PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 8



Pages : 1 2 [3] 4 5 6 7 8

pammalar
19th July 2011, 04:04 AM
டியர் ராகவேந்திரன் சார்,

தாங்கள் தொடர்ந்து அளித்து வரும் உச்சமான பாராட்டுக்களுக்கு அடியேனது உளப்பூர்வமான நன்றிகள் !

நாம் ஒவ்வொருவருமே நமது நடிகர் திலகத்திற்கு தொண்டாற்றி வருகிறோம் என்பது நாம் பெற்ற பாக்கியம் !

டியர் பாலா சார், பதிவு அருமை !

Rajinikanth & Rangan, A Rare Combo !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
19th July 2011, 04:09 AM
ஒரு பழைய படத்துக்கு -டிக்கட் கட்டணம் ரூ. 80 என்று அதிகமாக வைக்கப்பட்டிருந்தாலும், ஞாயிறு மாலை காட்சி அரங்கம் நிறையும் என்பது முன்பே எதிர் பார்த்ததுதான்.

ஆனால் அட்வான்ஸ் புக்கிங்கிலேயே full ஆகி விட்டதும் பிளாக்கில் டிக்கட் 150 முதல் 200 விற்கப்பட்டதும் ஆச்சரியமே. என்ன இருந்தாலும் " ஒரு நாளைக்கு 10௦,000 ரூபாய்க்கு மேல பீஸ் வாங்கி ஊரெல்லாம் ரஜினிகாந்த் , ரஜினிகாந்துன்னு பேச வச்ச " வசூல் மன்னராச்சே நம்ம Barrister .

DVD யில் சௌகரியமாகப் பார்க்க வாய்ப்பிருந்தும் அதனை விடுத்து பல திரைக் கலைஞர்கள் நேரில் வருகை தந்திருந்தார்கள். நடிகர் திலகத்தின் தீவிர அபிமானியான ஒரு கலைஞர் தனது VIP அம்மா உட்பட ( 4 தலைமுறைகளைச் சேர்ந்த ) குடும்பத்துடன் வந்திருந்ததையும் அவர்கள் அனைவருமே படத்தை மிகவும் ரசித்துப் பார்த்ததையும் காண முடிந்தது.

டிவி , DVD இவற்றின் வீச்சையும் தாண்டி நல்ல பழைய படங்களுக்கு இன்னும் திரையரங்க மார்க்கெட் இருக்கிறது என்பதை இந்த படம் நிரூபித்துவிட்டது.

இனி வரப்போகும் தங்கப்பதக்கம் , எங்கள் தங்க ராஜா, வசந்த மாளிகை, கர்ணன் மற்றும் கட்டபொம்மன் படங்கள் இந்தக் கருத்தை உறுதி செய்து , Multiplex திரையரங்களில் பழைய படங்கள் திரையிடப்படும் காலத்தை உருவாகினால் மகிழ்ச்சியே.

படத்தை பற்றி என்ன சொல்ல ?

" அட்வகேட் ரங்கபாஷ்யம் அப்பாயின்டட் அஸ் ஹைகோர்ட் ஜட்ஜ் " என்ற செய்தி வாசிப்பை தொடர்ந்து வரும் குமுறலையா?

" என்ன போஸ்ட்மேன் வரவேண்டிய நேரத்துல பொலிஸ்மேன் வந்திருக்கேள்" என்று செந்தாமரையைப் பார்க்காமலே பேசும் மிதப்பையா?

" லுக் மைடியர் யெங் மேன்" என்று அதே காட்சியில் தோளைக் குலுக்கும் பாங்கையா?

" நான் கோர்டுக்கு போகும்போது புலி கூட குறுக்கே போகாது" என்ற வார்த்தைகளில் உள்ள கர்வத்தையா?

கோட்டைக் கேட்டு கண்ணன் வரும் காட்சியில் பைப்பை பிடித்துக்கொண்டு காலைக் குறுக்கே வைத்துக்கொண்டு மாடியின் மேல் நிற்கும் தோரணையையா?

'அது யாரால முடியும் பெரியப்பா?' என்று கேட்கும் கண்ணனிடம் ' என்னால முடியும்டா' என்று சொல்வதில் உள்ள தற்பெருமையையா?

" இன்னைக்கு ஜட்ஜ்மென்ட் டே" என்று சொல்லிவிட்டு பட்டன் போடாத முழுக்கை சட்டையின் பட்டையை விளக்கி மணிபார்க்கும் வேகத்தையா?

வெறுமனே மாடிப்படியில் அமர்ந்திருப்பது போன்ற காட்சியில் கூட கைத்தட்டல் வாங்குமளவுக்கு அமர்ந்திருக்கும் ஸ்டைலயையா?

எதைச் சொல்வது எதை விடுவது?

மொத்தத்தில் Barrister ஒரு One man army. படம் ஒரு one man show.

மகேஷ் என்னும் ரசிகருக்குள் மகத்தான எழுத்தாளர் சுடர் விட்டுப் பிரகாசிக்கிறார் !

தொடருங்கள் சார், எழுத்து உங்கள் வசம் !! பாராட்டுக்களுடன் கூடிய வாழ்த்துக்கள் !!!

அன்புடன்,
பம்மலார்.

Sunil_M88
19th July 2011, 04:10 AM
[color=indigo][b]Nadigar Thilagam as National Thilagam [Bhagat Singh] in RAJAPART RANGADURAI

thanks, that was quick :) brilliant screenshot

Sunil_M88
19th July 2011, 04:12 AM
sorry to be a pest but is there one of him like this in hat and a western dress

http://topnews.in/law/files/Bhagat_Singh.jpg

pammalar
19th July 2011, 04:39 AM
thanks, that was quick :) brilliant screenshot

Thanks, Sunil_M88.

pammalar
19th July 2011, 05:03 AM
sorry to be a pest but is there one of him like this in hat and a western dress

http://topnews.in/law/files/Bhagat_Singh.jpg

Here it is, my dear friend !

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4004a.jpg

This is a promo still for the stage play 'Bhagat Singh' in RR.

pammalar
19th July 2011, 05:10 AM
கௌரவக் கொண்டாட்டம்

சென்னை சாந்தி : 17.7.2011 : ஞாயிறு மாலை

கணேசலங்காரம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3915a.jpg


சரம் மாரி பொழிதல்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3916.jpg


மக்கள் வெள்ளம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3923.jpg


மீண்டும் 'கார்'காலம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3932.jpg

தொடரும்...

அன்புடன்,
பம்மலார்.

Sunil_M88
19th July 2011, 05:15 AM
WOW :shock: very nice share

pammalar
19th July 2011, 05:30 AM
கௌரவக் கொண்டாட்டம்

சென்னை சாந்தி : 17.7.2011 : ஞாயிறு மாலை [தொடர்ச்சி...]

ஜன சமுத்திரம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3925.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3926.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3927.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3928.jpg

தொடரும்...

அன்புடன்,
பம்மலார்.

groucho070
19th July 2011, 06:58 AM
Early morning checking this thread, I got nothing but lump in my throat. My favourite movie, still so powerful. Still drawing crowd. Still relevant. This character could be our version of Citizen Kane, but to hell with Kane, Barrister Rajinikanth is up there with Hamlet, except Hamlet is frickin' wimp! Long live NT's fame.

Mahesh, and rangan, beautiful posts! Thanks.

NOV, when can we ever have something like this over here. Very sad.

Pammalar sir, I've never seen that still myself (with hat). Kettathum tak-nu kuduttenggale! You are great sir!

goldstar
19th July 2011, 07:50 AM
Infinite thanks to Pammalar and Ragavendran sir for soaking us into happy mood and making us virtually to present inside Shanthi theatre and enjoying Sunday show, hats off to you guys.

I should agree Chennai fan's started beating our Madurai "Allapparai"...

Cheers,
Sathish

pammalar
19th July 2011, 10:09 AM
Thank you, Mr.Sunil_M88 & Mr.Rakesh.

Thank you very much, goldstar Satish.

Regards,
Pammalar.

RAGHAVENDRA
19th July 2011, 10:15 AM
Thank you, Mr.Sunil_M88 & Mr.Rakesh.

Thank you very much, goldstar Satish.

Regards,
Raghavendran

RAGHAVENDRA
19th July 2011, 10:18 AM
உலகமகா நடிகனுக்கு, அஞ்சலி,அஞ்சலி.கண்ணீர்அஞ்சலி! (http://www.facebook.com/notes/visali-sriram/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AE%95%E0%A E%BE-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%A F%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%A E%BF%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2% E0%AE%BF%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF %80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E 0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF/243065452384399)

அஞ்சலி,அஞ்சலி கண்ணீர் அஞ்சலி! ஜூலை 21!கருப்புதினம்...என் நாள்காட்டியிலே,கையேட்டிலே,வீட்​டிலே,,நாட்டிலே ,ஏன் உலகத்திற்கே கருப்பு நாள்! உலகமகா நடிகன்,நடிகர்திலகம்,கலைக்குரிச​ில்,நடிப்பின் அகராதி உயிர்கூட்டைப் பிரிந்து பறந்த நாள்! நடிப்பும் இறந்தது!!!! நீ அப்பாவாக நடித்தாய்,எனக்கு அப்பாவைப் பிடித்தது!நீ அண்ணனாக நடித்தாய்...எனக்கு அண்ணனில்லயே என்று அழுதேன்!நீ மகனாய் நடித்தாய் எனக்கு மகனில்லயே உன்னைப்போல் என்று வருந்தியிருக்கிறேன்! நீ காதலனாய்,கணவனாய் திரையில் வந்த பொழுது உன்னோடு மனதோடு வாழ்ந்திருக்கிறேன்!!நீ இறக்கும் படங்களைப் பர்த்து கதறியிருக்கிறேன்!கட்டபொம்மனை,வ​.உ.சியை,ராஜராஜசோழனை ,பரதனை,ஷண்ம​ுகசுந்தரத்தையும்,அப்பர் சாமிகளையும்,வீரபாகுவையும்,நாரத​ரையும்,சுந்தரம்பிள் ளையையும்,நர​சிம்மாச்சரியையும் பார்த்து,பார்த்து இன்றுவரை பார்த்துக்கொண்டே இருக்கேன்,அலுக்கவில்லை எனக்கு!!!போடாத வேஷமில்லை,சிந்தாத கண்ணீர் இல்லை,சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை! எத்தனை வேஷங்கள்.....வாழ்ந்து இருக்கிறாய்!பத்மனாப அய்யர்,பாரிஸ்டெர் ரஜினிகாந்த்,மில்முதலாளி ராஜலிங்கம்,தெய்வமகன் கண்ணன் இனிமேல் எவனும் நடிக்கிறேன் சொல்லிக்கொண்டு வரமுடியாத அளவுக்கு ஒரு இமயமலையாய்,அண்ணாந்து பார்க்ககூட முடியாத இடத்தில் ஒரு சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருக்கிறாய்!கவிதைக்கும்,பாடலுக​்கும் உயிர் கொடுத்தாய்!நீ வாசிக்காத வாத்தியமே இல்லை,நீ ஆடாத நடனமே இல்லை!முதல்மரியதை உனக்கு கொடுக்காம வேற யாருக்கு கொடுக்கிறது? உனக்கு விருதுகள் தேடி வந்து ஒட்டிக்கொண்டு பெருமையொடு மார்தட்டிக்கொண்டு பூரிப்பு அடைந்தது!!! எல்லாம் சரி!என்ன அவசரம் என்று இவ்வளவு வேகமாய் ஓடினாய்? திரையுலகு பொட்டிழந்த விதவையாய் நிற்கிறது!! உன்னை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்கிறவர்கள் உன் நிழலைக்கூடத் தொட முடியாமல் பாதியிலேயே நிற்கிறார்கள்!தேவர்மகனை நம்பிக்கொண்டு இருக்கிறோம்!அவருக்கு உனக்கு கிடைத்த பாத்திரங்கள் அளவு கனமான பாத்திரங்கள் இன்னும் கிடைக்கவில்லை!நீ நீதான்!!!!இனிமேல் யார் வந்தாலும் உன்னைப் பார்த்து சூடு போட்டுக்கொண்ட கதைதான்!!! STYLE:style style,people talk about style now,what is that bloody style,you created that word i will vouch,your wlking style in PAARTHAAL PASITHEERUM,THIRUVILAYADAL,BAG​APIRIVINAI,GOWRAVAM ,KATTABOMMA​N.......WOW!NOBODY can even try that!Your gestures,hats off!!!!Your dialogue delivery......"PLEASE"in PUDHIYAPARAVAI before UNNAIONDRU KETPEN,your smoking style in Yaar andha nilavu,in PAARTHAGNABAGAM ILLAYO SONG,Mella nada,mella nada scene,Paalooti valartha kili song scene,THILLANA MOHANAMBAL(WHOLE MOVIE)KARNAN,whole movie especially with savithri in EDUKKAVO KORKAVO SCENE,KAPPALOTTIATHAMIZHAN,VEE​RAPANDIAKATTABOMMAN full movie,UYARNDHAMANIDHAN...."SIV​AKUMAR sappadu konduvandhu sappidara scene,pal kuthura scene etc etc,etc....The list goes on and on LIKE RMKV SAREE,INDIA'S SCAM REPORT.......!!!!!!! I have so many things to write about you but it will go as big as A SKY,A SEA OR AS VAST AS THE UNIVERSE! AS YGM puts it "THERE IS ALWAYS ONE SUN,ONE MOON................ONLY ONE SHIVAJI!!!!!!!!As long us i live,i can never accept anybody a great actor because ACTING means SHIVAJI SIR!Others can try,try try again and again ......to reach your perfection!No words more..................high time for me to mourn!!!!!!!

Visali Sriram

we completely second you madam

thanks to facebook website.

pammalar
19th July 2011, 10:22 AM
கௌரவக் கொண்டாட்டம்

சென்னை சாந்தி : 17.7.2011 : ஞாயிறு மாலை [தொடர்ச்சி...]

பேனர்களின் பேரணி

பாரிஸ்டருக்கு பேனர்கள்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3929.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3922.jpg


நினைவு நாள் பதாகைகள்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3919a.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3920.jpg

தொடரும்...

அன்புடன்,
பம்மலார்.

saradhaa_sn
19th July 2011, 11:46 AM
டியர் பம்மலார், ராகவேந்தர், முரளி, மகேஷ், ராதாகிருஷணன் மற்றும் பாலா....

கௌரவம் திரைக்காவியத்தின் ஞாயிறு கொண்டாட்ட நிகழ்ச்சிகளை செய்திகளாகவும், புகைப்படங்களாகவும் தந்து அசத்தி விட்டீர்கள். அனைத்தும் மிக அருமை என்பதோடு, அரங்குக்கு வர இயலாதோரை நமது திரி வழியாகக் காண வைத்து விட்டீர்கள்.

மகேஷ்,
நீங்கள் பாரிஸ்ட்டரின் ஸ்டைல் காட்சிகளை வரிசைப்படுத்திய விதம் அருமை. இன்னும் நிறைய இருக்கிறது. அவர் வரும் காட்சிகள் அனைத்தும் ஸ்டைல்தானே. (புகைப்படங்களில், திரைக்காட்சிகள் சிவப்பு நிறமாக இருப்பதைப்பார்த்தால் படம் பழைய பிரிண்ட்டோ என்று தோன்றுகிறது. ரசிகர்களின் இவ்வளவு எதிர்பார்ப்புக்களுக்கிடையே, அவர்களின் பெருத்த ஆதரவோடு திரையிடப்படும் படம் புதிய பிரிண்ட்டாக திரையிட்டிருக்கலாம்).

பாலா,
இப்படத்துக்காக நீங்கள் பெங்களூரிலிருந்து வந்து சிறப்பித்திருப்பது பிரமிக்க வைக்கிறது. நடிகர்திலகத்தின்மீது நீங்கள் வைத்திருக்கும் அபிமானம் சிலிர்க்க வைக்கிறது. இது முதல் முறையல்ல என்பது கூடுதல் சுவாரஸ்யம்.

'பாரிஸ்ட்டர்' மோகன்,
உங்கள் உணர்ச்சிகளை என்னால் உணர முடிகிறது. சாந்தி நிர்வாகம் இப்போதாவது ரசிகர்களின் உணர்ச்சி வேகத்தைப் புரிந்துகொண்டு, நடிகர்திலகத்தின் படங்களை பெரிய திரையில் காணச்செய்வதற்கு நன்றிகள். (சிறிது காலம் சென்னை அரங்குகளில் நடிகர்திலகத்தின் படங்களையே பார்க்க முடியாமல் இருந்தது. இதுபற்றி சகோதரர் ராகவேந்தர் பலமுறை குறைபட்டுள்ளார்).

கௌரவம் பலதரப்பட்ட ரசிகர்களையும் திருப்திப்படுத்துவதாக அமைந்ததும் அதன் பெரிய வெற்றி. நடிகர்திலகத்திடம் ஸ்டைலுடன் கூடிய சற்றுமிகை நடிப்பை ரசிக்க விரும்புவோருக்கு பாரிஸ்ட்டர் பாத்திரம். அடக்கி வாசிக்கப்பட்ட இயல்பான நடிப்பை விரும்புவோருக்கு கண்ணன் பாத்திரம் என இரண்டையும் தந்திருந்தார். பாரிஸ்ட்டருக்கு கிடைத்த அபார வரவேற்பின் மூலம், ரசிகர்களும் பொதுமக்களும் நடிகர்திலகத்திடம் என்ன விதமான நடிப்பை எதிர்பார்த்தனர் என்பதற்கும் விடை சொல்லியது இப்படம். இருப்பினும் கண்னன் பாத்திரமும் சோடைபோகவில்லை.

பெரியவருக்கு எதிராக தன்னை பிரைன்வாஷ் செய்யும் சகவக்கீல்கள் மற்றும் இன்ஸ்பெக்டர் செந்தாமரையிடம், 'எல்லோரும் சேர்ந்து இந்த மெழுகு பொம்மைக்கு உயிர் கொடுக்கப்பார்க்கிறீர்கள். ஆனா, எங்க பெரியப்பா 'கண்ணா'ன்னு கூப்பிட்டு ஒருதடவை பார்த்தாருன்னா இந்த பொம்மை அப்படியே உருகிடும் சார்' என்று சொல்லும்போது பெரியவரிடம் இருக்கும் பக்தியை அருமையாக வெளிப்படுத்துவார். 'இன்னும் கொஞ்சூண்டு நெய் போடுறேன். சமர்த்தா சாப்பிடுங்கோ' என்று பெரியப்பாவிடம் கொஞ்சும் அழகு, பெரியவரின் கோர்ட் கவுனை வாங்க வந்த இடத்தில் பெரியவரைப் பார்க்கும் முன் பண்டரிபாயிடம் பேசும்போது கொட்டும் உணர்ச்சிப்பிரவாகம், கோர்ட் சீனில் பெரியப்பாவைப்பார்த்து 'Let him take his own time' என்று சொல்லுமிடம், கடைசியில், கேஸில் தான் ஜெயித்ததற்குக்கூட பெருமைப்படாமல், பெரியப்பாவுக்கு ஜஸ்டிஸ் போஸ்ட் கிடைத்து விட்டது என்பதையறிந்து குழந்தைபோல குதூகலித்து ஓடும் அழகு... என்று கண்ணனும் தன் பங்குக்கு அசத்தியிருப்பார்.

கோல்டன் சதீஷ்,
சென்னை என்ன மதுரை என்ன, தமிழக திரையரங்குகள் அனைத்துமே நடிகர்திலகத்தின் கோட்டைகள்தான், தாராசுரம் டூரிங் டாக்கீஸ் உள்பட.

முந்தாநாள் கௌரவம் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் நன்றி.

abkhlabhi
19th July 2011, 12:23 PM
Three Thilagams
http://abkhlabhi.blogspot.com/2011/07/three-thilagams.html


3 wonders with one
http://abkhlabhi.blogspot.com/2011/07/three-wonders-with-one.html


NT 2 NT
http://abkhlabhi.blogspot.com/2011/07/nt-2-nt.html


ALL GREATS
http://abkhlabhi.blogspot.com/2011/07/blog-post.html


http://abkhlabhi.blogspot.com/2011_07_01_archive.html

RAGHAVENDRA
19th July 2011, 01:00 PM
ஆட்சியில் இல்லை, அதிகாரத்தில் இல்லை, ஆலாய்ப் பறக்க ஏவல்கள் இல்லை,
காசு, பணம், பதவிகளில்லை, டிக்கெட் கிழிக்க செல்வாககுள்ளவர்கள் இல்லை,
ஆனால்
மக்கள் உண்டு, நெஞ்சங்கள் உண்டு, உயிராய்த் தாங்கும் உள்ளங்கள் உண்டு,
உயிருள்ளவரை உன்னைத் தவிர, வேறு ஏதும் எண்ணாதவர்கள், உத்தம புத்திரர்கள் ஏராளமுண்டு,
ஏசுவோர் ஏசினாலும் தூற்றுவோர் தூற்றினாலும்,
சிகரத்தைக் கைகளால் மறைக்க இயலாது

என்பதை நிரூபித்து வரும் நடிகர் திலகத்தின் கௌரவம் காவியம் பெற்ற வெற்றியை
நானிலம் கொண்டாட நல்லெண்ணம் கொண்டு
இணையத்தில் ஏற்றிய இந்தியா க்ளிட்ஸுக்கு
இதயம் முழுதும் இறைந்து வரும் நன்றிகள்.


http://www.indiaglitz.com/channels/tamil/gallery/Events/28326.html

நடிகர் திலகத்தின் தலையில் குவிந்திருக்கும் ஏராளமான கிரீடங்களில் கோஹினூர் வைரக்கிரீடம் கௌரவம் - திருமதி மதுவந்தி அருண்

நடிப்புக்கு இலக்கணம் நடிகர் திலகம் என்றால் ரசிப்புக்கு இலக்கணம் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் - திரு மோகன்ராம்

நாங்கள் நடிகர் திலகத்தை மறந்து விட்டோம் என்றால் நாங்கள் இறந்து விட்டோம் என்று பொருள் - திரு நெய்வேலி வாசுதேவன்

இவையெல்லாம் என்ன காசு கொடுத்து சொல்லச் சொல்லும் கோஷங்களா இல்லை, உள்ளத்தின் அடித்தளத்தில் உணர்ச்சிப் பெருக்கில் எழும் உண்மைகள்

இவை போன்ற உணர்ச்சிமயமான காட்சிகளைத் தொகுத்து தந்திருக்கும் இந்தியா க்ளிட்ஸ் இணையதளத்தின் நிர்வாகத்திற்கு உளமார்ந்த நன்றிகள்.

அன்புடன்

groucho070
19th July 2011, 01:44 PM
Three Thilagams
http://abkhlabhi.blogspot.com/2011/07/three-thilagams.html


3 wonders with one
http://abkhlabhi.blogspot.com/2011/07/three-wonders-with-one.html


NT 2 NT
http://abkhlabhi.blogspot.com/2011/07/nt-2-nt.html


ALL GREATS
http://abkhlabhi.blogspot.com/2011/07/blog-post.html


http://abkhlabhi.blogspot.com/2011_07_01_archive.htmlThe one with GG and Savithiri. What a style! Style chakravarthi-nu Rajini summAvA sonnaru. Thanks Abkhlabi.

joe
19th July 2011, 03:19 PM
Indiaglitz :thumbsup: சிவாஜி - பெயரை கேட்டாலே சும்மா அதிருதுல்ல :)

saradhaa_sn
19th July 2011, 04:00 PM
டியர் பம்மலார்,

'கௌரவக் களேபரங்கள்' கொஞ்சம் குறைந்தபின் இதைப்பதிவிடலாம் என்று தாமதித்தேன்.

'தர்மம் எங்கே' படத்தின் நிறைவுப்பகுதியாக அப்படம் பற்றி நடிகர்திலகம், கலைச்செல்வி, மற்றும் இயக்குனர் ஏ.சி.டி. ஆகியோரின் கட்டுரைகளைப் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. ரசிகர்கள் மட்டுமல்ல, அதில் பணியாற்றியோரும் அப்படத்தின் வெற்றியைப் பெரிதும் எதிர்பார்த்து இருந்தனர் என்பது தெளிவாகிறது. படம் வெளியாகும் முன் வந்த இந்தக் கட்டுரைகளையும் அவற்றுடன் இருந்த ஸ்டில்களையும் பார்த்துதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறிப்போனது. அந்த ஆண்டின் துவக்கத்தில் வெளியான 'ராஜா'வை இப்படம் வசூலில் மிஞ்சும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டதாம்.

அது (1972) நமது நடிகர்திலகம் சாதனைகளைப்புரிந்த ஆண்டு மட்டுமல்ல, அந்த சாதனைகளை இன்று இங்கு உரக்க பறைசாற்றிக்கொண்டிருக்கும் நீங்கள் பிறந்த ஆண்டும் கூட அல்லவா?.

'கைகொடுத்த தெய்வம்' வெளியீட்டு நாளையொட்டி உங்களின் விளம்பர அணிவகுப்பு அருமை. தேடிக்கொணர்ந்து குவிக்கும் உங்களை எப்படி பாராட்டுவது, எப்படி நன்றி சொல்வது?. அதற்கெல்லாம் அப்பாற்பட்டு போய்விட்டீர்கள்.

அட, ராஜபார்ட் ரங்கதுரையில் 'பகத் சிங்'கை கைதி உடையில் ஒரு படம் பிரசுரித்தீர்கள். நண்பர் அவர் தொப்பியணிந்த போஸில் உள்ள படம் வேண்டும் என்றதும் உடனே பதிக்கிறீர்கள். Google Search பகுதியில் தேடினால் கூட இவ்வளவு விரைவில் கிடைக்காது. அவ்வளவு வேகம், சுறுசுறுப்பு. நீங்கள் எங்களுக்குக்கிடைத்த பெரிய GIFT.

No Doubt.

saradhaa_sn
19th July 2011, 04:06 PM
நாளை மறுநாள்....

நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது.

என்னென்ன்வோ சட்டம் போடுகிறார்களே, 'ஜூலை 21 என்ற நாள் காலண்டரிலேயே இருக்கக்கூடாது' என்று யாரேனும் ஒரு சட்டம் போடக்கூடாதா?.

RAGHAVENDRA
19th July 2011, 04:46 PM
இமயமாய் உச்சத்திலேயே இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் 21ஜூலையைத் தேர்ந்தெடுத்தாரோ...

RAGHAVENDRA
19th July 2011, 05:27 PM
இன்றைய 19-07-2011 தேதியிட்ட மாலை மலர் நாளிதழில் வெளிவந்துள்ள செய்தியின் பிரதி

http://epaper.maalaimalar.com/1972011/epaperimages/1972011/1972011-md-hr-10/152315187.jpg (http://epaper.maalaimalar.com/showtext.aspx?parentid=10191&boxid=152315187&issuedate=1972011)

அன்புடன்

abkhlabhi
19th July 2011, 05:27 PM
http://abkhlabhi.blogspot.com/2011/07/blog-post_19.html

abkhlabhi
19th July 2011, 05:51 PM
GOWARAVAM CELEBRATION AT SHANTHI

http://www.moviejockey.com/forum/showthread.php?p=459284#post459284

Mr.Murali Srinivas in 2nd photo

abkhlabhi
19th July 2011, 06:15 PM
GOWRAVAM CELEBRATION PHOTO FEATURES - CHENNAI ONLINE

http://chennaionline.com/cityfeature/Photofeature/Nadigar-Thilagam-gallery.aspx?page=0
http://chennaionline.com/cityfeature/Photofeature/Nadigar-Thilagam-gallery.aspx?page=1
http://chennaionline.com/cityfeature/Photofeature/Nadigar-Thilagam-gallery.aspx?page=2

RAGHAVENDRA
19th July 2011, 06:19 PM
பாலகிருஷ்ணன் சாரின் பதிவில் குறிப்பிடப் பட்டுள்ள படங்கள்

நன்றி - www.moviejockey.com இணைய தளம்

http://www.tamiltinsel.com/wp-content/gallery/sivaji-ganesans-gowravam-re-release-in-shanthi-theatre-stills/sivaji-ganesan-gowravam-shanthi-theatre-re-release-houseful-shows-stills-13.jpg

http://www.tamiltinsel.com/wp-content/gallery/sivaji-ganesans-gowravam-re-release-in-shanthi-theatre-stills/sivaji-ganesan-gowravam-shanthi-theatre-re-release-houseful-shows-stills-14.jpg
தன்னுடைய கைபேசியுடன் காட்சியளிப்பவர் நம்முடைய முரளி ஸ்ரீநிவாஸ், அவருக்கு இடப்பக்கத்தில் ஆடிட்டர் திரு ஸ்ரீதர், வெள்ளை அங்கியுடன் கேபேசியில் உரையாடுபவர் திரு கவிதாலயா கிருஷ்ணன்

http://www.tamiltinsel.com/wp-content/gallery/sivaji-ganesans-gowravam-re-release-in-shanthi-theatre-stills/sivaji-ganesan-gowravam-shanthi-theatre-re-release-houseful-shows-stills-16.jpg
தம்முடைய ஆதர்ஷ குருவைப் போற்றும் நினைவுகளோடு திரு மகேந்திரா, திரு நந்தகுமார், திரு கவிதாலயா கிருஷ்ணன்

http://www.tamiltinsel.com/wp-content/gallery/sivaji-ganesans-gowravam-re-release-in-shanthi-theatre-stills/sivaji-ganesan-gowravam-shanthi-theatre-re-release-houseful-shows-stills-17.jpg

RAGHAVENDRA
19th July 2011, 06:21 PM
http://www.tamiltinsel.com/wp-content/gallery/sivaji-ganesans-gowravam-re-release-in-shanthi-theatre-stills/sivaji-ganesan-gowravam-shanthi-theatre-re-release-houseful-shows-stills-18.jpg

http://www.tamiltinsel.com/wp-content/gallery/sivaji-ganesans-gowravam-re-release-in-shanthi-theatre-stills/sivaji-ganesan-gowravam-shanthi-theatre-re-release-houseful-shows-stills-19.jpg

http://www.tamiltinsel.com/wp-content/gallery/sivaji-ganesans-gowravam-re-release-in-shanthi-theatre-stills/sivaji-ganesan-gowravam-shanthi-theatre-re-release-houseful-shows-stills-20.jpg

RAGHAVENDRA
19th July 2011, 06:25 PM
chennai online இணைய தள நிழற்படங்கள்

http://chennaionline.com/film/Photofeature/images/Nadigar-Thilagam/Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Gouravam-14.jpg

http://chennaionline.com/film/Photofeature/images/Nadigar-Thilagam/Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Gouravam-18.jpg

http://chennaionline.com/film/Photofeature/images/Nadigar-Thilagam/Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Gouravam-22.jpg

துணைவியார் சுதா அவர்களுடனும் மகள் திருமதி மதுவந்தி அவர்களுடனும் திரு மகேந்திரா

RAGHAVENDRA
19th July 2011, 06:28 PM
http://chennaionline.com/film/Photofeature/images/Nadigar-Thilagam/Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Gouravam-24.jpg

கல்வியாளரும் திரு மகேந்திராவின் தாயாருமான திருமதி ராஜலட்சுமி பார்த்தசாரதி அவர்கள் தன்னுடைய வயதையும் பொருட்படுத்தாது உற்சாகத்துடன் வந்திருந்த காட்சி

http://chennaionline.com/film/Photofeature/images/Nadigar-Thilagam/Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Gouravam-21.jpg

என்னய்யா, எங்கள் தலைவரைப் போல் இனிமேல் வர முடியுமா என்று திரு மகேந்திரா வினவுவது போல் உள்ளதல்லவா

RAGHAVENDRA
19th July 2011, 06:36 PM
இத்திரைக்காவியத்தினைத் தயாரித்த ஹிந்து பத்திரிகையாளர் ரங்கராஜன் அவர்களுக்கும், இந்தக் காலகட்டத்தில் மீண்டும் நினைவு கூர்ந்து ஹிந்து பத்திரிகையில் எழுதிய திருமதி மாலதி ரங்கராஜன் அவர்களுக்கும் நமது உளமார்ந்த நன்றியை இத்தருணத்தில் தெரிவிக்க விரும்புகின்றோம்.

இணைப்புகளைத் தந்த பாலகிருஷ்ணன் அவர்களுக்கும் நமது நன்றி.

அன்புடன்

RAGHAVENDRA
19th July 2011, 07:00 PM
galatta.com இணையதளம் வெளியிட்டுள்ள படங்களில் சில

http://tamil.galatta.com/entertainment/specialevents/Sivaji-Ganesan-in-Gowravam-Special-Screening-at-Shanthi-Theatre/images/Sivaji-Ganesan-in-Gowravam-Special-Screening-at-Shanthi-Theatre-01.jpg

http://tamil.galatta.com/entertainment/specialevents/Sivaji-Ganesan-in-Gowravam-Special-Screening-at-Shanthi-Theatre/images/Sivaji-Ganesan-in-Gowravam-Special-Screening-at-Shanthi-Theatre-03.jpg

http://tamil.galatta.com/entertainment/specialevents/Sivaji-Ganesan-in-Gowravam-Special-Screening-at-Shanthi-Theatre/images/Sivaji-Ganesan-in-Gowravam-Special-Screening-at-Shanthi-Theatre-12.jpg

http://tamil.galatta.com/entertainment/specialevents/Sivaji-Ganesan-in-Gowravam-Special-Screening-at-Shanthi-Theatre/images/Sivaji-Ganesan-in-Gowravam-Special-Screening-at-Shanthi-Theatre-18.jpg

joe
19th July 2011, 07:28 PM
பட்டையை கிளப்பும் பாரிஸ்டர் ரஜினிகாந்த் :boo:

J.Radhakrishnan
19th July 2011, 10:37 PM
ஆட்சியில் இல்லை, அதிகாரத்தில் இல்லை, ஆலாய்ப் பறக்க ஏவல்கள் இல்லை,
காசு, பணம், பதவிகளில்லை, டிக்கெட் கிழிக்க செல்வாககுள்ளவர்கள் இல்லை,
ஆனால்
மக்கள் உண்டு, நெஞ்சங்கள் உண்டு, உயிராய்த் தாங்கும் உள்ளங்கள் உண்டு,
உயிருள்ளவரை உன்னைத் தவிர, வேறு ஏதும் எண்ணாதவர்கள், உத்தம புத்திரர்கள் ஏராளமுண்டு,
ஏசுவோர் ஏசினாலும் தூற்றுவோர் தூற்றினாலும்,
சிகரத்தைக் கைகளால் மறைக்க இயலாது

உண்மை!!! உண்மை!!! உண்மையை தவிர வேறொன்றும் இல்லை......

pammalar
20th July 2011, 02:51 AM
டியர் ராகவேந்திரன் சார்,

விசாலி ஸ்ரீராம் அவர்கள் வடித்துள்ள அஞ்சலிக் கட்டுரை உருக்கத்தின் உச்சம். உணர்வுபூர்வமான கட்டுரையைத் தந்த அவருக்கும், அதனை நமது திரியில் சிரத்தையோடு பதிவிட்ட தங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் !

எட்டு நிமிட வீடியோவில் எல்லையில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்திய Indiaglitz இணையதளத்திற்கும், அதன் இணைப்பை அம்சமாக இங்கே பதிவிட்ட தங்களுக்கும் மீண்டும் ஒரு முறை இதயங்கனிந்த நன்றிகள் !

டியர் பாலா சார்,

அரிய புகைப்படங்களை அள்ளி அளித்து வரும் தங்களுக்கு மனமார்ந்த நன்றி !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
20th July 2011, 03:20 AM
சகோதரி சாரதா,

நமது நடிகர் திலகம் திரியில் நான் பதிவிடத் தொடங்கிய 2009 செப்டம்பரிலிருந்து எனது பதிவுகளை வெகுவாகவும், மனமாரவும், உயர்வாகவும், உச்சமாகவும் பாராட்டியிருக்கின்றீர்கள். தற்போது தாங்கள் அளித்துள்ள மிகுந்த உச்சமான பாராட்டுக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன் ?! ஆனந்தக்கண்ணீருடன் எனது ஆத்மார்த்தமான நன்றிகளை தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்பேர்ப்பட்ட பாராட்டுக்களையெல்லாம் பெற்றது என் வாழ்வின் பேறு. மீண்டும் மனமார்ந்த நன்றிகள் !

எல்லாப் புகழும் எப்பொழுதும் என்றென்றும் நமது இதயதெய்வத்திற்கே !

அன்புடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.

pammalar
20th July 2011, 03:28 AM
கௌரவத் திருவிழாவை அகிலமெங்கும் கொண்டு சென்றுள்ள moviejockey, tamiltinsel, chennaionline, galatta இணையதளங்களுக்கும், 'மாலை மலர்' நாளிதழுக்கும், அவற்றில் இடம்பெற்றுள்ள புகைப்படங்களை இங்கே அழகுற இணைத்துப் பதித்துள்ள பாலா சாருக்கும், ராகவேந்திரன் சாருக்கும் கனிவான நன்றிகள் !

['மாலை மலர்' நாளிதழின் புகைப்படச் செய்தி இன்றைய [19.7.2011] சென்னைப் பதிப்பு மட்டுமன்றி அனைத்து பதிப்புகளிலும் வெளியாகியுள்ளது.]

அன்புடன்,
பம்மலார்.

pammalar
20th July 2011, 04:28 AM
கௌரவக் கொண்டாட்டம்

சென்னை சாந்தி : 17.7.2011 : ஞாயிறு மாலை [தொடர்ச்சி...]

திருவரங்கமான திரையரங்கம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3942.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3944.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3949.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3961.jpg

தொடரும்...

அன்புடன்,
பம்மலார்.

pammalar
20th July 2011, 04:38 AM
கௌரவக் கொண்டாட்டம்

சென்னை சாந்தி : 17.7.2011 : ஞாயிறு மாலை [தொடர்ச்சி...]

திருவரங்கமான திரையரங்கம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3967.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3976.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3977.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3981.jpg

தொடரும்...

அன்புடன்,
பம்மலார்.

pammalar
20th July 2011, 04:57 AM
கௌரவக் கொண்டாட்டம்

சென்னை சாந்தி : 17.7.2011 : ஞாயிறு மாலை [தொடர்ந்து நிறைகிறது]

திருவரங்கமான திரையரங்கம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3991.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3996.jpg


பக்த சிரோன்மணிகள் : ஒய்ஜி & சேரன்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3957.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3958.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
20th July 2011, 05:34 AM
இதயதெய்வத்திற்கு பத்தாம் ஆண்டு புகழாஞ்சலி

[21.7.2001 - 21.7.2011]

22.7.2001 ஞாயிறன்று பிரபல காலை மற்றும் மாலை நாளிதழ்களின் முதல் பக்கங்கள்

1. தினத்தந்தி
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4008a.jpg


2. தினமணி
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4017aa.jpg


3. தினமலர்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4005a.jpg


4. தினகரன்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4007a.jpg

அடுத்த பதிவில் தொடரும்...

பக்தியுடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.

pammalar
20th July 2011, 05:55 AM
இதயதெய்வத்திற்கு பத்தாம் ஆண்டு புகழாஞ்சலி

[21.7.2001 - 21.7.2011]

22.7.2001 ஞாயிறன்று பிரபல காலை மற்றும் மாலை நாளிதழ்களின் முதல் பக்கங்கள்
[தொடர்ச்சி...]

5. The Hindu
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4014a.jpg


6. The New Sunday Express
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4013a.jpg

அடுத்த பதிவில் தொடரும்...

பக்தியுடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.

pammalar
20th July 2011, 06:30 AM
இதயதெய்வத்திற்கு பத்தாம் ஆண்டு புகழாஞ்சலி

[21.7.2001 - 21.7.2011]

22.7.2001 ஞாயிறன்று பிரபல காலை மற்றும் மாலை நாளிதழ்களின் முதல் பக்கங்கள்
[தொடர்ந்து நிறைகிறது]

7. மாலை முரசு
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4006a.jpg


8. மாலை மலர்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4009a.jpg


9. மக்கள் குரல்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4010a.jpg


10. News Today
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4012a.jpg

[சில நாளிதழ்களின் முதல் பக்கச் செய்திகள் தொடர்ச்சியாக உள்பக்கங்களிலும் வெளியாகியுள்ளன. அவற்றை அடுத்தடுத்த பதிவுகளில் அவசியம் அளிக்கிறேன்.]

பக்தியுடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.

joe
20th July 2011, 06:49 AM
couldn't control my tears :(

goldstar
20th July 2011, 07:08 AM
Who said NT is no more, he will be with us for another century, there is no end to NT.

groucho070
20th July 2011, 07:49 AM
Who said NT is no more, he will be with us for another century, there is no end to NT.+1. Look at those screenings. Look at this thread. Look at us. Never!!!

Till today, I refuse to watch that funeral procession video. No way!

RAGHAVENDRA
20th July 2011, 08:12 AM
இது ஒரு துயில் காட்சி - உறங்குவது போல் நடிக்கும் காட்சி - அவர் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் போது அவருக்கு ஏது மரணம் - இறைவன் இவ்வுடலைக் காண வேண்டி நம்மிடமிருந்து பலாத்காரமாகப் பிடுங்கி எடுத்துக் கொண்டு விட்டான்.

http://www.tribuneindia.com/2001/20010723/1nat.gif

உலகத்திலே ஒருவனென உயர்ந்து நிற்கும் திலகமே
உடனிருந்து காலமெல்லாம் மணம் பரப்பும் இதயமே

RAGHAVENDRA
20th July 2011, 08:18 AM
From one of the fellow forums


George
MasterBlogger
http://tamil.myfreeforum.org/avatars/myfree1026/tamil.myfreeforum.org/7431718024b0bcb4b72126.jpg
Posted: Sat Mar 20, 2010 4:11 pm

My top 10 Sivaji films. This is my personal selection. Maybe others can put up their own top 10 and we can compare.
website: (http://tamil.myfreeforum.org/SIVAJI_GANESAN_about79.html)

1. Trisoolam
2. Vasantha Maligai
3. Vani Rani
4. Moondru Deivangall
5. En Magan
6. Avanthaan Manithan
7. Deepam
8. Enga Mama
9. Puthiya Paravai
10. En Magan

More discussion on the link page (http://tamil.myfreeforum.org/SIVAJI_GANESAN_about79.html)

abkhlabhi
20th July 2011, 10:33 AM
மீண்டும் 21 ஆம் தேதி ஜூலை 2001 க்கு அழைத்து சென்ற பம்மல் ஆர். சுவாமிநாதன், ராகவேந்திரா - நன்றி பல. பராசக்தியில் தூக்கத்தில் இருந்து எழுந்தவர், தூங்க சென்றுவிட்டார். அவர் மனிதன் அல்ல. தெய்வம். அவருக்கு சாவே கிடையாது. படங்களின், எழுத்துகளின் முலம் நம்முடன் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்.

mr_karthik
20th July 2011, 11:15 AM
இதற்கு முன் வரை திரு. பம்மலார் சார் தந்த செய்தித்தாள் தொகுப்புக்கள் மகிழ்ச்சியைத் தந்தனவென்றால், இப்போது அளித்துள்ள செய்தித்தாள்களின் முதல் பக்கங்களின் அணிவகுப்பு நம்மைக் கலங்கடித்தன, கண்ணீர்க்கடலில் மூழ்கடித்தன.

சகாப்தங்கள் சாய்வதில்லை

சரித்திரங்கள் ஓய்வதில்லை.

வாழ்ந்த வரை ஒரு அன்னை இல்லத்தில் வாழ்ந்தாய், மறைந்தபின்னோ கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் வாழ்கின்றாய்.

இந்த உலகத்தில் கடைசி தமிழன் இருக்கும் வரை நீ வாழ்ந்துகொண்டிருப்பாய்.

KCSHEKAR
20th July 2011, 01:27 PM
டியர் பம்மலார்,

'கௌரவக் களேபரங்கள்' கொஞ்சம் குறைந்தபின் இதைப்பதிவிடலாம் என்று தாமதித்தேன்.

'தர்மம் எங்கே' படத்தின் நிறைவுப்பகுதியாக அப்படம் பற்றி நடிகர்திலகம், கலைச்செல்வி, மற்றும் இயக்குனர் ஏ.சி.டி. ஆகியோரின் கட்டுரைகளைப் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. ரசிகர்கள் மட்டுமல்ல, அதில் பணியாற்றியோரும் அப்படத்தின் வெற்றியைப் பெரிதும் எதிர்பார்த்து இருந்தனர் என்பது தெளிவாகிறது. படம் வெளியாகும் முன் வந்த இந்தக் கட்டுரைகளையும் அவற்றுடன் இருந்த ஸ்டில்களையும் பார்த்துதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறிப்போனது. அந்த ஆண்டின் துவக்கத்தில் வெளியான 'ராஜா'வை இப்படம் வசூலில் மிஞ்சும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டதாம்.

அது (1972) நமது நடிகர்திலகம் சாதனைகளைப்புரிந்த ஆண்டு மட்டுமல்ல, அந்த சாதனைகளை இன்று இங்கு உரக்க பறைசாற்றிக்கொண்டிருக்கும் நீங்கள் பிறந்த ஆண்டும் கூட அல்லவா?.

'கைகொடுத்த தெய்வம்' வெளியீட்டு நாளையொட்டி உங்களின் விளம்பர அணிவகுப்பு அருமை. தேடிக்கொணர்ந்து குவிக்கும் உங்களை எப்படி பாராட்டுவது, எப்படி நன்றி சொல்வது?. அதற்கெல்லாம் அப்பாற்பட்டு போய்விட்டீர்கள்.

அட, ராஜபார்ட் ரங்கதுரையில் 'பகத் சிங்'கை கைதி உடையில் ஒரு படம் பிரசுரித்தீர்கள். நண்பர் அவர் தொப்பியணிந்த போஸில் உள்ள படம் வேண்டும் என்றதும் உடனே பதிக்கிறீர்கள். Google Search பகுதியில் தேடினால் கூட இவ்வளவு விரைவில் கிடைக்காது. அவ்வளவு வேகம், சுறுசுறுப்பு. நீங்கள் எங்களுக்குக்கிடைத்த பெரிய GIFT.

No Doubt.


Exactly said madam - No doubt

Plum
20th July 2011, 03:20 PM
+1 Joe. Middle of office, tears in eyes. I am running to the rest room right now to avoid embarassment

pammalar
20th July 2011, 03:39 PM
நடிகர் திலகம் பற்றிய புதிய புத்தகம்

இதயவேந்தன் சிவாஜியின் வரலாற்றுச் சுவடுகள் [பாகம் 2]

பாவமன்னிப்பு-பாசமலர்-பாலும் பழமும்
[பொன்விழா ஆண்டு மலர் (1961-2011)] [ஆசிரியர் : கா.வந்தியத்தேவன்]

நூல் முகப்பு
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/PPP1.jpg


பின் அட்டை
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/PPP2.jpg


நூலைப் பெற...
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/PPP3.jpg

அன்புடன்,
பம்மலார்.

gkrishna
20th July 2011, 04:37 PM
மன்னனின் கெளரவம் சாந்தி திரை அரங்கிலே
ரசிக்கின்ற சேனையோ பிள்ளைகள் வடிவிலே

தவிர்க்க முடியாத சில காரணத்தால் திரை அரங்கிற்கு வர முடியவில்லை . தாம்பரம் மண்ணிவாக்கம் அருகே மாட்டி கொண்டு விட்டேன் .
என்னால் உடனடியாக திரு முரளி சார் அவர்களை மெசேஜ் மூலமாகதான் தொடர்பு கொள்ள முடிந்தது . திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில்
திருநெல்வேலி சென்று விட்டேன் இப்போது எல்லாவற்றையும் கண்டு களித்தேன் simply superb
சில இழப்புகள் என்றுமே மனதில் வலி கொடுத்து கொண்டுஇருக்கும் அதேபோல் தான் சண்டே evening ஷோ
25 /10 /1973 தீபாவளி நோக்கி நினைவுகள் சென்றன நெல்லை சென்ட்ரலில் ரிலீஸ் காலை 6 மணிக்கு தீபாவளி கொண்டாடி விட்டு திரை அரங்குக்கு சென்றால் பெட்டி வரவில்லை. மதியம் சுமார் 12 மணி அளவில் பெட்டி வந்ததாக நினவு. நோ இண்டர்வல் தொடர்ச்சி ஆக 2 1 /4 மணி நேரம் படம் பார்த்தோம் . ஏன் என்றால் அன்று 5 காட்சிகள் இரவு 10 மணிக்குள் 4 காட்சிகள் ஓட்டிவிட்டார்கள். முதல் காட்சி மற்றும் இரவு காட்சி
இரண்டு காட்சிகள் பார்த்தோம். அந்த கால கட்டத்தில் நாகேஷ் புகழ் சற்று குறைந்த நேரம் . நம்மவர்க்கு எதிராக சற்று வில்லன் கலந்த பாத்ரத்தில் நாகேஷ் (தில்லான மோகனம்பாள் போல் ) மேலும் நீலு அவர்கள் சேர்ந்து கலக்கி இருப்பார்கள்
பண்டரி பாய் அவர்கள் சின்னவர் கண்ணனிடம் கோயில் கும்பாபிசேகம் கொடுப்பதற்கு பணம் கேட்கும் போது நாகேஷ்,நீலு,மகேந்திரன் மற்றும் சமையல் காரர் அடிக்கும் லூட்டிகள் காண கண் போதாது . அதிலும் பண்டரி பாய் பணம் கேட்டு நம்மவர் மறுக்கும் போது நாகேஷ் அடிக்கும் வசனம் மறக்க முடியாது
"வெள்ளியில் சாவி கொத்து செய்து கொண்டு அதை வெளியில் தெரியும் படி கட்டி கொண்டு வேண்டும் என்கிறபோது செலவு செய்ய வேண்டிய மாமி நிலைமை பார்த்தீரா மகாலக்ஷ்மியே மார்வாடிகிட்ட கடன் கேட்ட மாதிரி இருக்கு"
அப்போது பண்டரி பாய் அவர்கள் "கண்ணன் கெடுபிட்யாக இருப்பது நல்லது இல்லனே எல்லோரும் சேர்ந்து அவனை கிளோஸ் பன்னிருவீர்கள் "
என்று கூறுவார் . அதே போல் "நீலு பொடி போடும் போது என்னவோய் நீலகுண்டம் பொடி போடுகிரீரா அல்லது பீரங்கிகு மருந்து செளுதரீரா "
மேலும் கோர்ட் ஒத்திகை காட்சியில் பெரியவர் நாகேஷிடம் "Mr கோபாலன் நீர்தான் ஜட்ஜ்" என்றவுடன் அதற்கு நாகேஷ் "வேண்டாம் அண்ணா உங்களுக்கே கிடக்கலை எனக்கு எப்படி " என்று சொன்னவுடன் "யோவ் ஜட்ஜ் மாதிரி act பண்ணும் ஐய" என்று NT சொல்வதும் காட்சிகள் கண் முன்னால் ஓடி கொண்டு இருக்கிறது .
நம்மவர்,மேஜர், ராமசாமி நாகேஷ் பண்டரிபாய்,செந்தாமரை போன்றோர் மறைந்து விட்டனர் . திரு மகேந்திரன் மற்றும் நீலு உள்ளனர் அவர்களுடைய நினைவுகள் கிடைத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் . திரு முரளி சார், பம்மலர் சார்,ராகவேந்தர் சார் நினைத்தால் நிச்சயம் முடியும்

என்றும் அன்புடன்

கிருஷ்ணா G

abkhlabhi
20th July 2011, 04:46 PM
http://www.dinasudar.co.in/e_paper/bangaluru/img/03.htm
http://www.dinasudar.co.in/e_paper/bangaluru/img/07.htm

goldstar
20th July 2011, 05:33 PM
http://www.dinasudar.co.in/e_paper/bangaluru/img/03.htm
http://www.dinasudar.co.in/e_paper/bangaluru/img/07.htm

Super super....

How will be the response if Gowravam or Vasantha Maligai released in Natraj or Pallavi theatre?

Cheers,
Sathish

parthasarathy
20th July 2011, 05:38 PM
கௌரவம் - இந்தப் பெயர் நடிகர் திலகம் நடித்த காவியத்திற்குப் பெயராக வந்தபின், வந்தபின்னர் தான், அந்தப் பெயருக்கே ஒரு கெளரவம் கிடைத்தது என்றால் அது மிகையாகாது. இந்தக் காவியத்தை கடந்த ஞாயிறன்று நம் ஹப் நண்பர்கள் திரு. ராகவேந்தர், திரு. முரளி, திரு. பம்மலார், திரு. ராதாகிருஷ்ணன், திரு. மோகன் ரங்கன், திரு. மகேஷ், திரு. பாலா (திரு. கிருஷ்ணாஜி இந்த முறை வர இயலவில்லை) போன்றோருடன் நம் எல்லோருடைய மனதுக்கும் மிக நெருக்கமான சாந்தியில் அமர்ந்து பார்க்கும் பேறு கிடைத்தது பெரும் பேறு! இந்த முறை திரு. சந்திரசேகர் அவர்களையும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது இன்னமும் பெரிய பேறு!

இந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பு அனைத்து தரப்பினரையும் மூக்கில் விரல் வைத்து ஆச்சரியப் பட வைத்தது. அந்த விவரங்கள் அனைத்தையும் நண்பர்கள் அனைவரும் பகிர்ந்து ஏற்கனவே விரிவாக பகிர்ந்து கொண்டனர். அன்று படம் பார்த்து வெளியில் வந்ததும் எழுந்த குமுறல் - நண்பர் ஒருவரிடம் பகிர்ந்து கொண்டேன் - இன்னமும் இருக்கிறது - இந்த மீடியா காரர்கள் ஏன் இன்னமும் பெரிதாக எழுத மாட்டேன் என்று அடம் பிடிக்கின்றனர். அவர் வாழ்ந்த போதும், பத்து ஆண்டுகள் கழித்தும், இந்த ஓரவஞ்சனை ஏன் இன்னும் தொடர்கிறது? ஒரு வருடத்துக்கு முன்னர், ஆல்பர்ட் தியேட்டரில் மாற்று அணியினரின் படம் மறு வெளியீடு செய்யப்பட போதும், அதன் பின்னர் அவரது மற்றொரு படமும் (இரண்டும் அவரது இயக்கத்தில் வெளிவந்த முதல் இரண்டு படங்கள்), அதற்குக் கொடுக்கப்பட்ட விளம்பரம், அந்தப் படத்தைப் பார்க்கச் சென்ற காக்கை கூட்டம் (அதாவது அவர் பெயரைச்சொல்லியே பல வருடங்கள் திரைவானில் காலத்தை ஓட்டி விட்ட சிலர்) கரைந்த கரையலும்!! நான் அந்தப் படங்களையோ அந்தப் படத்தில் நடித்தவரையோ குறை சொல்லவில்லை! அவரும் பெரிய சாதனையாளர்தான்! இந்த மீடியாகாரர்களுக்கு ஏன் இந்த ஓர வஞ்சனை இன்னமும் போக மாட்டேன் என்கிறது?

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

parthasarathy
20th July 2011, 05:54 PM
ஜூலை 21, 2001 - நாம் அனைவரும் மறக்க வேண்டிய நாள். நம் எல்லோர் மனத்திலும், என்றும் நிரந்தரமாகக் குடிகொண்டு அல்லும் பகலும் நம்மை ஆக்கிரமித்த நடிகர் திலகம் மறைந்த நாள்!

அன்று, நான் அப்போது வேலை செய்து கொண்டிருந்த நிறுவனத்தின் குடும்ப விழா. அந்த விழாவில், நானும் ஒரு பொறுப்பை ஏற்று எல்லோரும் ஓடிக் கொண்டிருந்தோம். விழா முடிந்து அறுசுவை உணவு எல்லோரும் சாப்பிட்டு கொண்டிருந்தனர். இந்த விழாக் கமிட்டிகாரர்கள் எல்லோரும் சாப்பிட்டவுடன், நிறுவனத்தின் மூத்த இயக்குனர்களை வழியனுப்புவதற்காக செல்லும் போது, இரவு சுமார் எட்டரை மணிக்கு, என்னுடைய பேஜரில் (அப்போதெல்லாம் பேஜர் தான்), நடிகர் திலகத்தின் மறைவுச் செய்தி வர, உடனே, திக்பிரமை பிடித்தது போல் ஆகி விட, ஒரு இயக்குனர் என்னிடம் "என்ன பார்த்தா, ஒரு மாதிரி இருக்கே" என்று கேட்க, நான் அந்தப் பேஜர் செய்தியை அவருக்குக் காண்பிக்க, அவரும் உடனடியாக "அடடா! எப்பேர்பட்ட நடிகன் ..." என்று கூற, அப்புறம் எல்லோரும் புறப்பட்டுச் சென்றோம். சாப்பிட மனம் ஒப்பாமல், கண்களில் உருண்டோடும் கண்ணீரைத் துடைக்கக்கூடத் திராணியில்லாமல் பின்னிரவில் வீட்டுக்குத் திரும்பி - மறு நாள் - போக் சாலை சென்று கூட்டத்தில் திணறி அவரைப் பார்க்க முடியாமல், ஏமாந்து, பின்னர் வீட்டிலிருந்து பேஜரில், சன் டிவியில் நேரடி ஒளிபரப்பு என்று தகவல் வர - வீட்டிற்கு ஓடி - நாள் முழுக்க எந்த வேலையும் பார்க்காமல் - டிவிப் பெட்டி முன்னால் உட்கார்ந்து அழுது கொண்டே இருந்தது - எப்போதும் நினைவில் இருக்கும்.

நீங்காத நினைவுகளுடன்,

இரா. பார்த்தசாரதி

parthasarathy
20th July 2011, 06:06 PM
கடந்த சில வாரங்களாக, நம் திரிக்கு ஏற்பட்டிருக்கும் வேகமும், உற்சாகமும் - பஞ்ச கல்யாணிப் பாய்ச்சல்!

திரு. ராகவேந்தர் மற்றும் திரு. பம்மலார் அவர்களின் பங்களிப்பும், அவர்களது முனைப்பும் - கோடானு கோடி நடிகர் திலக ரசிகர்களுக்கு, அவர்கள் வெகு நாட்களாக எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டிருந்த, அவரது படச் சாதனைகள், மற்றும் வெளியீட்டு விவரங்கள் அடங்கிய பல் வேறு பத்திரிகைச் செய்திகள் மற்றும் விளம்பரங்களைப் பதிவிட்டு - அத்தனை ரசிகர்களின் ஒட்டு மொத்தப் பாராட்டுகளையும் நெகிழ்ச்சி கலந்த நன்றிகளையும் பெற்றுக் கொண்டீர்கள். இந்த வேக வேகமான வியாபார உலகில், ஒவ்வொருவருக்கு எத்தனை எத்தனையோ வேலைகள் மென்னியைப் பிடித்துக் கொண்டிருக்கும் காலத்தில், எத்தனை அலுவல்களுக்கிடையேயும், நடிகர் திலகத்திற்காக நேரம் ஒதுக்கி இத்தனை சிறப்புகளைச் செய்து கொண்டிருக்கும், உங்களை நான் சந்தித்ததையும், உங்கள் நண்பன் என்று சொல்லிக் கொள்வதையும், பெருமையாகக் கருதுகிறேன். வாழ்க/வளர்க உங்கள் தொண்டு!

மேலும், கெளரவம் படம் பார்த்ததைப் பற்றிய செய்திகளையும், அப்படத்தின் சிறப்புக் கண்ணோட்டத்தையும் பதிவிட்ட, திரு. ராகவேந்தர், திரு. பம்மலார், திரு. முரளி, திரு. மகேஷ், திரு. ரங்கன், திரு. ராதாகிருஷ்ணன், திரு. பாலா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. சாரதா மேடம் மற்றும் திரு. கார்த்திக் அவர்களுக்கும் மற்றும் ஏனைய அன்பர்களும் அவர்களது பதிவுகளுக்கும் மிக்க நன்றி.

என்றும் நம்மில் வாழும் நடிகர் திலகத்தின் நினைவுகளைப் போற்றுவோம்!

இரா. பார்த்தசாரதி

parthasarathy
20th July 2011, 06:14 PM
நடிகர் திலகம் - உலகெங்கும் உள்ள கோடானு கோடி தமிழர்கள் மட்டுமல்லாது, ரசிப்புத்தன்மை உள்ள அனைத்து நெஞ்சங்களிலும், நீக்கமற நிறைந்து விட்ட இந்த யுகக் கலைஞன் மறைந்து பத்து ஆண்டுகள் நிறைந்து விட்ட இந்த நிலையில் - அவரது நினைவைப் போற்றும் விதமாக இந்தக் கட்டுரையை மீண்டும் தொடர வாய்ப்பளித்த எல்லாம் வல்ல கடவுளுக்கும் - நடிப்புக் கடவுளுக்கும் நன்றி கூறி - தொடர்கிறேன்.

நடிகர் திலகத்தின் படங்களில் சிரஞ்சீவித்துவம் பெற்ற பாடல்கள் (தொடர்ச்சி......)

ஏற்கனவே, "நலந்தானா", "பொன்னொன்று கண்டேன்" மற்றும் "மலர்ந்தும் மலராத" ஆகிய மூன்று பாடல்களைப் பற்றி என்னுடைய பார்வையிலிருந்து பதிந்திருந்தேன். அதன் தொடர்ச்சியாக, ஏனைய ஏழு பாடல்களில், ஒவ்வொன்றாக மறுபடியும் பதியும் பேறு, கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு இப்பொழுதுதான் கிடைத்திருக்கிறது.

4. "யாரடி நீ மோகினி" படம்: உத்தமபுத்திரன்; பாடல்: கு.மா.பாலசுப்பிரமணியம்; பாடியவர்கள்: டி.எம்.சௌந்தரராஜன், ஜிக்கி, ஜமுனாராணி மற்றும் குழுவினர்; இசையமைப்பு:- ஜி.ராமநாதன்; இயக்கம் - டி. பிரகாஷ் ராவ்; நடிப்பு:- நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஹெலன் மற்றும் குழுவினர்.

இந்தப் பாடலை நினைத்த மாத்திரத்தில், முப்பது வருடங்களுக்கு முன்னர் நடிகர் திலகம் தூர்தர்ஷனில் அளித்த மலரும் நினைவுகள் நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. அப்போதிருந்த சில இளம் நடிகர்களில் ஆரம்பித்து, பல பழைய/புதிய இயக்குனர்களும், நடிகர்களும் அவரைப் பேட்டி காணுவதாகவும், அவருடைய படங்களில் இருந்து சிறந்த காட்சிகள் வருவதாகவும் அமைந்த நிகழ்ச்சி அது. அதில், திடீரென்று கமல் அவர்கள் அன்னை இல்லத்திற்கு நுழைந்து, நடிகர் திலகத்தை பேட்டி காணுவதாக ஒரு எபிசோட் வரும். அவர் நுழைந்தவுடன், அவரை நலம் விசாரித்தவுடன், அது எப்படி நீங்கள் முப்பது வருடங்களுக்கு முன்னரே எங்களை விடவும் ஸ்டைலாக கைத் தட்டிக் கொண்டே அந்த "யாரடி நீ மோகினி" பாடலில் நடித்தீர்கள் என்று கேட்க ஆரம்பித்து, கூடவே வேறு சில கேள்விகளையும் அவர் முன் வைத்தார். இன்னும் ஒரு முப்பது, முப்பது வருடங்கள் ஆனாலும், எப்பொழுதும் எல்லோரையும் ரசிக்க வைக்கும்படி அமைந்த பாடல். An ever enduring performance indeed!

இந்தப் பாடலைப் பொறுத்தவரை முக்கியமான அம்சம் துள்ளும் தாளகதியுடன் அமைந்த, கேட்ட/பார்த்த மாத்திரத்திலேயே, எவரையும் எழுந்து ஆட வைக்கும், திரு. ஜி.ராமநாதன் அவர்களின் மெட்டு மற்றும் இசை, அதற்கேற்றாற்போல், ultra எனர்ஜியுடன் அமைந்த நடிகர் திலகம் மற்றும் மொத்த குழுவினரின் நடனம் மற்றும் உடல் மொழி. பெரும்பாலும், கர்நாடக மற்றும் நாட்டுப்புற மெட்டுகளையே அமைக்கும், ஜி.ராமநாதன் இந்தப் படத்தில், பல பாடல்களை வித்தியாசமான களத்தில் அமைத்திருந்தார். இந்த நிமிடம் வரையிலும், என்றென்றும், உத்தமபுத்திரன் படப்பாடல்கள் ஜனரஞ்சகமாகவும், சாகாவரம் பெற்றவையாகவும் மட்டுமல்லாமல், தரத்திலும், உயர்வாக இருந்தது என்று கூறலாம். இந்தப் படத்தின் மாபெரும் வெற்றிக்கான முக்கியமான காரணங்களில், இசை மிக முக்கிய இடம் பெறும். அதே நேரத்தில், ஒவ்வொரு பாடலைப் படமாக்கிய விதமும், அவை அமைந்த சூழல்களும், அதில் நடித்த நடிக/நடிகையர்களின் பங்கும் மகத்தானது.

பாடல் துவங்கும்போதே, எனர்ஜி கொப்பளிக்கும் என்றால், முதல் சரணம் ஆரம்பித்து - "விந்தையான வேந்தனே..." என்று துவங்கி ஒரு துள்ளலான மெட்டு ஒலிக்கும். கேட்கும்/பார்க்கும் அனைவரையும் தாளம் போட வைக்கும். ஒரே பாடலில், ஒன்றுக்கும் மேற்பட்ட மெட்டுகளில் பாடல் அமைந்து, நீண்ட பாடலாயிருந்தாலும் (ஆறு நிமிடங்களுக்கு மேல்), சுவாரஸ்யம் குன்றாமல் இருப்பதற்கு வழி வகுத்தது.

அடுத்து, பாடல் வரிகள். மெட்டுக்கு அமைத்த பாடல் - அதுவும், ஜனரஞ்சக மெட்டு. இருப்பினும், தரம் குறையாது, பாடலின் துள்ளலை அதிகரிக்கும்படி அமைந்த வரிகள். கவிஞர் திரு. கு.மா. பாலசுப்பிரமணியம் இது போல் எத்தனையோ ஜனரஞ்சகப் பாடல்களுக்கு, மெட்டுகளுக்கு பாடல் எழுதுவதில் விற்பன்னர்.

அடுத்து, பாடியவர்கள். திரு. டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள் அந்த வேளையில், நடிகர் திலகத்துக்காக நிறைய பாடல்கள் பாட ஆரம்பித்து விட்ட நேரம். நடிகர் திலகம் வெறும், வசனம் தான் பேசுவார் என்ற குற்றச்சாட்டை (அவரும் எத்தனை எத்தனையோ விதமான நடிப்பைக் கொடுத்து விட்டாலும், இன்று வரை இந்தக் குற்றச்சாட்டு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது - அதற்கு, தனியே ஒரு பெரிய கட்டுரை எழுதும் எண்ணம் உள்ளது), அவர் தொடர்ந்து, முதல் படத்திலிருந்தே, உடைத்துக் கொண்டு வர, அவருக்கு, பலதரப்பட்ட பாத்திரங்கள், காட்சியமைப்புகள் மட்டுமின்றி, பாடல்களும், பெரிதும் உதவி செய்தன. அதில் மிக முக்கிய பங்கு, திரு. டி.எம்.எஸ். அவர்களுக்கும், மெல்லிசை மன்னர்களுக்கும், திரை இசைத்திலகம் மாமா கே.வி.மகாதேவன் அவர்களுக்கும், கவியரசு கண்ணதாசனுக்கும், வாலிக்கும் செல்லும். இந்தப் பாடலை, டி.எம்.எஸ். பாடிய விதம் - பாடல் நெடுகிலும், உற்சாகமும், அதே சமயத்தில், ஒரு விதமான குழைவும் (குடித்த பின் பாடுவதால், இலேசான போதையுடன் கூடிய குழைவு!) இழையோடும். திருமதி. ஜிக்கி அவர்களும், திருமதி. ஜமுனாராணி அவர்களும், அவர்கள் பங்குக்கு, குறை வைக்காமல், பிய்த்து உதறியிருப்பார்கள்.

அடுத்து, நடன இயக்குனர் ஹீராலால் மற்றும் இயக்குனர் டி. பிரகாஷ் ராவ். மேற்கத்திய பாணியில் எனக்குத் தெரிந்து, தமிழில், இந்தப் பாடல்தான் முதலில், பரிபூர்ணமாக, அமெச்சூர்தனம் இல்லாமல், அமைக்கப்பட்ட முதல் பாடல். இருப்பினும், நடிகர் திலகத்தின் படங்களின் ட்ரேட் மார்க்கான - தரம் வழுவாத தன்மை - இந்தப் பாடலிலும், அமைந்தது. முகம் சுளிக்கும்படியான அங்க அசைவுகளுக்கும், எக்கச்சக்க ஸ்கோப் இருந்தும், கடுகளவும், தரம் குறையாது அமைக்கப்பட்ட நடன அசைவுகள். அற்புதம்!

இப்போது, நடிப்பு.

பாடல் துவங்குவதற்கு முன்னரே அமர்க்களம் ஆரம்பித்து விடும். முதலில், பார்த்திபனாக வருபவர் ஸ்டன்ட் சோமுவுடன் வாள் பயிற்சியை முடித்தவுடன், கஞ்சிக் கலயத்தை எடுத்துக் குடிக்க ஆரம்பிக்கும் போதே, அலப்பறை ஆரம்பித்து விடும். ஏனென்றால், உடனே காட்சியை மாற்றி, இன்னொரு கஞ்சிக் கலயத்தைக் காட்டுவார்கள். அதைக் குடிப்பவர், விக்கிரமன். படத்தில் இன்றளவும், இந்தப் பாத்திரம் தானே, பெரிய அளவில் பேசப் படுகிறது. இந்தப் பாத்திரத்தில், நடிகர் திலகம் கையாண்ட வித்தியாசமான சில ஸ்டைல்களைத் தானே, ரஜினி அவர்கள் ரோபோவில் அவருடைய பாணியில், வித்தியாசமாகச் செய்து, கைத்தட்டல்களை அள்ளினார். சில நாட்களுக்கு முன், ரஜினிக்கு, சிறந்த வில்லன் அவார்டு கிடைத்தபோது, அதைப் பெற்றுக்கொண்ட தனுஷும், அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவரும், வில்லன் வேடத்தை எல்லோரும் ரசிக்கும்படி ரஜினி செய்தார் என்று கூறினார். உண்மைதான்! ஆனால், இவை எல்லாவற்றுக்கும் முன்னோடி, இன்றளவும், இந்த விக்கிரமன் பாத்திரம் தானே. (இதே வேளையில், இந்தப் படத்தின் மூலத்தில் அமர்க்களமாக நடித்த திரு. பி.யு.சின்னப்பா அவர்களையும் யாரும் மறக்கக் கூடாது.).

ஸ்டைல். முதல் படம் பராசக்தியில், கடைசியில், கோட் சூட் சகிதம் பண்டரிபாயிடம், அவர் பாடிய பாடலைத் திரும்பப் பாடும்போது (லாஜிக் சறுக்கல் வேறு விஷயம்) கொப்பளிக்கும் ஸ்டைல், அவ்வப்போது, அந்த நாள், எதிர்பாராதது, அமர தீபம், பெண்ணின் பெருமை போன்ற படங்களில், ஸ்டைல் பளிச்சிட்டாலும், படம் நெடுகிலும், ஸ்டைலான நடிப்பை வழங்க ஆரம்பித்தது இந்தப் படத்திலிருந்துதான்.

இந்தப் பாடலில் அவரது உடல் மொழி அபாரமாக இருக்கும். அடிப்படையில், குடிபோதையில் இருப்பவர், போதையையும் காட்ட வேண்டும், அதே நேரத்தில், அவர் உடலில் மது ஏற்றிய உற்சாகத்தை, தன்னை மறந்து, மற்றவர்கள் ஆடும்போது, கூடவே காட்ட வேண்டும். போதையில் இருப்பவன், என்னதான் உற்சாகமாக ஆட ஆரம்பித்தாலும், துவங்கிய சிறிது நேரத்திலேயே களைப்பை அடைவான். அதை கனகச்சிதமாக திரையில் வடித்திருப்பார். படம் நெடுகிலும், உற்சாகமும், போதையேறிய குழைவும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். யார் சொல்லிக் கொடுத்தார்கள் இந்தக் கலையை அவருக்கு? ஒருவரும் இல்லை. அது நடிப்புக்கடவுளான அவருக்கே உரிய கலை.

முதலில், ஹா! என்று துவங்கும் போது ஒரு ஸ்டைல், கைத் தட்டி நடன மங்கைகளை அழைக்கும் போது ஒரு ஸ்டைல், ஒவ்வொரு நடன மங்கையைப் பார்க்கும்போதும் ஒரு ஸ்டைல், முதல் சரணத்தில், ரீட்டா என்ற அந்த நடன நடிகை "விந்தையான வேந்தனே", என்று துவங்கி, சரணத்தை முடிக்கும் போது, அவரைப் போலவே வேகமாக நடன அசைவுடன் ஒரு நடையை நடந்து முடிக்கும் போது, இன்றும் கைத்தட்டல்களை அள்ளிக் கொண்டிருக்கிறார். பின், ஒண்ணும் "ஒண்ணும் ரெண்டு" என்னும்போது, திரும்பவும், "ஹ ஹ ஹ ஹா" என்னும்போது, ஒருவிதமான ஸ்டைல். பின்னர், புகழ் பெற்ற வட நாட்டு நடன நடிகை ஹெலன் அவர்கள் வந்தபின், உற்சாகம் மேலும் கூடும். பாடல் முடிய முடிய, நடிகர் திலகத்தின் அந்தப் புகழ் பெற்ற கைத்தட்டலுடன் கூடிய நடனம். கைத்தட்டல் ஹெலன், மற்ற நடன நடிகைகள் மட்டுமல்லாது, எம்.என்.நம்பியார் மற்றும் ஒ.ஏ.கே.தேவரையும் தொற்றிக்கொள்ள, பாடல் அமர்க்களமாக ஆரம்பித்து, படு அமர்க்களமாக முடியும்.

ஒரு பாடல் சிரஞ்சீவித்தன்மையுடன் இருப்பதற்குத் தேவையான அத்தனை அம்சங்களும் ஒருங்கே அமைந்த மற்றுமொரு பாடல். இன்றளவும், என்றும் ரசிக்கப்படும் ஒரு பாடல்.

தொடரும்,

இரா. பார்த்தசாரதி

RAGHAVENDRA
20th July 2011, 07:00 PM
அன்பு நண்பர் பார்த்தசாரதி அவர்களுக்கு,
உள்ளத்தைத் தொடும் வார்த்தைகள் ஒவ்வொன்றும்...
பாராட்டுக்களுக்கு சிரந்தாழ்ந்த நன்றிகள்...
தங்களுடைய ஊக்கமும் பாராட்டுக்களும் மேலும் மேலும் பல தகவல்களுக்கு ஊன்றாக உள்ளன. அதுவே உண்மை.

முதலில் பாடலைப் பார்ப்போமா


http://www.youtube.com/watch?v=q6dOjUsuCxU

யாரடி நீ மோகினி பாடலை மிகச் சிறப்பாக அலசி வருகிறீர்கள். இப்பாடல் இசைத்தட்டில் மேலும் கிட்டத்தட்ட ஒரு நிமிடத்திற்கு மேல் வரும். ஜிக்கியின் குரலில் ஹெலன் ஆடுவதாக வந்த பாடலின் ஒரு சரணமே தணிக்கையில் பலியானது. வரிகள் விரசமாம்... அந்த தணிக்கை அதிகாரிகள் தற்போதைய பாடல்களைக் கேட்டிருக்க வேண்டும்... என்ன ஆவார்களோ...

இதோ அந்த சரணத்தின் வரிகள்

நானும் நீயும் நல்ல ஜோடி...
தேனும் பாலும் போலக் கூடி
நேசமாகப் பாடிப் பாடி
ஆசையாக ஆடி ஆடி
காதலாலே போதை ஏறி
போதையாலே பாதை மாறி வாழடி
ஓடி நீ இங்கு வா
பாவமேது புண்யமேது
லாபமேது நஷ்டமேது
நானுமேது நீயுமேது
ஆணுமேது பெண்ணுமேது
உண்மையேது பொய்யுமேது
நன்மை தீமையேது
மானமேது ஈனமேது
தானமேது தர்மமேது
மானமேது ஈனமேது
தானமேது தர்மமேது
நாரா தீரா வீரா நீயே ராரா
ஆ...ஹா...
அன்பே ஹா ஹா..
என் அன்பே ஓஹோ ஹோ
என் அன்பே வா வா வா
என் அன்பே நீ வா
பண்பாடும் என் அன்பே நீ வா ஆஹ்...

[... க்ளாப் ஒலி தொடர்கிறது...]

முழுப்பாடலையும் இது வரை கேட்காதவர்களுக்காக இதோ இணைப்பு (http://www.mediafire.com/?nq2mlmdcoyg)

பாடலுக்கு நன்றி, சுக்ரவதனி இணைய தளம் மற்றும் பகிர்ந்து கொண்ட நண்பர்.

அன்புடன்

pammalar
20th July 2011, 07:16 PM
Exactly said madam - No doubt

டியர் சந்திரசேகரன் சார்,

நெஞ்சார்ந்த நன்றி !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
20th July 2011, 07:49 PM
திரு.ஜோ & Mr.Plum,

22.7.2001 தேதியிட்ட நாளிதழ்களின் நிழற்படப் பதிவுகளை இடும் போது எனது கண்களும் என்னையறியாமல் குளமாகிக் கொண்டேதான் இருந்தன. கண்களில் பெருக்கெடுத்த கண்ணீரை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.

பம்மல் ஆர். சுவாமிநாதன்.

joe
20th July 2011, 08:17 PM
பம்மலார்,
நான் அலுவலகத்துக்கு கிளம்பும் முன்னர் ஒரு தடவை நமது திரியை பார்வையிடுவது வழக்கம் .பின்னர் அலுவலகம் சென்றவுடன் ஒரு முறை ஏதாவது புதிய இடுகைகள் வந்துள்ளனவா என ஒரு முறை பார்ப்பது வழக்கம் ..இரண்டுக்கும் நடுவிலான நேரத்தில் நீங்கள் அந்த செய்தித்தாள் படங்களை இட்டிருந்தீர்கள் ..அலுவலகம் சென்றதும் எப்போதும் போல திறந்ததும் அவற்றை பார்த்ததும் கண்கள் குளமாகி கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் அடக்க முடியாமல் ஆகிவிட , என் கேபினுக்குள் யாராவது வந்து விடப் போகிறார்கள் என துடைத்துக்கொண்டே இருக்க வேண்டியதாகி விட்டது :)

pammalar
20th July 2011, 08:51 PM
திரு. ஜோ,

நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் இதயதெய்வமாக நடிகர் திலகம் வாழ்ந்து கொண்டேதான் இருக்கிறார் !

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
20th July 2011, 09:26 PM
ஓராயிரம் பதிவுகளைத் தொடும் ராகவேந்திரன் சாருக்கு உளப்பூர்வமான வாழ்த்துக்கள் !

ஒப்புவமை சொல்ல முடியாத உங்களது அபரிமிதமான பங்களிப்புக்கு பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள் !

இன்னும் பல்லாயிரக்கணக்கான பதிவுகளைப் பாங்குறப் படைக்கப் போகின்ற உங்களுக்கு நமது இதயதெய்வத்தின் ஆசிமலர்கள் என்றென்றும் துணைநிற்கும் !

பாசத்துடன்,
பம்மலார்.

pammalar
20th July 2011, 09:36 PM
Mr.Rakesh & goldstar Satish, True ! NT will live forever !

பாலா சார் & ராகவேந்திரன் சார்,

நற்றமிழ் மொழியும், கண்கவர் கலையும் உள்ளளவும் தமிழர் திலகமான கலைக்குரிசில் வாழ்ந்து கொண்டேயிருப்பார் !

பக்தியுடன்,
பம்மலார்.

joe
20th July 2011, 09:38 PM
நடிகர் திலகம் நினைவு தினம் .. ஐயா! உங்களை நினைக்காத நாளில்லை !


உனக்கு தேசிய விருது கிடைக்கவில்லையாம்!

குடகு மலையைக் கடந்தாயா என
இமய மலையைக் கடந்தவனிடம் கேள்வி!

பிரான்சுக்கும் எகிப்துக்கும் தெரிந்த உண்மை -இங்குள்ள
பீஷ்மர்களுக்கு மட்டும் தெரியாதாம்!

சிதம்பரனார் செல்ல மகன்
சினிமா என்பதையும் மறந்து
"ஐயோ அப்பா!" என்றரற்றினாராமே! -இந்த
சிறப்புக்கு முன் ஆஸ்கார் எந்த மூலைக்கு?

விண்ணுலகில் கூட...

சிவனும் ,சிதம்பரனாரும்
கட்டபொம்மனும் ,கர்ணனும்
அப்பரும் ,அம்பிகாபதியும்,
ஜார்ஜ்-ம் ,சாக்ரட்டீசும்

கண்ணாடி பார்ப்பதற்கு பதில்
உன் முன்னாடி தான் நிற்கிறார்களாமே?

pammalar
20th July 2011, 09:54 PM
Mr.Joe, 'Fan'tastic !

J.Radhakrishnan
20th July 2011, 09:57 PM
பம்மலார் சார்,
தங்களின் 22.7.2001 தேதியிட்ட நாளிதழ்களின் நிழற்படப் பதிவுகளை படிக்கும் போதே கண்ணீர் பெருக்கெடுத்து கணினியை மறைத்தது, இருந்தாலும் என்னை தேற்றிகொள்வது எப்படியென்றால் அவர் ஒரு யுக கலைஞன், அவருக்கு மரணமில்லை! அவர் திரைப்படங்கள் மற்றும் நினைவுகளின் முலம் நம்முடன் வாழ்ந்து கொண்டே இருக்கிறார் என்பதே.

என்றும் அவர் நினைவுடன்

sathya_1979
20th July 2011, 11:25 PM
ulagin maGA kalaignanukku, en manamArndha anjali :bow:

Karikalen
21st July 2011, 02:54 AM
http://65.175.77.34/makkalosai/showtext.aspx?parentid=14038&boxid=20393093&issue=2172011

Nice take by Malaysian newspaper on the late Legend's achievements

Best wishes to all his fans
Karikalen

pammalar
21st July 2011, 03:19 AM
இதற்கு முன் வரை திரு. பம்மலார் சார் தந்த செய்தித்தாள் தொகுப்புக்கள் மகிழ்ச்சியைத் தந்தனவென்றால், இப்போது அளித்துள்ள செய்தித்தாள்களின் முதல் பக்கங்களின் அணிவகுப்பு நம்மைக் கலங்கடித்தன, கண்ணீர்க்கடலில் மூழ்கடித்தன.

சகாப்தங்கள் சாய்வதில்லை

சரித்திரங்கள் ஓய்வதில்லை.

வாழ்ந்த வரை ஒரு அன்னை இல்லத்தில் வாழ்ந்தாய், மறைந்தபின்னோ கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் வாழ்கின்றாய்.

இந்த உலகத்தில் கடைசி தமிழன் இருக்கும் வரை நீ வாழ்ந்துகொண்டிருப்பாய்.

mr_karthik,

தாங்கள் கூறியது மிகச் சரியே. நடிகர் திலகத்தின் பெரும்பாலான பதிவுகளை அடியேன் இங்கே இடுகை செய்யும் போது மிகுந்த மகிழ்ச்சியுடன் பதிவிடுவது வழக்கம். ஆனால் நேற்று இங்கே இந்த செய்தித்தாள் நிழற்படங்களை பதிவிடும் போது துக்க உணர்ச்சிகள் மேலோங்கி என்னையறியாமல் எனது கண்கள் கசியத் தொடங்கி கண்ணீர் பெருக்கெடுத்தது. அதனைக் கட்டுப்படுத்த முடியாதவனாய் பின்னர் அவர் அருளாலேயே பதிவிட்டு முடித்தேன்.

நமது மனக்கோயில்களில் வீற்றிருக்கும் மாணிக்கமாக என்றென்றும் வாழ்ந்து, நம்மை அவர் பிரகாசிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். வாழ்க அவரது புகழ் !

பக்தியுடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
21st July 2011, 03:43 AM
டியர் பம்மலார்,
தங்களுடைய ஒவ்வொரு பதிவும் ஓராயிரம் பதிவுகளுக்கு சமம். தங்களைப் போன்ற அடுத்த தலைமுறையினரின் உழைப்புதான் அந்த மகா கலைஞனின் அருமைகளையும் பெருமைகளையும் எதிர்காலத்தில் நிலைநிறுத்தும். எனவே தாங்கள் மேலும் மேலும் இடப் போகும் பதிவுகளைப் பார்வையிடுவதும் அதனுடன் சேர்ந்து நாமும் பயணிப்பதுமே நடிகர் திலகத்திற்கு நம்மால் செய்யக் கூடிய சிறு பங்களிப்பாகக் கருதுகிறேன். தங்களுடைய அன்பான வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் உளமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த ஆயிரமாவது பதிவினை மிகுந்த சிறப்பு சேர்க்கும் விதமாக அன்பு நண்பர் கவிதாலயா கிருஷ்ணன் அவர்கள் நடிகர் திலகத்தைப்பற்றிப் புனைந்துள்ள அஞ்சலிக்கவிதையை பதிவிடுவதில் மிகுந்த பெருமை கொள்கிறேன். நம்மைப் பொறுத்த வரையில் அவர் மறைந்தால் தானே நினைவு நாள், நாம் தான் அவரை அல்லும் பகலும் நினைவூட்டிக் கொண்டே உள்ளோமே...



http://www.hindu.com/2006/12/14/images/2006121414320201.jpg

ON THE DEATH OF SIVAJI GANESAN

Eyes closed he sleeps serene,
its as if the sun itself has shut.
for god has written his final scene
and there is nobody to say CUT.

All across my youth,
my emotions he defined,
in per second 24 frames of truth,
all my choices he refined



He orchestrated my feelings
to suit his roles it seems,
when my passions he had reeling,
its like he invented my dreams.


In the arena of make-believe,
he was a star who set the pace,
and to laugh,to love,or to grieve,
the rest merely tried to mime his face.

His silence spoke in pages,
such eloquence his eyes stored,
when he stalked those screens n stages,
like a king this lion roared,

No betters his stature to match,
he was a leader by an unsaid law,
no equals his laurels to snatch,
no jealousies -but only AWE.

He played saints n brought them fame,
he played crooks n gave them charm,
he lent patriots acclaim,
even GODS he gave them form !!!!

A wizard he created a magic,
that was the toast of a generation whole
whether the heroic ,comic or tragic
mere tales he gave them soul.

Thus when a greatness passes on,
its but a single soul thats greived ,
but now that this actor has left and gone
its ike we are 300 times bereaved !!!!!

So a legend has spent his breath,
a titan fallen to that reaper grim,
but what's more cruel than that of his death ,
is that now there is nobody else to play him !

And though he has made his final bow,
can memory's curtains ever close??
for as long as theatre is a cinema show,
the legend of sivaji ganesan lives and grows.
- KAVITHALAYA KRISHNAN


அன்புடனும் நன்றியுடனும்

pammalar
21st July 2011, 04:18 AM
டியர் ராகவேந்திரன் சார்,

உச்சமான பாராட்டுக்களை வழங்கிய உங்களுக்கு எனது உயர்வான நன்றிகள் ! அடியேன் வாழ்வின் பயனை அடைந்தேன் என்றே சொல்ல வேண்டும் !

கவிதாலயா கிருஷ்ணன் அவர்கள் புனைந்துள்ள அஞ்சலிக் கவிதை அருமையிலும் அருமை !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
21st July 2011, 04:53 AM
இமயம் : 33வது உதயம்

[21.7.1979 - 21.7.2011]

பொன்னான பொக்கிஷங்கள்

'இமயம்' வளருகிறது விளம்பரம் : தினத்தந்தி : 4.5.1978
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4018a.jpg
["அந்தமான் காதலி"யின் 99வது நாளன்று அளிக்கப்பட்டது]


முதல் வெளியீட்டு விளம்பரம் : முரசொலி : 12.8.1979
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4021a.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
21st July 2011, 05:21 AM
டியர் கிருஷ்ணாஜி,

'கௌரவ'த்தில், நகைச்சுவைச் சக்கரவர்த்தி நாகேஷின் நகைச்சுவை நடிப்பை தாங்கள் சிலாகித்துக் கூறியிருப்பது தங்களின் [சிறந்த சிவாஜி ரசிகர்களுக்கே உரித்தான] பரந்த மனதையும் விசால நோக்கத்தையும் காட்டுகிறது !

தாங்கள் கூறியவற்றை காலதேவனின் கருணையோடு, கணேச பெருமானின் அருளோடு நிறைவேறறுவோம் !

டியர் ஜேயார் சார்,

தங்களின் கூற்று முற்றிலும் உண்மை ! நடிகர் திலகம் நம்முடன் வாழ்ந்து கொண்டேதான் இருக்கிறார் !

Dear Mr.Karikalen,

Thanks for the Supreme Link.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
21st July 2011, 05:25 AM
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/Shivan1.jpg

உலகை ஆண்டவனே !
உமக்கு ஜனனம் மட்டுமே !

பக்தியுடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.

RAGHAVENDRA
21st July 2011, 05:54 AM
ஜனனத்தின் நாயகன், மரணத்தின் வில்லன், உலகத்தின் உத்தமன், திலகத்தின் வடிவம், சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு கூறும் ஒளிக்காட்சியினைப் பகிர்ந்து கொண்டு பம்மலாரின் கூற்றுக்கள் மெய்ப்பிக்கப் படுவதை கண்டறிவோம்


http://video.google.com/videoplay?docid=3604633588006801092

அன்புடன்

RAGHAVENDRA
21st July 2011, 06:23 AM
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/karnandtsadfw.jpg

திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் அவர்களின் இந்த மாபெரும் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்

அன்புடன்

groucho070
21st July 2011, 06:46 AM
&உனக்கு தேசிய விருது கிடைக்கவில்லையாம்!

குடகு மலையைக் கடந்தாயா என
இமய மலையைக் கடந்தவனிடம் கேள்வி!

பிரான்சுக்கும் எகிப்துக்கும் தெரிந்த உண்மை -இங்குள்ள
பீஷ்மர்களுக்கு மட்டும் தெரியாதாம்!

சிதம்பரனார் செல்ல மகன்
சினிமா என்பதையும் மறந்து
"ஐயோ அப்பா!" என்றரற்றினாராமே! -இந்த
சிறப்புக்கு முன் ஆஸ்கார் எந்த மூலைக்கு?

விண்ணுலகில் கூட...

சிவனும் ,சிதம்பரனாரும்
கட்டபொம்மனும் ,கர்ணனும்
அப்பரும் ,அம்பிகாபதியும்,
ஜார்ஜ்-ம் ,சாக்ரட்டீசும்

கண்ணாடி பார்ப்பதற்கு பதில்
உன் முன்னாடி தான் நிற்கிறார்களாமே?Superb :thumbsup:

goldstar
21st July 2011, 10:15 AM
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/karnandtsadfw.jpg

திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் அவர்களின் இந்த மாபெரும் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்

அன்புடன்


Wow, watching Karnan in Shanthi theatre with DTS.... I have already started imagine the Sunday "Alapparai" on that day... it will beat Gowravam "Alapparai". It would be nice if released between Aug. 3rd week and Sep. last week, so that I can enjoy the "Alapparai" in person.

Cheers,
Sathish

goldstar
21st July 2011, 10:19 AM
Parthasarathy sir,

You are 100% correct, few news paper themself called as "only truth news" and are so biased on giving information about NT and have written few emails to them but as usual no response. Best thing we could do just ignore these nutshell people.

Cheers,
Sathish

saradhaa_sn
21st July 2011, 10:23 AM
கலையுலகின் கறுப்பு நாள்.......

அந்த 2001 ஜூலை 21 என்ற கறுப்புநாள் வராமலே போயிருக்கக் கூடாதா?. அதிகம் நடிப்பதில்லை என்றாலும் எங்களோடு இருக்கின்றாய் அதுபோதும் என்று எண்ணியிருந்த எங்கள் எண்ணத்தில் மண் விழுந்த அந்த நாள். மீண்டும் மீண்டும் வந்து எங்கள் உள்ளங்களை வாட்டுவது ஏனோ?. எங்கள் உள்ளங்களில் ஒட்டிக்கொண்ட உன் நினைவுகள் இருக்கின்றனவா என்று சோதிப்பதற்கா?. உன்னை நினைக்கும்போதெல்லாம் எத்தனை எண்ணங்கள், இனிய நினைவுகள். ஒன்றா.. இரண்டா..?.

'ரக்ஷா பந்தன்' கொண்டாடும் பழக்கமில்லாதவர்கள் நாம். இருப்பினும் இதை சாக்காக வைத்து உன்னைக்காண வேண்டும் என்பதற்காக, ‘ரக்ஷாபந்தன்’ தினத்தன்று ஒரு பெரிய ‘ராக்கி’யை எடுத்துக்கொண்டு உன்னிடம் ஓடி வந்தேன், நான் மட்டும்தான் கட்டப்போகிறேன் என்ற எண்ணத்தில். ஆனால் எனக்கு முன்பே பல வடநாட்டுப்பெண்கள் உன் இல்லத்தின் முன் ராக்கியோடு நிற்பதைப்பார்த்து அதிசயித்தேன். உன்னை அண்ணா என்று உரிமை கொண்டாட எத்தனை தங்கைகள்..!!. ராக்கி கட்டியவர்களுக்கெல்லாம், பக்கத்தில் நின்ற உதவியாளரிடம் பணம் பெற்று கொடுத்துக் கொண்டிருந்தாய்.

என்முறை வந்தது. “என்னம்மா, நல்லாயிருக்கியா?” என்று சிரித்துக்கொண்டே வலது கையை நீட்டினாய். பதட்டத்தில் எனக்கு முடிச்சுப்போட வரவில்லை. என் கணவர்தான் உதவினார். என் பதட்டத்தை நீ ரசித்துச் சிரித்தாய். மெய்மறந்து நின்றேன். உதவியாளர் தர அந்த நூறு ரூபாய் நோட்டைத் என்னிடம் நீட்டினாய். “அண்ணா, நீங்கள் த்ரும் இந்த நூறு ரூபாய் எனக்கு கோடிக்கு சமம். எப்படியும் இதை நான் செலவழிக்கப் போவதில்லை. அதனால் உங்கள் கையெழுத்துப்போட்டு தந்து விடுங்கள்” என்று நான் கேட்க, அதை உதவியாளரிடம் கொடுத்துவிட்டு, இன்னொரு புத்தம்புது நூறு ரூபாய் நோட்டை வாங்கி உன் கையெழுத்திட்டு தந்தாய். இன்றைக்கும் என்வீட்டு வரவேற்பறையில் எவர்சில்வர் பிரேமிட்ட கண்ணாடிபேழையில் நீ கையொப்பமிட்ட 'அந்த கோடி ரூபாய்' ஜொலிக்கிறது.

2001 ஜூலை 21-க்கு முன் வரை அதைப்பார்க்கும்போதெல்லாம் பெருமிதம் பொங்கும், இப்போதோ பார்க்கும்போதே கண்களில் நீர் கோர்க்கிறது. எத்தனை நினைவுகள் இதுபோல..!!!!.

உன்னை இழந்துவிட்டு ஓராயிரம் ஆண்டா வாழ்ந்துவிடப்போகிறோம்?. இதோ வந்துகொண்டே இருக்கிறோம்.

அதுவரை உன் நினைவுகள் எங்களோடு.....
கண்ணீருடன், தங்கை சாரதா.

goldstar
21st July 2011, 10:28 AM
கலையுலகின் கறுப்பு நாள்.......

அந்த 2001 ஜூலை 21 என்ற கறுப்புநாள் வராமலே போயிருக்கக் கூடாதா?. அதிகம் நடிப்பதில்லை என்றாலும் எங்களோடு இருக்கின்றாய் அதுபோதும் என்று எண்ணியிருந்த எங்கள் எண்ணத்தில் மண் விழுந்த அந்த நாள். மீண்டும் மீண்டும் வந்து எங்கள் உள்ளங்களை வாட்டுவது ஏனோ?. எங்கள் உள்ளங்களில் ஒட்டிக்கொண்ட உன் நினைவுகள் இருக்கின்றனவா என்று சோதிப்பதற்கா?. உன்னை நினைக்கும்போதெல்லாம் எத்தனை எண்ணங்கள், இனிய நினைவுகள். ஒன்றா.. இரண்டா..?.

'ரக்ஷா பந்தன்' கொண்டாடும் பழக்கமில்லாதவர்கள் நாம். இருப்பினும் இதை சாக்காக வைத்து உன்னைக்காண வேண்டும் என்பதற்காக, ‘ரக்ஷாபந்தன்’ தினத்தன்று ஒரு பெரிய ‘ராக்கி’யை எடுத்துக்கொண்டு உன்னிடம் ஓடி வந்தேன், நான் மட்டும்தான் கட்டப்போகிறேன் என்ற எண்ணத்தில். ஆனால் எனக்கு முன்பே பல வடநாட்டுப்பெண்கள் உன் இல்லத்தின் முன் ராக்கியோடு நிற்பதைப்பார்த்து அதிசயித்தேன். உன்னை அண்ணா என்று உரிமை கொண்டாட எத்தனை தங்கைகள்..!!. ராக்கி கட்டியவர்களுக்கெல்லாம், பக்கத்தில் நின்ற உதவியாளரிடம் பணம் பெற்று கொடுத்துக் கொண்டிருந்தாய்.

என்முறை வந்தது. “என்னம்மா, நல்லாயிருக்கியா?” என்று சிரித்துக்கொண்டே வலது கையை நீட்டினாய். பதட்டத்தில் எனக்கு முடிச்சுப்போட வரவில்லை. என் கணவர்தான் உதவினார். என் பதட்டத்தை நீ ரசித்துச் சிரித்தாய். மெய்மறந்து நின்றேன். உதவியாளர் தர அந்த நூறு ரூபாய் நோட்டைத் என்னிடம் நீட்டினாய். “அண்ணா, நீங்கள் த்ரும் இந்த நூறு ரூபாய் எனக்கு கோடிக்கு சமம். எப்படியும் இதை நான் செலவழிக்கப் போவதில்லை. அதனால் உங்கள் கையெழுத்துப்போட்டு தந்து விடுங்கள்” என்று நான் கேட்க, அதை உதவியாளரிடம் கொடுத்துவிட்டு, இன்னொரு புத்தம்புது நூறு ரூபாய் நோட்டை வாங்கி உன் கையெழுத்திட்டு தந்தாய். இன்றைக்கும் என்வீட்டு வரவேற்பறையில் எவர்சில்வர் பிரேமிட்ட கண்ணாடிபேழையில் நீ கையொப்பமிட்ட 'அந்த கோடி ரூபாய்' ஜொலிக்கிறது.

2001 ஜூலை 21-க்கு முன் வரை அதைப்பார்க்கும்போதெல்லாம் பெருமிதம் பொங்கும், இப்போதோ பார்க்கும்போதே கண்களில் நீர் கோர்க்கிறது. எத்தனை நினைவுகள் இதுபோல..!!!!.

உன்னை இழந்துவிட்டு ஓராயிரம் ஆண்டா வாழ்ந்துவிடப்போகிறோம்?. இதோ வந்துகொண்டே இருக்கிறோம்.

அதுவரை உன் நினைவுகள் எங்களோடு.....
கண்ணீருடன், தங்கை சாரதா.

Saradha madam,

Can we also see your 1 crore worth note please...

joe
21st July 2011, 11:04 AM
http://a2.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash1/32235_1409707356363_1042855542_31188965_6789572_n. jpg

இது புகைப்படமல்ல .. நடராஜன் என்ற அன்பர் தீட்டிய ஓவியம்

நன்றி : Facebook -ல் ஜீவா நந்தன் (ஓவியர் ..சமீபத்தில் தன் ‘திரைச்சீலை’ புத்தகத்துக்காக தேசிய விருது பெற்றவர் ..நடிகர் திலகத்தின் ரசிகர் ..நாஞ்சில் மண்ணிலிருந்து இப்போது கோவையில் குடியுருப்பவர்) ..இன்று நடிகர் திலகம் நினைவு நாளையொட்டி Facebook -ல் கலக்கிக்கொண்டிருக்கிறார்.

groucho070
21st July 2011, 11:18 AM
அட ஆமா பயின்டிங்கு . Captured the ferocity well. Thanks, Joe.

Mahesh_K
21st July 2011, 11:29 AM
http://www.hindu.com/2006/12/14/images/2006121414320201.jpg

ON THE DEATH OF SIVAJI GANESAN

Eyes closed he sleeps serene,
its as if the sun itself has shut.
for god has written his final scene
and there is nobody to say CUT.

All across my youth,
my emotions he defined,
in per second 24 frames of truth,
all my choices he refined



He orchestrated my feelings
to suit his roles it seems,
when my passions he had reeling,
its like he invented my dreams.


In the arena of make-believe,
he was a star who set the pace,
and to laugh,to love,or to grieve,
the rest merely tried to mime his face.

His silence spoke in pages,
such eloquence his eyes stored,
when he stalked those screens n stages,
like a king this lion roared,

No betters his stature to match,
he was a leader by an unsaid law,
no equals his laurels to snatch,
no jealousies -but only AWE.

He played saints n brought them fame,
he played crooks n gave them charm,
he lent patriots acclaim,
even GODS he gave them form !!!!

A wizard he created a magic,
that was the toast of a generation whole
whether the heroic ,comic or tragic
mere tales he gave them soul.

Thus when a greatness passes on,
its but a single soul thats greived ,
but now that this actor has left and gone
its ike we are 300 times bereaved !!!!!

So a legend has spent his breath,
a titan fallen to that reaper grim,
but what's more cruel than that of his death ,
is that now there is nobody else to play him !

And though he has made his final bow,
can memory's curtains ever close??
for as long as theatre is a cinema show,
the legend of sivaji ganesan lives and grows.
- KAVITHALAYA KRISHNAN


நமது உணர்வுகளைப் பிரதிபலிக்கும் திரு. கவிதாலாயா கிருஷ்ணன் அவர்களின் அஞ்சலிக் கவிதை மிக அருமை.

திரு. கிருஷ்ணன் அவர்களை ஒரு நல்ல நடிகராகவும் நம்மைப் போன்ற தீவிர நடிகர் திலகம் அபிமானியாகவும் அறிந்திருந்தோம். சாந்தியில் திரையிடப்படும் படங்கள் அனைத்திற்கும் தவறாமல் வந்து விடுகிறார். கெளரவம் படத்தை பார்க்க காட்சி நேரத்துக்கு 1 மணி நேரம் முன்பே அரங்கத்துக்கு வந்து காத்திருந்தார்.

இப்போது அவருக்குள் இருக்கும் கவிஞரை நமக்கு ராகவேந்திரன் சார் தெரியப்படுத்தி இருக்கிறார். இருவருக்கும் மனமார்ந்த நன்றி.

Mahesh_K
21st July 2011, 01:02 PM
இது புகைப்படமல்ல .. நடராஜன் என்ற அன்பர் தீட்டிய ஓவியம்

நன்றி : Facebook -ல் ஜீவா நந்தன் (ஓவியர் ..சமீபத்தில் தன் ‘திரைச்சீலை’ புத்தகத்துக்காக தேசிய விருது பெற்றவர் ..நடிகர் திலகத்தின் ரசிகர் ..நாஞ்சில் மண்ணிலிருந்து இப்போது கோவையில் குடியுருப்பவர்) ..இன்று நடிகர் திலகம் நினைவு நாளையொட்டி Facebook -ல் கலக்கிக்கொண்டிருக்கிறார்.

Thanks Joe for giving me a new avatar. Looks like a photograph. So natural.

abkhlabhi
21st July 2011, 01:04 PM
http://rufusonline.blogspot.com/2011/03/drganeshs-tribute-to-chevalier-sivaji.html

Karnan Advt. published in B'lore Edition also.

HARISH2619
21st July 2011, 01:42 PM
திரு பம்மல் சார்,
கை கொடுத்த தெய்வம் பட விளம்பரங்கள் சூப்பர் .நடிகர்திலகம் மறைந்த செய்தியை தாங்கி வந்த நாளிதழ் பக்கங்கள் கண்ணீரை வரவைத்துவிட்டது.
கௌரவ கொண்டாட்டங்கள் என்னை உட்கார்ந்து கொண்டே ஆட்டம் போட வைத்தது,நன்றி.
புதியபறவை அளவுக்கு மலர்மாலைகள் இல்லாததில் ஒரு சிறு வருத்தம்.

HARISH2619
21st July 2011, 01:46 PM
மண்ணை விட்டு மறைந்தாலும் லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதை விட்டு மறையாத நடிகர்திலகத்திற்கு பத்தாமாண்டு நினைவஞ்சலி

abkhlabhi
21st July 2011, 02:03 PM
A tribute by Cable Murugan, Nelson, Stalin Enbaraj, Viruthunagar - THANKS

http://www.youtube.com/watch?v=5uOi9sin3MY

saradhaa_sn
21st July 2011, 02:51 PM
நடிகர்திலகத்தின் நினைவு நாளை நினைவுகூறும் வகையில் இன்று காலை மெகா டிவியின் 'அமுதகானம்' நிகழ்ச்சியில் நடிகர்திலகத்தின் திரைப்பாடல்களில், நவரசங்களையும் காட்டும் வண்ணம் ரசத்துக்கு ஒன்றாக பாடல்களைத்தொகுத்து வழங்கினார் திரு. ஆதவன்.

ஆனந்தம் - நான் தன்னந்தனிக்காட்டு ராஜா
கோபம் - நீயும் நானுமா கண்ணா
வீரம் - வெற்றிவேல் வீரவேல்
வெட்கம் - பாலக்காட்டுப் பக்கத்திலே
ஆசை - பொன்மகள் வந்தாள்
காதல் - மயக்கமென்ன்ன இந்த மௌனமென்ன
சாந்தம் - ஆறு மனமே ஆறு

இதுபோக கடந்த மூன்று தினங்களாக பொதிகையின் 'என்றும் இனிமை' நிகழ்ச்சியில் நடிகர்திலகத்தின் பாடல்களையே, விளக்கங்களுடன் தொகுத்து வழங்குகிறார் திரு வா.யோகானந்த்.

Murali Srinivas
21st July 2011, 04:38 PM
மரணமே இல்லாத மனிதன் அவன்
முடிவே இல்லாத தொடர்கதை அவன்
நாம் வாழும் காலம் மட்டுமல்ல
நம்முடைய சந்ததிகளின் தலைமுறைகளையும்
கடந்து வாழப் போகிறவன்
நூற்றாண்டுகள் இனியும் கடந்த பின்னும்
நினைவில் நிற்கப் போகும் காவியம் அவன்
தமிழ் சினிமா இருக்கும் காலம் வரை அவனின்
தாக்கம் இருந்துக் கொண்டே இருக்கும்.
நெஞ்செமெல்லாம் அவன் எண்ணங்கள் நிறைந்திருக்க
என்றென்றும் அந்த யுக கலைஞனின் நினைவோடு

நாம் வாழும் காலம் அவன் புகழை முன்னெடுத்து செல்வோம்!

அன்புடன்

KCSHEKAR
21st July 2011, 05:09 PM
எங்களின் இமயத்திற்கு கண்ணீர் அஞ்சலி

- பம்மலாரின் 2001 ஆம் ஆண்டு நடிகர்திலகத்தின் மறைவு தினப் பத்திரிக்கை பதிவுகள் உண்மையிலேயே கண்ணீரை மீண்டும் வரவழைத்துவிட்டது

சாரதா மேடம், உங்களுடைய அனுபவ பதிவு ஒரு பாக்கியம்தான்.

ராகவேந்திரன் சார் நடிகர்திலகத்தின் நினைவுநாள் பதிவுகளுக்காக நன்றி. 1000 பதிவுகளைக் கடந்ததற்கு வாழ்த்துக்கள்.

Please click the link below to view the news:

http://www.chennailivenews.com/Entertainment/Movies/20114520124530/Remembering-Sivaji-Ganesan.aspx

J.Radhakrishnan
21st July 2011, 11:02 PM
இன்று நடிகர் திலகத்தின் நினைவுநாளை முன்னிட்டு சாந்தி தியேட்டர் சென்றிருந்தேன், அங்கு ரசிகர் மன்றத்தினர் சிவன் வேடத்தில் (திருவிளையாடல்) ntஅவர்கள் தோன்றும் பெரிய படத்தினை வைத்து விளக்குகள் ஏற்றி வழிபட்டு கொண்டிருந்தனர், இது பற்றிய புகைப்படங்களை பம்மலார் பதிவேற்றுவார் என நம்புகிறேன், பலதரப்பட்ட ரசிகர்கள் திரண்டு ntஅவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர், ஒரு வித்தியாசமான ரசிகர் பராசக்தி படம் முதல் பூப்பறிக்க வருகிறேன் வரை மனப்பாடமாக ஒப்பித்துகொண்டிருந்தார், மேலும் திரு ராகவேந்தர் சார், முரளி சார், மற்றும் பம்மலார் உடன் வெகு நேரம் ntஅவர்களின் சாதனைகள் பற்றி பேசினோம்.

வாழ்க நடிகர்திலகத்தின் புகழ்.

pammalar
22nd July 2011, 03:52 AM
டியர் பார்த்தசாரதி சார்,

எங்கே 'நமது திரியின் சாரதி' என எண்ணிக் கொண்டிருந்த போது, 'யாரடி நீ மோகினி' என வந்து அதகளப்படுத்திவிட்டீர்கள்.

எப்பொழுதும் போல் தாங்கள் அளித்த உச்சமான பாராட்டுதல்களுக்கு எனது உளங்கனிந்த நன்றிகள் !

தங்களது 21,22 ஜூலை 2001 நினைவுப்பதிவு, படிக்கும் போதே கண்களில் நீரை வரவழைத்துவிட்டது.

மேலும், தாங்கள் மிக அருமையாக பதிவு செய்துள்ள 'யாரடி நீ மோகினி' பாடல் குறித்து இன்னும் சில செய்திகள்:

- இப்பாடல் காட்சி படமாக்கப்பட்டபோது அவருக்கு High Fever. அதனுடனேயே அநாயாசமாக நடனமாடி பாடி நடித்து பேர் வாங்கியிருக்கிறார் என்றால் அவரை விட்டால் வேறு யார் அவதார புருஷர். இன்னொன்று, தன்னால் படப்பிடிப்புக்கும், படக்குழுவினருக்கும் எந்தவிதத்திலும் சங்கடம் வந்துவிடக்கூடாது என்கின்ற இறைகுணம்.

- தாங்கள் குறிப்பிட்டுள்ள 15.8.1986 சென்னைத் தொலைக்காட்சி மெகா பேட்டியில் கமலுக்கு அவர் பதில் கூறுவார், "FULL CREDIT TO HIRALAL" என்று. தான் பாடி நடனமாடி நின்று நிலைநிறுத்தி பேர் வாங்கிய Stylish Performanceன் Creditஐ அந்தப் படத்தின்/பாடலின் நடன இயக்குனருக்கு அளிக்க இவரைத் தவிர வேறு எந்த ஹீரோவுக்கும் மனம் வராது. தான் செய்த தர்மத்தைத் தாரை வார்த்தான் கர்ணன். அக்கர்ணனாக திரைக்காவியத்திலும், நிஜத்திலும் வாழ்ந்து காட்டியவரோ தனக்கு வந்த புகழையே தாரை வார்க்கிறார். கர்ணனை மிஞ்சும் கர்ணன் இவர்.

- இப்பாடலில் டி.எம்.எஸ், ஜமுனாராணி, ஜிக்கி, குழுவினருடன் சிறந்த பின்னணிப் பாடகியான ஏ.பி.கோமளாவும் பாடியிருக்கிறார். "விந்தையான வேந்தனே" எனத் தொடங்கும் வரியிலிருந்து அந்தப் பெண்குரல்[ரீட்டா] முடியும் வரை அவர்தான் பாடியிருப்பார்.

- நமது வீடியோவேந்தர் எப்பொழுதும் போல் ஒளிக்காட்சியை உடனுக்குடன் பதிவிட்டு அசத்தியதோடு, கத்திரிக்கு உள்ளான வரிகளையும் பத்திரப்படுத்தி கொடுத்திருக்கிறார். இதனுடன் சேர்க்க வேண்டிய இன்னொரு அரிய தகவல் என்னவென்றால்,

"ஹா ! காதலி நீதானடி
பேசவே ஆகாதடி
ரம்பை போல நீயே ஆடுகின்ற மாதே
மேலும் மேலும் நீ ஆடடி" என்ற வரிகள் முதலில்

"ஹா ! திராக்ஷையின் தேன் சாறடி
மோக்ஷமே நீதானடி
மீறுகின்ற போதை ஏறுகின்ற போதே
மேலும் மேலும் நீ ஊற்றடி" என்றே இருந்தது.

[இந்த வரிகள் "உத்தமபுத்திரன்" ஒரிஜினல் பாட்டுப் புத்தகத்தில் உள்ளன.]

இதுவும் சென்ஸாரின் செல்லரிப்புக்கு முழுதும் இரையானதால் முந்தைய வரிகள் பாடலில் பின்னதாக இடம்பெற்றன.

சென்ஸாருக்கும் நமக்கும் சரியான ராசிதான். முதல் திரைப்படமான "பராசக்தி"யை பிரச்னைகுள்ளாக்கியபோது அது பிய்த்துக் கொண்டு ஓட ஆரம்பித்தது. "யாரடி நீ மோகினி"யை நமது சாரதி பிச்சு உதறுகிற அளவுக்கு சிரஞ்சீவித்தன்மை பெற்றுவிட்டது. "காதல் ராணி கட்டிக் கிடக்க" பாடலுக்கு கத்தரி போடலாமா என சென்ஸார் எண்ணி விடுவித்ததில் மற்ற பாடல்களைப் போல அந்தப்பாடலும் சூப்பர்ஹிட், படமும் செஞ்சுரி[1900-1999]ஹிட்.

'யாரடி நீ மோகினி' என அறைகூவல் விடுத்து இந்தப் பதிவை எழுதத் தூண்டிய தங்களுக்கு நன்றி !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
22nd July 2011, 04:06 AM
இந்த வேக வேகமான வியாபார உலகில், ஒவ்வொருவருக்கு எத்தனை எத்தனையோ வேலைகள் மென்னியைப் பிடித்துக் கொண்டிருக்கும் காலத்தில்,

டியர் பார்த்தசாரதி சார்,

உங்களது எழுத்தில் உண்மையுடன் கூடிய நகைச்சுவையும் [humour] மிளிர்கிறது.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
22nd July 2011, 04:58 AM
எனது ஆருயிர் நண்பர் திரு.வெ.சீனிவாசன், நமது நடிகர் திலகத்தின் அதிதிவீர பக்தர். நமது ஹப்பர்கள் திரு.சந்திரசேகரன், திரு.ராகவேந்திரன், திரு.முரளி ஸ்ரீனிவாஸ் ஆகியோருக்கும் நெருங்கிய நண்பர். சிறந்த விஷய ஞானமும், மிகுந்த எழுத்துத் திறமையும் கொண்டவர். தற்பொழுது, நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவையின் தென் சென்னை மாவட்டத் தலைவராக தொண்டாற்றி வருகிறார். அவரது எழுதுகோலில் உருப்பெற்ற "கலையின் தாக்கம்" என்கின்ற படைப்பை, பதிவுத் தொடராக அடுத்தடுத்த பதிவுகளில் காணலாம்.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
22nd July 2011, 05:03 AM
கலையின் தாக்கம்

[ஆக்கம் : வெ.சீனிவாசன்]

(அறிவுபூர்வமாக அல்லாமல் இதயத்தின் வழியாக உணர்வுபூர்வமாக இக்கவிதையை அணுக வேண்டுகிறேன். ஏனெனில் அதீதமான கற்பனையின் அடிப்படையில் பிறந்தது இக்கவிதை.)

நடிகர் திலகமும் ரசிகர்களும்

நடிகர் திலகமே ! திரைப்படங்களில்

- நீ மகிழ்ச்சி பொங்க சிரித்த போது எங்கள் முகங்களில் புன்னகைப் பூக்கள் பூத்தன !

- நீ கதறி அழுது கண்ணீர் வடித்த போது எங்கள் கண்களில் நீர் சுரந்தது !

- நீ தூக்கம் கலைந்து விழித்தபோது எங்கள் உறக்கமும் கலைந்தது !

- நீ காதல் வயப்பட்டபோது எங்கள் உடல்களில் இன்ப உணர்ச்சி பரவியது !

- நீ காமவயப்பட்டபோது நாங்கள் எல்லையில்லா இன்பத்தின் எல்லை கண்டோம் !

- நீ சிகரெட் பிடித்தபோது எங்கள் நாசிகளில் புகை வந்தது !

- நீ மது அருந்தியபோது எங்களுக்கு போதை தலைக்கேறியது !

- நீ ரசித்து ருசித்து சாப்பிட்டபொழுது எங்கள் பசிப்பிணி அகன்றது !

- நீ செல்வந்தனாக வலம் வந்தபோது எங்கள் நடையில் செருக்கு மிளிர்ந்தது !

- நீ சக்கரவர்த்தியாகக் கோலூச்சியபொழுது எங்கள் கைகளை செங்கோல் அலங்கரித்தது !

தொடரும்...

pammalar
22nd July 2011, 05:28 AM
தேனும் பாலும் : 41வது உதய தினம்

[22.7.1971 - 22.7.2011]

ஒரிஜினல் பாட்டுப் புத்தக முகப்பு
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4065a.jpg

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
22nd July 2011, 06:25 AM
டியர் சந்திரசேகர்,
வாழ்த்துக்களுக்கு நன்றி. நடிகர் திலகம் நினைத்தாலே கண்ணீர் வரவழைக்கும் பாசக் கடவுள்

டியர் பம்மலார்,
உத்தம புத்திரன் தகவல்களுக்கும் தேனும் பாலும் பாடல் புத்தக முகப்பிற்கும் நன்றி.

தேனும் பாலும் வெளியீட்டு விளம்பரம், சித்ராலயா வார இதழில் வெளிவந்தது. படம் வெளியான நாள் 22.07.2011.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/thenumpalumreleaseadfw.jpg

நினைவுகள் பின்னோக்கி செல்கின்றன. அதிக விளம்பரமில்லை. ஆனால் மெல்லிசை மன்னரின் பாடல்கள் படத்திற்கு எதிர்ப்பார்ப்பை உண்டு பண்ணி விட்டன. சவாலே சமாளியின் ஆர்ப்பாட்டத்தில் அமைதியாக வெளிவந்தது. ரிசர்வேஷநும் திடீரென தந்தபடியால், முதல் நாள் முதல் காட்சிக்கு பதிவு செய்ய முடியவில்லை. காலை 10.00 மணி சுமார், திடீரென நண்பனிடம் கேட்டேன், தேனும் பாலும் போவோமா என்று. ரிசர்வேஷன் இல்லையே என்றான். பரவாயில்லை, க்யூவில் முயற்சிக்கலாம், நடிகர் திலகம் நமக்கு கருணை காட்டாமலா போவார் என்று கூறிப் புறப்பட்டோம். திருவல்லிக்கேணியில் இருந்து நடந்தே சென்றோம்.. சுமார் 11.00 மணிக்கு அரங்கில் நுழைந்தால் நம்மைப் போலவே அனைவரும் வந்து குவிந்து விட்டனர். முயன்று தான் பார்ப்போமே என்று வரிசையில் நின்றோம். முதல் 40, 50 பேர்களில் நின்றதால் கொஞ்சம் நம்பிக்கை. பொய்க்க வில்லை. டிக்கெட் கிடைத்து விட்டது. ஆனந்தத்திற்கு அளவேது. படம் துவங்கியதும் எழுந்த ஆரவார ஒலியில் வசனமே காதில் விழவில்லை. இளமையான தோற்றத்தில் ஆஹா.. நடிகர் திலகம் மிகவும் ஸ்டைலாக இருப்பார். சரோஜா தேவியின் பாடல் ஒட்டுக் கேட்கும் பெண்களே துவங்கியது... பாதிப் பேர் ஸ்டாலில்... நாகேஷின் பாடல் அடுத்தவன் போட்ட தாளத்திற்கெல்லாம் ஆடாதே... பரவாயில்லை... இவற்றிற்கு நடுவே இடைவேளை.. இடைவேளையில் அனைத்து ரசிகர்களும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க, சொல்லி வைத்தாற் போல் ஒரே கமெண்ட், தலைவருக்கு டூயட் இல்லையே... இத்தனைக்கும் நடுவில் அவருடைய நடிப்பு கைதட்டல் விழாத காட்சியே கிடையாது. அமைதியாகவும் அமர்க்களமாகவும் ஒவ்வொரு காட்சியிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். நதியினில் வெள்ளம் பாடல் .... அவ்வளவு தான் அரங்கமே இரண்டானது... பாடல் முடிந்தது... படமும் முடிந்து விட்டதாக தீர்மானம் செய்து கொண்டு அரங்கை விட்டு வெளியே போனவர்கள் போக, உள்ளே மீதமிருந்தவர்களை எண்ணி விடலாம்...

மறக்க முடியாத திரைக் காவியம் தேனும் பாலும்...

அன்புடன்

RAGHAVENDRA
22nd July 2011, 06:30 AM
Nadhiyinil vellam song


http://www.youtube.com/watch?v=cqOaaeYqAkM&feature=view_all&list=PLE2F2831F0F9547EA&index=17

இந்தப் பாடலில் நடிகர் திலகத்தின் விழிகளைப் பாடல் முழுதம் கவனியுங்கள்... இதை எழுதும் போதே உள்ளம் நெகிழ்கிறது, உடல் புல்லரிக்கிறது... பிறவிக் கலைஞனய்யா நீர்... எங்களைப் பிறவி ரசிகனாக்கி விட்டீர்....

என்ன தவம் செய்தோம்.. இவரை ரசிக்க... இவரைப் பார்க்க... இவருடன் கலந்துரையாட... இவர் வாழ்ந்த காலத்தில் வாழ...

இதற்காகவே இறைவனுக்கு கோடானு கோடி நன்றிகள்...

கண்ணீருடன்

RAGHAVENDRA
22nd July 2011, 08:25 AM
அன்பு சகோதரி விஷாலி ஸ்ரீராம் அவர்கள் நேற்றைய நாளை மிகச் சிறப்பாக facebook பக்கத்தில் அனுசரித்துள்ளார்கள்.. கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட பாடல்களுக்கான youtube இணைப்புகளைத் தந்துள்ளார்கள்.
விஷாலி ஸ்ரீராம் அவர்களின் பக்கம் (http://www.facebook.com/profile.php?id=100000428395116)
இதனைப் பார்க்க படிக்க facebook அங்கத்தினராவது அவசியம்

அன்புடன்

RAGHAVENDRA
22nd July 2011, 09:06 AM
அன்பு சகோதரர் ஸ்ரீநிவாசன் அவர்களே,
- நீங்கள் கவிதை எழுதினீர்கள்
நாங்கள் கவிஞரானோமே
- நீங்கள் நடிகர் திலகத்தை நினைத்தீர்கள்
நாங்கள் உணர்வு கொண்டோம்
- நீங்கள் மேலும் எழுதுவீர்கள்
நாங்கள் தொடர்ந்து சிந்தனையாவோம்

அன்புடன்

RAGHAVENDRA
22nd July 2011, 09:14 AM
தேனும் பாலும் -

பாடல்கள்

1. அடுத்தவன் போட்ட தாளத்துக்கெல்லாம் ஆடாதே - எஸ்.சி.கிருஷ்ணன், எல்.ஆர்.ஈஸ்வரி
2. ஒட்டுக் கேட்கும் பெண்களே - எல்.ஆர். ஈஸ்வரி
3. மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள் - எஸ்.ஜானகி, ஜிக்கி
4. ஒருவனுக்கு ஒருத்தியென்று - பி.சுசீலா
5. நதியினில் வெள்ளம் - டி.எம்.சௌந்தர் ராஜன்

மேலும் சில பாடல்கள் உங்கள் பார்வைக்கு

மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள்


http://www.youtube.com/watch?v=IEFJOdG_O-k

ஒருவனுக்கு ஒருத்தியென்று


http://www.youtube.com/watch?v=JhEUXGZ1lSQ

அடுத்தவன் போட்ட தாளத்துக்கெல்லாம் ஆடாதே


http://www.youtube.com/watch?v=H6E1phXM09g

ஒட்டுக் கேட்கும் பெண்களே உளவு பார்க்கும் கண்களே
- இந்த பாடலில் மெல்லிசை மன்னரின் தாளக் கட்டைக் கவனியுங்கள், யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத வித்தியாசம், பியானோவின் ஆளுமை, எல்.ஆர்.ஈஸ்வரியின் சிறந்த குரல்...


http://www.youtube.com/watch?v=D7NunCnGnho

அன்புடன்

abkhlabhi
22nd July 2011, 10:48 AM
Don't know this video already posted in this thread

சிவாஜி கணேசனை நினைவு கூர்தல்
Remembering Sivaji Ganesan

http://video.google.com/videoplay?docid=3604633588006801092#

KCSHEKAR
22nd July 2011, 10:57 AM
நண்பர் திரு சீனிவாசன் அவர்களின் கவிதை அருமை. எளிய நடை - தேன் சுவை. திரியின் வெளியே இருப்பவர்களுடைய பங்களிப்பையும் ஊக்குவிக்கும் விதத்தில் இந்தக் கவிதையை பதிவு செய்த நண்பர் பம்மலார் அவர்களுக்கு நன்றி.

abkhlabhi
22nd July 2011, 12:23 PM
TM Release date 22nd or 27th ?

mr_karthik
22nd July 2011, 12:48 PM
தேனும் பாலும்

இன்றைய தினம் (1971) வெளியான தேனும் பாலும் படத்துக்கு இன்று வயது 40 நிறைந்தது. பம்மலார் சார், ராகவேந்தர் சார் ஆகியோரின் பதிவுகள் அன்றைய நினைவுகளைக் கிளறி விட்டுள்ளன. அப்போது மாணவப்பருவம். எனவே நினைவுகள் பசுமையாக உள்ளன.

நடிகர்திலகத்தின் 150-வது படம் சவாலே சமாளி வெளியாகி 19 நாட்களிலேயே இப்படம் வெளியானது. போதிய விளம்பரம் இல்லை. அதனால் ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்புகள் இல்லை. இருபதுக்கும் குறைவான இவ்வளவு குறுகிய நாட்களில் இப்படம் வெளியானது ரசிகர்களில் எத்தரப்பினருக்கும் பிடிக்கவில்லை. அதனால் இதன் வெளியீட்டை ரசிகர்கள் கொண்டாடும் மனநிலையில் இல்லை. இவ்வாண்டின் முதல் பாதியில் பெற்ற பாடம் போதுமானதாக இருந்தது.

தினத்தந்தியில் இன்றுமுதல் விளம்பரம் பார்த்தபிறகே பெரும்பாலோருக்கு இப்பட வெளியீடு தெரிந்தது. முதல்நாள்வரை 'அவளுக்கென்று ஓர் மனம்' ஓடிக்கொண்டிருந்த மிட்லண்ட் தியேட்டரில் திடீரென்று இப்படத்தின் பானர்கள் முளைத்திருந்தன. மிட்லண்டின் பக்கவாட்டில் ஒரேயொரு கட்-அவுட் வைக்கப்பட்டு மாலையிடப்பட்டிருந்தது. (பக்கவாட்டில் வைத்தால்தான் ஜெனரல் பேட்டர்ஸ் ரோட்டில் திரும்பும்போது பளிச்சென்று தெரியும். அதனால் எல்லாப்படங்களுக்கும் அப்படி வைப்பார்கள்). எப்படியும் இன்று முதல் நாள் மேட்னிக்காட்சி பார்த்து விடுவது என்று எங்கள் நண்பர்களுக்கிடையில் ஒரு முடிவு செய்தோம்.

அப்போது லியோ தியேட்டர் கட்டப்படவில்லையாதலால் இப்போதுள்ள இடத்தில் டிக்கட் கவுண்ட்டர் இல்லை. அது கார்பார்க்கிங் இடமாக இருந்தது. மிட்லண்ட் தியேட்டரை ஒட்டினாற்போலவே இரண்டு வரிசை கவுண்ட்டர்கள் இருக்கும். கடைசி வகுப்பு டிக்கட்டுக்கு ரோட்டுப்பக்கம் திறப்பும், அதற்கடுத்த வகுப்புக்கு காம்பவுண்ட் உள்ளே திறப்பும் இருக்கும். அந்த கூண்டுக்குள் நுழைந்துவிட்டால் எப்படியும் டிக்கட் கிடைத்து விடும் என்பது ஐதீகம். கூண்டுக்குள் மத்தியில் மாட்டிக்கொண்டோம். அப்போதே டிக்கட் கன்பர்ம். காலைக்காட்சி முடிந்து வெளியே வரும் கூட்டத்தை கம்பிக்கிராதிகள் வழியாகப் பார்க்க முடிந்தது. பெரும்பாலோர் முகத்தில் அவ்வளவு சுரத்து இல்லை. அதனால் எங்கள் மனதிலும் பெரிய எதிர்பார்ப்பும் இல்லை. வெயிலிலும் புழுக்கத்திலும் நின்று உள்ளே சென்றதும் குளுகுளுவென்று இருந்தது. (அப்போது மிட்லண்டில் ஏ.சி.அதிகமாகவே போடுவார்கள்).

எதிர்பார்ப்பில்லாமல் பார்த்ததாலோ என்னவோ படம் நன்றாக இருந்தது. ஒவ்வொரு காட்சியும் சுவாரஸ்யமாக இருந்தது. சந்தர்ப்ப வசத்தால் நடிகர்திலகமும் சரோஜாதேவியும் தவறிப்போகும் காட்சி விரசமில்லாமல் எடுக்கப்பட்டிருந்தது. சகஜநிலைக்குத் திரும்பியதும், சரோஜாதேவி கட்டிலின் பக்கவாட்டில் கலைந்த தலையுடன் ஒருக்களித்து சாய்ந்து, விரக்தியுடன் பார்க்கும் காட்சி பரிதாபத்தை ஏற்படுத்தியது. இடைவேளையின்போது பத்மினியும், சரோஜாதேவியும் தோழிகள் என்ற சஸ்பென்ஸ் ஆர்வத்தை மேலும் தூண்டியது.

மெல்லிசை மன்னர் இசையில் ஜானகியும், ஜிக்கியும் பாடிய 'மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள்' பாடல், சுசீலாவின் தனிப்பாடலை சாப்பிட்டு ஏப்பம் விட்டது. இதே ஜோடியை பாடவைத்து, மெல்லிசை மன்னரின் சீடர்கள் சங்கர் கணேஷ் அடுத்த ஆண்டில் தந்த 'தலைவாழை இலைபோட்டு' பாடலும் மக்கள் மத்தியில் எடுபட்டது. (எம்.ஜி.ஆரின் ஒரு நல்ல படம் சரியாக ஓடவில்லையே என்று சிவாஜி ரசிகர்களைக்கூட வருத்தப்பட வைத்த படம் 'நான் ஏன் பிறந்தேன்').

ராகவேந்தர் சார் சொன்னதுபோல 'நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு' பாடல் ரசிகர்களால் ஆரவாரத்துடன் ரசிக்கப்பட்டது. படம் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது மனதுக்கு நிறைவாகவே இருந்தது. இருந்தாலும் படம் பெரிய அளவில் ஓடாது என்பது அப்போதே கணிக்கப்பட்டது. ஏற்கெனவே சவாலே சமாளி, தமிழகமெங்கும் ஆரவாரத்துடன் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனிடையே இன்னும் 22 நாட்களில் (ஆகஸ்ட் 15) மூன்று தெய்வங்கள் வெளியாக இருக்கிறது. எனவே தேனும் பாலும் சுமார் ஓட்டம்தான் என்று சொல்லப்பட்டது சரியாகவே அமைந்தது.

இப்படத்தில் நடிகர்திலகத்துக்கு டூயட் பாடல் இல்லையென்பது மட்டுமல்ல. வரிசையாக நான்கு படங்களிலும் அவருக்கு ஒரு டூயட் கூடக் கிடையாது.

'சவாலே சமாளி'யில் நாயகனும் நாயகியும் எலியும் பூனையும். அப்புறம் எங்கே டூயட் பாட?. (கனவில் டூயட் பாடுவது போன்ற அபத்தங்களைச் செருகாத மல்லியத்துக்கு கோடி நன்றிகள்)

'தேனும் பாலும்' படத்தில் இரண்டு நாயகிகள் இருந்தும் டூயட் இல்லை. முழுக்க முழுக்க சீரியஸ்.

'மூன்று தெய்வங்கள்' படத்திலோ ஜோடியே கிடையாது. அப்புறம் யாருடன் டூயட் பாடுவது?.

'பாபு' படத்தில் பதினைந்து நிமிட ஜோடியாக மின்னலாக வந்துபோகும் விஜயஸ்ரீ. ரயில்வே ட்ராக்கில் சின்ன காதல் காட்சி. அதனால் அதிலும் டூயட் இல்லை.

வந்தார் சி.வி.ராஜேந்திரன்..... ராகவேந்தர் சாரும், சாரதா மேடமும் சொல்வது போல அவர் சிவாஜி ரசிகர்களின் டார்லிங். நான் முடித்து வைத்த டூயட் காட்சியை நானே தொடர்கிறேன் என்று, ஏப்ரல் 14 அன்று அவர் படத்தில் ஒலித்த 'ஒருதரம் ஒரேதரம்' என்ற கடைசி டூயட்டுக்குப்பின் ஜனவரி 26-ல் ராஜாவில் மீண்டும் தொடர்ந்தார். ஒவ்வொரு சிவாஜி ரசிகரும் சி.வி.ஆரைப்பார்த்துப் பாடினார்கள்..... 'நீ வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன்'.

ஆகா... இனிய நினைவுகளை அசைபோடுவதுதான் எவ்வளவு சுவையானது.

HARISH2619
22nd July 2011, 01:45 PM
நடிகர்திலகம் சிவாஜிகணேசனின் பத்தாவது நினைவுநாள் 21 -07 -11 அன்று பெங்களூர் பிரகாஷ் நகரில் உள்ள சிவாஜி அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்றது.
சிவகணபதி டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் சிவப்ரகாஷ் ஏழை குழந்தைகளுக்கு புத்தகப்பை வழங்கினார் .அறக்கட்டளை நிர்வாகி மா.நடராஜ் மற்றும் பிரமுகர்கள் உடன் இருந்தனர்.

கர்நாடக சிவாஜி பிரபு அறக்கட்டளை சார்பில் சிவாஜி நினைவு நாள் விழா பெங்களூர் காட்டன்பேட்டையில் நடைபெற்றது.அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிவாஜியின் படத்துக்கு மன்ற நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

சிவாஜிகணேசன் நினைவுநாள் பெங்களூர் பிரகாஷ் நகர் 2 வது மெயின் 2 வது கிராசில் தீனசேவா சங்கத்தின் மாணவர்கள் சங்க செயலாளர் சடையாண்டி தலைமையில் நடைபெற்றது.இதையொட்டி நடிகர்திலகத்தின் படம் மலரால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.காலை 10 மணி அளவில் சிவாஜி ரசிகர்கள் சார்பில் மலரஞ்சலியும் மௌன அஞ்சலியும் நடைபெற்றது.இதில் திரளான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர் .

பெங்களூர் பாஷியம்நகரில் சிவாஜி நற்பணி மன்றம் சார்பில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்ச்சியில் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பெங்களூர் ஸ்ரீராமபுரம் சன்ரைஸ் சர்க்கிளில் நடைபெற்ற நினைவுநாள் நிகழ்ச்சியில் காந்திநகர் எம்எல்ஏ தினேஷ் குண்டுராவ் கலந்து கொண்டு நடிகர்திலகத்தின் உருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார்.

gkrishna
22nd July 2011, 01:49 PM
அன்புள்ள நண்பரே அழகு கண்களே என்று நம்மவர் தெய்வ மகன் பாடும் பாடல் போல எல்லோரையும் ஒன்று சேர அன்புள்ள நண்பர்களே என்று அழைக விரும்புகிறேன் ஒரு நாள் நம்முடைய திரி பார்கவில்லை என்றல் 10 பக்கம் கூடிவிடுகிறது அதுவும் இப்போது பம்மலர் சார் மற்றும் ராகவேந்தர் சார் கார்த்திக் சார் மற்றும் நம் உறவினர்கள் ellorum அடிக்கும் கொட்டம் (ஜாலி ஆக) அருமையோ அருமையோ (எத்தனை எத்தனை தகவல்கள் ) இன்று ஒரு தகவல் தென்கச்சி கோ சுவாமிநாதன் போல் . தர்மம் எங்கே சினிமா குண்டூசி கட்டுரை மறு பதிப்பு மிக அருமை
சவாலே சமாளி தேனும் பாலும் மற்றும் மூன்று தெய்வங்கள் ஓரே நேரத்தில் ஓடி கொண்டு இருந்தது நினைவுக்கு வந்தது கார்த்திக் அவர்கள் கட்டுரை படித்த போது அப்போது நெல்லையில் மொத்தமே 6 திரை அரங்குகள் தான் புது படங்கள் போடுவார்கள்
(சென்ட்ரல் ரத்னா பார்வதி லக்ஷ்மி பாப்புலர் நியூ ராயல் )
அதில் சென்ட்ரல் தேனும் பாலும் ரத்னா மூன்று தெய்வங்கள் பார்வதி சவாலே சமாளி நம்மவர் படங்கள் லக்ஷ்மியில் ரிக்ஷாக்காரன்
வேறு நடிகர் படங்கள் எதுவேமே இருக்காது

pammalar
22nd July 2011, 02:22 PM
TM Release date 22nd or 27th ?

"தில்லானா மோகனாம்பாள்" வெளியான தேதி : 27.7.1968.

abkhlabhi
22nd July 2011, 03:18 PM
Thanks Pammalar

From Reporteronlive
http://www.youtube.com/user/reporteronlive#p/search/0/G_VSczQaEWA

pammalar
22nd July 2011, 03:30 PM
இறவா சரித்திரம்

இதயதெய்வத்தின் பத்தாவது அவதார நிறைவு நாளன்று [21.7.2011 : வியாழன்] அடியார்களின் அஞ்சலி

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4025.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4029.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4033.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4028.jpg

பக்தியுடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.

pammalar
22nd July 2011, 03:44 PM
இரண்டாவது [உத்தம தலைவரே !] மற்றும் நான்காவது [தியாக உள்ளத்துக்கு] சுவரொட்டிகளுக்கு அருகே காணப்படும் கருப்பு நிறப் பொருள் தலைக்கு அணிந்து கொள்ளக் கூடிய ஒரு தொப்பி.

pammalar
22nd July 2011, 04:02 PM
இறவா சரித்திரம்

இதயதெய்வத்தின் பத்தாவது அவதார நிறைவு நாளன்று [21.7.2011 : வியாழன்] அடியார்களின் அஞ்சலி



http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4041.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4035.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4037.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4054a.jpg

பக்தியுடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.

goldstar
22nd July 2011, 05:03 PM
Thanks Pammalar

From Reporteronlive
http://www.youtube.com/user/reporteronlive#p/search/0/G_VSczQaEWA

Thanks Abkhlabhi sir.

No other other got this much coverage , long live NT fame.

Sathish

abkhlabhi
22nd July 2011, 05:53 PM
http://www.bbc.co.uk/tamil/news/story/2011/07/110721_sivajideathanniversary.shtml?utm_medium=fac ebook&utm_source=twitterfeed

abkhlabhi
22nd July 2011, 06:19 PM
PUBLISHED IN MONSOON JOUNRAL MAY 2011 - PAGE 26

Cinema World

Beginning of a long, successful innings Sivaji Ganesan in Parasakthi

Blast from the past: Parasakthi 1952 ~ Sivaji Ganesan (debut), Pandari Bai, S. V. Sahasranamam, S. S. Rajendran. Sriranjani Jr., K. P. Kamatchi
The film that ushered in that new era was Pm kiln, released hi 1952 - written for the screen by another fast-rising star Mu. Karunanidhi, writes Randor Guy for "Blast from the Past" in The Hindu.
1952... an eventful year for Tamil cinema, the beginning of a new period.
Its genesis is interesting and deserves to be told at some length.... 'Parasakthi' was a hit play written by Pavalar Balasundaram, a Tamil scholar with a strong atheistic stance. The play attracted attention all over Tamil Nadu. Around tins time, another play, titled 'En Thangai' (My Sister), written by Tiruchi-based T. S. Natarajan, was making waves hi the theatre circuit. A tale of a brother sacrificing his love for the sake of his sightless kid sister, the play moved audiences wherever it was staged. The actor who played the loving brother was a struggling stage actor named 'Sivaji' V. C. Ganesan.
Meanwhile, back at Central Studios, Coimbatore, 'Jupiter' Somu ever a talent scout came to know about the play 'En Thangai'. Noted writer-director A. S. A. Sami saw the play and liked it. But he had too many irons hi the fire and suggested that Sundar Rao Nadkarm, then working for Jupiter, could be asked to do the film. Nadkami felt it was not his cup of tea. He loved mythology and folklore.
His charisma rules
but not modern-day melodrama. Sami also saw 'Parasakthi' at the request of his friend and film distributor P. A. Perumal of National Pictures, who had plans of producing it as a film. This play too had as its main pohit the love of a brother for his poor, widowed sister.
Sami suggested that both plays could be coalesced into one, rewritten and made into a movie. But that did not work, as the veiy idea was rejected by 'En Thangai' Natarajan (as he came to be known). He had, meanwhile, sold his play to a producer hailing from the family, which had produced Ambikapathi years ago!
Work began on En Thangai with Tiruchi Loganathan, then a popular playback artiste, playing the role of the sacrificing brother. After a few reels were canned under the direction of Telugu film director Ch. Narayanamurthy the makers felt that the hero's performance was poor. The footage was scrapped, and M. G. Ramachandian, not yet the superstar he was destined to be. replaced the singer.
P. A. Perumal launched his production by buying up the film rights of 'Parasakthi'. AV. Meivappan backed him. And Mu. Karunanidhi was signed to write the script. A great and significant moment hi Tamil cinema history was bom. To play the hero, Perumal chose Sivaji Ganesan who. after years of struggle and starvation, faced a movie camera for the first time inAVM Studio. The first word of dialogue he spoke was "Success". What a significant and prophetic word it turned out to be for that newcomer!
However, it was not smooth sailing for him. The directors, Krishnan-Panju, worked hard with the new face and after a few thousands of feet were canned, AV. Meiyappan and Iris friends viewed the rough-cut footage and were sorely disappointed. They felt The hero, that new actor Sivaji Ganesan. was no good!
AVM suggested that the hero be replaced and K. R. Ramasami be brought on board. But Perumal was not convinced. He had great faith in Sivaji Ganesan and was in no mood to heed AYM's advice. Also he couldn't ignore AVM in toto. Therefore, work stopped for quite a while and the poor hero had no option but to undergo long stretches of intense mental agony and insecurity, until Perumal decided to go ahead with him, come what may. And the camera whirred again hi the AVM Studios...
There were scenes of a temple priest trying to seduce the helpless young widow and her brother beating him up. The dialogue in this sequence was full of irony, sarcasm and biting humour, with deft touches of atheistic propaganda. These were found hi liberal doses elsewhere too. Not surprisingly, Parasakthi ran into severe problems with the censors before the certificate was issued for public exhibition. Parasakthi opened with a bang and met with instant success. Sivaji Ganesan found himself like Lord Byron, famous the next morning. The powerful writing of Karunanidhi, the atheistic stance, the performance of the unknown newcomer all this and more took the world by stomi. For a while, there were wild rumours

Sivaji Ganesan in Parasakthi - This July 21st marks 10 years since the passing away of "Nadigar Thilagam" Sivaji Ganesan.
that the picture might be banned, and that chew larger crowds to cinema houses.
Indeed the picture was the hit of the year. Sivaji Ganesan achieved star status overnight. Mu. Karunanidhi scaled greater heights. Dialogue became king hi Tamil films. Tamil cinema was never the same again. A new khid of history, which would have far-reaching consequences, was beginning to be made.
Remembered for the dialogue and the stunning performance of the new hero.

Sivaji Ganesan's 'Thmrvarut-chelvar' was released a week ago and there's more hi store for his fans, writes Malathi Rangarajan, in The Hindu newspaper of Apr 22. Friday Review section:
Frankly, when Y Gee Mahendra hisisted I join a group of diehard admirers of Sivaji Ganesan at Shanthi Theatre, Cheimai. to watch A.P. Nagarajan's 1967 classic. 'Thimvaiiitchelvar.1 I wasn't quite prepared for the adoration that the actor still commands. His every nuance on screen was greeted with joy. But, it wasn't a packed hall! "The crowd is less today because Cheimai Super Khigs are on the cricket field now," said B.V. Murali, whose Archana Films lias released 'Tliiruvamtchelvar.' All the same, it was obvious that Ganesan's staying power has shown no signs of let-up, and probably never will!
"Even today a Sivaji film draws full house on Sundays, and during the week the strength averages 200. Generally, on weekdays a new film has only around 100 viewers for a show. But Sivaji is still veiy viable." contends Murali. He is planning re-runs of 'Gauravam,' 'Engal Tlianga Raja' and 'Mannavan Vandliaanadi.1 hi the weeks to come. "It's more than mere business for me. I'm a hardcore fan of the actor," he smiles.
Murali was once secretary of the Cental Madras Sivaji Rasikar Mandram. "His fans are spread out all over the world. M.L. Khan, the present secretary of the All India Sivaji Mandram, has been helping me out with the promotion of 'Hiiruvamtchelvar,'" he says. The film will soon be screened in theatres in other areas of the city.
Though publicity for the film was minimal, on Sunday last, ardent followers of Sivaji, from Kadalur, Timvaimamalai and Puducheny travelled all the way to

Cheimai, to watch their hero on the big screen. "The house was almost frill. They had engaged mini vans to ply them to Cheimai for the purpose."
Recalls Murali: "We would often go over to Ms house to meet him. He would tell us, ' Acthig is my job. But just following actors shouldn't be yours. You have a duty towards your parents. Don't fritter away tune, it's precious. I'll be veiy happy if you all come up hi life.' Great man!"
Sekkizhar is seated in the king's court. His literary work on the Nayanmars is to be inaugurated. Beads of sweat reveal his anxiety. "Reading out the manuscript to such an august gathering makes me tense," he confesses self-consciously. Sivaji in the role (among several others in the film) bowled over the audience with his underplayed portrayal in the sequence. "This is how you portray fear, this is what you call acthig," cheered Mahendra. The audience's applause seconded it.
"And note director A.P. Nagarajan's service to Tamil with

a spate of films. Sad that the doyen went unsung," he adds.
You are bound to find V. Raghavendar at all venues where events for Ganesan are organised. "My devotion to Sivaji is as deep as YGM's," he laughs.Sivaji is as deep as YGM's," he laughs.

This former employee of the University of Madras created a website for his favourite actor in 2007 — nadigarthilakam.com offers authentic info and updates about Ganesan's repertoire. "It attracts 20 to 30 hits a day, and 23,000 fans have visited the site so far.
"I had no knowledge of computers but when I saw sites carrying incorrect details about Sivaji, I decided to redress matters. Sheer love for him goaded me on to become a computer literate and set up a site, without a tutor to guide me," he says. Raghavendar designed the banner for 'Thiruvarutchelvar' that was placed at Shanthi tins week.Not a day passes without a Ganesan film being telecast on one or the other of the satellite channels. With such a fare available at the click of a button, can theatre releases woo people? "A year ago, Ins 'Pudhiya Paravai' was released and went on to do brisk business. Watching Sivaji tuts on the big screen is a worthy experience. The response makes it clear that many feel so," says Murali. Has he watched all of Sivaji's films? "He's worked in 298 films totally. 'Pooparikka Vamgirom1 was the last. Most of us have watched nearly all of them, but we are still hunting for the five we missed out — 'Thembudu Kodukku' hi Telugu and 'Mudlial Thaedlii,' 'Thuli Visham,' 'Kangal' and Manidhanum Mimgamum' in Tamil. Among these 'Mudhal Thaedlii' with Anjali Devi had him playing a middle-aged father even at the beginning of his career," Murali goes on.
July 21 will signify the 10 years of void that the remarkable actor's death has created. Murali plans to bring 'Gauravam' back to the theatres then. "His fans will lap it up," he says.
They do it eveiy tune, don't they?

pammalar
22nd July 2011, 06:51 PM
இறவா சரித்திரம்

இதயதெய்வத்தின் பத்தாவது அவதார நிறைவு நாளன்று [21.7.2011 : வியாழன்] அடியார்களின் அஞ்சலி
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4056a.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4042-1.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4055.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4026.jpg

பக்தியுடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.

pammalar
22nd July 2011, 09:20 PM
இறவா சரித்திரம்

இதயதெய்வத்தின் பத்தாவது அவதார நிறைவு நாளன்று [21.7.2011 : வியாழன்] அடியார்களின் அஞ்சலி
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4061a.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4027.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4051a.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4060.jpg

பக்தியுடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.

pammalar
22nd July 2011, 09:24 PM
இறவா சரித்திரம்

இதயதெய்வத்தின் பத்தாவது அவதார நிறைவு நாளன்று [21.7.2011 : வியாழன்] அடியார்களின் அஞ்சலி

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4046.jpg

பக்தியுடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.

J.Radhakrishnan
22nd July 2011, 11:37 PM
pammalar sir,

Thanks for photos

RAGHAVENDRA
23rd July 2011, 06:10 AM
மற்றோர் வலைத் தளத்தில் திரு நாகை கண்ணன் என்ற நண்பர் நடிகர் திலகத்தின் நினைவைப்போற்றி எழுதிய கவிதை



நடிகர்திலகதிற்கு இன்று நினைவு நாள்!

நடிகர் திலகத்தின் நினைவில்லாத நாள் என்று!

அவர் படம் பற்றி பேசாத நாளுண்டா!
அவர் பாடலைப் பாடாத நாளுண்டா!
அவர் நடிப்பைப் பற்றி பேசாத நாளுண்டா!
அவர் மறக்க முடியாதவர்!

இந்நாளில், அவர் குறித்து என் கவிதை (?) :-

முதல் படத்தில்
"கா கா" எனப் பாடியவருக்கு -
அரசியலில் இறுதிவரை
அதைப் பிடிக்கதெரியவில்லை!

அதனால்தான் நீ -
தனிக் கட்சி தொடங்க உந்தபட்டாய்!
அதனால் நீ
மிகவும் நொந்து பட்டாய்!

எத்தனைக் கடவுள்களை
எம் கண் முன் கொண்டுவந்தாய்!
அப்போதெல்லாம் எமக்கு
தெரியவில்லை, நீ
நடிப்பிற்கு கடவுளென்று!
தெரிந்ததால்தான் உன்னை
தம்மிடம் அழைத்துக் கொண்டனரோ
அந்தக் கடவுளெல்லாம்!

நம்முள் இருப்பதுதான்
கடவுள் என்பர்!
நம் உள் கட(கட+ உள் )
என்பதே கடவுளானது!
அப்படிப் பார்த்தாலும்
நீ எமக்கெல்லாம்
கடவுள்தான்!
நீ எம்முள்
இருப்பவன்தானே!

மற்ற கடவுளெல்லாம்
அவராகதாம் எமக்கு
தெரிவர்!
ஆனால் நீ!
எல்லாக் கடவுளுமாய்
எமக்குத் தெரிகிராயே!

நடிப்பே, நீ
எம் உள் கட!



நடிப்பு பயில கல்லூரிகளைத்
தேடும் இளைஞர்களே!
ஏன் இப்படி இல்லாத இடம்
தேடி தேடி அலைகிறீர்கள்?

நவராத்திரியைப் பாருங்கள்
வசந்த மாளிகையை பாருங்கள்
அவன் தான் மனிதனைப் பாருங்கள் -
அதுதான் நடிபென்று அறிவீர்கள்!

பட்டுப் பெறுகின்றதை
பட்டப் படிப்பு
எப்போதும் தாராதையா!
கல்லூரிப் படிப்பில் நடிப்பு வாராதையா !

உன்னை மறந்தவர்களுக்கு
இன்று உனது நினைவுநாள்!

இது நினைக்க மட்டும்
தெரிந்த மனம்!
மறக்கத் தெரியாது!
உம்மை எம்மிடமிருந்து
பிரிக்கவும் முடியாது!

உன் உருவம் தான்
எம்மிடையே இன்றில்லை!
உன் படங்கள் எம்மிடையே
இன்றும் உலவிதான் வருகிறது!
உன் நடிப்பிற்கு
எப்படி அழிவில்லையோ,
"சிவாஜி கணேசன்" என்ற
பெயருக்கும் என்றும்
அழிவில்லை!

நண்பர்களே, ஏதோ எனக்குத்
தெரிந்ததை கிறுக்கி இமயத்திற்கு
சமர்பிக்கின்றேன்!
பெரியோர்கள் ஏற்று அருளவேண்டும்!
எல்லோரும் இன்புற்றிருபதுவேயன்றி யாமொன்றும் அறியேன் பராபரமே!

நாகை வே. கண்ணன்


அவ்வலைத்தளத்திற்கு என் உளமார்ந்த நன்றி

RAGHAVENDRA
23rd July 2011, 06:16 AM
அதே போல அதே வலைத்தளத்தில் டாக்டர் சாந்தாராம் அவர்கள் பாட்டும் பதமும் என்கிற தலைப்பில் நடிகர் திலகத்தின் பாடல்களைத் தொகுத்து வழங்கியுள்ளது மிகவும் அருமையாக உள்ளது.



பாட்டும் பதமும் - புதிய வடிவில் !

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களிம் நினைவு நாளில் ( 21 / 07 / 09 )அவரைப் போற்றும்

வகையில் அவரது படங்களில் வந்த பாடகளைக்கொண்டு !


முழுக்க முழுக்க சிவாஜி கணேசன் பாடல்களில் !


நான் எடுத்த்க்கொண்ட வாக்கியம் :

" செந்தமிழ் வெள்ளி திரை உலகின் ஈடற்ற ஒளி விளக்கே ,

திலகமே,

நீயே எங்கள் உள்ளத்தில் என்றும் வாழ வேண்டும் ! "




மேற்கண்ட நீண்ட வாக்கியத்திற்கு ஒவ்வொரு சொல்லுக்கும் நான் கொடுக்கும் நடிகர் திலகத்தின் பாடல்கள் :


பாடல் : " செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று தேரினில் வந்தது கண்ணே ! "

படம் : " வைர நெஞ்சம் " ( 1975 ) )

பாடியவர்கள் : டி எம் எஸ் - பி.சுசீலா

இசை : மெல்லிசை மன்னர்[/b]

http://www.mediafire.com/?jdzeuwyzijd



வெள்ளி:


பாடல் : "வெள்ளி மணி ஓசையிலே உள்ளமென்னும் கோயிலிலே "

படம் : " இரு மலர்கள் " ( 1967) )

பாடியவர் : ப்.சுசில்லா

இசை : மெல்லிசை மன்னர்

http://www.mediafire.com/?mq35omymkyw



திரை :


பாட்டு : திரை போட்டு நாமே மறைத்தாலும் காதலே தெரியாமல் போகுமா "

படம் : " ராஜா ராணி " ( 1956 )

பாடியவர்கள் : ஏ.எம்.ராஜா - ஜிக்கி

இசை : டி. ஆர். பாப்பா

http://www.mediafire.com/?yiryjkxicgy



உலகின் :

பாடல் : " உலகின் முதல் இசை தமிழிசையே"

படம் : " தவப் புதல்வன் " ( 1972 )

பாடியவர்கள் : டி எம் எஸ் - பி.பி. எஸ்

இசை : மெல்லிசை மன்னர்

http://www.mediafire.com/?umjieu5jql4


ஈடற்ற :

பாடல் : " ஈடற்ற பத்தினியின் இன்பத்தை கொன்றவன் நான்"

( " ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே " )

தொகயறாவிலுருந்தும் சொல்லை எடுக்கலாம் !

படம் : " தங்கப் பதுமை "( 1959 )

பாடியவர் : சி.எஸ்.ஜயராமந் ( பத்மினியில் குரலோடு )

இசை : மெல்லிசை மன்னர்கள்

http://www.mediafire.com/?5khmurimqyh


ஒளி :

பாடல் : " ஒளி மயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது "

படம் : " பச்சை விளக்கு " ( 1964 )

பாடியவர் : டி எம் எஸ்

இசை : மெல்லிசை மன்னர்கள்

http://www.mediafire.com/?avznjwk2m1q


விளக்கே :

பாடல் : " விளக்கே நீ தந்த ஒளியாலே "

படம் : " நிறை குடம் " ( 1969 )

பாடியவர் : டி எம் எஸ்

இசை : வி.குமார்

http://www.mediafire.com/?eztmmeyzvym


திலகமே ! :

பாடல் ள் : " திலகமே, உலகின் திலகமே தமிழ் நாட்டு கலை உலகின் திலகமே "

படம் : " வடிவுக்கு வளை காப்பு " ( 1962 )

பாடியவர் : டி எம் எஸ்

இசை : கே.வி. மகாதேவன்

( இந்த பாடலை வழங்கிய திரு. மாமன் அவர்களுக்கு நன்றி ! )

http://www.mediafire.com/?ykdu2atmmyz


நீயே

பாடல் : " நீயே உனக்கு என்றும் நிகரானவன்"

படம் : " பலே பாண்டியா " ( 1962 )

பாடியவர் : டி எம் எஸ் & மற்றொருவர்

இசை : மெல்லிசை மன்னர்கள்

http://www.mediafire.com/?ljjzdmnwyzw


எங்கள் :

பாடல் : " எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம் "

படம் : " கலாட்டா கல்யாணம் " ( 1968 )

http://www.mediafire.com/?3wtfrzdzmjo


உள்ளத்தில் :

பாடல் : " உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்தடா "

படம் : " கர்ணன் " ( 1964 )

பாடியவர் : சீர்காழி

இசை : மெல்லிசை மன்னர்கள்

http://www.mediafire.com/?dq2jtzgzgry


என்றும்

பாடல் : " என்றும் புதிதாக இளமை குறையாத"

( " உலகத்திலே உருவம் என உயர்ந்து நிற்கும் திலகமே ! "

படம் : " வியட்னாம் வீடு "( 1970 )

பாடியவர்கள் : சுசீலா, ஏ.எல் .ராகவன், சூலமங்கல்

இசை : கே.வி. மகாதேவன்

http://www.mediafire.com/?jut41wgjylm



வாழ:

பாடல் : " வாழ நினைத்தால் வாழலாம் "

படம் : " பலே பாண்டியா " ( 1963 )

பாடியவர்கள் : டி எம் எஸ் - பி.சுசீலா

இசை : மெல்லிசை மன்னர்கள்

( ஒரே நிகழ்ச்சியில் ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களுக்கு ஒரே படத்திலிருந்து பாடல்களைக் கொடுக்கக்

கூடது ! இந்த விதியை நான் சற்று தளர்த்தியுள்ளேன் ! )

http://www.mediafire.com/?nlytwfhhthj



வேண்டும் :

பாடல் : " வேண்டும் வேண்டும் உங்கள் உறவு"

படம் : " வசந்ததில் ஒரு நாள் " ( 1982 )

பாடியவர்கள் : டி எம் எஸ் - வாணி ஜெயராம்

இசை : மெல்லிசை மன்னர்.

http://www.mediafire.com/?newmymywodm


என்ன நண்பர்களே !

நிகழ்ச்சி நண்ராக இருந்ததா ?

1. எல்லாப் பாடல்களும் தரமான ஒலிப்பதிவில் அமைந்துள்ளது.


2. எல்லாப் பாடல்களும் மகிழ்ச்சியான, மங்களகர மான பாடல்கள்.

( ஒரே ஒரு பாடலைத்தவிர . )

3. பெரும்பான்மையான பாடல்கள் சிவாஜியின் புகழைப் பறை சாற்றும் விதமாக அமைந்துள்ளன.

4. ஒரு சில பாடல்களில் நடிகர் திலகத்தில் குரலோடு இணைந்திருக்கும்.


உங்கள் கருத்துக்களை எழுதுங்கள் !


மீண்டும் சந்திப்போம் !

எம்கேஆர்சாந்தாராம்


எனது இந்த இரு பதிவுகளிலும் இடம் பெற்ற தகவல்களுக்கு சுக்ரவதனி இணைய வலைத் தளத்திற்கு உளமார்ந்த நன்றிகள்.

அப்பதிவுகளுக்கான இணைப்புகள்
http://www.sukravathanee.org/forum1/viewtopic.php?f=168&t=16552

http://www.sukravathanee.org/forum1/viewtopic.php?f=168&t=10856&start=45

அன்புடன்

kumareshanprabhu
23rd July 2011, 11:45 AM
thanks for ur update on Bangalore Function But u forget Sivan Chetty garden function

HARISH2619
23rd July 2011, 01:06 PM
DEAR KUMARESAN SIR,
Thanks.I didn't find cantonment area functions in the newspaper.maybe, they would have planned the function for sunday .Sir,are there any plans for releasing NT films in bangalore?

pammal sir,
Thanks for uploading the posters of NT death anniversary.

mr_karthik
23rd July 2011, 01:38 PM
பம்மலார் சார்,

நடிகர்திலகத்தின் நினைவுநாளையொட்டி பல்வேறு மன்றங்களின் சார்பில் அமைக்கப்பட்ட சுவரொட்டிகளையும் பேனர்களையும் சிரமம் பாராது தொகுத்து இங்கே பதிப்பித்து, நமது திரியின் சார்பிலும் நினைவஞ்சலியை நிறைவேற்றியிருக்கிறீர்கள் மிக்க நன்றி.

சந்திரசேகர் சார்,

நடிகர்திலகத்தின் நினைவுநாளையொட்டி அன்னதானம் நிகழ்ச்சிகளை சிறப்பாக ஏற்பாடு செய்தமைக்கு மிக்க நன்றி.

மற்றும் பல்வேறு இடங்களிலும் பல்வேறு விதங்களிலும் அவரது நினைவஞ்சலியை சுவரொட்டிகள், பேனர்கள் வாயிலாகவும், அன்னதானம் மற்றும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வாயிலாகவும், மற்றும் தங்கள் தனிப்பட்ட வலைப்பூக்களில் அவரைப்பற்றிய நினைவஞ்சலி கட்டுரைகள், கவிதைகள் வாயிலாகவும், சில தொலைக்காட்சி சேனல்கள் தங்கள் நிகழ்ச்சிகள் வாயிலாகவும் நடிகர்திலகத்தின் நினைவுநாளை மனமுருகி நினைவு கூர்ந்தமைக்கு மேலும் மேலும் நன்றிகள்.

RAGHAVENDRA
23rd July 2011, 06:27 PM
செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்பார்கள்... அதை மெய்ப்பிக்கும் வகையில் இறந்து 10 ஆண்டுகள் கழிந்த பின்னும் அரங்குகளில் நிரம்பி வழியும் கூட்டங்களே நடிகர் திலகத்தின் ஆளுமைக்கு ஒரு பக்கம் கட்டியம் கூறி வருகின்ற வேளையில், அரங்கிற்கு வர இயலாமல் இல்லத்திலேயே மீண்டும் மீண்டும் நினைவு கூறும் வாய்ப்பினை ஏற்படுத்திக்கொண்டு அவர் நினைவிலேயே வாழும் ரசிகர்கள் மற்றும் பொது மக்கள், மற்றொரு பக்கம் நடிகர் திலகத்தின் ஒளிப்பேழைகள், குறுந்தகடுகள், நெடுந்தகடுகளுக்கு மிகப் பெரும் வரவேற்பைக் கொடுத்து அதிலும் அவரே நம்பர் 1 என்று நிரூபித்துக் கொண்டுள்ளனர். எத்தனை நிறுவனங்கள் நடிகர் திலகத்தின் பட விற்பனையை மூடி மறைத்தாலும் அவர்களுடைய மனசாட்சி நிச்சயம் அவர்களை உறுத்தும். அதே சமயம் நடிகர் திலகத்தின் எந்தப் படமானாலும் - அது வெற்றியடைந்ததானாலும் சரி, தோல்வியடைந்ததானாலும் சரி, தயங்காமல் ஒளி வடிவில் காட்சிக்கு வெளியிடும் நிறுவனங்களுக்கு நமது உளமார்ந்த பாராட்டுக்களும் நன்றிகளும் உரித்தாகும். அவ்வகையில் புதிய சாதனையாக, ஒரே சமயத்தில் ஒரே நடிகரின் ஐந்து படங்களை ஒளித்தகடாக வெளியிட்டிருப்பதன் மூலம் இந்த வகையிலும் அசைக்க முடியாத சாதனையாளராக நடிகர் திலகத்தின் புகழ் ஓங்குவதை எண்ணும் போது பெருமையாக மட்டுமல்ல, அவர் படத்திற்கு பெருத்த ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றியும் கூற வேண்டியது நமது கடமையாகிறது. இதோ ஒரே நிறுவனம் வெளியிட்டுள்ள ஐந்து படங்கள் -

இல்லற ஜோதி
பாரம்பரியம்
நெஞ்சங்கள்
திருப்பம்
மிகுந்த ஆவலை எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் விஸ்வரூபம்

இவற்றை வெளியிட்ட நிறுவனத்திற்கு நமது உளமார்ந்த நன்றிகள்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/DVD%20VCD%20covers/IJFR.jpg

தொடரும்

RAGHAVENDRA
23rd July 2011, 06:29 PM
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/DVD%20VCD%20covers/PaarambaryamFR.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/DVD%20VCD%20covers/NenjangalFR.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/DVD%20VCD%20covers/ThiruppamFR.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/DVD%20VCD%20covers/ViswarupamFR.jpg

அன்புடன்

RAGHAVENDRA
23rd July 2011, 06:48 PM
flash news

இப்பதிவுகளை நான் இடும் நேரத்தில், இத்தகடுகளை அடியேன் வாங்கிய விற்பனைக் கூடமான avm sound zone நிறுவனத்திலிருந்து முரளி சார் அழைத்துக் கூறியது - இன்று மதியம் வந்த ஒளித்தகடுகள் எந்த வித தகவலும் இன்னும் பரிமாற்றப்படாத குறுகிய காலகட்டத்தில் மேற்கூறிய அனைத்துப் படங்களும் விறுவிறுப்பான விற்பனையை கண்டு கொண்டுள்ளன, குறிப்பாக விஸ்வரூபம் படத்தின் அனைத்துப் பிரதிகளும் விற்று விட்டன, மேலும் பிரதிகள் இரவுக்குள் எதிர்பார்க்கப் படுகின்றன என்ற தகவல்களைக் கூறியுள்ளார்.

"only nadigar thilagam can do this.."

அன்புடன்

pammalar
24th July 2011, 01:03 AM
இதயராஜா சிவாஜி பித்தர்கள் செலுத்திய அஞ்சலி

இதயதெய்வத்தின் பத்தாவது அவதார நிறைவு நாளை முன்னிட்டு, இதயராஜா சிவாஜி பித்தர்கள் சார்பில், சென்னை சாந்தி திரையரங்கில், 21.7.2011 வியாழனன்று மாலை 5:30 மணியளவில், சிவாஜி பெருமானுக்கு சிறப்பு பூஜை, அலங்காரம், நைவேத்யம், மஹாதீபாராதனை மிக விமரிசையாக நடந்தேறியது. நைவேத்யம் செய்யப்பட்ட பிரசாதமாக அங்கு வந்தவர்கள் அனைவருக்கும் சாம்பார் சாதம் வழங்கப்பட்டது. திரைப்பட விநியோகஸ்தர்கள் 'திவ்யா பிலிம்ஸ்' திரு.சொக்கலிங்கம், 'அர்ச்சனா பிலிம்ஸ்' திரு.முரளி ஆகியோர் பொன்னாடை போர்த்தப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள். பெருந்திரளான ரசிகர்களும், பொது மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சி அழைப்பிதழ்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4108a.jpg


பெருமானுக்கு ஆராதனை
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4038-1.jpg

பக்தியுடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.

pammalar
24th July 2011, 05:07 AM
அண்ணலின் "அன்பு"க்கு 59வது ஜெயந்தி

[24.7.1953 - 24.7.2011]

[ஜுலை 24 வெள்ளியன்று சென்னை தவிர தென்னகமெங்கும் வெளியான இக்காவியம் சென்னையில் மட்டும் ஆகஸ்ட் 7 வெள்ளியன்று வெளியானது]

அன்பான பொக்கிஷங்கள்

பட விளம்பரம் : சுதேசமித்ரன் : 18.7.1953
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4118a.jpg


முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 24.7.1953
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4112aa.jpg


முதல் வெளியீட்டு விளம்பரம் [சென்னை மட்டும்] : சுதேசமித்ரன் : 7.8.1953
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4114a.jpg


ஆறாவது வாரம் : சுதேசமித்ரன் : 28.8.1953
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4115a.jpg

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
24th July 2011, 06:09 AM
அன்பாலே அண்ணனை ஆராதித்த நிகழ்வுகளை அன்போடு நம்மிடம் பகிர்ந்து கொண்ட பம்மலாருக்கு அன்பு கொண்ட நெஞ்சோடு நன்றியைக் கூறுவோம்.அன்புக்கு உண்டோ அடைக்கும் தாழ் என்பதற்கேற்ப 58 ஆண்டுகள் நிறைவுற்ற போதிலும் மாறாத அன்புடன் வரவேற்பைக் காணும் அன்பு திரைக்காவியத்தின் நினைவுகளை விளம்பர நிழற் படங்களில் தந்தமைக்கு நன்றிகள்...

கலக்கல் பம்மலாரே...

தங்களுடைய பதிவுகளை எண்ண எண்ண இன்பமே வாழ்விலே என்னாளும்...


http://www.dailymotion.com/video/xcyp36_enna-enna-inbame_creation

இசை டி.ஆர்.பாப்பா, குரல் ஏ.எம்.ராஜா, ஜிக்கி

mr_karthik
24th July 2011, 10:55 AM
பம்மலார் சார்,

'அன்பு' பட வெளியீட்டு நினைவையொட்டி நீங்கள் தந்துள்ள விளம்பர அணிவகுப்பு எப்போதும்போல அட்டகாசம். உங்கள் விளம்பர வரிசையைப்பார்க்கும்போதுதான் 'ஓ.. இன்றைக்கு இப்படம் ர்லீஸான தினம் அல்லவா?' என்ற எண்ணம் வருகிறது.

தங்கள் சிரத்தையும் சிரமங்களும் மலைக்க வைக்கின்றன. எல்லோரையும் மகிழ்ச்சிப்படுத்த நீங்கள் எடுத்துக்கொள்ளும் பெருமுயற்சிகளுக்குப் பாராட்டுக்கள்.

இன்னும் எவ்வளவு படங்களின் அணிவகுப்பு வரவிருக்கிறது என்று அன்போடு காத்திருக்கிறோம்.

நன்றியுடன்
கார்த்திக்.

sankara1970
24th July 2011, 03:25 PM
Hearty congrats for part 7

pammalar
24th July 2011, 08:39 PM
புத்தம்புது நூறு ரூபாய் நோட்டை வாங்கி உன் கையெழுத்திட்டு தந்தாய். இன்றைக்கும் என்வீட்டு வரவேற்பறையில் எவர்சில்வர் பிரேமிட்ட கண்ணாடிபேழையில் நீ கையொப்பமிட்ட 'அந்த கோடி ரூபாய்' ஜொலிக்கிறது.


சகோதரி சாரதா,

நடிகர் திலகத்தின் நினைவு நாள் குறித்த தங்களது பதிவு உருக்கத்துடன் கூடிய உணர்வுபூர்வமான பதிவு.

கோடிகளைக் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்க முடியாத நமது கோடீஸ்வரன் வழங்கிய அந்தக் கோடானுகோடி மதிப்புள்ள அன்புப்பரிசை நிழற்படமாக இங்கே நமது திரியில் எல்லோரும் கண்டு களித்து உணர்ச்சிப் பெருக்கில் நீந்தும் வண்ணம் பதிவிட வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
24th July 2011, 09:16 PM
டியர் ராகவேந்திரன் சார்,

விரைவில் "கர்ணன்" 'திவ்ய'மாகக் கலக்க வருகிறார். 21.7.2011 'தினத்தந்தி'யில் வெளியான இந்த விளம்பரத்தைப் பதிவிட்டமைக்கு நன்றி !

டியர் பாலா சார், தாங்கள் அளித்து வரும் லிங்க்குகள் அனைத்துமே கற்கண்டுகளாய் இனிக்கின்றன !

டியர் ஜோ சார்,

தாங்கள் பதிவிட்டுள்ள "வீரபாண்டிய கட்டபொம்மு" ஓவியத்தைப் பார்க்கும் அனைவருமே புகைப்படம் என்றுதான் கூறுவார்கள். அந்த அளவுக்கு அவ்வோவியம் தத்ரூபமாய்க் காட்சியளிக்கிறது. வரைந்த அன்பருக்கும், வழங்கிய உங்களுக்கும் வளமான நன்றிகள் !

டியர் செந்தில் சார்,

சரமாரியான பாராட்டுதல்களுக்கு சிரம் தாழ்த்திய நன்றிகள் !

டியர் சந்திரசேகரன் சார், மிக்க நன்றி !

டியர் ஜேயார் சார், நன்றி !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
25th July 2011, 04:17 AM
டியர் ராகவேந்திரன் சார்,

தங்களின் பாராட்டுக்களுக்கு எனது பணிவான நன்றிகள் !

'சித்ராலயா' வார இதழிலிருந்து தாங்கள் வழங்கிய சென்னை அரங்குகளுடன் கூடிய "தேனும் பாலும்" இன்று [22.7.1971] முதல் விளம்பரம், பசும்"பால்" என்றால் பாடல்கள் அனைத்தும் கொம்புத்"தேன்". தங்களது நினைவலைகள் எங்களுக்கு போனஸ்.

கவிஞர் நாகை கண்ணனின் படைப்பு அருமை; டாக்டர் சாந்தாராமின் 'பாட்டும் பதமும்' அற்புதம்; இவற்றை தாங்கள் இங்கே பதிவிட்டது அபாரம் !

இல்லற ஜோதி, விஸ்வரூபம், நெஞ்சங்கள், திருப்பம், பாரம்பர்யம் எனும் பஞ்சரத்னங்களை நெடுந்தகடுகளாக [DVDs] நல்லிதயங்களும், பொதுமக்களும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில, அவை வெளிவந்துவிட்ட வெல்லப்பாகு செய்தியை உடனுக்குடன் தந்தமைக்கு உளங்கனிந்த நன்றிகள் !

கவி கா.மு.ஷெரிஃப் அவர்களின் அற்புத வரிகளைக் கொண்ட அண்ணலின் "அன்பு" பட டூயட் பாடலான 'எண்ண எண்ண இன்பமே' பாடலின் ஒளிக்காட்சியை அளித்தது பிரமாதம் !

டியர் mr_karthik,

தாங்கள் வழங்கிவரும் தொடர் பாராட்டுக்களுக்கு எனது பசுமையான நன்றிகள் !

"தேனும் பாலும்" ஆரம்ப தினத்தன்று [22.7.1971] சென்னை மிட்லண்டில் ஏற்பட்ட அனுபவங்களை தங்கள் பதிவில், ஒரு ஒளிப்பேழையைக் [வீடியோ] காண்பது போல் வழங்கியுள்ளீர்கள். நன்றி கலந்த பாராட்டுக்கள் !

டியர் செந்தில் சார்,

நமது இதயதெய்வத்தின் பத்தாவது அவதார நிறைவு நாளன்று [21.7.2011], பெங்களூரூவில் நடைபெற்ற நிகழ்ச்சிகளின் விவரங்களை செவ்வனே தொகுத்தளித்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் !

டியர் கிருஷ்ணாஜி, பாராட்டுக்கும் பதிவுக்கும் நன்றி !

டியர் ஜேயார் சார் & கோல்ட்ஸ்டார் சதீஷ், மிக்க நன்றி !

Dear sankara1970, Thanks & Welcome back.

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
25th July 2011, 07:54 AM
Vintage Heritage அமைப்பின் சார்பில் 1950களில் தமிழ்த்திரையுலகம் மற்றும் தென்னிந்திய திரைப்படங்களைப் பற்றிய ஆய்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. கடந்த ஜூன் திங்கள் தன்னுடைய 19வது ஆண்டினைக் கொண்டாடும் விதமாக, நடிகர் திலகமும் நாட்டியப் பேரொளியும் என்கிற நிகழ்ச்சியினை நடத்தியது. இம்மாதம், அதாவது ஜூலை 2011 நிகழ்ச்சியாக, நடிகர் திலகத்தின் உன்னதத் திரைக்காவியமான இல்லற ஜோதி

http://3.bp.blogspot.com/-g0aHDlTyMkw/TizQaccXd-I/AAAAAAAAAek/cplIXgT773o/s400/illarajothi01.jpg

திரையிடப் படுகிறது. விவரங்கள் கீழே தரப்படுகின்றன. அனுமதிச் சீட்டு வேண்டுவோர், திரு ராகப்பிரவாகம் சுந்தர் அவர்களை அணுகலாம். அவருடைய கைப்பேசி எண்ணும் கீழே தரப்பட்டுள்ளது.

இடம் - விவேகாநந்தர் ஹால், பி.எஸ்.மேல்நிலைப் பள்ளி வளாகம், ராமகிருஷ்ணா மடம் சாலை, மயிலாப்பூர், சென்னை - 4.
நாள் - 31.07.2011 ஞாயிறு. நேரம் - மாலை 6.30 மணி
அனுமதிச் சீட்டு மற்றும் மேல் விவரங்களுக்கு அணுகவும்
ராகப்பிரவாகம் திரு சுந்தர். கைப்பேசி எண்9444047714

RAGHAVENDRA
25th July 2011, 08:26 AM
இல்லற ஜோதி திரைக்காவியத்தின் சிறப்பு

http://www.behindwoods.com/features/moviearticles/articles1/kannadasan/images/kannadasan3.jpg

படத்திற்கு கதை வசனம் கவியரசர் கண்ணதாசன்,

http://kalaivanar.com/images/nsk-karunanidhi.gif

இதில் இடம் பெறும் சலீம்-அனார் காதல் காட்சியின் உரையாடல் கலைஞர் கருணாநிதி அவர்கள்.

http://www.jointscene.com/php/image.php/picmain.jpg?width=350&height=350&image=/ahtees/admin/customer/content/5930_17_G%20Ramanathan.jpg

இசை ஜி.ராமநாதன்

படம் வெளியான நாள் - ஏப்ரல் 9, 1954

தயாரிப்பு - மாடர்ன் தியேட்டர்ஸ்

இயக்கம் - ஜி.ஆர்.ராவ்

நடிக நடிகையர்

சிவாஜி கணேசன், பத்மினி, எஸ்.ஏ.அசோகன், தங்கவேலு, ஸ்ரீரஞ்சனி மற்றும் பலர்

இடம் பெற்றுள்ள பாடல்கள்

1. கல்யாண வைபோகமே

2. பார் பார்


http://www.dailymotion.com/video/xf603r_kalangmilla-kathalile-illara-jothi_shortfilms

3. களங்கமில்லா காதலிலே - இப்பாடல் காரில் துவங்கி, திடீரென மேடையில் தொடரும் வண்ணம் சில ஒளித்தகடுகளில் உள்ளது. ஆனால் முன்னர் திரையரங்குகளில் இப்படத்தைப் பார்த்த போது தனித்தனியே இருமுறை இடம் பெற்ற நினைவு. பாடியவர்கள் ஏ.எம்.ராஜா, ஜிக்கி. மேலே தரப்பட்டுள்ள ஒளிக்காட்சியில் நாடகத்தில் இடம் பெறுவதாக அமைந்துள்ள பாடல் உள்ளது.

4. காதலே

5. சிறு விழி

6. கேட்பதெல்லாம் காதல் கீதங்களே - பி.லீலா பாடிய இப்பாடல் அவருடைய மிகவும் பிடித்த பாடல்களின் வரிசையில் இடம் பெற்றதாகும். இப்பாடலின் சிறப்பு, நடிகர் திலகம் இப்பாடலில் இரு இசைக் கருவிகளை வாசிப்பதாக வரும் காட்சி. பின்னாளில் திருவிளையாடல் படத்தில் ஐந்து இசைக் கருவிகளுடன் தோன்றும் காட்சிக்கு இன்ஸ்பிரேஷனாக அமைந்தது இப்பாடல். இப்பாடல் காட்சிக்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.

7. உனக்கும் எனக்கும். - இப்பாடல் வேறொரு படத்தில் இடம் பெற்ற அவர்க்கும் எனக்கும் என்ற பானுமதியின் பாடலை நினைவூட்டும்.

இல்லற ஜோதி திரையரங்குகளில் காணும் வாய்ப்பு கிடைப்பது அரிது. என்றாலும் தற்போது கிடைத்துள்ள வாய்ப்பினை அன்பர்கள் பயன் படுத்திக் கொள்ளலாம்.

அன்புடன்

பி.கு. முன்னர் தவறுதலாக ஜி.ராமநாதன் அவர்களுக்கு பதிலாக எழுத்தாளர் புதுமைப் பித்தன் படம் இடப்பட்டு விட்டது. மன்னிக்க வேண்டுகிறேன்.

KCSHEKAR
25th July 2011, 05:16 PM
பாராட்டுக்கு நன்றி திரு. கார்த்திக்.

RAGHAVENDRA
25th July 2011, 06:40 PM
சிக்கல்களைக் களையும் சிவபெருமானின் புதல்வரை நினைவு கூரத் தயாராவோம்...

RAGHAVENDRA
25th July 2011, 09:42 PM
http://www.indiangossips.com/wp-content/uploads/2011/07/Ravichandran-150x150.jpg

விதி தன் வேலையைக் காட்டி விட்டது. தமிழ்த்திரை உலகில் பாகவதர்-சின்னப்பா, எம்.ஜி.ஆர்.-சிவாஜி இவர்களுக்குப் பிறகு புதிய தலைமுறை கதாநாயகர்களாக வலம் வந்த ஜெய்சங்கர்-ரவிச்சந்திரன் சகாப்தம் முடிந்து விட்டது. இன்று இரவு கலை நிலவு என அன்போடு அழைக்கப்பட்ட ரவிச்சந்திரன் அவர்கள் இயற்கை எய்திய செய்தி, எங்களைப் போன்ற பழைய தலைமுறை ரசிகர்கள் உள்ளத்தில் மாறாத வடுவை ஏற்படுத்தி விட்டது. திரு ரவிச்சந்திரன் அவர்களின் பங்களிப்பு தமிழ்த்திரையுலகில் தனித்துவம் வாய்ந்தது. அவருடைய பாணி தனித்துவம் பெற்றது. பல ரசிகர்களை ஈர்த்தவர் ரவிச்சந்திரன். அவரைப் பற்றிப் பல விஷயங்களை சொல்ல எண்ணினாலும் இந்த சூழ்நிலையில் வார்த்தை வரவில்லை. பிறிதொரு சந்தர்ப்பத்தில் எழுதலாம்.

அவர் நினைவாக சீர்காழி கோவிந்த ராஜன் குரலில் ஜஸ்டிஸ் விஸ்வநாதன் திரைக்காவியத்தில் இடம் பெற்ற உள்ளம் உருக்கும் பாடல்


http://www.youtube.com/watch?v=FE5Wqz-EqPc

pammalar
26th July 2011, 02:22 AM
'கலை நிலவு', 'ஸ்மார்ட் ஹீரோ' என்கின்ற அடைமொழிகளுடன் திரையுலகில் 1960களிலும், 1970களிலும் மிகப் பெரிய வலம் வந்த நடிகர் ரவிச்சந்திரன் அவர்களின் மறைவு கலையுலகுக்கு ஒரு பேரிழப்பு. நமது நடிகர் திலகத்துடன் மோட்டார் சுந்தரம் பிள்ளை, கவரிமான் ஆகிய திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ள ரவிச்சந்திரன் ஒரு திரையுலக சாதனையாளர். அவரது மறைவுக்கு நமது அஞ்சலி.

அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர், நண்பர்களுக்கும், கலையுலகைச் சேர்ந்தவர்களுக்கும், ரசிகர்களுக்கும், சகோதரி சாரதா முதற்கொண்ட ரசிகைகளுக்கும் நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை இறைஞ்சுவோம்.

பம்மல் ஆர். சுவாமிநாதன்.

pammalar
26th July 2011, 04:39 AM
சிக்கல்களைக் களையும் சிவபெருமானின் புதல்வரை நினைவு கூரத் தயாராவோம்...

தங்கள் சித்தம் என் பாக்கியம் !

இதோ சிக்கலாரைப் போற்றுகிறார் பம்மலார் !

pammalar
26th July 2011, 04:50 AM
WORLD CINEMA's BLOCKBUSTER

தில்லானா மோகனாம்பாள் : 44வது உதயதினம்

[27.7.1968 - 27.7.2011]

கலைப் பொக்கிஷங்கள்

முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 2.8.1968
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4120a.jpg


ஆறாவது வாரம் [NSC Areas] : தினத்தந்தி : 31.8.1968
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4122a.jpg


75வது நாள் : தினத்தந்தி : 9.10.1968
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4123a.jpg


100வது நாள் : தினத்தந்தி : 3.11.1968
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/MAGAZINE_0003.jpg

கலைப் பொக்கிஷங்கள் களை கட்டும்.....

சிக்கலார்
புகழ் பாடும்
பம்மலார்.

RAGHAVENDRA
26th July 2011, 06:34 AM
டியர் பம்மலார்,
சிக்கலாரை வரவேற்க சிக்கலேதும் இல்லை,
நக்கல் செய்தவர்கள் நாணிச் சென்று விட்டார்.
விக்கல் வந்தாலும் விண்ணவனை எண்ணிடுவோம்,
எக்கலையும் ஏற்றமுற ஏந்திடுமே ஏந்தலையே

வண்ணத்தில் வார்த்தெடுத்த விளம்பரப் பிரதியினை
வாரீர் பாரீர் எண்ணத்தில் உவகையுற
மறைந்திருந்தே பார்க்கத் தேவையில்லை -
மனதினிலே ஏற்ற உரிமையாக்குங்கள் இதை

சிக்கலாரின் நாயனத்தை சிங்காரமாய்க் காண
ஆயிரம் கண் போதாது நமக்கு
ஆங்கில இசையும் துணைக்கு


http://www.youtube.com/watch?v=O5AY2kVHag4&feature=related

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/thillanabommaiad.jpg

விளம்பரப் படங்களுக்கு நன்றி பம்மலாரே,

அன்புடன்

RAGHAVENDRA
26th July 2011, 07:59 AM
முந்தைய கால கட்டங்களில், படம் வெளியாகும் நாளுக்கு முந்தைய நாள் மாலை நாளிதழில் இன்று முதல் என்று குறிப்பிட்டே விளம்பரங்கள் வெளியாகும். தமிழில் மாலை முரசு, நவமணி, பத்திரிகைகளும் ஆங்கிலத்தில் தி மெயில் பத்திரிகையும் மாலை ஏடுகளாகும். மாலை மலர் அப்போது சென்னையில் வெளியிடப் படவில்லை. காலை ஏடாக வந்து கொண்டிருந்த சுதேச மித்திரன் நிர்வாகக் காரணங்களால் மாலை ஏடாக வெளிவரத் துவங்கியது 60களின் பிற்பகுதியில். தொடர்ந்து 70களின் துவக்கத்தில் மக்கள் குரல் மாலை ஏடு வெளி வரத்துவங்கியது. இவை யனைத்துமே மறுநாள் வெளியிடப் படும் படத்திற்கான விளம்பரங்களை இன்று முதல் என்று குறிப்பிட்டே வந்தன. அதனை யொட்டியே சில விளம்பரங்களில் தேதி முந்தைய தேதியாக இருந்தாலும் இன்று முதல் என்பதைக் காணலாம். அதற்கு உதாரணம் தான் மேலே பம்மலார் பதிவிட்டிருக்கும் சுதேச மித்திரன் பத்திரிகை தில்லானா மோகனாம்பாள் விளம்பரம்.

அன்புடன்

goldstar
26th July 2011, 11:14 AM
Thanks a lot Pammallar and Ragavendran sir for complete TM posters. The beauty of these posters are all the actors say AVM Rajan or Padmini or Balaiah, Sarankabhani given equal important like NT. I just think of current cinema, 90% of screen occupied by main actor.

We can learn from even old movie posters.

Cheers,
Sathish

RAGHAVENDRA
26th July 2011, 11:22 AM
தில்லானா மோகனாம்பாள் திரைக்காவியத்தைப் பற்றி 11.08.1968 தேதியிட்ட கல்கி வார இதழில் வெளிவந்த விமர்சனம்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/thillanakalkireview01fw.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/thillanakalkireview02fw.jpg

தில்லானா மோகனாம்பாள் திரைக்காவியத்தைப் பற்றிய பேசும் படம் பத்திரிகையின் கணிப்பு

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/thillanapesumpadamcoveragefw-1.jpg

கணேசர்களும் நாதஸ்வரங்களும் - பேசும் படம் கட்டுரை

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/thillanapesumpadamnewsfw.jpg

abkhlabhi
26th July 2011, 02:32 PM
http://www.southdreamz.com/movie/thillana-mohanambal-1968

abkhlabhi
26th July 2011, 02:36 PM
http://www.behindwoods.com/features/moviearticles/articles1/thillana/tamil-cinema-movies-article-thillana-mohanambal.html

KCSHEKAR
26th July 2011, 06:30 PM
தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தின் 44 ஆம் ஆண்டு உதய தினத்தில் - பொக்கிஷப் பதிவுகளை அளித்து கலக்கிய பம்மலாருக்கும், திரு. ராகவேந்திரன் அவர்களுக்கும் நன்றி. தில்லானா மோகனாம்பாள் உதய வருடமும் நான் இந்த உலகில் உதயமான வருடமும் ஒன்றே என்பதால் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. மீண்டும் என்னுடைய நன்றியை இருவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். இத்தகைய அருமையான பதிவுகளால், ஒவ்வொரு நாளும் இன்று என்ன, யாருடைய உதய தினம் என்று திரியை ஆவலுடன் பார்க்கசெய்கிறது.

RAGHAVENDRA
26th July 2011, 09:02 PM
தில்லானாவை திடுதிப்பென்று எடுத்து விட்டார்களே - பேசும் படம் இதழில் ஒரு வாசகர் கேள்வி... இந்த கேள்வி தமிழ்நாட்டிலிருந்து கேட்கப் படவில்லை. அவர்கள் தியேட்டரில் ஓட்டுவதற்கென்ன என்று பொய்யும் புரட்டும் பேசியும் ஏசியும் வந்தவர்களுக்கு உண்மை நிலையை உணர்த்தவே அந்தக் காலத்தில் இந்த பதில் அமைந்தது. பேசும் படம் பத்திரிகை நடுநிலையான பத்திரிகை என்பதற்கு எந்த சான்றும் தேவையில்லை. அவர்களின் பத்திரிகையில் பல சந்தர்ப்பங்களில் நடிகர் திலகத்தின் படங்களை விமர்சித்துள்ளார்கள். அப்படிப்பட்ட இதழில் பிப்ரவரி 1969 இதழில் வெளியான கேள்வி பதில் இது. பாருங்கள்..ஏராளமான ரசிகர்களின் உள்ளக்கிடக்கையினை எதிரொலித்தது இக்கேள்வி. சாந்தியில் வெள்ளி விழா கண்டிருக்க வேண்டிய படம்.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/thillanapesumpadamQA.jpg

அன்புடன்

pammalar
27th July 2011, 03:25 AM
டியர் ராகவேந்திரன் சார்,

முதற்கண் பாராட்டுக்கு நன்றி !

"தில்லானா மோகனாம்பாள்" குறித்து தாங்கள் வழங்கிவரும் கலைப் பொக்கிஷங்களின் அணிவகுப்பு பிரமாதத்திலும் பிரமாதம் !

- "பாவை விளக்கு" திரைக்காவியத்தில் நமது திலகம் கவிஞராகப் படைத்துப் பாடிய 'ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே' பாடலை "தில்லானா"வில் அவரே நாதஸ்வரத்தில் வாசித்து நாம் அதைக் கண்டு கேட்டு ரசிக்கும் போது ஒருஇனம் புரியாத மகிழ்ச்சியும், சிலிர்ப்பும் ஏற்படும். கூடவே சவாலுக்கு பதிலாய் வரும் English Note எனக் கூறப்படும் மேற்கத்திய இசை நடனப்பாடல். Performanceல் பின்னியிருப்பார் நமது சிக்கலார். கர்நாடக இசையுலகச் சக்கரவ்ர்த்தி மதுரை மணி ஐயர்தான் 'க ம ப ரி க ப ரி க ஸ' எனத் தொடங்கும் ஸ்வரங்களைப் பிரயோகித்து இந்த ஆங்கில நோட் [English Note] பாடலை மேடைக் கச்சேரிகளில் முதன்முதலில் பாடும் வழக்கத்தைக் கொண்டு வந்தார். பின்னர் அதனைப் பல வித்வான்களும் தங்களது பாணியில் பின்பற்றத் தொடங்கினர். மதுரை மணி ஐயர் அவர்கள் பாடிய அந்த ஒரிஜினல் மெட்டிலேயே நாதஸ்வரத்தில் புகுந்து விளையாடியிருப்பார்கள் நமது சிக்கலார் குழுவினர். மதுரை மணி ஐயர் அவர்கள் பாடியது இதோ:


http://www.youtube.com/watch?v=8wl5yW14ZL0&feature=related

- 'பொம்மை' ஜூலை 1968 இதழின் பின் அட்டை வண்ண விளம்பரம் கண்ணை விட்டு அகல மறுக்கிறது.

- 'கல்கி' [11.8.1968] இதழின் கண்ணியமான விமர்சனம் கூடுதல் பொலிவு.

- 'பேசும் படம்' இதழின் 'வீணையும்-நாதமும்' 'தேனும்-பாலும்' என்றால், ஜனவரி 1968 இதழில் வெளிவந்த கட்டுரையான 'கணேசர்களும் நாதஸ்வரமும்', 'உனக்காக நான்' என்று நாதஸ்வரத்தை நோக்கிப் பகருவது போல் உள்ளது. உண்மையை உரக்க உரைத்த கேள்வி-பதில், கண்டெடுக்கப்பட்ட ஒரு 'புதையல்'.

Thanks for the links, Bala Sir.

Thanks, goldstar.

பாராட்டுக்கு நன்றி, சந்திரசேகரன் சார்.

சிக்கலார்
புகழ் பாடும்
பம்மலார்.

pammalar
27th July 2011, 05:05 AM
WORLD CINEMA's BLOCKBUSTER

தில்லானா மோகனாம்பாள் : 44வது உதயதினம்

[27.7.1968 - 27.7.2011]

கலைப் பொக்கிஷங்கள் களை கட்டுகின்றன : பேசும் படம் : ஆகஸ்ட் 1968

அட்டைப்பட விளம்பரம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/TM1.jpg


காவியக் காட்சிகள்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4124a.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4160a.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4129a.jpg


கலைப் பொக்கிஷங்கள் களை கட்டும்.....

சிக்கலார்
புகழ் பாடும்
பம்மலார்.

pammalar
27th July 2011, 05:53 AM
WORLD CINEMA's BLOCKBUSTER

தில்லானா மோகனாம்பாள் : 44வது உதயதினம்

[27.7.1968 - 27.7.2011]

கலைப் பொக்கிஷங்கள் களை கட்டுகின்றன : குமுதம் ஜங்ஷன் : 13.5.2003

அட்டைப்படம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4169a.jpg


கவர் ஸ்டோரி
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4136a.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4137a.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4138a.jpg

கலைப் பொக்கிஷங்கள் களை கட்டும்.....

சிக்கலார்
புகழ் பாடும்
பம்மலார்.

RAGHAVENDRA
27th July 2011, 09:45 AM
டியர் பம்மலார்,
பேசும் படம், குமுதம் ஜங்ஷன் என்று அமர்க்களப் படுத்தி விட்டீர்கள்.. தில்லானா மோகனாம்பாள் சவாலே சமாளியை மிஞ்சி விடும் என்று தோன்றுகிறது..

மலையாளத் தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் திலகத்தின் 10வது நினைவு நாளையொட்டி ஒரு சிறு தொகுப்பினை வழங்கியுள்ளனர். அதற்கான காணொளி இதோ -


http://www.youtube.com/watch?v=G_VSczQaEWA

தமிழ், தமிழர், என்று கூறிக் கொள்வோர் சிந்திக்கட்டும்...

abkhlabhi
27th July 2011, 12:58 PM
Written by Nithya Subramanian

Thillana Mohanambal.....

Here's some plain speaking...I stay at Bangalore and yet I've never been any good with movies or with catching up with the latest releases. I can never be dedicated to any task for more than a few minutes, and being glued to the silver screen for two-and-a-half or three hours is not, in many cases, an exception. I do have quite a few English favorites though (This is affectionately called the UK effect by some of my team-mates). Given a choice, I would prefer the Tamil oldies to the latest Hindi or the regional masalas. And speaking of Tamil oldies, the one film that pops up in my mind is this evergreen classic Thillana Mohanambal..

It is truly a classic..not only because it is set in the early to mid nineteenth century or because it is of Eastman colour..but also because generations after generations, people (children and adults alike) have found pleasure in every scene of the movie..I've watched the movie a zillion times before and I can play the entire movie in my mind's eye uninterruptedly (sans the irritating ads), and yet, I never miss an opportunity to watch it again discovering newer connotations in every scene and adding richer appreciation to every character. Well, its after all a classic....

For those of you who are not familiar with the story, here is a very brief synopsis of the movie...
Sikkil Shanmughasundaram (a role adorned by Shivaji Ganesan to the extent of religious perfection) is a very talented but rather irritable 'Nadaswara vidwan'. Mohanambal (played by Padmini) is an equally talented and gorgeous Bharatanatyam danseuse. Each of them have their own set of troupes. Balaiya, the mridangam vidwan, Thangavelu, the dance master, T.R.Ramachandran (playing the role of Varada) are a few of them.

Well guys, its the proverbial love at first sight and first hear for them (you got to hear the nadaswaram and watch the Bharatanatyam dance). Its more of a magnetism between the Nadam and Bharatam, the arts, and consequently the corresponding artistes. And that's another reason why its a favourite of mine (its love at first encounter ;) ). Back to the plot, Shanmugasundaram's bad-temper and Mohana's mother's lust for money bring in a few villains. Vaithy (played by Nagaesh) accentuates the rift between them, bringing in the Singapura Minor (Balaji) and the Madanpur Maharaja (Nambiar) who are allured by Mohanambal's splendor.


There is also a contest held between the lead artistes, (nadam or bharatham? Sikkil or Mohana? is the question) and the usual wise judgement of both being equally exceptional is delivered. Mohanambal is rightfully bestowed with the title 'Thillana Mohanambal' by none other than Shanmugasundaram himself in praise of her exceptional talent in that form of dance - Thillana...

To cut a long story short, (movies of yesteryears do have a intricate storyline guyz, unlike the modern counterparts which manage to run the reels for three hours with a three-minute plot), Mohana finally manages to appease Shanmugasundaram with her dedication. All's well that ends well...

Now for the critical analysis of the movie....All the songs are classics, with this one standing out... 'Marainthirunthu paarkum marmam enna..' Check out the video on youtube (link provided in this page)....Padmini's abhinayangal, her charm, lithe dance movements, notwithstanding Shivaji's expressions will leave you entranced. My favorite scene in the movie is the train scene, one in which both the troupes are cramped inside a typical Indian third class compartment and fight their guts out for more comfortable seats, berths, and light. Balaiya (the mridanga vidwan and Sivaji's senior accomplice excels in this scene...his is yet another monumental performance in movie.)The young couple, unperturbed by the surrounding scuffles are in their private world conversing with their eyes. How romantic!!! How intense is their affection!!! I seldom get that romantic feel in any of the modern day movies.....Such is the execution of the scene....

And I have quite a few favorite characters in the movie...Its difficult to pick a single superlative, because every single artiste connects to their roles and plays them to the required level of precision. I admire even the seemingly minor roles of Varadha (TRR), Vaithy (Nagaesh), dance master (Thangavelu) or even the vethilaipotti accomplice of Mohana's mother. And yet, one particular character which deserves awesome appreciation is Jiljil Ramamani (seemlessly rendered by Manorama). Her role is marked by ignorance, innocence, good-intentioned stupidity. In my opinion, her performance in the movie is second only to Shivaji Ganesan's...Do leave your favorite scenes and characters in the comments section.

So if there is something which can keep a true Mercurian like me glued to a spot for over three hours, it is a classic like Thillana Mohanambal. You can laugh, cry, emote, sit straight and connect all at once in three hours. That should explain most of it...I can't think of any modern-day sequels that can get even remotely close to this classic...Can you??

abkhlabhi
27th July 2011, 12:59 PM
From the 50 best tamil films must watch before you DIE

Thillana Mohanambal

Thillana Mohanambal is a story of two egoistic geniuses falling in love head over heels but never had the mettle to express each other. Too simplistic? A simple one-liner can become a classic with a superb screenplay and wonderful acting. This movie is an epitome of what we are talking about. Thillana Mohanambal is a novel by Kothamangalam Subbu and adapted by AP Nagarajan. Sikkal Shanmugasundaram (Sivaji Ganesan) is a renowned Nagaswaram maestro and egoistic about his talent meets the Bharathanatyam genius Mohanambal (Padmini) and they fall in love instantly because of mutual admiration towards their talents. Her mother (CK Saraswathi) wants her to get married to a wealthy man in-order to get a luxurious life. She tries to patch Mohana with different people through the help of Vaithi (Nagesh – at his Villainy best) but fails at every instant due to the determination of Mohana. Shanmugasundaram misunderstands Mohana and gets in to a depressed state but through the help of friends their love travels to an happy ending.

Why it’s so special?
1. The ensemble cast and brilliant acting. Sivaji and Padmini are fabulous. If you take the 10 best pairs in Tamil Cinema, they will rank right at the top, simply because of the chemistry and the way they try to overpower each other whenever they act together. Thillana Mohanambal provides the right premise for both the actors to shine.
2. The supporting cast of AVM Rajan, Balayya, SV Sahasranamam, TR Ramachandran, Thangavelu, CK Saraswathi and apt cameos from Balaji, Nambiyar make the movie perfect. You would be amazed at the screenplay and how each actor is provided with scenes where they can shine in their own way. For instance, the train scene where Balayya steals the show completely from the lead characters.
3. There are two actors without who Thillana Mohanambal would be half baked. Vaithi played by Nagesh and Jil Jill Ramamani by Manorama. Vaithi is the real villain of the story and Nagesh cakewalks the role. His saguni like villainy will make you laugh and hate him at the same time. Nobody other than Nagesh could have pulled it off. Jill Jill Ramamani on the other hand is the darling of the movie. Manorama’s portrayal is splendid with the unique gait and voice modulation. Even sometimes you feel that Sivaji let her to overshadow him. Don’t miss the folk dance performance from Manorama.
4. The music and dance. This is one of the movies whose soundtrack should be preserved in any Tamil music buff’s collection. Maraindhirunthu Parkum, Nalamthana are instant classics. The musical pieces at various points of time performed by the Nagaswaram Troupe especially the western score done through traditional instruments are out of the world. the music was composed by KV Mahadevan. If music was perfect, the dance sequences are overwhelming. Padmini was at her best through the choreography of PS Gopalakrishnan. The Thillana contest between Nagaswaram and Bharathanatyam is a sequence not to be missed.
5. It’s one of the perfect screenplays as it was adapted from a 3 volume novel and wonderfully directed too.
6.One of the best novel adaptations and could not find a better musical than this.
7.Perfectly casted, perfectly acted, perfectly composed (song and dance), perfectly written and perfectly directed.
8.One of the few movies in Tamil which will not bore you even if you see it innumerable times and enjoy the movie from any point
9.The nagaswaram played by Sivaji and AVM Rajan was played offline by MPN Sethuraman and MPN Ponnusami.
10.The western notes that’s played by Sivaji’s troupe during the western band standoff scene was composed by Harikesnallur Muthaiah Bagavathar for Madurai Mani Iyer. It was used by KV Mahadevan for the movie
11.The 3 volume novel written by Kothamangalam Subbu was published as a series in Ananda Vikatan 25 years before the movie was made. Interestingly, Vaithi’s caricature made by Gopu (artist) was very similar to Nagesh.
12.The story is based out of the Kaveri delta area of Tanjore and adjacent places. Sikkal is a small village in Nagapattinam district and known for Singaravelan Temple. But the whole movie was shot in sets except for few scenes in Railway stations.

J.Radhakrishnan
27th July 2011, 02:09 PM
ராகவேந்தர் சார், பம்மலார் சார்,
தில்லானா மோகனாம்பாள் விளம்பரங்கள் மிக அருமை, அதிலும் பேசும் படம் அட்டை படம் super!

saradhaa_sn
27th July 2011, 02:57 PM
டியர் பம்மலார் & டியர் ராகவேந்தர்,

தமிழ்த்திரையுலகின் கலைப்பொக்கிஷமும், கலாச்சார பிரதிபலிப்புமான 'தில்லானா மோகனாம்பாள்' திரைக்காவியத்தின் வெளியீட்டு தின சிறப்புப் பதிவுகள் அனைத்துமே அருமையிலும் அருமை. சமீப காலமாக நமது திரியில், ஒவ்வொரு திரைப்பட வெளியீட்டையும் நினைவுகூறும் விதமாக நீங்கள் தேடித்தேடி அளித்து வரும் பொக்கிஷங்களான செய்தித்தாள் விளம்பரங்கள் மற்றும் அப்படம் சம்மந்தமான ஆவணங்களின் அணிவகுப்பு எல்லோராலும் மிக மிக விரும்பி வரவேற்கப்படுகிறது.

உண்மையைச்சொல்லப்போனால் அவற்றைப்பார்க்கும் பலர் இங்கு பாராட்டி எழுத விரும்புகின்றனர். அவர்களிடத்தில் உறுப்பினர் பதிவு இல்லாததால் அவர்களின் நன்றிகளை வெளிக்காட்ட முடியாமல் இருக்கின்றனர். ஆனால் பலர் சொல்வது... 'ஓ, இதைத்தான் இவ்வளவு நாட்கள் தேடிக்கொண்டிருந்தோம்' என்பதுதான். அப்போது காணக்கிடைக்காதவர்கள் இப்போது பார்த்து, பத்திரப்படுத்தி மகிழ்கின்றனர். இந்தப்பெருமைகளெல்லாம் உங்கள் அனைவருக்கும்தான். (சரி, சமீபகாலமாக முரளியண்ணாவின் பதிவுகளைக் காணவில்லையே ஏன்?. வேலைகளில் பிஸியாக இருக்கிறரா?).

ராகவேந்தர் அவர்கள் சொன்னதுபோல, 'தில்லானா' கொண்டாட்டங்கள் 'சவாலே சமாளி'யை மிஞ்சிவிட்டன. படம் வெளியானபோது காணக்கிடைக்காத 'பேசும் படம்' மற்றும் 'பொம்மை' பத்திரிகைகளின் செய்தித்துளிகளும் கல்கி விமர்சனமும் இப்போது படிப்பதற்கு உண்மையிலேயே மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றன. ஆக, பத்திரிகைகளே இப்படத்தின் பெரிய வெற்றியை எதிர்பார்த்திருக்கின்றன. இருந்தபோதிலும் இப்படத்தின் தரத்துக்கும் உழைப்புக்கும் ஆறு திரையரங்குகளில் 100 நாட்கள் என்பது போதாது. குறைந்தது 15 அரங்குகளில் 100 நாட்களும், குறைந்தது மூன்று நகரங்களில் வெள்ளிவிழாவும் கண்டிருக்க வேண்டும். அவ்வளவு தரமான படைப்பு.

இப்படம் பற்றி ஏற்கெனவே நமது திரியில் நாம் நிறையப் பேசிவிட்டதால், நாமே சிலாகித்துப்பேசிக்கொண்டிருப்பதற்கு பதில், அன்றைய சூழலில் பத்திரிகைகளில் வந்த செய்திகளை எடுத்துப்பிரசுரிப்பது உண்மையிலேயே மகிழ்வைத்தருகிறது.

இந்தப்பதிவுகளின் பின்னால் உங்கள் இருவரின் கடின உழைப்பு நன்றாகத்தெரிகிறது. இடையில் சிறிது காலம் இருட்டடிப்புச் செய்யப்பட்டிருந்த நடிகர்திலகத்தின் புகழும் சாதனைகளும், இதுபோன்ற உழைப்புகளால் இப்போது சுடர்விட்டுப்பிகாசித்து வருகிறது. நமது திரியில் விவாதிக்கப்படும் பல விஷயங்களும், புள்ளி விவரங்களும் தொலைக்காட்சி காம்பியர்களால் நிகழ்ச்சிகளில் எடுத்து கையாளப்பட்டு வருகின்றன. இது மிகவும் சந்தோஷப்பட வேண்டிய விஷயம்.

நண்பர் சந்திரசேகர் அவர்கள் சரியாகச் சொன்னதுபோல, இப்போதெல்லாம் அடுத்து வரும் திரைப்பட வெளியீட்டு தின நினைவன்று என்னென்ன விருந்து படைக்கப்போகிறீர்கள் என்று ஆவலுடன் அனைவரையும் எதிர்பார்க்க வைத்து விட்டீர்கள்.

தொடரட்டும் உங்கள் சீரிய தொண்டு.
நன்றிகளுடன்..... சாரூ...

kumareshanprabhu
27th July 2011, 04:01 PM
HI Ragahavendra Sir. Pammal sir, Joe, Murali.shekar

lovely writing by harish thank you

guruswamy
27th July 2011, 04:03 PM
My Dear Beloved N.T. Fans,

I'm back after long time, this long time I have been going thro' my ups & downs in my life, but I assure you all that never i missed out reading this thread about our great legend. All the discussions in this thread kept me movtivated in many ways.

Kindly execuse me, if by any chance I have deviated from the current topic. Our great man N.T have always inspired me and belive me only his inspiration made me to find a way out to all my problems.

By our N.T. blessings I assure our beloved fans that, I will continue to be active in this thread and keep posting my true experiences about our Legend.

JAIHIND
M. Gnanaguruswamy

saradhaa_sn
27th July 2011, 04:23 PM
டியர் பாலா,

தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் பற்றிய நீங்கள் அளித்துள்ள இணைப்புகளும், ஆங்கிலத்தில் எடுத்துப்பிரசுரித்திருக்கும் கட்டுரையும் வெகு ஜோர். கட்டுரையாளர் சொல்லியிருப்பது மிகச்சரியான வார்த்தை. அப்படத்தில் வரும் சின்ன சின்ன ரோல்களில் வருபவர்கள் கூட தங்கள் பங்களிப்பை சரியாக நிறைவேற்றியிருப்பார்கள். கூட்டு முயற்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டான படம் இது. இதே ஆண்டின் துவக்கத்தில் வெளியான 'திருமால் பெருமை'யின் ஓட்டத்தைப் பார்த்துவிட்டு, 'சிவாஜி - ஏ.பி.என். காம்பினேஷன் அவ்வளவுதான். இனிமேல் எடுபடாது' என்று ஆரூடம் கூறியவர்களின் வாய்களுக்கு பூட்டுப்போட்டது இப்படம்.

இணைப்புகளுக்கும், கட்டுரைக்கும் நன்றி பாலா.

Dear Guruswamy,

Wecome back..
வந்து நடிகர்திலகத்தின் ஜோதியில் ஐக்கியமாகுங்கள்.

Plum
27th July 2011, 05:10 PM
The directors, Krishnan-Panju, worked hard with the new face and after a few thousands of feet were canned, AV. Meiyappan and Iris friends viewed the rough-cut footage and were sorely disappointed. They felt The hero, that new actor Sivaji Ganesan. was no good!
AVM suggested that the hero be replaced and K. R. Ramasami be brought on board. But Perumal was not convinced
:hammer:
Not satisfied with their terrible contribution to tamil cinema(esp after murattu kaalai), AVM might have committed this sin also?

RAGHAVENDRA
27th July 2011, 06:14 PM
Email received by me:

DEAR RAGHAVENDRAN,
TO-DAY'S nadigar thilagam web cover fantastic. all messages about the film given neatly and correctly. About the movie not pushed for silverjublie in spite of big collections. NT HUB IS VERY WELL UPDATED. THANKS TO PAMMALAR AND FRIENDS.
Iam also one of the thousands of fans very much dejected those days. we are expecting more inf on 31st with THIRUVILAIYADAL RELEASE MELA.
REALLY YOU ARE GREAT IN GIVING NT NEWS .
WE FEEL AS IF NT IS ALIVE TODAY
REGARDS RAMAJAYAM

Regards,
S.Ramajayam
Chennai.

Thank you Ramajayam Sir. I forward all your appreciations to the fellow hubbers, including pammalar, Saradha, Murali Srinivas, Karthik, KrishnaG, Parthasarathy, Balakrishnan, Joe Sir, Plum Sir, Nov Sir, and all the friends here (order random, not specific).

A REQUEST TO MODERATOR CONCERNED

Mr. Ramajayam is a senior citizen, retired from a reputed Institution in Chennai. He has been closely following our thread and very much interested to participate. His will be an invaluable source to our thread since he has so much information to share with us. He seems to have submitted the request for registration since long but somehow yet to receive any confirmation. Please help him to get registered in our hub and enable him to make postings. His knowledge expands beyond Nadigar Thilagam to cover other art forms.

His email id: Ramajayam Subramanian <s_ramajayam@yahoo.com>

Raghavendran.

RAGHAVENDRA
27th July 2011, 06:18 PM
Dear Guruswamy,
We are very much eager to read your postings and info. Please keep on writing.
Your finishing note is very touching "Jai Hind" -
Raghavendran

RAGHAVENDRA
27th July 2011, 06:23 PM
Dear Kumaresh and Radhakrishnan
Thank you for the kind compliments. All goes to NT.
Raghavendran

kumareshanprabhu
27th July 2011, 09:11 PM
thank u Ragahavendran Sir
welcome guru sir

pammalar
27th July 2011, 09:57 PM
திருவருட்செல்வர்

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/Appar1.jpg

வருகிறார்.........

RAGHAVENDRA
27th July 2011, 10:55 PM
அப்பர்.....
வந்து கொண்டே....
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/TVC.jpg
இருக்கிறார்

RAGHAVENDRA
27th July 2011, 10:59 PM
தினமணி கதிர் 11.08.1968 தேதியிட்ட இதழில் வெளிவந்த விமர்சனம்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/TVCKadhirReviewfw.jpg

Murali Srinivas
28th July 2011, 12:15 AM
வருடத்தின் ஒவ்வொரு நாளிலும் ஒரு புது உதயம் கண்ட நடிகர் திலகத்தின் படங்களுக்கு வெளியீட்டு நாள் சிறப்பு விளம்பரங்கள் மற்றும் செய்திகளை இங்கே பதிவேற்றுவதற்காக சுவாமிக்கும் ராகவேந்தர் சாருக்கும் நன்றி சொல்ல ஆரம்பித்தால் அது நாள்தோறும் நடந்துக் கொண்டேயிருக்கும். காரணம் அத்தனை தகவல்கள் அவர்களிடம் கொட்டிக் கிடக்கின்றன. சுவாமியோடும் ராகவேந்தர் சாரோடும் பேசும்போது கிடைக்கும் சில தகவல்கள் நம்மை ஆச்சரியப்படுத்தும். வருட முடிவில் மொத்தமாக அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்ளலாம்.

இதையும் மீறி இன்று சுவாமிக்கு நன்றி சொல்ல வேண்டும். காரணம் அவர் இங்கே பதிவேற்றியுள்ள மதுரை மணி அய்யரின் இங்கிலீஷ் நோட்ஸ் சுட்டிக்காக. ஒரு திரைப்பட நடிகன் பற்றிய அல்லது அவன் திரைப்படங்களைப் பற்றிய விவாத திரியில் மதுரை மணி அய்யர் போன்ற கர்நாடக இசைக் கலைஞர்களின் படைப்புகள் இடம் பெறுவது என்பதே நடிகர் திலகம் திரியில் மட்டுமே நடக்க கூடிய ஒன்று. அந்த வகையிலும் இந்த திரியின் பெருமை கூடுகிறது.

சாரதா, சற்று வேலை பளு. அதுவும் தவிர நமது திரியில் பெய்யும் விளம்பர மழையில் ரசனையாக நனைந்துக் கொண்டிருந்தேன்.

இப்போது விற்பனையில் உள்ள குமுதம் ரிப்போர்டர் இதழில் நடிகர் திலகத்தின் 10 -வது நினைவு நாளை முன்னிட்டு ஒரு கட்டுரை. அதில் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் சிலர், அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கின்றனர். அவர்களில் ஒருவர் பெயர் நாஞ்சில் ஜோ. பெயரை பார்த்தவுடன் ஒரு சின்ன ஆர்வம் தோன்ற யார் என்று பார்த்தால் அவர் குமரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளில் ஒருவராம். அப்போது நிச்சயமாக நமது ஜோவிற்கும் அவருக்கும் ஸ்நான ப்ராப்தி கூட இருக்காது என்று புரிந்து போனது.

குருசுவாமி சார், இம்முறை உங்கள் அனுபவ பகிர்வு உறுதியாக இடம் பெறும் என நம்புகிறேன்.

அன்புடன்

சிக்கலாருக்கு பின்னால் சிவனடியார்களையும் அந்த தென்னாடுடைய சிவனையுமே பலரும் எதிர்பார்த்து காத்திருப்பது புரிகிறது. இதற்கு இடையே ஒரு சின்ன சர்ப்ரைஸ் --- !

Murali Srinivas
28th July 2011, 01:27 AM
இன்றைய நாள் ஜூலை 27. 43 வருடங்களுக்கு முன்பு இதே நாள் [27-07-1968] ஒரு சனிக்கிழமை. முதலில் ஜூலை 13 வெளிவருவதாக இருந்து பின் 27-ந் தேதி வெளியானது. தந்தியில் வந்த விளம்பரம் இப்போதும் கண் முன்னே நிற்கிறது. சாதாரணமாக முழுப் பக்க விளம்பரங்கள் portrait சைசில் வெளியாகும். ஆனால் தில்லானா விளம்பரமோ Landscape பாணியில் நடிகர் திலகமும் குழுவினரும் தரையில் அமர்ந்து நாதஸ்வரம் வாசிப்பது போல் வெளிவந்திருந்தது.

அப்போது எனக்கு மிக சிறு வயது. அந்தக் காலகட்டத்தில் சனிக்கிழமையன்று அரை நாள் பள்ளி நடக்கும். தில்லானா திரையிடப்பட்டிருந்த சிந்தாமணி அரங்கை தாண்டிதான் பள்ளிக்கு செல்ல வேண்டும். காலையில் அந்த வழியாக கடக்கும்போது இருந்த கூட்டத்தைப் பார்த்தால் அப்படியே பிரமித்து போனேன். அவ்வளவு கூட்டம், அடிதடி. எங்கள் சைக்கிள் ரிக்க்ஷா அந்த இடத்தை கடக்கவே 10 நிமிடங்கள் ஆனது. மதியம் பள்ளி முடிந்து வரும்போது மணி ஒன்றை தாண்டியிருக்கும். அப்போது நின்ற வரிசையைப் பார்த்து அசந்து போனேன். அரங்கின் இருபுறமும் உள்ள சின்ன சந்தில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வரிசை நிற்கிறது. படத்தை வெளியான எட்டாவது நாள்தான் பார்க்க முடிந்தது. அப்போதும் அசாத்திய கூட்டம்.

படம் வெளிவருவதற்கு முன்னர் படத்தைப் பற்றி எத்தனை கேலி பேச்சு? படம் பிப்பீ என போய்விடும் என பேசியவர்கள் எல்லாம் ஓடி ஒளியும் வண்ணம் படம் சூப்பர் டூபர் வெற்றி பெற்றது. எங்கள் மதுரையில் சிந்தாமணி அரங்கில் 132 நாட்கள் ஓடியது. என் நினைவு சரியாக இருக்குமானால், ஓடிய அந்த 132 நாட்களில் ரூபாய் 3 ,47,000 சொச்சம் வசூல் செய்தது. அதே சிந்தாமணியில் கருப்பு வெள்ளைப் படங்களில் பாகப் பிரிவினை 216 நாட்கள் ஓடி சுமார் 3.36,000 ரூபாய் வசூலித்து சாதனை புரிந்தததோ அதே போல் சிந்தாமணியில் கலர் படங்களில் இந்த வசூல் ஒரு புதிய சாதனை. இன்னும் சொல்லப் போனால் அதே சிந்தாமணியில் தில்லானாவிற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு, மிகப் பெரிய நிறுவனம் தயாரித்த மிகப் பெரிய படங்களின் வசூலை எல்லாம் முறியடித்தது [இதற்கும் கூடுதல் நாட்கள் ஒட்டப்பட்டும் கூட அரை லட்சம் ருபாய் குறைவு என்று நினைவு].

அந்த 1968 ம் ஆண்டு மதுரையைப் பொறுத்தவரை வெளிவந்த அனைத்துப் படங்களின் வசூலை எடுத்துக் கொண்டால் [பணமா பாசமாவை தவிர்த்து விட்டு பார்த்தால்- காரணம் அது தங்கத்தில் வெளியானது] முன்னணியில் நின்றது தில்லானாதான்.

டூயட் இல்லை, நாயகனுக்கு பாடல் இல்லை, சண்டை காட்சி இல்லை, ஏன், நாயகனுக்கு மீசை கூட கிடையாது. எந்த விதமான கவர்ச்சிகளும் இல்லாமல் வெளிவந்தது. இருப்பினும் மக்கள் அமோக வரவேற்பளித்தனர். அப்படிபட்ட ஒரு திரைக் காவியம் மறு வெளியீடு காணும் போதெல்லாம் மக்கள் கூட்டம் அலை மோதியது.

தமிழ்ப் படங்களை பொறுத்த வரையில் வித்தகமும் வர்த்தகமும் கை கோர்த்து பெற்ற இமாலய வெற்றிகளில் தில்லானா என்றுமே முன்னணியில் நிலை கொள்ளும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கவே முடியாது.

நினைவுகளை ஆசை போட வாய்ப்பளித்ததற்கு நன்றி.

அன்புடன்

pammalar
28th July 2011, 02:55 AM
டியர் ராகவேந்திரன் சார், பாராட்டுக்கு நன்றி !

டியர் முரளி சார், மனம் திறந்த பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி ! நினைவலைகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி !

சகோதரி சாரதா, உளப்பூர்வமான பாராட்டுக்கு உளங்கனிந்த நன்றி !

Dear Bala Sir, Thanks a lot for TM-related articles.

டியர் ஜேயார் சார், பாராட்டுக்கு நன்றி !

Dear kumareshanprabhu, Hello & Thanks.

Dear Gnanaguruswamy Sir, Welcome back.

Dear Ramajayam Sir, My sincere thanks for your praise. Very eager to view your posts.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
28th July 2011, 03:38 AM
WORLD CINEMA's BLOCKBUSTER

தில்லானா மோகனாம்பாள் : 44வது உதயதினம்

[27.7.1968 - 27.7.2011]

கலைப் பொக்கிஷங்கள் களைகட்டி நிறைகின்றன : இரு அபூர்வ கிளிக்ஸ்

'நாதஸ்வர சக்கரவர்த்தி'யாக நடிகர் திலகம், ஏ.பி.என்.
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/TM2.jpg


சிக்கலார் பார்ட்டி
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/TM3.jpg

சிக்கலார்
புகழ் பாடும்
பம்மலார்.

pammalar
28th July 2011, 03:57 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 204

கே: "தில்லானா மோகனாம்பாள்" படத்தில் சிவாஜி கணேசனா நாதஸ்வரம் வாசிக்கிறார்? (எம்.ஆர்.பிரேமா-வசந்தா, சென்னை - 7)

ப: இப்படிச் சந்தேகமேற்படச் செய்வதால்தான் அவரை நடிகர் திலகம் என்கிறோம் !

(ஆதாரம் : பேசும் படம், அக்டோபர் 1968)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
28th July 2011, 04:11 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 205

கே: "தில்லானா மோகனாம்பாள்" வெள்ளிவிழாக் கொண்டாடுமா? (பி.சாந்தகுமாரி, அண்ணாமலை நகர்)

ப: பிறகு வந்த படங்களைப் பார்க்கும்போது, கதை, பாடல், இசை, நடிப்பு போன்ற எல்லா அம்சங்களும் நிறைந்த அந்தப்படம் ஏன் பொன்விழாக் கொண்டாடக் கூடாது என்றே நான் கேட்க விரும்புகிறேன்.

(ஆதாரம் : பேசும் படம், நவம்பர் 1968)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
28th July 2011, 05:31 AM
வந்துவிட்டார்

திருவருட்செல்வர்

[28.7.1967 - 28.7.2011] : 45வது ஜெயந்தி

பக்தி மலர்கள்

முதல் வெளியீட்டு விளம்பரங்கள்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4180a.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4170a.jpg


'பேசும் படம்' அட்டைப்பட விளம்பரம் : வெள்ளிவிழா மலர் ஆகஸ்ட் 1967
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4178a.jpg

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
28th July 2011, 06:19 AM
திருவருட்செல்வர்

[28.7.1967 - 28.7.2011] : 45வது ஜெயந்தி

பக்தி மலர்கள்

அய்யன் சிவாஜி அப்பர் ஆகிறார்..... : பொம்மை : ஆகஸ்ட் 1967
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4188a.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4185a.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4186a.jpg

பக்தியுடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
28th July 2011, 06:25 AM
18.08.1968 தினமணி கதிர் இதழில் வெளிவந்த விளம்பரம்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/TVCRunningAdfw.jpg

RAGHAVENDRA
28th July 2011, 06:42 AM
டியர் முரளி சார்
பள்ளிப் பருவத்தில் நடிகர் திலகத்தின் படங்களை முதல் நாள் முதல் காட்சியினை அரங்கில் காண்பதை விட பெரும் பேறு இலலை என்கிற அளவிற்கு அந்தக் காலங்களில் நம்முள் ஆக்கிரமித்து அதை இன்றும் இனி என்றும் நம் உடலில் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை, உயிர் மூச்சு பிரியும் வரை, தொடரும் நடிகர் திலகம் என்கிற ஆகர்ஷண சக்தியினைப் பற்றி எழுதிக் கொண்டே போகலாம். அவற்றிக்கு வாய்ப்பளித்த ஹப் இணைய தளத்திற்குத் தான் நமது முழு முதல் நன்றி போக வேண்டும். மேலும் மேலும் பலர் இங்கு வந்து எழுதுவதற்கு காத்துக் கொண்டுள்ளனர் என்பதும் தெரிய வருகிறது. விரைவில் அவர்களையும் எதிர்பார்ப்போம்.
தங்களுடைய நினைவுகள் எனக்கும் அதே காலகட்டத்தில் சஞ்சாரம் செய்ய வைத்து விட்டன. இன்னும் சற்று முன்னர் 1962ம் ஆண்டு வாக்கில் ஒரு இசை நிகழ்ச்சிக்கு என் பாட்டி அழைத்து சென்றிருந்தார் அப்போதெல்லாம் அடிக்கடி அழைத்துச் செல்வார். அந்த குறிப்பிட்ட நிகழ்ச்சி மதுரை மணி அய்யரின் கச்சேரி. நீண்ட நேரம் வரிகளே இல்லாமல் எழுத்துக்களை மட்டுமே பாடுகிறாரே என்று பாட்டியிடம் கேட்டேன். அப்போது நான் சின்னஞ்சிறிய பிராயத்தவன். அப்போது என் பாட்டி சொன்னார், இது வெறும் எழுத்தில்லை, ஸ்வரப் ப்ரஸ்தாரம், இதில் இவர் தான் நம்பர் 1 என்று. பின்னர் திடீரென்று பாட்டில் தாளம் மாறி, எல்லோரும் கைதட்ட ஆரம்பித்தார்கள், கூடவே தாளம் போட ஆரம்பித்தார்கள். இது என்ன திடீரென்று இப்படி வருகிறதே இது என்ன சினிமா பாட்டா என்று வினவினேன். இல்லை இது அவரே உருவாக்கியது என்றார்.
பின்னர் சில ஆண்டுகள் கழித்து ஓரளவு உலக ஞானம் புரிய ஆரம்பித்த போது தான் அவரைப் பற்றித் தெரிந்து கொண்டேன். திருவிளையாடல் படத்தின்போதே அவருடைய மகிமை புரிய ஆரம்பித்தது.
அவருடைய அந்த இசை தான் மதுரை மணி அய்யர் நோட்ஸ் என்பது பின்னர் தான் தெரிய வந்தது. ஆஹா இதை நாம் நேரிலேயே கேட்டிருக்கிறோமே என்கிற பெருமை உச்சந்தலையில் போ்ய் அமர்ந்து கொண்டது. உள்ளூர பாட்டிக்கு நன்றி கூறிக் கொண்டது. தற்போது பம்மலாரின் காணொளி மூலம் அந்த நினைவுகள் நிழலாட வாய்ப்புக் கிடைத்தது.

திருவருட்செல்வர் படத்திற்கும் விமர்சனங்கள் ... இந்தக் கிழவனைப் போல் படமும் தள்ளாடும் என்கின்ற ஏகடியங்கள்... தங்களிடமும் ஒரு சக்தியுள்ளது என்கிற நினைப்பில் மற்றொரு பெரிய கட்சியினர் நடிகர் திலகத்தைப் பற்றிய கேலிகளையும் கிண்டல்களையும் எழுத முடியாத வார்த்தைகளால் அள்ளி வீசியது இன்றும் நினைவில் உள்ளது. இதை மறக்க முயன்றாலும் முடியவில்லை. படம் வெளியாகி மிக நன்றாகப் போனது. இருந்தாலும் வெள்ளி விழா கண்டிருக்க வேண்டிய படத்தை அவ்வளவு சீக்கிரம் எடுத்து விட்டது வருத்தமே.

என்றாலும் அப்போது பார்த்த அதே திரையரங்கில் சமீபத்தில் அதை விட பெரிய அளப்பரைகளுடன் பார்த்த போது, அந்த வருத்தங்கள் அனைத்தும் மறந்து போயின, பறந்து போயின.

டியர் பம்மலார்
நான் மிகவும் ஆவலாக பாதுகாத்து வந்து மிகவும் பத்திரமாய் வைத்து விட்டு எங்கே என்பதை மறந்து போ்ய் விட்டு இங்கே பதிய வைக்கும் வாய்ப்பை இழந்து போய் விட்டு வருந்தும் நேரத்தில், நடிகர் திலகம் ஒப்பனைக் காட்சிகளைப் பதிவேற்றி அசத்தி விட்டீர்கள். தங்களுடைய இளம் வயதில் தாங்கள் நடிகர் திலகத்திதற்கு செய்து வரும் சேவையின் முன் நாங்களெல்லாம் ஜுஜுபி....

நன்றி,
அன்புடன்

goldstar
28th July 2011, 06:51 AM
alla alla amutha surabhi pola namathu NT pada vivarakkalai alli alli tharum Pammallar and Ragavendra sir avarkalai potri potri...

Nantriyudan,
Sathish

joe
28th July 2011, 07:42 AM
பம்மலார்,
திருவருட்செல்வர் ஒப்பனை பற்றிய புகைப்படத்தோடு கூடிய வர்ணணை அருமை ..இது போன்ற பொக்கிஷங்களை பாதுகாத்து உரிய நேரத்தில் வழங்கும் உங்களை நினைக்க பிரமிப்பாக இருக்கிறது ..பாராட்ட வார்த்தைகளே இல்லை நண்பரே .

joe
28th July 2011, 07:46 AM
அவர்களில் ஒருவர் பெயர் நாஞ்சில் ஜோ. பெயரை பார்த்தவுடன் ஒரு சின்ன ஆர்வம் தோன்ற யார் என்று பார்த்தால் அவர் குமரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளில் ஒருவராம். அப்போது நிச்சயமாக நமது ஜோவிற்கும் அவருக்கும் ஸ்நான ப்ராப்தி கூட இருக்காது என்று புரிந்து போனது.

:lol: நமது ஜோ-வுக்கும் அவருக்கும் ‘நடிகர் திலகம் ரசிகன்’ என்ற அசைக்க முடியாத பந்தம் இருக்கிறது :)

சமீபத்தில் தான் எனது கூகிள் பயனர் பெயரை ‘நாஞ்சில் ஜோ’ என மாற்றினேன் . எங்கூரு ‘ஜோ’ -க்களெல்லாம் நடிகர் திலகம் ரசிகர்களாகத் தான் இருப்பார்கள் போலிருக்கு .

RAGHAVENDRA
28th July 2011, 10:44 AM
For those friends who might be interested to hear NT's interview to BH Abdul Hameed:-
http://www.bhabdulhameed.com/archives/siva.wma
http://www.bhabdulhameed.com/english/home.html

The youtube link for the video tribute to NT through the song "Singam Endral" from Asal-
http://www.youtube.com/watch?v=EcqXs94XVe8&feature=player_embedded

kumareshanprabhu
28th July 2011, 11:04 AM
thank u raghavendra sir

it would be greatful if u could add some more links of NT in you tube

regards
kumareshan prabhu

hi murali thank you boss

J.Radhakrishnan
28th July 2011, 11:48 AM
பம்மலார் சார்,
அப்பர் வேடத்தில் நடிகர்திலகத்தின் நடிப்பை பார்த்து வியந்திருக்கின்றேன், ஆனால் அந்த மேக்கப் போட அவர் எவ்வளவு சிரமப்பட்டு உள்ளார் என்பதை தங்கள் பதிவை பார்க்கும் போது தானே தெரிகிறது?

தொடரட்டும் தங்கள் திருப்பணி!!!

RAGHAVENDRA
28th July 2011, 11:52 AM
a few snaps of function held in memory of NT's 10th anniversary. Images courtesy: our fellow hubber, Kumaresan Prabhu. Thank you, Sir. Kindly provide the details here.

Raghavendran.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NT%20Events/nt10anivbangaluru02.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NT%20Events/nt10anivbangaluru01.jpg

RAGHAVENDRA
28th July 2011, 12:02 PM
Dear Kumaresh,
NT songs and scenes videos are being embedded here along with our discussions frequently under different topics, which include காதல் திலகத்தின் ரொமான்டிக் சூப்பர் ஹிட்ஸ், கதைக்களத்தில் நடிகர் திலகத்தின் பாடல்கள், நடிகர் திலகத்தின் கொள்கைப் பாடல்கள், and so on. Please browse through different pages. More will follow soon under the different discussions.

However, why not we watch one now? It will always be a pleasure watching him. And this one is even more special - NT's 175th film - And favourite for many of old time fans like me.
Song: Oonjalukku Poochootti
Singer: T.M.Soundararajan & M.S.Viswanathan
Lyrics: Kannadasan
Film: Rasi Enterprises, "Avan Thaan Manithan"


http://www.youtube.com/watch?v=xbSZJeC4pAU

Many may be surprised to see MSV's name in the singers' list - yeah, as the song fades out, you will listen a mild humming in Malaysian Folk tune. And that's MSV.

Raghavendran

goldstar
28th July 2011, 12:59 PM
Dear Kumaresh,
However, why not we watch one now? It will always be a pleasure watching him. And this one is even more special - NT's 175th film - And favourite for many of old time fans like me.
Song: Oonjalukku Poochootti
Singer: T.M.Soundararajan & M.S.Viswanathan
Lyrics: Kannadasan
Film: Rasi Enterprises, "Avan Thaan Manithan"

Raghavendran

Thank you Ragavendran sir, one of my most favourite song.

Cheers,
Sathsih

parthasarathy
28th July 2011, 03:56 PM
அன்புள்ள திரு. ராகவேந்தர் மற்றும் திரு. பம்மலார் அவர்களே,

கடந்த சில வாரங்களாக, தாங்கள் இருவரும் செய்து வரும் தொண்டு திருத்தொண்டு.

எந்த ஒரு விஷயமும் எளிதாக ஒவ்வொருவரையும் சென்று சேர்வதற்கும், எழுத்தின் மூலம் செய்வதை விட, விஷுவலாக செய்வது தான் சிறந்த உபாயம். அவ்வகையில், தாங்கள் இருவரும் திரை கடலோடியும் திரவியம் சேர்ப்பது போல், நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றிய செய்திகளை, சேகரித்து, அதை இந்தத் திரியில் பதிவிடும்போது, ஒவ்வொருவரும் மகிழ்ச்சிக்கடலில் தத்தளித்து, பழைய இனிய நினைவுகளில் மூழ்கிப் போகிறோம்!

இந்தத்திரியின் சுவாரஸ்யம் மேலும் பன்மடங்கு கூடிக் கொண்டே போகிறது.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

parthasarathy
28th July 2011, 04:00 PM
இன்றைய நாள் ஜூலை 27. 43 வருடங்களுக்கு முன்பு இதே நாள் [27-07-1968] ஒரு சனிக்கிழமை. முதலில் ஜூலை 13 வெளிவருவதாக இருந்து பின் 27-ந் தேதி வெளியானது. தந்தியில் வந்த விளம்பரம் இப்போதும் கண் முன்னே நிற்கிறது. சாதாரணமாக முழுப் பக்க விளம்பரங்கள் portrait சைசில் வெளியாகும். ஆனால் தில்லானா விளம்பரமோ Landscape பாணியில் நடிகர் திலகமும் குழுவினரும் தரையில் அமர்ந்து நாதஸ்வரம் வாசிப்பது போல் வெளிவந்திருந்தது.

அப்போது எனக்கு மிக சிறு வயது. அந்தக் காலகட்டத்தில் சனிக்கிழமையன்று அரை நாள் பள்ளி நடக்கும். தில்லானா திரையிடப்பட்டிருந்த சிந்தாமணி அரங்கை தாண்டிதான் பள்ளிக்கு செல்ல வேண்டும். காலையில் அந்த வழியாக கடக்கும்போது இருந்த கூட்டத்தைப் பார்த்தால் அப்படியே பிரமித்து போனேன். அவ்வளவு கூட்டம், அடிதடி. எங்கள் சைக்கிள் ரிக்க்ஷா அந்த இடத்தை கடக்கவே 10 நிமிடங்கள் ஆனது. மதியம் பள்ளி முடிந்து வரும்போது மணி ஒன்றை தாண்டியிருக்கும். அப்போது நின்ற வரிசையைப் பார்த்து அசந்து போனேன். அரங்கின் இருபுறமும் உள்ள சின்ன சந்தில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வரிசை நிற்கிறது. படத்தை வெளியான எட்டாவது நாள்தான் பார்க்க முடிந்தது. அப்போதும் அசாத்திய கூட்டம்.

படம் வெளிவருவதற்கு முன்னர் படத்தைப் பற்றி எத்தனை கேலி பேச்சு? படம் பிப்பீ என போய்விடும் என பேசியவர்கள் எல்லாம் ஓடி ஒளியும் வண்ணம் படம் சூப்பர் டூபர் வெற்றி பெற்றது. எங்கள் மதுரையில் சிந்தாமணி அரங்கில் 132 நாட்கள் ஓடியது. என் நினைவு சரியாக இருக்குமானால், ஓடிய அந்த 132 நாட்களில் ரூபாய் 3 ,47,000 சொச்சம் வசூல் செய்தது. அதே சிந்தாமணியில் கருப்பு வெள்ளைப் படங்களில் பாகப் பிரிவினை 216 நாட்கள் ஓடி சுமார் 3.36,000 ரூபாய் வசூலித்து சாதனை புரிந்தததோ அதே போல் சிந்தாமணியில் கலர் படங்களில் இந்த வசூல் ஒரு புதிய சாதனை. இன்னும் சொல்லப் போனால் அதே சிந்தாமணியில் தில்லானாவிற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு, மிகப் பெரிய நிறுவனம் தயாரித்த மிகப் பெரிய படங்களின் வசூலை எல்லாம் முறியடித்தது [இதற்கும் கூடுதல் நாட்கள் ஒட்டப்பட்டும் கூட அரை லட்சம் ருபாய் குறைவு என்று நினைவு].

அந்த 1968 ம் ஆண்டு மதுரையைப் பொறுத்தவரை வெளிவந்த அனைத்துப் படங்களின் வசூலை எடுத்துக் கொண்டால் [பணமா பாசமாவை தவிர்த்து விட்டு பார்த்தால்- காரணம் அது தங்கத்தில் வெளியானது] முன்னணியில் நின்றது தில்லானாதான்.

டூயட் இல்லை, நாயகனுக்கு பாடல் இல்லை, சண்டை காட்சி இல்லை, ஏன், நாயகனுக்கு மீசை கூட கிடையாது. எந்த விதமான கவர்ச்சிகளும் இல்லாமல் வெளிவந்தது. இருப்பினும் மக்கள் அமோக வரவேற்பளித்தனர். அப்படிபட்ட ஒரு திரைக் காவியம் மறு வெளியீடு காணும் போதெல்லாம் மக்கள் கூட்டம் அலை மோதியது.

தமிழ்ப் படங்களை பொறுத்த வரையில் வித்தகமும் வர்த்தகமும் கை கோர்த்து பெற்ற இமாலய வெற்றிகளில் தில்லானா என்றுமே முன்னணியில் நிலை கொள்ளும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கவே முடியாது.

நினைவுகளை ஆசை போட வாய்ப்பளித்ததற்கு நன்றி.

அன்புடன்

திரு. முரளி அவர்களே,

வழக்கம் போல் அருமை.

நான் பலரிடமும் எப்போதும் வைக்கும் வாதம் இது தான். உலகெங்கும் உள்ள அந்தக் காலத்து நடிகர்கள் முதல் இந்தக் காலத்து நடிகர்கள் வரை அத்தனை பேரையும் கூப்பிடுவோம். அவர்கள் எல்லோரும் படத்தின், அறிமுகக் காட்சியில், பாகவதர் கிராப்பை வைத்துக் கொண்டு, மீசையை வழித்து, நெற்றியில், பைசா அகலப் போட்டு வைத்து, வாயில் நாதஸ்வரத்துடன் உட்காரட்டும். திரை அரங்கில், ஒருவர் கூட சிரித்து விடக்கூடாது. அந்த கெட்டப்பில் உள்ள அந்த நடிகரைப் பார்த்தவுடன், பார்க்கும் ஒவ்வொருவருக்கும், அந்த நடிகரின் மேல் ஒரு வித மரியாதை தான் வர வேண்டும்.

எனக்குத் தெரிந்து, நடிகர் திலகம் ஒருவரைத் தவிர வேறு எந்த நடிகர் இந்த கெட்டப்பில் தோன்றியிருந்தாலும் / தோன்றினாலும், திரை அரங்கங்கள் சிரிப்பொலியில் ஆழ்ந்து தான் போயிருக்கும்! இது தான் நடிகர் திலகத்தின் தனிச் சிறப்பு. ஆண்டவன் அவருக்கு வழங்கிய அந்த முகம்; கூடவே, அவர் எடுத்துக் கொள்ளும் சிரத்தை மற்றும் அர்ப்பணிப்பு. அதனால் தான், அந்தத் தெய்வீகத் தன்மை அவருக்குத் தானாகவே வந்து விடுகிறது. திரு. முக்தா சீனிவாசன் ஒரு முறை அளித்த பேட்டியில் கூறியது போல, "சதை படர்ந்த அந்த முகத்தில் அவர் காட்டிய உணர்வுகள் ஏராளம்! ஏராளம்!!".

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

gkrishna
28th July 2011, 05:25 PM
பம்மலர் மற்றும் ராகவேந்தர் சார் முரளி சார் மற்றும் நம் எல்லா நண்பர்களுக்கும்
கண்கள் பனிகின்றன இதயம் வருடுகிறது . திருவருட்செல்வர் மற்றும் தில்லான மோகனம்பாள் பற்றிய கட்டுரை மிக அருமை
இப்படிப்பட்ட ஊனோடும் உயிரோடும் கலந்துவிட்ட ரசிகர்கள் பெற சிவாஜி புண்ணியம் செய்தாரோ அல்லது சிவாஜியின் ரசிகர்களாக இருக்க நாம் என்ன புண்ணியம் செய்தோமோ தெரியவில்ல.
முரளி சார் மற்றும் பம்மலர் மற்றும் பார்த்தசாரதி சார் உடன் avm சங்கர ஹால் சென்றது நினைவுக்கு வருகிறது
அங்குள்ள விற்பனையாளர் சொன்னது "இருக்கும் வரை எப்படியோ தெரியவில்லை மறைந்த பிறகு தான் சிவாஜின் அருமை எல்லோருக்கும் தெரிகிறது " .

உண்மையை சொல்ல வேண்டுமானால்

வான் உள்ளவரை இந்த வையகம் உள்ளவரை கார் உள்ளவரை கடல் உள்ளவரை மலை உள்ளவரை
நம்மவரின் புகழ் என்றும் மறையாது

ஆயிரம் கைகள் மறைத்து நின்றலும் ஆதவன் மறைவது இல்லை என்று பாடியது நம்மவருக்ககதான்

என்றும் அன்புடன்

கிருஷ்ணா க

RAGHAVENDRA
28th July 2011, 07:42 PM
டியர் கிருஷ்ணாஜி,
உணர்ச்சி மயமான தங்கள் பதிவு அனைத்து ரசிகர்களின் உள்ளத்திலும் ஆழ ஊடுருவியிருக்கும் என்பது திண்ணம். இன்னும் சொல்லப் போனால் நம் ஒவ்வொருவரின் ஊனிலும் உயிரிலும் நடிகர் திலகம் என்ற திருநாமம் ஊடுருவி பரவியுள்ளது என்றால் அது தான் உண்மை. ஆங்கிலத்தில் சொல்லக் கூடிய வார்த்தை - vibration - இது தான் நம் ஒவ்வொருவரின் உள்ளும் ஆட்டுவிக்கிறது. இது நடிகர் திலகம் என்கிற ஜீவனைத் தவிர வேறு எவருக்கும் கிட்டாத பேறு - அது யாராக இருந்தாலும் சரி, எவ்வளவு பெரியவர்களாயிருந்தாலும் சரி- இந்த உணர்வுடன் கலந்த தன்மை அவருக்கும் அவருடைய ரசிகர்களுக்கும் மட்டுமே சாத்தியம்.
அது தான் நம்மை இப்படி சங்கிலி போல் இணைத்து அழைத்து செல்கிறது.

அன்புடன்

RAGHAVENDRA
28th July 2011, 07:44 PM
டியர் பார்த்த சாரதி,
தங்களுடைய பாராட்டுக்களுக்கு மிகுந்த நன்றி. சொல்லப் போனால் இது நம்மை நாமே பாராட்டிக் கொள்வது போலாகும். அனைத்தும் நடிகர் திலகத்திற்கே சமர்ப்பணம்.
தங்களுக்கு மிகுந்த மன உறுதி அதிகம் என எண்ணுகிறேன். அதனால் தான் மற்றவர்களுக்கு அந்த வேடத்தைப் போட்டு, அதைப் பார்க்கும் துணிவும் உள்ளது. பாராட்டுக்கள்.

அன்புடன்

RAGHAVENDRA
28th July 2011, 07:53 PM
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/KKKNT.jpg

29.07.1960 - பந்துலு-நடிகர் திலகம் என்ற கூட்டணியின் துவக்க காலத்தை நினவில் நிறுத்தும் நாள். எத்தனை அவதாரம் யார் போட்டாலும், எத்தனை ஒப்பனைகள் செய்தாலும் அனைத்திற்கும் முன்னோடியான விஞ்ஞானியின் பாத்திரத்தில் நடிகர் திலகம் மிக அழுத்தமாக முத்திரை பதித்த திரைப்படம் வெளியான நாள். இந்த படத்தைப் பார்த்த ரசிகர்கள் புண்ணியம் செய்தவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். இது வரை பார்க்காதவர்கள், முதல் முன்னுரிமை தந்து எப்பாடு பட்டாவது பார்த்தே தீர வேண்டும். பிற்காலத்தில் உலகத்தில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்து பிரம்மாண்டமான விஸ்வரூபத்தினை நடிகர் திலகம் எடுப்பதற்கு முன்னோடி இப்படம். கிட்டத் தட்ட 10 நிமிடக் காட்சி. குழந்தைகளோடு அவர் பங்கெடுத்து நடித்த காட்சி.... நெஞ்சை விட்டு அகலாது... அதுவும் இறக்கும் தருவாயில் அவர் காட்டும் யதார்த்தமான நடிப்பு ... இப்போது கூறப்படும் அத்தனை விதமான இயல் நடிப்புகளுக்கும் முன்னுதாரணம்...
அத்திரைப்படம் ... குழந்தைகள் கண்ட குடியரசு
தயாரிப்பு - பத்மினி பிக்சர்ஸ்
இயக்கம் - பி.ஆர்.பந்துலு

கல்கி 17.04.1960 இதழில் வெளிவந்த விளம்பரம்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/KKKKalkiAdprereleasefw.jpg

ஆனந்த விகடன் 31.07.1960 தேதியிட்ட இதழில் வெளிவந்த விளம்பரம்.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/KKKVikatanAdreleasefw.jpg

இப்படத்தின் பாட்டுப் புத்தகத்தின் முகப்பு

http://www.nadigarthilagam.com/songbookcovers/kkksbc.jpg

அன்புடன்

பி.கு. முதலில் இப்பதிவினை இடும் போது ஆண்டு 1959 என்று தவறுதலாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. சுட்டிக் காட்டிய பம்மலாருக்கு நன்றிகள். பாகப் பிரிவினை படம் எண்ணத்தில் நிழலாடிக் கொண்டிருந்த காரணத்தால் 1959 என்ற ஆண்டு தானாகவே வந்து அமர்ந்து விட்டது. தவறுக்கு மன்னிக்கவும். சரி செய்யப் பட்டு விட்டது.

pammalar
28th July 2011, 09:56 PM
டியர் ராகவேந்திரன் சார்,

தங்களின் அபரிமிதமான சேவைக்குமுன் அடியேனுடையது எம்மாத்திரம் !

தாங்கள் தொடர்ந்து அளித்து வரும் உயர்ந்த பாராட்டுக்களுக்கு எனது உளங்கனிந்த நன்றிகள் !

தாங்கள் பதிவிட்டுள்ள "திருவருட்செல்வர்" விஷுவல்கள் அருமையிலும் அருமை என்றால் "குழந்தைகள் கண்ட குடியரசு" நிழற்படங்கள் அற்புதத்திலும் அற்புதம் !

பெங்களூரூவில் நடைபெற்ற நமது இதயதெய்வத்தின் பத்தாம் ஆண்டு நினைவாஞ்சலி நிகழ்ச்சியின் நிழற்படங்களை நேர்த்தியோடு வழங்கிய திரு.குமரேசன் பிரபு அவர்களுக்கும், அதனை இங்கே அழகுற பதிவிட்ட தங்களுக்கும் கனிவான நன்றிகள் !

டியர் கோல்ட்ஸ்டார் சதீஷ்,

பாராட்டுக்கு நன்றி !

நமது நடிகர் திலகம் என்றென்றும் அள்ள அள்ளக் குறையாத அக்ஷயபாத்திரம் [அமுதசுரபி].

அனைத்துப் போற்றுதலும் நமது அய்யனுக்கே !

டியர் ஜோ சார்,

தாங்கள் அளித்த புகழுரைக்கு சிரம் தாழ்த்திய நன்றி !

ஒரு துக்ளக் 'சோ' மட்டுமா நடிகர் திலகத்தின் விசிறி, பற்பல 'ஜோ'க்களும் தானே !

தங்களின் சொந்த ஊரான நாஞ்சில் நகரமே என்றென்றும் அசைக்க முடியாத நடிகர் திலகத்தின் கோட்டையாயிற்றே !

தங்களது கூற்றுப்படியே "ஜோ" என்ற திருப்பெயர் கொண்டவர்களெல்லாம், 'ஜோஜோஜோஜோஜோலிஜோ' என 'மோகனப்புன்னகை' புரிந்து கோமகன் சிவாஜிக்குத் தான் தங்களது அன்பு உள்ளங்களை அளிப்பார்கள் என்பது புலனாகிறது.

டியர் ஜேயார் சார், பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நெஞ்சார்ந்த நன்றி !

டியர் பார்த்தசாரதி சார், பாராட்டுக்கு நன்றி !

டியர் கிருஷ்ணாஜி,

தங்களது பாராட்டுக்கு பசுமையான நன்றி !

உதயம் மட்டுமே கொண்ட கலைச்சூரியனாயிற்றே, நமது நடிகர் திலகம் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
29th July 2011, 04:37 AM
"குழந்தைகள் கண்ட குடியரசு" விஞ்ஞானிக்கு 52வது ஜெயந்தி

(நடிகர் திலகம் கௌரவத் தோற்றத்தில் கலக்கிய திரைக்காவியம்)

[29.7.1960 - 29.7.2011]

பொக்கிஷப் புதையல்

விஞ்ஞானியாக...
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/KKK1.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/KKK2.jpg


முதல் வெளியீட்டு விளம்பரம்
[உதவி : நல்லிதயம் திரு.கே.நவீன்]
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4195a.jpg

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
29th July 2011, 07:57 AM
சென்னை மகாலட்சுமி திரையரங்கில் இன்று 29.07.2011 முதல் தினசரி 3 காட்சிகளாகத் தொடர்கிறது, நடிகர் திலகத்தின் உன்னதத் திரைக்காவியம்,

http://moviegalleri.net/wp-content/gallery/gauravam-movie-re-release/gauravam_movie_001.jpg

RAGHAVENDRA
29th July 2011, 08:46 AM
குழந்தைகள் கண்ட குடியரசு திரைக்காவியத்தின் தெலுங்கு பதிப்பில் நடிகர் திலகத்தின் பகுதி (http://www.mediafire.com/?d91yzm9hmqij5oh)

அன்புடன்

kumareshanprabhu
29th July 2011, 10:05 AM
Thank u raghavendran Sir for that beautiful song

kumareshanprabhu
29th July 2011, 10:24 AM
Our nt 10th year photos

saradhaa_sn
29th July 2011, 10:52 AM
டியர் பம்மலார் &

டியர் ராகவேந்தர்,

காணக்கிடைக்காத 'குழந்தைகள் கண்ட குடியரசு' திரைப்பட ஸ்டில்கள், மற்றும் விளம்பரங்கள் மிக அருமை.

அந்த ஸ்டில்களூக்குக் கீழே மறக்காமல் குறிப்பிட வேண்டிய ஒரு விஷயம்....

"கிட்டத்தட்ட 100 வய்துக்காரராகத் தோற்றம் தரும் அந்த வேடத்தில் நடித்தபோது நடிகர்திலகத்தின் வயது 31 மட்டுமே"

அந்தப்படம் நான் பார்த்திருக்கிறேன் (தூரதர்ஷனில் ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலைப்படமாக காண்பிக்கப்பட்டது). வெறும் வயதான மேக்கப் மட்டுமல்ல. அந்த வயதுக்குரிய பெர்பாமென்ஸும் அட்டகாசமாக இருக்கும்.

நடிகர்திலகம் ஒரு யுகக்கலைஞர் என்பதை நிரூபிக்கும் இன்னொரு படம்.

mr_karthik
29th July 2011, 12:29 PM
பம்மலார் சார்,

தில்லானா மோகனாம்பாளைத் தொடர்ந்து திருவருட்செல்வர் விளம்பர வரிசையும், அப்பர் வேடத்துக்கான மேக்கப் போடும் அபூர்வக் காட்சித்தொகுப்புகளும் சூப்பர். திருவருட்செல்வர் மற்றும் அதில் வரும் அப்பர் காட்சிகள் என்றால், சிறுவயதில் பள்ளி வகுப்பில் எங்கள் தமிழாசிரியராக இருந்த திரு. கா.சுப்பிரமணியன்தான் நினைவுக்கு வருவார்.

வகுப்பில் அவர் பெரியபுராணத்தில் வரும் அப்பூதியடிகள் படலத்தைநடத்திக்கொண்டிருந்தபோது. அடிகளின் மகனை பாம்பு தீண்டி அவர் உயிர் துறக்கும் இடத்தையும் அப்பர் (திருநாவுக்கரசர்) பதிகம் பாடி அச்சிறுவனை எழுப்பும் காட்சியையும் மிக உருக்கமாக விளக்கியவர், இறுதியில் சொன்னார்... "நான் இவ்வளவு தூரம் விளக்கமாக நடத்தியதை விட, இந்தக்காட்சியை திருவருட்செல்வர் படத்தில் சிவாஜி நடித்திருப்பார். போய்ப்பாருங்க. நான் நடத்தியது கூட உங்களுக்கு மறந்துவிடும். ஆனால் அவர் நடிக்கும் அந்தக்காட்சி உங்களுக்கு எப்போதும் மனதில் நிற்கும். என்னடா ஒரு ஆசிரியரே சினிமா பார்க்கச்சொல்றாரேன்னு நினைக்காதீங்க. இந்த மாதிரிப்படங்களைப் பார்க்கும்படி சொல்வதில் தவறில்லை. நான் பார்க்கச்சொன்னேன்னு உங்க அப்பா அம்மாகிட்டே சொல்லிட்டே போய்ப்பாருங்க" என்றார். ஆனால் அவர் சொன்னபோது அந்தப்படம் ஏற்கெனவே ஓடிமுடிந்து தியேட்டர்களைவிட்டுச் சென்று விட்டது. நான் உட்பட ஒருசில மாணவ்ர்கள் மட்டு ஏற்கெனவே பார்த்திருந்தோம். பெரும்பாலான மாணவர்கள் பார்த்திருக்கவில்லை.

அப்போதெல்லாம் வீடியோ, சிடி எல்லாம் ஏது?. அதனால் சில மாதங்கள் கழித்து திருவருட்செல்வர் மீண்டும் ஒருவாரம் மட்டும் திரையிடப்பட்டபோது எல்லா மாணவர்களும் கூட்டமாகப் போய் திருவருட்செல்வரைப் பார்த்து மகிழ்ந்தோம்.

தமிழாசிரியர் திரு சுப்பிரமணியன் அவர்கள் தற்போது உயிருடன் இல்லை. இப்போதும் இப்படம் பார்க்கும்போதெல்லாம் அவருடைய நினைவு வரும். குறிப்பாக திருநாவுக்கரசர் படலம் வரும்போது.

gkrishna
29th July 2011, 03:46 PM
Dear sir,

kindly help me to locate Mahalakshmi theatre

regards

gkrishna

RAGHAVENDRA
29th July 2011, 06:05 PM
டியர் கார்த்திக்,
தங்கள் தமிழாசிரியர் கா.சு. அவர்கள் சரியான முறையில் தன் மாணாக்கர்களை வழி நடத்தியிருக்கிறார். திரைப்படம் என்கிற ஊடகத்தைக் கேவலமாகப் பார்க்காமல் அதில் உள்ள நல்ல அம்சத்தை மாணவர்களிடம் எடுத்துச் சொன்ன திரு கா.சு. அவர்கள் நல்லாசிரியருக்கு ஓர் இலக்கணமாகி விட்டார். தாங்கள் அதை மறக்காமல் நினைவு கூர்ந்ததன் மூலம் சிறந்த மாணவருக்கு எடுத்துக் காட்டாய் விளங்குகின்றீர்கள். பாராட்டுக்கள்.

அன்புடன்

RAGHAVENDRA
29th July 2011, 06:10 PM
டியர் கிருஷ்ணா.க.
மஹாலட்சுமி திரையரங்கம் சென்னை ஓட்டேரி பகுதியில் உள்ளது. சாலையின் பெயர் ஸ்டிரஹான்ஸ் சாலை. தாங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்பதை வைத்து பாதையைக் கூறமுடியும். எப்படி யிருந்தாலும் தென் சென்னை பகுதியிலிருந்து வருவதானால் தாங்கள் அநேகமாக கீழ்ப்பாக்கம் மருத்துவ மனை வழியாகத் தான் வரவேண்டியிருக்கும். அவ்வாறு வரும் போது கே.எம்.சி. எதிரில் அனைத்து வண்டிகளும் இடப்புறம் திரும்பும். பின்னர் வலப்புறம் திரும்பி, மீண்டும் இடப்புறம் திரும்பினால் மோட்சம் திரையரங்கு. அதே சாலையில் மோட்சம் திரையரங்கினைக் கடந்த பின்னர் மீண்டும் திரும்பாமல் நேரே சென்றால் மேகலா, சரவணா திரையரங்கு சாலை வரும். அதில் சுமார் 1.5 கி.மீ. தூரம் சென்ற பிறகு 4 முனை சந்திப்பு ஒன்று வரும். அந்த சந்திப்பில் இடப்புறம் திரும்பினால் அயன் புரம், நேரே சென்றால் பெரம்பூர். தாங்கள் வலப்புறம் திரும்பினால் சுமார் 500 மீட்டர் அல்லது 600 மீட்டர் தூரத்தில் மஹாலட்சுமி திரையரங்கினை அடையலாம். பாதை வழிகாட்டி வேண்டுமென்றால் கூகுள் மேப் பயன் தரும்.

அன்புடன்

RAGHAVENDRA
29th July 2011, 06:12 PM
அன்பு சகோதரி சாரதா அவர்களுக்கு
தங்களுடைய பாராட்டுக்களுக்கு அடியேனின் உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எல்லாம் திலகத்திற்கே சமர்ப்பணம்.

தாங்கள் கூறியது முற்றிலும் சரி, 30 வயது காலகட்டத்திலேயே நரைக் கிழவர் வேடம் போட்டு அசத்தியவர் நடிகர் திலகம்.

அன்புடன்

RAGHAVENDRA
29th July 2011, 06:15 PM
அண்ணலே,
உன் விழியசைந்தால் குருடன் கண் பார்ப்பான்
உன் விரலசைந்தால் அகிலமே உன் காலடியில்
நீ நடந்தால் முடவன் நடை பயில்வான்
நீ சிரித்தால் துன்பமெல்லாம் பறந்து போம்...

ஒரு துளி விஷமாயினும் நீ தந்தால் அமுதாகும் அன்றோ...

அன்புடன்

RAGHAVENDRA
29th July 2011, 06:40 PM
ராஜாதி ராஜ
ராஜ கம்பீர
ராஜ குல திலக
ராஜ மார்த்தாண்ட
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/dp01fw.jpg
கற்பக நாட்டு மன்னர் வருகிறார்...
பராக்...
பராக்...
பராக்...

rangan_08
29th July 2011, 07:04 PM
Dear everybody, Due to work pressure, not able to visit the hub regularly.

As i said earlier, taking part in the " Gowrava kondattam " was a great & unforgettable experience. My first thanks goes to Murali sir for letting me know about the screening, thru email....Thank you Sir !

Pammalar sir, your'e contribution to this thread is amazing......particularly the cover pages of Pesum Padam & NT's very rare still of Bhagat Singh....I'm sure that for most of us, including me, it was a first look. I was just awestruck when i saw the " make-up processing " photos of Thiruvarutchelvar....Fantastic !!! Keep going sir, all the best.

Raghavendra sir, thanks for the wonderful snap from "Kuzhandaigal kanda kudiyarasu" (reminds me of Scrooge !). One can obviously realise the amount of pain & care both yourself & Pammalar sir have taken to preserve these wonderful gems.

Many many thanks for your great service, Gentlemen....We salute you.

rangan_08
29th July 2011, 07:23 PM
Watch "KARNAN" tonight 8 pm in Raj digital.

rangan_08
29th July 2011, 07:27 PM
Hoping to catch up this Sunday eve @ Mahalakshmi......

By the way, what's next @ Shanthi.....Murali sir, you have mentioned the word "Surprise " in your post.....pls let it out.

Murali Srinivas
30th July 2011, 12:27 AM
Mohan,

Sorry if my post had made you think of some release happening in Shanthi. What I meant was, everybody is talking and expecting ad and news coverage details about Thiruvarutselvar and Thiruvilayaadal [the release date of Thiruvilayaadal being 31st July] but not many are aware of Thuli Visham whose release date falls on 30th July and that's what I called as surprise and as you could see the first teaser is out. But Ragavender Sir and Swamy surprised me with Kuzhaindhaigal Kanda Kudiyarasu. Though I have seen the paper ad earlier, the still was first look for me.

கிருஷ்ணாஜி, நீங்களும் மோகனும் கௌரவ திருவிழாவிற்கு செல்லும்போது நாங்கள் வேறு ஒரு ஜோதியில் கலந்து விடலாம் என நினைத்திருக்கிறோம்.

Regards

pammalar
30th July 2011, 02:55 AM
டியர் பம்மலார் &

டியர் ராகவேந்தர்,

காணக்கிடைக்காத 'குழந்தைகள் கண்ட குடியரசு' திரைப்பட ஸ்டில்கள், மற்றும் விளம்பரங்கள் மிக அருமை.

அந்த ஸ்டில்களூக்குக் கீழே மறக்காமல் குறிப்பிட வேண்டிய ஒரு விஷயம்....

"கிட்டத்தட்ட 100 வய்துக்காரராகத் தோற்றம் தரும் அந்த வேடத்தில் நடித்தபோது நடிகர்திலகத்தின் வயது 31 மட்டுமே"

அந்தப்படம் நான் பார்த்திருக்கிறேன் (தூரதர்ஷனில் ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலைப்படமாக காண்பிக்கப்பட்டது). வெறும் வயதான மேக்கப் மட்டுமல்ல. அந்த வயதுக்குரிய பெர்பாமென்ஸும் அட்டகாசமாக இருக்கும்.

நடிகர்திலகம் ஒரு யுகக்கலைஞர் என்பதை நிரூபிக்கும் இன்னொரு படம்.

சகோதரி சாரதா,

பாராட்டுக்கு நன்றி !

தாங்கள் குறிப்பிட்டுள்ளது போலவே இளம் வயதில், வயோதிகக் கதாபாத்திரங்களை அதிக அளவில் மிகுந்த துணிச்சலுடன் ஏற்று அப்பாத்திரங்களாகவே அப்படங்களில் வாழ்ந்து காட்டியவர், நமது தைரியத்திலகம்.

தனது 27வது வயதில், ஒரு பொறுப்புமிக்க நடுத்தரவகுப்புக் குடும்பத்தலைவராக "முதல் தேதி(1955)"யில் அசத்தியிருப்பார்.

தனது 28வது வயதில், "நான் பெற்ற செல்வம்(1956)" திரைக்காவியத்தில் இடம்பெற்ற 'புலவர்-தருமி-நக்கீரர்' ஓரங்க நாடகத்தில், புலவர் சிவபெருமானாக நடித்ததோடு முதுபெரும்புலவர் நக்கீரராகவும் வெளுத்து வாங்குவார் என்றால் "தெனாலிராமன்(1956)" திரைக்காவியத்தில், 'உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள் சொல்லாமல் போவார் அல்லாவிடம்' என்ற பாடல்காட்சியிலும் [பின்னணிக்குரல் : கண்டசாலா], அதனைத் தொடர்ந்து வரும் காட்சியிலும் ஒரு வயதான முஸ்லீம் பெரியவர் தோற்றத்தில் [மாறுவேடம் தான்!] பிரமாதப்படுத்தியிருப்பார்.

தனது 29வது வயதில், "தங்கமலை ரகசியம்(1957)" திரைக்காவியத்தில், கதைப்படி, ஒரு கட்டத்தில் தனது இளமையையும் அழகையும் முழுவதுமாக இழந்து முதியவனாக அதுவும் குரூபியாகக் காட்சியளிப்பார். பின்னர் இறுதியில் இழந்தவற்றை அவர் திரும்பப் பெறுவார் என்பது வேறு விஷயம் !

தனது 32 வயதில், "தெய்வப்பிறவி(1960)"யில் கம்பீரமிக்க குடும்பத்தலைவராக, தனது 38 வயதில் கோடி கொடுத்தாலும் கிடைக்காத "மோட்டார் சுந்தரம் பிள்ளை(1966)" எனும் அன்புத்தந்தையாக [அதாவது பல முன்னணி நடிக-நடிகையருக்கு மாமனார்-அப்பா], தனது 39 வயதில் "திருவருட்செல்வர்(1967)" திரைக்காவியத்தில் 80 வயது அப்பராக, இப்படி எத்தனை எத்தனையோ பாத்திரங்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

உலக சினிமாவின் முதன்மை தைரிய நட்சத்திரம் நமது நடிகர் திலகம் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
30th July 2011, 03:32 AM
டியர் mr_karthik,

பாராட்டுக்கு நன்றி !

'நாவுக்கரசராக நடிகர் திலகத்தை நினைக்கும் போதெல்லாம் தங்களுக்கு தங்களின் தமிழாசிரியரும் நினைவில் வருகிறார்' என்று தாங்கள் எழுதியதைப் படித்தபோது எனக்கு அப்படியே மெய்சிலிர்த்துவிட்டது. எப்பேர்ப்பட்ட நற்றமிழாசிரியர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறார்கள்.

தங்களது பதிவு அறிவுபூர்வமானது மட்டுமல்ல, உணர்வுபூர்வமானதும் கூட !

டியர் ரங்கன் சார்,

தங்களின் மனம் திறந்த பாராட்டுக்களுக்கும், மனமார்ந்த வாழத்துக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் !

தங்களது குருநாதரை 'மகாலட்சுமி'யில் மெகா அமர்க்களக்கத்துடன் தரிசிக்கப் போவது ஒரு thrilling experience !

டியர் முரளி சார்,

மிக்க நன்றி !

பலருக்கும் 'மகாலட்சுமி'யில் 'மகர ஜோதி' என்றால், நமக்கு 'மயிலை'யில் 'இல்லற ஜோதி'.

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
30th July 2011, 03:37 AM
The Picture speaks:

http://www.thehindu.com/multimedia/dynamic/00737/29THSIVAJI_737657f.jpg (http://www.thehindu.com/arts/cinema/article2306392.ece)

RAGHAVENDRA
30th July 2011, 03:47 AM
ஆகஸ்டு 1954 திராவிட நாடு இதழில் வெளிவந்த விளம்பரம்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/ThulivishamAdDravidaNadufw.jpg

கல்கி 08.08.1954 இதழில் வெளிவந்த விமர்சனம்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/thulivishamkalkireviewp1fw.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/thulivishamkalkireviewp2fw.jpg

தினமணி கதிர் இதழில் வெளிவந்த விமர்சனம்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/thulivishamkadhirreviewp1fw.jpg

RAGHAVENDRA
30th July 2011, 04:06 AM
மற்ற எந்த நடிகர் கதாநாயகனாக வந்தாலும் சரி, கணேசன் தனது கம்பீரத் தோற்றத்தினாலும், கணீர் என்ற பேச்சினாலும் அந்தப் பாகத்தைத் 'திருடிக்' கொண்டு விடுகிறார்.

இந்த வரிகள் மேலே காணும் தினமணி கதிர் விமர்சனத்தில் இடம் பெற்றுள்ளன. இந்தப் பாராட்டை அவர் பெற்றது தனது 16வது திரைப்படத்திலேயே என்பது குறிப்பிடத் தக்கது.

கற்பக மன்னர் சூரியகாந்தனாக நடிகர் திலகமும் நாக நாட்டு சேனாதிபதி சந்திரனாக கே.ஆர்.ராமசாமியும் தர்பாரில் ஆற்றும் சொற்போர், இன்றைய கால கட்டத்தில் ஒவ்வொரு வார்த்தையும் பொருத்தமாக அமைந்துள்ளது. சில வரிகள் இன்றைய சூழ்நிலையை தத்ரூபமாக பிரதிபலிக்கின்றன. இக்காட்சியினைக் காணும் போது தாங்களே அதனை உணர்வீர்கள். தங்களுக்காக அக்காட்சியின் இணைப்பு.

கற்பக நாட்டு மன்னன் - நாக நாட்டு சேனாதிபதி சொற்போர் (http://www.mediafire.com/download.php?xkfvx4ffvgpw7pl)

இக்காட்சி கோப்பாகத் தரப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

அன்புடன்

pammalar
30th July 2011, 04:30 AM
டியர் ராகவேந்திரன் சார்,

"துளி விஷம்" build-up பிரமாதம் !

விளம்பரமும், விமர்சனங்களும், ஒளிக்காட்சியும் அருமை மட்டுமல்ல மிகமிக அரியவையும் கூட !

அடுத்தடுத்த பதிவுகளை அன்புடன் நோக்குங்கள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
30th July 2011, 04:38 AM
துளி விஷம்

[30.7.1954 - 30.7.2011]

கற்பக நாட்டு மன்னன் 'சூரிய'காந்தனுக்கு 58வது 'உதய'தினம்

பொக்கிஷப் புதையல்

பட விளம்பரம் : சுதேசமித்ரன் : 26.6.1954
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4199a.jpg


முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 28.7.1954
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4201a.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
30th July 2011, 04:53 AM
'துளி விஷம்' உண்ட திருநீலகண்டர்

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/Sivan1.jpg

"திருவிளையாடல்" புரிய வருகிறார்...

pammalar
30th July 2011, 06:23 AM
சிவாஜி பெருமானின் "திருவிளையாடல்"

[31.7.1965 - 31.7.2011] : 47வது ஆராதனை தினம்

லீலா வினோதங்கள்

'விரைவில் வருகிறது' விளம்பரம் : தினத்தந்தி : 10.2.1965
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4203a.jpg


முதல் வெளியீட்டு விளம்பரம் : வெண்திரை : ஆகஸ்ட் 1965
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4217a.jpg


முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 7.8.1965
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4210a.jpg


50வது நாள் : தினத்தந்தி : 18.9.1965
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4212a.jpg

லீலா வினோதங்கள் விரியும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
30th July 2011, 07:37 AM
சிவாஜி பெருமானின் "திருவிளையாடல்"

[31.7.1965 - 31.7.2011] : 47வது ஆராதனை தினம்

லீலா வினோதங்கள் விரிகின்றன...

75வது நாள் : The Hindu : 13.10.1965
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4214aa.jpg


100வது நாள் : தினத்தந்தி : 7.11.1965
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4205a.jpg


100வது நாள் : The Hindu : 7.11.1965
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4204a.jpg


25வது வெள்ளிவிழா வாரம் : தினத்தந்தி : 14.1.1966
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4218a.jpg

லீலா வினோதங்கள் விரியும்...

பக்தியுடன்,
பம்மலார்.

KCSHEKAR
30th July 2011, 10:35 AM
துளி விஷம், திருவிளையாடல் என்று பொக்கிஷ அணிவகுப்புகள் திக்குமுக்காடச் செய்கின்றன. நன்றி திரு. பம்மலார் & திரு.ராகவேந்திரன்.

abkhlabhi
30th July 2011, 10:44 AM
நடிகர் திலகத்தின் படங்களையும், அவரை பற்றியும் தினம் தினம் அள்ளி வழங்கும் தகவல் திலகமே, வெறும் நன்றி என்ற வார்த்தை உங்களை கேவல படுத்துவதாகும். அவர் நடிகர் திலகத்திற்கும், அவருடை ரசிகர்களுக்கும், செய்யும் சேவை பாராட்ட வார்த்தை இல்லை. தொடருட்டும் உங்கள் சேவை.

abkhlabhi
30th July 2011, 10:50 AM
Thiruvilayadal written by Balaji

A.P. Nagarajan is mostly famous as the director of various epics based on mythological characters or Hindu Gods that are often characterized by riveting performances, spellbinding music, and by virtue of them being based on well-known history/religion. Arguably the most popular of his movies, certainly the most entertaining, is Thiruvilayadal, which provides an account of Lord Shiva’s grace in helping his devotees through a series of episodes. Starting with ‘Sivaji’ Ganesan’s arresting performance, K.V. Mahadevan’s timeless music, and Nagesh’s legendary comedy to name a few, I would be amazed if there is an aspect that can be used to qualify film masterpieces absent here. The film has been telecasted on TV every now and then, but it has still lost none of its charm and remains one of the greatest movies in Tamil cinema history.
As the director kindly informs us through a background voice heard during the beginning, Lord Shiva’s benign and kindly nature toward his devotees has been widely written about in the form of various epics, ithihasas, and puranas. This film borrows some of the most prominent episodes from such writings and tries to recapture the same playful nature of the Lord on-screen, and is entirely successful in doing so. Throughout the course of these four episodes, which see Lord Shiva appear in various forms, the film is highly entertaining, while also conveying a variety of messages through each of them.
The film opens with an introduction for Lord Shiva (‘Sivaji’ Ganesan), followed by the fabled “wisdom-fruit” sequence. The ever-mischievous Naradha provides the God with what he calls a unique “wisdom-fruit.” The God, playing along with the former, hands it over to Goddess Parvathi (Savithri), who decides to test her two sons and give the winner the prize. The test is who can complete a round-trip around the world first. Lord Murugan takes his trusted peacock and “actually” completes the task, while Lord Ganesha completes a circle around his parents and equates it to completing a trip around the world, thereby winning the prize. Murugan gets angered on his return as he sees this as his parents favouring their first child, and abandons them without heeding calls from his mother or avvaiyar (K.B. Sundarambal) that this is also one of his father’s playful acts.
If there is a single downside in the entire film, it is that these initial sequences can be inordinately slow by any standard. The elaborate set-design and dances that accompany the Sambo Mahadeva… song which introduces Lord Shiva are good, but this sequence itself is quite long and drawn-out. And, three songs immediately follow the “wisdom-fruit” sequence, further slowing down everything to a degree where we want the actual episodes to start. However, once the “movie” itself kicks off, with Parvathi recounting Lord Shiva’s playfulness to a very furious Murugan, it never flags and keeps things moving at a decent pace.
The first episode will be the most instantly recognizable to even people who have not seen the movie. The King of the Pandya land, Shenbaga Pandyan (Muthuraman), announces a flattering amount of gold to anyone who can solve his puzzle relating to the scent emanating from a woman’s hair (in this case, his wife, played by Devika). Inspired by the prize amount, a poverty-stricken poet, Dharumi (Nagesh), does what any person in his situation with his level of talent would: pray to God – who as usual solves his troubles by appearing in humane form. The highlight of this episode (or the movie, for that matter) is of course the verbal duel between Sivaji and Nagesh which has become the stuff of legend, with many a modern movie paying homage to it in its own way. And the “Nettrikkan Thirappinum Kuttram Kuttrame” dialogue is probably one of the most famous quotes in Tamil cinema and popular culture. Notwithstanding the other episodes, the movie touches its apex inarguably in this sequence.


.....contd

abkhlabhi
30th July 2011, 10:51 AM
Thiruvilayadal - written by Balaji ..... contd.

The second and third episodes stand to be the weakest of the four, not because they are not entertaining (which they certainly are), but because they obviously lack the visual energy that pervades both the other episodes. The former sees Dakshan (Parvathi’s father) start a yaagam without inviting Shiva, which angers his daughter. Parvathi doesn’t heed Shiva’s calls and still visits her father requesting him to put an end to this madness. When it proves to be futile, she returns to her Lord, but the difference of opinion still remains. This is probably the only episode which doesn’t have any noteworthy aspect except, possibly, Lord Shiva’s “thaandavam” which serves the singular purpose of highlighting Sivaji’s weak dancing capabilities.
The third episode, in comparison, is definitely much stronger, and sees Parvathi forget her origins and be born as a fisherman chieftain’s daughter. Though it starts off slowly with another song, Sivaji’s reappearance as a fisherman provides some much-needed energy, and the episode itself concludes with an imaginatively picturized fight sequence in water, as Sivaji fights off and defeats a killer whale to win back Parvathi.
Finally, the fourth episode has Lord Shiva return back to Madurai, this time under the rule of Varaguna Pandyan. Hemanatha Bhagavathar (T.S. Balaiah), a carnatic singer of worldwide fame, has finally made his way to Madurai to sing in the King’s presence and prove his superiority once and for all. He poses a challenge to the King that if somebody from Madurai can defeat him, his voice and talent will be laid at the city’s feet and he will never sing again. However, if that person loses, then every man in the Pandya kingdom should henceforth refrain from singing. After everybody in the King’s court refuses to oblige, Baanapathrar (T.R. Mahalingam), who sings devotional compositions in the temple is chosen. The latter, realizing that he is no match in a straight battle with the famous out-of-town singer, prays to God to find a way out of this trouble. Of course, Lord Shiva appears as a woodcutter and rewards his devotee, while also teaching a lesson to Hemanathar.
Regardless of all the movie’s minor problems or for that matter its high points, it can be watched and re-watched any number of times just for ‘Sivaji’ Ganesan’s acting alone, whose radiant screen presence and majestic voice are aptly suited for such a role. Ever since its release, much has been written and said about this portrayal, so I would like to highlight my personal favourite sequence from the movie in order to demonstrate just how good a performance this is: The Paatum Naane, Baavamum Naane song.
Sivaji was one of the very few actors who could make us believe he was actually singing the song. Though T.M. Sounderarajan’s voice and its resemblance to Sivaji’s had a big say in this, the actor’s lip movements and genuine throbbing of the throat are the main reasons. The aforementioned sequence is the perfect example of both this fact and Sivaji’s acting talent. The twinkle in the eye as he gives a fleeting look at the room in which Hemanathar is staying when he sings “Paadum Unai Naan Paadavaithene,” or the rolling of the eyes accompanied by the inimitable smile when he utters “Naan Asainthal Asaiyum Agilam Ellame,” or even the ease with which his various forms handle the Veena, the Flute, and the Mridangam – all provide ample proof as to why he is arguably the greatest actor in Tamil cinema history and why this is decidedly one his best ever portrayals.
With such a commanding performance, the only other actors who make any sort of impact are Nagesh and Balaiah. As Dharumi, the former creates what is easily one of his most memorable on-screen characters. A variety of accolades has already been heaped on the role, but what I find most impressive about it is the consummate ease with which Nagesh accomplishes the seemingly impossible task of making us take our eyes of Sivaji and fixating them on Dharumi. A hard task in any of Sivaji’s roles, but to achieve it in this movie, and to a degree where we find ourselves incapable of removing our eyes off Dharumi, is proof enough of the late character actor/comedian’s greatness. Balaiah can generally be considered as a much underrated supporting actor who can leave a mark in any movie. As the egoistic singer who thinks the whole world is beneath his talent, he puts in a terrific shift, which injects a lot of energy to the movie, especially after the slower middle episodes.
With the exception of Sivaji, Savithri has the largest amount of screen time. However, this is definitely not one of the actress’ memorable performances, though she is quite suited and adequate for the role. (It has to be mentioned that this owes a great deal to Sivaji, with whom she shares much of the screen during the movie.) Director A.P. Nagarajan makes a cameo appearance as Nakkiran in the first episode and delivers the one critical dialogue with enough zest to firmly etch the role in our minds. Muthuraman, Devika, and Manorama all have minor appearances which further serves to the highlight the significance of the lack-of-ego argument I mentioned in my review of Saraswathi Sabatham.
As is a given in all of A.P. Nagarajan’s movies, the combination of K.V. Mahadevan’s music and Kannadasan’s lyrics stands him in good stead throughout, delivering a truly outstanding soundtrack. The standouts definitely are Paatum Naane Baavamum Naane…, Isai Thamizh Nee Seitha…, and Indroru Naal Podhuma…, all from the last episode. Of special note is the latter in which Balamuralikrishna’s voice and Balaiah’s expressions contribute effectively to craft an all-time great song. The other songs that have become very popular are Pazham Neeyappa… and Gnana Pazhathai Puzhindhu… from the first episode, which sing Murugan’s praise. Podhigai Malai… is also a very melodious number, while Sivaji has a lot of fun in Paarthal Pasumaram. The other songs work well within context of the movie, but are definitely not suited for casual listening on the Ipod.
Looking back at the history of Tamil cinema, few movies would come close to providing the same level of entertainment offered by this one. In a career that has seen him direct such movies as Kandan Karunai, Thillana Mohanambal, Thiruvarutchelvar, and Saraswathi Sabatham, just to name a few, this movie can be argued to be A.P. Nagarajan’s greatest movie. If not, then it is certainly close to the top. And, combined with what can be undeniably termed as a tour-de-force performance from Sivaji at the height of his craft, Thiruvilayadal is certainly one of Tamil cinema’s long standing masterpieces.

RAGHAVENDRA
30th July 2011, 11:02 AM
கல்கி 22.08.1965 தேதியிட்ட இதழில் வெளிவந்த விமர்சனம்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/ThiruvilaiyadalKalkiReviewfw.jpg

sankara1970
30th July 2011, 02:30 PM
sameebathil ithaya theivam kalakiya Raaja-Neethi-Sorkam combo DVD vangi parthen-Neethi athigam parthathillai-
what a movie and namma NT yin acting-

sankara1970
30th July 2011, 02:53 PM
ithu enna puthu pada releasa mathiri iruuke-rasika vellam-innikku Kowravam CD yil parka ippothe ready ahi villten

RAGHAVENDRA
30th July 2011, 04:10 PM
தொடர இருக்கும் அணி வகுப்புகளின் முன்னோட்டம்

ஆகஸ்டு திங்கள் - அதிர வைக்கும் பட்டியல் -

குங்குமம் சிவக்க மன்னவன் வந்தானடி என்று கொண்டாடத் துவங்கி என் ஆச ராசாவே என்று உச்சி முகர்ந்து முடிக்கும் திங்கள் ஆக்ஸ்ட். இம் மாதத்தில் அணிவகுப்பு, அம்மம்மா.. என்னென்ன படைப்பு....

தேதி, படத்தின் பெயர் (அடைப்புக்குறிக்குள் ஆண்டின் இலக்கம்) என்கின்ற வரிசையில்...


2 = குங்குமம் (1963), மன்னவன் வந்தானடி (1975)

3 = மர்ம வீரன் (1956)

5 – மக்கள ராஜ்ய (கன்னடம்) (1960)

8 = நிறை குடம் (1969) (சென்னையில் 09.08.1969)

10 = நான் வாழ வைப்பேன் (1979)

12 = குங்குமம் (1963), சுமங்கலி (1983), ஜீவன தீராலு (1977)

14 – மூன்று தெய்வங்கள் (1971), முதல் குரல் (1992), அக்னி புத்ருடு (1987)

15 – சாரங்கதரா (1958), ராமன் எத்தனை ராமனடி (1970), எழுதாத சட்டங்கள் (1984), முதல் மரியாதை (1985), ஒரு யாத்ரா மொழி (1997)

19 – மகாகவி காளிதாஸ் (1966)

21 – மரகதம் (1959), என் மகன் (1974)

22 – மாடி வீட்டு ஏழை (1981)

24 – மருத நாட்டு வீரன் (1961) (பொன விழா நிறைவு)

25 – சாணக்ய சந்திரகுப்தா (1977)

26 – கூண்டுக்கிளி (1954), தூக்குத் தூக்கி (1954), மங்கையர் திலகம் (1955), தவப் புதல்வன் (1972), தாயே உனக்காக (1966)

28 – கிருஷ்ணன் வந்தான் (1987), ஜல்லிக்கட்டு (1987), என் ஆச ராசாவே (1998)


அன்புடன்

abkhlabhi
30th July 2011, 04:54 PM
నటవిశ్వరూపం శివాజీగణేశన్* - NATAVISWARUPAM SIVAJI GANESAN

written by కుసుమకుమారి Published in Visahala Andhra.

తమిళనాడులో నటులు పూనకం పట్టినట్టుగా నటిస్తారని ఉత్తరాది సినీపరిశ్రమ చెప్పుకునేది.వారు అతి చిన్నరోల్*కూడా అతి పెద్దగానే ఏక్ట్*చేస్తారు. అందుకు కారణం 1950నుంచి 1980 వరకు 30ఏళ్లపాటు ఆటైపు నటీనటులే వచ్చారు. ఎవరిని చూసినా శృతిమించిన నటనతో రెచ్చిపోతుండేవారు. వారిలో అగ్రగణ్యుడు నడిగర తిలకగమ్* శివాజీగణేశన్*. ఆయనతో సిన్మాతీస్తే కథలేకపోయినా చిత్రంలో సరైన పాటలు మాటలు ఏవి లేకపోయినా ఆయనుంటేచాలు తమిళ ప్రేక్షకులు చూసితీరుతారనే నమ్మకం ఆయనతో తీసే నిర్మాతలకు ఉండేది. 80 దర్శకులు ఆయనతో చేసారు. వారిలో భీమ్*సింగ్*, ఏసి.త్రిలోక్*చందర్*, డి.యోగానంద్*, సేతు మాధవన్*, కె.విజయన్*, క్రిష్ణన్*పంజు వంటి వారు ఒక్కొక్కరు 20చిత్రాలు శివాజీతో చేసారు.

నటన అంటేప్రాణం. ఈతరహానటుడు ఏభాషలో లేరు. శివాజీ సిన్మా షఉటింగ్* జరుగుతున్నప్పుడు ఏకొంత విరామం లభించినా ఆయన ఆ పాత్రతోనే అవే హావభావాలతో తిరుగాడేవారు. పాలేరువేషమైతే లంచ్*లో నేలమీద కూర్చుని ఇంటి నుంచి వచ్చినకేరియర్* విప్పి పనివాడిలా గోడకు చేరగిలబడి ఆబగాతింటుంటే తోటినటులు ఆశ్చర్యపోయేవారు. తను ఈరోజు నటించే సీన్లకు ఇది ఉప యోగపడుతుంది అని చెప్పేవారు. కర్ణుడుగా చేస్తున్నప్పుడు ప్రశాంతగా, గంభీరంగా స్టూడియో లాన్స్*లో బిగదీసుకుని నడుస్తుండే వారు. దర్శకనిర్మాత బి.ఆర్*.పంతులు ఆశ్చర్యపోయేవారు. అది శివాజీకి వున్న నటపిచ్చి. దాంతో కెమెరా ముందు చెలరేగేవారు.
శ్రీశ్రీ వంటి మహాకవి చెప్పకనే చెప్పారు అయ్యా మీకునచ్చిననటుడు ఎవరు అని అడిగితే ప్రపంచ మహానటుడు శివాజీయే అని కుండబద్దలు కొట్టేవారు. తమిళనాడులో నేటికి శివాజీకి ఫస్ట్*మార్కు వస్తుంది. కుముదం అనే తమిళ వారపత్రిక ఒకసర్వేలో శివాజీకి 35శాతం, ఎమ్*జిఆర్* 30, రజనీ20, కమల్*15 శాతంగా ఫలితాలు వెలువడ్డాయి. అంటే శివాజీ నటనకు తమిళప్రజలు ఎంతగా ఆరాదిస్తున్నారో అర్దమ వుతుంది. అక్కడ నేటికి శివాజీని నటనపరంగా మెచ్చనివారులేరు.

శివాజీగణేశన్* విళ్లుపురంలో చిన్నయమండ్రాయర్*, రాజ మణి అమ్మయార్*లకు 1-10-1928లో జన్మిం చారు. అప్పటికే తండ్రి స్వాతంత్రపోరులో ఉన్నం దున జైలుకు తరలింపబడ్డారు. పదేళ్లప్రాయంలో శివాజీకి నటనపిచ్చి అంకురించింది. ఎక్కడ నాటకాలు వేసినా చూసి ఆడైలాగులు చెప్పడంతో తల్లి బాలగానసభ అనే నాటక కంపెనీలో చేర్పించింది. దాని నిర్వాహకుడు పొన్నుస్వామిపిళ్లే శివాజీలో నటన పటిమచూసి ఆశ్చర్యపోవడమే కాకుండా నాటకరంగాన్ని ఏలుతావు అని భుజంతట్టేవారు. అప్పటికి వీరపాండ్యకట్టబొమ్మన నాటకం వేయడానికి ఆంగ్లప్రభువులు అప్రకటిత నిషేధాన్ని విధించారు. దాన్ని కంబళా త్తాన్* కూత్తుపేరిట ప్రదర్శిస్తుండేవారు. దాన్ని ఎవరువేసినా చూసేవాడు. అలా శివాజీలో పూనకంతోకూడిన నటన చిరుత ప్రాయం నుంచే అలవడింది.

1952లో శివాజీ తమిళతెరమీద కన్పించాలనే తహ తహలోఉన్నప్పుడు తెలుగు నిర్మాత ఆదినారాయణరావు అంజలి తాము తీసిన పరదేశి చిత్రంలో ఒకవేషమిచ్చారు. అందుకే ఆయన ఆదంప తులకు ఎనలేని గౌరవమిచ్చేవారు.తర్వాత భక్తతుకారాం తీసినపుడు శివాజీ వేషం వేయమని అప్పటికే ఆయన స్టార్*డమ్*లో ఉన్నందున వేషం చిన్నదే ఎంత ఇవ్వాలో చెబితే ఇస్తామని నిర్మాతలు అడిగారు. నాకు తొలిచిత్ర అవకాశం కల్పించిన మీకు ఈచిత్రం ఉచితంగా చేస్తామని చేసారు. సెట్*లో అంజలి, ఆదినారాయణరావులవద్ద మంచి నీళ్లుకూడా తీసుకోకుండా నటించారు.

చిన్న తనంలో ఎక్కువగా శివాజీవేషం వేసినందునే ఆయ నకా పేరు వచ్చింది. చిన్నయ్యపిళ్ళై గణేశన్* జన్మనామం.ఇక ఆయన తొలితమిళచిత్రం పరాశక్తి 25 వారాలు నడిచింది. దానికి కరుణానిధి రచయిత ఈ ఇద్దరు కలిసి పలుచిత్రాలుచేసారు. ఇక ఆయన నటించే చిత్రాలలో 100చిత్రాలవరకు 25 వారాలు నడిచి లాభాలు తెచ్చినవిగా శివాజీ చిత్రమాలికలో నమోద య్యాయి. ఆయన తో సిన్మాఅంటే దర్శకనిర్మాతలకు,చిత్రం చూసే జనాలకు పండుగ కర్ణచిత్రంలో ఎన్*టిఆర్* సయి తం శివాజీని చూసి ముచ్చటపడ్డారు. రక్తసంబం దం,కలిసిఉంటేకలదుసుఖం,ఆత్మబందువు కొండవీటి సింహం చిత్రాలు ఎన్*టిఆర్*కు మంచి పేరు తెచ్చినవే అయినా అవి అంతకుముందు శివాజీతో నిర్మితం కావడంవలన నటనకు పరాకాష్ట కావడంతో ఎన్*టిఆర్*కు నటనపరంగా పేరురాలేదు. ఈసమస్య అక్కినేనికూడా ఎదుర్కొన్నారు. ధర్మదాత, నవరాత్రి చిత్రాలు అక్కినేనికి శివాజీకి మించిపోయి పేరురాలేదు. ఇలా శివాజీ నటనకు సరితూగడం కష్టమే అన్నంతగా ఆయన ఉండేవారు. ఎన్*టిఆర్* కొన్నిచిత్రాల్లో శివాజీని తలపింపచేస్తారు. మేజర్* చంద్రకాంత్*లో ఎన్టీఆర్* వీరపాండ్యకట్టబొమ్మన ఉరితీసే సన్నివేశంలో కన్పిస్తారు. అక్కడ శివాజీ అనుకరణతోనే సాగుతుంది. అంటే ఎన్*టిఆర్*కు శివాజీ నటన మీద అంతగురి ఉండేది. తాను స్వంతంగాతీసే చంఢశాసనుడు తమిళ్*లో శివాజీతో తీసారు. రెండుభాషల్లో చిత్రం ఫెయిల్* అయ్యింది. తెలుగు కంటే తమిళ్*లో ఒకింత మెరుగయ్యింది.
శివాజీ తమిళతెరపై నెంబర్* ఒన్* అయినా ఆయననటనలో పర్వతాకారంలో ఉన్నా ఆయన ఎందుకో రాజకీయంలో రాణించలేక పోయారు.ఎమ్*జిఆర్*తో తెరమీద పోటీ దీర్ఘకాలం సాగింది. అక్కడ కూడా ఎమ్*జిఆర్* ఫస్*్తప్లేస్*లో వుండేవారు. పైగా ఆయనవన్నీ మాస్* చిత్రాలే.ఇకరాజకీయాల్లో శివాజీ ఏమీసాధించలేకపోయారు. నటిస్తునే మరణించాలనే కోరికతో ఆయన చివరివరకు నటించారు. 1960లో కైరోలో బెస్ట్* యాక్టర్* అవార్డు తీసుకున్నారు. ఇక అవార్డులకు కొదవేలేదు. పద్మశ్రీ, పద్మభూషన్* వంటి వాటితో ప్రభుత్వం ఆయన్ని సత్కరించింది.
ఆమహానటుడు చెన్నరు అపోలోలో తన 73ఏట 21జూలై 2001లో చికిత్స పొందుతూ తుదిశ్వాస విడిచారు.

மேலே உள்ள கட்டுரையில் உள்ள சில para படித்தால் புரியம் / தெரியும் ----
நன்றி கடனின் மறு பெயர் நடிகர் திலகம்
நடிப்பு தன உயிர் மூச்சாக வாழ்ந்த நடிகர் திலகம்
செய்யும் தொழிலே தெய்வமாக வாழ்ந்த --- உதாரணமாக திகழ்ந்த
நடிகர் திலகம் ஒருவரே என்று

RAGHAVENDRA
30th July 2011, 04:54 PM
டியர் பம்மலார்,
தங்களுடைய திருவிளையாடல் விளம்பரப் படங்கள் SUPERB. 1965ல் பிறக்காதவர்கள் அந்தக் காலத்தை உணர்ந்திருப்பார்கள், தாங்கள் உட்பட. பாராட்டுக்கள்.

திருவிளையாடல் பாடல்/காட்சிகளின் அணிவகுப்பு

பாட்டும் நானே பாவமும் நானே - ஐந்து இசைக் கருவிகள் - ஐந்து பாத்திரங்கள் - ஐம்புலன்களையும் கட்டிப் போடும் அட்டகாசமான நடிப்பு, இசை, குரல், வரிகள் --

நடிகர் திலகம், கே.வி.மகாதேவன், டி.எம்.சௌந்தர்ராஜன், கண்ணதாசன் கூட்டணி - கேட்கவும் வேண்டுமோ - காலத்தால் அழியாத காவிய கானம்


http://www.youtube.com/watch?v=xg_hBWlR3h0

அன்புடன்

RAGHAVENDRA
30th July 2011, 04:58 PM
சங்கறுப்பது எங்கள் குலம், சங்கரனார்க்கு ஏது குலம்,
சங்கை அறுந்துண்டு வாழ்வோம், உம்போல் இரந்துண்டு வாழ்வதில்லை--

இந்தப் பாத்திரத்திற்கு வேறு நடிகரை அழைத்திருந்தாராம் ஏ.பி.என். அவர்கள். அந்த நடிகர் நடிகர் திலகத்தின் நாடகக் குழு உறுப்பினர். ஆனால் நடிகர் திலகம் இப்பாத்திரத்தின் கனத்தை உணர்ந்து இயக்குநரிடம் விடுத்த ஆலோசனை - ஐயா இப்பாத்திரத்தை தாங்களே ஏற்று நடிக்க வேண்டும். இயக்குநருக்கோ தயக்கம். இருந்தாலும் தயக்கத்தை உதறிவிட்டு தானே ஏற்று நடிக்க முன் வந்தார். நமக்கு காலத்தால் அழிக்க முடியாத சிறந்த காட்சி கிடைத்தது. இதோ காணுங்கள்...


http://www.youtube.com/watch?v=m-xLGALYZyk

RAGHAVENDRA
30th July 2011, 05:04 PM
பொன்னும் பொருளும் மூட்டை கட்டி போட்டு வெச்சாரு - இவரு
போன வருஷம் மழையை நம்பி வெத வெதச்சாரு
ஏட்டுக்கணக்கை மாத்தி மாத்தி எழுதி வெச்சாரு - ஈசன்
போட்ட கணக்கை மாத்தவில்லே போய் விழுந்தாரு ...

என்பது போன்ற கருத்தாழமிக்க வரிகளை கண்ணதாசன் புனைய, நெஞ்சைத் தொடும் ராகத்தை மெல்லிய மெட்டில் மகாதேவன் அமைக்க, சௌந்தர்ராஜன் ஜீவனுள்ள குரலில் பாட, இவர்களின் கடின உழைப்பை திரையில் அங்கீகரித்து உயிர் கொடுத்த நடிகர் திலகத்தின் சிறந்த நடிப்பில் மற்றொரு பாடல்

பாத்தா பசு மரம் படுத்து விட்டா நெடுமரம்


http://www.youtube.com/watch?v=3Fu0546rs1g

RAGHAVENDRA
30th July 2011, 05:09 PM
இதற்கு முன்பும் இதற்கு பின்பும் வராத வர முடியாத நடிகர்கள், காட்சி, உரையாடல், ஒளிப்பதிவு, வேகம்.....

நாகேஷ் என்றால் தருமி, என்று முத்திரை பதித்த படம்... வார்த்தைகளில் அடங்காத வர்ணிக்க முடியாத சிறப்புகளைக் கொண்ட காட்சி

திருவிளையாடல் என்றால் தருமியின் காட்சி இல்லாமலா...


http://www.youtube.com/watch?v=6JRjHh91Gx4

RAGHAVENDRA
30th July 2011, 05:13 PM
நீலச் சேலை கட்டிக் கொண்ட சமுத்திரப் பொண்ணு, மீனவனை எதிர்பார்ப்பது உண்மையோ பொ்ய்யோ தெரியாது, ஆனால் அநத மீனவன் நடையை நிச்சயம் எதிர்பார்த்திருப்பார்.


http://www.youtube.com/watch?v=aTDV10y_Eko&feature=relmfu

RAGHAVENDRA
30th July 2011, 05:24 PM
மாணவனுக்கு சந்தேகம் வந்தால் அறிவில் தெளிவு. கணவனுக்கு சந்தேகம் வந்தால் வாழ்வில் முறிவு. மன்னனுக்கு சந்தேகம் வந்தால்...
வந்தது....
சந்தேகம் தீர்ந்ததா..
தீர்ந்தது...
திருவிளையாடல் போல் அதற்கு முன்னும் பின்னும் ஒரு சிறந்த காவியம் வரப்போவதில்லை என்ற தீர்மானம் பிறந்தது...

அந்த சந்தேகம்... அதற்கான காரணம்...


http://www.youtube.com/watch?v=rA1cuzhcTfQ

RAGHAVENDRA
30th July 2011, 05:28 PM
டி.ஆர்.மகாலிங்கம் ஐயா,
இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை, நீ இருக்கையிலே நாங்கள் இருந்ததும் பெரும் சாதனை...


http://www.youtube.com/watch?v=HdhAu6fbeIA

RAGHAVENDRA
30th July 2011, 05:30 PM
எத்தனை ஆண்டுகள், எத்தனை கலைஞர்கள், எத்தனை உழைப்பு, இவற்றின் உருவமே திருவிளையாடல் படைப்பு... இதனைப் பற்றிக் கூற


http://www.youtube.com/watch?v=8BN5bdI0GY4

abkhlabhi
30th July 2011, 05:39 PM
Full movie - Good qulaity
http://www.bigflix.com/home/movies/thiruvilayadal/906

rangan_08
30th July 2011, 06:05 PM
Dear Murali sir, noted. Not sure whether to take part in Gowravakkondattam or to immerse in Mylai Jyothi, this Sunday eve.

Dear Pammalar & Raghavendra sir, as usual the info's, stills, links & trivias about Thuli visham & Thiruvilayadal is stunning. Hats off.

rangan_08
30th July 2011, 06:12 PM
While looking at the amazing pace in which our NT thread is moving on, i felt this.....

Majority of contribution for most of the threads in this hub comes from youngsters & tech savvy's whereas in our case, majority of contribution comes from seniors, which I'm sure is the pulse of this threads success. Now, that itself is an achievement in its own order, isn't it ??