PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 8



Pages : 1 2 3 4 [5] 6 7 8

Murali Srinivas
14th August 2011, 05:46 PM
There was an article in Chennai Times [Supplement to Times Of India] in which an interview with Anusha Rizvi, the director of Peepli Live came out yesterday. For the uninitiated, Anusha Rizvi is the one who made her debut with Peepli Live, the movie that got released last year. Produced by Aamir Khan, the film dealt with the suicides of the farmers in Maharashtra from a different point of view. It won rave reviews and she was here in Chennai to receive the Gollapudi Srinivas award for the best debut director for the same film.

In the interview she talks about various things and it seems that this is her first visit to Chennai but what surprised me was her statement that she doesn't watch too may Tamil films but she asserts that she is going to buy a handful of DVDs of the legend Nadigar Thilagam. She says her trip would be incomplete without that. She is only 33.

Again goes to show that even the new breed of directors who are committed to path breaking films, irrespective of their language, irrespective of the part from where they come from finally lands up at NT, when it comes to quality.

Regards

[Sathya,

Point noted]

vasudevan31355
14th August 2011, 06:56 PM
டியர் ராகவேந்திரன் சார்,

'சித்ராலயா' இதழில் வெளிவந்த " மூன்று தெய்வங்கள்" வெளியீட்டு விளம்பரம் அருமையிலும் அருமை. அதே போல் 'துக்ளக்' இதழில் வெளியான "மூன்று தெய்வங்கள்" பற்றிய விமர்சனம் வெளியிட்டமைக்கும் மிகவும் நன்றி. "சாரங்கதாரா" வெளியீடு விளம்பரமும் மற்றும் ஆனந்த விகடனின் விமர்சனமும் போற்றிப் பாதுகாக்கப் படவேண்டியவை. என்னுடைய ஹார்ட் டிஸ்க்- இல் இடம் பிடித்து விட்டன.

"ராமன் எத்தனை ராமனடி" நிழற் படங்களும், விமர்சனமும் இன்னமும் கண்களிலேயே நிழலாடுகின்றன. நன்றி!

"ராமன் எத்தனை ராமனடி" யில்' நடிகர்திலகம் விஜயகுமார்' என்ற கதாபாத்திரம் சாதாரண ஒன்றல்ல. மிகவும் கனமான கதாபாத்திரம். பல உள்ளுணர்வுகளை ஆர்ப்பாட்டமாகவும், சிலசமயம் நிதானமானமாகவும் மிக அழகாக வெளிப்படுத்தியிருப்பார் நடிகர் திலகம். ஸ்டைல், சோகம், சந்தோஷம்,பாசம். நடிப்பு என தூள் பரப்பியிருப்பார். கே.ஆர்.விஜயாவின் குடிலுக்குள் ஓடிவந்து குடிலைத் தாங்கும் அந்தக் கம்பைப் பிடித்தபடி கொடுக்கும் போஸ் ஒன்றே போதும். சாப்பாடு, தண்ணீர் எதுவும் நமக்குத் தேவைப்படாது.' ஸ்டைல் சக்கரவர்த்தி' அல்லவா அவர்!

அன்பு பம்மலார் சார்,

பொன்விழாப் பதிவுகளைக் கொடுத்து கண்களைக் குளமாக்கி விட்டீர்கள். "மூன்று தெய்வங்கள்" வெளியீட்டுக் கட்டிங் சூப்பர். மனமார்ந்த நன்றி!.

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

J.Radhakrishnan
14th August 2011, 08:43 PM
டியர் பம்மலார்,

உங்களை எப்படி வாழ்துவதேன்றே தெரியவில்லை, அருமையான பதிவுகள் அத்தனையும் முத்தானவை . நன்றிகள் பல.

pammalar
14th August 2011, 09:06 PM
டியர் ராகவேந்திரன் சார்,

பாராட்டுக்கு நன்றி !

"மூன்று தெய்வங்கள்" விளம்பரம்-விமர்சனம்-நெடுந்தகடு முகப்பு-பாடலின் வீடியோ,

"சாரங்கதரா" விளம்பரங்கள்-விமர்சனம்,

"ராமன் எத்தனை ராமனடி" விமர்சனம்-விளம்பரம்-முழுக்காவியத்தைக் காண்பதற்கான சுட்டி-நெடுந்தகடு முன்-பின் முகப்புகள்,

"ஒரு யாத்ராமொழி"யின் சுட்டி-பாடல் வீடியோ,

"முதல் குரல்" லிங்க்,

எதைச் சொல்வது-எதைச் சொல்லாமலிருப்பது,

ஒவ்வொன்றும் அற்புதங்களின் அற்புதம் !

பாராட்டுக்கள் ! வாழ்த்துக்கள் !! நன்றிகள் !!!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
14th August 2011, 09:22 PM
டியர் mr_karthik,

தங்களது பசுமையான பாராட்டுக்கு எனது பணிவான நன்றி !

"மூன்று தெய்வங்கள்" திரைக்காவியத்தின் 50வது நாள், 75வது நாள் விளம்பரங்கள் கிடைத்தவுடன் கண்டிப்பாக இங்கே இடுகை செய்கிறேன்.

Dear sankara1970,

Thanks a lot for your appreciation. Full & All credit to our NT.

டியர் நெய்வேலி வாசுதேவன் சார்,

தங்களின் உணர்வுபூர்வமான பாராட்டுக்கு எனது உளப்பூர்வமான நன்றி !

டியர் ஜேயார் சார்,

தங்களின் இதயபூர்வமான பாராட்டுக்கு எனது இதயங்கனிந்த நன்றி !

அன்புடன்,
பம்மலார்.

joe
14th August 2011, 09:38 PM
ராகவேந்திரா ஐயா,
தகவலுக்கு நன்றி. உயிர்மை இதழ் இணையத்தில் ஆகஸ்டு மாத இதழ் இன்னும் வலையேற்றம் பெறவில்லை
[http://www.uyirmmai.com/VeiwMonthlyArchives.aspx
எனினும் நடிகர் திலகத்தின் கட்டுரை இடம்பெற்றிருக்கிறது என்பதற்காகவே ஆகஸ்டு இதழை வாங்கிப் படிக்க வேண்டும்

இதற்காகவே உயிர்மை ஆகஸ்ட் இதழை வாங்கினேன் ..கட்டுரை அருமையாக உள்ளது ..உயிர்மை இணைய தளத்தில் வலையேற்றம் பெறவில்லையென்றால் பின்னர் நான் பகிர்ந்து கொள்கிறேன்.

pammalar
14th August 2011, 09:54 PM
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்

முதல் குரல்

[14.8.1992 - 14.8.2011] : 20வது உதயதினம்

வரலாற்று ஆவணங்கள் : பொம்மை : அக்டோபர் 1990

நடிகர் திலகம் பற்றியும், "முதல் குரல்" குறித்தும்
கதாசிரியர்-வசனகர்த்தா-தயாரிப்பாளர்-இயக்குனர் திரு.வி.சி.குகநாதன்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4313a-1.jpg


http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4315a-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
14th August 2011, 10:35 PM
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்

அக்னி புத்ருடு(தெலுங்கு)

[14.8.1987 - 14.8.2011] : வெள்ளிவிழா ஆண்டின் தொடக்கம்

அரிய நிழற்படம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4319a-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
14th August 2011, 11:14 PM
அனைவருக்கும் ஆத்மார்த்தமான சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துக்கள் !

அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்

சாரங்கதரா

[15.8.1958 - 15.8.2011] : 54வது ஜெயந்தி

முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 15.8.1958
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4321a-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
15th August 2011, 05:08 AM
அனைவருக்கும் இதயபூர்வமான சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துக்கள் !

அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்

ராமன் எத்தனை ராமனடி

[15.8.1970 - 15.8.2011] : 42வது ஜெயந்தி

சாதனைப் பொன்னேடுகள்

முதல் வெளியீட்டு விளம்பரம் : பேசும் படம் : செப்டம்பர் 1970
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4336a-1.jpg


50வது நாள் : சிவாஜி ரசிகன் : 1.10.1970
[இந்த 'சிவாஜி ரசிகன்' சிறப்பு மலர், 1.10.1970 வியாழன் அன்று சென்னை S.I.A.A. திடலில் மிக பிரம்மாண்டமான முறையில் கொண்டாடப்பட்ட நடிகர் திலகத்தின் 43வது பிறந்தநாள் விழாவில் வெளியிடப்பட்ட மலர். இதன் தனிச்சிறப்பு என்னவென்றால், அதுவரை வெளிவந்திருந்த ஒவ்வொரு நடிகர் திலகத்தின் திரைப்படத்தினுடைய புகைப்படத்தையும் ஒரு பக்கம் அளித்து, அதன் கீழே அப்படம் குறித்த நடிகர் திலகத்தின் கருத்தையும் சேர்த்து ஒரு ஆல்பம் போல் கொடுத்திருந்தார்கள் மலர்க்குழுவினர். (இந்த மலரின் ஒவ்வொரு பக்கத்தையும் கூடிய விரைவில் இங்கே பதிவிடுகிறேன்). இதன் பின்னர் 15.4.1972 தமிழ்ப் புத்தாண்டு முதல் 'சிவாஜி ரசிகன்' மாதமிருமுறை இதழாக வெளிவரத் துவங்கியது. 'சிவாஜி ரசிகன்' முதல் இதழின் (15.4.1972) முன் அட்டையை சமீபத்தில் 15.7.2011 பெருந்தலைவரின் பிறந்தநாளன்று, இங்கே நிழற்படமாகப் பதிவிட்டேன் என்பதனைப் பணிவுடன் கூறிக் கொள்கிறேன்.]
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4330a-1.jpg


29.10.1970, தீபாவளித் திருநாளான 76வது நாளன்று, 'தினத்தந்தி' மதுரைப் பதிப்பில் வெளியான விளம்பரம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4329a-1.jpg


100வது நாள் : தினத்தந்தி : 22.11.1970
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4324a-1.jpg

["ராமன் எத்தனை ராமனடி" தமிழகத்தில் நேரடியாக ஒரு அரங்கில் 100 நாட்களைக் கடந்த சூப்பர்ஹிட் காவியம். ஆனால் தமிழகத்தில் மட்டும் நேரடியாக 8 அரங்குகளில் 100 நாட்களைக் கடந்து மெகாஹிட் காவியமாக ஆகியிருக்க வேண்டும். 29.10.1970 அன்று தீபாவளி வாலாக்களாக "எங்கிருந்தோ வந்தாள்" காவியமும், "சொர்க்கம்" காவியமும் வெளியானதால் மதுரை தவிர்த்து 7 அரங்குகள் பறிபோயின. இல்லையென்றால் 75 நாட்களில் பெருங்கூட்டத்துடன் எடுக்கப்பட்ட சென்னை (சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி), திருச்சி(பிரபாத்), நெல்லை(ரத்னா), சேலம், கோவை ஆகிய 5 ஊர்களிலும் (7 அரங்குகளிலும்) 100 நாட்களைக் கடந்து இமாலய வெற்றியை அடைந்திருக்கும். நமது படங்களே நமது படங்களுக்குப் போட்டி. தருமி போல் புலம்புவதைத் தவிர நாம் வேறென்ன செய்ய முடியும் !]

தொடரும்.....

அன்புடன்,
பம்மலார்.

pammalar
15th August 2011, 05:35 AM
அனைவருக்கும் உளங்கனிந்த சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துக்கள் !

அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்

எழுதாத சட்டங்கள்

[15.8.1984 - 15.8.2011] : 28வது ஆரம்பதினம்

பொக்கிஷப் புதையல்

முதல் வெளியீட்டு விளம்பரம் : தினமணி : 15.8.1984
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4325a-2.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
15th August 2011, 05:45 AM
அனைவருக்கும் மனமார்ந்த சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துக்கள் !

அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்

ஒரு யாத்ராமொழி(மலையாளம்)

[15.8.1997 - 15.8.2011] : 15வது உதயதினம்

பொக்கிஷப் புதையல்

முதல் வெளியீட்டு விளம்பரம் [மூன்றாவது வாரம் வெற்றிநடைபோடும் விளம்பரம்]
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4327a-1.jpg

[டியர் முரளி சார், மலையாளத்தில் உள்ள இந்த விளம்பரத்தை தமிழில் மொழிபெயர்த்துத் தருமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.]

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
15th August 2011, 05:58 AM
http://www.indiafun.net/wp-content/uploads/2011/01/Indian-Flag-Animated-Wallpaper-2.gif

அனைவருக்கும் உளமார்ந்த இந்திய விடுதலை நாள் வாழ்த்துக்கள்

டியர் பம்மலார்,

முதல் குரல் பொம்மை பக்கங்கள், அகனி புத்ருடு ஸ்டில், ராமன் எத்தனை ராமனடி 50வது நாள், 75வது நாள், 100வது நாள், எழுதாத சட்டங்கள், ஒரு யாத்ரா மொழி விளம்பரங்கள் என 15.08.2011ஐ சிறப்பாக வரவேற்று விட்டீர்கள். உங்களுடன் நாங்கள் அனைவரும் சேர்ந்து மகிழ்வுறுவோம். நன்றி, வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

அன்புடன்

pammalar
15th August 2011, 05:59 AM
என்றென்றும் "முதல் மரியாதை"க்கு உரியவர் வருகிறார்.....

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/MM1-1.jpg

RAGHAVENDRA
15th August 2011, 06:01 AM
அக்னி புத்ருடு திரைப்படத்தில் மிகச்சிறிய நேரமே நடிகர் திலகத்தின் பாத்திரம் பங்கு பெறும்.
அதனுடைய ஒளிப் பிரதி இணையத்தில் இணைப்பு தென்பட்டால் நாம் பகிர்ந்து கொள்ளலாம்.

அன்புடன்

RAGHAVENDRA
15th August 2011, 06:02 AM
முதல் மரியாதை பெற்ற நாயகனுக்கு முதல் மரியாதை அளிக்கும் பம்மலாருக்குப் பாராட்டுக்கள்.

pammalar
15th August 2011, 06:13 AM
டியர் ராகவேந்திரன் சார்,

தங்களின் மனம் திறந்த பாராட்டுக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் !

சுதந்திரத் திருநாளுக்காக தாங்கள் பதிவிட்டிருக்கும் அழகிய மல்டிமீடியா நிழற்படம் கண்கொள்ளாக் காட்சி !

நமது தேசிய திலகம் கூறியுள்ளது போல், விடுதலை நாளை நாம் அனைவரும் ஒருசேர கொண்டாடி மகிழ்வோம் !

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
15th August 2011, 06:13 AM
வண்ண மரியாதை

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/mmcolored.jpg

படம் உதவிக்கு நன்றி- பம்மலார் அவர்கள்

RAGHAVENDRA
15th August 2011, 06:19 AM
அனைவருக்கும் சிறப்பு வாழ்த்துக்கள்

தனிப்பட்ட திரியில் 3000 பதிவுகளை இத்திரி - நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பாகம் 7 - கடந்துள்ளது. இந்த ஹப்பில் வேறு ஏதேனும் திரி இந்த அளவினை எட்டியுள்ளதா என்பதை முரளி சார், அல்லது ஒருஙகிணைப்பாளர்கள் விளக்க வேண்டும். அப்படி வேறு எத்திரியிலும் அந்த அளவினை எட்டவில்லை என்றால், இதுவும் ஒரு சாதனையே..

அன்புடன்

RAGHAVENDRA
15th August 2011, 07:10 AM
அக்னி புத்ருடு திரைப்படத்தில் நடிகர் திலகம் தோன்றும் காட்சிகள். ஏ.நாகேஸ்வரராவ் அவர்களுடன் நடித்த நடிகர் திலகம், அவருடைய புதல்வர் நாகார்ஜுனா அவர்களுடனும் நடித்துள்ள காட்சியை இப்படத்தில் காணலாம்.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Decorated%20images/NTinAgniPutrudufw.jpg

அன்புடன்

vasudevan31355
15th August 2011, 07:44 AM
அன்பு பம்மலார் சார்,

சுதந்திர தின வாழ்த்துக்கள். உங்களை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. என்ன அசத்தலான உழைப்பு! ஹப்-இன் பக்கங்கள் உங்களாலும், திரு.ராகவேந்திரன் சாராலும் வைரப் பக்கங்களாய் ஜொலிக்கின்றன.கோடானு கோடி நன்றிகள் எனும் வார்த்தைகளை உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து தெரிவித்துக் கொள்கிறேன்.

"முதல் குரல்" பற்றிய 'பொம்மை' யில் v.c. குகநாதன் அவர்களின் பேட்டி,
கிடைத்தற்கரிய அண்ணலின் "அக்னிபுத்ருடு" நிழற்படம்,
'சாரங்கதாரா' வின் முதல் வெள்யீட்டு விளம்பரம்,
"ராமன் எத்தனை ராமனடி" யின் 50 மற்றும் 100-ஆவது நாள் விளம்பரங்கள்,
'எழுதாத சட்டங்கள்" மற்றும் "யாத்ரா மொழி காவியங்களின் விளம்பரங்கள்,
"முதல் மரியாதை" நிழற் படங்கள்,
என புகுந்து விளையாடி விட்டீர்கள்.

நன்றி! நன்றி! நன்றி!

நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

vasudevan31355
15th August 2011, 08:02 AM
டியர் ராகவேந்திரன் சார்,

என் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

'வண்ண மரியாதை' யில் உங்கள் அபார உழைப்பும், திறமையும் பளிச்சிடுகிறது.
சூப்பரோ சூப்பர்! இதுவரையில் நான் காணாத அக்னிபுத்திரரின் "அக்னிபுத்ருடு" படக் காட்சிகள் வெகு பிரமாதம். அதற்காக உங்களுக்கு என் 'ஸ்பெஷல்' நன்றிகள்.

சுதந்திரத் திருநாளுக்காக தாங்கள் பதிவிட்டிருக்கும் அழகிய மல்டிமீடியா நிழற்படம் நெஞ்சை அள்ளுகிறது. எப்படி சார் இப்படியெல்லாம்?.....

நன்றி! நன்றி!

அன்பு வாழ்த்துக்களுடன்,

நெய்வேலி வாசுதேவன்.

vasudevan31355
15th August 2011, 08:26 AM
அன்பு நண்பர்களே,

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள். சுதந்திரத்திற்க்காக பாடுபட்ட அரும்பெரும் தலைவர்களை நம் கண் முன் நிறுத்திய தன்னிகரில்லா உயர்ந்த மனிதர், நடிக மாமேதை, நடிப்புப் பல்கலைகழகம், புகழ் விரும்பா புண்ணியபுருஷர், எங்கெங்கோ இருந்த நம்மையெல்லாம் தன் சீர்மிகு நடிப்பால் ஒன்றிணைத்து சகோதரர்களாக்கி, பாசத்தையும், நேசத்தையும் ஊட்டி வளர்த்த பாசமலர், 'அன்னை இல்லம்' கண்ட, கருணை உள்ளம் கொண்ட நம் தங்க ராஜா, கலைக்குரிசில் அவர்களின் நினைவாக இதோ உங்களுக்காக,

வாஞ்சி நாதன்.


http://www.youtube.com/watch?v=7AeGzAQTOVg&feature=player_detailpage

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

RAGHAVENDRA
15th August 2011, 08:33 AM
அன்புமிக்க வாசுதேவன், பம்மலார் மற்றும் நண்பர்களுக்கு,
தங்கள் பாராட்டுக்களுக்கு என் உளமார்ந்த நன்றிகள்.
நம் நாட்டுக் கொடியின் மல்டி மீடியா படம் வேறொரு இணைய தளத்தில் பதியப்பட்டு இங்கு இணைப்புக் கொடுக்கப் பட்டுள்ளது. அவ்வளவுதான். எனவே தங்கள் பாராட்டுக்களை அந்த நிழற்படத்தை உருவாக்கியவருக்கே சமர்ப்பணம்.

அன்புடன்

RAGHAVENDRA
15th August 2011, 08:40 AM
உலகம் போற்றும் உத்தமக் கலைஞனின் முதல் மரியாதை நிழற்படங்களே பார்க்கப் பார்க்க புதுப்புது பரிணாமங்களை அளித்துக் கொண்டே போகும் என்றால் படம் - கேட்கவா வேண்டும். நிழற்படங்களுக்காக சம்பந்தப் பட்ட இணையதளங்களுக்கு நமது நன்றிகள்.

http://img600.imageshack.us/img600/5084/99767554.png

http://img36.imageshack.us/img36/2391/41224796.png

http://img840.imageshack.us/img840/3453/42773812.png

நிகரில்லா இனிமையுடனும் மண்ணின் மணத்துடனும் வைரமுத்து, இளையராஜா கூட்டணியில் தமிழ்த்திரையுலகின் வரலாற்றில் தனக்கெனத் தனி இடம் பிடித்த பாடல்களில் ஒன்று நம் பார்வைக்காக. வெட்டி வேரு வாசம் - எங்கள் திலகத்தின் வேசம்


http://www.youtube.com/watch?v=GiZYQs-MAK4

அன்புடன்

RAGHAVENDRA
15th August 2011, 09:21 AM
வீரன் வாஞ்சிநாதனை நமக்குரைத்த காட்சிக்கு நன்றி வாசுதேவன் சார்.

இதே போல் நமக்கு நடிகர் திலகம் எடுத்துரைத்த மற்றொரு விடுதலைப் போராட்ட வீரரை நினைவு கூர்வோம்.

பாஞ்சாலங்குறிச்சியிலுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை

http://www.madurawelcome.com/thoothukudi/Tho-img/Panchalankurichi_fort.jpg

நடிகர் திலகம் அமைத்துக் கொடுத்த கட்டபொம்மன் திருவுருவச் சிலை. இவ்வளவு பெரிய பீடம் தமிழ்நாட்டில் வேறு எந்த சிலைக்கும் உள்ளதா என்று அறிய வேண்டும்.

http://www.madurawelcome.com/thoothukudi/Tho-img/memorial_kattabomman.jpg

கட்டபொம்மன் நினைவிடத்தின் உட்புறத் தோற்றம்

http://www.dhool.com/gifs/vpk/VPK-memorial.jpg

வீரபாண்டிய கட்டபொம்மனாக நடிகர் திலகம்

http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcQx09lbS7qs01vKTNfy21o9TUvPwImo7 vYwUOc-6xPlAUEdQ7li

vasudevan31355
15th August 2011, 10:43 AM
வ.உ.சி- ஆக வாழ்ந்து காட்டிய நடிப்புலக வேந்தர்.

http://tamilnation.co/images/hundredtamils/sivajiVOC.jpg

'செக்கிழுத்த செம்மல்' வ.உ,சி அவர்களை சுதந்திர தினத்தில் நினைவு கூர்வோம்.

வ.உ.சி அவர்கள் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோயம்புத்தூர் மத்திய சிறைச் சாலையில் சிறை வைக்கப்பட்ட இடம்.

http://tamilnation.co/images/hundredtamils/voc3.jpg

வ.உ.சி அவர்கள் உடல் வருத்தி இழுத்த செக்கு.

http://tamilnation.co/images/hundredtamils/voc4.jpg

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

pammalar
15th August 2011, 03:02 PM
டியர் ராகவேந்திரன் சார்,

வண்ண மரியாதைக்கு வளமான நன்றி !

"அக்னி புத்ருடு" மற்றும் "முதல் மரியாதை" ஸ்டில்ஸ் அசத்தல் !

'வெட்டி வேரு வாசம்' மனதைக் கட்டிப் போட்டு விட்டது !

வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவுக்கோட்டை, நினைவிடத்தின் உட்புறம், தேசிய திலகம் அமைத்துக் கொடுத்த கட்டபொம்மனின் திருவுருவச்சிலை, கட்டபொம்மனாக தேசிய திலகம் முதலியவை உள்ளிட்ட நிழற்பட ஆல்பம் உள்ளத்தை ஈர்த்துக் கண்களைக் குளமாக்கின. சுதந்திரத் திருநாளன்று இந்த அரிய தேசிய பொக்கிஷங்களை இங்கே பதிவிட்டமைக்கு தங்களுக்கு எனது பொன்னான நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
15th August 2011, 03:16 PM
டியர் நெய்வேலி வாசுதேவன் சார்,

இதயத்தின் அடித்தளத்திலிருந்து தாங்கள் அளித்திருக்கும் உணர்ச்சிமயமான பாராட்டுக்களுக்கு எனது இதயபூர்வமான நன்றிகள் !

வீரவாஞ்சி வீடியோவை விடுதலைத் திருநாளன்று வெளியிட்ட தங்களுக்கு வீர வணக்கங்கள் !

செக்கிழுக்கும் செம்மல் வ.உ.சி.யாக தேசிய செம்மல், கப்பலோட்டிய தமிழர் இருந்த சிறை அறை, அவர் இழுத்த செக்கு ஆகியவை கொண்ட ஆல்பப்பதிவு உடலுக்குள் புகுந்து, உயிருடன் கலந்து ஆன்மாவைத் தொட்டது. விடுதலைத் திருநாளன்று இந்த இந்தியப் பொக்கிஷங்களை இடுகை செய்த தங்களுக்கு இனிய நன்றிகள் !

"பெற்ற சுதந்திரத்தை பேணிக் காப்போம்" என்று சூளுரைப்போம் !

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
15th August 2011, 06:17 PM
அனைவருக்கும் இனிய சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துக்கள் !

அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்

முதல் மரியாதை

[15.8.1985 - 15.8.2011] : 27வது உதயதினம்

சாதனை வசந்தங்கள்

முதல் வெளியீட்டு விளம்பரம் : தினமணி : 15.8.1985
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4328-1.jpg

90வது நாள் : தினத்தந்தி : 11.11.1985
[தீபாவளித் திருநாளான 11.11.1985 திங்கள் [89வது நாள்] அன்று அளிக்கப்பட்ட விளம்பரம்]
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4334a-1.jpg
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4334b.jpg

தொடரும்.....

அன்புடன்,
பம்மலார்.

rangan_08
15th August 2011, 06:32 PM
Mr. Partha Sarathy, your feelings about Raman Ethanai Ramanadi was nice. Let's hope to see it in Shanthi theatre, soon.

Dear Mr. Neyveli Vasudevan sir, thanks for your kind words.

Dear Pammalar sir, you're rocking as usual with those rare paper cuttings, photos, news etc !! Great.

pammalar
15th August 2011, 08:00 PM
அனைவருக்கும் இனிய சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துக்கள் !

அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்

முதல் மரியாதை

[15.8.1985 - 15.8.2011] : 27வது உதயதினம்

சாதனை வசந்தங்கள் தொடர்கின்றன.....

100வது நாள் : தினத்தந்தி : 22.11.1985
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4332a.jpg
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4332b-1.jpg
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4333.jpg
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4343a.jpg

தொடரும்.....

அன்புடன்,
பம்மலார்.

pammalar
15th August 2011, 09:11 PM
அனைவருக்கும் இனிய சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துக்கள் !

அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்

முதல் மரியாதை

[15.8.1985 - 15.8.2011] : 27வது உதயதினம்

சாதனை வசந்தங்கள் தொடர்ந்து நிறைகின்றன

வெள்ளிவிழா : தினத்தந்தி : 7.2.1986
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4342a-2-1.jpg
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4342b.jpg

அன்புடன்,
பம்மலார்.

Murali Srinivas
15th August 2011, 09:30 PM
வெல்க பாரதம்! வாழ்க எம்மக்கள்!

அனைவருக்கும் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள்.

ராகவேந்தர், சுவாமிநாதன், வாசுதேவன் நீங்கள் மூவரும் மும்மூர்த்திகளாய் செயல்பட்டு பதிந்த அத்தனை படங்களுக்கும் நன்றி! நன்றி! நன்றி!

சுவாமி, குறிப்பாக யாத்ரா மொழியின் விளம்பரத்திற்கு மிக்க நன்றி!

முதலில் மலையாளத்தில் எழுதப்பட்டிருக்கும் வரிகள்!

ஸ்த்ரீ ஜனங்களுட நிலய்க்காத பிராவஹம்
ஒரு சத்யத்தினு அடிவரையிடுனு
இதான்னு 97- லெ மோகன்லாலின்ட மிகச்ச குடும்பச்சித்திரம்!

அதன் தமிழ் மொழியாக்கம் இதோ!

ஓயாத கடலைலைகளாய் திரண்டு வரும் பெண்கள் கூட்டம்
ஒரு உண்மையை அடிக்கோடிட்டு சொல்கிறது!
இதுதான் 97-ல் மோகன்லாலின் சிறந்த குடும்பச்சித்திரம்!

அனுகிரஹா சினி ஆர்ட்ஸ்

ஒரு யாத்ரா மொழி

பிரதாப் போத்தன்
பிரியதர்ஷன்
ஜான் பால் - [திரைக்கதை வசனம்]
வி.பி.கே.மேனன் [தயாரிப்பு]
இளையராஜா
பி.லெனின்
அனுகிரஹா சினி ஆர்ட்ஸ் ரிலீஸ்

3 -ம் வாரம்

திருவனந்தபுரம் - அஞ்சலி
எர்ணாகுளம் - சவிதா
கொல்லம் -பிரணவம்
திருச்சூர் - ஜோஸ்
ஆலப்புழா- சாந்தி
புனலூர் -ராம்ராஜ்
பாலக்காடு -பிரியதர்ஷினி
பாலா - மகாராணி
கருநாகப்பள்ளி - ஸ்ரீகிருஷ்ணா
பந்தளம் - அஸ்வதி
சாலக்குடி -அக்கர
குருவாயூர் - அப்பாஸ்
கண்ணணூர் - சங்கீதா
நிலம்பூர் - கீர்த்தி
ஹரிபாட் -எஸ்.என்.
காங்கநாடு - ஸ்ரீவிநாயக்
கல்லர- மகாவீர்
ஆட்டிங்கல் - ஆர்.என்.பி
திரூர் - விஸ்வாஸ்
வடகர - ஜெயபாரத்
மூவாட்டுபுழா - லதா

2-ம் வாரம்

கோழிகோடு - டேவிஸன்
கொடுங்கல்லூர் - எஸ்.என்.
சங்கனாஸேரி -அப்சரா

28-08-97 முதல்

கோட்டயம் -அனுபமா

அன்புடன்

pammalar
16th August 2011, 12:19 AM
அனைவருக்கும் இதயபூர்வமான சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துக்கள் !

அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்

ராமன் எத்தனை ராமனடி

[15.8.1970 - 15.8.2011] : 42வது ஜெயந்தி

காவியப் பொக்கிஷங்கள் தொடர்ந்து நிறைகின்றன

அரிய புகைப்படம் : சத்ரபதி சிவாஜி
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/Shivaji1-1.jpg


அரிய புகைப்படம் : ஆக்டர் விஜயகுமார்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/RER100-1.jpg


பத்திரிகை நிழற்படம் : பேசும் படம் : ஜூலை 1970
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4344a-1-1.jpg


வரலாற்று ஆவணம் : பேசும் படம் : செப்டம்பர் 1970
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4340a.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
16th August 2011, 12:28 AM
டியர் முரளி சார்,

பாராட்டுக்கு நன்றி !

"ஒரு யாத்ராமொழி" மலையாள விளம்பரத்தை தமிழாக்கம் செய்து அளித்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றி !

Dear Rangan Sir,

My sincere thanks for your special appreciation.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
16th August 2011, 04:55 AM
அனைவருக்கும் ஆத்மார்த்தமான சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துக்கள் !

சுதந்திரத் திருநாள் ஸ்பெஷல்

வரலாற்று ஆவணங்கள் : சிவாஜி ரசிகன் : 15.8.1973
[உதவி : நல்லிதயம் திரு.ஜி.மாணிக்கவாசகம்]

அட்டைப்படம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4348a-1.jpg


சுதந்திர பாரதம் குறித்து தேசிய திலகம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4349a-1.jpg

பக்தியுடன்,
பம்மலார்.

vasudevan31355
16th August 2011, 02:53 PM
அன்பு நண்பர்களே,

நடிகர் திலகத்தின் 136-ஆவது வெற்றிப் படைப்பு "தர்த்தி" ஹிந்திப் படமாகும்.

இயக்குனர் ஸ்ரீதர் அவர்களின் இயக்கத்தில் உருவான "சிவந்த மண்" ணின் ஹிந்திப் பதிப்பே "தர்த்தி' ஆகும். தமிழில் முத்துராமன் அவர்கள் நடித்த 'ஆனந்த்' என்ற கதாபாத்திரத்தை ஹிந்தி 'தர்த்தி' யில் நடிகர் திலகம் அவர்கள் அதி-அற்புதமாகச் செய்திருந்தார்.

நடிகர்திலகத்தின் அந்த அற்புத நடிப்புக் காட்சிகள் அனைத்தையும் ஒலி- ஒளிக் காட்சிகளாக இங்கே வெளியிட்டுள்ளேன். அதிகமாகக் காண முடியாத அரிய காட்சிகள் உங்கள் அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும் என்று நம்புகிறேன். இனி..... இதோ நடிகர் திலகம்.......


http://www.youtube.com/watch?v=lZBZt40ZhZ4&feature=player_detailpage


http://www.youtube.com/watch?v=A0plsvQDcbA&feature=player_detailpage


http://www.youtube.com/watch?v=crCsNMnQ4s8&feature=player_detailpage


http://www.youtube.com/watch?v=SzIdXkNHOdY&feature=player_detailpage



அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

groucho070
16th August 2011, 03:32 PM
vasudevan31355, thank you so much for the links. Truly appreciate it.

abkhlabhi
16th August 2011, 04:39 PM
அனைவருக்கும் ஆத்மார்த்தமான சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துக்கள்


http://abkhlabhi.blogspot.com/2011_08_01_archive.html

RAGHAVENDRA
16th August 2011, 05:11 PM
டியர் வாசுதேவன்,
சிவந்த மண் ஹிந்தி பதிப்பான தர்த்தி திரைப்படத்தில் நடிகர் திலகத்தின் பாத்திரத்தை காட்சிக்களித்து அனைத்து ரசிகர்களின் உள்ளங்களிலும் உவகையூட்டியுள்ளீர்கள். நன்றிகள், பாராட்டுக்கள், மற்றும் வாழ்த்துக்கள்.

அன்புடன்

RAGHAVENDRA
16th August 2011, 05:12 PM
டியர் பாலகிருஷ்ணன்,
தாங்கள் தரவேற்றியுள்ள நடிகர் திலகத்தின் நிழற்படங்கள் சிம்ப்ளி சூப்பர். நன்றி.
அன்புடன்

RAGHAVENDRA
16th August 2011, 05:14 PM
டியர் பம்மலார்,
அடியேனை தரதரவென இழுத்து 1970 ஆகஸ்ட் 15 சாந்தி திரையரங்கிற்கு அழைத்துச் சென்று, தங்களுடைய நிழற்படங்களை நுழைவுச் சீட்டாக்கி, அமர்த்தி விட்டீர்கள். I may find it difficult to recover from the hangover.

நன்றி

அன்புடன்

RAGHAVENDRA
16th August 2011, 05:16 PM
டியர் முரளி சார்,
ஒரு யாத்ரா மொழியை ஒரு மலையாள மொழியிலிருந்து ஒரு தமிழ் மொழியாக்கி, மொழிகளைக் கடந்த மொழிஞாயிறின் பெருமையைத் தங்களுக்கே உரிய மொழியில் உரக்கச் சொல்லி விட்டீர்கள்.
நன்றி, பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

அன்புடன்

abkhlabhi
16th August 2011, 05:25 PM
http://www.youtube.com/watch?v=Jtbhd9hW9nc

http://www.youtube.com/watch?v=GL6Zpcs6qC8

abkhlabhi
16th August 2011, 05:27 PM
http://www.youtube.com/watch?v=gLZhNgF3Z0s

abkhlabhi
16th August 2011, 05:31 PM
http://www.youtube.com/watch?v=DEmwfeVkFCw
http://www.youtube.com/watch?v=ONyl2buf-dE

abkhlabhi
16th August 2011, 05:38 PM
http://www.youtube.com/watch?v=a3IQKvcZEPQ

abkhlabhi
16th August 2011, 05:41 PM
http://www.youtube.com/watch?v=ij1XPqCSVOA

abkhlabhi
16th August 2011, 05:50 PM
http://www.youtube.com/watch?v=hQ3OXH8kATI

abkhlabhi
16th August 2011, 05:50 PM
http://www.youtube.com/watch?v=O_C7tmtR9Us

abkhlabhi
16th August 2011, 05:56 PM
http://www.youtube.com/watch?v=Dbns1Bx7igU
http://www.youtube.com/watch?v=44kKiFFzPic
http://www.youtube.com/watch?v=ugAGbCydfGU

abkhlabhi
16th August 2011, 05:58 PM
http://www.youtube.com/watch?v=Pqf81uPc0Kk

http://www.youtube.com/watch?v=-Ddm_esNPZY

abkhlabhi
16th August 2011, 06:03 PM
http://www.youtube.com/watch?v=2vxkYyE9h0s

abkhlabhi
16th August 2011, 06:05 PM
http://www.youtube.com/watch?v=L49zpCipbak

goldstar
16th August 2011, 06:13 PM
Thanks Vasu sir very rare Dharti videos?

Pammalar sir, can we get Dharti's Chennai records?

Murali sir, in which Madurai theatre Dharti released and how was the first day first show?

Cheers,
Sathish

RAGHAVENDRA
16th August 2011, 08:39 PM
டியர் சதீஷ்,
தர்த்தி திரைப்படம் சென்னையில் ஜூன் 1971ல் பிராப்தம் படத்தை எடுத்து விட்டுத் திரையிடப் பட்டது. சென்னையில் அத்திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பிருந்தது. ஆனால் திரையரங்கம் குறைந்த காலத்திற்கே கிடைத்த காரணத்தால் அதிக நாட்கள் திரையிடப்படவில்லை. பம்பாய் நகரத்தை விட அதிகமாக பெங்களூருவிலும் தில்லியிலும் வரவேற்பைப் பெற்ற படம் தர்த்தி.

சென்னை மிட்ல்ண்ட் திரையரங்கில் அரங்கு நிறைந்த காட்சியில் முதல் நாள் பார்த்தது மறக்க முடியாத அனுபவம்.

தங்களுக்காக மிட்லண்ட் திரையரங்கில் தர்த்தி வெளியீட்டிற்கான சித்ராலயா வார இதழ் விளம்பரம்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/DarthiChitralayaAdfw.jpg

இவ்விளம்பரத்தில் நடிகர் திலகம் நடித்த முதல் ஹிந்தி திரைப்படம் என விளம்பரப் படுத்தியிருந்தனர். ஏற்கெனவே ஸ்கூல் மாஸ்டர் ஹிந்தி பதிப்பிலும், மனோஹர் ஹிந்தி பதிப்பிலும் நடித்திருந்தார். என்றாலும் இது நடிகர் திலகத்தின் முதல் ஹிந்தி வண்ணப் படம் என்று சொல்லலாம்.

அன்புடன்

RAGHAVENDRA
16th August 2011, 08:51 PM
1972ம் ஆண்டில் நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழாவின் போது சிவாஜி ரசிகன் பேட்ஜ் ரசிகர்களுக்கு வழங்கப் பட்டது. வசந்த மாளிகை திரைப்படத்தை அக்டோபர் 1, 1972 அன்று சாந்தி திரையரங்கில் பார்த்த பொழுது அனைத்து ரசிகர்களுக்கு்ம் வழங்கப் பட்ட பேட்ஜ், அடியேனுக்கும் கிடைக்கப் பெற்றேன். அதனுடைய நிழற்படம் இதோ

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Decorated%20images/sivajirasiganbadgefw-1.gif

அன்புடன்

vasudevan31355
16th August 2011, 10:06 PM
டியர் ராகவேந்திரன் சார்,

'தர்த்தி' க்கான தங்களின் பாராட்டுதல்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமுவந்த நன்றி.
தாங்கள் பதிவு செய்துள்ள சித்ராலயா இதழின்' தர்த்தி' முதல் நாள் வெளியீட்டு விளம்பரம் அரிய ஒன்று. அதைப் பார்த்து அனுபவித்து மகிழ்ந்தேன்.
எள் என்றால் எண்ணையாக நிற்கும் தங்களின் பணி தொடரட்டும். நன்றி! வாழ்த்துக்கள்!

Dear goldstar sir,

Many many thanks.

Dear groucho070 sir,

Lot of thanks for your lovely reply.

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

vasudevan31355
16th August 2011, 10:25 PM
அன்பு முரளி சார்,

"ஒரு யாத்ரா மொழி" மலையாளத் திரைப்படத்தின் விளம்பரத்தை மிக அழகாக தமிழ் மொழியாக்கம் செய்திருந்தீர்கள். என்னைப் போன்ற மலையாள மொழி தெரியாத அனைவருக்கும் பேருதவி புரிந்து விட்டீர்கள். அருமை! அருமை! அன்பு நன்றிகள்!

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

Murali Srinivas
16th August 2011, 11:50 PM
வாசுதேவன் சார்,

எனக்கு எதற்கு நன்றியெல்லாம்? நான் செய்தது வெறும் ஒரு மொழி பெயர்ப்புதானே! நீங்கள் இன்று கொடுத்திருக்கும் தர்த்தி சுட்டிக்கு நாங்களல்லவா நன்றி சொல்ல வேண்டும்!

கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு மறைந்து கொள்ளும் புரட்சி வீரன் பேச்சுக் குரலின் மூலம் வந்திருப்பவன் தன் நண்பன் பாரத் என தெரிந்தவுடன் அந்த profile போஸில், தன் கண்கள் வழியாக அந்த நட்பையும் வாஞ்சையையும் வெளிப்படுத்துகிறாரே, அந்த ஒரு காட்சி போதும் படத்தில் நடித்த அனைவரையும் தூக்கி சாப்பிட்டுவிட்டு போக!

சதீஷ்,

தர்த்தி மதுரையில் வெளியாகவில்லை. என்ன காரணம் என்று தெரியவில்லை. சென்னையிலே மிக தாமதமாகத்தான் வெளியானது. 1970 பிப்ரவரி 6 அன்று வட இந்தியாவில் வெளியான இந்தப்படம் [அதே நாளில்தான் விளையாட்டுப் பிள்ளை தமிழகத்தில் சென்னை தவிர்த்து மற்ற ஊர்களில் வெளியானது] சென்னையிலேயே 1971 ஜூன் 4 அன்றுதான் வெளியானது. மிட்லாண்டில் வெளியான இந்த ஸ்ரீதர் படம் ஜூன் 18 அன்று அதே ஸ்ரீதரின் அவளுக்கென்று ஓர் மனம் படத்திற்காக மாறிக் கொடுத்தது.

[இந்த நேரத்தில் நமது மதுரையின் பெருமையையும் சொல்லி விடலாம். பிராப்தம் படத்தை பற்றி ராகவேந்தர் சார் குறிப்பிட்டார். அந்த பிராப்தம் திரைப்படம் தமிழகத்திலேயே அதிகபட்சமாக நமது மதுரை சென்ட்ரலில்தான் 65 நாட்கள் ஓடியது. அதுவும் அவளுக்கென்று ஓர் மனம் படத்திற்காகத்தான் மாற்றப்பட்டது].

பாலா,

அருமையான புகைப்படங்கள். குறிப்பாக மூன்று படங்களைப் பற்றி சொல்ல வேண்டும். விழா மேடையில் இரு பக்கமும் என்,டி.ஆரும் ஏ.என்.ஆரும் அமர்ந்திருக்க நடுவில் கம்பீரமான நடிகர் திலகம். இரண்டாவது ப்ரெஸ்டிஜ் பத்மநாபன். மூன்றாவது அந்த ஜிப்பா அணிந்த அந்த புகைப்படம். அது கூட சிவந்த மண் வெளியான காலக்கட்டத்தில் எடுக்கப்பட்ட படம். நன்றி!

அன்புடன்

pammalar
17th August 2011, 05:21 AM
டியர் வாசுதேவன் சார்,

கிடைத்தற்கரிய "தர்த்தி" ஒலி-ஒளிக் காட்சிகளுக்கு உளப்பூர்வமான நன்றிகள் !

தாங்கள், திலகத்தின் திரைக்காவியக்களஞ்சியம் என்பதனை ஊர்ஜிதப்படுத்திவிட்டீர்கள் !

தங்களின் வீடியோ பதிவைப் பாராட்டிய கோல்டுஸ்டார் சதீஷ் வினவிய வினாவுக்கு பதிலாக, 'சித்ராலயா' இதழில் வெளியான "தர்த்தி"யின் மிக அரிய சென்னை வெளியீட்டு விளம்பரத்தை வழங்கிய ராகவேந்திரன் சாருக்கு ஸ்பெஷல் நன்றிகள் !

"தர்த்தி" பற்றி மேலும் ஒரு பத்திரிகை ஆவணம்:

தர்த்தி(ஹிந்தி)

வரலாற்று ஆவணம் : பொம்மை : ஜனவரி 1968
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4351a-1.jpg
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4353a-1.jpg
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4354a-1.jpg

குறிப்பு:
1. இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது போல் நடிகர் திலகம் "தர்த்தி"யில் முக்கிய கதாபாத்திரத்தில்[ஆனந்த்] நடித்தார். ஆனால் நடிகர் ராஜேந்திரகுமார் "சிவந்த மண்"ணில் நடிக்கவில்லை. அந்த ஆனந்த் பாத்திரத்தை முத்துராமன் ஏற்று சிறப்பித்தார் என்பது அனைவரும் அறிந்ததே. என்ன காரணத்தினால் ராஜேந்திரகுமார் தமிழ்ப்பதிப்பிலிருந்து நடிக்காமல் விலகினார் என்பது அவருக்கே வெளிச்சம் !

2. "தர்த்தி"யில் ஆனந்த் பாத்திரத்தில் சில மணித்துளிகளே வந்தாலும், அதில் வாழ்ந்து காட்டியுள்ள நடிகர் திலகம், அப்பாத்திரத்தின் ஹிந்தி வசனங்களை அதியற்புதமாக முன்னணியில் உச்சரித்தார். பின்னணியில் வேறொரு கலைஞர் அவருக்கு குரல் கொடுத்தார்.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
17th August 2011, 05:45 AM
டியர் ராகவேந்திரன் சார்,

"ராமன் எத்தனை ராமனடி" நிழற்படங்களின் பதிவு, தங்களின் பசுமையான நினைவுகளை தூண்டிவிட்டதென்றால் அது நடிகர் திலகத்தின் கிருபைதான்.

தங்கள் மகிழ்ச்சி நான் பெற்ற பாக்கியம்.

தங்களின் பாராட்டுக்கு பணிவான நன்றி !

[1972-ம் ஆண்டு 'சிவாஜி பேட்ஜ்' மிக மிக அரியதொரு கலைப்பொக்கிஷம்].

டியர் பாலா சார்,

அபூர்வ புகைப்படங்களுக்கும், அருமையான சுட்டிகளுக்கும் அற்புத நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

vasudevan31355
17th August 2011, 07:16 AM
அன்பு பம்மல் சார்,

தங்களின் அன்புக்கும், பாராட்டுதல்களுக்கும் நன்றி! "தர்த்தி" பற்றிய தங்களது பங்களிப்பும் என்ன சும்மாவா?.. 'பொம்மை' இதழின் கட்டுரையை வெளியிட்டு பழைய நினைவுகளைக் கிளர்ந்து எழச் செய்து விட்டீர்கள். இந்த அரிய வரலாற்றுப் பக்கங்களை அன்பிற்குரிய என் தாயார் சேகரித்து வைத்திருந்தார்கள். அசந்தர்ப்பமாக தவறி விட்டது. ( என் தாயார் அவர்கள் அண்ணலின் பரம ரசிகை. சிறு வயதில் எனக்கு சாப்பாடு ஊட்டும் போது கூட நடிகர் திலகத்தின் பெயரைச் சொல்லிச் சொல்லித்தான் அவர்கள் என்னை ஊட்டி வளர்த்தார்கள். அவர்களுக்கு இந்த நேரத்தில் தங்கள் சார்பாகவும், நம் 'ஹப்' அங்கத்தினர்கள் சார்பாகவும் நன்றி கூறிக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன்).

அற்புதமான அந்த வரலாற்று ஆவணத்தை அளித்ததற்கு நன்றி!

டியர் முரளி சார்,

தங்களுக்கு என் மனம் கனிந்த நன்றிகள். நடிகர் திலகத்தின் அந்த குறிப்பிட்ட profile போஸை நீங்கள் வர்ணித்திருக்கும் விதமே அலாதி. அது மட்டுமல்ல..தட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது , கதவு தட்டப் பட்டவுடன் தட்டை வைத்துவிட்டு, படு கேஷுவலாக சாப்பிட்ட கையை பின்னால் சட்டையில் அவர் துடைத்துக் கொண்டே நடக்கும் அழகே அழகு!..என்ன ஒரு திறமை! எப்படிப்பட்ட ஒரு உடல் மொழி!

நன்றியுடன்,

நெய்வேலி வாசுதேவன்.

kumareshanprabhu
17th August 2011, 11:33 AM
hats of to you pammal sir

goldstar
17th August 2011, 11:57 AM
Thanks a lot Ragavendran and Pammalar and Murali sir.

As usual, "Naanga ellu entru sonna neenga yennaiya vanthu alli tharreenga".....

In English simply I say "Thank You"...

Cheers,
Sathish

mr_karthik
17th August 2011, 02:18 PM
அன்புள்ள பம்மலார் சார், ராகவேந்தர் சார், மற்றும் வாசுதேவன் சார்.....

வர வர நம்ம திரி 'ஜெட்' வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது. எல்லோரும் சேர்ந்து அசத்தலோ அசத்தல் என்று அசத்துகிறீர்கள்.

ஆகஸ்ட் 14-லிருந்து அள்ளித்தெளிக்கப்பட்ட காவியங்களின் ஆவணங்கள்தான் எத்தனை எத்தனை...

** 'மூன்று தெய்வங்கள்' விளம்பரங்கள், வீடியோ கவர், மற்றும் துக்ளக் விமர்சனம்.

** 'சாரங்கதாரா' விளம்பரங்கள் மற்றும் விமர்சனம்

** 'ராமன் எத்தனை ராமனடி' வெளியீடு, 50வது நாள், 75வது நாள், 100வது நாள் விளம்பர வரிசை, டிவிடி உறைகள் மற்றும் அபூர்வ புகைப்ப்படங்கள்

** 'ஒரு யார்த்ரா மொழி' பட விளம்பரம், அது தொடர்பான செய்தித்தொகுப்புகள்

** 'முதல் மரியாதை' பட விளம்பர வரிசை, புகைப்படத் தொகுப்பு, மற்றும் கட்டுரை.

** 'கட்டபொம்மன்' நினைவுக்கோட்டை, அதன் உட்புறத்தோற்றம், நடிகர்திலகம் அமைத்த கட்டபொம்மன் சிலை, படத்தில் அவரது ஆக்ரோஷமான தோற்றம். (ராகவேந்தர் சார், இவ்வளவு உயரமான சிலைப்பீடம் தமிழ்நாட்டில் கிடையாது. அதற்கு முன் உயரமானதாகக் கருதப்பட்ட சென்னை தாமஸ் மன்றோ சிலையின் பீடத்தை கட்டபொம்மன் தோற்கடித்தார். இதிலும் வெள்ளையனைத் தோற்கடித்த பெருமை அவருக்கே).

** 'கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சி. சிறை வைக்கப்பட்டிருந்த சிறைக்கூடம். அவர் இழுத்த செக்கு இவற்றின் காணக்கிடைக்காத புகைப்படங்கள். (இந்த சுதந்திர நாளை மிகச்சிறப்பாக கொண்டாடியது நமது திரிதான் என்பதில் மகிழ்ச்சி).

** 'சிவாஜி ரசிகன்' இதழின் சுதந்திர தின சிறப்பிதழ் அட்டைப்படம், உள்ளே நடிகதிலகத்தின் சிறப்புக்கட்டுரை, கண்கவர் சிவாஜி ரசிகன் பேட்ஜ்.

** பொன்விழாக் கொண்டாட்டத்தின் நிறைவுப்பதிகள்.

** 'தர்த்தி' படத்தின் காணக்கிடைக்காத விளம்பரம், அதில் நடிகர்திலகத்தின் பாத்திரம் பற்றிய 'பொம்மை' இதழின் கிடைத்தற்கரிய அரிய தகவல் பொக்கிஷங்கள்.

** இதுபோக, 'பாலா' அவர்கள் அள்ளியளித்த ஏராளமான வீடியோ தொகுப்புகள்.

அடேயப்பா.... அடேயப்பா.... அடேயப்பா....

சர்க்கஸில், ஒருபக்கம் பார் விளையாட்டு, ஒருபக்கம் சைக்கிள் சாகசங்கள், இன்னொருபக்கம் மிருகங்களின் சாகசங்கள், பிறிதொருபக்கம் கூண்டுக்குள் மோட்டார் சைக்கிள்கள் ஓட்டம் அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்கும்போது, எதைப்பார்ப்பது என்று காலரியில் உட்கார்ந்து விழி பிதுங்கிக்கொண்டிருக்கும் ரசிகனாக இருக்கிறேன் நான்.

எவ்வளவு ஆதாரங்கள், எவ்வளவு ஆவணங்கள்..... எல்லோரும் ஒரு முடிவோடுதான் இறங்கியிருக்கிறீர்கள்.

நன்றி...., நன்றி...., நன்றி...., நன்றி...., நன்றி...., நன்றி...., நன்றி...., நன்றி....

vasudevan31355
17th August 2011, 03:38 PM
டியர் கார்த்திக் சார்,

நமது திரியை ஆகஸ்ட்14-வரை திரும்ப ரீவைண்ட் செய்து பார்க்க வைத்தது உங்கள் அழகான விமர்சனம்.அதற்காக இதோ பிடியுங்கள் ஒரு சபாஷ்.....நன்றி சார்!....திரு.ராகவேந்திரன் சார் சொன்னது போல நமது திரி பல சாதனைகளைப் படைக்கப் போவது உறுதி. அந்த மனமகிழ்வோடு 'பண்பாளர்' திரு.பம்மலார் அவர்கள் சார்பாகவும், 'ரசிகவேந்தர்' திரு, ராகவேந்திரன் சார் அவர்கள் சார்பாகவும், என் சார்பாகவும் தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

parthasarathy
17th August 2011, 05:05 PM
வழக்கம் போல், நடிகர் திலகத்தின் காவியங்களின் ஆவணப் படங்களையும், செய்திதாள் சாதனை விளம்பரங்களையும், வீடியோ பதிவுகளையும் பதிவிட்டு அசத்திக் கொண்டிருக்கும் திரு. ராகவேந்தர் மற்றும் திரு. பம்மலார் அவர்களுக்கு எப்படி நன்றி கூறுவது என்று தெரியவில்லை.

சிவந்த மண்ணின் ஹிந்தி வடிவம் "தர்த்தி"-இல் இடம் பெற்ற நடிகர் திலகம் இடம் பெரும் காணக் கிடைக்காத வீடியோ காட்சிகளைப் பதிவிட்ட திரு. நெய்வேலி வாசுதேவன் சாருக்கு தனிப்பட்ட முறையில் மிக்க நன்றி. எப்போதெல்லாம் வட இந்தியாவுக்கு வேலை நிமித்தமாக செல்கிறேனோ அப்போதெல்லாம் இந்தப் படத்தின் இந்தி வடிவத்தைப் பெற முடிந்தவரையில் பிரயத்தனம் செய்தும், இது வரை வெற்றி அடைந்ததில்லை. இப்போது, நீங்கள் அந்தக் காட்சிகளைப் பதிவிட்டவுடன் சொல்லொணா மகிழ்ச்சியடைந்தேன். மிக்க நன்றி. திரு. முரளி அவர்கள் நடிகர் திலகத்தின் நடிப்பை (அந்த சைட் போஸ் முக பாவம்!) வர்ணித்த விதம் அருமை.

திரு. கார்த்திக் அவர்கள் குறிப்பிட்டது போல், இந்தத் திரி அற்புதமாக சென்று கொண்டிருக்கிறது.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

parthasarathy
17th August 2011, 05:06 PM
சென்ற வாரம், என்னுடைய கசின்கள் அனைவரும் ஒரு நிகழ்வுக்காக ஒன்று கூடினோம். எல்லோரும் ஒன்று கூடினால், பேச்சு எங்கெங்கோ சென்று கடைசியில், சினிமாவில் வந்து நிற்கும். சினிமாவில் வந்து கடைசியில், நடிகர் திலகத்தில் வந்து மையம் கொள்ளும். என்னுடைய அண்ணன் மகன், "போன வாரம் ஏதோ ஒரு சிவாஜி படத்தின் பாடலைப் பார்த்துக் கொண்டிருந்தோம்; உடனே, உன் நினைவு வந்து விட்டது" என்று சொன்னான். அப்படி பேசிக் கொண்டிருக்கும்போதே, கலைஞர் டிவியின் தேனும் பாலும் நிகழ்ச்சியில், "அவன் தான் மனிதன்" படத்தில் வரும் "ஊஞ்சலுக்குப் பூச்சூட்டி" பாடல் ஆரம்பித்தது. இது அத்தனை நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கும் பிடித்த பாடலாயிற்றே! நான் அவனிடம் சொன்னேன் "இந்தப் பாடலின் கடைசி சரணத்தில், அவர் மெரூன் கலரில் சட்டை அணிந்து கொண்டு வருவார். "இலக்கிய ரசத்தோடு என்று ஆரம்பிப்பதற்கு முன்னர், ஒரு மாதிரியான போஸில் ஆரம்பிப்பார். பாடிக் கொண்டே, கடைசியில், "ஓவிய சீமாட்டி .." எனும்போது, ஒரு ஸ்டைல் பண்ணுவார். பார்" என்று கூறி, வீட்டில் இருந்த அனைவரும், நினைவுகளில் மூழ்கி, சரியாக அந்தச் சரணம் துவங்கி முடிந்தவுடன், அந்த ஸ்டைல் வரவும், எல்லோரும் தங்களை மறந்து வீட்டிலேயே கைத்தட்ட, வீட்டிலிருந்த மற்றவர்கள் ஓடி வந்து பார்க்க, சுவையாக அந்தப் பகல் கழிந்தது.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

parthasarathy
17th August 2011, 05:11 PM
[QUOTE=rangan_08;725528]Mr. Partha Sarathy, your feelings about Raman Ethanai Ramanadi was nice. Let's hope to see it in Shanthi theatre, soon.
Dear Mr. Mohan Rangan,

Thanks. Raman Ethanai Raamanadi has always been one of my favourite Top Ten movies and it will remain so forever. I saw this movie in late 90's in Sangam theatre (I don't remember the no. count) along with 2 of my friends on a Sunday Matinee with Full House. I still remember the way the crowd went berserk from the scene NT enters his village as Actor Vijayakumar till the sad version of "Ammaadi Ponnukkuth Thanga Manasu"; especially, for this song when he elegantly touches his head after starting the song "thanga manasu ... thanga manasu... thanga manasu...".

Thanks once again,

R. Parthasarathy

KCSHEKAR
17th August 2011, 05:50 PM
தர்தி பற்றிய பதிவுகள் அருமை. நன்றி திரு.ராகவேந்திரன் & திரு.பம்மலார். ஒலி ஒளி காட்சிகளை இணைத்து மெருகூட்டிய திரு வாசுதேவன் அவர்களுக்கு நன்றி.

pammalar
17th August 2011, 07:57 PM
டியர் நெய்வேலி வாசுதேவன் சார்,

தங்களின் உயர்ந்த பாராட்டுக்களுக்கு எனது உளங்கனிந்த நன்றிகள் !

தங்களைப் போன்றதொரு ரசிக ரத்தினத்தை எங்களுக்கு தந்ததற்காகவே, தெய்வீக நடிகரின் சிகர ரசிகையான தங்களது அன்னையாருக்கு நாங்கள் என்றென்றும் நன்றிகளைக் காணிக்கையாக்கக் கடமைப்பட்டுள்ளோம் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
17th August 2011, 08:32 PM
டியர் mr_karthik,

தங்களின் பாராட்டுக்கு எனது நன்றி !

தாங்களும் ஆகஸ்ட் 14 & 15 இருதினங்களில் அளிக்கப்பட்ட ஆவணப்பதிவுகளை அழகுறப் பட்டியலிட்டு அசத்தி விட்டீர்கள். [அதில் ஒரு சிறுதிருத்தம் - "முதல் குரல்" காவியத்திற்குத்தான் கட்டுரை இடுகை செய்யப்பட்டது].

1986 பொன்விழாக் கொண்டாட்டங்கள் எமது அடுத்த பதிவில் நிறைவு பெறுகின்றன.

Dear kumareshanprabhu Sir, Thank you so much !

Dear goldstar Satish, My sincere thanks for your special praise !

டியர் பார்த்தசாரதி சார், பாராட்டுக்கும், பதிவுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றி !

டியர் சந்திரசேகரன் சார், நன்றி !

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
17th August 2011, 10:37 PM
அன்பு நண்பர்களுக்கு,
இயக்குநர் சிகரம் என்று அழைக்கப்படும் திரு கே.பாலச்சந்தர் அவர்களுக்கு ஹம்ஸத்வனி என்ற சபா சார்பில் நாளை, 18.08.2011 மாலை சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் விருது வழங்கப் படுகிறது. அதனுடைய அழைப்பிதழைக் கீழே தருகிறேன். அந்த அழைப்பிதழின் முன்பக்கத்தில் அந்த அமைப்பின் மின்னஞ்சல் தரப்பட்டுள்ளது. பாலச்சந்தர் அவர்களுக்கு விருது வழங்குவதைப் பற்றிய நமது கருத்து மாறுபாடு எதுவும் இல்லை. ஆனால் அவரைப் பற்றிய குறிப்பு பின்பக்கத்தில் அளிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் எழுதப் பட்ட அக்குறிப்பில், நடிகர் திலகத்தின் வாழ்க்கையில் பாலச்சந்தர் சார் மேம்படுத்தினார் என்று கிட்டத்தட்ட பொருள் வரும் வகையில் எழுதப் பட்டுள்ளது. அதனை அந்த நிழற்படத்தில் நாம் படிக்கலாம்.

இப்படிப்பட்ட அபத்தமான கருத்தை எழுதியது யார் எனத் தெரியவில்லை, அதைப் பற்றி நாம் கவலையும் படத்தேவையில்லை. ஆனால் அந்த அமைப்பிற்கு நாம் நமது எதிர்ப்பைத் தெரிவிப்பது கடமை என நான் எண்ணுகிறேன். நான் என் எதிர்ப்பைத் தனியாக அவர்களுக்கு தெரிவிக்க உள்ளேன். இதைப் படிக்கும் நம் நண்பர்கள் ஒவ்வொருவரும் தத்தம் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் என விரும்புகிறேன்.

தங்களுடைய தகவலுக்காக மின்னஞ்சல் முகவரி கீழே தரப்படுகிறது

info@hamsadhwani.org.in
hamsadhwani@vsnl.net

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/HamsadhwaniiKB01fw.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/HamsadhwaniiKB02fw.jpg

நாம் படிப்பதற்கு ஏதுவாக நடிகர் திலகத்தைப் பற்றிய கருத்து உள்ள பத்தி மட்டும் தனியாக ஹைலைட் செய்து காட்டப் பட்டுள்ளது.

அன்புடன்

pammalar
17th August 2011, 10:44 PM
'சாம்ராட் அசோகன்' ஓரங்க நாடகம் : "அன்னையின் ஆணை(1958)" திரைக்காவியம்

இந்த ஓரங்க நாடகம் மற்றும் முழுப்பட வசனம் : அமரர் முரசொலி மாறன்


http://www.youtube.com/watch?v=vh1k-W_bkCg
[இந்த வீடியோவில் 5 நிமிடம் 30 விநாடி சென்றபின் 'சாம்ராட் அசோகன்' ஓரங்க நாடகம் வருகிறது].

[தொடர்ந்து கீழ்க்கண்ட வீடியோ காட்சியில் முதல் நான்கு நிமிடங்கள் இந்த ஓரங்க நாடகம் தொடர்ந்து நிறைகிறது].

http://www.youtube.com/watch?v=_BIByVzdCmU&feature=related


இன்று 17.8.2011 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்-மத்திய அமைச்சர் அமரர் முரசொலி மாறன் அவர்களது 78வது பிறந்ததினம்.

பம்மல் ஆர்.சுவாமிநாதன்.

RAGHAVENDRA
18th August 2011, 12:08 AM
Text of my letter to Hamsadhwani


Dear Sir,
First let me convey my best wishes for the 21st Annual Day Program of the Hamsadhwani and congratulate Dadasaheb Phalke Award winner, Shri K.
Balachander for being chosen for the confernment of the Distinguished Citizen Award.

While sincerely appreciating your efforts, I am compelled to painfully bring to your notice of the lines mentioned in the introductory note of
Shri K.B. Sir, on the reverse of the Inviitation.

"In the course of several decades of KB's close involvement in Kollywood, he played a prominent role in further shaping the careers of a few of
the yester-year's icons of Tamil Cinema such as Shivaji Ganesan, Sowcar Janaki, the inimitable Nagesh, Muthuraman and others."

As an ardient fan of Nadigar Thilagam Sivaji Ganesan, I was shocked to read this line. I hope it must be due to some slip or error and believe
it is not intentional, since you may know more than me, that by the time KB Sir entered Tamil cinema in 1964-65, Nadigar Thilagam Sivaji
Ganesan, completed his 100 movies and was reigning supreme, which he never stooped from till his last. K.B.Sir's first film with Nadigar
Thilagam was his 105th film, NEELAVANAM, released on 10.12.1965, by which time Shri Sivaji Ganesan had completed 13 years of his film career,
since Parasakthi. And KB Sir's next association with Nadigar Thilagam was the 139th film of Sivaji, ETHIROLI, released on 27th June 1970.

These were the only 2 films KB Sir worked with Nadigar Thilagam. As it is a known fact, Sivaji Ganesan never looked back from the very first
film. A man who won Padma Awards, Afro-Asian Awards, Chevalier award and above all fans in millions the world over, was Sivaji Ganesan.

I earnestly place with you, a simple question that comes to my mind?

Do you believe that Sivaji Ganesan was waiting for KB Sir for further shaping of his career?
Do you believe that KB Sir himself would accept this?

Till now I keep HAMSADHWANI at high esteem which is sincere and serious in promoting art.

In that spirt, I expect that the least, you may do, is to

EXPRESS A REGRET FOR THIS REMARK AT THE STAGE DURING THE FUNCTION TO HONOUR KB SIR.

With a heavy and pained heart,

V. Raghavendran
www.nadigarthilagam.com

pammalar
18th August 2011, 03:49 AM
டியர் ராகவேந்திரன் சார்,

நமது நாட்டில் பிரகஸ்பதிகளுக்கு பஞ்சமேயில்லை. இந்த விருது வழங்கும் விழாவினுடைய அழைப்பிதழின் பின்பக்க குறிப்புகளை எழுதிய நபரும் இது போன்றதொரு பிரகஸ்பதியே. [இந்த பிரகஸ்பதிக்கு ஒரு வேளை "சிவாஜி" கணேசனுக்கும் "ஜெமினி" கணேசனுக்கும் வித்தியாசம் தெரியாமல் போய் விட்டதோ !]

ஒரே ஒரு முறை மட்டுமே நமது NTயை இயக்கிய KBயின் அபிமானியான அந்த பிரகஸ்பதிக்கு நமது வன்மையான கண்டனங்களை பல முறை "எதிரொலி"க்கிறோம்-"எதிரொலி"ப்போம் !

தங்களது மின்னஞ்சல் பதிவு ரத்தினசுருக்கமாகவும் அதேசமயம் "சுறுக்"கென்றும் உள்ளது. தங்களது திருத்தொண்டுக்கு எனது இருகரம் கூப்பிய சிரம் தாழ்த்திய வணக்கங்கள் மற்றும் நன்றிகள் !

பகிரங்க அறிவிப்பு

தனது 'நாடக உலக ஆசான்' என்று நமது நடிகர் திலகமே குறிப்பிட்டுள்ள
"திரு.சின்ன பொன்னுசாமி படையாச்சி"
மற்றும் தன்னை 'வாழ வைத்த தெய்வம்' என்று நமது திலகத்தால் புகழ்ந்துரைக்கப்பட்ட"திரு.பி.ஏ.பெருமாள் முதலியார்",
இந்த இரு பெருந்தகையாளர்கள் மட்டுமே
திரும்பவும் பலமாக அடித்துச் சொல்கிறேன்
எத்தனை முறை வேண்டுமானாலும் அடித்துக் கூறுவேன்
இந்த இரு பெருந்தகையாளர்கள் மட்டுமே
அவரது கலையுலக வாழ்க்கையின் முக்கியஸ்தர்கள் !
வேறு எவரும் எந்தவிதத்திலும் எதையும்
நமது திலகத்திடம் சொந்தம் கொண்டாட முடியாது.
ஈடு-இணை சொல்லமுடியாத பெருந்தன்மையின் காரணமாக - வளர்ந்து வருபவர்களை ஊக்குவிக்கவேண்டும் என்பதற்காக - எல்லோரையுமே மிச்சம்-மீதி வைக்காமல் வானளாவப் புகழ்ந்துரைத்திருக்கிறார் நடிகர் திலகம். அதனைக் கருத்தில் கொண்டு ஆளாளுக்கு தலை-கால் தெரியாமல் குதிக்கக்கூடாது.
அவர் தனது அபரிமிதமான-அபாரமான-அற்புதமான நடிப்புத்திறமையால் மட்டுமே என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

எதிரிகளையும்-துரோகிகளையும் வீழ்த்தத் துடிக்கும் வீரத்திலகம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/RER101-1-1.jpg

NT Devotee,
பம்மலார்.

pammalar
18th August 2011, 04:19 AM
பொன்விழா நாயகன்

கலைக்குரிசிலின் 50 ஆண்டு கலைச்சேவையை பாராட்டும் விழா
மற்றும் அவரது 59வது பிறந்தநாள் விழா
தொடர்ந்து களைகட்டி நிறைகின்றன

1.10.1986 : புதன் : சென்னை

[விழா நிகழ்வுகளின் அபூர்வ தொகுப்பு]

வரலாற்று ஆவணங்கள் : "மருதாணி" இதழ் சிறப்பு மலர் : 10.10.1986
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4305a-1.jpg


http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4306a-1.jpg


http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4308a-1.jpg


http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4310a-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
18th August 2011, 04:51 AM
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்

மகாகவி காளிதாஸ்

[19.8.1966 - 19.8.2011] : 46வது ஜெயந்தி

பொக்கிஷப் புதையல்

முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 19.8.1966
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4355a-1.jpg

பக்தியுடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
18th August 2011, 06:17 AM
அன்பு நண்பர்களே,
பம்மலார் கூறியது போல், வேறு யாரையாவது மனதில் வைத்து, தவறுதலாக நடிகர் திலகத்தின் பெயரை அந்த அழைப்பிதழில் குறிப்பிட்டிருக்க வாய்ப்புண்டு. எப்படியிருந்தாலும் நாம் எவ்வளவு போ் முடியுமோ அவ்வளவு பேர் மின்னஞ்ல் மூலம் நம்முடைய மனக்குமுறலை அவர்களுக்கு தெரியப் படுத்தினால் நன்று.

டியர் பம்மலார்,
ஆணித்தரமாக, அழுத்தந் திருத்தமாக தங்கள் கருத்தைப் பதிந்துள்ளீர்கள். பாராட்டுக்கள். பெருந்தன்மை என்ற சொல்லுக்கு இலக்கணமாக விளங்கியவர் நடிகர் திலகம்.

பெயர் குறிப்பிட விரும்பவில்லை. இந்த அழைப்பிதழ் வாசகத்தைப் பற்றி ஒரு பழம்பெரும் நடிகர் மிகவும் மனம் வெதும்பி வேதனைப் பட்டார். நடிகர் திலகத்தின் மேல் அவர் வைத்திருக்கும் அபார மரியாதை, மதிப்பினைப் பார்க்கும் போது நமக்கு, நெகிழ்வு, வியப்பு போன்ற அனைத்து உணர்வுகளும் ஒரு சேர ஏற்பட்டன.

அன்புடன்

RAGHAVENDRA
18th August 2011, 06:18 AM
டியர் கார்த்திக்,
பம்மலார், வாசுதேவன் மற்றும் நண்பர்கள் கூறியது போல் ஆகஸ்ட் பதிவுகளை அழகாய்த் தொகுத்துப் பாராட்டியுள்ளீர்கள். தங்களுக்கு உளமார்ந்த நன்றிகள்.

அன்புடன்

RAGHAVENDRA
18th August 2011, 06:19 AM
உண்மையைச் சொல்வதற்கு படிப்பெதற்கு? - எல்லாம்
உணர்ந்தவர் போல் நடிக்கும் நடிப்பெதற்கு?
கண் கண்ட காட்சிகட்கு விளக்கெதற்கு? - நெஞ்சில்
கள்ளமில்லாதவர்க்கு பயமெதற்கு?

நீ இருக்கும் இடத்தில் நானிருப்பேன் - உன்
நிழலிலும் பொருளாகக் குடியிருப்பேன்
தாயிருக்கும் வரையில் கலக்கமில்லை - இந்தத்
தாயிருக்கும் வரையில் கலக்கமில்லை - எந்தச்
சபையிலும் உனக்கு நடுக்கமில்லை

- தீர்க்க தரிசி கவியரசர் கண்ணதாசன்

விளக்கம் தேவையில்லாத வரிகள், விவரம் புரியாதவர்க்கு வலிகள்

RAGHAVENDRA
18th August 2011, 06:22 AM
கல்கி 04.09.1966 இதழில் வெளிவந்த மகாகவி காளிதாஸ் விமர்சனம்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/KalidasKalkireviewfw.jpg

அன்புடன்

vasudevan31355
18th August 2011, 08:34 AM
டியர் ராகவேந்திரன் சார், மற்றும் அன்பு பம்மலார் சார்,

மிகத் தெளிவாகவும்,ஆணித்தரமாகவும் அதே சமயம் ரத்தினச் சுருக்கமாகவும் நம் நியாயமான மனக்குமுறல்களை வெளிப்படுத்தியுள்ளீர்கள்.. நன்றி!

எப்போதுமே நடிகர் திலகம் என்றால் சிலருக்கு இளக்காரம் தான். வேறு ஒருவராக இருந்தால் இவர்கள் இப்படியெல்லாம் சகட்டுமேனிக்கு எழுதுவார்களா?.. சீண்டத்தான் முடியுமா?.. இவர்களுக்கெல்லாம் யார் என்ன கேட்டு விடப் போகிறார்கள் என்ற குருட்டு தைரியம் தான்.

இந்த புத்திசிகாமணிகளுக்கு நாங்கள் சொல்லி கொள்வது இதுதான்...

எந்தக் காலத்திலும் யாரை நம்பியும் தன் திறமையை மேம்படுத்திகொள்ள வேண்டிய அவசியம் அந்த அவதார புருஷருக்கு இல்லை. அவரால் மேம்பட்டவர்களை ஆயிரக் கணக்கில் ஆதாரங்களுடன் கூற முடியும். தன்னைத் தானே நடிப்பு என்ற உளியால் செதுக்கி கொண்ட சிற்பி அந்த மகா புருஷர்.

உலகப் புகழ் பெற்ற பல கலைஞர்கள் அவருடைய அபார நடிப்புத் திறமைக்கு தலை வணங்கி, அவரை மானசீக குருவாக ஏற்று தங்களை மேம்படுத்திக் கொண்டிருகிறார்கள் என்பதுதான் வரலாற்று உண்மை.

இது புரியாத 'அதிமேதாவிகள்' சிலர் தங்கள் சுயலாபத்திற்காகவும், யாரோ ஒரு சிலருடைய பாராட்டுதல்களுக்காகவும் வேண்டி எங்கள் ஆசானை,உலகம் போற்றும் உத்தமரை, நடிப்புலக மாமேதையை இழிவு படுத்த நினைப்பதை படு வன்மையாகக் கண்டிக்கிறோம்.

பல்லாயிரக்கணக்கான அன்பு நடிகர்திலகத்தின் ரசிகப் பெருங்கூட்டம் இருப்பதை மறந்து விடவேண்டாம். 'குட்டக் குட்ட குனிந்த காலமெல்லாம்' மலையேறி விட்டது.

எங்கள் அன்பு ஆசான் எங்களுக்கு போதித்த பொறுமை,நிதானம்,சகிப்புத்தன்மை இவற்றை advantage- ஆக எடுத்துக்கொண்டு உங்கள் இஷ்டத்திற்கு வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று கண்டபடி எழுதுவீர்களேயானால் அவற்றை தூக்கி எறியவும் தயங்க மாட்டோம் என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

RAGHAVENDRA
18th August 2011, 08:55 AM
டியர் வாசுதேவன், பம்மலார் மற்றும் நண்பர்கள்,
தங்களுடைய உள்ளக் குமுறல் நம் அனைவரின் எண்ண ஓட்டத்தையும் பிரதிபலிக்கும் என்பதில் ஐயமில்லை. இந்த குறிப்பிட்ட சபா, நீண்ட காலமாக பல்வேறு கலைஞர்களை ஊக்குவித்து பல கலை நிகழ்ச்சிகளை நடத்தி, அவர்களுக்கு உதவி வருகிறது. அவர்களை மதித்துப் பாராட்டி கௌரவித்து வருகிறது. இந்த சபா மட்டுமல்ல, பல சபாக்கள் இவ்வாறு கலைச் சேவையினை செய்து வருகின்றன. அவர்களைப் பாராட்டுவது நம் கடமையாகும். இப்படிப் பட்ட சபாக்களின் ஆதரவில் தான் நடிகர் திலகத்தின் நாடகங்களும் நடைபெற்றன என்பதை நாம் மறக்கவோ மறுக்கவோ முடியாது. அதே சமயம் சில சமயங்களில் சிலருடைய தவறுகளால் இந்த மாதிரி நிகழும் போது அதை எடுத்துக் கூறாமல் நாம் இருந்தால் நாம் நம் கடமையை செய்யத் தவறியவர்களாவோம்.

நாம் நல்ல படியே நினைப்போம். இது அறியாமல் செய்த தவறாகத் தான் இருக்க முடியும். எனவே நாம் அவர்களுடைய கவனத்திற்கு இதைக் கொண்டு சென்றால் போதும்.

அனைவரின் கருத்துக்களுக்கும் நன்றி.

அன்புடன்

RAGHAVENDRA
18th August 2011, 08:59 AM
மஹாகவி காளிதாஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பினைப் பற்றி பேசும் படம் இதழில் வெளிவந்த செய்தித் துணுக்கு

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/ppkalidasshootcoveragefw.jpg

இந்தக் காட்சியை எளிதில் யூகித்திருப்பீர்கள் என எண்ணுகிறேன்.

அன்புடன்

vasudevan31355
18th August 2011, 09:48 AM
அன்பு சந்திரசேகரன் சார்,
'தர்த்தி' பாராட்டுதல்களுக்கு என் மனமுவந்த நன்றி.

அன்பு பம்மலார் சார்,
தங்களின் ஆத்மார்த்தமான அன்புக்கு என் இனிய நன்றி.

அன்பு பார்த்தசாரதி சார்,
தங்கள் 'தர்த்தி' பற்றிய பதிவுக்கு மிக்க நன்றி. தங்கள் மகிழ்ச்சி என் பாக்கியம்.

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

vasudevan31355
18th August 2011, 10:11 AM
டியர் ராகவேந்திரன் சார்,

தங்களைப் போன்ற பழுத்த அனுபவசாலிகளின் உயர்ந்த பண்பும், உயர் குணநலன்களும், அறியாமல் செய்த பிழை என்று பொறுத்துக் கொள்ளச் சொல்வது மட்டுமின்றி, அவர்கள் செய்யும் நல்ல விஷயங்களையும் பாராட்டும் பெருந்தன்மையுமே வெள்ளாட்டு மந்தைகள் நடுவில் உலவும் அந்த ஒரு சில கருப்பு ஆடுகளுக்கு பாடமாய் அமையட்டும்.


நன்றி!

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

parthasarathy
18th August 2011, 10:57 AM
Dear Shri. Raghavendiran & Friends,

It was a rude shock to read the contents of Hamsadhwani Trust's felicitations to Shri. K. Balachander and at once, I've also mailed my mind to the Trust, the content of which is reproduced below:- I am sure, Shri Balachander will himself correct this on the stage.

quote

Dear Sirs,

It gives me immense pleasure, as a Tamilian to note that a Tamil Director is being conferred the Distinguished Citizen of the year 2011 by Hamsadhwani today. Every Tamil speaking Indian should be proud on this achievement and also, on his getting Dadasahed Phalke Award by Govt. of India, only the second Tamilian to get the honour, after the Great Nadigar Thilagam - Sivaji Ganesan.

We salute Hamsadhwani Trust for the initiative, ahead of Govt. of India.

However, a few words for you to get corrected. It has been written that Shri. K. Balachander shaped the illustrious careers of certain Actors, including Sivaji Ganesan. While everybody will admit that Shri Balachander shaped the careers of many actors/actresses including Kamal Hassan and Rajnikanth, it's a gross injustice and insult to the Thespian, that he got shaped by a Director, who started directing films, after this Thespian completed more than 130 odd films. In fact, it was an honour conferred on Shri Balachander to have worked with this Thespian, early in his career. When Shri Balachander arrived at the Tamil Cinema, Sivaji Ganesan was already a Star and an Actor, the status of which, has no single Actor, has not achieved yet, the way he has achieved. In fact, Shri Balachander got the honour of directing the Legend only once in Ethiroli, released in 1970, 17 years after Sivaji Ganesan arrived as a Superstar (from his very first film!). Earlier, this Director wrote dialogues for his Film "Neelavanam", released in 1965.

I really wonder, how prestigious and a renowned Trust like Hamsadhwani did this mistake. I am sure, it's only an error, which will stand corrected, lest will be a permanent blot for Hamsadwhani, which I am sure, Hamsadhwani will erase permanently.

It would be a honour to correct the mistake on the stage itself today, which itself will be the honour to every Tamilian, including Sivaji Ganesan and K. Balachander.

Yours sincerely,

R. Parthasarathy

unquote

KCSHEKAR
18th August 2011, 01:19 PM
ராகவேந்திரன் சார் - தகவலுக்கு நன்றி. இதுமாதிரி நிகழ்வுகளுக்கு அவ்வப்போது நாம் பதிலடி கொடுத்தால்தான் மீண்டும் தவறுசெய்ய பயப்படுவார்கள்.

Letter sent to Hamsadhwani through Email on 18-08-2011

அன்புடையீர்

வணக்கம்

தங்களுடைய அமைப்பின் சார்பாக இயக்குனர் பாலச்சந்தர் அவர்களுக்கு விருது வழங்கும் விழா அழைப்பிதழ் கண்டேன். அழைப்பிதழின் பின்புறம் இயக்குனர் பாலச்சந்தர் பற்றிய குறிப்பில் இவர் சிவாஜி கணேசன், சௌகார் ஜானகி, நாகேஷ், முத்துராமன் போன்ற தமிழ் நடிகர்களை நடிப்பில் மேலும் மெருகேற்றியவர் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவர்களுடைய நடிப்பிற்கு பாலச்சந்தர் மெருகேற்றினார் என்று கூறியிருப்பது - யாரோ விபரம் தெரியாதவர் எழுதித் தந்ததை அப்படியே அழைப்பிதழில் அடித்துள்ளீர்கள் என்பது தெரிகிறது. நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் யாராலும் மெருகேற்றப்படவில்லை. அவர் தனது நடிப்புத் திறமையால், கடின உழைப்பால்தான் முன்னுக்கு வந்தார். பல இயக்குனர்களை, பல நடிகர்களை மெருகேற்றியவர் சிவாஜி கணேசன் என்றால் அது மிகையாகாது. இனியாகிலும் உண்மை தெரியாமல் இதுபோன்ற தவறுகளை தங்களைப் போன்ற விழா நடத்துபவர்கள் நிகழ்த்தாமல் இருக்கவேண்டும், திருத்திக்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.


இப்படிக்கு

கே. சந்திரசேகரன்
தலைவர்
நடிகர்திலகம் சிவாஜி சமூகநல பேரவை.
சென்னை.

RAGHAVENDRA
18th August 2011, 01:46 PM
டியர் பார்த்தசாரதி,
தங்களுடைய ஆதங்கம் நியாயமானது, அதை சரியான முறையில் அவர்களுக்குத் தெரியப் படுத்தியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

டியர் சந்திரசேகர்,
தங்களுடைய அமைப்பின் சார்பில் அனுப்பப் பட்டுள்ள கடிதம் மிகவும் சரியான முறையில் உள்ளது. பல இயக்குநர்களின் தொழில் மேம்பாட்டிற்கு நடிகர் திலகம் காரணமாயிருந்தவர் என்பது நிதர்சனம். இது அறியாமல் அவசர கோலத்தில் ஏற்பட்ட பிழை என்றே நாம் கொள்வோம். இருந்தாலும் இதை ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் சரிபார்த்திருக்கலாம். நிச்சயம் பாலச்சந்தர் அவர்களின் கவனத்திற்கு இது போயிருக்காது அல்லது அவர் இதை கவனித்திருக்க மாட்டார் என்று தான் எண்ணுகிறேன். நம்முடைய மன வருத்தத்தை நாம் எடுத்துரைத்திருக்கிறோம். இனிமேல் இதை சரி செய்ய வேண்டியது அவர்கள் கடமை.

அனைவருக்கும் நன்றி.

அன்புடன்

mr_karthik
18th August 2011, 02:10 PM
Hamsadhwani அமைப்புக்கு நான் அனுப்பிய மின்னஞ்சலின் சாராம்சம்...

"அன்புடையீர்,

தமிழின் சிறந்த இய்க்குனர்களில் ஒருவரான திரு கே.பாலச்சந்தர் அவர்களுக்கு நடைபெறவிருக்கும் பாராட்டு விழாவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் அதே நேரம், தங்கள் அழைப்பிதழின் பின்புறம் குறிப்பிட்டிருக்கும் ஒரு மாபெரும் தவறை சுட்டிக்காட்ட வேண்டியது நடிகர்திலகத்தின் தீவிர ரசிகன் என்ற வகையில் என் கடமை.

கிட்டத்தட்ட 300 படங்களில் தொய்வில்லாமல் நடித்து அசுர சாதனை படைத்த ஒரு மாபெரும் கலைஞனை, அவரது சகாப்தத்தின் மத்தியில் ஒரே ஒரு படத்தை இயக்கிய (அதுவும் கூட மக்களால் வரவேற்கப்படவில்லை) ஒரு இயக்குனர் மெருகேற்றினார் என்று அபத்தமான தகவலைத் தந்துள்ளீர்கள். இதைத் தமிழ்த் திரை வரலாற்றையறிந்த எவரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்பது மட்டுமல்ல திரு பாலச்சந்தர் இயக்கிய படத்தில் நடிகர்திலகம் நடித்துள்ளார் என்பதைக்கூட ஆச்சரியமாக நினைப்பார்கள்.

அந்த ஒரே படத்தின் அனுபவத்தைப்பற்றிக்கூட கே.பி. சொல்லும்போது, 'நான் அவரிடம் இப்படிச்செய்யுங்கள் அப்படிச்செய்யுங்கள் என்று சொல்ல மாட்டேன். காட்சியைமட்டும் விளக்கி விட்டு ஒதுங்கிக்கொள்வேன். மற்றபடி அவரே நடித்து விடுவார்' என்று சொல்லியிருக்கிறார். உண்மை இவ்வாறிருக்க, திரு கே.பி அவர்களால் மெருகேற்றப்பட்ட நடிகர்கள் பட்டியல் பெரிய அளவில் வேறு இருக்க, சம்மந்தமில்லாமல் நடிகர்திலகத்தின் பெயரை அக்குறிப்பில் இணைத்திருப்பது கண்டனத்துக்குரியது.

இது குறித்து விழா அமைப்பாளர்கள், விழா மேடையிலேயே விளக்கம் அளித்து வருத்தம் தெரிவிப்பதே, நடிகர்திலகம் சிவாஜி கணேசன் என்னும் அந்த மாபெரும் கலைஞனுக்கு செய்யும் மரியாதையாகும்."

parthasarathy
18th August 2011, 02:14 PM
ஹம்சத்வனி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் - இவர்கள் இழைத்த அநீதியை என்னவென்று சொல்வது?

தாங்க முடியாமல், இப்பொழுதுதான் ஹம்சத்வனிக்கு போன் செய்து வைத்தேன். திரு. கோபாலன் என்பவர் எடுத்துப் பேசினார். அவரிடம் நம் உள்ளக் குமுறல்களைச் சொன்ன போது, சார், தயவு செய்து தவறாக நினைக்காதீர்கள். இது கிருஷ்ணா ஸ்வீட்ஸ் காரர்கள் போட்டது என்றார். நான் அவரிடம் நீங்கள் இந்த விஷயத்தை திரு. பாலச்சந்தர் அவர்களிடம் காட்டினால், அவரே மேடையிலேயே விளக்கம் கொடுப்பார் என்று கூறி, எப்படியாவது இந்தத் தவறுக்கு மன்னிப்பு கேட்டு, ஹம்சத்வனி மற்றும் கிருஷ்ணா ஸ்வீட்சின் மானத்தைக் காத்துக் கொள்ளுங்கள். அது அந்த இறந்தும் இறவாக் கலைஞன் நீங்கள் செய்யும் பிராயச்சித்தம் என்று கூறி வைத்தேன்.

இதே போல், இரண்டு நாட்களுக்கு முன்னர், விஜய் டிவியில் நடந்த சூப்பர் சிங்கர் போட்டியில், மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தி அவர்களின் பாடல்கள் சுற்றில், மெல்லிசை மன்னர் திரு. விஸ்வநாதன் அவர்கள் நீதிபதியாக இருந்தார். அவரிடம் திரு. கோபிநாத், உங்கள் முதல் பட அனுபவத்தைக் கூறுங்கள் என்ற போது, அவர் "பணம்" - நடிகர் திலகத்தின் இரண்டாவது படம் - படத்தைப் பற்றிப் பேசாமல், "ஜெனோவா" படத்தைப் பற்றிப் பேசி, "எனக்கு சான்ஸ் கிடைத்தது" அது இது என்று கூறினார். மற்றவர்கள் செய்த நல்லதைக் கூற வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. இவர் செய்த நல்லதை ஏன் சொல்ல மறுக்கிறார்கள்? இத்தனைக்கும், தமிழில், 76-க்குப் பிறகு, இளையராஜா அலை அடிக்க ஆரம்பித்த பிறகும், தொடர்ந்து பல வருடங்கள், நடிகர் திலகம் அவருடைய படங்களில் (அண்ணன் ஒரு கோவில், திரிசூலம், இரத்த பாசம், வா கண்ணா வா" என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.), மெல்லிசை மன்னரைத்தான் இசையமைப்புக்குப் பயன்படுத்தினார்.

ஏன் இப்படி நடக்கிறது?

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

mr_karthik
18th August 2011, 02:51 PM
பார்த்தசாரதி சார்,

இதுபோலத்தான், பொதிகை சேனலில் வியாழன் அன்று இரவு ஒளிபரப்பாகும் 'வாலிப வாலி' நிகழ்ச்சியில் பங்கேற்கும் கவிஞர் வாலி, பெரும்பாலும் எம்.ஜி.ஆர். பாடல்களைப் பற்றித்தான் பேசுவார். நடிகர்திலகத்துக்கு எத்தனையோ படங்களில் (குறிப்பாக ஏ.சி.டி. இயக்கிய படங்கள்) எவ்வளவோ பாடல்கள் எழுதியிருந்தும் அவற்றைச்சொல்ல மாட்டார்.

பேட்டியெடுக்கும் கவிஞர் நெல்லை ஜெயந்தா, நடிகர்திலகத்துக்கு பாடல் எழுதிய அனுபவங்களைப் பற்றிக்கேட்டாலும், வாலி மழுப்பலாக ஒன்றிரண்டு வார்த்தைகளில் முடித்துக்கொள்வார். அதிலும் உயர்ந்த மனிதன் பற்றி மட்டுமே சொல்வார். பேசும் தெய்வம், பாபு, பாரதவிலாஸ், டாக்டர் சிவா, இருமலர்கள் இவற்றைப் பற்றியெல்லாம் மூச்சுவிட மாட்டார்.

vasudevan31355
18th August 2011, 06:44 PM
அன்பு நண்பர்களே!
'ஹம்சத்வனி' அமைப்பிற்கு நான் அனுப்பியுள்ள மின்-அஞ்சல் விவரம்.



அன்புடையீர்,

முதற்கண் என் வணக்கங்கள். தங்களுடய 'ஹம்சத்வனி' அமைப்பின் சார்பாக 'இயக்குனர் சிகரம்' திரு கே.பாலச்சந்தர் அவர்களுக்கு நடைபெற உள்ள பாராட்டு விழாவிற்கு என் இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்களின் பாராட்டு விழா அழைப்பிதழின் பின்புறம் அளிக்கப் பட்டிருக்கும் சில வரிகள் என் போன்ற ஆயிரக் கணக்கான நடிகர் திலகத்தின் ரசிகர்களை திடுக்கிட வைத்தது.

திரு.பாலச்சந்தர் அவர்கள் மிகச் சிறந்த இயக்குநர் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. ஆனால் நடிகர் திலகம் என்ற மாபெரும் கலைஞர் உலக அரங்கில் நம்மையெல்லாம் தலை நிமிரச் செய்தாரே, அவருடைய அருமை பெருமைகள் உங்களுடைய அழைப்பிதழ் தயார் செய்தவர்களுக்கு தெரியாமல் போனது விந்தையிலும் விந்தை!

திரு.பாலச்சந்தர் அவர்களால் மெருகேற்றப் பட்ட திரு.ரஜினிகாந்த் அவர்கள், திரு.கமலஹாசன் அவர்கள், திரு.சரத்பாபு அவர்கள் என்று பலரிருக்க, அவர்களையெல்லாம் விட்டு விட்டு நடிகர் திலகம் அவர்கள் திரு.பாலச்சந்தர் அவர்களால் மெருகேற்றப்பட்டார் என்று அழைப்பிதழில் குறிப்பிட்டிருப்பதைக் கண்டு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

தன் சிறு வயதிலேயே நாடகங்களில் நடித்து அனுபவப் பட்டு, 1952-இல் பல இன்னல்களுக்கு மத்தியில் பராசக்தியில் கதாநாயகனாக அறிமுகமாகி, தன் முதல் படத்திலேயே உலக சினிமா அரங்கைத் தன்னை திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகர் திலகம். அவர் நடிப்பில் எவரெஸ்ட்-இன் உச்சியைத் தொட்ட பல வருடங்களுக்குப் பின்னரே திரு. கே.பாலச்சந்தர் அவர்கள் திரையுலகிற்கு வந்தார்.

நீலவானம் மற்றும் எதிரொலி என்ற இரு படங்களில் மட்டுமே நடிகர் திலகத்துடன் திரு. பாலச்சந்தர் பணியாற்றி உள்ளார். நிலைமை இவ்வாறிருக்க தங்கள் அழைப்பிதழில் சம்பந்தமே இல்லாமல் நடிகர் திலகத்தை சம்பந்தப் படுத்தியிருப்பது வேதனைக்குரியது.

இப்படிப்பட்ட நல்ல பாராட்டு விழாக்கள் தங்களால் நடத்தப் படும்போது இது போன்ற, தெரிந்தோ அல்லது தெரியாமலோ நடந்து விடும் சில நிகழ்வுகள்
என் போன்ற பலரை மனம் புண்படும்படி செய்து விடுவது துரதிர்ஷ்டவசமானது.

எனவே பாராட்டு விழா அழைப்பிதழ் அச்சடிக்கும் முன்னால் நல்ல அனுபவசாலிகளைக் கொண்டு, அளிக்கப்படும் விவரங்கள் சரியானதுதானா,
பிறர் மனம் சங்கடப்படும்படி ஆர்வக் கோளாறினால் தவறுகள் ஏதாவது ஏற்பட்டிருக்கிறதா என்று ஆய்ந்து,ஆராய்ந்து, சரிபார்த்த பின்னரே அழைப்பிதழ் தயார் செய்யுமாறு தங்களைத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

அப்படி உண்மையிலேயே திரு.பாலச்சந்தர் அவர்களால் நடிகர் திலகம் மெருகேற்றப்பட்டிருந்தால், திரு. பாலச்சந்தர் அவர்களுக்கு 'முதல் மரியாதை' செய்யும் முதல் ரசிகர் நடிகர் திலகம் அவர்களின் ரசிகராகத்தான் இருந்திருப்பார்.

எனவே அசந்தர்ப்பம்மாக நடந்துவிட்ட இந்த நிகழ்விற்கு தாங்கள் தகுந்த முறையில் விழா மேடையில் விளக்கம் அளிப்பீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.

மறுபடியும் தங்கள் சபாவிற்கும், தங்கள் சபா மூலம் பெருமை அடையப் போகும் 'இயக்குநர் இமயம்' திரு கே. பாலச்சந்தர் சாருக்கும், என் சார்பிலும், லட்ச்சக்கணக்கான 'உலக மகா நடிகர்', ' நடிகர் திலகம்' சிவாஜி கணேசன் ரசிகர்கள் சார்பிலும் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி!

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

vasudevan31355
18th August 2011, 08:47 PM
டியர் பார்த்தசாரதி சார்,

ஏன் இப்படி நடக்கிறது?...அவரும் அவர் ரசிகர்களும் என்ன பாவம் செய்தார்கள்? நல்லதையே நினைத்து, நல்லதைப் பாராட்டி, நல்லதையே செய்து திறமை யாரிடம் இருந்தாலும், எங்கிருந்தாலும் பாரபட்சமின்றி ஓடிச் சென்று பாராட்டும் சுபாவம் யாருக்குப் புரிகிறது?...தான் கடந்து வந்த பாதையை நன்றியோடு திரும்பிப் பார்க்க இந்த ஜாம்பவான்களுக்குக் கூடவா தெரியவில்லை?...சரி விடுங்கள்...ஒற்றை விரலால் சூரியனை மறைக்க முடியாது.

நீங்கள் குறிப்பிட்டிருந்த 'ராமன் எத்தனை ராமனடி' திரைக்காவியத்தின் அந்த அற்புத சோகப் பாடலான 'அம்மாடி....பொண்ணுக்குத் தங்க மனசு...தங்க மனசு'.... தங்கமனசு.....பாடலில் அவர் அந்த தலையின் சைடில் ஸ்டைலாக இடது கையை வைத்து, லேசாக ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டு, பழைய நினைவுகளில் மூழ்கியபடியே அந்த ஸ்டிக்கை வைத்துக்கொண்டு நடக்கும் அழகை! ...... வேண்டாம் சார்.... கண்கள் குளமாகிறது.... தங்களைப் போலவே ஆயிரம் முறை அந்த குறிப்பிட்ட காட்சியை அனுபவித்து, அனுபவித்து ரசித்தவன் என்ற முறையில், என் மனதில் நீங்கா இடம் பெற்ற அந்தக் காட்சி தங்கள் மனதிலும் எவ்வளவு பாதிப்புகளை உண்டாக்கியிருக்கும் என்று பரிபூரணமாக என்னால் உணர முடிகிறது. நன்றி சார்...

கண்களில் நீருடன்,

நெய்வேலி வாசுதேவன்.

pammalar
19th August 2011, 03:54 AM
NT பற்றி KB

வரலாற்று ஆவணம் : கலைத்தென்றல் : 1986
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4357a-2.jpg
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4358a-1.jpg
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4359a-1.jpg

அந்த 'ஹம்ஸத்வனி' அருமையான ஸ்ருதிகளையும், அற்புத கிருதிகளையும் கொண்ட அபூர்வ ராகம் !

அமைப்பான இந்த 'ஹம்ஸத்வனி' அபஸ்வரமும், ஸ்ருதிபேதமும் நிறைந்த அபூர்வ ரணம் !

["எதிரொலி(1970)"யும் அப்படி ஒன்றும் படுதோல்விப் [Utter Flop] படமாக அமையவில்லை. சில சென்டர்களில் 50 நாட்களை எட்டிய படமாக, 'நல்லதொரு வெற்றி' என்ற இலக்கை நழுவவிட்ட படமாக, 'Average' BO Statusஸைப் பெற்றது].

NT Devotee,
பம்மலார்.

goldstar
19th August 2011, 09:50 AM
Guys,

Even though I am late to response Hamsadhwani , I still want to show my un-happiness with the invitation and sent following message to them.

Dear Sir,



I got a chance to look at your invitation about feliicitation to director KB. I am happy to know that our KB has been honored with Dadasaheb Phalke award by Indian government and Hamsadhwani is arranging a big felicitation function to KB. But same time it is shock to read back side of invitation which states that Nadigar Thillagm Sivaji Ganeshan has been improvised by KB. What a pathetic line. When NT is on the top of the sky, KB is just put his feet in the Tamil industry and you say KB has improvised NT career and activing? I hope you are joking. My first impression was you may be mistaken NT with Gemini Ganeshan. If that is case then you have responsibility to inform in the meetings itself. If you have knowledge of NT name referred in the invitation then I must say you have responsibility to say unconditional apology to every one.



I hope you will take my feedback in a positive way as Hamsadhwani is highly respected art division and people expect truthful information from you.



Thanks,



Sathish,

Australia.

RAGHAVENDRA
19th August 2011, 10:25 AM
Dear Sathish,
An apt and fitting message of yours should make them feel guilty. Human error is always possible. But they should be honest enough to make things straight and amend it. As I said, the least they could do was to express regret at the stage.
Raghavendran

RAGHAVENDRA
19th August 2011, 10:26 AM
From Today (19.08.2011) at Srinivasa Theatre, West Mambalam, Chennai, daily three shows, Nadigar Thilagam's evergreen and classic:

http://www.cinehour.com/gallery/events1/moviefunctions/Sivaji%20Ganesans%20Gauravam%20Movie%20Re%20Releas e%20at%20Shanthi%20Theatre/54814712Gauravam_Re_Release_at_Shanthi_Theatre-(22).jpg

parthasarathy
19th August 2011, 12:36 PM
டியர் பார்த்தசாரதி சார்,

நீங்கள் குறிப்பிட்டிருந்த 'ராமன் எத்தனை ராமனடி' திரைக்காவியத்தின் அந்த அற்புத சோகப் பாடலான 'அம்மாடி....பொண்ணுக்குத் தங்க மனசு...தங்க மனசு'.... தங்கமனசு.....பாடலில் அவர் அந்த தலையின் சைடில் ஸ்டைலாக இடது கையை வைத்து, லேசாக ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டு, பழைய நினைவுகளில் மூழ்கியபடியே அந்த ஸ்டிக்கை வைத்துக்கொண்டு நடக்கும் அழகை! ...... வேண்டாம் சார்.... கண்கள் குளமாகிறது.... தங்களைப் போலவே ஆயிரம் முறை அந்த குறிப்பிட்ட காட்சியை அனுபவித்து, அனுபவித்து ரசித்தவன் என்ற முறையில், என் மனதில் நீங்கா இடம் பெற்ற அந்தக் காட்சி தங்கள் மனதிலும் எவ்வளவு பாதிப்புகளை உண்டாக்கியிருக்கும் என்று பரிபூரணமாக என்னால் உணர முடிகிறது. நன்றி சார்...

கண்களில் நீருடன்,

நெய்வேலி வாசுதேவன்.

அன்புள்ள திரு. வாசுதேவன் அவர்களே,

நடிகர் திலகத்தின் ஒவ்வொரு படமும் அவருடைய அனைத்து ரசிகர்களின் மனதிலும் நீங்காமல் நிலை பெற்று விட்டாலும், சில படங்கள் (இது மட்டும் ஒவ்வொருவருக்கும் மாறலாம்!) அவரவர்களுடைய பழைய நினைவுகளைப் பெரிதாகக் கிளறி விடும். அந்த நினைவுகள் எப்போதும் இனியவையாகவும் அதே சமயம் கண்களில் நீரைப் பெருக்குவதாயும் அமையும்.

அந்த வகையில், அறுபதுகளிலும் அதற்குப் பிறகும் பிறந்த அனைத்து ரசிகர்களுக்கும் "தங்கை" தொடங்கி அவர் நடித்த பல படங்கள், நீங்கா இடம் பெறும். ஏனென்றால், ஒவ்வொரு மனிதனுக்கும் அவன்/அவள் வாழ்க்கையில் இளம் வயதில் நடக்கும் நிகழ்வுகள் தான் என்றென்றைக்கும் சாஸ்வதமாக மனதில் நிலைத்து இடம் பிடிக்கும். அதற்காக, தங்கைக்கு முன்னர் வந்த படங்கள் குறைத்து மதிப்பிடப்பட முடியாது. அவருடைய ஒப்பற்ற பல படங்கள் தங்கைக்கு முன்னர் தான் வெளிவந்தன. எனக்கும் அவைகள் மிகவும் பிடிக்கும். இருப்பினும், தங்கையிலிருந்துதான், அவருடைய ரசிகர்கள் வருடக்கணக்காக ஏங்கி எதிர்பார்த்துக் கொண்டிருந்த, அவரது புதிய பரிமாணம் துவங்கியது.

என் மனதுக்கு மிகவும் பிடித்த படங்கள் எத்தனையோ (closest to my heart). அதில் எப்போதும் தவறாமல் இடம் பிடிக்கும் படம் "ராமன் எத்தனை ராமனடி". இந்தப் படத்தில், குறிப்பாக, அவர் நடிகராகி அவரது பூர்வீக கிராமம் பூங்குடிக்கு வந்து ரயில் நிலையத்தின் வாசலில் வந்து, அந்த கூலிங் க்ளாசுடன் நின்றவுடன், அவரை முதலில் அவமானப்படுத்திய நான்கு பேரும், நடிகர் திலகம் வாயில் சிகரெட்டை வைத்தவுடன், லைட்டரை எடுத்துப் போகும் இடம் முதல், "அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு" சோக வடிவம் முடியும் வரை, அவர் செய்யும் அட்டகாசம், இந்த உயிர் உள்ளளவும் நிலை பெற்று விட்ட ஒன்று.

ஒன்றுக்கும் உதவாத சிறு பிள்ளைத்தனமான மனிதனாக இருந்தவரின் மனதில் இடம் பிடித்து, அந்தப் பெண்ணை அடைவதற்காக, பெரிய மனிதனாக ஆகி, அதே கிராமத்துக்குத் திரும்பவும் அவளுக்காகவே அடங்காத ஆவலுடன் வந்து - அதுவும் குறிப்பாக, அந்தக் கனவுப்பாடல், "சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்" -பார்க்கும் ஒவ்வொருவரையும், அந்த விஜயகுமார் பாத்திரத்துக்குள் நுழைத்து, அத்தனை பேரையும் விஜயகுமாராகவே ஆக்கி, - கடைசியில், காதலி தனக்கில்லை என்று தெரிந்தவுடன், அவர் அந்த அதிர்ச்சியை எதிர்கொள்ளுகிற விதம். அந்த சோக வடிவப் பாடல் துவங்குவதற்கு முன்னர், சதை படர்ந்த அந்த அழகு முகத்தில் காட்டுகின்ற நுணுக்கமான பாவங்கள் - முத்து முத்தாய் வியர்வைத் துளிகள் - பெரிய கண்களில் தெரியும் அந்த சோகம் கலந்த ஏமாற்றம் - வாய் விட்டு அழாமல் - ஆண்மையுடன் அந்த வலியைக் காட்டும் அந்த நேர்த்தி - what a controlled brilliant performance! கடைசியில் பாடல் முடிந்தவுடன், கையில் உள்ள ஸ்டிக்கால் தரையை ஆத்திரத்துடன் தட்டிக் கொண்டே, காலையும் உதைத்துக் கொண்டே, அந்த உணர்வுகளை வெளிப்படுத்திய விதம்! (இத்தனைக்கும், அவருடைய பின் புறம் தான் மக்களுக்குத் தெரியும் ("ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ" பாடல், ஆண்டவன் கட்டளையில் சில இடங்கள் என்று இந்த வகையில் பலவற்றை அடுக்கி கொண்டே போகலாம்.). காதலி தனக்கில்லை என்ற செய்தியை எதிர்கொண்டு அந்த அதிர்ச்சி கலந்த ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விதத்திற்கு இலக்கணம் அமைத்த காட்சி; பின்னர் எத்தனை எத்தனையோ நடிகர்களுக்கு inspiration-ஆக அமைந்த நடிப்பு (இப்படி பல நடிப்புகள் உள்ளன என்றாலும்!).

அவர் இறப்பதற்கு முன்னால், அவருடைய நடிப்பில் கடடுண்டு அழுதிருக்கிறேன் (றோம்). ஆனால், அவர் இறந்த பின், ஒவ்வொரு முறை அவருடைய பல்வேறுபட்ட நடிப்பினைத் தாங்கிய படங்களையும், பாடல்களையும், காட்சிகளையும் பார்க்கும் போது, "ஆஹா எப்பேர்பட்ட நடிகன்! போய் விட்டாயே!!" என்ற உணர்வால், அழது கொண்டிருக்கிறேன் (றோம்).

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

vasudevan31355
19th August 2011, 01:43 PM
நன்றி அன்பு பார்த்தசாரதி சார்.

இரு ஒன்றுபட்ட ஒரே ரசனையுள்ள உள்ளங்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளும்போது ஏற்படும் மகிழ்ச்சியும், ஆனந்தமும் வார்த்தைகளில் அடங்கி விடாது. அந்த அதி அற்புத பாக்கியத்தை நமக்களித்த நம் 'இதய தெய்வத்திற்கு' நன்றி சொல்வதைத் தவிர வேறு நான் என்ன சொல்ல!.....

உங்கள் ரசனைக்குத் தலை வணங்கும்,

உங்கள் அன்பன்,

நெய்வேலி வாசுதேவன்.

groucho070
19th August 2011, 01:53 PM
Alright, I have sent mine. Here's the mail:

Dear sir,

By now you are already inundated with angry or sad mails concerning the error in your invitation letter. The reason I write is to let you know that there are fans from all over the world who's aware who Nadigar Thilagam Sivaji Ganesan is. I am from Malaysia.

The error reflects poorly on your organisation, and it might even embarass K. Balachander himself, who might take the error as reflection of how the award has lost its credibility. I hope I am wrong.

Hopefully, you will do some correction, before hurting more Sivaji fans, which includes many of your future award candidates.

Take care and thanks for your attention.

--
Rakesh Kumar Premakumaran
Batu Caves, Malaysia

KCSHEKAR
19th August 2011, 02:48 PM
NT பற்றி KB

வரலாற்று ஆவணம் : கலைத்தென்றல் : 1986
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4357a-2.jpg
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4358a-1.jpg
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4359a-1.jpg

அந்த 'ஹம்ஸத்வனி' அருமையான ஸ்ருதிகளையும், அற்புத கிருதிகளையும் கொண்ட அபூர்வ ராகம் !

அமைப்பான இந்த 'ஹம்ஸத்வனி' அபஸ்வரமும், ஸ்ருதிபேதமும் நிறைந்த அபூர்வ ரணம் !

["எதிரொலி(1970)"யும் அப்படி ஒன்றும் படுதோல்விப் [Utter Flop] படமாக அமையவில்லை. சில சென்டர்களில் 50 நாட்களை எட்டிய படமாக, 'நல்லதொரு வெற்றி' என்ற இலக்கை நழுவவிட்ட படமாக, 'Average' BO Statusஸைப் பெற்றது].

NT Devotee,
பம்மலார்.

இந்த ஒரு ஆவணமே போதும் - சபாஷ் / நன்றி - பம்மலார்.

RAGHAVENDRA
19th August 2011, 02:53 PM
ராகேஷ், உணர்வு பூர்வமாகவும் அதே சமயம் பொருளை விட்டு விலகாமலும் தங்களுடைய கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி, பாராட்டுக்கள்.
அன்புடன்

RAGHAVENDRA
19th August 2011, 02:58 PM
டியர் வாசுதேவன் மற்றும் பார்த்த சாரதி,
வாழ்நாளில் என்றைக்கும் மறக்கவே முடியாத உன்னதத் திரைக்காவியத்தைப் பற்றித் தாங்கள் நினைத்து நினைத்து எழுதியுள்ள வரிகள் உணர்ச்சிகரமாயும் கருத்தாழத்துடனும் உள்ளன. தாங்கள் கூறியது போல், இளம் வயது நினைவுகள் மனிதனின் சரீரத்தையும் தாண்டி உயிருடன் கலந்து அவன் மரணித்து விட்டாலும் கூட, அவனுடன் சேர்ந்து ஆத்மாவில் கலந்து பூமியில் சஞ்சாரித்துக் கொண்டே இருக்கும். அதுவும் நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கு சொல்லவே வேண்டாம். அப்படி உயிருடனு்ம் ஆத்மாவுடனும் கலந்த படங்களில் ஒன்று ராமன் எத்தனை ராமனடி. தாங்கள் கூறிய காட்சிகளின் நிழற்படங்கள் இங்கே நம் நினைவுகளை அசை போடுவதற்காக...

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/RERvarietyfw.jpg

அன்புடன்

abkhlabhi
19th August 2011, 03:07 PM
"கதை கட்ட ஒருவன் பிறந்து விட்டால்
கண்ணகி வாழ்விலும் களங்கம் உண்டு
.................................................. ...........................
குணத்திற்குத் தேவை மனசாட்சி


மயிலைப் பார்த்து கரடி என்பான்
மானைப் பார்த்து வேங்கை என்பான்
குயிலைப் பார்த்து ஆந்தை என்பான்
அதையும் சிலபேர் உண்மை என்பான்
யானையைப் பார்த்த குருடனைப் போல்
................................
சிவாஜியைப் பார்த்தால் என்ன செய்வது "

groucho070
19th August 2011, 03:09 PM
ராகேஷ், உணர்வு பூர்வமாகவும் அதே சமயம் பொருளை விட்டு விலகாமலும் தங்களுடைய கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி, பாராட்டுக்கள்.
அன்புடன்
Thanks, sir. Let's hope they do something about it the soonest.

mr_karthik
19th August 2011, 04:21 PM
அன்புள்ள வாசுதேவன் சார், பார்த்தசாரதி சார் மற்றும் ராகவேந்தர் சார்....

'ராமன் எத்தனை ராமனடி' படத்தில் நீங்கள் குறிப்பிடும் காட்சி பற்றி, சாரதா அவர்கள் தனது ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் இடம் இதோ.....

""// ......படத்தில் இரண்டு முறை வரும் ' அம்மாடீ.... பொண்ணுக்குத் தங்க மனசு' பாடல் அப்போது (இப்போதும்) SUPER HIT.. அதிலும் இரண்டாவது பாடலைவிட, முதலில் அப்பாவி ராமு பாடும் பாடல், மெட்டு ரீதியாகவும், காட்சி ரீதியாகவும் ரொம்பவே பாப்புலர். இந்தப்பாடலுக்கு முன்னால், கே.ஆர்.விஜயாவும் தோழிகளும் வருமுன்னர் கூட்டாளிகளோடு 'கொலை கொலையா முந்திரிக்கா' விளையாடிக் கொண்டிருக்கும் நடிகர்திலகத்தைக்காட்டி, ‘இவர்தாம்பா வீரபாண்டிய கட்டபொம்மனிலும், பாசமலரிலும் நடித்தவர். இவ்வளவு ஏன், இதற்கு முந்தைய படமான வியட்நாம் வீட்டில் பிரிஸ்டீஜ் பத்மனாபனாக நடித்தவர்தான்யா இதோ ‘கொலை கொலையா முந்திரிக்கா’ விளையாடிக் கொண்டிருக்கிறார்’ என்றால் யாராவது நம்புவார்கள் என்கிறீர்களா?. ஆம், எங்கள் அண்ணன் நடிப்பின் எல்லா நீள, அகல, உயர, ஆழங்களையும் அளந்து முடித்தவர் என்று மார்தட்டிச்சொல்வோம்.

சில ஆண்டுகளுக்குப்பிறகு அதே லொக்கேஷனில், தனித்தவராக ஏமாற்றத்தின் விளிம்பில் நின்று அவர் பாடும்... 'அம்மாடீ... பொண்ணுக்கு தங்க மனசு... தங்க மனசு... தங்க மனசு...' அடுத்த வரி பாட முடியாமல், அண்ணாந்து பார்க்க, அங்கே எரிந்துகொண்டிருக்கும் டியூப் லைட், கிராமம் ரொம்ப மாறிவிட்டது என்பதற்கு அடையாளம் காட்டும்.

எந்த தேவகி என்ற மந்திரச்சொல் தன் வாழ்க்கைப்பாதையையே மாற்றி அமைத்ததோ அந்த தேவகியை சந்திக்கப்போகிறோம் என்ற உற்சாகத்துடன் ரயிலில் வந்துகொண்டிருக்கும் ராமுவுக்கு, முந்தைய ஸ்டேஷனிலேயே தன்னை வரவேற்க வந்து நிற்கும் தேவகியுடன், ரயிலில் பயணிக்கும்போது தேவகி (கே.ஆர்.விஜயா) பாடுவதாக வரும், 'சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்' பாடல் மெல்லிசை மன்னரின் அபார திறமைக்கு எடுத்துக்காட்டு. 'சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் முத்துரதங்கள் ஊர்வலம் போகும்' என்பது ஒரு மெட்டு, 'தேரில் வந்த ராஜராஜன் என்பக்கம்' இன்னொரு மெட்டு, சரணத்தில் 'அந்நாளிலே நீ கண்ட கனவு காயாகி இப்போது கனியானதோ' என்பது இன்னொரு மெட்டு... இந்த வாமனர், தன் மூன்று காலடிகளில் இசையுலகையே அளந்து முடித்து விட்டார் என்றால் அது மிகையா?. இல்லவே இல்லை. இப்பாடலுக்கு பக்க வாத்தியமாக வரும் ரயிலின் தாலாட்டு, அது பக்க வாத்தியமல்ல 'பக்கா' வாத்தியம். அக்கால நீராவி எஞ்சினின் விசில் சத்தமாகக்காட்டி அதையே, ஸ்ருதி மாறும்போது ராமு என்கிற விஜயகுமார், புல்லாங்குழல் வாசிப்பதாகக்காட்டுவது மெல்லிசை மன்னரின் கம்போஸிங்கை இயக்குனர் பி.மாதவன் எப்படியெல்லாம் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் என்பதன் அடையாளம். பாடலும் தேவகியும் கனவு என்று அறியும்போதும், அதை மாஸ்டர் பிரபாகர் கிண்டல் செய்யும்போதும் அவர் முகத்தில் தோன்றும் நாணம்.

இந்தப்பாடல் முடிந்து ஸ்டேஷனில் வந்திறங்கும்போது, ஃபுல் சூட்டும் கண்களில் குளிர்க்கண்ணாடியுமாக, ரயில் பெட்டியின் வாசலில் தோன்றும்போது ரசிகர்களின் கைதட்டல் காதைக்கிழிக்கும். (வரவேற்கும் பேண்டு வாத்தியத்தில் 'செல்லக்கிளிகளாம் பள்ளியிலே' பாடல்) இதே உடையுடனும், மைனர் அணிவிக்கும் ஆளுயர மாலையுடனும் அவர் நிற்கும் போஸ்தான் படத்தின் முழுப்பக்க விளம்பரம். .........//""

'ராமன் எத்தனை ராமனடி'பற்றிய சாரதாவின் முழு ஆய்வுக்கட்டுரையும் படிக்க, இங்கே சொடுக்கவும்....

http://www.mayyam.com/talk/showthread.php?7207-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-5&p=427890#post427890

parthasarathy
19th August 2011, 05:06 PM
அன்புள்ள வாசுதேவன் சார், பார்த்தசாரதி சார் மற்றும் ராகவேந்தர் சார்....

'ராமன் எத்தனை ராமனடி' படத்தில் நீங்கள் குறிப்பிடும் காட்சி பற்றி, சாரதா அவர்கள் தனது ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் இடம் இதோ.....

""// ......படத்தில் இரண்டு முறை வரும் ' அம்மாடீ.... பொண்ணுக்குத் தங்க மனசு' பாடல் அப்போது (இப்போதும்) SUPER HIT.. அதிலும் இரண்டாவது பாடலைவிட, முதலில் அப்பாவி ராமு பாடும் பாடல், மெட்டு ரீதியாகவும், காட்சி ரீதியாகவும் ரொம்பவே பாப்புலர். இந்தப்பாடலுக்கு முன்னால், கே.ஆர்.விஜயாவும் தோழிகளும் வருமுன்னர் கூட்டாளிகளோடு 'கொலை கொலையா முந்திரிக்கா' விளையாடிக் கொண்டிருக்கும் நடிகர்திலகத்தைக்காட்டி, ‘இவர்தாம்பா வீரபாண்டிய கட்டபொம்மனிலும், பாசமலரிலும் நடித்தவர். இவ்வளவு ஏன், இதற்கு முந்தைய படமான வியட்நாம் வீட்டில் பிரிஸ்டீஜ் பத்மனாபனாக நடித்தவர்தான்யா இதோ ‘கொலை கொலையா முந்திரிக்கா’ விளையாடிக் கொண்டிருக்கிறார்’ என்றால் யாராவது நம்புவார்கள் என்கிறீர்களா?. ஆம், எங்கள் அண்ணன் நடிப்பின் எல்லா நீள, அகல, உயர, ஆழங்களையும் அளந்து முடித்தவர் என்று மார்தட்டிச்சொல்வோம்.

சில ஆண்டுகளுக்குப்பிறகு அதே லொக்கேஷனில், தனித்தவராக ஏமாற்றத்தின் விளிம்பில் நின்று அவர் பாடும்... 'அம்மாடீ... பொண்ணுக்கு தங்க மனசு... தங்க மனசு... தங்க மனசு...' அடுத்த வரி பாட முடியாமல், அண்ணாந்து பார்க்க, அங்கே எரிந்துகொண்டிருக்கும் டியூப் லைட், கிராமம் ரொம்ப மாறிவிட்டது என்பதற்கு அடையாளம் காட்டும்.

எந்த தேவகி என்ற மந்திரச்சொல் தன் வாழ்க்கைப்பாதையையே மாற்றி அமைத்ததோ அந்த தேவகியை சந்திக்கப்போகிறோம் என்ற உற்சாகத்துடன் ரயிலில் வந்துகொண்டிருக்கும் ராமுவுக்கு, முந்தைய ஸ்டேஷனிலேயே தன்னை வரவேற்க வந்து நிற்கும் தேவகியுடன், ரயிலில் பயணிக்கும்போது தேவகி (கே.ஆர்.விஜயா) பாடுவதாக வரும், 'சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்' பாடல் மெல்லிசை மன்னரின் அபார திறமைக்கு எடுத்துக்காட்டு. 'சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் முத்துரதங்கள் ஊர்வலம் போகும்' என்பது ஒரு மெட்டு, 'தேரில் வந்த ராஜராஜன் என்பக்கம்' இன்னொரு மெட்டு, சரணத்தில் 'அந்நாளிலே நீ கண்ட கனவு காயாகி இப்போது கனியானதோ' என்பது இன்னொரு மெட்டு... இந்த வாமனர், தன் மூன்று காலடிகளில் இசையுலகையே அளந்து முடித்து விட்டார் என்றால் அது மிகையா?. இல்லவே இல்லை. இப்பாடலுக்கு பக்க வாத்தியமாக வரும் ரயிலின் தாலாட்டு, அது பக்க வாத்தியமல்ல 'பக்கா' வாத்தியம். அக்கால நீராவி எஞ்சினின் விசில் சத்தமாகக்காட்டி அதையே, ஸ்ருதி மாறும்போது ராமு என்கிற விஜயகுமார், புல்லாங்குழல் வாசிப்பதாகக்காட்டுவது மெல்லிசை மன்னரின் கம்போஸிங்கை இயக்குனர் பி.மாதவன் எப்படியெல்லாம் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் என்பதன் அடையாளம். பாடலும் தேவகியும் கனவு என்று அறியும்போதும், அதை மாஸ்டர் பிரபாகர் கிண்டல் செய்யும்போதும் அவர் முகத்தில் தோன்றும் நாணம்.

இந்தப்பாடல் முடிந்து ஸ்டேஷனில் வந்திறங்கும்போது, ஃபுல் சூட்டும் கண்களில் குளிர்க்கண்ணாடியுமாக, ரயில் பெட்டியின் வாசலில் தோன்றும்போது ரசிகர்களின் கைதட்டல் காதைக்கிழிக்கும். (வரவேற்கும் பேண்டு வாத்தியத்தில் 'செல்லக்கிளிகளாம் பள்ளியிலே' பாடல்) இதே உடையுடனும், மைனர் அணிவிக்கும் ஆளுயர மாலையுடனும் அவர் நிற்கும் போஸ்தான் படத்தின் முழுப்பக்க விளம்பரம். .........//""

'ராமன் எத்தனை ராமனடி'பற்றிய சாரதாவின் முழு ஆய்வுக்கட்டுரையும் படிக்க, இங்கே சொடுக்கவும்....

http://www.mayyam.com/talk/showthread.php?7207-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-5&p=427890#post427890

அன்புள்ள திரு. கார்த்திக் அவர்களே,

ராமன் எத்தனை ராமனடி படத்தைப் பற்றிய சாரதா மேடம் அவர்களின் ஆய்வுக்கட்டுரையைப் படித்து அணு அணுவாகப் படித்து ரசித்த எண்ணற்ற ரசிகர்களில் நானும் ஒருவன்.
இந்தப் படம் மட்டுமல்லாது இன்னும் பல படங்களைப் பற்றியும் அதில் அவரது நடிப்பைப் பற்றியும், அவர்களும், திரு. முரளி போன்ற நண்பர்களும் எழுதிய கட்டுரைகளைப் படித்து இன்புற்றேன்.
சரி, பல வருடங்களுக்கு முன்னரே நாம் எழுதிக் காணாமல் போன கட்டுரைகளை நம்முடைய பார்வையிலிருந்து தருவோம் என்று இறங்கினேன்.
அதனால் தான், ஏற்கனவே எழுதப் பட்ட பல படங்களைப் பற்றி என்னுடைய பார்வையிலிருந்து நான் எழுதும்போது, அந்தந்தப் படங்களின் கதை மற்றும் பிற தகவலைப் பற்றி எழுதாமல், முழுக்க முழுக்க நடிகர் திலகத்தின் நடிப்பைப் பற்றி மட்டுமே எழுதுகிறேன்.

எப்படி நடிகர் திலகம் எவ்வளவு முடியுமோ அத்தனை நடிப்பு ரசங்களையும் நடித்து/வடித்து, பின்னாளில் வரும் கலைஞர்களுக்குக் கொஞ்சமே கொஞ்சம் சந்தர்ப்பம் கொடுத்தாரோ, அதைப் போல, சாரதா மேடம் மற்றும் திரு. முரளி மற்றும் பல நண்பர்கள் நடிகர் திலகத்தின் படங்களையும் அதில் அவரது வெவ்வேறு பரிமாணங்களையும் அக்கு வேறு ஆணி வேறாக அலசி, வடித்து விட்டனர்.

இருப்பினும், இந்தப் புவி உள்ளளவும், புதிது புதிதாக எண்ணற்ற ரசிகர்கள் உருவாகிக் கொண்டேதான் இருப்பார்கள், அவர்களும் முந்தைய யாரும் கண்டிராத நடிகர் திலகத்தின் ஆற்றலைத் தாங்கிய புதுப்புது விஷயங்களைத் தங்கள் பார்வையிலிருந்து கொடுத்துக் கொண்டே தான் இருக்கப் போகிறார்கள். அது தான் இந்த யுகக் கலைஞனின் தனிச்சிறப்பு.

ரசனை தொடரும்,

இரா. பார்த்தசாரதி

vasudevan31355
19th August 2011, 05:52 PM
அன்பு நண்பர்களே,

நம் யாவராலும் மறக்க முடியாத ,மறக்க இயலாத நெஞ்சமெல்லாம் நிறைத்திருக்கும் அம்மாடி..பொண்ணுக்குத் தங்க மனசு...தங்க மனசு...தங்க மனசு... அற்புதப் பாடல் காட்சியினை மறுபடியும் கண்டு மகிழ இதோ....



http://www.youtube.com/watch?v=2lsAJtWoUIA&feature=player_detailpage


அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

abkhlabhi
19th August 2011, 05:54 PM
தினகரன்.காம்மில் வெளியான கட்டுரை

நட்பின் இலக்கணம் சிவாஜி

பதிவு செய்த நாள் 8/18/2011 17:10:12


சிவாஜிக்கும் பாலாஜிக்கும் இருந்த நட்பு ரொம்ப ஆழமானது. நடிகர்கள் என்ற ரேஞ்சில் தொடங்கிய நட்பு, நடிகர், தயாரிப்பாளர் என்ற நிலையிலும் தொடர்ந்தது.

சிவாஜியை வைத்து பல படங்களை பாலாஜி தயாரித்திருக்கிறார். கதை, சம்பளம் எல்லாமே சிவாஜிக்கு இரண்டாம்பட்சம்தான். நண்பர் பாலாஜி கேட்டுவிட்டால்,

உடனே கால்ஷீட் தருவார். கதைகளை தேர்வு செய்வதில் பாலாஜியும் சிறந்து விளங்கினார். அதனால்தான் அவர் பல காலம் சினிமாவில் ராஜ்ஜியம் செய்ய

முடிந்தது. ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கத்தில் ‘என் தம்பி’ படத்தை ச¤வாஜியை நடிக்க வைத்து தயாரித்தார்.
கே.ஆர்.விஜயா, நாகேஷுடன் பாலாஜியும் நடித்திருந்தார்.

ஏ.பி.என்.னின் புராண படங்களின் வரிசையில் இடம்பெற்ற மற்றொரு படம் ‘திருமால் பெருமை’. வசனம் எழுதி ஏ.பி.நாகராஜன் இயக்கியிருந˘தார்.

ஏபிஎன், சிவாஜி கூட்டணியாக இருந்தும் இந்த படம் சரியாக போகவில்லை[/b]. [/color]



திரு. முரளி ஸ்ரீநிவாஸ் எழுதிய சிவாஜின் சாதனை சிகரங்களில் , திருமால் பெருமை 75 நாட்கள் கடந்து ஓடிய படம் என்று எழுதிருந்தார். இப்படம் ஒரு தோல்வி படம் இல்லை என்று நினைகிறேன்.

பம்மாலர், ராகவேந்திரா தெளிவு படுத்தவும்.

mr_karthik
19th August 2011, 06:41 PM
பாலா சார்,

'திருமால் பெருமை' சரியாகப்போகவில்லை என்று தினகரன் எழுதியதை, அதை தோல்விப்படம் என்று சொன்னதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.

பொதுவாக நடிகர்திலகம் - ஏ.பி.நாகராஜன் கூட்டணியின் வெற்றிகளை எடைபோடும் பலரும் அவர்களது நவராத்திரி, திருவிளையாடல், சரஸ்வதி சபதம், தில்லானா மோகனாம்பாள் ஆகிய மாபெரும் வெற்றிப்படங்களை அளவுகோலாகக்கொண்டு அளப்பது வழக்கம்.

அந்த அளவை எட்டாத படங்கள் சிலவற்றை 'சரியாகப்போகவில்லை' என்று சொல்வார்கள். அந்த வகையில் 'திருமால் பெருமை'யைப் பற்றி அப்படி எழுதியிருக்கக்கூடும்.

குற்றவாளி ஏ.பி.என்.தான். கொஞ்சம் கூட இடைவெளி விடாமல் சகட்டு மேனிக்கு வரிசையாக புராணப்படங்களை எடுத்துத்தள்ளினார். அதனால் ஒன்றை விட ஒன்று வெற்றியில் குறைந்து கொண்டே போனது. பாருங்கள்......

'திருவிளையாடல்'போன அளவுக்கு 'சரஸ்வதி சபதம்' போகவில்லை

'சரஸ்வதி சபதம்' போன அளவுக்கு 'கந்தன் கருணை' போகவில்லை

'கந்தன் கருணை' போன அளவுக்கு 'திருவருட்செல்வர்'போகவில்லை

'திருவருட்செல்வர்' போன அளவுக்கு 'திருமால் பெருமை' போகவில்லை

நல்லவேளையாக பாதையை மாற்றி 'தில்லானா மோகனாம்பாள்' எடுத்தார். இக்கூட்டணி மீண்டும் மாபெரும் வெற்றியை சுவைத்தது.

vasudevan31355
19th August 2011, 10:36 PM
டியர் கார்த்திக் சார்,

ஏ. பி. என் அவர்களின் படங்கள் எப்படிப் போயின என்று அற்புதமாக எழுதி உள்ளீர்கள். முற்றிலும் உண்மை. மெகா ஹிட்டான'திருவிளையாடல்' மக்கள் மனதில் வெகு ஆழமாகப் படிந்து விட்டதால் வந்த கோளாறு தான் மற்ற படங்கள் சுமாராகப் போனதற்குக் காரணம். இன்னொரு காரணமும் உண்டு. திருவிளையாடல் பக்தியுடன் சேர்த்து வெகு ஜனரஞ்சகம். 'கல கல' என நகரும். ஆனால் திருவருட்செல்வர் அப்படி இல்லை. 'அப்பராக' அபார நடிப்புத்திறமையில் அசத்தியும் கூட சுமாராகப் போனதற்குக் காரணம் கிளாசிக்-ஆக அமைந்துவிட்டதோடல்லாமல் வெகுஜன ரசனைக்கேற்ப காட்சிகள் 'கல கல' வென நகராதது தான் என்று நான் நினைக்கிறேன்.

கந்தன் கருணையிலோ இவர் வரும் நேரம் குறைவு. இவர் வராத காட்சிகள் சற்று சலிப்பை ஏற்படுத்தும். 'First is the best' என்பது இதிலும் உண்மையாகி விட்டது. கமர்ஷியல் கலவைகள் குறைந்ததனாலோ என்னவோ திருமால் பெருமையும், திருவருட்செல்வரும் அற்புதமான நடிப்பு இருந்தும் எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லையோ?.....என்று எண்ணத் தோன்றுகிறது.

எப்படியிருந்தாலும் அந்த அப்பரின் அசத்தலால் பின்னாட்களில் நன்றாகத் தான் திருவருட்செல்வர் போனது. (கப்பலோட்டிய தமிழன், பழநி போல)

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

Murali Srinivas
19th August 2011, 11:25 PM
நடிகர் திலகத்தைப் பற்றி ஒரு தவறான குறிப்பு வெளியானதும் இங்கே நமது திரியிலும் வெளியிலும் அதற்கு ஏற்பட்ட எதிர்ப்பின் வீர்யத்தை தங்களுக்கு வந்த மின்னஞ்சல்களின் மூலமாக பார்த்தவுடன் தவறு செய்தவர்களுக்கு தாங்கள் செய்தது எத்தனை பெரிய வரலாற்று பிழை என்பது புரிந்திருக்கும். தெரிந்தோ தெரியாமலோ நடந்த இந்த தவறுக்கு நமது கண்டனத்தையும் வருத்தத்தையும் அந்த அமைப்பின் நிர்வாகிகள் கவனத்திற்கு சில முக்கிய நபர்கள் மூலமாக எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. தங்கள் தவறை அவர்கள் உணர்வார்கள் என நம்புவோம்.

அன்புடன்

Murali Srinivas
20th August 2011, 12:27 AM
சாரதியும் வாசுதேவன் சாரும் ராமன் எத்தனை ராமனடி படத்தை அதிலும் விஜயகுமாராக அவர் கிராமத்திற்கு வந்து ஒரு கலக்கு கலக்குவதை ஒரு அலசு அலசி விட்டார்கள். நடிகர் திலகத்தின் பல்வேறு ரசிகர்களை போல் எனக்கும் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம் ராமன் எத்தனை ராமனடி. அதை பலமுறை இங்கே எழுதியிருக்கிறேன். இருப்பினும் ஒவ்வொரு முறையும் சித்திரை மாதம் பௌர்ணமி நேரமும் பாடலும் சரி அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு பாடலும் சரி, அதை கேட்கும் போதும் பார்க்கும் போதும் அதை பற்றி படிக்கும் போதும் சந்தோஷம் தொற்றிக் கொள்ளும்.

பாலா,

கார்த்திக் சொன்னது போல திருமால் பெருமை திரைப்படம் திருவிளையாடல் சரஸ்வதி சபதம் போன்ற படங்களைப் போல் வெற்றி பெறவில்லையே தவிர அது ஒரு தோல்வி படமல்ல. நான் சாதனை சிகரங்களில் குறிப்பிட்டது போல் அது 75 நாட்களை நெருக்கி ஓடியது. படத்தின் முதற் பகுதியில் இருந்த விறுவிறுப்பு இடைவேளைக்கு பிறகு maintain செய்யப்படாமல் தொய்வு விழுந்ததே அதற்கு காரணம். மேலும் 16-02-1968 அன்று வெளியான இந்த படம் 50 நாட்களை நிறைவு செய்யும்போதே நமது படங்களான ஹரிச்சந்திராவும் கலாட்டா கல்யாணமும் அடுத்தடுத்த நாட்களில் [ஏப்ரல் 11,12] வெளியாகி திருமால் பெருமையின் ஓட்டத்தை பாதித்தது. இந்த பாதகமான சூழலில் கூட எங்கள் மதுரையில் அதன் பிறகும் ஒரு மூன்று வாரம் ஓடி தமிழகத்திலேயே அதிகபட்சமாக மதுரை ஸ்ரீதேவியில் 71 நாட்களை நிறைவு செய்தது. ரிலீஸ் அரங்கிலிருந்து ஷிப்ட் செய்யப்பட்ட இந்த படம் வழக்கம் போல் ஷிப்டிங் அரங்குகளில் 100 நாட்களை நிறைவு செய்தது.

நமது திரியில் நேர்ந்த digression மூலமாக மகாகவி காளிதாஸ் என்ற அற்புத காவியத்தின் 46-வது வெளியிட்டு தின விழா சிறப்புகள் உரிய முறையில் விவாதிக்கப்படவில்லை என்பது ஒரு குறை.

அன்புடன்

pammalar
20th August 2011, 03:32 AM
டியர் சந்திரசேகரன் சார்,

மிக்க நன்றி !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
20th August 2011, 05:06 AM
அடியேன் அஞ்சல் செய்த மின்மடல் :

கலைப் பிரம்மாவைப் படைத்தது பாலசந்தரா ?!

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீக்ஷிதர் அருளிய விண்ணுலக கணேசர் புகழ் பாடுகின்ற அற்புதக்கிருதியாம் "வாதாபிகணபதிம் பஜேஹம்" அமைந்த "ஹம்ஸத்வனி" ராகத்தின் பெயரையே அமைப்பின் பெயராக்கி செயல்படும் "ஹம்ஸத்வனி" நிர்வாகத்திற்கு கலையுலக கணேசர் புகழ் பாடும் பம்மலார் என்கிற பம்மல் ஆர். சுவாமிநாதன் வரையும் மின்மடல்.

தங்களது விழா அழைப்பிதழை இணையத்தில் கண்டேன்.

முதற்கண் தங்களது அமைப்பின் 21வது ஆண்டு விழா இனிதே நடைபெற இதயபூர்வமான நல்வாழ்த்துக்கள் !

விழாவின் தொடக்க நாள் நிகழ்வாக இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் அவர்களுக்கு "DISTINGUISHED CITIZEN OF THE YEAR AWARD 2011" அளிப்பது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி.

தொடர்ந்து தங்களது அமைப்பின் ஆண்டு விழா அழைப்பிதழின் முன்பக்கத்தை வாசித்துக் கொண்டே வந்த எனக்கு அதன் பின்பக்கத்தைப் படித்ததும் ஷாக் அடித்தது. திரு.கே.பாலசந்தர் குறித்து பின்பக்கத்தில் தாங்கள் மிகுந்த கவனக்குறைவுடன் வழங்கியுள்ள குறிப்பின் மூன்றாவது பாரா(Para) மீண்டும் தங்கள் பொன்னான கவனத்திற்கு:

"His own Production Unit, Kavithalayaa Productions is known for its mature creations, also for the small screen. In the course of several decades of KB's close involvement in Kollywood, he played a prominent role in further shaping the careers of a few of the yester-year's icons of Tamil Cinema such as Shivaji Ganesan, Sowcar Janaki, the inimitable Nagesh, Muthuraman & others."

1935-ல், ஏழு வயதில் நாடகத்தில் நடிக்கத் தொடங்கி, 17 வருடங்கள் நாடக உலகில் கொடிகட்டிப் பறந்து, 1952-ல் "பராசக்தி" மூலம் பாராளும் சக்தியாகி, 47 வருடங்கள் திரையுலகில் ஏக சக்ராதிபதியாக விளங்கி, அதே சமயம் 1952 முதல் 1974 வரை "சிவாஜி நாடக மன்றம்" மூலம் நாடக உலகுக்கும், நமது பாரத சமுதாயத்திற்கும் அருந்தொண்டு புரிந்து, மேடையிலும் ஈடு-இணையற்றவராகத் திகழ்ந்து, என்றென்றும் நடிப்புலக சாம்ராஜ்யத்தின் நிரந்தர சக்கரவர்த்தியாக, திரையுலகின் வசூல் சக்கரவர்த்தியாக, கலையுலகின் குலதெய்வமாக, எங்களது / எனது இதயதெய்வாமாகத் திகழும் கலைப்பிரம்மா நடிகர் திலகம் சிவாஜி கணேசரின் கேரியரை இயக்குனர் கே.பாலசந்தர் ஷேப் செய்தாரா ?! கேலிக்கூத்தாயிருக்கிறதே.

47 ஆண்டுகளில் [1952-1999], 306 திரைக்காவியங்களில் வாழ்ந்து காட்டிய கலையுலக மகானுடன், இரண்டே இரண்டு திரைக்காவியங்களில் மட்டுமே பணிபுரிந்திருக்கும் கே.பி. அவர்கள் எப்படி நடிகர் திலகத்தின் திரைப்பயணத்தை ஷேப் செய்தவராக முடியும் ?! நடிகர் திலகத்தின் திரையுலகப்பயணத்தில் அவருடன் பயணித்து அவரது பற்பல பரிமாணங்களை இவ்வுலகுக்கு காட்டிய இந்திய சினிமாவின் மிகச் சிறந்த இயக்குனர்களான திரு.ஏ.பீம்சிங், திரு.பி.ஆர்.பந்துலு, திரு.ஏ.பி.நாகராஜன் போன்றோர் கூட அவரை நாங்கள் செதுக்கினோம் என்று கூறியதில்லை. அவரால் தான் நாங்கள் உயர்வு பெற்றோம் என்றே கூறியுள்ளனர். அதுதான் உண்மையும்கூட. விஷயம் இப்படியிருக்க, அவரது கேரியரில் 0.65 சதவீதம் படங்களில் மட்டுமே அவருடன் பணிபுரிந்த திரு.கே.பி., நடிகர் திலகத்துடன் இணைந்து பணியாற்றிய பெருமையைப் பெற்றார் என்று கூறினால் அதுதான் சரி. அதைவிடுத்து இதெல்லாம் என்ன வேண்டாத வேலை.

ஆழ்மனதில் ஆழமாகப் பதித்துக் கொள்ளுங்கள், நடிகர் திலகம் சிவாஜி கணேசனை எந்தவொரு இயக்குனரோ, தயாரிப்பாளரோ, எந்தவொரு பிரமுகரோ ஷேப் செய்யவில்லை, உருவாக்கவில்லை. விண்ணுலக பிரம்மனின் படைப்பால் மட்டுமே அவர் கலையுலக பிரம்மன் ஆனார். தனது அபரிமிதமான-அபாரமான-அற்புதமான நடிப்புத்திறமையால் மட்டுமே அவர் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

தங்களது விழா அழைப்பிதழின் பின்பக்கக் குறிப்புக்களை எழுதிய அந்த மகானுபாவருக்கு எங்களது / எனது மெகா கண்டனங்கள். தங்களது அறிவீனத்தை அழைப்பிதழின் பின்பக்கம் கண்ணாடி போல் காட்டுகிறது. அருமையான ஸ்வரங்களும், அற்புதமான கீர்த்தனைகளும் கொண்ட "ஹம்ஸத்வனி", அபஸ்வரமும், ஸ்ருதிபேதமும் நிறைந்ததாக மாறியது விந்தையிலும் விந்தை ! இந்த மூன்று நாள் விழாவின் ஏதேனும் ஒரு நாளிலாவது இந்த மாபெரும் தவறுக்குத் தாங்கள் விழா மேடையில் ஒரு வருத்தமோ / மன்னிப்போ தெரிவித்தால் அது அந்த கலையுலக மகானாகிய நடிகர் திலகத்துக்கு செய்த உண்மையான சேவை. செய்வீர்கள் என்று நம்புகிறோம்.

சிவாஜி பக்தன்,
பம்மலார் என்கிற பம்மல் ஆர்.சுவாமிநாதன்,
ஆசிரியர் & வெளியீட்டாளர்,
மனிதபுனிதர் சிவாஜி அவர்களின் புகழ் பரப்பும்
"வசந்த மாளிகை" இதழ்.

குறிப்பு:
நடிகர் திலகத்துடன் திரு.கே.பி. அவர்கள் இணைந்து பணியாற்றிய அந்த இரண்டு திரைப்படங்கள்:

1. நீலவானம்(1965) [திரைக்கதை-வசனம்]

2. எதிரொலி(1970) [திரைக்கதை-வசனம்-இயக்கம்]

இணைப்பு;
1986-ம் ஆண்டு 'கலைத்தென்றல்' சினிமா இதழில், "படிக்காதவன்(1985)" பட வெள்ளிவிழாவில் நடிகர் திலகம் பற்றி திரு.கே.பி. அவர்கள் கூறியதாக வெளிவந்துள்ள தகவல் [நமது திரியில் இந்த ஆவணம் நேற்று இடுகை செய்யபட்டது].

RAGHAVENDRA
20th August 2011, 06:29 AM
டியர் முரளி சார்,
மிகப் பெரிய வரலாற்றுப் பிழையினை உரியவர்கள் மூலம் அந்ந நிர்வாகத்திற்கு எடுத்துரைத்த தங்களுக்கும், மற்றும் மின்னஞ்சல் மூலம் தங்களது வருத்தத்தினைப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றியும் பாராட்டுக்களும். குறிப்பாக பம்மலார் அவர்கள் ஆதாரங்களுடன் தமது வாதத்தை வைத்து முத்திரை பதித்து விட்டார். அவருக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

இனிமேலும் நடிகர் திலகத்தைப் பற்றி மேம்போக்காக கமெண்ட் செய்பவர்களுக்கும், வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று போகிற போக்கில் ஏசி விட்டுப் போகிறவர்களுக்கும், யார் கேட்கப் போகிறார்கள் என்கிற அலட்சிய மனப்பான்மையில் அவரைப்பற்றி எழுதுவோர்க்கும் பேசுவோர்க்கும் இது ஒரு பாடமாக இருக்கட்டும், இருக்கும். எந்த வித பின்புலமும் இன்றி தனியொரு மனிதனாக தன் ஆளுமையை ஆணித்தரமாகப் பதித்த அந்த உன்னத கலைஞனை யாரும் எதுவும் பேசவோ எழுதவோ முடியாத படி தட்டிக் கேட்க கடைசி சிவாஜி ரசிகன் இருக்கும் வரை முயற்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதை எடுத்துரைத்த நமது நண்பர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள் ஆவர்.

அன்புடன்

RAGHAVENDRA
20th August 2011, 06:31 AM
டியர் பம்மலார்,
சீற்றம் கொண்ட சிங்கம் போல் ஏறு கொண்டு எழுந்து எழுத்தினை ஆயுதமாக்கி எழுத்துப் பிழையினை எடுத்துரைத்த தங்களின் பணி மிகுந்த பாராட்டுக்குரியது. நன்றிகள். வாழ்த்துக்கள். தொடரட்டும் தங்கள் பணி.

அன்புடன்

RAGHAVENDRA
20th August 2011, 06:49 AM
http://i45.tinypic.com/33erj94.jpg

காலத்தில் அழியாத காவியம் தர வந்த மாபெரும் கலை மன்னனே..
காளி தாஸ் என்னும் கவிஞனை வடித்த மாபெரும் கலைச் சிற்பியே

என்று அந்தத் திரைக்காவியத்தைப் பற்றியும் நடிகர் திலகத்தைப் பற்றியும் பேசிக் கொண்டே எழுதிக் கொண்டே இருக்கலாம்.

அப்பாவி இடையனாக தேங்காயச் சில்லுகளை எடுத்து மாறு வேடத்தில் வந்திருக்கும் காளியிடம் நீட்டும் காட்சியா, அல்லது சென்று வா மகனே பாடல் காட்சியில் தான் மிகப் பெரிய உயரத்தை நோக்கிப் பயணிக்கிறோம் என்பதை அறியாத அந்த கள்ளங்கபடமற்ற முகத்தையும் அந்த நடையினையும் சொல்வதா, தன்னுடைய திருமணத்தைப் பற்றிய விவரம் அறியாமல் முதலிரவு அறையில் பழங்களை ருசிக்கும் குணத்தை மெச்சுவதா, தனக்கு காளியின் அருள் கிடைத்ததும் கோயிலில் யார் தருவார் அந்த அரியாசனம் என்று கணீரென்று பாடுவதை சொல்வதா


நடிகர் திலகம் ராஜ்ய சபா உறுப்பினராய் நியமனம் செய்யப் பட்டு, பதவியேற்ற நாளையொட்டி, தூர்தர்ஷனில் வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியு்ம் நிகழ்ச்சியில் ஒளிபரபப் பட்ட முதல் பாடல், யார் தருவார் இந்த அரியாசனம் என்பது குறிப்பிடத் தக்கது

தர்பாரில் சைகையிலேயே ஒவ்வொரு கேள்விக்கும் அப்பாவியாக கையைக் காட்ட, அதற்கு மனோகர் தனி வியாக்கியானம் செய்ய, தன் முகத்தில் அப்பாவித்தனத்தையும் பெருமிதத்தையும் ஒரு சேர காட்டும் அந்த பாவத்தை சொல்லுவதா, புலவரான பின் தன்னுடைய உடல் மொழியிலேயே அந்தப் பாத்திரத்தின் சிறப்பினைக் கொண்டு வந்த பாங்கை சொல்வதா....

ஒவ்வொரு காட்சியும் பல முறை பார்த்து ஆய்வு செய்ய வேண்டிய திரைக்காவியம் மஹாகவி காளிதாஸ்...


இன்னும் சொல்லப் போனால் வேறொரு திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானாலும் மிகவும் நெகிழ வைக்கும் காவியமாக நடிகர் திலகத்தின் நீலவானம் திரைப்படம் மூலமே தன் உண்மையான திறமை வெளிப்பட்டது, அதுவும் மற்றொரு சிறந்த இயக்குநர் மூலமாக, என்பதை பாலச்சந்தர் அவர்களின் மனசாட்சியை விட அதிகமாக உணர்ந்தவர் வேறுயார் இருக்க முடியும். இதன் படி பார்த்தால் பாலச் சந்தர் என்கிற இயக்குநரை நன்கு உருவகப் படுத்திக் கொள்ள முதல் படி அமைத்துக் கொடுத்தது நீலவானம் என்பது தானே உண்மையாக இருக்க முடியும்.

இப்படிப் பல்வேறு பரிணாமங்களில் தன் நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் திலகத்தின் புகழ் மகுடத்தில் மற்றோர் வைரக்கல், மாணிக்கக் கல், மஹாகவி காளிதாஸ்.

அன்புடன்

vasudevan31355
20th August 2011, 07:02 AM
டியர் பம்மலார் சார்,

தங்களின் "கலைப் பிரம்மாவைப் படைத்தது பாலசந்தரா ?!" மின்னஞ்சல் தவறு செய்தவர்களுக்கு ஒரு சாட்டையடி, எங்கள் மனம் போல் உங்கள் மனமும் இன்னும் ஆறவில்லை என்று புரிகிறது. நாம் தவறைச் சுட்டிக் காட்டி விட்டோம். தவறைச் சரி செய்வார்கள் எனவும் நம்புகிறோம். அப்படி தகுந்த விளக்கம் அவர்கள் தரவில்லை என்றால் இது வேண்டுமென்றே, சம்பந்தப் பட்டவர்கள் சிலரால் தெரிந்தே செய்யப்பட்ட தவறாகத்தான் நாம் எடுத்துக் கொள்ள முடியும்.

மின்னஞ்சல்கள் மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும், நமது திரியின் மூலமாகவும், கண்டனங்களைத் தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நமது 'இதய தெய்வம்' ரசிகர்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

RAGHAVENDRA
20th August 2011, 08:40 AM
http://www.sukumari.com/images/others/Sukumari_Young_Age.jpg

யார் இவர்? யூகிக்க முடிகிறதா?

இவருக்கும் தற்போது நம் திரியின் விவாதத்திற்கும் என்ன தொடர்பு?

சற்றுப் பொறுத்திருங்களேன்..

RAGHAVENDRA
20th August 2011, 08:43 AM
http://www.thehindu.com/multimedia/dynamic/00671/Chitralaya_Gopu_671112f.jpg

இவரை உங்களுக்குத் தெரியும்.
இவருக்கும் தற்போது நம் திரியின் விவாதத்திற்கும் என்ன தொடர்பு?

சற்றுப் பொறுத்திருங்களேன்..

RAGHAVENDRA
20th August 2011, 08:48 AM
இவர்கள் மட்டுமா

இயக்குநர் ஏ.சி. திருலோக்சந்தர்

கதை வசனகர்த்தா பாலமுருகன்

ஒளிப்பதிவு மேதை ஏ. வின்சென்ட்

இவர்களுக்கும் தற்போது நம் திரியின் விவாதத்திற்கும் என்ன தொடர்பு -
விடை காண சற்றுப் பொறுத்திருங்களேன்...

rajeshkrv
20th August 2011, 09:32 AM
adhu sukumari

RAGHAVENDRA
20th August 2011, 09:38 AM
சூப்பர் ராஜேஷ், சொல்லப் போனால் அந்த நிழற்படத்தின் சுட்டியிலேயே அவருடைய பெயர் உள்ளது.
அன்புடன்

RAGHAVENDRA
20th August 2011, 09:40 AM
கலைநிலா சிவாஜி கணேசன் ரசிகர் மன்றத்தின் 11வது ஆண்டு விழாவும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழாவும் 02.10.2011 அன்று காலை 10.00 மணிக்கு சென்னை பெரம்பூர் சந்திரசேகர் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. விழாவில் முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். அன்றைய தினம் நண்பகல் சமபந்தி போஜனம் நடைபெற உள்ளது. விவரம் விரைவில்.

kumareshanprabhu
20th August 2011, 10:20 AM
great pammalr sir

vasudevan31355
20th August 2011, 12:17 PM
டியர் ராகவேந்திரன் சார்,

எனக்குப் புரிந்து விட்டது.......

சார், உங்களுடைய மகாகவி காளிதாஸ் பற்றிய சுருக்கமான சிறப்பாய்வு அற்புதம். சபாஷ்!.... நானும் என் பங்கிற்கு கொஞ்சம் டைப் செய்ய ஆரம்பித்தவுடன் பவர் கட்...

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

abkhlabhi
20th August 2011, 12:21 PM
http://www.youtube.com/watch?v=kdmKD8fN5j0

vasudevan31355
20th August 2011, 01:15 PM
அன்பு முரளி சார்,

'மகாகவி காளிதாஸ்' பற்றிய தங்களது குறை திரு.ராகவேந்திரன் சார் மூலம் தீர்ந்திருக்கும் என்று நம்புகிறேன். உங்களின் திருப்திக்காக இதோ என்னுடைய பங்கு....

'கல்லாய் வந்தவன் கடவுளம்மா....
அதில் கனியாய் கனிஞ்சவ தேவியம்மா...
புல்லாய் முளைச்சவ சக்தியம்மா....
அதில் பூவா மலர்ந்தவ காளியம்மா..ஆ..ஆ..ஆ...'

கையில் அந்த ஊதுகுழலென்ன..
தலையில் உச்சிக் குடுமி என்ன.....
இரு கைகளிலும் வளையங்கள் என்ன...
கருப்பு நிற கட்-பனியன் என்ன...
கையில் பிடித்துள்ள கொம்பு என்ன...
அதில் அழகாய்த் தொங்கும் சிறு மூட்டை தான் என்ன....
ஆடுகள் மேய்க்கும் அழகென்ன ....
ஊதுகுழல் ஊதும் உதட்டசைவுதான் என்ன...
நடந்து வரும் நடையழகுதான் என்ன....

நடிப்புச் சுரங்கத்தை வாரிக் கொடுத்த பாரியே!
ஏன் எங்களை விட்டுப் பிரிந்தாய்?...
இந்த நன்றி கெட்ட உலகம் வேண்டாமென்றா?...

(குறிப்பு : இந்தப் பாடலின் 1.09 நிமிடத்திலிருந்து 1.15 நிமிடம் வரை மிக உன்னிப்பாக அன்பர்கள் கவனிக்க வேண்டுகிறேன்.)



http://www.youtube.com/watch?v=9mzZVgQRzwg&feature=player_detailpage




அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

abkhlabhi
20th August 2011, 01:20 PM
Perunthalaivar Birthday celebration by Govt.of Puducherry on 15/07/2011
http://info.puducherry.gov.in/bkamarajar2011.htm#IMAGES/bkamarajar2011/1.jpg


Nadigar thilagam Death anniversary celebration by Govt.of Puducherry on 21/7/2011
http://info.puducherry.gov.in/dsivaji2011.htm#IMAGES/dsivaji2011/1.jpg

Invitation by Govt.of Puducherry
http://info.puducherry.gov.in/events/21july2011.jpg
http://info.puducherry.gov.in/events/15july2011.jpg

mr_karthik
20th August 2011, 02:06 PM
வாசுதேவன் சார்,

'மகாகவி காளிதாஸ்' பாடலை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.

மார்கழி மாதம் அதிகாலையில் எங்கள் தெரு கோயிலில், வருடாவருடம் இப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் ஒலிபரப்புவார்கள். மற்ற புராணப்பட பாடல்கள் இருக்கிறதோ இல்லையோ, மகாகவி காளிதாஸ் பாடல்கள் நிச்சயம் இருக்கும். அதனால் எங்கள் தெரு மக்களுக்கு இப்படப் பாடல்கள் மனப்பாடம்...

கல்லாய் வந்தவன்...
சென்று வா மகனே...
மலரும் வான் நிலவும்... (இரண்டு வெர்ஷன்)
காலத்தில் அழியாத காவியம் பல தந்த...
யார் தருவார் இந்த அரியாசனம்...

இப்படி, இந்தப்படத்தின் பாடல்களை எப்போது எங்கே கேட்டாலும் மார்கழி மாத அதிகாலைப்பொழுது என் நினைவுக்கு வரும்.

நாளை நடிகர்திலகம் இரட்டை வேடங்களில் கலக்கிய 'என் மகன்' உதய தினம்.

மதுரை நியூசினிமாவில் 100-வது நாள் விளம்பரம் காண இப்போதே ஆவலாக இருக்கிறேன்.

pammalar
20th August 2011, 03:23 PM
நாளை நடிகர்திலகம் இரட்டை வேடங்களில் கலக்கிய 'என் மகன்' உதய தினம்.

மதுரை நியூசினிமாவில் 100-வது நாள் விளம்பரம் காண இப்போதே ஆவலாக இருக்கிறேன்.

வருகிறார்...

pammalar
20th August 2011, 04:22 PM
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்

என் மகன்

[21.8.1974 - 21.8.2011] : 38வது ஜெயந்தி

சாதனைப் பொன்னேடுகள்

முதல் வெளியீட்டு விளம்பரம் : பேசும் படம் : செப்டம்பர் 1974
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4363a-1.jpg


100வது நாள் [கார்த்திகை தீபத்திருநாள்] : தினத்தந்தி : 28.11.1974
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4364a-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
20th August 2011, 04:32 PM
டியர் ராகவேந்திரன் சார் & வாசுதேவன் சார்,

தங்களது உணர்வுபூர்வமான பாராட்டுக்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள் !

எதிர்ப்பை கண்ணியமான முறையில் பதிவு செய்த அன்புள்ளங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
20th August 2011, 04:33 PM
டியர் ராகவேந்திரன் சார் & வாசுதேவன் சார்,

"மகாகவி காளிதாஸ்" வீடியோக்களுக்கும், கண்ணோட்டங்களுக்கும் கனிவான நன்றிகள் !

Dear kumareshanprabhu Sir, Thank you very much !

அன்புடன்,
பம்மலார்.

mr_karthik
20th August 2011, 07:30 PM
அன்புள்ள பம்மலார்,

'எள் என்னும் முன்னே எண்ணெயாக வந்து நிற்பவர்' என்பதனை வழக்கம்போல மீண்டும் நிரூபித்துள்ளீர்கள். "என் மகன்" ஆவணப்பதிவுகளுக்கு நன்றிகள் ஆயிரம். (வேறொரு திரியொன்றில் சிலரிடம் 1969-ல் வந்த ஒரு திரைப்படத்தின் 100-வது நாள் விளம்பரம் கேட்டிருந்தேன். மூன்று மாதங்களாகியும் சத்தத்தையே காணோம். மூன்று வருடங்களானாலும் வராது என்பது தெரிந்த விஷயம்தான்).

நண்பர் முரளி சீனிவாஸ் உள்ளிட்ட மதுரை ரசிகப்பெருமக்களுக்கு நன்றிகள் பல. (சென்னை தேவி பாரடைஸில் 80 நாட்களைக்கடந்த நிலையில், முக்தாவின் 'அன்பைத்தேடி' படத்துக்காக தூக்கப்பட்டது. முக்தாவுக்கு இதே வேலை. திரிசூலம் சென்னையில் மிகச்சுலபமாக 200 நாட்களைத்தாண்டுவதையும், தனது இமயம் படம் மூலமாகக் கெடுத்தார்).

Subramaniam Ramajayam
20th August 2011, 07:34 PM
Sorry friends. iwas not able to contact you because of technical problems. REGARDING THE DISCUSSIONS ON KB ISSUE. FRIENDS HAVE ENLIGHTENED THE FACTS VERY WELL. IT IS UPTO HAMSADWANI TO REGRET FOR THE HAPPENINGS. ONE THING EVEN THOUSANDS OF KB COMES NT WILL SWALLOW THEM IN SINGLE ACTION THIS FACTS EVERY BODY KNOWS VERYWELL MOULDING IS NOT NECESSARY FOR NT NECESSARY FOR KB

RAGHAVENDRA
20th August 2011, 09:22 PM
MOULDING IS NOT NECESSARY FOR NT NECESSARY FOR KB

Well said Ramajayam Sir.

Raghavendran

RAGHAVENDRA
20th August 2011, 09:22 PM
டியர் பம்மலார்,
என் மகன் என்று நடிகர் திலகம் கொஞ்சும் அளவிற்கு அவர் மேல் தாங்கள் வைத்துள்ள பாசம், பக்தி அனைத்தும் நெஞ்சை நெக்குருக வைக்கின்றன. பாராட்டுக்கள்.

அன்புடன்

RAGHAVENDRA
20th August 2011, 09:23 PM
என் மகன் படப் பூஜையைப் பற்றி பொம்மை மாத இதழில் வெளிவந்த செய்திப் படம்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/EnMaganPujaBommaifw.jpg

மேலே உள்ள படத்தில் காமிராவின் அருகில் நிற்பவர் ஒளிப்பதிவாளர் மஸ்தான். முடுக்கி வைப்பவர் பாலாஜியின் மகள், பெயர் சுஜாதா என்று நினைக்கிறேன்.

தொடரும்

RAGHAVENDRA
20th August 2011, 09:27 PM
படம் வளரும் செய்திப் படங்கள்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/EnMagancoverageBommaip01fw.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/EnMagancoverageBommaip03fw.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/EnMagancoverageBommaip04fw.jpg

தொடரும்

vasudevan31355
20th August 2011, 11:04 PM
டியர் பம்மலார் சார்,

'என் மகன்' 38வது ஜெயந்தி தினத்தை ஒட்டி தாங்கள் வெளியிட்டுள்ள பேசும் படம் முதல் வெளியீட்டு விளம்பரம், மற்றும் தினத்தந்தி 100வது நாள் விளம்பரம் இரண்டுமே அற்புத பொக்கிஷங்கள். அளித்தமைக்கு நன்றி.

டியர் ராகவேந்திரன் சார்,

என் மகன் படப் பூஜையைப் பற்றி பொம்மை மாத இதழில் வெளிவந்த செய்திப் படம் அசத்துகிறது. அபூர்வமான, காணக் கிடைக்காத புகைப்படங்கள். 'என் மகன்' வளரும் போது வந்த செய்திப் படங்களும் அற்புதம்.

நன்றிகள் சார்..

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்..

vasudevan31355
21st August 2011, 12:09 AM
"நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்?"....
மனசாட்சி இல்லாத மனிதர்களைப் பார்த்து
நடிகர் திலகம் கேட்கிறார்...முடிந்தால் மனசாட்சி உள்ளவர்கள்
பதில் சொல்லட்டும்....

அன்பு நெஞ்சங்களே,

'என்மகன்' 38வது ஜெயந்தியை முன்னிட்டு நடிகர் திலகத்தின் அற்புத அங்க அசைவுகளில்.... இதோ..



http://www.youtube.com/watch?v=QoJ__lFYLGY&feature=player_detailpage


அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

Murali Srinivas
21st August 2011, 12:42 AM
காளிதாசனின் புகழ் பாடிய ராகவேந்தர் சாருக்கும் வாசுதேவன் சாருக்கும் நன்றி.

என் மகன் விளம்பரம் கண்டவுடன் சில பல நினைவுகள். தங்கப்பதக்கம் மிக நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் போது இந்தப் படம் வெளியாகிறதே என்று ஓர் எண்ணம். இருந்தாலும் ஆகஸ்ட் 15 -ஐ எதிர்பார்த்திருக்கும் போது தமிழ் திரையுலக வரலாற்றிலே அது வரை கண்டிராத ஒரு வேலை நிறுத்தம். அன்றைய ஆட்சியாளர்களின் அடக்குமுறையை எதிர்த்து நடந்த போராட்டம். தனிப்பட்ட கோவத்தை தீர்த்துக் கொள்ள திரைப்படங்களுக்கு 70 சதவீதம் கேளிக்கை வரி விதிக்கப்பட அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகமெங்கும் இயங்கிக் கொண்டிருந்த அனைத்து திரை அரங்குகளும் ஆகஸ்ட் 15 முதல் மூடப்பட்டன. அன்றைய நாளில் தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக இருந்த நடிகர் திலகம் அவர்களின் தலைமையில் கூடிய திரையுலக அமைப்புகள் வேலை நிறுத்தம் செய்வதென முடிவு எடுத்து அதை நடை முறைப்படுத்தியது.

இதன் மூலம் அரசாங்கத்திற்கு எந்த முதலீடுமில்லாமல் வந்து கொண்டிருந்த வரி வருமானம் நின்று போகவே அதிர்ந்து போன அரசு திரையுலக அமைப்புகளை பேச்சு வார்த்தைக்கு அழைத்தது. நடிகர் சங்கம் சார்பில் நடிகர் திலகமும் கலந்து கொண்டார். அரசு எந்திரத்தை கண்டு அஞ்சாமல் அமைப்புகள் உறுதியாக இருப்பதை உணர்ந்த அரசு கூட்டிய வரி விகிதத்தை குறைத்து தான் அறிவித்த அரசாணையை திரும்பப் பெற்றது. 5 நாட்கள் நடைபெற்ற வேலை நிறுத்தம் விலக்கி கொள்ளப்பட்டு ஆகஸ்ட் 20 அன்று திரையரங்குகள் இயங்க ஆரம்பித்தன.

ஆகஸ்ட் 15 ந் தேதி வெளியாக வேண்டியிருந்த என் மகன் இதன் காரணம் ஆகஸ்ட் 21 புதனன்று நியூசினிமாவில் ரிலீஸ் ஆனது. முதன் முறையாக மதுரையில் நான்கு காட்சிகள் முறையே 1,4,7,10 மணிக்கு நடைபெற்றது. இது முதல் மூன்று நாட்களுக்கு இப்படி தொடர்ந்து பின் சனி ஞாயிறு வழக்கம் போல் காட்சிகள் நடைபெற்றன. சிறப்பான வெற்றியைப் பெற்ற என் மகன் மதுரையில் 100 நாட்களை நிறைவு செய்தது. இதன் மூலம் மதுரை மாநகரில் மீண்டும் தொடர்ந்து மூன்று படங்கள் 100 நாட்கள் கடந்து ஓடும் சாதனையை நடிகர் திலகம் புரிந்தார். முதலில் வாணி ராணி அடுத்தது தங்கப்பதக்கம் பிறகு என் மகன்.

என் மகனை பொறுத்தவரை மறக்க முடியாத மற்றொரு அம்சமும் உண்டு. 37 வருடங்கள் கடந்து விட்டன, எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. இருப்பினும் பொய்க்காத கவிஞனின் வாக்கும் அதற்கு திரையில் உருவம் கொடுத்த உண்மையே பேசிய கலைஞனின் குரலும் அன்றைய இன்றைய சூழலுக்கும் எத்தனை அழகாய் பொருந்துகிறது.

சட்டத்தின் பின்னால் நின்று சதிராடும் கூட்டம்

தலை மாறி ஆடும் இந்த அதிகார ஆட்டம்

என்றைக்கும் மேலிடத்தில் இவர் மீது நோட்டம்

இப்போது புரியாது எதிர்காலம் காட்டும்

நாடக வேஷம் கூட வராது

நாளைய உலகம் இவரை விடாது சொல்கின்றேன்.

பல நாள் திருடன் ஒரு நாள் சிறையில்

பாவம் செய்தவன் தலைமுறை வரையில் பார்க்கின்றேன்.

அன்புடன்

pammalar
21st August 2011, 01:39 AM
டியர் mr_karthik,

பாராட்டுக்கு நன்றி ! தாங்கள் குறிப்பிட்டது போல் சென்னை 'தேவிபாரடைஸ்' திரையரங்கில் "என் மகன்", 21.8.1974 புதன் முதல் 12.11.1974 புதன் வரை 84 நாட்கள் ஓடிய பெருவெற்றிக்காவியம். 13.11.1974 தீபாவளியன்று "அன்பைத் தேடி" ரிலீஸ்.

ஓடும் படத்திற்காக வரும் படத்தை நாம் எப்பொழுதுமே நிறுத்தி வைத்ததில்லையே !

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
21st August 2011, 01:45 AM
டியர் முரளி சார்,
சத்தியமான வார்த்தைகளை உரைப்பதும் அந்த சத்தியமான வாக்குகள் பலிப்பதும் ஒரு சத்தியமான மனிதனால் தான் முடியும். அது நடிகர் திலகத்தைத் தவிர வேறு யாரால் இருக்க முடியும். இந்த வரிகளை உச்சரிக்கும் தகுதி இன்றைக்கு யாருக்கு உள்ளது.... தேடணும்... தேடணும்.... தேடிக் கொண்டே இருக்கணும்....

அன்புடன்

RAGHAVENDRA
21st August 2011, 01:46 AM
என் மகன் திரைப்படத்தின் காட்சிகள் பொம்மையில் வெளிவந்தவை, தற்போது நமது பார்வைக்கு...

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/EnMaganstillBommaifw.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/EnMagancoverageBommaip02fw.jpg

அன்புடன்

pammalar
21st August 2011, 03:29 AM
டியர் ராகவேந்திரன் சார்,

பாசமான பாராட்டுக்கு பணிவான நன்றி !

ரசிகக் கண்மணிகளாகிய அன்புள்ளங்கள் அனைவரையுமே நமது கலையுலகத் தந்தை, "பிள்ளைகளே !" என்றுதானே வாய் நிறைய வாஞ்சையோடு, அன்போடு அழைப்பார் !

"என் மகன்" - 'பொம்மை' இதழ் நிழற்படங்கள், பொக்கிஷங்கள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
21st August 2011, 03:46 AM
டியர் நெய்வேலி வாசுதேவன் சார்,

பாராட்டுக்கு நன்றி !

'நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா' பாடலின் வீடியோவைப் பதிவிட்டு வெளுத்து வாங்கி விட்டீர்கள் !

டியர் முரளி சார்,

"என் மகன்" - 'அன்றும் இன்றும்' சூப்பர் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
21st August 2011, 04:29 AM
நடிகர் திலகம் பற்றி அமரர் ராஜீவ் காந்தி

நடிகர் திலகம் கலையுலகில் 50 ஆண்டுகள் கோலோச்சி பீடுநடை போடுகின்றதைப் பாராட்டி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ராஜீவ் காந்தி அவர்கள் எழுதிய 25.9.1984 தேதியிட்ட பாராட்டுக் கடிதத்தின் நகல்
[உதவி : நமது ஹப்பர் திரு.கே.சந்திரசேகரன்]
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4369aa.jpg

இன்று 20.8.2011 முன்னாள் பிரதமர் அமரர் ராஜீவ் காந்தி அவர்களின் 68வது பிறந்த தினம்.

பம்மல் ஆர். சுவாமிநாதன்.

pammalar
21st August 2011, 05:01 AM
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்

மரகதம்

[21.8.1959 - 21.8.2011] : 53வது உதயதினம்

பொக்கிஷப் புதையல்

முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 7.8.1959
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4361a-1.jpg


முதல் வெளியீட்டு விளம்பரம் : முரசொலி : 21.8.1959
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4362a-1.jpg

"மரகதம்" சென்னை 'வெலிங்டன்' திரையரங்கில் 100 நாட்கள் ஓடிய சிறந்த வெற்றிக் காவியம்.

இதன் 100வது நாள் விளம்பரம் கிடைக்கப் பெற்றவுடன் அவசியம் இங்கே இடுகை செய்கிறேன்.

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
21st August 2011, 08:25 AM
டியர் பம்மலார்,
முத்தே, மணியே, பவழமே, மாணி்ககமே, மரகதமே என்று உங்களைத் தமிழில் உள்ள அனைத்து வார்த்தைகளையும் வைத்து வார்த்தை ஜாலம் செய்து வாழ்த்தி அந்த உத்தமக் கலைஞன் மகிழ்ந்து கொணடிருக்கிறார் என்பது திண்ணம்.

அன்புடன்

RAGHAVENDRA
21st August 2011, 08:26 AM
மரகதம் விமர்சனம்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/maragathamreview.jpg

மரகதம் திரைப்படத்தின் மற்றொரு விளம்பரம்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/maragathamAdfw.jpg

அன்புடன்

vasudevan31355
21st August 2011, 08:54 AM
நடிகர் திலகத்தின் வெற்றி மகுடத்தில் மேலும் ஒரு மணி மகுடம் என்மகன். N.T யின் 172- ஆவது காவியம்.

பூட்டு உடைக்கும் திருடனாகவும், ஏட்டு ராமையா தேவனாகவும் இரட்டை வேடம் நடிகர் திலகத்திற்கு.

பாசமான குடும்ப வேடங்களிலேயே N.T யை அதிகம் பார்த்த நமக்கு action role-களிலும் அவர் வெளுத்து வாங்க முடியும் என்று நிரூபித்தவர்கள் திரு,பாலாஜி அவர்களும், திரு சி.வி.ராஜேந்திரன் அவர்களும். (தங்கை, என் தம்பி, திருடன், ராஜா, என்மகன் )

வழக்கம் போல இரண்டு character-களுக்கும் சரியான வித்தியாசம்.

சந்தர்ப்ப சூழ்நிலையால் திருடனாக்கப்பட்டு எதிரிகளிடம் சிக்கித் தவிக்கும் தவிப்பாகட்டும்..

தனக்குக் கோபம் தலைக்கேறும் போதெல்லாம் lighter- யை கொளுத்தி கோபத்தை வெளிப்படுத்தும் விதமாகட்டும்...

தன்னை சுவீகாரம் எடுத்துக் கொள்ளும் ஏட்டு ராமையா தேவரின் அன்புக்கு கட்டுப் படவேண்டிய சங்கடமான சூழ்நிலையில் சிக்கிக்கொண்டு தவிப்பதாகட்டும்...

தன் திருட்டுத் தொழிலால் காதலி பாதித்து விடக் கூடாது என்பதற்காக காதலை மறைத்து தவிப்பதாகட்டும்...

'நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்' என்று எதிரிகளிடம் கொக்கரிப்பதாகட்டும்...

தனக்கு ஒரு ஆண்பிள்ளை இல்லையே என்று ஒரு திருடனை சுவீகாரம் எடுத்துக் கொண்டு அவன் திருடன் என்று தெரிந்ததும் கொதித்துக் கொந்தளித்து,அவனை துவம்சம் செய்து விட்டு, பின் பாசத்தில் trumpet- எடுத்து சோகத்துடன் வாசிக்கும் பாங்காகட்டும்...

எதிரிகளிடமிருந்து தன் மகனை காப்பாற்ற மரங்கள் அடர்ந்த தோப்பில் போடும் அந்த அற்புத கம்பு சண்டையாகட்டும்...

தன்னை பாலாஜி முதுகில் சுட்டவுடன் "பின்னால நின்னு யாருடா சுட்டது..கோழப் பய...ஆம்பளையா இருந்தா முன்னாடி வாடா...டாய்..நான் தேவன்டா", என்று துடிதுடித்து உயிரை விடுவதாகட்டும்...

ஏட்டு ராமையாத் தேவராகவும், திருடன் ராஜாவாகவும் நடிப்பில் ராஜாங்கம் நடத்துகிறார் நடிக மன்னன்.

பொண்ணுக்கென்ன அழகு...
நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்...
சொல்லாதே.. சொல்லாதே...ஊரார்க்கு சொல்லாதே ....

போன்ற சூப்பர் ஹிட் பாடல்கள்..

ஒளிப்பதிவு டைரக்டர் மஸ்தானின் 'குளு குளு' ஒளிப்பதிவு...

எம்.எஸ்.விஸ்வநாதனின் ஆர்ப்பாட்டமான இசை...

C.V..ராஜேந்திரனின் 'விறு விறு' இயக்கம்...

மொத்தத்தில் அனைத்து தரப்பினரையும் கவர்ந்த வெற்றிமகன் "என் மகன்". ராஜாமணி அன்னை ஈன்ற அன்பு மகன், எங்கள் 'தெய்வ மகன்'....

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

RAGHAVENDRA
21st August 2011, 09:44 AM
வாசுதேவனின் மகன் ஜெயந்தி நாளன்று, தன் பிள்ளைகளில் ஒருவரான வாசுதேவனை அந்த நடிகர் திலகம் வாழ்த்திக்கொண்டுள்ளார் என்பது நிதர்சனம். என் மகன் திரைக்காவியத்தைப் பற்றிய தங்களின் ஆய்வு, சிறப்பாக உள்ளது. பாராட்டுக்கள்.

தங்கள் வரவு நம் திரியின் மகுடத்தில் மற்றும் ஓர் மரகதக் கல் என்பது உறுதி.

தங்களுக்காகவும் மற்றும் நம் அனைத்து நண்பர்களுக்காகவும் மரகதம் திரைக்காவியத்திலிருந்து சில காட்சிகள், collage வடிவில்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Decorated%20images/maragathamcollagefw.jpg

அன்புடன்

RAGHAVENDRA
21st August 2011, 09:50 AM
மரகதம் திரைக்காவியத்தில் எஸ்.எம்.சுப்பையா நாயுடு அவர்கள் இசையமைப்பில் ராதா ஜெயலக்ஷ்மி - டி.எம்.சௌந்தர்ராஜன் குரல்களில் காலத்தால் அழிக்க முடியாத இனிமையான பாடல், கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு. இப்பாடலைத் திரு வாசுதேவன் தரவேற்றிய சூட்டோடு சுட்டாக நம் அனைவர் பார்வைக்கும் தருவார் என எதிர்பார்ப்போம்.
முன்கூட்டிய நன்றி திரு வாசுதேவன் அவர்களே

அன்புடன்

vasudevan31355
21st August 2011, 10:13 AM
நன்றி திரு.ராகவேந்திரன் சார்! இதோ.. நீங்கள் எதிர்பார்த்தபடியே உங்கள் பார்வைக்கும், மற்றும் அனைத்து நண்பர்களின் பார்வைக்கும் அந்த அற்புதப் பாடலான,

"கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு".

அன்பு நண்பர்களே!

பக்ஷிராஜாவின் "மரகதம்" 53-ஆவது உதய தினம். 53-வருடங்கள். அடேயப்பா!... ஆனால் நடிகர் திலகத்தை இங்கு உங்கள் 'கண்ணுக்குள்ளே' பாருங்கள். கருப்பு-வெள்ளை-யில் தான் அவர் முகம் எவ்வளவு வசீகரம்! பத்மினியும் கூடத்தான்...இதோ...அந்த அற்புதப் பாடல் காட்சி. உங்களுக்காக...




http://www.youtube.com/watch?v=z7110AGgpb0&feature=player_detailpage


அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

vasudevan31355
21st August 2011, 10:43 AM
நன்றி ராகவேந்தர் சார்.

தாங்கள் வெளியிட்டுள்ள 'மரகதம்' திரைக்காவிய காட்சிகளைப் பார்த்த போது முழுப் படத்தையும் பார்த்த திருப்தி எற்பட்டது. 'சிகர ரசிகரான' தங்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகளும், வணக்கங்களும், கோகுலாஷ்டமி வாழ்த்துக்களும்.

என்றும் தங்கள் வழியில்.

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

vasudevan31355
21st August 2011, 10:52 AM
அன்பு நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள்.

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

vasudevan31355
21st August 2011, 12:34 PM
"கருடா சௌக்கியமா" இரண்டாம் பாகம் ஆய்வுக் கட்டுரை விரைவில்.



http://s3.postimage.org/yuik9lh0k/1_avi_000881781.jpg



http://s3.postimage.org/yudx8bf50/6_avi_000076676.jpg





அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

pammalar
21st August 2011, 06:03 PM
டியர் ராகவேந்திரன் சார்,

நவரத்னப் பாராட்டுக்கு நயமிகு நன்றி !

நமது இதயதெய்வம் தமது அருளாசி மலர்களை நம் அனைவருக்குமே வாரி வழங்குகிறார் என்பது திண்ணம் !

"மரகதம்" குறித்த 'குமுதம்' விமர்சனம்-விளம்பரம் மற்றும் தாங்கள் வழங்கிய நிழற்படங்கள் மரகதங்களாய் மின்னுகின்றன !

பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

adiram
21st August 2011, 07:43 PM
Vasudevan,

romba unarchivasap padureenga.

pammalar
21st August 2011, 08:41 PM
டியர் நெய்வேலி வாசுதேவன் சார்,

"என் மகன்" காவிய அலசல் மிக அருமை !

ரத்னசுருக்கமான அதே சமயம் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய நேர்த்தியான ஆய்வு !

"கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு", one of my most favourite NT romantic number. NT & NP romantic duo - made for each other pair என்பதனை மீண்டும் நிரூபிக்கிறார்கள் ! இப்பாடலை இயற்றியவர் நாமக்கல் கவிஞர் வே.ராமலிங்கம் பிள்ளை அவர்களின் அன்புப்பிள்ளை ரா.பாலு. பாடல் வரிகளில் இயற்கை எழில் பூத்துக் குலுங்குவது இப்பாடலின் இன்னொரு சிறப்பம்சம். டி.எம்.எஸ் அவர்களும், ஜெயலக்ஷ்மி அவர்களும் இணைந்த அரிய இரு குரலிசை இந்த கானம். இப்பாடல் குறித்து திரை இசை ஆராய்ச்சியாளர் திரு.வாமனன் அவர்கள் எழுதியுள்ள 'திரை இசை அலைகள் [பாகம் 1 & 2]' நூல்களிலிருந்து சில தகவல்கள்:

"நாம சங்கீர்த்தன விற்பன்னர் ஹரிதாஸ் சுவாமிகள் தமது பஜனை-கதாகாலட்சேபங்களில் இப்பாடலை அப்படியே இசைப்பது வழக்கமாம். ஒரு காதல் பாடல் சமய மேடைக்கும் சமயம் தகுந்தாற்போல் உபயோகப்படுவது போற்றுதலுக்குரிய ஒன்று.

Semi-classical ஸ்டைலில் அமைந்த இந்தப்பாடலின் வர்ணமெட்டை தன்னுடன் இணைந்து பாடப் போகிறவர் கர்நாடக இசையுலக கானவாணி ஜெயலக்ஷ்மி என்று அறிந்ததும் டி.எம்.எஸ். மிகவும் மகிழ்ச்சியடைந்தாராம். "ஜெயலக்ஷ்மியை விட அதிக திரைப்பாடல்கள் பாடுபவன் என்கின்ற ரீதியில் இப்பாடல் பதிவின் போது அவருக்கு சில நேர்த்தியான Cinematic Singing Nuancesஸை எடுத்தியம்பினேன். நிறைகுடமான அவர் அந்த யுக்திகளை அப்படியே கையாண்டு அதியற்புதமாகப் மிக இனிமையாக என்னுடன் இணைந்து பாடினார்" என்கிறார் பாடகர் திலகம்."

நமது நடிகர் திலகத்துக்கு வருவோம், அவர் நம் கண்களில் மட்டுமா, உடல், உயிர், ஆன்மா என அனைத்திலும் அவர்தானே வியாபித்திருக்கிறார்.

தங்களது பதிவுகளுக்கு நன்றி கலந்த பாராட்டுக்கள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
21st August 2011, 09:41 PM
அனைவருக்கும் "ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி" நல்வாழ்த்துக்கள் !

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/Krishna1-1.jpg

pammalar
21st August 2011, 10:23 PM
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்

என் மகன்

[21.8.1974 - 21.8.2011] : 38வது ஜெயந்தி

பொக்கிஷப் புதையல்

அரிய புகைப்படம் : ஏட்டு ராமையா தேவர்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/EnMagan1-1.jpg


படக்காட்சிகள் : திரைவானம் : செப்டம்பர் 1974
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4367a-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
22nd August 2011, 12:41 AM
டியர் பமமலார்,
கிருஷ்ண ஜெயந்தியை அற்புதமாகக் கொண்டாட வழி செய்து விட்டீர்கள். பட்சணங்கள், பால் பழங்கள் அனைத்தையுமே பருகிய உணர்வையும் தந்து விட்டீர்கள். அதுவும் ஏட்டு ராமையாவின் பாதுகாப்போடு உண்பதால், வயிற்றுக்கும் பங்கமில்லை.

நன்றி

அன்புடன்

RAGHAVENDRA
22nd August 2011, 12:43 AM
இன்று 22.08.2011 மறக்க முடியாத நாள். நம் அன்புச் சகோதரர் சசிகுமார் நினைவு நாள். தீயே உனக்கென்ன தீராத பசியோ என்று மெல்லிசை மன்னர் தீர்ப்பு படத்தில் பாடியது இவரை எண்ணித்தானோ...

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Sasikumar%20Tribute/sasikumartrib.jpg

இனி வரும் படங்கள் இடம் பெற்ற சிவாஜி ரசிகன் இதழை எனக்குத் தந்துதவிய நெய்வேலி வாசுதேவன் அவர்களுக்கு இந்தப் பதிவுகள் சமர்ப்பணம்.

RAGHAVENDRA
22nd August 2011, 12:45 AM
சசிகுமார் நினைவாக சில பதிவுகள்...படங்கள் மட்டும்.. அவரைப் பற்றி எழுத என்னால் இயலவில்லை.. கண்ணீர் தான் வருகிறது...அவர் அளவிற்கு நடிகர் திலகத்தின் மேல் பாசம் கொண்டவர்கள் அந்தக் காலத்திலும் அதற்கு அடுத்த காலத்திலும் யாரையும் காண இயலவில்லை. தற்போதைய காலத்தில் சசிகுமார் இடத்தை நம் ஒய்.ஜி.மகேந்திரன் நிரப்பி வருகிறார் எனலாம்.

சசிகுமார் மறைந்த போது சிவாஜி ரசிகன் 01.09.1974 இதழில் அவருடைய படம் அட்டையில் வெளியிடப் பட்டது

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Sasikumar%20Tribute/Sasitrib01.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Sasikumar%20Tribute/Sasitrib02.jpg

RAGHAVENDRA
22nd August 2011, 12:47 AM
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Sasikumar%20Tribute/Sasitrib06.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Sasikumar%20Tribute/Sasitrib07.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Sasikumar%20Tribute/Sasitrib04.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Sasikumar%20Tribute/Sasitrib05.jpg

RAGHAVENDRA
22nd August 2011, 12:52 AM
சசிகுமாரின் மறைவையொட்டி நடிகர் திலகத்தின் கண்ணீர் அஞ்சலி

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Sasikumar%20Tribute/Sasitrib03.jpg

RAGHAVENDRA
22nd August 2011, 12:53 AM
சசிகுமாரின் இறுதி ஊர்வலத்தைப் பற்றிய சிவாஜி ரசிகன் இதழில் வெளிவந்த செய்தித் தொகுப்பு

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Sasikumar%20Tribute/Sasitrib08.jpg

RAGHAVENDRA
22nd August 2011, 12:56 AM
சசிகுமாரின் மறைவையொட்டி பிலிமாலயா இதழில் வெளி வந்த கட்டுரை

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Sasikumar%20Tribute/Sasitrib09.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Sasikumar%20Tribute/Sasitrib10.jpg

நெஞ்சம் நெகிழ்வுடன்
ராகவேந்திரன்

பி.கு. இங்கு ஓர் அன்பர் நீங்கள் உணர்ச்சி வசப் படுகிறீர்கள் என்று கூறினார். உள்ளத்தில் பாசமும் ஈரமும் மனிதாபிமானமும் உள்ளவனால் மட்டுமே உணர்ச்சி வசப்பட முடியும் என்பதற்கு இந்தப் படங்கள் ஆணித்தரமான சான்று.

RAGHAVENDRA
22nd August 2011, 01:08 AM
சசிகுமார் அவர்கள் பழகுவதற்கு மிகவும் இனியவர். பேசும் போது நொடிக்கு ஒரு முறை நடிகர் திலகத்தைப் பற்றி சொல்லாமல் இருக்க மாட்டார். அண்ணா என்று தான் சொல்வார். நான் கேட்டேன், நீங்கள் அண்ணா என்று சொன்னால் அது அண்ணாதுரை அவர்களையல்லவா குறிக்கும் என்றதற்கு, என்னைப் பொறுத்த வரை அண்ணா என்றால் நடிகர் திலகம் மட்டும் தான் என்றார். அது மட்டுமல்ல, அண்ணன் என்றால் மரியாதைக் குறைவு, என்னால் அப்படி என்னை விட வயதானவரை மரியாதைக் குறைவாக அழைக்க முடியாது என்றார். நான் ஏற்கெனவே ஒரு முறை குறிப்பிட்டிருந்தது போல் ராஜபார்ட் ரங்கதுரை மறுமணக் காட்சி படப்பிடிப்பு முடிந்த சில நாட்களில் அவருடன் உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. நெடு நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அவருடைய கார் மெக்கானிக்கினால் பழுது பார்க்கப் பட்டு முடிந்து அவர் வந்து அழைத்த பின்னும் அவர் அடியேனுடன் நடிகர் திலகத்தைப் பற்றியும் பெருந்தலைவரைப் பற்றியும் இந்த நாட்டைப் பற்றியும் சிலாகித்துப் பேசிக் கொண்டிருந்தார்.

அவரை மறக்க முடியுமா...

pammalar
22nd August 2011, 03:01 AM
ராகவேந்திரன் சார் & வாசுதேவன் சார்,

அமரர் சசிகுமார் அவர்களுக்கு அடியேனது ஆத்மார்த்தமான அஞ்சலி.

பதிவுகள் கண்களைக் குளமாக்கி விட்டது.

பம்மல் ஆர். சுவாமிநாதன்.

pammalar
22nd August 2011, 03:34 AM
நமது நடிகர் திலகத்தின் போர்வாள்
தேசிய நடிகர் அமரர் சசிகுமார் அவர்களுக்கு
37வது ஆண்டு நினைவாஞ்சலி

வரலாற்று ஆவணம் : சிவாஜி ரசிகன் : 15.9.1974
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4371a.jpg
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4372a.jpg

பம்மல் ஆர். சுவாமிநாதன்.

pammalar
22nd August 2011, 04:29 AM
நமது நடிகர் திலகத்தின் போர்வாள்
தேசிய நடிகர் அமரர் சசிகுமார் அவர்களுக்கு
37வது ஆண்டு நினைவாஞ்சலி

வரலாற்று ஆவணம் : சிவாஜி ரசிகன் : 15.9.1974
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4374a.jpg
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4374aa.jpg
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4379a.jpg

பம்மல் ஆர். சுவாமிநாதன்.

pammalar
22nd August 2011, 05:38 AM
நமது நடிகர் திலகத்தின் போர்வாள்
தேசிய நடிகர் அமரர் சசிகுமார் அவர்களுக்கு
37வது ஆண்டு நினைவாஞ்சலி

வரலாற்று ஆவணம் : பேசும் படம் : செப்டம்பர் 1974
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4386a.jpg
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4387a.jpg


வரலாற்று ஆவணம் : திரைவானம் : செப்டம்பர் 1974
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4385a.jpg

பம்மல் ஆர். சுவாமிநாதன்.

pammalar
22nd August 2011, 06:52 AM
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்

மாடி வீட்டு ஏழை

[22.8.1981 - 22.8.2011] : 31வது உதயதினம்

பொக்கிஷப் புதையல்

நடிகர் திலகம்-கலைஞர் கூட்டணியில் "மாடி வீட்டு ஏழை" என்ற திரைக்காவியம் உருவாக இருப்பதாக 1959-ம் ஆண்டே விளம்பரம் வெளிவந்தது. என்ன காரணத்தினாலோ அப்போது அந்தக் காவியத்தின் தயாரிப்பு அந்த விளம்பரத்தோடு நின்றுபோனது. அந்த கிடைத்தற்கரிய 1959-ம் ஆண்டு வரலாற்று விளம்பரம் இத்தொகுப்பில் முதல் நிழற்படமாக அளிக்கப்பட்டுள்ளது.

மிகமிக அரிய விளம்பரம் : The Hindu : 1.8.1959
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4384a-1.jpg


காவிய விளம்பரம் : முரசொலி : 25.7.1981
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4381a-1.jpg


முதல் வெளியீட்டு விளம்பரம் : தினமணி : 22.8.1981
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4383a-1.jpg


50வது நாள் : முரசொலி : 10.10.1981
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4382a-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

vasudevan31355
22nd August 2011, 07:27 AM
அன்பு பம்மலார் சார்,

தங்கள் அன்புக்கும், வாழ்த்துதல்களுக்கும் என் மனங் கனிந்த நன்றிகள்.


"கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு" பாடலைப் பற்றி திரை இசை ஆராய்ச்சியாளர் திரு.வாமனன் அவர்கள் எழுதியுள்ள 'திரை இசை அலைகள்' நூலில் இருந்து அரிய விஷயங்களை தொகுத்துக் கொடுத்து, அற்புதமான இலக்கிய நடையில் அழகாக அலசியிருந்தீர்கள். அற்புதம்! அற்புதம்! (தங்களின் தரமான தமிழ்ச் சொற்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள்).

அதே போல் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தாங்கள் பதிவு செய்துள்ள அந்த 'படிக்காத மேதை பரமாத்மா'வின் புகைப்படம் கண்ணுக்குள்ளயே நிழலாடுகிறது. ஏட்டு ராமையா தேவரும் புகைப்படத்தில் அசத்துகிறார்.
(எங்கள் பம்மலாரும் 'அசத்தோ அசத்து' என்று அசத்திக் கொண்டிருக்கிறார்).

தேசிய நடிகர் அமரர் சசிகுமார் அவர்களின் 37வது ஆண்டு நினைவாஞ்சலி
பதிவுகளும் நெஞ்சைத் தொட்டு, அந்த மாபெரும் தேசிய நடிகனின் நினைவுகளைத் தட்டி எழுப்பி கண்ணீர் மல்க வைத்தன.

டியர் ராகவேந்திரன் சார்,

நன்றிகள் சார்.
தேசிய நடிகர் சசிகுமார் அவர்களின் 37வது ஆண்டு நினைவாஞ்சலியை ஒட்டி தாங்கள் வெளியிட்டுள்ள பதிவுகள் மனதை பிசைகின்றன. ஒப்புயர்வில்லாத உன்னதக் கலைஞன். நடிகர் திலகத்தின் அன்புத் தம்பி. உண்மையான அபிமானி. நடிகர் திலகத்திற்காகவும், காங்கிரஸ் கட்சிக்காகவும் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்ட அற்புத அறிஞன். அந்த மாபெரும் தேசிய நடிகருடன் ஆழ்ந்த நட்பு கொண்ட உங்களின் உணர்வுகள் மெய் சிலிர்க்க வைத்து விட்டன.

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

RAGHAVENDRA
22nd August 2011, 08:41 AM
டியர் வாசுதேவன்,
தங்கள் உணர்வுகள் எல்லோருடைய உணர்வுகளையும் பிரதிபலிக்கின்றன.

டியர் பம்மலார்,
மாடி வீட்டு ஏழை விளம்பர ஸ்டில் வெளியிட்டு கலக்கி விட்டீர்கள். சூப்பரோ சூப்பர்...

சிம்மக் குரல் கொண்ட கலைஞன் இங்கே...
ராஜ நடை போடும் மறவன் இங்கே..
நவரச நாடக நடிகன் இங்கே..
நல்ல மனிதர்களில் ஒருவன் இங்கே...

கேளுங்கள்..

இங்கே ... இங்கே... இங்கே... (http://www.jointscene.com/php/play.php?songid_list=18020)

FIREFOX உலாவியில் கேட்கலாம்.

அன்புடன்

vasudevan31355
22nd August 2011, 09:19 AM
இன்று 22.08.2011 மறக்க முடியாத நாள். நம் அன்புச் சகோதரர், தேசிய நடிகர் சசிகுமார் அவர்களின் நினைவு நாள். நானிலம் போற்ற வாழ்ந்த அந்த நல்லவருக்கு நமது திரியின் சார்பாக 37வது ஆண்டு நினைவாஞ்சலியை கண்ணீரோடு காணிக்கை ஆக்குகிறோம்.

இதோ...சசிகுமார் அவர்கள் "பாரத விலாஸ்" திரைக் காவியத்தில் நடித்துள்ள உணர்ச்சி மயமான ஒரு காட்சி ஒலி-ஒளி வடிவில்.

இந்தக் காட்சியில் சசிகுமார் அவர்கள் சொல்லுவதாக வரும் ஒரு வசனம் நம் கண்களைப் பனிக்கச் செய்கிறது. ("கசாப்புக் கடையிலே வெட்டுப் படுற ஆட்டுக்குக் கூட நாம ஏன் சாகப் போறோம்கிற காரணம் தெரியுமே") என்கிற வசனம் தான் அது. அது போல் தானும் தன் அன்பு மனைவியும் நெருப்புக்கு இரையாகப் போகிறோம் என்று முன்னமேயே காரணம் தெரியாமல் போய் விட்டதோ நம் தேசிய நெஞ்சத்திற்கு?..




http://www.youtube.com/watch?v=aerN6j-Q99o&feature=player_detailpage



அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

KCSHEKAR
22nd August 2011, 11:10 AM
தேசிய நடிகர் சசிகுமார் நினைவு பதிவுகளைத் தந்து அசத்திய திரு.ராகவேந்திரன், திரு.வாசுதேவன், திரு.பம்மலார் ஆகியோருக்கு நன்றி. மாடி வீட்டு ஏழை - 1959 இல் வெளிவந்த விளம்பரம் புதிய தகவல் மற்றும் ராஜீவ்காந்தி நடிகர்த்திலகத்தைப் பாராட்டி எழுதிய கடிதத்தை ராஜிவ்காந்தியின் பிறந்த நாளன்று வெளியிட்டது மிகவும் பொருத்தம் - நன்றி பம்மலார்.

RAGHAVENDRA
22nd August 2011, 07:01 PM
தேசிய நடிகர் சசிகுமாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒரு பக்கம் நம்முடைய நடிகர் திலகம் இணைய தளத்தில் உருவாக்கப் பட்டு தரவேற்றப் பட்டது. அதனுடைய இணைப்பு கீழே

http://www.nadigarthilagam.com/SasikumarTrib.html

இந்த இணைப்பு நம்முடைய ஹப்பர் திரு மோஹன் ராம் அவர்களுக்கு அனுப்பப் பட்டது.

அவர் அதனை சசிகுமார் அவர்களுடைய குமாரருக்கு அனுப்பியுள்ளார்.

அந்த இணைப்பிலுள்ள பக்கத்தினை சசிகுமார் அவரது குடும்பத்தினர் பார்த்துள்ளனர்.

உணர்ச்சிப் பெருக்குடன் அவர்கள் நமது நடிகர் திலகம் இணைய தளத்திற்கு நன்றி செலுத்தி யுள்ளனர்.


Dear Sir ,

We extend our heart felt gratitude for your tribute on rememberance of my grandfather Shri .Sasikumar .
It was very heartrending and I felt very proud about my grandfather .
Thank you once again for your memories of him.

with sincere regards,
his family members- Son and Daughter ,in-laws and three grandchildren .


திரு சசிகுமார் அவர்களுடைய குடும்பத்தார்க்க்கு நமது உளமார்ந்த நன்றிகள். அவர்கள் குடும்பம் ஆல்போல் தழைத்து அருகு போல் வேரூன்றி வளர நம் இதயதெய்வத்தின் நல்லாசிகள் உண்டு என்று கூறிக்கொண்டு நாமும் இறைவனை வேண்டிக் கொள்வோம்.

அன்புடன்

saradhaa_sn
22nd August 2011, 08:08 PM
டியர் முரளியண்ணா
டியர் பம்மலார்,
டியர் ராகவேந்தர்,
டியர் பார்த்தசாரதி,
டியர் வாசுதேவன்,
டிய சந்திரசேகரன்....

மற்றும் நடிகர்திலகத்தின் ரசிக நெஞ்சங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.

கடந்த பத்துப் பணிரெண்டு நாட்கள் கணிணி வேலை செய்யவில்லை, ரிப்பேர். அதனால் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் இந்த மகத்தான தருணத்தில் கலந்துகொண்டு பங்களிப்பாளர்களுக்கு அவ்வப்போது நன்றி தெரிவிக்க இயலவில்லை.

இன்றைக்குத்தான் திரியைத்திறந்து பார்த்தால் அப்பப்பா எவ்வளவு உன்னதமான அற்புதமான பதிவுகளை எல்லாம் காலத்தே கண்ணுற இயலாமல் போய்விட்டது என்று வருத்தம் அடைந்தேன். எவ்வளவு ஆவணப்பதிவுகள், ஆதாரங்கள், நேர்காணல்கள், சிறப்புக்கட்டுரைகள், சாதனை விளம்பர ஆவணங்கள். அனைத்தையும் பார்த்து படித்து முடிக்கவே ஒருநாள் முழுக்க போய்விட்ட்டது (இத்தனைக்கும் வேறு வேலைகள் எதுவும் செய்யாமல் இதே வேலையாக இருந்தும்).

அவற்றில் ஏராளமான ஆவணங்கள் நான் இதுவரை பார்த்திராதது. ஆவணக் களஞ்சியங்களான பம்மலார், ராகவேந்தர் ஆகியோருக்கும் புதிய வரவாக வந்து எல்லோரையும் அசத்திக்கொண்டிருக்கும் வாசுதேவன் அவர்களுக்கும் எப்படி நன்றிகளைத் தெரிவிப்பது என்றே தெரியவில்லை. அந்த எல்லைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டுப்போய்விட்டீர்கள்.

ஆனால் அனைத்துப்பதிவுகளையும் படித்து வந்தபோது கடைசிப்பதிவுகளாக இடம்பெற்ற தேசீய நடிகர் 'கேப்டன்' சசிகுமார் அவர்களின் அகால மரணம் பற்றிய பதிவேடுகளைக்கண்டபோது கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. எப்பேற்பட்ட ஒரு அற்புத தேசியவாதியை இளம் வயதில் இழந்துவிட்டோம் என்று வருத்தம் மேலிட்டது.

நடிகர் ஸ்ரீகாந்துக்கு உருவாக்கிய திரியில், 'காங்கிரஸ் பேரியக்கத்தில் ஸ்ரீகாந்த்' என்ற கட்டுரையில் கேப்டன் சசிகுமாரின் அகால மரணம் பற்றிய சம்பவங்களைக் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் இப்போது நீங்கள் அனைவரும் அளித்திருக்கும் காவியப்பதிவுகள் அந்த மகா கலைஞனைப்பற்றிய பல விஷயங்களை இன்றைய தலைமுறைக்கு எடுத்துச்சொல்வதாக அமைந்துள்ளது.

அவரது புதல்வர் விஜயசாரதி இப்பதிவகளைப்பார்த்தாரானால் நிச்சயம் பெற்றோரின் நினைவில் மனம் நெகிழ்ந்து போவார். அவருக்கு நினைவஞ்சலி செலுத்தியதன் மூலம் நடிகர்திலகத்தின் ரசிகப்பெருமக்கள் எவ்வளவு நன்றியுணர்வும், நல்லவர்களை மதிக்கும் நல்ல மனமும் கொண்டவர்கள் என்பதை உலகுக்கு உணர்த்தி விட்டீர்கள்.

உங்கள் அனைவருக்கும் இதயம் நிறைந்த நன்றிகள்.

(இதனை டைப் செய்துவிட்டுப் பதிவிடும்போது பார்க்கிறேன், சசிகுமார் குடும்பத்தினர் இப்பதிவுகளைப்பார்த்து நன்றி தெரிவித்திருப்பதாக அண்ணன் ராகவேந்தர் தெரிவித்துள்ளார். என்ன ஒரு மன ஓட்டம் நமக்குள்).

vasudevan31355
22nd August 2011, 09:11 PM
டியர் ராகவேந்திரன் சார்,

தேசிய நடிகர் சசிகுமார் அவர்களின் நினைவஞ்சலி பதிவுகளை நம்முடைய நடிகர் திலகம் இணைய தளத்தில் தரவேற்றி, திரு.சசிகுமார் அவர்களின் குடும்பத்தாருக்கு, மரியாதைக்குரிய திரு.மோகன்ராம் மூலமாக தெரியப் படுத்தி, அந்த நாட்டுப்பற்று மிக்க நல்ல நடிகருக்கு இமாலய அஞ்சலி செலுத்தி விட்டீர்கள். இதற்கு வார்த்தைகளால் நன்றி கூற இயலாது. நம் hub அங்கத்தினர்கள் சார்பாக என் கோடானு கோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு.மோகன்ராம் சாருக்கும் என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

J.Radhakrishnan
22nd August 2011, 09:46 PM
டியர் ராகவேந்தர் சார், பம்மலார் சார், வாசுதேவன் சார்,

நடிகர் சசிகுமார் இளம்வயதில் தீ விபத்தில் காலமானார் என்பதனையும், நடிகர் திலகத்தின் மேல் பற்றுள்ளவர் என்பதனையும் கேள்விபட்டிருக்கின்றேன், தங்கள் பதிவுகளை பார்க்கும் போது தான் அவர் எப்பேர்பட்ட தேசியவாதி என்பதனை கண்டு கண்கள் குளமாகின.

Murali Srinivas
22nd August 2011, 11:45 PM
சில விஷயங்களைப் பற்றி படிக்கும் போதோ அல்லது பேசும் போதோ நாம் ஒரு சபை மரியாதைக்காக மனம் கலங்கியது கண்கள் குளமாகியது என சொல்வது உண்டு. ஆனால் உண்மையில் வெகு சில நேரங்களில் மட்டுமே அது நடக்கும். அப்படி ஒரு உணர்வு இன்று நமது தேசிய நடிகன் சசிகுமார் அவர்களின் மறைவைப் பற்றி மீண்டும் படித்த போது தோன்றியது. அது நடந்த காலத்தில் நமது ரசிகர்கள் எப்படி மன வேதனை அடைந்தனர் என்பதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் என் மகன் வெளியிட்டு விழாவைக் கூட கொண்டாட முடியாத நிலையில் இருந்தனர் ரசிகர்கள். மதுரையில் அஞ்சலிக் கூட்டம் நடந்தது நினைவிருக்கிறது.

பெருந்தலைவரின் மேல் மாறாத பற்றும் நடிகர் திலகத்தின் மேல் அளவற்ற அன்பும் வைத்திருந்த அந்த மனிதன் அந்த இளம் வயதில் நம்மை விட்டு பிரிந்தது ஒரு பெரிய இழப்பே. எப்போதும் சுவாமியிடம் பேசும்போது ஒரு விதயத்தை அடிக்கடி குறிப்பிடுவேன். பெருந்தலைவரையும் நடிகர் திலகத்தையும் இரு கண்களாக நினைத்து வாழ்ந்த ஒரு பெரும் படை தமிழகத்தில் நமக்கு வாய்த்திருந்தது. எண்ணிக்கையிலும் செயல்திறனிலும் அதை வெல்ல யாரும் இல்லாத நிலை. ஆனால் காலம் செய்த கோலம் என்று சொல்வதா அல்லது விதியின் விளையாட்டு என்று கூறுவதா என்று தெரியவில்லை. அது பல திசைகளில் சிதறுண்டது.

அப்படி இருந்த அந்த படையின் ஒரு எஃகு தளபதி மறைந்த சசிகுமார் என்றால் அது மிகையில்லை. வாழ்க அவர் புகழ்!

அன்புடன்

pammalar
23rd August 2011, 03:32 AM
டியர் ராகவேந்திரன் சார்,

பாராட்டுக்கு நன்றி !

தேசிய நடிகர் கேப்டன் சசிகுமார் அவர்களது குடும்பத்தினர் தெரிவித்த நன்றிகள் தங்களின் ஈடு-இணையற்ற சேவைக்கான சிறந்த அங்கீகாரம்.

அமரர் சசிகுமார் அவர்களது குடும்பத்தினருக்கு நமது மனமார்ந்த நன்றிகள் !

அவர்கள் வாழ்வில் மென்மேலும் உயர்ந்து எல்லா வளங்களும் பெற்று வாழ்வாங்கு வாழ்க !

[தாங்கள் செலுத்திய அஞ்சலியை அவர்களது பார்வைக்கு கொண்டு சென்ற திரு.மோகன்ராம் அவர்களுக்கு நமது நெஞ்சார்ந்த நன்றி !]

அன்புடன்,
பம்ம்லார்.

pammalar
23rd August 2011, 03:56 AM
டியர் வாசுதேவன் சார்,

தொடர்ந்து அசத்தி வரும் தாங்கள் அளித்த அன்பான பாராட்டுக்களுக்கு எனது கனிவான நன்றிகள் !

"பாரத விலாஸ்" வீடியோ பதிவு, தேசிய நடிகருக்கு தாங்கள் செலுத்திய சிறப்பான அஞ்சலி.

டியர் சந்திரசேகரன் சார்,

பாராட்டுக்கு நன்றி !

டியர் ஜேயார் சார்,

மிக்க நன்றி !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
23rd August 2011, 04:07 AM
சகோதரி சாரதா,

சிறிய இடைவெளிக்கு பிறகு வந்துள்ள தங்களுக்கு நல்வரவு !

எப்பொழுதும் போல் தாங்கள் அளித்த உயாந்த பாராட்டுதல்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள் !

தங்களது பதிவு இல்லாத நமது திரி, பாயசம் இல்லாத விருந்து போல் அல்ல - விருந்தே இல்லாத திருமணம் போல் உள்ளது.

எனவே, தொடர்ந்து தங்களது பொன்னான பதிவுகளை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்குகின்றோம் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
23rd August 2011, 04:20 AM
அன்னை ராஜாமணி அம்மையாருக்கு
நமது ஆத்மார்த்தமான அஞ்சலி

வரலாற்று ஆவணம் : மின்னல் கொடி : 10.9.1972
[உதவி : நல்லிதயம் திரு.ஜி.மாணிக்கவாசகம்]
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4389a.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4394a.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4393a-1.jpg

24.8.2011, கலை தெய்வத்தை ஈன்றெடுத்த தெய்வம் அன்னை ராஜாமணி அம்மையார் அவர்களது 39வது ஆண்டு நினைவு தினம்.

பம்மல் ஆர். சுவாமிநாதன்.

pammalar
23rd August 2011, 04:50 AM
அன்னை ராஜாமணி அம்மையாருக்கு
நமது ஆத்மார்த்தமான அஞ்சலி

வரலாற்று ஆவணம் : மின்னல் கொடி : 10.9.1972
[உதவி : நல்லிதயம் திரு.ஜி.மாணிக்கவாசகம்]
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4392a.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4390a.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4391a.jpg

24.8.2011, கலை தெய்வத்தை ஈன்றெடுத்த தெய்வம் அன்னை ராஜாமணி அம்மையார் அவர்களது 39வது ஆண்டு நினைவு தினம்.

பம்மல் ஆர். சுவாமிநாதன்.

pammalar
23rd August 2011, 05:35 AM
அன்னை ராஜாமணி அம்மையாருக்கு
நமது ஆத்மார்த்தமான அஞ்சலி

வரலாற்று ஆவணம் : சிவாஜி ரசிகன் : 15.9.1972
[உதவி : நல்லிதயம் திரு.ஜி.மாணிக்கவாசகம்]
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4395a.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4399a.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4400a.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4401a.jpg

24.8.2011, கலை தெய்வத்தை ஈன்றெடுத்த தெய்வம் அன்னை ராஜாமணி அம்மையார் அவர்களது 39வது ஆண்டு நினைவு தினம்.

பம்மல் ஆர். சுவாமிநாதன்.

pammalar
23rd August 2011, 06:03 AM
அன்னை ராஜாமணி அம்மையாருக்கு
நமது ஆத்மார்த்தமான அஞ்சலி

வரலாற்று ஆவணம் : சிவாஜி ரசிகன் : 15.9.1972
[உதவி : நல்லிதயம் திரு.ஜி.மாணிக்கவாசகம்]
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4402a.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4403a.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4404a.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4405a.jpg

24.8.2011, கலை தெய்வத்தை ஈன்றெடுத்த தெய்வம் அன்னை ராஜாமணி அம்மையார் அவர்களது 39வது ஆண்டு நினைவு தினம்.

பம்மல் ஆர். சுவாமிநாதன்.

vasudevan31355
23rd August 2011, 08:53 AM
அன்னை ராஜாமணி அம்மையார் அவர்களது 39வது ஆண்டு நினைவு தினம்.

தவப்புதல்வனைப் பெற்று கலை உலகுக்குத் தந்த அன்புத் தெய்வம், லட்சக் கணக்கான நடிகர் திலகத்தின் ரசிகப் பிள்ளைகளின் பேரன்புத் தாய், தன் கணவர் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றதும் நிராதரவாக ஏழ்மையில் உழன்று, சொல்லொணாத் துயரங்களுக்கு மத்தியில் தன் அன்புப் பிள்ளைகளை ஆளாக்கிய அற்புத அன்னை, தெய்வ மகனை ஈன்றெடுத்து, நமக்களித்து, இந்த உலகையே உவகையுறச் செய்த ஈடு இணையில்லா மாணிக்கம், "அன்னை இல்ல"த்தின் இல்லற ஜோதி "அன்னை ராஜாமணி அம்மையார்" அவர்களின் 39வது ஆண்டு நினைவு தினம். அம்மையார் அவர்களுக்கு நமது ஆத்மார்த்தமான இதய அஞ்சலி.

அம்மையார் அவர்களின் நினைவாக "கிரஹப் பிரவேசம்" திரைக்காவியத்தில் இருந்து ஒரு சிறு ஒலி-ஒளிக் காட்சியின் மூலமாக நம் இதய அஞ்சலி.

இந்தத் திரைக்காவியத்தில் நம் நடிகர் திலகம் அவர்கள் தன் அன்புத் தாயார் அவர்களின் திருவுருவப் படத்தின் முன் நின்று அவர்களிடம் பேசுவதாக வரும் ஒரு உணர்ச்சிமயமான அற்புதக் காட்சி. தன் தாயார் அவர்களின் மேல் உள்ள பாசத்தையும், வாஞ்சையையும் நடிகர் திலகம் வெளிப்படுத்துவதைக் காணும்போது கல்நெஞ்சமும் கரைந்துருகுமே....




http://www.youtube.com/watch?v=L3daiJD3sOs&feature=player_detailpage



அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

vasudevan31355
23rd August 2011, 10:58 AM
மரியாதைக்குரிய சாரதா மேடம்,

உங்களுக்கு என் 'முதல்' வணக்கங்கள். தங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும் என் உளம் கனிந்த நன்றிகள்.

இந்த hub-இல் அங்கத்தினர் ஆவதற்கு முன்னம் ஏகலைவனாய் வெளியே நின்று உங்கள் ஆய்வுக் கட்டுரைகளை பாடம் செய்தவன் என்பதில் வானளாவிய பெருமை எனக்கு. அதிலும் குறிப்பாக அந்த "ராமன் எத்தனை ராமனடி" ஆய்வுக்கட்டுரை காந்தமாய் என்னை ஈர்த்தது. இத் திரியில் நான் இணையவும் அடிகோலியது. நடிகர் திலகத்தின் காவியப் படைப்புகளைப் பற்றி ஆய்வு செய்யத் தொடங்குவதற்கு அஸ்திவாரமும் போட்டது.
இதற்கெல்லாம் காரணகர்த்தா நீங்கள்தான். இதற்கு நீங்கள் பொறுப்பேற்றே ஆக வேண்டும். என்னுடைய ஆழ்மனத்தின் நன்றிகளை ஏற்றுக்கொண்டே தீர வேண்டும். வழிகாட்டியாய் துணை நின்று ஏற்றம் பெறச் செய்ய வேண்டும். நன்றி!
(சிறு இடைவெளிக்குப் பின் வந்தாலும் அந்த இடைவெளியில் வந்த அத்தனை பதிவுகளையும் பார்த்து, படித்து,தங்களின் வழக்கமான, அசத்தலான நடைப் பதிவில் கருத்துக்களை பதிவு செய்ததற்கு எங்கள் இதய பூர்வமான நன்றிகள் மேடம்).

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

KCSHEKAR
23rd August 2011, 11:00 AM
நம் அண்ணலை ஈன்றெடுத்த அன்னையை வணங்கிப் போற்றுவோம். நினைவுப் பதிவுகளை, வரலாற்று ஆவணங்களை வெளியிட்ட திரு.பம்மலார், கிரஹப்பிரவேசம் காட்சி இணைப்பை அளித்த திரு.வாசுதேவன் அவர்களுக்கு நன்றி.

vasudevan31355
23rd August 2011, 11:07 AM
டியர் சந்திரசேகரன் சார்,

தங்களின் உளப்பூர்வமான பாராட்டுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

kumareshanprabhu
23rd August 2011, 12:46 PM
Dear pammalar Vasudevan, Raghavendra Sir

NANDRI

saradhaa_sn
23rd August 2011, 02:37 PM
டியர் பம்மலார்,

தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி.

அன்னை ராஜாமணி அம்மையாரின் நினைவுநாள் பதிவுகள் சோகத்தை ஏற்படுத்தின. நடிகர்திலகத்தின் மனத்திலிருந்து பீரிட்டெழும் அந்த தாய்ப்பாசம் கண்களில் கண்ணீர் சுரக்க வைத்தது. குறிப்பாக 'இந்த கண்கொள்ளாக் காட்சியை இனி காண்போமா?' என்ற வாசகத்துடன் கூடிய புகைப்படம் மனதை நெகிழ வைத்தது. நடிகர்திலகத்தின் கையில் இருக்கும் குழந்தை பேத்தி சத்யவதி என்று நினைக்கிறேன். (சத்யவதியை நினைக்கும்போதெல்லாம் 'கிளையை வளர்த்து.......' என்ற சொற்றொடர்தான் நினைவுக்கு வரும்).

அந்நிகழ்ச்சிகளில் முக்கிய இடம் வகிக்கும் திரு சின்ன அண்ணாமலையின் மரணமும் அதிர்ச்சியான ஒன்று. மணிவிழாவின்போது 60 குடம் தண்ணீர் ஊற்றியதில் மயக்கமடைந்து உயிர் துறந்தார். மணிவிழாவின் துவக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த நடிகர் திலகத்துக்கு, அவர் வீடு வந்து சேருமுன்பே, சின்ன அண்ணாமலையின் மரணச்செய்தி காத்திருந்தது.

திரு. சின்ன அண்ணாமலையின் நினைவுநாளும் நினைவுகூறப்பட வேண்டிய ஒன்று.

டியர் வாசுதேவன்,

தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி.

'கிரகப்பிரவேசம்' படத்தில் இடம்பெற்ற காட்சியை சரியான தருணத்தில், சரியான இடத்தில் இடம்பெறச்செய்துள்ளீர்கள். நடிகர்திலகம் தாய்ப்பாசத்தோடு பேசும் இடம் மனதை நெகிழ வைக்கிறது என்பதில் ஐயமில்லை. பதிவுக்கு மிக்க நன்றி.

parthasarathy
23rd August 2011, 04:59 PM
திரு. ராகவேந்தர் மற்றும் திரு. பம்மலார் அவர்களே,

மறைந்த நடிகர் திரு. சசிகுமார் பற்றிய நினைவுகளை மிகச் சரியாக அந்த நினைவு நாளில் பதிவிட்டமைக்கு மிக்க நன்றிகள். கூடவே, திரு. வாசுதேவன் அவர்களும், பாரத விலாஸ் திரைக்காவியத்தில் இடம் பெற்ற பொருத்தமான காட்சியைப் பதிவிட்டு கண்களைக் குளமாக்கி விட்டார்.

சசிகுமாரும் அவரது துணைவியாரும் மறைந்த அந்த தினம் மிகச் சரியாக நினைவில் இருக்கிறது. அந்தக் காலத்தில் சசிகுமார் புகழ் ஏணியில் விரைவாக ஏறிக் கொண்டிருந்த நேரம். நடிகர் திலகத்தோடு தன்னையும் தேசிய நீரோட்டத்தில் இணைத்துக் கொண்டு, அவரது போர் வாட்களில் ஒருவராக மேடைகளில் முழங்கி கொண்டிருந்த நேரம் - எதிர்பாராத விதமாக அகால மரணம் அடைந்த போது - துணைவியாரோடு, அவர்களுடைய குழந்தைகளுக்கு பத்து வயது கூட நிரம்பியிருக்கவில்லை. பெரிய அளவில் வந்திருக்க வேண்டிய கலைஞர்.

இந்த மரணமும் 1975 அக்டோபர் முதல் தேதியிலிருந்து துவங்கி நடந்த நிகழ்வுகளும் (கர்மவீரரின் மறைவிலிருந்து துவங்கி...). விதி என்ற ஒன்றை நம்பாதவனும் நம்பித் தொலைக்க வேண்டியிருக்கிறது. திரு. முரளி அவர்கள் மிகச் சரியாக நினைவு கூர்ந்திருந்தார்.

நடிகர் திலகத்தின் அன்னையாரின் நினைவு தினத்தை ஒட்டி தாங்கள் பதிவிட்ட அத்தனை படங்களும், கண்களை மறுபடியும் குளமாக்குகின்றன. தினத் தந்தியில், சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர் தொடராக வந்த வரலாற்றுச் சுவடுகளில் இந்த வருடத்தைப் பற்றி எழுதியிருந்தது நினைவுக்கு வருகிறது. 1972-ஆம் வருடம் நடிகர் திலகத்தின் நடிப்புலக வாழ்க்கையில் சிகரத்தில் இருந்த நேரம். அந்த நேரம் பார்த்து, அவர் உயிரையே வைத்திருந்த அவரது அன்னையார் காலமானார். மிகச் சரியாக, கிரஹப்ரவேசம் திரைக்காவியத்தில் வரும் காட்சியைப் பதிவிட்டமைக்கு திரு. வாசுதேவன் அவர்களுக்கு மிக்க நன்றி.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

parthasarathy
23rd August 2011, 05:01 PM
சாரதா மேடம் அவர்களே,

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வந்த உங்களிடம் மீண்டும் நிறைய கருத்துகளையும், ஆய்வுகளையும், உங்களுக்கேயுரிய நடையில் - எதிர்பார்க்கிறோம்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

Mahesh_K
23rd August 2011, 07:44 PM
திரு. சசிகுமார் மற்றும் சின்ன அண்ணாமலை குறித்த பதிவுகள் அருமை.

குறிப்பாக சின்ன அண்ணாமலை அவர்களை ஒரு நல்ல நகைச்சுவை எழுத்தாளர், பேச்சாளர் மற்றும் தமிழ் அறிஞர். 80 களின் இறுதியில் குமுதம் இதழின் இலவச இணைப்பாக “ சொன்னால் நம்ப மாட்டீர்கள் “ என்ற அவரது புத்தகத்தின் சில பகுதிகளை வெளியிட்டார்கள் . உண்மையான ஆனால் எளிதில் நம்ப முடியாத பல தகவல்களை சுவைபட எழுதியிருப்பார்.

அந்த நேரத்தில்தான் வயதில் மூத்த சில நண்பர்கள் மூலம் அவர் அகில இந்திய சிவாஜி மன்றத் தலைவராக இருந்தவர் என்ற தகவலையும், தர்மராஜா படத் தயாரிப்பாளர், காமராஜரின் தொண்டர், தன்னுடைய பிறந்த நாள் அன்றே ( மணிவிழா அன்று) மறைந்து விட்டார் என்ற தகவல்களையும் அறிந்தேன்.

அது மட்டுமல்ல 1971ம் ஆண்டு திராவிடர் கழகத்தவர் ஈ.வே.ரா அவர்கள் தலைமையில் சேலத்தில் இந்து கடவுளர்களின் உருவப்படங்களை அவமரியாதை செய்த செயலை சின்ன அண்ணாமலை வன்மையாக எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார் . அன்றைய அரசு இந்த செயலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஒரு கண்டனச் சுவரொட்டி அச்சிட்டு வந்ததை அறிந்த அன்றைய அரசு, தேர்தல் நேரத்தில் இந்த சுவரொட்டி வருவதை விரும்பாமல் “மத விரோதத்தை தூண்டுகிறது” என்ற காரணம் காட்டி சுவரொட்டியை அச்சகத்தில் இருந்து பறிமுதல் செய்தபோது நீதி மன்றம் வரை சென்று ஆணித்தரமான வாதங்களுடன் போராடி சுவரொட்டிகளை திரும்பப் பெற்றார் என்பதையும் அறிந்தேன் .

சின்ன அண்ணாமலை, குமரி அனந்தன் போன்ற தமிழ் அறிஞர்கள் எல்லாம் சிவாஜி மன்றத் தலைவர்களாக இருந்தார்கள் என்பதில் எனக்கு எப்போதும் பெருமை உண்டு

அவரையும், நடிகர் திலகத்தின் தீவிரத் தொண்டராக இருந்து மறைந்த சசிகுமார் அவர்களையும் நினைவு கூர்ந்த அனைவருக்கும் நன்றி.

pammalar
23rd August 2011, 09:53 PM
டியர் வாசுதேவன் சார்,

தாங்கள் இடுகை செய்த "கிரஹப்பிரவேசம்" வீடியோ காட்சி, தெய்வமகனை ஈன்றெடுத்த தெய்வத்திற்கு செலுத்தப்பட்ட சிறந்த அஞ்சலி.

டியர் சந்திரசேகரன் சார், கனிவான நன்றி !

டியர் குமரேசன்பிரபு சார், மிக்க நன்றி !

சகோதரி சாரதா,

மனமார்ந்த நன்றி ! ஜூன் மாதத்தில் வரும் தியாகி சின்ன அண்ணாமலை அவர்களின் பிறந்த-நினைவு தினங்கள் [இரண்டும் அவருக்கு ஒன்றே] அவசியம் போற்றப்படும்.

டியர் பார்த்தசாரதி சார். நெஞ்சார்ந்த நன்றி !

டியர் மகேஷ் சார், நன்றி !

அன்புடன்,
பம்மலார்.

Subramaniam Ramajayam
23rd August 2011, 10:28 PM
welcome sarada madam hub throwing great guns day by day. homage to our NT's mother smt rajamani ammal by vasudevan is a touching ones. great lady who has given NADIGAR THILAGAM to the world well remembered.

pammalar
23rd August 2011, 11:18 PM
அன்னை ராஜாமணி அம்மையாருக்கு
நமது ஆத்மார்த்தமான அஞ்சலி

வரலாற்று ஆவணம் : சிவாஜி ரசிகன் : 1.9.1972
[உதவி : நல்லிதயம் திரு.ஜி.மாணிக்கவாசகம்]
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4408.jpg


வரலாற்று ஆவணம் : சிவாஜி ரசிகன் : 15.9.1972
[உதவி : நல்லிதயம் திரு.ஜி.மாணிக்கவாசகம்]
[இக்கட்டுரையை வடித்த 'அப்பச்சி' என்பவர் திரு.சின்ன அண்ணாமலை அவர்களேதான்]
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4406.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4407.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4409.jpg

24.8.2011, கலை தெய்வத்தை ஈன்றெடுத்த தெய்வம் அன்னை ராஜாமணி அம்மையார் அவர்களது 39வது ஆண்டு நினைவு தினம்.

பம்மல் ஆர். சுவாமிநாதன்.

vasudevan31355
23rd August 2011, 11:58 PM
அன்பு பம்மலார் சார்,

தங்கள் அன்புக்கு நன்றி! அன்னை ராஜாமணி அம்மையாரின் 39வது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி தாங்கள் இடுகை செய்திருந்த பதிவுகள் அனைத்தும் நெஞ்சை பாரமாக்கின. நடிப்புலக வேந்தர் தன் தாயாரின் பூத உடல் அருகே துயரமே உருவாய் நிற்பதைக் கண்டதும் பேச நா எழவில்லை. இதயத்தின் மீது இமயமலையைத் தூக்கி வைத்தாற்போன்று அப்படி பாரமாய் வலிக்கிறது. அன்னைக்கு சிறப்பான அஞ்சலி செய்த தங்களுக்கு எங்கள் கண்ணீரால் நன்றி சொல்கிறோம்.

மரியாதைக்குரிய சாரதா மேடம் அவர்களே!
தங்களுக்கு எனது பணிவான நன்றி!

திரு.பார்த்தசாரதி சார் அவர்களே, தங்களுக்கு என் கனிவான நன்றி!

திரு.சுப்ரமணியன் ராமஜெயம் சார், தங்களுக்கு என் மனங் கனிந்த நன்றி!

திரு.குமரேசன்பிரபு சார், தங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

திரு. மகேஷ் சார்,

மறைந்த திரு.சின்ன அண்ணாமலை அவர்களைப் பற்றிய அரிய தகவல்களை அறிய வைத்ததற்கு மிகவும் நன்றி! (திரு.சின்ன அண்ணாமலை அவர்கள் நடிகர்திலகத்தை வைத்து மனிதனும் தெய்வமாகலாம், ஜெனரல் சக்கரவர்த்தி மற்றும் தர்ம ராஜா போன்ற படங்களை 'விஜயவேல் பிலிம்ஸ்' என்ற பட பேனரில் தயாரித்திருந்தார்கள்).
சிதறுண்டு கிடந்த ஆயிரக் கணக்கான சிவாஜி ரசிகர் மன்றங்களை ஒன்றிணைத்து, ஒழுங்குபடுத்தி, திரு.முரளி சார் சொன்னது போல எண்ணிக்கையிலும் செயல்திறனிலும் யாருமே நெருங்க முடியாத நிலையை உருவாக்கிய பெருமை திரு.சின்ன அண்ணாமலை அவர்களையே சாரும். நன்றி சார்!

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

pammalar
24th August 2011, 12:29 AM
அன்னை ராஜாமணி அம்மையாருக்கு
நமது ஆத்மார்த்தமான அஞ்சலி

வரலாற்று ஆவணம் : பேசும் படம் : செப்டம்பர் 1959

அவதார புருஷனாக அவதரித்த தனது அருந்தவப்புதல்வன் குறித்து
அன்னையார் எழுதிய அருமையான-அரிய கட்டுரை
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4410a.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4412a.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4414a.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4415a.jpg

24.8.2011, கலை தெய்வத்தை ஈன்றெடுத்த தெய்வம் அன்னை ராஜாமணி அம்மையார் அவர்களது 39வது ஆண்டு நினைவு தினம்.

பம்மல் ஆர். சுவாமிநாதன்.

pammalar
24th August 2011, 12:41 AM
டியர் வாசுதேவன் சார்,

தங்களது பதிவைப் படித்ததும் எனக்கு கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்துவிட்டது. மிக்க நன்றி !

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
24th August 2011, 03:45 AM
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்

24.8.1961 அன்று ஜனித்த மருதநாட்டு வீரனுக்கு பொன்விழா நிறைவு

24.8.2011 அன்று 51வது ஜெயந்தி

வீரப் பொக்கிஷங்கள்

காவிய விளம்பரம் : கலைத்தோட்டம் : 15.6.1959
[15.6.1959 தேதியிட்ட 'கலைத்தோட்டம்' பருவ இதழ் சற்றேறக்குறைய அப்பொழுது ஒரு மாதத்திற்குமுன் வெளியாகி விண்ணை முட்டும் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்த "வீரபாண்டிய கட்டபொம்மன்" திரைக்காவிய சிறப்பு மலராக மலர்ந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.]
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4416a-1.jpg


முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 24.8.1961
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4417a-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

vasudevan31355
24th August 2011, 09:07 AM
நடிகர் திலகத்தின் 72- ஆவது வெற்றிப் படைப்பு "மருத நாட்டு வீரன்"

கேரளாவில் அமோக வெற்றி பெற்ற காவியம். 'ஸ்ரீ கணேஷ் பிரசாத் மூவீஸ்' தயாரிப்பில் 24.8.1961 அன்று வெளியான இப்படத்திற்கு இயக்குனர் திரு.T.R.ரகுநாத் அவர்கள். பல வெற்றிப் படங்களை உருவாக்கியவர்.

ஜமுனா, கண்ணாம்பா, சந்தியா, P.S.வீரப்பா, ஸ்ரீராம், A.கருணாநிதி ஆகியோர் நடிகர் திலகத்துடன் இணைந்து நடித்திருந்தனர்.

இசை திரு.SV. வெங்கடராமன் அவர்கள். நடிகர் திலகத்தின் அறிவாளி, இரும்புத் திரை (நெஞ்சில் குடியிருக்கும்... அன்பருக்கு நானிருக்கும்...) ,கண்கள், கோடீஸ்வரன் மற்றும் மனோகரா போன்ற பல படங்களுக்கு இசை அமைத்தவர்.

பாடல்களை இயற்றிவர்கள் திரு.மருதகாசி மற்றும் 'கவியரசர்' கண்ணதாசன்.

சமாதானமே தேவை....
புது இன்பம் ஒன்று..உருவாகி இன்று...
பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா?...
விழியலை மேலே..செம்மீன் போலே...
அரும்புதிர முத்துதிர அழகு சிரிக்குது ....

போன்ற அற்புதமான பாடல்கள் இந்தத் திரைக் காவியத்தில்..

இது தவிர "எங்கே செல்கின்றாய்?" என்ற P.B.ஸ்ரீநிவாஸ் அவர்களின் குரலில் சோகமான பின்னணியில் ஒலிக்கும் பாடல், நடிகர் திலகத்தின் இந்தப் படத்தில் ஒலிப்பது புதுமை.

"கேரள மக்கள் அமோக ஆதரவு அளித்த படம்" என்று நடிகர் திலகம் அவர்கள் தன் சொந்தக் கருத்தாக இப்படத்தைப் பற்றிக் கூறியுள்ளார்.

மருத நாட்டு வீரனாக, சீன கைரேகை நிபுணராக, சமையல்காரராக,வேதியராக இப்படி பல மாறுபட்ட வேடங்களில் தோன்றி நடிகர் திலகம் அசத்திய படம்.

'சமாதானமே தேவை'

கட்சி பேதங்கள் எதற்காக...
பல கலகமும் பகையும் எதற்காக...
ஒற்றுமையால் நாம் உயர்ந்திடுவோம்...
ஒரே கட்சியாய் இருந்திடுவோம்...

ஆம்..நடிகர் திலகத்தின் கட்சியாய் இருந்திடுவோம்.

இதோ நடிகர் திலகம் அவர்களின் குண நலன்களை விளக்கும் ஒரு ஒலி-ஒளிக் காட்சி....


http://www.youtube.com/watch?v=nDQW9uCoYQ8&feature=player_detailpage



சமாதானத்தை விரும்பிய அந்த வெள்ளை மனம் கொண்ட மாசில்லா மாணிக்கம் நமக்கு அறிவுறித்திய "சமாதானமே தேவை" பாடல் ஒலி-ஒளிக் காட்சி வடிவில்...


http://www.youtube.com/watch?v=OPRjgxrPoDg&feature=player_detailpage



அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

pammalar
25th August 2011, 12:17 AM
டியர் வாசுதேவன் சார்,

51வது ஜெயந்தியை முன்னிட்டு தாங்கள் பதிவிட்டுள்ள "மருதநாட்டு வீரன்" குறித்த அருமையான தகவல்கள், அபாரமான ஒலி-ஒளிக்காட்சிகள், அட்ட்காசமான நிழற்படங்கள் எல்லாம் ஒரே அசத்தல் !

வீரத்திலகத்தின் வீரத்தளபதி நீங்கள் !!

பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள் !!!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
25th August 2011, 02:49 AM
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்

தூக்கு தூக்கி

[26.8.1954 - 26.8.2011] : 58வது ஜெயந்தி

பொக்கிஷப் புதையல்

முதல் வெளியீட்டு விளம்பரம் : பேசும் படம் : செப்டம்பர் 1954
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4418a-1.jpg


அரிய புகைப்படம் : ராஜகுமாரன் சுந்தராங்கதன்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/TT1-1.jpg

இக்காவியம் மதுரை 'சென்ட்ரல்' திரையரங்கில் 3.9.1954 அன்று வெளியானது.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
25th August 2011, 04:35 AM
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்

கூண்டுக்கிளி : இரு திலகங்கள் இணைந்த ஒரே காவியம்

[26.8.1954 - 26.8.2011] : 58வது உதயதினம்

பொக்கிஷப் புதையல்

முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 28.7.1954
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4419a-1.jpg


முதல் வெளியீட்டு விளம்பரம்(சென்னை) : தினமணி : 9.9.1954
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4420a-1.jpg

தென்னகமெங்கும் ஆகஸ்ட் 26 அன்று வெளியான இக்காவியம் சென்னையில் மட்டும் செப்டம்பர் 9 அன்று வெளியானது.


அன்புடன்,
பம்மலார்.

pammalar
25th August 2011, 05:10 AM
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்

மங்கையர் திலகம் [100 நாள் பெருவெற்றிக் காவியம்]

[26.8.1955 - 26.8.2011] : 57வது உதயதினம்

பொக்கிஷப் புதையல்

முதல் வெளியீட்டு விளம்பரம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4422a-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
25th August 2011, 05:29 AM
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்

தாயே உனக்காக [கௌரவத் தோற்றம்]

[26.8.1966 - 26.8.2011] : 46வது ஆரம்பதினம்

பொக்கிஷப் புதையல்

முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 22.8.1966
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4424a-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
25th August 2011, 05:38 AM
வருகிறார்.....

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4423a-1.jpg

vasudevan31355
25th August 2011, 06:35 AM
அன்பு பம்மலார் சார்,

தங்கள் அன்புக்கும், வாழ்த்துதல்களுக்கும் மனமார்ந்த நன்றி.

தூக்குத்தூக்கி, கூண்டுக்கிளி, மங்கையர் திலகம், தாயே உனக்காக போன்ற அற்புதப் படைப்புகளின் முதல் வெளியீட்டு விளம்பரங்களை வெளியிட்டு தலைவாழை இலை போட்டு விருந்து வைத்து விட்டீர்கள். சுவைகளுக்குக் கேட்க வேண்டுமா? அனைத்தும் முக்கனிகளின் சாராய் இனித்தன. விருந்துக்கு நன்றி. அடுத்த விருந்தான நம் தவப் புதல்வனுக்கு முன்கூட்டியே நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

vasudevan31355
25th August 2011, 08:38 AM
தூக்கு தூக்கி 58 -ஆவது ஜெயந்தி.

http://s1.postimage.org/y7z37xg4k/Thookku_Thookki_1954_Tamil_Movie_Watch_Online.jpg


அருணா பிலிம்ஸ் தயாரிப்பில் நடிக மன்னனின் 18- ஆவது படமாக வந்து வெற்றிக்கொடி நாட்டிய படம். நம் தமிழ் நாட்டின் பட்டி தொட்டிகள் எங்கும் தெருக் கூத்தாகவும், நாடகமாகவும் வெற்றி உலா வந்து, பின் நடிகர் திலகத்தின் ஈடு இணையற்ற நடிப்பால் வீர உலா வந்தது.

இப்படத்தில் பாலையா, T.N.சிவதாணு, 'யதார்த்தம்' பொன்னுசாமிப் பிள்ளை, 'சட்டாம்பிள்ளை' வெங்கட்ராமன், லலிதா, பத்மினி, ராகினி, C.K.சரஸ்வதி, M.S.S.பாக்கியம் என்று மாபெரும் நட்சத்திரக் கூட்டம்.

சுந்தரபுரி இளவரசன் சுந்தராங்கதன் நாட்டின் பொருளாதார வழிகளைப் பெருக்க தன் தந்தையாகிய மன்னரின் ஆணைக்கேற்ப நாட்டைச் சுற்றி வரும் வேளையில், ஓலைச் சுவடிகளை ஆராய்ச்சி செய்யும் ஒரு ஆராய்ச்சி மன்றத்தில் அறிஞர்கள் மத்தியில் உரையாடநேருகிறது.

கொண்டு வந்தால் தந்தை...
கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்...
சீர் கொண்டு வந்தால் சகோதரி...
கொலையும் செய்வாள் பத்தினி...
உயிர் காப்பான் தோழன்...

என்று முன்னோடிகள் ஓலைச்வடிகளில் அனுபவங்களால் எழுதி வைத்த குறிப்புகளைத் தவறென்று ஆராய்ச்சி மன்றத்தில் அறிஞர்கள் நடுவே ஆணித்தரமாக வாதாடுகிறான் சுந்தராங்கன். அந்தக் கருத்துக்கள் பொய்யானவை என்று நிரூபிப்பதாகவும் சவால் விடுகிறான்.

அதற்காக அவன் சந்தித்த சோதனைகள், துரோகங்கள்,வேதனைகள் ஏராளம்.

பொருள் கொண்டு செல்லாததால் தந்தையால் வெறுக்கப் பட்டு, அவராலேயே நாடு கடத்தப் படுகிறான் சுந்தராங்கன். ஆனால் தாயின் அன்பு என்றும் சாஸ்வதம் என்பதை உணருகிறான். சீர் கொண்டு செல்லாததால் தன் தங்கையால் வெறுக்கப் பட்டு வேதனையுறுகிறான். தன் மனைவியே தனக்கு நம்பிக்கை மோசம் செய்வதை நேரிடையாகக் காண்கிறான். கொலைக் குற்றம் சாட்டப் படுகிறான். தன் மனைவியாலும், அவளின் கள்ளக் காதலனாலும் தன் உயிருக்கு அபாயம் ஏற்படும் நிலையில் தன் உயிர்த் தோழனால் காப்பாற்றப் படுகிறான். நாட்டை விட்டே வெளியேறி வேற்று நாட்டு அரண்மனையில் தூக்குத் தூககியாய் வேடம் புனைந்து, அங்கு இளவரசிகளின் அன்புக்குப் பாத்திரமாகி, அரண்மனையில் பல சோதனைகளைக் கடந்து தான் குற்றவாளி அல்ல என்று நிரூபணம் செய்து, முன்னோர்கள் சொன்ன தத்துவங்கள் பொய்த்துப் போவது இல்லை என்பதனையும் தன் அனுபவங்களால் உணருகிறான்.

இளவரசன் சுந்தராங்கதானாக நம் நடிகர் திலகம். கேட்க வேண்டுமா..பின்னிப் பெடலெடுத்திருக்கிறார். குறிப்பாக அந்த பரத நாட்டியக் காட்சிகள்.. ஏறாத மலைதனிலே, அபாய அறிவிப்பு,பெண்களை நம்பாதே, சுந்தரி சௌந்தரி பாடல்களுக்கு அவர் நடனமாடுவது காலாகாலத்திற்கும் ரசிக்க வைக்கக் கூடியது. வழக்கம் போல வீறு கொண்ட வசனங்கள்...பலதரப் பட்ட முகபாவங்கள்..பாவனைகள்..இந்தப் படத்தின் மூலம் மேலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார் நடிகர் திலகம்.

வசனங்களை ஏ.டி.கே மற்றும் V.N.சம்பந்தம் அவர்கள் இணைந்து எழுத, சங்கீத விற்பன்னர் ஜி.ராமநாதன் அவர்கள் எக்காலங்களிலேயும் ரசிக்க வைக்கும் ஜனரஞ்சகப் பாடல்களுக்கு இசை அமைக்க, டி.எம்.எஸ், M.L.வசந்தகுமாரி, P.லீலா, A.P.கோமளா போன்ற ஜாம்பவான்கள் பின்னணி பாட, அற்புதமான பொழுது போக்குப் படமாக இயக்கியிருந்தார் இயக்குனர் R.M.கிருஷ்ணசாமி அவர்கள்.

நடிகர் திலகத்திற்கு முதன் முதலாக திரு.T.M.S. அவர்கள் பின்னணிப் பாடல்கள் பாடிய பெருமை இந்தப் படத்தையே சாரும்.

வெங்கட்ராமன் என்ற நகைச்சுவை நடிகர் தன் அபார நகைச்சுவை நடிப்பால் இந்தப் படத்தில் தான் ஏற்ற கதாபாத்திரத்தின் பெயரிலேயே 'சட்டாம்பிள்ளை' வெங்கட்ராமன் என்று பெரும் பெயர் பெற்றார் என்பது இன்னொரு சிறப்பு.

பாடல்கள் அத்தனையும் தேன் சொட்டும் ரகம்..

A. மருதகாசி அவர்கள் இயற்றிய

இன்பநிலை காண ஏன் இன்னும் தாமதம்....
கண்வழி புகுந்து கருத்தினில் கலந்த...
சுந்தரி சௌந்தரி....

திரு.உடுமலை நாராயணகவி அவர்கள் இயற்றிய

பியாரி நம்பள் மேலே...
பெண்களை நம்பாதே..கண்களே..பெண்களை நம்பாதே...
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்...

திரு.தஞ்சை ராமையாதாஸ் அவர்கள் இயற்றிய

அபாய அறிவிப்பு ...அய்யா!.. அபாய அறிவிப்பு...
ஏறாத மலைதனிலே....வெகு ஜோரான கௌதாரி ரெண்டு...

போன்ற காலத்தை வென்ற கானங்கள் நம் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கின்றன.

மொத்தத்தில் அததனை பேர் மனதையும் கொள்ளை கொண்டு போகிறான் 'தூக்கு தூக்கி'.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல இதோ.. ஒரே ஒரு சோறு.. ஒலி-ஒளி வடிவில்...


http://www.youtube.com/watch?v=WPi1I-X82uc&feature=player_detailpage


அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

KCSHEKAR
25th August 2011, 10:55 AM
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள் பம்மலாரின் கைவண்ணத்தில் உண்மையிலேயே அற்புதம்தான். திரு.வாசுதேவன் அவர்களின் ஒலி, ஒளி காட்சி இணைப்பு வேறு. கேட்கவேண்டுமா சுவைக்கு? நன்றிகள் கோடி. தவப்புதல்வனுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் .

HARISH2619
25th August 2011, 12:41 PM
நடிகர்திலகத்தை பெற்றெடுத்த தெய்வத்தாய் ராஜாத்தி அம்மையார் மற்றும் நடிகர்திலகத்தின் போர்வாள் சசிகுமார் ஆகியோரது மறைவு குறித்த வரலாற்று ஆவணங்களின் தொகுப்பு கண்ணீரை வரவைத்து விட்டது.இந்த அற்புத தகவல்களை பதிவேற்றிய பம்மல் சாருக்கும் அதன் தொடர்ச்சியாக ஒலி ஒளி காட்சிகளை அளித்த வாசுதேவன் சாருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

திரு குமரேசன் சார்,
புதிய பறவை வெளியீடு குறித்த லேட்டஸ்ட் தகவல் ஏதேனும் உண்டா?

A part of an interview by raghavendra rajkumar,second son of late actor rajkumar to radio mirchi which was published in the times of india,bangalore edition dated 23-8-11:
Which actor did he admire the most?
He greatly admired the legendary tamil actor SIVAJI GANESAN.He used to travel in local buses and watch sivajiganesan"s movies in theatres.

parthasarathy
25th August 2011, 01:31 PM
அன்புள்ள திரு. பம்மலார் அவர்களே,

அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்களில், தூக்குத்தூக்கி, கூண்டுக்கிளி, மங்கையர் திலகம் மற்றும் தவப்புதல்வன் திரைச் சித்திரங்களின் போட்டோ வடிவங்களைப் பதிவிட்டு வழக்கம் போல் அசத்தி விட்டீர்கள்.

அன்புள்ள திரு. வாசுதேவன் அவர்களே,

இமைப் பொழுதும் சோராவண்ணம், தாங்களும் வழக்கம் போல் மின்னல் வேகத்தில், தூக்குத்தூக்கி திரைக்காவியத்தினை அலசி அறுசுவை விருந்து படைத்து விட்டீர்கள்.

நன்றியுடன்,

இரா. பார்த்தசாரதி

parthasarathy
25th August 2011, 01:32 PM
நான் சில நாட்களுக்கு முன்னர் இட்ட ஒரு பதிவில், இந்த 1954-ஆம் வருடத்தின் சிறப்பினைக் குறிப்பிட்டிருந்தது போல், மேற்கூறிய படங்கள் அல்லாமல், மனோகரா, எதிர்பாராதது மற்றும் அந்த நாள், படங்களையும் குறிப்பிட்டிருந்தேன்.

தூக்குத்தூக்கி படத்தினைப் பற்றிய கூடுதல் தகவல்; நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்து தான். அந்த வருடத்தில் வெளி வந்த மற்ற படங்களிலும் அவர் அதியற்புதமாக நடித்திருந்தாலும், சினிமா ரசிகர்கள் சங்கத்தின் மூலமாக அந்த வருடத்தின் சிறந்த நடிகர் விருது அவருக்கு தூக்குத்தூக்கி படத்திற்குத் தான் வழங்கப்பட்டது - ஆல் ரவுண்டு பெர்பார்மன்சுக்காக.

படத்தின் ஆரம்பத்தில், ஒரு விதமான நடிப்பு, ஒவ்வொரு பழமொழியையும் ஆராயும் போது, ஒரு விதமான நடிப்பு, பாலைய்யாவிடம் வேலைக்காரனாக நடிக்கும் போது ஒரு விதமான நடிப்பு, (புடவே... புடவே... பாடல் காட்சி அபாரமாக இருக்கும்!), பெண்களை நம்பாதே பாடல் ஆரம்பித்து, கடைசியில், அரசு தர்பாரில், ராஜ துரோகத்திற்காக நிறுத்தப்படும் வரை, அதகளப்படுத்தும் சொன்னதையே சொல்லும் கிளிப்பிள்ளை/அசடு போல் பாத்திரத்தில் வரும் நடிப்பு. கடைசியில், தர்பாரில், தன்னுடைய மனைவியே தன்னுடைய கள்ளக்காதலுக்காக தன்னைக் கொல்லத் துணிந்து விட்டதை சபையில் சொல்லி அவமானம் மற்றும் ஆத்திரத்துடன் மடை திறந்த வெள்ளமென எரிமலையாய் வெடிக்கும் போது காட்டும் நடிப்பு - "மாசுண்டாள் உம் பெண்" என்று துவங்கி "தெய்வம் பொறுக்குமா உங்கள் திருக்கூத்தை?" என்று முடிக்கும் போது திரையரங்குகளில் எழும் கைத்தட்டல் இன்னும் அடங்கவில்லை.

இந்த ஆல் ரவுண்டு பெர்பார்மன்சுக்குத் தான் அவருக்குச் சிறந்த நடிகர் விருது சரியாகத் தரப்பட்டது.

மேற்கூறிய இரண்டு படங்களும் ஜனரஞ்சகமாகவும் அதே சமயம் தரமான படங்களாகவும் அமைய, கூண்டுக் கிளி மற்றும் அந்த நாள் படங்களில் unconventional பாத்திரங்களை ஏற்று நடித்தார் (ஒன்றில் நண்பனுக்கே துரோகம் இன்னொன்று தேச துரோகம்!).

அது மட்டுமா?, கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி படத்தில் நகைச்சுவை கலந்த துணைக் கதாபாத்திரத்திலும், எதிர்பாராதது படத்தில், காதலில் தோல்வி அடைந்து அவர் தன்னுடைய தந்தைக்கே இரண்டாம் தாரமானதைத் தாங்கும் (கடைசியில், அவரை அடையத் துடித்தாலும்) பாத்திரத்திலும், துளி விஷம் படத்தில் வில்லனாகவும், இல்லற ஜோதியில் எழுத்தாளனாகவும் (திருமணம் ஆனபின்னும் வேறொரு பெண்ணை நாடி கடைசியில், மனம் திருந்தி மனைவியிடமே வருவார்), நடித்தார்.

இத்தனை இளம் வயதில், நடிக்க வந்த மூன்றாவது வருடத்திலேயே (1952 - ஆம் வருடக்கடைசியில் தான் பராசக்தி வெளிவந்தது என்பதால், இரண்டாவது வருடம் என்றும் சொல்லலாம்!) இத்தனை கனமான, ஜனரஞ்சகமான, மற்றும் நகைச்சுவை கலந்த பாத்திரங்களில் நடிப்பதற்கு, எத்தனை நம்பிக்கையும், அனுபவமும், மெச்சூரிட்டியும் வேண்டும்? அவர் மனிதப் பிறவி தானா? இல்லையில்லை, தெய்வம் நடிப்பதற்கென்றே சிருஷ்டித்த தெய்வக் கலைஞன் - தெய்வ மகன்!

அந்த வருடத்தில் வெளி வந்த நடிகர் திலகத்தின் அத்தனை படங்களிலும், தூக்குத்தூக்கி மற்றும் மனோகரா வசூல் சாதனையே புரிந்தன. அதில்லாமல், மேற்கூறிய வித்தியாசமான நடிப்புச் சாதனையை நெருங்கக்கூட முடியுமா வேறு ஒரு நடிகனால் எத்தனை வருடங்கள் ஆனாலும்?

மாற்று முகாமில் வெளி வந்த ஒரே ஒரு படம் மட்டும் வசூல் சாதனை புரிந்ததை இன்றளவும் ஊதிப் பெரிதாக்குபவர்கள், ஒரே வருடத்தில், இரண்டு ப்ளாக் பஸ்டர்களைத் தந்ததை (மனோகரா, தூக்குத்தூக்கி) ஏன் இருட்டடிப்பு செய்கிறார்கள்?

"தெய்வம் பொறுக்குமா இவர்களின் திருக்கூத்தை?"

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

goldstar
25th August 2011, 01:52 PM
Guys,

Meetings you all from Madurai, hot news at Ram theatre NT's super duper hit Tyagam from today.

Cheers,
Sathsih

vasudevan31355
25th August 2011, 02:42 PM
டியர் பார்த்தசாரதி சார்,

தங்கள் அன்புக்கு என் பணிவான நன்றி!

'தூக்கு தூக்கி' படத்தைப் பற்றியும், நடிகர் திலகத்தின் அபார நடிப்புத் திறமையையும் அற்புதமாக வர்ணித்துள்ளீர்கள். சூப்பர். உங்களுக்கு ஏற்பட்ட அதே ஆதங்கம் தான் எனக்கும் ஏற்பட்டது. தூக்கு தூக்கி ஓரளவு தான் வெற்றி பெற்றது என்ற மாயை உங்கள் கட்டுரையைப் படித்தால் உடைபட்டுப் போகும். அந்தப் படத்தின் வெற்றி பற்றிய விளம்பரங்களை அன்பு பம்மலார் அவர்கள் பதிவிடுவார் என்று எதிர்பார்க்கலாம்.

அந்த அற்புதக் கலைஞனின் அபார வெற்றிகளை அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை மூடி மறைத்து ஆனந்தப் படக்கூடிய ஒரு கூட்டம் இன்றளவும் இருக்கத்தான் செய்கிறது. அப்படி செய்வதில் அவர்களுக்கு கிடைக்கும் சந்தோஷம் தான் என்ன என்று எவ்வளவோ யோசித்தும் எனக்குப் புரியவில்லை. தெரியவில்லை.சரி. விடுங்கள்.. போற்றுவார் போற்றினாலும் தூற்றுவோர் தூற்றினாலும் சிங்கத் தமிழனின் வெற்றிகளை யாரும் மறைத்து விட முடியாது... மறுத்து விடவும் முடியாது.

தூக்கு தூக்கி படத்திற்கு இன்னொரு சிறப்பு உண்டு. தமிழகத்தில் நாம் வைகுண்ட ஏகாதசி கொண்டாடும் போது இரவு தூங்காமல் கண் விழிப்பதற்காக எல்லா தியேட்டர்களிலும் நடுநிசிக் காட்சி என்ற ஒரு காட்சியை இரவு ஒரு மணிக்கு திரையிடுவார்கள். அந்த நடுநிசிக் காட்சிகளில் அதிகம் திரையிடப் பட்ட படம் அநேகமாக தூக்கு தூக்கியாகத்தான் இருக்கும்.அப்படி பலமுறை கடலூரில் நண்பர்களோடு தூக்கு தூக்கிக்கு சென்று, அளப்பரை செய்து, நடு இரவுகளில் ரசித்துப் பார்த்துவிட்டு அதிகாலைகளில் வீடு போய் சேர்ந்தது பசுமையாக நினைவில் நிற்கிறது. நன்றி!

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்

abkhlabhi
25th August 2011, 04:09 PM
BLAST FROM THE PAST - RANDOR GUY - THE HINDU
Thookku Thookki 1954

Sivaji Ganesan, T. S. Balaiah, Lalitha, Padmini, Ragini, P. B. Rangachari, C. K. Saraswathi, M.S.S. Bhagyam and T. N. Sivathanu

Great success Thookku Thookki

Thookku Thookki was a popular folk tale and stage play. It was brought to the screen in 1935 by the famous Madurai-based Rayal Talkie Distributors with the movie pioneer R. Prakash directing it and handling the camera.

Noted star of that era C.V.V. Panthulu played the title role with K. T. Rukmini in the female lead. K. N. Kamalam and ‘Clown' Sundaram formed part of the cast. R. M. Krishnaswami (RMK), a young, talented camera assistant, was working with Prakash. This film was embedded in his mind. He turned producer in the 1950s with his Aruna Films and made his directorial debut with Rajambal. He took up Thookku Thookki as his next production, which turned out to be the biggest success of his career.

The tale was all about five maxims — 1. A father cares only for the riches earned by his son; 2. Only a mother stands by the son through thick and thin; 3. A sister values her brother only for the gifts he brings her; 4. A wife should never be relied on for she will even murder her husband; and 5. A friend in need is always a friend indeed. A prince (Sivaji Ganesan) listens to the maxims in a religious discourse and sets out to prove them wrong. He undergoes several adventures and finds more than a grain of truth in the maxims.

Sivaji as the hero came up with a fine performance, while T.S. Balaiah in the role of a North Indian Seth was superb. The scenes featuring Balaiah speaking Sowcarpet Tamil with his mistress (Lalitha, the hero's wife) were great.

What elevated this film to great success was its scintillating music composed by G. Ramanathan. The lyrics were by A. Marudhakasi, Thanjai Ramaiah Das and Udumalai Narayana Kavi.

An interesting back story about the song composing… Udumalai Narayana Kavi based in Coimbatore reached Madras by the Blue Mountain Express on the morning of the day scheduled for the song composing and recording. He was to leave by the same train from Central Station around eight in the night. In less than 12 hours, Narayana Kavi wrote five of the eight songs, which were composed immediately by G. Ramanathan, rehearsed by T. M. Soundararajan and others. An amazing feat of creativity, it vouches for the musical genius of G. Ramanathan, the poetic talent of Narayana Kavi and the captivating singing of TMS.

Many of the songs rendered by Soundararajan became popular and it was this film that laid the foundation for his glorious career. Female singers M. L. Vasanthakumari, M. S. Rajeswari, P. Leela and A. P. Komala also contributed to the richness of the music. Noted singer and actor V. N. Sundaram lent his voice to one of the songs along with TMS and others.


Remembered for: the impressive performance of Sivaji Ganesan and the songs rendered by TMS.

abkhlabhi
25th August 2011, 04:32 PM
http://www.tubetamil.com/view_video.php?viewkey=8d6cd95deb3bdb750dce

Plum
25th August 2011, 04:36 PM
One Q: What happened in the hamsadhwani function? Did anyone apologise? If no one else, atleast the man being honoured - who presumably MUST have seen the invitation - did he voice out?

abkhlabhi
25th August 2011, 04:50 PM
“காதலிக்க நேரமில்லை“(1964). புத்தகத்திலிருந்து சிறு பகுதி…......

பரணி ஸ்டூடியோவில் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது, ஒரு காட்சி முடிந்து, அடுத்த காட்சிக்காக லைட் அட்ஜெஸ்ட்மண்ட் நடந்து கொண்டிருந்தது. நானும் (sridhar) சிவாஜியும் எதிரெதிரே உட்கார்ந்து, பேசிக் கொண்டிருந்தோம். ஸ்டுடியோவில் நுழைவாயிலை நோக்கியபடி உட்கார்ந்திருந்த எனக்கு திடீரென்று ஒரு அதிர்ச்சி.கேட்டை திறந்து கொண்டு திமுதிமுவென ஐம்பது, அறுபது இளைஞர்கள் உள்ளே நுழைந்து எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.



அடுத்தாற்போல் அந்த கூட்டத்துடன் வந்துகொண்டிருந்த மனிதரைப் பார்த்தவுடன் மேலும் அதிர்ச்சி.”அண்ணே திரும்பிப் பாருங்க. எம்.ஜி.ஆர். ஐம்பது அறுபது பேரோட வந்துகிட்டு இருக்காரு” என்றேன். திரும்பிப் பார்த்த சிவாஜிக்கும் எம்.ஜி.ஆர். ஏன் இப்போது, இத்தனை பேருடன் இங்கே வருகிறார் என்று புரியவில்லை. இதற்குள் எம்.ஜி.ஆர் எங்களை நெருங்கிவிட்டார். “அண்ணே வாங்க வாங்க… எங்க இவ்வளவு தூரம்?” என்றார் சிவாஜி. தம்முடன் வந்த இளைஞர்களைக் காட்டி “இவங்களெல்லாம் உங்க ரசிகர்களாம். காலையில் ஸ்டூடியோவைத் தாண்டிப் போகிறபோது, இவங்களெல்லாம் ஸ்டூடியோவுக்கு வெளியில் நிற்கறதைப் பார்த்தேன். இப்போ திரும்பிப் போகிறபோதும் பார்த்தேன்.வெளியிலேயே நின்னுகிட்டு இருந்தாங்க. அதான் உங்களை சந்திக்கட்டுமேன்னு உள்ளே கூட்டிக்கிட்டு வந்தேன். நான் வரட்டுமா?” என்று கூறி விடைபெற்றார். அந்த ரசிகர்கள் புறப்பட்டு போனபின் சிவாஜி தமாஷாய் , “என்னோட இந்த ரசிகர்களில் பாதிபேர் எம்.ஜி.ஆர் ரசிகரா இன்னியிலே யிருந்து மாறிடுவாங்க” என்றார்.

சிவாஜி ரசிகர்கள் என்று தெரிந்தும், சிவாஜியை அவர்கள் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்ததை எம்.ஜி.ஆரின் பெருந்தன்மை என்பதா? ராஜதந்திரம் என்பதா?

abkhlabhi
25th August 2011, 05:19 PM
http://www.youtube.com/watch?v=32tJCnxdQLk

abkhlabhi
25th August 2011, 05:50 PM
Article from Kalyanamalai Magazine :

Today, when we hear the name Sasikumar, we’ll immediately think of Sasikumar of the film ‘Naadodigal’. But there was a Sasikumar of yesteryears, who had found a permanent place in the hearts of the cine-goers … some interesting titbits about the hero of yesterday …

Sasikumar was an army man before entering the celluloid world. He was born on 8-12-1944 to the couple Radhakrishnan – Savithri in Kumpakonam. Radhakrishnan had worked as a Hindi professor in Trichy National College. From his early years, Sasikumar displayed staunch loyalty and love to the nation, Tamil Nadu and fine arts. After completing B. Sc., he joined the army, served for ten years and rose to the rank of captain. He won medals for his gallantry during the war with China in the year 1962 and with Pakistan in 1965. After these wars, he resigned from the army and founded a drama troupe of his own and started acting in his own stage plays. Director A. P. Nagarajan, who happened to watch one of his plays, introduced him to cinema through his film ‘Thirumalai thenkumari’. Then followed ‘Arangetram’, ‘Punnakai’, ‘Aval’, ‘Malai naattu mangai’, ‘Vellikkizhamai viratham’, ‘Bharatha vilas’, ‘Kaasethaan katavulataa’, ‘Kalyaanamaam kalyaanam’, ‘Samarpanam’, ‘Pirayachitham’, ‘Suriyakaanthi’, ‘Thirutan’, ‘Rajapart Rangadurai’ etc. he was dear to all in the industry.


He used to visit his parents and relatives at Kumpakonam. My native place is also Kumpakonam and I wanted to meet Sasikumar there during one of his visits. I was studying in the 11th Std. (SSLC) and I met Sasikumar with the help of his relatives. He was happy when I reviewed his films. But when he noticed my school-books and notebooks, he understood that I came to see him during my class hours. He advised me very strongly that it was not correct to sacrifice classes for the sake of seeing film people or watching movies and that education should be the first priority. I met him again at the premises of Nadigar Sangam in Chennai. When I reminded him about the Kumpakonam incident, he repeated his advice in a warm tone. When I asked him for some details about his personal life and career, he asked me whether I had joined any cinema magazine. I told him that after finishing my studies, I intended joining the print media.

Excerpts from his talk:

“My given name is Vijaykumar. My father is a staunch follower of ‘Thanthai’ Periyar. Periyar named me ‘Vetriselvan’. When I was in the army, my name was ‘Vetriselvan’ only. I changed my name to Sasikumar when I entered cinema. I am a patriot and I am a member of the Congress Party. I’ll strive hard for the welfare of the party as well as for the nation till my end. I don’t expect anything in return. Cinema is the live-wire of my life. I’ll not leave cinema till my last breath.”


When I met his son Vijayasarathi recently, I recalled these words of his father with excitement. When I asked him whether he remembered the incident in which both his parents died of fire accident, he started crying and narrated the incident in between sobs. “My father was preparing to attend the Congress Party’s public meeting at Ennore. He wanted to take milk before leaving for the meeting. When my mother lit the pump stove to warm the milk for all of us, the stove exploded. My mother’s sari caught fire. My sister and I, who were playing outside the house rushed into the house on hearing the noise. I was just four and my sister was six at that time. When my father rushed to the kitchen and tried to put down the fire by hugging my mother tightly, the fire caught hold of him also. Both rushed to the bathroom and opened the shower to douse the fire.


Both were admitted to the hospital with the help of our neighbors. My father signaled to me and Nandini to tell that they would be back safely. They were admitted to the Royapettah Hospital. Leading actors including MGR, Sivaji Ganesan, Gemini Ganesan and Major Sunderrajan came and spoke to the doctors. K. R. Vijaya madam and AVM Saravanan both brought air-coolers and kept them in the room of my parents. Many helped by donating blood. Intense treatment was given for three days.
My father requested everyone to sing ‘Janaganamana’ and chant ‘Vande matharam’ during his last hours.
On 24-8-1974, both died, not responding to the treatment. My mother died two hours after my father died. The last rites were performed at Kannammapet with military honors. Kamaraj Aiyah paid his last homage. The entire film industry was present. Sivaji Ganesan raised the slogan “Jai Hind” with others accompanying him.

Our grandmother brought us up amid great difficulties. Almost daily, some channel or other will be telecasting one of my father’s films. Whenever I watch them, my eyes well up with tears of joy. “


Sasikumar’s attractive personality and distinct talent will always remain fresh in our hearts!

abkhlabhi
25th August 2011, 06:21 PM
http://www.youtube.com/watch?v=Beta3ehxcFA

can any one upload "Ulagin Muthal Isai" Song ?

goldstar
25th August 2011, 06:46 PM
One Q: What happened in the hamsadhwani function? Did anyone apologise? If no one else, atleast the man being honoured - who presumably MUST have seen the invitation - did he voice out?

Plum,

I got following response from Hamsadhwani.

Date: Thu, 25 Aug 2011 08:05:32 +0500
> From: hamsadhwani@vsnl.net
> Subject: Re: Clarification about your invitation to felicitate KB
> To: sathish
> CC: gopalans@airtelmail.in
>
> Dear Sir,
> We sincerely regret the error and apologise.
> The error that crept in was because of agencies write up .
> Thanks for your understanding.
> regards
> Hamsadhwani

mr_karthik
25th August 2011, 07:30 PM
அன்புள்ள பம்மலார் சார் மற்றும் ராகவேந்தர் சார்,

காங்கிரஸ் பேரியக்கத்தின் தளபதிகளில் ஒருவராக விளங்கிய தேசீய நடிகர் கேப்டன் சசிகுமார் அவர்களின் நினைவஞ்சலி நெஞ்சை நெகிழ வைத்தது. அது தொடர்பான பல்வேறு பத்திரிகைகளின் ஒரிஜினல் பதிப்புகளை இங்கே வெளியிட்டு நாட்டுக்காக உழைத்த அந்த நல்ல மனிதருக்கு சிறப்பான நினைவஞ்சலியை நிறைவேற்றியிருக்கிறீர்கள். பெருந்தலைவரின் தொண்டர்கள் மற்றும் நடிகர்திலகத்தின் ரசிக உள்ளங்கள் சார்பில் இதயம் நிறைந்த நன்றிகள்.

ராகவேந்தர் அவர்கள் சொன்னது போல சசிகுமார், பிரேம் ஆனந்த் ஆகியோருக்குப்பின் திரையுலகில் நடிகர்திலகத்தை அந்தரங்க சுத்தியோடு நேசிக்கக்கூடியவர் ஒய்.ஜி.ம்கேந்திரன் அவர்கள்தான். நாலு வரி பேசினால் அதில் இரண்டு வரிகள் நடிகர்திலகம் பற்றியதாகத்தான் இருக்கும். சமீபத்தில் கூட மெல்லிசை மன்னரின் 'திரும்பிப் பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்துச்சொன்னபோது மறக்காமல் நடிகர் திலகத்தை நினைவு கூர்ந்தார். ஆனால் முன்னிருவர் போல இவர் நடிகர்திலகத்தோடு அரசியலில் தோள்கொடுத்து நிற்கவில்லை. தனது கலையுலகத் தந்தையாக மதித்து வருகிறார். சசி, பிரேம் இவர்களுக்குப்பின் நடிகர் திலகத்துடன் இணைந்து பணியாற்றிய இன்னொரு நல்ல உள்ளம் மறைந்த திரு. ஜெய்கணேஷ் அவர்கள். அவர் காங்கிரஸ் பேரியக்கத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார்.

நான் சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரியில் புகுமுக வகுப்புப் படித்துக் கொண்டிருந்தபோது ஃபைன் ஆர்ட்ஸ் கழகத்தின் சார்பில் சிறப்புறையாற்ற சசிகுமாரை அழைத்திருந்தனர். ஷூட்டிங்கில் இருந்து நேரடியாக கல்லூரிக்கு வந்திருந்தார். பேச்சு முழுவதும் தேசீயத்தைப்பற்றியேதான் பேசினார். பள்ளி நாடகங்களில் பெண்வேடம் போட்டு நடித்ததைப் பார்த்த ஒருவர் அவரை நிஜமான பெண்ணென்று நினைத்து காதல் கடிதம் கொடுத்ததை நகைச்சுவையோடு சொன்னார். முடிவில் நாட்டுப்பற்றை வலியுறுத்தி என்று முடித்தார்.

விழா முடிந்ததும் மாணவர்கள் அனைவரும் அவரைச்சூழ்ந்து நின்று குரூப் குரூப்பாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். அனைவரிடமும் அன்பாகப்பேசினார். அப்போதும் கூட 'கிளாஸை கட் அடித்து விட்டு படம் பார்க்கப்போகாதீர்கள்' என்று கேட்டுக்கொண்டார். விழா முடிந்தபின்னும் கிட்டத்தட்ட ஒருமணிநேரம் மாணவர்களுடன் உரையாடிய பின்னர் அன்போடு விடைபெற்றார். இது நடந்தது 1974 மார்ச் மாதம். ஆனால் நாங்கள் பி.காம். முதலாம் ஆண்டு துவங்கிய சிறிது நாட்களிலேயே 1974 ஆகஸ்ட் அன்று தீ விபத்தில் மனைவியைக் காப்பாற்றப் போராடியதில் சசிகுமாரும்ரும் தீயில் சிக்கி ஆஸ்பத்திரியில் இருக்கிறார் என்று கேள்விப்பட்டு பார்க்க ஓடினோம். பொதுமக்களை காவல்துறையினர் உள்ளே அனுமதிக்கவில்லை. திரையுலகினரும் காங்கிரஸ் தலைவர்களும் வந்து பார்த்துச்சென்ற வண்ணம் இருந்தனர். மருத்துவ மனைக்கு வெளியில் நின்றவாறே அவரும் மனைவியும் குணமடைய பிரார்த்தித்துக் கொண்டிருந்தோம். ஆனால் எல்லோரின் பிரார்த்தனையும் பலனற்றுப்போனது.

சசிகுமார் தம்பதிகள் ஒருவர் பின் ஒருவராக மரணமடைந்த செய்தி பேரிடியாகத் தாக்கியது. புதுக்கல்லூரி மாணவர்கள் பெரும்பாலோர் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டோம். மாணவர்கள் பலர் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். அவர்கள் சொன்ன விவரத்தைக்கேட்டு, நான் சசிகுமார் அவர்களின் உடலைப்பார்க்க விரும்பவில்லை. திரைப்படங்களிலும், கல்லூரி விழாவிலும் பார்த்த அந்த அழகான சிரித்த முகமே நெஞ்சில் நிலைத்திருக்கட்டும் என்று எண்ணி, தீயில் வெந்த அவரது முகத்தைப்பார்க்காமல் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டேன்.

இளம் வயதிலேயே மனைவியைக்காப்பாற்ற தன் இன்னுயிரை ஈந்த தியாகச்செம்மல், தேசிய வீரன், பெருந்தலைவரின் அன்புத்தொண்டன் எங்கள் சசிகுமாரை இப்போது நினைத்தாலும் நெஞ்சம் பதறுகிறது. அவரது நினைவைப்போற்றும் வகையில் நமது தளத்தில் சிறப்பான அஞ்சலி செலுத்திய உங்கள் அனைவருக்கும் என் இதயம் நெகிழ்ந்த நன்றிகள்.

kumareshanprabhu
25th August 2011, 10:06 PM
hats of to my bangalorean, vasudevan , pammalar , raghavendra, murali sir can any one of u please put engamama film song ellorum nallum valla naan padigirane.Which is one of the favorite song in Cantonment area in Bangalore

regards
kumar

pammalar
26th August 2011, 12:47 AM
டியர் வாசுதேவன் சார்,

தாங்கள் தொடர்ந்து அளித்து வரும் பாராட்டுக்களுக்கு எனது பணிவான நன்றிகள் !

"தூக்கு தூக்கி" காவியக் கண்ணோட்டம் தூக்கல் என்றால் 'குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்' ஒலி-ஒளிக்காட்சி அசத்தல் !

தாங்கள் விரும்பியது போல் வசூல் பிரளயத்தை ஏற்படுத்திய பெருவெற்றிக்காவியமான "தூக்கு தூக்கி"யின் வெற்றி விளம்பரங்களை-புள்ளிவிவரங்களை விரைவில் இங்கே பதிவிடுகிறேன்.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
26th August 2011, 12:54 AM
டியர் சந்திரசேகரன் சார்,

அற்புதப் பாராட்டுக்கு அன்பான நன்றி !

டியர் செந்தில் சார்,

தாங்கள் வழங்கிய பாராட்டுக்கும், அளித்த அபூர்வ தகவலுக்கும் ஸ்பெஷல் நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
26th August 2011, 01:02 AM
நடிகர்திலகத்தை பெற்றெடுத்த தெய்வத்தாய் ராஜாத்தி அம்மையார்


அன்னை ராஜாமணி அம்மையார்

pammalar
26th August 2011, 02:12 AM
டியர் பார்த்தசாரதி சார்,

1954-ல் வெளிவந்த நடிகர் திலகத்தின் காவியங்கள் குறித்த அலசல் பிரமாதம் !

அந்த ஆண்டின் "மனோகரா", "தூக்கு தூக்கி" மகாவெற்றி வரிசையில் அவசியம் இடம்பெறவேண்டிய மேலும் இரண்டு காவியங்கள், "கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி" மற்றும் "எதிர்பாராதது".

தாங்கள் அளித்த அன்பான பாராட்டுக்கு கனிவான நன்றி !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
26th August 2011, 02:32 AM
டியர் கோல்ட்ஸ்டார் சதீஷ்,

நமது தாய்த்திருநாட்டிற்கும், தங்களது சொந்த மண்ணிற்கும் வருகை புரிந்திருக்கும் தங்களுக்கு இதயம் நிறைந்த இனிய நல்வாழ்த்துக்கள் !

தங்களின் பயணம் வெற்றிகரமாக, உவகை பொங்க, இனிதே அமையட்டும் !

இன்று [25.8.2011 : வியாழன்] முதல், மதுரை 'ராம்' திரையரங்கில், நடிகர் திலகத்தின் "தியாகம்" என்கின்ற தித்திக்கும் தகவலுக்கு திகட்டாத நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
26th August 2011, 03:16 AM
டியர் பாலா சார்,

'ஹிந்து' நாளிதழில் 'திரு.ராண்டார் கை'யின் கைவண்ணத்தில் வெளிவந்த "தூக்கு தூக்கி" படக்கட்டுரையை பதிவிட்டமைக்கும், "கூண்டுக்கிளி" வீடியோ சுட்டிக்கும், தவப்புதல்வன் தான்சேனின் 'இசைகேட்டால் புவி அசைந்தாடும்', பாடகர் நிர்மலின் 'Love is fine darling' கானங்களின் ஒலி-ஒளிக்காட்சிகளுக்கும், 'கல்யாணமாலை' இதழில் வெளிவந்த கேப்டன் சசிகுமார் அவர்கள் குறித்த கட்டுரையை இடுகை செய்தமைக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
26th August 2011, 03:31 AM
டியர் mr_karthik,

தேசிய நடிகர் கேப்டன் சசிகுமார் அவர்களைப் பற்றி தாங்கள் எழுதிய பதிவை படித்து முடித்ததும் என்னையும் அறியாமல் எனது கண்கள் பனித்தன. மனமார்ந்த நன்றி !

Dear kumareshanprabhu Sir, Thanks !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
26th August 2011, 03:44 AM
can any one of u please put engamama film song ellorum nallum valla naan padigirane.Which is one of the favorite song in Cantonment area in Bangalore
regards
kumar

Dear kumareshanprabhu Sir,

Here is the "Enga Mama" song link : "Ellorum Nalam Vaazha Naan Paaduvaen"

http://www.raaga.com/channels/tamil/video.asp?clpId=12334

Regards,
Pammalar.

pammalar
26th August 2011, 05:00 AM
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்

தவப்புதல்வன்

[26.8.1972 - 26.8.2011] : 40வது ஜெயந்தி

பொக்கிஷப் புதையல்

அரிய நிழற்படம் : மதி ஒளி : 1.4.1972
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4427a-1.jpg

அரிய ஆவணம் : சிவாஜி ரசிகன் : 1.9.1972
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4433a-1.jpg

வருவார்.....

அன்புடன்,
பம்மலார்.

pammalar
26th August 2011, 05:45 AM
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்

தவப்புதல்வன்

[26.8.1972 - 26.8.2011] : 40வது ஜெயந்தி

பொக்கிஷப் புதையல்

அட்டைப்படம் : சினிமா குண்டூசி : ஆகஸ்ட் 1972
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4430a-1.jpg


அரிய ஆவணம் : பேசும் படம் : ஆகஸ்ட் 1972
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4435a-1.jpg

வருவார்.....

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
26th August 2011, 06:04 AM
அன்பு சகோதரி சாரதா,
தங்கள் கணினி சரியானதற்கும் என்னுடைய இணைய இணைப்பு பழுதுறுவதற்கும் சரியாக இருந்தது போலும். கடந்த 2 அல்லது 3 நாட்களாக பதிவுகள் இட முடியாமல் தவிப்பு. தற்போது இணைய இணைப்பு சரியாகி விட்டது. தங்களுடைய பாராட்டுக்களுக்கு எனது நன்றியினையும் நினைவுகளுக்கு எனது மகிழ்வினையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாங்கள் தொடர்ந்து தங்களுடைய கருத்துக்களை இங்கு பதிவி்ட்டு அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.
அன்புடன்