PDA

View Full Version : Comedy Actors of Yester Years



RAGHAVENDRA
28th May 2010, 06:41 PM
தமிழ்த் திரைப்படங்கள் என்றாலே நகைச்சுவையில்லாமல் இல்லை என்கிற அளவிற்கு ஆண்டாண்டு காலமாய் பல தலைமுறையாய் வியாபித்து வருகிறது நகைச்சுவை நடிகர்களின் பங்கு. கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள் காலந் தொட்டு இன்றைய வடிவேலு வரை, மக்கள் நகைச்சுவையில் தான் தங்கள் கவலைகளை மறக்கின்றனர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. பல்வேறு பரிமாணங்கள் பல்வேறு காலகட்டங்கள் பல்வேறு நடிகர்கள் என கிட்டத்தட்ட 80 ஆண்டுகளாக வளர்ந்துள்ள தமிழ் சினிமாவின் வளர்ச்சியில் நகைச் சுவை நடிகர்களின் பங்கு முக்கியமானதாகும். ஏற்கெனவே நம் ஹப்பில் பல நகைச்சுவை நடிகர்களுக்கான திரிகள் உள்ளன. அவற்றைத் தவிர்த்தும் பொதுவாக வெவ்வேறு காலகட்டங்களில் பரிமளித்த இதர நகைச்சுவை நடிகர்களின் பங்களிப்பு பற்றி அலசவே இத்திரி உருவாக்கப் பட்டுள்ளது.

கலைவாணர் அவர்களின் காலத்திலேயே அவராலேயே பெரிதும் வியந்து ரசிக்கப் பட்ட பாராட்டப் பட்ட நகைச்சுவை நடிகர் டி.ஆர். ராமச்சந்திரன். சபாபதி திரைப்படம் மூலம் மிகப் பெரிய பிரபல்யம் அடைந்த அவரின் நடிப்பு அனைத்துத் தலைமுறையையும் கடந்து மெய் மறந்து சிரிக்க வைக்கும். ஆனால் அவருக்குள் இருந்த நடிப்புத்திறமை குணசித்திர வேடங்களிலும் கதாநாயக வேடங்களிலும் சிறந்த முறையில் வெளிப்பட்டது. உதாரணம் ராஜி என் கண்மணி, சாது மிரண்டால், போன்றவையாகும். அவருடைய நடிப்பினைப் பற்றி முதலில் அலசலாமே.

ராகவேந்திரன்

saradhaa_sn
15th September 2010, 07:28 PM
இந்த திரியில் அலச விரும்புவோர்க்கு வசதியாக நகைச்சுவை நடிகர்கள் பட்டியல் கீழே:

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
காளி என் ரத்தினம்
கொட்டாப்புளி ஜெயராமன்
சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன்
சாய்ராம்
டி.ஆர்.ராமச்சந்திரன்
ஏ.கருணாநிதி
'டணால்' கே.ஏ.தங்கவேலு
சந்திரபாபு
'தி கிரேட்' நாகேஷ்
தேங்காய் சீனிவாசன்
வெண்ணிற ஆடை மூர்த்தி
சோ
நீலு
எம்.ஆர்.ஆர்.வாசு
ஐ.எஸ்.ஆர்.
சுருளிராஜன்
'என்னத்தே' கன்னையா
ஜனகராஜ்
பசி நாராயணன்
கல்லாப்பெட்டி சிங்காரம்
உசிலைமணி
லூஸ் மோகன்
தயிர்வடை தேசிகன்
ஓமக்குச்சி நரசிம்மன்
எஸ்.எஸ்.சந்திரன்
எஸ்.வி.சேகர்
ஒய்.ஜி.மகேந்திரன்
'அண்ணன்' கவுண்டமணி
செந்தில்
மணிவண்ணன்
சார்லி
தாமு
பாலாஜி
கிரேஸி மோகன்
'சின்னக்கலைவாணர்' விவேக்
'வைகைப்புயல்' வடிவேலு
சிங்கமுத்து
மனோபாலா
சந்தானம்
கருணாஸ்
கஞ்சாகருப்பு

இவர்கள் போக கதாநாயகர்களான நடிகர்திலகம், மக்கள் திலகம், ரஜினி, கமல், சத்யராஜ், பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், பிரபு, கார்த்திக், விஜய், அஜித், ஜெயராம், மற்றும் வில்லன்களான எம்.ஆர்.ராதா, பாலையா, நம்பியார், அசோகன் போன்றவர்களும் நகைச்சுவையில் கலக்கியெடுக்கக் கூடியவர்களே.

ஆனால் நகைச்சுவை நடிகர்களில் இவ்வளவு பெரிய பட்டியலிட முடிந்த நமக்கு (இன்னும் கூட விடுப்பட்டவர் பலர்), நகைச்சுவை நடிகைகளில்
ஒரு மனோரமா,
ஒரு சச்சு,
ஒரு கோவை சரளா,
ஒரு ஆர்த்தி
என்பதோடு முடிந்து போகிறது. ஏன் அப்படி..?.

app_engine
15th September 2010, 07:48 PM
ஆனால் நகைச்சுவை நடிகர்களில் இவ்வளவு பெரிய பட்டியலிட முடிந்த நமக்கு (இன்னும் கூட விடுப்பட்டவர் பலர்), நகைச்சுவை நடிகைகளில்
ஒரு மனோரமா,
ஒரு சச்சு,
ஒரு கோவை சரளா,
ஒரு ஆர்த்தி
என்பதோடு முடிந்து போகிறது. ஏன் அப்படி..?.

ஆணாதிக்க சமுதாயம், வேறு என்ன சொல்ல? பெண்கள் அழகாய் வந்து போகவும், பயப்படவும், அழுது வடியவுமே பெரும்பாலும் தமிழ்ப்படங்களில் உபயோகப்பட்டிருக்கிறார்கள். சில சமயங்களில் "போராட்டம் / சீர்திருத்தவாதம்" போன்றத்துக்கும்.

அது என்னமோ புத்திசாலித்தனத்தோடு அவர்களைக்காட்ட சினிமாக்காரர்கள் அதிகம் விரும்பவில்லை போலிருக்கிறது :-(

இன்னொரு விதத்தில் பார்த்தால் நடிகைகளுக்கும் நகைச்சுவை செய்வதில் விருப்பமில்லையோ என்னவோ?

டி.ஏ.மதுரம் வேணுமானால் சேத்துக்கலாம் லிஸ்ட்டில்:-)

saradhaa_sn
16th September 2010, 04:20 PM
விடுபட்ட இன்னும் சிலர்...

வி.கே.ராமசாமி
பக்கோடா காதர்
'ஒருவிரல்' கிருஷ்ணாராவ்
வையாபுரி
மயில்சாமி

நகைச்சுவை நடிகைகளில்...

டி.பி.முத்துலட்சுமி
எம்.சரோஜா
'அம்முகுட்டி' புஷ்பமாலா
ரமாபிரமா
பிந்துகோஷ்


ஆணாதிக்க சமுதாயம், வேறு என்ன சொல்ல? பெண்கள் அழகாய் வந்து போகவும், பயப்படவும், அழுது வடியவுமே பெரும்பாலும் தமிழ்ப்படங்களில் உபயோகப்பட்டிருக்கிறார்கள். சில சமயங்களில் "போராட்டம் / சீர்திருத்தவாதம்" போன்றத்துக்கும்.

அது என்னமோ புத்திசாலித்தனத்தோடு அவர்களைக்காட்ட சினிமாக்காரர்கள் அதிகம் விரும்பவில்லை போலிருக்கிறது :-(

இன்னொரு விதத்தில் பார்த்தால் நடிகைகளுக்கும் நகைச்சுவை செய்வதில் விருப்பமில்லையோ என்னவோ?
எனக்கென்னமோ இதில் ஆணாதிக்கம் காரணம் என்பதை ஒப்புக்கொள்ள முடியவில்லை. பெண்களே உருவாக்கிய / இயக்கிய படங்களில் கூட புதிதாக யாரும் அறிமுகப்படுத்தப்படவில்லை.

அனேகமாக நீங்கள் சொன்ன கடைசிக்காரணம்தான் உண்மையெனப்படுகிறது. நகைச்சுவை செய்வதும் அதில் பெயரெடுப்பதும் ரொம்பக்கடினம். கவர்ச்சியாக நடித்து விட்டுப்போக அசாதாரண திறமையெல்லாம் தேவையில்லை. அதனால்தால் கவர்ச்சியாக நடிக்க கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் நடிகையர், நகைச்சுவைப் பக்கம் தலைகாட்ட முற்படுவதில்லை.

Sarna
16th September 2010, 04:25 PM
(வேறெந்த இந்திய மொழியிலும் இவ்வளவு நீண்ட நகைச்சுவை நடிகர் வரிசையைக் காண்பிக்க முடியாது. அது நம் தமிழ்ப்பட உலகுக்கே உரிய சிறப்பு).

:)

neenga kuduththa list ennaikkaiya vida adhigamaana nagaichuvai nadigargala orEy telungu padaththula paakkalaam :)

saradhaa_sn
16th September 2010, 04:31 PM
(வேறெந்த இந்திய மொழியிலும் இவ்வளவு நீண்ட நகைச்சுவை நடிகர் வரிசையைக் காண்பிக்க முடியாது. அது நம் தமிழ்ப்பட உலகுக்கே உரிய சிறப்பு).

:)

neenga kuduththa list ennaikkaiya vida adhigamaana nagaichuvai nadigargala orEy telungu padaththula paakkalaam :)
உண்மையாகவா..??.

அப்படீன்னா, என்னுடைய பதிவில் அந்த வரிகளை நீக்கி விடுகிறேன்.

rajeshkrv
17th November 2010, 10:13 PM
nagaichuvai nadigagigalil muthuletchumi, M.saroja, manorama chachu endru palar kodi katti parandhirundhaalum, ramaprabha pala nagaichuvai paathriangalai arumaiyaaga seidhirupppar

to list few

1. innocent sister in irulum oliyum.. brilliant performance (Goodmorning sister)

2. as a patient in utharavindri ulley vaa. she tortures Nagesh .fun fare indeed..

3. as mental patient in kaasethan kadavulada.. hillarious ..

she definitely was a very nice comediene..