கோபால் சார்
புராண படத்தை, கடவுளின் வெளிக்காட்டல்களை சராசரி மனித குணங்களின் இயல்புகளுடன் இணைத்து மேற்கோள் காட்டி விவரித்திருப்பது பிரமிப்பான ஆய்வு.
தங்களின் பாராட்டிற்கும் நன்றி.
Printable View
கோபால் சார்
புராண படத்தை, கடவுளின் வெளிக்காட்டல்களை சராசரி மனித குணங்களின் இயல்புகளுடன் இணைத்து மேற்கோள் காட்டி விவரித்திருப்பது பிரமிப்பான ஆய்வு.
தங்களின் பாராட்டிற்கும் நன்றி.
( 37 )
நடிகர் திலகத்தின் திறமை
வெளிப்பாடுகள், அழகான
ஆச்சரியத்தை உண்டு
பண்ணக் கூடியவை...
அறிமுகமே இல்லாத குழந்தை
பேருந்தின் முன்னிருக்கையில்
இருந்து சிரித்து விளையாடுவது போல.
அந்த ஆச்சரியத்துக்கு
உதாரணம் இது-
நக்கீரனோடு வாதிடுபவர்,
தலையைப் பக்கவாட்டில்
திருப்பிக் கொண்டு விறைப்பாக
நடப்பார். பார்வை வேறு
புறமிருக்க, நடை மட்டும் நூல்
பிடித்தாற்போல் ஒரே நேர்கோட்டில் இருக்கும்.
( 38 )
நக்கீரனையும், அவரது தமிழ்ப்
பற்றையும் சோதித்து முடித்த
பிற்பாடு, தன்னை இறையென்று தெரியப்படுத்தி,
பொற்றாமரைக் குளத்தின்
முதல் படியில் நின்று கொண்டு,
எட்டுத் திக்கும் எதிரொலிக்க
ஒரு சிரிப்பு சிரிப்பார்.
அப்படியொரு சிரிப்பை, நடிகர்
திலகம் தவிர வேறொருவர்
சிரிக்க முடியுமென்றால்..
அது, அந்த சிவனாகத்தான்
இருக்கும்.
( 39 )
"மூக்குக் கண்ணாடியை எங்கே
எடுத்து வச்சே?" என்று
பெண்டாட்டியைக் கோபிக்கும்
புருஷன்மார்கள், கோபமாக
இருக்கும் போது முகம் பார்க்கும் கண்ணாடியில்
பார்த்துக் கொண்டால்,அதற்கப்புறம் கோபப்படவே
மாட்டார்கள்.
கோபத்தில், எந்த முகமும்
அழகாயிருப்பதில்லை.
ஆனால், இதில் தகப்பன் வீடு
செல்ல அனுமதி கோரும்
மனைவியை வெறுத்து,
கோபமாக "போ" என்கிறார்...
அத்தனை அழகு.
அது சரி...
இது- கடவுளின் கோபமல்லவா?
( 40 )
தனது சொல் மீறி தகப்பனின்
யாகத்திற்குப் போய் வந்த
மனைவி மேல் கோபமாகி,
கோபம் பெரிதாகி, வாக்குவாதமாகி,
சண்டையாகி...
"நீயா இல்லை நானா?" என்கிற
அளவுக்குப் போய் விட..
மனைவி சக்தியை அழிக்க,
தனது சக்தியையெல்லாம்
உள்ளிருந்து வெளிக் கொணர
வேண்டிய காட்சி.
தொழில் நுட்பக் கலைஞர்கள்
பேசப்பட வேண்டிய காட்சி.
அந்தப் புகழையும் நம்மவர்
தட்டிக் கொண்டு போகிறார்.
உள்ளிருந்து சக்தியை வெளிக்
கொணர்வதற்கான அவரது
பாவனைகள்...
அப்பப்பா...
அந்த வாய் திறப்பு.
உடல் குறுக்கி, வயிற்றை
உட்குழிக்கும் பாங்கு.
கோபம் விலகாத, பெரிதாகும்
கண்கள்...
என்னதான் ஆணும், பெண்ணும்
சமமென்று அந்தக் காட்சி
முடிந்தாலும், என்னைக் கேட்டால் சொல்வேன்...
சிவாஜிதான் சிவனென்றால்..
சிவம்தான் பெரிது.
Thunderous & Bold Speech by Mr Cheran at Thiruvilayadal Function.
தருமி...(சொன்னது) பாட்டெழுதிப் பேர் வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள்.. குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள். (சொல்லாமல் விட்டது).. உபத்திரவம் செய்து உருப்படாமல் போக வைக்கவென்றே குறை கூறி பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்...
திரு கோபால் அவர்களுக்கு
மிக்க நன்றி உங்கள் பாராட்டிற்கு...!
என்னிடம் உள்ளது...நான் பார்ப்பது...கேட்பது ...அறிவது...இவை அனைத்தையும் தான் பகிர்கிறேன்..!
தாங்கள் ராஜ ராஜ சோழன் திரைப்படத்தின் 2வது வாரம் முடிவில் 25,00,000 ( இருபத்தி ஐந்து லட்சம் ருபாய் வசூல் ) விளம்பரம் பார்த்தீர்களா ?
திரு செந்தில்வேல் அவர்கள் பதிவு செய்துள்ளார் !
சரியாக போகவில்லை...வசூல் இல்லை என்று பறைசாற்றிய, சாற்றப்பட்ட மாயா பிம்பங்கள் ஒரு வழியாக உடைந்தது !
இறைவனுக்கும் ....திரு செந்தில்வேல் அவர்கள் முயற்சிக்கும் நன்றி !
Rks