-
#நமக்கு #கூட்டம் #கூடுறதுனால #மக்களின் #ஆதரவு #நிறைய #இருக்குன்னு #அர்த்தமாகிவிடாது...
நான் நடிகன்கிறதால என் மீது அன்பு வெச்சிருக்கலாம். இப்ப நான் தனிக்கட்சி தொடங்கியாச்சு. இதுக்கு மக்களிடம் எந்த அளவு ரெஸ்பான்ஸ் இருக்குன்னு தெரிஞ்சுக்கிறது தான் நல்லது...அதனால் நீங்களனைவரும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களின் மனோநிலையை அறிஞ்சிட்டு வாங்க..." என்று தனது உதவியாளர்களிடம் கூறுகிறார் எம்ஜிஆர்.
திருச்சியில் நடந்த கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்...எம்ஜிஆர் பேசும்போதெல்லாம் கரவொலிகள்..."எம்ஜிஆர் வாழ்க" ன்னு ஒரே கோஷம்..
இதையடுத்து திருச்சியில் உள்ள "ஆஸ்பி" ஓட்டலில் தங்கியிருந்த எம்ஜிஆர், தன் உதவியாளர்களிடம் மேலே குறிப்பிட்டவற்றை சொல்லிக்கொண்டிருந்தார்...
#மக்களின் #கூட்டத்தைப் #பார்த்த #எம்ஜிஆர் #அவர்களுக்கு #தலைக்கனம் #ஏற்படவில்லை. #உண்மையில் #பயப்படத்தான் #செய்தார்..."ஏனெனில் இது வெறும் சினிமாக் கவர்ச்சியாக ஆகிவிடக்கூடாதே என்று..."
அவர் சொற்படி உதவியாளர்கள் தமிழகம் முழுவதும் சுற்றினர்...மக்கள் எல்லோரும் சொல்லிவெச்ச மாதிரி கேட்ட ஒரே கேள்வி ...
"#எம்ஜிஆர் #எப்ப #ஆட்சியமைக்கப் #போகிறாரு...?"
திமுக கோட்டையாக விளங்கிய ராமநாதபுரத்திலும் கூட மக்களின் கேள்வி இது மட்டுமே ...! உதவியாளர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். தலைவரும் மகிழ்வாரென அவரிடம் இந்த நல்ல செய்தியைத் தெரிவித்தனர்...
"கட்சியவே இப்ப தான் நாம ஆரம்பிச்சோம்...ஆனா மக்கள் பலபடிகள் மேலே போய் ஆட்சி எப்ப அமைக்கப்போறார்னு கேக்கறாங்கன்னு தெரிஞ்சதும்...மக்கள் தன்மீது வைத்திருக்கும் பாசத்தை நினைத்து எம்ஜிஆருக்கு அழுகை பீறிட்டது...
ஆனால் இதற்காக ஒரேடியாக மகிழவில்லை... மாறாக, இதைத் தன் வாழ்நாள் முழுவதும் தக்கவைக்க வேண்டுமே என்று கவலை தான் பட்டார்...
எப்பேர்ப்பட்ட தலைவர் பாருங்கள்...
ஆனால் இன்றைக்கு நடக்கிற காமெடியைப் பாருங்கள்... தனது திரைப்படம் 25 நாள் ஓடிட்டாலே இவங்களுக்கு தலைக்கனம் ஏறிடுது. தனக்குத் தானே பட்டம் வேறு கொடுத்துக்கறாங்க...
ஒரு நடிகர் என்னடான்னா இதுக்குமேலே போய் "100 நாள்ல கட்சியமைப்பேன்...ஆட்சியமைப்பேன்னு" பேட்டி கொடுக்கறாரு.
இன்னொரு நடிகர்..."நா எப்ப வருவேன் எப்டி வருவேன்னு தெரியாது...ஆனா கண்டிப்பா வருவேன்னு டயலாக் அடிச்சிட்ருக்காரு...20 வருஷமா...
மக்கள் இளிச்சவாயர்கள்னு நினைச்சுட்டீங்களா!!!
1965ல் தான் பாடிய பாடலுக்கு உயிர்கொடுத்து அதை மெய்ப்பித்துக் காட்டியவர் புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் மட்டுமே...
காலத்தால் அழிக்கமுடியாத அந்த வரிகள்...
"நான் ஆணையிட்டால்
அது நடந்துவிட்டால்..."
மக்களை ரசிகர்களாகவும்,
ரசிகர்களைத்
தொண்டர்களாகவும்,
தொண்டர்களை
பக்தர்களாகவும்
தனது மனிதநேயத்தால் மாற்றிய...
காலத்தால் வெல்லமுடியாத #உலகின் #ஒப்பற்ற #ஒரே #தலைவர் இதயதெய்வம் புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் மட்டுமே...bsm...
-
தன்னலமின்றி வாழ வைத்து தமிழ் மண்ணைப் போற்றியவர்!
கடந்தகால நினைவுகள் என் நெஞ்சில் வலம் வருகின்றன.
வரிபாக்கிக்காக மத்திய அரசிடம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தன்னுடைய வீட்டை அடகு வைத்திருக்கிறார் என்கின்ற செய்தியைக் கேட்டு ஒரு தொண்டர் பதறிப் போனார்.
"தங்கள் மீது உயிரையே வைத்திருக்கும் நாங்கள் நொடிப் பொழுதில் அந்தக் கடனை அடைத்து விடுகிறோம். நீங்கள் எங்களுடைய அன்புக்குரிய அருமை அண்ணன். உரிமையோடு கேட்கிறேன் . தயவுசெய்து சரி என்று ஒரு வார்த்தை கூறுங்கள், போதும் . தங்களுக்காக எந்தத் தொல்லையாக இருந்தாலும் ஏற்றுக் கொள்கிறோம் " என்று மன்றாடினார்.
அமைதியாக, உறுதியாக, தெளிவாக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் . புன்முறுவலோடு பதில் கூறினார்:
"என் உடம்பில் இன்னும் உழைக்கும் சக்தி எனக்கு இருக்கிறது . வேலையும் அதற்கு உரிய பணமும் கிடைக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் இருக்கும் என் கடனைத் தீர்க்க நீங்கள் விரும்புகிறீர்கள் . உங்கள் அன்பிற்கு நன்றி! நான் தமிழ்நாட்டில் மூன்று நான்கு வயதில் அடியெடுத்து வைத்தபோது இன்று உள்ளது போல் எனக்கு வீடும் இல்லை, காரும் இல்லை. வேறு எந்தவிதமான வசதியும் எனக்கு இல்லை. ஒருவேளை எனக்கு இருப்பதாகச் சொல்லப்படுகின்ற வீட்டையோ, சொத்துக்களையோ இந்தியப் பேரரசு எடுத்துக் கொண்டு, பின்பு அந்த வீட்டில் குடியேறுபவர்கள், என்னை வாழவைத்த தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றால் எனக்கு அதிக மகிழ்ச்சிதான் ஏற்படும். எனவே ஏமாற்றம் அடையும் நிலையில் நானில்லை . லட்சக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள், கடன் சுமையால் , துன்பச் சூழ்நிலையில் உழன்று கொண்டு இருக்கின்றார்கள் . அவர்களைப் பற்றித் தான் நாம் சிந்திக்க வேண்டும்."
இன்னொரு முறை ஒரு நண்பர் வினா தொடுத்தார் . " உங்களைப்போல் புகழ்பெற என்ன செய்ய வேண்டும். பலத்த சிரிப்புக்குப் பின் பதில் கூறினார் புகழுக்குரிய எம்.ஜி.ஆர் . அடக்கமாக ...
"எனக்குப் புகழ் இருக்கிறதா? நான் பெற்றிருப்பதாக நீங்கள் கூறும் இந்தப் புகழ் போதாது. ஒரு மனிதன் மறைந்த பிறகு அவனை அந்த நாடு மறக்காமல் போற்றினால்தான் அவன் புகழ்பெற்றவனாகிறான் . இப்போது எனக்குச் சூட்டப்படுகின்ற மாலைகள், தரப் படுகின்ற பாராட்டுகள் இவைகளை வைத்துக் கொண்டு புகழின் எல்லைக்கோட்டைப் பற்றி முடிவுக்கு வராதீர்கள். அண்ணல் மகாத்மாவைப் போல், அண்ணாவைப்போல புகழ் பெற விரும்புகிறவர்கள், தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழவேண்டும் . அதுதான் நிறைவான வாழ்வு."
அடக்கமாகக் கூறிய பண்பாளர், நீலத் திரைக்கடல் ஓரத்திலே , அண்ணாவின் அருகிலே, அடக்கம் செய்யப்பட்டு விட்டார் . ஆனால் , அவர் வார்த்தைகள் ... எண்ணங்கள் கோடான கோடி உள்ளங்களில் கொலுவிருக்கின்றன.
நன்றி : அண்ணன் "நாகை"தருமன்
...sb...
-
மலரும் நினைவுகள் - 1977
*****************************************
1977 பாராளுமன்ற தேர்தல் மக்கள் திலகம் எம்ஜிஆரின் அதிமுக கூட்டணி யின் வெற்றி சரித்திரம் .
42 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் இந்திய பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு பிப்ரவரி 1977ல் வெளியானது
.
மக்கள் திலகம் எம்ஜிஆர்
**************************************
.இன்றுபோல் என்றும் வாழ்க, நவரத்தினம், மீனவ நண்பன் , மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் போன்றபடங்களில் நடித்துக்கொண்டிருந்தார் .பல புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார் . மக்கள் திலகம் 60 வயதில் மிக அழகாகவும் இளமையாகவும் சுறுசுறுப்பான ஹீரோ வாக வலம் வந்தார்
அதிமுக சந்தித்த தேர்தல்கள்
*******************************************
1973 திண்டுக்கல் இடைத்தேர்தலில் சரித்திர சாதனை படைத்தார் . 1974ல் புதுவை மாநிலத்தில் முதல் முறையாக அதிமுக ஆட்சி அமைத்தது .
கோவை - புதுவை நாடாளுமன்ற தொகுதிகளை முறையே வலது கம்யூ மற்றும் அதிமுக கைப்பற்றியது
1977 பாராளுமன்ற தேர்தலில் எம்ஜிஆர் தலைமயில் காங் கட்சி வலது கம்யூ முஸ்லீம்லீக் கூட்டணி அமைத்தது
தமிழ் நாட்டில் அதிமுக 20 தொகுதிகள் மற்றும் புதுவை மொத்தம் 21 இடங்களில் போட்டியிட்டது .காங் கட்சி 15 இடங்களிலும் முஸ்லீம்லீக் ஒரு தொகுதியிலும் போட்டியிட்டது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் இரவு பகலாக 40 தொகுதிகளுக்கும் ஒட்டு வேட்டையாடினார் .காங் கட்சி பிரமுகரான நடிகர் சிவாஜிகணேசனும் கூட்டணிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தார் மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் முழு ஒத்துழைப்பு தந்து 40 தொகுதிகளிலும் பம்பரமாக சுழன்றி வாக்குகள் சேகரித்தார்கள் . சிவாஜிகணேசனின் ரசிகர்கள் போதிய ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்பது உண்மை
ஒட்டு எண்ணிக்கை அன்று ,,,
பெங்களூர் நகரில் ,,
1977 நாடாளுமன்ற தேர்தல் எண்ணிக்கை அன்றய தினம் காலை 10 மணி முதல் மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் நூற்றுக்கணக்கில் ரசிகர்களும் கட்சி தொண்டர்களும் தினசுடர் பத்திரிகை முன்பும் பிடிஐ எனப்படும் செய்தி டெலிபிரின்டர் நிறுவனத்தின் முன்னர் குவிந்தார்கள் .
சற்று தூரத்தில் ஸ்ரீ என்ற திரை அரங்கில் எம்ஜிஆரின் நாடோடி மன்னன் திரைப்படம் தினசரி 4 காட்சிகளுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது .
பகல் 12 மணிக்கு தபால் ஒட்டு எண்ணிக்கையில் திமுக பல தொகுதிகளில் முனனிலை என்ற செய்தி வந்ததும் அங்கு கூடியிருந்த திமுகவினர் ஒரே ஆரவாரத்துடன் பட்டாசுகளை வெடிக்க தொடங்கினார்கள் . பிற்பகல் 2 மணி அளவில் முதல் செய்தியாக பழனி தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளர் காங் கட்சி சி .சுப்பிரமணியம் 10000 வாக்குகள் முந்துகிறார் .3மணி முதல் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் 36 தொகுதிகளில் முன்னேறி லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வெற்றி அடைந்தார்கள் .
அதிமுக முக்கிய பிரமுகர்கள்
ஆலந்தூர் மோகனரங்கம்
சேலம் கண்ணன்
ஆலடி அருணா
எஸ்.டி. சோமசுந்தரம்
பெ .அன்பழகன்
இளஞ்செழியன்
மாயத்தேவர்
வேணுகோபால்
பாலா பழனூர்
பிரமிக்க வைத்த தேர்தல் முடிவுகள் - ஒரு கண்ணோட்டம்
தேர்தலில் எம்ஜிஆர் கூட்டணி தோல்வியை சந்திக்கும் என்று பலரும் ஆரூடம் கூறினார்கள் . எல்லோரின்கணிப்புகளை யும் முறியடித்தார் எம்ஜிஆர் .
அதிமுக 20 தொகுதிகளில் போட்டியிட்டு 18 தொகுதிகளை வென்றது .புதுவை தொகுதி யிலும் வெற்றி
மொத்தம் 19 இடங்களில் வெற்றி .
காங் கட்சி
நாகர்கோயில் தொகுதியில் மட்டும் வெற்றி வாய்ப்பை இழந்தது
வேலூர் தொகுதியில் முஸ் .லீக் கட்சி 3000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது .
வலது கம்யூ போட்டியிட்ட மூன்று தொகுதிகளிலும் வெற்றி அடைந்தது
அதிமுகவின் வெற்றி 19 வேட்பாளர்கள்
Leading votes.
நெல்லை - ஆலடி அருணா --- 1,82,000
ராமநாதபுரம் - அன்பழகன் 1.75 000
சிவகங்கை - தியாகராஜன் 2.11.000
புதுக்கோட்டை - இளஞ்செழியன்.2,23,000
தஞ்சை - சோமசுந்தரம் 97,000
பெரம்பலூர் - அசோக்ராஜ் 1,80 000
பெரியகுளம் - ராமசாமி 2,04,000
திண்டுக்கல் - மாயத்தேவர் 1,69 000
பொள்ளாச்சி - ராஜு 1,24,000
நீலகிரி - ராமலிங்கம் 59.000
திருச்செங்கோடு - குழந்தைவேலு 1,28,000
சேலம் - கண்ணன் 79,000
வந்தவாசி - வேணுகோபால் 81,000
திருப்பத்தூர் - விஸ்வநாதன் 98,000
செங்கல்பட்டு - மோகனரங்கம் 35,000
ஸ்ரீபெரும்புதூர் - ஜெகநாதன் 45,000
கிருஷ்ணகிரி - பெரியசாமி 1,19,000
சிதம்பரம் - முருகேசன் 1,09,000
புதுவை - பாலா பழனூர் 19,000
வட சென்னை
மத்திய சென்னை
இரண்டு தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை அதிமுக இழந்தது
வட சென்னையில் நாஞ்சில் மனோகரன் 45 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி .
மத்திய சென்னை யில் ராஜா முகமது 73ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி .
1977 பாராளுமன்ற தேர்தலில் எம்ஜிஆரின் உழைப்பால் அதிமுக கூட்டணி பிரமாண்ட வெற்றி பெற்றது . அன்றைய தினமே தமிழகத்தின்
அடுத்த முதல்வர் எம்ஜிஆர் அடுத்த ஆட்சி அண்ணாதிமுக என்பதை தேர்தல் முடிவுகள் நமக்கு உணர்த்தியது .
இந்தியா முழுவதும் அனைத்து பத்திரிகைகளும் எம்ஜிஆரின் மக்கள் செல்வாக்கை பற்றி விரிவாக புகழ்ந்து எழுதினார்கள் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு பெருமையும் நிறைவான மகிழ்வும் தந்த தேர்தல் முடிவுகள் மறக்க முடியாத வரலாற்று சாதனை .VND......
-
கவிஞர் வசனங்கள் எழுதிய எம்.ஜி.ஆரின் காவியங்கள்!
கவியரசர் கண்ணதாசன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி முதலில் 1954 – ஆம் ஆண்டு ‘இல்லற ஜோதி’ என்ற திரைப்படம் வெளிவந்தது. இலக்கிய ரசனையும், தன்னிகரற்ற தமிழ்நசயமும் மிகுந்த வசனங்கள் இடம் பெற்றிருந்தும் அந்தப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.
1956 – ஆம் ஆண்டில், கவியரசரே பெருமிதப்படும் வசனங்கள் அமைந்திருந்த ‘நானே ராஜா’ படமும் வெற்றிக்கனியைப் பறித்துத் தரவில்லை. இதே ஆண்டில் கவிஞரின் திரைக்கதை வசனத்தில் வெளியான ‘தெனாலிராமன்’ படம் ஓரளவுக்கு வெற்றிப்படமாக அமைந்தது. மூன்றிலும் நடிகர்திலகம் சிவாஜிகணேசனே நடித்திருந்தார்.
இருப்பினும் இதே 1956 – ஆம் ஆண்டில் கண்ணதாசனின் திரைக்கதை வசனத்தில் புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த ‘மதுரைவீரன்’ திரைப்படமோ மாபெரும் வெற்றிப்படமாகத் திகழ்ந்தது. இதனால், கவிஞரின் புகழும், எம்.ஜி.ஆரின் மகோன்னத வெற்றியும் மக்களால் மாறி மாறி பேசப்பட்டது. இப்படம் குறித்த செய்திகளை முன்னரே பார்த்தோம்.
1956 – ஆம் ஆண்டிலேயே சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பா தேவரால் தொடங்கப்பெற்ற தேவர் பிலிம்ஸாரின் முதல் படமான ‘தாய்க்குப் பின் தாரம்’ கண்ணதாசனின் வசனத்திலேயே வளர்ந்து வந்தது. கவிஞர் ‘திருக்கோஷ்டியூர்’ தொகுதி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட நேர்ந்ததாலும், கழகப்பணிகளில் பெரும் நேரம் செலவிட்டதாலும் கவிஞரின் உதவியாளர் ச. அய்யாப்பிள்ளை அப்படத்தின் வசனங்களைத் தொடர்ந்து எழுதினார். இருப்பினும் கவிஞரின் மேற்பார்வையில் வசனங்கள் மெருகூட்டப்பட்டன. புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த இத்திரைப்படம் மகத்தான வெற்றியைக் கண்டது.
ஆக 1956 – ஆம் ஆண்டில், கண்ணதாசன் வசனங்கள் எழுதிய படங்கள் நான்கும் பெருமைக்குரியனவாகவே வெளிவந்தன.
அதில் வரலாற்றுப் பெருமைக்குரியதாய், ‘மதுரை வீரன்’ படமும். சமூகப் பிரச்சனைகளைச் சித்தரித்து, குடும்ப உறவுகளில் ஏற்படும் பகையினால் விளையும் தீமைகளைப் பக்குவமாய்ப் பேசித் தீர்வு காண வைக்கும் படமாய்த் ‘தாய்க்குப் பின் தாரம்’ படமும் அமைந்தன.
1957 – தேர்தல் பிரச்சாரத்தில் தாய்க்குப் பின் தாரம்!
1957 – ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம், தமிழக சட்டசபைத் தொகுதிகள் 123-லும், நாடாளுமன்றத் தேர்தலில் 13 தொகுதிகளிலும் முதன்முறையாகத் தனது வேட்பாளர்களை நிறுத்திப் போட்டியிட்டது.
இந்த வேட்பாளர்களோடு, கழக ஆதரவு பெற்ற வேட்பாளர்களாகச் சிலரும் போட்டியிட்டனர்.
இத்தேர்தலில் தி.மு.க தலைவர்கள் அனைவரும் போட்டியிட்டனர். கழகத்தின் முதுகெலும்பாய்த் திகழ்ந்த அறிஞர் அண்ணா, தமது காஞ்சியுரம் தொகுதி தேர்தல் பணியோடு, பிரச்சாரப் பணிகளிலும் பல தொகுதிகளில் முழுமூச்சோடு ஈடுபட்டார்.
இத்தருணத்தில் புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர். தொடர்ந்து பத்தொன்பது நாள்கள் தமிழகமெங்கும் சூறாவளிச் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு, தொடர்ச்சியாகப் பிரச்சாரங்களில் ஈடுபட்டார்.
அத்தோடு நில்லாமல், தனது நாடகக்கூழுவைக் கொண்டு, தானே நடித்த ‘இன்பக் கனவு’. ‘சுமைதாங்கி’ நாடகங்களையும், மதுரை, திண்டுக்கல், நாகர்கோயில் போன்ற முக்கிய நகரங்களில் நடத்திப் பெரும் சாதனையைப் படைத்தார்.
இம்மட்டோ! கழகத்தின் முக்கியத் தலைவர்களாம் அறிஞர் அண்ணா போட்டியிட்ட காஞ்சிபுரம் தொகுதியில் 1957 மார்ச்சு மாதம் முதல்தேதி முழுவதும், கலைஞர் கருணாநிதியின் குளித்தலைத் தொகுதியில் மார்ச்சு மாதம் எட்டாம் தேதி முழுவதும், மதுரை முத்துவின் மதுரை மத்தியத் தொகுதியில் ஒன்பதாம் தேதி முழுவதும், என்.வி. நடராசன், ஏ.வி.பி. ஆசைத்தம்பி, பேராசிரியர் அன்பழகன், சத்தியவாணிமுத்உத உள்ளிட்டோர் போட்டியிட்ட சென்னை மாநகரத் தொகுதிகளில், அறிஞர் அண்ணாவோடு இணைந்து மார்ச்சு ஐந்து, ஆறு தேதிகளிலும் புரட்சிநடிகர் புயல்வேகப் பிரச்சாரம் செய்தார்.
இன்னும், நாஞ்சில் மனோகரன் பாராளுமன்றத்திற்கும், நாகூர் அனீபா சட்டமன்றத்திற்கும் போட்டியிட்ட நாகப்பட்டினம் தொகுதியில் பிப்ரவரி 19 – ஆம் தேதியும், இரா. செழியன் பாராளுமன்றத்திற்கும், எம். குழந்தைவேலு சட்டமன்றத்திற்கும் போட்டியிட்ட கரூர் தொகுதியில் பிப்ரவரி 20 – ஆம் தேதியும், கவியரசர் கண்ணதாசன் போட்டியிட்ட திருக்கோஷ்டியூர் தொகுதியில் பிப்ரவரி 25 – ஆம் தேதியும், இலட்சியநடிகர் எஸ்.எஸ்.ஆர் போட்டியிட்ட தேனித்தொகுதியில் பிப்ரவரி 26, 27 தேதிகளிலும் புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர் எழுச்சிமிகு தேர்தல் பிரச்சாரங்களைச் செய்தார்.
எந்தவொரு நடிகரும். தலைவரும் செய்திட இயலாத அளவிற்குத் தன்னுடைய படப்பிடிப்புப் பணிகளையெல்லாம் பார்க்காமல், பணச்செலவுகளைப் பற்றியும் கவலைப்படாமல் வியத்தகு தேர்தல் பிரச்சாரங்களைச் செய்து அனைவர்க்கும் வியப்பூட்டி நின்றவரே மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர் எனலாம்.
இவரது 1957 – ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தோடு, மக்களை பிரமிக்க வைத்த பிரச்சாரச் சுவரொட்டிகளாய் மலர்ந்தனவே ‘தாய்க்குப் பின் தாரம்’ திரைப்படக் காட்சி, சுவரொட்டிகள் எனில் மிகையாகா.
தேர்தல் களத்தில் தி.மு.கழகத்தோடு மோதும் முதன்மையான கட்சி காங்கிரஸ் கட்சியாகும். அக்கட்சியின் தேர்தல் சின்னமோ ‘நுகத்தடி பூட்டிய காளைமாடுகள்’ சின்னமாகும்.
தாய்க்குப்பின் தாரம் திரைப்படத்திலோ மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், யாரும் அடக்க முடியாத ஜல்லிக்கட்டு காளைமாட்டோடு போராடி, அதனை வீழ்த்தி வெற்றி பெறுவதாக ஓர் அருமையான காட்சி இடம் பெற்றுள்ளது.
அதனையே தேர்தல் பிரச்சாரச் சுவரொட்டிகளாக தி.மு.கழகத்தவர் நாடெங்கும் சுவர்களில் ஒட்டியும், வரைந்தும் இருந்தார்கள். தட்டிகளிலும் ஏராளமாக ஒட்டி வைத்தார்கள்.
காங்கிரஸ் என்ற காளையை, உதயசூரியன் என்ற தடுப்புப் பலகையோடு இளைஞர் எம்.ஜி.ஆர், அடக்குவதுபோன்ற கருத்துப் படத்தை, 25.1.1957 ஆம் தேதியிட்ட ‘முரசொலி’ இதழும் வெளியிட்டது.
அன்றைய தி.மு.கழகத்தின் அதிகாரப்பூர்வமான வார ஏடாக வெளிவந்த நாவலரின் ‘நம்நாடு’ இதழ், இதுபற்றி எழுதியாதையும் நாம் இப்போது வாசித்துப் பார்ப்போமே!
“தாய்க்குப்பின் தாரம்” படத்தில், காளை மாட்டோடு புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர், சண்டையிடும் காட்சியைக் கையிட்டு வரைந்தும், சில இடங்களில் தட்டிகள், பானர்கள் வைக்கப்பட்டும் இருந்தன. தி.மு.கழகத்தின் தேர்தல் ஈடுபாட்டை, இந்தத் தேர்தல் உத்திகளை மக்கள் வரவேற்றனர்; இரசித்தனர். மக்கள் வாக்களிப்பார்களா? – என்பதைவிடக் கூட்டம் கூட்டமாக வரவேற்பு இருந்ததைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது”
பார்த்தீர்களா? 1957 – ஆம் ஆண்டு தேர்தலிலேயே, ‘தாய்க்குப்பின் தாரம்’ படக்காட்சிகன் மூலமும், தனது பிரச்சாரத்தின் மூலமும், தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், மறுமலர்ச்சியையும் தோற்றுவித்த எம்.ஜி.ஆரின் அரிய பணிகளை….! இதனாலன்றோ பின்னாளில் புரட்சித்தலைவராக அவரால் பீடுநடை போட முடிந்தது.
முயற்சிகளால் முன்னேறிய எம்.ஜி.ஆரை முட்டுக்கட்டைகள் எவற்றாலும் தடுக்க முடிந்தனவா? தடுக்க முயன்றவர்கள்தானே தடம் புரண்டு வீழ்ந்தார்கள்.
இத்தகு வித்தகர் நடித்த பல படங்களுக்கு, நம் கவித்திருமகனார் வீர வசனங்களை எழுதியுள்ளார்.
1957 – ஆம் ஆண்டு வெளிவந்த ‘மகாதேவி’, 1958 – ஆம் ஆண்டு வெளிவந்த ‘நாடோடி மன்னன்’, 1960 – ஆம் ஆண்டில் வெளிவந்த ‘மன்னாதி மன்னன்’, ‘ராஜா தேசிங்கு’, 1961 – ஆண்டு வெளிவந்த ‘ராணி சம்யுக்தா’ ஆகிய வரலாறு படைத்த படங்களுக்கெல்லாம் கண்ணதாசனே நம் கருந்துகளைக் கவரும் வசனங்களை எழுதியுள்ளார்.
நூலில் இடம் அமைந்திடும் அளவிற்கு, நம் இதயங்களில் அவரது வசனங்கள் இதம்பெறப் பின்பு முயற்சிக்கலாம். இப்போது கவிமகன், சத்தியத்தாய் மகனுக்குத் தந்த பாராட்டை வாசிக்கலாம்.
தென்றல் ஏட்டில், சத்யத்தாய்
மகனுக்கு, கவிமகன் தந்த பாராட்டு!
கவியரசர் கண்ணதாசன், தனது தென்றல் வார இதழில் (27.10.1956 – இல்), ‘புரட்சி நடிகரின் நன்கொடைகள்’ என்ற தலைப்பில் எழுதிய எழுச்சிமிகு பாராட்டுக் கடிதத்தை நாம் இப்போது படித்துப் பார்ப்போமா!
“நடிகத் தோழர்களின் சேவை, நாட்டுக்குப் பலவகைகளிலும் பயன்படுகிறது. கலையை மட்டும் அல்லாது, நாட்டின் பல்வேறு நிறுவனங்களையும் வளர்க்கும் பெருமை நடிகத் தோழர்களில் பலரைச் சாருகிறது.
கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள், தன் கொடைத்திறனால் மக்கள் மன்றத்தில் பெருமதிப்புப் பெற்றவர். பிறர் கண்ணீரைக் காணச் சகியாத உள்ளம், அவர் உள்ளம். இல்லையென வருவாருக்கு, இயன்ற மட்டும் தருவது அவர் பழக்கம். கைப்பணத்திலும் ஆயிரமோ, இரண்டாயிரமோ கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்.
அந்த வரிசையிலே இப்பொழுது புரட்சி நடிகர் இராமச்சந்திரன் இடம் பெறுகிறார். புயல் நிவாரண நிதிக்கு அவர் வாரி வழங்கிய தன்மையை நாடறியும். இப்பொழுது மதுரைத் தமிழ்ச்சங்கத்துக்கும், தெற்குத் திட்டங்களத்து ஆதிதிராவிடப் பள்ளிக்கும், சென்னை தியாகராயர் கல்லூரிக்கும் முறையே ரூ 1000, 2000, 2500 நன்கொடையாகத் தந்துள்ளார். அதன்றியும் அகில இந்தியப் பெண்கள் உணவு சங்கத்தின் சென்னைக் கிளைக்கும் ரூ. 500ம் தந்துள்ளார்.
வருமானம் அதிகரிக்கலாம்; புகழ் பெருகலாம். பெரிய மனிதர்கள் கூட்டுறவு ஏற்படலாம். ஆனாலும் நாராள மனது எல்லாருக்கும் வந்துவிடுவதில்லை. கையிலிருந்து பணம் கொடுப்பது என்றாலே, கண்களில் ரத்தம் கசியும் சிலருக்கு. வந்த பணத்தை, எப்படித் தன் குடும்பத்துக்குச் சொத்தாக்குவது என்றுதான் எல்லோருமே செய்யும் உபதேசமே, ‘பணத்தைப் பத்திரமாக வைத்துக் கொள்ளப்பா’ என்பதுதான். பணம் கைக்கு வந்ததும் மடிக்கு மாறி, பெட்டிக்குள் பதுங்கப் பார்க்கிறது. ‘நாம் தொல்லைப்படும் போது, யார் நமக்குத் தருகிறார்கள்? நமக்கெதற்கு வள்ளன்மை!’ என்ற பேச்சுப் புறப்படுகிறது.
‘ஐயா பசி!’ என்று அலறுபவனைப் பார்த்து, ‘எல்லார்க்கும் அப்படித்தான்! போ! போ!’ என்று இரக்கமின்றிக் கூறத் தோன்றுகிறது. கைப்பணத்துக்கும், தன் பெண்டு பிள்ளைகளுக்குமே தொடர்பு ஏற்படுத்தி, மனம் கணக்கிடுகிறது. பெரும்பகுதி மனித மனம் இப்படி இருப்பதால்தான், ஈந்து சிவக்கும் இருகரம் படைத்தோரை வாயார வாழ்த்தத் தோன்றுகிறது.
கலைவாணர் என.எஸ்.கே, நடிப்பிசைப் புலவர் ராமசாமி, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். முதலியோர் நடிகர்களில் வள்ளல்கள் ஆவார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுவில் எம்.ஜி.ஆர். உறுப்பினர். தீவிரமான கொள்கைகளை உறுதியாகக் கடைப்பிடிப்பவர். இலட்சோப இலட்சம் மக்களின் இதயகீதம் அவர் பெயர். சமீகத்தில் அவர் நடித்து வெளிவந்த ஐந்து படங்களும் இதுவரை படுலக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு வசூலைத் தந்துள்ளன. இப்பொழுது சுமார் பதினைந்து படங்களில் நடித்து வருகிறார்.
இரண்டொரு படங்களில் நடிப்பதாக இருந்து கொள்கை மாறுபாட்டால் அவர் நடிக்க மறுத்ததை நாடறியும். கூமார் இரண்டு இலட்சம் ரூபாய்கள்வரை, இதனால் அவர் இழந்தார். அதற்காகத் துளியும் வருந்தியதில்லை அவர். திருச்சியிலும், மதுரையிலும் சமீபத்தில் மதுரைவீரன் 200 ஆவது நாள் விழா நடந்தபோது, அவற்றில் பேசிய எம்.ஜி.ஆர். ‘எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் என் கொள்கையை விட்டு நடிக்க மாட்டேன். தயாரிப்பாளர்கள் இருக்கும் இந்த மேடையிலேயே அதை அறுதியிட்டு உறுதியாகக் கூறுகிறேன்’, என்றார்.
நான் நடிக்கப் போகும் கதையை, முன்கூட்டியே பரிசீலித்துத்தான் நடிக்கிறார். கதைகளிலே தன் கருத்தை வெளியிட இரண்டு நடிகர்களுக்குக் கற்பனை ஓட்டம் உண்டு. ஒருவர் கலைவாணர். மற்றொருவர் புரட்சி நடிகர். இன்றையத் திரை உலகில் தலையாய நடிகர் என்ற பெருமை புரட்சி நடிகருகுக்க் கிட்டியுள்ளது. தென்இந்திய நடிகர் சங்கத்தைத் தொடங்கி சிறப்புடன் வளர்க்கும் பெருமை இவருக்கு உண்டு. இவர் பதிப்பாசிரியராக இருந்து நடத்தி வரும் ‘நடிகன் குரல்’ என்ற மாத இதழ், சுமார் இருபத்து மூவாயிரம் பிரதிகள் செலவழிகிறது. அதில் தன் வரலாற்றை எழுதி வருகிறார்.
தி.மு.க. கழகத் தலைவர்கள் அனைவரும் இவரிடத்து நல்ல மதிப்பு வைத்திருக்கிறார்கள்.
நடிகர்களில், அழகாகப் பேசக்கூடியவர் இவர். இவர் புகழில் நாம் பெருமைப்பட நியாயம் இருக்கிறது. காரணம், இவர் நம் குடும்பத்துத் திடமான பிள்ளைகளில் ஒருவர்! வாழ்க!”
படித்துப் பார்த்தோம்! இவற்றிலிருந்து சத்தியத்தாய் பெற்றெடுத்த சரித்திர மகனைப் பற்றி, கவதைத்தாயின், காவியத்தாயின் மகனின் கணிப்பு சரிதானா? கொஞ்சம் சிந்திப்போமே!...
-
உலகத்தில் எத்தனையோ தலைவர்கள் வரலாம் மறையலாம் , புகழ் பெறலாம் ஆனால் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் இந்தப் புனிதமான பொன் இடத்தை ( மக்கள் சக்தியால் ) அடைய இனி ஒருவர் தோன்ற முடியாது. மாபெரும் தலைவர் புரட்சித்தலைவர் கொடைவள்ளல் எம்.ஜி.ஆர் வாழ்ந்த அந்த பொற்காலத்தில் 1989 , 1990 காலகட்டங்களில் பிறந்த இளைஞர்களாகிய எங்களுக்கு புரட்சித்தலைவரின் தரிசனத்தையும், புரட்சித் தலைவரின் முதல் வெளியீடாக வருகின்ற அவரின் அருமையான திரைப்படங்களையும், புரட்சித்தலைவரின் பொற்கால ஆட்சியையும் நாங்கள் காணாமல் போனது இன்றும் நினைத்து வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
நல்ல வேலையாக எங்களுக்கு விவரம் தெரிய முன்பிருந்தே எங்கள் பெற்றோர்கள் புரட்சித்தலைவரின் திரைப்படங்களை பார்க்க வைத்துவிட்டனர். புரட்சித்தலைவரின் ரசிகர்களான மற்றும் பக்தர்களான எங்கள் பெற்றோர்களுக்கு கோடான கோடி நன்றிகள். புரட்சித்தலைவரின் திரைப்படங்களை பார்த்து வளர்ந்தோம். புரட்சித்தலைவரின் சரித்திரங்களை கேட்டு வளர்ந்தோம். புரட்சித்தலைவரின் சரித்திரங்களை படித்து வளர்ந்தோம். புரட்சித்தலைவரின் திரைப்படங்களை பார்க்கப் பார்க்க மீண்டும் முதல் முறையில் பார்த்ததுபோல் பார்க்க தூண்டிக் கொண்டே இருக்கின்றன.
புரட்சித்தலைவரின் ரசிகர்களாக பிறந்தோம் என்பது நாங்கள் செய்த பெரும் பாக்கியம். உழைப்போம் உழைத்துப் பிழைப்போம். புரட்சித் தலைவரின் பெயரை மட்டுமே உச்சரிப்போம்.
அன்பான வணக்கத்துடன் Saravanan Subramanian என்றும் என்றென்றும் நம்முடைய புரட்சித்தலைவரின் புகழ் நிலைத்திருக்கும்
மாபெரும் கொடை வள்ளல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க...VR...
-
மக்கள் திலகம், தன்னுடைய இரு சிறுநீரகங்களும் பழுதடைந்து அமெரிக்காவின் ப்ரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மறுபிறவி எடுத்து வந்தார. தன் வீட்டை அடைகிறார்.ராமாவரம் தோட்டத்தில் பெரும் கூட்டம். தன்னை பார்க்க மட்டுமல்ல, தங்கள் குறைகளை மனுவாக புரட்சித்தலைவரிடம் கொடுக்கவும் கூட்டம் கூடியிருக்கிறது.
முதல்வர் நினைத்திருந்தால் தன் உடல் நிலையை, வெளியில் அதிக நேரம் இருந்தால் தொற்று பரவும் அபாயதை காரணம்காட்டி பொதுமக்களை திரும்ப அனுப்பியிருக்கலாம்.ஆனால் அவ்வாறு செய்யவில்லை மக்கள் திலகம்..தன்னை கண்குளிர பார்க்கவும்,பேசவும், தன்னை குடும்பத்தில் ஒருவனாக நினைத்து குறைகளை சொல்லவும் வந்த பொதுமக்களை // தொண்டர்களை தன் உடல்நிலையை காரணம்காட்டி ஏமாற்ற விரும்பவில்லை மக்கள் திலகம். சளைக்காமல் காம்பவுண்ட் சுவர்தாண்டி மூங்கில் தட்டி அருகே நின்று மக்களின் மனுக்களை பெறுகிறார். மக்களிடம் உற்சாகமாக பேசுகிறார்.
ஒரு கட்டத்தில் உடல் சோர்ந்து தன்னை தாங்கி பிடிக்கவேண்டிய கட்டத்துக்கு சென்று விடுகிறார் மக்கள் திலகம். (முதல் படம்). அப்போதும் கூட அசரவில்லையே மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்!!! தன் உதவியாளரை நாற்காலியை கொண்டுவர செய்து சற்று ஆசுவாசபடுத்திக்கொண்டு மீண்டும் மனுக்களை பெறுகிறார் மக்கள் திலகம்.
இறந்து 33 வருடம் ஆன பிறகும் கூட மக்கள் மனதில் இறவாத்தலைவராய் சிம்மாசனம் போட்டு மக்கள் திலகம் அமர்ந்திருக்கிறார் என்றால்...அவர் மக்களுடன்-குறிப்பாக அடித்தட்டு மக்களுடன் ஏற்படுத்திக்கொண்ட பிரிக்கமுடியாத தொடர்புதான்..!!!...Sudn...
-
புரட்சித் தலைவரின் முடிக்கப்படாத, வெளியிடப்படாத
திரைப்படம் குறிப்புகள்.
சாயா "முதல் கதாநாயகன்"
- கதாநாயகி : டி. வி. குமுதினி
– 1941 இல் வெளிவரவிருந்தது.
சிலம்புக் குகை - 1956 இல் வெளிவரவிருந்தது.
மலை நாட்டு இளவரசன் - 1956 இல் வெளிவரவிருந்தது.
குமாரதேவன் - 1956 இல் வெளிவரவிருந்தது.
ஊமையன் கோட்டை - 1956 இல் வெளிவரவிருந்தது.
ரங்கோன் ராதா
உத்தம புத்திரன் - இதே தலைப்பில் சிவாஜி கணேசன் நடித்த படம் வந்ததால் கைவிடப்பட்டது.
பின்னர் நீரும் நெருப்பும் என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது.
வாழப் பிறந்தவன் - வித்துவான் வி. லட்சுமணன் தயாரித்து எஃப். நாகூர் இயக்கத்தில் 1957 இல் வெளிவரவிருந்தது.
பவானி 1957 இல் வெளிவரவிருந்தது. கவிஞர் கண்ணதாசன் கதை வசனம் பாடல்கள் எழுதி கூட்டு தயாரிப்பு
அஞ்சலி தேவி கதைநாயகி.படம் இருபதாயிரம் அடி வளந்த நிலையில் நின்றது. எம் ஜி ஆர் கவிஞர் பங்கை கொடுத்து அவருக்கு நஷ்டம் இல்லாமல்; அதை எம் ஜி ஆர் பிக்சர்ஸ் க்கு வாங்கி கொண்டார்.
ஏழைக்கு காவலன் - 1957 இல் வெளிவரவிருந்தது.
அதிரூப அமராவதி - 1958 இல் வெளிவரவிருந்தது.
காத்தவராயன் - 1958 இல் வெளிவரவிருந்தது - பின்னர் சிவாஜியை வைத்து எடுக்கும்படி எம். ஜி. ஆர். இயக்குநர் டி. ஆர். ராமண்ணாவிடம் சொன்னார்.
அட்வகேட் அமரன் - எம். ஜி. ஆர். நாடகக் குழுவின் ஒரு நாடகம்
– 1959 இல் வெளிவரவிருந்தது.
காணி நிலம் - 1959 இல் வெளிவரவிருந்தது.
கேள்வி பதில் - 1959 இல் வெளிவரவிருந்தது.
நடிகன் குரல் - 1959 இல் வெளிவரவிருந்தது.
நாடோடியின் மகன் - நாடோடி மன்னன் இரண்டாம் பாகம்
– 1959 இல் வெளிவரவிருந்தது.
பொன்னியின் செல்வன் - கல்கி கிருஷ்ணமூர்த்தியின் நாவல்
– 1959 இல் வெளிவரவிருந்தது.
தென்னரங்க கரைi - 1959 இல் வெளிவரவிருந்தது.
தூங்காதே தம்பி தூங்காதே - 1959 இல் வெளிவரவிருந்தது
இத்திரைப்படம் பின்னர் ஏவி எம் தயாரிப்பில் கமல் ஹாசன் நடித்து 1983 ஆம் ஆண்டு நவம்பரில் வெளியானது. அப்போது எம். ஜி. ஆர். தமிழ் நாடு முதலமைச்சராக இருந்தார்.
கேரள கன்னி - 1960 இல் வெளிவரவிருந்தது.
பரமபிதா - சரவணா ஃபிலிம்ஸ் தயாரித்து கே. சங்கர் இயக்கத்தில் 1961 ஆம் ஆண்டு வெளிவர இருந்தது. சரோஜாதேவி உடன் நடிப்பதாகவும் வண்ணப் படம் எனவும் அறிவிக்கப்பட்டது.
மாடி வீட்டு ஏழை - 1961 ஆம் ஆண்டு நடிகர் ஜே. பி. சந்திரபாபு தயாரித்த திரைப்படம். கருத்து வேறுபாடுகளால் கைவிடப்பட்டது. பின் 1981 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியானது.
இது சத்தியம் - 1962 இல் வெளிவரவிருந்தது
கே. சங்கர் இயக்கத்தில் பின் எஸ். ஏ. அசோகன் நடித்து ஆகஸ்ட் 30, 1962 வெளியானது.
அன்று சிந்திய ரத்தம் - ஸ்ரீதர் இயக்கத்தில் 1963 இல் வெளிவரவிருந்தது
6 வருடங்களின் பின்னர் சிவாஜி கணேசன் நடித்து சிவந்த மண் பெயரில் வெளியானது.
மகன் மகள் - 1963 இல் வெளிவரவிருந்தது.
வேலுத்தேவன் - 1964 இல் வெளிவரவிருந்தது.
இன்ப நிலா - 1966 இல் வெளிவரவிருந்தது.
ஏழைக்குக் காவலன் - 1966 இல் வெளிவரவிருந்தது.
மறு பிறவி
- தேவர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் 1967 இல் வெளிவரவிருந்தது.
தந்தையும் மகனும் - தேவர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் 1967 இல் வெளிவரவிருந்தது.
கங்கையிலிருந்து கிரெம்ளின் வரை - 1969 இல் வெளிவரவிருந்தது.
இணைந்த கைகள் - எம். ஜி. ஆர். பிக்சர்ஸ் தயாரிப்பில் 1969 இல் வெளிவரவிருந்தது.
யேசுநாதர்
- 1969 இல் வெளியாக இருந்தது.
இந்தப் படத்தைத் தயாரிக்கவிருந்த பி. ஏ. தாமஸ் இரண்டு வருடங்களின் பின் தலைவன்தலைவன் என்ற திரைப்படத்தைத் தயாரித்து வெளியிட்டார்.
அணையா விளக்கு - 1973 இல் வெளியாகவிருந்தது பின்னர் இதே அணையா விளக்கு என்ற பெயரில் மு. க. நடித்து வெளிவந்தது.
கிழக்கு ஆபிரிக்காவில் ராஜு - உலகம் சுற்றும் வாலிபன் இரண்டாவது பாகமாக எடுக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் எம். ஜி. ஆருக்கு நேரமின்மை காரணமாக கைவிடப்பட்டது.
மக்கள் என் பக்கம் - 1974 இல் வெளியாகவிருந்தது.
சத்யராஜ் நடித்து, பின்னர் வெளிவந்த மக்கள் என் பக்கம் இதனோடு தொடர்புடையதல்ல.
சமூகமே நான் உனக்குச் சொந்தம் - 1974 இல் வெளியாகவிருந்தது. லதா ஜோடியாக நடிக்கவிருந்தார்.
தியாகத்தின் வெற்றி - 1974 இல் வெளியாகவிருந்தது.
நானும் ஒரு தொழிலாளி - ஸ்ரீதர் இயக்கத்தில் 1975 இல் வெளியாகவிருந்தது.
- இதே [[நானும் ஒரு தொழிலாளி தலைப்பில் ஸ்ரீதர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்த திரைப்படம் 1986 இல் வெளியானது.
அமைதி - 1976 இல் வெளியாகவிருந்தது.
அண்ணா நீ என் தெய்வம் - ஸ்ரீதர் இயக்கத்தில் 1976 இல் வெளியாகவிருந்தது
முடிக்கப்படாத இத்திரைப்படத்தின் சில காட்சிகளை வைத்து எம். ஜி. ஆர். இறந்தபின் இயக்குநர் கே. பாக்யராஜ் அவசர போலீஸ் 100 என்ற பெயரில் ஒரு திரைப்படம் தயாரித்து வெளியிட்டார்.
புரட்சிப் பித்தன் - 1976 இல் வெளியாகவிருந்தது.
நல்லதை நாடு கேட்கும் - 1977 இல் வெளியாகவிருந்தது
5% படமாக்கப்பட்டிருந்தது. அதையும் சேர்த்து இதே பெயரில் ஜேப்பியார் 1991 ஆம் ஆண்டு இன்னொரு திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டார்.
அக்கரைப் பச்சை' - 1978 இல் வெளியாகவிருந்தது.
கேப்டன் ராஜா - 1978 இல் வெளியாகவிருந்தது.
இளைய தலைமுறை - 1978 இல் வெளியாகவிருந்தது.
இதுதான் பதில் - கே. சங்கர் இயக்கத்தில் 2 பாடல்கள் பதிவாயின
– 1980 இல் வெளியாகவிருந்தது.
உன்னை விட மாட்டேன் - 1980 இல் வெளியாகவிருந்தது....ADas...
-
...‘#முகராசி’ படத்தில், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடிக்கும் எம்.ஜி.ஆர். கள்ளச் சாராயம் காய்ச்சும் கும்பலை, போலீசாரோடு மாறுவேடத்தில் வந்து கைது செய்யும் காட்சியொன்று.
அக்காட்சியில் எம்.ஜி.ஆர், நீதி சொல்லிப்பாடும் பாடலொன்றைக் கண்ணதாசன் எழுதினார்.
இப்பாடல் காட்சி, கவியரசரின் உடல்தகனம் செய்யப்பட்ட நாளில் சென்னைத் தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. அன்றைய முதல்வராய்த் திகழ்ந்த எம்.ஜி.ஆர். சோகத்தோடு கவியரசரின் உடல் அருகே நின்ற காட்சியும், உறையாற்றிய காட்சியும் காட்டப்பட்டது. அந்த நினைவலைகளை நினைவில் நிறுத்திப் பாடலைப் பார்க்கலாமா?
“உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு! -
இங்கே
கொண்டுவந்து போட்டவர்கள் நாலுபேரு!
கொண்டாடும்போது ஒரு நூறு பேரு! – உயிர்
கூடுவிட்டுப் போன பின்னே கூட யாரு?…”
பாடலைப் பார்த்தோம்…..!
அரிய பெரும் தத்துவத்தை, அவருக்கே உரிய பாணியில், எவ்வளவு எளிமையாகக் கண்ணதசன் எழுதியுள்ளார் பார்த்தீர்களா?
பாமரர்க்கும் புரியும் இப்பாடலுக்கு விளக்கம் ஏன்?
“உயிர்!… ஒப்பற்ற ஒன்று! உடலெனும்
கூடுவிட்டு அது போன பின்னே….
கூட யாரு?’
இதனைப் புரிந்தவர், தெளிந்தால் ஆடாத ஆட்டங்கள் ஆடுவரோ?
எந்த மனிதர்க்கும் நிலை இதுதானா?….பார்ப்போம்!
“தீராத நோய்களையும் தீர்த்து முடித்தான்! – இவன்
தேறாத வைத்தியத்தைத் தேர்ந்து படித்தான்! – பிறர்
நோய் தீர்க்கும் வைத்தியன் – தன்
நோய் தீர்க்க மாட்டாமல்
பாய் போட்டுத் தூங்குதப்பா! – உயிரும்
பேயோடு சேர்ந்ததப்பா!…..”
பாருங்களேன்!
தீராத நோய்களைத்
தேறாத வைத்தியத்தை
தேர்ந்து படித்தவன்
தீர்த்து முடித்தான்!….
ஆனால்…. மற்றவர் நோய் தீர்த்த
மருத்துவன்!
தன் நோய் தீர்க்க முடியாமல்
பாய் போட்டுத் தூங்கிவிட்டான்!
அவன் உயிரும்….
பேயோடு சேர்ந்து விட்டது’.
என்கிறார் எம்.ஜி.ஆர்!
உலகியல் உண்மை இதுதானே!
இன்னும் நீதி சொல்வதென்ன?
“கல்யாணம் செய்வதற்கும் நாள் சொல்லுவார்! -
எந்தக்
காரியத்தைச் செய்வதற்கும் தேதி குறிப்பார்! – நல்ல
சேதி சொல்லும் ஜோசியர்க்கும்
நீதி சொல்லும் சாவு வந்து
தேதி வைத்து வட்டதடியோ? – கணக்கில்
மீதி வைக்கவில்லையடியோ!”
‘நல்ல சேதி சொல்லும் ஜோசியர்!…
அவர்க்கும் நீதி சொல்லும்
சாவு வந்து…
தேதி வைத்து விட்டதாம்!
அவரும் தப்ப முடியாமல்,
கணக்கில் மீதி வைக்காமல்,
நீதி அவர் கதையையும்
முடித்து விட்டதாம்!’
நீதி சொல்வதில் யார்தான் தப்ப முடியும்? கவிஞரின் கணிப்பை, காட்சியாக்கிக் காட்டும் எம்.ஜி.ஆர் இன்னும் சொல்வதுதான் என்ன?
“பட்டணத்தில் பாதி இவன் வாங்கி முடித்தான்! – அந்தப்
பட்டயத்தில் கண்டதுபோல் வேலி எடுத்தான்! – அதில்
எட்டடுக்கு மாடி வைத்துக்
கட்டிடத்தைக் கட்டிவிட்டு
எட்டடிக்குள் வந்து படுத்தான்! – மண்ணைக்
கொட்டியவன் வேலி எடுத்தான்!”
‘பெரும் பட்டணத்தில் பாதியை வாங்கி, பட்டயத்தில் கண்டது போல், மண்ணைக் கொட்டி வேலி எடுத்தவன்!… அவ்வளவுதானா?
எட்டடுக்கு மாடிகளை அளந்து, கட்டடத்தை அழகாகக் கட்டி முடித்தவன்….! கடைசியில் எட்டடி மண்ணுக்குள் வந்து படுத்தான்…. தன் கதையை முடித்தான்!’
வாழ்க்கை என்பதே இவ்வளவுதான்….! இதற்கேன் வாழும்போதெல்லாம் போராட்டம்? தேவையில்லைதான்!
யார் சொல்லி யார் கேட்கிறார்கள்?
இப்படி மக்களுக்கு உகந்த தத்துவக் கருத்துகளை, மக்கள்திலகம் கூறும் விதத்தில் பாடலை இயற்றித் தந்த தத்துவக் கவிஞர் கண்ணதாசன் திறனை வியந்து எம்.ஜி.ஆர் பாராட்டியது நியாயந்தானே!
*கவிஞர் கண்ணதாசன்... மறைந்த போது எம்.ஜி.ஆர் கண்ணீர் அஞ்சலி செலுத்தும் போது எடுத்த புகைப் படம்*
https://youtu.be/2JI4Yc-JGfk...Natesan Subramani........
-
மக்கள் திலகம் எம்ஜிஆர் பட தலைப்புகளும் - நிதர்சனமான நிகழ்வுகளும் .
மதுரை வீரன் ----------- மக்கள் உள்ளங்களில் இன்றும் நிலைத்துவிட்டார் எம்ஜிஆர் .
நாடோடி மன்னன் - 1958ல் பிரகடனம் . 1967ல் அண்ணாவை அமரவைத்தார் .1977ல் தானே அமர்ந்தார் .
மன்னாதிமன்னன் - 1977-1987 நிரூபித்து காட்டியவர் எம்ஜிஆர் .
நல்லவன் வாழ்வான் - அண்ணாவின் உண்மை தம்பியாக வாழ்ந்தவர் எம்ஜிஆர்
தர்மம் தலைகாக்கும் - 1959 / 1967 /1984 மூன்று முறை காப்பாற்றியது
காஞ்சித்தலைவன் - உயிர் வாழ்ந்தவரை மறக்காத மாபெரும் தலைவர் எம்ஜிஆர்
வேட்டைக்காரன் - காமராஜரே பயந்து போனார் . பந்துலுவும் எம்ஜிஆரின் வெற்றியை உணர்ந்தார்
எங்க வீட்டுப்பிள்ளை - உலகமே வியந்து கொண்டாடியது .
ஆயிரத்தில் ஒருவன் தமிழ் சினிமாவின் அற்புத படைப்பு .
நான் ஆணையிட்டால் சொன்னார் . செய்தார் .எம்ஜிஆர்
கலங்கரை விளக்கம் மக்களுக்கு ...ரசிகர்களுக்கு
தனிப்பிறவி - உண்மை
முகராசி திமுகவை ஆட்சியில் அமர காரணமானவர் எம்ஜிஆர்
ஆசைமுகம் எங்கள் எம்ஜிஆர் மட்டுமே
நம்நாடு எந்த காலத்திற்கும் பொருத்தமான எம்ஜிஆர் படம்
தலைவன் 1972ல் உருவெடுத்தார் .
நல்ல நேரம் எம்ஜிஆரின் புகழ் நிரந்தரமானது
நான் ஏன் பிறந்தேன் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு வேதநூல்
உரிமைக்குரல் 1972ல் எழுப்பினார் .எதிரிகளை பந்தாடினார்
நினைத்ததை முடிப்பவன் - நிகழ்த்தி காட்டினார்
நாளைநாமதே - நம்பிக்கை ஊட்டினார்
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் - தீய சக்தியிடமிருந்து தமிழகத்தை மீட்டார் ............vnd...
-
பாவம் என்ற கல்லறைக்கு பல வழி...
பொன்மனச்செம்மல் நமக்கு....
வழிகாட்டிய வழியோ.... தூய்மையானது..
அவ்வழியில் சென்றவர்கள் தான்
தலைவரின் தூயபக்தர்கள் ஆவார்...
நம்மை விட்டு உயிர் ஒருமுறை சென்றால் திரும்ப வருமா....
அதுபோல் தான் ஒழுங்கும்... ஒழுக்கமும்
ஒருமுறை நம்மை விட்டு சென்றால் திரும்ப வராது.... என பாடம் சொன்ன
தர்மதேவன்....
அநியாயம் எங்கு தலைவிரித்தாலும்
அதை அடக்கவே தலைவர் கையில் கம்பெடுத்து சூழட்டுவார்....
(அன்று எங்க வீட்டுபிள்ளையில் சாட்டை எடுத்தது போல்... )
ஆறு அரக்க உள்ளங்களை அன்பினால் ஆட்கொண்டு... தன் புன்னகை மூலம் நல்வழி படுத்திய கலையுலகின்
பிதாமகன்... தேசத்தின் வெற்றிமகன்!
+++++++++++++++++++++++++++++++++
அங்கோ.....
*************
காசுக்காக தேசபக்தன் வேடம் போட்டும்....
காசுக்காக குடிமகன் வேடம் போட்டும்...
காசுக்காக சிவன் வேடம் போட்டும்...
காசுக்காக. வேசியுடன்.....
குடிமகனே என ஆட்டம் போட்டும்...
காசுக்காக கப்லோட்டியனாக
வேடம் தரித்தும்....
காசுக்காக புகைபிடீத்தும் கையில் கோப்பையுடன் ராஜா யுவராஜ என பல பெண்ணிகளிடம் பாடி...தினம் உறவு வைத்தும்...
காசே தன் வாழ்க்கை... தன் நடிப்பு
என கொள்கை வரையறையின்றி நடித்தவர்கள் இருந்த தமிழ் சினிமாவில்...
+++++++++++++++++++++++++++++
கலை மூலம் படிப்பினை
என்னும் பாடம் புகட்டிய
உலகபெரும் திரை வாத்தியாரை
நாம் தலைவராக... வள்ளலாக....
தெய்வமாக வணங்குவது...
++++++++++++++++++++++++++++++
"நாம் அடைந்த பிறவி பலன்" ஆகும்!
++++++++++++++++++++++++++++++
பல்லாண்டு....பல்லாண்டு....
பலகோடி ஆண்டு.... பல்லாண்டு வாழ்க!
தமிழகத்தை வாழ வைத்த தரமிகு தலைவரின் புனித புகழ்.........bsr...