http://uploads.tapatalk-cdn.com/2016...21e88d0cb8.jpg
Printable View
இளையதிலகத்தின் பட வரிசை
42.சின்னத்தம்பி பெரியதம்பி
27.02.87
http://uploads.tapatalk-cdn.com/2016...05c771cb2d.jpg
பிரபு,சத்யராஜ்,காந்திமதி,நதியா,
விஜயன்,சுதாசந்திரன்,நிழல்கள் ரவி
இசை.இளையராஜா
இயக்கம் மணிவண்ணன்.
1.கடன் கொடுத்தவன் கழுத்தில் துண்டைப்போட சத்யராஜ் அதைப் பார்த்துவிட்டு துண்டைப் போட்டவனை புரட்டியெடுத்துவிட்டு,பின் அவன் ஏன் துண்டைப்போட்டான் என்று பிரபுவை கேட்க,கடன் குடுத்தவன் துண்டை போடாம கழுத்தில் மாலையையா போடுவான் என்று அந்த சமயத்திலும் அடிக்கும் நக்கல்
2.நதியாவை தவறாக பேசிய நிழல்கள் ரவியை அடிக்கும் போது பிரபு வர.,சத்யராஜ் என்னவென்று சொல்லாமல் பிரபுவையும் அடிக்கச் சொல்ல பிரபுவும் அடித்துவிட்டு "என்னை ஏண்டா அடிக்கச் சொன்ன?"
என்று பிரபு கேட்பது,
3.மாமன் பொண்ணுக்கு..ஒரு காதல் என்பது ,பாடல்களில் நடிப்பு
என்று வரிசையாக சொல்லிக் கொண்டே போகலாம்.
"சின்னத்தம்பி சிகரம் தொட்டதம்பி"
Chinna Thambi Periya Thambi: http://youtu.be/GkJKy7cfEwg
இளையதிலகத்தின் பட வரிசை
45.மேகம் கறுத்திருக்கு
06.03.87
http://uploads.tapatalk-cdn.com/2016...331294762d.jpg
பிரபு,ரேகா,ரகுவரன்
இசை.மனோஜ் கியான்
இயக்கம். ராம நாராயணன்
மசாலா படங்களுக்கிடையே ராமநாராயணன் இயக்கிய கதையம்சம் உள்ள படம்.முகத்தை கருமையாக்கி ,படிப்பற்றவராகவும்,
கிராமத்தானாகவும் பிரபு நடிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து நடித்த படம்.
பாடல்களில்,
வடுகபட்டி அய்யாத்துரை
அழகான புள்ளிமானே
இரண்டும் நன்று.
அழகான புள்ளிமானே சூப்பர் ஹிட்பாடல்.
46.சின்னப்பூவே மெல்லப்பபேசு
17.04.87
http://uploads.tapatalk-cdn.com/2016...705d11d10b.jpg
பிரபு,ராம்கி,சபீதா,நர்மதா,செந்தாமரை,சுதாசந்தி ரன்
இசை.S.A.ராஜ்குமார்
இயக்கம்.ராபர்ட் ராஜசேகரன்.
டேவிட் என்ற கதாபாத்திரம் பிரபுவுக்கு மட்டும் உரியது என்பது போல் நடித்திருப்பார் இளையதிலகம்.
அவரை தவிர வேறு யாருக்கும் கச்சிதமாக பொருந்தியிருக்காது என்பது போல் நன்றாக செய்திருப்பார்.
முதல் பார்ட்டான கல்லூரி காட்சிகளில் ஜாலியான கல்லூரி மாணவராக கலக்குபவர் இரண்டாம் பார்ட்டானஆட்டோ டிரைவர் வேடத்தில் மிரட்டியிருப்பார்.
செந்தாமரையை சவாலுக்கு இழுக்கும் காட்சியில் அவர் தோரணை,பேச்சு,கெத்தான நடிப்பில் அசரடிப்பார்.
பிரபுவின் நடனத்தில் இருக்கும் நளினத்தை ரசித்தவர்களுக்கு வேறு எவரின் நடனமும் (அந்த கால கட்டத்தில் நடித்த)ஈர்ப்பை உண்டாக்காது.
காலேஜில் டெஸ்ட் வச்சா பாடலில் ஆடும் நடனமும் அது போல்தான்.
பண்பட்ட நடிப்புக்கு சான்றாக ஏ புள்ள கருப்பாயி பாடலைச் சொல்லலாம்.
செம ஹிட் பாடல்.
அரிவாளைத் தூக்கிக் கொண்டு ஓடி வரும் அந்த கடைசி சண்டைக்காட்சியில் பிரமிப்பை உண்டாக்கி விடுவார்.
சாதாரணமாக வெளியாகி பெரும் பரபரப்பாக ஓடி பிரபுவுக்கு பெரும்பெயர் பெற்றுத்தந்த படம்.
Chinna Poove Mella Pesu: http://youtu.be/5maXFECWKsw
இளையதிலகத்தின் பட வரிசை
47.காவலன் அவன் கோவலன்
20.05.87
http://uploads.tapatalk-cdn.com/2016...1d018de2dc.jpg
பிரபு (இரு வேடங்கள்)
விசு,ரேகா,மாதுரி,
விசு தயாரித்து இயக்கிய படம்.சினிமா இயக்குனர் வேடம் பிரபுவுக்கு.
நல்ல குடும்பம்,மனைவி இருந்தும் வேறு தவறான பாதையில் சென்று அல்லாடும் சினிமா இயக்குனர் பிரபுவை, கிராமத்திலிருந்து பட்டணத்திற்கு வரும் பிரபு ,சினிமா இயக்குனருக்கு நல்வழி காட்டி திருத்தவதுதான் படத்தின் கரு.
படத்தில் மனோரமா ,கார்த்திக்கை வைத்து பிரபு இயக்குவது போல் காட்சிகள் இருக்கும்.
Kavalan Avan Kovalan: http://youtu.be/VYuQn3P42eY
இளையதிலகத்தின் பட வரிசை
48.வைராக்கியம்
15.08.87
பிரபு.,ராதா.ஜெய்சங்கர்,மனோரமா,
விஜயகுமாரி,,சௌகார் ஜானகி
இசை.மனோஜ்கியான்.
இயக்கம்.K.விஜயன்
"Vairagyam" | Jai Shankar, Manorama | Tamil Full …: http://youtu.be/wTijTI-SegM
பட டைட்டிலில் சௌகார் ஜானகி பெயர்தான் முதலில் வரும்.அடுத்ததாகதான் இளையதிலகம் பிரபு என்று டைட்டில் வரும்.
K.பாலாஜி பிரபுவை வைத்து தனியாக எடுத்த முதல்படம்.
இளையதிலகத்தின் பட வரிசை
49.பூ பூவா பூத்திருக்கு
18.09.87
http://uploads.tapatalk-cdn.com/2016...cc8f819b1e.jpg
பிரபு. சரிதா,அமலா,ராஜீவ்,சித்ரா லட்சுமணன்
இசை.T.ராஜேந்தர்.
இயக்கம் அழகப்பன்
படத்தில் சில காட்சிகள் அந்தமானில்
படமாக்கப்பட்டவை.
அந்தமான் காதலிக்கு பிறகு அந்தமானில் படம் பிடிக்கப்பட்ட தமிழ்படம் இது.
அந்தமான் காதலியில் காதலியை பிரிந்து வாழும் கதையமைப்பு.
இதில் காதலியை இழந்து வாடும் கதையமைப்பு.
பூப்பூத்த செடியக்காணோம் என்ற அருமையான பாடல் உண்டு.
Tamil Full Movie | Poo Poova Poothirukku Romanti…: http://youtu.be/ebHuWKP378c