PDA

View Full Version : GnAnakoothan



P_R
25th May 2009, 10:19 AM
எனக்கு மிக விருப்பமான தமிழ்க்கவிஞர் ஞானக்கூத்தன். அவரது படைப்புகளைப் பற்றிப் பேச இந்தத் திரியை பயன்படுத்துவோம்.

ஞானக்கூத்தன் கவிதைகள் இந்த வலைத்தளத்தில் (http://gnanakoothan.wordpress.com/) படிக்கக் கிடைக்கின்றன.

P_R
27th May 2009, 05:07 PM
அவருடைய முதல் (?) கவிதையே பிரமாதம்

யோசனை (http://gnanakoothan.wordpress.com/2006/07/16/%e0%ae%af%e0%af%8b%e0%ae%9a%e0%ae%a9%e0%af%88/)

உனக்கென்ன தோன்றுது
கருத்துக்கு மாறாகப் போலீஸார்கள்
கட்டிவைத்துக் கையெழுத்து வாங்கலாமா

எனக்கென்ன தோன்றுது
வருத்தத்துக் காளானான் புலவன் என்றால்
யாப்பிலொரு கவிபாடச் சொன்னால்
போச்சு

Shakthiprabha
27th May 2009, 06:13 PM
Such situations persist everyday in every issue :) very subtly hinted I should say :clap:

P_R
3rd June 2009, 08:21 PM
Such situations persist everyday in every issue :) very subtly hinted I should say :clap:

In one sweep he has passed a comment on Tamil literature itself.


கை அது கடன் நிறை யாழே
மெய் அது புரவலர் இன்மையின் பசியே

என்று புறநானூற்றில் ஒரு வரி வரும்.

Even Bertrand Russel writes something like :" In these days of democracy one if apt to forget the debt art owes aristocracy".

That bounded feeling of indebtedness is brought out with its searing painfulness in this poem.

geno
10th February 2013, 12:33 AM
ஞானக்கூத்தனின் அரசியல் இயங்குதளம் புரிய அவருடைய தமிழ் (http://gnanakoothan.wordpress.com/2006/08/01/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d/)என்னும் கவிதை உதவும்:

தமிழ் (1973)
----------

"எனக்கும் தமிழ்தான் மூச்சு
ஆனால்
பிறர்மேல் அதைவிட மாட்டேன்"


திராவிட இயக்க/தமிழ் அடையாள அரசியல் மறுப்பும், பகடியும் தொனிக்கும் எழுத்துக்குச் சொந்தகாரர்; ஆனால் அதை மீறியும் கவர்கிறவர்.

எனக்கு அவருடைய "மேசை நடராசர்" கவிதையின் இயல்பான தொனியும், ஓட்டமும் மிகப் பிடிக்கும்.

மற்றபடி தமிழ் / திராவிட அரசியல் எதிர்ப்புணர்வு - அவருடைய "நாய் குரைக்கும்" கவிதை ஒன்று எண்பதுகளில் இந்தியா டுடேயில் வந்தபோது படித்தேன் - திராவிட இயக்க/ இட ஒதுக்கீட்டுக்கு எதிரான, அந்தக் கவிதை எழுதப்பட்டது 1969இல் என்று நினைவு - இந்தியா டுடே வில் வெளியிட்டபோது மிக கனத்த எதிர்ப்பை / விமர்சனங்களை சந்திக்க நேர்ந்தது நினைவுக்கு வருகிறது!

1960-களில் அவர் எழுதிய அரசியல் (உள்ளீட்டுக்) கவிதைகள் அவர் வலையில் உள்ளன - ஆனால் 1975 முதல் 1978 வரையிலான எமர்ஜென்சி காலத்தில் அவர் - எதுவும் " இந்திய அரச பயங்கரவாத அங்கதக் கவிதை" எழுதினாரா என்பது காணக் கிடைக்கவில்லை; அப்படி இருப்பது ஒரு கவிஞனின் அக நேர்மைக்குச் சான்றாக அமையும் - அவர் எழுதியிருக்காவிட்டாலும் யாரும் அவரது இலக்கியப் பங்களிப்பை மறுத்துவிடப்போவதில்லை..ஒரு பதிவாக சொல்லத் தோன்றியது.

1970-கள் வரைக்குமான அவரது அரசியல் உள்ளீட்டுக் கவிதைகள் அனைத்தும் தமிழ் அடையாள/திராவிட பண்பாட்டு அரசியலுக்கு எதிரான பகடிகள், எள்ளல்களே என்பதைப் புரிந்து கொள்வதற்கு 'உரை'கள் எதுவும் தேவையில்லை!


"நந்தா எந்தன் நிலா' என்றொரு எஸ்பிபி பாடல் உண்டு; அந்தப் பாட்டின் உள்ளீடாக வரும் உவமைகள் / அலங்காரங்கள் எதுவும் என் கருத்துக்கு ஏற்புடையவை அல்ல (அகத்தியன் செய்த அருந்தமிழ் நீயே) - ஆனால் என்னுடைய மிகப் பிடித்த பத்து பாடல்களில் அதுவும் ஒன்று. கலைக்கும், கவிதைக்கும் உள்ளடக்கத்தை மீறி ஆட்கொள்ளும் தன்மை உண்டு! :)

geno
10th February 2013, 12:43 AM
ஞானக்கூத்தனின் 'புகழ்' பெற்ற நாய் கவிதை:

நாய் (1969)

காலம் கடந்துண்ணும் எதிர்மனைப் பார்ப்பான்
எச்சிற் களையைத் தெருவில் எறிந்தான்
ஆள் நடவாத தெருவில் இரண்டு
நாய்கள் அதற்குத் தாக்கிக் கொண்டன
ஊர் துயில் குலைத்து நாய்கள் குரைக்கவும்
அயல்தெரு நாய்களும் ஆங்காங்கு குரைத்தன
நகர நாய்கள் குரைப்பது கருதிச்
சிற்றூர் நாய்களும் சேர்ந்து குரைத்தன
நஞ்சை புஞ்சை வயல்களைத் தாவிக்
கேட்கும் குரைச்சலின் குறைச்சலைக் கேட்டு
வேற்றூர் நாய்களும் குரைக்கத் தொடங்கின
சங்கிலித் தொடராய்க் குரைத்திடும் நாய்களில்
கடைசி நாயை மறித்துக்
காரணம் கேட்டால் என்னத்தைக் கூறும்?



இதற்குப் பின்னால் தெரிகிற 'வர்ணக்' கடுப்பு! .. :lol2:

geno
10th February 2013, 01:21 AM
ஞானக்கூத்தனின் அரசியல் வட்டிலில் இன்னொரு சோற்றுப் பதம்:

தோழர் மோசிகீரனார் (1970)


மோசிகீரா
மகிழ்ச்சியினால்
மரியாதையை நான்
குறைத்ததற்கு
மன்னித்தருள வேண்டும் நீ

சொந்தமாக உனக்கிருக்கும்
சங்கக்கவிதை யாதொன்றும்
படித்ததில்லை நான் இன்னும்
ஆனால் உன்மேல் அளவிறந்த
அன்பு தோன்றிற்று
இன்றெனக்கு
அரசாங்கத்துக் கட்டிடத்தில்
தூக்கம் போட்ட முதல்மனிதன்
நீதான் என்னும் காரணத்தால்.


முரசுக் கட்டிலில் களைப்பால் தூங்கிய கவிஞனுக்கு அரசன் சாமரம் வீசியதாக வரும் சங்கப் பாடல், கலைஞர்களும், புலவர்களும் கொண்டாடப் பட்டதை பதிவு செய்கின்றன.

தமிழர்களின் பண்பாட்டுப் பதிவாக உள்ள இந்த உண்மையின் மீது ஞானக்கூத்தன் வீசுவது புளியங்கொட்டை அல்ல - அங்கதப் போர்வையில் மிகுந்த வன்மத்துடன் வீசப்பட்ட எறிகுண்டு! (நமத்துப் போன, வெடிக்காத, பிசிபிசுத்த சொறிகுண்டு! :lol2: )

geno
10th February 2013, 01:49 AM
ஞானக்கூத்தனின் சைவ சமய நக்கலுக்கு மற்றொரு எடுத்துக்காட்டு! (irir & kalyan எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்!)

விட்டுப்போன நரி (1969)

குதிரையாகாமல்
விட்டுப்
போனதில் ஒருவன் சாமீ
குதிரையாகாமல்
விட்டுப்
போனதில் ஒருவன் சாமீ

மேற்படிக்
குரலைக் கேட்டார்
மாதொரு
பாகர். குற்றம்
ஏற்பட
வியந்தார். தேவி
ஏளனம்
செய்தாள் சற்று

“வாதவூரடிகட்காக
நரிகளைத் தேர்ந்த போது
நீதியோ என்னை மட்டும்
விலக்கிய செய்கை சாமீ!”

திருவருட்
திட்டம் பொய்த்த
தற்கொரு
ஊளைச் சான்றாம்
நரி எதிர்
உதித்துக் கீற்று
நிலாத் திகழ்
ஈசர் சொன்னார்:

நரிகளைப் பரிகளாக்கும்
திருவிளையாடல் முற்றும்
விடுபட்ட பேரை நாங்கள்
கவனிக்க மாட்டோம் போய்வா.


அடப்பாவி! இந்தாளு உண்மையிலேயே ரங்கராஜ நம்பியின் தொண்டரடிப் பொடியாழ்வார் வம்சமா இருப்பாரோ?!

venkkiram
10th February 2013, 04:25 AM
சொல் - 1981

எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல்
வெளியில் சொல்லும் பழக்கம் எனக்கு
நண்பன் ஒருவனோ நேரெதிர் இதற்கு

ஒன்றையும் சொல்ல மாட்டான் எதற்கும்
மௌனமாய் இருப்பதே அவன் வழியாகும்
பலரும் சொன்னோம்
‘சொல்லப்படுதலே என்றும் சிறந்தது’
அதற்குப் பிறகும் அவன் சொல்லவில்லை.
நாங்கள் வியந்தோம்.

இறக்கும் பொழுதும் சொல்ல மாட்டானா
ஒருநாள் அவனும் இறந்தான்
கட்டைப் புகையிலை போல அவன்
எரிந்ததைப் பார்த்துத்

திரும்பும் பொழுது தெருவில் வெயிலில்
சேவல் கூவிற்று ஒருமுறை விறைத்து.
வழக்கம் போல நான் சொன்னேன்.
‘புலர்ந்தற் கப்புறமும் கோழிகள் கூவும்’


** நான் ஒரு மக்கு பிளாஸ்திரி. கடைசி வரியின் அர்த்தம் இந்த சூழலுக்கு என்ன சம்பந்தம் என கொஞ்சம் புரிய வைக்கிறீங்களா?

P_R
10th February 2013, 07:34 AM
சுத்தம்!

மிகக் குறுகலான readings
மத்தியானமா வரேன்.

P_R
10th February 2013, 10:08 AM
ஞானக்கூத்தனின் 'புகழ்' பெற்ற நாய் கவிதை:

நாய் (1969)

காலம் கடந்துண்ணும் எதிர்மனைப் பார்ப்பான்
எச்சிற் களையைத் தெருவில் எறிந்தான்
ஆள் நடவாத தெருவில் இரண்டு
நாய்கள் அதற்குத் தாக்கிக் கொண்டன
ஊர் துயில் குலைத்து நாய்கள் குரைக்கவும்
அயல்தெரு நாய்களும் ஆங்காங்கு குரைத்தன
நகர நாய்கள் குரைப்பது கருதிச்
சிற்றூர் நாய்களும் சேர்ந்து குரைத்தன
நஞ்சை புஞ்சை வயல்களைத் தாவிக்
கேட்கும் குரைச்சலின் குறைச்சலைக் கேட்டு
வேற்றூர் நாய்களும் குரைக்கத் தொடங்கின
சங்கிலித் தொடராய்க் குரைத்திடும் நாய்களில்
கடைசி நாயை மறித்துக்
காரணம் கேட்டால் என்னத்தைக் கூறும்?



இதற்குப் பின்னால் தெரிகிற 'வர்ணக்' கடுப்பு! .. :lol2:

என்னங்க இது!
ஏன் இப்படி ஒரு interpretation?

கோஷமும் எதிர்கோஷமும், அவற்றலிருந்து பிரிந்த கோஷமுமாய் இருக்கும் சூழலில் (அரசியல்) புரிதல்னு ஒண்ணும் இருக்காது. இன்னைக்கு கத்துறவனுக்கு தான் எதுக்கு கத்துறோம்னு கூட தெரியாது, அவன் கிட்ட கோவிச்சிக்க எதுவும் இல்லைங்கிறார்.

The absurdity of it all, how little we know about the things we think we grapple with perfectly and get motivated by ன்ற மாதிரி'ல்ல விரியுது.

இதுல எங்கேர்ந்து வர்ணக்கடுப்பு?

எல்லாரையும் "பார்ப்பானின் எச்சிற்களைக்கு அடித்துக்கொள்ளும் நாய்கள்" ன்னுட்டார்னப் போறீங்களா??


'அந்தத் தெரு (https://gnanakoothan.wordpress.com/2006/07/page/14/)'வுக்கு



தனிப்பட வர மாட்டாமல்
கடவுளின் துணையில்
அங்கே
வருகிறான் பார்ப்பான்
சாமி
வலம் வர வேதம்பாடி.


கடவுள்னு தனியாப் போட்டப்புறம் 'சாமி'ன்ற வார்த்தையை பயன்படுத்துறார்- 'பார்ப்பான் சாமி'ன்னு அர்த்தம் வர்றாப்ல.
அந்தக் கிண்டல், stinging indictment எல்லாம் தான் அவரோட style.

P_R
10th February 2013, 10:20 AM
முரசுக் கட்டிலில் களைப்பால் தூங்கிய கவிஞனுக்கு அரசன் சாமரம் வீசியதாக வரும் சங்கப் பாடல், கலைஞர்களும், புலவர்களும் கொண்டாடப் பட்டதை பதிவு செய்கின்றன.

தமிழர்களின் பண்பாட்டுப் பதிவாக உள்ள இந்த உண்மையின் மீது ஞானக்கூத்தன் வீசுவது புளியங்கொட்டை அல்ல - அங்கதப் போர்வையில் மிகுந்த வன்மத்துடன் வீசப்பட்ட எறிகுண்டு! (நமத்துப் போன, வெடிக்காத, பிசிபிசுத்த சொறிகுண்டு! :lol2: )

இதெல்லாம் overreaction to a harmless and enjoyable poem.

மோசுகீரனாருக்கு சாமரம் வீசப்பட்ட நெகிழ்ச்சியான கதை தமிழ்நாட்டுல ஒரு household legend. அதை சிறுமைபடுத்த வேண்டும் என்ற வன்மம் ஞானக்கூத்தனுக்கு உண்டு, என்றெல்லாம் சந்தேகக்கண்ணோடு பார்க்கும் திராவிடப் பார்வையின் விசாலம் தான் என்னே என்னே!

நடராசர் கிண்டல் மாதிரி ஏன் இதை இயல்பாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. விட்டால் அவருக்கு நடராசரை இழிவுபடுத்தும் நோக்கு இருக்கிறது என்று நிஜமாகவே சொல்வீர்கள் போல இருக்கிறது.

இந்தாங்க இன்னொரு கிண்டல் (http://www.gnanakoothan.com/2012/07/15/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%A E%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95% E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/)




நான்கு வேண்டாம் ஒருகை உண்டா
தலையும் இல்லை வாலும் இல்லை
இதுவும் தெய்வமா என்று
கேட்பவர் கேட்கட்டும் மைல்கல்லே
எனக்குக் கண்ணில் நீ மகாலிங்கம்
ஆனால் கொஞ்சம் சப்பட்டை.

:lol:

P_R
10th February 2013, 10:29 AM
ஞானக்கூத்தனின் சைவ சமய நக்கலுக்கு மற்றொரு எடுத்துக்காட்டு! (irir & kalyan எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்!)
..
அடப்பாவி! இந்தாளு உண்மையிலேயே ரங்கராஜ நம்பியின் தொண்டரடிப் பொடியாழ்வார் வம்சமா இருப்பாரோ?!

மோசுகீரனார் கவிதைக்கு (அந்தத் தலைப்பு 'தோழர்' மோசுகீரனார் :lol: ) உங்க ரியாக்*ஷனைப் பார்த்தப்புறம் இதையெல்லாம் in-jest சொல்றீங்களா, இல்லை நிஜமாலும் சொல்றீங்களான்னு தெரியலை.

It is a fantastic poem. The comic absurdity of the situation, the 'insolence of office' with which God replies, the மாதொருபாகன் is still a man being laughed at by his woman. It takes its own meanings in how one contends with the apparently final denial of prayers (of course, that's just me, each to his own). But merely resisting reducing it to - potshot at Sivan. Really hope that's not how you are really reducing this.

geno
10th February 2013, 02:24 PM
மோசுகீரனார் கவிதைக்கு (அந்தத் தலைப்பு 'தோழர்' மோசுகீரனார் :lol: ) உங்க ரியாக்*ஷனைப் பார்த்தப்புறம் இதையெல்லாம் in-jest சொல்றீங்களா, இல்லை நிஜமாலும் சொல்றீங்களான்னு தெரியலை.

It is a fantastic poem. The comic absurdity of the situation, the 'insolence of office' with which God replies, the மாதொருபாகன் is still a man being laughed at by his woman. It takes its own meanings in how one contends with the apparently final denial of prayers (of course, that's just me, each to his own). But merely resisting reducing it to - potshot at Sivan. Really hope that's not how you are really reducing this.

முதல் விஷயம் - எதிர்வினையாற்றுவதால், ஞானக்கூத்தனை - சோ ராமசாமி, சுப்பு சாமி, ராம கோஆலன், ராதா ராஜன் போன்றோருடன் சேர்த்துவிடப்போவதில்லை. எனக்குத் தெரிந்து - தீவிர திராவிட இயக்கவாதிகளில் பலருக்கு அவரோடு உரையாடல் உண்டு.

ஆனால் நுட்பமான வேறுபாடுகலை பதிவு செய்வதை நாம் தடுக்க, மறுக்க தேவையில்லை.

புராணிகம், தொன்மம் ஆகியவற்றின் மீதான எள்ளல் - வெறும் தத்துவ - சித்தாந்த அலவில் எதிர் நோக்கக் கூடியது. தமிழ்த்தேசிய அரசியல் மீதான் பகடி என்அது - ஒரு பக்கச் சார்பு நிலையை எடுத்து விட்டதை அறிவிக்கற அரசியல் நகர்வே. அதில் தவறு ஏதுமில்லை. 50களில், 60களில் நிகழ்ந்த மிகத் தீவிரமான, militant திராவிட தமிழ்தேசிய அடையால அரசியல் பார்ப்பனர்களுக்கு, சித்தாந்தம் கடந்து, ஏற்படுத்தியிருக்கும் வெறுப்பு, அந்த தளத்தில் புரிந்து கொள்ளக் கூடியது.

உருவ வழிபாடு, சடங்கு மீதான எள்ளல், பொதுமையாக எல்லா சமயங்களுக்கும் உரியதாக உள்ளது; அடையாள அரசியல்வேறு.

P_R
10th February 2013, 04:09 PM
50களில், 60களில் நிகழ்ந்த மிகத் தீவிரமான, militant திராவிட தமிழ்தேசிய அடையால அரசியல் பார்ப்பனர்களுக்கு, சித்தாந்தம் கடந்து, ஏற்படுத்தியிருக்கும் வெறுப்பு, அந்த தளத்தில் புரிந்து கொள்ளக் கூடியது.
அந்த எதிர்நிலையை 'வெறுப்பு' 'வர்ணக்கடுப்பு' என்று வகைப்படுத்துவதைத் தான் குறுகல் என்கிறேன். அறிவுலக நிராகரிப்பு என்று ஒன்று திராவிட அரசியலுக்கு நிகழ்வே இல்லை, எல்லா எதிர்நிலைகளும் vested interests மட்டுமே என்று நீங்கள் சொல்வதாகப் படுகிறது.

முன்பே ஒரு விவாதத்தில் சொன்னதுபோல திராவிட அரசியலை 'natural threat'ஆக ஏற்று insecure ஆவது இயல்பானது. அது ஒன்றும் incidental side-effectடும் அல்ல.

That said, அதன் சமகாலத்திலேயே ஒரு intellectual core அற்ற உணர்ச்சி அறுவடை இயக்கம் என்று அதை விமர்சித்தவர்கள் எல்லாருக்கும் 'வர்ணக்கடுப்பு' என்று வகைப்படுத்தி சிறுமைப்படுத்துவதும் ஒத்துக்கொள்ளத்தக்கது அல்ல. ஆனால் அது தான் அடையாள அரசியலின் signature.

Note: this is NOT to say there were no vested interests in the criticism of the Dravidian movement. But to classify every criticism as motivated by 'preservation' interests is not only flawed, it is a brazen attempt to besmirch anyone making the criticism and thusly impede it.

எனக்கென்ன பிரச்சனைன்னா ஞானக்கூத்தனை நிறைய பேர் இப்படி reduce பண்ணிருக்காங்க. அவரை defend பண்றவங்க கூட தங்களோட அரசியல் சட்டகத்துக்குள்ள வச்சே பண்ணிருக்காங்க:

ஓரு பழைய கணையாழில(ன்னு நினைக்கிறேன்), இவரோட பட்டிப்பூ (http://gnanakoothan.wordpress.com/2006/07/30/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%A E%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82/), விடுமுறை தரும் பூதம் (http://gnanakoothan.wordpress.com/2006/07/30/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%A F%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/) போன்ற anti-work கவிதைகளை யாரோ (ப்ரமிள்?) விமர்சனம் பண்ணதுக்கு ஒரு இடதுசார்புள்ள எழுத்தாளர் டிஃபெண்ட் பண்ணி இந்த தோரணைல ஒண்ணு எழுதியிருந்தார்: "ஞானக்கூத்தனின் கவிதைகள் உழைப்பையே நிராகரிக்கவில்லை. மாறாக இந்த சமுதாய-அரசியல் சூழலில் தன் உழைப்பை தர மறுக்கும் மனநிலையை அவை பிரதிபலிக்கின்றன".

நான் வெடிச்சு சிரிச்சேன் :lol:

சைவத்தொன்மத்தைப் பகடி செய்யும் போது இயல்பாக தோன்றுவதும், தமிழ்த்தொன்மத்தைத் தொடும்போது touchy ஆகி, agenda-attribute செய்வதும் எங்கிருந்து வருகிறது? தமிழ்மரபுக்கும் 'இவர்களு'க்கும் சம்மந்தமம் இல்லை 'இவர்'கள் ப்ரேமைக்குரிய விஷயங்கள் வேறு, உஷாராக இரு.. என்றெல்லாம் நினைக்கவைக்கும் உங்கள் அரசியல் நிலைப்பாடு. அதைத் தான் சுட்டிக்காட்டினேன்.

geno
13th February 2013, 02:02 AM
சமயத்தைச் சாடுவதும், பகடி செய்வதும் - அச்சமயங்கள் holier than thou என்பதாக ஒரு பம்மாத்து செய்வதினாலும், சமயத்தின் மாயக் காரண/சடங்குகளால் மக்கள் கூட்டத்தை சுரண்டி ஒரு குறிப்பிட்ட மேல் வகுப்பாரே அதில் பிழைப்புவாதம் செய்வதை இடித்துக் காட்டுவதுமான ஒரு சமூக/அறிவுலகக் கடமை ஆற்றுவதற்குத்தான்.

தமிழ்த்தேசியம் என்பதே பெரியார் காலத்து முதலாக (அதற்கு முன்னால் மரபு வழியாக வள்ளுவன் முதன் வள்ளலார் வரை தமிழ் அறிவுலகச் சிந்தனையின் வழியாக) சமயம்/கடவுளை வைத்து - பார்ப்பனர்/ மேல்சாதியார் - சூத்திரர்களை, பஞ்சமர்களை சுரண்டி, ஒடுக்கி பிழைப்பதை நியாயப்படுத்தும் ஒரு கருவி, ஏற்பாடு, கட்டமைப்பு என்பதைச் சரியாக விளக்கும் - குறிக்கும் குறியீடாகவே இருந்து வருகிறது, சமூக-அரசியல்-பண்பாட்டுத் தளங்களில்.

இந்த அடிப்படை தெரியாமல் , அல்லது மறைக்கிற திரிபுவாதிகளால் - ஒரு போதும் உண்மையை நோக்கிச் செல்ல இயலாது :)

தெலுங்கு தேசியம், கன்னட தேசியம், மல்லு தேசியம் - என்று எதுவும் - பார்ப்பனர்களுக்கு வெறுப்பாகசக் கசப்பதில்லை; ஏனெனில் அவை - குறியீட்டளவில், இயங்குதளத்தில் - பார்ப்பனிய மேலாதிக்கத்தை எதிர்த்து நிற்பவை அல்ல என்பது மிக மேலோட்டமாக அவதானிப்பவர்களுக்கும் தெரியும்!

தமிழ் மொழிவழித் தேசியமே - பண்பாட்டு/அரசியல்/இலக்கிய/வரலாற்று தளங்களில் ஈராயிரம் ஆண்டு நெடுக பார்ப்பனிய எதிர்ப்பை பதிவு செய்து வந்திருக்கிறது!

தொன்மம்/புராணிகம் என்பது - இட்டுக் கட்டிய, ஒரு பொய்யான - அறிவுலகு அல்லது பண்பாட்டுத் தளத்தின் உரைகல்லில் சான்று பெற்றவை அல்ல!

பண்பாட்டு வரலாறு என்பது - மிகக் கூர்மையாக - பண்பாட்டு, இலக்கிய, சமூக தளத்தில் தன் உயிர்ப்பினை மெய்ச்சான்றுகளுடன் உலவ வல்லது.

தொன்மத்தை பகடி செய்வது - பிற்போக்குத்தனத்துக்கு எதிரான குரலைப் பதிய வைப்பது.

வர்ண ஆதிக்கத்தை எதிர்த்து எழுந்த தமிழ்த்தேசிய பண்பாட்டு வரலாற்றின் மீது எள்ளி நகையாடுவது - அப்பட்டமான, உள் நோக்கம் கொண்ட, வன்மம் நிறைந்த - தம் வர்ண அடையாளத்தை உடைத்தெறிந்த எதிரியின் போர்க் கருவி என்பதைப் புரிந்து கொண்ட காழ்ப்பே!

எதிர்நிலை என்பது தரவுகளோடு கூடிய விமர்சனமாயிருத்தல் வேண்டும். ஒரு மொழியினதின் பண்பாட்டை பகடி செய்வது - யாழ் பல்கலை நூலக எரிப்புக்குச் சமமானதே - அதன் பிண்ணனியின் எதிராளியின் பண்பாட்டை குலைத்துக் காட்ட வேண்டுமென்கிற நோக்கம் உள்ளது.

1960 கள் பூராவும் ஞானக்கூத்தனின் தமிழ் அடையாள எதிர்ப்புக் கவிதைகள் அவரது பகடியின் மூலம் வெளிப்பட்டன; 1975-1978-இல் இத்தனை பெரும் அரசியல்-பண்பாட்டு விமர்சகர் ஏன் அவசர நிலைப் பிரகடனத்தை எதிர்த்து ஒரே ஒரு கவிதையும் கூட எழுதவில்லை? என்கிற கேள்வி கடைசி நாய்களால் கேட்கப்பட்டும் பதில் இல்லை!

ஆக, தமிழ்த்தேசியம் பார்ப்பனர்களின் வர்ண ஆதிக்கத்தை உடைத்த எதிரிகளின் சூத்திரக் கொற்றவை; இந்திய தேசியம், பார்ப்பனர்களுக்கு உகந்த, எவரும் கேள்வியே கேட்கக் கூடாத, பூசிக்கப் படவேண்டிய இந்திராணி- என்பது மறுமுறை மெய்ப்பிக்கப்படுகிறது!

திராவிட/தமிழ் தேசிய இயக்கத்தாரின் முன் வைக்கும் உரைகளில் முதிர்ச்சி வேண்டும்; வார்த்தை ஜாலங்களை வைத்து கபடி ஆடக் கூடாது!

P_R
13th February 2013, 09:45 AM
பார்ப்பனனுக்கு மோசுகீரனாரை பகடி செய்யும் உரிமை கிடையாது. உண்மைத் தமிழன் (திராவிடச் சான்றிதழ் தேவை) மட்டும் தான் பகடி செய்யலாம் - என்ற நிலைப்பாடு அபத்தமானது. சங்க இலக்கியத்தை தன் heritage-ஆக தமிழ் பார்ப்பனர்கள் பார்ப்பதில்லை என்பதே ஒரு திராவிடப் புரட்டு. அது அவர்கள் heritage அல்ல என்று சொல்லும் திடாவிட அரசியல் கருத்தியலைத் தான் நிராகரிக்கிறார்கள்.

எந்த வகையிலும் இது மோசிகீரனாரையும், தமிழ் பண்பாட்டு மரபையோ சிறுமைப் படுத்தியதாக நினைக்கத் தோன்றவில்லை. மோசிகீரனாரை endear செய்யும் ஒரு simple கவிதையைக் கூட, சந்தேகத்துடன் பார்த்து வன்மம் கற்பிப்பது திராவிட அரசியலின் பண்பாட்டுக் கொடை.

'தமிழின் பெயரைச் சொல்லி, ஒரு புரட்டுக்கு மாற்றாக இன்னொரு புரட்டைச் 'சரித்திர மீட்டெடுப்பு' என்று கதைகட்டி, ஒரு sense of victimizationஐ அறுவடை செய்யும் அறிவு core அற்ற இயக்கம்' என்பது போன்ற ஒரு விமர்சனம் பார்ப்பனர்களிடம் இருந்தும், அல்லது ஹிந்து வர்ண அடுக்கு சமூகத்தைக் கட்டிக்காக்கும் நோக்குடைய பிற ஜாதியினரிடம் இருந்தும் மட்டும் தான் வந்தது என்பதுபோல சித்தரிப்பது பொய்.

உதாரணமாக, அந்தக் காலத்திலேயே கம்யூனிஸ்ட்கள் திராவிட இயக்கத்தை கடுமையாக எதிர்த்தார்கள். சமுதாயத்தின் அடுக்குகளைப் புரட்டிப் போடுவதிலும், நாத்திகத்திலும் நம்பிக்கை உடையவர்கள் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜஸ்டிஸ் கட்சி காலத்தில் இருந்தே 'அடையாள அரசியலை முன்நிறுத்தி வர்க்கப் பிரச்சனையை மழுங்கடித்தார்கள்' என்ற விமர்சனம் இருந்தது.

நிற்க: இப்படித் தான் விமர்சிக்கவேண்டும். கம்யூனிஸ்டகளின் நிலைப்பாடு சரி. திராவிட இயக்க grouses சரியல்ல என்றெல்லாம் நான் சொல்லவில்லை. பார்ப்பனர்களுக்கு loss of privilege பற்றிய கடுப்பு உண்டு என்றும் சொல்லியிருக்கிறேன். (இதை மீண்டும் மீண்டும் நான் நினைவுறுத்த வேண்டி இருப்பது சலிப்பாக இருக்கிறது)

ஆனால் திராவிட இயக்கத்திற்கு வரும் அத்தனை விமர்சனத்தையும் வெறும் 'வர்ணக்கடுப்பு' என்று சொல்வது தவறு மட்டும் இல்லை விமர்சிப்பவரை சிறுமைப்படுத்தும் போக்கு என்கிறேன். அவ்ளொதான்பா!

P_R
13th February 2013, 09:48 AM
நான் கூட எல்லாத்துலயும் oppression, காழ்ப்பைப் பார்க்கலாம்னு இருக்கேன். ரொம்ப வசதியா இருக்கும்போல.
ஜாதிக்கொடுமைகளை perpetuate செய்யும் கவிதையாக, எதிர்ப்பை நீர்த்துப் போகச்செய்யும் கவிதையாக உதை வாங்கி அழும் குழைகுழந்தைக்கு' (http://gnanakoothan.wordpress.com/2006/07/30/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%A E%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%A E%A4%E0%AF%88%E0%AE%95/)-வை பார்க்கலாம்.

ஞானக்கூத்தன் ஒரு ஆண். பெண் வீட்டை விட்டு வெளியே வருவதைப் பார்த்தால் அவருக்கு கோவம் வருகிறது. சமதர்மமற்ற இந்த உலகில் விழுந்து எழுந்து கற்றுக்கொள்ளும் பெண்களை ஊக்குவிப்பனே, சமூகப் பிரக்ஞையுள்ள கலைஞன். அவர்களை கிண்டல் செய்து, சிறுமைப் படுத்தி தன் காழ்ப்பை சைக்கிள் கமலம் (http://gnanakoothan.wordpress.com/2006/07/30/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%A E%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/) கவிதையில் வெளிப்படுத்துகிறார்.

ஹை! இது நல்லாருக்கே :-)

kaveri kannan
4th March 2013, 12:08 PM
உங்கள் தலபுராணத்தில் சொன்ன குறிப்பு பிடித்து இங்கே வந்தால்

இனிய ஜூகல் பந்தி விருந்தே பரிமாறி விட்டீர்கள்.

நன்றி பிரபு & ஜினோ..

கருத்தாடல்களின் ஆழமும் வீச்சும் கண்ணியமும் சபாஷ் சொல்ல வைக்கின்றன..

திருவிளையாடல் முற்றும் -- அரசு இயந்திரத்தின் '' இயந்திரத்தன'' செயல்பாட்டைச் சாட..
மோசி கீரா - அந்த இயந்திர ஓட்டுநர்களின் மெத்(தை)தனத்தைப் பாட..

இன்னும் தொடருமா இக்கூத்தலசல்?

otuziosoqu
22nd March 2013, 11:24 PM
what you guyz are discussing