PDA

View Full Version : Makkal Thilagam MGR Part 26Pages : [1] 2 3 4 5 6

suharaam63783
29th April 2020, 11:54 AM
With all our friends blessings to day I am starting our MAKKAL THILAGAM MGR PART 26.

ravichandrran
29th April 2020, 12:18 PM
மக்கள் திலகம் எம் ஜி ஆர் பாகம் 26
இன்று வெற்றிகரமாக துவங்கப்பட்டுள்ளது

இந்தப்பாகத்தை துவங்கி வைத்த திரு சுகாராம்
அவர்களுக்கு நன்றி.

மக்கள் திலகத்தின் திரையுலக அரசியல் சாதனைகளை
அன்பு நண்பர்கள் தொடர்ந்து பதிவிட கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்

எஸ் ரவிச்சந்திரன்

suharaam63783
29th April 2020, 12:52 PM
அனைவருக்கும் நல் வணக்கம்... நல்வரவு... நல்வாழ்த்துக்கள்... எல்லாம் வல்ல இறைவன் அருளால் உலகமெங்கும் சுபிட்சமாக வாழ கடைக்கண் பார்வை பார்த்து ஆசிர்வதிகட்டும்... மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., புதிய பாகம் 26 தொடங்கப்பட்டத்தில் மிக்க மகிழ்ச்சி... நம் சகோதரர்கள் எல்லோரும் மக்கள் திலகம் மாண்பினை பல்வேறு கோணங்களில் பதிவு செய்ய வேண்டும் என வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறோம்... நன்றி...

ravichandrran
29th April 2020, 12:56 PM
தற்பொழுது

சன் லைப் தொலைக்காட்சியில்

அரச கட்டளை

suharaam63783
29th April 2020, 01:43 PM
MGR Filmography (1962 Film 53) Poster

1962ஆம் ஆண்டு ராணி சம்யுக்தா மாடப்புறா ஆகிய இரண்டு சராசரி படங்களுக்கு பிறகு அந்த வருட சித்திரைப் பிறப்பன்று எம்ஜியாருக்குப் புத்துயிர் கொடுக்க வெளியானது தாயைக் காத்த தனயன்.
எம்ஜியாரின் ஆஸ்தான ப்ரொட்யூசர்களில் ஒருவரான சின்னப்பா தேவர் தயாரிப்பில் உருவான இப்படத்துக்கு வழக்கம்போல ஆரூர்தாசின் கதை வசனத்தில் கேவி மகாதேவன் இசையமைக்க, எம்ஏ திருமுகம் இயக்க, எம்ஜியார் படங்களில் தவறாது தோன்றும் சரோஜாதேவி, அசோகன், எம் ஆர் ராதா அனைவரும் நடித்தனர். படத்தில் மிருகங்களுடனான சண்டைக்காட்சிகள் மிகுந்த பாராட்டைப் பெற்றன. தாய்க்குப் பின் தாரம் படத்திலிருந்தே தேவரின் படங்களில் ஏதேனும் ஒரு மிருகம் முக்கியத்துவம் பெறுவது என்பது வழக்கமாக இருந்தது. இதில் புலியின் உறுமலும் சீற்றமும் விசேஷம் பெற்றன.
மொத்தம் ஏழு பாடல்கள், ஏழும் ஹிட் ஆகின. வழக்கமான ஆக்ஷன் சீக்வன்ஸுகள் மட்டுமல்லாமல் எம்ஜியாருக்குப் பல உணர்ச்சிகரமான காட்சிகளையும் கொண்டிருந்தது இந்தப் படம். எம்ஆர் ராதா இரட்டை வேடம் ஏற்றிருந்ததும் அதை அழகான சஸ்பென்ஸ்ஃபுல் த்ரில்லராகச் செய்திருந்ததும் படத்தின் வெயிட்டை அதிகரித்தன.
சென்னையில் எம்ஜியார் படங்கள் வழக்கமாக வெளியாகும் ப்ளாசா, மஹாலஷ்மி, பாரத் ஆகிய தியேட்டர்களிலும், சேலம், கோவை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களிலும் நூறு நாட்களைத் தாண்டி வெற்றிகரமாக ஓடியது இப்படம். இலங்கையிலும் அவ்வாறே நூறு நாள் படமானது.
ஆக்ஷன், செண்டிமெண்ட், இசை போன்ற மசாலாக்களை எல்லாம் சரியான விகிதத்தில் சேர்த்து பர்ஃபெக்ட்லி பேக்கேஜ்ட் ஃபிலிம் என்பதற்கான உதாரணங்களில் இப்படமும் ஒன்றானது........ Thanks...

suharaam63783
29th April 2020, 01:53 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் வீரமும்
இன்றைய கோழை கஞ்ச நடிகர்களும்

பணம் அதிகம் இல்லை பிரபலம் ஆகிவரும் காலம் என்ற போதும் இந்தியா சைனா போர் பிரமரின் வேண்டுகோள் இந்தியாவிலே முதல் குடிமகனாய் அதிக பணம் கொடுத்தது எம்.ஜி.ஆர்.

உலகிலே ஒரு கட்சி கொடியை தன் ஸ்தாபனத்தின் அடையாளமாக திரையில் காட்டிய முதல் வீரநடிகர் எம்ஜிஆர் . உலகத்திலேயே ஒரு கட்சி எதிர் கட்சியாக கூட வராத காலத்தில் துணிந்து அக்கட்சியின் கொடியை தன் படத்தில் காண்பித்த அடலேறு மாவீரர் எம்.ஜி.ஆர்., மட்டுமே.
ஊழலை எதிர்த்து தனி கட்சி அமைத்ததால் தன் லட்சிய படம் இறங்க ஆளும் கட்சி அதிகாரம் குண்டர் படை கொண்டு தடுத்த போதும் படத்தை வெளியிட்டு அதுவரை தமிழ் திரையுலகம் கண்ட அத்தனை வசூல் சாதனைகளையும் முறியடித்தார் எம்ஜிஆர்
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை எம்ஜிஆர் குணமடா

இன்றைய நடிகர்கள் பதவி மோகம் கொண்டு பைத்தியமா ஆட்சியை பிடிக்க நடிகன் என்ற ஒரே தகுதி போதும் என உளறி கொண்டு திரிகிறார்கள்
தமிழனை படுகொலை செய்து கொத்து கொத்தாக குண்டு வீசி அளித்த போது களம் இறங்காத நடிகர்கள் பதவி அடைய வயதாகி மார்கெட் போன பின் களம் இறங்க போறாங்களாம்

எம்ஜிஆர் நடிகன் என்பதால் மட்டும் மக்கள் ஆதரிக்க வில்லை மனிதநேய வள்ளல் ஒரு தெய்வப்பிறவி என்பதால் தான் என்பதை உணரவேண்டும்

வாழ்க எம்ஜிஆர் புகழ்........ Thanks...

suharaam63783
29th April 2020, 01:57 PM
#தலைவரின்_நேற்றுஇன்றுநாளை
[ 12 - 07 - 1974 ]

தலைவர் இயக்கம் கண்டு திண்டுக்கல் இடைத்தேர்தல் இமாலய வெற்றிக்குப் பிறகு வெளியான சூப்பர் ஹிட் காவியம்.

திமுக ஆட்சியை இழந்ததற்கும் அதன் பின்பு தலைவர் இருக்கும் காலம் வரை திமுக ஆட்சியை பிடிக்க முடியாமல் போனதற்கும் தலைவரின் இந்தப் பாடலும் ஒரு முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது.

குறிப்பாக 1974 நேற்று இன்று நாளை
ரிலீஸான நாள் முதல் 1977 சட்டமன்ற பொதுத்தேர்தல் வரை கிராமங்களில் நடைபெறும் இல்ல சுபகாரியங்களில் கூட இந்தப் பாடலை மீண்டும் மீண்டும் ஒலி பரப்புவார்கள்...

திமுகவினருக்கு வரும் ஆத்திரத்திற்கு அளவே கிடையாது.

இந்தப் பாடலில் வரும் வரிகளான...

மக்கள் நலன் மக்கள் நலன் என்றே சொல்லுவார்...
தம் மக்கள் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்...

என்ற வரிகள் நேரடியாக கலைஞரையே தாக்குவதாக உள்ளதால் திமுகவினரின் ஆத்திரம் தலைவர் மீது மட்டுமல்ல...

இந்தப் பாடலை எழுதிய வாலி அவர்களையும் தயாரிப்பாளர்
நடிகர் S.A. அசோகன் அவர்களையும்
விட்டு வைக்கவில்லை.

மக்கள்திலகம் ரசிகர்களின் பேராதரவில் மாபெரும் வெற்றிப்படம் மட்டுமல்ல...
தலைவர் அரியணை ஏறுவதற்கும் கலைஞர் சொன்னாரே 14 ஆண்டு கால வனவாசம் என்று...

அதை நிறைவேற்றியதில் பெரும்பங்கு வகித்த பாடல் இது...

நெல்லை எழில்மிகு பார்வதி திரையரங்கில் இந்த திரைப்படத்திற்கு திரண்ட மக்கள் சமுத்திரம் போல் பார்வதி திரையரங்கில் எந்த திரைப்படத்திற்கும் வந்ததில்லை என்று நேரில் பார்த்தவர்கள் கொடுக்கும் சாட்சியாகும்.

இத் திரைக்காவியத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மெகா ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.

�� வளர்க புரட்சித்தலைவர் புகழ் ��

#இதயதெய்வம்........... Thanks.........

suharaam63783
29th April 2020, 02:07 PM
Cont-1
பாய்ஸ் கம்பனினா என்னனு தெரியுமா உங்களுக்கு? (பாய்ஸ் கம்பெனி என்பது ஒரு குழுவாகத் தொழில் முறை நடிகர்களை வைத்து நாடகம் போடும் நிறுவனங்கள். அதில் சிறுவர்கள் நிறைய இருப்பார்கள். வறுமையின் காரணமாகவும், கலை ஆர்வம் காரணமாகவும் வந்து சேரும் சிறுவர்கள். எல்லோரும் ஒன்றாகத் தங்கி, ஒன்றாக உண்டு, ஊர் ஊராகப் போய் நாடகம் போடுவார்கள். சிறுவர்களுக்குப் பயிற்சி அளிக்க வாத்தியார்களும் இருப்பார்கள்) குரல் உடையற வயசு. அந்த வயசில இருக்கிறவனுக்குப் பாடம் கொடுக்க மாட்டாங்க. பாட முடியாதில்ல?. வேஷம் இல்லாதவனுக்கு கம்பெனியில மரியாதை கிடையாது. ஆசிரியர்கள் வேண்டாத மாணவர்களைப் பழி தீர்த்துக் கொள்ள்வதும் அப்போதுதான். வாழ்க்கை பெரிய நரகமாக ஆகிவிடும். ஒரு நாளைக்கு சாப்பிட உட்கார்திருக்கோம். நல்ல பசி. இலை போட்டாச்சு. காயும் ஊறுகாயும் வைச்சுட்டுப் போயிருக்காங்க. சோறு வந்துகிட்டே இருக்கு. என்னை பிடிக்காத வாத்தியார் ஒருத்தர் நான் சாப்பிட உட்கார்ந்திருக்கிறதைப் பார்த்தாரு. வேகமாக கிட்ட வந்தாரு. ' ஏண்டா உங்களுக்கெல்லாம் முதப் பந்தி கேட்ட்குதா?'னு கையைப் பிடிச்சு எழுப்பிவிட்டார். கையிலசோறு எடுத்து வாயில போடப்போற நேரத்தில எழுப்பிவிட்டா எப்படி இருக்கும்? ஆனா அந்த நேரத்தில எனக்கு பசியைவிட அவமானம்தான் அதிகமாக இருந்தது. 'அவரை எதிர்த்து யாரும் சண்டை போட முடியாது, கேள்வி கேட்க முடியாது, தன் கிட்ட அதிகாரம் இருக்குனு தானே எழுப்பிவிடறாரு?எனக்கு என்னிக்காவது அதிகாரம் வந்தா நாலு பேருக்குச் சோறு போடுவேன், எவன் சோத்தையும் பறிக்க மாட்டேன்'னு அன்னிக்கு நினைச்சேன். இன்னிக்கு எல்லோரும் என்னை வாத்தியார் வாத்தியார்னு கூப்பிடும் போது எனக்கு அவங்களுக்கு சோறு போடற கடமை இருக்குகிற நினைப்பு வருது. அடுத்த வேளைச் சோற்றுக்கு உத்திரவாதம் இருக்கிறவங்க ஏழைகள் சோற்றைப் பற்றி என்ன வேணா கேள்வி கேட்கலாம். எனக்கு அதைப் பற்றி கவலை இல்லீங்க."
இதைச் சொல்லும் போது அவர் குரல் கனமேறிக் கரகரத்தது.......... Thanks.........

suharaam63783
29th April 2020, 02:11 PM
இனிய பிற்பகல் வணக்கம்..!!

#எம்_ஜி_ஆர்_பற்றி_சுவையான_சிறு_குறிப்புகள்

சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல் மாடல். இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும்... இன்று அவரை பற்றி பார்ப்போம்.

நாளை போடப்போறேன் #சட்டம் – பொதுவில்
நன்மை புரிந்திடும் #திட்டம்
நாடு நலம் பெறும் #திட்டம்

என்று நாடோடி மன்னன் படத்தில் பாடிய படியே எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்ததும் பல மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றினார். ஒப்பனையும் ஒரிஜினலும் ஒன்றுகலந்ததாக எம்.ஜி.ஆரின் வாழ்க்கை அமைந்துவிட்டதால் அவரை சினிமா எம்.ஜி.ஆர் என்றும் அரசியல் எம்.ஜி.ஆர் என்றும் பிரித்துப் பார்க்க இயலவில்லை.

#தொழிலாளியாக_எம்ஜிஆரின்_நலத்_திட்டங்கள்

ஏழை பங்காளன் என்று மக்களால் அழைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் அதற்கு எடுத்துக்கொண்ட முயற்சிகள் ஏராளம்., ரிக்*ஷாக்காரனாக, பெயின்டராக, வண்டி இழுக்கும் தொழிலாளியாக, பரிசலோட்டியாக, கிணறு தூர் வாருபவராக பல வேடங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார். இதனால் அவர் மீது மிகுந்த நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் தொழிலாளிகளிடையே காணப்பட்டது. அவர்கள் எதிர்பார்த்தபடியே எம்.ஜி.ஆரும் நெசவாளர், தீப்பெட்டி தொழிலாளர் மற்றும் பனையேறும் தொழிலாளிகளுக்கு விபத்து நிவாரணத் திட்டத்தை அறிமுகம் செய்தார்....... Thanks...

kaliaperumal vinayagam
29th April 2020, 02:27 PM
ஐக்கிய நாடுகள் சபை போற்றி, உலகமே வியந்து பாராட்டிய சத்துணவு திட்டத்தை 01-07-1982 முதல் அறிமுகப்படுத்தினார்.

மதிய உணவுத்திட்டம் என்று ஏற்கனவே ஒரு சில பள்ளிகளில் மட்டுமே இருந்த திட்டம் சரிவர நடத்த முடியாமல்இருந்ததால் இத்திட்டத்தை மேலும் அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தி சாதாரண உணவாக இல்லாமல் சரிவிகித சத்துணவுத்திட்டமாக மாற்றினார். இதற்கு அதிகாரிகள் அதிகமாக செலவாகும் என்றும் செயல்படுத்துவது கடினம் என்றும் கூற இத்திட்டத்தை எப்பாடு பட்டேனும் நிறைவேற்றுவேன் என்று கூறி சாதித்தும் காட்டினார். இன்றைக்கு உயர்ந்த பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் நீதிபதிகள் என நிறைய பேர் இத்திட்டத்தினால் பயன்பெற்றவரே. இதை அவர்களே பல நேரங்களில் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். இத்திட்டத்தை இந்தியாவின் பல மாநிலங்கள் பின்பற்றி பின்னர் ஐ. நா சபையே அதை பாராட்டியது. ஆனால் முந்தைய ஆட்சியில் இருந்தவர்கள் இந்த சாதனையை இன்றைய தலைமுறையினருக்கு சரிவர கொண்டு சேர்க்கவில்லை. இனிமேல் பக்தர்களாகிய நாம் நம் ஆண்டவன் நிகழ்த்திய சாதனைகளை ஒவ்வொன்றாய் இன்றைய தலைமுறையினர் நன்கு அறியும் வண்ணம் செய்ய வேண்டியது நமது கடமையாகும். நம் உறுப்பினர்கள் இந்த சாதனை சம்பந்தமாய் தாங்கள் அறிந்தவற்றை பதிவிடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

வி. கலியபெருமாள். புதுச்சேரி
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜியார்.

suharaam63783
29th April 2020, 02:43 PM
ரசிகர்களும் மக்களும் விரும்பிய ஒரே நடிகர் மக்கள் திலகம் எம்ஜிஆர் .( அதற்க்கான results பல தடவைகள் நிரூபிக்கபட்டுள்ளது உலகறிந்த உண்மை)
எம்ஜிஆர் நடித்த திரைப்படங்களின் தலைப்பே அதற்கு உதாரணம் .

நாடோடி மன்னன்
மன்னாதி மன்னன்
தர்மம் தலைகாக்கும்
நல்லவன் வாழ்வான்
நீதிக்கு பின் பாசம்
என் கடமை
தொழிலாளி
தெய்வத்தாய்
படகோட்டி
எங்க வீட்டுப்பிள்ளை
ஆயிரத்தில் ஒருவன்
கலங்கரை விளக்கம்
ஆசை முகம்
நான் ஆணையிட்டால்
முகராசி
சந்திரோதயம்
தனிப்பிறவி
காவல்காரன்
விவசாயி
குடியிருந்த கோயில்
புதியபூமி
ஒளிவிளக்கு
நம்நாடு
தலைவன்
எங்கள் தங்கம்
நீரும் நெருப்பும்
சங்கே முழங்கு
நல்ல நேரம்
நான் ஏன் பிறந்தேன்
அன்னமிட்டகை
நேற்று இன்று நாளை
உரிமைக்குரல்
சிரித்து வாழ வேண்டும்
நினைத்ததை முடிப்பவன்
நாளை நமதே
இதயக்கனி
பல்லாண்டு வாழ்க
நீதிக்கு தலை வணங்கு
உழைக்கும் கரங்கள்
ஊருக்கு உழைப்பவன்
இன்று போல் என்றும் வாழ்க
மீனவ நண்பன்
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் ...... Thanks...

suharaam63783
29th April 2020, 04:02 PM
[எழுத்தாளர் மாலனின் வலைப்பூ

தொப்பியும் இல்லாமல், கண்ணாடியும் அணியாமல் என் முன்னே உட்கார்ந்திருந்தார் எம்.ஜி.ஆர். ஒரு நாள் முழுக்க அவரோடு இருந்து அவரது அசைவுகளை எழுதுவதற்காக நான் அவர் அறையில் அமர்ந்திருந்தேன்.காலையில் எழுந்து பல்துலக்கியதுமே ராமாவரம தோட்டத்திற்குப் போய் அவரோடு அவருடைய காரிலேயே கோட்டைக்கும் போய்விட்டு மதியச் சாப்பாட்டிற்கு திநகர் ஆற்காடு (முதலியார்) வீதிக்குத் திரும்பியிருந்தோம். எம்ஜிஆர் சாப்பிடத் தனது அறைக்குப் போனார். எங்களுக்குக் கீழே சாப்பாடு ஏற்பாடாகியிருந்தது.

அவரது ஆற்காடு முதலி வீட்டில் (இப்போது நினைவகம் இருக்கிறது) அவர் இருந்த காலத்தில், தினம் மதியம் 100 பேராவது சாப்பிடுவார்கள்.அது சாப்பாடு இல்லை. விருந்து. ராமவரத்திலும் காலையில் ஒரு 50 60 பேராவது சாப்பிடுவார்கள்.பகல் 12 மணியிலிருந்து மதியம் இரண்டு இரண்டரை மணி வரைக்கும் யாரைப்பார்த்தாலும், அலுவலக உதவியாளர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், சந்திக்க வருகிற பார்வையாளர்கள், லிப்ட் இயக்குநர். கார் டிரைவர், என யாரைப் பார்த்தாலும் 'சாப்பீட்டீங்களா?' என்பதுதான் அவரது முதல் கேள்வியாக இருக்கும்.

சாப்பிட்டுவிட்டு மேல அவரது அறைக்கு வந்த என்னைப் பார்த்து "சாப்டீங்களா?" என்றார். "ஆச்சு" " என்ன சாப்டீங்க? சைவமா அசைவமா?" என்று கேட்டு "ஓ! நீங்க அசைவம் சாப்பிட மாட்டீங்கல்ல?" என்று அவரே பதிலும் சொல்லிக் கொண்டார். என்ன மெனு என்று சொல்லச் சொன்னார். ஏதாவது ஒன்றிரண்டை விட்டு விட்டேனோ என்னவோ, வெடுக் என்று கையைப் பறித்து உள்ளங்கையை முகர்ந்து பார்த்தார். "ஸ்வீட் சாப்டீங்களா? என்ன ஸ்வீட்?" என்றார். எங்களுக்கு அன்று ஸ்வீட் பரிமாறப்படவில்லை. நாங்களும் அதைப் பொருட்படுத்தவில்லை. சாப்பிடுவதற்கா போயிருக்கிறோம்? கோட்டையிலிருந்து திரும்பும் போதே இரண்டு மணி இருக்கும். அதற்குள் பல பந்திகள் முடிந்திருந்தன. ஸ்வீட் தீர்ந்து போயிருக்கலாம். எங்கள் மெளனத்தைப் பார்த்துவிட்டு காலின் கீழ் இருந்த அழைப்பு மணியை அழுத்தினார். அவர் அதற்கான விசையை அங்கேதான் வைத்திருந்தார். உதவியாளர் வந்தார்." "இவங்களுக்கு சாப்பாட்ல ஸ்வீட் போட்டீங்களா?" என்றார். உதவியாளர் எங்கள் முகத்தைப் பார்த்தார். 'போட்டுக் கொடுத்திட்டீங்களா? பாவிகளா?" என்பது போல இருந்தது அவர் பார்வை. மெளனமாக இருந்தார். ஒரு நிமிடத்தில் எம்.ஜி.ஆரின் முகம் சிவந்து விட்டது,
"இப்படித்தான் தினமும் இங்கே நடக்குதா?" என்று இறைந்தார். "எத்தனை நாளா இப்படி நடக்குது/" என்றார் மறுபடியும். உதவியாளர் ஸ்வீட் தீர்ந்து போன நிலையை விளக்க முயன்றார்." அதெல்லாம் எனக்குத் தெரியாது. இப்ப இவங்களுக்கு ஸ்வீட் வரணும் என்றார். சிறிது நேரத்தில் ஒரு பெரிய தூக்குவாளி நிறைய ஒரு லிட்டர் பாசந்தி வந்தது. அதை அப்போதே நாங்கள் சாப்பிட்டாக வேண்டும் என வற்புறுத்தினார்.

ஏன் சாப்பாடு சாப்பாடு என வற்புறுத்திக் கொண்டே இருக்கிறார் என்று எனக்குள் ஒரு கேள்வி. அவருடைய சத்துணவுத் திட்டத்தைப் பற்றிப் பேச இதுதான் சந்தர்ப்பம் என்று எனக்குத் தோன்றியது. அந்த திட்டம் பற்றிய விமர்சனங்களை வீச ஆரம்பித்தேன்." மக்களுடைய வரிப்பணத்தை எடுத்து இப்படிச் சோறு போட செலவழிக்க வேண்டுமா? தொழிற்சாலைகள் நிறுவி, மக்களுக்கு வேலை கொடுத்தால் அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்குச் சோறு போட மாட்
டார்களா?" என்று என் கேள்வியை ஆரம்பித்தேன்.

அதற்கு பதிலாக அவர் தனது இளமைக்கால சம்பவம் ஒன்றை விவரிக்க ஆரம்பித்தார்." அப்போது நான் பாய்ஸ் கம்பெனியில் நடிச்சிக்கிட்டு இருக்கேன்.

Cont...]......... Thanks...

suharaam63783
29th April 2020, 04:12 PM
Cont-2
புத்தகங்களில் உள்ள பொருளாதாரத் தத்துவங்களால் விளக்க முடியாததாக இருந்தது புரட்சி தலைவர்,அவரது சத்துணவுத் திட்டம். ஆனால் இன்று பின்னோகிப் பார்க்கும் போது ஆரம்பக் கல்வி நிலையங்களில் உள்ள மாணவர்கள் படிப்பைப்
பாதியில் நிறுத்திவிட்டு விலகும் விகிதம் (dropout rate) இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் குறைவு. The National University of Educational Planning and Administration (NUEPA) என்ற நிறுவனம் பள்ளிகளைப் பற்றித் தயாரித்த ரிப்போர்ட் கார்டின் படி தமிழ்நாட்டில் Retention rate 100%. Common Man's logic என்ற ஒன்று இருக்கத்தான் செய்கிறது. அது தத்துவங்களுக்கு அப்பாற்பட்டது !....... Thanks...

suharaam63783
29th April 2020, 06:15 PM
தலைவர் மறைந்தபோது எனக்கு 10 வயது எங்க வீட்டுக்கு பின்புறம் இரயில் பாதை அந்த இரண்டு நாட்களும் எல்லா ரயில்களும் இது போலவே சென்றது அப்பா என்னை அழைத்து கொண்டு தலைவரை பார்த்து விட வேண்டும் என்று கிளம்பினார் ஆனால் அம்மா ஒவ்வொரு ரெயிலிலும் இவ்வளவு கூட்டம் போகிறது பிள்ளையை அனுப்ப மாட்டேன் என்று சொல்லி விட்டார் தலைவரை பார்க்க வேண்டும் என்கிற ஆசை நிறைவேறாமலே போய்விட்டது...... Thanks Chezhiyan...

suharaam63783
29th April 2020, 06:16 PM
மறக்க முடியாத பயணம்...
நிறைய ரத்தத்தின் ரத்தங்களுக்கு--
இதைத்தான் நடிகர் சோ சொல்வார்---
"எல்லா நடிகளுக்கும் ரசிகர்கள் உண்டு.ஆனால் MGR க்கு மட்டுமே
பக்தர்கள் உண்டு"....... Thanks... Kumaravel...

suharaam63783
29th April 2020, 06:24 PM
சினிமா, அரசியல் என இரட்டைக் குதிரையிலும் உச்ச வேகத்தில், உயரத்தில் #எம்.ஜி.ஆர் பயணித்துக்கொண்டு இருந்த சமயம் அது...

ஆனந்த விகடனில் 'நான் ஏன் பிறந்தேன்?’ என்ற தலைப்பில் தன் சுயசரிதையை எழுதினார்... #மக்கள்திலகம்...

வாசகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடரின் முதல் அத்தியாயமே எம்.ஜி.ஆரின் கையெழுத்தில் இப்படித்தான் தொடங்கியது...... Thanks...

suharaam63783
29th April 2020, 06:27 PM
Cont-2
மதுரை தியேட்டர்களில் எந்த நிறுவனத்தின் எம்பளம் பார்த்துட்டு கை தட்டினேனோ அந்த நிறுவனத்தின் படத்தை நான் டைரக்ட் செய்ய வேண்டுமா … நானும் கமலும் அதிர்ந்து போய்விட்டோம்.
ஒருமுறை சென்னை மாங்கொல்லையில் அவர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசி முடித்து விட்டு, நான் என் காரைத் தேடிக் கொண்டிருந்த போது, அவர் என்னைத் தன்னுடைய காரில் ஏறச் சொன்னார். நான் தயங்கினேன்.
கூட்டம் கூடுது சீங்கிரம் ஏறு என்றார். ஏறிக் கொண்டேன். வீடு எங்கே ஜெமினி காம்ப்ளக்சில் தானே என்று கேட்டு என்னை இறக்கி விட்டார். பின் இந்த வீட்டிலதான் இன்னும் இருக்கியா என்று கேட்டார். இல்ல தி.நகரில் புது வீடு கட்டிக் கொண்டிருக்கிறேன். நீங்கதான் வந்து கிரகபிரவேசத்திற்குக் குத்து விளக்கேற்றி வைக்கணும் என்றேன். அவசியம் வருகிறேன் என்று சொல்லி விடைபெற்றார்.
அவர் புரூக்ளின் மருத்துவ மனையிலிருந்து திரும்பி வந்த பிறகுதான் அந்த வீடு கட்டி முடிக்கப்பட்டது.
வீட்டிற்குக் குடிபோவதற்கு முதல் நாள் ஒரு மரியாதைக்காக அவரிடம் சொல்லிவிட்டு வருவதற்காகச் சென்றேன். நாளைக்கு எத்தனை மணிக்கு என்றார். காலை ஆறரை மணிக்குங்க என்றேன்.
மறுநாள் காலை ஆறேகால் மணிக்கு அந்த மாமனிதனின் கால்கள் என் வாசலில் பதிந்தன. நான் நெகிழ்ந்து போனேன். அவர் ஏற்றி வைத்த விளக்கு என் வீட்டில் இன்னும் வெளிச்சம் பேசிக் கொண்டிருக்கிறது. ஆனால் அந்த மனிதன் … அந்த மனிதன் ….
புரூக்ளின் மருத்துவமனையே … அந்த மாமனிதனின் சுவாசத்தை இரண்டாண்டுகள், மூன்றாண்டுகள் தானா உன்னால் நீட்டிக்க முடிந்த்து. இன்னும் கொஞ்சம் இரக்கம் காட்டியிருக்க்க் கூடாதா? கண்களில் நீர் தளும்ப நான் அதனோடு மானசீகமாகப் பேசினேன்.
புரூக்ளின் மருத்துவமனை சலனமில்லாமல் நின்றது.
ஞாபக நதிக்கரையில் நூலில் இயக்குநர் பாரதிராஜா....... Thanks...

suharaam63783
29th April 2020, 06:28 PM
தலைவர் தலைமையில் ஒன்றிய செயலாளர் திருமணம் pmv ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது தலைவர் குறித்த நேரத்தில் வர இயலவில்லை வரும் வழி எங்கும் தொண்டர்கள் கூட்டம் மிக தாமதமாக தலைவர் வந்து சேர்ந்தார் வந்தவுடனே தலைவர் கேட்டது நல்ல நேரத்தில் முகூர்த்தம் முடித்திருக்கலமே என்றார் ஒன்றியச் செயலர் ஒற்றை வரியில் சொன்னது தலைவர் அருகில் இருக்கும் போது ராகு கேது மற்றும் எமகண்டம் என்னை நெருங்காது தாலியை நீங்கள் தொட்டு தாருங்கள் இதுவே என் வாழ்க்கையில் பொன்னான நாள் என்றார்.... Thanks...

suharaam63783
29th April 2020, 06:29 PM
ஒவ்வொரு கிராமத்திலும், ஏதோ ஒரு குறிப்பிட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களே பரம்பரை பரம்பரையாக கிராம நிர்வாகத்தை கவனித்து வரும் முறையை ஒழித்து..

'கிராம நிர்வாக அலுவலர்' என்கிற பதவியை ஏற்படுத்தி அதை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தவர் #எம்ஜிஆர்.

இதன் மூலம், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் கிராம நிர்வாக அலுவலராக வரக்கூடிய சூழல் உருவானது என்பது மிக முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு செயலாகும்.

எம்.ஜி.ஆர் ஆட்சியில் இருந்த போதுதான், தெரு பெயர்களில் 'ஜாதிப்பெயர் இடம்பெறக்கூடாது' என்கிற முக்கியமான அரசாணையைப் பிறப்பித்தார்.

சென்னை மாநகராட்சியின் அனைத்துப் பகுதிகளிலும் உடனடியாக நடைமுறைக்கு வந்தது !........ Thanks...

suharaam63783
29th April 2020, 06:35 PM
கௌரவம் பார்த்தால்
கௌரவம் பார்க்காதே?
---------------------------------------------

எம்.ஜி.ஆரின் சிறப்பை வகை வகையாய் ஒவ்வொருத்தரும்,, தங்கள் தனித் திறமையால் வித விதமாக முக நூல்,,வாட்ஸ்-அப்புகளில் விளக்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள்!
அந்த வகையில் எம்.ஜி.ஆரின் ஒரு குண நலனை,,அதுவும் அவர் முதல்வராக இருக்கும்போதும் செயல்படுத்தியதை இங்கேப் பார்க்கலாம்!
அது,,சத்யா மூவீஸின் மாஸ்டர் பீஸ் படம்--
ரிக்ஷாக்காரன்!!
சோ வையும்,,இன்னொரு சிறந்த நடிகரையும் தனது விருப்பத் தேர்வாக,,அந்தப் படத்தில் நடிக்க வைக்க விரும்புகிறார் எம்.ஜி.ஆர்!
தேங்காய் ஸ்ரீனிவாசனோடு ஈடு கட்டும் ஐயராக சோ நடிக்க வேண்டும் என்ற எம்.ஜி.ஆரின் எதிர்ப்பார்ப்பு எவ்வளவு சரியானது என்பதைப் படம் பார்த்த நாம் புரிந்து கொள்ளலாம்!
தேங்காயோடு சேர்ந்து கலக்கியிருப்பார் சோ!!
வக்கீலாக,,ஒரு குணச்சித்திர நடிகரை தம் மனதில் தேர்வு செய்து வைத்திருந்தார் எம்.ஜி.ஆர்!
கதையே,,அந்த வக்கீலால் தான் அமைந்திருக்கிறது என்பதையும்,,அந்த நடிகரால் தான் அந்தப் பாத்திரத்துக்கு உயிர்க் கொடுக்க முடியும் என்றும் திடமாக நம்பினார் எம்.ஜி.ஆர்!
குணச் சித்திர நடிகராக எவர் பொருத்தமானவர் என்று எம்.ஜி.ஆர் கருதினாரோ,,அவரால் எம்.ஜி.ஆரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய இயலவில்லை?
சிவாஜி படங்களுடன் வேறு நடிகர் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்ததால் ஒரு நாள் கால்ஷீட்டைக் கூட ரிக்ஷாக்காரனுக்காக அவரால் ஒதுக்க முடியவில்லை!
தயாரிப்பாளர் சார்பிலும்,,இயக்குனர் சார்பிலும் கேட்கப் பட்டும் சாதகமான பதிலை அந்த நடிகரால் கொடுக்க முடியவில்லை!
வத்தி வைக்கவும்,,வளைத்துப் பேசவும் தான் வகை வகையாய் மனிதர்கள் இருக்கிறார்களே?
ரொம்ப அலட்சியமா மாட்டேன்னு சொல்லிட்டார்!
சிவாஜி படங்களில் நடிக்கறோம்ங்கற திமிரு?
உங்கள வச்சு தாண்ணே படமே!
அந்தாளு கிட்டே எதுக்குக் கெஞ்சணும்?
இப்படியாக உப்புக் காரம் சேர்த்து??
பதில் ஏதும் சொல்லாத எம்.ஜி.ஆர்,,தொலைபேசியைக் கையில் எடுக்கிறார்--
சாதாரணமாக,, மறு முனையில் பேசிய அந்த நடிகர் பேசுவது எம்.ஜி.ஆர் எனத் தெரிந்ததும் டென்ஷனாகிறார்?
என் படத்துல நீங்க நடிச்சா நான் சந்தோசப்படுவேன். உங்களுக்குக் கால்ஷீட்டு பிரச்சனை இருக்குங்கறதையும் நான் மறுக்கலே.
உங்களுக்காக ஒரு ரெண்டு மாசம் காத்திருக்கணும்ன்னாலும் பரவாயில்லே--
எம்.ஜி.ஆர் போய் இப்படி--அதுவும் நம்மப் போல சாதாரண நடிகரிடம்??
நெகிழ்ச்சியில் கண் கலங்கிய அந்த நடிகர் பல்வேறு முறைகளில் தன் கால்ஷீட்டை அட்ஜஸ்ட் செய்து கொண்டு நடித்துக் கொடுத்து,,தம் நடிப்பில் எம்.ஜி.ஆருக்கு இருந்த நம்பிக்கையை பூர்த்தி செய்து கொடுக்கிறார்!1
ஆம்! அவர் மேஜர் சுந்தரராஜன்!!!
ஒரு கலைஞனாக மட்டுமே தம்மை இருத்தி,,ஒரு படம் வெற்றிப் படமாக இருக்க வேண்டும் என்பதோடு,,காசு கொடுத்துப் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு மன நிறைவைக் கொடுக்க வேண்டும் என்ற காரணத்தால்,,தன் நிலையைத் தாழ்த்தி மேஜரிடம் பேசிய எம்.ஜி.ஆர்??
இதே எம்.ஜி.ஆர் தான் முதல்வராக இருந்தபோது மத்தியில் பிரதமராக எவர் இருந்தாலும் தன் ஆதரவைக் காட்டினார்--
நான் இப்போ தமிழ் நாட்டு மக்களின் பிரதி நிதி!
ராமச்சந்திரனுக்குன்னு நான் கவுரவம் பார்த்தால் தமிழ் நாட்டு மக்களுக்கு மத்தியிலேர்ந்து வரும் உதவிகள் தடைபடுமே??
எவன் ஒருவன்--
தன்னிலைத் தாழ்ந்து மற்றவர்க்காக குரல் கொடுத்தால்--
விண் நிலைக்கு உயரமாட்டானா ஒருவன்?
என் நிலை இதுவென்று எம்.ஜி.ஆர். சொன்னதைக் கடைப் பிடித்தால்-
இன் நிலை தானே எல்லோருக்கும் இறுதி வரைக்கும்!!
இதுவென்று நாமும் பணிவைக் கொள்வோம்!
இது வென்று கொடுக்கும் நம் முயற்சிகளை!!!...Thanks...

suharaam63783
29th April 2020, 10:43 PM
https://www.facebook.com/952306474825887/posts/2971826362873878/?sfnsn=wiwspwa&extid=vaNGKGzUrh4MIfmT&d=w&vh=e........... Thanks...

suharaam63783
29th April 2020, 10:46 PM
மக்கள் திலகத்தின் பெரும் மதிப்பிற்குரிய கலைவாணர் தன் 49 ஆம் வயதில் உடல் நலம் மிகவும் பாதிக்க பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவருடன் அவர் சீடர்கள் காக்கா ராதாகிருஷ்ணன் , டனால் தங்கவேலு ஆகியோர் உடன் இருந்தனர்.

கலைவாணர் ஒருவேளை நான் இல்லாமல் போனால் தம்பி ராமச்சந்திரனை நன்கு கவனித்து கொள்ளுங்கள் ..அவன் மிகவும் நல்லவர் என்று சொல்லி கொண்டே இருக்க.

ஒரு நாள் இரவு மருத்துவ மனைக்கு அவரை நலம் விசாரிக்க தலைவர் போகிறார்...அங்கே மருந்து சாப்பிட்டு விட்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார் கலைவாணர்.

வெளியே காத்து இருந்த மேலே சொன்ன இருவரிடமும் நான் வந்து போனதாக சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு தலைவர் புறப்பட.

மறுநாள் விடிந்தது..காலை கடன்களை முடித்த பின் கலைவாணர் இருவரையும் அழைத்து நேற்று இரவு என்னை பார்க்க எம்ஜிஆர் வந்தாரா என்று கேட்க.

தங்கவேலும், ராதா கிருஷ்ணன் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு ஆமாம் அண்ணே எப்படி சரியா சொன்னீங்க....என்று கேட்க.

பசங்களா இந்த நாட்டுல வேறு எவர் நான் தூங்கி கொண்டு இருக்கும் போது என் தலையணை கீழே ஒரு பேப்பரில் சுற்றி கட்டு கணக்கில் பணத்தை வைத்து இருக்க போறாங்க...என்று சொல்ல.

வியப்பில் அசந்து போனது அவர்கள் மட்டும் அல்ல நாமும் தானே...

வாழ்க எம்ஜியார் புகழ்.

நன்றி... திரு.நெல்லை மணி அவர்களின் பதிவிலிருந்து........ Thanks...

suharaam63783
29th April 2020, 11:16 PM
https://youtu.be/xpKElg_KJTY... Thanks...

suharaam63783
29th April 2020, 11:22 PM
https://youtu.be/xpKElg_KJTY... Thanks...

suharaam63783
29th April 2020, 11:24 PM
https://youtu.be/benpvS6aEKw... Thanks......

suharaam63783
29th April 2020, 11:38 PM
தங்கத்தின் தங்கமான தலைவருக்கு சைக்கிள் ஓட்ட கற்று கொடுத்த கலைவாணர் ஒரு நாள் அவரின் வீட்டு வழியே தினமும் ஒரு நபருக்கு ஒரு ரூபாய் கொடுப்பாராம். இதை கவனித்த நம் தங்கத்தின் தங்கம் அவரிடம் ஏன் அண்ணே என கேட்க , அவன் அதைவைத்து என்ன வீடா கட்ட போகிறான் என்றவுடன் வள்ளல் பெருமை அடைந்தும், பிறர் இன்னும் எத்தனையோ கண்கள் குளமாகின்றன. மீண்டும் வரவேண்டும் என்ற வலிகளுடன் தினமும் கண்ணீருடன்......
Thanks...

suharaam63783
29th April 2020, 11:40 PM
இந்த வருடம் என் பிறந்தநாளுக்கு அமெரிக்காவில் வசிக்கும் என் அன்பு சகோதரியின் வாழ்த்துக்களுடன் கூடிய பரிசு. இந்த புகை படங்களை வரைந்தவர் என் சகோதரியின் அன்பு தோழி திருமதி. ரேவதி மோகன் அமெரிக்காவில் வசிக்கும் இவர் இதய தெய்வத்தின் தீவிர அபிமானி என்பது குறிப்பிடதக்க ஒன்று. கடல் கடந்து வசிக்கும் இவருக்கு நம் வாழ்த்துக்களை தெரிவிப்பது நம் கடமையாகும். முக நூல் நண்பர்களுக்கு... Saravanan... Thanks...

suharaam63783
29th April 2020, 11:42 PM
இன்று :
சர்வதேச நடன தினம் கொண்டாடபடுகிறது.
எம்.ஜி. ஆர். இரு வேடங்களில் நடித்த 'குடியிருந்த கோயில்' திரைப்படத்தில் "ஆடலுடன் பாடலைக்கேட்டு..." என்ற பாட்டில் அவர் எல். விஜயலட்சுமி உடன் ஆடுவதுபோன்ற காட்சியை அமைத்திருப்பார் டைரக்டர் சங்கர். ஆனால் எம். ஜி. ஆர். இப்பாடலுக்காக ( பங்கரா டான்ஸ் ) கடுமையான பயிற்சியை மேற்கொண்டார். அதன் பயனாக இந்த பாடல் இன்று வரை ரசிகர்களிடைய பெரும் வரவேற்பு பெறுகின்ற ஒன்றாகும். தமிழ் திரைப்பட வரலாற்றில் இதுபோல ஒரு நடனக்காட்சி இதுவரை வந்ததில்லை.

'மொட்ட சிவா கெட்ட சிவா' படத்தில் இப்பாடல் ரீமிக்ஸ் செய்யபட்டிருக்கும் .ஆனால் இதுபோல் நடனக்காட்சி இல்லை. இருப்பினும் பாடலின் இறுதியில் எம். ஜி. ஆர். படத்துக்கு பூக்களை தூவி, "பொன்மனச்செம்மல் நூற்றாண்டை வரவேற்போம்" என்பார் லாரன்ஸ்.
'மன்னாதி மன்னன்' படத்தில் பதமினியுடன் போட்டி நடனமும்,
'கலங்கரை விளக்கம்' படத்தில் 'பல்லவன் பல்லவி' பாடல் காட்சியும் , 'அன்பே வா' படத்தில் 'நாடோடி போகவேண்டும் ஓடோடி ' பாடலிலும், 'என் அண்ணன்' படத்தில் வரும் 'ஆயிரம் எண்ணம் கொண்ட 'பாடலில் என்று பல பாடல் காட்சிகளில் எம். ஜி. ஆர். , நடனம் பயின்ற நாயகியருக்கு ஈடாக அழகுபட நடனமாடி நடித்திருப்பார்.

Ithayakkani S Vijayan with Plato Rajagopalan... Thanks...

suharaam63783
29th April 2020, 11:45 PM
இனிய மாலை வ*ணக்கம் ந*ண்ப*ர்க*ளே!

"விவ*சாயி" திரைப்ப*ட*த்தில் மக்கள் திலகம்.. இப்ப*ட*த்தின் பெரும்பாலான வெளிப்புற* ப*ட*ப்பிடிப்பு கோவை அக்ரி யுனிவ*ர்சிட்டி மற்றும் ம*ருத*ம*லை அடிவார*த்தில் எடுக்க*ப்ப*ட்ட*து. 1.க*ட*வுள் என்னும் முத*லாளி 2. ந*ல்ல ந*ல்ல நிலம் பார்த்து..3. இப்ப*டித்தான் இருக்க*வேணும் பொம்ப*ள 4. காத*ல் எந்த*ன் மீதில் என்றால் 5. எவ*ரிட*த்தும் த*வ*றுமில்லை..6. என்ன*ம்மா, சிங்கார* க*ண்ண*ம்மா.. ஆகிய இனிய பாட*ல்க*ள் உண்டு.

ச*ண்டைக்காட்சிக*ள் மிக*ச்சிற*ப்பு..

கோரிக்கை நிறைவேறாவிட்டால் க*ல்லால் அடிப்ப*தா?

த*வ*று செய்ப*வ*ர்க*ளைப்ப*ற்றி த*க*வ*ல் கொடுக்குமுன் அதே த*வ*று ந*ம்மிட*ம் இருக்கிற*தா? என பார்த்துக்கொள்ள வேண்டும்..

நாடே உண*வுப்ப*ஞ்ச*த்தில் த*விக்கும்போது விளைநிலங்க*ளை அழித்து க*ட்டிட*ம் க*ட்ட* அனும*திக்க* கூடாது..

நெல் விளையும் நிலத்தில் நெல்தான் விளைவிக்க வேண்டும்..

கூட்டுப்ப*ண்ணை திட்ட*ம், கூட்டுற*வு விவ*சாய*ம் போனேஅவ*ற்றை வ*லியுறுத்தும் காட்சிக*ள்..

விவ*சாய*த்தொழிலே அனைத்து தொழில்க*ளிலும் முத*ன்மையான*து..

த*வ*று செய்த*வ*னை த*ண்டிப்ப*தைவிட மன்னித்து ஏற்றுக்கொண்டால் அவ*னும் ந*ல்ல மனித*னாக மாறுவான்.. போன்ற* க*ருத்துக்க*ளை வ*லியுறுத்தும் காட்சிக*ள் கொண்ட*து..

மக்கள் திலகம் துப்பாக்கி சூட்டில் பாதிக்க*ப்ப*ட்டு சிகிச்சையில் இருந்த*போது அவ*ர் உயிர் பிழைத்து வ*ருவாரா? அப்ப*டியே மீண்டு வ*ந்தாலும் மீண்டும் சினிமாவில் முன்புபோல் ந*டிக்க* இய*லுமா? என திரையுலகமும், அவ*ர*து எதிர்முகாமைச் சார்ந்த*வ*ர்க*ளும் வ*த*ந்தி ப*ர*ப்பிக்கொண்டிருந்த*ன*ர். அப்போது சின்ன*ப்பா தேவ*ர் எம்ஜிஆர் சிகிச்சை பெற்றுவ*ரும் ம*ருத்துவ*ம*னைக்கே வ*ந்து முருகா! நீங்க*ள் குண*ம*டைந்து ந*ல்லப*டியாக* திரும்பி வ*ருவீர்க*ள்..முன்பைவிட* சுறுசுறுப்புட*ன் திரைப்ப*ட*த்திலும் ந*டிப்பீர்க*ள் என்று ஆறுத*ல் கூறி மக்கள் திலக*த்தின் நெற்றியில் விபூதியை இட்டார். மேலும் ஒரு பெரிய தொகையை த*ன*து அடுத்த* ப*ட*த்தில் ந*டிப்ப*த*ற்கு முன்ப*ண*மாக* அளித்துச்சென்றார். அத*ன்ப*டியே எம்ஜிஆர் குணமாகி வ*ந்ததும் காவ*ல்கார*ன் ப*ட*த்தில் மீதியிருந்த* காட்சிக*ள் மற்றும் ட*ப்பிங் வேல*க*ளை முடித்ததும் விவ*சாயி ப*ட*த்தில் ந*டித்து கொடுத்தார். குறுகிய காலத் த*யாரிப்பான விவ*சாயி பெரும் வெற்றிப்ப*ட*மாக*வும் அடிக்க*டி திரைய*ர*ங்குக*ளிலும், தொலைக்காட்சிக*ளிலும் இன்றும் திரையிட*ப்ப*டும் ப*ட*மாக*வும் அமைந்துள்ள*து குறிப்பிட*த்த*க்க*து..

மேலும் இப்ப*ட*த்தில் த*லைவ*ர*து ப*ஞ்ச் ட*ய*லாக் ஒரு காட்சியில்..ந*ம்பியாரிட*ம் ச*மாதான*ம் பேச* அவ*ர் வீட்டிற்கே எம்ஜிஆர் வ*ருவார். பின் எதிர்பாராத* நேர*த்தில் தாக்க* வ*ரும் ந*ம்பியாரை புர*ட்டி எடுப்பார். பிற*கு நம்பியாரிட*ம் என்ன? நீங்க கேட்ட*து கிடைச்சுதா? ப*த்த*லைனா சொல்லுங்க..வ*ந்து குடுத்துட்டுப் போகிறேன்.. என்னும் காட்சியில் க*ர*வொலி அதிரும்..... Thanks...

suharaam63783
29th April 2020, 11:55 PM
[மக்கள் திலகம் பற்றி நடிகர் திலகம்:
(டிசம்பர் 1984, ஜனவரி மற்றும் பிப்ரவரி 1985 பொம்மை இதழ்களிலிருந்து)

"அண்ணன் எம்.ஜி.ஆரைப் போல நானும், என்னைப் போல அண்ணன் எம்.ஜி.ஆரும் தாய்ப்பாசத்தில் அதிகமாகப் பற்று கொண்டவர்கள். தாய் சொல்லைத் தட்டாதவர்கள். தாய் கிழித்த கோட்டை தாண்டாதவர்கள். தாயை தெய்வமாக மதிப்பவர்கள். அந்நாளிலும் இந்நாளிலும் நாங்கள் எந்த இடத்தில் இருந்தாலும், அரசியல் காரணமாக வெவ்வேறு பாதையில் இருந்தாலும், குறித்த நேரத்தில், சந்திக்க வேண்டிய இடத்தில், பேசுகின்ற பாஷையில், கண்களில் அன்பு நீரைத் தேக்கி வைத்துக் கொண்டு நாங்கள் இருவரும் சிறிது நேரம் எங்களையே மறந்து நிற்கின்ற அந்த நிலையை யாரால் விளக்க முடியும்?! இதை வெளியிலே கூற முடியுமா? சொன்னால் மற்றவர்களுக்கு எப்படிப் புரியும்?! படிப்புக்கு பலர் இலக்கணம் வகுத்திருப்பார்கள். நாங்கள் நட்புக்கு இலக்கணம் வகுத்தவர்கள்.

ராஜாமணி அம்மையாருக்கு உடம்பு செளகரியமில்லை என்றால் தன் உடம்புக்கு வந்து விட்ட மாதிரி அண்ணன் இருப்பார். மூதாட்டி யாரைப் பார்த்தாலும் அண்ணன் தாய்ப்பாசத்தைப் பொழிவார். அந்த மூதாட்டியை அணைத்துக் கொள்வார். அரசியலுக்காக இதைக் கிண்டல் பண்ணலாம். ஆனால் அவருடைய மனதில் எங்கோ ஒரு மூலையில் தாய்ப்பாசம் இருப்பதனால் தானே இப்படிச் செய்கிறார். மற்றவர்களால் முடியுமா?!

திரையுலகில் அண்ணனின் பாணி வேறு. என்னுடைய வழி வேறு. நம்மாலும் சண்டைக் காட்சிகளில் நடிக்க முடியும் என்பதை நிரூபித்தேன். தம்மாலும் நடிக்க முடியும் என்பதை அவரும் பல படங்களில் காண்பித்தார். எவ்வளவு தான் இருந்தாலும் அவர் அண்ணன், நான் தம்பி. அரசியலில் என்னை விட அவர் திறமைசாலி. நினைத்ததை செய்து காட்டியவர். நான் இன்றும் தொண்டனாகத் தான் இருக்கிறேன். அதனால் தான் அவர் அண்ணன், நான் தம்பி.

அவருக்கு உடல் நிலை சரியில்லை என்று அறிந்தவுடன் நான் சென்று பார்ப்பேன். அவருக்கு கால் உடைந்த போது தொடர்ந்தாற் போல் சிரமங்கள் வந்து கொண்டு இருந்தன. அவருடைய மூத்த மனைவி இறந்து விட்டார். நான் அவருடன் இரண்டு தினங்கள் இருந்தேன். அவருடன் மயானத்திற்குப் போனேன். அங்கு அவருக்கு மயக்கம் வந்து விட்டது. அவரைக் காரில் வீட்டிற்கு அழைத்து வந்து நானே அவருக்கு குளிப்பாட்டி, தலை துவட்டி விட்டு 'ஒரு வாயாவது ஹார்லிக்ஸ் குடித்துத்தான் ஆக வேண்டும்' என்று வற்புறுத்தி, அவர் ஹார்லிக்ஸ் குடித்த பிறகே நான் காபி குடித்தேன். அந்த நிகழ்ச்சியை அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார் அண்ணன். நாம் அவருடன் பேசும் போது சென்டிமென்டைத் தொட்டு விட்டால் மற்றவற்றை அவர் மறந்து விடுவார். அப்போது அண்ணன் குழந்தை ஆகி விடுவார்.

அவர் மக்களுக்கு இன்னும் ஆற்ற வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன என்று கருதிய ஆண்டவன், நம் பிரார்த்தனைகளை ஏற்று அண்ணன் அவர்களை அமெரிக்காவிலிருந்து தமிழ்நாட்டிற்கு உடல் நலத்துடன் திருப்பி அனுப்பி இருக்கிறான். அவர் நீண்ட நாட்கள் பொறுப்பில் இருந்து, மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது எல்லோருடைய ஆசை. ஆனால் இனிமேலாவது மற்றவர்களுக்காகப் பணியாற்றும் போது அண்ணன் தன் உடல் நலத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். என்னுடைய இந்த சிறு வேண்டுகோளை அண்ணன் ஏற்றுக் கொள்ள வேண்டும்#அரசியலில் இரு துருவங்கள்,உண்மையில் இரு சகோதரர்கள்! ]...... Thanks Poongodi...

suharaam63783
30th April 2020, 12:00 AM
அப்பொழுது தொலைக்காட்சி வசதிகள் அதிகமாக இல்லை ஒரு 5 கிலோமீட்டர் தூரத்தில் ஒரு செல்வந்தர் வீட்டிற்கு சென்று பார்த்தோம் அப்போது கூட்டம் அதிகமாக அந்த செல்வந்தர் அவர் வீட்டிற்கு அருகில் இருந்த கலையரங்கில் தொலைக்காட்சி பெட்டியை வைத்து அனைவரையும் பார்க்க வைத்தார் ஒரே அழுகை அலரல் யாராலும் தாங்கிக்கொள்ள முடியாத சோகம் .வள்ளல் அவர்களின் இறுதி ஊர்வலம் முடிந்து அடக்கம் வரை அனைவரையும் பார்க்க வைத்த அந்த செல்வந்தர் காங்கிரஸ் கட்சியில் பிரபலமானவர் என்றும் ஆனாலும் தலைவரின் அபிமானி என்பதை என் தந்தையார் சொல்லி தெரிந்து கொண்டேன் .
அருமை பதிவு ங்க அண்ணா. ����������..... Thanks...Rathnavel Kumaran

suharaam63783
30th April 2020, 12:06 AM
இரண்டு நாளுக்கு முன்னர் வந்த என் பதிவுக்கு வந்த வரவேற்பை கண்டு மலைத்துவிட்டேன்! ஏன் என்றால் தலைவரைப்பற்றிய நிகழ்வுகள் அரசியல் பற்றிய அனுபவங்கள் நடக்கும் போது நமக்கு புரியாத வயது! அதனால் அதுபற்றி தெரியாது! படங்கள் பற்றி நிறைய எழுதிவிட்டேன்! பாடல்கள் வந்த வண்ணம் இருக்கிறது. அதனால் புதுமையாக ஏதாவது பதியலாம் என்று இதனை பதிவிட்டேன்! அதன் தொடர்ச்சி இது:-
நான்:- ஏண்டா தலைவரைப்பற்றி படங்களை பற்றி பெருமையாக பதிவிட்டால் என்னையா சுனாமி தூக்கனும்கற? உனக்கு என்னடா தெரியும்? தலைவரைப் பற்றி!
நண்பன்:- சொல்லுடா கேட்கிறேன்!
நான்:- 40 பாடல்கள் ஆலாபனை வசன நடை என்று போன தமிழ் சினிமாவை புதிய பாதைல திருப்பிவிட்டதே எங்க தங்க தலைவர் தான்!
வசனத்திற்கு:- மதுரை வீரன்
எழில் தோற்றம்:- அலிபாபாவும் 40 திருடர்களும்
கத்திவீச்சுக்கு:- சர்வாதிகாரி
சிலம்ப சுழற்றுக்கு:- படகோட்டி: தாயை காத்த தனயன், அன்னமிட்டகை
களரி, மல்யுத்தம்:- சக்கரவர்த்தி திருமகள், அன்பே வா
குத்து சண்டைக்கு:- காவல்காரன்! பட்டிக்காட்டு பொன்னையா!
புதுமையான ரிக்ஷா சண்டை, சுருள் செயின் வீச்சு:- ரிக்ஷாக்காரன்
சண்டை புதுபரிமாணங்கள்:- உலகம் சுற்றும் வாலிபன்
பதுப்பு கண்ண அழகுக்கு:- தேவர் படங்கள்
சுருள் முடி அழகிற்கு:- குலேபகாவலி,சக்கரவர்த்தி திருமகள் புதுமைப்பித்தன்,
வேட்டி கட்டழகு:- உரிமைக்குரல்; உழைக்கும் கரங்கள்
பெல்பாட்ட அழகு:- மீனவநண்பன், நீதிக்கு தலைவணங்கு
புதுமை கதை அமைப்பு:- நான் ஏன் பிறந்தேன்?
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்! மற்ற எந்த நடிகர் படங்களானாலும் இது பீம்சிங் படம், திருலோகசந்தர் படம், மாதவன் படம் ஸ்ரீதர் படம், பாலசந்தர் பாடம் அட்லி படம் புட்லி படம், சின்னப்பய முருகதாசு படம் என சொல்வார்கள்! அது தற்போது வரை உள்ள எந்த நடிகப்பயல்களுக்கும் பொருந்தும்! ஆனால் எங்க தலைவர் படங்கள் எவன் டைரக்ட் செய்தாலும் வாத்தியார் படம்டா?
நண்பன்:- உங்கிட்ட பேசமுடியுமா! ஆளவிடுடா சாமி! என்னத்தான் சுனாமி தூக்கணும்! ஒங்கிட்ட பேசவந்தேன் பாரு!!!...... Thanks SR.,

suharaam63783
30th April 2020, 12:16 AM
தொடர்ச்சி.
***********

புரட்சித்தலைவர் அவர்கள்.!

வறுமையின் கொடுமையின் காரணமாக கல்வி பயில முடியாமல் போக, அவர் ஆரம்பக் கல்வியை மட்டுமே பயின்றவர்.

அந்த அற்புத தலைவர்.! பொன்மன தலைவர்.! கல்வியைப் பற்றி நன்கு அறிந்தவர்.

1977- ஆம் ஆண்டு தமிழகத்தினுடைய முதலமைச்சர் பொறுப்புக்கு வந்தார்.

ஆட்சிக்கு வந்த கையுடன், கல்வியில் சீர்திருத்தம் கொண்டு வந்தார்.

மாணவர்களுக்கு தொழில் கல்வியை கொண்டு வந்தவர் புரட்சித் தலைவர் அவர்கள்.

மாணவர்களுக்கு பாலிடெக்னிக் கல்வியை கொண்டு வந்தவர் புரட்சித் தலைவர் அவர்கள்.

இதற்கெல்லாம் ஆதாரமாக.. அச்சாரமாக அண்ணா பல்கலைக் கழகத்தைத் தோற்றுவித்தார்.

இன்றைக்கு இருக்கின்ற சுயநிதி பொறியியல் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள் புரட்சித்தலைவரின் மானியத்தால் தொடங்கப்பட்ட கல்லூரிகளே ஆகும்.

இன்றைக்கு இருக்கின்ற அத்தனை சுயநிதி பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்தவை ஆகும்.

கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட இன்ஜினியர் பிரிவுகளில் இருக்கும் அத்தனை பாடத்திட்டங்களையும் புரட்சித் தலைவரே கொண்டுவந்தார்.

தமிழ்நாட்டு மாணவர்களை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றவர் புரட்சித் தலைவர் அவர்களே ...

இன்றைக்கு மாணவர்கள் வளமுடன் வாழ்கிறார்கள் என்றால் ...

அதற்கு காரணம், நம் புரட்சித் தலைவரே புரட்சித் தலைவரே....

இதை மாணவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு.

என்கிற வள்ளுவன் வாக்கை நினைவுபடுத்த விரும்புகிறோம்.

வாழ்க புரட்சித் தலைவர்.!!
வாழ்க பொன்மனச்செம்மல் ..!!
வாழ்க மக்கள் திலகம் ...!!!

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் புரட்சித் தலைவா வாழ்க வாழ்க வாழ்கவே ....

( 2. ).

������������������������������..... Thanks...

suharaam63783
30th April 2020, 12:20 AM
'எங்க வீட்டுப் பிள்ளை' படத்தின் சென்னை விநியோக உரிமையை எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பெற்றிருந்தது. படம் வெற்றிகரமாக ஓடி நல்ல லாபம் கிடைத்தது. பேசிய தொகைக்கு மேல் லாபம் கிடைத்திருப்பதாகக் கூறி, நாகிரெட்டிக்கு ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையை எம்.ஜி.ஆர் அனுப்பினார். படத்தில் நஷ்டம் வந்ததால் ஈட்டுத் தொகையை கொடுக்க தயாரிப்பாளரை,விநியோகஸ்தர் வலியுறுத்தும் காலம் இப்போது.
ஆனால் அக்காலத்தில எம்.ஜி.ஆர். செய்தது என்ன தெரியுமா? கூடுதலாகக் கிடைத்த லாபத்தை தயாரிப்பாளருக்கு கொடுத்த முதல் விநியோகஸ்தர் மட்டுமல்ல, கடைசி விநியோகஸ்தரும் எம்.ஜி.ஆர்தான்.
அதை ஏற்றுக் கொள்ள நாகிரெட்டி(இதுவும் இக்காலத்தில் காண இயலாதது.) மறுத்து விட்டார். "நீங்கள் செய்யும் தர்ம காரியங்களுக்கு இத்தொகையைப் பயனபடுத்திக் கொள்ளுங்கள்" என்று அந்த காசோலையைத் திருப்பி அனுப்பி விட்டார்.எம்.ஜி.ஆரிடம்.திரும்பி வந்த அந்த லட்ச ரூபாய் எத்தனை ஏழைகளின் துயர் துடைத்ததோ யாருக்குத் தெரியும்?..... Thanks...

suharaam63783
30th April 2020, 12:27 AM
[எம்ஜிஆர் அவர்களின் அருமை நண்பர் சாண்டோ சின்னப்பா தேவர் அவர்கள் கோயம்புத்தூரில் மாருதி உடற்பயிற்சி நிலையம் என்று ஒரு அமைப்பு வைத்திருந்தார் எம் ஜி ஆர் ஷூட்டிங்க் இல்லாத வேளையில் அங்கு சென்று விடுவார் அவருடன் சண்டை போடுவார் சுமார் ஒரு மணி நேரம் அப்படியே கம்புச் சண்டை நடந்துகொண்டிருக்கும் இடைவெளி இல்லாமல் அவர்கள் 2 பேரும் சூழ்ந்து தன்னை தாக்கி கொள்வார்கள் அப்படி உருவானது அவர்கள் நட்பு கம்பு வீச்சு என்றால் அது தேவருக்கும் எம்ஜிஆருக்கும் தான் சரியாக இருக்கும்..... Thanks...

suharaam63783
30th April 2020, 12:29 AM
எம்ஜிஆா் சினிமாவில் மட்டுமின்றி சொந்த வாழ்க்கையிலும் முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டினாா்
அண்ணன் சக்கரபாணியை "யேட்டா" என்று எம்ஜிஆா் அழைப்பாா். ஒ௫ போதும் பெயா் சொல்லி அழைத்ததில்லை.அண்ணன் பிள்ளைகளிடமும் அதை பிரதிபலிக்கச் செய்தாா். சக்கரபாணியின் மகன்களில் இளையவா் மூத்தவரை அண்ணன் என்றே அழைக்க வேண்டும் பெயா் சொல்லி அழைக்கக் ௯டாது. மூத்தவா் இளையவரைப் பெயர் சொல்லிக் ௯ப்பிடலாம் இந்த மாியாதை விஷயத்தில் எம்ஜிஆா் ரொம்ப உஷாராக உறுதியாக இ௫ந்தாா்
அந்தக் குடும்பத்துப் பணியாளா்களைக்௯ட வயதில் சிறியவா்கள் அணணே என்றுதான் அழைக்க வேண்டும் சக்கரபாணியின் பிள்ளைகள் ாிக் ஷாவில் பள்ளிக்கு அழைத்து செல்லப்படுவாா்கள் அதற்காக வ௫ம் இ௫சப்பன் என்ற ாிக் ஷாக்காரரை இ௫சப்பண்ணே என்றோ அண்ணே என்றோதான் பிள்ளைகள் மாியாதை காட்டியி௫க்கிறாா்கள் பணியாளா்கள் யாராக இ௫ந்தாலும் அவா்களுக்கும் இத்த மாியாதை உண்டு
உணவு விஷயத்தில் எம்ஜிஆாிடம் எந்தளவு தாராளம் உண்டோ அந்தளவு நிபந்தனைகளும் உண்டு வீட்டில் எந்த உணவு சமைத்தாலும் எல்லோ௫ம் அதைச் சாப்பிட்டாக வேண்டும். யா௫ம் இது எனக்குப் பிடிக்காது என்று மறுக்கக்௯டாது பாகற்காய் கசக்கிறதே என்று முகம் சுழிக்கக் ௯டாது.கசப்பான உணவுகளையும் பழகிக்கொள்ள வேண்டும் என்பாா் எம்ஜிஆா்
சாப்பிடும்போது உணவைத் தட்டில் பாிமாறி விட்டால் அதை மீதம் வைக்காமல் சாப்பிடவேண்டும். தேவைக்கேற்ப உணவை பாிமாறிக் கொள்ளலாம். இவ்வளவுதான் சாப்பிட வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது ஆனால் தட்டில் மீதம் வைக்கக்௯டாது. சாப்பிட்டு விடவேண்டும் சாப்பிட்டபின் அவரவா் தட்டை எடுத்துக்கொண்டு போய் கழுவி வைத்துவிட வேண்டும்
எம்ஜிஆா் அதிகாலையில் 4.30 அல்லது 5மணிக்கெல்லாம் எழுந்து உடற்பயிற்சி செய்யத் தொடங்கிவிடுவாா் அவா் எழுந்தி௫க்கும் நேரத்தில் பிள்ளைகளும் எழுந்தாக வேண்டும் எழுந்து அவா்களும் உடற்பயிற்சி செய்யவேண்டும் படிக்கவேண்டும் அவா்கள் எல்லாம் அ௫கிலுள்ள வி்.கே. ஆச்சாாி என்பவரது உடற்பயிற்சி ௯டத்திற்குச்சென்று பயிற்சிகளை மேற் கொள்வாா்கள் இதில் சிலம்பு வீரதீரமான பயிற்சிகளும் அடங்கும்
படப்பிடிப்பு இல்லாத ஓய்வு நேரமென்றால் எம்ஜிஆா் எல்லோ௫டனும் சாப்பிட உட்காா்ந்துவிடுவாா் எறா தொக்கு சாப்ஸ் என்றால் அதைச்சோற்றுடன் எம்ஜிஆரே பிசைந்து ஒ௫ பொிய பாத்திரத்தில் போட்டுக்கொள்வாா் அண்ணன் பிள்ளைகளை உட்காரவைத்து அவா்களுக்குத் த௫வாா் அப்போது மீண்டும் அவாிடம் உ௫ண்டை பெற ஒ௫ போட்டியே நடக்கும் அதெல்லாம் கண்டிப்பு இல்லாத கலகலப்பான நேரம்
எம். எஸ். சேகா் இ௫௯ா் கோவை...... Thanks...

suharaam63783
30th April 2020, 10:07 AM
#வணக்கம் #முதலாளி

பொதுவாக தமிழ்த்திரைப்பட உலகில் எம்ஜிஆரை, 'சின்னவர்', 'முதலாளி' என்றழைப்பர்...

ஆனால் எம்ஜிஆர், திரைப்படத்துறையில் சிலரைப் பார்த்து, 'முதலாளி' என்றழைப்பதுண்டு...

அந்தப் பெருமைக்குரியவர்கள் பலருண்டு. ஏவி.மெய்யப்பச் செட்டியார், பி.நாகிரெட்டியார், எஸ்எஸ் போன்றோர் சிலர்...
நேற்று இன்று நாளை படப்பிடிப்பில், நடிகர் அசோகனைப் பார்த்து, 'வணக்கம் முதலாளி வாங்க' என்றார்.

உடனே அசோகன் எம்ஜிஆரின் காலைப் பிடித்துக்கொண்டு, "ஐயோ! என் தெய்வமே! நீங்க என்னை பார்த்து முதலாளின்னு சொல்வதா ? இனிமேல் அப்படிச் சொல்லமாட்டேன்னு சொன்னால் தான் காலை விடுவேன் " ன்னு சொல்லி எம்ஜிஆரின் காலை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு விட்டார்.

உடனே எம்ஜிஆர், அசோகனைத் தூக்கி, கட்டிப்பிடித்து முத்தமிட்டு, "அட மண்டு, நான் படத்தில் நடிப்பவன், நீ எனக்கு சம்பளம் கொடுப்பவன். உன்னை முதலாளின்னு சொல்வதில் என்ன தவறு இருக்குறது !? தயாரிப்பாளரான உனக்குக் கொடுக்கும் மரியாதையைக் கொடுத்துத்தான் ஆகவேண்டும் !!! உன்னை எல்லோரும் முதலாளி என்று தான் அழைக்கவேண்டும். இப்போது நீ நடிகன் மட்டுமல்ல...ஒரு படத்தயாரிப்பாளரும் கூட...பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும்..."

இந்த அறிவுரைகளைக் கேட்ட அசோகனும் படப்பிடிப்புக் குழுவினரும் கண்ணீர் மல்கினர்...

இதுபோல மற்றவர்களை மதிக்கும் மாண்பு தான் வாத்தியாரை தெய்வீகநிலைக்கு உயர்த்தியது.......... Thanks.........

suharaam63783
30th April 2020, 10:08 AM
#தலைவரின்_நேற்றுஇன்றுநாளை
[ 12 - 07 - 1974 ]

தலைவர் இயக்கம் கண்டு திண்டுக்கல் இடைத்தேர்தல் இமாலய வெற்றிக்குப் பிறகு வெளியான சூப்பர் ஹிட் காவியம்.

திமுக ஆட்சியை இழந்ததற்கும் அதன் பின்பு தலைவர் இருக்கும் காலம் வரை திமுக ஆட்சியை பிடிக்க முடியாமல் போனதற்கும் தலைவரின் இந்தப் பாடலும் ஒரு முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது.

குறிப்பாக 1974 நேற்று இன்று நாளை
ரிலீஸான நாள் முதல் 1977 சட்டமன்ற பொதுத்தேர்தல் வரை கிராமங்களில் நடைபெறும் இல்ல சுபகாரியங்களில் கூட இந்தப் பாடலை மீண்டும் மீண்டும் ஒலி பரப்புவார்கள்...

திமுகவினருக்கு வரும் ஆத்திரத்திற்கு அளவே கிடையாது.

இந்தப் பாடலில் வரும் வரிகளான...

மக்கள் நலன் மக்கள் நலன் என்றே சொல்லுவார்...
தம் மக்கள் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்...

என்ற வரிகள் நேரடியாக கலைஞரையே தாக்குவதாக உள்ளதால் திமுகவினரின் ஆத்திரம் தலைவர் மீது மட்டுமல்ல...

இந்தப் பாடலை எழுதிய வாலி அவர்களையும் தயாரிப்பாளர்
நடிகர் S.A. அசோகன் அவர்களையும்
விட்டு வைக்கவில்லை.

மக்கள்திலகம் ரசிகர்களின் பேராதரவில் மாபெரும் வெற்றிப்படம் மட்டுமல்ல...
தலைவர் அரியணை ஏறுவதற்கும் கலைஞர் சொன்னாரே 14 ஆண்டு கால வனவாசம் என்று...

அதை நிறைவேற்றியதில் பெரும்பங்கு வகித்த பாடல் இது...

நெல்லை எழில்மிகு பார்வதி திரையரங்கில் இந்த திரைப்படத்திற்கு திரண்ட மக்கள் சமுத்திரம் போல் பார்வதி திரையரங்கில் எந்த திரைப்படத்திற்கும் வந்ததில்லை என்று நேரில் பார்த்தவர்கள் கொடுக்கும் சாட்சியாகும்.

இத் திரைக்காவியத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மெகா ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.

�� வளர்க புரட்சித்தலைவர் புகழ் ��

#இதயதெய்வம்......... Thanks...

suharaam63783
30th April 2020, 10:11 AM
Cont-1
ஷுட்டிங்கிற்கா நான் வந்து இரண்டு நாளாச்சு யாருமே சொல்லவே இல்லையே சரி இங்கெல்லாம் நிறைய பூக்கள் இருக்கே இங்கேயே ஷுட்டிங் எடுக்கலாமே
நீங்க இங்க இருக்கீங்க உள்ளே ஒரு ஆளை விடுவாங்களா என்ன? என்றேன் நான். யார் சொன்னது நீங்க எடுங்க என்று கூறிவிட்டு போன் செய்தார்,
மறுநாள் காவல்துறையினரின் பாதுகாப்போடு தமிழ்நாடு ஹவுசில் படப்பிடப்பு ஆரம்பமானது. அப்போது ஒரு அதிகாரி வந்து இன்னிக்கு மத்தியானம் லஞ்ச் எங்கேயும் அரேஞ்ச் பண்ணிடாதிங்க. மொத்த யூனிட்டிற்கும் சாரோடதான் சாப்பாடுன்னு உங்க்கிட்டே சொல்லச் சொன்னார் என்று தெரிவித்து விட்டுச் சென்றார். நான் திகைத்துவிட்டேன்.
கொஞ்ச நேரத்தில் படப்பிடிப்புத் தளத்தில் இருந்தவர்கள் பரபரப்பாக ஓரிடத்தில் பார்வையைக் குவித்தனர். திரும்பிப் பார்த்தால் எம்.ஜி.ஆர் . வந்து கொண்டிருந்தார். உடனே நான் அவரை நோக்கி விரைந்தேன். என்னை அழைத்தார். எங்கே டான்ஸ் மாஸ்டர் ? தயங்கிய படியே இல்லை நான் தான்.. ஓகோ நீங்களே டான்ஸ் மாஸ்டரா ? என்று கூறி குழந்தையாகச் சிரித்தார்
ஷாட் முடிந்தவுடன் என்னையும் கமலையும் பக்கத்தில் அழைத்துப் பேசிக் கொண்டிருந்தார். பேசி முடித்தபின் என் ஸ்டில் போட்டோகிராபர் சங்கர்ராவை அழைத்து, அவரிடமிருந்த மிகமிகச் சிறிய ஒரு கேமராவைக் கொடுத்துப் படம் பிடிக்கச் சொன்னார். நான் அவரிடம் பழக்கமான உரிமையுடன் என்னங்க உங்களைப் பத்தி நிறைய மிஸ்டரி இருக்குன்னு சொல்வாங்க கேமராவில் கூட மிஸ்டரி வச்சிருக்கிங்களே என்றேன்.
அவர் சிரித்துக் கொண்டே கையில் கட்டியிருந்த வாட்சைக் காண்பித்து இங்கே பார் இதுல கூட கேமரா இருக்கு. பேசிட்டிருக்கும் போதே கூட படமெடுக்கலாம் என்று சொல்லி அதை இயக்கிக் காட்டினார். நான் மறுபடியும் திகைத்துப் போனேன்.
மறுநாள் காலையில் என்னையும் கமலையும் கூப்பிட்டனுப்பியிருந்தார். சென்றோம். எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் பேனர் படம் எடுத்து ரொம்ப நாளாச்சு. நீ டைரக்ட் பண்ணு கமல் நடிக்கட்டும். இப்ப இல்ல. உனக்கு எத்தனை படம் கமிட் ஆகியிருக்கோ அத்தனையையும் முடித்து விட்டு அப்புறமாய் பண்ணு நான் கேக்கறேங்கறதுக்காக அவசரப்படாதே எவ்வளவு செலவழிக்கணுமோ அவ்வளவு செலவழிச்சு பிரம்மாண்டமா எடுத்துடுவோம் என்றார்....... Thanks...

suharaam63783
30th April 2020, 10:12 AM
தொடர்ச்சி.
***********

புரட்சித்தலைவர் அவர்கள்.!

வறுமையின் கொடுமையின் காரணமாக கல்வி பயில முடியாமல் போக, அவர் ஆரம்பக் கல்வியை மட்டுமே பயின்றவர்.

அந்த அற்புத தலைவர்.! பொன்மன தலைவர்.! கல்வியைப் பற்றி நன்கு அறிந்தவர்.

1977- ஆம் ஆண்டு தமிழகத்தினுடைய முதலமைச்சர் பொறுப்புக்கு வந்தார்.

ஆட்சிக்கு வந்த கையுடன், கல்வியில் சீர்திருத்தம் கொண்டு வந்தார்.

மாணவர்களுக்கு தொழில் கல்வியை கொண்டு வந்தவர் புரட்சித் தலைவர் அவர்கள்.

மாணவர்களுக்கு பாலிடெக்னிக் கல்வியை கொண்டு வந்தவர் புரட்சித் தலைவர் அவர்கள்.

இதற்கெல்லாம் ஆதாரமாக.. அச்சாரமாக அண்ணா பல்கலைக் கழகத்தைத் தோற்றுவித்தார்.

இன்றைக்கு இருக்கின்ற சுயநிதி பொறியியல் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள் புரட்சித்தலைவரின் மானியத்தால் தொடங்கப்பட்ட கல்லூரிகளே ஆகும்.

இன்றைக்கு இருக்கின்ற அத்தனை சுயநிதி பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்தவை ஆகும்.

கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட இன்ஜினியர் பிரிவுகளில் இருக்கும் அத்தனை பாடத்திட்டங்களையும் புரட்சித் தலைவரே கொண்டுவந்தார்.

தமிழ்நாட்டு மாணவர்களை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றவர் புரட்சித் தலைவர் அவர்களே ...

இன்றைக்கு மாணவர்கள் வளமுடன் வாழ்கிறார்கள் என்றால் ...

அதற்கு காரணம், நம் புரட்சித் தலைவரே புரட்சித் தலைவரே....

இதை மாணவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு.

என்கிற வள்ளுவன் வாக்கை நினைவுபடுத்த விரும்புகிறோம்.

வாழ்க புரட்சித் தலைவர்.!!
வாழ்க பொன்மனச்செம்மல் ..!!
வாழ்க மக்கள் திலகம் ...!!!

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் புரட்சித் தலைவா வாழ்க வாழ்க வாழ்கவே ....

( 2. ).

������������������������������... Thanks...

suharaam63783
30th April 2020, 10:15 AM
"நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர்"
நீரும் நெருப்புமான ஒரு வாழ்க்கை பயணம்..! (அத்தியாயம் : 1)

சுமார் அரைநூற்றாண்டுக் காலம் தமிழகத்தில் சினிமா, அரசியல் இரண்டிலும் தனித்துவத்துடன் கோலோச்சிய ஆளுமை, எம்.ஜி.ஆர். அவருக்கு முன்னும்பின்னும் பல முதலமைச்சர்களை, ஆளுமைகளை தமிழகம் கண்டிருந்தாலும் எம்.ஜி.ஆர் ஒருவரே மக்களின் இதயங்களைத் தாண்டி இன்னமும் அவர்களது இல்லங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். எளிய குடும்பத்தில் பிறந்து வறுமையினால் கலைத்துறையைத் தேர்ந்தெடுத்து அதில் பல சோதனைகளுக்கு ஆளாகி, தன் மனிதநேயத்தால் மக்களின் இதயங்களைத் திருடி, பின்னாளில் ஒரு மாநிலத்தின் முதல்வராகவும் ஆவதற்கு அவர் கையாண்ட வழிமுறைகள் என்ன... இந்த வெற்றிக்கு அடைந்த செய்த தியாகங்கள், அடைந்த துயரங்கள் என அவர் வாழ்வின் இன்னும் பல சுவாரஸ்ய பக்கங்களை சொல்கிறது இந்தத் தொடர்.

“நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்... ஆனால், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்கவேண்டும்“ - முன்னாள் ஜனாதிபதியான அப்துல் கலாம் இளைஞர்கள், மாணவர்களை ஊக்கப்படுத்த தான் ஏறிய மேடைகளில் தவறாமல் உதிர்த்த வார்த்தைகள் இவை. பல நூறு மேடைகளில் இதை அவர் தெரிவித்திருந்தாலும்... 2012-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி அவர் இந்த வார்த்தைகளை உச்சரித்த மேடை, மிகப் பொருத்தமானது. ஆம் அவர் அப்படிப் பேசியது தனது பிறப்பை சம்பவமாகவும் இறப்பை வரலாறாகவும் மாற்றிக்கொண்ட ஒரு மனிதர் வாழ்ந்து மறைந்த இடத்தில் நின்றுதான்! அது, ராமாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் காதுகேளாதோர் பள்ளி! அந்த மாமனிதர் மருதுார் கோபாலமேனன் ராமச்சந்திரன். ரத்தின சுருக்கமாக எம்.ஜி ஆர் என்றால் இந்தத் தலைமுறையின் எந்தக் குழந்தைக்கும் புரியும்.

இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்தாலும் எம்.ஜி.ஆர், இலங்கையைச் சேர்ந்தவர் அல்ல; அவரது தந்தை கோபாலமேனனின் (மேனன் அல்ல; மேன்மைக்குரியவர் என்ற அர்த்தத்தில் அழைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.) பூர்வீகம் கோவை அடுத்த காங்கேயம் எனச் சொல்லப்படுகிறது. அங்கு மன்றாடியார் வகுப்பைச் சேர்ந்தவர் என பின்னாளில் எம்.ஜி.ஆர் பிறப்பு குறித்து ஆய்ந்து எழுதப்பட்ட ’செந்தமிழ்வேளிர் எம்.ஜி.ஆர்’ என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. நீதித்துறையில் மாஜிஸ்திரேட்டாக பணியாற்றிய கோபாலன் கேரளாவைச் சேர்ந்த வடவனுரில் பணிநிமித்தமாக நீண்ட காலம் வசித்தார்.

அப்போதுதான் மருதூரைச் சேர்ந்த சத்யபாமாவைச் சந்தித்திருக்கிறார். இருவருக்குள்ளும் காதல் உருவாகி திருமணம் செய்துகொண்டதாகச் சொல்லப்படுகிறது. அந்தத் திருமணத்தில் சத்யபாமா குடும்பத்தினருக்கு விருப்பம் இல்லாதநிலையில், தனியே வசித்தார்கள் தம்பதியினர். தொடர்ந்து பணி நிமித்தமாக சத்யபாமா குடும்பம் அரூர் கரூர், திருச்சூர் மற்றும் கேரளாவின் பாலக்காடு உள்ளிட்ட இடங்களில் வசித்திருக்கிறது.

கோபாலன் நேர்மையான மனிதர்; மனிதநேயம் கொண்டவர்; எதற்காகவும் தன் பணியில் சமரசம் செய்துகொள்ளாதவர் என பெயரெடுத்தவர். இறைநம்பிக்கையில் அதீத பற்றுக் கொண்ட அவர், தீவிர விஷ்ணு பக்தர். பக்தர் என்றால் சாதாரண பக்தர் அல்ல; புராண காலத்தைப்போன்று இறைவன் மேல் தீராத காதல்கொண்டவர். வைணவத்தின் மீது வெறித்தனமாக பக்தி கொண்டிருந்தவர். தன் பிள்ளைகளில் ஒருவர் சக்கரபாணி பிறந்தபோது அவர் கேரளாவில் உள்ள நீதிமன்றத்தில் பணியாற்றிவந்தார். அவர் வசித்த இடத்தின் அருகே சிவன் கோயில்தான் புகழ்பெற்றிருந்தது. அதனால் சத்யபாமா, குழந்தைக்கு அந்தக் கோயிலில் முறையான வழிபாடு நடத்தி, நீலகண்டன் என பெயர் சூட்டி மகிழ்ந்தார்; கொதித்துப்போனார் கோபால மேனன். சில மாதங்கள்வரை மனைவி பிள்ளைகளுடன் அவர் பேசவில்லை. அடுத்த சில மாதங்களில் மற்றோர் இடத்துக்கு மாற்றலாகியபோது முதல்வேலையாக அங்குள்ள விஷ்ணு கோயில் ஒன்றுக்கு பிள்ளையை அழைத்துச்சென்று நீலகண்டன் என்ற பெயரை சக்கரபாணி என மாற்றினாராம். கூடவே,’’ இனி அந்தப் பெயரில்தான் யாரும் அழைக்கவேண்டும்’’ என கறார் உத்தரவும் போட்டாராம்.

அப்படி ஒரு விந்தை மனிதர் அவர். 1914-ல், தான் தீர்ப்பு வழங்கிய ஒரு வழக்கில்... அவரது தன்மானத்தை உரசிப்பார்க்கும் ஒரு சம்பவம் நடந்தது. தன்னை விட்டுக்கொடுக்க விரும்பாத கோபால மேனன், தன் பணியை விட்டுக்கொடுத்தார். பணியை ராஜினாமா செய்தார். மாத வருவாயில் இருந்தவரை குடும்பம் வசதியான வாழ்க்கை வாழ முடிந்தது. இப்போது வறுமை, குடும்பத்தைச் சூழ்ந்துகொண்டது. கோபால மேனனுக்கு அப்போது 4 பிள்ளைகள். இவர்களில் கோபாலனின் முதல் தாரத்து பிள்ளைகளும் அடக்கம். குடும்ப வறுமையைப் போக்க வேலை தேடி இலங்கை அடுத்த கண்டிக்கு இடம்பெயர்ந்தது கோபால மேனன் குடும்பம். அங்கு கல்லூரி ஒன்றில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். அப்படி கண்டியில் வசித்தபோது 1917-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி வானத்தை எந்தக் கருமேகங்களும் சூழவில்லை; தேவதூதன் பிறக்கப்போவதாக எந்த அசரீரி குரலும் மக்களுக்குக் கேட்கவில்லை; அசாதாரண சூழல் அங்கு எங்கும் தென்படவில்லை. ஆனால் அப்துல்கலாம் குறிப்பிட்ட அந்தச் 'சம்பவம்' நிகழ்ந்தது. ஆம்...அன்றிரவு அந்தக் குடும்பத்தின்
5-வது குழந்தையை சத்யபாமா பெற்றெடுத்தார். குழந்தைக்கு ராம்சந்தர் என பெயர் சூட்டப்பட்டது.

ராம்சந்தர் பிறந்தநேரம் குடும்பம் மோசமான வறுமையில் சிக்கிக்கொண்டிருந்தது. ஆசிரியர் வருமானத்தில், குழந்தைகளைப் பராமரிக்க முடியாமல் திணறினார் கோபால மேனன். இந்தச் சமயத்தில் குழந்தைகளில் இருவர் இறந்ததாகச் சொல்லப்படுகிறது. மீண்டும் பாலக்காட்டுக்குத் திரும்பியது குடும்பம். குடும்பத்தின் சூழல் கொஞ்சம் முன்னேற்றம் கண்டது. ஆனால், உடல்நிலை சரியில்லாமல் போனது. பணி முடிந்து எத்தனை மணிக்குத் திரும்பினாலும் கோபால மேனன் குழந்தைகளுக்குப் பிடித்தமானதை வாங்கிவந்து அவர்களின் படுக்கைத் தலையணைக்குக் கீழே வைத்துவிடுவார். காலையில் குழந்தைகள் எழுந்தவுடன் அதைப் பார்த்து மகிழ்வதைக் கண்டு ரசிப்பது அவர் வழக்கம். ராம்சந்தர் கைக்குழந்தையாக இருந்த சமயம் ஒருநாள் அப்படிக் குழந்தைகள் தங்கள் படுக்கையைத் தடவிப்பார்த்தபோது அங்கு எதுவும் வைக்கப்பட்டிருக்கவில்லை.

மூத்த பிள்ளை சக்கரபாணி வழக்கமாக தனக்குப்பிடித்த வாழைப்பழத்தைத் தேடுவார். அன்று கிடைக்காத ஏமாற்றத்துடன் தாயை பார்த்தார் அவர். “பசங்களா இனி தலையணையில் எதுவும் தேடாதீங்க...அப்பா உடம்பு சுகமில்லை. இனி அவர் வேலைக்குச் செல்லமாட்டார்’’ என சேலைத்தலைப்பை வாயில் பொத்தியபடி கூறிவிட்டுச் சமையற்கட்டுக்கு ஓடிச் சென்றார் சத்யபாமா.

குழந்தைகளுக்குப் பெரும் ஏமாற்றம். கொஞ்சநாளில் கோபால மேனனுக்கு உடல்நிலை ரொம்ப மோசமானது. ஒருநாளில் தன் பிள்ளைகளில் மூத்தவரான தங்கத்தை அழைத்த கோபால மேனன், “தங்கம்... அப்பா இனி பிழைக்கவழியில்லை. நீதான் இனி விபரம் தெரியாத அம்மா மற்றும் உன் சகோதரர்களைப் பொறுப்போடு பார்த்துக்கொள்ளவேண்டும். செய்வாயா” என மகளின் கையைப் பிடித்தபடி 'நாராயணா, நாராயணா' என மூன்று முறை சொன்னார். அவர் கை தளர்ந்து விழுந்தது. அந்த வீட்டில் பெருங்குரலெடுத்த ஓர் அழுகை புறப்பட்டது. அது சத்யபாமாவுடையது.

வீட்டின் ஒரே வருவாய் ஆதாரம் மறைந்துவிட்டது. வறுமை வாணலியில், வறுபட ஆரம்பித்தது சத்யபாமா குடும்பம். உறவினர்களிட மிருந்து எந்த ஆதரவுமில்லை. அரிதாகச் சிலர் உதவினார்கள். ஆனால், உண்பதற்கு மீன் தருவதைவிட மீன் பிடிக்க கற்றுத்தருவதுதானே நிரந்தர உதவி. அப்படி நிரந்தரமாக அந்தக் குடும்பத்துக்கு வருவாய் ஏற்படுத்தித் தர உறவினர்கள் யாரும் உதவிட முன்வரவில்லை. குழந்தைகளின் எதிர்காலம் கருதி தானே வேலைக்குச் செல்வதென முடிவெடுத்தார் சத்யபாமா. பாலக்காட்டில் ஒரு வசதியானவர் வீட்டுக்கு வேலைக்குச் சென்றார் அவர். ஆனால் கெளரவமாக இதுநாள் வரை குடும்பம் நடத்திவந்த அவருக்கு அங்குதான் சோதனைகள் உருவாகின. வேலைக்குச் செல்கிறபோது தன் கைக்குழந்தைக்கு பால் கொடுக்கும் பொருட்டு ராம்சந்தரை மட்டும் சத்யபாமா, வேலை செய்யும் வீட்டுக்குத் தூக்கிச் செல்வார். அதற்கு வீட்டுக்காரப் பெண்மணியிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. கொஞ்சநாட்களில் சத்யபாமாவை, ’’வாடி போடி’’ என்ற தொனியில அந்த வீட்டுப்பெண்மணி கீழ்த்தரமாக அழைக்க ஆரம்பித்தார்.

பொறுத்துப்பார்த்து பொங்கித்தீர்த்துவிட்டார் சத்யபாமா. “இத பாரும்மா... நானும் உன்னைப்போல ஒருகாலத்துல வசதியாக மாட மாளிகையில வசித்தவதான். என் விதி என்னை இப்டி வீட்டு வேலை செய்ற நிலைக்குக் கொண்டுவந்துவிட்டது. ஆனா, நீ மனிதப்பிறவி போல என்னை நடத்தலை. எனக்கு சத்யபாமா, கண்ணச்சியம்மா, சின்னம்மா என ஒண்ணுக்கு மூணு பேர் இருக்கு. அதுல ஏதாவது ஒண்ணைவைத்துக் கூப்பிடு. இல்லைனா, இனி ஒரு நிமிஷம்கூட உங்கிட்ட வேலை பார்க்க முடியாது” என பொரிந்துதள்ளிவிட்டு குழந்தை ராம்சந்தரைத் துாக்கி இடுப்பில் துாக்கிவைத்தபடி வீட்டை நோக்கி நடந்தார் சத்யபாமா.

உண்மையில் வீட்டுக்காரப் பெண்மணி சத்யபாமாவைக் கொடுமைப்படுத்தியதில் பின்னணியில் இன்னொரு காரணமும் உண்டு. குழந்தையில்லாத அவரது உறவினர் ஒருவர், சத்யபாமாவின் வறுமையைச் சுட்டிக்காட்டி குழந்தை ராம்சந்தரை தனக்கு தத்து கொடுத்துவிடும்படி முன்பு ஒருமுறை கேட்டிருந்தார். கோபமடைந்த சத்யபாமா, “எத்தனை கஷ்டம் வந்தாலும் குழந்தையை தத்து தர மாட்டேன்” என மறுத்துவிட்டார். இதுதான் வீட்டுக்கார அம்மாவின் கோபத்துக்குக் காரணம்.

அன்றிரவு குழந்தைகளைக் கட்டியணைத்தபடி பலப்பல சிந்தனைகள் தோன்றி மறைந்தன அவருக்குள். குழந்தைகளைக் காக்க தாமதிக்காமல் தமிழகத்துக்குச் செல்வது ஒன்றுதான் தனக்கு ஒரே தீர்வு என முடிவெடுத்தார். கடவுளை வேண்டியபடி பின்னிரவுக்குப்பிறகே உறங்கப்போனார். மறுநாள், அவரைத்தேடி வந்தார் வேலுநாயர். இவர் ஓய்வுபெற்ற போலீஸ்காரர். கோபாலனுடன் பணியாற்றியவர் என்பதோடு... அவருக்கு நெருங்கிய நண்பர். கோபாலன் இறந்த தகவல் கேட்டு விசாரிக்க வந்திருக்கிறார். குடும்பத்தின் நிலையை நேரில் பார்த்த அவர், கும்பகோணத்துக்கு தான் செல்லவிருப்பதாகவும்... அங்கு வந்தால், ஏதாவது வேலை செய்து பிழைத்துக்கொள்ளலாமே என ஆறுதல் சொன்னதோடு... தன்னோடு வந்தால் தானே அதற்கு வழி செய்வதாகக் கூற, சில தினங்களில் மாட்டுவண்டியை ஏற்பாடு செய்துகொண்டு குழந்தைகளுடனும் கணவரின் புகைப்படங்களோடு அவரது நினைவுகளையும் சுமந்தபடி கும்பகோணத்துக்குப் பயணமானார் சத்யபாமா.

மாட்டுவண்டி கும்பகோணத்தை அடைந்தநேரம் விடிந்தும் விடியாத ஒரு விடியற்காலைப்பொழுது.

அந்த நேரம், தம் நடிப்பாலும் மனிதநேயப் பண்பாலும் ஓர் அரைநுாற்றாண்டு காலம் தமிழர்களின் உறக்கத்தைக் கலைக்கப்போகிற குழந்தை ராம்சந்தர் தாயின் மடியில் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தான். ராம்சந்தருக்கு அப்போது இரண்டேகால் வயது.

(தொடரும்)
Posted : M.G.Nagarajan
30 April 2020 1:07 AM
Thanks for _ Published : Naveenan
20:17 in
"வண்ணத்திரை"
யாழ் இணையம்........... Thanks...

suharaam63783
30th April 2020, 10:17 AM
தந்தை இறந்த பிறகு தாய் சத்தியமா அனுபவித்த சொல்லொண்ணா துயரத்தின் வெளிப்பாடு தலைவரை ஏழைகளின் பால் ஈர்ப்பதற்கும்,ஈகை செய்ய வேண்டும் என்பதை உணர்த்தியிருக்கிறது.நாகராஜன் சார் அரிய கிடைக்காத அருமையான கருத்துக்களை பதிவு செய்தமைக்கு நன்றி........ Thanks...

suharaam63783
30th April 2020, 10:17 AM
M Soundararajan கொடுமையிலும் கொடியது, இளமையில் வறுமை. நீதி மொழிகளில் நாம் படித்திருக்கிறோம். அதை எம்ஜி.ஆர் அவர்கள் சிறுவயதில் அனுபவித்ததினால்; தான் பட்ட கஷ்டங்கள் வேறு யாருக்கும் வரக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். தனக்கு வருகின்ற வருமானம் அனைத்தையும் வாரி வழங்கி உதவி செய்தார். அதனால்தான், சுவாமிகள் கிருபானந்த வாரியார் அவர்கள் பொன்மனச்செம்மல் என்று அழைத்தார். மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பெற்று இறையானார்....... Thanks...

suharaam63783
30th April 2020, 10:18 AM
காலம் தன் கடமையை செவ்வனே செய்யும் என்பதற்கு இந்த பதிவும் ஒரு எடுத்துக்காட்டு.அதனால் தான் தெய்வதாய் சத்யபாமா அவர்களை வேலைக்காரி அவமானம் செய்ய கொதித்தெழுந்த அம்மா தமிழகம் படையெடுக்க நமக்கு இதய தெய்வம் புரட்சி தலைவர் கிடைத்தது.......... Thanks...

suharaam63783
30th April 2020, 10:19 AM
திரு. N.G.Nagarajan, அவர்களுக்கு இனிய காலை வணக்கங்கள். நான் ஒரு போலீஸ் ஆபிசர். எனக்கும் தெரியாத விஷயங்கள் உங்களுக்கு எப்படிக் கிடைத்தன. நான் தலைவரையே காற்றாக சுவாசிப்பவன்.. நன்றி.
எனக்கு இரண்டு விஷயங்கள் புரியவில்லை. நாம் தலைவரிடம் எதையும் எதிர்பார்க்க வில்லை. உயிரை வைத்திருக்கிறோம். ஆனால் சிலர் எம்.ஜி.ஆர் பணத்தை சாப்பிட்டவர்கள் வேறு கட்சியில் சேர்ந்து வாழ்க என்று சொல்கிறார்கள். இரக்கம் இல்லாதவர்கள். அவர்கள் உடலில் ரத்தம் ஓடுகிறார்..தெரியவில்லை..உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்ய......... Thanks...

suharaam63783
30th April 2020, 10:20 AM
Radhakrishnan P ஆம் நண்பரே �� என்ன செய்வது. நாம் தலைவரின் மேல் உள்ள பாசத்தால் அவர் நம்மிடத்தில் வைத்துப்போன அன்பின் வட்டத்துக்கு உள்ளாகவே இருக்கிறோம். அவர்கள் பணத்தின்மேல் குறிக்கோளாகக் இருப்பவர்கள். பணம் பதவி வருகின்ற பக்கம் எல்லாம் போவார்கள்...... Thanks...

suharaam63783
30th April 2020, 12:50 PM
#நண்பர்கள்_அனைவரும்
#இனிய_மதியவேளை_வணக்கம்

கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆசைப்பட்டான் அந்த மாணவன்.

கொஞ்சம் பெரிய படிப்புதான்.
எனவே அதற்கு பெரிய தொகை நன்கொடையாக தேவைப்பட்டது.

1000 ரூபாய் என்பது 1968 ல் பெரிய தொகைதானே !

யாரிடமும் போய் உதவி கேட்டுப் பழக்கமில்லை. என்ன செய்வது?

#ஒரே_ஒருவர்_நினைவுதான்_அவனுக்கு #உடனே_வந்தது.

தயக்கத்துடன் போனான். தடுமாற்றத்துடன் தன் நிலையை எடுத்துச் சொன்னான்.

அமைதியாக அமர்ந்து அவன் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அந்த மனிதர் அடுத்த நாள் அவனை வரச் சொன்னார். பணம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கை ஓரளவு அவனுக்கு வந்தது. நிம்மதியுடன் புறப்பட்டு வீடு சென்றான்.

#மறுநாள்_பணத்தை_எதிர்பார்த்து #சென்ற_அந்த_மாணவன்_கையில்
#ஒரு_காகிதத்தை_கொடுத்தார்_அந்த #மனிதர்_புரியாமல்_அந்த_காகிதத்தை #புரட்டிப்_பார்த்தான்.
#அது_ஒரு_ரசீது_1000_ரூபாயை
#அந்த_கல்லூரியில்_தன்_பெயரிலேயே #செலுத்தி_அதற்கு_ரசீது_வாங்கி #வைத்திருந்தார்_அந்த_மனிதர்.

ஆனந்தக் கண்ணீர் ஆறாக பொங்கி வழிய நன்றி சொல்ல வார்த்தை எதுவும் இன்றி தவித்தான் அந்த மாணவன்.

கல்லூரி வாழ்க்கை தொடங்கியது.

சரி. அந்த கட்டண ரசீது என்ன ஆனது ? புத்தகங்களுக்கு நடுவே புகுந்து கொண்டதா ?
அல்லது பூஜை அறை சாமி பக்கத்தில் சயனம் கொண்டதா ?

இல்லை. அப்படி எல்லாம் அந்த மாணவன் செய்யவில்லை. அந்த ரசீதை அழகாக லாமினேட் செய்து பத்திரமாக தன்னுடனே வைத்துக் கொண்டான் அந்த மாணவன்.

காலத்தாற் உதவி செய்த அந்த மனிதர், சில ஆண்டுகளுக்குப் பின் காலமாகி விட்டார்.

அந்த மாணவன் படித்து முடித்து, உத்தியோகத்திலும் அமர்ந்து ஓய்வும் பெற்று விட்டார்.

ஒவ்வொரு மாதமும் ஓய்வூதிய பணத்தை எடுக்க, பக்கத்திலுள்ள ATM போகிறார். அங்கே மெஷினிலுள்ள பட்டன்களை அழுத்துகிறார்.
கட கடவென்ற ஓசைக்குப் பின்...

#பணத்தை_கொடுப்பது_எல்லோரின் #கண்களுக்கும்_எந்திரமாக_தெரிகிறது.
#சம்பந்தப்பட்ட_இந்த_மனிதருக்கு
#மட்டும்_அது_எம்ஜிஆராக_தெரிகிறது.

ஆம். 1967-68 ல் இவர் கல்லூரியில் படிக்க ஆசைப்பட்டபோது உடனடியாக நிதி உதவி செய்த அந்த மாமனிதர் எம்ஜிஆர்.

எம்ஜிஆர் தன் பெயரில் பணம் செலுத்தி படிக்க வைத்த அந்த மாணவர், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் மகன் Nallathambi Nsk.

#இதோ_நல்லதம்பி_அவர்களே
#சொல்லும்_அந்த_நன்றிக்_கதை..

"1967 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள மண்டியாவில் Engineering படிக்க சேர்ந்தபோது, மக்கள் திலகம் எனக்காக கட்டிய Capitation Fees Receipt.
அதை Laminate செய்து வைத்துள்ளேன்.

கல்லூரியில் சேரும்போது தலைவர் என்னை கூப்பிட்டு "
#கலைவாணர்_பல #கோடிகள்_சம்பாதித்தார்_ஆனால் #அதையெல்லம்_தர்மம்_செய்துவிட்டு #அழியாத_புகழை_விட்டு_சென்றுள்ளார்.
#எனவே_செல்வம்_அழிந்து_போகும்.
ஆனால் நான் உனக்கு கொடுக்கப்போகும் கல்வி அழியாது. நன்றாக படி"என்று ஊக்கமும் கொடுத்தார் எம்ஜிஆர்.

#படித்து_வேலை_செய்து_ஓய்வு
#பெற்றுவிட்டேன்_இன்றும்_ATM_சென்று #ஓய்வூதியம்_பெறும்போது_அரசாங்கம்
#கொடுப்பதாக_எனது_கண்களுக்கு
#தெரியவில்லை
#தலைவர்எனக்கு_கொடுப்பதாக #நன்றியோடு_நினைத்துக் #கொள்கிறேன்."

நன்றி நல்லதம்பி அவர்களே !

உங்கள்
நல்ல மனம் வாழ்க !
நன்றி மறவாத
அந்த தெய்வ குணம்
வாழ்க !

#நன்றி_மறவாத_நல்ல_மனம்_போதும்
#என்றும்_அதுவே_என்_மூலதனம்_ஆகும்
#எனப்_பாடிய_வரிகளுக்கும்
#அது_போல_வாழ்ந்து_காட்டிய
#மன்னாதி_மன்னன்
#பொன்மனச்செம்மல்_எம்ஜிஆர்_புகழ்...
#என்றென்றும்
#வாழ்க_வாழ்க... !

அண்ணன் நல்லதம்பி அவர்கள் கல்லூரியில் சேர்ந்துவிட்டு,
#மக்கள்திலகம் அவர்களை சந்தித்து செய்தி சொல்கிறார்...

கல்லூரியில் சேர்ந்துவிட்டாய் மாத செலவுக்கு என்ன செய்வாய் என்று கேட்கிறார் நம் #வள்ளல் அதை எதிர்பார்த்து செல்லாத அண்ணன் நல்லதம்பிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

#நம்_இறைவன்_சொன்னார்_மாதா #மாதம்_செலவுக்கு_இங்கு_வந்து_பணம் #பெற்றுக்கொள்_என்கிறார்.

அடுத்த மாதம் தோட்டத்திற்கு செல்கிறார். அப்போது #தலைவர் வெளியே புறப்பட்டுக் கொண்டிருகிறார். என்ன செய்வது என்று அண்ணன் நல்லதம்பி யோசிக்க...
இவரை பார்த்த #பொன்மனச்செம்மல் #ஜானகி_அம்மையாரை காணச் சொல்லிவிட்டு புறப்பட்டுவிடுகிறார். ஜானகி அம்மையாரை சந்தித்தால், அந்த மாத செலவுக்கு பணம் கொடுத்து, ஒவ்வொரு மாதமும் வாங்கிக் கொள்ள சொல்கிறார். அண்ணன் நல்லதம்பி தன் கல்லூரி படிப்பு முடியும் வரை அந்த தொகையை பெற்றுக் கொண்டார்.

அன்புடன்
படப்பை
ஆர்.டி.பாபு........ Thanks.........

suharaam63783
30th April 2020, 12:51 PM
தமிழகம் நலம் பெற #புரட்சித்தலைவர் #எம்ஜிஆர் என்கிற பெயரை மூன்றெழுத்து மந்திரமாக சட்டமன்றத்திலும்.. மேடைகளிலும்.. உச்சரித்து மக்கள் திலகத்தின் மாண்பு சிறக்க பொன்மனச்செம்மலின் சாதனைகளை முன்மொழிந்து.. "புரட்சித் தலைவரின் அரசு" என்று என்று "மனதார ஏற்று"செயலாற்றும் எவருமே ...
எவரானாலும்.. புரட்சித் தலைவரின் பக்தராக இருந்தால்...
வெற்றிபெறுவது நிச்சயம்..
இனிவரப்போவது புரட்சித் தலைவரின் தீர்ப்பு.. மக்களின் மகிழ்ச்சி மட்டுமே எதிர்காலம் ..
அச்சம் தவிர்.. விழித்துக் கொண்டோரெல்லாம்..
பிழைத்துக் கொண்டார்..
உள்ளதைச் சோல்லி நல்லதைச் செய்து..வருவது வரட்டும் என்றிருப்போம்..
வாழ்க புரட்சித் தலைவரின் புகழ்.இனிய வணக்கம் அன்புள்ளங்களே......... Thanks Mrs.Hanna George Medam...

suharaam63783
30th April 2020, 12:54 PM
1984-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல்... 👑👑👑

👑 புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அமெரிக்கா ப்ரூக்ளின்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்... 😭😭😭

⭐ அதனால், அதிமுக கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத்தை அவரது அமைச்சர்களில் ஒருவரான இராம.வீரப்பன் திட்டமிட்டு நடத்தினார்...💐🌸🌺

☀ அப்போது, எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்தில், எம்.ஜி.ஆர் உயிரோடு இல்லை என்று கடும் சொற்களால் வறுத்தெடுத்த வண்ணம் நாக்கில் நரம்பில்லாமல் போசினர்...😡😡😡

♥ மிக நேர்த்தியாக #இராம_வீரப்பன் அவர்கள், தலைவர் சிகிச்சை பெற்று உடல்நலத்துடன் இருக்கும் வீடியோவைத் தயாரித்து ஒளி பரப்பினார்... 💗💗💗

💚 அதிமுக பிரச்சாரத்தில் மிக முக்கியமான ஒரு திருப்பு முனையாக அமைந்தது தான் இந்த வீடியோ...
⬇⬇⬇⬇⬇⬇....... Thanks...

suharaam63783
30th April 2020, 12:55 PM
������ வரலாற்றில் அழியாத திரு.சைதை துரைசாமியின் துணிச்சலை நினைவு கூறும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் உரை... ❤����

திரு.சைதை துரைசாமி பற்றி புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் அரசு விழாவில் பேசிய பேச்சு... ⬇⬇⬇

➡ நாங்கள் அரசியல்வாதிகள் எப்படி இருக்கின்றோம்...?
நான் இங்கு வந்து மேடையில் நிற்கும் போதே சைதாப்பேட்டை என்றாலே எலுமிச்சம்பழம் தான் எனக்கு ஞாபகம் வரும்... ��������

���� நான் ஒரு அரசியல்வாதி...❗����

☀☀☀எலுமிச்சம் பழத்தை மாலையாகப் போட்ட துரைசாமியைத் தான் எனக்கு ஞாபகம் வருமே தவிர, பிறகு தான் இந்த நிகழ்ச்சி கூட ஞாபகம் வரும்... ������

❤❤ நான் ஒரு அரசியல்வாதி...❗❗❗

������ என்னுடைய அரசியல் கட்சியில் இருந்த ஒருவர், அப்போதிருந்த முதலமைச்சருக்கு, இந்த சைதாப்பேட்டையிலே துணிச்சலாக எலுமிச்சம் பழ மாலையைப் போட்டு, அந்த மேடையையே அடித்து தூளாக ஆக்கி, அவரைத் தூக்கிக்கொண்டு போய் சிறைச்சாலையில் போட்ட அனுபவம் தான் என் கண்முன்னே முன்னே நிற்கும்... ������

������ ஆனால், அதை நினைத்துக் கொண்டு இங்கே வந்து, அந்த எண்ணத்தைப் பரிந்துரைக்கின்ற வகையில்நான் பேச ஆரம்பித் தேனானால், நான் முதலமைச்சராக இருக்க லாயக்கற்றவன் என்பதை இங்கே தெளிவாகக் கருதுகிறேன்... ��������

������ ஓட்டு வாங்குவது வேறு, அதை வாங்கிய பிறகு மக்களுக்குப் பணி செய்யும் நிலைமை வேறு... ������

✨⭐�� தன் தொண்டருக்காக எப்படி பட்ட எச்சரிக்கையுடன் புரட்சித் தலைவர் பேசுகிறார் என்பதற்கு இது ஒரு சான்று ....⚡⚡⚡...... Thanks...

suharaam63783
30th April 2020, 12:56 PM
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரைப் பற்றி அறிஞர் அண்ணா போற்றுவது...

ஒரு முறை தென் மாவட்டங்களில் சிறப்புரை நிகழ்த்திவிட்டு, அறிஞர் அண்ணா காரில் வந்து கொண்டிருக்கிறார். பயணக் களைப்பைப் போக்கிக் கொள்வதற்காகக் காரிலிருந்து இறங்கி சாலையோரத்தில் நிற்கிறார்.

அந்த வழியே வந்து கொண்டிருந்த விவசாயக் கூலிப் பெண்கள் அண்ணாவின் காரைப் பார்க்கிறார்கள். நாடோடி மன்னன் திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். காட்டிய அதே கொடி அண்ணாவின் காரிலும் பறக்கிறது. அந்தப் பெண்கள் மகிழ்ச்சியுடன் அண்ணாவைப் பார்த்துக் கேட்கிறார்கள்: "நீங்கள் எங்கள் எம்.ஜி.ஆர். கட்சியா?” அண்ணா அவர்கள் புன்னகை ததும்பப் பதிலளிக்கிறார்; "ஆம், நான் உங்கள் எம்.ஜி.ஆர். கட்சிதான்!” இந்த நிகழ்ச்சியை விவரித்து ‘தம்பிக்கு' எழுதிய கடிதத்தில் "அந்தப் பெண்கள் நீங்கள் எம்.ஜி.ஆர். கட்சியா என்று கேட்டபோது நான் அளவில்லா மகிழ்ச்சியுற்றேன். நாம் செல்லாத ஊர்களுக்கும், நம்மை தெரியாத பாமர மக்களிடத்திலும் எம்.ஜி.ஆர். நமது கொடியைக் கொண்டு சென்றிருக்கிறாரே என்று வியந்து போனேன். உச்சிப் பொழுதிலும், நாம் உறங்கும் வேளையிலும்கூட எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள் நமது கருத்துக்களைப் பிரசாரம் செய்து கொண்டிருக்கின்றன என்பது உண்மையல்லவா....” என்று குறிப்பிட்டிருக்கிறார் அண்ணா .

"திமுக என்றால் எம்.ஜி.ஆர்.; எம்.ஜி.ஆர். என்றால் எங்கள் வீட்டுப் பிள்ளை " இதுதான் கட்சிக்கு அப்பாற்பட்ட பொதுமக்கள் அபிப்பிராயம். இதைப் புரிந்து கொண்டதால்தான், 'யாருக்கும் கிடைக்காத கனியொன்று மரத்தில் பழுத்துத் தொங்கியது. யார் மடியில் விழுமோ என்று எல்லோரும் ஏங்கித் தவித்தபோது, அக்கனி என் மடியில் விழுந்தது. மடியில் விழுந்த கனியை என் இதயத்தில் பத்திரமாக வைத்துக்கொண்டேன்' என்று அண்ணா எம்.ஜி.ஆரை கொண்டாடினார்.

1967ல் நடைபெற்ற பொதுத் தேர்தல் தமிழக வரலாற்றில் முக்கியமான அத்தியாயமாகும். அப்போது தேர்தல் நிதியாக எம்.ஜி.ஆர். ஒரு இலட்சம் ரூபாய் தந்தபோது அண்ணா சொன்னார் : "தம்பீ, இந்த ஒரு இலட்ச ரூபாய் பெருந்தொகைதான், ஆனால் நானோ இதைவிட அதிகமாக எதிர்பார்க்கிறேன். மக்களுக்கு உன் முகத்தைக் காட்டு, அது பல இலட்சம் வாக்குகளைப் பெற்றுத்தரும்!” என்றார். அந்தத் தேர்தலின்போது தான் தமிழகத்தை உலுக்கிய துயரச் சம்பவம் நடந்தது. இளைஞர்கள் கொதித்தார்கள்; தலைவர்கள் திகைத்தார்கள்; பெண்கள் அழுது புலம்பினார்கள்; ஆம், எம்.ஜி.ஆர். சுடப்பட்டார்.

அண்ணா கேட்டுக்கொண்டபடி எம்.ஜி.ஆர். தனது முகத்தை மக்களுக்குக் காட்ட முடியவில்லை . ஆனால், குண்டடிபட்டு கழுத்தில் கட்டுப்போடப்பட்ட அவருடைய படம் அச்சிடப்பட்ட போஸ்டர்கள், தமிழ்நாடு எங்கும் ஒட்டப்பட்டன. பார்த்துப் பதறிய மக்கள் தி.மு.க.விற்கு வாக்குகளை அள்ளிக் குவித்தார்கள். கூட்டணிக் கட்சிகளும் மகத்தான வெற்றி பெற்றன. வெற்றிக்கு மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் வகையில், அண்ணாவிற்கு மாலை அணிவிக்கச் சென்ற மக்களிடம் குறிப்பாக கே.ஏ.மதியழகன் ஊரான கணியூர் மற்றும் கோவை நகரக் கழகப் பொறுப்பாளர்களிடம் “இந்த வெற்றிக்கு உரியவர் எம்.ஜி.ஆர்.தான். அவரால்தான் இந்த வெற்றி சாத்தியமானது. முதலில் அவருக்கு இந்த மாலையை சூட்டுங்கள்" என்று அண்ணா உணர்ச்சிபொங்கப் பேசினார்.

திமுக வளர்ந்தது, வெற்றி பெற்றது, ஆட்சி அமைத்தது எம்.ஜி.ஆரால்தான் என்பதை உணர்வதற்கு அறிஞர் அண்ணாவின் கூற்றே வரலாற்றுச்சான்று...!!!...... Thanks...

suharaam63783
30th April 2020, 12:59 PM
😊🌹என் அன்பு நெஞ்சங்களே..🌹😊

🔥மனிதன் என்பவன் வெளிச்சம் தரும்
தீபமாவதும்..
ஊரைக் கொழுத்தும்
தீயாவதும்..
அவனிடம் உள்ள பகுத்தறிவு
தன்மையால் தான்..🔥
🔥புரட்சி என்னும் தீ எதன்
அடிப்படையில் அமைகிறதோ..
அதனை பொருத்தே அதன்
பின்விளைவுகள் அமையும்..🔥
🔥ஒவ்வொரு நாட்டிற்கும்
ஒவ்வொரு பண்பாடு..
ஒவ்வொரு நாட்டிலும்
ஒவ்வொரு சட்டதிட்ட முறைகள்..
ஆராய்ந்து பார் ஏதும்
பயனில்லை - காரணம்
தனிமனிதனின் மனசாட்சி
விழிப்படையாமல் இருப்பது தான்..🔥
🔥அகிலத்தில் விதிமுறைகள் பல
அகம் ஏற்பதை மட்டும்
அறிந்து ஆனந்தமாய் செய்க..🔥
🔥நெஞ்சில் துணிவு கொண்டு
நேர் வழியில் செல்..
🔥பாகுபாடு ஒழித்து
பகுத்தறிவுடன் பயன்படு..
🔥ஏற்றமிகு எண்ணங்களை
எல்லுலகும் எடுத்துரை..
🔥அள்ளக்குறையாத அன்பை ,
ஞான ஊற்றாய் பெருக்கெடு..
🔥அச்சம் அவசியமற்றது
தன்மானத்துடன் இரு..
🔥வலுவாக்கி கொள் உடலுடன் , மனதையும் .,
எந்த நோயும் எட்டியும் பார்க்காது..!!
😍🔥நம் ஞானத்தால் நம் வாழ்வும்
சுடர் ஒளியாய் மிளிரட்டும்..🔥😍
😍🔥🙏நாம் வணங்கும் இஷ்ட தெய்வம் பொன்னார் மேனியன் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் துணை இருக்கிறார்..!!🙏🔥😍

😍🌹என்றென்றும் மகிழ்ச்சியுடன் வாழ்..!!🌹??

😊🔥👍என்றும் நம் #புரட்சித்தலைவர் புகழ் ஓங்கும்..!!!👍🔥😊........ Thanks...

suharaam63783
30th April 2020, 01:03 PM
மே 1 தொழிலாளர் தினம்! உழைக்கும் தோழர்களே! ஒன்று கூடுங்கள் உலகம் நமது என்று சிந்து பாடுங்கள், மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண என்ன வழி என்று பாருங்கள் என்று புரட்சி தலைவர் பாடியது போல,
தனது பெரும்பாலான படங்களில் தொழிலாளராக நடித்ததுடன் அவர்களின் சிறப்பான வாழ்வுக்கு பல நல்ல கருத்துக்களை சொன்னதோடு நில்லாமல் அவர்களுக்கு அநேக உதவிகளை செய்தவர் மக்கள் திலகம்.
ரிக்ஷாக்கார்களுக்கு மழை கோட்டு வழங்கினார். அவர்களுக்கு தேவைப்படும் போது பல உதவிகளை செய்ய தயங்கியதில்லை.

அதனால்தான் அவர் "ஏழைப்பங்காளன்" என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்டார். இன்றைய நாளில் புரட்சி தலைவரை அன்போடு நினைவு கூர்ந்து மே தினத்தை வரவேற்போம். இதே மே நாளில்தான் தலைவரின்"அடிமைப்பெண்" வெளியானது என்பதை நினைவில் கொள்வோம். உழைக்கும் தொழிலாளர்களுக்கு தொடர் இடர் தந்த கொரானாவை விரட்டி மீண்டும் சுறுசுறுப்பாக பணியாற்ற எல்லாம் வல்ல இறைவன் அருளை வேண்டுவோம்......... Thanks...

suharaam63783
30th April 2020, 01:09 PM
"ராம்சந்தருக்கு பால் கொண்டுவா டா..! எம்.ஜி.ஆருக்கு கிடைத்த முதல் கவுரவம்',"
நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர்.
அத்தியாயம் : 2

பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக சத்யபாமா உழைக்க ஆரம்பித்தார். உடலை வருத்தி ஒரே நாளில் பல சிறுசிறு வேலைகளைச் செய்து சம்பாதிக்க ஆரம்பித்தார். ஆனாலும் வறுமை அந்தக் குடும்பத்தை முழுவதுமாகவிட்டு விலகி ஓடிவிடவில்லை. பள்ளிசேர்க்கும் வயது வந்தபோது கும்பகோணம் ஆனையடிப் பள்ளியில் பிள்ளைகள் சேர்க்கப்பட்டனர். பள்ளியில் ராம்சந்தர் படுசுட்டி. ஏதாவது குறும்பு செய்துவிட்டு ஓடி ஒளிந்துகொள்வான். பஞ்சாயத்து, அண்ணன் சக்கரபாணிக்கு போகும். தம்பியைக் கூப்பிட்டுக் கோபப்படுவதுபோல் நடிப்பார். புகார் சொன்னவர்கள் சமாதானம் அடைவர். பிறகு, ''ஏன் ராம்சந்தர்... இப்படிச் செய்றே? அம்மாவிடம் யாராவது இதைச் சொன்னா பிரம்படிதான் கிடைக்கும் என தம்பி மீது இரக்கப்பட்டுப் பேசுவார் சக்கரபாணி. எம்.ஜி.ஆர் அவர்களிடமிருந்த நல்ல பழக்கங்கள் பல சத்யபாமாவினால் வந்தவை. பிள்ளைகள் பொய்சொல்வதை, சொந்த சகோதரனாக இருந்தாலும் அனுமதியின்றி ஒருவர் பொருளை இன்னொருவர் எடுப்பதை அவர் அனுமதிக்கமாட்டார்.

இம்மாதிரி சமயங்களில்தான் சத்யபாமா பிரம்பைத் தூக்குவார்; படிப்பில் குழந்தைகள் சோடைபோனால்கூட மன்னிப்பார்; ஒழுக்கத்தில் குறை கண்டால் பொறுக்கமாட்டார். ஒழுக்கம்தான் பிள்ளைகளை உயர்த்தும் என்பதில் உறுதியான பெண்மணி அவர். சத்யபாமாவின் இந்தக் கண்டிப்புதான் சகோதரர்களை வறுமையிலும் செம்மையாக இருக்கவைத்தது.

படிப்பு, அப்படி இப்படி என்றாலும் சகோதரர்களுக்கு நடிப்பு நன்றாக வந்தது. பள்ளியில் அந்த வருட விழாவில் அரங்கேற்றப்பட்ட 'லவகுசா' நாடகத்தில் ராம்சந்தருக்கு லவன் வேஷம் அளிக்கப்பட்டது. சிறுவன் பின்னியெடுத்துவிட்டான். அதுமுதல் ராம்சந்தருக்கு தடபுடல் மரியாதைதான் பள்ளியில். நாடக ஆசையில் கொஞ்சநாள் கனவிலும் நனவிலும் தன்னை ராஜா போன்று எண்ணிப் பேசிவந்தான்.

இப்படித்தான் ஒரு விடுமுறை நாளில் சிறுவன் ராம்சந்தர் வில் அம்பு செய்து தெருவில் விளையாடிக்கொண்டிருந்தான். சிறுவன் விட்ட அம்பு தெருவில் போய்க்கொண்டிருந்த ஒருவர் மீது பட்டு காலில் ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. குறிபார்த்து விட 'ராமச்சந்திர'னா என்ன; ராம்சந்தர்தானே! பயந்து வீட்டில்போய் பதுங்கிக்கொண்டான். ஆனாலும் அடிபட்டவர், கோபத்துடன் ராம்சந்தர் வீட்டுக்குள் நுழைந்து, ''கூப்பிடுறா... உன் அப்பா அம்மாவை'' என எகிற... அப்போது, எதேச்சையாக உள்ளே நுழைந்தார் வேலுநாயர். அடிபட்டவரை பார்த்து, ''வாரும்... எப்போ வந்தீர்... ஏன் இவ்வளவு தாமதம்... இது என்ன ரத்தம் எனக் கேட்டார். ராம்சந்தருக்கு ஒன்றும் புரியவில்லை. வீட்டுக்குள் இருந்துவந்த சத்யபாமாவுக்கும் ஒன்றும் புரியவில்லை. பின்னர்தான் புரிந்தது. வந்தவர் வேலுநாயரின் உறவினர். நாடகக் கம்பெனி ஒப்பந்ததாரர். பிள்ளைகள் இருவரும் படிப்பில் சற்று மந்தமாக இருந்ததால் சத்யபாமாவிடம் அனுமதி பெற்று அவர்களை நாடகக் கம்பெனியில் சேர்க்கத் திட்டமிட்டு வரச்சொல்லியிருக்கிறார். வந்த இடத்தில்தான் இந்த ரகளை.

எது எப்படியோ நாராயணன் நாயருக்கு (அடிபட்டவர்) சகோதரர்களைப் பிடித்துவிட்டது. சத்யபாமாவையும் பேசிக் கரைத்துவிட்டார் வேலுநாயர். புகழ்பெற்ற மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி அப்போது கும்பகோணத்தில் முகாமிட்டிருந்தது. அன்றே சிறுவர்கள் அதில் சேர்த்துவிடப்பட்டனர். கும்பகோணத்தில் கொஞ்சநாள் பயிற்சி. பின்னர் பாண்டிச்சேரியில் நாடகம் போட கம்பெனி நிர்வாகம் முடிவெடுத்தது. முதல்முறையாகத் தாயைப் பிரிந்துசெல்கின்றனர் சகோதரர்கள். இரண்டு தரப்பிலும் கண்ணீர் வெள்ளம். எல்லாம் உங்க நன்மைக்குதானப்பா பிள்ளைகளின் கண்ணீரைத் துடைத்தபடி சொன்னார் சத்யபாமா. பீறிட்டுக் கிளம்பிய ரயிலின் சத்தத்தில் குழந்தைகளின் அழுகைச் சத்தம் குறைவாகவே கேட்டது.

நாடகக் கம்பெனியில், ராம்சந்தருக்கு மகாபாரத நாடகத்தில் விகர்ணன் வேஷம் கொடுக்கப்பட்டது. கௌரவர்களில் ஒருவனே இந்த விகர்ணன். கண்பார்வையற்ற மன்னனான திருதராஷ்டிரனுக்கும், காந்தாரிக்கும் பிறந்த நூறு பிள்ளைகளுள் ஒருவன். சிறுவேஷம் என்றாலும் ராம்சந்தருக்கு தன்னை நிரூபிக்க அது போதுமானதாக இருந்தது. நாடக நுணுக்கங்களை ஓரளவு சகோதரர்கள் தெரிந்துகொள்ளத் தொடங்கினர். விகர்ணன் வேஷத்தில் நன்றாக நடித்ததால், அடுத்த முறை அதே நாடகத்தில் அபிமன்யு வேஷம் தரப்பட்டது.

'நாடகத்தில் படையோடு எழுந்திடுவேன்' என அபிமன்யு பாடும் பாடல் ஒன்று உண்டு. ஆனால், எம்.ஜி.ஆருக்கு பாடுவதில் கொஞ்சம் தடுமாற்றம் இருந்தது. ரிகர்சலிலேயே கொஞ்சம் அப்படி இப்படித்தான் பாடினார். பாடலாசிரியரும் நாடகத்தின் நகைச்சுவை நடிகருமான பக்கிரிசாமி, பையா நீ இந்தப் பாட்டை நாடகத்தில் நன்றாகப் பாடி முடித்துவிட்டால், உனக்கு என் பரிசு 1 ரூபாய். இல்லையென்றால் நான் தரும் தண்டனையை நீ வாங்கிக்கொள்ள வேண்டும் எனக் கறாராகச் சொல்லிவிட்டார். 'இதென்னடா வம்பு, பாடினால் பரிசு... பாடாவிட்டால் தண்டனையா...' சரியாக சிக்கிக்கொண்டோமா என்ற குழப்பத்துடனே ரிகர்சலில் ஈடுபட்டான் சிறுவன் ராம்சந்தர்.

தண்டனைக்காக அல்லாமல் தான் பாடத்தகுதியற்றவன் என்ற ஆசிரியரின் எண்ணத்தை மாற்றியாகவேண்டும் என முடிவெடுத்தான் ராம்சந்தர். பலநாட்கள் கடும் முயற்சியில் ரிகர்சலில் ஈடுபட்டான். நாடகத்தன்று நாடகக் குழுவில் இருந்த ராம்சந்தரின் நண்பர்கள் பதைபதைப்போடு மேடையை வெறித்துகொண்டிருந்தனர்.

ராம்சந்தர் பாடத் தொடங்கினான். எங்கும் சுருதி விலகவில்லை. வாத்தியாரின் எதிர்பார்ப்பையும் விஞ்சி உச்சஸ்தாயியில் பாடி முடித்தபோது... அரங்கமே அதிரும்படி கைதட்டல் எழுந்தது.


வாத்தியார் வைத்த பரீட்சையில் தன் தம்பி ஜெயித்துவிட்டதை மகிழ்ச்சியுடன் அரங்கின் ஓரத்தில் நின்று ரசித்துக்கொண்டிருந்தார் சக்கரபாணி . நினைத்ததை முடித்துவிட்ட மகிழ்ச்சியில், கூட்டத்தைப் பெருமிதத்தோடு பார்த்துக்கொண்டிருந்தான் ராம்சந்தர்.

அரங்கில் அன்று அவன் காதுகளில் முதன்முறையாக ஒலித்த கைதட்டல், அடுத்த பல பத்து ஆண்டுகளுக்கு தொடரப்போவதை காலம் மட்டுமே அன்று அறிந்திருக்கும்.

சில நிமிடங்களும் தாமதிக்கவில்லை. பக்கிரிசாமி, ராம்சந்தரை அழைத்து கட்டிப்பிடித்தபடி ஓங்கி குரல் கொடுத்தார். ஏய் பையா, ராம்சந்தருக்கு பால் கொண்டுவாங்கடா..- ராம்சந்தருக்கு இன்னும் மகிழ்ச்சி. ஆம் அன்றைய நாளில் பாய்ஸ் கம்பெனியில் ஒரு வழக்கம் உண்டு. அதாவது, நாடகத்தில் அப்ளாஸ் வாங்கும் அளவு சிறப்பாக நடிப்பவர்களுக்கு கம்பெனி உரிமையாளர் தன் கையால் நாடகம் முடிந்தவுடன் பாராட்டி பால் தருவார். கம்பெனியில் அது ஒரு கெளரவம். அதுவரை அரிதான சிலரே அப்படி கெளரவம் பெற்றிருந்தனர். முதன்முறையாக ராம்சந்தருக்கு அன்று, அந்தக் கெளரவம் கிடைத்தது.

கம்பெனியில் நல்ல நடிகன் என பெயர் வாங்கியாகிவிட்டது. இப்போது முறைப்படி ராம்சந்தருக்கு 6 வருட அக்ரிமென்ட்டும், சக்கரபாணிக்கு 3 ஆண்டுகளும் என ஒப்பந்தம் கையெழுத்தானது. சகோதரர்கள் தொடர்ந்து பாய்ஸ் கம்பெனியின் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தனர். பாலபார்ட் நடிகனாக ராம்சந்தர் நடித்துக்கொண்டிருந்தபோது அங்கு ராஜபார்ட் நடிகராக இருந்தவர் அந்நாளைய சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான பி.யு.சின்னப்பா. கதாநாயக நடிகர் என்பதால், கம்பெனியில் ஏக மரியாதை அவருக்கு. அதைப் பார்க்கிறபோதெல்லாம் தானும் ஒருநாள் இப்படிப் பலரும் மதிக்கும் பெயரும் புகழும் பெற்ற நடிகனாக வேண்டும் என்ற வெறி சிறுவன் ராம்சந்தரின் மனதில் எழும். ராம்சந்தரின் ஆசை நிறைவேறியதா...?

தொடரும்...
Posted M.G.Nagarajan
30 April 2020 8:01 AM
Published : Naveenan

விகடன்
யாழ் இணையம்......... Thanks...

suharaam63783
30th April 2020, 01:12 PM
1957ல் ஒரு முக்கியமானவரிடம் மக்கள் திலகம் அவர்கள் சொன்ன விஷயம்
மக்கள் திலகம் அவர்களிடம் உங்களுடைய முன்னேற்றத்திற்கு வழிகாட்டி உங்களுக்கு அறிவுரைகளை சொன்னது யார், யார், என்பதை தயவுடன் சொல்லுங்கள் என்று ஒரு முக்கியமானவர் கேட்டார். உடனே திரு. எம்.ஜி.ஆர் அவர்கள் சற்றும் யோசிக்காமல் அந்த விஷயத்தை சொன்னார் சுருக்கமாக.
1. எனது தாயுடைய அறிவுரைகள், கண்டிப்பான வளர்ப்பும் தான்.
2. அடுத்து நான் நாடக கம்பெனியில் வேலைக்கு சேர்ந்த பிறகு எனக்கு நாடகத்தில் நடிக்க சொல்லி தந்த வாத்தியார்.
3. கம்பெனி முதலாளி
4. நடனம், சண்டை பயிற்சிகள் சொல்லிக் கொடுத்தவரும் எனக்கு நல்ல முறையில் மிகவும் கண்டிப்பான விதத்தில் சொல்லிக் கொடுத்தார்கள். நானும் அவர்களுடைய கண்டிப்பு, அடி, இவைகளையெல்லாம் சமாளித்து கொண்டு எல்லாவற்றிலும் கண்ணும் கருத்துமாக கற்றுக்கொண்டேன். எல்லாவற்றிலும் நல்ல பையன் சுறுசுறுப்பானவன் நல்ல அறிவுள்ளவன் என்று அவர்களால் புகழப்பட்டேன். நாடகத்தில் நடித்து கொண்டு இருக்கும் போது கூட திரை மறைவில் நின்று கொண்டு பிரம்பால் அடிப்பார்கள் அதை எல்லாம் அன்றைக்கு சமாளித்ததால் தான் சினிமாவில் நல்லா நடிக்க முடிந்தது என்றார் மக்கள் திலகம். அன்றைக்கு குருவாக இருந்தவர்கள் மதுரை பாய்ஸ் கம்பெனி முதலாளி சச்சிதானந்தம் பிள்ளை அவர்களும், ஆசிரியர் கிருஷ்ணசாமி அவர்களும் திரு. கந்தசாமி, காளி. என். ரத்தினம் அவர்களும் சண்டைப் பயிற்சியாளர் இவர்கள் தான் இதற்கு மேல், பி.யு. சின்னப்பா, கிட்டப்பா, எம்.கே. ராதா இவர்களை விட தன் உடன் பிறந்த தம்பிபோல் பாவித்து என் மனம் கவலைபடாத அளவிற்கு குடும்ப விஷயத்திலிருந்து அதாவது குடும்ப விஷயத்தை பற்றி கூட அறிவுரைகளை சொல்லக்கூடியவர் திரு. என்.எஸ்.கே அவர்கள் தான்.எனக்கு மனதில் சஞ்சலம் ஏற்பட்ட போதெல்லாம் அவரிடம் போய்விடுவேன். அவரிடம் ஒரு மணி நேரம் பேசிக்கிட்டு இருந்தால் போதும், அவர் ஒரு காலகட்டத்தில் வெள்ளைக்கார ஆட்சியில் ஜெயிலுக்கு போகவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதாவது என்.எஸ்.கே. தியாகராஜபாகவதர் இவர்கள் மீது ஒரு பத்திரிகை ஆசிரியர் கொலை சம்பந்தமாக 1944ல் ஜெயிலில் போட்டு விட்டார்கள். அது சமயம் நான் மிக மிக வேதனை அடைந்தேன். பிறகு, அவர்கள் ஜெயில் தண்டனை, முடிந்து விடுதலை ஆகி 1947க்க வீட்டுக்கு வந்த பிறகு, எல்லோரையும் பார்த்து நடந்த சம்பவத்தை பற்றி ஆறுதல் செய்திகள் சொன்னேன். பிறகு, என்.எஸ்.கே. அவர்களுக்கு என்னால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்து கொண்டு இருந்தேன். அவர் கேட்காமலேயே நானும் அந்த சமயம் கொஞ்சம் வசதி உள்ளவன் ஆகிவிட்டேன். அப்படி நான் செய்யும் உதவிகளை நினைத்து மிகவும் சந்தோஷப்படுவார்கள். கடவுள் தான் ராமச்சந்திரன் உருவத்தில் வந்து இருக்கிறாரோ என்று கலைவாணர் நினைப்பாராம். இதை என்னிடம் சொல்லுவார்கள்....... Thanks...

suharaam63783
30th April 2020, 02:24 PM
காங்கிரஸ் காமராஜ் ஆட்சிகாலம் பஞ்சம் பசி யில் மக்கள்
சிலகாலம் அண்ணாவின் சீர்திருத்த ஆட்சி
பின் கருணாநிதி ஊழல் ஆட்சி

பலகாலம் எம்ஜிஆர் பொற்கால ஆட்சி
கல்வியில் முதலிடம்
தன்னிறைவு திட்டம் கிராமவளர்ச்சி முதலிடம்
கிருஷ்ணா நதி சத்துணவு என தமிழகம் கண்ட நன்மைகள் பல

வாழ்க எம்ஜிஆர் புகழ்....... Thanks...

suharaam63783
30th April 2020, 02:35 PM
One Single Man Army ruled over 60 years in the hearts of people especially from the day he joined in DMK (1951). Though Anna is a great leader but needed extra support from the popular personality from MGR, well known for helping tendency from olden days and his face, campaign speech brought in DMK into power slow growth from 1957, 1962 and finally in 1967 (mainly because of MGR - indirect power) even Annadurai accepted his popularity when and how DMK came to power because & more of his bullet shooted photo) and then in 1971 (Karu became because of MGR campaign and even he accepted how he became CM with full support from MGR) and then MGR direct power from 1977 onwards and still in 2021........ Thanks.........

ravichandrran
30th April 2020, 03:16 PM
MGR, dominated like no other, the films and politics of India's Tamil Nadu state. A charismatic actor and philanthropist, he commanded the idolatrous adulation of millions of fans and tamils all over the world became Tamil Nadu's chief minister. ..more than 10 years continiously...There probably will never be a man that held the entire state of Tamil Nadu under his control like Puratchi Thalaivar M.G.R did. His films introduced the genre of entertainment into the Tamil Industry and thousands to millions flocked to see the man who had an naturally spell-binding aura on screen. From his dialogue delivery to his solo singing moments, he was an enigma at capturing hearts. The words devotees and fansclub were birthed for him. The unrivalled craze to see the man didn't stop inside his state. His popularity outside his home, grew larger than one could ever dream of ever. And he soon became a force that could not be touched. But his magic didn't stop in cinema. After his departure from the film world, his stint in Politics as the Chief Minister of Tamil Nadu will forever be the imprinted as the backbone of Tamil politics forever. It is fair to say that M.G.R had his fair share of negative influences, but the huge positive impact he had on society will always leave a mark on Tamil Nadu forever.43 years ...and so on MGR RULING THE TAMIL FILM.

Even after his retirment from cinefield 1977 till today 2020 most of his movies running with packed houses in entire south india with box office .No other actor in the world have charisma l

Audience: Almost all commercial cinema lovers were fans of his films.

Thanks to Mr Vinod - Bangalore

suharaam63783
30th April 2020, 03:37 PM
"எம்.ஜி.ஆர் குருவிடம் அறை வாங்கியது ஏன்...?"
நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் - அத்தியாயம் : 3

அந்நாளில் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சேர்வது என்பது குதிரைக்கொம்பான விஷயம். திறமையுள்ளவர்களுக்கு மட்டுமே அங்கு கதவுகள் திறக்கப்படும். சச்சிதானம்பிள்ளை என்பவர் நடத்திவந்த இந்த நாடக கம்பெனியில் நடித்தவர்கள் பின்னாளில் புகழ்பெற்ற சினிமா நட்சத்திரங்களானார்கள். பி.யு சின்னப்பா, பி.ஜி. வெங்கடேசன், டி.எஸ் பாலையா, நன்னையா பாகவதர், கே.பி கேசவன், பிரபல நாடகாசிரியர் எம்.கந்தசாமி முதலியார், அவரது மகன் எம்.கே. ராதா, கே.ஆர் ராமசாமி , காளி என்.ரத்தினம் என இந்த பட்டியல் ரொம்ப நீளம். இந்த பட்டியலில் ராம்சந்தருக்கும் ஓர் இடம் இப்போது.

பாய்ஸ் கம்பெனியில் சேர வெறும் கலை ஆர்வமும் நடிப்புத்திறனும் மட்டுமே தகுதிகளில்லை. கிட்டதட்ட அது ஓர் குருகுல வாசம்போல. நடிப்புப் பயிற்சிக்கு முன்னதாக அவர்களுக்கு அடிப்படை படிப்பு சொல்லித்தரப்படும். விடியற்காலை எழுந்ததும் தேகப்பயிற்சி, பின்னர் வீர திர விளையாட்டுப்பயிற்சி, நாடக வசனங்களை பாடம் செய்தல், பாடும் பயிற்சி, நடனப்பயிற்சி என கிட்டதட்ட ஒருவனை நாடகத்துறையில் சகலகலா வல்லவனாக்கும் முயற்சிகள். அதேசமயம் இத்தனை பயிற்சிக்குப்பின்னும் நாடகத்தில் சொதப்பினால் அதற்கு தண்டனைகளும் உண்டு. அந்த தண்டனைக்கு பயந்தே நடிகர்கள் கண்ணும் கருத்துமாக பயிற்சிகளை செய்வார்கள். உடலையும் உள்ளத்தையும் உறுதியாக்க பாய்ஸ் கம்பெனி இட்ட இந்த உரம்தான் பின்னாளில் ராம்சந்தரை 'எம்.ஜி.ஆர்' ஆக ஆக்கியது என்பதில் சந்தேகமில்லை.

சேர்ந்தபோது மாத சம்பளம் நாலணா. இப்போது 5 ரூபாய். சக்கரபாணிக்கும் அதேதான். பெருமிதமான இந்த அங்கீகாரத்துடன் தனது திறமையை மட்டுப்படுத்திக்கொள்ளாமல் இன்னும் புகழடையவேண்டும் என்ற எண்ணம் ராம்சந்தருக்கு தீவிரமானது. அந்நாளில் கம்பெனியில் எம்.ஜி.ஆருக்கு குருவாக இருந்தவர் எம்.கந்தசாமி முதலியார். இவர் தமிழகத்தில் நாடக வளர்ச்சிக்கு வித்திட்டவர்களில் முக்கியமானவர். எம்.ஜி.ஆருக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்தவர் காளி என்.ரத்தினம்.

நாடகங்கள் குறித்த முக்கியத்துவம், நடிகர்களின் அர்ப்பணிப்பு போன்றவற்றை ராம்சந்தருக்கு உணர்த்தியவர் எம்.கே என்றால், ஒரு நடிகன் கதாபாத்திரத்தில் சோபிக்க என்னவெல்லாம் தியாகம் செய்யவேண்டும், எப்படியெல்லாம் தன்னை கதாபாத்திரத்திற்குள் பொருத்திக்கொள்ள வேண்டும் என்பதை ராம்சந்தருக்கு சொல்லிக்கொடுத்தவர் காளி என்.ரத்தினம். எம்.ஜி.ஆரின் நடிப்புக்கு ஆதாரமானவர்கள் இவர்கள் இருவரும். உதாரணமாக இவர்களுடனான ராம்சந்தரின் ஒரு அனுபவத்தை சொல்லலாம்.

ராம்சந்தர் அப்போது ராஜேந்திரன் என்ற நாடகத்தில் நடித்துவந்தார். ஊதாரித்தனமாக செலவு செய்யும் பெரும் பணக்கார வாலிபன் வேடம் அவருக்கு தரப்பட்டிருந்தது. ஒரு காட்சியில் மகனின் ஊதாரித்தனத்தால் அவனுக்கு தன் கணக்கில் வங்கியில் பணம் தர வேண்டாம் என அவரது தந்தை வங்கிக்கு அறிவுறுத்தியிருந்தார். இதுதெரியாமல் சென்று 'செக்' கிற்கு பணம் கேட்க வங்கி மறுக்கிறது. கோபமடைந்த வாலிபன் தன் செருப்பை கழற்றி வங்கி அதிகாரிகளை அடிப்பதுபோல் ஓங்கியபடி வெறியாட்டம் போடுகிறான். நாடகத்திற்கு நடிப்பு சொல்லிக்கொடுத்தவர் காளி.என். ரத்தினம்.

முதல்நாள் நாடக அரங்கேற்றம் நடந்து முடிந்து ஓய்வாக வந்து தன் இருக்கையில் வந்து அமர்ந்தார் ராம்சந்தர். அப்போது வேகமாக அவரை நோக்கி முன்னேறி வந்த கந்தசாமி முதலியார் ராம்சந்தரின் முகத்தில் ஒங்கி ஒரு அறை விட்டார். அதிர்ந்துபோயினர் அங்கிருந்தவர்கள். கந்தசாமி முதலியார் நடிப்பு விஷயங்களில் கொஞ்சம் முரட்டுமனிதர். அதனால் அவரிடம் சென்று ராம்சந்தரை அறைந்ததற்கான காரணம் கேட்க யாருக்கும் தைரியமில்லை. எந்த தவறும் செய்யாத தன்னை ஏன் வாத்தியார் அடித்தார் என கன்னத்தை பிடித்தபடி நின்றான் ராம்சந்தர். தந்தை என்பதால் எம்.கே.ராதா மட்டும் துணிந்துகேட்டார். எதற்காக அவனை அடித்தீர்கள் நன்றாகத்தானே நடித்தான்...?

முட்டாள்தனமான நடிப்பு...எந்த பணக்காரனாவது பொது இடத்தில் இப்படி செருப்பை கழற்றி அநாகரீகமாக நடந்துகொள்வானா...ஏற்ற பாத்திரத்தின் தன்மையை புரிந்துகொள்ள வேண்டாமா... இப்படி நடித்தால் நாடகம் பார்ப்பவர்கள் என்னையும் நம் நாடக குழுவையும்தானே தவறாக பேசுவார்கள். ரத்தினம் என்ன பாடம் சொல்லிக்கொடுத்தான் இவனுக்கு! என்று பொரிந்து தள்ளினார் கந்தசாமி முதலியார். ராம்சந்தருக்கு எந்த கோபமும் எழவில்லை. காரணம் தந்தையை இழந்து தாயை பிரிந்து வறுமைக்காக கலைத்துறையில் ஈடுபட்டிருக்கும் தனக்கு எல்லாமுமாக இருந்து இதுநாள் வரை வழிநடத்தி வருபவர் எம்.கே முதலியார் என்பதால், அவர் எதை செய்தாலும் அது தன் வளர்ச்சிக்குத்தான் என்பதில் உறுதியாக இருந்ததே. நல்ல படிப்பினையாக அந்த சம்பவத்தை எடுத்துக்கொண்டான் ராம்சந்தர்.

அதேசமயம் தன்னை வாத்தியார் அடித்ததை யாரும் தட்டிக்கேட்க துணிவில்லாதபோது தைரியமாக தனக்காக தன் தந்தையையே எதிர்த்து கேள்வி கேட்ட எம்.கே.ராதாவின் அன்பில் நெகிழ்ந்துபோனார் எம்.ஜி.ஆர். தன் சொந்த சகோதரர் சக்கரபாணிக்கு இணையான பாசத்துடன் இறுதிவரை அவரையும் தன் சொந்த சகோதரர் போன்றே மதித்து பாசத்துடன் பழகினார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆருக்கு முன்னரே சந்திரலேகா, அபுர்வ சகோதரர்கள் பாசவலை போன்ற படங்களில் நடித்து பின்னாளில் புகழ்பெற்றவர் எம்.கே.ராதா. திரையுலகில் புகழடைந்ததற்கு பின், எம்..ஜி.ஆர் பொது இடங்களில் மூத்தவர்களின் கால்களில் விழுந்து வணங்கியது அரிதான சந்தர்ப்பங்களில்தான். அணணா கூட இடம்பெறாத இந்த பட்டியலில் எம்.கே ராதாவும், சாந்தாராமும் இடம்பெற்றிருந்தனர். தன் வாழ்நாளில் முக்கியமான எந்த நிகழ்வுகளுக்கும் எம்.கே.ராதாவை தேடிச்சென்று ஆசிபெறுவதை இறுதிவரை கடைபிடித்தார் எம்.ஜி.ஆர். எம்.கே.ராதாவின் மீது அத்தனை மரியாதையும் அன்பும் வைத்திருந்தார் எம்.ஜி.ஆர்.

இனி நடிப்பில் சோடைபோகக்கூடாது. வாத்தியாரிடம் அடி வாங்கக்கூடாது என அன்றே உறுதி எடுத்துக்கொண்டார் ராம்சந்தர். தொடர்ந்து மனோகரா உள்ளிட்ட பல நல்ல நாடகங்கள் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நடத்தப்பட்டன. இந்த நேரத்தில் பி.யு சின்னப்பாவை போல் பெரிய நடிகர் ஆக வேண்டும் என்ற ராம்சந்தரின் ஆசை ஒருநாள் கைக்கூடிவந்தது.

அப்போது பாய்ஸ் கம்பெனி 'தசாவதாரம்' என்ற நாடகத்தை நடத்திவந்தது. சென்னையில் பல நாட்கள் தொடர்ந்து நடந்த வெற்றிகரமான நாடகம். பின்னர் பாலக்காட்டில் நடத்தப்பட்டது. இதில் பரதனாக பி.யு சின்னப்பா நடித்தார். ராம்சந்தருக்கு சத்ருகன் வேடம். பெயருக்குத்தான் வேடம்; அதில் நடிப்புத்திறமையை காட்டும் வாய்ப்பு துளியும் இல்லை. வேண்டா விருப்பமாகவே நடித்துவந்தார் ராம்சந்தர். ஒருநாள் புதுக்கோட்டையில் இருந்து பாலக்காட்டுக்கு பறந்து வந்தது அந்த 'அதிர்ச்சி' தந்தி. தந்தி சொன்ன சேதி என்ன...?

தொடரும் ...
Posted : M.G.Nagarajan
30 April 2020 12:34 PM
Thanks for: Published : Naveenan

Vikatan News
யாழ் இணையம்........ Thanks...

suharaam63783
30th April 2020, 03:42 PM
[1957ல் ஒரு முக்கியமானவரிடம் மக்கள் திலகம் அவர்கள் சொன்ன விஷயம்
மக்கள் திலகம் அவர்களிடம் உங்களுடைய முன்னேற்றத்திற்கு வழிகாட்டி உங்களுக்கு அறிவுரைகளை சொன்னது யார், யார், என்பதை தயவுடன் சொல்லுங்கள் என்று ஒரு முக்கியமானவர் கேட்டார். உடனே திரு. எம்.ஜி.ஆர் அவர்கள் சற்றும் யோசிக்காமல் அந்த விஷயத்தை சொன்னார் சுருக்கமாக.
1. எனது தாயுடைய அறிவுரைகள், கண்டிப்பான வளர்ப்பும் தான்.
2. அடுத்து நான் நாடக கம்பெனியில் வேலைக்கு சேர்ந்த பிறகு எனக்கு நாடகத்தில் நடிக்க சொல்லி தந்த வாத்தியார்.
3. கம்பெனி முதலாளி
4. நடனம், சண்டை பயிற்சிகள் சொல்லிக் கொடுத்தவரும் எனக்கு நல்ல முறையில் மிகவும் கண்டிப்பான விதத்தில் சொல்லிக் கொடுத்தார்கள். நானும் அவர்களுடைய கண்டிப்பு, அடி, இவைகளையெல்லாம் சமாளித்து கொண்டு எல்லாவற்றிலும் கண்ணும் கருத்துமாக கற்றுக்கொண்டேன். எல்லாவற்றிலும் நல்ல பையன் சுறுசுறுப்பானவன் நல்ல அறிவுள்ளவன் என்று அவர்களால் புகழப்பட்டேன். நாடகத்தில் நடித்து கொண்டு இருக்கும் போது கூட திரை மறைவில் நின்று கொண்டு பிரம்பால் அடிப்பார்கள் அதை எல்லாம் அன்றைக்கு சமாளித்ததால் தான் சினிமாவில் நல்லா நடிக்க முடிந்தது என்றார் மக்கள் திலகம். அன்றைக்கு குருவாக இருந்தவர்கள் மதுரை பாய்ஸ் கம்பெனி முதலாளி சச்சிதானந்தம் பிள்ளை அவர்களும், ஆசிரியர் கிருஷ்ணசாமி அவர்களும் திரு. கந்தசாமி, காளி. என். ரத்தினம் அவர்களும் சண்டைப் பயிற்சியாளர் இவர்கள் தான் இதற்கு மேல், பி.யு. சின்னப்பா, கிட்டப்பா, எம்.கே. ராதா இவர்களை விட தன் உடன் பிறந்த தம்பிபோல் பாவித்து என் மனம் கவலைபடாத அளவிற்கு குடும்ப விஷயத்திலிருந்து அதாவது குடும்ப விஷயத்தை பற்றி கூட அறிவுரைகளை சொல்லக்கூடியவர் திரு. என்.எஸ்.கே அவர்கள் தான்.எனக்கு மனதில் சஞ்சலம் ஏற்பட்ட போதெல்லாம் அவரிடம் போய்விடுவேன். அவரிடம் ஒரு மணி நேரம் பேசிக்கிட்டு இருந்தால் போதும், அவர் ஒரு காலகட்டத்தில் வெள்ளைக்கார ஆட்சியில் ஜெயிலுக்கு போகவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதாவது என்.எஸ்.கே. தியாகராஜபாகவதர் இவர்கள் மீது ஒரு பத்திரிகை ஆசிரியர் கொலை சம்பந்தமாக 1944ல் ஜெயிலில் போட்டு விட்டார்கள். அது சமயம் நான் மிக மிக வேதனை அடைந்தேன். பிறகு, அவர்கள் ஜெயில் தண்டனை, முடிந்து விடுதலை ஆகி 1947க்க வீட்டுக்கு வந்த பிறகு, எல்லோரையும் பார்த்து நடந்த சம்பவத்தை பற்றி ஆறுதல் செய்திகள் சொன்னேன். பிறகு, என்.எஸ்.கே. அவர்களுக்கு என்னால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்து கொண்டு இருந்தேன். அவர் கேட்காமலேயே நானும் அந்த சமயம் கொஞ்சம் வசதி உள்ளவன் ஆகிவிட்டேன். அப்படி நான் செய்யும் உதவிகளை நினைத்து மிகவும் சந்தோஷப்படுவார்கள். கடவுள் தான் ராமச்சந்திரன் உருவத்தில் வந்து இருக்கிறாரோ என்று கலைவாணர் நினைப்பாராம். இதை என்னிடம் சொல்லுவார்கள்]....... Thanks...

suharaam63783
30th April 2020, 03:43 PM
தலைவா உமக்காக திரைப்படம் பார்க்க பழகினோம் , ஓடி ஓடி உழைத்து சம்பாதித்த பணத்தை இறுதி வரை ஏழைகளுக்கு அள்ளிக் கொடுத்த வள்ளலே , இறுதியிலும் உள்ள சொத்துக்களையும் மாற்றுத்திறனாளிகளுக்கு அள்ளி இறைத்த இறைவா , நீர் கூட எவரையும் , எம்மதத்தையும் இழிவு படுத்தியதில்லை , உமது கலைத்துறையை பயன்படுத்தி உமது தமிழக மக்களால் வளர்ந்த சில கழிசடை நாய்கள் இன்று நெறிமுறையின்றி வாழ்வதும் அறிவுரை கூறுவதும் எம்மால் சகிக்க முடியவில்லை இறைவா............. Thanks...

suharaam63783
30th April 2020, 03:47 PM
உங்கள்(MGR) குணம் இவர்களுக்குயில்லை...
ஆனால் உங்களைப்போல் நாடாளும் ஆசை ...எல்லா கூத்தாடிகளுக்கும் உள்ளது... அதை என்னவென்று சொல்வது?!..... Thanks...

suharaam63783
30th April 2020, 03:54 PM
�� வெளிச்சப்பாடு
மருதூர்,. பாலக்காட்டை ஒட்டி கேரள எல்லையில் உள்ள அழகான கிராமம். பசுமை மஞ்சம் விரித்த நிலப்பரப்பு,
அதில் ஓர் அம்மன் ஆலயம், அதன் விழாவுக்காக வெளிச்சப் பாடு நடக்கவிருக்கிறது. வெளிச்சப்பாடு என்றால் நம் நாட்டில், தன்னைத்தானே பிழைப்புக்காக சாட்டையால் அடித்துக் கொள்வதை போல தன்னைத்தானே கத்தியால் வெட்டிக் கொள்வது.
இதற்குரிய பக்தரை மஞ்சள் உடை கட்டி மேளதாளம் முழங்க அழைக்க வருகிறார்கள்.
அம்மன் முன் நிற்கிறார். ஆக்ரோஷமாக பால கண்ணனோ குமரகுரு முருகனோ என வியக்கும் அளவுக்கு சிறுவன் ஒரு ஐந்து வயது சிறுவன் கம்பீரமாக நடந்து அம்மன் முன் போகிறான்.
அவனைவிட உயரமான வாள் சாத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அந்த பால் மனம் மாறாத சிறுவன் தனது பிஞ்சு கரங்களினால் தூக்கி வருகிறான். அந்த கொடுமையான தோற்றமுள்ள பக்தரிடம் நீட்டுகிறான். அவர் வாங்கி தன் கண்களில் ஒற்றி அதனால் தன் மேனியை காயப்படுத்தி அந்த ரத்தத்தை எடுத்து சிறுவன் நெற்றியில் வைத்து ஆசி கூறுகிறார்.
சிறுவனும் வணங்குகிறான், மக்கள் ஆரவாரம் செய்கிறார்கள்,


கண்ணுக்கினிய அந்த சிறுவன் யார் தெரியுமா????
பிற்காலத்தில் கோடான கோடி மக்களின் அரவணைப்பை யும் ஆரவாரத்தையும், ஆசிகளையும் பெற்ற நம் நெஞ்சுக்கு இனிய நாயகர் எம்ஜிஆர் அவர்கள்தான்,
இலங்கையில் தந்தையை பரிகொடுத்து தாய் நாடு திரும்பி மாமனின் சூழ்ச்சிக்கு ஆளாகி வறுமையின் பிடியில் அன்புத் தாயின் மடியில் இருந்த போது அந்தக் குடும்பத்தின் பெருமையே இந்த ஆலயத்துக்கு கத்தி கொடுக்கும் உரிமையில் தான் இருந்தது
அப்படி அம்மன் கத்தி கொடுத்து வளர்ந்ததால் கத்தி பிடித்து வாழ்ந்தார்
கத்தியை சுழற்றி நடித்தார் கத்தி வேந்தர் ஆனார், கத்தி பிடித்து வாழ்ந்தார்
கத்தி பிடித்து நடித்தார்
வேடத்தில் மட்டுமல்ல,,, வாழ்விலும் மன்னராகி மன்னராக திகழ்ந்தார் நமது எம்.ஜி.ஆர்.......... Thanks...

suharaam63783
30th April 2020, 04:11 PM
ஸ்ரீ MGR வாழ்க

சித்திரை 17 வியாழன்

எம்ஜிஆர் பக்தர்களே

நமது வள்ளல் எம்ஜிஆர் அவர்கள்

,தனிமனிதனாக சினிமா உலகில் சம்பாதித்த பணத்தை

நாட்டு மக்களுக்கு எப்படியெல்லாம் கொடுத்து உதவி இருக்கிறார்

++++++++++++++++++++++++++++++++++

எம்ஜிஆர் அவர்கள் வறுமையோடு இருந்த காலகட்டத்திலும்

தன் அண்ணன் எம் ஜி சக்கரபாணி அவர்களுடைய குடும்பத்தையும் கூட்டுக்குடும்பமாக இருந்து வழி நடத்தினார்

எம்ஜிஆர் அவர்களுக்கு நிரந்தரமான வருமானம் வந்த பிறகு

அண்ணன் சக்கரபாணி குடும்பத்திற்கும் அவருடைய மகன்களுக்கும் நல்ல தொழிலை அமைத்துக் கொடுத்தார்

அவருடைய குழந்தைகளுக்கு திருமணங்களை நடத்தி வைத்தார்

அவர்களுடைய குடும்பம் கஷ்டமில்லாமல் நல்ல நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்

எம்ஜிஆரின் இறந்துபோன முதல் மனைவியின் குடும்பத்தினருக்கும் எம்ஜிஆர் பண உதவி செய்து அவர்களை முன்னேற்றம் செய்துள்ளார்

எம்ஜிஆரின் இறந்துபோன இரண்டாவது மனைவியின் குடும்பத்தினருக்கும் பண உதவி செய்து அவர்கள் குடும்பத்தை கஷ்டம் இல்லாமல் வாழ வைத்தார்

அடுத்து ஜானகி அம்மையாரின் அண்ணன் தம்பி குடும்பத்தையும் உயர்ந்த நிலைக்கு கொண்டுவந்தார்

+++++++++++++++++++++++++++++++++

அடுத்து ராமாவரம் தோட்டத்தில் வேலைபார்த்த

சமையல்காரர்கள்

தோட்டத் தொழிலாளர்கள்

ஆடு மாடு மேய்த்த தொழிலாளர்கள்

எம்ஜிஆரின் பாதுகாப்பாளர்கள்

ஆகியோர் களுடைய வீட்டில் நடைபெறுகின்றன

அத்துனை நல்ல நிகழ்ச்சிகளுக்கும் பண உதவி செய்துள்ளார்

//////////?//////?/////////////?////////////?/?/.?

1949 ல் திமுக ஆரம்பிக்கப்பட்டது

1952 ஆண்டு எம்ஜிஆர் திமுகவில் சேருகிறார்

1972 ஆண்டு எம்ஜிஆர் அவர்களை கருணாநிதி அவர்கள் திமுகவில் இருந்து நீக்கினார்

இந்த 20 ஆண்டுகளில் திமுக சந்தித்த தேர்தல்கள்

1952 திமுக சந்தித்த முதல் சட்டசபை தேர்தல்

1957. திமுக சந்தித்த சட்டசபை தேர்தல்

1962 திமுக சந்தித்த சட்டசபை தேர்தல்

1967ஆம் ஆண்டு திமுக சந்தித்த சட்டசபைத் தேர்தல்

1971ஆம் ஆண்டு திமுக சந்தித்த சட்டசபை தேர்தல்

இத்தனை தேர்தலிலும் எம்ஜிஆர் தமிழ் நாடு முழுவதும் வேனில் சென்று பிரச்சாரம் செய்தார்

பல இடங்களில் நடைபெற்ற இடைத் தேர்தல்களிலும் எம்ஜிஆர் சென்று திமுக வேட்பாளர் களுக்காக பிரச்சாரம் செய்தார்

இப்படி எம்ஜிஆர் தமிழ் நாடு முழுவதும் திமுக வேட்பாளர் களுக்காக பிரச்சாரத்திற்கு செல்லும் பொழுது

எம்ஜிஆருக்கு ஆரத்தி எடுக்கின்ற மக்களுக்கு

எம்ஜிஆர் தன் சொந்தப் பணத்தை அன்பளிப்பாக கொடுக்கிறார்

பல இடங்களில் வேட்பாளர் தனக்கு பணம் பத்தவில்லை என்று எம்ஜிஆரிடம் கேட்டு வாங்கி தேர்தல் செலவு செய்கிறார்கள்

மாநகராட்சி தேர்தல்களிலும் நகராட்சித் தேர்தலுக்கும் எம்ஜிஆர் பிரச்சாரத்திற்கு சென்றார்

அப்பொழுதும் எம்ஜிஆர் தன் கை பணத்தை தான் மக்களுக்கு கொடுத்தார்

இப்படி எல்லாம் எம்ஜிஆர் திமுகவின் வளர்ச்சிக்காக தன்னுடைய பணத்தை செலவழித்தார்

அந்தக் காலத்தில் திமுக நகர செயலாளர்கள் ஒன்றிய செயலாளர்கள் மாவட்ட செயலாளர்கள் கிளைக் கழகச் செயலாளர்கள்

தங்கள் வீட்டு நிகழ்ச்சிக்கு பத்திரிக்கையை எடுத்துக்கொண்டு எம்ஜிஆரிடம் சென்று கொடுப்பார்கள்

அவர்களுக்கும் பண உதவி செய்தவர் எம்ஜிஆர்

இப்படியெல்லாம் பாடுபட்டு தன்னுடைய பணத்தை திமுகவிற்கு செலவழித்த எம்ஜிஆர் அவர்கள்

திமுகவை கைப்பற்ற முயற்சி செய்யவில்லை

கருணாநிதி அவர்களை முதலமைச்சர் பதவியிலிருந்து இறக்கி விட்டு தான் முதலமைச்சராக வரவேண்டும் என்று எம்ஜிஆர் துரோகம் செய்யவில்லை

அன்றைய பிரதமர் இந்திரா காந்தியை கொல்லைப்புற வழியாக எம்ஜிஆர் சந்தித்து

கருணாநிதி அவர்களை முதலமைச்சர் பதவியிலிருந்து இறக்குவதற்கு எம்ஜிஆர் முயற்சி செய்யவில்லை

+++++++++++++++++++++++++++++++++(

எம்ஜிஆர் புகழ் பெறத் தொடங்கிய பிறகு தமிழ்நாடு முழுவதும் இந்தியா முழுவதும் எம்ஜிஆர் மன்றம் உருவாகியது

தமிழ்நாடு முழுவதும் உள்ள எம்ஜிஆர் மன்றத்தை சேர்ந்தவர்கள் தங்கள் வீட்டு திருமணம் காதுகுத்து போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு எம்ஜிஆரிடம் பத்திரிக்கை கொண்டுபோய் கொடுப்பார்கள்

அவர்களுக்கும் பண உதவி செய்தவர் எம்ஜிஆர்

++++++++++++++++++++++++++++++++++

எம் ஜி ஆர் பிக்சர்ஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கின்ற தொழிலாளர்களுக்கும் அவர்கள் வீட்டு விசேஷங்களுக்கு எம்ஜிஆர் தன் பணத்தை கொடுத்து உதவி செய்தார்

எம்ஜிஆர் நாடக மன்றத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களின் குடும்ப கஷ்டத்திற்கும் அவர்கள் வீட்டு விசேஷங்களுக்கும் எம்ஜிஆர் பண உதவி செய்தார்

சென்னையில் உள்ள அனைத்து சினிமா ஸ்டூடியோக்களில் எம்ஜிஆர் நடிப்பார்

அந்த ஸ்டுடியோக்களில் எடுபிடி வேலை பார்க்கின்றார் தொழிலாளி அனைவருக்கும் அவர்கள் வீட்டு விசேஷங்களுக்கு எம்ஜிஆர் பண உதவி செய்வார்

எம்ஜிஆர் படத்திற்கு கதை வசனம் எழுதுகிற அவர்களுக்கும்

எம்ஜிஆர் படத்திற்கு பாடல்
எழுதுகிற வர்களுக்கும்

எம்ஜிஆர் படத்தில் பணிபுரிந்த உதவி கேமராமேன் உதவி டைரக்டர்கள்

எம்ஜிஆர் படங்களுக்கு செட்டிங்ஸ் அமைக்கிற தொழிலாளிகளுக்கும்

அவர்கள் வீட்டில் நடக்கின்ற விசேஷங்களுக்கு எம்ஜிஆர் பண உதவி செய்துள்ளார்

++++++++++++++++++++++++++++++++++

அடுத்து எம்ஜிஆர் சினிமாவில் கை நிறைய சம்பாதித்த அக்காலத்தில் இருந்து எம்ஜிஆர் மரணமடையும் வரை

தமிழ் நாட்டில் நடக்கின்ற தீவிபத்து வெள்ளம்

பஸ் விபத்து ரயில் விபத்து
இதைப்போல் தமிழ்நாட்டு மக்களுக்கு சோதனை வருகின்ற காலகட்டத்தில் எல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்கு தன் பணத்தை அள்ளி அள்ளி கொடுத்துள்ளார்

++++++++++++++++++++++++++++++++++

அடுத்து அண்ணா திமுகவை ஆரம்பித்தார்

அண்ணா திமுகவை ஆரம்பித்து அந்த கட்சி ஆட்சிக்கு வரும்வரை

அண்ணா திமுகவில் உள்ள கட்சித் தலைவர்களுக்கும் செயலாளர்களுக்கும் தொண்டர்களுக்கும் எம்ஜிஆர் அவர்கள் வீட்டு விசேஷங்களுக்கு பணத்தை அள்ளி அள்ளி கொடுத்துள்ளார்

++++++++++++++++++++++++++++++++++

இதைத்தவிர இந்தியாவிற்கும் சீனாவிற்கும் ஏற்பட்ட போரின்போது நிதி கொடுத்துள்ளார்

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் போர் நடந்தபோது நிதி கொடுத்துள்ளார்

இந்தியாவில் பல மாநிலங்களில் நடந்த வறட்சி நிவாரண நிதி வெள்ள நிவாரண நிதி

இன்னும் பல நிகழ்ச்சிகளுக்கு எம்ஜிஆர் பணத்தை அள்ளி அள்ளி கொடுத்துள்ளார்

++++++++++++++++++++++++++++++++++

,அடுத்து எம்ஜிஆர் அவர்கள் சினிமா உலகில் புகழ் பெறத் தொடங்கிய காலத்திலிருந்து

அவர் மரணம் அடையும் வரை

தமிழ்நாட்டில்இருந்து வெளி வருகின்ற அனைத்து தினசரி பத்திரிக்கைகள் வாரப் பத்திரிக்கைகள் மாதப் பத்திரிகைகள் பணிபுரிகின்ற தொழிலாளி கள்வீட்டில் நடைபெறுகிற அனைத்து விசேஷங்களுக்கும் எம்ஜிஆர் பண உதவி செய்துள்ளார்

தமிழ்நாட்டில் இருந்து வெளி வருகிறான் அனைத்து சினிமா பத்திரிக்கையில்

பணிபுரிகின்ற அனைத்து தொழிலாளர்களுக்கும் அவர்கள் வீட்டு விசேஷங்களுக்கு

அவர்கள் பத்திரிக்கை கொடுக்கும் போது அவர்களுக்கும் பண உதவி செய்துள்ளார்

++++++++++++++++++++++++++++++++++

எம்ஜிஆர் என்ற ஒரு மனிதன் சம்பாதித்த பணத்தை

இத்தனை வகையில்

நல்ல காரியங்களுக்காக எம்ஜிஆர் தர்மம் செய்து உள்ளார்

எம்ஜிஆர் செய்த தர்மம்தான்

எம் ஜி ஆருக்கு வெற்றி மேல் வெற்றி குவிந்து கொண்டே இருந்தது

எம்ஜிஆரின் எதிரிகள் தோல்விமேல்தோல்வி அடைவார்கள்

எம்ஜிஆர் அவர்களுக்காக எம்ஜிஆரின் குடும்ப. ஜோதிடர் வித்வான் லட்சுமணன் அவர்கள்

நான் ஆணையிட்டால் என்ற சினிமா படத்தில் ஒரு பாடல் எழுதினார்

+++++++++++++++++++++++++++++++++

ஆலமரம் போல நீ வாழ

அங்கு ஆயிரம் கிளிகள் இளைப்பாற

காலமகள் உன்னைத் தாலாட்ட

அந்தக் கருணையை நாங்கள் பாராட்ட

++++++++++++++++++++++++++++++++++

இந்தப் பாடல் எவ்வளவு பொருத்தமான பாடல்

இப்படி எல்லாம் எம்ஜிஆர் தர்மம் செய்த காரணத்தினால் தான்

ஜெயலலிதா முதல் எடப்பாடி வரை முதல்வராக வர முடிந்தது

இப்படி எல்லாம் எம்ஜிஆர் தர்மம் செய்த காரணத்தினால் தான் இந்த நிமிடம் வரை தமிழ்நாட்டில் எம்ஜிஆர் கட்சியின் ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது

அண்ணா திமுகவிற்கு சினிமாமார்க்கெட் இழந்த கழுதைகள் வந்து மாலை மரியாதை பெற்றுக்கொள்கிறார்கள்

பிறகு எம்ஜிஆருக்கு துரோகம் செய்கிறார்கள்

ஆனால் அந்தக் கழுதைகள் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த பொழுது

இந்த மாதிரி எம்ஜிஆர் தர்மம் செய்ததை போல் அந்த கழுதைகள் யாருக்காவது தர்மம் செய்து இருக்கிறார்களா

எந்த நடிகராவது எந்த நடிகையாவது எம்ஜிஆரை போல் சினிமா உலகில் சம்பாதித்த பணத்தை ஏழை மக்களுக்கு கொடுத்து உதவி இருந்தால் உடனடியாக அவருடைய ரசிகர்கள் அதைஒரு பதிவாக வெளியிடவும்

எம்ஜிஆருக்கு துரோகம் செய்த

தெருப்பொறுக்கி கழுதை கள்

ஊழல் வழக்கில் விசாரணை கமிஷனில் சிக்கி சீரழிந்து

நல்ல சாவு சாக மாட்டார்கள் ....... Thanks PM.,

suharaam63783
30th April 2020, 06:40 PM
[MGR முதல்வரான பின் பாராளுமன்ற தேர்தல் க.இராசாராம் , எனது தந்தை OKR
மற்றும் நிர்வாகிகள் கள்ளகுறிச்சி சென்று
வரவேற்று சேலம் அழைத்து வருகின்றனர்.
ஏற்கனவேபெத்தநாயக்கன் பாளைய-கழக பிரமுகர் MGR இங்கு பேசவேண்டும் என அடம்பிடித்தார்.

கழக நிர்வாகிகள் பொது கூட்டம் அதிகம் உள்ளது நேரமில்லை என விளக்கி சமாதனபடுத்தினர். MGR கார் பெத்தநாயக்கன் பாளையம் வரும்
போது கழக பிரமுகர் திடிரென ரோட்டில் பாய்ந்து கையசைக்க ஒரு நொடி பொழுதில்
எல்லா கார்களும் பிரேக் பிடித்து நிறுத்தினர்.
இதை யாருமே எதிர்பார்கவில்லை.

அதிகாரிகள் ஓடி சென்று முதல்வரிடம் சென்று நடந்ததை கூறினர். MGR காரைவிட்டு வெளியே வந்து மக்களை நோக்கி கையசைத்துவிட்டு காரில் அமர்ந்தவர், குறுக்கே வந்த பிரமுகரை ஜுப்பில் ஏற்றி வாருங்கள் உத்தரவிட்டார்.
சிறிது தூரம் வந்தவுடன் எல்லா காரையும்
நிறுத்த சொல்லிவிட்டு குறுக்கே வந்தவரை அழைத்துவர சொன்னார்.

இதுவரை அடக்கிவைத்த கடுங் கோபத்துடன் திடிரென குறுக்கே வந்தாயே பிரேக் அடிக்கவில்லை எனில் உன் உயிருக்கு அல்லவா ஆபத்தாயிருக்கும் என கோபத்தோடு நாளு அறைவிட்டு போ என
என்று கூறிவிட்டு சட்டென காரில் அமந்து புறப்பட்டார்.சேலம் வந்தவுடன் வந்தவர் நிர்வாகிகளை அழைத்து தான் அடித்தவரை பற்றி விசாரித்தார்.

அவர்கள் தலைவரே அவன் உங்கள் தீவிர ரசிகன் அ.தி.மு.க ஆரம்பித்தவுடன் அப்
பகுதி பொது மக்களையும் நம் கட்சியில்
சேர்த்துள்ளான்.ஏதோ ஆர்வகோளாரால் ஏதோ செய்துவிட்டான் என்றனர்.
MGR - சரி நான் பேசி முடிப்பதற்குள்
விருந்தினர் மாளிகைக்கு அழைத்துவாருங்கள் என்றார்.

MGR அவர்கள் அறைக்கு வந்தவுடன்
அடிபட்டவர் அழைத்துவரப்பட்டார்.என்ன ஆகபோகிறதோ என அவரும், மற்றவர்களும்
பயந்து நிற்க,்MGR ரோ அவரை கண்டவுடன் இழுத்து அனைத்து வாஞ்சையுடன் கன்னத்தை தடவி கொடுத்து வலிக்குதாப்பா என கேட்டதுதான் தாமதம்.

அவர் தேம்பி , தேம்பி அழுதபடி தலைவரின்
கையைபிடித்து அவர்கன்னத்திலேயே அறைந்து கொண்டு தவறு செய்த என்னை அடி தலைவா உனக்கு தான் உரிமை உள்ளது என்றார்.

MGR கண் கலங்கி உனக்கு ஏதாவது ஆகியிருந்தால் எனக்கு எவ்வளவு மனக்கஷ்டம் என கூறி அவரை அணைத்து
ஆறுதல் சொல்லி ஊருக்கு அனுப்பிவைத்தார். ஒரு தொண்டனின் உயிருக்கு ஆபத்து எனும் போது அடித்த கரமும் அவன் உணர்வுக்கு ஆறுதலாக நினைத்து அனைத்த கரங்களும்
என் புரட்சி வாத்தியார் கரங்களே!!!]......... Thanks...

suharaam63783
30th April 2020, 06:46 PM
"கதர் பக்தியும் காந்தி தரிசனமும்..!"
நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் - அத்தியாயம் 4

பாலக்காட்டில் நடந்த 'தசாவதாரம்' நாடகம் பி.யு சின்னப்பாவின் புகழை அதிகப்படுத்தியது. சென்ற இடங்களில் எல்லாம் பாராட்டு மழை. ஆனால் அது நிலைக்கவில்லை. ஆம், நாடக குழு தங்கியிருந்த வீட்டிற்கு பறந்துவந்தது ஒரு தந்தி. சின்னப்பாவின் தாய் மறைந்துவிட்டதை சொன்னது அது.

அழுதபடி ஊருக்கு புறப்பட்டார் சின்னப்பா. வெளி மாநிலம். நாடகத்திற்கு நல்ல வசூல். தொடர்ந்து இன்னும் சில தினங்கள் நடத்தினால் நல்ல வசூலாகலாம். கம்பெனி நிர்வாகிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. “கே.ஆர் ராமசாமியை கூப்பிடுவோமா அவசரத்துக்கு” என்றார் வாத்தியார். “அவனை தேடி கண்டுபிடிச்சி ஒத்திகை நடத்தி...விடிஞ்சிடும் போ...”கவலையுடன் சொன்னார் முதலாளி. பலரும் பலரை பரதன் பாத்திரற்கு பரிந்துரைத்தார்கள்.

முதலாளிக்கு திடீரென ஒரு யோசனை உதித்தது. “ஆமாம் அந்த ராம்சந்தர் எங்க இருக்கான் கூப்பிடு அவனை”. ஆரம்பத்திலிருந்தே சின்னப்பாவுடனேயே வருவதால் எப்படியும் பரதன் வேடத்திற்கான வசனங்கள் அத்துபடியாகி இருக்கும். எனவே ராம்சந்தர்தான் சரியான மற்றும் விரைவான தேர்வு என அவர் தீர்க்கமாக முடிவெடுத்தார்.


உடனடியாக நாடக குழுவினர் தங்கியிருந்த வீட்டுக்கு ஆள் அனுப்பப்பட்டது. ஆனால் அங்கு ராம்சந்தர் இல்லை. விசாரித்ததில், பாலக்காட்டில் உள்ள தனது உறவினர் ஒருவரை பார்க்க சென்றுவிட்டதாக சொன்னார்கள். முதலாளியிடம் சென்று தகவல் சொன்னபோது, “என்ன செலவானாலும் சரி, ராமசாமியை உடனே கிளம்பி பாலக்காடு வரச்சொல்லு” என்றார் கொதிப்பான குரலில். அதே நேரம் அந்த இடத்திற்கு வியர்க்க விறுவிறுக்க ஓடி வந்துகொண்டிருந்தார் ராம்சந்தர்.

எல்லோர் முகத்திலும் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் உண்டானது. முதலாளி முகத்தில் கொள்ளை சந்தோஷம். “டேய்... போய் பரதன் பாடத்தை படி...இன்னிலேர்ந்து நீதான் பரதன்”- அசரீரி போல முதலாளி சொன்னதைக் கேட்டு தன்னையே கிள்ளிப்பார்த்துக்ககொண்டார் ராம்சந்தர்.

பாலக்காட்டின் இன்னொரு மூலையில் இருந்து முதலாளியைத் தேடி ராம்சந்தர் அத்தனை சீக்கிரம் வந்தது எப்படி..?

வீட்டில் ராம்சந்தரை தேடி வந்ததை பார்த்த அவரது சக நடிகனான நண்பன், விஷயத்தை கேட்டு தெரிந்துகொண்டு தம் நண்பனுக்கு வந்த வாய்ப்பு பறிபோய்விடக்கூடாது என வாடகை சைக்கிள் பிடித்து அழைத்துவந்திருக்கிறார். நண்பனால் ராம்சந்தரின் கனவு நனவானது அன்று.

“பாடம் படி, போ" என காளி. என்.ரத்தினம் சொன்னபோது, “தேவையில்லை அண்ணே... என் பாடத்தோட அவர் பாடத்தையும் நான் படிச்சி வெச்சிருக்கேன். ஒருதடவை ஒத்திகை பார்த்தால் போதும்”- நெகிழ்ந்தார் ரத்தினம். இதுதான் எம்.ஜி.ஆர்!

'வாய்ப்புகள் வரும்... போகும். அல்லது எப்போதாவது வரலாம். அதற்காக தகுதியை நாம் வளர்த்துக்கொள்ளவேண்டுமே தவிர வாய்ப்பு வரவில்லை என சுணங்கிவிடக்கூடாது. சுணங்கினால் வாய்ப்பு வரும்போது அதை பயன்படுத்திக்கொள்ள முடியாமல் போய்விடும். திரைபடத்துறையிலும், அரசியலிலும் எம்.ஜி.ஆர். பெற்ற மகத்தான (முதலிடம்) வெற்றிகளுக்கு எல்லாம் இதுதான் காரணம். பாலக்காட்டில் பரதன் என்ற கதாபாத்திரத்தில் முதன்முறையாக கதாநாயகன் வேடம் ஏற்றார் எம்.ஜி.ஆர்.

பி.யு.சின்னப்பா நடித்த பாத்திரத்தில் ராம்சந்தர். மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற ஐயம் முதல்நாளிலேயே தீர்ந்தது. சின்னப்பாவுக்கு வந்த அதே கைதட்டல். பத்துநாட்கள் மட்டுமே நடத்த திட்டமிட்டிருந்த நாடகம் அடுத்த பத்து பத்து நாட்கள் கூடுதலாக நடந்தது. கதாநாயகனாக வெற்றிபெற்றார் எம்.ஜி.ஆர்.

ஆயினும் சின்னப்பா திரும்பி வந்ததால் கடைசி 2 நாட்கள் அவரே மீண்டும் பரதனாக நடித்தார். ஆனாலும் முதலாளி கடைசி நாளன்று எம்.ஜி.ஆரின் அருகே வந்து அவரது காதுகளில் மெதுவாக சொன்னார் இப்படி, “ டேய் ராம்சந்தர், வாய்ப்பு விட்டுப்போச்சுன்னு கவலைப்படாதேடா...சின்னப்பாவின் எல்லா பாடத்தையும் நேரம் கிடைக்கும்போது படிச்சி வெச்சிக்கடா...பின்னாடி பயன்படும்”- முதலாளி வாக்கு பலித்தது ஒருநாள்.

தற்காலிகமாக வந்த கதாநாயகன் வாய்ப்பு நிரந்தரமாகும் காலம் கைக்கூடிவந்தது சில மாதங்கள் கழித்து. ஆம், 'தசாவதாரம்' முடிந்து கம்பெனியின் அடுத்தடுத்த நாடகங்கள் பல அரங்கேற்றப்பட்டன. அதில் ஒன்று 'சந்திரகாந்தா'. அதில் சுண்டூர் இளவரசன் வேடத்தில் சின்னப்பா நடித்துக்கொண்டிருந்தார். பாய்ஸ் கம்பெனிக்கும் தனிப்பட்ட முறையில் சின்னப்பாவுக்கும் புகழ் தந்த நாடகங்களில் ஒன்று இது.

ஆந்திர மாநிலம் சித்துாரில் இந்த நாடகம் நடந்துகொண்டிருந்தபோது சின்னப்பாவுக்கு மகரக்கட்டு பிரச்னை வந்தது. இதனால் நாடகத்தில் அவரால் பாடி நடிக்கமுடியாத நிலை. இதனால் நாடகம் கொஞ்சநாள் நிறுத்தப்பட்டது. அதற்குள் சின்னப்பாவால் குரலை தேற்ற முடியவில்லை. கொஞ்சநாளில் மனக்கசப்பும் உருவாகவே சின்னப்பா கம்பெனியை விட்டு விலகுவதென முடிவெடுத்தார். அவர் விலகியதையடுத்து முக்கிய கதாநாயகன் பாத்திரங்கள் எம்.ஜி.ஆருக்கும், கம்பெனியின் மற்றொரு நடிகரான கே.எம்.கோவிந்தன் என்பவருக்கும் பிரித்தளிக்கப்பட்டன.

இதில் எம்.ஜி.ஆருக்கு அளிக்கப்பட்டவை முக்கிய கதாபாத்திரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மனோகராவில் மனோகரன், சந்திரகாந்தாவில் சுண்டூர் இளவரசன், பதிபக்தியில் வீரமுத்து, இப்படி! பாத்திரங்கள் எம்.ஜி.ஆருக்கு நிரந்தரமாகின; நிரந்தரம் என்றால் பெயரளவில் இல்லை. ராஜபார்ட் நடிகர்களுக்கு கம்பெனி தரும் சிறப்பு சலுகைகளும் சிறப்பு மரியாதைகளும் எம்.ஜி.ஆருக்கு இப்போது கிடைத்தன.

ஆனாலும் கதாநாயகனாத்தான் நடிப்பேன் என எம்.ஜி.ஆர் தன்னை கட்டுப்படுத்திக்கொள்ளவில்லை. ராஜபார்ட், ஸ்திரீ பார்ட் என எதிலும் தன்னை நிரூபித்தார். மகழ்ச்சியாக சென்றன நாட்கள்.

இந்த சமயத்தில் எம்.ஜி.ஆருக்கு 'கதர் பக்தி' என்ற நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாடகத்தின் முடிவில் நிஜமாகவே காந்தியத்தின் மீதும், காந்தியின் மீதும் காதல் உண்டானது. இதனால் கதர்த்துணிகளையே உடுத்த ஆரம்பித்தார். காரைக்குடியில் அவரது நாடகம் ஒன்று நடத்தப்பட்டபோது போராட்டம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக காந்தி அங்குவந்திருந்தார்.

விஷயம் அறிந்த எம்.ஜி.ஆர், தன் ஆதர்ஷ நாயகனை நேரில் பார்ப்பதென முடிவெடுத்து காந்தி கலந்துகொண்ட கூட்டத்திற்கு ஆர்வத்துடன் சென்றார். காந்தியை நேரில் சந்தித்தார். புகழ்பெற்ற நடிகரான பின் ஒருமுறை காந்தியை சந்தித்த தன் அனுபவத்தை இவ்வாறு விவரித்திருந்தார்.

"நான் அப்போது இளைஞன்தான். காங்கிரஸ் கட்சியில் நான் இருந்தேன். கதராடையே அணிந்து வந்தேன். காரைக்குடிக்கு காந்தியடிகள் வந்து ஒரு மேடை மீது நின்று, மக்களுக்கு தரிசனம் தந்தார். அமைதியும், எளிமையும் உருவான அவரைப் பார்த்ததும் ஏதோ செய்வத்தன்மை பொருந்திய ஒருவரைப் பார்ப்பது போன்ற பக்தி உணர்வுதான் ஏற்பட்டது.

அந்தப் புன்சிரிப்பும், அவரது நடையும், குனிந்த தலையும் என் உள்ளத்தில் இன்னும் சித்திரமாகப் பதிந்திருக்கின்றது. ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த அக்கூட்டத்தில் ஒரு மூலையில் நின்றபடி பார்த்தேன் இந்த பார் முழுதும் போற்றும் மகானை. அப்போது மக்களுக்கு என்னை அதிகம் தெரியாது."

காலத்தின் விளையாட்டு, பின்னாளில் காந்தி வளர்த்தெடுத்த, அவரது கொள்கைகளை முன்னெடுத்த காங்கிரஸ் கட்சியையே அவர் எதிர்க்க நேர்ந்ததுதான்.

மீண்டும் நாடக கம்பெனிக்கு வருவோம்... சினிமா படங்கள் தோன்றி மவுனப்படங்களாக வெளிவந்து மக்களுக்கு ஆச்சர்யத்தை தந்துகொண்டிருந்த காலம் அது. தமிழகத்தில் மவுனப்பட காலம் முடிந்து பேசும்படங்கள் தயாரிக்கும் முயற்சிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்துகொண்டிருந்தன.

இந்த நேரத்தில்தான் கம்பெனியின் முக்கிய நடிகர்கள் பலரும், குறிப்பாக வாத்தியார் எம்.கந்தசாமி முதலியார், எம்.கே.ராதா போன்றோர் சினிமா ஆசையில் கம்பெனியில் இருந்து விலகிச் சென்றிருந்தனர்.

கம்பெனியில் ராஜபார்ட் நடிகர், சகலவிதமான மரியாதைகள், கணிசமான சம்பளம் என விரும்பியதெல்லாம் கிடைத்தாலும் சகோதரர்கள் தனிமையை உணர ஆரம்பித்தனர் கொஞ்சநாளில்...

தொடரும் ...

Posted : M.G.Nagarajan
30 April 2020 3:42 PM
Thanks for :
Published : Naveenan

Vikatan News
யாழ் இணையம்........ Thanks...

suharaam63783
30th April 2020, 06:52 PM
#தலைவரின்_இதயக்கனி...
[ 22 - 08 - 1975 ]

அனைவருக்கும் உழைப்பாளர் தின நல் வாழ்த்துக்கள்...

காலத்தால் அழிக்க முடியாத பாடல்...

இதயதெய்வம் புரட்சித்தலைவரின் புகழுக்கு பெருமை சேர்ப்பதில் என்றென்றும் மிஞ்சி நிற்கும் பாடல்...

சென்னை சத்யம் தியேட்டர் முதல்...
நாகர்கோவில் பயோனியர் முத்து தியேட்டர் வரை திரையிட்ட திரையரங்கம் முழுவதும் திருவிழா கோலம்தான்...

தலைவரின் அறிமுகக் காட்சி பேரறிஞர் அண்ணாவின் இதயத்திலிருந்து தலைவர் தோன்றுவது போல் இருக்கும்.

இதற்காகவே தலைவர் பக்தர்கள் வெள்ளித்திரையில் தலைவர் தோன்றும்போது ரோஜா மலர்களையும் கற்பூரம் மெழுகுவர்த்தி ஏந்தியும் வரவேற்பார்கள்.

உணர்ச்சிமிக்க தலைவர் தொண்டர்களின் ஆரவாரத்தை தியேட்டர் அதிபர்கள் கட்டுப்படுத்த படாத பாடு பட்டு விடுவார்கள்.

இப்பாடலில் வரும் ஆரம்ப தொகையறா சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் கணீர் குரலாகும்...

இதன் ஒளிப்பதிவு தலைக்காவிரி தொடங்கி பிலிகுண்டு, ஒக்கேனக்கல், மேட்டூர், குளித்தலை, முக்கொம்பு, கொள்ளிடம், திருச்சி கல்லணை, தஞ்சாவூர் என்று காவிரி ஆறு கடைசியாக கலக்கும் இடம் வரை சென்றுள்ளது...

தலைவரின் சத்யா தோட்டத் தொழிலாளர்களுடன் எடுக்கப்பட்டுள்ள இந்த பாடல் வரிகள் ஒவ்வொன்றும் தலைவரின் புகழுக்கு மேலும் மேலும் மகுடம் சேர்ப்பது போல் ஜொலிக்கிறது.

எங்கள் நாகர்கோவிலில் பயோனியர் முத்து திரையரங்கில் இதயக்கனி ரிலீசான அன்று அனைவருக்கும் ஆப்பிள் பழம் மாவட்ட தலைமை மன்றத்தால் வழங்கப்பட்டது பசுமையான நினைவுகள்...

ஒரு சுவாரஸ்யமான தகவல்...

படம் வெளியான மாதம் ஆவணி மாதம் என்பதால் நாகர்கோவில் நாகராஜா கோயிலில் ஆவணி ஞாயிறு பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும்...

ஞாயிற்றுக்கிழமை மட்டுமே நாகர்கோவில் நகரத்திற்கு வரும் குடும்பத்தினர் மதியம், மாலைக் காட்சிகளில் மூன்று வாரமும் டிக்கெட் கிடைக்காமல் திரும்பி சென்றவர்கள் கடைசியில் இரவு 10.30 மணிக்காட்சி பார்த்து பஸ் கிடைக்காமல் விடிந்த பிறகு ஊர் திரும்பி வந்த மறக்க முடியாத நிகழ்வுகள் ஏராளம்...

நாகர்கோவில் நாகராஜா கோயில் அருகேதான் பயோனியர் முத்து திரையரங்கம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது....

எத்தனை ஆயிரம் முறை இந்தப் பாடலைக் கேட்டாலும் பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும்...
நீங்க நல்லாயிருக்கணும் நாடு முன்னேற பாடலை மீண்டும் ஒரு முறை பார்ப்போம்.

தலைவர் நம் அருகில் இருப்பது போன்ற ஓர் உணர்வு ஏற்பட்டு விடுகிறது...

45 ஆண்டுகள் கடந்தாலும் இன்று ரிலீசானது போன்ற தோற்றம்...

💐 வளர்க புரட்சித்தலைவர் புகழ் 💐

#இதயதெய்வம்........ Thanks...

suharaam63783
30th April 2020, 07:05 PM
காசே கடவுள்!!
---------------------------
எம்.ஜி.ஆர் பற்றிய இந்த நிகழ்வை எவ்வளவு பேர்கள் அறிந்திருப்பீர்கள் என்பது நமக்குத் தெரியாது!
நம் கடன் பதிவு செய்து கிடப்பதே?
டைப்பிஸ்ட் கோபு!!
அந்த கால சினிமாக்களில் நகைச்சுவைக் காட்சிகளில் வலம் வந்தவர்!
அதே கண்கள்,,காசே தான் கடவுளடா போன்ற படங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்!!
சிவாஜி,,ஜெய்சங்கர்,,முத்துராமன்--இப்படி அந்த கால நாயகர்களுடன் நூற்றுக்கும் மேலான படங்களில் நடித்த இவர்,,எனக்குத் தெரிந்து எம்.ஜி.ஆருடன் நடித்ததாகத் தெரியவில்லை!!
1978!!
வசந்த நாட்களாக தமிழக மக்களுக்கு புலர்ந்தது-
அசந்த நாட்களாக ஆகிறது டைப்பிஸ்ட் கோபுவுக்கு??
அவரது அன்பு மகனுக்கு ஹார்ட் ஆபரேஷன்?
இவர் ஒன்றும் பெரிய ஹீரோவாக ஜொலிக்கவில்லையே??
ஆபரேஷனுக்கு 15 ஆயிரம் பணம் கட்ட வேண்டும்?
வழக்கம் போல் தாம் சார்ந்த நடிகர்கள் அத்தனை பேர் வீட்டுக்கும் சென்று,,காலிங்-பெல்லை அழுத்தியும்-சாரி கோபு--
நீ ஒண்ணும் கவலைப்படாதே கோபு,, கடவுள் உன்னைக் கை விட மாட்டார்--
என்ன பண்ணறது கோபு? விதி வலியது??
இதில் சிவாஜி மட்டும்--
நீ எப்படியாவது பையன் ஆப்பரேஷனை முடிச்சுடு. நான் உனக்கு ரெண்டு படங்களுக்கு சிபாரிசு பண்ணறேன்??
ஆக தத்துவங்களும் ஆறுதல்களும் உபதேசங்களும் வந்ததே தவிர --
உதவி??--ம்ஹூம்!!
எவரிடத்திலும் கிடைக்காது இடிந்து போன கோபுவின் காதில் தேனை ஊற்றுகிறார் டாக்டர் ஹண்டே!
தோட்டத்துக்குப் போய் சின்னவரைப் பாரு!!
குத்தும் குற்ற உணர்ச்சியுடன் தோட்டத்துக்குப் போன கோபு,,காத்திருந்து--காத்திருந்து--
வள்ளல் முகம் காண்கிறார். விஷயத்தை சொல்கிறார்!
டைப்பிஸ்ட் கோபுவுக்கு எம்.ஜி.ஆர் தந்ததோ-
ஷார்ட் ஹாண்ட் தனமான பதில்??
நான் பாத்துக்கறேன்??
வேகமான,,அதே சமயம்-சுருக்கமான பதில்?
மறு நாளைக்கும் மறு நாள் ஆபரேஷன்?
அடுத்த நாளும் ஆவலோடு எதிர்பார்க்கும் கோபுவுக்கு ஏமாற்றமே பதில்?
மறு நாள் காலை ஆபரேஷன்?--
மருத்துவர்களால் மகனின் இதயத்துக்கு என்றால்-இன்றே ஆபரேஷன்?
கொந்தளிக்கும் கோபுவின் இதயத்துக்குக் காலம் செய்கிறது?
எல்லா நம்பிக்கையும் அற்று நைந்து போய் மருத்துவமனை சென்ற கோபுவுக்கு மாயாஜாலம் காத்திருக்கிறது?
ஆஸ்பத்திரி டீன்,,அதாவது தலைமை மருத்துவர் கோபுவை அழைக்கிறார்--
மகனுக்குப் பால் ஊற்ற வேண்டியது தானா என்று இடிந்து போன கோபுவின்--
இதயத்துக்குப் பால் வார்க்கிறார் மருத்துவர்?
ஆபரேஷனுக்கான மொத்த பணத்தையும் எம்.ஜி.ஆர் கட்டிட்டார்??
மறு நாள் அறுவை சிகிச்சை பதினோரு மணிக்கு!
ஒன்பது மணிக்கு டாக்டர் ஹண்டேயின் விஜயம்!
தேவையான அறிவுறுத்தல்களை டீனிடம் சொல்லி விட்டுத் திரும்பும் ஹண்டே,,
கோபுவின் கையில் ஒரு பொட்டலத்தைக் கொடுத்துவிட்டு சொல்கிறார்!
சின்னவர் உன்னிடம் கொடுக்கச் சொன்னார்!
உள்ளேப் பார்த்தால்--பதினைந்தாயிரம் பணம்?
பணம் கட்டிட்டாங்க சார் எம்.ஜி.ஆர் ஆஃபீஸிலிருந்து-சொன்ன கோபுவிற்கு பதில் சொல்கிறார் ஹண்டே--இது இதர மருத்துவ செலவுகளுக்கு???
சரி!!
எம்.ஜி.ஆர் உதவியதைக் கொஞ்சம் பார்ப்போமா?
முதல்வருக்கிருந்த பலதரப்பட்ட அலுவல்களில் பிஸியாக இருந்த எம்.ஜி.ஆர்,,வெளியே கிளம்ப ஆயத்தமாகி,,மனைவி ஜானகி அம்மையாரிடம் விடை பெறும்போது --
ஜானகி அம்மா டெக்கில் பார்த்துக் கொண்டிருந்த திரைப்படம்?
காசேதான் கடவுளடா??
உடனே எம்.ஜி.ஆருக்கு கோபு தான் நினைவுக்கு வருகிறார்--
மின் அதிர்ச்சியை மேனிக்குள் படர விட்ட வண்ணம் ஜானகியிடம் சொல்கிறார்--
ஜானு,,நாளைக்கு கோபுவோட மகனுக்கு ஆபரேஷன்!
தாம் கலந்து கொள்ள இருந்த அரசு விழாவையும் மறந்துவிட்டு அரை மணியில் அவர் செய்திருக்கிறார் அத்தனை ஏற்பாடுகளையும்!!
அழைப்பவர் குரலுக்கு வருவேன் என்றான்
கீதையிலே கண்ணன்!!
கீதையில் கண்ணன் சொன்னதைத் தன்
பாதை எங்கும் பரப்பியவன் ராமச்சந்திரன் என்பதில் என்ன ஐயம் இருக்க முடியும். இல்லையா அருமைகளே???...... Thanks..."அன்பே வா" படத்தில் கோபு ஒரு காட்சியில் வருவார்...

suharaam63783
30th April 2020, 07:07 PM
[எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த சமயம். பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழா. முதல்வர் என்ற முறையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக, சென்னை மாம்பலத்தில், இப்போது நினைவு இல்லமாக உள்ள தனது அலுவலகத்தில் இருந்து காரில் புறப்பட்டார். அண்ணா மேம்பாலம் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, திடீரென டிரைவர் கதிரேசனை காரை நிறுத்தும்படி எம்.ஜி.ஆர். பதற்றத்துடன் கூறினார். அவரும் உடனடியாக காரை நிறுத்தி விட்டார். முதல்வருடன் வந்த வாகனங்களும் நின்றுவிட்டன.
காரை விட்டு இறங்கிய எம்.ஜி.ஆர். ஓட்டமும் நடையுமாக சென்றார். என்னவென்று புரியாமல் அதிகாரிகளும் உதவியாளர்களும் அவரை வேகமாகப் பின்தொடர்ந்தனர். சாலையில் காரை நிறுத்தி எம்.ஜி.ஆர். இறங்கிச் செல்வதைப் பார்த்ததும் ஆங்காங்கே வாகனங்களில் சென்றவர்களும் வாகனத்தை நிறுத்திவிட்டனர். பொதுமக்களும் கூடியதால் அந்த இடமே பரபரப்பானது. அடுத்த சில விநாடிகளில் எம்.ஜி.ஆர். எதற்காக அப்படி வேகமாக சென்றார் என்பது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது.
சாலையோரத்துக்கு எம்.ஜி.ஆர். வேகமாக சென்றார். அங்கு காக்காய் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு கை,கால்களை உதறியபடி வாயில் நுரைதள்ள ஒருவர் போராடிக் கொண்டிருந்தார். அந்த நபரை மடியில் கிடத்திக் கொண்ட எம்.ஜி.ஆர்., அவரது கையை நீவிவிட்டு ஆசுவாசப்படுத்தினார். சற்று துடிப்பு அடங்கிய நிலையில், தனது உதவியாளர்களை அழைத்தார். அந்த நபரை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு கூறிவிட்டு பின்னர், காரில் ஏறி புறப்பட்டார். சென்னை அண்ணா சாலையில் பரபரப்பு மிகுந்த காலை நேரத்தில் ஏராளமானோர் செல்கின்றனர். அவர்கள் யாருமே வலிப்பு நோயால் துடிக்கும் நபரை கண்டு கொள்ளவில்லை. ஆனால், ஒரு மனிதன் துடிப்பதை பொறுக்காமல் முதல்வரே காரில் இருந்து இறங்கி வந்து அவரை ஆசுவாசப்படுத்தியதுடன் அவருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த மனிதநேயத்தை நேரில் பார்த்த ஆயிரக் கணக்கானோர் வியந்தனர்.]......... Thanks...

ravichandrran
30th April 2020, 08:21 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் , 7மணிநேர சாதனை உண்ணாவிரதம்...!!!
**********************************
(ஜூனியர் விகடன்: 16.2.1983)
பிப்ரவரி 9-ம் தேதி. காலை மணி 9-50. அண்ணா சமாதியில் மலர் வளையம் வைத்து வணங்கி, இரண்டு நிமிடம் மௌனமாக இருந்து, பிறகு சமாதியை வலம் வந்து நேராகக் கம்பன் சிலை அருகே போடப்பட்டிருந்த பந்தலுக்கு வந்தார் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். ஐந்து அடி உயர மேடையில் ஏறி அமர்ந்து ஏழு மணி நேர அடையாள உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார் அவர்.
''கொடுத்துச் சிவந்த கரம் 'தா என்று கேட்பது தனக்காக அல்ல; மக்கள் நலனுக்காக! மத்திய அரசே, மத்திய அமைச்சரே, அரிசி கொடு!'' என்று முழக்கங்கள் கேட்கின்றன.
அடையாள உண்ணாவிரதம் இருக்கப் போவதாக முதல் நாள் பிற்பகல் ஒரு மணி சுமாருக்குத் திடீரென்றுதான் முதலமைச்சர் அறிவித்தார். மின்னல் வேகத்தில் இரண்டு 'பக்கா பந்தலும், கம்பீர மேடையும் ரெடியாகி விட்டது! ஒரு பந்தலில் எம்.ஜி.ஆர். அமர்ந்த மேடையும், அதைச் சுற்றிக் கட்சிப் பிரமுகர்களும் இருந்தார்கள். வலது பக்கப் பந்தலில் பார்வையாளர்களாகத் திரண்ட பொதுமக்கள்.
பந்தல் ரெடியான வேகத்தைப் பற்றி நிருபர்களில் சிலர் அதிசயமாகப் பேசிக் கொண்டிருந்தபோது...
''நேற்று மேல்சபையில் முதலமைச்சர் உண்ணாவிரதத்தை அறிவித்த மறு கணமே மத்திய அரசு தரப்பில் இருந்து பதில் வந்ததே, அந்த வேகம் எப்படி?'' என்றார் ஒருவர். ''பதிலை ரெடியாக வைத்திருந்தார்கள் போலிருக்கிறது'' என்று சொன்னார் முன்னாள் சட்ட அமைச்சர் மாதவன். (பி.டி.ஐ. அதைவிட வேகமாகச் செயல்பட்டு மத்திய அரசு அறிக்கைக்கு நள்ளிரவில் எம்.ஜி.ஆரிடமிருந்து பதில் வாங்கி வெளியிட்டு விட்டது!)
அரிசி தராத மத்திய அரசுச் செயல் எப்படித் தவறானது என்பதை மாதவன் நிருபர்களிடம் எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார்...
உண்ணாவிரதத்தைத் தொடங்கிய எம்.ஜி.ஆர். தன்னுடன் கட்சியின் பொதுச் செயலாளர் மட்டும் கூடவே அமர்ந்திருக்க அனுமதித்தார். ''எம்.எல்.ஏ-க்கள், எம்.எல்.சி.-க்கள் யாரும் இங்கே இருக்கக் கூடாது... சட்டமன்றத்திற்குப் போங்கள்'' என்று அனுப்பி விட்டார்.
சங்கரய்யா என்ற முதிய தொண்டர் மேடைக்குக் கீழே முக்கிய கட்சிக்காரர்களுடன் உண்ணாவிரதம் இருக்க உட்கார்ந்திருப்பதை எம்.ஜி.ஆர். பார்த்தார். அவரை மேடைக்கு அழைத்தார். ''நீங்கள் வயிற்றுவலிக்காரர். நான் உண்ணாவிரதம் இருக்கிறேன் என்பதற்காக நீங்கள் உண்ணாவிரதம் இருந்தால் உடம்புக்கு நல்லதல்ல... வீட்டுக்குப் போங்கள்...'' என்றார். சங்கரய்யா எவ்வளவோ மறுத்தும் முதல்வர் கேட்கவில்லை. அதேபோல, அலமேலு அப்பா துரையை மேலே அழைத்து அவரையும் வீட்டுக்குப் போகும்படி சொன்னார். அவரும் கேட்க மறுத்தார். ஜேப்பியாரை அழைத்து அவரை காரில் ஏற்றி வீட்டிற்கு அனுப்புங்கள் என்று சொல்லி விட்டார்.
ஜேப்பியார் இங்கும் அங்கும் ஓடி பந்தோபஸ்துக்களையும் கவனித்தார். முக்கிய புள்ளியாக ஜொலித்தார்.
''என்ன, ஜேப்பியார் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாகிவிட்டார் போலிருக்கிறதே!''
''அதெல்லாம் சொல்ல முடியாது... சென்னையில் உண்ணாவிரதம் இருக்கிறார். மாவட்ட செயலாளர் என்பதால் ஜேப்பியார் பொறுப்பு இது... மற்றபடி யாரை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பதெல்லாம் தலைவருக்குக் கைவந்த கலை.''
-சிலர் பேசியது இது. அங்கே காதில் விழுந்த இம்மாதிரி பேச்சுக்கள் சுவையானவை.
''மாநில உணவு அமைச்சராக இருந்தாரே ஆர்.வி.சாமிநாதன், அவருக்கு 'கல்தா ஏன் கொடுத்தார்கள் தெரியுமா? எம்.ஜி.ஆருக்கு வேண்டியவர் என்பதால்தான்!''
''தமிழ்நாட்டைப் பட்டினி போட விடமாட்டேன் என்று ஆர்.வி. சாமிநாதன் அறிக்கை விட்டு டெல்லி போயிருக்கிறார். மத்திய அமைச்சர் ராவ் பிரேந்திரசிங் அவரை அழைத்துக் கன்னாபின்னாவென்று திட்டியிருக்கிறார். 'இப்படியெல்லாம் யாரைக் கேட்டு அறிக்கை விட்டீர்கள்? அரிசி உங்கள் பாக்கெட்டிலா இருக்கிறது? என்று ராவ் பிரேந்திரசிங் இகழ்ச்சியாகக் கேட்டாராம்''. (சரி. தமிழ்நாட்டைப் பட்டினி போடுவேன் என்று சொல்லியிருந்தால் மன்னித்திருப்பார்களோ!)
அதற்குள் சில மூதாட்டிகள் கியூ வரிசையில் வந்து, மேடையில் ஏறி தேங்காயில் கற்பூரம் ஏற்றி எம்.ஜி.ஆருக்குத் திருஷ்டி சுற்றினார்கள். எம்.ஜி.ஆர். படங்களில் நடித்திருக்கும் துணை நடிகை மீனாட்சி அம்மாள், எலுமிச்சம்பழத்தைச் சுற்றி, பிழிந்து வீசி திருஷ்டி சுற்றினார். ''அவருக்கு திருஷ்டி கழிக்கணும்னு ரொம்ப நாளா வெறி'' என்றார்.
ஒரு பையன் எம்.ஜி.ஆருக்கு மாலை போட வர, அந்த மாலையை அவனுக்கே திருப்பிப் போட்டார்
எம்.ஜி.ஆர். ''நீங்கதான் போட்டுக்கணும்'' என்று அந்தப் பையன் வற்புறுத்தி, மீண்டும் மாலையை அவருக்கு அணிவித்தான். இம்மாதிரி காட்சிகளின்போது பொதுமக்களிடமிருந்து கரவொலியும் 'விசில் ஒலிகளும் எழுந்தன!
மேடையில் எம்.ஜி.ஆர். பக்கத்தில் அமர்ந்திருந்த ப.உ.சண்முகம் சற்றுத் தெம்புடனும் 'களையுடனும் காணப்பட்டார். பழைய தி.மு.க. நாளேடான நம்நாடு இதழ்கள் அடங்கிய பைண்ட் வால்யூமைப் புரட்டியவாறு இருந்தார் அவர். சில இதழ்களில் வந்த செய்தியை முதலமைச்சருக்கு அடிக்கடி சுட்டிக் காட்ட, இருவரும் அந்தச் செய்தியை ரசித்தனர்.
முதல்வர் கவனம், நிருபர்களுடன் பேசிக் கொண்டிருந்த மாதவன் மீது விழுந்தது. அவரை அழைத்துத் தன் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டார்! ஏனோ நிருபர்கள் உடனே ப.உ.சண்முகம் முகத்தைப் பார்த்தனர்.
கொஞ்ச நேரத்தில் அது உண்ணாவிரத மேடை என்பது மறந்து போகும் நிலை ஏற்பட்டு விட்டது!
முதலமைச்சர் அருகில் பார்த்துக் குறைகளைச் சொல்லி மனுக்கள் தர இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்று நினைத்தவர்கள் கெட்டிக்காரர்கள்தான்! ''என் மகளுக்கு வேலை வேண்டும்'', ''ப்யூன் சம்பளம் அதிகப்படுத்த வேண்டும்'',''குடிசை கட்ட இடம் தர மறுக்கிறார்கள்'' என்பது போல, மனுக்களை எடுத்து வந்து கொடுக்க ஆரம்பித்தார்கள். சில பெரிய மனிதர்களும் மாலை போட்டுவிட்டு 'மனு கொடுத்தார்கள்! ஒரு பெண் ''வீட்டில் சமைக்க மணி அரிசி இல்லை'' என்று, விக்கி விக்கி ஆனால் கண்ணில் கண்ணீர் வராமல் அழுதாள்! அவளை மேடையில் இருந்து இறக்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது!
மதுரை மேயர் பட்டுராஜன் மேடையில் ஏறி மாலை போடுகிறார். எம்.ஜி.ஆருக்கு அணிவித்த மாலைகளும், பொன்னாடைகளும் மேடைக்குப் பின்புறத்தில் மலை போலக் குவிக்கப்பட்டிருந்தது.
''திருச்செந்தூர் தேர்தல் பிரசார துவக்க விழாவிற்கு முதலமைச்சர் இன்று வருவதாக இருந்தது. வரவேற்க ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தபோது, திடீரென்று நேற்று மாலை இந்த நியூஸ் கேள்விப்பட்டவுடன் மெட்ராஸ் புறப்பட்டு விட்டேன்'' என்று நிருபர்களிடம் சொன்னார் மதுரை மேயர்.
''அதோ பார்! ஆப்பிளை எடுத்துண்டு மேடைக்குப் போறார். சி.எம்.கிட்ட கொடுத்துடப் போறார்... நிறுத்து அவரை...''
-யாரோ உரக்கச் சொல்கிறார்கள்.
''இது ஆப்பிள், மனுவெல்லாம் கொடுக்கற இடமா, போங்கள்: என்று யாரையோ விரட்டுகிறார் ஜேப்பியார்.
பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவு ஒலிபெருக்கியில் வந்து கொண்டிருந்தது. திடீரென்று குரல் மாறுகிறது. ஜேப்பியார் லவுட் ஸ்பீக்கர்காரர்களிடம் ஓடுகிறார்... ''நிறுத்துப்பா... யார் பேச்சு இது? அண்ணா பேச்சு மட்டும் போடு'' என்கிறார். பழைய 'டேப் போலும்! நடுவில் 'தலை காட்டியது அன்பழகன் குரல்!
'எதிரே சாலையில் ''இந்திரா ஒழிக! எம்.ஜி.ஆர். வாழ்க!'' என்று குரல் கொடுத்தவாறு ஒருவர் தீக்குளிக்க முயன்றிருக்கிறார். கூட்டம் அந்தக் குரல் கேட்டு எழுந்திருக்க, எம்.ஜி.ஆர். கையமர்த்தி உட்கார வைத்தார். போலீஸார் அந்த ஆசாமியைக் கட்டிப்பிடித்து லாரியில் ஏற்றினார்கள். கெரோஸினால் உடம்பு நனைந்திருந்தது. உதட்டில் ரத்தம் வழிந்திருந்தது. நெருப்பு வைத்துக் கொண்டாரா என்று தெரியவில்லை.
உள்ளே மேடையைச் சுற்றியிருந்த கட்சிப் பிரமுகர்களுக்கு அந்த ஆசாமியை ஏற்கெனவே தெரியும் போலிருக்கிறது. ''நேத்து பந்தல் போடறச்சே இங்கிட்டுச் சுத்திக்கிட்டிருந்தான்... தலைவர் கவனத்தைக் கவர வழி பண்ணிட்டான்'' என்று அதிருப்தியுடன் பேசினார்கள்.
பிற்பகல் ஒன்றரை மணிக்கு அமைச்சர் குழந்தைவேலுவும் ஹண்டேயும் வந்தார்கள். குழந்தைவேலு எம்.ஜி.ஆர். அருகில் அமர்ந்து சட்டசபை ரகளையைப் பற்றிய தகவலை முதல் முதலாகக் கொடுத்தார். சற்றைக்கெல்லாம் இன்னும் சில அமைச்சர்கள் வந்தார்கள். ஏதோ அமைச்சரவைக் கூட்டமே அங்கே நடப்பது போல இருந்தது. கடைசியில் சபாநாயகர் ராஜாராம், ஆர்.எம்.வீ., எஸ்.டி.எஸ். ஆகியோர்தான் பாக்கி! சிறிது நேரத்தில அவர்களும் வந்தார்கள்.
ஆர்.எம்.வீ. முதலமைச்சரின் முதுகுப் பக்கத்தில் அமர்ந்துவிட்டு, சபாநாயகரும் மற்றவர்களும் கிளம்பியபோது தானும் கிளம்பிச் சென்றார்.
உண்ணாவிரத மேடையைச் சுற்றிக் கும்பல் மிக அதிகமாகவே, மப்டி போலீஸார் எல்லோரையும் விரட்டினார்கள்.
''அஞ்சு மணிக்கு ஜெயலலிதா ஜூஸ் கொடுக்க உண்ணாவிரதம் முடியுமாம்.''
-என்று ஒரு பொதுஜனம் சொல்ல, கட்சித் தொண்டர் வெறுப்படைகிறார்.
''ஏதாவது இஷ்டப்படி பேசாதீங்க. அவங்க ஊரிலேயே இல்லை'' என்று பதில் கொடுத்தார் முறைப்பாக!
உண்ணாவிரதம் முடியும் நேரம் நெருங்கியது. ''5மணி ஆகிறது'' என்றார். ப.உ.சண்முகம் எம்.ஜி.ஆர். கறுப்புக் கண்ணாடியைத் தூக்கிவிட்டுக் கொண்டு தன் எலெக்ட்ரானிக் கடிகாரத்தைப் பார்த்து, ''இன்னும் எட்டு நிமிஷம் இருக்கிறது'' என்றார்! உடனே ப.உ.ச. எதிரே தெரியும் பல்கலைக்கழக கடிகாரத்தைக் காட்டினார். அதில் நேரம் ஐந்து. ''அது ஃபாஸ்ட்'' என்றார் எம்.ஜி.ஆர்.
சற்றைக்கெல்லாம் ஜேப்பியார் லைம் ஜூஸ் கொடுக்க, ஏழு மணி நேர உண்ணாவிரதம் முடிந்தது.


செய்தி :
"உழைக்கும் குரல்" தளம்
க.பழனி

நன்றி🙏

suharaam63783
30th April 2020, 10:00 PM
MGR, dominated like no other, the films and politics of India's Tamil Nadu state. A charismatic actor and philanthropist, he commanded the idolatrous adulation of millions of fans and tamils all over the world became Tamil Nadu's chief minister. ..more than 10 years continiously...There probably will never be a man that held the entire state of Tamil Nadu under his control like Puratchi Thalaivar M.G.R did. His films introduced the genre of entertainment into the Tamil Industry and thousands to millions flocked to see the man who had an naturally spell-binding aura on screen. From his dialogue delivery to his solo singing moments, he was an enigma at capturing hearts. The words devotees and fansclub were birthed for him. The unrivalled craze to see the man didn't stop inside his state. His popularity outside his home, grew larger than one could ever dream of ever. And he soon became a force that could not be touched. But his magic didn't stop in cinema. After his departure from the film world, his stint in Politics as the Chief Minister of Tamil Nadu will forever be the imprinted as the backbone of Tamil politics forever. It is fair to say that M.G.R had his fair share of negative influences, but the huge positive impact he had on society will always leave a mark on Tamil Nadu forever.43 years ...and so on MGR RULING THE TAMIL FILM.

Even after his retirment from cinefield 1977 till today 2020 most of his movies running with packed houses in entire south india with box office .No other actor in the world have charisma l

Audience: Almost all commercial cinema lovers were fans of his films.......... Thanks.........

suharaam63783
30th April 2020, 10:04 PM
தலைவருக்கும், ஆந்திர என்.டி.ராமாராவ் அவர்களுக்கும் உள்ள நல்ல நட்பு அனைவரும் அறிந்த ஒரு விஷயம்.

ஒரு முறை சென்னைக்கு வந்த என்.டி.ஆர்...தலைவரை பார்க்க வந்த போது நம்மவர் படப்பிடிப்பில் இருக்க அங்கே வந்த என்.டி.ஆர்...முகத்தில் மூக்கில் சிவந்து காயம் போல தெரிய பதறி தலைவர் என்ன அது கேட்க.

போன வாரம் ஷெட்டி என்ற ஒரு ஸ்டண்ட் மாஸ்டர் உடன் படப்பிடிப்பில் ஒரு சண்டை காட்சியின் போது அவர் மூக்கில் குத்தி விட்டார்.

மூக்கு உடைந்து சரியான காயம்...அடி பட்டது கூட பரவாயில்லை அண்ணே அவர் அதன் சண்டை காட்சிகளில் இது எல்லாம் சகஜம் என்று அசால்டா சொல்லி விட்டார் என்று வருந்த.

கொஞ்ச நாட்கள் கழித்து ஷோலே, தீவார் போன்ற பல இந்தி படங்களின் ஸ்டண்ட் மாஸ்டர் ஷெட்டி தலைவருடன் நடிக்க ஊருக்கு உழைப்பவன், நவரத்தினம் போன்ற படங்களில் புக் செய்ய பட்டார்.

தலைவருக்கு என்.டி.ஆர் அனுபவம் நினைவுக்கு வர ஷெட்டியின் உடல் பயிற்சி விவரங்கள் சேகரித்து அவர் 350 கிலோ வரை வெயிட் எடுப்பார் என்பதை தெரிந்து கொண்டு.

தலைவரும் ஒரு வாரம் 350 தாண்டி 375 கிலோ வரை எடைகள் தூக்கி தன்னை தயார் செய்து கொண்டார். ஊருக்கு உழைப்பவன் படத்துக்கு அப்புறம் வந்த நவரத்தினம் படத்தில் ஹிந்தி நடிகை ஜரீனா வகாப் அவர்களுடன் ஒரு பாடல் காட்சி முடிந்து வரும் சண்டை காட்சியில் ஒரு கையில் ஈட்டி மறு கையில் கேடயம் கொண்டு ஷெட்டி சண்டை காட்சியில் தலைவர் லாவகம் ஆக நகர்ந்து தன் வலது கை கொண்டு ஷெட்டி மூக்கில் ஒரு குத்து விட அவர் மூக்குவுடைந்து ரத்தம் சிந்த ஆரம்பித்தது.

படத்தில் அந்த சண்டை காட்சி அரை குறையாக போய்விடும்...நீக்கள் அடுத்த முறை படம் பார்த்தால் சரி பார்த்து கொள்ளவும்.

உடனே தலைவர் அடடா சண்டை காட்சிகளில் இது எல்லாம் சகஜம் என்று சொல்லி அவர் மூக்கை துடைத்து மருத்துவ செலவுகளை அவரே ஏற்று கொண்டு.

அதன் பின் இருநாட்கள் கழித்து ஷெட்டியை தன் வீட்டுக்கு கூட்டி கொண்டு போய் விருந்து கொடுத்து தன் உடற்பயிற்சி கூடத்தை சுற்றி காட்டி ஏராளமான பரிசு பொருட்களையும் ஒரு கவரில் ஒரு பெரிய தொகையை கொடுத்து.

மும்பை விமானத்துக்கு அவரை ஒரு ஆள் அனுப்பி வழி அனுப்பி வைக்க...

தன் மூக்கை தடவி கொண்டே என்ன மனிதர் இவர் என்று யோசித்து கொண்டே விமானத்தில் பறந்தார் ஷெட்டி.

வாழ்க எம்ஜியார் புகழ்.

நன்றி...தொடரும்..உங்களில் ஒருவன் நெல்லை மணி.....

விரைவில் ....... தலைவர் காலத்தில் போடப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தம் நடந்தவை பற்றி......... Thanks.........

suharaam63783
30th April 2020, 10:07 PM
அன்பு நண்பர்களே....
வணக்கம்.. வணக்கம்.. வணக்கம்...!!!

தமிழ்நாட்டில்.! கல்வி அறிவு பெற்றவர்கள் உயர்வதற்கு காரணம் என்ன என்று ...

ஐ.நா. சபை ஆய்வு செய்தது.
அந்த ஆய்வில் அவர்களுக்கு கிடைத்த தகவலை உலகத்திற்கு தெரிவித்தார்கள்.

அது யாதெனில் ....
தமிழ்நாட்டில் கல்வி அறிவு பெற்றவர்கள் அதிகமாக இருபதற்கு மிக முக்கிய காரணம்.

"#புரட்சித்தலைவர்_எம்ஜிஆர்_அவர்கள்."

கொண்டுவந்த "#சத்துணவுத்_திட்டமே " முக்கிய காரணம் என்று ஆய்வில் தெரியவந்தது என்று... ஐ.நா.சபை கூறியது.

இந்த தகவலை நான் கூறவில்லை.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட் ) மாநில செயலாளராக உள்ள, கே. பாலகிருஷ்ணன் அவர்கள்.. கூறினார்கள்.

இன்றும்.. CPM... மாநில செயலாளராக,
கே. பாலகிருஷ்ணன் அவர்கள் தான் உள்ளார்.

உங்களுக்கு சந்தேகமாக இருந்தால் அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

வாழிய வாழிய வாழியவே....!!!
புரட்சித்தலைவர் நாமம் வாழியவே ...!!

������������������������������......... Thanks...

suharaam63783
30th April 2020, 10:08 PM
#தீய_சக்தியின் தூண்டுதலால் தாக்குதல்

1972-ம் ஆண்டில், பாராளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி செல்வதற்காகச் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்குச் சென்றார். அவரைப் போலவே, பாராளுமன்றக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தி.மு.க. உறுப்பினர்கள் சிலரும் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். அவர்கள், நாஞ்சிலாரைக் கண்டதும் பதட்டமடைந்தனர்.

”டேய் துரோகி!” என்று கூச்சலிட்டுக் கொண்டே நாஞ்சிலார் மீது பாய்ந்து அவரைத் தாக்கினார்கள்; இதய நோயாளியான அவருடைய நெஞ்சில் சரமாரியாக குத்தினார்கள். அங்கிருந்து பதறி ஓடிய நாஞ்சிலார், விமான நிலைய நிர்வாகியின் அறைக்குள் புகுந்து கதவைப் பூட்டிக் கொண்டார். அங்கிருந்து தொலைபேசியின் மூலம் புரட்சித்தலைவருடன் தொடர்புகொண்டு தம்மைக் காப்பாற்றும்படி வேண்டுகோள் விடுத்தார்.

புரட்சித்தலைவர் மனோகரனுக்கு ஆறுதல் கூறிவிட்டு, ”கவலைப்படாதீர்கள், இன்னும் பத்தே நிமிடத்தில் நம் ஆட்கள் பறந்து வந்து உங்களைக் காப்பாற்றுவார்கள்!” என்றும் கூறினார். புரட்சித்தலைவர் தொலைப்பேசியைக் கீழே வைத்துவிட்டு சத்யா ஸ்டுடியோ பத்மநாபனிடம் நாஞ்சில் மனோகரனின் நிலைமையைச் சொல்லி, ”உடனே தேவையான ஆள்களோடு போய் நாஞ்சிலாரைப் பத்திரமாக மீட்டுக் கொண்டு வாருங்கள்!” என்று கூறினார்.

அடுத்த நிமிடம் பத்மநாபன் பத்துப் பேரோடு ஒரு காரில் ஏறி மீனம்பாக்கத்தை நோக்கிப் பறந்து சென்றார். புரட்சித்தலைவருக்கோ அவர் நண்பர்களுக்கோ ஓர் ஆபத்து என்றால், தம்மைப் பலி கொடுத்தாவது காப்பாற்றத் துடிக்கின்ற அற்புதமான தொண்டர், பத்மநாபன்.

பத்மநாபன் மீனம்பாக்கம் விமான நிலையத்திற்குள் புயல்போல் புகுந்து, தி.மு.க. எம்.பி.க்களின் முற்றுகையைத் தகர்த்தெறிந்தார்; நாஞ்சிலாரை மீட்டுக்கொண்டு வந்து அடுத்த அரை மணி நேரத்தில் புரட்சித்தலைவரிடம் ஒப்படைத்தார். இப்படி இன்னும் எத்தனையோ கொலை வெறித்தாக்குதல்களுக்கு அ.தி.மு.க.வினர், ஆளாகியுள்ளனர்.

அதே நாஞ்சில் மனோகரன் நன்றி மறந்து 1980–ம் ஆண்டு மறுபடியும் தி.மு.க வில் தன்னை இணைத்துக் கொண்டார்........ Thanks...

suharaam63783
30th April 2020, 11:01 PM
[நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் தீவிர ரசிகரான பஸ் டிரைவர் ஒருவருக்கு விபத்து ஏற்பட்டது. காலில் பலத்த காயம். அறுவை சிகிச்சை செய்து காலை எடுக்காவிட்டால் உயிரே பறி போகும் அபாயம். ‘பிறருக்கு பாரமாக இருப்பதை விட சாவதே மேல்’ என்ற எண்ணத்தில் அறுவை சிகிச்சைக்கு டிரைவர் மறுத்தார். பெற்ற மனம் கேட்குமா? மகனைக் காப்பாற்றத் துடித்தார் தாய். ஆனால், அவர் என்ன சொல்லியும் மகன் கேட்கவில்லை. ‘காலை இழந்து வாழ்வதை விட சாவதே மேல்’ என்று உறுதியாகக் கூறிவிட்டார்.எம்.ஜி.ஆர். அவர்களின் ரசிகனான தன் மகன் அவர் சொன்னால் கேட்பான் என்ற நம்பிக்கை பிறந்தது அந்தத் தாய்க்கு. எம்.ஜி.ஆர் அவர்களை சந்தித்து தன் மகனின் நிலையைக் கூறி அவரைக் காப்பாற்றும் படி கேட்டுக்கொண்டார்.

அந்த தாயின் வேண்டுகோளை ஏற்று மருத்துவமனைக்கே புரட்சித்தலைவர் சென்று தனது ரசிகரை சந்தித்து ஆறுதலும் தைரியமும் கூறினார்.சூரியனைக் கண்ட பனி போல டிரைவரின் கவலையும் அச்சமும் மிச்சமில்லாமல் பறந்தன. அறுவை சிகிச்சைக்கு சம்மதித்தார். பாதிக்கப்பட்ட கால் அகற்றப்பட்டு டிரைவர் உயிர் பிழைத்தார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் செலவிலேயே அவருக்கு செயற்கைக்கால் பொருத்தப்பட்டது. பின்னர், அவர் கடை வைத்து நடத்தவும் புரட்சித்தலைவர் உதவி செய்தார். டிரைவராக இருந்தவர் முதலாளியாகிவிட்டார்.

நல்ல நிலைமைக்கு வந்தவுடன் தாயும் மகனும் எம்.ஜி.ஆர் அவர்களை நேரில் சந்தித்து நன்றி சொல்ல விரும்பினர். தங்கள் விருப்பத்தை எம்.ஜி.ஆருக்கு தெரியப்படுத்தி சந்திக்க அனுமதி கோரினர். அதற்கு புரட்சித்தலைவர் அளித்த பதில் இது...

‘‘தன் மகன்களில் ஒருவனாக கருதித்தான் என்னைத் தேடி அந்த அன்னை வந்தார். டிரைவரை நானும் என் சகோதரனாக நினைத்துத்தான் உதவி செய்தேன். தாயாக, தம்பியாக எப்போது வேண்டுமானாலும் அவர்கள் என்னைப் பார்க்க வரலாம். நன்றி சொல்வதற்கு என்று வந்தால் நான் அந்நியனாகி விடுவேன்.வயது முதிர்ந்த தாயை அந்த சகோதரர் நன்றாக கவனித்துக் கொண்டாலே போதும். அதுவே என்னைப் பார்ப்பதற்கு சமம் .."

என்ன ஒரு பணிவு!
என்ன ஒரு தன்னடக்கம்!

33 வருடங்களாக அவரது பூவுடல் இப் பூமியில் இல்லாவிடினும்
நமது மனங்களில்
MGR என்றும் வாழ்வார்!......... Thanks...

suharaam63783
30th April 2020, 11:23 PM
"எம்.ஜி.ஆர் அழுத ரகசியம்!"...
" நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர்"...!
🍁 அத்தியாயம் : 5🍁

கம்பெனியில் இருந்த தனது நலன் விரும்பிகள் வெளியேறிவிட்ட கவலையில் நாடகங்களில் பங்கெடுத்துவந்த ராம்சந்தருக்கு இன்னொரு பிரச்னை உருவானது. ஆம் பி.யு.சின்னப்பாவுக்கு வந்த அதே மகரக்கட்டு பிரச்னை. பாடி நடிக்கும் குரல்வன்மை போனதால் ஒரேநாளில் எல்லாமே தலைகீழானது. வாழ்க்கை ஒரு வட்டம் என்பதுபோல் சின்னப்பாவிடமிருந்து ராம்சந்தருக்கு வந்த ராஜபார்ட் வேடங்கள் இப்போது இன்னொருவருக்கு அளிக்கப்பட்டது.

மகரக்கட்டு என்பது ஆண்களுக்கு பருவ வயதின் துவக்கத்தில் குரல்வளம் கடினமாக மாறிவிடும் தன்மை. சிறுவர்கள் பெரியவர்களாகிவிட்டதற்கான அடையாளம் அது. இயல்பான மனிதர்களுக்கு அதில் சிக்கலில்லை. தொழில்முறை நாடக நடிகர்களுக்கு அது வனவாசம் போன்ற காலகட்டம். எந்த பாத்திரத்திற்கும் அந்த குரல் பொருந்திவராது. இக்காலகட்டத்தில் நடிகர்கள் பெரும்பாலும் வேறு தொழிலுக்கோ அல்லது நாடக குழுவிலேயே வேறு பிரிவுக்கோ மாறிவிடுவர். மகரக்கட்டினால் பாட வாய்ப்பில்லாத சில பாத்திரங்கள் மட்டுமே ராம்சந்தருக்கு ஒதுக்கப்பட்டன. சக்கரபாணி தன் தம்பியின் நிலை கண்டு வருந்தினார்.

'தொடர்ந்து கம்பெனியில் தங்கி தம் திறமையை மழுங்கடித்துவிடக்கூடாது. அதேசமயம் கம்பெனியை விட்டு முற்றாக வெளியேறிவிடுவதும் புத்திசாலித்தனம் இல்லை' என சிந்தித்த சகோதரர்கள், குரல் வன்மை திரும்ப வரும்வரை முதலாளிக்கு தெரியாமல் வேறு கம்பெனியில் சேர்ந்து நடிப்பது என முடிவெடுத்தனர். ஆனால் அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் தெரிந்த நண்பர்கள்தான். நாடக குழுக்களின் அறிமுகம் எதுவும் கிடையாது. கம்பெனியின் பழைய வாத்தியாரான எம்.கந்தசாமி முதலியார், மொய்தீன் என்ற நாடக ஒப்பந்ததாரருடன் இணைந்து சிங்கப்பூரில் நாடகம் போட்டுவந்த தகவலை அப்போதுதான் சக்கரபாணியின் நண்பர் ஒருவர் சொன்னார்.


சகோதரர்களுக்கு மகிழ்ச்சி. நம் மீது அன்பு கொண்ட வாத்தியார் எப்படியும் நமக்கு ஒரு வழிகாட்டுவார் என்ற எண்ணத்துடன் அவரை நேரில் சந்தித்தனர். 'பசங்களா எப்படிடா இருக்கீங்க...' என நலம் விசாரித்த கையோடு சகோதரர்களின் பிரச்னைக்கும் தீர்வு சொன்னார் எம்.கே.

மொய்தீன் குழுவில் சகோதரர்களை சிங்கப்புர் அழைத்துச்செல்வதென முடிவெடுக்கப்பட்டது. நாகப்பட்டினத்தில் 12 நாட்கள் நாடக ஒத்திகை நடந்தது. ஆனால் அன்றைய அரசியல் சூழலால் அந்த பயணம் ரத்தானது. அதற்கு பதிலாக பர்மா பயணமாக முடிவானது.

பர்மா செல்லும் நாள் வந்தது. அந்நாளில் நாடக குழுக்களில் நடிப்பவர்கள் அவ்வப்போது நாடக குழுக்களை மாற்றிக்கொள்வது சகஜம் என்றாலும் தமக்கு ஆதரவளித்த கம்பெனிக்கு துரோகம் செய்துவிட்டு வேறு குழுவுக்கு வந்தது சகோதரர்களுக்கு உறுத்தியது. அப்படி தம்முடன் பழைய குழுவில் இருந்த யாரேனும் நம்முடன் வந்து நம்மை அடையாளம் கண்டுவிடுவார்களோ என்ற அச்சம் சக்கரபாணியை விட ராம்சந்தருக்கு அதிகமாக இருந்தது. அதற்கு காரணம் உண்டு.

பாய்ஸ் கம்பெனியில் முதலாளி சச்சிதானந்தம் கோபக்காரர்தான். ஆனால் பேச்சோடு அவர் கோபம் நின்றுவிடும். ஆனால் வாத்தியார் காளி.என்.ரத்தினம் அப்படியல்ல; கோபம் வந்தால் தாறுமாறாக அடித்துவிடுவார். பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்த புதிதில் ராம்சந்தர் நல்லதங்காள் நாடகத்தில் நடித்தார். அதில் வறுமையினால் தன் குழந்தைகளை ஒவ்வொருவராக கிணற்றில் வீசிவிடுவாள் நல்லதங்காள். கடைசி குழந்தை ராம்சந்தர். கடைசி குழந்தையை வீசும் முன் அந்த குழந்தை அம்மாவிடம் தன்னை கொன்றுவிடாதே என்றும் தான் குடும்பத்தை காப்பாற்றுவதாகவும் அழுதபடி கூறவேண்டும்.

ஆனால் ராம்சந்தருக்கு அப்போதிலிருந்தே அழுகை மட்டும் கொஞ்சம் சிக்கல் தரும் விஷயம். ஒத்திகையின்போதே டயலாக் பேசுவார். அழுகை வராது. அழவில்லையென்றால் அந்த காட்சி உருக்கமாக இருக்காது. இதற்காக காளி.என்.ரத்தினம் ஓர் உபாயம் செய்தார். முதல்நாள் நாடக அரங்கேற்றத்தின்போது அந்த காட்சியில் ராம்சந்தரை வசனம் பேசியபடி நாடக மேடையின் ஓரமாக வரச்சொல்லியிருந்தார் ரத்தினம்.

வாத்தியார் கூப்பிடுகிறாரே என சிறுவன் ராம்சந்தர் வசனம் பேசியபடி மேடையின் ஓரம் வர, திடடமிட்டபடி அங்கு மறைந்திருந்த ரத்தினம் ராம்சந்தரின் தலையில் ஒங்கி ஒரு குட்டு வைத்தார். உயிர் போகும் வலி. ராம்சந்தர் நிஜமாகவே அழுதபடி வசனம் பேச, அதை சிறுவனின் யதார்த்தமான நடிப்பு என நம்பி, அடடா, என்னமா நடிக்கிறான்யா பையன்! என அரங்கில் பலத்த கைதட்டல். வலியினால் நாடகம் முடிந்தபின்னும் அழுதுகொண்டிருந்தான் ராம்சந்தர். இப்படி நாடகத்தின் வெற்றிக்காக எதையும் செய்யத் தயாராக இருப்பவர் காளி.என். ரத்தினம்.

கப்பல் பயணத்தில் இந்த சம்பவம்தான் திரும்ப திரும்ப நினைவில் வந்து ராம்சந்தரை பயமுறுத்திக்கொண்டிருந்தது.
யாராவது பார்த்துவிட்டு முதலாளியிடம் சொல்லிவிடுவார்களோ என்ற அச்சத்துடனேயே பர்மா பயணமானார்கள் சகோதரர்கள். பர்மாவில் நாடகம் துவங்கியது. ஒருநாள் நாடகத்தின் க்ளைமேக்ஸ் காட்சி நடந்துகொண்டிருந்தது. அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது

தொடரும்...
Posted : M.G.Nagarajan
30 April 2020 6:31 PM
Thanks for :
Published : Naveenan

விகடன் வண்ணத்திரை
யாழ் இணையம்......... Thanks...

suharaam63783
30th April 2020, 11:28 PM
பெருந்தன்மைக்கு ஒரு எம்.ஜி.ஆர்!
மனம் திறந்த இயக்குநர் ஸ்ரீதர்
https://www.thaaii.com/?p=36162

‘நினைத்துப் பார்க்கிறேன்’ என்ற தலைப்பில் 1992 ஆம் ஆண்டில் இயக்குநர் ஸ்ரீதரின் வாழ்வை கல்கி வார இதழில் தொடராக எழுதியவர் பத்திரிகையாளரான எஸ்.சந்திர மௌலி.

நன்றியுடன் அதிலிருந்து ஒரு பகுதி:

“இந்தி நடிகர் ராஜேந்திரகுமார் என் நெருங்கிய நண்பர் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். சென்னைக்கு வந்தால், என் வீட்டில் ஒரு வேளையாவது உணவருந்தி, சற்றுநேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டுத் தான் போவார்.

இம்முறை சென்னை வந்திருந்தபோது, என் பிரச்சினைகளை நன்கு அறிந்திருந்த அவர், சித்ராலயாவின் நிலைமை பற்றி விசாரித்தார்.

“பொருளாதார நெருக்கடியை ஓரளவு சமாளிக்க, ஹிந்தி ஹீரோ-72 பெற்ற வெற்றி உதவியது என்றாலும், முழுவதுமாகத் தீரவில்லை’’ என்றேன்.

“தமிழில் ‘ஹீரோ 72’ என்ன ஆயிற்று?’’

“சிவாஜியும், தம்பி ஷண்முகமும் எவ்வளவோ முயன்றும், எனக்குக் கால்ஷீட் அட்ஜஸ்ட் பண்ணிக் கொடுக்க முடியவில்லை. படம் தொங்கலில் தான் இருக்கிறது’’

சிரத்தையுடன் கேட்டுக் கொண்ட ராஜேந்திர குமார், சற்று நேரம் மௌனமாக யோசித்துவிட்டுத் திடீரென்று, “ஏன் ஸ்ரீதர், நீங்க ஏன் எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம் எடுக்கக்கூடாது?’’ என்று கேட்டார்.

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.

என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், நான் தயங்கித் தடுமாற, அவரே தொடர்ந்து “எனக்கென்னமோ உங்க பிரச்சினை தீர அது தான் வழி என்று தோன்றுகிறது’’ என்றார்.

நான் நிதானமாக “உங்களுக்கு என் மேல் உள்ள அக்கறை எனக்குப் புரிகிறது. ஆனால் உங்கள் ஆலோசனையைச் செயல்படுத்துவது சாத்தியமில்லை’’ என்றேன்.


“ஏன், எம்.ஜி.ஆர் உங்களுக்கு கால்ஷீட் தர மாட்டாரா?’’

“அப்படியில்லை. ஏற்கனவே எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படத்தை ஆரம்பித்து, சில காட்சிகள் மட்டுமே எடுக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து எம்.ஜி.ஆரின் ஒத்துழைப்பு கிடைக்காததால், படத்தை அப்படியே நிறுத்த வேண்டியதாகிவிட்டது.

பிறகு நானே அதே கதையில் சில மாற்றங்களைச் செய்து, சிவாஜியை வைத்துப் படம் எடுத்ததும் எம்.ஜி.ஆருக்குத் தெரியும். அப்படியிருக்க…’’

“ஸ்ரீதர்! இப்போ அந்தப் பழைய கதையை நினைத்துக் கொண்டு எம்.ஜி.ஆர் ஒத்துழைப்புத் தர மறுப்பார் என்று எனக்குத் தோன்றவில்லை’’


“நீங்கள் சொல்வது உண்மையாகவே இருக்கலாம். ஆனால் அதிலும் ஒரு தர்ம சங்கடம். இப்போ எம்.ஜி.ஆர் கால்ஷீட் தருவதாக வைத்துக் கொண்டால், சிவாஜி என்ன நினைப்பார்?

“ஓஹோ.. நம்ம படம் பாதியிலேயே நிற்க, எம்.ஜி.ஆரை வைத்துப் படம் எடுக்கப் போய்விட்டாரா ஸ்ரீதர்’’ என்று சிவாஜி தப்பு அர்த்தம் செய்து கொள்ளக்கூடும். அல்லது எம்.ஜி.ஆரே ‘முதலில் சிவாஜி படத்தை முடித்துவிட்டு வா; அப்புறம் பார்க்கலாம்’’ என்று கூறலாம்..’’

ராஜேந்திரகுமார் என் சமாதானங்களை ஏற்கவில்லை.

“ஸ்ரீதர், யோசித்து யோசித்துத் தயங்காதீர்கள். எதற்கும் எம்.ஜி.ஆரை அணுகுங்கள். அவர் ஒப்புக் கொள்வார் என்றே எனக்குத் தோன்றுகிறது. உங்க பிரச்சினை எல்லாம் தீர அது தான் வழி’’

“பெரிய ரிஸ்க் இல்லையா?’’

“ரிஸ்க் தான். துணிந்து ரிஸ்க் எடுங்க’’

ராஜேந்திரகுமார் உறுதியாகக் கூற, நானும் அவர் யோசனையை ஏற்பது என்று தீர்மானித்தேன்.

இதற்கு முன்பு ஓரிரு சந்தர்ப்பங்களில் எம்.ஜி.ஆரை நான் சந்திக்க நேர்ந்தபோது அவர் “நாம் இருவரும் சேர்ந்து ஒரு படம் பண்ண வேண்டும்; முன்பு ஒருமுறை ஆரம்பித்த படம் கூட நின்று போய்விட்டதே’’ என்று கூறியது எனக்கு நினைவில் இருந்தது.

அதை ஒருவேளை உபச்சாரமாகக் கூறியிருப்பாரோ?

யார் என்ன விமர்சனம் செய்தாலும் சரி, எம்.ஜி.ஆரை அணுகுவது என்று தீர்மானத்துக்கு வந்தேன். ஆனாலும் உள்ளூர ஒரு தயக்கம்.

எப்படி எடுத்துக் கொள்வாரோ? என்ன பதில் கூறுவாரோ?

எனவே நான் நேரில் எம்..ஜி.ஆரைப் பார்த்துப் பேசாமல், கன்னையா என்ற நண்பரிடம் என் விருப்பத்தைத் தெரிவித்தேன்,

‘சின்னத்தம்பி’ போன்ற படங்களை டைரக்ட் செய்தாரோ பி.வாசு, அவருடைய அப்பா பீதாம்பரம் எம்.ஜி.ஆரிடம் மேக்கப் மேனாக இருந்தார்.

அவரிடம் என் விருப்பத்தை கன்னையா தெரிவிக்க, பீதாம்பரம் எம்.ஜி.ஆரிடம் விஷயத்தைச் சொல்ல, எம்.ஜி.ஆரின் பதில் திரும்பவும் கன்னையா மூலமாக எனக்கு வந்து சேர்ந்தது.

அதிலே எம்.ஜி.ஆரின் பெருந்தன்மை மீண்டும் ஒருமுறை வெளிப்பட்டது.

பதில் இது தான்.

“ஸ்ரீதர் படத்தில் நடிக்கச் சம்மதம். ஆனால் மேலே இது குறித்துப் பேச வேண்டும். நாங்கள் சந்திப்பது ஸ்ரீதர் வீட்டிலும் வேண்டாம்; என் வீட்டிலும் வேண்டாம் ஒரு பொது நண்பரின் வீடாக இருக்கலாம். நம்பியார் வீடாக இருந்தால் சௌகரியம்’’

நான் நெகிழ்ந்து உணர்ச்சிவசப்பட்டுப் போனேன்.

எம்.ஜி.ஆர் என் வீடு தேடி வந்தால் நன்றாயிராது. அதே சமயம் அவர் வீட்டுக்கு நான் போனால், மற்றவர்கள் என்னைக் கேவலமாக- ‘அவர் வீடு தேடி அவர் காலில் விழபோனேன்’’ என்று பேசுவார்கள்.

அந்த அவமானம் எனக்கு வரக்கூடாது என்று அவர் நினைத்தார். அதனால் பொது நண்பர் வீட்டில் சந்திக்கலாம் என்று தகவல் அனுப்பியிருக்கிறார்.

நான் கன்னையாவிடம் சொன்னேன்,

“எம்.ஜி.ஆரை நான் சென்று சந்திப்பது தான் முறை. எனக்கு இதில் தயக்கமோ, சங்கடமோ கிடையாது. அவர் உள்ளம் எனக்குப் புரிந்து விட்டது. ‘தோட்டத்தில் வந்து சந்திக்கிறேன்’ என்று அவரிடம் கூறிவிடுங்கள்’’.

மறுநாள் காலை தோட்டத்தில் சிற்றுண்டிக்கு வரும்படி எம்.ஜி.ஆரிடம் இருந்து தகவல் கிடைத்தது.

ராமாவரத்தில் ‘தடபுடலான’ சிற்றுண்டி.

“உங்களை வைத்துப் படம் எடுக்க வாய்ப்புக் கிடைத்ததில் பெருமைப்படுகிறேன்.’’ என்று நான் கூற,

“உங்களுடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுவதில் எனக்கும் சந்தோஷம்’’ என்றார் எம்.ஜி.ஆர்.”

அதன் பிறகு ஸ்ரீதர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர் நடித்து வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்ற படம் – ‘உரிமைக்குரல்’.

#ஸ்ரீதர் #உரிமைக்குரல் #எம்ஜிஆர் #பீதாம்பரம் #சின்னத்தம்பி....... Thanks...

suharaam63783
30th April 2020, 11:48 PM
மக்கள் திலகம் அவர்கள் நடிகர் டைப்பிஸ்ட் கோபு மகனுக்கு உதவியது சம்பந்தமாக நண்பர்கள் கொடுத்த கருத்துகள்.......
டைப்பிஸ்ட் கோபு க்கு எம்ஜிஆர் உதவினார் என்பது நாம் ஆச்சரியப்படுவதற்கு இல்லை ஏனென்றால் நமக்கு அது வழக்கமான செய்திதான் பிறருக்கு உதவுவதை தலைவர் எப்போதுமே தன் கடமையாகக் கொண்டிருந்தார் ஆனால் அந்த காலகட்டத்தில் நடிகர்களில் மனிதராக இருந்தவர் ஜெய்சங்கர் அல்லவா அவர் கூடவா உதவவில்லை........ Thanks...

suharaam63783
30th April 2020, 11:49 PM
எப்பேர்ப்பட்ட உதவி!!! மேனி புல்லரிக்குது நான் பாத்துக்குறேன் அந்த ஒத்த வார்த்தைக்கு எப்படிபட்ட பலம் என்பது நானறிவேன் இன்னொருவர் பிறக்கவில்லை தங்கதலைவனைப்போல் அள்ளித்தந்த வள்ளல் நினைவுகளே காலத்தை வெல்லும்
அருமையான பதிவு...... Thanks...

suharaam63783
30th April 2020, 11:50 PM
நடிகர் சிவக்குமார் சொன்னது நினைவுக்கு வருகிறது. அவர் மற்றவர்க்குத் தெரிந்து கொடுத்தது கொஞ்சமே. தெரியாமல் கொடுத்தது அதிகம். உலக வள்ளல் என்று இதயக்கனி ஆசிரியர் சொன்னது 100 % உண்மை..... Thanks...

suharaam63783
30th April 2020, 11:52 PM
தயாள குணம் படைத்தவர்களை தவிர பிறர் எவரும் , உதவி என்று சென்று கேட்டால் , இவனால் திருப்பி தர முடியுமா அல்லது இவனால் பின்னால் நமக்கு ஏதாவது ஆதாயம் கிடைக்குமா என்றெல்லாம் யோசித்து அதற்கேற்றபடி பதில் சொல்லி அனுப்பி விடுவார்கள் .
திரு டைபிஸ்ட் கோபு அவர்களின் நிலைமையும் அப்படித்தான் அமைந்தது .
திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்பது போல நமது இதய தெய்வம் உதவி செய்தது , திரு கோபு அவர்கள் புரட்சிதலைவர் அவர்களை பற்றியும் , உடனிருந்தே கை விட்ட மற்றவர்களையும் புரிய வைத்துவிட்டது ...
இது போன்ற பதிவுகள் இன்னும் தொடரட்டும் ....... Thanks...

suharaam63783
30th April 2020, 11:55 PM
குருநாதாரே... அருமையான பதிவு
புராணத்தில் கர்ணன் பற்றி படித்து தெரிந்து கொண்டும்..
இந்த காலத்தில் தலைவரை பார்த்து தெரிந்து கொண்டோம் கர்ணன் என்றால் இப்படி தான் இருப்பர் என்று...

எனக்கு ஒரு உண்மை தெரிந்தாக வேண்டும்
நடிகர் சிகணேசன் யாருக்கும் உதவி என்பதே செய்தது இல்லையா....... Thanks...

suharaam63783
30th April 2020, 11:56 PM
தலைவரின் வள்ளல் குணம் எப்போதும் நம்பிக்கையின் உச்சம் ஆனாலும் சிவாஜி சிறந்த நடிகராக இருந்தும் கூட நம்பிக்கையானவர்களுக்கு கூட பெரிய உதவிகள் செய்ததில்லை என்று கேள்விப்பட்டுள்ளேன் குருஜி உண்மையா அது...... Thanks...

suharaam63783
30th April 2020, 11:59 PM
Eppadi Thalaivar seitha veliye theriyaatha aayiramaayiram vuthavikal veli pattukkonde eruppathu,Evar saathaarana manitha piravi alla,
Kaakkum Kadavul
enbathu pulanaakirathu ayyaa.Pathivitta thangalukku ....nandri....... Thanks...

suharaam63783
1st May 2020, 12:01 AM
ஒரே வரியில் இதய தெய்வம் ஒரு தெய்வப் பிறவி. கண்களுக்கு தெரியாத தெய்வத்திடம் முறையிட்டால் எந்த காரியமும் சுபமாய் முடியும் என்பது மக்களின் நம்பிக்கை. ஆனால் இந்த கலியுகத்தில் வாழ்ந்து உதவி என்று வந்தவர்களுக்கு வேண்டியதை செய்தார் இந்த மனித தெய்வம். நான் ஏன் பிறந்தேன் திரைப்படத்தில் இறுதி காட்சியில் வில்லன் M.N. நம்பியார் காஞ்சனாவை சிறைப்பிடித்து வந்து தேங்காய் சீனிவாசனுடன் திருமணம் நடக்கும் இடம் அந்த திரைப்படத்தில் இதய தெய்வம் பெயர் கண்ணன் காஞ்சனா பெயர் ராதா. அந்த காட்சியில் ராதா கண்ணன் என்னை காப்பாற்றுங்கள் என்று கூக்குறலிட உடனே வில்லன் நம்பியார் நீ கூப்பிட்டவுடன் உடனே வந்து காப்பாத்த உன் கண்ணன் ஒன்னும் புராணகாலத்து கண்ணன் இல்லை என்று கூற உடனே கண்ணனாகிய இதய தெய்வம் கூறுவார் புராண காலத்து கண்ணன் வேண்டுமானால் கொஞ்சம் தாமதமாக வரலாம் ஆனால் இந்த கண்ணன் பெண்களுக்கு ஆபத்தென்றால் அடுத்த நொடியே அவங்கள காப்பாத்த முதலில் நிப்பான் தெரிஞ்சுக்க அடுத்து நடப்பத்து என்னவென்று அனைவரும் அறிந்த ஒன்றாயிற்றே. எதிரிகளை துவம்சம் செய்து விட்டு கலியுக ராதாவை காப்பாற்றுவார் கலியுக கண்ணனாகிய நம் இதய தெய்வம். கோபுவின் பதட்டம் இறுதிவரை இதய தெய்வத்தை பற்றிய ஒன்று அவர் முழுவதுமாக அறிந்திருக்க தனிப்பட்ட அனுபவம் இல்லாதது தான். தன்னுடன் நடிக்காவிட்டாலும் கலை குடும்பத்தை சேர்ந்த ஒரு சக நடிகர் கஷ்டத்தில் இருக்கிறார் என்று அறிந்து அவர்களுக்கு உதவுவதை இதய தெய்வம் தன் கடமையாகவே கொண்டிருந்தார் என்றே கூற வேண்டும். மிகவும் நெகிழ்ச்சியான ஒரு பதிவு குருநாதா. வாழ்த்துக்கள்......... Thanks.........

suharaam63783
1st May 2020, 12:05 AM
தலைவர் வாழ்நாளில் இதைப்போன்று எத்தனை ஆயிரம் நிகழ்வுகள் சார்.
தலைவர் பிறந்தது பிறருக்கு உதவுவதற்காகவேவா.
என்ன ஓர் பிறவி சார். ?!
இவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதே ஓர் பாக்கியம்........ Thanks...

suharaam63783
1st May 2020, 12:09 AM
இதுவரை நான் கேள்விப்படாத ஒரு அருமையான, நெகிழ வைக்கும் பதிவு ......முதன்முதலில் நடிகர் நாகேஷுக்கு தமிழ் சினிமாவில் நடிக்க வழிகாட்டியாக இருந்தவர் தலைவர் தான் குருஜி.......... Thanks...

suharaam63783
1st May 2020, 12:36 AM
மக்கள் திலகம் "ரிக்க்ஷாக்காரன்" காவியத்தை உருவாக்கும்போது வக்கீல்/ நீதிபதி கதாப்பாத்திரம் நடிகர் மேஜர் சுந்தராஜன் ஏற்று நடித்தால் பொருத்தமாக இருக்கும் என காத்திருந்து பிறகு நடித்த சம்பவம் தொடர்பாக பதிந்த பதிவு ...கருத்து பின்னூட்டங்கள் ஒரு பார்வை.......எந்த நடிகர் மேஜருக்கு மாற்றாக நடித்திருந்தாலும் படம் வெற்றி பெறுவது உறுதி. ஆனால் இவர்தான் இந்தப் பாத்திரத்திற்குப் பொருத்தமானவர் என்று தலைவர் கருதுவதும் தீர்மானிப்பதும் அவரது திருப்திக்காக ரசனைக்காக அல்ல. மக்களுக்கு நன்றிலும் நன்றாக சிறப்பானதைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தால்தான் அவருக்கு உறக்கம் வரும். படத்தின் நீளத்திற்கும் அதிகமாகப் பன்மடங்கு எடுத்து ஆகச்சிறந்ததைத் தேர்ந்து கோர்த்து சிறந்த படமாக உருவாக்க பொருள் வீணாவதைப் பற்றிக் கவலைப்படாத தலைசிறந்த நல்ல எடிட்டர் தயாரிப்பாளர் இயக்குனர் இசைமேதை அவர். கலையை மக்களுக்காக சமூக ஏற்றத்திற்காக மறுமலர்ச்சிக்காகப் பயன்பெறச் செய்த கலைஞானி அவர். திறமையை மதிப்பதில் அவருக்கு இணை யாருமில்லை. SPB பாடலுக்கு மாதக்கணக்கில் காத்திருந்தார். மாணவப் பருவத்து பாடகரை இவர் மதித்து வாய்ப்பளித்ததால் கின்னஸ் சாதனை படைத்த பாடகராக அவர் விஸ்வரூபம் எடுக்க தலைவரே காரணம். கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் கூட அவரே வள்ளல்......... Thanks....

suharaam63783
1st May 2020, 12:40 AM
அறியப்படாத தகவல்
வாழ்த்துகள் பதிவிற்கு நன்றி����
தலைவர் புகழுக்கு
மேலும் ஒரு வைரக்கல்
புரட்சி தலைவர் எம்ஜிஆர் அம்மா வின் ஆசியுடன் காலை வெற்றி வணக்கம் நம்வாழ்வு நம் கையில் வீட்டில் உள்ளே இருப்போம் நல்லது நடக்கும்........ Thanks...

suharaam63783
1st May 2020, 12:40 AM
நிறைகுடம் என்றும் தளும்பாது.தலைவர் மக்கள் நலன்கருதி,மத்தியஅரசுடன் இணக்கமாக இருந்து காரியம் சாதித்தார்.தங்களால்,அதுபோல செய்ய முடியாவிட்டால்,மக்களிடம் பெயர்கெட்டுவிடுமே என்பதால் எதிரிகட்சிகள்,அதையெல்லாம் குறைகூறிப் பேசின.இன்றைக்கும் அப்படித்தான் நடக்கிறது.
தலைவர் நம்வேலை நடிப்பது,வாங்குற கூலிக்கு மாரடிப்போம் என்றில்லாமல்,இது என்படம்,வெற்றிபெறத்தான் வேண்டும் என்று மொத்த பட விஷயங்களையும் தனதாக்கி,நடித்தூ,வெற்றிபெறச் செய்ததால்தான் இன்றும் நம்மில் வாழ்கிறார்......... Thanks...

suharaam63783
1st May 2020, 12:44 AM
1958-ல் வெளிவந்து சரித்திரம் படைத்த சாதனை படம் நாடோடி மன்னன்.
மக்கள் திலகம் எம்ஜிஆர் நடிப்பு, தயாரிப்பு,
இயக்கம் என தனது முழு திறமையையும்
வெளிப்படுத்திய வெற்றிப் படம்.
பகுதி மட்டும் வண்ணத்தில் எடுக்கப்பட்டது.

பேசும்படம் சினிமா மாத இதழ்,
"நாடோடி மன்னன்" சிறந்த படமென தேர்ந்தெடுத்து பாராட்டு பத்திரம் வழங்கியது....... Thanks.........

suharaam63783
1st May 2020, 12:50 AM
"கூரைகளெல்லாம் கூட வளர்ந்தால் கோபுரமாவதில்லை..."
"குருவிகளெல்லாம் உயரப் பறந்தால் பருந்துகளாவதில்லை.."
#புரட்சித்தலைவர். #எம்ஜிஆர் பெயரை எவ்வளவுதான் மறைக்கவோ...மறுக்கவோ ஒரு கூட்டம் முயற்சி செய்தாலும் .. தலைவரின் பெயரை ..புகழை... சாதனைகளை யாராலும் அழிக்கவோ..
மறைக்கவோ நெருங்கவோ முடியாது..."
இது புரட்சித் தலைவர்.எம்ஜிஆரின் அரசு.." அவர் பாடுபட்டு வளர்த்து கட்டிக் காத்த..ஊழலற்ற பொற்கால ஆட்சி செய்த கட்சி.. . மக்கள் திலகத்தை இதயதெய்வமாக வணங்கிக் கொண்டு.. தலைவர் மறுபடியும் வரமாட்டாரா...என்ற ஏக்கத்துடன் ...
தலைவரை வேண்டி நிற்கிறார்கள்... நம் தலைவரின் பக்தர்கள்...
நம்மிடையே மஹானாக..சித்தராக வாழும் நம் தலைவரின் வெளிப்பாடு...???
எதிர்பார்ப்போம்... என் உள்ளம் என்னும் உலகில் புரட்சித் தலைவர்.எம்ஜிஆர்..
மட்டுமே என் நிரந்தர தலைவர்...
இனிய அதிகாலை வணக்கம் அன்புள்ளங்களே...
வாழ்க புரட்சித் தலைவரின் புகழ் என்றும்.......
Thanks...

suharaam63783
1st May 2020, 10:00 AM
#தொழிலாளர்தின #வாழ்த்துக்கள் ...

தொழிலாளர்களின் நலத்தைத் தனது ஒவ்வொரு திரைப்படத்திலும் பேணி, அவர்களைப் போற்றி...தான் முதல்வரான பின்பும் தொழிலாளர்களுக்காக பல நலத்திட்டங்களைச் செயல்படுத்திய நம்ம வாத்தியாருக்கு, அவர்தம் பொற்பாதங்களுக்கு இப்பதிவினைச் சமர்ப்பிக்கின்றேன்.

#MAY #DAY - Dedicated to our Beloved God "VAATHIYAR"

அன்பே வா திரைப்படத்தில் சரோஜாதேவிக்கு உடைகள் வடிவமைத்தவர் திரு ரஹ்மான் பாய் படத்தின் பெயர்ப்பகுதியில்(டைட்டிலில்) காணலாம்.

ரஹ்மான் பாய்...!

சிம்லா மிகவும் குளிர்ப் பிரதேசம் ரஹ்மான்பாய் அதற்குத் தகுந்தாற்போல் உடைகள் இருக்க வேண்டும் என்று புரட்சித்தலைவர் அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஆயத்தமாக இருந்த உடைகளை ரஹ்மான்பாய் காண்பிக்க, மகிழ்ச்சியில் கட்டியணைத்து வாழ்த்து சொன்னார் வாத்தியார்.

படத்தில் ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் பாடலில் வாத்தியார் & சரோஜா போட்டிருக்கும் உடைகளைத்தைத்து வாத்தியாரிடம் காண்பிக்க, அப்படியே மகிழ்ந்து, தனது சொந்தப் பணத்தை எடுத்து அன்பளிப்பாக வழங்கியுள்ளார். பேசிய தொகை கிடைத்துவிட்டது. கொடுக்கப்பட்ட வேலையைத்தான் செய்தேன் அதிகப்படியாக வேண்டாம் என்றிருக்கிறார் ரஹ்மான் பாய்...

"இல்லை ரஹ்மான்பாய்.." கொடுக்கப்பட்டதைவிட அதிக வேலைப்பாடுள்ள உடைகளைத் தயாரித்திருக்கிறீர்கள் அதிகப்பணமல்ல... என் அன்பு இது. என் அன்பு வேண்டாமா உங்களுக்கு ? என்றிருக்கிறார் வாத்தியார்.
திக்குமுக்காடிப்போன பாய் பணத்தை வாங்கிக்கொண்டு, அந்தப் பணத்தை நிறைய வருடங்கள் செலவழிக்காமல் வைத்திருந்திருக்கிறார்.

திரைப்படங்களில் கொடைவள்ளல்களாக நடிப்பவர்கள் சொந்தவாழ்வில் கருமிகளாகத் தானிருந்திருக்கிறார்கள். நடிப்பதில் செய்ததை, சொந்த வாழ்வில் நடிக்காமல் செய்தவர்.

மற்றொரு சம்பவம்...!

ஒருமுறை தேர்தல் பிரச்சாரத்திற்காக காரைக்குடிக்கு மாலை 6 மணிக்கு வருவதாக இருந்தது. வழக்கம்போல் 9 மணிக்கு வந்தார்கள். சுற்றுவட்டார மக்கள் காலையிலிருந்தே வர ஆரம்பித்துவிட்டார்கள். தாமதமானதால் அவரது வாகனம் வேகமாகக் கூட்டத்திற்குள் நுழைந்தது.

காவலர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டுதான் இருந்தார்கள் அதையும்மீறி எம்ஜிஆரைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் 8 வயதுச் சிறுவன் கூட்டத்திலிருந்து நடுச்சாலைக்குள் வந்துவிட்டான்.

பிரேக் போட்டாலும் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்குள் சிறுவனைக் கார் இடித்துவிட்டது. முதலில் காரிலிருந்து இறங்கியது யார் தெரியுமா? எம்ஜிஆர் தான்... " குழந்தை... குழந்தை... " என்று
அவர் பதறிவந்து தூக்கியதை, அங்கிருந்த யாரும் அவ்வளவு சுலபத்தில் மறந்திருக்க வாய்ப்பே இல்லை. தன் காரிலேயே மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து சிகிச்சைக்கான செலவு, சிறுவனின் படிப்பு, உணவு, உடை எல்லாவற்றையும் தானே ஏற்றுக்கொண்டார்...

அடிபட்ட சிறுவன் யார் தெரியுமா? அவன் பெயர் முருகேசன்... சலவைத் தொழிலாளியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
காரைக்குடி, காட்டுத்தலைவாசல் என்னும் இடத்தில் சலவைத்தொழிலாளியாக அவன் குடும்பத்தினர் இருந்தனர்.

இப்படிப்பட்ட சம்பவங்கள் எத்தனை எத்தனை...ஒன்றா! இரண்டா! எடுத்துச்சொல்ல...

வாத்தியாரின் வழியில் தொழிலாளர் நலம் பேணுவோம்... போற்றுவோம்........... Thanks.........

suharaam63783
1st May 2020, 10:06 AM
தலைவா உங்கள் மேல் உயிரையே வைத்திருக்கும் இவ்வுலகில் அதாவது இந்த உலகத்திலேயே!
ஆம் யாருக்குமே எந்த ஒரு தனிமனிதனுக்கும் கிடைக்காத மிகப்பெரிய தொண்டர்படை கூட்டம் ஒன்று உங்கள் நினைவுகளோடு வாழுகிறது தலைவா.
எந்த ஒரு பிரதிபலனும் எதிர்பார்க்காமல் உங்களையும் ,உங்கள் கருத்துக்களையும் உங்கள் நல்ல செய்கைகளையும்,எதிர்பாராமல் இல்லாதார்க்கு கொடுத்து வாழவைத்த வள்ளல் குணத்தையும் நினைத்து மறக்கவேமுடியாமல் வாழ்ந்து வருகிறோம் மன்னவா*

உங்களைவைத்து பல்லாயிரம்கோடி சம்பாதித்தவர்களுக்கும் சம்பாதித்துகொண்டிருப்பவர்களுக்கும் எந்தவிதத்திலும் ஜால்ரா போடாமல், எங்கள் தலைவன் காட்டிய வழியில் உங்கள் நினைவோடு உங்களை மட்டுமே தலைவனாக ஏற்று உங்கள் நல்ல கருத்துக்களை,வழிமுறைகளை மட்டுமே பின்பற்றி நீங்கள்கூறியதுபோல் எங்கள் உழைப்பில் (நன்றியில்லாமல் வாழ்ந்த, வாழ்ந்துகொன்டிருக்கிறவர்கள் மத்தியில் )வாழும் நாங்கள் மட்டுமின்றி,, உங்கள்வழி இன்னும் பலதலமுறைகளையும் வாழவைக்கும் என்பதுமட்டும் எவராலும் மறுக்கவே முடியாது.
இந்த உலகத்தில் நிறந்தர புகழுக்கு சொந்தகாரர் ஒருவர் உண்டென்றால் அது நீங்கள் மட்டுமே.ஒருசிலர் குறைகூறினால் அவர்கள் மனிதனாக வாழ்வதற்கே தகுதியில்லாதவர்கள்.
மான்புகெட்டவர்களை பின்பற்றிய நன்றிகெட்டவர்கள் உங்கள் புகழை மறைப்பதாக நினைக்கலாம்.நீங்கள் ஆலமரம் .வற்றாத கடல்.வீசுகின்ற காற்று.
வேண்டுமென்றால் தலைவனுடைய வரலாற்றை தெரியாதவர்கள் ஒருமுறைபடித்துபாருங்கள்.உங்களுக்கு ஒருவித மயக்கமே வரும்.பின்னர் நீங்களும் எங்கள் தலைவனின் மெய்சிலிர்க்கவைக்கும் புகழை தானாகவே எடுத்துறைப்பீர்கள் .
தலைவா உலகமே உங்கள்புகழை எண்ணி எண்ணி தினமும் வியக்கிறது, வியர்க்கிறது. தகுதியேயில்லாதவர்களெல்லாம் பிரதமர், ஜனாதிபதி பதவியை குறிவைத்தார்கள்.எல்லா தகுதியுமுள்ள மேதை நீங்கள் தமிழ்நாட்டை மட்டுமே, தமிழையே நேசித்தீர்கள்.
உங்கள் மேல் உயர்ந்த எண்ணம்கொண்ட பல கோடி உண்மை பிரியர்களில் நானும் ஒருவன் என்று பெருமை பீற்றிக்கொள்ளும்
என்றும் உங்கள்
N RGM
அனைவர்க்கும் மேதின நல்வாழ்த்துக்கள்......... Thanks.........

suharaam63783
1st May 2020, 10:10 AM
நமது தங்க தலைவரின் ரசிகர்கள் / பக்தர்கள் அனைவருக்கும் புரட்சி தலைவரின் ஆசியுடன் இனிய காலை வணக்கம் நண்பர்களே,!

அடிமைப் பெண் - 01-05-1969

அடிமைப் பெண் 1969 ஆம்
ஆண்டு இதே தொழிலாளர் தினத்தில் ( மே 1 -ஆம் ) வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நடிகர் எம். ஜி. இராமச்சந்திரன் தானே தயாரித்த இத்திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாஇருவருமே இரட்டை வேடத்தில் நடித்திருப்பதோடு, ஜெயலலிதா சொந்தக்குரலில் பாடியும் இருக்கிறார்.

அடிமைப் பெண்:-
இயக்குனர் : கே.சங்கர்
தயாரிப்பு : எம் ஜி ஆர் பிக்சர்ஸ்
கதை : எம் ஜி ஆர் பிக்சர்ஸ்
நடிப்பு : எம். ஜி. இராமச்சந்திரன்,
ஜெயலலிதா, சோ , சந்திரபாபு
S.A. அசோகன் , R.S. மனோகர் ,
ஜோதிலட்சுமி , பண்டரிபாய் ,
ஜஸ்டின் , பேபிராணி , ராஜசிரி
ஒளிப்பதிவு : ராமமூர்த்தி
வசனம் : சொர்ணம்
இசை : K.V.மகாதேவன்
பாடல் : வாலி, சோமூ, புலமைப்பித்தன்
வெளியீடு : 01.05.1969

கதைச்சுருக்கம் :-

வேங்கைமலை ராணியின் மீது தவறுதலாக நடக்க முயன்ற பொழுது கால்கள் வெட்டப்படும் செங்கோடன் சூரக்கோட்டை ராஜா ஆவான். இவன் தன் மனைவி மீது தவறுதலாக நடக்க முயற்சித்தான் என்ற கூற்றினால் அவனுடன் போர் புரிய வருகின்றான் போரில் வெற்றியும் பெறுகின்றான் வேங்கைமலை ராஜா (எம்.ஜி.ஆர்). ஆனால் நயவஞ்சக முறையில் அவனைக் கொலை செய்யும் செங்கோடன் பின்னர் அவன் நாட்டில் வாழும் பெண்கள் அனைவரையும் அடிமைப் படுத்த உத்தரவு பிறப்பிக்கின்றான். இச்செய்தியைக் கேட்டு அறியும் வேங்கையன்,தாயார்தனது மகனை செங்கோடன் கையில் பறிகொடுத்து தலைமறைவான இடத்தில் வாழ்ந்து வருகின்றார். வேங்கையனும் சிறுவயது முதல் சிறையில் அடைக்கப்பட்டு உலகமறியாது வாழ்கின்றான். காட்டுவாசி போலவே மாறிவும் வேங்கையனை வேங்கைமலையினைச் சேர்ந்தவனால் காப்பாற்றப்படுகின்றான். பின்னர் ஜீவா (ஜெயலலிதா) என்ற பெண்ணால் வளர்க்கப்படுகின்றான் வேங்கையன். அவளிடன் பேச, போர் செய்ய மற்றும் பல விடயங்களைக் கற்றுக் கொள்ளும் வேங்கையன் தனது தாயாரையும் சந்திக்கின்றான். தன் மகனை முதலில் சந்திக்க மறுக்கும் வேங்கையனின் தாயார் பின்னர் வேங்கையன் அடிமையாகவிருந்த பெண்களை விடுவித்தபின்னர் அவனைச் சந்திக்கின்றார். இச்சமயம் ஜீவா போன்றொரு பெண் வேறொரு பகுதிக்கு ராணியாகவிருப்பதைக் காணும் வேங்கையன் திகைப்படைகின்றான். அவளும் இவன் மீது காதல் கொள்கின்றாள். ஆனால் ஜீவாவையே காதலிக்கும் வேங்கையன் அப்பெண்ணை ஏமாற்றி தன் நாடுதிரும்புகின்றான். அச்சமயம் பார்த்து செங்கோடனுக்கு உதவி புரியும் அந்த ராணி தன்னை ஏமாற்றியதற்காக வேங்கையனை பழிவாங்குவதற்கு முயற்சி செய்யும் சமயம் ஜீவா தனது தோழி என்பதனைத் தெரிந்து கொள்கின்றாள். இச்சமயம் பார்த்து வேங்கையனின் தாயாரைக் கடத்திச் செல்லும் செங்கோடனிடமிருந்து தன் தாயை மீட்டெடுத்து செங்கோடனைக் கொலை செய்கின்றான் வேங்கையன். அதே சமயம் ஜீவாவைக் கொலை செய்ய முயலும் பெண்ணான வேங்கையனை அடைய விரும்பிய ராணி தவறுதலாகத் தாக்கப்பட்டு கொலையும் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

புகழ்பெற்ற பாடல் : -
@ . ஆயிரம் நிலவே வா -
@. தாயில்லாமல் நானில்லை
@. காலத்தை வென்றவன் நீ
@. ஏமாற்றதே.. ஏமாற்றதே..
@. உன்னை பார்த்து இந்த
@. அம்மா என்றால் அன்பு

சிறப்பு :
@. வெளியானது தொழிலாளர் தினத்தில்
@ புரட்சி நடிகர் நடித்த 102 வது படம்
@. புரட்சி நடிகர் கதாநாயகனாக வலம் வந்த 82-வது படம்.
@. புரட்சி நடிகர் 2 வேடத்தில் பங்கு கொண்ட 7-வது படைப்பு
@. மக்கள் திலகத்துடன் ஜெயலலிதா நடித்த 17-வது படம்
@. தலைவரின் 11-வது வண்ண படம்
@. மக்கள் திலகத்துடன் ராஜசிரி நடித்த 4-வது படம்.
@. மக்கள் திலகத்துடன் K.V.மகாதோவன் இசை அமைத்த 22-வது படம்
@. அதிகமான இடங்களில் வெளிப்புற படப்பிடிப்பு நடத்த பட்ட படம்
@. K.சங்கர் தலைவருக்க இயக்கிய 5-வது படம்.
@ வெள்ளி விழா படம் 25-வாரம் - மதுரை சிந்தாமணி
@. தொழிலாளர் தினத்தில் வந்த ஒரேயொரு தலைவர் படம்.
@. அதிகமான பொருட்செலவில் உருவானது

நன்றி.. B.S.Raju, Urimaikural
என்.வேலாயுதன்
திருவனந்தபுரம்........ Thanks.........

suharaam63783
1st May 2020, 10:21 AM
சித்திரச் சோலைகளே!
உமை நன்கு திருத்த இப்பாரினிலே
முன்னர் எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ!
உங்கள் வேரினிலே

ஆர்த்திடும் யந்திரக் கூட்டங்களே!
உங்கள் ஆதி அந்தம் சொல்லவோ?
நீங்கள் ஊர்த்தொழிலாளர் உழைத்த உழைப்பில்
உதித்தது மெய் அல்லவோ?

ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நான் ஒரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின் மேலே
அனைவரும் எனது கூட்டாளி

இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழும்
இலக்கணம் படித்தவன் தொழிலாளி
உருக்கு போன்ற தான் கரத்தையே நம்பி
ஓங்கி நிற்பவன் தொழிலாளி
*******

நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே - இந்த
நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே...

" உழைக்கும் கைகளே.. உருவாக்கும் கைகளே.."

போன்ற பாடல்களின் வழியாக.. தன்னுடைய திரைப்படங்களில் உழைக்கும் மக்களின் மேன்மையை புரட்சித்தலைவர் உயர்த்தினார்.. இன்றைக்கும் இந்தப் பாடல்களை கேட்கும் போது உழைக்கும்
தொழிலாளிக்கு வாழ்த்துகள் சொல்லி ஒரு சல்யூட் அடிக்க ஆசைப்படுவோம்.

நாட்டின் மூலதனத்தை விட தொழிலாளியின் சக்தியே வீரியமானது. அதனை நன்றியோடு எண்ணிப் பார்க்க வேண்டும். வேர்வை நிலத்தில் பட உழைக்கும் தொழிலாளி இல்லையென்றால் உலகில்
எந்தப் பராக்கிரமங்களும் கிடையாது.

எப்படித் தொழிலாளர்களை மேதினத்தில் நினைத்துப் பார்க்கின்றோமோ, அதுபோல விளைநிலத்தில் பாடுபடும் விவசாயிகளைக் கொண்டாட வருடத்தின் 365நாட்களில் ஒரு நாள் கூட கிடையாது.

பாடுபடும் விவசாயிகளைப் பற்றி எண்ணும் போது பட்டுக்கோட்டைக் கவிஞன் சொன்னது போல, காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும் தானே மிச்சம் என்ற வரிகள் தான் நினைவுக்கு வருகின்றது.

கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி .... என்று பாடல்களில் உழவனைச் சிறப்பித்து சொல்லப்படுகிறது..
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்,
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்றார் அய்யன் வள்ளுவர்.

பாடல்களால் விவசாயத்தைச் சிறப்பிப்பது ஒருபுறம் இருந்தாலும் தங்கள் உழவுத் தொழிலை கொண்டாடுகின்ற தைத்திங்களை எல்லோரும் கொண்டாடினாலும், உழைக்கும் தொழிலாளர்களுக்கு, தங்கள் உழைப்பை, உழைப்பின் உன்னதத்தை மே 1-ம் நாளில் சிறப்பித்துக் கொண்டாடுவது போல,
நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளுக்கும் தாங்கள் படுகின்ற பாட்டைப் பாடுகின்ற வகையில், உழவர் தினம் என்று வருடத்தில் ஒர்நாள் சர்வதேச அளவில் அறிவிக்கப்பட வேண்டும்.

இது விவசாயத்தையும், விவசாயத் தொழிலாளிகளையும் சிறப்பிக்கின்ற முக்கிய நடவடிக்கையாக அமையும்...
அனைவருக்கும் இனிய மேதின வாழ்த்துக்கள் ...!.......... Thanks.........

suharaam63783
1st May 2020, 10:25 AM
ராஜாதி ராஜா... ரஜினிகாந்த்.....வேல்..சூரியா.... சட்டம் என்கையில்... கமல்...வாணிராணி.. வாணி ஸ்ரீ .., வந்தாளே மகராசி.. ஜெயலலிதா... தங்கமடி தங்கம் அம்பிகா... இத்தனை படங்கள் ... "எங்க வீட்டு பிள்ளை" கதையின் மூலக்கரு........ Thanks...

suharaam63783
1st May 2020, 01:16 PM
எங்க வீட்டு பிள்ளை படத்தை கிட்டத்தட்ட 4 தடவை பார்த்து விட்டேன். அதோடு நில்லாமல் ஒரு 40 , 50 பேரிடமாவது கதையை சொல்லியிருப்பேன். நண்பர்கள் சேர்ந்து விட்டால் போதும் விளையாட்டை முடித்துவிட்டு அரட்டை அடிக்க ஆரம்பித்து விடுவோம். அப்போது எங்க வீட்டு பிள்ளையில் வரும் ஒவ்வொரு காட்சியாக சொல்லி பேசி மகிழ்வோம்.

அப்படி பேசிக்கொண்டிருக்கையில் ஒருநாள் எம்ஜிஆர் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு காசு கொடுக்காமல் சென்று விடுவாரே, அவரை மாதிரி சாப்பிட்டு விட்டு தைரியமாக காசு கொடுக்காமல் வரமுடியுமா? என்று எங்களுக்குள் சவால் எழுந்தது.
உடனே நான் இதென்னடா பிரமாதம் நான் செய்கிறேண்டானு சொல்லிட்டேன். எல்லோரும் உடனே சம்மதித்து விட்டு சரிடா! நீ செய்டா! அப்படி செஞ்சுட்டா உன்னையும் எம்ஜிஆர் மாதிரி தைரியமானவன்னு ஒத்துகொள்வோம் என்றனர்.

4,5 நாட்கள் ஆன பிறகு டேய் இவன் பயந்துட்டான். இவன் ரெளடி எம்ஜிஆர் கிடையாது.கோழை எம்ஜிஆர் என்று என்னை அழைக்க ஆரம்பித்தார்கள். உடனே எனக்கு ஆவேசம் வந்து விட்டது. உடனே ஒரு திட்டம் மனதுக்குள் தோன்றியது.
நாம நாலு பேரும் ஹோட்டலுக்கு போவோம். சாப்பிட்டு முடித்தவுடன் சர்வர் பில் தரும்போது தனித்தனி பில் கேட்போம். சர்வர் தந்தவுடன் நீங்கள் சர்வர் பார்க்கும் போதே அத்தனை பில்லையும் ஏங்கிட்ட குடுத்துட்டு நீங்க வெளியே போய் விடுங்கள். நான் மூன்று பில்லை மறைத்து வைத்து விட்டு என் பில்லை மட்டும் கட்டி விட்டு வருகிறேன் என்றேன்.
எல்லோரும் பலே நல்ல ஐடியாவாக இருக்கிறதே என்று என்னை பாராட்டினார்கள். ஒன்றை மறந்து விட்டோம். ஹோட்டலுக்கு சென்று சாப்பிடும் வயது எங்களில் யாருக்கும் கிடையாது.அனைவருடைய பார்வையும் எங்கள் மீதுதான் இருக்கும் என்பதை நாங்கள் நினைக்கவில்லை.

சரி அதற்கான ஹோட்டலை தேர்ந்தெடுக்க வேண்டுமே! என்று ஹோட்டலை தேடினோம். அந்த காலகட்டத்தில் சாதாரண ஹோட்டல்தான் அதிகமிருக்கும். ஒருவர் அல்லது இருவர் மட்டுமே அமர்ந்து சாப்பிடுவார்கள். அங்கெல்லாம் சென்றால் நாம் மாட்டிக் கொள்வோம். அங்கெல்லாம் செல்லாமல் காரனேஷன் தியேட்டர் அருகே சரவண பவ என்ற ஹோட்டலை தேர்ந்தெடுத்தோம். படம் விடுகிற வேளையில் கொஞ்சம் கூட்டம் அதிகமாக இருக்கும். அந்த நேரம் பார்த்து நுழைந்து விடுவோம்.

2,3 நாள் நோட்டம் விட்டதில் திருப்தியான அளவுக்கு கூட்டம் இல்லை. ஒரு நாள் வெள்ளிக்கிழமை புதிய படம் போட்டதால் படத்துக்கு கூட்டம் சற்று அதிகமாக காணப்பட்டது. ஹோட்டலிலும் கூட்டம் அதிகமாக இருந்ததால் நாங்கள் நால்வரும் ஹோட்டலில் நுழைந்து விட்டோம். நால்வரும் ஒரே டேபிளில் அமர்ந்து சாப்பிட்டோம்.சாப்பாட்டில் கவனம் செல்லவில்லை. எப்படி காரியத்தை வெற்றிகரமாக முடிப்பது என்ற எண்ணத்தில் இருந்ததால் மனம் படபடவென அடித்துக் கொண்டிருந்தது. எங்கள் நாலு பேருக்கும் சேர்த்து மொத்தம் ₹2 தான் வந்தது.

உடனே சர்வரை கூப்பிட்டு தனித்தனி பில்லாக கொண்டு வா என்றேன். அவனும் ஆளுக்கு 50 பைசானு தனித்தனி பில்லாக கொடுத்து விட்டு சென்று விட்டான். அடுத்த டேபிளுக்கு ஆள் வரும்வரை சர்வர் கல்லாவுக்கு எதிரேதான் நிற்பான். அதுவரை மெதுவாக சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். மூவரின் பில்லை நான் வாங்குவதை சர்வர் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு அங்கேயே நின்றான். திடீரென்று அடுத்த டேபிளுக்கு 4 பேர் வந்து அமர்ந்து ரொம்ப அவசரம் படம் போட்டு விடுவான் சீக்கிரம் ஆளுக்கு 2 தோசை போட்டு கையோடு எடுத்துட்டு வா என்றதும் சர்வர் வேகமாக தண்ணி எடுத்து வைத்து விட்டு சமையல் கட்டுக்குள் நுழைந்தவுடன் அவசரமாக இலையை எடுத்து போட்டு விட்டு கவுண்டருக்கு போய் 50 பைசா பில்லை காண்பித்து காசை கொடுத்து விட்டு கிளம்பினேன்.தம்பி உன் கூட வந்தவங்களை எங்கே? என்று கேட்க வெளியே நிக்கிறாங்கனு சொல்லிட்டு திரும்பி பார்க்காமலே நடந்து, நடந்து என்ன ஒட்டமும் நடையுமாக சென்று விட்டேன்.

இதை என் உடன்பிறந்தவர்களிடம் சொல்லி பெருமைப்பட்டு கொண்டிருந்தேன்.
அதில் ஒருவன் என் தந்தையிடம் போட்டுக்கொடுத்து விட்டான். என் தந்தை என்னை கூப்பிட்டார்கள். விளையாடிக் கொண்டிருந்த நான் என் தந்தை அழைத்ததும் என்னப்பா! என்று தந்தையிடம் சென்றேன். டேய் பரவாயில்லைடா நீ பெரிய சாமர்த்தியசாலி எப்படிடா ஏமாற்றினாய் என்று கேட்டவுடன் ஆர்வம் தாங்காமல் அத்தனையும் மிகவும் பெருமையாக சொல்லி முடிப்பதற்குள் ஒரே மிதிதான். தள்ளிப்போய் விழுந்தேன். நான் அந்த பகுதிக்கு அடிக்கடி போகிறவன். எனக்கு என்று ஒரு கெளரவம் இருக்கு நீ அதை கெடுத்திருவே போல இருக்குனு சொல்லிட்டு இனிமே இப்படி ஏதாவது கேள்விப்பட்டேன் உனக்கு அன்றைக்கே சமாதிதானு சொல்லிட்டு போயிட்டாரு. அதோடு அந்த எண்ணங்கள் மாறி விட்டது.
அப்பறம்தான் படத்தை நினைத்து பார்க்கையில் தலைவர் சொல்வது நினைவுக்கு வந்தது. சே! சாப்பிட்டு விட்டு இப்படி காசு கொடுக்காம வந்துட்டோமே! வெட்கமா இல்லை! எப்படியும் இந்த தாயத்தை விற்றாவது காசை கொடுத்திருவோம்னு சொன்னது நினைவுக்கு வந்தது.

இரண்டு நாள் கழித்து என் தந்தை அம்மாவிடம் பேசியதை கேட்ட போதுதான் தெரிந்தது அந்த ₹1/50 பைசாவையும் சேர்த்து கொடுத்தார்களாம் ஆனால் ஹோட்டல்காரர் வாங்க மறுத்து விட்டாராம். அதற்கு முதலாளி, அது நம்ம தம்பியா தெரியாமல் போய் விட்டதே! முன்னமே தெரிந்திருந்தால் நல்லா சாப்பிட வைத்து அனுப்பியிருப்போமே! என்றாராம். என் தந்தையை வைத்து ஒரு நாளைக்கு 40 காபி, டீக்கு மேல் விற்பனை நடக்குமாம்.

இருவரும் நல்ல நண்பர்களாம். அதற்கு என் தந்தை சொன்னார்கள் நீ. பிடிபட்டவுடன்
உன்னை யாரென்று எல்லாம் விசாரிக்க மாட்டார்கள் ஆளாளுக்கு தர்மஅடி கொடுத்தபின்புதான் விசாரிப்பார்கள். அதற்குள் அந்த பகுதி முழுவதும் தெரிந்து விடும். இன்னார் மகன் என்று என் பெயரைத்தான் கேவலமாக பேசுவார்கள் என்றார். அதுவும் எனக்கு நியாயமாக பட்டது. அன்றிலிருந்து. தம்பி தங்கக்கம்பியாக மாறி விட்டேன்........தோழர் S K அவர்களின் நீண்ட பதிவு..... Thanks...

suharaam63783
1st May 2020, 01:35 PM
#தொழிலாளி

தொழிலாளிகளைப் பற்றி உலகத்தில் எத்தனையோ தலைவர்களும், அறிஞர்களும் சொல்லியிருக்கிறார்கள்....ஏன் சில திரைப்படங்களில் கூட தொழிலாளர்களைப் போற்றியுள்ளார்கள்...

ஆயிரம் பேர் போற்றியிருந்தாலும்...
நம்ம வாத்தியார், தொழிலாளர்களைப் போற்றியதற்கு ஈடாகுமா!!!

ஏனெனில் மேற்குறிப்பிட்ட யாவரும் சொல்லி மட்டும் தான் இருக்கின்றார்கள்...அறிவுரை சொல்வது எளிது...அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்

ஆனால் #அடிமட்டத்தொழிலாளியாக இருந்து , தன் உழைப்பினால் தானும் உயர்ந்து, திரைப்பட துறையில் சிறிய அளவில் நடிகராக நடிக்க தொடங்கி கடும் உழைப்பினால் முன்னேறி முதல் ரேங்க் உச்ச நடிகர் அந்தஸ்தில் தொடர்ந்து சினிமாவில் இருந்து விலகும் வரையிலும், தம்மை சார்ந்தவர்களையும் வாழவைத்து, ஒரு மாநிலத்திற்கே முதல்வராய்த் திகழ்ந்து...நமக்கெல்லாம் இதயதெய்வமாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற...

தொழிலாளர் வர்க்கத்திற்கே என்றென்றும் பெருமை சேர்த்துக்கொண்டிருக்கும்...

"#வாத்தியாரின் #பாதகமலங்களுக்கு இக்காணொளியை" சமர்ப்பிக்கின்றேன்...

உண்மையான தொழிலாளிக்குத்தான் உண்மையான தொழிலாளர்களின் பிரச்சனை தெரியும்.

வாத்தியார் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் #வெறும் #நடிப்பல்ல...எவ்வளவு ஆத்மார்த்தமானது என்பதை இக்காட்சிகளில் அறிந்துகொள்ளலாம்...எனக்குக் கண்ணீரே வந்துவிட்டது......... Thanks.........

suharaam63783
1st May 2020, 01:37 PM
"எம்.ஜி.ஆர் ஒரு சகாப்தம்"

" மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மனிதநேயம்"

1977 இல் எம்.ஜி.ஆர் தேர்தலில் நின்று வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவி ஏற்றிருந்த சமயம். எம்.ஜி.ஆருக்கு எல்லா மட்டங்களிலும் ரசிகர்கள் உண்டு. எம்.ஜி.ஆரின் உயர்மட்ட விசிறிகளில் குறிப்பிடத்தக்கவர் கர்நாடக மாநிலத்தில் அப்போது முதலமைச்சராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குண்டுராவ்.

பெங்களூரில் உள்ள தன் வீட்டுக்கு வரவேண்டும் என்று குண்டுராவ் எப்போதும் அழைத்துக்கொண்டே இருப்பார். குண்டுராவின் பிறந்த நாளன்று, பெங்களூருக்கு நேரில் சென்று, அவரை வாழ்த்தவேண்டும் என்று முடிவு செய்தார் எம்.ஜி.ஆர்.

பிற்பகலில் TMX 4777 என்ற எண்ணுள்ள பச்சை அம்பாசிடர் காரில் கிளம்பினார் எம்.ஜி.ஆர். அவருடன், அவரது மனைவி ஜானகி அம்மா, ஜானகி அம்மாவின் சகோதரர் நாராயணனின் மகள் லதா இருவரும் வந்தனர். மற்றொரு வேனில் நாங்கள் அவர் வண்டியை பின்தொடர்ந்தோம்.

பெங்களூரை அடைந்ததும் எம்.ஜி.ஆரும், அவரது குடும்பத்தினரும் அங்கு 'வெஸ்ட் எண்ட்' என்கிற ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கினர். நாங்கள் அதற்க்கு அருகே வேறொரு ஹோட்டலில் தங்கினோம்.

மறுநாள் காலை ஒன்பது மணிக்கு கர்நாடக முதல்வர் குண்டுராவ் வீட்டுக்கு சென்றோம். பெரிய பார்சல் ஒன்றை அவருக்கு பரிசாக அளித்தார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரின் உதவியாளர் ஐ.ஏ.எஸ் அதிகாரி பரமசிவம், செக்யுரிட்டி ஆபிசர் கண்ணுசாமி உடன் இருந்தனர். பால் பாயாசத்தோடு எங்கள் அனைவருக்கும் நன்றாக சைவ சாப்பாடு அளிக்கப்பட்டது. சாஷ்டாங்கமாக எம்.ஜி.ஆரின் காலில் விழுந்து நமஸ்கரித்தார் குண்டு ராவ். அவரை மனதார வாழ்த்தினார் எம்.ஜி.ஆர்.
பத்து மணிக்கு மேல் அங்கிருந்து கிளம்பினோம். அப்போது எம்.ஜி.ஆர் தான் வரும் அம்பாசிடர் காரில் என்னை வரச் சொன்னார். 11 மணிக்கு மேல் ஓசூர் வரும்போது நல்ல வெயில். காரில் பயணம் செய்யும்போது எம்.கே.தியாகராஜ பாகவதர் படிய பாடல்களை எப்போதும் ரசித்துக் கேட்பார் எம்.ஜி.ஆர்.

ஓசூர் தாண்டியிருப்போம். இடது பக்கம் நெடுஞ்சாலை ஓரத்தில் வயதான கிழவி மற்றும் பத்து வயது சிறுமி இருவரும் தலையில் பெரிய புல்கட்டை சுமந்தவாறே காலில் செருப்பு இல்லாமல் வெயிலில் தவித்துக் கொண்டிருந்தனர். கொஞ்ச நேரம் நடந்து, பிறகு வெயிலுக்காக ஓரமாக நின்று மீண்டும் நடை.

'ராமசாமி, காரை நிப்பாட்டு...' என்று டிரைவர் ராமசாமியிடம் சொன்னார் எம்.ஜி.ஆர். 'ராமு, போய் அவங்களை விசாரித்துவிட்டு வா...' என்றார் என்னிடம். ராமகிருஷ்ணன் என்ற என் பெயரை பல நேரத்தில் 'ராமு' என்று சுருக்கியே அவர் கூப்பிடுவார்.

'கால் சுடுதய்யா நிற்கிறோம்...' என்றார் அந்தக் கிழவி. 'தூரத்திலிருந்து புல்லை அறுத்து, கட்டி சுமந்து சென்று விற்றால் தலைச்சுமைக்கு பன்னிரெண்டு அணா கிடைக்கும்...' என்றார். எம்.ஜி.ஆரிடம் சொன்னேன்.

தன் மனைவி ஜானகி அம்மா, லதா இருவரிடம் அவர்கள் அணிந்திருந்த செருப்புகளைக் கழற்றச் சொன்னார். காரில் பயணம் செய்யும்போது எப்போதும் ஒரு கருப்பு பேட்டியில் பணம் வைத்திருப்பார். அதிலிருந்து ஆயிரம் ரூபாயை எடுத்து, 'அவர்களிடம் கொடு...' என்றார்.

இரு ஜோடி செருப்புகளையும் எடுத்துக் கொண்டுபோய் அவர்களிடம் கொடுத்து, எம்.ஜி.ஆர் கொடுக்கச் சொன்னார் என்று ஆயிரம் ரூபாயையும் கொடுத்தேன். அப்படியே நெகிழ்ந்து போயினர். எதிர்பாராமல் பணம் கிடைத்ததில் அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. நன்றிகூட சொல்லாமல் அப்படியே நின்றனர்.

காரின் கண்ணாடியை இறக்கி வணக்கம் தெரிவித்தார் எம்.ஜி.ஆர். அங்கிருந்து நாங்கள் புறப்பட்டோம்.

தன்னிடம் உதவி கேட்டவருக்கு மட்டும் என்று இல்லாமல், உதவி கேட்காதவர்களுக்கும் குறிப்பறிந்து உதவி செய்வதுதான் எம்.ஜி.ஆரின் குணம். இந்த மனிதநேயம் தான் அவரை உயரத்தில் வைத்தது. தனக்கு உதவியவர் தமிழக முதல்வர் என்று அந்த கிழவிக்குத் தெரியுமா, தெரியாதா? எனக்குத் தெரியவில்லை. எந்தப் பிரதிபலனும் பாராமல் செய்யப்பட்ட மனிதநேய செயல் அது.
Posted : M.G.Nagarajan
30 April 2020 2:13 AM
தகவல்களுக்கு நன்றி: விகடன் பிரசுரம்...... Thanks........

suharaam63783
1st May 2020, 01:41 PM
வாத்தியார் தன் தாயிடம் பேசும்பொழுது நான் பார்க்கிறது நம் வாத்தியார்தான் ஏனென்றால் தாய் பாசத்தை கண்டேன் அந்தத் தாய் உள்ளத்தை அவர் மூலம் தெரியும் பொழுது அதை பார்த்தவுடன் கண்ணீர்தான் பெருக்கெடுக்கிறது 💪💪💪💪👌👌👌👌 அந்தத் தாய் பாசம் ஒரு துடிப்போடு பிள்ளைகளை கே உரித்தானது அதை தலைவர் அந்த இடத்தில் உண்மையாகவே வாழ்ந்து காட்டினார் அருமை அருமை மிக மிக அருமை மே தினத்தில் இப்படி ஒரு பதிவு போட்ட உங்களுக்கு மனதார வாழ்த்துக்கள்...... Thanks...

suharaam63783
1st May 2020, 01:43 PM
தொழிலாளர் தினத்தன்று மிக சரியான காட்சிகளை பதிவிட்டு இருக்கிறீர்கள். அருமை!
இந்த மாதிரி இன்று சொல்ல கூடியவர்கள் யாருமில்லை என்பதை உணரும்போது தலைவரின் அருமை மேலும் மேலும் தெரிகிறது.......... Thanks...

suharaam63783
1st May 2020, 01:45 PM
மே மாதம் 1ம் தேதி ..1996 அன்று நம் நிரந்தர தலைவர். புரட்சித் தலைவரின் மனைவி..
முன்னாள் முதலமைச்சர்.திருமதி*.வி.என்.ஜானகி அம்மையார் அவர்கள்..ராமச்சந்திரா மருத்துவமனையில் ஆஞ்ஜியோ பிளாஸ்டி .. Angioplasty..கிளிப் பரிசோதனைக்கு காத்..லேப் புக்கு வந்தபோது... அங்கு A6 ஆபரேஷன் தியேட்டர் செவிலியர்கள் தலைமை பொறுப்பில் ( Nursing Manager & Lecturer for operating theatre technology ..phycisian assistance group..of Deemed University Sri.Ramachandra Medical College and hospital.. இருந்தேன்.. .. காத் லேபில் cath lab இருந்து என் தோழி காயத்ரி..in charge..cath lab.. என்னை அழைத்ததன் பேரில் திருமதி.ஜானகி அம்மா அவர்களுக்கு அருகில் இருந்து அவர்களுடன் பேசவும் உறுதுணையாக இருந்து நர்சிங் சேவை செய்யும் பாக்கியமும் பெற்றேன்.. நம் புரட்சித் தலைவருக்கும் என் 23 வயதில் ..அப்பல்லோ மருத்துவமனையில் சேவை செய்த நினைவுகளையும் ஜானகி அம்மாவுடன் பகிர்ந்துக் கொண்டேன்.. தலைவருக்கும்..அவரது இல்லத்தரசிக்கும்.. சேவை செய்யும் பாக்கியம் எத்தனை பேருக்கு கிடைத்திருக்கும்..!!!
இறைவனுக்கு நன்றி..
மே 1 என்றுமே எனக்கு ஜானகி அம்மாவை என் நினைவுக்கு கொண்டு வரும்..
வணக்கம் அன்புள்ளங்களே....... Thanks...

suharaam63783
1st May 2020, 01:49 PM
#யாருக்கு கிடைக்கும் இந்த #அதிர்ஷ்டம் ..!!

1) #தமிழகத்தில் தேர்தல் மூலம் வெற்றி பெற்று #பெண் முதலமைச்சரை கொண்ட கட்சி #அஇஅதிமுகழகம்...

2) #தமிழகத்தில் மிக இளம் வயது முதல்வரை பெற்ற கட்சி #அஇஅதிமுகழகம்...

3) #தமிழகத்தில் முதலாவது பெரிய கட்சியும் #இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி #அஇஅதிமுகழகம்...

4) #மொத்தமுள்ள 10 மாநகராட்சிகளில் 10ம் வெற்றி பெற்ற ஒரே கட்சி #அஇஅதிமுகழகம்...

5) #தமிழ்நாட்டில்
சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலின் போது #தனித்து போட்டியிட்டு பிரம்மாண்ட வெற்றி பெற்ற ஒரே கட்சி #அஇஅதிமுகழகம்...

6) #இந்திய வரலாற்றில் ஒரு #இடைத்தேர்தலில் 1,50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்த கட்சி #அஇஅதிமுகழகம்...

7) #இந்தியாவிலேயே தலைமைக்கு கட்டுப்படுவது மட்டுமின்றி, மிகுந்த #விசுவாசம் நிறைந்த #தொண்டர்களை,
#தொழிலாளர்களையும் கொண்ட கட்சி #அஇஅதிமுகழகமே...

#அனைத்து_இந்திய_அண்ணா_திராவிட_முன்னேற்றக்_கழகம ் சார்பில் கழக நண்பர்கள் அனைவருக்கும் #மே 01 #தொழிலாளர் தின நல் #வாழ்த்துக்கள்...

இவன்...
#சேலம்_மாநகர்_மாவட்டம்.

அன்புடன்
மு #மன்சூர்யாசின்
சேலம் மாநகர் மாவட்ட துணை #செயலாளர் #சிறுபான்மையினர் நலப்பிரிவு......... Thanks...

suharaam63783
1st May 2020, 01:51 PM
தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றுரைத்த மகாகவி எப்போது வெற்றி பெறுகிறான்?,,வாடிய,வயிரை கண்டபோதெல்லாம் ஓடிசென்று காத்த வள்ளல் எம்ஜிஆர் முதலமைச்சர் ஆனபின்புதான்...... Thanks...

suharaam63783
1st May 2020, 01:53 PM
😍🌹உழைக்கும் வர்க்கமே - நம்
வாழ்வின் சொர்க்கம்..
😍🌹உழைப்பவர்களுக்காக பிறர்
உழைப்பில் வாழ்பவர்கள் கொண்டாடுகிறார்கள்.,
உழைப்பாளர் தினத்தை..!!
உழைப்பவர்கள் நாம் தானே
உலா வருவோம் ,
உள்ளத்தால் மகிழ்ந்து - வாருங்கள்...!!
😍🌹உழைக்க தெரிந்தவன் மனித சாதி..
😍🌹உழைக்க தெரியாதவன் இனத்தின் ஏமாளி..
😍🌹உழைப்பாளர்கள் உயரவும்..
😍🌹களிப்போடும் வாழவும்..
😍🌹வியர்வை சிந்தினால் ,
😍🌹வாழ்வு வைரமாய் மின்னிடும்...!!
😍🌹உடல் எடை குறைக்க நடக்கும்
கூட்டம் இருக்கையில்..
ஒருவேளை உணவிற்கு ஓடி உழைக்கும்
கூட்டமும் இருக்க தான் செய்கிறார்கள்..!!🌹😍
😍🌹தனக்கான ஆடையை உடுத்தி கொள்ள ,
அடுத்தவர் உதவி நாடுவோர் கூட்டம் பலர்..!!
தாம் ஆடையை தானே நெய்து உடுத்தும் ,
எம் நெசவாளர் கூட்டமும் சிலர்..!!🌹😍
😍🌹விண்ணின் கூரை பிளந்து..
😍🌹எதிர்வரும் தடையை மாய்த்து..
😍🌹சொல்லும் செயலும் ஒன்றினைந்து..
😍🌹உழைப்புடன் உறுதியும் சுமந்து..
😍🌹💪வரும் காலங்களில் - நம்
வாழ்வு செம்மையாய்
ஓங்கிட செய்வோம்..!!!💪🌹😍

😍🌹தர்மத்தை காக்கவே
தரணியில் மலர்ந்த - எங்கள்
தர்ம தேவன்..
😍🌹எம் இதயம் வணங்கும் ,
எங்கள் மன்னாதி மன்னன் துணை இருக்க
உள்ளத்தில் உறுதிக்கு ஓர் பஞ்சமா..!! ?
😍🌹நினைத்ததை முடிப்பவரை
நினைவில் பூஜித்தாலே - நாம்
நினைப்பது எல்லாம் வெற்றி தான்...!!!🌹😍
😍🌹என் அன்பு நெஞ்சங்களுக்கு எனது இதயப்பூர்வமான நல்வாழ்த்துகள்..🌹😍

😍🌹வாழ்வோம் மனம் மகிழ்ந்து..🌹😍

😍🌹🙏என்றும் நம் #புரட்சித்தலைவர் புகழ் ஓங்கி ஒலிக்கும்..!!🌹🙏😍

அன்பன்.,........
#தஞ்சை_சுபாஷ். 😍💪......... Thanks...

suharaam63783
1st May 2020, 02:02 PM
பத்திரிகையில் சேர்ந்தேன். தி.மு.கவிலிருந்து 1972இல் எம்.ஜி.ஆர் விலகினார். எம்.ஜி.ஆர் ரசிகனா யிருந்த நான், முரசொலியிலிருந்து விலகி அலை யோசையில் சேர்ந்தேன். அது, எம்.ஜி.ஆர் ஆதரவு இதழாக இருந்தது. அங்கிருந்தபோது பாலமுருகன் என்ற கதாசிரியரை பாடல் எழுத வாய்ப்பு கேட்டுச் சந்தித்தேன். அவர், டைரக்டர் பி.மாதவனிடம் அறிமுகப்படுத்தினார். மாதவன் தயாரித்த ‘பொண்ணுக்குத் தங்க மனசு’ படத்தில் “தஞ்சாவூர் சீமையிலே தாவி வந்தேன் பொன்னியம்மா’’ என்ற பாட்டை எழுதினேன்.
அதன்பிறகு எம்.ஜி.ஆருக்கு எதிரான செய்திகளை வெளியிட்ட அலையோசையி லிருந்து விலகினேன். அதுதெரிந்து, எம்.ஜி.ஆர் கூப்பிட்டார். “விஷயம் கேள்விப்பட்டேன். பணம் கொடுக்கிறேன். வாங்கிக்கங்க’’ என்றார். “பணம்வேண்டாம். வேலை கொடுங்க’’ என்றேன். வற்புறுத்தினார். “உங்க அன்பு போதும்’’ என்று மறுத்துவிட்டேன். அதன்பிறகு எம்.ஜி.ஆர் தாம் நடித்த படங்களில் எல்லாம் பாட்டெழுத வாய்ப்பளித்தார்.
‘உழைக்கும் கரங்கள்’ படத்தில் “கந்தனுக்கு மாலையிட்டாள் கானகத்து வள்ளிமயில்’’ என்ற பாட்டில் தொடங்கினேன். மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படம் வரைக்கும் தொடர்ந்து எழுதினேன்.
“இது நாட்டைக் காக்கும் கை – உன்
வீட்டைக் காக்கும் கை’’ என்ற பாடலை எம்.ஜி.ஆரே தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தினார். எம்.ஜி.ஆர் முதல்வரானதும் அமெரிக்கா நாட்டில் வெளிவரும் “வாஷிங்டன் போஸ்ட்’’ பத்திரிகை என்னையும் அந்தப் பாடலையும் குறிப்பிட்டு இத்தகைய பாடல்களைப் பாடி எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்தார் என எழுதியது. அவர் தம் சொந்தத் திறமையாலேயே ஆட்சிக்கு வந்தார். ராமருக்கு அணில்போல வேண்டுமானால் என் பங்கு இருக்கலாம்......முத்துலிங்கம்...... Thanks...

suharaam63783
1st May 2020, 02:11 PM
தான் ஆட்சி பீடத்தில் அமர்ந்த பின் ஏழைகளின் சிம்ம சொப்பனமான மிதிவண்டியில் இரண்டு பேர் செல்ல தடையை தகர்த்து எறிந்தார்
#புரட்சிதலைவர்
வகுப்பு வாரியமாக வேலை வாய்ப்பு வழங்குவதை அனைத்து பிரிவுகளிலும் ஏழை பணக்காரன் இருக்கிறான் ஆகையால் வேலைவாய்ப்பை வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவருக்கு முன்னுரிமை என்ற சட்ட மசோதாவை நிறை வேற்ற வந்தார் தலைவர் அப்போது எதிர்கட்சியான கருணாநிதி முழுக்க தடுத்து கடும் எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் ஜாதி கலவரத்தை தூண்டிய தால் அது நிறைவேறாமல் போனதை நினைத்து இரத்த கண்ணீர் வடித்தார் #மக்கள்திலகம்
ஏழைகளை பற்றியே சிந்தித்து ஆட்சி புரிந்த ஒரே தலைவர்
#எம்ஜிஆர்........ Thanks...

suharaam63783
1st May 2020, 02:32 PM
உழைப்பவன் வியர்வை காய்யும் முன் உழைப்பின் ஊதியத்தை கொடு
தன்னோடு பங்கேற்றவர் அனைவரின் ஊதியம் வழங்க பட்டதா என அறிந்த பின் தான் தன் ஊதியத்தை பெறுவார் படத்தை முடிப்பார் எம்ஜிஆர்
தொழிலாளிக்கே தன் ஸ்டுடியோ நடத்த கொடுத்தவர் எம்ஜிஆர்

தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்...... Thanks...

suharaam63783
1st May 2020, 02:34 PM
உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்

உழைப்பாளர் தினம் என்றால் மக்கள் திலகம் நினைவு இல்லாமலா?

தன் படங்கள் அனைத்திலும் உழைப்பவர் வாழ்வு மலரவும் உயரவும் வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்தவர் அதற்காகவே வாழ்ந்தவர்.

அவர் படங்களிலிருந்து சில வரிகள்.

1) தானே தயாரித்து இயக்கி நடித்த நாடோடி மன்னன் படத்தில்

உழைப்பதிலா உழைப்பைப் பெறுவதிலா இன்பம் உண்டாவதெங்கே சொல் என் தோழா
உழைப்பவரே உரிமை பெறுவதிலே இன்பம் உண்டாகும் என்றே சொல் என் தோழா

2) அடுத்து அதே படத்தில்
காடு வேளஞ்சசென்ன மச்சான் பாடலில்
"மாட உழைச்சவன் வாழ்கையிலே பசி வந்திடக் காரணம் என்ன மச்சான் அவன் தேடிய செல்வங்கள் வேற இடத்திலே சேர்வதனால் வரும் தொல்லையடி"

3) அதே படத்தில் சிரிப்பு நடிகர்களுக்கான பாடல்
பாடு பட்டா தன்னாலே பலன் இருக்குது தன்னாலே

4) அடுத்து அவர் தயாரித்து இயக்கி நடித்த உலகம் சுற்றும் வாலிபன் படத்தில்
சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே

5) அடுத்து அவர் இயக்கி நடித்த மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தில்
தாயகத்தின் சுந்தந்திரமே எங்கள் கொள்கை பாடலில்
ஒற்றுமையால் பகைவர்களை ஓட வைப்போம் உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்

6) அன்று வந்த மகாதேவி படத்தில் தாயத்து தாயத்து பாடலில்
உடம்ப வளைச்சி நல்லா உழைச்சு பாரப்பா உனக்கும் உலகத்துக்கும் நன்மை இருக்கு

7) அரசிளங்குமரி படத்தில் ஏற்றமுன்னா ஏற்றம் அதில் இருக்குது முன்னேற்றம் எல்லோரும் பாடு பட்டா இன்பம் விளையும் தோட்டம்..........
விதியை எண்ணி வீழ்ந்து கிடக்கும் வீணரெல்லாம் மாறனும் வேலை செய்ஞ்சா உயர்வோம் என்ற விபரம் மண்டையில் ஏறணும்

8) கன்னித்தாய் படத்தில் கேளம்மா சின்னப்பொண்ணு கேளு பாடலில்
ஏழை படும் பாடு அதில் எழுந்து நிக்குது வீடு அவன் இருப்பதுவும் படுப்பதுவும் குருவி வாழும் கூடு

9) படகோட்டி படத்தில்
உலகத்தின் தூக்கம் கலையாதோ உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ
உழைப்பவர் வாழ்கை உயராதோ

10) தொழிலாளி படத்தில்
ஆண்டவன் உலகத்தின் முதலாளி அவனுக்கு நான் ஒரு தொழிலாளி

11) நீரும் நெருப்பும் படத்தில் வரும் கடவுள் வாழ்த்துப் பாடும் பாடலில் ஊருக்காக உழைக்கும் கைகள் உயர்ந்திட வேண்டாமோ

இன்னும் சில பாடல்கள்

12) நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற பாடலில்
உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
13) உழைக்கும் கைகளே உருவாக்க்கும் கைகளே
14) கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி
15) ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
16) நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
17) ஒன்றே சொல்வான் ஒன்றே செய்வான் பாடலில்
18) ஆடும் நேரத்தில் ஆடிப் பாடுங்கள் ஆனாலும் உழைத்தே வாழுங்கள்
19) சித்திரச் சோலைகளே

இன்னும் நிறைய உள்ளது.

மக்கள் திலகம் பொன்மன செம்மல் இல்லாமல் மே தினம் எனும் உழைப்பாளர் தினத்தை நினைக்க முடியுமா?

நண்பர்களே விட்டுப் போனதைப் பதிவிடுங்கள்......... Thanks...

suharaam63783
1st May 2020, 03:37 PM
நானும் ஸ்முல் மற்றும் ஸ்டார் மேக்கர் ஆப்களில் மொத்தமாக 2300 பாடல்கள் பாடி விட்டேன்! அதில் "ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம்" என்ற குடியிருந்த கோயில் தலைவர் பாடலை பாடமுடியவேயில்லை! மிகவும் சிரமப்படுகிறேன்! குரல் சில இடங்களில் உச்ச ஸ்தாயி, சில இடங்களில் மூச்சடக்கி தம் கட்டவேண்டியுள்ளது! கண்ணருகில் பெண்மை குடியேற-வில் தொடங்கி உலகையே மறந்து விளையாடு உகுகு உகுகு உகுகு ஹோ என முடிக்கவேண்டும்! மூச்சு விடாமல் முடிக்கவேண்டும்! T.M.சௌந்தரராஜன் மிகவும் சிரமப்பட்டிருப்பார்! குரல் சில சமயம் பிசிருகிறது! மூச்சு போகிறது! சில சமயம் ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா சரியா வரவில்லை! இரண்டுமுறை பதிவு செய்து ட்ராப்ட்டில்(draft) சேமித்துள்ளேன்! எதற்கு சொல்கின்றேனெனில் தற்போது மூச்சுவிடாமல் பாடியது இது என அடிக்கடி பீலா விடுகிறார்கள்!நம் பாடக/ இசை வித்தகர்கள் எல்லாம் இப்படியா பீற்றிக் கொண்டார்கள்? எனது கணிப்பு:- ஒரு திறமையான வாய்ப்பாட்டு பாடகன் ஆகவேண்டும் என்றால் புரட்சித்தலைவனின் இந்த ஒரு பாடலை மட்டும் சாதனை செய்தால் போதும்! எப்படிப் பட்ட பாடலையும் பாடி விடலாம்!! பாடுவேன்! முடிப்பேன்! வெற்றி பெற்று உங்களுக்காக பதிவிடுவேன்! நம்பிக்கை இருக்கிறது. தலைவரை/ குரலழகரை/ மெல்லிசை மாமன்னரை வணங்கி எனக்கருள வேண்டும் என வேண்டிக்கொண்டு ஏகலைவனாகி இந்த பதிவை நிறைவு செய்கிறேன்...காலை வணக்கம்!...... Thanks SR

suharaam63783
1st May 2020, 03:42 PM
MGR Filmography (1962 Film 55) Poster

1962ஆம் ஆண்டு சித்திரைப் பிறப்பன்று எம்ஜியாருக்குப் புத்துயிர் கொடுக்க வெளியானது தாயைக் காத்த தனயன்.அதே ஆண்டு சுதந்திர தினத்தில் முத்திரைபதித்தது எம்ஜிஆரின் அடுத்த படமான குடும்ப தலைவன்.

எம்ஜியாரின் ஆஸ்தான தயாரிப்பாளரில் ஒருவரான சின்னப்பா தேவர் தயாரிப்பில் உருவான இப்படத்துக்கு வழக்கம்போல ஆரூர்தாசின் கதை வசனத்தில் கேவி மகாதேவன் இசையமைக்க, எம்ஏ திருமுகம் இயக்க, எம்ஜியார் படங்களில் தவறாது தோன்றும் சரோஜாதேவி, அசோகன், எம் ஆர் ராதா அனைவரும் நடித்தனர்.
மொத்தம் ஏழு பாடல்கள், ஏழும் ஹிட் ஆகின. மாறாதைய்யா மாறாது பாடலுக்கு கூலிங் கிளாஸ் அணிந்து அருமையாக இருந்தார்

வழக்கமான ஆக்ஷன் சீக்வன்ஸுகள் மட்டுமல்லாமல் எம்ஜியாருக்கும் அசோகனுக்கும் சரோஜா தேவிக்கும் இடையேயான கடைசி 15நிமிடங்ள் பல உணர்ச்சிகரமான காட்சிகளையும் கொண்டிருந்தது இந்தப் படம். எம்ஆர் ராதாவின் தந்தை வேடமும். பொய் சீதா(கதாநாயகி பெயர்) வேடமும் அதை அழகான சஸ்பென்ஸ்ஃபுல் த்ரில்லராகச் செய்திருந்ததும் எம்ஜிஆர் உண்மையான சீதாவை கண்டுபிடிப்பதும் படத்தின் வெயிட்டை அதிகரித்தன.
ஆக்ஷன், செண்டிமெண்ட், இசை போன்ற மசாலாக்களை எல்லாம் சரியான விகிதத்தில் சேர்த்து பர்ஃபெக்ட்லி பேக்கேஜ்ட் ஃபிலிம் என்பதற்கான உதாரணங்களில் இப்படமும் ஒன்றானது.120 நாட்கள் ஓடி வெற்றிபடமாகியதுடன் எம்.ஜிஆர்க்கு என்று குடும்ப செண்டிமெண்ட் உடன் கதைகள் எழுதபட்டன........ Thanks...

suharaam63783
1st May 2020, 04:36 PM
*வணக்கம்.*

*ஆண்டவன் உலகத்தின் முதலாளி அவனுக்கு நான் ஒரு தொழிலாளி...*

*கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி...*


*உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம் உண்டாவது எங்கே சொல் என் தோழா...*

*உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே உலகை புது முறையில் உண்டாக்கும் கைகளே...*

*ஓடி ஓடி உழைக்கனும் ஊருக்கெல்லாம் குடுக்கனும்...*

*உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள் உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்...*

*உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே...*

*நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே*
*இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே உழைக்கும் கரங்களே...*

*உழைப்பவரே உயர்ந்தவர்*
*மேதின வாழ்த்துகள்...*..........
💪🏻 🙏🏻........ Thanks...

suharaam63783
1st May 2020, 04:40 PM
கண்ணதாசன் வர்ணித்த ஆணழகன்...

சினிமாவில் பொதுவாக பெண்களின் அழகைத்தான் கவிஞர்கள் வர்ணிப்பார்கள்....

ஆண்களின் அழகையும் வர்ணிக்க முடியும் என்றால் அது மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு மட்டுமே பொருந்தும்...

‘குடும்பத் தலைவன்’ படத்தில் ‘கட்டான கட்டழகு கண்ணா, உன்னைக் காணாத பெண்ணும் ஒரு பெண்ணா?’

என்று எம்.ஜி.ஆரை வர்ணித்திருப்பார் கண்ணதாசன்...

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் அழகை, ஆளுமையை ‘நீதிக்குப் பின் பாசம்’ படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலில், நாயகி பாடுவது போல கண்ணதாசன் விவரித்திருப்பார். அந்த வரிகள்…

‘தேக்கு மரம் உடலைத் தந்தது

சின்ன யானை நடையைத் தந்தது

பூக்கள் எல்லாம் சிரிப்பை தந்தது

பொன்னல்லவோ நிறத்தை தந்தது’

இந்த வரிகளைப் படித்தாலே நினைவுக்கு வருபவர் எம்.ஜி.ஆராகத்தான் இருக்க முடியும்...

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த கண்ண தாசன் பாடல் ‘மன்னாதி மன்னன்’ படத்தில் அவர் எழுதிய ‘அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா...’பாடல்...

காரில் தலைவர் செல்லும்போது அவர் கேட்டு ரசிக்கும் பாடல்களில் இந்த பாடல் தவறாமல் இடம் பெறும்........ Thanks mr.Sendra Sigaram...

suharaam63783
1st May 2020, 05:55 PM
#சமூக நலத்திட்டங்களின் பிதாமகன் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்:

__________________________________

#மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களின் "அம்மா உணவகம்" இன்று அனைவராலும் பாரட்டப்படுகிற திட்டமாக உள்ளது. ஆனால் 1982ஆம் ஆண்டே புரட்சித்தலைவரின் சிந்தையில் உதித்த அற்புத திட்டம்தான் இது. புரட்சித்தலைவர் 1982ஆம் ஆண்டு செயல்படுத்திய் அந்த திட்டத்தி