PDA

View Full Version : MAKKAL TV



subanrao
30th November 2007, 09:56 AM
VANAKKAM!WHAT DO U THINK ABOUT TAMIL CULTURE & ART CHANNEL MAKKAL TV?THIS CHANNEL HAD BEEN LAUNCHED IN MALAYSIA ON OCTOBER 2007.WHICH PROGRAMMES DO U LIKE? :)

mr_karthik
30th November 2007, 01:03 PM
'MAKKAL TV' IS RUNNING BY POLITICAL LEADER DR. RAMADOSS (PA.MA.KA.FOUNDER)

NO CINEMA ORIENTED PROGRAMMES/MEGA SERIALS WILL BE TELECASTED IN THAT TV CHANNEL.

MEDIA ASIA
30th November 2007, 08:04 PM
I'm surprised to see a channel not focusing on Tamil cinema/serials all the time like e.g. Sun TV.

We can watch some Makkal TV programs through Tharisanam TV Europe and Tharisanam TV Australia... They are doing some nice programs, but a pay-TV channel like Tharisanam TV cannot only survive with Makkal TV programs without any serials and movies. so therefor Tharisanam TV is also showing movies, serials and eelam programs.

Regarding their live shows... I think they should take time to talk with people... often they are in hurry to get to the next viewer in the line...

But in Malaysia it should be possible to watch Makkal TV, Tamilan TV, Mega TV, Kalaignar TV, Win TV Tamil and Raj Musix free-to-air on Insat satellite.

subanrao
1st December 2007, 08:44 AM
how can we watch channels from Insat Satelite?

MEDIA ASIA
1st December 2007, 07:07 PM
Hi

You can watch the free-to-air Tamil channels from Insat on 83 degree East. if you have a satellite dish of about 200 cm size.

You can see here in the coverage map that Insat's zone beam and wide beam covers Malaysia and Singapore too. Even people in Australia are watching Tamil channels from Insat.

Zone: http://www.lyngsat-maps.com/maps/in2e_super.html
Wide: http://www.lyngsat-maps.com/maps/in2e_wide.html

The free-to-air Tamil channels are:

1. Jaya TV
2. Jaya Plus promo
3. Jaya Max testcard
4. Raj Musix
5. Kalaignar TV
6. Makkal TV
7. Win TV Tamil
8. Tamilan TV
9. Mega TV

For frequency info:
http://www.lyngsat.com/in83.html


Kindly regards
Suriyan

subanrao
3rd December 2007, 06:42 AM
makkal tv is already available on astro.It not impact astro in Malaysia?

subanrao
3rd December 2007, 06:43 AM
makkal tv is already available on astro.It not impact astro in Malaysia?

MEDIA ASIA
4th December 2007, 04:23 PM
yes - but why pay for Astro to watch these channels, when you can watch the channels for free on Insat ??

subanrao
15th December 2007, 09:42 AM
how to subscribe to Insat?

subanrao
15th December 2007, 09:46 AM
how to subscribe to Insat?

aanaa
15th August 2008, 07:26 PM
இது நம்ம கடை
கடை இருக்கும், கடையில் பொருள் இருக்கும், பொருளுக்கான விலை குறிப்பிட்டிருக்கும். ஆனால் விற்பனையாளர்கள் யாரும் அங்கே இருக்க மாட்டார்கள்.

நமக்குத் தேவையான பொருளை நாமே எடுத்துக் கொள்ளலாம். அதற்கான பணத்தை நாமே கல்லாப் பெட்டியில் போட்டு விடலாம். எல்லா மனிதர்களும் நல்லவர்கள் தான். அவர்களை நல்லவர்கள் என்பதை நிரூபிக்கும் சந்தர்ப்பத்தை யாரும் தரவில்லை. அந்த நல்ல வாய்ப்பை மக்களுக்குத் தரும் நிகழ்ச்சி தான் இது நம்ம கடை.

சென்ற வருடம் விடுதலை நாள் அன்று முதல் சுதந்திரம் தீப்பிடித்த வேலூரில் நம்ம கடை விரித்தது மக்கள் தொலைக்காட்சி. அப்போது மக்கள் தொலைக்காட்சி மக்கள் மேல் வைத்த நம்பிக்கையை மக்கள் காப்பாற்றினார்கள்.

இந்த வருடம் சேலத்தில் நம்ம கடை போடுகிறது. மக்கள் தொலைக்காட்சி, மக்கள் நம்ம கடைக்கு எப்படிப்பட்ட வரவேற்பை தரப்போகிறார்கள் இன்று இரவு 8.30 மணிக்கு காணலாம்.

aanaa
15th August 2008, 07:26 PM
மக்கள் தொலைக்காட்சியில் இன்று முதல் ஒளிபரப்பாக விருக்கும் புதிய நிகழ்ச்சி காலம். விடுதலைப் போராட்ட வீரர்களின் வரலாறு காலத்தை வென்ற வீரர்களின் கதை என்ற தலைப்பில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

முதல் நிகழ்ச்சியாக பூலித்தேவன் கதை இன்று மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. 1775-ஆம் ஆண்டு வாழ்ந்த பூலித்தேவன் அன்னியரை எதிர்த்து சமர்புரிந்த வீரர் செறிந்த வரலாறுக்கு சொந்தக்காரன்.

திருநெல்வேலி மாவட்டம் நெற்கட்டும் சேவல் பகுதியை ஆண்டவன். மடியும் வரை அன்னியனுக்கு அடிமையில்லை என்று வீரனாக மாண்டவன். இன்றைய தலைமுறைக்கு நம்ம விடுதலை வீரர்களின் தியாக வரலாறை பதிவு செய்து தந்திருப்பவர் தீனதயாளப் பாண்டியன்.

ஒவ்வொரு தமிழனும் அறிந்து கொள்ள வேண்டிய வீர வரலாறு காலம்.

aanaa
17th August 2008, 12:23 AM
[tscii:a7a043ffbf]வளாகம்




மக்கள் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி `வளாகம்.' பயனுள்ள இந்நிகழ்ச்சி எப்படியெல்லாம் முன்னேறலாம் என்ற முழு விவரமும் தாங்கி வருகிறது.

புதன்கிழமை காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியில் பங்கு சந்தை நிலவரம், மிïச்சுவல் பண்ட், ஆயுள் காப்பீடு, ஜெனரல் இன்சூரன்ஸ், ஓய்வூதியத்திட்டம், பண உதவித்திட்டம், சேமிப்புத்திட்டம், வீடு மனை வாங்கும் திட்டம் போன்ற திட்டங்களை மக்களுக்கு எடுத்துரைத்து அதன் மூலம் அவர்கள் பயன்பெற திட்டங்களை வகுத்து கொடுக்கும் நிகழ்ச்சியாகும். எஸ்.எச்.எஸ். அட்வைசரி குரூப்பின் நிர்வாக இயக்குனர் எஸ்.நாராயணன் இதுபற்றி விரிவாக விவரிக்கிறார்.

மிïச்சுவல் பண்ட்டில் எத்தனை விதமான முதலீடுகள் மற்றும் எப்படி செய்யலாம்? எந்த முதலீட்டில் போட்டால் நல்ல பயன் பெறும்?

ஆயுள் காப்பீடு திட்டம் மற்றும் ஜெனரல் இன்சூரன்சில் எந்த வகையான திட்டத்தை தேர்ந்தெடுத்து முதலீடு செய்தால் லாபம் ஈட்டும்?

ஓய்வூதிய திட்டம் என்றால் என்ன? இத்திட்டத்தின் கீழ் எவ்வளவு முதலீடு செய்தால் எந்த வயதில் எவ்வளவு லாபம் கிடைக்கும்?

எதிர்கால சேமிப்புத்திட்டத்தில் நிறைய வகை முதலீடுகள் உள்ளன. அவற்றில் பாண்ட்ஸ் வாங்குவது, தபால் நிலையத்தில் சேமிப்பது எந்த நிறுவனத்தில் முதலீடு செய்வது, வருமான வரியை சேமிக்க எங்கே எப்படி முதலீடு செய்வது என்பது பற்றி தெரிவிக்கப்படும்.

வீடு மனை வாங்கும் திட்டத்தில் முதலீடு செய்தால் எந்த இடத்தில் வாங்குவது? எதிர்காலத்தில் அந்த இடத்தின் முன்னேற்றத்தையும், மதிப்பையும் விவரமாக ஆராய்ந்து கூறுவது.

பங்கு சந்தை மற்றும் முதலீட்டு நிறுவனத்தின் சந்தேகம் மற்றும் நேயர்களின் கேள்விகளுக்கும் நாராயணன் பதில் அளிக்கிறார்.

[/tscii:a7a043ffbf]

aanaa
17th August 2008, 12:36 AM
காலத்தை வென்றவர்கள்





மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புதிய நிகழ்ச்சி `காலம்.'

விடுதலைப் போராட்ட வீரர்களின் வரலாறு `காலத்தை வென்ற வீரர்களின் கதை' என்ற தலைப்பில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பூலித்தேவன், மருதநாயகம், வேலுநாச்சியார், திப்பு சுல்தான், 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஊமைத்துரை, தீரன் சின்னமலை, வீரன் வேலுத்தம்பி, ஜான்சிராணி என்று அன்னியனுக்கு அடிபணியாமல் வீரத்தை நிலைநாட்டிய ஒப்பற்ற வீரர்களின் வரலாற்றை காலம் வென்ற வீரர்களின் கதை நிகழ்ச்சியில் தொடர்ந்து காணலாம்.

விடுதலை வீரர்களின் தியாக வரலாற்றை பதிவு செய்து தந்திருப்பவர் தீனதயாளப் பாண்டியன்.

இந்த வீர வரலாறு, வெள்ளி தோறும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

saradhaa_sn
17th August 2008, 01:49 PM
மக்கள் தொலைக்காட்சியில், எல்லாமே நன்றாகத்தான் இருக்கிறது.

ஆனால் 'சந்தனக்காடு' தொடரில், சந்தனக்கடத்தல் வீரப்பனை ஒரு பெரிய தியாகி போலவும், நாட்டுவிடுதலைக்குப் போராடியவரைபோலவும் சித்தரித்தது ரொம்பவே நெருடுகிறது.

P_R
8th September 2008, 02:25 PM
மக்கள் தொலைக்காட்சியின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா மதுரையிலிருந்து நேரடியாக ஒளிபரப்பானது. முழுவதாகக் காணமுடியவில்லை. பத்திரிக்கையாளர் திருப்பூர் கிருஷ்ணன் கச்சிதமாக, மிக அழகாகப் பேசினார். தமிழ் அலைவரிசைகளில் தனித்து நிற்கிறது மக்கள் தொலைக்காட்சி :thumbsup:

joe
8th September 2008, 02:26 PM
மக்கள் தொலைக்காட்சியின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா மதுரையிலிருந்து நேரடியாக ஒளிபரப்பானது. முழுவதாகக் காணமுடியவில்லை. பத்திரிக்கையாளர் திருப்பூர் கிருஷ்ணன் கச்சிதமாக, மிக அழகாகப் பேசினார். தமிழ் அலைவரிசைகளில் தனித்து நிற்கிறது மக்கள் தொலைக்காட்சி :thumbsup:

:cry: எங்களுக்குத் தான் கொடுத்து வைக்கவில்லை :sigh2:

P_R
8th September 2008, 02:34 PM
Yeah Joe.
I think you will like that channel. Despite its political slant - which has become inevitable with most of our channels - the channel has several very good programs. The total 'feel' of the channel is impressive.

joe
8th September 2008, 02:39 PM
இந்த விடயத்தில் மருத்துவர் ராமதாஸ் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் :clap:

aanaa
30th September 2008, 10:54 PM
புத்தகம் படி.. பரிசைப்பிடி!




உங்கள் வீட்டில் நூலகம் வைக்க ஆசையா? நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் `புத்தகம் படி பரிசைப்பிடி' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினால் போதும். புத்தகங்களை பரிசாக வெல்ல முடியும்.

ஆனால் ஒன்று, நீங்கள் பொது அறிவு, இலக்கியம் எல்லாவற்றிலும் புலமை பெற்றவராக இருக்க வேண்டும். நிகழ்ச்சி நடத்துபவர் உடன் விளையாடுபவரிடம் கேள்வி கேட்பார். அதற்கு நான்கு பதிலும் தருவார். அதிலிருந்து சரியான பதிலை தேர்ந்தெடுத்து சொன்னால் ஒரு புத்தகம் பரிசாக கிடைக்கும். ஒவ்வொரு சரியான பதிலுக்கும் ஒவ்வொரு புத்தகம் பரிசு.

கேள்விக்கு சரியான பதிலைச் சொல்லி கைநிறைய புத்தகங்களை பரிசாக அள்ளிச் செல்லும் இந்த நிகழ்ச்சியை நடத்துபவர் இ.மாலா.

` புத்தகம் படி பரிசைப்பிடி நிகழ்ச்சி' மக்கள் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் மாலை 6.03 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

aanaa
30th September 2008, 10:55 PM
கற்போம் கணினி




திங்கள் முதல் வெள்ளி வரை மக்கள் தொலைக்காட்சியில் தினமும் காலை 10.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது, `கற்போம் கணினி' நிகழ்ச்சி.

விரும்புகிறோமோ இல்லையோ நாகரிகம் நுழைந்து நம் வாழ்க்கையை மாற்றிவிட்டது. விஞ்ஞானம் வளர்ந்து அனைத்தும் கணினிமயமாகி விட்டது. வாழ்க்கையோடு கணினி பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டது.

நாம் அனைவரும் கணினியை கையாள தெரிந்து வைத்திருக்கிறோமோ என்றால் இல்லை.

கணினியை கையாளுவது எளிது. இல்லத்தரசிகள் முதல் ஏர்பூட்டும் உழவர்கள் வரை அனைவரும் கணினியை கையாளத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சியை எளிய தமிழில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் கணியத் தமிழ் அமைப்பினர் கற்றுத் தருகிறார்கள். இந்த நிகழ்ச்சியை `முகவரி' முத்து இயக்குகிறார்.

aanaa
30th September 2008, 10:55 PM
உழவர் அரங்கம்




நாட்டில் தனி நபர் வருமானம் உயர்ந்திருக்கிறது. உழவர் பெருமக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்திருக்கிறதா? இந்தியாவில் வறுமை குறைந்திருக்கிறது. உழவர்களின் வயிறு நிறைந்திருக்கிறதா? இப்படி உழவர் பெருமக்களின் வாழ்க்கையைச் சுற்றி ஆயிரமாயிரம் கேள்விகள் இருக்கின்றன. மரபணு மாற்று விதையை வரவேற்கலாமா, ஆபத்தா? செயற்கை உரம் பயன்படுத்தலாமா, கூடாதா? மின் வெட்டால் உழவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்ன? இப்படி அணிவகுக்கும் கேள்விகளை விவாதித்து விடைகாணும் முயற்சிகள் உழவர் அரங்கத்தின் நோக்கம்.

உழவர் அரங்கம். சனிக்கிழமை தோறும் மாலை 6.03 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

aanaa
30th September 2008, 10:56 PM
நடிகை மனோரமாவின் வாழ்க்கைப் பின்னணியை விவரிக்கும் புதிய தொடர் "ஆச்சி வந்தாச்சு.'' இது தமிழன் டிவியில் ஞாயிறு தோறும் காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

வாழ்வில் வெற்றி பெறவேண்டும் என்ற ஒரே லட்சியத்திற்காக தனக்கு ஏற்பட்ட சோதனைகளை சாதனைகளாக மாற்றி வெற்றியின் உச்சிக்கு சென்றவர், நடிகை மனோரமா. இவர் தன் வெற்றிக்கு உதவியவர்களையும், சாதனைகளுக்கு துணை நின்றவர்களையும் இந்த தொடரில் நினைவுகூறுகிறார். எண்ணம், கருத்தாக்கம்: ஏ.பத்மராஜ்; திரைக்கதை வசனம்: தேவன்; இயக்கம்: ஏ.கே.உசேன்.

aanaa
3rd October 2008, 10:52 PM
மக்கள் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.03 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் புதிய நிகழ்ச்சி இசைத் தமிழ் பாமாலை.

அப்பர், சுந்தரர், சம்பந்தர், சேக்கிழார் என்ற சமயக் குரவர்கள் நால்வரும் இயற்றிய நற்றமிழ் பாடல்களை ஓதுவார்கள் இசையோடு பாடுகிறார்கள். கேட்கும் போது காது குளிர்கிறது. தமிழ் மணக்கிறது. நல்ல தமிழ் இசையை விரும்புகிறவர்களுக்கு இனிய வரவு இந்த இசைத் தமிழ் பாமாலை.

மதுரை இன்னிசை இணையம் வழங்கும் இந்த இசைத் தமிழ் பாமாலை, இசைத் தமிழுக்கு சூட்டப்படுகின்ற மாலை.

aanaa
5th October 2008, 02:25 AM
குறிஞ்சி மலர்



மக்கள் தொலைக்காட்சியில் புதன் தோறும் மாலை 4.30 மணிக்கு மலரும் குறிஞ்சி மலர், மேதைக் குழந்தைகளின் திறமையை அரங்கேற்றும் நிகழ்ச்சி. வயதுக்கு மீறிய சாதனை புரிந்த இளம் சாதனையாளர்களை நேர்காணல் செய்வது, திறமைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவது என்று திறமைக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சிதான் குறிஞ்சி மலர்.

இளம் சாதனையாளர்களை பார்க்கும் மற்ற குழந்தைகளுக்கு தாங்களும் ஏதாவது சாதனை புரிய வேண்டும் என்ற ஆவல் எழும். அவர்களும் சாதனைக்கான முயற்சியில் இறங்குவார்கள்.

எந்த குழந்தையும் திறமையான குழந்தைதான். அவர்களின் திறமையை வெளிக்கொணரும் பங்கு பெற்றோருக்கும், ஆசிரியருக்கும் உண்டு. குழந்தைகளின் திறமைக்கு மரியாதை தரும் இந்த நிகழ்ச்சியை இயக்குபவர் ஜெயராமன்.

aanaa
5th October 2008, 02:27 AM
திரைகடல் ஓடி...



மக்கள் தொலைக்காட்சியில் செவ்வாய் தோறும் காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகும் நேரலை நிகழ்ச்சி, திரைகடல் ஓடி. இன்று ஏற்றுமதி வணிகம் என்பது அதிகம் லாபம் சம்பாதிக்கும் துறையாக உள்ளது. ஆதிகாலத்திலேயே நம் தமிழர்கள் கடல் கடந்து வணிகம் செய்து

வந்தார்கள்.ஆர்வமுள்ள தமிழர்கள் அனைவரும் ஏற்றுமதி துறையில் ஈடுபட வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட நிகழ்ச்சிதான் `திரை கடல் ஓடி'. ஏற்றுமதி ஆலோசகர் ராமச்சந்திரன் எந்தெந்த நாடுகளுக்கு எந்தெந்த பொருளை ஏற்றுமதி செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம். ஏற்றுமதிக்கு எந்த பொருள் அதிக லாபம் சம்பாதித்து தரும் என்பது போன்ற தகவல்களை எல்லாம் புள்ளி விவரங்களுடன் தருகிறார்.

ஏற்றுமதி வணிகத்தில் ஏற்கனவே ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் அந்த துறையின் நெளிவு சுழிவுகளை அறிய இந்த நிகழ்ச்சி துணைபுரிகிறது.

R.Latha
22nd October 2008, 01:42 PM
மகளிர் உலகம்



மக்கள் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 3.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நேரலை நிகழ்ச்சி, `மகளிர் உலகம்'. இது பெண்களுக்கான நிகழ்ச்சி.

பெண்கள் தான் கற்றதையும், பெற்றதையும் தன் தோழியரோடு தொலைபேசி வழியாக பரிமாறிக்கொள்ளும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் பிரச்சினைக்கு தீர்வு, சுற்றுலா சென்று வந்த அனுபவம், பிடித்த பொன்மொழி, எழுதிய கவிதை என பெண்கள் தங்கள் பிரச்சினைகள் அனைத்தையும் தொலைபேசி வழியாக பகிர்ந்து கொள்ளலாம்.

இல்லத்தரசிகளாக கணவன், குழந்தை, குடும்பம் என்று வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக் கிடக்கும் பெண்கள் தங்கள் அனுபவங்களையும், எண்ணங்களையும் பரிமாறிக் கொள்வதற்கான களம் தான் இந்த மகளிர் உலகம்.

R.Latha
22nd October 2008, 01:48 PM
காதோடு காது



நாட்டு நடப்புகளை பற்றிய உரையாடல்களின் தொகுப்பாக இடம்பெறும் நிகழ்ச்சிதான் காதோடு காது. இதில் வரும் வசனங்கள் யதார்த்த பின்னணியில் அமைந்திருப்பது சிறப்பு. சனிக்கிழமை தோறும் இரவு 7 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

R.Latha
22nd October 2008, 01:56 PM
கிராமத்துப் பாட்டு



மக்கள் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் காலை 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி `கிராமத்துப்பாட்டு'

நாற்று நடுவோரும், ஏற்றம் இறைப்போரும், சுண்ணம் இடிப்போரும் வேலை செய்யும் களைப்பு தெரியாமல் இருக்க பாடிக் கொண்டே வேலை செய்வார்கள். இந்தப் பாட்டில் ராகம், தாளம் எல்லாம் நேர்த்தியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் கேட்பவர்களின் களைப்பை போக்கும் ஆற்றல் இந்த நாட்டுப்புற பாட்டில் இருக்கும்.

அந்த நாட்டுப்புறப் பாட்டை அழகான அரங்கில் நேர்த்தியாக தருவதுதான் கிராமத்துப்பாட்டு. இந்த கிராமத்துப் பாட்டை கேட்டால் மண் வாசனை வீசும், மனசுக்குள்ளே மகிழ்ச்சி தாளம் போடும். முறையாக இசை கற்றவர், கேள்வி ஞானத்தால் பாடும் பாடல் ஆற்றல் பெற்றவர்கள் என பலதரப்பட்ட பாடகர்கள் கிராமத்து பாட்டு நிகழ்ச்சியில் பாடுகிறார்கள். இதில் இசை புதிது, குரல் புதிது. கேட்கும் அனுபவமும் புதிது.

R.Latha
22nd October 2008, 02:08 PM
பட்டாம் பூச்சி



மக்கள் தொலைக்காட்சியில் குழந்தைகளுக்கான விளையாட்டு நிகழ்ச்சியான பட்டாம்பூச்சி, நூறாவது எபிசோடை கடந்திருக்கிறது.

செல்லக் குழந்தைகளுக்கான இந்த விளையாட்டு நிகழ்ச்சியில் "கொக்கு பரபர... கோழி பரபர... பூனை... பறக்காது'' போன்ற வேடிக்கையான பாட்டு விளையாட்டும், வரைகலை மூலம் உருவாக்கப்பட்ட வினோத உருவத்தில் இருப்பது எவை என்பதை கண்டுபிடிக்கும் ஞாபகசக்தியையும், அறிவாற்றலையும் சோதிக்கும் பகுதி, வெற்றியாளர்களை அறிமுகப்படுத்தும் பகுதி என பொழுது போக்குக்கும், அறிவுக்கும் விருந்து வைக்கும் நிகழ்ச்சிதான், பட்டாம்பூச்சி.

வெற்றி பெற்ற செல்லக் குழந்தைகளுக்கு பரிசும் உண்டு.

திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளி பரப்பாகிறது.

aanaa
1st November 2008, 07:48 PM
கனவு இல்லம்





மக்கள் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி, `கனவு இல்லம்'.

உண்ண உணவு, இருக்க இடம், உடுக்க உடை இந்த மூன்றும் மனிதனுக்கு இன்றியமையாதவை.

இதில் இருக்க இடம் என்பதுதான் இன்று குதிரைக்கொம்பாகி விட்டது. நகரங்களில் வீடு வாங்குவது என்பது அத்தனை எளிதான காரியமில்லை. வாடகை வீட்டில் வாழலாம் என்றால் கட்டுப்படியாத வாடகை!

பணவீக்கம்... வேலையின்மை... விலைவாசி ஏற்றம்... இதற்குள் சிக்கிச் சுழலுபவர்கள் சொந்த வீடு வாங்குவது நடக்கிற காரியமா?

நிச்சயமாக எல்லோராலும் சொந்த வீடு வாங்க முடியும். அதற்கு வழிசொல்லும் நிகழ்ச்சிதான் கனவு இல்லம்.

வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டியவை என்ன? வங்கிக் கடனுக்கு வழி என்ன... வில்லங்கமில்லாமல் வீடு வாங்க கவனிக்க வேண்டியது என்ன?

வாங்கிய வீட்டை பராமரிப்பது எப்படி... லீகல் பார்ப்பது என்றால் என்ன... இப்படி வீடு... வீட்டுமனை சார்ந்த அத்தனைக்கும் விளக்கம் தரும் நிகழ்ச்சிதான், கனவு இல்லம்.

சொந்த வீடு வாங்க வேண்டும் என்று கனவு காண்பவர் களுக்கு அந்தக் கனவை நனவாக்க வழிசொல்லும் இந்தக் கனவு இல்லம்.

aanaa
1st November 2008, 07:50 PM
கை மணம்


மக்கள் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறு மதியம் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி `கை மணம்'.

இது நமது மண்ணின் மணம் மாறாத சமையல் நிகழ்ச்சி.

தமிழன் இன்று பிட்சாவுக்கும், பர்கருக்கும், பதப்படுத்திய உணவுக்கும் பழகிவிட்டான். அதனால் பல்வேறு நோய்களுக்கும் ஆட்பட்டான்.

aanaa
1st November 2008, 08:00 PM
கேள்விக்கு என்ன பதில்?



நாம் பூமியில்தான் வாழ்கிறோம். ஆனால் பிரச்சினைகளுக்கு நடுவில் வாழ்கிறோம்.

பிரச்சினையிலிருந்து விடுபட என்ன வழி... எல்லோரும் பிரச்சினையின்றி வாழ என்ன வழி...

விடைதெரியாத ஆயிரம் கேள்விகள்.

அந்த விடை தெரியாத கேள்விகளுக்கு தீர்வை எட்ட முயலும் முயற்சிதான் `கேள்விக்கு என்ன பதில்?'

ஒவ்வொரு பிரச்சினையையும் எடுத்து... அதன் காரண, காரியங்களை துறை சார்ந்த வல்லுநர்கள் துணையோடு அலசி ஆராய்ந்து தீர்வுக்கு வழிசொல்லும் நிகழ்ச்சி.

மக்கள் தொலைக்காட்சியில் வெள்ளிக்கிழமைதோறும் காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்தநேரலை நிகழ்ச்சியில் நேயர்கள் தாங்கள் ஆலோசனைகளையும் தாங்கள் சந்திக்கும் பிரச்சினைகளையும் தொலைபேசி வழியாக பகிர்ந்து கொள்ளலாம்.

நிகழ்ச்சி இயக்கம்: கார்மல்.

aanaa
1st November 2008, 08:08 PM
[tscii:c6950ede22]


http://www.hindu.com/fr/2008/10/31/stories/2008103150550400.htm


Kaelvikku Enna Badhil

(Makkal TV, Friday, 11.00)

Our life is characterised by the challenges we face; the anomalies we witness around us; the societal issues we share with our fellow citizens. Power cuts and losing out lands to SEZs are but a few examples of the range of issues we are facing in the current scenario.

What are the alternatives? Where are the solutions? Kaelvikku Enna Badhil is an attempt to find answers to such questions. The live phone-in show involves experts from the relevant fields, in line with the topic debated in the particular episode. It also facilitates viewers’ interaction over phone, so as to share their opinions and perspectives on the topic of the show. The show is directed and anchored by Carmel.
[/tscii:c6950ede22]

aanaa
1st November 2008, 08:08 PM
[tscii:c92d91669d]


http://www.hindu.com/fr/2008/10/31/stories/2008103150550400.htm


Udal Nalam Penum Kaimanam

(Makkal TV, Sundays, 9 a.m.)

This is for the health conscious. The global addiction to fast foods — pizza, burger and so on has not spared the people of Tamil Nadu. In the bargain, their health has taken a beating. Udal Nalam Penum Kaimanam brings to the viewer traditional recipes, nutritious and tasty. Food thus becomes the remedy to ailments. The programme also introduces new recipes as well. [/tscii:c92d91669d]

aanaa
1st November 2008, 08:09 PM
http://www.hindu.com/fr/2008/10/31/stories/2008103150550400.htm


Kanavu Illam

(Makkal TV, Saturdays and Sundays, 1 p.m.)

To own a home is a universal dream. But never has it been more difficult, what with escalating costs, inflation that is not showing signs of coming down and recession. Property within the city is beyond the reach of the common man. And paying rent again is not an easy proposition. So what is the solution?

Kanavu Illam (Dream House) guides prospective owners and those who aspire to buy property. What are the salient points one should notice? How is loan obtained? How is litigation avoided?

aanaa
8th November 2008, 08:08 PM
வேலைவாய்ப்பு தகவல்கள்




வேலை கிடைக்கவில்லை என்பவர்கள் ஒரு பக்கம்... தகுதியான பணியாளர் கிடைக்கவில்லை என்பவர்கள் மறுபக்கம்... இருவரையும் இணைக்கும் பாலம் ``வேலைவாய்ப்புத் தகவல்கள்.''

இன்றைக்கு படிக்கும் மாணவர்களிடம் வேலை என்றதும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வேலை மட்டும்தான் கண்முன் விரிகிறது. ஆனால் அதைத் தாண்டியும் ஆயிரம் வேலை இருக்கிறது.

எந்த வேலைக்கு நாட்டிலும், உலக அளவிலும் தேவை அதிகமாக இருக்கிறது? இதற்கு என்ன படிப்பு படிக்க வேண்டும்? முதுநிலை பட்டப் படிப்பு படித்தவர்களும் கூடுதலாக எதைப் படித்தால் வேலை கிடைப்பது சுலபமாகும் என்று கல்வியாளர்கள் பங்கேற்று, நேரலையில் தெளிவுபடுத்தும் இந்த நிகழ்ச்சி, வியாழன்தோறும் காலை 11 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

aanaa
8th November 2008, 08:08 PM
இவர்கள்


இந்த சமூகத்தால் கவனிக்கப்படாதவர்கள், சமூகத்தால் உரிய அங்கீகாரம் தரப்படாதவர்கள், இந்த சமூகத்துக்கு முக்கியமானவர்கள் இல்லை என்று கருதப்படுபவர்கள், பற்றிய நிகழ்ச்சி ``இவர்கள்.''

யார் இந்த ``இவர்கள்?'

சாக்கடை அள்ளுபவர், கடற்கரையில் சுண்டல் விற்பவர்கள், குப்பை பொறுக்கி வாழ்பவர்கள், பிணம் எடுப்பவர்கள், அரவாணிகள் என்று சமூகத்தில் கடைநிலை மக்களாக சித்தரிக்கப்பட்டிருப்பவர்கள்.

கவனிக்கப்படாத இந்த மக்களை கருத்தில் கொண்டு அவர்களை நேர்காணல் செய்து அவர்களின் வாழ்க்கை முறைகளையும், அவர்களது லட்சியத்தையும் பதிவு செய்யும் நிகழ்ச்சிதான் ``இவர்கள்.''

சனிக்கிழமை தோறும் காலை 8.30 மணிக்கு இந்த நிகழ்ச்சியை மக்கள் தொலைக்காட்சியில் காணலாம்.

aanaa
8th November 2008, 08:09 PM
செல்வம் சேர்




அதிகம் சம்பாதிப்பதால் ஒருவன் செல்வந்தன் ஆகிவிட முடியாது. சேமிக்கத் தெரிந்தவன் மட்டுமே செல்வந்தன் ஆக முடியும்.

அதற்கான வழிசொல்லும் நிகழ்ச்சிதான் ``செல்வம் சேர்''. நேரலை மூலம் நேயர்கள் விளக்கம் பெறலாம்.

வீட்டு குடும்ப வரவு செலவு திட்டம் போடுவது... சம்பளத்தில் எவ்வளவு வீட்டு வாடகைக்கு எடுக்கலாம்... பிள்ளைகள் படிப்புக்கு எவ்வளவு பணம் செலவிடலாம் ... எவ்வளவு விழுக்காடு பணம் சேமிக்கலாம்...சேமிப்பது என்றால் எதில் சேமிப்பது...பரஸ்பர நிதியில் முதலீடு செய்யலாமா.. தங்கத்தில் முதலீடு செய்யலாமா.... வங்கிகளில் வைப்பு நிதியாக வைக்கலாமா... என வழி சொல்லும் நிகழ்ச்சி.

வருமானத்தை எப்படி திட்டமிட்டு செலவு செய்யலாம், எப்படி திட்டமிட்டால் உங்கள் பணத்தை பன்மடங்கு பெருக்கலாம் என்று வழி சொல்லும் இந்த நிகழ்ச்சியை சனிக் கிழமை காலை 9 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் காணலாம்.

aanaa
8th November 2008, 08:18 PM
வல்லவனுக்கு வல்லவன்


வசந்த் டி.வி.யில் ஞாயிறுதோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் புதுமையான `கேம் ஷோ' வல்லவனுக்கு வல்லவன். இதில் நேயர்கள் கலந்து கொண்டு தங்கள் தனித் திறமைகளை வெளிப்படுத்துகின்றனர். நிகழ்ச்சியை டாக்டர். ஜி.எஸ்.பிரதீப் நடத்துகிறார்.

aanaa
8th November 2008, 08:24 PM
[tscii:122bf0de3c]


http://www.hindu.com/fr/2008/11/07/stories/2008110750210400.htm


Vaelai Vaaippu Thagavalgal

(Makkal TV, Thursdays, 11.00)

Job seekers and talent hunters for positions available with them come together on a common platform in the programme. Most students today fail to think of openings beyond the IT sector. But the options are innumerable — printing, tanning and hotel management to name a few. The scope in each field, the qualification essential for each and the other details are discussed threadbare by educationists in ‘Vaelai Vaaippu Thagavalgal.’


[/tscii:122bf0de3c]

aanaa
8th November 2008, 08:24 PM
[tscii:3dfe44f7f3]

Ivargal

(Makkal TV, Saturdays, 8.30)

Who are they? They are the marginalised lot in society. What happens if scavengers go on a strike? We wax eloquent on the importance of health and hygiene but do we give the people who help maintain our surroundings enough recognition? Folks who haven’t got their due — like the ragpicker and the boy selling ‘sundal’ on the beach — are interviewed on the show. ‘Ivargal’ is a record of their lives.
[/tscii:3dfe44f7f3]

aanaa
8th November 2008, 08:25 PM
Selvam Saer

(Makkal TV, Saturdays, 9.00)

Ways to plan your household budget, tips on amounts to be allocated for each kind of expenditure, proper saving methods, safeguarding your wealth and much more will be discussed in the programme.

R.Latha
10th November 2008, 02:15 PM
இவர்கள்



இந்த சமூகத்தால் கவனிக்கப்படாதவர்கள், சமூகத்தால் உரிய அங்கீகாரம் தரப்படாதவர்கள், இந்த சமூகத்துக்கு முக்கியமானவர்கள் இல்லை என்று கருதப்படுபவர்கள், பற்றிய நிகழ்ச்சி ``இவர்கள்.''

யார் இந்த ``இவர்கள்?'

சாக்கடை அள்ளுபவர், கடற்கரையில் சுண்டல் விற்பவர்கள், குப்பை பொறுக்கி வாழ்பவர்கள், பிணம் எடுப்பவர்கள், அரவாணிகள் என்று சமூகத்தில் கடைநிலை மக்களாக சித்தரிக்கப்பட்டிருப்பவர்கள்.

கவனிக்கப்படாத இந்த மக்களை கருத்தில் கொண்டு அவர்களை நேர்காணல் செய்து அவர்களின் வாழ்க்கை முறைகளையும், அவர்களது லட்சியத்தையும் பதிவு செய்யும் நிகழ்ச்சிதான் ``இவர்கள்.''

சனிக்கிழமை தோறும் காலை 8.30 மணிக்கு இந்த நிகழ்ச்சியை மக்கள் தொலைக்காட்சியில் காணலாம்.

aanaa
15th November 2008, 06:43 AM
கண்டுபிடி கண்டுபிடி


பள்ளி மாணவர்களின் அறிவியல் பாடங்களில் வரும் அறிவியல் நிகழ்வுகளை அழகாக செய்முறை விளக்கத்தோடு சொல்லித் தரும் நிகழ்ச்சி

இது.உதாரணத்துக்கு வாய் ஒடுங்கிய கண்ணாடிக் குடுவை. அதற்குள் போக முடியாத அளவு பெரிய அவித்த முட்டை. அது எப்படி குடுவைக்குள் போகிறது என்பதை விளக்கத்தோடு சொல்லித் தருகிறது, நிகழ்ச்சி.

செவ்வாய்தோறும் மாலை 4.20 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது, இந்த நிகழ்ச்சி.

தொகுத்து வழங்குபவர் பேராசிரியர் சுப்பையா பாண்டி.

aanaa
22nd November 2008, 07:36 PM
சொல் விளையாட்டு



சொல்லோடு விளையாடும் நேரலை விளையாட்டு நிகழ்ச்சி ``சொல் விளையாட்டு.''

புதிய தமிழ்ச் சொற்களை அறிமுகம் செய்ய வேண்டும். தமிழ் எழுத்துக்களை கொண்டு பல சொற்களை உருவாக்கும் பயிற்சி தர வேண்டும் என்பதற்காக வடிவமைக்கப்பட்ட நிகழ்ச்சி, இது.

பந்தில் கலைந்திருக்கும் எழுத்துக்களை வரிசைப்படுத்தி வரும் சொற்றொடரை சொல்லும் தகுதிச் சுற்று, 8 எழுத்துக்களிலிருந்து 10 சொற்களை உருவாக்கும் முதல் சுற்று, படத்தைப் பார்த்து அதற்கு தொடர்புடைய பழமொழியைச் சொல்லும் பட்டுப்புடவைச் சுற்று என மூன்று சுற்றுக்களைக் கொண்டது.

இதில் விளையாடி வெற்றி பெற தமிழ்ப்புலமை இருக்க வேண்டும் என்பதில்லை. தமிழ் ஆர்வம் இருந்தாலே போதும்.

திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். நேரலை நிகழ்ச்சியின் இந்த ``சொல் விளையாட்டு'' - 500 வது நாளை நோக்கி தொடர்ந்து கொண்டிருக்கிறது.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் கார்த்திகா.

aanaa
22nd November 2008, 07:37 PM
உலகத்திரை''.


காலத்தால் அழியாத சிறந்த திரைப்படங்கள் பல உலக நாடுகளின் பல மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளன.

கறுப்பு-வெள்ளை காலம் தொடங்கி இன்றைய காலம் வரை, எடுக்கப்பட்ட அத்தகைய உன்னத திரைப்படங்களை - சிறந்த திரைப்படங்களை பார்க்க விரும்புகிறவர்களுக்கு அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி யாகவும் இதை சொல்லலாம். மக்கள் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு 9.30 மணிக்கு நல்ல படம் பார்க்க விரும்புகிறவர்களுக்கு அத்தகைய படங்கள் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியே ``உலகத்திரை''.

aanaa
22nd November 2008, 07:38 PM
கல்லூரி கொண்டாட்டம்



மக்கள் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி, கல்லூரி கொண்டாட்டம். கல்லூரி என்பது மாணவர்களை பட்டதாரிகளாக மாற்றும் தொழிற்சாலை இல்லை. அவர்களது தனித்திறமைகளையும் வளர்த்தெடுக்கும் கலைக்கூடம். மாணவர்களிடம் படிப்பை தாண்டி பல்வேறு தனித்திறமைகள் ஒளிந்திருக்கின்றன. அவைகளை அடையாளம் கண்டு மக்களுக்கு அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியே ``கல்லூரி கொண்டாட்டம்.''

மாணவர்களின் தனித்திறமை வெளிப்படும் விதத்தில் விதவிதமான விளையாட்டுகள், போட்டிகள் என்று வைக்கப்பட்டு பரிசும் தரப்படும்.

தயாரிப்பதோடு, தொகுத்தும் வழங்குபவர் ஹரிபாலாஜி.

R.Latha
9th January 2009, 12:23 PM
[tscii:8094acc2f7]உழவர் சந்தை

மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘உழ வர் சந்தை'

இதில் விளை பொருள்களை எங்கே சந்தைப்படுத்தாலம், விற்ப தற்கு எது ஏற்ற நேரம் போன்ற தகவல்களையும். உழவுத் தொழி லுக்குப் பயன்படும் புதிய கண்டுபிடிப்புகளை உழவர்கள் தெரிந் துக் கொள்ளும் வகையிலும் வேளாண் பொருள்களிலிருந்து உரு வாக்கப்படும் புதிய உணவு பொருள்கள், மூலிகைகள், நுண்ணு யிர் உரங்கள் போன்றவை பற்றிய தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்

முழுக்க முழுக்க வேளாண்மை சம்பந்தப்பட்ட தகவல்களைத் தரும் இந்த நிகழ்ச்சியை ‘ஹரிகரன்' தொகுத்து வழங்குகிறார்

வாரம்தோறும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு இந்நி கழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
dinamani 9.1.09 [/tscii:8094acc2f7]

R.Latha
9th January 2009, 12:25 PM
[tscii:b89d4dbaf5]மக்கள் தொலைக்காட்சியில் சிறுவர்களைக் கவரும் வகையில் ஒளிபரப்பாகி வரும் (கார்ட்டூன்) நிகழ்ச்சி ‘குறும்புச் சித்திரம்'

கார்ட்டூன்களின் வளர்ச்சி 2டி, 3டி என்று வளர்ந்து பரி ணாமடைந்து நிற்கிறது. நிஜ உருவங்களையும், கார்ட்டூன்க ளையும் இணைத்து உருவான தொடர்களும் வரத்தொடங்கி யுள்ளன

இதில் குழந்தைகள் மற்றும் சிறுவர்களை குதூகலப்படுத்தும் வகையில் மட்டுமே கார்ட்டூன் காட்சிகள் அமைக்கப்பட்டுள் ளன. அவர்களுக்குள் வன்முறை விதையை விதைத்துவிடமால் மகிழ்ச்சியை மட்டுமே அளிக் கும் ‘குறும்புச் சித்திரம்' வாரம் தோறும் வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப் பாகிறது.
Dinamani 9.1.09[/tscii:b89d4dbaf5]

R.Latha
9th January 2009, 01:00 PM
[tscii:96bc851916]மறுபக்கம்

மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு விறுவிறுப்பான நிகழ்ச்சி ‘மறுபக்கம்'. நாட்டில் நடக்கும் அதிர்வுகளின் தொகுப்பாக, சமூக விரோதிகளைக் கலங்க வைக்கும் புலனாய்வு அலசலாக இந்த நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டுள்ளது.

மணல் கொள்ளையில் ஆரம்பித்து கல்வி என்ற பெயரில் மக்களின் பணத்தைக் கொள்ளையடிப்பது வரை ஒவ்வொரு பிரச்னையையும் அலசி, அதன் பின்னணியில் இருப்பது யார் என்ற உண்மையை வெளிப்படுத்துவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.

சமூக ஆர்வலர்களாகத் தங்களைக் காட்டிக்கொண்டு இரட்டை வாழ்க்கை வாழ்ந்து வருபவர்களின் உண்மையான நிஜ முகங்களைக் காட்டும் இந்த நிகழ்ச்சி, வாரம்தோறும் சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.


Dinamani 9.1.09[/tscii:96bc851916]

aanaa
10th January 2009, 08:31 AM
:ty:

aanaa
12th January 2009, 12:03 AM
Tamil Cinema which was hitherto shunned by popular television channel 'Makkal' has published in its press release that awards for Best Tamil Film and Best Tamil Short Film would feature as two of 31 categories for which prizes would be given away on the 12th of January at the Chettinad Vidhyasharam School premises.

Walks of life that are usually not acknowledged by society at large will feature in this Awards Ceremony. Awards for Best Farmer, Best Publishing House, Best Sculptor, Best School, Best College, best Tamil Writer, Best Sportsperson, Best Environmentalist, Best Citizen etc have been instituted.

According to the press release, a twenty member committee has been formed and they would finalize as to who the deserving winners are.

Any guesses as to which Tamil film will take the honors?

aanaa
17th January 2009, 09:46 PM
விடை சொன்னால் வெகுமதி

மக்கள் தொலைக்காட்சியில் ஞாயிறு காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகும் நேரலை விளையாட்டு நிகழ்ச்சி ``விடை சொன்னால் வெகுமதி.''

இதிலே ஒரு பழமொழியின் ஒரு பகுதி தரப்படும். அதன் மீதி பகுதியையும் சொல்லி பழமொழியை முழுமையாக்க வேண்டும். அடுத்து 5 வார்த்தைகள் இரு பக்கங்களும் தரப்படும். கலைந்திருக்கும் வார்த்தைகளை பொருத்த வேண்டும்.

aanaa
17th January 2009, 09:56 PM
[tscii:ca37597698]

Vedikkai Vilaiyattu

(Makkal TV, Sunday, 10.30 a.m.)

The anchor, Alexander, asks funny questions and the chosen few (at various locations, including the beach and theme parks) will have to come up with the right answers. Of course, there will be a twist to each question.
Vidai Sonnaal Vegumathi


[/tscii:ca37597698]

aanaa
17th January 2009, 09:57 PM
Vidai Sonnaal Vegumathi

(Makkal TV, Sunday, 11 a.m.)

The game show, hosted by Hariharan, provides a platform to showcase Tamil proverbs and idioms. There are two rounds: in the first, the participant will have to complete a proverb. The second round has five jumbles, which the participant has to solve.

hindu.com

R.Latha
23rd January 2009, 12:37 PM
[tscii:5b2cced2ab]சின்ன சின்ன ஆசை

மக்கள் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் வித்தியாசமான நிகழ்ச்சி ‘சின்ன சின்ன ஆசை'.

எல்லோருக்கும் ஆசை இருக்கும். இருப்பவனுக்கு ஓர் ஆசை இருப்பதுபோல இல்லாதவனுக்கும் ஓர் ஆசை இருக்கும். வசதி இல்லாத அதுபோன்ற ஏழைக் குழந்தைகளின் சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றி வைப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.

ஐஸ்கிரீம், சைக்கிள், செருப்பு, பொம்மை, புதிய சட்டை என ஏழைக் குழந்தைகளின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றும் இந்த நிகழ்ச்சியை ஆர்த்தி தொகுத்து வழங்குகிறார்.

ஏழைக் குழந்தைகளின் எளிய தேவைகளை நிறைவேற்றும் இந்த நிகழ்ச்சி, வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
[/tscii:5b2cced2ab]

aanaa
24th January 2009, 09:56 PM
சின்னச் சின்ன ஆசை



ஆசையே துன்பத்துக்கு காரணம். ஆகவே எல்லோரும் ஆசையை அறவே ஒழிக்க வேண்டும் என்று புத்தர் ஆசைப்பட்டார்.

ஆசைப்பட வேண்டும். ஆசையே வெற்றிக்கு அடிப்படை. இதுதான் யதார்த்தம். பேராசை தான் பெரிய நஷ்டம்.

``சின்னச் சின்ன ஆசை'' எப்போதுமே சிறந்தது. மழையில் சில்லென்று நனைய விரும்புவதும்... கடலிலே நீச்சலடிக்க விரும்புவதும் கூட ``சின்னச் சின்ன ஆசை'' தான். எல்லோருக்கும் ஆசை இருக்கும். இருப்பவனுக்கு ஒரு ஆசை. இல்லாதவனுக்கு ஒரு ஆசை.

ஏழைக் குழந்தைகளுக்கு என்ன ஆசை? அவர்களின் சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றி வைக்கும் நிகழ்ச்சி தான் ``சின்னச் சின்ன ஆசை''.

புதுச் சொக்கா, ஐஸ்கிரீம், சைக்கிள், செருப்பு, பொம்மை இப்படி அந்த ஏழைக் குழந்தைகளின் தேவை உலகமே சிறியது தான்.

சின்னச் சின்ன ஆசையை நிறைவேற்றும் இந்த நிகழ்ச்சி, மக்கள் தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் செல்வி, ஆர்த்தி.


நன்றி -- தினதந்தி

aanaa
31st January 2009, 06:26 AM
[tscii:d48af3817e]

ரஷிய படம்



மக்கள் தொலைக்காட்சியின் உலகத் திரைப்பட வரிசையில் நாளை ஒளிபரப்பாகும் ரஷிய திரைப்படம் ``தி வொயிட் டிï''. 1983-ல் வெளியான இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் இகோர் டோப்ரோயுபோவ்.

நகைச்சுவை படமான இதன் கதையை அலெக்சி டுடார்யோவ் எழுதியுள்ளார். தமிழ் மொழி பெயர்ப்பு வாசகங்களோடு படம் ஒளிபரப்பாகிறது.

நன்றி - தினதந்தி[/tscii:d48af3817e]

aanaa
31st January 2009, 06:27 AM
பணம் பண்ணலாம் வாங்க'



பங்குச் சந்தையில் ஈடுபடுபவர்கள் நட்டத்தை தவிர்ப்பதற்கும், லாபமீட்டுவதற்கும் ஆலோசனை தரும் நிகழ்ச்சி, `பணம் பண்ணலாம் வாங்க'. தி.ரா.அருள்ராஜன் வழங்கும் இந்த நிகழ்ச்சி மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை சனிக்கிழமை தோறும் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இந்த நிகழ்ச்சி, இனி சனிக்கிழமை காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகும். பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களை வரைபடத்தோடு விளக்கும் இந்த நிகழ்ச்சியில், தங்கவிதியை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் ரகசியத்தையும் சொல்லித் தருகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் செல்வி.ஆர்த்தி.

நன்றி - தினதந்தி

aanaa
31st January 2009, 06:35 AM
[tscii:4f0aa6cc2d]The White Dew

(Makkal TV, Sunday, 2 p.m.)

As part of the Russian film series, watch ‘The White Dew’ this weekend. Made in 1983, the comedy is directed by Ikor Toproyvpov and written by Alexi Tdoryov.


thanks - Hindu [/tscii:4f0aa6cc2d]

aanaa
31st January 2009, 06:36 AM
[tscii:ab68be1661]Sangappalagai

(Makkal TV, Sunday, 10.30 p.m.)

Here’s a programme that motivates viewers to think about social issues such as reservation for women and the rationale behind caste-based census. Activists, politicians and thinkers come together to discuss such issues and present possible solutions.



thanks - Hindu
[/tscii:ab68be1661]

aanaa
31st January 2009, 06:36 AM
Panam Pannalaam Vaanga
(Makkal TV, Saturday, 9 a.m.)

Hosted by Aarthi, the programme helps people understand how the stock market works, and how to operate and invest in the share market, and make profits


thanks - Hindu .

aanaa
7th February 2009, 06:38 AM
நீதியின் குரல்



சமூக பொருளாதார ரீதியாக புறந்தள்ளப்பட்ட சாமானிய மக்களுக்கான குரலாய் வரும் நிகழ்ச்சி `நீதியின் குரல்'. சமூக நீதிக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் இந்த நேரலை நிகழ்ச்சியில் சாதாரண மக்களின் பிரச்சினைகள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன. பாதிக்கப்பட்டவர்களின் கருத்துக்கள் பதிவு செய்யப்படுவதுடன் பார்வையாளர்கள் தொலைபேசி மூலம் கூறும் கருத்துக்களும் பதிவு செய்யப்பட்டு பிரச்சினைக்கு தீர்வு காண வழி தேடுகிறது.

இந்த நிகழ்ச்சியின் வாயிலாக பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காணப்பட்டுள்ளன.

மக்கள் தொலைக்காட்சியில் திங்கள்தோறும் நேரலையில் காலை 11 மணிக்கு நிகழ்ச்சியை காணலாம். நிகழ்ச்சித் தொகுப்பு: வடிவேல் ராவணன்.



நன்றி: தினதந்தி

aanaa
7th February 2009, 06:39 AM
தேவைகள் சேவைகள்



நான்கு சுவர்களுக்குள் நான்கு பேர் உட்கார்ந்து பிரச்சினைகளை அலசுவதோடு முடித்துக்கொள்ளாமல், மக்களிடமே நேரடியாக சென்று அவர்களது பிரச்சினைகளை கேட்டறிந்து அதற்கு தீர்வு என்ன? என்பதை எடுத்துக்கூறும் நிகழ்ச்சி `தேவைகள் சேவைகள்'.

சாலை வசதி, குடிநீர் வசதி, போக்குவரத்து வசதி, சுகாதார வசதி என்று அடிப்படை வசதியின்றி தவிக்கும் மக்களிடம் சென்று அவர்களின் தேவைகளை பதிவு செய்யும் இந்த நிகழ்ச்சி,மக்கள் தொலைக்காட்சியில் சனி தோறும் காலை 10.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

நன்றி: தினதந்தி

aanaa
7th February 2009, 06:39 AM
புதிய திரை



மக்கள் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி புதிய திரை.

படைப்பு உலகத்தில் வீரியமாக இயங்கிக் கொண்டிருந்தாலும் ஊடகங்களால் கவனிக்கப்படாத ஒன்று குறும்படங்கள். சமூக அவலங்களையும், மக்கள் பிரச்சினைகளையும் மையமாகக் கொண்டு படைப்பாளிகள் குறும்படங்களை எடுத்துக் கொண்டே இருக்கின்றனர். அப்படிப்பட்ட குறும்படங்களில் சிறந்த படங்களை மக்களுக்கு அடையாளப்படுத்தும் முயற்சிதான், `புதியதிரை'.

குறும்படங்களை திரையிடுவதோடு மட்டுமல்லாமல் அந்த படங்களை இயக்கிய இயக்குனர்களின் நேர்காணலும் ஒளிபரப்பப்படுகிறது.

நன்றி: தினதந்தி

aanaa
15th February 2009, 05:40 AM
சங்கே முழங்கு



மக்கள் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறு இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான நிகழ்ச்சி தமிழ் பேசு தங்கக்காசு. இனி இந்த நிகழ்ச்சி ஞாயிறு மட்டும் இரவு ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாகும். சனிக்கிழமை தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கும் புதிய நிகழ்ச்சி `சங்கே முழங்கு'.

மேடைகளில் அரசியல் பேசிய அரசியல் தலைவர்கள் மக்கள் தொலைக்காட்சியில் கவிதை, இலக்கியம், பண்பாடு, நாடகம், நாகரிகம், காதல் என பல மாறுபட்ட தலைப்புகளில் முழங்க இருக்கிறார்கள்.

நல்ல தமிழால் தமிழர் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்த வைகோ, குமரிஅனந்தன், திருமாவளவன் முதலான அரசியல் தலைவர்கள் தங்களது புதிய பரிமாணத்தை காட்ட இருக்கிறார்கள்.

இது அரசியல் மேடை அல்ல. தமிழ் மேடை. இதில் காரசாரமான சொல்லாடல் இருக்கும். அரசியல் தலைவர்களை அரசியலுக்கு அப்பாலும் காட்டுவதற்கான முயற்சியே இந்த சங்கே முழங்கு.


நன்றி: தினதந்தி

aanaa
15th February 2009, 05:40 AM
ஈரானிய படம்

மக்கள் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் மாலை 6.30 மணிக்கு உலகத் திரைப்படங்கள் ஒளிபரப்பாகவிருக்கிறது. மக்களின் வாழ்வியலை பதிவு செய்யும் யதார்த்த உலகத்திரைப்படங்கள் - உலக மக்களை மட்டுமல்ல அவர்கள் வாழ்க்கை, உணவுப் பழக்க வழக்கங்கள் அனைத்தையும் முழுமையாக பதிவு செய்கின்றன.

இன்று மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கும் திரைப்படம் `பாரன்'. இது ஈரானியத் திரைப்படம். அகதியாக வரும் பெண் தன் தந்தையைக் காப்பாற்றுவதற்காக ஆண்வேடம் அணிந்து வீடு கட்டுமானப் பணியில் ஈடுபடுகிறாள். ஆண்களுக்கு இணையாக கடுமையான பாரம் தூக்க முடியாமல் அவதிப்படுகிறாள். இந்த துயரச் சூழலிலும் இழையோடும் அவளது மெல்லிய காதலையும் பதிவு செய்கிற படைப்பு.




நன்றி: தினதந்தி

aanaa
22nd February 2009, 04:12 AM
வெற்றிப்படிகள்



பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வை எதிர்நோக்கியுள்ளனர். தங்கள் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற என்ன வழி?

அதற்கான ஆலோசனையை வழங்கும் நேரலை நிகழ்ச்சிதான் வெற்றிப்படிகள்.
தேர்வுக்கு எப்படி தயாராக வேண்டும்? படித்ததை நினைவில் வைத்துக்கொள்ள என்ன வழி? பதட்டமில்லாமல் பொதுத்தேர்வை எதிர்கொள்ள உங்களை எப்படி தயார்படுத்திக் கொள்வது? தேர்வில் எந்தப் பாடத்தில் என்ன கேள்விகள் முக்கியமாக கேட்கப்படும் போன்ற பல்வேறு தகவல்களை மாணவர்களுக்கு நேரலையில் வழங்கும் நிகழ்ச்சி இது.

மக்கள் தொலைக்காட்சி சனிக்கிழமைதோறும் பிற்பகல் 3.30 மணிக்கு இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது. தொகுத்து வழங்குபவர் ஹரிஹரன்.

நன்றி: தினதந்தி

aanaa
22nd February 2009, 04:13 AM
சாகீரா



மக்கள் தொலைக்காட்சியில் இன்று மாலை 6.03 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கும் ஈரானிய மொழித்திரைப்படம், சாகீரா.

நாடக நடிகை சாகீரா அழகானவள், நடிப்பில் கதாபாத்திரமாகவே மாறிவிடக் கூடியவள். அவளுக்குத் திருமணம் நடக்கிறது. குடும்ப வாழ்க்கையிலே பிரச்சினை.

என்ன மாதிரி பிரச்சினை என்றால், மனதளவில் பல நேரங்களில் அவள் வாழ்வின் எதார்த்த நிகழ்வுகளோடு ஒன்றி அந்த பாத்திரமாகவே மாறிவிடுவதுதான்.

மனதளவில் ஏற்பட்ட இந்த பாதிப்பால் சந்தோஷமான குடும்ப வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பாதிப்பிலிருந்து மீண்டு முழு மனுஷியாக மீண்டும் தன் கணவனோடு எப்படி சந்தோஷமான வாழ்க்கையை தொடங்குகிறாள் என்பது படம்.


நன்றி: தினதந்தி

P_R
25th February 2009, 11:25 AM
Was matching Ma.Nannan's program last night on thamizhkoodal.
It is extremely hilarious. He takes up publications in newspapers/popular journals and rips apart the quality of Tamil writing there. He is always understandably furious and the way he puts it across with a mix of nakkal and concern is just too good.

Yesterday he was just annoyed like never before

என்ன எழவை எழுதியிருக்காருன்னே விளங்கலை. கேட்டா மக்கள் மொழியில் எதுகிறோம், ஜனரஞ்சகம் 'ன்றான். மக்கள் யாரய்யா இப்படி உளருகிறார்கள். எழுவாய் கிடையாது, பயனிலையும் கிடையாது.... அது என்ன ஜனம் ? என்ன ரஞ்சகம் ? :rotfl:

tailpiece...he abruptly ran out of time

இப்போதைக்கு இது போதும்.....அடுத்த முறை சந்திக்கும்போட்து மறுபடி இது போன்றவற்றை எடுத்து வைத்து கொஞ்சுவோம் :lol:

joe
25th February 2009, 12:24 PM
என்ன எழவை எழுதியிருக்காருன்னே விளங்கலை. கேட்டா மக்கள் மொழியில் எதுகிறோம், ஜனரஞ்சகம் 'ன்றான். மக்கள் யாரய்யா இப்படி உளருகிறார்கள். எழுவாய் கிடையாது, பயனிலையும் கிடையாது.... அது என்ன ஜனம் ? என்ன ரஞ்சகம் ? :rotfl:

tailpiece...he abruptly ran out of time

இப்போதைக்கு இது போதும்.....அடுத்த முறை சந்திக்கும்போட்து மறுபடி இது போன்றவற்றை எடுத்து வைத்து கொஞ்சுவோம் :lol:

:rotfl:

aanaa
28th February 2009, 08:49 AM
சந்தை



வாடகைக்கு வீடு வேண்டும், வேலைக்கு போவதா... வீடு தேடி அலைவதா... பழைய இரு சக்கர வாகனம் இருக்கிறது, அதை விலைக்கு கொடுக்க வேண்டும்... பழைய கார் ஒன்று வேண்டும், எங்கு கிடைக்கும்... இப்படி தேவைகள் பலவிதம். இந்தத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான தகவல் தரும் நிகழ்ச்சிதான் "சந்தை.''

மக்கள் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 2 மணிக்கு நேரடி நிகழ்ச்சியாக சந்தை ஒளிபரப்பாகிறது.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்:ஹரிகரன்.

நன்றி -- தினதந்தி

aanaa
28th February 2009, 08:51 AM
வேடிக்கை விளையாட்டு



பொழுதுபோக்கு பூங்காக்கள் போன்ற இடங்களில் மக்களை சந்தித்து அவர்களிடையே வேடிக்கையான கேள்விகள், வினோதமான விளையாட்டுகள் வைத்து அதில் வெற்றி பெற்றால் பரிசு தரும் நிகழ்ச்சிதான் வேடிக்கை விளையாட்டு. இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் திடீரென, உயிர் எழுத்துக்கள் எத்தனை என்பார். 12 என்றால் சொல்லச் சொல்லுவார். சரியாகச் சொன்னால் அவருக்குப் பரிசு.

இப்படி ஒவ்வொருவரிடமும் ஏதாவது ஒரு விளையாட்டு அல்லது கேள்வி கேட்கப்படும். அவர் மாட்டுவாரா... வெற்றி பெறுவாரா...?

கலகலப்பு அம்சம் நிறைந்த இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் அலெக்சாண்டர். ஞாயிறு காலை 10.30 மணிக்கு மக்கள் தொலைக்காட்சி இந்த நிகழ்ச்சியை வழங்குகிறது.



நன்றி -- தினதந்தி

R.Latha
2nd March 2009, 01:21 PM
[tscii:1759d1120d]ஜன்னலோர பயணங்கள்'



மக்கள் டி.வி.யின் ‘பயணம்' நிகழ்ச்சி, வரலாற்றுப் பக்கங்களில் பதிவு செய்யப்படாத சில முக்கிய நிகழ்வுகளை ஆச்சரியக் குறியோடு பதிவு செய்கிறது. வாரம்தோறும் ஏதாவது ஒரு புது விஷயத்தை இத்தொடரில் பதிவு செய்து வரும் இயக்குனர் ‘எம்.என்.ரிஷி' அது பற்றி பேசுகிறார்...

பஸ்ஸின் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்துகொண்டு பார்வையின் கடைசிப் புள்ளி வரை பார்க்கத் துடிக்கும் குழந்தைப் பருவம்தான் பயணங்கள் மீதான ஆர்வத்தை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டாக்குகிறது. அந்த ஆர்வம்தான் ‘பயணம்' தொடரை இயக்க உதவியாகவும் இருக்கிறது.

பயணங்களின் மீதான என்னுடைய காதல் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இன்று வரைக்கும் என் பயணங்கள் ஜன்னலோரமாகவே இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன்.

பசுமையையும், வெறுமையையும் ஒரே நேரத்தில் கண் முன்னே காட்டும் வல்லமை ஜன்னலோர பயணங்களுக்குத்தான் உண்டு. அப்போதெல்லாம் கையில் காசு இருக்கிற வரைக்கும் என் பயணங்கள் அமையும்.

அந்த தீராத பயணங்களின் போது வேடிக்கை பார்ப்பது என்ற விஷயம் பயணங்களின் மீதான என்னுடைய காதலை இன்னும் அதிகரிக்கச் செய்தது. அந்த பயணங்களின் போதுதான் சில வரலாற்றுப் பிழைகள் கண்ணுக்குத் தெரிந்தன. தஞ்சை மன்னன் ராஜராஜ சோழன் கட்டிய பிரகதீஸ்வரர் கோயிலை அறிந்த அளவிற்கு ராஜராஜ சோழனைப் பற்றி தெரிந்து கொள்ளாதவர்கள்தாம் நம் மக்கள்.

இது போன்று ஆயிரமாயிரம் விஷயங்கள் இருக்கின்றன.

இது போன்ற விஷயங்களை வெளி கொண்டு வர வேண்டும் என்று நினைத்தபோதுதான் மக்கள் டி.வி.யின் ‘பயணம்' கிடைத்தது.

தற்போது 80 வாரங்களைக் கடந்து ஒளிபரப்பாகி வரும் இத்தொடரில் தமிழகத்தின் பல்வேறு நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை சென்று, யாருக்கும் தெரியாத விஷயங்களைப் பதிவு செய்கிறோம். இத்தொடர் ஒரு வகையில் வரலாற்றை மறு பதிவு செய்யும் முயற்சிதான்.

யாருக்கும் தெரியாமல் சிதம்பரத்தின் ஏதோ ஒரு குக்கிராமத்தில் முட்புதர்களில் மூழ்கிக் கிடந்த ராஜராஜ சோழ மன்னனின் சமாதியை கேமிராவில் பதிவு செய்த இரவு சற்று நிம்மதியாக உறங்கினேன்.

இத்தொடருக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் எங்கள் பயணம் வரலாற்றின் புதிய பக்கங்களை தேடித் தொடர்கிறது என்றார் ‘பயணம்' தந்த களைப்புடன்.

http://www.dinamani.com/Cinema/CineItems.asp?ID=DNC20090226115225&Title=Cinema+%2D+News&lTitle=%F9Nn%A7Ls&Topic=0
[/tscii:1759d1120d]

aanaa
3rd March 2009, 12:43 AM
thank you Latha

P_R
13th March 2009, 10:20 PM
Balu Mahendra's Kathai nEram

Today's story was beautiful. Dunno's whose story it is. Did anyone watch it from the start ?

aanaa
14th March 2009, 07:33 PM
ரஷிய படங்கள்



மக்கள் தொலைக்காட்சியில் இன்று மாலை 6.03 மணிக்கு ஒளிபரப்பாகும் ரஷிய திரைப்படம் ``விடியல் இங்கு அமைதியாகத் தான் விடிகிறது.'' `அட் டான் இட்ஸ் கொயட் ஹியர்' என்ற பெயரில் ரஷிய மொழியில் வெளியான இத்திரைப்படம் இரண்டாம் உலகப் போரின் போது ரஷியாவிற்கும், ஜெர்மனிக்கும் இடையே நடைபெற்ற சண்டையினை அதன் தன்மை மாறாமல் சித்திரிக் கிறது.

நாளை பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் ரஷியத் திரைப்படம் ``சாரி செய்யாத் தெருவில் ஒரு வசந்த காலம்''. 1956 இல் `ஸ்பிரிங் ஆன் சரிச்னயா ஸ்ட்ரீட்' என்ற பெயரில் ரஷியாவில் வெளியான இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் மார்லென் குட்டிசெவ் மற்றும் பெலிக்ஸ்மயிரோனர்.

வேலை செய்து கொண்டே மாலையில் படிக்கச் செல்லும் ஒரு இளைஞன், தனது ஆசிரியர் மீது கொள்ளும் காதலை அதன் அழகியலோடு சித்தரிக்கிறது இப்படம்.

நன்றி -- தினதந்தி

aanaa
14th March 2009, 07:34 PM
என்னதான் தீர்வு?



இலங்கை தமிழர் பிரச்சினையை பொறுத்தவரை பல தரப்பினருக்கும் பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும் அங்கே அமைதி எட்டப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் இரண்டாம் கருத்து இல்லை.

இந்தச் சூழலில் எது இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வாக இருக்க முடியும் என்று அரசியல்வாதி பீட்டர் அல்போன்சு, எழுத்தாளர்கள் மாலன், ஐயநாதன், சாவித்திரி கண்ணன், விடுதலை ராஜேந்திரன் மற்றும் தஞ்சை இள முருகன் ஆகியோர் கூடி விவாதித்த அனல் பறக்கும் விவாதம் மக்கள் தொலைக்காட்சியில் நாளை இடம் பெறுகிறது. இதன் தொடர்ச்சியை அடுத்த ஞாயிறில் காணலாம். ஒளி பரப்பு நேரம்: இரவு 9 மணி

R.Latha
16th March 2009, 01:28 PM
இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு என்ன தீர்வு?

மக்கள் டி.வி.யில் இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு என்ன தீர்வு? என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

இலங்கைத் தமிழர் பிரச்னையைப் பொறுத்தவரை பல தரப்பினருக்கும் பல்வேறு கருத்துகள் இருந்தாலும் அங்கே அமைதி எட்டப்பட வேண்டும் என்பதில் இரண்டாம் கருத்து இல்லை.

இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு எது தீர்வாக இருக்க முடியும் என பீட்டர் அல்போன்ஸ், பத்திரிகையாளர் மாலன், ஐயநாதன், சாவித்ரி கண்ணன், விடுதலை ராஜேந்திரன் மற்றும் தஞ்சை இளமுருகன் ஆகியோரின் விவாதங்கள் ஒளிபரப்பாகிறது. மேலும் இதில் இலங்கையின் வரலாற்று பின்னணிகளும் ஆதாரங்களுடன் அலசப்படுகிறது.

இந் நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 15) மற்றும் அடுத்த ஞாயிறு (மார்ச் 22) ஆகிய நாள்களில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

R.Latha
16th March 2009, 01:52 PM
[tscii:f3547ef45d]இளமை பக்கம்

புடவை கட்டுவதும் ஒரு கலைதான்!

இளவரசி சிவக்குமார்

மக்கள் தொலைக்காட்சியில் குழந்தைகளுக்கான ‘பட்டாம்பூச்சி' நிகழ்ச்சியை தொகுத்தளிப்பதின் மூலம் ஏராளமான குழந்தைகளின் உள்ளத்தில் படபடத்துக் கொண்டிருப்பவர் இலங்கையைச் சேர்ந்த யாழினி.

யாழினி... இனி உங்களுடன்...

இந்தியாவுக்கு வரும் வாய்ப்பு உங்களுக்கு எப்படிக் கிடைத்தது?

என்னுடைய சொந்த நாடு இலங்கை. அங்குதான் என்னுடைய உறவு சனம் மொத்தமும் இருக்கிறது. நான் அங்கு மருத்துவருக்குப் படிக்க நினைத்தேன். மதிப்பெண்கள் குறைவானதால் பல் மருத்துவருக்குத்தான் இடம் கிடைத்தது. அதனால், அங்கேயே நான் பரதநாட்டியத்தில் டிப்ளமோ முடித்தேன். பரதநாட்டியத்திலேயே உயர் பயிற்சிக்காக விண்ணப்பித்தேன். இந்திய அரசாங்கத்தின் உதவித்தொகை எனக்குக் கிடைத்தது. நான் கலாஷேத்ராவில் என்னுடைய படிப்பைத் தொடர்ந்தேன். நாட்டிய அரங்கேற்றம் செய்தபோதுதான், நடிக்கும் ஆர்வமும் எனக்குள் துளிர்விட்டது.

நீங்கள் முதலில் தொகுப்பாளினியானீர்களா, நடிகையானீர்களா?

நான் முதன்முதலாக சின்னத் திரையில் தோன்றியது தொடர்களில்தான். வசந்த் டிவி, வின் டிவியில் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டேன்.

தொகுப்பாளராகும் எண்ணம் எப்படி வந்தது?

நான் அடிப்படையில் பரதநாட்டியக் கலைஞர். நான் கற்ற கலையை அடுத்தவர்களுக்கும் சொல்லித் தரவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. அதேநேரத்தில் நான் எல்லோராலும் அறியப்பட்ட அறிமுகமான, பரீட்சயமான கலைஞராக இருந்தால்தான் என்னிடம் பயிற்சி பெற பலரும் முன்வருவார்கள். அதனால் முதலில் நான் பிரபலமானவளாக ஆவதற்கான முயிற்சியை எடுத்தேன். இதற்கான நல்ல வாய்ப்பாக தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற மக்கள் தொலைக்காட்சியில் எனக்குத் தொகுப்பாளினியாகும் வாய்ப்பு கிடைத்ததை நான் பெருமையாக நினைக்கிறேன்.

நீங்கள் தொகுத்தளிக்கும் நிகழ்ச்சியின் சிறப்பு என்ன?

பொழுதுக்கும் காமெடி மற்றும் திகிலான நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு, ஒரு மாற்றான நிகழ்ச்சியாக ‘பட்டாம்பூச்சி'யைச் சொல்லலாம். குழந்தைகளை அறிவுஜீவிகளாக மாற்றவேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். முழுக்க முழுக்க குழந்தைகளின் பொது அறிவை வளர்க்கும் வித்தியாசமான பயனுள்ள நிகழ்ச்சி இது. அதுமட்டுமில்லாமல், நேரலையில் தொடர்பு கொண்டு நேரடியாக பேசி, கேள்விக்கான பதிலைப் பெறும்போது அவர்களின் அறிவுத்திறன் வளர்கின்றது. பொது அறிவுப் புதிரில் அறிவியல், திருக்குறள் என்று பல விஷயங்களையும் நாங்கள் சேர்த்துக் கொள்கிறோம்.

நேரலையில் அத்தனைக் குழந்தைகளையும் எப்படி சமாளிக்கிறீர்கள்?

குழந்தைகளை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் நடன வகுப்புகளை எடுப்பதாக இருந்தாலும் சரி, நிகழ்ச்சியை தொகுத்தளிப்பதாக இருந்தாலும் சரி.. அவர்களுடன் நேரத்தைச் செலவிடுதல் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர்களுடன் அதிக நேரம் செலவிடுவதாலேயே நான் மிகவும் இளமையாக, சுறுசுறுப்பாக இருப்பதாகக் கருதுகிறேன்.

எதிர்காலத் திட்டம் என்ன?

வரும்காலத்தில் ஒரு நாட்டியப் பள்ளி தொடங்கி நான் கற்றுக்கொண்ட கலையை பிறருக்கும் கொண்டுபோகவேண்டும். வசதி இல்லாத குழந்தைகளுக்கு இலவசமாகக் கற்றுக் கொடுக்கும் எண்ணமும் இருக்கிறது.

ஒரு நடிகையாக இன்னும்கூட நீங்கள் பிரபலமாவதற்கு வழியிருக்கிறதே, அதை ஏன் நீங்கள் தொடரவில்லை?

அப்படிச் சொல்லமுடியாது. சிலநேரங்களில் வில்லியாக நடிக்கிற ஒருத்தரை, ரசிகர்கள் நிஜத்திலும் அப்படியே ரசிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. நாம் எடுத்துக் கொள்ளும் பாத்திரத்திற்கு ஏற்ப, நம் மீதான அபிப்ராயமும் ரசிகர்களிடையே மாறுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் நிகழ்ச்சி தொகுப்பாளினி பணியில் இந்த ஆபத்து இல்லை. அன்றாடம் எங்களுடைய திறமையை வெளிப்படுத்துகிறோம். அதற்கான பாராட்டும் உடனுக்குடன் எங்களுக்குக் கிடைத்துவிடுகின்றது.

இலங்கை பிரச்னை குறித்து உங்கள் கருத்து என்ன?

சிங்கள ராணுவத்தினரின் தாக்குதலில் தமிழினமே அழிந்து கொண்டிருப்பது மிகுந்த மனவேதனையைக் கொடுக்கிறது.

ஏழு வருடத்துக்கு முன்பு நான் அங்கிருந்த போது, பொட்டு வைத்துக்கொண்டு பெண்கள் வெளியே வந்தால், தமிழர்னு பிடிச்சுட்டு போயிடுவாங்க. அதனால அவை இல்லாமலேயே வெளியே வரவேண்டிய நிர்பந்தத்திற்குத் தமிழ்ப் பெண்கள் தள்ளப்பட்டிருக்காங்க. ஆண், பெண் சமஉரிமை என்பதுபோல, பெண்களுக்கு அங்கே சமஉரிமை வேணும். சீக்கிரமாகக் கிடைக்கணும் என்பதுதான் என்னுடைய பிரார்த்தனை. இன்னொன்று மனிதனை, மனிதனாக மதிக்கும் நிலை இலங்கையில் உருவாக வேண்டும்.

எப்போதுமே புடவை கட்டுவது போரடிக்கலையா?

என்னைப் பொறுத்தவரை புடவை கட்டுவதும் ஒரு கலைதான். என் கலை பசிக்கேற்ற ஏற்ற வாய்ப்பு தமிழகத்தில் கிடைத்து வருகிறது. ஒவ்வொரு நாளும் ரசனையோடு புடவை கட்டிக்கிட்டு வருகிறேன். ஏனெனில் அந்த உடைதான் எனக்கு மிகவும் பிடிக்கும்!

http://www.dinamani.com/Cinema/index.asp[/tscii:f3547ef45d]

R.Latha
23rd March 2009, 12:34 PM
கதை நேரம்

மக்கள் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி, பாலு மகேந்திராவின் `கதை நேரம்'.

மிகச் சிறந்த தமிழ்ச் சிறுகதைகளை திரைமொழியில் சொல்லும் உன்னத படைப்புகளின் தொகுப்புதான் இந்த கதை நேரம். தினம் ஒரு சிறுகதையை எடுத்து அதை உணர்வு பூர்வமாக தந்திருக்கிறார் பாலு மகேந்திரா.

முடிவே தெரியாத நெடுந்தொடர்கள் போல் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு சிறுகதை 7 மணிக்கு தொடங்கினால் 7.30 மணிக்கு முடிந்து விடும்.

மூன்றாம்பிறை, வீடு, சந்தியாராகம், வண்ணவண்ண பூக்கள் போன்ற மிகச்சிறந்த திரைப்படங்களை தமிழ்த் திரையுலகுக்கு தந்த பாலுமகேந்திரா, சிறுகதைகளையும் ஒரு திரைப்படத்துக்கு உரிய நேர்த்தியுடன் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

R.Latha
23rd March 2009, 12:35 PM
ரஷிய திரைப்படம்



மக்கள் தொலைக்காட்சியின் திரைப்பட விழாவில் இன்று ஒளிபரப்பாகும் ரஷிய திரைப்படம் படைவீரனின் கதை. உலகின் மிகச் சிறந்த திரைப்படங்களில் ஒன்றான இத்திரைப்படம் `பேல்லட் ஆப் சோல்ஜர்' என்ற பெயரில் 1959 இல் வெளி வந்தது. இதை இயக்கியிருப்பவர் கிரிகோரி சுக்ராய்.

இரண்டாம் உலகப் போரின் போது ரஷிய படையில் பணிபுரியும் 19 வயது அல்யோசா எதிரிகளின் இரண்டு பீரங்கிகளை வீழ்த்துகிறான். அதற்குப் பரிசாக கிடைக்கும் சில நாள் விடுமுறையில் தனது அம்மாவை காணச் செல்கிறான். அல்யோசாவின் அந்த பயணமே இந்தப் படத்தின் கதைக் களம். போரின் விளைவுகளை அழகான கதையோட்டத்தின் பின்னணியில் அழுத்தமாக சொல்கிறது இந்தப் படம்.

R.Latha
23rd March 2009, 12:35 PM
கே.பாலசந்தரின் `சொல்லத்தான் நினைக்கிறேன்'

ஜி தமிழ் டிவியில் விரைவில் வரவிருக்கும் புதிய தொடர், சொல்லத்தான் நினைக்கிறேன்.

மதன் பிரபல சின்னத்திரை நடிகர் நேர்மையானவர். நேரம் தவறாதவர். அவருடைய ஒரே மகள் சாரு. வயது 20. மிகச்சிறிய வயதிலிருந்தே தாயாகவும், தந்தையாகவும் இருந்து பேணிப் போற்றி சாருவை வளர்க்கிறார் மதன். தந்தை மேல் உயிரையே வைத்திருக்கிறாள் சாரு.

அவள் தாய் தன்னை விட்டு பிரிந்து போய் எங்கோ வாழ்ந்து வரும் உண்மையை சாருவிடம் ஏனோ அவரால் சொல்ல முடியாமல் போய்

விடுகிறது.தாய்ப் பாசமே தெரியாமல் வளர்ந்து வரும் சாருவின் எதிரில் ஒரு நாள் அவளுடைய அம்மா வந்து நின்றால் என்ன நடக்கும்?

மதனாக ரவி ராகவேந்தரும், சாருவாக `சஹானா புகழ்' காவ்யாவும், சாருவின் தாயாக யுவராணியும் நடித்துள்ளனர். பீலிசிவம், `விழுதுகள்'சந்தானம், பாத்திமா பாபு, பாம்பே ஞானம் மற்றும் பலரும் இத் தொடரில் பாத்திரமேற்றுள்ளனர்.

கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் இத் தொடரை தயாரித்துள்ளது.

R.Latha
23rd March 2009, 12:41 PM
தேர்தல்களம்-2009

மக்கள் தொலைக்காட்சி செய்திகளில் இடம் பெறும் சிறப்பு பகுதி `தேர்தல் களம்'

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் மக்கள் மனநிலை குறித்து இரண்டு முறை கருத்தாய்வு நடத்தி, மக்கள் தொலைக்காட்சி செய்திகளில் முடிவுகள் வெளியிடப்பட இருக்கின்றன.

முதற்கட்டமாக தொகுதியின் தற்போதைய நிலை, வாக்காளர்களின் எண்ண ஓட்டம் ஆகியவை பற்றிய சிறப்பு தொகுப்பு, நாள்தோறும் இரவு 8 மணி மற்றும் இரவு 10 மணி செய்திகளில் ஒளிபரப்பாக இருக்கிறது.

ஏறத்தாழ 4 நிமிடங்கள் ஒளிபரப்பப்படும் இந்த சிறப்பு பகுதியில் தொகுதி மக்களின் மனநிலையைத் துல்லியமாகவும், நடுநிலையாகவும் இருக்கும் வகையில் கருத்தாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாக்காளர்களை அவர்களது இடத்திற்கே சென்று நேரில் சந்தித்து, அவர்களின் மன ஓட்டத்தை படம் பிடிக்க 120 பேர் கொண்ட ``மக்கள் தொலைக்காட்சிக் கருத்தாய்வு குழுக்கள்'' அமைக்கப்பட்டுள்ளன.

சராசரியாக ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு 1,200 பேர் என்ற அடிப்படையில், மொத்தம் 48 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களை சந்தித்து அவர்களது கருத்துக்கள் பதிவு செய்யப்படுகின்றன. பின்னர், அவற்றை கணினியில் ஏற்றி, புள்ளி விவரங்களை பரிசீலனை செய்து, அதன் அடிப்படையிலேயே இந்தக் கருத்தாய்வு முடிவுகள் வெளியிடப்படவிருக்கின்றன.

வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பிறகு இரண்டாவது கட்டமாகவும் கருத்தாய்வு நடத்தப்பட உள்ளது. அதில் எந்த வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்பதும் மக்கள் தொலைக்காட்சி செய்திகளில் புள்ளி விவரங்களோடு இடம் பெறுகிறது.

R.Latha
23rd March 2009, 12:41 PM
குறிஞ்சி மலர்

சாதனைச் சிறுவர்களை அடையாளம் கண்டு அவர்களை மக்களுக்கு அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி ``குறிஞ்சி மலர்''.

எப்படிக் கேட்டாலும் திருக்குறளை ஒப்பிக்கும் குழந்தை, காலில் ஸ்கேட்டிங் கட்டிக் கொண்டே நாட்டியமாடும் குழந்தை, காலால் ஓவியம் வரையும் குழந்தை, எந்த எண்ணை சொன்னாலும் ஒரு நொடிக்குள் கூட்டி, பெருக்கி, வகுத்து தரும் குழந்தை என்று பல குழந்தைகள் சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பயிற்சியும், விடாமுயற்சியும் இருந்தால் எல்லோராலும் சாதிக்க முடியும். சாதனைக் குழந்தைகளாய் உருவாக முடியும் என்கிற உண்மையை மற்ற குழந்தைகளுக்கும் சொல்வதன் மூலம் அந்தக் குழந்தைகளையும், சாதனை நாயகர்களாக உருவாக்க முடியும்.

அந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்ட நிகழ்ச்சிதான் ``குறிஞ்சி மலர்''. புதன்கிழமை தோறும் மாலை 4.30 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சியை காணலாம்.

R.Latha
25th March 2009, 02:07 PM
Kurinji Malar

(Makkal TV, Wednesday, 16.30.)

Kurinji Malar is where viewers meet children with extraordinary talent.

Also shows how determination and hard work play a big role in their achievements.

http://www.hindu.com/fr/2009/03/20/stories/2009032050860300.htm

R.Latha
30th March 2009, 12:01 PM
புத்தகம்படி பரிசைப்பிடி

ஒவ்வொரு தமிழரின் இல்லங்களிலும் நூல் நிலையம் அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் மக்கள் தொலைக்காட்சியில் தொடங்கப்பட்டது ``புத்தகம்படி பரிசைப்பிடி'' நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சியில் பொது அறிவு தொடர்பான கேள்வி கேட்கப்படும். அதற்கு நான்கு பதில்கள் தரப்படும். அதில் உரிய பதிலை தேர்ந்தெடுத்துச் சொன்னால் புத்தகம் பரிசு. ஒருவர் எத்தனை புத்தகங்களை வேண்டுமானாலும் பரிசாகப் பெறலாம். தவறாக பதில் சொன்னால் இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும். இந்த வாய்ப்பையும் தவறவிட்டால் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற வேண்டும்.

ஞாயிறு தோறும் மாலை 6.03 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் மாலா.

R.Latha
30th March 2009, 12:05 PM
வேலை வாய்ப்புத் தகவல்கள்

இன்றைய மாணவர்களிடம் வேலை என்றதும் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த வேலை மட்டும்தான் கண்முன் விரிகிறது. ஆனால் அதைத் தாண்டியும் ஆயிரம் வேலை இருக்கிறது.

பறக்கும் விமானம், தண்ணீரில் போகும் கப்பல், ஓட்டல், தோல் பதனிடுதல், அச்சுத்துறை என்று பல துறைகள். ஒவ்வொரு துறையிலும் எப்போதும் திறமையான ஆட்களுக்கான தேவைகள் இருந்து கொண்டே இருக்கின்றன.

எந்த வேலைக்கு நாட்டிலும், உலக அளவிலும் தேவை அதிகமாக இருக்கிறது. இதற்கு என்ன படிப்பு படிக்க வேண்டும்... முதுநிலை பட்டப் படிப்பு படித்தவர்களும் கூடுதலாக எதைப் படித்தால் வேலை கிடைப்பது சுலபமாகும் போன்ற எதிர்பார்ப்பு கேள்விகளுக்கு கல்வியாளர்கள் நேரலையில் தெளிவுபடுத்தும் நிகழ்ச்சி, ``வேலைவாய்ப்புத் தகவல்கள்''.

வியாழன் தோறும் காலை 11 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர், ராம்குமார் சிங்காரம்.

R.Latha
30th March 2009, 12:41 PM
[tscii:52b5829e5d]புத்தகம் படி; பரிசைப் பிடி

மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புதுமையான நிகழ்ச்சி ‘புத்தகம் படி; பரிசைப் பிடி'.

இதில் ஒரு பொது அறிவுக் கேள்வி கேட்கப்பட்டு அதற்கு நான்கு பதில்கள் தரப்படும். உரிய பதிலை தேர்ந்தெடுத்துச் சொன்னால் ஒரு புத்தகம் பரிசாக வழங்கப்படும். ஒருவரே எத்தனை புத்தகங்களை வேண்டுமானலும் பரிசாகப் பெறலாம்.

புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை எல்லோரிடத்திலும் ஏற்படுத்த வேண்டும். அனைவரின் இல்லங்களிலும் நூல் நிலையம் அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

http://www.dinamani.com/Cinema/CineItems.asp?ID=DNC20090327123735&Title=Cinema+%2D+News&lTitle=%F9Nn%A7Ls&Topic=0
[/tscii:52b5829e5d]

R.Latha
30th March 2009, 12:46 PM
[tscii:6bde42b411]காலத்தை பின் தொடர்ந்து

மக்கள் தொலைக்காட்சியின் திரைப்பட விழாவில் இந்த வாரம் ‘காலத்தை பின் தொடர்ந்து' என்ற ரஷ்ய திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

‘இவான் வாசிலேஷச்: பேக் டூ த ஃப்யூச்சர்' என்ற பெயரில் 1973-ம் ஆண்டு வெளியான இந்த படத்தை லியோனிஸ்ட் இயக்கியிருக்கிறார். 1973 ல் ரஷ்யாவில் சுமார் 6 கோடி டிக்கெட்டுகள் இந்த படத்திற்காக விற்பனையானது குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவின் புகழ்பெற்ற நகைச்சுவைப் படங்களில் இந்த படத்திற்கு முக்கியமான இடம் உண்டு.

கால இயந்திரத்தைப் பயன்படுத்தி 1973ல் வாழும் புன்சா என்பவர் மன்னர் காலத்திற்கு சென்றுவிடுகிறார். மன்னராக இருக்கும் நான்காம் இவான் 1973-ல் உள்ள நாகரிக காலத்திற்கு வந்துவிடுகிறார். இருவரும் ஒரே தோற்றமுடையவர்களாக இருப்பதால் ஏற்படும் குளறுபடிகளை நகைச்சுவையாக சொல்லுகிறது இந்த படம்.

இந்த படம், மார்ச் 28 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது.[/tscii:6bde42b411]

P_R
2nd April 2009, 08:44 PM
Today's story in Kadhai nEram
koLLai by Sujatha

romba sumaar

Comedy flopped
Very poor amateurish acting by Mounika and Junior Baliah - expect perhaps the last twist (which is also not very strong)

R.Latha
6th April 2009, 12:46 PM
மக்கள் தொலைக்காட்சியில் நாளை பிற்பகல் 3.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி, `ஆடுகளம்'. கைப்பந்து, கால்பந்து, சடுகுடு, பனிச்சறுக்கு, அலை விளையாட்டு, இருசக்கர வாகன பந்தயம், கோல்ப் என்று விதவிதமான விளையாட்டுகள் விளையாடப் படுகின்றன.

இதிலே பொழுது போக்கு விளையாட்டுகள், உயிரைப் பணயம் வைத்து விளையாடும் சாகச விளையாட்டு என்று பல வகை விளையாட்டுகள் இருக்கின்றன.

உலகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் விளையாடப்படும் விறுவிறுப்பான பல்வேறு விளையாட்டுகளையும் தொகுத்து அதற்கு தமிழ் வர்ணனை தந்து ஒளிபரப்பப் படுகிறது.

இந்த ஆடுகளம், விளையாட்டை பகையாகப் பாராமல் விளையாட்டாக பார்த்து ரசிக்க சொல்லித்தரும் நிகழ்ச்சி.

மக்கள் தொலைக்காட்சியில் நாளை மாலை 3.30 மணிக்கு ஆடுகளம் ஒளிபரப்பாகும்.

R.Latha
6th April 2009, 02:02 PM
ரஷிய படம்

மக்கள் தொலைக்காட்சியின் திரைப்படவிழாவில், இன்று மாலை 6.03 மணிக்கு ஒளிபரப்பாகும் ரஷியத் திரைப்படம் `சுவர்க்கத்தின் அருகே நாடோடிகள்.' 1976 இல் `ஜிப்பிஸ் ஆர் பவுண்ட் நியர் ஹெவன்' என்ற பெயரில் ரஷியாவில் வெளியான இந்தப் படத்தை தயாரித்து இயக்கியிருப்பவர் லோட்யானு எமில். நாடோடிகளின் வாழ்க்கை முறையை அழகிய காதல் பின்னணியோடு விவரிக்கிறது இத்திரைப்படம்.

உலகப் புகழ் பெற்ற இத்திரைப்படம் தமிழ் மொழி பெயர்ப்பு வாசங்களோடு ஒளிபரப்பாகிறது.

R.Latha
6th April 2009, 02:03 PM
தேவைகள் சேவைகள்

மக்களின் அன்றாட பிரச்சினைகளையும், இன்னல்களையும் காட்சிப்படுத்தி கோரிக்கைகளை முன்வைப்பதே `தேவைகள் சேவைகள்' என்ற நிகழ்ச்சியின் கருப்பொருள்.

நாட்டில் நடைபெறும் சட்டமீறல்களையும், அரசு அதிகாரிகள் சிலரின் அலட்சியப் போக்கையும் மக்களின் மொழிலேயே எடுத்துக்காட்டி குறைகளை நிவர்த்தி செய்ய தூண்டுவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய குறிக்கோள்.

மக்கள் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் காலை 10.30 மணியளவில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

R.Latha
15th April 2009, 11:29 AM
நேதாஜி

மக்கள் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர், நேதாஜி.

ஆட்டோ சங்கர், சந்தனக்காடு, `மறக்க முடியுமா?', அரசியலின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை தெரிவித்த `தலைவா' என மக்கள் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பான ஒவ்வொரு தொடரும் மக்கள் மனதில் அதிர்வை ஏற்படுத்தியவை.

`ஈழம் நேற்றும் இன்றும்' என்ற ஈழ வரலாற்றுத்தொடர், நிறைவு பெற்றதைத் தொடர்ந்து இந்திய விடுதலைப் போராட்டத்தில் வீரத்தை முன்வைத்து நடைபோட்ட சுபாஷ் சந்திரபோசின் வரலாற்று `நேதாஜி' என்ற பெயரில் தொடராக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

பிரிட்டிஷாருக்கு எதிரான விடுதலைப்போரில் அறவழியே ஏற்றது என்று காந்தியடிகள் தலைமையில் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்தபோது வீரத்தின் மூலமே இந்தியா விடுதலை பெற்றதாக வரலாறு பேசவேண்டும் என்று போர்ப்படையை வழிநடத்தியவர் நேதாஜி. வெள்ளையன் பயணித்த ஹெலிகாப்டரை சுட்டு அவன் காலை முடமாக்கியதன் மூலம் வெள்ளையர்களின் மனதில் பயத்தை விதைத்தவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.

R.Latha
15th April 2009, 11:31 AM
சித்திரைக் கொண்டாட்டம்



கொண்டாட்டத்தோடு ஆரம்பித்து விட்டது கோடை விடுமுறை. இந்த சித்திரைக் கொண்டாட்டத்தில் மக்கள் தொலைக்காட்சியில் வண்ணமயமான பல நிகழ்ச்சிகள், வரும் செவ்வாய்க்கிழமை ஒளிபரப்பாகிறது.

காலை 7 மணிக்கு சங்க இலக்கியப் பாடல்களை பள்ளிக் குழந்தைகள் இசையோடு படிக்கும் இசையமுது நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. நமது சங்க இலக்கியத்தை கண்டு ரசிக்கும் நாட்டிய அரங்கம் காலை 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

கோடை வந்தாலே வெயில் சார்ந்த பல நோய்கள் படுத்தி எடுக்கும். அதனால் 50 விதமான நோய்களையும், அதற்கான அறிகுறிகளையும் மருத்துவர்கள் விவரிக்கும் நிகழ்ச்சி காலை 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

கபடி, சிலம்பம், சுட்டிக்கல், பாண்டி முதலான பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாடி மகிழும் `நம்ம விளையாட்டு' காலை 9.30 மணிக்கும், ஐம்பெருங்காப்பியத்தில் ஒன்றான சீவக சிந்தாமணி இசை நாட்டிய வடிவில் காட்சியாகும் அகமும் புறமும் காலை 10.30 மணிக்கும் நம் தமிழ்நாட்டின் பெருமைமிகு கிராமத்து மக்களையும், அவர்கள் வாழ்க்கை முறைகளையும் அறிமுகம் செய்யும் சிறப்பு `மண் மணம்' பகல் 12 மணிக்கும், கல்லூரி மாணவிகள் நாட்டுப்புற பாடலுக்கு அசத்தல் நடனம் ஆடும் "தைய்யா... தைய்யா...'' நிகழ்ச்சி மாலை 5 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.

`கோடை மழை' நிகழ்ச்சி பகல் 1 மணிக்கும், கோடை காலத்துக்கு ஏற்ற சுற்றுலா இடங்கள் எவை என்பதை சொல்லி நேயர்களை அந்த இடத்துக்கே அழைத்துச் செல்லும் கோடைச் சுற்றுலா மாலை 6 மணிக்கும், டாஸ்மாக்கே கதியென்று வாழ்வை தொலைக்கும் முடாக் குடிகாரர்கள் கூடிப் பேசும் `புட்டி மன்றம்' என்ற நகைச்சுவை நிகழ்ச்சி இரவு 8 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.

சந்திரனுக்கு சந்திராயன் விண்கலம் அனுப்பிய விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தான் பிறந்து வளர்ந்த கோவை மாவட்டத்திலுள்ள கோதவாடி கிராமத்துக்குச் சென்று மண்ணையும், மக்களையும் கண்டு பேசி உறவாடி மகிழும் ஊர்கோலம் நிகழ்ச்சி இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

R.Latha
15th April 2009, 11:33 AM
ரஷ்ய திரைப்படங்கள்



மக்கள் தொலைக்காட்சியின் திரைப்பட விழாவில் இன்று மாலை 6.03 மணிக்கு ஒளிபரப்பாகும் ரஷ்ய திரைப்படம் `வைரக் கற்கள்.' 1968-ல் "டயமண்ட் ஆர்ம்'' என்ற பெயரில் ரஷ்ய மொழியில் வெளியான இத்திரைப்படத்தை இயக்கியவர் லியோனிட் கயிடே.

தற்செயலாக நடைபெறும் விபத்தால் கதாநாயகன் கை உடைந்துபோக, அதைக் கொண்டு கடத்தல்காரர்கள் வைரங்களை கடத்துகின்றனர். பிறகு கதாநாயகனுக்கு இது தெரிய வர, அதன்பின் கடத்தல்காரர்களை காவல்துறையிடம் பிடித்துக் கொடுக்க எண்ணி போடும் திட்டங்களை நகைச்சுவை ததும்ப சொல்கிறது, இப்படம்.

ஞாயிறு மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் ரஷ்ய திரைப்படம் "இடத்தை மாற்ற முடியாது.'' 1979-ல் "தி மீட்டிங் பிளேஸ் கேன் நாட் பி சேஞ்சுடு'' என்ற பெயரில் ரஷ்ய மொழியில் வெளியான இத்திரைப்படத்தை இயக்கியவர் ஸ்தனிஸ்லாவ் கோவோருகின்.

R.Latha
17th April 2009, 01:57 PM
[tscii:7ca651a68d]மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பயனுள்ள நிகழ்ச்சி ‘கேளுங்கள் தரப்படும்'. இதில், குடும்ப அடையாள அட்டை வாங்க என்ன செய்ய வேண்டும்... பாஸ்போர்ட் பெற வழிகள் என்னென்ன... நுகர்வோர் நீதிமன்றத்தை எப்படி அணுகுவது... தகவல் பெறும் உரிமைச் சட்டம் என்றால் என்ன... அதில் குடிமக்களுக்கு உள்ள உரிமைகள் என்னென்ன... குழந்தை வளர்ப்பில் பெற்றோர்களின் பங்கு என்ன... அரசால் நடத்தப்படும் பொதுத் தேர்வுகளுக்கு நம்மைத் தயார் செய்வது எப்படி.. இது போன்ற ஆயிரம் கேள்விகளுக்கு துறை சார்ந்த வல்லுநர்கள் பங்கேற்று தெளிவான பதில்களை அளிப்பார்கள். பொதுமக்கள் மட்டுமல்லாமல் மாணவர்களுக்கும் பயனுள்ள இந்த நிகழ்ச்சி புதன்கிழமைகளில் காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF %81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+% E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE %9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&artid=tkX7LSyLoFI=&SectionID=SO2rbXgWYYc=&MainSectionID=SO2rbXgWYYc=&SEO=&SectionName=Np30OLxH4ag=[/tscii:7ca651a68d]

R.Latha
20th April 2009, 12:43 PM
கேளுங்கள் தரப்படும்

துறை சார்ந்த வல்லுநர்கள் - மக்களின் ஐயங்களை நேரலை மூலம் தெளிவுபடுத்தும் நிகழ்ச்சி ``கேளுங்கள் தரப்படும்''. இது மக்கள் தொலைக்காட்சியில் புதன் தோறும் காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

குடும்ப அடையாள அட்டை வாங்க என்ன செய்ய வேண்டும்... கடவுச் சீட்டு பெற வழிகள் என்னென்ன... நுகர்வோர் தங்கள் உரிமையை பெற நுகர்வோர் நீதிமன்றத்தை எப்படி அணுகுவது... தகவல் பெறும் உரிமைகள் என்னென்ன... குழந்தை வளர்ப்பில் பெற்றோர்களின் பங்கு என்ன... அரசால் நடத்தப்படும் பொதுத் தேர்வுகளுக்கு நம்மை தயார் செய்வது எப்படி... இப்படி ஒவ்வொருவருக்குள்ளும் ஆயிரமாயிரம் கேள்விகள் விடை தெரியாத கேள்விகளாய் இருந்து கொண்டிருக்கும்.

இந்த கேள்விகளுக்கு அந்தந்த துறை சார்ந்த வல்லுநர்கள் தெளிவான விளக்கம் தரும் நிகழ்ச்சியே ``கேளுங்கள் தரப்படும்''

R.Latha
20th April 2009, 12:49 PM
ரஷிய படம்

மக்கள் தொலைக்காட்சியின் திரைப்பட விழாவில் இன்று மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ரஷிய படம் ``நாரைகள் பறக்கின்றன'' `தி கிரேன்ஸ் ஆர் ப்ளையிங்' என்ற பெயரில் ரஷிய மொழியில் வெளியான இத்திரைப் படத்தை இயக்கியவர் காலாடோசோவ்.

போரினால் ஏற்படும் பாதிப்பை அதன் தன்மை மாறாமல் சித்தரிக்கிறது இப்படம். தமிழ் மொழிபெயர்ப்பு வாசங்களோடு படத்தை காணலாம்.

P_R
20th April 2009, 12:53 PM
ரஷிய படம்

மக்கள் தொலைக்காட்சியின் திரைப்பட விழாவில் இன்று மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ரஷிய படம் ``நாரைகள் பறக்கின்றன'' `தி கிரேன்ஸ் ஆர் ப்ளையிங்' என்ற பெயரில் ரஷிய மொழியில் வெளியான இத்திரைப் படத்தை இயக்கியவர் காலாடோசோவ்.

போரினால் ஏற்படும் பாதிப்பை அதன் தன்மை மாறாமல் சித்தரிக்கிறது இப்படம். தமிழ் மொழிபெயர்ப்பு வாசங்களோடு படத்தை காணலாம்.

மிக அழகான படம்.
பார்க்காதவர்கள் அவசியம் பார்த்து ரசிக்கலாம்.
ரஷிய திரைப்படங்களிலேயே மிகச்சிறப்பான படங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

R.Latha
20th April 2009, 12:56 PM
திரைகடல் ஓடி...

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பது பழமொழி.

தமிழர்கள் முன்பே கடல் கடந்து வணிகத்தில் முத்திரை பதித்தவர்கள். இதற்கு வரலாற்றுச் சான்றுகள் ஏராளம்.

இன்று உலகமயம் என்றாகிவிட்டது. ஏற்றுமதி வணிகம் மிகப் பெரிய லாபம் தரும் தொழிலாகிவிட்டது.

இட்லி, இடியாப்பம், தேங்காய் நாரில் உருவான பொருட்கள், காய்ந்த கொப்பரை தேங்காய், மீன் குழம்பு, காஞ்சிபுரம் பட்டும், அரிசிப்புட்டு, ரோசாப்பூ, மல்லிகைப்பூ, வெட்டிவேர், தலைமுடி என்று எல்லாப் பொருட்களும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

ஏற்றுமதி செய்வதற்கு என்ன வழிமுறைகள்... எந்தெந்த நாடுகளுக்கு என்னென்ன பொருளை ஏற்றுமதி செய்தால் அதிக லாபம் சம்பாதிக்க முடியும்? ஏற்றுமதி சம்பந்தமான அனைத்து வழிகாட்டுதலையும் தரும் நிகழ்ச்சியே `திரைகடல் ஓடி'.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் ராம்குமார் சிங்காரம்.

மக்கள் தொலைக்காட்சியில் செவ்வாய் தோறும் காலை 11 மணிக்கு இந்த நிகழ்ச்சியை காணலாம்.

R.Latha
20th April 2009, 01:01 PM
கற்போம் கணினி

மக்கள் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 10.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி, `கற்போம் கணினி' அறிவியல் கண்டுபிடிப்புகளில் இன்று முக்கியமான ஒன்று கணினி. மனிதன் கண்டுபிடித்த கணினி தான் இன்று மனிதனால் முடியாதவற்றையும் எளிதாக சாதித்துக் கொண்டிருக்கிறது.

கணினி, வேலையை சுலபமாக்குகிறது. பல சாதனைகளுக்கு துணையிருக்கிறது. உலகமே இன்று கணினியை மையமாக வைத்து சுழன்று கொண்டிருக்கிறது.

கிராமத்து மக்களும், வீட்டு வேலை பார்த்து வீட்டுக்குள்ளேயே முடங்கி விட்ட பெண்களும் கணினியை கற்க வேண்டும். அந்த அறிவியல் சாதனையை அனைவரும் பயன்படுத்தி பயனடைய வேண்டும் என்பதற்காக மக்கள் தொலைக்காட்சி எளிய தமிழில் கணினியை இயக்க கற்றுத்தரும் நிகழ்ச்சி ``கற்போம் கணினி''.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் யாழினி.

aanaa
25th April 2009, 05:22 AM
ஈழம்்


இலங்கையின் பூர்வகுடிகளான தங்களுக்கும் சமஉரிமை கேட்டு போராடி வருகின்றனர் ஈழத்தமிழர்கள். அவர்களின் உரிமைப்போராட்டத்தை வன்முறை இயக்கமாக, வேண்டாத சிலர் சித்தரிக்கும் நிலையில், ஈழத்தின் உண்மை வரலாற்றை உலகிற்கு உணர்த்த வேண்டும் என்று தொடங்கப்பட்டதுதான் `ஈழம் - நேற்றும் இன்றும்' தொடர்.

67 பகுதிகளைக் கொண்ட இந்த ஈழ வரலாற்றுத் தொடர் மக்கள் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி பேரதிர்வை ஏற்படுத்தியது. நேயர்களின் வேண்டுகோளுக்கு இணங்க `ஈழம் - நேற்றும் இன்றும்' தொடர் இப்போது இரவு 10.30 மணிக்கு மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.




நன்றி: தினமணி

R.Latha
28th April 2009, 01:09 PM
மே தின கொண்டாட்டம்
உழைப்பாளர்களின் தினமாக கொண்டாடப்படும் மே 1-ந் தேதிக்கான சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்குகிறது, மக்கள் தொலைக்காட்சி. காலை 6.30 மணிக்கு உழைப்பாளர் நாள் நிகழ்ச்சியில் இருந்து தொடங்குகிறது.

உலகமெங்கும் பரந்திருக்கும் உழைப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லும் `நேரலை நிகழ்ச்சி' காலை 9 மணிக்கும், ரெயில் நிலையங்களில் பயணிகளின் சுமை சுமப்பவர்களைப் பற்றிய வாழ்வியலை பதிவு செய்யும் `சுமைதாங்கி நிகழ்ச்சி காலை 10.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.

மாலை 6 மணிக்கு உழைப்பாளர்களின் உரிமைகளை விவரிக்கும் புரட்சிப் பாடல்கள் ஒளிபரப்பாகிறது. மாலை 6.30 மணிக்கு உழைத்து வலுவிழந்தவர்களின் சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றி வைக்கும் `சின்ன சின்ன ஆசை' நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

மருத்துவர் ராமதாஸ் தன் இளமைக் காலத்தை திரும்பிப்பார்த்து தமிழ் மண்ணையும் மக்களையும் நலம் விசாரிக்கும் `ஊர்கோலம்' நிகழ்ச்சி இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

புதிய கோணங்கிகள் தங்கள் நகைச்சுவை முத்திரையோடு சமுதாய அவலங்களை தோலுரிக்கும் நிகழ்ச்சி இரவு 8.30 மணிக்கும், புரட்சியால் புதுமை நிகழ்ந்த நாடுகளின் வரலாற்றை பதிவு செய்யும் புரட்சிக்காவியம் `சிவந்த மண்' இரவு 9 மணிக்கும், சூடுபிடித்த தமிழக தேர்தல் களத்தை அலசும் நிகழ்ச்சி 9.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.

R.Latha
4th May 2009, 03:27 PM
பனி இளவரசி



மக்கள் தொலைக்காட்சியின் திரைப்பட விழாவில், இன்று மாலை 6.03 மணிக்கு ஒளிபரப்பாகும் ரஷ்யத் திரைப்படம் ``பனி இளவரசி' 1966ல் வெளியான இந்தத் திரைப்படத்தை கசான்ஸ்கி கென்னடி இயக்கியுள்ளார். கிறிஸ்டியன் ஆன்டர்சன் எழுதிய `தி ஸ்னோ குயின்' என்ற தேவதைக் கதையை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டது.

நல்ல சக்திக்கும், தீய சக்திக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை ஒரு சிறுவனும், சிறுமியும் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை மாயாஜாலக் காட்சிகளுடன் விளக்குகிறது படம். தமிழ் மொழி பெயர்ப்பு வாசகங்களோடு படத்தை காணலாம்.

நாளை மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் ரஷ்ய திரைப்படம் `போக்ரோவ்ஸிக் வாயில்'' 1982ல் வெளியான இத்திரைப்படத்தை இயக்கியவர் மிகைல் கோசாகோவ். நடிகரான மிகைல் கோசாகோவ் இயக்கியுள்ள 8 படங்களில் இப்படம் ஒரு முக்கியமான நகைச்சுவை படம்.

R.Latha
4th May 2009, 03:42 PM
பெண்ணே நீ!

மக்கள் தொலைக்காட்சியில் இன்று பகல் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி, `பெண்ணே நீ!' ஒரு சமூகத்தை முன்னெடுத்துச் செல்லும் ஆற்றல் பெற்றவள் பெண். அடுத்த தலை முறையை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிப்பவள்.

இத்தகைய பெண்கள் வெறும் புள்ளிக்கோலம் போடவும், சமைக்கவும் மட்டுமானவர்கள் அல்ல. அவள் பல தளங்களில் சிறகு விரித்துப் பறக்கும் ஆற்றல் பெற்றவள்.

அத்தகைய பெண்களின் வெற்றி அனுபவங்களை பகிர்ந்து கொள்வது, பெண்களிடம் உள்ள தனித்திறமைகளை வெளிக்கொணர்வது, பெண்களுக்கான சட்ட ஆலோசனைகளை தருவது, பெண்கள் நலம் சார்ந்த மருத்துவ ஆலோசனை தருவது என்று பெண்களின் பிரச்சினைகளையும் பெண்களின் பண்முக ஆற்றலையும் வெளிக் கொணரும் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிதான் ``பெண்ணே நீ!'

இது சாதித்த பெண்களை அறிமுகம் செய்யவும், சாதிக்கத் துடிப்பவர்களுக்கு அதற்கான ஆலோசனை வழங்கவும், பெண்கள் உரிமைகளுக்கான தகவல்களைத் தருவதுமான நிகழ்ச்சி. நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் யாழினி.

aanaa
9th May 2009, 06:27 PM
[tscii:03ef8a0b4e]

Uzhavar Arangam

(Makkal TV, Saturdays, 5 p.m.)

All discussions revolve around the Indian farmer in this programme. Issues such as ‘Per capita income is up, but has a farmer’s income gone up?’ and ‘The overall percentage of people below the poverty line has come down. But, what percentage of this is the farming fraternity?’ are discussed by two groups of participants. The show also highlights topics that concern a contemporary farmer — the use of genetically modified seeds and artificial fertilizers or the effects of power cuts on agro-productivity.

நன்றி: Hindu

[/tscii:03ef8a0b4e]

aanaa
9th May 2009, 06:28 PM
[tscii:e5f7a27cf0]


White Dew

(Makkal TV, Saturday, 6.03 p.m.)

As part of the Russian classics series, watch ‘White Dew’ this week. Fyodor Hodas, a war veteran and a respected man in his village, White Dews, is a widower and father of three grown up sons. The eldest is too practical, the youngest too cheerful, and the middle one works far away from home. The old man is constantly worried about his sons, especially the youngest. According to ‘Soviet Screen’ magazine, this was the best comedy film of 1984. The director is Igor Dobrolyubov.


நன்றி: Hindu [/tscii:e5f7a27cf0]

aanaa
9th May 2009, 06:28 PM
Kanavu Illam

(Makkal TV, Sunday, 9 a.m.)

This programme is for those who dream of having their own house. It provides useful information on how to choose flats or a property, home loan tips, precautions to take before going in for such loans, formalities involved and tips on interior decoration.

நன்றி: Hindu

R.Latha
11th May 2009, 11:10 AM
[tscii:5a8620df11]
சினிமா
‘பெண்கள் டாட் காம்'

மெகா டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் பெண்களுக்கான நிகழ்ச்சி ‘பெண்கள் டாட் காம்'.

பெண்களுக்குத் தேவையான அனைத்து தகவல்களையும் வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி, 375-வது எபிஸோடைக் கடந்துள்ளது.

பல பிரிவுகளாக ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் புதுசு புதுசுதான் பகுதியில் புதிய ரக ஆடைகள், அலங்கார நகைகள், அழகு சாதனப் பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை அறிமுகபடுத்துவதுடன் அவற்றை உபயோகப் படுத்துவது, பராமரிப்பது குறித்தும் சொல்லப்படுகிறது.

கலையும், கலைவண்ணமும் பகுதியில் வீட்டு அலங்கார பொருள்களை தயார் செய்வது குறித்தும், அம்மாயி சமையல் பகுதியில் பாரம்பரியம் மிக்க உணவு வகைகளை சமைப்பது குறித்தும், ருசியோ ருசி பகுதியில் புது விதமான உணவு வகைகள் தயார் செய்வது குறித்தும், கைத் தொழில் பகுதியில் சிறு தொழில் செய்வது எப்படி என்பது குறித்தும், டிப்ஸ் ஸ்பெஷல் பகுதியில் உடல் அழகைப் பராமரிப்பது குறித்தும் சொல்லித் தரப்படுகிறது.

வினோதினி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது.


http://www.dinamani.com/edition/story.aspx?Title=%22%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0 %AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9F%E0%AE% BE%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E 0%AF%8D&artid=j7LMA|zlxaI=&SectionID=SO2rbXgWYYc=&MainSectionID=SO2rbXgWYYc=&SEO=&SectionName=Np30OLxH4ag=[/tscii:5a8620df11]

R.Latha
11th May 2009, 12:06 PM
கனவு இல்லம்

மக்கள் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி, `கனவு இல்லம்' சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற மக்களின் கனவை நனவாக்கும் வழிகளை சொல்லித் தரும் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிதான் ``கனவு இல்லம்''.

சொந்த வீடு வாங்குபவர்கள் கவனிக்க வேண்டியவை என்ன... நிலம் வாங்கும் போது எப்படி எல்லாம் ஏமாற்றப்படலாம்... வீட்டுக்கடன் வாங்க வழிகள் என்னென்ன... எந்தெந்த வங்கிகள் வீட்டுக் கடன் தருகின்றன... வீடு கட்டும் போது கவனிக்க வேண்டியவைகள் என்ன...

இப்படி நிலம், வீடு சம்பந்தமான அனைத்து தகவல்களையும் வீட்டு வரவேற்பறைக்குள் கொண்டு தரும் நிகழ்ச்சியே ``கனவு இல்லம்''.

aanaa
17th May 2009, 06:12 PM
ரஷிய திரைப்படம்



மக்கள் தொலைக்காட்சியின் உலகத் திரைப்பட வரிசையில் நாளை ஒளிபரப்பாகும் ரஷியத் திரைப்படம் பழி. 1966-ல் "தி எலுசிங் அவெஞ்சர்ஸ்'' என்ற பெயரில் ரஷியாவில் வெளியான இந்தப் படத்தை தயாரித்து இயக்கியிருப்பவர், கியோசாயான்எட்மண்ட். ரஷியாவில் நடைபெற்ற உள்நாட்டு போரை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது இத்திரைப்படம்.

தமிழ் மொழிபெயர்ப்பு வாசகங்களுடன் நாளை மதியம் 2 மணிக்கு இந்த திரைப்படத்தை காணலாம்.

நன்றி: தினதந்தி

R.Latha
19th May 2009, 12:19 PM
மக்கள் தீர்ப்பு-2009



மக்கள் தொலைக்காட்சி தேர்தல் முடிவையொட்டி இன்று காலை 7.30 மணி முதல் இரவு 8 மணி வரை "மக்கள் தீர்ப்பு'' என்ற சிறப்பு நேரலை நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது.

இந்த நேரலை நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள், அரசியல் பார்வையாளர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று தேர்தல் முடிவுகள் குறித்து விவாதிக்க உள்ளனர். தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் இருந்து, மக்கள் செய்தியாளர்கள் நேரலையில் தேர்தல் நிலவரங்களை உடனுக்குடன் தெரிவிக்க உள்ளனர். ஒட்டுமொத்த கண்களும் உற்றுநோக்கும் தலைநகர் டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்தும் துல்லியமான தேர்தல் முடிவுகளை செய்தியாளர்கள் அறிவிக்க உள்ளனர்.

நேரலையின் இடையிடையே தேர்தல் நிலவரம் குறித்த 20-க்கும் மேற்பட்ட சிறப்புச் செய்தி அறிக்கைகளும் இடம் பெற உள்ளன. இதுதவிர வழக்கம்போல் இடம்பெறும் செய்திகளில் தேர்தல் முடிவுகள் குறித்த முழு தகவல்களும் ஒளிபரப்பாக உள்ளன.

aanaa
6th June 2009, 07:41 PM
பட்டாம் பூச்சி



10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் நேரலையில் விளையாடும் கலகலப்பான விளையாட்டு நிகழ்ச்சி, `பட்டாம் பூச்சி'.

கிராமங்களில் குழந்தைகள் இன்றும் விளையாடும் பிரசித்தி பெற்ற விளையாட்டுகளில், `கோழி பற பற, கொக்கு பற பற' விளையாட்டும் ஒன்று. இந்த விளையாட்டை நிகழ்ச்சித் தொகுப்பாளரோடு குழந்தைகள் விளையாடுவார்கள். எருமை என்பார் தொகுப்பாளர். `பற பற' என்று சொன்னால் தவறு. போட்டியிலிருந்து வெளியேற வேண்டும்.

அடுத்து வினோத உருவம் சுற்று. இரண்டு உருவங்கள் இணைந்து ஒன்றாக இருக்கும். அது எந்தெந்த உருவங்கள் என்று சரியாக சொல்ல வேண்டும்.

அடுத்து கட்டத்துக்குள் மறைந்திருக்கும் பிரபலம் யார் என்று கண்டுபிடித்து சொல்ல வேண்டும். சரியாகச் சொன்னால் கைக்கடிகாரம், குறுந்தகடு, பள்ளி பை, தண்ணீர் குடுவை என்று பல பரிசுகளை வெல்லலாம்.

திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5.30 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் ``பட்டாம்பூச்சி'' சிறகடிக்கும்.



நன்றி: தினதந்தி

aanaa
6th June 2009, 07:42 PM
முகவரி



சிறு வணிகர்களும், குறு வணிகர்களும் தங்கள் பொருட்களை சந்தைப் படுத்துவதற்கு மக்கள் தொலைக்காட்சி அமைத்து தந்திருக்கும் களம் `முகவரி'. திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 12.30 க்கு ஒளிபரப்பாகிறது.

பெரிய நிறுவனங்கள் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் தொகையை விளம்பரத்துக்காக மட்டும் செலவிடுகின்றன. ஆனால் சிறு வணிகர்களுக்கும், குறு வணிகர்களுக்கும் அத்தனை பெரிய தொகையை முடக்குவது இயலாத காரியம்.

அதே நேரத்தில் சந்தையில் தங்கள் பொருளையும் சந்தைப்படுத்த வேண்டிய கட்டாயமும், பெரிய நிறுவனங்களின் போட்டியில் தாக்குப் பிடிக்க வேண்டிய அவசியமும் உண்டு.

இப்படிப்பட்ட சூழலில் - சிறு வணிகர்கள் விளம்பரம் செய்து பயனடைவதற்கான களம்தான் ``முகவரி''.




நன்றி: தினதந்தி

aanaa
27th June 2009, 06:33 PM
வேலைவாய்ப்புத் தகவல்கள்



இன்றைக்கும் படிக்கும் மாணவர்களிடம் வேலை என்றதும் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த வேலை மட்டும்தான் கண்முன் விரிகிறது. ஆனால் அதையும் தாண்டி ஆயிரம் வேலை இருக்கிறது.

பறக்கும் விமானம், தண்ணீரில் போகும் கப்பல், ஹோட்டல், தோல்பதனிடுதல், அச்சுத்துறை என்று பல துறைகள். ஒவ்வொரு துறையிலும் எப்போதும் திறமையான ஆட்களுக்கான தேவைகள் இருந்து கொண்டே இருக்கின்றன.

எந்த வேலைக்கு நாட்டிலும், உலக அளவிலும் தேவை அதிகமாக இருக்கிறது... முதுநிலை பட்டப் படிப்பு படித்தவர்களும் கூடுதலாக எதைப் படித்தால் வேலை கிடைப்பது சுலபமாகும் என்று கல்வியாளர்கள் பங்கேற்று நேரலையில் தெளிவுபடுத்தும் நிகழ்ச்சி ``வேலைவாய்ப்புத் தகவல்கள்''.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் ராம்குமார் சிங்காரம். வியாழன் தோறும் காலை 11 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சியை காணலாம்.


நன்றி: தினதந்தி

aanaa
5th July 2009, 06:16 PM
மக்கள் தொலைக்காட்சியில் பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி, `மண்மணம்.' காடு கழனிகளில், நீர் நிலைகளில் களத்துமேடுகளில் உழைத்துக் கொண்டிருக்கும் மக்களின் மத்தியில் நடைபெறும் விளையாட்டு நிகழ்ச்சி இது.

ஊரகப் பகுதி மக்கள் உழைக்கும் களங்களுக்கு சென்று சின்னச் சின்ன விளையாட்டுகளை போட்டியாக வைத்து பரிசு கொடுக்கிறது, இந்த "மண்மணம்'' நிகழ்ச்சி. அத்துடன் நாட்டுப்புற பணி பாட்டுக் கூறுகளை பதிவு செய்யும் நிகழ்ச்சியின் ஊடாக, நாட்டுப்புற கலை வடிவங்களையும், நாட்டுப்புற கலைஞர்களையும் அறிமுகப்படுத்தி அவர்களை உற்சாகப்படுத்துகிறது இந்த "மண் மணம்'' நிகழ்ச்சி.

aanaa
5th July 2009, 06:20 PM
[tscii:950565ec5f]Manmanam

(Makkal TV, Saturdays, 2 p.m.)

A village a week… that’s what ‘Manmanam’ is all about. This programme showcases the different folk arts of Tamil Nadu such as Thappaattam, Karagaattam, Oyilaattam and Mayilaattam. Besides, traditional games are discussed.

The villagers narrate interesting tales and their local legacies to add that native flavour. [/tscii:950565ec5f]

aanaa
12th July 2009, 05:14 PM
மருத்துவ நேரம்



மக்கள் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும்

பிற்பகல் 3.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நேரலை நிகழ்ச்சி, `மருத்துவ நேரம்'.

எல்லோருக்குமே ஆரோக்கியமாக வாழ ஆசை இருக்கிறது. ஆனால் பல்வேறு வியாதிகளால் பல இன்னல்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறோம்.

ஏன் வியாதி வருகிறது... உணவு முறையில் ஏற்பட்ட பிரச்சினையா? அல்லது சுற்றுச்சூழலா? அல்லது பரம்பரை வியாதியா? இப்படி பல்வேறு ஐயங்கள் எல்லோருக்கும் இருக்கிறது.

அந்த ஐயங்களை தெளிவுபடுத்துவதற்காக தொடங்கப்பட்ட நிகழ்ச்சிதான் `மருத்துவ நேரம்'

துறை சார்ந்த மருத்துவ நிபுணர்கள் நேரலையில் தோன்றி, நேயர்களின் நோய் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கிறார்கள்.




நன்றி: தினதந்தி

aanaa
12th July 2009, 05:15 PM
தந்திர மாலை



சனிக்கிழமைதோறும் இரவு 7 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி `தந்திரமாலை.' மேஜிக்கில் கின்னஸ் சாதனை செய்த நடிகர் அலெக்ஸ் இந்த நிகழ்ச்சியை வழங்குகிறார்.

விதவிதமான மேஜிக்கை பார்க்கும் போது `இது எப்படி சாத்தியம்...' என்ற வியப்பு நம்மில் பலருக்கும் ஏற்படுகிறது, இந்த மேஜிக் நிகழ்ச்சியில் ஒரு பெண்ணை இரண்டு துண்டாக வெட்டிக் காட்டுவது... தலையை தனியே பிரிப்பது... பூவிலிருந்து பூனை வரவைப்பது.. மெழுகுவர்த்தியை புறாவாக்குவது என்று விதவிதமான மாயா ஜாலங்களை செய்து காட்டுகிறார், அலெக்ஸ்.




நன்றி: தினதந்தி

aanaa
19th July 2009, 01:24 AM
திசைகள்



மக்கள் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினந்தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி `திசைகள்'.

இது தடுப்பூசி, கடுதாசி, பொய்திகள், சல்லடை, விடாது கருப்பு, ஒலி பெருக்கி, அன்று என அரை மணி நேரத்தில் விறுவிறுப்பாக ஏழு பகுதிகளாக வருகிறது. அன்றாட நாட்டு நடப்புகளை சிந்தனையை தூண்டும் விதத்தில் சுவாரசியமாக அலசுகிறது, இந்த திசைகள். அரசியல், சமூகம் சார்ந்த நிகழ்வுகளை புதிய பரிமாணத்தில் காணலாம்.



நன்றி: தினதந்தி

aanaa
25th July 2009, 08:15 PM
தொழில் வளம்



வீணை உருவாக்குவது எப்படி... காதுக்கு இனிய நாதம் எழுப்பும் வீணை எந்த மரத்தில் எப்படி உருவாகிறது... ஆலய மணி எப்படி செய்யப்படுகிறது... வாசனைப் பொருட்கள் எப்படி தயாராகிறது...

செய்முறை விளக்கத்தோடு ஒவ்வொரு தொழிலையும் சொல்லித் தரும் நிகழ்ச்சி.

அறிவுக்கு விருந்து. காண்பதற்கு வியப்பு. வளமான தொழில் உள்ள நாடு வல்லரசு. அதை உரக்கச் சொல்லும் நிகழ்ச்சி. இன்று இரவு 7.30 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சியை காணலாம்.



நன்றி: தினதந்தி

aanaa
1st August 2009, 09:33 PM
உரிமைக்குரல்



மக்கள் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் ஒளிபரப்பாகும் `உரிமைக்குரல்' நிகழ்ச்சி வித்தியாசமான குரலாக ஒலிக்கிறது. தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்குச் சென்று மக்களின் மனங்களை பதிவு செய்யும் இந்நிகழ்ச்சியை பிரபல பேச்சாளரும், பேராசிரியருமான ராமச்சந்திரன் இயக்குகிறார். சமூக பொருளாதார பண்பாட்டு ரீதியான பிரச்சினைகள், அவற்றில் அன்றாடம் குடும்பங்களில் பிரதிபலிக்கும் பிரச்சினைகளை விவாதப் பொருளாக்குகிறது இந்நிகழ்ச்சி.

பங்கேற்பாளர்கள் வாதத்திறமையுடன் நகைச்சுவை ததும்ப தங்கள் கருத்துக்களை முன்வைக்கிறார்கள். இறுதியாக நிகழ்ச்சியின் நடுநாயகர் பிரச்சினைகளின் தன்மைக்குத்தக்கவாறு இறுதிக்கருத்தை எடுத்துரைக்கிறார்.

ஞாயிறு தோறும் காலை 10.30 மணிக்கு இந்நிகழ்ச்சியை காணலாம்.

நன்றி: தினதந்தி