-
தற்போதை திரையுலகில் பல ஆண்டுகளாக
ஒரு நடைமுறை இருந்து வருகிறது.
ஒரு பெரிய நடிகரின் படம் வெளிவரும் போது,
அதற்கு போட்டியாக உள்ள மற்ற நடிகரின் படத்தை வெளியிடக் கூடாது என்பது தான் அந்த நடைமுறை.
... பல ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி அவர்களின் பேட்டையும், அஜித் அவர்களின் விஸ்வாசமும் வெளிவந்தது. அதுவும் தீபாவளி என்ற காரணத்தினால்.
வசந்தமாளிகையின் வெற்றி ஒன்றை உறுதிபடுத்துகிறது.
இனி, நடிகர்திலகத்தின் படம் டிஜிட்டலில் வெளிவரும் போது,
எந்த பெரிய நடிகரின் படத்தையும் வெளியிட தயாரிப்பாளர்கள் யோசிக்க வேண்டும்.
தமிழகமெங்கும் அரங்கம் அதிர
தனது 3 வது வாரத்தை தொடர்கிறது....
வசூல் மாளிகை மன்னிக்கவும்
வசந்தமாளிகை.
http://oi66.tinypic.com/n506xu.jpg
நன்றி Sndar rajan
-
-
விளம்பரம் தேடா தர்மம் *நம்* தலைவரின் புகழ் காக்கிறது,இனியும் 50 ஆண்டுகள் சென்றாலும் நம்மை போன்ற *பிரதிப்பலன்ப்பாரத ஒரு கூட்டம் அவர் புகழை பாடிக்கொண்டே இருக்கும்,உலகம் அழிந்தாலும்,தலைவர் சிவாஜியின் புகழை எவனாலும் அழிக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது.
நன்றி Nirmal sasi
-
எந்த நடிகனுக்கும் கிடைக்காது, நம்மைப் போன்ற இப்படி ஒரு ரசிகர் படை, சிவாஜி ரசிகர்கள் நாங்கள் ராணுவத்தை விட மன உறுதி படைத்தவர்கள்,
அவர் நம்மை விட்டுச் சென்று 18 ஆண்டுகள் ஆகியும், அண்ணன் சிவாஜி இல்லாமல் அதே பலத்துடன் முன்பை விட அதிக ரசனையுடன் ஒவ்வொரு கோணத்திலும் சிவாஜியை ரசிக்கிறோம்,
உலக சினிமா வரலாற்றில் உண்மையான, அதிகமான ரசிகர்கள் சிவாஜிக்கு மட்டுமே,
ஒரு நடிகன் (தலைவன்)இறந்து 18 ஆண்டுகள் ஆகியும், அவரது கோடானு கோடி ரசிகர்கள் அதே ராணுவ கட்டுக்கோப்புடன் உயிர் உள்ளவரை சிவாஜி ரசிகர்களாக இருப்பது கின்னஸில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும்,
ஆருயிர் அண்ணன் சிவாஜி நம்மோடு இல்லாவிட்டாலும், ஒவ்வொரு சிவாஜி ரசிகனும் சிவாஜியோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்,
நன்றி CI Joe
-
உங்களுக்கு கூடுதல் தகவலுக்கு ஒன்று சொல்கிறேன்.
இதே திருப்பூர் கஜலட்சுமி தியேட்டரில் வாழ்வே மாயம் படம் ரிலீஸானது. நொய்யல் ஆற்றங்கரையில் ஒருபுறம் இந்த தியேட்டர். எதிர் புறம் யுனிவர்சல் தியேட்டரில் வசந்த மாளிகை செகண்ட் ரிலீஸ்.
இரண்டு படமும் போட்டியிட்டு ஓடியது. வாழ்வே மாயமும் நல்ல படம்தான். ஆனால் அந்தப் படம் 28 நாள்கள் ஓடியது. வசந்த மாளிகை 30 நாள் ஓடியது. அந்த நேரத்தில் அது ஒரு ஆச்சரிய சாதனைதான்!
நன்றி Isai inban(வசந்தமாளிகை சாதனை பற்றி)
-
-
-
-
-