PDA

View Full Version : Kadumnagai



P_R
18th September 2008, 04:50 PM
கடும்நகை


சாப்பிடுவதைக் குத்திக் காண்பித்தாலே குமரேசனுக்கு கோபம் வரும்.
"வடிச்சதெல்லாம் தா இதே முளுங்கிருச்சு" என்று அக்காள் விளையாட்டாக ஒரு முறை சொல்லப்போக, இரண்டு நாள் சாப்பிடாமலே இருந்துவிட்டான் குழந்தை.
முதல் நாள் யாரும் பெரிதாக கவனிக்கவில்லை. இரண்டாம் நாள் வீடு இறுக்கமானது. அம்மா மிரட்டினாள், கெஞ்சினாள்; அப்பா முதுகில் ரெண்டு போட்டார் ஒன்றும் மாறவில்லை. அக்காவை கன்னத்தில் விட்டார், அவள் அழுதுகொண்டே வந்து மன்னிப்பு கேட்ட பிறகு தான் சாப்பிட்டான். எல்லோரும் இலேசானார்கள், அப்பாவைத்தவிற . "இவ்வள வீம்பு நல்லதுக்கில்லடீய்" என்று கோபமும், பயமும் கலந்த தொனியில் அம்மாவிடம் சொன்னார். பிறகொருமுறை சத்துணவு வேளையில் வாத்தியார் ஏதோ சொல்லப்போக கடுங்கோபத்தில் புதிதாக கற்றுக்கொண்டிருந்த ஒரு வட்டாரச்சொல்லை உதிர்த்தான். சக மாணவர்களின் குபீர்ச்சிரிப்பில் ஆசிரியர் சற்று திடுக்கிட, புளிய மிளார் அகப்படுவதற்குள் சுள்ளான் ஓட்டம் பிடித்துவிட்டான்.

அதெல்லாம் ஒரு காலத்தில். சேந்தம்பட்டி முத்தைய்யன் செட்டுக்கு வாழ்க்கைப்படுவதற்கு முன். இப்போது எல்லோருக்கும் முன்னால் அந்த ராமசாமி இவன் சாப்பிடுவதைப் பற்றி தரம்தாழ்ந்து பேசினாலும் சோற்றோடு அவமானத்தையும் சேர்த்து சாப்பிடவேண்டியிருக்கிறது.

இங்கு வந்து சேர்ந்து விளையாட்டாக ஆறு வருடம் ஆகிறது. இன்னும் சேர்ந்தபோது இருந்த பொடியனாகவே அவனை இச்சூழல் நினைக்க வைக்கிறது. இத்தனைக்கும் இன்னொரு நாயனம் ஊதும் மாணிக்கண்ணனுக்கு இப்போதெல்லாம் நெஞ்சடைப்பு ஏற்படகிறது. ஊதும்போது ஒரு கரட்டுத்தனமான இரட்டை 'குரல்' கேட்கிறது. அதனால் குமரேசன் முதல் நாயனமாகிக்கொண்டு வருகிறான். ஆனாலும் இவர்களுக்கு அவன் சிறுபயல் தான். மற்றவர்கள் தன்னை சின்னவனாக நடத்துவதில் அவனுக்கு அதிக பிரச்சனை இருந்ததில்லை. அதற்குத் தோதாக ஒரு குழந்தைத்தனத்தை தன் சுபாவத்தில் கூட ஏற்படுத்திக் கொண்டு விட்டான்.

ஆனால் இரண்டாந்தவில் ராமசாமி வேறு ரகம். ஏனோ வந்த நாள் முதல் அவனுடன் இடக்கு தான். முத்தையண்ணன் தன்னை குழுவில் சேர்த்தது இந்த ஆளுக்கு இவனைப் பிடிக்கவில்லை."நீ் என்ன ஆளுக ?" என்று முதல் நாளே கேட்டுத் தெரிந்துகொண்டான். எடுபிடி வேலைகள் குடுக்கலானான். இவனால் குழுவில் எல்லோரும் குடுக்க ஆரம்பித்தார்கள். முத்தையண்ணன் இப்படியெல்லாம் செய்ய மாட்டார் ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளவும் மாட்டார்.

ராமசாமி் வாசிக்கும் நடை சுத்தம் இல்லை என்பது இவனுக்குத் தெரிந்த அளவு முத்தையண்ணனுக்கும் தெரிந்திருக்கும். ஆடுவது அவர்தானே. பல இடங்களில் நடனத்தில் வேகத்துக்கு ஈடு குடுக்காமல் வருவதை சுட்டிக்காட்டுவார்.
"இந்த இடத்துல கொஞ்சம் குறையுதண்ணே" என்று முதல்முறை சொன்னதும் "சரி தம்பி" என்று கேட்பதைப்போல் சொல்லிவிட்டு அப்படியே வாசிப்பான். இரண்டொருமுறை பார்த்துவிட்டு அந்நடைக்கு ஏற்றபடி தன் ஆட்டத்தைத் தளர்த்திக்கொள்வார் முத்தண்ணன். மேலே தொடர்ந்தால், "இதுக்கு இதேன் தம்பி சரியா வரும்" என்று பதில் வரும்.
ஏன் இது போன்றவர்களை சகித்துக்கொள்கிறார் இவ்வளவு நல்ல ஆட்டக்காரர் என்று குமரேசனுக்குப் புரிந்ததில்லை.

குமரேசன் தந்தையும் ஒரு கலைஞர் தான். அவர் நாதஸ்வரத்துக்குப் பக்கம் வாசித்துக்கொண்டிருந்தவர் கொஞ்சம் தாளம் தப்பினாலும் மேடையிலேயே திட்டு விழுவதைப் பார்த்திருக்கிறான் குமரேசன். தனது பன்னெண்டாவது வயதில் தந்தையை இழந்தபோதிலிருந்து அவனுக்கு ஒரு பெரியமனுஷத்தனம் வந்தாகிவிட்டது.
சொத்தோ, நிலமோ விட்டுச்செல்லும் சாதாரணத் தந்தையாக இல்லாமல் நாதஸ்வர பரிச்சயத்தை விட்டுச்சென்றிருந்தார். மிகுந்த நளினத்துடன் அவன் தந்தை வாசித்த 'ஆயிரங்கண் போதாது" பாட்டு அவனுக்கு நினைவிருக்கிறது. தேரனூர் ராமர் கோவில் உற்சவத்தில் அவர் வாசித்ததைக் கேடடு, வந்திருந்த கலெக்டர் மறுமுறை வாசிக்கச் சொல்லிக் கேட்டது அவனுக்கு முக்கியமான நினைவு. அவனுக்கு அப்போது பத்து வயது, தந்தை அரங்கேற்றிய நளினங்களை அவன் உள்வாங்கியிருக்க வாய்ப்பில்லை. ஆனால் ஒரு ஊதாங்குழலுக்கு கிடைத்த மரியாதையை அவன் நன்கு மனதில் பதித்திருந்தான்.

ஆனால் இன்று அவன் வாசிப்பது நாதத்தின் ஆழத்தை முன்னிறுத்தும் இசை அல்ல. தெருவில் ஆடும் ஆட்டத்திற்கு ஒத்திசை. யாரும் மறுமுறை வாசிக்கக்கேட்பதில்லை ('ஆயிரங்கண்' வாசிக்க தான் அப்பா இல்லை என்பதும் இவனுக்குத் தெரியும்), முதல் முறை கேட்டாலே பெரிய விஷயம். நடுநாயகம் இல்லாததால் குறைவாக எண்ணிவிட முடியாது. தெருவில் ஆடுவது என்றாலும் ஊரே கூடி ரசிக்கிறது. திருவிழாக்களில் இசைக்கச்சேரிக்கு கூடுவதை விட இங்கு தான் அதிக மக்கள் வருகிறார்கள். அந்த அளவில் தான் இன்னமும் கலை சோபிக்க, மக்கள் மனமகிழ்வுக்கு ஏதோ செய்துகொண்டிருப்பதாய் நம்பலாம் தான். ஆனால் இதில் எத்தனை கூட்டம் முத்தையண்ணன் ஆட்டத்தைப் பார்க்கவும் அதன் ஒத்தாக இவன் சார்ந்த குழு எழுப்பும் இசையைக் கேட்கவும் வந்தது, எத்தனைக் கூட்டம் சரசுவின் வெளிப்பாடுகளை பிரதானமாகக் கொண்டு வந்தது என்பது சங்கடமானக் கேள்வி தான்.


அப்பா இதை எந்த அளவுக்கு மரியாதையானதாக நினைப்பார் என்று அவனுக்கு சில சமயம் தோன்றும். அதே கலெக்டர் தன் வீட்டுவிழாவுக்காக சொல்லிவிட, "கல்யாண நாயனமெல்லாம் வாசிக்கிறதில்லீங்க" என்று நேராக சொன்னவர் அவர்.
"ஆமாம், நட்டாற்றில் விட்டுவிட்டு செத்துவிட்ட மனுஷன் என்ன கேள்வி கேட்பது ? 'இவ்வாறு ஊதித்தான், உன் பெண் ஒருத்தியை கல்யாணம் செய்து கொடுத்திருக்கிறேன்' என்று பதில் கூட சொல்லலாம். ஆனால் பதில் என்பது பிறருக்கு சொல்லக் கூடிய ஒன்று மட்டுமே.

என்றைக்காவது கச்சேரி வாசித்துவிடலாம், இப்போது அன்றாடத் தேவைகளுக்கு ஆகட்டும் என்று ஆரம்பித்து ஒரு மாதிரி இதே நிலைத்துவிட்டது. ராமசாமியின் ஏளனும் நிலைத்துவிட்டது (அது குழுவினர் எல்லோருக்கும் தொற்றிக்கொண்டுவிட்டது). விளையாட்டாக சொல்லுவதுபோல பாசாங்கு செய்தபடி ஒரு வன்மத்துடனே தாக்கிவந்தான். ஒரு சில முறை முத்தையனிடம் இந்த பேச்சுக்களைப் பற்றி சொல்லியும் பயனில்லை. அவருக்கு ஆயிரம் கவலைகள். "நீயே சமாளித்துக்கொள்" என்பதுபோல சொல்லிவிட்டார்.

சாப்பிடுவது, தூங்குவது, வாசிப்பது,பயணிப்பது என்று அவன் வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் ஆக்கிரமித்து சிறுமைப்படுத்தி வருவதையே தொழிலாகக் கொண்டிருந்தான். சரசு குமரேசனிடன் அணுக்கமாகப் பேசுவதைக் கண்ட நாள் முதல் கொச்சையின் உச்சத்திற்கே சென்றுவிட்டான். சொல்லடிகள் தவிற பொதுவில் கையால் அடிப்பது கூட சாதாரணமாகி விட்டது. செட்டில் பிறர் இதை விளையாட்டாக எடுத்துக்கொள்ளும்படியான ஒரு தோற்றம் வருமாறு செய்தான். ஒவ்வொரு சமயம் இந்தச் சனியனையெல்லாம் விட்டுப் போய் விடலாம் என்று தோன்றும்.

ஆனால் அக்காளைப் போல தங்கைக்கும் ஒன்று முடித்துவிட்டுப் போகலாம். தவிற, இப்போதெல்லாம் ஆட்டக்கார்களைக் கூப்பிடுவது கூட குறைந்து வருகிறது. சினிமாப்பாட்டு கச்சேரிகள் வைத்து முடித்துவிடுகிறார்கள். அதனால் வேறு குழுக்கு மாறுவது அவ்வளவு எளிதல்ல. மேலும் யாரும் முத்தையன் போல காசு விஷயத்தில் நாணயமாக நடந்துகொள்வதில்லை.
**
அடுத்த வாரம் தான் கச்சேரி. நாளை முதல் புதுப்பாட்டு பயிற்சி என்று முத்தையண்ணன் சொல்லியிருக்கிறார். இன்று சாப்பிட்டுவிட்டு ஏதாவது சினிமாவுக்கு போகவேண்டும். இதற்கும் ஏதாவது சொல்லுவான் - ஏதோ இவன் காசை செலவழிப்பது போல. கொஞ்ச நேரம் காலாற நடமாடிவிட்டு வரலாம் போல இருந்தது. வீட்டுக்குள்ளிருந்து வெளிப்பட்டபோது ராமசாமி வலப்பக்கத் திண்ணையில் அமர்ந்து பல் குத்திக்கொண்டிருந்தான். அதில் கூட ஒரு அலட்சியமும், அகம்பாவமும், பிறரை ஆட்டுவிக்கும் தோரணையும் இருப்பதாகத் தோன்றியது இவனுக்கு. இதற்கு ஏதாவது செய்துவிடவேண்டும் என்று தோன்றினாலும் 'இவன் கொட்டத்தை அடக்கும்' அளவுக்கு தான் ஒன்றும் செய்துவிடமுடியாது என்றும் தோன்றியது.

ஆற்றாமையும் சுய-பச்சாதாபமும் ஒருசேர எழ, இங்கிருந்தால் எரிச்சலாக இருக்கும் என்று அங்கிருந்து நகர முனைந்தான். தன்னளவில் இயன்றவரையில் ஏதாவது செய்துவிட வேண்டும் என்று உறுதியாகத் தோன்றியது.


"டேய் நாதஸ்..." ராமசாமி குரல் கொடுத்தான். கையை பைக்குள் விட்டுத் துழாவி ஒரு ரூபாய் நோட்டை எடுத்து நீட்டியபடி சொன்னான், "போய் ரெண்டு பளம் வாங்கிட்டு வா"
________________

crazy
18th September 2008, 08:59 PM
:P

Vivasaayi
19th September 2008, 03:23 PM
:lol: :lol: :lol: :lol: :lol: :lol:

oohhh...man...i dint expect the climax!

u must be only guy who thought abt the life of senthil amongst the kavunders nakkal!

amaala....."andha pinju manasu enna paadu pattirukkum" :lol:

karakaatakaran dialogues-ye vechu ... :lol:

this is different ...push it to a magazine PR.


"kumaresan ramasamiyai pazhathai vaithu pazhi vaangiyadhu....avvaiyin gnanapazha kaadhaiku aduthapadiyaga pugazh petradhu...sarasuvum kumaresanum...kadaisiyaaga raamasamy munnilaiyil inaindhaargal" mutrum!

littlemaster1982
20th September 2008, 09:44 AM
Excellent one PR :2thumbsup:

Shakthiprabha.
20th September 2008, 10:18 AM
PR,

:clap: excellent!

inime SEnthil'lai entha comedy clipping-il paarthaalum intha kathai ninaivil varaamal irukkaathu.

romba diff approach! :clap: senthil-ai hero akkiteenga :D :D

kadaisi vari padikkum pothu thaan kathaiyin motha uruvam, aim, approach ellaamE purigirathu :clap:

I suggest, u post it to some magazine :)

VENKIRAJA
20th September 2008, 10:23 AM
"enna namma settu...periya shaving settu!"
:lol:

The story is well composed and crafted.I ain't so sure about the dialect,but the content is written from keen observation and some experience.I was wondering why 'kadumnagai' till the end.And wow-What a suspense!
As vigneshwaran anna said,push it to a magazine!
:thumbsup:

Murali Srinivas
20th September 2008, 10:45 AM
பிரபு,

நான் என்ன சொல்வது? எல்லோருக்கும் தெரிந்த ஒரு நகைச்சுவை கதாபாத்திரத்தை எடுத்துக் கொண்டு அதன் பின்னால் இருந்திருக்கக்கூடிய(?) ஒரு சோகத்தை ஒரு திரைக்கதை அமைப்பில் வடிவமைத்த உங்கள் கற்பனைக்கு ஒரு சபாஷ்.

அன்புடன்

P_R
20th September 2008, 10:22 PM
Thank You crazy, LM, SP and Mr.MuraLi.

Thanks for the suggestion Viv. "prachchanai ellAm oNNu dhaan" :-)
At some level, the motivation for the story is also about GM not getting his due place in TFI history due to people's misplaced notions about comedy. I will elaborate about the motivation for the story sometime later... after more Hubbers have read the story

Thanks for your comment Venki. I have tried to keep conversation minimal and dialect neutral enough to be applicable to any location. Thanks for the comment.

Sanguine Sridhar
22nd September 2008, 04:37 PM
Wow man!! lovely :D :notworthy: :clap:

rangan_08
22nd September 2008, 05:12 PM
Well done PR.

GM உங்கள் மனதில் எந்த அளவிற்கு வியாபித்திருக்கிறார் என்பது hub-ல் உள்ள பலரும் அறிந்ததே. ஆணால், " செந்திலின் பார்வையில் GM " என்கிற கோணத்தில் கதையமைத்து, அதற்கு, " கடும்நகை " என்கிற பொருத்தமான தலைப்பைக் கொடுத்தது உங்களின் பன்முகத் திறமைக்கு மற்றுமொரு சான்று.

வாழ்த்துக்கள்.

joe
22nd September 2008, 05:48 PM
PR :thumbsup:

HonestRaj
22nd September 2008, 07:52 PM
PR arumai arumai :thumbsup:

perumbalum inraikku sirippu enbadhu aduthavanin azhugai enbadhai eduthukattum oru kadhai!!!!

en cinema arivirku ettiya varayil.. K Baghyaraj tharum screenplay poal irundhadhu :)

P_R
23rd September 2008, 11:40 AM
Thank You Sridhar, Joe,Karthik and Mohan.


perumbalum inraikku sirippu enbadhu aduthavanin azhugai enbadhai eduthukattum oru kadhai!!!! இன்றைக்கு மட்டும் அல்ல. என்றைக்கும் பெரும்பாலும் நகைச்சுவையின் மூலமாக வலி தான் இருந்திருக்கிறது. வாழைப்பழத்தோல் வழுக்கி விழுபவரை பார்த்து நாம் சிரிப்பதில்லை. ஏன் என்றால் அந்த கஷ்டம் கண்கூடாகத் தெரிகிறது. ஆனால் பிற இக்கட்டுகளை இந்த அளவுக்கு பொருட்படுத்துவதில்லை. கிட்டத்தட்ட எல்லா சிரிப்புக்கும் பின்னால் "butt of the joke" ஆக இருப்பவரின் அவமானம் உண்டு. தோல் வழுக்கி விழுவதை விட பெரிய வலி அது. மறக்க விரும்பியும், மறக்க முடியாமல் நிலைத்து நிற்கும் நினைவு.

ஒரு சில கஷ்டங்களுக்கு மட்டும் நாம் சென்சிடிவ்'ஆக நாகரீகக் கோடு இழுத்துக் கொண்டு சிரிக்க மறுப்பது, சில கோணங்களில் பார்த்தால் நகைச்சுவையானதே. அப்படிக் கொள்வது கூட ஒருவரின் (பார்வை) குறைபாடுகளை நகைப்புக்குரியதாக்குவதாகும் :P

இந்த தத்துவக் கேள்வியில் திளைப்போம்: அதென்ன தாமாசு வெட்டறதில ?

directhit
23rd September 2008, 12:46 PM
PR :bow: :bow:

app_engine
24th September 2008, 10:56 PM
Wow PR, hilarious ending:-)

Right from the beginning when you mentioned 'settu' , I got the karagAttakkAran images coming up in my mind (being familiar with your affinity towards kounder's comedies) with all those characters falling in place. I couldn't control LOL in the workplace in the end!

Classic!

ajithfederer
24th September 2008, 11:19 PM
:clap:

rajasaranam
25th September 2008, 07:01 PM
:lol: மிக அருமையான படைப்பு. சிறுகதைகளுக்கே கடைசி வரி திடுக் திருப்பம் இருந்த போதிலும், அதை இவ்வளவு அருமையாக அமைத்ததற்க்கு எவ்வளவு பாராட்டினாலும் தகும். :notworthy:

கதை படித்து முடித்தவுடன் 'சொப்பணசுந்தரியை யார் வெச்சிருந்தா' வுக்கான பதில் தெரிய ஆவலாய் உள்ளது 8-)

Srimannarayanan
25th September 2008, 07:26 PM
Excellant Prabhu.

complicateur
26th September 2008, 04:50 AM
இது வரை மௌனியாக இருந்த என்னை பேசவைத்துவிட்டது இந்தக் கதை. :notworthy: . "கௌண்டேரை மதிக்காத பெண்மணியை கை பிடிப்பதில்லை" என்ற தீவிர முடிவுக்கு வந்த நண்பனை "இதுவல்லவோ லட்சியம்" என்று பாராட்டிய நண்பர் குழுவில் நானும் ஒருவன். :)



கிட்டத்தட்ட எல்லா சிரிப்புக்கும் பின்னால் "butt of the joke" ஆக இருப்பவரின் அவமானம் உண்டு. தோல் வழுக்கி விழுவதை விட பெரிய வலி அது. மறக்க விரும்பியும், மறக்க முடியாமல் நிலைத்து நிற்கும் நினைவு.[/i]

ஹெகேலின் dialectic எங்கெல்லாம் விளையாடுகிறது பார்த்தீர்களா? :)



இந்த தத்துவக் கேள்வியில் திளைப்போம்: அதென்ன தாமாசு வெட்டறதில ?

வெட்டுபவன் "நின்னுகோரி வர்ணம்" அபஸ்வரத்தில் பாடிக்கொண்டே வெட்டினால் ?

Nerd
26th September 2008, 05:32 AM
Whoa, the last line :shock: There was not even a hint of GM-Senthil in the whole story till that point. But re-reading it, everything fell in place. Enjoyed the second reading better with many ROTFLs, the first reading gave me a pleasant shock in the end.

Never read anything like this before. A new genre perhaps. Excellent :clap: :clap: :clap:

complicateur
26th September 2008, 05:56 AM
பதிவு செய்து விட்டு மீண்டும் படிக்க ஆர்வம் தோன்றியதில் கிடைத்த சில விஷயங்கள்:
சற்று தாழ்வு மனப்பான்மை உடையவனே பெரும்பாலும் நகைசிரமத்துக்கு உள்ளாவான் (பல சந்தர்ப்பங்களில்). இங்கு ராமசம்யின் இம்சை மட்டும் அல்லாமல், ஒரு கலைஞனாக குமரேசன் அடையாத உச்சங்களும், அவனது ஆளுமையில் தாழ்வு மனப்பான்மை கலந்துவிட காரணமாக்கியிருப்பதற்கு ஒரு பேஷ்!

இரண்டாவது பேஷ் படத்தில் வரும் சில காட்சிகளை ஆர்ப்பாட்டமில்லாமல் கதையில் பிணைததற்கு.

In most rock groups the drummer is usualy considered the wild-child, non-conformer etc.. (case in point Tommy Lee, Sivamani who is unconventional by Indian standards etc...). I've always felt that the nature of percussive music appeals to the non-conformers, so it was a singular stroke of genius casting Gounder as a thavil player.

Nerd: This would probably fall under the genre' of fan-fiction. I agree that it is rather new for Tamil cinema.

P_R
26th September 2008, 02:23 PM
Thanks anoop, Stanley, rajasaranam and sriman.

Thanks app_engine. I find your reaction is quite interesting. :-)

P_R
26th September 2008, 02:30 PM
இது வரை மௌனியாக இருந்த என்னை பேசவைத்துவிட்டது இந்தக் கதை. :notworthy: .
Welcome to 'active' hubbing complicateur.


"கௌண்டேரை மதிக்காத பெண்மணியை கை பிடிப்பதில்லை" என்ற தீவிர முடிவுக்கு வந்த நண்பனை "இதுவல்லவோ லட்சியம்" என்று பாராட்டிய நண்பர் குழுவில் நானும் ஒருவன். :)
உங்கள் நண்பரின் லட்சியம் பாராட்டுக்குரியது. உயர்ந்த தர எதிர்பார்ப்பு தான் அது.He would have had to deal with acute short supply. But it is one helluva filter. :-)



கிட்டத்தட்ட எல்லா சிரிப்புக்கும் பின்னால் "butt of the joke" ஆக இருப்பவரின் அவமானம் உண்டு. தோல் வழுக்கி விழுவதை விட பெரிய வலி அது. மறக்க விரும்பியும், மறக்க முடியாமல் நிலைத்து நிற்கும் நினைவு.[/i]

ஹெகேலின் dialectic எங்கெல்லாம் விளையாடுகிறது பார்த்தீர்களா? :)

:-) அது இல்லாத இடமில்லை என்கிறார்களே.




இந்த தத்துவக் கேள்வியில் திளைப்போம்: அதென்ன தமாசு வெட்டறதில ?
வெட்டுபவன் "நின்னுகோரி வர்ணம்" அபஸ்வரத்தில் பாடிக்கொண்டே வெட்டினால் ?
:lol:


இங்கு ராமசம்யின் இம்சை மட்டும் அல்லாமல், ஒரு கலைஞனாக குமரேசன் அடையாத உச்சங்களும், அவனது ஆளுமையில் தாழ்வு மனப்பான்மை கலந்துவிட காரணமாக்கியிருப்பதற்கு ஒரு பேஷ்!

நம் போதாமைகளும், அவமானங்களும் ஒரு மொத்த உருவாக (தாக்குவதற்குத் தோதாக) நாம் எல்லாருக்கும் அமைவதில்லையே :-)

உங்கள் கவனமான வாசிப்புக்கு நன்றி.

P_R
26th September 2008, 02:32 PM
Thank You Nerd.

app_engine
26th September 2008, 07:29 PM
Thanks app_engine. I find your reaction is quite interesting. :-)

Three reasons :

1. I've been a regular reader in all the comedy related threads in TF section (Goundamani, Nagesh, Classic comedian poll etc)

2. I got redirected to this story from your signature (I'm not a regular visitor to this section) while browsing one of those threads and naturally with the 'nagai' in the title, difficult to read without Gounder lingering somewhere in the mind

3. karagAttakkaran music album is one of my all time IR fav (can't count how many times heard, viewed the dvd, youtube etc) and 'muththaiyyan kaNakku moththamum onakku' gets sparked when you mentioned about his 'settu':-)

Once again, புகழப்போதுமான பதங்களில்லை:-)

P_R
26th September 2008, 07:49 PM
:-) Thanks again.

Apart from the songs, the movie itself it quite well written - particularly the first half. I have this theory that well written films may flop but successful/enjoyable films are invariably well written. KaragAttakkAran is one example I like to quote...particularly for friends who think Gangai Amaran just lucked out. A small example:

Some villager tells Chandrashekar that some new set has been arranged for this year.The next shot is Shanmugasundaram saying "appidiyA ?", the next shot reveals they are in the house and Chandrashekar is standing around. We are in the middle of the conversation already.

Then Chandrashekar starts "engitta kooda piriyamA iruppAru....en ippid senjAru-nnu theriyalayE". Next shot is on Kanaga - she knows why -shot of Kanaga slapping Santhabarathy- back to today, all in two seconds !!

No vaLavaLA. In no time, we are told what happened , the motivation, the extent to the entry of a new set is disappointing to the incumbents, the potentially hostile environment for the yet-to-be introduced new settu, the potential villainy - nearly everything that the movie needs.

equanimus
26th September 2008, 09:34 PM
Prabhu Ram,
Very well written. Interesting delineations. Really enjoyed reading it.


KaragAttakkAran is one example I like to quote...particularly for friends who think Gangai Amaran just lucked out. A small example:

Some villager tells Chandrashekar that some new set has been arranged for this year.The next shot is Shanmugasundaram saying "appidiyA ?", the next shot reveals they are in the house and Chandrashekar is standing around. We are in the middle of the conversation already.

Then Chandrashekar starts "engitta kooda piriyamA iruppAru....en ippid senjAru-nnu theriyalayE". Next shot is on Kanaga - she knows why -shot of Kanaga slapping Santhabarathy- back to today, all in two seconds !!

No vaLavaLA.
Ha, interesting! I've found this sequence particularly striking too. One small correction though. The two-second flashback comes twice. First when Santhana Bharathi recollects it, and then when Kanaga does the same. What is startling about the two-second scene (besides its economy) is that it's a flashback that opens and ends like that. Usually, in our films, a character's memory is often limited to the audience's, and what the audience gets to know since the film's first frame in progressive timeline is what the characters are conscious of, too. If the character knows something else that had happened before the film opened, it's usually an incident that happened long back, and a very big deal is made out of it. Here, it's something that probably happened only a few weeks (or months) ago, and is also quite an important event. The usual choice, even if the idea is to wrap it up as quickly as possible, would be to show it in chronological order. But then, Gangai Amaran hardly wants to waste any time before introducing the asalUr karagAtta gOshti! :)

P_R
27th September 2008, 01:19 AM
Thank You equanimus.


Ha, interesting! I've found this sequence particularly striking too. One small correction though. The two-second flashback comes twice. First when Santhana Bharathi recollects it, and then when Kanaga does the same.
You are right.
One correction to correction.
SB's flashback is one second (only slap)
Kanaga's flashback is elaborate (hand-grab followed by slap) :P



Usually, in our films, a character's memory is often limited to the audience's, and what the audience gets to know since the film's first frame in progressive timeline is what the characters are conscious of, too. If the character knows something else that had happened before the film opened, it's usually an incident that happened long back, and a very big deal is made out of it. Here, it's something that probably happened only a few weeks (or months) ago, and is also quite an important event.
Nice point about the uniqueness of this 'flashback'.

Reminds me of two GM-Senthil anecdotes.

One where Senthil starts off on a flashback (wants to cut to it..and GM objects)..looking up
GM: unakkellAm oru plAsback-A ?
Senthil: visual-A sonnA thaannEn nallA irukkum :lol:

And of course the last word on flashbacks is the one post Santhanamary (nonvisual flashback :P) in Jaihind

GM: flashback ellAm nallAthAngaNNA irukku....aana government oththukkAdhungaLE
Senthil: I don't care
GM: oh ! :rotfl:

thilak4life
27th September 2008, 01:54 AM
:!: :notworthy:

Actually, I read it the moment you posted. But I didn't reply as I wasn't logged in mayyam. There I've said it, Superb.

amloo
29th September 2008, 03:17 PM
பரவா இல்லையே..வித்தியாசமான கர்பனை என்று கூட சொல்லலாம்..bravooo

neyway im new to tis MAYYAM..nice to c u al disscussing such a wonderful topics xsply in tamil literature..gd job..kip it up...

P_R
29th September 2008, 04:23 PM
Thank you thilak.

நன்ரி amloo

equanimus
29th September 2008, 04:57 PM
Ha, interesting! I've found this sequence particularly striking too. One small correction though. The two-second flashback comes twice. First when Santhana Bharathi recollects it, and then when Kanaga does the same.
You are right.
One correction to correction.
SB's flashback is one second (only slap)
Kanaga's flashback is elaborate (hand-grab followed by slap) :P
Yes indeed. The two flashbacks are as the two characters remember it. Didn't mean to say they're one and the same. Santhana Bharathi naturally recollects only her slapping him (one shot) and walking away (next shot)! Anyway, what's interesting is these sort of brief cuts to past are usually reserved to incidents that the audience is already aware of, and are shown again only for effect.

Reminds me of two GM-Senthil anecdotes.

One where Senthil starts off on a flashback (wants to cut to it..and GM objects)..looking up
GM: unakkellAm oru plAsback-A ?
Senthil: visual-A sonnA thaannEn nallA irukkum :lol:

And of course the last word on flashbacks is the one post Santhanamary (nonvisual flashback :P) in Jaihind

GM: flashback ellAm nallAthAngaNNA irukku....aana government oththukkAdhungaLE
Senthil: I don't care
GM: oh ! :rotfl:
:lol:

Enough digression. aduththa kadhai ezhudhi post pannunga.

Anoushka
29th September 2008, 05:24 PM
:) wonderful PR

madhu
30th September 2008, 05:52 AM
நம்ம பிரபு எழுத்துக்கும், சிந்தனைக்கும் விமரிசனமா எதைச் சொன்னாலும் சரியா இருக்காது. I mean.. இந்த சிக்கலாரின் ஊதலுக்கு நம்ம போஸ்டிங் எல்லாம் 'ஒத்து வராது..

ஆனா ஒண்ணு மட்டும் சொல்லியே தேரணும்..

அந்தக் கடைசி வரி விஷமா இருக்கு.. :shock:

அதாவது..

"நச்சு"னு இருக்கு :mrgreen:

அதனால :bow: :clap: :bow:

P_R
30th September 2008, 10:13 AM
:) wonderful PR
Thank you Anoushka

P_R
30th September 2008, 10:16 AM
pun-முக பூந்தேறலாரே, நன்றி.


ஆனா ஒண்ணு மட்டும் சொல்லியே தேரணும்.. சொல்வதைக் கேட்டுத் தேர முயல்வேன்.

ShereneAndrew
30th September 2008, 04:33 PM
Good one PR... i didn't expect the last line.. awesome.. :clap: :D

sarna_blr
4th October 2008, 08:00 PM
:-) Thanks again.

Apart from the songs, the movie itself it quite well written - particularly the first half. I have this theory that well written films may flop but successful/enjoyable films are invariably well written. KaragAttakkAran is one example I like to quote...particularly for friends who think Gangai Amaran just lucked out. A small example:

Some villager tells Chandrashekar that some new set has been arranged for this year.The next shot is Shanmugasundaram saying "appidiyA ?", the next shot reveals they are in the house and Chandrashekar is standing around. We are in the middle of the conversation already.

Then Chandrashekar starts "engitta kooda piriyamA iruppAru....en ippid senjAru-nnu theriyalayE". Next shot is on Kanaga - she knows why -shot of Kanaga slapping Santhabarathy- back to today, all in two seconds !!

No vaLavaLA. In no time, we are told what happened , the motivation, the extent to the entry of a new set is disappointing to the incumbents, the potentially hostile environment for the yet-to-be introduced new settu, the potential villainy - nearly everything that the movie needs.

edhuvumE plan pannaama, chummaa spot'layE yEnaadhaanO'nu eduththa padam dhaan Karagaattakkaaran'nu Gangai amaran oru pEtteela solliyirukkaar :confused2::

Kadumnagai :clap: :clap: :clap: :clap: Indha vaira-nagaiya oru nalla magazine'ku mail pannunga :P

Roshan
4th October 2008, 11:15 PM
:lol: Simply superb Prabhu :thumbsup: I didn't expect that climax :lol: arumaiyAna kaRpanai and the flow is really nice. A good publishing material. Try to do somethign about it and do write more :)

PS: Sorry for the late reaction :oops:

disk.box
5th October 2008, 02:10 AM
நெஞ்சைப் பிழிய வைக்கும் துன்பியல் முடிவொன்றை எதிர்பார்த்தே கதையைப் படித்தேன். (இடையிடையே அவரின் வாழ் நிலைக்காக "அய்யோ பாவம்" என்றெல்லாம் வேறு பரிதாபப்பட்டேன் :( ).

இத்தனையையும் வீணாக்குவதற்கென்றே வந்தன கடைசி இரு வரிகள்.
சிரித்து.....சிரித்து.....சிரித்து.... இன்னும் ஓயவில்லை.
மிக அருமையாக வடிக்கப்பட்ட சிறுகதை. :clap:

(வார இதழ்களின் ஒருபக்கக் கதைகளெல்லாம் வாசலில் கையேந்தி நிற்கின்றனவே அவற்றையெல்லாம் என்ன செய்ய உத்தேசித்திருக்கிறீர்கள் மதிப்பிற்குரிய பிரபு ராம் அவர்களே? )

P_R
5th October 2008, 11:11 AM
Thank you Sherene

Thank You sarna.

edhuvumE plan pannaama, chummaa spot'layE yEnaadhaanO'nu eduththa padam dhaan Karagaattakkaaran'nu Gangai amaran oru pEtteela solliyirukkaar Oh surprising ! Appo ellA pugazhum editorukkE.

நன்றி டிஸ்க்.பாக்ஸ்.

Thank you Roshan.

Try to do somethign about it ...
I will. Thanks for the encouragement. Actually this itself was written over quite a while. This post (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=914306#914306) - over a year back- was sort of the spark-off. First draft sometime in April. Beware...laziness masquerading as meticulousness :P


...and do write more :-)

Here are some old ones:

1) Complications (http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=4488) - heck more than 3 years back !!!

2) கற்பு (http://www.maiyam.com/hub/viewtopic.php?p=244895) : needs TSC fonts....written when in college...so, slightly prophetic, if I may say so :P

3) டிம்பக்டூ (http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=4991) - TSC again....a kind of musing on Hub/blogging...if you will.

4) How to Write a Short Story (http://www.mayyam.com/hub/viewtopic.php?t=6361)

5) சம்சாரம் (http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=9147)

wrap07
6th October 2008, 01:53 PM
wonderful Prabhuram :)
A different genre ! :thumbsup:


//
i just remember a meeting meant to facilitate the comedy actors wherein Shri Nagesh said " naanga niraya vedanaigal/kashtangal irunthalum, athayellam poruthukiittu, Ungalai sirikka vaikkarom".//

P_R
7th October 2008, 04:54 PM
Thank You Shankar !

aanaa
20th October 2008, 07:44 PM
Here are some old ones:

1) Complications - heck more than 3 years back !!!

2) கற்பு : needs TSC fonts....written when in college...so, slightly prophetic, if I may say so Razz

3) டிம்பக்டூ - TSC again....a kind of musing on Hub/blogging...if you will.

4) How to Write a Short Story

5) சம்சாரம்


:clap:

pavalamani pragasam
21st October 2008, 04:14 PM
This is what I call empathy! Deep analysis, from a different angle! Well done, PR!

P_R
22nd October 2008, 03:01 PM
Thanks Mrs.PP.

Thank you aanaa :-)

hub rap
29th October 2008, 09:42 PM
Wow PR, hilarious ending:-)

Right from the beginning when you mentioned 'settu' , I got the karagAttakkAran images coming up in my mind (being familiar with your affinity towards kounder's comedies) with all those characters falling in place. I couldn't control LOL in the workplace in the end!

Classic!

kaDumnagai? :P

hub rap
29th October 2008, 09:42 PM
The descriptions transcend the character, Kumaresan and fits nearly all characters Senthil has played. A little guilt might creep when I laugh at Senthil the next time he is lampooned. The vagaries of life, nicely brought.

"இரண்டு நாள் சாப்பிடாமலே இருந்துவிட்டான் குழந்தை."
Brings that face effortlessly into my mind.

"அதற்குத் தோதாக ஒரு குழந்தைத்தனத்தை தன் சுபாவத்தில் கூட ஏற்படுத்திக் கொண்டு விட்டான்." -
An antithesis of the following lines from 'Big Fish' - "A man tells his stories so many times that he becomes the stories. They live on after him, and in that way he becomes immortal."

They have told the same story about him so many times that he became the stories. The final line stays as it is

"நீ் என்ன ஆளுக ?"
- kinda ill-fits :?

Loved these lines:
"ஆனால் ஒரு ஊதாங்குழலுக்கு கிடைத்த மரியாதையை அவன் நன்கு மனதில் பதித்திருந்தான்."

"ஆமாம், நட்டாற்றில் விட்டுவிட்டு செத்துவிட்ட மனுஷன் என்ன கேள்வி கேட்பது ? 'இவ்வாறு ஊதித்தான், உன் பெண் ஒருத்தியை கல்யாணம் செய்து கொடுத்திருக்கிறேன்' என்று பதில் கூட சொல்லலாம். ஆனால் பதில் என்பது பிறருக்கு சொல்லக் கூடிய ஒன்று மட்டுமே.
Beautiful

Wine-like.

hub rap
29th October 2008, 10:13 PM
My avatar's mind-voice: nalla vEla. ivan mattum indha kadhaiya munnAdiyE ezhutheerunthaan, karumAndikku anuthAba vote-u pottE classic comedy collection election-la jeika vachchiruppAnunga :)

P_R
29th October 2008, 10:37 PM
Thank You hub_rap.

The ones you have quoted are among my favourite lines from Big Fish. That's an interesting perspective

Regarding ill-fitting line, it was meant to suggest possible motives for Ramasamy's behaviour - not just his treatment of Kumaresan but also possibly everyone else including Muthayyan. A mild attempt at character assassination. Perhaps it didn't gel in as well as I thought.

hub rap
29th October 2008, 11:22 PM
"ஏனோ வந்த நாள் முதல் அவனுடன் இடக்கு தான"
I like the above adjective as a reason for Ramasamy's behaviour... like the dialogues (http://in.youtube.com/watch?v=GPeG5Kz2Reg) after 5:47 :lol:
adhu, yErkanavE assassinated character dhAn :)

killua
28th January 2009, 02:09 AM
Great One PR

well done.

I am just reflecting the popular opinion here, hopefully it doesn't turn into one of those (if a lot of ppl agree with me i start to think whether i am right)

my intention is simpler than that. just to get a english transliteration of this wonderful publicly acclaimed short story.

you see sometimes when ppl fight over region & regional languages, casualties like me arise, not learning how to read their own mother tongue.

P_R
28th January 2009, 11:57 AM
Nice try mon ami.
You shall regret from here to eternity, your inability to enjoy such classics of Tamil Literature because adolescent ignorance and refusal of monetary incentives to learn thine tongue.

Welcome back though!