PDA

View Full Version : Neeya Naana? - Vijay TV

joe
22nd October 2007, 03:36 PM
One of the better programms compare to usual 'emotional' and 'melodrama' Arattai Arangam type programmes.

GopiNath is doing a wonderful Job ..Spontenious ,knowledge ,balancing both sides and informative.

MrJudge
22nd October 2007, 03:45 PM
Joe,

Yes, this is a good one. Yesterday's program was even better (it was about Doctor's Giramiya sevai thittam).

raaja_rasigan
22nd October 2007, 04:08 PM
sometimes this programme has lots of humour

tvsankar
22nd October 2007, 08:07 PM
Dear joe,
Thanks for this topic.Neenda naatkalaga indha programme patri solla asai.

better illai Best programe nu feel panren.

Gopinath romba nalla nadatharar.

Idhu varai vandha topic il enaku piditha topic.

1.Life il yaruku mukiya idam? Friends or Relatives??

Idhai Gopinath muditha vidham miga arumai.

Friends enru pesiyavargalidam sonnar - Relatives madhiri pazhagiya friends ai than ipadi feel panreenga.

Relatives nu sonnavargalidam sonnar - Friends madhiri ungalai treat panniya relatives ai than neenga solreenga..

Very Good Judgement..

So life ku Friends and Relatives iruvarumae mukiyam enru mudithar.

tvsankar
22nd October 2007, 08:17 PM
Another nice topic

Early morning la ezhundhukaradhu bettera or

Late a ezhundhukaradhu bettera?

Indha topic ku - 2 side members aiyum - padikum students - marks enru compare panni - late and early - 2m ok dhan - late a ezhundhukaradhu onnum bad illai enru mudithar Gopinath.

Gopinath nadathum vidhathil ennai kavarndha point

Yaraga irundhalum Personal attack - adhu jolly aga irundhalum permit pannamal - unga opinion and ungalai patri sollunga enru correct pannum vidham- He is a Nice Guy

Roshan
23rd October 2007, 11:20 AM

My favourite program too. No emotional dramas like Visu's arattai arangam or no excessive humour like Liyoni and Solomon Paappayya(but need to accept that those program cater to a different group of audience). It strikes a good balance, with Gopinath's excellent way of conducting the show. Friendly, assertive, to the point, controlled emotions, not trying to force his thoughts and opinions on to others ( unlikeVisu) and always with a cheerful mood and a pleasant smile - Gopinath really stands out. BTW, is he a Malayalee?

Waking up early or late doesnt make any difference and this doesnt have any connection to one's intelligence level-nu superb-a, points-oda prove paNNi ennai mAthiri late birds-ai santhOshapaduthunAr :D :redjump: :boo:

MrJudge
23rd October 2007, 11:21 AM
Another nice topic

Early morning la ezhundhukaradhu bettera or

Late a ezhundhukaradhu bettera?

Indha topic ku - 2 side members aiyum - padikum students - marks enru compare panni - late and early - 2m ok dhan - late a ezhundhukaradhu onnum bad illai enru mudithar Gopinath.

Gopinath nadathum vidhathil ennai kavarndha point

Yaraga irundhalum Personal attack - adhu jolly aga irundhalum permit pannamal - unga opinion and ungalai patri sollunga enru correct pannum vidham- He is a Nice Guy

intha episode konjam udhachadhu. Paavam early risers couldn't present their case best.

Sanjeevi
23rd October 2007, 11:51 AM
Saw recent Neeya Naana, I was quite surprised by Dr. Anbumani Ramadoss who somewhat rocked the show. Previously I had no respect for him.

MrJudge
23rd October 2007, 01:35 PM
:)

MrJudge
23rd October 2007, 01:35 PM
Saw recent Neeya Naana, I was quite surprised by Dr. Anbumani Ramadoss who somewhat rocked the show. Previously I had no respect for him.

Yeah, me too surprised by his calm, composure and ofcourse his valid points.

tvsankar
23rd October 2007, 02:04 PM
Dear Roshan and Mr.judge,

Nanum konjam late a ezhundhpen dhan. So enakum indha topic um mudivu romba pidichadhu.

Dear Sanjeevi.

Dr.Anbumani sonna unmaiyana oru nijam - Software ai USA udan compare pannapadum India Health care il - Afghanisthan or South Africa level ku than compare panna padugiradhu enru sonnar.

Bihar pondra pin thangiya gramathuku velai seiya pogiren enru sonnavargalin applications - Dr.Anbumani - thanaga avargalidam senru vangi kondadhil - Andha idangalin mel avaruku ulla akkaraiyai eduthu kaatiyadhu.

Another Interesting topic.

Girls and Boys - in Love - Oru kadhal - Pala Kadhal.

Sonna ellarukum vidhayasamana anubavam dhan.
Inru irukum ulaga maga prachanai - Love and Love Failure dhan. :lol:

Roshan
23rd October 2007, 03:57 PM
Dear Roshan and Mr.judge,

Nanum konjam late a ezhundhpen dhan. So enakum indha topic um mudivu romba pidichadhu.

But as Mr.Judge said, there were some important points missed from the 'early risers' side. Though I am not one, I am certainly aware of the 'benefits' of waking up early and certain disadvantages of getting up late. Atha sariyAga combine paNNalannu enakkum thOnuchu.

Sanguine Sridhar
23rd October 2007, 04:24 PM
I am not regular viewer of NN, but I have watched couple of episodes. In my opinion some episodes are absolutely one-sided, sad that the weaker side was not given much chance.

One example Prithiviraj a.k.a Babuloo was in that show he simply dominated that show along with Gopinath. Same thing happened in another episode. So I stopped watching it!

Enna thaan nyaymana karuthu jeikanum endraalum, opponent enna thaan solla varanga-nu kooda seriya ketka mudiyala!

Roshan
23rd October 2007, 05:29 PM

Sridhar,

In that particular episode (mutpagal seyyin pitpagal viLaiyum), as you said, it was quite one sided because the special guest (some saamiyaar) who was invited to speak in favour of the topic was quite weak in his arguments and there was no clarity in his speach. Even though Prithvi aka Babloo had nothing sensible to say against the topic, as usual ( :lol: ) his screaming and the emotional drama he created undermined the whole thing I felt.

But athukkAga neenga progam pAkkuRatha vittathu thappu :P :notthatway:

mr_karthik
23rd October 2007, 06:36 PM
Programme nalaathaan irukku. No doubt, Gopinath arumaiyaa nadathukiraar.

But, debate endraal edhaavathu oru mudivu theerkamaaga irukkanum. Pattimandram endraal irandil oru mudivuthaan sarinnu dhairiyamaa theerpu sollanum.

adhai vittuttu, idhuvum sarithaan, adhuvum sarithaan endru judgement koduppathu sariyaana 'sodhappal'.

MrJudge
23rd October 2007, 07:46 PM
Dear Roshan and Mr.judge,

Nanum konjam late a ezhundhpen dhan. So enakum indha topic um mudivu romba pidichadhu.

But as Mr.Judge said, there were some important points missed from the 'early risers' side. Though I am not one, I am certainly aware of the 'benefits' of waking up early and certain disadvantages of getting up late. Atha sariyAga combine paNNalannu enakkum thOnuchu.

Count me in for not-early-risers. :)

The guest was not a regular white collar job holder. He is from cine industry, but the majority of the people argued that day are white collars. Creative people have their own comfort to finish their job in their own time. Out of total population, 1% may be engaged in that industry. Rest 99% depend on routine work that has to be done on time set by others. There early-risers win most of the time. Take any top CEOs, Managing Directors, Political leaders of any party or Sportsmen, most of them are early risers.

One early-riser even went on to say that I will be big in 10 years time and not the other guy. What a senseless statement that is! That pulled down the whole argument.

Roshan
23rd October 2007, 11:22 PM
Programme nalaathaan irukku. No doubt, Gopinath arumaiyaa nadathukiraar.

But, debate endraal edhaavathu oru mudivu theerkamaaga irukkanum. Pattimandram endraal irandil oru mudivuthaan sarinnu dhairiyamaa theerpu sollanum.

adhai vittuttu, idhuvum sarithaan, adhuvum sarithaan endru judgement koduppathu sariyaana 'sodhappal'.

Naan aRinthavarai athu oru debate program alla, but a talk show that analyses the pros and cons of both sides by providing valuable and analytical information. 'Debate' pArkka virumbugiRavargaLukku irukkavE irukkiRargaL Liyoni, Solomon Pappayya pOnRavargaL, illAvittAl they can switch on to Visu or TR. IMO, this program is not for 'debate' lovers :)

Mr.Judge, you are right. That guy screwed up the whole thing and I was like :evil:

MrJudge
23rd October 2007, 11:33 PM
Dr.Anbumani sonna unmaiyana oru nijam - Software ai USA udan compare pannapadum India Health care il - Afghanisthan or South Africa level ku than compare panna padugiradhu enru sonnar.

itha kettathum konjam kashtama thaan irunthathu, but that is the sorry state of our healthcare system. Our GHs are so bad and the doctors working there are even worse. The same doctors while visiting private hospitals lick patients' b**ts. Money plays its own games always.

I have not known much about Anbumani Ramadoss before, neither heard his speeches. He looked sensible. I wish he improves the healthcare system especially GHs where poor guys go for treatment because they too deserve better medical care.

MrJudge
23rd October 2007, 11:43 PM
Naan aRinthavarai athu oru debate program alla, but a talk show that analyses the pros and cons of both sides by providing valuable and analytical information. 'Debate' pArkka virumbugiRavargaLukku irukkavE irukkiRargaL Liyoni, Solomon Pappayya pOnRavargaL, illAvittAl they can switch on to Visu or TR. IMO, this program is not for 'debate' lovers :)

Yeah, Roshan. This is not like a pattimandram where issues end with some theerpu. This program definitely brings out different people's opinions.

Mr.Judge, you are right. That guy screwed up the whole thing and I was like :evil:

Yeah, he was repeating that twice :twisted:

joe
24th October 2007, 11:30 AM
BTW, is he a Malayalee?

I don't think so ..It seems ,He is from Pudukottai.

Btw,What made you to think so? Is his pronounciation has malayaLam shade? :roll: or you confused with 'GrandMaster' program :lol:

Roshan
24th October 2007, 12:52 PM
BTW, is he a Malayalee?

I don't think so ..It seems ,He is from Pudukottai.

Btw,What made you to think so? Is his pronounciation has malayaLam shade? :roll: or you confused with 'GrandMaster' program :lol:

Yeah he slightly has a Mallu accent or perhaps the way he speaks is bit different. Moreover his looks are more of a Mallu than of a Tamil :P

PS: Another nice thing in him is that he is (also) a person who doesnt mix English when speaking.

I dont watch Grand Master because I find it a bit boring. And most of the time I dont understand what 'Grand Master' says :lol: :oops:

mr_karthik
24th October 2007, 03:34 PM
PS: Another nice thing in him is that he is (also) a person who doesnt mix English when speaking.

Because he is not Tamil Cinema Actress. :lol: :lol:

tvsankar
28th November 2007, 06:17 PM
Indha thread arambitha pin, thirushti madhiri 2 weeks aga programe avvalavaga nanraga illai.

Daily Rasi palan - Nambikai iruka ?? Illaiya??

Gopi yum interest aga nadathiya madhiri theriyavillai.

But last week topic was very nice. Konjam interest aga irundhadhu.

TAmizh mozhi - other languages. Exact aga topic ennavenru theiryavillai.But it goes like this.

Dear Karthick,
Roshan wrote:
PS: Another nice thing in him is that he is (also) a person who doesnt mix English when speaking.

Because he is not Tamil Cinema Actress.
Dear Karthick,
Ungalin indha karuthil oru chinna muranpadu.
Edho Tamil cine actress mattum dhan english mix panra madhiri solli iurkeenga....

Tamil pengal ellarum dhan ippadi english mix panni pesaranga.

Indha karuthuku - last week programe il answer kidaithadhu.

One ques asked by Gopi.

Endha language karanga avanga mozhiyai nalla pesaranga???

Anegamaga elalrin replyum - Malaiyalees dhan.

Next - Hindikaranga.

Appadi sollum podhu, about tamilians,

Niriaya per sonnanga - Ivanga ivanga languageai seriya pesaradhu illai.

Niraiya english mix panranga.Tamil padika theiryaradhu ilali.

Oru Girl - Malaiyalee solranga - "Enaku thamizh padika theiryum..

Ana tamil natla porandhu ., valandha tamil karangaluku tamil padika theiryadhu......

Yaruku mozhi patru adhigam iruku??

Niraiya perin bhadhil -- Tamizh karangaluku than........

One more ques by Gopi

Endha language karanga englilsh nalla pesaranga??

Angae irundha anaivarin bhadhilum - Tamilians dhan English ai romba nalla pesaranga.Ivargalin
eng pronounciation romba nalla irukum...

Hmmm.... Idhuku enna solreenga Karthick???

aanaa
28th November 2007, 08:02 PM
School system in Tamil Nadu has to be changed

All parents like to get an admission in English school / Convent to their children not in Govt public school.

Tamil nada - Tamilians thinking its a fashion speaking in Tamish.

British rulers left in 1946 but not moham - adimai

tvsankar
28th November 2007, 08:53 PM
ஆஆனா,
ஆங்கிலம் கற்றுக் கொள்வது தவறு இல்லை.அதுவும் இப்போது இருக்கும் சூழ்நிலையில், வேலைக்காக ஆங்கிலம் அவசியம் ஆகி விட்டது.
நம் தாய் மொழியில் பேசுவது என்பது கேவலமான விஷயம் இல்லை. இதை நாம் உணர வேண்டும்.நம் குழந்தைகளுக்கும் உணர்த்த வேண்டும்.

மற்ற மொழிக்காரர்களிடம் பேச நேர்ந்தால் கண்டிப்பாக ஆங்கிலம் அவசியம்.

ஆனால், நம் தாய்மொழியில் பேசுவது கேவலம் இல்லை என்ற
உணர்வு தமிழர்களிடம் வந்தால் போதுமானது.
அன்புடன்,
உஷா ஷங்கர்.

joe
29th November 2007, 07:09 AM
ஆனால், நம் தாய்மொழியில் பேசுவது கேவலம் இல்லை என்ற
உணர்வு தமிழர்களிடம் வந்தால் போதுமானது.

போதாது ..தமிழ்ர்களிடையே பேசிக்கொள்ளும் போது தமிழில் பேசாதிருப்பது கேவலம் என்ற உணர்வு தமிழர்களிடையே வர வேண்டும்.

aanaa
29th November 2007, 09:19 AM
சைனாக் காரனிடம் கற்றுக் கொள்ளவேண்டியது நிறையவே உள்ளது.

tvsankar
29th November 2007, 10:45 AM
ஆனால், நம் தாய்மொழியில் பேசுவது கேவலம் இல்லை என்ற
உணர்வு தமிழர்களிடம் வந்தால் போதுமானது.

போதாது ..தமிழ்ர்களிடையே பேசிக்கொள்ளும் போது தமிழில் பேசாதிருப்பது கேவலம் என்ற உணர்வு தமிழர்களிடையே வர வேண்டும்.

Jஒஎ,
நன்றாகச் சொன்னீர்கள்.

கடந்த வார நிகழ்ச்சியில், மற்றொரு கேள்வி.

எந்த மொழிக்காரர்கள் தங்கள் மொழியை நன்றாகப்பேசுகிறார்கள்??

அனேகம் பேரின் பதில்

மலையாளிகள் தங்கள் மொழியை நன்றாகப் பேசுகிறார்கள்.
அடுத்து,

ஹிந்தி மொழியினர் ஹிந்தியை நன்நாகப்ப்பேசுகிறார்கள்.அலுவலக வார்த்தைகளைக் (லெட்ஜெர், ஃபைல் போன்ற வார்த்தைகலைக் கூட அவர்க்ள்மொழியில் தான் பேசுகிறார்கள்.ஆங்கிலதைப் பயன்படுத்துவதில்லை.

Sanjeevi
29th November 2007, 10:55 AM
என்னைப்பொறுத்தவரையில் இது இக்கரைக்கு அக்கரை பச்சை என்றுதான் இருக்கிறது.

வடநாட்டில் அல்லது கர்நாடகாவில் போய் கேட்டால் தமிழ் என்று சொல்வார்கள்

sudha india
29th November 2007, 02:40 PM
In this fast world, nobody speaks a language completely.
Everyone mix english words here and there. It has become a normal practice - for easy usage and understanding.

Malayalees also use a lot of english words, however pronounce english in a malayalam accent. Office, lOdge, etc.

Even in villages people use certain english words (even when they dont know english)

So my personal feeling is that using english words while talking is not wrong or does not mean one has no Thaimozhipatru.

But when people speak Tamil with english accent (as though they just landed into Tamilnadu from an european country) I get sick.
- Namma thamizh TV channel anchors, especially !!

BTW, there was an episode on the Cultural marriages. Was surprised when girls openly said that Thali is just a metal and nothing special. So many such sentiments were shattered in that episode, The guts the youngsters have now-a-days is really amazing.

sudha india
29th November 2007, 02:44 PM

crajkumar_be
26th December 2007, 09:16 AM
Yet another annoying talk show and an irritating host :hammer:

Just when you think it can't get lower, here they come up with the "vEtti" episode :banghead:

However, the promo had this hilarious (IMO) line, delivered in a deadpan serious manner "enna poruthavaraikkum vetti vandhu grilfriend madhiri.. eppo kazhandukkum nu theriyadhu!" :lol:

thilak4life
26th December 2007, 09:34 AM
Heard that the host is a big ^$%@#. And the whole show is staged beforehand. But I peep occasionally.

R.Latha
11th February 2008, 12:11 PM
காதலர் தினத்தை முன்னிட்டு விஜய் டி.வி.யில், `திறந்திடு சீசேம்' மற்றும் `நீயா நானா' ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளும் சிறப்பு நிகழ்ச்சியாக இடம் பெறுகின்றன.

திறந்திடு சீசேம் நிகழ்ச்சியில், அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விஜய் ஆதிராஜ், தான் காதலித்து மணம் முடித்த ரக்ஷனாவை அரங்கத்திற்கு அழைத்து வருகிறார். இந்நிகழ்ச்சி நாளை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

நீயா நானா நிகழ்ச்சியில் `காதலில் அதிக பயந்தாங்கொள்ளிகள் யார் - ஆண்களா? பெண்களா?' எனும் தலைப்பில் விவாதம் நடைபெறுகிறது. காதல் வயப்படும் ஒரு ஆண்-பெண்ணிடையே தோன்றும் எதிர்பார்ப்புகள், ஈர்ப்பு, காதலிக்கும் நபருடைய பொருட்களை சேகரித்து வைக்கும் பழக்கம் போன்றவைகளைப் பற்றி கலகலப்பான முறையில் விவாதம் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, காதலித்து மணமுடித்த டிங்கு மற்றும் அவரின் மனைவி சுப்ரியா ஆகிய இருவரும் கலந்து கொள்கின்றனர். இந்நிகழ்ச்சி நாளை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

selvakumar
17th March 2008, 08:46 AM
Yesterday, the episode was quite good with both sides accepting the -ves and +ves. The special guests had nothing much to do. No fights and all.
"Bosses vs Employees" was the topic. Initially, I thought GOPI is supporting the employees. Later on, he changed the course of the discussion well.

tvsankar
17th March 2008, 12:21 PM

About Gopinath - As usual, avar rendu side um kettutu, azhagana mudivai sonnar.

Analum, anegamga niriaya time employees ku support aga niraiya kettar.

Mukkiya vishayam - Indha employees dhan nalaiya BOSS. Nijamdhanae...

employees in compliant about BOSS - Boss ellam - self improvement kanga technicalai solli tharuvadhu illai. Idhuvum nijam dhanae......

joe
17th March 2008, 12:27 PM
Yet another annoying talk show and an irritating host :hammer:

Don't you think it is far far better than so-called காட்டுக்கத்தல் ,உணர்ச்சி சுரண்டல் அரட்டை அரங்கங்கள் ? :roll:

littlemaster1982
17th March 2008, 01:26 PM
Yet another annoying talk show and an irritating host :hammer:

Don't you think it is far far better than so-called காட்டுக்கத்தல் ,உணர்ச்சி சுரண்டல் அரட்டை அரங்கங்கள் ? :roll:

Yeah, this is much much better than Makkal/Arattai Arangam.

Shakthiprabha.
17th March 2008, 01:37 PM
yup great show :thumbsup:

tvsankar
17th March 2008, 01:43 PM
varatu kathal
cinemathanama pechu

enru illamal,

logical question and answer

adhai Gopi - correct aga pannuvar.

edhavadhu opinion kettal - Ungalin opinion matum sollunga. podhuvaga solla vendam.. like that. I like it.

R.Latha
5th January 2009, 12:13 PM
உண்மைதான் உலகில் மிக அழகானது

நீயா-நானா?'கோபிநாத்

தலைப்பைப் படித்து விட்டீர்களா? `நீயா-நானா' நிகழ்ச்சியின் வெற்றி குறித்து கோபிநாத்திடம் கேட்டபொழுது, அவர் அளித்த பதில் கமெண்ட் தான் இது. சமீபத்தில் ஒளிபரப்பான `நீயா-நானா?' நிகழ்ச்சியில் கணவன்- மனைவி, மனம் திறந்து தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்களா? என்பது குறித்த எபிஸோட் பெண்கள் மனதை ரொம்பவே கவர்ந்திருக்கிறது.

இந்த டாக் ஷோவுக்கு வருபவர்கள், தங்கள் மனதில் பட்டதையெல்லாம் பேச நாங்கள் அனுமதிப்பதில்லை. அவர்களை மனம் திறந்து பேச வைக்கிறோம். அதனால் நிகழ்ச்சி முடியும் போது இருவேறு நிலைகளில் இருக்கும் மனிதர்களுக்கு இடையில் ஒரு நல்ல புரிதல் உண்டாகிறது. அதுமட்டுமில்லை, இந்த டாக்ஷோ, இளைஞர்களுக்கான மிகப் பெரிய பயிற்சிப் பட்டறையாக இருக்கும். மனிதர்கள் கூடியிருக்கும் ஒரு சபையில் தாங்கள் சொல்ல வந்த கருத்துக்களைத் தெளிவாகவும், சுருக்கமாகவும் சொல்வதற்கு இந்த `டாக்-ஷோ' மிகவும் உதவும் என்று நினைக்கிறேன்'' என்றவரிடம், ``எல்லாம் சரி... ஆனால் கணவன்-மனைவி இருவருமே ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினால் `ஷோ' முடிந்த பிறகு அவர்கள் தங்களுடைய எதார்த்த வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டுமே. இது அவர்கள் வாழ்க்கைக்குள் ஒரு நெருடலை ஏற்படுத்தாதா?'' என்று கேட்டோம்.

கண்டிப்பாகக் கிடையாது. ஏனென்றால், இந்த ஷோவில் கலந்து கொண்டு திரும்பும் தம்பதிகள் தங்களுக்குள் ஒரு தெளிவை ஏற்படுத்திக் கொண்டு தான் வீடு திரும்புகிறார்கள். எனக்கு ஃபோன் செய்து அவ்வப்போது பேசுகிறார்கசள். இந்த டாக்-ஷோவை நடத்துவது எனக்குக் கிடைத்த பாக்கியம்'' என்று நெகிழ்ந்து போய் பேசும் கோபிநாத், வரும் ஜனவரி மாதத்தில் கம்யூனிகேஷன் ஸ்கில்ஸை வளர்க்க உதவும் பயிற்சிப் பள்ளியைத் துவக்க இருக்கிறார். அது மட்டுமில்லை, `பிராட் காஸ்டிங்....'' சம்பந்தமான புத்தகம் ஒன்றையும் வெளியிட இருக்கிறார்.

கலக்குங்க பாஸ்....
குமுதம் சிநேகிதி 5.1.09

R.Latha
6th January 2009, 02:59 PM
தொலைக்காட்சித் தொகுப்பாளர்கள் என்றாலே அதற்கு சில எழுதப்படாத விதிகள் இருக்கிறது. பெண்-ணாய் இருக்கவேண்டும். தமிழ் அரைகுறையாய் தெரிய-வேண்டும். கொஞ்சிக் கொஞ்சிப் பேசவேண்டும். அபத்த-மான கேள்விகள் கேட்கவேண்டும். இந்த விதிகளை மீறி அமோகமாய் வெற்றி பெற்றிருக்கிறார் கோபிநாத்.

அறந்தாங்கிக்கு அருகே சித்துக்காடு என்ற சிறிய ஊரில் பிறந்து வளர்ந்து படித்து சென்னைக்கு வந்து சாதித்தது ஆச்சரியமான வெற்றி. கோபிநாத்தின் தந்தை சந்திரபிரகாஷுக்கு விவசாயம்தான் தொழில். தாய் குமுதம் வீட்டு நிர்வாகத்துக்குப் பொறுப்பு. கோபிநாத்துக்கு ஒரு மூத்த சகோதரர், பிரபாகரன். ஒளிப்பதிவாளராக இருக்கிறார்.

``சின்ன வயதிலேயே எனக்கு புத்தகங்கள் மீதும், மேடைப் பேச்சின்மீதும் ஆர்வம் அதிகம். பள்ளிப் படிப்பை அறந்தாங்கில படிச்சேன். பி.பி.ஏ. படிப்புக்கு திருச்சி நேஷனல் காலேஜ்ல சேர்ந்தேன். அங்கே நிறைய பேச்சுப்போட்டிகள் நடக்கும். தமிழ்நாட்டின் பல பேச்சாளர்கள் அந்தக் கல்லூரியில் உருவாகியவர்கள்தான். நான் கல்லூரியில் நடக்கும் அத்தனை பேச்சுப்போட்டிகளிலும் கலந்துப்பேன்'' என்று கோபிநாத் கூறிக்கொண்டிருக்கும்போதே, குறுக்கிடுகிறார் அவரது தந்தை.

``இவனைப் பார்ப்பதற்கு ஊரிலிருந்து கிளம்பி வந்தால் இவன் ஊரில் இருக்கமாட்டான். பேச்சுப் போட்டியில் கலந்துகொள்வதற்காக ஏதாவது ஒரு ஊருக்குப் போயிருப்பான்'' என்று சிரித்துக்கொண்டே சொல்கிறார் தந்தை. அந்தப் பேச்சுப் போட்டி அனுபவம் கோபியை தொலைக்காட்சி மூலம் தமிழர்கள் அனைவருக்கும் தெரிந்தமுகமாக மாற்றியிருக்கிறது.

``கல்லூரிப் படிப்பு முடிந்ததும், சென்னை என்.ஐ.ஐ.டி.யில் வந்து சேர்ந்தேன். அண்ணன் ஃபிலிம் டெக்னாலஜி படிப்பு முடித்துவிட்டு சென்னையில் ரூம் எடுத்து தங்கி இருந்தார். அவருடன்தான் தங்கியிருந்தேன். முதலில் திருச்சியில் ஒரு பெரிய கம்பெனியில் வேலை கிடைத்தது. நல்ல சம்பளம். எல்லோருக்கும் சந்தோஷம். ஆனால் எனக்கு மட்டும் சந்தோஷமில்லை. கை நிறையச் சம்பளம் கிடைத்தாலும் அந்த வேலையில் மனம் ஒட்டவில்லை'' என்று சொல்லும் கோபிநாத், அப்போது எடுத்த தீர்மானமான முடிவுதான் அவர் வாழ்க்கைப் பாதையை மாற்றியது.

``ஒரு அறையில் நான்கு சுவர்களுக்கு மத்தியில் உட்கார்ந்து கொண்டு ஆபீஸ் வேலையைச் செய்ய எனக்குப் பிடிக்கவில்லை. என்னுடைய கனவு அதுவல்ல. தன்னுடைய பேச்சுத் திறமை, புத்தக ஆர்வம் இவையெல்லாம் சேர்ந்த ஒரு துறையாக இருந்தால் என்னால் சிறப்பாக, மனமகிழ்ச்சியுடன் பணியாற்ற முடியும் என்று நம்பினேன். அதற்கு, விஷுவல் மீடியாதான் சிறந்த பிரிவு என்று நினைத்து வேலையை விட்டேன். டி.வி. மீடியாவுக்குள் நுழைய முயன்றேன்'' என்று இப்போது எளிதாகச் சொன்னாலும் அது கடினமான முடிவாக இருந்திருக்கிறது. நல்ல வேலையை விட குடும்பத்தார் எல்லோரும் எதிர்த்திருக்கிறார்கள்.

``அப்பா மட்டும்தான் என் முடிவை ஆதரித்தார். `உன் கனவுகளை விட்டுவிடாதே. அவற்றின் பின்னால் நம்பிக்கையுடன் போ. வெற்றி பெறுவாய்' என்று கடிதம் எழுதியிருந்தார். அந்த தெம்பூட்டும் வார்த்தைகள்தான் இன்று என்னை இத்தனை தூரம் கொண்டு வந்திருக்கிறது.''

சில வருடங்களுக்கு முன்பு இந்தியாவின் சிறந்த டி.வி. தொகுப்பாளர்கள் குழு அமெரிக்கா சென்றது. அந்தக் குழுவில் கோபிநாத்தும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அதேபோல் இந்தியா டுடே பத்திரிகையின் `இளம் சாதனை-யாளர்' விருதையும் பெற்றிருக்கிறார்.

``ராஜ் டி.வி.யில் ஹாலிவுட் திரைப்படங்களை விமர்சனம் செய்யும் பணியில் துவங்கினேன். பிறகு விஜய் டி.வி. செய்திகள்.... என வளர்ந்து இப்போது `நீயா நானா', `நடந்தது என்ன?' போன்ற தமிழ் தொலைக்காட்சியின் வித்தியாசமான நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறேன். ஆனால் இன்னும் நிறைய சாதிக்க வேண்டியிருக்கிறது'' என்கிறார் கோபி.

``சரி, எப்போது திருமணம்?''

``அண்ணனுக்கு நடந்ததும்'' என்று சட்டென்று பதில் வருகிறது.

``இத்தனை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறீர்கள். ஒரு பெண் கூடவா உங்கள் மனதைக் கவரவில்லை?''

``என் மனதைக் கவர்ந்த ஒரே பெண் என் அம்மாதான்'' என்று சொல்லிச் சிரிக்கிறார் கோபி.

http://www.kumudam.com/magazine/Kumudam/2008-12-31/pg34.php

Shakthiprabha.
6th January 2009, 03:05 PM
:bow:

இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையா? :shock:

வயதை சற்று கூட்டி மதிப்பிட்டுவிட்டேன். :|

R.Latha
8th January 2009, 01:56 PM
நானும்தான் திருமணம் ஆகியிருக்கும். குழந்தைகள் இருக்கும். என்ன வயது ஒரு முப்பதுக்கு மேல் முப்பத்தைந்தாவது இருக்கும் என்று நினைத்தேன்.ஆனால் நான் வயதை கூட்டவில்லை

Shakthiprabha.
8th January 2009, 02:02 PM
ஓ :)

sarna_blr
8th January 2009, 02:08 PM
have anyone scene the episode named - NAVEENA THEENDAAMAI :roll: in Neeya-Naana program

Shakthiprabha.
8th January 2009, 02:11 PM
No sarna!

That reminds me, ms.latha, do u watch

"Kutram nadanthathu enna"

Yesterday they were showing glimpses of a lady venting out emotions and memories and saying she was jodha akbar in her past birth.

Any reports on the show?

Madhu Sree
8th January 2009, 02:41 PM
have anyone scene the episode named - NAVEENA THEENDAAMAI :roll: in Neeya-Naana program

Hey sarna, wowwwie avatar ;) :thumbsup:

sarna_blr
27th January 2009, 03:27 PM
have anyone scene the episode named - NAVEENA THEENDAAMAI :roll: in Neeya-Naana program

I liked another performance by I dunno who, as a trans-sexual person. There were few trans-sexual people on show who moved the audience by sharing their problems.

Kudos to kala for bringing in such issues and taking a step in making these issues lil more acceptable :bow:

SP akka, the same issue was discussed in the program named NAVEENA THEENDAAMAI in Neeya-Naana program. Few people expressed their views (which I experienced :oops: :evil: ) in this program.

R.Latha
30th January 2009, 01:35 PM
[tscii:025ac31528]
கஜினி முகமது 17 முறை
தோற்றதாக ஏன் எடுத்துக்
கொள்கிறீர்கள்?... ஜெயிப்ப
தற்கு 17 முறை முயன்று
வென்றிருக்கிறார் என்று
எடுத்துக் கொள்ளவேண்டிய
தானே...' இப்படித்தான், கோவையில்
நடந்த ஒரு கூட்டத்தில் அதிரடியாக
ஆரம்பித்து ‘பாசிடிவ் பாயிண்டு'
களாக அள்ளிவிட்டுக் கொண்டிருந்
தார் அந்தச் சாதனை நாயகன். கூட்ட
மும் ஆர்வமாய் கேட்டுக் கொண்டி
ருந்தது.
ஞாயிற்றுக்கிழமை என்றாலே டிவி
யில் ஆட்டபாட்டம், கொண்டாட்டம்
என இருந்தவர்களை தனது வித்தி
யாச முயற்சியால் திசை திருப்பிய
பெருமை இவருக்குண்டு. ‘டாக்
ஷோ'வுக்கு ஒரு புதிய பரிணாமம்
கொடுத்த இவர் ‘டாக் ஷாப்' என்ற
நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
2004- ம் ஆண்டு உலகம் முழுவதுமி
ருந்து சிறந்த இளம் செய்தியாளர் மற்
றும் நிகழ்ச்சி நடத்துனர்கள் தேர்வில்,
இந்தியாவிலிருந்து இவர் தேர்வு செய்யப்பட்டு
அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுக
ளுக்குச் சென்று வந்திருக்கிறார். இந்தியா
டுடே பத்திரிகை சார்பில் இளம் சாதனையாளர்
விருதும் வென்றிருக்கிறார்... என ஊடக
வெளிச்சத்தில் மிக வேகமாக முன்னேறிக்
கொண்டிருக்கும் விஜய் டிவியின் ‘நீயா?
நானா?' கோபிநாத் இப்போது உங்களுக்காக..
நீங்கள் நடத்தி வரும் பேச்சரங்குகளில் பங்கேற்
கும் இளைய தலைமுறையினரின் திறமை குறித்து
என்ன நினைக்கிறீர்கள்?
மிக அபாரமான வளர்ச்சி அடைந்துள்ளனர்.
அவர்களின் திறன் மேம்பட்டுள்ளது. அவர்களின்
விளையாட்டுத்தனமான வெளிப்பாட்டை மட்டுமே
பார்க்கவேண்டியதில்லை எனுமளவு சமூகத்தின்
மீதான அவர்களது பார்வையும், அக்கறையும் அதிக
ரித்துள்ளது.
பெரியவர்களையும், இளைஞர்களையும்
இணைத்து நிகழ்ச்சிகள் நடத்தும்போது அவர்களுக்
குள் தலைமுறை இடைவெளி எந்தளவுக்கு உள்
ளது?
பேச்சரங்க நிகழ்ச்சிகளை நான் நடத்த ஆரம்பித்த
போது இருந்ததை விடவும் இப்போது நிறைய மாற்
றங்கள் தெரிகின்றன. இரு தரப்பிலும் உள்ள தலை
முறை இடைவெளி வெகுவாக குறைந்து, புரிதல் அதி
கரித்து வருகிறது. இரு தரப்பினரும் அடுத்தவர்
சொல்வதை மதித்து கேட்கும் அளவு பக்குவம், கவ
னிக்கும் தன்மை, பொறுமை அதிகரித்துள்ளது.

ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.க்ண்ய்ஹம்ஹய்ண்.ஸ்ரீர்ம்/ஓஹக்ட்ண்ழ்/2512009/24.ல்க்ச்[/tscii:025ac31528]

R.Latha
30th January 2009, 01:39 PM
[tscii:1fdd45b52c]சர்ச்சை நிறைந்த தலைப்புக
ளில், சூடான விவாதங்களுடன்
இரு தரப்பும் மோதிக் கொண்டா
லும் இறுதியில் நீங்கள் ஏதும் தீர்வு
சொல்வதில்லையே?
அடுத்தவர் வாழ்க்கையை, பிரச்
னையை தீர்மானிக்கும் பொறுப்பை
நான் எடுத்துக்கொள்வதில் எனக்கு
உடன்பாடில்லை. யாருக்கும், தன்னு
டைய முடிவை தானே எடுக்கும் பக்
குவம் வேண்டும். எனவேதான்,
விவாதங்களில் தீர்வை நோக்கி விவா
தத்தை நகர்த்தும் பணியை மட்டும்
நான் செய்கிறேன்; தீர்ப்பு கொடுப்ப
தில்லை. மீன் பிடிக்க தூண்டிலைக்
கொடுக்கிறேன்; மீனை அல்ல.
சில பேச்சரங்குகளில் பேச
வேண்டிய விஷயங்களும், தீர்ப்புக
ளும் முன்பே முடிவு செய்யப்பட்டு
விடுகின்றன என்று கூறப்படுவ
துண்டு. உங்களது நிகழ்ச்சியும்
அப்படித்தானா?
நிச்சயமாக இல்லை. இங்கு பேச வருபவர்கள் அனைவ
ரும் சாதாரண மக்கள். அவர்களது பேச்சு யதார்த்தமா
னது. அவர்களது மனவலியும், உணர்ச்சிகரமான பேச்சும்
ஒத்திகை பார்க்கப்பட்டதல்ல. ஒரு மணிநேரம் ஒளிபரப்
பாகவேண்டிய நிகழ்ச்சிக்கு 4 மணிநேரம் படப்பிடிப்பு
நடக்கும். அதை யதார்த்தம் மாறாமல் ‘எடிட்' செய்கி
றோம்; அவ்வளவுதான்.
நீங்கள் புதிதாக நடத்தி வரும் ‘நடந்தது என்ன?'
நிகழ்ச்சிக்கு வரவேற்பு எப்படி உள்ளது?
நல்ல ஒரு துவக்கத்துடன், நல்ல வரவேற்பைப் பெற்
றுள்ள ஒரு நிகழ்ச்சி.
நீங்கள் நடத்தும் டிவி நிகழ்ச்சி
கள் மூலம் நீங்கள் கற்றுக் கொண்
டது?
நிறைய இருக்கிறது. நிகழ்ச்சிக
ளுக்காக நான் சந்திக்கும் மனிதர்கள்
நிறையக் கற்றுக் கொடுக்கிறார்கள்.
மேலும், இத்தனை மனிதர்களை சந்
திப்பதே நல்ல அனுபவம்தானே!
அடுத்த நிகழ்ச்சியாக நீங்கள்
நடத்த உத்தேசித்துள்ளது?
குறிப்பிட்டுச் சொல்லும்படி
யான, வித்தியாசமான நிகழ்ச்சியாக
நடத்தவேண்டும் என்பதே எனது
நோக்கம். நல்ல தயாரிப்பாளர்
கிடைத்தால், தரமான விநாடி வினா
நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கு
சலிப்புத் தட்டாத விதத்தில் கொடுக்
கும் ஆசையிருக்கிறது.
நிகழ்ச்சிகளில் உங்களுடன்
பணியாற்றுபவர்கள் மற்றும் மீடியா
வின் ஒத்துழைப்பு பற்றி..
நிச்சயமாய் இது ஒரு ‘டீம் ஒர்க்' தான். எங்
கள் குழுவின் ஒத்துழைப்பும், மீடியாவின் ஒத்
துழைப்பும் இருப்பதால்தான் எனது நிகழ்ச்
சிகள் இவ்வளவு பிரபலமடைந்துள்ளன.
அதிலும், குறிப்பாக நிகழ்ச்சியின் இயக்குனர்
ஆண்டனியின் பங்களிப்பு மிக அதிகம்.
எனக்கு இன்னொரு சகோதரர் அவர்.
எதை எதிர் நோக்கியது உங்கள் குறிக்
கோள்?
நம்மில் பலரும் தோல்வியிலிருந்து தப்பிக்
கவே திட்டம் தீட்டுகிறோம். ஜெயிப்பதற்கா
கத் திட்டம் தீட்டுவது குறைவு. ஒரு உயிரைப்
பறிக்கும் தீவிரவாதியிடம் இருப்பதும் சக்தி
தான்; அந்த தீவிரவாதியிடமிருந்து உயிரைக்
காப்பவருக்கு இருப்பதும் சக்திதான். இரு
வேறுமாதிரியான சக்தியும் எப்படி உபயோகப்
படுத்தப்படுகிறது என்பதுதான் கவனிக்கப்பட
வேண்டிய விஷயம். ‘பாசிடிவ் எனர்ஜி'யாக
மாற்றும் பணியை நான் செய்யப்போகிறேன்.
உங்கள் சகோதரர் பிரபாகர் பற்றி..?
எனது அண்ணன் பிரபாகர் சில டிவி தொடர்களில்
நடித்துள்ளார். எங்களது ‘டாக் ஷாப்' நிறுவனத்தின் முக்
கியப் பொறுப்பாளரும் அவரே.
‘டாக் ஷாப்'- ‘வீ ஸ்பீக் ஃபார் யூ' என வித்தியாசமாய்
பெயபெயர் வைக்கக் காரணம்?
‘டாக் ஷாப்' நிறுவனம் மூலம் ஆவணப்படங்கள்,
விளம்பரப்படங்கள் போன்றவற்றைச் செய்து வருகி
றோம். அடுத்தவர்களுக்காக நாங்கள் எடுத்துச் செய்வ
தால் ‘வீ ஸ்பீக் ஃபார் யூ' என்ற வாசகத்தைச் சேர்த்துள்
ளோம். ■

http://www.dinamani.com/Kadhir/2512009/24.pdf[/tscii:1fdd45b52c]

Nerd
18th April 2009, 12:09 AM
neeyA naanA-Apr 14th special (http://video.yahoo.com/watch/4864353/12967922) - Joe, idhai pArthu ungaL ratham kothikkumnu ninaikkiREn. enakkE almost that feel. In fact one of the participants ketta vArthaiyil edhO sonnAr (which was beep-ed) :lol:

Compli,
Even the people who were arguing for thamizh were pathetic in putting their points across. Thankfully Bharathi Baskar made some wonderful points towards the end of the show.

Joe, check this out too.aaitha ezhuthu-Gopinath again (http://tamil.techsatish.net/file/ayutha-ezhuthu/). At the end of the show Gopinath made this point, thamizhnAttula mattum dhAn thaaimozhiyai correct-A pEsinaal, pArAtukkaL kidaikkuthu. Hard-hitting!

rocketboy
18th April 2009, 03:45 AM

Those people who felt there isn't any necessity to read and write in Tamizh are lowlifes. Tamilnadu is better off without these people.
Antha sidela okkanthu ponnunga ellam pala per jeans pant than. Intha ponnunga ellam tamizh pengala. Tamizh isn't a mere language. Its our identity. I am an Indian by birth. But at some point in the future I may renounce my citizenship and may become a Swede. But I can never dream of becoming a French overnight, no not even in my wildest dream.( By French I mean a native speaker of the language, a French by birth). One should be proud to be a Tamizhan /Tamizhachhi . Kal thondri man thondra kaalathe mun thondriya mootha kudi namathu tamizh kudi. While the rest of the world was groping in darkness our Tamizh people had already reached the highest echelons of human development , scientifically as well as spiritually. Intha Tamizhnattu mannu epperpatta mannu . Intha mozhi epperpatta mozhi. Pulamai illenaalum mathikavaathu theriyanum. :(.

Nerd
18th April 2009, 10:25 AM
ராக்கெட், சௌக்கியமா? ஞாபகம் இருக்கா?

joe
18th April 2009, 01:53 PM
Joe, idhai pArthu ungaL ratham kothikkumnu ninaikkiREn.

உண்மையிலேயே இதனால தான் இதை பார்க்க வேண்டாம்-ன்னு தவிர்த்தேன் :evil: :x ..இப்போ கொஞ்சம் தயாராயிட்டு பார்க்குறேன். :)

joe
18th April 2009, 03:18 PM
Nerd,
மீண்டும் இணைப்புக்கு நன்றி!

தமிழராய் தமிழகத்தில் பிறந்தவர்கள் குறைந்த பட்சம் தமிழை எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டாமா ? என்ற நிகழ்ச்சியின் ஆதார சுருதியிலிருந்து பல முறை விவாதம் நழுவிச் சென்றது . கோபிநாத் மீண்டும் அதை சுருதி சேர்க்க பல முறை முயன்றார் .

என்றாலும் இறுதியாக பேசிய ஆழி பதிப்பகம் திரு .செந்தில் நாதன் மிகத்தெளிவாக சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டார் . குறிப்பாக சீனா ,கொரியா ,ஜப்பான் குறித்து அவர் கூறிய கருத்துக்கள் .. நான் அலுவல் தொடர்பாக சீனா ,தென் கொரியா -வுக்கு சென்ற அனுபவங்கள் அதை உறுதிப்படுத்தியது.

இங்கே நான் தமிழ் மட்டுமே படிக்க வேண்டும் என்றோ அல்லது தனித்தமிழில் தான் பேச வேண்டுமென்றோ சொல்ல மாட்டேன் ..எத்தனை மொழிகள் முடியுமோ அத்தனை மொழிகளையும் கற்றுக்கொள்வோம் ,தமிழை இழந்து அல்ல .. தமிழகத்தில் பிறந்த தமிழன் தமிழை எழுதப்படிக்க தெரியாமல் மற்றவையெல்லாம் கற்றுத் தேர்ந்திருந்தாலும் எனக்கு அவன் -----தான் .

தமிழன் என்றில்லை ,யாராயிருந்தாலும் முதலின் அவன் தாய் மொழியை எழுதப்படிக்க கற்றுக்கொள்ளட்டும் .. இல்லையென்றால் அவன் முடவன் தான் .

joe
18th April 2009, 03:27 PM
At the end of the show Gopinath made this point, thamizhnAttula mattum dhAn thaaimozhiyai correct-A pEsinaal, pArAtukkaL kidaikkuthu. Hard-hitting!

உண்மை ..ஒரு தடவை எங்கள் வீட்டில் வந்திருந்த சில விருந்தினர்களோடு பேசும் போது தமிழ் குறித்து விவாதம் வந்த போது ,கடைசியாக ஒருவர் சொன்னார் ((அவரும் தமிழர் தான்) " பரவாயில்ல .உங்களுக்கு தமிழ் மேல் பற்று இருக்கிறது பாராட்டத்தக்கது " ..நான் சொன்னேன் " ஒருவனுக்கு தாயின் மீது பற்று இருப்பதோ ,தாய் மொழியின் மீது பற்று இருப்பதோ ஆச்சரியமானதோ ,தனியாக பாராட்டப்பட வேண்டியதோ அல்ல .அது இல்லாமல் இருந்தால் தான் ஏதோ கோளாறு என்று அர்த்தம் .. சொந்த தாய் மொழி மீது பற்று வைத்திருப்பதற்கே பாராட்டு கொடுக்க வேண்டிய சூழலில் நாம் இருப்பதே ஒரு அவமானம் ..வேறு நாடுகளில் இப்படி இருப்பதாக தெரியவில்லை".

rocketboy
19th April 2009, 01:32 AM
ராக்கெட், சௌக்கியமா? ஞாபகம் இருக்கா?

Paravaillai. How you've been?

எத்தனை மொழிகள் முடியுமோ அத்தனை மொழிகளையும் கற்றுக்கொள்வோம் Thevaillai. The time spent in learning languages could be put to better use by training oneself in a particular trade. Vocational skills jobs tharumae thavira languages tharatthu. Tamizh makkalukku thevai English Tamizh mattum than . The necessity for learning other languages should be decided on a case-by-case basis.

என்றில்லை ,யாராயிருந்தாலும் முதலின் அவன் தாய் மொழியை எழுதப்படிக்க கற்றுக்கொள்ளட்டும் .. இல்லையென்றால் அவன் முடவன் தான்

Ithu nyayam.

On a lighter note,

http://music.pz10.com/album/17613/Themmanku%20Paatukkal-Vijayalakshmi%20Navanidha%20Krishnan.html

P_R
20th April 2009, 10:18 AM
கோபிநாத் கொஞ்சம் ஒருபக்கம் சாய்ந்தே ஆரம்பித்ததால் தொடர்ந்து பார்க்கவில்லை.

உண்மை ..ஒரு தடவை எங்கள் வீட்டில் வந்திருந்த சில விருந்தினர்களோடு பேசும் போது தமிழ் குறித்து விவாதம் வந்த போது ,கடைசியாக ஒருவர் சொன்னார் ((அவரும் தமிழர் தான்) " பரவாயில்ல .உங்களுக்கு தமிழ் மேல் பற்று இருக்கிறது பாராட்டத்தக்கது "
எழுத்தில் இருக்கும் ஓரளவு சரளம் பேச்சில் இல்லாத என்னைப் போன்றவர்களுக்கு உங்கள் பேச்சு ஒரு inspiration (பாத்தீங்களா...இங்க கூட). அதைத்தான் உங்கள் விருந்தினர் சொல்லியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

உங்களைப்போல சரளமாக ஆங்கிலக்கலப்பு அதிகமில்லாமல் பேசுபவது பாராட்டுக்கு உரியதே. அது பாராட்டுக்கு உரியதாக இருப்பது வருத்தத்துக்குரியதே.

அங்கு எல்லாரும் திருக்குறள், நாலடியார் என்றே சொல்கிறார்கள். தமிழ் என்ன சமஸ்க்ருதம் போன்ற அன்றைய மொழியா ? இன்றும் உயிரோடு இருக்கும் மொழி. எனக்கு இந்த கல்தோன்றி சமாச்சாரங்களில் ஆர்வமில்லை. சுமேரியா, எகிப்து போல இல்லாமல் பெரும்பாலும் இலக்கிய குறியீடுகள் மூலமாக புரிந்துகொள்ளப்படும் வரலாறு அது. ஆதிமொழி என்கிற விவாதத்துக்குள் இறங்க எனக்கு புலமையும் இல்லை.ஆனால் தமிழார்வத்துக்கு தமிழின் தொன்மையைக் காட்டிலும் அதன் தொடர்ச்சியே மிக வலுவான காரணமாக இருக்க முடியும்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா

குறைந்தபட்சம் 1500 வருஷங்கள் முன்பாவது எழுதப்பட்ட வரி. இன்றும் எந்த வித மொழிபெயர்ப்பும் தேவைப்படாமல், உதிராமல் அப்படியே புரிகிறது. அதை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல வேண்டாமா.

அலுவலக வேனில் சென்றுகொண்டிருந்தபோது, தொல்லியல் பற்றிய ஒரு புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தேன். உடன் வேலை செய்யும் ஒருவன் என்ன புத்தகம் படிக்கிறாய் திருக்குறளா என்றான். எனக்கு சிரிப்பு வந்ததா...ஏன் தமிழ் என்றால் திருக்குறள் தானா

It's a book about fossils
But it is in Tamil ?... Is it translated into Tamil ?
(அதவாது தமிழில் கவிதை மட்டும் தான் எழுதுவார்கள் என்பது அவன் நம்பிக்கை.)
No. It is written by an archeologist in Tamil.
Oh...ok but you are reading that in Tamil, not an English translation

அதவாது இது போன்ற விஷயங்களை ஆங்கிலத்தில் படிப்பதே உசிதம். தமிழ் அதற்கு சரியான மொழி அல்ல. ஆங்கிலம் தெரிந்த நான் ஏன் தமிழில் படித்துக் கொண்டிருக்கிறேன் என்று அவனுக்குத் தோன்றுகிறது.

எனக்கு சிரிப்பு வந்தது. அவன் ஒரு 21 வயது இளைஞன், இந்தியாவின் முக்கிய கல்வி நிலையத்தில் பயின்றவன். ஆனால் தமிழ் பற்றி அவன் கருத்து இது தான் (தமிழ் என்று இல்லை எந்த இந்திய மொழியைப் பற்றியும் அவன் எண்ணம் இப்படியாகத்தான் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்).

Language is a communication tool என்று சொல்பவர்கள் கூட, எதை எதை எந்த மொழியில் பேச முடியும் என்று அவர்களே வரையறைகளை வகுத்துக் கொள்கிறார்கள் !

joe
20th April 2009, 11:56 AM
அங்கு எல்லாரும் திருக்குறள், நாலடியார் என்றே சொல்கிறார்கள். தமிழ் என்ன சமஸ்க்ருதம் போன்ற அன்றைய மொழியா ? இன்றும் உயிரோடு இருக்கும் மொழி. எனக்கு இந்த கல்தோன்றி சமாச்சாரங்களில் ஆர்வமில்லை. சுமேரியா, எகிப்து போல இல்லாமல் பெரும்பாலும் இலக்கிய குறியீடுகள் மூலமாக புரிந்துகொள்ளப்படும் வரலாறு அது. ஆதிமொழி என்கிற விவாதத்துக்குள் இறங்க எனக்கு புலமையும் இல்லை.ஆனால் தமிழார்வத்துக்கு தமிழின் தொன்மையைக் காட்டிலும் அதன் தொடர்ச்சியே மிக வலுவான காரணமாக இருக்க முடியும்.

சத்தியமான வார்த்தைகள் !

பழமை ,தனித்தமிழ் என்று ஒரேடியாக தமிழை பெரும்பான்மையினரிடமிருந்து தனிமைப்படுத்துவதைக் காட்டிலும் ,மாறிவிட்ட சமூக ,தொழில் நுட்ப சூழலில் இயைந்து தமிழை அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்திச்செல்வதே நாம் செய்ய வேண்டிய கடமை ..அது மிகவும் எளிமையும் சாத்தியமும் ஆன கடமை.

அதற்கு பெரிய புலமையெல்லாம் தேவையில்லை .சற்று பற்றுணர்வும் கடப்பாடும் இருந்தால் போதும் ..பலர் உலக வரலாறு ,அரசியல் ,சமூகம் பற்றி பேசிக்கொண்டு தான் வாழும் சமூகம் பற்றி அடிப்படை அறிவு கூட இருப்பது போல ,எத்தனை மொழிகள் கற்றுக்கொண்டால் என்ன ,சொந்த மொழியை எழுதப்படிக்க அறிந்திராமல் இருப்பது .. அனாதை ஆசிரமம் நடத்துபவன் சோறு போட வக்கில்லாமல் அம்மாவை வீட்டை விட்டு துரத்தியது போல இருக்கிறது.

sarna_blr
20th April 2009, 12:38 PM
தீதும் நன்றும் பிறர் தர வாரா

குறைந்தபட்சம் 1500 வருஷங்கள் முன்பாவது எழுதப்பட்ட வரி. இன்றும் எந்த வித மொழிபெயர்ப்பும் தேவைப்படாமல், உதிராமல் அப்படியே புரிகிறது. அதை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல வேண்டாமா.

"யாதும் ஊரே யாவரும் கேளிர்" எத்தனை பேருக்கு புரியும் ??

Language is a communication tool என்று சொல்பவர்கள் கூட, எதை எதை எந்த மொழியில் பேச முடியும் என்று அவர்களே வரையறைகளை வகுத்துக் கொள்கிறார்கள் !
:?

PR, உங்களைப்போல் மற்றவர்கள் மனது புண்படாமல் பேசுவது பாராட்டுக்குரியதே. அது பாராட்டுக்கு உரியதாக இருப்பது வருத்தத்துக்குரியதே :oops:

P_R
20th April 2009, 12:45 PM
தீதும் நன்றும் பிறர் தர வாரா

குறைந்தபட்சம் 1500 வருஷங்கள் முன்பாவது எழுதப்பட்ட வரி. இன்றும் எந்த வித மொழிபெயர்ப்பும் தேவைப்படாமல், உதிராமல் அப்படியே புரிகிறது. அதை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல வேண்டாமா.

"யாதும் ஊரே யாவரும் கேளிர்" எத்தனை பேருக்கு புரியும் ??

சர்ணா, எல்லாமே இன்றும் புரியும் என்று சொல்லவில்லை. பல்லாயிரம் வருடங்களுக்கு முன் எழுதியதில் பல இன்றும் புரிவது ஆச்சர்யம் தானே.

இதில் கூட "யாதும் ஊரே" என்பது புரிய சிரமம் இல்லை என்றே நினைக்கிறேன். யாவரும் என்பதும் புரியும் வார்த்தை. அந்தத் தொடரை இதுவரை வாசித்தாலே, 'கேளிர்' என்ற சொல்லுக்கான அர்த்தத்தைத் தோராயமாக ஊகித்து விடலாம்.

sarna_blr
20th April 2009, 12:59 PM

:P நான் சிலவருடங்கள் முன்பு வரை கேளிர் என்ற சொல்லுக்கு கேளுங்கள் என்பதுதான் பொருள் எனும் மாயயில் இருந்தேன் :oops:

salem.saravanan
20th April 2009, 02:07 PM
19.4 என்ன தலைப்பு பேசபட்டடு