PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 8



Pages : 1 2 3 4 5 6 7 [8]

kumareshanprabhu
15th September 2011, 12:04 PM
all the best shekar

KCSHEKAR
15th September 2011, 12:23 PM
வாழ்த்துக்களுக்கு நன்றி திரு.வாசுதேவன் சார் & திரு. குமரேஷ்.

vasudevan31355
15th September 2011, 12:28 PM
பாசமிகு பம்மலார் சார்,

'செந்தாமரை' பேசும் படம் இதழின் அரிய,அற்புதக் காவியக் காட்சிப் பகுதிகளைப் பதிவிட்டு நெஞ்சை கபளீகரம் செய்து விட்டீர்கள். இதுவரை நான் பார்த்திராத ஸ்டில்கள். படத்தின் cd,dvd க்கள் கூட இன்னும் கிடைக்க வில்லை. படம் பார்க்காத குறை மனதை வாட்டிக் கொண்டிருந்தாலும் தாங்கள் பதிவிட்ட ஸ்டில்ஸ் மூலம் அக்குறை ஓரளவிற்கு தீர்ந்தது. அதற்காக என் ஸ்பெஷல் நன்றிகள்.

நடிகர் திலகத்தின் "இரத்தத்திலகம்" காவியத்தின் பேசும் படம் இதழின் காவியக் காட்சிகள் அனைத்தும் காந்தங்கள். எத்தனை விதமான ஸ்டில்கள்! அதி அற்புதம். தேசியக் கொடியை ஒரு கையிலும், துப்பாக்கியை ஒரு கையிலுமாக 'சிக்' கென்ற ராணுவப் போர் உடையில் நம் இதயவேந்தர் வீரத்துடன் நிற்கும் அந்த நிழற் பட போஸ் கோடிப் பொன் கொட்டிக் கொடுத்தாலும் ஈடு இணை ஆகாதது. ஆஹா!.. வைத்த கண் வாங்காமல், இமை கொட்டாமல் வாழ்நாள் முழுதும் பார்த்து பார்த்து ரசித்துக் கொண்டே இருக்கலாம். அதை அள்ளி வழங்கிய உங்களுக்கு காலம் முழுதும் நன்றி சொல்லிக் கொண்டே இருக்கலாம். நன்றி! நன்றி!நன்றி!

'இரு மேதைகள்' பொம்மை ஆவணப் பொக்கிஷம் அருமை. அயன்புரம் சத்திய நாராயணன் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் அளித்திருக்கும் (நான் பார்த்த படம்) இருமேதைகள் விமர்சனம் நடுநிலையானது. இந்தியன் எக்ஸ்பிரஸ் 'தாவணிக் கனவுகள்' முதல் வெளியீட்டு விளம்பரம்,தினத்தந்தி 101வது நாள் விளம்பரம் அனைத்தும் அருமை. ஆதாரங்களை அற்புதமாய் அள்ளித் தரும் அருமைச் சகோதரரே! நீவிர் ஆல் போல் தழைத்து வாழ்க! வாழ்க!

அன்புடன் வாழ்த்தும்,
வாசுதேவன்.

kumareshanprabhu
15th September 2011, 12:30 PM
vasudevan sir

waiting for some more mails

regards
kumareshanprabhu

KCSHEKAR
15th September 2011, 12:41 PM
அன்புள்ள பம்மலார், கிடைத்தற்கரிய ரத்தத்திலகம் பொக்கிஷங்களை வாரி வழங்கிய உங்களுக்கு பாராட்டுக்கள், நன்றிகள் பல.

vasudevan31355
15th September 2011, 12:43 PM
kumaresan sir,

definitely. which date vasantha maligai releasing on ? very eager to know about it.

vasudevan.

vasudevan31355
15th September 2011, 12:51 PM
அன்பு ராகவேந்திரன் சார்,

தங்கள் அன்பு உள்ளத்தித்திற்கும்,பாசப் பாராட்டுக்களுக்கும் பணிவான நன்றிகள் சார்.
இருமேதைகள் collage வடிவிலான நிழற்படம் நெஞ்சில் நிழலாடுகிறது. thank you sir!

உங்கள்
வாசுதேவன்.

saradhaa_sn
15th September 2011, 01:55 PM
டியர் சந்திரசேகர்,

நடிகர்திலகம் சிவாஜி சமூக நலப்பேரவை சார்பில், மலைக்கோட்டை மாநகரில் நடைபெற இருக்கும் 'நடிகர்திலகம் பிறந்தநாள் விழா மற்றும் மாணவ மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா' பரிபூரண வெற்றியடைய இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.

எண்ணத்தாலும் செயலாலும் நடிகர்திலகத்தின் புகழ் பரப்பும் பணியில் நீங்கள் மேற்கொள்ளும் இதுபோன்ற நற்காரியங்கள் அனைத்துக்கும் இறைவனின் அருளும் ஆசியும் பேருதவியும் கிடைக்கப் பிரார்த்திக்கிறோம்.

kumareshanprabhu
15th September 2011, 02:12 PM
Dear Vasudevan sir

i will defentely tell u the date

vasudevan31355
15th September 2011, 02:59 PM
thank u kumaresan sir.

saradhaa_sn
15th September 2011, 03:13 PM
டியர் வாசுதேவன்,

இத்திரியில் தங்களின் பங்களிப்புகள் அனைத்தும் அருமை. அந்த வகையில் 'இரத்தத்திலகம்' மற்றும் 'தாவணிக்கனவுகள்' புகைப்பட ஆல்பம் மிகவும் அருமையாக வழங்கியுள்ளீர்கள்.

தாவணிக்கனவுகள் படத்தில் நடிகர்திலகம் அறிமுகமாகும் முதல் காட்சியான கொடியேற்றும் காட்சியில் துவங்கி, இறுதியில் நேதாஜியாக வந்து சொல்லும் வரை அனைத்து காட்சிகளையும் தனித்தனி புகைப்படமாகத் தந்துள்ளீர்கள். திரைப்படத்தில் பார்க்கும்போது கூட அவரது உணர்ச்சிபூர்வமான முகபாவங்களை இவ்வளவு நிறுத்தி, நிறுத்தி பார்க்க முடியாது. மிகவும் சிரமம் எடுத்துக்கொண்டு தொகுத்திருக்கிறீர்கள். கிட்டத்தட்ட நடிகர்திலகம் வரும் காட்சிகளை மட்டும் தனியே பார்த்தது போலிருக்கிறது.

இதேபோலத்தான் 'இரத்தத்திலகம்' புகைப்பட ஆல்பமும் மிக அருமையான தொகுப்பு. மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்க வேண்டிய படம். தமிழர்களின் நாட்டுப்பற்றை மீறி, 'காங்கிரஸ்காரன் படம்' என்று துர்ப்பிரச்சாரம் செய்யப்பட்டதால் பெரிய அளவில் மக்களிடம் சென்றடையாத படம். (அப்போது திராவிட இயக்கம் காட்டுத்தனமாக வளர்ந்துகொண்டிருந்த நேரம்).

இப்படம் உருவானதும் கவிஞர் கண்ணதாசன், பெருந்தலைவரை அழைத்து (அப்போது முதலமைச்சராக இருந்தாரா அல்லது விலகிவிட்டாரா என்பது தெரியவில்லை, இந்திய சீனப்போர் நடைபெற்றபோது முதல்வராக இருந்தார்) இரத்தத்திலகம் படத்தை திரையிட்டுக்காட்டினார். படம் முடிந்ததும் கருத்து சொன்ன பெருந்தலைவர், 'போர்முனைக்காட்சிகளை நல்லா எடுத்திருக்கீங்க. ஆனா காலேஜ் காட்சிகள், இங்கிலீஷ் நாடகம் எல்லாம் ரொம்ப நீளமாக இருக்கிறது. கொஞ்சம் குறைங்க' என்று சொல்லி விட்டு, 'சிவாஜி நல்லா தேசப்பற்றை ஊட்டுகிற மாதிரி செஞ்சிருக்கார்' என்று பாராட்டினாராம். இதையும் சேர்த்து, பெருந்தலைவர் தன் வாழ்நாளிலேயே நான்கோ ஐந்தோ படங்கள்தான் பார்த்த்ருக்கிறார். அதில் ராஜபார்ட் ரங்கதுரையும் ஒன்று என்பது நமக்கெல்லாம் தெரிந்த விஷயம்.

பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றிகள் வாசுதேவன். உங்கள் கலக்கல்கள் தொடரட்டும்.

KCSHEKAR
15th September 2011, 03:17 PM
சாரதா மேடம், தங்களுடைய அன்பான வாழ்த்துக்கு என் இதயம் கனிந்த நன்றி.

தங்களைப்போன்ற, எண்ணற்ற ரசிகர்களின் இதயப்பூர்வமான வாழ்த்து மற்றும் விண்ணிலிருந்து நமது கலை தெய்வத்தின் பரிபூரண ஆசியால், இதயசுத்தியோடு நடைபெறும் நம்முடைய விழாக்கள் கண்டிப்பாக வெற்றிகரமாக அமையும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. ஏனென்றால், உள்ளதைச் சொல்வேன் சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது என்று பாடியதுபோலவே வாழ்ந்து காட்டி மறைந்த நடிகர்திலகத்தின் வழியில் நாம் நடப்பதால்.

மீண்டும் நன்றி.

லட்சோபலட்சம் ரசிகர்களுள் ஒருவனாக,

saradhaa_sn
15th September 2011, 03:36 PM
டியர் பம்மலார்,

வழக்கம்போல நடிகர்திலகத்தின் திரைப்பட விளம்பர மழையினை அள்ளித்தருவதோடு அடிஷனலாகத் தரும் அந்நாளைய 'பேசும் படம்' இதழ்களின் புகைப்படத்தொகுப்புகளையும் தருவது மனதுக்கு இதமளிப்பதோடு பழைய இதழ்களில் வந்தவற்றைப்படித்த மலரும் நினைவுகளையும் தூண்டுவதாக அமைந்துள்ளது.

'செந்தாமரை' படத்தின் காணக்கிடைக்காத ஸ்டில்களூம், 'இரத்தத்திலகம்' காவியத்தின் பேசும்படம் புகைப்பட ஆல்பமும் மிகவும் அருமையாக உள்ளன. இரத்தத்திலகம் படத்தில் இடம்பெற்ற நடிகர்திலகத்தின் உணர்ச்சிப்பிழம்பான புகைப்படங்கள் காணக்காண திகட்டாதவை. அப்புகைப்படக்குறிப்பில் புஷ்பலதா பற்றிச் சொல்லியிருப்பது உண்மை. அக்காலத்தில் அவருடைய அடித்து நிறுத்தும் அழகுக்காகவே பலர் அவர்மீது பைத்தியமாக இருந்தார்களாம். 'தாழம்பூவே தங்க நிலாவே' பாடல் அவரும் நடிகர்திலகமும் பாடுவதாக புஷபலதாவின் கற்பனையில் தோன்றும் பாடல் என்று நினைக்கிறேன். ஈஸ்வரி பாடியிருப்பதால் அப்படி ஒரு எண்ணம் எனக்கு. அழகான அந்தப்பாடல் ஏனோ படத்தில் இடம்பெறவில்லை. ஆனால் இலங்கை வானொலி தயவால் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் ஒலித்த பாடல் அது. புஷ்பலதா நன்றாக வந்திருக்க வேண்டிய நடிகை. ஏனோ இரண்டாம் நிலைக் கதாநாயகியாகவே இருந்து, அப்புறம் அம்மா ரோல்களுக்குப் போய்விட்டார்.

நீங்கள் அள்ளித்தரும் விளம்பரங்களும், பொம்மை, பேசும் படம் இதழ்களின் தொகுப்புகளும் கிடைத்தற்கரிய பொக்கிஷங்கள். இன்னும் எவ்வளவு அள்ளித்தரப்போகிறீர்கள் என்று நினைக்கும்போதே ஆனந்தமாக இருக்கிறது.

தங்களுக்கு என் இதயம் நிறைந்த பாராட்டுக்களும், நன்றிகளும்.

saradhaa_sn
15th September 2011, 04:02 PM
டியர் ஷக்திப்ரபா,

What a surprise.... ரொம்ப நாளைக்குப்பிறகு உங்களுடைய அழகான, அருமையான விமர்சனம் கண்டேன். விமர்சனம் அருமை என்பதால் மட்டுமல்ல, மீண்டும் நடிகர்திலகத்தின் தளத்தில் உங்களைக் கண்டதும் மிக மிக ஆனந்தமாக இருக்கிறது. உங்கள் தொடர்ந்த பங்களிப்பை எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

(நமக்குள் போலி மரியாதை எல்லாம் போதும், வழக்கம்போல ஒருமையில் அழைப்பதில் தவறில்லை என்று நினைக்கிறேன்).

"ஷக்தி, ஏன் பதிவை நிறுத்தி விட்டாய். உன் அற்புதமான எழுத்துக்களில் நீந்துவதற்கு ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதே ஷக்தி. உன் எழுத்தும் கற்பனையும் தேனோடு கலந்த தெள்ளமுது, தூய நிலவோடு சேர்ந்த குளிர்த்தென்றல். நமது நடிகர்திலகத்தின் சன்னதியில் உன் எழுத்தோவியங்களும் சேர்ந்து கலக்கட்டும்.... எழுது ஷக்தி... எழுது".

(என் கிண்டலை நீ ரசிக்கிறாயோ இல்லையோ, ஸ்ரீதர் அண்ணாவும் வைஷுவும் நிச்சயம் ரசிப்பார்கள்).

sudha india
15th September 2011, 04:28 PM
Naan rasithen Saradhaa......

RAGHAVENDRA
15th September 2011, 04:48 PM
வயலின்
புல்லாங்குழல்
சாக்ஸபோன்
ட்ரம்பெட்
டிரம்ஸ்
யாழ்
சிதார்
மிருதங்கம்
கொன்னக்கோல்
ஜதி
பியானோ
நாதஸ்வரம்
மத்தளம்
மேன்டலின்
கிடார்
தபேலா
ஹார்மோனியம்
இத்யாதி... இத்யாதி

இவற்றை இங்கே கூறக் காரணம்...

இல்லாமலா....

தன்னுடைய 300க்கும் மேற்பட்ட திரைக்காவியங்களில் ஏராளமான இசைக் கருவிகளை நடிகர் திலகம் வாசிப்பினை நடித்துக் காட்டியுள்ளார். எந்த இசைக் கருவியானாலும் அவற்றைத் தத்ரூபமாக வாசிப்பதாக நடித்துள்ளவர் நடிகர் திலகம். அப்படிப்பட்ட காட்சிகளில் சிலவற்றை நிழற்படமாகத் தொகுத்து இங்கே வழங்குவதில் மிகவும் பெருமையடைகிறேன். இதில் நிச்சயமாக விட்டுப் போனவை இருக்கக் கூடும். விடுபட்டவற்றை நண்பர்கள் நினைவு கூர்ந்து இங்கு தகவலைப் பகிரந்து கொண்டு உலகத்தில் இந்த அளவிற்கு மிக அதிகமான இசைக்கருவிகளை வாசிக்கும் கலைஞராக நடித்தவர் நடிகர் திலகம் மட்டுமே என்பதிலும் அவர் படைத்த சாதனையை பறை சாற்றுவோம்.

இதோ உங்கள் பார்வைக்கு அந்த நிழற் படம்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Decorated%20images/ntplayinginstrumentsfw.jpg

அன்புடன்

sudha india
15th September 2011, 05:00 PM
VEENAI

Ithyaadhi ithyaadhi

KCSHEKAR
15th September 2011, 05:03 PM
டியர் ராகவேந்தர் சார் - இசையின் நாயகனாக நம் நடிகர்திலகத்தை காண வைத்த உங்களுக்கு நன்றி. மிகவும் அருமையான தொகுப்பு.

pammalar
15th September 2011, 07:14 PM
பேரறிஞருடன் நடிகர் திலகம்

[சென்னையில் 15.12.1968 ஞாயிறன்று மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற்ற நடிகர் திலகத்தின் 125வது படவிழாவில் ("உயர்ந்த மனிதன்" படவிழாவில்) முதலமைச்சர் அண்ணா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்து தனது பேரன்பிற்குரிய சிவாஜியை மனதாரப் பாராட்டி வாழ்த்தினார். அந்த விழாவில் எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் உங்கள் பார்வைக்கு:]

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/Anna1.jpg

இன்று 15.9.2011 முன்னாள் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 103வது பிறந்ததினம்.

பம்மல் ஆர். சுவாமிநாதன்.

RAGHAVENDRA
15th September 2011, 08:58 PM
டியர் பம்மலார்,
திராவிட இயக்கங்களின் தளகர்த்தா பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை நினைவு கூர்ந்து அவருடைய படத்தையும் இங்கே பதிவேற்றி, அமர்க்களமாகக் கொண்டாடி விட்டீர்கள். இதை மேலும் சிறப்பிக்கும் வண்ணம், பேரறிஞர் அண்ணாவின் கதைக்கு கலைஞர் வசனம் எழுத, நடிகர் திலகத்தின் ஒப்பற்ற நடிப்பில், பானுமதிக்கு நடிப்பிற்கு இலக்கணம் வகுத்தவர் என்று அண்ணா பட்டம் சூட்டக் காரணமாயிருந்த ரங்கோன் ராதா திரைக்காவியத்திலிருந்து ஒரு இனிமையான பாடல் காட்சி. காற்றில் ஆடும் முல்லைக் கொடியே என்ற அந்த இனிமையான பாடலை பானுமதியே பாடியிருக்கிறார். இசை டிஆர்.பாப்பா.


http://www.youtube.com/watch?v=5wOM8qsCu80&edit=ev&feature=uenh

அன்புடன்

pammalar
15th September 2011, 09:30 PM
நடிகர் திலகத்தின் 125வது படவிழா

["உயர்ந்த மனிதன்" விழா : 15.12.1968 : சென்னை]

வரலாற்று ஆவணம் : பொம்மை : ஜனவரி 1969

முதல் பக்கம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4589a.jpg


இரண்டாவது பக்கம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4590a-1.jpg


மூன்றாவது பக்கம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4591a-1.jpg


நான்காம் பக்கம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4592a-1.jpg

தொடரும்...

அன்புடன்,
பம்மலார்.

pammalar
15th September 2011, 09:33 PM
நடிகர் திலகத்தின் 125வது படவிழா

["உயர்ந்த மனிதன்" விழா : 15.12.1968 : சென்னை] [தொடர்ச்சி...]

வரலாற்று ஆவணம் : பொம்மை : ஜனவரி 1969

ஐந்தாம் பக்கம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4593a-1.jpg


ஆறாம் பக்கம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4595a-1.jpg

[இந்த விழாத் தொகுப்புக் கட்டுரை மொத்தம் ஆறு பக்கங்களைக் கொண்டது.]

அன்புடன்,
பம்மலார்.

goldstar
16th September 2011, 12:38 AM
Guys,

Last few days moving around Madurai to buy missed NT DVDs and could find a similarity ie., every where mostly NT movies are selling like hot cakes and NT DVDs got extra sections than other actors.

I think not only NT fans, common people even our NT's opposition people started buying our NT's DVDs to enjoy each and every scene, it seems other actors time pass movies don't stand for long time.

I have bough nearly 50 NT movies and got a chance to have interaction with NT details guru Murali in Madurai and discussed about 1 hour simply NT and NT and NT.

There is no NT movies in Madurai for last 4 weeks and got 2 more weeks of holidays and wish to watch at least one NT movie in Madurai and that too on Sunday evening show. Let me see my luck.

Vasu sir, Ragavendran sir and Swamy sir, you people are soaking us in NT mood every day and thanks for your efforts to bring photos and videos of our NT.

Chandrasekar sir, we are talking of our NT's movies only but you are in other directions doing so much good things and spreading our NT fame outside of movies, I really appreciate your efforts.

Can we get few minutes videos of Trichy functions?

Any NT movie in Chennai ?

Kumaresan sir, yavaka VM Bangalru thalli barathey? Please do update with photos and videos, news paper cutting and make sure no other actor fans can think of cut outs and garlands in the future.

Cheers,
Sathish

pammalar
16th September 2011, 04:44 AM
டியர் ராகவேந்திரன் சார்,

தங்களின் பாராட்டுக்களுக்கு எனது பொன்னான நன்றிகள் !

"இரத்தத்திலகம்" கல்கி விமர்சனம், பாடல்களின் சுட்டிகள் அனைத்தும் பிரமாதம்.

"இரு மேதைகள்" நிழற்படங்கள் கலக்கல் !

நடிகர் திலகம் வாசித்த இசைக்கருவிகளின் நிழற்படத்தொகுப்பு அவருக்கு தாங்கள் செலுத்திய சிறப்பான இசையாஞ்சலி !

கலைஞர் கவிஞராய்ப் படைப்புத்திறன் காட்டிய 'காற்றில் ஆடும் முல்லைக்கொடி'யை இசைத்தென்றலாய் தவழச் செய்துவிட்டீர்கள் !

பாராட்டுக்கள் ! வாழ்த்துக்கள் ! நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
16th September 2011, 04:49 AM
டியர் வாசுதேவன் சார்,

தங்களது பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் எனது வளமான, கனிவான நன்றிகள் !

"இரத்தத்திலகம்" ஆல்பம் அற்புதம் என்றால் அதில் இடம்பெறும் 'ஒதெல்லோ' ஓரங்க நாடக வீடியோ அட்டகாசம் !

"தாவணிக் கனவுகள்", "இரு மேதைகள்" ஆல்பங்களை கண்களில் ஒற்றிக் கொள்ளும் அளவுக்கு அவ்வளவு அருமையாக அள்ளி அளித்துள்ளீர்கள் !

பாசமிகு பாராட்டுக்கள் ! வளமான வாழ்த்துக்கள் ! நெஞ்சார்ந்த நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
16th September 2011, 04:53 AM
டியர் சந்திரசேகரன் சார்,

தங்களது பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி !

சிவாஜி பேரவை சார்பில் திருச்சியில் நடைபெறும் நடிகர் திலகத்தின் 84வது ஜெயந்தி விழா இனிதே நடைபெற இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள் ! சமூகநலப் பேரவை என்கின்ற பெயருக்கு ஏற்றாற்போல் சமூகத்திற்கு நலம்பயக்கும் நற்பணிகளையும் செய்வது போற்றுதலுக்குரிய ஒன்று.

தொடரட்டும் பேரவையின் பெருந்தொண்டு !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
16th September 2011, 04:57 AM
டியர் mr_karthik,

தங்களின் அளவில்லா அன்பிற்கும், பாசமிகு பாராட்டுக்களுக்கும் எனது எண்ணிலடங்கா நன்றிகள் !

பாக்யராஜ் அவர்கள் 'நடிகர் திலகம் "தாவணிக் கனவுகள்" திரைக்காவியத்தில் நடிக்கப் போகிறார்' என ஒரு பொதுவிழாவில் அறிவித்ததை சுவாரஸ்யம் குன்றாமல் இங்கே பதிவிட்ட விதம் சூப்பர்.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
16th September 2011, 05:00 AM
சகோதரி சாரதா,

தாங்கள் எப்பொழுதும்போல் அள்ளி வழங்கிய பாராட்டுக்களுக்கு எனது அன்பான நன்றிகள் !

"இரத்தத்திலகம்" குறித்த மேலதிக விவரங்கள் அருமை ! பண்பட்ட நடிகையான புஷ்பலதா பெரிய அளவில் வராதது எனக்கும் வருத்தம்தான்.

தாங்கள் விரும்பியவண்ணம் பொக்கிஷங்களின் அணிவகுப்பு தொடரும் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
16th September 2011, 05:01 AM
Dear goldstar Satish,

It is nice to know that your tour of our motherland is going fine. All the best !

Thanks for your post & praise.

On any arena, Our Emperor Rules, Always !

Warm Wishes & Regards,
Pammalar.

pammalar
16th September 2011, 05:24 AM
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4596a-1.jpg

RAGHAVENDRA
16th September 2011, 06:00 AM
டியர் பம்மலார்,
தங்களுடைய பாராட்டுக்களுக்கு என் உளமார்ந்த நன்றிகள்.
அன்புடன்

RAGHAVENDRA
16th September 2011, 06:04 AM
அறிஞர் அண்ணாவின் கடைசி மேடை விழாவாக உயர்ந்த மனிதன் விழா அமைந்தது. பின்னர் அவர் இறுதியாகக் கலந்து கொண்ட விழா கலைவாணர் சிலை திறப்பு விழா, ஆனால் அன்று அவர் மேடையேற வில்லை.
உயர்ந்த மனிதன் விழாவில் உரையாற்றிய அப்போதைய மத்திய அமைச்சர் திரு ஒய்.பி.சவாண் அவர்களின் சென்னை நிகழ்ச்சிகளைப் பற்றி அப்போது ஆனந்த விகடன் வார இதழில் வெளி வந்த செய்தித் தொகுப்பு தங்கள் பார்வைக்கு.

பக்கம் 1

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/YBCProgcoveragevikatandec68p1fw.jpg

பக்கம் 2

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/YBCProgcoveragevikatandec68p2fw.jpg

அன்புடன்

RAGHAVENDRA
16th September 2011, 06:09 AM
டியர் பம்மலார்,
பூப்பறிக்க வருகிறோம் என்று சொல்லி விட்டுத் தான் மட்டும் தனியாக சென்று விட்ட நடிகர் திலகத்தின் இறுதித் திரைக்காவியத்தைப் பற்றிய விளம்பரம் மூலம் புதியதொரு அணிவகுப்பினைத் தொடங்கியுள்ளீர்கள். நன்றிகள் பல.

இத்திரைக்காவியத்தின் நெடுந்தகடு வெளியிடப் பட்டுள்ள விவரம் ஏற்கெனவே இங்கு தரப் பட்டுள்ளது. இருந்தாலும் தற்போது மீண்டும் அதன் நிழற்படங்கள் தரப்படுகிறது.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/DVD%20VCD%20covers/PPVF.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/DVD%20VCD%20covers/PPVR.jpg

அன்புடன்

vasudevan31355
16th September 2011, 07:56 AM
மதிப்பிற்குரிய சாரதா மேடம் அவர்களே,

தங்கள் ஆத்மார்த்தமான பாராட்டுதல்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள். தங்களின் மனம் நிறைந்த பாசப் பாராட்டுதல்கள் நம் நடிப்புலக இறைவனாருக்கு தொண்டுகள் செய்ய மென்மேலும் ஊக்குவித்தலாய் அமைகின்றன. நன்றிகள் பல.
நீங்கள் குறிப்பிட்டது போல பெருந்தலைவர் அவர்கள் பார்த்து மகிழ்ந்த சிற்சிலபடங்களில் ஒன்று 'சினிமாப் பைத்தியம்'. வாஞ்சிநாதனாக அதில் இவர் வாழ்ந்து காட்டியதை காமராஜர் வெகுவாக ரசித்துப் பாராட்டினாராம்.
உங்கள் அன்புத்தோழி சகோதரி ஷக்திப்ரபா அவர்களிடம் உங்களுக்கு உள்ள உரிமையை நினைக்கும் போது மனம் பெருமகிழ்ச்சி அடைகிறது. ஜாலியாக நீங்கள் அவரை பதிவுகள் இடச்சொல்லி 'சிங்கார வேலனே தேவா' பாடலின் ஆரம்ப வசனம் போல ஒருமையில் அன்புக் கட்டளை பிறப்பித்திருக்கும் அழகு கொஞ்சும் சலங்கையாய் கொஞ்சி விளையாடுகிறது. மிகவும் ரசித்தேன்.ரசித்தோம். உங்கள் ஆழ்ந்த நட்பு நடிகர்திலகமும் நடிப்பும் போல பரிபூரணம் பெற்று நிலைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

பக்தியுடன்,
தங்கள் மாணவன்.

vasudevan31355
16th September 2011, 08:09 AM
அன்பு ராகவேந்திரன் சார்,
சகல இசைக்கருவிகளிலும் தலைவர் புகுந்து விளையாடும் நிழற்படங்கள் தூக்கலோ தூக்கல்.கலக்கல். தூள் கிளப்பி விட்டீர்கள்.அத்தனை வாத்தியக் கருவிகளுக்கும் பெருமை சேர்த்த அந்த மகானுக்கு அந்த இசைக் கருவிகள் மூலமாகவே புதுமை முறையில் தாங்கள் பெருமை சேர்த்து விடீர்கள். இசைக்கருவிகளின் வேந்தருக்கு எங்கள் 'ரசிக வேந்தர்' அளித்த அற்புதமான இசை அஞ்சலி. நன்றிகள் சார். உயர்ந்த மனிதன் விழா பற்றி ஆனந்த விகடன் வார இதழில் வெளி வந்த செய்தித் தொகுப்பு ஒர் அரிய புதையல். அளித்தமைக்கு அன்பார்ந்த நன்றி.

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
16th September 2011, 08:21 AM
டியர் சதீஷ் சார்,
தங்கள் உயர்ந்த பாராட்டுதல்களுக்கு அன்பான நன்றிகள். தலைவருக்கு சேவை செய்வது நமது தலையாய கடமை ஆயிற்றே! அதில் கிடைக்கும் ஆத்ம திருப்தி வேறு எதிலும் கிடைக்காது.
மதுரையில் தலைவருடைய படங்களின் cd,dvd- க்கள் விற்பனையில் முதலிடம் வகிக்கின்றன என்ற தங்களுடய செய்தி காதில் தேனாகப் பாய்கிறது. வித்தைகள் புரிந்த வித்தகரின் காவியங்களை ரசிக்காதவரும் உண்டோ? தங்கள் அன்புக்குத் தலைவணங்கும்
அன்பு வாசுதேவன்.

NOV
16th September 2011, 09:18 AM
Rare interview with NT


http://www.youtube.com/watch?v=c8xZ1n3eLxI&feature=related

RAGHAVENDRA
16th September 2011, 10:42 AM
http://www.nadigarthilagam.com/papercuttings2/eporunningad2.jpg

அம்பத்தூர் க. வெங்கடேசன் என்ற ரசிகர், அம்பத்தூரில் செவாலியே சிவாஜி கணேசன் பிறந்த நாள் நினைவு நிழற்குடை அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்கென பிரத்யேகமாக 01.10.2011 அன்று பிற்பகல் 2.30 மணிக்கு சென்னை கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில் உள்ள எம்.எம்.தியேட்டரில் நடிகர் திலகத்தின் வெற்றிச் சித்திரமான என்னைப் போல் ஒருவன் சிறப்புக் காட்சியாக திரையிடப் படுகிறது. நுழைவுச் சீட்டு தேவைப் படுவோர் திரு அம்பத்தூர் வெங்கடேசன் அவர்களை 9790844116 என்கிற கைப்பேசி எண்ணைத் தொடர்பு கொள்க.

அன்புடன்

RAGHAVENDRA
16th September 2011, 10:44 AM
டியர் சதீஷ்,
தங்களின் பாரத வருகை மகிழ்வூட்டுகிறது. தங்களை நேரில் சந்திக்க அனைவரும் ஆவலாயுள்ளோம். தாங்கள் சென்னை வரும் வாய்ப்புள்ளதா. அவ்வாறாயின் தங்களை நேரில் கண்டு கலந்துரையாடலாலமா, விவரம் தெரிவிக்கவும்.
அன்புடன்

KCSHEKAR
16th September 2011, 10:59 AM
உயர்ந்த மனிதன் படவிழா பொம்மை தொகுப்பு மிகவும் அருமை. பேரறிஞர் அண்ணா அவர்களின் உரையில் - நடிகர்திலகம் பராசதியில் அறிமுகமாகியிராவிட்டால் என்னவாகியிருக்கும் என்ற கேள்வியை எழுப்பி - அவரே பதில் கூறுகிறார் "ஒளி வீசும் வைரம் நீண்டநாள் சுரங்கத்திலேயே தங்கமுடியாது, தங்கவைக்கவும் முடியாது" என்று. 125 -வது பட விழாவில் அண்ணா பேசியதன்பின்னால், நடிகர்திலகம் 300 படங்கள் நடித்து, மறைந்து இன்று 10 ஆண்டுகள் ஆகியும் அவருடைய புகழ் ஒளி வீசுகிறது. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மங்காப் புகழ் பெற்று ஒளிவீசும் என்பது திண்ணம்.

அவ்விழாவில் நடிகர்திலகத்தைப்பற்றிப் பேசிய ஒவ்வொருவருடைய கருத்தும் இன்று படித்தாலும், மேடைக்காக பேசவில்லை - எவ்வளவு சத்தியமான உண்மை என்பது புரியும்.

அருமையான ஒரு வரலாற்று ஆவணத்தை வழங்கிய நம்முடைய திரியின் பொக்கிஷம் பம்மலார் அவர்களுக்கு - பாராட்டுக்கள் - நன்றிகள்.

saradhaa_sn
16th September 2011, 11:32 AM
டியர் ராகவேந்தர்,

வாவ்....., எத்தனை சிரமப்பட்ட தொகுப்பு. அற்புதம்... அற்புதம்.

உங்கள் எண்ணம் எப்படியெல்லாம் ஓடுகிறது, அதற்கு உடனே எப்படியெல்லாம் செயல்வடிவம் கொடுக்கிறீர்கள். இவை அத்தனை இசைக்கருவிகள் வாசிக்கும் புகைப்படங்களை சேகரிப்பதும் அவற்றை இங்கே பதிப்பதும் லேசான வேலையா?.

நடிகர்திலகத்தின் புகழ் பரப்பும் பணியில் உங்கள் செயல்பாடுகள் புல்லரிக்க வைக்கின்றன. (எங்க மாமா படத்தில் அக்கார்டியன் இசைக்கும் புகைப்படமும் உங்கள் தொகுப்பில் உள்ளது. ஆகவே அக்கருவியையும் நீங்கள் அளித்துள்ள பட்டியலில் சேர்த்துக்கொள்ளுங்கள்).

நிச்சயமாக உலகத்தில் வேறு யாரும் இத்தனை இசைக்கருவிகளை இசைப்பவராக நடித்திருக்க முடியாது. ஏனென்றால் அவற்றில் பல வாத்தியங்கள் நம் நாட்டுக்கே உரித்தானவை.

அட்டகாசம்... அருமை... அற்புதம்...

சாதனை நாயகனுக்கேற்ற சாதனை ரசிகர் நீங்கள்.

saradhaa_sn
16th September 2011, 11:53 AM
டியர் பம்மலார்,

நடிகர்திலகத்தின் 125-வது வெற்றிக்காவியம் 'உயர்ந்த மனிதன்' விழாத்தொகுப்பு மிக அருமை. 'பொம்மை' இதழில் வந்த அதை அதன் ஒரிஜினல் வடிவத்தில் பார்க்கும்போது மனம் குதூகலிக்கிறது.

அவ்விழாவில், மறைந்த முதல்வர் அண்ணா கலந்துகொண்டார் என்பது மட்டுமே பலருக்குத் தெரிந்திருக்கும். ஆனால் அன்றைய மத்திய அமைச்சர்கள் ஒய்.பி.சவான், கே.கே.ஷா போன்றவர்களும், தமிழக அமைச்சர்கள் மற்றும் எஸ்.எஸ்.வாசன் போன்றோரும் கலந்துகொண்டது பலருக்குப் புதிய செய்தி. சவான் அவர்களின் பேச்சு மிகவும் நன்றாக இருந்தது.

இதுபோன்ற பல புதையல்களை வெளிக்கொணர்ந்து எல்லோரையும் அறியச்செய்யும் அரிய சேவைக்கு ஆயிரமாயிரம் நன்றிகள். இதுவரை உங்களிடம் மட்டுமே இருந்து வந்த இந்த அரிய பொக்கிஷங்கள் இப்போது எண்ணற்ற நடிகர்திலகத்தின் ரசிகர்கள் கைகளில். அவை இன்னும் பல்கிப்பெருகி இளைய தலைமுறையினருக்கு நடிகர்திலகத்தின் அருமை பெருமைகளைப் பறைசாற்றும்.

சீரிய, சிறப்பான சேவை தொடர வாழ்த்துக்கள்.

vasudevan31355
16th September 2011, 12:07 PM
அன்பு பம்மலார் சார்,

கிடைத்தற்கரிய நடிகர் திலகத்தின் 125வது படவிழா பொம்மை ஆவணப் பதிவை வெளியிட்டு நம் மகானுக்கு புகழ் சேர்த்து விட்டீர்கள். அரிய ஆவணத்திற்கு நன்றி. அற்புதம்.

இந்த ஆவணத்தில் அவருடய பெருமைகளை மற்றவர்கள் பறை சாற்றுவது ஒரு பக்கம் சந்தோஷம் அளிக்கிறது என்றாலும் மறுபக்கம் என் மனதில் இருந்து பொங்கி வரும் ஆதங்கத்தை இங்கு வெளிப்படுத்த விரும்புகிறேன்.

மேடைகளில் நிகழ்ச்சி நடைபெறும் அந்த ஒரு சில மணி நேரங்களில் மட்டும் "இவரைப் போல சிறந்த நடிகர் ஊரில் எவரும் இல்லை..இந்தியாவில் கூட யாரும் இல்லை ..ஏன் உலகத்தில் கூட ஒருவரும் இல்லை" என்று எதுகை மோனையுடன் பேசிப் பெயர் வாங்கிக் கொண்டதைத் தவிர வேறு என்ன அவருக்காகச் செய்து சாதித்து கிழித்து விட்டார்கள்?

அவர் ஆரம்ப காலக் கட்டங்களில் கஷ்டப் பட்டபோது அவருக்கு உதவி செய்தவர்களை நாம் மறந்து விடவில்லை. மறந்து விடவும் கூடாது. அவரும் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க என்றுமே தவறியது இல்லை. செய்நன்றியை ஒருபோதும் மறந்ததும் இல்லை. ஆனால் அவருக்குக் கிடைத்திருக்க வேண்டிய நியாயமான அங்கீகாரம் கிடைக்க இவர்கள் எல்லாம் மேற்கொண்ட முயற்சி என்ன? அவர் உழைப்பை பிடுங்கித் தின்றதைத் தவிர...

அவர் முன்னாளில் இருந்த திராவிட இயக்கம் ஆகட்டும்... பின்னாளில் மாடாய் உழைத்து உயிரைக் கொடுத்து வளர்த்த காங்கிரஸ் பேரியக்கமாகட்டும். அவருக்கு என்ன செய்தன? அவர் உழைப்பை உறிஞ்சி சுய லாபங்களுடன் தங்களை வளர்த்துக் கொண்டன.
தேர்தல் பிரச்சாரங்களுக்கு மட்டும் அவர் வேண்டும். ஊர் ஊராய் ராப்பகலாய் சுற்றி ஓட்டு சேகரிக்க வேண்டும் .திரை உலகின் உச்ச நடிகராய் ஒரு நாளைக்கு 22 மணி நேரம் கஷ்டப்பட்டு உழைத்த அந்தக் காலக் கட்டங்களில் கூட வீடு மனைவி மக்களைப் பிரிந்து எந்த விதமான பிரதிபலனையும் எதிர்பாராமல் காங்கிரசுக்காக ரத்தத்தை வியர்வையாய் சிந்தி இவர்களை அரியணையில் அமர்த்தி அழகு பார்க்க வேண்டும்.

அவருடைய ரசிகக் கண்மணிகள் கட்சிக்கொடி கட்ட மட்டும் பயன்படுத்தப் படுவார்கள். அவரது படங்களின் வெளியீடுகளின் முதல் நாள் ரசிகர் ஷோ வசூல் 'கட்சிக்கு'என்ற பெயரில் விழுங்கி ஏப்பம் விடப்படும். அவரும் அவர் ரசிகர்களும் காட்டிய உழைப்பு உறிஞ்சப்பட்டு கறிவேப்பிலையாய் அவர்கள் தூக்கி எறியப் படுவார்கள்.

யார் யாரோ திறமை,தகுதி அற்றவர்கள் எல்லாம் இந்தியாவின் சிறந்த நடிகர் பட்டம் வாங்குவார்கள். அல்லது அவர்களுக்கு வாங்கிக் கொடுக்கப்படும். அதற்கெல்லாம் இவரும் விழாக்கள் எடுக்க வேண்டும்.ஆரத்தித் தட்டுக்கள் ஏந்த வேண்டும். என்ன கொடுமைடா இது...

ஆனால் இவருக்குக் கிடைக்கக் கூடிய அங்கீகாரங்களைப் பற்றி இவர்கள் எவருக்கும் சிந்திக்கக் கூட நேரம் இருந்ததில்லை. அதைப் பற்றியக் கவலையும் இல்லை. நமக்குத்தான் அவரால் ஆக வேண்டிய காரியங்கள் எல்லாம் கச்சிதமாக ஆகிக் கொண்டிருக்கிறதே..பிறகென்ன..

உலக நாடுகளின் அங்கீகாரங்கள் கிடைத்தால் என்ன... நாங்கள் ஏற்றுக் கொள்வோமா? என்ற மனப் போக்கு உள்ளவர்களைத்தான் அன்றும் பார்க்க முடிந்தது. இன்றளவும் பார்க்க முடிகிறது. இதோ அவருக்காகக் குரல் கொடுக்கிறேன்..இதோ இவருக்காக ரத்தம் சிந்தவும் தயார் என்றெல்லாம் ஜம்பம் அளப்பார்கள். அந்தப் பக்கம் போனதும் மண்வெட்டியை எடுத்துக் கொள்வார்கள்.

எதிர்ப்பு என்ற நெருப்பு அலைகளிலேயே நீந்தி நீந்திக் கரை சேர்ந்து இமயத்தின் உச்சியைத் தொட்டு வானத்தை அளந்தவர் அவர். திறமை என்ற அந்த மூலதனம் மட்டும் அவர் பெற்றிருக்காவிட்டால் அவரை சுருட்டி சூறையாடி காற்றில் பறக்கவிட்டு களியாட்டம் போட்டிருப்பார்கள். காங்கிரசில் அந்தக் காலத் தலைவர்கள் முதல் இந்தக்காலத் தலைவர்கள் வரை அது யார் வேண்டுமானாலும் இருக்கட்டும்... இவருக்காக ஒருவரும் ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போட்டது கிடையாது என்பதுதான் வரலாற்று உண்மை.

இவரின் நண்பர்கள் என்று மார்தட்டிக் கொள்ளும் எதிர் அணியினரோ செய்த அட்டகாசங்களுக்கு அளவே இல்லை. திரைத்துறை,அரசியல்துறை அனைத்திலும் இவருக்கெதிரான சூழ்ச்சிகள் ..தந்திரங்கள்..பழிவாங்கல்கள். (இவ்வளுவுக்கும் சூதுவாது தெரியாமல் நியாய தர்மத்துக்குக் கட்டுப் பட்டு நடந்த அந்த உத்தம புத்திரனுக்கு எதிராக)

வெறும் வார்த்தை ஜாலங்களாலும்,வெற்றுப் பாராட்டுக்களாலும் அவரையோ,அவர் ரசிகக் கூட்டத்தையோ ஏமாற்றிவிடலாம் என்று இவர்கள் கணக்குப் போட்டால் என்ன? கோடானு கோடி உலக மக்களின் உள்ளங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்து ராஜாங்கம் நடத்துகிறாரே அந்த அதிசய அன்பு மகான்! அவர் குடியிருக்கும் அந்த அன்பு உள்ளங்களை என்ன செய்துவிட முடியும் இவர்களால்?

இந்த நேரத்தில் இந்தப் பதிவு ஏன் என்று கூட நண்பர்கள் யோசிக்கலாம். காங்கிரஸ் தலைவர்களையும் திராவிட இயக்கத் தலைவர்களையும் காணும் போதே அவர்கள் உண்மையான பற்றுடன் தலைவரைப் பற்றிப் புகழ்ந்துரைத்தாலும் கூட அதையும் மீறி அவர்கள் நம் தலைவரின் நியாயமான அங்கீகாரத்திற்கு தங்களுடைய பங்கை சரியான முறையில் அளிக்கவில்லை என்பதே மாறாத வடுவாய் நெஞ்சில் முதலிடத்தில் நிலைத்து நிற்கிறது.

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
16th September 2011, 12:37 PM
அன்பு பம்மலார் சார்,
பூப்பறிக்க வருகிறோம் விளம்பரக் கட்டிங் வண்ணமயமாக வளைய வருகிறது.எந்த வயதானால் என்ன? நம்ம ஊர் ராஜா நம்ம ஊர் ராஜாதான். அசத்தல் ஸ்டில். முதல் ஸ்டில்லே இப்படி என்றால்... எப்போது சார் அடுத்த ஸ்டில்ஸ்? காத்திருக்க நேரமில்லை. நன்றிகள்.

அன்புடன்,
வாசுதேவன்.

saradhaa_sn
16th September 2011, 01:01 PM
டியர் வாசுதேவன் அவர்களே,

உங்கள் பதிவு உங்களுடையது மட்டுமல்ல, நடிகர்திலகத்தின் ஒவ்வொரு ரசிகர்கள் / தொண்டர்களின் உள்ளக்குமுறல் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இது பற்றி நமது திரியின் இரண்டாம் பாகத்திலேயே நான் பதித்திருந்ததை மீண்டும் இங்கு தருவதில் தவறில்லையென்று நினைக்கிறேன்.

நான் பதித்திருந்தது இதுதான்.....................

// "நடிகர்திலகம் காங்கிரஸுக்காக உழைத்த அளவுக்கு, காங்கிரஸில் அவர் கௌரவிக்கப் படவில்லை. காங்கிரஸில் அவரளவுக்கு காமராஜர் பெயரை உச்சரித்தவர்களும் இல்லை. தன்னுடைய திரைப்படங்கள் மூல்மாக காமராஜரையும் காங்கிரஸையும் மக்கள் மத்தியில் உயிர்ப்பாக வைத்திருந்தவர். அவரது அரசியல் ஈடுபாடு காரணமாக, வெற்றிபெற வேண்டிய பல படங்களும் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கின்றன. அவ்வளவு பெரிய நடிகர் தன்னுடைய திரைப்பட செல்வாக்கை காங்கிரஸ் கட்சிக்கு வலிய வந்து தருகிறாரே என்ற நன்றியுணர்ச்சி காங்கிரஸ் தலைவர்களுக்கு (தொண்டர்களுக்கு அல்ல) என்றுமே இருந்ததில்லை.

தேர்தல் நேரங்களில், அவர் தன்னுடைய திரைப்பட படப்பிடிப்புகளை ஒத்தி வத்துவிட்டு, தேரதல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார். ஆனால் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், ஒரு நன்றி சொல்லக்கூட அவரைச்சென்று பார்க்கமாட்டர்கள். இது கண்கூடாக நடந்த உண்மை.

ஒருமுறை ஒரு பொதுத்தேர்தல் முடிந்த சமயம், படப்பிடிப்பின் ஓய்வு நேரத்தில் ஸ்டுடியோவுக்கு வெளியில் மரத்தின் நிழலில் நாற்காலியில் அமர்ந்திருந்தபோது, சற்று தூரத்தில் ஒரு கூட்டத்தினர், வேறொரு படப்பிடிப்பில் இருந்த நடிகர் ஆனந்தனை சந்தித்து, அவருக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்து அவருடன் உரையாடிவிட்டுப் போனார்களாம். அப்போது சிவாஜி தன் அருகில் இருந்தவரிடம் 'அவங்க என்னப்பா பண்றாங்க?. ஆனந்தனுக்கு இன்னைக்கு பிறந்த நாளா?' என்று கேட்க, அருகில் இருந்தவர், 'இல்லண்ணே, இப்போ நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர் ஒருவர் வந்து ஆனந்தனுக்கு நன்றி சொல்லிட்டு போகிறார். ஏன்னா, ஆனந்தன் அவருக்காக அவருடைய தொகுதியில் பிரச்சாரம் பண்ணினாராம்' என்று சொல்லியிருக்கிறார். அப்போது நடிகர்திலகம் 'உம்... நானும்தான் தமிழ்நாடு முழுக்க சுற்றி, சுற்றி பிரச்சாரம் பண்ணினேன். அதுல பலர் ஜெயிச்சும் இருக்காங்க. ஆனா ஒருத்தர் கூட தேர்தல் முடிந்து என்னை வந்து பார்க்கலை' என்று விரக்தியோடு சொன்னாராம். இந்த அளவுக்குத்தான் காங்கிரஸ்காரர்களின் நன்றியுணர்ச்சி.

கருணாநிதியும், எம்,ஜி,ஆரும், ஜெயலலிதாவும் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கும் சிவாஜி தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது. கருணாநிதி தி.மு.கவுக்காக பிரசாரம் செய்தால், அக்கட்சி வெற்றி பெற்றதும் அவர் முதல்வர் ஆவார். எம்.ஜி.ஆர்., அண்ணா தி.மு.க.வுக்காக பிரச்சாரம் செய்தால் அக்கட்சி வெற்றியடைந்ததும் அவர் முதல்வர் ஆவார். அதுபோலவே ஜெயலலிதா, அண்ணா தி.மு.க.வுக்காக பிரச்சாரம் செய்தால் அக்கட்சி வெற்றியடைந்ததும் அவர் முதல்வர் ஆவார். ஆனால் சிவாஜி காங்கிரஸுக்காக பிரச்சாரம் செய்து அக்கட்சி வெற்றி பெற்றாலும் அவருக்கு எந்தப்பதவியும் கிடைக்கப்போவதில்லை. இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல்தான் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஆனால் காங்கிரஸில் அவருக்கு உரிய மரியாதையும் கௌரவமும் வழங்கப்படவில்லை என்பது உண்மை.

அதுமட்டுமல்லாது, தேர்தல் என்று வந்துவிட்டால், காங்கிரஸுக்கு மிகப்பெரிய தொண்டர்படையாக செயல்பட்டது சிவாஜி ரசிகர்மன்றம் தான். தங்கள் அபிமான நட்சத்திரம் காங்கிரஸில் இருக்கிறார் என்பதற்காகவே தங்களை காங்கிரஸுடன் இணைத்துகோண்ட ரசிகர்கள் எராளம்."" //

(இன்னும் காட்டமான பகுதிகளும் இருக்கின்றன. அவை இங்கு வேண்டாம் என்று நினைப்பதால் 'கட்' பண்ணி விட்டேன்)

saradhaa_sn
16th September 2011, 01:32 PM
காங்கிரஸ் கட்சியினர்தான் இப்படியென்றால், திராவிட இயக்கத்தினர் அதற்கு பல படிகள் மேலே போய் நடிகர்திலகத்தை வஞ்சித்தனர். அரசியல் ஆதாயங்களுக்காக மத்திய அரசுடன் சேர்ந்துகொண்டு, த்குதியானவரைக் கீழே தள்ளி, தகுதியற்றவர்களை விருதுக்குத் தகுதி பெற வைத்தனர். அதற்கு அவர்களுடன் துணை போனது தேசியக்கட்சியான "இ.காங்கிரஸ்".

'உயர்ந்த மனிதன்' விழாவில் ஜனவரி 69-ல் இப்படி பேசிய மாறன், அதே நடிகர்திலகத்தை 1971 ஜனவரியில் தேர்தல் மேடைகளில் எப்படியெல்லாம் தரக்குறைவாகப் பேசினார் என்பது நாடறிந்தது. ராகவேந்தர் சார் அடிக்கடி சொலவ்து போல தங்களிடம் இருந்த "இன்னொரு சக்தி"யை மேலே கொண்டுவர அவர்கள் செய்த சூழ்ச்சிகள் எண்ணிலடங்காதவை.

சுருக்கமாகச் சொன்னால், தான் சார்ந்திருந்த கட்சியாலும், எதிர்க்கட்சியாலும் ஒரே நேரத்தில் சேர்ந்தாற்ப்போல பழி வாங்கப்பட்ட ஒரே அப்பாவித் தமிழன் நமது நடிகர்திலகம் மட்டுமே. அத்தனையும் கடந்து அவரை மக்கள் மனதில் நிலைபெற வைத்தது அவரது அபார திறமையும், கள்ளம் கபடமில்லாத நல்ல உள்ளமும்தான்.

anm
16th September 2011, 02:32 PM
இங்கு நடிகர் திலகம் புகழ் பாடும் அனைத்து உள்ளங்களுக்கும் வணக்கம்,


இது ஒரு சத்யமான வார்த்தை, எல்லா சிவாஜி ரசிகர்களின் மனதில் இருக்கும் மாறாத வடு;ஒரு உயர்ந்த இடத்தை தனது திறமையாலும், கடுமையான உழைப்பாலும் மட்டுமே எட்டிய ஒரு தமிழனை, சக தமிழர்களும், கூட இருந்து குழி பறித்தவர்கலுமே அதிகம் என்பதை நமது ரசிகர்கள் ஒவ்வொருவரும் அறிவர்; திரு. வாசுதேவன் மற்றும் சாரதா மேடம் அவர்களின் உள்ளக் குமறலை நானும் வழி மொழிகிறேன்.

இந்த திரியை, நமது நடிகர் திலகம் புகழ் பாடும் இந்த நூலகத்தை, பல்கலைகழகத்தை ஒரு மாதம் முன்புதான் காணும் வாய்ப்பு கிடைத்தது; பெரும் பாக்கியம் பெற்றேன்;என்னைபோலவே இங்கு பல முகங்களை காண்கிறேன், ஆனால், உங்களைப் போல் எல்லாம் என்னால் இந்தத் திரியில் என்னால் பங்கு கொள்ள முடியாது, ஆனால், இதையெல்லாம் பார்த்து, நடிகர் திலகத்தின் நடிப்பை பார்ப்பது போல், பார்த்து, படித்து பரவச முடியும், ஏனென்றால், இன்று வரை நம்மால் அப்படி வேறு ஒரு நடிகரை அடையாளம் காண முடியாததால்.

இங்கு பங்கேற்கும் அனைத்து நமது சிவாஜி ரசிகர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள், இப்படி ஒரு திரியை ஆரம்பித்து , அணையா விளக்கைப்போல், நாளொரு மேனிபோல் வளர்த்துக் கொண்டிருப்பதற்கு!!!!!

Anm

goldstar
16th September 2011, 03:08 PM
இங்கு நடிகர் திலகம் புகழ் பாடும் அனைத்து உள்ளங்களுக்கும் வணக்கம்,

இங்கு பங்கேற்கும் அனைத்து நமது சிவாஜி ரசிகர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள், இப்படி ஒரு திரியை ஆரம்பித்து , அணையா விளக்கைப்போல், நாளொரு மேனிபோல் வளர்த்துக் கொண்டிருப்பதற்கு!!!!!

Anm

Welcome Anm to our NT thread. We are all here to spread our NT fame and our Ragavendran, Pammalar, Vasu and Murali sir, Saradha madam are here to give authentic information about our NT for our next generations. From this thread so many people understood that NT's movies collections and records not touched by any other actors and media people over hyped an actor's records original records shown to every one and even over hyped actor fans also agreed with the proof given by our Pammalar sir.

Vasu sir, I agree with you when our NT acted as Cycle Rickshaw wala with cotton shirt (as original shirt wear by Richshaw walas) but when an actor wear terry cotton shirt and driven Rickshaw (big show) got an Bh......th award, what a shame.... History never forgive these people who purposely worked against NT.

But these people succeed for few times, look at now people talk and discuss and praise about our NT, not about any other actors. That is more than any awards.
Long live NT fame.

Cheers,
Sathish

anm
16th September 2011, 03:31 PM
Dear Ragavendra Sir,

Very True, what you said about Randor-guy.

Randor-guy is an anti Shivaji writer, a self assumed intellect, who was in selection committees and these are all the pseudo-intellectuals who don't know what is acting!!!

ANM

anm
16th September 2011, 03:48 PM
Thank you very much, Mr.Sathish for the warm welcome by the forum.

You are very true, No one else's film is still remembered like our Nadikar thilagam films and they are Monuments now and we know that other films are gone with the days.

Once again thanking for the prompt welcome, I am really very very happy to know lots of shivaji's veteran fans here and what is the 'uniqueness' is that every one speaks the same language, I mean 'Shivaji'.

ANM

mr_karthik
16th September 2011, 04:17 PM
அன்புள்ள anm சார்,

வருக..... வருக....

தங்களைப்போன்ற தீவிர நடிகர்திலகத்தின் ரசிகர்களை வரவேற்பதில் இத்திரி பெருமையடைகிறது. உங்கள் முதல் பதிவே முத்தான பதிவாக அமைந்துள்ளது. எல்லா சிவாஜி ரசிகர்களுக்கும் உரிய மனக்குமுறலோடு வந்திருக்கிறீர்கள்.

த்மிழிலும் ஆங்கிலத்திலும் அழகாக எழுதும் நீங்கள், தொடர்ந்து நடிகர்திலகத்தின் அருமை பெருமைகளை நீங்கள் அறிந்தவற்றை, பார்த்தவற்றை, அனுபவித்தவற்றை உங்கள் மேலான கருத்துக்களைப் பதிக்க வேண்டுகிறோம்.

mr_karthik
16th September 2011, 04:43 PM
அன்புள்ள பம்மலார் சார்,

நடிகர்திலகத்தின் 125-வது வெற்றிப்படமான உயர்ந்த மனிதன் படவிழா பற்றிய விவரங்களடங்கிய பொம்மை மாத இதழின் ஏடுகளை இங்கு பதிவிட்டமைக்கு மிக்க நன்றி.

விழாவின்போது தேனொழுகப் பேசியவர்கள் எல்லாம், செயல் வடிவில் எதையும் செய்யவில்லையென்றும், ஒரு சிறந்த கலைஞனுக்குரிய நியாயமான அங்கீகாரங்கள் கிடைக்க்க தடையாக நின்றனர் என்றும் வாசுதேவன் அவர்களும் அதைத்தொடர்ந்து சாரதா அவர்களும் கொட்டியிருக்கும் உள்ளக்குமுறல்கள் நியாயமானவையே. நடிகர்திலகத்தின் ஒவ்வொரு ரசிகருக்கும் அடி மனதில் இருந்து வரும் தீராத வலி அது. கள்ளம் கபடமில்லாத குழந்தை உள்ளம் படைத்தவரை எப்படியெல்லாம் தங்கள் சுயநலத்துக்காக உருட்டி விளையாடியிருக்கிறார்கள் என்பதை நினைத்தால் ஒவ்வொருவரும் கொதிப்படைவது நிச்சயம். இருந்தும் அவருக்கு இருந்த ஒரே ஆறுதல் தன்னலம் கருதாத ரசிகப்பிள்ளைகள்தான். இன்றுவரை அவர் புகழை முன்னெடுத்துச் செல்வதல்லாது, வேறெதையும் அறியாத தொண்டர் படை.

இப்படை இருக்கும் வரை, அவர் புகழையோ, பெருமைகளையோ, திறமைகளையோ, சாதனைகளையோ எவரும் மறைத்துவிட முடியாது.

mr_karthik
16th September 2011, 04:57 PM
ராகவேந்தர் சார்,

நடிகர்திலகம் பல்வேறு இசைக்கருவிகளை இசைக்கும் புகைப்படத் தொகுப்பு ஒரு அசுர சாதனை. இத்தனை இசைக்கருவிகள் இசைக்கும் புகைப்படங்களையும் திரட்டி, ஒரே அளவில் பதித்து, அவற்றை ஒரே புகைப்பட வடிவில் தருவதென்பது, உங்களைப்போன்ற அபார கற்பனா சக்தி கொண்டவர்களால் மட்டுமே நிகழ்த்தப்படக்கூடியது.

தாங்கள் அளித்திருக்கும் அந்தப்பதிவு மிகப்பெரிய பொக்கிஷம். பதினாறு சுவைகளை உள்ளடக்கிய விருந்து. நன்றிகள் ஏராளமாய்.

பம்மலார் சார்,

நடிகர்திலகத்தின் கடைசிக்காவியமான 'பூப்பறிக்க வருகிறோம்' பட விளம்பரம் ஜோர். அப்படத்தில் அவரோடு இணைந்து நடித்த மாளவிகா போன்ற இன்றைய தலைமுறையினரின் கருத்து பற்றிய பத்திரிகை கட்டிங் எதுவும் இருக்கிறதா?.

mr_karthik
16th September 2011, 05:23 PM
ராகவேந்தர் சார் தொகுத்துள்ள 'இசைக்கருவிகளுடன் இணையில்லாக்கலைஞன்' தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் நிழற்படங்கள், என் அறிவுக்கு எட்டியவரையில்...

தர்மம் எங்கே (கிடார்)
திருவிளையாடல் (துந்தனா, மிருதங்கம், புல்லாங்குழல், வீணை, கொன்னக்கோல்)
படித்தால் மட்டும் போதுமா (மேண்டலின்)
தவப்புதல்வன் (ட்ரம்பெட், சிதார், யாழ்)
தில்லானா மோகனாம்பாள் (நாதஸ்வரம், மிருதங்கம்)
ராஜபார்ட் ரங்கதுரை (டேபிள் டென்னிஸ் மட்டையே சப்ளா கட்டையாக)
என் மகன் (ட்ரம்பெட்)
எங்க மாமா (அக்கார்டியன், பியானோ)
புதிய பறவை (ட்ரம்பெட், சாக்ஸபோன், பியானோ - இரு ஸ்டைகளில்)
ராமன் எத்தனை ராமனடி (புல்லாங்குழல்)
பாவ மன்னிப்பு (டேப்)
கலாட்டா கல்யாணம் (ஷெனாய்)
பட்டிக்காடா பட்டணமா (எலக்ட்ரிக் கிடார்)

(விடுபட்டவற்றைச் சுட்டிக்காட்டுங்கள் என்று ராகவேந்தர் சார் கேட்டதால்) மேலும் இடம் பெற வேண்டியவை.....

லட்சுமி வந்தாச்சு (தபேலா)
பாசமலர் (பியானோ)
கௌரவம் (புல்லாங்குழல், பியானோ)
ராஜபார்ட் ரங்கதுரை (ஆர்மோனியம்)
மிருதங்க சக்கரவர்த்தி (மிருதங்கம்)
தெய்வ மகன் (சிதார்)
பாட்டும் பரதமும் (ஜதீஸ்வரம்)
விடுதலை (ட்ரம்ஸ்)

kumareshanprabhu
16th September 2011, 05:42 PM
Dear ALL

We around 30 Members went to the distributor and discussed about Vasntha Malagai

it will be released on October 14th Friday

Regards
Kumareshan

vasudevan31355
16th September 2011, 05:44 PM
அன்பான anm சார் அவர்களே!
http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcRcXN_EebzoVUkv5W7ecN3MjJ76MkzqZ IdmvPfg6YpweB6X6WkfqQ
வருக! வருக!.
நம் திரியின் சார்பாக உங்களை வருக! வருக! என வரவேற்கிறோம். நீங்கள் இந்ததத் திரியில் இணையும் போதே உங்களுடைய பங்களிப்பு தொடங்க ஆரம்பித்து விட்டது. பார்த்துப் படித்து இன்புறுங்கள். கருத்துக்களையும் பரிமாறிக் கொள்ளுங்கள். சிகரத் தலைவரின் சிறந்த ஆசிகளோடு இத் திரியில் வலம் வர வாழ்த்துக்கள்.
அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
16th September 2011, 05:51 PM
thank u kumaresan sir. very good news. hats off. we will meet on october 16th at Bengaluru

regards,
vasudevan

vasudevan31355
16th September 2011, 06:01 PM
விழாவின்போது தேனொழுகப் பேசியவர்கள் எல்லாம், செயல் வடிவில் எதையும் செய்யவில்லையென்றும், ஒரு சிறந்த கலைஞனுக்குரிய நியாயமான அங்கீகாரங்கள் கிடைக்க்க தடையாக நின்றனர்

மிகச்
சரியாகச்
சொன்னீர்கள்
கார்த்திக் சார்.
நன்றிகள் சார்.

அன்புடன்,
வாசுதேவன்.

RAGHAVENDRA
16th September 2011, 06:11 PM
டியர் anm,
நடிகர் திலகத்தின் உண்மையான ரசிகர் பட்டாளத்தில் இணைந்து விட்ட தங்களுக்கு மனமார்ந்த

http://i992.photobucket.com/albums/af43/jourdan016/welcome-animated-1.gif

நீங்களும் anm நடிகர் திலகமும் anm (Avare Nadiga Mudhalvar)

அன்புடன்

RAGHAVENDRA
16th September 2011, 06:14 PM
டியர் சாரதா, கார்த்திக் மற்றும் நண்பர்கள்,
தங்கள் அனைவருடைய பாராட்டுகளும் நடிகர் திலகத்திற்கே சமர்ப்பணம். உந்து சக்தி, கிரியா சக்தி எல்லாம் அவர் செயல். இசைக் கருவிகளைப் பட்டியலிட்டு எண்ணிக்கையினை அதிகரித்துள்ள கார்த்திக் அவர்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள். இன்னும் கூட இருக்கலாம். அவற்றை எல்லாம் ஒருங்கிணைத்து எல்லாவற்றின் நிழற்படங்களையும் தொகுத்து வழங்கும் போது இன்னும் கூட பிரமிப்பாக இருக்கும்.
நன்றி

vasudevan31355
16th September 2011, 06:26 PM
மதிப்பிற்குரிய சாரதா மேடம்,

நன்றிகள் மேடம். நீங்கள் பதிவு செய்திருந்த உணர்ச்சிபூர்வமான அந்தப் பதிவுகளை இப்போதுதான் படித்து முடித்தேன். தெள்ளத் தெளிவான,மிக நியாயமான உள்ளக்குமுறல்கள். நிஜமாகவே உள்ளம் வலிக்கிறது மேடம்.இவ்வளவு சோதனைகளுக்கும்,வேதனைகளுக்கும் நடுவே அவர் சிறிதும் கலங்காது தன்னுடைய தொழிலில் இம்மியளவும் பிசகாது நடிப்பில் மேலும் பற்பல முத்திரைகளைப் பதித்தாரே... அதனால்தான் மனிதரில் மாணிக்கமாய் மக்கள் மனதில் மங்காப் புகழுடன் பவனி வந்து கொண்டிருக்கிறார்.

அன்பு மாணவன்
வாசுதேவன்.

vasudevan31355
16th September 2011, 06:47 PM
டியர் கார்த்திக் சார்,
'இசைக்கருவிகளுடன் இணையில்லாக்கலைஞன்' தொகுப்பிற்காக தாங்கள் அளித்துள்ள பட்டியல் மிரள வைக்கிறது. சூப்பர் சார். இன்னும் ஒரு சில.

கல்தூண் (உடுக்கை)
குறவஞ்சி (குறவர் டப்பா)
எங்க மாமா (மரகாஸ்)
http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcT03kfUfQbeLkFhZMFqhVL484bDNifYN ofgx_gl-3pSts2emNjw

நன்றிகள் சார்.
அன்புடன்,
வாசுதேவன்.

RAGHAVENDRA
16th September 2011, 06:56 PM
டியர் கார்த்திக், வாசுதேவன் சார்,
தாங்கள் பட்டியலிடும் போது மேலும் சில கருவிகள் நினைவுக்கு வருகின்றன.

இமைகள் திரைப்படத்திலும் ட்ரம்ஸ் வாசிப்பார் என நினைவு

அதே போல்
ஜெனரல் சக்கரவர்த்தி திரைப்படத்தில் டான்சேனியா மாநாட்டிற்குப் பின் நீக்ரோ வேடத்தில் வரும் போது பேங்கோஸ் வாசிப்பார் என நினைக்கிறேன்.
சரிபார்த்துக் கொள்ள வேணடும்.

அன்புடன்

vasudevan31355
16th September 2011, 08:29 PM
'ரசிக வேந்தர்' திரு ராகவேந்திரன் சாருக்காகவும், நம் ஹப் அங்கத்தினர் அனைவருக்காகவும்

'இசைக்கருவிகளுடன் இணையில்லாக்கலைஞன்'

நிழற்படங்கள் வரிசைகளின் தொகுப்பு.

மிக விரைவில்

அன்புடன்
வாசுதேவன்.

RAGHAVENDRA
16th September 2011, 08:40 PM
நன்றி வாசுதேவன் சார்.
தங்களுடைய பணி மிகவும் மேன்மையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

இதோ இசைக் கருவிகளின் அணிவகுப்பில் நடிகர் திலகம். ஒரே பாடலில் நான்கு இசைக் கருவிகள்

பாடல் - ஸ்ரீலங்கா சின்ன ராணி
திரைப்படம் - இமைகள்
இசை - கங்கை அமரன்

பெயர்கள் ஆங்கிலத்தில் தரப் பட்டுள்ளன

Drums
Treple bangos
Bangos
Guitar

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Decorated%20images/imaigalinstrumentsfw.jpg

இமைகள் திரைப்படத்தை மனதில் வைத்து ஜெனரல் சக்கரவர்த்தி என்று தவறாக எழுதி விட்டேன் மன்னிக்கவும்.

அன்புடன்

anm
16th September 2011, 09:15 PM
டியர் ராகவேந்திர சார்,

நன்றிகள் பல.என்னையும் உங்கள் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக் கொண்டதில்.

A(vare) N (iranthara ) M (udalvar).

anm
16th September 2011, 09:34 PM
அன்புள்ள கார்த்திக் சார்,

நன்றிகள் பல.

எல்லா ரசிகர்களையும் போல் நானும் ஒரு தீவிர ரசிகன்தான். 2003-இல் சிவாஜி விழாவில் திரு. Y.g. மகேந்திர அவர்கள், தான் ஒரு தீவிர சிவாஜி ரசிகன், அல்ல, அல்ல, தீவிர வெறியன் என்றார்.அவரைப் போல் தான் நாம் எல்லோரும், என்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

நிச்சயமாய் எனக்கு தெரிந்தவற்றை எழுதுகிறேன்.

அன்புடன்,
anm.

anm
16th September 2011, 09:45 PM
அன்புள்ள வாசுதேவன் சார் அவர்களுக்கு,

என் தலை வணங்கி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இரண்டு மாத காலமாக இந்தத் திரியைப் படித்து, பார்த்து, இன்புற்று வந்தேன். எத்தனை வருடங்களை இழந்து விட்டேன் என்று தெரிகிறது.

அன்புடன்,
anm

Murali Srinivas
16th September 2011, 10:29 PM
என்றும் அணையா ஜோதியில் வந்து ஐக்கியமாகி இருக்கும் anm அவர்களே, உங்களை இந்த சபைக்கு பெருமையுடன் அழைக்கிறோம். உங்கள் ரசனைகளை அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்! காத்திருக்கிறோம்!

அன்புடன்

Murali Srinivas
16th September 2011, 10:45 PM
சாரதா/கார்த்திக்/வாசு சார்,

ராகவேந்திரன் சார் பதிவிட்ட பல்வேறு இசைக்கருவிகளுடன் நடிகர் திலகம் பற்றிய புகைப்படங்களுக்கு நன்றி சொல்லி, விட்டுப் போன சில இசைக்கருவிகளையும் பற்றி குறிப்பு வரைந்திருக்கிறீர்கள். ஆனால் எதற்காக அவர் அதை செய்தார் என்பது தெரியுமா? அவர் எது செய்தாலும் ஒரு அர்த்தம் இருக்கும். காதை கொடுங்கள் சொல்கிறேன்!

நடிகர் திலகத்தின் ஒவ்வொரு பிறந்த நாளை முன்னிட்டும் அவரின் படங்களிருந்து ஒரு கருத்தை எடுத்துக் கொண்டு [thematic presentation] அதன் அடிப்படையில் இசை நிகழ்ச்சியை வழங்கி பிறந்த நாளை கொண்டாடும் ரசிக மன்னன் ஒய்.ஜி.மகேந்திரா அவர்கள், இம்முறை நடிகர் திலகம் இசைக்கருவிகளை இசைப்பதாக நடித்த பாடல் காட்சிகளில் இடம் பெற்ற பாடல்களைதான் வரும் அக்டோபர் 2 அன்று காமராஜர் அரங்கில் நடைபெறும் விழாவில் இசைக் குழுவினரை வைத்து பாட வைக்கப் போகிறார். அந்த இசை மழையில் நனையும் ஒத்திக்கைதான் இது.

அன்புடன்

Murali Srinivas
16th September 2011, 11:23 PM
சதிஷை சந்தித்தேன்!

நமது அன்பு நண்பர் ஆஸ்திரேலியா கண்டத்தில் நடிகர் திலத்தின் புகழ் பரப்பும் மதுரையின் மைந்தன் கோல்ட் ஸ்டார் சதீஷ் அவர்களை பத்து நாட்களுக்கு முன் மதுரையில் வைத்து சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது!

அவரே குறிப்பிட்டிருப்பதை போல ஒன்றாக இருந்த அந்த ஒரு மணி நேரமும் நடிகர் திலகம் பற்றிய பேச்சிலேயே கழிந்தது. டி.வி.டி கடையிலும் சரி உட்கார்ந்து பேசிய உணவு விடுதிலும் சரி, உரையாடல் அவரை சுற்றி சுற்றியே வந்தது.

டவுன் ஹால் ரோடு - மேலமாசி வீதி - மேலகோபுர வாசல் தெரு சந்திக்கும் இடத்தில் நின்று கொண்டு பேசியபோது அவரிடம் பழைய நினைவுகளை நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டேன். அந்த இடத்தின் சிறப்பு என்னவென்றால் அதுதான் சென்ட்ரல் சினிமா அமைந்துள்ள இடம்! அவரிடம் அந்த நாற்சந்திப்பின் மூலையை காட்டி சிவந்த மண் படம் வெளியான முதல் நாளன்று இந்த இடத்தையும் தாண்டி வரிசை நின்றது என்பதை சொன்னேன்! சொர்க்கம் படத்திற்கு முதல் நாள் எந்த வழியாக தியேட்டர் உள்ளே சென்றோம் என்பதை சுட்டிக் காட்டினேன்! ஊட்டி வரை உறவு முதல் நாள் கூட்டத்தைப் பற்றி, என் தம்பி மூன்றாம் நாள் அலப்பறையைப் பற்றி, ராஜாவிற்கு வந்த கூட்டத்தைப் பற்றி, பட்டிக்காடா பட்டணமா படத்தின் வெள்ளி விழாவிற்கு வந்த நடிகர் திலகம் திறந்த ஜீப்பில் தியேட்டரில் இருந்து பாண்டியன் ஓட்டலுக்கு சென்ற போது நான் எங்கிருந்து பார்த்தேன் என்ற இடம், அந்த தெருவில் ஞாயிறன்று வாசகசாலை எங்கே அமைப்பார்கள் என்ற இடம் இவற்றையெல்லாம் பற்றி சொல்லிக் கொண்டேயிருந்தேன்! சதீஷ் வீட்டில் ஒரு முக்கியமான சடங்கு நடைப் பெற்றுக் கொண்டிருந்த அந்த நேரத்திலும் அவரின் presence வீட்டில் கட்டாயம் தேவை என்ற நிலையிலும் அவர் என்னோடு நேரம் செலவிட்டுக் கொண்டிருந்த அந்த செய்கை மறக்க முடியாத ஒன்று! அந்த நேரத்திலேயே அந்த இடத்திலிருந்தே சுவாமியுடன் அலைபேசியில் உரையாடியதும் மறக்க முடியாத ஒன்று!

நன்றி சதீஷ்! நன்றி! அநேகமாக நீங்கள் மதுரையிலிருந்து புறப்படும் தினமான செப்டம்பர் 30 அன்று மதுரையில் மன்னவன் வந்தானடி திரையிடப்படலாம்! அதுவும் உங்கள் அபிமான அலங்கார் திரையரங்கில்!

அன்புடன்

pammalar
17th September 2011, 12:03 AM
டியர் anm,

நல்வரவு ! நற்பதிவுகள் !! நல்வாழ்த்துக்கள் !!!

தங்களுடைய மேலான பதிவுகளை-பங்களிப்பை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்குகின்றேன் !

[My abbreviation for your id anm : awesome nadigarthilagam's messenger]

அன்புடன்,
பம்மலார்.

Murali Srinivas
17th September 2011, 12:03 AM
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ராகேஷ்! [செப்டம்பர் 17]

இது போல் மேலும் பல சிறந்த பிறந்த நாட்கள் உங்களுக்கு அமையட்டும்!

அன்புடன்

pammalar
17th September 2011, 12:09 AM
A Very Very Happy Birthday Mr.Rakesh !

Many Many More Happy Returns !

pammalar
17th September 2011, 12:17 AM
டியர் ராகவேந்திரன் சார்,

பாராட்டுக்கு நன்றி !

'சென்னையில் சவான்' விகடன் தொகுப்பு அருமை. "உயர்ந்த மனிதன்" படவிழாவை வீடியோவாகவும் எடுத்திருப்பது தெரிகிறது. அதனைத் தேடும் பணியிலும் தீவிரமாக ஈடுபட வேண்டும்.

Dear Mr. NOV,

Thanks a lot for the radio interview of NT.

டியர் சந்திரசேகரன் சார்,

பொக்கிஷப் பாராட்டுக்கு பணிவான நன்றி !

சகோதரி சாரதா,

தங்களது பாராட்டுக்கு எனது கனிவான நன்றி !

தங்கள் கூற்று முற்றிலும் உண்மை. 'நான் ஒருவன் மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும் பொக்கிஷங்களை அகிலமெங்கும் உள்ள அனைவரும் பார்த்துக் களித்து இன்புற வேண்டும்' என்பதே எனது குறிக்கோள். அந்த வகையில் அதற்கு வழிவகை செய்திருக்கின்ற நமது திரிக்கும், நமது 'ஹப்'பிற்கும் நமது நன்றிகள் என்றென்றும் !

டியர் வாசுதேவன் சார்,

பாராட்டுக்கு நன்றி !

தங்களின் குமுறல் நம் எல்லோரது எண்ணங்களையும் படம்பிடித்துக் காட்டுவதாய் உள்ளது. தங்களின் ஆதங்கம் infinite percent நியாயமானது.

தாங்கள் கூடியவிரைவில் தரப்போகின்ற 'இசைக்கருவிகளுடன் இணையில்லாக்கலைஞன்' நிழற்படத்தொகுப்பிற்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் !

Dear goldstar Satish,

Thanks for your praise !

டியர் mr_karthik,

பாராட்டுக்கு நன்றி !

தாங்கள் தொகுத்துள்ள 'நடிகர் திலகம் இசைத்த இசைக்கருவிகள்' பட்டியல் அருமை.

Dear Mr.Kumareshanprabhu,

Thanks for the release date of VM.

டியர் முரளி சார்,

தங்களின் 'சதீஷை சந்தித்தேன்' பதிவில் ஒரு மினி வரலாறே உள்ளது.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
17th September 2011, 12:52 AM
செல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள்

பூப்பறிக்க வருகிறோம்

[17.9.1999 - 17.9.2011] : 13வது உதயதினம்

பொக்கிஷப் புதையல் : பத்திரிகை புகைப்படங்கள்

தினத்தந்தி : 24.11.1998
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4597a.jpg


தினகரன் : 16.11.1998
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4598a.jpg


தினகரன் : 27.11.1998
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4600a.jpg


தினத்தந்தி : 2.2.1999
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4601a.jpg

பூப்பறிக்க வருகிறோம்...

அன்புடன்,
பம்மலார்.

pammalar
17th September 2011, 04:38 AM
செல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள்

பூப்பறிக்க வருகிறோம்

[17.9.1999 - 17.9.2011] : 13வது உதயதினம்

பொக்கிஷப் புதையல் : முதல் வெளியீட்டு விளம்பரங்கள்

தினத்தந்தி : 7.7.1999
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4602a-1.jpg


தினகரன் : 17.9.1999
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4603a-1.jpg


தினகரன் : 18.9.1999
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4604a-1.jpg


தினகரன் : 21.9.1999
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4605a-1.jpg

பூப்பறிக்க வருகிறோம்...

அன்புடன்,
பம்மலார்.

pammalar
17th September 2011, 04:43 AM
செல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள்

பூப்பறிக்க வருகிறோம்

[17.9.1999 - 17.9.2011] : 13வது உதயதினம்

பொக்கிஷப் புதையல் : வரலாற்று ஆவணங்கள்

நடிகர் திலகம் பற்றி நடிகர் ரகுவரன் : தினமணி [வெள்ளிமணி] : 11.12.1998
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4606a.jpg


விமர்சனம் : தினகரன் : 18.9.1999
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4608a.jpg

பூப்பறிக்க வருகிறோம்...

அன்புடன்,
பம்மலார்.

pammalar
17th September 2011, 04:49 AM
பம்மலார் சார்,

நடிகர்திலகத்தின் கடைசிக்காவியமான 'பூப்பறிக்க வருகிறோம்' பட விளம்பரம் ஜோர். அப்படத்தில் அவரோடு இணைந்து நடித்த மாளவிகா போன்ற இன்றைய தலைமுறையினரின் கருத்து பற்றிய பத்திரிகை கட்டிங் எதுவும் இருக்கிறதா?.

செல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள்

பூப்பறிக்க வருகிறோம்

[17.9.1999 - 17.9.2011] : 13வது உதயதினம்

பொக்கிஷப் புதையல் : வரலாற்று ஆவணம்

நடிகர் திலகம் குறித்து நடிகை மாளவிகா : தினத்தந்தி : 24.3.1999
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4610a.jpg

[டியர் mr_karthik, தங்கள் சித்தம் என் பாக்கியம் !]

அன்புடன்,
பம்மலார்.

vasudevan31355
17th September 2011, 06:06 AM
பூப்பறிக்க வருகிறோம் 13வது உதயதினம்

இளைய தலைமுறையுடன் ஈடு இணையில்லாக் கலைமகன்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_1VOB_000105196.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_1VOB_000503890.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_1VOB_000527199.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_1VOB_000671206.jpg

vasudevan31355
17th September 2011, 06:10 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_1VOB_000757697.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_1VOB_000953400.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_1VOB_001012039.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_1VOB_001084464.jpg

vasudevan31355
17th September 2011, 06:12 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_1VOB_001132228.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_2VOB_000851590.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_2VOB_001688710.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_3VOB_000320461.jpg

vasudevan31355
17th September 2011, 06:16 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_3VOB_000416465.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_3VOB_000750644.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_3VOB_000829688.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_3VOB_001420982.jpg

vasudevan31355
17th September 2011, 06:18 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_3VOB_001817214.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_4VOB_001437448.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_4VOB_001874434.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

RAGHAVENDRA
17th September 2011, 07:15 AM
டியர் பம்மலார் மற்றும் வாசுதேவன்,
பூப்பறிக்க வருகிறோம் திரைக்காவியத்தின் விளம்பரம் மற்றும் ஸ்டில்களை வெளியிட்டு அசத்திவிட்டீர்கள்.

ஆனால் இந்த படத்தை நினைக்கும் போது நம்மால் உணர்ச்சி வசப் படாமல் இருக்க முடியவில்லை. கட்டுப் படுத்துவதும் கடினமாய் உள்ளது. தன்னுடைய கடைசிப் படம் என்று தெரியாத நடிகர் திலகம், தன்னுடைய முதல் படத்தைப் போன்று இந்தப் பாடல் காட்சியில் துள்ளி ஆடுவதைப் பார்க்கும் போது...

http://i50.photobucket.com/albums/f313/666britty666/thcry.gif

எட்டில் அழகு பதினெட்டில் அழகு என்ற அந்த இனிமையான பாடல் நம் பார்வைக்கு.,
இசை மெல்லிசை இளவல் வித்யா சாகர்


http://www.youtube.com/watch?v=wKrhsw9ST7Q

அது மட்டுமா தன்னுடைய இறுதிப் படத்தில் கூட புல்லாங்குழல் இசைக் கருவியை வாசித்து நடித்துள்ளார்.

அன்புடன்

RAGHAVENDRA
17th September 2011, 07:31 AM
டியர் முரளி சார்,
தங்களுடைய பதிவினை தினமும் எதிர்பார்க்கும் பல ரசிகர்களில் அடியேனும் ஒருவன். தினமும் எழுதுங்கள். ஒரு வார்த்தையாவது எழுதுங்கள். தங்களின் ஒரு வார்த்தை ஒரு லட்சம்.

சதீஷுடனான தங்களின் நினைவுப் பகிர்வு எல்லோருக்கும் அவரவர்களுடைய இளமைக் காலத்தை நினைவூட்டியிருக்கும். பொதிகை மலை சந்தனமே, பூஜை செய்யும் மந்திரமே, மதுரை நகர் வீதியிலே வளைய வரும் இளங்காற்றே என்ற பாடலின் வரிகளைப் போல் மதுரை நகரின் காற்று தங்களுக்குக் கட்டியம் கூறும்.

தாங்கள் கூறியது சரி. திரு ஒய்.ஜி.மகேந்திரா அவர்களுக்குத் தான் நாம் நன்றி கூற வேண்டும். நடிகர் திலகத்தின் மேன்மைகளை நம்மைப் போன்று ரசிகர்களில் ஒருவராக, பல்வேறு கோணங்களில் அவருடைய பெருமையைப் பறை சாற்றுபவராக திரு மகேந்திரா ஆற்றி வரும் தொண்டு மிகவும் பாராட்டத் தக்கது. அவருடன் விவாதிக்கும் போது அவருடைய சிந்தனையில் தோன்றியதன் செயல் வடிவம் நாம் 2ம் தேதி பார்க்கும் போது தெரியும்.

இதற்காக அவருக்கு நம் அனைவரின் சார்பிலும் நன்றிகள்.

அன்புடன்

vasudevan31355
17th September 2011, 08:35 AM
'பூப்பறிக்க வருகிறோம்' சிறப்பு நிழற்படங்கள்.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/44.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-1.jpg

அன்புடன்,
வாசுதேவன்

KCSHEKAR
17th September 2011, 11:13 AM
[size=4][color=darkred][b]பொக்கிஷப் புதையல் : வரலாற்று ஆவணம்

நடிகர் திலகம் குறித்து நடிகை மாளவிகா : தினத்தந்தி : 24.3.1999
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/gedc4610a.jpg

[டியர் mr_karthik, தங்கள் சித்தம் என் பாக்கியம் !]

அன்புடன்,
பம்மலார்.

கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா!! இது nt திரைப் பாடல்.
நம் திரியைப் பொறுத்தவரை கேட்ட தகவல் கிடைக்கும் - பம்மலாரின் லைப்ரரியில் -

KCSHEKAR
17th September 2011, 11:18 AM
முரளி சார்! ரசிகருடனான சந்திப்பைக் கூட ஒரு சுவாரசியமான கட்டுரையாக வடித்திருப்பது அருமை.. தொடர்ந்து உங்களுடைய எழுத்துக்களை, ஆய்வுகளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்.

mr_karthik
17th September 2011, 11:20 AM
அன்புள்ள பம்மலார் சார்,

'பட்டணத்தில் பூதம்' படத்தில், முதன்முதலாக ஜாடியிலிருந்து வெளிவந்த பூதத்தைப்பார்த்து பயப்படும் ஜெய்யும், நாகேஷும் அதை அங்கிருந்து அகற்ற, எங்காவது பக்கத்திலுள்ள இடத்துக்கு அனுப்பினால் உடனே திரும்பி விடும் என்பதற்காக, திருப்பதி சென்று பிரசாதம் கொண்டு வரும்படி சொல்ல, அடுத்த கணம் கோயில் சந்நிதானத்திலிருந்து ஒருவர் பிரசாதத்துடன் வந்து நிற்பார்.

அதுபோல, நடிகர்திலகத்துடன் நடித்த நடிகை மாளவிகா அவரைப்பற்றி கருத்துச்சொன்ன பேப்பர் கட்டிங் எதுவும் உள்ளதா என்று நான் கேட்டதுதான் தாமதம்.... "இதோ" என்று எடுத்து நீட்டுகிறீர்கள். என்ன மனிதரய்யா நீங்கள்....

ஊகும்.... பூதாதி பூதங்களின் தலைவன் 'ஜீ பூம்பா' எங்கும் போகவில்லை, இங்குதான் இருக்கிறது.

இந்த ஜென்மத்தில் அதன் பெயர் 'பம்மல் சுவாமிநாதன்'.

KCSHEKAR
17th September 2011, 11:22 AM
http://2.bp.blogspot.com/-ndRc7vJrIaM/TnLyYOyZuVI/AAAAAAAAAJ4/GCNUzKkn0Z8/s1600/Nadigarthilagam%27s84thBDayChennai.jpg

mr_karthik
17th September 2011, 11:45 AM
அன்புள்ள முரளி சார்,

நீங்களும் கோல்டன் ஸ்டார் சதீஷ் அவர்களும் சந்தித்த மாலை நேரத்தின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட விதம் அருமை. அதைச்சொல்லும் நோக்கில், மதுரை சென்ட்ரலில் வெளியாகி வெற்றிக்கொடி நாட்டிய நடிகர்திலகத்தின் படங்களையும் பட்டியலிட்டிருந்த வித அருமை.

சென்னையின் முப்பெரும் கோட்டைகளைப்போல மதுரையில் நடிகர்திலகத்தின் நாற்பெரும் கோட்டைகளாகத் திகழ்ந்த சென்ட்ரல், நியூ சினிமா, சிந்தாமணி, ஸ்ரீதேவி அரங்குகளில் நடிகர்திலகத்தின் சாதனை ஓவியங்கள் பற்றி விரிவாக எழுதுவதாக முன்னொருமுறை சொல்லியிருந்தீர்கள்.

நேரம் கிடைக்கும்போது ஒவ்வொரு அரங்காக எழுதலாமே, நாங்களும் படித்து இன்புறுவதோடல்லாமல் பொக்கிஷமாய்ப் பாதுகாப்போம் அல்லவா?.

தங்களது 'எந்தன் பொன்வண்ணமே' எழுத்தோவியத்தை நேற்று மீண்டும் படித்தேன். ஆகா என்ன ஒரு ஆய்வு. அந்த பழைய முரளிசாரை மீண்டும் காண விழைகிறோம். வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்குங்கள்.

mr_karthik
17th September 2011, 12:15 PM
சொல் குறைவு..... செயல் அதிகம்......

அதுதான் எங்கள் k.சந்திரசேகரன்.

சென்னையில், நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் நடைபெற இருக்கும், 'நடிகர்திலகத்தின் 84-வது பிறந்தநாள் சிறப்பு அன்னதான விழா' இனிதே வெற்றிகரமாய் நடைபெற வாழ்த்துக்கள்.

தன்னலம் கருதாத தங்கள் சமூக நலப்பணிகள் சிறக்க, தாங்கள் பல்லாண்டுகள் வாழ எங்களின் பிரார்த்தனைகள்.

vasudevan31355
17th September 2011, 12:24 PM
http://padamhosting.com/out.php/i58506_vlcsnap2011020112h02m53s171.png

http://www.thenisai.com/img/tamil/rev/pvarugirom.jpg


http://tamilmovies.awardarea.com/wp-content/plugins/simple-post-thumbnails/timthumb.php?src=/wp-content/thumbnails/944.jpg&w=200&h=150&zc=1&ft=jpg


http://padamhosting.com/out.php/i58508_aaaa.JPG

அன்புடன்,
வாசுதேவன்.

KCSHEKAR
17th September 2011, 12:33 PM
திரு கார்த்திக் அவர்களே
உங்கள் அன்பான பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் என்னுடைய பணிவான நன்றிகள்

vasudevan31355
17th September 2011, 12:41 PM
'பூப்பறிக்க வருகிறோம்' விளம்பர கட்டிங்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/RVasudevan106-1.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

anm
17th September 2011, 01:43 PM
என்றும் அணையா ஜோதியில் வந்து ஐக்கியமாகி இருக்கும் anm அவர்களே, உங்களை இந்த சபைக்கு பெருமையுடன் அழைக்கிறோம். உங்கள் ரசனைகளை அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்! காத்திருக்கிறோம்!

அன்புடன்

திரு. முரளி ஸ்ரீநிவாஸ் அவர்களே,

என்னுடைய நன்றிகள் உரித்தாகுக, உங்களின் இந்த அன்பான வரவேற்பிற்கு.

நிச்சயம் நானும் பங்கு கொள்கிறேன்.

Anm

anm
17th September 2011, 01:49 PM
டியர் anm,

நல்வரவு ! நற்பதிவுகள் !! நல்வாழ்த்துக்கள் !!!

தங்களுடைய மேலான பதிவுகளை-பங்களிப்பை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்குகின்றேன் !

[my abbreviation for your id anm : awesome nadigarthilagam's messenger]

அன்புடன்,
பம்மலார்.

திரு. பம்மலார் அவர்களே,

தங்களின் அருமையான பங்களிப்புகளை விரும்பிப் படிப்பவர்களில் நானும் ஒருவன்.

தங்களின் இந்த அன்பான வரவேற்பிற்கு என் தலை வணங்கி நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

எல்லா சிவாஜி ரசிக ஜாம்பவான்களுக்கும் என் நன்றிகள்.

அன்புடன்,

anm

KCSHEKAR
17th September 2011, 01:53 PM
வருக anm அவர்களே (தங்கள் பெயரைக் குறிப்பிட்டால் நன்று)

HARISH2619
17th September 2011, 01:55 PM
DEAR MR.ANM SIR,
A warm welcome to this thread.Please continue your valuable posts on our NT.

DEAR KUMARESAN SIR,
Thankyou for the information on release date of VM(It's a bit disappointment as I was expecting it on our NT's birthday but still we can wait for some more days for the day of our lifetime.)

DEAR MURALI SIR,
Your write up on the interaction with our satish sir was simply superb.please try to add atleast one post everyday so that we will not feel like missing you for a long time.

anm
17th September 2011, 02:02 PM
திரு. வாசுதேவன் சார்,

உங்களின் பூப்பறிக்க வருகிறோம் Stills மிகவும் அருமை.இந்தப் படத்தை நான் பார்க்கத் தவறிவிட்டேன்.அதன் CD கிடைக்கிறதா?

அன்புடன்,
ANM

anm
17th September 2011, 02:04 PM
Dear Harish Sir,

It is my pleasure to be here and my sincere thanks for all the warm reception I am getting here.

With love & Regards,
ANM

anm
17th September 2011, 02:08 PM
வருக anm அவர்களே (தங்கள் பெயரைக் குறிப்பிட்டால் நன்று)

டியர் KCSHEKAR சார்,

என் பணிவான நன்றிகள், தங்களின் வரவேற்பிற்கு.

உங்களின் வேண்டுகோளின்படி, என் பெயர்,

அன்புடன்,
Anand.

anm
17th September 2011, 02:39 PM
Dear Sri Aravind Srinivasan,
These lines were absolutely irrelevant in the write-up by Randor Guy and not true. I expressed my strong sentiments to The Hindu for such kind of irrelevant remarks immediately. Even when Paraasakthi was under progress, NT was working under various banners for different projects and during the period between 17.10.1952 [release date of Paraasakthi] and 09.12.1954 (2 years, 2 months, i.e. 26 months approx.), he has given 19 films, i.e. his 19th film Edhirpaaraadadhu, released on 09.12.1954). 19 films in 26 months - does that mean that there was no body to buy him? These kind of ill-perceptions were what we in our hub have been clarifying and rectifying and Mr. Murali Srinivas, Saaradha, Karthik and friends have put forth valid and undisputable arguments here. I would advise you to go through all the previous 6 parts of this thread and I am sure you would get the real dimension of the holy soul called Nadigar Thilagam.

I am extremely happy to read your posts and eager to see more from you,

Beloved,
Raghavendran

Dear Raghavendran Sir,

It is very kind of you and many thanks from all other Rasikas for correcting the erroneous article by Randor Guy. It is really a valuable input against false impression created by many people like Randor Guy, Idayam Pesukirathu Maniyan etc. These are the people who were creating a fallacy against Shivaji to cajole some one else.

Even I noticed at a meeting where Shivaji, Kamal attended, while Randor Guy was speaking NT was sitting showing contempt, we can understand why it is so. As mentioned by our NT in an interview, it was Maniyan who had started 'Shiviji's acting is over-acting' and we know very well that he wanted please some one or others where there was dearth of acting.

We all await your very very valuable more inputs like this.

Regards,
Anand

mr_karthik
17th September 2011, 02:43 PM
அன்புள்ள வாசுதேவன் சார்,

நடிகர்திலகத்தின் க்டைசிக்காவியமான 'பூப்பறிக்க வருகிறோம்' நிழற்படத்தொகுப்பு மிகவும் அருமை. நடிகர்திலகத்தின் தனித்தோற்றங்களை ஏகப்பட்ட நிழற்படங்களாகத் தொகுத்த நீங்கள், குறை வைக்காமல் மற்ற கலைஞர்களின் படங்களை ஒரே பிரேமில் தொகுத்து ஈடு செய்துவிட்டீர்கள்.

அதிலும் சிறப்பு நிழற்படத்தில் நீங்கள் செருகியுள்ள 'ரேடியோகிராம்' என்னும் ஆடியோ யூனிட், பழைய நினைவுகளைக் கிளறிவிட்டது. ஏனென்றால் எங்கள் வீட்டிலும் அது ஒன்று இருந்தது. அதில்தான் எத்தனை ஆயிரம் பாடல்களைக் கேட்டு மகிழ்ந்திருப்போம். இன்றைய தலைமுறை பார்த்திராத 'இசைப்பெட்டகம்' அது. ரகசியமாகவெல்லாம் அதில் பாடல் கேட்க முடியாது. கொஞ்சமாக சவுண்ட் வைத்தாலே மூன்று வீடுகளுக்குக் கேட்கும்.

அதுபோல, விளம்பரத்தில் சென்னை 'பாரத்' தியேட்டர் பெயரைப்பார்த்ததும், சமீபத்தில் புதிய பறவை வெளியிட்டபோது, நண்பர்கள் இங்கு குறிப்பிட்டிருந்த மாபெரும் ஒற்றுமை மனதில் தோன்றியது. சென்னையில் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகத்திலேயே எந்த அரங்குக்கும் கிடைக்காத மாபெரும் பெருமை 'பாரத்' அரங்குக்கு கிடைத்த விஷயம்தான் அது.

நடிகர்திலகத்தின் முதல் காவியமான 'பராசக்தி' படத்தையும், கடைசி ஓவியமான 'பூப்பறிக்க வருகிறோம்' படத்தையும் த்ன்னில் ரிலீஸ் செய்து பெருமை கொண்ட ஒரே அரங்கம், வடசென்னை, வண்ணாரப்பேட்டை, காமராஜ் மேம்பாலம் கீழே அமைந்திருக்கும் 'பாரத்' திரையரங்கம்.

mr_karthik
17th September 2011, 03:06 PM
DEAR MURALI SIR,
Your write up on the interaction with our satish sir was simply superb.please try to add atleast one post everyday so that we will not feel like missing you for a long time.

யெஸ்....

இதுபோல, நண்பர் பார்த்தசாரதி சாரும் அடிக்கடி காணாமல் போய்விடுகிறார்.

mr_karthik
17th September 2011, 03:10 PM
திரு. வாசுதேவன் சார்,

உங்களின் பூப்பறிக்க வருகிறோம் Stills மிகவும் அருமை.இந்தப் படத்தை நான் பார்க்கத் தவறிவிட்டேன்.அதன் CD கிடைக்கிறதா?

அன்புடன்,
ANM

ஆனந்த்,

பூப்பறிக்க வருகிறோம் படம், அருமையான டி.வி.டி.யாகவே கிடைக்கிறது.

அதன் டிவிடி உறையை இங்கே முந்திய பக்கத்தில் ராகவேந்தர் சார் த்ந்திருக்கிறாரே. பார்த்திருப்பீர்களே.

RAGHAVENDRA
17th September 2011, 08:33 PM
http://jeeboombaevents.weebly.com/uploads/6/9/9/5/6995992/1301570431.png

ஜீபூம்பா பம்மலார் ...

ஆஹா... சொல்லும் போதை சூப்பராக உள்ளதே...

இனிமேல்

ஜீபூம்பா பம்மலார்....

வாழ்க வாழ்க ....

அன்புடன்

RAGHAVENDRA
17th September 2011, 08:34 PM
கல்தூண் உடுக்கை, லட்சுமி வந்தாச்சு - தபேலா, குறவஞ்சி - டால்டா டப்பா

இந்த வாத்தியங்களை நினைவூட்டிய கார்த்திக் அவர்களுக்கு நன்றி...

இதோ காணுங்கள் அவர்களை -

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Decorated%20images/kalthunlakshmikuravanjiinstfw.jpg

அன்புடன்

J.Radhakrishnan
17th September 2011, 09:12 PM
Welcome Mr.Anand,
நடிகர்திலகம் புகழ் பாடும் பக்தர்களின் இக்கோவிலுக்கு தங்களை வருக வருக என வரவேற்கிறோம்.

J.Radhakrishnan
17th September 2011, 09:22 PM
http://2.bp.blogspot.com/-ndrc7vjriam/tnlyyoyzuvi/aaaaaaaaaj4/gcnuzkkn0z8/s1600/nadigarthilagam%27s84thbdaychennai.jpg

டியர் சந்திரசேகர் சார்,

விழா இனிதே நடைபெற நம் இறைவனை (nt)வேண்டிகொள்வோம்.

J.Radhakrishnan
17th September 2011, 09:37 PM
டியர் பம்மலார் சார்,

பூப்பறிக்கவருகிறோம் Stills அருமை, நான் என் மனைவியுடன் பார்த்த இரண்டாவது திரைப்படம்.
இன்றும் என் நினைவில் பசுமையாக உள்ளது.

J.Radhakrishnan
17th September 2011, 09:44 PM
டியர் முரளி சார்,
தங்களுடைய பதிவினை தினமும் எதிர்பார்க்கும் பல ரசிகர்களில் அடியேனும் ஒருவன். தினமும் எழுதுங்கள். ஒரு வார்த்தையாவது எழுதுங்கள். தங்களின் ஒரு வார்த்தை ஒரு லட்சம்.


டியர் முரளி சார்,
நானும் இதை ஆமோதிக்கிறேன், ராகவேந்தர் சார் குறிப்பிட்டதை போல தினமும் தங்கள் கருத்துகளை பதிவிட வேண்டுகிறேன்.

J.Radhakrishnan
17th September 2011, 09:49 PM
Quote Originally Posted by HARISH2619 View Post
DEAR MURALI SIR,
Your write up on the interaction with our satish sir was simply superb.please try to add atleast one post everyday so that we will not feel like missing you for a long time.
யெஸ்....

இதுபோல, நண்பர் பார்த்தசாரதி சாரும் அடிக்கடி காணாமல் போய்விடுகிறார்.

டியர் பார்த்தசாரதி சார்,
என்ன ஆச்சு? உங்கள் பதிவுகள் எதுவும் இல்லையே? அதிக வேலைபளுவோ???

J.Radhakrishnan
17th September 2011, 09:59 PM
டியர் வாசுதேவன் சார்,

பூப்பறிக்க வருகிறோம் stills அருமை!!! நடிகர்திலகத்தின் பல்வேறு முகபாவங்களை அப்படியே படம் பிடித்துள்ளீர்கள்

மிக்க நன்றி!!!

pammalar
17th September 2011, 10:05 PM
டியர் ராகவேந்திரன் சார்,

மிக்க நன்றி !

டியர் வாசுதேவன் சார்,

"பூப்பறிக்க வருகிறோம்" ஆல்பம் மிக அருமை !

டியர் சந்திரசேகரன் சார்,

லைப்ரரி பாராட்டுக்கு லைஃப்டைம் நன்றிகள் !

சிறப்பு அன்னதான விழா சிறந்த முறையில் நடைபெற செழிப்பான வாழ்த்துக்கள் !

டியர் mr_karthik,

சாதாரண மனிதனான என்னை 'ஜீபூம்பா' பூதமாக்கிய தங்களுக்கு என்ன சொல்லி நன்றி தெரிவிப்பது !

ஓகே, "காசே தான் கடவுளடா" தேங்காய் பாணியில் 'தேங்க்ஸ் ஆயதே நமஹ !! பூதப்பிரசாத சித்திரஸ்து !!!'

டியர் anm,

மிக்க நன்றி !

தங்களின் திருப்பெயர் 'ஆனந்த்' என்றதும் வசந்த மாளிகை 'ஆனந்த்' நினைவுக்கு வந்துவிட்டார்.

டியர் ஜேயார் சார்,

மலரும் நினைவுகளுக்கு மனமார்ந்த நன்றி !

[ராகவேந்திரன் சார், நன்றி ! நன்றி !]

அன்புடன்,
பம்மலார் என்கிற பம்மல் ஆர்.சுவாமிநாதன் என்கிற ஜீபூம்பா [உபயம் : mr_karthik].

J.Radhakrishnan
17th September 2011, 10:12 PM
டியர் ராகவேந்தர் சார்,

உயர்ந்த மனிதன் விழாவில் உரையாற்றிய அப்போதைய மத்திய அமைச்சர் திரு ஒய்.பி.சவாண் அவர்களின் சென்னை நிகழ்ச்சிகளைப் பற்றிய பதிவை கண்டேன், என்ன செய்வது? மேடையில் இப்படி புகழ்பவர்கள் ntஅவர்களுக்கு இறுதி வரை தேசிய சிறந்த நடிகர் விருது வழங்க முயற்சி எடுக்க வில்லை என்பது வருந்ததக்கது.

Murali Srinivas
17th September 2011, 11:15 PM
ராகவேந்தர் சார், சந்திரசேகர், செந்தில், கார்த்திக் மற்றும் ராதாகிருஷ்ணன்,

உங்கள் அனைவரின் அன்புக்கும் என் மனங்கனிந்த நன்றிகள். எழுத வேண்டாம் என்பதில்லை. இந்த திரியில் தினசரி நான் [மட்டும்] எழுதிக் கொண்டிருந்த காலமெல்லாம் இருந்தது. ஆனால் இன்று தங்களின் அருமையான பங்களிப்புகளை தர இப்போது பலர் இருக்கிறார்கள். செவிக்குணவு இல்லாத போதுதானே வயிற்றுக்கு ஈய வேண்டும். இங்கே பலமுறை சொன்னது போல அலுவலகத்தில் ஹப் பார்க்க முடியாது. இரவில் கிடைக்கும் ஒன்றோ அல்லது இரண்டு மணி துளிகளில் படிப்பதையும் பதிவிடுவதையும் செய்ய வேண்டும் என்பதால் சில நேரங்களில் எழுத முடியாமல் போய் விடுகிறது. தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன். உங்கள் அனைவருக்குமாக ஒரு பெரிய பதிவு பின்னாலே வருகிறது.

அன்புடன்

என் பதிவையும் பூப் பறிக்க வருகிறோம் ஸ்டில்ஸ்-ஐயும் பார்த்துவிட்டு எல்லோரும் [சுவாமி தவிர] நமது நண்பர் ராகேஷ் [Groucho] அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிக்க மறந்து விட்டீர்கள். எனவே உங்கள் எல்லோரும் சார்பாகவும் ராகேஷிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Murali Srinivas
17th September 2011, 11:23 PM
1970-களும் நடிகர் திலகமும் - ஆனந்த விகடனும் - Part I

இங்கே ஒரு சில நாட்களுக்கு முன் நடிகர் திலகத்தின் படங்களுக்கு 70-களின் தொடக்கத்திலிருந்து விகடனின் விமர்சனங்கள் எதிர்மறையாக எழுதப்பட்டதை சுட்டிக் காட்டியிருந்தார் சுவாமி. நான் அதை பற்றி எழுதுவேன் என்றும் குறிப்பிட்டிருந்தார். அதை பற்றிய செய்திகளுக்கு செல்லும் முன் அன்றைய காலகட்டத்தில் நடந்த ஒரு சில நிகழ்வுகளை இங்கே நினைவு கூற வேண்டியுள்ளது. இந்த திரிக்கு இது ஒரு Digression என்றாலும் அதை எழுதினாலே இதன் பின்னணியை புரிந்துக் கொள்ள முடியும் என்ற வகையில் இதோ.

நான் எழுதப் போகும் விஷயங்களில் நமது திரியின் நாயகன் நடிகர் திலகம் இடம் பெறப் போவதில்லை. மாறாக இரண்டு நபர்கள் தங்கள் பரஸ்பர தேவைகளுக்காக செயல்பட்டது எப்படி அதில் எந்த பங்கும் இல்லாத நடிகர் திலகத்தின் படங்களை பாதித்தது [அதாவது மக்கள் மத்தியில் படத்தைப் பற்றி ஒரு நெகடிவ் கருத்தை உருவாக்கியது] என்பது பற்றிய பதிவே இது.

ஆனந்த விகடன் அதிபர் எஸ்.எஸ்.வாசன் அவர்கள் ஒரு தேசியவாதி. காங்கிரஸ் பேரியக்கத்தை பெரிதும் ஆதரித்தவர். 1967 தேர்தலின்போது கூட தி.மு.க.கூட்டணியை எதிர்த்து தன் பத்திரிக்கையில் எழுதியவர். அந்த தேர்தலின்போது ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பிறகு 1968-ல் சென்னையில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டின் சில பணிகளை [அலங்கார ஊர்திகள் முதலியன] அன்றைய அரசாங்கம் அவரிடம் ஒப்படைக்க அதை சிறப்பாக செய்து முடித்தார். விகடன் தவிர அவர் ஜெமினி தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஜெமினி ஸ்டுடியோஸ் அதிபர் என்பது அனைவரும் அறிந்திருப்பர். இந்த உலகத்தமிழ் மாநாட்டிற்கு முன்னர்தான் முதன் முறையாக தன் ஜெமினி நிறுவனம் சார்பில் எம்,ஜி,ஆரை வைத்து ஒரு படம் தயாரிக்க ஆரம்பித்தார். எம்.ஜி.ஆர். அப்போதுதான் பிற மொழிப் படங்களை தமிழில் ரீமேக் செய்து அதில் நடிக்க ஆரம்பித்திருந்த நேரம். சிட்டிமார்(?) என்ற இந்தி படம் குடியிருந்த கோயிலாக உருவாகி கொண்டிருந்தபோது பூல் அவுர் பத்தர் படத்தை வாங்கி ஒளிவிளக்கு என்ற பெயரில் தயாரிக்க ஆரம்பித்தார் வாசன். இயக்குனர் பொறுப்பை சாணக்கியாவிடம் ஒப்படைத்தார். தயாரிப்பு நிர்வாகத்தை வாசனின் புதல்வர் பாலசுப்ரமணியனும் [எஸ்.எஸ்.பாலன்] அன்றைய விகடன் இதழில் துணை ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்த மணியனும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இந்த இடத்தில் மணியனை பற்றி சொல்ல வேண்டும். 1950-களில் விகடனில் 13-வது உதவி ஆசிரியராக சேர்ந்த மணியன் நாளைடைவில் வளர்ந்து வாசனுக்கு மிகவும் நெருக்கமானார். கதைகள் எழுதிக்கொண்டிருந்தவரை வெளிநாட்டுகளுக்கு அனுப்பி வைத்து இதயம் பேசுகிறது என்ற தலைப்பில் பயணக் கட்டுரைகள் எழுத வைத்தனர் வாசனும் பாலனும். அதன் மூலம் மணியன் அடைந்த வளர்ச்சி அபாரமானது. மீண்டும் விட்ட இடத்திற்கு வருவோம்.

ஒளிவிளக்கு எம்.ஜி.ஆரின் 100-வது படமாக 1968 செப்டம்பர்-ல் வெளியானது. ஏ.வி.எம். போல் ஜெமினியும் அந்த ஒரு எம்.ஜி.ஆர். படத்துடன் நிறுத்திக் கொண்டது. ஆனால் யாரை எப்போது எப்படி தனக்கு உதவிகரமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் தேர்ந்தவரான எம்.ஜி.ஆர். மனியனுடனான உறவை தொடர்ந்தார். அது மணியனுக்கும் தேவையாய் இருந்தது. இது எந்தளவிற்கு இருந்தது என்றால் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் தினசரி மாலை வேலையில் மாம்பலம் ஆற்காடு தெருவில் உள்ள எம்.ஜி.ஆரின் அலுவலகத்திற்கு செல்வதை மணியன் வழக்கமாக்கி கொண்டிருந்தார். [மணியனே எழுதியுள்ளபடி அங்கே அவர் சென்றவுடன் இருவருக்கும் பாசந்தி மற்றும் முந்திரிப்பருப்பு பக்கோடா வருமாம். தினசரி அதை சாப்பிட்டதனால்தான் உங்கள் உடல் மிகவும் பெருத்து விட்டது என்று மணியனின் மனைவி திருமதி லலிதா மணியன் அவரை கிண்டல் செய்வாராம்] இந்த பரஸ்பர புரிதல் காரணமாக அடுத்து வெளிவந்த எம்.ஜி.ஆரின் படங்களான அடிமைப் பெண், நம்நாடு போன்ற படங்களுக்கு விகடனின் விமர்சனம் உறுதுணையாய் இருந்தது.

இப்படி இருந்த நேரத்தில் 1969 ஆகஸ்ட் 26 அன்று எஸ்.எஸ்.வாசன் காலமானார். ஆசிரியர் பொறுப்பு பாலனின் மேல் விழுந்தது. ஆனால் எப்போதும் இது போன்ற பொறுப்புகளை ஏற்பதில் தயக்கம் காட்டிய பாலன் பெயரளவில் தான் ஆசிரியராக இருந்துக் கொண்டு பத்திரிக்கையை நடத்தி செல்லும் முழுப் பொறுப்பையும் மனியனிடம் கொடுத்து விட்டார். மணியன் வைத்ததுதான் சட்டம் என்றாகிப் போனது.

இந்நிலையில் எம்.ஜி.ஆருடனான நட்பை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்தார் மணியன். அவரிடம் சென்று விகடனில் ஏதாவது எழுதும்படி கேட்டுக் கொள்ள முதலில் மறுத்த எம்.ஜி.ஆர். பின் அதைப் பற்றி யோசிக்க தொடங்கினார். அன்றைய நாளில் பிரபலமான வார இதழ்கள் என்று எடுத்துக் கொண்டால் அவை குமுதம், விகடன், கல்கி, தினமணி நாளிதழின் ஞாயிறு பதிப்பாக வெளிவந்துக் கொண்டிருந்த தினமணி கதிர், கல்கண்டு மற்றும் ராணி ஆகியவை ஆகும். இவற்றில் எந்த இதழுமே எம்.ஜி.ஆர் ஆதரவு இதழ் கிடையாது. இவற்றில் கல்கண்டு மற்றும் கதிரை ஒதுக்கி விடலாம். கல்கிக்கு குமுதம், விகடன் போல் reach கிடையாது. ராணி தி.மு.க. ஆதரவு இதழாக இருந்தபோதினும் சந்திரோதயம் படத்தின் மூலமாக சி.பா. ஆதித்தனாரோடு ஏற்பட்ட பிணக்கு முற்றிலுமாக தீராத நேரம். மிச்சம் இருப்பது குமுதம் மற்றும் விகடன் மற்றுமே. இதில் குமுதம் நடிகர் திலகத்திற்கு ஆதரவாக இருக்கக் கூடிய இதழ். அது எந்தளவிற்கு என்பதை அரசு எழுதிய ஒரு கேள்வி பதில் மூலமாக தெரிந்துக் கொள்ளலாம்.

கேள்வி இப்படி இருந்தது

ஒரே நேரத்தில் சிவாஜி படத்திற்கும் எம்.ஜி.ஆர். படத்திற்கும் ஓசி பாஸ் கிடைத்தால் நீங்கள் எதற்கு போவீர்கள்?

அதற்கு அரசு அளித்த பதில்

இரண்டையும் கிழித்துப் போட்டுவிட்டு சிவாஜி படத்திற்கு காசு கொடுத்துப் போவேன்.

நான் சொல்லும் இந்த பதில் 1973 - 74 காலக்கட்டத்தில்தான் வந்தது. ஆனால் நாம் பேசிக் கொண்டிருப்பதோ 1970-ன் தொடக்கம். இருந்தாலும் கூட குமுதத்தின் stand எல்லாக் காலங்களிலும் எப்படி இருந்தது என்பதை வாசகர்கள் எளிதில் விளங்கி கொள்ளவே இதை குறிப்பிடுகிறேன்.

எனவே அன்றைய நாளில் பிரபலமாக விளங்கிக் கொண்டிருந்த ஒரு பத்திரிக்கையின் ஆதரவு தேவை என்பதை சிந்தித்துப் பார்த்த எம்.ஜி.ஆர். விகடனில் எழுத ஒப்புக் கொண்டார். அது மணியனின் master stroke -ஆக பத்திரிக்கை உலகில் பார்க்கப்பட்டது. எதைப் பற்றி எழுதுவது என்று ஆலோசித்த எம்.ஜி.ஆர். தன் வாழ்க்கை வரலாற்றையே நான் ஏன் பிறந்தேன் என்ற பெயரில் எழுத தொடங்கினார். 1970-ம் வருடம் ஏப்ரல் மாதம் 10-ந் தேதி வெள்ளிகிழமையன்று தமிழ் புத்தாண்டு சிறப்பிதழாக வெளியான விகடன் இதழில் தொடர் ஆரம்பித்தது. இதற்கிடையில் 70 ஜனவரியில் வெளியான மாட்டுக்கார வேலன் படத்திற்கும் விகடனின் ஷொட்டு கிடைத்தது.

(தொடரும்)

அன்புடன்

pammalar
17th September 2011, 11:27 PM
தந்தை பெரியாருடன் கலையுலகத் தந்தை 'சிவாஜி'
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/Periyar1-1.jpg


"பெற்ற மனம்(1960)" திரைக்காவியத்தின்
ஒரு காட்சியில் பெரியார் தோற்றத்தில் கலைப்பெரியார்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4611a-1.jpg

இன்று 17.9.2011 பகுத்தறிவுப் பகலவன், வைக்கம் வீரர் தந்தை பெரியார் அவர்களின் 133வது பிறந்ததினம்.

பம்மல் ஆர். சுவாமிநாதன்.

Murali Srinivas
17th September 2011, 11:32 PM
1970-களும் நடிகர் திலகமும் - ஆனந்த விகடனும் - Part II

நான் மேற்குறிப்பிட்டுள்ள தேதியின் அடுத்த நாளன்றுதான் [அதாவது 1970 ஏப்ரல் 11] நடிகர் திலகத்தின் வியட்நாம் வீடு வெளியானது. 1964-ல் வெளியான புதிய பறவை சிவாஜி பிலிம்ஸ் பானரில் தயாரிக்கப்பட்டது. அதற்கு ஆறு வருடங்களுக்கு பிறகு சிவாஜி புரொடக்சன்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஏற்படுத்தப்பட்டு வியட்நாம் வீடு வெளியானது. படம் பெரிய வெற்றியைப் பெற்றதும் தொடர்ந்து படங்களை தயாரிக்க வேண்டும் என்று விரும்பிய வி.சி.சண்முகம் அதற்கான முயற்சியை ஆரம்பித்தார். சிவந்த மண் ஏற்படுத்திய தாக்கத்தினால் வெளிநாடுகளில் சென்று படமாக்க முடிவு செய்தார். அந்நேரத்தில் அந்த வருடம் ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் ஜப்பானில் உள்ள ஒசாகா நகரில் எக்ஸ்போ 70 என்ற மாபெரும் கண்காட்சி நடைபெறப் போவதை அறிந்த அவர் அந்த நேரத்தில் அங்கே படப்பிடிப்பை வைத்துக் கொள்ள விரும்பினார். அன்னை இல்லத்தின் குடும்ப நண்பரும் நடிகர் திலகதிற்காக மதி ஒளி என்ற மாதம் இருமுறை பருவ இதழை நடத்திக் கொண்டிருந்த மதி ஒளி சண்முகம்
அவர்களிடம் off the record ஆக இதை விசிஎஸ் சொல்ல , ஆர்வக் கோளாறு என்று சொல்லலாமா இல்லை வேறு ஏதாவது காரணம் இருந்ததா என்று தெரியவில்லை, மதி ஒளி இதழில் இந்த செய்தி வெளியாகி விட்டது. இதை பார்த்த மாற்று முகாமிற்கு ஒரே அதிர்ச்சி.

முதல் வாய்ப்பு போய்விட்டது. இந்தப் படத்தையும் விட்டு விட்டால் அது தமக்கு ஒரு அவமானமாகி விடும் என்பதை உணர்ந்த அவர் உடனே காய்களை நகர்த்த தொடங்கினார். வெளிநாடுகளில் படப்பிடிப்பு வைத்துக் கொள்ள விரும்பிய எம்.ஜி.ஆருக்கு முதலில் நினைவு வந்தது மணியனைதான். காரணம் முன்பே சொன்னது போல் இதயம் பேசிகிறது என்ற தலைப்பில் பல வெளிநாட்டு சுற்றுப் பிரயாணங்களை மேற்கொண்டவர். பத்திரிக்கை உலக தொடர்புகளை அதிகமாக உடையவர் என்பதால். அவரும் அவருடன் சித்ரா கிருஷ்ணசாமியும் சென்றனர்.

உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு முதலில் குன்னக்குடி இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்ட செய்திகள் எல்லாம் இங்கே பலரும் அறிந்ததே. இந்நிலையில் குன்னகுடியை மாற்றி விட்டு மெல்லிசை மன்னரை இசையமைப்பாளராக அறிவித்தார்கள். எம்.எஸ்.வியே பல பேட்டிகளில் சொன்னது போல 15 நாட்கள் எஸ்.எஸ்.வியை கசக்கி பிழிந்து பாடல்களை வாங்கினார் எம்.ஜி.ஆர். அதற்கு காரணம் வெளிநாட்டு படப்பிடிப்பு தொடங்குவதற்கு அவருக்கு நேரம் குறைவாக இருந்ததனால்தான். வெகு வேகமாக நடிக நடிகையர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். மணியனின் கிரீன் சிக்னல் கிடைத்தவுடன் எம்.ஜி.ஆர்.படப்பிடிப்பு குழுவினரோடு கிளம்பினார்.

இதற்கிடையில் எம்.ஜி.ஆர். எக்ஸ்போ 70-ல் படம் எடுக்கிறார் என்று தெரிந்ததும் சிவாஜி புரொடக்சன்ஸ் தங்கள் படத்தை ட்ராப் செய்துவிட்டனர். படப்பிடிப்பு நேரத்தில் குடும்பத்துடன் போவதாக இருந்த நடிகர் திலகம் தன் பயணத்தை ரத்து செய்து விட்டு ராம்குமார் பிரபு, சண்முகத்தின் மகன்கள் ஆகியோரை அனுப்பி வைத்தார்.

வெளிநாட்டு படப்பிடிப்பு என்பது அந்தக் காலத்தில் அவ்வளவு எளிதல்ல. அது மட்டுமல்ல அன்றைய நாட்களில் அந்நிய செலவாணி இன்றைய நாள் போல் அவ்வளவு எளிதாகவோ அல்லது அதிகமாகவோ கிடைக்காது. படப்பிடிப்பு திட்டங்களை முறையாக வகுத்துக் கொண்டு போகும் தயாரிப்பு நிறுவனங்களுக்கே கூட கிடைத்திருக்கும் அந்நிய செலவாணிக்குள் செலவை சுருக்குவதே கடினம் எனும் போது கதையை கூட முடிவு செய்யாமல் படப்பிடிப்பு நடத்தப்பட்டால் செலவு என்னத்துக்கு ஆகும்? படப்பிடிப்புக்கு தேவையான பணத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்ட போதெல்லாம் மணியன் தன் வெளிநாட்டு தொடர்புகளை பயன்படுத்தி பணத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். ஒரு வழியாக படப்பிடிப்பு முடிந்து அக்டோபர் கடைசி வாரத்தில் [அக்டோபர் 25 அன்று] சென்னை திரும்பி வந்தார்கள்.

மணியன் செய்த உதவிகளால் பெரிதும் மனம் மகிழ்ந்த எம்.ஜி.ஆர் அவருக்கு ஏதாவது செய்ய விரும்பினார். ஒரு 40 நாட்களுக்கு பிறகு 1970 டிசம்பர் 7 அல்லது 8 -ந் தேதி இரவு 7 மணிக்கு மேல் நுங்கம்பாக்கத்தில் ஜம்புலிங்கம் தெருவில் அமைந்திருந்த மணியனின் வீட்டிற்கு எம்.ஜி.ஆர். வந்தார். எந்த தகவலும் சொல்லாமல் எம்.ஜி. ஆர் வந்ததும் மணியனுக்கு இன்ப அதிர்ச்சி. எம்.ஜி.ஆர். உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் படப்பிடிப்புக்கு மணியன் செய்த உதவிகளை பாராட்டி விட்டு தான் ஏதாவது பிரதி உபகாரம் செய்ய விரும்புவதாகவும் சொல்லி விட்டு, நான் கால்ஷீட் தருகிறேன். உடன் ஒரு படத்தை தயாரியுங்கள் என்று சொல்லியிருக்கிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத மணியன் தான் எம்.ஜி.ஆர். படத்தின் தயாரிப்பாளரா என்று மலைத்து போய் நிற்க எம்.ஜி.ஆரே ஒரு பேப்பர் பேனா எடுத்து உதயம் புரொடக்சன்ஸ் என்ற பெயரையும் தயாரிப்பு நிறுவனத்திற்கு சூட்டியிருக்கிறார். பத்திரிகை அலுவலக பணி சுமையை சுட்டிக் காட்டிய மணியனிடம் வித்வான் வே.லட்சுமணனையும் தயாரிப்பில் சேர்த்துக் கொள்ள செய்திருக்கிறார். கதையை தயார் செய்யும்படியும் உடனே படப்பிடிப்பை தொடங்கலாம் என்றும் எம்.ஜி.ஆர். சொல்லி விட்டு சென்றார்.

உடனே கதை தேடும் படலம் துவங்கியது. மணியனுக்கு தான் விகடனில் எழுதிய ஒரு தொடர்கதையை படமாக்க ஆசை. அப்படி பார்க்கும்போது அவர் எழுதிய இதய வீணை கதை பொருத்தமாய் இருக்கும் என்று தோன்றியது. எம்.ஜி.ஆரிடம் கதை சொல்ல அந்த கதையின் நாயகன் சுந்தரம் பாத்தரத்தை சிறிது மாற்றங்களோடு எம்.ஜி.ஆர். ஓகே செய்தார். ஆனால் அந்த நேரத்தில்தான் 1971 ஜனவரியில் அன்றைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தி நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தல் அறிவித்தார். அதை பின்பற்றி இங்கே தமிழகத்திலும் சட்டமன்றத்தின் ஆயுள் ஒரு வருடம் மீதம் இருக்கும்போதே அதை கலைத்துவிட்டு பொது தேர்தல் அறிவிக்கப்பட்டது. எம்,ஜி,ஆர். தேர்தல் பிரசாரத்திற்கு போனதன் காரணமாக இதயவீணை படப்பிடிப்பு தொடங்குவது தள்ளி வைக்கப்பட்டது.

தேர்தல் முடிந்து மீண்டும் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் 1971 ஜூலை மாதம் பூஜை போட்டு படப்பிடிப்பு ஆனந்தம் இன்று ஆரம்பம் பாடல் படமாக்கத்துடன் தொடங்கியது. அன்றைய முதல்வர் மு.க. கிளாப் அடித்து துவக்கி வைத்தார். படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது நடந்த சில நிகழ்வுகளை பற்றி மணியன் எழுதியிருக்கிறார். அவை இங்கே தேவையில்லை என்பதால் அதை விட்டு விடுவோம்.

ஒரு பக்கம் ஆசிரியர் பணி, மற்றொரு பக்கம் தயாரிப்பாளார், இத்துடன் வெளிநாட்டு பயணங்கள் என்று மணியனின் பயணம் தொடர அவருக்கும் எம்.ஜி.ஆருக்குமான தொடர்பு மேலும் இறுகியது. நான் ஏன் பிறந்தேன் தொடரும் தொடர்ந்து வந்துக் கொண்டிருந்தது. இதை தவிர தினசரி மாலையில் எம்.ஜி.ஆரை சந்திப்பதும் தொடர்ந்ததோடு மட்டுமல்லாமல் அவர் கலந்து கொள்ளும் அரசியல் பொதுக் கூட்டங்களுக்கும் கூட போக ஆரம்பித்தார் மணியன். ஆனால் அவரே எழுதியுள்ளபடி பொதுக்கூட்ட மேடை வந்ததும் மணியன் காரிலேயே இருந்துக் கொள்வாராம். எம்.ஜி.ஆர். மட்டும் இறங்கி சென்று பேசிவிட்டு கூட்டம் முடிந்ததும் தன் காரிலேயே மணியனை அவர் வீட்டில் விட்டுவிட்டு போவாராம்.

(தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
17th September 2011, 11:42 PM
1970-களும் நடிகர் திலகமும் - ஆனந்த விகடனும் - Part III

71-72 காலகட்டங்களில் தி.மு.க.வில் புகைச்சல் தொடங்கி வளர்ந்தது பற்றி நாம் பலமுறை பேசிவிட்டதால் அதை விட்டுவிடலாம். சரியாக எம்.ஜி.ஆர். தி.மு.க.வை விட்டு வெளியேற்றப்பட்டு அ.தி.மு.க.வை தொடங்கும் நேரத்தில் மணியனின் முதல் படமான இதய வீணை, 1972 அக்டோபர் 20-ந் தேதி வெளியானது. படத்தின் ரிசல்ட் average என்ற போதிலும் அன்றைய அரசியல் சூழல் காரணமாக பல திரையரங்குகளில் காட்சிகள் பாதிக்கப்பட்டன. அன்றைய ஆளும் கட்சியினரின் சில அடாவடி செயல்களினால் எம்.ஜி.ஆர். படத்திற்கு முதுகெலும்பான தாய்மார்கள் கூட்டம் குறைந்தது. மணியனுக்கு மீண்டும் ஒரு படம் செய்து தருகிறேன் என்று எம்.ஜி.ஆர். வாக்கு கொடுத்தார்.

மாறி விட்ட சூழலால் சில வாரங்கள் நான் ஏன் பிறந்தேன் தொடர் வெளிவரவில்லை. அதன் பிறகு வந்த இதழில் எம்.ஜி.ஆர். ஒரு அறிவிப்பு செய்கிறார். நாம் என்னுடைய வாழ்க்கை பயணத்தை எழுதிக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது மாறி விட்ட அரசியல் சூழலில் அதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துவிட்டு என்னுடைய அரசியல் பயணத்தை பற்றி எழுதப் போகிறேன். ஆகவே இப்போது முதல் நான் ஏன் பிறந்தேன் என்ற இந்த தொடரின் பெயர் மாற்றப்பட்டு நான் கடந்து வந்த அரசியல் பாதை என்ற தலைப்பில் வெளியாகும் என்று சொல்லியிருந்தார். அந்த பெயரில் ஒரு சில வாரங்கள் மட்டுமே வெளிவந்தது. பின்னர் அதுவும் நின்று போனது. எம்.ஜி.ஆர் பிசியாக இருக்கிறார். விரைவில் மீண்டும் அந்த தொடர் வெளியாகும் என்று விகடனில் அறிவிப்பு வந்தது. ஆனால் தொடர் தொடரவேயில்லை.

ஆனால் அரசியலில் அவர் முழு வீச்சில் ஈடுபட தொடங்கியதால் அவரது அரசியல் வேலைகளுக்கு மணியன் தேவைப்பட்டார். குறிப்பாக டெல்லியில் மணியனுக்கு இருந்த செல்வாக்கு எம்.ஜி.ஆருக்கு தேவைப்பட்டது. அன்றைய பிரதமர் இந்திராவிடம் தனிப்பட்ட செல்வாக்கு படைத்திருந்த மணியன் அவரிடம் பேசி எம்.ஜி.ஆர் இந்திராவை சந்திக்க appointment வாங்கி கொடுத்தார். அவரே எம்.ஜி.ஆருடன் கூட சென்று இந்திராவுடன் நடந்த சந்திப்பின் போது உடனிருந்தார். அதன் தொடர்ச்சியாகதான் எம்.ஜி.ஆரும் அன்றைய நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான எம். கல்யாணசுந்தரம் அவர்களும் சேர்ந்து அன்றைய குடியரசு தலைவரான வி.வி.கிரி அவர்களை சந்தித்து அன்றைய தி.மு.க. அரசின் மீது குற்றச்சாட்டுகள் பட்டியலை கொடுத்த நிகழ்வும் நடந்தேறியது. [பிற்காலத்தில் அந்த பட்டியலின் அடிப்படையில்தான் சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டது].

மணியனால் அரசியல் தொடர்புகள் மட்டுமல்ல ஆன்மீக தொடர்புகளும் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டன. ஆம், அன்றைய நாளில் காஞ்சி மகாப்பெரியவரையும் சந்திக்கும் பேறையும் எம்.ஜி.ஆருக்கு மணியன் ஏற்படுத்தி கொடுத்தார். காஞ்சிக்கு அருகிலுள்ள கலவை எனும் கிராமத்தில் மகாப்பெரியவர் வந்து தங்குவது வழக்கம். அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் அதிகாலையில் பெரியவரை சந்திக்க ஏற்பாடு ஆனது. சென்னையிலிருந்து அதிகாலை இரண்டு மணிக்கு கிளம்பி இருள் பிரியாத விடியற்காலை நான்கு மணிக்கு பெரியவர் குளிக்க வரும் குளக்கரைக்கு அருகே எம்.ஜி.ஆர் வந்து காத்திருக்க பெரியவர் அவரை பார்த்து பேசி ஆசி கூறினார். மணியன் உடன் இருந்தார். ஆக அரசியல் ஆன்மிகம் மற்றும் பத்திரிக்கை தளங்களில் எம்.ஜி.ஆருக்கு மிகவும் வேண்டப்பட்டவராக மாறிப் போனார் மணியன்.

தவப்புதல்வன் விமர்சனம் பற்றி கார்த்திக் இங்கே வருத்தப்படிருந்தார். அது பரவாயில்லை என்று சொல்லும் வண்ணம் அமைந்தது ராஜ ராஜ சோழன் விமர்சனம். அதை கடுமையாக விமர்சித்திருந்தார்கள். இந்த நேரத்தில்தான் 1973 மே மாதம் 11-ந் தேதி உலகம் சுற்றும் வாலிபன் வெளியானது. ஆனந்த விகடன் விமர்சனம் படத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியது!

[அதை கூட நமது ஹப்பில் எம்.ஜி.ஆர். திரியில் வெளியிட்டிருந்தனர். அந்த நேரத்தில் அருமை சகோதரர் ராஜாராம் அவர்கள் விமர்சனம் வெளி வந்த காலகட்டத்தில் ஆனந்த விகடன் திரைப்பட விமர்சனத்தில் மார்க் போடும் முறையை அறிமுகப்படுத்தியிருக்கவில்லை. அப்படி இருந்திருந்தால் இந்த படத்திற்கு 90 மார்க் கிடைத்திருக்கும் என்று சொல்ல நமது நண்பர் மகேஷ் அப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை. காரணம் விகடன் அதிக பட்சமாக அளித்த மார்க் 62 1/2 தான் என்று சுட்டிக் காட்டினார். உடனே நமது மற்றொரு நண்பரும் ரஜினி ரசிகரும் எம்.ஜி.ஆர் அபிமானியுமான bayarea, என் மனதிற்கு இந்த படம் இத்தனை மதிப்பெண்கள் பெற்றிருக்கும் என்று தோன்றுகிறது. அதில் நான் சந்தோஷம் அடைகிறேன், அதை கூடாது என்று சொல்ல நீங்கள் யார் என பதில் கேள்வி எழுப்பினார். படத்தின் தொடக்கத்திலிருந்து இறுதி வரை கூடப் பணியாற்றி, வேண்டிய உதவிகளும் செய்து விட்டு பின் இந்த உ.சு.வா, வெளிவருவதற்கு முன்னரே எம்.ஜி.ஆர். பட தயாரிப்பாளராகவும் மாறி அந்தப் படத்தையும் வெளியிட்டு விட்டு அடுத்த படத்திற்கு அதே கதாநாயகனிடம் கால்ஷீட் எதிர்பார்த்து நிற்கும் ஒருவர் ஒரு பத்திரிக்கையின் ஆசிரியராகவும் இருக்கும் பட்சத்தில் அந்த பத்திரிக்கையின் விமர்சனம் புகழாரங்களின் தொகுப்பாக இல்லாமல் நேர்மையான விமர்சனமாகவா இருக்கும்? இதை அன்றே அந்த திரியில் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் ஒரு சில நண்பர்களின் மனது புண்படுவதை நான் விரும்பவில்லை].

அந்த வருடத்தில் எம்.ஜி.ஆர். கால்ஷீட் கிடைக்க தாமதமானதால் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் தனது இலவு காத்த கிளியை, சொல்லத்தான் நினைக்கிறேன் என்ற பெயரில் தயாரித்து வெளியீட்ட மணியன் 1974 -ம் வருடத்தில் எம்.ஜி.ஆர். கால்ஷீட் வாங்கிவிட்டார். Zanjeer படத்தின் தமிழ் உரிமையை வாங்கி வந்த அவர், அந்த வருட பிப்ரவரி, மார்ச்சில் நடைபெற்ற பாண்டிச்சேரி சட்டமன்ற பொதுத்தேர்தல் மற்றும் கோவை பாராளுமன்ற மற்றும் கோவை கிழக்கு சட்டமன்ற தொகுதிகளின் இடைதேர்தல்களுக்குபின் தொடர்ச்சியாக படப்பிடிப்பை வைத்துக் கொண்டவர் அந்தப் படத்தையும் அதே 1974 வருடம் நவம்பர் 30 அன்று வெளியிடவும் அனுமதி வாங்கி விட்டார்.

இதை சினிமா உலகமே ஆச்சரியத்தோடு பார்த்தது. காரணம் தன்னுடைய எந்த படம் வெளியாகும் போதும் சரி அந்த படத்திற்கு போதிய இடைவெளி விட்ட பிறகே அடுத்தப் படத்தை வெளியிடுவது எம்.ஜி.ஆர். வழக்கம். அப்படி இருக்கையில் 1974 நவம்பர் 7 அன்று உரிமைக்குரல் வெளியாகியிருக்க அதற்கு 23 நாட்கள் இடைவெளியில் எம்,ஜி,ஆரின் அடுத்த படமும் வெளியாக அவர் அனுமதி கொடுக்கிறார் என்றால் மணியன் எந்தளவிற்கு அவருக்கு நெருக்கமாக இருந்தார் என்று தெரிந்துக் கொள்ளலாம்!

அது மட்டுமா? 1975-ம் ஆண்டு பிப்ரவரியில் அடுத்த படத்திற்கான அறிவிப்பும் விளம்பரமும் வருகிறது. அதுவும் எப்படி? பிரபல இயக்குனர் சாந்தாராம் இயக்கிய தோ ஆன்கேன் பாரா ஹாத் திரைப்படம் பல்லாண்டு வாழ்க என்ற பெயரில் தமிழில் தயாரிக்கப்படுவதாகவும் படப்பிடிப்பு தொடங்குகிறது என்ற விளம்பரத்திலேயே அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 வெளியாகிறது என்று கொடுத்திருந்தார்கள். 1967-க்கு பிறகு பூஜையன்றே ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட முதல் எம்.ஜி.ஆர். படம் பல்லாண்டு வாழ்க. 44 வருடங்கள் கூடவே இருந்த வீரப்பனாலும் முடியாத காரியம் மணியனால் முடிந்தது. மார்ச் 1 தொடங்கி ஏப்ரல் முதல் வாரம் வரை தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து படம் கிட்டத்தட்ட முடிந்து விட்டது. ஆனால் அறிவித்தது போல் செப்டம்பர் 15 அன்று படம் வெளியாகவில்லை. காரணம் சென்சார் பிரச்னை [எமெர்ஜென்சி நேரம்] என்று ஒரு தகவலும், இல்லை ஆகஸ்ட் 22 அன்று வெளியான இதயக்கனிக்கு போதிய இடைவெளி கொடுக்க வேண்டும் என்ற காரணத்தினால் தள்ளிப் போடப்பட்டிருக்கிறது என்று மற்றொரு தகவலும் உலவின. படம் இறுதியில் தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன் அக்டோபர் 31 அன்று வெளியானது.

1976 வருடம் மார்ச் மாதம் மீண்டும் அடுத்த படம் அறிவிப்பு வருகிறது. மண்ணில் தெரியுது வானம் என்ற தலைப்பு. ஜோடி ஹேமமாலினி என்று. ஆனால் அந்த காலகட்டத்தில் சென்சார் கெடுபிடிகள் அதிகமானதால் படம் அறிவித்தப்படி தொடங்கவில்லை. அதன் பிறகு உதயம் புரொடக்சன்ஸ் நிறுவனம் எம்.ஜி,.ஆர். படங்களை தயாரிக்கவில்லை என்றாலும் விகடனின் ஆதரவு தொடர்ந்தது. அதே போன்று நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றிய நெகடிவ் விமர்சனமும் தொடர்ந்தது. [முதலில் சொன்னபடி சிவாஜி நடிப்பை மட்டும் பாராட்டி விடுவார்கள்].

அதற்கு பின்னர் நடந்த 1977 பாராளுமன்ற தேர்தல் சட்டமன்ற தேர்தல்கள் அதன் முடிவுகள், எம்.ஜி.ஆர்.முதல்வராக பதவியேற்றது எல்லாம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். தான் ஆதரவு தெரிவித்தவரே முதல்வராக பதவியேற்றவுடன் மணியன் தன் நெடுநாள் கனவை நிறைவேற்ற முயன்றார். ஆம், சொந்தமாக ஒரு வார இதழ் தொடங்கும் ஆசையைத்தான் சொல்கிறேன். அதுவும் நிறைவேறியது. 1978 ஜனவரி 1 அன்று இதயம் பேசுகிறது இதழ் வெளியானது.

வாடகை வீட்டில் இருக்கும்போதே அவ்வளவு செய்தவர்கள் சொந்த வீடு வந்தவுடன் இன்னும் எவ்வளவு செய்வார்கள். அதையும் செய்தார்கள். இம்முறை நேரிடையாகவே. மணியனுடன் விகடனை விட்டு வெளியேறிய தாமரை மணாளன் இதயம் பேசுகிறது இதழில் பல புனை பெயர்களில் எழுதினார். அதில் ஒன்றுதான் நக்கீரன்! அப்படி அவரால் எழுதப்பட்ட கட்டுரைதான் நடிகர் திலகம் நடிப்பதை நிறுத்த வேண்டும் என்று சொன்ன பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற கட்டுரை. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய ரசிகர்களையும் கொச்சைப்படுத்தினார்கள். அதாவது இருபது பேர் மட்டுமே இருந்தார்கள் என்று கூசாமல் பொய் எழுதினார்கள். தியாகம் படத்தின் விமர்சனமும் இதே பாணியில் அமைய பாலாஜி கோவப்பட்டு விளம்பரம் கொடுத்ததெல்லாம் எல்லோரும் அறிந்த கதை. இப்படிப்பட்ட தாக்குதல்கள் கிட்டத்தட்ட 1981 மே மாதம் வெளியான கல்தூண் வரை நீடித்தது.

பொதுவாக தன் மேல் செலுத்தப்படும் எந்த எதிர்ப்புக் கணைகளையும் பொருட்படுத்தாத நடிகர் திலகமே இவையெல்லாம் நடந்து கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகும் கூட அதை மறக்க முடியாமல் 1997-ல் தினமணிக்கு அளித்த பேட்டியில் மணியனின் பெயரை குறிப்பிட்டு சொல்கிறார் என்றால் அந்த வேதனை எப்படிப்பட்டது என்பதை நம்மால் உணர முடியும்.

இவ்வளவு ஏன்? விகடன்-மணியனின் இந்தப் போக்கு அவரை அப்போதே மன வருத்தத்தில் ஆழ்த்தியது என்பதற்கு வேறு ஒரு சம்பவமும் சாட்சி. நடிகர் திலகமும் மணியனும் ஒரே லயன்ஸ் கிளப்-ல் உறுப்பினர்கள். ஆனால் இருவருமே அபூர்வமாகவே அரிமா சங்க கூட்டத்திற்கு செல்பவர்கள். ஒரு முறை ஒரு முக்கியமான கூட்டத்திற்கு இருவரும் சென்றிருக்கிறார்கள். இந்த கூட்டம் நடைபெற்றது 1972 இறுதி அல்லது 1973 ஆரம்பம் என்று நினைக்கிறேன். வெகு நாட்களுக்கு பின் நடிகர் திலகத்தை சந்தித்த மணியன் அந்த காலகட்டத்தில் அவர் படங்கள் தொடர் வெற்றி பெற்றதற்கு பாராட்டி விட்டு குறிப்பாக பட்டிக்காடா பட்டணமா மற்றும் வசந்த மாளிகை இவற்றின் இமாலய வெற்றியை குறிப்பிட்டு பெரிய இடத்திற்கு போய்டீங்க என்று சொன்னாராம். அதற்கு உடனே நடிகர் திலகம் ஆமாம், ஆனால் நீங்கதான் நம்மளை விட்டு வேற எங்கேயோ போய்டீங்க என்று பதில் சொன்னாராம். இதை சற்றும் எதிர்பார்க்காத மணியன் ஒரு நிமிடம் திகைத்து பின் சிரித்து சமாளித்தாராம். இதை மணியனே எழுதியிருந்தார்.

சுருக்கமாக சொன்னால் ஒரு நாள் இரு நாள் அல்ல பல வருடங்கள் நடந்த பல சம்பவங்களை இங்கே எழுதுவதற்கு காரணமே, எந்த நியாயமும் இல்லாமல் நடிகர் திலகம் குறி வைக்கப்பட்டார் என்பதை சுட்டி காட்டவே. அதிலும் ஒரு பழம் பெரும் பத்திரிக்கை இப்படி நடந்துக் கொண்டது பலரையும் காயப்படுத்தியது.

இங்கே எழுதியிருப்பது அனைத்தும் பல நேரங்களில் வெளிவந்த மணியனின் வாக்குமூலங்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது. ஆகவே இதில் உண்மையை தவிர வேறொன்றுமில்லை.

அன்புடன்

PS: பதிவு நீண்டு போயிருப்பின் மன்னிக்க!

pammalar
18th September 2011, 03:50 AM
டியர் முரளி சார்,

ராகவேந்திரன் சார், நீங்கள், நான் மூவரும் சந்திக்கும்போதெல்லாம் எவ்வளவோ விஷயங்களைப் பற்றி ஆழமாக அலசியிருக்கிறோம். அச்சமயங்களில் இந்த விகடன் விஷயத்தை [விஷமத்தை] பற்றி தாங்கள் ஆணித்தரமாக தெரிவித்த தகவல்களையெல்லாம் தற்பொழுது மிக அழகாக-நேர்த்தியாக ஒன்று திரட்டி மிகச் சிறந்ததொரு கட்டுரையாக அளித்துள்ளீர்கள். தங்களுக்கு எனது இதயபூர்வமான பாராட்டுக்கள்!

தங்களின் கட்டுரையில் 1970களின் ஒரு மினி வரலாறும் அடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க தங்களது Busy Scheduleலிலும் மிகுந்த சிரத்தையோடு சிரமம்பாராமல் இந்த மகாகட்டுரையை இங்கே பதிவு செய்த தங்களுக்கு எனது மெகா நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
18th September 2011, 06:39 AM
டியர் ராகேஷ்,
தங்களுக்கு என்னுடைய தாமதமான, ஆனால் உளமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். நடிகர் திலகத்தைப் பற்றிய தங்களின் புதிய திரியினை மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்

RAGHAVENDRA
18th September 2011, 06:40 AM
டியர் பம்மலார்,
தந்தை பெரியாரின் பிறந்த நாளை பெற்ற மனம் ஸ்டில்லுடன் வெளியிட்டு அழகுற நினைவூட்டியுள்ளீர்கள்.

பாராட்டுக்கள்.
அன்புடன்

RAGHAVENDRA
18th September 2011, 06:48 AM
டியர் முரளி சார்,
லேட்டாக வந்தாலும் ஹைலைட்டாக வருவேன் என்று ஆணித்தரமாக நிரூபித்துள்ளீர்கள். சூப்பர்.
குடியிருந்த கோயில் திரைப்படத்தின் மூலத் திரைப்படம் சைனா டவுன் ஆகும்.

நான் ஏன் பிறந்தேன் கட்டுரை துவக்க நாளிலும் ஒரு விஷயம் உள்ளதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன். அதனை முதலில் ஏப்ரல் இறுதியில் துவங்க இருந்ததாக ஒரு தகவல் வந்ததுண்டு. ஆனால் ஏப்ரல் 10 அன்று, அதாவது வியட்நாம் வீடு ரிலீஸுக்கு முன்னர் வானொலியில் நடிகர் திலகத்தின் பேட்டி ஒலிபரப்பாக உள்ளதை அறிந்து அதன் மூலம் அவரைப் பற்றிய புகழ் மக்களிடம் தீவிரமாக சென்றடைந்து விடும் என்பதனை உணர்ந்து, அந்தக் கட்டுரையை விகடனில் அவசர அவசரமாக ஏப்ரல் 09 அன்று வெளியான விகடன் இதழிலேயே துவங்க செய்து விட்டதாகவும் அன்றைய கால கட்டத்தில் பல சிவாஜி ரசிகர்கள் கூறக் கேட்டிருக்கிறேன்.

இதயம் பேசுகிறது இதழில் அவர் வெளியிட்டிருந்த கட்டுரை மிகப் பெரிய அளவில் எதிர்ப்பை சந்தித்தது. ஆனால் பத்திரிகை உலகமே மணியனுக்கு ஆதரவாக புடை சூழ்ந்து வந்து அவரை ஆதரித்ததாகவும் ஒரு தோற்றத்தை அப்போது ஏற்படுத்தினர். இந்தக் கட்டுரைக்கு எதிராக, அதாவது, நடிகர் திலகம் நடிப்பதை நிறுத்த வேண்டும் என்ற கருத்தை எதிர்த்து கட்டுரை வெளியிட்ட பத்திரிகை பிலிமாலயா என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. அவர்கள் நடிகர் திலகத்தின் படங்களை விமர்சிப்பார்களே தவிர தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்ததில்லை. இதுவும் அந்தக் காலகட்டத்தில் குறிப்பிடத் தக்கதாகும்.

தங்களுடைய பதிவுகளைப் படித்த பின்னர் மாற்று முகாமில் உள்ளவர்களும் நடிகர் திலகம் எப்படிப் பட்ட எதிர்ப்புகளையெல்லாம் சந்தித்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்வர். எதிர் நீச்சலிலேயே உயர்ந்தவர் நடிகர் திலகம். அரசியலிலும் அவர் சார்ந்த இயக்க்த்திலேயே அவர் எதிர் நீச்சல் போட்டுத் தான் இருந்திருக்கிறார் என்பதை இங்கே பல பதிவுகளில் நாம் முன்னமேயே பகிரந்து கொண்டிருக்கிறோம்.


அன்புடன்

vasudevan31355
18th September 2011, 07:36 AM
அன்பு பம்மலார் சார்,
பூப்பறிக்க வருகிறோம் தினமணி ரகுவரன் பேட்டி மற்றும் தினத்தந்தி மாளவிகா பேட்டி என வெளியிட்டு எங்கள் எல்லோருடைய நெஞ்சங்களிலும் நீங்கா இடம் பிடித்து விட்டீர்கள். இளம் தலைமுறை நடிகர்கள் நடிகர் திலகத்தின் மீது வைத்திருந்த அபிமானமும்,மரியாதையும் தெள்ளத் தெளிவாக அந்தப் பேட்டிகளில் வெளிப்படுகின்றன. ரகுவரன் தெய்வமகனைக் கண்டு ரசித்ததும்,தலைவர் பாட்ஷா கண்டு ரசித்து ரகுவைப் பாராட்டியதும் பரஸ்பரம் இரு கலைஞர்களுக்கிடயே இருந்த ஆரோக்கியமான உறவுகளை அப்படியே படம் பிடித்துக் காட்டியது ரகுவின் பேட்டி. அரிய அந்தப் பேட்டியை தந்த ஜீபூம்பா ஜித்தரே! நீவிர் வாழ்க பல்லாண்டு!
அதே போல் தினகரன் விமர்சனமும் மிக அருமை. மூச்சுக்கு முன்னூறு தடவை நம் மகானின் பெயரை உச்சரித்து அவருக்குப் பெருமை சேர்த்திருந்தது அந்த விமர்சனத்தில்.
சுய மரியாதை தலைவருடன் சுய விளம்பரம் தேடாத நம் அன்புத் தெய்வம் அமர்ந்துள்ள அரிய நிழற்படம் நித்ய தரிசனம்.
எல்லாவற்றிக்கும் சிகரம் வைத்தாற்போன்று பெற்றமனம் படத்தில் வைக்கம் அய்யாவைப் போல் வையகம் போற்றும் நம் ஐயா தோன்றும் சுதேசமித்திரன் விளம்பரம் அருமையோ அருமை.
அனைத்திற்கும் பிடியுங்கள் ஒரு பெரிய சபாஷ். நன்றி!

அன்புடன்
வாசுதேவன்.

vasudevan31355
18th September 2011, 08:14 AM
டியர் ராதாகிருஷ்ணன் சார்,

தங்கள் பாராட்டுக்கு என் தலை வணங்கிய நன்றி!

அன்பு anm அவர்களே!

உங்கள் உயரிய பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி! நீங்கள் கேட்டிருந்த பூப்பறிக்க வருகிறோம் dvd கடைகளில் கிடைக்கிறது. நிஜமாகவே நல்ல குடும்பச் சித்திரம். நடிகர்திலகம் அந்த வயதிலும் பின்னிப் பெடல் எடுத்திருப்பார். அவசியம் வாங்கிப் பாருங்கள். ktv யிலும் அடிக்கடிப் போடுகிறார்கள்.தெரிந்து கொண்டு பார்க்கலாம். எனக்குத் தெரிந்தாலும் தங்களுக்கு அவசியம் தகவல் தெரிவிக்கிறேன். உங்களுக்காக மறுபடியும் அன்பு ராகவேந்திரன் சார் நமக்களித்த பூப்பறிக்க வருகிறோம் DVD கவரின் முன் தோற்றமும்,பின் தோற்றமும்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/PPVF.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/PPVR.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
18th September 2011, 08:29 AM
அன்பு கார்த்திக் சார்,
தங்கள் ரசனைக்கு எனது மனமுவந்த பாராட்டுக்கள். ரேடியோகிராம் பற்றி ஒரு சிறிய ஆனால் சிறப்பு ஆய்வையே நடத்தி விட்டீர்கள். நன்றி! think about you என்ற
வாசகத்திற்காக அந்த photo வை photoshine இல் தேர்ந்தெடுத்தேன். அதில் தங்களுக்குப் பிடித்திருந்த ரேடியோகிராம் இருந்தது மகிழ்ச்சி. இருவர் எண்ணமும் ஈடேறியது அவரின் ஆசி. நன்றிகள் சார்.

அன்புடன்,
வாசுதேவன்.

guruswamy
18th September 2011, 08:43 AM
Dear Mr. Harish

Thank you for the wonderful photos of our N.T. I loved having it.

JAI HIND
M. Gnanaguruswamy

vasudevan31355
18th September 2011, 08:53 AM
டியர் ராகவேந்திரன் சார்,

'எட்டில் அழகு' கொள்ளையழகு போங்கள்...வீடியோ பிரமாதம். நடிகர்திலகம் நம்மைக் கண்கலங்க வைப்பது உண்மை! அவர் நீங்கள் குறிப்பிட்டது போல் சின்னக் குழந்தை மாதிரி துள்ளி குத்தித்து நடனமாடுவதை பார்க்கும் போது மனம் சோகத்தின் உச்சிக்கே செல்கிறது. நன்றிகள் சார்.

அன்புடன்,
வாசுதேவன்.

guruswamy
18th September 2011, 08:54 AM
Dear Mr. Kumaresh

Now the count down starts for October 14th, I have a suggestion, we need to capture the complete gala celebration both INSIDE AND OUTSIDE the theatre. I want every one of us should see and enjoy the kind of celebration we do inside the theatre while watching our N.T on the gaint screen.

We can engage a video grapher to capture all the events and also capture the original recordings as how our fans enjoy and celebrate inside the theatre....

Also, please send us the programme schedule.

Kindly consider my request.

JAI HIND
M. Gnanaguruswamy

vasudevan31355
18th September 2011, 09:45 AM
அன்பு முரளி சார்,

http://www.orkutmela.com/images/scraps/16/17.gif

1970-களும் நடிகர் திலகமும் - ஆனந்த விகடனும் என்ற அற்புதப் பதிவிற்கு
வெறும் பாராட்டு என்ற வார்த்தையை சொல்ல எனக்கு மனம் வரவில்லை. இப்படிப்பட்ட ஒரு வரலாற்று சிறப்பு மிக்க கட்டுரையாக உங்கள் கட்டுரை அமைந்து விடும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. உங்களின் நிதானமான,ஆழ்ந்த,அனுபவப்பட்ட வார்த்தைகோர்வைகளின் நிஜங்களின் பின்னணிகளை அளந்து பார்த்தால் உண்மையாகவே நெஞ்சு பகீரென்கிறது. எத்தனை சதி வலைப்பின்னல்கள்! என்ன வஞ்சகத் திட்டங்கள்! ஒரு சாது பசுவைச் சுற்றி எத்தனை வரிப்புலிகள்! எவ்வளவு சுயநலங்கள்! தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருந்தவரைக் கவிழ்க்க கயமைத்தனங்கள் தான் எத்தனை? இப்படி எத்தனை எத்தனை என்று எத்தனையோ கேள்விகள் உள்ளத்துக்குள் கணைகளாய் துளைத்தெடுக்கின்றன.
தங்கள் சுய வளர்ச்சிகளுக்காகவும்,சுயலாபங்களுக்காகவும் பலிகடாவாக ஆக்கப்படுவதற்கு நடிகர்திலகம் தானா கிடைத்தார்?
தங்களின் இந்த அதியற்புதமான பதிவு பலதிரைமறைவு உண்மைகளை நாங்கள் அறிந்துகொள்ள பேருதவியாய் இருக்கிறது என்பது உண்மை.

அதே போல் விகடன் என்னும் நடுநிலை இதழ் ஒருசிலரின் கைப்பொம்மையாக இயங்கி தன் தரத்தைக் குறைத்துக் கொண்டதை நினைத்தால் வெட்கமும்,வேதனையும் நம்மைப் பிடுங்கித் தின்கிறது. விகடன் ஏன் எப்போதும் இப்படியே தரம் தாழ்ந்து விமர்சனம் எழுதிகிறது என்று நண்பர்கள் அனைவரும் பேசிப் பேசி மாய்ந்து போவோம். அதனுடைய பின்னணி உங்கள் எழுத்துக்களின் மூலமாக இன்றுதான் முழுமையாய் தெரிய வந்தது. தெளிந்தும் விட்டது.

நம் ரசிகர்கள் மட்டுமல்ல..பல நூறு பேர்கள் இந்த உண்மையினை தெரிந்து கொள்ளவும்,புரிந்து கொள்ளவும் வழி செய்து விட்டீர்கள். அதற்காக தங்களுக்கு எங்கள் கோடி கோடி கோடி கோடி நன்றிகள் சார்.

இத்தனை வேலைப்பளுவிற்கு மத்தியிலும் நீங்கள் இரவென்றும் பாராமல் இந்த அற்புதமான உண்மைகளைப் பிட்டு பிட்டு வைக்கும் உணர்ச்சி பூர்வமான கட்டுரையைப் பதிவிட்டமைக்கு காலம் முழுதும் நாங்கள் தங்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம் சார். நன்றி.

ஆச்சரியத்தின் விளிம்பில்
வாசுதேவன்,
நெய்வேலி.

vasudevan31355
18th September 2011, 10:08 AM
அருமை நண்பர் ராகேஷ் அவர்களுக்கு

சற்று காலதாமதமானாலும் பொறுத்தருளி எங்களின் பொன்னான பிறந்த நாள் வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்க. எங்களின் அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள். நம் இறைவனாரின் ஆசிகள் என்றும் தங்களுக்குத் துணை நின்று அருள் புரியும். வாழ்க வளமுடன்!

மனதார வாழ்த்தும்,
நெய்வேலி வாசுதேவன்.

kumareshanprabhu
18th September 2011, 10:44 AM
Dear Guru

the first day sweet distribution, Staurday Annadhanam, sunday mornig sweet disrtibutions and chicken Briyani Anadhnam, evenig poo palku procession starts from Seppings Road, huge garlands and welfare programme

regards
kumar

vasudevan31355
18th September 2011, 11:03 AM
kumaresan sir,
Do u received my 5 N.T.'s photos by e.mail? do u want more?
vasudevan.

saradhaa_sn
18th September 2011, 12:40 PM
டியர் முரளியண்ணா,

தாங்கள் ஒரு வரலாற்றுச்சுரங்கம் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறீர்கள். எழுத்தாளர் மணியனின் கயமைத்தனங்கள் பற்றிய நீண்ட கட்டுரை மிக அருமை மட்டுமல்ல, வரலாறு தெரியாத பலருக்கு பல உண்மைகளைப்புரிய் வைத்த காலக்கண்ணாடி. நமது ஆதங்கம் எல்லாம் ஒன்றே ஒன்றுதான்....

மணியன், திரு எம்.ஜிஆரின் நெருங்கிய நண்பராக இருந்து விட்டுப்போகட்டும், நமக்கு அதில் எந்த ஆட்சேபணையும் இல்லை. அது நமக்குத்தேவையுமில்லை.

திரு எம்.ஜிஆரின் கட்டுரையை தன் பத்திரிகையில் வெளியிட்டுக்கொள்ளட்டும். நமக்கு அதில் எந்த ஆட்சேபணையும் இல்லை. அது நமக்குத்தேவையுமில்லை.

திரு எம்.ஜிஆரின் வெளிநாட்டுப்படப்பிடிப்புக்கு உதவி செய்திருக்கட்டும், நமக்கு அதில் எந்த ஆட்சேபணையும் இல்லை. அது நமக்குத்தேவையுமில்லை.

திரு எம்.ஜி.ஆரை வைத்து படம் தயாரிக்கட்டும், நமக்கு அதில் எந்த ஆட்சேபணையும் இல்லை. அது நமக்குத்தேவையுமில்லை.

ஆனால் இதையெல்லாம் காரணமாக வைத்து, இதில் எந்த சம்மந்தமும் இல்லாத நடிகர்திலகத்தைப் பற்றி தரக்குறைவாக எழுதியும், அவரது நல்ல படங்களுக்குக்கூட குற்றம், குறைகளை பெரிதாக அடுக்கி, அந்தப்படங்களில் பாஸிட்டிவ் அம்சங்கள் நிறைய இருந்தாலும் அவற்றை வேண்டுமென்றே மறைத்தும் ஏன் பழி வாங்க வேண்டும்?. (அப்போதெல்லாம் எத்தரப்பிலும் சாராத பொது ரசிகர்கள், விகடன் விமர்சனம் அளிக்கும் மதிப்பெண்களை வைத்து படம் பார்க்கலாமா, வேண்டாமா என்று முடிவு செய்வதுண்டு. அப்படிப்பட்ட சமயங்களில் இதுபோன்ற மோசமான விமர்சனங்களும், மதிப்பெண்களும் பல படங்களைப் பாதித்திருக்கின்ற்ன).

தாங்கள் குறிப்பிட்டது போல, நடுநிலையாளரான வாசன் மறைந்த பிறகு, அனுபவமில்லாத அவரது மகன் எஸ். பாலசுப்பிரமணியனை (எஸ்.எஸ்.பாலன்) பெயரளவுக்கு 'ஆசிரியர்' என்ற பெயரில் தன் கைப்பொம்மையாக வைத்துக்கொண்டு மணியன்தான் விகடனை டாமினேட் செய்து வந்தார். 13-வது துணையாசிரியராகச்சேர்ந்த மணியன், தன் குறுக்குப்புத்தியாலும் வில்லங்கங்களாலும், வாசனுக்கு நெருக்கமாக இருந்தவர்களும் விகடன் வளர்ச்சிக்குப்பாடுபட்டவர்களுமான விந்தன், கொத்தமங்கலம் சுப்பு, மெரினா போன்றோரை ஓரம் கட்டிவிட்டு, தான் பிரதான துணையாசிரியரானார். கூடவே தன் ஜால்ராக்களான தாமரை மணாளன், லட்சுமி சுப்பிரமணியம், ஜே.எம்.சாலி இவர்களை வைத்துக்கொண்டு விகடன் பத்திரிகையை தன் இஷ்ட்டத்துக்கு நடத்தினார்.

அப்போது வெளியான விகடன் இதழ்களைப்பார்த்தால் இந்த உண்மை விளங்கும். அதில் மணியனின் ஒரு தொடர்கதை, தாமரை மணாளனின் ஒரு தொடர்கதை, இவர்களே பல புனைப்பெயர்களில் எழுதிக்கொள்ளும் சிறுகதைகள், எம்.ஜி.ஆரின். 'நான் ஏன் பிறந்தேன். தொடர், பரணீதரனின் ஒரு பக்திப்பயணத் தொடர், மணியனின் 'இதயம் பேசுகிறது' என்ற தலைப்பில் ஒரு வெளிநாட்டுப் பயணத்தொடர்.... அவ்வளவுதான். தன் இஷ்ட்டத்துக்கு ஆட விட்டு கண்டுகொள்ளாமல் இருந்த பாலனுக்கு நன்றிக்கடனாக தானும் வித்வான் லட்சுமணனும் தயாரித்த மூன்றாவது தயாரிப்பான 'சிரித்து வாழ வேண்டும்' படத்தின் இயக்குனராக எஸ்.எஸ்.பாலனைப்போட்டார் மணியன். இதுவும் பெயரளவுக்குத்தான். ஆனால் படத்தை பெரும்பாலும் இயக்கியவர் ப.நீலகண்டன் (எம்.ஜி.ஆர். விருப்பப்படி). டைட்டிலில் மட்டும் பாலன் பெயர் வந்தது.

இதனால், தனக்கு 'வேண்டியவரின்' நெருக்கத்தைப் பெற மணியன் தேவையில்லாமல் நடிகர்திலகத்தின் படங்களை மட்டம் தட்டும்போதெல்லாம் கண்டுகொள்ளாமல் இருந்த பாலன், அதன் கூலியை அனுபவித்தார். ஆம், மணியன் ஆனந்தவிகடனை விட்டு விலகி 'இதயம் பேசுகிறது' பத்திரிகையைத் துவக்கியபோது, விகடனில் முக்கிய பொறுப்புக்களில் இருந்தவர்களில் பெரும்பாலோரை தன்னுடன் அழைத்துச்சென்றபோதுதான், பாலன் விழிப்படைந்தார். இத்தனை நாள் பாம்புக்குப் பால் வார்த்திருகிறோம் என்ற உண்மை உறைத்தது. (கார்ட்டூனிஸ்ட் மதனை தன்னுடன் வருமாறு மணியன் அழைத்தபோது அவர் சொன்னது, 'அம்மா பட்டம்மாள் வாசன் கையால் நான் சாப்பிட்டிருக்கிறேன். அந்த உப்பு இன்னும் என் உடம்பில் கொஞ்சம் இருக்கிறது')

இதன் பின் ஆனந்த விகடன் பொன்விழா வந்தது. விகடனில் இருந்து தனக்கு வந்த அழைப்பைப் பார்த்து, 'விழாவில் தனக்கு பெரிய மரியாதை கிடைக்கும், விகடனுக்காக தான் செய்த பல பெரிய விஷயங்கள் அங்கே குறிப்பிடப்பட்டு பெரிதாக மதிக்கப்படுவோம்' என்று நப்பாசையுடன் போன மணியனுக்கு சரியான நோஸ்கட் காத்திருந்தது. ஒரு சாதாரண ஆள் மதிக்கப்பட்ட அளவுகூட மணியன் மதிக்கப்படாமல் உதாசீனப்படுத்தப்பட்டார். தன் நெஞ்சில் குத்தி விட்டுப்போனவரை அழைத்து வைத்துப்பழிவாங்கினார் வாசனின் புதல்வர் பாலன்.

இதை மந்தில் வைத்துக்கறுவிய மணியன் (இதைப்பற்றி தன் பத்திரிகையிலும் புலம்பியிருந்தார்), தனக்கு 'வேண்டியவரின்' ஆட்சி நடப்பதை வைத்து, ஒரு சாதாரண கார்ட்டூன் வெளியிட்டமைக்காக விகடன் ஆசிரியர் பாலனைக் கைது செய்து சிறையில் அடைக்க வைத்தார்.

வரலாறுகளை மறைக்க முயன்றோரை வரலாறு மறப்பதிலை.

vasudevan31355
18th September 2011, 01:44 PM
மதிப்பிற்குரிய சாரதா மேடம்,

உங்கள் பங்கிற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் மிக அருமையாக திரு முரளி சாரைப் பின்தொடர்ந்து உண்மைகளை சற்று காட்டமாக மிக மிகச் சரியாகவே பதிந்துள்ளீர்கள். நம் அருமையானவர் தில்லானா...வில் "எனக்கு எந்தெந்தப் பய.........." என்று கூறுவது போல அவர் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டவர்கள் அனைவரும் எந்த கதிக்கு ஆளானார்கள் என்பது வரலாறு அறிந்ததே.

அன்புடன்,
தங்கள் மாணவன் வாசுதேவன்.

joe
18th September 2011, 02:14 PM
முரளி சார்,
’முந்தைய தலைமுறை தமிழ் சினிமா வரலாறு’ என்ற புத்தகத்தை எழுதுவதற்கு ஆற்றலும் அறிவும் மொழிநடையும் கொண்டவர் நீங்கள் என்பது என் வலுவான எண்ணம் .இதில் எந்த உயர்வு நவிற்சியும் இல்லை ..என்னுடைய இந்த எண்ணம் ஒரு நாள் ஈடேறும் என நம்புகிறேன்.

vasudevan31355
18th September 2011, 02:38 PM
'இசைக்கருவிகளுடன் இணையில்லாக்கலைஞர்'

கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி-- ஹார்மோனியம்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/kalyanampanniyumbrammacchariVOB_006162736.jpg

பெண்ணின் பெருமை-- ஹார்மோனியம்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/PenninPerumai1956TamilVCDCD3MeNmpg_000555984.jpg

அமர தீபம்-- மேண்டலின்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/amaradeepammpg_006055828.jpg

மணமகன் தேவை-- கிடார்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AVSEQ03DAT_002451520.jpg

vasudevan31355
18th September 2011, 02:48 PM
சபாஷ் மீனா-- வயலின்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_3VOB_033343370.jpg

காத்தவராயன்-- துந்தனா , சப்ளாகட்டை

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_3VOB_005103421.jpg

குறவஞ்சி-- குறவர் டால்டா டப்பா

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_06_1VOB_000992139.jpg

குறவஞ்சி-- துந்தனா

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_06_2VOB_000778270.jpg

vasudevan31355
18th September 2011, 02:58 PM
படிக்காத மேதை-- தபேலா

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_1avi_002605063.jpg

பாவ மன்னிப்பு-- டேப்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_1VOB_001490366.jpg

பாசமலர்-- பியானோ

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_1VOB_004893931.jpg

படித்தால் மட்டும் போதுமா-- டேப்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/Untitled-1.jpg

vasudevan31355
18th September 2011, 03:03 PM
வடிவுக்கு வளைகாப்பு-- வீணை

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AVSEQ02DAT_000790880.jpg

மகாகவி காளிதாஸ்-- புல்லாங்குழல்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/MahakaviKaalidas1966TamilDvDRipXvidavi_000475642.j pg

கலாட்டா கல்யாணம்-- குழந்தைகள் ஊதும் பீப்பீ

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/GalattaKalyanamTamilPiratesComavi_006325773.jpg

தெய்வ மகன்-- சிதார்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_1VOB_002703494.jpg

vasudevan31355
18th September 2011, 03:14 PM
ராமன் எத்தனை ராமனடி-- புல்லாங்குழல்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_2VOB_001304758.jpg

தவப்புதல்வன்-- ட்ரம்பெட்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_04_1VOB_000876172.jpg

தவப்புதல்வன்-- சிதார்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_04_1VOB_001833194.jpg

தவப்புதல்வன்-- மகர யாழ்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_04_1VOB_001912422.jpg

vasudevan31355
18th September 2011, 03:45 PM
வண்ணப்படங்களில் 'இசைக்கருவிகளுடன் இணையில்லாக்கலைஞர் '

புதிய பறவை--ட்ரம்பெட்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_1VOB_000647516.jpg


புதிய பறவை--ட்ரம்பெட்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_1VOB_000652698.jpg

புதிய பறவை-- சாக்ஸபோன்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_1VOB_000708572.jpg

புதிய பறவை--பியானோ

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_3VOB_001954751.jpg

vasudevan31355
18th September 2011, 03:58 PM
திருவிளையாடல்--துந்தனா

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_04_4VOB_001340018.jpg


திருவிளையாடல்--மிருதங்கம்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_04_4VOB_001655605.jpg

திருவிளையாடல்-- வீணை

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_04_4VOB_001476280.jpg

திருவிளையாடல்-- புல்லாங்குழல்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_04_4VOB_001658353.jpg

vasudevan31355
18th September 2011, 04:19 PM
சரஸ்வதி சபதம்-- நாரதர் வீணை, சப்ளாக்கட்டை

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/Untitled-3.jpg

தில்லானா மோகனாம்பாள்-- நாதஸ்வரம்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_1VOB_000470872.jpg

தில்லானா மோகனாம்பாள்-- மிருதங்கம்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_3VOB_000239435.jpg

எங்க மாமா-- அக்கார்டியன்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_1VOB_001992280.jpg

vasudevan31355
18th September 2011, 04:25 PM
எங்க மாமா-- மரக்கா (maraca)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_1VOB_002058840.jpg

எங்க மாமா-- பியானோ

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_1VOB_003559832.jpg

தர்மம் எங்கே-- கிடார்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_1VOB_003732552.jpg

தர்மம் எங்கே-- கிடார்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_1VOB_003794489.jpg

vasudevan31355
18th September 2011, 04:31 PM
கெளரவம்-- புல்லாங்குழல்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/Gauravam1973DVDrip5elicomavi_001612107.jpg

கெளரவம்-- பியானோ

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/Gauravam1973DVDrip5elicomavi_005381365.jpg

ராஜபார்ட் ரங்கதுரை (டேபிள் டென்னிஸ் மட்டையே சப்ளா கட்டையாக)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/Untitled-2.jpg

வாணி ராணி-- டோலக்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AVSEQ03DAT_000060440.jpg

vasudevan31355
18th September 2011, 04:40 PM
என் மகன்-- ட்ரம்பெட்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_03_1VOB_001715123.jpg

என் மகன்-- ட்ரம்பெட்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_04_2VOB_001120238.jpg

பாட்டும் பரதமும்-- சிதார்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AVSEQ03DAT_001024720.jpg

பாட்டும் பரதமும்-- எலெக்ட்ரிக் கிதார்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AVSEQ03DAT_002896080.jpg

vasudevan31355
18th September 2011, 04:47 PM
திரிசூலம்-- ட்ரம்பெட்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2avi_001947714.jpg

விஸ்வரூபம்-- ட்ரம்ஸ்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_3VOB_000681403.jpg

கல்தூண்-- உடுக்கை

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/Kalthoon1981TamilDvDRipXviDAC3CD1MeNavi_002657724. jpg

இமைகள்-- டேப்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AVSEQ03DAT_000025000.jpg

vasudevan31355
18th September 2011, 04:59 PM
இமைகள்-- டபுள் பேங்கோஸ்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AVSEQ04DAT_000095960.jpg

இமைகள்-- டிரம்ஸ்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AVSEQ04DAT_000067720.jpg

இமைகள்-- கிடார்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AVSEQ04DAT_000065160.jpg

சுமங்கலி-- டேப்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AVSEQ02DAT_002359440.jpg

vasudevan31355
18th September 2011, 05:06 PM
மிருதங்கச் சக்கரவர்த்தி-- மிருதங்கம்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_2VOB_000701666.jpg


மிருதங்கச் சக்கரவர்த்தி-- மிருதங்கம்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_1VOB_001073438.jpg

மிருதங்கச் சக்கரவர்த்தி-- மிருதங்கம்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_7VOB_000624459.jpg

வெள்ளை ரோஜா-- ஹார்மோனியம்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2avi_002769069.jpg

vasudevan31355
18th September 2011, 05:25 PM
விடுதலை-- டிரம்ஸ்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1avi_003964064.jpg

லக்ஷ்மி வந்தாச்சு-- தபேலா

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_2VOB_001357308.jpg

பூப்பறிக்க வருகிறோம்-- பெரிய புல்லாங்குழல்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_1VOB_001684208.jpg

அன்பு நண்பர்களே!

என்னால் இயன்ற அளவு நடிகர்திலகம் அவர்கள் இசைக்கருவிகளுடன் இணைந்திருக்கும் நிழற்படங்களைத் தொகுத்துத் தந்துள்ளேன். அன்புப் புனிதர் எனதருமை நண்பர் திரு.ராகவேந்திரன் அவர்களும், அன்பு நண்பர்,அருமைச் சகோதரர் திரு 'ஜீபூம்பா'
ஜித்தர் பம்மலார் அவர்களும், மற்ற மரியாதைக்குரிய உயிரான அனைத்து ஹப் அங்கத்தினர்களும் பெருமகிழ்ச்சி அடைவீர்கள் என்று நம்புகிறேன். குற்றம் குறைகள் இருந்தால் உரிமையோடு சுட்டிக் காட்ட வேண்டுகிறேன், நன்றி!



அன்புடன்,
வாசுதேவன்.

saradhaa_sn
18th September 2011, 06:00 PM
டியர் வாசுதேவன்,

'இசைக்கருவிகளுடன் இணையில்லாக்கலைஞன்' தொகுப்பு ஒரு அசுர சாதனை.

வெறுமனே பட்டியலிடுவதோடு நிறுத்தாமல் அத்தனை ஸ்டில்களையும் தேடிக்கொணர்ந்து குவித்த விதம் அருமையோ அருமை.

எப்படித்திரட்டினீர்கள் என்று நினைத்துப்பார்க்கவே மலைப்பாக இருக்கிறது.

இன்னும் என்னவெல்லாம் செய்து அசத்தப்போகிறீர்களோ தெரியவில்லை.

vasudevan31355
18th September 2011, 06:08 PM
சிறப்பு நிழற்படம்.
நடிகர் திலகம் முதன் முதலாக 'அன்பு' திரைப் படத்தில் பியானோ வாசிப்பதாக அமைந்த காட்சியாதலால் இது சிறப்பு நிழற்படமாகிறது.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/111.jpg


(இத்தகவலை அளித்த பம்மலாருக்கு அன்பு நன்றி).

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
18th September 2011, 06:28 PM
மரியாதைக்குரிய சாரதா மேடம்,

தங்களின் மேலான..ஆழ்ந்த.. அன்புக்குத் தலை வணங்குகிறேன். நன்றிகள் மேடம்!.

தங்கள் மாணவன் என்பதில் பெருமையடையும்,
வாசுதேவன்.

vasudevan31355
18th September 2011, 06:39 PM
மிக அரிய அற்புதமான போனஸ் புகைப்படம்..

'எங்கமாமா' திரைப்படத்தில் 'நம் தங்கராஜா'அக்கார்டியன் இசைக்கருவியுடன்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/RVasudevan144.jpg


அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.

saradhaa_sn
18th September 2011, 06:49 PM
டியர் வாசுதேவன்,

'உரிமையோடு சுட்டிக்காட்டுங்கள்' என்று நீங்கள் கேட்டிருப்பதால் ஒரு சின்ன சுட்டல்...

படித்தால் மட்டும் போதுமா திரைக்காவியத்தில், 'நான் கவிஞனுமில்லை, நல்ல ரசிகனுமில்லை' பாடலின்போது, பீரோவின் மேலிருந்து ஒரு சின்ன கிடாரை (அல்லது மேண்டலின்..?) எடுத்து, பாடிக்கொண்டே தந்திகளை 'டைட்' பண்ணி, பின்னர் இடையிசையில் வாசிப்பார். அந்த ஸ்டில்லையும் இணைக்கலாமே.

sankara1970
18th September 2011, 07:22 PM
great effort Vasu sir

vasudevan31355
18th September 2011, 09:00 PM
சாரதா மேடம்,

நீங்கள் குறிப்பிட்டு சுட்டிக் காட்டியிருந்த 'படித்தால் மட்டும் போதுமா' படத்தில் நடிகர் திலகம் மேண்டலின் இசைக்கும் காட்சி. (தங்கள் சுட்டிக் காட்டலுக்கும், ஞாபக சக்திக்கும் ஒரு சபாஷ்!)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2vob_003543506.jpg

நன்றியுடன்
வாசுதேவன்.

pammalar
19th September 2011, 12:21 AM
டியர் ராகவேந்திரன் சார்,

தங்களின் அன்பான பாராட்டுக்கு கனிவான நன்றி !

டியர் வாசுதேவன் சார்,

தாங்கள் அளித்த பாராட்டு மழைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
19th September 2011, 12:34 AM
சகோதரி சாரதா,

விகடன் விஷமங்களை வீறுகொண்டு விளம்பிய முரளி சாரின் பதிவுகளைப் பாராட்டியதோடு மேலதிக விவரங்களாக தாங்கள் வழங்கியுள்ள பதிவு மணியனின் மகோன்னதங்களைத் தோலுரித்துவிட்டது. நான் முன்பே ஒருமுறை தங்களுக்கு வழங்கிய பாராட்டு எவ்வளவு பொருத்தமாக அமைந்துவிட்டது என்பதை நினைத்து மெய்சிலிர்க்கிறேன். அதாவது அடித்து ஆடுவதில், முரளி சார் 'கவாஸ்கர்' [Soft Touch] என்றால், தாங்கள் 'ஸ்ரீகாந்த்' [Hard Hitting]. பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
19th September 2011, 01:00 AM
டியர் வாசுதேவன் சார்,

'இசைக்கருவிகளுடன் இணையில்லாக்கலைஞர்', ஈடு-இணை சொல்லமுடியா அற்புத-அபார-அட்டகாசத் தொகுப்பு. பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றிகள் ஆகியவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட பகீரதப் பதிவுகள் ! தங்களது உழைப்பு உண்மையிலேயே சிலிர்க்க வைக்கிறது, மலைக்க வைக்கிறது.

இதுபோன்ற ஈடு-இணையற்ற எண்ணற்ற பதிவுகளை இங்கே நீங்கள் இடவேண்டும். எங்களுக்கு இன்பங்களை அள்ளித்தர வேண்டும். அதற்கு தங்களுக்கு இதயதெய்வத்தின் அருளும், இறையருளும் என்றென்றும் துணை நிற்கும் !

பாசத்துடன்,
பம்மலார்.

anm
19th September 2011, 01:29 AM
Jr சார்,

இங்கே நான் கண்ட காட்சியான அநேகமான சிறந்த தொண்டர்களை, என் சிந்தனையில், 'நமது தெய்வம்' நடித்த திருவருட்செல்வரில் வரும் "திருத்தொண்டர் நாயனார்" போல், இங்கு காணும் எல்லா பக்தர்களுக்கும் தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன்.

நன்றிகள்.

அன்புடன்,
ஆனந்த்.

RAGHAVENDRA
19th September 2011, 06:34 AM
செல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள்(தொடர்ச்சி)

செப்டம்பர் 20 கல்யாணியின் கணவன்

வெளியான நாள் 20.09.1963
தயாரிப்பு - பக்ஷிராஜா ஸ்டூடியோஸ் (பக்ஷிராஜா ஸ்டூடியோஸின் கடைசித் தயாரிப்பு)
இயக்கம் எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு
கதை- வேலவன்
இசை - எஸ்.எம்.சுப்பய்யா நாயுடு
ஒளிப்பதிவு - ஷைலன் போஸ்
படத்தொகுப்பு - வேலுச்சாமி
நடனம் - ஹீராலால்

கல்கி 22.09.1963 இதழில் வெளிவந்த விளம்பரம்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/kalyaniyinkanavanAdkalki.jpg

ஸ்டைல் சக்கரவர்த்தியின் மற்றொரு கலக்கல்

எஸ்.எம்.சுப்பய்யா நாயுடு இசையில் சௌந்தர்ராஜன் சுசீலா குரலில் மெய் மறக்க வைக்கும் பாடல்


http://www.dailymotion.com/video/xelln0_enathu-raja-sabaiyile_auto

அன்புடன்

RAGHAVENDRA
19th September 2011, 06:47 AM
டியர் வாசுதேவன் சார்
நடிப்புச் சக்கரவத்தியை இசைச் சக்கரவர்த்தியாக உருமாற்றிய உங்களுக்கு பல்லாயிரம் கோடி பாராட்டுக்கள்! நன்றிகள்!! வாழ்த்துக்கள்!!!
ஸ்டில்ஸ் சூப்பர்

அன்புடன்

RAGHAVENDRA
19th September 2011, 06:49 AM
கல்யாணியின் கணவன் பாட்டுப் புத்தகத்தின் முகப்பு

http://www.nadigarthilagam.com/songbookcovers/kalyaniyinkanavansbc.jpg

RAGHAVENDRA
19th September 2011, 07:01 AM
கல்யாணியின் கணவன் பாடல்களைக் கேட்க

1. ஆசை கொண்ட மனம் இதோ அதோ - பி.சுசீலா (http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGOLD1881'&lang=en)
2. இதுவும் வேண்டுமடா எனக்கு - டி.எம்.சௌந்தர்ராஜன் (http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGOLD1882'&lang=en)
3. கல்யாணப் புடவை கட்டி- பி.சுசீலா (http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGOLD0392'&lang=en)
4. நாளொன்றும் பொழுதொன்றும் செல்லச் செல்ல - பி.சுசீலா (http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGOLD0393'&lang=en)
5. சொல்லித் தெரியாது - சௌந்தர்ராஜன், சுசீலா (http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGOLD0394'&lang=en)
6. உனக்கா தெரியாது (http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGOLD0395'&lang=en) - சௌந்தர்ராஜன், சுசீலா
7. உன்னை நினைக்கையிலே (http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGOLD1883'&lang=en) - சௌந்தர்ராஜன் (இந்தப் பாடலைப் படத்தில் பார்த்த நினைவு இல்லை)

அன்புடன்

RAGHAVENDRA
19th September 2011, 07:02 AM
டியர் பம்மலார்,
சகோதரி சாரதா மற்றும் வாசுதேவன் அவர்களது பதிவுகளை நீங்கள் பாராட்டிய விதம் சூப்பர்...
பாராட்டிலும் நீங்கள் ஜீபூம்பா ஜித்தர்....

கீப் இட் அப்

அன்புடன்

vasudevan31355
19th September 2011, 09:41 AM
டியர் ராகவேந்திரன் சார்,
தங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றிகள் சார். கல்யாணியின் கணவன் ஸ்டில்ஸ்,'எனது ராஜ சபையிலே' என்ற காலத்தால் அழியாத கானத்தின் வீடியோக் காட்சி,பாட்டுப் புத்தகத்தின் முகப்பு அட்டைப்படம்,ஆடியோ பாடல்கள் லிங்க் அத்தனையும் அருமை. மனமுவந்த பாராட்டுக்கள்.
என்றும் தங்களின்,
வாசுதேவன்.

vasudevan31355
19th September 2011, 09:44 AM
அன்பு பம்மலார் சார்,
தங்களின் ராட்சஷப் பாராட்டுகளுக்கு அடியேனின் அன்பு கலந்த நன்றிகள்.

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
19th September 2011, 09:47 AM
dear sankara1970 sir,
thank you very much sir. take care.
regards,
vasudevan.

kumareshanprabhu
19th September 2011, 10:36 AM
Dear Vasudevan Sir

thank u i have recived your mail i want some more photos and please let me have your Mobile number please
Dear Pammalar and Raghavendra Sir
i am expecting your mails

regards
kumareshan prabhu

sankara1970
19th September 2011, 10:39 AM
பாவ மன்னிப்பு 'எல்லோரும் கொண்டாடுவோம்' இந்த தொகுப்பில் மிஸ்ஸிங்

KCSHEKAR
19th September 2011, 10:56 AM
டியர் வாசுதேவன் சார், இசைக்கருவிகளுடன் நமது நடிகர்திலகம் - திரு.ராகவேந்திரன் அவர்கள் ஆரம்பித்து வைத்ததை, தாங்கள் விஸ்வரூபமாக்கிவிட்டீர்கள். பாராட்டுக்கள், நன்றிகள்.

எல்லோரைப்பற்றியும் பொக்கிஷம் வெளியிடும் ஆனந்தவிகடன் இதழின் - ஆரம்பகால சரித்திரத்தை அருமையாக விவரித்த திரு.முரளி ஸ்ரீநிவாஸ், சாரதா மேடம் ஆகியோருக்கு நன்றிகள்.

விழா சிறக்க வாழ்த்துக்களைத் தெரிவித்த திரு.பம்மலார், திரு.ராதாக்ருஷ்ணன் ஆகியோருக்கு நன்ற்கள்.

கல்யாணியின் கணவன் - திரைப்படத்தின் வெளியீட்டு விளம்பரம் பாட்டுப் புத்தக முகப்பு, பாடல் இணைப்பு என்று அப்படத்தின் பதிவுகளை இங்கு அளித்த திரு. ராகவேந்திரன் அவர்களுக்கு நன்றிகள்.

saradhaa_sn
19th September 2011, 11:29 AM
பாவ மன்னிப்பு 'எல்லோரும் கொண்டாடுவோம்' இந்த தொகுப்பில் மிஸ்ஸிங்

டியர் சங்கரன்,

நீங்கள் குறிப்பிடும் அந்த ஸ்டில் மிஸ்ஸாகவில்லை. தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது. பாசமலருக்கு அருகில் பாருங்கள்.

டியர் ராகவேந்தர்,

கல்யாணியின் கணவன் பதிவுகள் நன்றாக உள்ளன. விமர்சனப்பதிவை மட்டும் தவிர்த்திருக்கலாமோ என்று தோன்றூகிறது. அதில் தேவையில்லாமல் நடிகர்திலகத்தின் 'ரத்தத்திலகத்தை'யும், அதைவிட தேவையில்லாமல் பக்ஷிராஜாவின் முன்னொரு படத்தையும் இழுத்திருக்கிறார்கள்.

டியர் பம்மலார்,

பாராட்டுக்கு மிக்க நன்றி. (தனிமடல் (pm) பார்த்தீர்களா?)

vasudevan31355
19th September 2011, 11:58 AM
'கல்யாணியின் கணவன்' காவியத்தில் அன்னை கமலா அம்மாளின் அன்புக் கணவர்


http://www.shakthi.fm/album-covers/ta/e490f629/cover_m.jpg

http://padamhosting.com/out.php/i58107_vlcsnap521405.png

http://www.hindu.com/thehindu/gallery/sg/sg009.jpg

http://1.bp.blogspot.com/_2I2hYF2DQtI/TGwUibfwXTI/AAAAAAAAB-A/oV6Hyd-7KyA/s1600/Kalyaniyin+Kanavan_endu+raja+sabai_tamilhitsongs.b logspot.com.VOB_thumbs_%5B2010.08.18_22.42.02%5D.j pg

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
19th September 2011, 01:38 PM
இதோ 'இல்லறஜோதி' திரைப்படத்தில் இசைக்கருவிகளுடன் 'இணையில்லாக் கலைஞர்'

இல்லறஜோதி திரைப்படத்தில் நாட்டியப் பேரொளி பத்மினி பாடி ஆடுவதாக வரும் அற்புதப் பாடலான "கேட்பதெல்லாம் காதல் கீதங்களே" பாடலில் இரு நடிகர் திலகங்கள் வயலின் மற்றும் வீணை வசிப்பது போன்ற அருமையான காட்சி. திருவிளையாடல் படத்தில் 5 நடிகர் திலகங்கள் பல்வேறு இசைக்கருவிகளை கையாள்வதற்கு முன்னோட்டமாக அமைந்த காட்சியோ இது?


இல்லறஜோதி-- வீணை

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/IJ02DAT_001913160.jpg?t=1316418871

இல்லறஜோதி-- வயலின்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/IJ02DAT_001922880.jpg?t=1316418947

இல்லறஜோதி-- வயலின் மற்றும் வீணை. ( நடிகர் திலகம் இருவராக )

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/IJ02DAT_001926080.jpg?t=1316418806

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
19th September 2011, 04:46 PM
'கல்யாணியின் கணவன்' திரைப்படத்தில் கலையுலக வேந்தர்.

நடிக+நடிகைகள்:- "நடிகர்திலகம்"சிவாஜிகணேசன், "அபிநயசரஸ்வதி"பி.சரோஜாதேவி, "நடிகவேள்"எம்.ஆர்.ராதா, எஸ்.வி.ரங்காராவ், டி.ஆர்.ராமச்சந்திரன், ஓ.ஏ.கே.தேவர், ஏ.கருணாநிதி, எஸ்.ராமாராவ், புஷ்பமாலா, சீதாலக்ஷ்மி, ராதிகா, நிர்மலாதேவி மற்றும் பலர்.

இசையமைப்பு:-"இசைமாமணி"எஸ்.எம்.சுப்பைய்யா நாயுடு அவர்கள்.

பாடல்கள்:-"கவியரசு"கண்ணதாசன் அவர்கள்.

கதை+வசனம்:-வேலவன் அவர்கள்.

தயாரிப்பு:-பக்ஷிராஜா ஸ்டுடியோஸ்

இயக்கம்:-ஸ்ரீ ராமுலு நாயுடு அவர்கள்.

http://padamhosting.com/out.php/i58109_vlcsnap522698.png

http://padamhosting.com/out.php/i58114_vlcsnap524494.png

http://padamhosting.com/out.php/i58111_vlcsnap524420.png

http://padamhosting.com/out.php/i58110_vlcsnap523226.png

அன்புடன்,
வாசுதேவன்.

HARISH2619
19th September 2011, 05:15 PM
திரு ராகேஷ் சார்,
தங்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். தாமதமாக வாழ்த்துவதற்கு மன்னிக்கவும்.

திரு முரளி சார்,
தங்களின் இது போன்ற நீண்ட கட்டுரையை படித்து எவ்வளவு நாட்களாகிவிட்டது, மணியனின் உண்மையான முகத்தை ஆதாரத்தோடு உலகுக்கு உணர்த்தியதற்கு நன்றிகள் பல கோடி.

திரு வாசுதேவன் சார்,
இத்தனை இசைக்கருவிகளை திரையில் வாசித்தது நம்மவரின் சாதனை என்றால் அத்தனையையும் ஒன்று விடாமல் தேடி பிடித்து இங்கு பதிவேற்றம் செய்தது தங்களின் சாதனை,மிக்க நன்றி .

mr_karthik
19th September 2011, 06:24 PM
அன்புள்ள வாசுதேவன் சார்,

உங்களின் 'இசைக்கருவிகளுடன் இணையில்லாக்கலைஞன்' தொகுப்பு கண்டு அசந்து போனேன். எங்கிருந்தெல்லாம், எப்படியெல்லாம் தேடியெடுத்து வந்திருக்கிறீர்கள் என்பதற்கு, அந்தந்த ஸ்டில்களின் மூலைகளில் இடம்பெற்றிருக்கும் எம்ப்ளங்களே சாட்சியாக விளங்குகின்றன. எந்த ஒரு வீடியோ நிறுவனத்தையும், எந்த ஒரு டிவி சேனலையும் விடவில்லை போலிருக்கிறது.

முதலில், நடிகர்திலகம் இத்தனை ப்டங்களில் இத்தனை இசைக்கருவிகளை இசைத்திருக்கிறார் என்று உங்களுக்கு நினைவுக்கு வந்தது ஒரு ஆச்சரியம், அவை எங்கெங்கே கிடைக்கும் என்று தேடிக்கொணர்ந்தது அதைவிட ஆச்சரியம். இவையெல்லாம் பார்த்துவிட்டு மறந்து விட்டுப்போவதற்கு அல்ல, பொக்கிஷமாய்ப் பாதுகாப்பதற்கு என்று சொல்லாமல் சொல்லி விட்டீர்கள். நீங்கள் சொல்வதற்கு முன்பே நாங்கள் பாதுகாத்து விட்டோம். பின்னே?. இன்னொருமுறை கிடைக்காத அரிய வாய்ப்பு அல்லவா?.

நான் ஒரு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராயிருந்தால், நேற்றே நீங்கள் 'டாக்டர்' ஆகியிருப்பீர்கள். இருந்தாலும் 'நடிகர்திலகத்தின் தீவிர ரசிகன்' என்பது பல டாக்டர் பட்டங்களுக்கு சமம் அல்லவா?.

என்ன ஆச்சரியம்?. நெய்வேலி சுரங்கத்தில் நிலக்கரி மட்டும் கிடைப்பதாகத்தான் இத்தனை நாளும் நினைத்துக் கொண்டிருந்தேன். வாசுதேவன் போன்ற தங்கக் கட்டிகளுமா கிடைக்கின்றன?.

RAGHAVENDRA
19th September 2011, 06:40 PM
என்ன ஆச்சரியம்?. நெய்வேலி சுரங்கத்தில் நிலக்கரி மட்டும் கிடைப்பதாகத்தான் இத்தனை நாளும் நினைத்துக் கொண்டிருந்தேன். வாசுதேவன் போன்ற தங்கக் கட்டிகளுமா கிடைக்கின்றன?

பொன்னெழுத்துக்களில் பொறிக்க வேண்டிய வரிகள்..

vasudevan31355
19th September 2011, 06:50 PM
'நடிகர்திலகத்தின் தீவிர ரசிகன்' என்பது பல டாக்டர் பட்டங்களுக்கு சமம் அல்லவா?.

அன்பு கார்த்திக் சார்,

தங்கள் வானளாவிய வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களைப் போல அன்பானவர்களின் நல்லாசியும், நட்பும், நம் காவிய நாயகரின் அருளாசிகளும் துணை இருக்கும் பட்சத்தில் எந்த சாதனைகள் வேண்டுமானாலும் செய்து சாதிக்கலாம் என்பதை பணிவோடும் அடக்கத்தோடும் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் கூறியது நூற்றுக்கு இருநூறு சதவீதம் சரியே. அவரின் ரசிகன் என்ற பெருமையை விட மேலாக வேறு எதுவுமே உலகத்தில் நமக்கில்லை.

அன்பு நன்றிகள் சார்.

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
19th September 2011, 06:55 PM
டியர் ராகவேந்திரன் சார்,
என்னுடைய பாசமான நன்றிகள் சார். இதற்கெல்லாம் மூல காரணகர்த்தாவே நீங்கள்தான். அதற்காக என்றென்றைக்கும் தங்களுக்கு கடமைப் பட்டுள்ளேன். நன்றிகள் சார்!

தங்களின்,
அன்பு வாசுதேவன்.

mr_karthik
19th September 2011, 06:57 PM
அன்புள்ள முரளி சீனிவாஸ் சார் & சாரதா மேடம்,

மணியன் என்ற மனிதனின் மறுபக்கத்தை தெளிவுறக்காட்டியதற்கு மிக்க நன்றி. எல்லோருடைய ஆதங்கமும் ஒன்றே ஒன்றுதான். அவர்களிருவரும் நெருக்கமாக இருப்பதற்காக, சம்மந்தமேயில்லாத நடிகர்திலகத்தை எதிரியாகப் பாவித்து, பழிவாங்கும் எதிர் நடவடிக்கைகளில் ஈடுபட்டது ஏன் என்பதுதான். ஒருவேளை இப்படியெல்லாம் செய்தால்தான் நமது நட்பு நீடிக்கும் என்று 'சிலரால்' மணியன் நிர்ப்பந்தப் படுத்தப்பட்டாரா?. அப்படிச்செய்தால் அதற்குப்பெயர் நட்பா?. இல்லை, பச்சை வியாபாரப்புத்தி.

வாசுதேவன் கேட்டது போல, ஒரு அப்பாவிப் பசுவைச்சுற்றி இத்தனை வரிப்புலிகளா?. ஒருபக்கம் நா.பார்த்தசாரதி (நா.பா) என்பவன் இவரைத்தாக்கி ஒரு நாவலே எழுதினான். இன்னொருபக்கம் ராண்டார்கய் என்பவன் வரலாறுகளை மாற்றி, தரம் தாழ்ந்து எழுதியிருக்கிறான். ஏன்?. அப்படியென்ன அவர்கள் தின்னும் சோற்றில் இவர் மண்ணை அள்ளிப்போட்டாரா?. அடப்பாவிகளா, சூது வாது தெரியாத ஒரு அப்பாவித்தமிழனை காரணமேயில்லாமல் எப்படியெல்லாம் குறி வைத்து தாக்கியிருக்கிறீர்கள்?. இதனால் நீங்கள் அடைந்த லாபம் என்ன?. ('இதயம் பேசுகிறது' பத்திரிகை எரிப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு போலீஸாரிடம் தடியடி வாங்கிய விவரத்தை ஏற்கெனவே இங்கு சொல்லியிருந்தேன்). 'பூனைக்கு யார் மணி கட்டுவது?' என்ற அநியாயக்கட்டுரை எழுதியவர் இன்றைக்கு சோற்றுக்கே லாட்டரி அடிப்பதாகக்கேள்வி. தெரிந்தவர்களிடமெல்லாம் பணம் கேட்டுக்கொண்டிருக்கிறாராம். ஒரு இணையதளத்தில் படித்தேன்.

அப்பாவைப்போலவே பிள்ளைகளும் மன்னிக்கும் உயர்ந்த குணம் கொண்டவர்களாக விளங்குவதால்தான் இன்றைக்கும் 'அன்னை இல்லம்' பொலிவோடு விளங்குகிறது.

RAGHAVENDRA
19th September 2011, 09:03 PM
செல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள் (தொடர்ச்சி)

http://en.600024.com/images/profile/movie/1985/rajarishi.jpg

ராஜ ரிஷி

வெளியான நாள் 20.09.1985
தயாரிப்பு - பைரவி பிலிம்ஸ்
இயக்கம் - கே. சங்கர்
திரைக்கதை, உரையாடல் - ஏ.எஸ்.பிரகாசம்
இசை - இளையராஜா
ஒளிப்பதிவு - எம்.சி.சேகர், சிறப்பு ஒளிப்பதிவு - ரவிகாந்த் நகாய்ச்
படத்தொகுப்பு - கே.சங்கர், வி.ஜெயபால்
நடனம் - சுந்தரம்
நடிக நடிகையர் - நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இளைய திலகம் பிரபு, கே.ஆர். விஜயா, லட்சுமி, நளினி, ராதிகா, மற்றும் பலர்

பாடல்கள் - வாலி, புலமைப்பித்தன்

1. மான் கண்டேன் மான் கண்டேன்
2. ஆடையில் ஆடும்
3. சங்கரா சிவ சங்கரா
4. மாதவம்
5. அழகிய கலைநிலவே

இனிமையான பாடல் மான் கண்டேன் - இளைய திலகம் பிரபு, நளினி


http://www.youtube.com/watch?v=5Z5UfPVRg88&feature=related

அன்புடன்

guruswamy
19th September 2011, 09:05 PM
Dear Mr. Vasudevan

Kindly send me our N.T. Photos (NOT FEW), but as many as you can please....

E-mail: mgguruswamy@gmail.com

JAIHIND
M. Gnanaguruswamy

pammalar
19th September 2011, 10:05 PM
டியர் ராகவேந்திரன் சார்,

"கல்யாணியின் கணவன்" ,"ராஜ ரிஷி" பதிவுகள் கலக்கல் ! பாராட்டுக்கு நன்றி !

டியர் வாசுதேவன் சார்,

வழக்கம் போல் "கல்யாணியின் கணவன்" ஸ்டில்ஸ் Superb !

டியர் mr_karthik,

நமது வாசுதேவன் அவர்கள், நமது நடிகர் திலகம் "பராசக்தி" மூலம் திரையுலகில் புயலெனப் புகுந்ததுபோல், நமது நடிகர் திலகம் திரியில் புகுந்திருக்கிறார் என்று கூறினாலும் அது மிகையன்று !

அன்புடன்,
பம்மலார்.

Shakthiprabha
19th September 2011, 10:34 PM
அன்புள்ள சாரதா,

என் பதிவை படித்து அதற்கு பதிலுறுத்ததற்கு நன்றி. உண்மையைச் சொன்னால், நீங்கள் என் பதிவை படித்தது எனக்குத் தான் மிக மிக மகிழ்ச்சி. முன்பொரு சமயம் "படிக்காத மேதை" கதாபாத்திரத்தை நான் அனுபவித்து அலசியிருந்ததை, அதே அளவு உணர்வுடன் ரசித்தவர்கள் நீங்கள். என்னைப் போலவே ரசிக்க இன்னொருவர் என்ற உண்ர்வு எழுந்தது.

நீங்கள் எல்லோரும் இங்கு பங்களிக்கும் விதம் சிகரத்திற்கு ஒப்பானது. நான் சிறு அணில் போல. எனக்கு எழுத தெரிந்ததும் ரசிப்பதும் சில(பல) நேரம் வார்த்தைகளில் கொட்டி விட முடிவதில்லை. குறிப்பாக ஏதேனும் ரசிக்கும் கதாபாத்திரங்கள் நினைவு கூர்ந்தால் நிச்சயம் பகிர்வேன். "பாபு" திரைப்படம் நடிகர் திலகத்தின் கை வண்ணத்தில் நான் மிகவும் ரசித்த ஒன்று. என்றேனும் அதை மறுபடியும் காண நேர்ந்தால் பகிர்ந்து கொள்கிறேன்.

சுதா உங்களுக்கும் நன்றி.

Murali Srinivas
19th September 2011, 11:14 PM
சுவாமி, ராகவேந்தர் சார், வாசு சார், சந்திரசேகர் சார், செந்தில்.

பாராட்டுகளுக்கு நன்றி. உண்மைகளை உரக்க சொல்வோம் என்றே உந்துதலே அதற்கு காரணம். அதிலும் பாதிப்புக்குள்ளானவர் நமது அருமை நடிகர் திலகம் எனும்போது அதை ஊரறிய உலகறிய சொல்வோம் என்ற எண்ணம்.

சாரதா/கார்த்திக்,

உங்களின் உணர்வுபூர்வமான பதிவுகளுக்கு நன்றி.

ஜோ,

என் மேல் வைத்திருக்கும் நம்ப்பிக்கைக்கு நன்றி. நீங்களும் பலமுறை சொல்லியிருக்கிறீர்கள். விரைவில் நடைபெறும் என நானும் நம்புகிறேன்.

வாசு சார்,

கொடுங்கள் கையை. அற்புதமான ஸ்டில்ஸ். இதை சேகரிப்பதே ஒரு பெரிய விஷயம் எனும்போது பாராட்டுகளுக்கு அப்பாற்பட்டு நிற்கிறது உங்கள் உழைப்பு. இந்த தொகுப்பு ஒன்றே போதும் நடிகர் திலகம் எவ்வளவு பெரிய versatile actor என்பது யாரும் சொல்லாமலே புரியும்.

அன்புடன்

pammalar
20th September 2011, 01:03 AM
நடிகர் திலகத்தின் கருத்துக்களும் அவர்தம்
அருமைப்புதல்வரின் கருத்தோவியமும் நிரம்பிய

நடிகர் திலகம் குறித்த கட்டுரை

வரலாற்று ஆவணம் : பொம்மை : அக்டோபர் 1982

முன் அட்டை
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/Bommai1-1.jpg


கவர் ஸ்டோரி
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4613a-1.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4614a-1.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4615a-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
20th September 2011, 05:20 AM
டியர் பம்மலார்,

பாராட்டுக்கு மிக்க நன்றி. (தனிமடல் (pm) பார்த்தீர்களா?)

சகோதரி சாரதா,

தங்களின் தனிமடல் கண்டேன். தங்களுக்கு பதிலும் அனுப்பியுள்ளேன்.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
20th September 2011, 05:57 AM
செல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள்

கல்யாணியின் கணவன்

[20.9.1963 - 20.9.2011] : 49வது ஜெயந்தி

பொக்கிஷப் புதையல்

முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 20.9.1963
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4626a-1.jpg


அரிய நிழற்படம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/KK1-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

vasudevan31355
20th September 2011, 08:24 AM
'ராஜரிஷி' எங்கள் திரையுலக விஸ்வாமித்திரர்

http://4.bp.blogspot.com/_jo1xsRVxX7o/S6SPfqCHZSI/AAAAAAAAD4w/9_HDlFSBc-0/s400/Rajarishi.jpg

http://img.youtube.com/vi/atqJe54EPzg/0.jpg http://www.jointscene.com/ahtees/admin/movies/content/9043_17_Raja%20Rishi.jpg

http://3.bp.blogspot.com/_OMAZgG5FElE/SIW_sf2mJ_I/AAAAAAAACWg/18mDnotuskA/s320/raja+rishi.JPG

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
20th September 2011, 08:30 AM
'ராஜரிஷி' திரைக் காவியத்தில் 'நடிப்புலக ராஜா' அவர்களின் ரகளை முத்திரைகள் வீடியோவாக.

'சங்கரா... சிவ சங்கரா..ஜெய ஜெய சந்திரசேகரா'...அற்புதமான பாடல் காட்சி.


http://www.youtube.com/watch?v=4GQOdE0

'ஆடையில் ஆடும் பொன்மணிகள்' பாடல் காட்சி.


http://www.youtube.com/watch?v=atqJe54EPzg&feature=player_detailpage

'மாதவம் ஏன் மாதவனே' மயக்கும் வீடியோக் காட்சி.


http://www.youtube.com/watch?v=IiGc3aAp0rU&feature=player_detailpage

நடிகர் திலகத்தின் புயலென எழும் ஆக்ரோஷமான நடிப்பில் 'புயலென எழுந்ததடா' பாடல் வீடியோக் காட்சி.


http://www.youtube.com/watch?v=HHduRl8B6VY&feature=player_detailpage


அன்புடன் ,
நெய்வேலி வாசுதேவன்.

vasudevan31355
20th September 2011, 10:23 AM
அன்பு முரளி சார்,

தங்களின் உளமுவந்த அன்பான பாசப் பாராட்டுதல்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

தங்களின் மணியனின் நரித்தந்திரம் பற்றிய அந்த நேர்த்தியான கட்டுரை மனதை விட்டு அகல மறுக்கிறது. மனம் அதிலேயே லயித்து விடுகிறது. நல்ல விஷயங்கள் நம் நெஞ்சில் ஆழமாகப் பதிந்துவிடுவது போலவே அவருக்கு இழைக்கப் பட்ட துரோக வஞ்சக எண்ணங்களும் நம்மை அறியாமலேயே நம் மனதுக்குள் புகுந்து நம்மை வாட்டி வதைத்து எடுத்து விடுகின்றன. கார்த்திக் சாரும் இந்த மனநிலையில்தான் உள்ளார் என்பது அவரின் நேற்றைய பதிவுகளில் நன்றாகப் புலப்படுகிறது. இப்படி பல நல்ல உள்ளங்களைப் புண்படுத்திய அந்த மகானுபாவர்கள் நன்றாகவே இருக்கட்டும். அதுதான் நம் அருமையானவர் நமக்கு சொல்லிகொடுத்த நீதி. நன்றிகள் சார்.

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
20th September 2011, 10:28 AM
டியர் ராகவேந்திரன் சார்,

ராஜரிஷி படத்தைப் பற்றிய விவரங்களுக்கும், மானை காண வைத்ததற்கும் நன்றிகள். பாராட்டுக்கள்.

தங்கள்
வாசுதேவன்.

KCSHEKAR
20th September 2011, 10:35 AM
பொம்மை கவர் ஸ்டோரி அருமை. நாகேஸ்வரரராவ் அவர்கள் நடிகர்திலகத்தைப் பற்றி - நான் (anr), ராஜ்குமார், பிரேம்நசீர் ஆகியோரைவிட சிவாஜிதான் பெரிய நடிகர் என்று கூறியது மிகவும் பொருத்தமான பாராட்டாகும். - பொக்கிஷத் தகவலைப் பதிவிட்ட பம்மலாருக்கு நன்றி.

vasudevan31355
20th September 2011, 10:35 AM
அன்பு பம்மலார் சார்,
பொம்மை அக்டோபர் இதழ் (1982) முன் அட்டையில் தான் வேட்டையாடிய புலியுடன் நம் சிம்மம் நிற்கும் காட்சி அற்புதத்திலும் அற்புதம். அதே போல் கவர் ஸ்டோரி கலக்கலோ கலக்கல். அசத்திவிட்டீர்கள். நன்றிகள் அபூர்வப் புதையலை அள்ளித் தந்ததற்கு. 'கல்யாணியின் கணவன்' சுதேசமித்திரன் முதல் வெளியீட்டு விளம்பரம், அதை தொடர்ந்து வரும் நடிகர் திலகம் கலக்கலாக வேட்டி சட்டையில் மரத்தின் கிளையைப் பிடித்தவாறு நிற்கும் அபூர்வ நிழற்படம் அனைத்தும் சூப்பர்.கலக்குங்கள்.

அன்புடன்,
வாசுதேவன்.

RAGHAVENDRA
20th September 2011, 11:06 AM
அந்நாளைய பிரபல தொழிலதிபர்கள் டி.வி.எஸ். கிருஷ்ணா, டி.எஸ்.நாராயணசாமி, அந்நாளைய ஸாலிஸிட்டர் ஜெனரல் வி.பி.ராமன் - இந்த மூன்று பேரையும் ஒன்றாக்கி அதற்கு ஒரு நடை உடை பாவனை கொடுத்தால்....

கொடுக்கப் பட்டுள்ளது.

இதைப் பற்றி நமது ஹப்பர் மோகன்ராம் சார் அவர்களே கூறுகிறார்கள்...

படியுங்கள் (http://mohanramanmuses.blogspot.com/2011/09/gowravam-re-visited.html)

mr_karthik
20th September 2011, 11:44 AM
பம்மலார் சார்,

'பொம்மை' மாத இதழின் அட்டைப்படத்தில் புலியின் தோளில் சிங்கம் கைபோட்டுக்கொண்டு நிற்கும் போஸ் கொள்ளை அழகு. அதைத்தொடர்ந்த கவர் ஸ்டோரியும் மிக அருமை.

திரு நாகேஸ்வரராவின் கூற்று மிக அருமை மட்டுமல்ல உண்மையும் கூட. 'சிவாஜி சாரின் நடிப்பில் பத்தில் ஒரு பங்கு நடிக்க முயற்சி பண்ணிக்கிட்டிருக்கேன்' என்று சமீபத்தில் மெகா ஸ்டார் மம்மூட்டி சொன்னது எவ்வளவு உண்மை..!!.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், ஒரு தமிழ்க்கலைஞனின் திறமை, தமிழகத்துக்கு வெளியே இருப்பவர்களுக்கு மிக நன்றாகத் தெரிந்திருப்பதுதான்.

NOV
20th September 2011, 11:54 AM
Important Notice

It has come to our attention that some members here are posting using more than one ID.

Do take note that duplicate ID's are prohibited and anyone using more than one ID may get all thier IDs banned.
To avoid that from happening, PM me and request to remove your duplicate ID.

Others: Apologies for the intrusion.

mr_karthik
20th September 2011, 11:55 AM
திருவாளர்கள் முரளி சீனிவாஸ், பம்மலார், ராகவேந்தர், nov, வாசுதேவன், சாரதா, சந்திரசேகர், ராகேஷ், பாலா, செந்தில், பார்த்தசாரதி, தனுஷ், கார்த்திக் (நான்தான்) மற்றும் நண்பர்களுக்கு....

நமது திரி வேகமாக தனது '4000' ஆவது பதிவை நோக்கிச்சென்று கொண்டிருக்கிறதே, அடுத்து என்ன செய்வதாக உத்தேசம்..?.

எட்டாவது பகுதியை துவங்குவதாகவா அல்லது இங்கேயே தொடருவதாகவா..?.

RAGHAVENDRA
20th September 2011, 12:11 PM
A brief analysis led to compilation of list of instruments NT used in his acting, in his films:



Accordin Enga Maama Sorkkam Pakkathil
Alapana Kungumam Chinnanchiriya vannaparavai
Dalda dubba Kuravanchi Unakkum Puriyudhu
Dolak Vaani Raani Kaalamellam Parthadundu
Double bangos Imaigal Srilanka Chinnarani
Drums Viswarupam Sridevi song
Drums Imaigal Srilanka Chinnarani
Drums Viduthalai Madhavi song
Electric Guitar Paattum Barathamum My song is for you
Fllute Gowravam Yamuna Nadi Inge
Flute Raman Ethanai Ramanadi Ammadi Ponnukku thanga
Flute Raman Ethanai Ramanadi Chithirai madham
Flute Mahakavi Kalidas Kallai vandavan
Flute Poopparikka varugirom Ettil azhagu
Flute Thiruvilaiyadal Pattum Naane
Guitar Dharmam Engey Veeramennum paavai
Guitar Imaigal Sri Lanka Chinna rani
Harmonium Velllai Roja Nagooru pakkathile
Harmonium Kalyanam Panniyum Brahmachari Kaviyin kanavil
Harmonium Pennin Perumai TMS duet
Jathi Bale Pandiya Neeye Unakku endrum
Konnakkol Thiruvilaiyadal Pattum Naane
Konnakkol Thiruvilaiyadal Paattum Naane
Magara Yaazh ? Thavapudhalvan Isai kaettal
Mandolin Padithal Mattum Podhuma Naan Kavignanum Illai
Mandolin Amara Deepam Nadodi koottam
Marakas Enga Maama Sorkkam Pakathil
Mrdangam Thillana Mohanambal Jil jil Ramamani scene
Mrdangam Thiruvilaiyadal Pattum Naane
Mrdangam Mrdanga Chakkaravarthi Ketka kidaikkadha gaanam
Mrdangam Illara Jothi Ketpadellam kadhal Nagaswaram Thillana Mohanambal Nagumomu
Nagaswaram Rathapasam Ottam Konda Rajave
Piano Pudhiya Paravai Partha Gnyabakam
Piano Enga Mama Ellorum Nalam vazha
Piano Gauravam Mezuguvathi erigindradu
Piano Paasa Malar Paattondru Kaetten
Piano Pudhiya Paravai Unnai Ondru Kaetpen
Saplakattai Saraswathi Sabatham Kalviya Selvama
Saxaphone Pudhiya Paravai Unnai Ondru Kaetpen
Sitar Thavapudhalvan Isai Kaettal
Sitar Deiva Magan Kaettadum koduppavanae
Sitar Deiva Magan Jayalallitha meeting him scene
Sithar Paattum Barathamum Dance prelude
Svara Chithur Rani Padmini Parthukondirundhale Podhum
Tabela Latchumi Vandhachu Revathi dance
Table tennis bat Rajapart Rangadurai Ammamma Thambi endru
Taep Padithal Mattum Podhuma Nallavan Enakku naane
Taep Paava Mannippu Ellorum Kondaduvom
Taep Imaigal Song scene
Taep Sumangali Ohoho rasigargalel
Thunthana Thiruvilaiyadal Pattum Naane
Thunthana Kathavarayan Vaa Kalaaba Mayile
Thunthana Kuravanchi Unakkum puriyudu
Treble bangos Imaigal Srilanka Chinnarani
Trumpet Pudhiya Paravai Unnai Ondru Kaetpen
Trumpet Thavapudhallvan Love is fine darling
Trumpet En Magan Senior character
Trumpet En Magan Hero character
Trumpet Thirisulam En Rajathi Vaarungadi
Udukkai Kalthoon Temple scene
Veenai Thiruvilaiyadal Paattum Naane
Veenai Vadivukku Valaikappu Thilagame
Violin Illara Jothi Ketpadellam
Violin Sabash Meena Solo scene
Whistle Paar Magalae Paar Neerodum Vaigaiyile
Whistle Shanthi Nenjathile Nee


May be still more available for compilation.

NT the Musician!!!!!

mr_karthik
20th September 2011, 12:33 PM
வீணை - ஒன்ஸ்மோர் - 'இதயவீணை தூங்கும்போது'

சாக்ஸபோன் - ஒன்ஸ்மோர் - 'உன்னையும் என்னையும் இழுப்பது காதல்'

vasudevan31355
20th September 2011, 12:50 PM
டியர் ராகவேந்திரன் சார்,
பம்மலார் இன்னொரு இசைக்கருவி சொன்னார். தங்கை படத்தில் நம்மவர் 'இனியது இனியது உலகம்' பாடலில் mouth organ வாசித்துக் கொண்டே பாடுவார்.
உங்கள் லிஸ்ட் அருமை!
வாசுதேவன்.

vasudevan31355
20th September 2011, 01:31 PM
'இசைக் கருவிகளுடன் இணையில்லாக் கலைஞர்' தொடர்கிறது.

பார் மகளே பார்-- வாய்வழி விசில்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DvDRipParmahagalapar1963-sivajimovieChiyaaNwwwuyirvanicomavi_001114698.jpg? t=1316504974

தங்கை -- mouth organ

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_11_1VOB_000180736.jpg?t=1316505118

தங்கை-- விரல் விசில்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_11_1VOB_000183832.jpg?t=1316505170

தங்கை-- வாய்வழி விசில்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_11_1VOB_000187192.jpg?t=1316505228

அன்புடன்,
வாசுதேவன்.

தொடரும்....

HARISH2619
20th September 2011, 01:52 PM
திரு முரளி சார்/ராகவேந்திரா சார்/பம்மல் சார்,
திருச்சியில் நிறுவப்பட இருந்த நடிகர்திலகத்தின் சிலை பற்றிய எந்த செய்தியையும் காணோம், என்னவாயிற்று சார் ?

vasudevan31355
20th September 2011, 01:54 PM
தொடர்கிறது ....


பட்டிக்காடா பட்டணமா-- உறுமி மேளம் அடிப்பது போன்ற போஸ்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/1vob_002550669.jpg

எங்க மாமா-- வாய் வழி விசில்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_1VOB_003200360.jpg?t=1316506472

ராஜாபார்ட் ரங்கதுரை-- ஹார்மோனியம்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_15_2VOB_001464977.jpg

என் ஆச ராசாவே-- தவில் (மிக அபூர்வமாக)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_04_1VOB_001580800.jpg?t=1316506660

அன்புடன்
வாசுதேவன்.

KCSHEKAR
20th September 2011, 02:49 PM
டியர் ராகவேந்திரன் சார் - இசைக்கருவிகளோடு நடிகர்திலகம் லிஸ்ட் பிரமாதம். வாசுதேவன் சார் நம் நடிகர்திலகத்தை இசை தெய்வமாக்கி - கலக்கலான புகைப்படங்களோடு பதிவிட்டிருக்கிறீர்கள் - தொடரட்டும் உங்கள் இசைப் (பதிவு) பயணம்.

vasudevan31355
20th September 2011, 05:17 PM
'ஒன்ஸ்மோர்' கேட்க வைக்கும் ஒய்யாரக் கலைஞர்.

ஒன்ஸ்மோர்--மேண்டலின் (விஜய்யுடன்)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/DVDRIPOncemoreESubswwwkwdownloadscommp4_008246154. jpg


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/DVDRIPOncemoreESubswwwkwdownloadscommp4_008247989. jpg


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/DVDRIPOncemoreESubswwwkwdownloadscommp4_008253119. jpg


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/DVDRIPOncemoreESubswwwkwdownloadscommp4_008260502. jpg

இன்னும் கூட தொடரலாம் ....

அன்புடன்,
வாசுதேவன்.

parthasarathy
20th September 2011, 06:03 PM
அன்புள்ள திரு. கார்த்திக் மற்றும் ராதாகிருஷ்ணன் அவர்களே,

தொடர்ந்து இந்தத் திரியை நாள் தவறாமல் பார்த்து இன்புற்றுக் கொண்டிருந்தாலும், ஒரு சிறிய பதிவினைக் கூட இட முடியவில்லை. தொடர்ந்து, அலுவலகத்திலும், வீட்டு வேலைகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருப்பதே அதற்குக் காரணம். கூடிய விரைவில், என்னுடைய பாடல் பதிவுகளைத் தொடர்கிறேன்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

அன்புள்ள திரு. ராகவேந்தர், திரு. பம்மலார் மற்றும் திரு. வாசுதேவன் அவர்களே,

தொடர்ந்து, மலைக்க வைக்கிற அர்ப்பணிப்போடு தாங்கள் இடும் பல்வேறு இடுகைகள் - வேறு யாராலும் இந்த அளவுக்கு மெனக்கெட முடியுமா?

எங்கெங்கெல்லாமோ இருக்கும் வரலாற்று ஆவணங்களையும், குறிப்புகளையும், வீடியோ சமாச்சாரங்களையும் எடுத்து அவைகளை நிழற்படங்களாக்கிப் பின்னர் தொகுத்து அவைகளை இடுவதென்பது - அசுவ மேத யாகமே இதை விட சுலபம்!

மேலும் வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன்......

இரா. பார்த்தசாரதி

அன்புள்ள முரளி அவர்களே,

தங்களை நேரில், சென்ற ஞாயிற்றுக் கிழமையன்று சந்தித்த போது சொன்னது தான்.... தங்களின் எழுத்து நடை - ஒரு தேர்ந்த எழுத்தாளரின் நடை -தெளிந்த நீரோடை போன்று. அதனால் தான் எதைச் சொல்ல நினைத்தாலும் அது சீராகவும் சுலபமாகவும் எல்லோரையும் சென்று அடைகிறது.

குமுதத்தில் பணி புரிந்து கொண்டிருந்த போது அந்தக் குழுமத்தின் சில அணுகு முறைகள் - சினிமா விமர்சனம் உட்பட - அவை இனிய நினைவுகள் என்றால், மணியன் போன்றோரின் செய்கைகளால் எழும் நினைவுகள்? எத்தனைக் காலம் ஆனாலும் மறக்கவோ மன்னிக்கவோ முடியாது. நெஞ்சில் ஆறாதிருக்கும் புண் அது.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

சாரதா மேடம் அவர்களே,

திரும்பவும் நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களுடைய இடுகைகளைப் பார்ப்பதில் மகிழ்ச்சி. குறிப்பாக, முரளி அவர்களின் இடுகையைத் தொடர்ந்து (மேதை(!) மணியனைப் பற்றி) எழுதியது அருமையாகவும், நினைவுகளைக் கிளறுவதாயும் இருந்தது. தொடர்ந்து உங்களின் பங்களிப்பை எதிர்பார்க்கிறோம்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

திரு. சந்திர சேகர் அவர்களே,

நடிகர் திலகத்தின் பிறந்த நாள் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற உழைத்துக் கொண்டிருக்கும் உங்களையும் ஏனைய ரசிக நெஞ்சங்களையும் வெறும் வார்த்தைகளால் வாழ்த்தி விட முடியாது. இருப்பினும், தலை வணங்குகிறோம்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

திரு. Anm அவர்களே,

நடிகர் திலகத்தின் இந்தச் சிறப்புமிக்க திரியில் இணையும் உங்களை நானும் வரவேற்பதில் பெருமையுறுகிறேன்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

சக்திப் பிரபா அவர்களே,

உங்களின் இடுகைகளை நிறைய படித்திருக்கிறேன். நீண்ட நாட்களுக்குப் பின்னர் உங்களது வருகைக்கு நன்றி. மேலும் உங்களிடம் எதிர்பார்க்கிறோம்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

KCSHEKAR
20th September 2011, 06:32 PM
திரு. பார்த்தசாரதி அவர்களே, உங்களின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கு நன்றிகள். தங்களுடைய பரவசமூட்டும் பாடல் பதிவுகளை ஆவலுடன் எதிநோக்குகிறோம்.

vasudevan31355
20th September 2011, 10:01 PM
ஒன்ஸ்மோர்-- வீணை

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/DVDRIPOncemoreESubswwwkwdownloadscommp4_001432639. jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/DVDRIPOncemoreESubswwwkwdownloadscommp4_001437936. jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/DVDRIPOncemoreESubswwwkwdownloadscommp4_001478143. jpg

நிச்சயத் தாம்பூலம்-- டிரம்பெட்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_05VOB_000586030.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

RAGHAVENDRA
20th September 2011, 10:01 PM
டியர் பார்த்தசாரதி,
தங்களுடைய பாராட்டுக்களுக்கு உளமார்ந்த நன்றிகள். தங்களுடைய பதிவுகளை ஆவலோடு எதிர் நோக்குகிறோம்.
அன்புடன்

RAGHAVENDRA
20th September 2011, 10:04 PM
நமது திரி வேகமாக தனது '4000' ஆவது பதிவை நோக்கிச்சென்று கொண்டிருக்கிறதே, அடுத்து என்ன செய்வதாக உத்தேசம்..?.

இதைப் பற்றி முடிவெடுப்பது மாடரேட்டர்கள் அல்லவா... இந்த ஹப்பின் கட்டமைப்பு மாற்றப் பட்டுள்ளது. எனவே அவர்களுக்குத் தான் இதைப் பற்றித் தெரியும். 4000த்தினை 4 லட்சமாக ஆக்கி விடுவோமே...

அன்புடன்