PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan - Part 6



Pages : 1 [2] 3 4 5 6

rangan_08
16th March 2010, 07:01 PM
Some very disappointing introductions :

1. NAVA RATHIRI
2. UYARNDHA MANIDHAN
3. SIVANDHA MANN
4. ENGA MAMA
5. VAIRA NENJAM

People can add on more to the list.

Murali Srinivas
16th March 2010, 11:33 PM
Mohan,

I am happy that you are contributing continiously. Regarding Sunday evening show on 28th, yes there is going to be heavy rush. But we will ensure ours.

Again yes for Nattai thiruthap poren. It is from Mannavan Vandhanadi.

Bala,

நடிகர் திலகத்தின் ரசிகர்கள் அவரது படங்களின் வெற்றி செய்திகளுக்கான ஆதாரங்களை எங்கிருந்தாவது கொண்டு வந்து கொடுப்பார்கள் என்பதற்கு மேலும் ஒரு சான்று நீங்கள் நீதி மன்றத்தில் நடைபெற்ற வழக்கின் வாதங்கள் அடங்கிய பத்திரங்களை இங்கே பதிவிட்டது. ரசிகனை பொறுத்தவரை எங்கெங்கு காணினும் சிவாஜியடா என்றே சொல்லலாம்.

Senthil,

Availability of Print என்று ஒன்று இருக்கிறது. அதையும் கணக்கில் எடுத்துக் கொண்டே அவர்கள் படங்களை தெரிவு செய்திருக்கிறார்கள்.

அன்புடன்

pammalar
17th March 2010, 01:08 AM
டியர் கரிகாலன் சார்,

நன்றி! தில்லானா மோகனாம்பாள் ஷிஃப்டிங் முறையில் வெள்ளி விழா கண்டது. 11 அரங்குகளில் 100 நாட்களைக் கடந்த, 1983-ன் ஈடு, இணையற்ற வசூல் காவியமான வெள்ளை ரோஜா அதிகபட்சமாக 111 நாட்கள் ஓடியது.

டியர் முரளி சார்,

முன்னோட்டத்திற்கு மிக்க நன்றி! சந்தோஷம் தரும் சிங்கத்தமிழனின் சாதனைத் தகவல்களை கூடிய விரைவில் வழங்க சித்தமாயிருக்கிறேன்.

சகோதரி சாரதா,

தங்களின் தொடர் பாராட்டுக்களுக்கு எமது பொன்னான நன்றிகள்! நமது நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள் புரிந்த பாக்ஸ்-ஆபீஸ் சாதனைகளை (மறைக்கப்பட்ட, வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்யப்பட்ட சாதனைத் தகவல்களை, புள்ளிவிவரங்களை) ஒரு முழுமையோடு, அலசி, ஆராய்ந்து அதிகபட்சத் துல்லியத்துடன், அவற்றை சேகரித்து வழங்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் தொடர் முயற்சிகளின் முதல் வெளிப்பாடே, சில தினங்களுக்கு முன் வெளியான வெள்ளிவிழாப் பட்டியல். இம்முயற்சிகளில் எமக்கு உதவி வரும் அனைத்து நல்லிதயங்களுக்கும் பற்பல அன்பான நன்றிகளைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். இதைத்தான் முரளி சார் முன்னோட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
17th March 2010, 08:50 AM
டியர் பம்மலார்,
நடிகர் திலகத்தின் சாதனைகளை ஆதாரபூர்வமாக நிலைநிறுத்தும் உங்களது பணி தலையாயதாகும். இதைவிட அவருக்கு சிறந்த தொண்டு வேறெதுவும் இருக்க முடியாது. தங்களது முயற்சிகளுக்கு அனைத்து சிவாஜி ரசிகர்களின் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைய 17.03.2010 தேதியிட்ட ஹிந்து நாளிதழ், 1960ல் கெய்ரோவில் நடைபெற்ற ஆஃப்ரோ ஆசியன் திரைப்பட விருதுகளைப் பற்றிய செய்தியை மறுவெளியீட்டாக பிரசுரித்துள்ளது. அதற்கான இணைப்பு இதோ
http://www.hindu.com/2010/03/17/stories/2010031752340803.htm

அது மட்டுமல்லாமல் இதனுடைய 50வது ஆண்டு நிறைவினையொட்டி நமது இணைய தளத்திலும் ஒரு சிறப்புப் பக்கம் உருவாக்கப் பட்டு பதிவேற்றப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு இதோ-
http://www.nadigarthilagam.com/AfroAsian50.html

தங்களுடைய கருத்துக்களை எதிர்நோக்கும்

ராகவேந்திரன்

saradhaa_sn
17th March 2010, 10:57 AM
நமது நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள் புரிந்த பாக்ஸ்-ஆபீஸ் சாதனைகளை (மறைக்கப்பட்ட, வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்யப்பட்ட சாதனைத் தகவல்களை, புள்ளிவிவரங்களை) ஒரு முழுமையோடு, அலசி, ஆராய்ந்து அதிகபட்சத் துல்லியத்துடன், அவற்றை சேகரித்து வழங்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
டியர் பம்மலார்,
நிச்சயமாக, மிகச்சிறந்த முயற்சி மட்டுமல்ல, மிக அவசியமான முயற்சியும் கூட.

அவற்றுடன் கூடவே, அவைகளுக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, அதிகபட்சம் முடிந்த வரையில் அத்தகைய சாதனைகளுக்கான அன்றைய செய்தித்தாள் விளம்பரங்களை இணைத்து விட்டால், பல்வேறு 'வலைப்பூ'காரர்களுக்கு அவை 'வாய்ப்பூட்டாக' அமையும். நடிகர்திலகத்தின் சாதனைகளைக் குறைகூற, கீ-போர்ட் பக்கம் செல்ல அவர்கள் விரல்கள் தயங்கும்.

அந்த நல்ல நாள் விரைவில் வருமென எதிர்நோக்குகிறோம்.

joe
17th March 2010, 11:07 AM
நமது நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள் புரிந்த பாக்ஸ்-ஆபீஸ் சாதனைகளை (மறைக்கப்பட்ட, வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்யப்பட்ட சாதனைத் தகவல்களை, புள்ளிவிவரங்களை) ஒரு முழுமையோடு, அலசி, ஆராய்ந்து அதிகபட்சத் துல்லியத்துடன், அவற்றை சேகரித்து வழங்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
டியர் பம்மலார்,
நிச்சயமாக, மிகச்சிறந்த முயற்சி மட்டுமல்ல, மிக அவசியமான முயற்சியும் கூட.

அவற்றுடன் கூடவே, அவைகளுக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, அதிகபட்சம் முடிந்த வரையில் அத்தகைய சாதனைகளுக்கான அன்றைய செய்தித்தாள் விளம்பரங்களை இணைத்து விட்டால், பல்வேறு 'வலைப்பூ'காரர்களுக்கு அவை 'வாய்ப்பூட்டாக' அமையும். நடிகர்திலகத்தின் சாதனைகளைக் குறைகூற, கீ-போர்ட் பக்கம் செல்ல அவர்கள் விரல்கள் தயங்கும்.

அந்த நல்ல நாள் விரைவில் வருமென எதிர்நோக்குகிறோம்.

நானும் ஆவலாக காத்திருக்கிறேன் ..இந்த மன்றத்துக்கு வெளியேயும் சில நண்பர்களுக்கு புரிய வைக்க மிகவும் தேவைப்படுகிறது. :)

saradhaa_sn
17th March 2010, 12:32 PM
டியர் ஜோ,
ஏன் நீங்கள் 'MODERATOR' பொறுப்பிலிருந்து விலகி விட்டீர்கள்?.

joe
17th March 2010, 12:39 PM
டியர் ஜோ,
ஏன் நீங்கள் 'MODERATOR' பொறுப்பிலிருந்து விலகி விட்டீர்கள்?.

தனிமடல் அனுப்பியுள்ளேன். :)

HARISH2619
17th March 2010, 02:54 PM
செந்தில், மேலும் ஒரு விஷயம். 28 -ந் ஞாயிறன்று எங்கள் தங்க ராஜா மாலைக்காட்சிக்கு பெங்களூரிலிருந்து ரசிகர்கள் வருவதாக செய்தி வந்திருக்கிறது என்று சுவாமி சொன்னார்.



I'm sure sunday evening show will be a treat to watch with bangalore fans around,especially the introduction of pattaakkathi bairavan.
In the 90's I have seen the posters and banners in the name of "engal thanga raja sivaji mandram-srirampuram" during the release of prabhu's movies and rereleases of NT films

HARISH2619
17th March 2010, 02:58 PM
Senthil,

Availability of Print என்று ஒன்று இருக்கிறது. அதையும் கணக்கில் எடுத்துக் கொண்டே அவர்கள் படங்களை தெரிவு செய்திருக்கிறார்கள்.

அன்புடன்

thanks murali sir,now I understood

HARISH2619
17th March 2010, 02:59 PM
நமது நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள் புரிந்த பாக்ஸ்-ஆபீஸ் சாதனைகளை (மறைக்கப்பட்ட, வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்யப்பட்ட சாதனைத் தகவல்களை, புள்ளிவிவரங்களை) ஒரு முழுமையோடு, அலசி, ஆராய்ந்து அதிகபட்சத் துல்லியத்துடன், அவற்றை சேகரித்து வழங்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
டியர் பம்மலார்,
நிச்சயமாக, மிகச்சிறந்த முயற்சி மட்டுமல்ல, மிக அவசியமான முயற்சியும் கூட.

அவற்றுடன் கூடவே, அவைகளுக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, அதிகபட்சம் முடிந்த வரையில் அத்தகைய சாதனைகளுக்கான அன்றைய செய்தித்தாள் விளம்பரங்களை இணைத்து விட்டால், பல்வேறு 'வலைப்பூ'காரர்களுக்கு அவை 'வாய்ப்பூட்டாக' அமையும். நடிகர்திலகத்தின் சாதனைகளைக் குறைகூற, கீ-போர்ட் பக்கம் செல்ல அவர்கள் விரல்கள் தயங்கும்.

அந்த நல்ல நாள் விரைவில் வருமென எதிர்நோக்குகிறோம்.

நானும் ஆவலாக காத்திருக்கிறேன் ..இந்த மன்றத்துக்கு வெளியேயும் சில நண்பர்களுக்கு புரிய வைக்க மிகவும் தேவைப்படுகிறது. :)

well said saradha madam and joe sir :clap:

pammalar
17th March 2010, 11:59 PM
டியர் பாலா சார்,

வழக்கு விவாதப் பத்திரங்கள் எனும் ஆணித்தரமான ஆவணங்களின் மூலம் நமது நடிகர் திலகத்தை பாக்ஸ்-ஆபீஸ் கிங் என ஆதாரபூர்வமாக நிரூபித்த தங்களுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டே இருக்கலாம்!

திரு.நௌ,

தேனும் பாலும்..., பட்டிக்காடா பட்டணமா..., அன்பே ஆருயிரே.... உங்கள் காட்டில் மழை போங்கள்...! ஆஸ்ட்ரோ வெள்ளித்திரையில் அசத்தலாக வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறீர்கள்!! மிக்க மகிழ்ச்சி!!!

திரு.ரங்கன் & திரு,ராகேஷ்,

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். தங்கள் இருவரது ஒரு காட்சி வர்ணனை, மொத்தப் படத்தையே(கௌரவம்) கண்முன் நிறுத்தி விட்டது. பாராட்டுக்கள்!

டியர் செந்தில் சார்,

பூ, இதழ் விரித்தது போன்ற, தங்களது பரந்து விரிந்த பாராட்டுக்களுக்கு எமது பாசமிகு நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
18th March 2010, 12:13 AM
டியர் ராகவேந்திரன் சார், சகோதரி சாரதா, திரு.ஜோ, திரு.செந்தில்,

தங்களின் மனம் திறந்த பாராட்டுகளுக்கு மனமார்ந்த நன்றிகள்!

ராகவேந்திரன் சார், லவ்லி லிங்க்கிற்கு ஸ்பெஷல் நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
18th March 2010, 02:20 AM
சாதனைகளின் சக்கரவர்த்தி - 2

நானிலம் போற்றும் நடிப்புலக வேந்தரின் 100 நாள் திரைக்காவியங்கள்:
(100 நாட்களிலிருந்து 24 வாரங்கள் வரை)
[காவியம்(வருடம்) - ஓடிய நாட்கள் என்கின்ற ஃபார்மெட்டில்]

1. மனோகரா(1954) - 156 நாட்கள் (ஷிஃப்டிங் முறையில் வெள்ளிவிழா)

2. கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி(1954) - 100 நாட்கள்

3. எதிர்பாராதது(1954) - 100 நாட்கள்

4. காவேரி(1955) - 100 நாட்கள்

5. மங்கையர் திலகம்(1955) - 100 நாட்கள்

6. பெண்ணின் பெருமை(1956) - 105 நாட்கள்

7. அமரதீபம்(1956) - 125 நாட்கள்

8. வணங்காமுடி(1957) - 100 நாட்கள்

9. உத்தமபுத்திரன்(1958) - 105 நாட்கள்

10. பதிபக்தி(1958) - 102 நாட்கள்

11. சம்பூர்ண ராமாயணம்(1958) - 165 நாட்கள் (ஷிஃப்டிங் முறையில் வெள்ளிவிழா)

12. சபாஷ் மீனா(1958) - 119 நாட்கள்

13. மரகதம்(1959) - 100 நாட்கள்

14. இரும்புத்திரை(1960) - 155 நாட்கள் (ஷிஃப்டிங் முறையில் வெள்ளிவிழா)

15. தெய்வப்பிறவி(1960) - 121 நாட்கள்

16. படிக்காத மேதை(1960) - 167 நாட்கள் (ஷிஃப்டிங் முறையில் வெள்ளிவிழா)

17. விடிவெள்ளி(1960) - 104 நாட்கள்

18. ஸ்ரீ வள்ளி(1961) - 100 நாட்கள்

19. பாலும் பழமும்(1961) - 139 நாட்கள் (ஷிஃப்டிங் முறையில் வெள்ளிவிழா)

20. கப்பலோட்டிய தமிழன்(1961) - 100 நாட்கள்

21. பார்த்தால் பசி தீரும்(1962) - 110 நாட்கள்

22. படித்தால் மட்டும் போதுமா(1962) - 112 நாட்கள்

23. ஆலயமணி(1962) - 105 நாட்கள்

24. இருவர் உள்ளம்(1963) - 105 நாட்கள்

25. அன்னை இல்லம்(1963) - 104 நாட்கள்

26. கர்ணன்(1964) - 108 நாட்கள்

27. பச்சை விளக்கு(1964) - 104 நாட்கள்

28. கை கொடுத்த தெய்வம்(1964) - 108 நாட்கள்

29. புதிய பறவை(1964) - 132 நாட்கள் (ஷிஃப்டிங் முறையில் வெள்ளிவிழா)

30. நவராத்திரி(1964) - 108 நாட்கள்

31. சாந்தி(1965) - 100 நாட்கள்

32. மோட்டார் சுந்தரம் பிள்ளை(1966) - 100 நாட்கள்

33. சரஸ்வதி சபதம்(1966) - 133 நாட்கள் (ஷிஃப்டிங் முறையில் வெள்ளிவிழா)

34. கந்தன் கருணை(1967) - 125 நாட்கள்

35. இரு மலர்கள்(1967) - 100 நாட்கள்

36. ஊட்டி வரை உறவு(1967) - 114 நாட்கள்

37. கலாட்டா கல்யாணம்(1968) - 106 நாட்கள்

38. தில்லானா மோகனாம்பாள்(1968) - 132 நாட்கள் (ஷிஃப்டிங் முறையில் வெள்ளிவிழா)

39. உயர்ந்த மனிதன்(1968) - 105 நாட்கள்

40. தெய்வமகன்(1969) - 100 நாட்கள்

41. திருடன்(1969) - 100 நாட்கள்

42. சிவந்த மண்(1969) - 145 நாட்கள் (ஷிஃப்டிங் முறையில் வெள்ளிவிழா)

இத்தனையும் பெரிய பெரிய திரையரங்குகளில், ரெகுலர் காட்சிகளாக. மற்றவர்கள் கனவிலும் காண முடியாத அசுர சாதனைகள்.

நடிப்புலக மகானின் 100 நாள் திரைக்காவியங்களின் சாதனைப்பட்டியல் தொடரும்...

சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு நிரந்தர சக்கரவர்த்தி சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே!

அன்புடன்,
பம்மலார்.

Jeev
18th March 2010, 04:25 AM
Dear Sivaji fans,

Theepam ran 148 days at Sellamahal theatre (Colombo).

Regards,

Jeev

saradhaa_sn
18th March 2010, 12:35 PM
[tscii:fb291c146f]இன்று 'என்னைப்போல் ஒருவன்' சேகர், சுந்தரமூர்த்தி 32-வது உதய தினம்......

'சொர்க்கம்' படத்துக்குப்பின் தயாரிக்கத்துவங்கி நீண்டநாள் தயாரிப்பில் இருந்தபடம். இப்படம் வெளிவராது, வந்தாலும் தேறாது என்று பலர் நப்பாசையுடன் ஆரூடம் சொன்ன படம். சென்னை மிட்லண்டில் (சின்ன அரங்கான லியோவிலிருந்து பெரிய அரங்குக்கு மாற்றப்பட்டு) அந்தமான் காதலி அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும்போது, மார்ச் 4 அன்று சாந்தியில் 'தியாகம்' வெளியீடு. அன்று காலை நடிகர்திலகத்தின் ரசிகர்களுக்கு ஒரு இனிய செய்தி தினத்தந்தியில் விளம்பர வடிவில் வந்திருந்தது. யாரும் எதிர்பாராத வண்ணம் மார்ச் 18 அன்று 'என்னைப்போல் ஒருவன்' ரிலீஸ் என்ற விளம்பரம்தான். தியாகம் வெளியீட்டுக்கு வந்திருந்த ரசிகர்களிடையே புதிய பரபரப்புச்செய்தியாக பரவ, எல்லோர் கைகளிலும் அவ்விளம்பரம் வெளியான தினத்தந்தி செய்தித்தாள் மாறி மாறி தவழ்ந்துகொண்டு இருந்தது. ஆனால் அவ்விளம்பரத்தில் சென்னையில் எந்தெந்த அரங்குகள் என்று குறிப்பிடப்படவில்லை. கெயிட்டி, சித்ரா போன்ற பழைய தியேட்டர்களில் ரிலீஸாகும் போலும் என்று ரசிகர்களிடையே விவாதம் நடந்துகொண்டிருந்த போது, ஒரு ரசிகர் கூட்டம் இன்னொரு இனிய செய்தியைக் கொண்டு வந்தது. சென்னையின் அப்போதைய பிரிஸ்டிஜ் தியேட்டர்களான தேவிபாரடைஸ், அகஸ்தியா, முரளிகிருஷ்ணா தியேட்டர்களில் 'என்னைப்போல் ஒருவன்' வெளியாகிறதாம் என்ற செய்தி பரவ ரசிகர்கள் மத்தியில் உற்சாகம். இருந்தாலும் ஒரு அச்சம். ஏற்கெனவே 'அந்தமான் காதலி' ஓடிக்கொண்டிருக்கிறது. இன்று 'தியாகம்' பலத்த எதிர்பார்ப்புகளுடன் ரிலீஸாகிறது. இன்னும் இரண்டே வாரத்தில் 'என்னைப்போல் ஒருவனும்' வந்தால் தேறுமா என்ற சந்தேகம்தான் ரசிகர்களை ஆட்கொண்டது. அதிலும் இது ரொம்ப நாள் தயாரிப்பில் இருந்த படம் வேறு. ஏற்கெனவே அதுபோல நீண்டகாலத் தயாரிப்புகளான இளைய தலைமுறை, சித்ரா பௌர்ணமி ஆகியன சரியாகப் போகவில்லையே என்பதே சந்தேகத்துக்கு மூல காரணம். தேவிபாரடைஸில் ரிலீஸ் என்பது எந்த அளவுக்கு உண்மை என்பதும் தெரியவில்லை. ஆனால் நான்கு நாட்களில் தேவிபாரடைஸில் 'என்னைப்போல ஒருவன்' ஸ்டில்கள் வைக்கப்பட்டுள்ளன என்பது ரசிகர்கள் காதில் தேனாகப் பாய, அதற்கு மறுநாள் மீண்டும் தினதந்தியில் தியேட்டர்களின் பெயர்களோடு விளம்பரம் வந்தது.

ரசிகர்களின் மத்தியில் இப்போது இன்னொரு பொறுப்பு வந்தது. பாலாஜிசார் படம் எப்படியும் தேறிவிடும். இப்போது நம் கவனம் 'என்னைப்போல் ஒருவனில்'தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்ய, ரிசர்வேஷன் அன்றைக்கே தியேட்டர்களில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது. அதுவும் சாந்திக்குப் பக்கத்து தியேட்டராதலால், ரசிகர்கள் கூடி வாதிக்க ஏதுவான இடமாகிபோனது. இப்படத்தின் பாடல்கள் 1972-லேயே வானொலிகளில் பிரபலமாகிவிட்டதால் மக்களும் ரிசர்வேஷனில் ஆர்வம் காட்டினர். ஏப்ரல் 18 காலையிலேயே தியேட்டர் விழாக்கோலம் பூண்டது. கொடிகளும், தோரணங்களும், ரசிகர்மன்ற பேனர்களுமாக தியேட்டர் களைகட்டியது. மொத்தத்தில் நீண்டகாலத் தயாரிப்பில் இருந்த படம் ரிலீஸ் போலத் தோன்றவில்லை. ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதுதானே.

மாட்னி ஷோ துவங்கியது. நியூஸ் ரீல் ஓடி முடிந்து, சென்ஸார் சர்டிபிகேட் காண்பிக்கப்பட்டதுமே ரசிகர்களின் கண்களில் உற்சாக வெள்ளம் (பின்னே? வருமா, வராதா என்று கைவிட்ட படமல்லவா). எடுத்த எடுப்பிலேயே சின்னதிலிருந்து பெரிசாக 'நைட்கவுன்' அணிந்த நடிகர்திலகத்தின் நான்கு போஸ்கள் தோன்ற கூடவே 'நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அளிக்கும்' என்ற எழுத்துக்கள் வந்ததும் ரசிகர்களின் உற்சாகம் கரைபுரண்டது. விசில், கைதட்டல், வாழ்த்தொலிகள் என தியேட்டர் அதிர்ந்தது. அடுத்த கார்டு 'ஷ்ரீ வினாயகா பிக்சர்ஸ்', அதையடுத்த கார்டில் மீண்டும் ஒரு வட்டத்தில் நடிகர்திலகத்தின் படம் வர அதிலிருந்து இன்னொரு வட்டம் பிரிந்து இன்னொரு நடிகர்திலகம் தோன்ற இரண்டுக்கும் நடுவில் 'என்னைப்போல் ஒருவன்' என்ற எழுத்துக்கள் தோன்ற... அவ்வளவுதான் ரசிகர்களின் உற்சாகம் எல்லை மீறியது. இப்படி அட்டகாசமான ஒரு துவக்கத்தை எதிர்பார்க்காத ரசிகர்கூட்டம் நன்றிப்பெருக்கில் மீண்டும் சத்தம் எழுப்பியது 'ராமண்ணா வாழ்க'. டைட்டில் ஓடிக்கொண்டிருந்தபோது, 'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.வி. பெயர் காண்பிக்கப்பட்டபோதும் இறுதியில் இயக்குனர் ராமண்ணா பெயர் காண்பிக்கப்பட்டபோதும் மீண்டும் கைதட்டல்.

நடிகர்திலகத்தின் அறிமுகம் கொஞ்சம் ஏமாற்றம்தான். தூக்கத்திலிருந்து விழிப்பது போன்ற துவக்கம் (ஆனாலும் ஒரு ஆறுதல். 'பராசக்தி'யிலும் இதே அறிமுகம்தான். அது தமிழ்த்திரை சரித்திரத்தை திருப்பிப் போடவில்லையா). அப்புறம் படம் ஓட ஓட விறுவிறுப்பு கூடியது. குறிப்பாக இரண்டு நடிகர்திலகமும் சந்தித்துக்கொள்ளும் இடம். ஆள் மாறாட்டம் நடக்கும் இடம், 'வேலாலே விழிகள்' பாடலில் ஆலத்தின் இளமைக்கு ஈடுகொடுத்து ஆடும் நடிகர்திலகத்தின் ஸ்டைல் என கைதட்டல் களைகட்டியது. இடைவேளையின்போது ரசிகர்கள் மட்டுமல்ல பொதுமக்களின் முகத்திலும் மகிழ்ச்சி வெள்ளம். எதிர்பாராத இன்ப விருந்து அல்லவா?. இடைவேளைக்குப்பிறகும் அதே விறுவிறுப்புக் குன்றாமல் படம் சென்றது. 'ஐ எம் எ லிட்டில் டீ பாட்' பாடலை சோகமாகப்பாடிக்கொண்டே வெளியேறும்போதும் சரி, பாதிரியாராக மாறுவேடத்தில் வரும்போதும் கைதட்டல்தான். அதிலும் 'தங்கங்களே நாளை தலைவர்களே' பாடலுக்கு வரிக்கு வரி கைதட்டல். பின்னே பெருந்தலைவரைப்பற்றிய வரிகள் என்பது முன்பே தெரியும், ஆனால் அவரையே பலமுறை காண்பித்திருப்பார்கள் என்பது எதிர்பாராதது அல்லவா? . (நிச்சயம் அந்தக்கூட்டத்தில் ராகவேந்திரன் சாரும் இருந்திருப்பார்)

படம் முடிந்து வெளியே வந்தபோது, படத்தின் ரிசல்ட்டை எதிர்பார்த்து வெளியே பெரிய கூட்டம் காத்து நிற்கிறது. சிறிது நேரத்தில் சாந்தியிலிருந்து 'தியாகம்' முடிந்து வந்த கூட்டமும் சேர்ந்துகொள்கிறது. படம் பார்த்த எல்லோருடைய ஒட்டுமொத்த கமெண்ட் “படம் ஆரம்பிச்சதும் தெரியலை, முடிஞ்சதும் தெரியலை. அவ்வளவு விறுவிறுப்பு”. தேவி தியேட்டர் காம்ப்ளெக்ஸில் ஒரு குறை என்னவென்றால், அங்கு நான்கு தியேட்டர்களுக்கும் கார்பார்க்கிங் இடம் சிறியது என்பதால் பட்டாசு வெடிக்க அனுமதிக்க மாட்டார்கள். (இப்போ எப்படீன்னு தெரியலை). அதனால் ரசிகர்களால் மகிழ்ச்சியைக்கொண்டாட பட்டாசு வெடிக்க முடியவில்லை.

(Most of the incidents nerrated here in this post, has been gathered from my DAD, a NT devotee)
[/tscii:fb291c146f]

J.Radhakrishnan
18th March 2010, 10:54 PM
வெல்டன் சாரதா மேடம் எங்கள் எல்லோரையும் 1978 வருடத்துக்கு கொண்டு சென்று விட்டீர்கள் தகவல்கள் அனைத்தும் அருமை உங்கள் தந்தைக்கு எங்கள் நன்றி


ராதாகிருஷ்ணன். (புதிய உறுப்பினர்)

J.Radhakrishnan
18th March 2010, 11:04 PM
பம்மலார் சார் உங்கள் தகவல்கள் அருமை. கர்ணன் படம் 108 நாள் ஓடியதா? யாரோ அது தோல்வி படம் என்று சொன்னார்களே ?

ராதாகிருஷ்ணன் (NT Devotee)

pammalar
18th March 2010, 11:13 PM
Dear Sivaji fans,

Theepam ran 148 days at Sellamahal theatre (Colombo).

Regards,

Jeev

Yes, Mr.Jeev. Thanks for the info.

On shifting basis, Dheepam celebrated Silver Jubilee at Sri Lanka.

Regards,
Pammalar.

pammalar
18th March 2010, 11:20 PM
நடிகர் திலகத்தின் பக்தர் திரு.ஜெ.ராதாகிருஷ்ணன் அவர்களை, நமது நடிகர் திலகத்தின் திரிக்கு, "வருக! வருக!" என இரு கரம் கூப்பி அன்புடன் வரவேற்கிறோம்!!!

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
19th March 2010, 12:01 AM
சிவாஜி என்ற எழுத்தில் உள்ள ஜ எவ்வளவு மகிமை என்பது நன்கு தெரிகிறது... ஜோ, ஜீவ், ஜே - ராதாகிருஷ்ணன் ... எப்படியாவது அவர் நம்முள் ஆட்டிப்படைக்கிறார் என்பதற்கு இது ஒரு சான்று.
வருக ராதாகிருஷ்ணன் அவர்களே... தங்களுடைய மேலான பதிவுகளுக்கும் கருத்துக்களுக்கும் எங்களின் ஆவலான எதிர்பார்ப்புகள்...
நம் திரியின் நாயகர்கள் முரளி, பம்மலார் இருவரும் அள்ளித் தரும் புள்ளிவிவரப் புதையலில் அனைத்தையும் எடுத்துக்கொண்டாலும் இன்னும் கேட்கும் அளவிற்கு சாதனைகள் புரிந்திருக்கும் நடிகர் திலகத்தின் அன்பு உள்ளங்கள் சார்பாகவும் தனிப்பட்ட முறையிலும் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

சகோதரி சாரதா, சொர்க்கம் முதல் நாள் முதல் காட்சியில் தேவி பாரடைஸில் என்ன மன நிலையிலிருந்தோமோ அதே மன நிலையில் தான் என்னைப் போல் ஒருவன் காட்சியிலும்.. நீங்கள் சொன்னது சரி. அந்தப் பேரானந்தக் கடலிலே நானும் ஒரு துளியாக அன்றிருந்தேன். அந்த நினைவுக்கு என்னை அழைத்துச் சென்றதற்கு நன்றிகள் பல. இதுபோல் பல நினைவுகள் அவ்வப்போது வரும் அவ்வப்போது அவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன்.

அன்புடன்
ராகவேந்திரன்

Murali Srinivas
19th March 2010, 01:06 AM
புதிய உறுப்பினராக வருகை தந்திருக்கும் நடிகர் திலகத்தின் பக்தன் திரு.ராதாகிருஷ்ணன் அவர்களே, உங்கள் வரவு நல் வரவாகுக.

கர்ணன் 108 நாட்கள் ஓடியதா என்றா கேட்டீர்கள்? ஆசியாவின் மிகப் பெரிய அரங்கமான மதுரை தங்கத்தில் 108 நாட்கள் ஓடியது. அதாவது சாதாரண அரங்குகளில் வெள்ளி விழா நாட்கள் [175 நாட்கள்] ஓடியதற்கு சமம்.

இன்று திரிக்கு வரும் முன் நிச்சயமாக என்னைப் போல் ஒருவன் படத்தைப் பற்றிய சாரதாவின் பதிவு இருக்கும் என்று நினைத்தேன். அப்படியே இருந்தது. காரணம் உங்களுக்கு மிகவும் பிடித்த படமல்லவா! தவறுதலாக நினைக்கவில்லை என்றால் ஒரு சந்தேகம். சென்னை நீங்கலாக தமிழகத்தின் ஏனைய பகுதிகளில் மார்ச் 18 அன்று வெளியான என்னைப் போல் ஒருவன் சென்னையில் ஏப்ரல் 14 அன்றுதானே ரிலீஸ் ஆனது? அப்போதும் எங்கள் மதுரை முந்திக் கொண்டது.

நானும் 18-ந் தேதி சனிக்கிழமை ரிலீஸ் அன்று மாலைக் காட்சி மதுரை தங்கத்தில் பார்த்தேன். சாரதா சொன்னது போல் மிகப் பெரிய வரவேற்பு. நடிகர் திலகம் 1972-73 காலகட்டத்தில் இருந்த உடல்வாகு என்பதால் பார்க்க பிரமாதமாக இருப்பார். சாரதா சொன்னது போல் பாடல்கள் முன்கூட்டியே பிரபலம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு. வேலாலே விழிகள் பாடல் ஆலத்துடன் என்பது மட்டுமே ஒரு சிறிய குறை. அதிலும் கூட கிரிம்சன் ரெட் நிறத்தில் கோட் சூட் அணிந்த நடிகர் திலகம் மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும் என்ற வரிகளுக்கு வலது கையை மட்டும் பயன்படுத்தி மூன்று ஸ்டெப் வைப்பார். அன்று ஆசியாவின் தங்கமே அலறியது. தங்கங்களே பாடலில் மகாத்மா, ஜவஹர்லால் மற்றும் பெருந்தலைவர் காண்பிக்கப்பட்ட போது பொங்கிய உணர்ச்சி வெள்ளம் வடிவதற்கே சிறிது நேரம் எடுத்தது. நாங்கள் வெகுவாக எதிர்பார்த்தது மௌனம் கலைகிறது பாடல். சென்சார் காரணம் சில பிரேம்கள் பகுதியாக மறைக்கப்பட்டு காண்பிக்கப்பட்டது. சண்டைக் காட்சியும் அலப்பறையாகவே போனது.

குறிப்பிட வேண்டிய விஷயம் படம் வசூல் ரீதியாக சாதனை புரிந்தது பற்றி. அதுவரை தங்கம் திரையரங்கில் முதல் வார வசூலில் சாதனை புரிந்திருந்த எங்க மாமா மற்றும் நீதி படங்களின் வசூலை வெகு எளிதாக கடந்த என்னைப் போல் ஒருவன் மதுரை தங்கத்தில்

முதல் 7 நாட்களில் பெற்ற வசூல் - Rs 80 ,140 .69 p.

தங்கத்தின் சரித்திரத்திலேயே கட்டுக்கடங்காத கூட்டத்தின் காரணமாக இரண்டாவது வாரம் ஞாயிற்றுக்கிழமையும் 5 காட்சிகள் திரையிடப்பட்ட என்னைப் போல் ஒருவன் மதுரையில் முதல் பத்தே நாட்களில் ஒரு லட்ச ருபாய் வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையையும் புரிந்தது.

http://www.nadigarthilagamsivaji.com/Photos/FilmAdvertisements/Others/034.jpg

மதுரையைப் பொறுத்த வரை அந்தக் காலகட்டத்தில் இது எப்படிப்பட்ட சாதனை என்று பார்ப்போம். 1977 நவம்பர் 10 தீபாவளியன்று நியூசினிமாவில் வெளியான அண்ணன் ஒரு கோவில் மதுரையில் தொடர்ந்து 101 காட்சிகள் அரங்கு நிறைந்து ஓடியது. அதாவது முதல் 30 நாட்களில் நடைபெற்ற அனைத்துக் காட்சிகளும் ஹவுஸ்புல். படம் 77 நாட்களை கடந்த போது 1978 ஜனவரி 26 அன்று சினிப்ரியா அரங்கில் அந்தமான் காதலி வெளியானது. அந்தமான் காதலி தொடர்ந்து 130 காட்சிகள் ஹவுஸ் புல். அதாவது முதல் 39 நாட்களில் நடைபெற்ற அனைத்துக் காட்சிகளும் ஹவுஸ் புல். அந்த நேரத்திலும் அண்ணன் ஒரு கோவில் வெற்றிகரமாக ரெகுலர் காட்சிகளில் 100 நாட்களை பிப்ரவரி 17 அன்று கடக்கிறது.

அந்தமான் காதலி முதல் 39 நாட்களின் அனைத்துக் காட்சிகளும் ஹவுஸ் புல் என்று சொன்னோம். படம் 37 நாட்களை கடந்த போதே மார்ச் 4 அன்று தியாகம் மதுரை சிந்தாமணியில் ரிலீஸ் ஆகி விட்டது. அதற்கு பிறகும் அந்தமான் காதலி ஹவுஸ் புல். தியாகம் வெளியாகி 14 நாட்களில் என்னைப் போல் ஒருவன் தங்கத்தில் ரிலீஸ்.

என்னைப் போல் ஒருவன் முதல் பத்து நாட்களில் ஒரு லட்ச ருபாய் வசூல் செய்யும் போது தியாகம் 24 நாட்களை கடந்திருந்தது. அந்த 24 நாட்களில் நடைபெற்ற 80 காட்சிகளும் ஹவுஸ் புல். அதே நாளில் அந்தமான் காதலி வெற்றிகரமாக 61 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது.

1978 மே 5 அன்று அந்தமான் காதலி சினிப்ரியாவில் 100 நாட்களை வெற்றிகரமாக கொண்டாடும்போது சிந்தாமணியில் தியாகம் 63 நாட்களை நிறைவு செய்கிறது. அந்த 63 நாட்களில் நடைபெற்ற 207 காட்சிகளும் ஹவுஸ்புல். அதே நாளில் என்னைப் போல் ஒருவன் 49 நாட்களை கடந்து 50 -வது நாளில் அடியெடுத்து வைக்கிறது.

இது போதாதென்று நடிகர் திலகம் தெலுங்கில் நடித்த ஜீவன தீரலு என்ற படம் வாழ்க்கை அலைகள் என்ற பெயரில் தமிழில் டப்பிங் செய்யபட்டு 1978 ஏப்ரல் 14 அன்று மதுரை மீனாட்சியில் வெளியாகி அதுவும் ஓடிக் கொண்டிருக்கிறது,

இது போன்ற ஒரு சாதனை அதற்கு முன்பும் செய்யப்பட்டதில்லை. அதற்கு பின்னும் முறியடிக்கப்படவில்லை. நான் ஏற்கனவே சொன்னது போல் யார் யாரோ என்னவெல்லாம் சொன்னாலும் மதுரை நடிகர் திலகத்தின் கோட்டை என்பதும் மதுரையில் அவரது தியேட்டர் சாதனைகளை முறியடிக்க இனி ஒருவர் பிறந்து வர வேண்டும் என்பதும் காலத்தின் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்ட சரித்திரம்.

அன்புடன்

pammalar
19th March 2010, 02:16 PM
சகோதரி சாரதா,

என்னைப்(ராஜசேகர்) போல் ஒருவன்(சுந்தரமூர்த்தி), மலரும் நினைவுகள் மிக மிக அருமை. [தங்களது தந்தையாருக்கு எனது சிரம் தாழ்த்திய நன்றிகள்!] தங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் திலகத்தின் படங்களில் இதுவும் ஒன்று என்று நினைக்கிறேன்.

தென்னகமெங்கும் 18.3.1978 அன்று வெளியான என்னைப் போல் ஒருவன், சென்னையில் மட்டும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று (14.4.1978) வெளியானது.

தேவிபாரடைஸில் 70 நாட்களும், அகஸ்தியாவில் 49 நாட்களும், முரளிகிருஷ்ணாவில் 49 நாட்களும் ஓடி அமோக வெற்றியைப் பெற்றது.

சென்னை வசூல் விவரம்: (மொத்த வசூல்)

1. தேவிபாரடைஸ் - 70 நாட்கள் - ரூ. 5,30,716-05

2. அகஸ்தியா - 49 நாட்கள் - ரூ. 2,34,583-22

3. முரளிகிருஷ்ணா - 49 நாட்கள் - ரூ. 1,87,803-75

சென்னையின் மொத்த வசூல் : ரூ. 9,53,103-02

அறிவுஜீவிகள் போர்வையில் உலவி வரும் அறிவிலிகள், இப்படத்தைத் தோல்விப்படம் என்பார்கள். அவர்களுக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்!

காஞ்சிபுரத்தில் லக்ஷ்மி திரையரங்கில் 28 நாட்கள் மிகுந்த வரவேற்புடன் ஓடி அள்ளித் தந்த மொத்த வசூல் ரூ. 85,858-95.

மதுரைப் புள்ளி விவரங்களை, மதுரையின் ரசிகத் திலகம் முரளி சார், அள்ளி அளித்து விட்டார். என்னைப் போல் ஒருவன், தங்கத்தில் ஓடி முடிய அளித்த மொத்த வசூல் ரூ. 2,74,556-59.

கோவை மாநகரின் ராஜா திரையரங்கில், 48 நாட்கள் ஓடி, அபார வெற்றி கண்டது.

நெல்லை பூர்ணகலாவில் 41 நாட்கள் வெற்றிகரமாக ஓடிய இக்காவியம், நாகர்கோவில் ராஜேஷில் 50 நாட்கள் ஓடி சிறப்பான வெற்றியைப் பெற்றது.

திண்டுக்கல் என்.வி.ஜி.பி. அரங்கில் 27 நாட்கள் மிக வெற்றிகரமாக நடைபெற்றது.

சேலம் நியூசினிமாவில் 70 நாட்கள் ஒடி சூப்பர் டூப்பர் ஹிட்.

திருச்சி பிரபாத்தில் 41 நாட்கள் வெற்றி நடை போட்டது.

ஏ, பி, சி என எல்லா சென்டர்களிலும் ஓட்டத்திலும், வசூலிலும் இக்காவியம் ஒரு கலக்கு கலக்கியது.

ரொம்ப லேட்டாக வந்து, பெரிய ஹிட்டான படங்களின் வரிசையில், என்னைப் போல் ஒருவனுக்கு தனி இடம் உண்டு.

அன்புடன்,
பம்மலார்.

joe
19th March 2010, 02:26 PM
முரளி சார்,
மதுரை சாதனை விவரங்களுக்கு மிக்க நன்றி :D

HARISH2619
19th March 2010, 03:14 PM
திரு ராதாகிருஷ்னண் அவர்களே,நடிகர்திலகத்தின் புகழ்பாடும் சோலைக்குள் தங்களை இரு கரம் கூப்பி வறவேற்க்கிறேன்.

சாரதா மேடம்,
தங்களின் மலரும் நினைவுகள் நான் சிறுவனாக இருந்தபோது 80களில் பெங்களூர் தியேட்டர்களில் என் தந்தையாருடன் சென்று நடிகர்திலகத்தின் படங்களை பார்த்த அனுபவங்களை ஞாபகப்படுத்தியது. ஓ.... அந்த இனிய நாட்கள்?

முரளி சார்,
78ல் நடிகர்திலகத்தின் பட சாதனைகள் பிரமிக்க வைக்கிறது.இதுவரையில் முறியடிக்க முடியாத இந்த சாதனை வருடத்துக்கு ஒரு படத்தை வெளியிட்டு அந்த படம் பகல்காட்சியாக 50நாட்களை தாண்டினாலே மாபெரும் வெற்றி என விழா கொன்டாடும் இந்த கால நடிகர்களால் முறியடிக்க முடியும் என்றா நினைக்கிறீர்கள்?சத்தியமாக முடியாது.

btw,how things are shaping up for sivaji week?please update.
kindly request the organisers to advertise it to a much wider range.

pammal sir,
thanks for the information on EPO collections

pammalar
20th March 2010, 03:12 AM
பம்மலார் சார் உங்கள் தகவல்கள் அருமை. கர்ணன் படம் 108 நாள் ஓடியதா? யாரோ அது தோல்வி படம் என்று சொன்னார்களே ?

ராதாகிருஷ்ணன் (NT Devotee)

வெற்றிக்காவியமே கர்ணன்

"கலைப்பொன்னி" சினிமா மாத இதழின் ஜூலை 1964 இதழில் வெளியான ஒரு கேள்வி-பதில்:

கேள்வி : 'கர்ணன்' படத்துக்கு செலவழித்த தொகையைத் தயாரிப்பாளர் பந்துலு பெற்றிருப்பாரா?

பதில்: நிச்சயமாகப் பெற்றிருப்பார். பந்துலுவைக் 'கர்ணன்' காப்பாற்றி விட்டதாகத்தான் வட்டாரத்தில் பேசிக் கொள்கிறார்கள்.

மாபெரும் வெற்றிவீரரான கர்ணன், செஞ்சோற்றுக் கடன் தீர்க்க இ(ரு)ந்த பக்கமே இருந்ததால், தோற்கடிக்கப்பட்டார். மாபெரும் தயாரிப்பாளரான பந்துலு, அந்தப் பக்கம் போனதால், வெற்றியாளர் கர்ணன், வெற்றி பெற்ற கர்ணன் தோல்வி என அறிவிக்கப்பட்டார். ஆக, பரமாத்மா முதல் பந்துலு வரை, கர்ணனைத் தோற்கடிக்க, எத்தனை குறியாக இருந்திருக்கிறார்கள்.

முதல் வெளியீட்டில், வீரபாண்டிய கட்டபொம்மன் பெற்ற விண்ணை முட்டும் வெற்றியைக் கர்ணன் பெறவில்லை என்பது உண்மை. ஆயினும், திரையிடப்பட்ட எல்லா இடங்களிலும், முதல் வெளியீட்டில், கர்ணன், அமோக வரவேற்பினைப் பெற்று சிறந்ததொரு வெற்றிப் படமாகத் திகழ்ந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.

கலைக்குரிசிலின் 94வது காவியமான கர்ணன், 14.1.1964 பொங்கல் திருநாளன்று, சென்னை மற்றும் தென்னகமெங்கும், 30க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது.

அவற்றில் 100 நாள் விழாக் கொண்டாடிய அரங்குகள் : 4 (இதுவே ஒரு சிறந்த சாதனை)

1. சென்னை - சாந்தி (1214 இருக்கைகள்) - 100 நாட்கள் (மொத்த வசூல் ரூ. 2,11,284-00)

2. சென்னை - பிரபாத் (1277 இருக்கைகள்) - 100 நாட்கள்

3. சென்னை - சயானி (842 இருக்கைகள்) - 100 நாட்கள்

4. மதுரை - தங்கம் (2593 இருக்கைகள்) - 108 நாட்கள் (மொத்த வசூல் ரூ. 1,98,102-99)
(ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்கம் தங்கம்)

[இன்றைய தினங்களில், 400 திரையரங்குகளில் திரையிடப்படும் பிரம்மாண்ட படங்களெல்லாம், 4 திரையரங்குகளில் கூட 100 நாட்களைத் தொட முடியாமல் மண்ணைக் கவ்வுகின்றனவே!?]

மேலும், கர்ணன் காவியம், திருச்சி, சேலம், கோவை போன்ற பெரிய நகரங்களில், 80 நாட்கள், ஒவ்வொரு நகரத்திலும் ஓடி, அபார வெற்றி பெற்றது.

நாகர்கோவிலில் 65 நாட்கள் ஏகோபித்த வரவேற்புடன் ஓடிய கர்ணன், திருநெல்வேலியில் 59 நாட்கள் வெற்றி நடை போட்டது.

திண்டுக்கல்லில் சூப்பர்ஹிட் ரேஞ்சில் 50 நாட்கள்.

ஆக, ஏ சென்டர்களில் எல்லாம் 80 நாட்களும் அதற்கு மேலும்,

பி சென்டர்களில் 50 நாட்களும் அதற்கு மேலும் மற்றும்

சி சென்டர்களில் எல்லாம் 3 வாரங்களிலிருந்து 6 வாரங்கள் வரை

வெற்றிகரமாக ஓடியுள்ள கர்ணன் ஒரு அபார வெற்றிக் காவியம்!!!

அன்புடன்,
பம்மலார்.

thamiz
20th March 2010, 04:34 AM
For some reason people formed a "false image" that KarNan is a failure movie for Shivaji!

RAGHAVENDRA
20th March 2010, 06:50 AM
நடிகர் திலகம் என்ற மாபெரும் வெற்றிக் கலைஞனை மீடியாக்கள் எப்படி இருட்டடிப்பு செய்கின்றன என்பதற்கு கர்ணன் ஒரு உதாரணம். பல படங்கள் 12 அல்லது 13 வாரங்களைத் தொட்டிருக்கின்றன. சில சமயங்களில் தயாரிப்பாளர் ஊக்கத் தொகை போன்ற கூடுதல் செலவினங்களின் காரணங்களுக்காகவும் படத்தை 90 முதல் 99 நாட்களில் எடுத்திருக்கின்றனர். அப்படியும் அப்படங்கள் தொடர்ச்சியாக மற்ற தியேட்டர்களில் ஓடி 100 நாட்களைக் கடந்திருக்கின்றன. அப்படிப்பட்ட படங்களின் பட்டியலை பம்மலார் தயாரித்து வருகிறார். அவற்றையெல்லாம் சேர்த்தால் கிட்டத்தட்ட 80 முதல் 90 சதவீத வெற்றியைத் தந்த கதாநாயகன் என்ற பெருமை நடிகர் திலகத்தை சாரும்.
தங்கைக்காக, அருணோதயம், உள்ளிட்ட பல படங்கள் இப்பட்டியலில் அடங்கும். மேலும் வசூலை வாரிக்குவித்து திடீரென்று எடு்க்கப்பட்ட படங்களும் உண்டு. 100 நாட்களைக் கடந்து வெள்ளி விழாவையும் கண்டிருக்கக் கூடிய தங்கசுரங்கம், வெள்ளி விழாவைக் கடந்து மேலும் வெற்றிகரமாக ஓடியிருக்கக் கூடிய, ஆனால் 19 வாரங்களில் எடுக்கப் பட்ட தில்லானா மோகனாம்பாள், போன்ற படங்களைச் சொல்லலாம். ஆனால் இப்படி திடீரென்று எடுக்கப் பட்ட படங்களுக்கு ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவின்மை என்ற காரணம் செல்லுபடியாகாது.

இப்படி பல உதாரணங்களைக் கூறலாம்.

சாதனைகளின் சக்கரவர்த்தி நடிகர்திலகம் பற்றிய மேலும் வெற்றி விவரங்களை பம்மலாரிடமிருந்து எதிர் நோக்கும்.

ராகவேந்திரன்.

saradhaa_sn
20th March 2010, 12:16 PM
டியர் முரளி, ராகவேந்தர், பம்மலார், ராதாகிருஷ்ணன் & செந்தில்...

தங்கள் அனைவரது பாராட்டுக்களுக்கும் நன்றி. நான் பதித்தபோதே முரளியண்ணாவின் மதுரை அனுபவம் வருமென்று எதிர்பார்த்தேன். அதுபோலவே நடந்துள்ளது. நன்றிகள்.

ஏப்ரல் 14 என்பதற்கு பதிலாக ஏப்ரல் 18 என்று பதிந்துவிட்டேன். சென்னையில் ஒருமாதம் தாமதம் என்ற எண்ணத்திலேயே இருந்துவிட்டேன். தமிழ்ப்புத்தாண்டுக்கு வெளியானது. விஜயஷ்ரீ பிக்சர்ஸ் வெளியீடு. அதற்கு முன்பாகவே மதுரை போன்ற இடங்களிலிருந்து படத்திற்கு கிடைத்த சிறப்பான வரவேற்பு விவரங்கள் சென்னை ரசிகர்களுக்கு வந்து சேர்ந்தன.

'கர்ணன்' பட வெற்றி விவரங்களுக்கு பம்மலாருக்கு ஸ்பெஷல் நன்றிகள். ஆனால் இம்மகிழ்ச்சியான வேளையில் மனதை வலிக்கச்செய்யும் ஒரு விஷ(ய)ம் நேற்று ஜெயா தொலைக்காட்சி 'தேன்கிண்ணம்' நிகழ்ச்சியில் சொல்லப்பட்டது. நேற்று வெள்ளியாதலால் மூன்று படப்பாடல் நிகழ்ச்சியாக ஒளிபரப்பானது. 1959களில் வெளியான மூன்று படங்களில் ஒன்றாக 'வீரபாண்டிய கட்டபொம்மன்' பாடல்களும் ஒளிபரப்பாயின. அதைத்தொகுத்து வழங்கிய டி.எம்.ஷ்ரீதேவி என்ற 'குழந்தை'(?) ஒரு தவறான தகவலைச்சொன்னது... "கட்டபொம்மன் வெற்றிகரமாக 26 வாரங்கள் ஓடிய போதிலும் தயாரிப்பாளருக்கு லாபத்தைத் தரவில்லை. ஜனாதிபதியின் சான்றிதழ் மட்டுமே ஆறுதலாகக் கிடைத்தது". இந்தத்தகவலைச்சொன்ன அந்தக்'குழந்தை' கட்டபொம்மன் வெளியானபோது பிறந்திருக்கவில்லை. ஆகவே வேறு யாரோ விஷமிகள்தான் இப்படி ஒரு மாபெரும் தவறான தகவலை அவருக்குச்சொல்லியிருக்க வேண்டும். அதைச்சரிபார்க்காமல் ஒளிபரப்பிய ஜெயா தொலைக்காட்சியை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

saradhaa_sn
20th March 2010, 01:36 PM
டியர் முரளி.....

மதுரையில் 1978-ம் ஆண்டின் முற்பகுதியில் நடிகர்திலகத்தின் சாதனை விவரங்கள் அருமையான தொகுப்பு. ஒரே நேரத்தில்...

நியூசினிமாவில் - அண்ணன் ஒரு கோயில் (100 நாட்களுக்கு மேல)
சினி ப்ரியாவில் - அந்தமான் காதலி (100 நாட்களுக்கு மேல)
சிந்தாமணியில் - தியாகம் (175 நாட்களுக்கு மேல்)
'மெகா' தங்கத்தில் - என்னைப்போல் ஒருவன் (50 நாட்களுக்கு மேல்).. இவை போக
மீனாட்சியில் - வாழ்க்கை அலைகள்

தேவியையும், சென்ட்ரலையும், கல்பனாவையும் ஏன் விட்டு வைத்தார்...?.

நிச்சயமாக மற்றவர்கள் செய்து காட்டுவது இருக்கட்டும், முதலில் மனதில் நினைத்துப்பார்க்க முடியாத சாதனைகள் இவையெல்லாம். இப்படி ஒருசில முறையல்ல, பலமுறை சாதித்துக்காட்டியவர் அண்ணன்.
'வலைப்பூ வல்லுனர்களின்'(?) பார்வைக்கு இவையெல்லாம் சென்று சேர்ந்தால் நன்றாயிருக்கும்.

saradhaa_sn
20th March 2010, 02:11 PM
டியர் பம்மலார்...
'என்னைப்போல ஒருவன்' படத்தின் வெற்றி விவர அறிக்கை (பதிவு) வெகுஜோர். அசத்திட்டீங்க. தேடினாலும் கிடைக்காத தகவல்கள், வசூல் விவரங்கள் அனைத்துக்கும் நன்றிகள் பல. நீங்களும் முரளியண்ணாவும் சொன்னது ரொம்ப சரியே. எனக்கு மிகவும் பிடித்த படங்களின் பட்டியலில் என்னைப்போல் ஒருவன் நிச்சயம் உண்டு. அதனால்தான் இந்த திரியின் முதல் பாகத்தில் நான் எழுதிய முதல் விமர்சனக்கட்டுரையே இப்படத்துக்குத்தான்.

ராமண்ணா மிகுந்த சிரமத்துக்கிடையேதான் இப்படத்தை வெளிக்கொணர்ந்தார். இறுதியில் ரீ-ரிக்கார்டிங் செய்வதற்குக்கூட வசதியின்றி, மெல்லிசை மன்னரின் அனுமதியுடன் அவர் முன்னர் பல்வேறு படங்களுக்கு அமைத்திருந்த பின்னணி இசையை அப்படியே பயன்படுத்திக்கொண்டார். டைட்டில் மியூசிக் சொர்க்கம் படத்தினுடையது அப்படியே பயன்படுத்தப் பட்டிருந்தது. நடிகர்திலகத்தை அறிமுகப்படுத்தும் மியூசிக், ஊட்டிவரை உறவு படத்தில் நாகேஷ், கடையொன்றில் ஒரு ஆங்கிலோ இந்தியப்பெண்ணின் பார்சலில் இருந்து 'காணவில்லை' விளம்பரத்தைக் கிழிக்க முற்படும்போது வாசிக்கப்பட்ட இசை. இப்படி பல்வேறு படங்களில் இருந்து பொருத்தமாக இணைத்திருந்தார். (சொன்னால்தான் மற்றவர்களுக்கே தெரியும். மற்றபடி இப்படத்துக்காகவே அமைக்கப்பட்ட ரீரிக்கார்டிங் போலவே இருக்கும்). நடிகர்திலகத்தின் காட்சிகள் எல்லாம் வெகுநாட்களுக்கு முன்பே முடிக்கப்பட்டிருந்தபோதிலும், தயாரிப்பாளரின் வேறு பல காரணங்களால் படம் தாமதப்பட்டது. நடிகர்திலகம் நடித்த ஒன்றிரண்டு சிறிய காட்சிகள் மட்டும் கடைசியில் எடுக்கப்பட்டு இணைக்கப்பட்டன. பள்ளியின் 'பெற்றோர் தின விழாவுக்கு' சேகரின் குழந்தைகள் சுந்தரமூர்த்தியை அழைக்கும் காட்சியும், மாடியிலிருந்து உருண்டுவிழும் பெண் குழந்தையை சுந்தரமூர்த்தி தூக்கும் காட்சியும் கடைசியில் எடுக்கப்பட்டன. (இந்தக்காட்சியில்கூட நடிகர்திலகத்தின் சட்டை, தோள்பட்டையில் கிழிந்திருக்கும். அதைக்கூட கவனிக்காமல் எடுத்திருப்பார் ராமண்ணா).

ஆனால் படத்தின் வெற்றி ராமண்ணா எதிர்பாராத ஒன்று. நிச்சயம் படத்தின் வெற்றியில் அவர் திக்குமுக்காடிப்போனார். 'என்னைப்போல் ஒருவன்' படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே, தினத்தந்தி பத்திரிகையில் நடிகர்திலகம் - லட்சுமி ஜோடியாக நடிக்கும் 'ராஜ பரம்பரை' என்ற புதிய படத்திற்கான விளம்பரத்தை வெளியிட்டார். அப்படத்துக்கான ஆரம்ப கட்ட ஆயத்தங்கள் நடந்துகொண்டிருக்கும்போது ராமண்ணாவின் உடல்நிலை நலிவுற்றதால் அப்படத்தைக் கைவிட்டார். அதன்பிறகு அவரது இறுதிக்காலம் வரை ஓய்விலேயே இருந்து வந்தார்.

rangan_08
20th March 2010, 04:27 PM
Raghavendra sir, Sivandha Mann Bharath reading a book in TN Assembly's back ground - Super !!

Pammalar sir, ALL THE BEST for your endeavours.

rangan_08
20th March 2010, 04:29 PM
Again, the co-ordination between the two actors...oh crap, co-ordination between NT & NT, unmaiyana two actors-kku kuda irukkathu :notworthy: :notworthy:

.....and, the Academy Award for Best Actor in a lead role, goes to Nadigar Thilagam Dr. Sivaji Ganesan.


.....and, the Academy Award for Best Actor in a supporting role, goes to, Nadigar Thilagam Dr. Sivaji Ganesan.

:D

rangan_08
20th March 2010, 04:32 PM
Kanna, onnu pannu

Enna periappa

Aatha vittu poyidu


Wow!! He just says it as a matter of fact. So very bland.


In the following scene, VV Sundaram gives a classy touch in the form of a dialogue :

Pandaribhai : Avar theertham sapidrache nee yenda anga pona ? :thumbsup:


Ah! Now, “ theertham “ serves as a cue for me to write the next piece :) .

“ Poda, nee appa pulla illa, amma pulla “

When they offer “ prasadam “ to BR, he says, “ enakku edhukku patta, enakkudhan ingeye irukke patta “ . He sips a glass of whisky and dances, “ hare Rama hare Rama, Rama Rama hare hare. Hare Krishna hare Krishna, Krishna Krishna hare hare “. :boo: Chance-e illa. :victory:

rangan_08
20th March 2010, 04:34 PM
[tscii:44af734cf7]A few days back we were discussing the masterpiece, Pudhiya Paravai, here. After chewing the cud I was prompted to write this.

The scene where the self-introduction between NT & SD takes place on the ship’s deck is one of my favourite scene. While strolling on the ship’s deck watching the sea through binoculars, he accidentally trips up on SD, who is sitting down on a chair reading a magazine. Immediately, he repents and then begins to engage in a brief chat with her.

He carries himself in the most suave and gentle manner in this scene. The way in which he introduces himself and then very eagerly enquires about her, registers a “ gentleman “ image at once in the minds of the audience. His costume in that scene is just an ordinary pant and a shirt that is rolled up to his sleeves. But still he commands dignity and honour through his body language and over all performance.

படத்தில் ஒரே ஒரு சின்னக் குறை நம்ம சரஸ்வதி தான் (nothing against her performance). அவங்க அபிநயமும் ஜாஸ்தி, அரிதாரமும் ஜாஸ்தி. I prefer to watch her only in b&w movies.
[/tscii:44af734cf7]

RAGHAVENDRA
20th March 2010, 10:12 PM
டியர் ரங்கன்,
புதிய பறவை பற்றிய உங்கள் பதிவு அருமை. நீங்கள் சொன்னது போல் சரோஜாதேவி கருப்பு வெள்ளை படங்களில் இருந்த அழகும் எழிலும் வண்ணப் படங்களில் இல்லை என்பது ஏற்கத்தக்கதே. இப் படத்தில் முழுக்க முழுக்க நடிகர் திலகத்தை ரசித்தாலும், ஒரு காட்சியில், தான் எவ்வளவு உன்னதமான நடிகர் என்பதை நிரூபித்து விட்டார். தன்னுடைய பிறந்த நாளன்று சித்ரா இன்னும் வரவில்லையே என்ற கவலையிலும் வந்தவர்களை இன்முகத்துடன் வரவேற்கும் காட்சி. இக்காட்சியில் இயக்குநரின் திறமையும் பளிச்சிடும். வாசலில் மூன்று வெவ்வேறு கலாச்சாரத்தைச் சார்ந்த குடும்பத்தினர் நடிகர் திலகத்திற்கு அவரவர் முறைப்படி வணக்கம் செலுத்திக் கொண்டே வருவர். அவ்வளவு வருத்தத்திலும் கவலையிலும், அதே இன்முகத்தோடு அவர்கள் மூவரையும் அவர்களுடைய கலாச்சாரத்தின் படியே பதில் வணக்கம் செலுத்துவார் நடிகர் திலகம். இக்காட்சியில் உன்னிப்பாகப் பார்த்தால் ஒரே ஷாட்டில் எடுக்கப் பட்டதாகத் தோன்றுகிறது, அதுவும் மிகவும் சில விநாடிகள் தான். அப்படியென்றால் அந்த மிகச் சிறிய வினாடிகளுக்குள் மூவருக்கும் அவரவர் கலாச்சாரப்படி பதில் வணக்கம் செலுத்தும் நடிப்பு நிச்சயம் நடிகர் திலகத்தைத் தவிர வேறு யாராலும் அவ்வளவு வேகமாக நடித்திருக்க முடியாது. அது மட்டுமன்றி, ஒவ்வொரு பதில் வணக்கத்திற்கும் ஒவ்வொரு ஷாட் வைத்திருப்பர்.

What a Genius!

ராகவேந்திரன்

pammalar
21st March 2010, 02:18 AM
நடிகர் திலகமும் பாகவதரும்

தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாராகத் திகழும் திரு.எம்.கே.தியாகராஜ பாகவதர் அவர்களின் நூற்றாண்டு, சமீபத்தில் 1.3.2010 அன்று நிறைவடைந்துள்ளது. தமது ஈடு, இணையற்ற கந்தர்வக் குரலாலும், வசீகரிக்கும் தோற்றப் பொலிவாலும், மக்கள் மனங்களில் நிரந்தர இடம் பிடித்தவர் பாகவதர் என்றால் அது மிகையன்று. எத்தனையோ பாகவதர்கள், "பாகவதர்" என்ற அடைமொழியுடன் இருந்தாலும், பாகவதர் என்று சொன்னால் அது திருவாளர் மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜ பாகவதரையே குறிக்கும். பாகவதர் 14 படங்களே நடித்தார். ஆனால், 100 படங்களில் நடித்த புகழைப் பெற்றார். வெள்ளித்திரையில் அவரது முதல் இன்னிங்ஸ்(1934-1944) சாதனைகளின் சிகரம். இரண்டாவது இன்னிங்ஸ்(1948-1959) சோதனைகளின் உச்சம். திரையிசையில் அமரத்துவ படைப்புகளை அளித்த பாகவதர் 1.11.1959 அன்று அமரத்துவம் அடைந்தார்.

இனி தலைப்பிற்கேற்ற தகவல்களைக் காண்போம்.

பாகவதரின் இரண்டாவது திரைப்படமான நவீன சாரங்கதரா(1936)வும், நடிகர் திலகத்தின் 50வது திரைப்படமான சாரங்கதரா(1958) திரைப்படமும் ஒரே கதைக்களங்களைக் கொண்டவை. சிந்தாமணி(1937) திரைப்படத்தில், பாபநாசம் சிவன் இயற்றி, அவரே செஞ்சுருட்டி ராகத்தில் இசையமைத்து உருவாக்கிய 'ராதே உனக்கு கோபம் ஆகாதடி' என்கின்ற பாடல் பாகவதரின் பிரசித்தி பெற்ற பாடல்களில் ஒன்று. இதையே நடிகர் திலகத்தின் குலமகள் ராதை(1963) திரைப்படத்தில், திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவன் அவர்கள் மிக அழகாக, மிகுந்த நேர்த்தியோடு, ஒரிஜினலையே மிஞ்சும் வண்ணம் ரீ-மிக்ஸ் செய்திருப்பார். கதைக்கும், காலத்துக்கும் ஏற்றாற் போல, கவிஞர் அ. மருதகாசி அவர்கள் பாடல் வரிகளை பாங்குற மாற்றியமைத்திருப்பார். பாகவதரின் பிம்பமான பாடகர் திலகம் டி.எம்.எஸ். பாட, நடிகர் திலகம் தமது நடையழகாலும், ரொமான்ஸாலும் பாடலை எங்கோ கொண்டு சென்று விடுவார். சரோஜாதேவியின் ரியாக்ஷ்ன்களும் இப்பாடலில் நன்றாகவே இருக்கும். பாடல் முடிந்ததும் சரோஜாதேவி நடிகர் திலகத்திடம், "முடிஞ்சுதா?" என்பார். "பெரிய பாகவதரோட பாட்ட இத்தன நேரமா மூச்ச புடிச்சுகிட்டு பாடிருக்கேன். இப்படிக் கேக்குறையே?" என்பார் நடிகர் திலகம். ரசிக்கத்தக்க அம்சங்கள். பாகவதருக்கு வான்புகழை அளித்த ஹரிதாஸ்(1944) திரைப்படத்தில் இடம்பெற்ற சூப்பர்ஹிட் பாடல், 'மன்மத லீலையை வென்றார் உண்டோ'. பாபநாசம் சிவனின் வைர வரிகளுக்கு, சாருகேசியை பழச்சாறாக பிழிந்து கொடுத்திருப்பார் திரை இசை மாமேதை ஜி.ராமநாதன். பாகவதர் குரலில் இப்பாடல், தமிழ்த் திரைப்பாட்டின் உச்சம். இதே 'மன்மத லீலையை' வார்த்தெடுத்தது போல், இதே சாருகேசி ராகத்தில், ஜி. ராமநாதன் அவர்கள் இசைமணம் பரப்பிய பாடல் தான், 'வசந்த முல்லை போலே வந்து'. சாரங்கதரா(1958)வில் இடம்பெற்ற இப்பாடலை இயற்றியவர் கவிஞர் அ.மருதகாசி. பாடலைப் பாடிய டி.எம்.எஸ்சை சௌந்தரராஜ பாகவதர் என்றே சொல்ல வேணடும். அந்த அளவுக்கு பாகவதரின் குரலை குளோனிங் எடுத்திருப்பார். தமது சிருங்கார காதல் நடிப்பால், இவையனைத்தையும் வென்று, முதலாவதாக நிற்பார் ஒருவர். அவர் தான் நடிகர் திலகம்.

1954-ல் திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் சீரும், சிறப்புமாக நடைபெற்ற நடிகர் திலகத்தின் ஒரே தங்கை பத்மாவதி அவர்களின் திருமண (பத்மாவதி-வேணுகோபால் திருமணம் தான்) வைபவத்திற்கு வந்தவர்களை வரவேற்று உபசரித்தவர் எம்.கே.டி.பாகவதர்.

1954-ல் வெளிவந்த மனோகரா திரைப்படத்தைக் திரையரங்கில் கண்டு களித்த பாகவதர், நடிகர் திலகத்தின் நடிப்பை இப்படிப் புகழ்ந்தார். "அம்மா என்ற ஒரு வார்த்தையை உணர்ச்சிப்பிழம்பாகச் சொல்லி கைத்தட்டல் பெற்ற ஒரே நடிகர் சிவாஜி தான்." நடிகர் திலகத்தின் நடிப்பில் மயங்கிய பாகவதருக்கு, நடிகர் திலகத்துடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பும் வந்தது. 1937-ல் சேலம் சங்கர் பிலிம்ஸ் தயாரிப்பில், அமெரிக்கர் எல்லிஸ்.ஆர்.டங்கன் அவர்களின் டைரக்ஷ்னில் வெளிவந்த அம்பிகாபதி திரைப்படத்தில் கதாநாயகன் அம்பிகாபதியாக பாடி நடித்தார் பாகவதர். படம் பொன்விழாக் கண்டது. 1957-ல் இதே அம்பிகாபதிக் கதையை ஏ.எல்.எஸ் புரொடக்ஷ்ன்ஸ் தயாரிக்க, ப.நீலகண்டன் இயக்கினார். கதாநாயகன் அம்பிகாபதியாக நடிகர் திலகம் நடித்தார். அம்பிகாபதியின் தந்தை கவிச்சக்கரவர்த்தி கம்பராக யாரை நடிக்க வைக்கலாம் என படக்குழுவினர் யோசித்த பொழுது, பாகவதரே பளிச்சிட்டார். அவரை படக்குழுவினர் அணுகிய போது 'கம்பராக நான் நடித்தால் சரி வராது' எனக் கூறி விட்டார். பின்னர் கம்பர் கதாபாத்திரத்தில் எம்.கே.ராதா நடித்தார். சிவாஜியுடன் நடிக்க பாகவதர் மறுத்து விட்டார் என சினிமாவுலகில் சிற்சில சர்ச்சைகள் கிளம்பின. அவைகளை பாகவதர், தமது சொல்லாலும், செயலாலும் ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தார். "சிவாஜியுடன் நடிக்க எல்லோரையும் போல் எனக்கும் விருப்பமே. ஆனால் அம்பிகாபதியின் தந்தை கம்பராக நடிக்க நான் விரும்பவில்லை. ஏனென்றால், ஏற்கனவே நான் அம்பிகாபதியாகவே நடித்திருக்கிறேன். அதனால் கம்பராக நடிக்க மனமில்லை." என அறிவித்தார். இதோடு நில்லாமல், தனது சொந்தத் தயாரிப்பில், நடிகர் திலகத்தைக் கதாநாயகனாகக் கொண்டு, தானும் நடிகர் திலகத்துக்கு தந்தையாக நடிக்க முடிவு செய்து ஒரு படத்தைத் துவக்கினார் பாகவதர். அந்தப் படத்தின் பெயர் "பாக்கிய சக்கரம்". இது நிகழ்ந்த ஆண்டு 1958. இந்த சமயத்தில், பாகவதரின் உடல்நிலை மோசமடைய, பாக்கிய சக்கரத்தின் படப்பிடிப்பு நடத்த முடியாமலே நின்று போனது. பின்னர் 1959-ல் பாகவதர் இயற்கை எய்தினார். "திரை, இசை உலகின் இமயம் வீழ்ந்தது" என நடிகர் திலகம் இரங்கல் விடுத்தார்.

சமீபத்தில், சிவாஜி-பிரபு அறக்கட்டளையின் பெருமுயற்சியில், திரையுலக முன்னோடிகளை கௌரவிக்கும் விதமாக, நடிகர் திலகத்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தன்று(21.7.2003), சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், தபால் துறை, பாகவதருக்கு சிறப்பு தபால் உறை வெளியிட்டு கௌரவித்தது. (இதே நிகழ்ச்சியில், நடிகர் பி.யூ.சின்னப்பா அவர்களுக்கும், கலைவாணர் என்.எஸ்.கே. அவர்களுக்கும் சிறப்பு தபால் உறை, அவர்களை கௌரவிக்கும் விதமாக வெளியிடப்பட்டதும் இங்கே குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.)

அன்புடன்,
பம்மலார்.

saradhaa_sn
21st March 2010, 01:32 PM
கடந்த புதன்கிழமையன்று (17.10.2010) வசந்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சிங்கத்தமிழன் சிவாஜி' நிகழ்ச்சியில், நடிகர் 'சிலோன் மனோகர்' கலந்துகொண்டு நடிகர்திலகத்திப்பற்றிய தன் நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டார் என்று சொல்வதைவிட அவர்மீதான தன்னுடைய பக்தியை வெளிப்படுத்திக்கொண்டார். அவரது பக்திப்பிரவாகமான பேச்சு நம்மை மெய் சிலிர்க்க வைத்தது.

பள்ளியில் படிக்கும் காலத்தில் நடிகர்திலகத்தின் படங்கள் வெளியாகும் நாட்களில் அவர்களின் நண்பர்கள் வட்டாரத்தில், யார் முதல் டிக்கட் வாங்குவது என்று பெரிய போட்டியே நடக்குமாம். அப்போட்டியில் ஜெயித்து முதல் டிக்கட் வாங்குபவர், மற்றவர்களுக்கு தேனீர் விருந்து அளிப்பாராம். அதில் பெரும்பாலும் தானே வெற்றி பெற்றதாக பெருமை பொங்கச் சொன்னார்.

பள்ளியில் நடந்த பாட்டுப்போட்டியில், பங்கேற்ற மனோகர், நடிகர்திலகம் நடித்த 'எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்' (எங்க மாமா) பாடலைப்பாடி முதல் பரிசு பெற்றதாகச் சொன்னவர் அப்பாடலைப்பாடியும் காட்டினார். திரைப்படங்களில் பாட ஆர்வம் கொண்டு எம்.எஸ்.வி. அவர்களையணுகியபோது, தகுந்த சந்தர்ப்பம் வரும்போது அழைப்பதாகக்கூறியனுப்பிய மெல்லிசை மன்னர், நடிகர்திலகத்தின் 'பைலட் பிரேம்நாத்' படத்தில் வரும் 'கோப்பித்தோட்ட முதலாளிக்கு' பாடலை L.R.ஈஸ்வரியுடன் இணைந்து பாட முதன்முதலில் வாய்ப்பு அளித்ததாகச்சொன்னார். நடிகர்திலகத்துடன் இணைந்து நடிக்க வாய்ப்புக்கிடைத்தது, வாழ்நாளில் தனக்குக்கிடைத்த மிகப்பெரும் பாக்கியம் என்றார்.

உலகமெங்கிலும் உள்ள தமிழர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம்பெற்றிருப்பவர் நடிகர்திலகம் என்று குறிப்பிட்டவர், வெளிநாடு வாழ் தமிழர்களின் இல்லங்கள் அனைத்திலும் அவர் நடித்த படங்களின் வீடியோக்களும், சி.டி.க்களும் இல்லாத இல்லங்களே இல்லையென்று பெருமையுடன் சொன்னார். அரைமணிநேரம் அவர் பேச்சு, நடிகர்திலகத்தின் மீதான பக்திப்பிரவாகமாகப் பாய்ந்தது. நடிகர்திலகத்தின் மீது, சிலோன் மனோகர் இந்த அளவு பற்றுதல் வைத்திருப்பது நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது என்றால் அது மிகையல்ல.

J.Radhakrishnan
21st March 2010, 11:17 PM
oted Hubber


Joined: 13 Sep 2009
Posts: 260
Location: Chennai
Posted: Fri Mar 19, 2010 5:42 pm Post subject: Re: Sivajiganesan reg
J.Radhakrishnan wrote:
பம்மலார் சார் உங்கள் தகவல்கள் அருமை. கர்ணன் படம் 108 நாள் ஓடியதா? யாரோ அது தோல்வி படம் என்று சொன்னார்களே ?

ராதாகிருஷ்ணன் (NT Devotee)


வெற்றிக்காவியமே கர்ணன்

"கலைப்பொன்னி" சினிமா மாத இதழின் ஜூலை 1964 இதழில் வெளியான ஒரு கேள்வி-பதில்:

கேள்வி : 'கர்ணன்' படத்துக்கு செலவழித்த தொகையைத் தயாரிப்பாளர் பந்துலு பெற்றிருப்பாரா?

பதில்: நிச்சயமாகப் பெற்றிருப்பார். பந்துலுவைக் 'கர்ணன்' காப்பாற்றி விட்டதாகத்தான் வட்டாரத்தில் பேசிக் கொள்கிறார்கள்.

Thank you pammalar Sir, very good information.

Radhakrishnan.

Murali Srinivas
22nd March 2010, 12:10 AM
நன்றி ஜோ, செந்தில், சுவாமி.

சாரதா,

நன்றி. நீங்கள் சொன்னது முழு உண்மை. அவர் இது போன்ற சாதனைகளை மதுரையிலே எத்தனையோ முறை செய்திருக்கிறார். சில தியேட்டர்களை ஏன் விட்டு வைத்தார் என்று கேட்டீர்கள்.நீங்கள் குறிப்பிட்டவற்றில் கல்பனா தியேட்டரில் அதே 1978 மே 12 முதல் புண்ணிய பூமி வெளியானது. தேவியைப் பொறுத்த வரை 1975 தீபாவளிக்கு வெளியான வைர நெஞ்சம் படத்திற்கு பிறகு அந்த தியேட்டரில் நடிகர் திலகத்தின் படம் என்றால் 1979 ஆண்டு வெளியான கவரி மான்தான். சென்ட்ரலில் Dr. சிவா [1975 தீபாவளி] படத்திற்கு பிறகு 1978 தீபாவளியன்று வெளியான பைலட் பிரேம்நாத்தான், இதை தவிர எத்தனை பழைய படங்கள்? நான் நடிகர் திலகத்தின் பல பழைய படங்களைப் பார்த்ததும் அந்த காலக்கட்டத்தில் தான். இப்போது கர்ணன் பற்றி பேச்சு வந்தது. கர்ணன் 1978 -ம் ஆண்டு நவம்பரில் மதுரை மீனாட்சியில் திரையிடப்பட்டபோது புதிய படம் போல் ஓடியது. தொடர்ந்து 50 காட்சிகள் ஹவுஸ் புல். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.




மாபெரும் வெற்றிவீரரான கர்ணன், செஞ்சோற்றுக் கடன் தீர்க்க இ(ரு)ந்த பக்கமே இருந்ததால், தோற்கடிக்கப்பட்டார். மாபெரும் தயாரிப்பாளரான பந்துலு, அந்தப் பக்கம் போனதால், வெற்றியாளர் கர்ணன், வெற்றி பெற்ற கர்ணன் தோல்வி என அறிவிக்கப்பட்டார். ஆக, பரமாத்மா முதல் பந்துலு வரை, கர்ணனைத் தோற்கடிக்க, எத்தனை குறியாக இருந்திருக்கிறார்கள்.



சுவாமி தங்களின் இந்த வரிகள் மிகப் பிரமாதம். அது போல பாகவதரின் இறுதி ஆசையும் பற்றிக் குறிப்பட்டது சாலப் பொருந்தும். நடிகர் திலகம் பாகவதர் செய்திகள் பிரமாதம்

அன்புடன்

pammalar
22nd March 2010, 10:12 AM
டியர் முரளி சார், ராகவேந்திரன் சார், திரு.செந்தில், திரு.ராதாகிருஷ்ணன், திரு.ரங்கன், சகோதரி சாரதா, தமிழ்,

அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி!

சகோதரி சாரதா,

என்னைப் போல் ஒருவன் குறித்த கூடுதல் விவரங்களும், சிலோன் மனோகர் அவர்களின் சிவாஜி நினைவலைகளும் அசத்தல், அருமை. சிங்கத்தமிழன் சிவாஜி நிகழ்ச்சியை, பார்க்க முடியாமல் போகின்றவர்களுக்கு, தங்களது பதிவுகள் ஒரு வரப்பிரசாதம். பார்த்து ரசித்தவர்களுக்கு அதுவே ஒரு நல்ல நினைவூட்டல்.

திரு.ரங்கன்,

ஒரு கைதேர்ந்த திரைப்பட இயக்குனரைப் போல், கௌரவத்தின் ஒவ்வொரு காட்சியையும் அனுபவித்து எழுதுகிறீர்கள்! புதிய பறவை ஆரம்பக் காட்சி வர்ணனை அருமை. மேலும், புதிய பறவை படக் காட்சிகளை, தங்களின் புதிய, புதிய வர்ணனை வடிவங்களில் ஆவலுடன் எதிர்நோக்குகின்றேன்.

ராகவேந்திரன் சார்,

"வணக்கம் பல(மூன்று) முறை சொன்னேன்." தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை. மூன்று நபர்களுக்கும், அவரவர் கலாசாரத்தின் படி, மூன்று வெவ்வேறு விதமான வணக்கங்களை ஒரே ஷாட்டில் நமது நடிகர் திலகத்தால் மட்டுமே செலுத்த முடியும்.

அன்புடன்,
பம்மலார்.

rangan_08
22nd March 2010, 06:46 PM
ராமண்ணா மிகுந்த சிரமத்துக்கிடையேதான் இப்படத்தை வெளிக்கொணர்ந்தார். இறுதியில் ரீ-ரிக்கார்டிங் செய்வதற்குக்கூட வசதியின்றி, மெல்லிசை மன்னரின் அனுமதியுடன் அவர் முன்னர் பல்வேறு படங்களுக்கு அமைத்திருந்த பின்னணி இசையை அப்படியே பயன்படுத்திக்கொண்டார். டைட்டில் மியூசிக் சொர்க்கம் படத்தினுடையது அப்படியே பயன்படுத்தப் பட்டிருந்தது. நடிகர்திலகத்தை அறிமுகப்படுத்தும் மியூசிக், ஊட்டிவரை உறவு படத்தில் நாகேஷ், கடையொன்றில் ஒரு ஆங்கிலோ இந்தியப்பெண்ணின் பார்சலில் இருந்து 'காணவில்லை' விளம்பரத்தைக் கிழிக்க முற்படும்போது வாசிக்கப்பட்ட இசை. இப்படி பல்வேறு படங்களில் இருந்து பொருத்தமாக இணைத்திருந்தார். (சொன்னால்தான் மற்றவர்களுக்கே தெரியும். மற்றபடி இப்படத்துக்காகவே அமைக்கப்பட்ட ரீரிக்கார்டிங் போலவே இருக்கும்). நடிகர்திலகத்தின் காட்சிகள் எல்லாம் வெகுநாட்களுக்கு முன்பே முடிக்கப்பட்டிருந்தபோதிலும், தயாரிப்பாளரின் வேறு பல காரணங்களால் படம் தாமதப்பட்டது. நடிகர்திலகம் நடித்த ஒன்றிரண்டு சிறிய காட்சிகள் மட்டும் கடைசியில் எடுக்கப்பட்டு இணைக்கப்பட்டன. பள்ளியின் 'பெற்றோர் தின விழாவுக்கு' சேகரின் குழந்தைகள் சுந்தரமூர்த்தியை அழைக்கும் காட்சியும், மாடியிலிருந்து உருண்டுவிழும் பெண் குழந்தையை சுந்தரமூர்த்தி தூக்கும் காட்சியும் கடைசியில் எடுக்கப்பட்டன. (இந்தக்காட்சியில்கூட நடிகர்திலகத்தின் சட்டை, தோள்பட்டையில் கிழிந்திருக்கும். அதைக்கூட கவனிக்காமல் எடுத்திருப்பார் ராமண்ணா).



:o enga irundhu indha information ellam pudikkireenga ??? Amazing !!! It really helps people like me to know more about the making of such great films and that's one of the reasons for my addiction to this thread.

rangan_08
22nd March 2010, 06:51 PM
டியர் ரங்கன்,
புதிய பறவை பற்றிய உங்கள் பதிவு அருமை. நீங்கள் சொன்னது போல் சரோஜாதேவி கருப்பு வெள்ளை படங்களில் இருந்த அழகும் எழிலும் வண்ணப் படங்களில் இல்லை என்பது ஏற்கத்தக்கதே. இப் படத்தில் முழுக்க முழுக்க நடிகர் திலகத்தை ரசித்தாலும், ஒரு காட்சியில், தான் எவ்வளவு உன்னதமான நடிகர் என்பதை நிரூபித்து விட்டார். தன்னுடைய பிறந்த நாளன்று சித்ரா இன்னும் வரவில்லையே என்ற கவலையிலும் வந்தவர்களை இன்முகத்துடன் வரவேற்கும் காட்சி. இக்காட்சியில் இயக்குநரின் திறமையும் பளிச்சிடும். வாசலில் மூன்று வெவ்வேறு கலாச்சாரத்தைச் சார்ந்த குடும்பத்தினர் நடிகர் திலகத்திற்கு அவரவர் முறைப்படி வணக்கம் செலுத்திக் கொண்டே வருவர். அவ்வளவு வருத்தத்திலும் கவலையிலும், அதே இன்முகத்தோடு அவர்கள் மூவரையும் அவர்களுடைய கலாச்சாரத்தின் படியே பதில் வணக்கம் செலுத்துவார் நடிகர் திலகம். இக்காட்சியில் உன்னிப்பாகப் பார்த்தால் ஒரே ஷாட்டில் எடுக்கப் பட்டதாகத் தோன்றுகிறது, அதுவும் மிகவும் சில விநாடிகள் தான். அப்படியென்றால் அந்த மிகச் சிறிய வினாடிகளுக்குள் மூவருக்கும் அவரவர் கலாச்சாரப்படி பதில் வணக்கம் செலுத்தும் நடிப்பு நிச்சயம் நடிகர் திலகத்தைத் தவிர வேறு யாராலும் அவ்வளவு வேகமாக நடித்திருக்க முடியாது. அது மட்டுமன்றி, ஒவ்வொரு பதில் வணக்கத்திற்கும் ஒவ்வொரு ஷாட் வைத்திருப்பர்.

What a Genius!

ராகவேந்திரன்

Very true Raghavendra sir. Once again, NT's amazing observation power played a great role here.

rangan_08
22nd March 2010, 07:02 PM
சரோஜாதேவியின் ரியாக்ஷ்ன்களும் இப்பாடலில் நன்றாகவே இருக்கும். பாடல் முடிந்ததும் சரோஜாதேவி நடிகர் திலகத்திடம், "முடிஞ்சுதா?" என்பார். "பெரிய பாகவதரோட பாட்ட இத்தன நேரமா மூச்ச புடிச்சுகிட்டு பாடிருக்கேன். இப்படிக் கேக்குறையே?" என்பார் நடிகர் திலகம். ரசிக்கத்தக்க அம்சங்கள்.

:lol: Fantastic article pammalar sir. Very interesting informations. Very heartening to know that Bhagavadhar played host in NT's sister's wedding. What an integrity the actors had in those days.

( BTW, I personally, am a big fan of MKT. Avarudaya " rajan maharajan, maraivai pudhaitha oadu - and of course the evergreen's, soppana vazhvil, ammayappa, manmadha leelai.....". Innaikellam kaetukitte irukkalam ).

pammalar
23rd March 2010, 03:32 AM
மார்ச், ஏப்ரல் மாதங்கள் வந்தாலே பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் எல்லா வகுப்புகளுக்கும் ஆண்டுத் தேர்வுகளும், பொதுத் தேர்வுகளும் நடைபெறும் நேரம். ஆகவே, தேர்வுகளை எழுதும் மாணவ-மாணவியர் அனைவருக்கும் உளங்கனிந்த நல்வாழ்த்துக்கள்! எதிர்கால இந்தியாவின் தூண்களான மாணவமணிகள் அனைவருக்கும் கடவுள் அருளும், கலைமகளின் கிருபையும், கலைமகளின் அருள் பெற்ற நமது வித்யாபதியின் ஆசிகளும் ஒரு சேர கிடைக்கப் பெற்று, எழுதும் தேர்வுகள் எல்லாவற்றிலும் மிக அதிகமான மதிப்பெண்களைக் குவித்து, கல்வியில் மென்மேலும் உயர்வடைய வளமான வாழ்த்துக்கள்!

இனி விஷயத்திற்கு வருவோம். பள்ளியிலும், கல்லூரியிலும் எந்தவொரு வகுப்பில் படித்தாலும், படிப்பதற்கு ஒவ்வொரு வகுப்பிலும் பற்பல பாடங்கள் உண்டு. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, கணிதம், அறிவியல், வரலாறு, புவியியல், சமூக அறிவியல், இயற்பியல், வேதியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், கணக்கியல், கணிப்பொறியியல், பொருளாதாரம், வணிகவியல் என பலவகைப் பாடங்கள் உண்டு. எல்லாப் பாடங்களின் தேர்வுகளுக்கும், கேள்வித்தாள்கள் வடிவமைக்கப்படும். நடிகர் திலகம் சம்பந்தப்பட்ட விஷயங்களை எல்லாம், சிவாஜியியல் என்கின்ற தலைப்பில் ஒரு பாடமாக்கி, அதற்கு ஒரு தேர்வு வைப்பதற்காக, ஒரு கேள்வித்தாளை வடிவமைத்தால் எப்படி இருக்கும். இதோ உஙகள் பார்வைக்கு சிவாஜியியல் பாடத்தின் கேள்வித்தாள்.

(கேள்வித்தாள் அடுத்த பதிவில்)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
23rd March 2010, 03:39 AM
சிவாஜியியல்

நேரம் : 3 மணி ; மொத்த மதிப்பெண்கள் : 100

பகுதி - அ [மதிப்பெண்கள் : 30 x 1 = 30] (எல்லா வினாக்களுக்கும் விடை தருக)

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. பராசக்தி படத்தில் நடிகர் திலகத்தின் கதாபாத்திரத்தின் பெயர்

அ) ஞானசேகரன் ஆ) குணசேகரன் இ) ராஜசேகரன் ஈ) சந்திரசேகரன்

2. வாழ்விலே ஒரு நாள் திரைப்படத்தில் நடிகர் திலகத்திற்கு ஜோடியாக நடித்தவர்

அ) பத்மினி ஆ) எஸ். வரலட்சுமி இ) பண்டரிபாய் ஈ) ஜி. வரலட்சுமி

3. "மாதவிப் பொன்மயிலாள் தோகை விரித்தாள்" பாடலை இயற்றியவர்

அ) வாலி ஆ) கண்ணதாசன் இ) மருதகாசி ஈ) ஆத்மநாதன்

4. சிம்ம சொப்பனம் படத்தின் இசையமைப்பாளர்

அ) இளையராஜா ஆ) எம்.எஸ்.விஸ்வநாதன் இ) கே.வி.மகாதேவன் ஈ) சங்கர்-கணேஷ்

5. தனது தமிழக முன்னேற்ற முன்னணி கட்சிக்கு தலைவர் சிவாஜி முதலில் சூட்டிய பெயர்

அ) தமிழக முன்னணி ஆ) தேசிய முன்னணி இ) தமிழக காங்கிரஸ் ஈ) தமிழ் தேசம்

கோடிட்ட இடங்களை சரியான விடை கொண்டு நிரப்புக:

6. பள்ளிக் குழந்தைகளின் மதிய உணவு திட்டத்திற்காக, பிரதமர் நேருவிடம் நடிகர் திலகம் ரூ.--------------------- அளித்தார்.

7. சிவாஜி-பீம்சிங் கூட்டணியில் உருவான முதல் "ப" வரிசைப் படம் -------------------------------------.

8. -------------------------------------------- திரைப்படம் நாதத்தையும், பரதத்தையும் மையமாகக் கொண்டது.

9. சிவாஜி அவர்கள் மூன்று வேடங்களில் (கதாபாத்திரங்கள்) தோன்றிய முதல் படம் ------------------------------.

10. நடிகர் திலகம் ---------------------------------- கோவிலுக்கு யானை அளித்தார்.
(பல கோவில்களுக்கு யானைகளைக் காணிக்கையாக அளித்துள்ளார். ஏதேனும் ஒரு கோவிலுக்கு வழங்கியதைக் குறிப்பிடவும்.)

சரியான விடையைத் தருக:

11. கணேசன் அவர்கள் பிறந்த ஊர் எது?

12. சிவாஜி கணேசன் அவர்களின் இயற்பெயர் என்ன?

13. சிவாஜி அவர்கள் ஏற்று நடித்த முதல் நாடக வேடம் என்ன?

14. இராமாயண நாடகத்தில் சிவாஜி அவர்கள் நடிக்காத மிக முக்கிய வேடம் ஒன்று உண்டு. அது எந்த வேடம்?

15. கணேசன் அவர்களுக்கு சிவாஜி கணேசன் என்று பட்டம் கொடுத்து அழைத்தது யார்?

16. சிவாஜி கணேசன் அவர்கள் எந்த வருடம் சக்தி நாடக சபாவில் சேர்ந்தார்?

17. சக்தி நாடக சபாவில் சிவாஜி அவர்கள் நடித்த ஏதேனும் ஒரு நாடகத்தின் பெயரினைக் கூறுக.

18. பராசக்தி படத்தின் மேக்கப் டெஸ்டிற்காக நடிகர் திலகத்தை புகைப்படங்கள் (ஸ்டில்ஸ்) எடுத்த புகைப்படக் கலைஞர் யார்?

19. இல்லற ஜோதியில் இடம்பெற்ற 'அனார்கலி - சலீம்' ஓரங்க நாடகத்தின் வசனங்களை எழுதியவர் யார்?

20. இரும்புத்திரை எந்த ஊரில், எந்த அரங்கில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது?

21. மக்களை பெற்ற மகராசியில் எந்த வட்டாரத் தமிழ் பேசப்பட்டது?

22. நடிகர் விஷாலின் சகோதரர் ஒரே ஒரு படத்தில் நடிகர் திலகத்துடன் இணைந்து நடித்தார். அந்தப் படத்தின் பெயர்?

23. சிவாஜி அவர்களுக்கு கலைக்குரிசில் என்ற பட்டத்தை வழங்கியவர் யார்?

24. விஸ்வரூபம் 100வது நாள் விழாவில் சிங்கத்தமிழனுக்கு வெற்றிவிழா ஷீல்டை அளித்தவர் யார்?

25. நடிகர் திலகம் இசைக் கருவியை இசைத்த முதல் திரைப்படம் எது?

26. களம் கண்ட கவிஞன் நாடக உரையாடல்களை எழுதியவர் யார்?

27. கல்யாணியின் கணவன் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் யார்?

28. தெய்வமகன் திரைப்படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் என்ன?

29. வைரநெஞ்சம் எந்த ஊரில் 50 நாட்களுக்கு மேல் ஒடியது?

30. நடிகர் திலகத்தின் 159வது திரைப்படம் எது?

பகுதி - ஆ [மதிப்பெண்கள் 15 x 2 = 30] (எல்லா வினாக்களுக்கும் விடைகளைத் தருக)

31. வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் எந்த ஊரில் அரங்கேற்றப்பட்டது? அரங்கேற்றத்தன்று தலைமை தாங்கியவர் யார்?

32. திருவிளையாடலில், புலவராக வரும் சிவபெருமான், தன்னை தருமியிடம் அறிமுகம் செய்து கொள்ளும் அந்த 2 வரி வசனங்களை எழுதுக.

33. நடிகர் திலகத்தின் பிள்ளைச்செல்வங்களின் (வாரிசுகளின்) நற்பெயர்களைக் குறிப்பிடுக.

34. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் நடிகர் திலகம் எந்த வருடம் இணைந்தார்? யாரை அவர் தலைவராக ஏற்றுக் கொண்டார்?

35. மாடர்ன் தியேட்டர்ஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் எவை?

36. நடிகர் திலகமும் மக்கள் திலகமும் இணைந்து நடித்த ஒரே திரைப்படம் எது? மக்கள் திலகம் தலைமை தாங்கிய நடிகர் திலகத்தின் 100வது நாள் திரைப்பட விழா எது?

37. பாசமலர் ராஜசேகரன் தனது தங்கையை ஆனந்தனிடம் ஒப்படைக்கும் போது கூறும் வார்த்தைகள் என்ன?

38. நடிகர் திலகத்துக்கு சந்திரபாபு பின்னணி பாடிய படம் எது? அப்பாடலின் முதல் வரி என்ன?

39. நடிகர் திலகத்துடன்

i) கமல் நடித்த முதல் திரைப்படம்

ii) ரஜினி நடித்த முதல் திரைப்படம்

iii) விஜய் நடித்த ஒரே திரைப்படம்

iv) நதியா நடித்த திரைப்படம்

ஆகியவைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.

40. நடிகர் திலகத்தின் அண்ணன், தம்பி, தங்கை, தங்கையின் கணவர் ஆகியோரது நற்பெயர்களைக் குறிப்பிடுக.

41. நடிகர் திலகத்தின் திரைப்படம் வெளியான தினத்தன்று வெளியான ஏதேனும் 4 மக்கள் திலகத்தின் திரைப்படங்களின் பெயர்களைக் கூறுக.

42. கீழ்க்காணும் திரைப்படங்களில் நடிகர் திலகத்தின் கதாபாத்திரப் பெயர்களைக் குறிப்பிடுக.

i) படிககாத மேதை ii) பாகப்பிரிவினை iii) எங்க மாமா iv) நிறைகுடம்

43. நடிகர் திலகத்தின் திருமணம் எந்த ஊரில், எந்த தேதியில் நடைபெற்றது?

44. தங்கப்பதக்கம் நாடகம் எத்தனை முறை நடத்தப்பட்டது? தங்கப்பதக்கம் திரைப்படம் வெளியான தேதி என்ன?

45. கீழக்காணும் எழுத்தாளர்களின் படைப்புக்கள் நடிகர் திலகத்தின் படங்களாகியுள்ளன. படைப்பையும், படத்தையும் குறிப்பிடவும்.

i)அகிலன் ii) கல்கி iii) லக்ஷ்மி iv) ஜெயகாந்தன்

பகுதி - இ (மதிப்பெண்கள் : 6 x 5 = 30)

குறிப்பு:

i) எல்லா வினாக்களுக்கும் விடை தருக.

ii) ஒவ்வொரு வினாவிலும் தரப்பட்டுள்ள மாற்று வினாக்களில் ஏதேனும் ஒன்றுக்கு மட்டும் விடையளிக்கவும்.

46. பராசக்திக்கு முன் உள்ள சிவாஜி அவர்களின் நாடக உலகத் தகவல்கள் சிலவற்றைத் தொகுத்து எழுதுக. (குறைந்த பட்சம் 10 வரிகள்)

(அல்லது) நடிகர் திலகத்தின் திரைப்படங்களில் இடம்பெற்ற ஓரங்க நாடகங்களைப் பட்டியலிடுக. (குறைந்த பட்சம் 10 ஓரங்க நாடகங்கள்)

47. பீம்சிங் இயக்கிய நடிகர் திலகத்தின் படங்களைப் பட்டியலிடுக. (குறைந்த பட்சம் 15 படங்கள்)

(அல்லது) நடிகர் பாலாஜி தயாரிப்பில் வெளிவந்த நடிகர் திலகத்தின் திரைப்படங்களைப் பட்டியலிடுக. (குறைந்த பட்சம் 15 படங்கள்)

48. தங்கப்பதக்கம் எஸ்.பி.சௌத்ரி அவர்களின் அழகு முகத்தை ஓவியமாக வரைக.

(அல்லது) பாவமன்னிப்பு ரஹீம் கதாபாத்திரத்தின் தன்மைகள் சிலவற்றை விவரித்து எழுதுக. (குறைந்த பட்சம் 10 வரிகள்)

49. திருவிளையாடல் திரைப்படம் 100 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய திரையரங்குகளைக் குறிப்பிடுக.
(ஊர் - அரங்கு என்ற ஃபார்மெட்டில்) (குறைந்த பட்சம் 10 அரங்குகள்) (அல்லது)

வசந்த மாளிகை திரைப்படம் 100 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய திரையரங்குகளைக் குறிப்பிடுக.
(ஊர் - அரங்கு என்ற ஃபார்மெட்டில்) (குறைந்த பட்சம் 10 அரங்குகள்)

50. நடிகர் திலகமும் இளைய திலகமும் இணைந்து நடித்த திரைப்படங்களைப் பட்டியலிடுக. (குறைந்த பட்சம் 15 திரைப்படங்கள்)

(அல்லது) ராஜபார்ட் ரங்கதுரையில் நடிகர் திலகத்தின் விதவிதமான கெட்டப்புகளை(வேடங்களை) பட்டியலிடுக. (குறைந்த பட்சம் 10 கெட்டப்புகள்)

51. புதிய பறவை திரைப்படத்தின் கதையை விவரித்து எழுதுக. (குறைந்த பட்சம் 10 வரிகள்)

(அல்லது) என்னைப் போல் ஒருவன் சுந்தரமூர்த்தி, ஞான ஒளி அருண் - சிறு குறிப்பு வரைக.
(ஒவ்வொரு பாத்திரத்தைப் பற்றியும் குறைந்த பட்சம் 5 வரிகள்)

பகுதி - ஈ (மதிப்பெண்கள் : 10)

52. கீழ்வருவனவற்றைப் பொருத்துக :

1) 21.7.2004 i) நயாகரா நகர மேயராக தங்கச்சாவி

2) செவாலியே விருது ii) தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை

3) அமெரிக்க அரசு iii) வீரபாண்டிய கட்டபொம்மன்

4) நான் பெற்ற செல்வம் iv) எம்.கே.ராதா சிறப்பு தபால் உறை

5) பைலட் பிரேம்நாத் v) பிரான்ஸ்

6) பத்மினி பிக்சர்ஸ் vi) இந்திய-இலங்கை கூட்டுத் தயாரிப்பு

7) எகிப்து - கெய்ரோ vii) கர்ணன்

8) விஸ்வநாதன்-ராமமூர்த்தி viii) சேக்கிழார்

9) திருவருட்செல்வர் ix) ஆசிய-ஆப்பிரிக்க சிறந்த நடிகராக வெள்ளிப் பருந்து சிலை

10) பொற்கைப் பாண்டியன் x) ஏ.பி.நாகராஜன்

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

சிவாஜியியல் கேள்வித்தாள் தொகுப்பு : பம்மல் ஆர். சுவாமிநாதன் (பம்மலார்)

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

அன்புடன்,
பம்மலார்.

pammalar
23rd March 2010, 04:33 AM
தமிழ்த் திரையுலக மூவேந்தர்களில் ஒருவராகத் திகழ்ந்த காதல் மன்னன் ஜெமினி கணேசன் அவர்களுக்கு, இன்று (22.3.2010) ஐந்தாம் ஆண்டு நினைவு நாள். அமரர் ஜெமினிக்கு நமது இதய அஞ்சலி.

நடிகர் திலகத்துடன் காதல் மன்னன் இணைந்து நடித்த திரைக்காவியங்கள்:

1. பெண்ணின் பெருமை(1956)

2. பதிபக்தி(1958)

3. வீரபாண்டிய கட்டபொம்மன்(1959)

4. பாவமன்னிப்பு(1961)

5. பாசமலர்(1961)

6. கப்பலோட்டிய தமிழன்(1961)

7. பார்த்தால் பசி தீரும்(1962)

8. பந்தபாசம்(1962)

9. சரஸ்வதி சபதம்(1966)

10. கந்தன் கருணை(1967)

11. திருவருட்செல்வர்(1967)

12. உனக்காக நான்(1976)

13. நாம் பிறந்த மண்(1977)

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
23rd March 2010, 06:12 AM
டியர் பம்மலார்,
தங்களுக்கு தமிழ்த்திரையுலக கலைஞர்கள் மீது என்ன கோபமோ, என்ன காழ்ப்புணர்ச்சியோ என்ன வெறுப்போ தெரியவில்லை. அவற்றையெல்லாம் ஒரு சேர இப்படிப்பட்ட ஒரு தேர்வை உருவாக்கியிருக்கிறீர்கள்.
குறிப்பாக இந்தத் தேர்வில் பூஜ்யம் மார்க் வாங்குவோர்க்கு பம்பர் பரிசாக ஒரு வீடு கொடுத்தால் தமிழ்த்திரையலகின் முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும் போட்டி போடுவார்கள். அதே சமயம் இந்தத் தேர்வில் நூற்றுக்கு நூறு மார்க் வாங்கும் தமிழ்த்திரைக் கலைஞர்களை நாடு கடத்தவேண்டும் என்றும் அவர்கள் தமிழரல்லர் என்றும் உத்தரவிட வேண்டும். அதுதான் சிறந்த பரிசாக இருக்க முடியும்.

ராகவேந்திரன்

joe
23rd March 2010, 11:14 AM
தங்கப்பதக்கம், பட்டிக்காடா பட்டணமா, எங்கள் வீட்டு பிள்ளை, எங்க ஊரு ராஜா, உயர்ந்த மனிதன் உள்பட எம்ஜிஆர், சிவாஜி யின் பல சூப்பர் ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பி.என்.சுந்தரம் காலமானார் . ஆழ்ந்த அஞ்சலி :(

http://thatstamil.oneindia.in/movies/news/2010/03/23-pn-sundaram-passes-away.html

groucho070
23rd March 2010, 11:24 AM
RIP :(

pammalar
23rd March 2010, 01:33 PM
திரையுலக வரலாற்றில் பல வெற்றிப் படங்களுக்கும், குறிப்பாக நடிகர் திலகத்தின் பல மெகாஹிட் படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ள ஒளிப்பதிவு மாமேதை பி.என்.சுந்தரம் அவர்களின் மறைவுக்கு நமது இதயபூர்வமான அஞ்சலி. அவரது பிரிவால் வாடும் அவரது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள், திரையுலகத்தினர் ஆகியோருக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பம்மல் ஆர். சுவாமிநாதன்

saradhaa_sn
23rd March 2010, 06:13 PM
நடிகர்திலகத்தின் எங்க ஊர் ராஜா, ராமன் எத்தனை ராமனடி, ஞான ஒளி, பட்டிக்காடா பட்டணமா, ராஜபார்ட் ரங்கதுரை, தங்கப்பதக்கம், மன்னவன் வந்தானடி, மோகனப்புன்னகை போன்ற பல்வேறு வெற்றிப்படங்களை நம் கண்களுக்கு விருந்தாக்கிய ஒளிப்பதிவு மேதை திரு பி.என்.சுந்தரம் அவர்களின் மறைவு தமிழ்த்திரையுலகின் மிகப்பெரிய இழப்பு. அவரை பிரிந்து வாடும் அனைவரின் இழப்பிலும் பங்கேற்கிறோம்.

'தேவனே என்னைப்பாருங்கள்' பாடலில் மேகக்கூட்டம் நகரும் காட்சியைக் காணும்போதெல்லாம் இனி உங்கள் முகம்தான் எங்கள் கண்முன் தோன்றும்.

Murali Srinivas
23rd March 2010, 10:36 PM
நடிகர் திலகத்தின் பல படங்களுக்கு குறிப்பாக மாதவன் இயக்கிய பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்த பி.என்.சுந்தரம் அவர்களின் மறைவுக்கு இதய அஞ்சலி. சாரதா அவர்கள் சொன்னது போல தேவனே என்னைப் பாருங்கள் பாடல் காட்சி இருக்கும் வரை சுந்தரம் அவர்களின் பெயர் நிலைக்கும்.

Murali Srinivas
23rd March 2010, 10:53 PM
சுவாமி,

பத்திரிகை நடத்திய அனுபவம் உங்களுக்கு இருக்கிறது என்று தெரியும். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் வேலைப் பார்த்த அனுபவமும் உங்களுக்கு இருக்கிறது என்றே அனைவரும் நினைப்பர். அது போன்ற எண்ணம் உங்கள் கேள்வித்தாள் வடிவமைப்பை பார்க்கும் போது தோன்றுகிறது. நீங்கள் வைத்துள்ள சிவாஜியியல் தேர்வு அவரது வாழ்க்கை சரித்திரத்தை முழுவதும் கவர் செய்வது போல் அமைந்து விட்டது.





ராமண்ணா மிகுந்த சிரமத்துக்கிடையேதான் இப்படத்தை வெளிக்கொணர்ந்தார். இறுதியில் ரீ-ரிக்கார்டிங் செய்வதற்குக்கூட வசதியின்றி, மெல்லிசை மன்னரின் அனுமதியுடன் அவர் முன்னர் பல்வேறு படங்களுக்கு அமைத்திருந்த பின்னணி இசையை அப்படியே பயன்படுத்திக்கொண்டார். டைட்டில் மியூசிக் சொர்க்கம் படத்தினுடையது அப்படியே பயன்படுத்தப் பட்டிருந்தது. நடிகர்திலகத்தை அறிமுகப்படுத்தும் மியூசிக், ஊட்டிவரை உறவு படத்தில் நாகேஷ், கடையொன்றில் ஒரு ஆங்கிலோ இந்தியப்பெண்ணின் பார்சலில் இருந்து 'காணவில்லை' விளம்பரத்தைக் கிழிக்க முற்படும்போது வாசிக்கப்பட்ட இசை. இப்படி பல்வேறு படங்களில் இருந்து பொருத்தமாக இணைத்திருந்தார். (சொன்னால்தான் மற்றவர்களுக்கே தெரியும். மற்றபடி இப்படத்துக்காகவே அமைக்கப்பட்ட ரீரிக்கார்டிங் போலவே இருக்கும்). நடிகர்திலகத்தின் காட்சிகள் எல்லாம் வெகுநாட்களுக்கு முன்பே முடிக்கப்பட்டிருந்தபோதிலும், தயாரிப்பாளரின் வேறு பல காரணங்களால் படம் தாமதப்பட்டது. நடிகர்திலகம் நடித்த ஒன்றிரண்டு சிறிய காட்சிகள் மட்டும் கடைசியில் எடுக்கப்பட்டு இணைக்கப்பட்டன. பள்ளியின் 'பெற்றோர் தின விழாவுக்கு' சேகரின் குழந்தைகள் சுந்தரமூர்த்தியை அழைக்கும் காட்சியும், மாடியிலிருந்து உருண்டுவிழும் பெண் குழந்தையை சுந்தரமூர்த்தி தூக்கும் காட்சியும் கடைசியில் எடுக்கப்பட்டன. (இந்தக்காட்சியில்கூட நடிகர்திலகத்தின் சட்டை, தோள்பட்டையில் கிழிந்திருக்கும். அதைக்கூட கவனிக்காமல் எடுத்திருப்பார் ராமண்ணா).



:o enga irundhu indha information ellam pudikkireenga ??? Amazing !!! It really helps people like me to know more about the making of such great films and that's one of the reasons for my addiction to this thread.

மோகன்,

சாரதாவின் ஆழ்ந்த கவனிப்பு வெளிப்படும் இடங்களில் இதுவும் ஒன்று. அவருக்கு பிடித்த படம் என்றால் இது போன்ற பல நுண்ணிய தகவல்களை எதிர்பார்க்கலாம். என்னைப் போல் ஒருவன் படம் தாமதமாக வெளியானதற்கு நடிகர் திலகம் எந்த விதத்திலும் காரணமில்லை என்பதை உதாரணத்தோடு சொல்லியிருக்கிறார். நடிகர் திலகத்தின் மேல் தவறில்லை என்பதற்கு மேலும் ஒரு உதாரணம் படத்தின் சென்சார் சான்றிதழ் பார்த்தால் தெரியும். படம் சென்சார் செய்யப்பட்ட தேதி 1976 டிசம்பர் 31 -ந் தேதி. அதன் பிறகு 14 மாதங்கள் கழித்துதான் ராமண்ணா படத்தை வெளியிட்டார். நடிகர் திலகத்தின் வேறு சில படங்களுக்கு சொன்னது போல் இந்த படமும் தாமதமில்லாமல் வந்திருந்தால் மிகப் பெரிய வெற்றியை பெற்றிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அன்புடன்

rajeshkrv
24th March 2010, 03:13 AM
Some more AMRaja songs for Shivaji

http://www.youtube.com/watch?v=9Ev_vECibzM

http://www.youtube.com/watch?v=r6XgTP5MwOc

pammalar
24th March 2010, 04:52 PM
சுவாமி,

பத்திரிகை நடத்திய அனுபவம் உங்களுக்கு இருக்கிறது என்று தெரியும். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் வேலைப் பார்த்த அனுபவமும் உங்களுக்கு இருக்கிறது என்றே அனைவரும் நினைப்பர். அது போன்ற எண்ணம் உங்கள் கேள்வித்தாள் வடிவமைப்பை பார்க்கும் போது தோன்றுகிறது. நீங்கள் வைத்துள்ள சிவாஜியியல் தேர்வு அவரது வாழ்க்கை சரித்திரத்தை முழுவதும் கவர் செய்வது போல் அமைந்து விட்டது.



டியர் முரளி சார்,

பல நாட்கள் சிந்தித்து சிந்தித்து, அந்த சிந்தனைகள் செயல்வடிவம் பெற்றதன் வெளிப்பாடே, இந்த சிவாஜியியல் கேள்வித்தாள். தாங்கள் அளித்துள்ள மனம் திறந்த பாராட்டுக்களே இது போன்ற முயற்சிகளுக்கு கிடைக்கும் மாபெரும் வெற்றி. தங்களது பாராட்டுக்களுக்கு எனது ஆத்மார்த்தமான நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
24th March 2010, 06:32 PM
Dear friends,
There has been a discussion going on about the Shanthi Theatre 50 years banner, at the following link:
http://onlysuperstar.com/?p=6299

Interesting

Raghavendran

pammalar
24th March 2010, 07:10 PM
Dear Mr.Rajesh,

Thanks a lot for the lovely links of rare NT film songs.

The first song THIRAI POTTU NAAMAEY is from the film RAJA RANI(1956). Sivaji & Padmini - One of the best romantic pairs in the annals of World Cinema. The playback here for NT is voiced by AMRaja and his wife Jikki for Padmini. The song is set to tune by TRPapa and the lyrics are penned by A.Maruthakasi. Every nerve in the face of NT acts and his walk & body language are simply superb. Padmini also does a fine job in the song. This song is the last capsule in the film, which comes in the film after the climax. Perhaps, with this song the film ends on a graceful note. This kind of practice of inserting a song even after the climax and finishing the film in a musical fashion was an accepted & popular formula in the films of 1950s. Anyway, THIRAI POTTU NAAMAEY is a scintillating song.

The other number YENNA YENNA INBAMAEY is from ANBU, NT's 6th film, which came in 1953. The same pair in romance with a piano for their company. The music for the song is from none-other-than again TRPapa and the same gifted melodious couple gift their voices for the romantic couple. Kavignar Kaa.Mu.Sharif has penned the lyrics for this song. As we all know, NT entered filmdom with a bang through PARASAKTHI. This electrifying entry's after-effects are very much proven in a line in this song. As mentioned earlier, ANBU is only NT's Sixth film. In the Charanam of this song.

NT Sings KARPANAI MAEYVUM KAAVIYAM NEEYAEY & (கற்பனை மேவும் காவியம் நீயே)

Padmini replies KAAVIYAM POTTRUM KALAIGNANUM NEEYAEY (காவியம் போற்றும் கலைஞனும் நீயே)

Aaha! Aaha!! A delightful treat for die-hard NT Fans!!!

(This kind of lines are enough ample proofs that NT has conquered Tamil Film World right from 1952 itself)

By-the-by, this is the first film in which NT plays a musical instrument.

Once again Mr.Rajesh, Thank you so much for the two excellent links!

Regards,
Pammalar.

RAGHAVENDRA
24th March 2010, 07:40 PM
Dear Pammalar,
If NT is included in the syllabus on cinema, your question paper will be the one used to test the students - hope it's not far away.

A small info: NT plays a mrdangam and violin while Padmini dances - a rare scenario - in a female solo song - in the film Illara Jyothi. This song was the inspiration for featuring 5 sivajis in the song Paattum Naane Bhavamum Naane from Thiruvilaiyadal. I shall try to provide the audio link for that song (if it's available online) and an image of that scene.

Raghavendran

RAGHAVENDRA
24th March 2010, 09:05 PM
An image of the poster for Sivaji Week at the Mahalakshmi Theatre, Chennai:
http://s872.photobucket.com/albums/ab289/ragasuda/?action=view&current=mahalakshmisivajiweekmarch10.jpg

Raghavendran

pammalar
25th March 2010, 12:24 AM
Please click the following link for a Visual Feast with regard to the Sivaji Treat at Chennai Mahalakshmi:

http://pammalar.webs.com/apps/photos/album?albumid=8540602

Happy Viewing,
Pammalar.

saradhaa_sn
25th March 2010, 11:29 AM
வசந்த் தொலைக்காட்சியில் புதன் தோறும் ஒளிபரப்பாகும் 'சிங்கத்தமிழன் சிவாஜி' தொடர் நிகழ்ச்சியின் நேற்றைய (23.03.2010) எபிசோட்டில் கலந்துகொண்டு நடிகர்திலகத்தைப்பற்றிய அரிய பல விஷயங்களை வழங்கியவர், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் பாராளுமன்ற் உறுப்பினருமான திரு இரா. அன்பரசு அவர்கள். காங்கிரஸ் தலைவராதலால், அவருடைய உரை நடிகர்திலகத்தின் திரைப்படங்களைபற்றியல்லாது, காங்கிரஸ் பேரியக்கத்தில் அவருடைய பங்களிப்பின் அரிய தொகுப்பாக அமைந்தது. அவருடைய உரையிலிருந்து சில துளிகள்.....

"நடிகர்திலகத்தின் ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் ஆயிரக்கணக்கில் தொண்டர்களும் ரசிகர்களும் அன்னை இல்லத்தில் காலைமுதல் இரவு வரை அவருக்கு வாழ்த்துச்சொல்லிச் சென்றவண்னம் இருப்பார்கள். அனைவரும் சென்ற பின்னர் அவர்கள் விட்டுச்சென்ற செருப்புக்கள் இரவில் ஒரு லாரியில் ஏற்றி வெளியேற்றப்படும். ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் அவர் இல்லத்தில் விருந்துக்கழக்கப்படுவோரில் நானும் கண்டிப்பாக இருப்பேன். பிறந்தநாளின்போது அவருக்கு அளிக்கப்படும் பல்வேறு பரிசுப்பொருட்களை அவர் தனக்கென்று வைத்துக்கொள்ளமாட்டார். அங்கு வந்திருக்கும் ரசிகர்களுக்கு அளித்துவிடுவார்.

எப்போதுமே மிகவும் வெளிப்படையாக மனதில் இருப்பதை அப்படியே பேசும் வழக்கமுள்ளவராக இருந்தார். மனதில் ஒன்றை மறைத்துக்கொண்டு வெளியில் வேறொன்றைப்பேசி நிஜவாழ்க்கையில் நடிக்கத்தெரியாதவராக இருந்தார். அதனாலேயே அரசியலில் பலரால் ஏமாற்றத்துக்குள்ளானார்.

ஒவ்வொரு தேர்தலின்போதும் அவருக்கான சுற்றுப்பயணம் தனியாக தயாரிக்கப்படும். சிவாஜி அவர்கள் இருந்தவரையில் அவர் எந்த தேர்தல் பிரச்சாரத்திலும் பங்கேற்காமல் இருந்ததில்லை. அதிலும் குறிப்பாக அப்போது காங்கிரஸ் பேரியக்கத்துக்கு பெரிய தொண்டர் பாசறையாக செயல்பட்டதே அவரது ரசிகர் மன்றங்கள்தான். (இதை மிகவும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்). ஒவ்வொரு தேர்தலின்போதும் சிவாஜி ரசிகர்களின் உழைப்பு, காங்கிரஸுக்கு பெரிய பலமாக அமைந்தது.

சிவாஜி அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமிக்க வேண்டும் என இந்திராகாந்தியிடம் அப்போது ராணுவ அமைச்சராக இருந்த ஆர்.வெங்கட்ராமன் தெரிவித்திருந்தார். அதை ஏற்று அது தொடர்பாக நேர்முக பேட்டிக்கு வருமாறு டெல்லிக்கு இந்திகாந்தி அம்மையார் அழைத்தார். சிவாஜி அவர்களுடன் நானும் டெல்லி சென்றிருந்தேன். வழக்கமாக இந்திரா அம்மையாரை சந்திக்க யார் சென்றாலும் அவர் அலுவலக அறையில் இருப்பார், போகின்றவர்கள்தான் வணக்கம் செய்துவிட்டு உள்ளே செல்வார்கள். ஆனால் சிவாஜி அவர்கள் சென்றபோது, இந்திரா அம்மையார் வாசல் வரை எழுந்துவந்து வரவேற்று அழைத்துச்சென்றார். கிட்டத்தட்ட அப்போது அவரையே தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமிக்க முடிவு செய்தபோதிலும் அது நடைபெறவில்லை. அதற்கு கட்சியில் நிலவிய உட்கட்சிப்பூசல்தான் காரணம் என்று நான் அடித்துச்சொல்வேன். அப்போதுமட்டும் அவர் தலைவராகியிருந்தால், அப்போதே தமிழ்நாட்டில், இப்போது நாம் சொல்லிவரும் 'காமராஜ் ஆட்சி' ஏற்பட்டிருக்கும். அப்படி நடக்காமல் போனதால்தான் இன்னும் நாம் மாநிலக்கட்சிகளுக்கு மாறி மாறி பல்லக்குத் தூக்கிக்கொண்டிருக்கிறோம். (நெத்தியடி)

அவரது திரைப்படங்களில் எப்போதும் தேசியம் இடம்பெற்றிருக்கும். அவர் பங்குபெறும் காட்சிகளில் பின்னணியில் பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் படம் இருக்கும்படி பார்த்துக்கொள்வார். அதுபோல அவரது படங்களின் பாடல்களில் பெருந்தலைவர் அவர்களைப்பற்றி புகழ்ந்து பாடும் வரிகளை சேர்க்கச்சொல்வார். தேசியம் அவரது ரத்தத்தில் ஊறியிருந்ததால்தான் யாருமே ஏற்றிராத பல்வேறு தேசியத்தலைவர்களின் பாத்திரமேற்று நடித்து மக்கள் மத்தியில் எழுச்சியை உண்டாக்கினார். (இந்த இடத்தில் பகவத்சிங், திருப்பூர் குமரன் கிளிப்பிங்குகள் காண்பிக்கப்பட்டன).

தமிழ்நாட்டில் அதிகமான இடங்களில் பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் சிலை இடம்பெற்றுள்ள்தென்றால் அதற்கு முழுமுதற்காரணம் அண்ணன் சிவாஜி அவர்கள்தான். அதிகமான காமராஜ் சிலைகளின் பீடத்திலுள்ள கல்வெட்டைக் கவனித்தோமானால், அவற்றைத்திறந்து வைத்தவர் அண்னன் சிவாஜி அவர்கள்தான். தன்னை தங்கள் ஊருக்கு வரும்படி அழைக்க வரும் தொண்டர்கள்/ரசிகர்களிடம் 'உங்கள் ஊரில் பெருந்தலைவர் சிலையை நிறுவ ஏற்பாடு செய்யுங்கள், நான் வந்து திறந்து வைக்கிறேன்' என்று சொல்லியே ஊருக்கு ஊர் தலைவர் சிலை ஏற்படக் காரணமாயிருந்தவர் அண்னன் சிவாஜி அவர்கள். (அடுத்து அன்பரசு அவர்கள் சொன்ன விஷயம் சிலிர்க்க வைத்தது).

பெருந்தலைவர் ஆணைப்படி தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வுப்போராட்டத்தை முன்னின்று நடத்திய அண்னன் சிவாஜி அவர்கள், அந்தப்போராட்டத்தில் கலந்துகொள்வோர் பட்டியலை, தொண்டர்களின் முகவரிகளோடு சேகரிக்க அந்தந்த பகுதி மன்ற பொறுப்பாளர்களுக்கு உத்தரவிட்டார். முகவரி எதற்கென்றால், தொண்டர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்க நேர்ந்தபோது அவர்களின் குடும்பங்களுக்கு பண உதவி செய்தார். தமிழ்நாட்டில் எந்த கட்சித்தலைவரும் செய்யாத அரிய செயல் இது.

அதுபோல கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரிய வெள்ளம் வந்தபோது, 16 பேரைக்காப்பாற்றிய சிவாஜி ரசிகருக்கு, அப்போதைய அரசு 'வீர இளைஞர்' பட்டம் வழங்கியது. 'நீங்கள் என்ன பட்டம் வழங்குவது?. நான் வழங்குகிறேன்' என்று அவ்விளைஞருக்கு சென்னையில் பாராட்டுவிழா நடத்தி 'வீர இளைஞர்' பட்டம் அளித்ததோடு நில்லாமல் பணமுடிப்பும் வழங்கி கௌரவித்தவர் அண்ணன் சிவாஜி அவர்கள்.

1975 அக்டோபர் முதல்தேதி அவரது பிறந்தநாள்விழாவுக்கு வழக்கம்போல் ஏராளமான ரசிகர்களும், தொண்டர்களும் , திரைப்பட நடிகர்களும் வந்து வாழ்த்துச்சொல்லி சென்றவண்ணம் இருந்தனர். ஆனாலும் அண்ணன் சிவாஜி அவர்களுக்கு பெருந்தலைவர் அவர்கள் இன்னும் வரவில்லையே என்று மனதில் ஒரு தவிப்பு இருந்தது. அதே நேரம் திருமலைப்பிள்ளை ரோட்டில் தனது இல்லத்தில் உடல்நலமின்றி இருந்த பெருந்தலைவர் அவர்களுக்கு, 'சிவாஜியின் பிறந்தநாளில் அவரை வாழ்த்தப்போக முடியவில்லையே' என்ற துடிப்பு இருந்தது. ஒரே நேரத்தில் இருவருக்கும் ஒரே மாதிரியான தவிப்பு. இறுதியில் அங்கிருந்த குமரி அனந்தன், மணிவர்மா ஆகியோரிடம் 'புறப்படுங்கள், சிவாஜி வீட்டுக்குப்போவோம்' என்று காரில் கிளம்பிவிட்டார். தலைவர் புறப்ப்ட்டு விட்டார் என்ற செய்தி கிடைத்ததுமே அண்ணன் சிவாஜி அவர்கள் வீட்டுக்குவெளியே வந்து தலைவரை எதிர்பார்த்து நின்றவர், அவர் காரிலிருந்து இறங்கியதும் அவரது கைகளிரண்டையும் பிடித்துக் கண்ணில் ஒற்றிக்கொண்டு உணர்ச்சிவசப்பட்டார். எல்லோரையும் வீட்டுக்குள் அழைத்துச்சென்றார். தலைவர் அண்னன் சிவாஜியை வாழ்த்திவிட்டு சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு புறப்பட்டார். பெருந்தலைவர் கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி அண்ணன் சிவாஜி அவர்களின் பிறந்த நாள்தான். மறுநாள் பெருந்தலைவர் மறைந்தார்.

அண்ணன் சிவாஜி அவர்களுடைய கனவெல்லாம் தமிழ்நாட்டில் மீண்டும் 'காமராஜ் ஆட்சி' அமைய வேண்டுமென்பதாகவே இருந்தது. எனவே அவர் கனவு கணடது போல தழகத்தில் 'காமராஜ் ஆட்சி' அமையச்செய்வதே அவருக்கு நாம் செய்யும் பெரிய கைம்மாறு ஆகும் என்று கூறி விடைபெறுகிறேன்".

(காங்கிரஸ் பேரியக்கத்தில் நடிகர்திலகத்தின் பங்களிப்பு பற்றிய அரிய பல தகவல்களைத்தந்த அன்பரசு ஐயா அவர்களுக்கு சிவாஜி ரசிக நெஞ்சங்களின் நன்றிகள்).

pammalar
25th March 2010, 12:54 PM
சகோதரி சாரதா,

தேசிய திலகம், இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்திற்கு ஆற்றிய அரும்பெரும் தொண்டுகளை, அளப்பரிய பங்களிப்பை ஒளிவு மறைவில்லாமல், எவருக்கும் அஞசாமல், எதையும் மறைக்காமல், இருட்டடிப்பு செய்யாமல் உள்ளதை உள்ளபடியே உண்மையாக உரைத்த பெருமதிப்பிற்குரிய திரு.இரா. அன்பரசு அவர்களுக்கு பல கோடி நன்றிகள்!

ஒவ்வொரு வாரமும், புதனன்று, வசந்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிங்கத்தமிழன் சிவாஜி நிகழ்ச்சியை, கர்ம சிரத்தையோடு, சிறப்பு பதிவுகளாக, நமது நடிகர் திலகம் திரியில் தொடர்ந்து தொகுத்தளித்து வரும் தங்களது திருத்தொண்டு போற்றுதலுக்குரியது, பாராட்டுக்களுக்குரியது. தங்களுக்கு சிவாஜி சமூகமே நன்றிகளைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளது.

பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்! நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

sankara1970
25th March 2010, 01:35 PM
Thiru Anbaru vin expressions in vasanth tv programme on NT -athai Sahothari sarathavin ezuthkalil padikum podu arumai.

J.Radhakrishnan
25th March 2010, 02:09 PM
சகோதரி சாரதா அவர்களே,
Vasanth Tv-ல் இரா அன்பரசு அவர்கள் கூறியபடி பெருந்தலைவர் அவர்கள் கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சி அண்ணன் சிவாஜி அவர்களின் பிறந்த நாள்தான். மறுநாள் பெருந்தலைவர் மறைந்தார்.

இதே போல் அண்ணா அவர்கள் கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சி நடிகர் திலகத்தின் 125 வது படமான உயர்த்த மனிதன் திரைப்பட விழா ஆகும்

நடிகர் திலகம் அவர்களே தன்னால் மறக்க முடியாத நிகழ்ச்சி என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்கள்.

Radhakrishnan.

HARISH2619
25th March 2010, 05:26 PM
திரு பம்மல் சார்,
சிவாஜியியல் கேள்வித்தாள் அருமை.அதற்க்குரிய பதில்களை படித்தாலே நடிகர்திலகத்தின் வாழ்க்கை சரித்திரத்தை படித்த நிறைவு உண்டாகும்.நடிகர்திலத்தின் பழைய பட தகவல்களை இவ்வளவு துல்லியமாக தெரிந்துவைத்திருப்பது வியக்க வைக்கிறது.நடிகர்திலகத்தின் மீதான தங்களின் பக்தி சிலிர்க்க வைக்கிறது.சிவாஜி வாரம் பற்றிய செய்தியும் நோட்டீசும் அருமை.ஞாயிறு மாலை பூமாலை,பாலபிஷேகம்,தீபாராதனை என்று தியேட்டரே அமர்க்களப்பட போகிறது

சாரதா மேடம்,
சிங்கத்தமிழன் சிவாஜி நிகழ்ச்சியை பார்க்க வாய்ப்பில்லாத என்னை போன்றவர்களுக்கு தங்களின் தொகுப்பு ஒரு வரப்பிரசாதம்.வாழ்த்துக்கள்.

Murali Srinivas
26th March 2010, 12:15 AM
குமரி அனந்தன், அன்பரசு, இளங்கோவன்,சிதம்பரம் போன்றவர்கள் முழு மனதோடு முயற்சித்தால் இப்போதும் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் மூலமாக காங்கிரஸ் பேரியக்கத்தை தமிழகத்திலே வலிமையான இயக்கமாக மாற்றலாம். நடிகர் திலகத்தின் கனவையும் நிறைவேற்றலாம்.

நன்றி சாரதா.

இதை சொல்லும் போது நீங்கள் இரண்டு மூன்று முறை குறிப்பிட்ட ஒரு விஷயம் [நாம் இப்போது பகிர்ந்து கொண்ட விஷயத்திற்கு தொடர்பில்லை என்றாலும்] நினைவுக்கு வருகிறது. மார்ச் 26, 1971 குலமா குணமா வெளியான நாள். 39 வருடங்கள் நிறைவு பெறுகின்றன. 1971-ம் வருடத்தில் நடிகர் திலகத்தின் முதல் நூறு நாட்கள் ஓடிய படம் என்று சாரதா குறிப்பிடுவார். உண்மை, ஆனால் அதே நேரத்தில் வெளியான மற்ற படங்களும் அந்த வெற்றிகோட்டை தொட வேண்டியவை தான். அவை அதை தொட முடியாமல் போனது மக்கள் ஆதரவு இல்லாததால் அல்ல. மாறாக அவை நல்ல முறையில் ஓடியும் தியேட்டர், விநியோகஸ்தர்களின் ஒத்துழைப்பு இல்லாதாதால் மாற்றப்பட்டது. இரு துருவம், தங்கைக்காக மற்றும் அருணோதயம் இவற்றையே குறிப்பிடுகிறேன். குறிப்பாக தங்கைக்காக மற்றும் அருணோதயம் படங்கள்.

குலமா குணமாவைப் பொறுத்த வரை கே.எஸ்.ஜி. படத்திற்கு பெயர் வைப்பதில் தன்னுடைய பணமா பாசமா வெற்றியின் hang over -லியே இருந்தார் என்பதற்கு இந்த படமும் ஒரு உதாரணம். இதற்கு பிறகு கே.எஸ்,ஜி. மீண்டும் நடிகர் திலகத்துடன் இணைய 14 வருடங்கள் காத்திருக்க வேண்டி வந்தது [படிக்காத பண்ணையார்-1985]. இந்த படத்திற்கு பிறகு ஜெய்சங்கர் மீண்டும் 10 வருடத்திற்கு பிறகே நடிகர் திலகத்துடன் கீழ்வானம் சிவக்கும் படத்தில் சேர்ந்து நடித்தார். நாட்டியப் பேரொளியோ 15 வருடங்கள் காத்திருந்து 1986 -ல் தாய்க்கு ஒரு தாலாட்டு மூலம் இணைந்தார் [வெகு நாட்களாக தயாரிப்பில் இருந்து அதே 1971-ம் வருடம் வெளியான தேனும் பாலும் படத்தையும் 1977-ல் பிளாஷ் பாக்கில் ஒரே ஒரு காட்சியில் அம்மாவாக தோன்றிய தீபம் படத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை]. இதை தவிர வாணிஸ்ரீயின் நடிப்பு திறமையை வெளிக் கொணர்ந்த படம் இது. மாஸ் ரசிகர்களுக்காக மசாலா படங்களில் அதிகமாக நடிக்கிறார் என்று சொல்லப்பட்ட நேரத்தில் எந்த காலத்திலும் தன்னால் முன் போன்றே கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வெற்றிக் கொடி நாட்ட முடியும் என்று நடிகர் திலகம் நிரூபித்த படம் குலமா குணமா.

அன்புடன்

pammalar
26th March 2010, 03:29 AM
சிவாஜி நியூஸ்

சென்னையில் நாளை வெள்ளிக்கிழமை (26.3.2010) நடைபெற உள்ள நடிகர் திலகத்தின் நிகழ்ச்சிகள்:

1. தங்கத்தமிழ்ப் பெருமகனின் வெள்ளித்திரைத் திருவிழா - செவாலியே சிவாஜி வாரம் (முதல் நாள்) - பெரம்பூர் மஹாலட்சுமி திரையரங்கம் - மன்னவன் வந்தானடி திரைக்காவியம் - நண்பகல் 2:30, மாலை 6:15, இரவு 9:45

2. செல்வாவின் சிவரஞ்சனி இசைக் குழுவினர் வழங்கும் இன்னிசை மழை - இரு சிகரங்களின் காலத்தால் அழியாத பாடல்கள் - நடிகர் திலகம், மக்கள் திலகம் திரைப்படப் பாடல்கள் இன்னிசை நிகழ்ச்சி - ராஜா அண்ணாமலை மன்றம், பிராட்வே - மாலை 6:30

அன்புடன்,
பம்மலார்.

pammalar
26th March 2010, 04:13 AM
Tomorrow (26.3.2010) at 6:30 PM , A Musical Treat at Chennai Raja Annamalai Mandram.

Please click the following link to have a Visual Treat of the above function:

http://pammalar.webs.com/apps/photos/album?albumid=8552310

Happy Viewing,
Pammalar.

Karikalen
26th March 2010, 06:47 AM
http://cinema.dinamalar.com/tamil-news/1919/cinema/Kollywood/Actor-Kamalhasan-speaks-about-Cine-personalites.htm

Can anyone elaborate on which period Kamal is talking about when he refers to NT's 13 films that did not succeed commercially.

HARISH2619
26th March 2010, 01:52 PM
Dear murali sir,
I have sent a mail to your yahoo ID.please check it out and reply

Murali Srinivas
27th March 2010, 12:28 AM
சிவாஜி வாரம் இனிதே துவங்கியது என செய்தி வந்திருக்கிறது. மன்னவன் வந்தானடி படத்தின் இன்றைய மதியக் காட்சிக்கே கணிசமான மக்கள் வந்திருந்ததாக சொன்னார்கள். இதை பற்றிய மேலும் பல செய்திகளுடனும், தியேட்டர் புகைப்படங்களுடனும் சுவாமி சற்று நேரத்தில் இங்கு வந்து அவற்றை வெளியிடுவார்.

மாலை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற மெல்லிசை கச்சேரியும் ரசிக்கும்படியாக இருந்தது என்ற தகவலும் வந்திருக்கிறது.

கரிகாலன்,

அப்படி ஒரு காலகட்டமே இல்லை. தொடர்ந்து 2, 3 படங்கள் தோல்வி அடைந்திருக்கலாம். ஆனால் தொடர்ந்து 13 படங்கள் எந்தக் காலத்திலும் இல்லை. சில படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்தாலும் மீண்டும் வெற்றி பெறக் கூடிய திறமை படைத்தவர் என்பதை குறிப்பிடுவதாகவே அப்படி ஒரு உதாரணம் காட்டப்பட்டிருக்கிறது என்பது என் எண்ணம்.

அன்புடன்

Harish, replied.

pammalar
27th March 2010, 02:08 AM
சிவாஜி நியூஸ்

சென்னையில் நாளை சனிக்கிழமை (27.3.2010) நடைபெற இருக்கும் நடிகர் திலகத்தின் நிகழ்ச்சிகள்:

1. திருமயிலை கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனிப் பெருவிழாவில் அறுபத்துமூவர் திருவிழா - நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவையின் சார்பில் மோர்ப்பந்தல் - கோவில் தெப்பக்குளத்துக்கு அருகாமையில் - நண்பகல் 1:00

2. தங்கத்தமிழ்ப் பெருமகனின் வெள்ளித்திரைத் திருவிழா - செவாலியே சிவாஜி வாரம் (இரண்டாம் நாள்) - பெரம்பூர் மஹாலட்சுமி திரையரங்கம் - கௌரவம் திரைக்காவியம் - பிற்பகல் 2:30, மாலை 6:15, இரவு 9:45

அன்புடன்,
பம்மலார்.

pammalar
27th March 2010, 03:01 AM
தங்கத்தமிழ்ப் பெருமகனின் வெள்ளித்திரைத் திருவிழா - செவாலியே சிவாஜி வாரம்

26.3.2010 - வெள்ளி - மன்னவன் வந்தானடி - மொத்த வசூல் விவரம் (சற்றேறக்குறைய)

பிற்பகல் 2:30 மணிக் காட்சி = ரூ.3,800/- (ரூபாய் மூவாயிரத்து எண்ணூறு)

மாலை 6:15 மணிக் காட்சி = ரூ. 3,500/- (ரூபாய் மூவாயிரத்து ஐநூறு)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
27th March 2010, 03:34 AM
Please click the following link to have a Visual Treat of the Sivaji Week at Chennai Mahalakshmi.

(All the outdoor photos were shot at the Hot Spot [Mahalakshmi Theatre Entrance])

http://pammalar.webs.com/apps/photos/album?albumid=8540602

Happy Viewing,
Pammalar.

saradhaa_sn
27th March 2010, 12:58 PM
Please click the following link to have a Visual Treat of the Sivaji Week at Chennai Mahalakshmi.

(All the outdoor photos were shot at the Hot Spot [Mahalakshmi Theatre Entrance])

http://pammalar.webs.com/apps/photos/album?albumid=8540602

டியர் பம்மலார்....

சென்னை புரசை மகாலட்சுமி திருக்கோயில் கும்பாபிஷேக புகைப்படத்தொகுப்பு அருமை. பல்வேறு மன்றங்களின் உழைப்பை நன்கு பறைசாற்றும் வண்ணம் அரங்க முகப்பு களைகட்டியுள்ளது. மன்றங்களெல்லாம் இப்படி ஒரு சந்தர்ப்பம் எப்போ, எப்போ என்று காத்திருந்த தவிப்பு தெரிகிறது. அட்டகாசம். .

இதனை அனைத்துலக ரசிகர்களின் பார்வைக்கு அளித்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

J.Radhakrishnan
27th March 2010, 10:07 PM
பம்மலார் அவர்களே சகோதரி சாரதா அவர்கள் சொன்னது போல் மகாலட்சுமி திரை அரங்கம் கோலாகலம் கொண்டிறிருக்கும் என்று சந்தேகம் இல்லை

joe
27th March 2010, 10:18 PM
Please click the following link to have a Visual Treat of the Sivaji Week at Chennai Mahalakshmi.

(All the outdoor photos were shot at the Hot Spot [Mahalakshmi Theatre Entrance])

http://pammalar.webs.com/apps/photos/album?albumid=8540602

Happy Viewing,
Pammalar.

:clap: :D

pammalar
28th March 2010, 02:22 AM
சிவாஜி நியூஸ்

சென்னையில் நாளை ஞாயிற்றுக்கிழமை (28.3.2010) நடைபெற உள்ள நடிகர் திலகத்தின் நிகழ்ச்சிகள்:

1. தங்கத்தமிழ்ப் பெருமகனின் வெள்ளித்திரைத் திருவிழா - செவாலியே சிவாஜி வாரம் (மூன்றாம் நாள்) - பெரம்பூர் மஹாலட்சுமி திரையரங்கம் - எங்கள் தங்க ராஜா திரைக்காவியம் - பிற்பகல் 2:30, மாலை 6:15, இரவு 9:45

2. ஞாயிறு மாலை ரசிகர் காட்சியை முன்னிட்டு சிறப்பு ஆராதனைகள்:

4:00 மணிக்கு அண்ணலின் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம்

4:29 மணிக்கு புஷ்ப அலங்காரம்

5:15 மணிக்கு வாண வேடிக்கை

6:00 மணிக்கு தீபாராதனை

3. ஞாயிறு மாலைக் காட்சிக்கு வருகை தரும் முக்கிய பிரமுகர்கள்:

* தளபதி திரு. ஜி. ராம்குமார், நடிகர் திலகத்தின் மூத்த புதல்வர், திரைப்பட அதிபர்

* திரு.ஹெச். வசந்தகுமார், எம்.எல்.ஏ, வசந்த் & கோ அதிபர்

அன்புடன்,
பம்மலார்.

pammalar
28th March 2010, 02:44 AM
தங்கத்தமிழ்ப் பெருமகனின் வெள்ளித்திரைத் திருவிழா - செவாலியே சிவாஜி வாரம்

26.3.2010 - வெள்ளி - மன்னவன் வந்தானடி - மொத்த வசூல் விவரம் (சற்றேறக்குறைய)

இரவு 9:45 மணிக் காட்சி = ரூ. 2,500/- (ரூபாய் இரண்டாயிரத்து ஐநூறு)

27.3.2010 - சனி - கௌரவம் - மொத்த வசூல் விவரம் (சற்றேறக்குறைய)

பிற்பகல் 2:30 மணிக் காட்சி = ரூ. 2,500/- (ரூபாய் இரண்டாயிரத்து ஐநூறு)

மாலை 6:15 மணிக் காட்சி = ரூ. 3,100/- (ரூபாய் மூவாயிரத்து ஒரு நூறு)

# நடிகர் திலகத்தின் பக்தர், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரா அவர்கள் கௌரவம் திரைக்காவியத்தை மேட்னி ஷோவில் கண்டு களித்தார்.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
28th March 2010, 03:45 AM
Chevaaliye Sivaji Week at Chennai Mahalakshmi (Latest Update):

http://pammalar.webs.com/apps/photos/album?albumid=8540602

Happy Viewing,
Pammalar.

Karikalen
28th March 2010, 06:49 AM
Thanks Murali Saar for the update.

sankara70
28th March 2010, 12:25 PM
It's feel like we are back to 70s

J.Radhakrishnan
28th March 2010, 09:36 PM
பம்மலார் அவர்களே தங்களின் சிவாஜி இயல் கேள்வித்தாள் நன்றாக இருந்தது. அதை பார்க்கும் போது நடிகர்திலகத்தின் சகோதரர் மறைந்த திரு சண்முகம் அவர்கள் பற்றி தகவல்கள் எதுவும் தங்களிடம் உள்ளதா?

RAGHAVENDRA
28th March 2010, 10:49 PM
1973 திரும்பியது...
இதைத்தான் மனது சொல்ல நினைக்கிறது

28.03.2010 மாலை சென்னை பட்டாளம் மஹாலக்ஷ்மி திரையரங்கில் எங்கள் தங்க ராஜா படத்துக்கு வருகை புரிந்த என்னைப் போன்ற பழைய ரசிகர்கள் மனதில் ஒரு மனதாக உருவாகிய கருத்து இதுவாகத்தான் இருக்க முடியும்.

ஒரு பத்து நிமிடம் முன்னதாக சென்றிருந்தால் தளபதி ராம்குமார் அவர்கள் பேச்சைக் கேட்டிருக்க முடியும். தாமதமாகி விட்டது. அது ஒரு குறை.

மற்றபடி சுமார் 5.30 மணியளவில் அரங்கிற்குச் சென்றபோது அங்கே கூடியிருந்த ரசிகர்களைக் கண்டவுடன் உள்ளத்தில் பொங்கிய உவகைக்கு அளவேது.

வெடிச்சத்தம் ஒரு பக்கம் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. இன்னொரு பக்கம் ஒலிபெருக்கியில் கேட்டுக்கோடி, ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன், மயக்கமெனன என்று தலைவர் பாடல்கள் ....

மற்றொரு பக்கம் தலையை நிமிர்த்தினால்...

ஆஹா ...
கண் கொள்ளாக் காட்சி ...
தலைவரின் கட் அவுட்டுகள் ...
ஆளுயரத்திற்கும் அதிக நீளத்தில் மலர் மாலைகள் ...
ரசிகர்களின் பாலாபிஷேகம்....
வேறு சில ரசிகர்கள் சூடம் காட்ட...
இங்கே இன்னொரு பக்கம் ஆட்டம் பாட்டம்...
இன்னொரு பக்கம் தொலைக்காட்சியினரின் படப்பிடிப்பு
இவையனைத்தையும் பார்த்தவாறு பழைய நினைவுகளில் மூழ்கிய பழைய ரசிகர்கள்..
குழந்தைகுட்டிகளுடனும், தாய்மார்களுடனும், குடும்பத்துடனும் படத்தைப் பார்க்க அரங்கினுள் நுழையும் ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர்...
வேறொரு பக்கம் பார்த்தால் சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களும் நின்று நிதானித்து பார்வையிட்டுப் பின் கடந்து செல்லும் காட்சி...
பேருந்துகளில் செல்பவர்கள் வைத்த் கண் வாங்காது பார்த்த காட்சி...
இவ்வளோ வருஷமானாலும் சிவாசிக்கு கூட்டம் பார்த்தியா ... இது ஒரு மூதாட்டி இன்னொரு மூதாட்டியிடம் பகிர்ந்து கொள்ளும் நெகிழ்ச்சி...
...
இத்தருணத்தில் வசந்தகுமார் எம்.எல்.ஏ.அவர்கள் வருகிறார்..
தன்னுடைய வழக்கமான நினைவுகளினூடே அவர் சொன்ன இரு கருத்துக்ககள் பெருத்த கரவொலி...
தலைவரிடம் எதையும் எதிர்பாராமல் தொண்டாற்றிய தொண்டன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ...
அவரிடம் எதையும் எதிர்பாராமல் தொண்டாற்றும் தொண்டர்க்ள் சிவாஜி ரசிகர்கள்...
இந்த வரிகள் பலத்த் கரகோஷத்தைப் பெற்றன எனச் சொல்ல்வும் வேண்டுமோ..
இவையனைத்தும் அரங்கிற்கு வெளியே ...

இனி உள்ளே...

பெரும்பாலானோர் தாமதமாக உள்ளே வந்தாலும் ... ஒன்றும் நஷ்டமில்லை...
அனைவரும் நடிகர் திலகத்தின் முதல் தோற்றத்தைக் காண ஆவலோடு காத்திருந்தனர்...
அவர் வந்தார்...
கரகோஷம்...
மீண்டும் மற்றொரு முறை..
இம்முறை பட்டாக்கத்தி பைரவன் வருகை...
அரங்கம் அதிர்ந்து குலுங்கியது...
இவை யெல்லாம் சாதாரண வர்ணனைகள்...
ஆனால் இன்றைய அளப்பறையோ...
வர்ணிப்பில் அடங்காது...

1973 ஜூலை 14 அன்று சாநதி திரையரங்கில் கண்ட காட்சிகள் மீண்டும் கண்ணெதிரே மலரும் என
நாங்கள் ஆசைப்பட்டது நடந்தேறியது...

இப்படிக் கூட்டம் வரும் போது எதற்கு புதிய படங்களைப் போட்டு ரிஸ்க் எடுக்க்ணும்...
இது தான் திரையரங்கு உரிமையாளர்க்ளின் மனதில் தோன்றியிருக்கக் கூடிய எண்ணம்...

மொத்தத்தில்...
1973 திரும்பியது...


ராகவேந்திரன்

Murali Srinivas
28th March 2010, 11:45 PM
இங்கே சங்கரா தற்செயலாக சொன்னாரா இல்லை சுவாமி இங்கே கொண்டு வந்து குவித்திருக்கும் புகைப் படங்களைப் பார்த்து விட்டு சொன்னாரா என்று தெரியவில்லை, 1973 ஜூலை 14 சனிக்கிழமை காலை 10.30 மணி மதுரை நியூசினிமாவில் நடந்த ஓபனிங் ஷோ மீண்டும் ஒரு முறை கால இயந்திரத்தின் மூலமாக 2010 ஆண்டில் மகாலட்சுமி திரையரங்கில் மீண்டு வந்ததோ என்று வலுவான ஒரு எண்ணம்.

அண்மைக் காலத்தில் அந்த அரங்கிற்கு வெளியே இவ்வளவு கோலாகல கொண்டாட்டங்கள் நடந்திருக்காது என்பது உறுதி. இங்கே சுவாமி அவர்கள் எடுத்த புகைப்படத்தில் அவன்தான் மனிதன் அதன் அருகில் திருவிளையாடல் படங்களின் ஸ்டில்-கள் அடங்கிய நீண்ட வடிவிலான போஸ்டர்களை அனைவரும் பார்த்திருக்க கூடும். இன்று அந்த போஸ்டர்களே தெரியாத அளவிற்கு ஏராளமான மாலைகள். எத்தனை விதங்கள் உண்டோ அத்தனை மாலைகளும் அங்கே அணிவிக்கப்பட்டன. பூசணிக்காய் சூட, தீப ஆராதனைகள் நடக்க மலர் மாரி பொழிய வாழ்த்தொலிகள் விண்ணை பிளக்க அந்த சாலையில் பேருந்துகள், வான்கள், கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் அனைத்தும் தியேட்டர் வாசலில் நின்று வியப்போடும்
ஆச்சர்யத்துடனும் நகர்ந்தன. எதிர்வரிசையில் அமைந்துள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் [முன்பு அங்குதான் சரஸ்வதி திரையரங்கம் அமைந்திருந்ததாக சொன்னார்கள்] இருப்பவர்கள் இப்படிப்பட்ட காட்சியை இதற்கு முன் இங்கே பார்த்ததில்லையே என்ற நினைப்போடு பார்க்க, பட்டாசுகள் முழங்கின. இன்னும் சொல்லப் போனால் இன்றைக்கு இருக்கக் கூடிய முன்னணி நடிகர்கள் கூட இந்த காட்களை கண்டிருந்தால் இது போன்ற ஒரு ரசிகர் கூட்டம் நமக்கு இல்லையே என்று நிச்சயமாக ஏங்கியிருப்பார். அந்த இடத்தில் வந்த ஒரு கமண்ட் " ஆஃக்ஷன் ஹீரோக்களுக்கு மாஸ் இருப்பது ஆச்சர்யமில்லை. ஆனால் ஒரு ஆக்டருக்கு இவ்வளவு பெரிய மாஸ் இருப்பது உலகில் இவரை விட்டால் யாருக்கும் இல்லை".

வசந்தகுமார் அவர்கள் வந்தார். அவருக்கு நல்ல வரவேற்பு. அவர் பேசும் போது நடிகர் திலகத்தின் பல்வேறு பாத்திரப் படைப்புக்களை குறிப்பிட்டார். நடிகர் திலகம், பெருந்தலைவர், காங்கிரஸ் பேரியக்கம் தொடர்புகளை சுட்டிக் காட்டி பேசி விட்டு விரைவில் நடிகர் திலகத்திற்கு சென்னையில் மணி மண்டபம் அமைக்கப்படும் என்றார். அந்த மணி மண்டப திறப்பு விழா நாளன்று சென்னையே சிவாஜி ரசிகர்களால் நிறைய வேண்டும், நிறையும் என்று சொன்ன வசந்தகுமார் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் காங்கிரஸ் பேரியக்கத்திற்கு உழைத்தவர் நடிகர் திலகம் அதே போல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நடிகர் திலகத்தின் மீது கொண்டுள்ள பற்றின் காரணமாகவே இன்றும் இருப்பவர் உழைப்பவர் அவரது ரசிகர்கள் என்ற போது ரசிகர்களின் பெரும் ஆரவாரம். பேசி முடித்து விட்டு அவர் கிளம்பினார்.

தியேட்டருக்கு வெளியே நண்பர் மோகனரங்கனை சந்தித்தோம். அவர் மாலையில் ஒரு வேலை இருந்ததால் மதியக் காட்சியே பார்த்து விட்டு வெளியே நின்றிருந்தார். நண்பர் சுவாமி மற்றும் ராகவேந்தர் சாரையும் சந்தித்தோம். படம் போட்டு விட்டார்கள் என்ற செய்தி அறிவிக்கப்பட உள்ளே நுழைந்தோம்.

தியேட்டர் நிகழ்வுகள் நாளை. அதற்கு முன் தியேட்டர் உள்ளே வெளியே நடந்த கொண்டாட்டங்களின் புகைப்பட குவியலோடு சுவாமி இங்கே போஸ்ட் செய்வார். அவர் சொல்வது போல் Happy Viewing.

அன்புடன்

தியேட்டருக்கு வெளியே நடந்த கொண்டாட்டங்கள் அனைத்தும் வசந்த் தொலைக்காட்சி நிறுவனத்தினரால் படமாக்கப்பட்டன. எனவே வசந்த் டி.வியில் இது ஒளிப்பரப்பாகும் என தோன்றுகிறது.

joe
29th March 2010, 06:34 AM
ஆகா ! சென்னையில் இல்லாமல் போனோமே என மனம் ஏங்குகிறது .

groucho070
29th March 2010, 06:56 AM
ஆகா ! சென்னையில் இல்லாமல் போனோமே என மனம் ஏங்குகிறது . :( The things I have been missing and still missing.

NOV
29th March 2010, 07:04 AM
Rakesh, we need to do something in Malaysia :sigh2:

groucho070
29th March 2010, 07:07 AM
Rakesh, we need to do something in Malaysia :sigh2:Don't know how, man. You are in the business, if you can pull some string. All I can is pull my muscle :(

Now, Joe is thinking about doing the same in Singapore. 8-)

RAGHAVENDRA
29th March 2010, 10:51 AM
நண்பர் பம்மலார் அவர்கள் பிம்பங்களைப் பிரதியேற்றும் வரைக்கும் நாம் கண்டு மகிழ சில, கீழே காணும் இணைப்பில் -
http://sivajiweek.blogspot.com/

அன்புடன்
ராகவேந்திரன்

sankara70
29th March 2010, 11:21 AM
பம்மலரின் புகைபட பதிவுகலை பார்த போது மனதில் தோன்ரியது-னம் இருபது சிவாஜி உகதில்-பாக் டு 1970

saradhaa_sn
29th March 2010, 11:30 AM
டியர் முரளி & ராகவேந்தர்....

உங்கள் இருவரின் பதிவுகள் மூலம் நேற்றைய அலப்பரைகள் எந்த அளவுக்கு நடந்துள்ளன என்று தெரிகிறது. இப்படி ஒருநாளைக்குத்தானே ஏங்கிக்கொண்டிருந்தோம். ஆனால் நேற்றிரவே எனக்கு நேரடி ரிப்போர்ட் வந்து விட்டது. என் கணவரும் மகனும் மகாலட்சுமி திரையரங்கில் எங்கள் தங்க ராஜா அதிரடிக்காட்சியைப் பார்த்துவிட்டு வந்து நள்ளிரவு வரை அதைப்பற்றி என்னுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். (இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்ட்டில் பணிபுரியும் அவருக்கு நேற்று லீவு, அவனுக்கும் பள்ளி விடுமுறை. சென்ற ஆண்டு இருதய ஆபரேஷன் செய்துகொண்டதிலிருந்து நான் பொது நிகழ்ச்சிகள் எதற்கும் செல்வதில்லை). ஆனால் அவர்கள் சொல்லச்சொல்ல 'ஐயோ நானும் சிரமத்தைப்பார்க்காமல் மகாலட்சுமிக்குப் போயிருக்கலாமே' என்று தோன்றியது. படம் பலமுறை பார்த்ததுதான். முக்கியமாக கொண்டாட்டத்தைக் காணத்தான் சென்றிருந்தார். சமீபகாலத்தில் இப்படி ஒரு கூட்டத்தை அந்த திரையரங்கம் பார்த்ததில்லை என்று அருகில் கடை வைத்திருக்கும் ஒருவர் சொன்னாராம். புதிய படம் வெளியீடு போலவே இருந்தது என்றார். இன்னும் அங்கு நின்ற ஒருசிலர் ஏழுநாட்களும் ஏழு படங்களையும் மாலைக்காட்சி பார்க்கவிருப்பதாகச் சொன்னார்களாம்.

முரளியண்ணா....
"எதிரில் அடுக்குமாடிக்குடியிருப்பு இருக்கும் இடத்தில்தான் முன்பு சரஸ்வதி தியேட்டர் இருந்ததாகச் சொன்னார்கள்" என்ற உங்கள் வரிகளைப்படித்ததும் அதிர்ச்சியடைந்தேன். அப்படீன்னா சரஸ்வதியும் போச்சா?. உள்ளே நுழையும்போதே 'கைகொடுத்த தெய்வம்' படத்தின் 100-வது நாள் ஷீல்டு சிரித்துக்கொண்டே வரவேற்கும் சரஸ்வதி தியேட்டர் இப்போது இல்லையென்ற செய்தி மனதைப் பிசைகிறது.

pammalar
29th March 2010, 01:01 PM
சிவாஜி நியூஸ்

சென்னையில் இன்று திங்கட்கிழமை (29.3.2010 - பங்குனி உத்திரம்) நடைபெறுகின்ற நடிகர் திலகத்தின் நிகழ்ச்சி:

தங்கத்தமிழ்ப் பெருமகனின் வெள்ளித்திரைத் திருவிழா - செவாலியே சிவாஜி வாரம் (நான்காம் நாள்) - பெரம்பூர் மஹாலட்சுமி திரையரங்கம் - பங்குனி உத்திரத் திருநாளை முன்னிட்டு திருவருட்செல்வர் திரைக்காவியம் - பிற்பகல் 2:30, மாலை 6:15, இரவு 9:45

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
29th March 2010, 11:02 PM
[tscii:f4eb1368f8]இன்றைய மாலை மலர் நாளிதழில் வெளிவந்துள்ள செய்தி-
http://www.maalaimalar.com/2010/03/29133510/MGR.html



ஹவுஸ்புல்” காட்சிகளாக கலக்கும் எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்கள்; கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் திங்கட்கிழமை, மார்ச் 29, 1:35 PM IST
சென்னை, மார்ச். 29-

சென்னையில் புதுப்படங்களுக்கு இணையாக பழைய எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்கள் வசூலில் கலக்குகின்றன.

நாடோடி மன்னன் ஆல்பர்ட் தியேட்டரிலும், அடிமைப்பெண் பிருந்தா தியேட்டரிலும் பல வாரங்கள் ஓடின. ஓட்டேரி சரவணா தியேட்டரில் வாரத்துக்கு ஒரு படம் என தொடர்ந்து 15 வாரங்கள் எம்.ஜி.ஆர். படம் திரையிட்டனர். கோபி கிருஷ்ணா தியேட்டரில் ஆயிரத்தில் ஒருவன், உலகம் சுற்றும் வாலிபன், நாடோடி மன்னன் படங்கள் திரையிடப்பட்டன. மோட்சம் தியேட்டரில் உலகம் சுற்றும் வாலிபன், ஆயிரத்தில் ஒருவன் படங்கள் டிஜிட்டல் முறையில் திரையிடப்பட்டன.

தற்போது நடராஜா தியேட்டரில் தனிப்பிறவி படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. அத்தியேட்டரில் ரசிகர்கள் ஆளுயர எம்.ஜி.ஆர். கட்-அவுட் வைத்து மாலை அணிவித்துள்ளனர். கொடி தோரணங்களும் கட்டி உள்ளனர்.

இதற்கு போட்டியாக சிவாஜி ரசிகர்கள் சிவாஜி வாரம் என்ற பெயரில் பட்டாளம் மகாலட்சுமி தியேட்டரில் தினம் ஒரு சிவாஜி படம் திரையிட்டு விழா கொண்டாடி வருகின்றனர். கடந்த வெள்ளியில் இருந்து நேற்று வரை மன்னவன் வந்தானடி, கௌரவம், எங்க தங்கராஜா போன்ற படங்கள் திரையிடப்பட்டன. இன்று திருவருட் செல்வர் படம் காட்டப்பட்டது. நாளை பாரத விலாஸ் படமும் நாளை மறுநாள் (புதன் கிழமை) ராஜபார்ட் ரங்கதுரை படமும், 1-ந்தேதி சொர்க்கம் படமும் தினமும் 3 காட்சிகள் திரையிடப்படுகின்றன.

இந்த தியேட்டருக்கு நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் நேரில் வந்து கௌரவம் படம் பார்த்தார். நேற்று சிவாஜி மகன் ராம்குமார், வசந்தகுமார் எம்.எல்.ஏ. ஆகியோர் வந்து எங்க தங்கராஜா படம் பார்த்தார்கள். சிவாஜி ரசிகர் மன்ற தலைவர் கே.வி.பி. பூமிநாதன், நிர்வாகிகள் எம்.ஏ. மஸ்தான், எம்.எல்.கான், சி.எஸ். குமார், மணவா ளன், நவீன், சூளை ராஜேந் திரன், ஏ. நாராயணன், எம். ஆதிமூலம், தணிகாசலம், பாப்பையா பாஸ்கரன், சில்க் இளங்கோ உள்பட ஏராளமான ரசிகர்கள் தினமும் படம் பார்க்கிறார்கள்.

தியேட்டரில் 25 அடி உயர சிவாஜி கட்-அவுட் அமைத்து தினமும் பால் அபிஷேகம் நடக்கிறது. வாணவேடிக்கை, தீபாராதனையும் நடத்துகின்றனர்.

தற்போது ரிலீசாகும் பல படங்கள் கூட்டம் இன்றி ஓரிரு நாளிலேயே தியேட்டரை விட்டு போய் விடுகின்றன. ஆனால் எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்கள் இப்போதும் லாபம் ஈட்டி தருகின்றன என்று தியேட்டர் அதிபர் ஒருவர் கூறினார்.

http://www.maalaimalar.com/2010/03/29133510/MGR.html

முதல் முறையாக ஒரு முன்னணிப் பத்திரிகை மனமுவந்து பெரிய மனது பண்ணி இருவர் படங்கள் என்று எழுதியதன் மூலம் நடிகர் திலகத்தின் சக்தியை உணர்ந்துள்ளது என்பதையே இச்செய்தி காட்டுகிறது. ஒரு தலைப் பட்சமாக எழுதுவது இனி குறைவதற்கான அறிகுறியே இச்செய்தி. இதற்கு முழுமுதற் காரணமான அனைத்து சிவாஜி ரசிகர்களும் தனிப்ப்ட்டமுறையிலும் மன்ற அமைப்பின் மூலமும் பாராட்ட்ப் படவேண்டியவர்களாவர். எந்த அரசியல் பின்புலம் இல்லை, எந்த விதமான பதவி பலமும் இல்லை, முழுக்க முழுக்க நடிகர் திலகம் என்கின்ற அப்பழுக்கற்ற அமரருக்கும் அவர்தம் ரசிகருக்கும் இடையே பின்னப் பட்டுள்ள பாசப் பிணைப்பின் வெளிப்பாடே இந்தச் செய்தி வெளிக்காட்டும் உண்மை, அது மட்டுமல்ல, எந்த அளவிற்கு இன்னும் நடிகர் திலகம் தமிழர் நெஞ்சில் கோலோச்சுகிறார் என்பதற்கு 28.03.10 மாலை மகாலட்சுமி திரையரங்கம் கண்ட காட்சியே சான்று.

ராகவேந்திரன்[/tscii:f4eb1368f8]

tacinema
29th March 2010, 11:57 PM
என்ன முரளி,
இந்த சென்னை ரசிகர்கள் மதுரை ரசிகர்களை முந்தி விடுவார்கள் போல் இருக்கே? என்ன எங்க ஊர்லே போட்டிருந்த மதுரை மாநகரம் கலைகட்டிருக்கும்.

Any way, lucky chennai NT rasigargal!!

Murali Srinivas
30th March 2010, 12:07 AM
எங்கள் தங்க ராஜா - தியேட்டர் நிகழ்வுகள்

நாங்கள் தியேட்டருக்குள் நுழைந்து மாடிக்கு சென்று இடம் தேடி இடம் கிடைத்து உட்காரும் போது கிட்டத்தட்ட நடிகர் திலகத்தின் intro வந்து விட்டது. எங்களின் பின் வரிசையில் அமர்ந்திருந்தவரை ராகவேந்தர் சார் அறிமுகப்படுத்தினார். நமது நண்பர் மோகனரங்கனின் பாதர் -இன்-லா என்று. அவரிடம் ஒரு ஹலோ சொல்லி விட்டு திரும்பினால் மேஜர், சிறுவன் ராஜாவிற்கு முயல் சிங்கத்தை ஜெயித்த கதையை சொல்லும் காட்சி ஓடிக் கொண்டிருந்தது. இதற்கிடையில் வெளியே ஆரவாரங்கள் கொண்டாட்டங்கள் எல்லாம் முடிந்து மக்கள் கூட்டம் உள்ளே சாரி சாரியாக வந்து கொண்டிருந்தது. மேஜர் அடுப்பில் வைத்த கல்லில் சின்ன சப்பாத்தியை பெரிய சப்பாத்தியாக மாற்ற ஒயிட் அண்ட் ஒயிட்டில் கூப்பிய கரங்களுடன் தெய்வதை வணங்கும் நடிகர் திலகம். பேப்பர் பறக்க காதை அடைக்கும் கைதட்டல்கள். கிழே திரைக்கு அருகில் மீண்டும் சூடம் ஏற்றப்பட அரங்கு உரிமையாளர்களுக்கு ஒரே கிலி. மன்ற நிர்வாகிகள் சிலர் மேடையில் ஏறி உணர்ச்சி வசப்பட்டவர்களை அமைதிப்படுத்தினர்.

இட்லி சுட்டு விற்கும் ஆயா நடிகர் திலகத்திடம் " உன் ராசியான கையாலே போனி பண்ணிடேலே வியாபாரம் அமோகமாக நடக்கும்" என்று சொல்லும் போது எழுந்தது வாழ்த்தொலி. மஞ்சுளா அண்ட் கோ கிண்டல் காட்சிகள், சாதாரண ஆளாக இருந்த மனோகர் பெரிய தொழிலதிபர் ஆக இருப்பதைக் காட்டுவது என சில காட்சிகள் போனது. பிறகு வந்தது "சாமியிலும் சாமியிது" பாடல். அந்த கணபதியோட வாரிசுதானே இந்த சாமி என்ற வரிகளுக்கு பலமான வரவேற்பு.

பிரின்சிபால் ராஜாவை கூப்பிடுகிறார் [நாகேஷ் - பிரின்சிபாலுக்கு பாடத்திலே ஏதோ சந்தேகமாம்,அதான் ராஜாவை கூப்பிடுறார்] ராஜாவிற்கு ஸ்காலர்ஷிப் இனிமேல் இல்லை என்று சொல்லி விட அடுத்த காட்சியில் நடிகர்திலகம் வேதனையோடு மேஜரிடம் சொல்லுவார் குல்லா வைக்கப் பிறந்தவன் கிரீடத்திற்கு ஆசைப்படக் கூடாது. உடனே மேஜர் நீ கிரீடத்திற்கே பிறந்தவன் ராஜா என்ற போது மறுமுறையும் அதிர்ந்தது தியேட்டர்.

குப்பத்து மக்கள் எல்லோரும் சேர்ந்து பரிட்சைக்கு பணம் கட்ட பரீட்சை நடக்கிறது என்று காட்சிகள் வெகு வேகமாக நகர்ந்தன.[பின்னால் இருப்பவன் நாகேஷிடம் என்ன எழுதறே அதற்கு நாகேஷ் ஸ்ரீராமஜெயம் எழுதறேன். உடனே நண்பன் அதைக் கூட ஸ்ரீராமானுஜன்-னு தப்பா எழுதறே].

அடுத்து நடிகர் திலகம் நடந்து வர காரிலிருந்து இறங்கும் மஞ்சுளா. தியேட்டரில் ஆரவாரம் அதிகமாகி மீண்டும் சிலர் திரை இருக்கும் மேடை நோக்கி போக, மஞ்சுளாவிடம் என்னை மறந்து விடு என்று சொல்லி நடிகர் திலகம் ஒரு நடை நடப்பார் - கிழே, மேலே திரைக்கு அருகே என எல்லா இடங்களிலும் கைதட்டல் ஒலி காதை கிழிக்க அமர்க்களமாக இருந்தது.

அதன்பின் நடிகர் திலகம் ஆஸ்பத்திரி ஆரம்பித்து நடத்தும் காட்சிகள். மஞ்சுளா அங்கே வலிய வந்து பணி செய்வது என காட்சிகள் விரைந்தன. நாகேஷ் நடிகர் திலகத்தை வந்து பார்த்து, டா போட்டு பேசி விட ஆப்பக் கடை ஆயா நாகேஷை திட்டி விட "என்னப்பா உன் பேட்டையிலே உன்னைப் பற்றி பேசினா பென்டை கழட்டிடுவாங்க போலிருக்கு" என்று சொல்ல பேசித்தான் பாரேன் என்று நடிகர் திலகம் சொல்ல பேட்டையை வளைக்கிறியா என்று நாகேஷ் கேட்க முதலிலே பேட்டையை வளைப்போம் அப்புறம் என்று நடிகர் திலகம் இடைவெளி விட்டு நிறுத்த பின்னால் பெருந்தலைவர் படம் இருக்க எழுந்த ஆரவாரம் மீண்டும் 1973 -ஐ நினைவுக்கு கொண்டு வந்தது.

அடுத்து மஞ்சுளா மனோகரின் மகள் என்பதை நடிகர் திலகம் தெரிந்துக் கொள்ளும் காட்சி. வசனங்கள் இல்லாமல் கண் சிவக்க உதடு துடிக்க நடிகர் திலகம் வெளிப்படுத்தும் காட்சி தன்னை அவமானப்படுத்தும் மனோகரிடம் ஒன்றும் சொல்லாமல் உங்க அப்பா நல்லவர்-னு சொன்னியே என்று மட்டும் சொல்லி விட்டு வெளியேறும் நடிகர் திலகம் - பெரும் ஆரவாரம். அது அந்த காட்சிக்கு மட்டுமல்ல அடுத்து வரும் காட்சிக்கும் சேர்த்துதான் என்பது புரிந்தது. மஞ்சுளாவிற்கு போன். சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கும் மஞ்சுளா. அங்கே அதை விட அதிக சந்தோஷத்தில் ரசிகர்கள். இப்போது மேடையில் கிட்டத்தட்ட 20 நபர்கள். அதில் நாலைந்து நபர்களின் கையில் தீபம். அது போதாதென்று உள்ளே மேளத்தை கொண்டு வந்து சிலர் அடித்து ஆட ஆரம்பிக்க அட்டகாசம் ஆரம்பமானது.

நடிகர் திலகம் இந்த பாடலில் சில ஸ்டைல் சில நடை நடப்பார். கர்சீப்பை கையில் வைத்துக் கொண்டு ஒரு கால் மாற்றி ஒரு கால் வைத்து ஆடி வருவார், சரணத்தின் போது நேர் போஸிலும் சைடு போஸிலும் ராஜ நடை நடப்பார். காது கிழியும் டெசிபல் லெவல். கிழே தீபம் என்றால் மேலே பால்கனி கைப்பிடியில் சூடம் ஏற்றப்பட்டு அது அணையாமல் எரிந்துக் கொண்டிருப்பதற்காக சூடங்கள் நெருப்பில் சேர்த்துக் கொண்டே சிலர் நிற்க பார்வையாளர்கள் எல்லாம் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தனர்.

ஒரு சில காட்சிகளுக்கு பின் தியேட்டரே எதிர்பார்த்துக் கொண்டிருந்த காட்சி. மோட்டார் பைக் காட்டப்பட்டு பட்டாக்கத்தி பைரவன் வாயில் சூயிங்கத்தை மென்றுக் கொண்டே திரையில் தோன்ற உள்ளேயே வெடித்தது பட்டாஸ். கிட்டத்தட்ட அனைவரும் எழுந்து நின்று பார்க்க வேண்டிய நிலைமை. காரணம் முன்னால் இருந்த ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று விட்டனர்.

பைரவ அமர்க்களம் நாளை.

அன்புடன்

Murali Srinivas
30th March 2010, 12:14 AM
ராகவேந்தர் சார்,

நீங்கள் சொன்னது போல் இப்போதாவது நமது படங்களைப் பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கிறதே. அப்போதும் கூட சில அள்ளி விட்ட செய்திகளை உள்படுத்தாமல் அவர்களுக்கு எழுத முடியவில்லை. சரி விடுங்கள்.

tac,

என்ன இருந்தாலும் நம்ம மதுரைக்கு ஈடாகுமா? நம்ம ரேஞ்சே தனி. இருந்தாலும் நேற்று சென்னை வாழ் ரசிகர்கள் தூள் கிளப்பி விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.

அன்புடன்

tacinema
30th March 2010, 02:19 AM
எங்கள் தங்க ராஜா - தியேட்டர் நிகழ்வுகள்

பைரவ அமர்க்களம் நாளை.

அன்புடன்

என்ன சார் இது........... படத்தோட ஆர்ப்பாட்டமே பட்டாகத்தி பைரவர் தானே? எத்தனை நடிகர்கள் வந்தாலும் என்றும் நான் தான் ஸ்டைல் சக்ரவர்த்தி என்று நிருபித்த INTRODUCTION ஆயிற்றே

Waiting for aththiradi!!

pammalar
30th March 2010, 02:59 AM
The Sunday (28.3.2010) Evening Gala at Chennai Mahalakshmi - A Connoisseur's Delight

Everyone's eyes should see the following link to have a real feel of the divine power of THE GOD OF ACTING:

http://pammalar.webs.com/apps/photos/album?albumid=8588985

A Very Very Happy Viewing,
Pammalar.

RAGHAVENDRA
30th March 2010, 08:04 AM
பட்டாசு, கூட்டம், கட்அவுட் என பம்மலாரின் புகைப்பட காட்சிகள் நம்மை அரங்கிற்கே அழைத்துச் சென்று விட்டன என்றால் மிகையில்லை.
தங்கள் பார்வைக்காக மேலும் சில படங்கள்
http://sivajiweek.blogspot.com/
ராகவேந்திரன்

tacinema
30th March 2010, 08:31 AM
murali/pammalar/raghavendra,

video இருந்தால் போஸ்ட் செய்யுங்க ப்ளீஸ். கலை உலக சக்கரவர்த்தி, சிம்ம குரலோன், நடிகர் திலகம், எங்கள் தங்க ராஜாவின் புகழ் வாழ்க!

Next time, you guys have good luck with NT's one and only Raaja!!

regards

joe
30th March 2010, 09:01 AM
ஆகா ! கலக்கிபுட்டீங்க மக்கா ..கலக்கிபுட்டீங்க :D

pammalar
30th March 2010, 03:58 PM
சிவாஜி நியூஸ்

சென்னையில் இன்று செவ்வாய்க்கிழமை (30.3.2010) நடைபெற உள்ள நடிகர் திலகத்தின் நிகழ்ச்சி:

தங்கத்தமிழ்ப் பெருமகனின் வெள்ளித்திரைத் திருவிழா - செவாலியே சிவாஜி வாரம் (ஐந்தாம் நாள்) - பெரம்பூர் மஹாலட்சுமி திரையரங்கம் - பாரத விலாஸ் திரைக்காவியம் - பிற்பகல் 2:30, மாலை 6:15, இரவு 9:45

அன்புடன்,
பம்மலார்.

Mahesh_K
30th March 2010, 04:32 PM
எங்கள் தங்க ராஜா - தியேட்டர் நிகழ்வுகள்

நாங்கள் தியேட்டருக்குள் நுழைந்து மாடிக்கு சென்று இடம் தேடி இடம் கிடைத்து உட்காரும் போது கிட்டத்தட்ட நடிகர் திலகத்தின் intro வந்து விட்டது. எங்களின் பின் வரிசையில் அமர்ந்திருந்தவரை ராகவேந்தர் சார் அறிமுகப்படுத்தினார். நமது நண்பர் மோகனரங்கனின் பாதர் -இன்-லா என்று. அவரிடம் ஒரு ஹலோ சொல்லி விட்டு திரும்பினால் மேஜர், சிறுவன் ராஜாவிற்கு முயல் சிங்கத்தை ஜெயித்த கதையை சொல்லும் காட்சி ஓடிக் கொண்டிருந்தது. இதற்கிடையில் வெளியே ஆரவாரங்கள் கொண்டாட்டங்கள் எல்லாம் முடிந்து மக்கள் கூட்டம் உள்ளே சாரி சாரியாக வந்து கொண்டிருந்தது. மேஜர் அடுப்பில் வைத்த கல்லில் சின்ன சப்பாத்தியை பெரிய சப்பாத்தியாக மாற்ற ஒயிட் அண்ட் ஒயிட்டில் கூப்பிய கரங்களுடன் தெய்வதை வணங்கும் நடிகர் திலகம். பேப்பர் பறக்க காதை அடைக்கும் கைதட்டல்கள். கிழே திரைக்கு அருகில் மீண்டும் சூடம் ஏற்றப்பட அரங்கு உரிமையாளர்களுக்கு ஒரே கிலி. மன்ற நிர்வாகிகள் சிலர் மேடையில் ஏறி உணர்ச்சி வசப்பட்டவர்களை அமைதிப்படுத்தினர்.

இட்லி சுட்டு விற்கும் ஆயா நடிகர் திலகத்திடம் " உன் ராசியான கையாலே போனி பண்ணிடேலே வியாபாரம் அமோகமாக நடக்கும்" என்று சொல்லும் போது எழுந்தது வாழ்த்தொலி. மஞ்சுளா அண்ட் கோ கிண்டல் காட்சிகள், சாதாரண ஆளாக இருந்த மனோகர் பெரிய தொழிலதிபர் ஆக இருப்பதைக் காட்டுவது என சில காட்சிகள் போனது. பிறகு வந்தது "சாமியிலும் சாமியிது" பாடல். அந்த கணபதியோட வாரிசுதானே இந்த சாமி என்ற வரிகளுக்கு பலமான வரவேற்பு.

பிரின்சிபால் ராஜாவை கூப்பிடுகிறார் [நாகேஷ் - பிரின்சிபாலுக்கு பாடத்திலே ஏதோ சந்தேகமாம்,அதான் ராஜாவை கூப்பிடுறார்] ராஜாவிற்கு ஸ்காலர்ஷிப் இனிமேல் இல்லை என்று சொல்லி விட அடுத்த காட்சியில் நடிகர்திலகம் வேதனையோடு மேஜரிடம் சொல்லுவார் குல்லா வைக்கப் பிறந்தவன் கிரீடத்திற்கு ஆசைப்படக் கூடாது. உடனே மேஜர் நீ கிரீடத்திற்கே பிறந்தவன் ராஜா என்ற போது மறுமுறையும் அதிர்ந்தது தியேட்டர்.

குப்பத்து மக்கள் எல்லோரும் சேர்ந்து பரிட்சைக்கு பணம் கட்ட பரீட்சை நடக்கிறது என்று காட்சிகள் வெகு வேகமாக நகர்ந்தன.[பின்னால் இருப்பவன் நாகேஷிடம் என்ன எழுதறே அதற்கு நாகேஷ் ஸ்ரீராமஜெயம் எழுதறேன். உடனே நண்பன் அதைக் கூட ஸ்ரீராமானுஜன்-னு தப்பா எழுதறே].

அடுத்து நடிகர் திலகம் நடந்து வர காரிலிருந்து இறங்கும் மஞ்சுளா. தியேட்டரில் ஆரவாரம் அதிகமாகி மீண்டும் சிலர் திரை இருக்கும் மேடை நோக்கி போக, மஞ்சுளாவிடம் என்னை மறந்து விடு என்று சொல்லி நடிகர் திலகம் ஒரு நடை நடப்பார் - கிழே, மேலே திரைக்கு அருகே என எல்லா இடங்களிலும் கைதட்டல் ஒலி காதை கிழிக்க அமர்க்களமாக இருந்தது.

அதன்பின் நடிகர் திலகம் ஆஸ்பத்திரி ஆரம்பித்து நடத்தும் காட்சிகள். மஞ்சுளா அங்கே வலிய வந்து பணி செய்வது என காட்சிகள் விரைந்தன. நாகேஷ் நடிகர் திலகத்தை வந்து பார்த்து, டா போட்டு பேசி விட ஆப்பக் கடை ஆயா நாகேஷை திட்டி விட "என்னப்பா உன் பேட்டையிலே உன்னைப் பற்றி பேசினா பென்டை கழட்டிடுவாங்க போலிருக்கு" என்று சொல்ல பேசித்தான் பாரேன் என்று நடிகர் திலகம் சொல்ல பேட்டையை வளைக்கிறியா என்று நாகேஷ் கேட்க முதலிலே பேட்டையை வளைப்போம் அப்புறம் என்று நடிகர் திலகம் இடைவெளி விட்டு நிறுத்த பின்னால் பெருந்தலைவர் படம் இருக்க எழுந்த ஆரவாரம் மீண்டும் 1973 -ஐ நினைவுக்கு கொண்டு வந்தது.

அடுத்து மஞ்சுளா மனோகரின் மகள் என்பதை நடிகர் திலகம் தெரிந்துக் கொள்ளும் காட்சி. வசனங்கள் இல்லாமல் கண் சிவக்க உதடு துடிக்க நடிகர் திலகம் வெளிப்படுத்தும் காட்சி தன்னை அவமானப்படுத்தும் மனோகரிடம் ஒன்றும் சொல்லாமல் உங்க அப்பா நல்லவர்-னு சொன்னியே என்று மட்டும் சொல்லி விட்டு வெளியேறும் நடிகர் திலகம் - பெரும் ஆரவாரம். அது அந்த காட்சிக்கு மட்டுமல்ல அடுத்து வரும் காட்சிக்கும் சேர்த்துதான் என்பது புரிந்தது. மஞ்சுளாவிற்கு போன். சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கும் மஞ்சுளா. அங்கே அதை விட அதிக சந்தோஷத்தில் ரசிகர்கள். இப்போது மேடையில் கிட்டத்தட்ட 20 நபர்கள். அதில் நாலைந்து நபர்களின் கையில் தீபம். அது போதாதென்று உள்ளே மேளத்தை கொண்டு வந்து சிலர் அடித்து ஆட ஆரம்பிக்க அட்டகாசம் ஆரம்பமானது.

நடிகர் திலகம் இந்த பாடலில் சில ஸ்டைல் சில நடை நடப்பார். கர்சீப்பை கையில் வைத்துக் கொண்டு ஒரு கால் மாற்றி ஒரு கால் வைத்து ஆடி வருவார், சரணத்தின் போது நேர் போஸிலும் சைடு போஸிலும் ராஜ நடை நடப்பார். காது கிழியும் டெசிபல் லெவல். கிழே தீபம் என்றால் மேலே பால்கனி கைப்பிடியில் சூடம் ஏற்றப்பட்டு அது அணையாமல் எரிந்துக் கொண்டிருப்பதற்காக சூடங்கள் நெருப்பில் சேர்த்துக் கொண்டே சிலர் நிற்க பார்வையாளர்கள் எல்லாம் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தனர்.

ஒரு சில காட்சிகளுக்கு பின் தியேட்டரே எதிர்பார்த்துக் கொண்டிருந்த காட்சி. மோட்டார் பைக் காட்டப்பட்டு பட்டாக்கத்தி பைரவன் வாயில் சூயிங்கத்தை மென்றுக் கொண்டே திரையில் தோன்ற உள்ளேயே வெடித்தது பட்டாஸ். கிட்டத்தட்ட அனைவரும் எழுந்து நின்று பார்க்க வேண்டிய நிலைமை. காரணம் முன்னால் இருந்த ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று விட்டனர்.

பைரவ அமர்க்களம் நாளை.

அன்புடன்
முரளி சார் , நான் இரு நண்பர்களுடன் மதிய காட்சி பார்த்துவிட்டேன். பிறகு வெளியே வந்து 5 மனிக்கு மேல் நடந்த ஆரவாரங்ளை வேடிக்கை பார்த்தோம். திரையரங்கம் இருந்தது போக்குவரத்து அதிகமுள்ள சாலை என்பதால் ட்ராபிக் ஜாம் ஆகும் அளவுக்கு ஓரே பரபரப்பு. பேருந்துகளிலும் வாகனங்களிலும் செல்பவர்கள் வேடிக்கை பார்த்ததால். இதுவே நமக்கு நல்ல விளம்பரம். படத்தை பல ஆண்டுகள் கழித்துப் பார்க்கிறேன் - DVD யில் வராததால். சிறு வயதில் நான் மிக விரும்பிப் பார்த்த படம் - சூப்பர் ஹிட் பாடல்கள் -.ஆப்பக்கார பாட்டி பேசும் வசனம், மேஜரின் கிரீடம் டயலாக், அபிமான தலைவரின் படம் மாட்டப்பட்ட மருத்துவமனை, வல்லவரை எதிர்ப்பேன் - ஜெயிப்பேன் பாடல் போன்ற பல பாடல் வரிகள், இவற்றை பார்க்கும்போது நடிகர் திலகம் நடித்த எம்.ஜி.ஆர் படம் என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன். எங்கள் பகுதியில் நெல்லை - பார்வதி, நாகர்கோவில் - ராஜேஷ் என இரண்டு சென்டர்களில் நூறு நாட்கள் ஓடியது குறிப்பிடத் தக்கது . அதனால் வசந்த மாளிகை, ப்ட்டிக்காடா பட்டணமா போன்றவற்றை விடவும் அங்கே பெரு வெற்றிப் படம் என்றே சொல்ல வேண்டும்.

pammalar
30th March 2010, 04:50 PM
The Sunday (28.3.2010) Evening Gala at Chennai Mahalakshmi - A Connoisseur's Delight - More Pictures

Everyone's eyes should view the following link to have a real feel of the divine power of THE GOD OF THE CELLULOID WORLD:

http://pammalar.webs.com/apps/photos/album?albumid=8588985

A Very Very Happy Viewing,
Pammalar.

pammalar
30th March 2010, 05:16 PM
நடிகர் திலகத்தின் நல்லிதயம், எமது நண்பர் திரு.கே.மகேஷ் அவர்களை நமது நடிகர் திலகத்தின் திரிக்கு "வருக! வருக!" என மிகுந்த அன்புடன் வரவேற்கிறேன். பார்வையாளராக இருந்த தாங்கள் பதிவாளராக உருவெடுத்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. தங்களது அடுத்தடுத்த பதிவுகளைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன். தங்களுக்கு இதயபூர்வமான நல்வாழ்த்துக்கள்!

"வந்தவர் (திரு.கே.மகேஷ்) வாழ்க! மற்றவர்கள் வருக!"

அன்புடன்,
பம்மலார்.

app_engine
30th March 2010, 10:33 PM
"நான் தன்னந்தனிக்காட்டு ராஜா (எங்க மாமா)"வைத்தழுவி அமைந்த ஜேஸன் ம்ரோஸின் பாடல் :

http://www.youtube.com/watch?v=EkHTsc9PU2A
("I'm yours", very popular in the west for the last couple of years)

pammalar
30th March 2010, 11:23 PM
தங்கத்தமிழ்ப் பெருமகனின் வெள்ளித்திரைத் திருவிழா - செவாலியே சிவாஜி வாரம் - பெரம்பூர் மஹாலட்சுமி திரையரங்கம் - மொத்த வசூல் (சற்றேறக்குறைய)

27.3.2010 - சனி - கௌரவம்

இரவு 9:45 மணிக் காட்சி = ரூ. 2,200/- (ரூபாய் இரண்டாயிரத்து இருநூறு)

28.3.2010 - ஞாயிறு - எங்கள் தங்க ராஜா

பிற்பகல் 2:30 மணிக் காட்சி = ரூ. 6,000/- (ரூபாய் ஆறாயிரம்)

மாலை 6:15 மணிக் காட்சி = ரூ. 13,000/- (ரூபாய் பதிமூன்றாயிரம்) (ஹவுஸ்ஃபுல்)

இரவு 9:45 மணிக் காட்சி = ரூ.3,000/- (ரூபாய் மூவாயிரம்)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
30th March 2010, 11:57 PM
தங்கத்தமிழ்ப் பெருமகனின் வெள்ளித்திரைத் திருவிழா - செவாலியே சிவாஜி வாரம் - பெரம்பூர் மஹாலட்சுமி திரையரங்கம் - மொத்த வசூல் (சற்றேறக்குறைய)

29.3.2010 - திங்கள் (பங்குனி உத்திரத் திருநாள்) - திருவருட்செல்வர்

பிற்பகல் 2:30 மணிக் காட்சி = ரூ. 4,500/- (ரூபாய் நான்காயிரத்து ஐநூறு)

மாலை 6:15 மணிக் காட்சி = ரூ. 5,100/- (ரூபாய் ஐந்தாயிரத்து ஒருநூறு)

இரவு 9:45 மணிக் காட்சி = ரூ. 2,100/- (ரூபாய் இரண்டாயிரத்து ஒருநூறு)

அன்புடன்,
பம்மலார்.

Murali Srinivas
31st March 2010, 01:33 AM
எங்கள் தங்க ராஜா - தியேட்டர் நிகழ்வுகள் II

இந்த காட்சிக்கு சற்று முன்பாக குறிப்பாக சொல்லப் போனால் கல்யாண ஆசை வந்த காரணத்தை சொல்லவா பாடலின் போதே உள்ளே போலீஸ் வந்து விட்டது. அரங்க உரிமையாளர்கள் உள்ளே திரையரங்கிற்கு ரசிகர்களின் ஆர்வக் கோளாறினால் எதாவது ஊறு நேர்ந்து விடுமோ என எண்ணி அழைத்திருந்தனர். ஆனால் போலீஸ் இல்லை ராணுவமே வந்தாலும் ரசிகர்களை அடக்க முடியாது என்பது அவர்களுக்கு தெரியவில்லை.

போலீசுடன் ஒரு வாக்குவாதம் ஏற்பட மன்ற நிர்வாகிகள் தலையிட்டு பொறுப்பேற்றுக் கொள்ள போலீஸ் சற்று தள்ளி நின்று பார்க்க முற்பட்டனர். அந்த நேரம்தான் பைரவர் விஜயம். இந்தோ அலப்பறை முடிந்து அவர் மனோகரின் மாளிகையில் நுழைய அடுத்தக் கட்ட ரகளைக்கு தயாரானார்கள் ரசிகர்கள். நீ அழகிலே ராணின்னு பார்த்தாலே தெரியுது ஆனா ஆட்டத்தில் ராணின்னு சொன்னானே எங்கே பார்க்கலாம் என்று சொன்னவுடன் பின்னணி இசை வேகம் பிடிக்க முன்னை விட அதிக ஆட்கள் திரைக்கு அருகே இடம் பிடிக்க சூட தீபங்கள் ஏற்றப்பட முத்தங்கள் நூறு என பாடல் ஒலிக்க தியேட்டரே ஆட ஆரம்பித்தது. அதிலும் நடிகர் திலகம் கையில் நீள ரிப்பன் வைத்த பெண்கள் சுற்றிலும் நிற்க ஒரு பக்கம் சாய்ந்து முத்தங்கள் நூறு என்று ஆரம்பிக்கும் போது கேட்ட கைதட்டலை சொல்வதா, காலை சற்றே அகற்றி இன்று எனக்கு நாளை எவருக்கு என்ற போது எழுந்த ஆரவாரத்தை சொல்வதா, இரண்டாவது சரணத்தில், ஆளை அளந்து அவர் ஆட்டம் அளந்து வரும் கூட்டம் அளக்கும் புத்தி உண்டு என கையை காட்டுவாரே அப்போது நடந்த அலப்பரையை வர்ணிப்பதா அல்லது உச்சக்கட்டமாக இவற்றையெல்லாம் தூக்கி சாப்பிடுவது போல் வல்லவனை எதிர்ப்பேன் ஜெயிப்பேன் என்ற வரிகளின் போது பாடல் சத்தத்தையும் மீறி ரசிகர்கள் போட்ட வாழ்த்தொலிகள் சவால்கள் இவற்றை சொல்வதா? சுருக்கமாக சொன்னால் ரணகளம்.

இது முடிந்தவுடன் கனகா வீடு சௌகார் சந்திப்பு இடைவேளை. இடைவேளையில் ரசிகர்களின் நினைவலைகள். பலரும் தங்கள் பழைய நட்பை புதிப்பித்துக் கொள்ள ஒரே உற்சாக வெள்ளம். திடீரென்று நாளைய திரைப்படம் என்று சொல்லி திரையில் நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே என்று அப்பர் பாட ஆரம்பிக்க அனைவரும் ஒரே ஓட்டமாக உள்ளே ஓடினர். பாடல் முடிந்தவுடன் மீண்டும் பைரவன் காட்சி தொடர கற்பாம் மானமாம் பாடல். உடல் தெரியும் வண்ணம் அமைந்த ஷர்ட் பாண்ட் அணிந்துக் கொண்டு பாட இங்கே அமர்களத்திற்கு மேல் அமர்க்களம். அதிலும் தாய்மொழியாம் தாய் நாடாம் தாய்மை எனும் பண்பாம் என்ற வரிகளுக்கு உச்சகட்ட கைதட்டல். க்ளோஸ் அப் காட்சிகளிக்கு தீபமும் சூடமும் திரையை நோக்கியேஇருந்தன.

அன்புடன்

To be continued

pammalar
31st March 2010, 01:22 PM
சிவாஜி நியூஸ்

சென்னையில் இன்று புதன்கிழமை (31.3.2010) நடைபெறுகின்ற நடிகர் திலகத்தின் நிகழ்ச்சி:

தங்கத்தமிழ்ப் பெருமகனின் வெள்ளித்திரைத் திருவிழா - செவாலியே சிவாஜி வாரம் (ஆறாம் நாள்) - பெரம்பூர் மஹாலட்சுமி திரையரங்கம் - ராஜபார்ட் ரங்கதுரை திரைக்காவியம் - பிற்பகல் 2:30, மாலை 6:15, இரவு 9:45

இன்றைய மேட்னி ஷோவைக் கண்டு களிக்க பாடகர் திலகம் திரு.டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள் வருகை புரிகிறார்.

அன்புடன்,
பம்மலார்.

saradhaa_sn
31st March 2010, 01:38 PM
டியர் முரளியண்ணா....

மகாலட்சுமி திரையரங்கில் ஞாயிறு மாலை நடந்தவற்றை அப்படியே (எழுத்துக்களால் நீங்களும், புகைப்படத்தொகுப்பால் பம்மலாரும்) கண்முன் கொண்டுவந்து நிறுத்தி விட்டீர்கள். படிக்கும் அத்தனை பேரும் அன்றைய மகாலட்சுமி நிகழ்வுகளை அப்படியே கண்முன்னே காண்பார்கள் என்பது நிச்சயம். முத்தங்கள் நூறு பாடலின் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது. ('மற்றவர்க்கோ ஒரு நாள் இரு நாள்... எங்கள் மன்னவர்க்கோ தினமும் திருநாள்'). தாஸாமக்கான் 'மகாலட்சுமி'யில் துவங்கிய இந்த திருவிழா சென்னை முழுதும் தொடர வேண்டும். தொடரும்.

டியர் பம்மலார்...
தினமும் ஒரு வி.ஐ.பி.வருகையால் மகாலட்சுமி அரங்கம் களைகட்டுகிறது. ராஜபார்ட் ரங்கதுரையில் டி.எம்.எஸ்.அண்ணாவின் பங்களிப்பு கொஞ்சமா?. அதை மீண்டும் மக்களோடு அமர்ந்து ரசிக்கப்போகிறார் என்பதே தித்திக்கும் செய்தி அல்லவா. 'சிவாஜி வாரம்' வசூல் விவரங்கள் அருமை. கலைப்புலி சேகரன் சொன்ன உண்மை மீண்டும் மெய்ப்பிக்கப்படுகிறது.

RAGHAVENDRA
31st March 2010, 02:05 PM
சகோதரி சாரதா,
தங்கள் கூற்று முற்றிலும் உண்மை. முரளி சாரும் பம்மலாரும் மஹாலட்சுமி திரையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிகளைக் கண்முன் நிறுத்தி விட்டார்கள்.
நிற்க. இத்திரிக்கு முற்றிலும் சம்பந்தம் இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு பொருந்தக் கூடிய உண்மையை பெண்ணாகரம் இடைத்தேர்தல் காட்டியுள்ளதாகப் படுகிறது. மிகைப்படுத்தப்பட்ட செயற்கையான ஆதரவெல்லாம் அதே வேகத்தில் மறைந்து வருவதாகத் தோன்றுகிறது. மக்களின எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் அரசைத் தான் மக்கள் விரும்புவர் என்பது புலனாகிறது. தனி மனித செல்வாக்கெல்லாம் ஒரு காலகட்டத்துக்கு மேல் நிலைக்காது, சாதனைகளே என்றைக்கும் நிற்கும் என்பதே இதன் பொருளாகத் தோன்றுகிறது.
இந்த நேரத்தில் நம்முடைய தலைவரின் படங்கள் வீறு கொண்டெழுந்து வெற்றி பவனி வருவதற்கும் அவருடைய புகழும் செல்வாக்கும் சிரஞ்ஜீவியாய் இருப்பதற்கும் திருவருட்செல்வரின் பகல் காட்சி வசூலே சான்று. மற்ற படங்களை விடுவோம். இந்தப் படம் ஒரு வார நாளில் இவ்வளவு வசூல் செய்துள்ளதென்றால் அது நடிகர் திலகத்தின் செல்வாக்கையே காட்டுகிறது.
1973 திரும்புகிறது என நான் எண்ணியது தவறில்லை என்றே தோன்றுகிறது, அனைத்து வகையிலும்.
ஒரே ஒரு வித்தியாசம் நடிகர் திலகத்தின் சிரஞ்ஜீவியான வெற்றியையும் செல்வாக்கையும் காண பெருந்தலைவர் இல்லை என்பதே.
ராகவேந்திரன்

rangan_08
31st March 2010, 05:39 PM
Hello friends. Due to personal reasons I was not able to visit the hub for the past few days. Pammalar & Murali sir have done a great job. Thanks to both of you.

rangan_08
31st March 2010, 05:44 PM
[tscii:c80650bfa8]I feel glad & proud to share my experience here about NT FILMATHON @ Mahalakshmi theatre.


At last, one of my long time wish has been fulfilled last Sunday. My God !!! what an event !! It’s about the screening of Engal Thanga Raja and the celebrations that took place on account of it. I went for the matinee and my F-I-L came along with his brother for the evening show. Raghavendra sir, Murali sir & Pammalar were obviously so happy to see the great proceedings.

Actually, the theatre is located on a busy main road, congested with traffic. Since, it was a Sunday the traffic was limited and people were able to pull it off successfully. Policemen were deployed to regulate traffic and to control the crowd. The on lookers, people sitting inside the moving bus and the general public were astounded by the terrific celebrations.

There were huge cut outs of NT in various avatars which was wonderfully captured by pammalar's camera and posted here. It was garlanded and rasigars climbed on top of it and did “ paalabishekam “. They burst crackers in front of the theatre and the loud speakers played songs from NT’s films to which the fans began to dance on the road itself. It was sheer fun.

Raghavendra sir had bought a bunch of printed sheets which had details about the films that was screened in this NT FILMATHON and distributed it among the crowds.

I also spotted Ms. Girija in the crowd. Actually, she came on Saturday also and was busy decorating the cinema hall with NT’s posters and placards which had rasigar mandram details written on it. On Sunday, she distributed free stationeries to kids who came to watch the film along with their parents.

At about 5.30 pm Mr Ramkumar came to the theatre to cheer the fans and gave a brief speech. He was visibly surprised and glad to see the amazing and over whelming response. Later Mr. Vasanth Kumar also came along with Congress cadres and gave a speech.

Altogether, it was a very very memorable day for me which I will cherish forever.
[/tscii:c80650bfa8]

rangan_08
31st March 2010, 05:46 PM
[tscii:6fced785d9]Now, a small treat from Karnan.

Have you heard the lion roaring? Well, watch Karnan if you have not and you will know that it is not for trivial reasons that Nadigar Thilagam is fondly called “ Simmakkuraloan “.

Karnan’s father-in-law is a racist to the core. Karnan comes to this man’s palace to take back his wife but his F-I-L tease and humiliates Karnan by calling him “ Therotti Magan “. Knowingly or un-knowingly, Banthulu has done a good job here by conceiving this scene wherein he literally establishes what “ Simmakuraloan “ actually means.

Now watch out for the genius……

Unable to tolerate his F-I-L’s mocking accusations, a visibly humiliated and dejected Karnan, with shame, anger and helplessness, begins to leave the place controlling himself. This man follows him and continues to lash him out with venom in his words and pricks him once again about his race and starts to laugh at Karnan. He’s already had enough and now this criticizing laughter in intolerable.

Karnan loses control and swiftly turns around and literally roars, not just once but thrice at his father in law. That’s it. No words, no arguments nothing. Just a thundering roar and that is enough to make the old man to shut his mouth. Not only his F-I-L, even the audience are stupefied by this sudden gesture.

நடிப்பிலே கொடை வள்ளலாகத் திகழ்ந்தவர் நமது நடிகர் திலகம்.
[/tscii:6fced785d9]

RAGHAVENDRA
31st March 2010, 10:46 PM
இன்றைய 31.03.2010 சிங்கத்தமிழன் சிவாஜி நிகழ்ச்சியை வசந்த் தொலைக்காட்சியில் பார்த்தவர்கள் இனிய இன்ப அதிர்ச்சிக்கு நிச்சயம் உள்ளாகியிருப்பர். கடந்த ஞாயிறன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியின் தொகுப்பு ஒளிபரப்பானது. அன்று அங்கு நேரில் பார்க்க முடியவில்லையே என ஏங்கியோர், குறிப்பாக சகோதரி சாரதா அவர்கள், நிச்சயம் உள்ளம் குளிர்ந்திருப்பர். அரை மணி நேரம் நிகழ்ச்சியில் விளம்பரம் போக எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஒளிபரப்பினார்கள்.

வசந்த் டிவிக்கு நமது உளமார்ந்த நன்றி.

ராகவேந்திரன்

Murali Srinivas
1st April 2010, 12:47 AM
எங்கள் தங்க ராஜா - தியேட்டர் நிகழ்வுகள் - III

இதற்கு இடையே ஒரு சில காட்சிகளும் அவற்றுக்கு கிடைத்த வரவேற்பும் நினைவுக்கு வருகிறது. ரிக்சாகாரன் அந்தோனிக்கு உடல் நலம் சரியில்லை என்று டாக்டர் கிளம்பி போக தற்செயலாக உண்டியலின் மீது கை வைக்கும் நாகேஷ் அதை எடுக்க முற்பட்டு பெருந்தலைவரின் புகைப்படத்தை பார்த்ததும் உண்டியலை கிழே வைத்து விட்டு கன்னத்தில் போட்டுக் கொள்ளும் காட்சிக்கு 1973-ல் என்ன கைதட்டல் இருந்ததோ அதே அளவுக்கு இப்போதும் இருந்தது.

நடிகர் திலகம் இந்தப் படத்தில் இளமை துள்ளளுடனும் முறுக்கேறிய துடிப்புடனும் இருப்பார். குறிப்பாக பைரவன் ரோலில். வீட்டுக்குளே ஓடும் கார் [இது அந்த காலக்கட்டத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது] அதில் தாவி ஏறுவார். அது போல் முத்தங்கள் நூறு பாடலின் முடிவில் தரையில் இருந்து பக்கவாட்டில் பறந்து படுக்கையில் போய் உட்காருவார் [கிட்டத்தட்ட stylish rolling high jumb போல இருக்கும்]. இவை இரண்டும் தியேட்டர் குலுங்கிய இடங்கள்.

படத்தின் தொடர்ச்சிக்கு வருவோம். கனகா வீட்டை சீர்திருத்தி அங்கே இருப்பவர்களுக்கு மறுவாழ்வு அமைத்துக் கொடுக்கும் பைரவன்; சௌகாரை ராஜாவின் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கும் நாகேஷ், அங்கே மேஜரை சந்திக்கும் சௌகார் தன் தம்பி ராஜா எங்கே என்று கேட்க டாக்டர் ராஜாதான் உன் தம்பி என்று சொல்லி விட்டு இந்த காமராஜ் நகரே அவனை தவப்புதல்வனா கொண்டாடிட்டிருக்கு என்று சொல்லும் போது மீண்டும் பயங்கர கைதட்டல்.

அது போல ராம்தாசோடு போடும் சண்டை. எப்போதும் முழுக்கை சட்டை அணிந்து வரும் பைரவன் அந்த காட்சியில் பிரவுன் நிற அரைக்கை சட்டை அணிந்து வரும் ஸ்டைல், அதற்கும் அந்த சண்டைக்கும் ஆரவாரம்.

சௌகாருக்கும் டாக்டர் ராஜாவிற்கும் நடக்கும் உரையாடல்கள், அக்காவை தேடும் தம்பி, தம்பியிடம் உண்மையை மறைக்கும் அக்கா என காட்சிகள் போனது. இதற்கிடையில் மனோகரோடு கோபித்துக் கொண்டு சிவாஜியிடமே வந்து சேரும் மஞ்சுளா, ஏற்றுக் கொள்ள மறுக்கும் சிவாஜி, நம்பி வந்தவங்களை எங்க டாக்டர் ஒருபோதும் கைவிட மாட்டார் என்று அக்காவின் ஸ்தானத்தில் உள்ளே நுழைந்து குங்குமம் வைத்து விட சொல்லும் சௌகார். இது நடந்து கொண்டிருக்கும் போதே திரையை நோக்கி ரசிகர்கள் படையெடுக்க ஆரம்பிக்க சூட தீபங்கள் எல்லா இடங்களிலும் மீண்டும் ஏற்றப்பட பச்சை புல்வெளியில் நடிகர் திலகம் மஞ்சுளா ஓடி வர, பின்னணியில் மாமாவின் வழக்கமான ரிதம் தொடங்க இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை முழங்க திரைக்கு முன்னாலும் மேடையிலும், கிழே வரிசைகளுக்கு நடுவிலும் ஏன் பால்கனியிலும் கூட நடந்த ஆட்டங்களை வர்ணிக்க முடியாது, பார்த்துதான் ரசிக்க வேண்டும். நமது சுவாமி அவர்கள் பொருத்தமான தலைப்பு சூட்டியது போல் பங்குனியில் கார்த்திகை தீபங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். [ஆடை இதுவென நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம், சரணம் ஆரம்பித்த போது சாரதா அவர்களின் நினைவு வந்தது. காரணம் அவர் பல முறை கண்ணதாசனின் இந்த புறநானூறு பகர்த்தலை ரசித்து எழுதியிருக்கிறார்].

பாடல் முடிவுக்கு வரவும் பெரும்பாலான ரசிகர்கள் கிளம்பி விட்டனர். இதை நான் எதிர்பார்த்தேன். ஏன் என்றால் பிறகு ராஜாவின் "மறைவும்" கோடியில் ஒருவன் பிறந்து வந்தான் என்ற பாடலும் வரும். பலருக்கும் அதை காணும் மனது இல்லை. நடிகர் திலகம் என்றும் நம்மிடையே வாழ்கிறார் என அழுத்தமான எண்ணம் அவர்களுக்கு இருப்பதே காரணம்.

பிறகு கிளைமாக்ஸ். பைரவன் ராஜாவாக வெளிப்படும் போது. எஸ், டாக்டர் ராஜா என்று சொல்லுவார். அதுவரை முகத்தில் இருந்த கோபம், வார்த்தைகளில் இருந்த கடுமை அப்படியே விடை பெற்றுக் கொண்டு போய் விட முகத்தில் வரும் சாந்தம் கனிவு - ரசிகர்கள் காத்திருந்து கைதட்டுவார்கள். அன்றும் அப்படியே.

படம் முடிந்தது. வெளியே வந்தோம். அப்படியே நின்று பேசிக் கொண்டிருந்தோம். எனக்கு மதுரை நியூசினிமா நினைவு வந்துக் கொண்டே இருந்தது. தவிரவும் 1973 ஜூலையில் வந்த மதுரை தினத்தந்தி விளம்பரத்தை வேறு சுவாமி அவர்கள் அங்கே ஒட்டி வைத்திருந்தார். அப்போது பகிர்ந்து கொண்ட சில விஷயங்கள்.

M-R என சொல்லப்படும் மதுரை ராமநாதபுரம் ஏரியாவில் பெரிய படங்கள் அதிகபட்சமாக 5,6 பிரிண்ட்கள் வெளியிடப்படும். ஆனால் எங்கள் தங்க ராஜா படம்தான் முதன் முறையாக 9 பிரிண்ட்கள் ரிலீஸ் செய்யப்பட்டது. மதுரை, திண்டுக்கல், பழனி, விருதுநகர், காரைக்குடி,கம்பம், ராஜபாளையம். ராமநாதபுரம்.

இந்த படம் வெளி வருவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன் வந்த படத்திற்கு மதுரை விநியோகஸ்தர் ஒரு பத்திரிகை விளம்பரம் கொடுத்துக் கொண்டிருந்தார். 100 நாட்களுக்கு இலவச அனுமதி கிடையாது என்று. எங்கள் தங்க ராஜா வெளி வந்ததும் எங்கள் தங்க ராஜாவின் விநியோகஸ்தர் [Rm.S films] 101 நாட்களுக்கு இலவச அனுமதி கிடையாது என்று விளம்பரம் கொடுக்க ஆரம்பித்தார்.

படம் வெளியான பிறகே பாடல் இசைத்தட்டு வெளிவந்தது. ஓபனிங் ஷோ படம் பார்க்கும் போதுதான் பாடல்களை முதன் முறையாக கேட்கிறோம். மாமா ஏமாற்றவில்லை.

இப்படி பல செய்திகளை பேசி பகிர்ந்துக் கொண்ட பின் மனம் அந்த இன்பமான நினைவுகளை அசைப் போட்டுக் கொண்டிருக்க தியேட்டர் சுற்றுப்புறத்தை விட்டு விலகி வந்து வீடு நோக்கி திரும்பினோம்.

அன்புடன்

saradhaa_sn
1st April 2010, 12:03 PM
இன்றைய 31.03.2010 சிங்கத்தமிழன் சிவாஜி நிகழ்ச்சியை வசந்த் தொலைக்காட்சியில் பார்த்தவர்கள் இனிய இன்ப அதிர்ச்சிக்கு நிச்சயம் உள்ளாகியிருப்பர். கடந்த ஞாயிறன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியின் தொகுப்பு ஒளிபரப்பானது. அன்று அங்கு நேரில் பார்க்க முடியவில்லையே என ஏங்கியோர், குறிப்பாக சகோதரி சாரதா அவர்கள், நிச்சயம் உள்ளம் குளிர்ந்திருப்பர். அரை மணி நேரம் நிகழ்ச்சியில் விளம்பரம் போக எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஒளிபரப்பினார்கள். வசந்த் டிவிக்கு நமது உளமார்ந்த நன்றி.
ராகவேந்திரன்
டியர் ராகவேந்தர் அண்ணா...

நீங்கள் சொலவ்து முற்றிலும் உண்மை. நான் சற்றும் எதிர்பார்க்கவில்ல்லை. நேற்றைய சிங்கத்தமிழன் சிவாஜி நிகழ்ச்சி துவங்கும் முன்பு 'இன்று யார் வி.ஐ.பி.யாக வந்து தன் அனுபவங்களையும் எண்ணங்களையும் பகிர்ந்துகொள்ளப்போகிறாரோ' என்று எண்ணத்தில் இருந்த எனக்கு இன்ப அதிர்ச்சியாக, நிகழ்ச்சி துவங்கியதும், நாதஸ்வர ஒலியுடன் காட்சிகள் காண்பிக்கப்பட மகிழ்ச்சியின் எல்லைக்குப்போனேன். இந்நிகழ்ச்சியை வசந்த தொலைக்காட்சியினர் படம்பிடித்தனர் என்று நீங்களும், முரளியண்ணாவும் சொன்னீர்கள். என்றைக்காவது சாவகாசமாகக் காட்டுவார்கள் என்று நினைத்திருந்தபோது, சூட்டோடு சூடாக இரண்டே நாட்களில் ஒளிபரப்பி திகைக்க வைத்தனர்.

பாலாபிஷேகம், கற்பூர ஆரத்தி, பட்டாசு வெடிக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் அருமையாகக் காண்பிக்கப்பட்டன. ச்கோதரர் ராம்குமார் அவர்களின் பேச்சு சுருக்கமாக இருந்தபோதிலும், ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்டிருந்தார் என்பது அவர் முகத்தில் தெரிந்தது. சிறுவர்களுக்கு அவர் பரிசுப்பொருட்கள் வழங்குவதும் காண்பிக்கப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் திரு வசந்தகுமார் அவர்களின் பேச்சு ஒவ்வொரு சிவாஜி ரசிகனின் மனதையும் அப்படியே பிரதிபலிப்பதாய் அமைந்திருந்தது. அதனால்தான் அவருடைய ஒவ்வொரு வரிக்கும் கைதட்டலும் ஆரவாரமும் எழுந்தது. சால்வையணிவித்து வரவேற்கப்பட்ட அவருக்கு இறுதியில் நினைவுக்கேடயமும் வழங்கப்பட்டது.

டியர் முரளியண்ணா....

ஞாயிறன்று நிகழ்வுகளை பகுதி பகுதியாக, வரி வரியாக விவரித்து எங்களை அப்படியே மகாலட்சுமி திரையரங்கின் நடு இருக்கையில் கொண்டுபோய் உட்கார வைத்துவிட்டீர்கள். வர்ணிப்புகள் அருமையிலும் அருமை. அவ்வளவு ஆர்ப்பாட்டத்துக்கிடையிலும், பாடல் வரிகளின்போது என் நினைவு வந்தது என்று நீங்கள் சொல்லியிருப்பது, நம் அனைவரின் இதயங்களும் நடிகதில்கத்தைப்பற்றி ஒரே அலைவரிசையில் துடித்துக் கொண்டிருப்பதற்கு எடுத்துக்காட்டு. உங்கள் அனைவரின் விவரிப்புகளும், பம்மலார் அளித்த புகைப்படத் தொகுப்புகளும் எனது 'யு.எஸ்.பி.ஃப்ளாஷ் மெமோரி'யில் நிரந்தரமாக இடம்பெற்றுவிட்டன. விழா பற்றிய உங்களின் வர்ணணைகளை கணிணியில் காண்பித்து என் கணவரிடம் 'பார்த்தீங்களா? நீங்களும்தான் போயிட்டு வந்தீங்க. இப்படி விவரமாகச்சொல்ல உங்களுக்கு தெரிந்ததா?' என்று கேட்க, அவர் ஒரே வரியில் சொன்ன பதில் 'எல்லோரும் முரளி சார் ஆகிவிட முடியுமா?'. (அவர் சொன்னது உண்மைதானே).

டியர் மோகன் (ரங்கன்)....

நீங்களும் உங்கள் பங்குக்கு, ஞாயிறு படவிழாவை அருமையாக விவரித்துள்ளீர்கள். நன்றி. குறிப்பாக சகோதரி கிரிஜா அவர்களின் பங்களிப்பைப் பற்றி.

டியர் பம்மலார்....

உங்களது புகைப்படத்தொகுப்பு அபாரம். சொர்க்கம் படத்தின் 100-வது நாள் தினத்தந்தி விளம்பரத்தை ரொம்ப நாளாகத் தேடிக்கொண்டிருந்தேன். உங்கள் புகைப்படத்தொகுப்பில் கிடைக்கப்பெற்றேன். பாரதவிலாஸ், ராஜபார்ட் ரங்கதுரைக்கான தியேட்டர் ரெஸ்பான்ஸ் எப்படியிருந்ததாம்?.

மொத்தத்தில் இந்த வாரம், நடிகர்திலகத்தின் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, மகாலட்சுமி திரையரங்க நிர்வாகத்தினருக்கும் மறக்க முடியாத வாரமாக அமைந்துவிட்டது என்பதில் ஐயமில்லை.

pammalar
1st April 2010, 05:13 PM
சிவாஜி நியூஸ்

சென்னையில் இன்று வியாழக்கிழமை (1.4.2010) நடைபெறுகின்ற நடிகர் திலகத்தின் நிகழ்ச்சி:

தங்கத்தமிழ்ப் பெருமகனின் வெள்ளித்திரைத் திருவிழா - செவாலியே சிவாஜி வாரம் (ஏழாம் நாள்) - பெரம்பூர் மஹாலட்சுமி திரையரங்கம் - சொர்க்கம் திரைக்காவியம் - பிற்பகல் 2:30, மாலை 6:15, இரவு 9:45

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
1st April 2010, 09:47 PM
இன்றைய மாலைக் காட்சி சொர்க்கம் குறிப்பிடத் தக்க அளவிற்கு மக்கள் நிறைந்த காட்சியாக அமைந்தது. சுமார் 220 லிருந்து 250 வரை இருக்கலாம். இதய வேந்தன் மன்றத்தினர் இடைவேளையில் அரங்க ஊழியர்களை சேலை வேட்டி பரிசு கொடுத்து கௌரவித்தனர். கூடிய விரைவில் இதே மஹாலக்ஷ்மியில் பாசமலர் வெளியிடும் செய்தி கிடைத்தது. தர்மம் தலைகாக்கும் படத்தை வெளியிட்டவர்களே பாச மலரையும் திரையிட உள்ளதாகவும் தகவல். உள்ளே வந்திருந்த அனைவரும் பொன்மகள் வந்தாள் பாடல் காட்சியிலும் சொல்லாதே யாரும் கேட்டால் பாடலிலும் பலத்த ஆரவாரம். அன்று தேவி பேரடைஸில் அன்றைய ரசிகர் கூட்டம் எந்தெந்த காட்சியிலெல்லாம் ஆர்ப்பரித்தனரோ, அதே போன்று இன்றும் அந்தந்த காட்சியிலெல்லாம் அதே வகையான ஆர்ப்பரிப்பு... நமக்கெல்லாம் வயது கூடியது என்பதைத் தவிர வேறெந்த வித்தியாசமும் ரசிகர்களிடமும் மக்களிடமும் காணப்படவில்லை. காரணம் இன்றைய காட்சியிலும் இளைஞர்களைக் காண முடிந்தது. இன்ப அதிர்ச்சியாக நமது புதிய ஹப்பர் ராதாகிருஷ்ணனை சந்தித்து உரையாடும் வாய்ப்புக் கிட்டியது. உள்ளம் மகிழ்வுற்றது.
இனி பாசமலர் நம்மைக் கட்டிப்போடக் காத்திருக்கிறது.
காத்திருப்போம்.

ராகவேந்திரன்

J.Radhakrishnan
1st April 2010, 11:29 PM
நன்றி திரு ராகவேந்தர் சார்,
இன்று சொர்க்கம் படம் காண வந்த போது ரசிகர்களின் உற்சாகத்தை பார்க்கும் போது Sunday நிகழ்ச்சிகளை miss செய்து விட்டேனே என்று வருந்துகிறேன். Ms கிரிஜா சண்டே அன்று நடந்த அலப்பறை பற்றி பேசிக்கொண்டே இருந்தார். மேலும் உங்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி.

rajeshkrv
2nd April 2010, 02:40 AM
2 more AMRaja songs for NT

http://www.youtube.com/watch?v=3oQJmJoYWNg

http://www.youtube.com/watch?v=_bMCVZn4ieo

pammalar
2nd April 2010, 03:03 AM
தங்கத்தமிழ்ப் பெருமகனின் வெள்ளித்திரைத் திருவிழா - செவாலியே சிவாஜி வாரம் - பெரம்பூர் மஹாலட்சுமி திரையரங்கம் - மொத்த வசூல் விவரம் (சற்றேறக்குறைய)

30.3.2010 - செவ்வாய் - பாரத விலாஸ்

பிற்பகல் 2:30 மணிக் காட்சி = ரூ. 2,400/- (ரூபாய் இரண்டாயிரத்து நானூறு)

மாலை 6:15 மணிக் காட்சி = ரூ. 2,600/- (ரூபாய் இரண்டாயிரத்து அறுநூறு)

இரவு 9:45 மணிக் காட்சி = ரூ. 2,100/- (ரூபாய் இரண்டாயிரத்து ஒருநூறு)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
2nd April 2010, 03:22 AM
தங்கத்தமிழ்ப் பெருமகனின் வெள்ளித்திரைத் திருவிழா - செவாலியே சிவாஜி வாரம் - பெரம்பூர் மஹாலட்சுமி திரையரங்கம் - மொத்த வசூல் விவரம் (சற்றேறக்குறைய)

31.3.2010 - புதன் - ராஜபார்ட் ரங்கதுரை

பிற்பகல் 2:30 மணிக் காட்சி = ரூ. 5,600/- (ரூபாய் ஐந்தாயிரத்து அறுநூறு)

மாலை 6:15 மணிக் காட்சி = ரூ. 4,200/- (ரூபாய் நான்காயிரத்து இருநூறு)

இரவு 9:45 மணிக் காட்சி = ரூ. 2,200/- (ரூபாய் இரண்டாயிரத்து இருநூறு)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
2nd April 2010, 04:50 AM
Dear Mr.Rajesh,

Once again, Thanks for the two rare & excellent song links.

Both the numbers were sung by AMRaja & Jikki.

The first one, KALANGAMILA KAADHALILAEY is from the film ILLARA JOTHI(1954). This film is Modern Theatres' proud production. Our NT has done only two films with Modern Theatres. The other one is Thirumbippaar(1953). The lyrics of this song were penned by Kannadhaasan and the music has been composed by G.Ramanathan. Look at the fast beat & rhythm. The tune goes like a sizzling wind with melody lingering throughout. NT & Padmini - Wah! - Made for each other. The song immortalises the Anarkali-Saleem melodramatic capsule which comes as a Stage Play (Oranga Naatakam) in the film. See how NT as Saleem looks supreme. Padmini as Azhaki Anarkali looks natural & beauty personified.SAAsokan witnesses the performance from the audience wing. This was the first film for him with NT. KAThangavelu plays as King Akbar. A Scintillating Song.

The second song INBAMAY PONGUMAY is from BOMMAI KALYANAM(1958). The Song is written by A.Maruthakasi and set to tune by Mama (K.V.) Mahadevan. NT & Jamuna - a mellow & joyful pair. This song comes in the middle of the film especially after NT weds Jamuna. NT in the boat in white & white with white hat & cooling glasses - a connoisseur's delight. Evergreen Song in every aspect.

Regards,
Pammalar.

RAGHAVENDRA
2nd April 2010, 08:37 PM
டியர் பம்மலார்,
தங்களின் பதிவுகள் மூலம் நடிகர் திலகத்தின் படங்கள் புரியும் சாதனைகளை அனைவருக்கும் தெரியும் படி புள்ளி விவரங்கள் மூலம் அளித்து வருவது பாராட்டுக்குரியது. தங்கள் பணி மென்மேலும் தொடரட்டும்.

நேற்றுடன் முடிவடைந்த சிவாஜி வாரத்தில் ஒரு தனித்துவம் இருக்கிறது. ஆமாம், சென்னை சாந்தியில் 02.08.1975ல் மன்னவன் வந்தானடி வெளியான போது முதல் நாள் வரைக்கும் அதாவது 01.08.1975 வரைக்கும் சிவாஜி வாரம் இரு வாரங்கள் கொண்டாடப் பட்டு நடிகர் திலகத்தின் படங்கள் திரையிடப் பட்டன. தற்போது 26.03.10 அன்று சிவாஜி வாரத்தை அதே மன்னவன் வந்தானடி படம் தொடங்கி வைத்துள்ளது. இது நிச்சயம் வியக்கத்தக்கதாகும். எதேச்சையாக அமைந்தாலும் சரித்திரம் திரும்புவதன் அறிகுறியாகக் கூட காட்சியளிக்கலாம் அல்லவா. அது மட்டுமல்ல, அப்போது மன்னவன் வந்தானடி படம் 100 நாட்கள் ஓடி முடிவடைந்தவுடன் வேறொரு படம் சில நாட்கள் திரையிடப்பட்டு அதனைத் தொடர்ந்து மீண்டும் சிவாஜி வாரமாக நாளுக்கொரு படமாக சாந்தியில் திரையிடப்பட்டன.

இதை என்னென்பது

ராகவேந்திரன்

Murali Srinivas
2nd April 2010, 11:56 PM
பாராட்டி எழுதிய சாரதா, ராகவேந்தர் சார், மோகன், தனி மடல் மூலமாக பாராட்டு தெரிவித்த செந்தில், யாஹூ சிவாஜி க்ரூப்ஸ் மூலமாக பாராட்டிய சங்கர் [சங்கரா 1970] மற்றும் முத்துசுவாமி முதலிய அனைத்து உள்ளங்களுக்கும் மனங்கனிந்த நன்றி.

அன்புடன்

NOV,

One request. Can you enable atlease one photo from the link given by either Ragavendar or Pammalar? Especially the poster photo with lot of garlands?

pammalar
3rd April 2010, 01:42 AM
தங்கத்தமிழ்ப் பெருமகனின் வெள்ளித்திரைத் திருவிழா - செவாலியே சிவாஜி வாரம் - பெரம்பூர் மஹாலட்சுமி திரையரங்கம் - மொத்த வசூல் விவரம் (சற்றேறக்குறைய)

1.4.2010 - வியாழன் - சொர்க்கம்

பிற்பகல் 2:30 மணிக் காட்சி = ரூ. 3,700/- (ரூபாய் மூவாயிரத்து எழுநூறு)

மாலை 6:15 மணிக் காட்சி = ரூ. 4,500/- (ரூபாய் நான்காயிரத்து ஐநூறு)

இரவு 9:45 மணிக் காட்சி = ரூ. 2,200/- (ரூபாய் இரண்டாயிரத்து இருநூறு)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
3rd April 2010, 04:35 AM
தங்கத்தமிழ்ப் பெருமகனின் வெள்ளித்திரைத் திருவிழா - செவாலியே சிவாஜி வாரம் - பெரம்பூர் மஹாலட்சுமி திரையரங்கம் - ஒரு வார மொத்த வசூல் விவரம் (சற்றேறக்குறைய)

26.3.2010 - வெள்ளி - மன்னவன் வந்தானடி = ரூ. 9,800/- (ரூபாய் ஒன்பதாயிரத்து எண்ணூறு)

27.3.2010 - சனி - கௌரவம் = ரூ. 7,800/- (ரூபாய் ஏழாயிரத்து எண்ணூறு)

28.3.2010 - ஞாயிறு - எங்கள் தங்க ராஜா = ரூ. 22,000/- (ரூபாய் இருபத்து இரண்டாயிரம்)

29.3.2010 - திங்கள் - திருவருட்செல்வர் = ரூ. 11,700/- (ரூபாய் பதினொன்றாயிரத்து எழுநூறு)

30.3.2010 - செவ்வாய் - பாரத விலாஸ் = ரூ. 7,100/- (ரூபாய் ஏழாயிரத்து ஒருநூறு)

31.3.2010 - புதன் - ராஜபார்ட் ரங்கதுரை = ரூ.12,000/- (ரூபாய் பன்னிரெண்டாயிரம்)

1.4.2010 - வியாழன் - சொர்க்கம் = ரூ.10,400/- (ரூபாய் பத்தாயிரத்து நானூறு)

ஆக மொத்தத்தில், ஒரு வாரத்தின் மொத்த வசூல் சற்றேறக்குறைய ரூ. 80,800/- (ரூபாய் எண்பதாயிரத்து எண்ணூறு). இன்றைய காலகட்டத்தில், இத்தகைய கலெக்ஷன், சாதனைகளின் உச்சம்.

தியேட்டர் வாடகை, திரைப்பட பிரிண்ட் வாடகை, பப்ளிசிடி மற்றும் இதர செலவுகள் எல்லாம் போக, திரையிட்டவருக்கு குறைந்த பட்சமாக ரூபாய் பத்தாயிரத்துக்கும் மேல் லாபம் கிடைத்துள்ளது.

சிவாஜி கணேச கடாட்சத்தால் பெரம்பூர் மஹாலட்சுமி திரையரங்கில் திரையிடப்பட்ட சிவாஜி வாரம், அபாரமான லட்சுமி கடாட்சத்தை அளித்துள்ளது.

செவாலியே சிவாஜி வாரம் ஒரு ஹிமாலயன் ஹிட்.

நமது நடிகர் திலகம் என்றுமே வசூல் சக்கரவர்த்தி தான்.

அன்புடன்,
பம்மலார்.

rangan_08
3rd April 2010, 12:08 PM
எங்கள் தங்க ராஜா - தியேட்டர் நிகழ்வுகள் - III

முத்தங்கள் நூறு பாடலின் முடிவில் தரையில் இருந்து பக்கவாட்டில் பறந்து படுக்கையில் போய் உட்காருவார் [கிட்டத்தட்ட stylish rolling high jumb போல இருக்கும்]. இவை இரண்டும் தியேட்டர் குலுங்கிய இடங்கள்.

True. I was really surprised. NT was really very agile as Bhairavan.




பாடல் முடிவுக்கு வரவும் பெரும்பாலான ரசிகர்கள் கிளம்பி விட்டனர். இதை நான் எதிர்பார்த்தேன். ஏன் என்றால் பிறகு ராஜாவின் "மறைவும்" கோடியில் ஒருவன் பிறந்து வந்தான் என்ற பாடலும் வரும். பலருக்கும் அதை காணும் மனது இல்லை. நடிகர் திலகம் என்றும் நம்மிடையே வாழ்கிறார் என அழுத்தமான எண்ணம் அவர்களுக்கு இருப்பதே காரணம்.

ENGAL THANGA RAJA
AVAN ENDRUM MANAKKUM ROJA

rangan_08
3rd April 2010, 12:11 PM
டியர் மோகன் (ரங்கன்)....

நீங்களும் உங்கள் பங்குக்கு, ஞாயிறு படவிழாவை அருமையாக விவரித்துள்ளீர்கள். நன்றி. குறிப்பாக சகோதரி கிரிஜா அவர்களின் பங்களிப்பைப் பற்றி.



Thank you. I wish that this will be followed by another great NT event.

rangan_08
3rd April 2010, 12:13 PM
இன்றைய மாலைக் காட்சி சொர்க்கம் குறிப்பிடத் தக்க அளவிற்கு மக்கள் நிறைந்த காட்சியாக அமைந்தது. சுமார் 220 லிருந்து 250 வரை இருக்கலாம். இதய வேந்தன் மன்றத்தினர் இடைவேளையில் அரங்க ஊழியர்களை சேலை வேட்டி பரிசு கொடுத்து கௌரவித்தனர். கூடிய விரைவில் இதே மஹாலக்ஷ்மியில் பாசமலர் வெளியிடும் செய்தி கிடைத்தது. உள்ளே வந்திருந்த அனைவரும் பொன்மகள் வந்தாள் பாடல் காட்சியிலும் சொல்லாதே யாரும் கேட்டால் பாடலிலும் பலத்த ஆரவாரம். அன்று தேவி பேரடைஸில் அன்றைய ரசிகர் கூட்டம் எந்தெந்த காட்சியிலெல்லாம் ஆர்ப்பரித்தனரோ, அதே போன்று இன்றும் அந்தந்த காட்சியிலெல்லாம் அதே வகையான ஆர்ப்பரிப்பு...

Great news Raghavendra sir. Eagerly waiting for Pasamalar's release.

venkkiram
3rd April 2010, 10:12 PM
ஓவியர் ஜீவாவின் கைவண்ணத்தில் நடிகர் திலகம். வரைந்து முடித்து ஒரு நாள் கூட ஆகவில்லை. சுடச் சுட உங்களின் பார்வைக்கு.

மிகவும் அருமையாக வந்திருக்கிறது.

http://img682.imageshack.us/img682/1038/sivajik.jpg

சிவாஜியின் பரம விசிறியான ஜீவாவையும் இந்த திரிக்கு அழைத்து வரலாம் என நினைக்கிறேன். பார்க்கலாம்.

joe
3rd April 2010, 10:28 PM
ஓவியர் ஜீவாவின் கைவண்ணத்தில் நடிகர் திலகம். வரைந்து முடித்து ஒரு நாள் கூட ஆகவில்லை. சுடச் சுட உங்களின் பார்வைக்கு.

மிகவும் அருமையாக வந்திருக்கிறது.

http://img682.imageshack.us/img682/1038/sivajik.jpg

சிவாஜியின் பரம விசிறியான ஜீவாவையும் இந்த திரிக்கு அழைத்து வரலாம் என நினைக்கிறேன். பார்க்கலாம்.

:clap: :thumbsup:

pammalar
4th April 2010, 12:10 AM
தித்திக்கும் செய்தி

வரும் வெள்ளி (9.4.2010) முதல், சென்னை பெரம்பூர் மஹாலட்சுமி திரையரங்கில், தினசரி 3 காட்சிகளாக, காலத்தை வென்ற காவியமான நமது நடிகர் திலகத்தின் பாசமலர் திரைக்காவியம் திரையிடப்படுகிறது. அற்புதக் கலை விருந்துக்கு அனைவரும் தயாராவோம்.

அண்ணன் ராஜசேகரனின் புகழ் வாழ்க! அண்ணல் நடிகர் திலகத்தின் புகழ் வாழ்க!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
4th April 2010, 12:54 AM
ஓவியர் ஜீவாவின் கைவண்ணத்தில் நடிகர் திலகம். வரைந்து முடித்து ஒரு நாள் கூட ஆகவில்லை. சுடச் சுட உங்களின் பார்வைக்கு.

மிகவும் அருமையாக வந்திருக்கிறது.

http://img682.imageshack.us/img682/1038/sivajik.jpg

சிவாஜியின் பரம விசிறியான ஜீவாவையும் இந்த திரிக்கு அழைத்து வரலாம் என நினைக்கிறேன். பார்க்கலாம்.

நடிகர் திலகத்தின் ஓவியம் மிக மிகப் பிரமாதம். அப்படியே தத்ரூபமாக இருக்கிறது. நான் எனது கணினியில் அதனைப் பதிவிறக்கம் செய்து கொண்டு விட்டேன். இங்கே அதனைப் பதிவு செய்த திரு.வெங்கிராமுக்கு பற்பல நன்றிகள்! திரு. ஜீவாவை இத்திரிக்கு அவசியம் அழைத்து வாருங்கள்!

ஓவியர் ஜீவாவின் கைவண்ணத்தில், சிங்கத்தமிழனின் "சித்திரம் பேசுதடி! நம் சிந்தை மயங்குதடி!!"

சபாஷ் ஜீவா!!!

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
4th April 2010, 06:15 AM
டியர் வெங்கிராம்,
ஓவியர் ஜீவாவின் நடிகர் திலகம் உருவப் படம் உயிரோட்டமாக உள்ளது. அதை நம்முடைய நடிகர் திலகம் இணையதளத்தில் http://www.nadigarthilagam.com முகப்புப் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. அவருக்கு நமது உளமார்ந்த் நன்றிகள். அவரையும் இத்திரியில் அறிமுகப் படுத்துங்கள். அவருக்கு நமது பாராட்டுக்கள்.

ராகவேந்திரன்.

venkkiram
4th April 2010, 08:34 AM
திரு பம்மலார், ராகவேந்திரா அவர்களுக்கு..

ஜீவாவின் ஓவியமானது சிவாஜி இணையத்தளத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டு அளவிலா மகிழ்ச்சி. ஜீவாவும் கேள்விப் பட்டு அகம் குளிர்ந்தார். நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக Hub-ற்கு வருகை தருவதாக சொல்லியிருக்கிறார்.

நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் மறைந்த நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஜீவா வரைந்த ஓவியம்(Acrylic paint), இதோ உங்கள் பார்வைக்கு (http://img32.imageshack.us/img32/8936/sivaji2.jpg). முதன் முதலாக இவ்வோவியத்தை கண்ட போது கண்ணில் நீர்த்திவலைகள் எட்டிப்பார்த்தது. என்ன ஒரு யோகிகளுக்கே உரிய, தீட்சன்யமான பார்வை சிவாஜியின் கண்ணில்!

உபரித் தகவல்:

ஜீவா (http://jeevartistjeeva.blogspot.com/) அவர்கள் திரைப்பட ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் (Om Shanti Om, அந்நியன், Main Hoon Na புகழ்) உடன் பிறந்த அண்ணன். ஜீவாவின் "திரைச்சீலை" என்ற தமிழ்ச் சினிமா பற்றிய நூல் வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி சென்னையில் வெளியிடப்பட இருக்கிறது.

pammalar
4th April 2010, 12:55 PM
ஏப்ரல் 9, வெள்ளி முதல் சென்னை பெரம்பூர் மஹாலட்சுமியில் பாசமலர். இதற்கான விளம்பரம் இன்று (3.4.2010) ஞாயிற்றுக்கிழமை தினத்தந்தி நாளிதழின் சென்னைப் பதிப்பில் வெளியாகியுள்ளது. அதனைக் கண்டு களிக்க கீழ்க்காணும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

http://paasamalar69.webs.com/apps/photos/album?albumid=8638909

அன்புடன்,
பம்மலார்.

joe
4th April 2010, 01:00 PM
நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் மறைந்த நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஜீவா வரைந்த ஓவியம்(Acrylic paint), இதோ உங்கள் பார்வைக்கு (http://img32.imageshack.us/img32/8936/sivaji2.jpg).
அற்புதம் ..அற்புதம் :notworthy: :notworthy:

Murali Srinivas
4th April 2010, 02:29 PM
வெங்கி,

நடிகர் திலகத்தின் திரியில் உங்கள் முதல் பதிவு இது. முதல் பதிவிலேயே ஒரு முத்தான உயிரோவியத்தை காட்சிப்படுத்தியதற்கு நன்றி. நடிகர் திலகத்தின் ஒளி உமிழும் கண்களையும் தேஜஸ் ததும்பும் முகத்தையும் தூரிகையில் வடித்த ஜீவா அவர்களுக்கு மனங்கனிந்த நன்றியும் பாராட்டுகளும். இந்த திரியில் அவரது பங்களிப்பும் சேரட்டும்.

சுவாமி,

இனிய செய்தியை சொன்ன உங்களுக்கு ஓராயிரம் நன்றிகள்.

அன்புடன்

Murali Srinivas
4th April 2010, 02:57 PM
அண்மைக் காலமாக நடிகர் திலகத்தை பற்றிய செய்திகளும் நிகழ்வுகளும் படங்களும் ஊடகங்களில் நிறைந்து காணப்படுவதை பார்க்கும் போது ஒளிமயமான எதிர்காலம் உள்ளத்தில் தெரிகிறது என்ற கவியரசரின் சாகவரம் பெற்ற வரிகள் நினைவுக்கு வருகிறது. இதை சொல்லும் நேரத்தில் என்ஜின் டிரைவர் சாரதி இதை திரையில் முதன் முதலாக உருவகப்படுத்தியது 46 வருடங்களுக்கு முன் இதே ஏப்ரல் 3-ந் தேதி என்பது ஓர் ஒற்றுமை [பச்சை விளக்கு - 03.04.1964].

கடந்த வாரம் சிவாஜி வாரம் ஆனதால் நாம் சாதாரணமாக குறிப்பிடும் சில விஷயங்கள் விட்டுப் போய் விட்டன. குலமா குணமா பற்றி சொன்னோம்.

மார்ச் 28 - தங்கச் சுரங்கம் வெளியாகி 41 வருடங்கள் நிறைவு பெற்றன [28.03.1969].

மார்ச் 29- இருவர் உள்ளத்தின் 47-ம் ஆண்டு நிறைவு விழா [29.03.1963].

மார்ச் 31 அன்று ராஜ ராஜ சோழன் 37 வருடங்களை நிறைவு செய்தார் [31.03.1973].

அவரது படங்களைப் பொறுத்தவரை வருடம் முழுக்க திருவிழாதான்.

அன்புடன்

pammalar
4th April 2010, 11:13 PM
HAPPY EASTER!!!

Pammalar.

pammalar
4th April 2010, 11:47 PM
நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் மறைந்த நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஜீவா வரைந்த ஓவியம்(Acrylic paint), இதோ உங்கள் பார்வைக்கு (http://img32.imageshack.us/img32/8936/sivaji2.jpg). முதன் முதலாக இவ்வோவியத்தை கண்ட போது கண்ணில் நீர்த்திவலைகள் எட்டிப்பார்த்தது. என்ன ஒரு யோகிகளுக்கே உரிய, தீட்சன்யமான பார்வை சிவாஜியின் கண்ணில்!

உபரித் தகவல்:

ஜீவா (http://jeevartistjeeva.blogspot.com/) அவர்கள் திரைப்பட ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் (Om Shanti Om, அந்நியன், Main Hoon Na புகழ்) உடன் பிறந்த அண்ணன். ஜீவாவின் "திரைச்சீலை" என்ற தமிழ்ச் சினிமா பற்றிய நூல் வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி சென்னையில் வெளியிடப்பட இருக்கிறது.

திரு.வெங்கிராம்,

கலையுலக பிரம்மாவுக்கு ஒரு ஓவிய பிரம்மாவின் தலைசிறந்த அஞ்சலி! ஆஹா! மெய் சிலிர்க்கிறது! நடிகர் திலகத்தின் ப்ரொஃபைல் போஸ் அபாரம், அற்புதம், அருமை! அப்படியே பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது. இந்தச் சித்திரம் என்ன, ஓவியம் மட்டுமா?! காண்பவர்தம் ஊனுடன் கலக்கும் உயிரோவியம்! வரைந்த ஓவியர் ஜீவாவின் கைகளுக்கு எனது கோல்டன் ஹேண்ட்ஷேக்! பதிவிட்ட தங்களுக்கு பற்பல நன்றிகள்!

எழுத்தாளர் ஜீவாவின் "திரைச்சீலை" நூலுக்கும் மற்றும் அதன் வெளியீட்டு விழாவிற்கும் இதயபூர்வமான நல்வாழ்த்துக்கள்!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
5th April 2010, 03:01 AM
திருப்பதி சென்று வந்தால் திருப்பம் வரும் என்பது ஆன்றோர் வாக்கு. தமது முழுமுதற் காவியமான பராசக்தியின் மூலம் திரையுலகுக்கே திருப்பத்தை, திருப்புமுனையை ஏற்படுத்தியவர், நம் பெருமான் நடிகர் திலகம். தற்பொழுது தமது வாரப் படங்களின் மூலம், குறிப்பாக சிங்காரச் சென்னை மாநகரில், பெரும் திருப்புமுனையை உருவாக்கியுள்ளார். சென்னை பெரம்பூர் மஹாலட்சுமியில் செவாலியே சிவாஜி வாரம் பெற்ற மாபெரும் வெற்றியினால், சீர் மேவும் சென்னை மாநகரம் கண்டு வரும் நல்ல திருப்பங்கள்:

1. பெரம்பூர் மஹாலட்சுமியில் சிவாஜி வாரம் வெற்றிகரமாக முடிந்து ஒரு வார இடைவெளியில், அதே அரங்கில் 9.4.2010 வெள்ளி முதல் நமது நடிகர் திலகத்தின் பாசமலர் திரைக்காவியத்தை ஜி.எம்.பிக்சர்ஸ் என்கின்ற திரைப்பட விநியோகஸ்தர் திரையிட உள்ளார்.

2. திவ்யா பிலிம்ஸ் திரு.ஜி.சொக்கலிங்கம் அவர்கள், காலனையும், காலத்தையும் வென்ற கலைக்கடவுளின் கர்ணன் காவியத்தை, கலை தெய்வத்தின் அவதார நிறைவு நாளை முன்னிட்டோ அல்லது அவதாரத் திருநாளை முன்னிட்டோ, மிகப் பிரம்மாண்டமான முறையில் ஏ.சி. திரையரங்குகளில் திரையிட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த இடைப்பட்ட காலத்தில், வேறு ஏதேனும் ஒரு கலைக்குரிசிலின் காவியத்தை அவர் எங்கேனும் திரையிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

3. பல விநியோகஸ்தர்களுக்கு சிவாஜி படங்களைத் திரையிட வேண்டும் என்கின்ற எண்ணம் எழுந்துள்ளது.

அன்புடன்,
பம்மலார்.

HARISH2619
5th April 2010, 10:56 AM
திரு முரளி சார்,திரு பம்மலார்,திரு ராகவேந்தர் சார்,திரு ரங்கன் சார்,
மஹாலட்சுமி தியேட்டர் நிகழ்வுகளை புகைப்படங்கள் மூலமாகவும் தங்களது அற்புதமான வர்னனைகள் மூலமாகவும் எங்களையும் படத்தை தங்களோடு சேர்ந்து பார்த்த திருப்தியை ஏற்படுத்தி விட்டீர்கள்.
சொர்ககம் படத்தில் பாலாஜி அவர்கள் நடிகர்திலகத்திடம் நீதான் இந்த கம்பெனிக்கு புது மேனேஜர் என்று சொல்லும்போது நடிகர்திலகம் மகிழ்ச்சியில் வார்த்தைகள் வெளிவராமல் கண்களாலேயே நன்றியை வெளிப்படுத்துவாரே,அந்த நிலைமையில் இப்போது நான் உள்ளேன்,நன்றிகள் பல கோடி.
திரு வெங்கிராம் அவர்களே,
அதிஅற்புதமான அந்த ஒவியங்களை தரிசனம் செய்ய வைத்தமைக்கு நன்றி.

sankara70
5th April 2010, 11:36 AM
[

2. திவ்யா பிலிம்ஸ் திரு.ஜி.சொக்கலிங்கம் அவர்கள், காலனையும், காலத்தையும் வென்ற கலைக்கடவுளின் கர்ணன் காவியத்தை, கலை தெய்வத்தின் அவதார நிறைவு நாளை முன்னிட்டோ அல்லது அவதாரத் திருநாளை முன்னிட்டோ, மிகப் பிரம்மாண்டமான முறையில் ஏ.சி. திரையரங்குகளில் திரையிட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த இடைப்பட்ட காலத்தில், வேறு ஏதேனும் ஒரு கலைக்குரிசிலின் காவியத்தை அவர் எங்கேனும் திரையிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

3. பல விநியோகஸ்தர்களுக்கு சிவாஜி படங்களைத் திரையிட வேண்டும் என்கின்ற எண்ணம் எழுந்துள்ளது.

அன்புடன்,
பம்மலார்.
[/b][/color][/quote]

I felt if NT movies will be screened in new cinemas, multiplexes
I got an answer
Thank u

kaveri kannan
5th April 2010, 07:13 PM
இந்தத் திரியில் எரிந்துகொண்டிருக்கும் கலைக்குரிசில் இரசிக நெஞ்சங்களுக்கு என் முதல் வணக்கம்.

காலத்தை வென்ற மகாக் கலைஞனின் புகழ்பாட இனி உங்களுடன் என் பயணம் இருக்கும்.

joe
5th April 2010, 07:54 PM
கலைவேந்தன் புகழ்பாட காவேரி கண்ணனே வருக! வெல்க!!

kaveri kannan
5th April 2010, 08:26 PM
நன்றி ஜோ அவர்களே..

நீங்கள், சாரதா, பம்மலார், முரளி ஸ்ரீனிவாஸ் மற்றும் நம் நண்பர்கள் இங்கே கட்டிவரும் மெய்நிகர் கலைக்கோயிலை சில நாட்களாய் தினம் தரிசித்து வருகிறேன்.

பதிந்து பலநாள் கழித்து இன்றுதான் பதிய அனுமதி கிடைத்தது.

சித்ராவில் புதிய பறவை, மேகலாவில் தில்லானா மோகனாம்பாள், பாண்டியனின் கீழ்வானம் சிவக்கும், சாந்தியில் முதல் மரியாதை, கிரவுனில் வெள்ளை ரோஜா, கபாலியில் நீலவானம், பாரத்தில் என்னைப்போல் ஒருவன், நடராஜாவில் நீலவானம், அசோக்கில் வடிவுக்கு வளைகாப்பு - என நாலாபக்கமும் ஓடித் தேடி அடைந்த 80 -களின் நினைவுகள் முழுதாய் மீட்டெடுத்தேன்.

என் பல பரிமாணங்கள் நீங்கள் ஒவ்வொருவரும் பதிவதாய், பரிமாறுவதாய் பரகாயப்பிரவேச பரவசம் எனக்குள்.

நல்ல இடம் நான் வந்த இடம்..

RAGHAVENDRA
5th April 2010, 09:51 PM
காவிரி பாயும் கன்னித் தமிழ் நாடு
கலைகளுக்கெல்லாம் தாய் வீடு
மரகதம் படத்தின் முகப்பில் ஒலிக்கும் இப்பாடல் வரிகளுக்கேற்ப காவிரிக் கர்ணனாய் நடிகர் திலகத்தினைப் பற்றிய நினைவுகளையும் எண்ணங்களையும் அள்ளித் தரவந்திருக்கும் காவிரிக்கண்ணன் அவர்களுக்கு நமது அனைவர் சார்பிலும் உளமார்ந்த வாழ்த்துக்கள். திக்கெட்டும் திரிந்தலைந்து திரும்புகின்ற திசையெல்லாம் அவர் திருவுருவத்தை மட்டும் காட்சியாய்க் கண்டு ரசித்த பல கோடிக் கண்களில் இரண்டு கண்களுக்கு சொந்தக்காரனான உங்களை வரவேற்பதில் பெரு மகிழ்வுறுகிறோம்.
வருக வருக வருக

ராகவேந்திரன்

kaveri kannan
5th April 2010, 10:01 PM
மதிப்புக்குரிய ராகவேந்திரா அவர்களே..

உங்கள் இரசனை என்னும் மேரு முன் நான் சிறு மண்மேடு.. அவ்வளவே..


நடிகர்மன்னினின் திரைக்காவியங்கள் காட்டப்பெறும் இடங்கள் நமக்கு தலங்கள்.


அவரைச் சிலாகித்து மகிழ்வது நம் மதம்..

இளையவயதின் சக்தியை ஒரு கலைக்கோட்டில் பயணிக்கவைத்த கலாச்சார இயக்கம் நம் நடிப்பின் தலைவர்.

படம் தொடங்குமுன், இடைவேளைகளில் -
சக மதத்தவருடன் ஆராதிக்கும் சேதிகளைப் பகிரவே பலமுறை விஜயம்...

நம்மைவிடவும் நுணுக்கமாய் நடிப்பரசரை ரசிப்பவரைக் கண்டால், உடன் நட்பு, நெருக்கம், மதிப்பு..


காட்சிகளின்போது அரங்கத்தவர் எப்படி இரசிக்கிறார்கள் என அவதானிப்பதே நம் விழிகளுக்கு முதல் பொறுப்பு...


உங்களைப் போன்றோரை அணுகவைத்த இத்திரிக்கு நன்றி..

RAGHAVENDRA
5th April 2010, 11:01 PM
அன்பு நண்பர் காவிரிக் கண்ணன் அவர்களே,
நம் அனைவரையும் ஒரு சேர சங்கமிக்க வைத்துள்ள இத்திரிக்கு நாம் அனைவருமே நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளோம். நம் அனைவரின் உள்ளத்தையும் பிரதிபலித்துள்ள தங்களுக்கு உளமார்ந்த நன்றிகள்.

வசந்த் தொலைக்காட்சி சிங்கத்தமிழன் சிவாஜி நிகழ்ச்சியில் இவ்வாரம் மனோ - பாடகர் அல்ல - மனோகர் - நடிகர் திலகத்தின் மூத்த சகோதரர் அவர்க்ளின் புதல்வன் - இவ்வாரம் பங்கு பெறுவார் எனத் தெரிகிறது. வசந்த் தொலைக்காட்சியின் முன்னோட்டத்தில் அவர் பேச்சைக் காட்டும் போது, நடிகர் திலகத்தின் கொடைத்தன்மை மற்றும் உதவும் மனப்பான்மையைப் பற்றிய தகவல்கள் இடம் பெறும் எனத் தெரிகிறது.

காத்திருப்போம், புதன் வரை.

ராகவேந்திரன்

Murali Srinivas
5th April 2010, 11:56 PM
நேற்றுதான் குறிப்பிட்டேன். நமது திரிக்கு பல புதிய பரிமாணங்கள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன என்று. அதை மேலும் உறுதிப்படுத்தும் வண்ணம் நண்பர் காவேரிக் கண்ணன் வருகை புரிந்திருக்கிறார். திரிக்கு புதியவர் ஆனால் அவரது எழுத்துக்களைப் பார்த்தால் மிகுந்த அனுபவம் உடையவர் என்பது புரிகிறது. அவரே சொன்னது போல் நல்ல இடம் நீங்கள் வந்த இடம். உங்கள் பதிவுகளால் இந்த திரிக்கு மேலும் மெருகூட்டுங்கள்.

அன்புடன்

pammalar
6th April 2010, 02:04 AM
கலைக்குரிசிலின் திரி என்னும் இக்கடலில், காவிரியாய், கண்ணனாய் மொத்தத்தில் காவேரிக் கண்ணனாய் கலக்க வந்திருக்கும் திரு.காவேரிக் கண்ணன் அவர்களே, வருக! வருக! தங்களின் வரவு நற்றமிழின் நல்வரவு!

நடிகர் திலகத்தின் நிரந்தர ரசிகரே, தங்களின் பயணம்,

புதுமைத் திலகத்துக்கு புதுவெள்ளம் பாய்ச்ச காவிரியாய்ப் பிரவாகிக்கும்!

வான்புகழ் வேந்தருக்கு வெண்சாமரம் வீச கண்ணனாய் விஸ்வரூபமெடுக்கும்!

பார்த்து படித்து மகிழப் போகும் நாங்களோ பாக்கியசாலிகள்!

பாசப்பெருக்கில்,
பம்மலார்.

saradhaa_sn
6th April 2010, 11:10 AM
நடிகர்திலகத்தின் புகழ்பரப்பும் இத்திரியின் இன்னொரு வைரமாய் வந்திருக்கும் காவேரிக்கண்ணன் அவர்களே, வருக.

உங்களின் ஆரம்பப்பதிவுகளே, இனிவரும் பதிவுகளின் சுவைக்கு கட்டியம் கூறுவதாய் அமைந்துள்ளன. குறிப்பாக 80-களின் காலகட்டத்தில் நீங்கள் அலைந்தோடி பார்த்து மகிழ்ந்த படங்கள் மற்றும் அரங்குகளின் பட்டியல் அக்கால நினைவுகளுக்கு அள்ளிச்செல்கிறது.

முரளி, பம்மலார், ராகவேந்தர், ஜோ, மோகன் (ரங்கன்), செந்தில், ராகேஷ், பாலா போன்ற இத்திரியின் ஜாம்பவான்கள் வரிசையில் நீங்களும் இடம்பெறப்போவது தெள்ளத்தெளிவு. நடிகர்திலகத்தின் காவியப்படங்களுடனான உங்கள் அனுபவங்களை அழகுற அள்ளித்தெளியுங்கள். அனுபவித்து மகிழ காத்திருக்கிறோம்.

NOV
6th April 2010, 05:13 PM
நல்ல இடம் நான் வந்த இடம்..ஆஹா! வாங்க வாங்க! வந்து ஜோதியில் ஐக்கியமாய்டுங்க. :)

Mahesh_K
6th April 2010, 06:49 PM
திரைப்படம் மட்டும் இன்றி, ஓவியம், எழுத்து, மேடைப்பேச்சு என பன்முகப் படைப்பாளியாக திகழுபவர் திரு. சிவகுமார்.... "என்னை முழுவதுமாக ஆட்கொண்ட தேவகுமாரன் சிவாஜி தான்" இப்படி துவங்குகிறார் - ராணி வார இதழில் அவர் எழுதி வரும் உங்களோடு பேசுகிறேன் என்ற கட்டுரையில்.

அவர் முதல் மூன்று முறை சிவாஜியை சந்தித்த சம்பவங்களை விளக்குகிறார். ராயப்பேட்டையில் சிவாஜி இருந்த ( தற்போது இது சிவாஜி பிலிம்ஸ் அலுவலகம் என்று நினைக்கிறேன்) வீட்டில் முதல் சந்திப்பு. " சிவாஜியை பார்த்த அந்த நொடிகளில் உணர்ச்சி குவியலாகிப் போனேன். பார்ப்பவர்க்ளை ஊடுருவும் அழகிய லேசர் கண்கள், அம்சமான சின்ன உதடுகள், நேர்த்தியான நீண்ட மூக்கு - பசி மறந்து பார்த்துக் கொண்டே இருக்கலாம்" என்கிறார் திரு. சிவகுமார் . சிவகுமார் வரைந்த "உத்தமபுத்திரன்" பட சிவாஜி ஓவியத்தைப் பார்த்து பாராட்டிய சிவாஜி மோகன் ஆர்ட்சில் வேலைக்கு சேர சொல்லி சிபாரிசு செய்கிறார். ஓரு வருடம் அங்கே பேனர் ஆர்டிஸ்ட் ஆக வேலை பார்த்துள்ளார் சிவகுமார்.

இரண்டாவது சந்திப்பு, கோவை மாதம்பட்டியில் கல்யாணியின் கணவன் பட ஷூட்டிங்கின் போது.

மூன்றாவது சந்திப்பு மோட்டார் சுந்தரம் பிள்ளை படப்பிடிப்பில். " அந்த படப்பிடிப்பு தளத்தில் சிவாஜியை பார்க்கும் போது அசந்து விட்டேன். கால் மேல் கால் போட்டு அவர் அமர்ந்து பேசிய பாவனை அவ்வளவு அற்புதமாக இருந்தது... அடடா.. ஒரு மனிதன் பிறக்கும் போதே இத்தனை ஸ்டைல் ஆக பிறக்க முடியுமா? என்று எண்ணத் தோன்றியது" என வியக்கிறார் திரு. சிவகுமார்.

பட்ப்பிடிப்பு தளத்தில்.....

"என்னை உங்களுக்கு நினைவு இருக்கா?. நான் தான் சிவகுமார். ஓடையகுளம் கண்ணு மச்சானுடன் உங்களை ராயப்பேட்டை வீட்டில் சந்தித்து இருக்கேன்"

" ஓ அப்படியா!. சாரிப்பா, எனக்கு நினைவு இல்லை. வெரி புவர் மெமரி" என்கிறார் சிவாஜி.

சிறிது மனம் வருந்தும் திரு.சிவகுமார், பின்பு பெரிய நடிகன் ஆன பிறகு கோவை ரயில் நிலையத்தில் தன்னை பத்து வருடம் முன்பு ஒரே ஒரு முறை பார்த்த ஒருவர் "என்னை நினைவு இருக்கிறதா?" என்று கேட்டதைப் பற்றியும், தான் நினைவுக்கு வராமல் தவித்ததை பற்றியும் சொல்கிறார்.

அப்போதுதான் மோட்டார் சுந்தரம் பிள்ளை படப்பிடிப்பில், சிவாஜியின் கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவனான நான் (சிவகுமார்) "என்னை நினைவு இருக்கா?" என்று அவரிடம் சர்வ சாதரணமாக கேட்டதையும், அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதையும் உணர்ந்தேன், என்று சொல்கிறார்.

உண்மையில் சிவாஜி போல நினைவாற்றல் கொண்ட ஒரு நடிகனை காணவே முடியாது. காட்சி, வசனங்கள் தேவையற்ற எதையுமெ அவர் நினைவு வைத்துக் கொள்வதில்லை. அதனால் தான் கடைசி வரை அந்த கம்பீரம் குறையாமல் சினிமவில் அவரால் வலம் வர முடிந்திருக்கிறது" என்கிறார் சிவகுமார்.

சிவாஜியின் நுட்பமான நினைவாற்றலுக்கு ஒரு சம்பவதை அடுத வாரம் ( இது ஒரு தொடர்) எழுதுவதாக கூறி முடித்து உள்ளார் திரு. சிவகுமார்.

rangan_08
6th April 2010, 07:02 PM
Dear venkiram, thanks for those wonderful pictures of NT. Just superb !!! Pls convey our wishes to Mr. Jeeva.

Dear Kaveri Kannan, warm welcome to NT's thread.

rangan_08
6th April 2010, 07:05 PM
Pammalar sir, what a great news about Pasa Malar. Surprise after surprise. First thing I'm going to do is to share this with my F-I-L. Meet you all @ Mahalakshmi theatre this weekend.

As Murali sir said, it's been very heartening to see more and more NT related news & events happening in the city.

kaveri kannan
7th April 2010, 12:32 AM
உங்கள் அனைவரின் அன்பான வரவேற்பைக் கண்டதும் - பிறந்த ஊர் வந்த மனநிலை எனக்கு..

வீடு நோக்கி ஓடி வந்த நம்மையே....


------------------------------

நண்பர் மகேஷின் பகிர்வுக்கு நன்றி..


----------------------

அன்னை இல்லத்துக்கு தனது விஜயம் குறித்து மலையாள மனோரமா பத்திரிகையில் மோகன்லால் குறிப்பிட்டதன் தமிழாக்கம்


-- நன்றி திரு. மோகன்காந்தி அவர்களுக்கு..


-------------------------------------------------------------------------
சிவாஜி சார் ஓவ்வொரு அறைக்கும் என் கையை பிடித்து கூட்டிக்கொண்டு போனார் . தொங்கிக் கொண்டிருந்த நட்சத்திர விளக்கு ,சுவரில் மாட்டியிருந்த பெரிய புகைப்படங்கள் ,அறையை அலங்கரித்த கலைப்பொருட்கள் மற்றும் அன்பளிப்புகள் இவற்றையெல்லாம் ஒரு சின்னக்குழந்தையின் மனோபாவத்தோடு பார்த்துக்கொண்டு நடந்து போனேன்.

சிவாஜி சாரின் மிகப்பெரிய பங்களா அது . அந்த நேரம் என் மனைவி சுசி (நடிகர் பாலாஜியின் மகள் சுசித்ரா) அங்கே இல்லை .எங்கோ வேறு ஒரு அறையில் இருந்தாள் என நினைக்கிறேன். நான் சொன்னவையெல்லாம் அவள் பார்க்கவில்லையென்றே தோன்றுகிறது. சிவாஜி சாரின் கைவிரல் குளிர்ச்சி மட்டுமே என் மனதில் நிறைந்திருந்தது .வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு அந்த விரல்களும் அந்த ஸ்பரிசமும்.

சிவாஜி சார் ஸ்டுடியோவுக்கு வருவதை பார்த்திருக்கிறேன் .அவர் வரும் போது எல்லா படப்பிடிப்பும் ஒரு நிமிடம் நின்று போகும் .அவர் போகும் வழியில் அனைவரும் எழுந்து நின்று அவரை கை கூப்பி வணங்குவார்கள் . அவர் வந்து போவதே ஒரு ராஜா வருவது போல இருக்கும் . அவர் சிரித்துக்கொண்டே கடந்து போகும் போது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு ஒளி வட்டம் நமது மனதில் வெளிச்சம் வீசி விட்டு செல்லும்.

சிவாஜி சாரைப் போல மற்றவர்களிடம் பழக வேண்டும் என்று எப்போதும் ஆசைப்படுகிறேன். தமிழில் மன்னனாக கோலோச்சிய அவர் மலையாளத்தில் நடிக்க வந்த போது ஒரு சாதாரண நடிகராக பழகினார் . இயக்குநருக்கும் மற்ற நடிகர்களுக்கும் மிகுந்த மரியாதை அளித்தார் .
குறையோ குற்றங்களோ எதுவுமே சொன்னதில்லை . தவிர்க்க முடியாத காரணங்களால் நடுவில் படப்பிடிப்பு தடை பட்ட போதும் சிறிதளவு கூட கோபமோ வருத்தமோ இல்லாமல் அனைவரிடமும் விடை பெற்று சென்றார் . மீண்டும் படப்பிடிப்பு தொடங்கிய போதும் மகிழ்ச்சியோடு வந்து நடித்துக் கொடுத்தார் .

அவர் படப்பிடிப்புக்காக கேரளத்துக்கு வந்த போது என்னுடன் தான் தங்கியிருந்தார் . ஒரு குழந்தை எப்படி சாக்லெட்டை விரும்பி கேட்குமோ ,அது போல வாத்து இறைச்சியும் மற்ற அசைவ உணவு வகைகளையும் விரும்பிக் கேட்பார் . அவர் கேட்டவையெல்லாம் தயார் செய்து அவர் சாப்பிட அமரும் மேசையில் வைக்கும் போது அவர் முகத்தை பார்க்க வேண்டுமே ,தான் கேட்டது கிடைத்தால் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்குமே குழந்தை ,அது போல மாறி விடுவார் . ஒவ்வொரு அயிட்டம் பற்றியும் அதன் ருசி பற்றியும் அவர் அடிக்கும் கமெண்ட் இருக்கிறதே ,அழகோ அழகு . அதே சமயம் தான் என்ன சாப்பிடுகிறோமோ அது தன்னுடைய பணியாட்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்.

வாரி வழங்கும் வள்ளலாக இருந்த அவர் தனக்கு பிடித்த சில பொருட்களை மட்டும் யாருக்கும் கொடுக்காமல் வைத்திருந்தார் . சொந்த மகனோ அல்லது மகளோ கேட்டால் கூட கொடுக்க மாட்டாராம் . ஒரு தடவை அவர் கையில் கட்டியிருந்த வாட்ச் நன்றாக இருக்கிறது என்று நான் சொன்னவுடன் உடனே கழற்றி என்னிடம் கொடுத்து விட்டார் . அதன் பிறகு பிரபு என்னிடம் பேசிக்கொண்டிருக்கும் போது அந்த வாட்ச்சை பலர் கேட்டும் கொடுக்காமல் வைத்திருந்தார் என்ரு சொன்னார் .

ஒரு முறை பாலச்சந்திரன் சுள்ளிக்காடும் ( மலையாள எழுத்தாளர்) அவரது நண்பர்களும் சிவாஜி சாரைப் பார்க்க அவர் வீட்டுக்கு சென்றிருந்தனர் .அவர்கள் விருப்பத்திற்காக சிவாஜி சார் ஒரு கையில் வேட்டியின் முனையைப் பிடித்துக் கொண்டு ,நெஞ்சை விரித்து ,கண்களில் தீப்பொறி பறக்க ,வீர பாண்டிய கட்டபொம்மன் வசனம் பேசிக் காண்பித்தார் (இங்கே 'வரி வட்டி' வசனத்தை மோகன்லால் குறிப்பிடுகிறார் ) .லட்சக்கணக்கான மக்களை மெய் மறக்கச் செய்த அந்த சிம்ம கர்ஜனையை நேரடியாக கேட்ட பாலச்சந்திரன் உணர்ச்சிவசப்பட்டு சிறுநீர் கழித்து விட்டார் என்கிறார் லால்.

இந்த வசனத்தை தமிழ்நாட்டுக்காரன் பேசச் சொல்லி கேட்டால் பேசுவாரா என்றால் இல்லை என்றே தோன்றுகிறது .அயல் மாநிலத்திலிருந்து வந்திருக்கக் கூடிய விருந்தினர்களுக்காக அவர்கள் விருப்பப்படும் எதையும் செய்யத் தயாராக இருந்தார் சிவாஜி சார் .தமிழகத்தின் தலை வணங்காத ராஜாவாக வாழ்ந்த அவர் , விருந்தினர் முன்னிலையில் பூமி போல பணிவாக நடந்து கொண்டார் . விருந்தினர் கடவுளுக்கு நிகர் என்று
அவர் உறுதியாக நினைத்து அது போல நடந்தார் . விருந்தினர்க்கு முன்னிலையில் ஒரு மலையாளியும் அது போல பணிவாக நடப்பதை நான் பார்த்ததே இல்லை .

வாயில் படியிறங்கி வந்து அவர் விருந்தினரை கார் கதவு திறந்து உள்ளே உட்கார வைத்து வழி அனுப்புவார் .அவர் அருகில் அவர் மனைவியும் சிரித்த முகத்துடன் நிற்பார் . நாம் வந்து விட்டு செல்வது அவர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய பாக்கியம் என்பது போல அந்த முகத்தில் உணர்ச்சிகள் வெளிப்படும் . தான் சந்திப்பவர்கள் எல்லாம் தன்னை விட பெரியவர்கள் என்றே அவர் நினைத்தார் . ஒருவரை அறிமுகப்படுத்தும் போது கூட இவர் பெரிய மனிதன் என்றே அறிமுகம் செய்வார் . அவர் பள்ளிக்கூடத்தில் படிக்கவில்லை . ஆனால் நடிப்பு உலகம் அவருக்கு சொல்லிக் கொடுத்த பழக்க வழக்கங்கள் யாராலும் காப்பி அடிக்க முடியாதவை .

நான் எப்போதாவது தலை குனிந்து வணங்க நேரிட்டால் என் உள்ளத்தில் இருக்கும் மலையாளி குணம் என்னிடம் " இந்த அளவுக்கு தலை குனிந்து வணங்க வேண்டுமா ?" என்று கேள்வி எழுப்பும் . அப்போது என்னை அறியாமலே சிவாஜி சார் நினைவு வரும் .தானே தலை குனிந்து போகும் .

kaveri kannan
7th April 2010, 01:50 AM
இந்த வார விகடன் பொக்கிஷம் பகுதியில் இருந்து --


நடிப்பாசிரியர்!


டைரக்டர் பீம்சிங்குக்கு, படத் தின் பெயர் 'ப'வில் துவங்கவேண் டும் என்று ஆசை. தயாரிப்பாளர் பி.எஸ்.வீரப்பாவுக்கோ 'ஆ'வின் மேல் ஆசை! ஆலயமணியும், ஆனந்தஜோதியும் வந்து போயிற்று. இப்போது 'ஆண்டவன் கட்டளை' தயாராகிறது.

அப்படத்தில் கல்லூரிப் பேரா சிரியராக நடிக்கும் சிவாஜிகணே சன், அன்று செட்டில் இடைவேளை யின்போது புதுமுகம் ராஜனுக்கு ஏதோ சொல்லிக்கொடுத்துக்கொண் டிருந்தார். அருகில் சென்று பார்த்த போதுதான், விஷயம் புரிந்தது. சிகரெட் ஒன்றைக் கையில் வைத் துக்கொண்டு, "இதை விரல்களுக் கிடையில் வைத்துக்கொள்ளும் தினுசிலிருந்தே ஒருவனின் குணச் சித்திரத்தைச் சொல்லிவிடலாம். சிகரெட் பிடிக்கும் பாணியிலி ருந்தே ஒருவன் கதாநாயகனா, வில்லனா, காமெடியனா என்று காட்டிவிட முடியும்" என்று சொல்லி, பல 'ஸ்டைல்'களில் பிடித்துக் காட்டினார். நடிப்புக் கலையின் நுணுக்கங்களை விரல் நுனியில் வைத்திருக்கிறார் நடிகர் திலகம்!

pammalar
7th April 2010, 03:28 AM
நாஞ்சில் மாநகராம், நாகர்கோவில் நமது நடிகர் திலகத்தின் கோட்டை. கோலிவுட்டைப் பொறுத்த வரை நாகர்கோவில் ஒரு பி சென்டர்.

எதிரிகளை உதிரிகளாக்கி, சவால் சவால் என சவால் விட்டவர்களின் சவால்களையெல்லாம் (சவடால்களையெல்லாம்) சமாளித்து, தவிடு பொடியாக்கி, வெற்றி கண்டு, எதிர்ச் சவால் விட்டு, சாதனைகளின் உச்சம் தொட்ட சக்கரவர்த்திக்கு சீரோடும், சிறப்போடும் என்றென்றும் வெண்சாமரம் வீசும் புண்ணிய ஸ்தலம் நாகர்கோவில்.

இத்தகைய திருத்தலத்தில் அமைந்துள்ள ராஜேஷ் திரையரங்கில் ராஜபார்ட் சிவாஜி துரையின் ராஜாங்க சாதனைகளை கண்டு களிப்பீர்!
(திரைக்காவியம் - வெளியான தேதி - ஓடிய நாட்கள் என்கின்ற ஃபார்மெட்டில்)
[நாகர்கோவில் ராஜேஷ் அரங்கின் இட எண்ணிக்கை : 1036 இருக்கைகள்]

1. ஞான ஒளி - 11.3.1972 - 55 நாட்கள்

2. தர்மம் எங்கே - 15.7.1972 - 34 நாட்கள்

3. தவப்புதல்வன் - 26.8.1972 - 34 நாட்கள்

4. வசந்த மாளிகை - 29.9.1972 - 69 நாட்கள்

5. நீதி - 7.12.1972 - 50 நாட்கள்

6. ராஜ ராஜ சோழன் - 31.3.1973 - 69 நாட்கள்

7. எங்கள் தங்க ராஜா - 15.7.1973 - 102 நாட்கள்

8. கௌரவம் - 25.10.1973 - 53 நாட்கள்

9. சிவகாமியின் செல்வன் - 26.1.1974 - 50 நாட்கள்

10. வாணி ராணி - 12.4.1974 - 50 நாட்கள்

11. அவன் தான் மனிதன் - 11.4.1975 - 63 நாட்கள்

12. மன்னவன் வந்தானடி - 2.8.1975 - 56 நாட்கள்

13. அன்பே ஆருயிரே - 27.9.1975 - 27 நாட்கள்

14. டாக்டர் சிவா - 2.11.1975 - 40 நாட்கள்

15. உனக்காக நான் - 12.2.1976 - 29 நாட்கள்

16. சத்தியம் - 6.5.1976 - 29 நாட்கள்

17. உத்தமன் - 25.6.1976 - 63 நாட்கள்

18. சித்ரா பௌர்ணமி - 22.10.1976 - 28 நாட்கள்

19. அண்ணன் ஒரு கோயில் - 10.11.1977 - 61 நாட்கள்

20. அந்தமான் காதலி - 26.1.1978 - 51 நாட்கள்

21. என்னைப் போல் ஒருவன் - 18.3.1978 - 50 நாட்கள்

22. திரிசூலம் - 27.1.1979 - 77 நாட்கள்

23. கவரிமான் - 14.4.1979 - 48 நாட்கள்

24. பட்டாக்கத்தி பைரவன் - 19.10.1979 - 42 நாட்கள்

25. வெற்றிக்கு ஒருவன் - 8.12.1979 - 27 நாட்கள்

26. ரிஷிமூலம் - 26.1.1980 - 55 நாட்கள்

27. தர்மராஜா - 26.4.1980 - 34 நாட்கள்

28. எமனுக்கு எமன் - 30.5.1980 - 15 நாட்கள்

29. ரத்தபாசம் - 14.6.1980 - 41 நாட்கள்

30. மோகனப்புன்னகை - 14.1.1981 - 14 நாட்கள்

31. சத்தியசுந்தரம் - 21.2.1981 - 27 நாட்கள்

32. அமரகாவியம் - 24.4.1981 - 28 நாட்கள்

33. வா கண்ணா வா - 6.2.1982 - 34 நாட்கள்

34. வசந்தத்தில் ஓர் நாள் - 7.5.1982 - 14 நாட்கள்

35. சந்திப்பு - 16.6.1983 - 68 நாட்கள்

36. வாழ்க்கை - 14.4.1984 - 55 நாட்கள்

37. நாம் இருவர் - 8.3.1985 - 14 நாட்கள்

38. லட்சுமி வந்தாச்சு - 1.11.1986 - 27 நாட்கள்

39. மண்ணுக்குள் வைரம் - 12.12.1986 - 50 நாட்கள்

40. ஜல்லிக்கட்டு - 28.8.1987 - 54 நாட்கள்

ஆக, நாகர்கோவில் ராஜேஷ் திரையரங்கில், நமது நடிகர் திலகத்திற்கு,

100 நாட்களைக் கடந்த காவியம் : 1

9 வாரங்கள் முதல் 14 வாரங்கள் வரை ஓடிய காவியங்கள் : 6

50 நாட்கள் முதல் 62 நாட்கள் வரை ஓடிய காவியங்கள் : 13

5 வாரங்கள் முதல் 7 வாரங்கள் வரை ஓடியவை : 8

5 வாரங்கள் வரை : 12

குறிப்பு:
1. ராஜேஷ் அரங்கில் வெளியான நடிகர் திலகத்தின் புதிய திரைக்காவியங்கள் மட்டும் இங்கே தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

2. ராஜேஷில் வெளியான முதல் நடிகர் திலகத்தின் திரைப்படம் மட்டுமல்ல, முதல் புதிய திரைப்படமே ஞான ஒளி தான்.

3. இருபதாம் நூற்றாண்டின் ஈடு, இணையற்ற சாதனைக் காவியமான திரிசூலம், ராஜேஷ் அரங்கில் 77 நாட்கள் வெற்றிகரமாக ஓடிய பின்னர், யுவராஜ் அரங்கிற்கு ஷிஃப்ட் செய்யப்பட்டு அங்கே 28 வெற்றி நாட்களைக் கண்டது. ஆக மொத்தம், திரிசூலம் நாகர்கோவிலில் 105 வெற்றி நாட்கள்!

4. ரத்தபாசம் திரைக்காவியத்தை திரையிடுவதற்காக ராஜேஷில் இருந்து 15 நாட்களில் எடுக்கப்பட்ட எமனுக்கு எமன், யுவராஜுக்கு மாற்றப்பட்டு அங்கே 35 நாட்கள் ஓடி, ஆக 50 வெற்றி நாட்கள்.

5. எந்தவொரு திரைப்படமும், பி சென்டர்களில் 5 வாரங்கள் ஓடினாலே நல்ல ஹிட்! 50 நாட்களைத் தொட்டாலோ சூப்ப்ர் டூப்ப்ர் ஹிட்!! 9 வாரங்கள் கண்டால் மகா மெகா ஹிட்!!!

சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு நிரந்தர சக்கரவர்த்தி சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே!

இத்தொகுப்பிற்கு தகவல்களை அளித்து உதவி புரிந்த நாகர்கோவில் நல்லிதயங்கள்,
திரு.கே.பி.மோகன், திரு.எம்.மார்ட்டின் ஜேம்ஸ், திரு.என்.சுப்பிரமணியன், திரு.கே.கோபால், திரு.ஜி.சங்கர், திரு.பி.குணசீலன், திரு..வி.நாகராஜன், திரு.எஸ்.கண்ணன் மற்றும் திரு.எஸ்.ராமஜெயம், திரு.எஸ்.கே.விஜயன், நமது ஹப்பர் திரு.கே.மகேஷ் ஆகியோருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
7th April 2010, 03:51 AM
நமது நடிகர் திலகத்தைப் பற்றி நடிகர் மோகன்லால் கூறியுள்ள ஒவ்வொன்றும் மெய் சிலிர்க்க வைக்கிறது. பதிவிட்ட காவேரிக் கண்ணன் அவர்களுக்கு கற்கண்டு நன்றிகள்!

பொக்கிஷப் புதையலுக்கும் கூடுதல் நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

joe
7th April 2010, 06:56 AM
அன்னை இல்லத்துக்கு தனது விஜயம் குறித்து மலையாள மனோரமா பத்திரிகையில் மோகன்லால் குறிப்பிட்டதன் தமிழாக்கம்.

இதை தமிழாக்கம் செய்தது நமது முரளி ஸ்ரீனிவாஸ் அவர்கள் தானே.

அதை பிரத்யேகமாக என் வலைப்பதிவில் வெளியிட்டேன்
http://cdjm.blogspot.com/2007/11/blog-post.html

groucho070
7th April 2010, 07:30 AM
அன்னை இல்லத்துக்கு தனது விஜயம் குறித்து மலையாள மனோரமா பத்திரிகையில் மோகன்லால் குறிப்பிட்டதன் தமிழாக்கம்.

இதை தமிழாக்கம் செய்தது நமது முரளி ஸ்ரீனிவாஸ் அவர்கள் தானே.

அதை பிரத்யேகமாக என் வலைப்பதிவில் வெளியிட்டேன்
http://cdjm.blogspot.com/2007/11/blog-post.html :oops: Haven't seen this post. Posted it on Facebook.

joe
7th April 2010, 09:48 AM
அன்னை இல்லத்துக்கு தனது விஜயம் குறித்து மலையாள மனோரமா பத்திரிகையில் மோகன்லால் குறிப்பிட்டதன் தமிழாக்கம்.

இதை தமிழாக்கம் செய்தது நமது முரளி ஸ்ரீனிவாஸ் அவர்கள் தானே.

அதை பிரத்யேகமாக என் வலைப்பதிவில் வெளியிட்டேன்
http://cdjm.blogspot.com/2007/11/blog-post.html :oops: Haven't seen this post. Posted it on Facebook.

:D

நான் வலைப்பதிவில் வெளியிட்ட போது ,அடுத்த வாரம் தினமணிக்கதிரில் இந்த வலைப்பதிவு இணைப்போடு குறிப்பு வந்திருந்தது 8-)

joe
7th April 2010, 09:50 AM
பம்மலார்,
என்றும் நடிகர் திலகத்தின் கோட்டையாம் எங்கள் நாஞ்சில் நகர் ராஜேஷ் திரையரங்கு தகவல்கள் அருமை .நன்றி 8-)

joe
7th April 2010, 01:23 PM
சிவாஜி - நடிகர் முதல் திலகம் வரை புத்தகத்திலிருந்து (கிழக்குப் பதிப்பகம் வெளியீடு) சில தகவல்கள்..

* தமிழில் ஒரு படத்தின் வசனங்கள் இசைத்தட்டாக வெளிவந்த முதல் படம் பராசக்தி

* வெளிநாட்டில் வெள்ளிவிழா ஓடிய முதல் படம் பராசக்தி

* பராசக்தி வெளியாகி 16 ஆண்டுகளுக்குப் பிறகு 1968-ல் உயர்ந்த மனிதன் வெளியான போது வட சென்னையில் உள்ள மஹாராஜா திரையரங்கில் (இப்போதைய பாண்டியன் தியேட்டர்) பராசக்தி வெளியாகி 118 நாட்கள் தொடர்ந்து ஓடி சாதனை படைத்தது.

pammalar
7th April 2010, 01:38 PM
பன்முகப் பாவாணர் நடிகர் சிவகுமார், பல வாரங்களாக, ராணி வார இதழில், தனது அனுபவங்களை, பதிவிட்டு வருகிறார். சென்ற இதழிலும் (4.4.2010), லேட்டஸ்ட் இதழிலும் (11.4.2010), நடிகர் திலகத்தோடு தனக்கேற்ப்பட்ட சுவையான அனுபவங்கள் குறித்து சிலாகித்து சொல்லி வருகிறார். அவற்றை வாசித்து மகிழ கீழ்க்காணும் லிங்க்கை கிளிக் செய்யவும்:

http://pammalar.webs.com/apps/photos/album?albumid=8666282

அன்புடன்,
பம்மலார்.

rangan_08
7th April 2010, 07:23 PM
முரளி, பம்மலார், ராகவேந்தர், ஜோ, மோகன் (ரங்கன்), செந்தில், ராகேஷ், பாலா போன்ற இத்திரியின் ஜாம்பவான்கள் வரிசையில்

:shock: :roll: odd man out !!!

yedho konjam vasana nadaya ezhudharen, irundhalum paravayillainu othukaranga endru Dharumai solra madhiri kooda ennala solla mudiyadhu :)

Anyway, thanks for your compliments :)

Murali Srinivas
7th April 2010, 11:56 PM
ஜோ,

நமது திரியின் முகப்பு பக்கத்தில் நடிகர் திலகம் - மோகன்லால் பதிவின் சுட்டியையும் கொடுத்து விடுங்கள்.

அது போல் பராசக்தியின் சாதனைகளைப் பற்றிய விவரங்கள் நமது சாதனை சிகரங்கள் திரியிலே இருக்கிறது.

சுவாமி,

நாஞ்சில் நாட்டின் ஒரு திரையரங்கிலேயே இவ்வளவு சாதனைகளா? அப்படியென்றால் மொத்த படங்களையும் அல்லது அனைத்து அரங்குகளையும் கணக்கு எடுத்தால் போட்டி போடவே ஆள் இருக்காது போலிருக்கிறதே!

சிவகுமார் எழுதும் கட்டுரையின் சுட்டியை தந்ததற்கு நன்றிகள்!

அன்புடன்

pammalar
8th April 2010, 02:26 AM
பம்மலார்,
என்றும் நடிகர் திலகத்தின் கோட்டையாம் எங்கள் நாஞ்சில் நகர் ராஜேஷ் திரையரங்கு தகவல்கள் அருமை .நன்றி 8-)

பதிவை வெளியிடும் போதே, தங்களிடமிருந்து பதில் வரும் என்று எதிர்பார்த்தேன். பாராட்டுக்கு மிக்க நன்றி ஜோ சார்!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
8th April 2010, 02:33 AM
சுவாமி,

நாஞ்சில் நாட்டின் ஒரு திரையரங்கிலேயே இவ்வளவு சாதனைகளா? அப்படியென்றால் மொத்த படங்களையும் அல்லது அனைத்து அரங்குகளையும் கணக்கு எடுத்தால் போட்டி போடவே ஆள் இருக்காது போலிருக்கிறதே!

சிவகுமார் எழுதும் கட்டுரையின் சுட்டியை தந்ததற்கு நன்றிகள்!

அன்புடன்

மிக்க நன்றி முரளி சார்! மேலும், தாங்கள் தெரிவித்துள்ள கருத்து நிச்சயமாக நூற்றுக்கு நூறு உண்மை!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
8th April 2010, 03:54 AM
நமது நடிகர் திலகத்தைப் பற்றி நடிகை சச்சு:
"என்னுடைய பாட்டியும் நானுமா சிவாஜி அண்ணன் வீட்டுக்குப் போனோம்.அன்போடு என்னைப் பற்றி விசாரித்தார். அவரது 'அன்னை இல்லம்' படத்தில் முத்துராமனுக்கு ஜோடியாக நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைச்சுது." (மங்கையர் மலர், மார்ச் 2010)

"சிவாஜி அண்ணன், தான் நடிக்கும் படங்களில் தன்னுடன் நடிக்கும் எல்லா நடிகர், நடிகைகளும் நன்றாக நடிக்கணும் என்று சிரத்தை எடுத்துக் கொண்டு சொல்லிக் கொடுப்பார்." (மங்கையர் மலர், ஏப்ரல் 2010)

சச்சுவின் பேச்சு அச்சு வெல்லம்.

அன்புடன்,
பம்மலார்.

kaveri kannan
8th April 2010, 04:03 AM
மதிப்புக்குரிய முரளி ஸ்ரீனிவாஸ், ஜோ மற்றும் அனைத்து நண்பர்களுக்கும்..


மன்னிக்க வேண்டுகிறேன்.

நான் படித்த தளத்தில் மோகன்லால் பதிவை
மோகன்காந்தி என்பார் இட்டிருந்தார்.

அவர் ஆதிமூலம் சொல்லாததால்
நான் அவருக்கு (மட்டும்) நன்றி சொல்லிப் பதிந்தேன்.

அவருக்கும் சேர்த்து கூடுதல் மன்னிப்பு கோருகிறேன்.

-------------------------------------

நாஞ்சில் நகரத்தின் நாயகரின் சாதனைகளைச்
பம்மலார் சொல்லக் கேட்டு
மனம் துள்ளலில்..

----------------------------------------------

kaveri kannan
8th April 2010, 04:07 AM
ஞாயிறு அன்று '' நெஞ்சம் மறப்பதில்லை'' பாடல் நிகழ்ச்சி ( கலைஞர் தொலைக்காட்சி)

கலாட்டா கல்யாணம் பாடல் பற்றி
இயக்குநர் ரமேஷ்கண்ணா:


'' இந்தப் படம் பார்க்கப் போனது நினைவில் இப்போதும் பசுமையாய்..

உடல் இளைத்த, அழகு இளைஞராய் நடிகர்திலகத்தைத் திரையில் கண்ட கணம் முதல் கைத்தட்டல்..

இரசிகர்கள் ஆரவாரம் இறுதிவரை அடங்கவே இல்லை..

ஜெயலலிதா எம்ஜிஆர் முகாமிலிருந்து முதலில் இந்தப்பக்கம் வந்ததைக் குறித்த
நல்ல இடம் நீ வந்த இடம் பாடல் வரியால்
அந்த ஆரவாரம் அதிகமானது''

joe
8th April 2010, 06:46 AM
ஜோ,
நமது திரியின் முகப்பு பக்கத்தில் நடிகர் திலகம் - மோகன்லால்
பதிவின் சுட்டியையும் கொடுத்து விடுங்கள்.

முரளி சார்,
ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது :D
12. நடிகர் திலகத்தின் விருந்தோம்பல் - மோகன்லால் -முரளி ஸ்ரீனிவாஸ் (http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?p=1211054#1211054)

groucho070
8th April 2010, 07:01 AM
முரளி, பம்மலார், ராகவேந்தர், ஜோ, மோகன் (ரங்கன்), செந்தில், ராகேஷ், பாலா போன்ற இத்திரியின் ஜாம்பவான்கள் வரிசையில்

:shock: :roll: odd man out !!! :lol: Count me in. Me? Jambavan? Too much, madam :D



Anyway, thanks for your compliments :) Same same here. :D

joe
8th April 2010, 07:05 AM
மன்னிக்க வேண்டுகிறேன்.

நான் படித்த தளத்தில் மோகன்லால் பதிவை
மோகன்காந்தி என்பார் இட்டிருந்தார்.

அவர் ஆதிமூலம் சொல்லாததால்
நான் அவருக்கு (மட்டும்) நன்றி சொல்லிப் பதிந்தேன்.

அவருக்கும் சேர்த்து கூடுதல் மன்னிப்பு கோருகிறேன்.

என்ன பெரிய வார்த்தையெல்லாம் சொல்லுறீங்க ..பரவாயில்லை .. அதை சிரமேற்கொண்டு மொழி பெயர்த்தது நமது முரளி சார் என சுட்டிக்காட்ட மட்டுமே அதை குறிப்பிட்டேன் 8-)

joe
8th April 2010, 07:11 AM
[tscii:66300226ce]



முரளி, பம்மலார், ராகவேந்தர், ஜோ, மோகன் (ரங்கன்), செந்தில், ராகேஷ், பாலா போன்ற இத்திரியின் ஜாம்பவான்கள் வரிசையில்

:shock: :roll: odd man out !!! :lol: Count me in. Me? Jambavan? Too much, madam :D

ஆகா ..நான் மறுப்பு சொல்லாததால் நான் ‘ஜாம்பவான்’ என ஏற்றுக்கொண்டதாக அர்த்தமா ? NEVER :lol: [/tscii:66300226ce]

RAGHAVENDRA
8th April 2010, 07:15 AM
முரளி, பம்மலார், ராகவேந்தர், ஜோ, மோகன் (ரங்கன்), செந்தில், ராகேஷ், பாலா போன்ற இத்திரியின் ஜாம்பவான்கள் வரிசையில் நீங்களும் இடம்பெறப்போவது தெள்ளத்தெளிவு.

சகோதரி சாரதாவின் பெயரும் மற்றும் முரளி, ஜோ, மோகன், செந்தில், ராகேஷ், பாலா, உள்ளிட்ட அனைவருமே இத்திரியின் ஜாம்பவான்கள் என்பது கண்கூடு. இவ்வரிசையில் காவேரி தந்த கலைச் செல்வனாக கண்ணனும் சேர்ந்து விட்டார். தங்கள் பதிவுகளையெல்லாம் பார்த்து ரசிக்கும் ரசிகனாக அடியென் உள்ளேன் என்பதே உண்மை.

பாராட்டுக்கள்.

பம்மலார் திரையரங்கு சாதனைகளை மட்டுமே ஒரு புத்தகமாக வெளியிட்டால் குறைந்தது 500 பக்கங்களாவது தேவைப்படும்.

ராகவேந்திரன்

HARISH2619
8th April 2010, 10:23 AM
முரளி, பம்மலார், ராகவேந்தர், ஜோ, மோகன் (ரங்கன்), செந்தில், ராகேஷ், பாலா போன்ற இத்திரியின் ஜாம்பவான்கள் வரிசையில் நீங்களும் இடம்பெறப்போவது தெள்ளத்தெளிவு. .
மேடம்,என்ன வெச்சு காமெடி கீமெடி பன்னலியே?......
தங்கள் அன்புக்கு நன்றி.

saradhaa_sn
8th April 2010, 11:02 AM
டியர் பம்மலார்,

நாஞ்சில் நகரமாம் நாகர்கோவில் ராஜேஷ் திரையரங்கில் அண்ணன் நடிகர்திலகத்தின் திரைப்பட சாதனை விவரங்கள் அட்டகாசமானதொரு தொகுப்பு. வழக்கம்போல இந்தத்தொகுப்பிலும் தங்களின் அபார உழைப்பும், சிரத்தையும் தெரிகிறது. பட்டியலைப்பார்க்கும்போது, ஞானஒளி துவங்கி பெரும்பாலான படங்கள் (ஒரே நாளில், அல்லது சிறிய இடைவெளிகளில் வெளியானவை தவிர்த்து) அத்திரையரங்கிலேயே வெளியானதாகத்தெரிகிறது.

நாஞ்சில் நகரம் எப்போதுமே அரசியலில் பெருந்தலைவரின் கோட்டையாகவும், கலையுலகில் நடிகர்திலகத்தின் கொத்தளமாகவும் திகழ்ந்தது (திகழ்வது) கண்கூடு.

தென்கோடியில் துவங்கியுள்ளீர்கள். திருத்தணி வரை தொடரட்டும் உங்கள் திரையரங்க வெற்றி உலா.

saradhaa_sn
8th April 2010, 01:41 PM
வசந்த் தொலைக்காட்சியில் வாரம்தோறும் ஒளிபரப்பாகிவரும் 'சிங்கத்தமிழன் சிவாஜி' நிகழ்ச்சியில் நேற்றைய (07.04.2010) எபிசோடில் கலந்துகொண்டு, தன் சித்தப்பாவான நடிகர்திலகத்துடன், தன்னுடைய அனுபவங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டவர் நடிகர்திலகத்தின் அண்ணன் திரு சூரக்கோட்டை தங்கவேலு மன்றாயர் மகன் (சிவாஜி மனோ என்கிற) மனோகர். (சிவாஜி புரொடக்ஷன்ஸ் படங்களின் டைட்டிலில் 'தயாரிப்பு: சாந்தி நாராயணசாமி, டி.மனோகர்' என்று இடம்பெறுமே, அவர்தான்). இதோ அவருடைய வார்த்தைகளிலேயே.....

"நடிகர்திலகம் எனது சித்தப்பாவாக இருந்தாலும் அவரை நான் 'அப்பா' என்றுதான் அழைப்பது வழக்கம். என்னுடைய கல்லூரிப்படிப்பை முடித்ததிலிருந்து நான் அவருடனேயே அவருடைய நிழலாக எங்கும் சென்று வருவேன். அது படப்பிடிப்பாக இருந்தாலும் அரசியல் நிகழ்ச்சியாக இருந்தாலும் நான்தான் அவருடன் போவேன். படப்பிடிப்புக்குப்போனால் அவருடைய ஷூட்டிங் முடியும்வரை இருந்து அழைத்து வருவேன்.

பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்த இந்தி நடிகை நர்கீஸ் பதவியேற்ற இரண்டு ஆண்டுகளில் இறந்துவிட்டதால், மீதமுள்ள நான்காண்டுகளுக்கு அப்பாவை அந்தப்பதவியில் பிரதமர் இந்திராகாந்தி நியமித்தார். அப்போது பதவியேற்புவிழாவுக்கு நானும் கமலாம்மாவும் தான் சென்றிருந்தோம். அதன்பிறகு அப்பா ஒவ்வொருமுறை டெல்லி செல்லும்போதும் நான்தான் உடன் சென்று வந்தேன். வழக்கமாக எம்.பி.க்களுக்கு அவர்களுக்கான குவாட்டர்ஸில்தான் இடம் ஒதுக்குவார்கள். ஆனால் இந்திரா காந்தி அவர்கள் அப்பாவுக்கு ஒரு அமைச்சருக்கு உரிய அந்தஸ்தோடு தனி 'வில்லா' (பங்களா) ஒதுக்கும்படி உத்தரவிட்டார். அப்பா மீது இந்திரா காந்தி அவர்கள் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார். அப்பா என்ன சொன்னாலும் சிரித்துக்கொண்டே கேட்பார். சில சமயங்களில் அப்பா சொல்வதை நான் அவர்களுக்கு மொழிபெயர்த்துச்சொல்வேன். அப்போது தேவையில்லாதவற்றை எடிட் செய்து சொல்வேன். 'நான் சொன்னதை அப்படியே சொல்லுடா' என்பார் அப்பா.

திரு சஞ்சய்காந்தி இறந்தபோது அப்பா (எம்.பி.ஆகும் முன்பு) வெளியூரில் ஷூட்டிங்கில் இருந்தார். அதனால் உட்னடியாக டெல்லி போகமுடியவில்லை. பின்னர் சிலநாட்களிலேயே கலைஞரின் 'மாடிவீட்டு ஏழை' படப்பிடிப்புக்காக காஷ்மீர் செல்லும் வழியில், மற்றவர்களையெல்லாம் காஷ்மீர் அனுப்பிவிட்டு, அப்பா, கமலாம்மா, நான் நாங்கள் மூவரும் மட்டும் டெல்லி சென்று இந்திரா அவர்களைச் சந்தித்தோம். அப்பாவைக்கண்டதும் இந்திரா அம்மையார் கண்ணீர் விட்டு அழுதார். அவர்களுக்கு ஆறுதல் சொல்லமுடியாமல் அப்பாவும் கமலம்மாவும் சேர்ந்து அழுதனர். மனது கேட்காமல் நான் வெளியே வந்துவிட்டேன். சிறிது நேரம் கழித்து அவர்கள் மூவரும் வெளியில் வர, இந்திரா அம்மையாரிடம் விடைபெற்று நாங்கள் காஷ்மீர் சென்றோம்.

இந்திரா காந்தி அம்மா திடீரென சுடப்பட்டு இறந்தபோதும் அப்பா ஊட்டியில் படப்பிடிப்பில் இருந்தார். செய்தியறிந்தவுடன் சென்னை திரும்பி, உடனடியாக டெல்லி சென்றோம். டெல்லி சென்றதும் திரு ஆர். வெங்கட்ராமன் அவர்களுக்கு போன் செய்து உடனடியாக இந்திரா அவர்களுக்கு இறுதிமரியாதை செலுத்தவேண்டும் என்று சொன்னபோது, 'இந்திரா அவர்களின் உடலை இன்னும் தீன்மூர்த்தி பவனுக்கு கொண்டுவரவில்லை. வந்ததும் நீங்க வாங்க' என்றார். பின்னர் உடல் தீன்மூர்த்திபவனுக்கு கொண்டுவரப்பட்ட செய்தி கிடைத்ததும் விரைந்தோம். உள்ளே நுழைய முடியாத அளவுக்கு கூட்டம். உள்ளே போக முடியாமல் திணறினோம். பாதுகாப்புக்காக ராணுவம் நின்றிருந்தது. அதில் ஒரு ராணுவ அதிகாரி தமிழ்நாட்டுக்காரர். அப்பாவைப்பார்த்ததும் எங்களை தனியே அழைத்துச்சென்று எல்லோரும் வெளியே வரும் வழியாக உள்ளே அழைத்துச்சென்றார். இந்திரா காந்தி அம்மையாரின் உடலைப்பார்த்து அப்பா கதறியழுதார்.

அதுவரை ராஜீவ்காந்திக்கும் அப்பாவுக்கும் அவ்வளவு பழக்கம் கிடையாது. ஓரிருமுறை பார்த்ததுதான். இதனிடையே 1984 தேர்தல் வந்தபோது, அப்பா காங்கிரஸில் தனது மன்ற ஆதரவாளர்களுக்கு இத்தனை எம்.பி.சீட், இத்தனை எம்.எல்.ஏ. சீட் கேட்டிருந்தார். ஆனால் அவர் கேட்டதில் ஒரு சீட் கூட ஒதுக்கப்படவில்லை. அவர் ஐதராபாத்தில் இருந்தபோது, சென்னையிலிருந்து ஒருவர் (பெயர் சொல்ல விரும்பவில்லை) அப்பாவுக்கு போன் செய்து, "ஆதரவாளர்களுக்கு சீட் வாங்கிக்கொடுக்க முடியவில்லை, நீயெல்லாம் ஏன்யா கட்சியில் இருக்கே?" என்று கேட்க அப்பா மனம் உடைந்துபோனார். உடனே என்னிடம் தொடர்பு கொண்டு, 'கட்சிக்காரங்க இப்படி பேசுறாங்கடா. கட்சியில் எனக்கு மதிப்பில்லை. செத்துடலாம் போல இருக்குடா' என்று வருத்தப்பட்டார். உடனடியாக அவரை சென்னைக்கு வரச்சொன்னோம். வந்ததும் டெல்லியில் வெங்கட்ராமன் அவர்களுடன் தொடர்பு கொண்டோம். அவர் 'ராஜீவ்காந்தியிடம் பேசலாம், உடனே டெல்லி வாங்க' என்றார். (இத்தனைக்கும் அவர் தனக்காக ஒருசீட் கூட கேட்கவில்லை). அன்று மாலை விமானத்தில் டெல்லிபோகிறோம் என்று தெரிந்து கட்சிக்காரர்கள் சிலர், 'சிவாஜி டெல்லி வரமாட்டார்' என்ற செய்தியை டெல்லியில் பரப்பினார்கள் (!!!!!!!!!!!!). அதைக்கேட்க வெங்கட்ராமன் மீண்டும் எங்களை போனில் தொடர்புகொண்டு கேட்க, நாங்கள் வந்துகொண்டேயிருக்கிறோம் என்று சொன்னோம். ராஜசேகரனும் அப்போது உடன் வந்தார். ராஜீவிடம் பேசியபோது, அப்பா தன் ஆதரவாளர்களூக்கு சீட் கேட்டிருந்த விஷயமே ராஜீவ்காந்தி காதுக்கு எட்டாமல் தமிழ்நாட்டுத்தலைவர்களால் மறைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது (???). பின்னர் ராஜீவ், அப்பா கேட்டிருந்தபடியே தருவதாக உறுதியளித்தார். பின்னர் சென்னை திரும்பினோம். அப்பா சீட் கேட்டிருந்தவர்களில் பலர் அத்தேர்தலில் வெற்றியடைந்தனர்.

நடிகர்சங்க விழாவுக்காக நாடகம் போட முடிவு செய்தபோது, அப்பா 'சாம்ராட் அசோகன்' நாடகம் போட்டார். அதற்கான வசனத்தை தஞ்சைவாணன் எழுதினார். தோட்டத்தில் அதற்கான ஒத்திகை பார்த்தபோது, நாற்காலியில் அமர்ந்துகொண்டு, தஞ்சைவாணனிடம் வசனத்தைப்படிக்குமாறு சொன்னார். அப்போது எஸ்.ஏ.கண்ணனும் உடனிருந்தார். படித்துக்கொண்டிருக்கும்போது பாதியில் அப்பா கண்ணை மூடிக்கொண்டு உறங்குவதுபோல் இருந்தார். வசனம் முடிந்ததும் அவரை தட்டி எழுப்பிவிட்டோம். மீண்டும் ஒருமுறை படிக்கச்சொன்னார். அப்போதும் பாதியில் உறங்குவது போல கண்ணைமூடினார். நான் சங்கடத்துடன் இருவரையும் பார்த்தேன். தஞ்சைவாணன் தொடர்ந்து படித்து முடித்தார். மீண்டும் அப்பாவைத் தட்டி எழுப்பினோம். 'முடிஞ்சிருச்சா?' என்றவர், தஞ்சைவாணனிடம், 'சரி இப்போ வசனத்தைச் சொல்றேன். சரியா இருக்கான்னு பாரு' என்றவர் அத்தனை பக்க வசனத்தையும் ஒரு எழுத்துவிடாமல், ஏற்ற இறக்கங்களுடன் பேசி எங்களை அசரவைத்துவிட்டார்".

அடுத்த வாரமும் தொடர்வதாக சொல்லி திரு. மனோகர் விடைபெற்றார்.

1984 தேர்தலில் நடிகர்திலகத்தின் ஆதரவாளர்களுக்கு சீட் ஒதுக்கப்படாதது குறித்து சிலஆண்டுகளுக்கு முன்பே நான் (சாரதா) குறிப்பிட்டிருந்தேன் (நமது திரியின் இரண்டாம் பாகத்தில் என்று நினைக்கிறேன்). பார்த்திராதவர்களுக்காக, அதில் ஒரு பகுதி மட்டும் கீழே.....

//இந்திரா அம்மையார் மறைந்தபிறகு நடந்த 1984 தேர்தலில், சிவாஜி மன்றத்தினர் தேர்தலில் சீட் கொடுக்கப்படாமல் ஒதுக்கப்பட்டதற்கு காரணமே, நடிகர் திலகத்துக்கும் காங்கிரஸுக்கும் இருந்த நீண்டகால உறவை பற்றி ராஜீவுக்கு தெரியாததே.

தமிழ்நாட்டில் காங்கிரஸின் மிகப்பெரிய தொண்டர் படையாக விளங்கிய சிவாஜி மன்றத்தினர், 1984 தேர்தலில் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டனர். சிவாஜிமன்றத்தினர் பற்றி தெரிந்திருந்த பெருந்தலைவரும், இந்திரா அம்மையாரும் இயற்கை எய்தியதால் அவர்களின் அருமை ராஜீவுக்கு தெரியவில்லை. வெகுண்டெழுந்த சிவாஜி மன்றத்தினர், தலைவர் தளபதி சண்முகம் தலைமையில் கூடி முடிவெடுத்து தமிழ்நாடு முழுக்க 99 போட்டி வேட்பாளர்களை அறிவித்தனர். சிலர் வேட்பு மனுவும் தாக்கல் செய்து விட்டனர். புரசை குமரன், அப்பன்ராஜ், செங்காளியப்பன், ராஜசேகரன், அடைக்கலராஜ், மாரிசாமி, பொன்.தங்கராஜ், சந்திரசேகரன், புவனேஸ்வரி ஆனந்த் போன்றோர் அதில் அடக்கம்.

பதறிப்போன மூப்பனார், டெல்லியுடன் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கி சொல்ல, சிவாஜி மன்றத்தினருக்கு சீட் ஒதுக்கப்பட்டது. சென்னை வண்ணாரப்பேட்டையில் ராஜசேகரன், திருச்சி எம்.பி.தொகுதிக்கு அடைக்கலராஜ் உள்பட பலர் கட்சியால் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்..//

sankara70
8th April 2010, 05:25 PM
வசந்த் தொலைக்காட்சியில்

பதறிப்போன மூப்பனார், டெல்லியுடன் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கி சொல்ல, சிவாஜி மன்றத்தினருக்கு சீட் ஒதுக்கப்பட்டது. சென்னை வண்ணாரப்பேட்டையில் ராஜசேகரன், திருச்சி எம்.பி.தொகுதிக்கு அடைக்கலராஜ் உள்பட பலர் கட்சியால் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்..//

Ana thalaivar katchi arambicha po, adikalaraj mudalanor vara villai

Moopanaraiye Maduari yil thalaivar than introduce panninar.
nandri marandavarkar

RAGHAVENDRA
8th April 2010, 08:58 PM
வசந்த் தொலைக்காட்சியில்

பதறிப்போன மூப்பனார், டெல்லியுடன் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கி சொல்ல, சிவாஜி மன்றத்தினருக்கு சீட் ஒதுக்கப்பட்டது. சென்னை வண்ணாரப்பேட்டையில் ராஜசேகரன், திருச்சி எம்.பி.தொகுதிக்கு அடைக்கலராஜ் உள்பட பலர் கட்சியால் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்..//

Ana thalaivar katchi arambicha po, adikalaraj mudalanor vara villai

Moopanaraiye Maduari yil thalaivar than introduce panninar.
nandri marandavarkar

நடிகர் திலகம் எனும் மாபெரும் மனித உள்ளத்தின் பெருந்தன்மையால் பல துரோகங்கள் மன்னிக்கப்பட்டும் மறக்கப்பட்டும் விட்டன. திரைத்துறையாகட்டும், பொது வாழ்விலாகட்டும், அரசியலிலாகட்டும், அவருக்கு துரோகம் செய்தவர்கள் அதற்குரிய பலனை அனுபவித்துத் தான் இருக்கிறார்கள், ஏதேனும் வகையில். குறிப்பாக அரசியலில் அவர் தோற்றதாக வரலாறில்லை. அவர் தேர்தலில் தான் தோல்வி கண்டாரே தவிர அரசியலிலோ பொது வாழ்விலோ அல்ல. அவர் தேர்தலில் களமிறங்கி கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகியும் அவருடைய ரசிகர்களே பெரும்பாலும் அவருடைய தொண்டர்களாகவும் இருப்பதால் அவருடைய செல்வாக்கு சற்றும் குறையவில்லை. அதை சோதிக்கும் தருணம் அதற்குப் பிறகு கிடைக்காததால் அவருடைய பலம் யாருக்கும் தெரியவில்லை. அவருக்கு எதற்கு அரசியல் என்று சொல்லியே எதிரிகளும் துரோகிகளும் பிரச்சாரம் செய்தார்களே தவிர, அவருடைய ரசிகர்கள் இன்றும் அவரைத்தான் தலைவராகக் கொண்டுள்ளனர். இது காலத்தால் அழியாத பாசப் பிணைப்பு.

ராகவேந்திரன்

J.Radhakrishnan
8th April 2010, 10:56 PM
நடிகர் திலகம் எனும் மாபெரும் மனித உள்ளத்தின் பெருந்தன்மையால் பல துரோகங்கள் மன்னிக்கப்பட்டும் மறக்கப்பட்டும் விட்டன. திரைத்துறையாகட்டும், பொது வாழ்விலாகட்டும், அரசியலிலாகட்டும், அவருக்கு துரோகம் செய்தவர்கள் அதற்குரிய பலனை அனுபவித்துத் தான் இருக்கிறார்கள், ஏதேனும் வகையில். குறிப்பாக அரசியலில் அவர் தோற்றதாக வரலாறில்லை. அவர் தேர்தலில் தான் தோல்வி கண்டாரே தவிர அரசியலிலோ பொது வாழ்விலோ அல்ல. அவர் தேர்தலில் களமிறங்கி கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகியும் அவருடைய ரசிகர்களே பெரும்பாலும் அவருடைய தொண்டர்களாகவும் இருப்பதால் அவருடைய செல்வாக்கு சற்றும் குறையவில்லை. அதை சோதிக்கும் தருணம் அதற்குப் பிறகு கிடைக்காததால் அவருடைய பலம் யாருக்கும் தெரியவில்லை. அவருக்கு எதற்கு அரசியல் என்று சொல்லியே எதிரிகளும் துரோகிகளும் பிரச்சாரம் செய்தார்களே தவிர, அவருடைய ரசிகர்கள் இன்றும் அவரைத்தான் தலைவராகக் கொண்டுள்ளனர். இது காலத்தால் அழியாத பாசப் பிணைப்பு.

உண்மை! எவராலும் மறுக்க முடியாதது.

kaveri kannan
8th April 2010, 11:06 PM
சாரதா அவர்கள் பகிர்ந்த அரசியல் நிகழ்வு நினைவுகளும்,

ராகவேந்திரா அவர்களின் பின்னூட்டமும் -

கல்வெட்டு உண்மைகள்..
காலம் சொல்கிறது.

-----------------------------------

காலந்தவறாமையும் கூட்டுக்குடும்பப் பாசப்பிணைப்பும் நடிகர்திலகத்தின் நெஞ்சுக்கு எவ்வளவு நெருக்கம் என்பதை அறிவோம்.

நான் முன்னர் படித்த ஒரு சேதியைப் பகிர்கிறேன்.


அன்னை இந்திராவைப் பார்க்க நேரம் குறித்தபின் நடிகர்திலகம் தில்லியில் அவரைப் பார்க்கச் சென்றார்.
குறித்த காலம் கடந்தும் பார்க்க அனுமதி தள்ளிப்போய்க்கொண்டே இருந்ததால் -

சட்டென எழுந்து , வேறு 'அப்பாயிண்ட்மெண்ட்' பிறகு வாங்கிக்கொள்கிறேன்.. இன்று மாலை சென்னையில் குடும்பத்துடன் 'டின்னர்' என்பதாய் அவர்களுக்கு சொன்னதை மாற்றி ஏமாற்ற இயலாது.. என்று சொல்லி வெளியேறிவிட்டார்.

பிரதமர் அலுவலகம் இதை ' கௌரவப் பிரசினையாய்'க் கருதி, தில்லி விமான நிலையம் வரை தொடர்ந்து வந்து கெஞ்சி, நடிகர் திலகம் முடிவை மாற்றச் சொல்லியும் - நடக்கவில்லை.


நம் நடிப்பரசரின் அஞ்சாமை, மனதில் சரியெனப் பட்டதை நிமிர்ந்த பார்வையுடன் செய்யும் துணிச்சலையும் சொல்லும் நிகழ்வல்லவா?

Murali Srinivas
8th April 2010, 11:49 PM
கண்ணன்,

ஜோ சொன்னது போல் மன்னிப்பு என்ற பெரிய வார்த்தையெல்லாம் எதற்கு? இந்த ஹப்பில் நம்மைப் போன்றவர்கள் போடும் பதிவுகளை சிலர் வேறு சில தளங்களில் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். சிவாஜியின் சாதனை சிகரங்கள் என்ற தலைப்பில் வருடவாரியாக நான் தொகுத்து பதிந்த புள்ளி விவரங்களையெல்லாம் ஒரு வலைப்பூ பதிவர் அவருடைய ப்ளாக்-ல் தன்னுடைய சொந்த சரக்கு போல பதிந்துக் கொண்டிருந்தார். நண்பர் ஜோ அவர்கள் அங்கே சென்று இதை ஜாடை மாடையாய் சுட்டிக் காட்டியும், பின் அந்த திரியின் சுட்டியை அங்கே வெளியிட்டும் கூட அவர் நிறுத்தவில்லை.

மனோ அவர்கள் நடிகர் திலகத்தின் அரசியல் தொடர்புகள் பற்றி சொன்னது, அதைப் பற்றி அதிகம் அறிந்திராத தலைமுறையினருக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இன்று நகரின் சில மையப் பகுதிகளில் பாசமலர் போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பதை பார்த்தேன். நடிகர் திலகமும் நடிகையர் திலகமும் இணைந்து நடிக்கும் என்ற தலைப்போடு சிவாஜி சாவித்திரி மற்றும் ஜெமினி ஆகியோர் நிற்கும் ஸ்டில்லும், கன்னத்தில் கைவைத்து பார்க்கும் நடிகர் திலகத்தின் மிக பிரபலமான க்ளோஸ்-அப் ஸ்டில்லும் போஸ்டரில் இடம் பெற்றிருக்கின்றன. நாளை முதல் ஆரம்பம்.

அன்புடன்

pammalar
9th April 2010, 02:17 AM
Chennai Mahalakshmi is getting ready for Paasath Thalaivarin Paasamalar.

Please click the following link for a Visual Delight:

http://paasamalar69.webs.com/apps/photos/album?albumid=8638909

Happy Viewing,
Pammalar.

pammalar
9th April 2010, 02:30 AM
நாஞ்சில் நகரத்தின் நாயகரின் சாதனைகளைச்
பம்மலார் சொல்லக் கேட்டு
மனம் துள்ளலில்..

----------------------------------------------

தங்களின் மனம் திறந்த பாராட்டால், என் மனத்திலும் அதே துள்ளல். நன்றி, திரு.காவேரிக் கண்ணன்.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
9th April 2010, 02:49 AM
பம்மலார் திரையரங்கு சாதனைகளை மட்டுமே ஒரு புத்தகமாக வெளியிட்டால் குறைந்தது 500 பக்கங்களாவது தேவைப்படும்.

ராகவேந்திரன்

பாராட்டுக்கு மிக்க நன்றி ராகவேந்திரன் சார். தங்களைப் போன்ற அன்புள்ளங்களின் ஆதரவோடு, எதிர்காலத்தில், நமது தலைவரின் பாக்ஸ்-ஆபீஸ் சாதனைகளை புத்தகமாக வெளியிடும் எண்ணமும் உள்ளது. அதற்கு இறையருளும், இதயதெய்வத்தின் ஆசிகளும், எல்லோரது வாழ்த்துக்களும் துணை நின்று நடத்திக் கொடுக்கும் என்று நம்புகிறேன்.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
9th April 2010, 03:29 AM
டியர் பம்மலார்,

நாஞ்சில் நகரமாம் நாகர்கோவில் ராஜேஷ் திரையரங்கில் அண்ணன் நடிகர்திலகத்தின் திரைப்பட சாதனை விவரங்கள் அட்டகாசமானதொரு தொகுப்பு. வழக்கம்போல இந்தத்தொகுப்பிலும் தங்களின் அபார உழைப்பும், சிரத்தையும் தெரிகிறது. பட்டியலைப்பார்க்கும்போது, ஞானஒளி துவங்கி பெரும்பாலான படங்கள் (ஒரே நாளில், அல்லது சிறிய இடைவெளிகளில் வெளியானவை தவிர்த்து) அத்திரையரங்கிலேயே வெளியானதாகத்தெரிகிறது.

நாஞ்சில் நகரம் எப்போதுமே அரசியலில் பெருந்தலைவரின் கோட்டையாகவும், கலையுலகில் நடிகர்திலகத்தின் கொத்தளமாகவும் திகழ்ந்தது (திகழ்வது) கண்கூடு.

தென்கோடியில் துவங்கியுள்ளீர்கள். திருத்தணி வரை தொடரட்டும் உங்கள் திரையரங்க வெற்றி உலா.

சகோதரி சாரதா,

தங்களின் மனப்பூர்வமான பாராட்டுக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்! தாங்கள் குறிப்பிட்டுள்ளது போல், நாஞ்சில் மாநகரம் என்றுமே கர்மவீரரின் கோட்டை, கலைக்குரிசிலின் கொத்தளம். இந்த உண்மையை எவரும், எங்கும், என்றும் மறுக்க முடியாது.

மேலும், அலுவல் காரணமாக, நேற்று (7.4.2010) என்னால் சிங்கத்தமிழன் சிவாஜி நிகழ்ச்சியை கண்டு களிக்க முடியவில்லை. ஆயினும், அது ஒரு குறையாகத் தெரியாமல் செய்து விட்டீர்கள். தங்களது பதிவு நிகழ்ச்சியை அப்படியே கண்முன் நிறுத்தி விட்டது.

அப்பாவின் ஆசிகளோடு (நமது நடிகர் திலகத்தின் ஆசிகளோடு) மனோ அவர்கள் நீடூழி வாழ்க!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
9th April 2010, 04:05 AM
இன்று (8.4.2010) மாலை பெரம்பூர் மஹாலட்சுமி அரங்கிற்கு சென்றிருந்தேன். நமது நல்லிதயங்கள் கிட்டத்தட்ட 50 பேர் அரங்கிற்கு வெளியே குழுமியிருந்தனர். அரங்கின் பிரதான வாயிலில், சிவாஜி வாரத்திற்கு பந்தல் போட்டது போல், பந்தல் போட்டுக் கொண்டிருந்தனர். பந்தல் வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. மிகப் பெரிய பேனர்கள் (பதாகைகள்) வைப்பதற்கும் ஏற்பாடுகள் திவீரமாக செய்யப்பட்டுக் கொண்டிருந்தன. பெரம்பூர் ஏரியாவே பாசமலர் போஸ்டர்களால் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது என்றால் அதற்கு மேல் பப்ளிசிடியைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ?! பெரம்பூர் பகுதி மட்டுமல்லாது, சென்னை மாநகரின் அனைத்து முக்கிய பகுதிகளிலும் பாசமலர் போஸ்டர்கள் விதவிதமான டிசைன்களில் ஒட்டப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன. மொத்தத்தில், பாசத்திலகத்தின் பாசமலர் மறுவெளியீட்டால், சென்னையே களை கட்டியுள்ளது.

போனஸ் நியூஸ்:
இதே பெரம்பூர் மஹாலட்சுமியில், பாசமலருக்குப் பின் ஓரிரு வாரங்கள் கழித்து, நல்லிதயங்களின் இதயங்களை மீண்டும் திருட "திருடன்" வரப் போவதாகவும் தகவல் வந்துள்ளது.

நமது நடிகர் திலகத்தின் திரைப்படக் கொண்டாட்டம் பல விதம், நாமும் அதிலே பல விதம்!!!

அன்புடன்,
பம்மலார்.

joe
9th April 2010, 07:35 AM
பம்மலார்,
எங்கள் நாஞ்சில் நகர் எப்போதும் நடிகர் திலகத்தின் நகராகவே விளங்கி வருகிறது என்பது அந்த பகுதியைச் சேர்ந்த அனைவருக்கும் நன்கு தெரியும்.

80-களில் வசந்தமாளிகை திரைப்படம் கிட்டத்தட்ட ஒவ்வொரு வருடமும் வெளியாகும் .குறிப்பாக ராஜேஷ் திரையரங்கில் .இன்னும் குறிப்பாக டிசம்பர் 3-ம் தேதி நாகர்கோவில் கோட்டாறு புனித சவேரியார் பேராலயத் திருவிழாவை முன்னிட்டு நடிகர் திலகத்தின் வசந்த மாளிகை , திரிசூலம் போன்ற படங்கள் நள்ளிரவு சிறப்புக்காட்சிகளோடு திரையிடப்பட்டு ,அப்போது வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் புதிய படங்களை விட வசூல் குவித்து சாதனை படைக்கும் ..அந்த தகவல்களையும் தொகுக்க வேண்டும்.

tacinema
9th April 2010, 09:23 AM
முரளி,
சென்னை ரசிகர்களுக்கு போட்டியா நம்மளும் மதுரை சிவாஜி படையை இங்கே காண்பிக்க வேண்டும். அவன் தான் மனிதன் சென்ட்ரல் தியேட்டரில் ரிலீஸ் ஆயிடிச்சா?

Any way, happy fun days for Chennai NT fans.

பாசமலர் பற்றிய விபரங்கள் இங்கே வழங்குங்கள்

Regards

RAGHAVENDRA
9th April 2010, 09:30 AM
முரளி,
சென்னை ரசிகர்களுக்கு போட்டியா நம்மளும் மதுரை சிவாஜி படையை இங்கே காண்பிக்க வேண்டும்.

சென்னை ரசிகர்களுக்கும் மதுரை ரசிகர்களுக்கும்
....
சபாஷ்... சரியான போட்டி

ராகவேந்திரன்

tacinema
9th April 2010, 09:31 AM
நாஞ்சில் மாநகராம், நாகர்கோவில் நமது நடிகர் திலகத்தின் கோட்டை. கோலிவுட்டைப் பொறுத்த வரை நாகர்கோவில் ஒரு பி சென்டர்.

எதிரிகளை உதிரிகளாக்கி, சவால் சவால் என சவால் விட்டவர்களின் சவால்களையெல்லாம் (சவடால்களையெல்லாம்) சமாளித்து, தவிடு பொடியாக்கி, வெற்றி கண்டு, எதிர்ச் சவால் விட்டு, சாதனைகளின் உச்சம் தொட்ட சக்கரவர்த்திக்கு சீரோடும், சிறப்போடும் என்றென்றும் வெண்சாமரம் வீசும் புண்ணிய ஸ்தலம் நாகர்கோவில்.

இத்தகைய திருத்தலத்தில் அமைந்துள்ள ராஜேஷ் திரையரங்கில் ராஜபார்ட் சிவாஜி துரையின் ராஜாங்க சாதனைகளை கண்டு களிப்பீர்!
(திரைக்காவியம் - வெளியான தேதி - ஓடிய நாட்கள் என்கின்ற ஃபார்மெட்டில்)
[நாகர்கோவில் ராஜேஷ் அரங்கின் இட எண்ணிக்கை : 1036 இருக்கைகள்]

1. ஞான ஒளி - 11.3.1972 - 55 நாட்கள்

2. தர்மம் எங்கே - 15.7.1972 - 34 நாட்கள்

3. தவப்புதல்வன் - 26.8.1972 - 34 நாட்கள்

4. வசந்த மாளிகை - 29.9.1972 - 69 நாட்கள்

5. நீதி - 7.12.1972 - 50 நாட்கள்

6. ராஜ ராஜ சோழன் - 31.3.1973 - 69 நாட்கள்

7. எங்கள் தங்க ராஜா - 15.7.1973 - 102 நாட்கள்

8. கௌரவம் - 25.10.1973 - 53 நாட்கள்

9. சிவகாமியின் செல்வன் - 26.1.1974 - 50 நாட்கள்

10. வாணி ராணி - 12.4.1974 - 50 நாட்கள்

11. அவன் தான் மனிதன் - 11.4.1975 - 63 நாட்கள்

12. மன்னவன் வந்தானடி - 2.8.1975 - 56 நாட்கள்

13. அன்பே ஆருயிரே - 27.9.1975 - 27 நாட்கள்

14. டாக்டர் சிவா - 2.11.1975 - 40 நாட்கள்

15. உனக்காக நான் - 12.2.1976 - 29 நாட்கள்

16. சத்தியம் - 6.5.1976 - 29 நாட்கள்

17. உத்தமன் - 25.6.1976 - 63 நாட்கள்

18. சித்ரா பௌர்ணமி - 22.10.1976 - 28 நாட்கள்

19. அண்ணன் ஒரு கோயில் - 10.11.1977 - 61 நாட்கள்

20. அந்தமான் காதலி - 26.1.1978 - 51 நாட்கள்

21. என்னைப் போல் ஒருவன் - 18.3.1978 - 50 நாட்கள்

22. திரிசூலம் - 27.1.1979 - 77 நாட்கள்

23. கவரிமான் - 14.4.1979 - 48 நாட்கள்

24. பட்டாக்கத்தி பைரவன் - 19.10.1979 - 42 நாட்கள்

25. வெற்றிக்கு ஒருவன் - 8.12.1979 - 27 நாட்கள்

26. ரிஷிமூலம் - 26.1.1980 - 55 நாட்கள்

27. தர்மராஜா - 26.4.1980 - 34 நாட்கள்

28. எமனுக்கு எமன் - 30.5.1980 - 15 நாட்கள்

29. ரத்தபாசம் - 14.6.1980 - 41 நாட்கள்

30. மோகனப்புன்னகை - 14.1.1981 - 14 நாட்கள்

31. சத்தியசுந்தரம் - 21.2.1981 - 27 நாட்கள்

32. அமரகாவியம் - 24.4.1981 - 28 நாட்கள்

33. வா கண்ணா வா - 6.2.1982 - 34 நாட்கள்

34. வசந்தத்தில் ஓர் நாள் - 7.5.1982 - 14 நாட்கள்

35. சந்திப்பு - 16.6.1983 - 68 நாட்கள்

36. வாழ்க்கை - 14.4.1984 - 55 நாட்கள்

37. நாம் இருவர் - 8.3.1985 - 14 நாட்கள்

38. லட்சுமி வந்தாச்சு - 1.11.1986 - 27 நாட்கள்

39. மண்ணுக்குள் வைரம் - 12.12.1986 - 50 நாட்கள்

40. ஜல்லிக்கட்டு - 28.8.1987 - 54 நாட்கள்

ஆக, நாகர்கோவில் ராஜேஷ் திரையரங்கில், நமது நடிகர் திலகத்திற்கு,

100 நாட்களைக் கடந்த காவியம் : 1

9 வாரங்கள் முதல் 14 வாரங்கள் வரை ஓடிய காவியங்கள் : 6

50 நாட்கள் முதல் 62 நாட்கள் வரை ஓடிய காவியங்கள் : 13

5 வாரங்கள் முதல் 7 வாரங்கள் வரை ஓடியவை : 8

5 வாரங்கள் வரை : 12

குறிப்பு:
1. ராஜேஷ் அரங்கில் வெளியான நடிகர் திலகத்தின் புதிய திரைக்காவியங்கள் மட்டும் இங்கே தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

2. ராஜேஷில் வெளியான முதல் நடிகர் திலகத்தின் திரைப்படம் மட்டுமல்ல, முதல் புதிய திரைப்படமே ஞான ஒளி தான்.

3. இருபதாம் நூற்றாண்டின் ஈடு, இணையற்ற சாதனைக் காவியமான திரிசூலம், ராஜேஷ் அரங்கில் 77 நாட்கள் வெற்றிகரமாக ஓடிய பின்னர், யுவராஜ் அரங்கிற்கு ஷிஃப்ட் செய்யப்பட்டு அங்கே 28 வெற்றி நாட்களைக் கண்டது. ஆக மொத்தம், திரிசூலம் நாகர்கோவிலில் 105 வெற்றி நாட்கள்!

4. ரத்தபாசம் திரைக்காவியத்தை திரையிடுவதற்காக ராஜேஷில் இருந்து 15 நாட்களில் எடுக்கப்பட்ட எமனுக்கு எமன், யுவராஜுக்கு மாற்றப்பட்டு அங்கே 35 நாட்கள் ஓடி, ஆக 50 வெற்றி நாட்கள்.

5. எந்தவொரு திரைப்படமும், பி சென்டர்களில் 5 வாரங்கள் ஓடினாலே நல்ல ஹிட்! 50 நாட்களைத் தொட்டாலோ சூப்ப்ர் டூப்ப்ர் ஹிட்!! 9 வாரங்கள் கண்டால் மகா மெகா ஹிட்!!!

சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு நிரந்தர சக்கரவர்த்தி சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே!

இத்தொகுப்பிற்கு தகவல்களை அளித்து உதவி புரிந்த நாகர்கோவில் நல்லிதயங்கள்,
திரு.கே.பி.மோகன், திரு.எம்.மார்ட்டின் ஜேம்ஸ், திரு.என்.சுப்பிரமணியன், திரு.கே.கோபால், திரு.ஜி.சங்கர், திரு.பி.குணசீலன், திரு..வி.நாகராஜன், திரு.எஸ்.கண்ணன் மற்றும் திரு.எஸ்.ராமஜெயம், திரு.எஸ்.கே.விஜயன், நமது ஹப்பர் திரு.கே.மகேஷ் ஆகியோருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.


பம்மலர்,
மிக அருமையான தொகுப்பு. அனால், சில நல்ல படங்கள் விடுபட்டுள்ளன - தங்கப்பதக்கம் & பட்டிக்காடா பட்டணமா. இந்த இரு படங்கள் படைத்த சாதனைகள் உள்ளனவா?

நடிகர் திலகத்தின் நாகர் கோவில் 1970க்கு முந்திய சாதனை தொகுப்பு இருக்கிறதா? That list should be awesome and much better than this one.

Regards.

tacinema
9th April 2010, 09:55 AM
பம்மலார்,
எங்கள் நாஞ்சில் நகர் எப்போதும் நடிகர் திலகத்தின் நகராகவே விளங்கி வருகிறது என்பது அந்த பகுதியைச் சேர்ந்த அனைவருக்கும் நன்கு தெரியும்.

80-களில் வசந்தமாளிகை திரைப்படம் கிட்டத்தட்ட ஒவ்வொரு வருடமும் வெளியாகும் .குறிப்பாக ராஜேஷ் திரையரங்கில் .இன்னும் குறிப்பாக டிசம்பர் 3-ம் தேதி நாகர்கோவில் கோட்டாறு புனித சவேரியார் பேராலயத் திருவிழாவை முன்னிட்டு நடிகர் திலகத்தின் வசந்த மாளிகை , திரிசூலம் போன்ற படங்கள் நள்ளிரவு சிறப்புக்காட்சிகளோடு திரையிடப்பட்டு ,அப்போது வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் புதிய படங்களை விட வசூல் குவித்து சாதனை படைக்கும் ..அந்த தகவல்களையும் தொகுக்க வேண்டும்.

Joe,

வசந்த மாளிகை மதுரையிலும் ஒவ்வொரு வருடமும் ரிலீஸ் ஆகும்.

Just curious: Why was NT more popular in Nagar Kovil than any other actor? Was it because of overall better education level in NK, its prosperity or social-religious distribution? Obviously, a fan's affinity with an actor depends on many factors, particularly education level. In a generic sense, as my uncle who was a big NT fan told me, it was NT who had most fans with at least college degree than any other tamil actors in history. Veterans, please confirm.

I guess we need to discuss here the background of NT fans in different categories:

1. his fan base in grass root level
2. fan base in rural - urban level
3. fan base related to prosperity
4. fan base related to education
5. fan base in highest level of people in society

and much more.

Regards

Mahesh_K
9th April 2010, 11:18 AM
வசந்த் தொலைக்காட்சியில்

பதறிப்போன மூப்பனார், டெல்லியுடன் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கி சொல்ல, சிவாஜி மன்றத்தினருக்கு சீட் ஒதுக்கப்பட்டது. சென்னை வண்ணாரப்பேட்டையில் ராஜசேகரன், திருச்சி எம்.பி.தொகுதிக்கு அடைக்கலராஜ் உள்பட பலர் கட்சியால் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்..//

சாரதா மேடம், 1984ல் சிவாஜி மன்றத்துக்கு ஒதுக்கப்பட்ட ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் சத்யமங்கலமும் ஒன்று. அந்த தொகுதியில் போட்டியிட்ட திரு. E.V.K.S. இளங்கோவன் 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

kaveri kannan
9th April 2010, 12:23 PM
பாசத்துக்குரிய பம்மலார் அளிக்கும்
பாசமலர் செய்திகளும், படங்களும்
நெஞ்சுக்கு நிறைவளிக்கின்றன..

நன்றிகள் பம்மலாரே..

--------------------------------------------


நம் திரிகளில்...

இளையதலைமுறை படப்பார்வை வாசித்தபோது...
''பொம்பளையா லட்சணமா பொடவையக் கட்டு '' என்ற பாடல் இசைத்தட்டில் இருந்தது..
படத்தில் இல்லை என்ற செய்தி இருந்தது.

அதே படத்தில் டி.எம்.எஸ், சுசீலா குரலில் நீண்ட நாள் கேட்டுக்கேட்டு மயங்கியிருந்த இன்னொரு பாடலும் படத்தில் இல்லாததால்
நாம் ஏமாந்த நினைவு நிழலாடுகிறது..


அந்த இனிய பாடல் -

கேட்டாயே ஒரு கேள்வி..
நான் வார்த்தையில் பதில் சொல்ல முடியாது..


--------------------

நடிகர்திலகம் - வாணிஸ்ரீ இணையில்
கத்திரிக்கப்பட்ட இன்னொரு பாடல் -

வசந்தமாளிகையின்

''அடேயப்பா ராஜப்பா சங்கதி என்ன'?


( காட்டுவாசிக் குழு நடனக்காட்சியில் வந்திருக்க வேண்டிய பாடல்????)

-----------------------------

அவன் ஒரு சரித்திரம் படத்துக்காக உருவாக்கப்பட்டு பின்னர் சிவகுமாரின் பெருமைக்குரியவள் ( ஒரே தயாரிப்பாளர்) படத்தில் வந்த இனிய பாடல்:

என் மனது ஒன்றுதான்
உன் மீது ஞாபகம்..


-----------------------

வந்துவிட்ட நூறுநூறு இனிய பாடல்கள் இருக்க
வாராதுபோன சில பாடல்களை எண்ணி ஏங்கும்
ரசிகமனதின் ரகசிய ஏக்கம்
புரியாத புதிர்தான்.. இல்லையா நண்பர்களே?

joe
9th April 2010, 12:31 PM
[tscii:d9771f12ee]

Just curious: Why was NT more popular in Nagar Kovil than any other actor? Was it because of overall better education level in NK, its prosperity or social-religious distribution?

எனக்கு தெரிந்த காரணங்கள்

1. காமராஜர் ஆதரவுத் தளம் : சட்டமன்ற தேர்தலில் சொந்த ஊரில் தோற்றுப் போன பெருந்தலைவர் ,பின்னர் நாடாளுமன்றத்துக்கு நாகர்கோவிலில் போட்டியிட்டு மக்களின் மகத்தான ஆதரவோடு வெற்றி பெற்றார் .அப்போது பெருந்தலைவருக்காக தொகுதியில் சுற்றி சுழன்றவர் நடிகர் திலகம் . காமராஜரை ‘அப்பச்சி’ என வாஞ்சையோடு அழைக்கும் குமரி மக்கள் நடிகர் திலகத்தை தங்கள் செல்லப்பிள்ளையாகவே நினைத்தனர் .நாகர் கோவிலில் பேருந்து நிலைய நுழைவில் ‘குமரித் தந்தை’ மார்ஷல் நேசமணிக்கு சிலை எடுத்தவர் நடிகர் திலகம்.

2. தேசிய கட்சிகளின் கோட்டை : தமிழகத்தில் தனித்துவமாக குமரி மாவட்டம் அன்றும் இன்றும் தேசிய கட்சிகளின் கோட்டை ..காங்கிரசின் இரும்புக் கோட்டையாக திகழ்ந்த மாவட்டத்தில் இன்றும் காங்கிரஸ் ,பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மாநில கட்சிகளுக்கு இணையான பலத்துடன் திகழ்கின்றன .இதிலிருந்து இம்மாவட்ட மக்களின் ரசனை சற்று மாறுபட்டது என அறியலாம்

3.தமிழகத்தில் கல்வியறிவில் முதலிடத்தில் இருப்பது காரணமா என தெரியவில்லை .ஆனால் அதுவும் இரு சிறு காரணியாக இருக்கலாம்.

4. குமரி மாவட்டத்தில் கூத்து ,வில்லுப்பாட்டு போன்ற பழங்கலைகளுக்கு இன்னும் மதிப்பு உண்டு . நல்ல திறமைகளை மதித்து போற்றுகின்ற போக்கு பொதுவாகவே மக்களுக்கு அதிகம் என்பது என் (தாழ்மையான :lol: ) கருத்து.[/tscii:d9771f12ee]

abkhlabhi
9th April 2010, 01:03 PM
Paasamalar Advt. in Today's Dinathanthi Page 13 . Unable to load.

joe
9th April 2010, 01:17 PM
Paasamalar Advt. in Today's Dinathanthi Page 13 . Unable to load.

[html:72a289a333]
http://i18.photobucket.com/albums/b126/cdjm/NT/pasamalarrrr.jpg[/html:72a289a333]

pammalar
9th April 2010, 01:23 PM
சிவாஜி நியூஸ் : சென்னை

1. இன்று (9.4.2010) வெள்ளி முதல், பெரம்பூர் மஹாலட்சுமி திரையரங்கில், தினசரி 3 காட்சிகளாக, காலத்தை வென்ற வெள்ளிவிழாக் காவியம், பாசத்தலைவரின் "பாசமலர்". (காட்சி நேரம்:பிற்பகல் 2:30, மாலை 6:15, இரவு 9:45)

2. இன்று (9.4.2010) வெள்ளி முதல், பிராட்வே மண்ணடி பகுதியில் உள்ள மினர்வா திரையரங்கில் (தற்பொழுது மினர்வா, பாட்சா எனப் பெயர் மாறியுள்ளது), தினசரி பகல் காட்சியாக, இதயதெய்வத்தின் "இரு துருவம்". (காட்சி நேரம்:முற்பகல் 11:15)

அன்புடன்,
பம்மலார்.

abkhlabhi
9th April 2010, 01:36 PM
:ty:

pammalar
9th April 2010, 02:03 PM
Please click the following link to see the Publicity Ad of PAASAMALAR, that has come in Today's (9.4.2010) Daily Thanthi, Chennai Edition:

(Special thanks to Mr.Bala & Mr.Joe for uploading the same in our thread itself)

http://paasamalar69.webs.com/apps/photos/photo?photoid=77464441

Happy Viewing,
Pammalar.

pammalar
9th April 2010, 02:18 PM
தேவி வார இதழில், இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் அவர்கள், தனது வாழ்க்கைப் பயணத்தை, தொடர் கட்டுரையாக வடித்து வருகிறார். 17.3.2010 தேதியிட்ட இதழில், நமது நடிகர் திலகத்துடன் கொண்டிருந்த நட்புறவைப் பற்றியும் , இருவருக்கும் இடையே இருந்த நெருக்கம் குறித்தும், "நானும் நடிகர் திலகமும்" என்கின்ற தலைப்பில், விரிவாக விவரித்துள்ளார். அதனைப் படித்து மகிழ, கீழ்க்காணும் சுட்டிகளை சொடுக்கவும்:

http://pammalar.webs.com/apps/photos/photo?photoid=77467168 (first two pages)

http://pammalar.webs.com/apps/photos/photo?photoid=77467169 (third page)

அன்புடன்,
பம்மலார்.

J.Radhakrishnan
9th April 2010, 09:32 PM
போனஸ் நியூஸ்:
இதே பெரம்பூர் மஹாலட்சுமியில், பாசமலருக்குப் பின் ஓரிரு வாரங்கள் கழித்து, நல்லிதயங்களின் இதயங்களை மீண்டும் திருட "திருடன்" வரப் போவதாகவும் தகவல் வந்துள்ளது.

பம்மலார் சார் தகவலுக்கு நன்றி. இந்த படத்திற்காக ரொம்ப நாளாக காத்திருந்தேன்.

RAGHAVENDRA
9th April 2010, 09:32 PM
மஹாலட்சுமியில் பாசமலர் இன்று பிற்பகல் காட்சியில் நல்ல வரவேற்பு. கிட்டத்தட்ட 300க்கு சற்றுக் குறைவான எண்ணிக்கையில் மக்கள் ரசித்துள்ளனர். அதில் மகளிர் மட்டும் 50க்கும் மேல். படத்தின் பிரதி நன்றாக உள்ளதால் மேலும் மேலும் கூட்டம் வரக்கூடும். வாசலில் பந்தல் கட்அவுட்கள் மிகவும் ரம்மியமாக உள்ளன. மொத்தத்தில் இந்த வாரம் பாசமலர் வாரமாகவே மாறிவிடும் சாத்தியக் கூறுகள் அமோகமாக உள்ளன.
(img)
மற்றொரு அற்புதமான, உள்ளங்களைக் கொள்ளையடித்துக் கொண்டு போகக்கூடிய, செய்திக்கு எதிர்பாருங்கள். சென்னையைக் கலக்க வருகிறார் நடிகர் திலகம்.

அந்தப் படம் ....

சொன்னால் துள்ளியடித்துக் கொண்டு சிட்டென சென்னைப் பறந்து வரமாட்டீர்களா என்ன

அந்த செய்திக்கு காத்திருப்போமே.

ராகவேந்திரன் [/img]

joe
9th April 2010, 10:49 PM
வாசலில் பந்தல் கட்அவுட்கள் மிகவும் ரம்மியமாக உள்ளன. மொத்தத்தில் இந்த வாரம் பாசமலர் வாரமாகவே மாறிவிடும் சாத்தியக் கூறுகள் அமோகமாக உள்ளன.


[html:ad1c3f9aca]
http://i18.photobucket.com/albums/b126/cdjm/pasamalar4.jpg[/html:ad1c3f9aca]
[html:ad1c3f9aca]
http://i18.photobucket.com/albums/b126/cdjm/pasamalar3.jpg[/html:ad1c3f9aca]
[html:ad1c3f9aca]
http://i18.photobucket.com/albums/b126/cdjm/pasamalar2.jpg[/html:ad1c3f9aca]
[html:ad1c3f9aca]
http://i18.photobucket.com/albums/b126/cdjm/pasamalar1.jpg[/html:ad1c3f9aca]

kaveri kannan
10th April 2010, 12:16 AM
பாசமலர் திரையரங்க, தினத்தந்தி காட்சிகள்
பார்க்கப் பார்க்கப் பரவசம்.
பார்த்தாலே பசி தீரும்.

பம்மலாருக்கும் ஜோ அவர்களுக்கும் நன்றி..


--------------

எஸ் எஸ் ஆர் கட்டுரை படிக்கச் சுவை.

கட்டபொம்மன் நினைவுகளை மீட்டது.

--------------------------------

RAGHAVENDRA
10th April 2010, 12:23 AM
அன்பு நண்பர் ஜோ அவர்களுக்கு,
உடனடியாக படங்களைப் பதிவேற்றமைக்கு என் உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நெஞ்சில் நஞ்சற்ற தவப்புதல்வனுக்கு நாஞ்சில் கோட்டையானதில் வியப்பென்ன.
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்கு யாண்டும் இடும்பை இல - இக்குறளுக்கேற்ப வாழ்ந்து காட்டியவர் நடிகர் திலகம்.

இனம் பார்க்க வில்லை,
மொழி பார்க்கவில்லை, தலைவரின்
குணம பார்த்தார், நாட்டின்
நலம் பார்த்தார்
இந்தியா வைக் கண்முன் நிறுத்தி
இன பேதத்தை இல்லாதாக்கி
நாடு போற்றும் தலைவரைத் தொண்டர்க்கு
நயம்பட கைகாட்டினார்
வீடு தோறும் கல்வியின் வீச்சை எடுத்துரைத்து
வேளை ஒன்றுக்கு விருந்தையும் தானளித்து
வீணாய்ப் போகாமல் சிறார்
வாழ்வில் ஒளியேற்றி
பெருந்தலைவராய் வாழ்ந்தவரை
அடையாளம் காட்டியவர்
தன்னுடைய இனமென்றும்
தன்னுடைய குலமென்றும்
எண்ணாமல் இந்நாடே
என்னாளும் பெரிதென்று
எடுத்துரைத்தார் சிவாஜி
ஏற்றனர் நாஞ்சில் மக்கள்
அன்று முதல் என்றென்றும்
பெருந்தலைவர் என்றாலே
அவருடைய அருந்தொண்டர்
நினைவுக்கு வருவாரே

ராகவேந்திரன்

kaveri kannan
10th April 2010, 12:24 AM
ஒய் ஜி மகேந்திரா போல நடிகை லட்சுமியும் சிறுவய்து முதலே நடிகர்திலகத்தின் தீவிர ரசிகர்கள்.

இருவரும் நண்பர்களுடன் கல்லூரிக்கு மட்டம்போட்டு கிருஷ்ணவேணியில் பார்த்த நடிப்புக்காவியங்கள் அநேகம்.

அப்படி இரசித்த நடிகர்திலகத்துடன் இணைந்து நடிக்கும்போது
இலட்சுமிக்கு எத்தனை ஆனந்தம் கிடைத்திருக்கும்!


தங்கைக்காக -வில் தங்கையாய்
இராஜராஜசோழனில் - மகளாய்..


எனக்கு இலட்சுமி, ( ஜெயசுதா, ஸ்ரீவித்யா......) நம்மவருடன் இணைந்த படங்கள் பிடிக்கும்.


இலட்சுமி முதலில் இணைந்தது - உனக்காக நான்.

பாலாஜி தயாரிப்பு.

நட்பு முன்னிலையில்.. காதல் பின்தங்கியது.


தியாகம் வெற்றிஜோடி ( தேன்மல்லிப்பூவே, வசந்தகாலக் கோலங்கள், நல்லவர்க்கெல்லாம்)..... வெகுவாய் ரசிக்கப்பட்டது.



ஆனந்தக்கண்ணீர் ( சிவாஜி புரொடக்ஷன்ஸ்)
குடும்பம் ஒரு கோயில் ( பாலாஜி தயாரிப்பு)

இவற்றிலும் இலட்சுமி இணை..

இரசிகை இணையானால் இரட்டிப்பு மகிழ்ச்சி, இல்லையா?

kaveri kannan
10th April 2010, 12:27 AM
அன்பு ராகவேந்திரா அவர்களுக்கு

உள்ளத்தில் பொங்கிய சொற்களை
உத்வேக விரல்கள் தட்டச்ச
நீங்கள் பதிந்த கவிதை வரிகள்
எங்கள் மனமும் செபிக்கும் வரிகள்..



வாழ்த்தும் நன்றியும்..

einstein
10th April 2010, 03:25 AM
LONG LIVE NADIGAR THILAGAM PUGAZH.

kaveri kannan
10th April 2010, 11:31 AM
நடிகர்திலகத்துக்கு சந்திரபாபு (கூட) பின்னணி பாடியிருக்கிறார்.

ஆனால் பி பி ஸ்ரீனிவாஸ் பாடவில்லை என நினைக்கிறேன். சரியா நண்பர்களே?

-----------------------------------

பெற்றமனம் படத்தில் தந்தை பெரியார் '' கெட்-அப்'பில் நடிகர்திலகம் தோன்றியிருக்கிறார்.

---------------------------------------

தீவிபத்திற்குப் பிந்தியதான ஒரு கெட்டப்பில்
வித்தியாசமாகத் தோன்றிக் கவர்ந்த படம் -
நீதியின் நிழல்.

----------------------------------------

கறுப்பைப் பூசியும் கண்ணோளிப்பொலிவும், வசீகரச் சிரிப்புமாய் நெஞ்சை அள்ளிய தோற்றங்கள்

தங்கசுரங்கம் - உச்சக்காட்சி
திருவிளையாடல் - கடற்கரைக் காட்சி
சிவந்தமண் - பட்டத்துராணி பாடல்காட்சி

tfmlover
10th April 2010, 11:56 AM
இமைகள் ன்னு ஒரு படம்
என்ன பாடறதுக்கு கூப்பிட்டு இருக்காரு அம*ர*ர்
நான் ஸ்டூடியோவுக்கு போனேன்
ஒரு பாட்டு சொல்லிக் கொடுத்தாரு
மாடப் புறாவோ ..மஞ்சள் நிலாவோ அப்டீன்னு
நானும் பாட்டெல்லாம் கத்துகிட்டு..
யோவ் யாருய்யா ஹீரோ ? ஹீரோவ சொல்லுங்கப்பா
அப்போதான் நான் அதுக்கு தகுந்தபடி
கொஞ்சம் வாய்ஸ அட்ஜெஸ்ட் பண்ணி பாடாலாம் அப்டீன்னேன்
நீ ஒண்ணும் பயந்துற மாட்டியேன்னாரு அம*ர*ன்
அதெல்லாம் பயப்பட மாட்டேன் சொல்லுங்கன்னேன்
நடிகர் திலகம் னாரு அப்போதான் பயம் வந்துச்சி
ஏன்னா சினிமா தியேட்டர்ல ஒக்காந்து நான் அதிசயமா பார்த்துக்கிட்டு இருந்தவரு
நம்ம கண்களுக்கு அதிசயமா தெரிஞ்சவரு
என்னா ஒரு நடிகர்
இமயத்தை விட மேலானவர்
அவ்வளவு பெரிய நடிகருக்கு நம்ம பாடப் போறோமா
அப்டீங்ற பயம் வந்திரிச்சு
யோவ் நான் பாடினா சரியா இருக்குமானேன்
நீ இதெல்லாம் இங்கே பேசாதே ஒக்காந்து இரு
பாடப் போற நேரத்துல சரியா வருமா வராதான்னெலாம் கேக்காதே
பாடு நல்லா பாடிரு அப்டின்னாரு..
அந்த பாட்டு பாடினேன் ..மாடப் புறாவோ..இல்லை மஞ்சள் நிலாவோ ..
அது பெரிய பேரும் புகழும் வந்துச்சி எனக்கு
அதுக்கப்புறம் பாத்தீங்கன்னா..
வெள்ளை ரோஜான்னு இளையராஜா அவர்கள் சிவாஜி சாருக்கு ஒரு படம் பண்றாரு
அந்த வெள்ளை ரோஜா படத்துல 'தேவனின் கோவிலிலே அப்டீங்ங்ற பாட்டை பாடினேன்
அதுவும் எல்லாருக்கும் புடிச்சி போச்சி
அதே ப*ட*த்துல* இன்னொரு பாட்டு நாகூர் ப*க்க*த்திலே
நம்மளோட பேட்டை..

பாரதிராஜா படத்துல பாடறத்துக்கு என்னை கூப்பிட்டு இருக்காங்க*
அப்பவும் என்ன சொல்றாரு இளையராஜா ?
நல்லா பாடிருய்யா எப்பவும் சொல்லுவாரு
நல்லா பாடிரு இலேன்னா வேணான்னு சொல்லிட போறாங்க*
சரின்னு பாட்டு கத்துகிட்டு ..பூங்காத்து திரும்புமா..ன்னு ஒரு பாட்டு..
அதுல வாற எல்லா பாட்டையும் நானே பாட ஆரம்பிச்சேன்
சிவாஜி சாரும் வந்து இருந்தாரு
வந்து சொன்னாரு நல்லா பாடுற 'கீப் இட் அப் அப்டீன்னாரு
அந்த ஒரு வார்த்தை போதும்
இமயம் வந்து கெரெட்டா இருந்துது ஒன் வாய்ஸ்
அப்டீன்னு சொன்னா அது எவ்வளவு பெரிய பெருமை
அதுக்கு எனக்கு பெரிய மகுடம் சூட்டின மாதிரி ஆயிடிச்சி
அவரோட ராஜரிஷி படத்துக்குபாட கூப்பிட்டாங்க
முதல் மரியாதையில பாடின மாதிரி பாடக் கூடாது
ரொம்ப கம்பீரமா பாடனும் நல்லா ஓபன் வாய்ஸ்ல பாடு
ஏன்னா ராஜரிஷி ரொம்ப கம்பீரமான காரெக்டரு
அதுக்கு பாடும்போது சாஃப்டா பாடினா எடுபடாது..
அதனால சிவாஜி சாரும் சொன்னாராம்
மொதல் மரியாதை எல்லாம் சரி இதுல இவன் பாடினா சரியா இருக்குமான்னு கேட்டாராம்
இல்லே சரியா பாட வச்சுடறோம் சொன்னார் இளையராஜா
டேப் பண்ணி கொண்டு போயி நல்லா கத்துக்கோ
நல்லா கத்துகிட்டு நாளைக்கு காலையிலே வந்து பாடுன்னு சொன்னாரு இளையராஜா
நான் போயி நைட் எல்லாம் ஒக்காந்து
விடிய விடிய கத்துகிட்டு வந்து பாடினேன் 'சங்கரா சிவசங்கரான்னு.. ஒரு பாட்டு

Singer Malaysia Vasudevan -Jaya TV Thirumbi paarkkirEn

Regards

saradhaa_sn
10th April 2010, 12:01 PM
நடிகர்திலகம் - வாணிஸ்ரீ இணையில்
கத்திரிக்கப்பட்ட இன்னொரு பாடல் -

வசந்தமாளிகையின்
''அடேயப்பா ராஜப்பா சங்கதி என்ன'?
( காட்டுவாசிக் குழு நடனக்காட்சியில் வந்திருக்க வேண்டிய பாடல்????)

-----------------------------

அவன் ஒரு சரித்திரம் படத்துக்காக உருவாக்கப்பட்டு பின்னர் சிவகுமாரின் பெருமைக்குரியவள் ( ஒரே தயாரிப்பாளர்) படத்தில் வந்த இனிய பாடல்:

என் மனது ஒன்றுதான்
உன் மீது ஞாபகம்..
காவேரிக்கண்ணன்...

'வசந்தமாளிகை'யில் 'அடியம்மா ராசாத்தி' பாடல் இடம்பெறாமல் அந்த நடனத்துக்கு வெறும் இசை மட்டும் பயன்படுத்தப்பட்டதற்கான நியாயமான காரணம் (கதாசிரியர் பாலமுருகனால் சொல்லப்பட்டது) இப்பகுதியின் ஆரம்ப பக்கங்களில் (அல்லது பகுதி 5ன் இறுதிப்பக்கங்களில்) அலசப்பட்டுள்ளது.

அதிலேயே, அவன் ஒரு சரித்திரம் படத்தில் 'உன்மனது ஒன்றுதான்' பாடலுக்கு பதிலாக 'அம்மானை அழகுமிகும் கண்மானை' இடம்பெற்ற விவரமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

saradhaa_sn
10th April 2010, 12:08 PM
டியர் tfmlover...

மலேசிய வாசுதேவனின் திரும்பிப்பார்க்கிறேன் நிகழ்ச்சியில் நடிகர்திலகத்தைப்பற்றி சொன்னதை எழுத டைப் பண்ணிட்டு திரிக்கு வந்து பார்க்கிறேன். அதையே நீங்க அட்டகாசமா எழுதியிருக்கீங்க. நான் எழுத நினைச்சதைவிட சூப்பரா இருக்கு.

அதெப்படி நம்முடைய மனங்கள் ஒரேமாதிரி துடிக்கின்றன..?

saradhaa_sn
10th April 2010, 05:06 PM
ஒய் ஜி மகேந்திரா போல நடிகை லட்சுமியும் சிறுவய்து முதலே நடிகர்திலகத்தின் தீவிர ரசிகர்கள்.

இருவரும் நண்பர்களுடன் கல்லூரிக்கு மட்டம்போட்டு கிருஷ்ணவேணியில் பார்த்த நடிப்புக்காவியங்கள் அநேகம்.

அப்படி இரசித்த நடிகர்திலகத்துடன் இணைந்து நடிக்கும்போது
இலட்சுமிக்கு எத்தனை ஆனந்தம் கிடைத்திருக்கும்!
நடிகர்திலகத்தின் ரசிகர்கள் வரிசையில் YGமகேந்திரனையும் நடிகை லட்சுமியையும் ஒரே தட்டில் வைக்க முடியாது. YGமகேந்திரனின் உயிர்மூச்சே நடிகர்திலகம்தான்.

ஆனால் லட்சுமி பலமுறை தான் ஒரு தீவிர எம்.ஜி.ஆர் ரசிகை என்று பலமுறை பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். தான் நடித்தவற்றுள் தனக்குப்பிடித்த படங்கள் என்று இதயவீணை, மாட்டுக்கார வேலன், குமரிக்கோட்டம் போன்ற படங்களைச்சொல்லியிருக்கிறாரே தவிர நடிகர்திலகத்தின் ஒரு படத்தைக்கூட அவர் குறிப்பிட்டதில்லை.

இன்னொரு பேட்டியில், தனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களோடு இணைந்து நடிக்கும் வாய்ப்புக்கிடைத்ததுதான் என்று சொல்லியிருந்தார்.

1976-ல் பொம்மை பத்திரிகையில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த லட்சுமி, 'சென்ற ஆண்டு வெளியான தமிழ்ப்படங்களில் உங்களுக்குப்பிடித்த படம் எது?' என்று கேட்டிருந்த ரசிகருக்கு (அந்த ஆண்டில் அவன்தான் மனிதன் வந்திருந்தும்) 'இதயக்கனிதான் தனக்குப்பிடித்த படம்' என்று சொல்லியிருந்தார். இப்போதும் பல்வேறு சமயங்களில் தான் ஒரு எம்.ஜி.ஆர். ரசிகை என்பதை அவ்வப்போது வெளிப்படுத்திக்கொள்வார்.

ஆனால் Y.G.மகேந்திரன், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தான் ஒரு 'தீவிர நடிகர்திலக பக்தன்' என்பதை தெரியப்படுத்துவார். எனவேதான் இருவரையும் ஒரே தட்டில் வைத்து மதிப்பிட முடியாது.

saradhaa_sn
10th April 2010, 05:15 PM
நடிகர்திலகத்துக்கு சந்திரபாபு (கூட) பின்னணி பாடியிருக்கிறார்.

ஆனால் பி பி ஸ்ரீனிவாஸ் பாடவில்லை என நினைக்கிறேன். சரியா நண்பர்களே?
'நான் வணங்கும் தெய்வம்' மற்றும் 'புனர் ஜென்மம்' படங்களில் நடிகர்திலகத்துக்கு பி.பி.எஸ். பாடியுள்ளார்.

rangan_08
10th April 2010, 05:17 PM
இன்று நகரின் சில மையப் பகுதிகளில் பாசமலர் போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பதை பார்த்தேன். நடிகர் திலகமும் நடிகையர் திலகமும் இணைந்து நடிக்கும் என்ற தலைப்போடு சிவாஜி சாவித்திரி மற்றும் ஜெமினி ஆகியோர் நிற்கும் ஸ்டில்லும், கன்னத்தில் கைவைத்து பார்க்கும் நடிகர் திலகத்தின் மிக பிரபலமான க்ளோஸ்-அப் ஸ்டில்லும் போஸ்டரில் இடம் பெற்றிருக்கின்றன. நாளை முதல் ஆரம்பம்.

அன்புடன்

Yes. I too saw the poster in some of the main parts of the city. Unlike the poster for NT Film festival, which was very small in size, this one was almost a life-size poster beautifully printed in orange-brown tint.

Another good news. Saw posters of " Iru Dhuruvam " near Park Town. Starting from yesterday (Mar-09), daily noon show @ Batcha (formerly Minerva ).

rangan_08
10th April 2010, 05:18 PM
போனஸ் நியூஸ்:
இதே பெரம்பூர் மஹாலட்சுமியில், பாசமலருக்குப் பின் ஓரிரு வாரங்கள் கழித்து, நல்லிதயங்களின் இதயங்களை மீண்டும் திருட "திருடன்" வரப் போவதாகவும் தகவல் வந்துள்ளது.

பம்மலார் சார் தகவலுக்கு நன்றி. இந்த படத்திற்காக ரொம்ப நாளாக காத்திருந்தேன்.

same here. eagerly waiting.

rangan_08
10th April 2010, 05:20 PM
[tscii:e843591f48]Last week Malaysia Vasudevan shared some memorable moments with viewers in “ Thirumbi parkiren “ ( jaya tv ). To my surprise, he said that the small portion, “ suno suno bhai….” that comes in between “ Indhia nadu en veedu “ from “ Bharatha vilas “, was sung by him.

He went on and said that Mellisai Mannar heard him singing in a programme and gave him this chance without even asking him to take a voice test. After recording the song, the legend praised him and said that “ paravayilla thambi, voice test vekkama unakku chance kuduthadukku, nee nalla paaditta “.

And you know who gave him the title Malaysia Vasudevan ? It is another legend, A.P. Nagarajan. APN gave him a song in his film starring Sivakumar & Kamal and music is by Kunnakudi. Pleased with his performance, APN appreciated him and asked how he would like to have his name in the title card, to which MV replied, Vasudevan. Now, APN said, “ illaye, kunnakudi , nee Malaysiala irundhu vandhiruka – Malaysia Vasudevan appadinu sonnare. Malaysia Vasudevan-ne vechukka, nee nalla varuva “…..and that’s how he went on to become Malaysia Vasudevan.
[/tscii:e843591f48]

rangan_08
10th April 2010, 05:22 PM
[tscii:56f2762ad2]Generally, before going to bed, I prefer to listen old songs in the radio. Last week I was listening to “ kodi asaindhadhum katru vandhadha ….” and I was completely bowled by this stunning piece of art. I’ve heard the song plenty of times before but on that night, it was a different experience because for the first time I noticed the nuance & brilliance hidden in that song.

NT as ex-serviceman, would always maintain a distance and behaves in a decent manner with Saroja devi. He also feels a little bit shy in her company. The smell of roses and the friendship of a young lady gives a strange feeling to this war veteran. But at the same time, he also enjoys it. Perfectly reflecting this quality of the hero, TMS ayya had sung it in a matured voice even though the song travels on a happy note.

On the other hand, SD is a vivacious, enthusiastic young lady who is full of dreams and hopes about her future with NT. Suseela amma effortlessly brings out this quality through her golden voice.

If it was not for the great Viswanathan-Ramamurthy, TMS ayya & Suseela amma, this would have become another ordinary song. But, because of their dedication, hard work and penchant to do something new has given us this wonderful gem. :notworthy: :thumbsup:
[/tscii:56f2762ad2]

saradhaa_sn
10th April 2010, 05:23 PM
டியர் ஜோ & பம்மலார்...

பாசமலர் திரையிடப்பட்டுள்ள மகாலட்சுமி திரையரங்க அலங்கார காட்சிகளை தொகுத்து கண்களுக்கு விருந்தாக்கியமைக்கு நன்றிகள் பல நூறு.

saradhaa_sn
10th April 2010, 05:33 PM
[tscii]Last week Malaysia Vasudevan shared some memorable moments with viewers in “ Thirumbi parkiren “ ( jaya tv ). To my surprise, he said that the small portion, “ suno suno bhai….” that comes in between “ Indhia nadu en veedu “ from “ Bharatha vilas “, was sung by him.
ஆம்...
'இந்திய நாடு என் வீடு' பாடலில் நடிகர்திலகத்துக்காக டி.எம்.எஸ்ஸும். கே.ஆர்.விஜயா மற்றும் தேவிகாவுக்காக சுசீலாவும், MRRவாசுவுக்காக வீரமணியும், ராஜசுலோச்சனா மற்றும் மனோரமாவுக்காக ஈஸ்வரியும், மேஜருக்காக மலேசியாவும், வி.கே.ஆருக்காக எம்.எஸ்.வி.யும் பாடியிருந்தனர்.

pammalar
10th April 2010, 07:10 PM
நடிகர்திலகத்துக்கு சந்திரபாபு (கூட) பின்னணி பாடியிருக்கிறார்.

ஆனால் பி பி ஸ்ரீனிவாஸ் பாடவில்லை என நினைக்கிறேன். சரியா நண்பர்களே?
'நான் வணங்கும் தெய்வம்' மற்றும் 'புனர் ஜென்மம்' படங்களில் நடிகர்திலகத்துக்கு பி.பி.எஸ். பாடியுள்ளார்.

மெலொடி கிங் பி.பி. ஸ்ரீனிவாஸ் அவர்கள், முதன்முதலில், நமது நடிகர் திலகத்திற்கு "நான் சொல்லும் ரகசியம்" திரைக்காவியத்தில் பின்னணி பாடினார். "கண்டேனே உன்னைக் கண்ணாலே, காதல் ஜோதியே" எனத் தொடங்கும் இந்த டூயட் பாடலை பி.பி.எஸ்., தலைசிறந்த பாடகி பி.சுசீலா அவர்களுடன் இணைந்து இசைத்தார். நடிகர் திலகமும், அஞ்சலி தேவியும் இணைந்து நடித்த அட்டகாசமான டூயட். திரை இசை மாமேதை ஜி.ராமநாதன் அவர்களின் இசையில் இப்பாடலில் ரொமான்ஸ் சொட்டும். பாடலை இயற்றியவர் அ.மருதகாசி.

அன்புடன்,
பம்மலார்.

tfmlover
10th April 2010, 11:30 PM
டியர் tfmlover...

மலேசிய வாசுதேவனின் திரும்பிப்பார்க்கிறேன் நிகழ்ச்சியில் நடிகர்திலகத்தைப்பற்றி சொன்னதை எழுத டைப் பண்ணிட்டு திரிக்கு வந்து பார்க்கிறேன். அதையே நீங்க அட்டகாசமா எழுதியிருக்கீங்க. நான் எழுத நினைச்சதைவிட சூப்பரா இருக்கு.

அதெப்படி நம்முடைய மனங்கள் ஒரேமாதிரி துடிக்கின்றன..?

அன்புள்ள சாரதா
மலேஷியா வாசுதேவன் அவர்களுக்கு அரிதாக கிடைத்த வாய்ப்புக்கள்
அவருக்கு அதன் அருமை நன்றாகவே தெரிந்து இருக்கிறது
அதை அவர் மிகப் பெருமையாக சொல்லும் பொழுது
அதன் பிண்ணனியில் தொனிக்கின்ற மகத்துவம்
இன்னும் ஒருபடி மேலாக உறைக்கிறது
ஆவலாகப் பார்த்தேன்
யாருக்காவது சொல்ல வேண்டுமென்ற ஆசையில்
முந்திக் கொண்டு விட்டேனா ? மன்னிக்கவும்
தாங்களே போஸ்ட் பண்ணியுருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமென்பதில் ஐய*மில்லை
இதற்கு முன் பி பி ஸ்ரீ நிவாஸன் அவர்களும்
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு
பாடும் அரிய வாய்ப்பு கிடைத்ததை சொல்லி மகிழ்ந்ததை பார்த்த கேட்ட ஞாபகம்..வந்தது
இதையும் கேளுங்கள் ( அனேகமாக கேட்டு இருப்பீர்கள் இருந்தாலும் லிங்க் தருகிறேன் இதுவரை கேட்காதவர்களுக்காக*)

http://www.in.com/music/punar-jenmam/songs-55281.html

listen to ENGUM SONDHAMILLAI (penultimate #)

நன்றி
அன்புடன்

Regards

kaveri kannan
10th April 2010, 11:32 PM
தகவல் சுரங்கங்களாய் அள்ளித்தந்து
என் புரிதல்களை சரிப்படுத்தி, விரிவுபடுத்தும்
நம் சாரதா அவர்கள், பம்மலார் அவர்கள்
இருவருக்கும் மிக்க நன்றி..

------------------------------------------

இமைகள் மாடப்புறாவோ பாடலை நினைவுபடுத்திய மலேசியா வாசுதேவன் பேட்டியைப் பதிந்த டிஎமப்ஃலவ்வருக்கு நன்றி.

பாவமன்னிப்பு ரகீமை நினைவுபடுத்திய கண்ணிய முகத்தோற்றம் -- தொடர் வழிபாட்டால் தோன்றும் மேல்நெற்றித் தழும்புடன் நடிகர்திலக முகதேஜஸ்..


நினைத்தாலே இனிக்கும்!

pammalar
11th April 2010, 12:37 AM
மற்றொரு அற்புதமான, உள்ளங்களைக் கொள்ளையடித்துக் கொண்டு போகக்கூடிய, செய்திக்கு எதிர்பாருங்கள். சென்னையைக் கலக்க வருகிறார் நடிகர் திலகம்.

அந்தப் படம் ....

சொன்னால் துள்ளியடித்துக் கொண்டு சிட்டென சென்னைப் பறந்து வரமாட்டீர்களா என்ன
ராகவேந்திரன்

புதிய பறவை களாக அனைவருமே பறந்து வருவார்கள் ராகவேந்திரன் சார்!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
11th April 2010, 02:28 AM
பம்மலார்,
எங்கள் நாஞ்சில் நகர் எப்போதும் நடிகர் திலகத்தின் நகராகவே விளங்கி வருகிறது என்பது அந்த பகுதியைச் சேர்ந்த அனைவருக்கும் நன்கு தெரியும்.

80-களில் வசந்தமாளிகை திரைப்படம் கிட்டத்தட்ட ஒவ்வொரு வருடமும் வெளியாகும் .குறிப்பாக ராஜேஷ் திரையரங்கில் .இன்னும் குறிப்பாக டிசம்பர் 3-ம் தேதி நாகர்கோவில் கோட்டாறு புனித சவேரியார் பேராலயத் திருவிழாவை முன்னிட்டு நடிகர் திலகத்தின் வசந்த மாளிகை , திரிசூலம் போன்ற படங்கள் நள்ளிரவு சிறப்புக்காட்சிகளோடு திரையிடப்பட்டு ,அப்போது வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் புதிய படங்களை விட வசூல் குவித்து சாதனை படைக்கும் ..அந்த தகவல்களையும் தொகுக்க வேண்டும்.

கூடுதல் தகவல்களுக்கு மிக்க நன்றி திரு.ஜோ.

நாஞ்சில் ராஜேஷ் அரங்கில் வெளியான நடிகர் திலகத்தின் புதிய திரைக்காவியங்களின் பட்டியல் மட்டுமே யாம் வெளியிட்டுள்ள ராஜேஷ் அரங்குப் பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இதை அப்பதிவின் குறிப்பிலும் சுட்டிக்காட்டியுள்ளேன்.

தாங்கள் கூறியுள்ளது போல், ராஜேஷ் அரங்கில் வெளியான கலைக்குரிசிலின் பழைய படங்கள் பற்றிய தகவல்களையும் தொகுத்து வருகிறேன். தொகுப்பு முழுமை பெற்றதும், பதிவாக அவசியம் வெளியாகும்.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
11th April 2010, 03:47 AM
பம்மலர்,
மிக அருமையான தொகுப்பு. அனால், சில நல்ல படங்கள் விடுபட்டுள்ளன - தங்கப்பதக்கம் & பட்டிக்காடா பட்டணமா. இந்த இரு படங்கள் படைத்த சாதனைகள் உள்ளனவா?

நடிகர் திலகத்தின் நாகர் கோவில் 1970க்கு முந்திய சாதனை தொகுப்பு இருக்கிறதா? That list should be awesome and much better than this one.

Regards.

திரு.டாக்,

நாஞ்சில் ராஜேஷ் திரையரங்கில் வெளியான நமது நடிகர் திலகத்தின் புதிய திரைக்காவியங்கள் புரிந்த சாதனை விவரங்கள் மட்டுமே அப்பதிவில் தொகுக்கப்பட்டது. தங்கப்பதக்கமும், பட்டிக்காடா பட்டணமாவும் முதல் வெளியீட்டில் ராஜேஷ் அரங்கில் வெளியாகவில்லை. தங்கப்பதக்கம், பயோனீர்முத்து திரையரங்கிலும், பட்டிக்காடா பட்டணமா, பயோனீர் பிக்சர்பேலஸ் திரையரங்கிலும் வெளியானது. தங்கப்பதக்கம் முத்துவில் 61 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. பட்டிக்காடா பட்டணமா பிக்சர்பேலஸில் 50 நாட்கள் சக்கை போடு போட்டது.

நாஞ்சில் மாநகரின், ஒவ்வொரு திரையரங்கிலும், நமது நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள் புரிந்த சாதனைகள், அரிய தொகுப்புக்களாக, விரைவில் அடுத்தடுத்து சிறப்புப் பதிவுகளாக வெளிவரும்.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
11th April 2010, 03:56 AM
சென்னை பெரம்பூர் மஹாலட்சுமி : பாசமலர் : தினசரி 3 காட்சிகள் : மொத்த வசூல்(சற்றேறக்குறைய)

9.4.2010 - வெள்ளி

பிற்பகல் 2:30 = ரூ.4,400/- (ரூபாய் நான்காயிரத்து நானூறு)

மாலை 6:15 = ரூ.4,000/- (ரூபாய் நான்காயிரம்)

இரவு 9:45 = ரூ.2,500/- (ரூபாய் இரண்டாயிரத்து ஐநூறு)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
11th April 2010, 04:15 AM
நாளை (11.4.2010) ஞாயிற்றுக்கிழமை, சிங்காரச் சென்னையில் நடைபெறுகின்ற சிங்கத்தமிழனின் சிறப்பு நிகழ்ச்சிகள்:

1. பிராட்வே மண்ணடி பாட்சா (மினர்வா) - இரு துருவம் - முற்பகல் 11:15

2. பெரம்பூர் மஹாலட்சுமி - பாசமலர் - பிற்பகல் 2:30, மாலை 6:15, இரவு 9:45

3. மெரீனா கடற்கரை (காந்தி, சிவாஜி சிலைகளுக்கு அருகே) - நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவையின் ஐந்தாம் ஆண்டு விழா - மாலை 4:00

4. பெரம்பூர் மஹாலட்சுமி - பாசமலருக்கு சிறப்பு ஆராதனைகள் - மாலை 5:00

அன்புடன்,
பம்மலார்.

pammalar
11th April 2010, 01:23 PM
LONG LIVE NADIGAR THILAGAM PUGAZH.

A Warm Welcome to our NT Thread, Mr.Einstein.

pammalar
11th April 2010, 01:37 PM
Paasamalar Ad in Today's (11.4.2010) Daily Thanthi Chennai Edition:

http://paasamalar69.webs.com/apps/photos/photo?photoid=77748108

Happy Viewing,
Pammalar.

pammalar
11th April 2010, 01:59 PM
Paasamalar at Chennai Mahalakshmi - More Pictures :

http://paasamalar69.webs.com/apps/photos/album?albumid=8638909

Happy Viewing,
Pammalar.

pammalar
11th April 2010, 02:03 PM
All Roads Lead To Chennai Mahalakshmi

Murali Srinivas
11th April 2010, 03:10 PM
பார்க்கும் இடமெல்லாம் பாசமலர். திரியில் படிக்கும் செய்திகளில் எல்லாம் பாசமலர் பற்றிய செய்திகள். வரும் மே மாதம் 27-ந் தேதி பொன் விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாசமலர் என்றும் வாடாமலர் என்பது சரித்திரத்தில் பொறிக்கப்பட்ட உண்மை.

இன்றைய நாள் ஏப்ரல் 11 - பிரெஸ்டிஜ் என்ற வார்த்தைக்கு ஒரு புதிய பரிமாணம் ஏற்படுத்திக் கொடுத்த பத்மநாபன் திரையில் முதன் முதலாக தோன்றிய நாள். நாற்பது வருடங்கள் கடந்து போன பிறகும் [11.04.1970] இன்றும் மக்கள் மனதில் ஈர்ப்பும் கண்களில் ஈரமும் உருவாக்கும் காவியம். This Film will stand on it's own legs even after 100 years.

இதே நாளில் வெளியான மற்றொரு காவியம் அவன்தான் மனிதன். 35 வருடங்கள் முன்பு இதே நாளில் [11.04.1975] திரைக்கு வந்த தீப்பெட்டி கம்பெனி முதலாளி, அவன்தான் நடிகன் என்று இன்றும் மக்கள் மனதில் ஆள்கிறார். அவர் நடிப்பில் ஆட்டுவித்தால் இன்றும் ரசிகர்கள் ஆடுகிறார்கள். இரண்டு படங்களையும் இன்று நினைப்போம். என்றும் ரசிப்போம்.

பொன் விழா என்று சொன்னவுடன் மேஸ்திரி நினைவு வருகிறது. நாளை மறுநாள் 13-ந்தேதி பொன் விழா காணப் போகும் "தெய்வப்பிறவி" -க்கு வாழ்த்துக்கள்.

அன்புடன்

Welcome to Hub and NT thread Mr.Einstein.

saradhaa_sn
11th April 2010, 05:46 PM
LONG LIVE NADIGAR THILAGAM PUGAZH.
டியர் einstein...

இது உங்களின் முதல் பதிவு.

ரிஜிஸ்ட்ரேஷன் கிடைத்ததும் முதல் பதிவே, நடிகர்திலகத்தின் புகழ் பாடும் பதிவாக அமைத்திருக்கிறீர்கள். உங்களைப்போன்ற உண்மை ரசிகர்கள்தான் இங்கு வேண்டும். இருகை நீட்டி வரவேற்கிறோம்.

RAGHAVENDRA
11th April 2010, 11:41 PM
அன்பு நண்பர் ஐன்ஸ்டீன் அவர்களே வருக, வருக.
நல்வாழ்த்து நான் சொல்வேன், நல்லபடி வருகவென்று கல்யாண திரியினிலே தலைவன் அவர் தெய்வமம்மா...

தங்களுடைய முதல் பதிவே முத்திரைப் பதிவாக அமைந்துள்ளது. மேலும் மேலும் தங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறோம்.

இன்று 11.04.2010 பட்டாளம் ஸ்டிரஹான்ஸ் சாலை மஹாலட்சுமி திரையரங்கிலும் அதன் வாயிலிலும் கண்கொள்ளாக் காட்சி.. எங்கள் தங்க ராஜாவை மிஞ்சிவிட்டது இன்றைய அளப்பரை. தியேட்டரில் பேசாமல் ஒலியை நிறுத்தி விடலாம். ரசிகர்களின் ஆர்ப்பரிப்பிலும் ஆரவாரத்திலும் வசனமே காதில் விழவில்லை (அது சரி யார் படம் பார்க்க வந்தார்கள், அனைவருமே ஆர்ப்பரிக்க அல்லவா வந்தோம்).
சென்னை மதுரையை மிஞ்சும் போலிருக்கிறது.. முரளி சார் தான் சொல்ல வேண்டும்.

காட்சிக்குக் காட்சி கரகோஷம், ஆரத்தி, கடைகளில் சூடம் டிமாண்ட் ஆகிவிடும் போல் அவ்வளவு. ஆரத்தி.. அது சரி இந்த வெய்யிலில் அவ்வளவு சூடம் கை வெந்து போகாதா ... நமக்கு திக் திக் என இருக்கிறது. ஆனால் அவர்கள் யாருமே அதைப் பற்றி சிந்திப்பதில்லை. இருக்கையில் கொஞ்சம் திரையினில் மிச்சம் என்கின்ற அளவிற்கு திரைக்கு முன் ரசிகர்களின் உற்சாகத் துள்ளல் ... ஆபத்தில்லாதவரையில் நடந்து கொண்டால் சரி என்பதும் உண்மை...

அரங்கு நிறைந்த காட்சி... அட்டகாசமான அளப்பரை .. நடிகர் திலகம் நின்றால் .. நடந்தால் ... பார்த்தால் ...

அதுவும் மிகவும் நுணுக்கமாக ரசிக்கக் கூடிய காட்சிகளிலும் கூட அவ்வளவு ஆரவாரத்திலும் ரசித்து ஆர்ப்பரிக்கும் காட்சி இருக்கிறதே ...

உலகத்தில் எந்த நடிகனுக்கும் இப்படிப்பட்ட ரசிகர் கூட்டமும் ரசிப்புத்தன்மாயும் கிடையாதய்யா என்று உறுதி படக் கூறலாம். அதுவும் நாம் அமைதியாய் டிவிடியில் பார்த்து அந்த துப்பாக்கியைக் கண்களில் வரும் கண்ணீரைத் துடைக்கப் பயன் படுத்துவாரே .. அந்தக் காட்சிக்கு தியேட்டரில் அளப்பரை என்றால் ....

ஆஹா இவனல்லவோ நடிகன்

ஆஹா இவர்களல்லவோ ரசிகர்கள்....

வேறென்ன சொல்ல ...

ராகவேந்திரன்

kaveri kannan
11th April 2010, 11:50 PM
பம்மலார் அளித்த படங்களில் பாதி சுகம்..
ராகவேந்திரா பதிந்த வர்ணனையால் மீதி சுகம்..


மஹாலட்சுமியில் இன்று மாலை நான் இல்லையே என ஏக்கமாய் இருக்கிறது..

நிசமே.. நம் நடிகர்திலகம் அளவுக்கு
ஆத்மாவை அர்ப்பணித்த தூய ரசிகர் குழாம்
எனக்குத் தெரிந்து வேறில்லை.

kaveri kannan
11th April 2010, 11:56 PM
தொலைக்காட்சியில் இன்று -


கலைஞர் ; நெஞ்சம் மறப்பதில்லை --
ரமேஷ்கண்ணா சொன்னது -

ஒரே நாளில் இரு படங்களை வெளியிட்டு அக்காலத்தில் ஹிட்கள் தொடர்ந்து கொடுத்தவர் நடிகர்திலகம்.

இருமலர்கள் படப்பாடலுக்கான முன்னோட்டத்தில் சொன்னார்.

அவரின் பின்னணியில் நடிகர்திலகம் ஹாலிவுட் ஜாம்பவான்கள் (மார்லன் பிராண்டோ) உடன் தோன்றும் புகைப்படம்..


-----------------------------------

ஜெயா.. ஜாக்பாட் நிகழ்ச்சி
குஜலகுமாரி என்ற நடிகை
பராசக்தி படத்தில் நடித்தபோது
நடிகர்திலகத்தின் அன்பான பழகும்விதம், பிறருக்கு நடிக்கச் சொல்லித்தரும் பாங்கு, நேரந்தவறாமை பற்றிச் சொல்லிச் சிலாகித்தார்...


பார்க்கும் இடங்களெல்லாம் அவர் பண்பாடும் காட்சிகள்..

pammalar
12th April 2010, 02:48 AM
Paasath Thilagaththin Paasamalar : 11.4.2010 Sunday Gala : Chennai Mahalakshmi : Flash Update

http://paasamalar69.webs.com/apps/photos/album?albumid=8703689

A Very, Very Happy Viewing,
Pammalar.

tacinema
12th April 2010, 06:04 AM
Paasath Thilagaththin Paasamalar : 11.4.2010 Sunday Gala : Chennai Mahalakshmi : Flash Update

http://paasamalar69.webs.com/apps/photos/album?albumid=8703689

A Very, Very Happy Viewing,
Pammalar.

Pammalar,

Beautiful pictures. What a loss to Chennai theaters that they weren't releasing our beloved Annan's movie for quite some time.... Gala time is back again!!

Raghavendra/pammalar/others,

Hope you must have seen the movie at Mahalakshmi.

எந்த சீனுக்கு தியேட்டர் மிகவும் கதறியது?

* மில் முதலாளியாக GG உடன் வாதம் செய்யும் போதா?
* தங்கை சாவித்திரி gemini ganesan உடன் பேசும் போது மறைவாக நின்று தன் hand gunல் கண்ணீர் துளிகளை துடைத்து கொள்ளும் போதா?
* "என் கண்களையே உன்னிடம் ஒப்படைக்கிறேன்" என்று காலத்தால் அளிக்க முடியாத நெஞ்சை அல்லும் டயலாக் சொல்லும் போதா?
* கடைசியாக, நான் தான் நடிகன் - மற்றவர்கள் எல்லாம் என்றும் எனக்கு பின்னல் தான் என்று நிருப்பித்த சிகர நடிப்பாக உள்ள பாடல்: "மலர்ந்தும் மலராத" காட்சியிலா?

நான் மும்பை ஆரோர தியேட்டரில் ஞாயிறு காலை காட்சியில் "மலர்ந்தும் மலராத" பாட்டு காட்சியில் தியேட்டர் கதறி விட்டது.

Still, I feel our madurai fans will handsomely beat chennai fans.

regards