PDA

View Full Version : naan oru 'psycho'vaam



pavalamani pragasam
23rd December 2008, 07:00 PM
(பனிரெண்டு வருடத்துக்கு முன் கல்லூரி பருவத்தில் இளைய மகன் எழுதியது)

நான் ஒரு 'சைக்கோ'வாம்

நான் ஒரு 'சைக்கோ'வாம். ஆம். எனக்கு அப்படித்தான் எங்கள் கல்லூரியில் பட்டப்பெயர் வைத்திருக்கிறார்கள். என் பின்னணி என்னவென்று உஙளுக்கு தெரியவேண்டுமா? சரி, என் கடந்த காலத்து ஜன்னலை திறந்து காட்டுகிறேன், எட்டிப்பாருங்கள்.

மீசை தரையில் கிடந்த பேன்ட்டை எடுத்தான். அதன் அடியிலிருந்து கரப்பான் பூச்சி ஓடியது. 'ச்சீ! இந்த சனியனுக்கு வேற இடம் கிடைக்கலையா?' என்று கத்தினான். அவசர அவசரமாக லுங்கியிலிருந்து பேன்ட்டிற்கு மாறினான். சுவற்றில் மாட்டியிருந்த சிறிய கண்ணாடியில் பார்த்து தலையை சரி செய்து கொண்டு வெளியில் வந்தான். குடிசையை பூட்டிவிட்டு, ஸாரி..சாத்திவிட்டு(அவன் குடிசைக்கு பூட்டு கிடையாது) வேகமாக நடந்தான்.

சிறிது தூரத்தில் மீசை முருகாயியைப் பார்த்தான். 'ஏ! முருவாயி! இந்த மருது பய எங்க போனான்? அவனுக்கு இன்னிக்கு ஸ்கூல் கிடையாதே? வீட்டுக்கு வந்தான்னா ஒழுங்கா படிக்கச் சொல்லு.'

'நா வூட்டுக்குப் போக நேரமாவும் மச்சான். செட்டியார் வூட்டுல வெளிய போறாகளாம். சின்ன புள்ளய பாத்துக்கறதுக்கு ஒப்புத்துக்கிட்டேன். நானும் ஓவர்டைம் பண்ணா நம்ம புள்ளக்கி நல்லதுதானே?'

'சரி, சரி,' என்றபடி நடந்தான் மீசை. ஸ்டாண்டை நெருங்கியபோது தன் ஆட்டோவுக்குள் சபரி உட்கார்ந்திருப்பது தெரிந்தது. இவன் வருவத பார்த்ததும், 'ஏன் மீசை இம்மாம் நேரம்? ஒன் பார்ட்டி இன்னிக்கி மாரி ஆட்டோல போயிட்டாரு' என்றான்.

மருடு குடிசைக் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தான். அங்கே இருந்த கம்ப்யூட்டர் முன் ஸ்டூலைப் போட்டு உட்கார்ந்தான். பொத்தானை அழுத்தி அதற்கு உயிர் கொடுத்தான். தன் பாக்கெட்டிலிருந்த ஃப்ளாப்பி டிஸ்கை எடுத்து நுழைத்தான். கீ போர்டின் பல கீகளை அவன் விரல்கள் சரளமாக தட்டின. திரையில் அவன் எழுதியயிருந்த புரோகிராம் தோன்றியது. புரோகிராமை செயல்படுத்தினான்.

திரையில் செங்கற்கள் வரிசையாக அடுக்கப்பட்ட காட்சி தோன்றியது. கீபோர்டில் எதையோ தட்டினான். ஆனால் ஒன்றும் மாற்றம் இல்லை. 'சே!' என்று கோபமாக மேஜையில் குத்தினான். அது ஒரு கேம் புரோகிராம். ஒரு வாரமாக அந்த விளையாட்டிற்கு அவன் முயற்சி செய்து கொண்டிருக்கிறான். அதில் உள்ள் தவறை கண்டுபிடிக்க முடியவில்லை.

எவ்வளவு நேரம் கம்ப்பூட்டர் திரையை வெறித்தபடி உட்கார்ந்துருந்தான் என்றே மருதுவுக்கு தெரியாது. திடீரென்று ஒரு பொறி தட்டியது. வேகமாக ஏதோ கீபோர்டில் டைப் செய்தான். புரோகிராமை செயல்படுத்தினான். மீண்டும் தரையில் செங்கற்கள் அடுக்கிவைக்கப்பட்ட காட்சி தெரிந்தது. ஆனால் இப்பொழுது ஒரு பந்தும் குதித்துக் கொண்டிருந்தது. மருதுவின் சந்தோசம் கரைபுரண்டது. அந்தப் பந்தை அவனால் நகற்ற முடிந்தது. அதைக் கொண்டு செங்கற்களை ஒவ்வொன்றாக உடைத்தான். அவன் புரோகிராம் துல்லியமாக வேலை செய்தது.

'டேய்! என்னடா பண்ற?' என்ற குரல் கேட்டு திடுக்கிட்டு திரும்பினான். அவன் அப்பன் மீசை நின்று கொண்டிருந்தான்.

' "சி" புரோகிராம், அப்பா' என்றான் மருது தயங்கியபடி.

'திரும்பவும் "சி" லாங்குவேஜ்ல கேம் புரோகிராம் போடுறியா? உன்ன ஹார்டுவேர் படிக்கச் சொல்லி ஒரு மாசம் ஆகுது. நீ இன்னும் ஆரம்பிக்கல,' என்று கத்தினான் மீசை.'எதுல புரோகிராம பதிவு பண்ணி வச்சிருக்க?' என்றான் திடீரென்று.

'ந்ப்ளாப்பி டிஸ்க்ல'

மீசை வேகமாக ஃளாப்பி டிஸ்கை உருவி மடக்கி உடைத்து கதவு வழியாக குடிசைக்கு வெளியே வீசி எறிந்தான். ஒரு நாய் ஓடி வந்து அதை முகர்ந்து பார்த்தது.

இதுதான் என் பள்ளி நாட்களின் சாம்பிள். இனி என் கல்லூரி வாழ்க்கையை நான் நேரிடையாகவே உங்களுக்கு சொல்கிறேன்.

அப்பொழுது நான் அந்த பொறியியல் கல்லூரியில் சேர்ந்து ஒரு வாரந்தான் ஆகியிருந்தது. இன்னமும் அந்த சூழலுக்கு நான் பழகியிருக்கவில்லை - அஃதாவது விடுதி உணவு சுவையாக(!) இருந்தது, சக மாணவர்கள் இனிமையாக(!) பழகினார்கள்.

என்னை முதன் முதலில் ராகிங் செய்தது நன்றாக நினைவிருக்கிறது. எங்கள் கல்லூரியில் ராகிங் ரொம்ப வித்ஹியாசமாக இருக்கும். கல்லூரி மதில் சுவரில் மணிக்கணக்கில் அசையாமல் உட்கார்ந்திருக்கச் சொல்வார்கள். மாலை நேரங்களில் வரிசையாக முதலாண்டு மாணவர்கள் சுவரில் அசையாமல் அசையாமல் அமர்ந்திருப்பார்கள். இதில் ஒரே ஒரு சிரமம் என்னவென்றால் தலை மேலே ஒரு நோட்டுப் புத்தகத்தை வைத்திருக்க வேண்டும்.

முதலாண்டு மாணவர்கள் அனைவரும் அஞ்சும் இந்த வகை ராகிங் எனக்கு மிகவும் சுவாரசியமாக இருந்தது. சிறு வயதில் இருந்தே எனக்கு அமைதியாக உட்கார்ந்து சிந்திப்பது என்றால் மிகவும் பிடிக்கும். வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, நான் ரிசர்வ்ட் டைப் என்று பெயரெடுத்தவன், அதற்கு காரணமே நான் அதிகமாக யோசித்து மிகக் குறைவாக பேசுவதுதான்.

இந்த மதில் சுவர் தியானங்களால் என் மனதின் கற்பனைக் களஞ்சியத்தில் பல புதிய கற்பனைகள் சேர்த்துக்கொள்ளப்பட்டன. இந்த கற்பனைகள் அரசியல் முதல் அறிவியல் வரை பலவகைப்பட்டிருக்கும். ஒரு முறை இது போன்ற தியானங்களில் எழுந்த ஒரு சந்தேகத்தை மறுநாள் இயற்பியல் பேராசிரியரிடம் கேட்டேன்.

'ஆற்றலின் அழிவின்மை(law of conservation)

விதியின் படி ஆற்றலை அழிக்கவோ, உருவாக்கவோ முடியாது என்கிறோம். அப்படியானால் மின் விளக்கில் இருந்து வரும் ஒளி ஆற்றல் என்னவாகிறது, சார்?' என்றேன். வகுப்பில் லேசாக சிரிப்பொலி கிளம்பியது. திகைப்படைந்தது போல் தோன்றிய அவர் முகம் சில விநாடிகளில் பிரகாசமானது.

'அந்த ஒளி ஆற்றல் அறையில் வெப்ப ஆற்றலாக மாறிவிடும். ஆற்றலின் அழிவின்மை விதிப்படி ஆற்றல் ஒரு வடிவிலிருந்து மற்றொன்றுக்கு மாரிவிடும்' என்று கூறி மாணவர்களிப் பார்த்து ஒரு வெற்றிப் புன்னகை பூத்தார்.

நான் கேட்டென், 'அந்த வெப்ப ஆற்ற்ல் என்ன ஆகும், சார்?'

இந்த கேள்வியை நான் கேட்பேன் என்று அவரும் எதிர்பார்க்கவில்லை, அதற்கு(பதில் கூறியிருக்காவிட்டாலும் பரவாயில்லை) அவர் கோபப்படுவார் என்று நானும் எதிர்பார்க்கவில்லை.

இது போல் மேலும் சில முறை சந்தேகம் கேட்டு மேலும் சில பேரசிரியர்களின் கோபத்தை சம்பாதித்த பிறகு இனி வகுப்பில் சந்தேகம் கேட்பதில்லை என்று முடிவு செய்து கொண்டேன்.

நான் அசிரிய்ர்க்ளிடம் சந்தேஅம் கேட்பதில்ல என்று உடிவு செய்து கொண்ட பிறகும் இரண்டா ஆண்டு படிகும்போது ஒரு முறை ஒரு ஆசிரியரிடம் நன்றாகத் திட்டு வாங்கினேன்.

அது காலை முதல் வகுபு. கடைசி வரிசை மாணவர்கள்கூஅ விழித்டிருந்தார்கள். வகுப்பில் பேசினால் வெளியே அனுப்பிவிட கூடிய கோபக்காரர் அவர். அதனால் வகுப்பு மிகவும் அமைதியாக இருந்தது. அப்பொழுது நான் திடீரென்று பாலமாக விசில் அடித்தேன். ( நான் நன்றாக விசில் அடிப்பேன்).

வகுப்பே என்னை திரும்பிப் பார்த்தது. 'யாரது?' என்று ஆசிரியர் கத்தினார். நானெழுந்து நின்றேன். அவருக்கு கோபத்தில் வார்த்தைவரவில்லை. உதடு அட்டும் அசைய நன்றாக மூச்சு வாங்கினார். (அந்த கோலத்தைக் கண்டு நான் பயப்படவில்லையா என்று பின்னர் என் நண்பன் ஆச்சர்யத்தோடு கேட்டான்.)

'சார்! நான் நேற்று ஒரு புத்தகம் படித்தேன். அதில் "மிகவும் சீரியஸானவர்களைக் கோபப்படுத்தினால் அவர்கள் பேசமுடியாமல் திணறுவார்கள்" என்று எழுடியிருந்தது. அதனால் தான் உங்கள் சைகாலஜியை சோதித்துப் பார்த்தேன்,' என்றேன்.

உடனே வகுப்பில் பலத்த சிரிப்பொலி நிரம்பியது. (ஆனால் அவர்கள் ஏன் சிரித்தார்கள் என்று எனக்கு இன்று வரை புரியவில்லை).

பிறகு நான் ஒரு வாரத்திற்கு அவர் வகுப்பில் outstanding (
வார்த்தையைப் பிரித்துப் படிக்கவும்) மாணவனாக இருந்ததும், பிறகு அவரிடம் கெஞ்சி, மன்னிப்புக் கேட்டு வகுப்புக்குள் நுழைந்ததும் பெரிய கதை. நல்ல வேளை, அந்த வருடம் தன் பாடத்தில் 50 சதவீதம் மதிப்பெண் கொடுத்து என்னை பார்டரில் பாஸ் பண்ணி விட்டார்.

'இனிமேல் இதுபோல் கேனத்தனமாகப் பண்ணாதே,' என்று என் நண்பன் கடுமையாக எச்சரித்தான்.

என்னுடைய வித்தியாசமாக சிந்திக்கும் தன்மை பல பிரச்சினைகளை ஏற்படுத்தினாலும் அதுதான் எனக்கு வேலை வாங்கிக் கொடுத்தது. எங்களுக்கு இறுதியாண்டில் பல நிறுவனங்கள் கல்லூரிக்கு வந்து நேர்முகத் தேர்வு நடத்தி மாணவர்களை வேலைக்கு தேர்வு செய்வார்கள்.

அது நான் பங்கேற்ற முதல் நேர்முகத் தேர்வு. முதல் பத்டு நிமிடத்திற்கு நான் கற்ற பொறியியல் சார்ந்த கேள்விகள் கேட்டார்கள். அவற்றிற்கு ஒருவாறு பதில் கூறி முடித்தேன். முடிவில் ஏதாவது ஒரு தலைப்பு முடிவு செய்து அதைப்பற்றி மூன்று நிமிடங்கள் பேசச் சொன்னார்கள்.

கரும்பு தின்னக் கூலி வேண்டுமா என்று நினைத்துக்கொண்டேன். என் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு பத்து நிமிடம் பேசினேன். முடிவில் போதும் போதும் என்று அவர்கள் கூற கஷ்டப்பட்டு குதிரையை நிறுத்தினேன். நான் பேசியதன் சுருக்கத்தை மட்டும் இங்கு கூறுகிறேன்.

நான் பேசியது 'Pulsating theory of universe'
பற்றி. இப்பொழுது இயங்கிக் கொண்டிருக்கும் இந்த பிரபஞ்சம் திடீரென்று அழிந்துவிடும் என்றேன். இப்பொழுது இந்த நேர்முகத் தேர்வு நடந்து கொண்டு இருக்கும்போதே திடீரென்று உலகம் சுக்கு நூறாக சிதறும். பிரபஞ்சத்திலுள்ள அனைத்து கோள்களும், நட்சத்திரங்களும், விண்கற்களும் உடைந்து தூள் தூளாகிவிடும். பிறகு அந்த தூள்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு புள்ளிக்குள் அடங்கிவிடும். பிறகு வரையறுத்துக் கூற முடியாத நேரத்திற்கு அப்படியே பிரபஞ்சம் ஒரு புள்ளிக்குள் அடங்கியிருக்கும்.

பிறகு திடீரென்று அதிலிருந்து மீண்டும் ஒரு 'நெபுலா' தோன்றும். காலத்தின் முதல் விநாடி மீண்டும் தோன்றும். ஒரு சூரிய மண்டலக் குடும்பம்(சோலார் சிஸ்டம்)தோன்றும். கோடானு கோடிக் கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு கோளில் உயிரினம் தோன்றும். பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு உய்ரினம் பரிணாம வளர்ச்சியால் தன்னைத் தான் அறியத் தொடங்கும். தன் கோளுக்கு பூமி என பெயர் சூட்டும். நாகரிகம் வளர்ந்து சிக்கலான வாழ்க்கைமுறை உருவாகும். ஒரு மாணவன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வான். அவன் பிரபஞ்சத்தின் கதையைக் கூறுவான். அப்பொழுது மீண்டும் பிரபஞ்சம் அழியும். மீண்டும் மீண்டும் இந்த நிகழ்ச்சிகள் கணக்கற்ற முறைகளாக நட்ந்து கொண்டிருக்கிறது.இதுதான் நான் கற்பனைக் குதிரையில் பயணித்த பிரபஞ்சம். மறுநாள் தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலில் என் பெயரைக் கண்டேன்.

'சைக்கோ' என்று எனக்கு பட்டப்பெயர் கிடைத்த கதையையும் கூறிவிடுகிறேன்.

நான் உட்கார்ந்து கற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டால் என்னையே மறந்துவிடுவேன். அது கற்பனையா, ஆராய்ச்சியா என்று என்னாலேயே கூற முடியாது.

ஒரு முறை நான் ஏன் பிறந்தேன் என்பதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன். லட்சக்கணக்கான உயிரணுக்களில் ஏதோ ஒன்றால் தான் ஒரு குழந்தை உருவாகிறது. அது போலத்தான் நானும் தோன்றினேன். அதுவே அந்த லட்சக்கணகான உயிரணுக்களில் வேறொரு உயிரணுவில் நான் தோன்றியிருந்தால் நான் வேறொரு மனிதனாக அல்லவா இருந்திருப்பேன்? இப்படி சிந்தித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று ஒரு மாணவன் என்னைத் தட்டி, 'அப்படி என்னடா யோசிக்கிற?' என்றான்.
உடனே, 'நான் யார்? நான் ஏன் பிறந்தேன்?' என்று அவனிடம் கேட்டேன். அதிர்ந்து போன அவன், 'டேய், சைக்கோ!' என்றான். உடனே அருகில் இருந்த மாணவர்கள் 'நல்ல பெயர்டா' என்று கூற அன்றிலிருந்து நான் அந்தப் பெயரால் அழைக்கப்பட்டேன். நான் ஏன் அப்படி கேட்டேன் என்று பிறகு கேட்டனர். நான் என் சிந்தனையைப் பற்றி கூறினேன். விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

ஏன் அவர்களுக்கு இது ஒரு சீரியஸான விஷயமாகத் தோன்றவில்லை? இதற்கே இவர்கள் இப்படிக் கிண்டலடித்தால் என்னுடைய மற்ற கற்பனைகளைக் கேட்டால் என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இவர்கள் பார்வையில் நான் ஒரு 'சைக்கோ'வாம். என்ன, ஆரம்ப வரிக்கே வந்துவிட்டோமா? அப்படியானால் வட்டம் முற்றுப் பெற்றது.

Shakthiprabha.
23rd December 2008, 07:22 PM
:)

Enjoyed every bit :clap: . I suppose I love being a psycho too :lol2:

Pass on our wishes to ur son pp maam :)

pavalamani pragasam
23rd December 2008, 07:53 PM
:D

madhu
23rd December 2008, 09:53 PM
:)

Enjoyed every bit :clap: . I suppose I love being a psycho too :lol2:

:)

:shaking: :frightened:

..................

PP akka...

unga son ivLo jOrA ezhudhuradhu oNNum periya vishayam illa.. :yes:

pavalamani pragasam
23rd December 2008, 09:58 PM
pulikku piranthathu poonaiyaagathuthaan!!!
thaay ettadi paanjaa kutti pathinaaRu adi paayaththaan seyyum!!!
vithai onnu pOttaa surai onnu muLaikkumaa???

:D

This story like many of mine was rejected by the printed media!
Publish aagi pakoda pottalam madikka pOvathai kaattilum the discerning readers here sollum nalla vaarththaikaLthaanE manasukku kuLirchchi!!! :lol:

btr
25th December 2008, 07:27 PM
good one! enjoyed the write up and your proud statement about the chip of the (old) block! :D hoping to read more.

pavalamani pragasam
25th December 2008, 07:37 PM
:ty: , btr!

vallimohanty
8th January 2009, 11:56 AM
PP Amma,
பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன் இதை படித்திருந்தால் நானும் ஒரு வேளை "psycho" ந்னு சொல்லி இருக்கலாம். இன்று இதை படிக்கும் போது, யோசிக்க வைத்துவிட்டீர்கள். ஆழ்ந்த சிந்தனை. முருவாயி, மருது பயல நல்லா வளர்த்திருகறீகள் :2thumbsup:
- Valli

pavalamani pragasam
8th January 2009, 05:19 PM
:lol: Thanx!

sarna_blr
8th January 2009, 07:37 PM
ஏன் அவர்களுக்கு இது ஒரு சீரியஸான விஷயமாகத் தோன்றவில்லை? இதற்கே இவர்கள் இப்படிக் கிண்டலடித்தால் என்னுடைய மற்ற கற்பனைகளைக் கேட்டால் என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இவர்கள் பார்வையில் நான் ஒரு 'சைக்கோ'வாம். என்ன, ஆரம்ப வரிக்கே வந்துவிட்டோமா? அப்படியானால் வட்டம் முற்றுப் பெற்றது.

// this story reminds me of myself :oops: //

BTW, PP amma , ivlO azhagaa-nErthiya-padikka inimayaa kadhai ezhudhveengalaa :roll: idhu enakku munnalayE therinjirundhaa :oops: neenga ezhudhuna kadhaingala eppavO padikka aarambichchiruppEnE :oops:
ini ellaa kadhaigalayum padikkirEn :D

pavalamani pragasam
9th January 2009, 11:59 AM
கதைகளை படிச்சிட்டு அப்படியே கவிதைகளையும் 'முதலிடம்' திரியில் புரட்டிப் பார்த்துவிடுங்கள்! :D

MumbaiRamki
16th January 2009, 07:47 PM
PP Mam - Magazines have constraints and hence they define certain qualities for stories - but as such , there is no constraint for a story - it can be a an event with no suprise , or lot of surprises .

I enjoyed this auto-biographical sequence of events !!!

pavalamani pragasam
17th January 2009, 12:32 PM
:notthatway: Though told in first person the story is not autobiographical!!!