நன்றி p_r.
Printable View
நன்றி p_r.
அன்பின் வெங்கி ராம்..இந்தத் திரியிலேயே old archivesல் கிடைக்கும் வெண்பாவின் பாடங்கள்..
வாங்கிய நூலில் வரைந்த வழிமுறைகள்
நீங்கள் படித்தவை நெஞ்சுவிட்டு --- நீங்காமல்
நன்கினிச் செய்வீரே வெண்பாநம் நண்பர்க்குத்
தெங்கினிமை உள்ளில் திணித்து.
You may scan and analyse.
வந்தது தான்வந்தீர் வாரம் பலசென்று
பொங்கலது போனாலும் இங்குதான் - தங்கமாய்
எண்ணச் சிறகை எளிதாய்ப் பறக்கவிட்டு
வண்ணக் கவிதையுடன் வா(ரும்)
C.K avarkaLE, why not try to give "room" to the "rum" in the veNba itself....it is worth the effort! Nice.
வண்ணக் கவிதையுடன் வந்தால்தான் சொல்லிடுவேன்
எண்ண முரைக்கும் எழில்..
முக நூலில் செளந்தர்ய லஹரிக்கு உரை எழுத முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.. அதற்காக இன்று எழுதின வெண்பாக்கள்(?!) ..
“வானில் நடமிட்டு வட்டமுகம் கோணாமல்
நாணி நகைபுரியும் நங்கையினைப் போலே
வரையற்ற வண்ணவொளி வையத்தில் நன்றாய்
நிறைத்தே அருளும் நிலவு
*
ஏக்கம் மிகக்கொண்டு ஏங்கிவரும் காதலரை
தேக்கி நிறுத்தாமல் தென்றலுடன் கூடக்
குளிர்வித்துக் காட்டின் மரநிழலில் அழகாய்
ஒளியும் நிலவின் ஒளி
*
மன்னனா மற்றோரா மாயங்கள் செய்கின்ற
கண்ணனா கள்வனா என்றெல்லாம் வெண்மதியும்
எண்ணாமல் ஈவாள் ஒளியை அதுவுமவள்
கொண்டிருக்கப் பெற்ற குணம்
*
பாவை அழகினைத்தான் பக்குவமாய் வர்ணிக்க
தேவையுள வார்த்தைகள் தீர்ந்துவிட அங்கே
கதியேது மில்லாமல் கற்றவர்கள் சொல்வர்
மதியை மயக்கும் மதி
*
வானில் இருந்தவள்தான் வந்துவிட்டாள் என்றெண்ணி
தேனில் பழத்தினைத் தோய்த்தே சுவைத்தாற்போல்
மேயும் நிலவின் பிரதிபிம்பம் தான்வாங்கிக்
காயும் நிலவால் கடல் “
நீங்க வந்தாத் தான்கொஞ்சம் எழுத முயற்சிக்கத் தோன்றுகிறது!!
அன்பின் சின்னக்கண்ணனவர்களே
நான் உங்கள் கவி கண்டு வரைந்த சில வெண்பாக்கள், எனது விரலகைவு (thumb drive) திறக்கமுடியாமல் மாட்டிக்கொண்டுவிட்டன. இதைக்கடைக்கு அனுப்பியுள்ளேன். இதில் பல கவிதைகள் உள்ளன.
என் செய்வேன்!
sad
It says drive F inaccessible, Incorrect function.
பரவாயில்லை சிவமாலா நான் தான் sad எனச் சொல்ல வேண்டும்.. மறுபடியும் எழுத முடிந்தால் எழுதுங்கள்..