Originally Posted by
suharaam63783
*நாம் இப்படி அவர்கள் அப்படி*
இன்று மாலை எனக்கொரு தொலைபேசி அழைப்பு வந்தது ...
அவர் சிவாஜி படங்களை மாதாமாதம் ஒரு ஊரில் அமைப்பு வைத்து நடத்தி ஒளிபரப்புகிறார் (பெயரும் .. ஊரும் வேண்டாம்)
நம் தலைவரின் தம்பி என்பதாலும் நம் தலைவரும் சிவாஜி அவர்களை நேசித்தார் என்பதாலும் எனக்கு சிவாஜி அவர்களை வெறும் நடிகராகப் பிடிக்கும் ...
அவர் சிறந்த நடிகர் என்பதிலும் மாற்றுக்கருத்து எனக்கு இல்லை ...
ஒரு திரைப்படப் பாடலாசிரியர் என்ற முறையில் என்னை அவர் ஊருக்கும்... அமைப்புக்கும் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார் ... சென்றேன்.. அமைப்பின் பொருளாதார சூழ்நிலை காரணமாக என் பயணமும் .. தங்கலும் சற்று வசதி குறைவு தான்..
நான் பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டேன்..
நம் தலைவர் காணாத கடினங்களா என்று எந்த சூழ்நிலையையும் அப்படியே முகம் கோணாமல் ஏற்றுக் கொள்வது தலைவர் எனக்குக் கற்றுக் கொடுத்தது ...
தலைவர் தினசரி உடற்பயிற்சியோடு தியானமும் செய்வார்...
அந்த தியானத்தை தினசரி நானும் கடைபிடிக்கிறேன்...
ஆக.. சிவாஜி அவர்களின் நடிப்பைப் பற்றி ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை அங்கே வாசித்தேன்...
அனைவருக்கும் பிடித்திருந்தது ...
இதுவல்ல விஷயம்...
நம் தலைவரின் அழியாப் புகழைத் தாங்க முடியாத சில சிவாஜி ரசிகர்கள் தலைவரை சம்மந்தமே இல்லாமல் குறை சொல்லினர்..
அவர்களுக்கு நன்றாகவே தெரியும் என் தாயின் தந்தை திரு.எஸ்.வி.எஸ் மணி தலைவரின் நண்பர் மற்றும் Production Manager for FR Pictures... உரிமைக்குரல் திரைப்பட விநியோகஸ்தர்... இதை எல்லாம் அறிந்தும் இங்கிதமில்லாமல் பேசினர்...
தர்ம சங்கடமாக இருந்தது ...
ஏன்டா நிகழ்ச்சிக்கு ஒப்புக் கொண்டோம் என்று...
இது நிற்க ..
அந்த நண்பர் அடிக்கடி பேசுவார்...
நம் தலைவரின் பக்தர்கள் ஆற்றும் தொண்டுகள் பற்றியும் திரைப்படம் காட்டுதல் பற்றியும் உச்சியில் ஏற்றிப் பேசுவேன்...
நான் இது வரை சிவாஜி அவர்களைப் பற்றி குறை சொன்னதில்லை..
என் தலைவர் என்னை அப்படி வளர்க்கவில்லை...
இன்று பேசிய அதே நண்பர் அரசகட்டளைக்கான என் முகநூல் பதிவைப் படித்து குசலம் விசாரித்தார்...
நான் ஏற்கனவே பெரிய திரையில் தலைவரின் ராஜ வசீகரத்தைப் பார்த்து சொக்கிப் போயிருந்ததால் நிகழ்வை மனதாரப் பாராட்டிக் கொண்டிருந்தேன்...
சிற்றுண்டி தருகிறார்கள் .. நீங்கள் தண்ணீராவது தர வேண்டும் .. என்று சொன்னேன்...
என் கெட்ட பழக்கமே இதயத்திலிருந்து பேசுவது தான்..
உள்ளதை உள்ளபடி உள்ளத்திலிருந்து உரைப்பது நம் தலைவருக்கு மிகவும் பிடித்த குணம் ...
அதற்கு அவர் அரசியல் அமைச்சர்கள் உதவியிருப்பார்கள் என்றார்..
நான் இல்லை என மறுத்தேன்...
எம்.ஜி.ஆர் ரசிகர்கள் பொய் சொல்வார்கள் அவரின் நிறைய படங்கள் ஓடவே இல்லை என்றார்...
நான் அதற்கும் மறுத்து என்னிடம் அவர்கள் உண்மையாகத் தான் நடந்து கொள்கிறார்கள் ...
அரசகட்டளையை ஒரு மூத்த தலைவரின் பக்தரோடு பார்த்துக் கொண்டிருந்தேன்...
படம் நிகழும் போதே ...
அந்த மூத்த பக்தரிடம் படம் உங்கள் காலத்தில் எத்தனை நாட்கள் ஓடியது எனக் கேட்டேன்..
அவர் சற்றும் யோசிக்காமல் 80 நாட்கள் தான் ஓடியது என்றார்..
அய்யோ.. எவ்வளவு அருமையாக இருக்கிறது 80 ×2 =160 நாட்களைத் தாண்டி ஓடியிருக்க வேண்டிய படமல்லவா எனக் கூறினேன்..
சில அரசியல் காரணமாக 80 நாட்கள் தான் ஓடியது என்றார்..
அந்த நேர்மை தான் எம்.ஜி.ஆர் ரசிகர்கள்...
அந்த சத்தியம் தான் எம்.ஜி.ஆர் ரசிகர்கள்...
ஒரு எம்.ஜி.ஆர் ரசிகர்கள் கூட சிவாஜியை குறை சொல்லி நான் கேட்டதே இல்லை...
ஒரு சிவாஜி ரசிகர் கூட எம்.ஜி.ஆரை குறை சொல்லாமல் இருந்ததை நான் கேட்டதே இல்லை...
தாழ்வு மனப்பான்மை தான் குறை சொல்லும் ...
நாம் நிறைவானவர்கள்..
வான் புகழை அந்த வயிறுகளால் ஜிரணிக்க முடிவதில்லை...
தொடர்ந்து பேசிய அவர் இருவரும் கடினப்பட்டுத் தான் வந்தார்கள் என்றார்...
ஆம்.. சிவாஜி நுழைந்த உடனே பிரபலமாகி விட்டார்...
எம்.ஜி.ஆர் கடந்த தடைகள் கொஞ்ச நஞ்சமல்ல என்றேன்..
சிவாஜியும் சினிமாவில் கஷ்டப்பட்டார் என்றார்...
நாடகத்தோடு அவர் கடின காலங்கள் முடிந்துவிட்டது பராசக்தியில் இருந்து அவருக்கு ஏறுமுகம் என்று சொல்லி..
பராசக்தியில் கதை தான் ஹீரோ... சப்ஜெக்ட் தான் கதாநாயகன் என்ற ஒரு உண்மையை சொல்லி.. அவரின் நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டதால் அடுத்த படத்திலிருந்து ஹீரோவானார் என்றேன்...
சிவாஜி நடித்திருக்காவிட்டால் ஓடியிருக்குமா? எனக் கேட்டார்.. அவர் மனதை புண்படுத்தக்கூடாது என்ற வகையில் மெளனம் காத்தேன்...
நான் 1984 என்றபடியால் எம்.ஜி.ஆர் படங்கள் எப்படி ஓடியது என்பதை எல்லாம் என் தலைமுறைக்கு முன் உள்ளவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும் என்றும்
என் தாயின் தந்தை திரு எஸ்.வி.எஸ் மணி அவர்கள் எம்.ஜி.ஆர் மட்டும் தான் தயாரிப்பாளர்களை நஷ்டப்படுத்தாதவர் என முன்பே சொல்லி இருந்ததையும் பதிவு செய்தேன்...
உரிமைக்குரல் படமே அதற்கு சிறந்த உதாரணம் என்றிருக்கிறார்...
தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த அந்த சிவாஜி ரசிகர் பிறகு பேசுகிறேன் எனத் தொலைபேசி இணைப்பைத் துண்டித்து விட்டார் ...
சத்தியத்தின் முன் நிற்க... சத்தியத்தாயின் திருமகன் புகழ் முன் நிற்க இந்த உலகத்தில் எவருக்குமே தகுதியோ அருகதையோ இருந்ததில்லை... இருக்கவும் போவது இல்லை...
இதை எந்த சபையிலும் துணிவோடு சொல்வேன்...
நம் தலைவரைப் பற்றி ஒன்றல்ல.. அவரின் ஒவ்வொரு படங்களைப் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை.. அவரின் மிகையில்லா மேன்மை திரை நடிப்பைப் பற்றி அனைத்துப் படங்கள் பற்றியுமே எழுதிப் பேச நான் பேனா வாளோடு தயாராகவே இருக்கிறேன்...
அமைப்பினர் மேடை தந்தால் ... வாய்ப்பு தந்தால் அரங்கேற்றிடலாம்..
ஏற்கனவே தோட்டத்து விஜயகுமார் (எம்.ஜி.ஆர் விஜயன்) அவர்களின் பேராதரவோடு அவரின் மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர் ரசிகன் மாத இதழில் என் பல கட்டுரை வெளியாகி இருக்கிறது .. என் கல்லூரி கால அனுபவங்கள் அவை..
அவரே என் தலைவர் கவிதைக்கு முன் பக்கம் தந்து என் எழுத்துக்கு மகுட மரியாதை தந்தவர்.. நான் அப்போதெல்லாம் சின்னப் பையன்..
அவர் நல்ல பண்பாளர்..
நேர்மையாளர்..
என் தலைவிதி அவரை இழந்தேன் ..
அவர் உயிர் இழப்பதற்கு பத்து நாட்கள் முன்பு என்னோடு நான் குறுஞ்செய்தியில் அனுப்பிய பொங்கல் வாழ்த்திற்குப் பதில் வாழ்த்துப் பேசினார்...
அன்றே நான் அவர் குரலை கடைசியாகக் கேட்டது...
இன்னமும் என் காதுகளில் கேட்டுக் கொண்டிருக்கிறது...
அவரை அடிக்கடி நினைத்துப் பார்ப்பேன்...
அவரே தோட்டத்தில் தலைவரின் அலுவலக அறைக்கு அழைத்துச் சென்று தலைவரின் டைரியை காண்பித்தவர்..
இந்த நேரத்தில் அவருக்கென் இதய அஞ்சலி...
தோட்டத்திற்கு எதிர்ப்புறம் இருக்கும் தலைவரின் பள்ளியில் ஒரு விழா .. என் கவிதைக்கு விசில் சப்தம் கேட்டது அன்றே முதன் முறை..
எம்.ஜி.ஆர் சிவா படகோட்டி கெட்டப் அப் பில் மேடையில் வலம் வந்தது .. மக்கள் அவரின் கால்களில் விழுந்தது.. நான் பிரம்மித்த தருணங்கள் அவை ...
எம்.ஜி.ஆர் சிவாவும் இப்போது உயிரோடு இல்லை...
விஜயகுமார் அண்ணா அவரோடு என்னையும் ஒரு புகைப்படம் எடுத்தார்.. அதுவும் என்னிடம் இல்லை..
நான் விஜயகுமார் அண்ணாவின் இதழில் வெளிவந்த தலைவர் கவிதைகள் .. கட்டுரைகள் இருக்கின்றன.. ஒவ்வொன்றாக வெளியிடுகிறேன்..
இதை எல்லாம் நான் சொல்ல காரணம்..
எனதருமை தலைவரின் ரசிகர்களே .. பக்தர்களே ... சரியான பாதையில் தான் நாம் பயணம் செய்கின்றோம்..
உங்களின் கொடை உள்ளம் தொடரட்டும்..
தலைவரைப் பற்றிய என் எழுத்துக்களும் தொடரும்...
சிறு மதி படைத்த அந்த நடிகரின் ரசிகர்கள் சிலர் வயிறு எரிகிறார்கள் என்றால்...
நாம் இன்னமும் சரியான பாதையில் தான் பயணம் செய்து கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்...
நடிகர்கள் எல்லாம் மக்கள் தலைவர் ஆகிவிட முடியாது...
திரையில் மட்டுமல்ல நம் உயிர் வரையில் ஆள்கிறார் நம் தலைவர்...
அவரின் கொள்கைக் கொடி பிடித்து வீறுநடை போடுவோம்...
குறை சொல்வதல்ல என் உள்நோக்கம்..
இங்கிதமும் இதயமும் பெருந்தன்மையும் நமக்கு அதிகம்...
நன்கொடை கேட்க வந்தவர்களிடம்
காசுக்கு பாட்டெழுதிய கண்ணதாசனுக்கு எதற்கு சிலை? என்று ஆரம்ப சிலை அமைப்பாளர்களிடம் கேட்டவர் உயிர் திரு சிவாஜி அவர்கள்..
(அவர்களே என்னிடம் சொல்லி வருத்தப்பட்டது)
அது போகட்டும்...
அவர்கள் அப்படி
நாம் இப்படி
அரசன் எவ்வழி
மக்கள் அவ்வழி
நம் அரசன்
கொடை சக்கரவர்த்தி...
வள்ளலாரின் அவதாரம்...
இதயம் திறந்து வைத்தே ஒரு நயவஞ்சக கழகத்தால் ஏமாற்றப்பட்ட இறைவன் அவன்...
அந்த இறைவனே என் வழிபாட்டு தெய்வம்
இப்படிக்கு
தலைவரின் கடைக்கோடி பக்தன்
*வைரபாரதி*............ Thanks...