PDA

View Full Version : Mohan - Nagaichuvai Thokuppu



leomohan
28th October 2006, 11:13 PM
நகைச்சுவை தொகுப்பு

பிரபலங்களுக்கு ஒரு வரி
________________________________________
அஜீத் நீங்கள் மிகச்சிறந்த கார் ரேஸ்காரர் ஆகவேண்டும் என்பது என் விருப்பம்.

விஜய் ரஜினியை காப்பியடிக்காமலும் டப்பாங்குத்து பாட்டு இல்லாமலும் ஒரு படத்திலாவது நீங்கள் நடிக்கவேண்டும் என்பதே என் விருப்பம்.

தனுஷ் ஏன் கண்றாவியாக நடித்து உங்கள் மாமனார் பெயரைக் கெடுக்கிறீர்கள்.

விவேக் சீக்கிரம் போலீஸ் ஸ்டேஷன் சென்று ஒரு புகார் கொடுங்கள். உங்கள் காமெடி காணாமல் போய்விட்டது.

சத்தியராஜ் போதும்.

வடிவேலு நிறுத்திடுப்பா நிறுத்திடு. இது ரொம்ப ஓவர்.

சன் டிவி நிலையத்தாரே தயவு செய்து உங்கள் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களை மேல் நாடு போகவேண்டாம் என்று சொல்லுங்கள். ஆபாசம் தாங்கவில்லை.

பார்திபன் நீங்க மஞ்சள் பத்திரிக்கை படிக்காமல் நீலப்படங்கள் பார்க்காமல் மூன்று மாதம் இருந்தால் ஒரு நல்ல படம் தயாரிக்கலாம்.

த்ரிஷா கண்ணுக்கு கீழே இருக்கும் தண்(கண்)ணீர் பையை மெட்ரோவில் இணைத்துவிடுங்களேன்!

ஸ்நேகா உங்கள் துரதிர்ஷ்டம் நீங்கள் தனுஷ்டன் நடிக்க வேண்டியதாகிவிட்டது. கவலைப் படாதீங்க நல்ல காலம் பிறக்கும்.

கமல் நீங்கள் வேட்டையாடவும் இல்லை விளையாடவும் இல்லை. இந்த படம் உங்களுக்கு தேவைதானா?

மாதவன் கமலைப்போல நடிக்காமல் உங்களைப்போல் எப்போது நடிக்கப்போகிறீங்க?

தயாநிதி மாறன் சன் நெட்வர்கைவிட்டு கொஞ்சம் நாட்டையும் வளர்க்க முயற்சி பண்ணால் நல்ல இருக்கும்.

கிரஸி மோகன் யூஎஸ்ல காமெடியை விட காம நெடிதான் அதிகமாக இருக்கு. கொஞ்சம் க்ளாஸ் எடுங்க இவங்களுக்கு!

crazy
29th October 2006, 12:31 AM
:lol:

leomohan
17th November 2006, 03:08 PM
ராமதாஸூடன் ஒரு கற்பனை பேட்டி
வணக்கம்.

வணக்கம்.

காலையில் எங்கு சென்றீர்கள்?

டாய்லெட். சே. கழிப்பறைக்கு.

பிறகு என்ன செய்தீர்கள்.

ஃப்ளஷ் பண்ணேன். அடச்சே. ஃப்ளஷூக்கு என்னப்பா தமிழில். ஆ. சரி. தண்ணீர் ஊற்றினேன்.

சரி. இன்னிக்கு பேப்பர் படிச்சீங்களா?

தினசரி செய்தித்தாள் படித்தேன்.

என்ன சிறப்பு நியூஸ்.

தினசரி ஆட்சியில் குழப்பம் தான்.

என்ன செய்யப்போகிறீர்கள்?

நான் முதன் மந்திரியுடன் போனில் பேசுவேன்.

என்ன? போனிலா? நீங்கள் தொலைபேசியில் தானே பேசவேண்டும்?

ஆமாம்பா. காலைப் போடு.

என்ன மருத்துவரே. கால் மட்டும் ஆங்கில வார்த்தை இல்லையா?

யோவ். நான் உன் காலை கீழே போடச்சொன்னேன்.

மன்னிச்சிடுங்க.

என் கார் ரெடியா இருக்கு. நான் போகுனும்.

இல்லை ஐயா. உங்கள் மகிழ்வுந்து தயாராக இருக்குன்னு சொல்லுங்க.

leomohan
17th November 2006, 03:08 PM
செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி
வணக்கம்.

வணக்கம்.

நீங்கள் மீண்டும் ஆட்சியை பிடிப்பீர்களா?

இது என்ன பைத்தியக்காரத்தனமான கேள்வி. நான் தான் ஆட்சி செய்கிறேன்.

என்ன? ஆனால் கலைஞர் தானே முதல்வர்?

அவர் முதல்வராக இருந்தால் என்ன. நான் தான் ஆட்சி செய்கிறேன்.

அவர் உங்கள் பெயரை சொல்லக்கூட மாட்டேங்கறார்?

அவருக்கு ஆங்கிலம் தெரியாது.

உங்கள் பெயர் தமிழ்தானே?

இல்லை. ஆங்கிலத்தில் தான் என் பெயர் ஜெயலலிதா.

தமிழிலில்?

புரட்சி தலைவி.

என்ன புரட்சி செய்தீர்கள்?

நான் தலைவியாக இருப்பதே ஒரு புரட்சிதானே?

சரி. நீங்கள் ஏன் கலைஞருடன் மோதுகிறீர்கள்?

அவர் நடத்தும் டிவியின் பெயர் மட்டும் சன் என்று ஆங்கிலத்தில் இருக்கலாமா?

உங்கள் டிவியின் பெயரும் தான் ஜெயா என்று ஆங்கிலத்தில் இருக்கிறது.

இல்லை. ஜெயா என்பது தமிழ் பெயர்.

இப்போது தானே நீங்கள் ஜெயா ஆங்கிலம் என்று சொன்னீர்கள்.

அது என் இஷ்டம். நீங்கள் போகலாம்.

leomohan
17th November 2006, 03:10 PM
கலைஞருடன் ஒரு கற்பனை பேட்டி
வணக்கம்.

வணக்கம்.

நீங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததைப்பற்றி?

அது கடவுளின் விருப்பம்.

ஆனால் நீங்கள் கடவுளை நம்பாதவர் ஆயிற்றே?

ஆம். இதை நான் சொன்னது கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு.

ஓ. அப்படியென்றால் உங்கள் கருத்துப்படி?

என் கருத்துப்படி இது அம்மையாரின் தோல்வி.

யார் அம்மையார்?

அவர் பெயரை நான் சொல்ல விரும்பவில்லை?

செல்வி ஜெயலலிதாவா?

ஆம். அந்த அம்மையார் தான்?

ஜெயலலிதா தான் அம்மையாரா?

ஆம்.

யார் அம்மையார்?

ஜெயலலிதா. ஓ. அவர் பெயரை என் வாயாலே சொல்ல வைத்து விட்டீர்களே? இன்னிக்கு ஒரு வேலையும் நடக்காது.

அதனால் என்ன? நீங்கள் பகுத்தறிவு வாதி ஆயிற்றே?

ஆம். அந்த பகுத்தறிவில் தான் சொல்கிறேன். அந்த அம்மையாரின் பெயரை எடுத்தால் எந்த
வேலையும் நடக்காது.

Shakthiprabha.
19th November 2006, 01:43 PM
good ones :thumbsup:

crazy
19th November 2006, 03:44 PM
:lol: :rotfl: