மனிதம் காணாமல் போய்விட்டதாம்
தண்டோராக்காரன் அறிவித்தான்
தேடிக்கண்டுபிடிக்க வாருங்கள்
கண்ணில் கருணை காட்டிப் பாருங்கள்
வார்த்தையில் இனிமை கூட்டிப் பேசுங்கள்
சட்டென்று இளகி உருகப் பழகுங்கள்
மாயமாய் மறைந்து போன மனிதம்
முன்னால் வந்து நின்று சிரிக்காதோ
Printable View
மனிதம் காணாமல் போய்விட்டதாம்
தண்டோராக்காரன் அறிவித்தான்
தேடிக்கண்டுபிடிக்க வாருங்கள்
கண்ணில் கருணை காட்டிப் பாருங்கள்
வார்த்தையில் இனிமை கூட்டிப் பேசுங்கள்
சட்டென்று இளகி உருகப் பழகுங்கள்
மாயமாய் மறைந்து போன மனிதம்
முன்னால் வந்து நின்று சிரிக்காதோ
சிரிக்காதோ இந்தப் பெண்..
லட்சணமான முகம்
பக்கத்து ஃப்ளாட் புதுக் குடித்தனம்
முப்பது செகண்ட் லிப்டிலும் சரி
எதிரில் பார்த்தாலும் சரி
ம்ஹூம்
ஒரு பதில் தலையாட்டல்
பதில் புன்முறுவல்..
சென்ற நாட்களில் வந்த தகவல்
அவள் தனியாம்
புருஷன் விவாகரத்தாம்
ஏதோ ஸகூல் டீச்சராம்..
ட்யூஷன் அண்ட் குறைந்த சம்பளம்
என ஓடுகிறதாம் வாழ்க்கை..
பக்கத்து க்ராசரி ஸ்டோர் காரன்
சொன்னதைக் கேட்டதும்
பாவமாய்த்தான் இருந்தது..
இன்னொன்றும் ..
மன சந்தோஷத்தில்
தான் பூக்கும் சிரிப்பூ..
சிரிப்பூ
சிதறும் மத்தாப்பூ
தீபாவளி திருவிழாயிது
மறுபடி வருவதற்கு
வருடம் ஒன்றாகுமே
வருத்தம்தான் வருகுதே
வருகுதே கண்ணனவன் வருகையினைக் காணாமல்
..வாடிய கண்களிலே கண்ணீரின் வெள்ளோட்டம்
பெருகுதே மனத்தினிலே துன்பவலை தானெழுந்து
..பெண்ணவள் பெருமூச்சாய் விட்டுவிட, மெழுகாட்டம்
உருகுதே உணர்வினிலே தானெழும்பும் நினைவலைகள்,
..ஊர்வலம் போலவங்கே முன்பின்னாய் தேராட்டம்
அரும்பிட அவள்மன்னன் அங்குவந்தால் இப்பாவை
..ஆடிட மாட்டாளோ பெருந்தோகை மயிலாட்டம்..
மயிலாட்டம் ஒயிலாட்டம் போலொரு ஆட்டம்
ஆடியதின்றதிகாலை சென்னை வானம்
ஆண்டவனின் உற்சாக ஊழித்தாண்டவமோ
இடி மின்னல் மழை அதன் நட்டுவாங்கமோ
நட்டுவாங்கமோ எனக் கேட்டால்
ஆம் எனத் தான் சொல்லவேண்டும்..
எதிர்ஃப்ளாட்
புதுக்குடித்தனம்
புதுக் கல்யாணம் போல
மெஹந்தி இன்னும் அழியவில்லை
நன்னாத் தான் இருந்தாள்
இருப்பினும்
எப்போதும் முகம் சுருங்குவதும்
எதற்கெடுத்தாலும் கோப விழிகள்
காட்டுவதும்
அவன் அடங்கிப்போவதும்
கொஞ்சம் நேரில் போகும் போதும்
கொஞ்சம் கார்பார்க்கிங்கிலும்
கொஞ்சம் அடுத்த ஃப்ளாட் மாமியாலும்
கிடைத்த தகவல்கள்
இன்னும் பேசியதில்லை..
என்ன வேண்டியதிருக்கிறது
சமர்த்தாய் குடித்தனம் பண்ண வேண்டாமோ
புள்ளையாண்டான் லட்சணம் தான்..
ஓமான் ஏரில் வேலை போல
வீட்டுவாசலில் ஸ்டிக்கர்..
ஒரு லிஃப்ட் சந்திப்பில்
தனியாய்க் கணவன் மாட்ட
புன்னகை பரிமாறிக் கொண்டு
எப்படி இருக்காங்க உங்க வைஃப்
அவஸ்யம் வீட்டுக்கு வரணும் நீங்க
கொஞ்ச நாள் போட்டும் ஆண்ட்டி
என்னோட அக்கா பொண் தான்
நான் ஏஜ் டிஃபரன்ஸ் ஜாஸ்தின்னு
சொன்னாலும் அம்மா கேட்கலை
சரியாய்டும் குழந்தைத் தனம்..
இப்பவந்தா ஏதாவது சுருக்னு சொல்லிடுவா
யாரையாவது..ஸோ…
சிரித்தேன்
இதானா..
நோப்ராப்ளம்ப்பா..
அப்படிஎல்லாம் ஃபீல் பண்ணாதே
ஒரு நாள்
அழைச்சுண்டு வா…
குழந்தையை…
குழந்தையைப் பார்த்துக்கொள் பத்திரமாய்
குறைந்துவிடும் உன் பாரங்கள் விசாரங்கள்
கண் விரிய பார்த்திடவேண்டும் அதிசயமாய்
கைகொட்டி ரசிக்கவேண்டும் ஒவ்வொன்றையும்
களித்திட வேண்டும் சின்ன சின்ன சாதனைக்கும்
உன் உள்மனமெனும் குழந்தையை காப்பாற்று
காப்பாற்று கடவுளே !எனக்கு கருணை காட்டு
கேசவா மாதவா கோவிந்தா உன்னருள் நீட்டு
கண்ணனின் கதறல் : கரியவன் காதோ செவிடு
கைவளை ஓசை ! கதவு தட் தட்டு !அம்மா அதட்டு !
பள்ளி கொண்டது போதும் கண்ணா எழுந்திரு
பள்ளிக்கு நேரமாச்சு :பர பரவென்றே புறப்படு
பக்கத்து வீட்டு பையன் கூட பறந்து விட்டான்
போகத்தான் வேண்டும் வேண்டாம் வீண் வாதம்
பள்ளிக்கா? மாட்டேன் அம்மா ! போகமாட்டேன் !
புரிந்து கொள் அம்மா !பாடம் சொல் வாத்திகளுக்கும்
பின்னே பசங்களுக்கும் என்னை பிடிக்கவில்லையே
போகத்தான் வேண்டுமெனில் ஏனென்று சொல்?
.
.
.
.
.
.
.
படுத்தாதே கண்ணா ! பள்ளி ஆசிரியரே நீ தான் !
https://external.fmaa1-1.fna.fbcdn.n...q4Jyf_UYbiAOfQ
(படித்த ஜோக்கின் தழுவல்)
நீ தான் நீயே தான்
பொறுப்பு உன் விதிக்கு
அழ ஆசைப்பட்டால் அழு
ஆனந்தம் வேண்டுமா
கொட்டிக்கிடக்கு அள்ளிக்கொள்
அலை ஓய்ந்து குளிக்கவோ
நாய் வாலை நிமிர்த்தவோ
வீண் முயற்சிகள் வேண்டாம்
சம்சார சாகரம் கடக்க இருக்கு
நம்பிக்கை என்னுமோர் துடுப்பு
துடுப்பின்றி தோணி தரை தட்டாது
தூயமதி இன்றி மனமோ நிலையாது
அவா வெகுளி கொண்டலையாது
அலைகடலாம் நின் வாழ்வினை கட
அலகிலா அக்கடவுள் சரண் பற்றி