Babloo Talks about STR's Beep Song
https://www.youtube.com/watch?v=wtIYdGrlrbo
Printable View
balaji, are u a simbu fan?
Paramu:mad: got a shock when u said no problem had vulgarities.. Arr would never agree to that
Yes. Even his sensual songs don't have the 'mukkals and munagals'. He is a socially responsible artist. I can vouch for that.
Sent from my SM-G531F using Tapatalk
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு: உருவானது புதிய அணி - Tamil Hindu
'த்ரிஷா இல்லனா நயன்தாரா' இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்
சிம்பு நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். மே 1ம் தேதி முதல் படப்பிடிப்பு
தொடங்குகிறது.
ஜி.வி.பிரகாஷ் நடித்த 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். இப்படம் வசூல் ரீதியில் பெரும் வெற்றி பெற்றது.
தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் இயக்குநர்
ஆதிக் ரவிச்சந்திரன். சிம்புவை சந்தித்து கதையை தெரிவித்திருக்கிறார். அவரும்
நடிக்க சம்மதம் தெரிவிக்கவே, மே 1ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டு
இருக்கிறார்கள்.
இப்படத்தை ரெபில் ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் தீபன் பூபதி தயாரிக்க
இருக்கிறார். இப்படத்துக்கு சிம்புவுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய சம்பளம்
கொடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
3 கெட்டப்களில் நடிக்கவிருக்கும் சிம்புவுக்கு ஜோடியாக 3 நாயகிகள்
நடிக்க இருக்கிறார்கள். சிம்புவுடன் நடிக்கவிருக்கும் நடிகைகள், நடிகர்கள் தேர்வு
தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
Super rare photo of STR
https://pbs.twimg.com/media/CZvblSzUAAA8uOG.jpg
Ramesh @rameshlaus 44m44 minutes ago Chennai, Tamil Nadu . @iam_str looking stylish on the cover of latest #Provoke Magazine pic.twitter.com/zI7tjaJIds
https://pbs.twimg.com/media/CaNpDTuUEAA36D2.jpg
- https://pbs.twimg.com/profile_images...HR_bigger.jpegRJ Balaji@RJ_Balaji 6h6 hours ago
Happy bday to one of d most honest human,genuine friend and super talented @iam_str ..! Great days ahead my friend. May the force b wit u :)
3h3 hours ago
Admin: Str celebrated his birthday with family , friends and fans ... #HBDSTR #HappyBirthdaySTR pic.twitter.com/Rdxz33AYIq
https://pbs.twimg.com/media/CaPlyRHUUAArqFY.jpg
- https://pbs.twimg.com/profile_images...uK0_bigger.jpgAnirudh Ravichander@anirudhofficial 6m6 minutes ago
Wishing a happy birthday to @iam_str and a great year ahead :)
எவ்ளோ ஹீரோ இருந்தாலும் சிம்புவை ஏன் மிஸ் பண்ணுவோம் தெரியுமா? - VIKATAN
குழந்தை நட்சத்திரமாக உறவைக் காத்த கிளியில் ஆரம்பித்து சிம்புவின் திரையுலக வாழ்க்கை. நம் மக்களுக்கு குழந்தை நட்சத்திரங்கள் என்றாலே ஒருவித அன்பு பெருகி, கொண்டாடுவார்கள். கமலஹாசன் தொடங்கி, அஞ்சு, மாஸ்டர் கணேஷ், மாஸ்டர் மகேந்திரன், ஷாலினி, ஷாமிலி, என்று இன்றைய சாரா வரை நம் வீட்டுப் பிள்ளைகள் வளர்வது போல மகிழ்வார்கள். சிம்புவின் வளர்ச்சியும் அப்படித்தான் இருந்தது. 1984ல் உறவைக்காத்த கிளியில் ஆரம்பித்து கிட்டத்தட்ட 10 படங்களுக்கு மேலாக சிம்புவை மக்கள் கவனிக்கத் தொடங்கி, ரசிக்கவும் தொடங்கியிருந்தார்கள். அதுவும் 1989ல் வெளியான சம்சார சங்கீதம் படத்தில் சிம்பு ஆடிய ‘ஐ ஆம் எ லிட்டில் ஸ்டார்’ பாடலை அப்படி ரசித்தார்கள். http://img.vikatan.com/cinema/2016/0...ages/simbu.jpg
அதன்பின் 2002ல் காதல் அழிவதில்லை படம் மூலமாக சிம்புவை, கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறார் அவர் தந்தை டி.ராஜேந்தர். தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்துக் கொண்டிருந்த டி.ராஜேந்தர், அடுத்த தலைமுறை மக்களின் ரசனை மாறலுக்கு ஈடு கொடுக்க முடியாமல், தன்னை நிரூபிக்க வேண்டி சிலம்பரசனை களத்தில் இறக்கிய படம் காதல் அழிவதில்லை. தாங்கள் ரசித்து வந்த ஒரு குழந்தை நட்சத்திரத்தின் முதல் படம் என்ற வகையிலான ஆவரேஜ் ஓபனிங் கிடைத்தது அந்தப் படத்திற்கு. ஆனால் அந்தப் படத்தின் இண்ட்ரோ பாடலில் (வெரலு...விசிலு..) ‘விஜய்னா ஃபைட் வரும், அஜித்னா துடிப்பு வரும், விக்ரம்னா நடிப்பு வரும்.. விவேக்னா காமெடி வரும்.. சிம்புன்னு சொன்னா புது ஸ்டைலே வரும்’ என்றதை ரசிக்கவில்லை மக்கள். ‘பெரிய ரஜினின்னு நெனைப்பு’ என்ற கமெண்ட்ஸ்களும், விரல் நடிகர் என்ற எள்ளல் பட்டமுமே கிடைத்தது. என்ன இருந்தாலும், மக்கள் ரஜினிக்கு கொடுத்த இடத்தை அவ்வளவு சுலபத்தில் விட்டுக் கொடுப்பதில்லை என்பதாக அது அமைந்ததோடு, ஒரு ஆரம்ப சறுக்கலாகவும் சிம்புவுக்கு அமைந்தது.
அதன்பின் வெளியான தம், அலை, கோவில் எல்லாமே தோல்விப்படங்களாகவே அமைய, ’குத்து’ மட்டும் ஆவரேஜாக கவனிக்கப்பட்டது. அதற்கடுத்து யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்கள் ஹிட் ஆகிவிட, பெரிய எதிர்பார்ப்புடன் ரொமாண்டிக் த்ரில்லரான ”மன்மதன்” வெளியானது. சிம்புவின் கதையில் வெளியான இந்தப் படம் ஒரு ஹிட்.. அதன்பிறகு தொட்டி ஜெயா, சரவணா போன்ற கவனிக்கப்படாத படங்களுக்குப் பிறகு, மீண்டும் சிம்புவே கதை எழுதி, சிம்புவின் இயக்கத்திலேயே வல்லவன் வெளியாகிறது. இதிலும் யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்கள் கைகொடுக்க, ஓரளவு தப்பிக்கிறது படம். ஆனாலும் சிம்பு, மக்கள் மனதில் நெருக்கமானவாராக இல்லை என்பது கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படத் தொடங்கியிருந்தது.. காரணம் அவர் சர்ச்சைகளின் நாயகனாக இருந்ததால்.
ஆம்.. காரணம் அப்பாவின் இயக்கத்திலேயே நடித்துக் கொண்டிருந்த சிம்பு, இயக்குநர்களுக்கு கட்டுப்பட்ட நடிகரல்ல என்பது சினிமாத்துறையின் ஊரறிந்த ரகசியமாக பேசப்பட்டு வந்தது. அதற்குத் தகுந்தாற்போலவே, மன்மதன் படத்தின் இயக்குநர் முருகன் சிம்புவின் இடையூறுகளால் வெறுப்படைந்த சம்பவங்களெல்லாம் நடந்தன. இது, இதுநம்ம ஆளு பாண்டிராஜ் வரை தொடர்கிற ஒன்றாக இருக்கிறது.சக நடிகர் நடிகைகளுடனும் இவருக்கு நல்ல நட்பு இருக்கவில்லை. தனுஷுக்கும் இவருக்கும் இருக்கும் பனிப்போர் பரவலாகப் பேசப்பட்டதும், தனுஷின் கொலவெறி பாடல் வெளியான உடனேயே, சிம்பு Love Anthem வெளியிட்டதும் நடந்தது. அதைப் போலவே நயன்தாரா உடனான ப்ரேக் அப்பிற்குப் பிறகு இருவரும் நெருக்கமாக இணைந்திருக்கும் புகைப்படம், ஹன்சிகாவுடனான ப்ரேக் அப்பிற்குப் பிறகு அவருடன் இணைந்திருக்கும் புகைப்படம் வெளியானதும், வீடியோக்கள் வெளியாவதும், விஜய் டிவி நிகழ்ச்சியில் ப்ரித்விராஜுடன் சண்டையிட்டு உணர்ச்சிகளை வெளிப்படுத்தியது என இவர் மீது துறையிலும், மக்களிடமும் இவர்மீதான கசப்புணர்வை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தன.
எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல, பீப் சாங் வெளியாக ‘அட.. என்னப்பா இது’ என்று வெறுப்பின் உச்சத்திற்கே சென்றுவிட்டனர் மக்கள். அப்போதும் ஒரு வருத்தமோ, மன்னிப்போ எதுவுமின்றி ’நான் என்ன வேணா பண்ணுவேன்’ ரேஞ்சுக்கு இவர் பேட்டி கொடுக்க பெரும்பாலானோர், இவர்மீது கோபத்திலேயே இருக்க நேர்ந்ததுஆனால், தோல்விகள் சர்ச்சைகள் இதையெல்லாம் மீறி, சிம்பு எப்போதும் லைம் லைட்டிலேயே இருப்பதற்கும், எப்போது வந்தாலும் அவருக்கு ஒரு ஓபனிங் இருப்பதற்கும் என்ன காரணம்? இனியாவது சிம்பு மக்களின் அன்பிற்கு உரியவராக வலம்வர என்ன செய்யலாம்? சுருக்கமாக அலசலாம்;
கௌதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத் தாண்டி வருவாயா. ‘நான் அவன்டா.. இவன்டா’ என்ற எந்த பந்தாவும் இல்லாமல் சிம்புவை ஒரு நடிகனாக நிலைநிறுத்திய படம். ‘ஷூட்டிங்ல இவர் பங்க்சுவல் இல்ல. ஆனா, நாம மிஸ் பண்ணக்கூடாத நல்ல ஆக்டர்’ என கௌதமால் பாராட்டப்பட்ட சிம்புவை மக்களும் அந்தப் படத்தில் கொண்டாடினார்கள். அந்தப் பட வெற்றிதான் வானம் படத்திலும் சிம்புவை ஓரளவு மக்களை ரசிக்க வைத்தது. ஆனால் திரும்ப ஒஸ்தியில் தன் பழைய ட்ராக்கில் பயணிக்கலானார் சிம்பு. போலவே தனுஷ் - சிம்புவுக்கு இடையான பனிப்போர் மறைந்து,தனுஷ் தயாரிப்பில் வெளிவந்த காக்காமுட்டையில் கெஸ்ட் ரோலில் நடித்த சிம்புவுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. போலவே டான்ஸ் ஆடும் திறமை. பீப் சாங்கிற்குக் கொடுத்த விளக்கத்தில் ’நான் மக்களுக்காக முட்டி தேய டான்ஸ் ஆடறேன்’ எனச் சொன்னது நகைப்புக்குள்ளானாலும், இவரது டான்ஸிற்கு என்று நல்ல ரசிகர்கள் உண்டு.
அதைப்போலவே, பாடகராகவும் சிம்புவுக்கு நல்ல பெயர்தான். ஈகோ இல்லாமல் ஜீவா, ஜெயம் ரவி என்று சக நடிகர்களுக்காக இவர் பாடுவது வரவேற்கத்தக்க ஒன்று. ஹீரோவுக்கான முழு லட்சணமும் பொருந்திய, குரல்வளம், மாடுலேஷன், டான்ஸ், நடிப்பு என அனைத்தும் ஒருங்கே பெற்ற நடிகர் சிம்பு என்பது பரவலான சினிமா ரசிகர்களின் கருத்து. ஆனால் இவர், எந்த இடையூறும் செய்யாமல் தன்னை முழுமையாக இயக்குநரை நம்பி ஒப்படைத்தாக வேண்டும். போலவே, இவரை கையாளத் தகுந்த ஒருவர் இவரை இயக்க வேண்டும். இரண்டும் ஒருங்கே நடந்தால், சிம்பு அமைதி காத்தால்.. இன்னும் பல வி தா வ-க்கள் வெளிவரலாம்.வரவேண்டும் என்பதே இந்தப் பிறந்தநாளில் அவரது ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு.
'ஸ்டைலிஷ் பாடி லேங்க்வேஜ்’
‘ஸ்க்ரீன் ப்ரசென்ஸ்'
'அவரு ஹீரோயின்ட்ட லவ் சொல்றப்ப, கண்ல உண்மையான லவ் தெரியும். லவ்வபிள் இடியட்!’
‘டான்ஸ்’
‘பன்முகத் திறமை. டைரக்*ஷன்.. நடிப்பு, பாட்டுன்னு எல்லாத்துலயும் எறங்கி அடிப்பாரு’
’வாயை மட்டும் கொறச்சுட்டா, சிம்பு என்னைக்கோ டாப்ல வந்திருக்க வேண்டிய ஆளு’
’என்ன இல்லை அவர்கிட்ட? கம்ப்ளீட் ஆர்ட்டிஸ்ட்ங்க சிம்பு!”
“ஃபீல்ட்ல எத்தனையோ ஹீரோ இருந்தும் உங்களுக்கு ஏன் சிம்புவ பிடிச்சிருக்கு?” என நாம் கேட்டதற்கு சிலரின் பதில்கள்தான் மேலே..
இப்பொழுதும் ‘இது நம்ம ஆளு’ என உங்களை அரவணைத்துக் கொள்ள ரசிகர்கள் தயாராகத்தான் இருக்கிறார்கள் ப்ரோ!
ஹேப்பி பர்த்டே டு யூ கார்த்திக்... ஸாரி.. சிம்பு!
source says that #Karthick meets #Jessie after 7 years.. #STR in d lead! sort of #VTV2 A Film by #GVM to start soon
STR, Gauthamvasudevmenon, STR Silambarasan and 2 others
https://pbs.twimg.com/media/CatmDHBUMAAdhXL.jpg
https://pbs.twimg.com/profile_images...IJi_bigger.jpgKINGMAKER@thekingmaker143 1h1 hour ago
#VinnaiThaandiVaruvaya will be Screened in @jazzcinemas for a week from this Friday(feb12) - #ValentinesDay https://abs.twimg.com/emoji/v2/72x72/1f60d.png
https://pbs.twimg.com/media/Ca1FT6fVIAA8IxT.jpg
சிம்புவுக்குப் பதிலாக ஜீ.வி.பிரகாஷ்?
ஜீ.வி.பிரகாஷ் நடித்த “த்ரிஷா இல்லன்னா நயன்தாரா” படத்தை இயக்கிய ஆதிக்ரவிச்சந்திரன், சிம்புவுக்கு ஒரு கதை சொன்னார். அந்தக்கதை பிடித்ததால் அவருடைய இயக்கத்தில் நடிக்க சிம்பு ஒப்புக்கொண்டிருந்தார் என்று சொல்லப்பட்டது.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும், சிம்புவிடம் கதை சொல்லியிருக்கிறேன் அவருக்குப் பிடித்திருக்கிறது அடுத்தபடம் அவருடைய படம்தான் என்று சொல்லியிருந்தார். இப்போது அதில் அதிரடி மாற்றம் நடந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
என்ன காரணத்தாலோ இந்தப்படத்தில் நடிப்பதிலிருந்து சிம்பு பின்வாங்கிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சியான இயக்குநர் ஆதிக், இந்தக்கதையை ஜி.வி.பிரகாஷிடம் சொல்லியிருக்கிறார். அவருக்கும் இந்தக்கதை பிடித்திருக்கிறதாம். அதனால் அவரே அந்தக்கதையில் நடிக்க ஒப்புக்கொண்டுவிட்டாராம்.
ஜி.விக்கு இப்போது “புருஸ்லி”, “எனக்கு இன்னொரு பேர் இருக்கு”, “கெட்டபையன்டா இந்த கார்த்தி” மற்றும் “கடவுள்இருக்கான்குமாரு” ஆகிய நான்கு படங்கள் இருக்கின்றன. இவற்றை ஒன்றன்பின் ஒன்றாக முடித்துவிட்டு இந்தப்படத்தில் நடிக்கப் போகிறாரா அல்லது இவை நடந்துகொண்டிருக்கும் நேரத்தில் கிடைக்கும் இடைவெளிகளில் ஆதிக் ரவிச்சந்திரன் படத்தில் நடிப்பதா என்பது பற்றிப் பேசிக்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.
இப்போதைக்குசிம்பு அந்தப்படத்தில் இல்லை என்பதும் அவருக்குப் பதிலாக ஜீவி நடிக்கிறார் என்பது மட்டும் உறுதி என்கிறார்கள்.
ஆண்டவன் பார்த்துக்கொள்வான்! போலீஸ் நிலையத்தில் சிம்பு உருக்கம்!
ஆபாச பாடல் விவகாரத்தில் சிம்பு வருகிற 24-ந்தேதிக்குள் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
நேற்று மாலை கோவை வந்த டி.ராஜேந்தர் இரவு 7 மணியளவில் தனது வழக்கறிஞருடன் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்துக்குச் சென்று, சிம்பு மீதான வழக்கு குறித்து விளக்கம் கேட்டார்.
இந்நிலையில், இன்று காலை சுமார் 10 மணியளவில் கோவை காட்டூர் காவல் நிலையத்தில் நடிகர் சிம்பு ஆஜரானார். அவருடைய வக்கீல்களும் அங்கு சென்றுள்ளனர். சிம்புவிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணைக்கு பின்னர் வெளியே வந்த சிம்பு, போலிசார் கேட்ட கேள்விகளுக்கு முழுமையாகப் பதில் சொல்லியிருக்கிறேன். என் மேல் எந்தத்தவறும் இல்லை. விசாரணைக்கு முழு ஒத்துழைப்புக் கொடுப்பேன். அதற்கு மேல் ஆண்டவன் பார்த்துக்கொள்வான் என்று கூறினார்.
அவரிடம் சுமார் அரை மணி நேரம் விசாரணை நடந்ததாகத் தெரிகிறது
Poda Podi Dubbed Into Telugu as "Mr.Manmadhan For Sale": The First Look Posters !!!http://image.noelshack.com/fichiers/...328-poda-1.jpghttp://image.noelshack.com/fichiers/...328-poda-4.jpghttp://image.noelshack.com/fichiers/...328-poda-2.jpghttp://image.noelshack.com/fichiers/...327-poda-3.jpg-------------------------------
இணையத்தில் 60 லட்சம் ஹிட்ஸ்களைக் குவித்தது, சிம்பு-மஞ்சிமாவின் 'தள்ளிப் போகாதே'
சிம்பு படத்தில் ஹாலிவுட் ஒப்பனைக் கலைஞர் ஒப்பந்தம் - Tamil Hindu
http://tamil.thehindu.com/multimedia...t_2757867f.jpg
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் படத்தில் ஹாலிவுட் ஒப்பனை கலைஞர் ஷான் ஃபூட் பணியாற்ற ஒப்பந்தமாகி இருக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் நடித்த 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். இப்படம் வசூல் ரீதியில் பெரும் வெற்றி பெற்றது.
தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். சிம்புவை சந்தித்து கதையை தெரிவித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.
இப்படத்தை ரெபில் ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் தீபன் பூபதி தயாரிக்க இருக்கிறார். 3 கெட்டப்களில் நடிக்கவிருக்கும் சிம்புவுக்கு ஜோடியாக 3 நாயகிகள் நடிக்க இருக்கிறார்கள். சிம்புவுடன் நடிக்கவிருக்கும் நடிகைகள், நடிகர்கள் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் சிம்புவின் ஒப்பனைக்கு விட்டா நிறுவனத்தின் ஷான் ஃபூட் பணியாற்ற ஒப்பந்தமாகி இருக்கிறார். இதற்காக ஷான் ஃபூட் ஒப்பனையில் சிம்புவுக்கு தனியாக மேக்கப் போட்டு பார்த்திருக்கிறார்கள். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே 'ஐ' படத்தில் விக்ரமின் மேக்கப்பிற்கு ஷான் ஃபூட் தான் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'ரெமோ' படத்திலும் அவர் பணியாற்றி வருகிறார்.
சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் 'இது நம்ம ஆளு' மற்றும் 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்கள் விரைவில் வெளியாக இருக்கின்றன. அப்படங்களைத் தொடர்ந்து சிம்பு, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிம்புவுடன் இணைவதில் என்ன தப்பு? அனிருத் கேள்வி
பீப் பாடல் சர்ச்சை குறித்து பிரச்னைகள் வெடித்த தருணம் அனிருத் தனது கனடா இசை நிகழ்ச்சிக்காக விமானத்தில் இருந்துள்ளார். அப்போது அவர் தனது நண்பரிடம், 2015 எவ்வித சர்ச்சையுமின்றி அமைதியாக கடத்திவிட்டேன். எனக் கூறியுள்ளார், கனடா விமான நிலையத்தில் மீண்டும் மொபைலை ஆன் செய்தபோது அவ்வளவு எஸ்.எம்.எஸ்கள் அனிருத் மொபைலை நிறைத்திருந்தன.
இப்பவும் தன்னால் அந்த நிமிடங்களை மறக்க முடியாது எனக் கூறும் அனிருத்திடம் மீண்டும் சிம்புவுடன் இணைந்து பணியாற்றுவீர்களா எனக் கேட்டபோது அவர் கூறிய பதில் இதுதான். ” அது ஒரு சின்ன விஷயம், தேவையில்லாமல் ஊதிப் பெரிதாக்கப்பட்டுவிட்டது. எனக்கும் அந்தப் பாடலுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லையென நான் கோயம்புத்தூர் காவல் நிலையத்திலும் கடிதம் கொடுத்துவிட்டேன்.
இதனால் ஏன் நான் சிம்வுடன் பணியாற்றாமல் இருக்கப் போகிறேன். உண்மையைச் சொன்னால் நாங்கள் இருவரும் இணைந்து மீண்டும் வேலை செய்தால் என்ன தரப்போகிறோம் என்பதில் கண்டிப்பாக மக்கள் ஆர்வம் காட்டுவார்கள்” எனக் கூறியுள்ளார் அனிருத்
சிம்பு கலந்துகொண்ட டோனி & கை திறப்பு விழா ஆல்பம்!
http://img.vikatan.com/album/2016/03...umb/142867.jpg http://img.vikatan.com/album/2016/03...umb/142868.jpg http://img.vikatan.com/album/2016/03...umb/142869.jpg http://img.vikatan.com/album/2016/03...umb/142870.jpg http://img.vikatan.com/album/2016/03...umb/142871.jpg http://img.vikatan.com/album/2016/03...umb/142872.jpg http://img.vikatan.com/album/2016/03...umb/142873.jpg http://img.vikatan.com/album/2016/03...umb/142874.jpg http://img.vikatan.com/album/2016/03...umb/142875.jpg http://img.vikatan.com/album/2016/03...umb/142876.jpg
Simbu takes just a few minutes to learn dance steps: Adah Sharma
Chennai: Actress Adah Sharma, who has grooved to a special song in upcoming Tamil romantic-comedy ‘Idhu Namma Aalu’, says it was so much fun to have danced alongside actor and extremely talented dancer Simbu.
‘It was so much fun dancing with Simbu. He comes to the sets, looks at a step and starts dancing. All that it takes him to learn a step is just a few minutes. And since he's so good at dancing, it encouraged me to work harder,’ Adah told IANS.
http://img01.ibnlive.in/ibnlive/uplo.../Simbucrop.jpg
In the film, Simbu and Adah will dazzle with the introduction song ‘Maaman waiting’.
‘It's a fantastic number with a very catchy tune,’ she said, adding that Simbu is very strong at portraying the right expressions for every step in the song.
Adah had signed the song soon after the phenomenal success of her Telugu suspense drama ‘Kshanam’, in which she was lauded for her role as a hapless mother in search of her miss daughter.
Asked if she has any qualms of signing a song after impressing everyone with such a fine act, Adah said: ‘Dance is my forte, and so far I haven't had the opportunity to portray my talent. Moreover, I'd do a song or a role if I find it amazing, because I don't like to discriminate.’
Adah has signed two new Hindi projects. She also has a Tamil and Telugu project in her kitty.
‘I start shooting for one of the Hindi projects from April. I can't divulge more information now as I feel it might jinx things for me,’ she said
சிம்புவின் அடுத்த பட தலைப்பு என்ன தெரியுமா?
சிம்புவின் ' இது நம்ம ஆளு' படத்தில் நயன்தாரா நடிக்க வேண்டிய ஒரே ஒரு பாடல் காட்சி படமாக்க வேண்டி இருந்தது. பலமுறை பாண்டிராஜ். டி.ராஜேந்தர், சிம்பு என மும்முனை முயற்சிகள் செய்தும் அனைத்தும் அம்பேல். ஒரு கட்டத்தில் கடுப்பான டி.ஆர் ' யோவ் பாண்டிராஜ் அந்த பொண்ணுக்கு என்ன கொம்பு முளைச்சிருக்கா... சிம்புவ வச்சி படத்தை முடிய்யா...' என்று சொல்ல மளமளவென படம் ரெடியாகி விட்டது இப்போது ' மே மாசம் ரிலீஸ் செய்தே தீருவேன்' என்று ப்சங்க மாதிரி அடம்பிடித்துக் கொண்டு இருக்கிறார், பாண்டிராஜ்.
இன்னொரு பக்கம் கெளதம் மேனன் படத்திலும், தே.மு.தி.க-வின் அ.தி.மு.க ஆதரவு எம்.எல்.ஏ மைக்கேல் ராயப்பன் தயாரிப்பிலும் நடிக்கிறார்.
சிம்பு ஆன்மீக தத்துவங்களை அள்ளிவிட்டாலும் பிடிவாதம் பிடிப்பதில் அப்பாவையே மிஞ்சும் அசகாயசூரர். பீப் பாடல் பிரச்னை ஒரு வழியாக இப்போதுதான் ஓரு வழியாக ஒய்ந்து இருக்கிறது. இந்த சூழ்நிலையில் தனது அடுத்த படத்துக்கு 'aaa' என்று சமூக விழிப்புணர்ச்சிக் கொண்ட தலைப்பைச் சூட்டி வலியபோய் வம்பை விலைக்கு வாங்கி இருக்கிறார்.
ரவிச்சந்திரன் இயக்கும் 'aaa' படத்துக்கான அர்த்தம் என்ன தெரியுமா? ' ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' என்று புதிய தலைப்பு வைத்து பிரச்னைக்கு பிள்ளையார் சுழி போட்டு இருக்கிறார் சிம்பு.
ஓட்டு போட வேண்டியது உன் கடமை: வாக்களிக்க வலியுறுத்தி சிம்பு எழுதிய பாடல்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடிகர் சிம்பு, பாடல் ஒன்றை எழுதி தயார் செய்து வருகிறார். சிம்பு எழுதியுள்ள பாடலில் இருந்து சில வரிகள்:
ஓட்டு போட வேண்டியது உன் கடமை
போடலைன்னா அது உன் மடமை
எதுக்குடா போடணும்னு நினைக்கிறது கொடுமை
அதனாலத் தான் நம்ம நாட்டுல இவ்வளவு வறுமை
நான் ஒருத்தன் போடலைன்னா என்னனு நீ நினைப்ப
உனக்கு வேண்டிய மாற்றத்தை நீயே தான் தடுப்ப
எவன் ஜெயிச்சா எனக்கு என்னனு நீ இருப்ப
தமிழ்நாட்டோட வளர்ச்சியை நீயே தான் கெடுப்ப
போடாம விட்டது பலவாட்டி
போட்டுத்தான் பாருடா இந்த வாட்டி
போடுங்கடா ஓட்டு இல்லாட்டி வேட்டு
போடுங்கடா ஓட்டு அதுக்குத்தான் இந்த பாட்டு
இப்பாடல் குறித்து ‘தி இந்து’விடம் சிம்பு கூறியதாவது:
அப்பாவைப் போல எதுகை மோனையுடன் எழுத வேண்டும் என்பது என் நீண்டநாள் ஆசை. அது இப்பாடல் மூலம் நிறைவேறி இருக்கிறது. தமிழக மக்கள் அனைவரும் ஓட்டு போட வேண்டும். அதற்கு நம்மால் ஆனதை செய்யவேண்டும் என நினைத்தேன். ஒரு வீடியோவில் அனைவரும் ஓட்டுப் போடுங்கள் என்று சும்மா சொல்ல முடியாது. பீப் பாடலை நான் வெளியிடவில்லை. அப்பிரச்சினையின்போது நீங்கள் ஒரு பாடலை வெளியிட்டால் தமிழ்நாடே கேட்கும் என்று சொன்னார்கள்.
தமிழ்நாடே கேட்கிறது என்றால் நாம் ஏன் ஓட்டுப் போடச் சொல்லி ஒரு பாடலை வெளியிடக் கூடாது என்று நினைத்து இதைச் செய்கிறேன். இன்னும் ஓரிரு நாட்களில் இப்பாடல் வெளியாகும். இந்த தேர்தல் மட்டுமன்றி அனைத்து தேர்தல்களுக்கும் இப்பாடல் பொருந்தும்.
இவ்வாறு சிம்பு கூறினார்.
The vote song by STR reminds me of Nannum Rowdy Thaan moment :
Nayanthara : Naan ungala podanum. Parthiban crawls his base over the sofa with a huge grin in his face.
A royal reply song from STR with a universal message : Vote-u Podunga, Please !
Simbu not starring in Junior NTR's 'Temper' remake
There were reports of Silambarasan starring in the Tamil remake of Telugu flick "Temper," which would be helmed by Vijay Chander of "Vaalu" fame. Now, the latest report clarifies that they are not part of this project.Speaking to the Times of India, Vijay Chander said that they are not working on "Temper" remake and he is busy writing a fresh script for Silambarasan. "It will be a mature role for him. Simbu will start shooting for Adhik's AAA next. Around the same time, we will be starting our project, too. We are likely to start shooting from the last week of August," the daily adds the filmmaker as saying.
Following the success of "Temper" in Telugu, S Michael Rayappan had reportedly acquired the remake rights of the film. But he could not start the project as planned before. It is also noted that there were rumours on Simbu being replaced by Vishal Krishna.
"Temper" was written and directed by Puri Jagganadh and produced by Bandla Ganesh. Kajal Aggarwal had romanced Junior NTR in the movie, which was released in February 2015.
Simbu's 'Idhu Namma Aalu' Performs Well at BO
Meanwhile, Simbu's latest release "Idhu Namma Aalu" has opened to fairly positive reviews and it has performed well at the box office. In its first weekend, the film has earned Rs. 14.05 crore in Tamil Nadu.
It is a romantic comedy movie, directed by Pandiraj. Simbu has paired up with his ex-girlfriend Nayanthara in the flick.
On the other hand, Simbu is now busy with Gautham Menon's "Achcham Yenbadhu Madamaiyada." The movie is now getting ready for the audio launch, which will be released on June 17. The Tamil film will hit the screens in July.
கடவுள் தன் சக்தியைக் காட்டி விட்டார்..சிம்பு நெகிழ்ச்சி!
வாலு படத்திற்கு பிறகு மீண்டும் பல ரிலீஸ் தேதிகள் அறிவிப்புகளுக்குப் பிறகு ’இது நம்ம ஆளு’ கடந்த வாரம் வெளியானது. கல்லூரி இளசுகளை சற்றே கவர்ந்திருக்கிறது இந்தப் படம். முக்கியமாக சிம்பு , நயன்தாரா போனில் பேசும் பகுதிகள் கொஞ்சம் நீளமாக இருப்பினும் இளைஞர்களின் விருப்பமான பகுதியாக அமைந்துள்ளன.
படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்திருக்கும் நிலையில் சிம்பு தன் மனநிலை குறித்து பகிர்ந்துள்ளார். ”என் படத்தை மக்கள் வெற்றியடையச் செய்யவேண்டும் என நினைத்ததில் எனக்கு சந்தோஷம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அனைத்தும் எனக்காக நடந்திருக்கிறது. என் கடினமான சூழலிலும் கூட யாரையும் நான் குற்றம் கூறவோ, அல்லது எனது பொறுமையை இழக்கவோ இல்லை”.
”எனக்குத் தெரியும் இந்த நாள் வரும் என்பது. அது இப்போது நடந்திருக்கிறது. கடவுள் தனது சக்தியை காட்டிவிட்டார். அனைவருக்கும் நன்றி” எனக் கூறியுள்ளார் சிம்பு.
பீப் பிரச்னை ஓய்ந்துவிட்ட நிலையில் தற்போது ‘அச்சம் என்பது மடமையா” டிரெய்லரும் நேற்று வெளியாகி சிம்பு ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் பின்னணி, மற்றும் கௌதம் மேனன் இயக்கம், எல்லாவற்றிற்கும் மேல் சிம்புவின் ரொமான்ஸ், ஆக்*ஷன் என டிரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
'இது நம்ம ஆளு' முதல் 'பில்லா' ரீமேக் வரை: ரசிகர்களுக்கு சிம்பு அளித்த பதில்கள் - TAMIL THE HINDU
'இது நம்ம ஆளு' படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ரசிகர்களுடன் PERISCOPE மூலமாக வீடியோ வடிவில் உரையாடினார். அப்போது ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு சிம்பு அளித்த பதில்களின் தொகுப்பு:
"'இது நம்ம ஆளு'வெற்றியைப் பற்றி எல்லாம் ஒன்று நினைக்கவில்லை. நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்கள், படம் நன்றாக போகிறது என்பதில் தான் எனக்கு சந்தோஷம். செல்வராகவன் சார் இன்னொரு படம் பண்ணிக் கொண்டிருக்கிறார். அவர் முடித்துவிட்டு வந்தவுடன் 'கான்' படம் தொடங்கப்படும்.
உடல் எடையை படத்துக்காக கூட்டியிருக்கிறேன். எப்போதுமே ஒல்லியாக தான் இருப்பேன். 'சிலம்பாட்டம்' நேரத்தில் ஒரு பாத்திரத்துக்கு என்னால் எடையைக் கூட்ட முடியாமல் போனது. இப்போது வயதானதால் உடல் எடை அதிகமாகிவிட்டது என நினைக்கிறேன். ’அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ ஒரு பாத்திரம் படப்பிடிப்பு முடிந்தவுடன், மீண்டும் எடையை குறைக்க இருக்கிறேன்.
திருமணம் செய்யலாம் என்ற எண்ணமெல்லாம் இருக்கிறது. பெண் வந்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்ள முடியும். பெண் வருகிற அன்றைக்கு வரட்டும். அமீர் சார் படம் இருக்கிறது. அவர் மற்றொரு படம் பண்ணிக் கொண்டிருக்கிறார். அதை முடித்தவுடன் அடுத்தாண்டு அவருடன் படம் பண்ணுவேன்.
'வேட்டை மன்னன்' படத்தில் பிரச்சினை தயாரிப்பாளர் தான். அவர் பண்ணுங்கள் என்றால் நாங்கள் பண்ண தயாராக இருக்கிறோம். LOVE ANTHEM பொறுத்தவரை அதில் ஒரு பெண் குரல் இருக்கிறது. அதில் சர்ப்ரைஸ் இருக்கிறது. அதை முடித்தவுடன் வெளியிட்டு விடுவேன். 'மன்மதன் 2' பண்ண நேரமே இல்லை.
விஜய் எனக்கு அண்ணன் மாதிரி. சின்ன பையனாக இருந்ததில் இருந்தே தெரியும். நான் அஜித் ரசிகனாக இருப்பதால், விஜய் அண்ணாவுடன் நான் எவ்வளவு க்ளோஸ் என்பது தெரியாது. நான் அதைப் பற்றி பெரிதாக பேசுவதில்லை. விஜய் அண்ணாவுக்கு நான் எவ்வளவு க்ளோஸ் என்பது அவருக்கு தெரியும்.
வித்தியாசமான கதைகள் எல்லாம் யோசித்து வைத்திருக்கிறேன். அதை தமிழில் பண்ண முடியுமா என்று பிரச்சினை இருக்கிறது. வருங்காலத்தில் பண்ணுவேன். ரஜினி சார் மற்றும் அஜித் சார் இருவருடன் நடிப்பேன். ஆனால் அதே மாதிரி கதைகள் வந்தால் நடிக்க தயாராக இருக்கிறேன். தனுஷ் ஒரு நல்ல நடிகர், எனக்கு நல்ல நண்பர். தலைவர் ரஜினி படம். 'கபாலி' படத்தை முதல் நாள் பார்த்துவிடுவேன்.
அடுத்தாண்டு இறுதியில் தலைவர், தல பண்ணிய 'பில்லா' படத்தை பண்ணவிருக்கிறேன். 'ப்ரேமம்' ரீமேக் பண்ணும் அளவுக்கு நேரமில்லை. நான் இசையமைக்கலாம், ஆனால் அனைத்து இசையமைப்பாளர்களும் எனக்கு நல்ல நண்பர்கள். அதனால் நான் இசையமைக்கவில்லை.
'இது நம்ம ஆளு' படத்தில் நடித்ததிற்கு நயன்தாராவுக்கு நன்றி தான் சொல்லணும். இந்த வெற்றிக்கு அவங்களுக்கு ஒரு காரணம்" என்று தெரிவித்தார்.
'பில்லா' ரீமேக் இணைந்த வெங்கட்பிரபு
சிம்புவின் 'பில்லா' அறிவிப்பு வெளியானவுடன், இயக்குநர் வெங்கட்பிரபு "நான், யுவன், நீங்கள் இணைப்பில் 'பில்லா 2018'. என்ன சொல்கிறீர்கள். நான் தயார்" என்று ட்விட்டர் தளத்தில் கேட்டார். அதற்கு சிம்பு "பொறந்ததில் இருந்தே ரெடி.கண்டிப்பாக" என்று வெங்கட்பிரபுக்கு பதிலளித்தார்.
சிம்புவின் பதிலால் வெங்கட்பிரபு இயக்கத்தில் 'பில்லா 2018' உருவாகும் என்று செய்திகள் வெளியாகி இருக்கிறது.
ரசிகர்களுடன் சிம்பு உரையாடியது வீடியோ வடிவில்!
https://www.youtube.com/embed/NTNWE2DMSEE
சிம்பு பாராட்டிய ‘ஐயம் சிங்கிள், ரெடி டு மிங்கிள்” பாடல் உருவானது இப்படித்தான்!
பிரபல இசையமைப்பாளர் மறைந்த எல்.வைத்தியநாதன் மகன் எல்.வி.முத்துகுமார் பாடல் ஒன்றை ரிலீஸ் செய்யப்போகிறார் என்ற தகவல் வந்ததும் அவரைத் தேடிப்பிடித்தோம். பொறியாளன், வில்அம்பு ஆகிய படங்களின் நாயகனான ஹரிஷ் கல்யாண், எழுதிப் பாடியுள்ள ‘ஐ எம் சிங்கிள்' என்ற பாடலுக்கு எல்.வி.முத்துகுமார் இசையமைத்துள்ளார். நான் சிம்புவின் கஸின் பிரதர் என ’அடடே’ போட வைத்து அறிமுகமானார் LV.முத்துகுமாரசாமி.
“ஐயம் சிங்கிள்.. ரெடி டு மிங்கிள்’ - யாருக்கோ செய்தி சொல்ற மாதிரி இருக்கே ப்ரோ?
(சிரிக்கிறார்) அச்சச்சோ.. அப்டிலாம் இல்லைங்க. இன்னைக்கு இருக்கற ஆன்லைன் உலகத்துல இளைஞர்கள் சொல்ல நினைக்கிற மிகப்பெரிய வார்த்தை இதுதான். ‘ஐயம் சிங்கிள், ரெடி டு மிங்கிள்’. பொண்ணுங்க கிட்ட ப்ரபோஸ் பண்ற ஸ்டைல் பாடல். நான் ஒரு 3 நிமிஷத்துக்கு மியூசிக் கம்போஸ் பண்ணி வெச்சிருந்தேன். பாட்டக் கேட்டுட்டு சூப்பர்ப்பா, இத முழுமையாக்கலாமே. அப்படின்னு டீம் உள்ள வந்தாரு ஹரிஷ். அவர் எழுதின வரிகள் தான் இந்தப் பாட்டு!”
http://img.vikatan.com/cinema/2016/0...s/Untitled.png
சிம்பு என்ன சொன்னாரு?
“ இந்தப் பாட்ட மூணு மாசத்துக்கு முன்னாடியே அண்ணா கேட்டுட்டாரு. ரொம்ப நல்லாருக்குனு சொன்னாரு. அவர் ஐயம் சிங்கிள், ஐயம் நாட் ரெடி டு மிங்கிள்னு ஒரு பாட்டு ஏற்கனவே எழுதியிருக்காரு. என்ன ஒரு கோ-இன்ஸிடெண்ட்ஸ் பாருங்க. சூப்பர்..சூப்பர்னு சொன்னாரு!”
உங்களைப் பத்தி சொல்லுங்களேன்! “ வல்லதேசம்’ படத்துக்கு மியூசிக் போட்டது நான் தான். ஆமா அந்த எல்.வி.முத்து குமாரசாமி நானே தான். சமீபத்துல தள்ளிப்போகாதே, சிம்பு வெர்ஷன் மியூசிக் மிக்ஸிங் கூட பண்ணதும் நான் தான்!” இதுக்கு மேல இன்னும் நிறைய விஷயங்கள் சொல்வாரு ஹரிஷ்” என்றார்.
ஹரிஷ் கல்யாண் தொடர்ந்தார்.
ஹாய்...ஹரிஷ் ’பொறியாளன்’, ’வில் அம்பு’ன்னு வித்தியாசமான முயற்சிகளாவே இருக்கே உங்க படங்கள்!
‘நான் எதுவுமே ப்ளான் பண்ணல.. அதுவா அமையுது. அடுத்து தெலுங்குல ரெண்டு ப்ராஜெக்ட். தமிழ்ல நிறைய கதைகள் வருது. ஆனா நல்ல கதைக்காக வெயிட்டிங்!”
உங்களுக்குள்ள இப்படி ஒரு மியூசிக் ஆர்வமா?
“ நான் படிச்சது விஸ்காம். அப்புறம் மியூசிக் கீபோர்டு, கிதார்னு வாசிப்பேன். பாட்டெழுதணும், பாடணும் இதெல்லாம் ஒரு ஆசையாவே நிறைவேறாம இருந்துச்சு. இப்போ கனவு நினைவாகிடுச்சு. ஒரு பையனோட ப்ரபோஸ், எல்லாத்துக்கும் மேல ட்ரெண்டியா காதல சொல்ற பாட்டு. கேட்டா உங்களுக்கே புரியும் . இனி நடிப்போட இசையையும் தொடர்வேன்!” வாழ்த்துகள்!
https://www.youtube.com/embed/nn10uchc7_o
'ரெமோ' விழா பேச்சு: சிம்பு ரசிகர்கள் கிளப்பிய சர்ச்சைக்கு விக்னேஷ் சிவன் விளக்கம்
http://tamil.thehindu.com/multimedia...u_2913007f.jpg
'ரெமோ' விழாவில் சிம்புவின் பெயரைக் குறிப்பிடவில்லை என்று ரசிகர்கள் எழுப்பிய சர்ச்சைக்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் விளக்கமளித்திருக்கிறார்.
பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ரெமோ'. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் விக்னேஷ் சிவன் 2 பாடல்களை எழுதியிருக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவில் பேசிய விக்னேஷ் சிவன் "அனிருத் தான் பாடல்கள் எழுத வாய்ப்புக் கொடுத்தார்" என்று பேசினார்.
'போடா போடி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகப்படுத்தியவர் சிம்பு தான். அவரது பேரைக் குறிப்பிட விட்டாலும் பரவாயில்லை. ஆனால், எப்படி அனிருத் தான் வாய்ப்புக் கொடுத்தார் என பேசலாம் என விக்னேஷ் சிவனை சிம்பு ரசிகர்கள் பலரும் திட்டித் தீர்த்தனர்.
அதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் "அனிருத் தான் என்ன பாடலாசிரியராக அறிமுகப்படுத்தினார் என்று நான் குறிப்பிடவில்லை. அப்படி ஒன்றை பொய்யாக உருவாக்காதீர்கள். எனது கடினமான தருணங்களில் அவர் எனக்கு ஆதரவாக இருந்தார் என்றே நான் எப்போதும் கூறிவருகிறேன். சிலம்பரசன் தான் எனக்கு முதல் படம் இயக்க வாய்ப்பு தந்தார். ஆனால் அதற்குப் பின் என் வாழ்வில் போராட்டமான ஒரு கட்டத்தில் இருந்தேன். அதை கடக்க, சிம்பு சார் உட்பட பலர் எனக்கு உதவி செய்துள்ளனர்.
அச்சமயத்தில் அனிருத் எனக்கு மியூஸிக் வீடியோ வாய்ப்பும், பாடல் எழுத வாய்ப்பும் தந்தார். அது என்னையும் என் குடும்பத்தையும் பார்த்துக் கொள்ள வழி செய்தது. தொடர்ந்து தனுஷ் சார் என் வாழ்வாதாரத்துக்கான வாய்ப்பை ’நானும் ரவுடி தான்’ படம் மூலம் தந்தார். நான் உழைத்தே இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். எனது முழு வாழ்க்கையை சுருக்கமாக சொன்னாலும் அதற்கு 15 நிமிடங்கள் ஆகும். ’ரெமோ’ மேடையில் எனக்கு இருந்தது ஒரு நிமிடமே. அதில் மேடையை சூழ்ந்திருந்த, படக்குழுவை சேர்ந்தவர்களுக்கு நன்றி தெரிவித்தேன். அது, எனது முதல் படத்திலிருந்து இன்று வரை நடந்தவற்றை சொல்ல சரியான இடம் அல்ல.
நான் கொடுத்த ஒரு சில பேட்டிகளில் எப்போதுமே சிம்பு சாருக்கு நன்றி தெரிவித்துள்ளேன். ஆனால் அதை யாரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. ஆனால் இப்போது எங்கிருந்தோ ஒரு பிரச்சினையை ஏன் கிளப்புகிறார்கள் எனத் தெரியவில்லை.
’ரெமோ’ மேடையில் என் அம்மா அப்பாவைப் பற்றி கூட குறிப்பிட்டதில்லை. ஏனென்றால் அது அதற்கான மேடை அல்ல. உங்களது மீம்களும், கருத்துகளும் தரக்குறைவாக உள்ளன. அவை தேவையற்றது. இந்த மிகையான எதிர்வினையை தயவு செய்து நிறுத்துங்கள். இப்போதுதான் சிம்பு சாருக்கு குறுந்தகவல் அனுப்பி, இதை செய்பவர்களை நிறுத்தச் செய்யுமாறு கோரினேன்.
சிம்பு சாரிடம் எப்போதும் எனக்கு இருந்து வரும் மரியாதையையும், பரஸ்பர நட்பையும் கெடுக்காதீர்கள். அவர் தான் என் சினிமா வாழ்க்கையின் தொடக்கப்புள்ளியாக இருந்தவர், அதை எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் குறிப்பிட்டு வருகிறேன். இந்த விஷயத்துக்கு தேவையில்லாத எதிர்வினை வேண்டாம் என அனைத்து தீவிர சிம்பு ரசிகர்களையும் கேட்டுக் கொள்கிறேன்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
சிம்பு தரப்பில் விசாரித்த போது "சிம்பு எப்போதுமே புதியவர்களுக்கு வாய்ப்பளித்து ஊக்குவித்து வருபவர் தான். அவரை அறிமுகப்படுத்தி விளம்பரப்படுத்துவார். விக்னேஷ் சிவனுக்கு வாய்ப்பளித்தது சிம்பு தான் என்பது அனைவருக்குமே தெரியும். தேவையில்லாமல் அவரை காயப்படுத்துவது நல்லதல்ல" என்று தெரிவித்தார்கள்.