-
வணக்கம் !
ஆர்வமாய் எழுதிய என் வலக்கரத்துடன் மறுகரமும் இணைத்து, மனங்குவித்து வணங்குகிறேன்... திரி சார்ந்த நல்லோர்கள் யாவரையும்.
சென்ற வருடம் நான் துவக்கிய நம் நடிகர் திலகம்
திரி பாகம் -18 இனிதே நிறைவாகியிருக்கிறது.
துடிப்பும், வேகமுமாய் அய்யனின் புகழ் வளர்க்கும்
அன்புக்குரிய கனடா திரு. சிவா அவர்களால் திரியின் பாகம் -19 அற்புதமாய் ஆரம்பமாகியிருக்கிறது.
இடைவெளியே விடாமல் தொடர்ந்துழைத்து கலை வளர்த்த அய்யனுக்கான அடுத்த திரியும்
இடைவெளியே இல்லாமல் வேகப்பட்டிருக்கின்றது.
நெகிழ்வான இத்தருணமே நான் நன்றி சொல்ல
ஏற்ற தருணம்.
அய்யனின் நடிப்பில் வந்த அத்தனை காவியங்களுமே ரசிகர்களுக்கு அமிர்தம் என்றாலும், ஒவ்வொரு ரசிகனுக்கும் ஏதாவது ஒரு படம் மிகப் பிடித்ததாயிருக்கும்.. எனக்கு "இரு மலர்கள்" போல.
நெய்வேலியாருக்கு " ஞான ஒளி" போல.
ராகவேந்திரா சாருக்கு " சுமதி என் சுந்தரி" போல.
இப்படி அதீதமாய்ப் பிடித்துப் போவதற்கு சொல்லத் தெரியாமல் ஆயிரம் காரணங்கள் இருக்கும்.
அப்படித்தான் எனக்கு திரியின் பாகம்- 18 மிகவும்
பிடித்துப் போனது.
யாரேனும் " இரு மலர்கள்" பற்றி சிலாகித்து எழுதும் போது, " என் படம், என்படம்" என்று உள்ளே ஒரு சந்தோஷம் ஓடுமே..? அது போல, திரியில் நல்ல நல்ல பதிவுகளை திரியின் முன்னோடிகள்
இடும் போதெல்லாம் " என் திரி, என் திரி" என்றொரு சந்தோஷம் என்னுள் பரவியது உண்மை.
திரி எண் 18 எனக்குத் தந்த கௌரவமும், பரவசமும், உயரங்களும் மறத்தற்கியலாதவை.
நன்றிகளுக்குரிய திரியின் நெறியாளர் முரளி சார் எனக்களித்த பொன்னான வாய்ப்பிற்கான என்
புல்லரிப்புகள் 18 ல் தான் ஒட்டிக் கிடக்கின்றன.
" திரியின் சூப்பர் ஸ்டார்", "கவித் திலகம்" என்று
அவர் மனமாரச் சூட்டிய மகுடங்கள் 18 ல் தான்.
எல்லோருக்கும் நெற்றிக் கண் காட்டும் கோபால் சார் என் கண்ணில் ஆனந்த நீர் கொட்ட வைத்த நிகழ்வுகள் 18 ல் தான். " உன்னை என்ன சொல்லிப் பாராட்ட?" என்று அவர் வார்த்தைகள் தேடிய வியப்புகள் 18 ல் தான்.
" அவரிடம் இல்லாத தமிழ்..
உதட்டளவில் பேசாத தமிழ்!
அவரிடம் உள்ள தமிழ்
உயிரோடு கலந்த தமிழ்!"
- என்று ராகவேந்திரா சார் என்னைக் குறித்து
எழுதிய தமிழ் என்னை அழ வைத்தது.. 18 ல் தான்.
இரு மலர்களில் திடீர்ப் பரீட்சை வைத்த நெய்வேலியார் நான் எழுதித் தேறியதை ஆர்வமாய் அறிவித்ததும், என்னை வாழ்த்தியதும்
18 ல் தான்.
பழைய திரிகள் கொண்டாடும் சாரதா என்கிற எழுத்தரசி பண்போடு என்னை வாழ்த்திய நெகிழ்வும் 18 ல் தான்.
" உங்கள் கவிதைகளைப் படித்தால் நடிகர் திலகத்தோடு தினமும் கலந்துரையாடும் உணர்வு ஏற்படுகிறது" என்று எழுதி அன்பின்
திரு. K. சந்திரசேகரன் அவர்கள் என்னை மகிழ்வில் திக்குமுக்காடச் செய்ததும் 18 ல் தான்.
சரியான தருணங்களில் சரியான வார்த்தைகளால்
என்னைப் பாராட்டிய நண்பர் திரு. செந்தில்வேல்
அவர்கள் எனக்களித்த மகிழ்வெல்லாம் 18 ல் தான்.
என் எழுத்துகளில் மிக வியந்து திரு. ஆதிராம் அவர்கள் எழுதியதால் வந்த சந்தோஷம் 18 ல் தான்.
இன்னும் இதில் நான் குறிப்பிடாத திரி சார்ந்த அத்தனை நல்லியதங்களுக்கும் நான் அனுப்பிய நன்றிகள் 18 ல்தான்.
என் பகவானைத் தரிசிக்க நான் பயபக்தியோடு
பாதம் பதித்தது 18 ல் தான்.
நெஞ்சள்ளும் அய்யனின் படங்களை அள்ளித்
தந்த அமரர் முத்தையன் அம்மு அவர்களுக்கான
எனது அஞ்சலி 18 ல் தான்.
என் பதினெட்டை அர்த்தமுள்ளதாய், அழகானதாய், அருமையானதாய் மாற்றித் தந்த
நல்லவர்களுக்கான என் நன்றி என்றென்றும்
இருக்கும்.
அந்த நன்றிக்குரியவர்களின் ஆத்மார்த்த பங்களிப்பில் திரியின் பாகம் பத்தொன்பதும் சிறக்கும்.
- நன்றிகளுடன்-
ஆதவன் ரவி.
-
மன்னிப்புக் கேட்பது அவசியமென்றால், அதை நானும்தான் கேட்க வேண்டும் முரளி சார்.
திரியின் சோர்வு தகர்க்கும் அதிவேக அற்புதப் பதிவுகளை சிவா சாரும், கோபால் சாரும், நண்பர்
செந்தில்வேல் அவர்களும் தந்தது போல் என்னால்
தரவே முடியவில்லை என்கிற வருத்தத்தோடு
நானும்தான் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
மன்னிப்புக் கேட்கிறேன்.
-
-
-
இது அரசியல் பதிவு அல்ல யார் திறமையையும் குறைத்து மதிப்பிடும் பதிவும் அல்ல . முழுக்க முழுக்க நடிகர் திலகம் பற்றியதே.
சில நண்பர்கள் பராசக்தி படத்தின் வசனங்கள் தான் சிவாஜியின் உயர்விற்கு காரணம் என்று மீண்டும் மீண்டும் சொல்லியும் எழதியும் வருகிறார்கள். அவர்கள் சொல்லி விட்டு போகட்டும் . நான் அதை வன்மையாக மறுக்கிறேன்.
பல்வேறு திறமையானவர்களின் வசனங்களும்சி வாஜி பேசி இருக்கிறார். நடிகர் திலகத்தின் உச்சரிப்பு ஏற்ற இறக்கம் மொழி ஆளுமை உடல் மொழி ஆகியவைதான் வசனங்களுக்கு மெருகூட்டியது... என்பது என் வாதம்.
வீரபாண்டிய கட்டபொம்மன் வசனம்
நீ முந்திண்டா நோக்கு னா முந்திண்டா நேக்கு வியட்நாம் வீடு வசனம்
வெதை நான் போட்டது இதெல்லாம் பெருமையா தேவர்மகன் வசனம்
நான் அரசியல் தெரியாதவனா - ராமன் எத்தனை ராமன் வசனம்
திருவிளையாடல் வசனம்
அங்கே ஒரு விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருக்கும் - பாசமலர் வசனம்
பாரதி போய்டியா கப்பலோட்டிய தமிழன் வசனம்
இன்னும் சொல்லிகொண்டே போகலாம் .
யார் வச னம் எழுதினாலும் அதை உள்வாங்கி தனக்கே உரித்தான பாணியில் அதே மெருகேற்றும் ரசவாதம் தெரிந்தே ஒரே கலைஞா நமது சிவாஜிதான்.
நண்பர்களுக்கு ஒரே ஒரு கேள்வி நீங்கள் பெருமையாக பேசும் வசனகர்த்தாக்களின் வசனம் பிற நடிகர்கள் பேசி எடுபட்டிருக்கிறதா. .
எங்கள் திலகத்தின் உயர்வு தன்தனி திறமையினால் மட்டுமே என்று உறுதியாக கூறுகிறேன்.
.................................................. ............
சில பின்னூட்டங்கள்
கலைஞர் வசனத்தை யாரெல்லாமோ பேசி நடித்தார்கள் அ த்தனை பேரும் நடிகர் திலகமாகி விட்டார்களா? சிவாஜி கடவுளின் படைப்பு இனி எவரும் அவர் போல் பிறக்க முடியாது
........
பேச்சு இல்லாமல் நடிப்பு மட்டும் கொண்ட வெற்றி படம் தந்த வரலாறும் நடிகர் திலகத்திற்கு உண்டு
..............
நடிகர் திலகம் போல் வசனம் தெளிவாக பேசுவதில் எஸ்.எஸ்.ஆர். ஒருவர்..ஆனால் அவரிடம் உணர்ச்சி, முகபாவம், மாடுலேசன் ஆகியவை சரியாக இருக்காது..அது நடிகர் திலகத்தின் தனிச் சிறப்பு..அது அவருக்கு இயற்கையில் அமைந்தது..
...........................
அந்த வசனங்களை பிறர் பேசுவதுபோல் கற்பனை செய்யங்கள். உண்மை புரியம். கலைஞர் வசனம் நன்று. ஆனால் அதை சிவாஜி பேசியதால்தான் மிக நன்று. அந்த வசனங்களுக்கு உயிர் கொடுத்ததே சிவாஜிதான்.
..................
(முகநூலில் இருந்து)
-
திரை உலக முடிசூடா மன்னனின் யூன் மாத வெளியீடுகள்
1) 1 தங்கப்பதக்கம் 1974
2) 3 மனோகரா (தெலுங்கு) 1954
3) 3 மனோகரா (ஹிந்தி) 1954
4) 7 குலமகள் ராதை 1963
5) 7 என் தம்பி 1968
6) 12 ஆண்டவன் கட்டளை 1964
7) 14 குருதட்சணை 1969
8) 14 ரத்தபாசம் 1980
9) 15 பொன்னூஞ்சல் 1973
10)16 பாலாடை 1967
11) 16 சந்திப்பு 1983
12) 25 படிக்காத மேதை 1960
13) 25 உத்தமன் 1976
14) 27 அஞ்சல் பெட்டி 520 1969
15) 27 எதிரொலி 1970
16) 29 அமரதீபம் 1956
17) 29 தங்கமலை ரகசியம் 1957
18)30 சிம்மசொப்பனம் 1984
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...68&oe=59B05ACC
http://i58.tinypic.com/2a0feqd.jpg
http://i1110.photobucket.com/albums/...andhippu-1.jpg
-
-
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
மதுரையில் நடிகர்திலகத்தின் ராஜபாரட் ரங்கதுரை சரித்திரம் காணா சாதனையாக 3வது வாரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இன்று 04.06....2017 ஞாயிறு மாலை ரசிகர்கள் சிறப்புக் காட்சி மதுரை மீனாட்சிபாரடைஸ் திரையரங்கில், ரசிகர்களின் கோலாகலத்துடன் நடைபெறுகிறது.
மதுரையை சேர்ந்தவர்கள் மட்டுமன்றி மதுரையைச் சுற்றியுள்ள அனைத்து அன்பு இதயங்களும் தவறாமல் இன்று மாலை நடைபெறும் ரசிகர்கள் சிறப்புக் காட்சிக்கு வருகை தந்து படத்தின் வெற்றிக்கு வித்திட்டு, வசூல் சாதனையில் என்றும் நமது நடிகர்திலகம் தான் என்பதை நிரூபிப்போம்.
மதுரை என்றும் சிவாஜி கோட்டை என்பதை உலகிற்கு உணர்த்துவோம்.
மாலை தியேட்டரில் சந்திப்போம் இதயங்களே....
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...77&oe=59DC5997
(முகநூலில் இருந்து)
-
-