ஏ.ஆர்.முருகதாஸ் production மான்கராத்தே - சிவகார்த்&
திருக்குமரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஹன்சிகா, சதீஸ் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் 'மான்கராத்தே'. அனிருத் இசையமைத்திருக்கிற இப்படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
இப்படத்திற்கு, கதை எழுதி எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். சமீபத்தில் வெளியான இப்படத்தின் இசை நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
இப்படம் தணிக்கை சான்றிதழுக்காக அனுப்பப்பட்டது. படத்தைப் பார்த்த தணிக்கைக்குழு படத்திற்கு எந்த காட்சியையும் நீக்காமல் 'யூ' சான்றிதழை அளித்துள்ளது.
வருகிற ஏப்ரல் 4ம் தேதி படம் திரைக்கு வரவிருப்பதால், ரசிகர்கள் பட வெளியீட்டுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.