மனோன்மணீயம் சுந்தரனாரின் பாடல்.
வருபொருள் உரைக்கும் வல்லபம் பெறில் என்?
மண்ணிடை விண்ணிடை மறைந்த
பெரு ரகசியங்கள் யாவையும் உணரும்
பெருமையும் ஞானமும்பெறிலென்;
பருவதம் எடுத்துப் பந்தென ஆடும்
பத்தியும் சித்தியும் பெறிலென்
பரவனுகூல திருட்டியென் றுரைக்கும்
பண்புறும் அன்பிலை எனிலே.
இது மனோன்மணீயம் சுந்தரனாரின் பாடல். அன்பின் அகநிலை அல்லது அறவுள்ளம் என்ற தலைப்பில் வெளியிடப் பட்ட கவிதைகளில் இரண்டாம் பாடல். அன்பின் முதன்மையை வலியுறுத்துவதாகும்.
விளக்கம் தொடரும்
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை poem on workers
ஆசிய ஜோதி, உமர்கய்யாம் பாடல்கள் முதலியன அளித்து தமிழிலக்கியத்தை மேலும் வளப்படுத்திய கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்களின் ஓர் அழகிய பாடல். ஏழை எளிய மக்களையும் தொழிலாள உடன்பிறப்புக்களையும் உள்ளத்தில் கொண்டு அவர் பாடியது:
பாடு படுவோர்க்கே--- இந்தப்
பாரிடம் சொந்தமையா;
காடு திருத்தி நல்ல--- நாடு
காண்பது அவரல்லவோ
மனம் திரியாமல்---காலை
மாலை எப்பொழுதும்
குனிந்து வேலை--- செய்வோர்
கும்பி கொதிக்கலாமோ
கோடி கோடியாக---நீங்கள்
குவித்திடும் லாபம்
வாடும் எம்மக்கள்---உண்ணா
வயிற்றுச் சோறல்லவோ
வாழ வேண்டுமெனில்---தொழில்கள்
வளர வேண்டுமையா
ஏழை என்றொருவன்---உலகில்
இருக்க லாகாதையா ( பாடுபடுவோர்க்கே)
"