-
ஒரு கேள்வி பதில் [1972]:.........
எம்.ஜி.ஆரின் விலாசத்தை அறியத் தருவீர்களா?
எம்.ஜி.ஆருக்கு விலாசமா?! அவருடைய விலாசம்தான் தமிழ் பேசுமிடமெல்லாம் பரந்து விரிந்து இருக்கிறதே!.......... Thanks........
எம்.ஜி.ஆர், தமிழ் நாடு, இந்தியா என்று எழுதினால் போதும்.
-
பேரறிஞர் அண்ணா !
************************
புரட்சி நடிகர் MGR ரைப்பாராட்டுவது என்னை நானே பாராட்டி கொள்வதற்கு சமம் உண்மை தானே !
முல்லைக்கு மனம் உண்டு என்பதை கூறவா வேண்டும் !!
எம் ஜி ஆர் நடிக மணிகளிலே வீரர் !
விவேகம் நிரம்பிய தோழர் !!
இல்லாதோரிடம் கருணை சுரக்கும் இயல்புடைய அறிவியக்கவாதி !
இரக்கவாதி !!
இது தானே பேரறிஞர் அண்ணா வின் சேதி !
அனல் M. அமரநாதன் B.Sc,........... Thanks.........
-
-
-
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ,
ஒரு பெண் இருக்கிறாள் என்பார்கள் !
ஆனால் ஒரு புகழ்மிக்க மனிதனின் வெற்றிக்கு பின்னால்
நிறைய அவமானங்கள்தான் இருக்கின்றன.
அந்த மனிதன் - “எம்.ஜி.ஆர்.”
“நாடோடி மன்னன்”
– இது எம்.ஜி.ஆர். தயாரித்து இயக்கிய முதல் படம்.
திரும்ப திரும்ப ஒரே காட்சியை படமாக்குகிறார் எம்.ஜி.ஆர்.
காரணம் , அந்த காட்சி சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக !
ஆனால் இதைக் கண்டு ,
ஆத்திரம் கொண்ட கதாநாயகி பானுமதி ,
படப்பிடிப்புத் தளத்தில் , பலர் முன்னிலையில் எம்.ஜி.ஆரை அழைக்கிறார் இப்படி:
“மிஸ்டர் ராமச்சந்திரன்!"
திகைப்புடன் திரும்பிப் பார்க்கிறார் எம்.ஜி.ஆர்.
பானுமதி படபடவென்று பொரிந்து தள்ளுகிறார் :
"ஒரே ஷாட்டை திரும்பத் திரும்ப எத்தனை முறை எடுப்பீங்க. இவ்வளவு நாளா சொல்ல வேண்டாம்னு இருந்தேன்.
நீங்க என்ன எடுக்கறீங்கன்னு உங்களுக்கே தெரியல. நீங்களே இந்தப் படத்தோட ப்ரொடியூசருங்கறதால, எல்லா ஆர்ட்டிஸ்டும் உங்களை அட்ஜெஸ்ட் பண்ணிட்டுப் போறாங்க. நீங்க அதை ஒங்களுக்கு சாதகமா எடுத்துக்காதீங்க . முதல்ல ஒழுங்கா கதையை முடிவு பண்ணுங்க.
இனிமேயாவது வேற டைரக்டரை போடுங்க. நான் தொடர்ந்து நடிச்சுத் தரேன். இன்னிக்கு எனக்கு மூடு போயிடுச்சு. நான் கிளம்பறேன். ஸாரி .”
அத்தனை பேர் மத்தியிலும் எம்.ஜி.ஆரை அவமானப்படுத்தி விட்டு அங்கிருந்து போய் விட்டார் பானுமதி .
ஆனால் , எம்.ஜி.ஆர். ஆத்திரம் அடையவில்லை ; அவமானம் கொள்ளவில்லை.
பானுமதி கதாபாத்திரத்தை பாதியிலேயே இறப்பது போல மாற்றி விட்டு , சரோஜா தேவியை வைத்து “நாடோடி மன்னன்” படத்தை தொடர்ந்து எடுத்து , அதை வெற்றிப் படமாகவும் ஆக்கிக் காட்டினார் எம்.ஜி.ஆர்.
சரி , பலர் முன்னிலையில் தன்னை பரிகாசம் செய்து அவமானப்படுத்திய பானுமதியை , பதிலுக்கு பதிலாக எப்படி பழி வாங்கினார் ?
எதற்கும் ஒரு காலம் வர வேண்டும் அல்லவா ?
25 ஆண்டுகள் காத்திருந்தார் எம்.ஜி.ஆர். !
அவர் தமிழக முதல்வராக ஆனபின் -
பானுமதியின் மீதுள்ள பகையை எப்படி தீர்த்துக் கொண்டார் எம்ஜிஆர் ?
1983 இல் “கலைமாமணி” விருதை பானுமதிக்கு வழங்கி கௌரவித்தார் எம்.ஜி.ஆர்.
அது மட்டுமா ?
தமிழக அரசு இசைக் கல்லூரியின் முதல்வராக பானுமதியை அமர வைத்தும் அழகு பார்த்தார்.
அவமானப்படுத்தியவருக்கு இத்தனை
வெகுமானங்களா ?
ஆச்சரியமாக இருக்கிறது!
இப்படி ஒரு தெய்வீக குணம் நமக்கு வருமா என்று சந்தேகமாக இருக்கிறது.
குணம் வருகிறதோ இல்லையோ ,
ஒரு குறள் நினைவுக்கு வருகிறது .
“ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.”
“தமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டித்தவர்க்குத் தண்டித்த அன்று மட்டுமே இன்பம்;
பொறுத்துக் கொண்டவர்க்கோ உலகம் அழியும் வரை புகழ் இருக்கும்.” .......... Thanks.........
-
இந்த வாரம் வெளியான மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். காவிய
திரைப்படங்கள் விபரம்...
----------------------------------------
சென்னை - பாலாஜி DTS.,
"தாய்க்கு தலை மகன்",
தினசரி 2 காட்சிகள்
மேட்னி/இரவு காட்சிகள்
மதுரை- ராம் dts., அரங்கில்
"நினைத்ததை முடிப்பவன் " டிஜிட்டல்
தினசரி 3 காட்சிகள்
கோவை- டிலைட் dts.,
உழைக்கும் கரங்கள்
தினசரி 2 காட்சிகள்............ Thanks.........
-
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை கடுமையாக சோ எதிர்த்த காலங்களும் உண்டு. மிகத் தீவிரமாக ஆதரித்த சமயங்களும் உண்டு. 1980ம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சி கலைக்கப்பட்ட பின் நடந்த தேர்த லில், எம்.ஜி.ஆர். மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதில் சோ தீவிரமாக இருந்தார்.
இப்போதும் கூட ‘ சோ அதிமுக ஆதரவாளர்’ என்று சில விமர்சனங்கள் இருந்தாலும், அந்தந்த சூழ் நிலைக்கு ஏற்ப, தன் மனதுக்கு நியாயம் என்று பட்டதை பட்டவர்த்தனமாக சொல்பவர் அவர். மக்கள் நலனுக்காக இலவச திட்டங்களை எம்.ஜி.ஆர். கொண்டு வந்தபோது கிண்டல் செய்தா லும் சில ஆண்டுகளுக்கு முன், ‘‘நமது நாடு இருக்கும் சூழலில் இலவச திட்டங்கள் தேவை என்பதை உணர்கிறேன்’’ என்று சோ கூறினார்.
எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுத்த சில தயாரிப்பாளர்கள் அவரது ‘கால்ஷீட்’ தாமதமாக கிடைக்கிறது என்றும் தொல்லைப்படுவ தாகவும் சோவிடம் குறைபட்டுள்ளனர்.
ஆனால்,
‘‘அப்படி என்னிடம் குறைபட்டவர்களே பின்னர் அடுத்த படத்தை எம்.ஜி.ஆரை வைத்தே தயாரித்தனர்’ என்று கூறும் சோ,
அதற்கு சொல்லும் காரணம்,
‘‘ எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுப்பது கஷ்டமானது. ஆனால், வேறு எந்த நடிகரையும் வைத்து படம் எடுப்பதை விட எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுப்பது லாபகரமானது.’’
‘விளம்பரத்துக்காகத்தான் எம்.ஜி.ஆர். பிறருக்கு உதவி செய்கிறார்’ என்ற விமர்சனங்களை சோ கடுமையாக மறுத்திருக்கிறார்.
‘‘விளம்பர நோக்கம் இல்லாமல் எம்.ஜி.ஆர். பிறருக்கு உதவு வதை பார்த்திருக்கிறேன்..."
திரைப்படத் துறையில் அவருக்கு எதிராக இயங்கிய வர்களுக்கு கூட அவர் உதவியிருக் கிறார்’’ என்று கூறும் சோ ஒருமுறை கேட்ட கேள்வி பொருள் பொதிந்தது.
சோவின் கேள்வி இது....
‘‘அப்படியே விளம்பரத்துக்கு என்று வைத்துக் கொண்டாலும் எத்தனை பேருக்கு விளம்பரத்துக்காகவாவது பிறருக்கு உதவும் மனம் இருக்கிறது?’’............ Thanks.. ..........
-
1976 ஜனவரி இறுதியில் அன்றைய தமிழக அரசு கலைக்கப்பட்ட நேரத்தில் மக்கள் திலகம் அவர்கள் மைசூர்
நகரில் '' நீதிக்கு தலை வணங்கு '' படபிடிப்பில் இருந்தார்.
02.02.1976 அன்று பெங்களுர் நகருக்கு வந்த மக்கள் திலகம் அவர்கள்
நேரமின்மையால் 03.02.1976 அன்று பெங்களுர் நகரில் அறிஞர் அண்ணா அவர்களின்
7வது நினைவு ஆண்டு அனுசரிக்க முடிவு செய்து அன்று இரவு
முடிவு செய்து பெங்களுர் நிர்வாகிகளுக்கு தகவல் கூறினார் .
இரவோடு இரவாக வாய் மொழி மூலமும் , மிதி வண்டி மூலமும் முக்கியமான மன்ற நண்பர்களுக்கு தகவல் தெரிவிக்க பட்டது .
03.02.1976 காலை 8மணியளவில் பெங்களூர் - சிவாஜி நகர்
லாவண்யா அரங்கின் அருகில் கிறிஸ்தவ ஆலய மைதானத்தில் அனுமதி பெற்று நினவு அஞ்சலி நிகழ்ச்சி
துவங்குவதற்கு முன் மக்கள் திலகம் சரியாக 8 மணிக்கு வந்து சேர்ந்தார் .
மக்கள் திலகத்தின் ரசிகர்களும் கழக தொண்டர்களும் யாருமே
எதிர் பார்க்காத வண்ணம் ஆயிரக்கணக்கில் குவிந்து நினைவு
நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மறக்க முடியாது
மைதானத்தில் மக்கள் வெள்ளம் . மரங்கள் மீதும் , கட்டடங்கள் மீதும் மக்கள் அமர்ந்திருந்தனர் .
மக்கள் திலகம் அவர்கள் சரியாக 3 நிமிடம் பேசிவிட்டு
பின்னர் 3 நிமிட மவுன அஞ்சலி செலுத்திய பின்னர்
படபிடிப்புக்கு திரும்பினார் ......... Thanks...
-
#எம்.ஜி.ஆர்.,--- ரசிகர்கள் ஏன் மற்ற நடிகர் படங்களை விரும்பறதில்ல?...
இதோ ஒரு உண்மையான ரசிகரின் பதில்...
உலகில் பிறக்கும் கோடிக்கணக்கான பேர்களில் ஒரு சிலரே வரலாற்றில் தங்கள் பெயரை பதித்துவிட்டுச் செல்கிறார்கள்.
அந்த வகையில் தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான மக்களால் இதயதெய்வம் என போற்றப்படுபவர் புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர்., திரை உலகிலும் மன்னர்.......சக்கரவர்த்தி...........
அரசியல் உலகிலும் சூப்பர் ஸ்டார். இது அவர் வாழ்ந்த காலத்தில்....
இன்று எம்ஜிஆரை முன்னாள் நடிகர், முன்னாள் முதல்வர் என போகிற போக்கில் சொல்லிவிட்டு போகமுடியுமா?
சில மாதங்களுக்கு முன்........
#"ரிக்சாக்காரன்", படம். 11 மாதத்தில் 4 வது முறை கோவை - ராயல் திரையரங்கில்..........
"இப்படி எங்களை அனாதையாக்கிட்டுப் போயிட்டியே தலைவா'"என்ற ஏக்கத்துடன் திரண்டு நிற்கிறார்கள்... எம்ஜிஆரின் ரத்தத்தின் ரத்தங்கள்.....
""எத்தனை படங்கள் வந்தாலும் பெட்டிக்குள் முடங்கிவிடும்.எம் தலைவர் படம் 48 வருசமா ஓடிக்கிட்டே இருக்கு பாத்தியா என ஒரு ரசிகர் பெருமிதத்தின் உச்சிக்கே செல்கிறார்.
தலைவர் படத்த தவிர வேற எந்த படமும் பாக்கறதில்லங்க.
பாத்த படத்தையே பாத்தாலும் மறுபடி புதுசா பாக்கறமாதறதான் இருக்கு.
அலுக்கவே இல்ல.
இந்த மாதிரி தலைவரின் எல்லாப் படங்களையும் புதுப்பிக்கணும்.
தலைவர் படத்தில் எல்லா விசயங்களையும் நிறைவு செய்துவிட்டார். இயல்பான தத்ரூபமாக நடிப்பை வெளிப்படுத்தியதால் 1971 ல் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார்.சண்டைக் காட்சிகளில் தனி முத்திரைப் பதித்தார். குறிப்பாக சுருள் பட்டைக் கத்தி சண்டைக் காட்சி தலைவருக்கு முன்பும் இன்றுவரையும் எவராலும் முறியடிக்க முடியாத சாதனை.ரிக்சாவில் ஒரு பெண்ணை வைத்துக் கொண்டு ஒற்றைக் கையாலே சிலம்பம் சுற்றி நடித்த ஸ்டைல்...ரிக்சாவை பின்னோக்கி ஓட்டி வட்டமடித்து வரும் ஸ்டைல்...இப்படி எண்ணற்ற சாகசங்களை நிகழ்த்தி காட்டியவர்.
பாடலில் பள்ளிக்கூடமே நடத்தியவர்.
கதை அமைப்பிலும் பண்பாடு கலாச்சாரம் காத்தவர். கடமை, கண்ணியம் ,கட்டுப்பாடு , காத்தவர்......
இன்னிக்கு இந்த மாதிரி யாரு காமிக்கறா? பெத்த தகப்பனையே கேவலமா பேசறானுக.
அத பாத்து நெசத்துலயும் அவனுக ரசிகனுக பண்றானுவ. சினிமாங்கறது படு கேவலமா போச்சு.சம்பாரிக்கவா தலைவர் சினிமாவுக்கு வந்தாரு?..
ஏதாவது நல்ல சேதி சொல்லனும்.சனங்களுக்கு நல்ல கருத்து சொல்லனும், நாலு பேருக்கு உதவனும் இதான் தலைவர்.
இதைத் தாண்டி வேறொரு அதிசயத்தைக் காட்டும் ஒரு நடிகர் உண்டென்றால் சொல்லுங்கள்...நான் அவருக்கு ரசிகராகிறேன்' என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
அவருக்கு ஈடாக எந்த நடிகரை காட்டுவது??
மக்களுக்கு நல்ல கருத்துள்ள படம் எங்க போய் தேடுவது?
பதில் எங்கிட்ட இல்லாததால் படத்தை பார்க்க ஆரம்பித்தேன்.
ரசிகர்களை எம்ஜிஆர் எவ்வளவு ஆழமாக புரிந்து வைத்திருந்தாரோ.
ரசிகர்களும் அதே மாதிரி அவரை புரிந்து கொண்டுள்ளனர்..
இது போன்ற உண்மையான நேசமுள்ள ரசிகர்கள் இருக்கும் வரை எம்ஜிஆரின் புகழ் மங்காது மறையாது.....
மீண்டும் அடுத்த பதிவில்........ Thanks..........
-