PDA

View Full Version : new serials/programs



Pages : 1 2 3 4 [5] 6 7

aanaa
5th November 2011, 07:59 PM
அவள்!



திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு விஜய் டி.வியில் ஒளிபரப்பாகிறது `அவள்' தொடர். தாய், மகள், கணவன், மனைவி, அண்ணன், தங்கை ஆகியோர்களிடையே நடக்கும் பாசப்போராட்டக் கதை. தாய் ஜெயந்தி மகளுக்குத் திருமணம் நடத்தி முடித்து மாப்பிள்ளை வீட்டிற்கு அனுப்பிய பின்னும், மகளை பிரிந்திருக்க முடியாமல் தவிக்கும் பாசம் ஒரு பக்கம். கணவன் மேல் உள்ள பாசத்தால் அவளை சந்தேகிக்கும் மனைவி ஒரு பக்கம் அண்ணனாக நினைத்திருப்பவனோடு சம்பந்தப்படுத்திப்பேசும் உறவுகள் ஒரு பக்கம். இப்படி குடும்ப பின்னணியில் எடுக்கப்பட்டிருக்கும் கதைதான் `அவள்'.

இயக்கம்: வள்ளிமுத்து.

நடிப்பு: சஞ்ஜீவ், மகாலட்சுமி, ஸ்ரீகலா. `பாஸ் என்ற பாஸ்கரன்' `யுத்தம் செய்' படங்களில் முத்திரை நடிப்பை வழங்கிய நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் முதல் முறையாக `அவள்' தொடரில் ஜெயந்தி என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



நன்றி: தினதந்தி


http://www.youtube.com/watch?v=eCg1iAYnJpc&feature=player_embedded

aanaa
7th November 2011, 06:37 PM
முத்தாரம் - சன் - தொலைக்காட்சி


http://www.youtube.com/watch?v=2u03a82yLGY&feature=player_embedded

aanaa
13th November 2011, 12:16 AM
உதிரிப்பூக்கள்



வரும் திங்கள் முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் புதிய தொடர், `உதிரிப்பூக்கள்' `மேகலா' வெற்றித்தொடரை இயக்கிய இயக்குனர் விக்ரமாதித்தன் இயக்குகிறார். `மாதவி' தொடரை தயாரித்த ஹோம் மீடியா நிறுவனம் இந்த புதிய தொடரை தயாரிக்கிறது.

கிட்டத்தட்ட இரண்டு வருட இடைவெளிக்குப்பிறகு சின்னத்திரையில் மீண்டும் இந்த தொடர் மூலம் நடிப்பு முத்திரை பதிக்க வருகிறார், சேத்தன்.

நடிகர் விக்ராந்த்தின் மனைவியும் நடிகையுமான மானசா, இந்த தொடர் மூலம் முதன்முதலாக சின்னத்திரையில் அறிமுகமாகிறார்.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த கதை, யதார்த்த குடும்ப பின்னணியுடன் தொடங்குகிறது. சிவநேசன் தனது இரண்டு மகள்கள் சக்தி, நிலா, மகன் திலீபன் இவர்கள் தான் உலகம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் அன்பான அப்பா. பிள்ளைகளிடம் அன்பை கொட்டுவதோடு அவர்களை பொறுப்பு மிக்கவர்களாகவும் வளர்க்கிறார். பிள்ளைகளும் அப்பா மீது உயிரையே வைத்திருக்கிறார்கள். தாயில்லை என்ற குறை தெரியாமல் தாய்க்குத் தாயும் தந்தைக்கு தந்தையுமாக நேசிக்கும் சிவநேசனின் அன்பில் பிள்ளைகள் உருகிப்போகிறார்கள்.

இப்படி ஒரு அப்பாவா என்று மற்ற பெண்களே பொறாமைப் படும் அளவுக்கு சிவநேசனின் பாசத்தின் எல்லை விரிந்துகொண்டே போகிறது.

இவர்கள் வீட்டுக்கு எதிர்வீடு அலமேலுவின் வீடு. சிவநேசனை `தம்பி' என்றும் அவர்மகள் சக்தியை `மருமகளே' என்று அவர் வார்த்தைக்கு வார்த்தை அழைப்பவள் அலமேலு.

இந்த உறவு முறை நெருக்கம் அவர்கள் இருவர் குடும்பத்திலும் அதிகப்படியான நெருக்கத்தை ஏற்படுத்தி வைக்கிறது.

அலமேலுவுக்கு ஒரு மகன். 3 மகள்கள். பெண்களில் இருவருக்கு திருமணமாகி அவர்கள் கணவர்களும் வீட்டோடு மாப்பிள்ளைகளாக அங்கேயே இருக்கிறார்கள். திருமணமான பெண்கள் இருவருமே அக்கா- தங்கை மாதிரி நடந்து கொள்ளாமல் எப்போதும் சக்களத்திகள் மாதிரி சண்டைபோட்டுக் கொள்வார்கள்.அதுபோதாதென்று இவர்கள் கணவர்கள் அடிக்கும் லூட்டி வேறு. உழைக்காமல் வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்தாலும் வெட்டி பந்தாவை விட்டு விடாத மாப்பிள்ளைகள் இவர்கள்.

அலமேலுவின் மகன் லட்சுமிபதி. சிறுவயது முதலே சிவநேசன் குடும்பத்துடன் இவர்கள் குடும்பம் நட்பு பாராட்டி வந்ததில் சக்தி இவனது அன்பான சிநேகிதி. இந்த நட்பு இவர்கள் இருவரின் பருவ வயதில் காதலாக மொட்டவிழ்ந்து ஒருவர் மற்றவரிடம் வெளிப்படுத்த தவிக்கிறது. ஆனால் யார் காதலை முதலில் சொன்னாலும் நட்பு சிதைந்து விடுமோ என்ற பயத்தில் காதலை உள்ளுக்குள்ளேயே பூட்டி வைக்கிறார்கள்.

இதற்கிடையே அலமேலு தன் மகன் லட்சுமிக்கு தங்கள் ஜாதிசனத்தில் பெண் தேடுகிறாள். இனம் இனத்தோடு தான் சேரவேண்டும் என்பதில் அவள் தீவிரமாக இருக்கிறாள்.

இந்தமாதிரியான ஒரு சூழ்நிலையில் சக்தி-லட்சுமி தங்கள் காதலை வெளிப்படுத்தினார்களா? அலமேலுவின் ஜாதிவெறியைத் தாண்டி இவர்களால் வாழ்க்கையில் இணைய முடிந்ததா? என்பது தொடரின் அடுத்த கட்டம்.

தொடரின் நட்சத்திரங்கள்: சேத்தன், மானசா, ஹரி, கிரேசி, வடிவுக்கரசி, ரூபஸ்ரீ, சுவேதா, சர்வன், ரேவதிபிரியா, பாரதி, அகிலா, எல்.ராஜா, ஸ்ரீலேகா.

பாடல்: யுகபாரதி. பாடல் இசை: இலக்கியா. பின்னணி இசை:கிரண். ஒளிப்பதிவு: சாகித்யா சீனு. திரைக்கதை: சி.முத்துச்செல்வன். வசனம்: பா.ராகவன். இயக்கம்: விக்ரமாதித்தன். தயாரிப்பு: சுஜாதா விஜயகுமார். திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.


நன்றி: தினதந்தி


http://www.youtube.com/watch?feature=player_embedded&v=iAmf3gq7Ac8

aanaa
19th November 2011, 07:19 PM
வேகம் பிடித்த `ஒற்றன்'



மக்கள் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8 மணி மற்றும் 10 மணி செய்திகளுக்கிடையே ஒளிபரப்பாகி வருகிறது `ஒற்றன்' பகுதி. அரசியல் பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள், அரசு வட்டாரங்களின் அந்தரங்க செயல்பாடுகள், முக்கிய கட்சிகளின் பின்னணி நடவடிக்கைகள் என முழுக்க, முழுக்க பரபரப்பு தகவல்களை சொல்லும் இந்த `ஒற்றன்' பகுதி, சின்னத்திரைக்கு புதியது. சமீப காலங்களாக இந்த ஒற்றன் பிரபலங்கள் பற்றி தரும் அதிரடி செய்திகளுக்காக பார்வையாளர்கள் அதிகரித்திருப்பது நிகழ்ச்சிக்கான சிறப்பு.


நன்றி: தினதந்தி

aanaa
19th November 2011, 07:22 PM
ஆத்மா உறங்குவதில்லை



உலகம் முழுவதும் கடவுள் `உண்டு என்றும்', `இல்லை' என்றும் விவாதங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. அதேபோல், ஆவி உலகைப்பற்றியும் எதிரும், புதிருமான கருத்துக்கள் அவ்வப்போது சொல்லப்பட்டு வருகின்றன.

இதுபோன்று உலகில் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த ஆவி பற்றிய உண்மைச் சம்பவங்களை தொகுத்து தருகிறார் விக்கிரவாண்டி வி.ரவிச்சந்திரன்.

ஆவிகளைப் பற்றி பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வரும் இவர் கூறும் கருத்துக்கள் ஆணித்தரமானவை. ஒவ்வொரு சனிக் கிழமையும் இரவு 9.30 மணிக்கு ``ஆத்மா உறங்குவதில்லை'' என்ற தலைப்பில் கேப்டன் டிவியில் இந்த நிகழ்ச்சியை காணலாம்.


நன்றி: தினதந்தி

aanaa
19th November 2011, 07:24 PM
நம்பினால் நம்புங்கள்



அமானுஷ்யம், ஆவிகள், வித்தியாசமான மனிதர்கள், மக்களின் நம்பிக்கைகள், புரியாத புதிர்கள் என அனைத்திற்கும் விடை தேடும் ஒரு நிகழ்ச்சியாக `நம்பினால் நம்புங்கள்' நிகழ்ச்சி ஜி டிவியில் இடம் பெறுகிறது. நடிகர் நிழல்கள் ரவி தொகுத்து வழங்குகிறார்.

முதல் வார சிறப்பு பகுதிகளாக, நடுக்கடலில் நடக்கும் சுறா வேட்டையில் பிரத்தியேக நிபுணர்களோடு நமது குழு கடலில் இறங்கி வேட்டையாடும் காட்சிகள். பதிமூன்று வருடங்களாக தனி அறையில் யாருமே கண்டிராத ஒரு மனிதன் வெளியே வரும்போது எப்படி இருப்பான்? அவனது நிலை என்ன? தமிழகத்தின் ஒரு காட்டில் ஒரு சமூக மக்கள் தொட்டால் மட்டுமே பூக்கும் பூ ஒன்று உள்ளது. அது ஏன் அப்படி? அது எங்கே உள்ளது? இப்படி பல கேள்விகளை எழுப்பும் பல வித்தியாசமான பகுதிகளை தரவிருக்கிறது, இந்த நிகழ்ச்சி.

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு இடம்பெறும் நிகழ்ச்சி இது.


நன்றி: தினதந்தி

aanaa
19th November 2011, 07:33 PM
குடும்பமா? மனைவியா? -தடுமாறும் கோபி!

திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் இரவு 7.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாதஸ்வரம் தொடர், விறுவிறுப்பும் பரபரப்புமாய் ஊகிக்க முடியாத காட்சிகளுடன் விரைகிறது.

கோபி - மலர் திருமணத்திற்குப் பிறகு எதிர்பாராத திருப்புமுனை காட்சிகளோடு பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது `நாதஸ்வரம்' தொடர். நடிப்பில் பட்டை கிளப்பும் புதுமுக நடிகர்கள் ஒருபுறம். அனுபவமிக்க பிறவிக் கலைஞர்களான மவுலி, பூவிலங்கு மோகன், ரங்கதுரை ஆகியோர் மறுபுறம். இரு தரப்பாரும் கதாபாத்திரங்களாகவே மாறி தொடருக்கு மெருகேற்றிக் கொண்டிருக்கின்றனர்.

கோபி-மலரின் திருமணத்தால் காமு-பரமுவின் வாழ்க்கை பாதிக்கப்படுமோ என்ற பயம் மயில்- தெய்வானை தம்பதிகளுக்கு. அதனால் அவர்கள் கோபியின் மீது கோபத்தில் இருக்க, சொக்கு குடும்பத்தோடு கோபி - மலர் சேர முடியாத சூழ்நிலையில் உள்ளனர்.

சொக்கு, கோபி-மலரை ஏற்றுக்கொண்டால் மயில் குடும்பம் அண்ணன் குடும்பத்தை விட்டு பிரியும் சூழ்நிலை வருமா? அல்லது குடும்பத்துக்காக கோபி, மலரை விட்டு பிரியும் சூழ்நிலை நேருமா? இதுதான் இப்போதைய முக்கிய கட்டம்.

மகா தன்னைக் கெடுத்த பாண்டிக்கு தண்டனை கொடுக்க, அவன் வீட்டிலேயே அவனோடு வாழ்கிறாள். தன் வாழ்க்கையை கெடுத்த கோபி-மலரை பழிவாங்க அவள் எடுக்கும் முடிவு அடுத்தகட்ட திருப்பம்.

மலரால் சொத்து, தொழில் என அனைத்தும் இழந்த கோகுல், தந்திரமாக ரோகிணியை திருமணம் செய்வதற்கு ஒத்துக்கொள்வது போல நாடகமாடுகிறான் இதற்காக அவன் செய்யும் ஒரு செயல் எதிர்பாராத விதமாக கோபி-மலர் வாழ்க்கையை பாதிக்கிறது.

பரமு திருமணத்தை நிறுத்த நீலாவதியும், மூர்த்தியும் போராட... நெல்லியும், காமுவும் பரமுவின் திருமணத்தை நடத்த... இதற்கிடையே சம்பந்தம் தனது திருமணத்திற்காக செய்யும் ஆர்ப்பாட்டம் இன்னொரு பக்கம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வைக்கிறது.

இதற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல கோபி-மலர் தேனிலவு செல்லும் சந்தர்ப்பம் ஏற்பட, அங்கு நடக்கும் எதிபாராத சம்பவம் நாதஸ்வரம் தொடரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது. பரபரப்பான அந்த நிகழ்வுகள் எந்த மாதிரியானவை என்பது சஸ்பென்ஸ் என்கிறார், தொடரின் இயக்குனர் திருமுருகன்.


http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20111119/TV06.jpg


நன்றி: தினதந்தி

aanaa
19th November 2011, 07:34 PM
மகாராணியின் சூழ்ச்சி

ஜி தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் சரித்திரத் தொடர் `ஜான்சி ராணி.'

இங்கிலாந்து மகாராணி விக்டோரியாவின் தனி அதிகாரி ஹீரோஸ், ஜான்சி ராணி லட்சுமி பாயை சந்தித்து சமாதானப் பேச்சுக்கு அழைக்கிறார். ஆங்கிலேயர்களின் உள்நோக்கத்தை நன்கு உணர்ந்தாலும், லட்சுமி பாய் சமாதானப் பேச்சிற்கு ஒத்துக் கொள்கிறார்.

ஒரு புறம் ராணி விக்டோரியாவுடன் சமாதானப் பேச்சு வார்த்தைக்கு வருகை தரும் லட்சுமிபாயையும், அவருடன் வரவிருக்கும் அண்டை மாநில மன்னர்களையும் தீர்த்துக் கட்ட ஹீரோஸுக்கு உத்தரவிடப்படுகிறது. மறுபுறமோ லட்சுமி பாய் தன் சகாக்களுடன் சேர்ந்து ஆங்கிலேய மேலதிகாரிகளை ஒரே இடத்தில் கொல்ல திட்டம் தீட்டுகிறார்.

இதற்கிடையில் ரானா சாஹேப், ஹீரோஸை சந்தித்து சமாதானப் பேச்சில் தன் பங்கை உறுதிப்படுத்தச் செல்ல, அங்கு ராவ் துலாஜைப் பார்க்க, அவன் தான் ஆங்கிலேயர்களின் உளவாளி என்பதை அறிந்ததும் அதிர்ச்சி.

சமாதானப் பேச்சு நடந்ததா? யார் திட்டம் வென்றது? பரபரப்பான வினாக்களுக்கு விடை, அதிர்ச்சிïட்டும் திருப்பங்களுடன் வெளிப்படுகிறது.


நன்றி: தினதந்தி

aanaa
19th November 2011, 07:35 PM
டீச்சர் தேவயானி



`கொடிமுல்லை' தொடர் முடிந்ததைத் தொடர்ந்து இடைவெளி இன்றி உடனே தேவயானி நடிக்க ஒப்புக்கொண்ட தொடர், முத்தாரம். இந்த தொடரில் அவர் டீச்சராக வருகிறார். அதுவும் அன்பான டீச்சர். படப்பிடிப்பின் முதல் நாளிலேயே இந்த கேரக்டரை ரொம்பவே ரசித்து செய்திருக்கிறார்.விஷயம் தெரிந்ததும் தேவயானியிடம், "டீச்சர் கேரக்டர் மேல் அப்படியென்ன அதீத ஈடுபாடு?'' கேட்டோம்.

"நான் பள்ளியில் படிக்கிற காலத்திலேயே பிற்காலத்தில் டீச்சர் ஆக வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டது. எனக்கு பாடம் சொல்லித்தந்த ஆசிரியர்கள் அந்தஅளவுக்கு எனக்குள் பதிந்துபோனார்கள். எதிர்காலத்தில் நாமும் இவர்கள் மாதிரி டீச்சராக வரவேண்டும் என்று எண்ணினேன். ஆனால் காலம் என்னை நடிகையாக்கி விட்டது. என்றாலும் இந்த தொடரில் எனக்கு டீச்சர் கேரக்டர் என்றதும் பழைய நினைவுகளுக்குப் போய்விட்டேன்.''

சொல்லும்போதே நெகிழ்கிறார், தேவயானி.


நன்றி: தினதந்தி

R.Latha
19th November 2011, 10:02 PM
nanri aanaa!

aanaa
26th November 2011, 08:25 PM
துரத்தும் அம்மா! ஓடும் மகள்!


விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `அவள்' தொடர், ரசிகர்ளை கவர்ந்த தொடராகி இருக்கிறது.

பெற்றவர்களால் அனாதையாக்கப்பட்டு, சாந்தா அம்மாளுக்கு வளர்ப்பு மகளாகவும், மகேஷிற்கு உடன்பிறவா தங்கையாகவும் செல்லமாக வளர்கிறாள் ஷாலினி.

மகேஷிற்கு திருமணமாக, அந்த வீட்டிற்கு மருமகளாக வருகிறாள். புரபசர் ஜெயந்தியின் மகள் அமலா, திருமணத்திற்கு முன் ஷாலினியைக் கண்டறியாத ஜெயந்தி, ஷாலினியை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறாள்.


தன் மகள் அமலாவின் உரிமை, சந்தோஷம் அந்த வீட்டில் ஷாலினியால் பறிபோய்விடுமோ எனப் பயப்படுகிறாள் புரபசர் ஜெயந்தி. அதனால் ஷாலினியை அந்த வீட்டிலிருந்து பிரிக்க முயற்சி செய்கிறாள்.

இந்நிலையில், ஷாலினியை சாந்தாவுக்கு வளர்ப்பு மகளாக கொடுத்த மெய்யப்பனுக்கு, புரபசர் ஜெயந்தி தான் ஷாலினியை பெற்றெடுத்த தாய் என்று தெரிய வருகிறது. அதோடு ஷாலினி வளரும் வீட்டிற்கே தன் மகள் அமலாவை மருமகளாக அனுப்பியிருக்கிறாள் என்றும் தெரியவருகிறது. இந்த உண்மை மெய்யப்பனைத் தவிர யாருக்கும் தெரியாது.

ஷாலினி தனது மகள் என்று தெரியாத ஜெயந்தி, அவள் அந்த வீட்டை விட்டு மட்டுமல்ல, மகேஷை விட்டும் நிரந்தரமாகப் பிரியவேண்டும் என்று பல வழிகளில் துன்புறுத்துகிறாள். தன்னை பாசமாக வளர்த்த அண்ணன் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக, ஷாலினி எல்லா துன்பங்களையும் தாங்கிக் கொள்கிறாள்.

ஜெயந்தியின் துன்புறுத்தலால், ஷாலினி எங்குமே நிம்மதியாக இருக்கமுடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறாள். காலம் அவளை ஜெயந்தியின் காலடியிலேயே வந்து தள்ளுகிறது.

தன் வாழ்வில் ஒரே எதிரியாக வந்த ஷாலினி, தன் வயிற்றில் பிறந்த மகள் என்று ஜெயந்திக்கும் தெரியாது... தன்னை ஓட ஓட துரத்தும் ஜெயந்தி தான் தன்னைப் பெற்ற தாய் என்று ஷாலினிக்கும் தெரியாது. எப்போது இருவருக்கும் உண்மை தெரிய வரும் என்ற எதிர்பார்ப்போடு தொடர்கிறது, தொடர்.

புரபசர் ஜெயந்தியாக பெரிய திரை முன்னணி நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் நடிக்கிறார். ஷாலினியாக நடிப்பவர் ஸ்ரீகலா. மற்றும் சஞ்சீவ், மகாலட்சுமி, மணிகண்டன், சந்திராயன், ஏ.ஆர்.எஸ், பாரதி, சிவன் சீனிவாசன், ஸ்ரீராம் நடிக்கிறார்கள். இயக்கம்: ஜி.ஜெயகுமார்.



http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20111126/Tv2608.jpg


நன்றி: தினதந்தி

aanaa
26th November 2011, 08:26 PM
புதியதோர் கவிஞன் செய்வோம்



திறன் படைத்த புதிய கவிஞர்களை தேடிக்கண்டு பிடிக்கும் அரிய பணியை ராஜ் டிவி தொடங்கியிருக்கிறது. இதற்காக கோவை, மதுரை, திருச்சி, சென்னையில் முதல்கட்டத் தேர்வு நடந்தது. கவிவிஞர் கண்ணதாசனின் மகளும் கவிஞருமான விசாலி கண்ணதாசன் புதிய கவிஞர்களை அவர்கள் கவிதைத்திறன் அடிப்படையில் தேர்வு செய்தார்.

அவருடன் கவிஞர்கள் கபிலன், மதன் கார்க்கி, பிரியன் ஆகியோரும் புதியகவிஞர் தேர்வுக்காக இணைந்ததில், இரண்டாம் கட்டமாக 60 கவிஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அடுத்தகட்டதேர்வு நகரின் பிரமாண்ட அரங்கில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அடுத்த மாதம் டிசம்பர் முதல் செவ்வாய், புதன்கிழமைகளில் இரவு 8.30 மணிக்கு இந்த புதியகவிஞர் தேடல் நிகழ்ச்சி ராஜ் டிவியில் ஒளிபரப்பாகிறது.


நன்றி: தினதந்தி

aanaa
26th November 2011, 08:27 PM
ரஞ்சனியின் `குழந்தை' போராட்டம்

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 11 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "முத்தாரம்'' தொடர் எடுத்த எடுப்பிலேயே வேகம் பிடித்து விட்டது.

கணவர் விட்டுப்போன பிறகு நான்கு பிள்ளைகளை வளர்க்க படாத பாடுபடும் மாமியார் சாரதா, ஒரு பேரப்பிள்ளை வேண்டுமென்ற ஆசையில், அதை பெற்றுத் தர முடியாத மருமகள் ரஞ்சனி மேல் கோபப்படுவது தப்பா?

வாழ வந்த வீட்டில் எல்லாருக்கும் ஈடு கொடுத்து, அடங்கிப்போய், கணவனின் தம்பி, தங்கைகளை தன் பிள்ளைகளாக நினைத்துப் பாசம் காட்டும் ரஞ்சனி, ஒரு பிள்ளைக்காக நடத்தும் போராட்டம் தப்பா?


தன்னை கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கிய தாய்க்கும், தன் மீது அபரிமிதமான அன்பு கொண்ட மனைவிக்கும் மத்தியில் ஊசலாடும் முரளி, தாய்க்கு ஆதரவாக இருப்பது தப்பா?

அன்பு கொண்ட அண்ணியை அம்மாவாக நினைக்கும் மது மற்றும் சூர்யாவின் அளவு கடந்த பாசம் தப்பா?

அவரவர் பக்கத்தில் இப்படி நியாயங்கள் இருக்க, இந்த குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் இருப்பது யாருடைய தப்பு?

ஒருபெண்ணின் ரத்தமும், சதையுமான உணர்வுகளின் அப்பட்டமான நிஜம் இந்த `முத்தாரம்.'

நாத்தனார் புஷ்பாவின் வளைகாப்பில், குழந்தை பெற முடியாத ரஞ்சனி, மாமியார் சாரதாவால் கடுமையாக அவமானப்படுத்தப்படுகிறாள். இதைப் பார்த்து கொதித்து எழும் மது, அண்ணியின் கண்ணீரைத் துடைக்க, அவளை பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்கிறாள். அங்கு எதிர்பாராமல் வரும் சாரதா, ரஞ்சனியைப் பார்த்தால்... என்ன செய்யப் போகிறாள்? மது எடுக்கும் முயற்சி குடும்பத்தில் எப்படி புயலாக வெடித்துச் சிதறப்போகிறது?

வரப்போகும் வாரங்களில் இத்தனை பரபரப்பான கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்.

தொடரில், தேவயானி ரஞ்சனி கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார். கதை, திரைக்கதை: தேவிபாலா. தயாரிப்பு: `மெட்டிஒலி' எஸ்.சித்திக்.


http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20111126/Tv2603.jpg


நன்றி: தினதந்தி

aanaa
26th November 2011, 08:29 PM
தேவி
அம்மனின் அருள் பெற்ற தேவிக்கு நவசக்தி கொண்ட சங்கு கிடைக்கிறது. இதே சங்கை அடைய துர்காபுரத்தின் செல்வந்தனான கேசவ்நாத்தின் தாத்தா மார்த்தாண்டன் பலமுறை முயன்று தோற்றார். அவரின் கனவை நனவாக்கத் துடிக்கும் கேசவ்நாத், பல சந்தர்ப்பங்களில் சங்கை அடைந்தும் அது அவரின் கையில் தங்காமல் தேவியிடம் பாதுகாப்பாக இருந்து வந்தது.


கேசவ்நாத் தன் குரு நம்பூதிரியிடம் சங்கை அடையும் வழியைக் கேட்க, அவர் தேவியின் அண்ணன் சந்தானத்தின் மூலம் கிடைக்கும் என்று கூற, தன் பணபலத்தை பயன்படுத்தி அவன் மூலம் சங்கை அடைகிறான். சங்கை ஊதி உபயோகப்படுத்துமுன் சில பரிகாரங்களை செய்யக்கூற, கேசவ்நாத் அனைத்து ஏற்பாடுகளையும் செய்கின்றார். இதற்கிடையில் கேசவ்நாத்தின் உதவியாளன் கோபால் மற்றும் நம்பூதிரியின் சிஷ்யன் வசந்த் ஆகியோரும் சங்கை அடையத் துடிக்க, கேசவ்நாத்தின் சந்தேகம் நம்பூதிரியின் மீது எழுகிறது.

சங்கை உபயோகப்படுத்தும் நாள் வருகிறது. அப்போது சந்தானத்திற்கு தேவியின் மீது இருந்த தவறான எண்ணம் போக, சங்கை தேவியிடமே திருப்பித்தர முடிவு செய்கிறான்.

பலரும் பல கோணங்களில் நவசக்தி கொண்ட சங்கை அடையத் துடிக்க, சங்கு யாரை அடைந்தது? தேவி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப் பாகும் `தேவி' தொடரில் காணலாம்.

நன்றி: தினதந்தி

aanaa
26th November 2011, 08:31 PM
வாலி-1000

கவிஞர் வாலி சினிமாவுக்கு பாட்டெழுத வந்து 50 ஆண்டுகளை தாண்டி விட்டார். 1948-ம்ஆண்டில் `அழகர் மலைக்கள்ளன்' படத்தில் தன் பாட்டு சாம்ராஜ்யத்தை தொடங்கியவர், இடைவிடாமல் தொடர்ந்து தேடிவந்த வாய்ப்புகளில் 15 ஆயிரம் பாடல்களை தாண்டி விட்டார். இப்போதும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்.

எம்.ஜி.ஆருக்கு எழுதிய முதல் பாடல் `சிரிக்கின்றான் இன்று சிரிக்கின்றான்.' நல்லவன் வாழ்வான் படத்தில் இசையமைப்பாளர் டி.ஆர்.பாப்பா இசையில் இந்தப்பாடலை எழுதினார். இன்றளவும் ரசிகர்கள் விரும்பும் மெலடிப்பாடல் இது. தொடர்ந்து வாலியை பிரபலப்படுத்தியது எம்.ஜி.ஆரின் படகோட்டி படம். அந்தப்படத்தில் `தரை மேல் பிறக்கவைத்தான்', `பாட்டுக்குப் பாட்டெடுத்து' போன்ற பாடல்கள் அவரை புகழின் உச்சம் கொண்டு போயின. பிறகென்ன, வாலிக்கு பாட்டு வாசல் நிரந்தரமாகத் திறந்தது.


வாலி எழுதிய 15 ஆயிரம் பாடல்களில் இருந்து ஆயிரம் பாடல்களை தெரிவு செய்து அதை மேடையில் பாடகர்களை பாடவைத்து வசந்த் டிவிக்காக தயாரிக்கிறார், `சாதகப்பறவைகள்' சங்கர். இந்த பாடல் நிகழ்ச்சியில் வாலி பற்றி அவரது சிறுவயது நண்பர்கள், இசை ரசிகர்கள், கல்லூரிமாணவர்கள் காலத்தால் அழியாத வாலியின் பாடல்களின் தனித்துவம் பற்றி பகிர்ந்து கொள்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சிக்காக சினிமா பிரபலங்கள் தயாரிப்பாளர் ஏவி.எம். சரவணன், இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன், மகேந்திரன், கதிர், எஸ்.ஜே.சூர்யா, வெங்கட்பிரபு, இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், தேவா, பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி, கிராமிய பாடகர் புஷ்பவனம் குப்புசாமி, கவிஞர்கள் நா.முத்துக்குமார், பா.விஜய், நாடக ஆசிரியர் கிரேசிமோகன், நடிகை குஷ்பு ஆகியோர் கவிஞர் வாலியை சந்தித்து பேசினார்கள். அவர்களின் கலந்துரையாடல்களும் பாடலினூடே இடம் பெறுகிறது.

விரைவில் வசந்த் டிவியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.



http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20111126/Tv2601.jpg

நன்றி: தினதந்தி

aanaa
26th November 2011, 08:32 PM
மீண்டும் வந்தாச்சு!



விஜய் டிவியில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட நிகழ்ச்சி, "உங்களில் யார் அடுத்த பிரபுதேவா.'' இளைஞர்கள் பெருவாரியாக கலந்து கொண்டு தங்களது நடனத் திறமையை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றுக்கு பிரபுதேவா நேரில் வந்திருந்து அடுத்த `பிரபுதேவாவை' தேர்ந்தெடுத்தது குறிப்பிடத்தக்கது.

விஜய் டிவி மீண்டும் `உங்களில் யார் பிரபுதேவா' நிகழ்ச்சியை தொடங்குகிறது. இதற்கான நேர்முகத்தேர்வுகள் கோவை, திருச்சி, மதுரையில் கடந்த ஞாயிறன்று நடைபெற்றது.

நாளை சென்னையில் நேர்முகத்தேர்வு நடைபெறவுள்ளது. இதில் 14 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட நடன ஆர்வலர்கள் கலந்து கொள்கிறார்கள்.



நன்றி: தினதந்தி

aanaa
26th November 2011, 08:36 PM
கம்சனை வதம் செய்த கண்ணன்

ஞாயிறுதோறும் காலை 9 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது, `மகாபாரதம்' தொடர்.


தன் சுயநலத்திற்காக திருமணம் நடந்த அன்றே தங்கை தேவகி மற்றும் அவளின் கணவன் வசுதேவர் இருவரையும் சிறையில் அடைக்கிறான் கம்சன். விதிப்படி தேவகியின் எட்டாவது மகன் தன்னைக் கொன்றுவிடுவான் என்று அறிந்த கம்சன் கோகுலத்துக் கண்ணன்தான் தேவகியின் எட்டாவது மகன் என்பதை தெரிந்து கொள்கிறான். தன் நண்பனின் உதவியுடன் கண்ணனை கோகுலத்திலிருந்து மதுராவிற்கு வரவழைக்கிறான்.

எப்போதும் தைரியமாக இருந்த கம்சனுக்கு, கண்ணனின் வரவு ஒருவித அச்சத்தை ஏற்படுத்துகிறது. இருப்பினும் கண்ணன் கம்சனுடன் மல்யுத்தப் போட்டி நடத்த, போட்டியில் வெற்றி பெற்ற கண்ணன் கம்சனை வதம் செய்கிறான்.

அந்த மகிழ்ச்சியுடன் கண்ணன் சிறைச்சாலையில் இருக்கும் தன் தாய், தந்தையரை விடுதலை செய்கிறான். இது ஒருபுறம் இருக்க, கிந்தம முனிவரின் சாபத்தால் தன் மனைவிகளை தொடாதிருந்த பாண்டு ஒரு நாள் தனது இரண்டாவது மனைவியான மாதுரி குளிப்பது கண்டு அவளை அணைக்க முற்பட உயிர் துறக்கிறான். பாண்டுவின் சாவிற்கு தன்னை காரணம் காட்டி மாதுரியும் உயிரை விட, குந்தி தன் ஐந்து பாண்டவ புத்திரர்களுடன் ஹஸ்னாபுரத்திற்கு வருகின்றாள். இவர்களின் வருகையை ஒருபோதும் விரும்பாத துரியோதனன் பாண்டவர்கள் மீது வெறுப்பைக் காட்டுகிறான்.


நன்றி: தினதந்தி

aanaa
11th December 2011, 01:57 AM
ராதாவின் மாயாஜாலம்



ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினந்தோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர், `ராதா கல்யாணம்.'

தனது கண்களுக்கு மட்டுமே தெரிந்து வரும் ராதாவை அடைத்து வைத்து, வீட்டில் இருப்பவர்களிடம் அவள் காணாமல் போகவில்லை என்று நிரூபிக்க நினைக்கும் கீர்த்தி ஒருபுறம். மகளின் இந்த நிலைக்காக கீர்த்தியின் தாய் எடுக்கும் அதிர்ச்சி முடிவு இன்னொருபுறம்.

ராதாவின் பிரிவால் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கும் கீர்த்தியை கொலை செய்ய இதை விட நல்ல சந்தர்ப்பம் இல்லை என்று நினைக்கும் சந்தனாவின் திட்டம் நிறைவேறுமா? சந்தனாவின் இந்தத் திட்டத்திற்கு அவளுக்கு உதவப் போவது யார்?

இதற்கிடையே டெண்டரில் ராதாவின் கையெழுத்து எப்படி வந்தது? கீர்த்தி சொல்வது போல் ராதா இருப்பது உண்மையா? உண்மையென்றால், ராதா ஏன் கீர்த்தியின் கண்களுக்கு மட்டும் தெரிகிறாள்? ராதா இருப்பது எங்கே?அழைத்த அந்த நிமிடத்தில் வந்து போகும் ராதாவின் நோக்கம் என்ன? இதன் பின்னால் ஏதாவது ச(க்)தி இருக்கிறதா? இருந்தால் அதற்குக் காரணம் என்ன? வம்சியின் தேடல்களுக்கான பதில் என்ன?

இதற்கிடையே சந்தனா பற்றி விஸ்வநாதன் தெரிந்து கொண்டது என்ன? அவர் பிடியில் இருந்து சந்தனா தப்பிப்பாளா? அல்லது அகப்பட்டு வம்சியை அடையும் திட்டத்தைக் கைவிட்டு அவர் வாழ்க்கையில் இருந்து விலகுவாளா? சுவாரசிய திருப்பங்களுடன் தொடர்கிறது, தொடர்.

நன்றி: தினதந்தி

aanaa
11th December 2011, 01:58 AM
நோய் போக்கும் ருத்ராட்சம்

சிவன் கண்ணிலிருந்து விழுந்த கண்ணீர்த்துளிதான் ருத்ராட்சமானது என புராணங்கள் சொல்கின்றன. ருத்ராட்சங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. இதன் சக்தியை வாரணாசி இந்தியன் இன்ஸ்ட்டிடிïட் ஆப் டெக்னாலஜி விஞ்ஞானிகள் அறிவியல் ரீதியாக நிரூபித்துள்ளார்கள்.

மருத்துவரீதியாக டயாபடீஸ், கேன்சர் போன்ற பல நோய்களை தீர்க்கும் சக்தியும் ருத்ராட்சத்திற்கு உண்டு. காலையில் ருத்ராட்சத்தில் ஊற வைத்த நீரை வெறும் வயிற்றில் பருகி வந்தால் அல்சர், அஜீரண கோளாறு ஏற்படாது என்கிறது, இயற்கை மருத்துவம். மேலும் பல சுவையான தகவல்களை சனிக்கிழமை தோறும் காலை 7.30 மணிக்கு ஜெயா பிளஸ் தொலைக்காட்சியில் வரும் ஸ்ரீஷாப்பி நிகழ்ச்சியில் காணலாம்.

நிகழ்ச்சியை நடிகை மாளவிகா தொகுத்து வழங்குகிறார்.

நன்றி: தினதந்தி

aanaa
11th December 2011, 01:58 AM
பாட்டுத்திருவிழா


அழியாத கோலங்கள், மூடுபனி, நீங்கள் கேட்டவை, மூன்றாம்பிறை, சந்தியாராகம், வீடு போன்ற படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவுக்கு புது முகவரி தந்தவர் இயக்குனர்-ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா. இவரது படங்களில் பெரும்பாலும் காமிராவே பேசிவிடும். கமல், ரஜனி உள்ளிட்ட பிரபலங்களை இயக்கியவர், புதுமுகங்களையும் தனது இயக்கத்தால் பிரபலமாக்கினார்.

பாலுமகேந்திராவின் கலை சாதனையை பாராட்டி `ஒப்பற்ற ஒளிப்பதிவு மேதைக்கு பாட்டுத்திருவிழா' என்ற தலைப்பில் சென்னை காமராஜர் அரங்கில் நாளை விழா நடைபெறுகிறது. `ஸ்ரீதேவி பைன்ஆர்ட்ஸ்' சிவசங்கர் நடத்தும் இந்த விழாவில், `சரிகமபதநிசா' இசைக்குழுவினர் பாலுமகேந்திரா படங்களில் இடம்பெற்ற பாடல்களை பாடுகிறார்கள். பாலுமகேந்திரா இயக்கிய அத்தனை படங்களுக்கும் இளையராஜாவே இசை என்பது குறிப்பிடத்தக்கது.

விழாவில் திரை நட்சத்திரங்கள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர், பாடகிகள் கலந்து கொள்கிறார்கள்.

பிரபல தனியார் சேனல் ஒன்றில் இந்த இசை நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகிறது.


நன்றி: தினதந்தி

aanaa
11th December 2011, 01:58 AM
கார் பரிசாகப்பெறும் சகலகலா வல்லவன் யார்?

கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் மாலை 4.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி, சகலகலாவல்லவன். பொதிந்து கிடக்கும் பல்வேறு மனிதத் திறமைகளை வெளிக்கொண்டு வருவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.

தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து ஒன்றுக்கும் மேற்பட்ட திறமைசாலிகளை இரண்டு கட்ட தேர்வுகளின் மூலம் தேர்ந்தெடுத்து நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டுள்ளது. 18 முதல் 35 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருவரும் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் குழுவினராகவும் போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர்.

திரைப்படம், இசை, நடனம் போன்ற துறைகளில் முத்திரை பதித்த பிரபலங்களான திரைப்பட இயக்குனரும், நடிகருமான ரமேஷ்கண்ணா, பரதநாட்டியக் கலைஞரும், நடிகையுமான சுகன்யா, ஒளிப்பதிவாளர், திரைப்பட தயாரிப்பாளர், நடிகர் என பல முகங்களைக் கொண்ட இளவரசு, பாடகர் மாணிக்க விநாயகம் ஆகியோர் இந்த நிகழ்ச்சிக்கு நடுவர் பொறுப்பேற்றிருக்கின்றனர்.

நிகழ்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் போட்டியாளர்களின் திறமைகளை கருத்தில் கொண்டு அடுத்தடுத்த சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். கால் இறுதி, அரை இறுதிச் சுற்றினைக் கடந்து இறுதிச்சுற்றில் வெற்றி பெறும் வெற்றியாளருக்கு தமிழகத்தின் சகலகலாவல்லவன் பட்டமும், முதல் பரிசாக `ஸென் எஸ்டிலோ' கார் ஒன்றும் வழங்கப்படுகிறது.

இது ஒன்றுக்கும் மேற்பட்ட திறமைகள் கொண்ட போட்டியாளர்களுக்கு ஒரு களம். பல திறமைகள் கொண்ட ஒருவருக்கு சவால். மாருதி ஸென் எஸ்டிலோவும், கலைஞர் தொலைக்காட்சியும் இணைந்து இந்த நிகழ்ச்சியை வழங்குகின்றது.தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றிலேயே புதுமையான, பற்பல நபர்களிடையே ஒளிந்திருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட பல திறமைகளை வெளி உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பு: கிராவிட்டி என்டர்டெயின்மென்ட்.

நன்றி: தினதந்தி

aanaa
11th December 2011, 01:58 AM
ரஜினி எக்ஸ்பிரஸ்

நடிகர் ரஜினியின் 61-வது பிறந்த நாளையொட்டி விஜய் டி.வி. `ரஜினி ரசிகன் எக்ஸ்பிரஸ் வாகனம்' ஒன்றை ஏற்பாடு செய்தது. அந்த வாகனம் தமிழகம் முழுவதும் சுற்றிவந்தது. இந்த வாகனத்தை படஅதிபர் ஏவி.எம்.சரவணன், இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20111210/TV09.jpg

நாளை ஞாயிறு முழுவதும் ரஜினி தொடர்பான சிறப்பு நிகழ்ச்சிகள் இடம் பெறுகிறது. பிரபல நட்சத்திரங்கள், இயக்குனர்கள், ரஜினி ரசிகர்கள், நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் இதில் பங்கு கொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சிகளுடன் `ரஜினி ரசிகன் எக்ஸ்பிரஸ் வாகனம்' சுற்றி வந்த இடங்களில் பெற்ற வரவேற்புகளும் ஒளிபரப்பாகும்.

நன்றி: தினதந்தி

aanaa
11th December 2011, 01:59 AM
வந்தாளே மகராசி-300

ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் "வந்தாளே மகராசி'' தொடர் 300 எபிசோடுகளை கடந்து தொடர்கிறது. பெண்ணின் பெருமைகளைச் சொல்லும் தொடர் என்பதால் தொலைக்காட்சி நேயர்களிடம் வரவேற்பு பெற்ற தொடர் இது. குறிப்பாக இந்த தொடருக்கு பெண் ரசிகைகள் அதிகம்.

எந்தவொரு குடும்பத்திலும் பெண் குழந்தை பிறந்தால் குடும்பத்தில் உள்ளவர்கள் அழைக்கிற வார்த்தை தான் தொடரின் தலைப்பு. பெண் மணமாகி புகுந்த வீட்டிற்கு செல்லும்போதும் இதை வார்த்தையைத்தான் சொல்வார்கள். இந்த வார்த்தையையே தலைப்பாக்கி வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

சொர்ணமால்யா, ஐஸ்வர்யா, ஸ்ரீ, இளவரசன், லதாராவ், சுக்ரன், ஸ்ரீலதா, அமரசிகாமணி, ஷண்முகசுந்தரம், புவனா, சுதா, சுமங்கலி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

இசை: ராஜ்பாஸ்கர். இயக்கம்: செந்தில்குமார். இவர் சுந்தர் சி.யின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் நடித்த `புதிய கீதை' மற்றும் பள்ளிக்கூடம், சாணக்யா, குப்பி, பகைவன் போன்ற படங்களைத் தயாரித்த விஸ்வாஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் வி.சுந்தர் தயாரிக்கிறார்.

நன்றி: தினதந்தி
-------

aanaa
17th December 2011, 11:33 PM
உறவுக்கு கைகொடுப்போம்-500



கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஏவி.எம்.மின் `உறவுக்கு கைகொடுப்போம்' தொடர் 500 எபிசோடை நிறைவு செய்திருக்கிறது. தொடர்ந்து குடும்ப உணர்வுகளின் சங்கமமாக தொடரும் இந்த தொடருக்கு குறிப்பாக பெண் ரசிகைகள் அதிகம்.

அண்ணன்-தம்பிகளின் ஒற்றுமை பற்றியும், வீட்டுக்கு வந்த மருமகள்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வது பற்றியும் சொல்லும் குடும்பக்கதை பின்னணி என்பதால், தொடர் நேயர்களின் ஏகோபித்த வரவேற்புக்குரியதாகி இருக்கிறது. விளைவு, கலைஞர் டிவியின் தொடர்கள் வரிசையில் டி.ஆர்.பி.ரேட்டிங்கிலும் முதல் தொடர் என்ற நிலையை தொடர்ந்து தக்க வைத்திருக்கிறது.

அண்ணன், தம்பி, தங்கை என்று சின்னக்குடும்பம். அந்தக் குடும்பத்தின் தாயான தெய்வநாயகி இறந்து மீண்டும் பெரியண்ணாவுக்கு குழந்தையாக பிறக்கிறாள். அந்தக் குழந்தை போன ஜென்ம நினைவுகளுடன் தன் பிள்ளைகளுக்கு தாயாக, மருமகள் களுக்கு மாமியாராக குடும்பத்தை சிறப்பாக நடத்திச் செல்கிறாள். இந்த கேரக்டரில் குழந்தை தெய்வநாயகியாக 21/2 வயது சின்னஞ்சிறுமி யுவினா நடித்திருக்கிறாள். பெரிய மனுஷி தோரணையில் மாமியார் தெய்வநாயகியாக நடிக்கும் அவள் சிறுவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை ஒட்டுமொத்தமாக தன் நடிப்பால் கவர்ந்திருக்கிறாள்.

இந்த குடும்பத்தின் கடைசி மருமகள் மதுவிற்கு குழந்தை என்றால் கொள்ளைப் பிரியம். அவள் 8 மாத கர்ப்பிணியாக இருக்கும்போது பிறக்கும் குழந்தையின் எதிர்காலம் பற்றி அறிய ஜாதகம் பார்க்க செல்கிறார்கள். ஜோதிடரோ, `ஆண் குழந்தை பிறந்தால் தாய் உயிரோடு இருக்கமாட்டாள் என்றும், பெண் குழந்தை பிறந்தால் தாய்க்கு ஆபத்து இல்லை' என்றும் சொல்ல, குடும்பமே ஆடிப்போகிறது. மதுவிற்கு என்ன குழந்தை பிறக்கப்போகிறது?

தெய்வநாயகியின் தம்பி நந்தகுமார்-கிருஷ்ணா குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த பத்மா யார் என்ற சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்து விட்டது. இனியாவின் தாய் தான் பத்மா என்பது தெரிந்து விட்டது. இதற்குப்பிறகு கிருஷ்ணா எதிர்பார்த்ததுபோல் இனியா, கிருஷ்ணாவை வெறுத்தாளா? அல்லது பத்மா-கிருஷ்ணாவின் தியாகத்தை உணர்ந்தாளா? பத்மா வந்ததால் கிருஷ்ணாவின் நிலை என்ன?

கேள்விகளுக்கு பதில், வரப்போகும் பரபரப்பான எபிசோடுகளில்.

தொடரின் இன்னொரு சிறப்பு அம்சம், வியாழன் தோறும் பாபாவின் தரிசனம். அதுவும் கதையில் வரும் கதாபாத்திரங்களுக்கு அவர் ஆலோசனை சொல்லும் விதத்தில் காட்சிகள் அமைந்திருப்பது சிறப்பு.

நட்சத்திரங்கள்: பூவிலங்குமோகன், விஜய்ஆனந்த், புஷ்பலதா, காயத்ரிபிரியா, யுவினா பார்த்தவி, சுரேஷ்வர், தினகர், சீதா, காஞ்சி வினிதா, பூரணி, சுபாஷினி, கிருஷ்ணமூர்த்தி.

கதை, திரைக்கதை வசனம்: சேக்கிழார். இயக்கம்: கே.ஏ.புவனேஷ்.

தயாரிப்பு: எம்.சரவணன், எம்.எஸ்.குகன்.

http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20111217/TV-04.jpg

நன்றி: தினதந்தி

aanaa
17th December 2011, 11:34 PM
சின்ன மருமகள்



திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர், `சின்ன மருமகள்.'

தேவுடன் திருமணம் என்பதை ஒரு கனவாகவே நினைத்துக் கொண்டிருந்த ராதிகாவிற்கு நேரம் கை கூடி வர, திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. சடங்குகள் பல நடந்து கொண்டிருக்க, அதே நேரம் சினிமா ஆசையில் மும்பை சென்றிருந்த விசாகா வீடு திரும்புகிறாள். விசாகாவின் வருகை ராதிகாவின் குடும்பத்தில் அச்சத்தை ஏற்படுத்துகிறது. இருப்பினும் தன் பேத்தியின் வருகை பாட்டிக்கு மட்டும் இனிக்கிறது.

ராதிகாவிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது முதலே, இதை சற்றும் விரும்பாத விசாகாவின் பாட்டி ராதிகாவுடனான தேவின் திருமணத்தை நிறுத்த பல வழிகளை கையாள்கிறார். அதன் ஒரு பகுதியாக தேவ் வீட்டிலிருந்து ராதிகாவிற்கு கொடுத்து அனுப்பப்பட்ட கொலுசை விசாகாவிற்கு அளித்து அணியச் செய்கிறார். இதைக் காணும் ராதிகாவின் அம்மா, தேவகி பாட்டியுடன் ராதிகாவிற்கு ஆதரவாக வாதிடுகிறார். தேவகியின் பேச்சை ஒரு பொருட்டாகவே மதிக்காத பாட்டி, விசாகாவை தேவுடன் இணைக்கப் போகும் தன் திட்டத்தை தேவகியிடம் கூற, தேவகியோ `இதற்கு ஒரு போதும் சம்மதிக்க மாட்டேன்' என்று கர்ஜிக்கிறாள்.

இதற்கிடையில் மாப்பிள்ளையை அழைக்கச் சென்றிருந்த ராதிகாவின் அப்பா, தேவ் தன் சொத்துக்களை ராதிகாவின் பெயருக்கு மாற்றி எழுதியதை அறிந்து கொதித்துப் போகிறார். அதே சமயம் கொலுசு அனுப்பப்பட்டது தனக்கு தான் என்று ராதிகா தேவகி மூலம் அறிந்து அதிர்ந்து போகிறாள்.

ராதிகா-தேவ் திருமண கனவு பலித்ததா? அல்லது பாட்டியின் சதித்திட்டம் வென்றதா? தொடர்கிறது, தொடர்.

நன்றி: தினதந்தி

aanaa
17th December 2011, 11:35 PM
பாமர மக்களிடம் இருந்து தெய்வீக ராகங்கள்



ஸ்ரீசங்கரா தொலைக்காட்சி இளைய தலைமுறைக் கலைஞர்களுக்கான இசையாற்றல் மற்றும் தெய்வீக உணர்வை வளர்க்கும் விதத்தில் `பஜன் சாம்ராட்' என்ற இசைப்போட்டி நிகழ்ச்சியை வழங்கி வருகிறது. தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த இசை நிகழ்ச்சியில் நடுவர்களாக இருப்பவர்கள் பிரபல கர்நாடக இசைப்பாடகி சவுமியா, நாட்டுப்புற இசைப்பாடகி குசுமா.

சவுமியாவிடம், "திரை இசைப்பாடல்களுக்கு நடுவராக சேனலில் வந்தீர்கள். சாஸ்திரிய சங்கீதத்துக்கும் நடுவராக இருந்திருக்கிறீர்கள். இந்நிகழ்ச்சி முழுக்க பஜனைப் பாடல்கள் பாடும் போட்டி. இதில் உங்கள் நடுவர் பணியை எப்படி உணருகிறீர்கள்?'' கேட்டோம்.

"திரைப்பட பாடல்கள், கர்நாடக சங்கீத பாடல்கள், பஜனைப்பாடல்கள் சாஸ்திரிய சங்கீத பாடல்கள் என ஒவ்வொன்றும் ஒருவிதம். இதில் பஜனைப்பாடல்கள் இறைவனை நினைத்து உருகிப்பாடுவது. இந்தப் பாடல்கள் மூலம் இறைவனை உணரலாம். இந்த நிகழ்ச்சியின் நோக்கம், சங்கீத வாசனையே இல்லாதவர்களும் கேள்வி ஞானத்தில் தங்கள் பாடும்ஆற்றலை நிரூபிப்பது தான். சங்கீத வாசனையே இல்லாத கன்னட தோட்ட தொழிலாளர்கள் கூட பஜனைப்பாடல்களை உள்ளம் உருக பாடியதை பார்த்து நெகிழ்ந்து போனேன்.

குறிப்பாக ஒரு இஸ்லாமிய பெண்ணும், ஒரு கிறிஸ்தவப்பெண்ணும் உள்ளம் உருக பஜனை பாடியபோது எனக்கு மதம் தெரியவில்லை மனிதம் தான் தெரிந்தது. இசையின்பால் அவர்கள் கொண்டிருந்த ஈடுபாடு தான் தெரிந்தது.''

நிகழ்ச்சியின் இன்னொரு நடுவரான குசுமா 500-க்கும் மேல் பஜனைப் பாடல்கள் பாடியவர். இவரது பாடல்கள் இசைத்தட்டாகவும் வந்துள்ளது. அவர் கூறும்போது, "தெய்வீக ராகங்கள் பாமர மக்களிடம் இருந்தும் இத்தனை அற்புதமாக வெளிப்படுவதை ஒரு நடுவராக உணர்ந்த நேரத்தில் என் பிரமிப்பு பல மடங்காயிற்று. கற்றுக்கொள்ளும் ஆர்வம் மட்டுமே அவர்களை தேர்ந்த பாடகர்களாக செதுக்கியிருக்கிறது'' என்கிறார்.

இந்த பஜனைப்பாடல் போட்டியில் பாடகர்கள் குழுவாக கலந்து கொள்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்படும் குழுவுக்கு பரிசு 10 லட்சம் ரூபாய்.

நன்றி: தினதந்தி

aanaa
17th December 2011, 11:35 PM
பக்தி திருவிழா



விஜய் டிவியில் வருகிற 20-ந்தேதி வரை நடைபெறு கிறது, பக்தி திருவிழா. திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் இந்த திருவிழாவில் பிரபல சொற்பொழிவாளர்களின் ஆன்மிக உரை மற்றும் நாமசங்கீர்த்தனங்கள் இடம் பெறுகின்றன.

இதற்கான விழாவை ஸ்ரீமத் ஸ்ரீரங்க ஸ்ரீநாராயண ஜீயர் சுவாமிகள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். முதல் நாள் நிகழ்ச்சியின் தொடக்கமாக உடையலூர் கல்யாணராமனின் நாம சங்கீர்த்தனமும், ஸ்ரீரங்கம் உ.வே.ஸ்ரீ ஹரியின் உபன்யமும் இடம் பெற்றன.

இன்று மாலை 5 மணிக்கு செல்வி சுமித்ராவின் ஹரி கதாவும், 6 மணிக்கு பேராசிரியை இளம்பிறை மணிமாறனின் உபன்யாசமும், இரவு 7 மணிக்கு டாக்டர் கணேஷின் நாமசங்கீர்த்தனமும் இடம் பெறுகிறது. இரவு 7.40 மணிக்கு உ.வே.துஷ்யந்த் ஸ்ரீதரின் உபன்யாசம்.

நாளை மாலை 5 மணிக்கு டி.எஸ்.பிரேமாவின் உபன்யாசம்; 6 மணிக்கு பேராசிரியை விஜயசுந்தரியின் உபன்யாசம். இரவு 7 மணிக்கு சதானாதபாகவதரின் நாமசங்கீர்த்தனம். 7.40 மணிக்கு நாவேந்தர் மதிவண்ணனின் உபன்யாசம்.

செவ்வாய் மாலை 5 மணிக்கு செல்வி சிந்துஜாவின் ஹரிகதா இடம் பெறுகிறது. 6 மணிக்கு கடையநல்லூர் துக்காராம் கணபதி மஹாராஜின் `பாண்டுரங்கனின் மகிமை' ஹரி கீர்த்தனை இடம் பெறுகிறது. இரவு 7 மணிக்கு ராகவேந்திர பஜனைமண்டலி வழங்கும் ஹரி கீர்த்தனையும், 7.40 மணிக்கு நீலமங்கலம் அலமேலு, வி.சுப்புராமன் ஆகியோரின் உபன்யாசமும் நடைபெறுகிறது. அத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகிறது.

ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த பக்தி திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.


நன்றி: தினதந்தி

aanaa
17th December 2011, 11:36 PM
சரித்திரம் பேசும் காதம்பரி



200 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை கதைக்களமாக கொண்டு, பழங்கால தமிழர்களின் வாழ்க்கை முறையை விளக்க வரும் புதிய டி.வி. தொடர் காதம்பரி. விறு விறுப்பான திரைக்கதையோடும், முன்னணி நட்சத்திரங்களோடும் வேகமாக வளர்ந்து வரும் இந்த தொடர், ஜெயா டி.வி.யில் ஜனவரியில் இருந்து ஒளிபரப்பாக உள்ளது.

நடிகை மிதுனா, இந்த தொடருக்காக முதன்முதலாக சின்னத்திரையில் தோன்றுகிறார். சுதாசந்திரன் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதை, திரைக்கதை, இயக்கம் எஸ்.பி. வசனம் கிருஷ்ணசாமி. ஒளிப்பதிவு வி.ராக்கு. இசை ராஜேஷ் ராமலிங்கம்.

சாப்ரன் கிரியேஷன்ஸ் இந்த தொடரை தயாரித்து வழங்குகிறது.

http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20111217/TV-09.jpg

நன்றி: தினதந்தி

aanaa
25th December 2011, 07:18 AM
பாட்டு ராணிக்கு பாட்டுத்திருவிழா



பிரபல பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரிக்கு சமீபத்தில் பாராட்டு விழா நடந்தது. `பாட்டு ராணிக்கு பாட்டுத்திருவிழா' என்ற தலைப்பில் சென்னை காமராஜர் அரங்கில் நடந்த இந்த விழாவில் எல்.ஆர். ஈஸ்வரி பாடிய காலத்தால் அழியாத பாடல்களை சாதகப்பறவைகள் இசைக்குழுவினர் பாடினார்கள். நிகழ்ச்சியின் நாயகி எல்.ஆர்.ஈஸ்வரியும் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். எல்.ஆர்.ஈஸ்வரிபாடி பிரபலமான பாடல்களான `பட்டத்துராணி பார்க்கும் பார்வை, அம்மம்மா கேளொரு சேதி, முத்துக் குளிக்க வாரீகளா, பளிங்கினால் ஒரு மாளிகை' போன்ற பாடல்களை தங்கள் குரலில் பாடகிகள்பாடியபோது நெகிழ்ந்துஅவர்களை பாராட்டவும் செய்தார். நிகழ்ச்சியில் `எலந்தப்பய(ழ)ம்' பாடலை அவரே பாடி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

விழாவில் கவிஞர் வாலி, நடிகர்கள் சிவகுமார், விவேக் ஆகியோர் எல்.ஆர்.ஈஸ்வரியின் இசை சாதனைகளை பட்டியலிட்டார்கள்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை வசந்த் டிவியுடன் இணைந்து `சாதகப்பறவைகள்' சங்கர் செய்திருந்தார்.

இந்த விழாக்கொண்டாட்டம் வசந்த் டிவியில் நாளை காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது.


http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20111224/TV04.jpg

நன்றி: தினதந்தி

aanaa
25th December 2011, 07:19 AM
அழகிய தமிழ் மகள்



கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் `அழகிய தமிழ் மகள்' நிகழ்ச்சி, 175-வது எபிசோடுகள் ஒளிபரப்பானதை கொண்டாடும் விதமாக சமீபத்தில் சிறப்பு நிகழ்ச்சியும், படப்பிடிப்பும் நடைபெற்றது. கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய அணு விஞ்ஞானி சேத்தல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அங்கு பணிபுரியும் வடமாநிலத்தைச் சேர்ந்த பெண்மணி, தமிழ் மொழி மீது கொண்ட காதலால், இந்தியில் தமிழ்க் கவிதை எழுதி வாசித்து அனைவரது பாராட்டையும் பெற்றார்.

தனித்திறமை உள்ள மகளிரை செல்வி. திருச்சி அன்னலட்சுமி மற்றும் தேர்வுக்குழுவினர் தேர்வு செய்கிறார்கள். ஸ்ரீவெங்கடேசுவரா டெலிபிலிம்ஸ் சார்பாக கே.பி.முத்துக் குமார் மற்றும் யமஹா பிரகாஷ் நிகழ்ச்சியினை தயாரிக்க, நடிகை ரோகிணி தொகுத்து வழங்குகிறார். ஞாயிறு தோறும் காலை 8 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது, இந்த நிகழ்ச்சி.


நன்றி: தினதந்தி

aanaa
25th December 2011, 07:20 AM
ராதா கல்யாணம்-200



திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் `ராதா கல்யாணம்' தொடர், 200-வது எபிசோடை எட்டுகிறது.

கீர்த்தி தன் தங்கையைப் போல் பாவிக்கும் ராதாவின் வாழ்க்கை மீது அதிக அக்கறை கொண்டிருக்கிறாள். அதன் காரணமாகவே ராதாவின் கழுத்தில் இருக்கும் தாலியை அறுத்தெறிந்து அவளுக்கு ஒரு புதிய வாழ்க்கை அமைத்துக் கொடுக்க நினைக்கிறான். ஆனால் ராதாவோ தன் உயிர் போனாலும் கழுத்தில் இருக்கும் தாலியை கழற்றுவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறாள்.

ராதாவின் வாழ்க்கையில் ஏதோ மர்மம் இருப்பதையும், அதை ராதா மறைப்பதையும் நன்கு உணர்ந்த கீர்த்தி, ராதாவை அவளின் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்கிறாள். அங்கு கீர்த்தியும், ராதாவும் கோவிலைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்க, அச்சமயம் குடிகார சேவகனை கீர்த்தி கண்டுவிட கீழே மயங்கி விழுகிறாள். கீர்த்தியை பரிசோதிக்கும் வைத்தியர், கீர்த்தி கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை கூற, வம்சியின் அம்மா உட்பட அனைவரும் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கிறார்கள். ஆனால் அந்த சந்தோஷத்தை நீடிக்க விடாமல், குழந்தை பெற்றவுடன் கீர்த்தியின் உயிர் பிரிந்துவிடும் என்ற அபாய செய்தியை அவர் கூற, அனைவரும் கலங்கிப் போகிறார்கள்.

ராதாவின் நடவடிக்கைகளில் நிறைய மாற்றங்களை உணரும் கீர்த்தி அடிக்கடி மயங்கி விழுகிறாள். ராதாவின் தாலி பற்றிய உண்மையை கீர்த்தி அறிந்தாளா? கீர்த்தியின் உடல் நிலையை வம்சி அறிந்தானா? தொடர்கிறது, தொடர்.
நன்றி: தினதந்தி

aanaa
25th December 2011, 07:22 AM
தங்கம் தொடரில் நடிக்கப்போகும் அடுத்த அழகுப் பெண் யார்?



நடிகை ரம்யாகிருஷ்ணன் சன் டிவியில் நாயகியாக நடிக்கும் தொடர் தங்கம். இந்த தொடரில் ஒரு புதுமுக நடிகைக்கு கடந்த ஆண்டு நடிக்க வாய்ப்பு வழங்கினார். அதற்காக எடுத்த எடுப்பில் இந்த வாய்ப்பை அவர் வழங்கி விடவில்லை. சிறந்த சரும அழகியை தேர்ந்தெடுத்து பயன்படுத்த விரும்பினார். அதற்காக கோத்ரேஜ் நிறுவனத்துடன் கைகோர்த்துக் கொண்டு பிரபல நகரங்களில் போட்டி நடத்தியதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் நித்யா.

போட்டியில் வென்ற நித்யா கோவையைச் சேர்ந்தவர். கல்லூரி மாணவியான அவர், இந்த தொடரில் வள்ளி என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானார். இந்த தொடரில் நடிக்கத் தொடங்கியதும் `விளக்கு வச்ச நேரத்திலே', `அபிராமி' தொடர் களிலும் நடிக்கும் வாய்ப்பு தேடிவந்தது.

இப்போது இன்னொரு புதுமுகத்தை தேர்ந்தெடுத்து நடிக்கவைக்கும் பொருட்டு `சிந்தால் சரும பாதுகாப்பு சவால் சீசன்-2' என்ற போட்டியை அறிவித்திருக்கிறார். இதன்மூலம் 18 வயதுக்கு மேற்பட்ட இளம் சரும அழகி ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். அவர் தங்கம் தொடரில் புதிதாக உருவாக்கப்படும் முக்கிய கேரக்டரில் நடிப்பார்.

போட்டிக்கான முதல் கட்டத்தேர்வு கோவை, திருச்சி, சென்னையில் நடைபெறவிருக்கிறது. டைரக்டர் டி.பி.கஜேந்திரன், நடிகை காவேரி இருவரும் நடுவர்களாக இருந்து சிறந்த சரும அழகியை தேர்ந்தெடுக்கிறார்கள். இவர்களில் காவேரி, இதே தங்கம் தொடரில் இளவஞ்சி என்ற கேரக்டரில் நடிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தினதந்தி

aanaa
1st January 2012, 04:03 AM
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி!



116 நாடுகளில் 83 மொழிகளில் 13 வருடங்களாக வலம் வந்து கொண்டிருப்பது `ஹு வாண்ட்ஸ் டு பி எ மில்லினிர் கேம் ஷோ' நிகழ்ச்சி. இதை இந்தியில் `கோன் பனேகா குரோர்பதி' என்ற பெயரில் அமிதாப்பச்சன் நடத்தி புகழ் பெற்றார். இப்போது தமிழில் `நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' என்ற தலைப்பில் பிரத்யேகமாக தயாராகிக் கொண்டிருக்கிறது, இந்த நிகழ்ச்சி.

எளிய நடையில், எளிய கேள்விகள் மூலம் பொது அறிவில் தங்களை வளர்த்துக் கொண்டவர்களை கோடீஸ்வரராக்கும் இந்த நிகழ்ச்சியை நடிகர் சூர்யா வழங்குகிறார். சின்னத்திரையில் சூர்யாவின் முதல் பங்களிப்பு இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கான படப்பிடிப்பு புத்தாண்டு முதல் தொடங்குகிறது. பிப்ரவரியில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகத் தொடங்குகிறது.


http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20111231/TV-02.jpg

நன்றி: தினதந்தி

aanaa
1st January 2012, 04:05 AM
புத்தாண்டு சிறப்பு ஜாக்பாட்



ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் ஜாக்பாட் நிகழ்ச்சி வரும் 2012 புத்தாண்டை மகிழ்ச்சி பொங்க வரவேற்கும் வகையில் `ஜாக்பாட்' சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாக உள்ளது. இந்த சிறப்பு ஜாக்பாட் நிகழ்ச்சியில் இளம் திரை நட்சத்திரங்கள் பங்கு பெறுகின்றனர்.

ஒரு அணியில் நடிகர்கள் ஜெய் ஆகாஷ், பிருத்திவ் பாண்டியராஜன், உதயா, நடிகை ஆர்த்தி, மற்றொரு அணியில் நடிகர்கள் ஹம்சவர்தன், கணேஷ்கர், சச்சின், நடிகை அனுஜா ஐயர் என இரு அணிகளும் உற்சாகத்துடன் இந்நிகழ்ச்சியில் இடம் பெறுகிறார்கள்.

நடிகை சிம்ரன் தொகுத்து வழங்கும் இந்த சிறப்பு ஜாக்பாட் நிகழ்ச்சி, புத்தாண்டு தினத்தில் இரவு 8 மணிக்கு ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாகிறது.

நன்றி: தினதந்தி

aanaa
1st January 2012, 04:06 AM
மூதாய்

மக்கள் தொலைக் காட்சியின் தயாரிப்பில், வரும் வெள்ளி இரவு 8.30 மணிக்கு `மூதாய்' என்கிற தலைப்பில் வெளிவரும் மாண்டுபோன பெண்களின் வீரவரலாறு தொடங்குகிறது. இதுவரை யாராலும் சொல்லப்படாத மண் வணங்கும் பெண்களின் உண்மைக்கதைகள் இதில் இடம் பிடிக்கின்றன. தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் பல்வேறு கிராமங்களில் மக்களால் போற்றப்படும் இந்த ஞான தெய்வங்கள் அத்தனைபேரும் சமூகத்திற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள்.

பிள்ளைக்காரி

இவள் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம், இலந்தக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவள். நாற்றுக் கட்டை வைத்து விளையாடிய பெண்ணை கொச்சைப்படுத்திய பண்ணையாரை எரித்தவள். தன்னைக் கொன்று பண்ணையாரின் கண்ணை பிள்ளைப்பால் தந்து காத்தவள்.

அழகம்மை

தேனி மாவட்டம், மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவள். தன் தாத்தா ஊரை ஏமாற்றிய கதையை ஊர் பஞ்சாயத்துக்குச் சொன்னவள். சொந்தத் தாத்தாவால் பழிவாங்கப்பட்டவள்.

வெட்டுடையாள்

சிவகங்கை மாவட்டம், கொல்லங்குடி கிராமத்தைச் சேர்ந்தவள். சிவகங்கை சமஸ்தானத்தை ஆண்ட வீரநங்கை வேலு நாச்சியாரை வெள்ளைக்காரர்களிடம் இருந்து தன் தலையைத் தந்து காத்தவள்.

பாகம்பிரியாள்

பழைய ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம், திருவொற்றிïர் கிராமத்தைச் சேர்ந்தவள். பெண்களுக்கும் சொத்தில் பங்கு வேண்டும் என்று சொன்னதால் சொந்த உறவுகளால் புதைக்கப்பட்டவள்.

கண்ணாத்தாள்

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையைச் சேர்ந்தவள். சிவகங்கை சமஸ்தானத்தில் பணியாற்றி வெள்ளையர்களுக்கு தன் நாட்டு ரகசியங்களைச் சொன்ன தன் கணவனை கொன்று, ராணிக்காக கொலையுண்டவள்.

குயிலி

சிவகங்கை மாவட்டம், முத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவள். சிவகங்கை அரண்மனையை வெடிகுண்டால் தகர்த்தெறிய வைத்திருந்த வெள்ளைக்காரர்களின் வெடிகுண்டுக் கிடங்கை தன் உடலில் நெய் ஊற்றி தீ மூட்டிக் கொண்டு குதித்து வெடிக்க வைத்து நாசம் செய்தவள்.

சிகப்பி

மதுரை மாவட்டம், சின்ன பள்ளப்பட்டியைச் சேர்ந்தவள். சாதிவிட்டு சாதித் திருமணம் செய்து ஊர்த் துணிகளைத் துவைத்து புரட்சி கண்டவள்.



நன்றி: தினதந்தி

aanaa
1st January 2012, 04:08 AM
தென்னிந்திய அழகிக்கு கிரீடம்


சென்னை நந்தம்பாக்கம் வர்த்தகமையத்தில் தென்னிந்திய அழகிப்போட்டியின் இறுதிச்சுற்று நடந்தது. இறுதிச்சுற்றில் இடம் பிடித்த 18 அழகுப்பெண்களில் சிறந்த தென்னிந்திய அழகியாக சென்னையைச் சேர்ந்த ரோகிணி தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாவது அழகியாக ஸ்வேதாவும், மூன்றாவது அழகியாக அஸ்வினியும் தேர்வு பெற்றார்கள். இவர்கள் இருவரும் பெங்களூரைச் சேர்ந்தவர்கள்.

போட்டியில் வென்ற 3 அழகிகளுக்கும் நடிகர் பிரசாந்த் கிரீடம் சூட்டி வாழ்த்தினார். இந்த அழகிப்போட்டி நிகழ்ச்சிகள் அனைத்தும் பொங்கல் தினத்தில் தனியார் சேனலில் ஒளிபரப்பாகிறது.


நன்றி: தினதந்தி

aanaa
1st January 2012, 04:09 AM
அஞ்சறைப்பெட்டி ஸ்டார் கிச்சன்



ஜீ தமிழ் டி.வி.யில் 650 பகுதிகளை கடந்து ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் சமையல் நிகழ்ச்சி அஞ்சறைபெட்டி. தென் இந்தியாவின் அனைத்து ஊர்களிலும் சிறப்பான உணவு வகைகளை தேடி அதனை நேயர்களிடையே சேர்த்து வருவது இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாகும். இந்த நிகழ்ச்சியின் புத்தாண்டு சிறப்பாக வெள்ளித்திரையில் மின்னும் நட்சத்திரங்கள் பங்கு பெற்று அவர்களுக்கு பிடித்த உணவு வகைகள் பற்றி பகிர்ந்து கொள்கின்றனர்.

நடிகர் பரத், உலகம் முழுவதும் தான் ரசித்து ருசித்த உணவு வகைகளையும், தன் உடல்வாகிற்கு தான் மேற்கொள்ளும் உணவு முறைகள் பற்றியும் பகிர்ந்து கொள்கிறார். இன்னொரு பகுதியில் நடிகை மோனிகா தனக்கு பிடித்த உணவு வகைகளை பற்றி பகிர்ந்து கொள்கிறார்.

மேலும் இந்த சிறப்பு நிகழ்ச்சியில் நடிகர் ஜீவாவின் மனைவி சுப்ரியா, தான் புதிதாக ஆரம்பித்திருக்கும் சாட் ஷாப் பற்றியும், அங்கு உள்ள வித்தியாசமான சாட் வகைகளையும், ஜீவா அவற்றை எங்கிருந்து கொண்டு வந்தார் என்பது போன்ற பல விஷயங்களையும் நேயர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

நிகழ்ச்சியை ஆனந்த கண்ணன் தொகுத்து வழங்குகிறார்.நாளை புத்தாண்டு தினத்தில் மதியம் 1.30 மணிக்கு இடம் பெறுகிறது, இந்த நிகழ்ச்சி.

நன்றி: தினதந்தி

aanaa
1st January 2012, 04:09 AM
ஜெயா அவார்ட்ஸ் 2011



ஜெயா டி.வி.யில் புதிய ஆண்டை வரவேற்கும் புத்தாண்டு நிகழ்ச்சியாக `ஜெயா அவார்ட்ஸ் 2011' எனும் பிரம்மாண்டமான நிகழ்ச்சி இன்று இரவு 8.30 மணி முதல் ஜெயா டி.வி.யில் தொடர்ந்து ஒளிபரப்பாகிறது.

புதிய ஆண்டை பிரபலங்கள் மற்றும் முன்னணி திரை நட்சத்திரங்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்களுடன் வரவேற்கின்றனர். இந்த புத்தாண்டை ஜெயா டி.வி. தனது நேயர்களுடன் இணைந்து புதுமையாக கொண்டாடுகிறது.

2011-ம் ஆண்டில் திரைத்துறையில் சாதனை படைத்த இளம் சாதனையாளர்கள் விருதை, நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு ஜெயா டி.வி. வழங்குகிறது.

ஜெயா அவார்ட்ஸ் 2011 நிகழ்ச்சியில் இன்னிசையுடன் பிரபல நடிகர், நடிகைகள், பின்னணி பாடகர்கள், பாடகிகள் பங்கேற்ற பிரம்மாண்ட நடன நிகழ்ச்சியும் இடம் பெறுகிறது.

நன்றி: தினதந்தி

aanaa
1st January 2012, 04:11 AM
கிருஷ்ணனை மீட்க போராடும் காயத்ரி



திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் முற்பகல் 11.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் `உறவுகள்' தொடர், 650 எபிசோடுகளை நிறைவு செய்து தொடர்ந்து கொண்டிருக்கிறது. குடும்ப உறவுகளின் மேன்மையை காட்சிப்படுத்தியிருக்கும் இந்த தொடரின் சிறப்பு யதார்த்தமான கேரக்டர்கள். அதற்குப் பொருத்தமான நட்சத்திரங்கள்.

கிருஷ்ணன்-முகுந்தன் இடையே நீடித்து வரும் சண்டையில், கிருஷ்ணன் தன் மீதான நம்பகத் தன்மையை முகுந்தனிடம் ஏற்படுத்த பல வழிகளில் முயற்சி மேற்கொள்கிறான். ஆனால் அவை அனைத்தும் முகுந்தனின் அலட்சிய மனோபாவத்தால் தோல்வியில் முடிகிறது.

இந்நிலையில் முகுந்தனின் இரண்டாவது மனைவி சுவேதாவுக்கு பெண் குழந்தை பிறக்கிறது. இதை தெரிந்து கொண்ட சுவேதாவின் முதல் கணவன் சத்யா, குழந்தையை திருடிப்போய் விடுகிறான். குழந்தையை ஆளாளுக்கு தேடிப்போக, கிருஷ்ணனும் தேடலை தீவிரமாக்குகிறான். இந்த சூழலில் கிடைக்கிறது சத்யாவின் மரணச்செய்தி. சத்யா இறந்ததற்குக் காரணம் கிருஷ்ணன் தான் என்பதாக சந்தர்ப்பம் சாட்சியமைக்க, கிருஷ்ணன் ஜெயிலுக்குப் போகிறான்.

கிருஷ்ணன் ஜெயிலுக்குப் போன பிறகும் முகுந்தன் திருந்தினானில்லை. தன்னை நல்லவனாக நம்ப வைக்க வேண்டும் என்பதற்காக இது கிருஷ்ணன் நடத்தும் நாடகம் என்பதாகவே நினைக்கிறான்.

கணவன் முகுந்தனின் இந்த கடின முகம் பிடிக்காத அவன் மனைவிகள் சுவேதாவும் சித்ராவும் அவனை திருத்தும் நோக்கில் ஒரு முடிவெடுக்கிறார்கள். எந்த சூழலிலும் அவனிடம் பேசிவிடக்கூடாது என்பது தான் அந்த முடிவு. இதற்காக அவர்கள் ஒரு ஒப்பந்தமும் போட்டுக் கொள்கிறார்கள்.

ஆனால் ஒருகட்டத்தில் இந்த ஒப்பந்தத்தை சித்ரா மீறி விடுகிறாள். சுவேதாவுக்குத் தெரியாமல் முகுந்தனிடம் பேச ஆரம்பிக்கிறாள். இது தெரிய வந்ததும் சித்ராவிடம் சுவேதா கோபமாகிறாள். இருவருக்கும் சண்டை ஆரம்பம். அதுவரை ஒற்றுமையாக இருந்தவர்களை இந்த சண்டை ஜென்ம விரோதிகள் போலாக்கி விடுகிறது. இதனால் `முகுந்தன் யாருக்கு?' என்ற போட்டி அவர்களுக்குள் தீவிரமாகிறது. இரண்டு மனைவிகளின் இந்த உரிமைப் போராட்டத்தில் கிருஷ்ணன் யார் பக்கமாய் சாய்கிறான் என்பது அடுத்த கட்ட திருப்பம்.

இதற்கிடையே ஜெயிலில் இருக்கும் தன் கணவன் கிருஷ்ணனை மீட்க காயத்ரி முயற்சி மேற்கொள்கிறாள்.அவள் முயற்சிக்கு பலன் கிடைத்ததா? சஸ்பென்சை தக்கவைத்தபடி தொடர்கிறது, தொடர்.

தொடரின் நட்சத்திரங்கள்: ஸ்ரீகுமார், பாவனா, ராஜ்காந்த், ஸ்ரீதுர்கா, அமரசிகாமணி, பீலிசிவம், ரேவதி சங்கர், ராஜேஸ்வரி, சிநேகா, பாஸ்கர்ராஜா, சாந்தி வில்லியம்ஸ், சிவகவிதா, ராமச்சந்திரன், ஜெயந்த், சோனியா, ஜெயலலிதா, சுதா, ஆர்த்தி, அப்சர், கே.எஸ்.ஜெயலட்சுமி, பரத், ஜெயபிரபு, வைரவராஜ்.

பின்னணி இசை: ரேஹான். முகப்பு இசை: டி.இமான். பாடல்: வைரமுத்து. ஒளிப்பதிவு: பழனி. திரைக்கதை: குமரேசன். வசனம்: பாலசூர்யா. இயக்கம் ஷிவா.

தயாரிப்பு: சேன் மீடியா.

http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20111231/TV-03.jpg


நன்றி: தினதந்தி

aanaa
1st January 2012, 04:12 AM
இல்லம் தேடி இறைவன்!



ஸ்ரீசங்கரா தொலைக்காட்சியில் தினந்தோறும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த "யுவர் சாய்ஸ்'' நிகழ்ச்சி தற்போது மாற்றம் செய்யப்பட்டு 5 மணிக்கு தொடங்கி 5.30 மணி வரையும், பின்னர் 6 மணிக்கு தொடங்கி 6.30 மணி வரையும் நேரடி ஒளிபரப்பாக தொடர்ந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் நேயர்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்றபடி ஆன்மிகம் சம்பந்தமான திருத்தலக் காட்சிகளையும் கண்டு பரவசிக்கலாம்.

தமிழகத்தில் ஒரு பகுதியில் இருக்கும் ஒரு நேயர் தாம் நினைத்தவுடனேயே பல ஆயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள ஆலயம் குறித்தோ, அல்லது அந்த ஆலயத்தில் நடைபெறும் உற்சவங்கள் குறித்தோ அரிய காட்சிகளை இந்நிகழ்ச்சிகளின் மூலம் கண்டு மகிழ முடியும்.

நிகழ்ச்சித் தொகுப்பாளர் பல மொழிகள் பேசும் நேயர்களிடமும் சரளமாக அவர்களின் மொழியில் பேசுவதோடு, நிகழ்ச்சியின் இடையிடையே பல்வேறு அரிய தகவல்களையும் அற்புதமான பாசுரங்களையும் பாடுவது பரவசம்.


நன்றி: தினதந்தி

aanaa
1st January 2012, 04:27 AM
300ஐ தாண்டிய வந்தாளே மகராசி!



ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் "வந்தாளே மகராசி தொடர் 300 எபிசோடுகளை கடந்து தொடர்கிறது. பெண்ணின் பெருமைகளைச் சொல்லும் தொடர் என்பதால் தொலைக்காட்சி நேயர்களிடம் வரவேற்பு பெற்ற தொடர் இது. குறிப்பாக இந்த தொடருக்கு பெண் ரசிகைகள் அதிகம். எந்தவொரு குடும்பத்திலும் பெண் குழந்தை பிறந்தால் குடும்பத்தில் உள்ளவர்கள் அழைக்கிற வார்த்தை தான் தொடரின் தலைப்பு. பெண் மணமாகி புகுந்த வீட்டிற்கு செல்லும்போதும் இதை வார்த்தையைத்தான் சொல்வார்கள். இந்த வார்த்தையையே தலைப்பாக்கி வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

சொர்ணமால்யா, ஐஸ்வர்யா, ஸ்ரீ, இளவரசன், லதாராவ், சுக்ரன், ஸ்ரீலதா, அமரசிகாமணி, ஷண்முகசுந்தரம், புவனா, சுதா, சுமங்கலி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இசை: ராஜ்பாஸ்கர். இயக்கம்: செந்தில்குமார். இவர் சுந்தர் சி.யின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் நடித்த `புதிய கீதை மற்றும் பள்ளிக்கூடம், சாணக்யா, குப்பி, பகைவன் போன்ற படங்களைத் தயாரித்த விஸ்வாஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் வி.சுந்தர் இத்தொடரை தயாரித்து வருகிறார்.


http://img1.dinamalar.com/cini//CNewsImages/NT_111213104601000000.jpg

நன்றி: தினமலர்

aanaa
7th January 2012, 08:12 PM
சென்னை வந்த சிண்ட்ரெல்லா

`இந்தியாவின் மிகப் பிரபலமான டிஸ்னி இளவரசிகளுள் சிண்ட்ரெல்லா முக்கியமானவர். `டிஸ்னி இளவரசி தொடர்பான கற்பனைக் கதைகள் என்றைக்குமே சுவாரஸ்யமானவை. நேர்மை, கவுரவம், அன்பு என குழந்தைகளின் மனதில் ஆழமாக பதிந்து விட்டாள், சிண்ட்ரெல்லா. இவளுடன் ஸ்நோ வொயிட், பெல், அரோரா, ஜாஸ்மின், ஏரியல் என டிஸ்னி இளவரசிகள் யாராக இருப்பினும் குழந்தைகள் மகிழும் வகையில் ஒவ்வொருவருக்கும் பிரத்யேக குணமும், சுவாரஸ்யமான கதையும் இருப்பது சிறப்பு அம்சம்.

கற்பனைக் கதாபாத்திரம் என்றாலும், சிண்ட்ரெல்லாவை குழந்தைகள் கொண்டாடு கிறார்கள். இந்த கதாபாத்திரம் உயிர்பெற்று வந்தால் எப்படி இருக்கும்? அதுவும் தன்னை உயிராய் நேசிக்கும் குழந்தைகளை ஒட்டு மொத்தமாக சந்தித்தால் எப்படி இருக்கும்?

இந்த சிந்தனையின் விளைவாகவே சிண்ட் ரெல்லா நிஜ உருக்கொண்டாள். பெங்களூர், டெல்லி, ஐதராபாத் ஆகிய நகரங்களில் உள்ள குழந்தைகளைக் குதூகலப்படுத்தியதைத் தொடர்ந்து இளவரசி சிண்ட்ரெல்லா மற்றும் இளவரசன் சார்மிங் ஆகியோர் சென்னை வந்தார்கள். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அம்பா ஸ்கைவாக் மாலில் நேரடியாகத் தோன்றி ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினர். இதற்காக ஸ்கைவாக் அரங்கில் சிண்ட்ரெல்லாவின் கதை மீண்டும் சொல்லப் பட்டது. குழுமியிருந்த ரசிகர்கள் முன்னிலையில் இளவரசி சிண்ட்ரெல்லா, தன் காதலன் இளவசரன் சார்மிங்குடன் வால்ட்ஸ் நடனமாடி குதூகலித்தார். இது இளவரசியின் முதல் இந்திய விஜயம் மற்றும் முதல் சென்னை வருகையும் கூட!

சிண்ட்ரெல்லாவின் வருகை, அவரைப்பார்த்ததும் குழந்தைகளின் கொண்டாட்டம், ரசிகர்களுக்காக சிண்ட்ரெல்லா மேடையில் ஆடிய நடனங்கள் என அனைத்தும் டிஸ்னி சேனலில் இடம்பெறுகிறது.

நன்றி: தினதந்தி

aanaa
7th January 2012, 08:13 PM
சரவணன்- மீனாட்சி நிச்சயதார்த்தம்


விஜய் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர், சரவணன் -மீனாட்சி'.

சரவணனாக செந்திலும், மீனாட்சியாக ஸ்ரீஜாவும் நிஜ காதலர்களோ என்று கேட்கும் அளவிற்கு நடிப்பில் அசத்துகிறார்கள்.

பெண் பார்க்கும் படலத்தில் ஆரம்பித்து, பெரியவர்களால் நிச்சயித்த கல்யாணமாக முடிந்திருக்க வேண்டிய கதையில் திடீரென `ஜாதகம்' வில்லனாகி விடுகிறது. அந்த ஜாதக குளறுபடியில் மனதை கல்லாக்கிக் கொண்டு சரவணனை மறக்க சம்மதம் தெரிவிக்கிறாள் மீனாட்சி. ஆனாலும் எல்லா உறுதிமொழிகளையும் தாண்டி, ஜாதக தடைகளை மீறி காதல் ஜெயிக்கிறது.

இப்போது காதல் ஜோடிகளுக்கு நிச்சயதார்த்தம். காரைக்குடியில் பிரம்மாண்ட பங்களாவில் நடை பெறும் இந்த நிச்சயதார்த்த பகுதிகள் மிகவும் சுவாரசியமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த காட்சியில் பொங்கி வரும் காதலும், குறும்பான ஊடலும் கூடலும் கரும்பாக நேயர்களை கவரும்.

சரவணனின் அப்பாவாக வரும் ராஜசேகர், அம்மா குயிலி இருவருமே நகைச்சுவை நடிப்பிலும் கலக்குகிறார்கள்.
நன்றி: தினதந்தி

aanaa
7th January 2012, 08:15 PM
காதம்பரியாக மாறிய மிதுனா!

கருத்தம்மா ராஜஸ்ரீயின் தங்கை மிதுனா `மாமதுரை' படத்தில் அறிமுகமானவர். தமிழிலும், தெலுங்கிலும் நடித்தவர் இப்போது சின்னத்திரையிலும் அடியெடுத்து வைத்திருக்கிறார். சாப்ரன் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் `காதம்பரி' மெகா தொடரில் இவர்தான் கதையின் நாயகி. இவருடன் சுதா சந்திரன், லஷ்மிராஜ், காயத்ரி, பாலாஜி, செம்புலி ஜெகன், சுந்தரி, சூரி, தேசிங்கு உட்பட பலர் நடித்து வருகின்றனர்.

பிரபு சங்கர் கதை எழுதி இயக்கும் இந்த தொடரின் படப்பிடிப்பு சென்னையை அடுத்த மணிமங்கலம் பகுதியில் நடைபெற்று வருகிறது. அங்கு நடித்து கொண்டு இருந்த மிதுனாவிடம் பேசினோம்.

http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20120107/TV03.jpg

"அந்த காலத்தையும், இந்த காலத்தையும் இணைக்கும் கதை. 200 ஆண்டுகளுக்கு பிறகு மறுஜென்மம் எடுத்து சந்திக்கும் காதம்பரியின் வாழ்க்கை சம்பவம். 2 கதாபாத்திரத்திலும் நடிக்கிறேன். அதிலும் அந்த காலத்து வேடத்துக்காக நான் ஜாக்கெட் அணியாமல் சேலை கட்டி, கொண்டை போட்டு, அந்த கால நகைகளை மாட்டிக்கொண்டு நடிப்பது புது அனுபவம் தான். இந்த தொடருக்கு பிறகு என்னை காதம்பரி என்றே அழைப்பார்கள். எனக்கு எதிரான பாத்திரத்தில் சுதா சந்திரன் நடிப்பில் மிரட்டியிருக்காங்க. அவுங்களுக்கும் பெரிய அளவில் பேர் கிடைக்கும். ''
நன்றி: தினதந்தி

aanaa
7th January 2012, 08:17 PM
சின்னத்திரையில் நடிகை காவேரி

தியாகம் தொடரில் நடிக்கிறார்
http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20120107/TV08.jpg


`தங்கம், வசந்தம், மாமா மாப்ளே..' போன்ற பல வெற்றித் தொடர்களை தயாரித்து வரும் விஷன் டைம் நிறுவனம் இப்போது `தியாகம்' என்ற புதிய தொடரை தயாரிக்கிறது.

முற்றிலும் குடும்ப பின்னணியில் மனித உறவுகளின் மகத்துவத்தை சொல்லவிருக்கும் இந்த தொடரில், கூட்டுக்குடும்பத்தின் முக்கியத்துவம் கதைக்களமாக்கப் பட்டிருக்கிறது. அன்றாடம் வாழ்வில் சந்திக்கும் இயல்பான முகங்கள்.. அவதாரம் எடுக்காத யதார்த்தமான கதாபாத்திரங்கள் தொடரின் உயிர்நாடி.

கவிஞர் வைரமுத்து இந்த தொடருக்காக ``தியாகம் என்பது யாகம்..'' என்ற பாடலை எழுதி உள்ளார். தினா இசையமைக்கிறார். சமுத்திரம், காசி உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கும் காவேரி, இந்த தொடரின் மூலம் சின்னத் திரையில் கால் பதிக்கிறார். கன்னடத்தில் நானூறுக்கும் மேற்பட்ட படங்களில் நாயகனாக நடித்த ஸ்ரீநாத் இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சபிதா ஆனந்த், கவுதமி, உதய், துர்கா, சூசன், பிர்லாபோஸ், விஜய் ஆனந்த், கீர்த்தி ஆகியோர் தொடரின் ஏனைய நட்சத்திரங்கள்.

கதை, திரைக்கதை வசனம்: குரு சம்பத்குமார். ஒளிப்பதிவு: செல்லப்பாண்டி. டைரக்ஷன்: ஏ.அப்துல்லா.

தொடருக்கான படப்பிடிப்பு காரைக்குடி, கும்பகோணம், திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வருகிறது.

விஷன் டைம் நிறுவனத்தின் சார்பில் வைதேகி ராமமூர்த்தி இந்த தொடரை தயாரிக்கிறார். விரைவில் சன் டி.வி.யில் பகல் ஒரு மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கிறது, தொடர்.
நன்றி: தினதந்தி

aanaa
7th January 2012, 08:18 PM
வைரமங்கை-175


தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக திறமையான பெண்களை அடையாளம் காட்டும் பிரத்தியேக நிகழ்ச்சி `வைரமங்கை.' கலைஞர் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் காலை 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி 175-வது எபிசோடை கடந்து தொடர்கிறது.

நிகழ்ச்சியில் பெண்களிடம் உள்ள அத்தனை திறமைகளையும் அரங்கேற்றும் விதத்தில் தமிழச்சி, அழகே அழகாய், உன்னால் முடியும் பெண்ணே, ஆஸ்கார் அரசி என நான்கு தகுதிச்சுற்றுகளையும் சிந்தனைத் திறன் எனும் பொது அறிவுச் சுற்றினையும் கொண்டுள்ளது, இந்த நிகழ்ச்சி.

இந்த சுற்றுகளை கடந்து வரும் வெற்றியாளர்களுக்கு இறுதிச் சுற்றான `சமயோசிதம் சுற்று' ஒரு சிறந்த பெண்மணியை அடையாளம் காட்டும் வித்தியாசமான சுற்றாக அமைந்துள்ளது.

இதுவரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் திறமையான பெண்களை அடையாளப்படுத்தி வரும் இந்த நிகழ்ச்சியை சின்னத்திரை பிரபலங்கள் சுஜிதா மற்றும் நிஷா தொகுத்து வழங்குகிறார்கள். கிரியேடிவ் கிரியேஷன்ஸ் சார்பில் மதுரை இரா.ரவிச்சந்திரன் தயாரித்து, இயக்குகிறார்.

இதுவரை 16 மாவட்ட வைர மங்கைகளை அடையாளம் கண்டுள்ள இந்த நிகழ்ச்சி, இன்னும் பல மாவட்டங்களில் வலம் வர உள்ளது.

இறுதியில் தமிழக அளவில் நடைபெறும் வைரமங்கை போட்டியில் வெற்றிபெறும் பெண்மணிக்கு 5 லட்சம் மதிப்புள்ள வைரக் கிரீடம் காத்துக் கொண்டிருக்கிறது.
நன்றி: தினதந்தி

aanaa
12th January 2012, 03:45 AM
உலகை உலுக்க வரும் வன்னிக்காடு!


சீமான் நடித்த ’மகிழ்ச்சி’ படத்தை இயக்கியவர் கௌதமன். இவர் இந்தப் படத்தை இயக்குவதற்கு முன்பு “சினிமாவுக்குப் போன சித்தாளு” என்ற ஜெயகாந்தனின் குறுநாவலை டெலிஃபிலிமாக எடுத்தவர்.

இந்த முயற்சிகளின் மூலம் வெளிச்சத்துக்கு வராத வ.கௌதமன் மக்கள் தொலைகாட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் “சந்தணக்காடு” மெகா தொலைகாட்சித் தொடரின் மூலம் புகழ் பெற்றார். சந்தண வீரப்பனின் வாழ்க்கையை இந்தத் தொடரில் அவர் மிகநேர்மையாகவும் துணிச்சலாகவும், காட்சிபடுத்தி வந்தார். தொலைக்காட்சிக்கு முன் தணிக்கை இல்லாத காரணத்தால் பல உண்மைகளை மறைக்காமல் இந்த சந்தணக்காடு தொடர் ஒளிபரப்பானது.

இந்நிலையில் ஈழமக்களின் விடுதலையில் அக்ககறை கொண்ட உணர்வாளராக, இவர் மக்கள் போராட்ட மேடைகளிலும் பிரபமாகி வருகிறார். இதனால் இவரிடம், “சந்தணக்காடு தொடரைப் போலவே, ஈழவிடுதலை வரலாற்றை வன்னிக்காடு என்ற தலைப்பில் ஏன் மக்கள் தொலைகாட்சிக்கு தயாரிக்கக் கூடாது” என்று நண்பர் கேட்க, ஏற்கனவே உணர்வாளராக இருக்கும் கௌதமன் இதை கற்பூரமாக பிடித்துக் கொண்டு விட்டார்.

தற்போது “வன்னிக்காடு” மெகா தொலக்காட்சித் தொடருக்கான திரைக்கதை மும்முரமாக எழுதிவருகிறேன். விரைவில் மக்கள் தொலக்காட்சி வன்னிகாட்டை தொடங்க இருகிறோம். இது மாபெரும் மக்கள் வரலாறாக இருக்கும். கோவை சத்தியமங்கலம் பகுதியையே வன்னிக்காடு தொடருக்கும் கதைக்களமாக பயன்படுத்த இருகிறேன். கொழும்பு, மற்றும் யாழ் நகர்களை கோவா மற்றும் மங்களூர் பாண்டிச்சேரி ஆகிய நகரங்களை வைத்து மேச் செய்ய இருகிறோம். திருநெல்வேலி மாவட்டம் கிளிநொச்சிக்கு அப்படியே பொருந்தும். வன்னிக்காடு தமிழனின் வீரவரலாறாக இருக்கும். ஈழத்தை விரைவில் தமிழினம் வெல்லும்” என உணர்ச்சி பொங்க நம்மிடம் கூறினார் கௌதமன்.


தமிழ் மீடியா

aanaa
14th January 2012, 07:55 AM
நானும் ஒரு பெண்

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் `நானும் ஒரு பெண்' தொடர், பரபரப்பான திருப்பங்களுடன் விரைகிறது.

திருமணமே கனவாக இருந்த காலம் போய் ஒரு வழியாக சங்கீதா ஜெய்குமாரை மணம்முடித்து மாமியார் வீடு செல்கிறாள். அங்கு அவளுக்கு பிரச்சினைகளுக்கு மேல் பிரச்சினைகள். தென்றலாக இருந்த ஜெய்குமாரின் குடும்பத்தில் அவனது சித்தி காஞ்சனாவின் வருகை பெரும் புயலை கிளப்புகிறது.

அவள் சங்கீதாவை ஜெய்குமாரின் வாழ்க்கையில் இருந்து நிரந்தரமாக பிரிக்க சூளுரைக்கிறாள். அவள் எண்ணம் நிறைவேறியதா? சங்கீதா, ஜெய்குமார் இருவரின் நிலையும் என்னாயிற்று? தொடர்கிறது, தொடர்.
நன்றி: தினதந்தி

aanaa
14th January 2012, 07:57 AM
விருது விழா



ஜெயா டி.வி.யில் வரும் திங்கட்கிழமை ஒளிபரப்பாகும் விருதுவிழா நிகழ்ச்சியில், கடந்த ஆண்டு சாதனை புரிந்த திரைப்பட கலைஞர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி இடம் பெறுகிறது.

தமிழ் சினிமாவின் 80-வது ஆண்டை கொண்டாடும் வகையில் `வி 4' அமைப்பு தமிழ் திரையுலகில் சாதனை புரிந்த திரையுலக பிரம்மாக்களை விருது வழங்கி கவுரவப்படுத்தியது. சென்னை சேத்துப்பட்டு லேடிஆண்டாள் பள்ளியில் நடந்த இந்த விழாவுக்கு பட அதிபர் ஏவி.எம்.சரவணன் தலைமை தாங்கினார். தயாரிப்பாளர் சங்கத்தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகர் முன்னிலை வகித்தார்.

விழாவில் கலைப்பொக்கிஷங்கள் நடிகர் `காகா' ராதாகிருஷ்ணன், இயக்குனர் கே.பாலசந்தர், கவிஞர் வாலி, வசன கர்த்தா ஆரூர்தாஸ், நடிகை அஞ்சலிதேவி, இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், பாடகர் பாலமுரளி கிருஷ்ணா, கலை வித்தகர் பிலிம் நிïஸ் ஆனந்தன் ஆகியோர் கலை உலக சாதனையாளர் விருது பெற்றார்கள்.

நடிகர் சத்யராஜ் அறிஞர் அண்ணா விருதும், பிரபு நடிகவேள் எம்.ஆர்.ராதா விருதும், இயக்குனர் சந்தானபாரதி மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். விருதும், பி.வாசு நடிகர் திலகம் சிவாஜிகணேசன் விருதும் பெற்றனர்.

சிறந்த படமாக விஜய் நடித்த வேலாயுதம் விருது பெற்றது. சிறந்த நடிகராக `ஆடுகளம்' படத்தில் நடித்த தனுஷ், சிறந்த நடிகையாக `பவானி' படத்தில் நடித்த சிநேகா விருது பெற்றனர்.

சிறந்த இயக்குனராக ஜெயம் ராஜாவும், இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜும், பாடலாசிரியராக விவேகாவும் விருதுகளை பெற்றுக்கொண்டார்கள்.

திரையுலகம் திரளாக திரண்ட இந்த விழாஏற்பாடுகளை `வி-4' அமைப்பாளர்கள் டைமண்ட் பாபு, சிங்காரவேலு, மவுனம் ரவி, ரியாஸ் அகமது செய்திருந்தனர்.

http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20120114/TV2.jpg


நன்றி: தினதந்தி

aanaa
14th January 2012, 07:59 AM
`வெள்ளைத் தாமரை'



திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் சன் டிவியில் மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கும் புதிய தொடர், வெள்ளைத்தாமரை. அனுபல்லவி தொடரைத் தொடர்ந்து அபிநயா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் புதிய தொடர் இது.

தொடருக்காக கவிஞர் காதல்மதி எழுதிய "வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாள்...'' என்கிற பாடலை ஸ்ரீநிவாஸ் பாடியுள்ளார். `எங்கேயும் எப்போதும்' வெற்றிப்படத்தின் இசையமைப்பாளர் சத்யா இந்தப் பாடலுக்கு இசை அமைத்துள்ளார். தொடருக்கான பின்னணி இசையும் இவரே.

இந்தப் பாடலுக்கு ஏவி.எம். மற்றும் கனவுப்பட்டறை ஸ்டூடியோக்களில் பிரமாண்ட செட் அமைத்து, அதில் கேசவன் நடன அமைப்பில் இருபதுக்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களுடன், தர்ஷினி, தனலட்சுமி இருவரும் போட்டி போட்டு பரத நாட்டியம் ஆடினர். பி.சித்திரைச்செல்வன், ஏ.சபாபதி, ஆர்.வி.பார்த்திபன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்தனர். தொடருக்கான படப்பிடிப்பு கும்பகோணம், டெல்லி, மும்பை போன்ற இடங்களிலும், சென்னையில் உள்ள சில படப்பிடிப்பு தளங்களிலும் நடைபெற்று வருகிறது.

தொடரின் நட்சத்திரங்கள்: அபிஷேக், புஷ்பலதா, வாசு விக்ரம், நேசன், தனுஷ், அறிமுகநாயகி தர்ஷினி, தனலட்சுமி, காயத்ரி, நித்யா ரவீந்தர், கூத்துப்பட்டறை ரவி, அழகு, வீரா, பிரசன்னா, நவீன், எம்.எல்.ஏ. தங்கராஜ், குகன்.

மணிபாரதி, தண்டபாணி இணைந்து இயக்கும் இந்தத் தொடருக்கு ஆர்.எஸ்.பாலமுருகன் வசனம் எழுதுகிறார். கதை, திரைக்கதை, ஆக்க தலைமை ஜே.கே. தயாரிப்பு: அபிநயா கிரியேஷன்ஸ் சார்பில் ராதா கிருஷ்ணசாமி.

நன்றி: தினதந்தி

aanaa
14th January 2012, 08:08 AM
மீண்டும் வந்தாச்சு `மானாட... மயிலாட...'

கலைஞர் தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ``மானாட மயிலாட'' நிகழ்ச்சியை நடன ரசிகர்களால் ஒருபோதும் மறக்க முடியாது. பிரபல நடன இயக்குனர் கலா இயக்கத்தில், வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்ட இந்த நடனப்போட்டி, இதுவரை 6 பாகங்களை ஒளிபரப்பியது. நேயர்களின் ஏகோபித்த பாராட்டுகளை பெற்ற இந்த நிகழ்ச்சி நேயர்களின் எதிர்பார்ப்பை முன்னிட்டு, தன்னுடைய 7-வது பாகத்தை நாளை இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

9 புத்தம் புது போட்டியாளர்களுடன் நடைபெறும் இந்த நடன போட்டியின் நடுவர்களாக நடிகைகள் குஷ்பு, நமீதா பங்கேற்கிறார்கள். பெண் போட்டியாளர்களை பெரிய மற்றும் சிறிய திரை உலகில் இருந்து அழைத்து வரும் இந்த நிகழ்ச்சியின் இயக்குனர் கலா, ஆண் போட்டியாளர்களுக்கும் நேர்முகத்தேர்வு வைத்து இந்த போட்டியில் வாய்ப்பு அளித்து இருக்கிறார்.
http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20120114/Tv4.jpg


நன்றி: தினதந்தி

aanaa
14th January 2012, 08:10 AM
சவாலில் ஜெயித்த அன்னம்மா!

வசந்த் டிவியில் நாளை மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகும் `ஆப்பக்கடை அன்னம்மா' தொடர், நடிகை ஒய்.விஜயாவின் இன்னொரு நடிப்புக்கோணத்தை கண்முன் நிறுத்துகிறது.

தெருமுனையின் ஒரு ஓரத்தில் ஆப்பக்கடை போட்டு பிழைக்கும் அன்னம்மாவாக நடிக்கிறார், ஒய்.விஜயா.

அன்னம்மா கடை போட்டு இருக்கும் புறம்போக்கு இடம் அந்த ஏரியா கவுன்சிலரின் கண்ணை உறுத்துகிறது. எங்கே புறம்போக்கு இடம் இருந்தாலும் அது அந்த கவுன்சிலரை தூங்கவிடாமல் இம்சை பண்ணும். அன்னம்மா வியாபாரம் செய்யும் இடத்தை அபகரித்து விற்று காசு பார்க்க விரும்புகிறார், கவுன்சிலர். அதனால் அவளை தனது அதிகாரத்தை பயன்படுத்தி கடையை காலி பண்ண நிர்ப்பந்திக்கிறார்.

ஆரம்பத்தில் கெஞ்சிப் பார்த்த அன்னம்மா, அப்புறம் ஜான்சிராணியாகி விடுகிறாள். கவுன்சிலரிடம் உன் பதவியை பறித்தே தீருவேன் என்று சவால் விடுகிறாள். இந்த சமயத்தில் அன்னம்மாவின் மகள் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்று ஐ.பி.எஸ். அதிகாரியாகிறாள். உயர் போலீஸ்அதிகாரியாக பொறுப்பேற்கும் அவள் அடாவடி கவுன்சிலரை கைது செய்கிறாள். நீதி வென்ற மகிழ்ச்சியில் இப்போது அன்னம்மா.

கவுன்சிலராக வாசு விக்ரம் ,அவருக்கு உதவியாளராக பயில்வான் ரங்கநாதன் நடிக்கிறார்கள்.
நன்றி: தினதந்தி

aanaa
22nd January 2012, 01:08 AM
another Saturday serial
Another sudden death
Normally Saturday serials never go to the last episode. Without any notification it disappears.
one more in the list

SIVASANGARI

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=Y-NRk4x4h6Q

aanaa
22nd January 2012, 01:35 AM
கலைவாணி-தாமரையின் `ஈகோ' போராட்டம்!



திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பகல் 12 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய தொடர், வெள்ளைத் தாமரை.

செல்வமும், செல்வாக்கும் நிறைந்த சூரியமூர்த்தி, நேர்மை, நியாயம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பவர். இவருக்கு மகள் தாமரையும், மகன் கதிரும் வாரிசுகள்.

பத்திரிகை என்பது சமூகத்தின் நான்காவது தூண் என்ற லட்சியத்துடன் வாழும் பொறுப்பான பத்திரிகையாளர் ஆதித்யன். இவருக்கு ஒரே மகன் ரவி.

பத்திரிகையில் பிரசுரமான ஒரு செய்தி, சூரியமூர்த்திக்கும், ஆதித்யனுக்கும் இடையில் பகை முடிச்சை போட்டு வைக்கிறது.

காலத்தின் கோலமாக பகைக்குடும்பங்களின் வாரிசுகள் ரவியும் தாமரையும் காதலாகிறார்கள். நெருங்கிய நேசத்தில் தாமரை கர்ப்பமடைகிறாள்.

மகளின் காதலை ஜீரணிக்க முடியாத சுந்தரமூர்த்தி, சம்மதிப்பது போல் நடித்து, ரவியை தந்திரமாக கொன்று விடுகிறார். இதை அறியாத தாமரையிடம் காதலன் அவளை ஏமாற்றி விட்டதாக நம்ப வைத்து வேறு திருமணமும் செய்து வைத்து விடுகிறார்.

தன் மகன் கொலைக்கு சுந்தரமூர்த்தியே காரணம் என்பதை கண்டு கொள்கிறார் ஆதித்யன். ஆனாலும் பணம் பாதாளம் வரையில் பாய்ந்து, அவரது சட்ட போராட்டத்தை சைலண்டாக்கி விடுகிறது.

இதற்கிடையே மகள் தாமரைக்கு பிறக்கும் பெண் குழந்தையை கொல்ல திட்டமிடுகிறார் சுந்தரமூர்த்தி. ஆனால் குழந்தை காப்பாற்றப்பட்டு ரவியின் தந்தை ஆதித்யனின் கைகளில் சேருகிறது. குழந்தைக்கு கலைவாணி என பெயர் சூட்டுகிறார் ஆதித்யன்.

தாமரையின் புதிய வாழ்க்கையில் பிறக்கும் பெண் குழந்தை இந்திரா, குணத்தில் அப்படியே தன் அடாவடி தாத்தா சுந்தரமூர்த்தியை கொண்டிருக்கிறாள். .

கலைவாணியும், இந்திராவும் வளர்கிறார்கள். பருவ வயதில் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள். இருவருக்கும் எல்லா விஷயத்திலும் மோதல்... பொறாமை... பகை...

கலைவாணி தனது அக்கா என்பதை இந்திரா தெரிந்து கொண்டாளா? தனது தந்தையால் செத்து பிறந்ததாக சொல்லப்பட்ட மகள் தான் கலைவாணி என்பதை தாமரை எப்போது அறிகிறாள்? தந்தையின் சதி நாடகம் தெரிந்ததா? சுவராஸ்ய முடிச்சுகளுடன் குடும்ப உறவை சொல்லும் அற்புத புஷ்பமாக மலர இருக்கிறது `வெள்ளைத்தாமரை' என்கிறார், கதாசிரியரும் ஆக்கத்தலைமையுமான ஜே.கே.

வசனம்:ஆர்.எஸ்.பாலமுருகன். இயக்கம்: மணிபாரதி-தண்டபாணி. அபிநயா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பு: ராதா கிருஷ்ணசாமி.


http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20120121/TV-01.jpg

நன்றி: தினதந்தி



http://www.youtube.com/watch?v=droj_jZOjF0&feature=player_embedded

aanaa
22nd January 2012, 01:39 AM
கலக்க வரும் நடன ஜோடிகள்



ஞாயிறு தோறும் இரவு 10 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் மீண்டும் புதுப்பொலிவோடு வலம் வரத்தொடங்கி விட்ட `மானாட... மயிலாட...' நடன போட்டியில் இடம் பெற்றுள்ள நடன பெண்மணிகள் அனைவருமே வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் தடம் பதித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தேர்வு பெற்ற போட்டியாளர்கள்: சந்துரு-அஸ்வதி, சூர்யா-அங்கிதா, பாபி-சுவர்ணா, விஸ்வாக்-ஆனந்தி, அரவிந்த்-சுவாதி மற்றும் புவியரசு-அனுஷா ஜோடிகள் மோதும் இந்த நடன போட்டியின் நடுவர்கள் குஷ்பு மற்றும் நமீதா.

நிகழ்ச்சி இயக்கம்: நடன இயக்குனர் கலா.

ஞாயிறுதோறும் இரவு 7.30 மணி முதல் 10 மணி வரை ஒளிபரப்பாகிறது இந்த நிகழ்ச்சி.


நன்றி: தினதந்தி

aanaa
22nd January 2012, 01:42 AM
திரும்பிப்பார்க்கிறேன்

http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20120121/TV-06.jpg

ஜெயா டிவியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் திரும்பிப்பார்க்கிறேன் நிகழ்ச்சியில் இந்த வாரம் எடிட்டர் மோகன் இடம் பெறுகிறார். இவர் டைரக்டர் ராஜா, நடிகர் ஜெயம் ரவி ஆகியோரின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

தனது திரை வாழ்க்கையின் சுவாரசியங்கள் பற்றி இந்த நிகழ்ச்சியில் மனம் விட்டு பகிர்ந்து கொள்கிறார்.


நன்றி: தினதந்தி

aanaa
28th January 2012, 03:40 AM
30-01-2012 தொடக்கம்

தியாகம்


http://www.youtube.com/watch?feature=player_embedded&v=ZQNoKcmTN90

aanaa
28th January 2012, 07:21 AM
சரித்திரம் படைத்த ஜான்சிராணி

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த ஜான்சிராணி தொடர், ராணி லட்சுமி பாயின் வீர மரணத்துடன் நேற்று நிறைவு பெற்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்ததொடரைக் கண்டு களித்தது குறிப் படத்தக்கது. குறிப்பாக பள்ளிக் குழந்தைகள் ஜான்சி ராணியின் வரலாற்றை முழுமையாக தெரிந்து கொள்ளும் வகையில் இத்தொடர் அமைந்திருந்தது. அதனால் ஏராளமான பள்ளிகளும் மாணவர்களுக்கு இத்தொடரை பார்க்கும்படி அறிவுரை வழங்கின.


தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகள் மற்றும் குழந்தைகளின் விருப்பத்தை ஏற்று, ஜீ தமிழ் தொலைக்காட்சி இத்தொடரை மீண்டும் 50 நாட்களில் முடியும் வகையில் ஒரு சிறப்புத் தொகுப்பாக ஒளிபரப்ப இருக்கிறது. இந்த சிறப்புத் தொகுப்பு வரும் 30-ந் தேதி முதல் இடம் பெறுகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு தொடரை காணலாம்.





நன்றி: தினதந்தி

aanaa
28th January 2012, 07:23 AM
நடிகை குஷ்புவின் `பார்த்த ஞாபகம் இல்லையோ'


கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் ஒளிபரப்பாகவிருக்கும் `பார்த்த ஞாபகம் இல்லையோ' தொடரை நடிகை குஷ்பு தயாரிக்கிறார். தனது அவனி டெலிமீடியா நிறுவனம் சார்பில் தொடரை தயாரிக்கும் குஷ்பு, முக்கிய கேரக்டரிலும் நடிக்கிறார். திரையில் இதுவரை சொல்லாத ஒரு கதைப்பின்னணியில் இந்த தொடரை உருவாக்கி வருகிறார், குஷ்பு.

நன்றி: தினதந்தி

aanaa
28th January 2012, 07:24 AM
ஆண் பாவம்

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த `இதயம்' தொடர் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, புதிய தொடராக வருகிறது "ஆண் பாவம்.'' இதயம் தொடரைத் தொடர்ந்து சத்யஜோதி பிலிம்சின் புதிய தொடர் இது.


ஆண் பாவம் எந்த மாதிரியான கதை?


ஊருக்குள்ள பொதுவா ஒரு சொல் உண்டு! ஆம்பள புள்ளைய பெத்தவங்க கொடுத்து வச்சவங்கன்னு! ஆனா? உண்மையில் ஆம்பள புள்ளைய பெத்தவங்க படுற பாடும், அந்த ஆம்பள புள்ளைகள கல்யாணம் பண்ணின மனைவிமார்கள் படுத்தற பாடும் புதிய கதைக்களமாக இத்தொடரில் வைக்கப்பட்டுள்ளது.


இன்னக்கி இருக்கிற சூழல்ல பெத்தவங்க, புள்ளைங்க எதிர்காலத்தபத்தி ஒண்ணு நினைக்கிறாங்க! ஆனா புள்ளைங்க தங்களோட எதிர்காலத்தபத்தி வேறொண்ணு நினைக்கிறாங்க!


பெத்தவங்க எண்ணமும், புள்ளைங்க எண்ணமும் ஒரு புள்ளியில் சந்திக்கும்போது என்ன ஆகும்கிறத பத்தின கதைதான் "ஆண் பாவம்'' தொடர்.


இதில் அப்பாவாக ராஜேஷும், அம்மாவாக மீரா கிருஷ்ணனும், புள்ளைங்களாக, பரத் கல்யாண், ராஜ்கமல், வெங்கட், கதிர் ஆகியோரும் நடிக்கிறார்கள். இவர்களின் ஜோடியாக, ஜெயஸ்ரீ, மேகி, கவுரி லட்சுமி, ஐஸ்வர்யா, மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில், அழகன் தமிழ்மணி பாம்பே பாபு, சுஜிபாலா, பாண்டி, மகிமா நடிக்கின்றனர்.


கதை-வசனம் பொன் காந்திராஜன். ஒளிப்பதிவு: எம்.டி.சரவணகுமார். இசை: கிரண். திரைக்கதை, இயக்கம்: டி.சி.பாலா. கிரியேட்டிவ் ஹெட்: டி.ஜி.தியாகராஜன்.


அடுத்த மாதம் 6-ந்தேதி திங்கட்கிழமை முதல் "ஆண் பாவம்'' தொடர் சன் டிவியில் ஒளிபரப்பாகிறது.


தயாரிப்பு: `சத்யஜோதி' பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன்.
நன்றி: தினதந்தி








http://www.youtube.com/watch?feature=player_embedded&v=IP06e47ZZkI

aanaa
28th January 2012, 07:35 AM
நடிகை குட்டி பத்மினி தயாரிப்பில் `சூர்யபுத்ரி'


http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20120128/TV03.jpg
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடர் சூர்யபுத்ரி. தமிழ்நாட்டில் சின்னத்திரை தயாரிப்பாளர்களில் முதல் பெண் தயாரிப்பாளர் என்ற பெருமைக்குரிய நடிகை குட்டி பத்மினி இந்த தொடரை தயாரிக்கிறார்.


பெண்களின் சராசரி வாழ்க்கையை மையமாக வைத்து கதையின் கரு உருவாக்கப்பட்டுள்ளது. திரைக்கதை எழுத்தாளர் சவீதா, குட்டி பத்மினியின் மகள் கீர்த்தனா ஆகியோரின் உதவியோடு விறுவிறுப்பாக பின்னப்பட்டிருக்கிறது கதைக்களம்.


நடிகர் நிழல்கள் ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


துளசியாக சந்தோஷி நடிக்கிறார். லாவண்யா, சுதாசந்திரன், ஏ.ஆர்.எஸ், பிரகதி, ராஜ்குமார், குமரேசன், ஸ்ரீவித்யா, ராஜசேகர் ஆகியோருடன் குட்டி பத்மினி மற்றும் அவரது மகள் பேபி ஆர்யா ஆகியோரும் உண்டு.


கதை: திருமதி குட்டிபத்மினி; திரைக்கதை: சவீதா; கிரியேட்டிவ் இயக்குனர்: கீர்த்தனா; வசனம்: ஜெகன்மோகன், ராதாகிருஷ்ணன்; இசை: டி.இமான்; இயக்கம்: தமிழ்பாரதி;


"கிருஷ்ணதாசி, காற்றாய் வருவேன், மந்திரவாசல், கனா கண்டேன் தோழி, பைரவி, தில்லுமுல்லு போன்ற பிரமாண்ட தயாரிப்பு வரிசையில் `சூர்ய புத்ரி'யும் சின்னத்திரை ரசிகர்களின் வரவேற்புக்குரியதாக இருக்கும்'' என்றார், குட்டி பத்மினி.
நன்றி: தினதந்தி

aanaa
28th January 2012, 07:38 AM
ரோஜா

மெகா டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடர்,"ரோஜா''


முரடன் லட்சுமிராஜ் அப்பாவிப்பெண் சுஜிதாவை திருமணம் செய்கிறான். அவன் தன் மனைவியை ஏமாற்றி விட்டு, புவனேஸ்வரியுடன் வாழ்கிறான். ஆனால் புவனேஸ்வரி கொஞ்சம் கொஞ்சமாக லட்சுமிராஜிடம் இருக்கும் செல்வங்களை அபகரித்துக் கொள்கிறார்.


இதைத்தொடர்ந்து, லட்சுமிராஜ் தனது மனைவி சுஜிதாவை துன்புறுத்துகிறான். சுஜிதாவுக்கு, ஐஸ்வர்யா உதவுகிறாள். அவள் கொஞ்சம், கொஞ்சமாக புவனேஸ்வரியின் சுயரூபத்தை லட்சுமிராஜ×க்கு புரிய வைக்கிறாள். இதே நேரம் லட்சுமிராஜின் தாயார் தன் மகனை சுஜிதாவிடம் இருந்து பிரித்து பெரிய இடத்தில் திருமணம் செய்து வைக்க நினைக்கிறாள். அது நடந்ததா இல்லையா?


சுஜிதா, ஐஸ்வர்யா, லட்சுமிராஜ், பிந்துமாதவி, ராஜ்குமார், நளினி, புவனேஸ்வரி, பானுபிரகாஷ் நடிக்கிறார்கள். சுதாகர் ஒளிப்பதிவில் பத்மநாபனின் கதை, திரைக்கதை வசனத்தில் உருவாகியுள்ள இத் தொடரை சில்வர் டார் கிரியேசன் தயாரித்துள்ளது.


இயக்கம்: பச்சில் சிவா.
நன்றி: தினதந்தி

aanaa
28th January 2012, 07:40 AM
தங்கத்தில் மேலும் இரு தங்கங்கள்

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் `தங்கம்' தொடரில் நட்சத்திரங்களை தேர்வு செய்வதிலும் புதுமை செய்கிறார்கள். ஏற்கனவே சிறந்த சரும பாதுகாப்பு அழகியாக தேர்வான கோவைப்பெண் வித்யாவை முக்கிய கேரக்டரில் நடிக்க வைத்தார்கள். இப்போது `சிந்தால் சருமபாதுகாப்பு சீசன்- 2' போட்டி நிகழ்ச்சி மூலம் மேலும் இரு பெண்கள் தேர்வாகி இருக்கிறார்கள். இவர்களும் தங்கம் தொடரில் நடிப்பார்கள்.


இதற்கான போட்டித்தேர்வு சென்னை, கோவை, மதுரை, திருச்சி நகரங்களில் நடந்தது. ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டதில் 15 பேர் இறுதிச்சுற்றுக்கு வந்தார்கள். இறுதிச்சுற்றில் டைரக்டர் டி.பி.கஜேந்திரன், நடிகை ரம்யாகிருஷ்ணன், நடிகை காவேரி ஆகியோர் நடுவர்களாக இருந்தார்கள். போட்டி முடிவில் பிரசாந்தி, பிரவினா என 2 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இருவருமே சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விஷன்புரோ ஈவென்ட்மேனேஜ்மென்ட் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கவனித்தது.
நன்றி: தினதந்தி

aanaa
29th January 2012, 09:15 PM
29-01-2012 தொடங்கி........
















ÛTW«











http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20120211/TV-01.jpg


A†‡”eL·, ÙTÖPÖyz ÚRÛY G] ÙRÖÛXeLÖyp† ÙRÖPŸLÛ[ RVÖ¡†‰ YZjfe ÙLÖz£eh• N¡LU C‹‡VÖ Œ¿Y]•, CÚTÖ‰ ÛTW« GÁ\ AUÖÄÐV ÙRÖPÛW• RVÖ¡ef\‰.

"sX•, ÚYXÁ, WÖ^ WÖÚ^ÍY¡, ÛUzVŸ ”R•, ÚY‘ÛXeLÖ¡ ÚTÖÁ\ ‡f¨• TWYN˜UÖ] ÙRÖPŸL· Y¡ÛN›¥ ÛTW« ÙRÖP£• CP• ‘zeh•'' GÁf\ÖŸ, ‘.BŸ.«^VXyr–. CYŸ N¡LU CÁzVÖ Œ¿Y]†‡Á ÙRÁUPX ÙTÖ‰ÚUXÖ[Ÿ. AÚRÖ| “L²ÙT¼\ ÛPWePŸ ‘.BŸ.T‹‰¨«Á UL· GÁTÚRÖ|, J¸T‡YÖ[Ÿ, RVÖ¡TÖ[Ÿ GÁ\ AÛPVÖ[jLº• AÛUV ÙT¼\YŸ.

ÙRÖP¡¥ SzÛL FŸYp, `r‹RWÖ zWÖY¥Í' WÖRÖ SÖVfVWÖL Szef\ÖŸL·. CYŸLºPÁ hZ‹ÛR SyN†‡W• Wec]Ö, «.GÍ.WÖLYÁ, TÖ|, W« BfÚVÖ£• E|.

LÛR, ‡ÛWeLÛR: «.NWYQWÖ^Ö. YN]•: BŸ.ÙN¥YTÖzVÁ. J¸T‡°: G•.«.L¥VÖ. TÖP¥: PÖePŸ Ë£RVÖ. CÛN: TÖ¥WÖÇ. CVeL•: ÙYjLy.È. f¡ÚVyzª CVeh]Ÿ: ‘¡ÁÍ. NÁ z«›¥ OÖ›¿ÚRÖ¿• CW° 9 U‚eh J¸TWTÖf\‰, ÛTW« ÙRÖPŸ.



















another sudden death :-(

http://i.imgur.com/DBxlh.jpg



http://www.youtube.com/watch?feature=player_embedded&v=tOWaxYzIJJ4

aanaa
4th February 2012, 04:28 AM
ருத்ரம்
ஜெயா டிவியில் வரும் திங்கள் முதல் ஒளிபரப்பாகும் புதிய மர்ம மெகா தொடர் `ருத்ரம்.'


ருத்ரம் என்பது ருத்ரனை, சிவனை போற்றிப்பாடும் மந்திரங்கள். தீமைகள், அழிவுகளிலிருந்து நம்மை காத்து ரட்சிப்பவன் என்பது அதன் பொருள்.


சித்தர்கள் உலகை காக்கும் ஒரு மகா ரகசியத்தை மகேந்திர மலையில் புதைத்து வைத்திருக்கின்றனர். சாதி, மத பேதமின்றி வெவ்வேறு நட்சத்திரங்களை சேர்ந்த சித்தர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 9 பேர் ஒன்று கூடி ருத்ர மந்திரத்தை சொல்லும்போது அந்த ரகசியத்தை அறியமுடியும்.


அந்த 9 பேரை தேடிப்பிடித்து அந்த ரகசியத்தை கண்டு பிடிக்கிறார்களா? இல்லையா? என்பது விறுவிறுப்பான காட்சி அமைப்புகளுடன் சொல்லப்பட்டிருக்கிறது.


கதை இந்திரா சவுந்தர்ராஜன். திரைக்கதை அமைத்து இயக்குகிறார், ஷான். தயாரிப்பு: ஸ்ரீபிரியா மகாலட்சுமி. இசை: பாலபாரதி. முக்கிய வேடத்தில் ஒய்.ஜி.மகேந்திரன் நடிக்கிறார். `அம்முவாகிய நான்' புகழ் பாரதி, மவுலி, பூவிலங்கு மோகன், குயிலி ஆகியோரும் நடிக்கிறார்கள்.


தமிழ் சின்னத்திரை வரலாற்றிலேயே முதன் முறையாக இத்தொடர் 5டி கேமரா மூலம் துல்லியமாக படப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

நன்றி: தினதந்தி

aanaa
4th February 2012, 04:29 AM
"பிரிவோம் சந்திப்போம்''

விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் "பிரிவோம் சந்திப்போம்'' தொடர், 200 எபிசோடுகளை தாண்டி தொடர்கிறது.


இனி வரும் எபிசோடுகள் கார்த்திக் கல்யாணம் நடக்குமா? இரு குடும்பங்களும் சேருமா? என்ற எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது.


இதுபற்றி அதன் இயக்குனர் ரசூல் கூறுகையில், "தொடர்ந்து தொடரை பார்த்து வரும் ரசிகர்கள் தங்களது மனம் திறந்த பாராட்டுகளையும், ஆலோசனைகளையும் பேஸ்புக் இணையதளம் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர். இது எங்களை மலைக்க வைத்திருக்கிறது. பல நாடுகளில் இருந்தும் ரசிகர்கள் அனுப்பும் மின் அஞ்சல்கள் எங்களுக்கு பெரும் உத்வேகத்தை கொடுத்துள்ளது. அதனால் தொடரில் விறுவிறுப்பையும், சுவாரஸ்யத்தையும் அதிகப்படுத்தி உள்ளோம்.


கார்த்திக் கல்யாணம் பற்றிய தகவல் கல்யாணிக்கு தெரிய வருகிறது. அந்த வீட்டு மருமகளாக மகாலட்சுமி வர அவள் சம்மதிப்பாளா? அந்த குடும்பம் இதை ஏற்கிறதா? என்ற முடிச்சுகள் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தி உள்ளது. தொடரின் ஒவ்வொரு பகுதியின் முடிவும் ரசிகர்களை மேலும் எதிர்பார்க்க வைக்கும்.


எவர்கிரீன் புரொடக்ஷன்ஸ் சார்பில் செய்யது அன்வர் தயாரித்து வரும் இந்த தொடரின் நட்சத்திரங்கள்: கல்யாணி, மகாலட்சுமி, தினேஷ், செய்யது அன்வர், எல்.ராஜா, ராஜலட்சுமி, அனுராதா கிருஷ்ணமூர்த்தி.
நன்றி: தினதந்தி

aanaa
4th February 2012, 04:30 AM
காமெடித் தொடரில் பொன்னம்பலம்

வசந்த் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் புதிய காமெடித்தொடர் `கன் பைட் கபாலி'. இந்த தொடரில் பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம் நடிக்கிறார்.


சின்னச் சின்ன திருட்டுகளில் மனம் நிறைவடைந்து விடும் கபாலிக்கு வந்து வாய்த்த மனைவியோ பேராசைக்காரி. எத்தனை நாளைக்கு இப்படி பர்ஸ்களை திருடி குடும்பம் நடத்துவது? பேங்க் மாதிரி பெரிய இடத்தில் கொள்ளையடித்தால் தானே நாமும் கார், பங்களான்னு வாழ முடியும் என்கிறாள். கபாலிக்கு அதில் உடன்பாடில்லை. எனவே எனக்கு அதெல்லாம் செட்டாகாது என்கிறான்.


விடுவாளா அவன் மனைவி? அவனை மெல்ல மெல்ல கரைத்து வங்கித்திருட்டுக்கு தயார் செய்து அனுப்புகிறாள். இவன் வங்கிக்கொள்ளைக்கு போனநேரம், அதே வங்கியில் கொள்ளையடித்து விட்டு ஓடி வரும் திருடன் இவன் கையில் சிக்குகிறான். இதனால் திருடனைப்பிடித்த கபாலிக்கு பாராட்டுகள் குவிகிறது.


அடுத்து யார் குழந்தையையாவது கடத்தி லட்சக்கணக்கில் பணம் கேள் என்கிறாள், மனைவி. அதற்காக புறப்பட்டவன் எதிரில் ஒரு பெண்ணின் சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடி வரும் ரவுடி மாட்டுகிறான். இம்முறையும் பாராட்டுகள்.


மறுபடியும் கணவனை துரத்துகிறாள், மனைவி. இப்போது இரண்டு குழந்தைகளை கடத்தி வீட்டுக்கு கொண்டு வந்து விடுகிறான். அந்தக்குழந்தைகள் அதுவரை குழந்தையில்லாத கபாலி தம்பதிக்கு புதிய உறவை கற்பிக்கின்றன.அடுத்து கபாலி என்ன முடிவெடுத்தான்? அவன் மனைவி ஆடம்பரக்கனவில் இருந்து வெளிவந்தாளா?


கபாலியாக பொன்னம்பலம் நடிக்கிறார். அவர் மனைவியாக பிரேமப்பிரியா நடிக்கிறார். வெற்றி, பெஞ்சமின், போண்டாமணி ஆகியோரும் இருக்கிறார்கள்.


விரைவில் ஞாயிறு மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கிறது இந்த தொடர். எழுத்து, இயக்கம்: ஜெயமணி.

நன்றி: தினதந்தி

aanaa
12th February 2012, 12:03 AM
RÖUÛW











‡jL· ˜R¥ ÙY·¸ YÛW ‡]‹ÚRÖ¿• LÖÛX 11 U‚eh É R–² ÙRÖÛXeLÖyp›¥ J¸TWTÖh• “‡V ÙRÖPŸ, `RÖUÛW.'

ÙRÖP¡Á SÖVf f£ÐQÖ J£ S|†RW h|•T†ÛRo ÚNŸ‹R ÙT. f£ÐQÖ°eh RÖÁ J£ ÙT¡V A‡LÖ¡VÖf RÁ h|•T†‡]¡Á YÖ²eÛL RW†ÛR EVŸ†R ÚY|• GÁ¿ BÛN. ÚRÛYVÖ] AzTÛP YN‡L· C¥XÖR ÚTÖ‡¨• RÁ EÛZTÖ¥ f£ÐQÖ Tz†‰ ˜zef\Ö·. R¼ÚTÖ‰ ‘‘zK GÁ\ AWr TR«eLÖL CÁPŸ«ï ÙN¥X ÚYz KVÖ‰ CW° TLXÖL Tzef\Ö·. f£ÐQÖ«¼h BRWYÖL AY¸Á ATÖ U¼¿• CÛ[V NÚLÖR¡ BfÚVÖŸ AYÛ[ CÁPŸ«ï«¥ ÙY¼½ ÙT\ YÖ²†‰fÁ\]Ÿ.

B]Ö¥ f£ÐQÖ«Á RÖVÖŸ Uy|• RÁ UL· ®y| ÚYÛXLÛ[ LY†‰ Y‹RÖ¥ ÚTÖ‰• GÁ\ GQ†‡¥ Ty|• TPÖU¨• SP‹‰ ÙLÖ·f\Ö·. C‹ŒÛX›¥ f£ÐQÖ CÁPŸ«ï«¼h ÙN¥¨• Y³›¥ T¥ÚY¿ CÛPï¿L· H¼T|fÁ\]. CÛY AÛ]†ÛR• RÖz CÁPŸ«ï SPeh• A¨YXL†ÛR ÙNÁ\ÛPV RÖURUÖf «|f\‰.

f£ÐQÖ CÁPŸ«ï«¥ Tjh ÙT¿• YÖšÛT ÙT¼\Ö[Ö? f£ÐQÖ«Á L]° S]YÖ]RÖ?

aanaa
12th February 2012, 12:04 AM
http://www.dailythanthi.com/muthucharam/images/articles/bar111.gif








ÚU[oN†R†‰PÁ SÖRÍYW•











http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20120211/TV-07.jpg


‡£˜£LÁ CVeL†‡¥ SÖRÍYW• ÙRÖPŸ EQŸ°”ŸY LÖypLºPÁ ÚYL• hÛ\VÖU¥ TV‚†RÖ¨•, ÙRÖP¡¥ A|†R|†‰ SP‹‰ ˜z‹R ÚNÖL N•TYjL· WpLŸLÛ[ Lƒ£• L•TÛXUÖef «yP]. CÙR¥XÖ• h|•TjL¸¥ SPT‰ RÖÁ. CTzTyP VRÖŸ†R†ÛR• H¼¿eÙLÖ·[†RÖÁ ÚY|• GÁ¿ TehYTyP WpLŸL· RjLºeh· NUÖRÖ]UÖfe ÙLÖ·[, U¼\YŸLÚ[Ö `AZ ÙYopy{jLÚ[...'G] E¡ÛUPÁ RjL· GQjLÛ[ ÙRÖP¡ÁCVeh]£eÚL ÙRÖÛX†ÙRÖPŸ“L· ™X• Ryz«P...

"G]eÚL A‰ “¡tN‰. B]Ö¥ LÛRÚTÖefÁ ÚYL†‡¥ EP]zVÖL A‡¥ C£‹‰ ÙY¸YW ˜zV«¥ÛX. B]Ö¥ C Y£• LÖypL· GÁ ÙRÖP£eÚL E¡†RÖ] SÛLorÛY LÖypLºPÁ ŒÛ\‹‡£eh•. AÚRÚSW• ÙRÖP¡Á ÚLWePŸL· ATzÚV RÖÁ C£TÖŸL·. A|†‰ Y£• LÖypL¸¥ TW˜ L¥VÖQ•, WÖf L¥VÖQ•, ÚWÖf‚ L¥VÖQ•, N•T‹R• L¥VÖQ• G] JÚW ÚU[ N†R• RÖÁ. C‹R L¥VÖQe LÖypL¸¥ YZeLUÖ] LXLX“eh• TtN–WÖ‰''GÁf\ÖŸ, CVeh]Ÿ ‡£˜£LÁ.

‡jL· ˜R¥ ÙY·¸ YÛW ‡]˜• CW° 7-30 U‚eh NÁ z«›¥ J¸TWTÖf Y£f\‰, SÖRÍYW•.

aanaa
12th February 2012, 12:05 AM
`UÚ]Ö-25'











http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20120211/TV-06.jpg


16 ÙUÖ³L¸¥ 22 B›W• TÖP¥LÛ[ TÖz›£TYŸ UÚ]Ö.

`pÁ]†R•‘' TP†‡¥ `AP EoNtRÛX Eop›ÚX', `Š¸›ÚX BPY‹R YÖ]†‰ –Á«[eÚL,', `SÖVLÁ' TP†‡¥ ` J£ LÖR¥ NjgR•', `ÚYÛXeLÖWÁ' TP†‡¥ `ÚYÛX C¥XÖRYÁ', `®WÖ' TP†‡¥ `UÛXeÚLÖ›¥ YÖN¦ÚX', `TÛPVTÖ' TP†‡¥ `feh H¿ÚR', `˜†‰ TP†‡¥ `‡¥XÖ]Ö ‡¥XÖ]Ö,' N—T†‡¥ ‡ÛWeh Y‹R `UjLÖ†RÖ' TP†‡¥ CP• ÙT¼\ `Uop KTÁ ‡ TÖyz¥' YÛW A†RÛ]• WpLŸL¸P• Aµ†RUÖL T‡‹RÛY.

R–²TP EXf¥ UÚ]Ö LÖXz G|†‰ ÛY†‰ 25 Y£PjL· BfÁ\]. UÚ]Ö«Á 25 Y£P LÛXXL NÖRÛ]ÛV TÖWÖy|• YÛL›¥, `NÖRL T\ÛYL·' NjL£PÁ CÛQ‹‰ `L¥VÖQL¥TÖ' Œ¿Y]• N—T†‡¥ "UÚ]Ö-25'' GÁ\ ÙTV¡¥ ÙNÁÛ]›¥ J£ «ZÖ G|†R‰.

"NÖRLT\ÛYL·'' CÛNehµ UÚ]Ö«Á TÖP¥Lºeh CÛNVÛUeL, ÙRÖPŸ‹‰ RÖÁ TÖzV 30 TÖP¥LÛ[ UÚ]Ö, R†‰•, TÖPfLºPÁ ÚNŸ‹‰• TÖz WpLŸLÛ[ E¼NÖL†‡¥B²†‡]ÖŸ.

SzLŸ TÖŸ†‡TÁ, ‘Á]‚ TÖPf ‘.rqXÖ, CVeh]Ÿ N‹RÖ]TÖW‡, CÛNVÛUTÖ[Ÿ ÚRYÖ, TÖPLŸL· z.G¥.ULÖWÖ^Á, GÍ.GÁ.rÚW‹RŸ, UÖ‚eL «SÖVL•, ~ÚXLÖ TÖŸ†RNÖW‡ BfÚVÖŸ «ZÖ«¥ LX‹‰ ÙLÖ| UÚ]ÖÛY TÖWÖyz]Ÿ.

C‹ŒL²op «ÛW«¥ «^š z«›¥ J¸TWTÖf\‰.

aanaa
12th February 2012, 12:06 AM
TWTWÛT H¼T|†‡V ÙY·Û[†RÖUÛW











‡jL· ˜R¥ ÙY·¸ YÛW ‡]˜• TL¥ 12 U‚eh NÁ z.«.›¥ J¸TWTÖf Y£• ÙY·Û[†RÖUÛW ÙRÖPŸ, G|†R G|‘ÚXÚV ÚYL• ‘z†‰ «yP‰. A‘SVÖ f¡ÚVcÁÍ NÖŸ‘¥ WÖRÖ f£ÐQNÖ– RVÖ¡eL, Ú^.ÚL.LÛR, ‡ÛWeLÛR GµR, U‚TÖW‡-RPTÖ‚ CVef Y£• ÙRÖPŸ C‰. BŸ.GÍ.TÖX˜£LÁ YN]• GµR, `GjÚL• GÚTÖ‰•' “L² N†VÖ CÛN AÛU†‰ Y£f\ÖŸ.

C‹R ÙRÖP£eLÖL ÙNÁÛ] A£ÚL E·[ IVTÁRÖjL¥ Th‡›¥ RÖUÛW›Á LÖRXÁ W«ÛV KP KP «Wyz ÙLÖÛX ÙNšY‰ ÚTÖÁ\ TWTWTÖ] LÖyp TPUÖ]‰. C‹R LÖypÛV TPUÖefVÚTÖ‰ J£ EÛUoN•TY• SPT‰ ÚTÖX ÙTÖ‰UeL· ŒÛ]†‰ A‡Ÿop›¥ EÛ\‹‰ ÚTÖ›]Ÿ. AYŸL· TRyP†ÛR AYŸLºeÚL ÙR¡VÖU¥ CÁÙ]Ö£ ÚL–WÖ«¥ T‡° ÙNš‰ E·[]Ÿ, TPehµ«]Ÿ.

ÙRÖP¡¥ RÖUÛWVÖL “ÐTXRÖ, LÖRX]ÖL ‘WNÁ]Ö Sz†R]Ÿ. CYŸLºPÁ A‘Úce, YÖr «eW•, ÚSNÁ, RÄÐ, A½˜LSÖVf RŸÑÂ, R]Xyr–, LÖV†¡, Œ†VÖ W®‹RŸ, i†‰TyPÛW W«, AZh, ®WÖ, S®Á, G•.G¥.H.RjLWÖÇ, hLÁ Sz†‰ E·[]Ÿ.

aanaa
22nd February 2012, 04:18 AM
ஆண் பாவம்

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர், "ஆண் பாவம்.''

திருப்பரங்குன்றம் கோபால்சாமியின் மூத்த மகன் 33 வயது மாதவனை பிடித்திருப்பதாக சாத்தூர் அழகர்சாமியின் கல்லூரியில் படிக்கும் கவிதா சொல்கிறாள். கவிதாவை பிடித்திருப்பதாக மாதவனும் சொல்கிறான். பெண் பார்க்கும் படலம் நல்லபடியாக முடிந்ததை கண்ட இரண்டு குடும்பமும் சந்தோஷத்தில் இருக்க, இந்நிலையில் கவிதாவை 5 வருடமாக ஒருதலையாக காதலிக்கும் முருகன் எடுக்கும் முடிவு என்ன?

கோபால்சாமியின் மற்ற 3 மகன்கள் சுந்தர்ராஜன், பத்மநாபன், சீனிவாசன் ஆகி யோரின் நிஜ முகத்தை நேயர் கள் பார்க்கப்போவது மிகப் பெரும் அதிர்ச்சியாக இருக்கும்.

கோபால்சாமியின் தங்கை சாந்தி லாரன்சின் மூத்த மகள் கிரேசுக்கு பார்த்த வரன் தட்டிப்போக, அதற்கு காரணம் மாதவன் என்ற உண்மையை மறைத்த கிரேஸ் எடுக்கும் முடிவு என்ன? இந்த உண்மை தெரியாமல், கிரேஸ் அம்மா சாந்தி லாரன்சின் மற்ற மகள்கள் மேரி லாரன்சும், ஜெனியும் தவிக்கும் தவிப்பும் தொடரின் ஏனைய காட்சிகள்.

அப்பாவாக ராஜேசும், அம்மாவாக மீரா கிருஷ்ணனும் நடிக்கிறார்கள். பரத் கல்யாண், ராஜ்கமல், வெங்கட், சதீஷ் ஆகியோர் பிள்ளைகளாக நடித்திருக்கின்றனர். இவர்களின் ஜோடியாக ஜெயஸ்ரீ, மேகி, கவுரி, ஐஸ்வர்யா நடிக்கிறார்கள்.

இவர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் அழகன்தமிழ்மணி, பாம்பே பாபு, பவானி, சுஜிபாலா, ஜக்குபாண்டி, மகிமா, பரணி, சாய் கோபி ஆகியோரும் உண்டு.

கதை-வசனம்: பொன்காந்திராஜன்; ஒளிப்பதிவு: எம்.ஆர்.சரவணகுமார்; திரைக்கதை, இயக்கம்: டி.சி.பாலா; கிரியேட்டிவ் ஹெட்: டி.ஜி.தியாகராஜன்; தயாரிப்பு: சத்யஜோதி பிலிம்ஸ்.



நன்றி: தினதந்தி

aanaa
22nd February 2012, 04:19 AM
காதம்பரி

ஜெயா டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய தொடர் `காதம்பரி.'

200 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்ட, வெள்ளையர்களின் அடிவருடிகளாக இருந்த பல சமஸ்தானத்து அரசர்களில் ஒருவன் ருஷ்யேந்திர பூபதி. நாகருத்ராட்சவர சமஸ்தானத்தின் சக்கரவர்த்தியான இவன், வெள்ளையர்களின் விருப்பம் அறிந்து நிறைவேற்றி தன்னையும் வளப்படுத்திக் கொள்கிறான்.

சமஸ்தானத்தில் வாழும் அப்பாவி மக்களை பெற்றோர், உறவினர்களிடமிருந்து பிரித்து பல தேசங்களுக்கு அடிமைகளாக நாடு கடத்தி வெள்ளையர்களிடம் இருந்து பொற்காசுகளையும், நற்பெயரையும் பெற்றுக் கொள்கிறான். மன்னனின் வழியிலேயே மகாராணி மங்களேஸ்வரியும் நடந்து கொள்கிறாள்.

இவர்களின் கண்ணசைவில் உத்தரவுகளை நிறைவேற்றுபவன் தளபதி கஜேந்திரவர்மன். இறைவன் படைத்த மனித உயிர்களை விருப்பம் போல் பறிப்பது இவன் பொழுதுபோக்கு. இவர்களுக்கெல்லாம் நேர்மாறாக, அன்பு, மனிதநேயத்தோடு இருப்பவன் இளவரசன் கவுதமபூபதி.

கொடுங்கோல் ஆட்சியில் இருந்து அடிமை மக்களை விடுவிக்க வானத்து விடிவெள்ளியாய் உதயமாகிறான் விருமன் என்னும் இளைஞன். தனது வீரம், புத்திசாலித்தனத்தால் இளைஞர்களை திரட்டி மன்னர் ஆட்சியை நிலைகுலையச் செய்கிறான். ஆனாலும் மக்களின் துன்பம் தீரவில்லை. இறுதியாக நகாருட்ராட்சவர சமஸ்தானத்து மக்கள் கேட்காமலேயே கிடைத்த வரமாக, ஒரு வெட்டியானின் மகளாக பிறக்கிறாள் காதம்பரி. இவளது பிறப்பே சமஸ்தானத்துக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறது. தனது மக்களை விடுவிக்க காதம்பரி ஒரு முடிவு எடுக்கிறாள். அந்த முடிவால் சமஸ்தானத்து மக்களுக்கு விடுதலை கிடைத்ததா?

வெள்ளித்திரை நாயகி மிதுனா முதன் முறையாக சின்னத்திரையில் நடிக்கிறார். இவருடன் சுதா சந்திரன், ஏ.சி.முரளி, லட்சுமிராஜ் மற்றும் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு: வி.ராக்கு; இசை: ராஜேஷ் ராமலிங்கம்; வசனம்: என்.கிருஷ்ணசாமி; கதை, திரைக்கதை, இயக்கம்: எஸ்.பிரபுசங்கர்; தயாரிப்பு: சாப்ரான் கிரியேஷன்ஸ்.

நன்றி: தினதந்தி

aanaa
25th February 2012, 08:58 AM
C£ UXŸL·











http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20120225/TV08.jpg


Ù^VÖ z«›¥ ‡jL· ˜R¥ ÙY·¸ YÛW ‡]˜• ˜¼TL¥ 11.30 U‚eh J¸TWTÖf Y£• “‡V ÙRÖPŸ, "C£ UXŸL·.''

L¥©¡›¥ TzÛT ˜z†‰ CÁ¿ ÙRÖ³¥ ˜Û\›¥ G‡£• “‡£UÖL ÚUÖ‡eÙLÖz£eh• CW| ÙTL· WtN•, A˜RÖ°•. CYŸL· ÚTÖyz CÁ¿ BW•TUÖ]R¥X. p¿ YV‡¥ C£‹ÚR Tz“, «Û[VÖy| GÁ¿ G‹R ÚTÖyzVÖL C£‹RÖ¨• J£YÛW J£YŸ –tN R£Q• TÖŸ†RTz C£TÖŸL·. L¥©¡ Tz“ ˜z• SÖ¸¥ J£YŸ ˜L†ÛR J£YŸ YÖ²SÖ¸¥ C TÖŸeL ÚTÖY‡¥ÛX GÁ\ ®•“PÁ ‘¡‹R]Ÿ. B]Ö¥ «‡›Á «Û[VÖyPÖ¥ C£Y£• J£YÛ]ÚV «£•‘ LQY]ÖL AÛPV ŒÛ]†‰ UQeÚLÖX†‡¥ N‹‡efÁ\]Ÿ.

C£Y£eh• G‡ŸTÖWÖR A‡Ÿop. GÁ\Ö¨•, AYŸLºeh· `VÖ SÖ]Ö' ÚTÖyz ÙRÖPWÚY ÙNšf\‰. C‹R Ù^ÁU TÛLÛV By|«T‰ VÖŸ?

WtNÂVÖL ULÖXyr–•, A˜RÖYÖL AfXÖ°• ÚY¿ ÚY¿ UQ• ®r• C£ UXŸL[ÖL ”†‡£efÁ\]Ÿ. S¸Â, ~ÚR«, AUWpLÖU‚, pYÁ qÂYÖNÁ, ÚWY‡ NjLŸ, YN‹† BfÚVÖ£• UXŸ† ÚRÖyP†‡¥ C£efÁ\]Ÿ.

Ù^VÖ z«eLÖL RVÖ¡†‰ CVef C£TYŸ R[T‡. CYŸ `S•U AQÖop', `AÁ“' ÚTÖÁ\ TPjLÛ[ CVefVYŸ. AZf TP†‡Á Gepfïzª “ÙWÖzïNŸ.

"JªÙYÖ£ SÖ· ˜z«¨• A|†R SÖ· TÖŸ†ÚR BLÚY|• GÁ\ «¿«¿“PÁ LÖypL· AÛUeLTy|·[‰, C‹R ÙRÖP¡Á p\“'' GÁf\ÖŸ, CVeh]Ÿ.

aanaa
3rd March 2012, 09:01 AM
நடிகை குஷ்பு நடிக்கும் புதிய தொடர்

கலைஞர் தொலைக்காட்சியில் வரும் திங்கள் முதல் ஒளிபரப்பாகும் புதிய தொடர், "பார்த்த ஞாபகம் இல்லையோ.'' கதையின் நாயகியாக நடிப்பதோடு, தனது `அவ்னி டெலிமீடியா' மூலம் இந்த தொடரையும் தயாரிக்கிறார், குஷ்பு.


சின்னத்திரைக்கு கல்கி, ருத்ரா, நாங்கள் என அடுத்தடுத்து 3 வெற்றித்தொடர்களை தந்த குஷ்பு, தனது நாலாவது படைப்பாக சின்னத்திரைக்குத் தருவதே இந்தத் தொடர். கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் இடை வெளிக்குப் பிறகு மீண்டும் சின்னத்திரையில் களம் இறங்கியிருக்கும் குஷ்பு இம்முறை வித்தியாசமான கதையை வடிவமைத்திருக்கிறார்.


"எந்த மாதிரியான கதை'' - குஷ்புவை கேட்டால், "அமானுஷ்ய நிகழ்வுகளை உள்ளடக்கிய சமூகத்தொடராக இருக்கும். முதல் எபிசோடில் இருந்தே நேயர்களின் எதிர்பார்ப்பை கிளப்பும் வகையில் கதையை உருவாக்கியிருக்கிறேன்.


ஒரு பெரிய குடும்பத்தில் மருமகளாக நுழையும் ஓவியாவை (குஷ்பு) அந்த குடும்பமே கொண்டாடுகிறது. ஆனால்... புகுந்த வீட்டை செழிக்க வைக்க வேண்டிய மருமகள், அதற்கு மாறாக அழிக்கத் தொடங்குகிறாள். ஏன்? ஓவியாவின் திட்டம் என்ன? எதற்காக இந்த பழிவாங்கும் படலம்? கதையின் மைய முடிச்சு இதுதான். எடுத்த எடுப்பிலேயே கதை வேகம் பிடித்து விடும்'' என்கிறார்.


நட்சத்திரங்கள்: குஷ்பு, சீனு, டெல்லி குமார், பானுமதி, ஷோபனா, தனுஷ், விஜேஷ்.


கதை, கிரியேட்டிவ் ஹெட்: குஷ்பு சுந்தர்; திரைக்கதை: என்.பிரியன்-பி.மாரிமுத்து. வசனம்: டி.வெங்கடேஷ். ஒளிப் பதிவு: ஆல்வின். இயக்கம்: என்.பிரியன்.


திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் இது.

நன்றி: தினதந்தி

aanaa
3rd March 2012, 09:02 AM
கால பைரவர்

ஜெயா டிவியில் இன்று ஒளிபரப்பாகும் புதிய தொடர், கால பைரவர்.


பாதாள உலகத்தில் பல யுகங்களாக அடைப்பட்டிருக்கும் அசுரன் பாண்டாசூரன், தானும் தேவர்களை போல சுதந்திரமாக உலவ சிவபெருமானை நோக்கி கடுந்தவமிருக்கிறான். அவன் தவத்தை ஏற்ற சிவபெருமான், அவனுக்கு கேட்ட வரமளித்து, அஷ்டமாசித்திகளையும் அளிக்கிறார்.


வரம் பெற்ற அரக்கன் தனக்கே உரிய அசுர குணத்தோடு மேலும் அதிக சக்தி பெற பிரம்ம தண்டத்தை தேடிச் செல்கிறான்.


மறுபுறம் ஈரேழு உலகங்களையும் அடிமைப்படுத்தி, தேவர்களை கொடுமைப்படுத்தும் பாண்டாசூரனின் கொட்டத்தை அடக்க, சிவபெருமானிடம் பிரம்மாவும், விஷ்ணுவும் வேண்ட, அண்ட சராசரங்களையும், தேவர்களையும் காக்க பதினெட்டு சித்தர்களுடன், ருத்ர மூர்த்தியான சிவபெருமான் தீய சக்திகளை அழிக்கவும், தீய வினைகளை வேரறுக்கவும், தடைகளை தகர்க்கவும், நல்லோர்களை காக்கவும் கால பைரவர் ஆக அவதரித்தார்.


வரம் பெற்ற பாண்டாசூரன் பிரம்ம தண்டத்தை பெற்றானா? கால பைரவராக அவதரித்த சிவன் தீய சக்திகளை அழித்தாரா? என்பதே கதை.


பிரம்மாண்ட செட்களிலும், அடர்ந்த காட்டுப்பகுதிகளிலும் வளர்ந்து வரும் கால பைரவர் தொடர், சனிக்கிழமை தோறும் இரவு 8 மணிக்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிறது.


சதீஷ், மாஸ்டர் ஸ்ரீதர், கே.ஆர்.செல்வராஜ், தாதா முத்துகுமார், ஸ்ரீதேவி, ஸ்ரீஹரி மற்றும் பிரபல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். வசனம் கே.பி.அறிவானந்தம். கதை, திரைக்கதை இயக்கம்: எஸ்.எஸ்.சரவணன்.
நன்றி: தினதந்தி

aanaa
3rd March 2012, 09:04 AM
3 புதிய தொடர்கள்

மெகா டிவியில் வரும் திங்கட்கிழமை முதல் 3 புதிய தொடர்கள் ஒளிபரப்பாகின்றன.


சந்திரலேகா: வீட்டிலும் வெளியிலும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு உதவுகிறாள், சந்திரலேகா. பெண்களின் மனப்போராட்டங்களை ஆண்களால் அத்தனை சுலபத்தில் புரிந்து கொள்ள முடியாது. பெண்கள் தான் பெண்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதை தொடரில் காட்சிப் படுத்தியிருக்கிறார்கள்.


இளவரசன், மஞ்சுளா, சாதனா, ஜெயலட்சுமி, மோகன்சர்மா தொடரின் நட்சத்திரங்கள். கதை, வசனம்: தேவிபாலா. இயக்கம்: சுதர்சன்.


ரோஜா: ஆரம்பத்தில் கெட்டவர்கள் என்னதான்ஆதிக்கம் செலுத்தினாலும் கடைசியில் நல்லவர்கள் தான் வெற்றியை சுவைப்பார்கள் என்ற கருத்தை உள்ளடக்கிய கதை. நம் சமூகத்தில் உள்ள பலவகை பெண்களை படம் பிடித்துக் காட்டும் இந்த தொடரை பச்சில் சிவா இயக்குகிறார்.


நட்சத்திரங்கள்: சுஜிதா, லட்சுமிராஜ், ஐஸ்வரியா, தேவதர்ஷினி, நளினி, பாத்திமா பாபு, புவனேஸ்வரி.


அக்கா-தங்கை: அக்கா-தங்கை பாசம், கூட்டுக்குடும்பத்தின் மகத்துவம் பற்றி விவரிக்கும் இந்த தொடரில், எஸ்.பி.பி.சரண், ஜீவா, பிரகதி, பாவனா, வசந்த வரலட்சுமி, விஜய்பாபு நட்சத்திரங்கள். தேவராஜ் இயக்குகிறார்.
நன்றி: தினதந்தி

aanaa
3rd March 2012, 09:05 AM
வீர சிவாஜி

ஜி தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சரித்திரத் தொடர் `வீர சிவாஜி.'


ஷாஜி மகாராணி ஜீஜீபாய் தன் மகனுக்கு சிறுவயது முதலே வீரத்தையும் நாட்டுப்பற்றையும் ஊட்டி வளர்த்ததால், எந்தவொரு அநியாயத்துக்கும் எதிராக கொடி பிடிக்கிறார், சிவாஜி.


இந்நிலையில் விவசாயிகளின் தானியத்தை சிலர் கொள்ளையடித்துச் செல்ல, இந்த தகவல் சிவாஜி காதுக்கு வர, கொதித்தெழுகிறார். அப்போது தான் பிஜப்பூர் மன்னன் ஆதில்ஷாவுக்கு அடங்கிப்போயிருந்த தன் பெற்றோர் பற்றி தெரிய வருகிறது. ஆவேசமாகிற சிவாஜியை அடங்கிப்போகச்சொல்கிறார்கள் பெற்றோர்.


சிவாஜி என்ன முடிவெடுக்கிறார்? தன்னை சிவாஜி எதிர்க்கத் துணிந்துவிட்ட தகவல் தெரிந்ததும் பிஜப்பூர் மன்னன் ஆதில்ஷா எடுத்த நடவடிக்கை என்ன?
நன்றி: தினதந்தி

aanaa
10th March 2012, 09:36 PM
சொல்வதெல்லாம் உண்மை

ஜீ தமிழ் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் `சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியில் இடம்பெறும் பலரின் கதைகள் சினிமா மற்றும் சீரியல் கதைகளையே மிஞ்சி விடுகிறது.


ஒரு இளைஞன் தன்னுடைய 21 வயதில் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்கிறான். 7 வருட திருமண பந்தத்தின் வழியாக 3 குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறான். மனைவி சலித்துப்போகவே, இரண்டாவதாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, அவளுடன் 4 வருடமாக முதல் மனைவிக்குத் தெரியாமலேயே குடும்பம் நடத்துகிறான். அவளும் சலித்துப்போக, புதிதாக கல்லூரி மாணவி ஒருத்தியைக் காதலித்து, திருமணம் செய்து கொள்ள தயாராகிறான்.


இதற்கிடையே ஐந்திற்கும் மேற்பட்ட பெண்களுக்குத் தூண்டில் வீசியிருக்கிறான். இதில் மூன்று பெண்கள் சிக்கிக் கொண்டும் விட்டனர். இதில் உள்ள சுவாரசியம் என்னவெனில், சம்பந்தப்பட்ட எல்லா பெண்களுக்கும் இவன் மற்ற பெண்களுடன் உறவு வைத்திருப்பது தெரியாது.


எல்லா பெண்களும் ஒரே இடத்தில் கூடி அவனிடம் தாங்கள் ஏமாற்றப்பட்டதற்கு நியாயம் கேட்டால் என்ன நடக்கும்? அவன் எப்படி அந்தப் பெண்களிடம் இருந்து தப்பித்தான்? அந்தப் பெண்கள் அவனுக்குக் கொடுத்த தண்டனை என்ன? சினிமாவை மிஞ்சும் மன்மத ராசா உண்மைக் கதையே வரும் வாரத்தில் ஒளிபரப்பாகிறது. இது வெறும் சுவாரசியமான கதை மட்டுமல்ல. பெண்களுக்கான விழிப்புணர்ச்சியும் கூட.


இதுபோல் ஆண்களிடம் இருந்து அபலைப் பெண்கள் தப்புவது எப்படி? என்பதைச் சொல்லித் தருகிறது, "சொல்வதெல்லாம் உண்மை.''


நிகழ்ச்சியை தேர்ந்த நடுவருக்கே உரிய அணுகுமுறையில் கொண்டு செல்கிறார் நிர்மலா பெரியசாமி.
நன்றி: தினதந்தி

aanaa
10th March 2012, 09:37 PM
சபாஷ் சரியான போட்டி

கல்லூரிக் குறும்புகளை படம் பிடித்துக்காட்ட கல்லூரி வளாகத்துக்கே செல்கிறது, கலைஞர் தொலைக்காட்சி. திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி `சபாஷ் சரியான போட்டி' என்ற தலைப்பில் இடம் பெறுகிறது.


கல்லூரி மாணவ மாணவிகளின் இளமைத்துள்ளல் நிகழ்ச்சியான இதில் மாணவர்களின் அரட்டை தொடங்கி சாதனை வரை அமர்க்களமாக அரங்கேறுகிறது. அவர்களின் தனித்திறமையை உலகுக்கு எடுத்துச் சொல்லும் நிகழ்ச்சியாகவும் இது அமைந்திருக்கிறது.


கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 8 மணிக்கு புதிய வரவாக இடம் பிடித்திருக்கும் இன்னொரு புதிய நிகழ்ச்சி, `கல்லூரிக் கச்சேரி.'


கல்லூரி மாணவ, மாணவிகளை மையப்படுத்தி தொடங்கும் இந்த நிகழ்ச்சியில், அந்தாக்ஷரி பாணியில் பாடல்கள் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக அலங்கரிக்கின்றன. பாடகர்கள் எம்.எல்.ஆர்.ரமேஷ்-செந்தில்தாஸ் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் இயக்கம்: விஜயலட்சுமி ரமேஷ்.
நன்றி: தினதந்தி

aanaa
10th March 2012, 09:39 PM
வெள்ளைத்தாமரை
http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20120310/TV02.jpg
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 12 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகும் `வெள்ளைத்தாமரை' தொடர், தொடக்கத்திலேயே பரபரப்பை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.


மகள் இந்து படிக்கும் கல்லூரிக்கு செல்லும் தாமரை, அங்கு "டிரியோ... டிரியோ'' என்று ஒரு பெண் அழைக்கும் சப்தம் கேட்டு திரும்பி பார்க்கிறாள். அந்த குரலுக்கு சொந்தமான கலைவாணி, தாமரை திரும்பிப் பார்த்ததும், அவளை வியப்போடும், கனிவோடும் பார்க்கிறாள்.


தாமரை அமைதியாக அவளைப் பார்த்துவிட்டு, தனது பழைய ஞாபகங்களை நினைவுக்கு கொண்டு வந்தாள். `இது தன்னுடைய காதலன் பிரசன்னா அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை ஆயிற்றே' என்று யோசித்தவள், பிரசன்னாவோடு பழகிய அந்த நாளைய நினைவுகளில் மூழ்கினாள். பிறகு சட்டென சுதாரித்துக் கொண்டு கலைவாணியை ஆழமாய் பார்த்தபடியே அங்கிருந்து சென்றாள்.


இப்படி ஒரு காட்சி கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் வெள்ளைத்தாமரை தொடருக்காக சித்திரைச் செல்வன் ஒளிப்பதிவில் படமானது.


இந்த காட்சி பற்றி கதாசிரியர் ஜே.கே.கூறுகையில், "தாமரையும், பிரசன்னாவும் காதலர்கள். இது தெரியாத தாமரையின் தந்தை சூரியமூர்த்தி, தொழில் பகை காரணமாக, எதிரியின் மகனான பிரசன்னாவை கூலிப்படையை ஏவி கொலை செய்து விடுகிறார்.


அதோடு காதலை சொன்ன மகளிடம் காதலுக்கு பச்சை கொடி காட்டுவது போல நடிக்கிறார். ஒருகட்டத்தில் `அவன் உன்னை ஏமாற்றி விட்டு எங்கோ போய்விட்டானம்மா' என்று மகளை நம்ப வைக்கிறார்.


தந்தை சொல்வதை அப்படியே நம்பும் தாமரை, காதலனால் தான் தாய்மை அடைந்திருப்பதை தெரிவிக்கிறாள். இதை கேட்டு அதிரும் சூரியமூர்த்தி, தனது மகளின் எதிர்காலத்துக்கு அந்த குழந்தை எதிராக இருக்கும் என்பதால் பிறந்ததும் அதை கொலை செய்ய முடிவு செய்கிறார்.


தந்தையின் திட்டம் நிறைவேறியதா? தாமரைக்கு இந்த உண்மை எப்போது தெரியவரும்? கேள்விகளுக்கு, தொடரும் தொடரில் விடை இருக்கிறது.

நன்றி: தினதந்தி

aanaa
10th March 2012, 09:41 PM
ஏவி.எம்.மின் புதிய தொடர் `வைராக்கியம்'

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர், வைராக்கியம். இது ஏவி.எம். நிறுவனத்தின் தயாரிப்பு.


பெண் உரிமைக்காகவும், நீதிக்காகவும் வைராக்கியத்துடன் போராடும் ஒரு பெண்ணின் கதை தான் `வைராக்கியம்.' ராஜ்காந்த், மீனாகுமாரி, கீதாரவிசங்கர், கோவை அனுராதா, சாதனா நடிக்கிறார்கள்.


ஒளிப்பதிவு: பிரபாகர்; இசை: பரத்வாஜ்; பாடல்: கவிஞர் வைரமுத்து; கதை, திரைக்கதை, வசனம்: சேக்கிழார்;
இயக்கம்: ஆர்.கே.


தொடரின் கதை கேட்டு கவிஞர் வைரமுத்து வடித்திருக்கும் பாடல் வரிகள் இவை: `வாழ்வுக்கு பிடிமானம் வைராக்கியமே; அந்த வைராக்கியம் வென்றால் சவுபாக்கியமே.'


இந்தக்கதைக்குள் நிகழும் சம்பவங்களை பாடல் வரிகளாக இனங்காட்டியிருக்கும் அடுத்த வைர வரிகள் பின்வருபவை:


`வேண்டாத தீமைகளை வெல்லுவதே வைராக்கியம்.


வெற்றியிலும் தலைவணங்கி மன்னித்தல் வைராக்கியம்.'


தயாரிப்பு: எம்.சரவணன், எம்.எஸ்.குகன், அருணா குகன், அபர்ணா குகன்.http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20120310/TV06.jpg
நன்றி: தினதந்தி

aanaa
10th March 2012, 09:42 PM
மனம் விட்டு பேசலாம்

கேப்டன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் புதிய நிகழ்ச்சி, "மனம் விட்டு பேசலாம்.''


பாதிக்கப்பட்ட மக்கள் தாமாகவே முன்வந்து தங்களின் வாழ்வியல் பிரச்சினைகளை கூறி அதற்கு தீர்வு பெறும் நிகழ்ச்சி இது. அவர்கள் சொல்வதை ஆராய்ந்து தீர்வு காண்பது நிகழ்ச்சியின் சிறப்பு. தேவைப்பட்டால் பல துறையைச் சேர்ந்த வல்லுனர்கள், சட்ட ஆலோசகர்களின் அறிவுரையும் உண்டு.


"மனம் விட்டு பேசலாம்'' நிகழ்ச்சி தீர்வுகளின் களம் என புரிந்து கொள்ளும் வாதி - பிரதிவாதியும் முடிவை ஏற்றுக் கொள்கின்றனர்.


பல வருடம் பிரிந்து வாழும் அப்பாவும் - மகனும் இதன் மூலம் ஒன்று சேர்ந்ததும், கணவன் - மனைவி தகராறில் பிரிந்து வாழ்ந்தோர் ஒன்று பட்டதும் இந்த நிகழ்ச்சிக்கான மகுடம்.


தயாரிப்பு: கேப்டன் டிவி;


நிகழ்ச்சியில் நடிகை குட்டி பத்மினி நடுவராக இருந்து தீர்வுக்கு வழிவகுக்கிறார்.
நன்றி: தினதந்தி

aanaa
17th March 2012, 10:21 PM
நேற்று கோலங்கள்... இன்று பொக்கிஷம்...
http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20120317/TV05.jpg

கோலங்கள் வெற்றித்தொடரின் மூலம் பிரபலமான இயக்குனர் திருச்செல்வம் எழுதி இயக்கும் புதிய தொடர், `பொக்கிஷம்.' இந்த தொடரின் மூலம் தயாரிப்பாளராகவும் ஆகி இருக்கிறார், திருச்செல்வம்.


`திருச்செல்வம் தியேட்டர்ஸ்' என்ற பேனரில் அவர் தயாரிக்கும் இந்த தொடர், வரும் திங்கள் முதல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.


தொடரின் கதைச்சுருக்கம் வருமாறு:


உறவுகளே வாழ்க்கை என வாழுகிறான், வசந்தன். உறவுகளால் ஏமாற்றப்பட்டு தனித்து வாழ பழகிக் கொண்டவள் கண்மணி. எதிரெதிர் புள்ளிகளில் இருக்கும் இவர்கள், விதி வசத்தால் வாழ்க்கையில் இணைகிறார்கள்.


எல்லா விஷயங்களிலும் ஒருமித்த கருத்துடன் இருக்கும் இவர்களுக்கு உறவுக்காரர்கள் தான் பிரச்சினையாகிறார்கள். அம்மா, இரண்டு அக்காக்கள், அவர்களது கணவர்கள், குழந்தைகள், ஒரு தங்கை என, தான் நேசிக்கும் தன் கூட்டுக்குடும்பத்தை மனைவியும் நேசிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறான் வசந்தன். அவர்களோடு ஒட்டவே முடியாமல் தவிக்கிறாள், கண்மணி.


கண்மணியின் தோழி யமுனா. கணவனைப் பிரிந்து தனது டீன்ஏஜ் மகனோடு வாழும் யமுனா, இந்த சமூகத்தில் சந்திக்கும் பிரச்சினைகள் கதையின் இன்னொரு பக்கம். இவர்கள் தவிர, வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ளும் அர்ஜுன்-மாயா, பத்திரிகை உலகில் சாதிக்கத் துடிக்கும் கண்மணியின் தங்கை நந்தினி, திருமணம் செய்து கொள்ளாமல் கடற்கரையில் ஒரு குடிசையில் வாழும் வசந்தனின் சித்தப்பா... இப்படி பல சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள் இந்த தொடரில் வரவிருக்கிறார்கள்.


"வழக்கமான சீரியல் பாணியில் இருந்து விடுபட்டு இன்றைய பெண்கள் சந்திக்கும் யதார்த்தமான பிரச்சினைகளை இந்த தொடர்அணுகப்போகிறது. அன்பு, கோபம், சோகத்திற்கு இணையாக நகைச்சுவையும் இந்த பொக்கிஷத்தில் உண்டு'' என்கிறார், இயக்குனர் திருச்செல்வம்.


வசந்தனாக திருச்செல்வமும், கண்மணியாக மலையாளப்படங்களில் முன்னணி நாயகியான மீராவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் நளினி, `தோழர்'ஆதவன், பவ்யகலா, கற்பகம், பவானி, பாரதிகண்ணன், ரமேஷ், நந்தினி, வித்யா ஆகியோரும் தொடரின் கலைப்பொக்கிஷங்கள்.
நன்றி: தினதந்தி

aanaa
17th March 2012, 10:23 PM
அரையிறுதிச் சுற்றில் `ஜெயிக்கப் போவது யாரு?'

ஜெயா டி.வி.யில் வியாழன் தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி `ஜெயிக்கப் போவது யாரு?. சின்னத்திரை வரலாற்றில் முற்றிலும் மாறுபட்ட பல்வேறு கலைகளின் தலைசிறந்த கலைஞர்கள் சங்கமிக்கும் பிரம்மாண்ட மேடை இது.


நிகழ்ச்சியை நடிகர் சுரேஷ் தொகுத்து வழங்குகிறார். நடுவர்களாக பல வித கலைகளின் ஆசான் ஹுசைனி, நடன இயக்குனர் ஸ்ரீதர், நடிகை சங்கீதா ஆகிய மூவரும் இணைந்து, வெற்றியாளர்களைத் தேர்வு செய்து வருகின்றனர்.


நேயர்களின் பெரும் வரவேற்பை பெற்ற இந்நிகழ்ச்சி தற்போது அரை இறுதி சுற்றை எட்டியுள்ளது. அரை இறுதி சுற்றிற்கு மொத்தம் இருபது குழுவினர் முன்னேறியுள்ளனர்.


ஒவ்வொரு சுற்றுக்கும் ஐந்து குழுவினர் என மொத்தம் நான்கு அரை இறுதிச்சுற்று நடைபெறவுள்ளது. ஒவ்வொரு சுற்றிலும் மூன்று குழுவினரை நடுவர்கள் மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுப்பார்கள்.


ஆனால் இதில் ஒரு முக்கிய நிகழ்வாக எஸ்.எம்.எஸ். வாக்கெடுப்பு என புதிதாக கொண்டு வரப்பட்டுள்ளது. மூன்று குழுவினரில் இருந்து மக்கள் தங்களுக்கு பிடித்த திறமையான இரண்டு குழுவினரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.


இதன் மூலம் மக்களே எஸ்.எம்.எஸ். வாக்கெடுப்பின் அடிப்படையில் தங்களின் மனம் கவர்ந்த திறமையான எட்டு குழுவினருக்கு பிரம்மாண்ட இறுதிப் போட்டிக்குள் நுழையும் வாய்ப்பினை பெற்றுத் தருகிறார்கள்.
நன்றி: தினதந்தி

aanaa
17th March 2012, 10:24 PM
மேற்கு மாம்பலத்தில் ஒரு காதல்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சி.ஜே.பாஸ்கரின் கதை, திரைக்கதை, இயக்கத்தில் வரவிருக்கும் புதிய தொடர், மேற்கு மாம்பலத்தில் ஒரு காதல்.''மாறுபட்ட கதையம்சம் இந்த தொடரின் சிறப்பு.


நாயகன் அமைதியே வடிவானவன். வங்கி ஒன்றில் மேலாளராக இருக்கிறான். நாயகியோ துறுதுறு பார்ட்டி. சேனல் ஒன்றில் நிருபராக பணி.


அமைதியும் ஆர்ப்பாட்டமும் காதல் கொண்டு இரு வீட்டு சம்மதத்துடன் திருமணமும் முடிகிறது.


அதன்பிறகே சிக்கல். வங்கிப்பணி முடிந்து வீட்டுக்கு வரும் கணவன், தன்னுடன் மனைவி அதிக நேரம் செலவழிக்க வேண்டும் என்று விரும்புகிறான். ஆனால் பரபரப்பான அவள் வேலைப் பின்னணியில் அது கனவாகவே போகிறது.


இதனால் சின்னச்சின்ன முட்டல் மோதல்கள், உரசல்கள் தொடர்ந்து கடைசியில் `நாம் பிரியலாம்' என முடிவெடுக்கிறார்கள் தம்பதிகள். விவாகரத்துக்காக மனு செய்கிறார்கள்.


இரண்டு குடும்பமும் இவர்களின் இந்த அவசர முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, இவர்களை ஒன்று சேர்க்க போராடித் தோற்கிறது. தம்பதிகள் தங்கள் உண்மையான காதலை உணர்ந்து வாழ்க்கையை புரிந்து கொண்டு ஒன்று சேர்ந்தனரா என்பது பரபரப்பான திரைக்கதை.


திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது, இந்த காதல் தொடர்.
நன்றி: தினதந்தி

aanaa
17th March 2012, 10:24 PM
சூர்ய புத்திரி

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர் `சூர்ய புத்திரி.' தமிழகத்தில் சின்னத்திரை தயாரிப்பாளர்களில் முதல் பெண் தயாரிப்பாளர் என்கிற பெருமைக்குரியவரான நடிகை குட்டி பத்மினி தயாரிக்கும் தொடர் இது..


சூர்யபுத்திரி, பெற்றோரின் திரைமறைவு வாழ்க்கையில் வந்த வாரிசு. பெற்ற தாய் இறந்த பிறகு தந்தையின் மற்றொரு குடும்பத்துடன் அடைக்கலமானாலும், அந்த குடும்பத்தினரின் அன்பைப் பெற போராடி வருகிறாள். விமானப் பணிப்பெண்ணான அவளுக்கும் விமானத்தில் அடிக்கடி பயணம் செய்யும் கோடீஸ்வர இளைஞனுக்கும் காதல் அரும்புகிறது. அவனுடைய குடும்பம் பெரிது என்பதால், அதில் பிரளயமென உருவெடுக்கும் பிரச்சினைகள் இவர்கள் காதலை அமுக்கப் பார்க்கிறது. குடும்ப சிக்கல்கள் சதி வலைகளுக்கு இடையில் இவர்கள் காதல் நிறைவேறியதா என்பதே சுவாரஸ்ய திரைக்கதை.


தொடரின் நட்சத்திரங்கள்: நிழல்கள் ரவி, சந்தோஷி, லாவண்யா, சுதாசந்திரன், ஏ.ஆர்.எஸ்., பிரகதி, ராஜ்குமார், குமரேசன், ஸ்ரீவித்யா, ராஜசேகர். இவர்களுடன் குட்டி பத்மினி அவரது மகள் பேபி ஆர்யாவும் இருக்கிறார்கள்.


கதை: குட்டி பத்மினி. திரைக்கதை: சவீதா, தேவிபாலா. கிரியேட்டிவ் இயக்குனர்: கீர்த்தனா. வசனம்: ஜெகன் மோகன், ராதாகிருஷ்ணன். இசை: டி.இமான். இயக்கம்: தமிழ்பாரதி.


"கிருஷ்ணதாசி, காற்றாய் வருவேன், மந்திரவாசல், கனா கண்டேன் தோழி, பைரவி, தில்லுமுல்லு போன்ற தொடர்களால் சின்னத்திரை ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது போல் சூர்யபுத்திரி தொடரும் பெரிய அளவில் ரசிகர்களைச் சேரும்'' என்கிறார், தயாரிப்பாளர் குட்டி பத்மினி.
http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20120317/TV01.jpg
நன்றி: தினதந்தி

aanaa
17th March 2012, 10:26 PM
துளசி

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வரும் திங்கள் முதல் ஒளிபரப்பாகவிருக்கும் புதிய மெகா தொடர் `துளசி.'


நன்மைகள் பல தந்தபோதும் காலம் காலமாக வீட்டிற்குள் அனுமதிக்கப்படாத துளசி செடியைப்போன்றவள் துளசி. தன் குடும்பத்திற்காக தியாகங்கள் பல செய்தும், உறவுகளால் ஒதுக்கப்படும் அபலைப் பெண்ணாக வாழ்ந்து வருகிறாள் "துளசி.''


துளசிக்கும் ஒரு ஆசை இருந்தது. இத்தனை இடர்களையும் தாங்கிக்கொண்டு அவள் அமைதியாக வாழும்பின்னணியில் மாமா மகன் செல்வா இருந்தான். அவனை திருமணம் செய்து கொண்டு எதிர்காலத்தை இனிமையாக அமைத்துக் கொள்ளவேண்டும் என்பது மட்டுமே அவள் கனவு.


ஆனால் நடந்தது வேறு. அவளை மனதளவில் டார்ச்சர் செய்வதையே குறிக்கோளாக வைத்திருந்த பிரசன்னாவால் மேலும் மேலும் தொல்லைகள். ஒரு கட்டத்தில் அவனை தன் சமயோசிதத்தால் திருப்பித் தாக்கும் நிலைக்கு துளசி வருகிறாள். அதற்கு அவள் கொடுத்த விலை, அவள் உயிராய் நேசித்த மாமா மகன் செல்வா. அவனை தன் தங்கை தாமரைக்கு திருமணம் செய்து வைத்தவள், இப்போது களம் புகுந்த புலியாக சீறிப்பாய்கிறாள், வழக்கறிஞர் ஒருவரின் துணையோடு.


இத்தனைக்கும் பிரசன்னா மணமாகி, மனைவி, குழந்தைகள் என்றிருப்பவன். போராட்டத்தில்அவனை எதிர்கொள்ள துளசிக்கு உதவ செல்வா முடிவெடுக்கிறான். இதனால் அவன் வாழ்க்கையிலும் சோதனை ஏற்படுகிறது.


துளசியின் வாழ்க்கை என்னானது? துளசியை அடையத் துடித்த பிரசன்னா தன் முயற்சியில் வென்றானா?

http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20120317/TV02.jpg
திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு `துளசி'யை காணலாம்.
நன்றி: தினதந்தி

aanaa
17th March 2012, 10:27 PM
திருக்குறள் கதைகள்

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 5.30 மணிக்கு திருக்குறளை மையமாகக் கொண்ட நீதிக்கதைகள் ஒளிபரப்பாகி வருகிறது. `திருக்குறள் கதைகள்' என்ற தலைப்பில் அனிமேஷன் தொழில் நுட்பத்தில் குழந்தைகள் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் தரப்படுகிறது, இந்த நிகழ்ச்சி.


4 முதல் 14 வயதுள்ள குழந்தைகளைக் கருத்தில் கொண்டு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானாலும், பெரியவர்களையும் ஈர்க்கும் வண்ணம் உலகத்தரம் வாய்ந்த தொழில் நுட்பங்களோடு உருவாக்கப்பட்டிருக்கிறது, நிகழ்ச்சி.



நன்றி: தினதந்தி

aanaa
24th March 2012, 09:46 PM
சின்னத்திரையில் நடிகை ரோஜா

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் `லக்கா கிக்கா' என்ற ஜாக்பாட் நிகழ்ச்சியை நடிகை ரோஜா நடத்துகிறார். டிவி. நேயர்களுடன் சின்னத்திரை பிரபலங்கள், சீரியல் நட்சத்திரங்களும் பெருவாரியாக இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுகிறார்கள். இந்த நிகழ்ச்சி 4 வித ரவுண்டுகளை உள்ளடக் கியது. முதல் ரவுண்டில் ரோஜா ஒரு கேள்வி கேட்பார். பார்வையாளர்கள் இந்த கேள்விக்கு விடை சொன்னால் அப்போதே கையில் 5 ஆயிரம் ரூபாய் பரிசு. இரண்டாவது ரவுண்டு திறமைக்கான போட்டி. பாடத்தெரிந்தவர்கள் ஆடத்தெரிந்தவர்கள் மேடையேறி ஆடலாம். அப்போது கிளி ஒவ்வொருவருக்கும் ஒரு சீட்டெடுக்கும். அந்த சீட்டில் வருகிற பரிசுத்தொகையை அப்போதே ரோஜா வழங்குகிறார்.


மூன்றாவது ரவுண்டில் ஏலம் விடும் நிகழ்ச்சி. இதிலும் நேயர்கள்அதிக தொகை வெல்லலாம். நாலாவது இறுதி ரவுண்டை எட்டுபவர்களுக்காக 3 பொம்மைகள் வைக்கப்பட்டிருக்கும். அதில் ஒரு பொம்மையில் மட்டும் அதிக தொகை வைக்கப்பட்டிருக்கும். இறுதிப்போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் மூன்றில் ஒரு பொம்மையை தேர்ந்தெடுத்து தங்களுக்கான தொகையை பெற்றுக் கொள்ளலாம். அதிர்ஷ்டசாலிகளுக்கு மட்டும் அதிக பணம் வைக்கப்பட்டிருக்கும் பொம்மை கிடைக்கும். திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை களில் இரவு 9.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20120324/TV-08.jpg



நன்றி: தினதந்தி

aanaa
24th March 2012, 09:47 PM
உறவுகள்


திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் முற்பகல் 11.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வகும் "உறவுகள்'' தொடர், வெற்றிகரமாக 700 பகுதிகளைக் கடந்து தொடர்கிறது.


இத்தொடரின் நாயகன் கிருஷ்ணன் தன் அண்ணனின் குழந்தையை காப்பாற்றப்போய் ஒரு கொலைப்பழியில் சிக்கிக்கொள்ள, அவன் மனைவி காயத்ரி அவனை காப்பாற்றுகிறாள்.


அதே சமயம் கிருஷ்ணனின் அண்ணன் முகுந்தன், கிருஷ்ணனின் நல்ல குணத்தை புரிந்து கொள்ளாமல் வெறுக்கிறான்.


முகுந்தனின் இரண்டு மனைவிகளான சித்ரா, சுவேதா இருவரும் இப்பொழுது எதிர் எதிர் துருவங்களாக மாறி விட, அனுதினமும் சண்டை. இதில் முகுந்தன் யாருடன் இருப்பது என்பது புரியாமல் மேலும், மேலும் குழப்பத்தில் குடித்து தன்னிலை மறக்கிறான்.


இந்நிலையில் நண்பன் தங்கராசுவுடன் தொழில் செய்ய முகுந்தனுக்கு 10 லட்சம் பணம் தேவைப்படுகிறது. அப் பணத்தை சுவேதா தருவதாக சொல்வதோடு, அவன் தனது வீட்டில் இருக்க வேண்டும் என்று கண்டிஷனும் போடுகிறாள்.


முகுந்தன் 10 லட்சம் பணத்தை தங்கராசுவிடம் கொடுக்க போகிறான் என்று தெரிந்த கிருஷ்ணன், முகுந்தனை சந்திக்கிறான். "நீ பணம் கொடுத்து தொழில் பண்ண போகிறவன் நம் எதிரி ராஜேந்திரனோட ஆள். நீ கொடுக்கும் பணத்தை வாங்கி வைத்துக் கொண்டு உன்னை ஏமாற்றி விடுவான்'' என்கிறான். ஆனால் முகுந்தன் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் பணத்தை தங்கராசுவிடம் கொடுத்து விடுகிறான்.


அதே சமயம் காயத்ரியின் தங்கை சுதாவின் கணவன் விஷ்ணுவுக்கு மூளையில் கட்டி இருப்பதும், தான் இறந்து விடுவோம் என்பதும் தெரிய வருகிறது. விஷயத்தை வீட்டில் மறைக்கும் அவன், தன் மனைவிக்கு வேறு ஒரு திருமணம் செய்து வைக்கவும், தன் அம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்க்கவும் முடிவு செய்கிறான்.


விஷ்ணுவுக்கு இருக்கும் நோயை வீட்டில் கண்டுபிடித்தார்களா? இல்லையா?


தங்கராசு முகுந்தனை ஏமாற்றினானா?


கிருஷ்ணன் - முகுந்தன் சண்டை என்ன ஆனது?


சித்ராவும், சுவேதாவும் எப்போது சரியாவார்கள்?


சுவாரஸ்யமான கேள்விகளோடு தொடர்கிறது, `உறவுகள்' தொடர்.


தயாரிப்பு: சான் மீடியா லிமிடெட்; இயக்கம்: கே.ஷிவா; திரைக்கதை: எஸ்.குமரேசன்; வசனம்: பாலசூர்யன்; இசை: டி.இமான், பாடல்:வைரமுத்து.


தொடரின் நட்சத்திரங்கள்: ஸ்ரீகுமார், பாவனா, ஸ்ரீதுர்கா, அப்சர், ராஜ்காந்த், அமரசிகாமணி, ராமச்சந்திரன், சாந்தி வில்லியம்ஸ், டி.ராஜேஸ்வரி, ரேவதி சங்கர், ஜெயப்பிரகாசம், சிவகவிதா, சோனியா பரத், ஜெயந்த், கே.எஸ்.ஜெயலட்சுமி, ஜெ.லலிதா, வைரவராஜ், சுதா, ஆரத்திகாஸ்ரீ, வச்தலா ராஜகோபாலன், பாஸ்கர் ராஜா, கிச்சா, எம்.எல்.ஏ. தங்கராஜ்.

aanaa
24th March 2012, 09:54 PM
சின்ன வீடு பெரிய வீடு

வசந்த் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடர், "சின்ன வீடு பெரிய வீடு.''


நேர்மை, ஒழுக்கம், கட்டுப்பாடாக வாழும் பிரபல வழக்கறிஞர் பரசுராமன் வாழ்க்கையில் குறுக்கிடுகிறாள் கங்கா என்ற நடிகை. அவளுடைய சினேகத்தால் குடும்பத்தில் புயல் வீசுகிறது. சின்ன வீடு பெரிய வீடு இரண்டுக்கும் நடுவில் மாட்டிக்கொண்ட வக்கீல் அதில் இருந்து எப்படி மீள்கிறார் என்பதே கதை.


வக்கீலாக ஒய்.ஜி.மகேந்திரனும், குமாஸ்தாவாக காத்தாடி ராமமூர்த்தியும் நடிக்கிறார்கள். வக்கீல் மனைவியாக யுவஸ்ரீ, நடிகையாக கங்கா, சாமியாராக `வியட்நாம் வீடு' சுந்தரம், மற்றும் ஜெயதேவி, சுருதி கண்ணன், கல்யாண்ஜி ஆகியோரும் நடிக்கிறார்கள்.


ஒளிப்பதிவு: முத்துராமன்; கதை வசனம், டைரக்ஷன்:கே.ஜெயமணி.





நன்றி: தினதந்தி

aanaa
31st March 2012, 10:32 PM
உதிரிப்பூக்கள்-100

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் உதிரிப்பூக்கள் தொடர், நூறாவது எபிசோடை எட்டியிருக்கிறது. குடும்ப உறவுகளின் பின்னான மர்ம முடிச்சை திருப்பங்களுடன் காட்சிப்படுத்தும் இந்த தொடர், விறுவிறுப்பான கதையோட்டத்திலும் கவர்ந்த தொடராகி இருக்கிறது.


இதுவரை தங்களை உயிருக்கும் மேலாக பாசம் காட்டி வளர்த்த அப்பா சிவநேசன், தங்கள் சொந்த அப்பா இல்லை என்ற உண்மை சக்தி-திலீபன், நிலா மூவரையுமே அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. என்றாலும் அப்படியே இருந்து விடாமல் வளர்ப்பு அப்பா மீது வழக்கு எதுவும் பாயாமல் இருக்க தன்னாலான முயற்சியை செய்யத் தொடங்குகிறாள், மூத்தவள் சக்தி.


ஆனால் அதற்குள் துரதிருஷ்டவசமாக சக்தி உள்பட பிள்ளைகள் மூவரும் கடத்தப்படுகிறார்கள். போலீஸ் தேடுகிறது. சிவநேசன் அதிர்ச்சியாகிறான். நம்மால் பிள்ளைகள் கஷ்டப் படக்கூடாது என்ற எண்ணத்தில் போலீசில் சரண்டர் ஆகிறான். பிள்ளைகள் கடத்தப்பட்டதன் பின்னணியில் அவன் பங்கு எதுவும் இருக்கிறதா என்பதை போலீஸ் துருவுகிறது.


உண்மையில் அவர்களை கடத்தியது யார்? எதற்காக அவர்கள் கடத்தப்பட்டார்கள் என்பது தெரியவரும் போது அடுத்த கட்ட அதிர்ச்சி காத்திருக்கிறது.


தொடரின் நட்சத்திரங்கள்: சேத்தன், மானசா, ஹரி, கிரேசி, வடிவுக்கரசி, எல்..ராஜா, ஸ்ரீலேகா. ஒளிப்பதிவு: சாஹித்யா சீனு. திரைக்கதை: முத்துச்செல்வன். வசனம்: ஆனந்த் சம்யுக்தா. இயக்கம்: விக்ரமாதித்தன்.


ஹோம் மீடியா சார்பில் தயாரிப்பு: சுஜாதா விஜயகுமார்.
நன்றி: தினதந்தி

aanaa
31st March 2012, 10:34 PM
தாமரை

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 11 மணிக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தொடர், `தாமரை.'


ஏழைக் குடும்பத்தில் பிறந்த கீர்த்தனாவின் லட்சியமே பி.டி.ஓ. ஆபீசர் ஆகவேண்டும் என்பது தான். ஆனால் கீர்த்தனாவின் முன்னேற்றத்தை அறவே வெறுக்கும் அவளின் சித்தப்பா பாலாஜி, கீர்த்தனாவிற்கு பல வழிகளில் பிரச்சினைகளை உண்டாக்குகிறார். தகுதியே இல்லாத தனது பெண்ணை சுந்தர் என்ற பணக்காரனின் உதவியோடு பி,டி.ஒ. தகுதித்தேர்வில் இடம் பெறுவதற்கான தகுதிச் சுற்றில் பாசாக வைக்கிறார்.


கீர்த்தனாவின் எண்ணத்தை நன்கு உணர்ந்த பாலு அவளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். அதன்படி பிடிஓ ஆபீசருக்கான இன்டர்விïவில் கீர்த்தனா பங்கு பெற உதவுகிறார். இன்டர்விïவிற்காக தன் தந்தை ராஜேந்திரனின் உதவியோடு கலெக்டரை சந்திக்கிறாள் கீர்த்தனா. ஆனால் கலெக்டர் அலுவலகத்தில் ராமன் என்பவன் ஸ்வீட் பாக்கெட்டில் லஞ்சப் பணத்தை வைத்து ராஜேந்திரன் மூலம் கலெக்டருக்கு கிடைக்கும்படி செய்கிறான். இந்த வஞ்சம் எதுவும் அறியாத ராஜேந்திரன், ஸ்வீட் பாக்கெட்டோடு கலெக்டரை சந்திக்கச் செல்கிறார்.


ராஜேந்திரன் லஞ்சப் பணம் கொண்ட ஸ்வீட் பாக்கெட்டை கலெக்டரிடம் கொடுத்தாரா? கீர்த்தனாவின் பி.டி.ஓ. ஆபீசராகும் கனவு நனவானதா? பரபரப்பான திருப்பங்களுடன் தொடர்கிறது தாமரை தொடர்.
நன்றி: தினதந்தி

aanaa
31st March 2012, 10:35 PM
உன் வாசம் என் நேசம் - சீசன் 3

ஜெயா டிவி வழங்கிய "உன் வாசம் என் நேசம் - சீசன் 2 நிகழ்ச்சியில் ஏராளமான இளம் தம்பதிகள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற தம்பதியருக்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள பரிசுப் பொருட்களை வழங்கியது, ஜெயா டிவி.


இந்நிகழ்ச்சி இப்போது "உன் வாசம் என் நேசம் சீசன் 3''-யை எட்டியுள்ளது. இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் தம்பதியருக்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகிறது. மேலும் இறுதிப்போட்டியில் பங்கு பெறும் 3 தம்பதியருக்கும் தலா ரூபாய் ஐம்பதாயிரம் வீதம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்படும்.


திருமணமாகி அதிகபட்சமாக 5 வருட மணவாழ்க்கையில் இருப்பவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம்.


"உன் வாசம் என் நேசம் - சீசன் 3'' நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான நேர்முகத்தேர்வு சுற்றுக்கள் தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் நடந்து வருகிறது. முதற்கட்டமாக திருச்சி மற்றும் கோவையில் நடைபெற்றதில் எண்ணற்ற இளம் தம்பதிகள் பங்கேற்றனர். நாளை சென்னை மகாபலிபுரம் அய்யப்பன் கோவில் அருகிலுள்ள எம்.எல்.எம். கல்யாண மண்டபத்தில் காலை 9 மணி முதல் இதற்கான தேர்வு நடைபெறவுள்ளது.
நன்றி: தினதந்தி

aanaa
31st March 2012, 10:36 PM
மனதோடு மனோ

ஜெயா டிவியில் புதன்கிழமை இரவு 9 மணிக்கு "மனதோடு மனோ'' என்ற இசை நிகழ்ச்சி இசைப்பிரியர்களுக்காக ஒளிபரப்பாகி வருகிறது.


இந்த நிகழ்ச்சியில் பாடகர் மனோவை சந்திக்கும் ஒவ்வொரு பிரபலங்களும், தங்கள் மனதின் ரகசியங்களை, சாதனைகளை... இசையாய், பாடலாய், பேச்சாய் மனம் விட்டு பகிர்ந்து கொள்கிறார்கள்.


இந்த வாரம் பிரபல பின்னணி பாடகி சுஜாதாவின் மகளும் பாடகியுமான சுவேதா மோகன் தனது இசைப்பயணத்தில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களையும், மறக்க முடியாத அனுபவங்களையும் மனோவுடன் பகிர்ந்து கொள்கிறார்.
நன்றி: தினதந்தி

aanaa
31st March 2012, 10:37 PM
மஞ்சுளா நடிக்கும் `சந்திரலேகா'

மெகா டிவியில் ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர் `சந்திரலேகா.' நடிகை மஞ்சுளா விஜயகுமார் முதன் முறையாக நடிக்கும் தொலைக்காட்சி தொடர் இது.


இது அக்கா, தங்கை இருவரிடையே ஏற்படும் பிரச்சினைகள் குறித்த கதைக்களம். மஞ்சுளா - மோகன் சர்மா தம்பதியினருக்கு திருமணமாகி பல வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாததால், ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது. பெண் பிறக்கிறாள். பெற்றெடுத்த குழந்தையையும், தத்தெடுத்த குழந்தையையும் வளர்த்து வருகின்றனர்.


இந்த அக்கா, தங்கை இடையே போட்டி, பொறாமை புகுந்து கொள்கிறது. அதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது.


தேவிபாலாவின் கதை வசனத்தில் உருவாகியுள்ள இத் தொடரை, சுதர்சன் இயக்கியுள்ளார். தயாரிப்பு: மெகா டிவி.


எம்.ஜி.ஆர். பட கதாநாயகி மஞ்சுளாவுடன் வரலெட்சுமி, புஷ்பலதா, ரவிகுமார், விஜயலெட்சுமி ஆகியோரும் தொடரின் நட்சத்திரங்கள்.


திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது. மறுஒளிபரப்பு: இரவு 8.30 மணிக்கு.
நன்றி: தினதந்தி

aanaa
31st March 2012, 10:39 PM
நாலாவது சுற்றில் `வாய்ஸ் ஆப் தமிழ்நாடு'

தமிழகத்தின் தங்க குரல் தேடலுக்கான ராஜ் டிவியின் விறுவிறுப்பான 4-வது சுற்று பிரமாண்டமான அரங்கில் நடந்தேறியது.


இதில் 4 வித்தியாசமான சுற்றுக்கள் நடந்தன. துள்ளல் மற்றும் வெஸ்டர்ன் பாடல்கள் சுற்றில் பாடகி கல்பனா, மக்களிசைச் சுற்றில் பாடகி அனிதா குப்புசாமி, சோகம் மற்றும் மெலடி சுற்றுக்களில் மஹதி ஆகியோர் சிறப்பு நடுவர்களாக பங்கேற்றனர். இவர்களுடன் பாடகர் ஸ்ரீராம், பாடகி தேவி நெய்தியார், அப்துல் ஹமீது ஆகியோர் இணைந்து 12 போட்டியாளர்களை மட்டும் தேர்ந்தெடுக்க இருந்தனர். ஆனால் போட்டியாளர்களின் அசாதாரண பாடும் திறமையால் பரவசமான நடுவர்கள் இறுதியாக 15 போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து இன்ப அதிர்ச்சியளித்தனர்.


ஒவ்வொரு சுற்றுக்கும் `சிறந்த குரல்' பட்டம் வழங்கி மொபைல்கள் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டு சுற்றுக்களில் வென்ற போட்டியாளர் ஜெயபிரகாஷ் இரண்டு மொபைல்களை வென்றது நிகழ்ச்சியின் சிறப்பு அம்சம்.


15 பேரில் `வாய்ஸ் ஆப் தமிழ்நாடு' பட்டத்துக்கு உரியவர் யார்? வியாழன், வெள்ளிக்கிழமைகளில் இரவு 8.30 மணிக்கு நிகழ்ச்சியை காணலாம்.
நன்றி: தினதந்தி

aanaa
31st March 2012, 10:39 PM
தள்ளிப்போகும் முதலிரவு

திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர், `சின்ன மருமகள்.'


விஷாகாவின் பாட்டியால் பலமுறை பல்வேறு வகைகளால் தடைப்பட்ட ராதிகா, தேவ் இருவரின் திருமணம் நடைபெறுகிறது. அனைவரும் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் திளைத்திருக்க, விஷாகாவின் பாட்டி மட்டும் ராதிகாவை கொல்லும் திட்டத்தை தீட்ட, அதில் விஷாகா மாட்டிக்கொள்ள, விஷாகாவை காப்பாற்றும் முயற்சியில் ராதிகா பலத்த தீக்காயம் அடைகிறாள்.


கோவில் பண்டிதர் சொன்னவாறு ஐந்துவிதமான புனித நீரால் ராதிகாவை தேவ் குளிப்பாட்ட, ராதிகாவின் உடம்பிலிருந்த காயங்கள் மறைந்தோடுகின்றன. வெகு நாட்களாக தடைபட்டுக் கொண்டிருந்த தேவ்-ராதிகா இருவரின் முதலிரவிற்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க, அச்சமயம் வீட்டிலிருந்து தன் பெற்றோரால் துரத்தப்பட்ட விஷாகா யாருக்கும் தெரியாமல் மாறுவேடத்தில் வந்து ஸ்டோர் ரூமில் தங்குகிறாள். இதை சற்றும் எதிர்பார்க்காத ராதிகா நிலைகுலைந்து போகிறாள்.


தன் சின்ன மருமகள் பதவியின் பொறுப்புகளை உணர்ந்த ராதிகா, தேவுடன் இணைய முடியாமல் போக, அதனால் ராதிகாவை தேனிலவுக்காக கோவாவிற்கு அழைத்துச் செல்ல திட்டமிடுகிறான் தேவ்.


தான் வீட்டில் இல்லை என்றால் நிச்சயம் விஷாகா தன் புகுந்த வீட்டாரிடம் மாட்டிக்கொள்வாள் என்று உணர்ந்த ராதிகா எடுத்த முடிவு என்ன? விடைக்கான காட்சிகள் தொடரில்.
நன்றி: தினதந்தி

aanaa
4th April 2012, 08:03 PM
ஆண்பாவம் - ஒரு கண்ணோட்டம்


http://www.youtube.com/watch?v=hQT2dRYGB2A

aanaa
8th April 2012, 06:46 AM
முத்தான `முத்தாரம்'

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 12.30 மணிக்கு சன் டி.வி.யில் ஒளி பரப்பாகி வரும் ``முத்தாரம்'' தொடர், வரும் வாரங்களில் பரபரப்பான மாறுபட்ட கதைக் களத்தில் பயணிக்கப் போகிறது.


தான் புகுந்த வீட்டுக்காகவும், கணவருக்காகவும், தியாகியாக, சாதுவாக வாழ்ந்து வரும் ரஞ்சனி கதாபாத்திரம் புதிய அவதாரம் எடுக்கப் போகிறது. ஒரு சாதாரண ஸ்கூல் டீச்சராக இருக்கும் ரஞ்சனி, உண்மையில் ஒரு பெரிய தொழில் அதிபரின் மகள். ஊட்டியில் செல்வச் செழிப்பில் வாழ்ந்தவள். ஒரு ஐ.பி.எஸ். அதிகாரியாக வலம் வந்தவள். அவளுக்கு ஒரு மூத்த சகோதரியும் இருக்கிறாள்.


நேர்மையான போலீஸ் வாழ்க்கையில், ரஞ்சனி பல பெரும்புள்ளிகளின் பகையை சந்திக்க நேர்கிறது. ஒரு காலகட்டத்தில் ரஞ்சனியின் கோபப் பார்வைக்கு, பெற்ற தந்தை கூட தப்பவில்லை. தந்தையின் கையில் விலங்கு மாட்டி சிறைக்கு அனுப்புகிறாள். இதனால் பெற்ற தாயின் கோபத்துக்கு ஆளாகிறாள்.


தந்தை நடத்தும் பஸ் கம்பெனியில் வேலை பார்த்த பழனிச்சாமியின் சாவுக்கு, தன் தந்தையே காரணம் என்று தெரிந்து பழனிச்சாமியின் குடும்பத்துக்கு உதவி செய்து வருகிறாள், ரஞ்சனி. சூழ்நிலை காரணமாக பழனிச்சாமியின் மகன் முரளிக்கு மனைவியாகி, பழனிச்சாமியின் மனைவி சாரதாவிற்கு மருமகளாகிறாள்.


இந்த சூழ்நிலையில் தன்னால் பாதிக்கப்பட்ட பெரும் புள்ளிகளை ரஞ்சனி சந்திக்க நேரிடுகிறது. ரஞ்சனி உயிரோடு இருப்பதை அறிந்த பெரும் புள்ளிகள் அவள் குடும்பத்தினருக்கு மிகுந்த அச்சுறுத்தலாக மாறுகிறார்கள்.


எந்தக் குடும்பத்திற்காக தன் காக்கிச்சட்டையை தியாகம் செய்தாளோ, அந்தக் குடும்பத்தைக் காப்பாற்ற மீண்டும் காக்கிச் சட்டை அணிய வேண்டிய நிர்ப்பந்தம் வருகிறது. ``ரஞ்சனி காக்கிச் சட்டை அணிந்தாளா?'


தன் கணவரின் சாவுக்கு ரஞ்சனி குடும்பம் தான் காரணம் என்பதை அறிந்த சாரதா, ரஞ்சனியை மருமகளாக ஏற்றுக் கொண்டாளா?


எதிரிகள் ஒரு புறமும் தன் குடும்பம் மறுபுறமுமாக ரஞ்சனி வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ளப் போகிறாள் என்பதை, வரும் வாரங்களில் காணலாம்.


தொடரின் நட்சத்திரங்கள்: தேவயானி, சத்யப்பிரியா, சீனு, பாலாசிங், டாக்டர் ஷாஜு, கிருஷ்ணமூர்த்தி, ரவிவர்மா, பவானி, ராஜா, ரம்யா, ஷப்னம்.


கதை: தேவிபாலா. திரைக்கதை: ராஜ்பிரபு. வசனம்: பா.ராகவன், இயக்கம்: சுந்தர் கே.விஜயன்.


தயாரிப்பு: `மெட்டி ஒலி' எஸ்.சித்திக்.

நன்றி: தினதந்தி

aanaa
8th April 2012, 06:55 AM
நடிகை புவனேஸ்வரி வில்லியாக நடிக்கும் `வாழ்வே மாயம்'

மெகா டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய தொடர், வாழ்வே மாயம். நீண்ட இடைவெளிக்குப்பிறகு நடிகை புவனேஸ்வரி இந்த தொடரில் வில்லியாக நடிக்கிறார்.


காதல் ஜோடிகள் சதீஷ்-பிரியா இருவரும் ஒரு சுப நாளில் திருமணம் செய்து கொள்கிறார்கள். மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கும் இவர்கள் வாழ்க்கையில் பேரதிர்ச்சி. விபத்தொன்றில் சதீஷ் தனது ஞாபக சக்தியை இழக்கிறான்.


இந்தக் காதல் திருமணத்திற்கு முன்பே பாவனா என்ற பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்தான் சதீஷ். அந்தக் காதல் நிறைவேறாத நிலையில் தான்அடுத்த காதல். இந்தக் காதல் கல்யாணத்தில் முடிய, சதீஷின் திருமதியானாள் பிரியா.


நினைவாற்றலை சதீஷ் இழந்த பிறகு நிலைமை அப்படியே தலைகீழ். பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட விஷயத்தையே மறந்து விடுகிறான் சதீஷ்.


இந்த சூழலில் சதீஷின் பழைய காதலி பாவனா அவனை சந்திக்கிறாள். மீண்டும் தனது காதலை புதுப்பித்துக் கொள்கிறாள். சதீஷூம் பாவனாவின் அன்பில் உருகி அவளுடனே சென்று விடுகிறான்.


விஷயம் தெரிந்து அதிரும் பிரியா, தன் கணவனை பாவனாவிடம் இருந்து மீட்டெடுக்க போராடுகிறாள். அவளால் தன் கணவனை பழைய நினைவுகளுக்குள் கொண்டு வந்து இழந்து போன தன் வாழ்க்கையை மீட்டெடுக்க முடிந்ததா என்பது பிற்பகுதி கதை.


பிரேம்சாய், அகிலா, பாவனா, லட்சுமிராஜ், பாலாஜி, ராஜ்குமார், ஷிவானி ஆகியோர் தொடரின் நட்சத்திரங்கள்.


திரைக்கதை: கண்மணிசுப்பு. இயக்கம்: எஸ்.வி.சோலைராஜா. தயாரிப்பு: மெகா டிவி.

நன்றி: தினதந்தி

aanaa
8th April 2012, 06:57 AM
மங்கம்மாவை பாராட்டிய ஸ்ரீதேவி

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வரும் திங்கள் இரவு 8 மணிக்கு தொடங்கவிருக்கும் புதிய தொடர் `மை நேம் இஸ் மங்கம்மா.' உல்லாசம், நேசம் படங்களில் கதாநாயகியாக நடித்த மகேஸ்வரி, இந்த தொடரில் நாயகியாக நடிக்கிறார். இவர் நடிகை ஸ்ரீதேவியின் தங்கை (சித்தி மகள்) என்பது குறிப்பிடத்தக்கது.




நட்சத்திர ஒட்டல் ஒன்றில் தலைமை சமையல் கலைஞராக பணியாற்றுகிறாள் மங்கம்மா. முதிர்கன்னியான அவளுக்கு மாப்பிள்ளை தேடுவதே அவளது பெற்றோரின் அனுதின கடமையாகி விடுகிறது. வரும் வரன்கள் எல்லாம் நழுவிப்போக, மங்கம்மா என்ற தனது பெயர் தான் திருமணத்துக்குத் தடையாக இருக்கிறதோ என்று எண்ணுகிறாள், அவள்.


ஆனால் எதையும் வெளிப்படையாக பேசும் அவளது குணாதிசயம் தான் திருமணத்துக்கு தடையாக இருக்கிறது. இது இந்த நிமிடம் வரை அவளுக்குத் தெரியவில்லை என்பது பரிதாபம். இந்த கதையை நகைச்சுவை பின்னணியில் உருவாக்கி இருக்கிறார்கள் என்பது சிறப்பு.


இந்த தொடரை பார்க்க செட்டுக்கே வந்த நடிகை ஸ்ரீதேவி, மகேஸ்வரியின் அப்பாவித் தனம் கலந்த நகைச்சுவை நடிப்பை ரசித்துப் பார்த்தார். `நான் எதிர்பார்த்தை விட நகைச் சுவையில் கலக்கி இருக்கிறாய்' என்று பாராட்டினார். அக்காவின் பாராட்டில் மகேஸ்வரி முகத்தில் மத்தாப்பு பிரகாசம்.
நன்றி: தினதந்தி

aanaa
14th April 2012, 06:16 PM
மூன்று முகம்

திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் மதியம் 2.30 மணிக்கு ஜீ தமிழ் தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய தொடர் `மூன்று முகம்.'


ரேகா, லேகா இருவரும் அக்கா-தங்கை. மூத்தவள் ரேகாவுக்கு பணக்கார சம்பந்தம் தேடி வருகிறது. பெண் பார்க்க வந்தவர்களுக்கு இளையவள் லேகாவை பிடித்துப் போகிறது. ரேகாவும் தங்கை லேகாவுக்கு அந்த சம்பந்தத்தை விட்டுக் கொடுக்கிறாள். இந்நிலையில் இவர்களின் சித்தி அன்னலட்சுமி வீட்டுக்கு வர, நடந்ததை அறிந்து அவள் கொதித்துப் போகிறாள்.


ஒருநாள் பெற்றோர் தன்னைப்பற்றி பேசிக்கொண்டிருக்க, அதைக்கேட்டு மனம் உடைந்து போகிறாள், ரேகா. அவள் சித்தி என்று அறியப்பட்ட அன்னலட்சமி தான் அவள் தாய் என்கிற அந்த உண்மை அவளை அதிர்ச்சியாக்குகிறது. அதோடு அதுவரை தான் இரண்டாம்பட்சமாக அந்த வீட்டில் நடத்தப்பட்டதும் நினைவுக்கு வர, இன்னும் அதிர்ந்து போகிறாள். அதுவரை சித்தியாக கருதியஅம்மா தனலட்சுமியிடம் தன் மனக்குமுறலை கொட்டுகிறாள். அவளோ, தன்மகளுக்கு கிடைக்காத எதுவும் லேகாவுக்கு கிடைக்கக்கூடாது என்று சதித்திட்டம் தீட்டுகிறாள். முதல்கட்டமாக லேகாவுக்குபேசி முடித்த அந்த பணக்கார வரனை `கட்' பண்ண பிளான் போடுகிறாள்.


அன்னலட்சுமியின் திட்டம் பலித்ததா? ரேகாவின் எதிர்காலம் என்ன? என்பது பரபரப்பாக தொடரும் காட்சிகள்.
நன்றி: தினதந்தி

aanaa
14th April 2012, 06:17 PM
ருத்ரம்-50

ஜெயா டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மர்மத்தொடர், "ருத்ரம்.''


2012-ல் உலகம் அழியப்போகிறது என்கிற மையக்கருத்தை அடிப்படையாக கொண்ட இந்த தொடர், இப்போது 50-வது பகுதியை எட்டியிருக்கிறது.


தொடரில் ஒய்.ஜி.மகேந்திரன், பாரதி, பூவிலங்கு மோகன், குயிலி போன்ற பிரபலங்களுடன் புதுமுகங்களும் உண்டு.


இனி வரப்போகும் கதையில் அழியப்போகும் உலகை காக்கும் சக்தியை தேடிப்போகும் முயற்சியில் இறங்கும் பேராசிரியர் விஸ்வநாதன், விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அவர் அணிந்திருந்த ருத்ராட்சம் பறிபோக, அதன் விளைவாக பித்து பிடித்த நிலைக்குள்ளாகிறார். அவர் பறிகொடுத்த ருத்ராட்சம் பல்வேறு இடங்களில் உள்ள பலதரப்பு மக்களிடையே பல அற்புதங்களை நிகழ்த்துகிறது.


சாலக்குடி, தலக்கோணம், திருநெல்வேலி, கும்பகோணம், பாணதீர்த்தமலை போன்ற இடங்களில் படமாக்கியதைத் தொடர்ந்து, இந்த தொடரின் அடுத்தகட்ட படப்பிடிப்பு, காசி, வாரணாசி, பத்ரிநாத் போன்ற இடங்களில் படமாக்கப்பட இருக்கிறது.
நன்றி: தினதந்தி

aanaa
14th April 2012, 06:28 PM
பிரமாண்ட காட்சிகளில் `கால பைரவர்'
http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20120414/TV-08.jpg
அசுரன் பாண்டாசூரன் சிவபெருமானை நோக்கி கடுந்தவமிருக்கிறான். அவன் தவத்தை ஏற்ற சிவபெருமான், அவன் கேட்ட வரமளித்து, அஷ்டமாசித்திகளையும் அளிக்கிறார். அவன் மேலும் சக்தி பெற பிரம்ம தண்டத்தை தேடிச் செல்வதோடு, மறுபுறம் ஈரேழு உலகங்களையும் அடிமைப்படுத்தி, தேவர்களை கொடுமைப்படுத்துகிறான். பாண்டாசூரனின் கொட்டத்தை அடக்க, கால பைரவர் ஆக அவதரிக்கிறார் சிவபெருமான்.


பாண்டாசூரன் பிரம்ம தண்டத்தை பெற்று மேலும் சக்தி பெற்றானா? கால பைரவராக அவதரித்த சிவன் தீய சக்தியின்மொத்த வடிவான அவனை அழித்தாரா என்பதே கதை. புராணக்கதை என்பதால் பிரமாண்ட காட்சிகள் தொடரின் பலம். சனிக்கிழமைதோறும் இரவு 8 மணிக்கு ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் சதிஷ், மாஸ்டர் ஸ்ரீதர், கே.ஆர்.செல்வராஜ், தாதா முத்துகுமார், ஸ்ரீதேவி, ஸ்ரீஹரி நடிக்கிறார்கள்.வசனம்: கே.பி.அறிவானந்தம். கதை, திரைக்கதை, இயக்கம்: எஸ்.எஸ்.சரவணன். சேலம் எம்.பி.எல். பிலிம்ஸ் பி.எல். பாபு தயாரிக்கிறார்.
நன்றி: தினதந்தி

aanaa
14th April 2012, 06:29 PM
ராஜயோகம்

ஸ்ரீசங்கரா தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி,


"ராஜயோகம்.''`முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்ற பொன் மொழியின்படி அமையப் பெற்றதுதான் மனித வாழ்க்கை. இப்பிறப்பில் நம்மால் முடிந்த நல்லவற்றை இயலாதோர்க்கும் இல்லாதோர்க்கும் செய்தால், இப்புண்ணியமானது தொடரும் பிறப்புகளில் நம்மை நற்கதி அடையவைக்கும் என்பது சாஸ்திரங்கள் சொல்லும் உண்மை.


அதன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட இந்நிகழ்ச்சியில், ஜோதிட நிபுணர் முனைவர் கே.ராம் கலந்து கொண்டு நேயர்கள் தங்களது எதிர்காலம் குறித்து தொலைபேசி மூலம் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்.
நன்றி: தினதந்தி

aanaa
14th April 2012, 06:29 PM
ஞானானந்தம்

பொதிகை தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் காலை 9.05 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புதிய ஆன்மிகத் தொடர் ஞானானந்தம்.


நம் வாழ்க்கையை நமக்கு நடக்கும் நல்லது கெட்டது தான் தீர்மானிக்கிறது. இந்த இருவேறு அனுபவங்களில் இருந்து தான் பாடமே கற்றுக்கொள்கிறோம். இந்த அனுபவம் தான் ஒருகட்டத்தில் நம்மில் பலரையும் ஆன்மிகப் பாதைக்குள் செலுத்துகிறது.


ஞானம் போதித்த மகான்கள் வாழ்ந்த காலகட்டம் நாம் அறிந்திருக்கவில்லை. தமிழ்நாட்டில் ஞானானந்தம் மகான் வாழ்ந்த காலத்தில் போதித்த பல போதனைகள் இப்போதும் மக்களின் அத்தியாவசியத்தேவையாகவே இருக்கிறது. ஞானானந்த மகானுக்கு சீடராக அமைந்தவர் சுவாமி ஹரிதாஸ் கிரி. இவரும் இன்று நம்மிடையே இல்லை. இருவரின் பின்னணியிலும் உள்ள சம்பவக் கோர்வைகளை, அவர்கள் மக்களுக்கு போதித்த ஞானத்தை, சமூக கதைகள் வடிவில் தருவதே இந்த நிகழ்ச்சி.


மாஸ்டர் ஸ்ரீதர் சுவாமி ஹரிதாஸ்கிரியாக மாறி இந்த கதையை சொல்கிறார். வி.எஸ்.ராகவன், காத்தாடி ராமமூர்த்தி, ராதா, லலிதா, சித்ரா, விஜயலட்சுமி, தனலட்சுமி, மேனேஜர் சீனா ஆகியோர் தொடரின் நட்சத்திரங்கள்.


கதை,வசனம்: கே.ராஜேஷ்வர். தயாரிப்பு நிர்வாகம் மற்றும் இணை இயக்கம்: கே.ஆர்.நாகராஜ். இசை:கே.கே. ஒளிப்பதிவு மற்றும் எபிசோடு இயக்குனர்: எஸ்.பி.ராஜாராம். கிரியேட்டிவ் ஹெட்-இயக்கம்: எஸ்.சந்திரமவுலி. ஆஸ்டர் மீடியா பிரைவேட் லிமிடட் சார்பில் தயாரிப்பு: எஸ்.கணேஷ்.
நன்றி: தினதந்தி

aanaa
22nd April 2012, 06:19 PM
தர்மனிடம் திரவுபதி வாங்கிய உறுதிமொழி




சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8.30 மணிக்கு தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புராணத்தொடர், மகாபாரதம்.

பாண்டவர்கள் தங்கள் சொத்துக்கள் அனைத்தையும் இழக்கும்படி செய்து துரியோதனின் எண்ணத்தை பூர்த்தி செய்கிறான், திருதராஷ்டிரன். அதன்பின்னர் காந்தாரி, திரவுபதி இருவரின் கேள்விகளுக்கும் பதிலளிக்க முடியாமல் பாண்டவர்களின் சொத்துக்கள் அனைத்தையும் திருப்பி அளிக்கிறான். இதனால் வெகுண்ட துரியோதனன், சகுனியின் அறிவுரைப்படி திருதராஷ்டிரனிடம் பாண்டவர்களை மீண்டும் சூதாட்டத்திற்கு வருமாறு வற்புறுத்துகிறான்.

தர்ம மகாராஜாவான யுதிஷ்டிரன் யார் பேச்சையும் கேட்காமல் தன் பெரியப்பாவின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து அவரின் உள் எண்ணத்தை அறியாமல் சூதாட்டத்திற்கு ஒப்புக் கொள்கிறான். இம்முறை யார் தோற்றாலும் 12 வருட வனவாசமும், ஒரு வருடகாலம் யார் கண்ணிலும் படாமல் அஞ்ஞான வாசமும் மேற்கொள்ள வேண்டும் என்பது போட்டி விதி.

சூதாட்ட களத்தில் அனைவரும் காத்திருக்க, திரவுபதி தர்மராஜா யுதிஷ்டிரனிடம் `இம்முறை யாரையும் பணயம் வைத்து விளையாடக் கூடாது' என்ற உறுதிமொழியை பெறுகிறாள்.

சூதாட்டம் ஆரம்பிக்கிறது. சகுனி தனக்கே உரிய கெட்ட எண்ணத்துடன் பகடைக்காயை உருட்டுகிறான். சூதாட்டத்தில் வென்றது யார்? வனவாசம் சென்றது யார்? எதிர்பாராத திருப்பங்களுடன் தொடர்கிறது, தொடர்.

aanaa
22nd April 2012, 06:20 PM
மணமேடையில் நடந்த கலாட்டா!




திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய தொடர், துளசி.

மிகப்பெரிய மண்டபத்தில் திரளான உறவினர் மத்தியில் துளசி - செல்வராஜ் திருமணம் வெகு விமரிசையாக நடந்து கொண்டிருந்தது. திருமணத்துக்கு செல்வராஜின் நண்பனாக வந்திருந்த முட்டுக்காடு காவல் அதிகாரி பிரபாகரன், `துளசி நல்லவள் இல்லை. பிரசன்னா என்பவருடன் ஓர் இரவு தங்கி இருந்தாள்' என்ற குழப்பத்தை செல்வராஜ் மனதில் விதைக்கிறான். இந்த நேரத்தில் பிரசன்னாவும் துளசி திருமணத்திற்கு வருகிறான்.

அவன் வருகையை தடுக்கும் விதமாக வாசலில் கட்டியிருந்த வாழை மரம் தானாக அறுந்து விழுகிறது. பிரச்சினைக்குரிய பிரசன்னாவே விழுந்த வாழை மரத்தை எடுத்து இறுக்கமாக கட்டுகிறான். கள்ளங் கபடம் இல்லாத துளசி, பிரசன்னாவை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறாள். இதை கண்கூடாக பார்த்த செல்வராஜின் மனதில் மெல்ல சந்தேகப் பேய் நுழைகிறது.

சீதை மேல் ராமன் சந்தேகம் கொண்டது போல் துளசி மேல் செல்வராஜ் சந்தேகம் கொள்கிறான். அந்த சந்தேகம் புற்றுநோயை போல் அவன் மனதில் நிமிடத்திற்கு நிமிடம் வேகமாக வளர்கிறது. மனமேடையிலோ சந்தேகப்பேய் சம்மணம் போட்டு அமர்கிறது.

இதற்குள் இந்த திருமணம் சிக்கல் இல்லாமல் நடக்க வேண்டுமே என்று துளசியின் தந்தை ரங்கசாமி பயத்தில் இருக்க, செல்வராஜ் யாரும் எதிர்பாராத வண்ணம் மாலையும் கழுத்துமாக மணமேடையில் இருந்து எழுந்து பிரசன்னாவை நெருங்குகிறான். அதேவேகத்தில் துளசிக்கும் அவனுக்குமான நெருக்கம் குறித்து கேட்டும் விடுகிறான்.

பிரசன்னா உண்மையை சொல்லி துளசி தூய்மையானவள் என்பதை நிரூபித்தானா? அல்லது தன் மேல் சந்தேகப்பட்டதுக்காக துளசி நடக்கவிருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினாளா?

பரபரப்பும் விறுவிறுப்புமாய் தொடர்கிறது, தொடர்.

aanaa
22nd April 2012, 06:26 PM
இறுதிப் போட்டியில் `ஜெயிக்கப்போவது யாரு'




ஜெயா டிவியில் வியாழன் தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `ஜெயிக்கப்போவது யாரு' நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. நடைபெற உள்ள பிரமாண்ட இறுதிப்போட்டிக்கு 8 குழுவினர் வந்திருக்கிறார்கள். இவர்களில் 3 குழுவினர் மட்டும் வெற்றியாளர்களாக தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்.

இறுதிப் போட்டியில் பங்குபெறும் 8 குழுவினர் வருமாறு:

ஈ குரு நடனக்குழு, சென்னை. தாண்டவா நடனக்குழு, பெங்களூர். சென்னை மற்றும் தமிழ்நாடு மலர் கம்பம் மல்கம்ப் குழு, விழுப்புரம். உமயல்ஆச்சி யோகாகுழு, அறந்தாங்கி. அஜய்குமார் வோவினம் மார்சியல் ஆர்ட்ஸ், காரைக்கால். சாலமன் டிவிஸ்டர்ஸ் நடனக்குழு, சென்னை. அமரேசன் பேலன்சிங் ஏக்ட், சென்னை. பிரதீப் ரமேஷ், புட்பால் ப்ரீஸ்டைல், சென்னை.

இந்த 8 போட்டியாளர்களில் நேயர்களைக் கவர்ந்த போட்டியாளரை தேர்ந்தெடுக்க நேயர்கள் தங்கள் வாக்கை எஸ்.எம்.எஸ்.சில் பதிவு செய்யலாம். நடிகர் சுரேஷ் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

aanaa
28th April 2012, 06:25 PM
மூன்று முடிச்சு
http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20120428/TV04.jpg
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர் `மூன்று முடிச்சு.'


நகர்ப்புற நடுத்தர வகுப்பு குடும்பத்துப் பெண்ணின் வாழ்க்கைப் பயணத்தை அழகுற சித்தரிக்கும் தொடர் இது. சீமாவுக்கும் பிரேமுக்கும் திருமண ஏற்பாடுகள் தடபுடலாய் நடந்து கொண்டிருக்கிறது. வீட்டிற்குத் தெரியாமல் ஆடல் போட்டியில் கலந்து கொண்டு ஒவ்வொரு சுற்றாக முன்னேறிக் கொண்டிருக்கும் சீமாவுக்கு வெற்றி இன்னும் சில சுற்றுகளில் காத்திருக்க.. வீட்டிற்குத் தெரியாமல் எவ்வளவு நாளைக்குத்தான் மறைப்பது என்கிற தவிப்பில் இருக்கிறாள்.


`சீமா ஆடினால் நிச்சயம் வெற்றி பெறுவாள். அத்துடன் தங்களது நிகழ்ச்சி நல்ல முறையில் ரசிகர்களைச் சென்றடையும்' என்று நிகழ்ச்சி அமைப்பாளர்கள் ஒரு பக்கம் சீமாவைத் துரத்த.. ஒரு சாதனையாளர் தங்கள் வீட்டில் உருவாவது தெரியாமலே சீமாவுக்கு வரும் தொலைபேசி அழைப்புகளை அவளது பெற்றோர் நிராகரிக்க... சீமா என்ன செய்யப் போகிறாள்.. போட்டியில் தொடர்ந்து கலந்து கொண்டு வெற்றி பெறப் போகிறாளா? அல்லது குடும்பத்தினருக்கு பயந்து இதுவரை பெற்ற வெற்றிகளை தியாகம் செய்து விட்டு திருமணம் செய்து கொண்டு செட்டிலாகப் போகிறாளா? என்பது வரும் வார காட்சிகள்.
நன்றி: தினதந்தி

aanaa
28th April 2012, 06:28 PM
நிறைவு பெறும் `பிரிவோம் சந்திப்போம்'

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு விஜய் டி.வி..யில் ஒளிபரப்பாகி வரும் `பிரிவோம் சந்திப்போம்' தொடர், அடுத்த மாதம் 4-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.


மாமன் மகள்- அத்தை மகள் ஆகிய இரண்டு சகோதரிகளைப் பற்றிய தொடர் இது. ரேவதியாக கல்யாணியும், ஜோதியாக மகாலட்சுமியும் நடித்துள்ளனர்.


ரேவதி, பிரபுவை திருமணம் செய்து கொள்கிறாள். ஜோதியோ ரேவதியின் மாமியாரின் தம்பி கார்த்திக்கை விரும்பி, அந்த காதலை அப்பா ஏற்காததால் ரகசியமாய் பதிவு திருமணம் செய்து கொள்கிறாள். இதற்கிடையில் ஜோதியின் காதலுக்கு துணைப்போகக்கூடாது என்று ரேவதிக்கு மாமா ஆணை போட்டு விட, ஜோதியின் காதலுக்கு உதவுவது போல் நடித்து வேறு மாப்பிள்ளையை ஜோதிக்கு திருமணம் செய்து வைக்கும் ஏற்பாடுகளுக்கு துணை போகிறாள் ரேவதி.


இதனால் ஜோதி ரேவதியை எதிரியைப்போல் கருதுகிறாள். ரேவதியின் வீட்டிற்கே வாழப்போகும் ஜோதி, ரேவதியை வெறுக்கிறாள். ரேவதியின் சின்ன மாமியாரும் அவரது மகன் மற்றும் மருமகளும் ரேவதிக்கு எதிராக சதித்திட்டம் தீட்ட, ரேவதி தன் கணவன் பிரபுவுடன் வீட்டை விட்டு வெளியேறி விடுகிறாள்.


ரேவதியை ஜோதி புரிந்து கொள்வாளா? மீண்டும் அவர்கள் நட்பு பாராட்டுவார்களா? ரேவதி தன் புகுந்த வீட்டில் போய் மீண்டும் வாழ்வாளா? ஒரே வாரத்தில் இதற்கான விடை கிடைத்துவிடும்.
நன்றி: தினதந்தி

aanaa
28th April 2012, 06:29 PM
காதலுக்காக மோதிக்கொள்ளும் `இருமலர்கள்'

ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் இருமலர்கள் தொடர், 50-வது எபிசோடை எட்டியிருக்கிறது. `நம்ம அண்ணாச்சி' உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கிய டைரக்டர் தளபதி இந்த தொடரை இயக்குகிறார்.


கல்லூரிப்பருவத்தில் அமுதா-ரஞ்சனி என்ற இரு பெண்கள் மோதிக் கொள்கிறார்கள். இனி வாழ்நாளில் ஒருவர் முகத்தை மற்றவர் பார்ப்பதில்லை என்று சபதமும் எடுக்கிறார்கள்.


அப்படி அவர்கள் வைராக்கியத்துடன் பிரிந்தபிறகு யார், எங்கிருக்கிறார்கள் என்பது இருவருக்குமே தெரியாது. ஆனாலும் அவர்களுக்குள்ளான போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. யார் என்று தெரியாமலே ஒருவரால் மற்றவருக்கு பிரச்சினைகள் நீடிக்கிறது.




இயக்குனர் தளபதியுடன் மகாலட்சுமி, அகிலா. இந்த போராட்டத்தின் அடுத்த கட்டமாக இருவரும் ஒரே இளைஞனை ஒருவர் அறியாமல் மற்றவர் காதலித்துக் கொண்டிருப்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்.


இப்படிப்பட்ட இந்த எதிர்மறை தோழிகள் எப்போது தான் நேரில் சந்திக்கப் போகிறார்களோ என்ற கேள்வி மனதில் எழுகிறதல்லவா? ஒருத்தியின் நிச்சயதார்த்தத்துக்கு இன்னொருத்தி வரப்போகிறாள். வந்த இடத்தில்தான் இருவரின் விருப்பத்துக்குரியவனும் ஒருவனே என்ற உண்மை அதிர்ச்சியாக வெடிக்கப் போகிறது.


இவர்கள் காதலில் அப்படி என்ன விசேஷம்? அதுவும் இருவர் ஒருவனை விரும்பும் அளவுக்கு?


சிவா அமுதாவை காதலிக்கிறான். ரஞ்சனி, சிவாவை காதலிக்கிறாள்.


தான் ரஞ்சனியால் காதலிக்கப்படுவது தெரியாமல் சிவாவும் உற்சாகமாக அமுதாவுடன் திருமணத்துக்கு தயாராகிறான். இதோ அதற்கான நிச்சயதார்த்த விழாவை தடுக்கும் முகமாகத்தான் ரஞ்சனி வீறுகொண்டு வருகிறாள்.


அடுத்து வரும் காட்சிகள் அமுதா-ரஞ்சனியை கோபத்தின் உச்சிக்கே கொண்டு செல்கிறது. அவர்களுக்கிடையேயான போட்டி இன்னும் வீரியமாகிறது. சவால்கள் தொடர்கின்றன.


தொடரில் ரஞ்சனியாக மகாலட்சுமியும், அமுதாவாக அகிலாவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் நளினி, வித்யா, அமரசிகாமணி, சிவன்சீனிவாசன், தினகரன், ரேவதிசங்கர், வசந்த் ஆகியோரும் இருக்கிறார்கள்.
நன்றி: தினதந்தி

aanaa
1st May 2012, 02:16 AM
23-04-2012 தொடங்கி....
Pillai Nila Sun Tv New Serial

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=hi4tuGHeGyQ

aanaa
5th May 2012, 09:18 PM
புதிய தொடர்கள்
http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20120505/TV-04.jpg
கனா காணும் காலங்கள் தொடரைத் தொடர்ந்து விஜய் டிவியின் இன்னொரு பள்ளித்தொடர், `7-சி.' அந்தப்பள்ளியில் `7-சி' வகுப்பில் உள்ள அத்தனை மாணவ-மாணவிகளும் இரட்டை வால்கள். இந்த வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுக்க பயப்படுகிறார்கள், ஆசிரியர்கள். ஆனால் அவர்களுக்கென்று அமைகிறார், ஒரு ஆசிரியர். குறும்புகளைத்தாண்டி அந்தப் பிள்ளைகளிடம் பொதிந்து கிடக்கும் திறமையை கண்டறியும் அநத ஆசிரியர், அந்த மாணவர்களின்திறமைகளைக் கொண்டே அவர்களை ஜொலிக்கச் செய்கிறார்.


திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது இந்த தொடர்.


இதே நாட்களில் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இன்னொரு தொடர், ஆஹா. கூட்டுக்குடும்பங்கள் நகர வாழ்க்கையில் குறைந்துவரும் இந்த காலகட்டத்தில் அழகான ஒரு பெரிய குடும்பத்தைப்பற்றிய கதை இது. பெரியதிரை இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணா சின்னத்திரைக்காக இயக்கும் முதல்தொடர் இது. இவரது `ஆஹா' சினிமாவில் நடித்த பானுப்பிரியாவே தொடரிலும் நடிக்கிறார்.
நன்றி: தினதந்தி

aanaa
5th May 2012, 09:19 PM
பாட்டு தர்பார்http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20120505/TV-08.jpg

ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய இசை நிகழ்ச்சி, பாட்டு தர்பார். நடிகர் மதன்பாப் தயாரித்து வழங்கும் இந்த நிகழ்ச்சி மூன்று பகுதிகளைக் கொண்டது. காலத்தை வென்ற பாடல்கள் பலமுறை நம்மனதை மகிழ்வித்திருக்கும். ஆனால் அந்த பாட்டுக்கான பின்புலம் தெரிய வந்தால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். உங்கள் விருப்பத்துக்குரிய பாடல்களை அந்த பாடல்களுக்குப் பின்னணியில் உள்ள சுவாரஸ்ய சம்பவங்களை சொல்லி தற்போதுள்ள பின்னணி பாடகர்கள் அந்தப்பாடலை பாடுவார்கள். இந்த பகுதிக்கு `பாட்டோட கதை கேளு' என்று பெயர்.


இரண்டாவது பகுதி `சிரிப்பு மழை'. நகைச்சுவைக் கலைஞர்கள் பங்கு பெற்று தங்கள் அதிரடி நகைச்சுவையால் ரசிகர்களை குலுங்க வைப்பார்கள்.


மூன்றாவது பகுதியில் `என் கேள்விக்கென்ன பதில்' நிகழ்ச்சி இடம் பெறுகிறது. இதில் பிரபலமான வி.ஐ.பி.களிடம் நடிகர் மதன்பாப் அதுவரை யாரும் கேட்டிராத அனல் பறக்கும் கேள்விகளைக் கேட்டு பதில் பெறுகிறார். இதில் முதல் வி.ஐ.பி.யாக டைரக்டர் கே.எஸ்.ரவி குமார் கலந்து கொள்கிறார்.


நிகழ்ச்சியில் நடிகர் மதன்பாப்பின் மகன் அர்ச்சித், மகள் ஜனனி இருவரும் பாடுகிறார்கள். இருவரும் சினிமா பின்னணி பாடகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தயாரிப்பு: கிரியேட்டிவ் கோம்ப்
நன்றி: தினதந்தி

aanaa
5th May 2012, 09:20 PM
வீர சிவாஜி

பிஜப்பூர் சுல்தான் ஆதில்ஷாவின் சர்வாதிகாரத்திற்கு உட்பட்டு பல்வேறு மன்னர்கள் அடிமைகளாக இருந்து வந்தனர். ஆதில்ஷாவை எதிர்த்த முதல் மாவீரர் சிவாஜி.


சிவாஜியின் சுதந்திர தாகத்தை உணர்ந்த அவரின் தந்தை ஷஹாஜிராவ், தன் உற்ற நண்பரான ரன்துல்லாகானின் உதவியோடு அதிக அளவில் போர்க்கருவிகளையும் குதிரைகளையும் சிவாஜிக்கு கிடைக்கச் செய்கிறார்.


இதற்கிடையில் பிஜப்பூர் சுல்தானின் நம்பிக்கை நட்சத்திரமான மியா ரஹீமுக்கு சிவாஜியை கொல்லும்படி ஆணையிட்டிருக்க, மியா ரஹீம் தன்அடிமையான கிருஷ்ணாஜியை பகடைக்காயாக்கி பல்வேறு விதத்தில் சிவாஜியை கொல்ல ஆணையிடுகிறார். கிருஷ்ணாஜி தேஷ்முக் இனத்தவரை தன்பணயக் கைதிகளாக்கி அதன்மூலம் சிவாஜியின் தன்மானத்தை சூறையாடுகின்றனர்.


சிவாஜி எடுத்த முடிவு என்ன? பல்வேறு திருப்பங்களுடன் தொடரும் `வீர சிவாஜி' தொடரை திங்கள் முதல் சனி வரை மாலை 6 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணலாம்.
நன்றி: தினதந்தி

aanaa
11th May 2012, 04:41 AM
‘Aahaa’ is directed by Suresh Krishna who has given the super hits movies like Baasha, Annamalai, Indiran Chandiran, Aalavandan & Sathya. Aahaa is a heart warming story riding high on family emotions.
In the current trend of nuclear families, there exists in the heart of Chennai, an ideal joint family led by the patriarch Parameshwara Iyer. Then love intervenes and Harsha a young man born and raised aboard, carefree, without a worry happens to lands up in the midst of the big joint family. Adamant to attain his love, Harsha sets out on a mission to win the heart of every family member. Little does he know that his life is going to change forever!
Starring popular names from the Tamil Film industry that includes Seema, Banupriya, L. Raja, J.V. Ramanamoorthy, Bharat Kalyan, Prabhudeva Balaji, Vijay Babu, Elavarasan, Delhi Ganesh, Kavithalaya Krishnan, Jayarekha and Benito Alex (‘Mahaan’ Baba fame).
Beginning from May 07, 2012, Aahaa would air every Monday-Friday, 1930 hrs on Vijay TV.



http://www.youtube.com/watch?feature=player_embedded&v=in57NreITFY

aanaa
12th May 2012, 08:38 PM
நடிகை ரோஜாவின் `லக்கா... திக்கா...'
http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20120512/TV03.jpg
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் மற்றும் செவ்வாய் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் `கேம் ஷோ' நடிகை ரோஜா வழங்கும் `லக்கா, திக்கா!'


எந்தவொரு முன்எதிர்பார்ப்பும் தயாரிப்புமின்றி ஒவ்வொரு மனிதரின் அதிர்ஷ்டத்தை மட்டுமே மையமாக கொண்டு நடைபெறும் ஒரு `கிக்'கான விளையாட்டு நிகழ்ச்சி, இது.


நிகழ்ச்சியில் `ரோஜா தி பாக்ஸ், கண்ண தொறக்கணும் சாமி, வைராஜா வை, ராஜாராணி, அதிர்ஷ்ட சக்கரம்' என ஐந்து பகுதிகள் உண்டு. முதல் பகுதி, `ரோஜா தி பாஸ்.' நாம் அன்றாடம் பார்த்துப் பழகிய நிகழ்வுகளை மையப்படுத்தி கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும். இதில் மொத்தம் 5 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு சரியான பதிலுக்கும் ஆயிரம் ரூபாய் பரிசு.


அடுத்தது `கண்ண தொறக்கணும் சாமி' பகுதி. இதில் பங்கேற்பவர்கள் நிழ்ச்சியில் சாமி வேடம் அணிந்தவரை தங்கள் திறமையால் கவர வேண்டும். அதன் மூலம் அவர்கள் திறமைக்கேற்ற ரொக்கப்பரிசு வழங்கப்படும். அடுத்து வரும் `வை ராஜா வை' பகுதியில், அவர்கள் வைத்திருக்கும் பணத்தை பயன்படுத்தி மற்றவர்கள் மேல் பந்தயம் கட்டி விளையாட வேண்டும். இதில்ஜெயித்தால் யார்மேல்பணம் கட்டி விளையாடினார்களோ, அவர்களின் பணம் கிடைக்கும். இல்லையேல் இவர்கள் பணம் அவர்களுக்குப் போய் விடும்.


`ராஜா ராணி' பகுதியில் பங்கேற்பவர்களுக்கு பொம்மை, ராஜா, ராணி போன்ற மூன்று ஆப்ஷன்கள் கொடுக்கப்படும். அனைத்திலும் பணம் அதிகமாக இருக்கலாம். அல்லது குறைவாகவும் இருக்கலாம். ஏதாவது ஒன்றில் இல்லாமலும் இருக்கலாம். பங்கேற்பாளர்கள் தேர்ந்தெடுப்பதை பொறுத்து பணம் அவர்களுக்கு போய் விடும்.


அடுத்து அதிர்ஷ்ட சக்கரத்தை சுற்றுவதில் கடைசி இரண்டு பங்கேற்பாளர்கள் விளையாடுவார்கள். இதில் இருவருக்கும் வாய்ப்பு அளிக்கப் படும். சக்கரம் சுற்றுவதில் யாருக்கு அதிக பணம் கிடைக்கிறதோ, அவர் தான் அந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்.எல்லா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குபவர் நடிகை ரோஜா.
நன்றி: தினதந்தி

aanaa
12th May 2012, 08:39 PM
http://cinema.dinakaran.com/cinema/gallery/Television-new-87.jpghttp://www.dailythanthi.com/muthucharam/images/articles/20120512/TV09.jpg



‘புலிவேஷம்’, ‘அய்யன்’, ‘விளையாடவா’ படங்களில் நடித்தவர் திவ்ய பத்மினி.

பிள்ளை நிலா

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 5.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய தொடர், `பிள்ளை நிலா.' இரண்டு தாய்-ஒரு பிள்ளை என்ற மையச்சுற்றில் பரபரப்பாக நகரும் திரைக்கதை தொடரின் பலம்.


சத்திரப்பட்டி தென்தமிழகத்தின் சிறிய ஊர். அவ்வூரின் சிறப்புகளில் ஒன்று கோகிலா-ஹேமாவின் நட்பு. கோகிலா அவ்வூரின் தலைவரும், அடாவடி பணக்காரனுமாகிய தங்கதுரையின் தங்கை. உள்ளூர் தபால்காரர் நட்ராஜின் மகள் ஹேமா. சாதாரண குடும்பம்.


பணம், அந்தஸ்து எதுவும் தடையின்றி கோகிலா-ஹேமாவின் நட்பு வளர்கிறது. நட்பு மட்டுமா? கோடீசுவர கோகிலாவுக்கும், ஏழை ஹேமாவின் அண்ணன் சந்தோஷூக்குமான காதலும் தான் வளர்கிறது.


ஒரு கட்டத்தில் இந்த காதல் விவகாரம் கோகிலாவின் அண்ணன் தங்கதுரைக்கு தெரியவர, அந்தஸ்து வெறியில் சந்தோஷை கொன்று விடுகிறான், அவன். இதனால் அதிர்ந்த ஹேமா, உயிர்த்தோழி கோகிலாவுடனான நட்பை முறித்துக் கொண்டு ஊரை விட்டே போகிறாள்.


இதற்கிடையே காதல் தந்த நெருக்கத்தில் கோகிலா கர்ப்பம் தரிக்க, பெண் குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தையை ஒரு அனாதை விடுதியில் சேர்த்து விடுகிறான் அண்ணன் தங்கதுரை. கண் விழித்து குழந்தையை தேடிய தங்கையிடம் குழந்தை இறந்தே பிறந்ததாக சொல்கிறான்.


காலம் ஆற்றிய மனக்காயத்தில் கோகிலா பெரிய ஜமீன்தார் குடும்பத்தில் வாழ்க்கைப் படுகிறாள். ஆண்டுகள் மூன்று உருண்டோடியும் குழந்தை பாக்கியம் இல்லை.


கோகிலாவின் தோழி ஹேமாவுக்கும் திருமணம் நடக்கிறது. கருவுறுகிறாள். அவளை அவள் கணவன் சேகர் நல்லபடியாக பார்த்துக் கொண்டாலும் அவன் அக்கா கல்யாணி ஹேமாவை கொடுமைப்படுத்துகிறாள். ஒருநாள் இந்த கொடுமையின் உச்சக்கட்டத்தில் ஹேமாவின் கர்ப்பம் கலைந்து விடுகிறது.


இதனால் ஹேமாவின் மனநிலை பாதிக்கப்படுகிறது. டாக்டர்கள் ஆலோசனைப்படி அனாதை விடுதியில் இருந்து ஒரு குழந்தையை தத்தெடுக்கிறார்கள். அந்தக் குழந்தையே அவள் அண்ணனுக்கும் உயிர்த்தோழி கோகிலாவுக்கும பிறந்த குழந்தை. இது தெரியாமல் குழந்தையை உயிராக வளர்த்து வருகிறாள், ஹேமா.


குழந்தை வளர்ந்து ஒரு கட்டத்தில் தான் அனாதை என்பதை கல்யாணி மூலம் தெரிந்து கொள்கிறாள். தன் தாயை தேடிப்போய் கண்டுபிடிக்கவும் செய்கிறாள்.


குழந்தை இல்லாத கோகிலா... குழந்தை மீது உயிரையே வைத்திருக்கும் ஹேமா...இவர்களில் யாரை குழந்தை ஏற்றுக் கொள்கிறாள்?


`அய்யன், புலிவேஷம், விளையாட வா' ஆகிய படங்களில் நாயகியாக நடித்த திவ்யபத்மினி முதன்முதலாக இந்த தொடர் மூலம் சின்னத்திரைக்கு வருகிறார். மேலும் ஷமிதா, ராகவ், ஓ.ஏ.கே.சுந்தர், ஸ்ரீ, ஷியாம் கணேஷ், சாந்திவில்லியம்ஸ், `சங்கராபரணம்' ராஜலட்சுமி, `வியட்நாம் வீடு' சுந்தரம், தாட்சாயிணி, ராஜசேகர், சங்கீதா பாலன், விஷ்வா நடிக்கிறார்கள்.


கதை, திரைக்கதை: ராஜஸ்ரீ என்.ராய், கூடுதல் திரைக்கதை, வசனம், கிரியேட்டிவ் டைரக்டர்: செல்வபாண்டியன். ஒளிப்பதிவு: பாலா. இசை: எக்ஸ்.பால்ராஜ். பாடல்: டாக்டர் கிருதயா. இயக்கம்: நந்தகுமார். கிரியேட்டிவ் டைரக்டர்: பிரின்ஸ்.
நன்றி: தினதந்தி

aanaa
12th May 2012, 08:50 PM
ஆண் பாவம்

தான் நினைத்தபடி, தான் பார்க்கும் பெண்ணைத் தான் தன் பிள்ளைகள் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று நினைக்கும் மகாலட்சுமி...


தன் மனதிற்குள் 25 ஆண்டுகளாக மறைத்து வைத்திருக்கும் உண்மையை சொல்லமுடியாமல் தவித்துக் கொண்டிருக் கும் கோபால்சாமி...


இந்த இரு துருவங்களுக்கிடையே சிக்கித்தவிக்கும் பிள்ளைகள் ஒவ்வொருவரின் மனதிலும் ஒரு காதல்...


பிள்ளைகளின் காதல் வென்றதா? அல்லது மகாலட்சுமியின் எண்ணம் பலித்ததா?


பிடிக்காத குடும்பத்தில் இருந்து மாதவனை திருமணம் செய்து கொண்டு வந்த தன் அக்கா கிரேசை வெறுத்து ஒதுக்கும் மேரி, பின்னாளில் அக்காவுடனும் மாதவனுடனும் சமாதானமானாளா?


இப்படி ஒவ்வொருவர் குடும்பத்தில் இருக்கும் போராட்டங்களையும் மையமாக்கி சுவாரஸ்ய திருப்பங்களுடன் திரைக்கதை அமைத்து ஒளிபரப்பாகி வரும் தொடரே `ஆண்பாவம்.'


சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில், ராஜேஷ், மீரா கிருஷ்ணன், ராஜ்கமல், இந்திரஜா, ரம்யா, ஐஸ்வர்யா, பரத் கல்யாண் நடிக்கிறார்கள்.


திரைக்கதை: தேவிபாலா. வசனம்: ஐ.அசோகன். இயக்கம்: டி.சி.பாலா. `சத்யஜோதி பிலிம்ஸ்' தியாகராஜன் தொடரை தயாரிக்கிறார்.
நன்றி: தினதந்தி

aanaa
12th May 2012, 08:50 PM
நல்லதொரு குடும்பம்

புதன் தோறும் இரவு 8 மணிக்கு டிஸ்கவரி தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி, `பிளையிங் வைல்ட் அலாஸ்கா.'


அலாஸ்காவின் ஆபத்தான வான்வெளியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வித்தியாசமான டிவிட்டோ குடும்பத்தவரை பின்தொடர்கிறது, இந்த தொடர் நிகழ்ச்சி. எரா அலாஸ்கா என்ற அவர்கள் குடும்ப நிறுவனம் நடத்தும் விமான சேவையானது, மிகக் கொடுமையான அலாஸ்கா பருவ நிலையை எதிர் கொள்கிறது. வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை தொலைதூர அலாஸ்காவுக்கு கொண்டு செல்லும் பணியில் அவர்கள் நிறுவனம் ஈடுபட்டிருக்கிறது.


பேரிங் கடலோரப் பகுதியில் வாழும் கிராமப்புற மக்களுக்கு வேறெந்த போக்குவரத்து வசதிகளும் இல்லாத நிலையில், எரா அலாஸ்கா தான் அவர்களுக்கான ஒரே வழி. நோய்வாய்ப்பட்டுள்ள குழந்தைகளுக்கான மருந்துகள், சுரங்கத் தொழிலாளர்களுக்கான மளிகைப்பொருட்கள் என அனுதின வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவற்றையும் துணிச்சலாக அப்பகுதிக்கு எடுத்துச்செல்வது எரா அலாஸ்காவின் துணிச்சல் மிக்க பைலட்டுகள் தான்.
நன்றி: தினதந்தி

aanaa
14th May 2012, 12:25 AM
7C

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=CBWkHqEGcS0




you-c..basically naanga romba lazy
i-c..
eee-c..enga kita mothum munne yo-c..yo-c

padipukku engala pudikala
athan padikavum engaluku pudikala
kurumbu-nu nenacha engala
katterumba kadippom ungala

paadathukum engalukum dhooram
padippu sonnale surrunu yerum
vaarathuku oru puthu vathiyaaru
vanthu mudinja engala nee maathi paaru

yo-c..theethuko prachanaiye pe-c

come to my cabin

ennodaya arumai
ullirukkum theramai
uthupaatha ulagukku perumai
pesalana niyani
basicave niyani
..dhoni..

you-c..basically naanga romba busy da dai
eee-c..prachana-la enga kaal dusi da

you-c..basically naanga romba lazy
padippu suthama varathu athu enga ra-c
ethuku melayum enga kitta vachukanuma yo-c

yen na naangalam 7-C

aanaa
15th May 2012, 11:30 PM
Aval


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=JBmaNjbFf6Q

aanaa
17th May 2012, 06:17 AM
விஜய் டிவி யின்

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தொடங்கி சில வருடங்கள் சன் டிவியின் அசத்தப்போவது நிகழ்ச்சியில் அசத்திய நகைச்சுவை பேச்சாளர் மதுரை முத்து. திடீர் விபத்தினால் சில மாதங்கள் ஓய்வில் இருந்த முத்து சன் டிவியில் புதிய நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலம் களம் இறங்கியுள்ளார்.

மதுரை முத்து உடன் இணைந்து காமெடியில் கலக்குபவர் தேவதர்ஷினி. ஞாயிறுதோறும் காலையில் ஒளிபரப்பாகும் இந்த காமெடி நிகழ்ச்சியில் போலீஸ் கான்ஸ்டபில் வேடத்தில் தேவதர்ஷினியும், திருடனாக மதுரை முத்துவும் சேர்ந்து காமெடி செய்ய முயற்சி செய்தனர்.

இதேபோல நிகழ்ச்சி சில பல வருடங்களுக்கு முன்பு நம்மநேரம் என்ற பெயரில் ஒளிபரப்பானது போல நினைவுக்கு வருகிறது. எது எப்படியோ காலை நேரத்தில் நிகழ்ச்சிக்குப் பஞ்சம் வந்தால் என்ன செய்வது பழைய நிகழ்ச்சியின் கருவை எடுத்து புதிய நடிகர்களை நடிக்க வைத்து தூசு தட்டி புதுசு போல ரெடி செய்து ஒளிபரப்பவேண்டியதுதானே.

சினிமாவிலேயே பழைய திரைப்படங்களை ரீமேக் செய்யும்போது தொலைக்காட்சியில் பழைய நிகழ்ச்சிகளை ரீமேக் செய்யக்கூடாதா என்ன? என்று யாரோ கேட்பது காதில் விழுகிறது.

ஞாயிறுக்கிழமை காலை 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த கலக்கல் காமெடி நகைச்சுவை பிரியர்களுக்கு ஏற்ற நிகழ்ச்சி என்கின்றனர் இதனை பார்த்து ரசித்த காமெடி பிரியர்கள்.

aanaa
17th May 2012, 06:30 AM
சத்யம் டிவியில் காமெடி கலாட்டா: சேதி கேளு ரெட்டை வாலு

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நையாண்டி கலந்த நிகழ்ச்சிகளுக்கு எப்போமுதுமே வரவேற்பு உண்டு. அந்த வகையில் தொலைக்காட்சியின் புதிய வரவான சத்யம் தொலைக்காட்சியில் தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `சேதி கேளு வித் ரெட்ட வாலு' நையாண்டி நக்கள் கலந்த நிகழ்ச்சி நேயர்களிடையே வரவேற்பினை பெற்றுள்ளது.

தினசரி செய்திகள், செய்தியின் நடுவே இருக்கும் சூட்சுமங்களையும் செய்தியை உருவாக்கும் மனிதர்களின் சுவாரஸ்யங்களையும் உலகுக்கு கொண்டு வந்து, வயிறு குலுங்க வைக்கும் காமெடி கலாட்டா நிகழ்ச்சி இது. அதில் ஒரு குட்டி வெடி, குறும்பு ஜோடியின் கடி... என நிகழ்ச்சி முழுக்க குலுங்கிச் சிரிக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியை நடத்தும் தொகுப்பாளர்களின் உடல்மொழியும் நன்றாக பொருந்தி வருவது நிகழ்ச்சியின் வெற்றிக்கு ஒரு காரணமாக இருக்கிறது.

வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பதை நினைவுபடுத்தும் இந்த நிகழ்ச்சியை மறுஒளிபரப்பில் மறுநாள் காலை 11 மணிக்கும் காணலாம். கண்டு ரசித்து சிரியுங்களேன்.

aanaa
20th May 2012, 09:00 PM
நிலா வந்தாச்சு!


http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20120519/TV-06.jpg

சரிகம இன்டியா நிறுவனத்தின் புதிய தயாரிப்பான `பிள்ளை நிலா' தொடர், `இரண்டு தாய்க்கு ஒரு பிள்ளை' என்ற கதைக்களம் என்பதால் பெண்களை ஈர்க்கும் தொடராகி இருக்கிறது. இந்த தொடரின் தென் மண்டல பொறுப்பில் இருக்கும் பி.ஆர்.விஜயலட்சுமி கூறும்போது, "குடும்பத்தில் நடக்கும் நிகழ்வு தான் கதையின் மையம் என்றாலும், அதில் பிள்ளைப் பாசம் தான் பிரதானம். தொடரில் நிலாவாக வரும் குட்டி நட்சத்திரம் நேகா, நடிப்பில் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டு விடுவாள். அத்தனை சூட்டிகை'' என்றார்.


அவர் சொன்னதை உண்மையாக்கிக் கொண்டிருந்தார், அன்று செட்டில் நாம் பார்த்த நிலா. அதாவது நேகா. டைரக்டர் சொன்ன காட்சியை ஒரே டேக்கில் நடித்து விட்டு, கணத்தில் அடுத்த காட்சிக்குத் தயாரான அந்த நடிப்பு நிலாவை பார்த்தபோது, வருங்கால திரை நட்சத்திரம் கண்ணில் தெரிந்தது. இனி நிலா அதாவது நேகா பற்றி...


சென்னை புழல்அருகில் சூரப்பட்டில் உள்ள வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளியில் 6-வது படிக்கிறார். 5 வயதில் இருந்து கற்றுக் கொண்டதால் நடனம் அத்துப்படி. பாட்டில் `கீதம்' வரை வந்திருக்கிறார். இன்னும் ஆசிரியர் மூலம் பாட்டுப்பயிற்சி தொடர்கிறது. பெற்றோர் ராஜேஷ்-பிரசன்னாவின் ஒரே வாரிசு. அப்பா என்ஜினீயர். அம்மா குடும்பத்தலைவி.


`பின்ளை நிலா' தான் நேகாவுக்கு முதல் தொடர். வாய்ப்பு வந்தது எப்படி?


இந்த மாதிரி கதைக்கு ஒரு சுட்டிப்பெண் தேவை என்பதை அறிந்து இயக்குனரைப் பார்க்கப் போனோம். அங்கே இவள் மாதிரி நிறைய பெண்கள் இருந்தார்கள். எல்லாருமே பெற்றோருடன் வந்திருந்தார்கள். இவள் அழைக்கப்பட்ட போது, டைரக்டர் `எனக்கு எங்க அம்மா வேணும்' என்ற டயலாக்கை பேசச்சொன்னார். டைரக்டர் சொன்னது தான் தாமதம், இவள் அந்த டயலாக்கை ஏற்ற இறக்கத்துடன் சொல்லி முடித்து விட்டாள். அப்போதே டைரக்டர் உற்சாகமாகி, `எங்க கதைக்கான நிலா கிடைச்சாச்சு' என்றார். மாதத்தில் 12 நாட்கள் படப்பிடிப்புக்கு வர வேண்டியிருக்கும் என்றார்கள்.''


"இப்போது பள்ளி விடுமுறைக்காலம். பள்ளி திறக்கும்போது விடுமுறை கிடைக்குமா?''


"பள்ளியில் இதை சொன்னபோது அதுவரை அவள் சம்பந்தப்பட்ட ரெக்கார்டு எல்லாம் பார்த்தார்கள். `குழந்தை எதையும் சட்டென்று கிரகித்துக் கொள்வாள். அதனால் நடிப்பு நேரம் தவிர ஒரு அம்மாவாக அவள் படிப்பையும் நீங்கள் பார்த்துக் கொள்வதாக இருந்தால் ஓ.கே.' என்றார்கள்.


சீரியலின் டைட்டில் பாடலுக்கான காட்சியை மகாபலிபுரம் கடற்கரையில் 2 நாட்கள் எடுத்தார்கள். நடித்தது மாதிரியே இல்லாமல் அவள் அத்தனை இயல்பாக காட்சிகளை ஓ.கே. செய்தபோது அவள் அம்மாவாக எனக்கே ஆச்சரியம்.''


"வீட்டில் நேகா எப்படி?''


"இரண்டாம் வகுப்பு முதலே அவள் வேலையை அவளே செய்து கொள்வாள். அவள் ïனிபார்மை அவளே அயர்ன் செய்து போட்டுக் கொள்வாள். தலை வாரிவிட வேண்டிய ஒரு வேலையை மட்டும் தான், எனக்கு தருவாள்.அதுவும் அவளுக்கு தலை வார வராததால் என்னை செய்யச் சொல்வாள். இந்த பொறுப்பு தான் அவளை இப்போது சீரியலுக்குள் நிலாவாக்கி இருக்கிறது.


டைரக்டர் சி.ஜே.பாஸ்கர் இப்போது இயக்கி வரும் `மேற்கு மாம்பலத்தில் ஒரு காதல்'தொடரிலும் நேகாவுக்கு ஒரு கேரக்டர் கொடுத்திருக்கிறார். அவர் நேகா பற்றி சொல்லும்போது அன்றைய குட்டி மீனாவை பார்த்ததுபோல் அத்தனை துறுதுறுப்பாக இருக்கிறாள். மீனா மாதிரியே கலைத்துறையில் பெரிய நட்சத்திரமாக வருவாள் என்று வாழ்த்தினார். உண்மையில் படிப்பில் நேகாவை பெரிய லெவலுக்கு கொண்டு வரவேண்டும் என்பது பெற்றோரான எங்கள் ஆசை. ஆனால் காலத்தின் கட்டளை எப்படியோ..! ''

aanaa
20th May 2012, 09:02 PM
அம்முவின் சொல்லத் துடிக்கும் மனசு


கேப்டன் டிவியில் "அம்முவின் சொல்லத் துடிக்கும் மனசு'' என்ற மெகா தொடர் ஒளிபரப்பாகிறது. இந்தியாவின் உயிர் நாடியான விவசாயிகளை பற்றிய இந்த தொடரில், கதாநாயகி அம்முவே பிரதான பாத்திரம். ஏழை விவசாயியின் மகளாக பிறக்கும் அம்மு, ஜமீன்தாரின் வேலைக்காரன் ராதாவால் தாலி கட்டப்பட்டு ஜமீன்தாருக்கு படுக்கையை பகிர்ந்து கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகிறாள்.


வேலைக்காரன் ராதாவோ முதலாளிக்காக எதையும் செய்ய தயாராக இருக்கும் அப்பாவி இளைஞன். அம்முவின் மீது ஆசை வைத்துள்ள ஜமீன்தார் அம்முவை அடைய கால சந்தர்ப்பம் பார்க்கிறார். இதனிடையே ஜமீன்தாரின் ஆசை பற்றி அவர் மனைவி ஊர்மிளாவிற்கும் அவருடைய அம்மாவிற்கும் தெரிகிறது. அவர்கள் ஜமீன்தாரை கண்டிக்கிறார்கள்.


இதற்கிடையே அம்முவின் மீது கணவன் ராதாவிற்கு காதலும் அன்பும் அதிகமாகிறது. இச்சூழ்நிலையில் ஜமீன்தார் அம்முவை அடைந்தாரா? அல்லது அம்மு ஜெயித்தாளா? தொடரும் கதை விடை சொல்லும்.

aanaa
20th May 2012, 09:03 PM
கொண்டாட்டம் புதுசு


ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் இரு மலர்கள் தொடர், 50-வது எபிசோடைத் தாண்டி விறுவிறுப்புடன் தொடர்கிறது. இரண்டு தோழிகளுக்குள்ளான மோதல் தான் கதைக்களம். இனி ஆயுள்வரை சந்திக்கப் போவதில்லை என்று சவால் விட்டுப்போன கல்லூரித்தோழிகள் ரஞ்சனியும் அமுதாவும் இப்போது ஒரு தோழியின் நிச்சயதார்த்த விழாவில் நேருக்கு நேர் சந்திக்கப் போகிறார்கள். அவர்கள் சந்தித்த பிறகு நடக்கும் பூகம்பம் தொடரும் பரபர எபிசோடுகள்.


50-வது எபிசோடு ஒளிபரப்பான தினத்தில் செட்டில் ஒரு திடீர் பரபரப்பு. பிரமாண்ட கேக் ஒன்றை தொடரின் நட்சத்திரங்களும் டெக்னிஷியன்களும் இணைந்து கொண்டு வந்தார்கள். டைரக்டர் தளபதியிடம், "நம் தொடரின் 50-வது எபிசோடு இன்று ஒளிபரப்பாவதையொட்டி கேக் வெட்டி கொண்டாட இருக்கிறோம். நீங்கள் தான் கேக் வெட்ட வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார்கள்.


அடுத்தகணம் செட் பரபரப்பானது. டைரக்டர் தளபதி கேக் வெட்டி முதல் துண்டை நாயகன்உதய்க்கு ஊட்ட, நாயகன் உதய் ஒரு துண்டை வெட்டி டைரக்டர் வாயில் ஊட்ட, மொத்தக் கூட்டமும் கைதட்டலால் அரங்கை ஆர்ப்பரிக்க வைத்தது.


இந்த கேக் ஊட்டும் வைபவம் அதோடு நின்று விடவில்லை. நடிகர்-நடிகைகள், டெக்னீஷியன்கள் வரை தொடர்ந்தது. அதோடும் நில்லாமல் பாத்திரம் சுத்தம் செய்து கொடுக்கும் பணியில் இருந்த பெண்மணி வரை அழைத்து கேக்கை ஊட்டினார். ஊட்டிய கேக்கை பெறும் அனுபவம் அதுவரை அல்லாத பலரும் கொஞ்சம் சம்மதம், நிறைய கூச்சத்துடன் வாங்கிக் கொண்டது தனி சுவாரஸ்யம்.

aanaa
20th May 2012, 09:04 PM
மண் வாசனை


ராஜ் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் "மண் வாசனை'' தொடர், இப்போது 110 பகுதிகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. பெண் சிசு கொலையை மையமாகக் கொண்ட இத்தொடர், சின்னத்திரையில் இதுவரை யாரும் கையாளாத ஒரு கதைக்களமாகும்.


இளம் விதவையான சுகுணா கர்ப்பமாக இருப்பது தெரிந்ததும் ஷ்யாம் அவளை விரும்புவதாக கூறுகிறான். இனி இருவருக்குள்ளும் நடக்க இருக்கும் பல திருப்பங்கள் தொடரின் விறுவிறு பகுதிகள்.

aanaa
20th May 2012, 09:05 PM
யூகியுடன் யூகியுங்கள்


வெள்ளி மற்றும் சனிக்கிழமை இரவு 10 மணிக்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி `ïகியுடன் ïகியுங்கள்.' நம் கண் முன் காணும் உண்மைகளின் ஆச்சரியமூட்டும் பின்னணிகளை தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் வழங்குவதில் தேர்ந்தவர் ïகிசேது. அவர் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு வென்றவர்களை இனம் காட்டுகிறார். சாதாரண நிலையில் இருந்து சாதனையாளர்களாக மாறியவர்கள் குடத்திலிட்ட விளக்காய் எங்கோ கண் காணாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை தேடிப் பிடித்து இந்த நிகழ்ச்சியில் உலகுக்கே வெளிச்சமாய் வெளிப்படுத்துகிறார், ïகிசேது.


கைகளை இழந்த சிறுவன் இன்று கணினி `வரைகலை' கலைஞனாக திகழ்கிறான். இரண்டு வயது குழந்தை 200 நாட்டு கொடிகளை இரண்டே நிமிடத்தில் சொல்லி ஆச்சரியப்படுத்துகிறது. வாய்பேச முடியாத பெண் குழந்தையை அதன் தாயே கைவிட்டு விடுகிறாள். அந்தக் குழந்தை வளர்ந்து நன்றாக பேசியது மட்டுமல்லாமல் 10 மணி நேரம் தொடர்ந்து பாடி கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்திருக்கிறது.


இவை தவிர, அகமும் புறமும் பற்றி வந்து சேரும் பலதரப்பட்ட விசித்திரமான செய்திகளை தனக்கே உரிய நையாண்டி பாணியில் விமர்சிக்கும் ïகிசேதுவின் முன்னுரையும் இதில் அடங்கும். வரும் வாரங்களில் மேலும் சில விசேஷ அத்தியாயங்களும், புகழ்பெற்ற மனிதர்களும் பங்கேற்க உள்ளனர். இவர்களில் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்தும் இருக்கிறார்.

aanaa
26th May 2012, 08:58 PM
ஆல் இன் ஆல் ஆறுமுகம்

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் வித்தியாசமான கேரக்டர் என்றால் உடனடி முக்கியத்துவம் கொடுப்பார். சிவாஜியுடன் அவர் நடித்த `பரீட்சைக்கு நேரமாச்சு' படம் சின்ன உதாரணம். இப்படி அவரது நடிப்புக்கு தீனி போடும் கேரக்டர் வசந்த் டிவிக்காக அவர் நடிக்கும் `ஆல் இன்ஆல் ஆறுமுகம்' தொடரிலும் கிடைத்திருக்கிறது.


இந்த தொடரில் அவர் சென்னை ரவுடி, கிராமத்து ரவுடி என இரண்டு மாறுபட்ட கெட்டப்புகளில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக யுவஸ்ரீ நடிக்கிறார்.


கிராமத்து ரவுடி, நகரத்து ரவுடி இந்த இருவரும் போலீ சாரை எப்படி சமாளிக்கிறார்கள்? இவர்களின்அணுகு முறைக்கு போலீஸ் எப்படி `மூவ்' செய்கிறது என்பது கதைக்குள்ளான கலகலப்பு காட்சிகள்.


தொடரில், போலீஸ் அதிகாரியாக காத்தாடி ராமமூர்த்தி நடிக்கிறார். யுவஸ்ரீயின் மாமனாராக `வியட்நாம் வீடு' சுந்தரம் வருகிறார்.


விரைவில் வசந்த் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் இந்த தொடரின் இயக்கம்: ஜெயமணி.
நன்றி: தினதந்தி

aanaa
26th May 2012, 08:58 PM
பாலாஜியின் சதி வலையில் கீர்த்தனா!

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 11 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர், `தாமரை.'


பல போராட்டங்களையும், பிரச்சினைகளையும் எதிர்கொண்ட பின், கீர்த்தனா தன் நீண்ட கால கனவான பி.டி.ஓ. பதவியை பெறுகிறாள். இதனால் அவளின் குடும்பம் மகிழ்ச்சியில் பரவசமாகிறது. கீர்த்தனாவின் வளர்ச்சியை கண்டு சற்றும் பொறுக்காத பாலாஜி, பி.டி.ஓ. அலுவலகத்தில் தனக்கு பழக்கமானவர்களுக்கு லஞ்சம் கொடுத்து கீர்த்தனாவிற்கு எதிராக செயல்படுமாறு கூறுகிறார்.


சுந்தர் தன் மனைவி கங்காவுடன் கோவிலுக்கு வருகிறார். அங்கு பிரபு பைக்கில் வருவதையும், கீர்த்தனாவின் குடும்பம் காரில் வருவதையும் கண்டு முகம் சிவக்கிறார். பி.டி.ஓ. அலுவலகத்தில் சுந்தருக்கு வேண்டியவர்கள் கீர்த்தனாவின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் வேவு பார்த்து அதை பாலாஜிக்கு தெரிவிக்கின்றனர்.


பாலாஜியும், சுந்தரும் கீர்த்தனாவை எப்படியாவது பி.டி.ஓ. பொறுப்பிலிருந்து நீக்க சதி திட்டம் தீட்டுகின்றனர்.


கீர்த்தனா சந்திக்கும் சங்கடங்கள் என்ன? அதை அவள் எவ்வாறு எதிர்கொள்கிறாள்? திருப்பங்களுடன் தொடர்கிறது `தாமரை' தொடர்.
நன்றி: தினதந்தி

aanaa
26th May 2012, 08:59 PM
அவள் ஒரு தொடர்கதை

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு பாலிமர் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் `அவள் ஒரு தொடர்கதை' தொடர், திருப்புமுனைக் காட்சிகளுடன் விரைகிறது.


தனா உயிரோடிருப்பதை கலா அறிந்து கொள்கிறாள். பாஸ்கருடன் சேர்ந்து கொண்டு தனாவைக் கொல்ல மறுபடியும் முயற்சிக்கிறாள்.


இதற்கான சந்திப்பின்போது கலாவுக்கும் பாஸ்கருக்குமான உரையாடல் வாக்கு வாதமாய் முற்றுகிறது. இந்நிலையில் பாஸ்கரிடம் இருந்து தனாவைக் காப்பாற்ற சாந்தா முயற்சிக்கிறாள். இதற்கிடையே தனா உயிரோடிருப்பதை தன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தெரிவிக்கிறாள், சுஜா.


இதன் பிறகே தனாவை கொல்வதற்கு நடத்தப்பட்ட சதியில் கலா தான் மூளையாக செயல்பட்டிருக்கிறாள் என்பதை குடும்பத்தினர் அறிந்து கொள்கிறார்கள். அதனால் கலாவுக்கும் அம்மாக்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றுகிறது.


இதற்கு ப் பிறகாவது கலா தனது தவறான பாதையில் இருந்து விலகினாளா? தனாவின் உயிருக்கு வந்த ஆபத்து நீங்கியதா? எதிர்பார்ப்பை தக்கவைத்துக் கொண்டபடி தொடர்கிறது, தொடர்.
நன்றி: தினதந்தி

aanaa
15th June 2012, 09:37 PM
அமுதா ஒரு ஆச்சரியக்குறி!

திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 7 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர் `அமுதா ஒரு ஆச்சரியக்குறி.' பிரபல இயக்குனர் கே.பாலச்சந்தர் இந்த தொடரை இயக்குகிறார்.


அமுதா ஒரு சராசரி நடுத்தர குடும்பத்துப் பெண். கணவன், ஒரு ஆண் குழந்தைஎன சின்னக் குடும்பம். சென்னையில் சொந்த இடம் வாங்கி அதில் ஒரு ஓட்டலை நடத்த வேண்டும் என்பதை நீண்ட நாள் எண்ணமாகவும், தன் கணவனின் தொப்பையைக் குறைக்க வேண்டும் என்பதை நீண்ட கால லட்சியமாகவும் கொண்டவள்.


எவ்வளவு துயரமான பிரச்சினைகள் என்றாலும் அதை சிரித்துக் கொண்டே கடக்க முயற்சி செய்யும் அமுதாவின் வாழ்க்கையிலும் ஒரு துயரம் வந்து குடியேறுகிறது. அதை சிரித்தபடி கடக்கிறாளா? இல்லை வெகுண்டு எழுகிறாளா? என்பதை சுவாரஸ்யமாக சொல்வதுதான் `அமுதா ஓர் ஆச்சர்யக்குறி.'


இந்தத் தொடர் மூலம் பல வருடங்களுக்குப்பின் மீண்டும் சின்னத்திரையில் தோன்றுகிறார் நடிகை ரேணுகா. இவருடன் கவிதாலயா கிருஷ்ணன், அப்சர், காவ்யா, ஷில்பா, வசந்த், வெங்கட், விஜயகிருஷ்ணராஜ், சுஜாதா, சுருதி, கனிகா, மாஸ்டர் சரண் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.


தொடரின் முகப்பு பாடலை கவிஞர் வாலி எழுத, அதற்கு இசையமைத்திருக்கிறார் `தமிழ் படம்' புகழ் கண்ணன். ஒளிப்பதிவு தமிழ்மாறன். இயக்கம் கே.பாலச்சந்தர், மற்றும் அஷ்வின் பாஸ்கர். தயாரிப்பு: கவிதாலயா சார்பில் புஷ்பா கந்தசுவாமி.



நன்றி: தினதந்தி

aanaa
15th June 2012, 09:38 PM
புதிய தொடர் 777

பாலிமர் டி.வி.யில் தினந்தோறும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கும் புதிய தொடர், 777.


7 நாட்களுக்கு ஒரு கதை, ஒவ்வொரு கதைக்கும் வேறு வேறு இயக்குனர்கள் என்று முற்றிலும் புதிய சிந்தனையுடன் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்ததொடரில், இவ்வாரக் கதை `அட்சதை.' கண்டிப்பான அப்பா, அன்பான அம்மா, வெகுளியான மகன் அசோக், அவனுக்கு ஒரு நல்ல தோழி கமலி... இப்படி எதிர்பார்ப்புடன் தொடங்கி விறுவிறுப்புடன் செல்கிறது கதை.


கண்டிப்பான அப்பா தன் மகனை தன் விருப்பம்போல உருவாக்க நினைக்கிறார். இதற்கிடையே அசோக்-கமலி நட்பில் பொறாமை கொண்ட அசோக்கின் நண்பன், அசோக்கின் அப்பாவை சந்திக்கிறான். அசோக்கும் கமலியும் காதலிக்கிறார்கள் என்று தவறாக போட்டுக் கொடுக்கிறான். இதை நம்பிய அப்பா, மகன் அசோக்கை வீட்டை விட்டுத் துரத்துகிறார். வீட்டை விட்டுப்போகும் அசோக் ஒரு விபத்தில் உயிரிழக்கிறான்.


மகனின் மரணத்தை மனைவியிடம் அசோக்கின் அப்பா மறைத்து விடுகிறார். ஆனால் ஒருநாள் அம்மாவுக்கு உண்மை தெரிய வர, அந்த அதிர்ச்சியில் உயிரை விட்டு விடுகிறாள். இதற்குப்பிறகு அன்பு என்றால் என்ன என்பதை தாமதமாக உணர்ந்து கொண்டு தன்னையே அன்பின் வடிவாக மாற்றிக் கொள்கிறார், அப்பா.





நன்றி: தினதந்தி

aanaa
16th June 2012, 08:47 PM
ராதிகாவின் போராட்டம்

திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர், சின்ன மருமகள்.


நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு ஒன்று சேர்ந்த தேவா-ராதிகா இருவரும் தங்கள் திருமண வாழ்க்கையை ஆரம்பிக்காமல் நடைப்பிணம் போல் வாழ்கின்றனர். ராதிகாவின் தங்கை விஷாகாவும், பாட்டியும் கொடுக்கும் குடைச்சல்கள் தான் இதற்குக் காரணம்.


இதுபோதாதென்று தேவாவின் வீட்டில் உள்ள சிலரும் தேவாவை மகா பண்டிதர் பதவியில் இருந்து இறக்க முயற்சிக்கின்றனர். தேவாவின் முதல் திருமணத்தின்போது ஆள்மாறாட்டம் செய்த குற்றத்திற்காக பண்டிதர்களின் குரு ராதிகாவுக்கு கடுமையான தண்டனை விதிக்க, தன் கணவனுக்காக அதையும் ஏற்கிறாள் ராதிகா.


இதற்கிடையில் தேவாவின் அண்ணியான மிருணாளினி தன் மலேசிய நண்பனான சாந்தனு மூலம் மேலும் பல பிரச்சினைகளை ஏற்படுத்துகிறாள். அதாவது விஷாகாவின் வயிற்றில் இருந்த குழந்தைக்கு தேவா தான் தந்தை என்றும், அதனால் தேவா மகா பண்டிதராக இருக்க தகுதியற்றவன் என்றும் சாந்தனு கிளப்பி விட, இப்போது தேவா குற்றமற்றவன் என்று நிரூபிக்க 2 நாட்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது.


தன் கணவன் குற்றமற்றவன் என நிரூபிக்கப் போராடும் ராதிகா, அதற்கேற்ற ஆதாரங்களைத் தேடி அலையும்போது, அவள் கண்ணில் விக்ரம் படுகிறான். ஆனால் அவளை பார்த்தமாத்திரத்தில் அவன் தப்பி விடுகிறான்.


விக்ரம்-சாந்தனு இருவருக்கும் இடையிலான உறவு என்ன? ராதிகாவிற்கு உதவ சாந்தனு எதிர்பார்க்கும் பிரதிபலன் என்ன? விறுவிறுப்பை தக்க வைத்தபடி தொடர்கிறது, தொடர்.
நன்றி: தினதந்தி

aanaa
16th June 2012, 08:50 PM
தாமரை

http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20120616/TV04.jpg
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 11 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர், தாமரை.


அரும்பாடுபட்டு பி.டி.ஓ. ஆபீசரான கீர்த்தனாவால் தன் கடமையை சரியாக செய்ய முடியவில்லை.


கீர்த்தனா-பிரபு காதல் கண்டு பொறுக்காத கீர்த்தனாவின் சித்தி, இருவரின் ஒவ்வொரு அசைவையும் பிரபுவின் தாயார் கங்காவிற்கு போன் செய்து போட்டுக்கொடுக்கிறாள். இதனால் கங்கா கீர்த்தனா மீது தகாத வார்த்தைகளை வீசுகிறாள். இதைக் கேட்கப் பொறுக்காத பிரபு, தன் தாயார் கங்காவை எதிர்க்க, இதை சற்றும் எதிர்பார்க்காத கங்கா நிலைகுலைந்து போகிறாள்.


பிரச்சினைகளின் உச்சக்கட்டத்தில் பிரபுவின் தந்தை சுந்தர் ஒரு அதிரடி முடிவை எடுக்கிறார். கீர்த்தனாவின் அப்பா ராஜேந்திரனை போலீசார் கைது செய்யும் அளவுக்கு அது போகிறது. கீர்த்தனாவின் மேலதிகாரி அவளின் தந்தையான ராஜேந்திரனை விசாரிக்கும் பொறுப்பை கீர்த்தனாவிடமே ஒப்படைக் கிறார். இதனால் தலையில் இடி விழுந்தாற்போல் நிலை குலைந்து போகிறாள், கீர்த்தனா.


கீர்த்தனா-பிரபு காதலின் நிலை என்ன? மகளே தந்தையை விசாரித்தாளா? பரபரப்பாக தொடர்கிறது தொடர்...
நன்றி: தினதந்தி

aanaa
16th June 2012, 08:52 PM
மாணவர்களை திருத்தும் ஆசிரியர்
http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20120616/TV03.jpg

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் 7-சி தொடரில், லூட்டி அடிக்கும் மாணவர்களை ஆசிரியர் ஸ்டாலின் எப்படி திருத்தி வழிக்குக் கொண்டு வருகிறார் என்பது தொடரும் கதைக் களம்.


இதற்காக ஆசிரியர் ஸ்டாலினுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒரு யோசனை சொல்கிறார். அதாவது இந்த மாணவர்களின் செல்லப் பெயர்களின் பின்னணி பற்றி முதலில் தெரிந்து கொண்டால் அவர்களை எளிதாக வழிக்கு கொண்டு வந்து விடலாம் என்பதே அந்த யோசனை. வரும் வாரங்களில் அதற்கான களம் தொடங்குகிறது.

நன்றி: தினதந்தி

aanaa
16th June 2012, 08:56 PM
பிரிந்த குடும்பம் ஒன்று சேருமா?

சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `நாதஸ்வரம்' தொடரின் முக்கிய திருப்பமாக சொக்கலிங்கம்-மீனாட்சி தம்பதியரின் அறுபதாம் கல்யாணம் நிகழவிருக்கிறது.


இந்த விழாவை வைத்து இவரின் தம்பி மயில்வாகனம் என்ன செய்யப் போகிறார்? இந்த கல்யாணம் சிறப்பாக நடைபெறுமா? அல்லது சொக்கலிங்கம் குடும்பத்தை அழிக்க நினைக்கும் மயிலின் எண்ணம் பலிக்குமா?


காலம் தான் சிலரை மனதளவிலும் செயல் அளவிலும் பிரித்து வைக்கிறது. அதே காலம் தான் சம்பந்தமில்லாத பலரை ஒன்றாக சேர்த்தும் வைக்கிறது.


சொக்கலிங்கத்தை மயிலிடம் இருந்து பிரித்து வைத்த காலம் திரும்பவும் இருவரையும் ஒன்று சேர்க்குமா? அண்ணன்-தம்பி உறவுக்கு உதாரணமான அந்த சகோதரர்கள் மீண்டும் ஒன்று சேர்வார்களா?


மேலும் கதையின் முக்கிய கட்டமாக பாண்டியை கொலை செய்த மரக்கடை உரிமையாளர், தான்செய்த தவறுக்கு மாட்டிக் கொள்ளப் போகிறாரா?அல்லது சிக்காமல் தப்பித்துக் கொள்வாரா? இவரின்போக்கை வைத்துத்தான் சொக்கு-மயிலின் நிலைமை எப்படி மாறப்போகிறது என்பது வரும் வாரங்களின் சுவாரஸ்ய சம்பவங்களாக அமையும்.


நெல்லி வீட்டிற்கு மூன்றாவது மருமகளாக வந்துள்ள பரமுவின் நடவடிக்கைகள் காமுவிற்கு சாதகமாக அமையப் போகிறதா? அல்லது காமுவிற்கும் பரமுவிற்குமே சிக்கல்களை ஏற்படுத்தப் போகிறதா? கணவன்-மனைவியாக ஒரே வீட்டில் இருந்தாலும் காமுவும் மூர்த்தியும் மனதளவில் எப்போது இணையப் போகிறார்கள்?


பாவம் காமு..! இந்த வீட்டிற்கு மருமகளாக வந்திருக்கவே கூடாது என்று நினைக்கக் கூடிய நேரம் வரப்போகிறது. பரமுவின் செயல் அப்படி அமையப் போகிறது.


ராகினியை துரத்தி துரத்தி அவள் பின்னால் சென்று அவளுக்காக நடைஉடைகளை மாற்றிக்கொண்ட குமாரின் நிலை என்ன? குமாருக்கும் ராகினிக்கும் திருமணம் நடக்குமா? நடக்காதா? சொக்கலிங்கம் இவர்கள் திருமணத்திற்கு ஒப்புக் கொள்வாரா? குமார் ராகினியின் மீது வைத்துள்ள கண்மூடித்தனமான காதல் வெற்றியடையுமா? குமார் செய்யப்போகும் தில்லுமுல்லுகள் என்ன? அது அவனுக்கு சாதகமாக அமையுமா?


செல்வரங்கம்-மகேஷூக்குள் உண்டான பிரச்சினைகள் மேற்கொண்டு எப்படி போகப்போகிறது? திவ்யா உண்மையிலேயே திருந்தி விட்டாளா? செல்வரங்கம் திருந்தி நல்லவனாக மாறிவிட்டானா? அல்லது திருந்தியது போல் இருவரும் நடிக்கிறார்களா? மகேஷ் இந்த இருவரையும் எந்த அளவிற்கு நம்புகிறாள்?


சொக்கலிங்கத்துக்கு மருமகளாகவும், கோபிக்கு மனைவியாகவும் தன்னை மாற்றிக் கொண்ட மலரும் கோபியும் இந்த அனைத்து பிரச்சினைகளையும் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள்? செல்வரங்கத்தை மலர் நம்புகிறாளா?


மேலும் கோகுலின் சுயரூபம் தெரியாமல் உண்மையிலேயே அவனை கணவனாக ஏற்றுக்கொண்டு அக்கா மலரிடமே சண்டை போடும் அளவுக்கு வளர்ந்து விட்ட ரோகிணியின் நாளைய நிலை என்ன?கோகுலின் சுயரூபம் தெரிய வரும்போது ஜெகநாதனுக்கும் கோகுலுக்கும் இடையே எந்த மாதிரியான பிரச்சனைகள் எழப் போகிறது? கோகுல் என்ன முடிவு எடுக்கப் போகிறான்? ஜெகநாதன் மலரை மருமகளாகவும் கோபியை மருமகனாகவும் ஏற்றுக்கொண்டு வீட்டிற்கு அழைக்கப் போகிறானா?


சொக்கலிங்கத்தை பிரிந்த மயில்வாகனம்!


திவ்யாவை இழந்த செல்வரங்கம்!


மலரை மறந்த ஜெகநாதன்!


காமுவை தள்ளி வைத்த மூர்த்தி!


பாண்டியை இழந்த மகாவிற்கு இன்னொரு வாழ்க்கை அமையுமா?


வரும் வார எதிர்பாராத சம்பவங்கள் அடுத்தடுத்த இந்த கேள்விகளுக்கு விடை தரப் போகிறது.


தொடரை தயாரிப்பதோடு இயக்கி நாயகன் கோபி கேரக்டரிலும் நடிக்கிறார், எம்.திரு முருகன்.

http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20120616/TV11.jpg


நன்றி: தினதந்தி

aanaa
16th June 2012, 08:59 PM
திரும்பிப் பார்க்கிறேன்

திரைப்படத்துறையில் நெஞ்சை விட்டு நீங்காத பல நிகழ்ச்சிகள் உள்ளன. ஒருசில காட்சிகளாகவும், பாடல்களாகவும் ரசிகர்களைக் கவர்ந்தவை. ஆனால், அதன் பின்னணியில் அமைந்த அரிய பல ரசிக்கத்தக்க சம்பவங்களும் இருக்கின்றன. அதுமட்டுமின்றி, திரைப்படத்துறையில் தங்களது திறமைகளை நிரூபித்து வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கையும், அவர்களது பசுமையான நினைவுகளும் பதிவு செய்யப்பட வேண்டியவை.


இந்தப் பதிவுகளை ஜெயா தொலைக்காட்சி, `திரும்பிப் பார்க்கிறேன்' என்ற சிறப்பு நிகழ்ச்சியின் வாயிலாக நேயர்களுக்கு வழங்குகிறது. அந்த வகையில் இந்த வாரம் பிரபல திரைப்பட நடிகை மேனகாவின் திரையுலக நினைவுகள் ஒளிபரப்பாகிறது.
http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20120616/TV01.jpg
மேனகா 1980களில் திரைத்துறையில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர். சில படங்களை தயாரித்தும் உள்ளார். சிறிய இடைவேளைக்குப் பிறகு இப்போது மீண்டும் நடித்து வருகிறார்.


இந்நிகழ்ச்சியில் அவர் தனது கலை வாழ்க்கை பற்றி பகிர்ந்து கொள்கிறார். அப்போது அவர் இடம் பெற்ற திரைப்பட காட்சிகளும் பாடல்களும் இடம் பெறுகின்றன. திங்கள் முதல் வியாழன் வரை தொடர்ந்து இரண்டு வாரங்களாக ஜெயா டிவியில் இரவு 10 மணிக்கு இந்த நிகழ்ச்சியை காணலாம்.
நன்றி: தினதந்தி

aanaa
16th June 2012, 09:04 PM
ஒய்.ஜி.மகேந்திரன்!


வெள்ளித்திரையில் தனக்கென காமெடியில் தனி பாணி உருவாக்கியவர் ஒய்.ஜி.மகேந்திரன். நீண்ட காலமாக வெள்ளித்திரையில் தலைகாட்டாத அவர், சின்னத்திரையில் மட்டும் அவ்வப்போது தலைகாட்டி வருகிறார். அந்த வகையில் வசந்த் டி.வியில் ஒளிப்பரப்பாக உள்ள புதிய நகைச்சுவை தொடரில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். ஆல் இன் ஆல் ஆறுமுகம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரில் சென்னையில் வசிக்கும் ரவுடி, கிராமத்தில் வசிக்கும் ரவுடி என இரு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். விரைவில் ஒளிபரப்பாக உள்ள இந்த நகைச்சுவைத் தொடரை ஜெயமணி என்பவர் இயக்கியுள்ளார்.



நன்றி:தினமலர்

aanaa
16th June 2012, 09:05 PM
பிரபுதேவா வியந்து பாராட்டிய அடுத்த பிரபுதேவா


பிரபுதேவாவின் நடனத்திற்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. சினிமாவில் இன்றைக்கு நடன இயக்குநர்களாக பிரபலமானவர்களில் பெரும்பாலானோர் பிரபுதேவாவிடம் பணிபுரிந்தவர்கள்தான். பிரபுதேவாவை சிறப்பிக்கும் விதமாக விஜய் டிவியில் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சி கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒளிபரப்பானது. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சியின் சீசன் 2 மறுபடியும் தொடங்கியுள்ளது. பல்வேறு சுற்றுக்களைக் கடந்து முக்கிய கட்டத்தை எட்டியுள்ள இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக நடன இயக்குநர்கள் ஸ்ரீதர், காயத்ரி ரகுராம் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சியின் நாயகன் பிரபுதேவா பங்கேற்றது போட்டியாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபுதேவா போட்டியாளர்களையும் அவர்களது நடனத்தையும் வியந்து பாராட்டி வருகிறார்.
நன்றி: தினமலர்

aanaa
23rd June 2012, 05:45 AM
800 எபிசோடை நெருங்கும் `உறவுகள்'

சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் முற்பகல் 11.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `உறவுகள்' தொடர் 800-வது பகுதியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. தொடரில் அடுத்து அடுத்து ஏற்படும் சுவாரஸ்யமான திருப்பங்களை இயக்குனர் கே.ஷிவா பகிர்ந்து கொண்டார்.


"காயத்ரி கர்ப்பம் அடைந்தது தெரிந்து கிருஷ்ணனும், பார்வதியும் பெரு மகிழ்ச்சி அடைகின்றனர். காயத்ரி கடவுளுக்கு நன்றி சொல்ல கோவிலுக்கு செல்ல, அங்கு பூஜைக்கான தேங்காய் அழுகி இருக்க - அதிர்ச்சி அடையும் காயத்ரி, அதனால் தன் கணவனுக்கோ தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கோ ஆபத்து வந்துவிடக்கூடாது என வேண்டுகிறாள்.


முகுந்தன் ஒரு பக்கம் அனைத்தையும் இழந்து கொண்டிருக்க, கிருஷ்ணன் ஒரு பக்கம் தொழிலில் முன்னேறி வசதியான நிலையை அடைகிறான். ஆனால் காயத்ரிக்கு தொடர்ந்து அப சகுனமான சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கிறது.


பார்வதி தனது குடும்ப ஜோதிடரை வரவழைத்து ஜாதகம் பார்க்க, ஜோதிடர் காயத்ரியின் ஜாதகத்தில் தோஷம் இருப்பதாக கூறுகிறார். அதோடு அவள் கருத்தரித்த நேரமும் சரியில்லை. இதற்கு பரிகாரமாக கிருஷ்ணனும் காயத்ரியும் 90 நாட்கள் ஒருவரை ஒருவர் பார்க்காமல், பேசாமல் பிரிந்து இருக்க வேண்டும். மீறி சந்தித்து விட்டால் காயத்ரியின் உயிருக்கோ, குழந்தையின் உயிருக்கோ ஆபத்து ஏற்படும் என்று கூற - கிருஷ்ணன், காயத்ரி பிரிகின்றனர்.


முகுந்தன் தங்கராஜிடம் ரியல் எஸ்டேட் பிஸினசிற்காக கொடுத்த பத்து லட்சம் பற்றி கேட்க, அவர் இன்னும் ஐம்பது லட்சம் இருந்தால்தான் பெரிய அளவில் வியாபாரத்தை செய்ய முடியும் என்கிறார். முகுந்தன் ஸ்வேதாவிடம் இதைச்சொல்லி வருத்தப்பட, ஸ்வேதாவோ தனது அப்பா, அம்மாவிடம் பேசி விட்டு பத்திரத்தை தருகிறாள். முகுந்தன் தங்கராஜ் மூலமாக ஒரு பைனான்சியரிடம் பத்திரத்தை வைத்து ஐம்பது லட்சம் வாங்கி விட, தங்கராஜ் அந்த பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றுகிறான். பைனான்சியர் வீட்டை ஜப்தி செய்து, ஸ்வேதா குடும்பத்தை வெளியேற்றி விட, முகுந்தன் ஸ்வேதா குடும்பத்தை தேடி அலைகிறான்.


இதற்கிடையே கிருஷ்ணனின் தங்கை கவுரியின் கணவன் பாபு சிறைத்தண்டனை முடித்து திரும்புகிறான். பாபு திருந்தி புது மனிதனாக வந்திருப்பதாக கூறியும், குடும்பத்தார் அவனை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். ஆனால் கிருஷ்ணன் மட்டும் பாபு திருந்தி விட்டதை உணர்ந்து ஏற்றுக்கொள்கிறான். தனது வாட்டர் கம்பெனியிலேயே சேர்த்துக் கொள்கிறான். பாபுவால் கிருஷ்ணனுக்கு அவமானம் ஏற்படும் என அனைவரும் பயம் கொள்ள, பாபுவோ கிருஷ்ணனின் வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைகிறான். இதுவரை கிருஷ்ணன் மற்றும் அழகேசன் குடும்ப வளர்ச்சிக்கு தொல்லை கொடுத்து வந்த தங்கராஜை பாபு சிறைக்கு அனுப்புகிறான். இதனால் ராஜேந்திரன் மற்றும் தங்கராஜ் வெறி கொண்டு கிருஷ்ணன் குடும்பத்தை அழிக்காமல் விட மாட்டோம் என்று சபதம் எடுக்கிறார்கள். அதற்கான முயற்சியிலும் இறங்குகிறார்கள்.


முகுந்தன், ஸ்வேதா குடும்பத்தை கண்டுபிடித்து காப்பாற்றினாரா? கிருஷ்ணனை விட்டு பிரிந்த காயத்ரிக்கு நல்லபடியாக குழந்தை பிறந்ததா? கேள்விகளுக்கான விடை தொடரின் அடுத்தடுத்த பரபரப்பான எபிசோடுகளில்'' என்கிறார், இயக்குனர்.


திரைக்கதை: எஸ்.குமரேசன். வசனம்: பாலசூர்யன். இசை: டி.இமான். பாடல்: வைரமுத்து.


தொடரின் நட்சத்திரங்கள்: ஸ்ரீகுமார், பாவனா, ஸ்ரீதுர்கா, ராஜ்காந்த், அப்சர், அமரசிகாமணி, ராமச்சந்திரன், சாந்தி வில்லியம்ஸ், டி.ராஜேஸ்வரி, ரேவதி சங்கர், ஜெயப்பிரகாசம், சிவகவிதா, நீபா, சோனியா, பரத், ஜெயந்த், கே.எஸ்.ஜெயலட்சுமி, ஜெ.லலிதா, வைரவராஜ், சுதா, ஆர்த்திகாஸ்ரீ, வத்சலா ராஜகோபாலன், பாஸ்கர் ராஜா, கிச்சா, எம்.எல்.ஏ.தங்கராஜ்.


தொடரை சான் மீடியா லிமிடேட் தயாரிக்க, இயக்கம்: கே.ஷிவா.
நன்றி: தினதந்தி

aanaa
23rd June 2012, 05:46 AM
ஆஹா...

சினிமா உலகில் 25 ஆண்டுகளில் 50 படங்களை இயக்கியவர் டைரக்டர் சுரேஷ்கிருஷ்ணா.


ரஜினிக்கு அண்ணாமலை, பாட்ஷா, கமலுக்கு சத்யா, ஆளவந்தான் என இயக்கி வெற்றிகரமான கமர்ஷியல் இயக்குனராக தன்னை நிலைப்படுத்திக் கொண்டவர். இந்நிலையில் தான் கொஞ்சமும் எதிர்பாராமல் ஒரு அழகான காதல் கதையை புதுமுகங்களை வைத்து எடுத்தும் வெற்றி பெற்றார். அந்தப் படமே ஆஹா. அந்தப்படத்தில் புதுமுகங்கள் தவிர விஜயகுமார், பானுப்பிரியா, ரகுவரன், ஸ்ரீவித்யா என முன்னணி நட்சத்திரங்களும் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் அறிமுகமான ராஜீவ் கிருஷ்ணா இப்போது குணச்சித்திர நடிகராக வலம் வருகிறார்.


ஆஹா படத்தை பார்த்த ரஜினி டைரக்டர் சுரேஷ்கிருஷ்ணாவிடம், `இதுவரை நீங்கள் எத்தனை படங்கள் இயக்கினாலும் `ஆஹா' உங்கள் இயக்கத்தில் ஒரு மைல்கல் ' என்று வாழ்த்தினார்.


இந்தப்படத்தில் முதலில் சுரேஷ்கிருஷ்ணா நடிக்க வைக்க விரும்பியது அஜித்தை. அவரோ கதை பிடித்தும் உடனே கால்ஷீட் கொடுக்க முடியாத சூழல். அதனால் அவரால் சிபாரிசு செய்யப்பட்டவர் தான் ராஜீவ் கிருஷ்ணா. படத்தை பார்த்த அஜித், "இந்தப் படத்தில் நானே நடித்து இருக்கலாம் போலிருக்கிறதே...அற்புதமான படத்தை தந்திருக்கிறீர்கள்'' என்று மனம் உவந்து பாராட்டியது தனிக்கதை.


இந்த சுவாரசிய தகவல்களை இப்போது நினைவுகூறக் காரணமே, சின்னத்திரையிலும் இதே ஆஹா என்ற பெயரில் ஒரு தொடரை சுரேஷ்கிருஷ்ணா இயக்கி வருவது தான்.


"இதுவும் கூட்டுக் குடும்பத்தின் மேன்மையை சொல்லும் கதை தான். மற்றபடி சினிமா ஆஹாவுக்கும் இதற்கும் கதை சம்பந்தம் இல்லை. அதேநேரம் `ஆஹா'வில் ராஜேஸ்வரி என்ற கேரக்டரில் நடித்த பானுப்பிரியா இந்த தொடரிலும் அதே பெயரில் நடிக்கிறார். ஆஹா படத்தில் சமையல்காரர் கேரக்டரில் வந்து கலக்கிய டெல்லிகணேஷூக்கும் இந்த தொடரில் முக்கிய வேடம்.''


சின்னத்திரையில் தனது தொடர் பற்றி இப்படி சுருக்கமாக முன்னுரை தந்த இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணாவிடம், "எப்படி இருக்கிறது., சின்னத்திரை இயக்குனர் அனுபவம்?'' கேட்டோம்.


"நன்றாகவே இருக்கிறது. சினிமாவில் எப்படி செய்வேனோ அதே மாதிரிதான் இதிலும் என் உழைப்பு இருக்கிறது. ரஜினி நடித்த அண்ணாமலை படத்தை 45 நாட்களிலும், பாட்ஷா படத்தை 60 நாட்களிலும் முடித்தேன். இரண்டும் மிகப்பெரிய வெற்றிப் படங்கள். கதைக்களம் சரியாக அமைந்து விட்டால் சின்னத்திரையிலும் ஜெயிக்க முடியும் என்பதை இப்போது `ஆஹா' தொடர் நிரூபித்து இருக்கிறது.


அதோடு சினிமா மாதிரியே இந்த தொடரில் பா.விஜய் எழுதி, கார்த்திக்ராஜா இசையமைத்த நாலு பாடல்களை இடம்பெறச் செய்திருக்கிறேன். 2 பாடல்கள் ஒளிபரப்பானபோது அத்தனை ரெஸ்பான்ஸ். சின்னத்திரையில் சினிமாவைப் பார்க்கிறோம் என்கிறார்கள் ரசிகர்கள்.''


தொடரில் இதுவரை சின்னத்திரைக்கே உரிய வில்லன், வில்லிகள் வரவில்லையே?


"கதை இப்போது தான் அதற்கு இடம் கொடுத்திருக்கிறது. இப்போது அந்த வீட்டு மாட்டுப்பெண் வில்லி முகம் காட்டப் போகிறாள். அந்த வீட்டின் மாப்பிள்ளையும் அடுத்தடுத்த காட்சிகளில் வில்லனாக தெரிவார். இது கும்பகோணத்தில் நடக்கிற கதை. கூட்டுக் குடும்பம், அதற்குள் ஒரு அழகான காதல்ஜோடி. அவர்களுக்குள் வந்து போகும் சின்னச் சின்ன நிகழ்வுகள்... இப்படியான கதைப்பின்னணி ரசிகர்களை சுலபத்தில் தொடருக்குள் கொண்டு வந்து விட்டது. இப்போது அவர்களை அதிலேயே நிலைத்திருக்கச் செய்ய அடுத்தடுத்த திருப்புமுனைக் காட்சிகள் தொடரும். தொடரைத் தொடர்கிற அத்தனை ரசிகர்களும் தொடரின் தலைப்பை (ஆஹா) தொடர்ந்து சொல்லணும். அப்போதுதான்இயக்குனராக சின்னத்திரையிலும் ஜெயித்த சந்தோஷம் நிலைக்கும்.''


சினிமாவையும் தொடருவீர்கள் தானே?


"நிச்சயமாக. இப்போது கூட கன்னடத்தில் நான் இயக்கி வெளிவந்த 3 டி படமான கட்டாரி வீரா சுர சுந்தராங்கி, பெரிய ஹிட். திட்டமிட்டு பணியாற்றி பெரிய திரை சின்னத்திரை இரண்டிலுமே நீடிப்பேன். இரண்டிலுமே வெற்றி மட்டுமே பேசப்படும் என்பதால், வெற்றிக்கான என் உழைப்பும் கடுமையாக இருக்கும்.''
நன்றி: தினதந்தி

aanaa
3rd July 2012, 11:39 PM
http://www.youtube.com/watch?v=eSxLVAcWtGA&feature=player_detailpage

aanaa
3rd July 2012, 11:40 PM
http://www.youtube.com/watch?v=JBmaNjbFf6Q&feature=player_detailpage

aanaa
6th July 2012, 04:51 AM
http://www.youtube.com/watch?v=qL9p1xlzWho&feature=player_embedded

aanaa
6th July 2012, 04:51 AM
Saravanan Meenatchi Tirunelveli & Coimbatore Event To Air on 17th & 24th June on Vijay TV


http://www.dishtracking.com/blog/wp-content/uploads/2012/06/Saravanan-Meenakshi.jpg


Serials on Vijay TV have always been unique and not formulaic. Vijay TV has always stood out with unique storylines that have appealed to audiences of all ages; be it love stories, family dramas or stories on day-to-day lives. Saravanan Meenakshi is one of the most popular serial which is airing on Vijay TV Monday – Friday at 2030 hrs for more than 180 episodes now.

Vijay TV had conducted an event at Tirunelveli and Coimbatore to celebrate the pre-wedding ceremony of the most popular characters of the soap Saravanan and Meenakshi. As per the story line of 'Saravanan Meenakshi' the marriage sequences of the couple will be telecast during the end of July 2012 in the serial which is airing Monday to Friday at 2030 hrs. This is the first time ever that a couple which is so popular amongst viewers is celebrated and their wedding is anxiously watched by one and all.

A grand event celebrating the wedding ceremony of Saravanan and Meenakshi titled 'Hero Saravanan Meenakshi Thirumana Varaverppu powered by RMKV' was held at Tirunelveli and Coimbatore on 13th and 19th May 2012. Popular faces of Vijay TV including the cast and crew of the serial, Mirthi Senthil (Saravanan), Srija (Meenakshi), Rajasekar, Kuyili, Y.V. Subramaniam, Stalin, Ramya, Suchitra, Sai and many others graced the occasion and performed on stage. The serial is directed by Azhagar, story, screenplay, dialogue Kadhiravan and cinematography by Gopal.

The entire event held at Tirunelveli and Coimbatore will be aired on Vijay TV as special episodes on 17th and 24th June 2012 at 1230 hrs.

Story of "Saravanan Meenatchi"
Saravanan Meenakshi is a story of love, life and marriage; as the title establishes; the story revolves around the lives of the two characters Saravanan and Meenatchi. The story began as the two families of Saravanan & Meenatchi meet to for the traditional "visiting of the girl's house"; but things go wrong; and an enemity rises between the two families and the wedding doesn't happen. As their lives continue after that incident; Saravanan and Meenatchi find themselves falling in love with some twist of fate. The couple then decides to face all odds; convince their families and get married. After so many hurdles the marriage date is fixed for the couple and every one is eager to witness their wedding ceremony.

aanaa
8th July 2012, 11:03 PM
இரு மலர்கள்-100

ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் இரு மலர்கள் தொடர் நூறாவது எபிசோடை எட்டுகிறது. இரு தோழிகளுக்கிடையே நடக்கும் உணர்ச்சிமயமான போராட்டம் தான் தொடரின் கதைக்களம் என்பதால் கதையிலும் காட்சிகளிலும் ஜெட் வேகம்.


ரஞ்சனி, அமுதா இருவரும் கல்லூரி கால தோழிகள். ஒரு கட்டத்தில் அவர்களுக்குள் ஏற்படும் போட்டி, பொறாமையாக மாறி நிரந்தர எதிரிகளாக்கி விடுகிறது.


காலப்போக்கில் ரஞ்சனி ஒரு கம்பெனியை நிறுவி அதன் எம்.டி ஆகிறாள். அதேநேரம் அமுதா அவள் கம்பெனி உற்பத்திப்பொருள் தொடர்புடைய இன்னொரு நிறுவனம் ஒன்றில் அதிகாரியாகிறாள். தன் வியாபார நுணுக்கத்தில் ரஞ்சனியின் கம்பெனிக்கே தலைவலியாக அமைகிறாள். இதனால் அவள் தன் நிரந்தர எதிரி என்று தெரியாமல் அவளை தன் கம்பெனியில் வேலையில் சேர்க்க முயற்சி மேற்கொள்கிறாள், ரஞ்சனி. அதற்காக தன் மேனேஜர் அந்தஸ்தில் இருக்கும் சிவாவை தூதாக அனுப்புகிறாள்.


ஆனால் அமுதாவின் நிர்வாகத்திறமை, பழகும் தன்மை, பண்பாடு அத்தனையும் சிவாவை ஈர்க்க, அவள் மேல் காதலாகிறாள். அதையே அமுதாவிடம் வெளிப்படுத்த, அடுத்த கட்டமாய் அவர்கள் காதல் நிச்சயதார்த்தம் வரை வந்து விடுகிறது.


இதற்கிடையே ரஞ்சனிக்கும் சிவா மீது ஒருவித ஈர்ப்பு இருக்கவே செய்கிறது. ஒரு கட்டத்தில் அது அவளை `காதல்சொல்' என்கிறது. அந்த கட்டத்தில் சிவாவுக்கு நிச்சயதார்த்தம் என்பது தெரியவர, அதிர்ந்து காதலை உள்வாங்குகிறாள்.


நிச்சயதார்த்தத்திற்கு போகும் ரஞ்சனி, இனி ஜென்மத்துக்கும் யாரைப்பார்க்கக் கூடாது என்று எண்ணியிருந்தாளோஅதே அமுதாவை சிவாவின் வருங்கால மனைவியாக சந்திக்கிறாள்.அவளுக்குள் இருந்த ஊமைக்காதல் உடைந்து சிதறுகிறது.


இப்போது அமுதா அந்த நிச்சயதார்த்தத்தை தடுத்து நிறுத்தி தன் பணபலத்தால் சிவாவை கைப்பற்றுவாள் என்று தானே எண்ணத்தோன்றும். ஆனால் அப்படிச்செய்யாமல் அமுதாவிடம் போலி நட்பு பாராட்டிக் கொண்டே திருமணத்தை தடுக்கும் வேலையிலும் மறைமுகமாக இறங்குகிறாள். ஆனால் இது தெரியாத அமுதா அவள் திருந்தி விட்டதாகவே நினைக்கிறாள்.


அமுதாவுக்கு எப்போது உண்மை தெரியவரும்? அமுதா-சிவா திருமணம் தடையின்றி நடக்க ரஞ்சனி விடுவாளா என்பது எதிர்பார்க்க வைக்கம் பரபரப்பு திருப்பம்.


திரைக்கதை:பாபா கென்னடி. வசனம்: பாலமுருகன். இயக்கம்: தளபதி.


சிவாவாக உதய், ரஞ்சனியாக மகாலட்சுமி, அமுதாவாக அகிலா நடிக்கிறார்கள்.
நன்றி: தினதந்தி

aanaa
8th July 2012, 11:04 PM
சத்தியத்தை மீறும் காதல்

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய தொடர், `அமுதா ஒரு ஆச்சரியக்குறி.' டைரக்டர் கே.பாலச்சந்தரின் கவிதாலாயா நிறுவனம் வழங்கும் தொடர் இது.


எப்போதுமே `கலகல'வென்றிருக்கும் அமுதாவிடம் காலம் மவுனமாக விளையாடத்
துவங்குகிறது. ஒவ்வொருவரின் பிரச்சினைகளையும் தேடித்தேடிப்போய் தீர்ப்பவளின் வாழ்வில் ஒரு துயரம் எட்டிப் பார்க்கிறது. அவளது கணவன்செல்வன் ஒருநாள் விவாகரத்து கேட்கிறான். அதற்கும் அவள் பதில் சிரிப்பு தானா, அல்லது வெகுண்டெழுகிறாளா?


சந்தோஷமாக போய்க்கொண்டிருக்கும் மதி-பானு வாழ்க்கையில், மதியின் விதவை சகோதரி வடிவில் பிரச்சினை எட்டிப் பார்க்கிறது. மாலதி செய்யும் கொடுமைகளை கணவனிடம் சொல்ல முடியாமல் தவிக்கிறாள், மாலதி. அப்படியிருந்தும் மாலதியின் மனதிற்குள் ஒளிந்திருக்கும் ஆசை, மற்றும் வேதனையை அறிந்து கொள்ளும் பானு, அதை அமுதாவிடம் சொல்கிறாள். அதற்கு அமுதாவின் ரியாக்ஷன் என்ன?


தீபாவுக்கு மெல்ல மெல்ல ரகு மீது காதல் பிறக்கிறது. ஆனால் அப்பாவுக்கு செய்து கொடுத்த சத்தியம் அவளை தடுக்கிறது. ஆனால் காதலை சத்தியத்தால் பூட்டி வைக்க முடியுமா? ஒரு கட்டத்தில் தீபா தன் காதலை சொன்னபோது அதை ரகு ஏற்றானா?


தொடரின் நட்சத்திரங்கள்: ரேணுகா, அப்சர், காவ்யா, ஷில்பா, வசந்த், வெங்கட், விஜய்கிருஷ்ணராஜ், சுஜாதா, சுருதி, கனிகா, மாஸ்டர் சரண்.
நன்றி: தினதந்தி

aanaa
8th July 2012, 11:04 PM
பன்னிரு திருமுறை இசை

இசைக்கு வசப்படாதோர், ஆட்படாதோர் என எவரும் இவ்வுலகில் இல்லை. எதற்கும் மயங்காத இறைவனை இசையால் மயக்கி, ஏகாந்தமாய் வாழ்ந்தோர் இவ்வுலகில் ஏராளமானோர்.


எண்ணற்ற பதிகங்கள் இறைவன் மீது பணித்தோர் பலர் இங்கு அவதரித்தாலும், பலரில் சிலராக நால்வரை சொல்வதுண்டு அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் என தமிழாக இசையாக வாழ்ந்த இவர்கள் இறைவன் மீது கொண்ட அலாதியான பற்றுதலே அவர்களின் படைப்பாக உருவானது.


திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 12 மணிக்கு திருமுறை இசையாக ஸ்ரீ சங்கரா டி.வி இந்த பக்தி நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது.
நன்றி: தினதந்தி

aanaa
8th July 2012, 11:07 PM
மதன்பாப்பின் பாட்டு தர்பார் சன் டி.வி.யில் ஒளிபரப்பாகிறது





கிரியேட்டிவ் கோம்ப் நிறுவனம் சார்பில் அர்ச்சித் தயாரிக்கும் நிகழ்ச்சி, ‘பாட்டு தர்பார்’. மதன்பாப் நடத்துகிறார். மே 6-ம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 10 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பாகிறது. இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்த நிகழ்ச்சி 3 பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதி ‘பாட்டோட கதை கேளு’. பாடல் பிறந்த கதை, சிறப்பு உள்ளிட்ட விவரங்களை சொல்வேன். இரண்டாவது பகுதி ‘சிரிப்பு மழை’. இதில் மிமிக்ரி கலைஞர்கள் சிரிக்க வைப்பார்கள். அடுத்து, ‘என் கேள்விக்கு என்ன பதில்’. இதில் திரைப்பட கலைஞர்களை பேட்டி காண்கிறேன். ஒரு காப்பி ஷாப்பில் நடப்பது மாதிரியான நிகழ்ச்சி. அதனால் பிரமாண்ட செட் போட்டு படமாக்கி வருகிறோம். இவ்வாறு மதன்பாப் கூறினார்.

aanaa
9th July 2012, 11:58 PM
நல்ல நாவல்கள் டிவி தொடராக வேண்டும்





கோலங்கள்’ திருசெல்வம் தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் புதியதாக தயாரித்து, இயக்கி, நடிக்கும் தொடர் ‘பொக்கிஷம்’. இத்தொடரை பற்றி அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டது.
என்ன மாதிரியான பொக்கிஷம் மக்களுக்கு கொடுக்க போறீங்க?




பொக்கிஷம் சொல்ல வருகிற விஷயம் என்னவென்றால் இப்போ நம்நாடு நாகரீக வளர்ச்சியடைந்து விட்டது. இதில் ஆண்களும், பெண்களும் தனித்து அவரவர் வாழ்க்கையை சந்திக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். இதில் பலருக்கும் சேர்த்து வைக்க வேண்டியது என்ன வெட்டிவிடுகிற விஷயம் என்ன என்கிற குழப்பநிலையில் தான் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது. நாகரீக வளர்ச்சியின் காரணமாக உடை, நடை பாவனை வேண்டுமானல் மாறியிருக்கலாம். ஆனால் அடிப்படையில் கணவன், மனைவி குடும்பம் என்கிற உறவுமுறைகளில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதில் எதை நாம தொலைக்கிறோம், எதை தேவையில்லாமல் இணைத்துக் கொள்கிறோம் என்பதை சொல்வது தான் பொக்கிஷம். பொதுவா தங்க குவியல், புதையல் அல்லது பல காலமாக பத்திர படுத்தி வரும் பொருட்களையோ தான் பொக்கிஷம் என்பார்கள். ஆனால் என்னை பொருத்தவரை நல்ல மனித நேயம் உள்ள மனிதர்களின் குணத்தை தான் பொக்கிஷம் என்பேன். ஒரு தாய்க்கு மகன் பொக்கிஷம், ஒரு மனிதனுக்கு நல்ல நண்பன் ஒரு பொக்கிஷம். இப்படி ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நல்ல கேரக்டர்கள் வருவார்கள். அதை நீங்கள் தொலைத்துவிட்டீர்கள் என்றால். உங்கள் பொக்கிஷத்தை இழந்து விடுவீர்கள் ஆனால் அதன்பிறகு நீங்கள் தேடி அடைகிற பொக்கிஷம் என்பது உயிரற்ற வெறும் பொருட்களாக தான் இருக்கும் அதில் முழுமையான சந்தோஷம் கிடைக்காது. வரும் காலங்களில் இந்திய உறவுமுறைகளை பற்றியும், இது தான் சரியான வாழ்க்கை முறை என்று மேலை நாடுகளில் கூட பேசக்கூடிய தருணங்கள் வரும் காலக்கட்டங்களில் நாம் ஏன் அதைப் பற்றி யோசிக்ககூடாது என்பதை சொல்வது தான் பொக்கிஷம்.




ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்ட கணவன் மனைவிக்குள்ள அவர்களை சுற்றி இருக்கும் உறவுகளால் ஏற்படும் பிரச்சனைகள், பெண் விடுதலையைப் பற்றி பெண்கள் சுதந்திரத்தை நிறைய பேசும் பெண்கள் திருமணத்திற்கு பிறகு எப்படி மாறிப் போகிறார்கள் என்பதை எல்லாம் நோக்கி தான் கதை நகர்கிறது. தொடர் இப்போது தான் ஆரம்பித்திருக்கிறது அதனால கதையை பற்றி இதற்கு மேல் சொன்னால் பொக்கிஷத்தின் மீதுள்ள ஆர்வம் குறைந்துவிடும்.




‘பொக்கிஷம்’ தலைப்புக்கு காரணமென்ன?




பொக்கிஷம்ங்கிற வார்த்தை எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் அடிக்கடி உபயோகப்படுத்தும் வார்த்தையும் கூட, போகலங்கள் தொடரில் கூட பார்த்தீங்கன்னா நிறைய இடத்தில் நட்பை பற்றி சொல்லும் போது பொக்கிஷம்ங்கிற வார்த்தையை உபயோப்படுத்தியிருப்பேன். அப்போவே அடுத்த தொடர் பண்ணும்போது பொக்கிஷம்னு தான் டைட்டில் வைக்கனும்னு நினைத்திருந்தேன். இந்த தொடரின் கதையும் அதற்கு பொருத்தமா அமைந்தால் அந்த தலைப்பையே வைத்துவிட்டேன்
.
பொதுவா சீரியல் ஹீரோயின்கள் எப்போதும் அழுது கொண்டே இருப்பார்கள்? உங்கள் ஹீரோயின் எப்படி?




எங்கள் ஹீரோயின் ரொம்ப பாஸிட்டிவ்வான ஹீரோயின். இது வழக்கமான சீரியலாக இருக்காது. கண்டிப்பாக ஆடியன்ஸுக்கு பிடிக்கும். வேலைக்கு போகும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளும் இந்த களத்தில் இருக்கிறது. அதேப் போல இன்வஸ்ட்மண்டுக்காக போகும் பெண்களை பற்றியும் இதில் சொல்லியிருக்கிறேன். இதுப் போன்ற இன்வஸ்ட்மெண்ட் வேலை செய்யும் வயதான பெண்களை சந்தித்து பேசினோம். அப்போ அவர்கள் என்ன மாதிரி பிரச்சனைகளையெல்லாம் சந்திக்கிறார்கள்னு சொல்லும் போது தான் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறதான்னு தோன்ணுச்சு. இதையெல்லாம் ரொம்ப ஸ்போட்டிவ்வா எடுத்து கொள்கிற கேரக்டர் தான் நாம ஹீரோயின். ஒரு சின்ன பில் இருக்கும் அதற்காக கலங்கி நிக்கிறவள் கிடையாது.
உங்கள் எபிசோட்க்கான கதைகளை எப்படி தயார் செய்கிறீர்கள்?




முதலில் ஒரு பேஸ் எடுத்துக் கொண்டு அதிலிருந்து அப்படியே எடுத்துச் செல்வோம். இதில் நான் ஸ்பேஷலா எடுப்பது என்னன்னா அந்த சம்பவம் எங்காவது நடந்திருந்தால் அதை ரெபரன்ஸுக்கு எடுத்துக்கொள்வேன். அடுத்து நாம வாழ்க்கையில் என்னவெல்லாம் நடக்கிறது என்பதை வைத்து மக்களுக்கு அைதை சொல்ல நினைக்கிறேன். ஒரு பொண்1 வேலைக்கு வருகிறாள் என்றால். எங்கள் குடும்பத்தை சொல்லனும், குடும்பத்தை சார்ந்தவர்களை சொல்லனும், பிறகு அவள் தினமம் வந்து போகிற வழியை சொல்லனும் பிறகு வேலை செய்கிற இடத்தை பற்றி சொல்லனும் அதன்பிறகு தான் அவளுடைய பிரச்சனை சொல்லனும். இதை சொல்வதற்கு கிளைக்கதைகள் நிறைய கிடைக்கும். அதை எப்படி இண்டரஸ்ட்டா சொல்கிறோம் என்பது தான் கதை. உண்மையா சொல்லனும்ன்னா உண்மையோட கொஞ்சம் கற்பனை கலந்து மெருகுட்டுவது தான் கான்சப்ட்.




நெடுந்தொடர் என்பதற்காக பல வருஷங்கள் ஒரு தொடரை இயக்குவது சரியா?


ஒரு நெடுந்தொடரை பொருத்தவரை. சினிமா போன்று 60 சீன்களில் முடிகிற விஷயம் கிடையாது. இது ஒரு செய்திதாள் மாதிரி நேற்றை விஷயங்களையும் அதில் இணைக்கலாம். அதுப்போன்ற நல்ல விஷயத்தை ஏன் ஒரு மாதம் ரெண்டு மாதம்னு குறுகிய காலத்தில் முடிக்க வேண்டும். ஒரு விஷயம் என்னவென்றால் நம்ம ஊர் ஆளுங்களுக்கு ஒருவன் வளருவதும் பிடிக்காது, வளராம இருப்பதும் பிடிக்காது. இது ரெண்டுக்கும் இடையில் போராடுகிற ஒரு மனோ நிலை இருக்கும். அதனால நம்ம சொல்ல வந்த விஷயத்தை சரியா யூஸ் பண்ணும் தப்பா யூஸ் பண்ணக் கூடாது அதையும் இந்த நேரத்துல சொல்லிக் கொள்ள நினைக்கிறேன். வெளிநாடுகளில் பார்த்தீங்கன்னா ஒரு சில தொடர்கள் பத்து வருடம், 12 வருடம் வெற்றி கரமா இயக்கியிருக்காங்க, ஒரு சில தொடர்கள் இன்னுமும் தொடர்ந்து போய்கிட்டு இருக்கு. அந்த ஊர்ல பார்த்தீங்கன்னா அந்த தொடரில் நடிக்கும் நடிகர்கள் தான் டாப்ஸ்டார்ஸ்ஸா இருக்காங்க. அவங்க டிவிக்குன்னு ஒரு தளம் ,கலர் வெச்சிருக்காங்க. நம்ம ஊர்ல அது ஒரு தப்பு நடக்கது அதை நான் இல்லன்னு மறுக்கல. அதிலிருந்து மாறுபட்டு என் சீரியல்களை கொண்டு வரணும்ன்னு நினைக்கிறேன். சினிமாவில் கொடுக்கிற விஷயங்களையே என் தொடர்களிலும் கொடுக்கக் கூடாதுன்னு நினைக்கிறேன். அதற்காக சில வித்தயாசங்கள் செய்ய நினைக்கிறேன். எத்தனையோ நல்ல நாவல்கள் இருக்கிறது. அதையெடுத்து தொடர் செய்யனும்னு ஆசையிருக்கு. ஆனால் அதற்காக நிறைய மெனக்கெடனும். சேனல்ஸ் ஒத்துக்கனும். மார்க்கெட்டிங் சப்போர்ட் பண்ணனும் எல்லாரும் இதை வெறும் பிஸினஸா பார்க்னாம , பேரா பார்த்தால் நிச்சயமா அடுத்து கட்டத்துக்கு சீரியல்கள் போகும். ஆனால் இந்தக் காலக்கட்டதுல அதுப்போல யாரும் பார்க்கதில்ல. அதே சமயத்தில் சேனல்கள் நம்மை நம்பி சேனல்கள் சலாட் கொடுக்கும் போது அதை சிறப்பா செய்து கொடுக்கனும். இதுலயும் நிறைய நல்ல விஷயங்களை சொல்லலாம். இந்தத் தொடரை பொருத்தவரை நிறைய யூமர் இருக்கும்.


உங்க ஹீரோயின் புதுசா இருக்காங்களே அவங்களை பற்றி சொல்லுங்க?


அவங்க பேரு மீரா கிருஷ்ணா. மலையாளத்தில் ரெண்டு படங்கள் நடிச்சிருக்காங்க. மலையாள தொடர்களில் நடிச்சிருக்காங்க. இந்தக் கதைக்கு புதுசா யாராவது இருந்தால் நல்ல இருக்கும்னு தேடினோம். அப்ப நடிகை வனிதா மேடம் இருக்காங்கில்லையா அவங்க தான் மீராவை பற்றி சொன்னாங்க. உங்க கதைக்கு பொருத்தமா இருப்பாங்கனு. சரின்னு வரச் சொல்லி பார்த்தோம். கதைக்கு பொருத்தமா இருந்தாங்க சரின்னு அவங்களையே செலக்ட் பண்ணிட்டோம். அவங்க மலையாளத்தில் ஸ்டேட் அவார்ட் வாங்கினவங்க. பெஸ்ட் சீரியல் ஆர்ட்டிஸ்ட் அவார்ட்டும் வாங்கினவங்க. ஆனா இப்ப சென்னையில் தான் செட்டில் ஆகிட்டாங்க.

நீங்கள் பெரியதிரையில் ஒரு படம் இயக்குகிறிர்களாமே?

ஆமாம் படம் இயக்குவதற்காக எல்லாம் தயார் செய்துள்ளோம் நல்ல படியா அமைந்தது. அந்த தயாரிப்பாளர் இப்ப கொஞ்சம் பிஸியா இருப்பதால அது தள்ளி போட வேண்டியது ஆகிடுச்சு.

உங்க பொக்கிஷம் டீம் பற்றி சொல்லுங்க?


கதை, திரைக்கதை, தயாரிப்பு, இயக்கம் நான். என்னோட பிரியாவும் வசனங்கள் எழுதறாங்க. ஒளிப்பதிவு தியாகராஜன், படத்தொகுப்பு கெளரி ரமேஷ், நவநீத் சுந்தர் டைட்டில் சாங் எழுதி கொடுத்திருக்காரு. அந்தப் பாடலை ஏர்டெல் சூப்பர் சிங்கர்ல வந்த நிவாஸ் பாடியிருக்கார். பாட்டை கேட்டு நிறைய பேர் பாராட்டு தெரிவித்தார்க்ள்.

உங்களை பற்றி சொல்லுங்கள்?


தாஞ்சாயூர் பக்கத்தில் உள்ள பட்டுக்கோட்டை தான் எனக்கு சொந்த ஊர். எங்க ஊர்ல அப்போது எல்லாம் ஒரு வழக்கம் இருந்தது. ஆண்களுக்கு 18, 19 வயது ஆகும் போதே திருமணம் செய்து விடுவார்கள். அப்படி எனக்கும் கல்லூரியில் படித்துக் கெண்டிருக்கும் போதே திருமணம் ஆகிவிட்டது. என் மனைவி பேர் பாரதி. அப்போ நான் சினிமாவுக்குள்ள வருவேன் என்று நினைத்து கூட பார்த்தது கிடையாது. கல்லூரி முடித்து என்ன செய்யலாம் என்று நினைக்கும் போது. ஊமை விழிகள் படம் ரீலிஸ் ஆகி திரைப்பட கல்லூரி மாணவர்களை பற்றி நிறைய டிஎப்ட்டி, டிஎப்ட்டி என்று பிரபலமாக பேசினார்கள். இது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதனால மனைவியை அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்தேன். திரைப்பட கல்லூரி சேர்ந்து படித்தேன். அதன்பிறகு சவுண்ட் எண்ஜியனராக பிரசாத் லேப், இளையராஜா சார்கிட்ட எல்லாம் ஓர்க் பண்ணினேன்.

சில டாக்குமண்ட்ரி படங்கள் எடுத்திருக்கிறேன். அந்த நேரத்துல என்னோட திரைப்பட கல்லூரியில் படித்த என் நண்பர் திருமுருகன். ஒரு காவேரி என்ற தொடரை இயக்க போவதாக சொல்லி கூப்பிட்டார். அதன் பிறகு மெட்டி ஒலி ஆரம்பித்தார்கள். அந்த நேரத்துல விகாடன் இருந்து எனக்க வாய்ப்பு வந்தது. அதன்பிறகு கோலங்கள் ஆரம்பித்தேன்.

இப்படி சின்னதிரைக்குள்ள வந்தேன். எனக்கு ஒரு மகள் தான் அவள் பேரு பிரியதர்ஷினி. ஆனால் அபி என்று தான் கூப்பிடுவேன். அவள் பெயரை வைத்து தான் கோலங்கள் தொடரில் தேவயாணி அவங்க கேரக்டருக்கு அபின்னு பேரு வைத்தேன்..

aanaa
15th July 2012, 03:21 AM
புகுந்த வீடு

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வரும் திங்கள் முதல் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடர், `புகுந்த வீடு.'


தமிழாசிரியர் ராமநாதனின் ஒரே மகள் ராதா. தன் மனைவியை ராதா குழந்தையாக இருக்கும்போதே இழந்து விட்ட ராமநாதன் ஒரு தாயாய், தந்தையாய் ராதாவுக்கு செய்யவேண்டிய கடமையை செய்து திருமணத்துக்கு நாள் குறிக்கிறார். ஆனால் எதிர்பாராத விதமாய் அந்த திருமணம் தடைபட்டு மண மேடையில் மாப்பிள்ளையை போலீஸ் கைது செய்கிறது.


இந்த நிலையில் திருமணத்துக்கு வந்திருக்கும் தாசில்தார் ஜாதகக் கோளாறுள்ள தன் மகன் விசுவநாதனை இதுதான் சந்தர்ப்பம் என்று மேடையேற்றி தாலிகட்டச் செய்கிறார்.


நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும் என்ற கனவுடன் புகுந்த வீட்டில் அடியெடுத்து வைக்கும் ராதா, வீடு நிறைய உறவுகள் இருந்தும் ஆதரவின்றி அனாதை போல் வாழ நேரிடுகிறது. இருப்பினும் தன் தந்தையின் நிம்மதியை மனதில் கொண்டு புகுந்த வீட்டில் தான் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மறைத்து எப்போதும் சந்தோஷமாக இருப்பது போல் காட்டிக் கொள்கிறாள்.


ராதா சந்தித்த பிரச்சினைகள் என்ன? அவற்றை எவ்வாறு எதிர்நோக்கி பீடு நடை போடுகிறாள் என்பது கதைக்களம். சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் தயாரிக்க, நித்யானந்தம் இயக்குகிறார். கதை, திரைக்கதை: இந்திரா சவுந்திரராஜன். திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது, தொடர்.
நன்றி: தினதந்தி

aanaa
15th July 2012, 03:23 AM
காதம்பரி -100

ஜெயா டிவியில் திங்கள் முதல்வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `காதம்பரி' வரலாற்றுத் தொடர், நூறாவது எபிசோடைத் தாண்டியிருக்கிறது. விறுவிறுப்பான சரித்திரப் பின்னணி கதையின் பலம்.


வரலாற்றுக் கதைகளை திரைக்குத் தருவது என்பது அத்தனை சுலபமல்ல. முதலில் அதற்கு சரியான கதைக்களம் அமைய வேண்டும். நவீன கால தொழில்நுட்பம் எதுவும் திரையில் வந்து விடக்கூடாது. நடிப்பவர்களின் நடை, உடை, பாவனை, உச்சரிப்பு அத்தனையும் அப்படியே கடந்த கால வரலாற்றை பிரதிபலிக்க வேண்டும்.


காதம்பரி தொடர் இந்தப் பட்டியலுக்குள் வரக்காரணமே அதன் படைப்புக் களமும், படமாக்கிய களங்களும் தான். எத்தனை உன்னிப்பாக கவனித்தாலும் நிகழ்கால எந்த தடயமும் தொடரில் பார்க்க முடிவதில்லை.


கதை 1812-ம் வருடம் நடக்கிறது. மன்னர் வருகிறார். மக்கள் வருகிறார்கள். எல்லாருமே இருநூறு ஆண்டுகள் பின்தங்கியவர்கள். அவர்கள் தோற்றம், பேச்சு, நடவடிக்கை எதிலுமே இன்றைய கலாசார பாதிப்பு ஒருசிறிதும் இல்லை.


நூறு எபிசோடை தாண்டி விட்ட காதம்பரி தொடரின் இயக்குனர் எஸ்.பிரபுசங்கருக்கு வாழ்த்து சொன்னபோது கொஞ்ச நேரம் மனம்விட்டு பேசினார்.


"வரலாற்றை அந்த வரலாற்றுக் காலத்துக்கே போய் கதை சொல்லும் உத்தி தான் தொடரின் வெற்றிக்கு காரணமா?''


"வரலாற்றுக் கதைகளை அப்படியே எடுக்க முடியாது. 10 சதவீத உண்மைச் சம்பவத்தை எடுத்துக் கொண்டு 90 சதவீதம் கற்பனை கலந்தே தருகிறோம். இந்தத் தொடர் மன்னர்கள் காலத்தில் நடப்பதாக காட்டப்பட்டாலும், அந்த மன்னர் யார் என்பதை கதைக்குள் சொல்லவில்லை. பொதுவாக மன்னன் என்பதாக கதைப்படுத்தி விட்டு காட்சியின் நம்பகத் தன்மையை மட்டும் சரியாக செய்கிறோம். அதில் நிறைய சமூக அக்கறையுடன் காட்சிகளை அமைக்கிறோம். மத வேறுபாடுகள், ஜாதிப்பிரச்சினைகள் மாதிரியே கல்விக்கான முக்கியத்துவத்தையும் காட்சிப்படுத்தியிருக்கிறோம். அதற்கு ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பு தான் என்னை அதிக உற்சாகத்தில் வைத்திருக்கிறது.''


கதையின் நாயகிக்கு கிடைத்த களம் புதியது. எந்தத்தவறும் செய்யாத ஒரு இளம்பெண் இழந்தது என்ன என்பது தான் கதையின் மைய முடிச்சு. அந்த கேரக்டருக்குள் ஹர்ஷா நாயர் அத்தனை பாந்தமாக பொருந்தியிருக்கிறார்.''


இயக்குனர் ஏற்கனவே அழகான நாட்கள், சதிலீலாவதி என 2 சமூகத் தொடர்களை இயக்கியவர். சரித்திரம் இது தான் முதல்.
நன்றி: தினதந்தி

aanaa
15th July 2012, 03:24 AM
சிவம்

விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர் சிவம்.


மகாராஜா தக்ஷராஜன் விஷ்ணுவின் சிலையை உருவாக்கி அதற்கு கோவில் அமைத்து பூஜை செய்ய ஏற்பாடு செய்கிறார். பூஜையின் போது சிலை முழுமையடையாமல் இருப்பதைக் கண்டு காஷீப முனிவரும் சிலரும் அதிர்ச்சியடைகின்றனர். முழுமையடையாத அந்த இறைவனின் சிலையை பிரதிஷ்டை செய்ய முடியாது என்று தக்ஷமகாராஜனுக்கு தெரிவிக்க, உடனே தக்ஷன் நாராயணி பூஜை செய்ய முனைகிறார். அந்த பூஜைக்கு தேவையான பாரிஜாத மலர்களை தக்ஷனின் மகள் சதி, எடுத்து வருவதற்கு தனது சகோதரிகளுடன் செல்கிறாள். அவளுக்கு பாரிஜாத மலர்கள் கிடைத்ததா? சிலை முழுமையடைந்ததா என்பது அடுத்து வரும் காட்சிகள்.
நன்றி: தினதந்தி

aanaa
15th July 2012, 03:25 AM
10 நிமிட கதைகள்

மக்கள் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது, `10 நிமிட கதைகள்'


நிகழ்ச்சி.இளம் படைப்பாளிகளை உலகிற்கு அறிமுகம் செய்யும் வகையில் 10 நிமிடக் கதைகள் என்ற குறும்பட போட்டித் தொடரினை மக்கள் தொலைக்காட்சி நடத்தியது. கடந்த சில மாதங்களாக நடந்த இப்போட்டித் தொடரில் மொத்தம் இரண்டு சுற்றுகள் இடம் பெற்றன.


முதல் சுற்றில் இடம் பெற்ற குறும்படங்கள் அனைத்தையும் நடுவரின் பார்வைக்கு கொண்டு சென்று அவர்கள் அளித்த மதிப்பீடுகளின் அடிப்படையில் இரண்டாவது சுற்றுக்கு 15 குறும்படங்களை தேர்வு செய்தனர். தேர்வு செய்த குறும்பட குழுவினருக்கு புதிய தலைப்புகள் வழங்கி அதற்கேற்றாற்போல் குறும்படங்களை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். அதன்படி பல்வேறு கதைக்களம் கொண்ட குறும்படங்கள் ஒளிபரப்பானதில் இருந்து சிறந்த மூன்று குறும்படங்கள் தேர்வாயின.


முதல் இடத்தை `நேருக்கு நேர்' என்ற குறும்படம் தட்டிச் சென்றது. இரண்டாவது இடத்தை `கண்டுபிடி' என்ற குறும்படமும், மூன்றாவது இடத்தை `அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்' என்ற குறும்படமும் தட்டிச் சென்றன.


பரிசளிப்பு நிகழ்ச்சியில் மக்கள் தொலைக்காட்சியின் ஆலோசகரான சவுமியா அன்புமணி தலைமை தாங்கி, வெற்றி பெற்ற குறும்பட குழுவினருக்கு பரிசுகளை வழங்கினார். திரைப்பட இயக்குனர்கள் வியட்நாம் வீடு சுந்தரம், ஞானராஜசேகரன், எஸ்.ஏ.சி.ராம்கி, விஜயபத்மா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
நன்றி: தினதந்தி

aanaa
15th July 2012, 03:26 AM
ஆனஸ்ட்ராஜ்


திங்கள் தோறும் இரவு 9 மணிக்கு வசந்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய தொடர் `ஆல் ரவுண்டர் ஆனஸ்ட்ராஜ்.' இந்த கேரக்டரில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக வருகிறார், நடிகர் செந்தில்.


எந்த சூழலிலும் லஞ்சம் வாங்குவதில்லை என்பதை கொள்கையாக வைத்திருக்கிறார் செந்தில். அவர் மனைவியோ லஞ்சம் வாங்கினால் என்ன தப்பு என்று கேட்கிற ரகம். செந்தில் தன் கொள்கையில் இறுதிவரை நிலைத்திருந்தாரா என்பதை நகைச்சுவைக் களத்தில் விவரிக்கிறது, தொடர்.


எழுத்து, இயக்கம்: ஜெயமணி.!
நன்றி: தினதந்தி

aanaa
19th July 2012, 09:48 PM
விஜய் டிவியில் புத்தம் புதிய மெகா தொடர் காஞ்சனா!


http://img1.dinamalar.com/cini//CNewsImages/NT_120718164807000000.jpg





விஜய் டிவியில் வரும் ஜூலை 23ம் தேதி முதல் காஞ்சனா என்ற புத்தம் புதிய தொடர் ஒளிபரப்பாகிறது.

பூஜா இத்தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.
அழகர் இயக்க இந்தத் தொடர் ஒரு அழகான கிராமத்திற்கு நேயர்களை அழைத்துச் செல்கிறது.
கல்வி மேற்படிப்பிற்காக வெளிநாட்டில் வாழும் காஞ்சனா தன் கிராமத்தையும், தன் தாத்தா *பாட்டியையும் பார்க்கும் ஆவலில் அவளது கிராமத்திற்கு வருகை தருகிறாள்.
காஞ்சனாவை பார்க்கும் அவளது சொந்தங்கள் மகிழ்ச்சியடைந்தாலும் அவர்களுக்குள் அவளை பார்த்த மாத்திரத்தில் இருந்து கவலை தொற்றிக்கொள்கிறது.
அதற்கான காரணம் என்ன.அவள் எதிர் நோக்கும் சம்பவங்கள் பல அவளை பல உண்மைகளை அறியத்தூண்டுகிறத.

அவள் ஆசையாக விரும்பி வாங்கும் ஒரு பட்டுப்புடவையில் நைதிருக்கும் படங்கள் அவள் வாழ்க்கையில் நடந்த, நடக்கவிருக்கும் சம்பவங்களை குறிக்கின்றன.
ஒரு புதிராக செல்லும் அவளது வாழ்க்கையில் அவருக்கு அதிர்ச்சியளிக்கக் கூடிய சம்பவங்கள் நடக்கின்றன.


அதில் மறைந்திருக்கும் மர்மங்கள் என்ன? அவள் யார்? எதற்காக அவள் அந்த ஊருக்கு வரவேண்டும்?
காஞ்சனா எனபவள் ஒரு தனி நபர் அல்ல, அவளைப்போன்று ஏழு சக்தி உள்ளன என்ற உண்மையை அவள் அறியும் நேரம் வருகிறது.
அந்த சக்திகளை அவள் தேடிச்செல்வாளா? இல்லையா? என்று காஞ்சனா தொடரை விருவிருப்பாகவும், மர்மங்கள் நிறைந்த தொடராகவும் வழங்விருக்கிறார் அழகர்.

வரும் ஜூலை 23ம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது காஞ்சனா என்ற புத்தம் புதிய மெகா தொடர்.


காஞ்சனா

விஜய் டிவியில் வரும் திங்கள் முதல் ஒளி பரப்பாகவிருக்கும் புதிய தொடர் காஞ்சனா.


கிராமத்திற்கு தனது தாத்தா-பாட்டியை பார்க்க வருகிறாள், காஞ்சனா. முதன் முதலாக அந்த கிராமத்திற்கு அவள் வந்தாலும், பல நாள் அவளிடம் பழகியது போல் அங்குள்ள மக்கள் அவளிடம் பேசி பழகுகின்றனர். ஆனால் அவளை பார்த்த தாத்தா-பாட்டியோ பயப்படுகிறார்கள்.


தாத்தா - பாட்டி பயந்தது போலவே அடுத்து நடக்கும் பல சம்பவங்கள் அவளை அதிர்ச்சியில் உறைய வைக்கின்றன.


அவள் யார்? அவளைப் பார்த்தும் ஊரே மகிழ்ச்சி முகம் காட்ட, அவள் வருகையில் அவள் தாத்தா-பாட்டி மட்டும் எதற்காக பயப்பட வேண்டும்? சஸ்பென்சான இந்த தொடரை இயக்குபவர் அழகர். இவர் சரவணன்-மீனாட்சி தொடரின் இயக்குனரும் கூட.


திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது, இந்த தொடர்.
நன்றி: தினதந்தி



http://blog.techsatish.net/2012/07/kanchana-vijay-tv-news-serial-promo.html

aanaa
19th July 2012, 09:49 PM
நித்தியானந்தம் இயக்கத்தில் புகுந்த வீடு! ஜீ டி.வி.யில் புதிய தொடர்!



ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புகுந்த வீடு என்ற பெயரில் புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ளது.
இந்திரா சவுந்திர ராஜன் கதை, திரைக்கதை எழுதியிருக்கும் இந்த தொடரை நித்தியானந்தம் இயக்குகிறார்.
கதைப்படி, தமிழாசிரியர் ராமநாதனின் ஒரே மகள் ராதா.
தன் மனைவியை ராதா குழந்தையாக இருக்கும்போதே இழந்து விட்ட ராமநாதன் ஒரு தாயாய், தந்தையாய் ராதாவுக்கு செய்யவேண்டிய கடமையை செய்து திருமணத்துக்கு நாள் குறிக்கிறார்.
ஆனால் எதிர்பாராத விதமாய் அந்த திருமணம் தடைபட்டு மண மேடையில் மாப்பிள்ளையை போலீஸ் கைது செய்கிறது.


இந்த நிலையில் திருமணத்துக்கு வந்திருக்கும் தாசில்தார் ஜாதகக் கோளாறுள்ள தன் மகன் விசுவநாதனை இதுதான் சந்தர்ப்பம் என்று மேடையேற்றி தாலிகட்டச் செய்கிறார்.
நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும் என்ற கனவுடன் புகுந்த வீட்டில் அடியெடுத்து வைக்கும் ராதா, வீடு நிறைய உறவுகள் இருந்தும் ஆதரவின்றி அனாதை போல் வாழ நேரிடுகிறது.
இருப்பினும் தன் தந்தையின் நிம்மதியை மனதில் கொண்டு புகுந்த வீட்டில் தான் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மறைத்து எப்போதும் சந்தோஷமாக இருப்பது போல் காட்டிக் கொள்கிறாள்.
ராதா சந்தித்த பிரச்சினைகள் என்ன? அவற்றை எவ்வாறு எதிர்நோக்கி நடை போடுகிறாள் என்பது கதைக்களம்.
சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கும் இத்தொடர், திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

aanaa
23rd July 2012, 12:21 AM
லிட்டில் மாஸ்டர்ஸ்-சீசன்-4

வாரந்தோறும் வெள்ளி மற்றும் சனி இரவு 9 மணிக்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் நடன நிகழ்ச்சி, `லிட்டில் மாஸ்டர்ஸ்.'


தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக குருகுலம் முறையை பயன்படுத்திய நிகழ்ச்சி, இது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகள் இன்று சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் நட்சத்திரங்களாக ஜொலித்து வருகின்றனர்.


2012-ல் லிட்டில் மாஸ்டர்ஸ் சீசன் நான்கிற்கான முதற்கட்ட தேர்வு சென்னை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் மக்களின் ஏகோபித்த வரவேற்புடன் நடைபெற்றது. இதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இருபது போட்டியாளர்கள் பிரம்மாண்டமான அரங்கில் நடைபெற இருக்கும் இந்த நடன யுத்தத்தில் பங்கேற்பார்கள். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களை பரிசோதிக்கும் பல்வேறு வகையான நடன சுற்றுக்கள் இடம் பெறும்.


நடிகர்கள் பிருத்விராஜ் மற்றும் ராகவ் நடுவர்களாகவும், போட்டியாளர்களை வழி நடத்தும் குருக்களாகவும் இடம் பெறுவர். நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் பாலாஜி.
நன்றி: தினதந்தி

aanaa
23rd July 2012, 12:23 AM
`கஸ்தூரி'யில் தொடங்கிய காமெடிப்பாதை!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சமீபத்தில் நிறைவு பெற்ற `பிரிவோம் சந்திப்போம்' தொடர், முற்றிலும் புதிய கதைக்களத்தில் ரசிகர்களை கவர்ந்த தொடராகி இருக்கிறது. இந்த தொடரில் கஸ்தூரி என்ற கேரக்டரில் கலகலப்பாக வந்துபோன ஹேமலதா, சிறந்த காமெடி நடிகையாகவும் ரசிகர்களிடம் பதிந்து போனார்.


தொடரில் வேலைக்காரியாக வந்து ஒவ்வொரு முறையும் நாயகனை கலாய்ப்பதும், ஏமாற்றி காசு வாங்குவதுமாய் இவரது காமெடி கலகலப்பின் உச்சம்.


ஹேமலதாவை `மலைக்கோவில்' படப்பிடிப்பு தளத்தில் சந்தித்தபோது, "ஆச்சி மனோரமா, கோவை சரளாவுக்கு பிறகு நல்ல காமெடி நடிகை என்ற இடத்துக்கு வந்து விட்டீர்கள் போலிருக்கிறதே?'' கேட்டோம்.


பதிலுக்கு கொஞ்சம் வெட்கம் கலந்த புன்னகையை உதிர்த்தவர், "நகைச்சுவை நடிப்பில் சிகரம் தொட்ட அவர்கள் எங்கே? நான் எங்கே? என்றாலும் அவர்கள் காட்டிய காமெடிப் பாதையில் நான் அடியெடுத்து வைத்திருக்கிறேன். அதற்கான வாய்ப்பு `பிரிவோம் சந்திப்போம்' தொடரில் அமைந்தது. இந்த தொடரில் வரும் கஸ்தூரி கேரக்டருக்கு கிடைத்த வரவேற்பு இனி காமெடி பாதையில் தொடரலாம் என்ற நம்பிக்கையை எனக்குள் விதைத்திருக்கிறது. அது மட்டும் உண்மை'' என்கிறார்.


அத்திப்பூக்கள் தொடரில் இதற்கு நேர்மாறான கேரக்டரில் வருகிறீர்களே?


"அதில் கதை வேறு. என் கேரக்டருக்கான நடிப்புக்களம் வேறு. அடுத்து வரும் தொடர்களில் காமெடிகேரக்டர் அமைந்தால் உற்சாகமாக நடிப்பேன்.''


சினிமாவிலும் இனி காமெடி நடிப்பை கெட்டியாக பிடித்துக் கொள்வீர்களா?


"பெரியதிரையில் `மலைக்கோவில்' படத்தில் சுமன்ஷெட்டியுடன் காமெடி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறேன். வெளுத்துக்கட்டு, மந்திரப்புன்னகை, சட்டப்படி குற்றம் போன்ற படங்கள் என்னை ஒரு நடிகையாக வெளிப்படுத்தின. இப்போது தான் என் இயல்புக்கேற்ற காமெடிக்களம் அமைந்திருக்கிறது. அதற்காக `பிரிவோம் சந்திப்போம்' தொடரின் இயக்குனருக்குத் தான் என் நன்றி சேரவேண்டும்.''
நன்றி: தினதந்தி

aanaa
23rd July 2012, 12:24 AM
டி.வி.யில் ஸ்ருதிஹாசன் `அறிமுகம்'!
http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20120721/TV08.jpg

தமிழ், தெலுங்கு, இந்தி என்று கலந்து கட்டி கலக்கும் கமல்ஹாசனின் புதல்வி ஸ்ருதிஹாசன், முதல்முறையாக `டி.வி.'யில் அறிமுகமாகிறார். `எம்டிவி ரஷ்' என்ற அந்த புதுமையான நிகழ்ச்சி, எம்.டி.வியில் ஒளிபரப்பாகிறது.


நடிகை ஸ்ருதிஹாசனின் அதிகம் அறியப்படாத முகம், அவர் ஓர் இசையமைப்பாளர் என்பது. அதை இந்நிகழ்ச்சி வெளிப்படுத்தும் என்கிறார்கள். பிஜோய் நம்பியாரால் இயக்கப்படும் `எம்டிவி ரஷ்', அட்டகாசமான 13 பகுதிகள் கொண்டதாம்.


இதில் ஓர் அத்தியாயத்தில் ஸ்ருதிஹாசன் தனது சொந்த இசைக்கோர்வைகளை அரங்கேற்றுவாராம். இசை மீதான தனது காதல்தான் இந்நிகழ்ச்சிக்குத் தான் ஒப்புக்கொண்டதற்குக் காரணம் என்கிறார் ஸ்ருதி.


``பிஜோய் என்னை அணுகி இந்த கான்செப்டை சொன்னதுமே எனக்கு பிடிச்சுப் போச்சு. எம்டிவி ரஷ் என்னை ரொம்பவே உற்சாகப்படுத்தியிருக்கு. இதில் நான் உருவாக்கிய இசைக்கோர்வையை நானே இசைப்பதை ரசிகர்கள் கண்டு, கேட்டு மகிழலாம். இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நாளை நான் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்'' என்கிறார் ஸ்ருதி, சந்தோஷப் பரபரப்புடன்.


`இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக...' என்று கூறத்தக்க இந்த நிகழ்ச்சிக்காக நாமும் ஆர்வத்தோடு காத்திருப்போம்!
நன்றி: தினதந்தி

aanaa
23rd July 2012, 12:25 AM
திரும்பிப்பார்க்கிறேன்
http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20120721/TV06.jpg

திரைப்படத்துறையில் தங்கள் திறமைகளை நிரூபித்து வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கையும், அவர்களின் பசுமையான நிகழ்வுகளும் அவர்கள் சம்பந்தப்பட்ட திரைப்பட காட்சிகளும், பாடல்களும் ரசிக்கத் தக்கவை. இந்த பதிவுகளை ஜெயா தொலைக்காட்சி `திரும்பிப்பார்க்கிறேன்' நிகழ்ச்சியின் வாயிலாக நேயர்களுக்கு வழங்கி வருகிறது.


இந்த வாரம் நடிகை ரஞ்சனியின் நினைவலைகள் ஒளிபரப்பாகிறது. சிங்கப்பூரில் பிறந்த இவர், டைரக்டர் பாரதிராஜாவால் `முதல் மரியாதை' படத்தில் அறிமுகமானவர். அந்தப் படத்தில் இடம்பெற்ற `அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன்' என்ற பாடல் இப்போதும் இவருக்கான தனி அடையாளம்.


தொடர்ந்து தமிழிலும் மலையாளத்திலும் பல படங்களில் நடிப்பைத் தொடர்ந்த ரஞ்சனி, அப்புறமாய் படஉலகில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்.


இப்போது இந்த நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் மீண்டும் முகம் காட்ட வந்திருக்கும் ரஞ்சனி, தன்கலை வாழ்வில் நடந்த மறக்க முடியாத பல நிகழ்வுகளை நிகழ்ச்சியில் பட்டியலிடுகிறார்.


நிகழ்ச்சியில் அவர் நடித்த படங்களில் இருந்து காட்சிகளும் பாடல்களும் இடம் பெறும்.


திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 10 மணிக்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும நிகழ்ச்சி இது.
நன்றி: தினதந்தி

aanaa
23rd July 2012, 12:26 AM
சின்ன மருமகள்

திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் தொடர், எதிர்பாராத திருப்பங்களில் வேகம் பிடிக்கிறது.


நீண்ட நாட்களுக்குப் பிறகு தன் குடும்பத்தில் இணையும் சாந்தனு தன்னை ஒதுக்கி வைத்த குடும்பத்தை பழி வாங்கத் துடிக்கிறான். தான் மஹாபண்டிதராக முடியாது என்று அறிந்து மேலும் சினங்கொள்கின்றான். சாந்தனுவை பண்டிதர் குடும்பத்தில் இணைக்கும் விழா நடந்து கொண்டிருக்க, மறுபுறம் தேவா ஒரு அவசர காரியமாக வெளியே செல்ல, பின் அவனின் மரணச் செய்தி தான் ராதிகாவிற்குக் கிடைக்கிறது.


இதனால் குடும்பத்தில் மூத்தவனான சாந்தனுவை மஹா பண்டிதராக்கும் விழா நடந்து கொண்டிருக்க, தேவாவைக் கொன்ற காரணத்திற்காக போலீஸ் சாந்தனுவை துரத்த, சாந்தனு விபத்தில் சிக்கி, தேவா விழுந்த அதே மலையடிவாரத்தில் விழுந்து உயிர் துறக்கிறான்.


இந்நிலையில் பல நாட்களுக்குப் பிறகு சுயநினைவு இல்லாத நிலையில் தேவாவை மற்றொரு பெண்ணுடன் கண்டு அதிர்ச்சி கொள்கிறாள் ராதிகா. தேவாவை எவ்வளவோ அழைத்தும் அவளை கண்டு கொள்ளாமல் செல்கிறான்.


ராதிகா தேவாவின் இருப்பிடத்தை அறிந்து கொண்டாளா? தேவா ராதிகாவை அடையாளம் கண்டு கொண்டானா? பண்டிதர் குடும்பத்தின் தற்போதைய நிலை? வினாக்களுடன் தொடர்கிறது சின்ன மருமகள் தொடர்.
நன்றி: தினதந்தி

aanaa
23rd July 2012, 05:29 AM
SIIMA



http://www.dailymotion.com/video/xsbmjt_siima-1_shortfilms#from=embediframe





http://www.dailymotion.com/video/xsbmot_siima-2_shortfilms#from=embediframe





http://www.dailymotion.com/video/xsbmsf_siima-3_shortfilms#from=embediframe





http://www.dailymotion.com/video/xsbmxw_siima-4_shortfilms#from=embediframe

aanaa
23rd July 2012, 05:31 AM
1606continue.....


http://www.dailymotion.com/video/xsbnac_siima-5_shortfilms#from=embediframe





http://www.dailymotion.com/video/xsbnoq_siima-6_shortfilms#from=embediframe





http://www.dailymotion.com/video/xsbo4o_siima-7_shortfilms#from=embediframe





http://www.dailymotion.com/video/xsbo4o_siima-7_shortfilms#from=embediframe

aanaa
23rd July 2012, 05:32 AM
1607continue.....




http://www.dailymotion.com/video/xsbodi_siima-9_shortfilms#from=embediframe




http://www.dailymotion.com/video/xsbppc_siima-10_shortfilms#from=embediframe





http://www.dailymotion.com/video/xsbqlt_siima-11_shortfilms#from=embediframe

aanaa
23rd July 2012, 07:03 PM
அந்த 10 நாட்கள்

SUN TV

16-07-2012 to 27-072012


http://www.youtube.com/watch?feature=player_embedded&v=Zcd1kfoyKjI

aanaa
28th July 2012, 06:34 AM
கார்த்திகைப் பெண்கள்

SUN TV - 30-07-2012 ...


http://www.youtube.com/watch?feature=player_embedded&v=2hBJB8hK-bw




http://www.youtube.com/watch?v=Lm3vei-1nsM&feature=player_embedded

aanaa
28th July 2012, 06:58 AM
டைரக்டர் மவுலியை பாதித்த செல்வரங்கம்!


http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20120728/TV-04.jpg

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு சன் டிவியில் ஒளி பரப்பாகி வரும் நாதஸ்வரம் தொடர், கூட்டுக் குடும்பத்தின் சிறப்பை உணர்ச்சிக் கொந்தளிப்புடன் திரைப்படுத்துகிறது.


இந்த தொடரில் செல்வரங்கமாக நடிப்பில் ஸ்கோர் பண்ணி வரும் ராகுல், இப்போது திருப்புமுனைக் கதைக்களத்தில் இன்னும் கவனிக்கப் படுகிறார்.


கதைப்படி அந்த குடும்பத்தின் கெட்ட மருமகனாக இருந்த செல்வரங்கத்திடம், இப்போது ஒரு இனிய மாற்றம். அக்கா-மாமா இருவரும் மருமகனிடம் நேர்ந்த மாற்றம் தெரியாமல் தொடர்ந்து தங்கள் தவறுகளை மருமகன் மூலம் அரங்கேற்ற விரும்புகிறார்கள். அப்போது தான் மருமகன் மாறிய விஷயம் தெளிவாகிறது.


இப்படி செல்வரங்கம் மாறும் காட்சியில் ராகுலின் நடிப்பை மனமுவந்து பாராட்டியிருக்கிறார், நடிகரும் டைரக்டருமான மவுலி. `நானும் பார்த்துக் கிட்டே வர்றேன். இந்த கேரக்டருக்குள் நீ அப்படி ஆழமா போயிட்டே. வாழ்த்துக்கள்' என்று அவர் சொன்ன போது சிகரம் தொட்ட சந்தோஷம் எனக்குள். 5 படங்களில் நாயகனாக நடித்தும் கிடைக்காத பெயர் இந்த ஒரே கேரக்டர் மூலம் கிடைத்ததில் அத்தனை மகிழ்ச்சி'' என்கிறார், ராகுல்.


மவுலி இந்த தொடரில் சொக்கலிங்கம் என்ற கேரக்டரில் நடிக்கிறார்.


மவுலியின் பாராட்டு குறித்து ராகுல் மேலும் கூறியதாவது: "சிறந்த இயக்குனர், தேர்ந்த நடிகர் அவர். கடந்த இரண்டரை வருடமாய் சொக்கலிங்கம் கேரக்டராகவே வாழும் அவரை இந்த தொடரில் பார்த்து பிரமித்தவன் நான். ஆனாலும் என் மனதில் ஒரு ஏக்கம். `நாம் நடிப்பதை பார்க்கிறார்.ஆனால்அதுபற்றி ஒரு வார்த்தை சொல்ல மாட்டேன் என்கிறாரே' என்று எண்ணியிருக்கிறேன். அனால்அமைதியாயிருந்தஅந்தநாட்களிலும்என் நடிப்பை அவர் ரசித்திருக்கிறார். அதையெல்லாம்சேர்த்து தான் இப்போது மொத்தமாக பாராட்டியிருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டேன்'' என்கிறார், நெகிழ்ச்சிக் குரலில்.


"சமீபத்தில் சிங்கப்பூர் சென்றிருந்தேன். அங்கே என்னை பார்த்தவர்கள் செல்வரங்கம் என்று தான்அழைத்தார்கள். அந்த அளவுக்கு நாதஸ்வரம் தொடர் என்னை உலகம் முழுக்க கொண்டு போயிருக்கிறது. இந்த பெருமையெல்லாம் இயக்குனர் திருமுருகனையே சாரும்'' என்றவர், தொடர்ந்து கூறும்போது, "அங்கே பலரும் டைரக்டர் திருமுருகனை `கோபி சார் எப்படியிருக்கிறார்?'என்று தான் நலம் விசாரித்தார்கள். ஏற்கனவே `மெட்டி ஒலி' தொடரில் கோபியாக நடித்தவர், இந்த தொடரிலும் அதே பெயரில் நடிக்கவே ரசிகர்களுக்கு அவர் `கோபி'யாகவே தெரிகிறார்'' என்றார்.
நன்றி: தினதந்தி

aanaa
28th July 2012, 07:00 AM
தாமரைக்கு குழந்தை பாக்கியம் உண்டா?

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகி வரும் துளசி தொடர் 100 எபிசோடுகளைத் தாண்டி தொடர்கிறது.


`தாமரைக்கு குழந்தை பிறக்குமா?' என்ற எதிர்பார்ப்போடு மாமியார் தெய்வானை தன் மருமகள் தாமரையை ஜோதிடரிடம் அழைத்துச் சென்று ஜாதகம் பார்க்கிறாள். தாமரைக்கு குழந்தை பாக்கியம் இல்லை. ஆனால் அவள் கணவன் செல்வாவிற்கு தகப்பனாகும் பாக்கியம் இருக்கிறது என ஜோதிடர் கூற, அதிர்ச்சியடைகிறாள், தாமரை. தன் வாழ்வில் துளசி குறுக்கே வந்துவிடுவாளோ என்ற பயத்தில் தன் கணவன் செல்வாவிடம் "உனக்கு தகப்பனாகும் பாக்கியம் இல்லாமல் இருக்க நீ அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்'' என்று நிர்ப்பந்திக்கிறாள்.


இதற்கிடையே செல்வாவின் தாய், தந்தை இருவரும் துளசியை சந்தித்து "என் குடும்பத்தில் உன்னால் தான் வாரிசு உண்டாக வேண்டும், தாமரைக்கு அந்த பாக்கியம் இல்லை என்று கூறி, நீயே மருமகளாக வந்து விட்டால் உன் தங்கை தாமரையை நீ அனுசரித்து போக முடியும். நீ இழந்த வாழ்க்கையை செல்வா மூலமே திரும்ப பெற வேண்டும்'' என்று சொல்ல... துளசி யோசிக்கிறாள்.


செல்வாவையே துளசி மணமுடித்தாளா? தாமரை சொல்படி செல்வா அறுவை சிகிச்சை செய்தானா? திருப்பங்களுடன் தொடர்கிறது, தொடர்.
நன்றி: தினதந்தி

aanaa
28th July 2012, 07:01 AM
பெண்ணின் போராட்டம்

திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் இரவு 7 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புகுந்த வீடு தொடர், வாழப் புகுந்த வீட்டில் ஒரு மருமகளுக்கு ஏற்படும் பிரச்சினையை அவள் எப்படி எதிர் கொள்கிறாள் என்பதை மையப்படுத்துகிறது.


வழக்கமான கதைகளில் இருந்து மாறுபட்டஇந்த தொடரின் ஸ்பெஷல், எதிர்பாராத திருப்பங்கள். கதாநாயகியின் வாழ்க்கையில் ஏற்படும் போராட்டங்களை சுவாரஸ்யமாக திரைப்படுத்தியிருக்கும் தொடர் இது. பெண் என்பவள் பொறுமையைக் கடைப்பிடிப்பதால் புகுந்த வீட்டையும் பிறந்த வீடாக மாற்றும் ஆற்றலைப் பெறுவாள் என்பதே தொடரின் விறு விறுப்பான கதைக்களம்.


இயக்கம்: நித்தியானந்தம்.


கதை: இந்திரா சவுந்தர்ராஜன்; இசை: கல்யாண் ஜி.; ஒளிப்பதிவு: சுதாகரன்; வசனம்: ஐ.அசோகன்; தயாரிப்பு: சத்யஜோதி பிலிம்ஸ்.
நன்றி: தினதந்தி

aanaa
28th July 2012, 07:02 AM
கிரிவல மகிமை

திருவண்ணாமலை மண்ணின் மகிமை பற்றியும், அருணாசலேஸ்வரின் உன்னதமான மகத்துவம் குறித்தும், திருவண்ணாமலையில் முக்தி பெற்ற சித்தர்களின் சிறப்பு பற்றியும் விவரிக்கும் தொடராக உருவாகி வருவதே, `திருவண்ணாமலை கிரிவல மகிமை'.


இந்த தொடரில் மேலும் இடம் பெறும் முக்கிய அம்சங்கள்: பவுர்ணமியில் கிரிவலம் வருவதால் என்னென்ன பலன்கள் கிட்டும்? கிரிவலம் எப்படி சுற்ற வேண்டும்? அப்போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள் என்னென்ன?


இந்த ஆன்மிக தொடரை அர்ஜீன் மூவிஸ் சார்பில் கே.ஜி.கோவிந்தராஜ் தயாரிக்கிறார். இவர் யோகாசன ஆசிரியரும் ஆவார். தொடருக்கு இசை: ராஜ்பாஸ்கர். முகப்பு பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியிருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், பாடல், இயக்கம்: பி.பாலாமணி. தனியார் சேனலில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கிறது, இந்த தொடர்.
நன்றி: தினதந்தி

aanaa
28th July 2012, 07:04 AM
சதிவலைகளை முறித்து ஷக்தி திருமணம் நடந்ததா?

சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் உதிரிப்பூக்கள். குடும்ப உறவுகளின் மேன்மையை சொல்லும் இந்த தொடரை டைரக்டர் விக்ரமாதித்தன்இயக்கி வருகிறார்.

http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20120728/TV-03.jpg


வளர்ப்பு அப்பாவுக்கும் சொந்த அப்பாவுக்கும் இடையே நடந்து வரும் `நீயா நானா' போட்டியில் பாதிக்கப்பட்டது அவர்களின் பாசமகள் ஷக்தியின் திருமணம் தான். முதல் தடவை வளர்ப்பு அப்பா சிவநேசன் ஏற்பாடு செய்த திருமணத்தை சொந்தஅப்பா தட்சிணாமூர்த்தி தனது திரை மறைவுவேலைகள் மூலம் நிறுத்தி விடுகிறார். இதற்குப் பிறகு வளர்ப்பு அப்பா சிவநேசனின் தீவிர முயற்சியில் மீண்டும் அதே மாப்பிள்ளையுடன் ஷக்தி திருமணம் நடக்க ஏற்பாடாகிறது.


இம்முறை ஷக்தியின் சொந்த அப்பா இந்த திருமணத்துக்கு எல்லா ஏற்பாடுகளும் செய்து கொண்டே மறைமுகமாக அந்த திருமணத்தை மணமேடையில் தடுத்து நிறுத்தவும் ஏற்பாடு செய்கிறார். அவரது திட்டம் மகள் ஷக்தியை தனது அக்கா மகன் இளங்கோவுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்பது. அதற்காக தாலிகட்டப் போகும் நேரத்தில் மாப்பிள்ளை மீது ஒரு பெரும்பழியை போடவும் பெண்ணொருத்தியை ஏற்பாடு செய்து விடுகிறார்.


தட்சிணாமூர்த்தியின் சாகச நாடகம் அரங்கேறும் கல்யாண தினமும் வருகிறது. மணமேடையில் ஷக்தி விரும்பிய மணமகனுடன் திருமணம் நடந்ததா? அல்லது அவளது சொந்த அப்பா தட்சிணாமூர்த்தியின் திட்டப்படி இளங்கோ அவளுக்கு மாலையிட்டானா? பரபரப்பான திருப்பங்களுடன் தொடர்கிறது, தொடர்.


வளர்ப்பு அப்பா சிவநேசனாக சேத்தனும் , சொந்த அப்பாவாக எல். ராஜாவும் நடிக்கிறார்கள். ஷக்தியாக மானசா நடிக்கிறார். மற்றும் வடிவுக்கரசி, ஸ்ரீலேகா, ஷ்ரவன், பாரதி, அகிலா, ரேவதிப்பிரியா, ஹரி, கிரேசி, ரூபஸ்ரீ ஆகியோரும் நடிக்கிறார்கள்.


திரைக்கதை: முத்துச்செல்வன். வசனம்: ஆனந்த். ஒளிப்பதிவு: சாகித்யா சீனு. இயக்கம்: விக்ரமாதித்தன். `ஹோம் மீடியா மேக்கர்ஸ்' சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார்.
நன்றி: தினதந்தி

aanaa
9th August 2012, 10:07 PM
ஒளிமயமான எதிர்காலம்

வெள்ளிக்கிழமை தோறும் காலை 7.45 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் `ஒளிமயமான எதிர்காலம்' நிகழ்ச்சியை பிரபல வாஸ்து நிபுணர் மகேஷ்வர்மா வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி 120 எபிசோடுகளை தாண்டி தொடர்கிறது.


வாஸ்து முறையில் தொழிற்சாலைகளை அமைப்பது, வீடு கட்டுவது, குறித்த டிப்ஸ்களை இந்த நிகழ்ச்சியில் மகேஷ்வர்மா தருகிறார். ஏற்கனவே வாஸ்து முறைப்படி கட்டாத வீடுகளை வாஸ்து முறையில் எப்படி மாற்றியமைப்பது என்பதற்கும் ஆலோசனைகளை வழங்குகிறார். வாஸ்து முறைப்படி எப்படி ஓட்டல்களை வடிவமைப்பது என்பதற்கும் நிகழ்ச்சியில் டிப்ஸ் தருகிறார்.
நன்றி: தினதந்தி

aanaa
9th August 2012, 10:08 PM
அப்பாஸ் நடிக்கும் `தர்மயுத்தம்'

விஜய் டிவியில் வரும் திங்கள் முதல் தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கும் புதிய தொடர், தர்மயுத்தம். இந்த தொடர் மூலம் நடிகர் அப்பாஸ் சின்னத்திரைக்கு வருகிறார்.
http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20120804/TV-09.jpg

இரண்டு குடும்பங்கள் எதிரும் புதிருமாக நின்று தங்கள் தரப்பு நியாயங்களை நீதிமன்றத்தின் மூலம் கிடைக்கப் போராடும் கதை தான் `தர்மயுத்தம்.' இதில் பிரபல வழக்கறிஞர்களாக பெரிய திரை நடிகர்கள் அப்பாஸ், கார்த்திக் குமார் நடிக்கின்றனர். மேலும் நடிகர்கள் கிட்டி, ராகவேந்தர், நடிகை அனுஜா ஐயர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.


திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கும் தொடர் இது.
நன்றி: தினதந்தி

aanaa
9th August 2012, 10:09 PM
சின்னத்திரை சினிமாவில் ராஜேஷ்குமார் கதைகள்
http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20120804/TV-04.jpg
கலைஞர் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது, சின்னத்திரை சினிமா. பிரபல நாவலாசிரியர் ராஜேஷ்குமாரின் கிரைம் நாவல்கள் இந்த நிகழ்ச்சியில் திரை வடிவம் பெற்று ஒளிபரப்பாகிறது.


இன்று இரவு ராஜேஷ்குமாரின் `கோகிலா கொலைவழக்கு' நாவல் இடம் பெறுகிறது. தேவ், ராம்கி, சுருளி மனோகர், கராத்தே கார்த்திக், பஞ்சாட்டி, நீலிமா ஆகியோர் நடிக்கிறார்கள். இயக்கம்: பிரேம்நாத்.


மர்மமான முறையில் இறந்துபோன கோகிலாவின் மரணத்தை சுற்றி பின்னப்பட்டுள்ள இந்த திகில் கதை, ஏற்கனவே நாவலாக வந்த நேரத்திலும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
நன்றி: தினதந்தி

aanaa
9th August 2012, 10:11 PM
பன்னீர் பூக்கள்

மக்கள் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர், `பன்னீர்ப்பூக்கள்.' 6 பெண்கள் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னேறுவதை கருவாக கொண்டுள்ளது, இந்த குறுந்தொடர்.


தொடரில் இடம் பெறும் ஒவ்வொரு பெண் கதாபாத்திரத்தின் கதையையும் தனித்தனியே காட்சிப்படுத்தியிருந்தாலும், கதைப்போக்கில் இவர்கள் ஒன்றாக இணைகிறார்கள்.அவர்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால் களை யதார்த்தமாக அமைத்துள்ளனர். பெண் நினைத்தால் முடியாதது இல்லை என்பதை ஆணித்தரமாக வலியுறுத்துகிறது, தொடர்.


தேவதர்ஷினி,தேவிப்பிரியா, ஷில்பா, டெல்லி கணேஷ், ஷ்யாம் கணேஷ் நடிக்க, ராம் குமார் இயக்கியுள்ளார்.
நன்றி: தினதந்தி

aanaa
9th August 2012, 10:12 PM
பார்த்த ஞாபகம் இல்லையோ!

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர், பார்த்த ஞாபகம் இல்லையோ. நடிகை குஷ்பு தனது அவ்னி டெலிமீடியா சார்பில் இந்த தொடரை தயாரிப்பதோடு, தொடரில் நாயகியாகவும் நடிக்கிறார்.


தன் கணவன் கார்த்திக்கின் குடும்பத்தை பழி வாங்க வந்த ஓவியா, தன் தாய்க்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவதா? அல்லது அந்த குடும்பத்தை பாதுகாப்பதாக சின்ன மாமனார் தாமோதரனுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவதா என்று தடுமாறுகிறாள்.


ஓவியாவுக்கு கார்த்திக் மீது ஏற்படும் அன்பும் காதலும் கைகூடுமா? கலவரம் ஆகுமா?


கார்த்திக்ரகுநாத் அசப்பில் தன்னைப் போலவே இருக்கும் கார்த்திக்கை ரத்தினவேல் கொலை வழக்கில் சிக்க வைக்க முயற்சி செய்கிறான். அதை முறியடிக்க ஓவியா முயற்சி மேற்கொள்கிறாள். இதில் வெற்றி பெற்றது யார்?


கார்த்திக்கின் அத்தை அகிலா, ஓவியாவை வீட்டை விட்டு விரட்டவும், கார்த்திக்கின் சொத்துக்களை அபகரித்து கார்த்திக்ரகுநாத்திடம் ஒப்படைக்கவும் திட்டமிடுகிறாள். அவளின் திட்டம் நிறைவேறியதா?


ஓவியாவின் வீட்டிற்கு வந்து அங்குள்ள அத்தனைபேரின் மனதையும் கிறங்கடித்த ஆசிரமக் குழந்தை சாருலதா யார்? அந்தக்குழந்தை ஓவியாவை சித்தி என்று அழைக்க காரணம் என்ன?


கேள்விகளுக்கு விறுவிறுப்பான திரைக்கதை விடை சொல்கிறது. தொடரில் நடிகை குஷ்பு தாய் வீட்டில் அருந்ததி என்ற பெயரிலும், கணவன் வீட்டில் ஓவியா என்ற பெயரிலும் நடிக்கிறார். குஷ்புவுடன் சீனு, டெல்லிகுமார், பானுமதி, ஷோபனா நடிக்கிறார்கள்.


கதை: குஷ்பு. திரைக்கதை-வசனம்: அசோக்குமார். ஒளிப்பதிவு: பொன்ஸ் சந்திரா. இயக்கம்: பிரியன்.
நன்றி: தினதந்தி

aanaa
19th August 2012, 09:09 AM
என்னைப்பார்த்து பயப்படுறாங்க: காஞ்சனா சீரியல் பூஜா


http://tamil.oneindia.in/img/2012/08/17-ss-music-pooja.jpg

எஸ்.எஸ் மியூசிக் தொகுப்பாளராக இருந்த பூஜாவிற்கு இளம் ரசிகர் பட்டாளங்கள் ஏராளம். சின்னத்திரையில் இருந்த போதே காதலில் சொதப்புவது எப்படி? படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.


கூடவே நல்ல பெயரும் கிடைத்தது. சினிமாவை விட சின்னத்திரையே மேல் என்று நினைத்த பூஜா இப்போது விஜய் டிவியில் காஞ்சனா சீரியல் மூலம் களம் இறங்கியிருக்கிறார். தனது சின்னத்திரை பயணம் பற்றி நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார் பூஜா.


அம்மா, அப்பா பெங்களூர்ல இருக்காங்க. நானும், தங்கை ஆர்த்தியும் படிக்கவும், வேலை பார்க்கவும் சென்னை வந்தோம். எஸ்.எஸ். மியூசிக்கில் வேலை பார்த்த போதே எனக்கு திருமணம் ஆயிருச்சு. என்னோட கணவர் க்ரேக் அவரும் எஸ்.எஸ். மியூசிக்கில் வேலை பார்க்கிறார்.


நான் எஸ்.எஸ்.மியூசிக்கில் வேலை பார்த்தபோதே சினிமாவிலும், சீரியலும் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் நான் மறுத்துவிட்டேன்.
அதற்கு காரணம் எனக்கு சினிமா மேல் இருந்த பயம்தான். காதலில் சொதப்புவது எப்படி பட இயக்குநர் பாலாஜி மோகன் என்னிடம் வந்து கதை சொன்னதும், கதை பிடித்து போய் ஓ.கே., சொல்லிவிட்டேன்.
ஏனென்றால் படம் முழுக்க காமெடி சப்ஜெக்ட். படத்தில் என்னுடைய கேரக்டர் பிடிச்சது, அதனால் இந்தபடத்தில் நடிச்சேன். படம் பார்த்து நிறைய பேர் பாராட்டுனாங்க. சித்தார்த்கிட்ட இருந்து நான் நிறைய கத்துக்கிட்டேன்.


எஸ்.எஸ். மியூசிக்கில் இருந்து விலகி ஒருவருடம் ஆகிவிட்டது. திடீர்னு ஒருநாள் காஞ்சனா சீரியல் கதை கேட்டேன். த்ரில்லிங் கதைக்காகவே நடிக்க ஒத்துக்கொண்டேன்.
இப்பதான் அதோட கஷ்டம் தெரியுது.
நிகழ்ச்சி தொகுப்பாளர் வேலை 2 அல்லது 3 மணி நேரத்தில் முடிந்துவிடும். ஆனா சீரியலுக்காக 15 மணிநேரம் கூட வேலை பார்க்க வேண்டியிருக்கிறது.
தென்காசி, குற்றாலம்னு காடுமேடெல்லாம் சுத்த வேண்டியிருக்கு. இப்பல்லாம் சின்னப்பசங்க என்னைப்பார்த்து காஞ்சனா பேய்னு பயப்படுறாங்க என்று குஷியாக சொல்லிவிட்டு சூட்டிங்கிற்கு கிளம்பினார் பூஜா.

aanaa
19th August 2012, 09:10 AM
டிவிக்கு வரும் அனுராக் காஷ்யப்: க்ரைம் தொடர் இயக்குகிறார்
.

அனுராக் காஷ்யப் என்றாலே க்ரைம், ரத்தம், வன்முறை இன்றி இருக்காது. பாலிவுட் திரை உலகின் தவிர்க்க முடியாத நபர் அனுராக் காஷ்யப். இயக்குநராக, திரைக்கதை எழுத்தாளராக, தயாரிப்பாளராக, நடிகராக பன்முகம் காட்டி வரும் அனுராக் இப்பொழுது சின்னத்திரையில் காலடி பதிக்க இருக்கிறார்.


வெள்ளித்திரையைப் போல சின்னத்திரையும் பவர்ஃபுல் மீடியா என்பதால் டிவி தொடர் இயக்க முடிவு செய்துள்ளதாக அனுராக் தெரிவித்துள்ளார். புதிய சூழல் முழுக்க, முழுக்க புதிய குழுவினருடன் களமிறங்கப் போவதால், மனதுக்குள் அவ்வப்போது படபடப்பு ஏற்படுவதாகவும் அனுராக் கூறியுள்ளார்.


இந்த க்ரைம் தொடரில் இந்தி வில்லன் நடிகர் குல்சான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் அனுராக்குடன் சைத்தான் படத்தில் நடித்துள்ளார்.
பிரபல, "டிவி சேனலுடன் பேச்சுவார்த்தை முடிந்துள்ள நிலையில்,
தொடர் சம்பந்தமான முன்னோட்ட காட்சிகளை படம் பிடித்து பார்த்த அனுராக், காட்சிகள் திருப்தி அளித்ததால், உற்சாகமாக இருக்கிறார். க்ரைம் கலந்த இந்த தொடர் பிரபல சேனலில் ஒளிபரப்பாக உள்ளது

aanaa
19th August 2012, 09:12 AM
ஜெயா டிவிக்காக இசை மேடையேறும் எம்.எஸ்.விஸ்வநாதன்

தமிழ் சினிமாவில் ஏறக்குறைய 60 ஆண்டுகள் இசை ராஜாங்கம் நடத்தியவர்...இப்போதும் நடத்திக் கொண்டிருப்பவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். அவரது இசை சாதனையில் ஒரு மைல் கல்லாய் அமையவிருக்கிறது ஜெயா டிவிக்காக அவர் நடத்தவிருக்கும் பிரமாண்ட இசை நிகழ்ச்சி.


வருகிற 22-ம்தேதி மாலை 6 மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இந்த இசைநிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ஆச்சரிய அதிசயம், ஜெயா டிவி அன்று தான் தன் 14-வது பிறந்தநாளையும் கொண்டாடி மகிழ்கிறது.


தொடக்க காலத்தில் எம்.எஸ்.வி. ஒரு நடிகராகவே வரவேண்டும் என விரும்பினார். கிடைத்ததோ கே.வி.மகாதேவனின் இசைக் குழுவில் கோரஸ் பாடகர் வாய்ப்பு.


1950-ம் வருடம் எம்.ஜி.ஆர். நடித்த `ஜெனோவா' என்ற திரைப்படத்தின் வாயிலாக இசையமைப்பாளர் அடையாளம். 1952-ல் பிரபல இசையமைப்பாளர் சுப்பராமனின் திடீர் மறைவுக்குப் பின்னர் அவர் இசையமைத்த `தேவதாஸ்' மற்றும் `காதல்' திரைப்படங்களை முடித்து கொடுக்கும் வாய்ப்பு எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும், ராமமூர்த்திக்கும் கிட்டியது. அதிலிருந்து தொடர்ந்தது, இந்த இரட்டையர்களின் இசைப்பயணம். இவர்களின் முதல் வெற்றித் திரைப்படமாக என்.எஸ்.கிருஷ்ணன் இயக்கிய `பணம்' திரைப்படம் வெளிவந்தது. இதைத்தொடர்ந்து 1963-ல் ஒரு திரைப்பட விழாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனால் இந்த இரட்டையர்களுக்கு "மெல்லிசை மன்னர்கள்'' என்ற பட்டம் வழங்கப்பட்டது.


"நீராரும் கடலுடுத்த'' என்ற தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு இசையமைத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். உலக திரை இசையின் பல்வேறு வடிவங்களை தமிழ் திரைப்படப் பாடல்களாக அறிமுகம் செய்த இந்த மெல்லிசை மன்னர் சுமார் 500 தனிப்பாடல்களை தன் இசையில் மட்டுமின்றி மற்ற இசையமைப்பாளர்களின் இசையமைப்பிலும் பாடியுள்ளார். அவற்றுள் பெரும்பாலானவை பக்திப்பாடல்கள்.


தமிழ் திரை இசைக்கு இவரின் மகத்தான பங்களிப்பை பாராட்டி தமிழ்நாடு அரசும், அரசு சாரா நிறுவனங்களும், ரசிகர்களும் அளித்த விருதுகளும், வாழ்த்துக்களும் ஏராளம். ஆனால் மத்திய அரசால் வழங்கப்படும் பத்ம விருதுகள் எதுவும் இவருக்கு இதுவரை வழங்கப்படவில்லை என்பது வருத்தத்திற்குரிய உண்மை. எனவே, எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு பொது மக்கள் தேர்வு செய்யும் உயரிய பட்டத்தை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக வழங்கவிருக்கிறது, ஜெயா டிவி.


நிகழ்ச்சிக்காக நிருபர்களை சந்தித்த எம்.எஸ்.வி., "சினிமாவில் நடிக்கத்தான் வந்தேன். ஆனால் சூழ்நிலையும் இறைவன் விருப்பமும் என்னை இசையமைப்பாளராக்கி விட்டது. நிகழ்ச்சியில் தமிழில் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கிலும் ரசிகர்களுக்கு பாட்டு கிடைக்கும். என்னோடு `இசை இரட்டையர்கள்' என்று நாங்கள் புகழ் பெறக் காரணமான ராமமூர்த்தியும் கலந்து கொள்கிறார்'' என்றார்.


சமீபத்தில் எம்.எஸ்.வி.யை வருத்தப்படுத்திய ஒரு இசை நிகழ்வு, ரீமிக்ஸ் பாடல்கள். அதுபற்றி பேச்சு வந்தபோது, "ஒரு பாட்டை மறுபடியும் ரீமிக்ஸ் பண்றது தப்பான காரியம். ஆனா அதைப்பண்றதுக்கும் ஒரு தைரியம் வேணும். என்னைப் பொறுத்தவரை ரீமிக்ஸ் பண்றது `ரேப்' பண்றதுக்கு சமானம். இசையமைக்கிறவங்க உங்க கற்பனையை பயன்படுத்துங்க'' அறிவுரை தினுசில் ரீமிக்ஸாளர்களுக்கு வைத்தார் ஒரு குட்டு.


நிகழ்ச்சிக்காக தனது இசையில் சிறந்த 82 பாடல்களை தேர்வு செய்து வைத்திருக்கிறார், எம்.எஸ்.வி. அப்படீன்னா இசை ரசிகர்களுக்கு கொழுத்த வேட்டை தான்.



நன்றி: தினதந்தி

aanaa
19th August 2012, 09:13 AM
மலேசியாவில் மானாட... மயிலாட...

கலைஞர் தொலைக் காட்சியில் தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் "மானாட... மயிலாட'' நிகழ்ச்சிக்கு உலகெங்கும் ரசிகர்கள் உண்டு.


வெளிநாட்டில் இருந்து விடுமுறையில் வரும் நேயர்கள் "மானாட மயிலாட'' நிகழ்ச்சி ஒளிப் பதிவு அரங்கிற்கு விஜயம் செய்வது வழக்கம்.


வெளிநாடுவாழ் தமிழ் ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டு களின் எதிரொலியாக, முதல் முறையாக துபாயில், இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நடைபெற்றது.


அதனைத்தொடர்ந்து "மானாட மயிலாட'' நிகழ்ச்சியின் பாகம் 7-ன் இறுதிப் போட்டி, அடுத்த மாதம் 8-ந்தேதி மலேசியா தலைநகரான கோலாலம்பூரில் நடைபெற உள்ளது.


பிரபல திரைப்பட நட்சத்திரங்களின் முன்னிலையில் நடைபெறும் இறுதிப்போட்டிக்கு பங்கேற்பாளர்களுடன், நிகழ்ச்சியின் இயக்குனர் கலா மாஸ்டர், நடிகைகள் குஷ்பு, நமீதா ஆகியோர் பங்கு கொள்கிறார்கள்.


மலேசியாவில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு விலை மதிப்பற்ற பல பரிசுகள் காத்திருக்கின்றன.



நன்றி: தினதந்தி

aanaa
19th August 2012, 09:14 AM
நாவல் சினிமா

சின்னத்திரை வரலாற்றில் நிச்சயம் இது புதுமை. பொதுவாக எழுத்தாளர்களின் நாவல்களை டிவி தொடர்களாக தயாரிப்பதுதான் வழக்கம். இந்த தொடர்களும் நெடுந்தொடர்களாக மாறி வருடக்கணக்கில் ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கும். இந்த பாணியிலிருந்து கலைஞர் டிவி முற்றிலும் மாறுபட்டு பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் நாவல்களை `சின்னத்திரை சினிமா' என்ற தலைப்பில் இரண்டு மணி நேர திரைப்படமாகவே உருவாக்கி ஒளிபரப்பி வருகிறார்கள். இதில் சினிமாவுக்கே உரித்தான பாடல்களோ, சண்டைக் காட்சிகளோ கிடையாது. அதேநேரம் விறு விறுப்பான சம்பவங்களுக்கு பஞ்சம் இல்லை. நிமிடத்திற்கு நிமிடம் கதையில் திருப்பங்கள் அமைந்து காட்சிகளை பரபரப்பாக்கி விடுகின்றன.


இது குறித்து எழுத்தாளர் ராஜேஷ்குமார் கூறும்போது, "என்னுடைய நாவல்கள் பல தொலைக்காட்சி தொடர்களாக வந்துள்ளன. ஆனால் `இந்த சின்னத்திரை சினிமா' எனக்கு ஒரு புது அனுபவம். நான் எழுதிய ஒவ்வொரு நாவலும் இரண்டு மணி நேரம் ஓடக்கூடிய திரைப்படமாகவே உருவாவதும், அது வாரந்தோறும் ஒளிபரப்பாவதும் என்னுடைய எழுத்துக்கு கிடைத்த அங்கீகாரமாகவே நினைக்கிறேன். நாவல்களைப் படிக்கும் பழக்கம் இல்லாத வாசகர்களின் வீட்டு வரவேற்பறைகளுக்கும் `சினிமா' வடிவில் என் நாவல்கள் சென்று விடுவதால், எனக்கு இப்போது புது வாசகர்கள் கிடைத்துள்ளார்கள்'' என்கிறார், உற்சாக தொனியில்.





நன்றி: தினதந்தி

aanaa
19th August 2012, 09:14 AM
சூரிய புத்ரி-100

திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 8.30 மணிக்கு கலைஞர் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் "சூர்ய புத்ரி'' தொடர், நூறாவது எபிசோடை நோக்கி தொடர்கிறது.


தொடரில் புதுமையாக பறக்கும் விமானத்திலேயே கதாநாயகன், நாயகி பங்கு பெறும் காட்சிகள் இடம் பெறுகின்றன. சின்னத்திரை தொடர் வரலாற்றில் இதுவரை இப்படி பறக்கும் விமானத்தில் காட்சிகள் படமானதில்லை. நாயகி விமானப் பணிப் பெண் கதாபாத்திரத்தில் வருவதால் நிஜ விமான நிலையத்தின் உள்பகுதிகளிலேயும் ஆகாயத்தில் பறக்கும் நிஜ விமானத்திலும் எடுக்கப்பட்ட காட்சிகள் பார்வையாளர்களின் மனதை கவரும் வகையில் அமையும் என்கிறார் , தொடரின் தயாரிப்பாளர் குட்டிபத்மினி.


கதையில் இந்த விமானப் பணிப்பெண் கேரக்டர் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்த கேரக்டர் கதையில் திருப்புமுனையை ஏற்படுத்தி ரசிகர்களை பரபரப்பாய் ரசிக்க வைக்கும் என்கிறார்கள்.



நன்றி: தினதந்தி

aanaa
19th August 2012, 09:17 AM
திரும்பிப் பார்க்கிறேன்
http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20120818/TV-05.jpg
திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 10 மணிக்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி, "திரும்பிப் பார்க்கிறேன்.''


திரையுலகில் அன்றைய நாளில் சாதனை படைத்து ரசிகர்களை கவர்ந்த திரையுலக பிரபலங்களின் சுயசரிதமே இது.


வரும் திங்கள் முதல் பிரபல திரைப்பட இயக்குனர் கே.விஸ்வநாத்தின் சுயசரிதம் இந்த நிகழ்ச்சியில் இடம் பெறுகிறது.


தொழில்நுட்ப கலைஞராக திரைத்துறைக்கு வந்த இவர், உதவி இயக்குனராக பல படங்களில் பணிபுரிந்தார். பின்னர் இயக்குனராக பல முன்னணி நடிகர்களை வைத்து இயக்கி பற்பல சிறந்த படங்களை கொடுத்தவர். குறிப்பாக `சங்கராபரணம்' என்ற சிறந்த திரைப்படத்தை இயக்கி திரையுலகில் புகழின் உச்சம் தொட்டவர். 80-க்கும் மேற்பட்ட வெற்றித் திரைப்படங்களை இயக்கியவர்.


தனது நீண்டகால திரையுலக வாழ்க்கை நிகழ்வுகளை அவர் இயக்கிய திரைப் படங்களின் பாடல்கள், காட்சிகள் வாயிலாக `திரும்பிப் பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் பதிவு செய்கிறார்.





நன்றி: தினதந்தி

aanaa
19th August 2012, 09:17 AM
அவள்-200

விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `அவள்' தொடர், 200-வது எபிசோடை கடந்து தொடர்கிறது.


மலையாளத்தில் "குங்குமப்பூ'' என்னும் பெயரில் 400-வது எபிசோட்டை கடந்து ஏசியாநெட்டில் ஒளிபரப்பாகி வரும் தொடரின் தமிழ் பதிப்புதான் இந்த "அவள்.''


கேரளாவில் ஏசியாநெட் தொலைக்காட்சியின் ஏசியா நெட் விருதுகளில் முறையே சிறந்த மெகாத் தொடர், சிறந்த கதை, திரைக்கதை, சிறந்த இயக்கம் மற்றும் சிறந்த நடிகர், நடிகையர் உள்ளிட்ட பதினைந்து விருதுகள் உள்பட இருபத்தைந்துக்கும் அதிகமான விருதுகளை `குங்குமப்பூ' தொடர் வாரிக்குவித்திருக்கிறது.


தொடரில் சஞ்சீவ், லட்சுமி ராமகிருஷ்ணன், மகாலட்சுமி, ஏ.ஆர்.எஸ்., ஸ்ரீகலா, விஜய்பாபு, பாரதி, மதுமோகன், சங்கீதா பாலன், ஸ்ரீதர், ஷமந்தா, ஸ்ரீவித்யா, பாலாஜி நடிக்கிறார்கள்.


கதை, திரைக்கதை: பிரதீப். வசனம்: ஜே.ஆர்.தர்மலிங்கம்; ஒளிப்பதிவு: அனில்வாஸ்; தயாரிப்பு, மேற்பார்வை: கே.ஸ்ரீகாந்த். ஜே.நேதாஜி; எபிசோட் இயக்குனர்: தாமரைக்கண்ணன்; ரோல் பெட்டல் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரித்து இயக்குபவர் ஜி.ஜெயக்குமார்.



நன்றி: தினதந்தி

aanaa
26th August 2012, 05:55 PM
உதிரிப்பூக்கள்-200
http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20120825/Tv08.jpg
சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் உதிரிப்பூக்கள் தொடர், 200-வது எபிசோடை எட்டியிருக்கிறது.


தொடரில் இப்போது ஷக்தியின் சொந்த அப்பா தட்சிணாமூர்த்திக்கும் வளர்ப்பு அப்பா சிவநேசனுக்குமான `ஈகோ' மோதல் உச்சக்கட்டத்தில் இருக்கிறது. அதன் விளைவாக வளர்ப்பு அப்பா சிவநேசன் நடத்த விரும்பிய ஷக்தியின் திருமணத்தை சொந்த அப்பா தட்சிணாமூர்த்தி தடுக்கிறார். ஆனால் வளர்ப்பு அப்பா சிவநேசன் சாமர்த்தியமாக செயல்பட்டு ஷக்திக்கு அவள் விரும்பிய இடத்திலேயே திருமணத்தை நடத்தி முடித்து விடுகிறார்.


தன் மகனுக்கு நடந்த திருமணத்தின்போது ஒவ்வொரு கணமும் விபரீதம் நடந்து விடுமோ என்று பதட்டத்தின் உச்சியில் இருந்த அலமேலு, திருமணம் முடிந்ததும் மருமகள் ஷக்தியிடம் போட்ட முதல் கண்டிஷன் இது தான். `இனி உன் சொந்த அப்பா குடும்பத்தில் இருந்தோ, வளர்ப்பு அப்பா குடும்பத்தில் இருந்தோ யாரும் உன்னைப் பார்க்க இந்த வீட்டுக்கு வரக்கூடாது. நீயும் இவர்கள் யார் வீட்டுக்கும் போகக்கூடாது.'


மாமியாரின் இந்த கட்டளை ஷக்தியை பெரிதும் பாதிக்கிறது. தன் குடும்பத்தில் உள்ளவர்கள் செய்த குழப்பம் தான் தனது மாமியாரை அப்படியொரு முடிவு எடுக்க வைத்து இருப்பதை அவள் உணர்ந்தாலும், அந்த பாசத்தடை அவளை பாதிக்கவே செய்கிறது.


ஷக்தியின் திருமணம் முடிந்த அன்று இரவே தன் இரண்டாவது மனைவியின் வீட்டுக்கு போகிறார், தட்சிணாமூர்த்தி. நடந்ததை போதையில் அவளிடம் சொல்லிப் புலம்ப, அவள் கொடுத்த யோசனையின் பேரில் அந்த ராத்திரியிலேயே மீண்டும் ஷக்தி வாழ்க்கைப் பட்ட வீட்டுக்கு வந்து கத்தி கலாட்டா செய்கிறார். இதனால் திருமண வீட்டில் உள்ளவர்கள் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தும் நோக்கில் தள்ளி விட, அப்போது ஏற்பட்ட கைகலப்பில் தட்சிணாமூர்த்தி மீது சில அடிகள் விழுகிறது. தட்சிணாமுர்த்தியுடன் வந்த அவரது சின்ன வீட்டு மகள் பிரியா இதனால் கோபமாகி, `எங்க அப்பா மேல கைவைக்கிறதுக்கு நீங்க யாரு? என்று எகிறுகிறாள்..


இதனால் தட்சிணாமூர்த்திக்கு இன்னொரு குடும்பம் இருக்கிறது. அந்தக் குடும்பத்தில் 20 வயதில் ஒரு பெண் இருக்கிறாள் என்பது வரை அந்த நேரத்தில் வெட்ட வெளிச்சமாகி விடுகிறது. இந்த விஷயம் தட்சிணாமூர்த்தியின் முதல் மனைவி வள்ளியம்மாளுக்குத் தெரிந்தால் அவள் நிலைமை என்னவாகும்? தன் கணவர் தனக்கு மட்டுமே உரிமையானவர் என்று இதுகாறும் நம்பிக்கொண்டிருந்த அவள், இந்த உண்மை தெரிய வரும்போது எடுக்கும் முடிவு என்னவாக இருக்கும்?


கணவன் வீட்டில் வாழவந்த ஷக்திக்கு மாமியார் மற்றும் அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களால் என்ன மாதிரியான பிரச்சினைகள் நேரப்போகிறது? அதை அவள் தன் வளர்ப்பு அப்பாவிடமோ குடும்பத்தினரிடமோ பகிர்ந்து கொண்டாளா? பிரச்சினைக்கு தீர்வு கண்டாளா? என்பது அடுத்தகட்ட அதிர்ச்சித் திருப்பம்.


தொடரில் நட்சத்திரங்கள்: சேத்தன், வடிவுக்கரசி, மானசா, ஷர்வன், எல்.ராஜா, ஸ்ரீலேகா, ரூபஸ்ரீ, கருணா, பாரதி, அகிலா, மகாலட்சுமி, சுரேகா.


திரைக்கதை: முத்துச்செல்வன். வசனம்: `சம்யுக்தா'ஆனந்த். ஒளிப்பதிவு: சாகித்யாசீனு. இயக்கம்: விக்ரமாதித்தன். `ஹோம் மூவி மேக்கர்ஸ்' சார்பில் தயாரிப்பு: சுஜாதா விஜயகுமார்.
நன்றி: தினதந்தி

aanaa
26th August 2012, 05:57 PM
வணக்கம் தமிழா

திங்கள் முதல் வியாழன் வரை தினமும் மாலை 5.30 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி, "வணக்கம் தமிழா.''


கைத்தொழில், எண்சாண் உடலை எழிலாக்குவோம், நோய் நாடி நோய் முதல் நாடி, திருவாசகத்தேன், வெற்றியை நோக்கி, மருந்தில்லா மருத்துவம், தெரியும் தெரியாது, வீரக்கலை என மக்களுக்கு தேவையான அனைத்தையும் பல்வேறு பகுதிகளாக உள்ளடக்கி தொகுத்து வழங்கப்படும் நிகழ்ச்சி இது.


ஜாஸ்மின் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
நன்றி: தினதந்தி

aanaa
26th August 2012, 05:58 PM
கொஞ்சம் அரட்டை... கொஞ்சம் சேட்டை...

மக்கள் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி, கொஞ்சம் அரட்டை கொஞ்சம் சேட்டை.


இந்த வாரம் இடம் பெறும் நிகழ்ச்சியில் நேயர்களின் அறிவுக் கூர்மையினை நொடிக்கு நொடி சோதிக்கும் வகையில் அடுக்கடுக்கான கேள்விகளை பொது இடங்களில் தோன்றி கேட்கிறார்கள். அதற்கு நேயர்களின் முக பாவனைகளையும், நகைச்சுவையான பதில்களையும் வரும் வாரத்தில் பார்த்து மகிழலாம்.


அத்துடன் விளக்கம் கேட்டும், பொதுமக்களிடம் அந்த நேர சிந்தனை உத்திகளை சோதிக்கும் பொருட்டும் கொஞ்சம் அரட்டையுடன் கலந்த சேட்டையையும் வழங்குகிறார்கள், நிகழ்ச்சியாளர்கள்.


நிகழ்ச்சித் தொகுப்பு: நெல்லை சங்கரபாண்டி.
நன்றி: தினதந்தி

aanaa
26th August 2012, 05:58 PM
சாதனை சிறுவர்கள்
http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20120825/Tv06.jpg

சித்திரம் தொலைக்காட்சியில் சிறுவர்-சிறுமிகளை சிந்திக்க வைக்கும் வண்ணமாக "வீ வில் மீட்'' என்ற நிகழ்ச்சி நாளை முதல் ஒளிபரப்பாகிறது. பிரபல கணினி மென்பொருள் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர்கள், ஷரவன் குமரன் (வயது 12) மற்றும் சஞ்சய் குமரன் (வயது10).
இருவரும் இந்த சிறுவயதில் ஆப்பிள் கணினி மென்பொருள் நிறுவனத்திற்கு மென்பொருள் உருவாக்கி சாதனை படைத்தவர்கள். இந்த சாதனை சிறுவர்கள் பிரபல வர்த்தகர்களை பேட்டி காணும் நிகழ்ச்சியே "வீ வில் மீட்!''


நாளை முற்பகல் 11.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் கட்டுமான நிறுவனத்தலைவர் சிட்டிபாபுவை பேட்டி காண்கிறார்கள். அடுத்த ஞாயிறன்று வி.ஜி.பி நிறுவன நிர்வாக இயக்குநர் ரவிதாசை பேட்டி காண்கிறார்கள்.
நன்றி: தினதந்தி

aanaa
26th August 2012, 05:59 PM
லிட்டில் மாஸ்டர்ஸ்-சீசன்-4
http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20120825/Tv07.jpg

ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் `லிட்டில் மாஸ்டர்ஸ்' நடன நிகழ்ச்சி, மூன்று ஆண்டுகளில் மூன்று வெற்றிகரமான சீசன்களை கடந்து சீசன் நான்கை எட்டியுள்ளது.


முதன்முறையாக குருகுலம் முறையை பயன்படுத்திய நிகழ்ச்சி இது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகள் இன்று சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் நட்சத்திரங்களாக ஜொலித்து வருகின்றனர்.


தமிழகத்தின் மூன்று முக்கிய நகரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட குட்டி நடனப் புயல்கள் தங்களது அடுத்த சுற்றுக்கு தயாராகிறார்கள். இந்த சுற்றில் `டாப் 40 குட்டி நடனப் புயல்கள்` நிகழ்ச்சியின் நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த நிகழ்ச்சியின் நடுவர்களான நடிகர்கள் பிருத்விராஜ். ராகவ் இவர்களோடு பிரபல நடன இயக்குநர் ஜானியும் இணைந்துள்ளார். நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் பாலாஜி.


வரும் இரண்டு வாரங்கள் வெள்ளி மற்றும் சனி இரவு 9 மணிக்கு ஜெயா டிவியில் இந்த நிகழ்ச்சியை காணலாம்.
நன்றி: தினதந்தி

aanaa
26th August 2012, 06:01 PM
கணவனுக்காக பெண் தேடும் அமுதா!

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `அமுதா ஒரு ஆச்சரியக்குறி' தொடர், விறுவிறுப்பான திருப்பங்கள் மூலம் 50 எபிசோடுகளை கடந்து தொடர்கிறது.


செல்வனுக்கு விவாகரத்து தர சம்மதிக்கிறாள், அமுதா. ஆனால் அதற்கு ஒரு நிபந்தனையும் விதிக்கிறாள். செல்வன் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது தான் அந்த நிபந்தனை. தனது கணவனுக்காக தானே பெண் தேடுகிறாள். அப்போது அவள் சந்திக்கும் பெண் தான் விமலா.


விமலாவிடம் அமுதா உண்மைகளை சொன்னாளா? விமலா செல்வனை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தாளா? செல்வனின் நிலை என்ன? தன்னை பிரிந்த பிறகும் தனது கணவனின் வாழ்க்கையில் சந்தோஷமும் நிம்மதியும் இருக்க வேண்டும். அவரை நன்றாக கவனித்துக்கொள்ளும் ஒரு பெண் இருக்க வேண்டும் என்று நினைக்கும் அமுதா, உண்மையிலேயே ஒரு ஆச்சரியக்குறி தான்! அவளது இந்த உயர்ந்த எண்ணம் ஜெயித்ததா?


அருந்ததி உண்மையிலேயே இறந்து விட்டாளா? அல்லது கார்த்திக்கை துன்புறுத்தவே அப்படி நடிக்கிறாளா? அருந்ததியால் கார்த்திக் மன நோயாளியாகிறானா? அருந்ததி இப்படி அவனை பழிவாங்க காரணம் தான் என்ன?.


சுவாரஸ்யமான கேள்விகளுக்கு யதார்த்தமாகவும், நகைச்சுவையாகவும் பதில் சொல்கிறது தொடர். டைரக்டர் கே.பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் வழங்கும் தொடர் இது.
நன்றி: தினதந்தி

aanaa
26th August 2012, 06:02 PM
மதுரையில் தேடிய நாயகி

ராஜ் டிவியின் `தமிழ் பேசும் கதாநாயகி'க்கான தேடல் மதுரையில் நடந்தது. மதுரையின் பாரம்பரிய நடனக் கலைஞர்களின் நடன வரவேற்பைத் தொடர்ந்து, தமிழ் பேசும் கதாநாயகியை மதுரை சவுராஷ்டிரா கல்லூரி, அமெரிக்கன் கல்லூரி என எல்லா இடங்களிலும் தேடினார்கள்.


நடுவர்களாக மதுரையின் பிரபல நடனக்கலைஞர்கள் பாலா நந்தகுமார், மாலா ராஜன் பொறுப்பேற்று வசன உச்சரிப்பு, விதவித பாவனைகள், நடனம் ஆகியவற்றின் அடிப்படையில் அழகுப் பெண்களை தேர்ந்தெடுத்தனர். இவர்களில் அர்ச்சனா என்ற அழகுப்பெண் `மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன' என்ற `தில்லானா மோகனாம்பாள்' பாடலுக்கு நடனமாடி அசத்தினார்.


டாப்-10 பெண்களை தேர்ந்தெடுக்கும் நடுவர்களாக நடிகர் அசோக், அழகாக தமிழ் பேசும் அமெரிக்கரான கோஸ்டாஸ், நடிகை வடிவுக்கரசி ஆகியோர் பொறுப்பேற்றிருந்தனர். இவர்களில் அமெரிக்கரான கோஸ்டாஸ் தமிழ் பண்பாட்டு ஆய்வாளர் என்ற சிறப்புத் தகுதியும் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


ராஜ் டிவியில் சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு இந்த நிகழ்ச்சியை ரசிக்கலாம்.
நன்றி: தினதந்தி

aanaa
31st August 2012, 10:18 PM
சொந்த பந்தம்

September 03- 2012 .



http://www.youtube.com/watch?v=fb6uwG5EyVY





http://www.youtube.com/watch?v=L4Jl3P7HfCs



http://www.youtube.com/watch?v=R4OFuS8156Y




http://www.youtube.com/watch?v=Lmi2C4-bx2s

aanaa
2nd September 2012, 08:11 AM
மீண்டும் `சிவம்'

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த `சிவம்' பக்தித் தொடர், சில தொழில் நுட்ப காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டு, இப்போது மீண்டும் கடந்த திங்கள் முதல் ஒளிபரப்பாகி வருகிறது.


சிவம் மற்றும் சக்தி இணைந்த கதை தான் சிவம்.


விஷ்ணு பக்தரான தட்ச மகராஜனின் மகள் சதி, சிவனிடம் எப்படி ஈர்க்கப்படுகிறாள்?தடைகளுக்கிடையே எப்படி சிவனை மணக்கிறாள் என்பது தொடரின் கதைக் களம்.


திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது, இந்த தொடர்.
நன்றி: தினதந்தி

aanaa
2nd September 2012, 08:12 AM
கார்த்திகை பெண்கள்
http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20120901/TV04.jpg

சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் `கார்த்திகைப் பெண்கள்' தொடர் சின்னத்திரை நேயர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. திரு பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த தொடரில், `கல்கி' படத்தில் கதாநாயகியாக நடித்த ஸ்ருதி நாயகியாக நடிக்கிறார். பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்த பானுசந்தர், ஸ்ருதியின் கணவனாக நடிக்கிறார். இவர்கள் தவிர ஸ்வேதா, ஸரவந்திகா, ஆனந்தி, `பாண்டி' கமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


தனது மகளின் திருமணம் முடிந்ததும் சாருலதா கணவன் மூர்த்தியை விவாகரத்து செய்து லேடிஸ் ஹாஸ்டல் ஒன்றை தனது வீட்டிலேயே துவங்குகிறார். அங்கு ப்ïலா, செண்பகா, ஆர்த்தி ஆகிய மூன்று பேர் தங்குகின்றனர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சினைகள். இவர்களது வாழ்வில் குறுக்கிடும் பிரச்சினைகள் சாருவை பாதிக்கிறது. சாருவின் பிரச்சினைகள் இவர்களையும் பாதிக்கிறது. இவற்றை எல்லாம் சாருவுடன் இணைந்து எப்படி எதிர்கொள்கிறார்கள், சமாளிக்கிறார்கள் என்பது சுவாரஸ்யமாக நகைச்சுவை கலந்து சொல்லப்படுகிறது.


இந்த ஹாஸ்டலுக்கு இவர்கள் தவிர மேலும் மூன்று பெண்கள் வர இருக்கின்றனர். ஆக ஆறு இளம்பெண்களின் வாழ்க்கை இந்த ஹாஸ்டலில் இணைகிறது. கார்த்திகைப் பெண்கள் ஆறு பேர். அவர்கள் தான் முருகனை வளர்த்தவர்கள் என்று புராணம் சொல்கிறது. ஆண்களைச் சார்ந்து இராத தனித்தன்மையுடய கார்த்திகைப் பெண்களைப் போன்றவர்கள் தான் இத்தொடரில் வரும் பெண்கள் என்று டைட்டிலுக்கு விளக்கம் கொடுக்கிறார், தயாரிப்பாளர் திருமுருகன்.


"இந்த ஆறு பெண்களுக்கும் மையமாக இருந்து அடைக்கலம் கொடுக்கிறாள். சாருலதா. தன் கணவன் தரும் இடைïறுகளைச் சமாளித்து அத்துடன் வெளியிலிருந்து வரும் பிரச்சினைகளையும் எதிர்கொண்டு இந்தப் பெண்களுக்கு தோழியாகவும் தாயாகவும் இருந்து அவர்களை எப்படிக் காப்பாற்றுகிறாள் என்பதே இந்த கதை'' என்கிறார் இயக்குநர் கவிதாபாரதி.


ஒளிப்பதிவு: சரத் கே.சந்திரன். எடிட்டிங்: பிரேம். இசை: சஞ்சீவ் ரத்தன். திரைக்கதை வசனம்: பாஸ்கர்சக்தி. கதை எழுதி திரு பிக்சர்ஸ் சார்பாக தயாரிக்கிறார், இயக்குநர் எம்.திருமுருகன்.
நன்றி: தினதந்தி

aanaa
4th September 2012, 06:58 PM
http://www.youtube.com/watch?v=xQSCqQrUax4&feature=player_embedded

aanaa
8th September 2012, 09:15 PM
ரூ.5 லட்சம் பெற்ற ஆயிரத்தில் ஒருத்தி!

"ஆயிரத்தில் ஒருவன்'' ரியாலிடி வினாடி வினா நிகழ்ச்சி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் மக்களிடையே பிரபலமாகி வரும் இந்நிகழ்ச்சி, பலருடைய வாழ்க்கையை மாற்றி அமைத்து விளக்கேற்றி உள்ளது. ஒளிபரப்பான 12 எபி சோடுகளிலும் போட்டியாளர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளுக்கு மெருகேற்றி வருகின்றனர்.


சென்னையைச் சேர்ந்த மணிமாலா என்னும் போட்டியாளர் கடைசி கனவுக் கேள்விக்குச் சரியான விடையைக் கூறி ரூ.5 லட்சம் பரிசு பெற்றுள்ளார். ஆயுள் முழுமையும் அரவணைப்பும், ஆதரவும் தேவைப்படும் பெருமூளை பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயான மணிமாலாவிற்குக் கிடைத்த இந்தப் பரிசு, குழந்தையின் வாழ்வில் ஒளியேற்ற உதவுமென நெகிழ்ந்தார்.


ரூ.62 ஆயிரம் ஜெயித்த மாற்றுத் திறனாளியான மதுரையைச் சேர்ந்த மற்றொரு போட்டியாளரான பக்கிரிசாமி தனது வர்த்தகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இந்தப் பரிசு உதவுமென மகிழ்ந்தார்.


இந்த வினாடி வினா நிகழ்ச்சியின் புனிதமான நோக்கத்தை தெரிந்து கொண்டு பல பிரபலங்கள் இதில் கலந்து கொள்கின்றனர். குறிப்பாக `அபியும் நானும்' படத்தில் நடித்த கணேஷ் வெங்கட்ராமன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பார்வைத் திறனில்லாத பிரபாகரன் மற்றும் தமிழ்வேலன் ஆகியோரின் எதிர்காலத்திற்காக விளையாடி ரூ.1 லட்சத்து 39 ஆயிரத்து ஐநூறு ரூபாய் ஜெயித்துக் கொடுத்தார். இவ்விருவரும் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தற்போது லயோலா கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகின்றனர் என்பது குறிப்படத்தக்கது..
நன்றி: தினதந்தி

aanaa
8th September 2012, 09:16 PM
திரும்பிப் பார்க்கிறேன்

திரையுலகில் சாதனை படைத்து ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டு வெள்ளித் திரையில் அன்றைய நாளில் ரசிகர்களை கவர்ந்த திரையுலக பிரபலங்களின் சுயசரிதம் தான்`திரும்பிப் பார்க்கிறேன்' நிகழ்ச்சி. பிரபல திரைப்பட இயக்குனர் கே.பாலசந்தரின் சுயசரிதம் இந்த நிகழ்ச்சியில் இடம் பெறுகிறது.


மேடை நாடகங்களிலிருந்து , 1965-ம் ஆண்டு நீர்க்குமிழி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு வந்தவர் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர். இத்திரைப்படம் மிகுந்த வெற்றிப் படமாக அனைவராலும் பேசப்பட்டது. அதனைத் தொடர்ந்து அபூர்வ ராகங்கள், எதிர்நீச்சல், சர்வர் சுந்தரம், புன்னகை, கண்ணா நலமா, இரு கோடுகள், வறுமையின் நிறம் சிவப்பு, மூன்று முடிச்சு போன்ற தொடர் வெற்றிப்படங்களை இயக்கிய பெருமைக்குரியவர்.


ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரிதா, சுஜாதா என பல முன் னணி நடிகர்-நடிகைகளை திரையுலகிற்கு அறிமுகம் செய்தவர். இவர் இயக்கியவை பெரும்பாலும் மனித உறவுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவற்றை எடுத்துக் கூறும் திரைப்படங்களாக திகழ்ந்தன. இதுதவிர பல வெற்றிப்படங்களையும் தயாரித்தார்.


வரும் தலைமுறையினருக்கு இவருடைய வாழ்க்கை அனுபவங்கள் நிச்சயம் ஒரு பாடமாக அமையும்.


இந்நிகழ்ச்சியில் கே.பாலசந்தர் தாம் கடந்து வந்த திரையுலக பயணத்தை பற்றியும், சக கலைஞர்கள் பற்றியும் பகிர்ந்து கொள்வதோடு, அவர் இயக்கிய படங்களிலிருந்து பாடல்களும், காட்சிகளும் இடம் பெறும்.


இந்த நிகழ்ச்சி வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும்.
நன்றி: தினதந்தி

aanaa
8th September 2012, 09:17 PM
சரிகமப சேலஞ்ச்-2012

இசை உலகில் `உங்கள் குரலுக்கான மாபெரும் தேடல்' என்ற அடைமொழியோடு தமிழகத்தின் மிகச் சிறந்த குரல் தேடலில் களம் இறங்கியுள்ளது ஜீ தமிழ் தொலைக்காட்சி. 1995 ஆம் ஆண்டு இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் இசைப்போட்டி ஜீ டி.வி.யின் `சரிகமப.' இந்த இந்தி நிகழ்ச்சி சோனு நிகம், ஷ்ரேயா கோஷல், விஜய் பிரகாஷ் போன்ற சிறந்த பாடகர்களை உருவாக்கியது. இப்போது தமிழில் மீண்டும் கால் பதிக்கிறது "சரிகமப'' நிகழ்ச்சி.


இதற்கான நான்கு கட்ட குரல் தேர்வு, மதுரை, திருச்சி, கோவை மற்றும் சென்னையில் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான போட்டியாளர்களில் இருந்து முதல் கட்ட தேர்வில் சுமார் 300 பேர் தேர்வு பெற்று, இரண்டாம், மூன்றாம் சுற்றுக்களில் இதுவே வடிகட்டப்பட்டு நான்காவது சுற்றின் இறுதியில் 30 முத்தான பாடகர்களை தேர்வு செய்துள்ளனர்.


இந்த 30 போட்டியாளர்களும் மிக பிரம்மாண்டமான அரங்கில் நடுவர்களின் முன்னிலையில் தங்களது திறமைகளை காட்டி, அவர்களது குரல் தமிழகத்தின் சாய்ஸாக அமைய மாபெரும் சங்கீத மகாயுத்தம் நடத்தவுள்ளனர். பின்னணி பாடகர் ஹரிஷ் ராகவேந்திரா, பிரசாந்தினி மற்றும் மோகன் வைத்யா நடுவர்கள்.


சனி மற்றும் ஞாயிறுதோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி இது.
நன்றி: தினதந்தி

aanaa
8th September 2012, 09:18 PM
பத்தே கேள்விகள்... பரிசோ 5 கிலோ தங்கம்!
http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20120908/TV-07.jpg

ராஜ் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் `கோல்டு கேசினோ' போட்டி நிகழ்ச்சியில் பத்தே பத்து கேள்விகளுக்கு சரியான பதில் சொல்லி 5 கிலோ தங்கத்தை அள்ளிச் செல்லலாம்.


நடிகை சுஹாசினி மணிரத்னம் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.


நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு முதலில் 20 தங்க காசுகள் கொடுக்கப்படும். கேட்கப்படும் கேள்விக்கு போட்டியாளர் தன் கையில் இருக்கும் எத்தனை தங்க காசுகளை வேண்டுமானாலும் பந்தயம் வைக்கலாம். போட்டியாளர்கள வைக்கும தங்க காசின்அளவைப் பொறுத்து பேங்கரும் அதேஅளவு தங்க காசுகளை வைப்பார். இதில் ஜெயித்தால் பந்தயத்தில் வைக்கப்பட்ட அத்தனை காசுகளும் போட்டியாளருக்கு போய்ச் சேரும். தோற்றாலோ பந்தயம் வைத்த காசு மட்டும் பேங்கருக்கு சென்று விடும். இதைத்தொடர்ந்து போட்டியாளர் தன்னிடம் இருக்கும் மீதமுள்ள தங்க காசுகளுக்கு ஆட்டத்தை தொடரலாம்.


போட்டியாளர் 40 தங்க காசுகளை ஜெயித்ததும், முதலில் பேங்கரிடம் இருந்து பெற்ற 20 தங்கக் காசுகளை அவரிடம் திருப்பிக் கொடுத்து விடடு ஆட்டத்தை தொடரலாம். மொத்த தங்கக்காசுகளையும் பந்தயம் வைத்து விளையாடி, 10 கேள்விகளுக்கும் சரியான பதிலை சொல்கிறவர்கள் 5 கிலோ தங்கத்தை தட்டிச்செல்லலாம்.


திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கும் நிகழ்ச்சி இது.
நன்றி: தினதந்தி

aanaa
15th September 2012, 06:59 PM
உறவுகள்-850
http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20120915/TV-02.jpg

சான் மீடியா நிறுவனம் தயாரித்து சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் முற்பகல் 11:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `உறவுகள்' தொடர், தற்போது 850 வது எபிசோடை நோக்கி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது, தொடரின் இயக்குனர் ஷிவா.கே. அவரிடம் தொடரின் வெற்றி ரகசியம் பற்றி கேட்டபோது...


"சித்ரா, ஸ்வேதாவையும் தன் குடும்பத்துடன் சேர்த்துக் கொண்டு ஒன்றாக வாழ வேண்டும் என விரும்புகிறாள். அதற்காக ஸ்வேதாவை சந்தித்து, `நம் இருவருக்கும் கணவர் முகுந்தன். நாம் இனி தனி தனியாக வாழ வேண்டிய அவசியம் இல்லை. நாம் இனி ஒரே வீட்டில் வாழ்வோம்' என்கிறாள். அதற்கு ஸ்வேதா, `எங்க அப்பா அம்மா ஆசை ஆசையாய் கட்டிய வீடு முகுந்தனால் விற்கப்பட்டு நடுத்தெருவுக்கு வந்தோம். இப்ப நான் பெற்றோருக்கு ஒரு வீடு வாங்கி கொடுக்காமல் வர முடியாது' என்கிறாள்.


சித்ரா தன் கணவன் மற்றும் மாமனார் மாமியாரிடம் ஸ்வேதாவின் எண்ணத்தை சொல்லி, `இந்த வீட்டை ஸ்வேதா பெயருக்கு எழுதி வைப்போம்' என்கிறாள். இதற்கு மாமனார் அழகேசன் மட்டும் சம்மதிக்கிறார். மற்றவர்கள் சம்மதிக்கவில்லை, மாமியாரோ இந்த வீட்டின் பங்குதாரர்கள் முகுந்தன், கிருஷ்ணன், ரஞ்சனி, கவுரி அனைவரும் சம்மதித்தால் மட்டுமே வீட்டை ஸ்வேதா பெயருக்கு மாற்ற முடியும் என்கிறாள். அழகேசன் அனைவரையும் சந்தித்து போராடி சம்மதம் வாங்குகிறார்.


வீடு ஸ்வேதா பெயருக்கு மாற்றி எழுதப்படுகிறது, அப்பொழுது ஸ்வேதா ஒன்றாக இருக்க சம்மதித்து குடும்பத்துடன் அந்த வீட்டிற்கு குடிபெயர்கிறாள், அந்த வீட்டில் காலடி எடுத்து வைத்ததும், "எங்க அப்பா அம்மா எப்படி வீடு இல்லாமல் வெளியே வந்தார்களோ, அதே மாதிரி உங்களையும் வெளியே அனுப்பவே இந்த வீட்டிற்கு வர சம்மதித்தேன்'' என்கிறாள். அதோடு நில்லாமல் முகுந்தன், சித்ரா, அழகேசன், விசாலம் அனைவரையும் வெளியே அனுப்புகிறாள்.அப்போது அழகேசனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்படுகிறது,


கிருஷ்ணனும் காயத்ரியும் ஜோதிடரால் 90 நாட்கள் பிரிந்து இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டு பிரிந்து இருக்கும் போது, ஒரு நாள் தற்செயலாக அனாதை குழந்தைகளுக்கு சாப்பாடு போடும் சம்பவத்தால் இருவரும் சந்திக்க நேரிடுகிறது. 90 நாட்களுக்கு சந்திக்கவே கூடாது என்ற நிலையில் சந்தித்ததால் கிருஷ்ணன் மீண்டும் ஜோதிடரை சந்திக்கிறான், அவரோ `பிரிந்து இருக்க வேண்டும் என்பது விதி. இப்போது திடீரென்று சந்திக்க வைத்ததும் அந்த விதி தான், இருந்தாலும் நீங்கள் இருவரும் சந்தித்ததனால் ஏற்படும் விளைவை ஏற்கத்தான் வேண்டும்' என்று அதிர்ச்சி ஏற்படுத்துகிறார், இருவருக்கும் என்ன ஆகுமோ என்று குடும்பமே பயப்படுகிறது.


இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான காயத்ரியோ அடிபட்டு ஆஸ்பிட்டலில் சேர்க் கப்படுகிறாள், டாக்டரோ `தாய், குழந்தை இருவரில் ஒருவரையே காப்பாற்ற முடியும்' என்கிறார்.


கிருஷ்ணன் பிழைத்தானா? காயத்ரிக்கு குழந்தை பிறந்ததா? மாரடைப்பு ஏற்பட்ட அழகேசன் நிலைமை என்ன? வீட்டை விட்டு வெளியே வந்த சித்ரா, முகுந்தன் இனி என்ன செய்யப் போகிறார்கள்? பரபரப்பாக தொடரும் தொடர் விளக்கும்'' என்கிறார், இயக்குனர். திரைக்கதை: எஸ்,குமரேசன். வசனம்: பாலசூர்யா. இசை: இமான். பாடல்: வைரமுத்து. ஒளிப்பதிவு: கே.எஸ். ஷங்கர்,


தொடரின் நட்சத்திரங்கள்: ஸ்ரீகுமார், பாவனா, ஸ்ரீதுர்கா, அப்சர், ராஜ்காந்த். அமரசிகாமணி, ராமச்சந்திரன், சாந்தி வில்லியம்ஸ், டி.ராஜேஸ்வரி, ரேவதி சங்கர், நீபா, ஜெயப்பிரகாசம், சிவகவிதா, சோனியா, பரத், ஜெயந்த். கே.எஸ். ஜெயலட்சுமி. ஜெ. லலிதா. வைரவராஜ், சுதா, ஆர்த்திகாஸ்ரீ. வத்சலா ராஜகோபாலன். பாஸ்கர் ராஜா. கிச்சா. எம்.எல்.ஏ தங்கராஜ்.
நன்றி: தினதந்தி

aanaa
15th September 2012, 07:00 PM
சின்ன மருமகள்

ஜீ தமிழில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளி பரப்பாகி வரும் `சின்ன மருமகள்' தொடர், எதிர்பாராத திருப்பங்களில் பயணிக்கிறது.


தான் தொலைத்த தேவா அருகில் இருந்தும் அவனுடன் சேர்ந்து வாழ முடியாத நிலையில் தவிக்கிறாள், ராதிகா. அவளுக்காக அவ்வப்போது கவலைப்படும் தேவா, தன் மனைவி கன்னிகா தான் என்று உறுதியாகக் கூறி ராதிகாவை புறக்கணிக்கிறான்.


இதற்கிடையில் சுய நினைவின்றி தம் மாப்பிள்ளையாக இருப்பவர் அபய் தேவா தான் என்று தெரிந்து கொண்ட கன்னிகாவும் அவளுடைய குடும்பத்தினரும் மஹாபண்டிதர் பதவி மற்றும் 600 கோடி ரூபாய் சொத்திற்காக தேவாவை ராதிகாவிடமிருந்து நிரந்தரமாகப் பிரிக்கத் திட்டமிடுகின்றனர். அதை செயல்படுத்தும் விதத்தில் தேவா-கன்னிகா திருமணத்தை நிச்சயிக்கின்றனர்.


இந்நிலையில் இறந்து விட்டதாக நினைத்த கன்னிகாவின் உண்மைக் காதலன் அபய் போன் பண்ண, முதலில் நம்பாத கன்னிகா, பின்பு சின்னக்குழந்தை போல் அவனை நோக்கி ஓடுகிறாள். கன்னிகாவும், அபயும் சந்தித்தார்களா? கார்த்தியாயினி தேவியின் எண்ணம் நிறைவேறியதா? ராதிகாவின் எதிர்காலம் என்னாகும்? திருப்பங்களுடன் தொடர்கிறது, தொடர்.
நன்றி: தினதந்தி

aanaa
15th September 2012, 07:01 PM
மும்பையில் தேடிய கதாநாயகி!

மும்பை, தமிழுக்கும், தமிழ், மும்பைக்கும் ஆற்றிய கதாநாயகி பரிமாற்றம் உலக சினிமா வரலாற்றில் இடம் பிடித்த ஒரு விஷயம்.


நமது வைஜயந்தி மாலா, ஹேமமாலினி, ரேகா, ஸ்ரீதேவி, வித்யாபாலன், அசின் போன்றோரை மும்பைக்கும், மும்பை தனது நக்மா, சிம்ரன், ஜோதிகா, பூமிகா, நமிதா, சமீரா ரெட்டி, ஐஸ்வர்யாராய், தீபிகா படுகோன், போன்றோரை தமிழுக்கும் அனுப்ப...!


அந்த வகையில் மேலும் சில தமிழ் பேசும் அழகுப்பதுமைகளை ராஜ் டிவியின் `தமிழ் பேசும் கதாநாயகி'க்காக தேடி ஒரு பயணம்.


கொட்டும் மழையிலும் மும்பை அழகு பெண்கள் கதாநாயகி தேடலுக்கு வந்ததில் அவர்களின் ஆர்வம் தெரிந்தது.


தொகுப்பாளர்கள் பாலாஜி, பூஜா மற்றும் ஷில்பா நிகழ்ச்சியினை நடத்தினார்கள். கல்லூரி மாணவிகளுடன் பல நடனப்பள்ளி மாணவிகளும் கலந்து கொண்டனர்.


`கழுகு' புகழ் கிருஷ்ணா, `காதலில் சொதப்புவது எப்படி' இயக்குனர் பாலாஜி மோகன், மும்பையின் பிரபல நடனமணிகள் நந்தினி அசோக், கவுரிராவ் மேதா ஆகியோர் நடுவராக இருந்து 100-க்கும் மேற்பட்ட போட்டியாளர்களை அவர்களின் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்தனர். முதல் சுற்றில் முப்பது பேர் தேர்வானார்கள். அதுவே இரண்டாம் சுற்றில் 15 ஆக குறைந்தது. தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் ஆட்டம் பாட்டம், நடிப்பு முகம் அத்தனையும் சுவாரஸ்ய காட்சிப் பதிவுகள்.


சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு ராஜ் டிவியில் இந்த கதாநாயகி தேர்வை ரசிக்கலாம்.
நன்றி: தினதந்தி

aanaa
15th September 2012, 07:02 PM
இமயத்துடன்..!

பாட்டு என்றதுமே உடனடியாக நினைவுக்கு வருபவர் டி.எம்.சவுந்தர்ராஜன். கணீர்க்குரல், கம்பீரக் குரல், ஆண்மைக் குரல் என்று அவரது குரல் வளம் பற்றி பிரபல இசையமைப்பாளர்களே பாராட்டியிருக்கிறார்கள். எம்.ஜி.ஆருக்கு அவர் மாதிரி, சிவாஜிக்கு அவர் மாதிரி என்று யாருக்கு பாடினாலும் நடித்தவர்களே பாடினார்களோ என்று பிரம்மையை ஏற்படுத்திய குரல் வளத்துக்கு சொந்தக்காரர். 7வயதில் பாட ஆரம்பித்தவர் இன்று 90 வயதிலும் பாடுகிறார்.


இந்த இசையரசர் பற்றி இப்போது ஒரு தொடர் உருவாகி வருகிறது. பாட்டுடைத் தலைவனின் இசையோடு இணைந்த வாழ்க்கைப் பதிவான இந்த தொடரை விஜயராஜ் இயக்குகிறார். இந்த தொடருக்காக கோவையில் உள்ள சென்ட்ரல் ஸ்டூடியோ, பட்சிராஜா ஸ்டூடியோ, சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டூடியோ இவற்றுக்கெல்லாம் டி.எம்.சவுந்தர்ராஜனே நேரடியாக சென்று அந்த ஸ்டூடியோவில் தான் பாடிய அனுபவங்களை அவரே மகிழ்ச்சி பொங்க விவரிக்கிறார்.


அந்த நாட்களில் பாட்டுப் பாட அவருக்கு மாத சம்பளம் 50 ரூபாய் என்ற தகவல் ஆச்சரியம் என்றால், பாட்டுப்பாடும் ஸ்டூடியாவுக்கு மூன்று மைல் தூரத்திலுள்ள தனது தங்குமிடத்தில் இருந்து நடந்தே வருவார் என்பது அடுத்த கட்ட ஆச்சரியம்.


இந்த காலகட்டத்தில் பி.ï.சின்னப்பா நடித்த `சுதர்சன்' படம் கோவையில் உள்ள ராயல் டாக்கீசில் ரிலீசாகி இருக்கிறது. அதில் பி.ï.சின்னப்பா பாடிய ஒரு பாடலை டி.எம்.எஸ் ரசித்து பாடுவதுண்டாம். ஒருமுறை ஸ்டூடியோ மாடியில் பி.ï.சின்னப்பா தனது நண்பர்களுடன் சீட்டாடிக் கொண்டிருந்திருக்கிறார். கீழே இருந்தபடி சின்னப்பா பாடிய சுதர்சன் படப்பாடலை உணர்ச்சி பொங்க பாடியிருக்கிறார், டி.எம்.எஸ்.


அப்போது சின்னப்பாவின் நண்பர் ஒருவர், `அண்ணே கீழே யாரோ ஒருத்தன் உங்க பாட்டை கன்னாபின்னான்னு பாடிக்கிட்டிருக்கான். நான் போய் சத்தம் போட்டு: பாட்டை நிறுத்திட்டு வரேன்' என்று சொல்ல, சின்னப்பாவோ, `அந்தப் பாட்டை நான் பாடினதை விடவும் அற்புதமா பாடறான்யா. வேணும்னா பாரு, பின்னாளில் பெரிய பாடகனா வரப்போறான். அதனால் அவன் பாடுறதை தடை பண்ணாதே' என்று சொல்லியிருக்கிறார். அப்போது அங்கிருந்த பிரபல இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு பின்னாளில் இந்த தகவலை டி.எம்.எஸ்.சிடம் சொல்லியிருக்கிறார். இந்த சம்பவத்தை மகிழ்ச்சியுடன் விவரித்த டி.எம்.எஸ்., `என்ன இருந்தாலும் பெரியவங்க பெரியவங்க தான்' என்கிறார்.


இந்த தொடரில் டி.எம்.எஸ்.சை இன்றைய பிரபல இசையமைப்பாளர்கள் சந்தித்து அளவளாவுகிறார்


கள். டி.எம்.எஸ்.சின் `பாடல் பெற்ற' நடிகர்கள் எஸ்.எஸ்.ஆர், சிவகுமார் போன்றோர் சந்தித்து உரையாடுகிறார்கள். இந்த வயதிலும் பழைய சம்பவங்கள் எதையும் மறக்காமல் டி.எம்.எஸ். பேசுகிற அழகை அவர்கள் வியக்கிறார்கள். அவர்கள் மட்டுமா, நாமும்


தான்.முத்தாய்ப்பாக ஒரு காட்சி. டி.எம்.எஸ். முதன் முதலில் சினிமாவில் பாடியதை தன் தந்தையிடம் மகிழ்ச்சி பொங்க கூறுகிறார். ஆனந்தத்தில் குரல் தழுதழுத்துப் போன தந்தை, `நீ நல்லா வருவப்பா' என்றபடி உச்சி முகர்ந்து வாழ்த்துகிறார். இந்த காட்சிக்கு டி.எம்.எஸ்.சாயலில் உள்ள அவரது மகள் வயிற்று பேரன் சுந்தரை நடிக்க வைத்திருக்கிறார்கள். இந்த காட்சியில் டி.எம்.எஸ்.சின் அப்பாவாக நடித்திருப்பவர் சினிமா பத்திரிகையாளரான மேஜர் தாசன்.


இசை வரலாறான டி.எம்.எஸ்.சின் இசையுடன் கூடிய இந்த வாழ்க்கைப் பதிவு, விரைவில் தனியார்சேனலில் ஒளிபரப்பாகவிருக்கிறது.
நன்றி: தினதந்தி

aanaa
22nd September 2012, 07:47 PM
மனம் கவர்ந்த வீடு

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஜீ தமிழில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புகுந்தவீடு தொடர், நேயர்களின் மனம் கவர்ந்த தொடராகி இருக்கிறது. 50 எபிசோடுகளை கடந்து தொடரும் இந்த தொடரை பி.நித்யானந்தம் இயக்குகிறார்.


புகுந்த வீட்டில் வாழப்போன தன் மகள் ராதா கடந்த ஆறு வருடங்களாக மாப்பிள்ளை விசுவுடன்மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்று நம்பிக் கொண்டிருந்தார், அப்பா ராமநாதன். ஆனால் மருமகன் விசு தன் மகளை திருமணம் செய்த பின்னணியில் ஜோதிடம் இருப்பதும், `முதல் மனைவி தங்க மாட்டாள்; இரண்டாவது மனைவி தான் செட்டாவாள்' என்று ஜோதிடர் சொன்னதைக் கேட்டே தன் மகளை முதல் தாரமாக விசு திருமணம் செய்திருக்கிறான் என்பதை அறிந்ததும், நொறுங்கிப் போகிறார். வேதனையில் சம்பந்தி வீட்டுக்கு வருபவர், சம்பந்தி வீட்டாரிடமும், மாப்பிள்ளை விசுவிடமும் சண்டை போடுகிறார். தனது மருமகன் அனுஷா வலையில் விழுந்து கிடப்பதை குறிப்பிட்ட ராமநாதன், "என் மகளை ஏமாற்றி விட்டு நீ வாழ முடியாது'' என்று எச்சரிக்கிறார்.


விசு, ராதாவுடன் சேர்ந்து வாழ்வானா? அனுஷாவை திருமணம் செய்து கொள்வானா? கேள்விக்கு விடையாக தொடர்கிறது பரபரப்பான காட்சிகள்.


கதை: இந்திரா சவுந்தர்ராஜன். இசை: கிரண். ஒளிப்பதிவு: சுதாகரன். வசனம்: ஐ.அசோகன்.
நன்றி: தினதந்தி

aanaa
22nd September 2012, 07:48 PM
`லிட்டில் மாஸ்டர்ஸ்' சீசன்-4

ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் லிட்டில் மாஸ்டர்ஸ், தென்னிந்தியாவின் மாபெரும் நடன நிகழ்ச்சியாகவும் அடையாளப் படுத்தப் பட்டிருக்கிறது.


மூன்று ஆண்டுகளில் மூன்று வெற்றிகரமான சீசன்களைக் கடந்து 2012-ல் பிரமாண்டமான முறையில் சீசன் நான்கை எட்டியிருக்கிறது இந்த நிகழ்ச்சி.


தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக குருகுலம் முறையை பயன்படுத்திய நிகழ்ச்சியும் இதுவே. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பல குழந்தைகள் இன்று சின்னத்திரையிலும் வெள்ளித்
திரையிலும் நட்சத்திரங்களாக ஜொலித்து வருகிறார்கள்.


தமிழகத்தின் மூன்று முக்கிய நகரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட டாப்-20 சுட்டி நடனப்புயல்கள் வரும் வாரம் அவர்களின் நடன ஆசிரியர்களுடன் நடனப் பள்ளி நண்பர்களுடன் அறிமுகமாகிறார்கள்.


நிகழ்ச்சியின் நடுவர்களான நடிகர்கள் பிருத்விராஜ், ராகவ் ஆகியோருடன், இப்போது பிரபல நடனஇயக்குனர் ரகுராம், நடிகை மும்தாஜ் ஆகியோர் புதிய நடுவர்களாக இணைந்திருக்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்கான வெற்றிக் கொண்டாட்டத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் கலந்து கொண்டு குட்டி நட்சத்திரங்களின் திறமை கண்டு வியந்தார்.


வெள்ளி, மற்றும் சனி இரவு 8 மணிக்கு இந்த நிகழ்ச்சியை ஜெயா டிவியில் காணலாம்.
நன்றி: தினதந்தி

aanaa
22nd September 2012, 07:48 PM
பஜனை பாடலுக்கு பத்து லட்சம் வென்ற பள்ளி மாணவிகள்

http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20120922/TV01.jpg

ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சி சில மாதங்களுக்கு முன்பு `பஜன் சாம்ராட்' என்கிற குழு பஜனைக்கான போட்டியினை அறிவித்திருந்தது. இதற்கான தகுதிச்சுற்று சென்னை, பெங்களூர், தஞ்சாவூர், கோவை, மற்றும் ஹூப்ளியில் நடைபெற்றது. 200-க்கும் மேற்பட்ட பஜன் குழுக்கள் கலந்து கொண்டனர். அவர்களில் 24 குழுக்கள் முதற்சுற்றுக்கும், அவற்றிலிருந்து 12 குழுக்கள் காலிறுதிக்கும் அவற்றிலிருந்து 8 குழுக்கள் அரையிறுதிக்கும் தேர்வு செய்யப்பட்டனர்.


இதிலிருந்து ஐந்து அணிகள் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்டு, இறுதிச் சுற்று கடந்த சனிக்கிழமை சென்னை மீனாட்சி கல்லூரி அரங்கில் நடைபெற்றது. இறுதிச் சுற்றில் நவரசமும் கலந்து பரவசமாய் பக்திப் பாடல்களை பாடிய விஷ்வ வித்யாலய பஜனைக் குழுவினர் `பஜன் சாம்ராட்' பட்டத்தை வென்றதோடு, பத்து லட்சம் ரூபாய் பரிசுத்தொகையையும் பெற்றுக் கொண்டனர். இந்த குழு முழுக்க முழுக்க பள்ளி மாணவிகளை மட்டுமே கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.


இரண்டாம் இடத்தை தட்டிச் சென்றவர்கள் ஹூப்ளி பசவேஸ்வர பஜன் மண்டலி தர்வாத் அணியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அடிப்படை இசைப்பயிற்சிகளோ, இசைப்பாரம்பரியமோ இல்லாத ஏழை விவசாயிகள். ஆனால் தங்களுக்கான இசைத்திறமையை வளர்த்துக் கொண்டு போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்து விட்டார்கள். இவர்கள் 4 லட்சம் ரூபாய் பரிசாக பெற்றார்கள். மூன்றாவது இடத்தை பெற்ற அம்பத்தூர் ஜி.கே.ஷெட்டி விவோனந்தா வித்யாலயாவுக்கு 3 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. நான்காம் இடம் பெற்ற பாலக்காடு மேலார்கோட் சிஸ்டர்ஸ் அணிக்கு ரூ.2 லட்சமும், ஐந்தாமிடத்தில் வந்த போத்தனூர் சத்குரு கிருபா பஜன் மண்டலி அணிக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்பட்டன.


நிகழ்ச்சியில் பஜன்சாம்ராட் இயக்குனர் ஜெய் ஆதித்யா கவுரவிக்கப்பட்டார்.


இறுதிச் சுற்றின் நடுவர்களாக `பஜன் சாம்ராட்' அனுப் ஜலோட்டா, கர்நாடக இசைப்பாடகி சுதா ரகு நாதன் மற்றும் ஸ்ரீ மல்லிகார்ஜ×ன பாகவதர் பங்கேற்றனர்.


ஸ்ரீசங்கரா தொலைக்காட்சியின் சி.இ.ஓ. சுரேஷ்குமார் இந்த போட்டி நிகழ்ச்சி பற்றி கூறும்போது, " நமது அரிய பஜன் பாடல்களை இளைய தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நினைத்து உருவாக்கப்பட்டது தான் இந்த போட்டி நிகழ்ச்சி. இறைவனை நினைத்து குழுவாக பஜன் பாடல்கள் பாடும் பொழுதும் கேட்கும் பொழுதும் மன அழுத்தங்கள் குறைந்து தெளிவான எண்ணங்கள் தோன்றுகின்றன. கைவிடப்பட்ட நிலையில் உள்ள பெரும்பாலான நோய்களுக்கு மாற்று மருத்துவமாக பஜன் பாடல்கள் திகழ்கின்றன என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் பட்ட ஒன்று'' என்றார்.
நன்றி: தினதந்தி

aanaa
22nd September 2012, 07:50 PM
மறக்கமுடியாத `மனதோடு மனோ!'
http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20120922/TV03.jpg

ஜெயா டிவியில் புதன்கிழமை தோறும் ஒளிபரப்பாகி வந்த `மனதோடு மனோ' நிகழ்ச்சி, இசைக்கலைஞர்களின் இன்னொரு பக்கத்தை மனம் திறந்த மடலாக எடுத்துக் காட்டியது. அதுவரை தங்கள் வாழ்வின் மலர்ப்பக்கங்களை மட்டுமே பட்டியலிட்டு வந்தவர்கள் கூட, மனோவின் முகம் பார்த்த நேரத்தில் தாங்கள் கடந்து வந்த முட்பாதையையும் கண்ணீர் மல்க விவரித்த அதிசயமும் நடந்தது.


இந்த நிகழ்ச்சியின் நிறைவுவிழாவை மனோ தனது கலை நண்பர்களுடன் கொண்டாடினார். நிகழ்ச்சியை இயக்கிய சண்முகம், நிகழ்ச்சித் தயாரிப்பாளரும் டைரக்டர் சண்முகத்தின் மனைவியுமான பிரியா மகாலட்சுமி (முன்னாள் சின்னத்திரை நடிகை மற்றும் முன்னணி தொகுப்பாளர்) பாடகர்கள் டி.எல்.மகாராஜன், வேல்முருகன், நிகழ்ச்சிக்கு இசை வழங்கிய ஸ்ருதி லட்சுமண், மற்றும் இசைக்குழுவினர் பெருவாரியாக கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சியில் பாடகர் வேல்முருகன் அம்மா பாட்டு பாடி நெகிழ வைத்தார். `பத்து மாசம் என்னை சுமந்து பெற்றெடுத்த அம்மா...உன் பாசத்துக்கு முன்னாலே எல்லாமே சும்மா' என்று அவர் உருகிப் பாடியபோது கேட்டவர்களும் கண் கலங்கிப் போனார்கள்.


நிகழ்ச்சியில் பாடகர் டி.எல்.மகராஜன் பேசும் போது, பிரபல பாடகரான தன் தந்தை திருச்சி லோகநாதனின் அன்பை நினைவு கூர்ந்தார். பெற்றோருக்கு தன்னையும் சேர்த்து 13 பிள்ளைகள். சிறு வயதிலேயே பாடும் வாய்ப்பு கிடைக்கப் பெற்று சம்பாதிக்க ஆரம்பித்து விட்டதால், தன் தாயின் கடைசி 5 பிரசவங்களுக்கு தானே செலவு செய்யும் பாக்கியம் பெற்றேன் என்று நெகிழ்ந்தார்.


இப்படியொரு மகனை பிள்ளையாகப் பெற்றது என் வாழ்வின் பெரும்பேறு என்று நெகிழ்ந்த அப்பா, ஒவ்வொரு இசைமேடையிலும் மறவாமல் `பங்காளிகள்' படத்தில் தான் பாடிய `சின்ன அரும்பு மலரும் சிரிப்பை சிந்தி வளரும் என்ற பாடலை பாடுவாராம். பாடலினூடே வரும் `மண்ணில் உலவும் நிலவே என் வயிற்றில் உதித்த கனியே... வாழ்வும் உன்னால் செழித்தே மனம் மகிழும் நாள் வரும்' என்ற வரிகளைப் பாடும்போது அப்பா என்னை மனதார பாராட்டுவது போலவே உணர்வேன் என்றார். சிறுவயதிலேயே குடும்பத்தை தாங்கினேன் என்பதால் அப்பாவுக்கு என் மீது அத்தனை பிரியம் என்று அவர் தழுதழுத்தபோது, கேட்டவர்களும் அந்த பாச சூறாவளியில் சிக்குண்டது நிஜம்.


வாழ்க்கையில் ஒரு மனிதன் உயர்ந்த ஸ்தானத்தில் இருந்தாலும் மனிதநேயத்தை விட்டு விடாதவனாக இருக்க வேண்டும் என்பதற்கு கவிஞர் காமகோடியன் எழுதிய `அறிஞனாயிரு, கலைஞனாயிரு, ஆயிரம் கோடிக்கு அதிபனாயிரு, அரசனாயிரு, புருஷனாயிரு, மொத்தத்தில் மனிதனாயிரு' என்ற பாடலை அவர் மேற்கோள் காட்டி பாடியபோது அரங்கு அதிர கரகோஷம்.


நிகழ்ச்சியில் எம்.எஸ்.விஸ்வநாதன் வரை கலந்து கொண்டு விட்ட போதிலும், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கலந்து கொள்ள முடியாமல் போனது நிச்சயம் இசை ரசிகர்களுக்கான வருத்தமே. ஆனால் எஸ்.பி.பி. சொல்லி துபாயில் மூளை வளர்ச்சி குறைந்த ஒரு இளைஞனை நிகழ்ச்சியில் பாட வைத்ததை குறிப்பிட்ட டைரக்டர் சண்முகம், `இந்த நிகழ்ச்சி மீதான எஸ்.பி.பியின் அக்கறையாகவே அதை எடுத்துக் கொண்டோம்' என்றார்.


அதற்கென்ன, `மனதோடு மனோ' இரண்டாம் பாகத்தின் ஆரம்பத்திலேயே எஸ்.பி.பி.யை பாடவைத்தால் போயிற்று!
நன்றி: தினதந்தி

aanaa
22nd September 2012, 07:52 PM
மானாட... மயிலாட...

மலேசியத் தலைநகர் கோலாலம்பூர், சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்த ரம்யமான ஒரு நகரம். சமீபத்தில் அங்கு இறுதிப்போட்டிக்காக சென்றிருந்த "மானாட... மயிலாட'' குழுவினர் கலைஞர் தொலைக்காட்சி நேயர்களுக்காக பிரபலமான பொழுதுபோக்கு மையங்கள், வர்த்தக நிறுவனங்கள் என்று கோலாலம்பூர் நகரத்தைப் படம் பிடித்து வந்துள்ளனர்.


அடுத்தடுத்து ஒளிபரப்பாகவுள்ள எபிசோடுகளில் நடனக்குழுவினர் ஆங்காங்கே நடனமாடும் காட்சிகளை, நேயர்கள் கண்டு களிக்கலாம்.


கோலாலம்பூர் நகரில், பார்க்க வேண்டிய இடங்களைத் தேர்வு செய்து, நடன இயக்குனர் கலா மாஸ்டர் மேற்பார்வையில் நடனக் குழுவினர் நடனமாடுவது, நேயர்களை நிச்சயமாக வசீகரிக்கும்.
நன்றி: தினதந்தி

aanaa
22nd September 2012, 07:55 PM
ஆயிரமாவது எபிசோடில் ஜீ தமிழின் டாப்-10!


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டாப் 10 நிகழ்ச்சி ஆயிரமாவது எபிசோடை தொடவுள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 11.30 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் டாப்-10 ரசிகர்களை ரொம்பவே கவர்ந்து வரும் நிகழ்ச்சி. தமிழகம், இந்தியா, உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு என 5 தலைப்புகளில் 50 செய்திகளை குறுகிய நேரத்தில் தருவது இந்த நிகழ்ச்சிக்கான ஸ்பெஷல்.


இதில் டாப்-10 தமிழகம் நிகழ்ச்சியில் தமிழ் திரைப்படங்கள் குறித்த தகவல்களும், கோலிவுட்டில் நிகழும் ருசிகர சம்பவங்களும் இடம் பிடிக்கிறது. தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரையுலகில் நிகழும் ஒட்டுமொத்த நிகழ்வுகளை டாப்-10 இந்தியா விவரிக்கிறது. உலகெங்கும் நிகழும் வினோதங்கள், பார்வையாளர்களை ஆச்சரிய உலகிற்குஅழைத்து செல்லும் வித்தியாசமான நிகழ்வுகளை டாப்-10 உலகம் விவரிக்கிறது. ஹாலிவுட் திரையுலகம் குறித்த தகவல்களை டாப்-10 பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் தருகிறார்கள். இதில் அயல்நாடுகளில் நடக்கும் இசை நிகழ்ச்சிகள் மற்றும் விருது விழாக்களின் தொகுப்பும் இடம் பிடிக்கிறது. விளையாட்டு உலகம் குறித்த சுவாரஸ்ய தகவல்களை டாப்-10 விளையாட்டு நிகழ்ச்சி வழங்குகிறது. இந்த நிகழ்ச்சி விரைவில் ஆயிரமாவது எபிசோடை எட்டவுள்ளது.
நன்றி: தினமலர்

aanaa
29th September 2012, 06:51 AM
ஸ்ரீகாந்த் வென்ற தங்கம்

ராஜ் டிவியின் `கோல்ட் காசினோ' அறிமுக நிகழ்ச்சி வினாயகர் சதுர்த்தி தினத்தில் நடந்தது. ஆண்களும் பெண்களும் தங்கம் என்றதும் எப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள்? எவ்வளவு பதட்டப்படுகிறார்கள்? இப்படி தங்கத்தை தக்க வைக்கும் ஆர்வம் கண்களில் தெரிய நிற்பதை நேயர்கள் பார்த்திருக்கலாம்.


தொடரும் இந்த நிகழ்ச்சியில் இன்னும் நிறைய கொண்டாட்டங்களோடு யார் யார் எவ்வளவு தங்கத்தை வென்று வீட்டிற்கு கொண்டு போகிறார்கள் என்பதையும் காணலாம்.


கலந்துகொள்ளும் ஒவ்வொருவரும் வெறுங்கையோடு போகமாட்டார்கள் என்பது நிச்சயம்.


நிகழ்ச்சியின் இடை இடையே தங்கம் வாங்குவதில், சேமிப்பதில், கவனத்தில் கொள்ள வேண்டிய உதவி குறிப்புகளும் வழங்கப்படுகிறது.


அக்டோபர் 1 ஆம் தேதியில் `கோல்ட் காசினோ' நிகழ்ச்சியின் முதல் எபிசோட் ஒளிபரப்பாக இருக்கிறது. நடிகர் ஸ்ரீகாந்த் பங்கேற்கும் முதல் எபிசோடு என்ற பெருமையும் இந்த நிகழ்ச்சிக்கு உண்டு. நிகழ்ச்சியில் ஸ்ரீகாந்த் எத்தனை கிராம் தங்கம் வென்றார் என்பதை மறுநாள் நிகழ்ச்சியில் காணலாம்.


நடிகை சுஹாசினி தொகுத்து வழங்குகிறார்.
நன்றி: தினதந்தி

aanaa
29th September 2012, 06:52 AM
துளசியின் குழந்தைக்கு தந்தை யார்?

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் துளசி தொடர், பரபரப்பான திருப்புமுனை காட்சிகளில் ரசிக்க வைக்கிறது.


துளசி-பிரசன்னா இருவருக்கும் திருமணம் ஆகிறது. முதலிரவிலேயே துளசி கர்ப்பமாக இருக்கும் தகவல் பிரசன்னாவுக்கு தெரிய வர, அவன் அதிர்ச்சியடைகிறான். குழந்தையின் தந்தை யார் என்றதேடலில் இறங்குகிறான்.


ஞாபகங்களை தொலைத்த துளசிக்கு அந்த கால கட்டத்தில் நேர்ந்த இந்த சோகம் பற்றி மருத்துவரிடமும் பகிர்ந்து கொள்கிறான். இதன் விளைவாக குழந்தை பற்றிய ரகசியம் பிரசன்னாவிற்கு தெரிய வந்ததா? மருத்துவரின் கண்காணிப்பில் துளசி மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தாளா? துளசி-பிரசன்னா இருவரின் வாழ்க்கை இனி எப்படி இருக்கப் போகிறது?


ராஜ்பிரபுவின் திரைக்கதைக்கு ஜான்கென்னடி வசனம் எழுத, பாலாஜி யாதவ் இயக்குகிறார்.இசை: தீனா. தயாரிப்பு: மார்நேனி புரொடக்ஷன்ஸ்.
நன்றி: தினதந்தி

aanaa
29th September 2012, 06:54 AM
கபடி... கபடி...

ஜெயா தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி `கலக்கல் கபடி' கே.பி.எல்.


தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக நமது பாரம்பரிய விளையாட்டான கபடியை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி இது. மக்களிடம் பேராதரவு பெற்ற இந்த நிகழ்ச்சி, தமிழகம் தழுவிய அளவில் ஒரு மாபெரும் போட்டியாகவும், ரியாலிட்டி ஷோவாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.


விளையாட்டு வீராங்கனைகளின் உணர்ச்சிமிகு குடும்ப பின்னணிகளையும், வறுமையை வென்று முன்னேறி வரும் அவர்களது தன்னம்பிக்கையும் வாரா வாரம் ஒளிபரப்பி வரும் இந்த நிகழ்ச்சியில், இன்று இரவு 9.30 மணிக்கு ஈரோடு அணியும், திருப்பூர் அணியும் மோதவிருக்கின்றன. நாளை பிற்பகல் 1.30 மணிக்கு கோவை அணியும், நீலகிரி அணியும் மோதுகின்றன. இவ்விரு அணி வீராங்கனைகளையும் நடிகை அஞ்சலி உற்சாகப்படுத்துகிற காட்சிகளும் இந்த எபிசோட்டில் இடம் பெற்றுள்ளது.


பெண் குழந்தை என்பதால் தந்தையால் புறக்கணிக்கப்பட்டு பல போராட்டங்களுக்கு இடையே சாதனை படைத்து வரும் சிந்தனைச்செல்வியின் வாழ்க்கை கதை இந்த வாரம் மனதை நெகிழ்த்துகிறது. கபடிக்காக திருமணத்தையே புறக்கணித்த நந்தினியின் லட்சியக் கதையும் இடம் பிடிக்கிறது.


நிகழ்ச்சி முடிவில் நகைச்சுவை நடிகர் சந்தானம் கபடி பற்றிய தனது கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார்.
நன்றி: தினதந்தி

aanaa
1st October 2012, 12:25 AM
விரைவில் மகாபாரதம் தொடர்!


http://www.cinemaexpress.com/Images/article/2012/9/25/mahabharata.jpg

சன் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கிறது மகாபாரதம் தொடர். இதற்கான படப்பிடிப்பு குற்றாலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இத்தொடரை நாகா இயக்கி வருகிறார். வழக்கமாக புராணத் தொடர்கள் என்றால் வேற்று மொழியில் தயாரானதை வாங்கி டப் செய்து தான் வெளியிடுவார்கள். ஆனால் முதன் முதலாக தமிழ் மொழியிலேயே "மகாபாரதம்' தொடர் தயாராகிறது.

:clap:

aanaa
7th October 2012, 10:34 PM
சின்னத்திரையில் மந்த்ரா..!


http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20121006/TV-01.jpg


"சின்னத்திரை நிகழ்ச்சிகளில் வித்தியாசமானது, புதுமையானது என்ற பெயரை எடுத்த எடுப்பிலேயே பெற்றிருக்கும் நிகழ்ச்சி, ஆயிரத்தில் ஒருவன். நேயர்களின் தனித்திறனை புடம் போட்ட பொன்னாக வெளிக்கொணர்ந்து அதற்குப் பரிசும் வழங்கும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் தனித்துவம் தெரிகிறது. பொதுஅறிவில் அவர்கள் அற்புதமாகத் தேர்ந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது'' என்கிறார், நடிகை மந்த்ரா.


25 எபிசோடைத் தாண்டி ஜி தமிழில் தொடரும் ஆயிரத்தில் ஒருவன் நிகழ்ச்சியில், இப்போது பங்கேற்று நேயர்களுடன் உரையாடுபவர் நடிகை மந்த்ரா., ரசிகர்களின் நெஞ்சில் நிறைந்த அதே மந்த்ரா தான். இப்போது 8 ஆண்டுகள் இடைவெளியில் இப்போது சின்னத்திரையில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.


"நிஜமாகவே நான் எதிர்பார்த்திராத அனுபவங்கள் இந்த நிகழ்ச்சியில் கிடைக்கிறது. இதில் கவிதை பற்றியும் பேசலாம். சமையல் பற்றியும் பேசலாம். எது பற்றியும் பேசலாம். இந்த வாரம் மதுரை பற்றி பேசினோம். மதுரை என்றாலே மல்லி, மீனாட்சியம்மன் கோவில், ஆயிரங்கால் மண்டபம் நினைவுக்கு வரும். ஆனால் போட்டியாளர்களிடம் பேசும்போது மதுரை பற்றி அதற்கு மேலும் எத்தனையோ சிறப்புக்களை தகவல்களாக கொட்டினார்கள். இந்த நிகழ்ச்சி மூலம் மீண்டும் ரசிகர்களுடனான என் பிணைப்பு இப்போது இன்னும் இறுகியிருக்கிறது. அந்தவிதத்திலும் இந்த நிகழ்ச்சி எனக்கு ஸ்பெஷல்'' என்கிறார், மந்த்ரா.


டைரக்டர் நிவாசை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கைக்குப் போனவரை இந்த நிகழ்ச்சியின் சுவாரசியம் அழைத்துக் கொண்டு வந்திருக்கிறது.


"நேயர்களின் பங்களிப்பில் சுவாரசியம் கொட்டிக் கிடக்குமே?''


மந்த்ராவைக் கேட்டால், "உண்மை. அவர்கள் திறமை பார்த்து நானே பிரமித்து விட்டேன். குறிப்பாக கவியரசர் கண்ணதாசனை பற்றி பேச்சு வந்தபோது, பாடல்களை அவர் எந்தெந்த சூழலில் எழுதினார் என்ற தகவல்களை அவர்கள் உற்சாகமாய் தந்தார்கள். இத்தனை விஷயம் கவியரசர் பற்றி தெரிந்து வைத்திருக்கிறார்களா என்று வியப்பு ஏற்பட்டது. அவரின் ஆழ்ந்த புலமை எப்படி சூழ்நிலையோடு இணைந்திருந்தது என்பதில் வியப்பும் ஏற்பட்டது. புதிய விஷயங்களை தெரிந்து கொள்ள இது நல்ல மேடை'' என்கிறார்.


"மீண்டும் பெரியதிரைக்கு எப்போது வருகிறீர்கள்?''


"ஏற்கனவே தெலுங்கில் `மங்கா' என்ற படத்தில் டைட்டில் ரோலில் நடித்து வருகிறேன். தமிழிலும் ஒரு படத்தில் நடிக்கிறேன். அதுபற்றிய அறிவிப்பு விரைவில் வரும். தவிரவும் தெலுங்கு ஜி டிவியில் `லக்கு கிக்கு' என்ற பரிசுப்போட்டி நிகழ்ச்சியையும் நடத்தி வந்ததால் ரசிகர்களுடன் எப்போதும் தொடர்பில் தான் இருக்கிறேன். இந்த நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களுடன் எனக்கு நேரடித்தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர் அபர்ணா பிள்ளை என்றும் என் நன்றிக்குரியவர்.''


ஆயிரத்தில் ஒருவன் நிகழ்ச்சி ஜி தமிழ் தொலைக்காட்சியில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

aanaa
7th October 2012, 10:37 PM
ஷக்தியின் வாழ்வில் வீசிய புயல்


சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் உதிரிப்பூக்கள் தொடர் 225 எபிசோடை தாண்டி பரபரப்பான காட்சிகளுடன் விரைகிறது.


இப்படி ஒரு மருமகள் கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று மருமகள் ஷக்தியை கொண்டாடிய மாமியார் அலமேலுவிடம் இப்போது அப்படியே தலைகீழ் மாற்றம். இப்போது ஷக்தி எது செய்தாலும் தப்பாகத் தெரிகிறது.


அதற்குக் காரணம், ரொம்ப சின்ன விஷயம். தன் தம்பியின் கல்விச் செலவுக்காக வங்கியில் பணம் எடுத்த ஷக்தியிடம் கணவன் அவசரத் தேவைக்கு பணம் கேட்கிறான். நியாயமான தேவை என்றாலும் தம்பிக்கு கொடுக்க வைத்திருக்கும் பணம் என்ற எண்ணத்தில் ஒருகணம் பணத்தை கணவனிடம் தர தயங்குகிறாள் ஷக்தி. அதை சட்டென உணர்ந்து கொள்ளும் கணவன், அவள் தன்னை அவமானப்படுத்தியதாக கருதி, `உன் பணம் வேண்டாம்' என்று வாங்க மறுக்கிறான். அதோடு ஷக்தியை முடிந்தவரை தவிர்க்கிறான்.


இதற்குப் பிறகு ஷக்தியின் சந்தோஷ வாழ்வில் புயல் வீசத் தொடங்குகிறது. அதுவரை அம்மாவாக இருந்த மாமியார் இப்போது எரிமலையாகப் பொங்குகிறாள். மருமகளின் சின்னச்சின்ன தவறையும் ஊதி பெரிதாக்குகிறாள். நேற்று வரைஅம்மாவாக தெரிந்த மாமியாரா இப்போது அப்படியே தலைகீழாக மாறிப்போயிருப்பது? இனி மாமியாரின்அன்பு கேள்விக்குறி தானா என்ற கவலையில் ஷக்தி உள்ளூற உடைந்து போகிறாள்.


ஷக்தியின் ஒரிஜினல் பெற்றோர் தட்சிணாமூர்த்தி-வள்ளியின் வாழ்க்கையில் இப்போது விரிசல். கணவன் சின்னவீடு வைத்திருப்பதை எந்த மனைவி ஏற்றுக் கொள்வாள்? அதனால் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு அவள் தனியாக வருகிறாள். அதோடு கணவனுக்கும் விவாகரத்து கேட்டு வக்கீல்நோட்டீஸ் அனுப்புகிறாள்.


ஆனால் தட்சிணாமூர்த்திக்கோ மனைவிக்கு விவாகரத்து கொடுக்க மனதில்லை. அதேநேரம் மனைவியிடம் இருக்கும் தன் பிள்ளைகளை தன்பக்கம் வரவழைக்க திட்டம் தீட்டுகிறார். அதன்படி கோர்ட்டில் விவாகரத்து வழக்கு வரும்போது எந்த கணவனும் மனைவி மேல் சுமத்த முடியாத ஒரு அப்பாண்டத்தை சுமத்தப் போக...அதனால் நிலைகுலைந்து போகிறாள் வள்ளி. அதற்குப் பிறகு அவள் எடுக்கும் முடிவு என்ன?


இதற்கிடையே வள்ளியின் பிள்ளைகள் திலீபன், நிலா இருவரும் கூட ஆளுக்கொரு பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். ஜோசியர் சொன்னதன் பேரில் அத்தை மகள் சுசியுடன் அவசர கதியில் தனக்கு கட்டாய நிச்சயதார்த்தம் நடந்ததை அவன் விரும்பவில்லை. அதற்குப்பிறகு அவன் கதை வேறுமாதிரியாகி விடுகிறது. அவன் அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்ணொருத்தியுடனான சிநேகம் திருமணம் வரைபோக, நிச்சயதார்த்தம் நடந்த திருமணத்தின் கதி என்ன? விறுவிறுப்பை தக்கவைத்தபடி தொடர்கிறது தொடர்.


நட்சத்திரங்கள்: சேத்தன், வடிவுக்கரசி, மானசா, எல்.ராஜா, ஸ்ரீலேகா, ஷ்ரவன், ரூபஸ்ரீ, கருணா, அகிலா, பாரதி, மகாலட்சுமி, சுரேகா.


திரைக்கதை: முத்துச்செல்வன். வசனம்: `சம்யுக்தா' ஆனந்த். ஒளிப்பதிவு சாகித்யா சீனு. இயக்கம்: விக்ரமாதித்தன். ஹோம் மீடியா மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பு: சுஜாதா விஜயகுமார்.

aanaa
7th October 2012, 10:38 PM
கிளைமாக்சுக்குப் பிறகும் தொடரும் கதை!


சின்னத்திரையில் வெகுவிரைவில் தனது ஒளிபரப்பபை தொடங்கவிருக்கிறது, வேந்தர் டிவி. பொழுதுபோக்கு சேனலான இதில் புதுமைப் படைப்பாக வரவிருக்கும் ஒரு தொடர் தயாரிப்பில் உள்ளது.


எல்லா திரைப்படங்களுக்கும் ஒரு கிளைமாக்ஸ் இருக்கும். ஆழ்ந்து யோசித்தால் அந்த கிளைமாக்சுக்குப் பிறகும் ஒருகதை தொடர்வதற்கான வாய்ப்பு இருப்பது புலப்படும். அதுபோன்ற திரைப்படங்களை அடையாளம் கண்டு அவற்றின் தொடர்ச்சியை சின்னத்திரையில் ஒரு தொடராக உருவாக்குவதே இந்த தொடராகும்.


இந்த தொடருக்கு `முடிவல்ல, ஆரம்பம்' என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. தொடரை கீதாஞ்சலி, உதயகீதம், உயிரே உனக்காக போன்ற வெள்ளிவிழா படங்களை இயக்கிய கே.ரங்கராஜ் இயக்குகிறார். `மெட்டி ஒலி' போஸ் 6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தொடருக்காக மீண்டும் சின்னத்திரையில் தோன்றுகிறார்.


இந்த தொடரில் எடுத்து கையாளப்படும் படங்கள் எவையெவை என்பது ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது.

aanaa
13th October 2012, 03:49 AM
உறவுகள்


came to an END - this Friday - Oct 12, 2012



http://www.youtube.com/watch?feature=player_embedded&v=R1dgFnjHz_E





http://www.youtube.com/watch?feature=player_embedded&v=ox0-KwRNCGM




http://www.youtube.com/watch?feature=player_embedded&v=IFFHE5Mfpas

aanaa
13th October 2012, 06:17 AM
http://www.dailymotion.com/video/xu7sbn_bommalattam-promo_shortfilms#from=embediframe

aanaa
13th October 2012, 11:10 PM
கிச்சன் சூப்பர் ஸ்டார்

விஜய் டிவியில் ஞாயிறு தோறும் இரவு 7.30 மணிக்கு "கிச்சன் சூப்பர் ஸ்டார்'' என்ற சமையல் போட்டி நிகழ்ச்சி இடம் பெறுகிறது.


இது ஒரு வித்தியாசமான சமையல் போட்டி நிகழ்ச்சியாகும். இதில் பங்கு பெறுபவர்கள் பிரபலங்கள். இவர்கள் விதவிதமான சுவையான உணவு வகைகளை செய்ய வருகின்றனர். பிரபல முகங்களான சிவா, இளவரசன், பிரியா, நேத்ரன், சபர்ணா, ஆர்த்தி, நிஷா, பிரீத்தா, ஜெ.லலிதா, அரவிந்த் சந்தியா, பூஜா ஆகியோர் போட்டியில் கலந்து கொள்கின்றனர். மேலும் நடிகர் சுரேஷ் இந்த கிச்சன் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும், நிகழ்ச்சியின் நடுவராகவும் இடம் பெறுகிறார்.


ஒவ்வொரு வாரமும் விதவிதமான உணவு வகைகளை செய்து போட்டியில் பங்கு பெறும் இவர்களின் சமையலை சுவைத்து மதிப்பெண் அளித்து தீர்ப்பு வழங்குகிறார்கள், பிரபல சமையல் நிபுணர்களான `செப்' வெங்கடேஷ் பட், `செப்' தாமு.
நன்றி: தினதந்தி

aanaa
13th October 2012, 11:11 PM
இரு மலர்கள் -150

ஜெயா டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் முற்பகல் 11.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `இரு மலர்கள்' தொடர், பரபரப்பான காட்சியமைப்பில் 150 எபிசோடை தாண்டி தொடர்கிறது.


தோழிகள் அமுதாவுக்கும் ரஞ்சனிக்கும் கல்லூரிக் காலத்தில் ஏற்பட்ட மோதல் அதன்பிறகும் தொடர்கிறது.


கல்லூரி வாழ்க்கை முடிந்தபிறகு தங்கள் நிறுவனத்தில் நிர்வாகப் பொறுப்பேற்கிறாள் ரஞ்சனி. அமுதாவோ தன் திறமைக்கேற்ப ஒரு நிறுவனத்தில் அதிகாரியாக அமர்கிறாள். ஒரு கட்டத்தில் வியாபாரத்தில் தங்கள் நிறுவனம் சற்றே பின்னடைவை சந்திக்க, அதற்குக் காரணம், தங்களுக்கு இணையாக வளர்ந்துள்ள நிறுவனம் என்பது ரஞ்சனிக்கு புரிய, அந்த நிறுவனத்தின் டீம் லீடர் தன் முன்னாள் தோழி அமுதா என்பதை அறியாமலே அவள் மீது ஏகப்பட்ட எரிச்சலை வளர்த்துக் கொண்டிருக்கிறாள், ரஞ்சனி.


இதற்கிடையே அமுதாவை அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் சிவா விரும்புகிறான். இதே கால கட்டத்தில் ரஞ்சனி, சிவாவை சந்திக்கநேர்கிறது. பார்த்த மாத்திரத்தில் அவளுக்குள்ளும் காதல் பற்றிக் கொள்கிறது.


சிவாவை தன் வாழ்க்கைத் துணைவனாக்க ரஞ்சனி திட்டம் போட்டநேரத்தில், சிவாவுக்கும் அமுதாவுக்குமான நிச்சயதார்த்த செய்தி ரஞ்சனிக்கு கிடைக்கிறது.


அப்போது கூட இந்த அமுதா வேறு யாரோ என்ற நினைப்பில் நிச்சய தார்த்தத்துக்கு வருகிறாள் ரஞ்சனி. அப்போதுதான் `நேற்றைய தோழி இன்றைய எதிரி'அமுதா தான் தன் நேசத்துக்குரியவனை மணக்கப் போவது தெரிகிறது.


இப்போது எரிமலை வெடித்திருக்குமே...அதுதான் இல்லை. கோபம் இப்போது செல்லுபடியாகாது என்பதை புரிந்து கொண்டு அமுதாவிடம் நல்லவள் போல் நாடகமாடுகிறாள் ரஞ்சனி. அவள் நடிக்கிறாள் என்பதை தெரிந்து கொள்ளாத அமுதா, ரஞ்சனியின் அன்பை உண்மை என்று நம்பி விடுகிறாள். அமுதா அறியாமல் அவள் திருமணத்தை நிறுத்த வசந்த் என்பவன் மூலம் ரகசிய திட்டம் வகுக்கிறாள்.


இந்த வசந்த் ஏற்கனவே அமுதாவின் தங்கையை காதல் என்ற பெயரில் ஏமாற்றி கெடுத்து கர்ப்பமாக்கினவன். இது தெரிந்ததும் அமுதாவின் அம்மாவும் அமுதாவும் நடுரோட்டில் வைத்து அவனை அடித்து உதைத்து அவமானப்படுத்துகிறார்கள்.


உண்மையில் அமுதாவின் குடும்பத்தில் இப்படியான குழப்பத்தை எற்படுத்த ரஞ்சனி அனுப்பிய அம்பு தான் இந்த வசந்த். இப்போது இதே வசந்த் தான் இப்போது அமுதாவின் திருமணத்தை நிறுத்த ரஞ்சனியால் அனுப்பப் பட்டிருக்கிறான்.


ரஞ்சனி ஆசைப்பட்ட சிவாவை தன் பேத்தி ரோஜாவுக்கு
திருமணம் செய்து வைக்கச் சொல்லி ரஞ்சினியின்அப்பா ராஜரத்னத்தை வற்புறுத்துகிறாள், வேங்கடத்தாள். ஏற்கனவே ராஜரத்னம் செய்த ஒரு கொலையை போட்டோ எடுத்து வைத்துக்கொண்டு அவரை மிரட்டி வரும் அவள், இப்போது சிவாவை தன் பேத்திக்கு திருமணம் செய்து வைக்கவேண்டும். சொத்தில் பாதியை தன் பேத்தி ரோஜா பெயரில் எழுதி வைக்கவேண்டும். திருமணம் முடிந்ததும் ராஜரத்னம் குடும்பத்தோடு ஊரை விட்டே சென்று விட வேண்டும் என்று கண்டிஷன் போடு கிறாள்.


இந்த கண்டிஷன்களுக்கு வேறு வழியின்றி சம்மதிக்கிறார், ராஜரத்னம். தந்தையின் நிலை இப்படி இருக்க, இது எதையும் அறியாத ரஞ்சனி சிவாவை தனக்கே தனக்கென்று மீட்பதில் கவனமாக இருக்கிறாள்.


சிவா-அமுதா திருமணம் திட்டமிட்டபடி நடக்குமா? அல்லது ரஞ்சனி தன் திட்டத்தில் வென்று விடுவாளா? ரஞ்சனியின் அப்பா ராஜரத்னம் வேங்கடத்தாளுக்கு பயந்து ஊரை விட்டுப் போவாரா? விறுவிறுப்பின் உச்சம் தொட்டு தொடர்கிறது, தொடர்.


சிவாவாக உதய், ரஞ்சனியாக மகாலட்சுமி, அமுதாவாக அகிலா, வசந்த்தாக வசந்த், ராஜரத்னமாக சிவன் சீனிவாசன், தங்கமாக நளிளி, ரோஜாவாக ஸ்ரீதேவி, வேங்கடத்தாளாக எஸ்.என்.பார்வதி நடிக்கிறார்கள். சுருளி என்ற வித்தியாசமான கேரக்டரில் சூர்யகாந்த் நடிக்கிறார்.


திரைக்கதை: பாபா கென்னடி. வசனம்: பாலமுருகன். ஒளிப்பதிவு: ஆரணன். இயக்கம்: தளபதி. தயாரிப்பு: ஜெயா டிவி.
நன்றி: தினதந்தி

aanaa
13th October 2012, 11:12 PM
மீண்டும் சொக்கு - மயில் பிரிவு வருமா?

சன் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் வெற்றித்தொடர் `நாதஸ்வரம்', 600 எபிசோடுகளை தாண்டி இயல்பான கதைப்போக்கில் யதார்த்தமாக பயணித்துக் கொண்டிருக்கிறது.


தொடர் இப்போது கதையின் அடுத்த கட்டத்திற்கு செல்ல இருக்கிறது. மர்ம மனிதனாக இருக்கும் ராஜேஷ், ராகினியை திருமணம் செய்து கொள்வானா? அல்லது இந்த திருமணத்தில் இருந்து ராகினி காப்பாற்றப்படுவாளா? கோபி கார் வாங்கிக் கொடுக்காததால் கோபப்பட்டு திருச்சிக்கு சென்ற மகேஷ் மீண்டும் அப்பா வீட்டுக்கு வருவாளா? ராகினியின் திருமணத்திற்கு வருவாளா? அடுத்து என்ன காய்களை மகேஷ் நகர்த்த இருக்கிறாள் என்பது சுவாரஸ்யமான விஷயம்.


புற்று நோயால் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும் மூர்த்தி, அவனை நம்பிக்கையுடன் கவனித்துக் கொள்ளும் காமு... இவர்கள் இருவரும் சேர்ந்தும் அதற்கு பயனில்லாமல் இருக்கிறது. இவர்களின் கதி என்ன?


பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு இருக்கும் மயில் மீண்டும் நாதஸ்வரம் வாசிக்கும் அளவிற்கு பழைய நிலைக்கு தேறி வருவாரா? மறுமணம் செய்து கொள்ள மறுக்கும் மகாவின் மனம் எப்படி மாறப்போகிறது? சித்தர் சொன்ன வாக்கின்படி மீனாட்சியின் மூத்த மகன் வரப்போகிறானா?


ஜெகநாதன் வீட்டில் உள்ள மொத்த நகையையும், பணத்தையும் கொள்ளை அடித்து சென்ற கோகுல், தப்பித்து வெளிநாடு சென்று விடுகிறானா? கோகுலின் சுயரூபம் ஜெகநாதனுக்கு தெரிந்து விட்டதால், மலர்-கோபியை சேர்த்து கொள்வரா? அப்படி சேர்த்துக் கொண்டால் கோபி மிகப் பெரிய பணக்கார வீட்டு மாப்பிள்ளையாகி விடுவார். இதை மீனாட்சி, தெய்வானை எப்படி எடுத்துக் கொள்வார்கள்? இதனால் வரும் ஏற்றத்தாழ்வு பிரச்சினைகளாலும், கார் விஷயத்தில் பரமுவுக்கும், மகேஷூக்கும் ஏற்பட்ட சண்டைகளாலும் மீண்டும் சொக்கு-மயில் இடையே பிரிவு வருமா? இதை சாமர்த்தியமாக எப்படி எதிர் கொள்ளப்போகிறார் சொக்கு?


இப்படி பல கேள்விகளுக்கு வரும் நாட்களில் நாதஸ்வரம் தொடரில் பதில் கிடைக்கும் என்கிறார் இயக்குனர் திருமுருகன். வசனம்: வசுபாரதி, ஒளிப்பதிவு: சரத் கே.சந்தர், இசை: சஞ்சீவ் ரத்தன், எடிட்டிங்: பிரேம், கதை, தயாரிப்பு, இயக்கம்: எம்.திருமுருகன்.

நன்றி: தினதந்தி

aanaa
13th October 2012, 11:13 PM
பயத்தின் உச்சக்கட்டம்

ஞாயிறு தோறும் இரவு 10 மணிக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பாகவிருக்கும் ஒரு திகில் தொடர் `பியர் பைல்ஸ்.'


வாரம் ஒரு கதையாக வரும் இத்தொடரில், ஆவிகளின் கோர தாண்டவமும், அதன் பயங்கர பிடியில் சிக்கி உயிருக்கு போராடியவர்களின் உண்மை சம்பவங்களும் வாரம் ஒரு கதையாக ஒளிபரப்பாக இருக்கிறது. இதய பலவீனம் உள்ளவர்கள் மற்றும் குழந்தைகள் இத்தொடரை பார்ப்பதை தவிர்ப்பது நல்லது என மனநல மருத்துவர்கள் கூறியுள்ளனர்.


இந்த திகில் தொடரின் முதல் கதையாக மும்பையில் வசிக்கும் கர்ப்பிணி பெண் நீருவின் திகில் கதை இடம் பெறுகிறது. அவள் தன் கணவனுடன் புது வீட்டுக்கு குடி போக, அங்கு வழக்கத்திற்கு மாறான சம்பவங்கள் நடக்கின்றன. நீரு அதிர்ச்சியும் பயமும் கொள்கிறாள். அந்த வீட்டில் இவர்கள் குடி வரும் முன்பு அங்கு ஒரு கர்ப்பிணி பெண் தற்கொலை செய்த உண்மை இவளுக்கு தெரிய வருகிறது. அந்த ஆவிதான் இவளை பல ரூபங்களில் பயமுறுத்துகிறது.


இந்த ஆபத்திலிருந்து நீரு தன் வயிற்றில் இருக்கும் குழந்தையை காப்பாற்றினாளா? ஆவியின் பிடியிலிருந்து மீண்டாளா? திகில் காட்சிகளுடன் வாரம் ஒரு கதையாக தொடர்கிறது.
நன்றி: தினதந்தி

aanaa
20th October 2012, 05:08 AM
பொம்மலாட்டம்
http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20121020/TV-10.jpg

சன் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் முற்பகல் 11.30 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் புதிய தொடர், `பொம்மலாட்டம்'. மிகப் பெரிய கோடீஸ்வரனின் மகனான சந்தோஷ் எதற்கும் துணிந்தவன். இறைவன் பெண்களை படைத்தது தன் சுகத்திற்காக என்பதே இவனது கொள்கை. இவனால் ஏமாற்றப்பட்ட பெண்கள் பட்டியல் அதிகம்..


சந்தோஷின் தங்கை தேவி, பிறந்ததும் தாயை பறி கொடுத்தவள். தந்தை பாசத்திற்காக ஏங்கி அது கிடைக்காததால் ரவுத்திரமானவள். அதோடு பணமும் கொட்டிக் கிடப்பதால் இயல்பிலேயே திமிரும் சேர்ந்து கொள்கிறது. அண்ணனைப் போலவே எதற்கும் துணிந்தவள்.


சந்தோஷ் மற்றும் தேவிக்காகவே வாழ்ந்து வருபவர் அவர்களின் அப்பா சிதம்பரம். தேவி பிறந்தபோதே மனைவி இறந்து போன அதிர்ச்சி அவரை ரொம்பவே பாதித்தது. என்றாலும் பாசத்துக்கு குறைவில்லாமல் பிள்ளைகளை வளர்த்து வருகிறார். உறவும் நட்பும் கட்டாயப் படுத்தியும் மறுமணம் புரியாதவர்.செல்வம் தேடி அயல்நாடு சென்று அதனால் மகள் மற் றும் மகன் பாசத்தை இழந்தவர். பாசத்திற்காக ஏங்குபவர்.


நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பாரதி சந்தோஷின் அலுவலகத்தில் வேலை பார்க்கிறாள். அவளின் அழகு சந்தோஷை சுண்டியிழுக்க, அவளை வீழ்த்தும் தருணத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறான்.


ஆனால் பாரதியோ அவனை சிறிதும் சட்டை செய்தாளில்லை. அவள் மனம் சினிமாவில் உதவி இயக்குனராக இருக்கும் கதிரை நேசிக்கிறது. கதிரும் பாரதியை உயிராக நேசிக்கிறான்.


சிதம்பரம், சந்தோஷ், தேவி, பாரதி, கதிர் என இந்த ஐந்துபேரும் ஆடும் ஆட்டம்தான் பொம்மலாட்டம்.


பாரதி-கதிரின் காதல் வீட்டுக்கு தெரிந்தால்? கதிரின் சினிமா இயக்குனர் கனவு நிறைவேறியதா? தன் அலுவலகத்தில் பணிபுரியும் பாரதியை சந்தோஷ் அடைந்தானா? தேவியின் திமிர் அடங்கியதா? அடக்கப்படுமா? சிதம்பரத்திற்கு பிள்ளைகளின் பாசம் கிடைத்ததா? அத்தனை கேள்விகளுக்கும் சுவாரசியமான கதைப்பின்னணியில் பரபரப்பான காட்சிகள் பதில் சொல்லும் என்கிறார், இயக்குனர் கே.ஷிவா.


கதையின் நாயகியான பாரதி கதாபாத்திரத்தில் நடிப்பவர் சிரிஜா. பெங்களூரை சேர்ந்த இவர் தமிழ் தொடருக்கு அறிமுகம்.


நட்சத்திரங்கள்:- சிரிஜா, டெல்லி குமார், ஸ்ரீகுமார், அப்சர், ப்ரீத்தி, மகிமா, காத்தாடி ராமமூர்த்தி, கணேஷ்கர், சாய்ராம், விஜய் கிருஷ்ணராஜ், ஷீலா, சசி, கவுரிலட்சுமி, வித்யா அன்பு, ஜிதேந்த்ரா, முரளி, கரிஷ்மா.


இசை:- தினா, பாடியவர்: ஹரிகரன். பாடல்: கவிஞர் வைரமுத்து. கதை: எழுச்சூர் அரவிந்தன், திரைக்கதை: விவேக்சங்கர், வசனம்: தவமணி வசீகரன், ஒளிப்பதிவு: சங்கர், தயாரிப்பு: சான்மீடியா நிறுவனம். இயக்கம்: ஷிவா.
நன்றி: தினதந்தி

aanaa
20th October 2012, 05:09 AM
சிந்து பைரவி-600
http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20121020/TV-06.jpg

ராஜ் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் "சிந்து பைரவி'' தொடர், 600 எபிசோடை நிறைவு செய்தபடி தொடர்கிறது.


சிந்துவும், பைரவியும் வீருக்காக போட்டி போட்டுக்கொண்டு ஒருவரை ஒருவர் படுத்திக்கொண்டது தொடரின் பிரதான அம்சம். அதேசமயம் வீருக்கே ஒரு பிரச்சினை என்றபோது, தான் ஆடாவிட்டாலும், தன் சதை ஆடும் என்பது அவர்கள் விஷயத்தில் உண்மையானது. சத்யாவும் அவன் தங்கையும் வீருக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுவதை தெரிந்து கொண்ட சிந்துவும் பைரவியும் வீருவை காக்கும் நோக்கில் கரங்கள் கோர்க்கிறார்கள்.


சத்யா மற்றும் அவனின் தங்கையின் சதி திட்டம் என்ன? சிந்துவும், பைரவியும் வீருக்காக என்ன தியாகம் செய்து அவனை காப்பாற்றினார்கள்? சத்யா மற்றும் அவனது தங்கையின் கதி என்ன ஆயிற்று? வீருக்காக ஒன்று சேர்ந்த சிந்துவும், பைரவியும் இணைந்தே இருப்பார்களா? பிரிவார்களா?


கேள்விகளுக்கு விடை சொல்ல வருகிறார்கள், சிந்துவும், பைரவியும்.
நன்றி: தினதந்தி

aanaa
20th October 2012, 05:11 AM
நவராத்திரி கொண்டாட்டம்

மக்கள் தொலைக்காட்சியில் வரும் 23-ம்தேதி நவராத்திரி நிகழ்ச்சிகள் காலை 6.03 மணிக்கே தொடங்கி விடுகின்றன. காலை 6.30 மணிக்கும் மாலை 6.05 மணிக்கும் `ஒளி பெருக்கும் ஒன்பது நாட்கள்' என்ற தலைப்பில் நவராத்திரியின் ஒன்பது நாட்கள் பற்றிய சிறப்பினை விளக்கும் பாடல்கள் இடம் பெறுகின்றன. அதோடு தமிழ் இலக்கியம் சார்ந்த பக்தி பாடல்களும் நிகழ்ச்சியில் இடம் பிடிக்கின்றன. இசை வல்லுனர் சிவா தலைமையில் இளம் பாடகர்கள் இடம் பெற்று ஒன்பது நாட்களும் சிறப்பு பாடல்களை பாடி சிறப்பிக்க உள்ளனர்.


மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி, `முத்திரை பதித்த மூவர்.' இன்றைய உலகில் பல போராட்டங்களையும் தாண்டி ஒவ்வொரு துறையிலும் சாதித்த பெண்மணிகளை கண் முன்னே கொண்டு வரும் நிகழ்ச்சி இது. கல்வி, செல்வம், வீரம் என இந்த மூன்று துறைகளிலும் சாதனை படைத்த பெண்கள், தங்களது அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்வதோடு அவர்கள் தங்களது வெற்றியின் ரகசியத்தையும் தெரிவிக்கிறார்கள்.
நன்றி: தினதந்தி

aanaa
20th October 2012, 05:12 AM
ஹவுஸ்புல்

தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் முற்றிலும் வித்தியாசமான கேம்ஷோ "ஹவுஸ்புல்.'' முற்றிலும் புதிய நிகழ்ச்சியான இது, ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிறது.


தமிழகம் மட்டுமின்றி உலக மக்கள் யாவரும் பயன் பெறும் வகையில் நேரடி ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில், வீட்டிலிருந்தபடியே முற்றிலும் எஸ்.எம்.எஸ். முறையை பயன்படுத்தி விளையாடலாம். இதில் ஒரு கோடி ரூபாய் வரை பரிசுகள் வெல்ல வாய்ப்பு உள்ளது. முதல் இடத்தைப் பிடிக்கும் வெற்றியாளருக்கு ஒரு கோடி மதிப்பிலான வீடு பரிசாக காத்திருக்கிறது.


நேயர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜெயா டிவியின் நிகழ்ச்சிகளுக்கிடையே கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில்களை எஸ்.எம்.எஸ். மூலமாக அனுப்ப வேண்டும். அதைத்தொடர்ந்து "ஹவுஸ்புல்'' நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 15 எண்களை கொண்ட ஒரு குறுந்தகவல் பட்டியல் அவர்களது செல்போனுக்கு அனுப்பப்படும். இந்த எண்களை வைத்து இந்நிகழ்ச்சியில் வீட்டிலிருந்தபடியே செல்போன் மூலமாக பங்கேற்கலாம்.


இந்த சுவாரஸ்யமான புத்தம் புது நிகழ்ச்சி திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 8 மணிக்கு ஜெயா டிவியில் நேரடி நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வருகிறது.
நன்றி: தினதந்தி

aanaa
25th October 2012, 05:07 AM
http://www.youtube.com/watch?v=IKvQ6Cy5vzo&feature=related

aanaa
28th October 2012, 06:22 AM
மாயா

ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர், "மாயா.''


சந்திரசேகரன் மிகப்பெரும் தொழில் அதிபர். இவரின் ஒரே மகள் மாயா ஆர்கிடெக்ட். அன்பானவள். அழகானவள். அவள் கைக்குழந்தையாக இருந்தபோதே சந்திரசேகரனை அவரது மனைவி பரமேஸ்வரி விவாகரத்து மூலம் பிரிந்து சென்று தொழில் அதிபர் அமர்நாத்தை மணந்து கொண்டாள். அதன்பிறகு சந்திரசேகரன் தன் மகள் மாயாவே உலகம் என்று வாழ்ந்து வருகிறார். அதோடு அமர்நாத்தின் அத்தனை தொழில்களுக்கும் போட்டி நிறுவனங்களை ஆரம்பிக்கிறார்.


நாளுக்கு நாள் போட்டி வலுத்த நிலையில் அமர்நாத் - பரமேஸ்வரியின் மகன் ரமேஷ் ஜெயிலுக்குப் போவதும், மாயா முதல்வர் கையால் விருது வாங்குவதும் ஒரே நாளில் நடக்கிறது. தான் தோற்றுவிட்டதாய் ஆத்திரப்படும் பரமேஸ்வரி, சந்திரசேகரனை நடுத்தெருவில் நிறுத்தி மாயாவை தன் பக்கம் கொண்டு வருவேன் என சபதம் எடுக்கிறாள்.


பரமேஸ்வரியின் சபதம் வென்றதா? சந்திரசேகரனின் லட்சியம் வென்றதா?


கதை: இந்திரா சவுந்தர்ராஜன். இயக்கம்: பி.நித்தியானந்தம்.


நட்சத்திரங்கள்: ஈஸ்வரிராவ், அபிஷேக், வாணி, மோகன்ராம், ஜெகதீஷ் ராமன்.


தயாரிப்பு: சத்யஜோதி பிலிம்ஸ்.
நன்றி: தினதந்தி

aanaa
28th October 2012, 06:23 AM
கொஞ்சும் சலங்கை

தமிழ் சினிமாவில் நடிப்பிலும் நடனத்திலும் தனி முத்திரை பதித்த பிரபல நடிகை வெண்ணிறஆடை நிர்மலா, நடனத்திற்காக கலைமாமணி விருதும் பெற்றவர். இவர் பொதிகை தொலைக் காட்சியில் நடத்திவரும் நடன போட்டியே `கொஞ்சும் சலங்கை.' இந்த போட்டி நிகழ்ச்சியில் 7 முதல் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமிகள் பங்குபெற்று அசத்தலாக கிளாசிக்கல் மற்றும் போக் நடனம் ஆடுகிறார்கள்.


நடுவராக இருந்து நிகழ்ச்சியை இயக்கி வழங்கும் வெண்ணிற ஆடை நிர்மலா, இந்த நிகழ்ச்சியில் தன் முத்திரை நடனங்களையும் ஆடி நடன ரசிகர்களை மகிழ்விக்கிறார்.


நடிகை சுதா நிகழ்ச்சியை தொகுத்தளிக்கிறார்.


இந்திய வரலாற்றுச் சிறப்பு மிக்க நடனங்களையும், கிராமப்புற நடனங்களையும் வளர்க்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறும் சிறுவருக்கு "பொதிகை இளமயில்'' பட்டம் வழங்கப்படுகிறது. அதுபோலவே `சிறந்த கிராமப்புற நடனம்', `சிறந்த அபிநயம்', `சிறந்த உடைஅலங்காரம்', `புதுமை நடனம்' ஆகிய பிரிவுகளிலும் நடன கலைஞர்கள் சிறப்பிக்கப்படுகிறார்கள்.


ஞாயிறு தோறும் பகல் 10.30 மணி முதல் 11.30 மணி வரை பொதிகை சேனலில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
நன்றி: தினதந்தி

aanaa
28th October 2012, 06:24 AM
மனதில் உறுதி வேண்டும்

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர், மனதில் உறுதி வேண்டும்.


கதையின் நாயகி பாரதி, தன் சம்பளத்தில் இரண்டு தங்கைகளை படிக்க வைப்பதோடு பெற்றோரையும் கவனித்து வருகிறாள். திடீரென ஒருநாள் தன் தந்தைக்கு உடனடியாக இதய அறுவை சிகிச்சை செய்தால்தான் உயிர் பிழைக்க முடியும் என டாக்டர்கள் சொல்லி விட, பணத்திற்கு வகை தெரியாமல் திகைத்துப்போகிறாள்.


கதையின் நாயகன் திக்குவாய் திருநாவுக்கரசு, சித்தி வைத்தீஸ்வரியின் கொடுமையால் வெகுளியாக, படிப்பறிவு இல்லாமல் போனவன். வைத்தீஸ்வரி தனக்கு பிறந்த பிள்ளைகளை மட்டும் படிக்க வைத்து புத்திசாலியாக வளர்த்தாள். திருநாவுக்கரசுவின் அப்பா சுந்தரம் தன் மகனை மனிதனாக்க ஒரு நல்ல மருமகள் வேண்டுமென முடிவு செய்தவர், பாரதியை சந்திக்கிறார். அவள் தந்தையின் இருதய ஆபரேஷனை தன் செலவில் செய்து வைப்பதாக உறுதி சொன்னவர், பதிலுக்கு தன் திக்குவாய் மகனை மணந்து கொண்டு வாழ்நாள் முழுக்க திக்குவாயாக நடிக்க வேண்டும் என்கிறார். அவளும் சம்மதிக்கிறாள்.


திருமணத்திற்கு பின் பாரதி, தன் கணவன் திருநாவுக்கரசுவை படிக்க வைத்து புத்திசாலியாக்கினாளா? பாரதி ஊமையல்ல என்பது கணவன் திருநாவுக்கரசுவிற்கு தெரிந்தபோது என்ன முடிவு எடுத்தான்? தன் கணவனுக்கு அவன் சித்தி வைத்தீஸ்வரி கெட்டவள் என்பதை பாரதி எப்படி புரிய வைத்தாள்? கதை, திரைக்கதை வசனம்: எஸ்.சேக்கிழார். இயக்கம்: வி.சதாசிவம்.


நட்சத்திரங்கள்: ராம்ஜி, சஞ்சய்குமார், கிருஷ்ணமூர்த்தி, ஐஸ்வர்யா, பிரீத்தி, சுமங்கலி.


தயாரிப்பு: ஏவி.எம்.புரொடக்ஷன்ஸ்.
நன்றி: தினதந்தி

aanaa
28th October 2012, 06:25 AM
லக்கா, கிக்கா

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடிகை ரோஜா தொகுத்து வழங்கும் பிரம்மாண்டமான கேம் ஷோ "லக்கா கிக்கா.'' திங்கள் முதல் புதன் வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில், திரையுலகினர், சின்னத்திரை நட்சத்திரங்கள் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள நேயர்கள் போட்டியாளர்களாக கலந்து கொள்கின்றனர்.


ஐந்து பகுதிகளை கொண்ட இந்த கேம் ஷோ, முற்றிலும் யதார்த்தமான விளையாட்டுக்களை பிரதிபலித்து வருகிறது. முதல் பகுதியான `ரோஜா தி பாஸில்' மக்களின் கருத்துக்கணிப்புக்கு ஏற்ப போட்டியாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும். `ஆல் இன் ஆல் அழகுராஜா' என்ற இரண்டாம் பகுதியில் போட்டியாளர்கள் தங்களது பன்முக திறமைகளை நிரூபித்து, அரங்கத்தில் இருக்கும் சிறப்பு விருந்தினர் தரும் பணமுடிச்சை பரிசாக பெறுவர். இரண்டாம் சுற்றின் முடிவில் குறைவான புள்ளிகளை உடைய போட்டியாளர் வெளியேற்றப்படுவார்.


போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் மீதே பந்தயம் கட்டி விளையாடும் வித்தியாசமான விளையாட்டு, "வை ராஜா வை'' எனும் மூன்றாம் பகுதி. இந்த சுற்றின் முடிவில், முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் போட்டியாளர்கள் நான்காம் சுற்றான `ராஜா ராணியில்' விளையாட தகுதி பெறுவர். இதில் ராஜா, ராணி என்னும் இரு கதவுகளில் ஒன்றில் மறைந்திருக்கும் பரிசை அதிர்ஷ்டத்தின் (லக்) மூலம் அடையும் போட்டியாளர், இறுதிச்சுற்றான அதிர்ஷ்ட சக்கரத்தை சுழற்ற வாய்ப்பு பெறுவார். இதில் வெற்றி பெறும் போட்டியாளருக்கு ஜீ தமிழின் பம்பர் பரிசு காத்திருக்கிறது.
நன்றி: தினதந்தி

aanaa
18th November 2012, 11:52 PM
விஜய் டி.வி.யில் வெங்கட்பிரபு தொகுத்து வழங்கும் கோலிவுட் கிங்!
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NT_121101164435000000.jpg

எப்பவும் புதுமையான நிகழ்ச்சிகளை கொடுத்து வரும் விஜய் டி.வி., இப்போது கோலிவுட் கிங் என்ற புதிய நிகழ்ச்சியை ஒளிப்பரப்பு செய்து வருகிறது. இதனை தமிழ் சினிமாவின் பிரபல டைரக்டர் வெங்கட்பிரபு தொகுத்து வழங்குகிறார். தமிழ் சினிமாவில் உள்ள கதாநாயகர்களுக்கு ரசிகர்கள் ஏராளம். அந்த ரசிகர்களை வைத்து மிகமிக சுவையாக நடத்தப்படும் ஒரு குவிஸ் நிகழ்ச்சிதான் இந்த கோலிவுட் கிங்.


ஒவ்வொரு வாரமும் ஒரு மாபெரும் நட்சத்திரத்தின் ரசிகர்களை இந்த கோலிவுட் கிங் நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள். அவர்களிடம் அந்த ஹீரோவைப்பற்றிய, அவர் நடித்த திரைப்படங்களைப்பற்றிய கேள்விகள் கேட்கப்படும். நிகழ்ச்சியில், ஒரு வாரத்தில் சுமார் 50 ரசிகர்கள் கலந்து கொள்வார்கள். அவர்களில் சரியான பதில்களை சொல்பவர்களை நிகழ்ச்சியின் அடுத்தடுத்த சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒவ்வொரு சுற்றிலும் அவர்களுக்கான பரிசுத்தொகையும் அதிகமாகிகொண்டே செல்லும். இறுதியில் அனைத்து கேள்விகளுக்கு பதில்களை *சரியாக சொன்ன ஒரு ரசிகர் அந்த வாரத்தின் கோலிவுட் கிங்காக தேர்ந்தெடுக்கப்படுவார்.


நிகழ்ச்சியின் முதல்வாரமாக கடந்தவாரம் அக்டோபர் 27ம் தேதி அஜீத் ஸ்பெஷல் எபிசோடாக இருந்தது. இந்தவாரம் நவ.4ம் தேதி ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக நடிகை சிம்ரன் கலந்து கொள்கிறார். சிம்ரன் ரசிகர்களும் இதில் கலந்து கொள்கின்றனர். மேலும் பல நட்சத்திரங்கள் பற்றிய சுவையான சுற்றுகளும் இந்த வார நிகழ்ச்சியில் இடம்பெறும். சனிக்கிழமை தோறும் இரவு 8 மணி முதல் 9.30 மணிவரை ஒளிப்பரப்பாகும் இந்த நிகழ்ச்சியை டைரக்டர் வெங்கட்பிரபு தனது பாணியில் தொகுத்து வழங்க உள்ளார்.

aanaa
18th November 2012, 11:53 PM
ஜெயா டிவி புதிய தொடர் மாயா!





ஜெயா டிவியில் மாயா என்ற பெயரில் புதிய தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. பி.நித்தியானந்தம் இயக்கத்தில் சத்யஜோடி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த தொடரில் ஈஸ்வரி ராவ், அபிஷேக், வாணி, ஜெகதீஷ் ராமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கதைப்படி, சந்திரசேகரன் மிகப்பெரும் தொழில் அதிபர். இவரின் ஒரே மகள் மாயா ஆர்கிடெக்ட். அன்பானவள். அழகானவள். அவள் கைக்குழந்தையாக இருந்தபோதே சந்திரசேகரனை அவரது மனைவி பரமேஸ்வரி விவாகரத்து மூலம் பிரிந்து சென்று தொழில் அதிபர் அமர்நாத்தை மணந்து கொண்டாள். அதன்பிறகு சந்திரசேகரன் தன் மகள் மாயாவே உலகம் என்று வாழ்ந்து வருகிறார். அதோடு அமர்நாத்தின் அத்தனை தொழில்களுக்கும் போட்டி நிறுவனங்களை ஆரம்பிக்கிறார்.
நாளுக்கு நாள் போட்டி வலுத்த நிலையில் அமர்நாத் - பரமேஸ்வரியின் மகன் ரமேஷ் ஜெயிலுக்குப் போவதும், மாயா முதல்வர் கையால் விருது வாங்குவதும் ஒரே நாளில் நடக்கிறது. தான் தோற்றுவிட்டதாய் ஆத்திரப்படும் பரமேஸ்வரி, சந்திரசேகரனை நடுத்தெருவில் நிறுத்தி மாயாவை தன் பக்கம் கொண்டு வருவேன் என சபதம் எடுக்கிறாள். பரமேஸ்வரியின் சபதம் வென்றதா? சந்திரசேகரனின் லட்சியம் வென்றதா? என்பதுதான் க்ளைமாக்ஸ்.

aanaa
20th November 2012, 09:50 PM
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=lX1Mr4omSoM#!

aanaa
30th November 2012, 06:38 AM
சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நாதஸ்வரம் தொடர் பரபரப்பான திருப்பங்களில் விறுவிறுப்பை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
ராகினி-ராஜேஷ் திருமணத்தின்போது, ராஜேஷ் தனது காதலி தீப்தியை பார்த்ததில் இருந்து அவள் மேல் பைத்தியமாகிறான். ராகினியை ஒதுக்க ஆரம்பிக்கிறான். ராஜேஷ்-தீப்தி சேர்ந்தால் ராகினியின் வாழ்க்கை என்னவாகும்?
சொக்கு குடும்பத்தினர் எப்படி இதை தாங்கிக் கொள்ளப் போகிறார்கள்? கோகுலை காணவில்லை.

இவர்கள் தான் கொலை செய்து விட்டார்கள் என்று கோகுலின் அப்பா போலீசில் புகார் கொடுத்ததால், கோபி, திருவரங்கம், ஜெகநாதன், அசோக் தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.
கோகுல் உயிருடன் கிடைக்கவில்லை என்றால், நால்வரும் கொலைப் பழியில் இருந்து தப்ப முடியாது.
கோகுல் உயிருடன் இருக்கிறானா, இல்லையா?

இதற்கிடையே செல்வரங்கம் போலீசில் மாட்டிக் கொள்ள, அவன் மனைவி மகேஷ் கோபத்தின்உச்சியில் இருக்கிறாள்.
அடுத்து அவள் செய்யப் போகும் அதிரடி என்ன? சொக்கு-மீனாட்சி தம்பதியரின் காணாமல் போன மூத்த மகன் வருவானா?

ராஜேஷ் பெங்களூரில் குடும்பம் நடத்தப் போவது ராகினியுடனா? தீப்தியுடனா?

மகேசுக்கு கார் கிடைக்குமா?

சொக்கு-கோபி மலேசியாவுக்கு நாதஸ்வரம் வாசிக்க செல்வார்களா?

தாமு-மூர்த்தி ஒற்றுமை நிலைக்குமா?

ரமேஷ் பணத்தை திருப்பிக் கொடுப்பானா?

இப்படி பல கேள்விகளுக்கு விடையுடன் பயணிக்கவிருக்கிறது, நாதஸ்வரம் தொடர். இத்தனைக்கும் மகுடம் வைத்தாற்போல் மகா, தனது தாய் மாமா வீட்டில் தான் வாழ்வாள் என்று ஜோதிடர் கூறியிருக்கிறார்.
மீண்டும் மகாவால் மலர்- கோபி- வாழ்க்கையில் திருப்பம் வருமா? பொறுத்திருந்து பாருங்கள் என்கிறார், இயக்குனர் திருமுருகன்.

வசனம்: விசு பாரதி. ஒளிப்பதிவு: சரத் கே.சந்திரன். எடிட்டிங்: பிரேம். இசை: சஞ்சீவ் ரத்தன். கதை, இயக்கம், தயாரிப்பு: எம்.திருமுருகன்.

http://www.dailythanthi.com/node/53055

aanaa
30th November 2012, 06:42 AM
http://www.dailythanthi.com/node/53053

சனிக்கிழமை தோறும் இரவு 9 மணிக்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் புதிய சினிமா நிகழ்ச்சி, ஜெயா டிவியில் சினிமா. எப்போதுமே சினிமா பொதுமக்களின் விருப்ப சாதனம். குறிப்பிட்ட ஒரு படம் பிடித்திருக்கிறது அல்லது பிடிக்கவில்லை என்று சொல்பவர்கள் உண்டு. ஆனால் சினிமாவே பிடிக்காது என்பவர்கள் மிகச் சிலரே. மக்களுடன் இரண்டறக் கலந்து விட்ட சினிமா பற்றிய செய்திகளை நேயர்களுக்கு தருவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம். பல்வேறு பகுதிகளை கொண்டுள்ள இந்த நிகழ்ச்சியில் நடிகர், நடிகைகளின் சுய விவரங்கள், பழம்பெரும் நடிகர்கள் பற்றிய சுவாரஸ்யமான செய்திகள், தற்போது படப்பிடிப்பில் இருக்கும் புதிய திரைப்படங்கள் பற்றி இதுவரைஅறிந்திராத செய்திகள், காணக்கிடைக்காத அரிய புகைப்படங்கள் என அத்தனையையும் முத்துக்களாக கொட்டித் தருவதே இந்த நிகழ்ச்சி. சமூக வலைத்தளங்களில் சினிமா பிரபலங்களின் எண்ண ஓட்டங்களும் பதிவுகளும், திரைக்கு வரவிருக்கும் ஒரு புதிய படத்தின் பிரத்தியேகமான காட்சிகளும் அந்தப் படக்குழுவினரின் அனுபவங்களும் என சினிமா பற்றிய பல்வேறு செய்திகளும் கூட இந்த நிகழ்ச்சியில் இடம் பிடிப்பது சிறப்பு.

aanaa
30th November 2012, 06:43 AM
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் புகுந்த வீடு தொடர்,
எதிர்பாராத திருப்பங்களுடன் பயணிக்கிறது.
விசுவநாதன் அனுஷாவை அடைய வேண்டும் என்ற ஆசையில், வீட்டுப் பத்திரத்தை திருடியது மட்டுமின்றி, ராதா எழுதிக் கொடுத்தவாறு போலி விடுதலைப் பத்திரத்தைக் காட்டி அனுஷாவை மணக்கிறான்.
விசு அனுஷாவை திருமணம் செய்ததை அனுஷாவின் அண்ணன் ஜெய்ராம் தனக்கு சாதகமாக பயன்படுத்தி சுலபமாக பணக்காரனாகும் திட்டத்தை வகுக்கிறான்.
இதற்கிடையில் விசாலம் மாமியின் அறிவுரையின் பேரில் நஷ்டத்தில் இயங்கும் அப்பளம் ஊறுகாய் தயாரிக்கும் கம்பெனி ஒன்றை பாட்டியின் உதவியுடன் வாங்குகிறாள். இந்தநிலையில் விசுவின் தங்கை தேவி யின் நிலைமை மிகவும் மோசமாகிறது. அவளின் வருங்கால மாமனார் ராதாவின் நிலை அறிந்து விசுவைப்போல் தான் தேவியும் என்ற முடிவுக்கு வருகிறார். அதன் காரணமாக தேவி-சம்பத் திருமண நிச்சயதார்த்தத்தை ஆறு மாத காலத்திற்கு தள்ளிப் போடுகிறார்.
இதனால் இடிந்துபோகும் தேவி, முதன் முறையாக தன் அம்மா ராஜேஸ்வரியை எதிர்த்து திட்டுகிறாள். இதைக் கேட்டு மகிழும் பாட்டி, தேவிக்கு ஆறுதல் கூறி ராதாவிடம் பேசி முடிப்பதாக உறுதி கூறுகிறார்.
ஜெய்ராம் தன் திட்டத்தின் முதல் படியாக விசு பணி புரியும் வங்கியிலிருந்து ஐம்பது லட்சத்தைப் பெறுகிறான். அன்று மாலையே நிறைய வட்டியுடன் பணம் திரும்ப வரும் என்ற கனவில் விசு இந்த மாபெரும் தவறை இழைக்கிறான். தேவியின் திருமண விஷயத்தில் ராதா எடுத்த முடிவு என்ன? ஜெய்ராம், விசுவிடம் பணத்தை திரும்ப அளித்தானா?
என்பது அடுத்து தொடரும் காட்சிகள்.

http://www.dailythanthi.com/

aanaa
8th December 2012, 11:47 PM
நடிகை சவுகார்ஜானகியின் ஆட்டோகிராப்




ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘ஆட்டோகிராப்’ நிகழ்ச்சி, வரும் வாரங்களில் புதிய நேரத்தில் புத்தம் புதுப்பொலிவுடன் பிரம்மாண்டமான அரங்கில் ஒளிபரப்பாகவுள்ளது.

நடிகை சுஹாசினி மணிரத்னம் பல பிரபலங்களை சந்தித்து அவர்கள் தனிப்பட்ட மற்றும் கலையுலக வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை உணர்ச்சிபூர்வ அனுபவங்களை அவர்கள் மூலம் பகிர்ந்து கொள்கிறார்.

தன்னுடைய இளம் வயது பள்ளித்தோழர்கள் மற்றும் நண்பர்கள், நீண்ட நாட்களாக சந்திக்க இயலாத உறவினர்கள் இந்த நிகழ்ச்சியில் பிரபலங்களுக்கு தெரியாமலேயே நிகழ்ச்சி அரங்கத்தில் வந்து அவர்களை சந்தித்து கடந்த கால நினைவுகளை பகிர்ந்துகொள்வது இந்த நிகழ்ச்சியின் சிறப்பாகும்.
இந்நிகழ்ச்சியில் பிரபல திரைப்பட நடிகை சவுகார் ஜானகி பங்கு பெறுகிறார்.

தனது திரையுலக அனுபவங்களை உணர்ச்சிபூர்வமாக பகிர்ந்து கொள்கிறார். நிகழ்ச்சியில் இயக்குனர் கே.பாலசந்தர், தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன், நடிகர்கள் ஸ்ரீகாந்த், ராஜேஷ், மோகன் ராம் பங்கு பெற்றனர். இந்நிகழ்ச்சி நாளை பகல் 12 மணிக்கு இடம் பெறுகிறது. தொடர்ந்து இரு வாரங்கள் ஒளிபரப்பாகும்.




நன்றி: தினதந்தி

aanaa
8th December 2012, 11:48 PM
நெஞ்சம் நிறைந்த ஞாபகங்கள்




கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ தொடரின் கதாநாயகியாக நடிக்கும் நடிகை குஷ்புவின் கதாபாத்திரம் மேலும் மெருகேற்றப்பட்டு பல்வேறு திருப்பங்களுடன் வரவிருக்கிறது. 150 எபிசோடுகளை தாண்டி பரபரப்பாய் விரையும் தொடரின் அடுத்தடுத்த காட்சிகள் வருமாறு:


வில்லன் ரகுநாத் கதாநாயகி ஓவியாவை பழிவாங்குவதற்காக ஓவியாவின் கணவன் கார்த்திக்கை சாந்தினிக்கு திருமணம் செய்து வைக்க முயற்சிக்கிறான், அதை ஓவியா தடுத்து நிறுத்துகிறாள். தன் திட்டம் தோல்வியடைந்த ரகுநாத், போதை ஊசிக்கு அடிமையான ஓவியாவின் கணவன் கார்த்திக்கை ஓவியாவை கொலை செய்யும்படி தூண்டிவிட்டு அனுப்புகிறான். ஒரே ஒரு போதைஊசிக்காக தன் சொந்த மனைவி ஓவியாவையே கொலை செய்ய வருகிறான் கார்த்திக். தன்னை கொலை செய்ய வந்தது தன் கணவன்தான் என்று தெரிந்த ஓவியா அதிர்ச்சியடைகிறாள். தன் கணவன் போதை பழக்கத்திற்கு அடிமையாகியிருப்பதை தெரிந்து கொள்கிற அவள், அதனால்தான் தன்னை கொலை செய்ய வந்திருக்கிறான் என்பதையும் புரிந்து கொள்கிறாள். கணவன் தனது எதிரி ரகுநாத்தின் கைப்பாவையாக இயங்கி வருகிறான் என்பதை அறிந்து தன் கண வனை ரகுநாத்திடமிருந்து மீட்க முயற்சிக்கிறாள். ரகுநாத்துடனான அவள் போராட்டம் வென்றதா என்பது தொடரும் விறுவிறு காட்சிகள்.


கதை: குஷ்பு.


திரைக்கதை வசனம்: எஸ்.அசோக்குமார்.


இயக்கம்: என்.பிரியன்.


ஒளிப்பதிவு: பொன்ஸ்சந்திரா.


படத்தொகுப்பு: ரமேஷ் பாரதி.


தயாரிப்பு அவ்னி டெலிமீடியா.



நன்றி: தினதந்தி

aanaa
8th December 2012, 11:49 PM
வெண்ணிலா


கேப்டன் டிவியில் வரும் திங்கட்கிழமை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடர் “வெண்ணிலா”. பொறுமையின் இருப்பிடம் வங்கி அதிகாரி சரவணன். பெண் என்பவள் அழவே கூடாது என்ற லட்சியம் கொண்டவள் சுகமதி. இவர்கள் இருவரும் எதிர்பாராமல் வாழ்க்கையில் இணைகிறார்கள். ஆனால் திருமணமான மூன்றே நாளில் விவாகரத்து பெறுகிறார்கள். ஏன்? ஜமீன்தார் ஜெயவீர ராமன் சுகமதியால் அவமானப்படுத்தப்பட்டவன்.
அதனால் அரண்மனைக்குக் கூட போகாமல் தோப்பு பங்களாவிலே தங்கியிருக்கும் ஜமீன்தார், சுகமதியை பழி தீர்த்தானா? ஜமீன்தாருக்காக தனது கணவனையே கொலை செய்து புதைத்த வேலம்மாள், சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டாளா?


திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகும் தொடர் இது.



நன்றி: தினதந்தி

aanaa
8th December 2012, 11:50 PM
ரசிக்கவைத்த இரட்டை வேடம்




சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முத்தாரம் தொடரில் போலீஸ் அதிகாரி வேடத்தில் ரொம்பவே வித்தியாசப்படுகிறார், தேவயானி. தன்னம்பிக்கை மிக்க புரட்சிப்பெண்ணாக கோலங்கள் தொடரில் தன்னை அடையாளப்படுத்தியவருக்கு முத்தாரம் தொடர் முற்றிலும் மாறுபட்ட இன்னொரு கதைக்களம். இன்னும் சொல்லப் போனால் பெரிய திரையில் கூட இப்படியரு கேரக்டர் அவருக்கு அமைந்திருக்கவில்லை.


அதுவும் இந்த தொடரில் அக்கா-தங்கை என இரட்டை வேடம். அக்கா சிவரஞ்சனி கரப்பான்பூச்சியை பார்த்தாலே பயந்து அலறும் ரகம். தங்கை ரஞ்சனிதேவியோ அதிரடி ஐ.பி.எஸ்.அதிகாரி. நேர்மையின்இருப்பிடம்.
இந்த இருவேறு கேரக்டர்களிலும் தேவயானி காட்டுவது மிகப்பெரிய வித்தியாசம். எந்த அப்பா தனது மகளை ஐ.பி.எஸ். ஆக்கிப்பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டாரோ அந்த அப்பாவே சட்டத்தின் பார்வையில் தப்பாகத் தெரிந்தபோது அவரையே 10 வருடம் ஜெயிலுக்கு அனுப்பியவர் இந்த ரஞ்சனிதேவி ஐ.பி.எஸ்.
இந்த இரண்டு கேரக்டர்களிலும் எது உங்களை அதிகம் ஈர்த்தது? தேவயானியிடம் கேட்டால், இரண்டும் இரண்டு கண்கள். இரண்டையுமே ரசித்து செய்கிறேன் என்கிறார்.



நன்றி: தினதந்தி

aanaa
8th December 2012, 11:51 PM
காற்றின் குரல்




விஜய் டிவி, கடந்த வாரத்தில் 2 நாட்கள் சென்னை வாணி மஹாலில் காற்றின் குரல் என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்ச்சி பழம்பெரும் இசை மேதை திருமதி எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. நிகழ்ச்சியின் முதல் நாள் பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா, ராதாவிஸ்வனாதன் இருவரும் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.தொடர்ந்து திருமதி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் கொள்ளுப்பேத்தி ஐஸ்வர்யாவின் இசைக்கச்சேரி நடைபெற்றது. நிகழ்ச்சியின் சிறப்புஅம்சமாக ‘எம்.எஸ்.சுப்புலட்சுமி ரசிகர்களின் நெஞ்சில் மேலோங்கி இருப்பது அவரின் திரை இசையா? கர்நாடக இசையா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. நடுவராக ஹெச்.எம்.வி.ரகு இருந்தார். பட்டிமன்ற பேச்சாளர்கள் சுமதி, மோகன் வைத்தியா, சுசித்ரா, சிந்துஜா, டாக்டர் கணேஷ், விஜயசுந்தரி ஆகியோர் இரண்டு அணிகளிலும் தங்கள் வாதத்தை முன்வைத்தனர். தொடர்ந்து பத்மஸ்ரீ அருணா சாய்ராமின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் இரண்டாம் நாளில் ரஞ்சனி- காயத்ரி இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதையடுத்த பிரபல நடனக்கலைஞர் ராதிகா சுர்ஜித்தின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சைந்தவி, மஹதி, மதுமிதா, ஜெயா ராஜகோபால், பூஜா, பிரியங்கா, ஷ்ரவண் பாடினர். இந்த நிகழ்ச்சிகளின் தொகுப்பு தினமும் காலை 6.45 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது



நன்றி: தினதந்தி

aanaa
8th December 2012, 11:54 PM
பிரியாவின் சதிவலையில் மாட்டிக்கொண்ட ஷக்தி குடும்பம்




சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் உதிரிப்பூக்கள் தொடர் பரபரப்பான காட்சியமைப்பில் விறுவிறுப்பை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. சிவநேசனின் வளர்ப்பு பிள்ளைகளான சக்தி, திலீபன், நிலா மூவரும் ஆளுக்கொரு பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். தனது தாயார் மலை உச்சியில் இருந்து கீழே விழுந்ததை பார்த்ததில் இருந்தே அதிர்ச்சியில் சிலையாகிப் போகிறாள் ஷக்தி. தாயாரின் இறப்புக்கு காரணமாக தன் தந்தை தட்சிணாமூர்த்தியின் சின்ன வீட்டு பெண்ணான பிரியா இருப்பதாக எண்ணிக் கொண்ட ஷக்தி, அவள் மீது தன் கோபத்தைக் கொட்டுகிறாள். தான் வாழ்க்கைப் பட்ட குடும்பத்தின் மூத்த மருமகன் முருகபூபதியைக் கூட காரணமில்லாமல் அடிக்கப் பாய்கிறாள்.


இம்மாதிரியான பிரச்சினைகள் தொடரத் தொடர, ஷக்தியின் மாமியார் அலமேலு ஒரு முடிவுக்கு வருகிறாள். சக்தி இதே மாதிரி தன் நடவடிக்¬கயை தொடர்ந்து கொண்டிருப்பதால், அவளைத் தள்ளி வைத்து விட்டு தன் மகனுக்கு வேறு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறாள். அதை செயல்படுத்தும் விதத்தில் முதல் கட்டமாக ஷக்தியை தங்கள் வீட்டில் இருந்து துரத்தி விடுகிறாள். ஆனால் ஷக்தியின் கணவன் தனது தாயாரின் இந்த திட்டத்துக்கு உடன்பட்டானா?


ஷக்தியின் தம்பி திலீபனுக்கு சொந்த அத்தை பெண் சுசியை திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடக்கிறது. இந்த நேரத்தில் திலீபனின் அலுவலகத்தில் டூர் போகிறார்கள். இந்த பயணத்தில் திலீபனுடன் நெருங்கிப் பழகும் அவன் அலுவலக ஊழியை ஷாலினி, அவனுக்கு கூல் டிரிங்க்சில் மயக்க மருந்து கலந்து கொடுத்து விடுகிறாள். டூர் முடிந்து எல்லாரும் கிளம்பும் நேரத்தில் திலீபனின் போதை தெளிந்ததும் பத்திரமாக அழைத்து வருகிறேன் என்று அவள் சொல்ல, அலுவலக ஊழியர்களும் அதை நம்பி புறப்படுகிறார்கள். ஆனால் அந்த இரவில் தனது அறைக்கு அவனை கொண்டு வந்த ஷாலினி, அவன் தன்னை பலவந்தம் செய்ததாக நம்ப வைக்கிறாள். இதனால் போதை தெளிந்து எழுந்த திலீபன் கதிகலங்கிப் போகிறாள். அத்தை மகளுடன் அடுத்த மாதம் திருமணம். இங்கே இப்படி நடந்து கொண்டிருக்கிறேனே என்று குழம்பிப் போகிறான். ஷாலினி நடத்திய நாடகம் இது என்பதும், இதுவும் பிரியாவின் கைவண்ணம் தான் என்பதும் அந்த நேரத்தில் திலீபனுக்குத் தெரியாது. இந்த மாதிரியான சூழலில் திலீபன்-சுதா திருமணத்துக்கு வாய்ப்பு உண்டா?


சக்தி, திலீபனின் தங்கை நிலாவின் கதையோ வேறுமாதிரியானது. சத்யா என்ற பெண் பித்தனை நம்பி அவனே தன் எதிர்காலம் என்று எண்ணுகிறாள். அந்த சத்யா ஏற்கனவே தனது சொந்த மனைவியை கொன்று வீட்டிலேயே புதைத்தவன். அப்பாவிப் பெண்கள் அவனிடம் மாட்டினால் அவர்கள் கதி அதோகதி தான். ஆனால் துரதிருஷ்டவசமாக அவனை உத்தமன் என்று நம்பும் நிலா, அவனை மணந்து கொள்ளத் தயாராகிறாள்.


இப்படி தனது மூன்று வளர்ப்புப் பிள்ளைகளும் ஆளுக்கொரு சிக்கலில் மாட்டித் தவிக்க, இதை தெரிந்து கொண்ட சிவநேசன் துடித்துப் போகிறான். அவர்கள் வாழ்வின் சிக்கலை சரி செய்ய முயற்சிக்கிறான்.அப்போது அவன் எதிர்கொள்ளும் எதிர்பாராத பிரச்சினைகள் அடுத்தடுத்து வரும் பரபர காட்சிகள் என்கிறார், தொடரின் இயக்குனர் விக்ரமாதித்தன். சேத்தன், வடிவுக்கரசி, மானசா எல்.ராஜு, ஸ்ரீலேகா, மகாலட்சுமி நடிக்க, ஹோம் மீடியா மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பு: சுஜாதா விஜயகுமார்.



நன்றி: தினதந்தி

aanaa
8th December 2012, 11:56 PM
சன் தொலைக்காட்சி மூலம் சின்னத்திரையில் காலடி எடுத்துவைக்கிறார் நடிகை உமா
http://cinema.dinakaran.com/cinema/gallery/Television-new-113.jpg


சன் தொலைக்காட்சியில் வள்ளி சீரியல் மூலம் சின்னத்திரையில் காலடி எடுத்துவைக்கிறார் நடிகை உமா.


முன்னாள் கதாநாயகி சுமித்ராவின் மூத்த மகள் உமா சினிமாவில் அறிமுகமாகி சில படங்களில் நடித்தார். பெரிய அளவில் பிரபலமாகாவிட்டாலும் நல்ல நடிகை என்று பெயரெடுத்தவர். சொக்கத்தங்கம், தென்றல், கடல்பூக்கள், செல்வம் உள்ளிட்ட பல படங்களில் திறமையாக நடித்துள்ளார் உமா.


குடும்பப்பாங்கான தோற்றம் கொண்ட உமா ஒரு படத்தில் கூட கவர்ச்சியாக நடித்ததில்லை. இதனால்தான் விரைவில் திருமணமாகி பெங்களூர் பக்கம் செட்டிலாகிவிட்டார். அங்கே போய் சும்மா இல்லை. கன்னட சீரியல்களில் நடித்து வருகிறார்.


அந்த அனுபவம்தான் தமிழ் சீரியல்களில் நடிக்க அவரை தூண்டியிருக்கிறது. விடுவார்களா நம் ஊர் சீரியல் தயாரிப்பாளர்கள். பெங்களூருக்கு டிக்கெட் போட்டுப்போய் புக் செய்துவிட்டார்கள்.


வள்ளி என்ற சீரியலில் இப்போது நடித்து வருகிறார். விரைவில் இது சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. சினிமாவில் நல்ல நடிகை என்று பெயரெடுத்த உமா டிவியில் இல்லத்தரசிகளிடம் பெயரெடுப்பாரா, அல்லது இவரும் அழ வைப்பாரா என்று சீரியல் ஒளிபரப்பாகும் போது தெரியும்.



நன்றி: தினகரன்






http://www.youtube.com/watch?feature=player_embedded&v=4mAhyLUB_Pw