PDA

View Full Version : Tamil Cinema and Social Responsibility

joe
12th February 2008, 01:28 PM
தமிழ் சினிமா பற்றிய இந்த விவாத களத்தில் பொதுவாக நடிகர் ,நடிகைகள் ,இயக்குநர்கள் ,இசையமைப்பாளர்கள் ..அவர் பெரிதா இவர் பெரிதா என்பவை போன்ற விவாதங்களே நடக்கின்றன ..ஒட்டுமொத்த தமிழ் சினிமா குறித்த விவாதங்கள் அரிதாகவே இருக்கிறது.

பொதுவாக சினிமா என்பதே ஒரு பொழுது போக்கு ஊடகம் .அதற்கு எந்த அளவு சமுதாய பொறுப்புணர்வு இருக்க வேண்டும் என்ற பொதுவான விவாதம் தேவையான ஒன்று.

* தமிழ் சினிமா என்பது வெறும் பொழுது போக்கு மட்டுமே ,எனவே அதற்கு சமுதாயப் பொறுப்பு தேவையில்லை என யார் கருதுகிறீர்கள்?

* இல்லை ,பொழுது போக்காக இருந்தாலும் அதற்கு குறைந்த பட்ச சமுதாய பொறுப்பு இருக்க வேண்டும் என யார் கருதுகிறீர்கள் ?

* அவ்வாறு சமுதாய பொறுப்பு தேவையென்றால் பொழுதுபோக்கும் சமுதாய பொறுப்பும் எந்த விகிதத்தில் இருக்க வேண்டும் ?

* இதுவரை தமிழ்சினிமாவில் சமூக மாற்றம் ,மதம் ,அரசியல் ,பெண்ணுரிமை ,குடும்பம் ,உறவுமுறைகள் ,சமுதாய பொறுப்பு குறித்து சொல்லப்பட்ட கருத்துக்கள் எவை ..அவை தேவையா ? போதுமான அளவு உள்ளதா அல்லது தேவைக்கு அதிகமாக உள்ளதா ?

* தமிழ் சினிமா தமிழ் மக்களின் சமூக வாழ்க்கையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது ?

இது பற்றி விவாதிக்கலாமா?

Thirumaran
12th February 2008, 01:31 PM
Poll Add pannalaamae :roll:

Shakthiprabha.
12th February 2008, 01:44 PM
yeah poll plz

joe
12th February 2008, 01:46 PM
Poll added :)

Shakthiprabha.
12th February 2008, 01:51 PM
vote casted :)

P_R
12th February 2008, 01:53 PM
மிக நல்ல தலைப்பு ஜோ.
அவசியம் விவாதிக்கப் படவேண்டிய தலைப்பு.

பொதுவாக பொறுப்பு கலைக்கு அவசியமில்லை (பொறுப்பு இருப்பதால் பாதகமில்லை) என்பதே என் கருத்து. ஆனால் இந்த கருத்து கதை, கவிதையை பற்றி என்னால் சொல்ல முடிகிறதே தவிற, தமிழ் சினிமா பற்றி அவ்வளவு எளிதாக சொல்ல முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். இதற்கு காரணம் அதன் அபாரமான வீச்சு. சமூகம், அரசியல் என்று பல தளங்களில் இதன் வீச்சு பல சமயம் பிரமிப்பூட்டுவதாகவும், பல சமயம் கூச்சப்பட வைப்பதாகவும் இருக்கிறது. (இந்த மையத்தில் நடக்கும் பல தீவிரமான விவாதங்களே இதற்கு சான்று !)

தாக்கம் அதிகமாக இருக்கும் ஊடகம் என்பதாலேயே அதை கையாள்பவர்களிடத்தில் சமூக பொறுப்பு இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுவாக இருக்கிறது.

நமது புரிதல்களும், தேடல்களும், ரசனையும் பெரும்பாலும் சினிமாவால் செதுக்கப்படுகிறது. அவற்றைத் தாண்டி வருவதைற்கு ஒரு முயற்சியே செய்ய வேண்டி இருக்கிறது.

அதனால், எனது அபிப்ராயத்தில், விவாதத்துக்கு முன்னால் நாம் பதில் தேட வேண்டிய ஒரு கேள்வி. தமிழ் சினிமாவில் வீச்சு இவ்வளவு அதிகமாக இருப்பதற்கு காரணம் என்ன என்பதே.

உலகத்தில் எந்த இடத்திலும் இந்த அளவு இல்லை என்றே நான் நினைக்கிறேன்.
நிச்சயமாக சினிமாவின் தரத்தினால் அல்ல :-) இரு தமிழர்கள் சந்தித்துக்கொண்டால் பத்து நிமிடத்தில் சினிமா பக்கம் பேச்சு திரும்புவது ஏன் ? வேறு கலை இலக்கிய தேடல்கள் இல்லாமல் வெற்றிடமாக இருக்கின்றனவா. (சமீபத்தில் ஒரு திரியில் நீங்கள் சொன்னது போல, அருகில் உள்ள கேரளாவில் 'படிப்பவர்கள்' இருக்கிறார்கள்).
ஆரம்பத்திலிருந்தே இவ்வாறு தான் இருந்ததா ? இடையில் ஏற்பட்ட மாற்றமா ?

இதைப் பற்றி பேசுபவர்கள்/எழுதுபவர்கள் எல்லாருமே ஒரு கீழ்நோக்குப் பார்வையுடன் பேசுகிறார்கள். "ஏ பூச்சிகளே....நீங்கள் எல்லாம் புறநானூறு படிக்காமல் பில்லா பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்" என்ற ஒரு அறிவுஜீவி தொனியில். அது இல்லாமல் விவாதிக்க இது சரியான தளமக இருக்கும் என்று நினைக்கிறேன். இது நம்மைப் பற்றி புரிந்துகொள்வத்ற்கான முயற்சி.

joe
12th February 2008, 02:10 PM
PR,
As expected You started with excellent thoughts :) .I will come out with my points later.

joe
12th February 2008, 02:22 PM
தமிழ் சினிமாவில் வீச்சு இவ்வளவு அதிகமாக இருப்பதற்கு காரணம் என்ன என்பதே.

உலகத்தில் எந்த இடத்திலும் இந்த அளவு இல்லை என்றே நான் நினைக்கிறேன்.
நிச்சயமாக சினிமாவின் தரத்தினால் அல்ல :-) இரு தமிழர்கள் சந்தித்துக்கொண்டால் பத்து நிமிடத்தில் சினிமா பக்கம் பேச்சு திரும்புவது ஏன் ? வேறு கலை இலக்கிய தேடல்கள் இல்லாமல் வெற்றிடமாக இருக்கின்றனவா. (சமீபத்தில் ஒரு திரியில் நீங்கள் சொன்னது போல, அருகில் உள்ள கேரளாவில் 'படிப்பவர்கள்' இருக்கிறார்கள்).
ஆரம்பத்திலிருந்தே இவ்வாறு தான் இருந்ததா ? இடையில் ஏற்பட்ட மாற்றமா ? .

அருமையான கேள்வி!

தமிழ் மொழிக்கு ஒரு சிறப்பு உண்டு ..வெகுகாலமாக தமிழர்கள் மொழியையே மூன்றாக பிரித்து இயல் ,இசை ,நாடகம் என முத்தமிழ் என வழங்கி வருகிறார்கள் .

பல்வேறு இனக்கூறுகளுக்கும் தொன்று தொட்ட கலைவடீவம் இருப்பது போல ,தமிழர்களுக்கு கூத்துக்கலை அமைந்திருக்கிறது ..தமிழகத்தின் கோவில் நிகழ்ச்சிகளில் கூட தொன்று தொட்டு கூத்து ஒரு முக்கிய அங்கமாக இருந்திருக்கிறது ..எதையும் கதை வடிவில் கலையாக வெளிப்படித்தியிருக்கிறார்கள் தமிழர்கள் ..கூத்து கால மாற்றத்தில் நாடகம் ஆகி இப்போது விஞ்ஞான வளர்ச்சி காலத்தில்ல் சினிமாவாக வந்து நிற்கிறது.

ஆக இந்த கலைவடிவத்தில் பங்கு கொண்டவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று இந்த கலையை வெளிப்படுத்தி (இலக்கியம் போலல்லாமல்) மக்களிடையே பரிச்சையமும் புகழும் பெற்றார்கள் ..பின்னர் நாடகம் வந்த போதும் நாடகக் கலைஞர்களை அவர்கள் புகழுக்குரியவர்களாக கருதினார்கள் .. அதுவே இன்று திரைப்படம் வரை நீள்கிறது என நினைக்கிறேன்.

joe
12th February 2008, 02:25 PM
PR,
கேரளத்தில் படிக்கும் ஆர்வம் அதிகம் வருவதற்கு அங்கே நிலை கொண்ட கம்யூனிஸ ஆதிக்கமும் ஒரு காரணம் என நினைக்கிறேன் .

joe
12th February 2008, 02:33 PM
இதைப் பற்றி பேசுபவர்கள்/எழுதுபவர்கள் எல்லாருமே ஒரு கீழ்நோக்குப் பார்வையுடன் பேசுகிறார்கள். "ஏ பூச்சிகளே....நீங்கள் எல்லாம் புறநானூறு படிக்காமல் பில்லா பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்" என்ற ஒரு அறிவுஜீவி தொனியில்.

:lol: உண்மை ..என்னைப் பொறுத்தவரையில் புறநானூற்றைப் படித்து ஆதிகாலத்தில் நாங்கள் அப்படி இருந்தோம் இப்படி இருந்தோம் என்று வீண் பெருமை பேசுவதை விட , நம் சமூகம் பற்றிய தற்கால இந்த நூற்றாண்டைப் பற்றிய குறைந்த பட்ச வரலாற்றுப் பார்வையும் ,வரும் காலத்தில் நவீன மாற்றத்திற்கேற்ப நம் சமூகம் கைக் கொள்ள வேண்டிய தேவைகளையும் பற்றிய அறிவும் கொண்டிருப்பது அவசியம் ..கூடுதலால பில்லா பார்ப்பதில் ஒன்றும் தவறில்லை. :)

selvakumar
12th February 2008, 03:03 PM
தமிழ் சினிமா அல்லது எந்த சினிமாவும் மக்களுக்கு அடிப்படையில் ஒரு பொழுதுபோக்கு ஊடகமே. அந்த ஊடகத்தின் வீச்சு அதன் ஆரம்ப காலங்களில் மிகவும் அதிகம். அந்த காலத்தில் சமூகக் கருத்துக்களைச் சொல்லும் போது அது நன்றாக மக்களை சென்றடைந்தது. கலைஞர்களும் புராண காலத்து சினிமாவில் இருந்து விலகி, சுதந்திர போராட்டம், சமூக கொடுமைகள், பண்டைய தமிழர்களின் வாழ்க்கை முறை இவற்றை, பொழுதுபோக்கு அல்லாமலும் கொடுத்து வெற்றியடைய முடிந்தது. மக்களுக்கு சினிமா பார்ப்பது அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக இருந்தது. பார்த்த படத்தையே திரும்ப திரும்ப பார்க்கும் பழக்கம் அன்று நடிகர்களின் ரசிகர்களை தவிர, வெகுஜன மக்களிடமும் பெரிதும் ஓங்கி இருந்தது. ஆனால், இன்று அது மெல்ல மெல்ல சுருங்கி வருகிறது.

இன்று சினிமாவை விட மிகுந்த தாக்கத்தை தொலைக்காட்சி ஏற்படுத்துகிறது. அதன் வீச்சு நம்மை மலைக்க வைக்கிறது. சினிமாவை கூட ஒதுக்கி வைத்துவிட்டு, தொலைக்காட்சியில் வரும் ஒரு நிகழ்ச்சியை மக்கள் தொடர்ந்து கண் கொட்டாமல் பார்ப்பது அதன் ஆற்றலுக்கு நல்ல சான்று. சினிமா கூட தொலைக்காட்சியின் வழியாக வந்தால் தான் இன்று மிகுந்த வரவேற்ப்பைப் பெறுகிறது. இதனால், சமூகக் கருத்துக்களை மட்டுமே வைத்து பின்னப்படும் படங்களும், அல்லது மிகுந்த பொறுப்புணர்வுடன் எடுக்கப் படும் திரைப்படங்களின் வெற்றியும், அதன் பொழுதுபோக்கு அம்சத்தைப் பொறுத்தே முடிவு செய்யப்படுகிறது. மக்களின் ரசனையும், சினிமா குறித்த எண்ணங்களும் மாறிவிட்டன. ஒரு கருத்து கூட நேரடியாகச் சொல்லப்படாமல், கதையின் ஓட்டத்துடன் சொன்னால்தான் எடுபடுகிறது அல்லது எதிர்பார்த்த தாக்கத்தைப் பெறுகிறது. இவை இல்லை என்றால், வெறும் ஆவணப்படங்களாக சித்தரிக்கப்பட்டு அவை ஒடுக்கப்படுகின்றன.

மக்களை சென்றடைவதில் சினிமாவும், தொலைக்காட்சியும் பின்னிப் பிணைந்து சென்றாலும், இறுதியில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமே தாக்கத்தை ஏற்படித்துகின்றன அல்லது மக்களைக் கட்டிப்போடுகின்றன.

எனவே, சினிமாவில் சொல்லவரும் கருத்து, வெறும் பொழுதுபோக்காக ஒதுக்கப்படும் வாய்ப்பு அதிகம். இதனால், ஏற்படும் பாதிப்புகள் மற்ற ஊடகங்களை விட குறைவே என்பது எனது கருத்து. ஆனால், குறைந்த பட்ச பொறுப்புண்ர்வு தமிழ் சினிமாவுக்குத் தேவை. ஆனால், அதை இதில் எதிர்பார்ப்பது *கானல் நீரைப் பார்த்து* தாகம் தீர்ப்பது போன்றது.

சினிமாவை விட, இன்று தொலைக்காட்சிக்கு சமூகப் பொறுப்புணர்வு தேவை என்பது எனது கருத்து.

joe
12th February 2008, 03:06 PM
Selva :thumbsup:

Shakthiprabha.
12th February 2008, 03:07 PM
இன்று சினிமாவை விட மிகுந்த தாக்கத்தை தொலைக்காட்சி ஏற்படுத்துகிறது. அதன் வீச்சு நம்மை மலைக்க வைக்கிறது. சினிமாவை கூட ஒதுக்கி வைத்துவிட்டு, தொலைக்காட்சியில் வரும் ஒரு நிகழ்ச்சியை மக்கள் தொடர்ந்து கண் கொட்டாமல் பார்ப்பது அதன் ஆற்றலுக்கு நல்ல சான்று.

சினிமாவை விட, இன்று தொலைக்காட்சிக்கு சமூகப் பொறுப்புணர்வு தேவை என்பது எனது கருத்து.

Awesome post selva :thumbsup: :clap:

So, where are we going? What are we gonna do about ftv, mtv, and other channel oriented rubbish which we watch?

We cant stop them.

The solution is to STOP EXPECTING ethics from media :( :?

raaja_rasigan
12th February 2008, 03:10 PM
Tamil Cinema should have minimum social responsibility

&

Tamil cinema lacks social responsibility

1) eppadi irukka vendum 2) eppadi irukkiradhu

most people (including me) want to vote for both... is there any possibility for this

joe
12th February 2008, 03:10 PM
//தமிழ் சினிமா அல்லது எந்த சினிமாவும் மக்களுக்கு அடிப்படையில் ஒரு பொழுதுபோக்கு ஊடகமே. அந்த ஊடகத்தின் வீச்சு அதன் ஆரம்ப காலங்களில் மிகவும் அதிகம்.//

செல்வா,
வெறெங்கும் இல்லாத அளவுக்கு ஒரு பொழுது போக்கு ஊடகம் 4 அல்லது 5 முதல்வர்களை தந்திருக்கிறது என்பதை கணக்கிலெடுத்துக்கொண்டால் ,மக்கள் இதை வெறும் பொழுது போக்காக கருதுகிறார்கள் என நினைக்கிறீர்களா ?

அல்லது முன்பு மக்கள் அதை வெறும் பொழுது போக்கு என கருதவில்லை ,ஆனால் இப்போது நிலமை மாறிவிட்டது என கருதுகிறீர்களா??

ThalaNass
12th February 2008, 03:11 PM
சினிமாவை விட, இன்று தொலைக்காட்சிக்கு சமூகப் பொறுப்புணர்வு தேவை என்பது எனது கருத்து.

:notworthy: :thumbsup:

raaja_rasigan
12th February 2008, 03:14 PM
இன்று சினிமாவை விட மிகுந்த தாக்கத்தை தொலைக்காட்சி ஏற்படுத்துகிறது. அதன் வீச்சு நம்மை மலைக்க வைக்கிறது. சினிமாவை கூட ஒதுக்கி வைத்துவிட்டு, தொலைக்காட்சியில் வரும் ஒரு நிகழ்ச்சியை மக்கள் தொடர்ந்து கண் கொட்டாமல் பார்ப்பது அதன் ஆற்றலுக்கு நல்ல சான்று.

சினிமாவை விட, இன்று தொலைக்காட்சிக்கு சமூகப் பொறுப்புணர்வு தேவை என்பது எனது கருத்து.

Awesome post selva :thumbsup: :clap:

So, where are we going? What are we gonna do about ftv, mtv, and other channel oriented rubbish which we watch?

We cant stop them.

The solution is to STOP EXPECTING ethics from media :( :?

FTV, MTV endru podhuvaga English channels mattum kurippidadheenga .... plz include Manada mayilada, mastana mastana, jodi no. 1 pondra thamizh kalacharavadhigalin tholaikkatchi nigalchigalayum serthukkunga

joe
12th February 2008, 03:17 PM
ஓரேயடியாக தொலைக்காட்சி பற்றிய விவாதங்களுக்கு செல்லாமல் சினிமாவின் தாக்கம் குறித்து அதிகமாக விவாதிக்கலாம் என நினைக்கிறேன். :)

raaja_rasigan
12th February 2008, 03:18 PM
//தமிழ் சினிமா அல்லது எந்த சினிமாவும் மக்களுக்கு அடிப்படையில் ஒரு பொழுதுபோக்கு ஊடகமே. அந்த ஊடகத்தின் வீச்சு அதன் ஆரம்ப காலங்களில் மிகவும் அதிகம்.//

செல்வா,
வெறெங்கும் இல்லாத அளவுக்கு ஒரு பொழுது போக்கு ஊடகம் 4 அல்லது 5 முதல்வர்களை தந்திருக்கிறது என்பதை கணக்கிலெடுத்துக்கொண்டால் ,மக்கள் இதை வெறும் பொழுது போக்காக கருதுகிறார்கள் என நினைக்கிறீர்களா ?

அல்லது முன்பு மக்கள் அதை வெறும் பொழுது போக்கு என கருதவில்லை ,ஆனால் இப்போது நிலமை மாறிவிட்டது என கருதுகிறீர்களா??

joe..... oru pazha mozhi irukkiradhu..... "Thadi eduthavan ellam thandalkaran aagiran" endru...... aanal adhai indru ippadi matri kollalam, "cinemavil nadippavanukkellam mudhalamaichar kanavu vandhu vidugiradhu"

idhai ondrum seivadharkku illai...... ippozhudhu cinemakaragalil ennam ellam endha padathai remake pannalam enbadhe.

selvakumar
12th February 2008, 03:27 PM
நன்றி ஜோ, சக்தி :)

செல்வா,
வெறெங்கும் இல்லாத அளவுக்கு ஒரு பொழுது போக்கு ஊடகம் 4 அல்லது 5 முதல்வர்களை தந்திருக்கிறது என்பதை கணக்கிலெடுத்துக்கொண்டால் ,மக்கள் இதை வெறும் பொழுது போக்காக கருதுகிறார்கள் என நினைக்கிறீர்களா ?

அல்லது முன்பு மக்கள் அதை வெறும் பொழுது போக்கு என கருதவில்லை ,ஆனால் இப்போது நிலமை மாறிவிட்டது என கருதுகிறீர்களா??

தமிழ் சினிமா எத்தனையோ சமூக மாற்றங்களுக்கு காரணமாக இருந்த்ததை நாம் மறுக்க முடியாது. ஆனால், இப்பொழுது அதன் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இது ரசிகர்களை தவிர்த்து, மக்களின் மூலம் உருவாக்கும் அலையை வெகுவாக குறைத்துவிட்டது. மக்களுக்கு ஆதிகாலம் தொட்டு சினிமா பெரும் அம்சமாக இருந்து வந்தாலும், இன்றைய சூழலில் அதன் பங்களிப்பும், மக்கள் அதை ஒரு பொருட்டாக எடுத்து உன்னிப்பாக கவனிப்பதும், முற்றிலும் இல்லாமல் போய்விட்டது. அதாவது, அந்த தாக்கத்தின் ஒரு பகுதியை, தொலைக்காட்சி எடுத்துக் கொண்டுவிட்டது. அதனால் தான், தொலைக்காட்சியில் வராத படங்கள் கூட நமது மக்களுக்குத் தெரிவதில்லை. அவை முற்றிலும், காணாமல் கூட போயிருக்கின்றன. இன்றைய சூழலில், தொலைக்காட்சி அதன் கரங்களை விரித்து, சிறு குழந்தை முதல், பெரியவர் வரை அவர்களின் அருகாமையில் சென்று மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றலைப் பெற்றுள்ளது. சினிமா இப்பொழுது ஒரு ஊடகம். அவ்வளவே !! அதன் மூலம் கருத்துக்கள் மட்டும் சொன்னால், அடிப்படையான வியாபாரம் பாதிப்பதால், பொறுப்புணர்வு இருந்தாலும் அதன் விளைவுகள் குறைவாகவே இருக்கும்.

joe
12th February 2008, 03:41 PM
செல்வா,
மீண்டும் தெளிவான கருத்தை சொல்லியிருக்கிறீர்கள்! :D

மேலும் அலசுவோம்..

joe
12th February 2008, 03:42 PM
joe..... oru pazha mozhi irukkiradhu..... "Thadi eduthavan ellam thandalkaran aagiran" endru...... aanal adhai indru ippadi matri kollalam, "cinemavil nadippavanukkellam mudhalamaichar kanavu vandhu vidugiradhu".

:shock: நீங்கள் மறைமுகமாக உங்கள் கேப்டனை தாக்குவது போலிருக்கிறதே!

Billgates
12th February 2008, 03:47 PM
நண்பர் ஜோ அவர்களே

அருமயான தலைப்பு !

தமிழ் சினிமா பார்க்கும் மக்கள் அதை வெறும் பொழுது போக்கும் சாதனமாக கருதவில்லை என்பது என் கருத்து. இல்லைஎன்றால் நாம் வரிசையாக 4 முதல் அமைசசர்களை பார்த்திருக்க மாட்டோம் . சினிமாவில் காண்பது உண்மயாக வரும் என்ற நம்பிக்கயோடு தான் மக்கள் வாக்களிக்கிறார்கள். அந்த அளவுக்கு சினிமாவின் தாக்கம் உள்ளது தமிழகத்தில்.

இந்த கண்ணோட்டத்தில் பார்தால் சினிமா எடுப்ப்வர்களுக்கு சமுதாயதத்ன் மேல் பொருப்புணர்ச்சி வேன்டும் என்பது எனது தாழ்மயான கருத்து

joe
12th February 2008, 03:49 PM
Billgates,
உங்கள் ஆணித்தரமான கருத்துக்கு நன்றி!

தொடர்ந்து இது பற்றி விவாதத்தில் பங்கு கொள்வீர்கள் என எதிர்பார்க்கிறேன். :)

raaja_rasigan
12th February 2008, 04:02 PM
joe..... oru pazha mozhi irukkiradhu..... "Thadi eduthavan ellam thandalkaran aagiran" endru...... aanal adhai indru ippadi matri kollalam, "cinemavil nadippavanukkellam mudhalamaichar kanavu vandhu vidugiradhu".

:shock: நீங்கள் மறைமுகமாக உங்கள் கேப்டனை தாக்குவது போலிருக்கிறதே!

:NO:

Captain-ukku en adharavu undu..... but this is the reality

Billgates
12th February 2008, 04:09 PM
க்டந்த சில வருடஙகளாக சினிமாவில் நீதிமன்றம், காவல்நிலயம் போன்ற பொதுதுறைகள் செயல்லற்றவை போல சிததரிக்கப்படுகிறது. படத்தின் கதாநாயகன் சட்டத்தை கைய்யில் எடுத்துக்கொண்டு தானாகவே நீதி வழங்குவது போல் சித்தரிப்பது மிகவும் தவறான ஒன்றாகும். இதை மாற்ற வேண்டும்.
சட்ட்ததை பாதுகாப்பவர்களே அதை சாதுர்யமாக மீறுவது போன்ற சித்தரிப்பு மிகவும் கண்டிக்கததக்க்தது. காவலர்களை கேவலமாக சித்திரிப்பது வருந்ததக்கது.
பெண்களை ஒரு அலந்காரப்பொருளாக சித்தரிப்பது கூட

raaja_rasigan
12th February 2008, 04:11 PM
joe..... oru pazha mozhi irukkiradhu..... "Thadi eduthavan ellam thandalkaran aagiran" endru...... aanal adhai indru ippadi matri kollalam, "cinemavil nadippavanukkellam mudhalamaichar kanavu vandhu vidugiradhu".

:shock: நீங்கள் மறைமுகமாக உங்கள் கேப்டனை தாக்குவது போலிருக்கிறதே!

avaravarkku piditha nadigargal arasiyalukku varuvadhai mattume makkal rasippargal, avarai thavira matra yavarayum yelanamdhan seyvargal...... idhu ella nadigargalin rasigargalukkum porundhum

joe
12th February 2008, 07:01 PM

கண்டிப்பாக எனக்கு பொருந்தாது ..நடிகர் திலகம் அரசியலுக்கு வந்த போது நான் அவரை ஆதரிக்கவில்லை. :)

Amarshiva
12th February 2008, 08:01 PM
Joe: Basically Tamil cinema had no social responsibility.
Though it was pure entertainment media, ppl at those circumstances(especially tamils) took very seriously on the outcome of the cinema.

That has resulted in winning of all the CM's that you're talking about now. MGR's powerful arrival made DMK much stronger. Exit of MGR made him to start his own party on his political success in DMK. Both J and Ja utilised the same skills and became CMs in frequent interval.

Now the scenario is not like that. This is because of Education these day. Otherwise, Rajni would have been CM by this time and so with Vijaykanth.

Now ppl seriously think before taking any decision. But too my dismay, tamil cinema still lacks the social responsibility. There were and are few exceptions to this. But on the whole, it lacks or it never had any social responsibility in the past. May be ppl are trying a bit..that too not even 3%.

It's my opinion Joe. I am not here to support any political party and any actor on this of course.

//தமிழ் சினிமா அல்லது எந்த சினிமாவும் மக்களுக்கு அடிப்படையில் ஒரு பொழுதுபோக்கு ஊடகமே. அந்த ஊடகத்தின் வீச்சு அதன் ஆரம்ப காலங்களில் மிகவும் அதிகம்.//

செல்வா,
வெறெங்கும் இல்லாத அளவுக்கு ஒரு பொழுது போக்கு ஊடகம் 4 அல்லது 5 முதல்வர்களை தந்திருக்கிறது என்பதை கணக்கிலெடுத்துக்கொண்டால் ,மக்கள் இதை வெறும் பொழுது போக்காக கருதுகிறார்கள் என நினைக்கிறீர்களா ?

அல்லது முன்பு மக்கள் அதை வெறும் பொழுது போக்கு என கருதவில்லை ,ஆனால் இப்போது நிலமை மாறிவிட்டது என கருதுகிறீர்களா??

Murali Srinivas
12th February 2008, 08:14 PM
டியர் செல்வா,

அருமையான நடை. ஜோ எழுதி பார்த்திருக்கிறேன். பிரபு ராம் அதே வீச்சில் எழுதுவார். அதுவும் ரசித்திருக்கிறேன். இப்போது சொன்னால் எப்படி எடுத்துகொள்வீர்களோ தெரியவில்லை. ஆனால் நீங்கள் ஏன் இன்னமும் தமிழில் எழுதவில்லை என்று யோசித்திருக்கிறேன். எழதி விட்டீர்கள். தொடருங்கள்.

ஜோ,

இந்த தலைப்பை பற்றி பிறகு(?) எழுதுகிறேன்.

அன்புடன்

joe
12th February 2008, 08:39 PM
Now the scenario is not like that. This is because of Education these day. Otherwise, Rajni would have been CM by this time and so with Vijaykanth.

I have to differ with you .But let us avoid deep political discussion :)

Thanks for all other views :D

joe
12th February 2008, 08:45 PM
முரளி சார்!

வாங்க! உங்கள் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறோம்.

குறிப்பாக தமிழ் சினிமா பல்வேறு காலகட்டங்களில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தியிருகிறது என்பதை எங்களை விட அதிகம் அறிந்தவர் நீங்கள்.

சுதந்திரத்துக்கு முந்தைய தமிழ் சினிமா , திரைப்படத்துறையில் திராவிட இயக்கங்களின் ஆதிக்கம் ,ஆன்மீகம் , பெண்ணுரிமை ,தேசபக்தி , சாதி மதக் கூறுகள் ,குடும்ப உறவுகள் ,தனிமனித உணர்வுகள் ,சமுதாய பார்வை ,காதல் ,வீரம் போன்றவற்றில் தமிழ் சினிமா ஏற்படுத்திய தாக்கம் குறித்து உங்கள் கருத்துக்களை தாருங்கள்

RAGHAVENDRA
12th February 2008, 08:46 PM
Dear Mr. Joe,
Whether Tamil cinema has the responsibility or not, I personally feel the artistes should have. They are paid the tax payers' money (though indirectly). As such, they are bound to reciprocate through their profession, though it is an art and they have the freedom of expression. You said that you did not support NT when he came to politics. I do not know if he had done any crime by entering in politics. In fact he did not bother to enter politics, but politics drew him. If at all he had bothered only about his own self, we would not have known about the freedom fighters, national movement, patriotism, etc. Is this not a proof of how much social responsibility he had in himself? His failure in politics is not because of his own self, it is a failure of people. Only people should repent for not encouraging him. He was an honest citizen till his last. He run his party in his own cost and lost his earnings. He may be failure in elections not in people's mind. Maybe his stand at that period would have not earned the people's sympathy. But that does not say that he is a failure in general. He did not want politics to be his mainstake, but he worshipped his profession more than any thing else. That cannot be objected. Because of his social responsibility, we could get the films Rathathilagam, describing patriotism and Indo-China war, Because of Rajapart Rangadurai, we can learn about various freedom fighters like Thiruppur Kumaran, Bhagat Singh, because of Kappalottiya Thamizhan we could know V.O.C. Is this not a social responsibility? Is it a ill-qualification for him to come to politics? Only the congress party did not utilise him. And he cannot be blamed for that. Since we talk about social responsibility in cinema this discussion is inevitable. I personally feel that the Tamil cinema should have social responsibility. Because of lack of it, we are forced to see so many movies which are supposed for adult people, that are shown on Television screen. Whether television has a social responsibility is a different question and it needs another thread.
Raghavendran

Kalyasi
12th February 2008, 08:54 PM

Good one Raghavendran

Kalyasi
12th February 2008, 09:02 PM
Joe anna enakku ivvalo perusa post panna theriyala

but IMO "Tamil Cinema should have minimum social responsibility"

joe
12th February 2008, 09:04 PM
ராகவேந்திரர் ஐயா,
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! :D

You said that you did not support NT when he came to politics. I do not know if he had done any crime by entering in politics.

நடிகர் திலகத்தின் அரசியல் பிரவேசத்தை நான் எதிர்க்கவும் இல்லை ,ஆட்சேபிக்கவும் இல்லை ..ஆனால் ஆதரிக்கும் நிலையில் நான் இல்லை ..நடிகர் திலகத்தின் வெறித்தனமான ரசிகனாக இருந்தாலும் ,எனகென்று மாறு பட்ட அரசியல் கண்ணோட்டம் இருந்தது .இருக்கிறது.

நடிகர் திலகம் ஜானகி அம்மையாரோடு கூட்டணி அமைத்து போட்டியிட்ட போது நடிகர் திலகம் மட்டும் எங்கள் நாகர்கோவில் தொகுதியில் நின்றிருந்தால் கட்சி பேதமின்றி மக்கள் அவரை வெற்றி பெற வைத்திருப்பார்கள் .. நாகர்கோவிலில் அந்த தேர்தலில் காங்கிரஸ் ,அதிமுக (ஜெ))-வை மூன்றாம் ,நான்காம் இடத்துக்கு தள்ளி தமிழக முன்னேற்ற முன்னணி வேட்பாளர் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் இரண்டாமிடத்துக்கு வந்தார் . திமுக வென்றது .

நடிகர் திலகம் நின்றிருந்தால் என் தனிப்பட்ட கொள்கையை மீறி நான் நடிகர் திலகத்துக்கு ஆதரவளித்திருப்பேன் என்பதை சொல்லிக்கொள்ளுகிறேன்.

RAGHAVENDRA
12th February 2008, 09:30 PM
அன்புள்ள ஜோ அவர்களுக்கு,
தங்கள் கருத்துக்களுக்கு நன்றி. தங்கள் கருத்துக்களை ஒட்டித்தான் என்னுடைய கருத்துக்களும் அமைந்துள்ளன. வெற்றியும் தோல்வியும் அரசியலில் சகஜம். தோல்வியடைந்ததினாலேயே அவர் கொள்கைகள் மறுக்கப்பட்டன என்று பொருளல்ல. அவருடைய நிலைப்பாட்டை மக்கள் ஏற்றிருந்தால் அவர் எங்கு நின்றிருந்தாலும் வென்றிருப்பார். இதுவே உண்மை. அந்த நேரத்தில் அவருடைய நிலைப்பாட்டை மக்கள் ஏற்கவில்லை. இதை நான் நேரிலேயே அனுபவித்திருக்கிறேன். அதற்காக அவரை மக்கள் ஒதுக்கி விட்டார் என்று ஆகி விடாது. அதே நேரத்தில் ஒரு விஷயம் கூற் வேண்டியிருக்கிறது. அவர் அந்த தேர்தல் முடிந்தவுடன், த. மு.மு. வின் அனைத்து வேட்பாளர்களையும் அழைத்து, அந்தந்த தொகுதியில் வேட்பாளர் ப்ரச்சாரம் எழுதிய அனைத்து சுவர்களையும் சுத்தப்படுத்தி வெள்ளையடித்து வைத்தார். அது மட்டுமல்லாமல் அதற்கான செலவையும் கட்சி சார்பில் செய்தார். அவருடைய நேர்மையான அரசியலுக்கு ஒரு சான்றாகவும், எவ்வளவு உத்தமமான தலைவரை தமிழகம் இழந்திருக்கிரது என்பதை காட்டவும் தான் இதை எழுதுகிறேன்.
ராகவேந்திரன்.

joe
12th February 2008, 09:59 PM
ராகவேந்திரர் ஐயா,
உங்கள் கருத்துக்கள் எதையும் நான் மறுக்கவில்லை ..தீவிர அரசியல் விவாதத்துக்கு உட்புக நான் விரும்பவில்லையெனினும் ஒரே ஒரு கருத்தை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

தமிழக அரசியலில் புதிதாக தனிக்கட்சி கண்டு அரசியல் புகுந்து வென்ற பலருக்கு பின்னால் ஏதாவது ஒரு புறகாரணம் இருந்திருக்கிறது .

மொழியுணர்வின் அடிப்படையில் திமுக தனது மூதல் வெற்றியை அறுவடை செய்தது ..எம்.ஜி.ஆர் அவர்கள் திமுக விலிருந்து நீக்கப்பட்டதை ஒரு துரோகமாக உருவகப்படுத்தி மக்களின் அனுதாபத்தை பெற்று எம்.ஜி.ஆர் வென்றார் ..பின்னர் எம்.ஜி.ஆர் மறைவையொட்டி நடைபெற்ற சில சம்பவங்களினால் ஜெயலலிதா அனுதாபத்தைப் பெற்று கட்சியை கைப்பற்றி பின்னர் ராஜீவ் காந்தி கொலை காரணமாக எழுந்த அனுதாப அலையில் முதல் வெற்ற்றியை அறுவடை செய்தார் ..நடிகர் திலகம் கட்சி ஆரம்பித்த போது முன்னிறுத்துவதற்கு எந்த பிரச்சனையோ ,அனுதாபமோ இருக்கவில்லை ..எனவே எடுபடவில்லை என்பது என் கருத்து.

Murali Srinivas
13th February 2008, 12:19 AM
ஜோ,

இந்த தலைப்பை பற்றி யோசிக்கும் போது ஏன் திரைப்படங்களுக்கு சமுதாய பொறுப்புணர்வை எதிர்பார்க்கிறோம் என்ற கேள்வி எழுகிறது. வணிக நோக்கோடு நடத்தப்படும் வேறு எந்த தொழிலிலும் நாம் இதை பற்றி நினைத்து பார்ப்பது கூட இல்லை எனும் போது ஏன் அதே போல ஒரு தொழிலான திரைப்படத்தில் மட்டும் அதை ஏன் எதிர்பார்க்க வேண்டும் என்ற கேள்வி எழுவது இயல்பு. அதற்கு நீங்கள் சொல்லியிருக்கும் காரணங்கள் பொருத்தமாகவே இருக்கின்றன. சினிமா என்ற ஊடகம் தமிழகத்தில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மிக அதிகம். தமிழர்களின் ஆழ் மனதில் இந்த சினிமா சென்று பதிந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல.

சமுதாய பொறுப்புணர்வு என்ற சொல்லே பொதுப்படையானது என்று தோன்றுகிறது. இதை எந்த அளவு கோல் கொண்டு வரையறுப்பது? கலை, அரசியல், கலாச்சாரம், காதல், மதம் என்ற பல தரப்பட்ட விவகாரங்களில் எனக்கும் உங்களுக்கும் அளவு கோல் மாறுபடலாம். அப்படி இருக்க சொல்லப்படும் விஷயம் பொறுப்புணர்வோடு இருக்கிறது, இல்லை என்ற வாத பிரதிவாதங்களும் ஏற்படக்கூடும்.

மேலும் கடந்த ஐம்பது வருடங்களில் நமது வாழ்க்கை முறைகளில் ஏராளமான மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பது வெளிப்படை. அப்போது திரைப்படமும் அதே மாறுதல்களை உட்கொண்டு மாறியிருக்கின்றன என்ற வாதமும் முன் வைக்கப்படுகின்றது. ஆகையால் தமிழ் சமுதாயமே இயல்பான நடை முறை வாழ்க்கைக்கு தேவையான மாறுதல்களை ஏற்றுக்கொண்டு விட்ட பின் பொறுப்பில்லாமல் படம் எடுக்கிறோம் என்ற வாதமே அபத்தம் என்பது இவ்வகை வியாபாரிகளின் குரலாக ஒலிக்கிறது.

அது மட்டுமல்ல இன்றைய தலைமுறையை வழி நடத்த வேண்டிய நிலைமை இல்லை, அவர்களுக்கே நல்லது கெட்டது தெரியும். ஒரு திரைப்படத்தை பார்த்து அதன் வழி தங்கள் எதிர்காலத்தை அவர்கள் தீர்மானிப்பதில்லை என்ற கருத்தும் பரவலாக இருக்கக்கூடிய சூழ்நிலையில் இந்த வாக்கெடுப்பில் இப்போது பங்கெடுக்க முடியவில்லை. ஆனால் சமுதாய பொறுப்புணர்வு ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த தலைப்பு யோசிக்க வைத்திருக்கிறது.

மேலும் யோசிக்கிறேன் ---

அன்புடன்

m_23_bayarea
13th February 2008, 12:24 AM
My 2 cents...

* First of all, Cinema is an entertainment medium!

* Secondly, Cinema is a Business!

* But, Sure yeah, if movies depict social awareness or bring social injustice to light, or even suggest recommendations to cure the societal problems, it's great! But Cinema is NOT obligated to prove its social responsibility or bring people's social awareness to light. It's the difference between "must-have" and "nice-to-have"...

* Perhaps, there's also something called "Self-Discipline" and "Commitment" to society, that most of us Indians do not seem to possess. If we did, we would not be pointing fingers on Politicians, Govt Officials, and other administrators all the time. After all, the government, law, and culture starts from an "Individual".

:cry: :oops: :cry:

Sanguine Sridhar
13th February 2008, 12:52 AM
Samuga poruppodu padam eduthaa producer-ku nashtam, hero-ku market poidum-nu bayam, director-ku art film edukuruvar-nu muthirai kuthiruvaanga-nu thayakkam! Seri idhukku meriyum edutha padam 10-naalaikku mela oda maatengudhu! karanam? makkaloda rasanai! indha rasanai thappunu solla maaten, naal muzhukka verva sindhi uzhaikiravan-uku 3 kuthu paatu, 2 rape scene, 4 sandai kaatchi theva paduthu, samuga prasangam kedayadhu! Its a fact..!

ok, eppo trend maaruchu? Murali sir ungakitta hub meet appo ketta question thaan " Quality movies, koduthuttu irrundha MGR,Shivaji pondra nadigargaluku pirkalathil Cabrey dance, Item songs yen thevaipattadhu?" Makkal-oda taste-a maathi masala trend-uku izhuthuttu ponadhu avvungalO?" Indha kelvikum neengalum,mattravargal seriyana vilakam kodukkavillai! Ippozhudhu yedhir paarkiren!

Ennoda karuthu, indha maadhriyana samuga nokkodu edukkapatta padangal 1970's il irrundhu, varudathukku 10-15 padangal vandhukonde irrundhirunthaal makkaludaya taste appadiye irrundhirukkum. Ippozhudhu suthamaaga maarina piragu as Kamal says in VRMBBS "Ippo ellathulayum masala kekuraangO!"

Not only cinema! adhai saarndha media-kalum maara vendum! Kumudham ippo thaan nadu pakkathai decent-aga maathi irrukudhu! Gossips illadha cinema pathrikaigal,websites?! "Oru nadigayin kadhai" pondra thodargal makkalin virasabuthikku vadigaalai thevai padugiradhendral namma samugam enna maadhriyaana samugam?!!

Cheran,Bala,Selvaraghavan pondra ippozhdhulla quality directors-ku kaadhal illamal padam edukka mudiyavillai. Cheran edutha Autograph blockbuster, kaadhalai thavira enna irrukku padathula? Adhai vida ennakku "Thavamai Thavamirundhu" nalla padamaaga thondriyadhu!

Selvaraghavan pondra thiramayana director-ku thannai "label" pannikolla "Thulluvadho Illamai" endra kuppai thevai padugiradhu..! Avaral 7/G Rainbow colony endra saadharna kaadhal padathai kooda virasam illamaal kodukka mudiyavillai.

Makkal maara vendum enbadhai vida makkalai sendradayum media-kal maara vendum!

Nerd
13th February 2008, 07:02 AM
I wish I could vote for #1. But what we need is #2, which is a shame on us :(

joe
13th February 2008, 07:20 AM
சமுதாய பொறுப்புணர்வு என்ற சொல்லே பொதுப்படையானது என்று தோன்றுகிறது. இதை எந்த அளவு கோல் கொண்டு வரையறுப்பது? கலை, அரசியல், கலாச்சாரம், காதல், மதம் என்ற பல தரப்பட்ட விவகாரங்களில் எனக்கும் உங்களுக்கும் அளவு கோல் மாறுபடலாம். அப்படி இருக்க சொல்லப்படும் விஷயம் பொறுப்புணர்வோடு இருக்கிறது, இல்லை என்ற வாத பிரதிவாதங்களும் ஏற்படக்கூடும்.

முரளி சார்,
மிக ஆழமான கருத்து .இதன் உட்கருத்தை நான் புரிந்துகொள்ளுகிறேன் ..எது சமுதாயத்துக்கு தேவையான கருத்து என்பது குறித்து அரசியல் ,சமூக தளங்களில் நமக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் .ஆனால் அரசியல் ,சமூக நிலைப்பாடுகளைத் தாண்டி எல்லோருக்கும் பொதுவான சில அடிப்படை மனித கூறுகள் இருக்கின்றன என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள் .மனித நேயம் ,தேசபக்தி ,தனி மனித ஒழுக்கம் ,நமது மண்ணின் அடிப்படை கலாச்சாரம் போன்றவற்றில் நமக்குள் பெரிதாக கருத்து வேறுபாடுகள் இருக்காது என நம்புகிறேன் .

Bay மற்றும் Sridhar -க்கும் சேர்த்து சொல்லுகிறேன் ..சினிமா மிகவும் தாக்கத்தை ஏற்படுத்துகிற் தமிழ் சூழலில் தமிழ் சினிமா சமூக பொறுப்புணர்வு குறித்து பிரச்சாரம் செய்ய தேவையில்லை என்பது ஒரு கோணம் என்றாலும் ,குறைந்த பட்சம் அடிப்படை வாழ்வியலுகு எதிர் மறையான கருத்துருவாக்கத்தை சிந்தனைகளை மறைமுகமாக மக்கள் மனதில் பதிக்காமல் இருக்க வேண்டிய பொறுப்பு உள்ளது என நான் நினைக்கிறேன்.

Bay சொன்னது போல தமிழ் சினிமா வெறும் பொழுது போக்கு தான் .அது மக்களை திருத்த வேண்டிய அவசியம் இல்லை தான் ..ஆனால் குறைந்த பட்சம் கெடுக்காமல் இருக்க வேண்டும் ..கெடுக்காமல் இருப்பதும் ஒரு சமூக பொறுப்புணர்வு தான் என்பது என் கருத்து.

joe
13th February 2008, 07:22 AM
I wish I could vote for #1. But what we need is #2, which is a shame on us :(

உங்கள் ஆதங்கம் புரிகிறது :P

Billgates
13th February 2008, 09:49 AM
ந்ண்பர் ஜோ

இந்த திரியாவது அரசியல் கலப்பில்லாத ஒன்றாக வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். சிலர் தேவையில்லாமல் சிவாஜியை புகழ்வதும் எம்.ஜி.யாரை மறைமுகமாக தாக்குவதும் வருந்ததக்தக்கது. இந்கு அரசியல் எதற்கு ??
நான் குறிப்பிடுவது திரு ராகவேந்திரரை தான்.

அப்படி பார்த்தால் மக்கள் திலகம் எததனயோ நல்ல விஷயந்களை சொல்லியுள்ளாரே ! ஏன் இந்த பேதமை !

joe
13th February 2008, 09:54 AM
இந்த திரியாவது அரசியல் கலப்பில்லாத ஒன்றாக வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.

தமிழ் சினிமாவின் தாக்கம் பெருமளவில் அரசியலில் இருந்தததால் முழுதும் தவிர்க்க முடியாது எனினும் ,உங்கள் கோரிக்கைப் படி இந்த திரி வெறும் அரசியல் விவாத திரியாக மாறாமலிருக்க வேண்டும் என நானும் விரும்புகிறேன்.

joe
13th February 2008, 09:56 AM
அப்படி பார்த்தால் மக்கள் திலகம் எததனயோ நல்ல விஷயந்களை சொல்லியுள்ளாரே ! ஏன் இந்த பேதமை !

நீங்கள் மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் மக்களிடையே ஏற்படுத்திய சமுதாய தாக்கத்தைப் பற்றி விரிவாக விளக்கலாமே ?

Billgates
13th February 2008, 10:04 AM
அப்படி பார்த்தால் மக்கள் திலகம் எததனயோ நல்ல விஷயந்களை சொல்லியுள்ளாரே ! ஏன் இந்த பேதமை !

நீங்கள் மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் மக்களிடையே ஏற்படுத்திய சமுதாய தாக்கத்தைப் பற்றி விரிவாக விளக்கலாமே ?

சிவாஜி ரசிகன் என்ற முறையில் நானும் கப்பல் ஓட்டிய தமிழன் பற்றி மேலும் எழுதவேண்டும் என்பது எனது அவா. சரி. MGஆரின் நல்ல கருத்துக்களைப்பற்றியும் எழுதுகிறேன் விரைவில்

joe
13th February 2008, 01:02 PM
:D

ThalaNass
13th February 2008, 02:52 PM
Happada i thot i was the only one voted for the 1st choice... yaaru pa athu meethi 5 aalu :lol:

P_R
13th February 2008, 02:59 PM
செல்வா :thumbsup: நீங்க இன்னும் நிறைய தமிழ்ல எழுதுங்க.

எனவே, சினிமாவில் சொல்லவரும் கருத்து, வெறும் பொழுதுபோக்காக ஒதுக்கப்படும் வாய்ப்பு அதிகம். இதனால், ஏற்படும் பாதிப்புகள் மற்ற ஊடகங்களை விட குறைவே என்பது எனது கருத்து. இந்த கருத்துடன் நான் வேறுபடுகிறேன். சினிமாவின் தாக்கம் தமிழ் கூறும் நல்லுலகைல், ஈடு இணையற்றது என்று நினைக்கிறேன்.

இதில் சமூக பொறுப்பு என்பது என்ன என்பதை கொஞ்சம் பேசிவிடலாம். சமுதாயம் செழித்திருக்க, நல்வழிப்பட (!) நல்போதனைகள் வழங்குவது' என்று அதை குறுக்க வேண்டாம்.

போதனைகள் அழகுக்கு முரணானவை என்று அவ்வையாரும், வள்ளுவரும் படித்த யாராலும் சொல்ல முடியாது :-) இருந்தாலும் இத்தகைய 'சமூக பொறுப்பு' இருந்தே ஆகவேண்டும் என்றெல்லாம் சொல்ல முடியாது.

பொறுப்பு என்பதை 'கருத்து சொல்லுதல்' என்று எடுத்துக்கொள்ள வேண்டாம். கேளிக்கைக்கு வரையறைகள் உண்டா என்ற ரீதியில் நோக்கலாம்.

திரு.முரளி சொன்னது போல 'அளவுகோல்கள்' பற்றிய கேள்விக்குக் கொண்டுபோய் விடும்.

தேர்வு செய்யும் திறனுடைய மக்கள் இருக்கும் பட்சத்தில் சமூக பொறுப்பை அவர்களிடமிருந்து எதிர்பார்க்க வேண்டியதில்லை.

இங்கு விவாதித்துக் கொண்டிருக்கும் அனைவருமே 'பொறுப்பற்ற' சினிமாவால் அலைக்கழிக்கப்பட்டாலும் உறுதியான கருத்துக்கள், ரசனைகள் உள்ளவர்களாய் நம்மை கருதிக்கொண்டு தான் பேசுகிறோம். அப்படியென்றால் இந்த 'பொறுப்பின்மை' யால் பாதிக்கப்படுபவர்கள் எல்லாருமே 'மற்றவர்கள்'. இதுவே ஒரு வித கீழ்நோக்குப் பார்வை தான்.

திரு.முரளி சொன்னது: கடந்த பல ஆண்டுகளில் ஒத்துக்கொள்ளப்படுபவையின் எல்லைகள் மாறியிருக்கின்றன. இதைத் தான் சினிமாவில் காண்கிறோம்.

இது பாதி உண்மை தான். இதன் எதிர்முனையைப் பற்றியே நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். சினிமா ஏற்படுத்தும் தாக்கம் என்ன. குறிப்பாக சமூகத்தில் 'ஒத்துக்கொள்ளப்படக்கூடியவை' பட்டியலை சினிமா எவ்வாறு மாற்றியிருக்கிறது ?

இப்போது காரசாரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'புகை' பற்றிய விவாதத்துக்கு வருவோம். கணிசாமன் பேர் தங்கள் ஆதர்ச நாயகனைப் போல் புகைபிடிக்க வேண்டும் என்ற புள்ளியியல் விவரமும் உண்மை என்று நம்புவோமாக.

அப்படியென்றால் ஸ்டைலாக புகைபிடிப்பதாக காட்டுவது எதற்கு ஒப்பானது:
1) பாதுகாப்பில்லாத உடலுறவு கொள்வதால் பாதகமில்லை
2) முஷ்டி பலம் இருந்தால் எல்லா பிரச்சனைகளையும் தீர்க்கலாம் - அநியாயத்தை தட்டிக் கேட்பது, பெண்களை மையல் கொள்ளச் செய்வது.

இரண்டுமே நடைமுறையில் பின்பற்றினால் பேராபத்தில் கொண்டுபோய் விடும். இரண்டிலும் வணிக லாபங்கள் உண்டு.

இவ்விரண்டில் 1 (இன்னும்) நிகழவில்லை. 2 இல்லாமல் தொண்ணூறு சதவிகித தமிழ் சினிமா இல்லை.
இவை எல்லாவற்றையும் 'பொறுப்பற்றவை' என்று தள்ளிவிட முடியுமா

RAGHAVENDRA
14th February 2008, 09:34 AM
உயர்திரு பில் கேட்ஸ் அவர்களின் பார்வைக்கு,
முதலில் என்னுடைய பாராட்டுக்களைத்தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். என்னுடைய கருத்துப்பற்றி நேர்மையாக கூறியதற்காக. திரைப்படம் என்பது பொழுதுபோக்கு சாதனம் என்றாலும் அது மக்களின் வரிப்பணத்தை உள்ளடக்கியுள்ளதால் அதற்கு பொறுப்புணர்வு தேவை என்பது என் கருத்து. திரு எம்.ஜி.ஆர். அவர்கள் இந்தகருத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொன்டிருந்ததால் தான் அதன் மூலம் மக்களுக்கு சமூக அக்கறையுடன் தான் சொல்ல நினைத்த கருத்துக்களைச் சொன்னார். இதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. மேலும் அமரராகி விட்டவரைப் பற்றித் தாக்கி எழுதுவதை நாகரீகமற்றதாகக் கருதுபவன் நான். எனவே யாரையும் குத்தியோ அல்லது மறைமுகமாகவோ அல்லது புண்படுத்தும் நோக்கமோ முற்றிலும் எனக்கு இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். நல்லதை யார் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கும் இருக்கும், இருக்க வேண்டும். இந்த தலைப்பு நிச்சயம் அரசியல் சார்ந்திருக்கின்ற படியால், கருத்து வேற்றுமைகள் நிச்சயம் இருக்கும். ஆனால் அது ஆக்க பூர்வமாயும், மக்களுக்கு பயனுள்ளதாயும் இருக்கும் என்று எண்ணுகிறேன்.
பில் கேட்ஸ் அவர்களுடைய பல பயனுள்ள கருத்துக்களைப் படிக்க ஆவலாயுள்ளேன்.
ராகவேந்திரன்.

thilak4life
14th February 2008, 10:04 AM
செல்வா, மேலும் தமிழில் எழுத கோரிக்கை விடுகிறேன்.

Roshan
14th February 2008, 11:29 PM
இந்தத் திரியை எட்டிப்பார்ப்பதற்கான அவகாசம் இப்பொழுதுதான் கிடைத்தது. ஆனால் பதிப்புகள் எதையும் முழுமையாக இன்னும் படிக்கவில்லை. எனது வாக்கையும் இன்னும் அளிக்கவில்லை. கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கிறது.

இங்கே பலர் தமிழில் தங்கள் கருத்துக்களை கூறுவதுகண்டு மகிழ்ச்சி :D

Roshan
14th February 2008, 11:31 PM
செல்வா, மேலும் தமிழில் எழுத கோரிக்கை விடுகிறேன்.

நீங்களும் முயற்சிக்கலாமே..உங்களால் நிச்சயம் முடியும் :)

joe
14th February 2008, 11:49 PM
கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கிறது.

யோசித்து மறக்காமல் வந்து கருத்தை பகிர்ந்து கொள்ளவும்.

m_23_bayarea
14th February 2008, 11:57 PM
I'm wondering if these genre of movies portray any social responsibility or bring out social awareness from people at all...

* One man army goin after injustice done by the bad/rich guys to the poor!

* One man army goin after the Govt/Administration to reveal social injustice, and clean the society!

* Bad guy becoming the savior of the masses (Robinhood kind)!

* Central character(s) criticising the negativity, and pointing out the positivity to people (thathuvangal)!

etc.

ajithfederer
15th February 2008, 01:29 AM
#4 :)

thilak4life
15th February 2008, 09:27 AM
செல்வா, மேலும் தமிழில் எழுத கோரிக்கை விடுகிறேன்.

நீங்களும் முயற்சிக்கலாமே..உங்களால் நிச்சயம் முடியும் :)

நன்றி ரோஷன் முயற்சி செய்கிறேன்

joe
15th February 2008, 09:38 AM
செல்வா, மேலும் தமிழில் எழுத கோரிக்கை விடுகிறேன்.

நீங்களும் முயற்சிக்கலாமே..உங்களால் நிச்சயம் முடியும் :)

நன்றி ரோஷன் முயற்சி செய்கிறேன்

இதுவே ஒரு நல்ல தாக்கம் தான் ..தமிழ் சினிமா பற்றிய விவாதம் பலரை தமிழில் எழுத தூண்டுவதற்கு தமிழ் சினிமாவுக்கு நன்றி! :D

Arthi
15th February 2008, 10:20 AM
[tscii:0298646427]

Wow nice thread to participate

IMO CINEMA it is an entertainment media we can’t expect them to bring social awareness in their pictures. If at all some directors give social message in their creation it is a bonus for us. How these media people are not compelled to social awareness pictures... in they same way they do not have rights to do any culture assassination.

IMO people go to picture just for a mere entertainment and they know what is good & what to do? I don’t expect from directors that they should teach good things to the society through the films they make at the same time I just request them not show all nasty/nonsense scenes which is above reality and ones imagination. I request them better not to spoil the society. All double meanings dialogues, rape scenes etc. Even the love sense they shoot… in most of the pictures it is well beyond the decent line…

I request them let them not do any social renaissance but at the same time please don’t disturb the structure which is already well built.

I request them to be a good citizen and adept to the culture we live !!!

[/tscii:0298646427]

Arthi
15th February 2008, 10:21 AM
yet to cast my vote !!!

Arthi
15th February 2008, 10:23 AM
JOE: migavum arumayaana thalaipu :) :thumbsup:

Arthi
15th February 2008, 10:42 AM
[tscii:ca5fe15269]As Selva said… more than cinema nowadays TV Media has more responsibility. Its intensity is more than cinema. Any buff or even the common people spend more time in front of TV. We all are flooded with so many programs and useless serials.

There is no hard and fast rule for any directors to bring in social awareness in their story but i feel it is not the case with TV shows…

anyway that(abt TV) we can discussion in other revelant thread :)[/tscii:ca5fe15269]

Murali Srinivas
17th February 2008, 11:28 PM
ok, eppo trend maaruchu? Murali sir ungakitta hub meet appo ketta question thaan " Quality movies, koduthuttu irrundha MGR,Shivaji pondra nadigargaluku pirkalathil Cabrey dance, Item songs yen thevaipattadhu?" Makkal-oda taste-a maathi masala trend-uku izhuthuttu ponadhu avvungalO?" Indha kelvikum neengalum,mattravargal seriyana vilakam kodukkavillai! Ippozhudhu yedhir paarkiren!

Dear Sridhar,

அந்த ஹப் மீட்-லே நான் சொன்ன பதில் உங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்பதை அப்போதே என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. இப்போதும் கூட இந்த விஷயத்தை பற்றி நான் சொல்ல யோசிக்கிறேன். ஏன் என்றால் நான் என்ன காரணங்களால் இப்படி மாறியிருக்கும் என்று நினைக்கிறேனோ, அதை எழுதினால் ஒரு சர்ச்சையை கிளப்ப ஆட்கள் தயாராக இருக்கிறார்கள். அது மட்டுமல்ல நான் யோசித்த வரையில் பல தரப்பட்ட நிகழ்வுகள் மூலமாகவே இந்த மாற்றங்கள் வந்திருக்கும் என்று நினைக்கிறேன். கொஞ்சம் பொறுங்கள், நான் நீங்கள் கேட்டதற்கு பதில் தர முயற்சிக்கிறேன்.

அன்புடன்