PDA

View Full Version : new serials/programsPages : 1 2 3 [4] 5 6 7

aanaa
2nd May 2010, 12:43 AM
முந்தானை முடிச்சு

மெட்டி ஒலி, முகூர்த்தம், மேகலா தொடர்களைத் தயாரித்த சினிடைம் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் புதிய தொடர் `முந்தானை முடிச்சு'.

சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர், வாழ்ந்து கெட்டுப்போன குடும்பத்தை தலைநிமிர்த்த போராடும் நாயகியை மையமாக வைத்து பின்னப்பட்டது. இதனால் கதைக்குள் நாயகியின் போராட்டங்களும், குடும்ப உறவுகளுடனான அவளது பாசப்பிணைப்பும் கதையை ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் கையைப் பிடித்து அழைத்து வந்து விடும் என்கிறார், தயாரிப்பாளர் `மெட்டி ஒலி' சித்திக்.

தொடரின் கதை:

குடும்பத்தை தலைநிமிர்த்தப் போராடும் நாயகியாக தமிழரசி. அவளுக்குப் பக்கத்துணை மூன்று சகோதரிகள். தானும் தன் தம்பியும் ஒற்றுமையாய் இருப்பது போல தனக்குப் பிறந்த மூன்று மகன்களும் இல்லையே என்ற கவலையோடு இருக்கும் மளிகை வியாபாரி கந்தசாமி.

தமிழரசிக்கும் கந்தசாமிக்கும் இடையே ஏற்படும் ஒப்பந்தத்தில் துவங்குகிறது, தொடரின் கதை. நடுத்தர வர்க்கத்து ஏக்கம் வைராக்கியம், பாசம், நெகிழ்ச்சி அனைத்தும் இந்த தொடருக்குள் சரிவிகிதக் கலவையாகி இருக்கிறது.

`கோலங்கள்' தொடரில் இணை இயக்குனராகப் பணிபுரிந்த சேலம் சிவா தொடரை எழுதி இயக்குகிறார். `திருமதி செல்வம்' தொடரின் திரைக்கதை, வசனகர்த்தா வே.கி.அமல்ராஜ், இத்தொடரின் திரைக்கதை, வசனம் எழுதுகிறார்.

பாடல்: கவிஞர் வைரமுத்து. இசை: குமார்-பாண்டியன். நடனம்: `காதல்' கந்தாஸ். ஒளிப்பதிவு அசோக். நட்சத்திரங்கள் டெல்லி குமார், ஸ்ரீஜா, சுலக்ஷனா, குயிலி, மனோகர், ரவிபிரகாஷ், எஸ்.என்.லட்சுமி, ஸ்ரீவித்யா.


[html:8d26160015]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20100501/TV08.jpg</div>[/html:8d26160015]

நன்றி: தினதந்தி

aanaa
2nd May 2010, 12:43 AM
அனுமான் புராணத் தொடர்

வாயுபுத்திரன் அனுமானின் சுயசரிதம் தொடராகிறது. அவர் ராமன் மீது கொண்ட பக்தி மற்றும் அவரது வாழ்க்கையைக் கூறும் இந்த இதிகாசதொடர், குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களையும் கவரும் விதத்தில் உருவாகிறது.

ராஜ் டிவியில் விரைவில் இந்த தொடரை காணலாம்.


நன்றி: தினதந்தி

aanaa
2nd May 2010, 12:44 AM
சிங்கப்பூரில் `வாடகை வீடு'

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகும் நகைச்சுவை தொடர், வாடகை வீடு.

வாடகை வீட்டில் குடியிருப்போர்களின் அன்றாடப் பிரச்சினைகளை அலசி ஆராயும் இத்தொடரில் திடீர் திருப்பமாக கதையின் மையப்பகுதி சிங்கப்பூரில் நடப்பதாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கதையின் நாயகிகளான தீபாவெங்கட், சந்தோஷி ஆகியோரை சிங்கப்பூருக்கே அழைத்துச் சென்று படப்பிடிப்பு நடத்த இருக்கிறார்கள்.

சிங்கப்பூரைச் சேர்ந்த பிரபல நடிக, நடிகைகளும் நடிக்க இருக்கிறார்கள். சிங்கப்பூரில் மட்டும் ஒரு மாதம் படப்பிடிப்பு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தயாரிப்பாளர் ஸ்ரீராம் வேதம் செய்து வருகிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பு குழுவினர் சிங்கப்பூருக்கு பறக்கவிருக்கிறார்கள். சிங்கப்பூரில் நடக்கும் சம்பவங்கள் சீரியலுக்கு முக்கிய திருப்பமாக அமையும் என்கிறார், தொடரின் தலைமை நிர்வாகி வி.ஆர்.சந்திரசேகரன்.

[html:e8d2f37e58]<div align="cenetr">:http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20100501/TV07.jpg</div>[/html:e8d2f37e58]


நன்றி: தினதந்தி

aanaa
2nd May 2010, 12:48 AM
பக்கத்து வீட்டில் நடக்கும் கதை -`நாதஸ்வரம்'


`ஒரே நேரத்தில் பலநூறு பேர் படுத்து உருளும் அளவுக்கு இடவசதி கொண்ட பெரிய மாளிகை போன்ற செட்டி நாட்டு வீட்டில் ஒரே ஒரு ஆச்சி மட்டும் குடியிருப்பார்.

அந்த வீட்டின் பின்பக்கம் சில குடித்தனங்கள் இருக்கும். சின்னச் சின்ன வீட்டுக்குள் குறைந்த வாடகையில் பலர் இருப்பார்கள். இந்த முரண் காரைக்குடியில் நிறைய வீடுகளில் இருக்கிறது. என்னுடைய `நாதஸ்வரம்' தொடரின் கதைக்களம் அந்த பின்பக்க குடித்தனங்கள்தான்!'' என்கிறார் திருமுருகன். இவர் தொடரை இயக்கி தயாரிப்பதோடு, கோபி என்ற கேரக்டரிலும் நடிக்கிறார்.(இவருக்கு புகழ் தேடித்தந்த `மெட்டி ஒலி' தொடரிலும் இவருக்கு கோபி என்று தான் பெயர்)

மெட்டி ஒலி வெற்றிக்குப் பிறகு இவர் இயக்கி தயாரிக்கும் இந்த தொலைக்காட்சித் தொடர், சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

செட்டி நாட்டு வீட்டின் பின்பக்கமுள்ள குடித்தனங்களில் ஒன்றில் வாழும் சொக்கலிங்கம் என்ற நாதஸ்வர வித்வானைச் சுற்றி நடக்கும் கதை இது. மவுலி அந்த கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். அவருடைய தம்பியாக நடிக்கும் பூவிலங்கு மோகனுக்கு நாதஸ்வரத்துக்கு துணையாக ஒத்து வாசிக்கும் கதாபாத்திரம். இருவரும் ஒரே தொழிலில் இருந்தாலும் தனித்தனியே வாழ்கிறார்கள்.

சொக்கலிங்கம் குடியிருக்கும் அதே வீட்டில் இன்னொரு குடித்தனமாக இருக்கும் ஜோசியர், அவரோடு தவில் வாசிக்கும் மாரிமுத்து, ஜிஞ்சா வாசிக்கும் கற்பகம் என்று பல கதாபாத்திரங்கள் உயிரோட்டமாக உருவாகியிருக்கின்றன.

சொக்கலிங்கத்தின் ஒரே தங்கை பக்கத்து ஊரான பேராவூரணியில் இருக்கும் போஸ்ட் மாஸ்டருக்கு வாழ்க்கைப்பட்டிருக்கிறாள். அவளுடைய குடும்பத்துக்கும் அண்ணன், தம்பிகள் குடும்பத்துக்கும் இடையே இருக்கும் பாசப் பிணைப்பு, பிணக்கு எல்லாமும் சேர்ந்ததுதான் இந்த நாதஸ்வரம்.

ஒரு குடும்பம் என்றாலே கலகலப்பும் இருக்கும். கைகலப்பும் இருக்கும். எங்கள் நாதஸ்வரத்திலும் இந்த இரண்டும் இருக்கும். சுருக்கமாகச் சொன்னால் உங்கள் பக்கத்தில் இருக்கும் ஒரு வீட்டில் நடக்கும் கதை தான் நாதஸ்வரம்.

குடும்பம் என்பதே நாதஸ்வரம் போன்றதுதான்... அதில் உள்ள துளைகள் எல்லாம் குடும்ப அங்கத்தினர் போல. எந்தத் துளையை மூடி எந்தத் துளையைத் திறந்தால் இனிய சங்கீதம் வரும் என்ற கணக்கு இருக்கிறது. அதுபோல, எந்தச் சூழலில் யாருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்...வேண்டாம் என்பதில் தெளிவாக இருந்தால் தான் குடும்பமும் இனிமையாக இருக்கும் அப்படி குடும்பம் என்னும் நாதஸ்வரத்தைக் கட்டிக் காக்கும் வித்வான்தான் குடும்பத் தலைவன்... அவருக்கு ஒத்து போல கூடவே இருக்கும் தம்பியும் இந்தக் கதைக்குள் இருக்கிறார்'' என்கிறார், இயக்குனர் திருமுருகன்.

தொடருக்கு திரைக்கதை: மாதேஷ், வசனம்: பாஸ்கர் சக்தி, இசை: சஞ்சீவ் ரத்தன், பாடல்: வைரமுத்து.

[html:fa13553d27]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20100501/TV04.jpg</div>[/html:fa13553d27]

நன்றி: தினதந்தி

aanaa
2nd May 2010, 12:49 AM
[tscii:7afac90fdd]
ரசிகன் எக்ஸ்பிரஸ்

விஜய் டிவியின் திரைப்பட விருது வழங்கும் விழா, இந்த ஆண்டும் தொடர்

கிறது. ஆண்டுதோறும் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களை டிவி ரசிகர்கள் மூலம் தேர்ந்தெடுத்து விருது வழங்கி வரும் விஜய் டிவி, கடந்த ஆண்டில் வெளிவந்த 131 படங்களில் இருந்து விருதுக்குரியவர்களை தேர்ந்தெடுக்கும் ஏற்பாடுகளை தொடங்கிவிட்டது. இதன் முதற்கட்டமாக `விஜய் ரசிகன் எக்ஸ்பிரஸ்' வாகனம் ரசிகர்களை சந்திக்கும் விதமாக தமிழகம் முழுவதும் பயணப்படுகிறது.

சென்னை மைலாப்பூரில் உள்ள சிட்டி சென்டரில் இருந்து புறப்பட்ட ரசிகன் எக்ஸ்பிரசை அமைச்சர் பரிதிஇளம்வழுதி கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். திரைப்பிரபலங்கள் ராம.நாராயணன், வி.சி.குகநாதன், பட அதிபர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் கலந்து கொண்டார்கள். இந்த வருட தேர்வுக்குழுவில் இடம்பெறும் முக்கிய நபர்கள்: இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகை ராதிகா, ஒளிப்பதிவாளர் ரவி. கே சந்திரன், நடிகர் ïகி சேது, கார்டூனிஸ்ட் மதன். திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 8 மணிக்கு இந்த நிகழ்ச்சியை விஜய் டி.வி.யில் காணலாம்.


நன்றி: தினதந்தி [/tscii:7afac90fdd]

aanaa
2nd May 2010, 12:51 AM
ஆன்மிக சேனல்


முழுக்க முழுக்க ஆன்மிக நிகழ்ச்சிகளுக்காக தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வரும் சங்கரா டிவி, 72 நாடுகளில் செயற்கைக்கோள் வழியாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு 2008-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21-ந்தேதி தமிழிலும், கன்னடத்திலுமாக அதிகாரபூர்வ ஒளிபரப்பைத் தொடங்கிய சங்கரா டிவியின் நிகழ்ச்சிகளை ஆரம்பத்தில் தமிழகத்தில் சில இடங்களில் மட்டும் பார்க்க முடிந்தது. இந்த டிவியின் ஒளிபரப்பு, இப்போது முழு தமிழகத்திலும் தெரிகிறது.

சங்கரா டிவியின் செயல்பாடுகள் குறித்து அதன் நிர்வாக இயக்குனர் சுரேஷ்குமார் விவரித்தார். அவர் கூறியதாவது:

இந்திய மக்களின் சமூக கலாசாரம், பண்பாடு, நாகரீகம் இதையெல்லாம் மேம்படுத்துவது சங்கரா டிவியின் உன்னத நோக்கமாக இருக்கும். ஆன்மிகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும், வெறும் சொற்பொழிவோடு நின்றுவிடாமல் நல்ல கருத்துக்களை வெளிப்படுத்தும் பக்தித்தொடர்களும் இடம் பெறும். அதோடு நடனம், இயற்கை மருத்துவம், யோகா போன்ற அடிப்படை ஆரோக்கிய அம்சங்களும் நிகழ்ச்சியில் இடம் பிடிக்கும். கோவில் திருவிழாக்கள், மத நல்லிணக்க நிகழ்ச்சிகள் என சம்பந்தப்பட்ட ஊர்களுக்கு தேடிச்சென்று காட்சிகளை படம் பிடித்து ஒளிபரப்புவதும் தொடரும். அதேநேரம் சினிமா சம்பந்தப்பட்ட எந்த நிகழ்ச்சியும் இந்த டிவியில் இடம் பெறாது.


நன்றி: தினதந்தி

aanaa
2nd May 2010, 12:51 AM
`பாடவா உன் பாடலை'

தமிழ்த் திரையுலகின் புகழ்பெற்ற பின்னணிப் பாடகர்களின் குரலில் பாடும் பாடகர்களைத் தேர்வு செய்யும் நிகழ்ச்சி, `பாடவா உன் பாடலை`. இந்த நிகழ்ச்சியின் அறிமுக சுற்றில் பிரபல பின்னணிப் பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் பாடிய பாடல்களை ஆண் போட்டியாளர்கள் பாடுகின்றனர். இதில் சிறப்பு விருந்தினராக பின்னணிப் பாடகர் விஜய் ஜேசுதாஸ் கலந்து கொள்கிறார்.

அதேபோல் பிரபல பின்னணிப் பாடகி பி.சுசிலா பாடிய பாடல்களை பெண் போட்டியாளர்கள் பாடுகின்றனர். இதில் சிறப்பு விருந்தினராக பி.சுசிலாவின் செயலாளர் சந்தியா கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு பிரபல பின்னணிப் பாடகரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் நடுவராக இருக்கிறார். பின்னணி பாடகரும், நடிகருமான யுகேந்திரன் தொகுத்து வழங்குகிறார்.

வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமையன்று இரவு 9 மணிக்கு ஜெயா டி.வி.யில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.


நன்றி: தினதந்தி

aanaa
9th May 2010, 07:39 PM
`அபிராமி' தொடரில் 3 வேடங்களில் கவுதமி

திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 9.30 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளி பரப்பாகி வரும் அபிராமி தொடர், இப்போது 60 எபிசோடுகளை கடந்திருக்கிறது. புதுமையான கதையமைப்பில் அதிகபட்ச ரசிகர்களை ஈர்த்து வரும் இந்த தொடரில் நாயகியாக நடிகை கவுதமி நடிக்கிறார்.

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு நடக்கும் அநீதிகளை தடுத்து நிறுத்தும் கதையம்சம் கொண்ட இந்த தொடரில் அபிராமி கேரக்டருடன் இப்போது மேலும் இரண்டு புதிய கேரக்டர்களில் கவுதமி நடிக்கிறார்.

ஒருவர் கலெக்டர்.

அடுத்தவர் ரவுடிப்பெண் நந்தா.

சின்னத்திரை வரலாற்றில் ஒரு முன்னணி நடிகை 3 வேடங்களில் நடிப்பது இதுவே முதன்முறை.

தொடர் பற்றி தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் கூறியதாவது:-

``இந்த தொடரில் பால்ய விவாகம் என்ற பெயரில் தமிழ்நாட்டில் இன்னும் நடந்து வரும் ஒரு கொடுமையான சமூகக் கேட்டை எடுத்துக்காட்டி, இச்சமூகத்திற்கு எங்களாலான ஒரு சிறிய சேவையை செய்து வருகிறோம். இதற்கு அடுத்ததாக நாங்கள் எடுத்துக் கொண்டிருப்பது பெண்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதிகளுக்கான சவுக்கடி. இந்த கதைக்களத்தில் முதல் முறையாக கவுதமி 3 வேடமிட்டு நடிக்க இருக்கிறார்.

ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட அபிராமி எழுதப் படிக்கத் தெரியாத பால்ய விவாகத்தால் பாதிக்கப்பட்டவள். சமூக அநீதியை எதிர்த்து வீட்டை விட்டு வெளியேறி விட்டாள்.

இந்த அபிராமி தவிர, புதிதாக கலெக்டர் சரண்யாவாக ஒரு கவுதமி வருகிறார். இவர் மிகவும் நேர்மையான ஒரு அதிகாரி. தன் கணவரே தவறு செய்தாலும் அவர் மேல் நடவடிக்கை எடுக்கத்தயங்காத, மிக எளிமையான ஒரு அதிகாரி. வீட்டிலிருக்கும் போது பாசமும், அன்பும் கொண்டவர். வீட்டுக்கு வெளியிலோ கண்டிப்பும், நேர்மையும் கொண்டவர்.

இதே தொடரில் நந்தா என்ற பெயரில் ஒரு முரட்டுப் பெண் வேடமிட்டும் கவுதமி நடிக்க இருக்கிறார். பெண்களுக்கு யாரால் அநீதி இழைக்கப்படுகிறதோ அவர்களை சம்ஹாரம் செய்வதையே கொள்கையாகக் கொண்டு உலா வருபவள். அவளுக்குள் அக்கினியாய் கனன்று கொண்டிருக்கும் சமூகக்கோபம் தான் இதற்கான அடிப்படை.

ஒவ்வொரு இந்தியப் பெண்ணும் அன்பாக இருக்கும்போது மகாலட்சுமியாகவும், அறிவாற்றலுடன் இருக்கும்போது சரஸ்வதியாகவும், அநீதியை எதிர்க்கும்போது துர்காவாகவும் இருப்பாள். அபிராமி, சரண்யா, நந்தா ஆகிய வேடங்களை ஏற்று நடிப்பதன் மூலம் நவீன யுகத்தின் லட்சுமி, சரஸ்வதி, துர்காவின் அவதாரங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளார் கவுதமி. மூன்று கேரக்டர்களிலும் கவுதமி வெளிப்படும் ஒவ்வொரு நாளும் அடுத்து என்னாகுமோ என்ற ஆர்வத்தை அதிகரிக்கும் அளவுக்கு கதை செல்லும்''.

தயாரிப்பு: அபிராமி ராமநாதன், நல்லம்மை ராமநாதன். ஹெட் ஆப் கிரியேட்டிவ்ஸ்: மீனாட்சி பெரிய கருப்பன். இயக்கம்: மதிவாணன். தலைமை செயல் அதிகாரி: டாக்டர்.சீனிவாசன்.எபிசோட் டைரக்டர்: நந்தகுமார். ஒளிப்பதிவு: வினோத் பாரதி. வசனம்: `காலச்சக்ரா' நரசிம்மா. திரைக்கதை: அருண் ஜோதி. இசை: வின்சென்ட்.


[html:7b6afa0131]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20100508/TV04.jpg</div>[/html:7b6afa0131]


நன்றி: தினதந்தி

aanaa
9th May 2010, 07:42 PM
உறவுக்கு கை கொடுப்போம்

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த `உறவுக்கு கைகொடுப்போம்' தொடர், வரும் திங்கள் முதல் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கிறது. இந்த தொடரில் இப்போது டாக்டர் வேடத்தில் நடிகை மீனாகுமாரியும் இணைக்கப்பட்டிருக்கிறார்.

தொடரின் கதைப்பின்னணி குறித்து கதை வசனகர்த்தா சேக்கிழார் கூறியதாவது:

"அண்ணன்-தம்பி நால்வரின் ஒற்றுமையை விவரிக்கும் கதை. ஒற்றுமையான குடும்பம் தான் தனது லட்சியம்என்பதை மனதில் கொண்டு அதற்கேற்ப குடும்பத்தை வழிநடத்தி வரும் அண்ணன் ஜோதிகிருஷ்ணா, செய்யாத குற்றத்துக்காக ஜெயிலுக்குப் போகும் சூழ்நிலை நேர்கிறது. மனைவி ஜானகி பலத்த போராட்டத்துக்குப் பிறகு கணவனை வெளியே கொண்டு வருகிறாள்.

ஜோதிகிருஷ்ணாவுக்கு இப்போதும் உள்ளூர நீடிக்கும் கவலை, வீட்டின் பேரில் இருக்கும் 6 லட்சரூபாய் கடன் தான். இந்தக்கடனை அடைக்க அந்த வீட்டின் 3 குடும்பப்பெண்களும் முயற்சி மேற்கொள்கிறார்கள். அதற்காக தொழில்துறையில் காலெடுத்து வைக்கிறார்கள்.

இந்தக் குடும்பத்துக்கு ஆகவேஆகாத வில்லி தமயந்தி இவர்களின் எல்லா வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டையாக இருக்கிறாள்.அவள் மகிழ்ச்சியை அதிகரிப்பது போல் குடும்பத்தில் இருந்து அடுத்தடுத்து 2 தம்பிகள் தங்கள் உறவைப் பிரித்துக்கொண்டு வெளியேறுகிறார்கள். இவர்களில் மெக்கானிக் தம்பியை அண்ணன் ஜோதிகிருஷ்ணா தனது அன்புப் பிடிக்குள் உடனடியாக கொண்டு வந்து விடுகிறார். அவன் வீட்டுக்கு வந்தாலும் இன்னொரு டாக்டர் தம்பி வராத வருத்தம் அண்ணனை கவலைக்குள்ளாக்குகிறது. ஆனாலும் முயற்சியை விட்டுவிடாமல் அவர் தன் டாக்டர் தம்பியை எப்படி மனமாற்றம் செய்து அழைத்து வருகிறார் என்பது கதையின் இன்னொரு சுவாரசியத் திருப்பம்.

ஜோதிகிருஷ்ணா குடும்பத்தில் எந்த மாதிரியான பிரச்சினை என்றாலும் அதை தீர்த்து வைப்பதில் முன்னோடியாக இருக்கிறார், டாக்டர் ஷக்தி. இதனால் குடும்பத்தில் சில பிரச்சினைகளை டாக்டர் ஷக்தி எதிர்பாராமல் சந்திக்க வேண்டியதாகிறது. அந்தப் பிரச்சினைகளில் இருந்து டாக்டரால் மீளமுடிந்ததா என்பது இன்னொரு பக்க பரபரப்பு அத்தியாயம்.

இந்த தொடரில் முதன்முதலாக வில்லி கேரக்டரில் நடிக்கிறார், காயத்ரிபிரியா. தொடரில் வரும் மிரட்டல் வில்லி தமயந்தி இவர்தான். பொறுப்புள்ள குடும்பத்தலைவன் அண்ணன் ஜோதிகிருஷ்ணாவாக பூவிலங்கு மோகன் வருகிறார்.

சமீபத்தில் தொடரில் இடம்பெற்ற ஒரு கதாபாத்திரம் தொடர்பாக போட்டி வைத்து கேள்வி கேட்கப்பட்டது. போட்டியில் 20 ஆயிரம் நேயர்கள் கலந்து கொண்டு பதில் எழுதியிருந்தார்கள். இவர்களில் சரியான விடை தந்த 32 பேருக்கு ரைஸ்குக்கர் பரிசாக அனுப்பி வைக்கப்பட்டது.''

இயக்கம்: புவனேஷ்.

தயாரிப்பு: எம்.சரவணன், எம்.எஸ்.குகன், அருணா குகன், அபர்ணா குகன்.


நன்றி: தினதந்தி

aanaa
9th May 2010, 07:43 PM
அன்புள்ள அப்பா

மெகா டிவியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய தொடர்,அன்புள்ள அப்பா.

ஒரு குடும்பத்தில் பிறந்த மூன்று பெண்களில் ஒரு பெண் தாயிடமும், இன்னொரு பெண் தந்தையிடமும், மற்றொரு பெண் தத்தெடுத்தவர்களிடமும் வளர்கின்றனர். தனது பரம்பரை சொத்துக்களை இழந்த இந்த மூன்று பெண்களும் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகளே கதை..

ரகு இயக்கத்தில் கண்மணி சுப்புவின் திரைக்கதையில் உருவாகியுள்ள இத்தொடரில், சுஜிதா, அஞ்சு அஸ்ராணி, சர்வாணி, லட்சுமிராஜ் நடித்துள்ளனர்.நன்றி: தினதந்தி

aanaa
15th May 2010, 06:03 AM
அம்மான்னா அம்மா தான்!


பாண்டவர்கள் என்ற புதிய தொடரில் நடிக்கிறார், நடிகை மனோரமா. ஒரு குடும்பத்தில் அம்மாவின் பொறுப்பு எத்தகையது என்பதை எடுத்துக் காட்டும் இந்த தொடரில் அம்மா இவர் தான்.

கேப்டன் டிவியில் விரைவில் ஒளி பரப்பாகவிருக்கிறது இந்த தொடர்.


நன்றி: தினதந்தி

aanaa
15th May 2010, 06:07 AM
விக்கிரமாதித்தன்

சிறுவயதில் பாட்டி சொன்ன கதை நம் ஞாபகத்தில் இருக்கும். அதில் வீரமும் விவேகமும் கொண்ட விக்கிரமாதித்தனின் சாகசங்களையும் கேட்டிருப்போம். அதையே இப்போது ராஜ் தொலைக்காட்சி மெகா தொடராக தருகிறது. விரைவில் இந்த விக்ர

மாதித்தனை ராஜ் டிவியில் காணலாம்.


நன்றி: தினதந்தி

aanaa
29th May 2010, 10:09 PM
100 எபிசோடுகளைத் தாண்டிய `விசாரணை' தொடர்எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் நாவல்கள் கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 10 மணிக்கு குறுந்தொடர்களாக ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த தொடர் இப்போது 100-வது எபிசோடைத் தொட்டுள்ளது.

ராஜேஷ்குமாரின் நாவல்கள் படிப்பதற்கு எவ்வளவு விறு விறுப்பானவையோ, அதே அளவு விறுவிறுப்பு வேகம் `விசாரணை' தொடரிலும் இருந்தது. அதனால் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பப்பட்ட போதிலும் நேயர்கள் குறிப்பாக பெண்கள் விரும்பிப் பார்த்தார்கள். விசாரணை தொடரை விரும்பி பார்க்க என்ன காரணம் என்று நேயர்கள் சிலரைக் கேட்ட போது, அவர்கள் சொன்ன கருத்து இது. `விசாரணை' தொடரில் இடம் பெறும் கதைகளை திங்கள் முதல் வியாழன் வரை நான்கே நாட்களில் முடித்து விடுவது ஒரு சிறப்பு.

பொதுவாக நெடுந்தொடர்கள் என்றாலே கதையின் முடிவைத் தெரிந்துகொள்ள வருடக்கணக்கில் காத்து இருக்க வேண்டியுள்ளது. விசாரணை தொடரில் ஒரு கதையை நான்கே எபிசோடுகளில் முடித்து விடுவதால் ஒரு நாவலை படித்து முடித்த நிறைவு ஏற்படுகிறது. அது தவிர ஒரு குற்றம் எப்படி நடைபெறுகிறது? குற்றம் நடந்தபின் போலீசார் அதை எப்படி அணுகி விசாரித்து குற்றவாளியை மெல்ல மெல்ல நெருங்குகிறார்கள் என்பதை சிறப்பாகவே படம் பிடித்துக் காட்டு
கிறார்கள். தொடரைப் பார்க்கும்போது `பாரன்ஸிக் துறை' எப்படி செயல்படுகிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள முடிகிறது.

மேலும் விசாரணை தொடரை இயக்கும் டைரக்டர் சி.பிரபு, ராஜேஷ்குமாரின் நாவல்களை அவர் எப்படி எழுதியிருக்கிறாரோ, அதன்படியே சிறப்பாக எடுத்து அந்த கதைக்கு சிறப்பு சேர்த்து வருகிறார். காமிராவும் பின்னணி இசையும் தொடருக்கு கூடுதல் பலம். எல்லாவற்றுக்கும் மேலாக கிராவிடி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தொடரை தயாரிக்கும் `விஜயகுமார், ரவிசந்தர் சால்வா இருவரும் பொருட்செலவைப் பார்க்காமல் தொடரை தயாரித்து நேயர்களுக்கு வழங்கி வருகிறார்கள்.

செஞ்சுரி அடித்துள்ள `விசாரணை' தொடர், 200, 300, 400 என்ற இலக்குகளைக் கடந்து 500 என்ற இலக்கை நிச்சயமாக தொடும் என்று உறுதியாய் நம்பலாம்.

நன்றி: தினதந்தி

aanaa
29th May 2010, 10:12 PM
களம் இறங்கும் கலெக்டர் சரண்யா

கலைஞர் டிவியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் அபிராமி தொடரில் நடிகை கவுதமி 3 வேடங்களில் நடித்து வருகிறார். சாந்தமான அபிராமி, ரவுடிப்பெண் நந்தா, கலெக்டர் சரண்யா என இந்த 3 கேரக்டர்களுமே அவரது தேர்ந்த நடிப்பில் பிரகாசிக்கின்றன.

இப்போது போய்க் கொண்டிருக்கும் தொடரின் கதைப்பின்னணி வருமாறு:

அம்பிகாவுடன் ஆட்டோவில் பயணம் செய்த அபிராமியை கலெக்டர் சரண்யா என்றெண்ணிய தெய்வானை, மணல் லாரியை விட்டு கொல்ல முயற்சிக்கிறாள். இதன் மூலம் சரோஜாவின் பாசத்தையும் அவள் மருமகள் வள்ளிக்கண்ணுவின் பகையையும் சம்பாதித்துக் கொள்கிறாள் அபிராமி.

லாரி மோதலில் அபிராமி தப்பித்து விட்டாலும், மனம் ஆறாத வள்ளிக்கண்ணு தனது ரவுடி அண்ணனிடம் முறையிடுகிறாள். அவன் தன் சகாக்களோடு அபிராமியை கடத்தி விடுகிறான்.

இதற்கிடையே அண்ணாச்சி மகன் செந்தில் கொலையை நேரில் பார்த்த ஒரே சாட்சியான கற்பகத்தை கண்டுபிடிக்கிறான் திவாகர். புதிதாக பதவியேற்கும் உதவி கமிஷனர் தேவராஜ், தெய்வானையின் விசுவாசியாக இருப்பதால் திவாகரிடம் இருந்து கற்பகத்தின் முகவரியை கைப்பற்றி அதே வேகத்தில் அவளை கைது செய்து தெய்வானையிடம் ஒப்படைக்கிறார். தெய்வானை அவளை அடித்து உதைத்து தன் மகனைக் கொன்றது யார் என கேட்கிறாள்.

தன்னை காப்பற்றிய கலெக்டர் சரண்யாவை கற்பகம் காட்டிக் கொடுத்தாளா?ரவுடி பழனியிடம் மாட்டிக் கொண்டஅபிராமியின் நிலை என்ன? நேர்மையான கலெக்டர் சரண்யாவின் அடுத்தகட்ட அதிரடி மூவ் என்ன? அடுத்துவரும் காட்சிகள் சஸ்பென்சையும் சேர்த்து தொடரும்.

தயாரிப்பு: அபிராமி மெகாமால் நிறுவனம் சார்பில் `அபிராமி' ராமநாதன்- நல்லம்மை ராமநாதன். கிரியேட்டிவ் ஹெட்: மீனாட்சி பெரிய கருப்பன். இயக்கம்: மதிவாணன்.

நன்றி: தினதந்தி

aanaa
29th May 2010, 10:21 PM
[tscii:097c865dad]
ஜெய்சங்கரின் புகழை பறைசாற்றப் போகிறது விஜய் டிவி

Jaisanker birthday programe in Vijay TV

இரவும் பகலும் என்ற படத்தின் மூலம் 1965ம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் ஜெய்சங்கர். 200க்கும் அதிகமான படங்களில் நடித்து முடித்திருக்கும் ஜெய்சங்கர் பெரும்பாலான படங்களில் துப்பாக்கியுடன் நடித்ததால் தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் என ரசிகர்கள் அழைத்தனர். இவர் பல திரைப்படங்களில் குறைந்த இடைவெளிகளில் தொடர்ந்து நடித்ததால், இவரது படங்கள் வாரம் ஒன்றென வெளிவந்த வண்ணம் இருந்ததால் ஜெய்சங்கருக்கு வெள்ளிக்கிழமை நாயகர் என்ற பட்டமும் உண்டு. அந்தக்கால தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்த ***ஜெய்சங்கர் 2000-ம் ஆண்டு ஜூன் 3ம்*தேதி காலமானார். அவரது மறைவு தமிழ் திரையுலகிற்கு மட்டுமல்ல அவரது ரசிகர்களுக்கும் பேரிழப்பாகத்தான் இருக்கிறது.

*மறைந்த நட்சத்திரங்களுக்கு மரியாதை செய்யும் வகையில் பழைய திரைப்படங்கள், முன்னாள் நாயகர்கள் பற்றிய நிகழ்ச்சிகளை வெளியிட்டு ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றி வரும் விஜய் டி.வி., ஜெய்சங்கர் பிறந்த நாளையொட்டி சிறப்பு நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளது. வருகிற ஜூலை 15ம்*தேதி ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜெய்சங்கரின் இரண்டாவது மகன் சஞ்சய் சங்கர் செய்து வருகிறார். நிகழ்ச்சியின்போது ஜெய்சங்கருடன் பணியாற்றிய தயாரிப்பாளர்கள், நடிகர் - நடிகைகள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என பலரும் தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்ளவிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி ஜெய்சங்கரின் புகழுக்கு மேலும் புகழ் சேர்க்கும் விதத்தில் இருக்கும் என்கிறார் சஞ்சய் சங்கர்.வாரிசை நடிகர் ஆக்காத ஜெய்சங்கருக்கு புகழாரம்!

Jai Shankar’s son to launch website

வாரிசுகளை நடிகராக்கி பணம் சம்பாதிக்கும் சினிமாத்துறையிவர் மத்தியில், தனது வாரிசை டாக்டர் ஆக்கி சமூக நலப்பணிகளில் ஈடுபட வைத்திருப்பவர் மறைந்த நடிகர் ஜெய்சங்கர். வாழ்ந்த வரை பலருக்கு பலவித உதவிகளை செய்து நல்ல மனிதர் என பெயரெடுத்தவர் நடிகர் ஜெய்சங்கர். தென்னிந்தியாவின் ஜேம்ஸ்பாண்ட் என்று அழைக்கப்பட்ட ஜெய்சங்கரின் மகன் விஜய் சங்கர் பிரபல கண் மருத்துவ நிபுணர். சங்கர் ஐ கேர் என்ற பெயரில் சென்னையில் கோடம்பாக்கம் நெடுஞ்சாலை மற்றும் ஆர்.ஏ.புரத்தில் மருத்துவமனை நடத்தி வருகிறார். ஏராளமான இலவச கண் மருத்துவ முகாம்களை நடத்தி சமூக நலப்பணிகளில் ஈடுபட்டு வரும் டாக்டர் விஜய் சங்கர் தனது தந்தை *ஜெய்சங்கர் பெயரில் ஒரு இணையதளத்தை (www.jaishankar.in) தொடங்கியுள்ளார். இதன் அறிமுக நிகழ்ச்சி விஜய்சங்கரின் மருத்துவமனையில் நடந்தது.

இதில் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், நடிகர் கார்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கமிஷனர் ராஜேந்திரன் பேசுகையில், ஜெய்சங்கரின் சமூக சேவையை எடுத்துரைத்தார். "தனது வாரிசை நடிகன் ஆக்க முயற்சிக்காத அரிய கலைஞர் ஜெய்சங்கர். எத்தனையோ பேருக்கு வெளியில் தெரியாமல் உதவியவர். டாக்டர் விஜய்சங்கரும் நடிப்பு துறைக்கு போகாமல் அப்பாவின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் சமூக நலப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இந்த இணையதளம் அவரது சமூகப் பணிகளுக்கு உதவியாக இருக்கும்" என்று கமிஷனர் ரஜேந்திரன் பேசினார்.நன்றி: தினமலர் [/tscii:097c865dad]

aanaa
5th June 2010, 05:21 AM
`தெரியாமலே' ஒரு காதல்!

திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் `விளக்கு வச்ச நேரத்திலே.' டைரக்டர் கே.பாக்யராஜின் கதை, திரைக்கதை வசனத்தில் தொடர்ந்து வரும் இந்த தொடரை இயக்குபவர் டைரக்டர் சி. ரங்கநாதன்.

தன் மகளுக்கு திருமண ஏற்பாட்டை செய்கிறாள் ஞானாம்பாள். பவித்ராவுக்கு உறவு வழியில் இரண்டு முறைமாப்பிள்ளைகள் இருக்கிறார்கள். இருவருமே பவித்ராவை மணக்க போட்டி போடுகிறார்கள். இந்த போட்டியில் ஒருவருக்கொருவர் அடிதடி வரை போய் விடுகிறார்கள்.

இந்த நேரத்தில் பக்கத்து ஊர்க்காரன் பிரதாப்பின் பார்வையில் படுகிறாள் பவித்ரா. அவன் சிங்கப்பூரில் நல்ல வேலையில் இருப்பவன். விடுமுறையில் ஊருக்கு வந்த நேரத்தில் தான் பவித்ராவை பார்க்கிறான். அவள் அழகில் மெய்மறந்தவன், தன் சித்தப்பா-சித்தியிடம் பவித்ராவை பெண் கேட்டு திருமணதேதியை முடிவு செய்ய கேட்டுக் கொள்கிறான்.

பிரதாப் சிங்கப்பூர் போன நிலையில் சித்தி-சித்தப்பா பவித்ராவை பெண்கேட்டு போகிறார்கள். கூடவே பிரதாப்பின் நண்பன்சேகரும் போகிறான். பெண் கேட்டு வந்திருப்பது தெரிந்ததும் எரிமலையாகிறார்கள், அவள் முறை மாமன்கள். அடிதடியாகி விடுகிறது. சேகர் காயத்துடன் தப்புகிறான்.

ஆனாலும் சேகர் நடந்த சம்பவத்தை மறைக்கிறான். போனில் நிச்சயதார்த்தம் பற்றி கேட்ட பிரதாப்பிடமும் நன்றாக நடந்ததாக பொய் சொல்கிறான். `அப்படியானால் என் பிறந்தநாளுக்கு பவித்ராவை வாழ்த்தச் சொல்' என்கிறான். ஆபத்துக்குப் பாவமில்லை என்று கருதிய சேகர், தன் தங்கை நிஷாவை பவித்ராவாக நடிக்கச் சொல்கிறான்.

நிஷாவை பவித்ராவாக எண்ணிக்கொண்டு அடிக்கடி போனில் தொடர்பு கொள்கிறான், பிரதாப். இந்த உரையாடல்களின் தொடர்ச்சி சேகரின் தங்கை நிஷாவுக்கு பிரதாப் மேல் காதலை கொண்டு வந்து விடுகிறது. ஒரு கட்டத்தில் பவித்ராவை பார்க்கும் ஆர்வத்தில் சிங்கப்பூரில் இருந்து பறந்து வந்து விடுகிறான், பிரதாப். வந்தபிறகே தான் இதுவரை பேசி மகிழ்ந்தது பவித்ராவிடம் அல்ல, தன் நண்பனின் தங்கையிடம் என்பது தெரிந்து அதிர்கிறான்.

இதற்கிடையே பவித்ராவுக்கு அவள் முறை மாமன் சுந்தரத்துடன் திருமணம் நிச்சயமாகி, மணமேடையில் திருமணம் நிற்கிறது. ஆத்திரமாகும் சுந்தரம் பவித்ராவை கடத்திப்போகிறான்.

கடத்தப்பட்ட பவித்ராவை யார் மீட்கப் போகிறார்கள்? பவித்ரா, பிரதாப்பின் காதலை தெரிந்து கொண்டாளா? பிரதாப்பின் அடுத்தகட்ட நிலை என்ன? பிரதாப்பையே மனதுக்குள் நேசிக்கும் நிஷாவின் எதிர்காலம் என்ன? பரபரப்பைத் தக்கவைத்துக் கொண்டு தொடர்கிறது,

தொடர்.எவர்ஸ்மைல் நிறுவனம் தயாரிக்கும் இந்த தொடருக்கு இசை: தேவா. பாடல்: வைரமுத்து. தயாரிப்பு ஒருங்கிணைப்பு: ஈ.ராம்தாஸ்.


நன்றி: தினதந்தி

aanaa
5th June 2010, 05:21 AM
சிந்து பைரவி

ராஜ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கும் புதிய தொடர் `சிந்து பைரவி.' ஒரு ஏழைப் பெண்ணின் வாழ்க்கையில் நடைபெறும் சுக துக்கங்களையும், போராட்டங்களையும் மையமாக வைத்து உருவாகும் தொடர் இது.

சிந்து ஒரு ஏழைக் குடும்பத்துப்பெண். அவளின் எதிர்காலம் கருதி அவளது தாய் ஒரு செல்வந்தர் வீட்டில் வேலை பார்த்து வருகிறாள். செல்வந்தரின் மகள் பைரவிக்கும், சிந்துவிற்கும் நட்பு மலர்கிறது. இந்நிலையில் பைரவிக்கு பார்த்த மாப்பிள்ளை, சிந்துவின் மேல் காதல் கொள்கிறான்.

இதனால் தோழியர் இருவரின் நட்பில் விரிசல் ஏற்படுகிறது. என்னதான் உழைத்தாலும் ஏழைப்பெண் பணக்கார குடும்பத்தில் ஒருவராக முடியாது என்ற பாடத்தை கற்றுக்கொள்கிறாள் சிந்து. இதையடுத்து சிந்து தனது வாழ்க்கை பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கிறாள் என்பது தொடரும் கதைப்பின்னணி.


நன்றி: தினதந்தி

aanaa
5th June 2010, 05:22 AM
சவாலை ஏற்று சாதிப்பாளா இளவரசி?

ரடான் நிறுவனத்தின் தயாரிப்பில் சன் டி.வி.யில் தினமும் பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் `இளவரசி'. இந்தத் தொடரின் கதை ஓட்டத்தில் பல்வேறு திருப்புமுனை சம்பவங்கள் இடம்பெற உள்ளன என்று கூறுகிறார், தொடரின் கிரியேட்டிவ் ஹெட்டான ராதிகா சரத்குமார்.

சுப்பிரமணிக்கும், அவனது அண்ணிக்கும் தவறான உறவு இருப்பதாகக் கூறி, மகள் இளவரசியை தன் வீட்டுக்கு அழைத்து வந்து விடுகிறாள் இந்திரா. அதேபோல் தன் மனைவி ஜானகியை தம்பி சுப்பிரமணியுடன் இணைத்து தவறாகப் பேசியதால் இளவரசி வீட்டு முன் வந்து கலாட்டா செய்கிறான் ஆறுமுகம். இதைப்பார்த்த வீட்டின் உரிமையாளர், இளவரசியிடம் உடனே வீட்டைக் காலி பண்ணச் சொல்கிறார். தன் மகளின் பரிதாப நிலை கண்டு பதறித் துடிக்கிறாள், அவளது தயார் இந்திரா. இந்த நிலையில் சித்தப்பா கிருஷ்ணமூர்த்தியும், `இளவரசியை அவசரப்பட்டு ஏன் இங்கே அழைத்து வந்தாய்?' என கொதிக்கிறார்.

இப்போது இளவரசி என்ன செய்யப் போகிறாள்? வீட்டைக் காலிசெய்து விட்டு வெளியேறுவாளா? பிரச்சினைகளை சவாலாக ஏற்று சாதிப்பாளா? இந்தப் பரபரப்பான கேள்விகளுக்கான விடை, வரும் நாட்களில் தெரிய வரும்.


நன்றி: தினதந்தி

aanaa
5th June 2010, 05:23 AM
100-வது வாரத்தில் "வைரமங்கை''

கலைஞர் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் காலை 8 மணிக்கு ஒளிபரப்பாகும் வைரமங்கை நிகழ்ச்சி, 100-வது வாரத்தை கடந்து தொடர்கிறது.

இதுவரை தமிழகத்தில் சென்னை, மதுரை, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், பெரம்பலூர், நாமக்கல், திருச்சி, கரூர், விருதுநகர் ஆகிய 12 மாவட்டங்களில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. மற்ற மாவட்டங்களிலும் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

பெண்களின் அறிவுப்பூர்வமான திறமைகளை வெளிக்கொண்டு வருவதே இந்நிகழ்ச்சியின் நோக்கம். பெண்கள் தங்கள் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தும் வாய்ப்பும் நிறைந்தது.

ஒவ்வொரு மாவட்டங்களிலும் இருந்து தேர்வு செய்யப்பட்ட வைரமங்கைகளுக்கு இறுதிப் போட்டி நடத்தப்பட்டு, அதில் முதலாவதாக வந்த பெண் தமிழகத்தின் வைரமங்கையாக தேர்வு செய்யப்படுகிறார். அவருக்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள வைரக்கிரீடம் சூட்டப்படும்.

`கிரியேட்டிவ் கிரியேசன்ஸ்' நிறுவனத்தின் மூலம், மதுரை ரா.ரவிச்சந்திரன் தயாரித்து இயக்குகிறார்.


நன்றி: தினதந்தி

aanaa
5th June 2010, 05:23 AM
இளம் பெண்ணுக்கு `நீதி' கிடைக்குமா?

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் இதயம் தொடரில் இப்போது புதிய கதைக்களம் இணைக்கப்பட்டிருக்கிறது.

இதுபற்றி தொடரின் கதாசிரியர் `அன்னக்கிளி' ஆர்.செல்வராஜ் கூறியதாவது:

சமூகத்தில் செல்வாக்குமிக்க ஒருவரின் கறுப்பு பக்கத்தை வெளிப்படுத்த போராடுகிறன் இளைஞன். அந்த பெரியமனிதர் மூலம் அவனுக்கு ஏற்பட்ட இழப்பு அத்தனை கொடியது. ஆத்திரமாகும் அந்த பெரிய மனிதர் தன் செல்வாக்கால் அந்த இளைஞனை கொலைக்கேசில் ஜெயிலுக்கு அனுப்புகிறார்.

சோர்ந்தானில்லை இளைஞன். எந்த சட்டத்தின் ஓட்டையை பயன்படுத்தி அவன் உள்ளே கொண்டு வரப்பட்டானோ, அந்த சட்டத்தை அவன் ஜெயிலில் இருந்தபடி படிக்கிறான். பரீட்சையில் தேறுகிறான். நன்னடத்தை காரணமாக முன்கூட்டியே ஜெயிலில் இருந்து விடுதலையாகும் அவன்,

வழக்கறிஞர் என்ற அடையாளம் மூலம் ஏழைகளுக்கு நீதி கிடைக்கச் செய்கிறான். இதனால் நீதி மறுக்கப்பட்டவர்கள் அத்தனை பேருக்கும் அவன் கண்கண்ட தெய்வமாகிறான்.

இந்த நேரத்தில் தன்னை ஜெயிலுக்கு அனுப்பிய பெரியமனிதனின் மகனால் பாதிக்கப்பட்ட பெண்ணொருத்திக்கு சட்ட உதவி தேவைப்படுகிறது. அவள் வழக்கை கையில் எடுக்கிறான் இளைஞன். அவனது சட்ட அறிவும், சாதிக்கும் திறனும் சமூக அந்தஸ்தில் இருக்கும் பெரிய மனிதரை பாதிக்கிறது. அவனுக்கு எதிராக தன் செல்வாக்கு அஸ்திரங்களை பாய விடுகிறார்.

இந்த பெரியமனிதருக்கும், இளைஞனுக்கும் உள்ள ஒரு உறவு பிளாஷ்பேக்காக மலரும்போது அடுத்தகட்ட அதிர்ச்சியும் காத்திருக்கிறது.

தொடரில் இப்போது புதிதாக இணைக்கப்பட்டிருக்கும் இந்த கதைக்குள், பாதிக்கப்பட்டு நீதி கேட்கும் பெண்ணாக நித்யாதாஸ் நடிக்கிறார். சின்னத் திரையில் அவரது முதல் தொடர் இது. வக்கீல் இளைஞனாக சஞ்சீவ் நடிக்கிறார். நடிகை சீதா, நித்யாதாசின் மாமியாராக

வருகிறார்.தயாரிப்பு: `சத்யஜோதி' தியாகராஜன். கதை: ஆர்.செல்வராஜ். வசனம்: அசோக். இயக்கம்: `ஆனந்தம்' நித்யானந்தம்.நன்றி: தினதந்தி

aanaa
5th June 2010, 05:30 AM
இருகோடுகள்

மெகா டி.வி.யில் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 8 மணிக்கு `இருகோடுகள்' என்ற புதிய மெகா தொடர் ஒளிபரப்பாகிறது. இறந்து போனதாகக் கூறப்படும் சுஜிதா, மீண்டும் வந்து வாழ்வில் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்த வித்தியாசமான தொடர் இது.

விஜயபாஸ்கர் இயக்கத்தில் சுஜிதா இருவேடங்களில் நடிக்கிறார்.

aanaa
13th June 2010, 11:22 PM
இறுதிச் சுற்றில் `சூப்பர் சிங்கர் ஜுனியர்'

விஜய் டிவியில் வரும் சூப்பர் சிங்கர் ஜுனியர்-2 போட்டியில் ரசிகர்களின் வாக்குகள் அடிப்படையில் ஸ்ரீகாந்த் மற்றும் நித்யஸ்ரீ ஆகிய இருவரும் முன்னிலை வகித்து இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தனர்.

அல்கா, நித்யஸ்ரீ, ஷ்ரவண், ரோஷன், ஸ்ரீகாந்த் ஆகிய ஐந்து போட்டியாளர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. வெற்றி பெறும் போட்டியாளருக்கு ரூ.25 லட்சம் மதிப்புள்ள ஒரு அழகிய வீடு பரிசு உண்டு.

விறுவிறுப்பான இந்த இறுதிச்சுற்றில் வெற்றி பெறப்போவது யார் என்ற பெரும் சஸ்பென்ஸ் அனைவரையும் தொற்றிக் கொண்டுள்ளது. வெற்றி பெற இருக்கும் அந்த அதிர்ஷ்டசாலியை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு மீண்டும் தொலைக்காட்சி நேயர்களிடமே கொடுக்கப்பட்டுள்ளது. இறுதிச் சுற்றுக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், பின்னணி பாடகி எஸ்.ஜானகி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று போட்டியாளர்களை வாழ்த்தியும் ஊக்கப்படுத்தியும் இருந்தனர்.

நிகழ்ச்சியின் இரண்டாம் கட்ட இறுதிச்சுற்று பிரம்மாண்ட மேடையில் நேயர்களின் கண்முன் நேரடியாக நடைபெறப் போகிறது. அதனை நேரடியாகவும் விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்கிறார்கள். இந்த நேரடி ஒளிபரப்பால் மேலும் பரபரப்பாகிறது சூப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சி.

வரும் வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் சென்னை ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் இறுதிச் சுற்று தொடங்க இருக்கிறது. பார்வையாளர்களுக்கு 6 மணி முதல் அனுமதி உண்டு. பிரம்மாண்டமாக நடைபெற இருக்கும் இந்த நேரலை ஒளிபரப்பில் இசைத் துறையினர் பெருவாரியாக கலந்து கொள்ள இருக்கின்றனர்.

இறுதி சுற்றுக்கு வாக்களிக்க வேண்டிய போட்டியாளர்கள்: அல்கா, நித்யஸ்ரீ, ஷ்ரவண், ரோஷன், ஸ்ரீகாந்த்.வாக்குகளின் அடிப்படையில் எந்த போட்டியாளருக்கு அதிக வாக்குகள் கிடைக்குமோ அவரே `சூப்பர் சிங்கர் ஜுனியர்.'
[html:b0ae51178b]<div align="center"><img src="http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20100612/Tv06.jpg></div>[/html:b0ae51178b]

நன்றி: தினதந்தி

aanaa
13th June 2010, 11:23 PM
சதி வலையில் செல்லம்மா...!

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர், செல்லம்மா.

இழந்த சொத்துக்களை ஆறு மாதத்திற்குள் மீட்பேன் என்று சபதம் போட்ட செல்லம்மா, அதில் ஜெயிப்பதற்காக அல்லும் பகலும் அயராமல் உழைக்கிறாள். தற்போது கர்ப்பவதியாக இருக்கும் செல்லம்மாவை கணவன் வடமலை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்கிறான்.

இந்நிலையில் கடற்கரையின் மகள் ரத்னா பூப்பெய்திய செய்தி கிடைக்க, அத்தை என்ற முறையில் அவளுக்கு சீர்வரிசை செய்கிறாள் செல்லம்மா! அதை கடற்கரையின் மனைவி முத்தழகி ஏற்க மறுத்து தகராறு செய்கிறாள்! அந்த ஆத்திரத்தில் செல்லம்மாவின் கர்ப்பத்தை கலைக்க சிவசு, சிவா இருவரையும் ஏவிவிடுகிறாள் முத்தழகி!

இந்நிலையில் மனைவி மதுமிதாவுக்காக ஜெயிலுக்கு போன ஏ.கே. ஜாமீனில் வெளிவருகிறார். முதல்காரியமாக கல்லூரி நிர்வாக பொறுப்பில் இருந்து மதுமிதாவை நீக்குகிறார். அதற்கெல்லாம் காரணம் செல்லம்மா தான் என்று நினைத்த மதுமிதாவும் சிவசு, சிவா மூலமாக செல்லம்மாவை விஷம் வைத்து கொல்ல சதி திட்டம் தீட்டுகிறாள். இந்த சதியில் இருந்து செல்லம்மா மீண்டாளா? பரபரப்பான திருப்பங்கள் காட்சிகளை தடதடக்க வைக்கும்.

தொடரில் ராதிகா சரத்குமார், டெல்லி கணேஷ், ரவிகுமார், ராதாரவி, அவினாஷ், நந்தகுமார், வெங்கட், சாக்சி சிவா, ராஜ்காந்த், மாளவிகா, மகாலட்சுமி, காவ்யா, நீலிமாராணி, கன்யா, சினேகா நம்பியார் நடிக்கிறார்கள்.

திரைக்கதை: ராஜ்பிரபு. வசனம்: சபரிநாதன். இசை: கிரண். டைரக்ஷன்: விக்ரமாதித்தன்.


நன்றி: தினதந்தி

aanaa
13th June 2010, 11:25 PM
கருப்பு வேட்டை

வரும் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 10 மணிக்கு பாலிமர் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய தொடர் `கருப்பு வேட்டை'

காலங்காலமாக நம்மிடையே உலவி வரும் கட்டுக்கதைகள், பின்பற்றி வரும் மூடநம்பிக்கைகள், மாறாத வழக்கங்கள், போன்றவை நமது கலாச்சாரத்தின் ஒரு அங்கமாகவே படிந்துவிட்ட இன்றையநிலையில் நிஜ வாழ்வில் நிகழும் அமானுஷ்யங்களை பதிவு செய்கிறது தொடர்.

இது இருட்டுலகின் மர்மங்களை உடைத்தெறியப்போகும் பயணக்கதை. அமானுஷ்யங்களை, நடைமுறை சாத்தியங்களின் அடிப்படையில் ஆய்ந்தறியும் ஒரு திகில் அனுபவம். இத்தொடர் நிகழ்வுலகை ஆட்டிப்படைக்கும் ஆவிகள், அமானுஷ்ய சக்திகள், மர்ம முடிச்சுகள் என அனைத்தையும் அலசுகிறது.

இந்த கருப்பு வேட்டையின் மூலம் உண்மைச் சம்பவங்களை, வீடியோ ஆதாரத்துடன் வழங்க இருக்கிறது, பாலிமர் தொலைக் காட்சி.நன்றி: தினதந்தி

aanaa
20th June 2010, 05:11 AM
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர், நாதஸ்வரம்.

இந்த தொடருக்கான பெரும்பான்மை நடிகர்களை பொதுமக்களில் இருந்தே தேர்ந்தெடுத்தார் இயக்குனர் திருமுருகன். முழுக்க முழுக்க வெளிப்புறப் படப்பிடிப்பு என்ற அளவில் வித்தியாசப்பட்டு நிற்கும் நாதஸ்வரத்தின் அடுத்த பயணம் எதை நோக்கி இருக்கும் என்று கேட்டபோது, விரிவாகப் பேசினார் திருமுருகன்.

"நாதஸ்வர வித்வான் மவுலியும் அவருடைய தம்பி ஒத்து கலைஞர் பூவிலங்கு மோகனும் அவ்வளவு அன்னியோன்யமாக இருக்கிறார்கள். அவர்களைப் போலவே மூத்தவரின் மகன் கோபியும் இளையவர் மகன் பாண்டியும் பிரியமாக இருக்கிறார்கள்.

ஆனால், பெரியவரின் மனைவி மீனாட்சியும் அவர் தம்பி மனைவி தெய்வானையும் எதிரும் புதிருமாக இருக்கிறார்கள். இருவருக்குள்ளும் சதா ஒரு போட்டி இருந்து கொண்டே இருக்கிறது. அந்தப் போட்டியின் ஒரு கட்டமாக பெரியவரின் மகள் மகேஸ்வரிக்கு மாப்பிள்ளை பார்ப்பதைப் போலவே தன் மகள் காமேஸ்வரிக்கும் மாப்பிள்ளை பார்க்கத் தொடங்குகிறாள் தெய்வானை.

இன்னொரு பக்கம் மகேஸ்வரிக்குப் பொருந்தாத ஜாதகம் ஒன்றை எல்லாப் பொருத்தங்களும் இருப்பதாகச் சொல்லி சதி செய்து தன் பகையைத் தீர்த்துக் கொள்கிறார், மவுலி வீட்டுக்குப் பக்கத்தில் குடியிருக்கும் ஜோதிடர். அதை நம்பி அவர்களும் மாப்பிள்ளையை முடிவு செய்யும் முயற்சியில் இறங்குகிறார்கள். இந்த மாப்பிள்ளை விவகாரம் வெடிக்குமா என்பது கதையின் முக்கிய திருப்பமாக இருக்கும்.

டெய்லராக இருக்கும் கோபியின் கடைக்கு வேலை விஷயமாக வந்து அவரோடு நன்கு பழக்கமாகி விடுகிறார், பெண் என்ஜினியரான மலர். இந்த நட்பு நாளடைவில் மலருக்கு கோபி மீது ஒருவித பிரியத்தைக் கொண்டு வருகிறது.

இன்னொரு பக்கம் கோபியின் மாமா மகள் மகாவுக்கு கோபியைத் திருமணம் செய்யும் ஆசை வெறியாக இருக்கிறது. அதே சமயம் கோபியின் தம்பி பாண்டியோ மகாவை கண்மூடித்தனமாகக் காதலிக்கிறான்.

இந்தப் பயணத்தில் மலர், கோபியின் மீது காட்டும் பிரியம் காதலாக மாறுமா... மகாவின் எண்ணம் ஈடேறுமா... முரட்டுத்தனமாகக் காதலிக்கும் பாண்டி மகாவை விட்டுக் கொடுப்பானா... இதனால், கோபிக்கும் பாண்டிக்கும் நடுவில் இருக்கும் பிரியம் என்னாகும்?

பெரியவர்களின் தலைமுறையில் ராசப்பா இருப்பது போல் இந்தத் தலைமுறையில் மனநிலை பாதிக்கப்பட்டு நிற்கப்போவது யார்...? கோபியா, பாண்டியா?

இதுபோன்ற பல கேள்விகளுக்கு அடுத்து வரும் எபிசோடுகளில் பதில் கிடைக்கும்.

`அடாவடியான மாமியார்... கொடுமைக்காரக் கணவன், அழுது வடியும் மருமகள் என்று வழக்கமான பாணியில் இல்லாமல் புதுமாதிரியாக இருக்கிறது என்ற மக்களின் வார்த்தைகள்தான் எங்களுடைய வெற்றி' என்று பெருமிதம் பொங்கச் சொல்கிறார், `நாதஸ்வரம்' இயக்குனர் திருமுருகன்.

[html:68c5d3be1a]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20100619/TV_nathas1%20copy.jpg</div>[/html:68c5d3be1a]

நன்றி: தினதந்தி

aanaa
7th July 2010, 05:43 PM
விரைவில் ஜெயா டி.வி.,யில் மந்திரம் ஒரு தந்திரம்
Magic show will coming soon on Jaya Tv
ஞாயிற்றுக்கிழமைகளில் புத்தம் புது நிகழ்ச்சிகளைக் களம் இறக்க திட்டமிட்டுள்ளது ஜெயா டி.வி. மற்ற தொலைக்காட்சி குழுமங்களைப் போல் குழந்தைகளை கவரும் தனி சேனல் ஜெயா டி.வி.யில் இல்லாததால், தொடர்ந்து குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளை அதிகளவில் களம் இறக்கும் முடிவிற்கு ஜெயா டி.வி., வந்துள்ளது. இதன் தொடக்கமாக "மந்திரம் ஒரு தந்திரம்' என்ற பெயரில் மேஜிக் நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்புகிறது. ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் பிரபல மேஜிக் நிபுணர் தயா பங்கேற்கிறார்.

நன்றி: தினமலர்

aanaa
15th July 2010, 03:25 AM
[tscii:6ae79f7f64]
Vandhalae Magarasi:Jaya TV, Monday to Friday, 8 p.m.

The plot of ‘Vandhalae Magarasi' revolves round the marriage of Sravanan and Meena that happens under extraordinary circumstances. Saravanan has no soft corner for his wife, who is hailed by the rest of the family as a lucky girl. Just as Saravanan wonders whether he is doing the right thing by spurning Meena, lands a girl calling herself his lover. Watch the drama unfold…


Nila

(Kalaignar TV, Mondays, 6 p.m.)

The new soap centres on a young couple forced to tie the knot for various reasons. The cast includes Deepak, Sreeja, Akila, Jayamani, Sopnam, Ranjani and Venkatesh.[/tscii:6ae79f7f64]

aanaa
25th July 2010, 06:38 PM
வினோதினியின் சொல்லத் துடிக்குது மனசு
Solla thudikkuthu manasu in Zee Tamil TV
தமிழில் ஒளிபரப்பாகும் பல தொலைக்காட்சிகள் பல புதுமையான நிகழ்ச்சிகளை வழங்கி தங்களது நேயர்களை திருப்திபடுத்தி வருகின்றன. அந்த வரிசையில் ஜி தமிழ் தொலைக்காட்சி தன் பங்குக்கு வித்தியாசமான, சுவாரஸ்யாமன நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது. பல உண்மைக் கதைகளை அதில் சம்பந்தப்பட்டவர்களே விவரிக்கும் ஒரு நெகிழ்ச்சியூட்டும் நிகழ்ச்சி, சொல்லத் துடிக்குது மனசு. நம்மைச் சுற்றி அன்றாடம் நடக்கின்ற மனித உறவு சிக்கல்கள், சமுதாய நிகழ்வுகள் ஆகியவை இந்த நிகழ்ச்சியில் உணர்ச்சிபூர்வமாக வெளிப்படும்.பல மேடை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற வினோதினி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சியை காணலாம்.
நன்றி: தினமலர்

aanaa
25th July 2010, 06:43 PM
தாசி வேடத்தில் நடிக்கும் மதுபாலா

ஜெயா டிவியில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் சவுந்தரவல்லி தொடரில் `ரோஜா புகழ்' நடிகை மதுபாலா நடிக்கிறார். இந்த தொடரை பிரபு நேபால் இயக்குகிறார்.

இந்த தொடரில் மதுபாலாவுக்கு தாசிகுலப் பெண் வேடம். இதுவரை சின்னத்திரையை தவிர்த்து வந்த மதுபாலா, சவுந்தரவல்லி கதையைக் கேட்டதும் உடனே நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்த வகையில் இவர் சின்னத்திரையில் நடிக்கும் முதல் தொடரும் இதுவே.

மதுபாலாவுடன் நடிகை சுதா சந்திரன் அகிலாண்டேஸ்வரி என்ற முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். நடிகை மகேஸ்வரி இன்னொரு பிரதான கேரக்டரில் வருகிறார்.

தாசி குடும்பத்துக்கும் அய்யர் குடும்பத்துக்கும் இடையில் நடக்கும் சவால்கள், குடும்ப பிரச்சினைகள் தான் கதைக்களம். கதையை மேனகா எழுத, திரைக்கதையை தேவிபாலா கவனிக்கிறார். வசனம்: ஜி.கே.-ராதாகிருஷ்ணன். இயக்கம்: பிரபு நேபால். தயாரிப்பு: ஜெகார்ப் டெலிபிலிம்ஸ்.

தொடருக்கான படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெறுகிறது.


நன்றி: தினதந்தி


[html:1d47c30341]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20100724/TVMadhubala.jpg </div>[/html:1d47c30341]

aanaa
25th July 2010, 06:46 PM
`பெண்ணே நீ' நிகழ்ச்சியில் காயத்ரி ரகுராம்

பெண் சாதனையாளர்களை சந்தித்து அவர்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் சாதனைப் பெண் பகுதியையும், பிரபலமான பெண்கள் தாங்கள் பொக்கிஷமாக வைத்து பாதுகாக்கும் பொருட்களுக்கு பின்னாலும் ஈரமான நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் பகுதியான பெட்டகம் பகுதியையும் கொண்டது `பெண்ணே நீ' நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி மக்கள் தொலைக்காட்சியில் சனிக்கிழமைதோறும் பிற்பகல் 3.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

சாதனைப் பெண் பகுதியில் இந்த வாரம் தன் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் சாதனையாளர் மருத்துவர் ஷாலினி. மனநல மருத்துவரான இவர், சிக்கலான மனநலம் சார்ந்த பிரச்சினைகளுக்கான தீர்வை தர வல்லவர். வெளியே தெரிந்தால் மானம் போய்விடும் என்ற பயத்தில் பல விஷயங்களை தங்களுக்குள்ளேயே போட்டு மறைத்து வைத்த பெண்கள் அந்த பிரச்சினைகளை வெளியே சொல்லும் அளவுக்கு துணிச்சலை உருவாக்கியதில் மருத்துவர் ஷாலினிக்கு பெரும்பங்குண்டு. தான் சந்தித்த சவாலான பல பிரச்சினைகளைப் பற்றியும் அதற்கான தீர்வுகளையும் இந்தப் பகுதியில் ஷாலினி பகிர்ந்துள்ளார்.

`பெட்டகம்' பகுதியில் நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம், தான் போற்றி பாதுகாத்து வரும் பல பொருட்களைப் பற்றிய இனிமையான நினைவுகளை நிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்கிறார்.

பொம்மை பிரியையான காயத்ரி ரகுராம் பல வித்தியாசமான பொம்மைகளை சேகரித்து வைத்துள்ளார். ஒவ்வொரு பொம்மையும் ஒவ்வொரு பிரபலம் கொடுத்தது. நடிகர் ஜெய்சங்கர் கொடுத்த பர்பி பொம்மையும் பார்ப்பவர்களை உடனே கவரும். அவ்வளவு அழகு.


நன்றி: தினதந்தி


[html:20937898d2]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20100724/TVGayathri.jpg </div>[/html:20937898d2]

aanaa
31st July 2010, 08:05 AM
உறவுகள்திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் மதியம் 12 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ``உறவுகள்'' தொடர், 300-வது எபிசோடை எட்டுகிறது.

உறவுகளின் கதை நாயகனான கிருஷ்ணா, தன் தங்கை கவுரியின் கணவன் பாபுவால் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருந்த விஷயம் அவர்கள் வீட்டுக்கு தெரியவருகிறது. இதனால் அனைவராலும் பாபு வெறுத்து ஒதுக்கப்பட்டான்.

கவுரியும் கணவன் பாபுவை பிரிந்து அண்ணன் கிருஷ்ணா வீட்டுக்கே வந்து விட்டாள். கிருஷ்ணா அவளுக்கு புத்திமதி சொல்லி அவளை மீண்டும் பாபுவிடம் சேர்த்து வைக்க, பாபுவோ, `இனி உங்கள் சொந்தங்கள் யாரும் கவுரியுடன் பேசக்கூடாது' என்று கிருஷ்ணாவிடம் சத்தியம் வாங்கிய பின்னரே அவளை ஏற்றுக் கொள்கிறான்.

ஆனாலும் பாபுவின் அட்டகாசம் நிற்கவில்லை. கவுரியையும் கிருஷ்ணாவையும் அவன் தற்செயலாக சந்திக்க வைத்து, இருவரும் பேசிக்கொள்கிறார்களா என்று சோதனை செய்கிறான். கவுரியும் கிருஷ்ணனும் பேசாமல் போய்விட, பாபு கவுரியின் கைகளில் சுடுபாலை ஊற்றி அவளை ஆஸ்பத்திரியில் சேர்க்கிறான். இதை கேள்விப்பட்டு என்னவென்று பாசத்துடன் கிருஷ்ணா விசாரிக்க, சத்தியத்தை எப்படி மீறலாம் என்று வம்புச்சண்டை இழுக்கிறான் பாபு. இதனால் கிருஷ்ணா செய்வதறியாது திகைக்கிறான்.

மறுபுறம் ரஞ்சனியின் கணவன் செந்தில் மனம் திருந்தி வந்திருக்க, அவனை ரஞ்சினி வெறுத்து ஒதுக்குகிறாள். செந்தில் எவ்வளவோ மன்றாடியும் ரஞ்சினி அவனை ஏறெடுத்தும் பார்க்க மறுக்கிறாள்.

இந்நிலையில் தற்செயலாய் செந்தில் தன் தங்கை சித்ராவுக்கு வாங்கி தந்த பலகாரம் அவளின் கர்ப்ப சிதைவுக்கு காரணமாக, அனைவரும் செந்திலை திட்டித் தீர்க்க, மனமொடிந்த செந்தில் மும்பை செல்ல ரயிலில் ஏறுகிறான். எதிர்பாராதவிதமாய் அந்த ரெயில் விபத்துக்குள்ளாகிறது. அதில் செந்தில் இறந்து விட, அதுவரை தன் கணவனை வெறுத்த ரஞ்சனி முதன் முதலாய் கணவனை நினைத்து அழ ஆரம்பிக்கிறாள். இனி ரஞ்சனியின் கதி?

பாபுவின் கொடுமைகளிலிருந்து கவுரி எப்போது தப்புவாள்? ரைஸ்மில்லை இழந்த கிருஷ்ணா அடுத்து என்ன தொழில் செய்து தன் குடும்பத்தை காப்பாற்றப் போகிறான்? எதிர்பார்ப்பு கேள்விகளோடு தொடர்ந்து நடை போடுகிறது ``உறவுகள்''.

உறவுகளின் 300-வது நாள் விழாவுக்கு கடிதம் மூலமும் போன் மூலமும் தங்கள் விமர்சனங்களை பகிர்ந்து கொண்டிருக்கும் நேயர்களில் பத்து பேரை தேர்ந்தெடுத்து விழாவுக்கு வரவழைக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

நட்சத்திரங்கள்: பீலிசிவம், அமரசிகாமணி, ஸ்ரீகுமார், அர்ச்சனா, ராஜ்காந்த், துர்கா, ராஜேஸ்வரி, ரேவதிசங்கர், வின்சென்ட்ராய், நித்யா, ராமச்சந்திரன், சிவகவிதா, சோனியா, பரத், சுதா, ஆர்த்தி, கல்பனா, ஜெயந்த், ஜே.லலிதா.

இசை: இமான். பாடல்: வைரமுத்து. திரைக்கதை: எஸ்.குமரேசன், வசனம்: பாலசூர்யா. ஒளிப்பதிவு: சி.தண்டபாணி. இயக்கம்: எஸ்.ஹரிபாபு,

தயாரிப்பு: சான் மீடியா.

[html:49d39971c3]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20100731/TV-01.jpg</div>[/html:49d39971c3]நன்றி: தினதந்தி

aanaa
31st July 2010, 08:06 AM
சவுந்தரவல்லி

ஜெயா டிவியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய தொடர் சவுந்தரவல்லி. நடிகைகள் மதுபாலா, மகேஸ்வரி, சுதா சந்திரன் முக்கிய கேரக்டர்களில் நடிக்கும் இந்த தொடரில் மூன்று பேருமே ஒருவருக்கொருவர் முறைத்துக் கொள்ளும் கேரக்டர்களில் வருகிறார்கள்.

சுதா சந்திரன் செல்வாக்கு மிக்க மடிசார் மாமி அகிலாண்டேஸ்வரியாக வர, அவருடன் நேருக்கு நேர்மோதும் அய்யர் வீட்டுப் பெண் மகாலட்சுமியாக மகேஸ்வரி வருகிறார்.

தாசிகுலப் பெண் சவுந்தரவல்லியாக மதுபாலா வருகிறார்.

ஊரின் செல்வாக்கு மிக்க மடிசார் மாமி அகிலாண்டேஸ்வரி கூட்டுக்குடும்பத்தை நேசிப்பவள். சிறுவயதில் இருந்தே தன்தம்பி சரபேஸ்வரனை பாசத்துடன் வளர்ப்பவள். தம்பிக்கு தைலா என்ற பெண்ணுடன் திருமணமாகி 2 பையன் கள், ஒரு பெண் பிறக்கிறார்கள்.

அகிலாண்டேஸ்வரிக்கும் ஒரு பெண் இருக்கிறாள். அவளுக்கு வீட்டோடு இருக்கும் மாப்பிள்ளையாக பார்த்து திருமணம் செய்து வைக்கிறாள்.

இவர்கள் வீட்டுக்கு எதிர்வீட்டில் இருக்கும் குருக்களின் பெண்தான் மகாலட்சுமி. தவறை எங்கு கண்டாலும் தட்டிக் கேட்கும் இந்த மகாலட்சுமி, ஒருமுறை அகிலாண்டேஸ்வரியிடமே ஒரு பிரச்சினையில் மோதுகிறாள். இந்த மோதலுக்கு நடுவே அதே குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவனுடன் மகாவுக்கு காதல் உண்டாகிறது. இந்த காதல் பிரச்சினை அகிலாண்டேஸ்வரியின் காதுக்கு வந்தபோது அவள் அதை எப்படி எதிர் கொண்டாள்?

அந்த ஊரில் இருக்கும் தாசிகுலப்பெண் சவுந்தரவல்லிக்குள் ஒரு சஸ்பென்ஸ் இருக்கிறது. அவள் பழிவாங்கும் உணர்வுடன் இருக்கிறாள். ஊருக்கே பயப்படாத அகிலண்டேஸ்வரிக்கு சவுந்தரவல்லியிடம் மட்டும் உள்ளூர ஒரு பயம் நீடிக்கிறது. பயத்துக்கான பின்னணி தெரியவரும்போது பூகம்பமே வெடிக்கும்.

தொடரின் மற்ற நட்சத்திரங்கள்: அஜய்ரத்னம், அஞ்சு, ஜெயலட்சுமி, ராஜ்குமார், மனோகர்.

மேனகா எழுதிய கதைக்கு திரைக்கதை தேவிபாலா. வசனம்: ஜி.கே.ராதாகிருஷ்ணன். தயாரிப்பு: ஜெகார்ப் டெலிபிலிம்ஸ். இயக்கம்: பிரபுநேபால்.


நன்றி: தினதந்தி

aanaa
31st July 2010, 08:08 AM
செல்லமே
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் `செல்லமே'.

பெண்கள் விடுதியில் தங்கி இருந்த அமுதாவை வீட்டுக்கு அழைத்து வருகிறாள் செல்லம்மா. மேலும் தனது அப்பா ஆவுடையப்பனிடம் அண்ணன் கடற்கரையாண்டி சினேகாவிடம் சிக்கிக் கொண்டிருக்கும் விஷயத்தை கூறுகிறாள் செல்லம்மா.

அதைக் கேட்டு ஆத்திரம் அடைந்த ஆவுடையப்பன், கடற்கரையாண்டியை கண்டிக்கிறார்.அவனோ பதிலுக்கு தன் அப்பா ஆவுடையப்பனையே அறைந்து விடுகிறான்.

வெறுத்துப்போன ஆவுடையப்பன் முதியோர் இல்லம் சென்று விடுகிறார். அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் கடற் கரைக்கும் அவனது தம்பிகளுக்கும் சொத்து பிரச்சினை எழுகிறது. தகவல் ஆவுடையப்பனுக்குப் போய்ச்சேர, அவர் எல்லா சொத்தையும் செல்லம்மாவின் பேருக்கு எழுதி வைக்க விரும்புகிறார். ஆனால் செல்லம்மா சொத்து முழுவதையும் உடன் பிறந்தவர்களுக்கு விட்டுக்கொடுத்து விடுகிறாள். சொத்துக்கள் கைக்கு வந்ததும் தம்பிகள் குடும்பமே சிதறிப்போகிறது. இதை அறிந்த செல்லம்மா துடித்துப்போகிறாள்.

செல்லம்மாவாக ராதிகா நடிக்கிறார். விக்ரமாதித்தன் இயக்குகிறார். தயாரிப்பு: ரடான் நிறுவனம்.


நன்றி: தினதந்தி

aanaa
31st July 2010, 08:10 AM
மகான்

இந்த பூமியில் நிகழும் ஒவ்வொரு பிறப்புக்கும் பின்னால் ஒரு உதாரணம் இருக்கிறது; அந்த காரணம் சிலரால் மட்டுமே உணரமுடிகிறது. அதை உணர்ந்து கடவுளின் தூதுவனாக, கடவுளின் பெருமைகளை மட்டுமே உலக மக்களுக்கு எடுத்துரைக்கும் புனிதர்களான மனிதர்களின் கதையை ``மகான்'' எனும் பெயரில் தொடராக ஒளிபரப்ப இருக்கிறது, விஜய் டிவி.

மகான் எனும் தலைப்பில், ஸ்ரீராகவேந்திரர், ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர், காஞ்சி பரமாச்சாரியார், ஸ்ரீ ரமண மஹரிஷி, ஆதிசங் கரர், வள்ளலார், அன்னை வேளாங்கண்ணி, நாகூர் பாபா ஆகிய குருமார்களின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் இந்த புதிய தொடர், இவர்கள் மக்களுக்கு செய்த சேவைகள், ஏன் இவர்களை நாம் இன்று வரை பூஜித்து வருகிறோம் என்பது போன்ற கேள்விகளுக்கும் ஒரு பதிலாகவே அமையும்.

முதல் மகானாக வேங்கன பட்டா எனும் பெயரோடு 16-ம் நூற்றாண்டில் பிறந்த ஸ்ரீராகவேந்திரர் இடம் பெறுகிறார்.

திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது இந்த நிகழ்ச்சி.


நன்றி: தினதந்தி

aanaa
31st July 2010, 08:10 AM
மூன்று முகம்

பாலிமர் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு இடம் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடர் மூன்று முகம்.

திலகவதியின் கணவர் மிகப்பெரிய டாக்டர். ஆனந்தும் திலகவதியும் மிகச்சிறந்த நண்பர்கள். விதி வசத்தால் ஆனந்த் உயிரிழக்க அவனது மனைவி ஸ்டெல்லாவை கைது செய்கிறது காவல்துறை. வயிற்றில் குழந்தையுடன் தன்னுடைய ஒன்றரை வயது பிள்ளையை விட்டுவிட்டு ஸ்டெல்லா சிறை செல்கிறாள்.

இறந்துபோன தன் நண்பனின் குழந்தையை படிக்க வைத்து ஆளாக்க நினைக்கிறாள் திலகவதி. சிறையில் ஸ்டெல்லா பெற்றெடுத்த பெண் பெரியவளாகி தன் தந்தையைக் கொன்று தாயை இந்த நிலைக்கு ஆளாக்கிய திலகவதியை பழிவாங்க துடிக்கிறாள். வெல்லவப்போது திலகவதியா? ஸ்டெல்லாவா? என்ற கேள்வியோடு பயணிக்கிறது மூன்றுமுகம்.

கிரிஸ்டல் எண்டெர்டெயின்மெண்ட் சார்பாக ஜி.வேங்குடபதி தயாரிக்க, அனுராதா கிருஷ்ணமூர்த்தி, நீபா, மகாலட்சுமி, அழகு நடிக்கிறார்கள். ஆர்.பவன் இயக்குகிறார்


நன்றி: தினதந்தி

aanaa
9th August 2010, 01:24 AM
யாமிருக்க பயமேன்

விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் `யாமிருக்க பயமேன்' தொடர், விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது.

பழனி மலைப்பகுதியில் மறைந்துள்ள முருகனின் இரண்டாவது சிலையை காலம் காலமாய் பல குழுக்கள் தேடி இறுதியில் தோல்வியையே சந்தித்துள்ளன. பல தலைமுறைகளாக தொடரும் இந்த தேடல் போராட்டத்தில் தற்போது தீவிர முயற்சியில் இருப்பவர்கள் பழனி நகரத்தில் வசிக்கும் இந்திராணி மற்றும் பழனி மலைப்பகுதியில் வாழும் தினைக்காத்தான் குடும்பத்தினர்.

இரண்டு குடும்பங்களுமே இரண்டாவது முருகன் சிலை தங்கள் பரம்பரைக்கு சேரவேண்டிய குலச்சொத்து எனக் கருதுவதால், அதைக் கைப்பற்றும் முயற்சியில் தீவிரம் காட்டுகின்றனர்.

இவர்களைத் தவிர, இந்த முருகன் சிலையை கைப்பற்றி கோடிக்கணக்கில் பணம் பார்க்கவும் ஒரு கூட்டம் திரிகிறது.

முருகன் சிலையை நிறுவிய போகர், சித்தர் குகன் உடலில் புகுந்து கொண்டு பல சித்து வேலைகளை செய்கிறார். தீராத நோயில் இருக்கும் சிறுவன் ஒருவனை டாக்டர்கள் கைவிட்ட நிலையில் போகர் குணப்படுத்த முயற்சிக்கிறார்.

இதற்கிடையே நீலாஞ்சன் கல் யாருக்கு கிடைக்கிறதோ, அவரே இரண்டாவது முருகன் சிலை மறைந்திருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியும் என்பதால், இந்திராணி, தினைக்காத்தான் குடும்பத்தார் அதை தேடும் முயற்சியில் தீவிரமாகிறார்கள்.

முடிவில் யாருக்கு நீலாஞ்சன் கல் கிடைக்கிறது? தீராதநோயால் உயிருக்குப் போராடிய சிறுவனை போகர் காப்பாற்றினாரா? கேள்விகளுக்கு வரும் வாரங்களில் விடை கிடைக்கும்.


நன்றி: தினதந்தி

aanaa
9th August 2010, 01:25 AM
அமுதகானம்-1000

மனதை கவரும் பழைய தமிழ்த் திரையிசைப் பாடல்களின் தொகுப்பாக மெகா டிவியில் `அமுதகானம்' என்ற நிகழ்ச்சி தினமும் காலை 8 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. பாடல்களின் இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குனர், நடிகர்கள், படம் வெளியான வருடம், பாடல்கள் உருவான சுவாரசியமான தகவல்களை திரைப்பட இயக்குனர் ஆதவன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி இது.

தற்போது ஆயிரம் எபிசோடுகளை தொட்டுள்ள இந்த நிகழ்ச்சியின் வெற்றி விழா சென்னை காமராஜர் அரங்கில் கடந்த வாரம் நடைபெற்றது. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இசை நிகழ்ச்சியும் நடத்தினார்.

அமுதகானம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இயக்குனர் ஆதவன் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வி.தங்கபாலு விருதுகள் வழங்கி கவுரவித்தார். மெகா டி.வி. நிர்வாக இயக்குனர் ஜெயந்தி தங்கபாலு வரவேற்புரை ஆற்றினார்.

விழாவில் படஅதிபர் ஏவி.எம்.சரவணன், இயக்குனர்கள் சி.வி.ராஜேந்திரன், எஸ்.பி. முத்துராமன், பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தர்ராஜன், பாடகிகள் பி.சுசீலா, எம்.எஸ். ராஜேஸ்வரி, கவிஞர்கள் காமகோடியன், முத்துலிங்கம், புலவர் புலமைப்பித்தன், பூவை செங்குட்டுவன் மற்றும் ஏ.எல்.எஸ்.ஜெயந்தி கண்ணப்பன்,திண்டுக்கல் லியோனி, நடிகைகள் சச்சு, சி.ஐ.டி. சகுந்தலா, ராஜஸ்ரீ உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த இசை நிகழ்ச்சி மெகா டிவியில் விரைவில் ஒளிபரப்பாகிறது


நன்றி: தினதந்தி

aanaa
9th August 2010, 01:26 AM
பாடவா உன் பாடலை

ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் `பாடவா உன் பாடலை' இசை நிகழ்ச்சி அரை இறுதிச்சுற்றை எட்டியுள்ளது. சுமார் 600 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் பல்வேறு தேர்வுச்சுற்றுகளில் வடிகட்டப்பட்டு இப்போது அரையிறுதிச் சுற்றுக்கு 23 பேர் வந்திருக்கிறார்கள்.

இந்த சுற்றில் டி.எம்.சவுந்தர்ராஜன், கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன், பி.சுசிலா, எஸ்.ஜானகி, எல்.ஆர்.ஈஸ்வரி, வாணிஜெயராம் போன்ற பிரபல பின்னணி பாடகர்கள் குரல்களில் அமைந்த பாடல்களை போட்டியாளர்கள் பாடப்போகிறார்கள்.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன், தீபன் சக்கரவர்த்தி, பின்னணி பாடகி மதுமிதா பங்கேற்கிறார்கள்.

அரை இறுதிச் சுற்று வருகிற செவ்வாய் மற்றும் 16-ந் தேதி திங்களன்று இரவு 9 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.

நிகழ்ச்சியை பின்னணி பாடகர் யுகேந்திரன் தொகுத்து வழங்க, பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் நடுவர்.


நன்றி: தினதந்தி

aanaa
9th August 2010, 01:36 AM
ரவிக்கை அணிய மறுக்கும் பெண்கள்காலங்கள் எவ்வளவோ மாறிவிட்டாலும் இன்னமும் பழமை மாறாத நம்பிக்கைகளில் ஊறித்திளைத்த கிராமங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அந்த வகையில், இன்றைய நவநாகரீக காலத்திலும் ரவிக்கை அணிய மறுக்கும் பெண்களும் இருக்கிறார்கள்.

`பொம்மக்காள் போட்ட உத்தரவுப்படி நாங்கள் ரவிக்கை அணியமாட்டோம்' என பல கிராமங்களைச் சேர்ந்த இளம் பெண்கள் காலம்காலமாக ரவிக்கை போடாமல் இருக்கிறார்கள். மீறி அணிந்தால், தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அவர்கள்
பயப்படுகிறார்கள்.

ஒரு மாறுபட்ட பயணமாக இவர்களை படம்பிடித்துக் காட்டுகிறது, இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் மக்கள் தொலைக்காட்சியின் `உண்மை' நிகழ்ச்சி.


நன்றி: தினதந்தி

aanaa
9th August 2010, 01:38 AM
"விஸ்வாஸ்' சுந்தர் தயாரிக்கும் மெகா தொடர் "வந்தாளே மகராசி'. இத்தொடரில் சொர்ணமால்யா, ஐஸ்வர்யா, இளவரசன், ஸ்ரீலதா, லதா ராமன், சண்முக சுந்தரம் மற்றும் பலர் நடிக்கின்றனர். இதன் கதை, திரைக்கதையை எழுதி, இயக்குகிறார் ஆர்.செல்வபாண்டியன். வசனத்தை ஜினாவும், ஒளிப்பதிவை எஸ்.ராஜீவா ஆல்வினும் மேற்கொள்கிறார்கள்.

சென்னையின் பிரபலமான வக்கீல் வசுந்தரா, தன்னுடைய வக்கீல் தொழிலில் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டுமென்ற லட்சியத்துடன் வாழும்போது, எதிர்பாராத விதமாக தன் கணவனையே கொலை செய்யும் சூழல் அவளுக்கு உருவாகிறது. இதனை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் "சுடர்' பத்திரிகையில் தன் வாழ்க்கை வரலாறை எழுதுகிறாள். அப்படி அவள் தொடராக எழுதும்போது தன் கணவனை கொலை செய்வதற்கான காரணம் என்ன என்பது மக்களுக்கு தெரிய வருகிறது? அதன்பின் அவளுடைய வாழ்க்கை என்னவானது? என்பதையே நெடுந்தொடராக இயக்கி வருகிறார் இயக்குநர் ஆர். செல்வபாண்டியன்.

இந்த மெகா தொடரில் பத்திரிகையாளராக சொர்ணமால்யாவும், வக்கீலாக ஐஸ்வர்யாவும் பாத்திரமேற்கிறார்கள். இத்தொடர் திங்கள் முதல் வியாழன் வரை இரவு எட்டு மணிக்கு ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.நன்றி: தினமணி

kugan98
14th August 2010, 03:06 PM
Aanaa, please mekondu Uravugal kathaiyai sollungguoh.
It was very interesting till your point.

Aanaa you are doing a great job.
Thanks, Kugan98

aanaa
14th August 2010, 10:15 PM
thanks for dropping in here ""kugan98""

ilayapuyalvinodh_kumar
26th August 2010, 10:04 PM
There's a new Program on Vaali Sir in Podhigai titled -- VAALIBA VAALI -- that will be aired every Thursday at 9 pm till 9.30 pm ... He shares interesting experiences of his journey in Film Industry & working with several generation of actors !

The first episode was aired today. Excuse me for not mentioning it earlier... I just now saw this section in our Hub. Don't miss it :wink:


Program - Vaaliba Vaali
Channel - Doordarshan Podhigai
Timings - Thursday, 9.00 - 9.30 pm

Regards,
Vinodh !

aanaa
28th August 2010, 06:44 PM
[tscii:48ed09225e]

Moondru Mugam
(Polimer TV, weekdays, 9.30 p.m.)

Directed by R. Pavan, the story revolves around the life of Anand, who dies in an accident, and his daughter who avenges his death.

Tilakavathi and Anand are best friends and their friendship flourishes even after they get married (to different people). Things get chaotic after Anand's death in an accident. Police suspect his pregnant wife, Stella, and takes her into custody. She leaves behind her one-year-old child who grows up under Tilakavathi's care.

The daughter who is born in prison, grows up to avenge her father's death and sets out to settle scores with Tilakavathi, who, she believes, is the cause of the tragedy. Does she succeed in her attempt? Produced by G. Venkutapathy, the cast includes Anuradha Krishnamurthy, Mahalakshmi and Azhagu.

.

Aalayam

Aalayam Makkal TV, Sunday, 6.03 a.m.

In this week's episode, worship Lord Muruga at Paththumalai, Malaysia. The 140-ft high idol is the world's tallest. The hill temple is also called ‘Venkundram' and ‘Swethagiri' because of its white colour.


[html:48ed09225e]<div align="center">http://www.hindu.com/cp/2010/08/20/images/2010082050341802.jpg </div>[/html:48ed09225e]


Game show for couple

Here is a chance, for the most compatible couple to win Rs. 5 lakh through a new game show ‘Un Vaasam En Naesam', to be aired on Jaya TV. Interviews for the show are being held at many places around Tamil Nadu.

This week's selection round will be held at R.V. Hotel, Bharatiyar Road, (near Gandhipuram Bus Stand), Coimbatore, on August 21, 8 a.m. Those who have completed 10 years of married life are eligible to participate.Modhi Paarkalam

(Vijay TV, Monday-Friday, 6 p.m.)

And now, a culinary battle on television… Two teams of celebrity cooks will face each other in this challenge. Actors Ilavarasan and Shiva, playback singer Velumani and actor Balaji form the men's team, with chef Dhamu as their guide.

Actors Kutty Pooja, Dr. Sharmila, Viji and playback singer Chinna Ponnu form the women's team, with actor Revathi Sankkaran donning the role of advisor. Every episode will feature a culinary crusade and each team has to choose a knight, find the recipe and cook the dish, all within a stipulated time. Kalyani and RJ Ajay are the hosts.

Titles such as ‘The Best Team Men / Women' and ‘The Most Promising Cook' await the participants, besides special prizes. The kitchen battle begins on August 23.

நன்றி: Hindu [/tscii:48ed09225e]

aanaa
11th September 2010, 06:14 AM
[tscii:efbdefe11f]
Universal Hero Kamal:Jaya TV, Saturday, 9 a.m.
(Jaya TV, Saturday, 9 a.m.)
Kamal Haasan was recently honoured in Kerala for his completion of 50 years as an actor.
Jaya TV will telecast the programme on September 11 (tomorrow) as part of its special shows for Vinayakar Chathurti. An interview with Kamal, in which he dwells on his cinema debut as a child, present day films, his dream project ‘Marudhanayagam' and his contemporaries in the industry, is also on the cards. The segment includes important film personalities offering their best wishes to the actor.[font=Courier, monospace]Ramzan special
Makkal TV airs an array of special programmes in connection with Ramzan on September 10 from 6 a.m. to 9 p.m. The day starts with ‘Pirai Isai,' at 6 a.m. ‘Nonbum Maanbum,' explains the special aspects of celebrating Ramzan, at 6.30 a.m. followed by the regular ‘Breakfast Show,' at 7 a.m.
A meet-up with Thoppil Mohammed Meeran in ‘Sannalukku Veliyae,' at 8.30 a.m. ‘Azhagiya Adhisayam,' a programme that discusses the extraordinary features about Taj Mahal, will be aired at 11.30 a.m. A comedy play, a literary programme, music programme by Khayal Mohammed Sameen and more are on the agenda.[font=Courier, monospace]New serials

Vijay TV launched two serials – ‘Meera' and ‘En Peyar Meenakshi' – this past week.

Meera: (Monday to Friday, 8 p.m.) Meera is the tale of a soft-spoken woman hailing from an orthodox Brahmin family. She works as a nurse in a hospital.
One day, while returning home she finds a baby; its mother's whereabouts are not known.
She takes the baby home but circumstances make her leave home. In a new city, Meera dons the role of a mother. Will she find love? Will the mother of the abandoned child return?
The role of Meera is played by Srija.
The serial is directed and produced by Kavita Bharathi. Hari Krishna has scored the music.

En Peyar Meenakshi: (Monday to Friday, 8.30 p.m.) Meenakshi is all excited about her forthcoming wedding and so is her school teacher father. On the wedding day, the groom is kidnapped. Sakthi, one of Meenakshi's father's students, comes to the rescue and is forced to marry her. Meenakshi is played by Harsha. Veteran actor Delhi Kumar plays Meenakshi's father and Siddharth is Sakthi. The story is written, directed and produced by C. Jerrold.
நன்றி: Hindu [/tscii:efbdefe11f]

aanaa
22nd September 2010, 06:55 PM
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒளிந்து கொண்டிருக்கும் அசாத்திய திறமைகளை வெளிப்படுத்த ஒரு சரியான களத்தினை ஏற்படுத்தித் தருகிறது, `தமிழகத்தின் சாம்பியன்ஸ்' நிகழ்ச்சி.

யோகா செய்து கொண்டே தன்னுடைய சட்டை, பனியனை மாட்டும் சிறுவன் ஜெய்கணேஷ், கண்ணைக் கட்டியபடி தலைகீழாக தொங்கிக்கொண்டு பற்களால் ஒருவரை தூக்கும் ஆனந்த், 300 கிளிப்புகளை மூக்கில் கட்டி, வாய் வழியாக எடுக்கும் முரளி, கண்ணைக் கட்டிக்கொண்டே வாழைக்காயை வேகமாக வெட்டும் பார்த்தசாரதி, தன்னுடைய கழுத்தில் பைக்கை ஏற்றும் ரஜினி ஆகியோரின் மயிர்க்கூச்செரியும் சாகசங்கள் இடம் பெறுகின்றன.

பிரம்மாண்டமான புதிய அரங்கத்தில் நடிகர் ஆதி, நடிகை பூர்ணா நடுவர்களாக பங்குபெறும் இந்த நிகழ்ச்சி, ஞாயிறுதோறும் இரவு 8 மணிக்கு பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.நன்றி: தினதந்தி

aanaa
22nd September 2010, 06:59 PM
தமிழ் சினிமா
ஞாயிறு தோறும் பிற்பகல் இரண்டு மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி `தமிழ் சினிமா இந்த வாரம்'.

வெளிவரும் புதிய திரைப்படங்களைப் பற்றிய இந்த நிகழ்ச்சி, வெறும் சினிமா விமர்சனமாக மட்டுமின்றி, அத்திரைப்பட இயக்குனர் முதல் கலைஞர்கள் வரை கலந்து கொள்ளும் சுவையான கலந்துரையாடல் நிகழ்ச்சியும் கூட.

புதிய திரைப்படங்களின் இயக்குனர், இசையமைப்பாளர், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டு, படப்பிடிப்பின்போது நடந்த சுவையான சம்பவங்களை பகிர்ந்து கொள்கின்றனர்.

படம் ரசிகர்களுக்கு திரையிட்டுக் காட்டப்படும். குறை நிறைகளை ரசிகர்கள் சொல்லும்போது, அதற்கான பதில்களை நேரடியாக இயக்குனரே அளிப்பார். நடிகர்கள் பற்றிய விமர்சனங்களுக்கு நடிகர்கள் பதில் அளிப்பர்.

இன்றைய நிகழ்ச்சியில் `பாஸ் என்ற பாஸ்கரன்' திரைப்படத்தை பற்றி விவாதிக்கிறார்கள்.

இதில் நடிகர்கள் ஆர்யா, சந்தானம், இயக்குனர் ராஜேஷ் கலந்து கொள்கிறார்கள்.
நன்றி: தினதந்தி

aanaa
22nd September 2010, 07:00 PM
ஒரு ஏழைச் சிறுமியின் ஆசைகளையும், உணர்வுகளையும் அவளது வாழ்க்கைப் போராட்டங்களையும் மையமாகக் கொண்டது `சிந்து பைரவி' தொடர். ராஜ் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது, இந்த தொடர்.நன்றி: தினதந்தி

aanaa
22nd September 2010, 07:01 PM
மீண்டும் `மண் மணம்'

தமிழர்களின் கலை மற்றும் பண்பாட்டு பதிவுகளை சுவைபட பதிவு செய்து தரும் நிகழ்ச்சி, மண்மணம். ஏற்கனவே மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மண்மணம் மீண்டும் புதுப்பொலிவுடன் ஒளிபரப்பாக உள்ளது.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நால்வகை நிலமும், நிலம் சார்ந்த வாழ்க்கையும் தமிழர்களுக்கு உரியது. ஒவ்வொரு நிலத்தில் வாழும் மக்களின் தொழிலும் வேறுவேறானவை. அவர்களின் கலைகளும் தொழில் சார்ந்ததாக இருக்கிறது. அப்படி தொழில் அடிப்படையில் பிறந்தது தான் மருத நிலத்து கும்மியும், நெய்தல் நிலத்து களியலும், முல்லை நிலத்து கரகமும்.

மண்மணம் நிகழ்ச்சியில் மண்ணின் கலைகளை பதிவு செய்வதோடு, அந்த பகுதியில் உள்ள மக்களின் வாழ்வு முறையையும் எதார்த்தம் மாறாமல் பதிவு செய்வது சிறப்பான ஒன்றாகும். அது மட்டுமல்லாமல் அவர்களின் தொழில் சார்ந்த விளையாட்டு போட்டிகளை நடத்தி பரிசும் தருவது கூடுதல் சிறப்பாகும்.

உதாரணத்துக்கு நெய்தல் நில ஆடவரிடம் நீருக்குள் அதிக நேரம் மூழ்கியிருக்கும் போட்டி, நீச்சல் போட்டி என்றும், முல்லை நிலத்தவரிடம் மாட்டு வண்டி போட்டியும், மருத நிலத்தினரிடம் கதிர் அறுக்கும் போட்டியும் என விதவிதமான போட்டி வைத்து வென்றவருக்கு பரிசும் தரப்படும். இந்த `மண் மணம்' நிகழ்ச்சியில் தமிழர்களின் வாழ்க்கை, கலைகள், விளையாட்டு என அனைத்தையும் காணலாம். ஞாயிறு தோறும் பகல் 2 மணிக்கு இந்த நிகழ்ச்சியை காணலாம்.நன்றி: தினதந்தி

aanaa
22nd September 2010, 07:02 PM
எல்லாம் சினிமா

ஜீ தமிழில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு வித்தியாசமான 5 சினிமா நிகழ்ச்சிகள் இடம் பெறுகிறது.

திரை உலகில் நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகள் மற்றும் திரை விமர்சனம், திரை நட்சத்திரங்களின் பேட்டிகள், திரைப்பட வரிசை, கோடம்பாக்கத்தில் நடக்கும் கிசுகிசு என்று 5 வித்தியாசமான நிகழ்ச்சிகளை காணலாம்.

திங்கள் - ஸ்டாருடன் ஒரு சந்திப்பு

வெள்ளித்திரை நட்சத்திரங்கள் தங்கள் வாழ்க்கையில் மற்றும் திரைத்துறையில் பெற்ற புதுமையான அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி.

செவ்வாய் - தமிழ் சினிமா

புதிதாக வெளியான படங்களைப் பற்றிய திரை விமர்சனம் மற்றும் அதில் நடித்துள்ள நட்சத்திரங்களைப் பற்றிய சிறப்பு செய்திகள்.

புதன் - டூரிங் டாக்கீஸ்

புதிதாக திரைக்கு வந்த படங்களைப் பற்றிய `கவுன் டவுன்' நிகழ்ச்சி. புதிதாக வெளியான 5 படங்களில் இருந்து சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகைகளை தேர்வு செய்வது.

வியாழன் - ரீல் பெட்டி

புதிதாக திரைக்கு வர உள்ள படங்களைப் பற்றிய முன்னோட்ட நிகழ்ச்சி.

வெள்ளி - காபி காரம் கோடம்பாக்கம்.

தமிழ் சினிமாவில் நிகழும் பட பூஜைகள், இசை வெளியீட்டு விழா மற்றும் திரை நட்சத்திரங்களைப் பற்றிய கிசுகிசுக்கள் இதில் இடம் பிடிக்கும்.
நன்றி: தினதந்தி

aanaa
27th September 2010, 04:28 AM
அழகிய தமிழ் மகள்

கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் காலை 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ``அழகிய தமிழ் மகள்'' நிகழ்ச்சி, நூறு எபிசோடைத் தாண்டி தொடர்ந்து வருகிறது.

தர்மபுரியில் நடந்த 116-வது எபிசோடுக்கான படப்பிடிப்பின்போது மல்லாபுரம் என்ற ஊரில் உள்ள தேவிபாலாவைப் பற்றிய ஒரு செய்தி தெரிவிக்கப்பட்டதும், படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்த அனைவருமே அந்த பெண்ணைப் பாராட்டிய சம்பவமும் நடந்தது.

தேவிபாலா 8 வயதாக இருந்தபோது, தந்தை இறந்து போக, நிர்கதியாக நின்ற தன் தாயையும், தன் குடும்பத்தையும் காப்பாற்ற அவர் எடுத்த அதிரடி முடிவு, தன் தந்தை செய்து வந்த முடி திருத்தும் தொழிலை அவர் தொடர்ந்தது தான்.

தற்போது 22 வயதாகும் தேவிபாலா போன்றவர்களைக் கண்டுபிடித்து மக்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அளித்து வரும் இந்த நிகழ்ச்சியை, ஸ்ரீவெங்கடேஸ்வரா டெலி பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக கே.பி.முத்துக் குமார் மற்றும் ``யமஹா' பிரகாஷ் தயாரிக்கிறார்கள். நடிகை ரோகிணி தொகுத்து வழங்குகிறார்.


நன்றி: தினதந்தி

aanaa
27th September 2010, 04:31 AM
முந்தானை முடிச்சு-100


திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் `முந்தானை முடிச்சு' தொடர் நூறு பகுதிகளைக் கடந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இப்போது மிகவும் பரபரப்பான கட்டத்தை அடைந்திருக்கும் இந்த தொடரின் கதைப் பின்னணி வருமாறு:-

கந்தசாமியின் மூன்று மகன்களுக்கும் தமிழரசியின் மூன்று தங்கைகளுக்கும் ஒரே மேடையில் மூன்று திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்கு முன்னோடியாக நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்து விட்டது. இந்நிலையில் அந்த வீட்டிற்கு மருமகளாக வரத் துடிக்கும் பிரேமலதா திருமணங்களை நடத்த விடுவாளா? சிறையில் இருக்கும் சதாசிவம் என்ன செய்தான்? இருவரும் கூட்டணி போட்டு திருமணத்தை நிறுத்த ஒரு திட்டம் தீட்டுகின்றனர்.

கந்தசாமியின் மனைவி கிருஷ்ணவேணி தினமும் சாப்பிடும் மாத்திரை பாட்டிலுக்குள் சயனைடு அடைக்கப்பட்ட மாத்திரை ஒன்றை கலந்து விடுகின்றனர். கிருஷ்ணவேணி அதைத்தின்று இறந்து விட்டால் திருமணம் நின்றுவிடும் என்பது அவர்கள் திட்டம்.

இன்னொருபுறம் தாயின் சாவிற்கு போயிருந்த ஷைலஜா சென்னைக்கு திரும்பிய நேரத்தில் சரவணன் - வசந்தி திருமண அழைப்பிதழ் அவள் கண்ணில் பட்டுவிட.. சரவணனிடம் சண்டையிட்டவள், அதே முகூர்த்தத்தில் சரவணன் தன் கழுத்தில் தாலி கட்ட வேண்டும் என்று மிரட்டுகிறாள்.

தமிழை கடனாளியாக்கி நிரந்தர அடிமையாக தன் கடையிலேயே வைத்துவிட திட்டமிடும் அசோக், அதற்காக அஞ்சுவுக்கு 5 லட்சம் பணம் கடனாக தருகிறான். தமிழ் அதைக் கொண்டு தங்கைகள் மற்றும் மாப்பிள்ளைகளுக்கு நகை, சீர் செய்கிறாள்.

சயனைடு மாத்திரை கிருஷ்ணவேணியின் உயிரைப் பறித்ததா இல்லையா? திருமணம் நடந்ததா இல்லையா? ஷைலஜா நினைத்தது நடந்ததா? அனைத்தும் அறிந்த ஞானச்சித்தர் ஆறுமுகசாமி என்ன செய்தார் போன்ற கேள்விகளுக்கு தொடர்ந்து இடம்பெறும் காட்சிகளில் விடை கிடைக்கும்.

திரைக்கதை: வே.கி.அமிர்தராஜ், வசனம்: கண. நடராஜ், இயக்கம்: ஞானசீலன். தயாரிப்பு: சினிடைம்ஸ் எண்டர்டெயின்மெண்ட்சுக்காக `மெட்டிஒலி' எஸ்.சித்திக்.

[html:c13350b82f]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20100925/TV-06.jpg</div>[/html:c13350b82f]

நன்றி: தினதந்தி

aanaa
27th September 2010, 04:34 AM
[tscii:370b2006e1]
ஆதி பராசக்தி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புதிய பக்தித் தொடர் ஆதிபராசக்தி. நடிகை கே.ஆர்.விஜயா நடிக்கும் இந்தத் தொடரில் தமிழகத்தில் உள்ள சுமார் 108 அம்மன் பீடங்கள் எவ்வாறு உருவானது என்பதை காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

விஜய நகர சாம்ராஜ்யத்தில் நடந்த பல அசம்பாவிதங்களுக்கு உற்சவ மாரியம்மனின் உக்கிரம்தான் காரணம் என முடிவு செய்தனர் மக்கள். இதன் காரணமாக விஜய நகர கோவில் உற்சவ மாரியம்மனை தந்தப் பல்லக்கில் ஏற்றி வெளிïருக்கு வழியனுப்பி வைத்தனர். இதனை தூக்கி வந்த அரச காவலர்கள் சமயபுரம் வந்ததும் தந்தப்பல்லக்கை தரையிலிறக்கி பசி, தாகம் தீர்த்துக் கொண்டனர்.

மீண்டும் பல்லக்கை தூக்க முயற்சித்த போது அதை ஒரு அங்குலம் கூட நகர்த்த முடியவில்லை. எனவே உக்கிரம் தீர்க்க மாரியம்மன் விக்கிரமபுரத்தில் அதாவது தற்போது சமயபுரத்தில் வீற்றுள்ளார் என்று நினைத்தவர்கள், பல்லக்கை அப்படியே விட்டுச் சென்றார்கள். சமயபுரம் மாரியம்மன் இன்று வரை அவ்விடத்திலிருந்து அற்புதங்கள் நிகழ்த்தி வருகிறாள் என்பது நம்பிக்கை.

ஓ.ஏ.கே.சுந்தர், பிரவீனா, ஆனந்த், மோகன் வைத்தியா, டாக்டர் ஷர்மிளா, ராஜசேகர், மீரா கிருஷ்ணன், சஞ்சய், நந்து நடிக்கிறார்கள்.

தொடருக்கு இசை: சரத். பாடல்: கவிஞர் முத்துலிங்கம். பாடியவர்: சித்ரா. திரைக்கதை- உரையாடல்: கே.பி.அறிவானந்தம். இயக்கம்: ஆர்.கோபிநாத்,

வெள்ளி தோறும் பகல் 12 மணிக்கு ``ஆதி பராசக்தி'' தொடரை காணலாம்.


நன்றி: தினதந்தி [/tscii:370b2006e1]

aanaa
4th October 2010, 03:18 AM
திரும்பிப் பார்க்கிறேன்ஜெயா டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி, `திரும்பி பார்க்கிறேன்'. திரைப்படத்துறையில் நெஞ்சை விட்டு நீங்காத பல நிகழ்ச்சிகள் உள்ளன. ஒரு சில காட்சிகளாகவும், பாடல் களாகவும் ரசிகர்களைக் கவர்ந்தவை. ஆனால், அதன் பின்னணியில் அமைந்த அரிய பல ரசிக்கத்தக்க சம்பவங்களும் இருக்கின்றன. அதுமட்டுமின்றி, திரைப்படத்துறையில் தங்களது திறமைகளை நிரூபித்து வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கையும், அவர்களது பசுமையான நினைவுகளும் காட்சிப்பதிவாகிறது.

இந்த வாரம் திரைப்பட இயக்குனர், இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியருமான கங்கை அமரனின் திரையுலக நினைவுகள் ஒளிபரப்பாகிறது.

இவர் முதலில் இசையமைத்த படம் `விடுகதை ஒரு தொடர்கதை'. இவர் இயக்கிய முதல் படம் - கோழி கூவுது. தமிழ் சினிமாவில் பல்வேறு சாதனைகளை செய்த கரகாட்டக்காரன் இவரின் படைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் கங்கை அமரன் தான் கடந்து வந்த திரையுலக பயணத்தை பற்றியும், சக கலைஞர்கள் பற்றியும் பகிர்ந்து கொள்கிறார்.
நன்றி: தினதந்தி

aanaa
4th October 2010, 03:23 AM
முருகன்- வசந்தி திருமணம் நடந்ததா?


திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பகல் 12 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர் `உறவுகள்.' குடும்ப உறவுகளை சுற்றி யதார்த்தமான கதைப் பின்னலில் காட்சிகள் நகருவது இந்த தொடரின் பலம்.

உறவுகள் தொடரின் கதை நாயகனான கிருஷ்ணா படும் அவஸ்தைகள் கதையோட்டத்தில் மிகவும் இயல்பாக அமைந்துள்ளது.

தன் தங்கை கவுரிக்காக கிருஷ்ணா விட்டுக் கொடுக்க இனி எதுவும் இல்லை. இந்த நிலையில் தங்கை கவுரி, கிருஷ்ணன் குடும்பத்து மீது காரணம் இல்லாமல் கோபப்படுகிறாள். இதனால் அனைவரின் வெறுப்புக்கும் ஆளாகிறாள். அவள் ஏன் அப்படி நடந்து கொண்டாள் என்று தெரிந்து கொள்ள கிருஷ்ணன் முயற்சிக்க, அவனையும் கவுரி அவமானப்படுத்துகிறாள்.

தங்கையால் மனம் உடைந்த நிலையில் கிருஷ்ணன் இருக்கும் நேரத்தில் அவனிடம் கொடுத்த கடனை திருப்பி கேட்டு முருகேசன் வருகிறார். அவர் கிருஷ்ணாவின் மாமனார் தணிகாசலத்தின் நண்பர். அவரிடம் கிருஷ்ணா கடன் வாங்கியிருந்தான். பணம் கேட்டவரிடம் உடனடியாக அவரது பணத்தை திருப்பித் தரமுடியாத நிலையை அவன் சொல்ல, முருகேசன் அதை ஏற்கவில்லை. உடனே பணம் தந்தாக வேண்டும் என்கிறார். சாதாரண வார்த்தைகள் தடம் மாறி, தடித்த வார்த்தைகளாகி கைகலப்பில் முடிந்து விடுகிறது.

கோபமான முருகேசன், இந்தக் கோபத்தை தன் நண்பரும் கிருஷ்ணாவின் மாமனாருமான தணிகாசலத்திடம் காட்டுகிறார். தன் கணவனால் அப்பாவுக்கு அவமானம் ஏற்பட்டதாக கருதிய காயத்ரி, கணவன் கிருஷ்ணாவிடம் எரிச்சலாக, கிருஷ்ணாவுக்கும், காயத்ரிக்கும் மனமுறிவு ஆரம்பிக்கிறது.

இந்நிலையில் சித்ராவின் அண்ணன் முருகனுக்கு வசந்தி என்ற பெண்ணை பார்த்து நிச்சயம் செய்கிறாள் ரஞ்சனி. ஆனால் அவள் ராஜேந்திரனின் தங்கை என்பது தெரிய வர, கல்யாணம் நிறுத்தப்படுகிறது. ராஜேந்திரன் தான் `அண்ணாமலை அரிசி ஆலை' அந்தக் குடும்பத்தின் கையை விட்டுப் போக காரணமானவன். ராஜேந்திரனின் தங்கை என்றாலும் பரவாயில்லை. கல்யாணத்தை நடத்தலாம் என்று முயற்சி செய்கிறான் செந்தில்.

கிருஷ்ணன்-காயத்ரியின் மனமுறிவு என்னவாயிற்று?

கவுரி ஏன் தன் குடும்பத்தை வெறுக்கிறாள்? முருகன், வசந்தியின் கல்யாணம் நடந்ததா? விசாலாட்சி எப்போது சித்ராவை புரிந்து கொள்வாள்? அடுத்தடுத்த கேள்விகளுக்கு சுவராஸ்யமான பதில்கள் தொடரில் காத்து இருக்கின்றன'' என்கிறார்கள் திரைக்கதை ஆசிரியர் குமரேசனும், இயக்குனர் ஹரிபாவும்.

தொடரில், பீலிசிவம், அமரசிகாமணி, ராஜேஸ்வரி, ரேவதி சங்கர், ஸ்ரீகுமார், ராஜ்காந்த், ஸ்ரீதுர்கா, அர்ச்சனா, சிவ கவிதா, ராமச்சந்திரன், கிச்சா, நித்யா, ஜெயபிரகாஷ், பரத், சுதா, கல்பனா, ஆர்த்தி, ஜே.லலிதா, ஜெயந்த், சோனியா, வைரவராஜ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

பாடல்: வைரமுத்து, இசை: டி.இமான், கேமரா: தண்டபாணி, வசனம்: பாலசூர்யா, கதை, தயாரிப்பு: சான் மீடியா.
நன்றி: தினதந்தி

aanaa
4th October 2010, 03:26 AM
புயலில் சிக்கிய பாண்டு ரங்கன்விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் `மகான்' தொடரில் சில வாரங்களாக ஸ்ரீராகவேந்திரர் நிகழ்த்திய மகிமைகள் இடம் பெறுகிறது. அந்த வரிசையில் இந்த வாரம் தின்பண்டங்களை விரும்பும் மூன்று அந்தணர்களைப் பற்றிய கதை ஒளிபரப்பாகிறது.

இவர்கள் ஆற்றங்கரையில் ராகவேந்திரரைப் பற்றி பேசி சவால் விடுவதும், அதன் பின் இவர்கள் மனதில் நினைத்தது போல தாங்கள் விரும்பிய இனிப்புகள் கிடைத்ததும் ராகவேந்திரரிடம் மன்னிப்பு கேட்பதுமாகக் காட்சிகள் அமைந்துள்ளன.

இது தவிர பாண்டுரங்கன் என்ற ஏழை பக்தனின் கதையும் இடம் பெறுகிறது. ராகவேந்திரரை தரிசிக்க விரும்புகிறான் பாண்டுரங்கன். ஆனால் அவனது மனைவியோ நிறைமாதக் கர்ப்பிணியாக இருக்கிறாள். அப்போது எதிர்பாராமல் பாலைவனப்புயலில் அவர்கள் சிக்கிக் கொள்ள, ராகவேந்திரரை வேண்டுகிறான். அப்போது அங்கு வரும் ராகவேந்திரர் பாலைவனத்தில் தடாகத்தை உருவாக்குகிறார். பாண்டுரங்கனின் மனைவிக்கு பிரசவமாகிறது. அதன்பிறகு என்னவாகிறது என்று இந்த கதை விவரிக்கிறது. இதில் பாண்டுரங்கனாக வெங்கட்டும் அவனது மனைவியாக மிஷாவும் நடித்துள்ளனர்.

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது, தொடர். தொடரில் ராகவேந்திரராக நடிப்பவர் தினேஷ்.


நன்றி: தினதந்தி

aanaa
12th October 2010, 05:13 AM
அழகிய தமிழ் மகன்

விஜய் டிவியில் கடந்த பல வாரங்களாக வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த அழகிய தமிழ் மகன் நிகழ்ச்சி இன்று இறுதிச்சுற்றை ஒளிபரப்பி அந்த `அழகிய தமிழ் மகன்' யார் என்பதை வெளிப்படுத்தவுள்ளது.

இந்த போட்டி பல கட்டங்களை தாண்டிய நிலையில் கடைசியாக சோமசேகர், சித்தார்த், அப்துல், ரவிசங்கர், கமல் ஆகியோர் இறுதிக்கட்ட போட்டியில் கலந்துகொள்கின்றனர். இந்த போட்டியாளர்களில் `அழகிய தமிழ் மகன்' யார் என்ற கேள்விக்கான விடை இன்று கிடைத்துவிடும்.

இந்த போட்டிகளின் மதிப்பெண்களின் அடிப்படையிலும் இறுதிப்போட்டியில் இவர்களின் திறமையான பதில்களின் அடிப்படையிலும் வெற்றியாளர் யார் என்று அறிவிக்கப்படுகிறது. நடிகை குஷ்புவுடன் வெள்ளித்திரை நட்சத்திரங்களும் இந்த இறுதிச் சுற்றில் கலந்து கொள்கின்றனர்.

இதுதவிர சிறந்த வீரர், சிறந்த நகைச்சுவையாளர், சிறந்த குரல், சிறந்த டான்ஸர் என்று பலவித விருதுகளும் வழங்கப்பட இருக்கின்றன.


[html:f59073f3c1]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20101009/ATM%20finals.jpg</div>[/html:f59073f3c1]நன்றி: தினதந்தி

aanaa
12th October 2010, 05:16 AM
இளவரசி - 200


நடுத்தர குடும்பத்தின் பிரச்சினைகளை மையப்படுத்தி ஒளிபரப்பாகி வரும் இளவரசி தொடர் 200-வது எபிசோடை தொடுகிறது. அத்துடன் `வரும் வாரங்களில் பல்வேறு எதிர்பாராத திருப்பங்கள் தொடரில் இடம் பெறப்போகிறது' என்கிறார் கிரியேட்டிவ் ஹெட்டான ராதிகா சரத்குமார்.

இளவரசி தன் தாய் இந்திராவின் வற்புறுத்தலால் கணவன் சுப்ரமணியுடன் சேர்ந்து வாழ ஒப்புக்கொள்கிறாள். அதன்படி சுப்ரமணி வீட்டுக்கு வருகிறாள். வந்த அன்றே ஜானகியின் கணவன் தலைமறைவான நிலையில், சுப்ரமணியின் அண்ணியான ஜானகி கர்ப்பம் அடைந்திருப்பதை அறிந்து அதிர்ச்சிக்குள்ளாகிறாள்.

இதற்குள் இளவரசியை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்று துடிக்கிறான் கார்த்திக். அதற்காக ஜானகியின் தங்கை கயல்விழியுடன் சேர்ந்து சதித்திட்டம் ஒன்றை தீட்டுகிறான். இளவரசியும், அவள் கணவன் சுப்ரமணியும் ஒன்றாக சேர்ந்து வாழக்கூடாது என்பதே அந்த சதித்திட்டத்தின் நோக்கம். அது நிறைவேறுமா? சதியை இளவரசி முறியடித்தாளா? பரபரப்பான காட்சிகளை வரும் நாட்களில் காணலாம்.

தொடரின் நட்சத்திரங்கள்: சந்தோஷி, ஸ்ரீகர், விஜேஷ், பரத், சாந்திகணேஷ், ரேவதி சங்கர்.

ஒளிப்பதிவு: பால குருநாதன். இசை: கிரண். வசனம்: தர்மலிங்கம். கதை, திரைக்கதை, இயக்கம்: என்.சந்தானம்.

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பிற்பகல் 1.30 மணிக்கு சன் டிவியில் இத்தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

தயாரிப்பு: ராடன் நிறுவனம்.

[html:b1c5f2f62a]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20101009/Ilavarasi.jpg</div>[/html:b1c5f2f62a]


நன்றி: தினதந்தி

aanaa
12th October 2010, 05:20 AM
கே.பாலச்சந்தரின் புதிய தொடர்


டைரக்டர் கே.பாலச்சந்தர் கொஞ்சம் இடைவெளி விட்டு இப்போது இயக்கிக் கொண்டிருக்கும் தொடர், `சாந்தி நிலையம்'.

முழுக்கமுழுக்க காமெடிப்பின்னணியில் உருவாகி வரும் இந்த தொடரில் நாயகியாக ரதி நடிக்கிறார். `சொல்ல மறந்த கதை' படத்தில் சேரன் ஜோடியாக நடித்தாரே அதே ரதி தான்.

விரைவில் ஜெயா டிவியில் ஒளிபரப்பாகவிருக்கிறது, இந்த தொடர்.


நன்றி: தினதந்தி

aanaa
12th October 2010, 05:26 AM
ஒய்.ஜி.மகேந்திரன் பார்வையில்...நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் திரையுலகின் பிரபலங்கள் அத்தனை பேரிடமும் பழகியவர். அந்த அடிப்படையில் அவர் தன்னுடன் பழகிய திரை நட்சத்திரங்கள் பற்றிய சுவையான தகவல்களை வசந்த் டிவியில் பகிர்ந்து கொள்கிறார்.

தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன், டைரக்டர்கள் கே.பாலச்சந்தர், எஸ்.பி.முத்து ராமன், மறைந்த நடிகர்திலகம் சிவாஜி, நகைச்சுவை நடிகர் நாகேஷ் ஆகியோருடனான தன் இனிய நிகழ்வுகளை நிகழ்ச்சியில் மனம் திறக்கிறார்.

தன் உறவினரும், நடிகருமான ரஜினி பற்றியும் இதில் பல சுவாரசிய விஷயங்களை நிகழ்ச்சியில் பட்டியலிடுகிறார்.

வசந்த் டிவியில் வரும் 15-ம்தேதி முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.நன்றி: தினதந்தி

aanaa
16th October 2010, 08:10 PM
வாடகை வீடு

திங்கள் முதல் வெள்ளி வரை கலைஞர் தொலைக்காட்சியில் தினமும் மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `வாடகை வீடு' தொடர், 150-வது எபிசோடை தாண்டியிருக்கிறது.

இத்தொடரின் படப்பிடிப்பு சிங்கப்பூர், கும்பகோணம், வேலூர் போன்ற பகுதிகளில் நடந்ததை தொடர்ந்து இப்போது பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, திருமூர்த்திமலைப் பகுதிகளில் தொடர்கிறது. பிரம்மாண்டமான செட்டுகள் போடப்பட்டு நடந்து வரும் இந்த தொடரில், டெல்லி கணேஷ், ஒய்.ஜி.மகேந்திரன், அப்ஸர், தீபாவெங்கட், சந்தோஷி, சாய்ராம், மேஜர்தாசன் நடிக்கின்றனர்.

இயக்கம்: எம்.விஸ்வநாத். காமாட்சி விஷன் சார்பில் தொடரை தயாரிப்பவர் ஸ்ரீராம் வேதம்.


நன்றி: தினதந்தி

aanaa
16th October 2010, 08:11 PM
அனுபல்லவி


திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 12.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் `அனுபல்லவி' தொடர், குடும்பப்பாங்கான கதைப்பின்னணியில் வேகம் பிடித்துக் கொண்டிருக்கிறது. தற்போது 125-வது எபிசோடை தொட்டிருக்கும் இந்த தொடரில் சந்தர்ப்ப சூழ்நிலையால் இரண்டு மனைவிகளுக்கு கணவனான ராஜாராமன் என்ற பெரிய மனிதரின் வாழ்க்கைப்பதிவு காட்சிகளாகியிருக்கிறது.

ராமனாக வாழவேண்டும் என்று ஆசைப்பட்ட தொழிலதிபர் ராஜாராமனை காலம் அனு-பல்லவி என்ற இரண்டு மனைவிகளுக்கு சொந்தக்காரனாக்குகிறது. இருவருக்குமே அடுத்தடுத்த ஊரில் தனித்தனி வீடு. மூத்தவள் அனுவுக்கு ஒரு பையன். இரண்டு பெண்கள். இளையவள் பல்லவிக்கு ஒரு பையன், ஒரு பெண்.

இதில் ஆச்சரியம், அனு-பல்லவி இருவருமே நல்ல தோழிகள். எதிர்பாராமல் நடந்த ஒரு சந்திப்பு அவர்களை சிநேகிதிகளாக்குகிறது. இருவரும் ஒரே கணவருக்குத்தான் வாழ்க்கைப் பட்டிருக்கிறோம் என்பது தெரியாமல் நட்பை தொடர்கிறார்கள்.

அனுவின் மூத்த மகளுக்கு பெரிய இடத்து சம்பந்தம் வருகிறது. நிச்சயதார்த்தம் வரை வந்து விட்டநிலையில் பெண்ணின்அப்பாவுக்கு இண்டு குடும்பம் இருப்பது மாப்பிள்ளையின் தந்தைக்கு தெரிய வர, அவர் இந்த சம்பந்தத்தை தவிர்க்கிறார்.

மாப்பிள்ளை வீட்டாரின் நிராகரிப்புக்கான காரணத்தை ராஜாராமன் தெரிந்து கொள்கிறார். எத்தனை காலம் தான் இந்த இரட்டை வாழ்க்கையை மறைப்பது? மனைவிகள் இருவரிடமுமே உண்மையை சொல்லி விடுவது, அதனால் என்ன விளைவு நேர்ந்தாலும் ஏற்றுக் கொள்வது என்ற முடிவுக்கு வருகிறார்.

ஆனால் ராஜாராமின் நண்பர் சுந்தரம் இந்த முடிவுக்கு தடை போடுகிறார். `உண்மை சொல்லவேண்டிய நேரம் இதுவல்ல' என்கிறார்.

இதற்கிடையே நிலைமை இன்னும் சிக்கலாகிறது. பல்லவியின் நட்பில் உருகிப்போகும் அனு, தன்மகனை பல்லவியின் மகளுக்கு நிச்சயம் பேசும் அளவுக்கு வந்துவிடுகிறாள். அதற்கு பல்லவியும் மனப்பூர்வமாக சம்மதிக்கிறாள். இந்த தகவல் ராஜாராமனை எட்டும்போது அதிர்ச்சின் உச்சத்திற்கே போய்விடுகிறார். தன் இரு மனைவியரும் விபரீதம் தெரியாமல் அண்ணன்-தங்கையை ஜோடியாக்க நினைக்கும் முடிவு அவரை வெகுவாக பாதிக்க, இனியும் தன்அந்தரங்க இரட்டைவாழ்க்கையை மறைக்கக்கூடாது... அதற்குப்பிறகு குடும்பத்தில் என்ன நடந்தாலும் சரி என்ற முடிவுக்கு வருகிறார். ஆனால் அவரால் உண்மையை சொல்ல முடிந்ததா?

இதற்கிடையே பல்லவியின் மகன் கார்த்தி, ஸ்ரீநிதி என்ற பெண்ணை காதலிக்கிறான். அவனுக்கு ஒரு ஏழைப்பெண்ணை மணப்பது லட்சியம். அதனால் பணக்காரப்பெண்ணான ஸ்ரீநிதி அவனிடம் தன்னை ஒரு ஏழைப்பெண்ணாகவே காட்டிக் கொள்கிறாள். ஒருநாள் உண்மை தெரியவரும்போது அவளை பிரிகிறான் கார்த்தி. அதேநேரம் கார்த்தியின் `அப்பா ரகசியம்' ஸ்ரீநிதிக்கு தெரியவருகிறது. அவள் என்ன முடிவெடுக்கிறாள்? `பரபர' திருப்பங்களுடன் தொடர்கிறது, தொடர்.

நட்சத்திரங்கள்: அபிஷேக், தீபாநரேன், யுவஸ்ரீ, சங்கீதா, ஸ்ரீவித்யா, `காத்தாடி'ராமமூர்த்தி, எம்.பானுமதி, நெப்போலியன், தனுஷ், `யார்'கண்ணன், ஷிவானி.

கதை: ஜே.கே. திரைக்கதை: சி.யு.முத்துச்செல்வன். வசனம்.:ஆர்.எஸ்.பாலமுருகன். இசை: சத்யா. இயக்கம்: மணிபாரதி-ஆர்.தண்டபாணி. தயாரிப்பு: ராதா கிருஷ்ணசாமி.


[html:821e984e80]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20101016/TV-08%20PH%2009.jpg</div>[/html:821e984e80]நன்றி: தினதந்தி

aanaa
16th October 2010, 08:13 PM
வார்த்தை விளையாட்டு

புதிய நிகழ்ச்சிகளை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வரும் விஜய் டிவி, இன்று முதல் சனிக்கிழமைதோறும் இரவு 8 மணிக்கு `ஒரு வார்த்தை ஒரு லட்சம்' என்ற புதிய வார்த்தை விளையாட்டு நிகழ்ச்சியை அறிமுகப்படுத்துகிறது. சொல் திறமைக்கும், வார்த்தைகளை கண்டுபிடிக்கும் திறமைக்கும் சவால் விடும் அறிவுசார்ந்த இந்த நிகழ்ச்சியில் வார்த்தைகளை சரியாக கண்டுபிடித்து வெற்றி பெறுபவர்கள் ஒரு லட்சம் ரூபாய் பரிசுப்பணம் வெல்லலாம்.

இந்த வார்த்தை விளையாட்டை இரண்டு டீம்கள் விளையாடலாம். இரண்டு நபர்களைக் கொண்டது ஒரு டீம். முதல் வரும் சுற்றுக்களில் வார்த்தைகள் முற்றிலும் தமிழில் அமைந்திருக்கும். அந்தந்த டீமில் உள்ள ஒருவர், கொடுக்கப்படும் வார்த்தைக்கு மாற்று வார்த்தைகளை தமிழில் தெரிவிக்க வேண்டும். அந்த மாற்று வார்த்தைகளை வைத்து சரியான வார்த்தைகளை மற்றொருவர் கண்டுபிடிக்க வேண்டும். இப்படி இரண்டு டீம்களுக்கும் தலா ஐந்து முதல் பத்து வார்த்தைகள் வரை வழங்கப்படும். குறைந்த வினாடிகளுக்குள் அதிகப்படியான சரியான வார்த்தைகளை கண்டுபிடிக்கும் ஒரு டீம் அடுத்த கட்ட விளையாட்டுச் சுற்றுக்குள் நுழையும்.

இதுவே ஒரு லட்சம் ரூபாயை வெல்லக்கூடிய சுற்றாகும். இதில் பத்தாயிரத்தில் தொடங்கி, இருபது ஆயிரம், ஐம்பதாயிரம், எழுபத்தைந்தாயிரம், ஒரு லட்சம் என்ற வரிசையில் பரிசுகள் காத்திருக்கும். ஒன்பது க்ளூக்களில் ஐந்து வார்த்தைகளை கண்டு பிடிப்பவர் பத்தாயிரம் வெல்ல லாம். எட்டு க்ளூக்களில் ஐந்து வார்த்தைகளை கண்டு பிடிப்பவர் இருபதாயிரத்தை வெல்லலாம். ஏழு க்ளூக்களில் ஐந்து வார்த்தைகளை கண்டு பிடிப்பவர் ஐம்பதாயிரம் வெல்லலாம். இப்படி ஒரு லட்சம் ரூபாய் வரைக்கும் வாய்ப்புகள் தொடரும்.

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார்.

நன்றி: தினதந்தி

aanaa
16th October 2010, 08:15 PM
செல்லம்மாவுக்கு இரட்டைக் குழந்தைகள்

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் `செல்லமே' தொடர் விறுவிறுப்புடன் பரபரப்பையும் கூட்டிக் கொண்டிருக்கிறது.

பத்து வருடங்கள் குழந்தை இல்லாதிருந்த செல்லம்மா அதற்காக பட்ட அவமானங்கள் அதிகம். இப்போது செல்லம்மா தாய்மை அடைந்தாள். அவள் வயிற்றில் வளர்வது ஒன்றல்ல...இரட்டைக் குழந்தைகள்.

செல்லம்மாவுக்கு வளைகாப்பும் நடந்து விட்டது. குழந்தைப்பேற்றை மகிழ்ச்சியுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறாள் செல்லம்மா.

இதிலும் ஒரு அதிர்ச்சியான பின்னணி இருக்கிறது. பிறக்கப்போகும் இரண்டு குழந்தைகளில் ஒன்று பாதிப்புக்குள்ளான குழந்தை என்பது செல்லம்மாவுக்கு இதுவரை சொல்லப்படவில்லை. அவள் உறவினர் ஒருவர் அவள் வாரிசு வயிற்றில் தங்கக்கூடாது என்பதற்காக மருந்து என்ற பெயரில் கொடுத்த விஷம் ஒரு குழந்தையை பாதித்து விட்டது.

குழந்தை பிறந்தபின் அந்த ஒரு குழந்தைக்கு நேர்ந்திருக்கும் குறைபாடு செல்லம்மாவை எந்த விதத்தில் பாதிக்கப் போகிறது?

ஏ.கே.யின் மகளை 4 பேர் `ரேப்' செய்து அதனால் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்தடுத்து அந்த 4 பேரும் கொலை செய் யப்படுகிறார்கள். இந்த நால்வரையும்கொன்ற கொலையாளி யார்? என்பது முற்றிலும் எதிர்பாராதது. கொஞ்சம் கூட ஊகிக்க முடியாதது.

நட்சத்திரங்கள்: ராதிகா, ராதாரவி, டெல்லிகணேஷ், அபிஷேக், மாளவிகா, நந்தகுமார், சாக்ஷி சிவா, ரவிகுமார், தேவிபிரியா, நீலிமா ராணி, கன்யா பாரதி, வெங்கட், காளிதாஸ்.

திரைக்கதை: ராஜ்பிரபு. வசனம்: சபரிநாதன். ஒளிப்பதிவு: சாகித்யா சீனு. இயக்கம்: இ.விக்ரமாதித்தன்.

தயாரிப்பு: ராடன் மீடியா ஒர்க்ஸ்.


நன்றி: தினதந்தி

aanaa
23rd October 2010, 07:42 PM
`ஆளப்பிறந்த' ரஜினி!


வசந்த் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் புதிய தொடர் ரஜினி பற்றியது. ரஜினியின் சிறுவயதுப் பிராயம் தொடங்கி, அவர் வாலிபனாக வளர்ந்த கால கட்டம் வரை அவரது அண்ணன் சத்யநாராயணராவ் மனம் நெகிழ விவரிக்கும் தொடர் இது.

`ரஜினி ரஜினி தான்' என்ற தலைப்பில் ரஜினியின் முன்கதை சொல்லப்போகும் இந்த தொடரின் ஆரம்பமே மனதை கலங்கடிக்கும் தகவல் தான் சொல்லப்படுகிறது. ரஜினியின் 10 வயதில் அவரது அம்மா இறந்து போகிறார். இறக்கும்தறுவாயில் தன் மூத்த மகன் சத்யநாராயணராவை அழைத்தவர், சிறுவன் ரஜினியை அவர் கையில் ஒப்படைத்து, "தம்பியை பத்திரமாக பார்த்துக் கொள். அவனை வளர்த்து ஆளாக்க வேண்டிய பொறுப்பு உனக்குத்தான்'' என்று கூறிவிட்டே கண் மூடியிருக்கிறார்.

இப்போது வேண்டுமானால் ரஜினி `சூப்பர் ஸ்டார்' என்று ஆளாளுக்கு கூறலாம். ஆனால் ரஜினி பிறந்ததுமே அதை சொல்லியிருக்கிறார், அவர் தாயார் ஜீஜாபாய்.

ஜீஜாபாய்க்கு ஜோதிடத்தில் நம்பிக்கை அதிகம். அதனால் ரஜினி பிறந்ததும் தங்கள் குடும்ப ஜோதிடரை வரவழைத்து குழந்தையின் எதிர்கால பலனை கேட்டிருக்கிறார். அப்போது ஜோதிடர், `இந்தக் குழந்தை பெரிய மகானாக வருவான். அதோடு ராஜ்யத்தை ஆள்கிறவனாகவும் இருப்பான்' என்று கூறியிருக்கிறார்.

ஜோதிடர் இப்படிச் சொன்னது முதலே அம்மாவின் தனி கவனிப்பு வளையத்தில் இருந்திருக்கிறார், ரஜினி.

இதுபற்றி சத்யநாராயணராவ் சொல்லும்போது, "அம்மாவின் இந்த கணிப்பு இப்போது நிறைவேறிக் கொண்டிருக்கிறது'' என்று பெருமிதம் கொள்கிறார்.

ரஜினிக்கு பூர்வீகம் தமிழகம் தான். கிருஷ்ணகிரி அருகில் உள்ள நாச்சிக்குப்பம் கிராமத்தில் பிறந்து வளர்ந்த ரஜினியின் அப்பா ரானோஜி ராவ், பெங்களூரில் கிடைத்த போலீஸ் ஏட்டு வேலையின் பொருட்டு அங்கு செட்டிலானார். அங்கே கர்நாடகப் பெண்மணி ஜீஜாபாய் அம்மையாரை திருமணம் செய்து கொண்டார். தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட ரஜினியின் உறவினர்கள் பலர் இப்போதும் இதே நாச்சிக்குப்பத்தில் தான் வசிக்கிறார்கள். இவர்களில் பலர் தமிழில் சரளமாக பேசுகிறார்கள். சிலர் மட்டும் `கன்னடம் பாதி தமிழ் மீதி'யாக இருக்கிறார்கள்.

ரஜினி தன் குடும்பத்தில் உள்ளவர்களிடம் செய்திருக்கும் எழுதப்படாத ஒப்பந்தம், சினிமாவில் யாரும் நடிக்கக்கூடாது என்பது தான். இந்த ஒப்பந்தம் ஏற்படுத்திய விளைவு, ரஜினியின் உறவினர்கள் பலரும் பெங்களூரில் ஆட்டோமொபைல் கம்பெனி பணியில் இருக்கிறார்கள். பெங்களூரில் மட்டும் இந்த வகையான 18 தொழிற்சாலைகள் ரஜினிக்கு இருக்கின்றன. அதோடு தன் 2 அண்ணன்கள், ஒரு அக்கா மூவருக்கும் ஒரு பெரிய வீட்டை வாங்கிக் கொடுத்திருக்கிறார். இதில் மூன்றாவது மாடியில் பெரிய அண்ணன் சத்யநாராயணராவ் இருக்கிறார். இரண்
டாவது மாடியில் சின்ன அண்ணன் சூரியராவ். முதல் மாடியில் அக்கா குடும்பம்.

சிறுவயதில் ரஜினி சில நாட்கள் பெங்களூர் ஜெயிலிலும் இருந்திருக்கிறார். தன் அண்ணனை அடித்த பிரபல ரவுடி நாராயணனை தனியாளாக அவன் இருப்பிடத்துக்கே போய் ரத்தம் வரவர அடித்து துவம்சம் செய்திருக்கிறார். ஆத்திரம் அடங்கி வீட்டுக்கு வந்தவரை அண்ணன் போலீசில் ஒப்படைத்திருக்கிறார். தங்கள் தந்தை போலீஸ் ஏட்டு அல்லவா! அதனால் தந்தைக்கு தம்பியின்அதிரடியால் கெட்ட பெயர் வந்து விடக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாட்டை அண்ணன் சத்யநாராயணா செய்திருக்கிறார். இந்த சம்பவத்தையும் நிகழ்ச்சியில் உள்ளம் உருகும் விதத்தில் எடுத்துரைக்கிறார், சத்யநாராயணா.

நவம்பர் 5-ம்தேதி முதல் ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம்தேதி வரை வசந்த் டிவியில் சத்யநாராயணராவின் இந்த பேட்டி ஒளிபரப்பாகிறது.


நன்றி: தினதந்தி

aanaa
23rd October 2010, 07:43 PM
பக்தி திருவிழா

விஜய் டிவி நடத்திய பக்தி திருவிழா சென்னையில் நடைபெற்றது. ஐந்து நாட்கள் நடைபெற்ற இவ்விழாவில் பிரபல சொற்பொழிவாளர்களின் உரைகள் மற்றும் நாமசங்கீர்த்தனங்கள் இடம் பெற்றன. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் வரும் திங்கள் முதல் வெள்ளி வரை விஜய் டிவியில் தினமும் காலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

ஆன்மிகத் தலைவர் எத்திராஜ ஜீயர் சுவாமிகள் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். சுகி சிவம் `ஞானி யார்' என்ற தலைப்பில் மகான்களைப்பற்றி பேசினார். தொடர்ந்து `உடையார் கல்யாணராமனின் நாமசங்கீர்த்தனமும், அடுத்து ஆர்.பி.வி.எஸ். மணியனின் `சங்கரரின் வாழ்வில் சில அதிசயங்கள்' என்ற சொற்பொழிவும் இடம் பிடிக்கிறது.

நிகழ்ச்சியில் ஏழு வயதே நிரம்பிய செல்வி வர்ஷா புவனேஷ்வரி `வள்ளி திருமண உபன்யாசம் `செய்தார். தொடர்ந்து பிரபல சொற்பொழிவாளர் உ.வே.கருணாகரச்சாரியார் சுவாமிகள், `செய்யும் செய்யாது' என்ற தலைப்பில் ஆற்றிய உரையும், உ.வே.தாமல் ராமகிருஷ்ணனின் ஆஞ்சநேயர் கதைகளும் இடம் பெறுகிறது.

மற்றும் பால ஸ்ரீனிவாசன், பேராசிரியை இளம்பிறை மணிமாறன், புஷ்பா ஆனந்த், நவசக்தி பரிமளம் டாக்டர் உ.வே.வெங்கட கிருஷ்ணன் ஆகியோரின் பக்தி உரைகளும் இடம் பெறுகிறது. இதைத் தொடர்ந்து விஜய பாகவதர், பாலாஜி பாகவதர் பார்ட்டி வழங்கும் நாமசங்கீர்த்தனம் இடம் பிடிக்கிறது. இதையடுத்து சுசித்ராவின் `ஆண்டாள் திருக்கல்யாணம்' உரை இடம் பெறுகிறது.


[html:ce771cb988]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20101023/TV05.jpg</div>[/html:ce771cb988]

நன்றி: தினதந்தி

aanaa
23rd October 2010, 07:44 PM
மகாராணி

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர், `மகாராணி'.

ராணியின் பிறந்த நாளை பிரம்மாண்டமாக கொண்டாடத் தயாராகும் தேவாவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. ராணி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அனுப்பியிருந்த கடிதம் தேவாவிற்கு அதிர்ச்சியை உண்டாக்குகிறது. ராணி, தேவாவின் உண்மையான மகள் இல்லை என்ற உண்மை தெரிந்திருந்தும் அதை தன் கணவனிடம் கூறினால் நம்பமாட்டார் என்ற வேதனை யமுனாவை ஆட்டிப் படைக்கிறது.

ராணியை யார் கடத்தியது? அவளாக எங்காவது சென்று கடத்தல் நாடகம் ஆடுகிறாளா? மாணிக்கத்திற்கும், பிரகாஷிற்கும் ராணியின் கடத்தலில் தொடர்புள்ளதா போன்ற கேள்விகள் கதையில் எதிர்பார்ப்பை தோற்றுவிக்கின்றன.

தேவாவின் உடல் நலக்குறைவால் அவருக்கு மகா தான் உண்மையான மகள் என்ற தகவல் தெரிவிக்கப்படுமா? அனைத்திற்கும் இந்த வாரம் விடை தெரிந்து விடும்.

தொடரில் ஜெயிக்கப்போவது யார்? மகாவா? ராணியா? இல்லை மகாராணியா? தொடர்கிறது, தொடர்.


[html:b2164c664b]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20101023/TV04.jpg</div>[/html:b2164c664b]

நன்றி: தினதந்தி

aanaa
23rd October 2010, 07:52 PM
[tscii:51ffadeaf0]

Un Vaasam En Nesam

(Jaya TV, Tuesday, 9 p.m.)

A contest for couples, the show has reached the final round with four competing for the prize of Rs. 5 lakhs. The four pairs have made it after tough preliminary rounds. Anita Kuppuswamy is the judge while Shilpa and Balaji are the anchors.

[html:51ffadeaf0]<div align="center">http://www.hindu.com/fr/2010/10/22/images/2010102250840401.jpg</div>[/html:51ffadeaf0]
Kannaadi

(Jaya TV, Wednesday, 9 p.m.)

There is a thin line that separates social drinking and addiction. It is not only the individual but the entire family that suffers on account of an alcoholic. The issue is discussed in two episodes – October 27 and November 3 – with Anu Haasan as the anchor.நன்றி: Hindu [/tscii:51ffadeaf0]

aanaa
30th October 2010, 11:31 PM
ஜான்சி ராணி

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு `ஜி' தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது, ஜான்சிராணி தொடர்.

சிறு வயது முதல் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தையும், அதிகார துஷ்பிரயோகங்களையும் வெறுக்கும் மனு கர்ணிகா, பின்னர் ஜான்சி மகாராஜா கங்காதர ராவை மணந்து லட்சுமிபாய் என்று பெயர் சூட்டப்பெறுகிறாள். லட்சுமி பாயின் வீரத்தையும் சுதந்திர தாகத்தையும் அறிந்த கர்னல் மார்ஷல் லட்சுமிபாயை வீழ்த்த துடிக்கிறான். இதன் ஒரு பகுதியாக லட்சுமிபாய் வீரத்துடன் நிகழ்த்தியவற்றை காங்காதர ராவின் பார்வைக்கு கொண்டு வந்து அவளை பிரச்சினைக்குள்ளாக்குகிறான்.

இந்நிலையில் ஜான்சி ராஜ்யத்தின் பெரும்கொள்ளைக்காரனாய் இருந்த சமர்சிங், லட்சுமிபாயை கண்ட நாள் முதல் திருந்தி தேச பக்தனாக மாறி லட்சுமி பாயின் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்கிறான். லட்சுமிபாயை கட்டுப்படுத்த துடிக்கும் மார்ஷல் சமர் சிங்கை கைது செய்து அவனுக்கு லட்சுமிபாயுடனான உறவை வெளிப்படுத்தி கங்காதர ராவின் வெறுப்புக்குள்ளாக்க நினைத்து வெற்றியும் பெறுகிறான்.

ஜான்சி மகாராஜா கங்காதர ராவின் முன் குற்றவாளியாக நிறுத்தப்படுகிறான் சமர்சிங். அவனின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவனுக்கு மரண தண்டனை நிச்சயம் என கங்காதர ராவ் அறிவிக்கிறார்.

இந்நிலையில், சமர்சிங்கை எப்படியாவது காப்பாற்ற துடிக்கும் லட்சுமிபாய் அனைவரின் முன்னிலையில் தன் புரட்சி வேடத்தை வெட்ட வெளிச்சமாக்குகிறாள்.

இந்நிலையில் ஜான்சி மகாராஜா கங்காதர ராவ் எடுத்த முடிவு என்ன? லட்சுமிபாயின் நிலை என்னவாயிற்று? கேள்விகளுக்கு விடை, தொடரும் காட்சிகளில்...


நன்றி: தினதந்தி

aanaa
30th October 2010, 11:32 PM
விஷ்ணு புராணம்

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6 மணிக்கும் இரவு 9 மணிக்கும் ஒளிபரப்பாகவிருக்கும் புதிய புராணத்தொடர், விஷ்ணு புராணம்.

`ஓம் நமச்சிவாய' என்ற பக்தி தொடர் மூலம் சிவபெருமானின் திருவிளையாடல்களை ஒளிபரப்பி வந்த ஜி தமிழ் தொலைக்காட்சி, இப்போது இந்த தொடர் மூலம் மகா விஷ்ணுவின் சிறப்புகளை தரவிருக்கிறது.

பிரளயத்தில் பூமியை உருவாக்கி, அதில் ஜீவராசிகளை படைப்பது. இரவு-பகல் மாற்றங்களை கொண்டு வருதல், மனித பிறப்பில் உள்ள நட்பு-பகைமையின் அர்த்தத்தை விஷ்ணு பகவானாக உணர்த்துவது மற்றும் தர்மம் வீழ்கின்றபோது, பூமியில் அவதாரம் எடுத்து மனித குலத்தை காப்பாற்றுவது வரை தொடரின் காட்சிகளாகி இருக்கின்றன.

விஷ்ணுவின் 10 அவதாரங்கள் என்று கூறப்படும் தசாவதாரத்தின் அற்புதங்களும், அவரின் லீலைகளும் இந்த தொடரில் இடம் பெறுகிறது. மேலும், உத்தானபாதன் என்ற மன்னன், மகாராணியின் சூழ்ச்சியால் மனைவி, மகனை மறந்து போவது, தந்தையின் பாசத்திற்கு ஏங்கும் சிறுவன் துருவனின் போராட்டம், துருவனின் தவத்தைக் கெடுக்கும் இந்திரனின் சூழ்ச்சிகள், பல தடைகளை மீறி பகவானின் தரிசனம் ஒருவனுக்கு கிடைக்குமா? போன்ற பல அரிய காட்சிகளுடன் வெளிவருகிறது விஷ்ணு புராணம்.நன்றி: தினதந்தி

aanaa
30th October 2010, 11:34 PM
மானாட... மயிலாட...

2009 செப்டம்பர் 15 ம் தேதி அன்று கலைஞர் தொலைக்காட்சி துவங்கிய நாள் முதல் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருவது `மானாட மயிலாட' நடனப்போட்டி. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பல லட்ச ரூபாய் பரிசுகள் வழங்கி வந்த கலைஞர் தொலைக்காட்சி, இந்த தொடர் நிகழ்ச்சியின் பாகம் ஐந்தினை அரபு நாடுகளில் ஒன்றான அபுதாபியில் நடத்தியது.

இறுதிப்போட்டிக்கு போட்டியாளர், நடுவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் என்று 100 பேர், கடந்த 15-ம் தேதி அபுதாபி சென்றனர். அங்குள்ள நேஷனல் தியேட்டர் அரங்கில் இறுதிப் போட்டி நடந்தது.

முதல் பரிசு பெற்ற ஜோடிக்கு, ஆளுக்கு ஒரு வீடு பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாவது பரிசாக ரூபாய் 5 லட்சமும், மூன்றாவது பரிசாக ரூபாய் 3 லட்சமும் வழங்கப்பட்டது. கலைஞர் தொலைக்காட்சி இயக்குநர் அமிர்தம், செயல் அதிகாரி ராம.நாராயணன் முன்னிலையில் நடிகர் பிரபுதேவா, நடிகை நயன்தாரா இருவரும் பரிசுகளை வழங்கினார்கள்.

நடுவர்களாக பணியாற்றிய நடிகைகள் குஷ்பு, நமீதா மற்றும் டான்ஸ் மாஸ்டர் கலா உடன் இருந்தனர். அடுத்தடுத்த ஞாயிற்றுக்கிழமைகளில், இந்த நிகழ்ச்சி கலைஞர் தொலைக்காட்சியில் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும்.

[html:14577e227c]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20101030/TV06.jpg </div>[/html:14577e227c]

நன்றி: தினதந்தி

Dhesh
31st October 2010, 09:29 PM
i watched the final showdown on kalaignar tv. It was amazing with prabhu deva and nayanthara being the special guests. But I don't lyk prabhu deva for what he did to his wife and his two other children.

Harihalan
1st November 2010, 09:12 PM
Disappointing end of Maanada Mayilada.I have voted for Rahman & Shivani. I didn't expect Bala.Well,He is a good dancer but over acting.

Dhesh
1st November 2010, 11:02 PM
Bala has already won the show. He doesn't need to be a contestant again. They didn't even announce second prize winners. Kala master said 'second prize, come here'. It always makes there efforts and hardwork go to waste because they don't treat them the same during the time their reading all the winners. Rehman and Shivani definitely should have won. Bala has been a film and has become successful. Gokul can easily be like Bala but he is not doing that because he's just being entertainment in the show which is good. Bala is really selfish and Kala master shouldn't of made him a contestant again. They need fresh contestants in Maanada Maayilada 6.

aanaa
7th November 2010, 04:45 AM
[tscii:bf74bc15e4]


Serials on Vijay TV have always been unique and not formulaic. Story lines have been distinctly keeping up with this trend. Two new serials titled ‘Meera’ & ‘En Peyar Meenatchi’ would be launched from September 06, 2010 on Vijay TV and would air every Monday – Friday 8pm & 8:30pm respectively.


Meera:

Meera is soft-spoken and a woman of manners hailing from an orthodox Brahmin family. She works as a nurse in Chennai hospital and on her journey back home to get engaged is entrusted with a baby whose mom’s whereabouts are not known. Not knowing what to do with the child, Meera takes home the child but circumstances lead her to leave the house and her family and live a life on her own with the child.

In her new life in a new city Meera takes on the role of a mother. Will she find love and marriage? Will the mother of the abandoned child return to claim her child forms the rest of the story.

The role of Meera is played by Srija who has earlier acted in Vijay TV’s Madurai serial. The serial is directed and produced by Kavita Bharathi and Cinematography is by Martin. Hari Krishna scores the music for the same. Beginning from September 06, 2010 ‘Meera’ would air every Monday-Friday, 8pm on Vijay TV.

En Peyar Meenatchi:

Is a story of a girl who sees her life change on the day of her wedding. Meenatchi is all excited about her wedding and so is her father. Her father who is a school teacher invites his students also for this great day. At the time of wedding, the groom is been kidnapped by few men and the wedding comes to a grinding halt. One of Meenatchi’s father’s students named Sakthi comes to rescue and is forced to marry her. Not knowing anything of her husband Sakthi, Meenatchi is in for many shocks as she is taken to her in-laws place.

Does Meenatchi feel gratitude? Anger? Or is she disappointed? Will she be accepted in the new house where she is all set to start a new life?

The role of Meenatchi is played by a debutant Harsha. Veteran actor Delhi Kumar plays the role of Meenatchi’s father and Siddharth of Azhagiya Thamizh Magan fame plays the role of Sakthi. The serial is written, directed and produced by C. Jerrold. Beginning from September 06, 2010 ‘En Peyar Meenatchi’ would air every Monday-Friday, 8:30pm on Vijay TV.

Both the stories have strong woman characters. One story depicts what happens to a girl whose marriage is halted due to unforeseen circumstances and in another a girl ends in a totally unexpected wedlock with a new guy altogether.


[html:bf74bc15e4]http://indiainteracts.in/gossip/images/meera-meenakshi.jpg[/html:bf74bc15e4][/tscii:bf74bc15e4]

aanaa
13th November 2010, 08:34 PM
பொன்னியின் செல்வன்

தமிழர்கள் மட்டுமின்றி, தமிழை நேசிக்கத் தெரிந்தவர்களும் கொண்டாடிய வரலாற்று நாவல், பொன்னியின் செல்வன். தமிழர்களின் பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு, ஈகை என ஒட்டுமொத்தத் தமிழர்களின் வாழ்க்கையையும் உள்ளடக்கிய நாவல் இது.

அழகு தமிழில் எழுத்தாளர் கல்கி எழுதிய இந்த நாவல், நெடுந்தொடராக மக்கள் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது.


நன்றி: தினதந்தி

aanaa
13th November 2010, 08:35 PM
`மெட்டுப் போட்ட' நாதஸ்வரம்

பொதுவாக சீரியலில் பாடல் என்றால் அது டைட்டிலில் இடம் பெறுவது மட்டும்தான். சீரியல் கதைகளில் டூயட்டுக்கோ, ஜாலி பாடல்களுக்கோ இடமிருக்காது. இந்த மரபை தன்னுடைய `மெட்டி ஒலி' சீரியலில் உடைத்து காட்டியவர் இயக்குனர் திருமுருகன். கதையின் நடுவே வரும் காட்சிகளுக்கு ஏற்ப பாடல் காட்சி வைத்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

அந்த மரபை தன்னுடைய நாதஸ்வரம் சீரியலிலும் தொடர்கிறார் திருமுருகன். அதுபற்றி அவரிடம் பேசியபோது, இசைங்கிறது எல்லோருடைய வாழ்விலும் தொடர்புடைய விஷயம். எல்லோருக்குமே குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் சில பாடல்கள் வாழ்க்கைக்கும் மறக்க முடியாத அம்சமாக அமைஞ்சிடும். இந்தக் கதையின் அடிநாதமே இசைக் குடும்பம்தான். அப்படி இருக்கும்போது இதில் இசைக்கு முக்கியத்துவம் இல்லாமல் போகுமா என்ன? பொதுவாக பாடல்ங்கிறது யதார்த்தத்தை மீறிய விஷயம். அதனால், அதை சீரியலுக்குள் நுழைக்க முடியாது என்றுதான் பலரும் சொல்வாங்க.

ஆனால் யதார்த்த வாழ்க்கையில் என்ன நடக்குது? மகிழ்ச்சி யாக இருக்கும் போது நம்ம உதடுகள் சந்தோஷமான பாட்டுக்களை முணுமுணுக்கத்தான் செய்யும். அதேபோல, வேதனையில் இருக்குறப்போ நமக்கு ஆறுதலாக இருக்கிறது இதே இசையும், பாட்டுகளும்தான். அப்படி நிஜ வாழ்க்கைல நம் கூடவே இருக்கிற இசையை சீரியலில் மட்டும் ஏன் ஒதுக்கி வைக்கணும்?

நிஜ வாழ்க்கைல எந்த அளவுக்கு இருக்குமோ, அதே அளவுக்கு எல்லை மீறாமல் இந்தத் தொடரில் பாடலை வெச்சிருக்கேன். கதையின் மிக முக்கியமான கட்டத்தில் சந்தோஷத்தின் வெளிப்பாடாக அந்தப் பாடல் அமைஞ்சிருக்கு.

"பாட்டுக்கான சூழலைச் சொன்னவுடன் அந்தக் காட்சியமைப்புக்கு பொருந்திப் போறமாதிரி இசையமைச்சுக் கொடுத்த இசையமைப்பாளர் சஞ்சீவ் ரத்தனும், அதற்கு வார்த்தைகள் மூலம் உயிர் கொடுத்த பாடலாசிரியர் யுகபாரதியும் இந்தப் பாடல் ஒளிபரப்பான பிறகு நிச்சயம் பாராட்டப்படுவாங்க.

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலிலும் மக்கள் கவனத்தை நம்ம பக்கம் திருப்புறதுக்கு பல உத்திகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. அதிலும் அவர்கள் வீட்டுக்குள்ளேயே போற நமக்கு இந்த சவால் கொஞ்சம் அதிகம். அதனால் மக்களை கதையோடு கட்டிப் போடற பல விஷயங்களைச் செய்துக்கிட்டே இருக்கோம். மக்களும் ரசிக்கிறாங்க. பாடல் காட்சியைப் பார்த்துட்டு அவங்க தரப் போற விமர்சனத்துக்காக இப்போதிருந்தே காத்துக்கிட்டிருக்கேன்'' என்றார் திருமுருகன்.

நாதஸ்வரத்தில் புதிய ராகம்.


[html:c8fe148d9a]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20101113/TV04.jpg</div>[/html:c8fe148d9a]

நன்றி: தினதந்தி

aanaa
13th November 2010, 08:39 PM
இதயம் கவர்ந்த `இதயம்'

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் "இதயம்'' தொடர், 350-வது எபிசோடை எட்டவிருக்கிறது.

தொடரில் மருமகளுக்காக போராடும் பாசமிகு மாமியாராக டாக்டர் சாய்கல்யாணி பாத்திரத்தில் சீதாவும், மாமனாராக சித்ராலட்சுமணனும் நடிக்கிறார்கள்.

விதிவசத்தால் வாழ்க்கையே திசைமாறிப்போக, அதில் சிக்கித் தவிக்கிறாள் கதாநாயகி நந்தினி. கதாநாயகன் சங்கருடன் சேர்ந்து வாழ தகுதியற்றவள் என்ற குற்ற உணர்ச்சியில் வாழ்க்கையையே புறக்கணிக்கிறாள். ஆனால், அவர்களை சேர்த்து வைக்க மாமியார் கல்யாணி போராடும் கால கட்டத்தில், வால்மீகி என்ற வழக்கறிஞரால் உறவுகளுக்குள் போராட்டம் வெடிக்கிறது. கல்யாணி - நந்தினியின் குடும்பத்தின் நலனுக்காக போராடும் வால்மீகிக்கு, அவதூறு பேச்சுக்கள் அவமானத்தை கொண்டு வந்து சேர்க்கின்றன.

கதாநாயகி நந்தினியின் வாழ்க்கை சீரழிய காரணமாக இருந்த பிரசாத்தின் கொலை வழக்கு ஒரு முடிவுக்கு வந்த நிலையில், தற்போது கல்யாணியிடம் நல்லவனாக நடித்துக் கொண்டிருக்கும் சங்கர், நந்தினியோடு சேர்ந்தானா? இருவரும் இணைவதற்கு வால்மீகி எடுத்த நடவடிக்கை என்ன? நந்தினி, கல்யாணியிடம் சத்தியம் செய்தது போல் பிள்ளையைப் பெற்றுக் கொடுத்தாளா? கல்யாணி-மங்களம் இருவருக்கும் உள்ள பகைக்கான பின்னணி என்ன?

கர்ப்பமாக இருக்கும் சகுந்தலாவின் கருவை கலைக்கச் சொன்ன மங்களம், அடுத்த கட்டமாக என்ன செய்தாள்? அதிரடியான திருப்பங்களுடன் தொடர்கிறது இதயம் தொடர்.

நட்சத்திரங்கள்: சீதா, சஞ்சீவ், சித்ரா லட்சுமணன், நித்யாதாஸ், ஸ்ரீ, நளினி, ரவிக்குமார், சாதனா, மனோகர், தேவதர்ஷினி, நீலிமாராணி, சத்யப்பிரியா, விஜயசாரதி, டி.பி. கஜேந்திரன், வர்ஷா. தொடருக்கு `அன்னக்கிளி' ஆர்.செல்வராஜ் திரைக்கதை அமைக்க, ஐ.அசோகன் வசனம் எழுத, பி.நித்தியானந்தம் இயக்குகிறார்.

கிரியேட்டிங் ஹெட், தயாரிப்பு: `சத்யஜோதி'பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன்.

[html:a4b4a69800]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20101113/TV01.jpg</div>[/html:a4b4a69800]

நன்றி: தினதந்தி

aanaa
13th November 2010, 08:41 PM
என் பெயர் மீனாட்சி

தான் காதலித்த சக்தி, மீனாட்சியை திருமணம் செய்து கொண்டதால் தங்களை சேர விடாமல் தொடர்ந்து பல சதிகளை அரங்கேற்றும் சக்தியின் அத்தை பெண் அமுதா ஒருபக்கம். கல்யாண நேரத்தில் தான் கடத்தப்பட்டதால் தனக்கு மனைவியாக வந்திருக்க வேண்டியவளை சக்தி அபகரித்துக் கொண்டான் எனும் ஆவேசத்தில் மீனாட்சியை இன்னலுக்கு ஆளாக்கும் ராஜரத்னம் இன்னொரு பக்கம் என `என் பெயர் மீனாட்சி' தொடர் படுவேகம் காட்டி போய்க் கொண்டிருக்கிறது.

இதுவரை வெளியிலிருந்து தொல்லை கொடுத்து வந்த அமுதாவும், ராஜரத்னமும் வரும் வாரம் இடம் பெறப் போகும் கதையில் சக்தியின் வீட்டிற்கே வந்து அதிரடியாக பிரச்சினைகளை உண்டு பண்ணுகிறார்கள்.

சக்தியின் வீட்டிலேயே அமுதா தங்கி மீனாட்சிக்கு எதிராக எப்படி செயல்பட முடியும்? அதற்கு மீனாட்சியின் அதிரடி பதிலடி என்ன? அமுதாவும் ராஜரத்னமும் கூட்டாக சேர்ந்து செய்யப் போகும் சதிகளை சக்தியும், மீனாட்சியும் முறியடிக்கப் போவது எப்படி?

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் இது.


நன்றி: தினதந்தி

aanaa
13th November 2010, 08:48 PM
பல சுவையான மற்றும் வித்தியாசமான நிகழ்ச்சிகளை வழங்கி ரசிகர்களின் வரவேற்பினை பெற்றுள்ள விஜய் டி.வி.யில் இப்போது ஒளிபரப்பி வரும் புது நிகழ்ச்சி "காதல் மீட்டர்'. இந்நிகழ்ச்சியை "ஐடியல் குக்வேர் அன்ட் அப்ளையன்சஸ்' நிறுவனம் வழங்குகின்றனர். இந்நிகழ்ச்சி வெள்ளி மற்றும் சனிக்கிழமை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

சின்னத்திரையின் பிரபல தம்பதியர்கள் பங்குபெறும் புதுமையான நிகழ்ச்சி இந்த "காதல் மீட்டர்'. திருமணமான ஜோடிகள், ஒருவரையொருவர் எவ்வளவு தூரம் தெரிந்து வைத்துள்ளனர்? இருவருக்கும் பிடித்த பொதுவான விஷயங்கள் என்ன? என்பதை அவர்கள் அளிக்கும் பதில்களில் இருந்து தெரிந்து கொள்ளப்படும். ஒவ்வொரு போட்டியிலும் இரண்டு ஜோடிகள் கலந்து கொள்கிறார்கள். புதுமையான இந்த நிகழ்ச்சியைத் திரைப்பட நடிகர் சுரேஷ் தொகுத்து வழங்கி வருகிறார்.

நன்றி: தினமணி

aanaa
21st November 2010, 01:58 AM
[tscii:5baed54f90]
இறுதிக் கட்டத்தில் `கறுப்பு ரோஜா'

பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வண்ணம் தயாராகி வந்த `கறுப்பு ரோஜா' தொடர், இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த தொடரில் பயன்படுத்துவதற்காக காமராஜரின் ஒரிஜினல் ஆடியோ, வீடியோ காட்சிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

மேலும் மறைந்த அமைச்சர் சி.சுப்பிரமணியம், முன்னாள் பள்ளிக்கல்வி இயக்குனர் நெ.து.சுந்தரவடிவேலு, காமராஜரின் அரசியல் குரு தீரர் சத்தியமூர்த்தியின் மகள் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி, பெருந்தலைவரின் உதவியாளர் வைரவன் போன்றவர்களின் அரிய பேட்டிகள் பயன்படுத்தப்படுகிறது. மறைந்த புகைப்படக் கலைஞர் சுபா சுந்தரத்தின் சேகரிப்பில் இருந்து மேற்கண்ட சந்திப்புகளும், அரிய புகைப்படங்களும் இடம் பெறுகின்றது.

இந்த தொடருக்காக விருதுநகர் தொடங்கி தமிழகம் முழுவதும் பயணம் செய்து காமராஜ் வாழ்க்கையை விவரிக்கிறார், சின்னத்திரை நட்சத்திரம் மோனிகா.

இறுதிக்காலத்தில் காமராஜ×டன் நெருக்கமாக இருந்த குமரி அனந்தன், திண்டிவனம் ராமமூர்த்தி போன்ற தலைவர்களின் பேட்டியும், பிரபல பேச்சாளர்கள் நெல்லை கண்ணன், பழ.கருப்பையா, தியாகு போன்றவர்களின் அனுபவமும் இடம்பெற உள்ளது.

நடிகவேள் எம்.ஆர்.ராதாவுடன் பெருந்தலைவர் காமராஜருக்கு இருந்த நெருக் கத்தை நடிகர் ராதாரவி விவரிப்பது நிகழ்ச்சிக்கு இன்னொரு அழகு.

இந்த தொடருக்கான வரலாற்று சம்பவங்களை எஸ்.கே.முருகன் எழுத, கே.எஸ்.சங்கர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். என்.கணேசன் இசை அமைக்க, படத்தொகுப்பு கேசவன்.

பார்ச்சூன் நெட்வொர்க் நிறுவனத்திற்காக ஆர்.பிரபாகரன் தயாரித்துள்ள `கறுப்பு ரோஜா' தொடர், விரைவில் சென்னை தொலைக்காட்சி, மற்றும் பொதிகையில் சனிக்கிழமை தோறும் இரவு 7.30-க்கு ஒளிபரப்பாக உள்ளது.


[html:5baed54f90]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20101120/TV-08.jpg</div>[/html:5baed54f90]
நன்றி: தினதந்தி [/tscii:5baed54f90]

aanaa
21st November 2010, 02:03 AM
முந்தானை முடிச்சு-150

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகும் `முந்தானை முடிச்சு' தொடர், தற்போது 150 எபிசோடுகளை எட்டி இருக்கிறது.

சமீபத்தில் பல திருப்பங்களுக்கு மத்தியில் நடந்து முடிந்த கந்தசாமி வீட்டு கல்யாணமே பட்டிதொட்டி எங்கும் நெகிழ்ச்சியுடன் பேசப்பட்ட நிலையில், கல்யாணத்திற்கு பிறகு நிகழும் சம்பவங்கள் பரபரப்பின் உச்சத்திற்கே கொண்டு செல்ல இருக்கின்றன.

சாந்தி முகூர்த்தத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் சதாசிவத்தின் சதி திட்டத்தால் லாரி விபத்திற்கு ஆளாகி உயிர் பிழைத்த முத்துக்குமாரை கொல்ல சதாசிவம் ஆஸ்பத்திரிக்கே ரவுடியை அனுப்பியிருக்க.. கணவனை நெருங்கியிருக்கும் ஆபத்தை அறியாமல் கவிதா அப்பாவியாய் அருகில் இருக்க... ஆஸ்பத்திரியில் நகரும் காட்சிகள் டென்ஷன் முடிச்சுக்களாக்கப் பட்டிருக்கின்றன.

ஏற்பாடு செய்திருந்த திருமணம் நின்றுபோன நிலையில் காதலித்த பிரகாஷின் வருகைக்காக நம்பிக்கையுடன் காத்திருக்கும் தமிழரசி இன்னொரு புறம். அவள் பிரகாஷை சந்திக்கும் போது ஏற்படும் திருப்பங்கள், அதைத் தொடர்ந்து தோழி பிரியாவின் மூலமாக வரும் துரோகம், அதே தோழிக்கு நியாயம் கிடைக்க தமிழரசி நடத்தும் போராட்டம், அதற்காக அவள் படும் துயரங்கள் சுவாரஸ்ய முடிச்சுகளாக்கப்பட்டிருக்கின்றன.இன்னொரு பக்கம் கந்தசாமி வீட்டிற்கு மருமகளாக சென்று பழிவாங்கத் துடிக்கும் பிரேமா தன் திட்டத்தின் உச்சகட்டமாய் கந்தசாமி குடும்பத்திற்குள் உறவுக் காரியாய் நுழைகிறாள். தன் வாழ்க்கையையே பணயமாக்கி அவள் எடுத்திருக்கும் முடிவு ஆச்சர்ய முடிச்சாக்கப்பட்டிருக்கிறது.

இதுவரை சந்தர்ப்ப சூழ்நிலையில் தவறு செய்து சைலஜாவின் மிரட்டலுக்கு பயந்து கொண்டிருந்த சரவணன், வெறுப்பின் உச்சத்தில் சைலஜாவுக்கு எதிராக திரும்பும் ருசிகரங்கள் அதிரடி முடிச்சுக்களாக்கப்பட்டிருக்கிறது.

தொடரின் கிரியேட்டிவ் ஹெட் மெட்டி ஒலி எஸ்.சித்திக்கிடம் தொடர் பற்றி கேட்டபோது,

``தமிழக மக்கள் விளக்கேற்றும் நேரத்தில் வழிபடும் திருப்தி யையும் தாண்டி இந்த தொடரானது மக்களுக்கு நிறைவை தரவேண்டும் என்பதே ஆசை'' என்கிறார்.[html:58e9a6b081]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20101120/TV-05%20PH%2013.jpg</div>[/html:58e9a6b081]

நன்றி: தினதந்தி

aanaa
21st November 2010, 02:06 AM
காஞ்சி மகா பெரியவரின் கடைசி விருப்பம்ஸ்ரீ சங்கரா டிவியில் ஞாயிறு முற்பகல் 11.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள புதிய நிகழ்ச்சி, `காஞ்சி மகா பெரியவரின் கடைசி விருப்பம்.'

காஞ்சி மகா பெரியவரான சந்திரசேகரேந்திர சுவாமிகளின் தாயார் வாழ்ந்த ஊர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஈச்சங்குடி கிராமம். அவர் வசித்த வீட்டை பலர் வாங்கி மாற்றி மாற்றி விற்றபடி இருந்தனர்.

இந்நிலையில் மகா பெரியவர் `சித்தி ஆவதற்கு' சில மணித்துளிகள் முன்னதாக, பெங்களூரை சேர்ந்த வி.எஸ்.ஹரி என்பவர் மகா பெரியவரை தரிசிக்க அனுமதி வேண்டினார். அவருக்கு தரிசனம் தர சம்மதித்த பெரியவர், அவரிடம் தனது தாயார் வசித்த வீட்டை வாங்கி புனரமைத்து, அங்கே ஒரு வேத பாடசாலையை நிறுவி வேதம் கற்க விரும்பும் அனைவருக்கும் இலவசமாக சொல்லித்தர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறி ஆசிர்வதித்தார். அதன் பின்னர் மகா பெரியவர் யாரையும் சந்திக்கவில்லை என்பதும், தமது அறையிலேயே `சித்தி ஆனார்' என்பதும் குறிப்பிடத்தக்கது.

மகா பெரியவர் பணித்ததற்கு ஏற்ப தற்போது அவரது தாயார் வசித்த வீட்டை வாங்கி புனரமைத்து, அங்கே வேத பாடசாலையை நிறுவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வின் தொகுப்பு ஸ்ரீ சங்கரா டிவியில் `காஞ்சி மகா பெரியவரின் கடைசி விருப்பம்' என்ற பெயரில் ஒளிபரப்பாக உள்ளது.


நன்றி: தினதந்தி

aanaa
21st November 2010, 02:08 AM
சிங்கப்பூரில் `மன்மதன் அம்பு'


கமல்ஹாசன் நடித்த `மன்மதன் அம்பு' படத்தின் பாடல் கேசட் வெளியீட்டு விழா சிங்கப்பூரில் உள்ள எக்ஸ்போ கலையரங்கில் இன்று மாலை நடக்கிறது. பிரபலங்களின் நடனங்களும், பாடல்களும்,இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்தின் பிரத்யேக இசை நிகழ்ச்சியும் உண்டு. நடிகர் மாதவன், நடிகைகள் திரிஷா, சங்கீதாவின் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் கமல்ஹாசனின் பங்களிப்பும் முக்கிய அம்சங்கள்.

இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகிறது.

[html:a02726a605]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20101120/TV-06%20Kamal.jpg</div>[/html:a02726a605]நன்றி: தினதந்தி

aanaa
21st November 2010, 02:12 AM
காதல் மீட்டர்

பல சுவையான மற்றும் வித்தியாசமான நிகழ்ச்சிகளை வழங்கி ரசிகர்களின் வரவேற்பினை பெற்றுள்ள விஜய் டி.வி.யில் இப்போது ஒளிபரப்பி வரும் புது நிகழ்ச்சி "காதல் மீட்டர்'. இந்நிகழ்ச்சியை "ஐடியல் குக்வேர் அன்ட் அப்ளையன்சஸ்' நிறுவனம் வழங்குகின்றனர். இந்நிகழ்ச்சி வெள்ளி மற்றும் சனிக்கிழமை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

சின்னத்திரையின் பிரபல தம்பதியர்கள் பங்குபெறும் புதுமையான நிகழ்ச்சி இந்த "காதல் மீட்டர்'. திருமணமான ஜோடிகள், ஒருவரையொருவர் எவ்வளவு தூரம் தெரிந்து வைத்துள்ளனர்? இருவருக்கும் பிடித்த பொதுவான விஷயங்கள் என்ன? என்பதை அவர்கள் அளிக்கும் பதில்களில் இருந்து தெரிந்து கொள்ளப்படும். ஒவ்வொரு போட்டியிலும் இரண்டு ஜோடிகள் கலந்து கொள்கிறார்கள். புதுமையான இந்த நிகழ்ச்சியைத் திரைப்பட நடிகர் சுரேஷ் தொகுத்து வழங்கி வருகிறார்.


நன்றி: தினமணி

aanaa
21st November 2010, 02:13 AM
ஆதிபராசக்தி

விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் புதிய பக்தித் தொடர் "ஆதிபராசக்தி'. நடிகை கே.ஆர்.விஜயா நடிக்கும் இந்தத் தொடரில் தமிழகத்தில் உள்ள சுமார் 108 அம்மன் பீடங்கள் எவ்வாறு உருவானது? என்பதைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

விஜயநகர சாம்ராஜ்ஜியத்தில் நடந்த பல அசம்பாவிதங்களுக்கு உற்சவ மாரியம்மனின் உக்கிரம்தான் காரணம் என முடிவு செய்தனர் மக்கள். இதன் காரணமாக விஜயநகர கோவில் உற்சவ மாரியம்மனை தந்தப் பல்லக்கில் ஏற்றி வெளியூருக்கு வழியனுப்பி வைத்தனர். இதனைத் தூக்கி வந்த அரச காவலர்கள் சமயபுரம் வந்ததும் தந்தப் பல்லக்கை தரையில் இறக்கி பசி, தாகம் தீர்த்துக் கொண்டனர்.

மீண்டும் பல்லக்கைத் தூக்க முயற்சித்தபோது அதை ஒரு அங்குலம் கூட நகர்த்த முடியவில்லை. எனவே உக்கிரம் தீர்க்க மாரியம்மன் விக்கிரமபுரத்தில் அதாவது தற்போது சமயபுரத்தில் வீற்றுள்ளார் என்று நினைத்தவர்கள், பல்லக்கை அப்படியே விட்டுச் சென்றார்கள். சமயபுரம் மாரியம்மன் இன்றுவரை அவ்விடத்தில் இருந்து அற்புதங்கள் நிகழ்த்தி வருகிறாள் என்பது நம்பிக்கை.

இத்தொடரில் ஓ.ஏ.கே.சுந்தர், பிரவீணா, ஆனந்த், மோகன் வைத்தியா, டாக்டர் ஷர்மிளா, ராஜசேகர், மீரா கிருஷ்ணன், சஞ்சய், நந்து ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இசை : சரத், பாடல் : கவிஞர் முத்துலிங்கம், பாடியவர் : சித்ரா, திரைக்கதை, உரையாடல் : கே.பி. அறிவானந்தம், இயக்கம் : ஆர்.கோபிநாத்.

இத்தொடர் வெள்ளிக்கிழமைதோறும் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.


நன்றி: தினமணி

aanaa
27th November 2010, 09:28 PM
ஜெய் அனுமான்


ஸ்ரீராமனின் பக்தனான வீர அனுமனின் வாழ்க்கை வரலாற்றை கூறும் புராணத் தொடர் ஜெய் அனுமான். இலங்கையை அழிக்க குலகுரு சுக்ராச்சாரியார் உருவாக்கிய மூர்காசூரனிடமிருந்து, இலங்கையை காப்பாற்றும் ஜெய் அனுமானின் வீர, தீர செயல்கள் தொடராகியிருக்கிறது.

திங்கள் முதல் வியாழன் வரை தினமும் 6 மணிக்கு மெகா டிவியில் இந்த தொடர் ஒளிபரப்பாகிறது.

நிகழ்ச்சியின் போது கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில் எழுதி அனுப்பும் நேயர்களுக்கு தங்ககாசு பரிசும் உண்டு.


நன்றி: தினதந்தி

aanaa
27th November 2010, 09:29 PM
காதலிக்க நேரமில்லை


தகவல் தொடர்பு வேலை செய்யும் இரண்டு நண்பர்கள். நடுவே ஒரு அழகான பெண். அதில் ஒரு நண்பன் அவள் மீது காதல் கொள்கிறான். இன்னொரு நண்பன் வஞ்சனையில்லாது அவளுக்கு உதவுகிறான். இந்த உதவியில் பல உபத்திரவங்கள் வருகின்றன. முதல் நண்பனின் காதல் என்ன ஆயிற்று என்பதே சூர்யா பாலகுமாரன் இயக்கியிருக்கும் `காதலிக்க நேரமில்லை' டெலிபிலிமின் கதை.

நகர்ப்புறத்து இளைஞர்களின் குதியல் கதையாக்கப்பட் டிருக்கிறது. ஒரு புதிய, அதிகம் பேசப்படாத வாழ்க்கை பேசப்பட்டிருக்கிறது. படிப்பும் திறமையும் இருக்கின்றன. ஆனால் பக்குவப்படவில்லை என்பது காட்டப்படுகிறது. இரு நண்பர்களாக ப்ரவீன், சரத் நடித்திருக்கிறார்கள். காதல் பெண்ணாக ப்ரியா.

கதை: சிவா. கேமரா: ஈஸ்வரன். இசை: சத்யன் மகாலிங்கம். பாடல்கள்: சிம்மன், சூர்யா பாலகுமாரன். திரைக்கதை, வசனம், இயக்கம்: சூர்யா பாலகுமாரன். இவர் பிரபல எழுத்தாளர் பாலகுமாரனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் தனியார் சேனலில் இந்த டெலிபிலிம் ஒளிபரப்பாகிறது.நன்றி: தினதந்தி

aanaa
27th November 2010, 09:31 PM
விளக்கு வச்ச நேரத்திலே..!திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 9 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் `விளக்கு வச்ச நேரத்திலே தொடர் 175 எபிசோடை தாண்டி தொடர்ந்து கொண்டிருக்கிறது.

மனநல சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து வரப் படுகிறான், செல்லத்துரை. அவன் பெயரில் இருக்கும் திரண்ட சொத்துக்கு ஆசைப்படும் அவன் தாய்மாமாவோ அவனை கொல்ல ரவுடிகளை அனுப்புகிறார்.

செல்லத்துரை போலவே அச்சுஅசலாக இருக்கும் ஜானி கண்ணில் பட்ட பெண்களை தன் காதல் பார்வையில் வீழ்த்தி அவர்களை வெளிநாட்டுக்கு விற்கும் `பிம்ப்' வேலையை செய்து கொண்டிருந்தான். இந்த ஜானியின் கண்ணில் இப்போது படுகிறான், அவன் போலவே உருவ ஒற்றுமையுடன் இருக்கும் செல்லத்துரை. அவன் குடும்பபின்னணி பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ளும் ஜானி, செல்லத்துரையின் இடத்துக்கு வர விரும்புகிறான். இதற்குள் தாய்மாமா அனுப்பிய ரவுடிகள் செல்லத்துரையை கடத்தி விட, அது ஜானிக்கு வசதியாகி விடுகிறது.

செல்லத்துரையின் வீட்டுக்கு வரும் ஜானி மீது யாருக்கும் பெரிய அளவில் சந்தேகம் எழ வில்லை. இது ஜானிக்கு வசதியாகி விடுகிறது. சொத்தை கொள்ளையடித்து விட்டு தப்பிச் செல்லும் தருணத்துக்காக காத்திருக்கிறான்.

இதற்கிடையே வந்திருப்பது செல்லத்துரை அல்ல என்பதாக ஒரு சந்தேகம் பிரதாப்புக்கு ஏற்படுகிறது. செல்லத்துரையின் மனைவி பவித்ராவின் நல்வாழ்வு ஒன்றையே மனதில் கொண்டு வாழ்பவன் பிரதாப். அவன் தன்னை சந்தேகிப்பது ஜானிக்கும் தெரிகிறது. அவன் பிரதாப்பிடம் இருந்து தப்பினானா? கடத்தப்பட்ட ஒரிஜினல் செல்லத்துரை என்னஆனான்? ஏற்கனவே ஜானியால் தற்கொலை செய்துகொண்ட சாவித்திரியின் மரணம் இப்போது ஜானியின் தலைக்கு இன்னொரு கத்தியாக வந்து கொண்டிருக்க, திருப்பங்களுடன் தொடர்கிறது தொடர் என்கிறார், இயக்குனர் சி.ரங்கநாதன்.

தொடரில் பவித்ராவாக சுஜிதா, பிரதாப்பாக சஞ்சீவ் நடிக்க, செல்லத்துரை, ஜானி என இரு வேடத்தில் கவுசிக் நடிக் கிறார். மற்றும் கலாரஞ்சனி, சிவன் சீனிவாசன், அனுராதா கிருஷ்ணமூர்த்தி, இளவரசன், நித்யா, `தேனி'ராஜேஷ், `ஊர்வம்பு' லட்சுமி , பயில்வான் ரங்கநாதன், ஜி.ஆர். ரவிச்சந்திரன், மோகன் வைத்யா நடிக்கிறார்கள்.

கே.பாக்யராஜ் கதை, வசனம் எழுத, இயக்கம்: சி.ரங்கநாதன். எவர்ஸ்மைல் நிறுவனத்துக்காக தயாரிப்பு ஒருங்கிணைப்பு ஈ.ராம்தாஸ்.


நன்றி: தினதந்தி

aanaa
27th November 2010, 09:32 PM
இதயம் தொட்ட இரட்டையர்கள்


இரட்டைக் குழந்தைகள் எப்போதுமே ஆச்சரியம். ஒரேசாயலில் இருந்து கொண்டு பெற்றவர்களைக் கூட பலநேரங்களில் குழப்பி விடுவார்கள்.

இரட்டைக் குழந்தைகளிடம் உள்ள உணர்வுபூர்வ வித்தியாசங்கள் இன்னமும் பிரமிக்க வைப்பதாக இருக்கும். பல இரட்டையர்கள் இருவரும் ஆணாகவோ, அல்லது பெண்ணாகவோ இருப்பார்கள். அபூர்வமாக ஒரு ஆண்- ஒரு பெண் என்ற விகிதத்திலும் இருப்பார்கள். பிறந்ததும் வீட்டையும் வளரவளர சுற்றுவட்டாரத்தையும் தங்கள் ஒரேமாதிரியான செயல்களால் ஆச்சரியப்படுத்தும் இவர்கள் பற்றிய சுவாரசியக்கதைகள் திரைப்படங்களாகவும் வந்திருக்கின்றன.

இப்படி ஒரே சாயலில் அமைந்த 30 இரட்டையர்களை 6 முதல் 16 வயது வரை தேடிப்பிடித்து வசந்த் டிவியில் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியே `இதயம் தொட்ட இரட்டையர்கள்'. சென்னையின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இந்த இரட்டையர்கள் தங்களையும் சுற்றுப்புறத்தையும் புரிந்து கொண்டு எப்படி தங்கள்வாழ்க்கையை எதிர்கொள்கிறார்கள், ஒருவருக்கு நேரிடும் உணர்வு இன்னொருவரை எந்த விதத்தில் பாதிக்கும் என்பது உள்ளிட்ட பல விஷயங்களை இந்த நிகழ்ச்சியில் சுவாரசியத் தொகுப்பாக தருகிறார்கள்.

வசந்த் டிவியில் ஞாயிறுதோறும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கும் நிகழ்ச்சி இது.


நன்றி: தினதந்தி

aanaa
27th November 2010, 09:33 PM
சொல்லத் துடிக்குது மனசு


ஜி தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ``சொல்லத் துடிக்குது மனசு'' நிகழ்ச்சி, 75-வது எபிசோடை எட்டியிருக்கிறது.

`குடும்பச்சொத்து 9 ஏக்கர் நிலத்தை விற்று எங்கள் பங்கினை கொடு' என அண்ணனிடம் வாதாடும் தம்பி, தங்கைகள். மனைவியின் நகைகளை அடமானம் வைத்து விட்ட கணவன், நகைகளை மீட்டு தந்தால் மட்டுமே சேர்ந்து வாழ்வேன் எனக் கூறும் மனைவி.

மன நலம் பாதிக்கப்பட்ட மனைவி, டி.பி.யால் பாதிக்கப் பட்டுள்ள கணவன், பாட்டியிடம் வளரும் அவர்களுடைய குழந்தைகள், இவர்கள் ஒன்று இணையும் காலம் எப்போது வரும்? தன் னுடைய ஊரில் கணவன் வந்து தங்க வேண்டும் என எதிர்பார்க்கும் மனைவி, அந்த மாதிரி செய்ய விருப்பப்படாத கணவன், இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என ஆசைப்படும் அவர்களின் குழந்தைகள். இவர்கள் தங்கள் வாழ்க்கையை பகிர்ந்து கொள்வதை `சொல்லத் துடிக்குது மனசு' நிகழ்ச்சியில் காணலாம்.


நன்றி: தினதந்தி

aanaa
27th November 2010, 09:35 PM
மனதை அள்ளும் மழலைகலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஏவி.எம்.மின் தொடர், உறவுக்கு கைகொடுப்போம். இந்த தொடரில் மூன்று வயதேயான குழந்தை தெய்வநாயகி தன் குறும்பான நடிப்பால் பார்ப்பவர்கள் அத்தனைபேர் மனதையும் அள்ளிக் கொள்கிறாள். கதைக்குள் இந்தக்குழந்தையின் வருகை புதிய திருப்பத்துக்கு வழிவகுத்திருக்கிறது.

பெரியண்ணா என்று அனைவராலும் பாசத்தோடு அழைக்கப்படுபவர் ஜோதிகிருஷ்ணா. தன் தாயின் விருப்பப்படி தன் தம்பிகளுடன் ஒற்றுமையாக வாழவேண்டும் என நினைக்கிறார். ஆனால், அவரது இரண்டாவது தம்பி கோகுலகிருஷ்ணா, தன் மைத்துனரின் பேச்சைக்கேட்டு, குடும்பத்திலிருந்து தனியாக பிரிந்து சென்று விடுகிறான். அவனை சமாதானப்படுத்தி மீண்டும் தங்கள் வீட்டிற்கு அழைத்துவர முயற்சிக்கிறார் ஜோதிகிருஷ்ணா.

இந்நிலையில் ஜோதிகிருஷ்ணாவுக்கும், ஜானகிக்கும் அழகான பெண்குழந்தை பிறக்கிறது. அதே நேரத்தில் அவனது தம்பி ராதாகிருஷ்ணனின் மனைவி, மதுவுக்கு குழந்தை இறந்தே பிறக்க, மதுவைக் காப்பாற்றுவதற்காக தன் குழந்தையை விட்டுக் கொடுக்கிறாள் ஜானகி. மதுவும் தான் பெற்ற குழந்தை என நினைத்து அதை வளர்த்து வருகிறாள்.

அக்குழந்தை, ஜோதிகிருஷ்ணாவின் தாயைப் போன்றே குணமுடையதாகவும், சில அபூர்வ சக்திகளுடனும் திகழ, தன் தாயே மீண்டும் வந்து பிறந்துவிட்டதாக அனைவரும் மகிழ்கிறார் கள்.

இன்னொரு புறம் டாக்டர் சக்தியும், மவுலியும் பிரிந்து வாழ, அவர்களை இணைப்பதற்காக வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார் மவுலியின் தந்தை.

குழந்தை தெய்வநாயகிக்கு மூன்று வயது ஆகும் போது, அதனுடைய அபூர்வத் திறமைகளைக் கண்டு, அதை ஒரு தெய்வகுழந்தையாகவே நினைத்து, அனைவரும் சந்தோஷமாகிறார்கள். அதைக்கண்டு கோபமடையும் எதிரி தமயந்தி, அவர்களின் சந்தோஷத்தைக் கெடுக்க நினைத்து குழந்தையை கடத்தி விடுகிறாள்.

இந்தக் குழந்தை தப்பித்து மீண்டும் எவ்வாறு வீடு வந்து சேர்கிறது? கோகுலகிருஷ்ணனை எவ்வாறு குடும்பத்தோடு இணைத்து வைத்தது? சக்தியும், மவுலியும் மீண்டும் இணைந்தார்களா? மவுலியின் தந்தை மீண்டும் வீட்டுக்குத் திரும்பினாரா? போன்ற கேள்விகளுக்கு விறுவிறுப்பாகவும், நகைச்சுவையோடும் கூடிய திரைக்கதை விடை தருகிறது. தொடரில் வியாழன் தோறும் பாபாவின் அருளுரையும் கதையோடு இணைந்து வருவது சிறப்பு.

குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் பேபி, யுவீனா பார்தவியின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்படுகிறது. அதைப் புகழ்ந்து ஏவி.எம். நிறுவனத்திற்கு தினமும் ஏராளமான தொலைபேசி அழைப்புகளும், கடிதங்களும் குவிந்து கொண்டு இருக்கின்றன.

[html:454508b5b0]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20101127/Tv00.jpg </div>[/html:454508b5b0]நன்றி: தினதந்தி

aanaa
3rd December 2010, 04:07 AM
[html:8b1097907a]<div align="center"><object width="640" height="390"><param name="movie" value="http://www.youtube.com/v/0rqMMOh8AY4&rel=0&hl=en_US&feature=player_embedded&version=3"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/0rqMMOh8AY4&rel=0&hl=en_US&feature=player_embedded&version=3" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="640" height="390"></embed></object></div>[/html:8b1097907a]

aanaa
4th December 2010, 07:50 PM
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஜி டிவியில் ஒளிபரப்பாகிறது ஜான்சி ராணி தொடர்.

ஜான்சியை விட்டு வெளியேறிவிட்டதாக போலி நாடகமாடும் மார்ஷல், மாறு வேடத்தில் வந்து குழந்தை ப்ராச்சியை கொன்று விடுகிறான். ப்ராச்சியை கொன்றவனை ஒரு போதும் விடக்கூடாது என்று சூளுரைக்கிறாள் லட்சுமிபாய். மகாராஜா கங்காதரராவ் மாறு வேடத்தில் துப்பறிந்து ப்ராச்சியை கொன்றது மார்ஷல் தான் என்பதை உறுதி செய்கிறார்.

லட்சுமிபாய், தாத்தையா குரு மற்றும் சமர்சிங் ஒரு குழுவாகவும், கங்காதரராவ் ஒரு குழுவாகவும் மார்ஷலை தேடும் போது, ஒற்றன் மூலம் மார்ஷல் கமிஷனர் அலுவலகத்தில் ஒளிந்திருப்பதை அறிந்து மார்ஷலை பின் தொடர்கின்றனர்.

இதை அறியும் மார்ஷல் அருகிலிருக்கும் தேவாலயத்தில் தஞ்சம் புகுகிறான். மார்ஷலின் வருகைக்காக காத்திருக்கும் லட்சுமிபாயிடம் மார்ஷல் பிடிபடுகிறான். இருப்பினும் லட்சுமிபாய் மார்ஷலை விடுவிக்க, சமர்சிங் மற்றும் தாத்தையா அதிர்ச்சி அடைகிறார்கள்.

துர்க்கை அம்மனுக்கு பூஜை செய்து கொண்டிருக்கும் கங்கா தரராவின் காலில் விழுந்து மார்ஷல் தன்னை காப்பாற்றும்படி மன்றாடுகிறான். அச்சமயம் புரட்சிப் பெண் தன் படையுடன் வந்து மார்ஷலை வெட்டி சாய்த்து விடுகிறாள். புரட்சிப்பெண்ணாக வந்து மார்ஷலின் கதையை முடித்தவர் மகாராணி என்று அறியும் கங் காதரராவ் பெருத்த அதிர்ச்சிக்குள்ளாகிறார்.

இந்நிலையில் ஆங்கிலேய அதிகாரிகள் புரட்சிப் பெண் மற்றும் சமர்சிங் ஆகியோரை ஒப்படைக்க வேண்டும் என்றும், தவறினால் ஜான்சியின் அதிகாரத்தை தாங்கள் பறித்துக் கொள்வோம் என்றும் நிபந்தனை விதிக்க, கங்காதரராவ் சங்கடத்துக்குள்ளாகிறார். பரபரப்பான இந்த சூழ்நிலையில் கங்காதரராவ் எடுத்த முடிவு என்ன?


நன்றி: தினதந்தி

aanaa
4th December 2010, 07:53 PM
பாண்டியராஜன் இரட்டை வேடத்தில் நடிக்கும் `மாமா மாப்ளே'


ஞாயிறுதோறும் காலை 9.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் புதிய காமெடித்தொடர் `மாமா மாப்ளே'. இந்த தொடரின் மூலம் நடிகர் பாண்டியராஜன் சின்னத்திரையிலும் கால் பதிக்கிறார்.

`சின்னபாப்பா பெரிய பாப்பா' என்ற நகைச்சுவைத்தொடர் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமான எஸ்.என்.சக்திவேல் இந்த தொடரை இயக்குகிறார்.

முதல் தொடரிலேயே நடிகர் பாண்டியராஜன் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். மலேசிய தொழிலதிபராகவும், சினிமாவில் துணை நடிகராகவும் இரு வேடங்களிலுமே நடிப்பில் அதிரிபுதிரி பண்ணுகிறார்.

"தங்கள் கோடீசுவர பெண்ணை மலேசியத் தொழிலதிபருக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்கிறார் மோகன்ராம். அதற்காக மலேசியாவில் இருந்து பெண் பார்க்கவரும் பாண்டியராஜனை கடத்தி விடுகிறார், ஒரு கார் டிரைவர். அதற்குக் காரணம் சினிமாவில் துணை நடிகராக இருக்கும் பாண்டியராஜனும், இந்த கடத்தல் டிரைவரும் நண்பர்கள்.

பிறகென்ன...கோடீசுவர பாண்டிய ராஜனாக துணை நடிகர் பாண்டியராஜன் மாறுகிறார். கோடீசுவரக் குடும்பத்தின் மருமகனாகும் சமயத்தில் மலேசிய பாண்டியராஜன் துணை நடிகர் பாண்டியராஜனை சந்திக்கிறார்.

இப்போது கோடீசுவர குடும்பத்தின் மருமகனாகப் போவது மலேசிய பாண்டியராஜனா? துணை நடிகர் பாண்டிய ராஜனா? நகைச்சுவைக்குப் பஞ்சம் இல்லாத இந்த தொடர் முழுக்க ரசிகர்கள் சிரித்துக்கொண்டே இருக்கலாம்'' என்கிறார், டைரக்டர் எஸ்.என்.சக்திவேல். தயாரிப்பு: `விஷன்டைம்' வைதேகி ராமமூர்த்தி.

தொடரின் நட்சத்திரங்கள்: பாண்டியராஜன், கல்பனா, சோபனா, ஐஸ்வரியா, மோகன்ராம், `அல்வா' வாசு, பயில்வான் ரங்கநாதன், நெல்லை சிவா, பாலாஜி, `சிசர்'மனோகர்.[html:bcc86a342d]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20101204/TV02.jpg</div>[/html:bcc86a342d]

நன்றி: தினதந்தி

aanaa
4th December 2010, 08:03 PM
கர்ணன்
ஞாயிறு தோறும் காலை 9 மணிக்கு பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புராணத் தொடர், கர்ணன். அவரது பிறப்பு பற்றிய
காட்சிகள் இந்த வாரம் இடம் பெறுகின்றன.

குந்தியை கந்தர்வ மணம் புரிந்தார் சூரியதேவன். இதனால் கர்ப்பமுற்ற குந்தி யாருக்கும் தெரியாமல், ஒரு ஆசிரமத்தில் கர்ப்பிணியாக அடைக்கலமானாள். குந்திக்கு கவச குண்டலங்களோடு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தனக்குப் பிறந்த குழந்தையை மறைப்பதற்கு முடிவெடுத்த குந்தி, அதனை ஒரு பெட்டியில் வைத்து ஆற்றில் விட்டாள். அந்த பெட்டியில் இருந்த குழந்தையை அதிரதன் எனும் திருத ராஷ்டிரனின் தேரோட்டி கண்டெடுத்து, கர்ணன் என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தார்.

குழந்தையை ஆற்றில் விட்ட குந்தி மீண்டும் அரண்மனைக்கு திரும்பி தனது தந்தை ஏற்பாடு செய்த சுயம்வரத்தில் கலந்து கொள்கிறாள்.

நன்றி: தினதந்தி

Harihalan
9th December 2010, 11:07 PM
மானாட மயிலாட பாகம் 06
05/12/10 முதல் ஆரம்பம்.புதிய நடுவர்கள்,புதிய அரங்கம்,புதிய போட்டியாளர்கள் என இம்முறை சற்று மாறுபட்ட அறிவிப்புடன் நிகழ்ச்சி ஆரம்பித்து விட்டது.நடுவர்களாக கலா மாஸ்டருடன் சுதா சந்திரன்(மயூரி)அவர்களும் நடிகை மும்தாஜ் அவர்களும் கலந்து கொள்ள முதலாவது நாளில் 8 பெண் போட்டியாளர்கள் மட்டும் நடனமாடினர்.ஓரிருவரைத் தவிர எல்லோருமே புது முகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மீதி 8 ஆண் போட்டியாளர்கள் மற்றும் யாருக்கு யார் ஜோடி போன்ற விபரங்கள் வரும் வாரங்களில்தான் தெரியும்,

aanaa
11th December 2010, 07:32 PM
[tscii:bb5aac5361]
மனதை நெகிழ்த்திய அபிராமி


எப்போதுமே நிறைவுவிழா என்பது நினைவில் வைக்கிற மாதிரி இருக்கும். கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `அபிராமி' தொடரின் நிறைவுநாளுக்கான படப்பிடிப்பு சென்னையை அடுத்த ராமாவரத்தில் நடந்தபோது, நிறைவுநாள் உணர்ச்சிக் கொந்தளிப்பு நாளாகவும் அமைந்து விட்டது.

நடிகை கவுதமி மூன்று வேடங்களில் நடித்த இந்த தொடரின் கடைசி நாள் படப்பிடிப்பு என்பதால் தொடரில் நடித்த பல நட்சத்திரங்கள் அங்கே ஆஜர். கவுதமிக்கும் சங்கீதாபாலனுக்குமான ஆக்ரோஷ காட்சியுடன் படப்பிடிப்பு முடிந்தபோது இரவு மணி பத்தரை.

தொடரின் தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன், அவர் மனைவி நல்லம்மை ராமநாதன், மகள் மீனாட்சி பெரிய கருப்பன், பேரக் குழந்தைகள் அண்ணாமலை, மீனாட்சி என தயாரிப்பு தரப்பிலும் மொத்த ïனிட்டையும் உற்சாகப்படுத்த முன்னரே வந்திருந்தார்கள்.

படப்பிடிப்பு முடிந்ததும் முதலில் கவுதமி தான் பேசத்தொடங்கினார். "இந்த தொடரில் எல்லாரும் ஒரே குடும்பமாக உணர்ந்தோம். அதனால் மறுபடியும் இதே மாதிரியான வாய்ப்புக்களில் நாம் இணைவோம். அந்த நம்பிக்கையுடன் இப்போது விடை பெறுவோம்'' என்றார்.

"சீரியல் என்றாலே சிக்கனம் பார்ப்பார்கள். ஆனால் தொடங்கியநாள் முதல் இன்றைய தினம் வரை படப்பிடிப்புக்கு என்ன தேவையோ அதை அப்படியே தயாரிப்பாளர் கொடுத்தார். சீரியலின் வெற்றியுடன் எங்கள் மீதான இந்த நம்பிக்கைக்கும் கொடுத்து வைத்திருக்கிறோம்'' என்றார் தொடரின் இயக்குனர் மதிவாணன். "ஒரே குடும்பமாக இணைந்த இந்த தொடர் உறவு ஒருபோதும் மனதை விட்டு அகலாது...'' இப்படிச்சொன்னநேரத்தில் அவர் கண்களில் கண்ணீர். அதைப்பார்த்த மற்ற டெக்னீஷியன்கள், நட்சத்திரங்களும் கலங்கினார்கள்.

"மதியும் ஜோதியும் என்னிடம் கதை சொல்லுவார்கள். அதற்குப்பிறகு அவர்கள்அதை எப்படி எடுக் கிறார்கள் என்றுகூட நான் போய்ப் பார்த்ததில்லை. என் நம்பிக்கையை அவர்கள் மேல் வைத்தேன். அவர்கள் அந்த நம்பிக்கையை தங்கள் உண்மையான உழைப்பில் காட்டினார்கள்...'' இப்படி புகழாரம் சூட்டிய தயாரிப்பாளர் `அபிராமி'ராமநாதன், "மூன்று மாதத்திற்குள் மீண்டும் எங்கள் தயாரிப்பில் நீங்கள் இருப்பீர்கள்'' என்றபோது பலர் கண்களில் ஆனந்த நீரூற்று.

எல்லாரும் விடைபெற்றுக் கொள்ளத் தொடங்கியநேரத்தில் கவுதமியிடம், "அபிராமியாக வாழ்ந்த உணர்வை சொல்லுங்களேன்'' என்றோம்.

கவுதமி சொன்னார்: "தன்னம்பிக்கையும் போராட்ட குணமும் இருந்தால் ஒரு பெண் தன் முயற்சியின்இலக்கை அடைந்தே தீருவாள். இப்படி பெண்களின் தன்னம்பிக்கை பாத்திரமாக இருந்த இந்த அபிராமி கேரக்டர் மூலம் இன்றைய பெண்களின் விடாமுயற்சிக்கு நானும் காரணமாக இருந்திருப்பதில் எனக்கு பெருமையே.''நன்றி: தினதந்தி [/tscii:bb5aac5361]

aanaa
11th December 2010, 07:33 PM
சரணம் ஐயப்பாவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புராணத்தொடர், சரணம் ஐயப்பா.

சபரிமலை ஐயப்பனின் அற்புதங்களைச் சொல்லும் இந்தத் தொடரில் சுவாமி ஐயப்பனாக நடிப்பவர் கவுசிக் பாபு. இவர் ஏற்கெனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான சுவாமி ஐயப்பன் தொடரிலும் ஐயப்பனாக நடித்தவர்.

பந்தள மகாராஜாவாக தேவன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை மீனா குமாரி ராணியாகவும், பழம் பெரும் நடிகை சுகுமாரி ஐயப்பனுக்கு பாட்டியாகவும் நடித்துள்ளனர்.

இயக்கம்: அன்ஸர்கான்.

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6 மணிக்கு ``சரணம் ஐயப்பா'' தொடரை காணலாம்.நன்றி: தினதந்தி

aanaa
11th December 2010, 07:34 PM
சிவனம்மெகா டிவியில் "சிவனம்'' என்ற புதிய ஆன்மிக தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. தீய சக்திகளுக்கும், ஆன்மிக சக்திக்கும் இடையே நடைபெறும் போராட்டமே இத்தொடர்.

ஸ்ரீயோக அமிர்தா டெலிவிஷன் வழங்கும் இந்தத் தொடரை சதாவல்லி ரமேஷ் தயாரித்துள்ளார்.

ஸ்ரீவித்யா, ஷில்பா, டாக்டர் ஷர்மிளா, சரவணன், பரத்கல்யாண், வசந்தா, சிவசக்தி நடராஜன் உள்ளிட்ட பலர் இத்தொடரில் நடித்துள்ளனர்.

இயக்கம்: பி.என்.சி.கிருஷ்ணா.

வெள்ளி மற்றும் சனிக்கிழமை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடரில் சிவபெருமானின் பெருமைகள் சுவாரஸ்ய கிளைக் கதைகளுடன் இடம் பிடித்திருக்கிறது.


நன்றி: தினதந்தி

aanaa
11th December 2010, 07:35 PM
செல்லமே

திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் `செல்லமே.'

உயிருக்கு உயிரான மனைவி முத்தழகியை பிரிந்து சினேகாவின் வசிய வலையில் சிக்கித் தவிக்கிறார் செல்லம்மாவின் அண்ணன் கடற்கரை. அவரை எப்படியாவது மீட்டு குடும்பத்துடன் சேர்க்க படாதபாடு படுகிறாள் செல்லம்மா.

இதனால் அண்ணன் கடற்கரையும், தங்கை செல்லம்மாவும் நேருக்கு நேர் மோதிக்கொள்கிறார்கள். கடற்கரையின் முயற்சிகள் ஒவ்வொன்றையும் தடுத்து அவரை நிலைகுலையச் செய்கிறாள் செல்லம்மா. அதே நேரம் தன் அண்ணியான முத்தழகியை பாதுகாத்து உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல உதவுகிறாள்.

இதற்கிடையே கொடூர இளைஞர்களால் சீரழிக் கப்பட்ட அஞ்சலிக்கும், வாசுவுக்கும் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன. இதை செல்லம்மாவே முன்னின்று செய்கிறாள். ஆனால் தாலி கட்டும் நேரத்தில் எல்லோரையும் திடுக்கிட வைக்கும் பரபரப்பான சம்பவம் நிகழ்கிறது. திருமணத்திற்கு வந்திருந்த அத்தனை பேரும் "அய்யோ'' என்று அலறித்துடித்தபடி சிதறி ஓடுகிறார்கள். அப்படி என்ன தான் நடந்தது அந்த திருமணத்தில்?

தொடரின் நட்சத்திரங்கள்: ராதிகா சரத்குமார், ராதாரவி, டெல்லிகணேஷ், மாளவிகா, கன்யா, வரலட்சுமி, மகாலட்சுமி, நீலிமாராணி, அபிஷேக், ராஜ்காந்த், விச்சு, நந்தகுமார்.

திரைக்கதை: ராஜ்பிரபு. ஒளிப்பதிவு: காசி. இயக்கம்: சி.ஜே.பாஸ்கர். இவர் ராடன் நிறுவனத்தில் ஏற்கனவே சித்தி, அண்ணாமலை தொடர்களை இயக்கியவர்.

கிரியேட்டிவ் ஹெட்: ராதிகா சரத்குமார். தயாரிப்பு: ராடன் நிறுவனம்.நன்றி: தினதந்தி

aanaa
19th December 2010, 04:57 AM
புதிய அரங்கில் தமிழகத்தின் சாம்பியன்ஸ்

தமிழர்கள் உலகெங்கும் தங்கள் திறமைகளால் தனி முத்திரையை பதித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் பலபேர், தங்களுக்குள் பல திறமைகளை தேக்கி வைத்துக் கொண்டு வாய்ப்புக்கு காத்திருப்பவர்களாக இருக்கிறார்கள். அப்படி ஒவ்வொரு மனிதனுக்குள்ளும், ஒளிந்து கொண்டிருக்கும் அசாத்திய திறமைகளை வெளிப்படுத்த ஒரு சரியான களத்தினை ஏற்படுத்தித் தருகிறது பாலிமர் தொலைக்காட்சியின் `தமிழகத்தின் சாம்பியன்ஸ்.

பிரமாண்டமான புதிய அரங்கத்தில் நடிகர் ஷக்தி, நடிகை சுஜா ஆகியோர் நடுவர்களாக பங்கு பெறும் இந்த நிகழ்ச்சியை ஆனந்தக்கண்ணன் தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சியில் பங்கு பெறும் கலைஞர்களின் சாகசங்கள், இதுவரை தமிழ் ரசிகர்கள் கண்டிராததாகவும் ஆச்சரியப்பட வைக்கக்கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஞாயிறுதோறும் இரவு 8 மணிக்கு பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது இந்த சாகச நிகழ்ச்சித் தொடர்.


நன்றி: தினதந்தி

aanaa
19th December 2010, 04:57 AM
சின்ன மருமகள்

`ஜி' டிவியில் வரவிருக்கும் புதிய மெகா தொடர், `ராதிகா'.

சேஷாத்ரி மற்றும் தேவகி தம்பதியரின் மகள்களான ராதிகாவும், விசாகாவும் பெரியவர்களானதும் எதிரிகளாக மாறுகிறார்கள். அதற்கான சூழ்நிலை என்ன? இவர்களின் வாழ்க்கையில் நுழையும் தேவ் என்பவரால் ராதிகாவுக்கு ஏற்படும் பிரச்சினைகள் ஒருவரால் தீர்க்கப்படுகிறது. அவர் யார்? என்பதை மிகவும் சுவாரஸ்யமாக தரும் தொடர் இது.

இந்த புதிய மெகா தொடர் வரும் திங்கள் முதல் ஒளிபரப்பை தொடங்குகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு சின்ன மருமகளை காணலாம்.


மீண்டும் தேவயானி

வெள்ளித் திரையில் மட்டுமல்லாது சின்னத்திரையிலும் தமிழ் ரசிகர்களின் உள்ளம் கவர்ந்தவர் நடிகை தேவயானி. சின்னத்திரையில் `கோலங்கள்' தொடரில் நடித்தபிறகு பெண்களின் அதிபட்ச நேசத்துக்கும் உரியவரானார்.

தேவயானி இப்போது ராஜ் டிவிக்காக `கொடிமுல்லை' என்ற புதிய மெகா தொடரில் நடிக்கிறார்.

ஒரு தாய் மற்றும் மகளின் வாழ்க்கைப் போராட்டத்தை, விறுவிறுப்பான பின்னணியில் எதிர்பாராத திருப்பங்களுடன் சொல்லப்போகும் தொடர் தான் `கொடிமுல்லை'.சுப்ரபாதம்

காலை வேளையில் மனமுருக பிரார்த்தனை செய்து கடவுளை வழிபட்டால் நினைத்த காரியங்களில் வெற்றி கிட்டும். அதற்கான வாய்ப்பை தினந்தோறும் காலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சுப்ரபாதம் நிகழ்ச்சி மூலம் வழங்குகிறது, ஸ்ரீசங்கரா டி.வி.

வாரத்தின் ஏழு நாட்களிலும் ஒவ்வொரு நாளுக்கும் ஏற்றபடி ஒவ்வொரு தெய்வத்தின் அபிஷேகங்கள் ஒளிபரப்பாகிறது.நன்றி: தினதந்தி

aanaa
19th December 2010, 05:02 AM
இதுவரையில் சின்னத்திரையில் வில்லியாக மட்டுமே முகம் காட்டிக் கொண்டிருந்த நடிகை புவனேஸ்வரி, இப்போது சின்னத்திரையின் இயக்குனராக இன்னொரு முகமும் காட்டுகிறார். வசந்த் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் `பூ ஒன்று புயலானது' தொடரின் இயக்குனர் புவனேஸ்வரி தான். தொடருக்கான கதையும் இவர் தான்.

"போராட்ட குணம் கொண்ட பெண்ணின் கதை என்பது தலைப்பைப் பார்த்தாலே தெரிகிறது. அது எந்த மாதிரியான கதை என்று சொல்லலாமே?'' டைரக்டர் புவனேஸ்வரியை கேட்டால்...

"வீட்டுவேலை செய்யப்போன பங்களா வீட்டில் தன் தங்கைக்கு நேர்ந்த பாலியல் கொடுமையை தட்டிக் கேட்கத் துணிகிறாள், அவள் அக்கா. செல்வம், செல்வாக்கு, அதிகாரம் என சகலஆயுதங்கள் பூண்டிருக்கும் அவர்களை நிராயுதபாணியான அக்காவால் எதிர்த்து வெற்றி கொள்ள முடிந்ததா? என்பதே திரைக்கதை. இதில் அக்கா கேரக்டரில் நான் நடிக்கிறேன்'' என்கிறார், புவனேஸ்வரி.


நன்றி: தினதந்தி

aanaa
25th December 2010, 05:14 AM
அன்பாலே அழகான வீடு


விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர் `அன்பாலே அழகான வீடு'.

நான்கு சகோதரிகளின் வாழ்க்கையில் நடக்கும் கதை இது. ஜனார்த்தனன்-ரேவதி தம்பதியருக்கு பூர்ணிமா, ஸ்ருதி, ஆர்த்தி, அருணா என்ற நான்கு மகள்கள். பூர்ணிமா அன்பானவள். ஸ்ருதி அழகும், அறிவும் கலந்த, கூச்ச சுபாவி. அவள் தன் சகோதரி பூர்ணிமா மேல் அன்பும் மரியாதையும் உடையவள். ஆர்த்தி மிகவும் தைரியசாலி. அருணா கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் துறுதுறுப்பான சுட்டிப் பெண். ஸ்ருதி காதல் திருமணம் செய்தவள், பிஸினஸ்மேனான கணவன் மகேஷுடனான சந்தோஷ வாழ்க்கையில் அவளுக்கு இது ஏழாவது மாதம்.

பூர்ணிமாவிற்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. திருமணம் நிச்சயமாகிறது. திருமணத்திற்கு முந்தைய நாள் அவர்கள் அனைவருக்கும் ஓர் பேரதிர்ச்சி காத்திருக்கிறது. அது அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை புரட்டிப்போட்டதா? அவர்களின் பந்தபாசங்கள் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தார்களா? என்பது தொடரில் தொடரும் பரபரப்பு அம்சம்
நன்றி: தினதந்தி

aanaa
25th December 2010, 05:20 AM
மீனாட்சியை காப்பாற்றும் `சக்தி'

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர், `என் பெயர் மீனாட்சி'.

சக்தி மீது அமுதா கொண்டுள்ள ஆழமான காதலையும் அவள் செய்த தியாகத்தையும் கண்டு பெரும் மனக் குழப்பத்திற்கு ஆளாகிறாள் மீனாட்சி. சக்திக்கு தன்னை விட அமுதா தான் பொருத்தமானவள் என்று நினைக்கும் அளவிற்கு சூழ்நிலைகளும், அமுதாவின் சத்தியமும் அவளை நிர்ப்பந்திக்க, யாரிடமும் கூறாமல் சக்தியின் வீட்டை விட்டு கிளம்புகிறான்.

அமுதாவிடம் `மீனாட்சி எங்கே?' என்று சக்தி கேட்க, பதிலுக்கு அமுதா `அவள் என் காதலை புரிந்து கொண்டு விலகி விட்டாள். இனி வர மாட்டாள்' என்க, சக்தி அதிர்ச்சிக்குள்ளாகிறாள்.

பேருந்து நிலையத்தில் கண்ணீருடன் தனித்திருக்கும் மீனாட்சியை பார்க்கும் தேவராஜின் தம்பி சேகர், அவளை ஊரில் இறக்கி விடுவதாக கூறி தன் காரில் ஏற்றிக்கொள்கிறான். ஆனால் அவன் அவளைக் கடத்தும் நோக்கத்தில் தான் அப்படிச் செய்கிறான். உண்மை தெரிந்து தப்பிக்க வழியின்றி கதறும் மீனாட்சியை அவன் தனது பண்ணைத்தோட்டத்தில் அடைத்து வைக்கிறான். அங்கு அவன் மீனாட்சியிடம் தவறாக நடக்க முயல, அங்கே வரும் சக்தி அவளை காப்பாற்றுகிறான்.

தன்னுடைய வாழ்க்கையை அவளோ, அமுதாவோ தீர்மானிக்க வேண்டாம் என்று கடுமையாக அவளை கோபிக்கும் சக்தி, அவளை அவள் அப்பா வீட்டில் விட்டுச் செல்கிறான். சக்தியின் அப்பா `மீனாட்சி எங்கே?' என்று கேட்க, `தாலி கட்டியதிலிருந்தே நிறைய துர்சம்பவங்கள் நடைபெறுவதால் சில பரிகாரங்களை செய்து விட்டு பெண்ணை அனுப்பி வைப்பதாக குருசாமி கூறினார்' என்று சக்தி பொய் சொல்கிறான். சக்தியை சந்திக்கும் மீனாட்சி `வாழ விடு, இல்லை சாக விடு' என்று வேதனையோடு அழ, தன் வாழ்வின் முக்கியமான முடிவினை எடுக்க, தனக்கு ஒரு வாரம் அவகாசம் தருமாறு கூறுகிறான் சக்தி. பரபரப்பாய் தொடர்கிறது தொடர்.

நன்றி: தினதந்தி

aanaa
25th December 2010, 05:21 AM
வித்தியாசமான தொடர்கள்


அரவாணிகளின் வாழ்க்கையை நெஞ்சம் நெகிழும் விதத்தில் தந்த `திக்கற்ற தேவதைகள்' தொடர் வசந்த் டிவியில் வந்தபோது அந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் வரவேற்பு அதிகம். இதைத்தொடர்ந்து குள்ளர்களின் சாகசத்தை வெளிப்
படுத்தும் `நான்கு கில்லாடிகள்' தொடர் வந்தது. சாதனைக் கும் உயரத்துக்கும் சம்பந்தம் இல்லை என்பதை உணர்த்தியது இந்த தொடர்.

இப்போது ஒளிபரப்பாகி வரும் `இதயம் தொட்ட இரட்டையர்கள்' நிகழ்ச்சியில் இரட்டைக் குழந்தைகளின் பிரச்சினைகள் புதிய கோணத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்த தொடர்களின் இயக்குனர் கே.ஜெயமணி, இதுவரை இப்படி வித்தியாசமான 30 தொடர்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் பத்திரிகையாளர் என்பது இவரது இன்னொரு அடையாளம்.

நன்றி: தினதந்தி

aanaa
31st December 2010, 10:48 PM
அன்பாலே அழகான வீடு


விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர் `அன்பாலே அழகான வீடு'.

நான்கு சகோதரிகளின் வாழ்க்கையில் நடக்கும் கதை இது. ஜனார்த்தனன்-ரேவதி தம்பதியருக்கு பூர்ணிமா, ஸ்ருதி, ஆர்த்தி, அருணா என்ற நான்கு மகள்கள். பூர்ணிமா அன்பானவள். ஸ்ருதி அழகும், அறிவும் கலந்த, கூச்ச சுபாவி. அவள் தன் சகோதரி பூர்ணிமா மேல் அன்பும் மரியாதையும் உடையவள். ஆர்த்தி மிகவும் தைரியசாலி. அருணா கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் துறுதுறுப்பான சுட்டிப் பெண். ஸ்ருதி காதல் திருமணம் செய்தவள், பிஸினஸ்மேனான கணவன் மகேஷுடனான சந்தோஷ வாழ்க்கையில் அவளுக்கு இது ஏழாவது மாதம்.

பூர்ணிமாவிற்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. திருமணம் நிச்சயமாகிறது. திருமணத்திற்கு முந்தைய நாள் அவர்கள் அனைவருக்கும் ஓர் பேரதிர்ச்சி காத்திருக்கிறது. அது அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை புரட்டிப்போட்டதா? அவர்களின் பந்தபாசங்கள் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தார்களா? என்பது தொடரில் தொடரும் பரபரப்பு அம்சம்.

[html:81f8066218]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20101225/TV05.jpg</div>[/html:81f8066218]


நன்றி: தினதந்தி

aanaa
31st December 2010, 10:49 PM
கோடியின் குரல்

ஜெயா டிவியில் திங்கள்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி `கோடியின் குரல்'.

மனிதர்கள் தன் ஆழ்மனதிற்குள் எத்தனையோ ரகசியங்களைப் புதைத்து வைத்திருக்கிறார்கள். அந்த ரகசியங்களை பொது இடத்தில் ஒப்புக்கொள்வதற்கு தைரியம் தேவைப்படுகிறது. போட்டியாளர்களையும் அவருடைய ரகசியங்களையும் சுற்றி இந்த நிகழ்ச்சி இயங்குகிறது.

தங்களின் வாழ்க்கை உண்மைகளை ஒத்துக்கொள்கிற தைரியம் இருக்கிற அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பரிசுத் தொகை ஒரு கோடி ரூபாயை வெல்லலாம்.

ஸ்கேன் ரூமில் அமர்கிற போட்டியாளரிடம் கேட்கப்படுகிற 23 கேள்விகளுக்கும் அவர் உண்மையை சொன்னால் அவருக்கு ரூபாய் ஒரு கோடிக்கான காசோலை வழங்கப்படுகிறது.

இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு போட்டியாளர் விளையாட வேண்டும். விளையாட்டின் 6 பகுதிகளையும் அவர் வெற்றியுடன் கடந்தால் இந்த ஒரு கோடி அவருக்கு சொந்தமாகும். ஒவ்வொரு முறையும் அவர் தவறான பதில் சொல்கிற போது அக்கேள்விக்குரிய பணம் ஒரு கோடியிலிருந்து கழிக்கப்படும். இறுதியாக அவர் ஜெயிக்கிற பணத்தை அவர் வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம்.

இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் சின்னத்திரை நடிகர் அஜய். இயக்கம் லாரன்ஸ்.
நன்றி: தினதந்தி

aanaa
31st December 2010, 10:51 PM
மீனாட்சியை காப்பாற்றும் `சக்தி'

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர், `என் பெயர் மீனாட்சி'.

சக்தி மீது அமுதா கொண்டுள்ள ஆழமான காதலையும் அவள் செய்த தியாகத்தையும் கண்டு பெரும் மனக் குழப்பத்திற்கு ஆளாகிறாள் மீனாட்சி. சக்திக்கு தன்னை விட அமுதா தான் பொருத்தமானவள் என்று நினைக்கும் அளவிற்கு சூழ்நிலைகளும், அமுதாவின் சத்தியமும் அவளை நிர்ப்பந்திக்க, யாரிடமும் கூறாமல் சக்தியின் வீட்டை விட்டு கிளம்புகிறான்.

அமுதாவிடம் `மீனாட்சி எங்கே?' என்று சக்தி கேட்க, பதிலுக்கு அமுதா `அவள் என் காதலை புரிந்து கொண்டு விலகி விட்டாள். இனி வர மாட்டாள்' என்க, சக்தி அதிர்ச்சிக்குள்ளாகிறாள்.

பேருந்து நிலையத்தில் கண்ணீருடன் தனித்திருக்கும் மீனாட்சியை பார்க்கும் தேவராஜின் தம்பி சேகர், அவளை ஊரில் இறக்கி விடுவதாக கூறி தன் காரில் ஏற்றிக்கொள்கிறான். ஆனால் அவன் அவளைக் கடத்தும் நோக்கத்தில் தான் அப்படிச் செய்கிறான். உண்மை தெரிந்து தப்பிக்க வழியின்றி கதறும் மீனாட்சியை அவன் தனது பண்ணைத்தோட்டத்தில் அடைத்து வைக்கிறான். அங்கு அவன் மீனாட்சியிடம் தவறாக நடக்க முயல, அங்கே வரும் சக்தி அவளை காப்பாற்றுகிறான்.

தன்னுடைய வாழ்க்கையை அவளோ, அமுதாவோ தீர்மானிக்க வேண்டாம் என்று கடுமையாக அவளை கோபிக்கும் சக்தி, அவளை அவள் அப்பா வீட்டில் விட்டுச் செல்கிறான். சக்தியின் அப்பா `மீனாட்சி எங்கே?' என்று கேட்க, `தாலி கட்டியதிலிருந்தே நிறைய துர்சம்பவங்கள் நடைபெறுவதால் சில பரிகாரங்களை செய்து விட்டு பெண்ணை அனுப்பி வைப்பதாக குருசாமி கூறினார்' என்று சக்தி பொய் சொல்கிறான். சக்தியை சந்திக்கும் மீனாட்சி `வாழ விடு, இல்லை சாக விடு' என்று வேதனையோடு அழ, தன் வாழ்வின் முக்கியமான முடிவினை எடுக்க, தனக்கு ஒரு வாரம் அவகாசம் தருமாறு கூறுகிறான் சக்தி. பரபரப்பாய் தொடர்கிறது தொடர்.


நன்றி: தினதந்தி

aanaa
8th January 2011, 07:50 AM
மவுனம் பேசியதே

மெகா டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் தொடர் `மவுனம் பேசியதே'.

சுப்பையாபிள்ளை-சாரதா தம்பதியருக்கு அஞ்சு, மஞ்சு, பார்வதி என்ற மகள்களும், ஆகாஷ் என்ற மகனும் உள்ளனர். சுப்பையா பிரிண்டிங் பிரஸ் நடத்தி, அதில் வரும் வருமானத்தைக் கொண்டு குடும்பம் நடத்துகிறார். மஞ்சு நர்சாகவும், பார்வதி நிருபராகவும், ஆகாஷ் பிரிண்டிங் பிரஸ்சிலும் வேலை செய்கின்றனர்.

அஞ்சுவுக்கு சுப்பையாபிள்ளையின் நண்பர் ஒருவர் மூலம் அஜய் என்ற நல்ல வேலையில் இருக்கும் வரன் வருகிறது. அஞ்சுவுக்கும், அஜய்யை பிடித்துப் போக, இருவீட்டாரும் தட்டு மாற்றும் நேரத்தில் அஞ்சுவின் தம்பியான ஆகாஷ், பணக்கார பெண்ணான ரேவதியை மணந்து கொண்டு மாலையும், கழுத்துமாக வந்து நிற்கிறான்.


அதிர்ச்சியடைந்த மாப்பிள்ளை வீட்டார் திருமணப்பேச்சை அத்துடன் முறித்துக்கொண்டு கிளம்புகிறார்கள்.

ஆகாஷ், ரேவதி என்ற பணக்கார வீட்டில் பெண்ணை முறைப்படி திருமணம் செய்து கொண்டதாக விளக்கம் கொடுத்தாலும், சுப்பையாபிள்ளை அதை ஏற்காமல் அவனை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்.

பணக்கார வீட்டுமாப்பிள்ளையாக போகும் ஆகாஷ், அங்கே தனக்கு கிடைக்கும் அவமரியாதைகளால் அங்கிருந்து கிளம்பி தன் வீட்டுக்கு வந்து விடுகிறான். அவன் வாழ்க்கை என்னாகிறது.

நிச்சயதார்த்தம் வரை வந்து அவனால் நின்றுபோன அஞ்சு-அஜய் திருமணம் என்னாயிற்று?

தொடரை சோலைராஜா இயக்கி இருக்கிறார்.

`சேது'அபிதா, மிருதுளா, அஜய்சாதனா, ஜெயந்த், விஜய்பாபு, ஸ்ரீநிவாஸ் தொடரின் நட்சத்திரங்கள்.
நன்றி: தினதந்தி

aanaa
8th January 2011, 07:53 AM
பூவா? தலையா?


சினிமாத் திரையில் பிரபலமான 12 கதாநாயகன், கதாநாயகிகள் கலந்து கொண்டு ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என்று அமர்க்களப்படுத்துகிற ஒரு நிகழ்ச்சிதான் `பூவா? தலையா?'.

அலமுஸ் வீடியோ ஏ.எஸ்.வெங்கடாசலத்தின் தயாரிப்பு மேற்பார்வையில் உருவான இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சுப்பு பஞ்சு, சாம்ஸ், ஆதிஷ், பிரேம், சஞ்சீவ், கணேஷ் இவர்களுடன் பிரபல கதாநாயகிகள் கீர்த்தி சாவ்லா, மோனிகா, சுஜா, ஆர்த்தி கணேஷ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இரண்டு குழுக்களாகப் பிரிந்து எதிர் எதிர் திசையில் ஆடல், பாடல், வினா விடைகள் மற்றும் விடுகதைச் சுற்றுக்களில் கலந்து கொண்டு தங்களது முழு திறமையையும் நிரூபிக்கிறார்கள்.


குறிப்பாக நடனச் சுற்றிலும், பாடல் சுற்றிலும் அவர்கள் வெளிப்படுத்தும் திறமை பார்வையாளர்களை பெரிதும் கவரும்.

நடிகர்கள் செந்தில், டெல்லி கணேஷ் இருவரும் நடுவர்களாக பங்கு கொண்டு `பூவா? தலையா?' நிகழ்ச்சி முழுவதையும் கலகலப்பாக்குகிறார்கள் நிகழ்ச்சியின் முடிவில் வெல்பவர்களுக்கு பரிசுகள் உண்டு.

இணை தயாரிப்பை எஸ்.வி.செந்தில்நாதன், கண்ணன் வெ.அடைக்கப்பன் இருவரும் கவனித்துக் கொள்ள, இசை லேகா ரத்னகுமார். எழுத்து-இயக்கம்: இரா.பாண்டியன். தயாரிப்பு: `அலமுஸ் வீடியோ' மீனாள் வெங்கடாசலம்.

பொங்கல் தினத்தில் ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிறது இந்த நிகழ்ச்சி.
நன்றி: தினதந்தி

aanaa
6th February 2011, 11:01 PM
விஸ்வரூபம் எடுக்கும் மாதவி


மனோகரனுக்கு யாருடன் திருமணம் நடக்கும் என்கிற கேள்வியில் பரபரப்பாக சென்று கொண்டிருந்த மாதவி தொடரில், அவனுக்கு அருணாவுடன் திருமணம் நடக்கிறது. இந்நிலையில் இறந்து போனதாக கருதப்பட்ட மாதவி வீடு திரும்பி விட்டாள். அவள் வந்ததும், சாந்தி முகூர்த்த அறையில் இருந்து மனோகரன் வெளியேறி விடுகிறான். அவன் எங்கு போனான் என தெரியாத அருணா அதிர்ந்து போகிறாள்.

இதற்கிடையே யாரும் எதிர்பாராத சூழ்நிலையில் மாதவி வீட்டிற்கு மனோகரன் வருகிறான். இதனால் மனம்நொந்து போகும் அருணாவின் தாய், தன் மகள் இனி மனோகரனுடன் வாழக் கூடாது என்ற முடிவில் அவள் தாலியை கழற்றப்போகிறாள். அப்போது தான் கடந்த காலத்தில் மாதவியும் மனோகரனும் காதலர்கள் என்ற உண்மை தெரியவருகிறது. இதனால் இன்னும் அதிர்ந்த அருணா, ஒரு திடமான முடிவெடுக்கிறாள்.

தன் மகளின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்கிற வெறியில் வாழவந்தான் மனோகரனின் மீது ஆத்திரத்தை வெளிப்படுத்துகிறான். கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களுக்கு வாழவந்தான் தான் காரணம் என மனோகரன் இப்போது அறிகிறான்.

அதே நேரம் மாதவி, யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதும், தங்கபாண்டியனை திருமணம் செய்ததாக அவள் சொன்னது பொய் என்பதும் மனோகரனுக்குத் தெரியவருகிறது. இதனால் அவன் மாதவியை சந்தித்து தங்கள் வாழ்க்கையை தொடர வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறான்.


மனோகரன் மாதவியை நோக்கி போனஅதே நேரத்தில் மாதவியும் அருணாவும் தங்கள் பக்கத்தில் இருந்து ஒரு முடிவை எடுக்கிறார்கள். வெறி கொண்ட வாழவந்தானோ வேறொரு திட்டத்தை போடுகிறான்.

இப்போது மாதவி, மனோகர், அருணா மூவரையும் ஒரே நேர்கோட்டில் வைத்து சுற்றிச்சுழல்கிறது கதைக்களம். அப்போது மாதவி எடுக்கும் விஸ்வரூபம், இன்னொரு கோலங்கள் என்கிற நிலையை எட்டும்'' என்கிறார், இயக்குனர் வி.திருச்செல்வம்.

ஹோம் மீடியா எண்டர்டெயின்மென்ட் பி.லிட் சார்பில் தயாரிப்பு: சுஜாதா விஜயகுமார், விஜயகுமார்.

நட்சத்திரங்கள்: சுபலேகா சுதாகர், சீனிவாசன், சாரா, பாவனா, தேவிப்பிரியா, நளினி, வனிதா, கே.நட்ராஜ், சுரேகா, `கோலங்கள்' துளசி, சோனியா, பாரதி கண்ணன், ரமேஷ், கிரி, கவிதா, ரவிசங்கர், ரம்யா, வைஜெயந்தி, புவனா.

ஒளிப்பதிவு: பி.தியாகராஜன். கதை, திரைக்கதை, இயக்கம்: வி.திருச்செல்வம்

சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது மாதவி தொடர்.

நன்றி: தினதந்தி

aanaa
13th February 2011, 04:18 AM
மகளை காணத்துடிக்கும் அன்னக்கொடி


நடிகை தேவயானி நடிக்கும் கொடிமுல்லை தொடர் எதிர்பாராத சுவாரசியத் திருப்பங்களுடன் பயணிக்கிறது. தற்போது 25-வது எபிசோடை எட்டியிருக்கும் இந்த தொடரில், பாசத்துக்கு ஏங்கும் 60 வயது பெண்மணி அன்னக்கொடி கேரக்டரில் வாழ்ந்து காட்டியிருக்கிறார், தேவயானி.

25 ஆண்டுகளாக ஜெயிலில் வாடும் அன்னக்கொடி கிட்டத்தட்ட ஒரு நடைப்பிணமாகவே உலவி வருகிறாள். அவளது ஒரே பெண்குழந்தை பிறந்ததும் இறந்துபோன நினைவே எப்போதும் அவளை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இந்த சோகம் 25 வருடமாக அவளை தூங்க விட்டதில்லை. அவள் ஜெயிலில் ஒருநாள் கூட தலை சாய்த்துப் படுத்ததில்லை. இரவானால் அப்படியே சுவரோரம் சாய்ந்திருப்பாள். அவ்வளவு தான். அதற்குள் இறந்துபோன தன் குழந்தையின் அழுகுரல் அவள் செவிப்பறையில் மோத, அத்தோடு தூக்கம் பறிபோய் விடும்.


இதோ இன்னும் சில தினங்களில் அன்னக்கொடி விடுதலையாகும் நாள் வருகிறது. அது அவளுக்கும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த விடுதலையை அவள் எதிர்பார்க்கவும் இல்லை. வெளியே போகவும் விரும்பவில்லை. அவளுக்குத் தான் யார் இருக்கிறார்கள்? சொந்தம் என்று சொல்லிக்கொள்ள இருந்த ஒரே மகளும் இல்லை. துயரமே வாழ்க்கையாகி விட்ட அன்னக்கொடிக்கு புதிதாக என்ன சந்தோஷம் வந்து அவள் வாழ்வில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடப்போகிறது?

அப்படித்தான் அன்னக்கொடியும் நினைத்திருந்தாள். ஆனால் கடந்தவாரம் கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வந்த டாக்டர்கள் குழுவுடன் வந்த நர்ஸ் ஒருத்தி அன்னக்கொடியை பார்த்துப்பேசியதும் தான் திருப்பம். அவள் அன்னக்கொடியிடம், `உன் குழந்தை சாகவில்லை...உயிருடன் தான் இருக்கிறாள்' என்ற சந்தோஷ தகவலை சொன்னதும், அன்னக்கொடி முகத்தில் அத்தனை பரவசம். அவளே மறுபடி பிறந்ததுபோல் அவள் காட்டிய அந்த அதீத சந்தோஷம், அதுவரை பேச்சையும் தனக்குள்ளே பூட்டி வைத்திருந்த அன்னக்கொடியை பேச வைக்கிறது. `எங்கே என் குழந்தை?' என்கிறாள் உணர்ச்சி பொங்க. "இருக்கிறாள்.. இப்போது அவள் 25 வயது இளம்பெண்ணாக...'' என்றதும் அந்த வினாடியில் அன்னக்கொடியை பார்த்த மற்ற கைதிகள் அத்தனை பேருமே தங்கள் சொந்த சோகம் மறந்தார்கள். மகிழ்ச்சிப் பிரவாகத்தில் பொங்கிப்பூரித்திருப்பது அன்னக்கொடியின் முகமா என்று அவர்களுக்கு அப்படி ஒரு ஆச்சரியம்.

இப்போது விடுதலை நாள் அன்னக்கொடியின் எதிர்பார்ப்பு நாளாகி விட்டது. அந்த நாள் வந்ததும் திறந்த ஜெயில் கதவைப்போலவே அவளது பாச மனக்கதவும் திறந்து கொண்டது. இதோ இப்போது அவள் தன் சொந்த மகளைப் பார்க்கும் ஆவல் உந்தித்தள்ள `இப்போதே ஊருக்குப் போய் விழுந்து விட மாட்டோமா' என்ற துடிப்பில் பயணப்படுகிறாள்.

மகளை சந்திப்பதும் அப்போது அங்கே நடக்கும் அடுத்த கட்ட நிகழ்வுகளும் அன்னக்கொடி வாழ்வின் அடுத்தகட்ட பரவச அத்தியாயம். தொடரில் அம்மா-பெண் என இரு கேரக்டர்களில் நடித்திருக்கிறார், தேவயானி.

ராஜ் டிவியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் இது.


நன்றி: தினதந்தி

aanaa
13th February 2011, 04:20 AM
``அது இது எது''


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நகைச்சுவை கேம்ஷோ நிகழ்ச்சி ``அது இது எது.'' இந்த நிகழ்ச்சியில் இதுவரை ஏராளமான சினிமா நட்சத்திரங்களும், சின்னத்திரை நடிகர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் இடம்பெறும் பல்வேறு சுற்றுக்கள் மிகவும் வித்தியாசமானவை. இதில் மூன்று பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொள்வார்கள். அவர்களுக்கு தலா 1000 பாயிண்டுகள் முதலிலேயே வழங்கப்பட்டு விடும். அவர்கள் சொல்லும் தவறான பதில்களுக்கு பாயிண்டுகள் குறைக்கப்படும்.

நிகழ்ச்சியின் முதல் சுற்றான `டூப்' ரவுண்டில் ஒரு தொழிலையோ, கலையையோ சார்ந்த மூன்று பேர் பங்கு பெறுவார்கள். அவர்களில் கைதேர்ந்தவர்கள் இரண்டு பேரும் அந்தத் துறைக்கு சம்பந்தமில்லாத ஒருவரும் கலந்து கொள்வார்கள். அந்த மூன்று பேரும் மேடையில் தங்களது தொழிலையோ, கலையையோ செய்து காட்ட வேண்டும்.

அந்த மூன்று பேரில் யார் டூப்ளிகேட் நபர் என்று பஸ்சரை அழுத்தி போட்டியாளர்கள் சொல்ல வேண்டும். அவர்கள் சரியாக பதிலளித்தால் அந்த ஆயிரம் பாயிண்டுகளில் இருந்து எதுவும் குறையாது. தவறாக பதிலளித்தால் பாயிண்டுகள் குறைக்கப்படும்.

இரண்டாவது சுற்றான `சிரிச்சா போச்சு' ரவுண்டில் ஒரு நகைச்சுவையாளர் அந்த மூன்று போட்டியாளர்களையும் சிரிக்க வைக்க வேண்டும். அவர்கள் சிரித்தால் பாயிண்டுகள் அவுட்.

மூன்றாம் சுற்றான `பொய் சொல்லப்போறோம்' ரவுண்டில் ஒவ்வொரு போட்டியாளரும் உண்மையான ஒரு சம்பவத்தைச் சொல்ல வேண்டும். அவர்கள் சொல்லும் கதையில் மூன்று பொய்கள் திணிக்கப்பட்டிருக்கும். அதில் எது பொய் என்று மற்ற போட்டியாளர்கள் கண்டிபிடிக்க வேண்டும். இப்படியாக நிகழ்ச்சி முழுவதுமே நகைச்சுவையுணர்வும், கலகலப்பும் கொண்டது. விஜய் டிவியில் சனிக்கிழமை தோறும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது, இந்த நிகழ்ச்சி.

சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் இன்று கலந்துகொள்ளவிருக்கும் சின்னத்திரை பிரபலங்கள் காவ்யா, தொகுப்பாளினி அர்ச்சனா மற்றும் கோவை பாபு.
நன்றி: தினதந்தி

aanaa
13th February 2011, 04:22 AM
`போலீஸ்' புவனேஸ்வரிவசந்த் டிவியில் சனிக்கிழமை தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நகைச்சுவைத்தொடர் `தில்லுமுல்லு தில்லுமுல்லு.' காமெடி நடிகர் சிங்கமுத்து திருடனாக நடிக்கும் இந்த தொடரில், அவரை பிடிக்கப் புறப்படும் துணிச்சல்மிக்க போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் நடிகை புவனேஸ்வரி.

`பிக்பாக்கெட் அடிப்பது எப்படி?' என்பது உள்ளிட்ட திருட்டின் அத்தனை அம்சங்களையும் ஒரு கல்லூரி தொடங்கி கற்றுத் தருகிறார்,

சிங்கமுத்து. இதைத்தடுத்து நிறுத்தி சிங்கமுத்துவை கைது செய்யும் கட்டாயத்தில் இருக்கிறார், புவனேஸ்வரி. அதற்காக அவர் போடும்திட்டங்களும், அதில் சிக்கினாரா சிங்கமுத்து என்பதும் வரும் வாரங்களில் `பரபர சுறுசுறு' காட்சிகள்.


நன்றி: தினதந்தி

aanaa
19th February 2011, 03:34 AM
நாதஸ்வர குடும்பத்தில் நடக்கும் இரு திருமணங்கள்முற்றிலும் புதுமுகங்களை நடிக்கவைத்து அவர்களை அந்தந்த கதாபாத்திரங் களாகவே ரசிகர்கள் மனதில் பதித்திருப்பது `நாதஸ்வரம்' தொடரின் பலம்.. சொக்குவாக நடிக்கும் மவுலி, மயிலாக நடிக்கும் பூவிலங்கு மோகன் இருவருமே கதையின் இரு தூண்கள். தொடரில் இடம் பெறும் கேரக்டர்கள் ஒவ்வொன்றுமே வாழ்ந்த, வாழும் கேரக்டர் களை நினைவுபடுத்துவது தொடருக்கான சிறப்பு.

தொடரில், தொடரும் கதைப்போக்கு பற்றி இயக்குனர் திருமுருகன் கூறுகிறார்: ``ஒரே நாளில் காதலை சொல்லி அதே நாளில் குடும்பத்தினருக்காக தங்கள் காதலை இழந்து பிரிந்த ஜோடி, கோபி - மலர். ஒருநாள் வாழ்க்கைக்காக திருமணம் நடந்த அன்றே கணவன் கோகுலை பிரிந்து வந்த மலர், இப்போது தாலியையும் கழற்றி கோகுலிடம் கொடுத்து விட்டாள். இந்த சூழ்நிலையில் மஹா-கோபி திருமணம் நடைபெற உள்ளது. நாதஸ்வர குடும்பத்தில் இரண்டு திருமணங்கள் நடைபெற உள்ளது. மஹா-கோபி திருமணம் போல் காமு - மூர்த்தி திருமணம்.

பணத்தாசையால் வரும் பரமுவின் காதல், கோபியை கொலை செய்யும் வெறியுடன் துரத்தும் பாண்டி, நெல்லியாண்டவர் கதாபாத்திரம் மற்றும் அவரது குடும்பத்தினர், செல்வரங்கம் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கும் போது கர்ப்பம் தரித்திருக்கும் மகேஸின் மனநிலை, இவையாவும் தொடருக்கு சுவாரஸ்யம் சேர்க்கும் அம்சங்கள்'' என்கிறார், இயக்குனர் திருமுருகன்.

மஹா - கோபி திருமணம் நடைபெறுமா? காமு-மூர்த்தி திருமணம் நடைபெறுமா? மலர், கோகுலை மீண்டும் ஏற்றுக் கொள்வாளா? காமு - மூர்த்தி ஏற்கனவே காதலித்தவர்கள் என்ற விஷயம் தெரிந்தால் நெல்லியாண்டவர் இந்த திருமணத்தை நடத்த விடுவாரா? செல்வரங்கம் மீண்டும் வருவாரா? போன்ற கேள்விகளுக்கு, பதிலாக பரபரப்பு திருப்பங்களுடன் வருகிறது அடுத்தடுத்த எபிசோடுகள்.

இதற்கிடையே சொக்கலிங்கத்தின் காணாமல் போன மூத்த மகன் திரும்புவானா? பரமுவின் காதல் என்னவாகும்? பாண்டி, மஹா-கோபியைப் பிரித்து மஹாவைத் திருமணம் செய்து கொள்வானா? சொக்கு - மயில் அண்ணன் தம்பி பாசம் நீடிக்குமா? மலர் - கோபி மீண்டும் இணைவார்களா?

இது போன்ற சுவாரஸ்யமான கேள்விகளுக்கும் விரைவில் பதில் கிடைக்கும் என்கிறார், இயக்குனர்.

திரைக்கதை: பாபு யோகேஸ்வரன், வசனம்: பாஸ்கர்சக்தி, ஒளிப்பதிவு: சரத் சந்திரன், இசை: கிரண், படத்தொகுப்பு. பிரேம். கதை, இயக்கம்: திருமுருகன்.

சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.நன்றி: தினதந்தி

aanaa
1st March 2011, 05:30 AM
என்னோடு பேசுங்கள்கலைஞர் தொலைக்காட்சியில் வியாழன் தோறும் இரவு 9 மணிக்கு ``என்னோடு பேசுங்கள்'' என்ற புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

பிரியதர்ஷினி தொகுத்து வழங்கும் இந்தநிகழ்ச்சியில், தற்போது திரையில் ஓடிக்கொண்டிருக்கும் பிரபல திரைப்படங்களின் கதாநாயகன், கதாநாயகிகளை, சேனலின் ஒளிப்பதிவு அரங்கிற்குள் வரவழைத்து, தற்போது வெளியான திரைப்படங்களில் அவர்களுடைய பங்கு மற்றும் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட சுவையான சம்பவங்களை நேயர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி இது.

`காவலன்' படத்தின் கதாநாயகன் விஜய், `சிறுத்தை' படத்தின் கதாநாயகன் கார்த்தி ஆகியோரைத் தொடர்ந்து, விரைவில் வெளியாக உள்ள படங்களின் நட்சத்திரங்களும் விரைவில் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற உள்ளனர்.
நன்றி: தினதந்தி

aanaa
1st March 2011, 05:31 AM
சிந்து பைரவிராஜ் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் `சிந்து பைரவி' தொடர் பரபரப்பு திருப்பங்களுடன் விரைகிறது.

திருமண மேடையில் மணப்பெண்ணாக அமரப் போவது சிந்துவா? அல்லது பைரவியா? சிந்துவை அவள் காதலனிடம் இருந்து பிரிக்க பைரவி போட்ட திட்டம் என்ன? அது நிறைவேறியதா?

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் இது.
நன்றி: தினதந்தி

aanaa
1st March 2011, 05:32 AM
`சிரிப்பு உங்கள் சாய்ஸ்'தமிழன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நகைச்சுவைத் தொடரான `சிரிப்பு உங்கள் சாய்ஸ்', கலகல காமெடிக்கு உத்தரவாதமாகி இருக்கிறது.

"அன்றாட வாழ்வில் நாம் காணும் சம்பவங்களை நகைச்சுவை கண்ணோட்டத்துடன் பார்த்தால் எப்படி இருக்கும்? இதை மனதில் கொண்டு மாறுபட்ட சிந்தனையில் உருவானதே இத்தொடர். வாரந்தோறும் ஒளிபரப்பாகி வரும் இத்தொடரை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கி வருகிறோம்'' என்கிறார், தொடரின் இயக்குனர் ப்ரியா பாலு.

கஜா, ரவிக்குமார் பிரதான வேடங்களில் நடிக்கின்றனர். அவர்களுடன் முக்கியமான மாறுபட்ட வேடத்தில் நடித்து தொடரை இயக்குகிறார், ப்ரியாபாலு.

பாஸ்கர், ஜெய், பாண்டியன், சுமித்ரா நடிக்கின்றனர்.

பி.ஜி.ஆர். கிரியேஷன்ஸ் தயாரிப்பில் சனிக்கிழமை தோறும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது, இந்த நகைச்சுவைத் தொடர்.
நன்றி: தினதந்தி

aanaa
14th March 2011, 12:19 AM
ரோஜா படம் மூலம் நடிக்க வந்த மதுபாலா பெரும் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார். இந்த முறை அவர் நடிக்கப் போவது மெகா சீரியலில். நடிகை ஹேமமாலினியின் உறவினர் மதுபாலா. ரோஜா படத்தில் நாயகியாக நடித்துத் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் பல படங்களில் நடித்த மதுபாலா பின்னர் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலானார். அவருக்கு அமயா, கேயா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். முதல் குழந்தைக்கு 10 வயதும், 2வது குழந்தைக்கு 8 வயதும் ஆகிறதாம். இப்போது மீண்டும் நடிக்க வந்துவிட்டார் மதுபாலா. இந்த முறை அவர் டிவி பக்கம் வந்துள்ளார். குட்டி பத்மினியின் கணவர் பிரபு நேபால் தயாரித்து, இயக்கும் சௌந்தரவல்லி என்ற மெகா தொடரில் நாயகியாக வருகிறார் மதுபாலா. இதில் அவருக்கு தாசி வேடம். அதேசமயம், தாசிகுலத்தின் அவலத்தைத் துடைத்து சமூக நீதிக்காக போராடும் கேரக்டராம் மதுபாலாவுக்கு. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்க வந்ததால் முதல் ஷூட்டிங்கின்போது சற்று பதட்டமாக இருந்ததாம் மதுபாலாவுக்கு. முதல் காட்சிக்கு நான்கு டேக்குகள் வாங்கினாராம். அதன் பின்னர் படிப்படியாக இயல்பாகி ஒரே டேக்கில் ஓ.கே செய்ய ஆரம்பித்தாராம். இதுபற்றி மதுபாலாவிடம் கேட்டபோது: ஹேமமாலினி எனது உறவினர். அவர் மகள் நடிக்கும் படத்தில் ஒரு கேரக்டர் பண்ண என்னை அழைத்தார். மறுக்க முடியவில்லை. அந்தப் படத்தில் நடிப்பதால் நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. நல்ல கதைகள் அமைந்தால் தொடர்ந்து நடிப்பேன். தமிழ் படங்களை பார்க்கிறேன். விஜய்யை ரொம்ப பிடிக்கும். அவரது தீவிர ரசிகை நான். விஜய், த்ரிஷா பொருத்தமான ஜோடி. இருவரும் சேர்ந்து நடித்தப் படங்கள் என்னை மிகவும் கவர்ந்தன என்றார். டிவி தொடரில் நடிப்பதற்காக நான் வருத்தப்படவில்லை. இது எனக்கு மறு வருகை. இதுவும் நடிப்புதான். நான் டிவியில் நடிப்பதை எனது தோழிகளான ரம்யா கிருஷ்ணன், குஷ்பு ஆகியோர் வரவேற்று உற்சாகப்படுத்தினர் என்றார் மதுபாலா. ஆகஸ்டு 2-ந்தேதி முதல் ஜெயா டி.வி.யில் இத்தொடர் ஒளிபரப்பாகிறது. வெள்ளித்திரையில் அண்ணி, அக்கா,... இடத்துக்கு அழைப்பு வரலாம்......அங்கேயும் கலக்குங்க!
நன்றி: தினதந்தி

aanaa
14th March 2011, 12:28 AM
மகான் சாய்பாபாவின் மகிமைகள்விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் `மகான்' தொடரில் ஷிர்டி சாய்பாபாவின் வாழ்க்கை வரலாறு ஒளிபரப்பாகி வருகிறது. சாய்பாபாவின் இளைய பருவ கதையில் இளமைக்கால சாய்பாபாவாக பெனட்டோ நடிக்கிறார்.

ஷீரடியில் இருந்து சென்ற சாய்பாபா, சில வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் ஷீரடிக்கு திரும்பினார். ஷீரடிக்கு மீண்டும் அவர் திரும்பக் காரணமாக அமைந்தவர் சாந்த் பாடீல். இவர் அவுரங்காபாத் அருகில் உள்ள தூப்காவன் என்ற ஊரில் கிராம அதிகாரியாக இருந்தவர். ஒருநாள் அவர் தன் குதிரையைத் தொலைத்து விட்டு, அதை வழியெங்கும் தேடிக் கொண்டிருந்தார். அப்போது தன் எதிரில் உட்கார்ந்திருந்த ஒரு பக்கீரிடம் `என் குதிரையை பார்த்தீர்களா?' என்று கேட்க, அவர் குதிரையை அழைத்தார். உடனே புதர் மறைவில் நின்றிருந்த குதிரை ஓடிவந்தது. அந்த ஆனந்த அதிர்ச்சி விலகும்முன்னே அந்த சாது, சாந்த் பாடீலின் பெயரைச் சொல்லி அழைக்க, அவர் இன்னும் ஆச்சர்யம் அடைந்தார். ஆனால் சாதாரண பக்கீர் என்று சாந்த் பாட்டீல் நினைத்த மனிதர் ஒரு ஞானி என்பதை அவர் அப்போதும் உணரவில்லை. அந்த அற்புதமான ஞானி சாய்பாபா.

சாந்த் பாடீல் தன்னுடைய மனைவியின் சகோதரர் வீட்டில் நடைபெறும் திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை ஆசீர்வதிக்குமாறு ஞானியை கேட்டுக்கொண்டார். அவர்கள் செல்லப்போகும் கிராமம் ஷீரடி ஆம், மீண்டும் ஷீரடி மக்களுக்கு பாபாவைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

சாந்த் பாடீலின் குதிரையை மீட்டதன் மூலம், சாய்பாபாவின் மகிமையை உலகம் அறியத் தொடங்கியது. ஷீரடி என்ற சாதாரண கிராமம், சாய்பாபாவின் வருகையால் அனைவருக்கும் தெரிய ஆரம்பித்து பிரபலமானது.

திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மகான் தொடரை இயக்கி வருபவர் தமிழ்தாசன்.


நன்றி: தினதந்தி

aanaa
14th March 2011, 12:29 AM
ஜான்சி ராணிராணி லட்சுமிபாய்க்கு உறுதுணையாக இருந்த சர்மாசிங்கை தீர்த்துக் கட்டும் முயற்சியில் ஈடுபடும் ஆங்கிலேயர்கள், அதில் தொடர்ந்து தோல்விகளையே தழுவுகின்றனர். ஆனால் இம்முறை லட்சுமி பாயின் முன்னாள் எதிரியான நெல்சன், ஜான்சிக்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்படுகிறார். அவர், சமர் சிங், கர்மா ஆகியோர் மீது பொய் குற்றச்சாட்டுகளைக் கூறி, தூக்கிலிடும் நீதிமன்ற ஆணையை பெறுகிறார்.

இருப்பினும் ஜான்சியின் வாரிசை வயிற்றில் சுமக்கும் லட்சுமிபாய், தாய்மை நிலையையும் பொருட்படுத்தாமல் உறுதியாக செயல்பட்டு சமர் சிங், கர்மா ஆகியோரை நெல்சனிடமிருந்து காப்பாற்றுகிறாள்.

அரண்மனையில் லட்சுமிபாயை தேடும் கங்காதரராவ், அவள் வெளியே சென்றிருக்கும் நோக்கமறிந்து அதிர்ச்சி அடைகிறார். இதற்கிடையில் சமர்சிங், கர்மா ஆகியோருடன் லட்சுமிபாய் குதிரை வண்டியில் வந்து கொண்டிருக்க, எதிர்பாராத நேரத்தில் அங்கு வந்த நெல்சன், சமர் சிங், கர்மா இருவரையும் துப்பாக்கியால் சுடுகிறார். உயிருக்கு போராடும் அவர்களை காப்பாற்றும் முயற்சியில் லட்சுமிபாயின் கர்ப்பம் கலைந்ததா? ஜான்சிக்கு வாரிசு உண்டான மகிழ்ச்சியில் இருக்கும் கங்காதர ராவின் மகிழ்ச்சி நீடித்ததா? கேள்விகளுக்கு விடையாக காட்சிகள் தொடர்கிறது.

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு `ஜீ' டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது இந்த சரித்திரத்தொடர்.


நன்றி: தினதந்தி

aanaa
14th March 2011, 12:30 AM
அம்மா-மகள் சந்திப்பு நடந்ததா?நடிகை தேவயானி அம்மா-பெண் என இரட்டைவேடத்தில் நடித்து வரும் `கொடிமுல்லை' தொடரில், வயதான அம்மாவாக வரும் அன்னக்கொடி கேரக்டர் சின்னத்திரை ரசிகர்களின் அதிகபட்ச எதிர்பார்ப்புக்குஉரியதாகி இருக்கிறது.

வரும்வாரத்தில் இதுவரை ஒருவரையொருவர் சந்தித்திராத அம்மா அன்னக்கொடி, மகள் மலர்க்கொடி இருவருமே நேரில் சந்திக்கும் வாய்ப்புக்கள் கூடி வருகின்றன. 25 வருட ஜெயில் வாழ்க்கையை முடித்துவிட்டு மகளைத்தேடி சொந்த ஊருக்கு போகும் அன்னக்கொடியால் மகளை சந்திக்கமுடியாமல்போகிறது.

அதனால் ஆறுதல் தேடி வேலூரில் உள்ள கோவில் ஒன்றுக்கு பயணப்படுகிறாள் அன்னக்கொடி.. தனது நிறுவன வேலை விஷயமாக அதே கோவிலுக்கு வரும் மகள் மலர்க்கொடி சில கணப்பொழுதில் தன் தாயாரை சந்திக்கும்வாய்ப்பை மிஸ் பண்ணுகிறாள். கோவில் வாசலில் அடுத்தடுத்து கிடக்கும் அன்னக்கொடி-மலர்க்கொடி செருப்பு, பிரகாரத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் முதுகு காட்டிய நிலையில் பார்க்கத் தவறுதல் இப்படி சந்திக்க வாய்ப்பு வந்தும் அது தள்ளித்தள்ளி போகிறது. கடைசியில் கோவிலில் இருந்து புறப்படும் முன்பாவது அம்மா-மகள் சந்திப்பு நிகழ்ந்ததா? இல்லையா? என்பது மனதை படபடக்கவைக்கும் சஸ்பென்ஸ்.

ரரஜ் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது `கொடிமுல்லை' தொடர்.
நன்றி: தினதந்தி

aanaa
14th March 2011, 12:31 AM
பெண்கள் விருதுஉலக மகளிர் தினத்தை முன்னிட்டு `சிறந்த சாதனைப் பெண்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சியை ராஜ் டிவி நடத்தியது. முனைவர்கள் ரேவதி ராஜ். பர்வீன் சுல்தானா, வசுதா பிரகாஷ், அம்பிகா காமேஷ்வர் மற்றும் நூரி ஆகிய 5 வெவ்வேறு துறைகளில் சாதனை புரிந்த 5 பெண்மணிகள் விருதுகள் பெற்றார்கள்.

விருது பெற்ற பெண்மணிகள் பெருமிதத்துடன் தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக திருநங்கையான நூரியின் பேச்சு அரங்கத்திலிருந்த அனைவரையும் நெகிழ வைத்தது. விருதுகளை நடிகைகள் சுஹாசினி, கவுதமி, ரோகிணி, தேவயானி வழங்கினர்.

விழாவில் மற்றுமொரு நிகழ்வாக ``சிறந்த பெண்மணி - 2010'' என்ற விருதும் வழங்கப்பட்டது. திருமதி சாவித்ரி வைத்தி, டாக்டர் லட்சுமி விஜயகுமார், ராதிகா, சந்தான கிருஷ்ணன், விஜயலட்சுமி சுப்பராமன் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். விழாவில் திருமதி நூரியின் சமூக அமைப்பு வசுதா பிரகாஷின் கல்வி அமைப்பு, அம்பிகா காமேஷ்வரின் ``ரசா'' அமைப்பு, சுஹாசினியின் ``நாம்'' மகளிர் அமைப்பு, சைல்டு எனும் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் என ஐந்து அமைப்புகளுக்கும் தலா 10 ஆயிரம் வீதம் 50 ஆயிரம் ரூபாயை ராஜ் டி.வி. வழங்கியது.

இந்நிகழ்ச்சியின் தொகுப்பை நாளை மதியம் 12 மணிக்கு ராஜ் டிவியில் காணலாம்.

http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20110312/TV10.jpg


நன்றி: தினதந்தி

aanaa
14th March 2011, 12:31 AM
வந்தாளே மகராசிபொறுமைக்கு எல்லையாக பூமியையும், பூமாதேவியையும் தான் நாம் குறிப்பிடுகிறோம். ஏனென்றால் எல்லா நல்லது கெட்டதுகளையும் தாங்கி நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது பூமியும் பூமாதேவியும்.

அதுபோலவே வீட்டுக்கு வரும் மருமகளும் ஒரு விதத்தில் பூமாதேவிக்கு நிகரானவள்தான். எல்லா நல்லது கெட்டதுகளையும் தாங்கிக்கொண்டு ஒரு குடும்பத்தை நிலைப்படுத்துவதில் மருமகளுக்கு தான் முக்கிய பங்கு உண்டு.

எதையும் தாங்கும் பூமி. ஒரு எல்லைக்குப் பிறகு சீற்றமாகி பூகம்பமாகி எப்படி எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொள்கிறதோ அது மாதிரியே வீட்டுக்கு வரும் மருமகள் சீற்றமானால் அந்த குடும்பம் என்ன மாதிரியான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்ற கருத்தை வலியுறுத்தும் தொடரே `வந்தாளே மகராசி'.

ஜெயா டிவி.யில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடரின் நட்சத்திரங்கள்: ஸ்ரீ, சொர்ணமால்யா, ஐஸ்வர்யா, வாசுவிக்ரம், ஸ்ரீபிரியா, லதாராவ், சுக்ரன், விசாலினி, புவனா, சண்முகசுந்தரம், சுதா, இளவரசன், விஸ்வா, விவிதா, ரம்யா, வாமன் மாலினி, அமரசிகாமணி, ஸ்ரீலதா, வின்சென்ட்ராய், ஸ்ரீலதா.

தொடருக்கு வசனம்: சாம்ராஜ்; ஒளிப்பதிவு: ஆல்வின்; இசை: ராஜ்பாஸ்கர்; கதை, டைரக்ஷன்: செல்வபாண்டி; பெரிய திரையில் பல முன்னணி நட்சத்திரங்களை நடிக்கவைத்து பல படங்களைத் தயாரித்த பிரபல தயாரிப்பாளர் விஸ்வாஸ் சுந்தர் இந்த தொடரை தயாரிக்கிறார்.

நன்றி: தினதந்தி

aanaa
26th March 2011, 06:22 PM
அம்மா-பெண் சந்திப்பில்...நடிகை தேவயானி இரட்டை வேடத்தில் நடிக்கும் ``கொடிமுல்லை'' தொடரில் அடுத்து வரும் பகுதிகள் கதையின் சுவாரஸ்யமான முடிச்சுகளை அவிழ்க்க இருக்கிறது.

சிறையிலிருந்து வெளிவந்த தாய் அன்னக்கொடி தன் மகள் மலர்க்கொடியைக் காண விரைகிறாள். தன்னைப் பெற்ற தாய் இத்தனை ஆண்டுகள் சிறையில் இருந்தது தெரிந்தால் மகள்அதை எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறாள்? பல ஆண்டுகள் பிரிந்திருந்த தாய் - மகளின் சந்திப்பு எப்படி நிகழப்போகிறது.

ராஜ் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது கொடிமுல்லை.

நன்றி தினத்தந்தி

aanaa
26th March 2011, 06:24 PM
மாறிய மணப்பெண்ராஜ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் `சிந்து பைரவி' தொடர், இரண்டு தோழிகளின் வாழ்க்கைப் போராட்டத்தை மையமாக கொண்டது. தொடரின் முக்கிய திருப்பமாக வீர் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. வீரை உயிருக்குயிராக நேசித்த சிந்து கடைசி தருணத்தில் பைரவிக்கு மணமேடையை விட்டுத் தருகிறாள்.திருமணத்தின்போது மணமகள் முகத்தை மலர்அலங்காரங்களால் மூடிக்கொள்ளும் சம்பிரதாயம் அவர்கள் திருமணமுறையில் இருப்பதால், மணமகன் வீரும் சிந்து என நினைத்தே பைரவிக்கு மாலையிட்டு விடுகிறான்.

உண்மை தெரியவந்தபோது மணமகனான வீர், தன் வாழ்க்கையில் சிந்துவை தவிர யாருக்கும் இடமில்லையென்றும், உயிருள்ள வரை பைரவியை மனைவியாக ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்றும் சபதமிடுகிறான்.

இனி இவர்களின் வாழ்வில் நடக்க இருப்பது என்ன? அடுத்து சிந்து எதிர்நோக்க இருக்கும் பிரச்சினைகள் என்ன?

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் இது.நன்றி தினத்தந்தி

aanaa
26th March 2011, 06:27 PM
ராதா கல்யாணம்ஜி தமிழ் தொலைக்காட்சியில், திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய தொடர், `ராதா கல்யாணம்'. இதில், ராதா, கீர்த்தி எனும் இரு டீன்ஏஜ் பெண்களை மையப்படுத்தி கதை அமைக்கப்பட்டுள்ளது.

கிராமத்து பள்ளி மாணவியான ராதா, படிக்கும் ஆர்வமிருந்தும், குடும்பத்தின் வறுமை காரணமாக வேலைக்குச் செல்ல நேர்கிறது. குடிப்பழக்கத்துக்கு அடிமையான தந்தை, அதனால் ஏற்பட்ட துக்கத்தில் இருந்து மீளமுடியாமல் வாழும் தாய் என ராதாவின் வாழ்வில் தொடர்கிறது சோகங்கள்.

இந்த நேரத்தில், நகரத்தில் செல்வச்செழிப்போடு சகல வசதிகளுடன் வாழும் அழகிய இளம்பெண்ணான கீர்த்தி, தனது காதலன் வம்சியின் மூலமாக ராதாவை சந்திக்க நேர்கிறது.

அதன்பின் இருவரின் வாழ்விலும் நிகழும் அதிரடி மாற்றங்கள் என்ன? என்பது தொடராக தொடர்கிறது.
http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20110326/TV09.jpg


நன்றி: தினதந்தி

aanaa
26th March 2011, 06:29 PM
கலைஞருக்காக ஒரு பயணம்

முத்தமிழறிஞர் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞரின் வாழ்க்கைப்பதிவுகள் இடம்பெறும் `சிறப்பு ரசிகன் நிகழ்ச்சி', கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் காலை 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

இந்த நிகழ்ச்சியில் திரைத்துறை கலைஞர்- பொதுவாழ்வில் கலைஞர்- கவிஞர் கலைஞர்- இலக்கியவாதி கலைஞர் என கலைஞரின் அத்தனை முகங்களையும் காணலாம். இன்றைய தலைமுறை குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் கலைஞரின் படைப்புகளில் ரசித்தவற்றையும், அனுபவங்களையும் பிரபல பின்னணிப் பாடகர்கள் பாடலாக பாடுகிறார்கள்.

டாக்டர் கலைஞரின் வாழ்க்கைப் பதிவுகளை இன்றைய தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பதற்கு `கலைஞருக்காக ஒரு பயணம்' செய்துள்ளது ரசிகன் நிகழ்ச்சிக் குழு. கலைஞரோடு தொடர்புடைய தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பயணம் செய்து, அவரது நினைவுகள், சரித்திரப் பதிவுகள் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது.

இந்த `சிறப்பு ரசிகன்' நிகழ்ச்சித் தொடரில் `கலைஞருக்காக ஒரு பயணம்' பகுதியில் 1975-ம் ஆண்டு கலைஞரின் முதல் சட்டமன்றத் தொகுதியான குளித்தலை பதிவுகள் இடம் பெறுகிறது. கலைஞரின் இளமைக்கால நண்பர்கள் பொற்செல்வி இளமுருகு, கவுண்டம்பட்டி முத்து, மேல்நங்கவரம் அண்ணாவி, தண்ணீர்பள்ளி பெரியசாமி, தேர்தலில் பணியாற்றிய தோழர்கள், மேலும் கலைஞரின் ரசிகர்கள் குளித்தலை சிவராமன், இரா.மாணிக்கம் எம்.எல்.ஏ ஆகியோரின் பேட்டிகள் இந்த குளித்தலை பயணத்தில் இடம் பெறுகிறது.

கிராவிட்டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பு: பி.விஜயகுமார், சுவிசந்தர் சாவ்லா. எழுத்து - இயக்கம்: கி.மணிவண்ணன்.

நன்றி: தினதந்தி

aanaa
2nd April 2011, 07:58 AM
பிரிவோம் சந்திப்போம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் புதிய தொடர், `பிரிவோம் சந்திப்போம்'. ரேவதி - ஜோதி என்ற இரு சகோதரிகளுக்கிடையே நடக்கும் கதை.

மனித நிறங்களுக்கும், அவர்கள் மனங்களுக்கும் இடையே நடக்கும் போராட்டம் தான். ரேவதி செக்கச் செவேலென்று இருப்பாள். ஆனால் ஜோதி மாநிறம். இந்த நிற வேற்றுமைக்கிடையிலும் அவர்கள் ஒற்றுமையாக இருக்கின்றனர். இவர்கள் வாழ்விலும் பிரிவு ஏற்படுகிறது. அவர்கள் உணர்வு போராட்டம் பற்றிய கதை தான் இது.

ரேவதி சிறுவயதிலேயே தாயை இழந்தவள், தந்தை சுந்தரேசன் கப்பல் துறையில் வேலை பார்ப்பதால், தன் மனைவியின் அண்ணன் சண்முகராஜா வீட்டில் ரேவதியை ஒப்படைக்கிறார். சண்முகராஜாவின் மகள் தான் ஜோதி. ரேவதியும், ஜோதியும் நல்ல தோழிகளாக வளர்கிறார்கள். அவர்களின் அன்பை பார்த்து சண்முகராஜா பரவசமடைகிறார். ஆனால் ஜோதியின் அம்மாவுக்கும், பாட்டிக்கும் வெறுப்பு. ஜோதியை விட ரேவதி அழகாயிருப்பதினால், இந்த வெறுப்பு.

ஜோதியின் நல்வாழ்விற்காக ரேவதி எடுக்கும் முடிவு, இதனால் அவள் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் தான் பிரிவோம் சந்திப்போமின் கதை.

நட்சத்திரங்கள்: எல்.ராஜா, ராஜலட்சுமி, கல்யாணி, மகாலட்சுமி. இயக்கம் ரசுல்.

வரும் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் இது.[நன்றி: தினதந்திhttp://www.youtube.com/watch?v=ADRi-W01dd4
Sundaresan's daughter Revathi is being brought up by his brother-in-law. He is a writer.

Sundaresan has been sending money to Revathi for her monthly expenditure through his brother-in-law. He had been putting those money in a Bank. He now decides to give this money to Revathi and gives the accumulated money to Revathi bundled in a red bag.

Revathi refuses to take money saying that she had been brought up like his own daughter by him and have given her education and respect in society.

Revathi is sitting in the steps and writing her diary. Jyothi comes over there and gives a ear-ring telling that it has been given by the grandmother for her. Revathi likes the ring very much. Jyothi puts the ring to Revathi. Sangeetha who comes there to dry clothes sees Jyothi giving the ring to Revathi which actually had been given to Jyothi.
Sangeetha knows that if Jyothi's mother Dhanam sees this she would be angry. She sends Revathi to kitchen telling that aunty had called her. Revathi goes to the kitchen but Dhanam who dislikes Revathi never sees her face. Sangeetha becomes upset.

When everyone is having lunch Sangeetha tacitly makes Dhanam to see Revathi wearing the ring. Dhanam leaves the dining table without having her food and goes to her room. Sangeetha asks Revathi to take milk to Aunty. Revathi after finishing her lunch takes milk to Dhanam. Dhanam refuses milk and asks Revathi to leave. Revathi thanks for the ear-ring given by the grandmother.

aanaa
2nd April 2011, 08:00 AM
மகா-பிரகாஷ் திருமணம் நடக்குமா?


திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு விஜய் டி.வி.யில் ஒளிபரப் பாகிவரும் `மகாராணி' தொடர் பரபரப்பை கூட்டிக்கொண்டிருக்கிறது.

மகாவின் பெற்றோரை ராணி தனது தந்திரத்தால் பெற்றோராக்கிக் கொள்கிறாள். இதனை அறிந்த மகா உண்மை தெரிந்தும் ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் தவிக்கிறாள். ஆனால் தன்னைப் பெற்ற தாயுடன் வாழும் அதிர்ஷ்டம் அவளுக்குக் கிடைக்கிறது. மகாவின் உண்மையான தாயான சந்தியாவும் உண்மை தெரிந்து மகாவை அரவணைத்துக் கொள்கிறாள்.

சந்தியா, மகாவின் தந்தையான தேவராஜ்-யமுனா தம்பதியருக்கும் மகா தான் உண்மையான மகள் என்று தெரியவரும்போது காரியம் கை நழுவிப்போய்விட்ட நிலையில் தேவராஜ் இருக்கிறார். தனது உண்மையான மகளென்று நினைத்து தத்தெடுத்த ராணியின் பெயரில் சொத்துக்கள் அனைத்தையும் எழுதிவைத்து விட, அதுவே பெரிய சிக்கலாகி விடுகிறது. சொத்துக்காக ராணி எந்த எல்லைக்கும் செல்வாள். தோப்பியாஸ் என்ற தேவராஜின் அலுவலக ஆளுடன் சேர்ந்து தேவராஜ், யமுனா, சந்தியா மற்றும் மகாவை ஒரேயடியாக அழிக்க திட்டம் தீட்டுகிறாள்.


மகாவைக் காதலிக்கும் பிரகாஷையும் அடையவேண்டும் என்ற நோக்கோடு அவர்களுக்கு நிச்சயித்த திருமணத்தை நிறுத்தப் பார்க்கிறாள். இதனிடையே தேவராஜின் பால்ய நண்பர் ஜோதிலிங்கத்தின் உதவியுடன் ராணியின் சதித்திட்டத்தை வெட்ட வெளிச்சமாக்கி அவளை பெண்கள் காப்பகத்தில் அடைக்கிறார்கள். பெண்கள் காப்பகத்தில் உள்ள கெடுபிடி மற்றும் கடுமையான தண்டனைக்கு மிரளாத ராணி அங்கேயும் வில்லத்தனமான திட்டங்களைத் தீட்டுகிறாள். தோப்பியாஸின் உதவியுடன் அவள் இப்போது அடைய நினைப்பது தேவராஜின் சொத்துக்களை.

மகாவின் திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கும் வேளையில் சொத்து வழக்கின் தீர்ப்பு நாளும் நெருங்குகிறது. தோப்பியாசிடம் பிரகாஷை தீர்த்துக்கட்டிவிடுமாறு சொல்லும் ராணியின் கட்டளைக்கு அவனும் சரி சொல்கிறான். மகாவின் திருமணம் நடக்குமா? பிரகாஷிற்கு என்னவாகும்? தேவராஜின் சொத்து வழக்கின் தீர்ப்பு எப்படி இருக்கும்? வரும் வாரத்தில் அத்தனை கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்.

மகா-பிரகாஷ் திருமணம் நடைபெறவிருக்கிற நேரத்தில் பெண்கள் காப்பகத்தில் இருந்து சீறிவரும் ராணி, மகாவின் திருமணத்தை நிறுத்திவிடுவாளா? என்ற கேள்விக்கும் விடைஉண்டு.

மகாவாக சுஜிதா, ராணியாக அர்ச்சனா, சந்தியாவாக பிரவீணா, யமுனாவாக சுலக்ஷனா நடிக்க, இயக்கம்: தாமரைக் கண்ணன்.


நன்றி: தினதந்தி

aanaa
9th April 2011, 06:38 PM
`நாடறிந்த நடிகர் நாகேஷ்'வசந்த் டிவியில் செவ்வாய்தோறும் இரவு 7.30 மணிக்கு `தமிழ்த்திரையுலகில் நடிகர் நாகேஷ்' என்ற புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. நகைச்சுவையில் தொடங்கி பின்னாளில் குணசித்ரத்திலும் கொடிகட்டிப் பறந்த நாகேஷின் கலையுலக சாதனை அளப்பரியது. சினிமாவில் பிசியாக இருந்த நாட்களிலும் நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார் என்பது திரையுலக நட்பு சரித்திரம்.

நாகேஷ் புகழேணியின் உச்சியில் இருந்த நேரத்தில் அவருடன் இணைந்து நடித்த நட்சத்திரங்கள் காத்தாடி ராமமூர்த்தி, சச்சு, அவருக்கு டைரக்டர் ஸ்ரீதர் படத்தில் காட்சிகள் அமைத்த கதாசிரியர் சித்ராலயா கோபு ஆகியோர் நாகேஷுடன் பழகிய அந்த நாட்களை இந்த நிகழ்ச்சியில் நினைவு கூர்கிறார்கள்.

நடிகை சச்சு பேசும்போது, "நாகேஷ் டைமிங்காக பேசி சிரிக்கவைப்பதில் வல்லவர். `காதலிக்கநேரமில்லை' படத்தில் அவருடன் நடிக்கும்போது அவர்அடித்த டைமிங் ஜோக்கால் சிரித்துக்கொண்டே இருந்தேன்'' என்றார்.

சித்ராலயா கோபு கூறும் போது, "நாகேஷ் நடித்து அப்போது `நெஞ்சில் ஓர் ஆலயம்' படம் மட்டுமே வந்திருந்தது. அப்போது ஒரு நிகழ்ச்சிக்காக வெளிïருக்கு நாகேஷுடன் நாங்கள் காரில் போன போது `நாகேஷ்..நாகேஷ்..' என்று உற்சாகத்துடன் கத்தியபடி ரசிகர்கள் காரை நோக்கி ஓடிவந்தனர். அந்தக்காரில் எங்களுடன் நடிகர் தங்கவேலுவும் வந்தார். அவர் ஏற்கனவே `கல்யாணப்பரிசு' போன்ற படங்களில் நகைச்
சுவையாக நடித்து புகழ் பெற்றவர். நாகேஷுக்கு இருந்த ரசிக ஈர்ப்பை நேரில் பார்த்ததும் அவர் , `ஒரு படத்திலேயே இப்படி ரசிகர்களை கவர்ந்து விட்ட நாகேஷ் பின்னாளில் பெரிய நட்சத்திரமாக வருவார்' என்று அப்போதே வாழ்த்தினார். அவர் வாழ்த்தியபடியே நாகேஷும் வளர்ந்தார்'' என்றார்.

நிகழ்ச்சியின்போது நாகேஷ் நடித்த படங்களில் இருந்து நகைச்சுவைக்காட்சிகளும் இடம் பெறுகிறது.நன்றி: தினதந்தி

aanaa
9th April 2011, 06:39 PM
அழகிய தமிழ்மகள்கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் காலை 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் "அழகிய தமிழ் மகள்'' நிகழ்ச்சி, 143 எபிசோடுகளைக் கடந்து தொடர்கிறது.

ஸ்ரீவெங்கடேஸ்வரா டெலிபிலிம்ஸ் சார்பில் கே.பி.முத்துக்குமார் மற்றும் யமஹா பிரகாஷ் தயாரித்து வழங்கும் இந்த நிகழ்ச்சியை, நடிகை ரோகிணி தொகுத்து வழங்குகிறார். பெண்மையின் பெருமையை பாராட்டும் விதமாக, பெண்ணியக் காவலர்களை மேடையேற்றி, பெண்ணினத்திற்கு பெருமிதம் சேர்க்கிறது இந்த நிகழ்ச்சி. சமூக சிந்தனையோடு, தாய்மார்களின் ஏக்கம் தீர்க்க, பல உதவிகளையும் மேடையில் அறிவிக்கிறார்கள்.

புதுக்கோட்டையில் நிகழ்ச்சி நடந்தபோது, மாற்றுத்திறனாளி ரத்தினவேலுக்கு மூன்று சக்கர வாகனம் வாங்க பணம் வழங்கியபோது, தன்மானம் கருதி பணத்தை வாங்காமல் விடைபெற்றுச் சென்ற அவரது செயல், நிகழ்ச்சி தயாரிப்பாளர்களை மட்டுமல்லாது பார்வையாளர்களையும் கலங்க வைத்தது. இவர் ஒரு பி.காம். பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.நன்றி: தினதந்தி

aanaa
9th April 2011, 06:40 PM
அன்னக்கொடியின் `காக்கும் கரங்கள்'
ராஜ் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `கொடிமுல்லை' தொடரில், தாய்-மகள் என இரட்டைவேடத்தில் நடித்து வருகிறார் தேவயானி. உயிரின்முக்கியத்துவத்தையும், ரத்ததானத்தின் அவசியத்தையும் தாய் அன்னக்கொடி கேரக்டர் மூலம் வரும் வாரங்களில் ஆணியடித்த மாதிரி காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

அன்னக்கொடியின் நகையை கொள்ளையடிக்க ஒரு கூட்டம் முயன்ற நேரத்தில் அந்த ஊர் வியாபாரி தடுக்க முயல, அவருக்கு விழுகிறது அரிவாள் வெட்டு. ரத்தம் வழிந்தோடிய நிலையில் அவர் உயிருக்குப்போராடுகிறார்.

பதறிய அன்னக்கொடி, அவர் உயிரைக்காப்பாற்றும் துடிப்பில் அந்த வழியாக வரும் வாகனங்களை நிறுத்த முயற்சிக்கிறாள். ஆனால், அவரவர் தங்கள் அவசரவேலையை காரணம் காட்டி உதவ மறுத்து பறக்கிறார்கள். கடைசியில் ஒரு ஆட்டோ டிரைவர் அன்னக்கொடியின் உருக்கமான வேண்டுகோளுக்கிணங்கி உயிருக்குப் போராடும்
வியாபாரியை ஆட்டோவில் ஏற்றி அரசுஆஸ்பத்திரிக்கு கொண்டு வருகிறார்.

ஆனால், அங்கும் சில நீடித்த விசாரணைகளில் வெட்டுப்பட்டவர் அதிக அளவில் ரத்தம் இழக்கிறார். இனியும் பொறுத்தால் உயிர் போவது நிச்சயம் என்பதை உணர்ந்த அன்னக்கொடி, ஆஸ்பத்திரி டீனை சந்தித்து நிலைமையை விளக்குகிறாள். அவரிடம் இருந்தும் அலட்சியமே பதிலாக வர, ஆத்திரத்தின் உச்சிக்கேபோன அன்னக்கொடி, அவரது கழுத்தில் கத்தரிக்கோலால் கீறுகிறாள். அடுத்தகணமே வியாபாரிக்கு உடனடி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.

ஆனால், அவருக்கு உடனடியாக ரத்தம் ஏற்றியாக வேண்டிய நிலை. அவருடையது அபூர்வ வகை ரத்தம் என்பதால் கிடைப்பது கேள்விக்குறியாகிறது. இந்த நிலையில் அன்னக்கொடி தன் மகள் மலர்க்கொடி பணியில் இருக்கும் சமூக நிறுவனத்துக்கு போன் செய்து ரத்த உதவி கேட்கிறாள். மலர்க்கொடியை பெண் பார்த்து நிச்சயம் செய்துபோன வருங்காலக் கணவனுக்கும் அதே ரத்தகுரூப் என்பதால் அவனுக்கு போன் செய்து உதவி கேட்கிறாள் மலர்க்கொடி, அவனும் உடனடியாக ஆஸ்பத்திரிக்கே வந்து ரத்தம் கொடுக்க, வியாபாரி காப்பாற்றப்படுகிறார்.

இதனால் மலர்க்கொடிக்கு அன்னக்கொடி போனில் நன்றி சொல்ல, "இப்படி உதவும் குணம் கொண்ட உங்களை நான் சந்திக்க வேண்டுமே'' என்கிறாள், மலர்க்கொடி. "இதோ இப்போது கூட வியாபாரித்தம்பிக்கு உதவியாக ஆஸ்பத்திரியில் தான் இருக்கிறேன்'' என்கிறாள் அன்னக்கொடி.

தாய்-மகள் என்ற உறவு தெரியாமலே இப்படிஅன்பு வளையத்துக்குள் வந்துவிட்ட அன்னக்கொடியும், மலர்க்கொடியும் இப்போதாவது சந்தித்தார்களா? என்பது அடுத்தகட்ட சஸ்பென்ஸ்.நன்றி: தினதந்தி

aanaa
16th April 2011, 08:36 AM
அப்பா-மகள் சந்திப்பு நடந்ததா?
விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர், `பிரிவோம் சந்திப்போம்.'

சிறுவயதிலிருந்து தன் தாய்மாமா சண்முகராஜனின் வீட்டில் வாழும் ரேவதி, 15 வருடங்களாக தன் தந்தை சுந்தரேசனின் பிரிவினால் வாடுகிறாள். இந்நிலையில் சுந்தரேசன் இந்தியா வரப் போவதாகக் கூற ரேவதி பரவசமடைகிறாள். தன் தந்தையின் வருகையையொட்டி வீட்டில் அனைவருக்கும் பரிசுகளை வாங்கித் தருகிறாள். அப்பா வரும் நாளில் தன் கையாலேயே அவருக்கு ருசியாக சமைக்கப் போவதாகக் கூறி தனியாளாக அனைத்தையும் தயார் செய்கிறாள்.

சிங்கப்பூர் விமான நிலையத்திலிருந்தபடி, `உனக்கு என்ன பரிசு வேண்டும்?' எனக் கேட்கும் அப்பாவிடம், `உங்கள் வருகையே எனக்கு மிகப் பெரிய பரிசுதான்' என ரேவதி கூற... இருவரும் நெகிழ்ச்சியடைகிறார்கள். உணர்ச்சிபெருக்கின் உச்சக்கட்ட பாசத்தில் இருக்கும் சுந்தரேசன்-ரேவதி சந்திப்பு நிகழ்ந்ததா? சுந்தரேசனை வரவேற்க திருச்சி விமான நிலையம் செல்லும் சண்முகராஜனுக்கு காத்திருப்பது ஆனந்தமா? அதிர்ச்சியா?

ரேவதியாக கல்யாணி, ஜோதியாக மகாலட்சுமி, சுந்தரேசனாக கவுதம், சண்முகராஜனாக `சங்கர்குரு' எஸ்.ராஜா மற்றும் ராஜ்யலட்சுமி, உதயா, ஸ்ரீதேவி நடிக்கிறார்கள்.

நன்றி: தினதந்தி

aanaa
16th April 2011, 08:37 AM
அவள் ஒரு தொடர்கதை


பாலிமர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கும் புதிய தொடர், `அவள் ஒரு தொடர்கதை.' சமுதாயத்தின் பார்வைக்கு அழகற்றவளாக தன்னை காட்டிக்கொள்ளும் அழகான சுஜாதா தான் தொடரின் நாயகி. தமிழகத்தில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான குடிசைகளில் ஒன்றுதான் அவளது வாசம். பலரின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகும் அவள் வாழ்க்கை, வேதனையும், சோதனையும் மிக்கது மட்டுமல்ல, ரகசியங்கள் அடங்கியதும் கூட. அவளது போராட்டங்களில் அவளது தாய் பத்மா மட்டுமே துணை.

அழகே வடிவான சுஜாதாவின் முகம் ஒரு சந்தர்ப்பத்தில் வெளியுலகுக்கு தெரியவருகிறது. தொடர்ந்து பத்மா பயந்த மாதிரியே பிரச்சினைகளும் வருகிறது. அழகுப்பெண்ணை ஆளுமை செய்யத் துடிக்கும் வெறிகொண்ட நய வஞ்சகர்களின் கூட்டம் வேட்டைநாயாய் அவளை சுற்றுகிறது.

இந்தநேரத்தில் கடவுளே அனுப்பியது போல் வந்து உதவுகிறான் பொன்னேரி தாஸ். பருவத்திற்கே உரிய தூண்டுதலால் தாஸ் மீது மையல் கொள்கிறாள் சுஜாதா. விதியின் கணக்கோ வேறு மாதிரி. தாஸ் ஏற்கனவே மனைவியை இழந்தவன். சுஜாதா மீது நல்ல அபிப்பிராயம் கொண்டவன். மகளின் மனதை அறிந்த தாய் பத்மா, `ஒருவர் நம் மீது காட்டும் கருணையை காதல்' என்று கொச்சைப்படுத்தக் கூடாது என்று அறிவுரை கூறுகிறாள்.

மனமுடைந்து போகும் சுஜாதா, தாயின் ஆலோசனையின் வலிமையை உணர்ந்து தனது காதலை தனக்குள்ளே புதைக்கிறாள்.

சமுதாயத்தின் கொடுமைகளை எதிர்த்து வெற்றிக்காக போராடும் ஒரு தாய் மற்றும் மகளின் உருக்கமான வாழ்க்கை பயணமும், அவர்கள் கட்டிக்காக்கும் குடும்ப ரகசியங்களுமே தொடரின் கதைக் களம்.

சுஜாதா மனதை தாஸ் அறிந்து கொண்டானா? அவனிடம் சுஜாதா தனது காதலை வெளிப்படுத்தினாளா? சுஜாதாவை ஆதரிப்பதனால் தாஸ் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன? கேள்விகளுக்கு பதிலாக வரும் 23-ந் தேதி முதல் பாலிமர் டிவியில் ஆரம்பமாகிறது, தொடர்.


நன்றி: தினதந்தி

aanaa
16th April 2011, 08:39 AM
நட்சத்திரத்தேர்வில் பொன்னியின் செல்வன்


சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு கல்கி எழுதிய வரலாற்றுச் சிறப்புமிக்க புதினம் ``பொன்னியின் செல்வன்''. சின்னத்திரை தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக, ``பொன்னியின் செல்வன்'' ஒரு நெடுந்தொடராக மக்கள் தொலைக்காட்சியில் வெளிவர உள்ளது.

10-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ராஜ ராஜ சோழனின் ஆட்சிக்கு முந்தைய காலக்கட்டத்தை கதைக்களமாகக் கொண்டு இப்புதினம் வடிவமைக்கப்பட்டது. இத்தொடரில் முக்கிய கதாபாத்திரங்களாக நடிக்கப் போகும் நடிகர் களுக்கான நேர்முகத் தேர்வு தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட முக்கிய மாநகரங்களில் நடைபெற்று வருகிறது.

தொடருக்கான நடிகர்கள் தேர்வின் காட்சித் தொகுப்பு நாளை முற்பகல் 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

நன்றி: தினதந்தி

aanaa
16th April 2011, 08:39 AM
`இதயம் கவர்ந்த' இதயம்

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இதயம் தொடர், விறுவிறுப்பு குறையாமல் தொடர்கிறது. கொடியவன் ஒருவனால் அநீதி இழைக்கப்பட்ட தன் மருமகளுக்காக போராடும் பாசமிகு மாமியாராக டாக்டர் கல்யாணி கதாபாத்திரத்தில் சீதா நடித்திருக்கிறார். நந்தினியைக் கெடுத்தவனே அவள் கணவனுக்கு நண்பனாக, அதனால் குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்களும், அவன் கொலையான பிறகு அதற்கு காரணம் யார்? என்ற சஸ்பென்சுடன் கதையை நகர்த்தும் விதமும் சுவாரசிய எதிர்பார்ப்பை தக்க வைக்கிறது.

கல்யாணி, தேவராஜன் மகளின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடக்கும் போது, பிரசாத் கொலை வழக்கு தொடர்பாக கல்யாணி கைது செய்யப்படுகிறாள். பிரசாத்தை கொலை செய்யவில்லை என கல்யாணி மறுக்க, சாட்சியங்கள் நிலை என்னவாயிற்று? கல்யாணி, பிரசாத்தை கொல்லவில்லையென்றால், அவனை கொன்றது யார்? கேள்விகளை முன்வைத்து தொடர்கிறது தொடர்.

சீதா, சித்ரா லட்சுமணன், நித்யாதாஸ், நளினி, தேவதர்ஷினி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்கம்: `ஆனந்தம்' நித்தியானந்தம். தயாரிப்பு: `சத்ய ஜோதி பிலிம்ஸ்' ஜி. தியாகராஜன்.

நன்றி: தினதந்தி

aanaa
16th April 2011, 08:41 AM
சொல்லத்தான் நினைக்கிறேன்


ஜி தமிழ் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது கே.பாலசந்தரின் `சொல்லத்தான் நினைக்கிறேன்' தொடர்.

மதன் பிரபல சின்னத்திரை நடிகர். நேர்மையானவர். நேரம் தவறாதவர். அவருடைய ஒரே மகள் சாரு. வயது 20. மிகச் சிறிய வயதிலிருந்தே தாயாகவும், தந்தையாகவும் இருந்து பேணிப் போற்றி சாருவை வளர்க்கிறார் மதன். தந்தை மேல் உயிரையே வைத்திருக்கிறாள் சாரு. அவள் தாய் தன்னை விட்டு பிரிந்து போய் எங்கோ வாழ்ந்து வரும் உண்மையை சாருவிடம் ஏனோ அவரால் சொல்ல முடியாமல் போய் விடுகிறது.

தாய்ப் பாசமே தெரியாமல் வளர்ந்து வரும் சாருவின் எதிரில் ஒரு நாள் அவளுடைய அம்மா வந்து நின்றால் என்ன நடக்கும்?

மதனாக ரவி ராகவேந்தரும், சாருவாக `சஹானா' புகழ் காவ்யாவும், சாருவின் தாயாக யுவராணியும் நடித்துள்ளனர். பீலி சிவம், `விழுதுகள்' சந்தானம், பாத்திமா பாபு, பாம்பே ஞானம் ஆகியோர் தொடரின் நட்சத்திரங்கள். தயாரிப்பு: கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம்.


நன்றி: தினதந்தி

aanaa
16th April 2011, 08:42 AM
ஆவிகள் ஆயிரம்

ஜெயா டிவியில் "ஆவிகள் ஆயிரம்'' என்னும் புதிய திகில் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. பத்துபேரில் ஒருவருக்காவது பேய் சார்ந்த நேரடி அனுபவமோ, சொல்லக்கேட்டு பயந்த அனுபவமோ கட்டாயம் இருக்கும்.

இந்த நம்பிக்கையின் அடுத்தகட்டமாய் வீட்டினுள் ஒரு இடத்தில் வைக்கப்பட்ட பொருள் மாயமாய் வேறு இடத்திற்கு மாறிவிடுவதும், இருவர் மட்டுமே உள்ள ஒரு அறையில் மூன்றாவதாக யாரோ இருப்பது போல் உணர்வதுமான ஒரு பலமான (பயமான) நம்பிக்கையும் இருக்கிறது.

இதுபோன்ற தனி நபர்கள் தங்களுக்குள் உணர்ந்து, உறைந்து, பயந்த அனுபவங்களை தொகுத்து `ஆவிகள் ஆயிரம்' என்ற புதிய நிகழ்ச்சியை ஜெயா டிவி தருகிறது.

பலதரப்பட்ட ஆவிகள், பல்வேறு வகையான மனிதர்களால் எவ்வாறு உணரப்பட்டது என்பதை திகிலும், பயமும், சுவாரஸ்யமும் கலந்த காட்சி வடிவில் தருவதே இந்த நிகழ்ச்சி.

அம்மாவை தற்கொலை செய்யத்தூண்டி தன்னுடன் வந்து விடுமாறு அழைக்கும் 7 வயது சிறுவனின் ஆவி, மோகினிப் பேயுடன் குடும்பம் நடத்தி ஒரு குழந்தை பெற்றுக்கொண்டதாக கூறி, ஒரு வீட்டில் தனித்தே வாழ்ந்து வரும் இளைஞர், இசையமைப்பாளர் தினாவுக்கு கொடைக்கானலில், நள்ளிரவில் ஏற்பட்ட நெஞ்சை உறைய வைத்த அனுபவம் என திடுக்கிட வைக்கும் அனுபவங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்கின்றன.

ஞாயிறு தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது இந்த நிகழ்ச்சி.


நன்றி: தினதந்தி

aanaa
8th May 2011, 05:27 AM
ஸ்ரீகணேசா


திங்கள் முதல் `ஜி' டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் புதிய பக்தித் தொடர் `ஸ்ரீகணேசா'.

சக்தி தேவி, மூல கடவுளான விநாயகர் தனக்கு மகனாக பிறக்க வேண்டும் என்ற கோரிக்கையினை விநாயகர் முன் வைக்க, விநாயகரும் அவருக்கு அருளாசி வழங்குகிறார். அதோடு `சக்திதேவி அதற்காக பல யுகங்கள் காத்திருக்க வேண்டும்' என்கிறார்.

அகந்தையின் உருவான தக்சபிரஜாபதியின் மகளாக சக்திதேவி பிறந்து, தனது ஆசையினை நிறைவேற்றிக் கொள்ள நினைக்கிறார்.

ஆனால், விதிப்பயனால் அது தள்ளிப்போகிறது. சக்திதேவியின் இந்த ஆசை எந்த பிறவியில் ஈடேறும்? மகா கணேசராக, சிவனுக்கும் - தேவி சக்திக்கும் எப்போது விநாயகர் பிறப்பார்? இது போன்ற பல சுவாரசியமான பகுதிகளை இந்த தொடரில் காணலாம். திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6 மணிக்கு இந்த தொடர் ஒளிபரப்பாகும்.http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20110507/Vinayagar.jpg

நன்றி: தினதந்தி

aanaa
8th May 2011, 05:32 AM
"கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை''


விஜய் டிவியில் ஒளிபரப்பான ``கனா காணும் காலங்கள்'' தொடர் பள்ளி வாழ்க்கையை அடையாளம் காட்டியது. இப்போது கல்லூரிக்குள் நுழைந்து இளம்மாணவப்பருவத்தின் கதையை சொல்ல வருகிறது, `கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை' என்ற பெயரில்.

தொடருக்கான நட்சத்திரங்கள் தேர்வு நடந்தது. தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வான புதுமுக நடிகர்களுக்கு திரைத்துறையிலும், நாடகத்துறையிலும் அனுபவம் வாய்ந்த வல்லுநர்கள் மூலம் நடிப்பு பயிற்சி வழங்கப்பட்டது.

கனா காணும் காலங்கள் தொடரில் நடித்து பிரபலமடைந்த பாண்டி, சத்ரியன், பாலசரவணன், ராகவேந்தர் ஆகியோர் இத்தொடரிலும் நடிக்கின்றனர். இவர்களுடன் பிரேம், கார்த்தி, கணேஷ், பிரபு, ரஜினி, சாய் பிரமோதிதா, நிஷா கிருஷ்ணன், ஸ்வேதா, குஷ்பு ஆகியோரும் நடிக்கின்றனர். இயக்கம்: தமிழ்.

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு இந்த தொடரை காணலாம்.

நன்றி: தினதந்தி

aanaa
8th May 2011, 05:36 AM
தேவி பராசக்தி


`ஜி' டிவியில் இன்று முதல் ஒளிபரப்பாகும் புதிய பக்தி தொடர் `தேவி பராசக்தி'.

அம்மன் கொடுத்த சங்கினை தீய சக்திகளிடமிருந்து காப்பாற்ற போராடும் மகாதேவி என்ற இளம் பெண்ணிற்கும், அம்மனுக்குமான பந்தத்தை உணர்த்தும் பக்தி தொடர் இது.

முன் ஜென்மத்தில், ஆங்கிலேயர்கள் ஆட்சி புரிந்த காலத்தில் இந்திய அரசன் மார்த்தாண்டன் இந்த சங்கினை அடைய நினைக்க, அந்த ஜென்மத்தில் மகாதேவி, துர்கா என்ற பெண்ணாக பிறந்து அந்த சங்கினை காக்க மார்த்தாண்டனை எதிர்த்து போராடி உயிரிழக்கிறாள். மகாதேவியாக இந்த ஜென்மத்தில், அவள் எப்படி அந்த சங்கினை தீய சக்திகளிடமிருந்து காப்பாற்றப் போகிறாள்? அதற்கு பராசக்தி எப்படி உதவப்போகிறாள்? என்பதே இந்த தொடரின் கதைப் பின்னணி.

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் இது.


நன்றி: தினதந்தி

aanaa
8th May 2011, 05:40 AM
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர் செண்பகம். சந்தோஷமாய் வாழ்க்கை நடத்திவரும் ராமச்சந்திரன் தம்பதிகளுக்கு ஒரு பெண், 2 ஆண் பிள்ளைகள் பிறக்கிறார்கள்.
மகிழ்ச்சியாய் பயணித்த அவர்கள் வாழ்க்கையில் ஒரு பெரும்புயல். எதிர்பாராமல் மனைவி இறந்து போக, சூறாவளியில் சிக்கிய படகாய் தடுமாறிப்போகிறது ராமச்சந்திரனின் குடும்பம். காலம் சில காயங்களை மாற்றும். ஆற்றும். `குழந்தைகளை பார்த்துக்கொள்ளவாவது இன்னொரு பெண்ணை மணந்துகொள் என்று வற்புறத்திய உறவினர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கிறார் ராமச்சந்திரன். இரண்டாவது மனைவியாக வடிவு வருகிறாள். மூத்தாளின் பிள்ளைகளை கரித்துக் கொட்டுகிறாள். சித்தி கொடுமை தாங்காத பிள்ளைகள் மூவரும் வீட்டை விட்டே ஒடிப்போகிறார்கள்.

வளர்ப்புத் தாயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் மனநிலையை படம் பிடித்துக் காட்டும் தொடர் இது. தனது இரு தம்பிகளுடன் வீட்டை விட்டு வெளியேறும் செண்பகம், நல்ல உள்ளம் கொண்ட ஒரு செல்வந்தரால், தத்து எடுக்கப்படுகிறாள். அவளது எதிர்காலம், அவளது சகோதரர்களின் எதிர்காலம் இரண்டையும் காலம் கருணையுடன் கணிக்க, வசதிவாய்ப்புகளுடன் செல்வந்தர்களாகிறார்கள். ஊரில் சித்திக்கும் மூன்று பெண் பிள்ளைகள். இப்போது முதல் தாரத்து பிள்ளைகள் சித்தி குடும்பத்தை சந்திக்கவேண்டிய சூழ்நிலை உருவாகிறது.
அப்புறம் என்னாகிறது என்பது தொடரின் விறுவிறுப்பு பகுதிகள். ராமச்சந்திரனாக வின்சென்ட் ராய் நடிக்க, வடிவாக நடிப்பவர் வடிவுக்கரசி. செண்பகமாக நடிப்பவர் புஷ்பலதா. தொடரின் மற்ற நட்சத்திரங்கள்: பரத், ராஜ்குமார், சத்யா, காவேரி, ஸ்வப்னா, யோகினி, ரேவதிப்பிரியா, திரிஷா, ஷோபனா, ரொசாரியோ, ஜோக்கர் துளசி. வசனம்: ராஜேந்திர செல்லையா. ஒளிப்பதிவு: கே.எஸ்.சங்கர். கதை, திரைக்கதை, இயக்கம்: தன்ராஜ். தயாரிப்பு வேதாத்திரி கலைக்கூடம் சார்பில் எஸ்.கே.எம்.சம்பத்ராசா, மு.ஜெகநாதன், மு.குலசேகரன்.

நன்றி: தினமலர்

aanaa
14th May 2011, 06:50 PM
சொல்லத்தான் நினைக்கிறேன்

`ஜி' தமிழ்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் `சொல்லத்தான் நினைக்கிறேன்' தொடர் சுவாரசிய திருப்பங்களுடன் விரைகிறது. ஒரு புறம் குழந்தையின்மை, மறுபுறம் ஆஸ்துமா என பிரச்சினைகள் தொடர்ந்து தாக்க, மனம் உடைந்து போகிறாள் இந்து.

ஒரு வழியாக சகஜ நிலைக்கு திரும்பும் இந்துவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சித் தகவல் மதியின் ரூபத்தில் காத்திருக்கிறது. அது எம்.ஆர்.பி.யின் சதியாக இருக்குமென இந்து நினைக்கிறாள். இந்துவுக்கு காத்திருக்கும் அந்த அதிர்ச்சி என்ன?

படப்பிடிப்பில் இருக்கும் மதனுக்கு போலீசிடமிருந்து போன் வர, சாரு கைது செய்யப்பட்டிருக்கிறாள் என்ற தகவல் வருகிறது. சாருவை ஜாமீனில் அழைத்து வரும் மதன் சாருவை திட்ட, அது பொறுக்காத சாரு வீட்டை விட்டு வெளியேறுகிறாள். வீட்டை விட்டு வெளியேறும் சாரு, மதனிடம் சமாதானமாகி வீடு திரும்புவாளா?

மனதை நெருட வைக்கும் திருப்பங்கள் நிறைந்த இந்த தொடரை திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு காணலாம். `பால்கே' விருது பெற்ற டைரக்டர் கே.பாலச்சந்தரின் சிகரம் தொட்ட படைப்பு இது.http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20110514/TV04.jpg

நன்றி: தினதந்தி

aanaa
14th May 2011, 06:53 PM
இதயம் தொடும் `இதயம்'


சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `இதயம்' மெகா தொடர், 450-வது எபிசோடை எட்டியிருக்கிறது. திருப்புமுனையான சம்பவங்கள், ஊகிக்க முடியாத காட்சிப் பின்னல்களுடன் அமைந்து ரசிகர்களின் இதயத்தொடராகியிருக்கிறது இந்த தொடர்.

நந்தினியிடமிருந்து விவாகரத்து ஆன சங்கர், எதேச்சையாக ரேவதி என்ற பெண்ணை சந்திக்க நேரிட, அடுத்தடுத்த சந்திப்புகள் நட்பு வளர்க்க, ஒரு கட்டத்தில் ரேவதியின் அலுவலகத்தில் ஒர்க்கிங் பார்ட்னர் ஆகிறான், சங்கர்.

ஏழை எளியவர்களுக்கு உதவி செய்யும் தர்மவான் தர்மராஜின் தங்கைதான் இந்த ரேவதி. தன் பாசமிகு தங்கைக்கு தானே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நினைப்பவனுக்கு தன் தங்கை ரேவதி, சங்கரை காதலிப்பது தெரியவர, அதை நேரடியாக கேட்க தைரியமில்லாமல் தர்மராஜ் இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறான். ரேவதி சங்கருடன் காதல் ஏற்பட்ட நிலையில், ரேவதி-நந்தினி நட்பு ஏற்பட, சங்கர் நந்தினியின் கணவன் என்பது தெரியாமல் பழகுகிறாள் ரேவதி.

சங்கரும், ரேவதியும் திருமணம் செய்து கொண்டார்களா? சங்கரை காதலிக்கும் தன் தங்கைக்கு தர்மராஜ் இடைïறு செய்வானா? உண்மையில் இந்த தர்மராஜ் யார்? பல கேள்விகளுக்கிடையே விறுவிறுப்பாக தொடர்கிறது தொடர்.

தொடரில் சீதா, சஞ்சீவ், சித்ரா லட்சுமணன், நித்யாதாஸ், ஸ்ரீ, நளினி, ரவிக்குமார், சாதனா, மனோகர், தேவதர்ஷினி, நீலிமாராணி, சத்யப்பிரியா, விஜயசாரதி, டி.பி.கஜேந்திரன், மற்றும் வர்ஷா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்தொடருக்கு ஐ.அசோகன், வசனம் எழுத பி.நித்தியானந்தம் இயக்குகிறார். கிரியேட்டிவ் ஹெட், தயாரிப்பு: `சத்யஜோதி பிலிம்ஸ்' டி.ஜி.தியாகராஜன்.http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20110514/TV09.jpg

நன்றி: தினதந்தி

aanaa
24th May 2011, 11:00 PM
அபிராமி கேட்கும் 3 வரங்கள்விஜய் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `பிரிவோம் சந்திப்போம்' தொடர். விறுவிறுப்பான கதையமைப்பில் வேகம் பிடித்திரு