PDA

View Full Version : viduthalai (Pavalamani Pragasam)



RR
6th July 2009, 12:24 PM
[tscii:7e9d3583a1]Ţξ¨Ä

- ÀÅÇÁ½¢ À¢Ã¸¡ºõ


¿¢øÄ¡Áø ÍÆÖÐ âÁ¢
¿¢¾Óõ ÒÄÕÐ ¸¡¨Ä
¿¢ÆÄ¡ö Á¡ÚÐ §¿üÚ
¿¢Ä×õ §¾öóÐ ÅÇÕÐ
¿¢ò¾¢¨Ã¢øÄ¡¾Ð þÂü¨¸

¿¢Â¾¢¸û «¾ý «îÍ
¿¢¨Ä Á¡Úõ §Å¨Ç
¿¢¸Øõ «Æ¢×õ «Ø¨¸Ôõ
¿¢¸úÅ¢ø ¯¨ÈÔõ ¿£¾¢
¿¢¨Éò¾¡ø Á¡Úõ Á¡É¢¼õ

¿¢¾¢Â¢ý À¢ý§É ¯Ä¸õ
¿¢¸úòÐõ ÀÄ À¡¾¸õ
¿¢ýÚ ¦¸¡øÖõ ¦¾öÅõ
¿¢¸ú¸¡Äõ ¾Õõ ÀÄ ÅÃõ
¿¢¨È̼Á¡Ì§Á¡ ¿õ ÁÉõ

¿¢ó¾¨É ²Ðõ ¦¿Õí¸¡Ð
¿¢Äò¾¢ø ¡÷ìÌõ Å½í¸¡Ð
¿¢õÁ¾¢Â¢ý ÌÇ¢÷ ¿¢ÆÄ¢§Ä
¿¢¨Ä츢ýÈ §Á¡É¦Á¡ý§È
¿¢¸Ã¢øÄ¡ §ÀâýÀ ¿¢¨Ä

¿¢Æø¸û ¿£Ùõ §Å¨Ç
¿¢¨É׸û ÁíÌõ Á¡¨Ä
¿¢ÆÄ¡ö Á¡Úõ ¸Å¨Ä
¿¢¾¡Éõ ¸¡Ïõ ¦ÅûÇõ
¿¢ÃõÀ¢ ¾ÐõÒõ ¯ûÇõ

¿¢ü¸¡¾ «¨Ä¸Ç¢ý ¬Æõ
¿¢îºÄÉõ ¯ÈíÌõ Áïºõ
¿¢ºí¸û ¯½÷ó¾ ¦¿ïº¢ø
¿¢÷ãÄÁ¡Ìõ Àü¦ÈøÄ¡õ
¿¢Ãó¾ÃÁ¡É§¾¡÷ Ţξ¨Ä
[/tscii:7e9d3583a1]

pavalamani pragasam
6th July 2009, 03:40 PM
unicode version:

விடுதலை

- பவளமணி பிரகாசம்


நில்லாமல் சுழலுது பூமி
நிதமும் புலருது காலை
நிழலாய் மாறுது நேற்று
நிலவும் தேய்ந்து வளருது
நித்திரையில்லாதது இயற்கை

நியதிகள் அதன் அச்சு
நிலை மாறும் வேளை
நிகழும் அழிவும் அழுகையும்
நிகழ்வில் உறையும் நீதி
நினைத்தால் மாறும் மானிடம்

நிதியின் பின்னே உலகம்
நிகழ்த்தும் பல பாதகம்
நின்று கொல்லும் தெய்வம்
நிகழ்காலம் தரும் பல வரம்
நிறைகுடமாகுமோ நம் மனம்

நிந்தனை ஏதும் நெருங்காது
நிலத்தில் யார்க்கும் வணங்காது
நிம்மதியின் குளிர் நிழலிலே
நிலைக்கின்ற மோனமொன்றே
நிகரில்லா பேரின்ப நிலை

நிழல்கள் நீளும் வேளை
நினைவுகள் மங்கும் மாலை
நிழலாய் மாறும் கவலை
நிதானம் காணும் வெள்ளம்
நிரம்பி ததும்பும் உள்ளம்

நிற்காத அலைகளின் ஆழம்
நிச்சலனம் உறங்கும் மஞ்சம்
நிசங்கள் உணர்ந்த நெஞ்சில்
நிர்மூலமாகும் பற்றெல்லாம்
நிரந்தரமானதோர் விடுதலை

tvsankar
7th August 2009, 03:17 PM
சகோதரி!
உங்கள்'விடுதலை'ப் பாடலில்,
அருமையாக இயற்கையின் நியதி பற்றியும்,
அதுமாறினால் நேரும் அழிவு பற்றியும்,மாறும் மனித குணம்
என்றெல்லாம் கூறி,
நிரந்தரமான விடுதலையின் நிலையைத் தத்துவ
மொழியில் விளக்கியிருப்பது அருமை!வாழ்த்துகள்!

அன்புடன்,

தங்கமணி.

Shakthiprabha
7th August 2009, 03:28 PM
awesome! :thumbsup:

pavalamani pragasam
7th August 2009, 03:58 PM
இருவருக்கும் நன்றி! :D