-
முயற்சிகள்..
உறவு
சந்திப்புக்களை தொடர்ந்து ஏற்படுத்தி
பரிசுகளைக் கொடுத்து வாங்கி
பரஸ்பரம் தொட்டுக் கொண்டு
மடிசாய்ந்து கதைகள் பலபேசி
சிரிப்பும் அழுகையுமாய் ஒன்றி
நேரம் இப்படியே நீளாதென ஏங்கி
ஒவ்வொரு கணத்தையும் கொண்டாடி
பிரியும் வேளையில் கட்டிப் பிடித்து
முத்தங்களை ஆசைத்தீர வழங்கி
கடைசியாய் எப்போதும் ஒரே கேள்வி
எப்பப்பா அம்மாவோட மறுபடியும்
ஒண்ணா வாழப் போறிங்க?
-
மிகவும் அருமை! கனமான ஒரு உணர்வை, அறைகின்ற ஒரு பெருகி வரும் அவலத்தின் யதார்த்தத்தை வெகு லகுவாக உறைக்கவைத்துவிட்டீர்கள்!
-
-
ஒளி
நேரம் என்ன தம்பி இருக்கும்
கடந்து போகும் முதியவர் கேட்டார்
ஐந்தரை மணி தாத்தா
அங்காடி இன்னும் தொறந்திருக்குமா
சந்தேகம்தான் சீக்கிரம் போங்க
கிருஷ்ணாயில் வாங்கணும் தீந்துபோச்சி
வேலை முடிஞ்சி வந்த சோர்வுல
நேத்திக்கே வாங்க மறந்திட்டேன்
பேத்திக்கு பரிட்சை நாளைக்கு
புலம்பி கொண்டெ நடையை கூட்டினார்
தாமதமாக வந்து நின்ற
டவுன் பஸ்ஸினுள் கூட்ட நெரிசலிலும்
ஏறிக்கொண்டு இன்வெர்ட்டர்
வாங்கும் பணத்தை
இன்னொருமுறை இருக்கிறதா என
சரிபார்த்துக் கொண்டென்
-
சோஷியலிச தராசின் ஏற்ற இறக்க தட்டுக்கள்- வாழ்வில் காணும் அவலமான நிதர்சனங்கள்!
-
உறவு40
ஓளி45
இனிய ஆரம்பம்! வாழ்த்துக்கள்!!!
திருத்தக்கன்.
-
:redjump:ஹைய்யா! வாத்தியார் வந்துட்டார் மார்க் போட! முனை மழுங்கிய பென்சிலாய் கிடக்கும் பெண் நான் கூராக்கப்படுவேனே!:cheer:
-
பெருகிவரும் மன -மண முறிவுகள் ---> பிஞ்சு மனங்கள் அதனால் வரண்டுபோகும் அபாயங்கள்...
இருக்கும் தட்டில் இருந்து அடுத்த தட்டுக்கு ஒருக்கால் ஏறிவிட தவிக்கும் பொருள் ஆதார புருஷர்கள்..
உறவு, ஒளி - இரண்டுக்கும் பாராட்டும் வாழ்த்தும் வெங்கிராம் அவர்களே!
-
தேர்தல்
ஏராளம் எண்ணிக்கையில் தொகுதி வேட்பாளர்கள்
சுறுசுறுப்பாக களத்தில் திரியும் பிரமுகர்கள்
ஓட்டு பிரியுமென்ற அதிர்ச்சியில் பெரிய கட்சிகள்
எல்லாத் திசையிலும் பணம் பொருள் இலவசம்
காற்றில் கலந்து விட்டிருந்த லஞ்ச வாசம்
பரப்பரப்பான வாக்குப் பதிவின் முந்தைய இரவு
பரலோகம் சென்றார் சுயேட்சை ஒருவர் மாரடைப்பில்
வாங்கியவற்றை ஏப்பமிட்டு வரவிருக்கும் இடைத்தேர்தலை
வரவேற்கத் தயார் நிலையில் ஊர் மக்கள்
-
நன்றி திரு காவேரி கண்ணன்!