http://i1039.photobucket.com/albums/...psunofl34w.jpg
Printable View
http://i1028.photobucket.com/albums/...pskjs5arzo.jpg
"இன்றே இப்படம் கடைசி"-
உங்கள் படம் ஓடும்
திரையரங்கம்,
வாசலில்
விளம்பரம் வைக்கும்.
வருத்தப்படுவதில்லை
நாங்கள்.
"இன்று முதல்
வெற்றிப் பவனி" என
அடுத்த நாள்
விளம்பரம் வைக்கும்
அதே திரையரங்கில்,
அடுத்த படமும்
உங்கள் படம் தான்.
ஏப்ரல் 1 முதல் தமிழகமெங்கும் வெற்றிநடைபோட வருகிறார் நவீன தொழிலநுட்பத்தில் உருவான சிவகாமியின் செல்வன். சிவகாமியின் செல்வன் திரைப்படத்தின் வெற்றி ஒவ்வொரு சிவாஜி ரசிகனின் வெற்றி. உண்மையான சிவாஜி ரசிகரின் தயாரிப்பில் உருவாகியுள்ள சிவகாமியின் செல்வன் திரைப்படத்தினை வெற்றி பெற செய்ய களம் காண்போம், வெற்றி பெறுவோம்.
https://scontent.fdel1-1.fna.fbcdn.n...2c&oe=577E1CC3
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
திரியின் 17 ஆம் பாகத்தைத் துவக்கி அருமையான பதிவுகளை வழங்கிய, வழங்கிக்கொண்டு இருக்கின்ற திரு.செந்தில்வேல் அவர்களுக்கு நன்றி.
திரியின் 18 ஆம் பாகத்தை இனிதே துவக்கி, நடிகர்திலகத்தின் விசிறியாக தனது கவிக்காற்றால் நம்மைக் குளிர்வித்துக் கொண்டிருக்கும் திரு.ஆதவன் ரவி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
பொள்ளாச்சியில் 15கிமீ தொலைவில் உள்ள குக்கிராமம் நல்லிக்கவுண்டம்பாளையம்.
http://i1039.photobucket.com/albums/...ps8d3ctose.jpg
அன்புள்ள நண்பர்களுக்கு,
வணக்கம்,
நான் பொதுவாக அரசியல் பதிவுகளை இத்திரியில் பதிவிடுவதில்லை. அதேபோல் இவர்களுக்கு வாக்களியுங்கள் என்ற விவாதத்திலும் ஈடுபடுவதில்லை. சிலை, மணிமண்டபம் போன்றவற்றில் சர்ச்சைகள் வரும்போது மட்டுமே என்னுடைய மற்றும் நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவையின் நிலைப்பாட்டை பதிவிட்டிருக்கிறேன்.
தற்போது, தேர்தலில் சிவாஜி சமூகநலப்பேரவையின் நிலைப்பாடு என்ன என்பது போன்ற கேள்விகளை சில நண்பர்கள் தொலைபேசி மூலமும், தனிப்பட்ட தகவலாகவும் கேட்டிருக்கிறார்கள்.
அதனடிப்படையில் வருகிற சட்டசபைத் தேர்தலில் நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவையின் நிலைப்பாட்டைப் பதிவிடுகிறேன்.
http://i1234.photobucket.com/albums/...psdkwarvxb.jpg
http://i1234.photobucket.com/albums/...psajamd3hr.jpg
ஆதவன் ரவி,
உங்கள் கவிதைகளை ஒன்று விடாமல் ரசித்து வருகிறேன். தெரிந்த பாடு பொருள், சுவையான வார்த்தை ஜாலங்கள், ஓரிரண்டு சாமர்த்திய திருப்புகள், முக்கியமாக சிறிதே சிறிதாய் படு அழகு. வாழ்த்துக்கள்.
செந்தில்வேல்,
17 ஆம் பாக நாயகனாய் பரிமளித்து, பதினெட்டாவதிலும் அசத்தி கொண்டிருக்கிறீர்கள். தங்கள் பத்திரிகை தகவல்கள்,அபூர்வ புகைப்படங்கள், சிவாஜி பற்றிய வரலாறு/எழுத்து குறிப்புகள் என்று சுவாரஸ்யம். எனது நன்றி.
கார்த்திக்,
ஞாயிறும் திங்களும் படத்தில் வண்ணமயமாக ஜொலிக்கும் நமது அண்ணியை பார்த்துமா ,வெளிவர மனமில்லை??? கொள்ளை அழகு தேவிகா. மாதுரி தீட்சித் பிச்சை வாங்க வேண்டும்.
சாரதா,
இவ்வளவு உள்ளங்கள் வரவேற்று எதிர்பார்த்து ஏங்கி கிடக்கும் ,தங்கள் எழுத்துக்கள் எங்களுக்கு எப்போது பரிமாற படும். தங்களுக்கு மீள் பதிவு செய்தே என் கரங்கள் மரத்து போகின்றன. வெளியே வாருங்கள். புது பதிவை தந்து எங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுங்கள்.
நடிகர் திலகமும் அரசியலும் என்பது போய்..இப்போது சிவாஜி சிலையும் மணிமண்டபமும் அரசியலும் என்று ஒரு புதிய அத்தியாயம் இந்த தேர்தலில் தொடங்கிஉள்ளது.
நடிகர் திலகம் திரி நண்பர்கள் சற்று யோசித்து பார்த்தீர்களேயானால் ஒரு சில வருடத்திற்கு முன்பு இதே திரியில் சமூக நலபேரவை அரசியல் நிலைப்பாடு குறித்து நான் எழுதி இருந்தேன். அப்போது சில நண்பர்கள் எனது பதிவிற்கு கடுமையாக சாடியும் பதிவு செய்தார்கள். சமூக நலபேரவைக்கு அரசியல் சாயம் நான் பூச முயற்சிக்கிறேன் என்று !
அப்போது மற்றொரு விஷயம் நான் கூறினேன். அதாவது...நான் கூறுவது நடக்கும் நாளில் திரும்ப அதற்க்கு பதில் தருவேன் என்று !
நினைவிருக்கும் என்று நினைக்கிறன் அனைவருக்கும்...!
இன்று மேற்கொண்ட பதிவு எனது கணிப்பு சரியே என்கிற ரீதியில் அமைந்துள்ளது ~ என்னை குறை கூறிய கனவான்கள் இப்போது என்ன பதில் வைத்துள்ளார்கள் ? முகத்தை எங்கே வைத்து கொள்ளபோகிறார்கள் என்பது தெரியவில்லை, தெரியவும் விரும்பவில்லை ~
ஒவொரு அமைப்பு ஒரு கட்சியை ஆதரிப்பது அவர் அவர்கள் வருங்கால அரசியல் எண்ணங்கள், அரசியல் குறிக்கோளை பொறுத்த விஷயம் ! அது எனக்கு தேவை இல்லாதது !
சிவாஜி சமூக பேரவை இந்த நிலைபாடை எடுத்துள்ளது சற்று ஆச்சர்யம் கலந்த ஒரு விஷயம்.
அனைவரும் அரசியல் சார்பற்ற ஒரு அமைப்பு சிவாஜி சமூக நல பேரவை என்று நம்பியிருந்தார்கள் ..!
ஆனால்....ஐயஹோ ! ....அந்தோ பரிதாபம் !!!.
அன்றைய கட்டபொம்மன் வசனம் இன்று வரை சரியாகதான் உள்ளது ..."நல்லவர்கள் நினைப்பது ஒன்றுதான் நடப்பதில்லை இந்த தமிழ்நாட்டிலே ! "
திரியில் படிக்க வரும் பொதுவான மக்கள் அனைவரும் ஒரு விஷயத்தை நினைத்து குழப்பம் கொள்ளகூடாது என்பதற்காகவே இந்த பதிவு !
சிவாஜி சமூக நல பேரவை என்பது வேறு !
அகில இந்திய சிவாஜி மன்றம் என்கிற அமைப்பு வேறு..!
அகில இந்திய சிவாஜி மன்றம் மற்றும் அதில் இணைந்துள்ளவர்கள் திராவிட காங்கிரஸ் கட்சிகளை என்றுமே ஆதரிக்காது !
ஆக்கபூர்வமான ஒரு வேட்பாளருக்குதான் ஒவ்வொருவரும் அவர் அவர் விருப்பத்திற்கு இணங்க தம்முடைய வாக்கை பதிவு செய்வார்கள் !
சிவாஜி சமூக நல பேரவை திராவிட காங்கிரஸ் கட்சிகளை ஆதரிப்பதால் அனைத்து சிவாஜி அய்யா அவர்களின் ரசிகர்கள் இந்த இரண்டு கட்சிகளையும் ஆதரிக்க வேண்டும் என்றோ வேண்டாம் என்றோ கூறவில்லை.
உண்மையான சிவாஜி அய்யா பக்தர்களுக்கு திராவிட கட்சிகள் தம்முடைய தலைவனுக்கு செய்த துரோகம் பற்றி நன்றாக தெரியும்....அதே சமயம் காங்கிரஸ் கட்சி செய்த அவதூறு , துரோகம் பற்றியும் மிக நன்றாக தெரியும் !
ஒரு சிலை வைத்து நடிகர் திலகம் அவர்களுடைய ரசிகர்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது !
புதுவையில் திரு ரங்கசாமி அவர்கள் சிலை வைத்த பிறகு தான் இங்கு சிலை வைக்கப்பட்டது !
முதலில் சென்னையில் வைக்க கூட இல்லை !
ஆய்யோ ரங்கசாமி பெயர் எடுத்துவிடாரே....இதை செய்துவிட்டாரே முதலில் என்ற எண்ணத்தின் விளைவு தான் சென்னையில் ஒரு சிலை.
வைத்த சிலை உருப்படியாக GOVT முறைகளை பூரணமாக கூட செய்யவில்லை என்பது வருத்திலும் வருத்தம் !
கண்டவர்களும் CASE போடும் அளவிற்கு சட்டத்தில் ஓட்டையை வைத்து விட்டு சிலை வடித்தார்கள், அதை திருத்த கூட முயற்சி ஏற்படவில்லை...எடுக்கிறார்கள் என்றவுடன்...திராவிடமும் காங்கிரேசும் வாய் திறந்து கண்டனம் கூட எழுப்பவில்லை...!
இதனை அனைவரும் ஞாபகத்தில் வைத்துகொள்ளவேண்டுகிறேன் !
உப்பு சப்பு பெறாத விஷயத்த்ரிக்கு பெரிய அளவில் போராட்டம் நடத்தும் இந்த இரு கட்சிகளும் வாய் மூடி...என்னமோ சமந்தமே இல்லாமல் வேடிக்கை பார்த்தது
...இப்போது நமது வோட்டு வேண்டுமாம் ! வோட்டு ! கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் தேர்தலில் ஊறுகாய் நாம் என்ற நினைப்பு !
திராவிட காங்கிரஸ் கட்சிகளை நம்பி நட்டாற்றில் மூழ்கியது போதும் !
சிவாஜி சமூக நல பேரவை என்பது அகில இந்திய சிவாஜி ரசிகர் மன்றம் அல்ல ! பொதுவில் உள்ள மக்கள் தயவு செய்து குழம்பவேண்டாம் என்று கேட்டுகொள்ளபடுகிறார்கள் !
உங்கள் மனதிற்கு யார் நல்லது செய்தார்களோ அவர்களுக்கு வோட்டு அளியுங்கள் !
திமுக நடிகர் திலகத்தை என்னவெல்லாம் கூறினார்கள் எப்படி எல்லாம் அவமானபடுத்தினார்கள்....ஞாயமாக நடிகர் திலகம் அவர்களுக்கு கிடைக்க இருந்த தேசிய விருதை எப்படி துரோகம் செய்து நமக்கு கிடைக்காமல் செய்தார்கள் அதுவும் தொடர்ந்து மூன்று வருடம் .....என்பது உள்ளங்கை நெல்லிக்கனி...!
அதே போல...சிவாஜி அவர்கள் மக்கள் திலகத்துடன் இணைந்துவிட்டார் இனி அவர் படங்களுக்கு மேலும் நல்ல கூட்டம் வரும் என்று கூறியவர் கலைஞர் அவர்கள் ! இதை எல்லாம் உண்மையான பக்தர்கள் மறக்கவில்லை, மறக்கவும் மாட்டோம் !
காங்கிரஸ் கட்சியும் தந்து பங்கிற்கு என்னவெல்லாம் அட்டோழியம் நடிகர் திலகதிற்கு, காங்கிரஸ் மூழ்கிய சமயத்தில் மீட்டுத்த, கரைசேர்த்த கலைஞன் நடிகர் திலகத்திற்கு இழிச்சொல் பழிச்சொல் செய்தது என்பதும் நாங்கள் மறக்கவில்லை. மறக்கவும் மாட்டோம் !
சிவாஜி சமூக நலபேரவை திராவிட காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பது அவர்கள் விருப்பம் ....சமூக நலபேரவை என்கிற அரசியல் சார்புடைய அமைப்பு வேறு அனைத்திந்திய சிவாஜி ரசிகர் மன்றம் மற்றும் உண்மையான சிவாஜி ரசிகர்கள் நிலைப்பாது என்பது வேறு !
எங்களுக்கு திராவிட கட்சிகளும் தேவையில்லை....காங்கிரெஸ் கட்சிகளும் தேவை இல்லை ! இனியும் நாங்க ஏமாற தயாராக இல்லை..!
Rks
தெளிவு படுத்தியதற்கு நன்றி ரவி கிரண் சூர்யா அவர்களே.
RKS,
சிவாஜி பேரவை ஒன்றுதான் உருப்படியாக இயங்கும் ஒரு அமைப்பு. அவர்கள் எடுக்கும் முடிவுகள் சமயோசிதமாக,நடிகர்திலகம் பெயரை தூக்கி பிடிக்கும் என்ற அசையாத நம்பிக்கை எங்களுக்குண்டு. சந்திர சேகர் எந்த அரசியல் லாபமும் கருதி இந்த பணியை செய்யவில்லை.
உண்மையான,தன்மானமுள்ள ,கோடி கணக்கான சிவாஜி ரசிகர்கள், சிவாஜி சமூக நல பேரவையின் பின்னால். புரிந்து கொள்.
உனக்கு கலைஞர் வெறுப்பை காட்ட ஒரு சாக்கு தேவை படுவதால் உள்ளே நுழைந்து குட்டையை குழப்பாதே.
__________________________________________________ ___________________________
Gopal,
No personal exchanges please.
Regards
Murali
அந்தமான்காதலி பட அனுபவங்களைபற்றி நடிகர்திலகம்
எழுதிய தொடர் கட்டுரை.
ஆனந்தவிகடனில்
நடிகர்திலகம் எழுதிய
"திரைகடலோடி திரைப்படம் எடுத்தோம்"
தொடர் ஆரம்பம்...
http://oi68.tinypic.com/2w3cbiq.jpg
அண்ணன் ஒரு கோயில்(1977)
சென்னை நகர் வசூல்
19,93,368.25
நடிகர்திலகம் விஷயத்தை பொறுத்தவரை திரு சந்திரசேகரன் அவர்களின் முடிவுதான் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் மிகச்சரியான முடிவு என்பது என் தனிப்பட்ட கருத்து .
நடிகர்திலகத்தின் பதினெட்டாம் பகுதியை துவக்கியதிர்க்கு என் வாழ்த்துக்கள்..ஆதவன் ரவி இந்த பகுதியை துவக்கி வழி நடத்தி செல்வத்திற்கு வாழ்த்துக்கள்..ஆதவன் என்றால் சூரியன்..ரவி என்றாலும் சூரியன்..இந்த இரட்டை சூரியனுக்கு புரட்சித்தலைவரின் பக்தர்கள் சார்பில் என் வாழ்த்துக்கள்..எப்போதும்போல் இந்த திரிக்கு எனது பங்களிப்பு உண்டு..அன்புடன் முத்தையன் அம்மு..
http://i67.tinypic.com/18kivo.jpg
நன்றி.. திரு.முத்தையன் அம்மு
சார்.
இந்த திரியைப் பள்ளியாக்கி
படங்களைக் கொண்டே பாடம் எடுப்பவர் நீங்கள்.
உங்கள் மனசுக்குள் எழுப்பிய கோயிலில் மக்கள் திலகத்தை
தெய்வமாகப் பூஜிக்கிற நீங்கள்,
கலை தெய்வம் எங்கள் நடிகர்
திலகத்திற்கும் தனி சந்நிதி
வைத்திருப்பது மகிழ்வுக்குரியது மட்டுமல்ல..
எமது நன்றிகளுக்குமுரியது.
கடந்த திரிகளின் பக்கங்களைச்
சிறப்பித்த தங்கள் கைவண்ணம்
என் காலத்தில் எனக்கும் துணைநின்று சிறப்பிக்கும்
என்று நம்புகிறேன்.
உங்கள் நல்வாழ்த்துகளை
எப்போதும் விரும்புகிறேன்.
உங்களன்பின்
-ஆதவன் ரவி-
நாங்கள் போய்க்கொண்டிருந்த படகுக்கு எதிரே சுமார் 15அடி நீளமுள்ள "ராஜநாகம்"இருந்ததைப் பார்த்த நண்பர்கள்,பெரிய கலைமான் ஒன்று நீந்தி வருகிறது என்றார்கள்.இங்கேயே வேட்டை கிடைத்துவிட்டது என்று சப்தம் போட்டார்கள்.
அருகில் சென்று பார்த்ததும்தான் அது பெரிய ராஜநாகம் என்று தெரிந்தது.நான் படகை இன்னும் அருகில் செலுத்தச் சொன்னேன்.மற்றவர்கள்'அது படகின் மீது பாய்ந்து விடும்.பலரை விரைவாக கடிக்கும் சக்தி அதற்கு உண்டு.பக்கத்தில் போக வேண்டாம் என்று எச்சரித்தார்கள்.
என்னுடைய அசட்டுத்தைரியம்
அதற்கு செவி சாய்க்கவில்லை.விசைப்படகை அருகில் செலுத்தி அதை வட்டமிடச் சொன்னேன்.படகின் வேகத்தினால் எழுந்த அலையிலே அது சிக்கி எங்கள் படகின் மீது பாய முடியாமல் படமெடுத்துச் சீறிய அந்த அழகிய காட்சி என் வாழ்க்கையில் நான் பார்த்த கண் கொள்ளாக் காட்சிகளில் ஒன்று.
யார்?
எங்கே?
எப்போது?
அனைவருக்கும் வணக்கம்!
தேர்தல் அரசியல் பற்றிய விவாதங்களை, அவரவர் கருத்துகளை பதிவு செய்ய விரும்புவர் Current Affairs பகுதியில் அதற்குரிய திரியில் வைத்துக் கொள்ளலாம். நடிகர் திலகம் இருந்தபோது இருந்த அரசியலை பற்றி பேசுவது என்பது வேறு, இன்றைய அரசியல் சூழலில் அவரவர் விருப்பத்தை பற்றி விவாதிப்பது வேறு,
ஆகவே இன்றைய தேர்தல் அரசியல் சூழல் பற்றிய விவாதங்களை தவிர்த்து நடிகர் திலகத்தின் புகழ் பரப்பும் பணிக்கு மட்டும் இந்த திரியை பயன்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்