MGR devotees celebration for Ithayakani release in Mahalakshmi theater September 2012.
https://www.youtube.com/watch?v=OMvVJ_KoMdk
Printable View
MGR devotees celebration for Ithayakani release in Mahalakshmi theater September 2012.
https://www.youtube.com/watch?v=OMvVJ_KoMdk
MGR Fest 95 function in Raja Annamalai Mandram, conducted by Olikirathu Urimaikural and all MGR Fans club in Chennai on August 2012. Here is the video of Actress Kanchana speech about our beloved Leader Puratchi Thalaivar MGR.
https://www.youtube.com/watch?v=GQz8aNk8-Uc
On the same day of the function, MGR's bodyguard K.P.Ramakrishnan gave a small speech, some we not know. Here is the video clip.
https://www.youtube.com/watch?v=5bhQFUv01Ys
டியர் எஸ்.வி.சார்
நடிகர் திலகம் ரசிகர்கள் சார்பாக அபிநய சரஸ்வதி சரோஜா தேவி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளதற்கு உளமார்ந்த பாராட்டுக்கள். அவர்களுடைய பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் காலத்தால் அழிக்க முடியாத இரண்டு சிறந்த பாடல்கள்
புதிய பறவை - ஆஹா மெல்ல நட
http://youtu.be/iyk3ofoFlf4
எங்க வீட்டுப் பிள்ளை - பெண் போனால்
http://youtu.be/-kdmqzfCLjY
Here is the full movie Ulagam Sutrum Vaaliban uploaded in Saregama in Youtube.
https://www.youtube.com/watch?v=dQks1sIadEs
For MGR fans Sister in Laws birthday here is the duet song of our MGR and Sarojadevi in Anbay Vaa.
https://www.youtube.com/watch?v=dBuAD62LTxA
Look at the clarity of the video. Wow. When we are going to see such a print in the movie theaters.
Video uploaded by apinternational.
மக்கள் திலகம் MGR 3 - திரி இன்று 3000 பதிவுகள்
300 பக்கங்கள் என்ற பெருமையுடன் பயணம் செய்கின்றது
.http://i47.tinypic.com/29xd8bk.jpg
மக்கள் திலகத்தின் உயிர் ரசிகர்கள்
http://i47.tinypic.com/jqm1c4.jpg
மதிப்பிற்குரியவர்கள் திருவாளர்கள்
திருப்பூர் ரவிச்சந்திரன்
பேராசிரியர் செல்வகுமார்
ஜெய்சங்கர்
சைலேஷ்
ரூப்குமார்
ராமமூர்த்தி
கலியபெருமாள்
பேராசிரியர் சிவகுமார்
மற்றும் பல பதிவுகள் வழங்கி வரும் நடிகர் திலகம் திரு ராகவேந்திரன் சார்
tfm LOVER சார் - மாசனம் மற்றும் பார்வையாளர்களுக்கும்
நன்றி .
அலைபேசி மூலம் வாழ்த்துக்கள் தெரிவித்த திரு பம்மலார் - திரு நெய்வேலி வாசுதேவன் - திரு பாரிஸ்டர்
பிரான்ஸ் - டேவிட் அவர்களிக்கும் நன்றி
நட்புடன்
வினோத்
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்
பரீட்சைக்குப் படிக்கும் மாணவன் , பாடத்தை எப்படி பலமுறை படித்து மனதில் பதிய வைத்துக் கொள்கிறானோ அப்படித்தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த படங்களில் வரும் பாடல்கள் அனைத்தையும் மனனம் செய்து இன்று மிகப்பெரிய பாடகராகவும் இசையமைப்பாளராகவும் ஆனவர் கலைமாமணி ஏ.வி.ரமணன். (சன் டிவியில் சப்த ஸ்வரங்கள் நிகழ்ச்சியை நடத்தும் அதே ஏ.வி.ரமணன் தான்.
இப்படி பள்ளிப் பருவத்திலிருந்தே பாடும் திறனை வளர்த்துக் கொண்ட ஏ.வி.ரமணன் தனியாக மியூசியானா என்ற பெயரில் இசைக்குழு ஒன்றையத துவங்குகிறார். இவருடைய முதல்கச்சேரி, சென்னை ஆபட்ஸ்பரி மாளிகையில் பஸ் அதிபர் சீனிவாசன் மகள் திருமண நிகழ்ச்சியில் நடக்கிறது.
எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் அலுவலகத்துக்கு அருகில் சீனிவாசன் வீடு இருந்ததால், அந்த நட்பில் மக்கள் திலகம் தனது துணைவியாருடன் மாளிகைக்கு வருகிறார்.
திரையில் மட்டுமே பார்த்துப் பார்த்து ரசித்துப் பூஜித்த தன் மனம் கவர்ந்த நாயகன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைப் பார்த்தவுடன் ஏ.வி.ரமணனுக்கு ஒரு புறம் மகிழ்ச்சி என்றாலும் மறுபுறம் மக்கள் திலகம் மனம் மகிழப் பாடமுடியுமா என்ற பயமும் ஏற்பட்டது.
பயத்துடனும், சந்தோஷத்துடனும் முதல் பாடலைப் பாட ஆரம்பிக்கிறார் ஏ.வி.ரமணன். வெற்றிகரமாக ஐந்தாவது பாடல் பாடிக் கொண்டிருக்கும் பொழுது ஜானகி அம்மையார் வாங்க போகலாம் என்று மக்கள் திலகத்தின் தோளைத் தொடுகிறார். மேடையில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருந்த மக்கள் திலகம் கொஞ்சம் இரு என்று ஜானகி அம்மையாரின் கைகளை மெதுவாகத் தட்டிவிட்டுக்கொண்டிருக்கிறார்.
இப்படி மக்கள் திலகம் மனம் லயித்து ஒரு மணி நேரம் அமர்ந்து கேட்கிறார். ஒரு மணி நேரத்திற்கும் பிறகு ஜானகி அம்மையார் இப்படியே விட்டா விடியவிடிய உட்கார்ந்துகிட்டு இருப்பீங்களே என்று குழந்தையை ஒரு தாய் கரிசனத்தோடு அழைத்துச் செல்வது போல் மக்கள்திலகத்தை அழைத்துச் செல்கிறார்.
அப்போது ஏ.வி.ரமணன் ஏக சந்தோஷத்தில் கண்ணீர் மல்க மக்கள் திலகத்தைப் பார்த்து கைகூப்பி வணங்குகிறார். பதிலுக்கு மக்கள் திலகமும் கைகூப்பி வணங்கிவிட்டு , கையசைத்துக் கொண்டே விடைபெறுகிறார்.
கச்சேரி முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த ஏ.வி.ரமணனுக்கு ராத்திரியெல்லாம் தூக்கம் பிடிக்கவில்லை. எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்து ஆசி பெற எப்பொழுது விடியும் என்று காத்திருந்த ரமணன், விடிந்தும் விடியாத கருக்கலிலேயே சைக்கிளை எடுத்துக் கொண்டு ய மாம்பலம் ஆற்காடு ரோடு வீட்டிற்கு செல்கிறார்.
அங்கே யாரும் இல்லை. வாட்சுமேன் மட்டுமே பின்பக்கம் நின்று கொண்டிருக்கிறார். அவரின் பார்வை படாவண்ணம் உள்ளே நுழைந்து விடுகிறார் ரமணன். சுற்றும் முற்றும் பார்வையை செலுத்திய போது அந்த அதிகாலைப் பொழுதில் இடதுபுற அறையில் இன்லேண்டு லெட்டரில் ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறார் மக்கள் திலகம்.
ஏ.வி.ரமணனைப் பார்த்தவுடன் ஆச்சரியப்பட்ட மக்கள் திலகம் உனக்குத்தாம்பா லெட்டர் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று அந்தக் காடித்தைக் காட்டுகிறார்.
அதற்குப் பிறகு ஏற்கனவே டேபிளில் பிரித்துப் போட்டிருந்த டேப்ரிக்கார்டரை சரிசெய்து கொண்டே அமைதியின் வெற்றி என்ற படத்தை நானே டைரக் ஷன் செய்ப் போகிறேன். எஸ்.எம்.சுப்பையாநாயுடு அவர்கள் தான் இசை. அந்தப் படத்துல எல்லா பாட்டையும் நீதான் பாடப்போகிறாய். பத்து நாள்கள் கழித்து வந்து பார். என்று சாதாரணமாக செல்கிறார். மக்கள் திலகம்.
இதைக் கேட்ட மாத்திரத்தில் கிறங்கிப் போன ஏ.வி.ரமணன் பத்துகாசு பிச்சை கேட்கப் போனவனுக்கு பத்து லட்சம் ரூபாய் பரிசு விழுந்த மயக்கத்தில் மிதந்து கொண்டே தன் வீடு வந்தடைகிறார்.
பத்து நாள் கழித்து சத்யா ஸ்டுடியோ சென்று அமைதியின் வெற்றி படத்தயாரிப்பாளர் உதயம் புரடக் ஷன்ஸ் ஆனந்தவிகடன் மணியன் பின்னாளில் நமது இதயம் பேசுகிறது நிறுவனர் மணியன் அவர்களைச் சந்திக்கிறார் ஏ.வி.ரமணன்.
தயாரிப்பாளரிடமும், அந்தப் படத்திற்கு பாடல்கள் அனைத்தையிம் பாடுவதற்கு ரமணன் வாய்பு பெற்றுவிட்ட நிலையில் மக்கள் திலகம் தி.மு.கவிலிருந்து நீக்கப்படுகிறார். எனவே அந்தப் படம் அதோடு நின்றுவிடுகிறது.
அதற்குப் பிறகு ஒன்பது வருடம் கழித்து ஏ.வி.எம். ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் ஒரு திருமணத்தில் ஏ.வி.ரமணனின் கச்சேரி நடந்து கொண்டிருக்கிறது. ஏழேகால் மணிக்கு முதல்வர் எம்.ஜி.ஆராக வருகிறார் மக்கள் திலகம்.
பாட்டு வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், மக்கள் திலகத்தைப் பார்த்த மகிழ்ச்சியில் உற்சாகமாகப் பாடுகிறார். ஏ.வி.ரமணன். அன்றும் ஒரு மணி நேரத்துக்கும் மேல் உட்கார்ந்து ரசித்துக் கொண்டிருந்த மக்கள் திலகம் ஒரு துண்டு சீட்டில் ஏதோ எழுதி மேடையில் இருந்த ரமணனை கீழே வரவழைத்து கட்டிப்பிடித்து அந்தச் சீட்டை ரமணனிடம் கொடுத்துவிட்டு விடைபெறுகிறார். அதில்
http://i46.tinypic.com/2h4f2us.jpg
அன்புத் தம்பிக்கு ஆசிகள் பல.
திரு தங்கவேலு அவர்களின் மகனுக்கு பெங்களூரில் திருமணம் நடந்து இன்று மாலை 8 மணி வரை இம்பீரியல் ஓட்டலில் வரவேற்பு நடைபெறுகிறது. எனது நிலையை புரிந்து கொள்வீர்கள் . புறப்பட வேண்டிய நிர்பந்தம். தவறாகக் கருதமாட்டீர்கள் என்பது எனது நம்பிக்கை. அன்புடன் எம்.ஜி.ராமச்சந்திரன் 29.10.1982 என்று எழுதப்பட்டுள்ளது.
ஒரு ரசிகனுக்கு ஒரு பக்தனுக்கு நாட்டை ஆளும் மன்னன் இவ்வளவு கரிசனம் காட்ட இயலுமா? என்று தேசிய விருது கிடைத்த மகிழ்ச்சியில் திளைக்கிறார் ஏ.வி.ரமணன்.
அதற்குப் பிறகு உதயம் புரடக்ஷன்ஸ் மணியன் எம்.ஏ.காஜா இயக்கத்தில் காதல் காதல் காதல் படம் தயாரிக்க போகும் செய்தியறிந்து மணியன் அவர்களைச் சந்தித்து இந்தப் படத்திலாவது தனக்கு பாட வாய்ப்பு வேண்டும் என்று ரமணன் கேட்கிறார். உடனே மணியன் மக்கள் திலகத்துடன் போனில் தொடர்பு கொண்டு ரமணன் வந்த செய்தியை சொல்கிறார். சில நொடிகளில் பேசி முடித்து விட்டு மணியன் ரமணனை கையைக் குலுக்கிக் கொண்டு நீ பாடத்தானே சான்ஸ் கேட்டு வந்தே ஆனா தலைவர் உன்னை இந்தப் படத்திலே கதாநாயகனாகவே போடச் சொல்லிட்டார். அது மட்டுமல்லாமல் பைட் டான்ஸ் எல்லாத்தையும் தோட்டத்துக்கே வந்து கத்துக்கச் சொல்லியிருக்கார். என்று சொல்ல ரமணனின் ஆனந்த நிலையை எப்படிச் சொல்வது . நடிகை லதா வீட்டில் பயிற்சியெல்லாம் முடிந்து படப்பிடிப்பு துவங்கி, படம் ரிலீஸும் ஆகிவிட்டது . படம் எதிர்பார்த்த வெற்றி அடையாததால் ரமணன் அதற்கு பிறகு மக்கள் திலகத்தைச் சந்திக்கவில்லை.
1987 டிசம்பர் முதல்வாரத்தில் நாகிரெட்டியின் பேத்தி திருமணம் விஜயசேஷ மகாலில் நடக்கிறது. அதிலும் ஏ.வி.ரமணனின்கச்சேரி ஏற்பாடு செய்யப்படுகிறது. எதிரிபாராமல் உடல் நிலை சரியில்லாத நிலையிலும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வருகிறார். வந்தவர் கடைசி வரிசையிலேயே நாகிரெட்டியுடன் அமர்ந்து கொள்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு மக்கள் திலகத்தை பார்த்த ரமணன் பயத்தில் அதோ அந்த பறவை போல பாடலை தப்புத் தப்பாக பாடுகிறார். அதையும் தெரிந்து கொண்ட மக்கள் திலகம் சிரித்துக் கொள்கிறார். 12பாட்டுக்கள் கேட்டு முடித்த மக்கள் திலகம் தன் இருக்கையை விட்டு எழுந்து நடந்து மேடைக்கு வருகிறார். ஏ.வி.ரமணனை கட்டிப்பிடித்து நாளைக்கு தோட்டத்துக்கு வா என்று சொல்லிவிட்டு பின்புற வாசல் வழியாக செல்கிறார். கச்சேரி முடிந்து அன்றிரவும் தூக்கம் பிடிக்காமல் சொர்க்கத்தில் மிதந்து கொண்டு எப்பொழுது விடியும் என்று காத்திருக்கிறார் ஏ.வி.ரமணன். விடிந்ததும் தனது துணைவியார் உமாரமணனையும் மகனையும் அழைத்துக் கொண்டு ராமவரம் தோட்டம் செல்கிறார் ரமணன். தன்னுடைய தனியறையில் படுத்துக் கொண்டே வார்த்தைவராத மழலையில் என்ன வேணும் கேளுங்க என்று வாய் மலர்கிறார் வள்ளல். பார்த்துப் பார்த்து பரவசப்பட்ட முகம் இன்று பச்சிளங்குழந்தை போல் தவித்துக் கொண்டிருந்ததை பார்த்த ரமணன் தம்பதியர் கண்ணீர் விட்டபடி நீங்க நல்லாருக்கும் பொழுதே நான் உங்ககிட்ட எதுவும் கேட்கலை. ஆனா நீங்க நடந்து வர பட்டுக்கம்பளம் விரிச்சு அழகு பார்த்தீங்க. அதனால் நீங்க நல்லா இருந்தாலே அதுவே எங்களுக்கு போதும் என்று சொல்லி விடைபெறுகிறார்கள் ஏ.வி.ரமணன் தம்பதியர். அன்று மக்கள் திலகம் எழுதிக் கொடுத்த துண்டுச்சீட்டுதான் இன்றும் அழகிய லேமினேசனில் பூஜை அறை முதல் ரமணனின் பாக்கெட் வரை குடிகொண்டிருக்கிறது. இதயம் பேசுகிறது 06.08.2000 இதழில் இருந்து
http://i48.tinypic.com/343gf1y.jpg