http://i1039.photobucket.com/albums/...pskox2jepi.jpg
Printable View
https://www.youtube.com/watch?v=czGlp3u_pwA
SIVAGAAMIYIN SELVAN - WARM ARRIVAL !!!
அனைவரும் எதிர்பார்த்திருந்த நடிகர் திலகம் இரு வேடங்களில் பிரமாதபடுத்திய சிவகாமியின் செல்வன் டிஜிட்டல் வடிவில் நேற்றுமுதல் தமிழகத்தில் சுமார் 27 திரை அரங்குகளில் ( எண்ணிக்கை சரிதானே? முரளி ஸ்ரீநிவாஸ் சார் )மறுவெளியீடு கண்டுள்ளது.
புதிய திரைப்படங்கள் பல கடைசி நிமிடத்தில் வெளிவந்தமையால் கோவை, திருநெல்வேலி நாகர்கோயில் வட ஆற்காடு, தென் ஆற்காடு, பாண்டிச்சேரி திருச்சி ஆகிய ஊர்களில் சிவகாமியின் செல்வன் திரைக்கு வரவில்லை என்பது ஒரு பக்கம் வருத்தத்திற்கு உரிய செய்தி என்றாலும், விநியோகஸ்தர்கள் பலரும் தங்களுடய இயலாமையை வருத்தத்துடன் தெரிவித்து கூடிய விரைவிலையே திரை அரங்கு தருகிறோம் என்று வாக்குறுதி கொடுத்துள்ளனர்.
ஆகையால் அதிக திரை அரங்குகள் வரும் நாட்களில் கிடைக்கும் என்று தாராளமாக நம்பலாம் !
இனி சிவகாமியின் செல்வன் வியாபார நிலவரம் !
சென்னையில் சிறந்த முறையில் ஒரு OPENING சிவகாமியின் செல்வன் திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது.
குளிர் சாதன வசதி இல்லாத ஸ்ரீனிவாச திரை அரங்கில் நேற்று மதிய காட்சிக்கு சுமார் 200 உக்கும் அதிகமான மக்கள் திரளாக வந்திருந்து கண்டுகளித்துள்ளது HIGHLIGHT !
ஸ்ரீனிவாச திரை அரங்கை பொருத்தவரை வெள்ளிகிழமை அன்று வெளியாகும் திரைப்படம் ..அது புதியதொ ..பழயதோ...60 முதல் 70 டிக்கெட் மட்டுமே போகும்....திரை அரங்கு நிர்வாகிகள் அனைவரும் மிகவும் மலைப்பில் உள்ளனர்...!
காரணம் இவர்களும் ஒரு சிலரை போல சிவாஜி படத்திற்கு கூட்டம் வராது என்ற காலம் காலமாக பரப்பியுள்ள பொய் செய்தியை நம்பியவர்களே !
ஆனால் நேற்று ...நடந்ததோ ....உண்மையான ஒரு நிகழ்வு....இதில் ஒரு சாரர் தியேட்டரை சேர்ந்தவர்கள்....போட்டாதானே தெரியும்...கூட்டம் வருதா இல்லையான்னு...சொம்மா இஷ்டத்துக்கு கதகட்டகூடாதுபா ..நம்ப தியேட்டர்ல எப்பயாவது 80 ஆடியன்ஸ் மேல வெளிகிழமா பாத்ருகொமா சொல்லு... இன்னிக்கிதான்யா களகட்டுது ...செல்வத்துக்கு ( கான்டீன் வைத்துள்ளவர்) இனிக்கி ஜாக்பாட் போ ! ...என்று அவர்களுக்குள்ளயே கூறியும் உள்ளனர் !
கர்ணன் , ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்களை டிஜிட்டல் முறையில் வெளியிட்ட திரு சொக்கலிங்கம் அவர்கள் ஸ்ரீனிவாச திரை அரங்கில் சென்று அங்கு வந்த மக்கள் கூட்டத்தை பார்த்து ...இடைவேளை வரை திரை அரங்கில் படமும் பார்த்து நம்முடைய சிவா மூவீஸ் திரு சந்திரசேகர் அவர்களை தொடர்புகொண்டு " சந்திரசேகர் சார் ...நீங்க ஜெயிசுடீங்க ! என்று அன்புடன் வாழ்தியுள்ளது கூடுதல் செய்தி !
நேற்று மூன்று காட்சிகள் முடிய ஸ்ரீனிவாச திரை அரங்கில் 600 உக்கும் அதிகமான மக்கள் கண்டுகளித்துள்ளது ....அந்த திரை அரங்கில் கடந்த பல வருடங்களில் நடக்காத ஒரு புதிய சாதனையாக திகழ்கிறது !
அடுத்து பெரம்பூர் மகாலட்சுமி திரை அரங்கம் - காலை முதலே திரை அரங்கு களைகட்ட துவங்கியுள்ளது நேற்று....சிவகாமியீன் செல்வன் அல்லவா !
நேற்று இரவு காட்சி வரை சுமார் 780 உக்கும் மேற்பட்ட மக்கள் கண்டுகளித்துள்ளனர் - இங்கும் சிவகாமியின் செல்வன் தினசரி 3 காட்சிகள் !
AGS திரை அரங்கை பொருத்தவரை மட்டும் சுமாரான வரவேற்ப்பு மட்டுமே சிவகாமியின் செல்வன் கண்டுள்ளது. எனினும் டிக்கெட் விலை 150 என்பதை கணக்கில் எடுத்தால் கணிசதிர்க்கும் கூடுதலான வசூல் என்றே விநியோகஸ்தர்கள் கூறியுள்ளார்கள். அதே சமயம் புதிய திரைப்படத்திற்கு வந்துள்ள மக்களை காட்டிலும் சிவகாமியின் செல்வனுக்கு இரண்டு மடங்கிற்கு மேல் கூடுதலாக வந்துள்ளார்கள் என்று ஒப்பீடு அவர்களே செய்து குறிப்பிட்டும் உள்ளார்கள். போஸ்டர் கொஞ்சம் சீக்கிரம் ஓட்ட சொல்லுங்க...ஜனங்களுக்கு தெரியனும்லே என்று திரை அரங்கு நிர்வாகிகள் கூறியுள்ளார்கள் ! .
அங்கு சிவகாமியின் செல்வன் போஸ்டர் திரைப்படம் வெளியான பிறகும் ஏன் ஓட்டுபவர்கள் இன்னும் ஒட்டாமல் இருந்தார்கள், இருக்கிறார்கள் என்பது விளங்கவில்லை !
மொத்தத்தில் கிடைத்த விவரங்களை வைத்து பார்க்கும்போது....LIMITED ஏரியாவில் மட்டுமே வெளியாகி இருந்தாலும் கிட்டத்தட்ட 98.5% திரை அரங்குகளில் சிவகாமியின் செல்வனுக்கு மக்கள் ரிலீஸ் செய்த புதிய திரைப்படங்களை விட இரண்டு மடங்கு கூடுதலாக நல்ல வரவேற்ப்பு கொடுத்துள்ளார்கள் என்பது மட்டும் உறுதி செய்துள்ளனர் திரைப்படத்தை விநியோகம் செய்துள்ளது விநியோகஸ்தர்கள்.
தரத்திலும் டிஜிட்டல் செய்யப்பட்ட விதத்திலும் சிவகாமியின் செல்வன் மிக மிக சிறந்த முறையில் உள்ளதாக மக்கள் FEEBACK கொடுத்துள்ளது அனைவரையும் உற்சாகபடுத்தி உள்ளது !
மற்ற ஏரியாக்களின் தகவல்களை திரு முரளி ஸ்ரீநிவாஸ் அவர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு காளை சுந்தர்ராஜன் சார் அவர்களும் பகிர்ந்துகொள்ள விரைவில் வருகிறார்கள் !
இது ஒருபுறம் இருக்கட்டும்....இனியாவது பொய் பேசும் சில விநியோகஸ்தர்கள் மாறுவார்களா தங்கள் காழ்புணர்ச்சியை மாற்றிகொள்வார்களா என்ற கேள்வி எழாமலும் இல்லை !
RKS
கோபால் சார்...
நன்றிகளுக்குரிய சுட்டிக்காட்டல் தங்களுடையது.
ஆலோசனைகள் கவனத்தில்
கொண்டேன்.
"நீங்கள்", "உங்கள்" என்று
எழுத, எழுத எனக்கும் ஒருமுறை தோன்றிற்று..
நடிகர் திலகத்தை மட்டுமே
குறிக்காமல் போய் விடுமோ
என்று.
ஆனாலும் ஒரு தெளிவு.
என் கவிதைகளின் உயர்வான
பாடுபொருளான நடிகர் திலகம்,
என் பேர் சொல்லும் அத்தனை கவிதைகளிலும் இன்ஷியல் போல் மறைந்திருக்கிறார்.
ஒவ்வொரு முறையும்
இனிஷியலோடு பேர் சொல்லுவது செயற்கையாகத்
தெரிகிறது.
அதுவும், அய்யனின் நினைவுகளோடு நாம் வாழும்
திரி எனும் நம் வீட்டுக்குள்ளேயே எதற்கு
என்ற எண்ணம்.
மேலும், தங்களைப் போன்ற
மூத்தவர்களைக் கொண்டு தேர்வு செய்து இக்கவிதைகளைப்
புத்தகமாகத் தொகுக்கும்
எண்ணமிருக்கிறது.
அப்போது, இக்குறைபாடுகள்
இல்லாது போகும்.
நடிகர் திலகத்தையும், என்
எழுத்துகளையும் இணைக்கும்
கண்ணிகள், என் திறமை வழி
இல்லாது போனாலும்,
தங்களின் அக்கறை வழி
எப்போதுமிருக்கும்.
நன்றிகள் மீண்டும்.
In Sathyam Cineplex - Almost 5 Films are running the same show - THE ONLY FILM TO SEE FULLHOUSE IS OUR SIVAGAMIYIN SELVAN !
http://i501.photobucket.com/albums/e...ps0gz351hf.jpg
சென்னையில் உள்ள நண்பனுடன் தொடர்பு கொண்டு பேசினேன். சத்யம் அரங்கில் பார்த்ததாக சொன்னார். இரண்டு நடிகர்திலகமும் செமையான கைதட்டல் மற்றும் ஆரவாரம் பெற்றார்களாம்.
தன் தாய் தந்தையின் புகைப்படங்களை பார்த்து மகன் உண்மையை உணரும் நேரத்தில் நடிகர்திலகத்தின் முகபாவங்களுக்கு அட்டகாசமான ரெஸ்பான்ஸ் கிடைத்ததாம். பாடல் காட்சிகளுக்கும் அப்படியே.
நடிகர்திலகம் மற்றும் வாணிக்கு அடுத்து ஆரவாரமாக ரசிக்கப்பட்டவர் மனோகர்தானாம். "நல்ல நாடு இது, எங்க அமெரிக்காவுலே" என்ற ரிபீட் டயலாக்குக்கு ஒவ்வொரு முறையும் சிரிப்பலைதானாம்.
நேற்றைய நிலவரங்களை விவரமாக தந்த நண்பர் ரவிகிரண் அவர்களுக்கு நன்றி.
Fantastic Feedback Mr RKS. NT once again proves who is the master in Box Office. It is a stupendous achievement
inspite of limited theatres. NT Rocks.
மக்கள் தலைவரின் சிவகாமியின் செல்வன் என்ற பெயர் கொண்டவராயிற்றே..
வரவேற்புக்கு சொல்லவா வேண்டும்.
நேற்று ஒரே நாளில் மஹாலக்ஷ்மி சீனிவாசா இரு திரையரங்குகளிலும் தலா மூன்று காட்சிகள் வீதம் 6 காட்சிகளில் மொத்தம் சுமார் 1200க்கும் மேல் எண்ணிக்கையில் பார்வையாளர்கள் வருகைதந்திருப்பது ஒன்றே நடிகர் திலகத்தின் வீச்சும் தாக்கமும் எந்த அளவிற்கு தலைமுறைகளைக் கடந்தது என்பதை எடுத்துக் காட்டும். திரையரங்கு நிறைய வேண்டும், வசூல் மழை பொழிய வேண்டும் என உண்மையாக விரும்பும் விநியோகஸ்தர்கள், மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் நிச்சயம் நடிகர் திலகத்தின் படங்களுக்குத் தான் முன்னுரிமை கொடுப்பார்கள். என்ன தான் ஆராதனா வை ஒப்பிட்டாலும், இன்றைய தேதியில் ஆராதனா வின் மறு வெளியீட்டிற்கு இது போன்ற மக்கள் வரவேற்பு கிடைக்குமா. இதைப்போன்ற சாதனைகளையெல்லாம் செய்யக்கூடியவர் நடிகர் திலகம் மற்றும் அவர் படங்கள் மட்டுமே.
துரதிருஷ்டவசமாக திரையரங்குகள் ஒரு வளையத்திற்குள் மாட்டிக்கொண்டு விட்டதாக ஒரு தோற்றம் உள்ளது. இது உண்மையாக இருந்தால் ஒரு திரையரங்கில் என்ன படம் வெளியிடுவது என்பதைத் தீர்மானிக்கும் உரிமைகூட அந்த திரையரங்கிற்கு இல்லையோ என்ற ஐயம் எழுகின்றது. இப்படிப்பட்ட போக்கு நிலவுவதும் உண்மையாக இருந்தால் அது நீடித்தால் நிச்சயம் அது தமிழ் சினிமாவிற்கு ஆரோக்கியமானதல்ல.
இது ஒரு புறம் இருக்க, திரையிட்ட திரையரங்குகள் அனைத்திலுமே நல்ல வரவேற்பை சிவகாமியின் செல்வன் பெற்றுள்ளது பாராட்டத் தக்கது. வெளியூரிலிருந்து வரும் தகவல்களும் மகிழ்ச்சியூட்டுவதாக உள்ளன.
படத்தைப் பொறுத்த வரையில் நவீனமயமாக்கலில் ஒரு புதிய பரிமாணத்தைக் கொண்டு வந்துள்ள மதுரை சிவா மூவீஸார் அதில் பெற்றுள்ள வெற்றி மிகவும் தெம்பூட்டக்கூடியதாகும். அது மட்டுமின்றி வருங்காலத்தில் பழைய படங்களைத் திரையிடுவதில் ஊக்கமும் உற்சாகமும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அளிக்கும் வகையிலும் இது அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.
நம்மைப் பொறுத்தமட்டில் சிவகாமியின் செல்வன் திரைப்படத்தின் நவீனமயமாக்கலின் புதிய பரிமாணம், அதற்குக் கிடைத்த வெற்றியின் மூலம், எங்கும் எதிலும் முதல்வர் நடிகர் திலகமே என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.
மதுரை சிவா மூவீஸுக்கு நமது உளமார்ந்த பாராட்டுக்கள்.
நண்பர் ரவிகிரண் சொல்வது போல, சிவகாமியின் செல்வன் படத்தின் வணிக ரீதியான வெற்றி விவரங்களை முரளி சாரும் மற்றும் மதுரையைச் சார்ந்த சிவா மூவீஸ் நண்பர்களும் பகிர்ந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம்.
நமது மதுரை சிவா மூவீஸாரின் புதிய பரிமாணத்தில் நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட சிவகாமியின் செல்வன் திரையில் ஒளி வீசும் கண்கொள்ளாக் காட்சி மனதைக் கவர்கிறது. திரையில் அதன் தோற்றத்தை நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு அதன் சிறப்பை எடுத்துரைக்கும் முகமாக சில நிழற்படங்கள் இங்கு பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. இந்தத் துல்லியம் இப்படம் திரையிடும் அனைத்துத் திரையரங்குகளிலும் அனைத்துப் பிரதிகளிலும் சமமாக இருப்பது இதன் சிறப்பு.
http://i1146.photobucket.com/albums/...pslus0cjhr.jpg
http://i1146.photobucket.com/albums/...psnvsqapf3.jpg
http://i1146.photobucket.com/albums/...psry9wsklo.jpg
http://i1146.photobucket.com/albums/...pshsyhqgla.jpg
http://i1146.photobucket.com/albums/...ps6zjw0zqe.jpg
http://i1146.photobucket.com/albums/...ps6lsgocqu.jpg
மதுரை சிவா மூவீஸாரால் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் இத்திரைப்படத்தின் பலம்
காட்சிகளில் தெளிவு. பளீரென ஒளிரும் காட்சிகள். இதனால் டார்ஜீலிங்கின் இயற்கை அழகை நம்மால் கண்குளிர ரசிக்க முடிகிறது.
ஃப்ரேம்கள் ஒழுங்காக அமைந்துள்ளன. தலையைக் காணோம் வாலைக் காணோம் போன்ற குறைகளேதும் இல்லை.
மிக மிக மிக மிக முக்கியமான பலம்.. பாராட்ட வேண்டிய விஷயம்.
ஒலியின் தன்மை.
மெல்லிசை மன்னரின் இசையை அதுவும் என்னைப் போன்ற அவரின் வெறியர்களுக்கு இது ஒரு வரப்ரசாதம். கண்ணை மூடி பின்னணி இசையைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். ஒவ்வொரு இசைக்கருவியும் துல்லியமாகக் கேட்கிறது. கூடுதலாக எந்த ஒரு ஒலியையும் சேர்க்காதற்காகவே மதுரை சிவா மூவீஸாருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். தேவி பேரடைஸில் வெளியான போது கூட இந்த அளவிற்கு இசையை அனுபவித்ததில்லை. இந்த சுகமான இசையில் நம்மை மூழ்க வைத்ததற்கு மெல்லிசை மன்னருக்கும் அதை சிறிதும் சிதையாது பாதுகாத்து அதன் புனிதம் கெடாமல் நமக்களித்த சிவா மூவீஸுக்கும் கோடான கோடி எம்எஸ்வி ரசிகர்கள் சார்பில் உளமார்ந்த நன்றி.
பலவீனம்
இது மக்களை இன்னும் பரவலாக சென்றடையவில்லை என்பது நமக்கு பலவீனமே. இதை நம்மால் சரி செய்ய முடியும். தேவையான பேனர்கள், போஸ்டர்கள் மற்றும் ஊடகங்களில் இதைப் பற்றிய செய்திகளை வரவழைத்தல் போன்றவை இதைப் போன்ற உன்னதக் காதல் காவியங்கள் மக்களிடம் சென்று சேர மிகவும் உறுதுணையாக இருக்கும்.
மொத்தத்தில் பார்த்துப் பார்த்துப் பரவசமடைய வைக்கும் வண்ணம் மெருகுடன் வெளிவந்துள்ளது சிவகாமியின் செல்வன். தங்கள் ஊரில் எந்தத் திரையரங்குகளில் வெளியானாலும் அங்கெல்லாம் நாம் பார்த்து ரசிக்க வேண்டிய வெற்றித் திரைக்காவியம் சிவகாமியின் செல்வன்.
ராகவேந்தர் சார்,
நடிகர்திலகத்தின் காதல் காவியம் "சிவகாமியின் செல்வன்" மறு வெளியீட்டின் வெற்றிச்செய்திகளை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி. திரையரங்குகளில் எடுக்கப்பட்ட நிழற்படங்கள் மிக மிகத்தெளிவு.
இன்னும் நன்றாக விளம்பரம் செய்யப்பட்டு, அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டுமென்பதே நம் ரசிகர்கள் அனைவரின் விருப்பம்.
சிவகாமியின் செல்வன்
கோவை
பிரிண்ட் மிக மிக அருமை.ஒலியும் அதனினும் அருமை.படம் வந்த புதிதில் கேட்கப்படாத ஒலிகளை கூட இப்போது மிக துல்லியமாக உணரமுடிந்தது.கண்களுக்கு குளுமையாக இருக்கிறது.
இது படம் பார்த்தஅனைவரின் கருத்து.
நடிகர்திலகத்தின் படங்களை தவறாது முதல்நாளில் பார்க்கும் நண்பர் ஒருவர் கோவை அர்ச்சனா தியேட்டருக்குச் சென்று அங்கு திரைப்படம் இல்லை என்று தெரிந்து பின்புருக்பீல்ட் வந்து படம் பார்த்து விட்டு சென்றார்.
சிம்ம சொப்பனம் http://i1039.photobucket.com/albums/...pse5ykykk9.jpg
நடிகர் திலகத்துடன் ரேகா
இதயம் பேசுகிறது அட்டைபடம் http://i1039.photobucket.com/albums/...psd1fhpffb.jpg
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...46&oe=5786CD7D
குடந்தை எம்எஸ்எம் திரையரங்கில் சிவகாமியின் செல்வன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் வைத்துள்ள பேனர்.
குடந்தை சிவாஜி சேகர் அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து.
Thanks for Sivakamiyin selvan rerelease feedback to mr rks raghavendra and senthil and friends. as iam out of the country Iam counting days to see SS at sathyam cinemas,
Congrats to madurai sivamovies for their wonderful presentation. hope it wi;; be another karnan rerelese,