Quote:
காஃபி வித் அனு'வில் சின்னி ஜெயந்த், கோவை சரளா
First Published : 11 Jul 2009 12:46:54 AM IST
Last Updated :
விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான "காஃபி வித் அனு' நிகழ்ச்சிக்குக் கிடைத்த வரவேற்பையடுத்து அதன் இரண்டாம் பாகம் சிறப்பு விருந்தினர்களின் சந்திப்புடன் தொடர்கிறது.
இதில் திரையுலகம், அரசியல் மற்றும் பல்வேறு துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பங்கேற்று தங்கள் அனுபவங்களை சுவாரஸ்யமாகப் பகிர்ந்துகொள்கிறார்கள்.
அந்த வரிசையில் நடிகை கோவை சரளா மற்றும் நடிகர் சின்னி ஜெயந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று தங்கள் கலை உலக அனுபவங்களை அனுஹாசனுடன் பகிர்ந்துகொள்கிறார்கள். இருவரும் இணைந்து நடித்த படங்கள்; பணியாற்றிய அனுபவங்கள்; சினிமாவில் நகைச்சுவையின் முக்கியத்துவம் போன்றவற்றை நேயர்களுடன் பகிர்ந்துகொள்கிறார்கள். இந்த கலகலப்பான நிகழ்ச்சி, சனிக்கிழமை (ஜூன் 11) இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.