https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...38&oe=59876A49
Printable View
From ONE INDIA :
சென்னை: திரைப்படங்களை தாராளமாக விமர்சனம் செய்யுங்கள். ஆனால் அடுத்தவர் மனசு நோகாமல் விமர்சனம் செய்யுங்கள் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டார்.
விக்ரம் பிரபு முதல் முறையாக தயாரித்து, ஹீரோவாக நடித்துள்ள படம் நெருப்புடா.
இந்தத் தலைப்பு ரஜினியின் கபாலி படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற பஞ்ச் என்பதால், ரஜினியையே படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர்.
சிவாஜி கணேசனின் வீடான அன்னை இல்லத்தில் நடந்த இந்த விழாவில் படப் பாடலை வெளியிட்டு ரஜினி பேசுகையில், "இந்த அன்னை இல்லம் என் வாழ்க்கையில் மறக்க முடியாதது. இந்த வீட்டுக்கு வந்த உடனே நான் நினைச்சேன்... சிவாஜி சார் மட்டும் இப்போ என்னைப் பாத்திருந்தா, 'என்னடா போட்டிக்கு தாடி வச்சிட்டியா'ன்னு கேட்டிருப்பார். அவருக்கு போட்டியே இல்ல. இனிமேலும் கிடையாது.
நான் முதன் முதலில் 1978-ல் என்று நினைக்கிறேன்.. அப்போதுதான் நான் வாழ வைப்பேன் படத்தில் அவருடன் நடித்தேன். ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வருமாறு அழைத்தார். 'ப்ரீயா இருந்தா வீட்டுக்கு வா.. பிரியாணி போடறேன்...' என்றார். நானும் சென்றேன். முதன் முதலாக அந்த வீட்டு வாயிலில் நுழைந்தபோது, அந்த பிரமாண்டத்தைப் பார்த்து வியந்தேன்.
உள்ளே போய் பார்த்தேன். ஏதோ என்னை மட்டும்தான் அழைத்திருக்கிறார் என்று நினைத்திருந்தேன். ஆனால் அங்கோ வெவ்வேறு பிரிவைச் சேர்ந்த 200 பேர் வந்திருந்தார்கள். பிரியாணி என்றால்.. அப்படி ஒரு பிரியாணி.. இது ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் அங்கு நடக்கும்.
இரண்டாவது நிகழ்வு, அண்ணாமலை படம். நான் சிவாஜி சாரின் ரசிகன் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்தப் படத்தில் ஒரு பகுதியில் என் கேரக்டரை சிவாஜி சாரை மனதில் வைத்து உருவாக்கியிருந்தார் சுரேஷ் கிருஷ்ணா. படம் முடித்து சிவாஜிக்கு தியேட்டரில் போட்டுக் காட்டினோம். அவர் தியேட்டரில் பார்த்தது ஒன்று அண்ணாமலை. அடுத்து படையப்பா. அவர் நடிச்ச படம்.
அண்ணாமலை பார்த்துவிட்டு, என்னை வீட்டுக்கு அழைத்து சிவாஜி சார் பாராட்டியது வாழ்க்கையில் மறக்க முடியாதது.
Today happens to be the 10th anniversary of our www.nadigarthilagam.com. Started in the year 2007, when there was not much limelight thrown on the electronic media's role, particularly websites, particularly on old Tamil film history. While searching through websites, found many mistakes in the filmography of NTin various websites and a thought arose why not a website exclusively for NT be launched and thus born the www.nadigarthilagam. It has now past 10 years all with the support of fellow Sivaji fans the world over and connoisseurs of Tamil classics. Thank you all.https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...4d&oe=5955AACDஇன்றோடு நமது நடிகர் திலகம் இணைய தளம் www.nadigarthilagam.com 10 ஆண்டுகளை நிறைவு செய்து 11வது ஆண்டில் நுழைகிறது. 10 ஆண்டுகளுக்கு முன் மின்னணு ஊடகம் மிகப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத கால கட்டத்தில் இணைய தளங்களும் பெரிய அளவில் மக்களிடம் சென்றடையாத கால கட்டத்தில், அப்போது இருந்த சில இணைய தளங்களில் நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றிய விவரங்கள் சரிவர இல்லாத காரணத்தால் ஏன் நடிகர் திலகத்திற்கென தனி இணைய தளம் துவங்கக் கூடாது என்ற எண்ணம் உதிக்க, அதனுடைய எதிரொலியாக நமது இணைய தளம் www.nadigarthilagam.com துவக்கப்பட்டு, இன்று 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதற்கு காரணமான அனைத்து சிவாஜி ரசிக நல்லிதயங்களுக்கும் தமிழ் சினிமா ஆர்வலர்களுக்கும் உளமார்ந்த நன்றி.https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...d0&oe=5991CEBB
Hi Raghavendra,
Congratulations for this splendid work. Completing 10 years in an individual capacity is a milestone and you are doing a magnificent work in running a successful website for our one and only Nadigar Thilagam. Big Thank you for this from Tamil Speaking world.
Great work. I sincerely believe this web treasure will turn into a wonderful NT dictionary, which will benefit tamils for many generations to come. Long live NT fame.
--A NT fan
Thank you TAC for your kind words sof appreciation and encouragement.
டியர் ராகவேந்தர் சார்,
பத்தாண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்து பதினோராவது ஆண்டில் வெற்றிகரமாக தடம் பதிக்கும் "நடிகர்திலகம்.காம்" இணையதளத்துக்கு இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.
இந்த இணையதளம் மூலம் தமிழ் நல்லுலகுக்கு நடிகர்திலகத்தைப் பற்றிய சாதனை சிறப்புகள் மிக சீரிய வகையில் சென்றடைந்தன என்றால் அது மிகையல்ல.
இந்த சிறப்பான வெற்றிக்கு தங்களின் ஓய்வறியா உழைப்பும், சோர்வறியா பங்களிப்பும், நடிகர்திலகத்தின் அன்பு பிள்ளைகளின் ஆதரவுமே முழுமுதற்காரணம் என்பது உண்மை.
நடிகர்திலகம் இணையதளம் இன்னும் பற்பல சாதனைகளை தனதாக்கி வெற்றிநடை போடவும், அதற்காக நீங்கள் பூரண ஆரோக்கியத்துடன் நீண்ட நெடிய காலங்கள் வாழவும் பிரார்த்திக்கிறேன்.
செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 171– சுதாங்கன்.
http://www.dinamalarnellai.com/site/...16gauravam.jpg
யு.ஏ.ஏ. குழுவினர் வெற்றிகரமாக நடத்தி வந்த நாடகம் 'கண்ணன் வந்தான்'. இந்த நாடகத்தை 'வியட்நாம் வீடுசுந்தரம் எழுதியிருந்தார்! நாடகம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நாடகத்தை சிவாஜி பார்த்தார்.அவருக்கு அந்த நாடகம் மிகவும் பிடித்து விட்டது. நாடகத்தில் அப்பா,- பிள்ளை இரண்டு கதாபாத்திரங்களின் மோதல்தான் கதை. நாடகத்தில், அப்பா வேடத்தில் மகேந்திரனின் தந்தை ஒய்.ஜி. பார்த்தசாரதியும், மகன் வேடத்தில் ஏ.ஆர். எஸ்ஸும் நடித்திருப்பார்கள்.
சிவாஜி இந்த நாடகத்தை படமாக்கி அதில் தான் நடிக்க வேண்டுமென்று நினைத்தார். அப்போது `இந்து’ நாளிதழின் இயக்குநர்களில் ஒருவரான ரங்கராஜன் படங்கள் எடுத்துக்கொண்டிருந்தார். அவர் சிவாஜியிடம் கால்ஷீட் கேட்டுக்கொண்டிருந்தார். அவரிடம் சிவாஜி இந்த நாடகத்தைப் பார்க்கச் சொன்னார்.
அவருக்கும் நாடகம் பிடித்துப் போனது. நாடகத்திற்கு கதை எழுதிய 'வியட்நாம் வீடு' சுந்தரமே இந்த படத்தை இயக்குவது என்று முடிவானது. கேமரா – இயக்குநர் ஸ்ரீதருடன் பல படங்களில் பணிபுரிந்த வின்சென்ட். நாடகத்தில் இரண்டு கதாபாத்திரங்கள்.
இப்போது படமாக எடுக்கும்போது அதில் அப்பா வேடத்தில் சிவாஜி என்று முடிவானது. அப்படியானால் பிள்ளை கதாபாத்திரத்தில் யார் நடிப்பது?
`அப்பா-, பிள்ளை இரண்டு வேடங்களிலும் நானே நடிக்கிறேன்’ என்றார் சிவாஜி! படத்திற்கு தலைப்பு `கவுரவம்’ என்று முடிவானது. ஏன் அவர் அப்படிச் சொன்னார்? அதற்கு சிவாஜியே விளக்கமளித்திருக்கிறார்.
`கவுரவம்’நல்ல படம். அதில் இரண்டு வேடங்களில் நான் நடித்தேன். இரண்டு வேடங்களிலும் நான் நடித்ததற்கு ஒரு காரணமுண்டு.
இயக்குநர் எல்.வி.பிரசாத் இயக்கிய படம் `இருவர் உள்ளம்’ அந்தப் படத்திற்காக நானும் சரோஜாதேவியும் ஒரு காட்சியில் நடித்துக்கொண்டிருந்தோம். அந்தக் காட்சியில் சரோஜாதேவிக்குத்தான் முக்கியத்துவம். அவர்தான் அந்தக் காட்சியை டாமினேட் செய்வார். அந்த காட்சியில் நானும் நடித்துக் கொண்டிருந்தேன்.சரோஜாதேவி பெண். நான் நடித்து, எப்படியும் அவரை ஜெயித்துவிடுவேன் என்று நினைத்து நடித்துக்கொண்டிருந்தேன்.
அப்போது இயக்குநர் பிரசாத் ` கட்’ `கட்’ என்று சொல்லி நிறுத்தினார்.
என்னை வெளியே அழைத்துக் கொண்டு போனார்.
`சிவாஜி, நீ நல்ல நடிகன். நீ நன்றாக நடிக்கிறாய். எனக்குத் தெரியும். நீ நன்றாக நடித்தால் காட்சியும் நன்றாக இருக்கும். அதுவும் எனக்குத் தெரியும். ஆனால், நீ இந்த காட்சியில் நன்றாக நடித்தால், நாம் எடுக்கும் காட்சி வீணாகி, கதையின் போக்கே மாறிவிடும். காரணம், கதைப்படி இந்த காட்சியில் சரோஜாதேவிதான் டாமினேட் செய்ய வேண்டும். நீ பேசாமல் இருக்க வேண்டும். அப்படியில்லையென்றால் படமே கெட்டுவிடும்' என்றார்.
இந்த அனுபவம் எனக்கு ஒரு பாடமாக அமைந்தது. படத்தில் நான் நடிப்பது முக்கியமல்ல. கதைப்படி எந்தக் காட்சியில் நாம் நடிக்காமல் இருக்க வேண்டுமென்பதும் மிகவும் முக்கியம்.
இதற்கு இன்னொரு உதாரணம் `எங்கிருந்தோ வந்தாள்’ படம்.
அதன் கிளைமாக்ஸ் காட்சியில் ஜெயலலிதாதான் நடிப்பார். நான் சும்மா கையைக் கட்டிக்கொண்டும், இடது கையை கன்னத்தில் வைத்தபடி சிரித்தபடியும்தான் அவர் அழைக்கும் இடத்திற்கெல்லாம் போவேன். நான் நடித்திருக்க மாட்டேன். ஜெயலலிதாதான் நடித்திருப்பார்.
அந்தக் காட்சியில் நான் நடித்திருந்தால் கதையே கெட்டு போயிருக்கும். படத்தின் தலைப்பும் வீணாகியிருக்கும். படத்தின் தலைப்பு என்ன? 'எங்கிருந்தோ வந்தாள்', 'எங்கிருந்தோ வந்தான்' இல்லையே ?
அதுதான் நடிப்பு. அதாவது நாம் நடிக்கக்கூடாத காட்சியில் நாம் கதாநாயகன், நானே எல்லாக் காட்சிகளிலும் நடிக்க வேண்டுமென்றால் கதை பாழாகிவிடும்.
`பாசமலர்’ படத்தில் பல காட்சிகளில் என்னைவிட சாவித்திரி நன்றாக நடித்திருப்பார். அவர் அப்படி நடித்து, நான் அடக்கி வாசித்ததால்தான் அந்தப் படத்தைப் பற்றி இன்றும் மக்கள் பேசுகிறார்கள்.
சரி! இன்னொரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். ஒரு காட்சியில் நான் நடிக்கிறேன். ஆனால் பாராட்டும், ரசிப்பும் என் சக நடிகருக்குத்தான் கிடைக்கிறது. இதற்கு என்ன சொல்லப்போகிறோம்?
அந்த காட்சிதான் `திருவிளையாடல்’ படத்தில் வந்த சிவன் – தருமி நடித்த காட்சி! இதில் சிவனாக நான் நடித்துக்கொண்டிருப்பேன். என் பின்னால் தருமியான நாகேஷ் நடித்துக் கொண்டிருந்தார். அவரது நடிப்பை ரசிகர்கள் மிகவும் ரசித்து, அந்தக் காட்சியே படத்தின் முக்கிய அம்சமாக இன்றும் மக்களால் ரசிக்கப்படுகிறது. அந்த காட்சி எடுத்தவுடன் அதை நான் பார்த்தேன்.
படத்தின் இயக்குநர் ஏ.பி. நாகராஜனிடம் நாகேஷ் நடித்ததில் ஒரு துளி அளவு கூட குறைக்கக்கூடாது என்றேன்.
எனக்குத் தெரியும். அந்த காட்சிதான் படத்தின் பேசப்படும் என்பது.
சரி! காட்சியின் தன்மையை புரிந்து கொண்டு நாம் நடிக்காமல் இருக்கலாம். ஆனால் மற்ற நடிகர்கள் இதை புரிந்து கொள்வார்களா? அதுவும் நான் ஒரு காட்சியில் நடிக்கும்போது அந்த சக நடிகரை 'நடிக்காதே' என்று சொன்னால் அவர் என்ன நினைப்பார்? ` சிவாஜி என்னை நடிக்க அனுமதிக்கவில்லை’ என்று நினைக்கமாட்டாரா ?
இப்போது `கவுரவம்’ விஷயத்திற்கு வருவோம். அப்பா,- பிள்ளை இரண்டும்தான் படத்தின் இரண்டு முக்கிய பாத்திரங்கள். அப்பா, பிள்ளை மோதல்தான் படத்தின் கருவே. இதில் அப்பா வேடத்தில் நான் நடிப்பதாக முடிவாகிவிட்டது. இப்போது பிள்ளை வேடத்தில் நடிக்கும் நடிகர் தானும் சிறப்பாக நடிக்க வேண்டுமென்று ஆசைப்படுவாரா? மாட்டாரா?
அவர் நன்றாக நடித்தால் என்னுடைய பாரிஸ்டர் ரஜினிகாந்த் வேடம் அடிபட்டுப் போகும். நான் நன்றாக நடித்து அவரை டம்மியாக்கினால், அந்த கதாபாத்திரம் கெட்டுப் போகும்.
மற்றவர்களை நடிக்க வைத்து, `ஏம்பா! இந்த காட்சியில் நீ நடிக்காமல் சும்மா இரு’ என்றால் கோபமோ, மனவருத்தமோ வராதா?
இயக்குநர் பிரசாத் சொன்னதாலும், அந்தக் காட்சியின் தன்மையை புரிந்து கொண்டதாலும் `இருவர் உள்ளம்’ படத்தில் அந்தக் காட்சியில் நான் நடிக்காமல் இருந்தேன்.
அதே போல் எத்தனை நடிகர்கள் புரிந்து கொள்வார்கள்?
`சிவாஜி மட்டும் பெயர் எடுத்துக் கொள்ள நினைக்கிறார்’ என்று நினைக்கமாட்டார்களா?
இதையெல்லாம் யோசித்துத்தான் `கவுரவம்’ படத்தில் நானே அப்பா-, பிள்ளை இரு வேடங்களிலும் நடிக்க தீர்மானித்தேன். அப்பா பாரிஸ்டர் ரஜினிகாந்த் கதாபாத்திரம்தான் மனதில் நின்றது.
அதற்குக் காரணம் கண்ணன் என்கிற அந்த பிள்ளை கதாபாத்திரம் குறைவாக நடித்ததுதான்'.
(தொடரும்)