PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan - Part 6



Pages : 1 2 3 4 5 [6]

KCSHEKAR
21st July 2010, 03:48 PM
Unavu Illamal Pasiyal Palanaal Irundadhundu. SIVAJI Unarvu Illamal Oru Nodi Irundhathillai....

In 9th Memorial Day - 21-07-2010

- Avarai Swasikkum

rangan_08
21st July 2010, 07:07 PM
இன்று மாலை ஹபிபுல்லா ரோட்டில் நடிகர் சங்க கட்டிடத்தின் அருகில் அமைந்திருக்கும் ஜெர்மன் ஹாலில் நடக்கும் நடிகர் திலகம் நினைவு நாள் கூட்டத்தில் நமது பெருமைக்குரிய ஹப்பரும் நடிகர் திலகம் டாட்.காம் இணையதள நிறுவனருமான ராகவேந்தர் சார் கௌரவிக்கப்படுகிறார்.

அன்புடன்

Congratulations Raghavendra sir. You deserve it.

rangan_08
21st July 2010, 07:12 PM
rangan : தலைவரே, நீங்க சாகா வரம் பெற்ற கலைஞனாச்சே, அதனால எப்பவும் எங்களோடதான் இருக்கீங்கன்னு நம்பறேன். ஆனா, அதையும் மீறீ உங்க நினைவு நாளான இன்னைக்கு உங்கள நெனச்சாலே துக்கம் தொண்டைய அடைக்குது.

Barrister Rajinikath : Silly. ஏண்டா feel பன்ற, படவா. அங்க என் படங்கள் ஒழுங்கா release ஆகலைன்னா சொல்லு, கண்ணனை விட்டு bail move பன்ன சொல்றேன். எத்தன வருஷம் ஆனா என்னடா? I will always be there with you.

Chinnadurai : Correct. இவங்களப் போல நல்லவங்களோட அன்பு இருந்தா, 100 வருஷம் என்ன, 1000 வருஷம் என்ன, அதுக்கும் மேலேயும் நான் உயிரோட இருப்பேன். இந்த வாரம் Shanthi theatre வாங்க, சும்மா ஜமாய்ச்சுடலாம்.

Gopal : Oh! உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா? நான் இன்னைக்குத் தான் Singapore ல இருந்து Chennai க்கு கப்பல்ல வந்து இறங்கினேன். பல வருஷங்களுக்குப் பிறகு என்னோட Shanthi theatre க்கு வரப்போறேன். எல்லாரும் அவசியம் வந்துடுங்க. வரும்போது மறக்காம எனக்கு பிடிச்ச பால்-feni கொண்டு வாங்க.

Rangan : கவலைப் படாதீங்க தலைவா, சும்மா ஜமாய்ச்சுடலாம்.

J.Radhakrishnan
21st July 2010, 09:55 PM
Dear Ragavendar sir,

Congratulation!!!!!

J.Radhakrishnan
21st July 2010, 09:57 PM
நடிகர் திலகமே,
என்றென்றும் உனை நினைத்திருப்பேன்
என்றாவது ஒரு நாள் மறந்திருப்பேன்
அன்று நான் -
இறந்திருப்பேன்
__

Dear Harish,

me too.........

Murali Srinivas
21st July 2010, 11:38 PM
மோகன்,கலக்கிடீங்க. புதிய பறவையில் சந்திப்போம்.

சாந்தி இப்போதே களை கட்ட ஆரம்பித்து விட்டது. புதிய பறவை போஸ்டர்கள் ஓட்டப்பட்டுவிட்டன. நினைவு நாளை முன்னிட்டு ஒட்டப்பட்ட போஸ்டர்களுடன் இவையும் சேர்ந்து கொள்ள பலரும் ஆர்வமாக தங்கள் செல்போனில் அதை பதிந்து கொண்டு போகிறார்கள். இவை அனைத்தும் அடங்கிய புகைப்பட பதிவுகளை இங்கே அனைவரும் கண்டு களித்திடும் வகையில் சுவாமி வழங்க இருக்கிறார்.

அன்புடன்

RAGHAVENDRA
21st July 2010, 11:59 PM
டியர் ராதாகிருஷ்ணன்,
தங்களின் பாராட்டுக்களுக்கு என் உளமார்ந்த நன்றி. எல்லாம் அவர் செயல்.

டியர் மோகன்,
தங்களுடைய interaction with NT மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. பாராட்டுக்கள். தங்கள் பாராட்டுக்களுக்கு என் நன்றிகள்.

இன்றைய உணர்வு பூர்வமான நிகழ்ச்சியைப் பற்றி விரைவில் பம்மலார் எழுதுவார். நானும் என் பங்கிற்கு என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் எழுத முயற்சிக்கிறேன்.

இடையில் புதிய பறவை பட வெளியீடு நம்மை மகிழ்ச்சியின் உச்சத்தில் ஆழ்த்த உள்ளது. சுவரொட்டிகள் மிகவும் நன்றாக உள்ளன. புதிய வடிவமைப்பில் அசத்துகின்றன. சென்னை சாந்தியில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளின் படங்களைக் கீழ்க்காணும் சுட்டியில் காணுங்கள்

http://sivajimoviesinchennai2010.blogspot.com/

அன்புடன்

ராகவேந்திரன்

RAGHAVENDRA
22nd July 2010, 12:17 AM
நடிகர் திலகத்தின் நினைவு நாளை முன்னிட்டு சென்னை நகரில் ஒட்டப் பட்டிருந்த சுவரொட்டிகளின் படங்கள் கீழ்க்காணும் சுட்டியில் காண்க

http://sivajiremembranceday.blogspot.com/

அன்புடன்

ராகவேந்திரன்

Murali Srinivas
22nd July 2010, 12:17 AM
இன்று இரவு 11 மணி முதல் 12 வரை தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பாடல்கள்

முத்துக்களோ கண்கள் - நெஞ்சிருக்கும் வரை

மன்னிக்க வேண்டுகிறேன் - இரு மலர்கள்

அமைதியான நதியினிலே - ஆண்டவன் கட்டளை

நான் பேச நினைப்பதெல்லாம் - பாலும் பழமும்

கொடி அசைந்ததும் - பார்த்தால் பசி தீரும்

நான் என்ன சொல்லி விட்டேன் - பலே பாண்டியா

பாவாடை தாவணியில் - நிச்சய தாம்பூலம்

நல்ல இடம் நீ வந்த இடம் - கலாட்டா கல்யாணம்

சந்திரனை காணாமல் அல்லி முகம் மலருமா - குலமகள் ராதை

தாமரை பூ குளத்திலே - முரடன் முத்து

சீவி முடித்து சிங்காரித்து - படிக்காத மேதை

மாதவி பொன் மயிலாள் - இரு மலர்கள்

புது பெண்ணின் மனதை தொட்டு போறவரே - பராசக்தி

அருமையாக தொகுத்து வழங்கிய இசையருவி சானலுக்கு நன்றிகள் பல.

அன்புடன்

Murali Srinivas
22nd July 2010, 12:20 AM
இன்றைய விழா இனிதே நடந்தது. கடந்த இரண்டு வருடங்களாக ஜூலை 21 அன்று விழாவாக இல்லாமல் நாடகம் மற்றும் சிலை திறப்பு நிகழ்வாக இருந்தது. இம்முறை இதை நினைவு நாள் நிகழ்ச்சியாக முன்னின்று நடத்தியவர்கள் துஷ்யந்த் மன்றத்தினர். விழா மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது. பேசியவர்கள் அனைவரும் உணர்வு பூர்வமாக பேசினார்கள். நமது ராகவேந்தர் சாரும் செல்வி கிரிஜாவும் நாஞ்சில் நகரத்தை சேர்ந்த ஜெகன் அவர்களும் விருது பெற்றனர். இன்றைய நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக பெப்ஸி அமைப்பின் தலைவர் வி.சி.குகநாதன் அவர்களும், இயக்குனர்கள் சங்க தலைவர் இயக்குனர் ஆர். கே.செல்வமணி அவர்களும், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் சிவசக்தி பாண்டியன் அவர்களும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் திரு பொன்னப்ப நாடார் அவர்களின் மகனும் ஜனதா தள் கட்சியில் நடிகர் திலகத்துடன் இணைந்து பணியாற்றிய பொன்.விஜயராகவனும் கலந்து கொண்டனர். இவர்களை தவிர மேடையிலே முன்னாள் வணிகவரி துறை அதிகாரியும் நடிகர் திலகத்துடன் பல வருடங்கள் நெருங்கி பழகியவருமான அருணன், திருச்சியை சேர்ந்த சந்திரசேகர், ராம்குமார், சிவாஜி மன்ற தலைவர் பூமிநாதன் ஆகியோரும் இருந்தனர்.

முதலில் நடிகர் திலகத்தின் உருவப்படம் மேடையில் திறந்து வைக்கப்பட்டது. பொன்.விஜயராகவன் அவர்கள் திறந்து வைக்க மேடையில் இருந்த அனைவரும் குத்து விளக்கின் ஒரொரு திரியை ஏற்றினார்கள். சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் சால்வை அணிவிக்கும் நிகழ்ச்சி முடிந்தவுடன் விருதுகள் வழங்கப்பட்டன. முதலில் செல்வி கிரிஜா அவர்களுக்கும், அடுத்ததாக 38 முறை ரத்த தானம் செய்த நாகர் கோவிலை சேர்ந்த ஜெகனுக்கும் பிறகு நமது ராகவேந்தர் சாருக்கும் வழங்கப்பட்டது. இதன் பிறகு மேடையில் இருந்தவர்கள் பேச அழைக்கப்பட்டனர்.

(தொடரும்)

அன்புடன்

pammalar
22nd July 2010, 03:12 AM
சிவாஜி விருது பெற்ற ரசிக முதல்வர் திரு.ராகவேந்திரன் சாருக்கும், பக்தை செல்வி கிரிஜா அவர்களுக்கும், சமூக ஆர்வலர் திரு.சரலூர் ஜெகன் அவர்களுக்கும் எண்ணிலடங்கா நல்வாழ்த்துக்கள்!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
22nd July 2010, 03:25 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 82

கே: சிவாஜி மறைவு? (பா.நாசர், தூத்துக்குடி)

ப: சிவாஜி மறையமாட்டார்!

(ஆதாரம் : ராணி, 5.8.2001)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
22nd July 2010, 04:29 AM
Nadigar Thilagam's Ninth Year of Remembrance : Poster Feature

http://pammalaar.webs.com/apps/photos/album?albumid=9566094

Regards,
Pammalar.

groucho070
22nd July 2010, 07:16 AM
rangan : தலைவரே, நீங்க சாகா வரம் பெற்ற கலைஞனாச்சே, அதனால எப்பவும் எங்களோடதான் இருக்கீங்கன்னு நம்பறேன். ஆனா, அதையும் மீறீ உங்க நினைவு நாளான இன்னைக்கு உங்கள நெனச்சாலே துக்கம் தொண்டைய அடைக்குது.

Barrister Rajinikath : Silly. ஏண்டா feel பன்ற, படவா. அங்க என் படங்கள் ஒழுங்கா release ஆகலைன்னா சொல்லு, கண்ணனை விட்டு bail move பன்ன சொல்றேன். எத்தன வருஷம் ஆனா என்னடா? I will always be there with you.

Chinnadurai : Correct. இவங்களப் போல நல்லவங்களோட அன்பு இருந்தா, 100 வருஷம் என்ன, 1000 வருஷம் என்ன, அதுக்கும் மேலேயும் நான் உயிரோட இருப்பேன். இந்த வாரம் Shanthi theatre வாங்க, சும்மா ஜமாய்ச்சுடலாம்.

Gopal : Oh! உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா? நான் இன்னைக்குத் தான் Singapore ல இருந்து Chennai க்கு கப்பல்ல வந்து இறங்கினேன். பல வருஷங்களுக்குப் பிறகு என்னோட Shanthi theatre க்கு வரப்போறேன். எல்லாரும் அவசியம் வந்துடுங்க. வரும்போது மறக்காம எனக்கு பிடிச்ச பால்-feni கொண்டு வாங்க.

Rangan : கவலைப் படாதீங்க தலைவா, சும்மா ஜமாய்ச்சுடலாம். :clap: :thumbsup:

RAGHAVENDRA
22nd July 2010, 07:41 AM
டியர் பம்மலார்,
தங்களின் வாழ்த்துக்களுக்கு என் உளமார்ந்த நன்றி. எனக்கு அளித்ததை விட தங்களுக்குத் தந்திருந்தால் நான் என் மகிழ்ச்சி அதிகமாயிருநதிருக்கும். அதுவும் இளைய தலைமுறையைச் சார்ந்த தங்களைப் போன்ற ரசிகர்கள் கௌரவிக்கப் படும் போது அது மேலும் சிறப்பைப் பெறும். கூடிய விரைவில் நிறைவேறும் என்று எதிர்பார்ப்போமாக.

புதிய பறவை படத்துக்கு டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப் படுகின்றன. காட்சி நேரங்கள் பிற்ப்கல் 3.00 மணி, மாலை 6.30 மற்றும் இரவு 10.00 மணி. ஞாயிறு மாலைக் காட்சி காண விரும்புவோர் முன் பதிவு செய்து விடல் நலம்.

தொலைபேசி எண்கள்
04428549086 | 04428549322 | 04443436363

அன்புடன்

ராகவேந்திரன்

RAGHAVENDRA
22nd July 2010, 07:50 AM
India glitz tribute to NT

http://www.indiaglitz.com/channels/tamil/article/58766.html

Pondicherry function report

http://www.newkerala.com/news2/fullnews-4695.html

Raghavendran

RAGHAVENDRA
22nd July 2010, 09:02 AM
நினைவு நாள் நிகழ்ச்சியின் நிழற்படங்களைக் காண இந்த சுட்டியை சொடுக்க்வும்.
போதிய வெளிச்சமின்மை காரணமாக படங்கள் துல்லியமாக இல்லை. மன்னிக்க வேண்டுகிறேன்.

http://sivajiremembranceday.blogspot.com/

அன்புடன்
ராகவேந்திரன்

goldstar
22nd July 2010, 09:14 AM
Thanks Raghavendra. I am interested to see 9th year of our god left us posters from Madurai fans. Please post it when ever you get it.

And one more questions, how old Mr. Swamy?. I thought, I am the youngest in this group. I am 38 years old.

Cheers,
Sathish

KCSHEKAR
22nd July 2010, 11:31 AM
Thanks Mr.Ragavendran & Pammalar for NT's 9th year Anniversary Poster & function coverages.

Congratulations Mr.Ragavendran for received the NT award.

Please click the link below for more news:

http://www.chennailivenews.com/Events/Events/20102221122228/Remembering-Sivaji-Ganesan.aspx

RAGHAVENDRA
22nd July 2010, 09:06 PM
Dear Sri Chandrasekhar,
Thank you for kind words of appreciation. There are even more deserving people who need recognition than me. Hope they too get their due in near future.
Regards,
Raghavendran

RAGHAVENDRA
22nd July 2010, 09:20 PM
Dear friends,
Today evening I went to Shanthi Theatre and the response it seems for the film Pudhiya Paravai, will be very very warm. Tickets are being sold like hot cakes and those who are eager to watch it on Sunday evening might well hurry up to book the tickets immediately. The seats are limited and fortunately there is a facility to book the tickets online.
http://www.shanticinemas.com
You can make use of it to avoid disappointment.
Show timings: 3.00 pm, 6.30 pm, 10.00 pm.

Raghavendran

Murali Srinivas
23rd July 2010, 12:46 AM
நடிகர் திலகம் நினைவு நாள் நிகழ்ச்சி - Part II

முதலில் சிறப்பு அழைப்பாளர்களைப் பற்றிய ஒரு அறிமுகம் என்ற முறையில் திரு.அருணன் பேசினார். முதல் முதலாக உயர்ந்த மனிதன் படத்தின் படப்பிடிப்பில் நடிகர் திலகத்தை சந்தித்த நாளை நினைவு கூர்ந்து அன்று முதல் அவரோடு இறுதி வரை நெருங்கி பழகியதையும் சொன்ன அருணன் கூடியிருந்த இளைய தலைமுறையினரைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நடிகர் திலகத்தைப் பற்றிய விழாக்கள் தொடர்ந்து நடத்த வேண்டிய அவசியத்தை சுட்டிக் காட்டினார். நடிகர் திலகத்தின் நூற்றாண்டு விழா வரும் போது தங்களைப் போன்றவர்கள் இருக்க மாட்டோம் என்றும் ஆகையால் இளைஞர்கள் இந்த பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார். தான் ஒரு அரசு ஊழியனாக வணிக வரி துறையில் வேலை பார்த்ததை குறிப்பிட்ட அவர் பாடியில் அமைந்துள்ள சிவசக்தி பாண்டியனின் சிவசக்தி தியேட்டரில், தான் சோதனை நடத்த போன நிகழ்வுகளை நகைச்சுவையாக குறிப்பிட்டார். நடிகர் திலகம் உரிமையோடு நண்பர்களை அழைக்கும் முறையை ரசித்துக் குறிப்பிட்ட அவர் பின்னர் சிறப்பு அழைப்பாளர்களைப் பற்றி ஒரு அறிமுகமும் கொடுத்து தன் உரையை நிறைவு செய்தார்.

அடுத்து எல்லோரையும் வரவேற்று பேசியது சிவாஜி மன்ற தலைவரான பூமிநாதன் அவர்கள். அவருக்கு பின் நிகழ்ச்சி அமைப்பாளரும் துஷ்யந்த் மன்ற தலைவருமான நாஞ்சில் இன்பா மைக் முன் வந்தார். தொடங்கும் போதே தனது தமிழ் ஆசானும் குருவுமான நடிகர் திலகத்திற்கு ஒரு மாணவன் செய்யும் மரியாதை என்று குறிப்பிட்ட இன்பா தங்கள் மாவட்டத்தின் பெருமையை அடிக்கடி முழங்கினார். தமிழ் பாடங்களில் மதிப்பெண் குறைத்து வாங்கியதையும் எப்படி நடிகர் திலகத்தின் தமிழ் வசனங்கள் தமிழ் மீதான காதலை வளர்த்தது என்பதையும் சுவைப் பட கூறிய இன்பா, பெருந்தலைவரை தங்களைப் போன்ற இளைஞர்கள் ஏற்றுக் கொண்டதற்கு முழு முதற் காரணம் சிவாஜிதான் என்றார். இதை சொல்லி விட்டு இன்பா அடுத்து குரல் உயர்த்தி ஒரு செய்தி சொன்னார். "எங்கள் தெருவில் ஏன் எங்கள் ஊரில் உள்ள வீடுகளில் நடிகர் திலகம் தவிர வேறு எந்த நடிகனின் புகைப்படமும் பார்க்க முடியாது. அது போல் தலைவர்களில் பெருந்தலைவரின் படம் மட்டுமே இருக்கும்" என்று சொன்னபோது அரங்கத்தில் அதிரடி கைதட்டல். உணர்ச்சி வசப்பட்ட நிலையில் பேசிய இன்பா தங்களைப் போன்ற இளைஞர்கள் சிவாஜியின் புகழை என்றும் பரப்புவோம் என கூறி நிறைவு செய்த போது அரங்கம் அவருக்கு உரத்த குரலில் மரியாதை செலுத்தியது.

அடுத்து வந்தவர் திருச்சியை சேர்ந்த வேங்கை சந்திரசேகர். திருச்சி சிவாஜி மன்றத்தை சேர்ந்த இவர் நடிகர் திலகத்துடன் நெருங்கி பழகும் வாய்ப்பு பெற்றவர். முதலில் அமைதியாக பேச ஆரம்பித்தவர் பின்னர் வேகம் எடுத்தார். திருச்சியில் கல்லூரியில் தான் தமிழ் மன்ற செயலாளராக இருந்ததையும் மன்ற விழாவிற்கு கண்ணதாசனை வரவழைத்ததையும் சொன்னார். கண்ணதாசன் அன்று கம்ப ராமாயணத்தைப் பற்றி பேசியதை நினைவு கூர்ந்த அவர்,கண்ணதாசன் சொன்ன ஒரு உவமையை பற்றி சொன்னார். அனுமன் சீதையை அசோகவனத்தில் சந்தித்து விட்டு ராமரிடம் காட்டுவதற்காக கணையாழியையும் பெற்று கொண்டு அவரிடம் சொல்வதற்கான செய்தியை கேட்கும் போது திருமண இரவில் ராமன் சீதையிடம் சொன்ன இனி சிந்தையிலும் பிறிதொரு மாதை [பெண்ணை] தொடேன் என்ற கம்பனின் வரிகள் கவிஞரின் மனதில் ஆழமாக பதிந்து போனதாகவும் அதை சந்தர்ப்பம் அமைந்த போது உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான் உள்ளத்தினாலும் தொட மாட்டேன் என்று எழுதி வைத்தாராம். எந்த நாயகன் பாடினால் இது எடுபடும் என்று பார்த்த போது நடிகர் திலகம் மட்டுமே கண்ணுக்கு தெரிந்தார் ஆகவேதான் அதை வசந்த மாளிகை படத்திற்கு பயன்படுத்திகொண்டதாகவும் கண்ணதாசன் குறிப்பிட்டதை திரு சந்திரசேகர் சொன்ன போது கூட்டம் அதை ஆவேசத்தோடு வரவேற்றது. இந்த கம்ப ராமாயண காட்சிகளை விவரிப்பதில் அதிக நேரம் எடுத்துக் கொண்ட சந்திரசேகர் அத்துடன் நன்றி கூறி விடை பெற்றார்.

(தொடரும்)

Sudarsh
23rd July 2010, 01:08 AM
நடிகர் திலகம் நினைவு நாள் நிகழ்ச்சி - Part II

முதலில் சிறப்பு அழைப்பாளர்களைப் பற்றிய ஒரு அறிமுகம் என்ற முறையில் திரு.அருணன் பேசினார். முதல் முதலாக உயர்ந்த மனிதன் படத்தின் படப்பிடிப்பில் நடிகர் திலகத்தை சந்தித்த நாளை நினைவு கூர்ந்து அன்று முதல் அவரோடு இறுதி வரை நெருங்கி பழகியதையும் சொன்ன அருணன் கூடியிருந்த இளைய தலைமுறையினரைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நடிகர் திலகத்தைப் பற்றிய விழாக்கள் தொடர்ந்து நடத்த வேண்டிய அவசியத்தை சுட்டிக் காட்டினார். நடிகர் திலகத்தின் நூற்றாண்டு விழா வரும் போது தங்களைப் போன்றவர்கள் இருக்க மாட்டோம் என்றும் ஆகையால் இளைஞர்கள் இந்த பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார். தான் ஒரு அரசு ஊழியனாக வணிக வரி துறையில் வேலை பார்த்ததை குறிப்பிட்ட அவர் பாடியில் அமைந்துள்ள சிவசக்தி பாண்டியனின் சிவசக்தி தியேட்டரில், தான் சோதனை நடத்த போன நிகழ்வுகளை நகைச்சுவையாக குறிப்பிட்டார். நடிகர் திலகம் உரிமையோடு நண்பர்களை அழைக்கும் முறையை ரசித்துக் குறிப்பிட்ட அவர் பின்னர் சிறப்பு அழைப்பாளர்களைப் பற்றி ஒரு அறிமுகமும் கொடுத்து தன் உரையை நிறைவு செய்தார்.

அடுத்து எல்லோரையும் வரவேற்று பேசியது சிவாஜி மன்ற தலைவரான பூமிநாதன் அவர்கள். அவருக்கு பின் நிகழ்ச்சி அமைப்பாளரும் துஷ்யந்த் மன்ற தலைவருமான நாஞ்சில் இன்பா மைக் முன் வந்தார். தொடங்கும் போதே தனது தமிழ் ஆசானும் குருவுமான நடிகர் திலகத்திற்கு ஒரு மாணவன் செய்யும் மரியாதை என்று குறிப்பிட்ட இன்பா தங்கள் மாவட்டத்தின் பெருமையை அடிக்கடி முழங்கினார். தமிழ் பாடங்களில் மதிப்பெண் குறைத்து வாங்கியதையும் எப்படி நடிகர் திலகத்தின் தமிழ் வசனங்கள் தமிழ் மீதான காதலை வளர்த்தது என்பதையும் சுவைப் பட கூறிய இன்பா, பெருந்தலைவரை தங்களைப் போன்ற இளைஞர்கள் ஏற்றுக் கொண்டதற்கு முழு முதற் காரணம் சிவாஜிதான் என்றார். இதை சொல்லி விட்டு இன்பா அடுத்து குரல் உயர்த்தி ஒரு செய்தி சொன்னார். "எங்கள் தெருவில் ஏன் எங்கள் ஊரில் உள்ள வீடுகளில் நடிகர் திலகம் தவிர வேறு எந்த நடிகனின் புகைப்படமும் பார்க்க முடியாது. அது போல் தலைவர்களில் பெருந்தலைவரின் படம் மட்டுமே இருக்கும்" என்று சொன்னபோது அரங்கத்தில் அதிரடி கைதட்டல். உணர்ச்சி வசப்பட்ட நிலையில் பேசிய இன்பா தங்களைப் போன்ற இளைஞர்கள் சிவாஜியின் புகழை என்றும் பரப்புவோம் என கூறி நிறைவு செய்த போது அரங்கம் அவருக்கு உரத்த குரலில் மரியாதை செலுத்தியது.

அடுத்து வந்தவர் திருச்சியை சேர்ந்த வேங்கை சந்திரசேகர். திருச்சி சிவாஜி மன்றத்தை சேர்ந்த இவர் நடிகர் திலகத்துடன் நெருங்கி பழகும் வாய்ப்பு பெற்றவர். முதலில் அமைதியாக பேச ஆரம்பித்தவர் பின்னர் வேகம் எடுத்தார். திருச்சியில் கல்லூரியில் தான் தமிழ் மன்ற செயலாளராக இருந்ததையும் மன்ற விழாவிற்கு கண்ணதாசனை வரவழைத்ததையும் சொன்னார். கண்ணதாசன் அன்று கம்ப ராமாயணத்தைப் பற்றி பேசியதை நினைவு கூர்ந்த அவர்,கண்ணதாசன் சொன்ன ஒரு உவமையை பற்றி சொன்னார். அனுமன் சீதையை அசோகவனத்தில் சந்தித்து விட்டு ராமரிடம் காட்டுவதற்காக கணையாழியையும் பெற்று கொண்டு அவரிடம் சொல்வதற்கான செய்தியை கேட்கும் போது திருமண இரவில் ராமன் சீதையிடம் சொன்ன இனி சிந்தையிலும் பிறிதொரு மாதை [பெண்ணை] தொடேன் என்ற கம்பனின் வரிகள் கவிஞரின் மனதில் ஆழமாக பதிந்து போனதாகவும் அதை சந்தர்ப்பம் அமைந்த போது உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான் உள்ளத்தினாலும் தொட மாட்டேன் என்று எழுதி வைத்தாராம். எந்த நாயகன் பாடினால் இது எடுபடும் என்று பார்த்த போது நடிகர் திலகம் மட்டுமே கண்ணுக்கு தெரிந்தார் ஆகவேதான் அதை வசந்த மாளிகை படத்திற்கு பயன்படுத்திகொண்டதாகவும் கண்ணதாசன் குறிப்பிட்டதை திரு சந்திரசேகர் சொன்ன போது கூட்டம் அதை ஆவேசத்தோடு வரவேற்றது. இந்த கம்ப ராமாயண காட்சிகளை விவரிப்பதில் அதிக நேரம் எடுத்துக் கொண்ட சந்திரசேகர் அத்துடன் நன்றி கூறி விடை பெற்றார்.

(தொடரும்)

wow what a long tamil article please translate to english :wink:

pammalar
23rd July 2010, 01:39 AM
டியர் பம்மலார்,
தங்களின் வாழ்த்துக்களுக்கு என் உளமார்ந்த நன்றி. எனக்கு அளித்ததை விட தங்களுக்குத் தந்திருந்தால் நான் என் மகிழ்ச்சி அதிகமாயிருநதிருக்கும். அதுவும் இளைய தலைமுறையைச் சார்ந்த தங்களைப் போன்ற ரசிகர்கள் கௌரவிக்கப் படும் போது அது மேலும் சிறப்பைப் பெறும். கூடிய விரைவில் நிறைவேறும் என்று எதிர்பார்ப்போமாக.

அன்புடன்

ராகவேந்திரன்

டியர் ராகவேந்திரன் சார்,

தங்களின் பாராட்டுக்கும், பெருந்தன்மைக்கும் தலைவணங்குகிறேன். விருது பெற்ற தாங்கள் மூவருமே மிகமிகத் தகுதியானவர்களே!

பணிவன்புடன்,
பம்மலார்.

pammalar
23rd July 2010, 02:32 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 83

கே: சிம்மக்குரலோன் சிவாஜி மறைவு குறித்து ஒரு அஞ்சலிக் கவிதை ப்ளீஸ்...? (த.சத்தியநாராயணன், அயன்புரம்)

ப: தகுதி 'பாராமல்'
பட்டமளித்துப் பட்டமளித்தே
தாழ்ந்த தமிழகமே!

'நடிகர் திலகம்' எனும்
நியாயமான பட்டத்தையாவது
இனி
எவருக்கும் வழங்காதிரு!

அதுவொன்றே
அந்த ஆத்தும நாயகனுக்கு
அனைவரும் செலுத்தக்கூடிய
கடைசி அஞ்சலி!

(ஆதாரம் : தமிழன் எக்ஸ்பிரஸ், 1-7 ஆகஸ்ட் 2001)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
23rd July 2010, 03:12 AM
Nadigar Thilagam's Ninth Year of Remembrance : Banners Galore

http://pammalaar.webs.com/apps/photos/album?albumid=9574016

Regards,
Pammalar.

pammalar
23rd July 2010, 04:40 AM
Pudhiya Paravai at Chennai Shanthi : Snapshots

http://chennaishanthitheatre.webs.com/apps/photos/album?albumid=9574555

Happy Viewing,
Pammalar.

NOV
23rd July 2010, 07:16 AM
Anyone here has seen Manidhanum Deivamaagalaam?

என்னடா தமிழ் குமரா என்னை நீ மறந்தாயோ
நான் பார்த்ததும் பொய்யென்றால் நீ வந்ததும் பொய்யென்றால்
பக்தியின் விலை என்னடா குமரா

groucho070
23rd July 2010, 07:23 AM
Nice film, NOV. You and I can sit and watch and argue till the cow comes home, in terms of ideologies discussed in it. The downside, to me, was the music. KKV just don't cut it :evil:

NOV
23rd July 2010, 07:32 AM
yeah, we shall argue, but not about the philosophy. To each his own is mine. ;)

but the music was very good!!! :evil:
and I like KKV :poke:

2 other songs I like from the film are kaavalukku vElundu and paal pongum paruvam :P

NOV
23rd July 2010, 07:43 AM
in fact Rakesh, theology vs atheism is brilliantly brought to a climax in this film.

its not like the atheist suffers a personal loss with the thiest coming to his rescue. in fact both atheist and theist go their separate ways in the end.
if you don't remember the ending, I'll be glad to post it for you.

sivaji vs sivaji, in another all time best :thumbsup:

groucho070
23rd July 2010, 07:54 AM
Of course, I love the ending. Long before the nakkals and the nayandis of current actors, NT did it in this film. But did you like the songs? I recall a western number, which thankfully was not massacred by KKV. Forgot what song that was...used to think it was by mAmA.

NOV
23rd July 2010, 07:58 AM
a post made three years ago....


This one is from my songbook

Name of the film: Manidhanum Deivamaagalaam
Sivaji Ganesan (iru vEdangal), Sowkar Janaki, Usha Nandhini, MRR Vasu, Sugumaari, etc
Production: Vijaya Vel Films
Lyrics: Kannadhasan
Music: Kunnakudi Vaidhyanathan
Direction: P. Madhavan

Songs:
1. paal pongum paruvam, adhil naan thangum idhayam, kanavum ninaivum manadhil malarum by TMS & PS

2. vaazhkkaiyE bOthai naadagam, vaalibam kaadhal by TMS & Group

3. vetrivEl vellumadaa vinai theerppaan vElanadaa (iraivan aalum ulagam endraal Ezhaigalai En padaiththaan) by SG & TMS

4. kaavalukku vElundu aadalukku mayilundu kOvilukku porulennadaa kumaraa nee irukkum idamthaanadaa - SG

5. ennadaa thamizh kumaraa, ennai nee marandhaayO by SG.

groucho070
23rd July 2010, 07:59 AM
Yeah, it's Pal Ponggum Paruvam. Hmm...not exactly western. Nice song, very KVM.

NOV
23rd July 2010, 08:19 AM
Rakesh, please go for this event and report if possible.
(I am stuck till 9.30pm :cry2: )


Date 23 July 2010

Time: 7.00 pm

Venue: Tan Sri KR Soma Auditorium, Wisma Tun Sambanthan, Kl

Ghief Guest of Honour: Y.Bhg Dato' AK NATHAN

Special Guest: Magalir Thilagam Annai Ratna Valli Vijeyaraj

Program: * Special Talk on Sivaji Ganesan by Rajendran - President, Tamil Writers Association, Malaysia
* Songs from Sivaji Ganesan's movies by local artistes.
* Thaeru Kuuthu by Veerasingam and Group
* Mini Drama on Veera Pandiya Kattabomman by Murugan & Group
* Q & A about Sivaji Gansesan ( attractive prizes to be won )
* Lucky Draw

High Tea shall be served

groucho070
23rd July 2010, 08:37 AM
Aiyo, NOV. Told you already, I don't like this group. They are mostly there to self-congratulate each other. I prefer this forum where there are wealths of information, reviews, and reports. Good enough for me.

HARISH2619
23rd July 2010, 02:05 PM
அடுத்த வருட விருது நம் முரளி சாருக்கும் பம்மல் சாருக்கும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை வேன்டிக்கொள்கிறேன்.

கர்நாடக சிவாஜி அறக்கட்டளை தலைவர் மா நடராஜ் தலைமையில் நடிகர்திலகத்தின் 9ம் ஆண்டு நினைவாஞ்சலி பெங்களூர் பிரகாஷ்நகரில் நடைப்பெற்றது.

கர்நாடக மாநில சிவாஜி பிரபு மன்றம் சார்பில் பெங்களூர் அக்கிபேட்டையிலுள்ள ஆதரவற்ற சிறுவர் விடுதியில் அன்னதானம் வழங்கி நடிகர்திலக்த்தின் 9ம் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது.இதில் மன்ற தலைவர் ரவி மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

பெங்களூர் பாஷியம்நகரில் சிவாஜி ரசிகர்மன்றம் சார்பில் 9ம் நினைவுநாள் கடைபிடிக்கப்பட்டது.

மேற்கன்ட அனைத்து நிகழ்ச்சிகளும் தினகரன் பெங்களூர் பதிப்பில் புகைப்படத்துடன் வெளியிடப்பட்டிருக்கிறது

Plum
23rd July 2010, 03:37 PM
rangan : தலைவரே, நீங்க சாகா வரம் பெற்ற கலைஞனாச்சே, அதனால எப்பவும் எங்களோடதான் இருக்கீங்கன்னு நம்பறேன். ஆனா, அதையும் மீறீ உங்க நினைவு நாளான இன்னைக்கு உங்கள நெனச்சாலே துக்கம் தொண்டைய அடைக்குது.

Barrister Rajinikath : Silly. ஏண்டா feel பன்ற, படவா. அங்க என் படங்கள் ஒழுங்கா release ஆகலைன்னா சொல்லு, கண்ணனை விட்டு bail move பன்ன சொல்றேன். எத்தன வருஷம் ஆனா என்னடா? I will always be there with you.

Chinnadurai : Correct. இவங்களப் போல நல்லவங்களோட அன்பு இருந்தா, 100 வருஷம் என்ன, 1000 வருஷம் என்ன, அதுக்கும் மேலேயும் நான் உயிரோட இருப்பேன். இந்த வாரம் Shanthi theatre வாங்க, சும்மா ஜமாய்ச்சுடலாம்.

Gopal : Oh! உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா? நான் இன்னைக்குத் தான் Singapore ல இருந்து Chennai க்கு கப்பல்ல வந்து இறங்கினேன். பல வருஷங்களுக்குப் பிறகு என்னோட Shanthi theatre க்கு வரப்போறேன். எல்லாரும் அவசியம் வந்துடுங்க. வரும்போது மறக்காம எனக்கு பிடிச்ச பால்-feni கொண்டு வாங்க.

Rangan : கவலைப் படாதீங்க தலைவா, சும்மா ஜமாய்ச்சுடலாம். :clap: :thumbsup:

:clap:
rangan - unga NT appreciation styleE thani!

HARISH2619
23rd July 2010, 04:32 PM
SO finally it's a dream come true event for all chennai NT fans.I wish you all a very happy and memorable pudhiya paravai gala evening on sunday.Murali sir,as I requested you earlier please try to record all the theatre happenings inside and outside on sunday evening by hiring a professiona videographer as per our plan.

how is the marketing for the film?

which was the last film of NT that got rereleased in shanthi?

pammalar
23rd July 2010, 04:45 PM
இன்று 23.7.2010 வெள்ளி முதல், சென்னை சாந்தி திரையரங்கில், தினசரி 3 காட்சிகளாக, புதுமைத் திலகத்தின் "புதிய பறவை".

அன்புடன்,
பம்மலார்.

P_R
23rd July 2010, 04:53 PM
துஷ்யந்த் மன்றத்தினர் :lol:

Thanks for the pointer Plum.
This one beats அகில உலக அம்சவிருத்தன் ரசிகர் மன்றம்

Plum
23rd July 2010, 04:59 PM
yOV, ennai mAtti vidAhdhEyum!

BTW, nothing beats Akash Rasigar Mandram, which basically consists of one banner outside the window of his lodge, one banner in the street corner of the lodge, and a stray dog occasionally spotted near the banner :-)

RAGHAVENDRA
23rd July 2010, 09:05 PM
சென்னை சாந்தியில் புதிய பறவை களை கட்டி விட்டது. அதை விட பழைய நண்பர்கள் அனைவரும் குழுமி விட்டனர். படம் புதிய பிரதி எடுக்கப் பட்டுள்ளது. பகல் காட்சியைப் பார்த்தேன். கிட்டத்தட்ட 300க்கும் மேல் பார்வையாளர்கள். ஒரு பக்கம் அளப்பரை பார்த்து ரசித்த நமக்கு இன்றைய பகல் காட்சி புதிய இனிமையான அனுபவம். 20 முதல் 80 வரை அனைத்து வயதினரையும் பார்க்க முடிந்தது. வந்திருந்த அனைவரும் தம்மை மறந்து முழுக்க முழுக்க லயித்து விட்டனர். அமைதி என்றால் அப்படியொரு அமைதி. அனைவரின் முகத்திலும் பரவசம். நடிகர் திலகத்தை திரையரங்கில், அதுவும் நம்முடைய சாந்தி திரையரங்கில் காண்பதென்றால் மகிழ்ச்சிக்கு அளவேது. அப்படியொரு இனிமையான நினைவுகளுடன் படத்தை அணு அணுவாக ரசித்துப் பார்த்தனர். ஒரு முதியவர், கிட்டத்தட்ட 80 வயது இருக்கும். 2.55 மணியளவில் அவசர அவசரமாக ஓடி வந்தவர், நேராக 80 ரூ டிக்கெட் எடுத்து உள்ளே போய் விட்டார். அவ்வளவு வேகம், அவ்வளவு ஈடுபாடு.

அந்த அமைதியையும் தாண்டி நம் மக்கள் சிலர் ஆர்ப்பாட்டத்திற்கு குறை வைக்கவில்லை.

அரங்கு முழுதும் பல பேனர்கள் அலங்கரிக்கின்றன. கிரிஜா அவர்களும் நம்முடைய பம்மலார் அவர்களும் வைத்துள்ள பட விவரங்கள் அனைவரையும் ஈர்ப்பதோடு பல நினைவுகளையும் அசை போட வைக்கின்றன.

5.30க்கு படம் விட்ட பின்னரும் படம் பார்த்த ரசிகர்கள் கலையாமல் அரங்கிலேயே நின்று தத்தம் நண்பர்களுடன் அளவளாவிக்கொண்டு (என்னையும் சேர்த்துத் தான் ) வீட்டுக்குப் போக மனமே இல்லாமல் நின்று பழைய நிகழ்வுகளை நினைவூட்டிக் கொண்டு ...

அந்த நாள் நினைவு மட்டுமல்ல .. நிகழ்வும் இன்று வந்தது ...

கிடைத்தற்கரிய இந்த வாய்ப்பு...

All Roads lead to Rome .... என்பதைப் போன்று அனைவரும் ஞாயிறு மாலைக் காட்சிக்காகக் காத்திருக்கின்றனர்.

நமக்குக் கிடைத்த தகவலின் படி, பெங்களூருவிலிருந்து 2 வேன்கள் மற்றும் ரயில்களில் என்று ரசிகர்கள் வருவதாக உள்ளனர். மற்றும் புதுச்சேரி, கடலூர் என வெளியூரிலிருந்தும் ரசிகர்கள் வருவதாக உள்ளனர் என்றும் கேள்வி.

இவையனைத்தையும் விட சற்று முன் கிடைத்த தகவல் உவகையூட்டுவதாக உள்ளது

ஆம். ஞாயிறு மாலைக் காட்சிக்கான முன்பதிவு டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுவிட்டதாக ஒரு செய்தி.

இதுவும் ஒரு விதத்தில் சாதனையே.

பழைய படத்திற்கு, அதுவும் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் பழமையான படத்திற்கு முன் பதிவில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விடுவதும் ஒரு விதத்தில் சாதனையாகக் கருதலாம்.

அன்புடன்

ராகவேந்திரன்

RAGHAVENDRA
24th July 2010, 12:23 AM
சென்னை சாந்தியில் புதிய பறவை வெளியானதையொட்டி அங்கு வைக்கப் பட்டிருக்கும் கட் அவுட் பேனர் காட்சிகளின் அடுத்த தொகுப்பைக் காண-

http://sivajimoviesinchennai2010.blogspot.com/

ராகவேந்திரன்

Murali Srinivas
24th July 2010, 01:15 AM
நடிகர் திலகம் நினைவு நாள் நிகழ்ச்சி - Part III

நடிகர் திலகம் சம்மந்தப்பட்ட ஒவ்வொரு விழாவிலும் கலந்துக் கொள்ளும் திரையுலக பிரபலங்களில் யாராவது ஒருவரேனும் நடிகர் திலகத்தின் இன்றைக்கும் தொடரும் ரசிகர் கூட்டத்தைப் பார்த்து வியக்காமல் இருந்ததில்லை. இம்முறை வியப்புகுள்ளானவர் இயக்குனர் ஆர்.கே. செல்வமணி. பேச தொடங்கும் போதே சிவாஜி சம்மந்தப்பட்ட விழாவில் தான் கலந்து கொள்வது முதல் முறை என்று குறிப்பிட்ட அவர் உடனே சொன்னது " நான் பல விழாக்களில் கலந்துக் கொண்டிருக்கிறேன். ஆட்கள் கைதட்டுவதை வைத்தே அது கூலிப் படையா இல்லை மனப்பூர்வமான வெளிப்பாடா என்பதை என்னால் உணர முடியும். இங்கே வரும் கைதட்டல், இங்கே வரும் வாழ்த்தொலிகள் அனைத்துமே உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து வருபவை என புரிந்து கொண்டேன். ஆட்சி இல்லாமல், அரசியல் இல்லாமல், இந்த உலகை விட்டு மறைந்து ஒன்பது வருடங்கள் ஆன பிறகும் இத்தனை பேர் இப்படி ஒரு பற்று வைத்திருக்கிறார்கள் என்றால், இந்த சென்னையில் மட்டுமல்ல தமிழகத்தின் பிற பகுதிகளிலும் இதே போல் இருக்கிறார்கள் என சொன்னால் அது ஒரு பிரமிப்பான விஷயம்." செல்வமணி பேச பேச அரங்கமே ஆர்ப்பரித்து ஆமோதித்தது. தான் சிவாஜியுடன் பழகிய காலங்கள் குறைவு என்று சொன்ன செல்வமணி ஜல்லிக்கட்டு திரைப்படத்திற்கு மணிவண்ணனிடம் உதவியாளாராக பணி புரிந்ததை நினைவு கூர்ந்தார். கர்நாடகத்தில் உள்ள குதிரமுக் என்ற ஊரில் வெளிப்புற படப்பிடிப்பு நடந்த போது நிகழ்ந்தவற்றை பகிர்ந்து கொண்டார். வெளியில் மிக தோழமையுடன் காட்சியளிக்கும் நடிகர் திலகம் ஷாட் படமாக்கப்படும் போது யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டார் என்பதை சொன்னார். அதற்கு உதாரணமாக சத்யராஜுடன் இணைந்து நடிக்கும் காட்சியில் மானிட்டரின் போது செய்யாததை,ஷாட் படமாக்கும் போது சத்யராஜ் செய்த போது உடனே ஷாட்டை நிறுத்தி விட்டு தானும் அதற்கு ஒரு ரியாக்க்ஷன் கொடுத்ததையும், கடைசி நாள் படப்பிடிப்பில் மேக்-அப்பை கலைத்த பிறகும் சத்யராஜின் ஒரு க்ளோஸ்-அப் ஷாட்டிற்கு கவுன்ட்டர் ரியாக்க்ஷன் கொடுப்பதற்காக மீண்டும் மேக்-அப் போட்டுக் கொண்டு வந்து நடித்ததையும் அவர் விவரித்த போது, கூட்டத்தினர் அதை ரசித்து வரவேற்றனர். எல்லோரும் சொல்லும் நடிகர் திலகத்தின் நேரந் தவறாமையையும் அவர் குறிப்பிட்டு காலை 6 மணி ஷூட்டிங்கிற்கு 4 மணிக்கே ரெடியாக இருந்ததையும் சொன்ன செல்வமணி மீண்டும் இது போல ஒரு நடிகர் திலகத்தின் விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என கூறி விடை பெற்றார்.

திரைப்பட உலகை சேர்ந்தவர்களே பேசிக் கொண்டிருந்த போது அரசியல் உலகை சேர்ந்த பொன்.விஜயராகவன் அடுத்து பேச வந்தார். தன் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் இன்பா தன்னை அழைத்தாரோ என்று எண்ணியதாகவும் பிறகு நடிகர் திலகத்துடன் அரசியல் செய்தவன் என்பதால் அழைத்திருப்பார் என நினைத்ததையும் சொன்ன அவர், நடிகர் திலகத்திற்காக தான் அடி வாங்கியவன் என்ற முறையிலும் தனக்கு கலந்து கொள்ள உரிமை இருக்கிறது என்றார். அந்த நாளையும் நினைவு கூர்ந்த அவர் 1968-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ந் தேதி மதிய காட்சிக்கு கல்லூரியை கட் செய்து விட்டு வெலிங்டன் அரங்கில் உயர்ந்த மனிதன் படத்திற்கு போனதை சொன்னார். அன்று அவர் படித்துக் கொண்டிருந்த நந்தனம் கலைக் கல்லூரிக்கும் நியூ கல்லூரி மாணவர்களுக்கும் மிகப் பெரிய மோதல் ஏற்பட்டு மாணவர்களில் 150 பேருக்கும் காவல் துறையை சேர்ந்த 150 பேருக்கும் காயம் ஏற்பட்டு மவுண்ட் ரோடு ஏரியா-வே போர்க்களம் போல் ஆயிருக்கிறது.ஆனால் இவர் இது ஒன்றும் தெரியாமல் படம் முடிந்தவுடன் அப்போது சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவராக இருந்த தன் தந்தையை காண எம்.எல்.ஏ ஹாஸ்டல்-க்கு போன போது பதைபதைப்புடன் இருந்த அவர் தந்தையார் எங்கே போயிருந்த என்று கேட்க அதற்கு கல்லூரி என்று பதில் சொன்ன மகனிடம் இன்று எதாவது விசேஷம் உண்டா என்று தந்தை கேட்க ஒன்றுமில்லையே என்று பதில் சொன்ன தனயனுக்கு பளார் என்று விழுந்திருக்கிறது அறை. பிறகு உயர்ந்த மனிதன் போனதை தந்தையிடம் கூறியிருக்கிறார்.

மேலும் இதை சொல்லி விட்டு அருமையான ஒரு தகவலை சொன்னார் விஜயராகவன். 1953-லியே நடிகர் திலகத்திற்கு முதன் முதலாக ரசிகர் மன்றம் அமைத்தது குமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில்தான் என்பதை பெருமையுடன் குறிப்பிட்ட அவர் அதுவும் திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு கிழே இருந்த நேரத்தில் என்றார். மேலும் நேசமணி சிலையை நடிகர் திலகம் சொந்த செலவில் நாகர்கோவிலில் வைத்ததையும் பிறகு அவர் மறைந்த போது காலியான இடத்திற்கு விருதுநகர் தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்த பெருந்தலைவரை நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று முதலில் தீர்மானம் நிறைவேற்றியது நாகர்கோவிலில் உள்ள சிவாஜி மன்றம்தான் என்பதையும் நன்றியுடன் நினைவு கூர்ந்தார். சோ ஒரு முறை நடிகர் திலகத்திடம் படமாக்கப்பட்ட காட்சியில் ஓவர் ஆக்டிங் என்று சொல்ல,தனியே அழைத்துக் கொண்டு போய் 5.6 விதங்களில் நடித்துக் காண்பித்த நிகழ்ச்சியையும் அவர் குறிப்பிட தவறவில்லை.

90-களில் ஜனதா தள கட்சியில் நடிகர் திலகத்துடன் இணைந்து பணியாற்றியதையும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட அவர் சிவாஜி ரசிகர்கள் என்பது ஒரு குடும்பம் என்றார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாஞ்சில் நகரில் பிரபு மன்ற சார்பில் பெருந்தலைவரின் சிலை வைக்கப்பட்டதையும் அதை அகற்ற காவல் துறை முயற்சி எடுத்ததையும் அதன் காரணமாக இரண்டு மூன்று நாட்கள் குமரி மாவட்டமே தமிழகத்திலிருந்து துண்டிக்கப்பட்டது போல இருந்ததையும் அவர் குறிப்பிட தவறவில்லை. கூடியிருந்த அனைவரும் மணி மண்டபம் பற்றி குரல் கொடுக்க, அதுவும் வேண்டும் அதற்கு முன்னால் அரசு சார்பில் வைக்கப்பட்டிருக்கும் சிவாஜி சிலைக்கு பிறந்த நாள் அன்றும் நினைவு நாள் அன்றும் மரியாதை செய்யப்பட வேண்டும் என்பதை ஆணித்தரமாக அரசிடம் கோரிக்கை வைப்போம் என்று அவர் உரையை நிறைவு செய்த போது. அரங்கம் மீண்டும் ஒரே சுரத்தில் வரவேற்றது.

(தொடரும்)

HonestRaj
24th July 2010, 01:22 AM
சென்னை சாந்தியில் புதிய பறவை வெளியானதையொட்டி அங்கு வைக்கப் பட்டிருக்கும் கட் அவுட் பேனர் காட்சிகளின் அடுத்த தொகுப்பைக் காண-

http://sivajimoviesinchennai2010.blogspot.com/

ராகவேந்திரன்

who is Dhadhamirasi?

Director of Pudhiya Paravai.... has he directed any other films :?

pammalar
24th July 2010, 02:49 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 84

கே: 'புதிய பறவை'யை வெளியிட்ட சிவாஜியின் அடுத்த திட்டம் என்ன? (வி.செல்வராஜா, காரைத்தீவு, இலங்கை)

ப: அதையும் மிஞ்சும் வகையில், ஒரு படம் தயாரித்து வெளியிட வேண்டும் என்பது தான்.

(ஆதாரம் : பேசும் படம், ஜனவரி 1965)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
24th July 2010, 04:23 AM
சிவாஜி பிலிம்ஸ் "புதிய பறவை"

புதுமைத் திலகத்தின் 98வது திரைக்காவியம்; 4வது வண்ணச் சித்திரம்; முதல் சமூக வண்ணப்படம்

வெளியான தேதி : 12.9.1964 (சனிக்கிழமை)

100 நாட்கள் மற்றும் 50 நாட்களைக் கடந்த திரையரங்குகள் : 10

100 நாட்களைக் கடந்த அரங்கு : 1

1. சென்னை - பாரகன் (945 இருக்கைகள்) - 132 நாட்கள்

50 நாட்களைக் கடந்த அரங்குகள் : 9

2. சென்னை - ஸ்ரீகிருஷ்ணா (1198 இருக்கைகள்) - 76 நாட்கள்

3. சென்னை - சயானி (842 இருக்கைகள்) - 76 நாட்கள்

4. மதுரை - சிந்தாமணி (1560 இருக்கைகள்) - 83 நாட்கள்

5. சேலம் - பேலஸ் (1222 இருக்கைகள்) - 76 நாட்கள்

6. திருச்சி - ராஜா (728 இருக்கைகள்) - 52 நாட்கள்

7. கோவை - ராஜா (1423 இருக்கைகள்) - 52 நாட்கள்

8. நெல்லை - சென்ட்ரல் (1405 இருக்கைகள்) - 52 நாட்கள்

9. நாகர்கோவில் - தங்கம் (960 இருக்கைகள்) - 52 நாட்கள்

10. தூத்துக்குடி - ஜோஸஃப் (1263 இருக்கைகள்) - 56 நாட்கள்

குறிப்பு:
1. நெல்லை சென்ட்ரல் திரையரங்க வரலாற்றிலேயே 50 நாட்களைக் கடந்த முதல் திரைப்படம்.

2. முதல் வெளியீட்டில், சென்னை மற்றும் தென்னகமெங்கும், சற்றேறக்குறைய முப்பதுக்கும் மேற்பட்ட அரங்குகளில் திரையிடப்பட்ட இக்காவியம், 9 அரங்குகளில் 50 நாட்களைக் கடந்தும், 1 அரங்கில் 100 நாட்களுக்கு மேலும் ஓடியது சிறந்ததொரு சாதனை.

3. "புதிய பறவை" முதல் வெளியீட்டில், நகரங்கள் அளவில் (ஏ சென்டர்களில்) சிறந்த வரவேற்பையும், பேரூர் மற்றும் சிற்றூர் அளவில் (பி & சி சென்டர்களில்) சராசரி வரவேற்பையும் பெற்று, நல்லதொரு வெற்றிப் படமாகத் திகழ்ந்தது.

4. தீபாவளித் திருநாளான 3.11.1964 அன்று, நடிகர் திலகத்தின் 99வது திரைக்காவியமான 'முரடன் முத்து'வும், 100வது திரைக்காவியமான 'நவராத்திரி'யும் வெளியானதால், இந்த இரண்டு காவியங்களுக்காக, நன்றாக ஓடிக் கொண்டிருந்த "புதிய பறவை"யை எடுக்க வேண்டிய தர்மசங்கட நிலை ஏற்பட்டது.

5. மறுவெளியீடுகளைப் பொறுத்தவரை, இக்காவியம், ஏ, பி, சி என அனைத்து சென்டர்களிலும் வரலாறு படைத்திருக்கிறது; இன்றளவும் படைத்துக் கொண்டிருக்கிறது.

6. மேலும், மறுவெளியீடுகளில், சென்னை மாநகரைப் பொறுத்தமட்டில், மக்கள் திலகத்தின் 'உலகம் சுற்றும் வாலிபன்', நடிகர் திலகத்தின் 'வசந்த மாளிகை' திரைக்காவியங்களுக்கு அடுத்தபடியாக அதிக ஏ/சி திரையரங்குகளில் திரையிடப்பட்ட காவியம், "புதிய பறவை".

சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு நிரந்தர சக்கரவர்த்தி சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
24th July 2010, 01:47 PM
சென்னை சாந்தியில் புதிய பறவை வெளியானதையொட்டி அங்கு வைக்கப் பட்டிருக்கும் கட் அவுட் பேனர் காட்சிகளின் அடுத்த தொகுப்பைக் காண-

http://sivajimoviesinchennai2010.blogspot.com/

ராகவேந்திரன்

who is Dhadhamirasi?

Director of Pudhiya Paravai.... has he directed any other films :?

Dada Mirasi is one of the fine directors of the tinsel world. He has directed three films of Nadigar Thilagam.

1. Raththath Thilagam - 14.9.1963 - Ran for 81 days

2. Pudhiya Paravai - 12.9.1964 - Ran for 132 days

3. Moondru Deivangal - 14.8.1971 - Ran for 83 days

Each one is a CLASSIC in its own right.

With regard to Box-Office, all the three were SUCCESSFUL FILMS.

Regards,
Pammalar.

NOV
24th July 2010, 05:29 PM
NANDRI NANDRI NANDRI !
------------ --------- --------- --------- ----

Dear Friends.

On behalf of the Organizing Committee of the 9th Sivaji Ganesan Memorial function held on 23 July. I wish to express my heartiest thanks and appreciation for the overwhelming support given by all of u for the event's success. The auditorium was in full capacity and dozens of them had to sit on the floor. Even though it was a simple function it was well received by the public.

This showed the great love and affection the Indian community have for this ICON. The function was a great success due to all u people and well wishers. Please continue to extend ur full support to all our future cultural based programs of this Society.

Once again THANKS.

Regards

Esshvara Lingam
SIVAJI GANESAN CULTURAL SOCIETY MALAYSIA

NOV
24th July 2010, 05:30 PM
LOOK FORWARD
------------ --------- -----


1. 73rd Birthday Celebration of Nadigar Thilagam SIVAJI GANESAN on 10 October,
2010, KL ( Venue to be in a bigger auditorium this time and to be announced later )

2. Book Launch: "AN AUTOBIOGRAPHY OF AN ACTOR - Sivaji
Ganesan" ( English Edition) published by SIVAJI - PRAHBU TRUST, Chennai.
This is a Fund raising event. Only 100 prints available. Date and venue to be announced
later.

pammalar
24th July 2010, 07:18 PM
டியர் சந்திரசேகரன் சார்,

தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி!

டியர் முரளி சார்,

சென்னை தியாகராய நகர் ஜெர்மன் ஹாலில், 21.7.2010 புதனன்று மாலை 6:30 முதல் இரவு 8:30 வரை, அகில இந்திய சிவாஜி, பிரபு, துஷ்யந்த் மன்றங்கள் இணைந்து நடத்திய நமது நடிகர் திலகத்தின் 9வது நினைவு நாள் நிகழ்ச்சியின் பதிவுகள் மிக மிக அருமை. நிகழ்ச்சியை மீண்டும் ஒரு முறை பார்க்கின்ற பிரமிப்பு. நிகழ்ச்சியின் பதிவுகள் களை கட்டியுள்ளன. தொடரட்டும் தங்களின் திருப்பணி. தங்களுக்கு எனது நன்றி கலந்த பாராட்டுக்கள்!

டியர் நௌ சார்,

மலேஷியாவில் நடைபெற்ற நடிப்புலக சக்கரவர்த்தியின் 9வது நினைவு நாள் நிகழ்ச்சியின் தகவல்களுக்கு பற்பல நன்றிகள்! இனி நடைபெறப் போகும் அடுத்தடுத்த சிவாஜி விழாக்களுக்கும் இதயபூர்வமான வாழ்த்துக்கள்!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
24th July 2010, 09:31 PM
அடுத்த வருட விருது நம் முரளி சாருக்கும் பம்மல் சாருக்கும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை வேன்டிக்கொள்கிறேன்.


டியர் செந்தில் சார்,

தங்களின் பெருந்தன்மையான பாராட்டுக்கு எமது இரு கரம் கூப்பிய, சிரம் தாழ்த்திய நன்றிகள்!

பெங்களூரில் நடைபெற்ற நடிகர் திலகத்தின் நினைவு நாள் நிகழ்ச்சிகள் குறித்த தகவல்களுக்கு ஸ்பெஷல் நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
24th July 2010, 10:38 PM
how is the marketing for the film?

which was the last film of NT that got rereleased in shanthi?

டியர் செந்தில் சார்,

சென்னை சாந்தியில், நடிகர் திலகத்தின் மறைவுக்குப் பின், அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, 3.8.2001 வெள்ளி முதல் 16.8.2001 வியாழன் வரை, 2 வாரங்கள் / 14 நாட்கள், தினசரி 3 காட்சிகளாக, "வீரபாண்டிய கட்டபொம்மன்" திரையிடப்பட்டு அமோக வெற்றி பெற்றது. பின்னர், 17.8.2001 வெள்ளி முதல் 21.8.2001 செவ்வாய் வரை, 5 நாட்களுக்கு மட்டும், தினசரி 3 காட்சிகளாக, "கர்ணன்" திரையிடப்பட்டு சிறந்த வெற்றி கண்டது. 22.8.2001 புதன் முதல் ஏற்கனவே ஒரு திரைப்படம் புக் செய்யப்பட்டிருந்ததால், "கர்ணன்" 5 நாட்கள் மட்டும் ஓடியது.

அதற்குப்பின் (கிட்டத்தட்ட 9 வருடங்களில்) தற்பொழுது தான், சாந்தியில் சிவாஜி படம் (புதிய பறவை) திரையிடப்பட்டிருக்கிறது.

மார்க்கெடிங்கைப் பொறுத்தவரை, "புதிய பறவை" படத்திற்கான சுவரொட்டிகள் (போஸ்டர்கள்), பல டிஸைன்களில், சென்னை மாநகரின் எல்லா பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளன. 21.7.2010(புதன்) அன்று தினகரன் சென்னைப் பதிப்பிலும், 22.7.2010(வியாழன்) மற்றும் 23.7.2010(வெள்ளி) ஆகிய தினங்களில் தினத்தந்தி சென்னைப் பதிப்பிலும் படத்தின் விளம்பரம் நல்ல முறையில் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் "புதிய பறவை" விவரங்கள் அடுத்தடுத்த பதிவுகளில்.

அன்புடன்,
பம்மலார்.

Murali Srinivas
25th July 2010, 12:27 AM
நடிகர் திலகம் நினைவு நாள் நிகழ்ச்சி - IV

அடுத்து வந்தவர் சிவசக்தி பாண்டியன். இவர் வசந்த் டி,வியில் சிங்கத்தமிழன் சிவாஜி நிகழ்ச்சியில் நடிகர் திலகத்தை பற்றி உணர்ச்சியோடு பேசினார் என்று சாரதா எழுதியிருந்தார். ஆனால் மேடையில் பேசும் போது இவ்வளவு உணர்ச்சிவசப்படுவார் என்பது கேட்கும் போதுதான் தெரிந்தது. அவர் பேச ஆரம்பிக்கும் போதே "இன்று என்னை பெரிய தயாரிப்பாளன், தயாரிப்பாளர் கவுன்சில் தலைவர் என்று சொன்னார்கள். ஆனால் நான் இன்று இந்த நிலைமையில் இருக்கிறேன் என்று சொன்னால் அதற்கு காரணம் நடிகர் திலகம்" என்ற போதே கூட்டம் உற்சாகமாகி விட்டது. அவர் மேலும் தொடர்ந்தார். ஒரு படம் எடுத்து மிகுந்த நஷ்டத்தை கொடுத்த போது அவரது வீட்டில் சினிமா துறையே வேண்டாம் என கூறியதையும் பிழைப்புக்காக வேலை தேடி அலைந்ததையும் பிறகு திருவொற்றியூரில் தினக் கூலி வேலை செய்ததையும் அதிலும் நிலையான வருமானம் இல்லாமல் போகவே என்ன செய்யலாம் என்று யோசித்த போது ஒரு நண்பன் வந்து 1000 ரூபாய் வாடகைக்கு ஒரு படத்தை எடுத்து காலைக் காட்சியாக திரையிடலாம் என்று சொன்னதும் அந்த விநியோகஸ்தரிடம் சென்று 250 ரூபாய் கொடுத்து படப் பிரதியை கேட்டதையும் அந்த வெளியீட்டாளர் அட்வான்சாகவே இந்த படத்திற்கு 1000 ரூபாய் கொடுக்க ஆட்கள் தயாராக இருக்கிறார்கள், ஆகவே தர மாட்டேன் என்று சொன்னதையும், தான் அழாக்குறையாக கெஞ்சுவதைப் பார்த்து மனமிரங்கி அவர் படப் பெட்டி கொடுத்ததையும் சொன்னவர் அந்த படம் வில்லிவாக்கம் ராயலில் காலைக் காட்சியாக திரையிடப்பட்டபோது 7 நாளில் 7 காட்சிகளும் ஹவுஸ்புல் ஆனதையும் அதன் மூலம் தான் மீண்டு வந்ததையும் எடுத்து சொன்ன அவர் அந்த படம் வசந்த மாளிகை என்று சஸ்பென்சை உடைத்த போது அபார ஆரவாரம். பாண்டியன் மேலும் சொன்னார் அடுத்து புதிய பறவை ரிலீஸ் செய்தேன், அடுத்து தெய்வ மகன் அதற்கடுத்து ஆண்டவன் கட்டளை என தொடர்ந்து படங்கள் ரிலீஸ் செய்தேன். கிட்டத்தட்ட 100 சிவாஜி படங்கள் வெளியிட்டு லாபம் பார்த்த நான் அந்த நேரம் வெளியான புதிய படமான வெள்ளை ரோஜா வெளியிட்டு மிகப் பெரிய லாபத்தை பார்த்தேன் என்று சொன்னார். மேலும் முதல் மரியாதை அதே போல் அவருக்கு வசூலை வாரிக் குவித்ததையும் பிறகு அவருக்கு சொந்தமான பாடி சிவசக்தி தியேட்டரில் படையப்பா பெற்ற வெற்றியையும் வெளிப்படுத்திய பாண்டியன் தன்னுடைய எல்லா வெற்றிகளுக்கும் பின்னால் நடிகர் திலகம் தான் இருக்கிறார் என்றார். அவரால் எத்தனை தயாரிப்பாளர்கள் வாழ்ந்தார்கள், எத்தனை பேரை புதிதாக உருவாக்கினார் போன்ற விஷயங்களை யோசித்தால் பிரமிப்பு ஏற்படும் என்று சொன்ன அவர் இன்று அது போல தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்யும் நடிகர்கள் யாருமே இல்லை என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியபோது கூட்டம் உணர்ச்சி வசப்பட்டது. வாழ்நாள் முழுக்க நடிகர் திலகத்திற்கு கடமைப்பட்டிருக்கிறோம் என்று சொன்ன பாண்டியன், சிவாஜியின் குடும்பத்துடன் தனக்கு உள்ள பிணைப்புக்கு மேலும் உதாரணம் பெரிதும் பேசப்பட்ட காதல் கோட்டையின் ஹிந்தி ரீமேக் ரைட்ஸை வாங்கியவர் ராகுமார் என்றார். நடிகர் திலகத்தின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளின் போது அரசு மரியாதையுடன் அரசு விழாவாக நடக்க, தன் தலைமையில் இயங்கும் தயாரிப்பாளர் சங்கம் முழு முயற்சி எடுக்கும் என தெரிவித்தவர் தன் உணர்ச்சிபூர்வமான உரையை அத்துடன் முடித்துக் கொண்டார்.


(தொடரும்)

pammalar
25th July 2010, 12:48 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 85

கே: சிவாஜி கணேசன் சொந்தக்குரலில் பாடுவது குறித்து உங்கள் எண்ணம் என்ன? (மிஸ்.யாஸ்மின், திருச்சி)

ப: அந்த நாளில் நாடக மேடையில் பாடிக் கொண்டிருந்தவர் அவர்.

(ஆதாரம் : பொம்மை, ஜூலை 1973)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
25th July 2010, 01:42 AM
சென்னை சாந்தி சினிமாஸ் : சிவாஜி பிலிம்ஸ் "புதிய பறவை"
[முதல் நாள் 23.7.2010 வெள்ளிக்கிழமையின் மொத்த வசூல் (சற்றேறக்குறைய)]

பிற்பகல் 3:00 மணிக் காட்சி : ரூ.16,100/- (ரூபாய் பதினாறாயிரத்து ஒருநாறு)

மாலை 6:30 மணிக் காட்சி : ரூ. 13,000/- (ரூபாய் பதிமூன்றாயிரம்)

இரவு 10:00 மணிக் காட்சி : ரூ.7,200/- (ரூபாய் ஏழாயிரத்து இருநூறு)

மொத்தம் : ரூ.36,300/- (ரூபாய் முப்பத்து ஆறாயிரத்து முந்நூறு)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
25th July 2010, 02:22 AM
Chennai Shanthi Cinemas : Pudhiya Paravai : Visual Treat

http://chennaishanthitheatre.webs.com/apps/photos/album?albumid=9574555

Happy Viewing,
Pammalar.

karthik_rcs
25th July 2010, 03:11 AM
Puthiya Paravai - Is it a remake from english to chase a crooked shadow?[/tscii]

pammalar
25th July 2010, 03:18 AM
Nadigar Thilagam's Ninth Year of Remembrance : 21.7.2010 : Chennai German Hall Programme : Photo Feature

http://pammalaar.webs.com/apps/photos/album?albumid=9588645

Regards,
Pammalar.

pammalar
25th July 2010, 03:48 AM
Puthiya Paravai - Is it a remake from english to chase a crooked shadow?[/tscii]

Yes, of course.

Please click the link given below for more info.:

http://www.hindu.com/cp/2009/06/26/stories/2009062650331600.htm

Regards,
Pammalar.

pammalar
25th July 2010, 04:34 AM
All Roads Lead To Chennai Shanthi Cinemas!!!

mr_karthik
25th July 2010, 01:01 PM
Chennai Shanthi Cinemas : Pudhiya Paravai : Visual Treat

http://chennaishanthitheatre.webs.com/apps/photos/album?albumid=9574555

Happy Viewing,
Pammalar.
பம்மலார் சார்,

சாந்தி தியேட்டர் 'புதிய பறவை' போட்டோ ஆல்பம் அருமையாக உள்ளது. நன்றிகள் பல.

உங்கள் தலையில் இன்னும் கொஞ்சம் கூடுதல் சுமையேற்ற ஆசை. அதாவது, புதிய பறவையின் அந்நாளைய செய்தித்தாள் விளம்பரங்களை மட்டும் இன்னும் கொஞ்சம் குளோசப்பில் தனித்தனி படங்களாக பார்க்க ஆவல். (கம்ப்யூட்டரில் சேகரித்துக்கொள்ளத்தான்). இதற்குமுன் அவற்றைப் பார்த்ததே இல்லை.

செய்வீர்கள் என்று நம்புகிறோம். கூடவே இன்றைய மாலை ஆரவாரங்களையும் காண ஆவல்.

mr_karthik
25th July 2010, 01:20 PM
சென்னை சாந்தியில் புதிய பறவை வெளியானதையொட்டி அங்கு வைக்கப் பட்டிருக்கும் கட் அவுட் பேனர் காட்சிகளின் அடுத்த தொகுப்பைக் காண-

http://sivajimoviesinchennai2010.blogspot.com/

ராகவேந்திரன்

who is Dhadhamirasi?

Director of Pudhiya Paravai.... has he directed any other films :?

Dada Mirasi is one of the fine directors of the tinsel world. He has directed three films of Nadigar Thilagam.

1. Raththath Thilagam - 14.9.1963 - Ran for 81 days
2. Pudhiya Paravai - 12.9.1964 - Ran for 132 days
3. Moondru Deivangal - 14.8.1971 - Ran for 83 days

Each one is a CLASSIC in its own right.
With regard to Box-Office, all the three were SUCCESSFUL FILMS.
Regards,
Pammalar.
.......and one more I remember by Dada Mirasi is, Gemini Ganesh double acted colour movie 'SANGAMAM' (1969).. with beautiful songs like 'thannandhaniyAga nAn vandahpOthu'.

mr_karthik
25th July 2010, 01:38 PM
'நடிகர்திலகம் சிவாஜி' விருது பெற்ற ராகவேந்தர் சார், கிரிஜா மற்றும் ஜெகன் ஆகியோருக்கு நல்வாழ்த்துக்கள்.

அடுத்த முறை பம்மலார் சார் மற்றும் முரளி சார் ஆகியோருக்கு வழங்கப்பட வேண்டும் என்று நண்பர் செந்தில் கோரிக்கை வைத்திருப்பதை நானும் மனப்பூர்வமாக வழிமொழிகிறேன்.

Murali Srinivas
25th July 2010, 03:41 PM
நடிகர் திலகம் நினைவு நாள் நிகழ்ச்சி - Part V

அடுத்து ராம்குமார் பேசினார். எடுத்தவுடன் ஜூலை 21 நினைவு நாளை ஒரு விழாவாக நடத்துவதை நிறுத்தி விட்டதாகவும் அதற்கு காரணம் தங்கள் தாயார் என்றும் கூறிய அவர் நடிகர் திலகம் மறையவில்லை அவர் நம்முடன் வாழ்கிறார் என்றே எங்க குடும்பத்தில் அனைவரும் கருதுகிறோம். அந்நிலையில் அவர் நினைவு நாள் என்று ஒன்றை சொல்லும் போது அவர் மறைந்து விட்டார் என்ற நினைவு ஏற்படுகிறது, அதனால் அது வேண்டாம் என்றும் நினைவு நாள் அன்று என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை அவரது பிறந்த நாளான அக்டோபர் 1 அன்று சேர்ந்து செய்யும்படி கமலா அம்மாள் சொன்னதாக தெரிவித்த ராம்குமார் அதனால் கடந்த இரண்டு வருடங்களாக விழாவாக நடத்தவில்லை என்றும் ஆனால் இந்த தடவை இன்பா வற்புறுத்தி கேட்ட போது இரண்டு காரணங்களுக்காக ஒப்புக் கொண்டதாக சொன்னார். ஒன்று இன்பா கடந்த இரண்டு வருடங்களாக வெளிநாட்டிற்கு படிக்க சென்றிருந்தார் ஆதலால் அவருக்கு இந்த விவரம் தெரியாது. இரண்டு அவர் எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டு குகநாதன் அவர்களையும் சிறப்பு அழைப்பாளராக முடிவு செய்து விட்டார் என்று அறிந்த போது அந்த காரணத்திற்காகவும் ஒத்துக் கொண்டதாக சொன்னார்.

குகநாதன் அப்பாவிற்கும் சித்தப்பாவிற்கும் மிகவும் பிடித்தமானவர், அப்பா நடித்த படங்களிலே பலருக்கும் பிடித்த படங்களில் ஒன்றான ராஜபார்ட் ரங்கதுரை படத்தை தயாரித்தவர் என்றும் ராம்குமார் வெளிபடுத்தினார். மேலும் அன்னை இல்லம் வீட்டை வாங்கி அதை மாற்றி அமைத்து செப்பனிட்டோம். அந்த வேலைகளுக்கு சித்தப்பா ஷண்முகத்திற்கு உதவியாக இருந்தவர் குகநாதனின் அண்ணன் என்பதையும் சொன்னார். சாதாரணமாக அப்பாவின் படங்கள் சாந்தியில் வெளியாகும் போது நான் காலையில் எனக்காகவும் நண்பர்களுக்காகவும் 10 டிக்கெட்கள் வாங்குவது வழக்கம். ஆனால் ராஜபார்ட் வெளியானது பைலட் தியேட்டரில். என்ன செய்வது என்று யோசித்த போது படம் வெளியான அன்று காலையில் குகநாதன் சார் வீட்டிற்கு வந்து என்னை கூட்டிக் கொண்டு போய் 10 டிக்கெட் வாங்கி கொடுத்தார்.

ராஜபார்ட் படத்தைப் பற்றி பேசும் போது வேறு ஒரு விஷயம் பற்றியும் குறிப்பிட்டார். நடிகர் திலகம் 9 வயதில் நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த போது அந்த வயது சிறுவர்களை முறைப்படுத்துவதற்காக தஞ்சையில் சுப்ரமணியன் என்று ஒருவர் இருந்தார். அவரை மணி வாத்தியார் என்று கூப்பிடுவார்கள். அவரும் அந்த பழைய நாடக சங்கத்தை சேர்ந்த சிலரும் படம் வெளியான அன்று மாலைக் காட்சி பார்த்து விட்டு நேராக அன்னை இல்லம் வந்ததையும், அதற்குள் தூங்கி விட்ட நடிகர் திலகம் எழுப்பட்டதையும் அவர்கள் நடிகர் திலகத்தை பாராட்ட வார்த்தைகள் இல்லாமல் தவித்ததையும் அதிலும் குறிப்பாக மணி வாத்தியார் நந்தனார் வேடத்தில் வரும் போது நடிகர் திலகம் பாடும் நாளை நான் போகாமல் இருப்பேனோ என்ற காட்சியை பற்றி சொல்லி கண் கலங்கியதையும் அதை பார்த்து நடிகர் திலகமும் உணர்ச்சி வசப்பட்டதையும் ராம்குமார் சொன்ன போது அவர் கண்ணிலும் கண்ணீர் துளிகள். உடனே அதிலிருந்து விடுபட்டு ராம்குமார் பேச தொடங்கினார். அவர் குகநாதன் பற்றி சொல்லும் போது மனதில் பட்டவற்றை வெளிப்படையாக பேசக் கூடியவர் குகநாதன். அதனாலே சினிமா துறையில் நிறைய பிரச்னைகளையும் கஷ்டங்களையும் சந்தித்தவர். ஆனாலும் தன் நிலையில் உறுதியாக இருப்பார். ஆகவே அப்பாவிற்கு மிகவும் பிடிக்கும். அவரும் எங்கள் குடும்பத்தில் ஒருவரைப் போல இருப்பார். அவர் இன்று இந்த விழாவிற்கு வந்தது எங்களுக்கெல்லாம் பெருமை என்றார் ராம்குமார். மேலும் விழாவிற்கு வந்திருந்த பல ரசிகர்களையும் பேர் சொல்லி குறிப்பிட்ட ராம்குமார் இனி வரும் வருடங்களில் ஜூலை 21 அன்று ஏழை மக்களுக்கு பயன்படும்படியான நற்பணிகளை குறிப்பாக படிக்கும் ஏழை மாணவர்களுக்கு உதவிகள் செய்ய சொல்லி தன் பேச்சை முடித்தார்.

இறுதியாக பேசினார் குகநாதன். தான் ஆவேசத்தோடு பேச வந்ததாகவும் ஆனால் ராம்குமார் பேசிய பேச்சு தன் மனதில் பழைய நினைவுகளை கிளறி விட்டு விட்டதாகவும் மனதில் தோன்றிய ஈரம் கண்களிலும் எட்டிப் பார்ப்பதாகவும் சொன்னார்.

உயர்ந்த மனிதன் படத்திற்கு தன் குருவான ஜாவர் சீதாராமனுக்கு உதவியாக பணி புரிந்ததையும் எங்க மாமா மற்றும் தங்கைக்காக படங்களுக்கு வசனகர்த்தாவாகவும் பணியாற்றி விட்டு இருந்த நேரத்தில் ஏ.வி.எம் அவர்கள் சுடரும் சூறாவளியும் படத்தை இயக்க வாய்ப்பு கொடுத்ததையும் சொல்லி விட்டு அந்த படம் சரியாக போகவில்லை என்பதையும் சொன்னார். படம் தோல்வியடைந்ததால் அடுத்த வாய்ப்புகள் ஒன்றும் வரவில்லை என்றும் அந்நிலையில் ஒரு நாள் பகல் பொழுதில் ஒரு வேலையாக ஏ.விஎம் ஸ்டுடியோவில் வைத்து தற்செயலாய் நடிகர் திலகத்தை பார்த்ததையும் தன்னை பார்த்ததும் மேக்-அப் ரூமிற்கு வரச் சொன்னதையும் உள்ளே சென்ற போது நடந்தவற்றை எல்லாம் கேட்டு தெரிந்துக் கொண்டு சின்ன படம்தான் பண்ணுவியா என்னை வச்சு படம் எடுக்க மாட்டியா என்று நடிகர் திலகம் கேட்ட போது தான் இன்ப அதிர்ச்சியில் பேச்சு வராமல் நின்றதையும் போய் சண்முகத்தை பாரு, நான் சொல்றேன் என்று சொன்னதையும் சொல்லும் போது இப்போதும் குகநாதனுக்கு அதே உணர்வுகள். அதன் காரணத்தையும் அவரே சொன்னார். எனக்கு அப்போது வயது குறைவு. அவரின் இரண்டு படங்களுக்கு மட்டுமே வசனம் எழுதியிருக்கிறேன். அவரோ பட்டிக்காடா பட்டணமா, வசந்த மாளிகை என்று ஹிட்டுக்கு மேல் ஹிட்டு கொடுத்து அவர் கால்ஷீட் கொடுக்க மாட்டாரா என்று பெரிய பட நிறுவனங்களெல்லாம் காத்து கிடக்கும் நேரத்தில் என்னைப் போல ஒருவனுக்கு கால்ஷீட் கொடுத்தார் என்றால் எப்பேர்பட்ட மனிதன் அவர். இன்று எந்த ஹீரோவாவது இப்படி செய்வார்களா என்று கேட்ட போது வாய்ப்பே இல்லை என்று பதில் மேடையிலிருந்தே சிவசக்தி பாண்டியனால் சொல்லப்பட்டது.

சண்முகம் அவர்களோ அட்வான்சே கூட வாங்காமல் கதை ரெடி ஆனவுடன் கால்ஷீட் தருவதாக உறுதி கூறியதையும் அதே போல் நடந்துக் கொண்டதையும் குறிப்பிட்டார் குகநாதன்.

ஒருவர் வக்கீல் ஒருவர் பாக்ஸர் என இரண்டு வேடங்களில் நடிகர் திலகம் நடிக்க தான் படம் இயக்க ஆரம்பித்ததையும் மூன்றாவது நாள் படப்பிடிப்பு முடிந்ததும் தன்னை தனியே அழைத்த நடிகர் திலகம் அப்போது தயாரிப்பில் இருந்த கெளரவம் படத்திலும் தான் வக்கீலாக நடிப்பதாகவும் அதிலும் சில காட்சிகள் இது போல இருப்பதையும் எடுத்து கூறினார் என்றும் ஆகவே அந்த கதை கைவிடப்பட்டு பாலமுருகன் கொண்டு வந்த ராஜபார்ட் ரங்கதுரை கதையை தயாரித்ததையும் சொன்னார்.

இந்த படம் எடுத்த முடித்த போதுதான் பெருந்தலைவரிடம் பழகும் வாய்ப்பு கிடைத்ததையும் திராவிட இயக்கத்தை சேர்ந்த தான் பெருந்தலைவரின் குண நலன்களைப் பற்றியும் அவரின் பண்புகளையும் அவர் செய்த நிர்வாக சாதனைகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள முடிந்தது என்று சொன்னார். படத்தை பார்க்க அழைத்த போது முதலில் தலைவர் தயங்கியதையும் சிவாஜி நடிக்கிறார் என்றவுடன் அவர் முகத்தில் வந்த மாறுதலையும் சிவாஜி பகத்சிங் வேடத்தில் நடிக்கிறார் என்றவுடன் வந்த மாறுதலையும் சிவாஜி திருப்பூர் குமரன் வேடத்தில் நடிக்கிறார் என்றவுடன் உடனே பார்க்க வருகிறேன் என்று சொன்னதையும் அவருக்காக ராஜலக்ஷ்மி தியேட்டரில் படம் திரையிடப்பட்டதையும் படம் பார்த்து விட்டு மிகவும் நன்றாக இருந்தது என்று பெருந்தலைவர் பாராட்டியதையும் குறிப்பிட்டார் குகநாதன்.


பிறகு பல வருடங்களுக்கு பிறகு முதல் குரல் எடுத்த போது இடையில் வைத்து நடிகர் திலகம் சிங்கப்பூர் சென்ற போது உடல் நலம் பாதிக்கப்பட்டு அதன் காரணமாக பல மாதங்கள் நடக்க கூட முடியாமல் உடல் நிலை மோசமாக இருந்த நிலையில் தன்னை அழைத்து படத்திற்கு நிறைய செலவு பண்ணி விட்டாய். எனக்கு எப்போது என்ன நேரும் என்று சொல்ல முடியாது. ஆகவே பக்கத்தில் உள்ள ஏதேனும் வீட்டில் படப்பிடிப்பு வைத்துக் கொள்ள சொன்னதையும் அருகாமையில் இருந்த விஜயகுமாரி வீட்டில் படப்பிடிப்பு வைத்துக் கொண்டதையும் மாடிப்படிகளில் ஏறுவதற்கு சேரில் வைத்து தூக்கி சென்றதையும் கண்கலங்க குறிப்பிட்டார் குகநாதன்.

தான் காதல் கல்யாணம் செய்ய முடிவெடுத்த போது தன்னை தனியே அழைத்து சென்று இந்த இந்த கஷ்டங்களெல்லாம் வரும் ஆகவே அதை எல்லாம் உன்னால் எதிர் கொள்ள முடியும் என்றால் கல்யாணம் செய்து கொள் என்று சொன்னதை குறிப்பிட்ட குகநாதன், நான் அவர் சொன்ன அத்தனை பிரச்சனைகளையும் சந்தித்தேன் என்றார்.

இதை சொல்லி விட்டு தான் திரையுலகில் இன்று இந்த நிலைமைக்கு தான் உயர்ந்திருப்பதற்கு இருவர் மட்டுமே காரணம் என்று சொன்ன குகநாதன் அதில் ஒருவர் பெயரை சொன்னால் உங்களுக்கு [ரசிகர்களை பார்த்து] பிடிக்காது.ஆனாலும் சொல்லாவிட்டால் நான் நன்றி மறந்தவனாவேன் என சொல்லி ஒருவர் எம்.ஜி.ஆர்., மற்றொருவர் நடிகர் திலகம் என்றார்.

திரைப்பட துறையை சேர்ந்தவர்களுக்கு அரசு வழங்கவிருக்கும் இடத்தில் ஒரு ஸ்டுடியோ கட்டப்பட போவதாகவும் அதில் ஒரு படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் திலகம் பெயர் வைக்கப்பட போவதையும் சொன்ன குகநாதன் அதன் அருகிலே நடிகர் திலகத்தின் அனைத்து படங்களின் தொகுப்பு அடங்கிய ஒரு ம்யூசியம் அமைக்கப்படும் என்றும் சொன்னார்.

இறுதியில் தான் பேச்சை நிறைவு செய்யும் விதமாக அடுத்த வருடம் நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழா அரசு சார்பாக நடைபெறும். அதற்கான முயற்சிகளை தன் சங்கம் எடுக்கும் என்று உறுதி கூறி விடை பெற்றார்.

தமிழ் தாய் வாழ்த்தோடு தொடங்கிய கூட்டம் நாட்டுப் பண்ணோடு நிறைவு பெற்றது.

அன்புடன்

sivank
25th July 2010, 08:07 PM
Congrats Mr. Ragavendran for recieving Sivaji award. A very nice gesture for a true and humble fan

sivank
25th July 2010, 08:08 PM
deleted

sivank
25th July 2010, 08:08 PM
repeat

sivank
25th July 2010, 08:09 PM
repeat

pammalar
26th July 2010, 03:39 AM
Chennai Shanthi Cinemas : Pudhiya Paravai : 25.7.2010 Sunday Gala

http://chennaishanthitheatre.webs.com/apps/photos/album?albumid=9596143

A Very, Very Happy Viewing,
Pammalar.

goldstar
26th July 2010, 04:32 AM
Thanks Mr. Pammalar.

Very much happy to see our NT with garlands. Wiating for more photos and videos.

Pammalar, much appreciated your hardwork to bring our god's celberation to every one. Please keep doing.

Cheers,
Sathish

RAGHAVENDRA
26th July 2010, 06:19 AM
தன்னிகரற்ற சாதனை, சாந்தியில் புதிய பறவை வெற்றி முழக்கம்.
இன்று மாலை 25.07.2010 சென்னை சாந்தியில் அரங்கு நிறைவு HOUSE FULL .

காணக் கண்கோடி வேண்டும் என்ற மொழிக்கு இன்றைய சாந்தி திரையரங்கின் நிகழ்வுகளே சரியான சான்று.

பெங்களூரு ரசிகர்கள் அசத்தி விட்டார்கள். மாலை என்றால் அப்படி யொரு மாலை. காட்சிப் படங்கள் பதிவேற்றப்படும் போது காணுங்கள்.

நாடி நரம்பெல்லாம் புகுந்து ருத்ர தாண்டவமே ஆடிவிட்டார் நடிகர் திலகம். உணர்ச்சி மயமாகாத ரசிகர்கள் இல்லை எனலாம். பகல் காட்சியில் கிட்டத் தட்ட 500 இருக்கைகளும் மாலைக் காட்சியில் அனைத்து இருக்கைகளும் நிறையும் அளவுக்கு ரசிகர்கள் திரண்டது மட்டுமல்ல. மேள தாளத்துடன் ஊர்வலமாய் மாலையை எடுத்துச் சென்று அண்ணாசாலையே குலுங்கும் அளவிற்கு ஆர்ப்பரிப்பு செய்து விட்டனர். காவல் துறையினர் வந்து குவியும் அளவிற்கு ரசிகர்கள் கூட்டம், பேருந்து உட்பட அனைத்து வாகனங்களில் பயணித்தோர், சாலையில் சென்றோர் அனைவரும் வியந்து சொன்ன வார்த்தை - "சிவாஜி படத்துக்கு கூட்டம் பாரேன், அதுவும் பழைய படத்துக்கு" என்பதே அனைவரின் உதடுகளும் உள்ளமும் உச்சரித்த வார்த்தைகள்.

சாந்தியில் உள்ளே வைக்கப் பட்டிருந்த கட்அவுட்டுக்கு செலுத்தப் பட்ட மாலைகளின் எண்ணிக்கை கிடடத்தட்ட 15க்கும் மேல். பிரம்மாண்டமான பெரிய மாலையை மேலே ஏற்ற தேவைப்பட்ட கரங்களின் எண்ணிக்கை மட்டுமே 100க்கும் மேல் இருக்கும். பாண்டு வாத்தியம் முழங்க பெங்களூரு, புதுவை, கடலூர் உள்ளிட்ட இடங்களிலிருந்து திரண்ட ரசிகர்களின் ஆரவாரம் இன்னும் பல ஆண்டுகளுக்கு கண்களில் நிழலாடும். உள்ளேயோ கேட்கவே வேண்டாம். அதுவும் எங்கே நிம்மதி பாடலுக்கு எழுப்பப் பட்ட உணர்ச்சி மயமான கரவொலிகளும் கோஷங்களும் படம் இன்று தான் புதியதாக வெளியானதொரு சூழ்நிலையை ஏற்படுத்தியது.

அரங்கினுள் ஆரவாரம் - காணுங்கள்
http://sivajimoviesinchennai2010.blogspot.com/

தொடரும் பதிவுகளில் விரிவாக நம் அனுபவங்கள்...

அன்புடன்

ராகவேந்திரன்

Irene Hastings
26th July 2010, 12:04 PM
நேற்று பொதிகையில் ராஜா ! நடிகர் திலகத்தின் இளமை ஊன்ஞலாடியது. ஒருவித துள்ளலுடன் நடித்திருப்பார் ! கடைசி காட்சியில் தன் முத்திரையை பதித்திருப்பார். :notworthy:

KCSHEKAR
26th July 2010, 12:44 PM
Very nice coverages on Pudhiya Paravai Sunday Gala. Thanks to Mr.Pammalar & Mr.Ragavendran

KCSHEKAR
26th July 2010, 12:46 PM
Nadigar Thilagam's Ninth Year of Remembrance : 21.7.2010 : Please click the links below:

1)

http://www.chennailivenews.com/Events/Events/20104325114316/Annadhanam-marks-Sivaji-anniversary.aspx

&

2)

http://www.indianewsreel.com/photo-gallery/Events/20103124083152/Sivaji-remembered-in-Chennai.aspx

HARISH2619
26th July 2010, 02:11 PM
திரு பம்மல் சார் & திரு ராகவேந்திரா சார்,
புகைப்படங்கள் மிகவும் அருமை.பலகோடி நன்றிகள்.

அடுத்து முரளி சாரின் வர்ணணைக்காக ஆவலோடு காத்திருக்கிறோம்

Mahesh_K
26th July 2010, 06:10 PM
[tscii:220efb65c2]From Deccan chronicle 25.07.2010 -

At a time when big heroes’ films are struggling at the box office, the late thespian Sivaji Ganesan’s 1964 evergreen classic, Pudhiya Paravai, is running to packed houses after its re-release at Shanthi Theatre.

Pudhiya Paravai, a musical thriller, stars Saroja Devi as Sivaji’s love interest. It was also notable for being the first Tamil film shot on a ship which was hired for the purpose.

To commemorate Sivaji’s ninth death anniversary, the movie has been released by Srinivasan, one of his ardent fans and a distributor of Tamil films. “Even 46 years after it was first released, the movie ran to a full-house on the weekend,” reveals Srinivasan.

Interestingly, the film was the first production from Sivaji’s home banner, Sivaji Films. “It was a milestone in Sivaji’s career. It had mind-blowing music by the M.S.Vishwanathan-Ramamurthy duo and all the songs were big chartbusters. In those days all Sivaji-starrers would be first released only in Shanthi Theatre. For the first time, the late star chose to release his film in Paragon Theatre (where normally MGR films used to release). The legendary actor took Paragon Theatre (now a multi-storied complex) on lease, renovated it and released the movie there,” reminisces distributor R.G.Venkatesh, who has watched Pudhiya Paravai at least a dozen times. The highlight of the film was Sivaji’s stylish looks and memorable dialogues. Which is why fans of the actor are felicitating Arurdas, the dialogue writer and Mutthappa, Sivaji’s make-up man, at a function in the city.


[/tscii:220efb65c2]

kumareshanprabhu
26th July 2010, 07:08 PM
on behalf of me and karnataka state prabhu fans i than each and every one for grand sucess of sunday celebration in shanthi

kumareshanprabhu
26th July 2010, 07:11 PM
thank you raghavendra and pammalar

kumareshanprabhu
26th July 2010, 07:13 PM
harish how are you

pammalar
26th July 2010, 08:33 PM
சென்னை சாந்தி தியேட்டர் நிகழ்வுகள் - 1
[புதிய பறவை : 25.7.2010 : ஞாயிறு மாலைக் காட்சி]

சாந்தி தியேட்டரின் நுழைவாயிலை நோக்கி எனது கால்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது சரியாக மாலை நாலேகால் மணி. எதிரே மகானின் பக்தர்கள் - பெற்ற குழந்தையை சிரத்தையுடன் சுமந்து வரும் அன்னை போல் - தாங்கள் பெற்ற தந்தைக்கு அணிவிப்பதற்காக ராட்சத மலர் மாலையை தங்களது கைகளிலும், தோள்களிலும் இருபுறமும் சுமந்து கொண்டு, "சிவாஜி புகழ் வாழ்க!', "எங்கள் தெய்வத்தின் புகழ் வாழ்க!" என்கின்ற கோஷங்களுடன் அமைதியான முறையில் ஊர்வலமாக அரங்க நுழைவாயிலை நெருங்கினர். ராட்சத மலர் மாலைக்கான முழு பங்களிப்பும் பெங்களூர் பக்தர்களைச் சேர்ந்தது. அவர்கள் இந்த மாலையை ஒரு கன்டைனர் லாரியில் பெங்களூரிலிருந்து சென்னைக்கு எடுத்து வந்தனர். ஊர்வலத்தில் சென்னை மற்றும் பெங்களூர் பக்தர்களுடன், தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் மற்றும் புதுச்சேரியிலிருந்தும் வருகை புரிந்திருந்த பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நுழைவாயிலில் ஊர்வலம் சில மணித்துளிகள் நின்றது. "அடி என்னடி ராக்கம்மா", "கேட்டுக்கோடி உருமி மேளம்", "வரதப்பா" பாடல்கள் பேண்ட் வாத்தியத்தில் முழங்க, ட்ரம்ஸ் ஒலிக்க, பக்தர்கள் பக்திப் பரவசத்தில் திளைக்க ஒரே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் தான்!

தியேட்டரினுள்ளே 5000 வாலா(சரம்) சப்தம் ரீங்காரமிட, மாபெரும் மலர் மாலா(மாலை), கோமகன் சிவாஜி அளித்த கோயில் யானை போல், பக்தர்கள் புடை சூழ மிக அழகாக, நேர்த்தியாக, கம்பீரத்தோடு அரங்கிற்குள் நுழைந்தது. மிக உயரமான அந்த மலர் மாலையை 60 அடி உயர ராட்சத பதாகைக்கு(கட்-அவுட்) கீழே, அருகே வாத்தியங்கள் முழங்க எடுத்து வந்தனர். பின்னர் அதனை தூக்கி, ஏற்றி அண்ணலின் அன்பு சொட்டும் முகத்துக்கு சூட்டினர். கரவொலிகளும், குரலொலிகளும் விண்ணைப் பிளந்தன. வாலாக்கள் தொடர்ந்து வெடித்த வண்ணம் இருந்தன. ஊர்வலம், டான்ஸ், வாணவேடிக்கைகள், மாலை சாற்றுதல், பாலாபிஷேகம் முதலிய சுபகாரியங்கள் கிட்டத்தட்ட ஒண்ணேகால் மணி நேரம் நீடித்தது. சரியாக மாலை 5:45 மணிக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்ட இறைவனுக்கு மஹாதீபாராதனை காட்டப்பட்டது. இந்த சமயத்தில் மேட்னி ஷோ முடிந்து கூட்டம் உள்ளிருந்து வெளியே வர, கற்பூர ஆரத்தியைக் கண்டு அனைவருக்கும் மெய் சிலிர்த்தது. இதயதெய்வத்தின் புகழ் பாடும் கோஷங்கள் அரங்கத்தில் குழுமியிருந்த ஒவ்வொரு நல்லிதயத்திலிருந்தும் அவர்களது இரத்தநாளங்களிலிருந்தும் உணர்வுபூர்வமாகக் கிளம்பி விண்ணைப் பிளந்தன. மணவிழாவில் கூடும் உறவினர் போல், திருவிழாவில் கூடும் தோழர்கள் போல், இத்திரைவிழாவில் பக்தர்கள் ஆங்காங்கே ஒன்று கூடி நலம் விசாரித்துக் கொண்டதையும், தங்கள் இறைவனின் நடிப்பைப் பற்றியும், சாதனைகள் குறித்தும் அளவளாவிக் கொண்டதையும் காணக் கண்கோடி வேண்டும். எங்கு பார்த்தாலும் பக்தர் வெள்ளம். சரியாக ஆறு மணிக்கு "SHANTI HOUSEFULL" என்கின்ற போர்டு மாட்டப்பட விசில் சத்தம் விண்ணை வீழ்த்தின. சென்னை பக்தர்கள் 10000 வாலா சரவெடியை கொளுத்திப் போட, ஆடியிலே தீபாவளி. காலதேவன் 6:30 நோக்கி நெருங்க, கலைத்தேவனைக் காண அடியவர் கூட்டம் அரங்கினுள் ஆர்ப்பரித்தது. மன்னவனுக்கு சூட்டப்பட்ட மாபெரும் மாலை கண்டு, பொழுதான மாலை வெட்கி, நாணி, மங்கி இரவுக்குள் புகுந்தது.

(தொடரும்...)

பக்தியுடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
26th July 2010, 10:00 PM
பம்மலார் அவர்களின் வர்ணனை எந்த அளவிற்கு துல்லியமாக உள்ளது என்பதை இதோ இந்த காட்சியில் காணுங்கள். நன்றி யூட்யூப் மற்றும் நமது ஹப் நண்பர்களுக்கு.
http://www.youtube.com/watch?v=2uJNuEdLWvo

ராகவேந்திரன்

RAGHAVENDRA
26th July 2010, 10:12 PM
Review of Nadigar Thilagam website in a blog:

http://websitesreview-meens.blogspot.com/

Thank you, madam. Your words of praise enthuse me and at the same places more responsibility. Thank you once again. At this chance, I'd like to mention my thanks to hub friends, who are so encouraging.

Raghavendran

pammalar
27th July 2010, 02:24 AM
Chennai Mylapore Kapaleeswarar Temple : 21.7.2010 : Annadhaanam organised by Sivaji Peravai : Photo Feature

Chief Guest for the Function : Tamil Nadu Hindu Religious & Charitable Endowments Minister Honourable K.R.Periyakaruppan

http://pammalaar.webs.com/apps/photos/album?albumid=9603898

Photos Courtesy : Sivaji Peravai President Mr.K.Chandrasekaran

Regards,
Pammalar.

pammalar
27th July 2010, 02:45 AM
Chennai Shanthi Cinemas : Pudhiya Paravai : 25.7.2010 Sunday Evening Gala : 10000 Wala Burst Video

http://www.youtube.com/watch?v=kBwYwkXfOp4

Happy Viewing,
Pammalar.

rangan_08
27th July 2010, 05:39 PM
Murali sir, Raghavendra sir, groucho & Plum - thanks for your kind words.

Pammalar sir, clippings & videos are great !

Mahesh_K
27th July 2010, 06:45 PM
From Dinamalar website


மீண்டும் சிவாஜிகணேசனின் புதிய பறவை!
--------------------------------------------------------------------------------

நடிகர் திலகம் சிவாஜிகணேசன், சரோஜா தேவி, சவுகார் ஜானகி, எம்.ஆர்.ராதா, நாகேஷ், மனோரமா நடிப்பில் 1964ம் ஆண்டு திரைக்கு வந்து சக்கை போடு போட்ட படம் புதிய பறவை. 46 ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்த படத்தை சிவாஜி பிக்சர்ஸ் தயாரிப்பில், தாதா மிராஸ் இயக்கியிருந்தார். தற்போது சிவாஜி கணேசனின் 9வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை சாந்தி தியேட்டரில் புத்தம் புது டிஜிட்டல் காப்பியாக திரையிடப்பட்டுள்ளது. புதிய படங்களுக்க இணையாக தியேட்டரை சுற்றிலும் சிவாஜி ரசிகர்கள் கட்-அவுட்களை *வைத்துள்ளனர். ரசிகர்கள் பலர் சிவாஜி கட்-அவுட்டுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறார்கள்.

புதிய பறவை படம் 1964ம் ஆண்டு பாரகன் தியேட்டரில் திரையிடப்பட்டது. அந்த காலகட்டத்திலேயே நல்ல வசூலை வாரி குவித்த இந்த படம் இப்போதும் நல்ல வசூலை கொடுத்துக் கொண்டிருக்கிறதாம்.

http://cinema.dinamalar.com/tamil-news/2414/cinema/Kollywood/Sivaji-Ganeshan%60s-Puthiya-paravai-screening-again.htm

RAGHAVENDRA
27th July 2010, 09:42 PM
மிக்க நன்றி மகேஷ் அவர்களே, அன்றைய மாலைக் காட்சியில் முரளி சார் அவர்களால் பங்கேற்க முடியாமல் போனது நமக்கெல்லாம் மிகுந்த வருத்தம் தான். இருந்தாலும் முடிந்த வரையில் நம்மால் இயன்ற வரையில் அன்றைய நிகழ்ச்சிகளை இங்கு பதிந்து கொள்வோம். தங்களுடைய அனுபவங்களையும் எண்ணங்களையும் அறிய மிகுந்த ஆவலாய் இருக்கிறோம்.

அன்று மாலை கட்அவுட்டுக்கு சாற்றுவதற்காக பெங்களூரு ரசிகர்கள் கொண்டு வந்திருந்த பிரம்மாண்ட மாலையை ஊர்வலமாய் எடுத்துச் சென்றதைக் கண்டோம். இதோ அம்மாலை மேலே தூக்கி ஏற்றப் படும் காட்சி.

http://www.youtube.com/watch?v=sNGCaYhob8I

அன்புடன்

ராகவேந்திரன்

RAGHAVENDRA
28th July 2010, 12:04 AM
Dear friends,
After print media, now it's the turn of e-media to cover the reception for Pudhiya Paravai. See what behindwoods would like to say:

http://www.behindwoods.com/tamil-movie-news-1/jul-10-05/sivaj-ganesan-pudhiya-paravai-27-07-10.html

Raghavendran

pammalar
28th July 2010, 01:54 AM
திரு.கார்த்திக் சார்,

ஆடிப் பெருக்கைப் போல துள்ளி வரும் தங்களின் உள்ளப் பாராட்டுக்கு எனது பணிவான நன்றிகள்! தங்களது ஆவலை விரைவில் பூர்த்தி செய்கிறேன்.

டியர் கோல்ட்ஸ்டார், சந்திரசேகரன் சார், செந்தில் சார், குமரேசன்பிரபு சார், ரங்கன் சார்,

பாராட்டுக்கு நன்றி!

டியர் மகேஷ் சார்,

"புதிய பறவை" பற்றி ஆங்கில நாளிதழான டெக்கான் க்ரோனிகிளில் வெளிவந்த செய்தியையும், தினமலர் இணையதள நாளிதழில் வெளிவந்த தகவலையும் பதிவிட்டமைக்கு நன்றி!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
28th July 2010, 02:20 AM
டியர் ராகவேந்திரன் சார்,

தங்களது மனம் திறந்த பாராட்டுக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்!

நடிகர்திலகம்.காம் இணையதளத்திற்கு கிடைத்திருக்கும் பாராட்டு குறித்து எல்லையில்லா மகிழ்ச்சி. நமது நடிகர் திலகம் பல படங்களில் ஒன்மேன்ஷோ புரிந்திருக்கிறார். நடிகர்திலகம்.காம் இணையதளமும் ஒரு ஒன்மேன்ஷோ தான். அதாவது, ராகவேந்திரன் என்கின்ற ரசிக திலகத்தின் ஒன்மேன்ஷோ.

நடிகர்திலகம்.காம் மென்மேலும் வளர்ந்து வான்புகழ் அடைய வளமான வாழ்த்துக்கள்!

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
28th July 2010, 07:29 AM
Dear Pammalar,
Thank you for your kind words of appreciation. It was possible only because of friends and fans like you. There are many more assignments we have to complete.

Times of India has covered the Pudhiya Paravai success:
http://timesofindia.indiatimes.com/city/chennai/Blast-from-the-past-as-Sivaji-movie-runs-housefull-/articleshow/6224856.cms

Raghavendran

tacinema
28th July 2010, 08:14 AM
Raghavendra,

Please accept my delayed congratulation of receiving this year's Sivaji Award. You, along with Girija, totally deserve it. Good luck in managing one and only web site: www.nadigarthilagam.com

Pammalar and others,

Hats off to your energetic coverage of Pudhiya paravai show.

It is sad to note that Murali couldn't attend Sunday festive event. Can someone give a beautiful presentation of the show please? This is taking me back to my viewing of PP during rerelease at Madurai Alankar.

Total collection so far please. Any idea of extending PP to 2nd week?

Regards
NT fan

Mahesh_K
28th July 2010, 12:00 PM
Ilaya thilakam Prabhu on Puthiya paravai's release... as reported by TOI.

"We screened Pudhiya paravai' because of demands form fans to mark his 9th death anniversary on Friday, but now the request for a Sivaji' film mela has come up," said actor Prabhu, son of Sivaji Ganesan. "The state of the prints of all his films need to be examined," he added.

The negatives of Pudhiya paravai' were cleaned up' at a lab, much to the delight of Sivaji's die-hard fans. Made in 1964, the film, has Sivaji playing the role of a man tortured by guilt over his past. "It came as a shock when people called me up for tickets," said Prabhu, in whose family-held theatre, Shanthi, the film could not be released in 1964. "Bollywood film Sangam' was running in the theatre and we had to release it at Paragon theatre, which does not exist anymore," he recollected"

http://timesofindia.indiatimes.com/city/chennai/Blast-from-the-past-as-Sivaji-movie-runs-housefull-/articleshow/6224856.cms

Few other links...

Dinamalar - website
http://cinema.dinamalar.com/tamil-news/2414/cinema/Kollywood/Sivaji-Ganeshan%60s-Puthiya-paravai-screening-again.htm


Deccan Chronicle
http://www.deccanchronicle.com/tabloids/sivaji-ganesan-continues-draw-fans-theatre-271[

Sify
http://sify.com/movies/fullstory.php?id=14951195

Behindwoods.com
http://www.behindwoods.com/tamil-movie-news-1/jul-10-05/sivaj-ganesan-pudhiya-paravai-27-07-10.html

Kolly-theater
http://www.kolly-theater.com/2010/07/pudhiya-paravai-at-shanti-deluxe.html[



Review by a viewer
http://cinema.theiapolis.com/movie-1S73/pudhiya-paravai/reviews-ratings/i-watched-the-movie-after-46-years-of-the-1000583.html

RAGHAVENDRA
28th July 2010, 12:20 PM
Dear Mahesh,
Thank you for providing links covering the Sunday event.

Here is another video hosted. This is the dance and gala at the entrance before the garland was taken in.

http://www.youtube.com/watch?v=D4M5gGwo5Fo

Raghavendran

J.Radhakrishnan
28th July 2010, 01:30 PM
ராகவேந்தர் சார், பம்மலார் சார்

சாந்தி தியேட்டர் நிகழ்வுகளை நேரடியாக பார்த்தது போல் இருந்தது.
நன்றி !!!

RAGHAVENDRA
28th July 2010, 02:00 PM
Raghavendra,
Please accept my delayed congratulation of receiving this year's Sivaji Award. You, along with Girija, totally deserve it. Good luck in managing one and only web site: www.nadigarthilagam.com
NT fan

Dear Sir,
Thank you very much for your kind words. There are many more people like Murali Sir, Pammalar, who should get recognised. Hope it materialises soon.

Dear Radhakrishnan,
Thank you for your kind compliments.

Raghavendran

Murali Srinivas
29th July 2010, 12:31 AM
Senthil & tac,

Sorry folks! Couldn't make it for Sunday evening show. But Ragavendar sir and Swami have made it more than enough.

I had gone to the theatre though I didn't go to the movie. It was a fantastic celebration by any yardstick and the two hours I had spent there was joyous. There was so much crowd and we were happy to see many youngsters turning up.

வந்திய தேவன் ஆடிப்பெருக்கு அன்று வீர நாராயண ஏரியை சுற்றி நடைபெறும் காட்சிகளை கண்டு களித்துக் கொண்டு வரும் போது அந்த காட்சிகளை வாசகன் உணர அத்துணை அழகாக விவரித்திருப்பார் கல்கி. அதே போல் நமது சுவாமி அவர்களும் கவிதை கலந்த நடையிலே ஆரம்பித்திருக்கும் அரங்கு நிகழ்வுகளை படிக்க நானும் ஆவலாய் உள்ளேன்.

அன்புடன்

pammalar
29th July 2010, 05:09 AM
சென்னை சாந்தி தியேட்டர் நிகழ்வுகள் - 2
[புதிய பறவை : 25.7.2010 : ஞாயிறு மாலைக் காட்சி]

வெள்ளித்திரை விடிவெள்ளியின் "புதிய பறவை" புதுக்காவியத்தின் ஆறரை மணி ஆட்டம் ஆரம்பிக்கப் போகிறது என அறிந்து அனைவரையும் போல் அடியேனும் அரங்கினுள் சென்று இருக்கையில் அமர்ந்து கொண்டேன். எனக்கு பக்கத்து இருக்கையில் நமது ராகவேந்திரன் சார், தங்கச்சுரங்கம் சிவாஜி போல் துடிப்புடன் இருந்தார். அவர் எப்பொழுதுமே அப்படித்தானே!

'நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அளிக்கும்' என டைட்டில் கார்ட் ரீட் செய்ய, ஆர்ப்பரிக்கிறது அரங்கம். அதிலிருந்து, 'நடிகர் திலகம் சிவாஜி கணேசன்' என்கின்ற நாமகரணம் வரும் வரை ஒரே கரவொலி, விசிலொலி மயம்! பெயர்ப்பலகை திகிலோடு முடிவடைந்து திரைப்படம் மென்மையுடன் மொட்டு விடுகிறது. சிங்காரச் சென்னையை நோக்கி சிருங்காரப் பயணிகள் கப்பல், பொற்றாமரைக்குளத்தில் மிதந்து வரும் கோயில் தெப்பம் போல், ஆழ்கடலில் அழகுற மிதந்து அக்கரைச்சீமையிலிருந்து வந்து கொண்டிருக்கிறது. அந்தக் கப்பலில் பயணம் செய்யும் கோபால்(நடிகர் திலகம்), பைனாகுலர் மூலம் ஃபைனான காட்சிகளை ரசித்த வண்ணம் அதே தளத்தில் சற்று தள்ளி 'டைம்' மேகஸின் படித்துக் கொண்டிருக்கும் சகபயணி லதாவின்(சரோஜாதேவி) காலை தெரியாமல் இடற, இருவரும் தங்களை பரஸ்பரம் தெரிந்து கொள்கிறார்கள். கோபால் பைனாகுலர் மூலம் உலகத்தைக் காண, கோபாலின் கோபியர்களோ (நடிப்புக்கடவுளின் பக்தர்கள்) இங்கே அவரையே உலகமாகக் காண்கிறார்கள். அகன்ற திரையில் நடிகர் திலத்தின் நல்லுருவம் தெரிந்தவுடன் ஆர்ப்பரிக்கும் அடலேறுவாகிறது அரங்கம்.

அடுத்து டைனிங் ஹால் காட்சி. நடிகர் திலகம், சரோஜாதேவி, விகேஆர். தனது மகளிடம் விகேஆர் 'இது இடம்' என்று அமர வேண்டிய இருக்கையையும், 'இது தமிழ்' என்று தமிழர் திலகத்தையும் காட்ட, 'தமிழே தலைவர் தான்' என்கின்ற கோஷம் கேட்கிறது. தனக்கு பிடித்தமான பலகாரம் பால்பேணி எனக் கூறிவிட்டு, சரோஜாதேவியின் ரசனையை வியக்கும் நடிகர் திலகம், அதற்குப்பின் மொழியும் வசனங்கள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. "வாழ்க்கையில ரசனை ரொம்ப முக்கியம். ரசிக்கத் தெரிஞ்சவங்க தான் உலகத்தினுடைய அழக பூரணமா அனுபவிக்க முடியும். நல்லா இருக்குன்னு சொல்றோம் பாருங்க, அந்த வார்த்தையே ரசனையிலேர்ந்து தான் உற்பத்தியாகுது." எவ்வளவு ரசித்து நடிக்கிறார். இதை ரசித்த விகேஆர், "வயசு இளமையாயிருந்தாலும் வார்த்தை முதுமையாயிருக்கு" என சிலாகிக்கிறார். உண்மை. அதை இவ்விதமும் கூறலாம். இளம் வயதிலே நடிப்பில் முதிர்ச்சி முத்திரை பதிப்பவர் நடிகர் திலகம் என்று.

விகேஆர் வினாக்களை விட அதற்கு விடைகளை அளிக்கிறார் நடிகர் திலகம். தனது பெயர் கோபால் என்றும், சொந்த ஊர் ஊட்டி என்றும், வியாபார விஷயமாக சிறுபிராயத்திலிருந்தே சிங்கப்பூரில் இருப்பதாகவும், தற்பொழுது தாயகம் திரும்புவதாகவும் கூறுகிறார். விகேஆரும் தன் பங்குக்கு தனது ஊர் ஊட்டிக்கு அருகாமையில் உள்ள கோயமுத்தூர் என்றும், தனது மகள் அக்கரைச்சீமைக்கு சுற்றுலா செல்ல விரும்பியதால் சிங்கப்பூர், மலேயா போன்ற நாடுகளுக்கு சென்று விட்டு மகிழ்ச்சியுடன் ஊர் திரும்பிக் கொண்டிருப்பதாகவும் கூறுகிறார். அதே சமயத்தில், லதா கோபாலிடம், தனது உள்ளம் அவரோடு நெருங்கி விட்டதையும் சூசகமாகத் தெரிவித்து, ஊரும் நெருங்கி விட்டது என்கிறார். பால்பேணி வருகிறது. நாம் எல்லோரும் தான் பலகாரம் சாப்பிடுகிறோம். ஆனால் இங்கே நடிகர் திலகம் பால்பேணி சாப்பிடுகிறார் பாருங்கள். எத்தனை அழகு! எத்தனை நேர்த்தி! பேணிப் பாதுகாக்கப்பட வேண்டிய நடிப்புப்பெட்டகம் அவர். கப்பல் கேப்டன் வருகிறார். வெள்ளைக்காரரான அவர், தனது அளகு தமிளில் வெளுத்து வாங்குகிறார். (இன்றைய காலகட்டத்தில் வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும், வானொலியிலும், இன்னும் பற்பல விழாக்கள், நிகழ்ச்சிகளிலும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பல பீடைகள் மொழிக்கொலையை துணிந்து செய்யும் போது வெள்ளைக்கார கேப்டன் தமிழ் பேசுவதை, தமிழ் பேச முயற்சிப்பதை நாம் பாராட்டித்தான் ஆக வேண்டும்.). நாளை கப்பல் சென்னைத் துறைமுகத்தை அடைவதாகவும், அதனால் இன்றிரவு கப்பலில் கேப்டன்ஸ் நைட் ஃப்ங்ஷன் வைத்திருப்பதாகவும், அதில் ஆட்டம், பாட்டம் எல்லாம் உண்டு என்று கூறும் கேப்டன், "ஆல் கலந்துக்கணும்" என அன்புக் கட்டளையிடுகிறார்.

அடுத்த காட்சியாக கேப்டன்ஸ் நைட் ஆரம்பமாகிறது. பக்தர்கள் இங்கே அந்த அற்புத இசைக்கு ஆடியபடியே திரையை நோக்கி நெருங்குகின்றனர். மெல்லிசை மன்னர்கள் மேற்கத்திய இசையிலும் மன்னர்கள். கேப்டனும், மற்றவர்களும் பாடிக் கொண்டே ஆடும் அந்த இசைக்கு நமது கால்களும் நம்மை அறியாமல் தாளம் போடுகின்றன. பக்தர்களைப் பற்றி சொல்லவா வேண்டும். கேப்டன் எவராவது பாட வேண்டும் என வேண்டுகோள் விடுக்க, எவரும் பாட முன்வராததால், தானே ஒரு அளகான தமில் பாட்டு பாடப் போவதாகக் கேப்டன் கூற, விகேஆர் உடனே "தமிழைக் காப்பாற்றுங்கள் கோபால்" என அறைகூவல் விட, கலைத்துறை என்னும் கடலில் தமிழைத் தன்னிகரற்ற முறையில் காப்பாற்றிய நடிகர் திலகம், ஆழிப்பெருங்கடலில் அசையும் இந்த அழகிய கப்பலிலும் தாய்மொழியைக் காப்பாற்ற தயார் ஆகிறார். திரைக்கு அருகே உள்ள மேடையிலும் வரிசையாக அகல் விளக்குகளைப் போல சூடங்களை வைத்து அக்னி பகவானுக்கு ஆக்யஞை(கட்டளை) கொடுக்க ஆயத்தமாகிறார்கள் பக்தர்கள். விகேஆரின்(இராமதுரை) மகள் லதா ஒரு அழகான தமிழ்ப் பாட்டு பாடுவார் என கோபால் அறிவித்ததுதான் தாமதம், அரை அரங்கமே திரையை நெருங்குகிறது.

கோபாலின் கைகள் கிளாப் அடிக்க, பின்னர் விரல்கள் பியானோவில் விளையாட, பியானோவை எந்த இசைக்கலைஞர் மெல்லிசை மன்னர்களின் குழுவில் வாசித்தாரோ அவர் தோற்றார், நடிகர் திலகம் இங்கே ஜெயித்து விட்டார். எத்தனை தத்ரூபமாக, கம்பீரமாக கைவிரல்களை அசைத்தும், சிரத்தை சற்று உயர்த்தியும், அங்க அசைவுகளைக் கொடுத்தும் தாளக்கட்டோடு வாசிக்கிறார். திரு.ஜோ கூறிய புகழுரை நினைவுக்கு வருகிறது. "இன்னொருத்தன் பொறந்துதான் வரணும்". பியானோ இசைக்கு திரைமேடையில் ஏறிய பக்தர்கள் ஆட, மேடைக்கு அருகே குழுமியிருந்தவர்கள் ஆட, அரங்கத்தில் ஆங்காங்கே நின்றிருந்தவர்கள் ஆட, இருக்கைகளில் அமர்ந்திருந்தவர்கள் எழுந்து ஆட, ஆக அரங்கமே ஆடுகிறது.

(தொடரும்...)

பக்தியுடன்,
பம்மலார்.

groucho070
29th July 2010, 07:51 AM
Having goosebumps just looking at the pix. What to do, will this ever happen to Malaysia? :cry:

Mahesh_K
29th July 2010, 10:46 AM
சென்னை சாந்தி தியேட்டர் நிகழ்வுகள் - 2
[புதிய பறவை : 25.7.2010 : ஞாயிறு மாலைக் காட்சி]

, சரோஜாதேவியின் ரசனையை வியக்கும் நடிகர் திலகம், அதற்குப்பின் மொழியும் வசனங்கள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. "வாழ்க்கையில ரசனை ரொம்ப முக்கியம். ரசிக்கத் தெரிஞ்சவங்க தான் உலகத்தினுடைய அழக பூரணமா அனுபவிக்க முடியும். நல்லா இருக்குன்னு சொல்றோம் பாருங்க, அந்த வார்த்தையே ரசனையிலேர்ந்து தான் உற்பத்தியாகுது."


பக்தியுடன்,
பம்மலார்.

இந்த வசனத்தை NT உச்சரிக்கும் விதம் மற்றும் அவரது பாடி language இருக்கிறதே..., வார்த்தைகளால் விவரிக்க முடியாது.. பார்த்துத்தான் உணர வேண்டும். சனிக்கிழமை இரவுக் காட்சியில் படம் பார்க்கும் போது பலத்த கையொலி.

பம்மலார் வர்ணனை அற்புதம். Match highlights தருவீர்கள் என்று நினைத்தேன். நீங்கள் "Full replay" தருகிறீர்கள். Thanks. அடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறேன்.

saradhaa_sn
29th July 2010, 12:40 PM
'புதிய பறவை' உற்சாகத்தில் திளைத்திருக்கும் நடிகர்திலகத்தின் ரசிக / பக்த கோடிகள் அனைவருக்கும் இந்த பழைய பறவையின் நல்வாழ்த்துக்கள்.

(கடந்த ஒருமாதத்துக்கும் மேலாக துண்டிக்கப்பட்டிருந்த எனது கணிணி இணைப்பு இப்போதுதான் மீண்டும் கிடைத்துள்ளது. முதல் வேலையாக விடுபட்டுப்போன பக்கங்கள் அனைத்தையும் படித்து முடித்தேன்).

முதலில், நடிகர்திலகத்தின் நினைவுநாளன்று 'நடிகர்திலகம் சிவாஜி' விருது பெற்ற சகோதரர் ராகவேந்தர், சகோதரி கிரிஜா மற்றும் திரு ஜெகன் ஆகியோருக்கு இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள். தகுதியானவர்களுக்கு கிடைத்திருக்கும் தகுதியான விருது. ராகவேந்தர் அவர்கள் இன்னும் இதுபோன்ற பல விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட வேண்டும் என்பது என் ஆவல் மட்டுமல்ல, அவரது உழைப்புக்கு வழங்கப்படும் அங்கீகாரமும் கூட.

பலர் இங்கே சொல்லியிருப்பது போல, விரைவில் சகோதரர்கள் பம்மலார், முரளியண்ணா ஆகியோருக்கும் வழங்கப்பட வேண்டும். அந்த நல்ல நாளை ஆவலோடு எதிர்நோக்குகிறேன்.

saradhaa_sn
29th July 2010, 01:02 PM
டியர் பம்மலார்.....

சாந்தி திரையரங்கத்தில் புதிய பறவை வெளியீடு புகைப்படத் தொகுப்பு மிகவும் அருமை.

சாந்தி திரையரங்க ஞாயிறு மாலை நிகழ்வுகளின் வர்ணனைகள் மிகவும் அற்புதம். நேரில் பார்ப்பது போலுள்ளது. உங்களின் வர்ணிப்பில் முரளியண்ணா இன்னொரு கல்கியைப் பார்த்தாரென்றால், நான் இன்னொரு சாண்டில்யனைப் பார்க்கிறேன். முதல் பாடல் வரைதான் வந்துள்ளது. அதுவே களைகட்டியுள்ளது.

வாழ்த்துக்கள்... நன்றிகள்....
மிச்சத்தையும் படிக்க காத்திருக்கிறோம்

saradhaa_sn
29th July 2010, 01:14 PM
டியர் ராகவேந்தர்

தாங்கள் மிகவும் சிரத்தையோடு அளித்திருக்கும் youtube இணைப்புகளுக்கு நன்றி.

(துரதிஷ்டவசமாக எனது கணினியில் youtube இணைப்பு வேலை செய்யவில்லையாதலால் கண்டு ரசிக்க முடியவில்லை. விரைவில் வாய்ப்பு வரும்போது கண்டு ரசிப்பேன்).

saradhaa_sn
29th July 2010, 01:25 PM
டியர் கே. மகேஷ்

தாங்கள் அளித்திருக்கும் பல்வேறு இணையதளங்களின் (புதிய பறவை திரையரங்க நிகழ்வுகளைப் பாராட்டி எழுதப்பட்டவை) இணைப்புகளுக்கு மிக்க நன்றி. அனைவரும் நன்றாகவும், உண்மையாகவும் எழுதியுள்ளனர். அவர்கள் வியப்படைந்ததில் அர்த்தம் இருக்கிறது.

** 46 ஆண்டுகளுக்கு முன் வெளியான ஒரு திரைப்படம்....

** பலமுறை திரையரங்குகளில் திரையிடப்பட்ட ஒரு படம்.....

** பலமுறை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டுவிட்ட ஒரு படம்....

** விசிடி / டிவிடிக்களில் வெளியாகிவிட்ட ஒரு படம்...

இப்போதும் கூட திரையரங்க வெளியீட்டில் இத்தகைய வரவேற்பைப் பெறுகிறதென்றால், காண்போர் அதிகபட்ச வியப்படைவது அர்த்தமுள்ளதுதானே. சிவாஜிபடை இன்றைக்கும் பொலிவோடு, வலுவோடு திகழ்கிறது என்பதற்கு, இந்த இணையங்களில் வெளியாகியுள்ள விவரங்களே கட்டியம் கூறும்.

நடிகர்திலகம் வாழ்கிறார்.... என்றும் வாழ்வார்.....

tacinema
29th July 2010, 01:35 PM
சென்னை சாந்தி தியேட்டர் நிகழ்வுகள் - 2
[புதிய பறவை : 25.7.2010 : ஞாயிறு மாலைக் காட்சி]


"வாழ்க்கையில ரசனை ரொம்ப முக்கியம். ரசிக்கத் தெரிஞ்சவங்க தான் உலகத்தினுடைய அழக பூரணமா அனுபவிக்க முடியும். நல்லா இருக்குன்னு சொல்றோம் பாருங்க, அந்த வார்த்தையே ரசனையிலேர்ந்து தான் உற்பத்தியாகுது." எவ்வளவு ரசித்து நடிக்கிறார். இதை ரசித்த விகேஆர், "வயசு இளமையாயிருந்தாலும் வார்த்தை முதுமையாயிருக்கு" என சிலாகிக்கிறார். உண்மை. அதை இவ்விதமும் கூறலாம். இளம் வயதிலே நடிப்பில் முதிர்ச்சி முத்திரை பதிப்பவர் நடிகர் திலகம் என்று.


பக்தியுடன்,
பம்மலார்.

Pammalar,

நம் தலைவர் மிக அடக்கத்தோடு பேசும் தமிழ் உச்சரிப்பே கொள்ளை அழகு. இந்த மாதிரி காட்சிக்களில் அவர் புகுந்து விளையடிருப்பார். தமிழ் அழகு பெறுகிறது என்பார்கள் - இதோ இந்த காட்சி தான் அதற்க்கு உதாரணம். எந்த நடிகர் அவரோடு போட்டி போடா முடியும்?

போக போக படம் எப்படி இருக்கும் என்பதற்கு இந்த ஒரு சீன்
சாட்சி. தங்கள் வருணனை மிக அருமை.

Superb start. please continue

Regards

saradhaa_sn
29th July 2010, 01:49 PM
டியர் முரளியண்ணா,

நடிகர்திலகத்தின் நினைவுநாள் விழா நிகழ்ச்சிகளின் முழுத்தொகுப்பும், விழாவை நேரில் கண்டு நெகிழ்ந்த உணர்வை ஏற்படுத்தியது. சிவசக்தி பாண்டியன், பொன்.விஜயராகவன், குகநாதன் ஆகியோரின் உரைகள் நெகிழ வைத்தன. ஒரே படமானாலும் ஆர்.கே.செல்வமணியின் அனுபவமும் நெஞ்சைத்தொட்டது. தொகுத்தளித்தமைக்கு மிக்க நன்றி

டியர் பம்மலார்,
நடிகர்திலகத்தின் நினைவுநாள் சுவரொட்டிகள் வரிசை அமர்க்களம். அதில் நெஞ்சைத்தொட்ட ஒரு வாசகம், நம் அனைவருக்கும் பொருத்தமான ஒன்று....

"மறக்க முடியுமா உங்களை
மாற்ற முடியுமா எங்களை"
(எந்த ஜென்மத்திலும் முடியாது).

saradhaa_sn
29th July 2010, 06:36 PM
ஜெயா தொலைக்காட்சியின் 'திரும்பிப்பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் இவ்வாரம் பிரபல திரைப்பட / நாடக / சின்னத்திரை நடிகரான திரு சண்முக சுந்தரம்.......

'நான் நடித்த முதல் படமே நடிகர்திலகத்துடன் தான், 'ரத்தத்திலகம்' படத்தில் நடித்தேன். முதல் இரண்டு நாட்கள் தனித்தனி சீன்கள் எடுத்தனர். மூன்றாவது நாள் இருவருக்கும் காம்பினேஷன் சீன். மேக்கப் ரூமில் இருந்தவர் என்னை அழைக்கிறார் என்றார்கள். போனேன். முதல் படமாச்சே என்று அவரிடத்தில் எனக்கு பயம் எதுவும் இல்லை. ஏனென்றால் அவர் அடிக்கடி என் அண்ணனைப் பார்க்க எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறார். நான் நடித்த நாடகங்களையும் பார்த்திருக்கிறார். மேக்கப் ரூமில் நுழைந்ததும் அங்கிருந்த தன் நண்பரிடம், 'இவர் சண்முக சுந்தரம். ஒண்டர்புல் ஆக்டர்' என்று அறிமுகப் படுத்தியவர் என்னிடம் திரும்பி, 'இன்னைக்கு நாம ரெண்டு பேருக்கும் காம்பினேஷன் சீன். நீ கொஞ்சம் அசந்தால் நான் உன்னை சாப்பிட்டு விடுவேன். நான் அசந்தால் நீ என்னை சாப்பிட்டுடணும்' என்றார்.

முதல் காட்சியே அவருடைய கன்னத்தில் அறைகிற மாதிரி சீன். 'பார்த்து அடிப்பா. நான் வயசானவன்' என்று சிரித்துக்கொண்டே சொன்னார். நானும்' இல்லேண்ணே நான் சும்மா அடிக்கிற மாதிரி ஆக்ஷன்தான் கொடுப்பேன்' என்று சொல்லி அறைவது போல் நடித்தேன். அதற்கு உண்மையிலேயே நான் கடுமையாக அடித்தது போல அவர் ரியாக்ஷன் கொடுத்ததுதான் சிறப்பு'. (இந்த இடத்தில் ரத்தத்திலகம்' கிளிப்பிங் காண்பிக்கப்பட்டது. சண்முக சுந்தரம் நான்குமுறை நடிகர்திலகத்தின் கன்னத்தில் அறைகிறார். அடி விழ விழ இவர் சிம்மக்குரலில் கர்ஜனை செய்கிறார்).

அடுத்த படமான 'கர்ணன் படத்திலும் எனக்கும் அவருக்கும் போட்டி சீன்தான். படத்தின் முக்கியமான காட்சி. கர்ணனாகிய அவருக்கு போர்க்களத்தில் தேரோட்டும் சல்லியனாக நான் நடித்திருந்தேன். நான் சொன்னதை அவர் கேட்கவில்லை என்பதற்காக பள்ளத்தில் இறங்கிய தேரை அப்படியே விட்டுவிட்டு கோபமாக இறங்கிப்போகும் காட்சி. (இந்த இடத்திலும் கிளிப்பிங்கும் வசனமும் காண்பிக்கப்பட்டன). தன்னோடு நடிப்பவர்களுக்கு எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுத்து அவர்களுக்கும் பெயர் கிடைக்க வேண்டும் என்று கருதும் ஒரே நடிகர், நடிகர்திலகம் சிவாஜி ஒருவர்தான்".

நன்றி சண்முகசுந்தரம் சார்...

RAGHAVENDRA
29th July 2010, 10:25 PM
சகோதரி சாரதா அவர்கள் நீண்ட நாட்களுக்குப் பின் புதிய பறவையாக சிறகடித்து வந்திருக்கிறார். மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. அது என்னவோ தெரியவில்லை, ஒரு வரி அல்ல, ஒரு வார்த்தை எழுதினாலும் போதும், நம் அனைவரும் ஒரு சேர பங்கேற்று விவாதிக்கும் போது ஏற்படும் மன நிறைவு நிச்சயம் நீங்காத நினைவுகள் தான்... மீண்டும் சாரதா அவர்களின் வரவுக்கு நமது அனைவரின் சார்பில் என் இதயங்கனிந்த மகிழ்ச்சியையும் நல்வரவையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்களுடைய கனிவான வார்த்தைகளுடனான பாராட்டு்க்களுக்கு என் உளமார்ந்த நன்றிகள். இதை எனக்கு தனிப்பட்ட முறையில் கிடைத்ததாக நான் எண்ணவில்லை, நம் அனவைரின் சார்பாகவும் எனக்குத் தரப்பட்டதாகத் தான் எண்ணுகிறேன். சொல்லப் போனால் தங்களுக்கும், முரளிசார், பிரபு ராம், பம்மலார் உள்ளிட்ட வித்தகர்களுக்கும் வழங்கப் படும் போது தான் என் மனம் நிறையும். நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றிய தங்களின் அலசல்கள் அடுத்த தலைமுறையினருக்கு சரியான வகையில் அப்படங்களை அறிமுகப் படுத்துகின்றன. இதற்கெனவே தனியாக தங்களுக்கெல்லாம் தனியாக விருது வழங்கப் பட வேண்டும்.

ஞாயிறு மாலைக் காட்சியில் நடைபெற்ற கோலாகலங்கள் உலகெங்கிலும் நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கு உவகையூட்டியுள்ளது. இன்று மாலைக் காட்சி வரையில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றியுடன் பவனி வந்துள்ளது. இதே சமயத்தில் திருச்சியில் உள்ள முருகன் திரையரங்கிலும் புதிய பறவை வெளியிடப் பட்டு அங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக தகவல்.

மெல்லிசை மன்னர்களின் இனிய பின்னணி இசையினை சாந்தி திரையரங்கில் குளிர்சாதன வசதியின் அமைப்பில் கேட்கும் சுவையும் சுகமும் தனி. குறிப்பாக ஹென்றி டேனியலின் குரலில் இரவு விடுதியில் ஒலிக்கும் பாடல், மலைவாழ் பழங்குடி மக்களின் இசையுடனும் ஹம்மிங்குடனும் புல்லாங்குழலின் இசையுடனும் வயலின் கருவிகளின் ஒலியுடனும் துவங்கும் சிட்டுக் குருவி பாடல், காரில் பங்களாவில் நுழைந்து இறங்கி, அங்கிருந்து ஊட்டியைச் சுற்றிப் பார்த்து விட்டு ஜீப்பில் வீட்டுக்குள் நுழையும் வரை ஒலிக்கும் மெல்லிய பின்னணி இசை, உன்னை ஒன்று கேட்பேன் இரண்டாம் முறை சுசீலாவின் குரலில் ஒலிப்பதற்கு சற்று முன்னால் ஒலிக்கும் ஹென்றி டேனியலின் குரல் ...

மெல்லிசை மன்னரின் இசையை அணு அணுவாக ரசிக்கவும் நடிகர் திலகம் கற்றுக் கொடுத்து விட்டாரே ... ரசனையைப் பற்றி அவர் கூறும் வசனம் போதுமே ...

வாழ்க்கையில் நடிகர் திலகத்தின் ரசிகனாகப் பிறக்க வேண்டும்...
புதிய பறவையைப் பார்க்க வேண்டும்...
அதை சென்னை சாந்தி திரையரங்கில் பார்க்க வேண்டும்..

சிவாஜி ரசிகர்களி்ன் இந்த மூன்று ஆசையும் நிறைவேற வாய்ப்பளித்த விநியோகஸ்தர்களுக்கும், சாந்தி திரையரங்க நிர்வாகத்திற்கும் நமது உளமார்ந்த நன்றி.

ஞாயிறு கோலாகலம் .... போனஸ்...

ராகவேந்திரன்

Murali Srinivas
30th July 2010, 12:54 AM
வருக சாரதா வருக. உங்களின் வருகையும் பதிவுகளும் வழக்கம் போல் களை கட்டத் தொடங்கிவிட்டன. பாராட்டுகளுக்கு நன்றி.

இங்கே நீங்கள் செந்தில் போன்றவர்கள் எனக்கு விருதளிக்க வேண்டும் என்று சொன்னீர்கள். நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் இது இணைய தளங்களில் செயல்படும் ரசிகர்களுக்கு மட்டும் கொடுக்கப்படும் விருதல்ல, மாறாக களப் பணி செய்யும் ரசிகர்களுக்கும், ஏதாவது தளத்தில் நடிகர் திலகத்தின் புகழ் பரப்பும் செயல் புரிபவர்களுக்கும் அது வழங்கப்பட்டிருக்கிறது. இனியும் அப்படியே தொடரும். ஆகவே என்னை விட தகுதியானவர்கள் ஏராளம் ஏராளம் பேர் இருக்கின்றனர். ஆனால் நண்பர் சுவாமி நிச்சயமாக தகுதி படைத்தவர். காரணம் என்னவென்றால் நடிகர் திலகம் புகழின் உச்சியில் இருந்த காலத்தில் அவர் பெயரில் சில பேர் பத்திரிக்கை நடத்தியிருக்கிறார்கள், ஆனால் அவர் நம்மிடையே இருந்து மறைந்த பிறகு அவர் பெயரில் ஒரு பத்திரிக்கை ஆரம்பித்து நடத்துவது என்பது எவ்வளவு கஷ்டமான வேலை என்பது அனுபவஸ்தர்களுக்கு தெரியும். அந்த நிலைமையிலும் தான் கை காசை போட்டு நடத்திய சுவாமி பாராட்டுக்கு மட்டுமல்ல விருதுக்கும் மிக தகுதியானவர்.

அன்புடன்

சாரதா

விளையாட்டுப் பிள்ளை விமர்சனம் படித்தீர்களா?

RAGHAVENDRA
30th July 2010, 02:03 AM
அன்பு மிக்க முரளி சார் அவர்களுக்கு,
தன்னடக்கம் தங்களிடம் ஏராளம். ஆனால் நீங்கள் எங்கள் நெஞ்சுக்குள் அடக்கம் தாராளம், தாராளம்...

அன்றைய சாந்தி திரையரங்க அளப்பரை, ஆரவாரங்களுக்கு மத்தியிலும் ஒரு ரசிகரின் காட்சி நம்மை நெகிழ வைத்து அழவும் வைத்து விட்டது. அதை படம் பிடிக்கும் பாக்கியமும் கிடைத்தது. ஆனால் அதை யூட்யூபில் சேர்க்கலாம் என்று எண்ணி தயார் செய்த போது என்னாலேயே உணர்வைக் கட்டுப் படுத்த முடியாமல் கணினியின் முன் நெகிழ்ந்து ஓரிரு நிமிடங்கள் அமர்ந்து விட்டேன். 46 ஆண்டு கால படத்திற்கான காட்சிக்காக வந்த நேரத்தில் நடந்த இந்த நிகழ்வு, நடிகர் திலகத்துடன் ரசிகர்களுக்குள்ள பந்தத்தை இந்த 45 வினாடி படம் நெகிழ்வுடன் சித்தரிப்பதைத் தாங்களும் காண

http://www.youtube.com/watch?v=3AGKZNPoDNo

அன்புடன்

ராகவேந்திரன்

pammalar
30th July 2010, 04:18 AM
சென்னை சாந்தி தியேட்டர் நிகழ்வுகள் - 3
[புதிய பறவை : 25.7.2010 : ஞாயிறு மாலைக் காட்சி]

அதிர்ச்சிக்குள்ளான அபிநயசரஸ்வதி ஒரு வகை வேகத்தோடு நடிகர் திலகத்தை நெருங்க, அங்கே கப்பல் தளத்திலும், இங்கே திரை தளத்திலும் சில நொடித்துளிகள் ஓசை ஒலிகள் நின்று ஒரு வித மௌனம். மௌனத்தை கலைக்கிறது மென்மையான "ப்ளீஸ்".

"உன்னை ஒன்று கேட்பேன்
உண்மை சொல்ல வேண்டும்
என்னைப் பாடச் சொன்னால்
என்னப் பாடத் தோன்றும்", சுசீலாவின் சுந்தரக் குரலில் ஒலிக்கிறது.

'என்ன பாடத் தோன்றும்', 'என்னப் பாடத் தோன்றும்' எனக் கேள்வி கேட்டே, என்றும் கேட்கக் கூடிய பாடலை படைத்த கவியரசர் பாட்டில் புவியரசர். அபிநயசரஸ்வதி அபிநயங்களை அள்ளி வீச, பியானோவில் நம்மவர் பின்னி எடுக்க, மெல்லிசை மன்னர்களின் இசைஜாலம் மெய்மறக்கச் செய்கிறது. முதல் சரணத்திற்கு முன், நடிகர் திலகத்தின் ட்ரம்பட் ட்ரீட் வருகிறது. அந்த சமயத்தில் இங்கே பக்தர்கள், ஏற்கனவே மேடையின் மீது வரிசையாக வைக்கப்பட்டிருந்த சூடங்களை சுடர் விடச் செய்ய, மெகாதீபாராதனை. மேடையில் கிட்டத்தட்ட பதினைந்துக்கும் மேற்பட்ட கற்பூரங்கள் ஜகஜ்ஜோதிமயமாக எரிகின்றன. கார்த்திகை தீபம், கார்கில் தீபம், அண்ணாமலை தீபம், ஆலயதீபம் ஆகிய தீபங்கள் ஒன்று சேர்ந்து ஒளி கொடுத்தால் எப்படி இருக்கும். சாட்சி இந்தக் காட்சி! இரண்டாவது சரணத்திற்கு முன், கனமான வாத்தியமான சாக்ஸோஃபோனை கற்றறறிந்த கனவான் போல் அம்சமாக வாசிக்கிறார் விழுப்புரம் வித்வான். கோபால்நாத்துக்கு முன்னோடி இக்கோபால் தானோ?! இரண்டாவது சரணம் இனிமையுடன் சிறகடிக்க, கேம்ஃபர்கள் கேர்லஸாக எரிவது கண்டு, காவல்துறையினர் கேர்டேக்கர்களாக மேடையை நோக்கி வர பக்தர்கள் கட்டுப்பட மறுக்கின்றனர். அண்ணலின் ஒவ்வொரு அசைவுக்கும், அடியார்கள் மேடை மீது நின்று அவரைத் தொடுவதும், அவர் பிம்பத்தைக் கும்பிடுவதும், அவர் திரையில் வரும் போதெல்லாம் அவரை மிஸ் பண்ணாமல் கிஸ் பண்ணுவதுமாக திரையரங்கக் காட்சிகள் திருவரங்கக் காட்சிகள் போல் நகருகின்றன. அந்த சிவபெருமானுக்கு 63 நாயன்மார் என்றால் இங்கே இந்த சிவாஜி பெருமானுக்கு எத்துணை நாயன்மார். ஆர்ப்பரிக்கும் அடலேறுகளாக ஆகிவிட்டனர் அடியார்கள்.

கோபாலின் ரசிகப்பிள்ளைகளை கட்டுப்படுத்த, மாப்பிள்ளை வேணுகோபாலே வந்துவிட்டார்.

(தொடரும்...)

பக்தியுடன்,
பம்மலார்.

gopalu_kirtinan
30th July 2010, 05:23 AM
I am very very happy to see this discussion forum on Nadigar Thilagam. Thanks a lot for Murali, Raghavendra, pammalar, Joe and other people who writes about Sivaji sir.

RAGHAVENDRA
30th July 2010, 07:54 AM
Dear Sri Gopalu Kirtinan,
It's heartening to get in contact with more and more Sivaji Fans and yours is a delight to get introduced. Nadigar Thilagam Sivaji Ganesan, even after 9 years of his physical disappearance, lives in the hearts of millions of fans the world over. And this forum serves as a platform to share our views and thoughts on NT. Thanks to the Hub through which now we have got one more friend in the NT fans community.

Welcome Sri Gopalu Kirtinan

Raghavendran

Mahesh_K
30th July 2010, 10:51 AM
டியர் கே. மகேஷ்

தாங்கள் அளித்திருக்கும் பல்வேறு இணையதளங்களின் (புதிய பறவை திரையரங்க நிகழ்வுகளைப் பாராட்டி எழுதப்பட்டவை) இணைப்புகளுக்கு மிக்க நன்றி. அனைவரும் நன்றாகவும், உண்மையாகவும் எழுதியுள்ளனர். அவர்கள் வியப்படைந்ததில் அர்த்தம் இருக்கிறது.

** 46 ஆண்டுகளுக்கு முன் வெளியான ஒரு திரைப்படம்....

** பலமுறை திரையரங்குகளில் திரையிடப்பட்ட ஒரு படம்.....

** பலமுறை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டுவிட்ட ஒரு படம்....

** விசிடி / டிவிடிக்களில் வெளியாகிவிட்ட ஒரு படம்...

இப்போதும் கூட திரையரங்க வெளியீட்டில் இத்தகைய வரவேற்பைப் பெறுகிறதென்றால், காண்போர் அதிகபட்ச வியப்படைவது அர்த்தமுள்ளதுதானே. சிவாஜிபடை இன்றைக்கும் பொலிவோடு, வலுவோடு திகழ்கிறது என்பதற்கு, இந்த இணையங்களில் வெளியாகியுள்ள விவரங்களே கட்டியம் கூறும்.

நடிகர்திலகம் வாழ்கிறார்.... என்றும் வாழ்வார்.....


One more point to be noted.

** டிக்கட் கட்டணம் ரூ. 80 /ரூ. 60

gopalu_kirtinan
30th July 2010, 11:29 AM
Welcome Sri Gopalu Kirtinan

Raghavendran

Sir you can call me Gopal. Vasantha maligai is my favorite movie. i like the way Sivaji delivered the dialogues before "Mayakkam enna" song. There are so many cases where i can point out his excellence as an actor. I will do that in future.

I am just 24 yrs old. my friends tease me for being a sivaji fan. but i dont care of them. I love to see sivaji movies. i like his walking mannerism which brought him more fans. still in villages, people speak about his walking style.

goldstar
30th July 2010, 12:22 PM
Welcome Gopal.

Good to see youngster like you follow Sivaji and his movies.

I am also not too old just 38.

Cheers,
Sathish

Irene Hastings
30th July 2010, 12:39 PM
உங்கள் வரவு நல்வரவாகுக கோபால்

கோபால் என்றவுடன் எனக்கு புதியபறவை கோபால் தான் நினைவுக்கு வருகிறது !

வயது 24 என்றவுடன் அதிற்சி கலந்த மகிழ்ச்சி !

KCSHEKAR
30th July 2010, 05:15 PM
வருக திரு.கோபால். வயது 20 ஆகட்டும் 60 ஆகட்டும் கலை ரசனை உள்ளவர்களால் வயது வித்தியாசமின்றி நடிகர்திலகம் என்றுமே நேசிக்கப்படுவார். இதுதான் சத்தியமான உண்மை.

pammalar
30th July 2010, 10:13 PM
டியர் முரளி சார், சகோதரி சாரதா,

எழுத்துலக ஜாம்பவான்களான கல்கி, சாண்டில்யன் போன்றவர்கள் எங்கே! அடியேன் எங்கே! தங்களது உச்சமான பாராட்டுக்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
30th July 2010, 10:48 PM
டியர் டாக், ஜேயார்,

பாராட்டுக்கு நன்றி!

டியர் மகேஷ் சார்,

பாராட்டுக்கு மிக்க நன்றி! தாங்கள் தொடர்ந்து அளித்து வரும் "புதிய பறவை" படம் சம்பந்தப்பட்ட பொன்னான லிங்க்குகளுக்கு பற்பல நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

Murali Srinivas
30th July 2010, 10:51 PM
Having goosebumps just looking at the pix. What to do, will this ever happen to Malaysia? :cry:

Rakesh,

Probably you are talking about the picture uploaded by NOV in the other thread, I believe. Very true and I had the same feeling when I snapped that moment at the theatre entrance and I should thank NOV for doing a job which looks simply great on the page.

Regarding your expectation [shall I say aadhangam], good news is round the corner. This may get fulfilled in 2011.

Welcome Gopal and as rightly pointed out by our hubbers, age doesn't matter when it comes to NT and his movies but yes we are over whelmed that such youngsters are able to appreciate NT. I wish you a happy stay here.

Talking about age reminds me of another info on the same line which was shared by Swami. One of Swami's friends had gone for the matinee show for Puthiya Paravai yesterday and he could spot a group of youngsters in his row with books and all. During the interval, he went up and checked with the youngsters and it transpired that one of the youth's father is a hard core fan of NT and basis the things his father told about the movie the young guy had brought his friends also. it seems that they were overwhelmed by the movie and they asked how would the movie would end. Our friend didn't disclose and asked them to watch it. Goes to show again that NT and his films would transcend all barriers.

சுவாமி,

எதுகை மோனையில் விளையாடுகிறீர்களே! பிரமாதம்.

Regards

pammalar
31st July 2010, 03:56 AM
சென்னை சாந்தி தியேட்டர் நிகழ்வுகள் - 4
[புதிய பறவை : 25.7.2010 : ஞாயிறு மாலைக் காட்சி]

மாந்திரீகத்தாலும் கட்டுப்படுத்த முடியாதவர்கள் மாப்பிள்ளையின் அணுகுமுறைக்கு சற்று கட்டுப்பட்டனர். பாதுகாப்பு கருதி மேடையில் சூடங்களை ஏற்ற வேண்டாம் என்கின்ற மாப்பிள்ளையின் வேண்டுகோளுக்கு பக்தர்கள் செவி சாய்த்தனர். மாப்பிள்ளையும், போலீஸும் விடை பெற, இக்காட்சிகளை கண்ட எனக்கு நமது முரளி சாரும், அவர் காட்டும் மேற்கோளும் நினைவுக்கு வந்துவிட்டது. ஆம், அவர் குறிப்பிடுவது போலவே, 'வழக்கம் போல் போலீஸ் வந்து விட்டது'. இத்தகைய கோலாகலங்களுடன் பாடலும் நிறைவடைந்தது. இப்பாடலைப் பற்றிய சில தகவல் துளிகள்:

- கருப்பு கோட்-சூட் காஸ்டியூமில் கலைக்குரிசிலைக் காண்பது கண்கொள்ளாக்காடசி. ஒய்ஜி ஒரு சிவாஜி விழாவில் கூறியது நினைவுக்கு வருகிறது. "அவர் மட்டும் தான் கோட்-சூட் அணிந்தால் எக்ஸிக்யூடிவ் போல இருப்பார். வேறு எவர் கோட்-சூட் அணிந்தாலும் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் சர்வர் போலத் தான் தெரிவார்."

- அபிநயசரஸ்வதி இப்பாடலில் அடிச்சுக்க முடியாத சரஸ்வதி. அழகிலாகட்டும், கவர்ச்சியிலாகட்டும், பாடி லேங்குவேஜிலாகட்டும், சிவப்பு சேலை காஸ்டியூமில் ஆகட்டும், சிவாஜிக்கு சற்றும் குறையாமல் இப்பாடலில் ஸ்கோர் செய்திருபார். அபிநயசரஸ்வதியை மிக மிக இளமையாகவும், மிகுந்த அழகாகவும் காட்டிய ஒரே தமிழ்க் கலர் படம் "புதிய பறவை"யாகத் தான் இருக்க முடியும். (நம்ம மோகனரங்கன் ஆமோதிப்பார் என எண்ணுகிறேன், என்ன ரங்கன் சார்!)

- பிரசாத்தின் கேமராவிற்கு என்ன கைம்மாறு? நமது பாராட்டுக்களும், நன்றிகளும் தான்! பிரசாத்தின் கேமரா ஒர்க் படம் முழுமையுமே பிரமாதம்!

சிருங்காரக் கப்பல் சிங்காரச் சென்னையில் கரை சேர, விலாசங்களைக் கொடுக்காமலேயே விடைபெற்றுக் கொள்கின்றனர் லதா-ராமதுரை மற்றும் கோபால். ஷிப்பிலிருந்து இறங்கும் கோபாலை பின்னாலே 'கப்'பென்று பிடிக்கப் போவதால், இப்போது 'கப்சிப்' என ஒரு கண்மட்டும் வைக்கிறார் ரங்கன்(நடிகவேள்). [இந்த ரங்கன் கலைக்குரிசிலைப் பிடிப்பதற்காக கண் வைக்கிறார். ஹப்பர் ரங்கன் கலைக்குரிசிலை பிடித்ததற்காக, கண்களில் மட்டுமல்ல, இதயத்திலும் வைத்திருக்கிறார். ](இந்த மேற்கோள் நம் எல்லோருக்குமே பொருந்தும்!)

(தொடரும்...)

பக்தியுடன்,
பம்மலார்.

NOV
31st July 2010, 07:40 AM
Regarding your expectation [shall I say aadhangam], good news is round the corner. This may get fulfilled in 2011.:omg: :omg: :omg:
I can't wait!!!! :redjump: :bluejump:

The last time I saw PP on the big screen was in the early 80s. Can't wait!

NOV
31st July 2010, 07:58 AM
[html:a165fb7b87]
http://farm5.static.flickr.com/4089/4844798971_9ae9f5034b_b.jpg

[/html:a165fb7b87]

Mahesh_K
31st July 2010, 11:58 AM
உங்கள் வரவு நல்வரவாகுக கோபால்

கோபால் என்றவுடன் எனக்கு புதியபறவை கோபால் தான் நினைவுக்கு வருகிறது !

வயது 24 என்றவுடன் அதிற்சி கலந்த மகிழ்ச்சி !

தங்க்ளுக்கு அதிர்ச்சி என்றாலும், உண்மை நிலையை பிரதிபலிப்பதாகவே நான் கருதுகிறேன்.

தமிழகத்தில் எந்த நடிகருக்கு ரசிகர்கள் அதிகம்? என்ற நோக்கில் ஊடகங்களால் எடுக்கபட்ட கருத்துக் கணிப்புகள் இதனை உறுதி செய்தே வந்து உள்ளன.

1990ம் ஆண்டு குமுதம் வார இதழ் நடத்திய கருத்துக் கணிப்பு ( NT முதல் இடம் - 58.76 % -multiple choice for respondents allowed) தொடங்கி 2008ம் ஆண்டு Loyola college புள்ளியியல் துறை நடத்திய கருத்துக் கணிப்பு ( NT -18.9% 2nd place - multiple choice for respondents not allowed) வரை பல உதாரணங்களை சொல்லலாம்.

இந்த சர்வே எல்லாமே அறிவியல் முறைப்படி, demographic pattern பிரதிபலிக்கும்படி எடுக்கப்பட்டவை. நமது மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி -அதாவது 46 to 47 % - 25 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் என்பதைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, இளைஞர்களின் அபிமானமும் கணிசமான அளவு NT க்கு உள்ளது என்பது தெளிவு.

அது மட்டுமன்றி 1990ல் திரையுலகில் active நடிப்பிலிருந்து விலகியிருந்த காலத்தில் மட்டுமன்றி இப்போது மூன்றாம் தலைமுறை நடிகர்களின் காலத்தில் கூட ஆதரவு தொடர்கிறது என்பதற்க்கு இந்த சர்வேக்கள் மட்டுமன்றி அவரது பழைய படங்களுக்கு கிடைக்கும் ஆதரவும் சாட்சி.

KCSHEKAR
31st July 2010, 12:27 PM
சாந்தி திரையரங்க - புதிய பறவை நிகழ்வுகளை அருமையாகப் படம் பிடித்துக் காட்டிய திரு. பம்மலார் மற்றும் திரு.ராகவேந்திரன் ஆகியோருக்கு நனறிகள் பல. யு-டியூப் மூலம் படக்காட்சிகளை வெளியிட்ட நடிகர்திலகம் டாட் காம் இனணய தளத்திற்கும் நன்றி.

pammalar
31st July 2010, 01:42 PM
Thank You Very Much Mr.NOV for excellently uploading Our NT Notice.

Regards,
Pammalar.

HARISH2619
31st July 2010, 02:04 PM
திரு பம்மல் சார்,
தியேட்டர் நிகழ்வுகள் வர்ணனை மிகவும் அருமை.சாரதா மேடம் சொன்னதை நான் ஆமோதிக்கிறேன்.

முரளி சார்,
நான் படம் பார்க்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தைவிட தாங்கள் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம்தான் மேலோங்குகிறது.இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பை விடலாமா?

நீண்ட இடைவேளைக்கு பிறகு வந்திருக்கும் சாரதா மேடமை வரவேற்கிறேன்

புதுவரவான இளைய தலைமுறை கோபால் அவர்களே வருக வருக.

saradhaa_sn
31st July 2010, 04:02 PM
டியர் NOV,

சென்னைத் திரையரங்குகளில் செஞ்சுரியடித்த நடிகர்திலகத்தின் படங்களின் தொகுப்புப்பட்டியலை அப்லோட் செய்தமைக்கு மிக்க நன்றி. இதன்மூலம் பலபேர் தெளிவடைவார்கள் என்பது நிச்சயம்.

------------------

நன்றி செந்தில்,
உங்கள் சகோதரி எங்கும் போய்விடவில்லை, உங்களோடுதான் இருக்கிறேன். இருப்பேன்.

abkhlabhi
31st July 2010, 04:28 PM
http://www.alaikal.com/news/?p=43637

abkhlabhi
31st July 2010, 04:37 PM
புதிய பறவை ஏற்படுத்திய புதிய திட்டம்




எம்*.ஜி.ஆர்., சிவா*ஜி நடித்த பழைய படங்கள் அவ்வப்போது பெரும் பரபரப்புடன் விளம்பரத்துடன் திரையிடப்படுவதும், சத்யரா*ஜ் போன்ற விசி***றிகள் ரசிகர்களுடன் விசிலடித்து படத்தை ரசித்து பத்தி*ரிகைகளில் பேட்டியளிப்பதும் வாடிக்கையானதுதான்.

சென்ற வாரம் சிவா*ஜியின் சாந்தி திரையரங்கில் சிவா*ஜி நடித்த புதிய பறவை படம் திரையிடப்பட்டது. பார்த்த ஞாபகம் இல்லையோ, உன்னை ஒன்று கேட்பேன், எங்கே நிம்மதி போன்ற அருமையான பாடல்கள் நிறைந்த இந்தப் படம் திரையிட்ட முதல் மூன்று தினங்களும் ஹவுஸ்ஃபுல்லாக வசூலை வா*ரிக் கொட்டியிருக்கிறது.

புதிய படங்கள் ஈயடித்துக் கொண்டிருந்த போது புதிய பறவைக்கு கூட்டம் அலைமோதியது.

இதனால் சிவா*ஜியின் புகழ்பெற்ற திரைப்படங்களை அவ்வப்போது திரையிடுவது என முடிவெடுத்திருக்கிறது சிவா*ஜியின் குடும்பம்.

சிவா*ஜி ரசிகர்களை குஷிப்படுத்தும் முடிவு

RAGHAVENDRA
31st July 2010, 05:52 PM
Sir you can call me Gopal. Vasantha maligai is my favorite movie. i like the way Sivaji delivered the dialogues before "Mayakkam enna" song. There are so many cases where i can point out his excellence as an actor. I will do that in future.

I am just 24 yrs old. my friends tease me for being a sivaji fan. but i dont care of them. I love to see sivaji movies. i like his walking mannerism which brought him more fans. still in villages, people speak about his walking style.

இனிய இளைய நண்பர் கோபால் அவர்களுக்கு நமது உளமார்நத வாழ்ததுக்கள். நீங்கள் 1986ல் அல்லது முதல் மரியாதைக்கு பிறகு பிறந்திருப்பீர்கள். அப்போது நடிகர் திலகம் கிட்டத் தட்ட தன்னடைய படங்களின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொண்ட நேரம். அந்த கால கட்டத்தில் அவர் கிட்டத் தட்ட 60 ஆண்டுகள் கலைப் பணியை கடந்திருப்பார். தங்களுக்கு நினைவு வந்த நாள் ஒரு ஐந்து வயது என்று வைத்துக் கொண்டாலும் கூட 1990 அல்லது 1991 ஆண்டு இருக்கலாம். அதிக பட்சம் தங்களுக்கு தெரிந்து அவருடைய மிகப் பெரிய படமாக தேவர் மகன் அமைந்திருக்கும். அவர் இறந்த காலத்தில் தாங்கள் பள்ளிப் படிப்பை முடித்திருக்கலாம் அல்லது முடிக்கும் தருவாயில் இருக்கலாம். அந்த நேரத்தில் ஓரளவுக்கு சினிமா என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளும் பக்குவம், அறிவு, தெளிவு அனைத்தும் தங்களுக்கு வந்திருக்கலாம். இன்னும் சொல்லப் போனால் அவர் இறந்த பிறகே தாங்கள் அவரைப் பற்றி அறியத் தொடங்கியிருக்கக் கூடும். தங்களின் கால கட்டத்தில் அறிவியல் முன்னேற்றம், தலைமுறை இடைவெளி, மூன்றாம் தலைமுறை நடிகர்களின் ஆதிக்கம் இவையெல்லாம் தங்களுக்குள் நியாயமாக தாக்கம் ஏற்படுத்தியிருக்கலாம்.

இந்த அனைத்தையும் கடந்து தங்களால் நடிகர் திலகத்தின் பால் ஈர்க்கப் பட்டு செல்ல முடிகிறதென்றால் அதற்குக் காரணமாய் இருக்கக் கூடியவை

1. சந்தேகமின்றி நடிகர் திலகம் என்ற உன்னதக் கலைஞனின் நடிப்பு
2. உள்ளத்துக்குள் தங்களுக்கு எந்த வித போலித்தனமும் இல்லாமை.
3. புதிய பறவை படத்தில் நடிகர் திலகம் கூறுவது போல் நல்ல ரசிகனிடம் நல்ல மனம் இருக்கும். உங்களுக்கு இருக்கிறது.

போலித்தனமற்ற, கலையின் பால் ஆழ்ந்த ஈடுபாடுடைய அனைவரும் நடிகர் திலகத்தின் தாக்கத்திலிருந்து விடுபட முடியாது. அதற்கு தங்களுடைய தலைமுறையே சான்று.

தங்களுடைய கள்ளங்கபடமற்ற ரசிப்புத்தன்மையே தங்களை நடிகர் திலகத்திடமும அவருடைய பக்தர்களாகிய நம் அனைவருடனும் சேர்த்திருக்கிறது.

வாழ்த்துக்கள்

ராகவேந்திரன்

Murali Srinivas
31st July 2010, 11:35 PM
NOV, two things.

Thanks for the upload of notice.

Second - Sorry, I was not talking about PP. It is another movie which is definitely one of your favourites. Grandiose plans are on for the said movie. Will give you details soon. But even PP may make it .

மகேஷ்,

உண்மைகளை தெளிவாக எழுதியிருக்கிறீர்கள். எனக்கு வேறொன்று நினைவிற்கு வருகிறது. ஒரு முறை பொது தேர்தல் முடிந்து ஒரு தனியார் தொலைக்காட்சியின் குழு உரையாடலின் போது சினிமா நடிகர்கள் தேர்தலில் ஏற்படுத்தும் மாறுதலைப் பற்றி பேசும் போது கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஒருவர் மற்றவர்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார். தமிழகத்திலேயே 60-களிலும் 70-களிலும் அதிகமான ரசிகர்களை கொண்டிருந்தவர் யார் என கேள்வி எழுப்பினார். அதில் இருந்தவர்கள் வேறொரு பெயரை சொல்ல இவர் மறுத்து நடிகர் திலகத்திற்குதான் அதிகமான ரசிகர்கள் என்பதை சொல்லிவிட்டு அதை நிரூபிப்பது போல் சில விஷயங்களையும் சொன்னார்.

செந்தில்,

எனக்கும் வருத்தம்தான். நான் வேறொரு இடத்திற்கு செல்ல வேண்டிய சூழல். ஆனால் அங்கும் நடிகர் திலகம்தான் பாட்டுடை தலைவன். மட்டுமல்ல, அங்கே சந்தித்தவர்களிடமிருந்து இருந்து நடிகர் திலகம் பற்றி பல செய்திகளை அறிய முடிந்தது.

வெகு நாட்களாக அமைதியாக இருந்த பாலா அவர்களே புதிய பறவையின் மூலமாக திரும்பி வந்திருக்கும் உங்களுக்கும் நல்வரவு.

ராகவேந்தர் சார்,

அழகான லாஜிக்கான அலசல். நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை.

அன்புடன்

pammalar
1st August 2010, 01:22 AM
வருக சாரதா வருக. உங்களின் வருகையும் பதிவுகளும் வழக்கம் போல் களை கட்டத் தொடங்கிவிட்டன. பாராட்டுகளுக்கு நன்றி.

இங்கே நீங்கள் செந்தில் போன்றவர்கள் எனக்கு விருதளிக்க வேண்டும் என்று சொன்னீர்கள். நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் இது இணைய தளங்களில் செயல்படும் ரசிகர்களுக்கு மட்டும் கொடுக்கப்படும் விருதல்ல, மாறாக களப் பணி செய்யும் ரசிகர்களுக்கும், ஏதாவது தளத்தில் நடிகர் திலகத்தின் புகழ் பரப்பும் செயல் புரிபவர்களுக்கும் அது வழங்கப்பட்டிருக்கிறது. இனியும் அப்படியே தொடரும். ஆகவே என்னை விட தகுதியானவர்கள் ஏராளம் ஏராளம் பேர் இருக்கின்றனர். ஆனால் நண்பர் சுவாமி நிச்சயமாக தகுதி படைத்தவர். காரணம் என்னவென்றால் நடிகர் திலகம் புகழின் உச்சியில் இருந்த காலத்தில் அவர் பெயரில் சில பேர் பத்திரிக்கை நடத்தியிருக்கிறார்கள், ஆனால் அவர் நம்மிடையே இருந்து மறைந்த பிறகு அவர் பெயரில் ஒரு பத்திரிக்கை ஆரம்பித்து நடத்துவது என்பது எவ்வளவு கஷ்டமான வேலை என்பது அனுபவஸ்தர்களுக்கு தெரியும். அந்த நிலைமையிலும் தான் கை காசை போட்டு நடத்திய சுவாமி பாராட்டுக்கு மட்டுமல்ல விருதுக்கும் மிக தகுதியானவர்.



டியர் முரளி சார்,

தாங்கள் எழுதிய வரிகள், என் கண்களில் ஆனந்தக்கண்ணீரையே வரவழைத்துவிட்டது. தங்களின் பெருந்தன்மைக்கு ஈடு இணையே இல்லை. தங்களுக்கு எனது இரு கரம் கூப்பிய, சிரம் தாழ்த்திய நன்றிகள்!

பாசத்துடன்,
பம்மலார்.

pammalar
1st August 2010, 02:10 AM
சகோதரி சாரதா,

தொடக்கத்திலிருந்தே தாங்கள் அளித்து வரும் தொடர் பாராட்டுக்களுக்கு எனது நன்றிகள் என்றென்றும்!

ஜெயா தொலைக்காட்சியில் நடிகர் திரு.சண்முகசுந்தரம் நடிகர் திலகம் குறித்து கூறியவற்றை தொகுத்தளித்தமைக்கு முதற்கண் நன்றி!

தாங்கள் இத்திரிக்கு மட்டுமா, இந்த ஹப்பிற்கே என்றும் "புதிய பறவை" தான். நமது நடிகர் திலகம் திரியின் முன்னோடிகளில் தாங்கள் முதன்மையானவர். தங்கள் பதிவு இல்லாத எத்திரியும், பருப்பு இல்லாத சாம்பார் போல, பாயசம் இல்லாத விருந்து போல! இங்குள்ள எல்லோரையும் போலவே தங்களின் பதிவுப் பொக்கிஷங்களை நானும் எப்பொழுதும் ஆவலுடன் எதிர்நோக்குகின்றேன்.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
1st August 2010, 02:20 AM
"புதிய பறவை" பற்றி எழுதிக் கொண்டிருக்கும் போதே கோபால் வந்து விட்டார்.

திரு.கோபால் அவர்களே, "வருக! வருக!" , தங்கள் வரவு நல்வரவாக அமையும் என்பது திண்ணம்.

திரையுலகில் தனது 24வது வயதில் புயலாகப் புகுந்தார் நடிகர் திலகம். "நடிகர் திலகம்" என்னும் இத்திரியுலகில், அதே அகவையில் தாங்கள்
தென்றலாய் அடியெடுத்து வைத்துள்ளீர்கள். தங்களுக்கு எனது நன்றி கலந்த பாராட்டுக்கள் மற்றும் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
1st August 2010, 02:24 AM
டியர் முரளி சார், சந்திரசேகரன் சார், செந்தில் சார்,

பாராட்டுக்களுக்கு பற்பல நன்றிகள்!

டியர் ராகவேந்திரன் சார்,

அபாரமான ஆய்வு! அற்புதமான அலசல்!! நன்றி கலந்த பாராட்டுக்கள்!!!

அன்புடன்,
பம்மலார்.

NOV
1st August 2010, 08:50 AM
Murali, don't tell me its Gauravam! :frightened:

Will I live to tell that I've watched it on big screen?

RAGHAVENDRA
1st August 2010, 09:20 AM
டியர் நவ் சார்,
தங்களுடைய வார்த்தைகள் தங்களுடைய உள்ளக் கிடக்கையை உருக்கமாக வெளிப் படுத்துகின்றன. நடவாதது எதுவுமில்லை என்ற நம்பிக்கையுடன் நிச்சயம் வெல்வீர்கள். பாரிஸ்டர் ரஜினிகாந்த் நம்மை ஏமாற்ற மாட்டார். விரைவில் வெள்ளித்திரையில் கௌரவம் வெளியாகும் என்ற ஆவலுடனும் நம்பிக்கையுடனும் காத்திருப்போம்.

டியர் முரளி மற்றும் பம்மலார்,
தங்களுடைய பாராட்டுக்களுக்கு நன்றி. திரு கோபால் போன்ற எண்ணற்ற எதிர்காலத் தலைமுறை ரசிகர்களையெல்லாம் எதிர்பார்த்திருப்பாரோ என்னவோ, நடிகர் திலகம் பல தலைமுறைகளுக்கான நடிப்பிலக்கணத்தை வடித்து வைத்துச் சென்றிருக்கிறார்.

அன்புடன்
ராகவேந்திரன்

NOV
1st August 2010, 09:40 AM
:bow: RAGHAVENDRA :)

saradhaa_sn
1st August 2010, 11:36 AM
நேற்றைய தினம் மதுரையில் நடைபெற்ற தியாகி கக்கன் அவர்களின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் கூடியிருந்த லட்சக்கணக்கானோர் மத்தியில், திரு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் 'சிங்கத்தமிழன் சிவாஜி' அவர்கள் பற்றிக்குறிப்பிட்டபோது, கூட்டத்தினர் மத்தியில் பலத்த கைதட்டல் மற்றும் விஸில். (வசந்த் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பாகக் காண்பிக்கப்பட்டது).

RAGHAVENDRA
1st August 2010, 12:28 PM
நேற்றைய கக்கன்ஜி நூற்றாண்டு விழா நிகழ்ச்சியின் நேரலையை வசந்த் தொலைக்காட்சியைப் பார்த்த பொழுதும் அந்தக் கூட்டத்தைப் பார்த்த பொழுதும் பழைய காட்சிகள் மனத்திரையில் நிழலாடின. அதற்கேற்றாற்போல் இளங்கோவன் அவர்கள் தம்முடைய உரையில் அந்தக் கூட்டத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது, சிங்கத் தமிழன் சிவாஜியும் மூப்பனார் அவர்களும் உரையாற்றும் கூட்டத்துக்கு எவ்வளவு கூட்டம் வருமோ அந்த அளவிற்கு உள்ளதாகக் குறிப்பிட்டார்.

ஆனால் ஒரே ஒரு வருத்தம். தியாகசீலர் கக்கன்ஜி அவர்களுக்காக தம்முடைய நாடகம் மூலம் ஈட்டிய வசூலை கொடுத்த நடிகர் திலகத்தின் நற்செயலைப் பற்றி யாருமே நினைவு கூறாதது ஏமாற்றமே, குறிப்பாக கக்கன்ஜி அவர்களின் குடும்பத்தினர் கூறுவர் என எதிர்பார்க்கப் பட்டது.

இவர்கள் என்ன செய்தாலும், நடிகர் திலகத்தை உரிய முறையில் நினைவு கூறாமலும் கௌரவிக்காமலும் இருக்கும் வரையிலும் காங்கிரஸ் பேரியக்கம் தமிழ்நாட்டில் தனியாக ஆட்சியமைப்பது கனவிலும் கூட நடக்காது. நடிகர் திலகம் அவர்களுடைய பெயரைச் சொல்லாமல் தேசிய இயக்கம் திராவிட இயக்கங்களுக்கு ஈடு கொடுப்பது என்பது என்றைக்குமே கைகூடாது. இதுவே என் எண்ணம்.

அன்புடன்
ராகவேந்திரன்

saradhaa_sn
1st August 2010, 01:28 PM
ஆனால் ஒரே ஒரு வருத்தம். தியாகசீலர் கக்கன்ஜி அவர்களுக்காக தம்முடைய நாடகம் மூலம் ஈட்டிய வசூலை கொடுத்த நடிகர் திலகத்தின் நற்செயலைப் பற்றி யாருமே நினைவு கூறாதது ஏமாற்றமே, குறிப்பாக கக்கன்ஜி அவர்களின் குடும்பத்தினர் கூறுவர் என எதிர்பார்க்கப் பட்டது.

டியர் ராகவேந்தர்,

அவர்கள் நினைவுகூறாவிட்டாலும் நாம் நினைவுகூர்வோம். (ஏற்கெனவே பதிந்ததுதான். இருந்தாலும் புதியவர்களுக்காக).....

வறுமையில் வாடிய தியாகி கக்கன் அவர்களுக்கு உதவும் பொருட்டு, கோவையில் நடிகர்திலகம் 'தங்கப்பதக்கம்' நாடகம் நடத்தினார். பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் தலைமை தாங்கினார். நாடகத்தைக்காண பெருங்கூட்டம் திரண்டது. நல்ல வசூல். நாடகத்தின் செலவு முழுவதையும் நடிகர்திலகம் ஏற்றுக்கொண்டதால், வசூலான தொகை முழுவதும் அப்படியே கக்க்கன் அவர்களிடம் அளிக்கப்பட்டது. விழாவில் பெருந்தலைவர், நடிகர்திலகத்தைப் பாராட்டி அவருக்கு ஒரு தங்கப்பதக்கம் பரிசளித்தார். அந்தப்பதக்கத்தையும் நடிகர்திலகம் மேடையிலேயே ஏலம் விட, உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் அதை பத்தாயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். (அப்போது ஒரு சவரன் விலை 700 ரூபாய்). ஏலத்தில் கிடைத்த பத்தாயிரம் ரூபாயையும்கூட கக்கனிடமே அளித்தார் நடிகர்திலகம்.

நன்றி தெரிவித்துப்பேசிய கக்கன் அவர்கள், "பதக்கம் மட்டும் தங்கம் அல்ல, சிவாஜியின் மனமும் சொக்கத்தங்கம்" என்று மனம் நெகிழ்ந்து சொன்னார்.

(ராகவேந்தர் அண்ணா, நேற்று இன்னொரு கொடுமை கவனித்தீர்களா?. பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் பெயரைக்கூட யாரும் அவ்வளவாக நினைவுகூறவில்லை. ஆனால் திருநாவுக்கரசர், மறக்காமல் தனை உருவாக்கிய எம்.ஜி.ஆர். புகழ் பாடினார்).

pammalar
2nd August 2010, 02:41 AM
சென்னை சாந்தி தியேட்டர் நிகழ்வுகள் - 5
[புதிய பறவை : 25.7.2010 : ஞாயிறு மாலைக் காட்சி]

எல்லா மண்டலங்களையும் மயக்கும் BGMமை மெல்லிசை மன்னர்கள் வழங்க, கோபாலின் கார், கார்கள் புடைசூழ உதகமண்டலத்தை அடைகிறது. சொகுசான கார்கள் ஷோக்காக வலம் வந்து அவரது பங்களாவை அடைய, அரண்மனை வாயிலில் இறங்கும் கோபால் மெல்ல தோட்டத்தில் நடக்கிறார். இங்கே விசில் பறக்கிறது. "தலைவன் நடைய பார், வேறு எவனுக்கும் இந்த நட வராது", "பாக்கெட்டுக்குள்ள கைய விட்டுக்கிட்டு நடக்கிற ஸ்டைலப்பார்" என்கின்ற ஏகவசன கோஷங்கள் ஏகமூச்சில் கேட்கின்றன. பல ஆண்டுகளுக்குப் பின் தனது அரண்மனையின் வெளித்தோற்றத்தை அதிசயித்தபடியே பார்த்து நடந்து வரும் கோபால், அவரது அகத்தினுள் நுழைகிறார். அது மட்டுமா? நடையழகால் அனைவரது அகத்தினுள்ளும் நுழைகிறார்.

அரண்மனை ஊழியர்களுக்கு பதில் வணக்கம் தெரிவித்து விட்டு, "தம்பி!" என்கின்ற தழுதழுத்த குரல் வரும் பக்கம் திரும்பி, ஒரு விசுவாச முதிய ஊழியரை நோக்கி நெருங்குகிறார். முதியவர் முந்தைய நினைவுகளை ஆசையோடு அசை போட, கோபால் அவரை "ராஜு தாத்தா" என வாஞ்சையோடு அழைத்து, அவரது நரைத்த மீசையை மென்மையாக முறுக்குகிறார். "நல்லா இருக்கீங்களா தாத்தா?!" நடிகர் திலகம் கொடுக்கும் வாய்ஸ் மாடுலேஷனில் கரையாத மனமும் கரையும். சீமைக்கு செல்லும் போது தாய்-தந்தையுடன் சென்ற திலகம் தனிமரமாக திரும்பி வந்திருப்பதைக் கண்டு மனம் குமுறுகிறார் முதியவர். அதற்கு நடிகர் திலகம் கொடுக்கும் ரியாக்ஷன் இருக்கிறதே, அப்பப்பா! கண்களில் நீர்த்துளிகளை தேக்கி, காண்பவர் கண்களை நீர்நிலைகளாக்குகிறார். அருகே ராகவேந்திரன் சார் எமோஷனலாகி இருந்தார்.

நாகேஷ்-மனோரமா காட்சி நகைச்சுவையுடன் நகர, தனது எஸ்டேட்டை ஸ்டிக், சிகரெட், ஹேட் சகிதம் கிங்-ஸைசில் வலம் வருகிறார் கோபால். அவர் நடந்து வரும் போதும், நிற்கும் போதும், குப்புறப் படுத்துக் கொண்டு குஷியாக புத்தகம் படிக்கும் போதும் விசில்கள் விண்ணை வீழ்த்துகின்றன. பிஜிஎம் பிரமாதம்!

ஊட்டி ரேஸ்கோர்ஸ். லதா-ராமதுரை இருவரையும் எதேச்சையாக சந்திக்கும் கோபால் அவர்களை தனது இல்லத்திற்கு அழைக்கிறார். அவரது அரண்மனைக்கு அவருடன் வரும் இருவரும் அதன் அழகில் அசறுகின்றனர். ஊழியர்களைத் தவிர்த்து, தான் ஒருவன் தான் அங்கே வசிப்பதாகக் கூறும் கோபால் அவர்களுக்கு உபசரணை செய்கிறார். பின், ஹோட்டலில் தங்கியிருக்கும் அவர்களை தனது ஹோமில் தங்குமாறு வேண்டுகிறார். அவர்கள் முதலில் மறுக்க பின்னர் ஏற்கின்றனர். அருகே கிரஹாம் பெல் கண்டுபிடித்த டெலிபோனின் பெல் அடிக்க கோபால் நடந்து சென்று எடுக்கிறார். அதர் ஸைடில் ரங்கன்(நடிகவேள்) வாழ்த்துக்கள் கூறி ராங் ஸைடில் பேச கோபால் "நான்சென்ஸ்" என்கிறார். போன் கட் ஆகிறது. ஆனால் சூடம் காண்பிப்பது கட் ஆகவில்லை. சகோதரி சாரதா சுட்டிக்காட்டியது போல் " மாற்ற முடியுமா எங்களை" என சுவரொட்டி அடித்தவர்கள் ஆயிற்றே! இக்காட்சிக்கு தங்களது கைகளில் கற்பூரங்களை கொளுத்தி பகவானுக்கு பக்தியுடன் காட்டினர்.

நாகேஷ்-மனோரமா காட்சி நகர, அடுத்த காட்சியில் ஒயிட் பேண்ட், ரெட் ஜெர்கின்ஸ், ஷூஸ், கையில் ஹேட் சகிதம் மாடியிலிருந்து இறங்கி வருவதாகட்டும், குட் மார்னிங் சொல்வதிலாகட்டும் அவரது பிஹேவியர், பாடிலேங்குவேஜ், ஆஹா! நடிகர் திலகம் ஹேண்ட்சம் திலகம். விகேஆர் தனது நேரந்தவறாமை பற்றிக் கூற, தானும் அவ்வாறே என்கிறார் நடிகர் திலகம். "பங்க்சுவாலிட்டின்னா தலைவர் தான்" - வீரமுழக்கம் விசில் பறக்க வெடிக்கிறது. லதா இறங்கி வரும் போது கோபாலுக்கு குட்மார்னிங் கூறி விட்டு தனது தந்தையை நோக்கி "இவரும் நம்மோடு வருகிறாரா?" என வினவ, "நாம தான் அவருடன் போகிறோம்" எனத் தந்தை விடை கூற மூவரும் எஸ்டேட்டை சுற்றிப் பார்ப்பதற்காக தற்காலிகமாக அரண்மனையை விட்டு விடை பெறுகிறார்கள். பின்சீட்டிலிருந்து பின்னி எடுக்கிறார் ஒருவர். "உன் கூட என் தெய்வம் வராது. நீதான் தெய்வத்தோட போணும்".

(தொடரும்...)

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
2nd August 2010, 03:00 AM
டியர் செந்தில் சார், குமரேசன் பிரபு சார்,

கலையுலகின் குலதெய்வத்திற்கு, நமது இதயதெய்வத்திற்கு பிரம்மாண்ட மலர் மாலையை அணிவித்ததோடு மட்டுமல்லாமல், பிரம்மாண்ட கலக்கல்கள் புரிந்து, சென்னை மாநகரையே குலுக்கி உலுக்கிய பெங்களூர் பக்தர்களுக்கு பல கோடி நன்றிகள்!

பாசத்துடன்,
பம்மலார்.

kaveri kannan
2nd August 2010, 03:00 AM
I cannot type in Tamil today.

First my hearty congrats to our beloved respected Pammalar.

Dear Murali Sir

If I had been in Chennai, I would NOT have missed being at Shanthi Theatre last sunday FOR ANYTHING!

Im sure I will meet you and our friends when I come home for holidays - October first half!

My pleasure on reading about PP and the enthused widespread response is boundless...

My love and respect and admiration for NT now is flowing to surrogate symbols - Pammalar, Murali Sir, Sradha madam, raghavendra sir, nov sir and all NT fans..

I m one happy and proud man - Im an ever NT fan!

kaveri kannan
2nd August 2010, 03:09 AM
Dear Raghavendra Sir

Your analysis of Gopal is outsatanding!

I watched a song from Chitra pournami - NT and JJ duet.

I saw NT's smile in that song - He can smile - like a light switched on - and the brightness will shine from his very soul!

The facial muscles of NT were chiselled by God of Art - finer than Greek statues!

Thats why he could do a duet in Vasantha maligai - soon after his mother's demise. He can command his facial and hand and body muscles at a split second and render most viewable postures and expressions. His gift has not been bestowed to any other artist in the whole world so far..

Im searching all the faces on the screens worldwide -- in vain..

No wonder Im ever ( going to be ) a NT fan .
And Im a very happy and proud man!

RAGHAVENDRA
2nd August 2010, 08:08 AM
டியர் பம்மலார்,
தங்களுடைய நேரடி மொழிபரப்பு, நம் அனைவரையும் சாந்தி திரையரங்கினுள் அமர்த்தியிருக்கிறது. தங்களருகில் நாங்கள் அனைவரும் அமர்ந்துள்ளோம். ஒவ்வொரு காட்சியையும் துல்லியமாக ரசிக்கிறோம். ஒரே ஒரு வித்தியாசம், இங்கு அனுமதி இலவசம்.

அன்பு மிக்க காவிரி கண்ணன் அவர்களுக்கு,
யூனிகோட் முறையினை பயன் படுத்தி தாங்கள் தமிழில் சொல்ல விரும்புவதை ஆங்கிலத்திலேயே அந்தந்த வார்த்தைகளைத் தட்டச்சு செய்தால் அவை அப்படியே தமிழில் இடப்படும். முயன்று பாருங்கள்.

தாங்கள் குறிப்பிட்ட பாடல் செந்தூர நெற்றிப் பொட்டின் திலகம் பாடல் என்று நினைக்கிறேன். வெள்ளை உடையில் பன்னாட்டு நிறவன உரிமையாளரைப் போல் தோரணையுடனும் ஸ்டைலுடனும் கலக்குவார்.

தங்களுடைய பாராட்டுக்களுக்கு என் உளமார்ந்த நன்றி. அனைத்தும் நடிகர் திலகத்திற்கே.

பெங்களூரு ரசிகர்களுக்கு நமது அனவரின் சார்பிலும் நன்றியும் பாராட்டுக்களும்.

தங்களனைவரையும் மீண்டும் சந்திக்க ஆவலாயுள்ளோம்.

அன்புடன்

ராகவேந்திரன்

goldstar
2nd August 2010, 12:42 PM
Guys,

Just curious, is PP running for second week?

Mr. Swamy, what about collection? Hope our god's PP collection should have broken any other Tamil films actors...

Long live our god NT fame

Cheers,
Sathish

HARISH2619
2nd August 2010, 01:14 PM
Dear kumaresan sir,
I'm doing fine,thankyou.Please visit this site regularly and contribute as much as possible.
When are you going to repeat the chennai scene in bangalore?

Irene Hastings
2nd August 2010, 01:41 PM
நடிகர் திலகமும் மக்கள் திலகமும் இணைந்து நடித்த ஒரே படமான கூண்டுக்கிளி இந்த இணைப்பில் கண்டு மகிழுங்கள் :D

http://www.24x7mediaclips.com/koondukili-live-old-tamil-movies-online-dvd/koondukili-old-tamil-movie-online-mgr-sivaji-video_49ee2d9e5.html

HARISH2619
2nd August 2010, 01:57 PM
நடிகர்திலகத்தின் 9வது நினைவுநாளை முன்னிட்டு ராணி வார இதழின் 25-7-10 தேதியிட்ட பதிப்பில் வெளிவந்த கவிதை:

கலை மண்டபத்தின்
'கல்தூண்' சரிந்த நாள்!
திரை உலகத்தின்
'இமயம்' சாய்ந்த நாள்!
நடிப்பின் -
இலக்கணப் புத்தகம்
கிழிக்கப்பட்ட நாள்!

நடிக்கத் தெரிந்த
திலகம்
மறைந்த நாள் !

கண்களையும்,
இமைகளையும்
நடிக்கவிட்டு
கலங்கவிட்டவனே !

கண்களை மூடிக்கொண்டு
த்மிழ்க் கண்களை
ஏன் அழவிட்டாய்?

சிரித்துக்கொண்டே அழவும்:
அழுதுகொண்டே
சிரிக்கவும் தெரிந்தவனே !
இப்பொழுது - உனக்காக
அழ மட்டுமே தெரிகிறது
எங்களுக்கு !

நடந்தாலும்
அசைந்தாலும்
நடிப்புக்கு
ஆதாரம் - நீ !

அச்சரப்பிழை இல்லா
தமிழ் உச்சரிப்பிக்கு
உதாரணம் - நீ !

அடைமொழிக்குள்
அடக்கிட முடியா
அற்புத கலைஞன் - நீ !

மரணம் -
நீ ஒன்றும் நடிக்காத
பாத்திரமில்லை !

இயக்குநர்களுக்கு இசைந்து
எத்தனையோ முறை
மரணித்தவன் தானே !

மருத்துவருக்கு
இசைய மறுத்து
மறைந்துவிட்டாயே ஏன் !

மரித்திருக்கமாட்டாய் - நீ
மரணத்தைத் தத்ரூபமாக்கிட
நடித்திருக்கக்கூடும் -நீ !

- க.முத்துநாயகம்
லாலாக்குடியிருப்பு

pammalar
2nd August 2010, 06:22 PM
திரு.காவேரிக்கண்ணன்,

தங்களது மனப்பூர்வமான பாராட்டுக்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள்! தாங்கள் விடுமுறையில் வரும் சமயம் நாம் அனைவரும் அவசியம் சந்திப்போம்!! தாங்கள் அளித்த இரு பதிவுகளுமே அழகே உருவான இரு மலர்கள்!!!

டியர் ராகவேந்திரன் சார்,

பாராட்டுக்கு நன்றி! தங்களுடன் அமர்ந்து படம் பார்ப்பதே எனக்கு பாக்கியம்!

டியர் செந்தில் சார்,

முத்தமிழின் நாயகன் பற்றி முத்துநாயகம் எழுதிய முத்தாய்ப்பான கவிதையை பதிவிட்டமைக்கு நன்றி!

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
2nd August 2010, 06:56 PM
டியர் செந்தில்
முத்து நாயகம் கவிதையை முத்தாரமாக வழங்கிய தங்களுக்கு நன்றிகள் பலப்பல.

டியர் பம்மலார்
தங்களைப் போன்ற இளைய தலைமுறை ரசிகர்களுடன் படம் பார்ப்பதே எங்களைப் போன்றவர்களுக்கு கிடைக்கக் கூடிய பெரும்பேறு.

ஊர்ஜிதமாகாத தகவல்களின் அடிப்படையில் வந்துள்ள செய்தி.

புதிய பறவை சென்னை சாந்தி திரையரங்கில் வசூல் சாதனை .. கிட்டத் தட்ட மூன்றே கால் இலட்சங்களுக்கு மேல் வசூலாகியுள்ளதாக செய்தி. ஒரே வாரத்தில் இந்த வசூல் பழைய பட மறு வெளியீட்டு வரலாற்றில் முக்கியமான நிகழ்வாகும். அதுவும் இருக்கை கட்டணங்கள் ரூ. 80.00 மற்றும் 60.00 என்ற அளவில்.

அடுத்த வாரம் அதாவது வருகின்ற 06.08.2010 வெள்ளியன்று வடசென்னை பாரத் திரையரங்கில் புதிய பறவை திரையிடப்பட இருப்பதாக தகவல். அதனைத் தொடர்ந்து கிருஷ்ணவேணி, பின்னர் உட்லண்ட்ஸ் சிம்போனி, மற்றும் மினி மோட்சம் திரையரங்குகளிலும் திரையிடுவதற்கான முயற்சிகள் நடைபெறுவதாகவும் தகவல். தகவல்கள் உறுதியாகும் வரை பொறுத்திருப்போம்.

அன்புடன்

ராகவேந்திரன்

rangan_08
2nd August 2010, 07:04 PM
டியர் நவ் சார்,
தங்களுடைய வார்த்தைகள் தங்களுடைய உள்ளக் கிடக்கையை உருக்கமாக வெளிப் படுத்துகின்றன. நடவாதது எதுவுமில்லை என்ற நம்பிக்கையுடன் நிச்சயம் வெல்வீர்கள். பாரிஸ்டர் ரஜினிகாந்த் நம்மை ஏமாற்ற மாட்டார். விரைவில் வெள்ளித்திரையில் கௌரவம் வெளியாகும் என்ற ஆவலுடனும் நம்பிக்கையுடனும் காத்திருப்போம்.



:happydance:

waiting, waiting....eagerly waiting.

pammalar
2nd August 2010, 07:04 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 86

கே: நடிகர் திலகத்தால் மட்டும் எந்த கேரக்டர் என்றாலும் எப்படி அவ்வளவு சிறப்பாக நடிக்க முடிந்தது? (ஈ.சிதம்பரம், ஸ்ரீவில்லிபுத்தூர்)

ப: மற்ற நட்சத்திரங்களை விட நிலவு ஏன் அதிகக் கம்பீரத்தோடு நிற்கின்றது...?! அது போலத் தான் இதுவும்.

(ஆதாரம் : சினிமா எக்ஸ்பிரஸ், 1-15 மார்ச் 2006)

அன்புடன்,
பம்மலார்.

rangan_08
2nd August 2010, 07:04 PM
pammalr sir, your'e writings on Pudhiya Paravai...sema kalakkal.

pammalar
2nd August 2010, 07:19 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 87

கே: நடிகர் திலகமும், மக்கள் திலகமும் சேர்ந்து ஒரு படத்தில் ஏன் நடிக்கக் கூடாது? (கே.எஸ்.ஸ்ரீநிவாஸபிரசாத், மைசூர்-1)

ப: கேட்பது சுலபம், செய்வது கடினம்.

(ஆதாரம் : பேசும் படம், ஏப்ரல் 1970)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
2nd August 2010, 07:21 PM
pammalr sir, your'e writings on Pudhiya Paravai...sema kalakkal.

Dear Rangan Sir,

Thank You So Much!

Regards,
Pammalar.

RAGHAVENDRA
2nd August 2010, 07:43 PM
பிப்ரவரி 4ல் பாட்டும் நானே பாவமும் நானே என்று பம்மலார் கொளுத்திப் போட்ட (மன்னிக்கவும் நகைச்சுவைக்காக) துவங்கி வைத்த இந்த திரி, இந்த ஆகஸ்ட் 4ல் 100 பக்கங்கள் நிறைவடையக் கூடிய சாத்தியக் கூறுகள் நிறையவே உள்ளன. சரியாக ஆறு மாதங்களில் ஒரு பாகத்தையே முடித்து வைக்கும் அளவிற்கு வேகமாக இத்திரியை வளரவிட்ட பம்மலாருக்கு நமது வாழ்த்துக்களை அட்வான்ஸ் புக்கிங்காக கூறிக்கொள்ள விரும்புகிறேன். எப்படி நடிகர் திலகத்தின் படங்களுக்கு அட்வான்ஸ் புக்கிங செய்து போகிறோமோ (அன்று முதல் இன்று புதிய பறவை வரை ) அதே போல் பம்மலாருக்கு வாழ்த்தும் அட்வான்ஸ் புக்கிங்.

வாழ்க பம்மலார், வளர்க அவர்தம் மொழிபரப்புரை

அன்புடன்

ராகவேந்திரன்

pammalar
2nd August 2010, 08:51 PM
டியர் ராகவேந்திரன் சார்,

உற்சவமூர்த்தியாக உலக மெகா நாயகர், அருள்பாலித்துக் கொண்டே அமர்ந்திருக்கும், திருவாரூர் தேர் போன்ற திருத்தேராகிய இத்திரியை, வடம் பிடித்து இழுக்கும் எத்தனையோ அடியார்களில் அடியேனும் ஒருவன். அவ்வளவே!

தங்களது உயர்ந்த உள்ளத்திலிருந்து வரும் அன்பான புகழுரைக்கு எனது பணிவான, கனிவான நன்றிகள்!

இந்த நேரத்தில், இத்திரியின் இப்பாகத்தை தொடங்கும் படி அடியேனைப் பணித்த மாடரேட்டர் திரு.நௌ அவர்களுக்கும் மற்றும் ஏனைய மாடரேட்டர்களூக்கும் மற்றும் அனைவருக்கும் மீண்டும் எனது நன்றிகளைக் காணிக்கையாக்குகின்றேன்!

பணிவுடன்,
பம்மலார்.

pammalar
2nd August 2010, 09:17 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 88

கே: 'ராஜ ராஜ சோழ'னில் சிவாஜியும்-லட்சுமியும் மோதிக் கொள்ளும் காட்சிகள் எப்படி? (மிஸ்.யாஸ்மின், திருச்சி)

ப: அனுபவம்-ஆர்வம் போட்டி போட்டுக் கொள்வது போல் இருந்தது.

(ஆதாரம் : பொம்மை, ஜூலை 1973)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
2nd August 2010, 10:04 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 89

கே: நடிப்பைக் கண்டு ரசிகத்தன்மை வளருகிறதா, ரசிகத்தன்மையைக் கண்டு நடிப்புத்திறன் வளர்கிறதா? (வள்ளிமயில் சுப்பிரமணியம், கூளியூர்)

ப: நடப்பதைக் கூறுகிறேன். சிவாஜியின் நடிப்பை நாம் மெய்மறந்து ரசிக்கிறோம். அங்கே நடிப்பு சிறப்பு பெற நம் ரசிகத்தன்மை வளருகிறது. நாம் ரசிக்கிறோம் என்பதற்காக சிலர் சிவாஜி போல் நடிக்கவும் வசனம் பேசவும் முற்படுகிறார்கள். அப்போது ரசிகத்தன்மை வளர்ந்து அவர்கள் வளர வேண்டியவர்கள் என்று எடுத்துக்காட்டுகிறது.

(ஆதாரம் : பேசும் படம், செப்டம்பர் 1971)

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
2nd August 2010, 10:41 PM
கேள்வி
கேள்வி பிறந்தது நல்ல பதில் கிடைத்தது 89 ஐ தாண்டி விட்டதே? 100 எப்போது வரும்?

பதில்
பம்மலாரின் வேகத்தைப் பார்க்கும் போது இந்தத் திரி 100வது பக்கத்தை நிறைவு செய்யும் போது அதுவும் 100ஐ எட்டி விடும் என்று விரும்புவோமாக!

(இது ஒரு அவா மட்டுமே, நிர்ப்பந்தம் அல்ல )

அன்புடன்

ராகவேந்திரன்

Murali Srinivas
3rd August 2010, 12:18 AM
IDear Murali Sir

If I had been in Chennai, I would NOT have missed being at Shanthi Theatre last sunday FOR ANYTHING!

Im sure I will meet you and our friends when I come home for holidays - October first half!

My pleasure on reading about PP and the enthused widespread response is boundless...

My love and respect and admiration for NT now is flowing to surrogate symbols - Pammalar, Murali Sir, Sradha madam, raghavendra sir, nov sir and all NT fans..

I m one happy and proud man - Im an ever NT fan!

Thanks Kaveri Kannan. Yes, we will meet in October.

Regards

pammalar
3rd August 2010, 01:53 AM
டியர் ராகவேந்திரன் சார்,

பாசத்தோடு தாங்கள் அளித்து வரும் பற்பல பாராட்டுக்களுக்கு எனது பல கோடி நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
3rd August 2010, 02:07 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 90

கே: "இது வரை யாரும் நடிக்காத வெட்டியான் பாத்திரத்தில் விக்ரம் நடிக்கிறார்" என்று 'பிதாமகன்' பாலா குறிப்பிட்டிருக்கிறாரே. 'ஹரிச்சந்திரா'வில் சிவாஜி ஏற்கனவே அதை செய்து விட்டாரே?! (வி.ஆர்.நடராஜன், திருமுல்லைவாயல்)

ப: படம் நெடுக வெட்டியானாக வருகிறார் விக்ரம் - என்ற அர்த்தத்தில் பாலா குறிப்பிட்டிருப்பார். சிவாஜி ஏற்காத பாத்திரம் என்று பார்த்தால்..... அதற்கு ஒரு ஆய்வுக் குழுவே அமைக்க வேண்டுமே!

(ஆதாரம் : நியூ பிலிமாலயா, அக்டோபர் 2003)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
3rd August 2010, 02:19 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 91

கே: "சிவந்த மண்"ணில் சிவாஜி, "தர்த்தி"யில் ராஜேந்திரகுமார், யார் நடிப்பு சிறந்தது? (ப.அ.துரைசாமி, பார்வேபாளையம்)

ப: "சிவந்த மண்" ணில் சிவாஜி இமயம்.

(ஆதாரம் : பேசும் படம், ஆகஸ்ட் 1970)

அன்புடன்,
பம்மலார்.

gopalu_kirtinan
3rd August 2010, 04:05 AM
நண்பர்களே, நீங்கள் அனைவரும் எனக்கு தரும் வரவேற்புக்கு எனது மனமார்ந்த நன்றிகள். உங்களை போன்ற உண்மையான ரசிகர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி எனக்கு.

ராகவேந்திரா அண்ணா, நீங்கள் சொன்னதைப்போல சிவாஜி என்னும் அந்த அற்புதக் கலைஞனின் நடிப்பு தான் என்னை கவர்ந்தது . மேலும் என்னுடைய பாட்டி ஒரு தீவிர சிவாஜி ரசிகை. எங்கள் கிராமத்து திரையரங்கில் எப்போதெல்லாம் சிவாஜி படம் போடுகிறார்களோ அப்போதெல்லாம் என்னையும் அழைத்துக்கொண்டு படம் பார்க்க செல்வார்கள். நான் முதன்முதலில் பார்த்த சிவாஜி படம் வசந்த மாளிகை ஆகும். அது 1995 வது வருடம் என நினைக்கிறேன். .மணல் மேடிட்டு என்னுடைய பட்டியுடன் நான் பார்த்தது இன்னும் எனக்கு நல்ல நியாபகம் இருக்கிறது. அதற்கு பின்னர் நான் பல படங்கள் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு சிவாஜி படத்திலும் அவர் தருகின்ற வேறுபட்ட நடிப்புகளையும் மற்றும் நடக்கின்ற பாணியையும் நினைத்து வியந்திருக்கிறேன்.

abkhlabhi
3rd August 2010, 01:05 PM
http://www.makkalosai.com.my/?p=5449


Page No.7

abkhlabhi
3rd August 2010, 01:06 PM
http://65.175.77.34/makkalosai/epaperhome.aspx?issue=2172010

Plum
3rd August 2010, 01:22 PM
கே: "சிவந்த மண்"ணில் சிவாஜி, "தர்த்தி"யில் ராஜேந்திரகுமார், யார் நடிப்பு சிறந்தது? (ப.அ.துரைசாமி, பார்வேபாளையம்)



:roll: - ipdi oru kELvi kEkkalAmA? adhuvum oru tamizhan ippadi kEkkalAmA? Rajendra Kumar :roll: - Enga avaroda thira nadippu varalAtrula avar nadhichadhE kedayAdhunga. Prashant kUda compare paNNa vEndiayavarai NT koodavA? ivangaLa ellAm ipdilAm kEkka edhuNNE thUndhudhu!

Irene Hastings
3rd August 2010, 01:49 PM
Even otherwise, Sivandhaman is not a great movie to be considered as a benchmark in NT's acting. The movie has some very good foreign shots and o/s music . Thats it.

Plum
3rd August 2010, 01:51 PM
Whatever. You cannot take Raasendra Kumar's(nichayamA avarukku yaarum inge fans irukka mAttAnga so I can get away with this distortion :yeah:) name in the same sentence as NT. Take the worst movie of NT - even Sandhippu or LDR - and compare with Raasendra Kumaru's best movie. Still, Raasu Kumar will fare worse!

Irene Hastings
3rd August 2010, 02:07 PM
Whatever. You cannot take Raasendra Kumar's(nichayamA avarukku yaarum inge fans irukka mAttAnga so I can get away with this distortion :yeah:) name in the same sentence as NT. Take the worst movie of NT - even Sandhippu or LDR - and compare with Raasendra Kumaru's best movie. Still, Raasu Kumar will fare worse!

Rasendrakumar :roll: :lol: Yaaru ? Meesaillama orutharu varuvare avara ! :D

Deivame. Pammalar sir should avoid posting such comparative questionaires :oops:

groucho070
3rd August 2010, 02:08 PM
Plum, I suppose better question should be, comparison between Muthuraman in Sivandha Man and the man who played same role in Hindi :P

Irene Hastings
3rd August 2010, 03:38 PM
http://www.24x7mediaclips.com/enga-oor-raja-live-old-tamil-movies-online-dvd/enga-oor-raja-sivaji-old-tamil-movie-online-video_5aef6a59c.html

Video of Enga Ooru Raja . Parthu magizungal :D

RAGHAVENDRA
3rd August 2010, 06:19 PM
Plum, I suppose better question should be, comparison between Muthuraman in Sivandha Man and the man who played same role in Hindi :P

.... played by NT himself...

Raghavendran

Plum
3rd August 2010, 07:05 PM
Plum, I suppose better question should be, comparison between Muthuraman in Sivandha Man and the man who played same role in Hindi :P

.... played by NT himself...

Raghavendran
I think grouch knew it and deliberately framed the statement that way, as a sort of playful dig!

saradhaa_sn
3rd August 2010, 07:06 PM
Even otherwise, Sivandhaman is not a great movie to be considered as a benchmark in NT's acting. The movie has some very good foreign shots and o/s music . Thats it.

தப்பா சொல்றீங்க...

வெளிநாட்டில் எடுத்த படம் என்ற எதிர்பார்ப்புதான் காலை வாரிவிடப்பார்த்தது. உள்நாட்டில் எடுக்கப்பட்ட கீழ்க்கண்ட காட்சிகள்தான், படத்தைன் தரத்தை உயர்த்தின...

உதாரணத்துக்கு சில:

1) நாகேஷ் - சச்சு நடத்தும் மதுபானக்கடையின் (பார்) அரங்க அமைப்பும், லைட்டிங்கும் ஆங்கிலப்படங்களுக்கு நிகராக அமைந்திருக்கும்.

2) கிளிமாக்ஸ் காட்சியில் ராணுவ ஜீப்கள் அனிவகுத்து வேகமாகப் பறந்து செல்லும் காட்சியமைப்பில் ஒளிப்பதிவு சூப்பர்.

3) எலிகாப்டர் காட்சியிலும், ஒளிப்பதிவாளரின் பங்கு அருமை. இயக்குனரும் கூட. குறிப்பாக, புரட்சிக்காரர்கள் ஓடி வந்து திடீரென்று தரையில் படுத்துக்கொள்ள அவர்களை ஒட்டியே குண்டுகள் வந்து விழும்போது, நம் ரத்தம் உறைந்து போகும். அதுபோல சிவாஜி ஓடிவந்து பள்ளத்தில் குதிக்க, அவர் தலையை உரசுவது செல்லும் எலிகாப்டர். இவற்றில் டைமிங் அருமையாக கையாளப்பட்டிருக்கும்.

4) கப்பலில் வெடிகுண்டு வைக்க புரட்சிக்காரர்கள் செல்லும்போது, கையாளப்பட்டிருக்கும் நைட் எஃபெக்ட் லைட்டிங்கும், கயிறு வழியாக சிவாஜி ஏறுவதை, கப்பலின் மேலிருந்து காட்டும் சூப்பர் ஆங்கிளும். அதே நேரம், கப்பலின் உள்ளே நடக்கும் ராதிகாவின் நடனமும், அதற்கு மெல்லிசை மாமன்னரின் இசை வெள்ளமும்.

5) ரயில் பாலத்துக்கு வெடிகுண்டு வைக்க சிவாஜி போவதை, கீழேயிருந்து படம் பிடித்திருக்கும் அற்புதக்கோணம், அப்போது சிவாஜியின் கால் சற்று சறுக்கும்போது நம் இதயமே சிலிர்க்கும்.

6) ஒளிந்து வாழும் சிவாஜி, தன் அம்மாவைப்பார்க்க இரவில் வரும்போது, மாளிகையைச்சுற்றி அமைக்கப்பட்டிகும் நைட் எஃபெக்ட் லைட்டிங்.

7) நம்பியாரால் கைது செய்யப்பட்டு, சிறைக்கு அனுப்பப்பட்ட சிவாஜி, ஜெயில் அதிகாரியை பிணையாக வைத்துக்கொண்டு, அத்தனை துப்பாக்கிகளையும் தன் வசப்படுத்தியதோடு, தன் கைவிலங்கை துப்பாக்கி குண்டால் உடைத்துக்கொண்டு தப்பிக்கும் காட்சி.

8) வாகினி ஸ்டுடியோவில் அமைக்கப்பட்ட, சுழன்று சுழன்று தண்ணீர் ஓடும் ஆறு. அதை இரவு வேளையில் காண்பிக்கும் அழகு.

9) அரண்மனை முன்னால் போராட்டம் நடத்த வந்த கூட்டத்தினரை, துப்பாக்கி ஏந்திய குதிரை வீரர்கள் விரட்டியடிக்க மக்கள் சிதறி ஓடும் காட்சி.

10) எகிப்திய நாட்டிய நாடகம நடத்தும் முன், தாங்கள் பதுங்கியிருக்கும் இடத்தில், அந்த நாட்டியத்துக்கான மேடை அமைப்பை ஒத்திகை பார்ப்பார் பாருங்க... என்ன ஒரு யதார்த்தம். (நம்ம வி.ஐ.பி.ங்க, டி.வி.ஷோவுல இதெல்லாம் சொல்ல மாட்டாங்க. அவங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் 'வானம் பொழிகிறது... பூமி விளைகிறது...')

RAGHAVENDRA
3rd August 2010, 10:09 PM
Even otherwise, Sivandhaman is not a great movie to be considered as a benchmark in NT's acting. The movie has some very good foreign shots and o/s music . Thats it.

(நம்ம வி.ஐ.பி.ங்க, டி.வி.ஷோவுல இதெல்லாம் சொல்ல மாட்டாங்க. அவங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் 'வானம் பொழிகிறது... பூமி விளைகிறது...')

அருமையான விரிவான பதிலைத் தந்த சகோதரி சாரதா அவர்களுக்குப் பாராட்டுக்கள். தாங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு சரி. 305 படங்களில் ஒரு சில படங்களை மட்டும் பார்த்துவிட்டுப் பேசுபவர்களுக்கு நீங்கள் சொன்ன மாதிரி வானம் பொழிவது மட்டும் தான் தெரியும் பூமி விளைவது மட்டும் தான் தெரியும். இடையில் நடிகர் திலகம் என்ற மாபெரும் கலைஞன் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் தமிழ்த் தாயின் பெருமையையும் கலாச்சாரத்தையும் உலகெங்கும் பரப்பியதும் அதற்காக அவர் பட்ட கஷ்டங்களும், அவர் படைத்த சாதனைகளும் தெரியாது.

நான் பல முறை சொன்ன மாதிரி இது வரை எந்த வி.ஐ.பி.யும் அல்லது சினிமா பிரபலமும் அன்னை இல்லம் க்ளைமாக்ஸ் காட்சிக்கு முன்னர் வசனமே இல்லாமல் தன் நடிப்புத் திறமையைக் கண்களாலேயே வெளிப்படுத்திய காட்சியை சொன்னதாகத் தெரியவில்லை. அது சரி, அவர்களுக்கு அன்னை இல்லம் என்றால் அவருடைய வீடு மட்டும் தான் தெரியுமோ என்னவோ.

அன்புடன்
ராகவேந்திரன்

Murali Srinivas
4th August 2010, 12:00 AM
கோபால்,

அழகான தமிழில் எழுதியிருகிறீர்கள், வாழ்த்துகள். உங்கள் அனுபவங்களை தொடர்ந்து எழுதுங்கள்.

திரியின் 6 -ம் பாகமும் சுவாமியின் கேள்வி பதிலும் ஒரே நேரத்தில் செஞ்சுரி அடிக்க வாழ்த்துகள்.

சாரதா,

சிறிது காலமாகவே நானும் சுவாமியும் தியேட்டரில் நடிகர் திலகத்தின் எந்தெந்த படங்கள் திரையிடப்பட்டால் எப்படி இருக்கும் என்று பட்டியல் போட்டுக் கொண்டிருக்கிறோம். அதில் தவறாமல் இடம் பெறக்கூடிய படம் சிவந்த மண். உங்கள் காட்சி விளக்கங்களை படிக்கும் போது [முன்பே நீங்கள் எழுதியதுதான் என்ற போதிலும்] சாந்தியில் சிவந்த மண் பார்க்கும் ஆசை அதிகரிக்கிறது. கூடிய விரைவில் அது நிறைவேறட்டும்.

அன்புடன்

pammalar
4th August 2010, 02:19 AM
சகோதரி சாரதா,

"சிவந்த மண்" படக்காட்சிகள் பற்றிய அலசல் அபாரம். தங்கள் பதிவில் ஒரு தேர்ந்த ஒளிப்பதிவாளரின் பார்வையையும், ஒரு சிறந்த இயக்குனரின் நேர்த்தியையும் காண்கிறேன். தங்கள் பதிவுகளைப் பற்றி சில தினங்களுக்கு முன் மொழிந்ததையே மீண்டும் மொழிகிறேன். தங்கள் பதிவு இல்லா எத்திரியும் பாயசம் இல்லா விருந்து போல், பருப்பு இல்லா சாம்பார் போல்!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
4th August 2010, 02:28 AM
டியர் கோபால்,

தங்களது அருமையான பதிவுக்கு நன்றி! தொடர்ந்து எழுதுங்கள்!! தங்களின் அனுபவங்களை அறிய மிகுந்த ஆவலாயுள்ளோம்!!!

டியர் பாலா சார்,

சூப்பர் லிங்க்குகளுக்கு சுப்ரீம் நன்றிகள்!

டியர் முரளி சார்,

பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றி!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
4th August 2010, 02:44 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 92

கே: நடிகர் திலகம் இலங்கைக்குச் சென்றிருக்கிறாரா? (எம்.சுகுமாரன், இலந்தப்பட்டு)

ப: இரண்டு தடவைகளுக்கு மேல் சென்றிருக்கிறார்.

(ஆதாரம் : பொம்மை, ஏப்ரல் 1968)

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
4th August 2010, 04:25 AM
புதிய பறவையின் பெரும் வெற்றி, திரையரங்கு உரிமையாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் ஒரு புதிய உத்வேகத்தைத் தந்துள்ளதாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து சென்னையின் மையப் பகுதியில் உள்ள பெரிய திரையரங்கான ஆல்பர்ட் திரையரங்கில், விரைவில் எம்.ஜி.ஆர். அவர்களின் ரிக்ஷாகாரன் திரையிடப் படுவதாக தகவல் வந்துள்ளது.

இப்படமும் பெரும் வெற்றியடைய நமது உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

நடிகர் திலகம் சிவாஜியும் எம்.ஜி.ஆர். அவர்களும் தமிழ்த்திரையுலகத்தின் வளர்ச்சியைத் தம் வளர்ச்சிபோல் பாவித்து வளர்த்தார்கள். அவர்கள் இருவரிடமிருந்து தற்போதைய தலைமுறை திரை உலகத்தினர் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. இருவருமே மறைந்து பல ஆண்டுகள் ஆகியும் மக்கள் இவர்களின் படங்களுக்கு படையெடுத்து வந்து திரையரங்குகளை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்க்ள். இதற்கு அடிப்படைக் காரணம் இருவருமே சமூக அக்கறையுடன் படங்களைத் தந்தது தான்.

வெறுமனே மீடியா விளம்பரங்கள் மட்டும் திரைப்படங்களுக்கு வெற்றியைத் தந்து விடாது என்பதை சம்பந்தப் பட்டவர்கள் உணர்ந்து குடும்பத்துடன் திரையரங்கிற்கு வந்து படம் பார்க்கும் அளவிற்கு திரைப்படங்களை உருவாக்கினால், மக்கள் விளம்பரங்களின் தேவையே இல்லாமல் வெற்றியைத் தருவார்கள்.

தமிழ்த்திரையுலகம் தழைக்க வேண்டும், மக்கள் புதுப் படங்களைப் பார்க்க்வும் திரையரங்குகளுக்கு வரவேண்டும் என்கிற நல்லெண்ணத்துடனும் இக் கருத்து எழுதப் படுகிறது.

ரிக்க்ஷாகாரன் திரைப்படம் மீண்டும் வெற்றி பெற நமது நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

அன்புடன்

ராகவேந்திரன்

RAGHAVENDRA
4th August 2010, 04:34 AM
புதிய பறவை பல பழைய சிவாஜி ரசிகர்களை ஈர்த்திருக்கிறது. நமது பழைய நண்பர் ஒருவர், அப்படம் முதன் முதலில் பாரகன் திரையரங்கில் வெளியான போது அந்த திரையரங்கில் பார்த்தவர், Youtubeல் நமது ஒளிக்காட்சியைப் பார்த்து விட்டு தமது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்


Aha Enna Arpudhamana Katchi, Nanum Oru Nadigar Thilagathin Theevira Rasigandhan, Idhai Parkum Podhu "PARTHA GYABAGAM iLLAIYA'" Endru Pazhaya Gyabagam Varugiradhu,
Indha Rasigargalin Kondattathai Parkkum Pozhudhu Andru Adaindha Magizhchi Yai Vida Indru Adhiga Magizhchi Adaindhen , Post Saidha Nanbarukku Enadh Nandri
http://www.youtube.com/watch?v=sNGCaYhob8I&feature=email

புதிய பறவை முதலில் வெளியான போது அடைந்த மகிழ்ச்சியை வி
தற்போது அதிகம் மகிழ்ச்சி அடைந்ததாகக் கூறியுள்ளார். அவருக்கு நமது நன்றி

அன்புடன்

ராகவேந்திரன்

pammalar
4th August 2010, 05:16 AM
சென்னை சாந்தி தியேட்டர் நிகழ்வுகள் - 6
[புதிய பறவை : 25.7.2010 : ஞாயிறு மாலைக் காட்சி]

நாகேஷ்-கருணாநிதி நகைச்சுவை கலகலப்புடன் நிறைய, Brilliant BGMமுடன் Beautiful இயற்கைக் காட்சிகள் நம் கண்களுக்கு விருந்தாகின்றன. கோபால், லதா, ராமதுரை மூவரும் 3000 ஏக்கர் பரப்புள்ள எஸ்டேட்டின் அழகை ரசித்த படியே நடந்து வருகின்றனர். இன்னும் கொஞ்ச தூரம் சென்றால் அழகான ஆரஞ்சு தோட்டத்தை காணலாம் என கோபால் அழைக்க, கால்கள் கெஞ்சுவதால் நீங்கள் இருவரும் செல்லுங்கள், நான் பங்களாவுக்கு போகிறேன் என ராமதுரை பயணிக்க, மேலே நடக்கிறார்கள் லதா-கோபால். திடீரென்று லதா வேகத்துடன் ஒரு உயரமான பகுதியை நோக்கிச் செல்ல, உடன் விரையும் கோபால் அங்கே செல்ல வேண்டாம் என அன்புக் கட்டளையிட்டு லதாவை காப்பாற்ற அவர் கைக்கு வசப்பட்ட லதாவின் முந்தானையை முன்னெச்சரிக்கையோடு இழுக்க, திகைப்புறும் லதா "கோபால், என்ன இது, விடுங்க" எனக் கடிந்து கொள்ள, அங்கே பார் என கோபால் லதாவுக்கு அதல பாதாளத்தைப் போன்ற அகன்ற பள்ளத்தாக்கைக் காண்பிக்க, அச்சமுறும் அபிநயசரஸ்வதி அண்ணலின் அன்புத் தோளில் சாய்கிறார். முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி, படித்திருக்கிறோம். இப்பெண் முல்லைக்கு தோள் கொடுத்தார் கோபால், பார்த்து ரசிக்கிறோம். இருவர் உள்ளமும், "இருவர் உள்ளம்" போல் இறுதியில் நெருங்காமல் இக்கணமே நெருங்க, இக்காட்சிக்கு விசில்கள் பறப்பதைக் கூறவும் வேண்டுமோ!

வீடு திரும்பும் விகேஆர்-விளையாடும் நாகேஷ்-கொசுறு மனோரமா காமெடி நிறைவடைய, கால்ஃப் களைகட்டுகிறது. நாடகமேடையில் கால்ஃப் ஆடவும் கற்றுக் கொண்டிருப்பாரோ?! மனிதர் தனது structureஐ எவ்வளவு அழகாக position செய்து கொண்டு என்னமாய் ஆடுகிறார். இதற்காகவே காத்துக் கிடந்தது போல் பக்தர்கள் கற்பூர ஆரத்தியை திரைக்கு அருகில் சென்று காட்டுகின்றனர். கோபால் லதாவுக்கு கால்ஃப் கற்றுத்தர முயல, லதாவுக்கு கால்ஃப் ஆடுவது பிடிக்காமல் போய் வீடு திரும்பலாம் எனக் கூற, கால்ஃப் ஸ்டிக்கால் கோபால் பந்தை அடித்து விட்டுத் திரும்ப, தூரத்தில் அப்பந்தைப் பிடித்து பந்தாடுகிறார் நடிகவேள். பிற்பகுதியில் கோபாலைப் பந்தாடப் போவதற்கு ஒத்திகை பார்க்கிறார் போலும்!

அரண்மனையை அடையக் காரில் விரைகின்றனர் ஓட்டுநர் லதா-பயணி கோபால். வழியில்,

ரயில்வே கேட் மூடப்படுகிறது; வண்டி நிற்கிறது; ரயில் வருகிறது,

"குப்குப்" எனக் கரும்புகையுடன் ரயில் தடம் புரளாமல் போய்க் கொண்டிருக்க, இங்கே காரில் கோபாலின் உள்ளம் "பக்பக்" எனப் பயம் கலந்த அதிர்வுப்புகையுடன் தடம் புரண்டு சென்று கொண்டிருக்க, கோபாலின் அகத்தை முகம் காட்டுகிறது. மனித மனத்தின் திடீர் அதிர்வால், கோபால் கொதிப்படைய அவரது கைகள் கார் கண்ணாடியை பயத்தோடு பற்றிக் கொள்ள, அருகிலிருக்கும் லதா இந்த அதிர்வு கண்டு அஞ்ச, Blood Pressure-இரத்தக்கொதிப்பு எனக் கைக்குட்டையால் முகத்தை ஒற்றிக் கொண்டே கோபால் சமாளிக்க, கேட் திறக்கப்படுகிறது; கார் கிளம்புகிறது.

"தல நடிப்ப பாத்தியா இந்த சீன்ல, தல தல தான்!" , குரல் கேட்கிறது, குஷி மேலிடுகிறது!

(தொடரும்...)

பக்தியுடன்,
பம்மலார்.

Irene Hastings
4th August 2010, 09:19 AM
Saradha Mdm

Thanks for the listing but my comment was about NT's acting prowess in SM . Nothing extrordinary . The movie glitters due to other factors . This is my point. Tks.

RAGHAVENDRA
4th August 2010, 10:51 AM
Dictionary of Nadigar Thilagam's acting from critics:

" nothing extraordinary" - if the story needs subdued subtle performance which NT provides.

"over-o-over acting" - if the story needs dramatisation and extra efforts for the portrayal of characters in true colours which NT provides.

I think a separate dictionary of acting of Nadigar Thilagam be prepared so that the critics may use of it at their wish and will and to their satisfaction.

Raghavendran

saradhaa_sn
4th August 2010, 11:16 AM
நன்றி ராகவேந்தர் அண்ணா, முரளியண்ணா மற்றும் பம்மலார்....


Saradha Mdm

Thanks for the listing but my comment was about NT's acting prowess in SM . Nothing extrordinary . The movie glitters due to other factors . This is my point. Tks.

Sorry Irene-ji........

இப்போதும் கூட தங்களின் கூற்றை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த படத்துக்கு, அந்த திரைக்கதையமைப்புக்கு என்ன அதிகப்படியான நடிப்பைத் தர முடியுமோ அதைக் குறைவில்லாமல் தந்திருந்தார்.

1) ஜூரிச் விமான நிலையத்தில், காஞ்சனாதான் இளவரசி என்று தெரிந்துகொள்ளும்போது காட்டும் அதிர்ச்சி.

2) விமான விபத்தில் தப்பிப்பிழைத்து, தன் வீட்டுக்குக்கூட நேராகப்போகாமல் நண்பனைச்சந்திக்கும்போது அடையும் ஆனந்தத்தின் உணர்ச்சி வெளிப்பாடு. (இப்படம் முத்துராமனின் கிரீடத்தில் ஒரு வைரம்).

3) செத்துப்போய்விட்டதாக நினைத்து மகனுக்கு பூஜை செய்து கொண்டிருக்கும்போது, திடீரென தாய் தந்தை முன் தோன்றி, அவர்களை அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தும் தருணம். அந்த இடத்தில் நடிகர்திலகம் நடிக்கிறார் என்று யாராவது சொல்ல முடியுமா?. நிஜமாகவே உயிர் தப்பிவந்த ஒருவரைப்போல எத்தனை உணர்வுகள் கலந்த வெளிப்பாடு. அதற்கு முற்றிலும் ஈடு கொடுத்து சாந்தகுமாரி, மற்றும் ரங்காராவிடம் இருந்து வெளிப்படும் அபார நடிப்புத்திறன்.

4) போராட்டத்தில் பலியான நண்பனையும், அந்த அதிர்ச்சியில் இறந்த அவன் தாயையும் மயானத்தில் எரித்து விட்டு, ரத்தக்கறையுடன் ஆக்ரோஷமாக தன் மாளிகையில் நுழைந்து, தன் தாயுடனும் அந்நேரம் அங்கு வரும் சமஸ்தானத்தின் தலைமை போலீஸ் அதிகாரியான தந்தையுடனும் பேசும்போது காட்டும் ஆக்ரோஷம், இறுதியில் அடிக்கும் அந்த அட்டகாசமான சல்யூட் (இந்தக்காட்சிக்கு பெரிய பெருமை.... மக்கள்திலகம் எம்.ஜி.ஆரின் ரசிகர்கள்கூட பலமாகக் கைதட்டிவிட்டு சொன்ன வார்த்தை 'இதுக்கெல்லாம் கணேசன்தான்யா'). வீராவேசத்திடன் செல்லும் மகனைப்பார்த்து, புன்னகைத்துக்கொண்டே ரங்காராவ் சொல்லும் பதில் "உன் மகன் முட்டாள் இல்லை, புத்திசாலி".

5) எலிகாப்டரை சுட்டு வீழ்த்திவிட்டு, அந்த மலையுச்சியில் நின்று நண்பர்களுக்கு எழுச்சிமிக்க 'அன்று சிந்திய ரத்தம்' பேருரை ஆற்றும்போது, முகத்தில் தோன்றும் ரௌத்ரம். (இதெல்லாம் வேறு யாராவது செய்யமுடியும் என்று நினைக்கிறீர்களா?).

6) தான் வீட்டுக்கு வந்திருப்பது திவான் நம்பியாருக்குத் தெரிந்துபோய், தன்னைக்கைது செய்யும் இக்கட்டான நிலையில் தந்தையைத் தள்ள, கணவரின் பெருமைகாக்க தன் தாயைக்கொண்டே தன்னைக்கைது செய்ய வைக்கும்போது காட்டும் கண்டிப்பு கலந்த பெருமிதம்.

7) ரயிலுக்கு குண்டுவைக்கும் முயற்சியை தன் மனைவியே செயலிக்கச்செய்துவிட்டாள் என்று தெரியும்போது முகத்தில் எழும் ஆதங்கம், அதை தன் சக புரட்சிக்காரர்களுக்குச் சொல்லும்போது முகத்தில் தோன்றும் ஏமாற்றம் கலந்த இயலாமை. (சில வினாடிகளுக்குள் எத்தனை உணர்ச்சிகள்தான் அந்த முகத்தில் தோன்றி மறையும்..!!!!). (இதுபோக நான் முந்தைய பதிவில் குறிப்பிட்ட, நாட்டிய மேடை ஒத்திகையின்போது காட்டும் யதார்த்தம்).

ஸாரி.... 'சிவந்த மண்' படத்தைப்பற்றியும் அதில் நடிகர்திலகத்தின் நடிப்பைப்பற்றியும் எழுதத்துவங்கிவிட்டால் நிறுத்தாமல் எழுதிக்கொண்டே இருப்பேன். அந்த அளவுக்கு காட்சியமைப்புக்களில் மட்டுமல்ல, நவரசமும் கலந்த நடிப்புப் புதையலிலும் அபாரமான படம்.

Irene Hastings
4th August 2010, 12:42 PM
சாரதா மேடம்

உங்களின் குறிப்பிட்ட காட்சிகள் அப்படி ஒன்றும் வியத்தகு வண்ணம் அவர் செய்யவில்லை. என்னுடைய நடிகர் திலகம் வேறு !
உதாரணத்திற்கு முதல் மரியாதை. :notworthy:

Mahesh_K
4th August 2010, 01:23 PM
Dictionary of Nadigar Thilagam's acting from critics:

" nothing extraordinary" - if the story needs subdued subtle performance which NT provides.

"over-o-over acting" - if the story needs dramatisation and extra efforts for the portrayal of characters in true colours which NT provides.

I think a separate dictionary of acting of Nadigar Thilagam be prepared so that the critics may use of it at their wish and will and to their satisfaction.

Raghavendran

முற்றிலும் உண்மை. திரு. Irene Hastings அவர்களது புதிய பதிவு உங்களது கருத்தை உறுதி செய்கிறது.

saradhaa_sn
4th August 2010, 02:22 PM
சாரதா மேடம்

உங்களின் குறிப்பிட்ட காட்சிகள் அப்படி ஒன்றும் வியத்தகு வண்ணம் அவர் செய்யவில்லை. என்னுடைய நடிகர் திலகம் வேறு !
உதாரணத்திற்கு முதல் மரியாதை. :notworthy:

அதாவது வெறுமனே வருவது, உட்காருவது, நிற்பது, போவது.... மொத்தத்தில் மேற்கொண்டு எதுவும் செய்யாமல் இருப்பது. (Is it Extraordinary...?. அறுபதுகளிலும் எழுபதுகளிலும் இதைப்பண்ணியிருந்தாரானால் பத்தோடு பதினொன்றாக ஆகியிருப்பார்)

உங்கள் டேஸ்ட் உங்களுக்கு. அதைக்குற்றம் சொல்ல யாருக்கும் உரிமை இல்லை....

எல்லோருக்கும் ஒரே மாதிரி டேஸ்ட் அமைந்துவிட்டால் நாடு முழுக்க ஒன்று 'ஆரியபவன்'களாகவோ அல்லது 'முனியாண்டி விலாஸ்'களாகவோ தான் இருக்கும்.

தனிப்பட்ட முறையில் என்னைப்பொறுத்தவரை முதல் மரியாதை, தேவர்மகன், படிக்காதவன், படையப்பா போன்ற்வற்றை நடிகர்திலகத்தின் வெற்றிப்படங்களில் சேர்ப்பதில்லை. ஏனென்றால் அவை அவருடைய படங்கள் அல்ல. வேறு யாரோ எடுத்த/நடித்த படங்களில் அவ'ரும்' இருந்தார். அவ்வளவே. முதல் மரியாதையையும் இதில் சேர்த்திருப்பது பலருக்கு புருவத்தை உயர வைக்கலாம். ஸாரி, என்னைப்பொறுத்தவரை அது பாரதிராஜா படம். அதில் இவர் வந்து போனார்.

Irene Hastings
4th August 2010, 02:37 PM
சாரதா மேடம்

எனக்கு பிடித்த ஒரு பாத்திரம் எங்க ஊரு ராஜா வில் வரும் ஜமீந்தார் வேடம் ! அதுவும் வயதான பின்பு அவர் காட்டும் நடிப்பு !
படம் முழுவதும் அவர் ஆக்ரமிப்பார் ( இரட்டை வேடமாக இருந்தாலும் )
படம் பார்த்த பின் நமக்கு நடிகர் திலகம் தான் மனதில் ஓடும்
அப்படி ஒரு தாக்கம் சிவந்தமண் ணில் எனக்கு ஏற்படவில்லை.
மன்னிக்கவும்.

saradhaa_sn
4th August 2010, 03:03 PM
அப்படி ஒரு தாக்கம் சிவந்தமண் ணில் எனக்கு ஏற்படவில்லை.

மன்னிக்கவும்.

Irene...ji,
இந்த வார்த்தை தேவையில்லை...

'முதல் மரியாதை' எனக்குப்பிடிக்கவில்லை என்பதற்காக உங்களிடம் மன்னிப்பா கேட்டேன்?. இல்லையே. அதுபோல 'சிவந்தமண்'ணில் அவர் நடிப்பு உங்களுக்கு பிடித்தேயாக வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்த முடியாது.

'முதல் மரியாதை' படத்தை முதலில் பார்த்தபோது அவ்வளவு நிறைவைத்தரவில்லை என்ற அளவில் மட்டும்தான் இருந்தது. ஆனால், தனது ஏழு வயதில் நடிக்க ஆரம்பித்து, நவரச நடிப்பால் உலகப்புகழ் அடைந்துவிட்ட ஒரு கலைஞனுக்கு, 1986-ல் ஒரு இயக்குனர் யதார்த்த நடிப்பைச்சொல்லிக் கொடுத்து நடிக்க வைத்ததாக மற்றவர்கள் சொல்லிச் சொல்லியே அந்தப்படம் எனக்கு சுத்தமாக பிடிக்காமல் போய்விட்டது. இதற்காக என் ரசனையை யாரும் குறை சொன்னாலும் அதுபற்றிக் கவலையில்லை

Irene Hastings
4th August 2010, 03:12 PM
1986-ல் ஒரு இயக்குனர் யதார்த்த நடிப்பைச்சொல்லிக் கொடுத்து நடிக்க வைத்ததாக மற்றவர்கள் சொல்லிச் சொல்லியே

மேடம்,

இதை நான் கேள்விபடவில்லை. எனக்கு முதல்மரியாதை ஏன் பிடித்ததென்றால் அவரால் வசனம் பேசாமலும் தன் திறமையை காண்பிப்பார் என்று நிரூபித்ததற்கு !
ஒரு இமயத்துடன் இணைவதில் பெருமைபடுகிறோம் என்று தான் படத்தின் ஆரம்பத்தில் வரும் :D

abkhlabhi
4th August 2010, 05:39 PM
முதல் மரியாதை பொறுத்த வரையில் யானை பசிக்கு சோள பொறி தான்

Plum
4th August 2010, 06:13 PM
1986-ல் ஒரு இயக்குனர் யதார்த்த நடிப்பைச்சொல்லிக் கொடுத்து நடிக்க வைத்ததாக மற்றவர்கள் சொல்லிச் சொல்லியே


Bharathiraja and teaching "yadaartha" nadippu? :roll:
Bharathiraja nadipu solli kuduthu nadikkaravanga will be like Pudhumai peN Revathy. nalla nadigar/nadigaigaLaiyE caricatural nadippAga mAtrubavar Bharatiraja. idhula ivar Sivajikku nadippu solli koduthArAmAmA? nallA irukku koothu.

pammalar
4th August 2010, 07:31 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 93

கே: எது ஓவர் ஆக்டிங்? (மதுரை முருகேசன், திருச்சி)

ப: அந்தக் கவிஞரின் வீட்டுக்கு ஊரிலிருந்து சில உறவினர்கள் வந்திருந்தனர். கவிஞரின் இல்லத்தரசி அவர்களை 'வாங்க' என்று அழைத்தாராம். அவர்களோ 'வரவேற்பு சரியில்லை' என்று புகார் செய்தார்களாம். 'வாங்க! வாங்க! வாங்க!' எனத் தங்களைக் கூப்பிடவில்லையே என்பது அவர்களுடைய ஆதங்கம். பின்னர் கவிஞர் அவர்களை சமாதானப்படுத்தினாராம். இதை ஒரு மேடையில் தெரிவித்த அந்தக் கவிஞர்,"சிவாஜியின் நடிப்பை மிகை என்று சிலர் சொல்வதுண்டு. ஆனால் அவர் நமது மக்களைப் பற்றி நன்றாக எடை போட்டு வைத்திருந்ததனால் தான் சற்று அதிகப்படியாகவே கொடுத்தார். அது மூன்று முறை, "வாங்க! வாங்க! வாங்க!'ன்னு சொல்வது மாதிரி தான். இங்கே அது தேவைப்படுகிறதே!" என்று சொல்லி, பார்வையாளர்களின் ஏகோபித்த கரகோஷத்தைப் பெற்றார். இதில் உங்கள் கேள்விக்கான பதில் அடங்கியுள்ளது. மேலே குறிப்பிட்டுள்ள கவிஞர், வராக நதிக்கரையோரம் வளர்ந்த கறுப்பு வைரம்.

(ஆதாரம் : சினிமா எக்ஸ்பிரஸ், 16-31 ஜனவரி 2006)

அன்புடன்,
பம்மலார்.

Murali Srinivas
4th August 2010, 11:23 PM
நமது ரசிகர்களுக்கு, தயவு செய்து வாதப் பிரதிவாதங்கள் வேண்டாமே! அதுவும் திரியின் ஆறாம் பாகம் நிறைவுற்று ஏழாம் பாகம் ஆரம்பிக்கும் நேரத்தில்.

சாரதா,

நீங்கள் குறிப்பிட்ட இரண்டு மூன்று காட்சிகள் - ஒன்று முத்துராமனின் மறைவிற்கு பின் வீட்டிற்கு வந்து பேசும் காட்சி. அந்த காட்சியின் இறுதியில் எனக்கும் அந்த உணர்வுகள் இருக்கின்றன என்று சொல்லும் தந்தையிடம் வலது குதிங்காலை சற்றே உயர்த்தி நெஞ்சு விரித்து வலது கையை ஒரு நாட்டிய முத்திரை போல் இயக்கி "உணர்ச்சிகள் வார்த்தைகளில் அல்ல செயல்களில், செயல்களில் இருக்க வேண்டும் அப்பா" என்று உணர்வுபூர்வமாய் பேசும் நடிகர் திலகம்!

போஃனை எடுக்கும் சாந்தகுமாரியிடம் நம்பியார் "மிஸஸ் சந்திரசேகர், புரட்சிக்காரன் பாரத் உங்கள் வீட்டிற்கு வந்திருப்பதாக தகவல் வந்திருக்கிறது" [ஸ்ரீதரின் இயல்பான வசனங்கள்] என்று சொல்ல தந்தை தாய் மகன் மூவரின் முகத்திலே ஓடும் அந்த உணர்ச்சிப் போராட்டம்!

காஞ்சனாதான் ரயிலுக்கு வெடிகுண்டு வைத்ததை செயலிழுக்க செய்தவர் என்று தெரிந்ததும், கூட வந்தது யார் என்று எவ்வளவோ கேட்டும் அவர் பதில் சொல்லாமல் இருக்க அவரை அடித்து விட்டு கல்லில் உட்கார்ந்திருக்க, தவழ்ந்து தவழ்ந்து அவர் அருகில் வரும் காஞ்சனா, கூட வந்தது அவரது தாய் என்ற உண்மையை சொல்ல, சுற்றி நிற்கும் நண்பர்களிடம் வார்த்தை வராமல் "வசந்தி கூட வந்தது என் தாயாம்" என்று உணர்ச்சி பெருக்கில் தடுமாறுவாரே! ஆஹா!

நம்மை உசுப்பி விடுவது போல் ராகேஷ் வேறு "அரேபிய பாரத்" அவதார் போட்டிருக்கிறார். சிவந்த மண் சாந்தியில் வெளியிட்டே தீர வேண்டும்! நாம் பார்த்தே ஆக வேண்டும்!

அன்புடன்

சுவாமி,

கோபால் கோலோச்சிக் கொண்டிருக்கும் நேரத்தில் பாரத் உள்ளே நுழைந்து பெயர் தட்டிக் கொண்டு போவதற்கு sorry.

tamizharasan
4th August 2010, 11:39 PM
1986-ல் ஒரு இயக்குனர் யதார்த்த நடிப்பைச்சொல்லிக் கொடுத்து நடிக்க வைத்ததாக மற்றவர்கள் சொல்லிச் சொல்லியே


Bharathiraja and teaching "yadaartha" nadippu? :roll:
Bharathiraja nadipu solli kuduthu nadikkaravanga will be like Pudhumai peN Revathy. nalla nadigar/nadigaigaLaiyE caricatural nadippAga mAtrubavar Bharatiraja. idhula ivar Sivajikku nadippu solli koduthArAmAmA? nallA irukku koothu.

Plum
We all know about BR's humility. No one has the capability to teach acting to Sivaji. Only thing is, others can make use of Sivaji's unbelievable talent. Kamal as foremost admirer of Sivaji, might have studied Sivaji's abilities and power more than anyone else. IMO Kamal has made the best use of Sivaji so far, even though it lasted for only for half of the movie. Sivaji's screen presence in Devar Magan lasted for may be half hour most, even then it was one of the most powerful performances I have seen on the screen. What would have happened if that kind of acting lasted for the whole movie. No one brings all kind of emotions so effortlessly other than Sivaji. He is indeed Saraswathiyin Selvan.

pammalar
5th August 2010, 02:15 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 94

கே: முக்தாவின் அடுத்த படத்தில் சிவாஜி நடிப்பதால் "நிறைகுடம்" வெற்றிப்படம் ஆகி விடுமா? (எஸ்.எஸ்.மணி, திருவனந்தபுரம்)

ப: "நிறைகுடம்" சம்பந்தப்பட்டவரை வசூலில் தயாரிப்பாளருக்கு வெற்றிப்படம் தான். ஒருவர் நடித்து வெற்றி பெற்றால் தான் அடுத்த படத்திலும் அவர் உண்டு என்பது என் வாதம் அல்லவே.

(ஆதாரம் : பேசும் படம், மே 1970)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
5th August 2010, 02:25 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 95

கே: நடிப்பில் சிவாஜியை மிஞ்சுவோர் வேறு யாரும் இல்லை என்பதில் யாருக்குப் பெருமை? (கெ.ரப்பதுல்லா, சென்னை - 3)

ப: இந்தியனுக்கு - குறிப்பாகத் தமிழனுக்கு!

(ஆதாரம் : பேசும் படம், டிசம்பர் 1970)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
5th August 2010, 02:46 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 96

கே: சிவாஜி, 'ரசிகர்கள் மாநாடு' நடத்தப் போவது குறித்து? (லட்சுமி செங்குட்டுவன், வேலூர்)

ப: தமிழக இந்திரா காங்கிரஸ் கட்சியிலும் விறுவிறுப்பும், எழுச்சியும் ஏற்படக்கூடும் என்பதற்கு ஒரு சான்று. சிவாஜி போன்ற செல்வாக்குப் பெற்றவர்களைத் தலைவராக்கினால்தான் இ.காங்கிரஸ் மேலிடம் மட்டுமல்ல, கீழிடமும் மரியாதையைப் பெறக்கூடும்.

(ஆதாரம் : இதயம் பேசுகிறது, 26.2.1984)

அன்புடன்,
பம்மலார்.

groucho070
5th August 2010, 08:08 AM
Bharathiraja and teaching "yadaartha" nadippu? :roll:
Bharathiraja nadipu solli kuduthu nadikkaravanga will be like Pudhumai peN Revathy. nalla nadigar/nadigaigaLaiyE caricatural nadippAga mAtrubavar Bharatiraja. idhula ivar Sivajikku nadippu solli koduthArAmAmA? nallA irukku koothu. :lol: Apt comparison of Barathiraja's actors would be Sudhagar, Raja, esetra, esetra.

I think during the first day on the set, NT actually asked BR how he wanted him to act. BR was shocked, and said there is no need for that, and just told him the scenes. I don't see any difference in NT's approach in performance in this film or in Pattikada Pattanama or in Makkalai Petra Magarasi. I said approach, but NT made the differences through his performance. To say NT didn't do much here, but took extra effort there is nonsense. He was the same powerhouse from day one he stepped in front of the camera, right to the last time we saw him on big screen. Yaar yaar ettana voltage eduttangganu athu vera vishayam.

Plum
5th August 2010, 10:30 AM
grouch, the point I made was that if an actor let himself/herself be guided by Bharathiraja, even a good actress like Revathy will descend into pudhumai peN level performances. Forget gone cases like Sudhakar, Raja. nalla nadigargaLE BR solli kuduthA romba pongiduvAnga!

groucho070
5th August 2010, 10:54 AM
okay, okay, got it thanks. :)

saradhaa_sn
5th August 2010, 11:13 AM
அன்பான ரசிகர்களுக்கு,
பாரதிராஜா பற்றி நான் துவக்கிய வாதத்துக்கு நானே முற்றுப்புள்ளி வைக்கிறேன். விவாதம் வேறு திசைக்குப் போகும் முன் இதோடு விட்டுவிடுங்கள் ப்ளீஸ்.

டியர் பம்மலார்,

உங்கள் 'கேள்வி பிறந்தது, நல்ல பதில் கிடைத்தது' பகுதியில் கேள்விகள் கேட்டிருக்கும் அன்பர்களின் பெயரகளைப்பார்க்கும்போது, பழைய நினைவுகள் எல்லாம் அலமோதுகின்றன. இணையதளங்கள் இல்லாத அன்றைய காலகட்டங்களில், வாரப்பத்திரிகைகளே கதி என்றிருந்த நாட்களில்.... 'வேலூர் லட்சுமி செங்குட்டுவன், பூதப்பாண்டி ராமலிங்கம், திருவனந்தபுரம் எஸ்.எஸ்.மணி' ஆகியோரின் கேள்விகள் இடம்பெறாத பத்திரிகைகளே இல்லையெனலாம். அதிலும் அண்ணன் எஸ்.எஸ்.மணி அவர்கள் மக்கள் திலகம் திரு எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். அவர் நடிகர்திலகத்தைப்ப்ற்றி கேட்கும் கேள்விகளில் ஒரு மறைமுகமான கிண்டல், குசும்பு, நாசூக்கான நையாண்டிகள் இருக்கும். ஆனால் நல்ல மனிதர். அதுபோல பூதப்பாண்டி திரு ராமலிங்கம், பின்னாளில் ஒரு பத்திரிகையாளராக ஆனார். திரை நட்சத்திரங்களை சந்திக்கும் வாய்ப்புக்காகவே பத்திரிகைத்துறையில் நுழைந்ததாக ஒருமுறை சொல்லியிருந்தார். வேலூர் லட்சுமி செங்குட்டுவனின் பெயரை அடிக்கடி குமுதம் வார இதழ்களில் பார்த்திருக்கிறேன்.

இத்தனை கேள்வி பதில்களையும் சேகரித்து வைத்திருக்கும் உங்களைப்பார்க்க மிகவும் மலைப்பாக இருக்கிறது. உங்களை இன்னொரு கல்கி, இன்னொரு சாண்டில்யன் என்று சொன்னதுபோல இப்போது இன்னொரு 'பிலிம்நியூஸ் ஆனந்தன்' என்றும் சொல்லலாம்.

டியர் முரளி,
சிவந்தமண் காட்சிகள் பற்றி இன்னும் நாம் நிறைய பேச வேண்டியிருக்கிறது.

groucho070
5th August 2010, 11:23 AM
Since new thread starting, oru poll podalama? With the revisit on Sivantha Man, why not have a list of NT's action films? I for one, would love to vote for and discuss Tanggachuranggam (NT: Nan James Bond-am :lol2: )

SHIV
5th August 2010, 11:38 AM
Dear Friends & Fans of NT,

Gud morning to everybody. Im Shivram now based on Pune though born and brought up in chennai. Im 40 years old and an HARDCORE NADIGAR THILAGAM FAN from my childhood days. My first meeting with NT on screen was when my parents took me to Bharata Vilas in Tanjore when I was around 4 or 5years old. From that day onwards i became an avid fan of NT and the devotion had grown thousandfolds till now.

My first darshan of NT was during a shooting in Mylapore post office for the movie "Anandha Kaneeer" where he took a long walk from the post offfice tll its entrance for a shot. There was no dialogue and only the walk was hot by Director K. Vijayan. Myself and a group of friends cut the class at school and watched the shooting ( I studied in Santhome High School). I carried a photo of NT and got it autographed by him at the shooting spot. I still treasure that photograph having it framed. Noticing our school uniform, NT asked us if we had come with permission of school or otherwise. We said that we cut the class and came to see him.
He smiled and asked to us leave the place immediately and go back to school and avoid this practise in future. He stressed that studies should be the only priority for students and everything comes next.

We were overjoyed that day and felt on top of the world having seen & spoken to NT and also got his autograph ( That we were suspended for a day from school for cutting class is a different matter).

Times rolled by and then i used to frequent his party office (TMM)in South usman road just to have his darshan.

I am an avid reader of this forum and a fan of writings of Mr.Pammalar, Mr.Ragavendran, Mr.Murali Srinivas and Sharada madam.

I am happy and proud that we all breathe and live by NT's acting and this forum is a platform for all NT Bhaktargal to share thier views and experiences of our Acting GOD.

Hope I have not bored you all too much. Hence forth I shall take active participation in this forum.

regards

Shivram

RAGHAVENDRA
5th August 2010, 11:43 AM
சகோதரி சாரதா அவர்களின் கருத்துக்கள் முற்றிலும் சரியானவை. நாம் சிவந்த மண் திரைப்படத்தைப் பற்றி இன்னும் விரிவாக அலச வேண்டும்.

தாங்கள் சொன்னது போல் மேலும் பல சிவாஜி ரசிகர்கள் பத்திரிகைகளிலும் வானொலியிலும் இடம் பெறுவர். திருவல்லிக்கேணி சிவாஜி பாஸ்கர் 60களின் பிற்பகுதி மற்றும் 70களின் முற்பகுதியில் மிகவும் பிரபலமான ரசிகராவார். மற்றும் திருவல்லிக்கேணி சிவாஜி ராஜசேகரும் பின்னர் எழுதுவார். மற்றும் இளம் பிறை பாரூக் உள்ளிட்ட பலர் எழுதியுள்ளனர். சில சமயங்களில் அடியேனுக்கும் அந்த வாய்ப்பு கிட்டியுள்ளது. குறிப்பாக 1971ல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப் பட்டபோது வானொலியில் இரவு 10.00 மணிக்கு விரும்பிக் கேட்டவை நிகழ்ச்சியில் நானும் என்னைப் போன்ற மற்ற ரசிகர்களும் கேட்டிருந்ததாக அறிவித்து சுமதி என் சுந்தரியில் இடம் பெற்ற கல்யாண சந்தையிலே பாடலை ஒலிபரப்பினார்கள். அவை யாவையும் இன்றும் பசுமையாக நினைவில் உள்ளன.

அண்மையில் ஒரு பழைய நண்பரைச் சந்தித்தேன். அவர் பாரகன் திரையரங்கில் புதிய பறவை வெளியீடு அன்றே அப்படத்தைப் பார்த்த்வர். கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற நிகழ்ச்சிகளை இணைய தளங்களில் பார்த்து என்னிடம் தன் மகிச்சியைப் பகிர்ந்து கொண்டார். முன்னமே தெரிந்திருந்தால் தானும் அன்று கலந்து கொண்டிருக்கக் கூடும் என்று கூறினார். இனிமேல் முடிந்த வரை வந்த வாய்ப்பை விடப் போவதில்லை என்றார்.

இது போல் பல சிவாஜி ரசிகர்கள் தம்முடைய வயது, உடல் நிலை அனைத்தையும் கடந்து நடிகர் திலகத்தின் பால் இன்றும் பாசத்துடன் உள்ளனர்.

சிவந்த மண் வெளியான அன்றைக்கு சென்னை குளோப் திரையரங்கில், அந்தப் படத்தின் பெயரில் ரசிகர் மன்றம் துவங்கிய சைதை ராம்தாஸ் மற்றும் அவர்களின் மன்ற உறுப்பினர்கள் நடிகர் திலகத்தின் அழகிய சிறு படம் ஒன்றையும் சாக்லேட் ஒன்றையும் அனைவருக்கும் வழங்கினர். குளோப் திரையரங்கே கோலாகலமாக இருந்தது. 22 வாரங்கள் நன்றாக மக்கள் வரவேற்போடு வெற்றி நடை போட்ட படம் மேலும் மூன்று வாரங்கள் தொடர்ந்திருந்தால் வெள்ளி விழா கண்டிருக்கும்.

இப்படி பல நினைவுகள் அவ்வப்போது நிழலாடிக் கொண்டுள்ளன.

அன்புடன்

ராகவேந்திரன்

RAGHAVENDRA
5th August 2010, 11:54 AM
டியர் சிவராம்,
முதற்கண் தங்களுக்கு நமது அனாத்து நண்பர்கள் சார்பிலும் அன்பான வரவேற்பை தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்களுடைய முதற் பதிவே நடிகர் திலகத்தின் ரசிகர்களுடனான அறிமுகமாக பதிந்துள்ளது மிக்க மகிழ்ச்சி யளிக்கிறது. சிவாஜி ரசிகர் சிவராம் என்று சொல்லும் போதே தமிழின் பெருமை வியக்க வைக்கிறது. அதுவும் தாங்கள் தமிழக முன்னேற்ற முன்னணி அலுவலக்திற்கு வந்துள்ளதை நினைவு கூறும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எந்த அளவிற்கு தங்களுக்குள் நடிகர் திலகம் இடம் பெற்றுள்ளார் என்பதை அறிய முடிகிறது. எனக்கு முந்தைய தலைமுறையினர் அந்தக் காலத்தில் என் தலைமுறையைப் பார்த்து வியந்து பாராட்டுவர், நான் சொல்வது 60களின் மைய கால கட்டத்தில். அதே உணர்வை நான் இப்போது பெறுகிறேன். தங்களைப் போன்ற புதிய தலைமுறை, சொல்லப் போனால் தங்களுக்கும் அடுத்த தலைமுறையினர் இதே ஹப்பில் நடிகர் திலகத்தின் பால் தங்கள் அன்பை வெளிப்படுத்தி தாங்கள் எவ்வாறு சிவாஜி ரசிகர்களானோம் என்பதை எழுதியுள்ளனர், அப்படி புதிய தலைமுறைகளை ஈர்க்கும் வல்லமை நடிகர் திலகத்திற்கு உண்டு.

அது மட்டுமல்ல பலபுதிய பரிணாமங்களில் நடிகர் திலகத்தின் நடிப்புப் புலமை அலசப் படுவதும் இங்கே சிறப்பாகும். இந்த சமயத்தில் இந்த ஹப்பிற்கும் நமது நன்றிகள் உரித்தாகட்டும்.

தங்களுடைய பதிவுகளைப் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறோம். தங்களுடைய அனுபவங்கள், படங்களைப் பற்றிய கருத்துக்கள், பலவற்றையும் நம் அனைவருடனும் பகிரந்து கொள்ளுங்கள்.

அன்புடன்

ராகவேந்திரன்

groucho070
5th August 2010, 12:05 PM
Welcome, Shivram. That's a nice anecdote. I was touched by NT's concern about children and education. I am three years younger than you and am a latecomer when it comes to NTism (only in 90s I really started appreciating him), looking forward to more anecdotes and posts from you. :D

saradhaa_sn
5th August 2010, 12:33 PM
சாரதா,

நீங்கள் குறிப்பிட்ட இரண்டு மூன்று காட்சிகள் - ஒன்று முத்துராமனின் மறைவிற்கு பின் வீட்டிற்கு வந்து பேசும் காட்சி. அந்த காட்சியின் இறுதியில் எனக்கும் அந்த உணர்வுகள் இருக்கின்றன என்று சொல்லும் தந்தையிடம் வலது குதிங்காலை சற்றே உயர்த்தி நெஞ்சு விரித்து வலது கையை ஒரு நாட்டிய முத்திரை போல் இயக்கி "உணர்ச்சிகள் வார்த்தைகளில் அல்ல செயல்களில், செயல்களில் இருக்க வேண்டும் அப்பா" என்று உணர்வுபூர்வமாய் பேசும் நடிகர் திலகம்!

'கோபால்' கோலோச்சிக் கொண்டிருக்கும் நேரத்தில் 'பாரத்' உள்ளே நுழைந்து பெயர் தட்டிக் கொண்டு போவதற்கு sorry.

இன்றைக்கு நடிகர்திலகத்தின் ரசிகர்கள் இருக்கும் உணர்ச்சிமயமான சூழ்நிலையில், சிவந்த மண் திரையங்குகளில் திரையிடப்பட்டால், ரசிகர்களின் அலப்பறையில் மேற்சொன்ன காட்சியில் ஒரு வசனம் கூட கேட்க முடியாது என்பது திண்ணம். (அதற்கென்று தனியாக இன்னொரு நாள் பார்க்க வேண்டியிருக்கும்). அந்த அளவுக்கு இந்தக்காட்சியில் வார்த்தைக்கு வார்த்தை கைதட்டலும் விசிலும் பறக்கும். இக்காட்சிக்குத்தேவையான அவரது பாடி லாங்குவேஜ். குறிப்பாக கீழ்க்கண்ட வசனங்களின்போது....

"....... அதற்கு உங்கள் ஆட்சி கொடுத்த பரிசு உயிர்ப்பலி, ரத்தம்" இந்த இடத்தில் அவரது கையசைவு.

"......... திவானைக் கைது செய்து மக்கள் முன் நிறுத்த வேண்டும். அல்லது அந்தப்பதவியையும் அதற்கான உடைகளையும் தூக்கி எறிந்துவிட்டு" (இந்த இடத்தில் அவர் கையசைவு) "திவானுக்கு எதிராக புரட்சிக்குரல் எழுப்ப வேண்டும்".

"பாராட்டு... வெறும் வார்த்தையில் இருந்தால் போதாது. செயலிலே காட்ட வேண்டும்" (நீங்கள் சொன்ன அந்த நாட்டிய முத்திரை).

"ஒரு தேச விரோதிக்கு உங்கள் சட்டம் பாதுகாப்பு தருகிறதென்றால், அந்தச்சட்டத்தை உடைத்தெறியவும் தயங்க மாட்டோம்" (இந்த இடத்தில் கையை உயர்த்தி இரண்டு சொடக்குப்போடுவார்)

"இல்லையம்மா... நான் இந்த சமஸ்தானத்தின் தலைமை போலீஸ் அதிகாரியிடம் பேசிக்கொண்டிருக்கிறேன்" (இந்தக் கட்டத்தில் அவர் கண்களில் தெரியும் தீர்க்கம்)

இறுதியாக தியேட்டரையே அதிர வைக்கும் அந்த சல்யூட்.

----------------------

'பாரத்'துக்கும் வசந்தி (என்கிற சித்திரலேகா) வுக்கும். எதிர்பாராவண்னம் திருமணம் நடந்துவிடும் அந்தச்சூழல் மிகவும் சுவையானது. ராணுவத்தின் துரத்தலுக்குத் தப்பி, ஒரு திருமண வீட்டில் தஞ்சம் புக, தேசப்பற்று மிக்க அம்மக்களால் நடிகர்திலகமும் காஞ்சனாவுமே திருமண தம்பதிகளாய் மாற்றப்பட,
மந்திரம் தெரியாமல் தடுமாறும் ஐயர் நாகேஷ்,
கண்ணடித்தவாறே டிரம்ப்பட் வாசிக்கும் (இயக்குனர்) விஜயன்,
ஸ்டைலாக தலையாட்டிக்கொண்டே பேண்ட் டிரம் வாசிக்கும் மாலி,
என அந்த சூழலே களை கட்டுகிறது.

('ஜெனரல் பிரதாப்' ஆக வருபவர், எம்.எஸ்.வி.யின் உதவியாளர் ஹென்றி டேனியலா...?)

இன்றைக்கு ஐந்து இயக்குனர்களை ஒரு படத்தில் நடிக்க வைத்திருப்பதாக பெருமைப்படும் முன், அன்றைக்கே மூன்று இயக்குனர்களை (ஜாவர் சீதாராமன், விஜயன், தாதாமிராஸி) தனது சிவந்த மண்ணில் நடிக்க வைத்த பெருமை ஸ்ரீதருக்கே. (இயக்குனர்கள் எல்லாம் படங்களில் தலைகாட்டாத காலம் அது).

saradhaa_sn
5th August 2010, 01:15 PM
வாருங்கள் சிவராம்....

உங்களைப்போன்ற நடிகர்திலகத்தின் அதி தீவிர ரசிகர்களின் வருகையால் இத்திரி பெருமை அடைகிறது. உங்களது முதற்பதிவே முத்தான, சத்தான பதிவாக அமைந்து களையூட்டியுள்ளது. நடிகர்திலகத்தின் நேரடி தரிசனம், அவரிடம் கையெழுத்துப்ப்பெற்றது, அப்போதே உங்கள் தலையெழுத்து நன்றாயிருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் அட்வைஸ் பண்ணியது என எல்லாமே அற்புதம்.

உங்களிடம் நிறையப் புதையல்கள் இருப்பது தெரிகிறது. தொடர்ந்து பங்கு பெறுங்கள். உங்கள் திரையரங்க அனுபவங்களை அள்ளித்தெளியுங்கள். அனுபவிக்கக் காத்திருக்கிறோம்.

ஏழாம் பகுதி துவங்க இருக்கும் இவ்வேளையில் 'நடிகர்திலக ஜோதி'யில் கலந்துகொள்ள வந்திருக்கும் உங்கள் வரவு களையூட்டுகிறது.

வருக... வரைக.... வாழ்க... வளர்க...

KCSHEKAR
5th August 2010, 03:14 PM
வருக திரு.சிவராம் அவர்களே! த.மு.மு அலுவலகத்திற்கு அடிக்கடி வருகை புரிந்திருப்பதால் அங்கு In-charge ஆக இருந்த என்னை சந்தித்திருக்க வாய்ப்புண்டு. ஆனாலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு த்ங்களைபோன்ற ரசிக நண்பர்களை சந்திக்க வைத்த இந்தத் திரிக்கும், முன்னெடுத்துச் செல்லும் நண்பர்களுக்கும் எனது நன்றி.

Touching 100th page in Part-6 - என்னுடைய Active Participation இல்லை என்றாலும் நான் தொடர்ந்து இத்திரியை வாசிப்பவன் என்ற முறையில் பங்கேற்றுக்கொண்டிருக்கும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

SHIV
5th August 2010, 03:28 PM
Dear Mr.Ragavendran/Saradha madam/Groucho

Many thanks for your welcome note. I would like to start with 2 songs of NT' 175th film "Avanthan Manithan". Wow, what a style and mannerism by NT in this movie!!!. Particularly the Singapore scenes......., I think Singapore had made itself proud by allowing NT to walk on its soil ( particularly the walk with a boquet in hand in the beginning of the song Oonjalukku Poochooti, will put even the dignitaries to shame). before that a 10 minute scene, where NT will chase Manjula in singapore with only the BGM is a class apart. Kudos to Mellisai Ma mannar for the BGM piece. No Music Director (past or present) can ever think of matching this BGM piece for a foreign location.

Just close your eyes and hear the BGM and you will feel like being in S'pore. Coming to the Song "Engiruntho oru kural vanthathu' NT just bowls us over with his small smiles, looks and mannerism. A typical rich business man with graceness written all over!! When VJ starts the song with a humming, the camera moves with NT's close up from right to left and NT with a curious look and short smile moves his eyes from right to left trying to find out where the humming comes from. God... what an expression and acting......

This movie is very close to my heart because after seeing this movie in my school days, i dreamt of working abroad, and by God's and NT's grace, I landed up in a Job at Singapore itself and was working there for 5 years (till 2008).

I am proud and thank god that I was born in NT 's era where i was able to see and enjoy such movies and acting.

Thanks

Shivram

SHIV
5th August 2010, 03:34 PM
Dear Mr.Chandrasekar

Thanks for your message. Yes, i remember you. I also have book written by you which has a collection of writings of personalities from different walks of life. If im not mistaken, there was also an office boy named Panguraj in that office... right?

My best wishes are always with you and for carrying out several good deeds thro NT samooga nala peravai.

Regards

Shivram

Mahesh_K
5th August 2010, 03:35 PM
முரளி சார், சாரதா மேடம்...

காட்சிகளை நுணுக்கமாக விவரிப்பது மட்டும் இல்லாமல் வசனத்தைக் கூட எழுத்து பிசகாமல் எப்படி உங்களால் சொல்ல முடிகிறது என்ற வியப்பு எனக்குப் பல நாட்களாக இருக்கிறது. Just amazing... (படத்தின் DVDஐ ஓட விட்டு வசனத்தை எழுதுவதாக என்னை நானே தேற்றிக் கொள்கிறேன் :) :) ).

உங்களைப் போலவே தான் என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவரும். சிவாஜி படங்களில் எந்த படத்திலிருந்தும் ஒரு துண்டு வசனத்தை சொன்னால் நொடிகளில் படத்தின் பெயரைச் சொல்லிவிடுவார்.

அவரிடம் வசனத்தை சொல்லி சோதிப்பது என்னுடைய வழக்கம். பல முறை அவரை சோதித்தும், ஒவ்வொரு முறையும் அவர் படத்தின் பெயரை- அவ்வளவாக ஓடாத, சாதரணப் படங்களின் பெயரைக் கூட - சரியாகச் சொன்னதால் வெறுத்துப் போன நான், MGR பட வசனம் எல்லாம் சொல்லி (சிவாஜி பட வசனம் தான் என்று சொல்லி) அவரை ஓரிரு நாட்கள் குழம்பி அலைய விட்டதும் உண்டு. ( நம்ம படத்தில இப்படி ஒரு டயலாக்கா??...! ).

இந்த திரியை பார்க்கும் வாய்ப்பில்லாத - இணைய தள பரிச்சயம் இல்லாத - அவருக்கு உங்கள் பதிவுகளை தெரிவித்தால் மிகவும் மகிழ்வார்.

Plum
5th August 2010, 03:44 PM
Mahesh, andha vasanatha ellAm vechu konjam engaLayum test paNNungaLen!

Inge: http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=13532&start=1365

Mahesh_K
5th August 2010, 04:36 PM
Mahesh, andha vasanatha ellAm vechu konjam engaLayum test paNNungaLen!

Inge: http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=13532&start=1365

Plum sir.. unable to get the link given from my PC .. some issue it seems. Posting few dialogues here.. You may transfer.

1. "இப்பதான் கொழுப்பு கொஞ்..சம் இறங்கி இருக்கு"

2. " அந்த வாசனையத்தான் நான் நல்லா மோப்பம் பிடிப்பேனே"

3. " தூங்குறவன எழுப்பினா முழிக்காம என்ன பண்ணுவான்?"

Plum
5th August 2010, 04:43 PM
Mahesh, Thank You.
I posted it there
Click here and see if this works (http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?p=2199874#2199874)

Plum
5th August 2010, 04:45 PM
All 3 are same film or different?
(2) is padikkAdha mEdhai?

KCSHEKAR
5th August 2010, 05:15 PM
Yes Mr.Shivram you are right. Kindly send me a mail through my mail id. I will send you in details of Sivaji Samooganala Peravai & activities of that.

Thanks

Mahesh_K
5th August 2010, 05:33 PM
All 3 are same film or different?
(2) is padikkAdha mEdhai?

Yes. The link works now. Tnx.

All the 3 movies are different.

Padikkatha mEdhai is a wrong answer.

pammalar
5th August 2010, 06:05 PM
சென்னை தண்டையார்பேட்டையிலுள்ள பாரத் திரையரங்கில் நாளை 6.8.2010 வெள்ளி முதல் "புதிய பறவை" திரையிடப்படுகிறது.

திரைப்பட வரலாற்றில், பாரத் திரையரங்கிற்கு, வேறு எந்த திரையரங்கத்திற்கும் இல்லாத ஒரு மாபெரும் சிறப்பு உண்டு. நடிகர் திலகத்தின் முதல் திரைப்படமான "பராசக்தி" யும் முதல் வெளியீட்டில் (25.10.1952) 'பாரத்'தில் தான் வெளியானது. நடிகர் திலகத்தின் 288வது இறுதித் திரைப்படமான "பூப்பறிக்க வருகிறோம்" திரைப்படமும் முதல் வெளியீட்டில் (17.9.1999) 'பாரத்'தில் தான் வெளியானது. கலைப்பெருஞ்ஜோதியின் ஆதியையும், அந்தத்தையும் வெளியிட்ட 'பாரத்' அரங்கிற்கு இதைவிட வேறென்ன பெருமை வேண்டும்!

குறிப்பு:
"பராசக்தி" முதல் வெளியீட்டில், சென்னை (பாரகன், அசோக்) மற்றும் தென்னகமெங்கும் 17.10.1952 தீபாவளித் திருநாளன்று வெளியானது. சென்னை 'பாரத்'தில் மட்டும் 8 நாட்கள் கழித்து 25.10.1952 அன்று வெளியானது.

அன்புடன்,
பம்மலார்.

abkhlabhi
5th August 2010, 06:19 PM
My heartiest & sincere thanks to everyone for completing 6th and entrying 7th.

Let all of us as usual spread NT's name & fame throughout.

rangan_08
5th August 2010, 07:12 PM
Congrats for Part 6 nearing completion and ALL THE BEST for Part 7.

Thanks to one and all. Let's continue to rock. :thumbsup:

sivank
5th August 2010, 08:23 PM
[tscii:1ef0f4e940]Hi friends, it is great to see that this thread is going to reach its 7th part. Thanks and congrats to all of you for making it happen. Special thanks to Saradha, Murali, Ragavendra and Pammalaar.

I just would like to share something which I happened to see recently. As we know NT never acted in Devarīs films. Still it was NT who gave the address of Devar to R Thiyagarajanīs family who were close friends of NT. During R. Thiyagarajan ( who replaced M.A.Thirumugam as director of nearly all Devar films) and Devarīs daughters marriage, NT acted as pillai veetukaaran and MT acted as pen veetukaaran during the betrothal and exchanged the plate containing the marriage things.

That was NTīs generosity to other film world members, even though they neglected him

[/tscii:1ef0f4e940]

Murali Srinivas
5th August 2010, 10:53 PM
ஒரே நாளில் நிறைய விஷயங்கள் நடந்திருக்கின்றன. அவற்றுக்குள் நுழையும் முன் இங்கே பங்களிப்பு நல்கும் அனைத்து நல் இதயங்களின் சார்பாக ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.

சாரதா,

நடிகர் திலகத்தின் புகழ் பாடும் இத்திரியின் 7-ம் பாகத்தை துவக்கி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் எந்த மறுப்பும் சொல்லாமல் இதை செய்ய வேண்டும் என்பது எங்கள் அனைவரின் எதிர்பார்ப்பு வேண்டுகோள். மாடரேட்டர்களையும் சேர்த்தே சொல்கிறேன். கோலாகலமாக துவக்கி வையுங்கள்.

அன்புடன்

Murali Srinivas
5th August 2010, 11:44 PM
வருக வருக சிவராம் அவர்களே
நல்ல இடம் நீங்கள் வந்த இடம்;

உங்கள் பாராட்டுகளுக்கு என் நன்றி.

அவன்தான் மனிதன் என்றும் மனதில் நீங்கா இடம் பிடித்த படம். பள்ளி நாட்களிலே மதுரை சென்ட்ரலில் முதல் 5 வாரத்தில் 5 முறை பார்த்த படம். ஊஞ்சலுக்கு பூச்சூட்டி பாடல் ஸ்டைலுக்கே பார்க்கலாம். எப்போது இந்த படத்தை பார்த்தாலும் மூன்றாவது சரணத்தில் வரும் இலக்கிய ரசத்தோடு வரிக்காக தியேட்டரே எதிர்பார்த்து நிற்கும். அந்த ஸ்டைல்! தியேட்டரே அலறும். கடைசியாக தியேட்டரில் 2001 பிப்ரவரி மாதம் [11ந் தேதி ஞாயிற்றுக்கிழமை என நினைக்கிறேன்] பார்த்தபோதும் எவ்வளவு அலப்பறை!

அது போல எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது பாடல். வாணி ஜெயராமின் குரல் ஜெஜெ-வுக்கு மிகவும் பாந்தமாக இருக்கும். இந்த பாடலில் ஒரு மெசூர்ட் லவ் வெளிப்படும்.[பிற்பாடு அது அப்படி அல்ல அது நம்முடைய கற்பனையே என்று புரிந்தாலும் கூட].

அண்மையில் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது கூட இந்தப் படத்தை பற்றி பேச்சு வந்தது. நான் குறிப்பாக நடிகர் திலகம் ஜெஜெ-விடம் தன்னை வெளிப்படுத்தும் காட்சி பற்றி பேசும் போது அந்த வசனங்களையும் காட்சியமைப்பையும் வரிசையாக சொன்னபோது [அதாவது 'லலிதா நீ படிச்சவ பண்பு நிறைஞ்சவ உன்னை மனைவியா அடையற அளவிற்கு" என்று நடிகர் திலகம் சிறிது இடைவெளி விட, "சந்துரு தகுதியில்லாதவர் என நினைக்கிறீங்களா" என்று ஜெஜெ பதில் சொல்வதிலிருந்து, ஜெஜெ-வை அனுப்பி விட்டு படியேறும் நடிகர் திலகத்திடம் "எஜமான் எல்லாம் பேசி முடிச்சிடிங்களா" என்று கேட்கும் மேஜரிடம் "ஆஹா" என்றபடியே திரும்புவாரே, அதுவரை] அந்த நண்பர் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. அவன்தான் மனிதன் பற்றி பேசிக் கொண்டே போகலாம்.

மகேஷ்,

காட்சிகளும் வசனங்களும் மனதிலே இன்றும் இருப்பதற்கு காரணம் அன்று நடிகர் திலகத்தின் மீதும் அவர் படங்களின் மீதும் ஏற்பட்ட எல்லையற்ற ஈர்ப்பு. குறிப்பாக சிவந்த மண் வெளி வந்த காலக்கட்டம்தான் நான் ஒரு தீவிர சிவாஜி ரசிகனாக உருவான நேரம். இதை அந்த நாள் ஞாபகம் தொடரிலே எழுதியிருக்கிறேன். இப்போதும் சொல்கிறேன், 1969 நவம்பர் 9-ந் தேதி மதுரை சென்ட்ரல் திரையரங்கின் வாசலில் கூடிய கூட்டத்தைப் போல் ஒன்றை நான் என் வாழ்நாளில் ஒரு சினிமாவிற்கும் பார்த்ததில்லை. என் மனதிற்கு மிகவும் பிடித்த படங்களில் சிவந்த மண்ணிற்கு ஒரு தனி இடம் உண்டு.

அன்புடன்

pammalar
6th August 2010, 12:04 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 97

கே: சிவாஜி கணேசன் இ.காங்கிரஸ் தலைவராக வேண்டும் என்று கூறி நீர் கோஷ்டிப் பூசலைக் கிளப்பி விடுகிறீரா? (இ.கே.முத்து, செங்கல்பட்டு)

ப: கோஷ்டிப் பூசலை இ.காங்கிரசுக்குள் இனியொருவர் உருவாக்கத் தேவையில்லை. அது அவர்களுடைய தேசிய நீரோட்டம். இன்னமும் அழுத்தமாகச் சொல்கிறேன். காங்கிரசின் நெடுநாளைய சரித்திரத்தை ஊன்றிப் பார்த்தவர்களுக்கு நன்றாகப் புரியும். பிராந்திய அளவில் செல்வாக்கு பெற்றவர்களாகவும், அடிமட்டத் தொண்டர்களின் அபிமானத்தைப் பெற்றவர்களாகவும் இருக்கும் தலைவர்களால்தான் காங்கிரஸ் வளர்ச்சி அடையும்.

இன்று அந்த அளவுகோலின் படிப் பார்த்தால், மூலை முடுக்கெல்லாம் அறிமுகமானவர், மக்கள் செல்வாக்குள்ள இ.காங்கிரஸ் தலைவர் சிவாஜிதான். 'ஒரு சினிமா நடிகர் தலைவராவதா?' என்ற அடிமனத் துவேஷம் இன்னும் பெரிய புள்ளிகளுக்கு நீங்காமலிருப்பதுதான் கோஷ்டிப்பூசலை விசிறி விடப் போகிறது. தற்காலிகமாக, எத்தனை மூடி மறைத்தாலும், இன்று இ.காங்கிரசுக்கு சிவாஜியை விட்டால் ஒரு செல்வாக்குள்ள தலைவர் கிடைக்கப் போவதில்லை. திண்ணைப் பேச்சு தலைவர்கள் சற்று இடம் விட்டு, ஒரு துடிப்பான இளைஞர் கூட்டத்தை செயல்படச் செய்வது விவேகம்!

(ஆதாரம் : இதயம் பேசுகிறது, 4.3.1984)

அன்புடன்,
பம்மலார்.

Murali Srinivas
6th August 2010, 12:08 AM
நடிகர் திலகம் மக்களை கவர்ந்தவர் நமக்கு தெரியும்1

மட்டுமல்ல மகான்களை கவர்ந்தவர் நமக்கு தெரியும்!

மட்டுமல்ல தெய்வங்களையும் கவர்ந்தவர் என்பதற்கு இதோ

ஆந்திர மாநிலம் ஓங்கோல் நகரத்தில் பகவான் சாய்பாபா கோவில் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. அங்கே பிரதிஷ்டை செய்யப்படப் போகும் பாபாவின் திரு உருவம் அங்கிருந்து ஷிர்டி செல்ல இருந்த நேரத்தில் சிலையை வடித்தவர் கனவில் பாபா தோன்றி ஷிர்டி செல்வதற்கு முன் தன்னை சென்னை போக் ரோட்டில் உள்ள சிவாஜி வீட்டிற்கு சென்று மூன்று தினங்கள் வைத்திருக்கும்படியும் பிறகு ஷீரடிக்கு செல்லலாம் என்று சொல்ல, அந்த ஸ்தபதி அன்னை இல்லத்தை தொடர்பு கொண்டு விஷயத்தை சொல்ல, அவர்கள் மிகுந்த மன மகிழ்ச்சியோடு பாபாவின் திரு உருவத்தை வரவேற்று அன்னை இல்லத்தின் வரவேற்பறையில் வைத்திருக்கிறார்கள். இன்று வியாழன் என்பதால் சிறப்பு பூஜைகளும் பஜன்களும் நடைபெற்றன. நாளையும் அன்னை இல்லத்திலே காட்சி அளிக்கப் போகும் சாய்பாபா சனிக்கிழமை காலை ஷிர்டி புறப்படுகிறார்.

பாபாவின் விக்கிரகத்தைப் இன்று இரவு நேரில் பார்த்த போது உயிருடன் நம் முன்னே அமர்ந்திருப்பதைப் போலவே தோன்றியது

தெய்வத்தின் பரிபூர்ண அருள் பெற்றவர் நடிகர் திலகம் என்பதற்கு வேறு சான்றுகளும் வேண்டுமோ!

அன்புடன்

[html:33194ca965]
http://farm5.static.flickr.com/4078/4866203434_c50a5dd549.jpg
[/html:33194ca965]

pammalar
6th August 2010, 12:13 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 98

கே: காமராஜர்-சிவாஜி நட்பு பற்றி...? (ஆர்.சண்முகராஜ், திருவொற்றியூர்)

ப: அலை அடித்தும் விலகாதது! புயல் அடிக்க வைத்தும் பிரியாதது!!

(ஆதாரம் : ராணி, 8.8.2010) [லேட்டஸ்ட் ராணி வார இதழ்)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
6th August 2010, 12:24 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 99

கே: இப்போது உள்ள நடிகைகளில் யார் நன்றாக டான்ஸ் ஆடுகிறார்கள்? (கே.எம்., தஞ்சாவூர்)

ப: 'ஷண்முகசுந்தரங்கள்' இல்லாத திரையுலகில் 'மோஹனாங்கிகளை' ஏன் தேடி அலைய வேண்டும்.

(ஆதாரம் : சினிமா எக்ஸ்பிரஸ், 16-30 ஜூன் 2006)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
6th August 2010, 12:31 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 100

கே: 'நவராத்திரி'யில் நடிகர் திலகத்தின் நடிப்பு எப்படி? (ஆர்.எம்.பாலகிருஷ்ணன், வேவள்ளி, இலங்கை)

ப: நவமான நடிப்பு! நயமான நடிப்பு!

(ஆதாரம் : பேசும் படம், ஜனவரி 1965)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
6th August 2010, 02:52 AM
சகோதரி சாரதா,

தங்களது பாராட்டுக்கு பற்பல நன்றிகள்! பத்திரிகைகளில் கேள்விகளைக் கேட்ட அன்புள்ளங்களும், அதற்கு பதில்களை அளித்த ஆசிரியர்கள் மற்றும் அவர்தம் குழுவினரும், சிவாஜி என்கின்ற ஒரு வரலாற்றின் வரலாறோடு பின்னிப் பிணைந்து விட்டார்கள். அவர்களுக்கும் நமது நன்றிகள்!

[தங்களை 'சிவந்த மண்' சாரதா என அடைமொழியிட்டு அழைக்கலாம் எனத் தோன்றுகிறது. ஆனால் கோபித்துக் கொள்வாரோ 'என்னைப் போல் ஒருவன்']

அன்புடன்,
பம்மலார்.

pammalar
6th August 2010, 02:55 AM
டியர் ஷிவ்ராம் சார்,

தங்களை "வருக! வருக!" என வரவேற்பதில் பெருமகிழ்ச்சி!

தங்களது முதல் பதிவே களை கட்டி விட்டது. அடுத்தடுத்த பதிவுகளைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ!!

தங்களின் பாராட்டு என் பாக்கியம்!!!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
6th August 2010, 03:36 AM
டியர் முரளி சார்,

தங்களின் அனுபவப் பதிவு, கலையுலக மகானின் ஆன்மீக, சமுதாய, ஈடுபாட்டிற்கும், தொண்டிற்கும், மிகச் சிறந்த சான்று.

நமது இதயதெய்வத்தை, கலையுலகின் குலதெய்வம் என காவியக்கவிஞர் வரகவி வாலி புகழ்ந்துரைத்தது ஊர்ஜிதம் ஆகிறது.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
6th August 2010, 04:04 AM
ஆறாவது பாகம் இனிதே நிறைவடைந்து, ஏழாவது பாகம் எழுச்சியுறத் துவங்க இருக்கும் இந்நேரத்தில், நமது மாடரேட்டர்கள், பங்களிப்பாளர்கள், பார்வையாளர்கள் அனைவருக்கும் நமது ஆத்மார்த்தமான நன்றிகள்!

அன்புள்ளங்களுக்கு,

தொடர்ந்து "புதிய பறவை"யை, தொடங்க இருக்கும் பாகத்தில், தொடர்ந்து எழுதுகிறேன்.

'கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது!' பகுதியும் தொடர்ந்து நல்ல முறையில் தொடரும்.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
6th August 2010, 04:15 AM
சகோதரி சாரதா,

நமது முரளி சாரின் சாய்ஸ் தான் அனைவரது சாய்ஸும். தங்களது பொற்கரங்களால், எழில் பொங்கப் போகும் ஏழாவது பாகத்தை, மங்களகரமாகத் துவக்கி வையுங்கள்!

பாசத்துடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
6th August 2010, 07:39 AM
சகோதரி சாரதா அவர்களின் பதிவோடு 7ம் பாகம் துவங்க இருப்பதை அனைவருடன சேர்ந்து நானும் ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்.

ராகவேந்திரன்

Mahesh_K
6th August 2010, 10:50 AM
சாரதா,

நடிகர் திலகத்தின் புகழ் பாடும் இத்திரியின் 7-ம் பாகத்தை துவக்கி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் எந்த மறுப்பும் சொல்லாமல் இதை செய்ய வேண்டும் என்பது எங்கள் அனைவரின் எதிர்பார்ப்பு வேண்டுகோள். மாடரேட்டர்களையும் சேர்த்தே சொல்கிறேன். கோலாகலமாக துவக்கி வையுங்கள்.

அன்புடன்

பொருத்தமான தேர்வு. மற்றவர்களுடன் சேர்ந்து நானும் வழிமொழிகிறேன்.

KCSHEKAR
6th August 2010, 11:00 AM
100 வது கேள்வியும் நானே பதிலும் நானே வை நடிகர்திலகத்தின் 100 வது படக் கேள்வியோடு முடித்திருக்கும் பம்மலாருக்கு வாழ்த்துக்கள்.

saradhaa_sn
6th August 2010, 11:35 AM
100 வது கேள்வியும் நானே பதிலும் நானே வை நடிகர்திலகத்தின் 100 வது படக் கேள்வியோடு முடித்திருக்கும் பம்மலாருக்கு வாழ்த்துக்கள்.
அதுவும், இந்த திரியின் 100-வது பக்கத்தில் இடம் பெற்றிருப்பது எத்தனை பொருத்தம். :D

ஏழாம் பாகத்தை துவக்கிவைக்குமாறு எனக்கு வேண்டுகோள் அல்ல, அன்புக்கட்டளை பிறப்பித்த முரளியண்ணா, ராகவேந்தர் அண்ணா, பம்மலார், மகேஷ் மற்றும் அனைவருக்கும் நன்றி.

தங்கள் ஆணைப்படி ஏழாவது பாகம் துவங்கப்பட்டுள்ளது. வாருங்கள் அங்கே உரையாடுவோம்.

Mahesh_K
6th August 2010, 11:43 AM
Saradha madam

Can you pls. provide part VII link?

saradhaa_sn
6th August 2010, 11:57 AM
Saradha madam

Can you pls. provide part VII link?

Sure. It is here:

http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=14569