PDA

View Full Version : 'Vennira Aadai' SHREEKANTH



saradhaa_sn
11th December 2009, 02:19 PM
[tscii:ca9c0be4fb]'வெண்ணிற ஆடை' ஸ்ரீகாந்த்

UPDATES.....

முழு ஆய்வுக்கட்டுரைகள் / விமர்சனங்கள் (Analysis / Reviews)

1) வெண்ணிற ஆடை
2) அவள்
3) கோமாதா என் குலமாதா
4) ராஜ நாகம்
5) வியட்நாம் வீடு
6) ராஜபார்ட் ரங்கதுரை
7) சில நேரங்களில் சில மனிதர்கள்
8) தெய்வீக ராகங்கள்
9) இவர்கள் வித்தியாசமானவர்கள்
10) ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
11) காசி யாத்திரை
12) திருமாங்கல்யம்
13) வெள்ளிக்கிழமை விரதம்

குறு ஆய்வுகள் / தகவல்கள் (Tid-Bits):

1) எதிர் நீச்சல்
2) அவன் ஒரு சரித்திரம்
3) இளைய தலைமுறை
4) வசந்த மாளிகை
5) வாணி ராணி
6) ஞான ஒளி
7) அன்னப்பறவை
8) வெற்றிக்கனி
9) சித்திரச் செவ்வானம்

சிறப்புப் பதிவுகள்:

ஸ்ரீதரின் அறிமுகத்தில் ஸ்ரீகாந்த்
காங்கிரஸ் பேரியக்கத்தில் ஸ்ரீகாந்த்
நடிகர்திலகத்தின் ‘ஸ்ரீகாந்த் பாசம்’
'திரும்பிப்பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் ஸ்ரீகாந்த்
[/tscii:ca9c0be4fb]

abkhlabhi
11th December 2009, 04:06 PM
:clap: 'வெண்ணிற ஆடை' ஸ்ரீகாந்த்

saradhaa_sn
12th December 2009, 11:46 AM
[tscii:566b5bbe4b]ஸ்ரீகாந்த்

'வெண்ணிற ஆடை' …… நியாயப்படி ஸ்ரீகாந்துக்கும், ஜெயலலிதாவுக்கும் கிடைத்திருக்க வேண்டிய பெயர். நிர்மலாவுக்கும், மூர்த்திக்கும் கிடைத்தது.

அமெரிக்கன் கான்ஸலேட் நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டே ராகினி கிரியேஷன்ஸ் என்ற அமெச்சூர் நாடகக் குழுவின் நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்த இவருக்கு ஸ்ரீதரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு தானாக தேடி வந்தது. வெங்கட்ராமன் என்ற இயற்பெயர் கொண்ட இவருக்கு அலுவகத்தில் பெயர் 'வெங்கி', நாடக மேடைகளில் இவரது பெயர் 'ராஜா', திரையில் மட்டுமே ‘ஸ்ரீகாந்த்’.

காதலிக்க நேரமில்லை படத்தின் அபார வெற்றிக்குப்பின், ஸ்ரீதர் எடுத்த ஒரு பரீட்சாத்த முயற்சியான 'வெண்ணிற ஆடை'யில் இன்னொரு பரீட்சாத்த முயற்சியாக, முழுக்க முழுக்க அனைத்து பாத்திரங்களுக்கும் புதுமுகங்களையே போடுவது என்று ஸ்ரீதர் முடிவெடுத்தபோது, அவரது யூனிட்டுக்குள்ளேயே கொஞ்சம் சலசலப்பு துவங்கியது. ஏற்கெனவே அந்தக் கதையையே மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று சந்தேகம் இருக்கும்போது, முழுக்க முழுக்க புதுமுகம் என்ற இன்னொரு அக்னிப்பிரவேசம் வேண்டாம் என்றும், அடுத்து ஏதாவது கமர்ஷியல் பொழுதுபோக்குப்படம் எடுக்கும்போது முழுதும் புதுமுகங்களாக அறிமுகம் செய்யலாம் என்றும் யூனிட்டாருக்கு, குறிப்பாக மாதவன், சி.வி.ஆர்., கோபு, வின்சென்ட் எல்லோருக்கும் ஒரு எண்ணம், ஆனால் ஸ்ரீதரிடம் சொல்ல பயம். எப்படியோ கதை டிஸ்கஷன்போது லேசுமாசாகச் சொல்லியும் ஸ்ரீதர் மறுத்துவிட்டார். முழுக்க புதுமுகங்கள்தான் வேண்டும். இது மக்கள் மத்தியில் நிச்சயம் எடுபடும் என்று (தவறாக) முடிவெடுத்துவிட்டார்.

அப்படி யார், யாரைப்போடலாம் என்று ஆராய்ந்தபோது, நாடக மேடைகளில் 'ராஜா' என்ற ஒரு இளைஞர் துடிப்பாக நடிக்கிறார் என்று கேள்விப்பட்டு, ஸ்ரீதரும் மக்களோடு மக்களாக அமர்ந்து நாடகம் பார்த்தார். தான் உருவாக்கியிருக்கும் மனோதத்துவ டாக்டர் ரோலுக்கு இவரே சரியென முடிவெடுத்து விட்டார். மறுநாள் காலை 'ராஜாவை' அழைக்க வண்டி அனுப்பியபோது, அவர் அமெரிக்கன் கான்ஸலேட் அலுவலகம் சென்றிருப்பதாகவும் மாலைதான் வீட்டுக்கு வருவார் என்றும், நாடகம் இருக்கும் நாட்களில் மாலையில் நேராக நாடகம் நடக்கும் இடத்துக்கே போய்விடுவார் என்றும் தகவல் வர, கொஞ்சம் தயக்கம் வந்தது. இதையே சாக்காக வைத்து அவரது அஸிஸ்டண்ட்கள் தூபம் போட்டனர்... 'பார்த்தீங்களா?. பகலில் வேலைக்குப்போய்விட்டு மாலையில் மட்டும் நடிப்பது என்பது நாடகத்துக்கு சரியாக வரும். சினிமாவுக்கு சரிப்படுமா?. இவர் வரும் நேரம் பார்த்து மற்ற நடிகர்கள் வருவாங்களா?. வேண்டாம்ணே. இந்தப்படத்தை நாம் வழக்கப்படி முத்துராமனையே போட்டு எடுப்போம். அடுத்த படத்துக்குப் பார்க்கலாம்" என்றனர்.

ஸ்ரீதருக்கு மனம் ஒப்பவில்லை. 'எதுக்கும் மாலையில் அழைத்து, நம்ம ஷூட்டிங்குக்குத் தகுந்தபடி வேலையில் அட்ஜஸ்ட் பண்ண முடியுமா என்று கேட்போம்' என்றார். ஸ்ரீதரிடமிருந்து அழைப்பு என்றதும் 'ராஜா' நாலுகால் பாய்ச்சலில் வந்தார். ஸ்ரீதரின் கண்டிஷன்களைக்கேட்டதும், ஒருபக்கம் கிடைத்தற்கரிய வாய்ப்பை நழுவவிடத்தயக்கம், மறுபக்கம் அலுவலக வேலைக்கு இடையூறு ஆகுமோ என்ற பயம். நண்பர்களோடு யோசித்தார். நண்பர்கள் சூப்பர் ஐடியா கொடுத்தனர். இரண்டுமாதம் கழித்துதான் அவர் வருடாந்திர லீவுக்கு தகுதியாவார். ஆனால் மேலதிகாரிகளைக் கேட்டு முன்கூட்டியே அந்த லீவை எடுத்துவிடுவது, ஸ்ரீதரிடம் பவ்யமாகச்சொல்லி அந்த ஒருமாத லீவுக்குள் இவர் சம்மந்தப்பட்ட காட்சிகளனைத்தையும் எடுக்கச்செய்வது. ஒருசில சீன்கள் பாக்கியிருந்தால், ஜஸ்ட் அலுவலகத்தில் சில மணி நேர பெர்மிஷனில் வந்து நடித்து முடிப்பது என்று முடிவெடுத்து ஸ்ரீதரிடம் சொல்ல, சற்று தயங்கிய அவர், 'சரி..இப்போது லீவு எடுக்க வேண்டாம். நான் எல்லா ஏற்பாடுகளையும், மற்ற நடிகர் நடிகைகளையும் ரெடி பண்ணிட்டு சொல்றேன். அப்போ எடுத்தால் போதும்' என்று சொல்லிவிட்டார். பிரச்சினைக்கு பெரிய தீர்வு கிடைத்தது போலிருந்தது.

ராஜா, ஸ்ரீதரின் படத்தில் நடிக்கப்போகிறார், அதுவும் கதாநாயனாக என்று அவரது நாடக வட்டாரத்தில் செய்தி பரவியது. பலருக்கு பொறாமை. அதுவும் அலையாமல், தேடாமல் வலிய வரும் வாய்ப்பு என்றால் யாருக்குத்தான் பொறாமை வராது?.

கதாநாயகியாக அப்போது ஒன்றிரண்டு கன்னடப் படங்களில் நடித்திருந்த ஜெயலலிதாவை புக் பண்ணினார். அவரது தாயார் சந்தியா, சித்தி வித்யாவதியெல்லாம் ஏற்கெனவே ஸ்ரீதருக்குப் பரிச்சயமானவர்கள். அதனால் சுலபமாகப்போய்விட்டது. எப்படியும் நகைச்சுவைக்கு நாகேஷ் - சச்சுவைத்தான் போடுவார், அதை மாற்றமாட்டார் என்று நினைத்திருக்க, அவர்களுக்கும் பதிலாக மூர்த்தியையும் ஆஷாவையும், காதலி ரோலுக்கு நிர்மலாவையும் ஒப்பந்தம் செய்தார். எல்லாவற்றையும் ஏற்பாடு செய்துவிட்டு, 'நாளைமறுநாள் முதல் விடுமுறை எடுங்கள்' என்று சொல்ல ராஜாவுக்கு அதிர்ச்சி. அமெரிக்கன் கான்ஸலேட் நிர்வாகப்படி பத்து நாட்களுக்கு முன் லீவுக்கு அப்ளை பண்ண வேண்டும். இதைச் சொன்னதும் இதைச்சாக்காக வைத்து அவரைத் தவிர்க்க முயன்றனர். ஆனால் ஸ்ரீதர் விடவில்லை. 'ஏன் அவனைத்தள்ளி விடுவதிலேயே குறியா இருக்கீங்க?. நான் முடிவு பண்ணிட்டேன். அவன்தான் HERO. ராஜா லீவு எடுத்துக்கொண்டு வரும்வரை மற்றவர்களின் சீனை எடுப்போம்' என்று ஸ்ரீதர் பிடிவாதமாக சொல்லிவிட்டார்.

‘ராஜா’ என்ற பெயர் நாடகமேடைக்கு சரி. ஆனால் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகும்போது இன்னும் சற்று கவர்ச்சியான, வித்தியாசமான பெயர் வைக்கலாமே என்று யோசித்தபோது, 'வெங்கி' என்ற 'ராஜா' சொன்னார். 'சார், நான் முதன்முதலாக உங்கள் படத்தில் அறிமுகமாகிறேன். அது காலத்துக்கும் நினைவிருக்கிறாற்போல உங்கள் பெயரையும் சேர்த்து வையுங்கள்' என்று சொல்ல, உடனே ஸ்ரீதர் கோபுவைப்பார்த்து ‘கோபு, என்ன பெயர் வைக்கலாம்னு நீயே சொல்லு' என்றது கோபு சட்டென்று, 'உங்க பெயரில் துவங்குகிறாற்போல ‘ஸ்ரீகாந்த்'னு வச்சிடலாம்'னு சொல்ல அது எல்லோருக்கும் பிடித்துப் போனது. ஸ்ரீதரின் மோதிரக்கையில் குட்டுப்பட்டவராக திரையுலகில் நுழைந்தார் ஸ்ரீகாந்த்.
[/tscii:566b5bbe4b]

saradhaa_sn
12th December 2009, 12:59 PM
[tscii:f46d022133]"வெண்ணிற ஆடை"

காதலிக்க நேரமில்லை படத்தின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து தெம்படைந்த இயக்குனர் ஸ்ரீதர், தனது பரீட்சாத்த முயற்சியாக வெண்ணிற ஆடையைத் தயாரித்து இயக்கினார். மணம் முடித்து சில மணி நேரங்களிலேயே கணவனை விபத்தில் பறிகொடுத்ததால் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் ஷோபா (ஜெயலலிதா), அவரைக்குணப்படுத்த வரும் மனோதத்துவ டாக்டர் ஸ்ரீகாந்த், அவருடைய காதலி கீதா (நிர்மலா). ஷோபாவைக் குணப்படுத்தும்போது, அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக டாக்டர் மீது ஒருதலையாய் காதல் ஏற்பட, டாக்டருக்கு தர்ம சங்கடம். இதில் பெரிய பிரச்சினை ஷோபாவின் பெற்றோரும், அவளுடைய காதலுக்கு சப்போர்ட் செய்வதுதான். ஷோபாவின் மனதில் காதல் வளர்ந்துவரும் வேளையில், டாக்டர் இனிமேலும் தாமதித்தால் ஆபத்து என்று தனக்கும் கீதாவுக்குமான காதலைப் பற்றிச்சொல்ல, ஷோபாவுக்கு அதிர்ச்சி. இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக ஏமாற்றத்திலிருந்து மீண்டு வருவதோடு, டாக்டருக்கும் அவரது காதலி கீதாவுக்கும் தன்னுடைய முயற்சியிலேயே திருமண ஏற்பாடு செய்ததோடு, திருமணம் முடித்து தன்னைச் சந்திக்க வரும்போது, வெண்ணிற ஆடை அணிந்து விதவைக்கோலம் பூணுகிறாள். தன் மனநிலை தெளிந்து தான் விதவை என்று உணர்ந்து அந்தக்கோலத்தைப்பூண்டாளா, அல்லது தான் விரும்பிய தன் காதலன் வேறொரு பெண் கழுத்தில் தாலி கட்டியதால் விதவைக் கோலம் பூண்டாளா என்ற கேள்விக்குறியோடே படம் முடிகிறது.

முழுக்க முழுக்க புதுமுகங்களைப்போட்டது மக்களுக்கு சிறிது ஏமாற்றமளித்ததே தவிர, நடித்த புதுமுகங்கள் ஏமாற்றவில்லை. மிகச்சிறப்பாகச் செய்திருந்தனர். அதிலும் ஜெயலலிதா மிகப்பிரமாதமாக நடித்திருந்தார். முதல் தமிழ்ப்படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு அற்புதமான பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தியிருந்தார். முதலில் பைத்தியமாக அறிமுகமாகும் பாடலில் துடிப்பு, போகப்போக மனநிலை சரியாகி வரும்போது கூடவே சாந்தமும் படிப்படியாக அவர் மனதில் குடிகொள்கிறது. இறுதியில் ஒரு துறவி நிலைக்கு தன்னை மாற்றிக் கொள்ளும்போது நம் மனதை ரொம்பவே பாதிக்கிறார். அதிலும் கடைசியில் வெண்ணிற ஆடை அணிந்து விதவைக்கோலம் பூணுவதை விட, சரியாக மண்டபத்தில் ஸ்ரீகாந்த் - நிர்மலா திருமணம் நடக்கும் நேரம், வீட்டில் தன்னை மணப்பெண் கோலத்தில் அலங்கரித்துக்கொள்வது நம் மனதைப்பதற வைக்கும்.

அதுபோலவே ஸ்ரீகாந்தும், தான் ஏற்றிருந்த மனோதத்துவ டாக்டர் ரோலுக்கு கச்சிதமாகப்பொருந்தினார். அந்த ரோலுக்கு என்ன தேவையோ அதைக் கொடுத்திருந்தார். அலட்டிக்கொள்ளாத அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ஒருவேளை நாலு ரவுடிகளை இவருடன் மோதவிட்டு அவர்களுடன் சண்டையிடுவதாகவெல்லாம் காண்பிக்காததால் மக்களுக்குப் பிடிக்கவில்லையோ என்னவோ தெரியவில்லை. காதலி நிர்மலாவுடனான இரண்டு டூயட் காட்சிகளிலும் கூட அழகாக நடித்து மனதைக்கவர்ந்தார். ஒரே குறை, இவர் மனோதத்துவம் படித்தது ஜெயலலிதா என்ற ஒரே நோயாளியைக் குணப்படுத்துவதற்கு மட்டுமே என்பது போலக்காண்பித்தது, அந்தப்பாத்திரத்தை சற்று குறைவடையச்செய்துவிட்டது.

நிர்மலாவைப்பொறுத்தவரை, இது அவருடைய முதல் படம் என்பது காட்சிக்கு காட்சி தெரியும்வண்ணம் ரொம்ப அமெச்சூர்தனமாக நடித்திருந்தார். டைரக்டர் சொல்லிக்கொடுத்ததைச் செய்தால் போதும் என்ற லெவலோடு நின்றுவிட்டார் போலும். இட்லர் மீசையுடன் வரும் மூர்த்தியும் அவரது ஜோடியான ஆஷாவும் நகைச்சுவைக்கொடுக்க முயன்றிருந்தனர். எந்த அளவுக்கு வெற்றிகரமாகச்செய்தார்கள் என்பது தெளிவாக இல்லை.

படத்தை 75 சதவீதம் காப்பாற்றியது பாடல்கள்தான் என்றால் மிகையில்லை. 'படம் சுமாராக இருந்தாலும் பாடல்களுக்காகப் பார்க்கலாம்' என்பது அன்றைய பல பத்திரிகைகளின் விமர்சனமாக இருந்தது. கவியரசர் கண்ணதாசனும், மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தியும் (1965 கிட்டத்தட்ட இருவரும் பிரியும் நேரம் நெருங்கிய சமயம் அது) படத்தின் முதுகெலும்பாக நின்று தூக்கி நிறுத்தியிருந்தனர். அதற்கு உறுதுணையாக நின்ற வின்சென்ட் - பி.என்.சுந்தரத்தின் ஒளிப்பதிவு. இப்படத்தின் பாடல்கள் இன்றைக்கும் ஜீவனோடு திகழ்ந்து, இன்றைய தலைமுறையினரும் பல்வேறு இசைப்போட்டிகளில் பாடிவரும் அளவுக்கு பசுமையாக உள்ளன.

'நீ என்பதென்ன.. நான் என்பதென்ன' ஜெயலலிதாவின் அறிமுகப்பாடல், மனநிலை சரியில்லாத நிலையில் பாடுவதாக அமைந்தது. L.R.ஈஸ்வரி பாடியிருந்தார். ஜெயலலிதாவின் ஸ்டெப்கள் நன்றாக இருக்கும்.

'அல்லிப்பந்தல் கால்களெடுத்து ஆட்டம் ஆடி வா' (மூர்த்தி) ஆஷாவுக்காக ஈஸ்வரி பாடியது. ('மலரென்ற முகம் இன்று சிரிக்கட்டும்' பாடலை நினைவுபடுத்தும்).

'என்ன என்ன வார்த்தைகளோ... சின்ன விழிப் பார்வையிலே' சுசீலாவின் குரலில் அழகான மனதை வருடும் கம்போஸிங். ஸ்ரீகாந்த் பியானோ வாசிக்க, ஜெயலலிதா பாடும் இண்டோர் பாடல். குளோசப்பில் ஸ்ரீகாந்த் பியானோ வாசிப்பதாகக் காண்பிக்கப்படும் கைகள் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.யுடையவை என்று ஒரு பேச்சு உண்டு.

'சித்திரமே சொல்லடி... முத்தமிட்டால் என்னடி' பி.பி.எஸ்., எஸ்.ஜானகி குரல்களில் ஸ்ரீகாந்த் நிர்மலா முதல் டூயட் பாடல். பாடலில் பங்கோஸ் துள்ளி விளையாடும். ஸ்டுடியோ செட்டில் எடுக்கப்பட்ட டாப்கிளாஸ் பாடல்களில் ஒன்று.

'ஒருவன் காதலன்... ஒருத்தி காதலி' இதுவும் அதே ஜோடிக்கான டூயட்தான். ஊட்டி கார்டனில் படமாக்கப்பட்டிருந்தது.

'நீராடும் கண்கள் இங்கே... போராடும் நெஞ்சம் எங்கே' பி.சுசீலா பாடிய இப்பாடல் ஒரு புதிர். அதாவது, இப்பாடல் படத்தில் இருந்தது என்பார்கள் சிலர். இல்லை என்பார்கள் சிலர். (நான் பார்த்த பிரிண்டில் 'இல்லை'). பாடல் கேட்பதற்கு இனிமையோ இனிமை.

'கண்ணன் என்னும் மன்னன் பேரைச்சொல்லச் சொல்ல' மனநிலை தெளிந்தபின், சுய நினைவோடு ஜெயலலிதா பாடும் பாடல். சுசீலாவின் குரலில் பயங்கர HIT. நாற்பத்தைந்து வருடங்களூக்கு முன் கனவிலும் நினத்துப்பார்க்க முடியாத ஒரு கம்போஸிங். உண்மையில், மெல்லிசை மன்னரின் திறமைக்கும் சாதனைக்கும் உரித்தான அங்கீகாரத்தையும் கௌரவத்தையும் இந்த அரசோ, சமுதாயமோ, ரசிகர் கூட்டமோ அளித்திருக்கிறதா?. இல்லை... இல்லை... நிச்சயமாக இல்லை. இதுவரை ஒருமுறையேனும் தேசிய விருதையோ, குறைந்த பட்சம் ஒரு பத்மஸ்ரீ விருதையோ இந்திய அரசு கொடுக்கவில்லை. அவரது அபார திறமைக்கு அதிகபட்சமாக கிடைத்தது "வெறும்" கலைமாமணி....?. அதைக்கூட அவர் திருப்பியளித்துவிடலாம். தப்பேயில்லை.

'அம்மம்மா காற்று வந்து ஆடைதொட்டுப்பாடும்' சுசீலாவின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்று. அவர் உள்பட யாருமே இன்றைக்கும் பாடமுடியாத பாடல். அதிலும் அந்த "அம்மம்மா..........." என்ற துவக்கம் பள்ளத்தில் விழுந்து எழும் அழகு. இப்பாடலின் இடையிசையை கம்போஸ் செய்ய இனியொருவன் பிறந்து வரணும். (இந்தப்பாடலில் ஒளிப்பதிவும் துல்லியமாக இருக்கும். உதாரணம் சின்ன அருவியிலிருந்து விழும் தண்ணீரின் தெளிவு.)
இதுபோன்ற பாடல்களை எவனாவது ரீமிக்ஸ் செய்தால் அவனை கொலைக்குற்றத்தில் கைது செய்ய இ.பி.கோ.செக்ஷன்கள் அனுமதிக்க வேண்டும் என்று பாராளுமன்ற முற்றுகைப்போராட்டம் நடத்தலாம்.

ஒரு ‘ஆர்ட் பிலிம்’ ரேஞ்சுக்கு படம் ஸ்லோவாக நகரும். மூர்த்தி ஆஷா காமெடி ட்ராக் இருந்தும், படத்தை விறுவிறுப்பாகக்கொண்டு செல்ல உதவவில்லை. முழுக்க முழுக்க புதுமுகங்கள் என்ற முடிவு சரியான முறையில் ஒர்க் அவுட் ஆகவில்லை. போதாக்குறைக்கு, ஜெயலலிதா ஒரு பங்கு துக்கப்பட்டால், அவரது பெற்றோராக வரும் மேஜரும் ருக்மணியும் பத்துமடங்கு அழுது தீர்த்தனர். காதலிக்க நேரமில்லை என்ற படு ஜோவியலான, படு ஸ்பீடான படத்தைப் பார்த்த அனுபவத்தை நினைத்துக்கொண்டு தியேட்டருக்குப்போன ரசிகர்களை படம் ஏமாற்றியது. ரிபீட்டட் ஆடியன்ஸ் வராததால் தியேட்டர் வெறிச்சோடியது. ஸ்ரீதர் எதிர்பார்த்தது ஒன்று நடந்தது ஒன்றாகிப்போனது.


'வெண்ணிற ஆடை' தோல்வி பற்றி இயக்குனரும் தயாரிப்பாளருமான ஸ்ரீதர் சொன்னார்... "இருபது ஆண்டுகள் கழித்து தர வேண்டிய படத்தை முன்கூட்டியே கொடுத்தது என் தவறுதான்".
[/tscii:f46d022133]

saradhaa_sn
12th December 2009, 04:16 PM
[tscii:b61167d65c]'எதிர் நீச்சல்' கிட்டு மாமா.

ஸ்ரீகாந்த் முதல் படத்திலேயே கதாநாயகனாக அறிமுகமான போதிலும், அவருக்கு தொடர்ந்து கதாநாயகனாகவே நடிக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை. பெரும்பாலானவை சப்போர்ட்டிவ் ரோல்களே. அவையும் பலசமயம் நல்ல எஃபெக்டிவ் ரோல்களாக அமைந்தது உண்டு. அவற்றில் ஒன்றுதான் எதிர்நீச்சலில் நடித்த கிட்டுமாமா ரோல்.

எதிர்நீச்சல் படத்தின் கதை மிகப்பெரிது. அந்த வீட்டில் வந்து ஒண்டியிருந்துகொண்டே கல்லூரியில் படிக்கும் மாது என்ற பரிதாபமான ஜீவனை, எப்படி எல்லோரும் தங்கள் சுயநலத்துக்குப் பந்தாடுகிறார்கள். ஒரு ரூபாய் பெறுமான சோற்றைப்போட்டுவிட்டு, பதிலுக்கு அவனிடமிருந்து பத்துரூபாய்க்கான வேலையை எப்படி வாங்குவது என்ற வித்தையை அனைவரும் அறிந்துள்ளனர். இதையும் விட்டால் தனக்குப் போக்கிடமில்லையே என்று நினைக்கும் அவன், எல்லாவற்றையும் சகிக்கிறான். மாது (நாகேஷ்) ஒரு பணக்காரரின் மகன் என்று நாயர் (முத்துராமன்) கிளப்பிவிடும் புரளியை நம்பி, திடீரென ஒவ்வொருவரும் அவன் மீது காட்டும் அக்கறையென்ன, அது பொய்யென்று தெரிந்ததும், தங்கள் சுயரூபத்தைக்காட்டும் பச்சோந்தித்தனம் என்ன?. கே.பி.யின் சிந்தனையே தனிதான்.

படத்தின் முக்கிய பாத்திரம் நாகேஷ் நடித்த 'மாடிப்படி மாது' பாத்திரமாக இருந்தாலும், அதற்கு துணை நின்ற அனைவரது கதாபாத்திரங்களுமே சிறப்புப் பெற்றன. படத்தின் கதையமைப்பு சென்னை திருவல்லிக்கேணி, மைலாப்பூர் பகுதிகளில் ஒரே வீட்டில் பல குடும்பங்களை உள்ளடக்கிய ஒண்டுக்குடித்தன வாழ்க்கையை அப்படியே பிரதிபலித்தது. அந்தக்குடித்தனக்காரர்களில் ஒன்றுதான் 'பட்டுமாமி-கிட்டுமாமா' தம்பதியினர் மற்றும் அவர்களின் கைக்குழந்தை. மடிசார் கட்டிய பட்டுமாமியாக சௌகார் ஜானகியும், பஞ்சகச்சம் வேஷ்டி, முழுக்கை சட்டை, துண்டு, மீசையில்லாத முகம் இவற்றுடன் ஸ்ரீகாந்த். மூச்சுக்கு மூச்சு 'ஏன்னா கேட்டேளா' என்றும் 'அடியே பட்டூ... நோக்கு விஷயம் தெரியுமோன்னோ?' என்றும் வளைய வ்ரும் 'டிப்பிக்கல்' மைலாப்பூர் பிராமணக்குடும்பம். இருவரும் ஜாடிக்கேத்த மூடி. இப்பாத்திரத்தில் நடிக்க, ஸ்ரீகாந்துக்கு நிச்சயம் நாடகமேடை அனுபவம் கைகொடுத்திருக்க வேண்டும். (இந்த படமும், நாடகத்திலிருந்து திரை வடிவம் பெற்றதுதான்). நாடகம் திரைப்படம் இரண்டையுமே செதுக்கியவர் இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர்தான்.

இந்ததம்பதியினரின் பாடல், 1968-ன் சூப்பர் பாடல்களில் ஒன்று...

'ஏன்னா.. நீங்க சமத்தா இல்லை அசடா?
சமத்தாயிருந்தா கொடுப்பேளாம் அசடாயிருந்தா தடுப்பேளாம்.

ஏண்டி புதுசா கேக்கிறே என்னைப்பாத்து?

அடுத்தாத்து அம்புஜத்தைப்பாத்தேளா -அவ
ஆத்துக்காரன் கொஞ்சறத கேட்டேளா
அடிச்சாலும் புடிச்சாலும் அவ ஒண்ணா சேர்ந்துக்கறா
அடிச்சதுக்கொணு புடிச்சதுக்கொண்ணு
பொடவையே வாங்கிக்கறா பட்டுப்பொடவையே வாங்கிக்கறா.

அடுத்தாத்து சங்கதியெல்லாம் நமக்கேண்டி - அவன்
சம்பளம் பாதி கிம்பளம் பாதி வாங்கறாண்டி
மூன்றெழுத்தை மூணுஷோவும் பார்த்தது நீதாண்டி
சினிமாவுக்கே சம்பளம் போனா
பொடவைக்கு ஏதுடி, பட்டூ பொடவைக்கு ஏதுடி’

என்ற பாடல் ஒலிக்காத நாளே இல்லையெனலாம்.

ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் கொண்ட இப்படத்திலிருந்து (இது ஸ்ரீகாந்த் திரியென்பதால்) அவர் ஏற்றிருந்த 'கிட்டுமாமா' ரோலைமட்டும் சொல்லியிருக்கிறேன்.
[/tscii:b61167d65c]

pammalar
13th December 2009, 08:09 PM
தேசிய நடிகர் ஸ்ரீகாந்த் அவர்களுக்கு, தேசிய திலகத்தின் பக்தையான சகோதரி சாரதா அவர்கள் ஆரம்பித்திருக்கும் இத்திரி பற்பல வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துக்கள் !

சாரதா அவர்களின் இந்த சீரிய முயற்சிக்கு எமது பாராட்டுக்கள், நன்றிகள் !!

அன்புடன்,
பம்மலார்.

groucho070
14th December 2009, 08:40 AM
I won't call Srikanth underrated or underappreciated. He was there, part of the history, and for NT fans like me, he was the reason why NT's characters went ballistic in many notable films :lol:

Anyway...I recall my aunt (our family film historian) saying that back in the days, Vennira Aadai was noted as "adult" film and got the youngsters all excited. But then, when they saw the actual film, they were very disappointed. Similar reactions there?

As usual, my :clap: for your efforts ma'am. :D


Edit. How do you spell his name actually? :?

saradhaa_sn
14th December 2009, 05:09 PM
பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி பம்மலார்.


I won't call Srikanth underrated or underappreciated. He was there, part of the history, and for NT fans like me, he was the reason why NT's characters went ballistic in many notable films :lol:
அந்த வகையில் சட்டென்று நினைவுக்கு வருவது 'தங்கப்பதக்கம்'.


Anyway...I recall my aunt (our family film historian) saying that back in the days, Vennira Aadai was noted as "adult" film and got the youngsters all excited. But then, when they saw the actual film, they were very disappointed. Similar reactions there?
Rakesh....
நீங்கள் சொன்னது போல வெண்ணிற ஆடை படத்துக்கு சென்ஸாரில் 'ஏ' சர்டிபிகேட் வழங்கப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது உண்மை. அதற்குக்காரணம், இப்போது போல 'ஏ' சர்டிபிகேட்டெல்லாம் அன்றைக்கு தமிழ்த்திரையுலகம் கேள்விப்படாத ஒன்று (இதற்கு பல ஆண்டுகளுக்கு முன் ஒரேயொரு படத்துக்கு வழங்கப் பட்டிருந்ததாம்). இந்திய அளவிலேயே 'ஏ'சர்டிபிகேட் என்பது ரொம்பவே அபூர்வம்.

'வெண்ணிற ஆடை' படத்துக்கு 'ஏ' வழங்கப்பட்டதும் ஆரம்பத்தில் இருந்த பரபரப்பு, 'எதையோ' எதிர்பார்த்து தியேட்டருக்குப்படையெடுத்த கூட்டம், எதிர்பார்த்த மாதிரி இல்லையென்றதும் புஸ்வாணமாய் அடங்கிப்போனது.

சென்னை மவுண்ட்ரோடு ஏரியாவில், தனது ஆஸ்தான தியேட்டரான காஸினோவில் 'வேறு' ஒரு படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கவே, வெண்ணிற ஆடையை ஸ்ரீதர் அப்போதைய புதிய தியேட்டரான ஆனந்த் தியேட்டரில் திரையிட்டார். ஆனந்த தியேட்டர் உரிமையாளர் ஜி.உமாபதி, மனதில் பட்டதை பளிச்சென்று சொல்லி விடுவார். முதல்நாள் மாலைக்காட்சியில் ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸைப் பார்க்க வந்த சித்ராலயா கோபுவிடம், 'யப்பா, ஸ்ரீதரிடம் அடுத்த படமாவது நல்லதா எடுக்கச்சொல்லி போய்ச்சொல்லு' என்றாராம். கோபுவுக்கு ஷாக். என்ன முதல் நாளே இப்படிச்சொல்றாரே என்று. ஆனால் அவர் சொன்னதுபோலவே ஆனது. வெண்ணிற ஆடை. தரத்தில் நல்ல படம்தான், ஆனால் தியேட்டர் அதிபர்கள் கல்லாவில்தானே கவனமாக இருப்பார்கள்.

(ஜி.உமாபதி அன்றைய நாளில் 'தியேட்டர் மன்னன்' என்று பெயர் பெற்றவர். இன்றைக்கு 'அபிராமி ராமநாதன்' போல. தனது தியேட்டரில் ஒரு டிக்கட் கூட'பிளாக்'கில் போக அனுமதிக்க மாட்டார். தியேட்டர் வாசலிலேயே, நான்கு பக்கமும் பார்க்கக்கூடிய விதமாக கண்ணாடி அறை அமைத்து, ஸ்க்ரீன் உள்ளே இருந்து கண்காணிப்பார். ஆனந்த், லிட்டில் ஆனந்த மட்டுமல்ல, புகழ்பெற்ற சாந்தி தியேட்டரை உருவாக்கியவரும் அவர்தான்).

Irene Hastings
14th December 2009, 05:19 PM
சாரதா மேடம்

நீங்கள் செய்யும் பணி மகத்தானது. வருங்காலம் ஷ்ரிகாந்த் போன்ற நல்ல குணசித்திர நடிகர் இருந்தார் என்பதை அறிய வேண்டும். ஆதற்கு உங்களின் பதிவுகள் ஆவன செய்யும் என்பது திண்ணம்.

நான் உங்களிடம் மிகவும் எதிர்பார்ப்பது :

தங்கப்பதக்கம்
ராஜ நாகம்
சதுரங்கம்
சில நேரங்களில் சில மனிதர்கள்

ஆவலுடன் எதிர்பார்கிறேன்

saradhaa_sn
14th December 2009, 06:24 PM
வருங்காலம் ஸ்ரீகாந்த் போன்ற நல்ல குணசித்திர நடிகர் இருந்தார் என்பதை அறிய வேண்டும்.
அதற்கு அடையாளமாகத்தான் அவர் நடித்த காலத்தால் அழையாத பல படங்களை அடையாளமாக விட்டு வைத்திருகிறாரே

நான் உங்களிடம் மிகவும் எதிர்பார்ப்பது :

தங்கப்பதக்கம்
ராஜ நாகம்
சதுரங்கம்
சில நேரங்களில் சில மனிதர்கள்

ஆவலுடன் எதிர்பார்கிறேன்
நன்றி.....

நீங்கள் குறிப்பிட்ட படங்களில் 'சதுரங்கம்' பார்த்ததில்லை. மற்றவை பார்த்திருக்கிறேன். இவையல்லாமல் மேலும் ஏராளமான படங்களில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அவற்றில் சட்டென நினைவுக்கு வந்த சில...

கோமாதா என் குலமாதா
தெய்வீக ராகங்கள்
காசியாத்திரை
இவர்கள் வித்தியாசமானவர்கள்
........போன்றவை.

இவைபோக தங்கப்பதக்கம், ராஜபார்ட் ரங்கதுரை, அவள் போன்ற பல்வேறு படங்களில் கதையின் முக்கியமான திருப்புமுனை பாத்திரங்களில் நடித்துள்ளார். ஒரு காலகட்டத்தில் ஸ்ரீகாந்த் இல்லாத நடிகர்திலகத்தின் படங்களே இல்லையெனும் அளவுக்கு அனைத்து படங்களிலும் நடித்தார். அதுபோல மக்கள் கலைஞர் ஜெய்சங்கரின் ஏராளமான படங்களிலும் முக்கிய பாத்திரங்களில் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார். அவற்றில் பெரும்பாலானவற்றை இங்கே பதிப்பிக்க வேண்டும் என்பதே என் ஆவல்.

அவரைப்பற்றி அறிந்த எல்லோரும் தங்கள் எண்ணங்களை இங்கே பதிப்பிக்க வேண்டும்.

saradhaa_sn
16th December 2009, 04:12 PM
காங்கிரஸ் பேரியக்கத்தில் ஸ்ரீகாந்த்

1969-வாக்கில் காங்கிரஸ் பேரியக்கம் பெருந்தலைவர் காமராஜ் தலைமையில் ஸ்தாபன காங்கிரஸ் என்றும் இந்திராகாந்தி தலைமையில் இந்திரா காங்கிரஸ் என்றும் பிளவுபட்டு நின்றபோது, தமிழகத்தைப்பொறுத்தவரை காங்கிரஸ் என்றால் அது பெருந்தலைவரின் ஸ்தாபன காங்கிரஸ்தான் என்றாகிப் போனது. வடமாநிலங்களில் இந்திரா காங்கிரஸ் வலுவாக இருந்தபோதிலும் தமிழகத்தில் அது ஒரு 'லெட்டர்பேட்' கட்சி என்ற அளவில்தான் இருந்தது. இ.காங்கிரஸுக்கு தொண்டர்கள் பலமில்லை.

தமிழகத்தைப்பொறுத்தவரை திரைப்பட கலைஞர்கள் பெரும்பாலும் திராவிட இயக்கங்களில் பங்கெடுத்த அளவுக்கு காங்கிரஸில் பங்கேற்கவில்லை. இன்னும் பலர் எந்த அரசியல் இயக்கத்தின்பக்கமும் சாராமல் தானுண்டு தங்கள் சினிமா உண்டு என்றிருந்தனர். முத்துராமன், சிவகுமார், ஏ.வி.எம்.ராஜன் போன்ற பெரும்பாலோர் இந்த மூன்றாம் வகையைச்சார்ந்தவர்கள். அறுபதுகளில் துவங்கி காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஒரே கலைஞராக நடிகர்திலகம் மட்டுமே விளங்கினார். இந்நிலையில் ஸ்தாபன காங்கிரஸ் என்ற பெயரில் இயக்கம் பிளவுண்டபோது நடிகர்திலகமும் பெருந்தலைவர் பக்கம் துணை நிற்க, அவரோடு தோளோடு தோள் நின்று ஸ்தாபன காங்கிரஸ்காரர்களாக தங்களை வெளிப்படுத்திக்கொண்டவர்கள் மூவர். அவர்கள் சசிகுமார், ஸ்ரீகாந்த், பிரேம் ஆனந்த். இவர்களில் பிரேம் ஆனந்த் கட்சியில் இருக்கிறார் என்பதற்காகவே நடிகர்திலகம் தன் படங்களில் தொடர்ந்து வாய்ப்புக்கொடுத்தார்.

இவர்களில் சசிகுமார், இந்திய விமானப்படையில் பணியாற்றியவராதலால் 'கேப்டன் சசிகுமார்' என்ற பெயரும் உண்டு. (இதே போல 'நீலமலைத்திருடன்' படத்தில் நடித்த ரஞ்சன், விமான பைலட்டாகப் பணியாற்றியதால் அவருக்கும் கேப்டன் ரஞ்சன் என்ற பெயர் உண்டு. இவர்களெல்லாம் 'ஒரிஜினல் கேப்டன்கள்'). சசிகுமார், இறுதிமூச்சுவரை பெருந்தலைவரின் தொண்டனாகவே இருந்து மறைந்தார். தீ விபத்தில் சிக்கிய தன் மனைவி சசிகலாவைக் காப்பாற்ற போராடியதில் இருவருமே உயிரிழந்தனர். பலத்த தீக்காயங்களுடன் மூன்று நாட்கள் போராடியபோது, வாழை இலையில் கிடத்தப்பட்டு, நடிகை கே.ஆர்.விஜயாவின் செலவில் ஒரே அறையில் ஆறு ஏர்-கண்டிஷன்கள் பொறுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டும் பலனின்றி அடுத்தடுத்து இருவரும் உயிரிழந்தனர். அந்நேரம் சின்னஞ்சிறுவனாக இருந்த அவர்களின் ஒரே மகன் விஜயசாரதி அப்போதைய நடிகர் சங்கத்தலைவராக இருந்த நடிகர்திலகம், செயலாளர் மேஜர், பொருளாளர் வி.கே.ஆர். ஆகியோரின் பராமரிப்பில் வளர்க்கப்பட்டார். (விஜயசாரதி இப்போது தொலைக்காட்சித் துறையில் நடிகர் மற்றும் அறிவிப்பாளராக புகழ்பெற்று விளங்குகிறார்).

இவர்களோடு, ஸ்தாபன காங்கிரஸ் இயக்கத்தில் பெருந்தலைவரின் தொண்டனாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டு, மேடைப்பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தவர்தான் ஸ்ரீகாந்த். 1973-வாக்கில் தமிழ்நாட்டில் கடும் விலைவாசி உயர்வு ஆட்கொண்டபோது, பெருந்தலைவரின் ஆணைப்படி ஸ்தாபன காங்கிரஸ் தொண்டர்களும் தலைவர்களும் விலைவாசி உயர்வை எதிர்த்து சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தினமும் காலை சென்னை சத்தியமூர்த்தி பவனிலிருந்து போராட்ட ஊர்வலம் கிளம்பி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி கைதாவார்கள். தினமும் ஒவ்வொரு ஸ்தாபன காங்கிரஸ் தலைவர்கள் தலைமையில் ஊர்வலம் புறப்பட, தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு கைதாகினர். அப்படி நான்காம் நாள் தலைவர்களோடு தேசிய நடிகர் ஸ்ரீகாந்த் காங்கிரஸ் கொடிபிடித்து ஊர்வலம் போய் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். ஒவ்வொரு நாளும் ஊர்வலத்தைக்காண வழியெங்கும் மக்கள் பெருந்திரளாக நின்று வாழ்த்தினர். அதிலும் ஸ்ரீகாந்த் கலந்துகொண்ட அன்றைக்கு கடும் கூட்டம்.

ஏழாம் நாள் திங்களன்று பெருந்தலைவர் காமராஜரே ஊர்வலத்தை தலைமையேற்று நடத்தப்போகிறார் என்ற செய்தியை அறிந்த அன்றைய கலைஞர் அரசு, முதல்நாள் மாலையே அதுவரை கைது செய்திருந்த அனைவரையும் விடுதலை செய்தது. இருந்தபோதிலும் பெருந்தலைவர் காமராஜ் திட்டமிட்டபடி மறுநாள் போராட்டத்தில் கலந்துகொண்டார். அன்றைக்கு யாரும் கைது செய்யப்படவில்லை. (கலைஞர்தான் நரியை நனையாமல் குளிப்பாட்டுபவராச்சே. தன் ராஜதந்திரத்தைக் கைக்கொண்டார்). ஆனாலும் பெருந்தலைவர் விடவில்லை. "என் நண்பர் கருணாநிதி என்னை கைது செய்யாமல் விட்டது எனக்கு மகிழ்ச்சியல்ல. விலைவாசியைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை எடுத்தால்தான் மகிழ்ச்சி" என்று அறிக்கை விட்டார்.

பெருந்தலைவரின் மறைவு வரை ஸ்தாபன காங்கிரஸில் இருந்த ஸ்ரீகாந்த், அவரது மறைவுக்குப்பின்னும் அங்கேயே தொடர்ந்தார். நடிகர்திலகம் போன்றோர் இந்திரா காங்கிரஸில் சேர முடிவெடுத்தபோதும் கூட அங்கே செல்லாமல், பா.ராமச்சந்திரன் தலைமையில் ஸ்தாபன காங்கிரஸிலேயே இருந்து வந்தவர், 1977-ல் ஸ்தாபன காங்கிரஸ், ஜனதா கட்சியாக மாறியபோதும் அங்கேயே இருந்து, 1977 பாராளுமன்ற தேர்தலில் மத்திய சென்னையில் பா.ராமச்சந்திரனை ஆதரித்தும், 1977 சட்டமன்ற தேர்தலில் ஜனதா கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும் பிரச்சாரம் செய்தார்.

இதனிடையே காந்தி மண்டபத்தின் அருகே பெருந்தலைவரின் நினைவிடத்தின் மேலே வைக்கப்படுவதாக இருந்த பெரிய கைராட்டை, எமர்ஜென்ஸி காலத்தின்போது அகற்றப்பட்டது. கட்டிடம் வெறுமனே மொட்டையாகக் காட்சியளித்தது. அப்போது மீண்டும் கைராட்டையை அவரது நினைவிடத்தில் வைக்க வேண்டும் என்று கோரி கவர்னர் மாளிகைக்குச் சென்று மனுக்கொடுத்த ஸ்தாபன காங்கிரஸ் தலைவர்களோடு ஸ்ரீகாந்தும் சென்றிருந்தார். மத்தியில் ஜனதாகட்சி ஆட்சியமைத்தபின்னர் 'கைராட்டை' மீண்டும் பெருந்தலைவர் நினைவிடத்தில் இடம் பெற்றது. பின்னர் ஜனதா கட்சி உடைந்து சிதறுண்டபின், ஸ்ரீகாந்தும் அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொண்டார்.

பெருந்தலைவர் மறைந்த பின் நடிகர்திலகம் எடுத்த அரசியல் முடிவுக்காக அவரை ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்ததால், நடிகர்திலகத்தின் படங்களில் இடம்பெறும் வாய்ப்புக்கள் குறையத் தொடங்கின. (அப்போது நடிகர்திலகம் ஸ்தாபன காங்கிரஸிலேயே தொடரவேண்டும் என்பதே ரசிகர்களில் பெரும்பாலோரது எதிர்பார்ப்பாகவும் இருந்தது). ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட படங்களில் மட்டுமே ஸ்ரீகாந்த் இருந்தார். ஒருகாலத்தில் ஸ்ரீகாந்த் இல்லாத நடிகர்திலகத்தின் படங்களே இல்லை என்றிருந்த நிலை மாறத்தொடங்கியது. இந்நேரத்தில் விஜயகுமார், ஜெய்கணேஷ் போன்றோர் நடிகர்திலகத்தின் படங்களில் துணைப்பாத்திரங்களில் இடம்பெறத்துவங்கவே, சிவாஜி படங்களில் ஸ்ரீகாந்த் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டார். (அதே சமயம் நடிகர்திலகத்தைப்பற்றி ஸ்ரீகாந்தை விட பல மடங்கு கடுமையாக விமர்சனம் செய்திருந்த எம்.ஜி.ஆர்.பக்தரான தேங்காய் சீனிவாசன், சிவாஜி படங்களில் தொடர்ந்து வாய்ப்புக்கள் பெறத்தொடங்கினார்).

saradhaa_sn
18th December 2009, 01:53 PM
இளைய தலைமுறை

(ஸ்ரீகாந்த் போர்ஷன் மட்டும்)

'ராகிங்' என்பது புதிதாக வரும் மாணவர்களுக்கு மட்டுமல்ல, புதிதாக வேலையில் சேரும் வார்டனுக்கும்தான், என்பதாக, முதல் நாளில் மாணவர்கள் செய்யும் ராகிங்கும் அதை வார்டன் சம்பத் (நடிகர் திலகம்) முறியடிப்பதும் சுவையான காட்சிகள். மாணவர்களாக வருபவர்களில் ஸ்ரீகாந்த், விஜயகுமார், ஜூனியர் பாலையா, பிரேம் ஆனந்த், ஜெயச்சந்திரன், ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்கள் அனைவரும் வார்டனை, (அவர் விதிக்கும் கட்டுப்பாடுகள் தங்களுக்கு அடக்குமுறைகள் போல தோன்றுவதால்) தங்கள் எதிரிகளாக நினைத்து வெறுக்க, அவர்கள ஒவ்வொருவரையும் வார்டன் தன்னுடைய வழிக்கு கொண்டு வருவது ரொம்ப சுவாரஸ்யமான விஷயம்.

ஒருகட்டத்தில் வார்டனை பழிவாங்குவதற்காக, தங்களுடன் எப்போதும் சேராமல் இருக்கும், குருக்கள் குடும்பத்து மாணவனுக்கு ஸ்ரீகாந்த் வலுக்கட்டாயமாக பெண் வேடம் போட்டு நள்ளிரவில் வார்டன் மேல் தள்ளிவிட்டு, அதை போட்டோ எடுத்து நோட்டீஸ் போர்டில் அம்பலப்படுத்த, அவமானம் தாங்காமல் அந்த மாணவன் தற்கொலை செய்து கொள்வது கொடூரம்.

ஒவ்வொரு மாணவனும் வார்டனால் திருத்தப்பட்டு, அவரது தூய உள்ளம் கண்டு அவர் பக்கம் வந்துசேர, ஸ்ரீகாந்த் மட்டும் கடைசி வரை திருந்தாத வில்லனாகவே இருந்து விடுவார். கிளைமாக்ஸ் காட்சியில் வார்டன் மீது திராவகம் நிரப்பிய பல்பை வீச, அதை அவர் தாம்பாளத்தால் தட்டி விட, திராவகம் ஸ்ரீகாந்த் மீதே விழுந்து அவரைப்பழி வாங்கி விடும் கட்டம் நல்ல முடிவு.

saradhaa_sn
18th December 2009, 02:10 PM
நியூ-வேவ் படமாகப் பேசப்பட்ட

'அவள்'

எழுபதுகளில் இந்திய திரையுலகைக் கலக்கிய நியூவேவ் இந்திப்படம் 'தோரகா'. ராம்தயாள் தயாரித்த அப்படம் இளைஞர்களிடையே, குறிப்பாக கல்லூரி மாணவ மாணவிகளிடையே பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டது. அதன் கதை என்று பார்த்தால் மிகவும் ஆபாசமான, சர்ச்சைக்குரிய ஒன்று. மாற்றான் மனைவியை, அதுவும் தன் நண்பனின் மனைவியையே திட்டம்போட்டு குறி வைத்து சூறையாடும், மிக மோசமான கலாச்சார சீரழிவு கொண்ட கதை. 'கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்' என்று முத்திரைகுத்தப்பட்டு வெளியான அந்தப்படம், இளைஞர்களின் இலக்காக மாறியதில் வியப்பில்லை. அந்தப்படத்தில் நடித்திருந்த நடிகை ராதா சலுஜாவும், நடிகர் சத்ருக்கன் சின்காவும் ஓவர்நைட்டில் பிரபலமாயினர்.

இந்தியில் பரபரப்பாகப் பேசப்பட்ட அந்தப்படத்தை தமிழில் சுந்தர்லால் நகாதா தனது விஜயலக்ஷ்மி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்தார். (ஏ.பி.நாகராஜனின் விஜயலக்ஷ்மி பிக்சர்ஸ் அல்ல). சர்ச்சைக்குரிய கதாநாயகி ரோலில் நடிக்க அப்போதிருந்த லட்சுமி, உஷா நந்தினி போன்ற பிரபல நடிகைகள் பலரை அணுகியபோது, மறுத்து ஓடினர். பிரமீளா, ஜெயசித்ரா, ஜெயசுதா, ஒய்.விஜயா போன்றோர் அப்போது அறிமுகமாகியிருக்க வில்லை. (இப்போதைக்கு என்றால் அந்த ரோலில் நடிக்க 'நான், நீ' என்று போட்டிபோட்டிருப்பார்கள்). கடைசியாக வெண்ணிற ஆடை நிர்மலாவை அணுகி, அந்தப்படத்தில் நடித்தால் அபார புகழ்பெற்று அவரது மார்க்கெட் மேலும் உய்ர வாய்ப்புள்ளது என்று தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட, அப்படியானால் அப்படத்தில் நடிக்க தனக்கு ஐம்பதாயிரம் ரூபாய் (???) தர வேண்டும் என்று டிமாண்ட் வைத்தார். தயாரிப்பாளருக்கு ஆச்சரியம். ஏனென்றால் அதுவரை ஐம்பதாயிரத்துக்கு மேல் சம்பளம் பெற்ற இரண்டே நடிகைகள் கே.ஆர்.விஜயாவும், ஜெயலலிதாவும்தான். (நந்தனார் படத்தில் நடிக்க கே.பி.சுந்தராம்பாள் ரூ. ஒரு லட்சம் வாங்கியதாக தகவல் உண்டு). இருப்பினும் அந்த இன்னஸண்ட் பாத்திரத்துக்கேற்ற அழகான நடிகையாக நிர்மலா கிடைத்ததில் திருப்தியடைந்த தயாரிப்பாளர் அவரையே புக் பண்ணினார்.

கீதா (வெ.ஆ.நிர்மலா) கல்லூரி மாணவி. டி.கே.பகவதியின் (இவருடைய பாத்திரப் பெயர் நினைவில்லை) மகள். எழுத்தாளன் சந்திரநாத் என்பவரைக் (சசிகுமார்) காதலிக்கிறாள். இதையறியாத அவளுடைய தந்தை பெரிய பணக்காரனான பிரகாஷுக்கு (ஏ.வி.எம்.ராஜன்) மணமுடிக்க ஏற்பாடு செய்கிறார். ஆனால் கீதா, சந்திரநாத்தைக் காதலிப்பதை அறிந்த பிரகாஷ், ஒதுங்கிப்போகிறான். பிரகாஷுக்கும் சந்திரநாத்துக்கும் ஒரு நண்பன் பெயர் சதானந்தம் (ஸ்ரீகாந்த்). பெயருக்கேற்றாற்போல சகல தீய பழக்கங்களுடன் 'சதா ஆனந்தமாக' இருப்பவன். அவனுக்கு திருமணம், சம்பிரதாயம் இவற்றிலெல்லாம் நம்பிக்கையில்லாதவன். எத்தனை பெண்களுடன் உல்லாசமாக இருக்க முடியுமோ அப்படியிருப்பவன். அவனுக்கு நண்பனின் காதலி கீதாவின் மீது ஒரு கண்.

இந்நிலையில் தன் மகள், அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லாத ஏழை எழுத்தாளனைக் காதலிப்பதையறிந்து, காதலுக்கு தடை போடுகிறார். மகள் கேட்கவில்லை. வீட்டைவிட்டு வெளியேறி காதலனை மணந்து தனிவீட்டில் இருக்கிறாள். கீதாவை அடைவதற்காக சமயம் பார்த்திருக்கும் சதானந்தம் முதலில் சந்திரநாத்தை குடிப்பழக்கத்துக்கு ஆளாக்கி, அதற்கே அடிமையாக்குகிறான். கீதாவை அடைவதற்காக, நண்பனுக்கு கார் வசதியெல்லாம் செய்துகொடுக்கிறான். தன் மனைவியையும் குடிக்க வற்புறுத்தும் சந்திரநாத், அவள் மறுக்கவே காரைவிட்டு வழியில் இறக்கிவிட்டுப்போய்விடுகிறான். அவள் தனித்து விடப்பட்டதுமே, அவளைச்சூறையாடவும், அவளது வாழ்க்கையை சீரழிக்கவும் ஒரு கும்பல் முயற்சிக்க, இவர்கள் கையில் சிக்கி சீரழிவதைவிட கணவன் பேச்சைக்கேட்டு அவனுடன் இருப்பதுமேல் என்று முடிவெடுத்து அவனிடம் போய், அவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஆடுகிறாள். குடிப்பழக்கத்தை மேற்கொண்டு அதற்கு அடிமையும் ஆகிறாள். சதானந்தத்திடமும் சகஜமாகபழகுகிறாள்.

சதானந்தம் எதிர்நோக்கியிருந்த அந்த சந்தர்ப்பமும் வருகிறது. கீதாவின் பிறந்த நாள் விழாவில் சந்திரநாத்தையும் கீதாவையும் மதுவில் மூழ்கடித்து, கீதாவின் படுக்கையறையில் அவளை சீரழித்துவிடுகிறான். காலையில் 'குமார்னிங்' என்ற குரலுடன் தன் மீது சதானந்தத்தின் கைவிழ, திடுக்கிட்டு எழுகிறாள். பக்கத்தில் படுத்திருக்கும் சதானந்தத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்து ஓடிப்போய்ப்பார்க்க, கணவன் சந்திரநாத் கீழே கூடத்தில் போதையுடன் சோபாவில் படுத்திருப்பதைப் பார்த்து தான் சதானந்தத்தால் சீரழிக்கப்ப்டுவிட்ட நிதர்சனத்தை அறிகிறாள். என்ன செய்வதென்று புரியாத நிலை. கணவனிடம் அவனது நண்பன் சதானந்தத்தின் நம்பிக்கை துரோகம் பற்றி அவள் சொல்ல, அவனோ அதை மிகவும் லைட்டாக எடுத்துக்கொள்கிறான். மீண்டும் வற்புறுத்தவே அவள் மீதே சந்தேகப்படுகிறான். கீதா முடிவெடுக்கிறாள். இந்தகேவலத்துக்குப்பின்னும் அந்த அயோக்கியனை உயிரோடு விடுவதில் அர்த்தமில்லை. எனவே அவனைக்கொல்வதற்காக, பல ஆண்டுகளுக்குப்பின் தந்தையின் வீட்டுக்குப்போகும் அவள், அப்பாவுக்குத்தெரியாமல் அவரது துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வருகிறாள்.

நண்பன் வீட்டிலில்லாத நேரம் மீண்டும் சதானந்தம் கீதாவைச்சூறையாட வரும்போது அவனிடம் போராடும் அவள், தான் பீரோவில் ஒளித்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அவனைக் குறிவைக்கிறாள். அவன் அதிர்ச்சியடைகிறான். அவளுக்கு தலைசுற்றுகிறது. மயங்கிவிழப்போகும் நேரம், குளோசப்பில் துப்பாக்கி வெடிக்க, நெஞ்சைப்பிடித்துக்கொண்டே கீழே விழும் சதானந்தம் உயிரை விடுகிறான்.

கோர்ட்டில் கேஸ் நடக்கிறது. தான் நிரபராதி என்று அவள் வாதாடவில்லை. ஆனால் அதே நேரம் 'யுவர் ஆனர், சதானந்தத்தைச் சுட்டது நான்தான்' என்ற குரல் கேட்கிறது. கோர்ட் மொத்தமும் திரும்பிப்பார்க்க வந்தவன் பிரகாஷ். நடந்த சம்பவத்தை அவன் சொல்லும்போது ப்ளாஷ் பேக், கீதா கையில் துப்பாக்கியுடன் மயங்கிவிழப்போகும் நேரம், ஒரு கைவந்து அவள் கையைப்பிடித்து துப்பாக்கியை வாங்குகிறது. கேமரா அப்படியே உயர வந்தவன் பிரகாஷ். குறி தவறாமல் சதானந்தத்தை சுட்டுத்தள்ளுகிறான். ப்ளாஷ்பேக் முடிய, தான் சுட்ட துப்பாக்கியையும் பிரகாஷ் கோர்ட்டில் ஒப்படைக்க, கீதா விடுதலை செய்யப்படுகிறாள். ஆனால், தான் புனிதத்தை இழந்துவிட்ட சோகத்தால் தவிக்கும் அவள் தூக்கமாத்திரைகள் உட்கொண்டு கணவனின் கைகளிலேயே உயிரை விடுகிறாள்.

ஏற்கெனவே இந்திப்படம் ஏற்படுத்திய தாக்கத்தால், 'அவள்' படம் வருவதற்கு முன்பே இளைஞர்களிடையே ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. காரணம் அன்றைய சூழ்நிலைக்கு இம்மாதிரி கதை சற்று புதியது. சந்திரநாத் ஆக சசிகுமார், சதானந்தமாக ஸ்ரீகாந்த், கீதாவாக வெண்ணிற ஆடை நிர்மலா, பிரகாஷாக A.V.M.ராஜன், கீதாவின் தந்தையாக டி.கே.பகவதி, கீதாவை வளர்க்கும் ஆயாவாக பண்டரிபாய், பால்காரனாக சந்திரபாபு ஆகியோர் நடித்திருந்தனர். இம்மாதிரி ரோலில் நடித்திருப்பதால் தன் இமேஜ் பெண்கள் மத்தியில் என்னாகுமோ என்று நிர்மலா பயந்தது போல எதுவும் நடக்கவில்லை. மாறாக அவர்மீது அனுதாபத்தையே ஏற்படுத்தி இமேஜை உயர்த்தியது. அதுபோலவே, சிறிது காட்சிகளிலேயே வந்தபோதிலும் A.V.M.ராஜன் ஏற்றிருந்த பிரகாஷ் ரோல் ரொம்பவே அற்புதமாக அமைந்தது.

இவர்களையெல்லாம் விட 'அவள்' படத்தின் மூலம் ஜாக்பாட் அடித்தவர் ஸ்ரீகாந்த் தான். இப்படத்துக்குப்பின் அவரது மார்க்கெட் எங்கோ எகிறிப்போனது. பயங்கர பிஸியானார். படங்கள் குவிந்தன. அதே சமயம் இன்னொரு பாதகமும் நிகழ்ந்தது. ஆம், 'கற்பழிப்புக்காட்சியா? கூப்பிடு ஸ்ரீகாந்தை' என்று இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் முத்திரை குத்தினர். இந்தியில் சத்ருக்கன் சின்கா ஏற்றிருந்த ரோலில் இவர் நடித்ததாக சிலர் சொல்வார்கள். அது தவறு. சத்ருக்கன் ரோலில் நடித்தவர் A.V.M.ராஜன்தான்.

கண்ணைக்கவ்ரும் வண்ணப்படமான 'அவள்' படத்தை ஏ.சி.திருலோக்சந்தர் இயக்கியிருந்தார். கடற்கரையில் நீச்சல் உடையில் சசிகுமார் நிர்மலா இருவரும் பார்த்துக்கொள்ளும் அந்தப்பார்வையைப் பறிமாறிக்கொள்ள, சொல்லித்தந்த இயக்குனருக்கே பாராட்டுக்கள். 'இன்னிசை இரட்டையர்' சங்கர்-கணேஷ் இசையமைத்திருந்தனர். கல்லூரி மாணவர்கள் பாடும் "Boys and Girls வருங்காலம் உங்கள் கையில், வாருங்கள்" என்ற பாடலும், சசிகுமார் நிர்மலா பாடும் டூயட் பாடலான,
"கீதா.... ஒரு நாள் பழகும் உறவல்ல
காதல்.... நீரில் தோன்றும் நிழல் அல்ல"
பாடலும் மனதைக்கவர்ந்தன என்றாலும்,

நிர்மலா கிளப்பில் பாடும் (பி.சுசீலா தனிப்பாடல்).....
"அடிமை நான் ஆணையிடு
ஆடுகிறேன்... பாடுகிறேன்...
மதுவை நீ ஊற்றிக்கொடு
மயங்குகிறேன் மாறுகிறேன்"
என்ற பாடலில் இசையை அள்ளிக்கொட்டியிருப்பார்கள் இரட்டையர்கள். தாங்கள் மெல்லிசை மன்னரின் மாணவர்கள் என்பதை அழுத்தமாக நிரூபித்திருப்பார்கள்.

தொண்ணூறு சதவீதம் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஆதரவோடு 'அவள்' சுமார் பத்து வாரங்கள் வரை வெற்றிகரமாக ஓடியது.

mr_karthik
21st December 2009, 06:21 PM
When I was reading the review of the movie'AVAL' , my memories travelled to the past. I was school boy then.

It has released in Devi Paradise at mount road. Those days Devi complex was merit theatres in madras. Mostly English movies will get released in Devi. Hindi and Tamil movies will get released in Devi Paradise. 'AvaL' was the fourth Tamil movie released in DP (after Sorkam, Rikshawkaran and Raja) and was followed by Needhi and U.S.Valiban.

During the running of AvaL, the theatre was sorrounded by mostly college students and youths. As it was certified as 'Strictly for Adults only' they will not issue tickets for school boys. So first time in my life I was wearing 'vEshti' and drew mushtaq with eyebrow pencil and entered with five or six people together at a time. இப்போ நினைச்சா தமாஷா இருக்கு.

Good thread ma'm. I am expecting your review about 'ராஜ நாகம்'.

saradhaa_sn
23rd December 2009, 07:43 PM
[tscii:c2e4364dca]வசந்த மாளிகையில் ஸ்ரீகாந்த்

நடிகர்திலகத்தின் மாபெரும் வெற்றிப்படமான ‘வசந்தமாளிகை’யில் ஸ்ரீகாந்தும் நடித்திருக்கிறார். ஆனால் நடிகர்திலகத்தும் ஸ்ரீகாந்துக்கும் நேரடியாக சந்திக்கும் காட்சி ஒன்று கூடக் கிடையாது. கதாநாயகி வாணிஸ்ரீயின் அண்ணனாக வரும் ஸ்ரீகாந்த், தன் மனைவி குமாரி பத்மினி சொல்லும் வார்த்தைக்கெல்லாம் தலையாட்டும் பூம் பூம் மாடு போல. தனக்கு வேலை வெட்டி சம்பாத்தியம் எதுமில்லாத காலத்தில் தங்கையின் வருமானத்தில் தானும் தன் மனைவியும் வண்டியோட்டிக் கொண்டிருப்பவர் (அப்பவும்கூட தங்கை அனுப்பும் பணத்தில் கமிஷன்). தனக்கு ஜாக்பாட்டில் லட்சக்கணக்கில் பணம் கிடைத்ததும், அப்பா, அம்மா, தம்பி, தங்கைகளை ஒதுக்கி விட்டு தானும் தன் மனைவியும் மட்டும் பங்களாவாசியாக அனுபவிக்கும் சுயநலவாதி. தங்கையின் வேலை போய் குடும்பத்தோடு தன்னிடம் வந்தபோதும் தன் மாளிகையில் தங்க விடாமல், (மனைவியின் பேச்சைக்கேட்டு) தோட்டக்காரன் வீட்டில் தங்கவைக்கும் கல்நெஞ்சக்காரன். இந்தப்பாத்திரத்தில் ஸ்ரீகாந்த் ரொம்பவே சிறப்பாக நடித்திருந்தார்.

தங்கைக்கு தான் பேசிமுடித்த சம்பந்தம் (சின்ன ஜமீன்தார் வரவால்) நின்று போய்விட, அதுதான் சமயமென்று தங்கையின் மேலிருந்த கோபத்தையெல்லாம், மணவறையில் அமர்ந்திருக்கும் தங்கை வாணிஸ்ரீயின் முன் கொட்டித்தீர்ப்பாரே, அந்த இடத்தில் வசனமும் ஸ்ரீகாந்தின் நடிப்பும் சூப்பர்.

திருமணம் நின்று போன சோகத்தில் அழுதுகொண்டிருக்கும் மனைவி பண்டரிபாயிடம், மேஜர் வந்து, 'ஏன் அழுதுக்கிட்டு இருக்கே?. பொண்ணைப்பெத்தோம். அவளை மணக்கோலத்திலும் பாத்துட்டோம். அப்புறம் என்ன, ஏதாவது குளமோ குட்டையோ போய் விழ வேண்டியதுதான்' என்று சொல்லி முடித்ததும்....

'இப்படி பெத்தவங்களையும், கூடப்பொறந்தவங்களையும் தலைகுனிய வைப்பதைவிட, பேசாம நீ செத்து தொலஞ்சிருக்கலாம். நாங்களாவது நிம்மதியா இருந்திருப்போம். பெரிசா சம்பாதிக்கிறோம்ங்கிற திமிர்ல பேசினியே, உன் அகம்பாவத்தாலே இப்போ என்ன ஆச்சு? நீ யாரை வாழ வச்சே?' என்ற ரீதியில் ஸ்ரீகாந்த் பேசிக்கிட்டே போவார்.

அங்கே அரண்மனையில் கதாநாயகனுக்கு அவர் அண்ணனே வில்லன் என்றால், இங்கே கதாநாயகிக்கு இவர் அண்ணனே வில்லன். வசந்தமாளிகையில் நடிகர்திலகத்துக்கும் மேஜருக்கும் (வாணியைத்தேடி வரும் சீன்), நடிகர்திலகத்துக்கும் பண்டரிபாய்க்கும் (அரண்மனை நகையைத் திருப்பிக்கொடுக்கும் சீன்) கூட காம்பினேஷன் காட்சி உண்டு. ஆனால் நடிகர்திலகத்துக்கும் ஸ்ரீகாந்துக்கும் காம்பினேஷன் காட்சியே இல்லை.

இருந்தபோதிலும், வசந்த மாளிகையில் சிறிய வேடமானாலும் சிறப்பாகச் செய்திருந்தார் ஸ்ரீகாந்த்.
[/tscii:c2e4364dca]

saradhaa_sn
24th December 2009, 04:29 PM
ராஜ நாகம்

ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்த படங்களில் 'ராஜ நாகம்' படத்துக்கு தனியிடம் உண்டு. காரணம் இதன் கதையமைப்பு பத்தோடு பதினொன்றாக வந்தது அல்ல. அன்றைய நிலையில் கொஞ்சம் வித்தியாசமானது. இன்றைக்கு அதுபோன்ற கோபக்கார இளைஞர்களின் கதைகளில் பல படங்கள் வந்து விட்டன என்பது உண்மை.

கன்னடத்தில் 'நாகரகாவு' என்ற பெயரில் வெளிவந்து சக்கை போடு போட்ட படத்தின் கதையை தமிழில் ரீமேக் செய்திருந்தனர். மேஜர் சுந்தர்ராஜனின் சிஷ்யன் ஸ்ரீகாந்த். தன்னைச்சுற்றி நடக்கும் தவறுகளைப் பொறுத்துக்கொள்ளாத கோபக்கார மாணவன். தவறுசெய்த தலைமை ஆசிரியரை இரவோடு இரவாக தூக்கி வந்து தெருக்கம்பத்தில் கட்டி வைக்கும் அளவுக்கு கோபக்காரன். அவரது காதலி மஞ்சுளா, சகமாணவ நண்பனான தேங்காய் சீனிவாசனின் தங்கை. மஞ்சுளாவின் பெற்றோரால் அவர்களது காதல் முறிக்கப்பட்டு, வி.கோபாலகிருஷ்ணனுக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறார். குரு மேஜரின் கட்டளைக்குப்பணிந்து ஸ்ரீகாந்த் பொறுமையாக அடங்கிப்போகிறார்.

நாகப்பாம்பு, அடங்காப்பிடாரி என்ற பெயர்பெற்ற ஸ்ரீகாந்த், படிப்பு முடிந்ததும் வேலை கிடைக்காமல், அசோகனிடம் வேலைக்குச் சேர்த்துவிடப்படுகிறார். இதனிடையே மார்கரெட் என்ற கிருஸ்துவப் பெண்ணோடு (பட்டிக்காடா பட்டணமா சுபா) ஸ்ரீகாந்துக்கு காதல் ஏற்படுகிறது. ஒரு சமயம், முதலாளி அசோகனின் கார் டிரைவராக அசோகன் மற்றும் அவரது கூட்டாளிகளோடு வெளியூர் செல்லும் ஸ்ரீகாந்த் அங்கு தன் பழைய காதலி மஞ்சுளாவை சந்திக்கிறார். மஞ்சுளா தன் கணவனோடு சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்று எண்ணிக்கொண்டிருக்கும் ஸ்ரீகாந்துக்கு, மஞ்சுளாவின் சோகக்கதையைக் கேட்டதும் இடி விழுகிறது. ஆம், கணவன் என்ற பெயரில் ஒரு கயவனின் பிடியில் சிக்கிய அவளுடைய உடலையே மூலதனமாக வைத்து அவன் சம்பாதித்துக் கொண்டிருக்கிறான் என்பதை அறிந்ததும் அவளது பழைய காதலன் நொறுங்கிப்போகிறார்.

இதனிடையே அவருக்கும் மார்கரெட்டுக்குமான காதலுக்கும் எதிர்ப்பு கிளம்புகிறது. இம்முறை தன் குருவின் பேச்சைக்கேட்பதாக இல்லை. அவருடைய பேச்சைக்கேட்டு பொறுமை காத்ததால் அவனுடைய காதலி மஞ்சுளாவின் கதி இப்போது என்ன என்பதை எடுத்துச்சொல்ல, அதைக்கேட்டு குருவுக்கும் அதிர்ச்சி. இருந்தபோதிலும் தன் சிஷ்யனின் செயலுக்கு எதிர்ப்புத்தெரிவிக்கிறார். மார்கரெட்டை இழுத்துக்கொண்டு மலைமேல் ஏறிக்கொண்டிருக்கும் தன் சிஷ்யனைத் தடுக்க அவன் அவரை தள்ளி விழ அவர் நிலைதடுமாறி உருண்டு விழுகிறார். இறுதியில் மலைஉச்சியில் இருந்து இருவரும் கீழே குதித்து தற்கொலை செய்துகொள்கின்றனர். (இது ஜஸ்ட் கதையின் அவுட்லைன் மட்டுமே).

ஆனால் படத்தில் ஸ்ரீகாந்தின் பாத்திரப்படைப்பின் வேகத்தையும் விவேகத்தையும் உணர்த்தும் ஏராளமான சம்பவக்கோர்ப்புகள் நிறைந்துள்ளன. படம் வெளிவந்த அந்தகால கட்டத்தில் அந்தப்பாத்திரம் தமிழ்ப்பட உலகுக்குப்புதுமையாக இருந்தது. பத்திரிகை விமர்சனங்களில் அந்தப்பாத்திரமும், அதில் அவரது நடிப்பும் ரொம்பவே சிலாகித்துப் பேசப்பட்டன.

கண்ணைக்கவரும் வண்ணப்படமாக வந்த இப்படத்தின் பாடல்களை கவிஞர் வாலி எழுத, வி.குமார் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் இனிமையாக இருந்ததுடன், படத்தின் சம்பவங்களுக்குப் பொருந்துவனவாகவும் அமைந்து சிறப்பூட்டின.

ஸ்ரீகாந்துக்காக டி.எம்.சௌந்தர்ர்ராஜன் பாடியிருந்த...
'மாணவன் நினைத்தால் நடத்திக்காட்டுவான்
அவன் நெஞ்சம் ஒரு நெருப்பு... அவன் நேர்மையின் மறுபிறப்பு
மதித்தால் மதிப்பான்... மிதித்தால் மிதிப்பான்'
என்ற பாடல் மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப்பெற்றிருந்தது என்பதைச்சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

தன்னை ஒரு அலங்கோல நிலையில் சந்திக்கும் தன் பழைய காதலன் ஸ்ரீகாந்த் முன், மஞ்சுளா தன் 'திருமண(???)' வாழ்க்கையைப் பிரதிபலித்துப் பாடும்.....
'சமுதாய வீதியிலே நான் சிவப்பு விளக்கு
தடுமாறி விலைபோகும் கடைச்சரக்கு
என்ன சொல்ல ஏது சொல்ல... வெட்கக்கேடு வெளியில் சொல்ல'
இந்தப்பாடலில் தன் கணவனாலேயே விலையாக்கப்படும் கதையை சொல்லச் சொல்ல நமக்கு மஞ்சுளாவின் பாத்திரத்தின் மீது ரொம்பவே பரிதாபம் ஏற்படும்.

மார்கரெட்டாக வரும் சுபாவும், ஸ்ரீகாந்தும் டூயட் பாடல்
'தேவன் வேதமும் கண்ணன் கீதையும்
ஒரு பாதையில் இங்கு சங்கமம்
ஒரு பாதையில் இங்கு சங்கமம்'
அன்றைய காலகட்டத்தில் ரொம்பவே பாப்புலரான பாடல். வி.குமார் இசையில் உருவான சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று. இப்பாடலின் வெளிப்புறக்காட்சிகளில் ஒளிப்பதிவு மிகவும் அருமை.

ஸ்ரீகாந்த். மஞ்சுளா, சுபா, மேஜர் சுந்தர்ராஜன், தேங்காய் சீனிவாசன், அசோகன், எம்,என்,ராஜம், வி.கோபாலகிருஷ்ணன் ஆகிய நட்சத்திரங்களுடன் துணைப் பாத்திரங்ககளில் பலர் நடித்திருந்த 'ராஜ நாகம்' பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்ற போதிலும், சராசரிக்கும் அதிகமாகவே ஓடியது.

bingleguy
24th December 2009, 09:06 PM
I won't call Srikanth underrated or underappreciated. He was there, part of the history, and for NT fans like me, he was the reason why NT's characters went ballistic in many notable films :lol:
அந்த வகையில் சட்டென்று நினைவுக்கு வருவது 'தங்கப்பதக்கம்'.



Right you are :thumbsup:

saradhaa_sn
26th December 2009, 04:48 PM
'கோமாதா என் குலமாதா'

தேவர் பிலிம்ஸ் படங்களில் கதாநாயகியின் வளர்ப்புப்பிராணி சம்மந்தப்பட்ட கதையென்றால், அப்படத்தில் கதாநாயகியும், அவளது வளர்ப்புப்பிராணியும் பிரதான இடம்பெறும் என்பது எல்லோர்க்கும் தெரிந்த விஷயம். கதாநாயன் இரண்டாம் படசம்தான். அவனைக்கூட கிட்டத்தட்ட ஒரு வில்லன் ரேஞ்சுக்கே காட்டுவர்கள். அந்த வகையில், வெள்ளிக்கிழமை விரதம், ஆட்டுக்கார அலமேலு வரிசையில் கோமாதா என் குலமாதாவும் அப்படியே. இந்தியில் 'கா(G)ய் அவுர் கௌரி' என்ற பெயரிலும் தமிழில் கோமாதா என் குலமாதா என்ற பெயரிலும் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்டு வெளியானது.

கதாநாயகி பிரமீளா, அவர் வளர்க்கும் பசுமாடு இரண்டும்தான் முக்கிய பாத்திரங்கள். பிரமீளாவின் ஜோடி ஸ்ரீகாந்த். துவக்கத்தில் தன்ன்னிடம் வம்பு பண்ணும் நான்கு போக்கிரிகளிடம் மாட்டிக்கொள்ளும் பிரமீளாவை ஸ்ரீகாந்த் சண்டைபோட்டுக் காப்பாற்றுகிறார். சரிதான், பரவாயில்லையே ஸ்ரீகாந்துக்கு நல்ல கௌரவமான ரோல் கொடுத்திருக்கிறார்களே என்று நாம் எண்ணிய சில வினாடிகளில் நம் கற்பனை தவிடுபொடி. ஆம், தான் ரவுடிகளிமிருந்து காபாற்றிய பிரமிளாவை காருக்குள் இழுத்துச்சென்று, அவர் கற்பை சூறையாடிவிடுகிறார். (அதானே பார்த்தோம், நம் படவுலகத்தினர் திருந்த விட மாட்டாங்களே). தன்னைக்கெடுத்தவனைப்பழி வாங்க நேரம் பார்த்திருக்கிறார் பிரமீளா.

ஸ்ரீகாந்துக்கு ஒரு பெரிய இடத்தில் திருமணம் நிச்சயம் ஆகிறது. ஸ்ரீகாந்தின் குணத்தைப் பற்றியறியும் மணப்பெண் திருமண மேடையில், அவரை உதாசீனப்படுத்தி விட்டு எழுந்து போக, ஸ்ரீகாந்த் அவமானத்தால் குன்றிப்போகிறார். இனிமேல் தன்னை யார் திருமனம் செய்ய சம்மதிப்பாள்? என்று தன் அம்மாவிடம் சொல்லியழ, சமயம் பார்த்திருந்த பிரமீளா, 'நான் அவரை கல்யாணம் பண்ணிக்கிறேன்' என்று முன் வருகிறார். ஸ்ரீகாந்தும் குடும்பத்தாரும் பிரமிளாவை நன்றியுடன் பார்க்கின்றனர். ஆனால் பிரமிளாவின் நோக்கம் வேறு.

முதலிரவின்போது கணவனின் வேண்டுகோளூக்காக ஆடிப்பாடும் பிரமீளா, முதலிரவிலேயே தன் பழிவாங்கும் சொரூபத்தைக்காட்ட. ஸ்ரீகாந்த் அதிர்ச்சியடைகிறார். அதிலிருந்து பிரமீளாவின் பழிவாங்கும் படலம்தான். அதற்குப் பெரிதும் துணையாய் நிற்பது அவர் வளர்க்கும் பசுமாடு. இதனிடையே ஒரு ரயில் விபத்தையும் 'லட்சுமி' என்ற அந்தப்பசு தடுக்கிறது(?). ரயிலைக்கவிழ்க்க ரயில்பாதையில் நாச வேலை செய்துகொண்டிருக்கும், ஒரு சதிகாரக்கும்பலை பாயிண்ட்மேன் தடுக்க, அவர்கள் அவனை அடித்துப்போட்டு விட்டு தண்டவாளத்தைப் பெயர்த்துவைக்க, லட்சுமி, அந்த பாயிண்ட்மேன் வைத்திருந்த சிவப்பு விளக்கை வாயில் கவ்விக்கொண்டு ரயில் வரும் பாதையில் முன்னோக்கி ஓடி வர, சிவப்புவிளக்கைப் பார்த்து எஞ்சின் டிரைவர் வண்டியை நிறுத்தி அவரும், கார்டு சின்னப்பா தேவரும் மற்றும் பயணிகளும் பசுமாடு செல்லும் வழியே சென்று பார்க்க, தண்டவாளம் பெயந்து கிடக்கிறது. (நம் வீட்டுப்பசுக்களெல்லாம் புல்லும் புண்ணாக்கும் தின்று விட்டு பால் கறப்பதோடு சரி). லட்சுமியையும் அதன் வளர்ப்பாளி பிரமீளாவையும் அனைவரும் பாராட்டுகின்றனர்.

ஆனால் ஸ்ரீகாந்துக்கு அந்த பசுமாட்டின் மீது கடும் கோபம், எரிச்சல். தன் மனைவியின் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்குத்துணை போவதால், அந்தப்பசுவை ஒழித்துக்கட்டினால் தான் தனக்கு நிம்மதி என்று அதை ஒழித்துக்கட்ட முயல்கிறார். இறுதியாக ஒருகட்டத்தில் பெரிய இக்கட்டிலிருந்து அந்தப்பசுவே ஸ்ரீகாந்தைக்காப்பாற்ற, பிரமீளாவும் அவரை ஏற்றுக்கொள்ள, தங்களைவிட்டுப் பிரிந்துபோகும் பசுவைத் தங்களோடவே வைத்துக்கொள்ள ஸ்ரீகாந்த் முடிவெடுக்க அப்புறம் என்ன?. தியேட்டர் காலி.

இம்மாதிரி பிராணி செண்டிமெண்ட் படங்கள் பெண்களுக்கு ரொம்பவே பிடிக்கும் என்பதாலும், அவர்கள் பெரும்பாலும் இம்மாதிரிப் படங்களில் லாஜிக்கையெல்லாம் எதிர்பார்ப்பதில்லை என்பதாலும், அவர்களின் பர்ஸைக்குறிவைத்தே இம்மாதிரி படங்கள் எடுக்கப்பட்டன. சாண்டோ சின்னப்பா தேவர் கைக்கொண்ட இவ்வழியை பிற்காலத்தில் ராம நாராயனன் தொடர்ந்தார். அதில் வெற்றிகளும் கிடைத்தன. ஆனால் படுதோல்வி என்பதெற்கெல்லாம் இடமில்லை.

வழக்கமாக தேவர் படங்களை இயக்கும் எம்.ஏ.திருமுகமோ, அல்லது ஆர்.தியாகராஜனோ இப்படத்தை இயக்கவில்லை. ஒருசில எம்.ஜி.ஆர். படங்களை இயக்கியிருந்த எம்.கிருஷ்ணன் இயக்கியிருந்தார். தனது தண்டாயுதபாணி பிலிம்ஸ் சார்பில் 'சாண்டோ' சின்னப்பா தேவர் தயாரித்திருந்தார்.

சங்கர் - கணேஷ் இசையில், இரண்டு பாடல்கள் நினைவில் உள்ளன....

பிரமீளா தன் தோழிகளுடன் மாட்டு வண்டியில் பாடிக்கொண்டு போகும் "பொழுதுக்கு முன்னே ஊருக்குப்போவோம் போடா தம்பி போ" பாடலையும்,

தன் முதலிரவில் கணவன் ஸ்ரீகாந்த் வேண்டுகோளுக்கிணங்க பிரமிளா பாடும் "மணக்கோலம் பார்க்க வந்தேன் மணமகளானேன்" பாடலையும் பி.சுசீலா பாடியிருந்தார். ஸ்ரீகாந்துக்கு பாட்டு எதுவும் இருந்தமாதிரி நினவில்லை. இருந்திருக்குமோ?.

மொத்தத்தில், 'கோமாதா பெண்களைக்கவர்ந்த குலமாதா'.

Plum
26th December 2009, 08:34 PM
நம் வீட்டுப்பசுக்களெல்லாம் புல்லும் புண்ணாக்கும் தின்று விட்டு பால் கறப்பதோடு சரி
:lol:

saradhaa_sn
31st December 2009, 10:53 AM
ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்த படங்களில் 'ராஜ நாகம்' படத்துக்கு தனியிடம் உண்டு.

கன்னடத்தில் 'நாகரகாவு' என்ற பெயரில் வெளிவந்து சக்கை போடு போட்ட படத்தின் கதையை தமிழில் ரீமேக் செய்திருந்தனர்.
ராஜநாகம் படத்தின் கன்னட மூலப்படமான 'நாகரகாவு' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி, கன்னடத்தில் பிரபலமான நட்சத்திரமாகத்திகழ்ந்த திரு.விஷ்ணுவர்தன் நேற்று (டிசம்பர் 30) காலை மாரடைப்பால் காலமானார். இவர் பிரபல நடிகை பாரதியின் கணவர் ஆவார்.

இயக்குனர் ஸ்ரீதரின் 'அலைகள்' படத்தின் மூலமாக தமிழில் கதாநாயகனாக அறிமுகமானவர் விஷ்ணுவர்தன். ரஜினிகாந்தின் 100-வது படமான ஸ்ரீராகவேந்திரர் படத்திலும் நடித்துள்ளார்.

நடிகை லட்சுமி இயக்கிய ஒரே படமான 'மழலைப்பட்டாளம்' படத்தில் கதாநாயகனாக, சுமித்ராவின் ஜோடியாக நடித்துள்ளார். (இப்படத்தை இயக்குனர் கே.பாலச்சந்தர் மேற்பார்வை செய்தார்).

நடிகர்திலகம் சிவாஜி, சூப்பர் ஸ்டார் ரஜினி இணைந்து நடித்த (இந்தி 'குர்பானி' படத்தின் தமிழ் ரீமேக்) 'விடுதலை' படத்திலும் நடித்துள்ளார். (உண்மையில் விடுதலையில் இவருடைய ரோலில் உலகநாயகன் கமலைத்தான் நடிக்க வைக்க தயாரிப்பாளர் திரு பாலாஜி முயன்றார். சில பல காரணங்களால் கமல் அப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. சிவாஜி, ரஜினி, கமல் இணைந்து நடித்த ஒரே படம் என்ற பெருமை கைநழுவிப்போனது).

May his soul rest in peace.

saradhaa_sn
3rd January 2010, 02:55 PM
'ஞான ஒளி'யில் ஸ்ரீகாந்த்

ஆண்ட்டனி, தன் வாழ்வில் மின்னல்போல வந்து மறைந்த தன் மனைவி ராணியால் தனக்குக்கிடைத்த அன்புப்பரிசான, தன் ஒரே மகள் மேரியை, கண்ணை இமை காப்பதுபோல வளர்த்து வர, கல்லூரிக்கு படிக்கச்சென்ற மகளுக்கு விதி காதலன் ரூபத்தில் வர, தந்தை இல்லாத சமயம் காதலனுடன் தன்னை மறந்திருக்கும் வேளையில், அதே நேரம் தன் மகளின் ஒளிமயமான எதிர்காலம் பற்றி தன் நண்பன் லாரன்ஸுடன் பேசிக்கொண்டு வீட்டுக்குள் நுழையும் ஆண்ட்டனிக்கு, தன் மகளை, காணக்கூடாத கோலத்தில் கண்டுவிட, அவன் மன நிலை எப்படியிருக்கும்?. தன் ஆத்திரம் முழுவதையும் திரட்டி, மகளின் காதலனைக் கொல்லப்போகும் நேரம், உடனிருக்கும் லாரன்ஸால் தடுக்கப்பட்டு, அவன் தப்புவிக்கப்படுகிறான். அதே சமயம் இன்னொரு உண்மையும் தெரிகிறது. அவன் பிறப்பால் கிருஸ்தவன் அல்ல. ஆயினும் தன் மகளை களங்கப்படுத்தியவனை வேறு வழியின்றி ஏற்றுக்கொள்ள சம்மதிக்கிறான் ஆண்ட்டனி.

ஆனால் அவனோ, மேரியின் காதலன் அல்ல, அவளைப்போல் பலரை கசக்கி எறிந்த காமுகன். அந்த உண்மை தெரியாமல் மேரியும் பலியாகிவிட்டாள். மறுநாள் ஊரைவிட்டு ஓடப்போகும் அவனைச்சந்திக்கும் ஆண்ட்டனி, தன் மகளை ஏற்றுக்கொள்ளும்படி கேட்க அவனோ மறுப்பதுடன் மேரியைப்பற்றி தவறாகப்பேச, ஆத்திரமடையும் ஆண்ட்டனி, தன்னை மறந்து ஒரே ஒரு போடு போட, ஆள் அவுட். (இந்தக்கொலைதான் ஆண்ட்டனியை வாழ்நாள் முழுவதும் துரத்தி, கடைசியில் மகளின் திருமணத்துக்கு முன்னர் நடந்த கொலைக்கு பேத்தியின் திருமணத்துக்குப்பின் கைது செய்யப்படுகிறார்).

இதில் மேரியின் காதலன் என்ற உருவில் வரும் காமுகனாக ஸ்ரீகாந்த் நடித்திருந்தார். சிறிது நேரமே வந்தாலும், கதையில் திருப்பத்தை ஏற்படுத்தும் பாத்திரம். நன்றாகச்செய்திருந்தார். 'பத்தோடு பதினொண்ணு' என்று மேரியின் போட்டோவைக்கிழித்துப்போடும் இடம் ஒன்று போதும், இவர் கேரக்டரைச்சொல்ல. மேரியாக சாரதா நடித்திருந்தார். "ஆண்ட்டனி ரோலில் யாருன்னு கேட்டால் சின்னக்குழந்தையும் சொல்லும்".

ஸ்ரீகாந்த் - சாரதா ஜோடிக்கு ஒரு டூயட் பாடலும் உண்டு. ஆனால் சுசீலா மட்டுமே பாடியிருப்பார். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.யின் வித்தியாசமான மெட்டமைப்பில்....
'மணமேடை.... மலர்களுடன் தீபம்....' என்ற தேன் சொட்டும் பாடல். கேட்கக் கேட்கத்திகட்டாத விருந்து. (இதே போல நடிகர்திலகத்துக்கும் விஜயநிர்மலாவுக்கும் 'அம்மா கண்ணு சும்மா சொல்லு ஆசையில்லையோ' என்ற அருமையான டூயட் பாடல் உண்டு. ஆனால் சிறப்பு தேன்கிண்ணம் வழங்க வரும் வி.ஐ.பி.க்கள் எல்லாம் சேர்ந்து, ஞான ஒளியில் 'தேவனே என்னைப்பாருங்கள்' என்ற ஒரு பாடல் மட்டும்தான் என்பது போன்ற மாயையைத் தோற்றுவித்து விட்டனர்).

ஸ்ரீகாந்துக்கு நல்ல ரோல் அமைந்த படங்களில் 'ஞான ஒளி'யும் ஒன்று.

saradhaa_sn
4th January 2010, 12:32 PM
நியூ-வேவ் படமாகப் பேசப்பட்ட

'அவள்'

இவர்களையெல்லாம் விட 'அவள்' படத்தின் மூலம் ஜாக்பாட் அடித்தவர் ஸ்ரீகாந்த் தான். இப்படத்துக்குப்பின் அவரது மார்க்கெட் எங்கோ எகிறிப்போனது. பயங்கர பிஸியானார். படங்கள் குவிந்தன.

வரும் புதனன்று (06.01.2010) பிற்பகல் 2.30-க்கு கலைஞர் தொலைக்காட்சியில்...

ஏ.வி.எம்.ராஜன், ஸ்ரீகாந்த், சசிகுமார், 'வெண்ணிற ஆடை' நிர்மலா நடித்த

"அவள்" வண்ணத்திரைப்படம்

ஒளிபரப்பாகிறது.

groucho070
4th January 2010, 01:29 PM
ஸ்ரீகாந்த் - சாரதா ஜோடிக்கு ஒரு டூயட் பாடலும் உண்டு. ஆனால் சுசீலா மட்டுமே பாடியிருப்பார். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.யின் வித்தியாசமான மெட்டமைப்பில்....
'மணமேடை.... மலர்களுடன் தீபம்....' என்ற தேன் சொட்டும் பாடல். கேட்கக் கேட்கத்திகட்டாத விருந்து. Absolutely gorgeous song. To me, the song starts without me knowing that it actually started. And yeah, Srikanth's role is pivotal here, the reason why Anthony has to go missing for some times.


(இதே போல நடிகர்திலகத்துக்கும் விஜயநிர்மலாவுக்கும் 'அம்மா கண்ணு சும்மா சொல்லு ஆசையில்லையோ' என்ற அருமையான டூயட் பாடல் உண்டு. ஆனால் சிறப்பு தேன்கிண்ணம் வழங்க வரும் வி.ஐ.பி.க்கள் எல்லாம் சேர்ந்து, ஞான ஒளியில் 'தேவனே என்னைப்பாருங்கள்' என்ற ஒரு பாடல் மட்டும்தான் என்பது போன்ற மாயையைத் தோற்றுவித்து விட்டனர்). :evil: :exactly: Such a beautiful song, one of the first hero-heroine-romance-on-rooftop scene.

Earlier I mentioned Srikanth making NT go nuts! I got three films so far:
Tanggapathakkam.
Rajapart Ranggathurai
Gnana Oli.

Any other films, madam? (sorry, interrupting your reviews here)

Plum
4th January 2010, 01:35 PM
grouch, as mentioned in the previous page, Ilaya Thalaimurai is another.

saradhaa_sn
4th January 2010, 06:50 PM
நடிகர்திலகம் டாக்டர் சிவாஜி அவர்களுடன், தேசிய நடிகர் ஸ்ரீகாந்த் இணைந்து நடித்த, காலத்தால் அழியாத காவியம், மாபெரும் வெற்றிப்படம் 'வியட்நாம் வீடு' திரைப்படத்தைப்பற்றிய எனது ஆய்வுக்கட்டுரை

இங்கே.......

http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1363202#1363202

Plum
4th January 2010, 07:02 PM
Wonderful write-up saaradha_sn. Even while reading, can't stop tears from eyes, especially the "gadigaaram ninnu pOchu" and "Counting days".

tvsankar
4th January 2010, 07:19 PM
Dear sAradha,
Ipodhu dhan indha thread ai parkiren,

Ungal writings - Involvement udan irukum our vishayam,.

Srikanth - Nalla Nadigar.

Raaja Nagam - Enaku migavum piditha padam.

indha thread full um padithu vittu karuthai pagirndhu kolgiren Saradha..

My Hearty Wishes to your Writings....

RC
4th January 2010, 11:08 PM
groucho: avan oru sariththiram?

groucho070
5th January 2010, 07:24 AM
Thanks Plum. Okay, NT vs Shreekanth (direct confrontation, I mean) list:
1. Tanggapathakkam.
2. Rajapart Ranggathurai.
3. Gnana Oli
4. Ilaya Talaimurai
5. Vietnam Veedu (how can I forget this :evil:)


groucho: avan oru sariththiram?Innum paarkala, RC :oops:

saradhaa_sn
5th January 2010, 10:39 AM
Dear sAradha,
Ipodhu dhan indha thread ai parkiren,

Ungal writings - Involvement udan irukum our vishayam,.

Srikanth - Nalla Nadigar.

Raaja Nagam - Enaku migavum piditha padam.

indha thread full um padithu vittu karuthai pagirndhu kolgiren Saradha..

My Hearty Wishes to your Writings....
நன்றி உஷாஜி (ரொம்ப நாள் ஆச்சு உங்களுடன் நேரடியாக பேசி)...
பாராட்டுக்களுக்கு நன்றி.

இதே பகுதியில்...
மக்கள் கலைஞர், ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கர் அவர்களுக்கும்
ஸ்மார்ட் ஹீரோ, கலைநிலவு ரவிச்சந்திரன் அவர்களுக்கும்
திரிகள் துவங்கப்பட்டு, இதைவிட அதிகமாகவும், சுவாரஸ்யமாகவும் பல பதிவுகள் இடம் பெற்றுள்ளன. அவற்றையும் படித்து, இந்த முப்பெரும் கலைஞர்களைப்பற்றிய உங்கள் எண்ணங்களையும், அவர்களின் திரைப்படங்களோடு உங்கள் அனுபவங்களையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

எதிர்பார்ப்புகளுடன், உங்கள் சாரூ...

saradhaa_sn
5th January 2010, 01:00 PM
Thanks Plum. Okay, NT vs Shreekanth (direct confrontation, I mean) list:
1. Tanggapathakkam.
2. Rajapart Ranggathurai.
3. Gnana Oli
4. Ilaya Talaimurai
5. Vietnam Veedu (how can I forget this :evil:)


groucho: avan oru sariththiram?Innum paarkala, RC :oops:
ராகேஷ்,

'அவன் ஒரு சரித்திரம்' படத்தில் நடிகர்திலகத்துக்கும் ஸ்ரீகாந்துக்கும் நேரடிக்காட்சிகள் / போட்டிகள் உண்டு. நடிகர்திலகத்தின் தம்பியாக வருவார். குறிப்பாக அந்த டென்னிஸ் கோர்ட் காட்சியில், ஸ்ரீகாந்தை நாற்காலியில் அமர வைத்து, நடிகர்திலகம் பேசும் காட்சியில் இருவரின் நடிப்புமே பிரமாதம். (ஆனால் கடுமையான வெயிலில் எடுத்திருப்பார்கள்).

அதுபோல 'வாணி ராணி' படத்திலும் ஸ்ரீகாந்துக்கு வில்லன் ரோல். எங்கவீட்டுப்பிள்ளையில் நம்பியார் செய்திருந்த பாத்திரம். அதாவது, 'வாணி'யை பெல்ட்டால் விளாசுவதும், பின்னர் 'ராணி'யிடம் பெல்ட்டால் அடி வாங்கிக்கட்டிக் கொள்வதும் இவர்தான். கிளைமாக்ஸில், பாழடைந்த மண்டபத்தில் நடக்கும் திருமணத்தின்போது, சண்டைக்காட்சியில் நடிகர்திலகம், வாணிஸ்ரீ, முத்துராமன் மூவரையும் ஒரே ஆளாக சமாளித்திருப்பார்.

saradhaa_sn
5th January 2010, 01:32 PM
நடிகர்திலகத்துடன் ஸ்ரீகாந்த் நடித்த மற்றுமொரு படம் 'சிவகாமியின் செல்வன்'. இரண்டாவது சிவாஜி (சிவகாமியின் செல்வனு)க்கு நண்பனாக வருவார். இவரும் ஒரு விமானப்படை பைலட் தான். (முதல் சிவாஜி(சிவகாமியின் கணவனு)க்கு நண்பனாக வருபவர் ஏ.வி.எம்.ராஜன். 'உள்ளம் ரெண்டும் ஒன்றையொன்று' பாடலில் ஜீப் ஓட்டிக்கொண்டு வருபவர்).

இப்படத்தில் ஸ்ரீகாந்த் ரொம்ப அசால்ட்டாக நடித்திருப்பார். குறிப்பாக, வாணிஸ்ரீ, லதா, வி.எஸ் ராகவன் ஆகியோரை ஃபங்ஷனுக்கு அழைக்குமிடத்தைச் சொல்லலாம். அதிலும் அந்த 'பை' சொல்லும் அழகு ஸ்ரீகாந்த் முத்திரை. இவருடைய பேச்சைப்பார்த்து, 'இந்தப்புள்ளைங்களுக்கு பயம் என்பதே கிடையாதா?' என்று வாணிஸ்ரீ அதிசயிப்பார்.

நடிகர்திலகத்துக்கு ஜோடியாக லதா நடித்த ஒரே படம் இது என்பது இன்னொரு சுவாரஸ்யம்.

mr_karthik
5th January 2010, 07:50 PM
Shreekanth acted with NT in 'RojAvin Raja' also.

tvsankar
5th January 2010, 09:16 PM
Dear saradha,
Thanks a lot for your response.

Jai and Ravichandran - oh.....

ellam padichitu, enjoy pannitu, enndoa
karuthum soligiren.

Kandipa varuven Saradha.....

Srikanth - Srikanth enru therindhu parhta
mudal padam - Ninaithu parkiren. Nyabagam varavilai.

Thanga padhakam - during my 5tj pr 6th std emri minaikiren.

padam parthadhadum - Srikanth characater dhan manasil
padhindhadhu.

Strict ana appavala paiyan kashta pattu, kettum poran...
idahn ennoda thoughts - appoadhum ippodhum eppodhum.....

Climax il - Srikanth - Sivaji yidam pesum scene...
Nalla paiyanga irukavilai enra ninaivudan, appa
usathi enra oru kaazhpunarchiyudan

Srikanth nadipu - Excellent.......

indha padathil Sivaji ku sariyaga (Characater aga matum ilamal) Nadipilum - pottiyaga irupar.........

Srikanth - Ivarukagavae - Sila Nerangalil Sila manidhargal padam - During my 8th std (think so) parthen.

Really He is a Nice Actor.
Villanaga nadika vaithu Veenadika patta oru Good Actor.

groucho070
6th January 2010, 07:42 AM
Saradha mdm, thank you for sharing. Somehow Shreekanth has the ability to really make NT's bp shoot up.

Mr_Karthik, thanks for the info, but do they have confrontation in that film?

Agree with Usha madam, wasted as just as a villain.

rajeshkrv
6th January 2010, 10:28 PM
srikanth was in most of NT's films. Saradha mam
can you also write on their off screen relationship.

I know Sivaji and balaji were really close like brothers.

saradhaa_sn
7th January 2010, 10:57 AM
[tscii:6c1c3dc8c1]
srikanth was in most of NT's films. Saradha mam
can you also write on their off screen relationship.

I know Sivaji and balaji were really close like brothers.
டியர் ராஜேஷ்,

நடிகர்திலகமும் பாலாஜியும் சம வயது தோழர்கள். ஒரே வயதினர். தவிர நெடுநாளைய நண்பர்கள். அவர்களுக்கிடையே 'வாடா' 'போடா' என்று பேசிக்கொள்ளும் அளவுக்கு நெருக்கம் இருந்தது. படப்பிடிப்பு இல்லாத அபூர்வ நேரங்களில், குறிப்பாக மழைபெய்யும் நேரங்களில் பாலாஜி தானே காரை எடுத்துக்கொன்டு (பாலாஜி ஒரு எக்ஸ்பெர்ட் டிரைவர் என்பது எல்லோருக்கும் தெரியும்) அன்னை இல்லத்துக்கு வந்து நடிகர்திலகத்தை அழைத்துக்கொண்டு கடற்கரைக்குச்சென்று மழைபெய்வதைப் பார்த்துக்கொண்டே நெடுநேரம் பேசிக்கொண்டிருப்பாராம்.

நடிகர்திலகத்தின் இறுதி நாட்களில் தினமும் மாலை அன்னை இல்லத்துக்கு வந்து நடிகர்திலகத்துடன் பேசிக்கொண்டிருப்ப்தை வழக்கமாக வைத்திருந்தார். வாழக்கையின் இறுதிக்கட்டத்தில் நின்ற மனமொத்த இரு நண்பர்களின் ஆறுதலான சந்திப்பு. அப்போது அவர்களின் மனநிலை எவ்வாறு இருந்திருக்கும் என்பதை நினைத்து பார்க்கும்போதே, நமக்கு மனதைப்பிசைகிறது.

ஸ்ரீகாந்தைப்பொறுத்தவரை அவர் சிவகுமார் போன்ற அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர். நடிகர்திலகத்துடன் இவரும் ஒரே நேரத்தில் பெருந்தலைவர் காமராஜரின் தலைமையின் கீழ் காங்கிரஸ் பேரியக்கத்தில் ப்ங்கு கொண்டிருந்தார் என்று முதல் பக்கத்திலேயே 'காங்கிரஸ் பேரியக்கத்தில் ஸ்ரீகாந்த்' என்ற பதிவில் குறிப்பிட்டுள்ளேன். பின்னர் அரசியல் ரீதியாக நடிகர்திலகத்தை கடுமையாக விமர்சித்ததால், அவருடைய படங்களில் பங்கேற்கும் வாய்ப்புக்களை இழந்தார் என்பதையும் சொல்லியிருந்தேன்.

நடிகர்திலகம் எப்போதுமே தன் மனதுக்குப்பிடித்த இளைய தலைமுறையினரை 'வாடா' என்றுதான் வாஞ்சையோடு அழைப்பார். ஸ்ரீகாந்தையும் அப்படித்தான் அழைத்தார். ஸ்ரீகாந்த்படப்பிடிப்பில் கடுமையான பிஸியான இருந்த காலத்தில், அலுவலகத்துக்கு அடிக்கடி லீவு போட்ட காரணத்தால், வேலையை ராஜினாமா செய்யும்படி அமெரிக்கன் கான்ஸலேட் அதிகாரிகளால் வற்புறுத்தப்படவே, வேலையை ராஜினாமா செய்தார். விஷயம் கேள்விப்பட்ட நடிகர்திலகம் மறுநாள் படப்பிடிப்பில் சந்தித்தபோது, "என்னடா, ஆபீஸிலேருந்து விரட்டியடிச்சுட்டானுங்களா?. இருந்த ஒரு பிடிமானத்தையும் விட்டுட்டே. இனிமே படத்துலயாவது ஒழுங்கா கான்ஸன்ட்ரேட் பண்ணு. கோட்டை விட்டுடாதே. சரி உன் பொண்டாட்டி வேலைக்குப்போறா இல்லையா? அவளைத் தொடர்ந்து போகச்சொல்லு" என்று ஒரு தந்தையின் கரிசனத்துடன் அட்வைஸ் பண்ணினார்.

'தங்கப்பதக்கம்' நாடகம் திரைப்படமானபோது, நாடகத்தில் ராஜபாண்டியன் நடித்த ஜெகன் ரோலுக்கு யாரைப்போடுவது என்று யோசித்தபோது பலரும் வெவ்வேறு நடிகர்களைச் சொன்னார்களாம். அதில் முத்துராமன், சிவகுமார் பெயரெல்லாம் கூட அடிபட்டதாம். அப்போது நடிகர்திலகம்தான் "அட அதான் நம்ம ‘ஸ்ரீ’ இருக்கானே அப்புறம் என்ன?. அவனைவிட அந்த ரோலுக்கு ஸூட் ஆன ஆள் கிடையாது. அவனைப்போடுங்க. படமும் எங்கோ போயிடும், அவனும் எங்கோ போயிடுவான்" என்றாராம். (சிவாஜி நாடகமன்ற இயக்குனர் எஸ்.ஏ.கண்ணன் ஒரு பேட்டியில் சொன்ன தகவல் இது). நடிகர்திலகத்தின் கணிப்பு நூற்றுக்கு நூறு சரியாக அமைந்தது.
[/tscii:6c1c3dc8c1]

groucho070
7th January 2010, 11:33 AM
Saradha mdm, you can start any thread, but it cannot escape from NT's shadow. Thanks for sharing again. :D :thumbsup:

saradhaa_sn
7th January 2010, 12:36 PM
Saradha mdm, you can start any thread, but it cannot escape from NT's shadow. Thanks for sharing again. :D :thumbsup:
டியர் ராகேஷ்,

உண்மைதான். நடிகர்திலகத்தின் நிழல் இல்லாமல் என்னால் எழுத முடியாது. காரணம் அவரது வாழ்க்கை திரையுலகத்துடன் பின்னிப்பிணைந்தது. அதே சமயம், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் திரிகளில் இல்லாத அளவுக்கு ஸ்ரீகாந்த் திரியில் நடிகர்திலகத்தின் பங்கேற்பு சற்று கூடுதலாக இருந்தே தீரும்.

மேலும் திரு. ராஜேஷ், நடிகர்திலகத்துக்கும் ஸ்ரீகாந்துக்கும் இடையே 'திரைக்குப்பின்னால் இருந்த தொடர்பு' பற்றிக்கேட்கும்போது, நமக்குத்தெரிந்ததை சொல்லித்தானே ஆக வேண்டும்.

saradhaa_sn
7th January 2010, 05:27 PM
'ராஜபார்ட் ரங்கதுரை' திரைப்படத்தில் நடிகர்திலகம், ஸ்ரீகாந்த் பங்கேற்கும் உணர்ச்சி மிக்க பாடல் காட்சியான "அம்மம்மா தம்பி என்று நம்பி அவன் உன்னை வளர்த்தான்" பற்றிய பதிவு by mr_karthik (in English)

இங்கே:
http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1417744#1417744

Plum
7th January 2010, 06:02 PM
Rajapart Rangadurai - "indha rajapart rangadurai ezhai allavO"-nu paadrache, that expression :great:

Over-acting-nu sollapadum style evLO rasikkapadakoodiyadhunnu indha padam pArthAl theriyum.
I mean, let it be over-acting but it is irresistible to watch. Subtle acting mattumE acting-nu ninaippavargaL pArka vEndiya padam.

Plum
7th January 2010, 06:02 PM
Sorry, NT pathi dhAn pEsa mudiyudhu. andha paattula varum thambi Srikanth-nu notice paNNadhE illai. NT screen-la irukkarachE vEra yaarum epdi shine aaga mudiyum?

mr_karthik
11th January 2010, 03:46 PM
Thanks mam, for the link you provided for my post about the song (which I forgot to do) :ty:


Sorry, NT pathi dhAn pEsa mudiyudhu. andha paattula varum thambi Srikanth-nu notice paNNadhE illai. NT screen-la irukkarachE vEra yaarum epdi shine aaga mudiyum?
Plum,
we cant completely avoid Shrikanth in that song. Whenever his face was shown in close-ups, முகத்தில் குழப்பம் நிறைந்த உணர்ச்சிகளை பிரதிபலித்திருப்பார். :thumbsup:

but we should accept, that NT fully dominated our minds. :2thumbsup:

Plum
11th January 2010, 05:07 PM
but we should accept, that NT fully dominated our minds.
That's the matter. I am not underestimating the skills of other actors. Just that one tends to be bedazzled by NT.

saradhaa_sn
13th January 2010, 06:39 PM
"சில நேரங்களில் சில மனிதர்கள்"

ஸ்ரீகாந்தின் புகழ் மகுடத்தில் ஒளிவீசும் வைரம்
லட்சுமிக்கு ஊர்வசி பட்டம் தந்த காவியம்
பீம்சிங்கின் கடைசி வெற்றிச்சித்திரம்
கருப்புவெள்ளை யுகத்தின் கடைசி வெற்றி அத்தியாயம்
ஜெயகாந்தனின் ஒப்பற்ற திரை ஓவியம்

.....இப்படி புகழ்மாலை சூட்டிக்கொண்டே போகலாம் இப்படத்துக்கு.

ஆர்ட் பிலிம் என்றாலே வெற்றிக்கும் அதற்கும் வெகுதூரம். மக்களைச் சென்றடையாது என்ற சித்தாந்தங்களைப் பொய்யாக்கி மாபெரும் வெற்றியடைந்ததன் மூலம், இதுபோன்ற திரைப்படங்களை எடுக்கும் தைரியத்தை தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு தந்த உன்னதச் சித்திரம்.

ஒரே வீட்டில் பல குடித்தனங்கள் சேர்ந்து, அதே சமயம் தனித்தனியாக வாழும் ஒண்டுக்குடித்தன வாழ்க்கையில் தன் தாயுடன் வசிக்கும் ஒருத்தி ஒரு மழைபெய்த மாலை நேரத்தில் காரில் வந்த காமுகனால் சூறையாடப்பட, அதை மறைக்கத்தெரியாமல் தாயிடம் வெகுளித்தனமாகச் சொல்லப்போக, அதை அந்தத்தாய் அவளைவிட வெகுளித்தனமாக, ஒண்டுக்குடித்தனக்காரர்கள் மத்தியில் விஷயத்தைப்போட்டு உடைத்து, மகளைத் அடிக்க, வெறும் வாய்களுக்கு கிடைத்த அவலாக, அவளது அந்த கருப்பு சம்பவம் அலசப்பட, அவள் களங்கப்படுத்தப்பட்டதை விட அதை வெளியில் சொன்னதுதான் மகா பாவம் என்ற நிலைமைக்கு ஆளாகிப்போனாள்.

முள்ளில் விழுந்த சேலையாக ரொம்ப ஜாக்கிரதையாகக் கையாளப்பட வேண்டிய கதை. கொஞ்சம் நூலிழை பிசகினாலும் விரசம எனும் பள்ளத்துக்குள் விழுந்துவிடக்கூடிய கதையை, இந்திய பாகிஸ்தான் பிரிவினையை விட கவனமாகக் கையாண்டிருந்தார் இயக்குனர் பீம்சிங். அதற்கு அடித்தளமாக அமைந்தது ஜெயகாந்தனின் யதார்த்தமான நடை.

ஊர்வாயில் விழுந்த அவலாக மெல்லப்படும் அவள் அவஸ்தை தாங்காமல் துடிப்பதை லட்சுமியை விட இன்னொருவர் சிறப்பாகக் காண்பித்திருக்க முடியுமா என்ன?. அதிலும் அந்த 'அக்கினிப்பிரவேசம்' என்ற நாவலை தாயிடம் கொடுத்து, அதில் வரும் குறிப்பிட்ட இடத்தைச்சுட்டிக்காட்டும்போது, மீண்டும் பழைய காட்சி... அம்மா சுந்தரிபாய் லட்சுமியை அடிக்கும்போது, வீடு மொத்தமும் எழுந்துபார்க்க.. 'ஒண்ணுமில்லே, இப்படி மழையிலே நனைஞ்சிட்டு வந்திருக்காளேன்னுதான் அடிச்சேன்' என்று சொல்ல மொத்த வீடும், மீண்டும் தங்கள் வேலையைப் பார்ப்பதைக்காண்பித்து, 'அன்னைக்கு மட்டும் நீ இப்படிச் சொல்லியிருந்தால், என் வாழ்க்கை இன்று சேற்றில் போட்டு இழுக்கப் பட்டிருக்குமா' என்பது போல லட்சுமி பார்ப்பாரே ஒரு பார்வை. அப்பப்பா... (தேசிய விருதுக்கமிட்டி அந்த இடத்தில்தான் விழுந்திருக்க வேண்டும்). எப்பேற்பட்ட ஒரு நடிகையை வெறுமனே டூயட் பாடவைத்ததன் மூலம், ஒரு நாதஸ்வரத்தை அடுப்பு ஊத பயன்படுத்தியுள்ளோம் என்ற குற்ற உணர்வு எழுகிறது.

ஸ்ரீகாந்த் மட்டும் என்னவாம். சூப்பர்ப். பாத்திரத்தின் தன்மைக்கு ஈடுகொடுத்து அற்புதமாகச்செய்துள்ளார். ஆரம்பத்தில் லட்சுமியை ஏமாற்றிவிட்டுப்போனதும், அவருக்கு வழக்கமான ரோல்தானோ என்று தோன்றும். ஆனால் மீண்டும் லட்சுமியைச் சந்தித்தபின், அவர் தொடரும் அந்த உறவில் அவர் காட்டும் கண்ணியம், நேர்மை. ஏற்கெனவே தனக்கு ஒரு குடும்பம் இருந்தும், லட்சுமியிடம் அவர் காட்டும் அன்பு, வரம்பு மீறாத பெரியமனுஷத்தனம் .....வாவ். இன்னும் ஒரு நாலைந்து படம் இதுபோல தேர்ந்தெடுத்து நடித்திருந்தால் மனிதர் எங்கோ போயிருப்பார்.

மறக்காமல் குறிப்பிடப்படவேண்டிய இருவர் அம்மாவாக வரும் சுந்தரிபாய் (வெகுளியான அம்மா), மற்றும் மாமாவாக வரும் ஒய்.ஜி.பார்த்தசாரதி. தங்கை மகள் கெட்டுப்போய்விட்டாள் என்று தெரிந்ததும், அவளைத் தான் அடைய அவர் மேற்கொள்ளும் முயற்சிகள், பெரிய மனிதனின் வக்கிர புத்திக்கு ஒரு எடுத்துக்காட்டு. சாய்வு நாற்காலியில் படுத்துக்கொண்டே, கட்டிலில் படுத்திருக்கும் லட்சுமியிடம் செய்யும் சேஷ்டைகள் எல்லைமீறுமுன், கொதித்தெழும் லட்சுமி அவரை பெல்ட்டால் விளாச, தன் மனதில் இருந்த சாத்தான் விரட்டியடிக்கப்பட்டதும், லட்சுமி தூக்கி எறிந்த பெல்ட்டை கையில் வைத்துக்கொண்டு கண்ணீர் சிந்தும்போது, இந்த மனிதர் ஏன் நாடக மேடைகளிலேயே தன்னைக் குறுக்கிக்கொண்டார் என்ற ஆதங்கம் நமக்கு வரும். அதற்கு ஈடாக இன்னொரு காட்சியைச் சொல்வதென்றால், மறுநாள் பொழுது விடிந்ததும் ஒய்.ஜி.பி., லட்சுமியின் அறைக்கதவைத்தட்டி, 'ஐ ஆம் லீவிங்' என்று சொன்னதும், லட்சுமி சட்டென்று அவர் காலில் விழுந்து நமஸ்கரிப்பாரே அதைச்சொல்லலாம்.

இப்படி, படிப்படியாக நம்மை படத்துடன் ஒன்றவைத்து, படம் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்ற நினைவை மாற்றி, அல்லது மறக்கடித்து, ஏதோ நம் கண்முன் நடந்துகொண்டிருக்கும் சம்பவங்களில் நாமும் ஒன்றாகிப்போனோம் என்ற நினைவில் நம்மைக்கொண்டு விடுவதால்தான், அந்த கிளைமாக்ஸ் காட்சி நம்மை அப்படி பாதிக்கிறது.

நம் ஊனையும் உருக வைக்கும் வாணி ஜெயராம் குரலில்....
'வேறு இடம் தேடிப்போவாளோ - இந்த
வேதனையில் இருந்து மீள்வாளோ' என்ற பாடல் பின்னணியில் ஒலித்துக்கொண்டிருக்க,
அவர் (ஸ்ரீகாந்த்) இனிமேல் மாட்டார் என்று தெரிந்தும், வாசலை வாசலைப் பார்த்துக்கொண்டும், திரைச்சீலை அசையும்போதெல்லாம் ஆவலோடு திரும்பிப் பார்த்துக்கொண்டும் இருக்கும் லட்சுமி இனி வரமாட்டார் என்ற நிதர்சனத்துடன் கடைசியில் ஸ்ரீகாந்த் கழற்றி வைத்துவிட்டுப்போன கோட்டை எடுத்து தன்னோடு அணைத்துக்கொள்ளும்போது, உணர்ச்சிப்பெருக்கால் நம் மனதில் விழும் சம்மட்டி அடி. (பின்னாளில், 'பூவே பூச்சூட வா' கிளைமாக்ஸில் நதியாவை ஆம்புலன்ஸில் கொண்டுபோனபின், கண்களில் நீருடன் மீண்டும் காலிங் பெல்லை பொருத்திக் கொண்டிருக்கும் பத்மினியைப் பார்த்தபோது, மீண்டும் மனதில் விழுந்த அதே சம்மட்டி அடி). ஆம், செல்லுலாய்டில் கவிதை வரையும் திறன் சிலருக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது.

படம் முடிந்தபின்னும் பிரம்மை பிடித்தது போன்ற உணர்வுடன், இருக்கையை விட்டு எழக்கூட மனமில்லாமல் எழுந்து செல்கையில், அடுத்த காட்சிக்காக கியூவில் நிற்பவர்களைப்பார்த்து, 'பீம்சிங் கொன்னுட்டாண்டா' என்று கத்திக்கொண்டு போகும் ரசிகர் கூட்டம் (அன்று 'பாகப்பிரிவினை' பார்த்துவிட்டு இவர்களது அப்பாக்கள் கத்திக்கொண்டு போன அதே வார்த்தை).

இப்படத்துக்கு அற்புதமான இசையைத் தந்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். 'கண்டதைச் சொல்லுகிறேன்' என்ற பாடலும், 'வேறு இடம் தேடிப்போவாளோ' என்ற பாடலும் படத்தின் தரத்தை மேலும் உயர்த்தின. பின்னணி இசையிலும் மனதை வருடியிருந்தார்.

தமிழ்த்தாயின் தலைமகன் ஜெயகாந்தன் எழுதி, முதலில் தினமணி கதிர் பத்திரிகையில் தொடர்கதையாகவும், பின்னர் முழுநாவலாகவும் வெளியாகி மக்கள் உள்ளங்களைக்கொள்ளை கொண்டு, கிடைத்தற்கரிய 'சாகித்ய அகாடமி' விருதையும் பெற்ற இந்நாவல், திரைப்படமாகிறது என்றதும் ஒரு பயம். காரணம் அதற்கு முன் திரைப்படமாக உருப்பெற்ற நாவல்களில் 95 சதவீதம், சிதைந்து உருமாறி, நாவலைப்படித்து விட்டு படம் பார்க்கச்சென்றோர் மனங்களை ரணமடையச்செய்தன என்பதுதான் உண்மை. ஆனால், இப்படி மாமல்லபுரம் சிற்பமாக இப்படம் உருப்பெற்று, உயர்ந்து நிற்கும் என்பது எதிர்பாராத இன்ப அதிர்ச்சி என்றால், 'சில நேரங்களில் சில மனிதர்கள்' என்ற இப்ப்டம் மாபெரும் வெற்றிப்படமாகவும் அமைந்தது தமிழ் ரசிகர்களை தலைநிமிரச்செய்தது. ஆம், 112-ம் நாள் படம் பார்க்கச்சென்று டிக்கட் கிடைக்காமல் ரசிகர்கள் திரும்பிய அதிசயமும் நடந்தேறியது.

லட்சுமிக்கு, இந்தியாவின் சிறந்த நடிகை என்ற தேசிய விருதான 'ஊர்வசி' விருதையும் பெற்றுத்தந்தது. ஸ்ரீகாந்த்தை நினைக்கும்போதெல்லாம் எனக்குத்தோன்றுவது, "உங்களுக்கு இந்த ஒரு படம் போதுமய்யா".

saradhaa_sn
20th January 2010, 02:36 PM
'சிலநேரங்களில் சிலமனிதர்கள்' படம் பற்றிய எனது பதிவுக்கு பலர் கண்டனம் தெரிவித்து பி.எம்.அனுப்பியிருந்தனர். (அவற்றை பி.எம்.மில் அனுப்பியிருக்க வேண்டியதில்லை. நேரடியாக இங்கேயே பதித்திருந்தால், திரியாவது கொஞ்சம் வளர்ந்திருக்கும்). நான் பலமுறை அந்தப்பதிவைப் படித்துபார்த்தும் எந்த ஆட்சேபமான விஷயமும் எனக்குத்தோன்றவில்லை.

இருப்பினும், Hubbers பார்வையில் அது ஆட்சேபத்துக்குரியது என்றால், அந்த பதிவை முழுவதும் நீக்க சம்மதித்து, நானே நீக்கிவிடுகிறேன்.

sivank
20th January 2010, 02:51 PM
[tscii:de052db80b]dear saradhaa,

please don´t remove Sila nerangalil sila manidhargal from this section. A great writeup for a very good film. As you mentioned if some one has something against it, let them write it here and we can discuss it here on the thread

Regards
sivan[/tscii:de052db80b]

saradhaa_sn
20th January 2010, 02:53 PM
[tscii:685822ff44]'தெய்வீக ராகங்கள்'

ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்து 1980-ல் இப்படி ஒரு படம் வந்தது எத்தனை பேருக்குத் தெரியும் என்பது தெரியவில்லை. கதாநாயகனால் வாழ்வு சூறையாடப்பட்டு, உயிரை இழந்த மூன்று பெண்கள் ஆவியாக வந்து (?????) அவரைப் பழிவாங்கும் கதை. நம் திரைப்படங்களுக்கு கதை 'பண்ணுபவர்களும்' கதாநாயகன் ஒரு படத்தில் நடித்ததை மனதில் கொண்டு, அந்த மாதிரியே அவருக்குத் தொடர்ந்து கதை பண்ணுவார்கள் போலும். அல்லது இம்மாதிரி கதை என்றால், அதுக்கு ஸ்ரீகாந்த் தான் என்று ஒதுக்கி வைத்துவிட்டார்கள் போலும். இப்படி குறிப்பிட்ட நடிகருக்கு குறிப்பிட்ட முத்திரை குத்துவதால்தான் அவர்கள் உண்மையான திறமைகள் வெளிவராமல், அல்லது வெளிவர வாய்ப்பளிக்கப்படாமல் போகிறது. ஒரு படத்தில் அவன் பிச்சைக்காரனாக நடித்தால் போச்சு. அப்புறம் பிச்சைக்காரன் ரோலா? கூப்பிடு அவரை என்ற கதைதான். ('ஞான ஒளி'யில் பாதிரியார் ரோலில் மணவாளன் என்கிற கோகுல்நாத் அருமையாக நடித்தார். சரி. உடனே 'பாரதவிலாஸ்' படத்தில் ஒரே ஒரு பாடல் காட்சியில் பாதிரியாராக வந்து 'நிற்பதற்கு' அவரை தேடிப்போய் அழைத்து வந்தார்கள்). சார்லிக்கு 'வெற்றிக்கொடி கட்டு' படத்தில் சேரன் துணிந்து கொடுத்த அற்புதமான ரோலின் மூலம்தானே சார்லியின் பன்முகத்திறமை வெளித்தெரிந்தது?. அப்படியில்லாமல், ‘கற்பழிப்புக்காட்சி கொண்ட பாத்திரமா?. கொண்டா ஸ்ரீகாந்தை’ என்று அப்போதைய இயக்குனர்கள் கடிவாளம் பூட்டிய குதிரைகளாக இருந்தனர், சிலரைத்தவிர. (ஸேஃப்டிக்கு இப்படி ஒரு வார்த்தையை போட்டு வச்சிக்குவோம்).

தன்னிடம் வேலைக்கு வரும் பெண்களை கற்பை சூறையாடி, அவர்களை அருவியில் தள்ளி, தற்கொலை அல்லது விபத்துபோல செட்டப் செய்யும் ஸ்ரீகாந்தை, சட்டமோ, போலீஸோ தண்டிக்க முடியாத காரணத்தால், அவரால் கொல்லப்பட்ட மூன்று பெண்களே பேயாக மாறி, ஆனால் பெண் உருக்கொண்டு அவரைப்பழி வாங்குவதான (??) புதுமையான (??) கதை. அதில் ஒரு பேயாக, அதாவது ஸ்ரீகாந்தினால் ஏமாற்றப்பட்ட பெண்ணாக வடிவுக்கரசி நடித்திருந்தார். மற்ற இருவர் யாரென்பது சட்டென நினைவுக்கு வரவில்லை, எனினும் அப்போதிருந்த இரண்டாம் நிலைக் கதாநாயகிகள்தான்.

ஆரம்பத்தில் ஸ்ரீகாந்தை ஒரு சிதார் இசைக்கலைஞனாக அறிமுகப்படுத்தி, கேட்போர் மனம் உருகும் வண்ணம் சிதார் இசைப்பவராக காண்பித்தபோது, 'பரவாயில்லையே, நல்ல கௌரவமான ரோல் கொடுத்திருக்காங்களே என்று தோன்றும். ஆனால் கொஞ்ச நேரத்திலேயே (அடடே நாம ஸ்ரீகாந்துக்கல்லவா கதை பண்ணுறோம் என்பது கதாசிரியருக்கும் இயக்குனருக்கும் நினைவு வந்திருக்க வேண்டும்) அவரை காம விகாரம் கொண்டவராகக் காண்பித்து, வழக்கமான ட்ராக்கில் திருப்பி அந்தப் பாத்திரத்தின் தன்மையையே குட்டிச்சுவர் பண்ணி, கதையை சொதப்பி விட்டனர்.

படத்தில் பாதிக்கு மேல் பேய்கள் ஸ்ரீகாந்தின் வீட்டில் வந்து டேரா போட்டுக்கொண்டு அவரை பாடாய் படுத்துவது, பார்க்க கொஞ்சம் தமாஷாக இருக்கும். மூன்று பேயகளுக்குள் நல்ல கூட்டணி. அதனால் கொஞ்சம்கூட பிசகாமல் ஸ்ரீகாந்திடமிருந்து அத்தனை தொகுதிகளையும் கைப்பற்றுகின்றன. பேய்களுக்கு கால்கள் இல்லையென்று யார் சொன்னது?. அதில் ஒரு பேய் பரதநாட்டியமே ஆடுகிறது. பேய்களின் அட்டகாசத்திலிருந்து தன்னைக் காப்பாற்றச்சொல்லி ஸ்ரீகாந்த் ஒரு ஏஜென்ஸியை நாடிப்போக, அதிலிருந்து வரும் இரண்டு அதிகாரிகள் சரியான கோமாளிகள். தங்களது அசட்டுத்தனத்தால் நம்மைச் சிரிக்க வைக்கிறார்கள். அதிலும் பேய்களை அண்டாவுக்குள் தேடுவது நல்ல தமாஷ். அவர்களில் ஒருவர் வி.கோபாலகிருஷ்ணன், இன்னொருவர் வெண்ணிற ஆடை மூர்த்தியா? நினைவில்லை.

வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் இன்னொருவர் சுருளிராஜன். பேய்களுக்குப்பயந்து தன்னுடன் இரவில் தங்க ஸ்ரீகாந்த் சுருளியை அழைத்துவர, அவரோ கனவில் பேயைக்கண்டு அலறி ஸ்ரீகாந்தை இன்னும் அச்சமூட்டுகிறார். கனவில் சுடுகாட்டுவழியே செல்லும் சுருளி, அங்கே ஒரு சமாதியின்மேல் அமர்ந்திருக்கும் ஒரு பெரியவரிடம், 'ஏன்யா, எந்த பெரிய மனுஷன் சமாதியோ. அதுல காலையும் மேலே வச்சிக்கிட்டு உட்கார்ந்திருக்கியே' என்று கேட்க அதற்கு அவர் (அது..?) 'நான்தான் தம்பி, உள்ளே புழுக்கம் தாங்கலைன்னு வெளியே வந்து உட்கார்ந்திருக்கேன்' என்றதும் அலறியடித்துக்கொண்டு ஓடும்போது, அங்கே நடந்து போய்க்கொண்டிருக்கும் இன்னொரு பெரியவரிடம் 'ஏங்க இந்த பேய் பிசாசையெல்லாம் நம்புறீங்களா?' என்று கேட்க, அவர் 'எவனாவது உயிரோடு இருப்பன்கிட்டே போய்க்கேளு. நான் செத்து அஞ்சு வருஷமாச்சு' என்று சொன்னதும் அலறிக்கொண்டு எழுவாரே... அந்த இடத்தில் தியேட்டரே சிரிப்பில் அதிரும்.

பேய்களுக்குப்பயந்து வீட்டைவிட்டுத் தப்பிப்போகும் ஸ்ரீகாந்தை ஒவ்வொருமுறையும் பேய்கள் வழியில் மடக்கி வீட்டுக்குக் கொண்டுவந்து சேர்ப்பது சுவையான இடங்கள். அதுபோலவே, தனக்கு நடக்க இருந்த திருமணம் நின்றுபோனதை நியூஸ் பேப்பர் மூலம் படிக்கும் ஸ்ரீகாந்த், அப்படியானால் தான் திருமணம் செய்துகொண்டு அழைத்து வந்த பெண்கூட உண்மையான பெண்ணல்ல அதுவும் கூட ஒரு பேய்தான் என்று அதிர்ச்சியடைவதும் இன்னொரு சுவாரஸ்யமான இடம். பேய்களின் அட்டகாசத்துக்குத் தோதாக ஒரு காட்டு வனாந்திரத்தில் இருக்கும் ஸ்ரீகாந்தின் பங்களா, முடிந்தவரையில் திகிலூட்டுவதற்காக பெரும்பாலான காட்சிகளை இரவு நேரத்திலேயே (தமிழில் சொன்னால் 'நைட் எஃபெக்ட்') எடுத்திருக்கும் புத்திசாலித்தனம் தெரிகிறது.

நடிப்பைப்பொறுத்தவரை ஸ்ரீகாந்த் மிகச்சிறப்பாக நடித்திருந்தார். அவருடைய ரோல் ஒருமாதிரியாக சித்தரிக்கப் பட்டிருந்தபோதிலும், அதிலும் தன் திறமையான நடிப்பால், ஈடுகட்டி பேலன்ஸ் பண்ணியிருந்தார். கதை இவரைச்சுற்றியே அமைந்ததாலும், படத்தில் குறைவான கதாபாத்திரங்களே பயன்படுத்தப்பட்டிருந்ததாலும், படத்தின் அதிகப்படியான காட்சிகளில் இவரே நிறைந்திருந்தார். இவருக்கு அடுத்து மூன்று பேய்களுமே நன்றாக நடித்திருந்தனர். மூவரும் பெண்ணாக வந்ததை விட பேயாக வந்தபோது கச்சிதமாகப்பொருந்தினர். (same side goal).

படத்துக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். ஆரம்பத்தில் சிதார் இசைக்கலைஞராக ஸ்ரீகாந்தைக் காண்பிக்கும்போது, அழகாக இதமான சிதார் இசையால் வருடியிருப்பார். பின்னர் பேய்கள் அட்டகாசம் துவங்கியதும் அவருக்கே உரிய அதிரடி திகில் பின்னணி இசையால் நம்மை பயமுறுத்துவார். இவரது இசையில் இப்படத்தில் வாணி ஜெயராம் பாடிய இரண்டு பாடல்கள் கேட்கும்படி இருந்தன. ஆனால் முதலடிதான் எவ்வளவு யோசித்தும் நினைவுக்கு எட்ட மறுக்கிறது. படத்தில் கேட்டதோடு சரி. பின்னர் வானொலி/தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பினால் அல்லவா நினைவில் நிற்கும்?. அவர்கள் ஒரு பட்டியல் போட்டு வைத்துக்கொண்டு அவற்றையே திரும்ப... திரும்ப... திரும்ப... திரும்ப... திரும்ப... திரும்ப... திரும்ப... திரும்ப... திரும்ப... திரும்ப... ஒளிபரப்பிக்கொண்டு இருப்பார்கள்.

எல்லாம் சரிம்மா, படம் எப்படி ஓடியதுன்னு கேட்கிறீங்களா?. இயக்குனர் (பாடலாசிரியர்/இசையமைப்பாளர்) கங்கை அமரன் (இப்படத்தின் இயக்குனர் அவர் அல்ல) தான் இயக்கிய சில படங்கள் வெற்றி வாய்ப்பை இழந்த நேரங்களில் ஒரு காரணம் சொல்வார். அதாவது, 'தன்னுடைய படம் வெளியான நேரம், மக்கள் கைகளில் பணப்புழக்கம் இல்லாமல் போனதால், மக்களால் அந்தப்படத்தைப் பார்க்க முடியாமல் போய்விட்டது' என்பார். அதுபோலவே 'தெய்வீக ராகங்கள்' என்ற இந்தப்படம் வெளியான நேரத்திலும் மக்கள் கைகளில் பணப்புழக்கம் இல்லாமல் போய்விட்டது. புரிந்திருக்குமே..!
[/tscii:685822ff44]

Plum
20th January 2010, 02:56 PM
I didnt find anything objectionable in SNSM writeup :huh:

It was a well written write up on a good movie. Please dont delete :-(

saradhaa_sn
20th January 2010, 04:49 PM
Dear Sivan.K & Plum

Thank you verymuch for your positive replies, which give me more clarity on this.

tvsankar
20th January 2010, 05:36 PM
sn,
Nalla than solli irukeenga.
Delete seiya vendam...

Objection solla enna iruku ena theiryavilai.

Dont Delete.....

abkhlabhi
20th January 2010, 05:54 PM
Dear Saradhaa Madam,

Excellant write up on SNSM. though this thread belongs to srikanth and lot of praises from you on Lakshmi, MSV, etc. I expected few words on RK Vishwanatha sharma - brilliant performance of the Legend Nagesh. I read more than 10 times , but i could not find. I think by oversight you omitted to mention Nagesh. Expect more from you on Oru Nadigai Nadagam Parkiral - same combination - Jayakanthan, Lakshmi, Srikanth, Nagesh. An Trend setter in TF.

rajeshkrv
20th January 2010, 09:31 PM
sundarbai excelled in the role. the day when lakshmi scolds her saying that father died long ago and why didnt she shave her head off and the next day she will do that and the dialouge whic follows will be amazing. Sundari bai's excellent performance

saradhaa_sn
21st January 2010, 10:56 AM
நன்றி உஷா, பாலா & ராஜேஷ்...
உங்கள் பதிவுகளையே 'அவர்களுக்கு' பதிலாக வைக்கிறேன்.

பாலா,

மன்னிக்கவும், நாகேஷின் அற்புதமான பங்களிப்பை குறிப்பிட மறந்ததற்கு. சர்மாவாக நடித்திருக்கிறார் என்பதைவிட வாழ்ந்திருக்கிறார் என்பதே உண்மை. சைக்கிளில் போகும்போது ஒரு காலை தூக்கி சொறிந்துகொள்ளும்போதும் சரி, பேப்பர்கள் காற்றில் பறக்கும்போது, தான் ஓடிப்பிடித்த ஒரே பேப்பரை பறக்க விடும்போதும் சரி... இப்படி பல இடங்களில் யதார்த்த நடிப்பை தந்து மனதைக் கவர்கிறார். அவருக்குச் சொல்லணுமா?. பிறவிக்கலைஞராச்சே.

ராஜேஷ்,

நீங்கள் சொன்னபடி சுந்தரிபாய் நடிப்பு படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று. அவரைப்பற்றி ஜஸ்ட் ஒரே வரி மட்டுமே குறிப்பிட்டிருந்தேன். நீங்கள் சொன்ன அந்தக்காட்சி அப்படியே மனதில் நிற்கிறது. 'சம்பிரதாயம் பற்றி வாய்கிழிய பேசுறியே, அப்பா செத்து எத்தனை வருஷமாச்சு, சம்பிரதாயப்படி உன் தலையை மொட்டையடிச்சியா?' என்று மகள் லட்சுமி கேட்ட கேள்விக்கு வாயால் பதில் சொல்லாமல், மறுநாள் காலை தலையை மொட்டையடித்து, குளித்துவிட்டு சொட்டசொட்ட நனைந்தபடி வந்து நிற்பாரே அந்த இடம் ஒண்ணு போதும், அவர் பங்களிப்பை பறைசாற்ற.

sudha india
21st January 2010, 03:21 PM
Dear Saradha

Sila nerangalil..... write up marupadiyum padichadhil delete panra alavukku onnume ille.
Pl retain.

groucho070
21st January 2010, 03:41 PM
Yeah, what's wrong with it, mdm? It's a good writeup, conjures up the same thing I feel about the film...was especially impressed with YGP. Shreekanth's penchant for negative roles actually helped with this film, when you begin by thinking of him as a bad guy then are bowled over by his warmthness. To the point that yeah...you do want to forgive him for that what he has done to Lakshmi. Leaves you conflicted actually. Was waiting for this review, madam. Thanks.

saradhaa_sn
22nd January 2010, 02:13 PM
Dear Saradhaa Madam,

Expect more from you on Oru Nadigai Nadagam Parkiral - same combination - Jayakanthan, Lakshmi, Srikanth, Nagesh. An Trend setter in TF.

Dear Bala, தங்கள் விருப்பப்படியே எழுதுகிறேன்.

அதற்கு முன்பாக, ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்த இன்னொரு 'வித்தியாசமான' படம் பற்றிய பதிவு.

இதோ.....

saradhaa_sn
22nd January 2010, 04:44 PM
'இவர்கள் வித்தியாசமானவர்கள்'

ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்த இன்னொரு வித்தியாசமான படம்.

எழுபதுகளின் இறுதிப்பகுதிகளில், முழுநேர நாடக நிறுவனங்களில் மனோகரின் நேஷனல் தியேட்டர்ஸ் போன்ற ஒரு சிலவே தொடர்ந்து நாடகங்கள் நடத்திக்கொண்டிருக்க, சென்னை நாடக அரங்குகளில் பெரும்பாலும் அமெச்சூர் நாடகமன்றங்களே கோலோச்சிக்கொண்டிருந்தன. அப்படியான அமெச்சூர் நாடகக்குழுவில் கோலோச்சிக்கொண்டிருந்த ஒருவர் கதாசிரியர், வசனகர்த்தா, மற்றும் இயக்குனர் என்ற முப்பரிமாணங்களுடன் 1979-ல் திரையுலகில் கால் பதித்தார். அவர்தான் இன்றைக்கும் திரையுலகில் வலம் வந்துகொண்டிருக்கும் "மௌலி". அவருடைய வித்தியாசமான சிந்தனையில் உருவானதுதான் 'இவர்கள் வித்தியாசமானவ்ர்கள்' திரைப்படம்.

ஒரு அலுவலகத்தில் மாதச்சம்பளத்தில் மேனேஜராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஸ்ரீகாந்த். அவருக்கு பாந்தமான மனைவியாக ஸ்ரீவித்யா மற்றும் இரண்டு குழந்தைகள் என அழகான அளவான குடும்பம். வித்யாவின் சித்தப்பாவாக நாகேஷ். இந்நிலையில் அதே அலுவலகத்துக்கு உதவி மேனேஜராக தலைமை அலுவலகத்திலிருந்து பணி மாற்றம் செய்யப்பட்டு வந்து சேரும் 'படாபட்' ஜெயலட்சுமி. திருமணம் ஆகியிராத அவருக்கு ஆதரவு நிழகாக இருக்கும் தந்தை பூர்ணம் விஸ்வநாதன். அலுவலகத்தில் மேனேஜர் ஸ்ரீகாந்துக்கும், உதவி மேனேஜர் ஜெயலட்சுமிக்கும் 'ஈகோ' பிரச்சினை படிப்படியாக வளர்ந்து, ஒரு கட்டத்தில் தாங்க முடியாத நிலை வரும்போது, அங்கிருந்தே மாற்றல் வாங்கி சென்றுவிடத்துடிக்கும் ஜெயலட்சுமி. அவரை அப்படியே ஸ்ரீகாந்த் போக விட்டிருந்தாரானால் படம் மூன்றாவது ரீலில் முடிந்துவிட்டிருக்கும் (?). ஆனால் போகாமல் தடுக்கும்போது, ஸ்ரீகாந்தின் நல்ல மனம் ஜெயலட்சுமியின் மனதில் சலனத்தை ஏற்படுத்த, வந்தது வினை. காந்த் திருமணமாகி, குழந்தைகளுடன் வாழ்பவர் என்று தெரிந்தும் ஜெயலட்சுமி அவரைக் காதலிக்க, அதைத்தவிர்க்க முடியாத நிலையில் ஸ்ரீகாந்தும் ஏற்றுக்கொள்ள, இதற்கு அப்பாவியான முதல் மனைவி ஸ்ரீவித்யாவும் சம்மதிக்க, தந்தை பூர்ணம் ஊரில் இல்லாதநேரம் அவர்கள் திருமணம் நடந்துவிடுகிறது. அதைத்தொடர்ந்து இரண்டு பெண்டாட்டிக்காரரான ஸ்ரீகாந்த் வாழ்வில் படும் அவஸ்தைகளை வைத்து சுவையாக படத்தைக்கொண்டு சென்றிருப்பார் மௌலி. இன்னொன்றைக் குறிப்பிட விட்டுவிட்டேன். கதை, வசனம், இயக்கத்தோடு நிற்காமல் நான்காவது பரிமாணமாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிகராகவும் உருவெடுத்திருப்பார் மௌலி. மனைவியிழந்தவராக வரும் இவர், கைவிடப்பட்ட குடும்பத்துக்கு ஆதரவாக மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

ஸ்ரீகாந்துக்கு இப்படத்தில் கிடைத்த பொறுப்புமிக்க கதாபாத்திரம், ஏற்கெனவே அவர்மேல் திணிக்கப்பட்டிருந்த இமேஜை உடைத்து, எந்த ரோலிலும் தன்னால் சோபித்துக்காட்ட முடியும் என்ற புதிய முகவரியைத்தந்தது என்றால் மிகையல்ல. இரண்டு வீட்டுக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு திண்டாடும் நிலையை மிக அற்புதமாக வெளிப்படுத்தியிருந்தார். கடைசியில் இரண்டு வீடுமே இல்லாமல் போய், தனியாளாக அலையும் போது (பின்னணியில் மெல்லிசை மன்னரில் குரலில் 'இரண்டு வீடு இரண்டு கட்டில், படுக்க இடமில்லை' பாடல் ஒலிக்க) கடற்கரை மணலில் அலையும் அவர், ஒன்றுமாற்றி ஒன்று அறுந்து போகும் இரண்டு செருப்புக்களையும் உதறி எறிந்துவிட்டு வெறும் காலுடன் செல்வது நல்ல டைரக்டோரியல் டச்.

ஸ்ரீவித்யா அப்படியே ஒரு அப்பாவி மனைவியை கண்முன் கொண்டு வந்திருப்பார். கணவர் ஸ்ரீகாந்தை 'ராமுப்பா... ராமுப்பா..' என்று அழைத்தவண்ணம் படத்தின் முற்பகுதியில் வளைய வரும்போதே அனைவரது அபிமானத்தையும் பெற்றுவிடுகிறார். (அதென்ன ராமுப்பா?. தன் மகன் ராமுவுடைய அப்பாவாம்). கணவரின் இரண்டாவது மனைவியான படாபட் ஜெயலட்சுமிக்கு குழந்தை பிறந்ததைப் பார்க்கச்செல்லும் அவர், தன் கணவர் தன்னையும் தன் குழந்தைகளையும் மறந்து இரண்டாவது மனைவியே கதி என்று இருப்பதைச் சுட்டிக்காட்ட, அங்கு கிடக்கும் தூசி படிந்த தலையணையைத் தட்டி, 'அப்பப்பா தலையணையெல்லாம் ஒரே தூசி படிஞ்சு கிடக்கு' என்று சொல்லும் இடத்தில் மௌலி தெரிகிறார்.

இவரது சித்தப்பாவாக வரும் நாகேஷ் பற்றி சொல்லவே வேண்டாம். பிரமாதப்படுத்தியிருப்பார். அத்தானின் இரண்டாவது திருமணத்துக்கு ஸ்ரீவித்யா சம்மதித்து விட்டார் என்பதையறிந்து கொடுப்பாரே ஒரு பஞ்ச் டயலாக்.. சூப்பர். கடைசியில் ஸ்ரீவித்யாவிடம் 'உன் புருஷனோட கல்யாணத்தில் நீ எங்கே இருப்பே?. புருஷனோட ரெண்டாவது கல்யாணத்துல முதல் மனைவி எங்கே இருக்கணும்னு இந்து தர்மத்துல சொல்லலியேம்மா' என்று கேட்கும் இடத்தில் அவர் முகத்தில் தெரியும் அந்த ஏக்கமும் ஏமாற்றமும்.. யப்பா.

'படாபட்' ஜெயலட்சுமியிடம் நல்ல பாந்தமான நடிப்பு. அந்த நேரத்தில் அவர் முள்ளும் மலரும், தியாகம், 6 லிருந்து 60 வரை என அசத்திக்கொண்டிருந்த நேரம். இந்தப்படத்திலும் அசத்தியிருந்தார். தேனிலவுக்காக ஸ்ரீகாந்துடன் வெளியூர் சென்று ஓட்டல் அறையில் நுழைந்த சற்று நேரத்திலேயே, வித்யாவின் குழந்தைக்கு விபத்து என்று போன் வர, முகத்தில் தோன்றும் ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு, 'புறப்படுங்க.. போகலாம்' என்று சொல்வாரே, அந்த இடத்தில் அவர் பார்வையும், அதற்கு பதிலளிப்பது போல 'என்னை மன்னித்துவிடு, வேறு வழியில்லை' என்பது போல ஸ்ரீகாந்த் அவரைப் பார்ப்பாரே அந்தப்பார்வையும் வசனமின்றி உணர்ச்சிகளைக்கொட்டும். அதேபோல இன்னொரு கட்டத்தில், வெளியூரிலிருந்து வரும் பூர்ணம் தன் வீட்டில் ஸ்ரீகாந்த் குளித்துக்கொண்டிருப்பதை கேள்விக்குறியுடன் பார்க்க, 'அவர் யாருடைய வீட்டிலோ குளிக்கிறார்னு பார்க்காதீங்கப்பா. அவருக்கு உரிமையான வீட்டில்தான் குளிச்சிக்கிட்டிருக்கார்' என்று சொல்லி, தனக்கும் அவருக்கும் திருமணம் நடந்துவிட்டதை நாசூக்காக உணர்த்துமிடமும் அப்படியே. ஆனால் அதைக்கேட்டதும் அதிரும் பூர்ணம் மகளிடம் ஒரு வார்த்தையும் பேசாமல், நேராகச்சென்று சுவரில் மாட்டப்பட்டிருக்கும் சாமி படத்தை உடைப்பதும், அதைப்பார்த்து ஜெயலட்சுமி அதிர்வதும் உணர்ச்சிகளின் உச்சம்.

மனதில் எதையும் மறைக்கத்தெரியாத வெள்ளந்தியான அப்பாவாக வரும் 'பூர்ணம்' விஸ்வநாதனுக்கு யார் அந்தப்பெயர் வைத்தார்களோ தெரியாது. ஆனால் பெயருக்கேற்றாற்போல நடிப்பில் பரி'பூரணம்'. மகளின் திருமணத்துக்கு முன் மகளின் மேலதிகாரியான ஸ்ரீகாந்த் வீட்டுக்கு வரும் அவர், அங்கிருக்கும் நாகேஷ் ஒரு பழைய பட்டாளத்து வீரர் எனப்தையறிந்து, பட்டாளத்திலிருக்கும் யாரோ (நாகேஷுக்கு முன்பின் தெரியாத) தன் பழைய நண்பனைப்பற்றி அசால்ட்டாக விசாரிக்கும்போது தெரியும் அப்பாவித்தனம் அவரது தேர்ந்த நடிப்புக்கு ஒரு சான்று.

ஸ்ரீகாந்த், ஸ்ரீவித்யா, 'படாபட்'ஜெயலட்சுமி, மௌலி, நாகேஷ், பூரணம் விஸ்வநாதன் ஆகியோர் நடித்திருந்த இப்படத்துக்கு 'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். வித்யாவுக்காக வாணி ஜெயராம் பாடிய பாடலும் (முதலடி தெரிந்தவர்கள் சொல்லுங்கள்), எம்.எஸ்.வி. பாடிய (நான் முன் குறிப்பிட்ட) பாடலும் மனதைக்கவர்ந்தன. குடும்பக்கதைக்கேற்ற சுகமான ரீ-ரிக்கார்டிங். படம் துவங்கும்போது ஆகாசவாணியின் இசையை மெல்ல பின்னணியில் ஒலிக்கவிட்டிருப்பது ஜோர்.

வித்தியாசமான ஒரு படத்தைத்தந்த 'இவர்கள்' நிச்சயம் 'வித்தியாசமானவர்கள்'தான்.

sudha india
22nd January 2010, 05:51 PM
Write up padichadhume padam paarka vendum pola irukku Saradha. Interesting !

En thaan indha padangalellam TV channelsla podaradhe illenu theriyalai.

Thiraikku vandhu sila maadhangale aana padangal poduvadharke neram podhavillaiye :lol:

rajeshkrv
22nd January 2010, 10:25 PM
wonderful writeup.

Yen dhan araitha maavaye araikiraargalo indha TV channelgal ellam.

evvallavu nalla padangal ullanga adhaiyellam pottal than enna

sudha sonnadhu pola indha padathai paarkavendum endru manam solgiradhu. kadhai konjam Irukodugal saayalil irukkiradhu

Murali Srinivas
22nd January 2010, 11:42 PM
இவர்கள் வித்தியாசமானவர்கள் பற்றிய பதிவு சூப்பர். உங்கள் எழுத்து நடையில் 30 வருடங்களுக்கு பிறகு [படம் வெளியானது 1980 ஏப்ரல் மாதம் என்று நினைக்கிறேன்] மீண்டும் படம் பார்த்த திருப்தி. படத்தைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் நினைவிற்கு வரும் வசனம் படாஃபட் ஸ்ரீகாந்திடம் சொல்லும் " I am Assistant Manager and not assistant to the Manager".

தொடருங்கள்.

அன்புடன்

saradhaa_sn
23rd January 2010, 11:04 AM
நன்றி முரளி, ராகேஷ், சுதா மற்றும் ராஜேஷ்..... 'இவர்கள் வித்தியாசமானவர்கள்' பதிவுக்கு அளித்த வரவேற்புக்கு.

நீங்கள் சொல்வது உண்மைதான். எத்தனையோ நல்ல படங்களை தொலைக்காட்சியினர் ஒளிபரப்பாமல், ஏற்கெனவே போட்ட படங்களையே முப்பத்தி எட்டாவது தடவையாக ஒளிபரப்பி நம்மை சலிப்படைய வைக்கின்றனர். நீங்கள் மட்டுமல்ல நானும் இதுபோன்ற படங்களை தொலைக்காட்சியில் ரொம்ப ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் (ஏற்கெனெவே பார்த்திருந்த போதிலும்)

சுதா சொன்னது போல, 'திரைக்கு வந்து சில மாதங்களே ஆன' திரைப்படங்களுக்கு மத்தியில், 'திரைக்கு வந்து பல வருடங்கள் ஆன' நல்ல படங்களையும் டி.வி.யினர் கண்டுகொள்ள வேண்டும்.

(அது சரி, நான் மிகவும் ரசித்து எழுதிய 'தெய்வீக ராகங்கள்' பதிவை யாருமே கண்டுகொள்ளவில்லையே. தொலைக்காட்சியினரின் பாதிப்பா...?)

saradhaa_sn
25th January 2010, 01:11 PM
[tscii:c39368fa6b]'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' - ( 1 )

ஜெயகாந்தனின் மற்றுமொரு நாவல் அதே கூட்டணியால் (ஜெயகாந்தன் - பீம்சிங் - எம்.எஸ்.வி - ஸ்ரீகாந்த் - லட்சுமி) மீண்டும் ஒரு கருப்பு வெள்ளைச் சித்திரமாக உருவானது. (இப்படம் முடிவதற்குள் இயக்குனர் பீம்சிங் மறைந்து விட்டார் என்பதாக நினைவு. 'பா'வன்னா பிரியரான அவரது இறுதிப்படம் 'பாதபூஜை' என்பதாகவும் நினைவு. இதை உறுதிப்படுத்துவது போல ‘ஒரு நடிகை நாடகம்.பார்க்கிறாள்' படத்தின் டைட்டிலில் 'டைரக்ஷன் 2வது யூனிட் திருமலை மகாலிங்கம்' என்று காண்பிக்கப்படும்). படத்தின் தலைப்பு எதைச்சொல்கிறது என்பது படம் பார்க்கும்போதுதான் விளங்குகிறது. ஒரு நாடக நடிகை தன் வாழ்க்கையையே நாடகமாகப் பார்க்கிறாள் என்பதை உணர்த்துகிறது.

நாடகக்குழு நடத்தும் அண்ணாசாமி (ஒய்.ஜி.பார்த்தசாரதி)யின் நாடகங்களில் நடிக்கும் பிரதான நடிகை கல்யாணி (லட்சுமி). தாய் தந்தை உற்றார் உறவினர் யாருமில்லாத கல்யாணிக்கு ஆதரவாக இருந்து வருபவரும் அண்ணாசாமிதான். கல்யாணியின் வீட்டிலேயே ஒரு பகுதியில் நாடகத்துக்கான இசைக்குழு வைத்து ஒத்திகை பார்க்கும் தாமு (ஒய்.ஜி.மகேந்திரன்). கல்யாணியின் ஒரே துணையாக வேலைக்காரி மற்றும் சமையல்காரி பட்டு. நாடகங்களை விமர்சித்து பத்திரிகைகளில் எழுதும் விமர்சகர் ரெங்கா (ஸ்ரீகாந்த்). தன் நாடகங்களை விமர்சித்து ரெங்கா எழுதுவது அண்ணாசாமிக்குப் பிடிக்கவில்லை. ஆனால் கல்யாணிக்கு விமர்சகர் ரெங்கா மீது ஈர்ப்பு. தன்னை சந்திக்க வருமாறு கையெழுத்தில்லாத கடிதமொன்றை அவள் அனுப்ப, குழம்பிப்போகும் ரெங்கா, தன் பத்திரிகைக்கு பேட்டியளிக்க முடியுமா என்று கேட்டு கல்யாணிக்கு கடிதமெழுத, கல்யாணி சம்மதிக்க ரெங்கா அவள் வீட்டுக்குப்போகிறான். பேட்டி நடக்கிறது. இடையில் கல்யாணிக்கு ஒரு சந்தேகம், ரெங்காவுக்கு திருமணம் ஆகியிருக்குமா என்று. பேச்சோடு பேச்சாக அண்ணாசாமி 'உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?' என்று கேட்க, 'ஐந்து வயதில் ஒறே பெண் குழந்தை'யென ரெங்கா சொன்னதும், அவள் முகம் ஏமாற்றம் அடைகிறது. ஆனால் அடுத்த வினாடியே தன் மனைவி முதல் குழந்தையின் பிரசவத்தில் இறந்துபோய்விட்டதாகவும், குழந்தை தன் மாமனார் வீட்டில் வளர்வதாகவும் சொல்ல, மீண்டும் அவள் முகத்தில் மகிழ்ச்சி. பேட்டியை எழுத்து வடிவில் முடித்து கல்யாணியிடம் காண்பிக்க மறுநாள் வரும்போது வீட்டில் பட்டுவும் இல்லை, தாமுவும் இல்லை, அண்ணாசாமியும் இல்லை. தனிமையில் இருவரும் மனம் விட்டுப்பேச, அவர்களுக்குள் ரெஜிஸ்ட்டர் திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையைத் தொடர்வது என்று முடிவெடுக்கின்றனர். இது கல்யாணியின் சொந்த வாழ்க்கை என்பதால் அண்ணாசாமியால் எந்த மறுப்பும் தெரிவிக்க முடியவில்லை.

ஆனால் தாய், தந்தை, முதல் மனைவி யாவரையும் இழந்து சித்தப்பாவோடும் சித்தியோடும் வாழும் ரெங்காவின் மறுமணம் சித்தப்பாவுக்கும் சித்திக்கும் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. மறுமணம் கூடாதென்பதல்ல அவர்கள் எண்ணம், ஆனால் வரப்போகும் புது மருமகள் தங்கள் ஜாதியாக இருக்கவேண்டும் என்று எண்ணும் பிற்போக்குத்தனத்தில் ஊரியவர்கள். அதுபோல ரெங்காவின் மறுமணம், ஊரிலிருக்கும் அவருடைய (முன்னாள்) மாமனாருக்கும், (அக்காவின் கணவர் தன்னையே மறுமணம் செய்வார் என்ற எண்ணத்தோடு அக்காவின் குழந்தையை தன் குழந்தையாக வளர்த்து வரும்) ரெங்காவின் கொழுந்தியாளுக்கும் பிடிக்கவில்லை, அவர்கள் குழந்தையையும் ரெங்காவிடம் தர மறுத்து அனுப்பிவிடுகின்றனர்.

ஓரளவு வசதியான வீட்டில், ஓரளவு வசதியான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும் கல்யாணியை, தானும் தன் சித்தப்பா (தேங்காய் சீனிவாசன்) மற்றும் தொத்தா என்று த்ன்னால் அழைக்கப்படும் சித்தி (காந்திமதி) ஆகியோர் வாழும் ஓட்டுவீட்டில் குடிவைத்து சங்கடப்படுத்த விரும்பாத ரெங்கா, தானும் அவளோடு அந்த வசதியான வீட்டிலேயேயே தங்கி வாழ்க்கை நடத்துகிறான். ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் எல்லாம் முடிந்ததும், ரெங்காவின் மனதில் தாழ்வுணர்ச்சி தலைதூக்குகிறது. தானும் சம்பாதித்து அவளும் சம்பாதித்து வாழ்வதை விட, தன் சம்பாத்தியத்தில் அவளும் வாழ்வதே சரிப்படும் என நினைக்கிறான். ஆனால் கல்யாணிக்கோ உயிரை விடுகிறாயா, நாடகத்தை விடுகிறாயா என்ற கேள்வி வரும்போது உயிரையே விடுகிறேன் என்று தேர்ந்தெடுக்கும் ரகம். அந்த அளவுக்கு நாடகமேடை அவளது உயிர்நாடி. விளைவு..?. சின்னசின்ன விஷயத்துக்கெல்லாம் அவர்களுக்குள் பிரச்சினை தலைதூக்குகிறது. கல்யாணி எதையும் விட்டுக்கொடுத்துப் போகிற ரகம். ஆனால் அதே சமயம் பேரம் பேசி வாழ்வதல்ல வாழ்க்கை என்பது அவள் எண்ணம். சின்ன ரோஜாச்செடி வளர்ப்பதில் கூட இருவருக்கும் கருத்து வேறுபாடு......[/tscii:c39368fa6b]

saradhaa_sn
25th January 2010, 01:36 PM
[tscii:c9d4590ab2]'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' – ( 2 )

கண்ணுக்கு அழகான ரோஜச்செடியல்ல மனிதனின் தேவை, அதைவிட பசியைப்போக்கும் காய்கறிச்செடியே பயன் தரும் என்கிற ரீதியில் ரெங்கா வாதிக்க , தொட்டதுக்கெல்லாம் கருத்து வேறுபாடு. விரிசல் பலமாகிக்கொண்டே போக, ரெங்கா தன் பெட்டியோடு சித்தப்பா இருக்கும் தன் வீட்டுக்குப்போய் விடுகிறான். சண்டைபோட்டுக்கொண்டு அல்ல. அவர்களிருவரின் மனதின் ஆழத்தில் ஒருவர் மீது ஒருவருக்கு அன்பு இழையோடிக்கொண்டே இருக்கிறது. எப்போதாவது தேடி வருவான், கல்யாணியும் எதுவுமே நடக்காததுபோல முகம் சுழிக்காமல் நடந்துகொள்வாள்.

இடையே, தாங்கள் தம்பதிகள் என்ற பந்தத்திலிருந்து விலகி நண்பர்கள் என்ற வட்டத்திலேயே அடங்கிப்போவோம் என்று முடிவெடுத்து, வழக்கறிஞர் நாகேஷிடம் போக, அவர் தன் வீட்டில் வைத்தே இருவரையும் வாதங்களால் துளைத்தெடுக்கிறார். அவரது நியாயமான கேள்விகளூக்கு இருவராலும் பதில்சொல்ல முடியவில்லை. அவர்கள் கூறும் காரணங்களெல்லாம் சட்டத்தின் முன் எடுபடாது, இருவரில் ஒருவருக்கு ஏதேனும் உடற்குறையிருந்தால் உடனே விவாகரத்து கிடைக்கும் என்று கூறி, ஆனால் அவர்களுடன் பேசியதில் இருவரும் என்னைக்கும் பிரியமாட்டார்களென்றும், இருவரும் சேர்ந்து வாழவேண்டுமென்பதே சட்டத்தின் விருப்பம், தன்னுடைய விருப்பம் மட்டுமல்ல, அவர்கள் மனதின் அடித்தளத்திலும் அதுதான் உள்ளது என்றும் சொல்லியனுப்புகிறார். கல்யாணிக்கு இந்த பந்தத்திலிருந்து விடுபட கொஞ்சமும் விருப்பமில்லை, அதே சமயம் ரெங்காவின் முடிவை எதிர்த்து அவனை நிர்ப்பந்தப்படுத்தவும் அவளுக்கு விருப்பம் இல்லை. ரெங்கா போய்விட்டான். மாதக்க்கணக்கில் அவள் வீட்டுக்கு வரவில்லை. அண்ணாசாமியும் பட்டுவும் மட்டுமே அவளுக்கு ஆறுதலாக உள்ளனர்.

இதனிடையே கல்யாணி உடல் நலிவுறுகிறது. ஒருநாள் படுக்கையில் இருந்து எழும் அவளுக்கு இரண்டு கால்களையும் அசைக்க முடியவில்லை. அலறுகிறாள். அண்ணாசாமி ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்சென்று அட்மிட் செய்கிறார். அவள் கால்கள் குணமடைய வாய்ப்புள்ளது, ஆனால் உடனடியாக நடக்காது என்று டாக்டர் சொல்கிறார். மனதுகேட்காத அண்ணாசாமி, ரெங்காவிடம் சென்று விஷயத்தைச்சொல்ல, அவன் நாலுகால் பாய்ச்சலில் மனைவியைக்காண வருகிறான். மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்தபின்பும், சக்கர நாற்காலியே கதியாக இருக்கும் அவளுக்கு ரெங்காவே கால்களாக இருக்கிறான். அவளது தேவைகளை அவனே நிறைவேற்றுகிறான். அப்போது கல்யாணியைக்காண வரும் வக்கீல் நாகேஷ் ரெங்காவிடம், அவளுக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் குறைபாட்டை காரணம் காட்டி உடனடியாக விவாகரத்து வாங்கிவிடலாம், சட்டம் அதை ஏற்றுக்கொள்ளும் என்று சொல்ல, ரெங்கா வெகுண்டெழுகிறான்.

'என்ன சார் உங்க சட்டம்?. இரண்டுபேரும் திடகாத்திரமாக ஒருவர் துணையின்றி ஒருவர் வாழமுடியும் என்றிருந்தபோது விவாகரத்து அளிக்காத சட்டம், இப்போ ஒருவரில்லாமல் ஒருவர் வாழமுடியாது என்ற அளவுக்கு உடலில் குறை வந்தபிறகு அந்தக்குறையையே காரணமாக வைத்து, பிரிக்க முடியும் என்றால் அந்த சட்டம் எங்களுக்குத் தேவையில்லை' என்று கூற வக்கீலுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி. இருவருக்கிமிடையில் நந்தியாக இருக்க வேண்டாம் என்று அண்ணாசாமியை அழைத்துக்கொண்டு வெளியேறுகிறார். இப்போது நடக்கமுடியாத தன் மனைவிக்கு கால்களாக தான் இருப்பதே ரெங்காவுக்கு மனநிறைவைத் தருகிறது. அவளை சக்கரநாற்காலியில் தள்ளிக்கொண்டே நாடகம் பார்க்க அழைத்துச்செல்கிறான். தன் உயிரான நாடகமேடையைப் பார்த்ததும், தனக்கு கால்களே வந்துவிட்டதுபோல அவள் உணர்ந்து மகிழ்வதுபோல படம் நிறைவடைகிறது.

ஒரு திரைப்படத்துக்கான செயற்கைத்தனம் கொஞ்சம் கூட தலைகாட்டாமல், முழுக்க முழுக்க யதார்த்தமாக படத்தை மிக அருமையாகக்கொண்டு சென்றிருப்பதன்மூலம், காட்சி வடிவிலேயே நாடகத்தைப்படித்த திருப்தி நமக்கு. கதாபாத்திரங்கள் யாரும் அந்நியமாகத்தோன்றவில்லை, நம் அன்றாட வாழ்வில் நம் கண்முன்னே வளைய வரும் இயற்கை மனிதர்கள் அத்தனைபேரும்.

ஒவ்வொருவருடைய நடிப்பைப்பற்றியும் தனித்தனியாகச் சொல்லிப் பாராட்ட வேண்டியதில்லை. ரெங்காவாக ஸ்ரீகாந்தும், கல்யாணியாக லட்சுமியும், அண்ணாசாமியாக ஒய்.ஜி.பார்த்தசாரதியும், ஸ்ரீகாந்தின் சித்தப்பாவாக தேங்காய் சீனிவாசனும், சித்தியாக காந்திமதியும், வக்கீலாக நாகேஷும் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு யதார்த்தம். அதிலும் தேங்காயும், நாகேஷும்.... சான்ஸே இல்லை. பிரமாதமாக நடிக்கவில்லை. மிகச்சாதாரணமாக வாழ்ந்துவிட்டார்கள். அதுபோல ஒய்.ஜி.பி. நம் அண்டை வீட்டில் குடியிருக்கும் ஒருவர்.

வசனங்கள் எல்லாம் வாள்பிடித்து நறுக்குகிறாற்போல தெள்ளத்தெளிவு. இந்த இடம்தான், அந்த இடம்தான் என்று தனித்தனியாகவெல்லாம் குறிப்பிட முடியாது. சென்ஸார் சர்டிபிகேட் துவங்கி, சுபம் என்ற எழுத்துக்கள் வரையில், திரைப்படங்களுக்கென்று எழுதிவைக்கப்பட்டிருக்கும் வரைமுறைகளை யெல்லாம் மீறி, படம் எங்கோ உயரத்துக்குப் போய்விடுகிறது.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் மனதை வருடும் பின்னணி இசை. கூடவே இரண்டு அழகான பாடல்கள். ஸ்ரீகாந்த் - லட்சுமி ரெஜிஸ்ட்டர் திருமணத்தின்போது பின்னணியில் ஒலிக்கும்...
'எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள்
எத்தனை மனங்கள் திருமணங்கள்'
(T.M.S., Vani Jeyaram) மற்றும், படத்தின் நிறைவுப்பகுதியில் K.J.ஜேசுதாஸ் பாடிய..
'நடிகை பார்க்கும் நாடகம் - அதில்
மனிதர்கள் எல்லாம் பாத்திரம்'
ஆர்ப்பாட்டமில்லாத இதமான மெட்டு. இப்படத்தின் கதை வசனத்தை மட்டுமல்ல, பாடல்களையும் ஜெயகாந்தனே எழுதியதாக டைட்டில் சொல்கிறது.

படத்தின் தொண்ணூறு சதவீத கதைக்களம் என்றால், அது சாப்பாட்டு மேஜையும், கல்யாணியின் படுக்கையறையும்தான் (அதிலும்கூட குறிப்பாக கட்டில்தான்). இவற்றையே திருப்பித் திருப்பி காண்பித்தபோதிலும் போரடிக்காமல் படம் செல்கிறதென்றால், அதற்குக் காரணம் கதையைக் கையாண்ட விதம்தான்.

பார்க்காதவர்கள் பார்க்க வேண்டிய படம். பார்த்தவர்களை திரும்ப பார்க்கத்தூண்டும் படம் 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்'.
[/tscii:c9d4590ab2]

sudha india
25th January 2010, 02:54 PM
பார்க்காதவர்கள் பார்க்க வேண்டிய படம். பார்த்தவர்களை திரும்ப பார்க்கத்தூண்டும் படம் 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்'.

Naan paarkavendume !.

sudha india
25th January 2010, 02:58 PM
Theiveega ragangal -nu oru padam irukkune theriyadhu. But unga write up paathadhum, andha peigalai pakkavendum sorry padathai parkavendum endru aaval ezhundhadhu.

Ipdi ella padangalaiyum paarkavendum endru thondruvadhu ippodhaikku ungal ezhuthukkalethaan saradha !

mr_karthik
26th January 2010, 02:58 PM
The Reviews of three black & white legendary movies...

'சிலநேரங்களில் சிலமனிதர்கள்'
'இவர்கள் வித்தியாசமானவர்கள்'
'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்'

are three crowns for Shrikanth's thread. Fully enjoyed them.

mr_karthik
26th January 2010, 03:38 PM
பார்க்காதவர்கள் பார்க்க வேண்டிய படம். பார்த்தவர்களை திரும்ப பார்க்கத்தூண்டும் படம் 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்'.

Naan paarkavendume !.
I heared that, recently Jaya tv telecasted this movie, but in the midnight. So I too missed it. (But I saw it long back, some 10 years before. I think this movie is 30 years old, but still fresh in quality).

Bhoori
18th February 2010, 11:00 PM
சில நேரங்களில் சில மனிதர்கள் படத்துக்கு எங்கள் ப்ளாகில் நானும் என் நண்பன் பக்சும் விமர்சனங்கள் எழுதி இருந்தோம். அங்கே சாரதா மறுமொழி எழுதி இருந்தார். அதைப் படித்த பிறகுதான் இப்படி ஒரு thread இருப்பதே தெரிய வந்தது. அருமையான thread , வாழ்த்துக்கள் சாரதா!

எங்கள் சில நேரங்கள் சில மனிதர்கள் விமர்சனங்கள்:
http://awardakodukkaranga.wordpress.com/2010/02/11/சில-நேரங்களில்-சில-மனிதர/

http://awardakodukkaranga.wordpress.com/2010/02/17/சில-நேரங்களில்-சில-மனிதர-2/

Bhoori
21st February 2010, 02:54 AM
எங்கள் தளத்தில் மேலும் சில ஸ்ரீகாந்த் பட விமர்சனங்கள்:

சில நேரங்களில் சில மனிதர்கள் (Sila Nerangalil Sila Manithargal) (http://awardakodukkaranga.wordpress.com/2010/02/11/சில-நேரங்களில்-சில-மனிதர/), <a href="http://awardakodukkaranga.wordpress.com/2010/02/17/சில-நேரங்களில்-சில-மனிதர-2/">ஆர்வியின் விமர்சனம்</எ>
ராஜபார்ட் ரங்கதுரை (Rajapart Rangadurai) (http://awardakodukkaranga.wordpress.com/2008/09/17/ராஜபார்ட்-ரங்கதுரை-rajapart-rangadurai/) (ஸ்ரீகாந்த் இதில் சிவாஜிக்கு தம்பி)
பாலாபிஷேகம் (Palabishekam) (http://awardakodukkaranga.wordpress.com/2008/10/08/பாலபிஷேகம்-paalabishekam/) (ஸ்ரீகாந்த் இதில் வில்லன்)
எதிர் நீச்சல் பற்றி ஆனந்த விகடன் (Edhir Neechal) (http://awardakodukkaranga.wordpress.com/2009/02/08/எதிர்-நீச்சல்/)

saradhaa_sn
23rd February 2010, 01:54 PM
[tscii:e67af90e52]வயிறு குலுங்க சிரிக்க வைத்த....

'காசி யாத்திரை'

சீரியஸான குடும்பச்சித்திரமான ‘பெத்த மனம் பித்து’ படத்துக்குப்பின் அதே குகநாதன் யூனிட்டால் முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்ட படம்தான் 'காசி யாத்திரை'.

'ஆஞ்சனேய பவன'த்தில் குடியிருக்கும் பரமசிவம் (வி.கே.ராமசாமி) ஒரு தீவிர ஆஞ்சனேய பக்தர். தான் திருமணம் செய்துகொள்ளாததோடு, தன்னைச் சேர்ந்தவர்கள் யாருமே திருமணம் செய்துகொள்ளாமல் கட்டை பிரம்மச்சாரிகளாகவே வாழ வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்திருப்பவர். அவரது அண்ணன் மகனான ராமு (ஸ்ரீகாந்த்) சித்தப்பாவையே அண்டி வாழ்க்கை நடத்துபவர். அவரை கல்லூரியில் படிக்க வைத்தது முதற்கொண்டு எல்லாமே சித்தப்பாதான். தன்னைப்போலவே தன் அண்ணன் மகன் ராமுவும் பெண் வாடையே அறியாத பிரம்மச்சாரியாக வாழவேண்டும் என்று போதித்து வளர்க்கிறார். ஆனால் ராமுவுக்கும், சோவின் அண்ணன் மகள் சீதா (ஜெயா) வுக்கும் காதல் உருவாகிறது. சித்தப்பாவுக்குத்தெரியாமலேயே காதல் வளர்கிறது.

சித்தப்பாவின் பிடிவாதத்தால். தாங்கள் ஒன்று சேர முடியாது என்று நினைத்து ராமுவும், சீதாவும் ஒருவருக்குத்தெரியாமல் ஒருவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொள்ளப்போகும் நேரத்தில், வாழ்க்கையை வெறுத்து தற்கொலை செய்துகொள்ள இருந்த சுருளியைக் காப்பாற்றி, தன் சித்தப்பாவிடம் தங்கள் காதலை எடுத்துச்சொல்லி சம்மதம் வாங்க சுருளிதான் சரியான ஆள் என்று முடிவெடுத்து, அவரை தீவிர ஆஞ்சநேய பக்தன் என்றும் பிரம்மச்சாரிக்கேற்ற உணவு சமைப்பதில் வல்லவர் என்றும் சித்தப்பாவிடம் பொய் சொல்லி, சுருளியை தன் வீட்டிலேயே வேலைக்கு அமர்த்திக்கொள்கிறார்.

உண்மையில் சமையல் தெரியாத சுருளியும், ஏதோ தன் கைக்கு வந்ததை சமைத்துவிட்டு, வி.கே.ஆர். கேட்கும்போதெல்லாம் 'இது பிரம்மச்சரியத்துக்கு ரொம்ப நல்லதுங்க' என்று சொல்லியே வாயடைத்து விடுகிறார். ராமு, சீதா காதல் விவகாரம் சோவுக்குத்தெரிய வர, தன் தம்பி மகளின் திருமணம் பற்றிப்பேச வர, ஆஞ்சனேய பவனத்தில் திருமணப்பேச்சாவது, தன் அண்னன் மகனை தன்னைப்போலவே பிரம்மச்சாரியாக வளர்க்கப்போவதாகச் சொல்லி, சோவை வி.கே.ஆர். விரட்டி விடுகிறார்.

(திருமணம் பேச வரும் சோ. வி.கே.ஆரிடம் சுவரில் மாட்டியிருக்கும் சீதை ராமர் கல்யாண படத்தைக்காட்டி 'என்ன இது?' என்று கேட்க, அதற்கு வி.கே.ஆர் 'இதுகூடத்தெரியாதா? இதுதான் சீதா ராம கல்யாணப்படம்' என்று சொல்ல, 'அது எனக்குத்தெரியாதா?. இதுக்குப்பக்கத்திலே இன்னொரு சீதா ராமு கல்யாணப்படத்தை மாட்டணும். புரியலே இல்லே? அது சரி, என் பேச்சு எவனுக்குப் புரிஞ்சுது?').

சித்தப்பா இப்படி 'அடமெண்ட்'டாக இருக்கவே, அவரை ஒரு பெண்ணை வைத்துக் கவிழ்த்துதான் தங்கள் கல்யாணத்தை முடிக்க வேண்டும் என்று முடிவு செய்யும் ராமு (ஸ்ரீகாந்த்), சுருளியின் உதவியுடன், நாடக நடிகையான மனோரமாவை விட்டு, வி.கே.ஆருக்கு காதல் கடிதம் எழுத வைத்து, அவரை மனோரமா வீட்டுக்கு வரவழைத்து, அவர்களுக்கிடையே முடிச்சுப்போட்டு, கடைசியில் வி.கே ஆர். உதவியுடனேயே தங்கள் கல்யாணத்தை முடித்துக்கொள்வதை இரண்டரை மணி நேரம் முழுக்க முழுக்க நகைச்சுவையுடன் சொல்லியிருப்பார்கள்.

நகைச்சுவைப்படமென்பதால் ஸ்ரீகாந்த், ஜெயா தவிர மற்ற பாத்திரங்கள் அனைத்துக்கும் நகைச்சுவை நடிகர்களையே போட்டு, நம்மை நகைச்சுவையில் முழுகடித்திருப்பார்கள். ஸ்ரீகாந்தின் சித்தப்பாவாக வரும் வி.கே.ஆர்., அவர்கள் வீட்டு சமையல்காரனாக வரும் சுருளி, ஜெயாவின் பெரியப்பாவாக வரும் சோ, நாடக நடிகையாக வரும் மனோரமா, அவரது ஆல்-இன் -ஆல் கூஜாவாக வரும் எம்.ஆர்.ஆர்.வாசு., மனோரமாவை நாடகத்துக்கு புக் செய்ய வரும் (திக்குவாய்க்காரர்) தேங்காய் சீனிவாசன் என அனைவரது வசனங்களிலும் நகைச்சுவைதான். உதாரணத்துக்கு சில:

தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்ளப்போகும் சுருளி தனக்குத்தானே புலம்பிக்கொண்டிருப்பார் : "அம்மா, உன் பிள்ளைக்கு இந்த உலகத்துல வாழ வழியில்லே. ஒரு வீட்டுத்திண்னையில் உட்கார்ந்திருந்தேன். கொஞ்ச நேரத்துல வீட்டுக்காரன் வந்து திண்ணையில் உட்கார்ந்ததற்கு வாடகை கேக்கிறான். இவ்வளவு மோசமான பட்டணத்துல எப்படி வழ முடியும். நீ போன இடத்துக்கே வந்துடுறேன். நீ எங்கே இருக்கே?. சொர்க்கத்திலேயா நரகத்துலேயா? என்னைப்பெத்த நீ சொர்க்கத்துலேயா இருப்பே?, நரகத்துலதான் இருப்பே, அங்கேயே நானும் வந்திடுறேன்".

சமையல்கார சுருளியிடம் வி.கே.ஆர். 'இன்னைக்கு என்ன சமையல்?' என்று கேட்க, சுருளி 'வெந்தய சாபார், வெந்தய ரசம், வெந்தய வத்தக்குழம்பு'.

'எல்லாம் சரி, ஆனா ஒரு தூக்குவாளிதானே கொண்டு வந்திருக்கே?'

'முதலாளி, இதையே மேலாக எடுத்தால் ரசம், கலக்கி எடுத்தால் சாம்பார், வத்த வச்சா வத்தக்குழம்பு'

இன்னொரு இடம்... பார்க்கில் நண்பனுடன் குடிபோதையில் இருக்கும் சோ, அந்தப்பக்கம் கையில் குழந்தையுடன் போகும் ஒரு பெண்ணிடம், 'ஏம்மா குழந்தை அழகா இருக்கே, உங்க குழந்தையா?".
"ஆமாங்க".
"உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?".
அந்தப்பெண் 'பளார்' என்று அறை விடுவார். சோ தன் நண்பனிடம் "ஏண்டா நான் என்ன தப்பா கேட்டுட்டேன்?". அதற்கு நண்பன் "பின்னே என்னடா?. அவள்தான் குழந்தை அவளோடதுன்னு சொல்றாளே. பின்னே கல்யாணம் ஆயிடுச்சான்னு கேட்கிறே. முதல்ல கல்யாணம் ஆயிடுச்சான்னு கேட்டுட்டு அப்புறம் குழந்தையைப்பத்தி கேட்டிருக்கணும்".

"அப்படியா?. இதோ இன்னொரு பொண்ணு வர்ரா, அவள்கிட்டே சரியா கேக்குறேன் பாரு".
"ஏங்க உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?".
"இன்னும் ஆகலீங்க".
"ஆகலியா? சரி, குழந்தை அழகா இருக்கே, உங்க குழந்தையா?". மீண்டும் அந்தப்பெண்ணும் 'பளார்' என்று அறைவிடுவார். "என்னடா இது? இப்படி கேட்டாளும் அறையிறாளுங்க, அப்படி கேட்டாலும் அறையிறாளுங்க". (இவை பானை சோற்றுக்கு சில சோறு பதங்கள். மற்றபடி படம் முழுக்க வயிறு குல்ங்கவைக்கும் சிரிப்புத்தான்).

எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் உருவான இப்படத்தை வி.சி..குகநாதன் தயாரித்திருந்தார். இசையமைத்தவர் வி.குமார் என்பதாக நினைவு. பாடல் எதுவும் மனதில் நிற்கிறாற்போல இல்லை. கதாநாயகியாக ஜெயா வழக்கம்போல அப்பாவியான முகமும், வெகுளிச்சிரிப்பும், குழந்தைப்பேச்சுமாக வளைய வருவார்.

ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்து, கருப்பு வெள்ளையில் மிகச்சிக்கனமாக எடுக்கப்பட்ட 'காசி யாத்திரை' திரைப்படம் நகைச்சுவையின் துணை கொண்டு வசூலை அள்ளியது.
[/tscii:e67af90e52]

Murali Srinivas
23rd February 2010, 10:15 PM
சாரதா,

வழக்கம் போல் நல்ல பதிவு. இந்த படம் நமது தங்கப்பதக்கம் வெளியான நேரத்தில் [1974 ஜூன்] ரிலீஸ் ஆனது என்று நினைவு. நான் மதுரை அலங்காரில் பார்த்தேன். மறக்க முடியாத இன்னொரு வசனம் - எப்போதும் குடித்துக் கொண்டிருக்கும் சோவை பரிசோதிக்கும் டாக்டர் இனிமேல் குடிக்கக் கூடாது என்பார். சோ சிரித்துக் கொண்டே "என்ன சார் இது? ஒரு டாக்டர் குடிக்க சொல்றாரு! இன்னொரு டாக்டர் குடிக்க கூடாது-னு சொல்றாரு. யார் சொல்றதை கேட்கறது?" என்பார். தியேட்டரில் செம ரெஸ்பான்ஸ் இருக்கும்.

[புரியாதவர்களுக்கு - தலைமுறை தலைமுறையாக குடி என்னவென்றால் தெரியாமல் வாழ்ந்த தமிழகத்தில் 1971 ஆகஸ்ட் 30 முதல் மது கடைகள் "டாக்டர்" கலைஞரால் திறக்கப்பட்டு நடந்து வந்ததை கேலியாக சுட்டிக் காட்டிய வசனம் இது].

அன்புடன்

Bhoori
23rd February 2010, 11:50 PM
சாரதாவின் சில நேரங்களில் சில மனிதர்கள் விமர்சனம் இங்கே மீள்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நன்றி, சாரதா!

http://awardakodukkaranga.wordpress.com/2010/02/21/சில-நேரங்களில்-சில-மனிதர-3/

saradhaa_sn
25th February 2010, 11:21 AM
Dear Murali,
Thanks for your response for the review of the movie 'Kaasi Yaathirai'

Dear RV,
thanks for the re-post, in your blog.

Bhoori
1st March 2010, 01:20 PM
சாரதாவின் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் விமர்சனம் இங்கே மீள்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நன்றி, சாரதா!

http://awardakodukkaranga.wordpress.com/2010/03/01/ஒரு-நடிகை-நாடகம்-பார்க்க/

Bhoori
2nd March 2010, 08:08 AM
[tscii:bb8eea83fb]சாரதா, பெயர் என்பவர் ஒரு மறுமொழி எழுதி இருக்கிறார்.

// படத்தின் நிறைவுப் பகுதியில் கே.ஜே. ஜேசுதாஸ் பாடிய ‘நடிகை பார்க்கும் நாடகம் – அதில் மனிதர் எல்லாம் பாத்திரம்’
That song was by Jolly Abraham and B.S.Sasirekha and not by KJD.You can listen to that in thiraipaadal.com or in dhool.com
under Song of the Day Archives //
[/tscii:bb8eea83fb]

saradhaa_sn
3rd March 2010, 11:12 AM
சுட்டிக்காட்டலுக்கு மிக்க நன்றி RV & Peyar....

படம் பார்த்து வெகுநாளாகி விட்டதாலும், படம் பார்க்கும்போதே அது ஜேசுதாஸின் குரல்தான் என்று நான் நம்பியதாலுமே இந்தக் குழப்பம். 'ஜேசு'வின் குரலும் 'ஜாலி'யின் குரலும் ஒன்றுபோல அமைந்து நம்மை ஏமாற்றும். இதே போல என்ன ஏமாற்றிய இன்னொரு பாடல் 'ஒரு கைதியின் டைரி' படத்தில் வரும் "பொன்மானே... கோபம்... ஏனோ..". ரொம்ப நாள்வரையில் அது ஜேசுதாஸின் குரல் என்றே நம்பியிருந்தேன், அதைப்பாடியவரே சொல்லும் வரை.

(RV..., உங்கள் ரசனைக்கேற்ற 'இவர்கள் வித்தியாசமானவ்ர்கள்' என்ற இன்னொரு ஆய்வும் இங்குள்ளது. படித்திருப்பீர்கள் என நம்புகிறேன்).

Bhoori
4th March 2010, 12:30 PM
மூன்று திரிகளையுமே படித்தேன். இவர்கள் வித்தியாசமானவர்கள் பார்த்ததில்லை, உங்கள் விமர்சனம் ஆவலைத் தூண்டுகிறது.

saradhaa_sn
4th March 2010, 05:38 PM
கலைச்செல்வி ஜெயலலிதாவின் 100-வது படம்

'திருமாங்கல்யம்'

கலைச்செல்வி ஜெயலலிதாவின் 100-வது படம் எது என்பதில் ஏற்பட்ட குழப்பம் பற்றியும், அப்போது நடந்த சுவையான நிகழ்வுகளையும் ஏற்கெனவே ரவிச்சந்திரன் திரியில், 'பாக்தாத் பேரழகி' படத்தினுடைய பதிவின் தொடர்ச்சியில் குறிப்பிட்டிருந்தோம். அந்த வகையில் பல்வேறு சர்ச்சைகளுக்கிடையில், ஜெயலலிதாவின் 100-வது படமாக முடிசூட்டப்பட்டு வெளியானது 'திருமாங்கல்யம்'. இவரோடு கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் திரையுலகுக்கு வந்த இன்னொரு நட்சத்திரம் 'புன்னகையரசி' கே.ஆர்.விஜயாவின் 100-வது படமான 'நத்தையில் முத்து' திரைப்படமும் இதே ஆண்டில்தான் வெளியானது. (ஒரே சமயத்தில் நுழைந்தவர்கள் என்றால் ஒரே ஆண்டில் அல்ல. கற்பகம் 1963, வெண்ணிற ஆடை 1965). இன்னொரு ஒற்றுமை, இவர்களில் ஒருவர் மக்கள் திலகத்துடனும், இன்னொருவர் நடிகர்திலகத்துடனும் அதிகப்படங்களில் ஜோடியாக நடித்திருந்த போதிலும் இவர்களின் 100-வது படங்களில் அவர்கள் இருவருமே இல்லையென்பது மட்டுமல்ல. இரண்டிலும் ஒரே நாயகனாக நடித்தவர் 'நவரசத்திலகம்' முத்துராமன்.

முத்துராமன், சிவகுமார் இருவரும் சகோதரர்கள். அவர்களின் முறைப்பெண் லட்சுமி. லட்சுமியின் தங்கை வாய் பேசமுடியாத ஸ்ரீதேவி. லட்சுமி பருவமடைந்த ஒரு விளையாட்டுப்பிள்ளை. அவருக்கு எல்லாமும், எப்போதும் விளையாட்டு. அவரை சிவகுமாருக்கு திருமணம் முடிக்கலாமென்றால், சிவகுமாருக்கோ ஏழைப்பெண் ஜெயலலிதா மீது காதல். அப்பா இல்லாமல் அம்மா பண்டரிபாயுடன் வாந்துவருபவர் ஜெயலலிதா. சிவகுமாரை ஜெயலலிதாவிடமிருந்து பிரிக்கும் நடவடிக்கையாக, ஜெயலலிதாவுக்கு மயக்க மருந்து கொடுத்து தானே அவருக்கு தாலி கட்டிவிடுகிறார் (??) முத்துராமன். இதனால் ஏற்படும் பல்வேறு குழப்பங்களுக்கிடையில் மீண்டு வருவதுதான் கதை.

சரி, இதில் ஸ்ரீகாந்த் எங்கே வந்தார்...?. இப்படத்தில் ஸ்ரீகாந்த் ஜெயலலிதாவின் சொந்தத் தம்பி. கொள்ளைக்கும்பலுடன் சேர்ந்து சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் ஸ்ரீகாந்துக்கு எப்போதும் போலீஸ் வலைவீச்சுதான். வலையில் சிக்காத கெண்டை மீனாக மறைந்து மறைந்து ஓடிக்கொண்டிருப்பார். இடையிடையே அம்மாவையும், அக்காவையும் சந்திக்க வரும்போதெல்லாம் அவருக்கும் அக்கா ஜெ.க்கும் வாக்குவாதம்தான். ஆனாலும் பண்டரிபாய் மகனை எதுவும் கடிந்துகொள்ள மாட்டார். பெற்ற மனசு அல்லவா?. (ஜெ.வின் முதல் படத்தில் கதாநாயகனாக வந்தவர் 100-வது படத்தில் தம்பி. திட்டமிடப்படாமல் எப்படியோ இரண்டிலும் இடம் பெற்றுவிட்டார். இப்படத்தில் ஜெ.வின் உருவத்துக்கும், ஸ்ரீகாந்தின் உருவத்துக்கும் 'அக்கா - தம்பி' உறவு பொருத்தமாகவே இருக்கும்). ஸ்ரீகாந்தின் கொள்ளைக்கும்பல் பாஸ் ஆக வரும் பாலாஜி தலையில் புஷ் குல்லாவும்(?), கண்களில் கறுப்புக்கண்ணாடியுமாக (?) 'யாரையோ' நினைவுபடுத்தினார். அவர் மதுவருந்தும்போது வாயில் வைத்து கொப்பளித்து விழுங்குவது போன்ற இடங்களில் அசோகனின் கோமாளித்தனம் நினைவுக்கு வந்தது.

இப்படத்தில் உணர்ச்சிகரமான கட்டம் ஒன்று. அம்மா பண்டரிபாய் இறந்தது மகன் ஸ்ரீகாந்துக்கு தெரியாது. மகனை எதிர்பார்த்து காத்திருந்து, வராமல் போகவே இறுதிச்சடங்குக்காக பிரேதத்தை சுடுகாட்டுக்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லும்போது, அதே நேரம் போலீஸின் துரத்தலில் ஓடி வரும் ஸ்ரீகாந்த், ஒரு புதர் மறைவில் தன்னுடைய பேண்ட் சட்டையை கழற்றிவிட்டு வேஷ்டி, பனியனுடன் ஓடிவந்து, அப்போது அந்த வழியாக வந்துகொண்டிருக்கும் பிரேத ஊர்வலத்தில் (அது தன் தாயின் உடல் என்றே தெரியாமல்) போலீஸில் இருந்து தப்பிக்க அந்த உடலைத்தூக்கி வருபர்களில் ஒருவராக கலந்துகொள்வார். அந்த இடத்தில் 'செத்தும் தன் மகனைக்காப்பாற்றும்' தாயாக பண்டரிபாய் விளங்குவார்.

திருமாங்கல்யம் படத்துக்கு 'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். தோழியின் திருமண வரவேற்பில் ஜெயலலிதா பாடும்
'யோகம் நல்ல யோகம்.. மங்கை நல்லாள் வந்த யோகம்'
பாடலை பி.சுசீலா பாடியிருந்தார்.

முத்துராமன் ஜெயலலிதாவுக்கு டூயட் பாடல் ஒன்று (கனவுப்பாடல்)
'பொன்னான மனமிங்கு போகின்றதே
சொல்லுங்கள் மேகங்களே'
இப்பாடலை எஸ்.பி.பி., சுசீலா பாடியிருந்தனர். இப்பாடலை பிரம்மாண்டமான செட்டில் படமாக்கியிருந்தனர். அந்த செட் 'பிரேம் நகர்' (இந்தி வசந்த மாளிகை) படத்துக்காகப் போடப்பட்டது. (இதே செட்டில் தான் பாலாஜியின் 'என் மகன்' படத்தில் 'சொல்லாதே சொல்லாதே ஊரார்க்கு சொல்லாதே' என்ற கவர்ச்சிப்பாடல் படமாக்கப்பட்டது).

தன் கழுத்தில் முத்துராமன் கட்டிய திருட்டுத்தாலியைப் பார்த்து அதிர்ந்து, தன் மனச்சாட்சியுடன் நடத்தும் போராட்டமாக ஜெயலலிதா பாடும் பாடல்
'திருமாங்கல்யம் கொள்ளும் முறையில்லையோ
மனம் அறியாமல் வரும் தாலி தவறில்லையோ'
இப்பாடலையும் சுசீலாதான் பாடியிருந்தார். (இப்பாடல் கிட்டத்தட்ட சவாலே சமாளியில் வரும் 'என்னடி மயக்கமா சொல்லடி' பாடலை நினைவுபடுத்தும்).

லட்சுமி தன் தோழிகளுடன், பார்ட்டியில் பாடும்...
'உலகம்... நமது வீடென்று சொல்லுங்.....கள்..ள்..ள்'
என்ற பாடலை எல்.ஆர் ஈஸ்வரி தனக்கே உரிய நெளிவு சுளிவுகளோடு பாடியிருந்தார்.

இவைகளோடு, பண்டரிபாயின் உடலை ஸ்ரீகாந்த் தூக்கிச்செல்லும்போது பாடப்படும் அசரீரிப் பாடல் ஒன்றும் உண்டு. பாடியவர் மெல்லிசை மன்னர்தான் என்று சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

ஜெயலலிதா, முத்துராமன், சிவகுமார், ஸ்ரீகாந்த், பாலாஜி, லட்சுமி, ஸ்ரீதேவி, பண்டரிபாய், மேஜர் சுந்தர்ராஜன் உள்பட பலர் நடித்திருந்த இப்படத்தை, மாபெரும் வெற்றிப்படமான 'வசந்த மாளிகை' படத்தைத் தயாரித்த டி.ராமாநாயுடு தயாரிக்க, ஒளிப்பதிவு மேதை ஏ.வின்சென்ட் இயக்கியிருந்தார்.

சற்று பிரம்மாண்டமாக வண்ணத்தில் தயாரான 'திருமாங்கல்யம்' பெரும் வெற்றியடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு சுமார் வெற்றியையே பெற்றது.

Plum
4th March 2010, 05:56 PM
saaradha_sn, Kase dhan kadavuLada matrum veettukku veedu cover paNNittIngaLA?
(in the 3 series yu are doing - RaviC, JaiS nad SriK)

saradhaa_sn
4th March 2010, 06:37 PM
saaradha_sn, Kase dhan kadavuLada matrum veettukku veedu cover paNNittIngaLA?
(in the 3 series yu are doing - RaviC, JaiS nad SriK)
Dear Plum,

'திருமாங்கல்யம்' படத்துக்கு முன் 'காசேதான் கடவுளடா' படத்தைப் பற்றித்தான் எழுத நினைத்தேன். ஆனால் அதில் ஸ்ரீகாந்தின் ரோல் சின்னது என்பதால் தள்ளிப்போட்டேன். (அதில் தேங்காய் ரோலுக்கு முன் முத்துராமன் ரோலே சிறியதுதான்). விரைவில் எழுதுகிறேன்.

(நீங்கள் குறிப்பிட்ட மூன்று திரிகளிலும் எந்தெந்தப் படங்கள் பற்றி இதுவரை 'கவர்' பண்ணப்பட்டுள்ளது என்ற பட்டியல் அந்தந்த திரிகளின் முதல் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது).

Plum
4th March 2010, 06:40 PM
Thanks saaradha. romba comment paNNattAlum, I watch these threads with interest(despite not being a fan of any of the actors concerned!)

saradhaa_sn
4th March 2010, 07:08 PM
Dear Plum,

On seeing the names of two movies you have mentioned in your previous post, it seems that you are a fan of comedy films.

So, did you read the post for 'Kaasi Yaathirai' in previous page (#5)...? (which is a comedy number).

saradhaa_sn
9th March 2010, 11:40 AM
இந்த வாரம் திங்கள் முதல் வெள்ளி வரை, ஜெயா தொலைக்காட்சியின் 'திரும்பிப்பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் தேசிய நடிகர் ஸ்ரீகாந்த் தோன்றி தன் நினைவலைகளை பகிர்ந்துகொள்கிறார். முதல் நாள் நிகழ்ச்சியைப் பார்க்காதவர்களுக்காக, சில விஷயங்கள் இதோ......

saradhaa_sn
9th March 2010, 11:57 AM
ஜெயா டி.வி.யின் 'திரும்பிப் பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் ஸ்ரீகாந்த்.

திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் 'திரும்பிப் பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் ஒவ்வொரு திங்களன்றும் நமக்கு ஒரு எதிர்பார்ப்பு. இந்த வாரம் யார் வந்து தன் திரையுலக அனுபவங்களைத் திரும்பிப்பார்த்து நம்மோடு பகிர்ந்துகொள்ளப் போகிறார்கள் என்று அறிந்துகொள்ள ஆர்வம். (இந்த வாரம் வரப்போவது யார் என்று முதல் வாரமே அறிவிக்க மாட்டார்கள்).

அந்த வகையில் இதுவரை நான் பார்த்தவரையில் சௌகார் ஜானகி, ஜெயந்தி, காஞ்சனா, சி,வி,ராஜேந்திரன், சித்ராலயா கோபு, பாலமுரளி கிருஷ்ணா, ஏ.ஆர்.எஸ்., சோ, பாலாஜி, ரவிச்சந்திரன், விசு, எஸ்.பி.முத்துராமன், ஏ.சி.திருலோகசந்தர், இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ், சந்திரபோஸ், குசலகுமாரி, ராஜசுலோச்சனா, ஒய்.ஜி.மகேந்திரன், வெண்ணிற ஆடை மூர்த்தி, குட்டி பத்மினி, பாடகி M.S.ராஜேஸ்வரி, டான்ஸ் மாஸ்டர் புலியூர் சரோஜா, ஒளிப்பதிவாளர்கள் பி.என்.சுந்தரம், எம் கர்ணன், பேராசிரியர் ஏ.எஸ்.பிரகாசம், வியட்நாம் வீடு சுந்தரம், வினு சக்ரவர்த்தி..... இப்படி ஏராளமான திரைப்பிரபலங்கள் பங்கேற்று தங்கள் அனுபவங்கள் சிலவற்றை பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் நேற்று (08.03.2010) யார் வரப்போகிறார்கள் என்று ஆவலோடு காத்திருந்தபோது, இன்ப அதிர்ச்சியாக நிகழ்ச்சியை அறிமுகம் செய்யும் அந்தப்பெண் காம்பியர் இப்படி அறிவித்தார்.. "அதிர்ஷ்டம்னா இவர் மாதிரிதாங்க இருக்கனும். பெரிய இயக்குனரான கே.பாலச்சந்தர் அவர்களால் நாடக மேடைகளில் செதுக்கப்பட்டு, இன்னொரு பெரிய இயக்குனரான ஸ்ரீதர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இவரோடு முதல் படத்தில் நடிச்சது யார் தெரியுமா? நம்ம் புரட்சித் தலைவி அம்மாதான். தெரியலீங்களா?. என்னங்க அடுத்தாத்து அம்புஜத்துக்குக் கூட இவரைத் தெரிஞ்சிருக்கும்போது உங்களுக்குத் தெரியாமல் இருக்குமா?" என்று அந்தப்பெண் அறிவித்ததுமே புரிஞ்சு போச்சு. ஆகா.... "நம்ம" ஸ்ரீகாந்த் அல்லவா வரப்போகிறார் என்று மனம் முழுக்க மகிழ்ச்சி.

அவரேதான்.... பேண்ட், முழுக்கை சட்டை, நெற்றியில் விபூதி, பொட்டு சகிதம் சின்னத் திரையில் தோன்றியதும் கண்களில் நீர் கட்டியது. 'எவ்வளவு நாளாச்சு உங்களைப்பார்த்து. நீங்கன்னா எனக்கு அவ்வளவு இஷ்ட்டம். மகாநடிகனில் கடைசி ஒரு சீனில் கவர்னராக வருவீங்க. அதன்பின்பு பார்க்கவேயில்லையே' பைத்தியக்காரி போல மனசுக்குள்ளேயே பேசிக்கொண்டிருந்தேன். திரையில் தோன்றியதும் வணக்கம் போட்டுவிட்டு பேசத்துவங்கினார். பேச ஆரம்பித்த பிறகுதான் அவர் எவ்வளவு துரதிஷ்டக்காரர் என்று தெரிந்தது.

'என்னுடைய உண்மையான பெயர் வெங்கட்ராமன். சொந்த ஊர் ஈரோடு. ஆஃபீஸ்ல 'வெங்கி'ன்னு கூப்பிடுவாங்க. நண்பர்கள் சிலர் ராஜா என்றும், ஸ்ரீ என்றும் கூப்பிடுவாங்க. ஸ்ரீகாந்த்னு அழைப்பவர்கள் ரொம்ப கம்மி (நம்ம திரியில் முதலிலேயே இதை சொல்லியிருந்தோம்). பெற்றோரைப்பொறுத்தவரை நான் அதிர்ஷ்டம் இல்லாதவன். என்னுடைய இரண்டு வயதிலேயே அப்பாவும், ஐந்து வயதில் அம்மாவும் இறந்துட்டாங்க (எவ்வளவு பெரிய துரதிஷ்டம்) தாத்தாவிடமும், மாமாவிடமும் வளர்ந்தேன். கோவையில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, கல்லூரியில் நான் விரும்பிய குரூப் கிடைக்காததால் டைப்ரைட்டிங் மற்றும் Short-Hand படித்துவிட்டு, வேலூரில் கொஞ்சநாள் வேலை செய்தபின் வேலைதேடி சென்னை வந்தேன். மாதம் முப்பது ரூபாய் சம்பளத்தில் (??) ஒரு வேலை கிடைத்தது. திருவல்லிக்கேணியில் மாதம் 40 ரூபாய் வாடகையில் ஒரு ரூம் எடுத்து அதில் நாலுபேர் தங்கியிருந்தோம். எனக்கு வாடகை ஒன்பது ரூபாய். மீதமுள்ள பணத்தில் ஒருநாளைக்கு மதியம் ஒருவேளை மட்டுமே சாப்பிடுவேன். அதற்கு மாதம் 15 ரூபாய். காலை டிபன் எப்போதாவது நண்பர்கள் வாங்கித்தந்தால் சாப்பிடுவேன். டீ, காபியெல்லாம் சாப்பிடுவது கிடையாது. இப்படியே கொஞ்சநாள் போனது. (ரவிச்சந்திரன் திரியின் முதல் பக்கத்தில், 'கடந்த கால வாழ்க்கையை சொல்வதில்' நடிகர்களையும் நடிகைகளையும் ஒப்பீடு செய்திருந்தேன். அது எவ்வளவு சரியானதுன்னு ஒவ்வொருவரும் நிரூபிக்கிறாங்க).

முப்பது ரூபாய் வருமானத்தில் எவ்வளவு நாள் ஓட்டுவது என்று வேறு வேலை தேடத்துவங்கினேன். என் நண்பன் மூலமாக ஒரு வேலைக்கு இண்ட்டர்வியூவுக்குப்போனேன். ஒரு கடிதம் டைப் செய்யச்சொன்னார்கள். பண்ணினேன். 'எவ்வளவு சம்பளம் எதிர்பார்க்கிறீர்கள்?' என்று மேனேஜர் கேட்க, நான் மனதுக்குள் சாப்பாடு மற்ற செலவுகளைக் கணக்குப்போட்டுப் பார்த்து '80 ரூபாய்' என்றேன். '80 ரூபாயா?' என்று அவர் கேட்டதும், அதிகமா கேட்டுட்டோமோ என்று நினைத்து, சரி காலை டிபனை கட் பண்ணிக்கலாம் என்ற எண்ணத்துடன் '70 ரூபாய்' என்றேன். மீண்டும் அவர் அதிர்ச்சி தெரிவிக்க, இன்னும் பத்து ரூபாய் குறைத்து '60 ரூபாய் கொடுத்தால் வேலையில் சேர்கிறேன்' என்றேன். அவர் சிரித்துக்கொண்டே 'உங்களுக்கு சம்பளம் மாதம் 100 ரூபாய்' என்றார். என் சந்தோஷத்துக்கு அளவேயில்லை. என் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள பெற்றோர் இல்லையே என்று அப்போது வருந்தினேன். சென்னைக்கு வந்து முதல் முறையாக மூன்று வேளை சாப்பிட்டேன். அதுவரை பல்பொடி வாங்கி கையாலேயே பல் துலக்கி வந்த நான் பேஸ்ட், பிரஷ் வாங்கி பல் துலக்கத்துவங்கினேன்.

வேலையில் சேர்ந்து சிறிதுநாட்கள் கழித்து, நாங்கள் ஒரு நாடக ட்ரூப் ஆரம்பித்து, சைடில் நாடகங்கள் போடத்துவங்கினோம். மேஜர் சுந்தர்ராஜன், எஸ்.ஆர்.வீரராகவன் இவர்களெல்லாம் எங்கள் ட்ரூப்பில் ஒரு ரூபாய் மெம்பர்கள்'.

saradhaa_sn
9th March 2010, 12:26 PM
'அப்போது ஏ.ஜி.எஸ். டிபார்ட்மெண்ட்டில் வேலை செய்துவந்த கே.பாலச்சந்தர், அவரது ஆஃபீஸ் விழாக்களுக்காக நாடகம் போடுவார். அந்த நாடகங்களை எங்கள் ரூமில் இருந்துதான் எழுதுவார். அதில் முக்கியமான நாடகம்தான் மேஜர் சந்திரகாந்த். இந்த நாடகத்தை 'கிரீக் ஸ்டேஜ்' ஸ்டைலில் போடலாம் என்று நான் யோசனை சொன்னேன். அதாவது நடுவில் மேடை போட்டு நாடகம் நடக்க, சுற்றிலும் ஆடியன்ஸ் இருந்து பார்ப்பதாக இருக்கும். இன்ஸ்பெக்டர் மோட்டார் சைக்கிளில் வந்து இறங்குவது போன்ற காட்சிகளெல்லாம் நேச்சுரலாக இருக்கும். ஏஜீஸ் அலுவலக காம்பவுண்ட்டில் அதற்கு நிறைய இடம் இருந்தது. இந்த ஏற்பாடு அனைவராலும் வரவேற்கப்பட்டது. கே.பாலச்சந்தர் மிக அற்புதமான படைப்பாற்றல் கொண்ட ஒருவர்.'

(ஸ்ரீகாந்த் பேட்டியின்போது ராஜநாகம், காசேதான் கடவுளடா, தங்கப்பதக்கம் ஆகிய படங்களின் கிளிப்பிங்ஸ் காண்பிக்கப்பட்டன. ஒளிப்பதிவாளர் பாபு, தன் நண்பர் ஸ்ரீகாந்த் பற்றி சொன்ன தகவலும் இடம் பெற்றது).

Bhoori
10th March 2010, 10:09 PM
சாரதா, நிகழச்சியைப் பார்க்க முடியாத என் போன்றவர்களுக்கு பெரிய உதவி செய்கிறீர்கள்! வாழ்த்துக்கள்!

rajeshkrv
13th March 2010, 11:23 PM
Srikanth's episode of thirumbi paarkiren

http://www.sharereel.com/view/21415/jaya-tv-thirumbi-paarkiren-090310/

http://www.sharereel.com/view/21415/jaya-tv-thirumbi-paarkiren-100310/

saradhaa_sn
14th March 2010, 10:06 AM
மிக்க நன்றி ராஜேஷ்....

பார்க்காதவர்களுக்கு பார்க்க வாய்ப்பளித்தமைக்கும், பார்த்தவர்கள் மீண்டும் பார்க்கச்செய்தமைக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றிகள்.


சாரதா, நிகழச்சியைப் பார்க்க முடியாத என் போன்றவர்களுக்கு பெரிய உதவி செய்கிறீர்கள்! வாழ்த்துக்கள்!
RV.....
உங்கள் பாராட்டுக்கள் அப்படியே நண்பர் ராஜேஷுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.

saradhaa_sn
14th March 2010, 06:26 PM
[tscii:3d175ff94d]முதல் நாள் போக மற்ற நான்கு நாட்களில் ஸ்ரீகாந்தின் 'திரும்பிப் பார்க்கிறேன்' நிகழ்ச்சியிலிருந்து சில துளிகள்......

நடிகர்திலகத்தைப்பற்றிப் பேசிய இடங்களிலெல்லாம் 'நடிகர்திலகம்' என்று மட்டுமே குறிப்பிட்டாரே தவிர 'சிவாஜி சார்' என்று கூட பெயரைக் குறிப்பிடவில்லை. அவருடன் தனக்கு நடிக்கக்கிடைத்த சந்தர்ப்பங்கள் மிகச்சிறந்த அனுபவங்கள் என்று சொன்னவர் அவற்றில் சிலவற்றைப் பட்டியலிட்டார். அவற்றில் வியட்நாம் வீடு, தங்கப்பதக்கம், ஞான ஒளி, ராஜபார்ட் ரங்கதுரை, அவன் ஒரு சரித்திரம் ஆகியவை அடங்கும். தன்னுடைய பாத்திரம் மட்டும் சிறக்காமல் உடன் நடிக்கும் அனைவரது ரோலும் நன்றாக அமைய வேண்டுமென்று சிரத்தை எடுத்துக்கொள்வார் என்று கூறியவர், படத்தில் எனக்கு ஒரு குளோசப் வைத்தால் அதற்கு கௌண்ட்டராக தனக்கும் ஒரு குளோசப் கேட்பார். அதுபோல அவருக்கு ஒரு குளோசப் வைத்தால், எனக்கும் ஒன்று வைக்கச்சொல்வார். கேட்டால், 'அப்போதான் நான் செய்த பெர்ஃபாமன்ஸுக்கு நீ ரெஸ்பான்ஸ் பண்ணுவது ஜனங்களுக்குத் தெரியும்' என்பார். சில நேரங்களில் அவர் சொல்லித்தருவது எனக்கு ஸூட் ஆகாதபோது, 'சரி அவன் ஸ்டைலில் பண்ணட்டும் விட்டுடுங்க' என்று சொல்லிவிடுவார். நடிகர்திலகத்தோடு நடிக்க மற்ற நடிகர்களுக்கு கிடைக்காத அருமையான பாத்திரங்கள் எல்லாம் அவரோடு நடிக்கும்போது எனக்குக் கிடைத்தது.

நிறையப்பேர் நான் பராசக்தி படம் பார்த்துவிட்டுத்தான் நடிக்க வந்தேன்னு சொல்லிக்கிறாங்க. அப்படி வந்தவங்க ஏன் அவரிடமிருந்து டெடிகேஷன், சின்ஸியாரிட்டி, பங்க்சுவாலிட்டி இவற்றைக் கற்றுக்கொள்ளவில்லை?' என்று கேள்வியும் எழுப்பினார்.
-----------------------------------------------

ஜெயகாந்தன் கதைகளைப்பற்றி அதிகம் புகழ்ந்தார். அவருடைய நான்கு கதைகள் படமானபோது நான்கிலும் தான் கதாநாயகனாக நடித்ததைப்பற்றி பெருமைப்பட்டார். கதாசிரியர் இருக்கும்போது அதென்ன திரைக்கதை என்று ஒன்று தனியாக?. கதை எழுதுபவர்களுக்கு திரைக்கதை எழுதத் தெரியாதா என்று விளாசினார். சிலநேரங்களில் சில மனிதர்கள் படத்துக்கு ஜெயகாந்தன் ஷாட் வாரியாக பிரித்து, லாங்ஷாட், குளோசப், ட்ராலி ஷாட் என்று விவரித்து எழுதியது புத்தகமாக அச்சிடப்பட்டு, அரசு திரைப்படக் கல்லூரியில் பாடமாக வைக்கப்பட்டுள்ளதை பெருமையுடன் குறிப்பிட்டார்.
--------------------------------------------------

ராஜாஜியின் 'திக்கற்ற பார்வதி' திரைப்படத்தில் நடித்ததைப் பற்றியும் அதற்கு மத்திய அரசின் விருது கிடைத்து, அதைப்பெற டெல்லி சென்றபோது நடந்த அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார். அக்கதை உண்மையிலேயே ராஜாஜி அட்டெண்ட் பண்ணிய ஒரு கேஸ் என்றும், அவர் அட்டெண்ட் பண்ணிய கேஸ் என்பதால், அதே கோர்ட்டிலேயே படமாக்க அனுமதி கிடைத்ததையும் சொன்னார்.
-------------------------------------------------

மேடை நாடகங்களைப்பற்றி அதிகம் பேசினார். கிட்டத்தட்ட ஒரு எபிசோட் முழுக்க நாடகங்களுக்கே ஒதுக்கி, தான் நடித்த நாடகங்கள் மாத்திரமல்லாது மற்றவர்களின் நாடகங்களையும் ரொம்பவே சிலாகித்துப்பேசினார். தான் நடித்த நாடகங்கள் எல்லாம் எப்படி படமாயின என்பதை விவரித்தார். எல்லோருடைய நடிப்பையும் புகழ்ந்தார். எக்காரணம் கொண்டும் மேடை நாடகங்கள் அழிந்துவிட விட்டுவிடக்கூடாது என்று ரொம்பவே ஆதங்கப்பட்டார்.
---------------------------------------------------

'இவர்கள் வித்தியாசமானவர்கள்', 'ராஜ நாகம்','பாமா விஜயம்' போன்ற ஏராளமான படங்களைக் குறிப்பிட்டுப்பேசினார். ராஜநாகம் இந்தியிலும், தெலுங்கிலும் தோல்வி என்றும், கன்னடத்திலும் தமிழிலும் மட்டுமே வெற்றி என்றும் சொன்னார். ஜெயலலிதாவைக் குறிப்பிடும் போதெல்லாம் 'முன்னாள் முதல்வர்' என்று குறிப்பிட்டார். வெண்ணிற ஆடை படத்தில் முதலில் அந்த ரோலில் நடித்த நடிகை ஹேமமாலினி மாற்றப்பட்டு அதில் ஜெயலலிதா நடித்ததையும், 'கண்ணன் என்னும் மன்னன் பேரை' பாடல் இரண்டு முறை ஜெ.வுக்கு இருவேறு உடைகளில் படமாக்கப்பட்டதையும் புடவையில் நடித்ததே படத்தில் இடம் பெற்றதையும் சுவைபடக்கூறினார்.
-----------------------------------------------------

'அவள்' படத்தைப்பற்றி மறக்காமல் குறிப்பிட்ட அவர், அதிலிருந்து தொடர்ந்து அதே மாதிரி ரோல்களைத்தந்து தனக்கு 'கற்பழிப்புத் திலகம்' என்று பட்டம் சூட்டியதை சிரித்துக்கொண்டே சொன்னவர், அந்நேரங்களில் படப்பிடிப்புக்குப்போனால் 'ஏம்ப்பா, இன்னைக்கு நான் யார் ஜாக்கெட்டைக் கிழிக்கணும்?' என்று கேட்பது வழக்கம் என்றும் சிரித்துக்கொண்டே சொன்னார்.
-----------------------------------------------------

நடிகர்களைப்போல மிமிக்ரி செய்பவர்களைப்பற்றி கடுமையாக சாடினார். நடிகர்திலகம், எம்.ஜி.ஆர்., நம்பியார் போன்ற சகாப்த நடிகர்களைப்போல மிமிக்ரி செய்வது அவர்களைக்கேலி செய்வது போலாகும் என்றவர், ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு மேனரிஸம் இருக்கும். அதைக் கிண்டலடித்து காசு சம்பாதிப்பது மிகவும் மோசமான செயல் என்று வருத்தம் அடைந்தார்.
-------------------------------------------------------

இந்நிகழ்ச்சியின் முடிவில் பெரும்பாலும் எல்லோரும் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களை அறிமுகப்படுத்துவது வழக்கம். ஆனால் எபிசோட் முடியும் நேரமாகிவிட்டதால், நேரமின்மை காரணமாக, 'என்னுடைய திரும்பிப்பார்க்கிறேன் நிகழ்ச்சியை இத்துடன் முடித்துக்கொள்கிறேன். மீண்டும் சந்திப்போம்’ என்று எதிர்பார்க்கிறேன்' என்று சொல்லி விடை பெற்றுக்கொண்டார்.

சந்திக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.... (குறிப்பாக நான் எதிர்பார்க்கிறேன்).
[/tscii:3d175ff94d]

RAGHAVENDRA
14th March 2010, 09:19 PM
சகோதரி சாரதா அவர்களுக்கு,
முதலில் ஸ்ரீகாந்த் என்றதும் நம்முடைய ஹப்பில் அவரைப்பற்றியெல்லாம் யார் விவாதிக்கப் போகிறார்கள், இது தற்போதைய ஸ்ரீகாந்த்தாக இருக்கும் என்று நினைத்து திரியை ஆரம்பித்தவர் பெயர் பார்த்தேன். சாரதா என்று இருந்தது. உடனே ஆஹா இது நிச்சயம் நம்ம ஸ்ரீகாந்த் என்று ஆவலுடன் பக்கங்களைப் பார்த்தேன். என்னை 70களுக்கே அழைத்துச் சென்று விட்டீர்கள் சாரதா, நன்றி.
நடுவில் ஸ்ரீகாந்த் மீது எனக்கு கொஞ்சம் கோபம் இருந்தது உண்மை. அவருடைய அரசியல் நிலைப்பாட்டினால் அல்ல ஏனென்றால் கிட்டத்தட்ட அனைத்து ரசிகர்களின் மனநிலையைத் தான் அவரும் மேற்கொண்டிருந்தார். ஆனால் அவர் கூட்டங்களில் மேடைப் பேச்சில் நடிகர் திலகத்தைக் கடுமையாக விமர்சித்ததை என் மனம் ஏற்கவில்லை. தெருத்தெருவாக பிச்சை எடுத்தாலும் எடுப்பேனே தவிர ஒரு நாளும் போக்ரோட்டில் போய் நிற்க மாட்டேன் என்று பேசியது இன்னும் என் நினைவில் உள்ளது. ஆனால் அது சில காலம் மட்டுமே. நாளடைவில் அத்தனை தேசியவாதிகளும் தேசிய இயக்கங்களும் சிதறு தேங்காய் போல் ஆகி விட்டது பரிதாபத்திற்குரியது. இதைப் பற்றிய விவாதம் வேண்டாம். ஸ்ரீகாந்த் விஷயத்திற்கு வருவோம்.
தொலைக்காட்சியில் ஸ்ரீகாந்தைப் பார்த்த வுடனேயே நமது உடன் பிறவா சகோதரனைப் போன்று, நம்முடன் நெருங்கிப் பழகிய ரசிக நண்பர்களைப் போன்று அன்புணர்வு ஏற்பட்டது. அந்த அளவிற்கு அந்தக் கால சிவாஜி ரசிகர்களின் நெஞ்சில் இந்த மூவரும் குடி கொண்டு விட்டனர். குறிப்பாக சசிகுமார் மற்றும் ஸ்ரீகாந்த். இன்னும் சொல்லப் போனால் நாம் சசிகுமாரைப் பற்றி நிறைய விவாதிக்க வேண்டும். சமயம் வரும்போது என் எண்ணத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.

தெய்வீக ராகங்கள் பகுதி பகுதியாக அருமையாக அமைந்த படம். மூன்று கதாநாயகிகளி் இன்னொருவர் உழைக்கும் கரங்களில் கந்தனுக்கு மாலையி்ட்டாள் பாடலில் நடித்த பவானி. மற்றொருவர் சரியாக நினைவில்லமை. பாவை நீ மல்லிகை பாடலை ஜெயச்சந்திரன் வாணி ஜெயராம், மற்றும் ஓடுவது அழகு ரதம் என்ற பாடலை ஜாலி ஆப்ரஹாம் எஸ்.ஜானகி, பாடியிருப்பா. வாணி ஜெயராம் கங்கா யமுனா சரஸ்வதி என்ற ஹாலோவின் பாடலையும் பச்சை மோகினி மகராஜா என்ற பாடலையும் பாடியிருப்பார். தயாரிப்பாளர் - ஆச்சி சினி ஆர்ட்ஸ்
வசனம் இயக்கம் - ஏ. வீரப்பன்

மற்றபடி தங்களுடைய அனைத்து விமரிசனங்களும் நேர்மையாக உள்ளன. பாராட்டுக்கள்.

ராகவேந்திரன்

saradhaa_sn
15th March 2010, 06:51 PM
சகோதரர் ராகவேந்தர் அவர்களுக்கு....

ஸ்ரீகாந்தின் திரியைப் பார்வையிட்டு தங்கள் கருத்துக்களைப் பதிந்தமைக்கு மிக்க நன்றி. ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் ஆகியோரின் திரிகள் துவங்கப்பட்ட சில நாட்களிலேயே இதுவும் தொடங்கப்பட்டு 90 பதிவுகளுக்கு மேல் கொண்டு, ஏழாவது பக்கத்தை எட்டியுள்ளது. (இதுபோன்ற திரிகளுக்கு பார்வையாளர்கள் அதிகம் வந்தபோதும், பதிவாளர்கள் குறைவான எண்ணிக்கையானபடியால் மெல்லவே வளர்ந்து வருகிறது).

சட்டென பார்ப்பவர்களுக்கு, ஒருவேளை இது தற்போதைய (பார்த்திபன் கனவு) ஸ்ரீகாந்தின் திரியோ என்று தோன்றி விடக்கூடாது என்ற எண்ணத்திலேயே, பழைய ஸ்ரீகாந்தின் நினைவு வருவதற்காக 'வெண்ணிற ஆடை' ஸ்ரீகாந்த் என்று தலைப்பிட்டிருந்தேன். மற்ற இரு திரிகளின் பக்கத்திலேயே இதுவும் இடம் பெற்றிருந்ததால் இதுவரை பார்த்திருப்பீர்கள், எனினும் அவர்மீது நடிகர்திலகம் ரசிகர்களின் கோபம் காரணமாக (கோபத்தின் காரணம் உங்கள் பதிவிலேயே இருக்கிறது) இதுவரை நீங்கள் எந்த போஸ்டும் பண்ணவில்லை என்றே நினைத்திருந்தேன்.

இந்த திரியில் நான் பதிந்த 'காங்கிரஸ் பேரியக்கத்தில் ஸ்ரீகாந்த்' என்ற பதிவில் கூட, ஸ்தாபன காங்கிரஸிலிருந்து நடிகர்திலகமும் மற்றோரும் இந்திரா காங்கிரஸில் இணைய முடிவெடுத்தபோது, (நீங்கள் குறிப்பிட்ட அந்த வாக்கியங்கள் என் மனதில் இருந்தபோதும்) நடிகர் திலகத்தை ஸ்ரீகாந்த் கடுமையாக சாடினார் என்று மட்டும் குறிப்பிட்டிருந்தேன். அவர் சொன்ன வார்த்தைகளால் நடிகர்திலகத்தின் ரசிகப்பெருமக்கள் மனம் புண்பட்டது என்பதில் ஐயமில்லை. எனினும் நடிகர்திலகத்தின் அந்த முடிவு ரசிகர்கள் மத்தியிலும் ஏற்புடையதாக இல்லையென்பதும் உண்மை. அந்த முடிவு, அப்போது வெளியான பாட்டும் பரதமும், உனக்காக நான், கிரகப்பிரவேசம் படங்களின் வெற்றியைப் பாதித்தது என்று பலமுறை முரளியண்ணா கூட சொல்லியிருக்கிறார்.

இருப்பினும் இதையெல்லாம் மீறி ஸ்ரீகாந்தின் மீது நமக்கெல்லாம் தனிப்பாசம் உண்டு. அதனால்தான் தொலைக்காட்சியில் பார்த்ததும் 'அடடே "நம்ம" ஸ்ரீகாந்த்' என்று உங்களுக்கும் தோன்றியிருக்கிறது.

RAGHAVENDRA
15th March 2010, 07:05 PM
சகோதரி சாரதா அவர்களுக்கு,
தங்களுடைய பதிவு என் எண்ணங்களை அப்படியே பிரதிபலித்தது. நன்றி.
வெண்ணிற ஆடை என்ற தலைப்பின் பகுதியை நான் பார்க்காமலில்லை. ஆனால் பழைய படங்களின் பெயரிலேயே இப்போது படமெடுக்கும் பாணி அதிகமாகிவிட்ட படியால் அப்படி ஒரு படம் தயாராகிறதோ என்கிற எண்ணம் தான் தோன்றியது. தங்களுடைய முன் எச்சரிக்கையான அறிவிப்பையும் மீறி இதை ஒரு புதுப் படத்தலைப்பு என்று நினைத்த என் எண்ணத்திற்கு நிச்சயம் நான் காரணமாயிருக்க மாட்டேன் என நினைக்கிறேன். தலைப்புக்கு பஞ்சம் வந்தது போல் பழைய பெயரிலேயே படமெடுக்கும் இப்போதைய திரை உலகம் தான் காரணமாயிருக்க முடியும். எப்படியோ உரிய நேரத்தில் கவனித்து பங்கெடுக்க முடிந்ததற்கு மகிழ்கிறேன்.

மேலும் வெண்ணிலா வெள்ளித்தட்டு பாடல் இடம் பெற்ற காளி கோயில் கபாலி, கங்கா யமுனா சரஸ்வதி (இதில் ஸ்ரீகாந்த் இருக்கிறார் என நினைக்கிறேன், இப்படத்தில் உமர்கயாம் எழுதி வைத்த கவிதை என்ற மிக அற்புதமான பாடல் எஸ்.பி.பாலாவும் இன்னொரு பாடகியும் பெயர் நினைவில்லை, பாட மெல்லிசை மன்னர் இசையமைத்திருந்தார்) படங்களைப் பற்றியும் தங்கள் பதிவினை எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்
ராகவேந்திரன்

Bhoori
16th March 2010, 12:16 AM
பைரவி திரைப்படம் பற்றி பக்ஸ் எழுதி இருக்கும் பதிவு இங்கே - இதில் ஸ்ரீகான்த் வில்லன். http://awardakodukkaranga.wordpress.com/2010/03/15/பைரவி-1978/

app_engine
16th March 2010, 12:36 AM
ஸ்ரீகான்த்

அமீர் கான், ஷாருக்கான் மாதிரி ஸ்ரீகானா? :D

Bhoori
16th March 2010, 03:00 AM
பைரவிக்கு பிறகுதான் நான் ரஜினி விசிறியாக மாறினேன். இந்த படத்தின் போஸ்டர்களில் ரஜினிக்கு கருப்பு பான்ட்; கருப்பு கோட், அதில் பட்டன் போட்டிருக்க மாட்டார், உள்ளேயும் சட்டை பனியன் எதுவும் கிடையாது. மேல் உடலில் நாடு பாகம் தெரியும். அவருக்கு எதிர்த்தாற்போல ஒரு பாம்பு படமெடுத்து நிற்கும். ஆஹா என்ன ஸ்டைல் என்ன ஸ்டைல்!

பைரவி வந்த ஓரிரு மாதங்களில் சதுரங்கம் என்று இன்னொரு படம் வந்தது. அதில் ரஜினிக்கு ஸ்ரீகாந்துக்கும் ரோல்கள் மாறி இருக்கும். ரஜினி அண்ணன், ஸ்ரீகாந்த் தம்பி. ரஜினிக்கு நெகடிவ் ரோல்; ஸ்ரீகாந்த்தான் ஹீரோ. ஒரு நல்ல பாட்டு உண்டு, நினைவு வரவில்லையே! ரோல் மாறி இருக்கிறதே என்று பேசிக் கொண்டிருப்போம்.

app_engine, ரொம்ப குறும்பு, அக்குறும்பு!

Bhoori
16th March 2010, 10:59 AM
னெரடியான தொடர்பு இல்லாவிட்டாலும், சிலருக்கு இந்த பதிவுகள் பிடிக்கலாம். ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள், நடிகை நாடகம் பார்க்கிறாள் புததகஙளைப் பற்றிய பதிவுகள் இங்கே.
சில நேரங்களில் சில மனிதர்கள் (http://koottanchoru.wordpress.com/2010/03/16/சில-நேரங்களில்-சில-மனிதர/)
நடிகை நாடகம் பார்க்கிறாள் (http://koottanchoru.wordpress.com/2010/03/12/ஜெயகாந்தனின்-ஒரு-நடிகை-ந/)

Bhoori
16th March 2010, 11:07 AM
//சதுரங்கம் படத்தின் ஒரு நல்ல பாட்டு உண்டு, நினைவு வரவில்லையே! //
மதனோத்சவம் என்ற பாடல்!

இங்கே கேளுங்கள்
http://98.130.188.109/movies/pages/index.php?movie=Sadurangam%28old%29

(நல்லதந்திக்கு நன்றி!)

பைரவியில் ஒரு பாட்டு எங்கள் ஸ்கூல் தமிழ் வாத்தியார் சிதம்பரநாதன் எழுதியது. கட்ட புள்ளே குட்ட புள்ளே கருகமணி போட்ட புள்ளே என்ற பாட்டு. இந்த பாட்டில்தான் வாடிப்பட்டி சந்தையில வாங்கி வந்த ரவிக்கையை ரஜினி ஸ்ரீப்ரியாவுக்கு போட்டுவிடுவார். நாங்கள் யாரும் வெளியில் போய் எங்க வாத்தியார் பாட்டு எழுதி இருக்கிறார் என்று சொல்லவே மாட்டோம். என்ன பாட்டு என்று கேட்டுவிட்டால்? ஏரிக்கரை பூங்காத்தே நீ போற வழி தென்கிழக்கோ பாட்டு எழுதிய பிறகுதான் வெளியில் தைரியமாக சொல்ல ஆரம்பித்தோம். (St. Joseph's Hr. Sec. School, Chengalpattu)

saradhaa_sn
16th March 2010, 01:55 PM
ஸ்ரீகான்த்

அமீர் கான், ஷாருக்கான் மாதிரி ஸ்ரீகானா? :D
Dear app_engine

தொடர்ந்து நீங்கள் இந்த திரிகளை படிக்கிறீர்கள் என்று தெரிகிறது. நீங்களும் ஒரு 'பழைய பட விரும்பி'தானே. உங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் இங்கு தொடர்ந்து பதியலாமே.

(ஒரு காலத்தில் நாமெல்லாம் கஷ்ட்டப்பட்டு உருவாக்கிய 'Good Picturisation of Great Songs' என்ற திரி காணாமலே போய்விட்டது. அதன் முக்கிய பங்கேற்பாளரான திரு. பாலாஜியையும் அதன்பின்னர் காணவில்லை)

saradhaa_sn
16th March 2010, 06:03 PM
பைரவியில் ஒரு பாட்டு எங்கள் ஸ்கூல் தமிழ் வாத்தியார் சிதம்பரநாதன் எழுதியது. கட்ட புள்ளே குட்ட புள்ளே கருகமணி போட்ட புள்ளே என்ற பாட்டு. இந்த பாட்டில்தான் வாடிப்பட்டி சந்தையில வாங்கி வந்த ரவிக்கையை ரஜினி ஸ்ரீப்ரியாவுக்கு போட்டுவிடுவார். நாங்கள் யாரும் வெளியில் போய் எங்க வாத்தியார் பாட்டு எழுதி இருக்கிறார் என்று சொல்லவே மாட்டோம். என்ன பாட்டு என்று கேட்டுவிட்டால்?
'நண்டூருது நரியூருது' - இளையராஜா இசையில் அபூர்வமாகவே பாடக்கூடிய டி.எம்.எஸ் பாடிய இந்தப்பாடல் 'பைரவி' படத்தின் ப்ளஸ்களில் ஒன்று.

saradhaa_sn
16th March 2010, 06:08 PM
தெய்வீக ராகங்கள் பகுதி பகுதியாக அருமையாக அமைந்த படம். மூன்று கதாநாயகிகளி் இன்னொருவர் உழைக்கும் கரங்களில் கந்தனுக்கு மாலையி்ட்டாள் பாடலில் நடித்த பவானி. மற்றொருவர் சரியாக நினைவில்லமை. பாவை நீ மல்லிகை பாடலை ஜெயச்சந்திரன் வாணி ஜெயராம், மற்றும் ஓடுவது அழகு ரதம் என்ற பாடலை ஜாலி ஆப்ரஹாம் எஸ்.ஜானகி, பாடியிருப்பா. வாணி ஜெயராம் கங்கா யமுனா சரஸ்வதி என்ற ஹாலோவின் பாடலையும் பச்சை மோகினி மகராஜா என்ற பாடலையும் பாடியிருப்பார்.
டியர் ராகவேந்தர் சார்,

நீங்கள் சொன்னபிறகு அந்த பவானியின் முகம் நினைவுக்கு வந்துவிட்டது.
'பாவை நீ மல்லிகை... பால் நிலா புன்னகை' பாடல் ஜெயச்சந்திரனின் HIT பாடல்களில் ஒன்று.
அதுபோல வாணி ஜெயராமின்
'கங்கா யமுனா சரஸ்வதி... நீங்கள் குளித்த மூன்று நதி
தரையில் விழுந்ததும் புனிதத்தை இழந்தது
காரணம் உங்கள் தீய மதி' பாடலும் படம் ஓடிய காலத்தில் விரும்பிக் கேட்கப்பட்ட பாடல். அதுபோல 'பச்சை மோகினி மகராஜா' பாடலும் லேசாக நினைவிருக்கிறது. ஆனால் ஜாலியும் ஜானகியும் இணைந்து பாடியதாக நீங்கள் சொன்ன பாடல் நினைவில் இல்லை.

saradhaa_sn
16th March 2010, 06:24 PM
மேலும் வெண்ணிலா வெள்ளித்தட்டு பாடல் இடம் பெற்ற காளி கோயில் கபாலி, கங்கா யமுனா சரஸ்வதி (இதில் ஸ்ரீகாந்த் இருக்கிறார் என நினைக்கிறேன், இப்படத்தில் உமர்கயாம் எழுதி வைத்த கவிதை என்ற மிக அற்புதமான பாடல் எஸ்.பி.பாலாவும் இன்னொரு பாடகியும் பெயர் நினைவில்லை, பாட மெல்லிசை மன்னர் இசையமைத்திருந்தார்) படங்களைப் பற்றியும் தங்கள் பதிவினை எதிர்பார்க்கிறேன்.
டியர் ராகவேந்தர் சார்,
ஜெய்கணேஷ் கதாநாயகனாக நடித்த 'காளி கோயில் கபாலி' படத்தின் முழுக்கதையும் கோர்வையாக நினைவில் இல்லை. துண்டு துண்டாவே நினைவுக்கு வருகிறது. (சாந்தியில் 'விஸ்வரூபம்' ஓடிக்கொண்டிருந்தபோது பாரகனில் வெளியானதென்று நினைக்கிறேன்). அதே சமயம் ஜெய்சங்கர், ஷ்ரீதேவி நடித்த 'கங்கா யமுனா காவேரி'யும் 'ராஜாவுக்கேத்த ராணி'யும் நன்றாக நினைவில் உள்ளது. இரண்டுமே ஓடியனில் அடுத்தடுத்து வெளியானதாக ஞாபகம். 'நல்லதுக்கு காலமில்லை', 'குழந்தையைத் தேடி' படங்களும் அங்கேதான் வெளியானதாக நினைவு.

அதே நேரத்தில் பி.எஸ்.வீரப்பா தயாரித்து சரத்பாபு கதாநாயகனாக நடித்த 'மேகத்துக்கும் தாகமுண்டு' படத்தில் மெல்லிசை மன்னரின் அபார உழைப்பைச் சொல்லியே ஆக வேண்டும். கதை சரியில்லாத காரணத்தால் எம்.எஸ்.வி.யின் உழைப்பு அத்தனையும் விழலுக்கு இறைத்த நீரானது.
'மரகத மேகம் சிந்தும்
மழைவரும் நேரமிது' (வாணி ஜெயராம்) பாடலாகட்டும், அல்லது
'ஆடலாமா அன்ன நடை பின்னலிட' (வாணி-எஸ்.பி.பி) பாடலாகட்டும்.... ஒலித்தால் ஒரு கணம் நின்று கேட்டுவிட்டுப்போகத் தோன்றும். (ஆனால் அப்போது தமிழ்கூறும் நல்லுலகம் 'ஓரம் போ... ஓரம் போ' பின்னாலும், 'ஆகா வந்திருச்சு' பின்னாலும் ஓடிக்கொண்டிருந்த நேரம், நல்ல பாடல்கள் பல புறந்தள்ளப்பட்டன).

app_engine
23rd March 2010, 12:33 AM
இன்று ஒரு ப்ளாகில் கண்டது :

http://2.bp.blogspot.com/_nSPvsgb1MPQ/S6XKTYQxLXI/AAAAAAAAAJo/47ipmdCy5z4/s1600-h/vikatanj.jpg



அன்னத்தின் மச்சானாக வரும் ஸ்ரீகாந்த் பஞ்சாயத்தில் வாதாடும் போதும், அன்னத்திடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்தும் உருக்கத்திலும்...அடேயப்பா! வழக்கமாகத் துகிலுரியும் ஸ்ரீகாந்தா இவர்?

Bhoori
26th March 2010, 11:03 PM
ஸ்ரீகாந்த் நடிட்த யாருக்கு யார் காவல் திரைப்படம் சுஜாதாவின் ஜன்னல் மலர் நாவலை மூலக் கதையாகக் கொன்டது. சுஜாதா இங்கே அந்தப் படத்தைப் பற்றி நினைவு கூர்கிறார். (ஆனால் இந்தப் பதிவில் ஸ்ரீகாந்த் பற்றி அதிகம் இல்லை.)

http://awardakodukkaranga.wordpress.com/2010/03/16/கனவுத்-தொழிற்சாலை-சுஜாத-4/

saradhaa_sn
29th March 2010, 01:17 PM
நேற்றிரவு யதார்த்தமாக 'கே - டிவி' சேனலைத்திருப்பியபோது, ஒரு திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. கிட்டத்தட்ட முடிவை நெருங்கும் நேரம் என்று நினைக்கிறேன். படத்தில் ஸ்ரீகாந்த் இருப்பதைப்பார்த்ததும் என்ன படமாக இருக்கும் தொடர்ந்து பார்த்தேன். இடையில் விளம்பர இடைவேளைக்குப்பின் மீண்டும் துவங்கியபோது படத்தின் பெயர் 'வெற்றிக்கனி' என்று காட்டினர்.(இப்படியொரு படம் வந்ததா?)

பார்க்கத்துவங்கிய இடத்திலிருந்து தொடர்ந்த வரையில், ஆனந்தபாபு, ரவீந்தர் என இரண்டு கதாநாயகர்கள். ஒரு கதாநாயகி ஜீவிதா. ரவீந்தரின் அப்பா ஸ்ரீகாந்த், தன் மகனை பெரிய பணக்காரியான ஜீவிதாவுக்கு மணமுடித்து அவளது சொத்துக்களை அடைய நினைக்கிறார். ஆனால் ஜீவிதாவுக்கும் ஆனந்தபாபுவுக்கும் காதல். அதனால் ரவீந்தர் வில்லனாகிறார். இதனிடையே ரவீந்தரின் ஒரிஜினல் அப்பா வி.கோபாலகிருஷ்ணன் சிறியிலிருந்து விடுதலையாகி வந்து ஸ்ரீகாந்தை சந்தித்து, தன்னை சிறைக்கு அனுப்பிவைத்ததற்காக வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அதை மறைந்திருந்து கேட்கும் ரவீந்தருக்கு வி.கோ.தான் தன் உண்மையான அப்பா, ஸ்ரீகாந்த் தன்னை வைத்து பணத்தைச்சுருட்ட நினைக்கும் ஒரு அயோக்கியன் என்று தெரியவருகிறது.

விஷயம் தெரிந்த அனைவருமே ஸ்ரீகாந்துக்கு எதிரியாகிறார்கள். பிறகென்ன கிளைமாக்ஸ்தான். வழக்கம்போல மலைப்பகுதி. வழக்கம்போல ரவீந்தரின் அப்பாவையும், ஆனந்தபாபுவின் அம்மாவையும் கடத்தி வந்து கையில் துப்பாக்கியுடன் ஸ்ரீகாந்த் மிரட்டுகிறார். கிளைமாக்ஸ் சண்டை. ஸ்ரீகாந்த் வி.கோபாலகிருஷ்ணனைச் சுட்டுத்தள்ள, பதிலுக்கு ரவீந்தர் ஸ்ரீகாந்தைச்சுட, சூடு வாங்கியபின்னரும் ஸ்ரீகாந்த ரவீந்தரைச்சுட, மீண்டும் ரவீந்தர் ஸ்ரீகாந்தை சுட்டுத்தள்ள, மிஞ்சியிருக்கும் ஆனந்தபாபுவும் ஜீவிதாவும் டூயட் பாட, படம் முடிந்தது. சரியான சொதப்பல் படம் என்று தெரிகிறது, காட்சியமைப்பு களையும், நடிகர்களையும் வைத்துப்பார்க்கும்போது யாருடைய இயக்கம் என்று ஊகிக்க முடிகிறது. அவரேதானா...?. நிச்சயமாகத் தெரியாததால் 'அட, ராமா.. நாராயணா...' என்று கூவ முடியவில்லை.

படத்தில் வனிதாவும் இருக்கிறார், ஆனந்தபாபுவின் தங்கையாக. ஒருகட்டத்தில் வில்லன் ஸ்ரீகாந்த் வனிதாவைத் தூக்கில் தொங்கவிட்டு அவர் காலில் டேப் ரிக்கார்டரைக்கட்டி விட்டிருக்கிறார். தங்கையின் பிணம் தூக்கில் தொங்குவதைப்பார்க்கும் ஆனந்தபாபு, முகத்தில் எந்த சலனமுமில்லாமல் டேப்ரெக்கார்டரை ஆன் பண்ணி ஸ்ரீகாந்த் என்ன பேசியிருக்கிறார் என்று கேட்டுவிட்டு, தூக்கில் தொங்கும் தங்கையின் பிணத்தைக்கூட இறக்காமல் அப்படியே தொங்கவிட்டுச்செல்கிறார். இதைவிட ஒரு மகாமட்டமான டைரக்ஷனைப்பார்த்திருக்க முடியுமா?.

கிளைமாக்ஸுக்கு சற்று முன்னர், கிளப்பில் ஜில்ஜில் ஜிகினா உடையுடன் ஆனந்தபாபு, ரவீந்தர், ஜீவிதா, டிஸ்கோ சாந்தி ஆடும் ஆட்டமும் பாட்டும் ஜோர். படுவேகம். இன்றைய ஆட்டங்களைவிட பலமடங்கு தேவலை. காமிராவை ஆட்டாத ஒளிப்பதிவும் (கேமராமேன் வாழ்க), கண் இமைப்பதற்குள் ஐம்பது காட்சிகளை மாற்றாததும் (எடிட்டர் வாழ்க) பாடலை களைகட்ட வைக்கிறது. அதைத்தொடர்ந்து ரவீந்தரும் ஆனந்தபாபுவும் போடும் சண்டைக்காட்சியும் வெகுஜோர். அதுபோல வில்லனின் ஆட்களிடம் சிக்கிய வி.கோ.வைக்காப்பாற்ற ரவீந்தர் போடும் சண்டையும், அவுட்டோரில் அழகாக இருந்தது. கதைதான் பலவீனமாகத் தெரிந்தது. ஸ்ரீகாந்தைப்பொறுத்தவரை இந்தப்படத்துக்கு அவரால் என்ன பண்ணமுடியுமோ அதைத் தந்திருந்தார்.

இருந்தாலும் 'வெற்றிக்கனி' இன்னொருமுறை முழுதாகப் பார்க்கும் வாய்ப்புக்கிடைத்தால் பார்க்கனும் என்று தோன்றியது. சீரியஸ் படத்தைப்பார்த்து சிரித்து மகிழலாமே.

gkrishna
13th April 2010, 11:00 AM
some more movies of srikanth
1.Oru veedu iru ulagam with shoba
2.Vattardhikul saduram with ladha/sumithra
3.idahyatil oru idam with radhika
4.oru marathu paravaigal with sripriya
5.raja rajeswari with sujatha
6.jaya nee jayuchette
7.Ponnai solli kuttramillai with y.vijaya/sivakumar
8.yarukku mapillai yaroo with padapat
9.vazhvu enpakkam with muthuraman/lakshmi
10.annapoorani with k.r.vijaya

gkrishna
13th April 2010, 11:08 AM
11. ezhaikkuam kalam varum with subha

அன்மையில் அவருடைய பேட்டி ஜயா TV ல் ஒலி பரப்பானது அதில் அவர் நாடகத்தை பட்ட்ர்ரி நீன்ட நேரம் பேசினார்

Bhoori
18th April 2010, 06:43 AM
தங்கப் பதக்கம் திரைப்படத்துக்கு விகடனில் வந்த விமர்சனம் இங்கே - http://awardakodukkaranga.wordpress.com/2010/04/17/தங்கப்-பதக்கம்/

// ஸ்ரீகாந்திடம் நல்ல முன்னேற்றம். அப்பாவின் கண்டிப்பைத் தவறாகப் புரிந்துகொண்டு அவரை அவமானப்படுத்தும் சந்தர்ப்பங்களைச் சாமர்த்தியமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். //

Bhoori
23rd April 2010, 12:43 AM
தங்கப் பதக்கம் படத்துக்கு என் விமர்சனம் இங்கே - http://awardakodukkaranga.wordpress.com/2010/04/22/தங்கப்-பதக்கம்-ஆர்வியின/

// படத்தின் revelation ஸ்ரீகாந்த்தான். அவருடைய காரக்டரில் நம்பகத்தன்மை அதிகம். சின்ன வயதில் இருந்தே அப்பா மீது காண்டு, நடுவில் கொஞ்சம் சமாதானமாகப் போக முயற்சி செய்தாலும், மீண்டும் கடுப்பாகி அப்பாவை வீழ்த்த முயற்சி செய்யும் ரோல். அலட்டிக் கொள்ளாமல், பொங்கி எழாமல், அதே நேரத்தில் இறுகிப் போன மனது என்பதை நன்றாக காட்டுகிறார். நான் சிறுவனாக இருந்த காலத்தில் என் காலேஜ் படிக்கும் உறவினர்கள் சிவாஜி இதற்கப்புறம் ஸ்ரீகாந்திடம் கொஞ்சம் பயந்தார், அவருடன் சேர்ந்து நடிக்கும்போதெல்லாம் ஸ்ரீகாந்துக்கு ஸ்கோப் கம்மியாக இருக்கும்படி பார்த்துக் கொண்டார் என்று சொல்வார்கள். அவர்களுக்கெல்லாம் ஆதர்சம் ஸ்ரீகாந்த்தான். ஸ்ரீகாந்த் மாதிரியே முடி, மீசை என்று அலைந்தார்கள். அவர்கள் சொன்னதில் உண்மை இருக்கிறதா இல்லையா என்று சாரதா போன்றவர்கள்தான் சொல்லவேண்டும். //

saradhaa_sn
23rd April 2010, 01:26 PM
டியர் ஆர்.வி.

உங்கள் நண்பர்கள்/உறவினர்கள் கூற்று முழுக்க முழுக்க கற்பனையே தவிர உண்மையில்லை. இதை ஸ்ரீகாந்தே ஒப்புக்கொள்ள மாட்டார். வியட்நாம் வீடு படத்திலேயே ஸ்ரீகாந்தின் நடிப்பைப் பார்த்த நடிகர்திலகம், 'இவனை நம்ம படத்துல தொடர்ந்து போடுங்கப்பா' என்று தன் இயக்குனர்களிடம் சொன்னார். அதிலும் தங்கப்பதகக்கத்துக்குப் பிறகுதான் அதிகமாக ஸ்ரீகாந்த், நடிகர்திலகத்தின் படங்களில் தொடர்ந்து இடம் பெற்றார்.

பீம்சிங் படங்களில், ஒரே படத்தில் ரங்காராவ், சுப்பையா, பாலையா, எம்.ஆர்.ராதா, ஜெமினி ஆகியோருடன் நடித்து கரை கண்டவரான நடிகர்திலகம், ஸ்ரீகாந்தைப்பார்த்து பயந்தார் என்று சொல்வது மிகப்பெரிய ஜோக். தன்னுடன் நடிப்பவர்கள், தனக்கு இணையாக சிறப்பாகச்செய்ய வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு நடிக்கச்சொல்லிக்கொடுப்பவர் நடிகர்திலகம். இதை திரைப்பிரபலங்கள் பலமுறை பல இடங்களில் சொல்லியிருக்கிறார்கள். 'உயர்ந்த மனிதன்' படத்தில், (தனக்கு அவ்வளாவாகப்பிடிக்காத) அசோகனுக்கு அவர் 'அட்டாக்' வந்து சாகும் தறுவாயில் எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுத்தாராம் நடிகர்திலகம். ஆனால் அதில் பத்தில் ஒரு பங்கு கூட அசோகன் நடிக்கவில்லையாம் (ஆதாரம்: நேற்று (22.04.2010) ஜெயா தொலைக்காட்சியின் 'திரும்பிப்பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் திரு ஏ.வி.எம்.சரவணன் சொன்ன தகவல்).

சிலருக்கு சிவாஜியைக் கிண்டல் செய்வது அல்வா சாப்பிடுவது போல. அவர்கள் எப்போதும் அதை விடப்போவதில்லை, (உங்கள் நண்பர்கள் உட்பட).

mr_karthik
30th April 2010, 01:43 PM
சிலருக்கு சிவாஜியைக் கிண்டல் செய்வது அல்வா சாப்பிடுவது போல. அவர்கள் எப்போதும் அதை விடப்போவதில்லை, (உங்கள் நண்பர்கள் உட்பட).
சரியாகச்சொன்னீர்கள்...

அதுவும் blog எழுதும் பிரகஸ்பதிகளிடம் இந்த மனப்பாங்கு மிக அதிகம். இவர் செய்யும் சின்னத்தவறைக்கூட மிகைப்படுத்தி எழுதுபவர்கள், அதே தவறை மற்றவர்கள் பெரிதாகச்செய்தாலும் கண்டுகொள்வதில்லை.

mr_karthik
30th April 2010, 01:50 PM
சமீபத்தில் தொலைக்காட்சியில் 'அன்னப்பறவை' என்ற படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மட்டும் பார்க்க நேரந்தது. ஸ்ரீகாந்த், லதா, ராதிகா ஆகியோர் நடித்திருந்தனர். லதாவின் மகளாக ராதிகா நடித்திருக்க, மிக முக்கியமான ரோலில் ஸ்ரீகாந்த்.

(பல ஆண்டுகளுக்கு முன் வந்த படமென தெரிகிறது. லதா, ஸ்ரீகாந்த், ராதிகா எல்லோரும் ரொம்ப இளமையாக இருக்கின்றனர்)

ராதிகாவின் பிறப்பில் ஏதோ மர்மம் இருப்பதுபோல தெரிகிறது. அவரது கல்யாணத்தின்போது அவருடைய அப்பாவைக்காணோம். யார் என்பதும் தெரியவில்லை. மணவறையில் மாப்பிள்ளையும் பெண்ணும் (ராதிகா) அமர்ந்திருக்க, "பொண்ணோட தாயார், தோப்பனார் வாங்க" என்று ஐயர் அழைக்கும்போது, லதா மட்டும் வந்து நிற்க, 'பொண்ணோட அப்பா எங்கே' என்று ஐயர் மீண்டும் கேட்க, லதா மருவுகிறார். சோபாவில் உட்கார்ந்து இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் ஸ்ரீகாந்த், ஏதோ நிலைமை கொஞ்சம் புரியவர, சட்டென்று 'இதோ வந்துட்டேன்' என்று எழுந்து வந்து தாம்பாளத்தில் ஏறி லதாவோடு ஒட்டி நிற்க ராதிகா இருவருக்கும் பாதபூஜை செய்கிறார். அப்போது லதா ஸ்ரீகாந்தை கண்களில் நன்றி ததும்ப பார்க்கிறார். கல்யாணம் முடிகிறது. திருமணமாகி மகளும் மருமகனும் போனபின்னர் ஸ்ரீகாந்திடம் வரும் லதா, 'இந்த உதவியை என் வாழ்நாள் முழுதும் மறக்க மாட்டேன்' என்று கண்களில் கண்ணீருடன் சொல்கிறார்.

பின்னர் ஒரு மரத்தடியில் ஸ்ரீகாந்த் அமர்ந்து இந்தக்கதையை எழுதி முடிப்பதுபோல படம் முடிகிறது. படம் நல்ல படம்போல தெரிகிறது. வாய்ப்புக்கிடைத்தால் முழுப்படமும் பார்க்க வேண்டும்.

யாராவது 'அன்னப்பறவை' பார்த்தவர்கள் அதைப்பற்றி எழுதுங்களேன்.

Plum
3rd May 2010, 12:00 PM
சிவாஜி இதற்கப்புறம் ஸ்ரீகாந்திடம் கொஞ்சம் பயந்தார், அவருடன் சேர்ந்து நடிக்கும்போதெல்லாம் ஸ்ரீகாந்துக்கு ஸ்கோப் கம்மியாக இருக்கும்படி பார்த்துக் கொண்டார்
:rotfl:

room pOttu yOsippAingaLO?

groucho070
3rd May 2010, 12:22 PM
சிவாஜி இதற்கப்புறம் ஸ்ரீகாந்திடம் கொஞ்சம் பயந்தார், அவருடன் சேர்ந்து நடிக்கும்போதெல்லாம் ஸ்ரீகாந்துக்கு ஸ்கோப் கம்மியாக இருக்கும்படி பார்த்துக் கொண்டார்
:rotfl:

room pOttu yOsippAingaLO? :lol:

saradhaa_sn
5th May 2010, 10:19 AM
11. ezhaikkuam kalam varum with subha

அன்மையில் அவருடைய பேட்டி ஜயா TV ல் ஒலி பரப்பானது அதில் அவர் நாடகத்தை பட்ட்ர்ரி நீன்ட நேரம் பேசினார்
Summery of Shreekanth's 'Thirumbi Paarkiren' programme here:

http://www.forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=13689&start=75

saradhaa_sn
5th May 2010, 10:26 AM
டியர் கார்த்திக்,

'அன்னப்பறவை' படத்தின் கிளைமாக்ஸ் சீனை விவரித்து, அப்படம் பார்க்கும் ஆவலை தூண்டி விட்டீர்கள். இதுவரை அப்படம் பார்த்ததில்லை. தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பினால் பார்க்கவேண்டும். நீங்கள் சொன்னதை வைத்துப்பார்க்கும்போது நல்ல படமாக இருக்குமெனத் தெரிகிறது

gkrishna
10th May 2010, 09:57 AM
அன்னபறவை ஒரு மிக சிறந்த படம் அதில் ஒரு பாடல் - "பொன் என்பதோ பூ என்பதோ காதல் பெண்ணே' spb இன் பாடல் 80 காலகட்டங்களில் பிக் ஹிட். இசை d ராமானுஜம் என்று நினேகிறேன் அதே போல் " கோபால ஏன் சார் எங்கே போறே சந்தைக்கு போறேன் என்ன வாங்க ' என்ற பாடலும் சிலோன் ரேடியோவில் அடிக்கடி ஒளிபர்ரப்பபட்ட பாடல்

gkrishna
10th May 2010, 10:11 AM
ஸ்ரீகாந்த் பற்றி சிவகுமார் அவருடைய "இது ராஜபாட்டை அல்ல" புத்தகத்தில் எழுதி உள்ள வரி "புத்தி உள்ள மனிதர் எல்லாம் வெற்றி காண்பது இல்லை வெற்றி பெற்ற மனிதர் எல்லாம் புத்திசாலி இல்லை"

joe
10th May 2010, 10:56 AM
சிவாஜி இதற்கப்புறம் ஸ்ரீகாந்திடம் கொஞ்சம் பயந்தார், அவருடன் சேர்ந்து நடிக்கும்போதெல்லாம் ஸ்ரீகாந்துக்கு ஸ்கோப் கம்மியாக இருக்கும்படி பார்த்துக் கொண்டார்
:rotfl:

room pOttu yOsippAingaLO? :lol:

:rotfl: ஸப்பா ...எப்படி தான் இப்படி துணிந்து சொல்லுறாங்களோ :rotfl:

gkrishna
10th May 2010, 11:34 AM
ஸ்ரீகாந்த் ஜெயப்ரபா இணைந்து நடித்த "பணம் பகை பாசம்' என்றுஒரு திரைப்படம் 1980 கால கட்டங்களில் தினத்தந்தி பேப்பர் இல் விளம்பரம் பார்த்த நினவு அதில் "எனக்கு பிடித்த ரோஜாப்பூவே எடுத்து செல்ல வா" என்ற பாடல் ஹிட் அந்த திரைப்படம் வெளியானதா யாரவது தகவல் தெரிந்தால் சொல்லவும்

RAGHAVENDRA
10th May 2010, 09:34 PM
அன்னப் பறவை இசையமைப்பாளர் ஆர். ராமானுஜம். இவர் எக்கோ ரிக்கார்டிங் கம்பெனி யைச் சேர்ந்தவரும் பிரபல இசையமைப்பாளருமான ஆர். பார்த்த சாரதி அவர்களின் சகோதரர் ஆவார். அன்னப் பறவையைத் தொடர்ந்து ராமானுஜம் இசையமைத்து வெளிவந்த மற்றொரு படம் ஆனந்த பைரவி. இதில் எஸ். வரலட்சுமி அவர்கள் பாடிய உமையவளே முத்து மாரியம்மா பாடல் மிகவும் உள்ளத்தை உருக்கக் கூடியதாகும்.
பணம், பெண், பாசம் படம் சென்னையில் அலங்கார் திரையரங்கில் முற்பகல் காட்சியாக வெளியானதாக நினைவு. அதில் இடம் பெற்ற பாடல் கலைமாமணியே, லட்சுமி வந்தாள், உள்ளிட்ட பாடல்கள் இடம் பெற்றதாக நினைவு. ஆனால் எனக்குப் பிடித்த ரோஜாப்பூவே பாடல் அதில் இடம் பெற்றதா என நினைவில்லை.
வாய்ப்புக்கு நன்றி.
ராகவேந்திரன்

gkrishna
11th May 2010, 10:25 AM
நன்றி திரு ராகவேந்தர் அவர்களுக்கு

ஆனந்த பைரவி படம் ரவி சந்திரன் கே.ர.விஜயா மற்றும் ஜெயதேவி நடித்து வெளி வந்தது அதில் 2 நல்ல பாடல்கள் உள்ளன 1 கோடி கோடி இன்பம் அது தேடி வந்த சொந்தம் ஆடி மத வெள்ளம் நீ என் ஆனந்த பைரவி . 2 ஒரு நாளில் உருவானது இது ஒரு நாளில் முடிவானது . இந்த இரண்டு பாடல்களுமே T .M .S அவர்கள் பாடி இருப்பார்கள். நினைவுகளை மீட்டி விட்டதற்கு நன்றி. பணம் பெண் பாசம் முத்துராமன் சரிதா நடிதது வெளி வந்தது திரு ஜாவர் சீத ராமன் கதை . பணம் பகை பாசம் ஸ்ரீகாந்த் மற்றும் ஜெயப்ரபா நடிப்பில் வெளி வரபோவதாக டெய்லி தந்தி பேப்பர் இல் விளம்பரம் பார்த்த நினவு. அதில் எனக்கு பிடித்த ரோஜா பூவே பாடல் சிலோன் ரேடியோவில் 1980 கால கட்டங்களில் அடிகடி கேட்ட நினவு

நன்றி

gkrishna
11th May 2010, 10:41 AM
௿௾ஸ்ப்ப்: எனக்கு பிடித்த ரோஜா பூவே
எடுத்து செல்லலாமா

ப்ஸ்: எதற்கு உனக்கு அஏக்கம் கண்ணா
இசையை கேட்கலாமா

ஸ்ப்ப்: எனக்கு பிடித்த ரோஜா பூவே
எடுத்து செல்லலாமா

ஸ்ப்ப்: நல்ல வெணு கானம் உந்தன் மொழியோ
இல்லை வீணை மீட்டுகின்ற இசையோ

ப்ஸ்: எந்தன் காதல் மன்னன் என்ன கவியோ
என்னை பார்த்தால் கவிதை வருமோ

ஸ்ப்ப்: நல்ல வெணு கானம் உந்தன் மொழியோ
இல்லை வீணை மீட்டுகின்ற இசையோ

ப்ஸ்: எந்தன் காதல் மன்னன் என்ன கவியோ
என்னை பார்த்தால் கவிதை வருமோ

ஸ்ப்ப்: இது தானா காதல் அமுதம்

ப்ஸ்: உந்தன் நெஞ்சில் மலரும் குமுதம்

ஸ்ப்ப்: இது தானா காதல் அமுதம்

ப்ஸ்: உந்தன் நெஞ்சில் மலரும் குமுதம்

ஸ்ப்ப்: எனக்கு பிடித்த ரோஜா பூவே
எடுத்து செல்லலாமா

ப்ஸ்:எதற்கு உனக்கு அஏக்கம் கண்ணா
இசையை கேட்கலாமா

ஸ்ப்ப்: எனக்கு பிடித்த ரோஜாப் பூவே
எடுத்து செல்லலாமா

ப்ஸ்: விரல் தீண்டும் போது ஒரு மயக்கம்
மனம் டேவ லோகத்தில் மிதக்கும்

ஸ்ப்ப்: இது போக போக இன்னும் இனிக்கும்
தெளியாத போதை இருக்கும்

ப்ஸ்: பூங்க்கோதை கண்ணன் மடியில்

ஸ்ப்ப்: அவன் மங்கை அன்பின் பிடியில்

ஸ்ப்ப்: எனக்கு பிடித்த ரோஜா பூவே
எடுத்து செல்லலாமா

ஸ்ப்ப்: ஒரு நூலில் ஆடுகின்ற இடையே
உன்னை வாங்க வெண்டும் என்ன விலையே

ப்ஸ்: கையில் கொடுக்க வெண்டும் நீ உன்னையே
உடல் யாவும் உனது வசமே

ஸ்ப்ப்: ஒரு நூலில் ஆடுகின்ற இடையே
உன்னை வாங்க வெண்டும் என்ன விலையே

ப்ஸ்: கையில் கொடுக்க வெண்டும் நீ உன்னையே
உடல் யாவும் உனது வசமே

ஸ்ப்ப்: நெடு நாளாய் உனது அடிமை
ப்ஸ்: உந்தன் சொந்தம் தங்க பதுமை

ஸ்ப்ப்: நெடு நாளாய் உனது அடிமை
ப்ஸ்: உந்தன் சொந்தம் தங்க பதுமை

ஸ்ப்ப்: எனக்கு பிடித்த ரோஜா பூவே
எடுத்து செல்லலாமா

ப்ஸ்:எதற்கு உனக்கு அஏக்கம் கண்ணா
இசையை கேட்கலாமா

ஸ்ப்ப்: எனக்கு பிடித்த ரோஜாப் பூவே
எடுத்து செல்லலாமா

RAGHAVENDRA
11th May 2010, 07:34 PM
டியர் கிருஷ்ணாஜி
பணம் பகை பாசம் விளம்பரத்தோடும் ஓரிரு ஷெட்யூலோடும் சரி. படம் வரவில்லை. ஆனால் இந்தப் பாடல் மிக மிக பிரபலமானது. இந்தப் பாடலுக்கான இணைப்பு
http://music.cooltoad.com/music/song.php?id=191012

ராகவேந்திரன்

gkrishna
12th May 2010, 03:26 PM
மிக்க நன்றி திரு ராகவேந்தர் அவர்களுக்கு

இதே போல் ஸ்ரீகாந்த் நடித்த கீழ்க்கண்ட படங்கள் வெளியானதா என்று எனக்கு சிறு சந்தேகம்

தங்க பதக்கத்தை தொடர்ந்து "குட் bye mr சௌத்ரி" என்று ஒரு திரைப்படம் வரபோவதாக தினத்தந்தி இல் பார்த்த நினவு

மற்றும் அவர் நடித்த காமன் பண்டிகை சித்ரா செவ்வானம் போன்ற படங்கள் வெளியானதா

என் உடைய ஒரு தாழ்மையான கேள்வி ஏன் திரு ஸ்ரீகாந்த் 1980 பிறகு நிறைய படங்களில் நடிக்கவில்லை ரஜினி உடன் பைரவி,சதுரங்கம் மற்றும் இறைவன் கொடுத்த வரம் படங்களில் நடித்தார் பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு தம்பிக்கு எந்த ஊரு (மெயின் வில்லன்),ஸ்ரீ ராகவேந்தர் மற்றும் வேலைக்காரன் (ஒரு சீன் மாத்திரம்) படங்களில் நடித்தார். இடையில் திரு ராமநாராயணன் இன் சில படங்களில் நடித்தார் பிறகு காணாமலே போய் விட்டார் ஏன் இந்த மிகுந்த இடைவெளி ஜெயா டிவி திரும்பிபர்கிறேன் நிகழ்ச்சியில் அவர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக தோன்றியது

RAGHAVENDRA
12th May 2010, 03:43 PM
சித்திரச் செவ்வானம் மற்றும் காமன் பண்டிகை படங்கள் வெளியாகின. சித்திரச் செவ்வானம் படம் சென்னை பிளாஸாவில் வெளியான ஞாபகம். முதன் முதலில் இந்தப் படத்தில் இடம் பெற்ற எங்கே உன்னைக் கண்டால் கூட என்ற பாடலில் தான் எஸ்.பி.பி.யின் குரலில் புதிய வகையில் ஹம்மிங், சிணுங்கல் போன்ற வித்தியாசமான பாணியைப் புகுத்தியதாக நினைவு. உடன் பாடிய ஜானகியும் தன் குரலில் புதுமையான பாணியைப் புகுத்திப் பாட ஆரம்பித்தார். மெல்லிசை மன்னரின் இசையில் இப்பாடல் என்றும் மாறா இளமை பொங்கும் பாடலாகும். காமன் பண்டிகை வந்த வேகத்திலேயே திரும்பி விட்டது. குட்பை மிஸ்டர் சௌத்ரியைப் பொறுத்த வரை சென்டிமென்ட் காரணத்தால் தொடரப் படவில்லை. அது தங்கப்பதக்கம் படத்தின் பாதிப்பில் உருவாக்கப் பட்ட டைட்டில் என்றாலும் சில விநியோகஸ்தர்கள் வற்புறுத்தலினால் வேறு டைட்டில் இடப் பட்டுத் தொடரப் பட்டதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன். முக்கால் வாசி படம் முடிவடைந்ததாகவும் செய்திகள் வெளியானதுண்டு.

1980க்குப் பிறகும் அவர் நடித்த படங்கள் நிறைய வந்தன. ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவர் அதிகம் நடித்ததாகத் தெரியவில்லை.

ராகவேந்திரன்

rajeshkrv
12th May 2010, 08:23 PM
the last film which had srikanth was Mounam Sammadham i guess.

saradhaa_sn
13th May 2010, 01:26 PM
the last film which had srikanth was Mounam Sammadham i guess.
ராஜேஷ்...

சத்யராஜின் 'மகா நடிகன்' படம்தான் அவர் திரையில் தோன்றிய கடைசிப்படம் (இதுவரை) என்று நினைக்கிறேன். அதில் கிளைமாக்ஸ் காட்சியில் கவர்னராக வந்து, சத்யராஜினால் உருவாக்கப்பட்ட இளைஞர்களுக்கு அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.

saradhaa_sn
13th May 2010, 01:46 PM
என் உடைய ஒரு தாழ்மையான கேள்வி ஏன் திரு ஸ்ரீகாந்த் 1980 பிறகு நிறைய படங்களில் நடிக்கவில்லை ரஜினி உடன் பைரவி,சதுரங்கம் மற்றும் இறைவன் கொடுத்த வரம் படங்களில் நடித்தார் பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு தம்பிக்கு எந்த ஊரு (மெயின் வில்லன்),ஸ்ரீ ராகவேந்தர் மற்றும் வேலைக்காரன் (ஒரு சீன் மாத்திரம்) படங்களில் நடித்தார். இடையில் திரு ராமநாராயணன் இன் சில படங்களில் நடித்தார் பிறகு காணாமலே போய் விட்டார் ஏன் இந்த மிகுந்த இடைவெளி ஜெயா டிவி திரும்பிபர்கிறேன் நிகழ்ச்சியில் அவர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக தோன்றியது
G.கிருஷ்ணா..

திரையுலகில் எல்லோருக்கும் ஏற்படும் தேக்க நிலை இவருக்கும் ஏற்பட்டது. இவர் வில்லனாக நடித்தபோது கதாநாயகனாக நடித்தவர்கள் திரையிலிருந்து ஒதுக்கப்பட்டபோது இவரும் சேர்ந்து ஒதுக்கப்பட்டார். இவர் வகித்து வந்த இடத்தை பின்னர் ரகுவரன், நாஸர், பிரகாஷ்ராஜ் போன்றோர் பிடித்து கொடிநாட்டத் துவங்கினர்.

தற்போது அவர் நடப்பதற்கு சற்று சிரமப்படுவதாகக் கேள்வி. ஜெயா டிவி. நிகழ்ச்சியின்போது கூட ஒரு இடத்தில் உட்கார்ந்த நிலையில்தான் பேசினார். சில ஆண்டுகளுக்கு முன் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் தன் மனைவியுடன் ஷாப்பிங் செய்துகொண்டிருந்தபோது பார்த்தேன். அப்போது நல்ல உடல் நலத்துடன் இருந்தார். வெள்ளை பேண்ட், வெள்ளை அரைக்கை சட்டை அணிந்திருந்தார்.

gkrishna
17th May 2010, 03:21 PM
மிக்க நன்றி சாரதா madem அவர்களுக்கு

நான் சிவாஜி ரசிகர் ஆக இருந்தாலும் ஏனோ தெரியவில்லை ஸ்ரீகாந்த் மீது ஒரு ஈடுபாடு மீண்டும் அவர் நடிக்க மாட்டாரா என்று ஒரு ஏக்கம் சமீபத்தில் இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் திரைபடத்தில் ஜெய்ஷங்கர் மற்றும் அசோகன் பெயரை உபயோகபடுத்தி இருப்பது மிகவும் மகிழ்ச்சி ஆக இருந்தது டைரக்டர் ஸ்ரீதர் ஒரு பேட்டியில் ஸ்ரீகாந்த் பற்றி சொல்லும் போது "ஸ்ரீகாந்த் ஒரு மிக சிறந்த நடிகர் சினிமா உலகை ஸ்ரீகாந்த் புரிந்து கொள்ளவில்லையா அல்லது ஸ்ரீகாந்த்ஐ திரை உலகம் புரிந்து கொள்ளவில்லையா என்று எனக்கு ஒரு கேள்வி எப்போதும் உண்டு " என்று கூறி இருந்தார் . கமல் கூட ஸ்ரீகாந்தை பயன்படுத்தி கொள்ளவில்லை அவர் முகவரி தெரிந்தால் யாராவது சொல்லவும் ஒரு முறை நேரில் சந்திக்க ஆசை படுகிறேன். இதே போல் பழைய திரை பட நடிகர்கள் / நடிகைகள் முகவரி தெரிந்தால் சொல்லவும் அவர்களையும் ஒரு முறை நேரில் சந்திது மரியாதை செய்ய ஆசை படுகிறேன் சமீபிதில் மனோரமாவின் கண்ணீர் கதை பற்றி குமுதம் magazine இல் படித்தேன் மிகவும் வருத்தப்பட்டேன்

அன்புடுன் க்க்ருஷ்ண

RAGHAVENDRA
17th May 2010, 06:16 PM
டியர் கிருஷ்ணா,
எனக்குத் தெரிந்து ஸ்ரீகாந்த் அவர்கள் சென்னை கோபாலபுரத்தில் கலைஞர் வீட்டுக்கு அருகில் வசித்து வந்தார். சமீபத்திய விவரம் தெரியவில்லை. அநேகமாக அவர் அங்கு தான் இன்னும் குடியிருப்பார் என எண்ணுகிறேன்.

[quoteஇதே போல் பழைய திரை பட நடிகர்கள் / நடிகைகள் முகவரி தெரிந்தால் சொல்லவும் அவர்களையும் ஒரு முறை நேரில் சந்திது மரியாதை செய்ய ஆசை படுகிறேன்[/quote]

இந்த இடத்தில் தனிப்பட்ட முறையில் என்னுடைய கருத்துக்களைக் கூற விரும்புகிறேன். சில பழைய கலைஞர்கள் தவிர பல பேர் நாம் எண்ணத்துக்கு மாறாகத் தான் உள்ளதாக நான் கேள்விப் பட்டுள்ளேன். நடிகர் திலகத்துடன் பல படங்களில் நடித்துள்ள ஒரு நடிகை தன் பொதுவான பழைய நினைவுகளைப் பற்றிப் பகிர்ந்து கொள்ளவே பழைய நினைப்பில் ஒரு கால்ஷீட்டிற்கு இவ்வளவு என்கிற ரீதியில் பணம் கேட்டதாகவும் அந்தப் பணத்தின் அளவைக் கேட்டு, அவரை நாடிச் சென்றவர்கள் கிட்டத்தட்ட மயக்கம் அடையும் அளவுக்கு அதிர்ச்சியடைந்ததாகவும் செய்திகள் சில காலத்துக்கு முன்னர் வலம் வந்தன. அது மட்டுமல்லாமல் அவர்கள் மேலேயும் நாம் குறை காண முடியாது. காரணம் அந்தக் காலத்தில் அவர்கள் அதிகம் சம்பாதித்திருக்க மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களை நாம் அணுகும் போது அவர்களுடைய அணுகுமுறை எப்படியிருந்தாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய மன வலிமையும் பக்குவமும் வேண்டும். அது மட்டுமல்லாமல், வயது காரணமாக அவர்களின் உடல் நிலையையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
இவையெல்லாம் ஒரு பொதுவான நிலைமையே. மற்றபடி சிலர் நல்லபடியாக வரவேற்றுப் பேசுவதும் உண்டு. இருந்தாலும் இதை யெல்லாம் சொல்லக் காரணம், நம்முடைய ஆவலும் நல்லெண்ணமும் உரிய முறையில் புரிந்து கொள்ளுதலும் ஏற்றுக் கொள்ளுதலும் வேண்டும் என்கிற ஆதங்கமே.

ராகவேந்திரன்

mr_karthik
4th June 2010, 02:19 PM
டியர் கிருஷ்ணா,
எனக்குத் தெரிந்து ஸ்ரீகாந்த் அவர்கள் சென்னை கோபாலபுரத்தில் கலைஞர் வீட்டுக்கு அருகில் வசித்து வந்தார். சமீபத்திய விவரம் தெரியவில்லை. அநேகமாக அவர் அங்கு தான் இன்னும் குடியிருப்பார் என எண்ணுகிறேன்.

எட்வர்ட் எலியட்ஸ் ரோட்டில் (தற்போது ராதாகிருஷ்ணன் சாலை) சோழா ஓட்டலுக்கு எதிரில் '5 ஸ்டார் ஷாப்பிங் செண்ட்டர்' என்று ஒரு பெரிய கடை இருந்தது. அதில் என் நண்பன் ஒருவன் வேலை செய்து வந்தான். அந்த கடைக்கு பின்புறம்தான் ஸ்ரீகாந்த் வீடு இருந்தது என்றும், அவர் வீட்டுக்கு இந்தக்கடையில் இருந்துதான் பொருட்கள் சப்ளை செய்ததாகவும், அப்படி அவர் வீட்டுக்குப்போகும்போது பலமுறை ஸ்ரீகாந்தை சந்தித்திருப்பதாகவும் சொல்லியிருக்கிறான். இப்போதும் அங்கேதான் இருக்கிறாரா என்று தெரியவில்லை.

mr_karthik
4th June 2010, 02:30 PM
இதே போல் பழைய திரை பட நடிகர்கள் / நடிகைகள் முகவரி தெரிந்தால் சொல்லவும் அவர்களையும் ஒரு முறை நேரில் சந்திது மரியாதை செய்ய ஆசை படுகிறேன் சமீபிதில் மனோரமாவின் கண்ணீர் கதை பற்றி குமுதம் magazine இல் படித்தேன் மிகவும் வருத்தப்பட்டேன்

அன்புடுன் க்க்ருஷ்ண


டியர் கிருஷ்ணா, இந்த இடத்தில் தனிப்பட்ட முறையில் என்னுடைய கருத்துக்களைக் கூற விரும்புகிறேன். சில பழைய கலைஞர்கள் தவிர பல பேர் நாம் எண்ணத்துக்கு மாறாகத் தான் உள்ளதாக நான் கேள்விப் பட்டுள்ளேன். நடிகர் திலகத்துடன் பல படங்களில் நடித்துள்ள ஒரு நடிகை தன் பொதுவான பழைய நினைவுகளைப் பற்றிப் பகிர்ந்து கொள்ளவே பழைய நினைப்பில் ஒரு கால்ஷீட்டிற்கு இவ்வளவு என்கிற ரீதியில் பணம் கேட்டதாகவும் அந்தப் பணத்தின் அளவைக் கேட்டு, அவரை நாடிச் சென்றவர்கள் கிட்டத்தட்ட மயக்கம் அடையும் அளவுக்கு அதிர்ச்சியடைந்ததாகவும் செய்திகள் சில காலத்துக்கு முன்னர் வலம் வந்தன. அது மட்டுமல்லாமல் அவர்கள் மேலேயும் நாம் குறை காண முடியாது. காரணம் அந்தக் காலத்தில் அவர்கள் அதிகம் சம்பாதித்திருக்க மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களை நாம் அணுகும் போது அவர்களுடைய அணுகுமுறை எப்படியிருந்தாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய மன வலிமையும் பக்குவமும் வேண்டும். அது மட்டுமல்லாமல், வயது காரணமாக அவர்களின் உடல் நிலையையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
இவையெல்லாம் ஒரு பொதுவான நிலைமையே. மற்றபடி சிலர் நல்லபடியாக வரவேற்றுப் பேசுவதும் உண்டு. இருந்தாலும் இதை யெல்லாம் சொல்லக் காரணம், நம்முடைய ஆவலும் நல்லெண்ணமும் உரிய முறையில் புரிந்து கொள்ளுதலும் ஏற்றுக் கொள்ளுதலும் வேண்டும் என்கிற ஆதங்கமே.

ராகவேந்திரன்

கிருஷ்ணன் சார்,

ராகவேந்தர் சார் சொல்வது முற்றிலும் உண்மை.

திரைப்படக்கலைஞர்களை (பெரும்பாலோரை), அவர்கள படங்களில் நடிப்பதை வைத்தும், தொலைக்காட்சிகளில் பவ்யமாக பேட்டியளிப்பதை வைத்தும் அவர்கள் குணத்தை எடைபோடாதீர்கள். அவை பல்லாயிரம் பேர் பார்க்கக்கூடியது என்பதால் பவ்யமாக, அடக்கமாக நடந்துகொள்வார்கள். (அதாவது அதிலும் நடிப்பார்கள்).

ஆனால் நீங்கள் தனித்துப்போய் சந்திக்கும் பட்சத்தில், அவர்கள் நடந்துகொள்ளும் முறையில், உங்களுக்கு அவர்கள் மீதுள்ள நன்மதிப்பு சடாரென சரிந்து தரைமட்டமாகும் வாய்ப்புள்ளது. மிகச்சிலர் மட்டுமே விதிவலக்கு. அவர்களை சிறிய பட்டியலில் அடக்கிவிடலாம். அதனால் வேண்டாம் இந்த விபரீத எண்ணம்.

Bhoori
12th June 2010, 01:17 AM
வெண்ணிற ஆடை படத்துக்கு ஒரு விமர்சனம் இங்கே. http://awardakodukkaranga.wordpress.com/2010/06/09/ஸ்ரீதரின்-வெண்ணிற-ஆடை-பற/

அந்த படட்தின் அரசியல் பற்றிய ஒரு கட்டுரை இங்கே. http://awardakodukkaranga.wordpress.com/2010/06/09/வெண்ணிற-ஆடை-திரைப்படத்த/

srimal
20th August 2010, 09:13 PM
srikanth endralae enakku, kaasae thaan kadavulada, bama vijayam and poova thalaiya thaan nyabagam varum....

first post la neenga potrukka list parthathum thaan .. aaha, idhaiyellam marandhuttomaenu thonudhu....

i like this whole section :)

Bhoori
8th September 2010, 12:28 AM
[tscii:2e41eeeb86]A reader of my blog writes:

// என் தந்தை திரு.ஏ.எஸ்.ராகவன் அவர்கள்-தற்போது 83 வயது ஆகிறது- 1960 – 70 களில் ஆனந்தவிகடன், கல்கி, கலைமகள்,போன்ற அனைத்துப் பத்திரிகைகளிலும் சிறுகதை, தொடர்கதை, எழுதியவர். ஓர் முதிர்ந்த எழுத்தாளர் வறுமையில் வாடுவது அறிந்து அவர் கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அதற்கான சன்மானத்தை அம்முதிர்ந்த எழுத்தாளர் முகவரிக்கு அனுப்பி அவரை மகிழச் செய்தவர்…இதே போல திரு.ஸ்ரீகாந்த் அவர்களும் அதே எழுத்தாளருக்கு உதவி செய்தது என் தந்தையே அறியாதது..ஓர் முறை ஜெயா டீவியில் திரு.ஸ்ரீகாந்த் அவரகள் “திரும்பிப் பார்க்கிறேன்” நிகழ்ச்சியில் இச்செய்தியைக் கூற ..அதை நான் என் தந்தையிடம் கூறினேன்..அப்போது அப்பா சொன்னார்..” அப்படியா..ஆமா யாரு ஸ்ரீகாந்த்து..” என்று.. //

Anyone who saw this program remember the writer mentioned here?
[/tscii:2e41eeeb86]

mr_karthik
12th September 2010, 01:08 PM
காங்கிரஸ் பேரியக்கத்தில் ஸ்ரீகாந்த்
நடிகர்திலகமும் பெருந்தலைவர் பக்கம் துணை நிற்க, அவரோடு தோளோடு தோள் நின்று ஸ்தாபன காங்கிரஸ்காரர்களாக தங்களை வெளிப்படுத்திக்கொண்டவர்கள் மூவர். அவர்கள் சசிகுமார், ஸ்ரீகாந்த், பிரேம் ஆனந்த். இவர்களில் பிரேம் ஆனந்த் கட்சியில் இருக்கிறார் என்பதற்காகவே நடிகர்திலகம் தன் படங்களில் தொடர்ந்து வாய்ப்புக்கொடுத்தார்.

Yes I remember Prem Ananth in several NT's films. Few of them...

'ILaiya thalaimuRai' - one of the Hostel Students (shreekanth, vijayakumar, jayachandran, YGM are other students).

'Pilot PremnAth' - pair for NT's daughter Shree Devi.

'Annan oru kOyil' - friend of villai Mohanbabu. Prem Ananth will come in the climax court scene with horrible acid thrown face make-up like that of NT in Dheiva Magan.

RC
28th September 2010, 04:10 AM
Happened to notice Srikanth in "Murali Remembered" event organized by nadigargaL sangam..

http://www.images.behindwoods.com/photo-galleries-q1-09/tamil-photo-gallery/murali-02/murali-19.html
http://www.images.behindwoods.com/photo-galleries-q1-09/tamil-photo-gallery/murali-02/murali-43.html

saradhaa_sn
30th September 2010, 02:13 PM
இணைப்புக்கு நன்றி RC ..

பழைய நண்பர்களான ஸ்ரீகாந்த், எஸ்.வி.சேகர், சிவகுமார் மூவரும் அளவளாவிக்கொள்ளூம் காட்சி கண்களுக்கு விருந்து. சென்ற வாரம் ஒரு தொலைக்காட்சியில் சிவகுமார், ஸ்ரீகாந்த் நடித்த தேவரின் 'வெள்ளிக்கிழமை விரதம்' ஒளிபரப்பினர். இந்த சந்திப்பைப் பார்த்ததும் அந்தப்ப்படமே நினைவுக்கு வந்தது.

mr_karthik
22nd November 2010, 06:28 PM
நடிகர்திலகத்துடன் ஸ்ரீகாந்த் நடித்த மற்றுமொரு படம் 'சிவகாமியின் செல்வன்'. இரண்டாவது சிவாஜி (சிவகாமியின் செல்வனு)க்கு நண்பனாக வருவார். இவரும் ஒரு விமானப்படை பைலட் தான். (முதல் சிவாஜி(சிவகாமியின் கணவனு)க்கு நண்பனாக வருபவர் ஏ.வி.எம்.ராஜன். 'உள்ளம் ரெண்டும் ஒன்றையொன்று' பாடலில் ஜீப் ஓட்டிக்கொண்டு வருபவர்).

இப்படத்தில் ஸ்ரீகாந்த் ரொம்ப அசால்ட்டாக நடித்திருப்பார். குறிப்பாக, வாணிஸ்ரீ, லதா, வி.எஸ் ராகவன் ஆகியோரை ஃபங்ஷனுக்கு அழைக்குமிடத்தைச் சொல்லலாம். அதிலும் அந்த 'பை' சொல்லும் அழகு ஸ்ரீகாந்த் முத்திரை. இவருடைய பேச்சைப்பார்த்து, 'இந்தப்புள்ளைங்களுக்கு பயம் என்பதே கிடையாதா?' என்று வாணிஸ்ரீ அதிசயிப்பார்.

நடிகர்திலகத்துக்கு ஜோடியாக லதா நடித்த ஒரே படம் இது என்பது இன்னொரு சுவாரஸ்யம்.
Yes, two days back I also watched this movie 'Sivakamiyin Selvan' in Raj TV channel. Very nice movie.

Especially I was waiting for the portion of NT & Shreekanth combination scenes and enjoyed this particular scene.

And in the climax scene, when NT and Shreekanth sitting side-by-side, and when NT's name announced for award, suddenly Shreekanth will kiss NT with affection. Nice one.

Also remembered the theatre happening as a boy in 1974, when Mellisai Mannar sings the line....
'சிவகாமி பெற்றெடுத்த செல்வனல்லவோ
நாளை இந்த மண்ணை ஆளும் மன்னனல்லவோ'
in the song எதற்கும் ஒரு காலம் உண்டு, with thunderous applause.
(at that time both the Mannars (NT & Perundhalivar) where alive).

saradhaa_sn
18th January 2011, 03:03 PM
வெள்ளிக்கிழமை விரதம்

தேவரின் தண்டாயுதபாணி பிலிம்ஸ் தயாரித்த இப்படத்தின் கதாநாயகன் சிவகுமார். ஸ்ரீகாந்த் இப்படத்தின் வில்லன். தேவரின் இதற்கு முந்தைய படமான 'கோமாதா என் குலமாதா' படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்தார்.

தேவர் வரிசையாக எடுத்த கோமாதா என் குலமாதா, வெள்ளிக்கிழமை விரதம், ஆட்டுக்கார அலமேலு ஆகிய படங்களுக்கு ஒரே கதைதான். கதாநாயகி ரொம்ப நல்லவள், பக்தி நிறைந்தவள். அவளது வளப்புப்பிராணி (பசு, பாம்பு, ஆடு) அவளுக்கு பெரிய உறுதுணையாகவும், பக்க பலமாகவும், ஆபத்து நேரங்களில் காப்பாற்றுவதாகவும், குறிப்பாக "அவள் பேசும் மொழிகளை புரிந்துகொள்ளக்கூடியதாகவும்" இருக்கும். அவள் காதலித்து மணக்கும் கணவன், சிறிது காலத்தில் நண்பர்களின் கூடா நட்பால் வழிதவறிப்போகும்போது, கதாநாயகி அவனைத் திருத்துவதற்குப் பெரிய உந்துசக்தியாகவும் இவ்வ்லங்குகள் இருக்கும்.

வெள்ளிக்கிழமை விரத்தத்தில் கதாநாயகி ஜெயசித்ராவின் 'தோழன்' (தோழி?) ஒரு நல்லபாம்பு. தன் எஜமானி ஜெயசித்ராவின் கணவன் திசைமாறும்போதெல்லாம், நாயகிக்கு உறுதுணையாக இருந்து, அவளது வில்லன், வில்லி வகையறாக்களைத் தீர்த்துக்கட்டுகிறது.

இப்படத்தில் கதாநாயகன் சிவகுமாரின் தோழன் -கம்- செக்ரட்டரி-கம்-வில்லனாக வருபவர் ஸ்ரீகாந்த்.இவரது தங்கையாக வருபவர் ஜெயசுதா. தன் முதலாளி சிவகுமார் அவசரப்பட்டு யாரோ ஒரு ஜெயசித்ராவைக் கல்யாணம் செய்து கொண்டதை அறிந்து அதிர்ச்சி அடையும் ஸ்ரீகாந்த், கோடீஸ்வரன் சிவகுமாரை எப்படியும் ஜெயசித்ராவிடமிருந்து பிரித்து தன் தங்கை ஜெயசுதாவுக்கு ஜோடியாக்கி, அதன்மூலம் முதலாளியின் கோடிக்கணக்கான சொத்துக்களை வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கத் துடிப்பவர். அதற்கு இடையூறாக இருக்கும் ஜெயசித்ராவையும், அவருக்கு பக்க பலமாக இருந்து தன் திட்டங்களை குட்டிச்சுவராக்கும் பாம்பையும் ஒழித்துக்கட்ட தங்கை ஜெயசுதாவுடன் சேர்ந்து திட்டம் போடுவதும் அவை ஒவ்வொன்றாக தோவியடைந்து, கடைசியில் அந்த பாம்பினாலேயே ஒருவர் பின் ஒருவராய் சாவதும்......

தனக்கு வேண்டியவர்களை தன் மனைவியின் வளர்ப்பு பாம்பு கொன்றுவிட்டதை அறிந்து சிவகுமார் மனைவி மீது கோபப்பட, கடைசி பதினைந்து நிமிடங்கள் ஒரே இடத்தில் நின்றபடி நீண்ட வசனம் பேசி, கணவனுக்கு வேண்டியவர்களின் சதிச்செயலை நாயகி புட்டு, புட்டு வைக்க... நாயகன், தன் மனைவியின் கைகளைப்பிடித்துக்கொண்டு 'உன் நல்ல மனசைப்புறிஞ்சிக்காம உன் மேலே கோபட்டுட்டேன். என்னை மன்னிச்சிடு' என்று, (தமிழில் பேசும் படம் துவங்கிய முதல் படமான 'சீனிவாச கல்யாணம்' தொட்டு கடைபிடிக்கப்பட்டு வரும் பாணியில்) கிளைமாக்ஸை முடித்து வைக்க.... படத்தில் வந்த ஏதோ ஒரு பாடலின் முதல்வரியை இருவரும் குளோசப்பில் பாட....

இம்மாதிரிப்படங்களை எத்தனை முறை எடுத்தாலும் மக்கள், குறிப்பாக குடும்ப்பப்பெண்கள் விழுந்தடித்துக்கொண்டு பார்ப்பார்கள் என்ற சூட்சுமத்தை அறிந்த தேவர், நன்றாக கல்லா கட்டினார்.

கதாநாயகனாக சிவகுமார் வழக்கம்போல அடக்கி வாசித்திருந்தார். பாத்திரத்துக்குத் தேவையானதைக் கொடுத்திருந்தார். கதாநாயகியாக ஜெயசித்ரா வழக்கம்போல ஓவராக அலட்டிக்கொண்டார். கதாநாயகனை மட்டம் தட்டும் பாத்திரம் என்றால் சிலருக்கு வெல்லம் சாப்பிடுவதுபோல ஓவராக அலட்டித்தீர்ப்பார்கள். (அற்கென்று விருது வைத்தால் முதலிரண்டு இடங்களைப்பெறுபவர்கள் ஆண்டாண்டுகளுக்கும் தட்டிச்செல்பவர்கள் சுகாசினியும், ராதிகாவும் என்பது வேறு விஷயம்). அந்த வழியில் ஜெயசித்ராவும் ஓவர்டோஸ் கொடுத்து நம்மை ஒரு வழியாக்கினார். அவரது தோழியாக வரும் பாம்புக்கு தமிழ், ஆங்கிலம் என்று எல்லா மொழியும் தெரிந்திருக்கிறது. அடுத்து நம்ம ஆள் எப்படீன்னு பார்ப்போம்......

கதாநாயகனை வழிமாற்றிச்சென்று, அவரை மனைவியிடமிருந்து பிரித்து, தன் தங்கையிடம் சேர்க்க முயலும் வில்லனாக ஸ்ரீகாந்த் மிக அருமையாக நடித்திருந்தார். ஒவ்வொருமுறையும் தன் திட்டங்களை முறியடிக்கும் பாம்பை சுட்டுக்கொல்ல அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் தோற்கும்போது, அவர் காட்டும் ஆவேசம் அருமை. கடைசியில் பாம்பு துரத்தும்போது மாடிப்படியில் கால் இடறி விழுந்து மேற்படியிலிருந்து கீழ்த்தலம் வரை டூப் போடாமல், கட்ஷாட் இல்லாமல், ரிதம் தவறாமல் புரண்டுகொண்டே வந்து விழுவாரே அதில் அவரது சிரத்தை தெரிகிறது.

இவரது தங்கையாக, அண்ணனின் சதித்திட்டங்களூக்கு பக்கபலமாக வரும் ஜெயசுதாவிடமும் வில்லிக்கான அருமையான நடிப்பு. அத்துடன் ஜெயசித்ராவின் உருவத்தையும், இழுத்துப்போர்த்திய புடவையையும் பார்த்து மூட் அவுட்டாகியிருந்த இளைஞர்களுக்கு ஆறுதலாக, ஒல்லியான உடல் வாகுடனும், மினிஸ்கர்ட் போன்ற மாடர்ன் உடைகளிலும் வந்து, கண்களூக்கு இதமளித்தார். நடிப்பிலும் சோடை போகவில்லை. தன்னைக்கொல்ல வந்த பாம்பைக்காணாமல் எங்கெல்லாம் தேடியும் காணாமல், நிமதியுடன் வந்து படுக்கையில் படுத்து போர்வையைத்தூக்க, அதிலிருந்து படமெடுத்து நிற்கும் பாம்பைப்பார்த்து, மொத்த அதிர்ச்சியையும் வெளிப்படுத்துவாறே அந்த இடம் ஒன்று போதும், அவரது திறையசொல்ல.

கவியரசரும் சின்னப்பா தேவரும் இணைந்த இப்படத்துக்கு, 'கவிஞர் வழங்கிய தேவரின்' சங்கர்-கணேஷ் இசையமைத்திருந்தனர். டி.எம்.எஸ்- சுசீலா ஜோடிக்குரலில் மூன்று டூயட் பாடல்கள் 'தேவியின் திருமுகம் தரிசனம் தந்தது' பாடல் பெரிய ஹிட். 'ஜிலு ஜிலு.. குளு.. குளு' போன்ற பாடல்களையெல்லாம் கவியரசர் எழுத நேர்ந்தது வேதனைதான். 'ஆசை.. அன்பு இழகளினாலே' பாடல் இந்திப்பாடலான ஆஜா.. ஆயி பஹார் மெட்டின் தழுவல்.

படத்தின் இன்னொரு சிறப்பம்சம் அருமையான வண்ண ஒளிப்பதிவு. வெளிப்புறக்காட்சிகள் கண்களுக்கு இதமளித்தன. தேவரின் மாப்பிள்ளை ஆர். தியாகராஜன் இப்படத்தை இயக்கியிருந்தார்.

தமிழகத்தின் பல இடங்களில் 100 நாட்களைக்கடந்ததோடு, அதிகபடசமாக 145 நாட்கள் ஓடிய மாபெரும் வெற்றிப்படம் 'வெள்ளிக்கிழமை விரதம்'.

sudha india
19th January 2011, 03:26 PM
Sema vimarsanam Saradha....

Sandhadi saakil, suhasini, radhika patri sonnadhu just perfect.

vimarsanam poora ungal nakkal dhoni arumai.
It was just interesting to read and enjoyed every line.

saradhaa_sn
19th January 2011, 05:16 PM
மிக்க நன்றி... Dear சுதா....

உங்கள் பதிலை இங்கு பார்ப்பதற்கு ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. ஜெய், ரவி திரிகளிலும் விமர்சனங்களைப்படித்து உங்கள் மேலான கருத்துக்களைப்பதியுங்கள்.

அடிக்கடி வாருங்கள்.... நன்றி.

('வாருங்கள்' means வருகை தாருங்கள், NOT வாரிவிடுங்கள் :D )

RAGHAVENDRA
19th January 2011, 07:53 PM
அன்பு சகோதரி சாரதா,
வெள்ளிக்கிழமை விரதம் பற்றிய தங்கள் கருத்துக்கள் கச்சிதமாய் உள்ளன. பாடல்களைப் பற்றிய தங்கள் கருத்துக்களையும் எதிர் பார்க்கிறேன். வாணி ராணி மற்றும் தீர்க்க சுமங்கலி இரு படங்களையும் முந்தி விட்டு வெற்றி நடை போட்ட படம் வெள்ளிக்கிழமை விரதம். சசிகுமாரின் வில்லன் வேடமும் படத்துக்கு பலம் சேர்த்தது என்றால் மிகையில்லை. சங்கர் கணேஷ் இசையில் பாடல்கள் பிரபலம், குறிப்பாக தேவியின் திருமுகம் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது. ஸ்ரீகாந்த்தின் திரையுலக வரலாற்றில் இப்படத்திற்கு தனி இடம் உண்டு.

தேவியின் திருமுகம் பாடல் காட்சி (http://www.youtube.com/watch?v=7yf_eJAPQJo)

விரைவில் 2000 பதிவுகளை எட்ட இருக்கும் தங்களுக்கு முன்கூட்டியே வாழ்த்துக்கள்.

அன்புடன்

saradhaa_sn
20th January 2011, 11:07 AM
டியர் ராகவேந்தர்,

வெள்ளிக்கிழமை விரதம் பதிவுக்கான மறுமொழிக்கும், அருமையான பாடல் இணைப்புக்கும் மிக்க நன்றி.

படத்தில் இன்னொரு கௌரவ வில்லன் ரோலில் நடித்திருந்த தேசியநடிகர் சசிகுமார் பற்றிக்குறிப்பிடத் தவறிவிட்டேன் என்பது உண்மைதான். இந்தப்படம் வெளியான சில மாதங்களிலேயே அவர் தீ விபத்தில் இயற்கை எய்தினார் என்பது சோகமான விஷயம். அவரது திடீர் மரணத்தால், அப்போது அவர் நடித்துக்கொண்டிருந்த கிட்டத்தட்ட பதினைந்து படங்களில் இருந்து அவரது பாத்திரங்கள் நீக்கப்பட்டன, அல்லது வேறு நடிகர்களால் செய்யப்பட்டன.

படத்தின் பாடல்களைப்பற்றி ஒரு வரி விமர்சனமாகக் குறிப்பிட்டிருக்கிறேன். மேலும், சங்கர்-கணேஷ் இசையமைத்த தேவரின் பிற்காலப்படங்களில் தவறாமல் இடம்பெற்ற, 'பாபி' இந்திப்பட ரீரிக்கார்டிங் பிட் இடம்பெறத்துவங்கியதும் இப்படத்திலிருந்துதான்.

1974-ம் ஆண்டு தமிழ்ப்புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ல் இப்படத்தோடு திரைக்கு வந்த வாணி ராணி, தீர்க்க சுமங்கலி ஆகியவையும் 100 நாட்களைக்கடந்து ஓடின என்றாலும், அதிக இடங்களிலும் அதிக நாட்களும் ஓடியது வெள்ளிக்கிழமை விரதம் படம்தான்.

sudha india
20th January 2011, 11:52 AM
மிக்க நன்றி... Dear சுதா....

உங்கள் பதிலை இங்கு பார்ப்பதற்கு ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. ஜெய், ரவி திரிகளிலும் விமர்சனங்களைப்படித்து உங்கள் மேலான கருத்துக்களைப்பதியுங்கள்.

அடிக்கடி வாருங்கள்.... நன்றி.

('வாருங்கள்' means வருகை தாருங்கள், NOT வாரிவிடுங்கள் :D )

Aaahaaa Saradha... Kandippaaga va(a)rugiren :lol:

Indha (Jai, Ravi, SK, NT) thirigal ondrum enakku pudhidhalla. i read all the vimarsanams. But ungala madhiri matrum Ragavendar sir pol andha padangalai patri edhuvum solla theriyadhu. 95% padangal naan paarthadhillai. Adhanal vimarsanangalai padithuviduven.

Neenga ellarum romba arumaiyaana vimarsagargal. I mean it very sincerely. Thodarndhu ezhudhungal. nangal padithu magizhgirom.

saradhaa_sn
18th February 2011, 10:37 AM
Sorry,

This post for just to keep this thread from disappear.

abkhlabhi
19th February 2011, 12:12 PM
சாரதா மேடம்,
காலம் சென்ற சஷிக்குமாரை பற்றி சொல்லும் பொது, என் நினைவலைகள் பின்னோக்கி சென்றன. அவருடன், ரவிச்சந்திரன், c .i .d சகுந்தலா மற்றும் சிலர், சாத்தனூர் Dam இல் படபிடுப்புக்காக எங்கள் ஊருக்கு வந்தார்கள். நாங்கள் குடியிருந்த தெருவின் கடைசியில் ஒரு டாக்டர் வீடு இருந்தது. இவர்கள் டாக்டர் விட்டில் முன்று தினங்கள் தங்கினர். அப்பொழது அவர்களை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்கள் எந்த வித பந்தா இல்லாமல் அவர்களை பார்க்க வந்தவர்களிடம் நன்றாக பேசி, ஆட்டோ கிராப் கொடுத்தார்கள். ஆகஸ்ட் மாதம் என்று நினைகிறேன். சசிகுமார் நல்ல வெள்ளை கலர். (உள்ளம்மும் தான்). இதன் பிறகு ஒரு வாரத்தில், சசிகுமார் , தன் மனைவியுடன் , தீ விபத்தில் இறந்து போனார். மிக கொடுமையானது. அவர் இறப்பை அறிந்த எங்கள் ஊரே சோகத்தில் முழ்கியது. நடிகர் திலகம் இறப்பு கூட என்னை அவ்வளவாக பாத்திகவில்லை. ஆனால் சசிகுமாரின் இறப்பு, என்னை பெரும்அளவில் பாதித்தது.

mr_karthik
3rd March 2011, 11:00 AM
Yesterday Kalaignar TV channel telecasted 'VeLLikizhamai Viradham' as midnight show. It was too nice to watch the movie, especially for Shreekanth as villain. What saradha mentioned in her review are exactly correct, particularly about Jayasudha, an eye catching personality.

V.Ramamoorthy's camera work is wonderful, and Shanker-Ganesh' music is good, with beautiful compossition of 'dhEviyin thirumugam'.

saradhaa_sn
23rd March 2011, 06:06 PM
சாரதா மேடம்,
காலம் சென்ற சஷிக்குமாரை பற்றி சொல்லும் பொது, என் நினைவலைகள் பின்னோக்கி சென்றன. அவருடன், ரவிச்சந்திரன், c .i .d சகுந்தலா மற்றும் சிலர், சாத்தனூர் Dam இல் படபிடுப்புக்காக எங்கள் ஊருக்கு வந்தார்கள். நாங்கள் குடியிருந்த தெருவின் கடைசியில் ஒரு டாக்டர் வீடு இருந்தது. இவர்கள் டாக்டர் விட்டில் முன்று தினங்கள் தங்கினர். அப்பொழது அவர்களை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்கள் எந்த வித பந்தா இல்லாமல் அவர்களை பார்க்க வந்தவர்களிடம் நன்றாக பேசி, ஆட்டோ கிராப் கொடுத்தார்கள். ஆகஸ்ட் மாதம் என்று நினைகிறேன். சசிகுமார் நல்ல வெள்ளை கலர். (உள்ளம்மும் தான்). இதன் பிறகு ஒரு வாரத்தில், சசிகுமார் , தன் மனைவியுடன் , தீ விபத்தில் இறந்து போனார். மிக கொடுமையானது. அவர் இறப்பை அறிந்த எங்கள் ஊரே சோகத்தில் முழ்கியது. நடிகர் திலகம் இறப்பு கூட என்னை அவ்வளவாக பாத்திகவில்லை. ஆனால் சசிகுமாரின் இறப்பு, என்னை பெரும்அளவில் பாதித்தது.

டியர் பாலா,

மறைந்த தேசியத்திலகம் சசிகுமார் பற்றிய உங்கள் மலரும் நினைவுகள் நெஞ்சைத்தொட்டன. அத்தனை பண்புள்ளவ்ராக அவர் இருந்ததால்தான், அவர் மறைந்து இத்தனை ஆண்டுகளுக்குப்பின்னும் அவரைப்பற்றி பெருமையாகவும், நெகிழ்ச்சியோடும் நினைத்துப்பார்த்து,பேசுகிறோம்.

இதுபோலவே, உங்கள் பதிவில் குறிப்பிட்டிருக்கும் சி.ஐ.டி.சகுந்தலாவையும் குறிப்பிட வேண்டும். ஒருமுறை நான் சென்னையிலிருந்து திருச்சிக்கு ரயிலில் சென்றுகொண்டிருந்தபோது, அதே ரயிலில் நாங்கள் இருந்த இரண்டாம் வகுப்புப்பெட்டிக்குப்பக்கத்தில் இருந்த முதல் வகுப்பு கம்பார்ட்மெண்ட்டில் சினிமா நட்சத்திரம் சி.ஐ.டி.சகுந்தலா பிரயாணம் செய்வதாகச் சொன்னார்கள். பார்க்க முடியுமா என்று எண்ணிக்கொண்டிருந்த வேளையில் ஆச்சரியம். செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி என்று எந்தெந்த ஜங்ஷன்களில் அந்த எக்ஸ்பிரஸ் ரயில் நின்றதோ அங்கெல்லாம் தன் கம்பார்ட்மெண்ட்டிலிருந்து பிளாட்பாரத்தில் இறங்கி நின்று, ரயில் புறப்படும் வரை தன்னைச்சுற்றி நின்ற ரசிகர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். மதுரை சென்று அங்கிருந்து கொடைக்கானலுக்கு ஷூட்டிங்கிற்குப் போவதாகச்சொன்னார். அவருடைய சிம்ப்ளிசிடி ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.

saradhaa_sn
25th April 2011, 07:12 PM
'இவர்கள் வித்தியாசமானவர்கள்' படத்தில் ஸ்ரீகாந்த், படாபட் ஜெயலட்சுமி....

RC
27th April 2011, 04:33 AM
avaL padaththin link
http://www.youtube.com/user/jafisingam#p/u/5/2E1FGwnEBEA

AREGU
28th April 2011, 06:51 PM
அன்பின் சாரதா,

உங்கள் திறனாய்வுகளை, (குறிப்பாக நடிகர் திலகம் திரியில்) படித்து வியந்திருக்கிறேன்.. மிக அற்புதமாக காட்சிகளைக் கண்முன்னே நிறுத்துவதில் வல்லவர் நீங்கள். பாராட்டுகள்.

வெ.வி. படத்தில், ஜெயசுதா அதிர்ச்சியில் உயிர்விடும் காட்சிக்கு முன் மிக நேர்த்தியாக இரசிகர்களைத் தயார்படுத்தியிருப்பார்கள்.. அந்தக் காட்சியின்போது, அரங்க இருக்கைமீது காலை தூக்கிவைத்துக்கொண்டோர் அனேகம்..

உங்கள் படைப்புகள் தொடரட்டும்..

saradhaa_sn
29th April 2011, 01:11 PM
டியர் aregu,
உங்கள் பாராட்டுக்கு நன்றி.
நீங்கள் குறிப்பிட்டபடி வெள்ளிக்கிழமை விரதம் படத்தில் அந்தக்காட்சிக்கு அதிர்ச்சியடையாதோர் மிகக்குறைவு.

டியர் rc

'அவள்' திரைப்படத்தின் யூட்யூப் இணைப்பை அளித்தமைக்கு நன்றி.
இதுவரை பார்க்காதோர் அப்படத்தைப்பார்க்க உதவியாக இருக்கும்.

rajeshkrv
5th May 2011, 08:02 AM
Srikanth in a telugu movie. Full length role from the beginning

Movie:ammayi pelli

http://www.bharatmovies.com/telugu/watch/Ammayi-Pelli-movie-online.htm

i think this is the original of Kattila thottila i guess.

RC
7th May 2011, 05:03 PM
Link for maharasi vaazhga *ing KRV, JaiGanesh, <b>Srikanth</b>, Jaysudha maRRum palar
Part 1 - http://www.youtube.com/watch?v=u1fCDAprYKc&feature=player_embedded
Part 2 - http://www.youtube.com/watch?feature=player_embedded&v=Z9nkAqaDPVQ

vazhakkam pOla Srikanth in villain role. niRaiya peNgaLai kaRpazhikkiRaar, thiruttu gumbal-ku thalaivana irukkaar...kadaisiyila (veN thiraiyil aka monitor-la paarththu magizhungaL)

rajeshkrv
11th May 2011, 07:28 AM
Srikanth in Uyarndhavargal


http://www.bigflix.com/home/movies/uyanthavargal/855

Sujatha at her best

adiram
30th May 2011, 04:07 PM
this is first time i am seeing a seperate thread for actor shreekanth (old).

many more unknown informations about him.

there are plenty of shreekath starred movies, not yet discussed here.

rajeshkrv
8th August 2011, 01:52 AM
Kanavan manaivi- Muthuraman,Jayalalitha,Srikanth

http://www.bharatmovies.com/tamil/watch/kanavan-manaivi-movie-online.htm

mr_karthik
29th July 2012, 08:06 PM
எல்லோருடைய திரிகளும் திடீரென்று உயிர்பெற்று உலவும்போது, இவர் மட்டும் என்ன பாவம் செய்தார்?.

இவரையும் எல்லோரும் கண்டுகொள்ளலாமே.

ஒரு காலத்தில் இவரும் நம்மவராக இருந்தவர் அல்லவா?.

adiram
7th March 2013, 11:54 AM
Recently I saw a program in a t.v. channel, where actress Sowcar Janaki was interviewed by the anchor of the show (Anu..?)

When they are talking about Edhirneechal ‘pattu maami - kittu mama’ scenes, anchor told Sowcar “ ippo pattummamiyai meet panna kittu mama varapporaar”.

Sowcar asked with surprise “Oh, avar vandhirukkaaraa?”.

Then Shreekanth enetered to the set with a flower boque in his hand and give to Sowcar . He was with olive green color pant and white half slack tugged in. He was walking slowly because of his age, more hairs fallen down and having little balled head. But possessing same mannerism in talking.

Both remembered about their golden period in cine field.

Shreekanth: “appo romba ilamaiyaa irundheenga, ippo konjam vayasaayiduchu”

Sowcar : “konjam illai, romba vayasaayiduchu”.

Shreekanth: “konjamnu sonnaa neenga sandhoshap paduveengannudhan appadi sonnen”

(same kurumbu from shreekanth)

mr_karthik
6th June 2013, 05:17 PM
ஜெய்சங்கர் - ரவிச்சந்திரன் காலத்தில் அவர்களோடு இணைந்து கலக்கிய இந்தப் புள்ளையாண்டானையும் கொஞ்சம் கண்டுக்குங்க. அந்த குரூப்பில் எஞ்சியுள்ள ஒருசிலரில் இவரும் ஒருவர்.

mr_karthik
6th June 2013, 05:23 PM
ஆதி சார்,

ஸ்ரீகாந்த் - சௌகார் சந்திப்பு பற்றிய துணுக்கு சுவையாக உள்ளது. துரதிஷ்ட வசமாக அந்த நிகழ்ச்சி நான் பார்க்கவில்லை.

ஸ்ரீகாந்த் சௌகாரின் மகன் மாதிரி இருந்திருப்பாரே.

gkrishna
31st August 2013, 02:39 PM
கார்த்திக்
சா ர்

ஸ்ரீகாந்த் திரி கோபால் சார்/நீங்கள்/ரகு சார்/ராகவேந்திர சார்/முரளி சார்/vasu sir வந்தால் தான் களை கட்டும்

mr_karthik
1st September 2013, 07:51 PM
1970-களின் மத்தியில் வெளியான "திக்கற்ற பார்வதி" படத்தை பார்த்தவர்கள் அதைப்பற்றி இங்கு எழுதலாமே.

ஸ்ரீகாந்த் - லட்சுமி நடித்த இந்த இன்னொரு ஆர்ட்பிலிம், மூதறிஞர் ராஜாஜி எழுதிய கதையைத் தழுவியது. ராஜாஜி சேலம் கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றியபோது அவர் நடத்திய கேஸை அடிப்படையாக வைத்து எழுதிய கதைஎன்பதால், கேஸ் நடந்த அதே கோர்ட்டில் (உயர்நீதிமன்ற அனுமதி பெற்று) படமாக்கப் பட்டது.

படம் இதுவரை பார்த்ததில்லை. பார்த்தவர்கள் எழுதலாம்....

Gopal.s
1st September 2013, 08:07 PM
திக்கற்ற பார்வதி பார்த்துள்ளேன்.இது கதையாக ராணிமுத்து வெளியீட்டில் வந்தது. சிங்கிதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில், அந்த கால ரியலிச படங்களின் formula கொண்டு வந்தது. நேரடி கதையானதால் ,மெதுவாக கதை சொல்லும் போக்குக்கு ஒத்து வரவில்லை.ஸ்ரீகாந்த் ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.
நடிக்கவே சரியாக கற்று கொள்ளாத இவர் நடிகர்திலகத்தை தாக்கி 1976,77 இல் கொடுத்த அறிக்கைகளால் இவர் மீது எனக்கு அருவருப்புணர்வே உண்டு. (கூடவே இருந்து பயன் பெற்றவர்)
இவர் சிறிதாவது நடிகராக தன்னை வெளிபடுத்தி கொண்டது ராஜ நாகம், சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்.(ப்ரில்லியன்ட் )

Gopal.s
1st September 2013, 08:24 PM
just to respect karthik sir&G.K sir's invitation.

1974 இல் வந்த திக்கற்ற பார்வதி, குடியின் கொடுமைகளை சொல்லும் படம். பார்வதியும்
(லட்சுமி)கருப்பனும்(ஸ்ரீகாந்த்) ஏழை தம்பதிகள். ஒரு குழந்தை பிறந்த பிறகு ,வருமானத்தை பெருக்க கடன் வாங்கி ஒரு வண்டி வாங்குவார். பிறகு மெதுவாக குடி பழக்கத்துக்கு அடிமையாகி,குழந்தையை இழந்து, கடனை கட்ட முடியாமல், கடன் கொடுத்தவரின் பலாத்காரத்துக்கு ஆளாவாள் பார்வதி.அதனால் அவனை தாக்கி கருப்பன் சிறை செல்ல, அவனை விடுவிக்க பார்வதி தன தவறை ஒப்பு கொள்வாள். அதனால் கணவன் மற்றும் அவர் உறவினர்களின் உதாசீனத்தினால் வழியறியாது மலை முகட்டிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வாள்.
ரொம்ப சாதாரணமாய் எடுக்க பட்ட படம். சிட்டிபாபு இசை சில இடங்களில் ஓகே. ஸ்ரீகாந்த் ,கருப்பன் ரோலுக்கு miscast ஆக தெரிவார். லட்சுமி கொஞ்சம் பரவாயில்லை ரகம். அப்போது நான் ஜோல்னா பை கோஷ்டியில் இருந்ததால் உன்னை போல் ஒருவன்,தாகம்,திக்கற்ற பார்வதி,தேநீர் ,அக்ரகாரத்தில் கழுதை போன்ற அரைகுறை artfilm கழுத்தருப்புக்களை பார்த்தே தீர வேண்டியிருந்தது.
இது படு போர். ஆழமில்லாத,சுவையுமில்லாத பிரசார சனியன்.

vasudevan31355
1st September 2013, 09:15 PM
'வெண்ணிற ஆடை' ஸ்ரீகாந்த்

கிருஷ்ணா சார், மற்றும் கார்த்திக் சார் தங்களுக்காக

http://img801.imageshack.us/img801/3185/snapshot21e.png

http://img821.imageshack.us/img821/3025/snapshot23n.png

http://img194.imageshack.us/img194/2713/snapshot20c.png

http://ttsnapshot.net/out.php/i17485_vlcsnap-4357558.png

http://ttsnapshot.net/out.php/i17480_vlcsnap-4334155.png

http://ttsnapshot.net/out.php/i17494_vlcsnap-4383953.png

http://ttsnapshot.net/out.php/i17490_vlcsnap-4366962.png

RAGHAVENDRA
1st September 2013, 09:28 PM
வாசு சார்
தங்கள் வருகை மிகவும் மகிழ்ச்சியூட்டுகிறது. என் கிராமம் என் மண்... அட்டகாசமான துவக்கம்...
அதே போல் இங்கு வெண்ணிற ஆடை அமர்க்களமான ஸ்டில்கள்....
தொடருங்கள்...
ஆவலோடு காத்திருக்கிறோம்... தங்கள் பதிவுகளுக்காக...

RAGHAVENDRA
1st September 2013, 09:45 PM
திக்கற்ற பார்வதி - சில துணுக்குகள்

http://iffi.nic.in/Dff2011/21st_nff/21st_nff_1973_img_0.jpg

http://iffi.nic.in/Dff2011/21st_nff/21st_nff_1973_img_11.jpg



1. NFDC என பின்னாளில் பெயர் மாற்றப் பட்ட Film Finance Corporation நிறுவனத்தின் உதவியால் தயாரிக்கப் பட்ட படம்.
2. சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி அவர்களின் ஒரே திரைப்படம்
3. திரைப்படம் வெளியிடப் பட்ட பிறகு அதனுடைய சிறப்பை அங்கீகரித்து ஒரு மாநில அரசே வாங்கிய படம். தமிழக அரசால் வாங்கப் பட்டது.
4. முதன் முதலாக படப்பிடிப்பு நீதிமன்றத்திலேயே நடத்தப் பட்டது மட்டுமின்றி அந்நீதி மன்ற வழக்கறிஞர்களும் பங்கு கொண்ட படம்.
5. ராஜாஜி பிறந்த தொரப்பள்ளியில் படமாக்கப் பட்டது.
6. இப்படத்திற்கான அனுமதிக் கடிதத்தில் ராஜாஜி அவர்கள் இட்ட கையொப்பமே அவர் கடைசியாக இட்ட கையொப்பம்.
7. இப்படத்திற்காக அவ்வாண்டின் சிறந்த நடிகைக்கான விருதிநை நூலிழையில் நந்தினி பக்தவத்சலா என்ற நடிகையிடம் பறி கொடுத்தார் நடிகை லக்ஷ்மி. என்றாலும் பிலிம்பேர் பத்திரிகையின் சிறந்த நடிகை விருதை அவருக்குப் பெற்றுத் தந்ததோடு சிறந்த மாநில படம் என்ற பிலிம்பேர் பத்திரிகையின் விருதையும் பெற்றது இப்படம்.

http://im.rediff.com/movies/2010/sep/07slide2.jpg

8. இப்படத்திற்காக சிட்டிபாபு இசையமைத்த இரு பாடல்களில் ஒன்றை ராஜாஜி எழுத, மற்றொன்றை கவியரசர் கண்ணதாசன் எழுதினார்
9. ராஜாஜியின் கதைக்கு திரைக்கதை வசனம் எழுதியவர் காரைக்குடி நாராயணன்.

காடு படத்தின் மூலம் நூலிழையில் லக்ஷ்மியை வென்று சிறந்த நடிகை விருதை வென்ற நந்தினி பக்தவத்சலா

http://iffi.nic.in/Dff2011/21st_nff/21st_nff_1973_img_16.jpg

vasudevan31355
1st September 2013, 11:20 PM
'வெண்ணிற ஆடை' படத்தில் வரும் "ஒருவன் காதலன்... ஒருத்தி காதலி".... பாடல் எனக்கு மிக மிக பிடித்த பாடலாகும். எப்போதும் என் வாய் முணுமுணுத்துக் கொண்டிருக்கும் பாடல் அது.

அந்த

"உறவு ஓஹோஹோ என்றது" அட்டகாசத்திலும் அட்டகாசம். அதைத் தொடர்ந்து வரும் "என்றதோ" தொடர்ச்சி இன்னும் பிரமாதம். ஸ்ரீனிவாசும், சுசீலாவும் பின்னி எடுத்திருப்பார்கள். ஸ்ரீகாந்திடம் அநியாத்திற்கு கூச்சம் தெரியும். வெண்ணிற ஆடை நிர்மலா அழகு. என் மனதை கொள்ளை கொண்ட அருமையான பாடல். பாருங்களேன்.


https://www.youtube.com/watch?v=nr7WwLLbYyg&feature=player_detailpage

Gopal.s
2nd September 2013, 04:48 AM
என் அபிமான பாடகி சுசிலா ஜாலம் புரிவார். என்றது என்பதில் கிக் ஆன கொக்கி போட்டு வா வா என்று அழைத்து மூன்றாவது என்றது என்று emphatic tone .
ஒஹொஹொஹொஹொஹொ என்ற அருமையான ஹம்மிங். சுசிலா பாட்டிற்கு ஏற்ற pitch ,tone எடுக்கும் அழகே அழகு. சில எல்.ஆர்.ஈஸ்வரி பாட வேண்டிய பாடல்கள் இவருக்கு வந்து விடும். அதையும் இவர் பாடும் அழகே அழகு. PBS ,மேடம் ஸ்கோர் பண்ண விட்டு விட்டு தோதாய் தொடர்வார் பாருங்கள் ,அடடா!!!
இது அற்புதமான பாடல். இதை விட்டு ஒரு சோதா பாடல் சித்திரமே ஹிட் அடித்தது எனக்கு வருத்தமே.
அதே போல பார் மகளே பார் படத்தில் என்னை தொட்டு சென்றன தென்றல்.பாட்டில் வாவென்று நீ சொல்ல மாற்றம் கண்டேன் பாட்டில் வா சொல்லும் அழகு, கலை கோவில் படத்தில் நான் உன்னை சேர்ந்த செல்வம் பாட்டில் வாட்டும் என்ற சொல்லில் வாட்டுவார் இந்தியாவின் மிக சிறந்த versatile பாடகி.
ஒருவன் காதலி பாடலை "நெஞ்சிருக்கும் வரை" டீசிங் செய்யும் இடத்தில் உபயோகிப்பார் ஸ்ரீதர்.

mr_karthik
2nd September 2013, 11:37 AM
அன்புள்ள கோபால் சார்,

'திக்கற்ற பார்வதி' பற்றிய தங்கள் பதிவுகளுக்கு நன்றி. தங்கள் மற்றும் ராகவேந்தர் பதிவுகள் படத்தைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டுகின்றன. 1976-ல் ஸ்ரீகாந்த் விட்ட அறிக்கைகள் பேட்டிகள் பற்றி நீங்கள் கூறியுள்ளது சரியே. அதன் காரணமாக நடிகர்திலகத்தின் அன்பையும், ரசிகர்களின் அபிமானத்தையும் இழந்தார் என்பது உண்மை. அந்த இடத்தை பின்னர் ஜெய்கணேஷ் பிடித்தார்.

பின்னர் தவறான சமயத்தில் (1988) நடிகர்திலகம் தனிக்கட்சி துவங்கியபோது, 1976-ல் ஸ்ரீகாந்த் தனது பேட்டியில் சொன்னது போல "இந்திரா காங்கிரஸ் கட்சியில் சேர்ந்ததற்கு மாறாக, பெருந்தலைவர் விட்டுச்சென்ற ஸ்தாபன காங்கிரசை நடிகர்திலகம் தலைமையேற்று நடத்தி இருக்கலாம்" என்று சொன்னது சரியோ என்று தோன்றியது. (பெருந்தலைவர் மறைவுக்கு பின்னர் மிகப்பெரிய தொண்டர்கள் பலம் கொண்ட ஸ்தாபன காங்கிரஸ் சரியான தலைமையின்றி தவித்தது உண்மையே).

mr_karthik
2nd September 2013, 11:40 AM
அன்புள்ள ராகவேந்தர் சார்,

திக்கற்ற பார்வதி பற்றிய தங்கள் மேலதிக தகவல்களுக்கு மிக்க நன்றி. இவை யாவும் நான் உட்பட பெரும்பாலோர் அறிந்திராதவை. சுவையான தகவல்களுக்கும் அதற்கு வலு சேர்க்கும் அறிய ஆவணங்களுக்கும் மிக்க நன்றி. தங்கள் இருவரின் பங்களிப்பால் தற்போது திக்கற்ற பார்வதி சற்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது...

mr_karthik
2nd September 2013, 12:07 PM
Dear Vasudevan sir,

Your postings on 'Vennira Aadai' still are very superb. (Dont mistake me, my Tamil font always doing 'kirukkuththanam' when typing, and giving lot of trouble for me, thatswhy English).

The stills you have posted are giving more glorious to the thread. Thanks for your efforts.

Your narration about the song "oruvan kaadhalan, oruththi kaadhali" also very nice.

Thanks a lot for your postings.

gkrishna
2nd September 2013, 04:47 PM
திக்கற்ற பார்வதி பற்றிய ராகவேந்திர சார் குறிப்புகள் சூப்பர்
அந்த படத்தில் வாணி குரலில் "ஆகாயம் மழை பொழிஞ்ச பூமி க்கு கொண்டாட்டம் " என்ற பாடல் ஒன்று மிக பிரமாதமாக இருக்கும்
என் உடைய வேண்டுகோள் ஏற்று திரியை உயிர்ப்பித்த அணைத்து சகோதர்களுக்கும் நன்றி
நான் ஏற்கனவே ஸ்ரீகாந்த் பற்றிய குறிப்பில் கூறி இருந்தேன் ஜெய் கணேஷ் மற்றும் விஜயகுமார் அவர்களுக்கு சிவாஜி சார் கொடுத்த வாய்ப்புகளில் பாதி ஸ்ரீகாந்த் பெற்று இருந்தால் மிக பெரிய அளவில் வந்து இருப்பார் ஆனால் அவரும் வாயால் கட்டார் போக் ரோடு நம்பி நான் இல்லை என்று அறிக்கை வேறு .

gkrishna
2nd September 2013, 04:59 PM
கோபால் சார்

ஜெய் கணேஷ் விட ஸ்ரீகாந்த் பெட்டெர் சார் சதுரங்கம் (பழைய),பைரவி,அன்னக்கிளி, நீதிக்கு முன் நீயா நானா,இதயதில் ஒரு இடம்,வாழ்ந்து கட்டுகிறேன்,அன்னபூரணி,உண்மையே உன் விலை என்ன,யாருக்கும் வெட்கமில்லை,திருமாங்கல்யம்,பயணம்,அச்சாணி,வட்டத்திற ்குள் சதுரம், ஒரு வீடு இரு உலகம் போன்ற படங்களில் சற்று மாறுபட்ட நடிப்பை வெளி படுத்தி இருப்பார் அதிலும் நீதிக்கு முன் நீயா நானா நம்ம கோமதி சங்கர் பிலிம்ஸ் (பொன்னுஞ்சல் அவன் ஒரு சரித்தரம்,ஒருக்கு ஒரு பிள்ளை ) விஜயகுமார் மற்றும் லதா நடித்த படம் அந்த படத்தில் இறுதியில் தான் ஸ்ரீகாந்த் வருவர் .படம்
பெரிய போர் ஸ்ரீகாந்த் வந்தவுடன் எழுந்த கைத்தட்டு (நெல்லை ரத்னாவில் ) இன்னும் என் நினைவில் உள்ளது

mr_karthik
17th August 2014, 04:41 PM
எங்கள் முரளி சார் அவர்கள் 'காதலிக்க நேரமில்லை' திரைக் காவியத்தின் பொன்விழா நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்ததை படித்தபோது, ரசிகர்களின் எண்ணங்களை அறிந்த ஆர்வலர் திரு ஒய்.ஜி.மகேந்திரன் அவர்களுக்கு இன்னொரு கோரிக்கை வைக்கலாம் என்று தோன்றுகிறது.

1965-ம் ஆண்டு வெளியான 'வெண்ணிற ஆடை' படம் அடுத்த ஆண்டு பொன்விழா நிறைவைக் காண்கிறது. அதற்கும் அவர் விழா எடுத்து கௌரவிக்க வேண்டும். காதலிக்க நேரமில்லை படத்தின் அனைத்து கலைஞர்களும் பங்கேற்றதுபோல

எங்கள் முரட்டு ஆணழகன், தென்னகத்து ஓமர்ஷெரீப், தென்னாட்டு சத்ருகன் 'ஸ்ரீகாந்த்', வெண்ணிறகொடியிடை நிர்மலா, நகைச்சுவை தென்றல் மூர்த்தி, ஆஷா உள்பட அனைத்து கலைஞர்களும் பங்கேற்று கௌரவிக்கப்பட வேண்டும். ('மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள்' வரமாட்டார். தனக்கு இவ்வளவு பெரிய வாழ்வை அளித்துவிட்டு சென்ற தன் தலைவரின் ஆயிரத்தில் ஒருவன் விழாவுக்கே அவர் வரவில்லை).

நடக்கும் என நம்புவோம், இறைவன் அருளால்....

gkrishna
18th August 2014, 05:21 PM
உங்கள் கருத்தை வழி மொழிகிறேன் dear kaarthik sir

Richardsof
25th August 2014, 01:45 PM
http://i62.tinypic.com/2eg40gk.jpg

gkrishna
25th August 2014, 02:13 PM
மேல் உள்ள புகைபடத்தில் சுந்தர்ராஜன் மற்றும் சாவித்திரி நடுவில் இருப்பவர் எந்த நடிகர் சார்
சற்று பிரேம் ஆனந்த் ஜாடை தெரிகிறது

Richardsof
29th August 2014, 09:11 AM
1965- new wave movie

[quote=esvee;1160038]49 ஆண்டுகளுக்கு முன் வந்த புதமை சித்திரம்
புதுமை இயக்குனரின் அற்புத படைப்பு
கண்ணை கவரும் உள் அரங்கம் - காட்சிகள் .
பிரமாண்ட ஒளிப்பதிவு - இனிமையான இசை
பாடகி ஈஸ்வரியின் மயக்கும் குரல்
அறிமுக நாயகியின் அட்டகாசமான முக பாவங்கள் - நடனம்
அறிமுக நாயகனின் எழிலான தோற்றம் - அமைதியான நடிப்பு
எல்லா சிறப்பு அம்சங்கள் நிறைந்த இனிய பாடல் .
இன்றைய பாடல் - எல்லோருக்கும் பிடித்த பாடல் .
மனதை மயக்கும் மதுர கானம் .

http://youtu.be/BDrVroKxD0w?list=UUZia4cfjDQIJ_q7Ap2gq-vw

mr_karthik
4th September 2014, 12:40 PM
அன்பு நண்பர் வினோத் அவர்களுக்கு நன்றி...

adiram
22nd November 2014, 07:38 PM
1982 அல்லது 1983 கால கட்டம் என்று நினைவு. எம் என் நம்பியார் அவர்கள் தலைமையில் நடிகர்கள் பலர் மாலை அணிந்து சபரி மலைக்கு விஜயம் செய்து இருந்தார்கள். சபரி மலையில் இருந்து திரும்பும் வழியில் புனலூர் செங்கோட்டை வழியாக நெல்லைக்கு எல்லோரும் விஜயம் செய்தார்கள். ரஜினி மிகவும் பிரசித்தம் ஆகி விட்ட நேரம். ஆனால் ஒரு சாதாரண ஐயப்ப பக்தர் போல் பேருந்து ஒன்றில் பயணம் செய்து நெல்லை வந்தார். அப்போது நான் நெல்லையில் ஐயப்ப சேவா சங்கம் என்ற அமைப்பில் கௌரவ ஊழியர் ஆக இயங்கி கொண்டு இருந்தேன். இப்போது போல் அந்நாட்களில் சாலை இணைப்பு வசதிகள் கிடையாது.கம்பம் குமிளி பாதை அடிகடி மலைச்சரிவால் பாதிக்கப்பட்டு வந்ததால் வடக்கில் இருந்து வருபவர்கள் (மிக அதிக தூரத்தில் இருந்து வரும் (சென்னை,ஆந்த்ரா மற்றும் கர்நாடகா,குஜராத் பக்தர்கள்) பெரும்பாலும் மதுரை,திருநெல்வேலி,செங்கோட்டை,புனலூர் மார்கமாகவே பயணிப்பார்கள் .அது போல் அம்முறை எம் என் நம்பியார் குழு நெல்லை வந்தது . அவர்களை எல்லாம் உபசரிக்கும் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டு இருந்தது . ஏற்கனவே நான் சிவாஜி ரசிகன் அதனால் ஸ்ரீகாந்த் மீது சற்று அபிமானம் கொண்டவன் என்ற முறையில் அது போக ஸ்ரீகாந்த் அப்போது எம் என் நம்பியார் அவர்கள் குழுவில் மூத்த ஐயப்ப பக்தர் என்பதால் அவருக்கு மரியாதை ஜாஸ்தி கொடுத்து உபசரித்தேன்.பொதுவாக ஐயப்ப பக்தர் குழுவில் ஒரு ஐயப்ப பக்தர் அவரை விட மூத்த பகதர்களுக்கு கொஞ்சம் மரியாதை ஜாஸ்தி கொடுப்பார்கள். ஆகையால் அவரை நான் கொஞ்சம் அதிகமாக உபசரித்தேன். என் நண்பர்கள் எல்லோரும் ரஜினி அவர்களையே சுற்றி சுற்றி வந்தார்கள் அப்போது இதை கவனித்த திரு ரஜினி அவர்கள் எல்லோரிடமும் என்னை காண்பித்து 'இந்த சாமி பாருங்க என்னை விட ஸ்ரீகாந்த் (சத்குருசாமி என்ற அடைமொழியுடன்) அவர்களை நன்றாக கவனித்து கொள்கிறார் .அது போல நீங்களும் நடந்து கொள்ளுங்கள் ' என்று கூறினார். அப்போது ஸ்ரீகாந்த் சொன்ன பதில் எனக்கு நல்ல நினைவு ரவி சார் "இந்த கவனிப்பு இருக்கட்டும் ரஜினி.நீங்க இப்ப உச்சத்தில் இருக்கிறீர்கள். உங்க படங்களில் எங்களை போன்ற மூத்த நடிகர்களையும் சேர்த்து கொள்ள வேண்டும் ." என்று சொன்னார். ரஜினி உடனே தன உதவியாளர் இடம் (அவர் பெயர் ஜெயராமன் என்று நினைவு) இப்ப நாம் கமிட் ஆகி இருக்கும் படத்தில் சத்குருசாமிக்கு படம் முழுதும் வருகிற மாதிரி நல்ல ரோல் கொடுக்கிறோம் .டைரக்டர் கிட்ட சொல்லுங்க ' என்றார். பிறகு எல்லோரும் இதை மறந்து விட்டோம். 6 அல்லது 7 மாதம் கழித்து வந்த 'தம்பிக்கு எந்த ஊரு ' திரைபடத்தில் ஸ்ரீகாந்த்க்கு நல்ல ரோல் கொடுத்து இருந்தார்கள்.அதே போன்று ஸ்ரீ ராகவேந்தர்,வேலைக்காரன் திரைப்படத்திலும் ஸ்ரீகாந்த் உண்டு . ஏனோ தெரியவில்லை .பின்னாளைய ரஜினி படங்களில் ஸ்ரீகாந்தை காணவில்லை .


https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcQckopp6FqEReApOC1G-pZZYHbpI-q7wZ2g5Ugw2mp8AFiwuV7Hsw

நன்றி ஜி.கிருஷ்ணா சார். (மதுர கானங்கள் திரியிலிருந்து)

gkrishna
24th November 2014, 05:32 PM
நன்றி ஜி.கிருஷ்ணா சார். (மதுர கானங்கள் திரியிலிருந்து)

thanks adiram sir for posting srikanth related information

unfortunately forget this thread

once again thanks and rgds

Gk