PDA

View Full Version : Makkal Thilagam MGR Part 26



Pages : 1 2 3 [4] 5 6 7 8 9

orodizli
14th September 2020, 04:59 PM
டாக்டர் எம்.ஜி.ஆர் அறக் கட்டளை -1

டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி கலை அறக்கட்டளைத் தொடக்க விழா சென்னை கலைவாணர் அரங்கில் 7.09.1984 அன்று காலை நாதசுர இசையுடன் தொடங்கியது.

சங்கர்-கணேஷ் இசை அமைக்கவும், அரசவைக் கவிஞர் புலமைப்பித்தன், கவிஞர் முத்துலிங்கம், எம்.எல்.சி., ஆகியோர் மாண்புமிகு முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களைக் குறித்து எழுதிய "புரட்சித்தலைவர் புகழ்மாலைப் பாடல்களை" திரு. மலேசியா வாசுதேவன், திருமதி வாணிஜெயராம் ஆகியோர் பாடினார்கள்.

மாண்புமிகு சட்டமன்றப்பேரவைத் தலைவர் திரு க.இராசாராம் அவர்கள் வரவேற்றுப் பேசுகையில், “ஒவ்வொரு ஆண்டும் இந்த அறக் கட்டளை சார்பில்,கல்வி,கலை, விஞ்ஞானம் பற்றிய சொற்பொழிவுகள் தாயகத்திலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் தேர்வு செய்யபட்ட அறிஞர்களால் நடத்தப்படும், பட்ட மேற்படிப்பில் முதல் இடம் பெறும் மாணவ மாணவிகளுக்கு இதிலிருந்து நான்கு பேருக்குப் பரிசுகள் வழங் கப்படும் , எம்.ஜி.ஆரின் கொள்கைகளைப் பரப்புவது இந்த கட்டளையின் நோக்கமாகும். தமிழகத்தில் முதல்வர் எம்.ஜி.ஆர் . ஆட்சியில் தான் கல்வி மறு மலர்ச்சி ஏற்பட்டுள்ளது.

"ரூபாய் 35 ஆயிரத்தில் இந்த அறக்கட்டளை ஏற்படுத்தப்பட் டுள்ளது” என்று கூறினார் . மேதகு ஆளுநர் திரு.எஸ்.எல்.குரானா அவர்கள் தலைமை தாங்கிப் பேசுகையில் கூறியதாவது:

"தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் சிறுவயதிலேயே கலைத் துறைக்கு வந்தவர் . ஏழை எளியவர்கட்கு உதவி செய்துக்கூடிய பாத்திரங்களை ஏற்று நடித்தவர் . பசி என்றால் என்ன என்பது அவருக்குத் தெரியும். அவர் முதல்வரானதும் பசிப்பிணி தீர்க்க, சத்துணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார்.

"தேசிய ஒருமைப்பாட்டிற்கு முதல்வர் எம்.ஜி.ஆர். ஆற்றிய பணிகள் மகத்தானவை. சீனப் போரின்போது அண்ணா எந்த நிலையை ஏற்றுக் கொண்டாரோ அந்த நிலையை எம்.ஜி.ஆர் . பின் பற்றுகிறார் . இந்த அறக்கட்டளை அவரது நோக்கங்களைப் பூர்த்தி செய்யும்"

தொடரும் ...............

orodizli
14th September 2020, 05:00 PM
அண்ணா மாவட்டம் - வெற்றிநடை போட வாழ்த்துகிறேன்

மக்களுக்கும், அரசுக்கும் இடையே நெருக்கமான தொடர்பு அமைவதைப் பொறுத்தே மக்கள் ஆட்சியின் வெற்றியும் அமைந்திடும். அதற்கு முதல்படியாக நிர்வாக நிலையங்கள் மக்களுக்கு எளிதில் எட்டக்கூடியதாக இருக் திடுவது தேவை. அதைக் கருத்தில் கொண்டே பெரிய மாவட்டங்களைச் சீரமைத்து, புதிய மாவட்டங்களை உருவாக்கிடவும். உருவாக்குகிற புதிய மாவட்டங்களுக்கு தமிழகச் சான்றோர் பெயர் சூட்டவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அவ்வகையில் - திண்டுக்கல்லைத் தலைாகராகக் கொண்டு பேரறிஞர் அண்ணாவின் திருப்பெயரைத் தாங்கிய வண்ணம் அண்ணா மாவட்டம் செப்டம்பர் 15 ஆம் தேதி[15/9/1985] அன்று உருவாகிறது.

திண்டுக்கல் பகுதி 18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து 1884 வரை நூறாண்டுக் காலத் திற்குத் தனி மாவட்டமாகவே இருந்து வந்தது. 1885 ஆம் ஆண்டு முதல் கொண்டுதான் மதுரையும், திண்டுக்கல் பகுதியும் ஒன்றாக இணைக்கப்பட்டன.

சரியாக 100 ஆண்டுகள் கழித்து 1985 ல் மீண்டும் திண்டுக்கல் பகுதி தனி நிர்வாக மாவட்டமாக அமைவது குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்ச்சியாகும்.

பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகளையும், குறிக்கோள்களையும் செயல்படுத்துவதே இலட்சியமாகக் கொண்டு பணியாற்றி வரும் எங்களுக்கு, மக்கள் தங்கள் மகத்தான ஆதரவை உறுதி செய்து போறிஞர் அண்ணாவின் வழியில் உண்மையாக நடை போடுகிறவர்கள் அங்கீகரித்து உலகறியச் செய்த பெருலம திண்டுக்கல் பகுதிக்கு உண்டு என்பதால் திண்டுக்கல்லைத் தலைநகராகக் கொண்டு அண்ணா மாவட்டம் அமைவதில் நான் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகிறேன்.

அண்ணாவின் பெயரால் அமைந்திடும் இந்தப் புதிய மாவட்டம் எல்லாத் துறைகளிலும் வளர்ச்சி அடைந்து முன்னேற்றப் பாதையில் வெற்றிநடை போட என் இனிய நல்வாழ்த் துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் .

மாண்புமிகு முதல்வர் புரட்சித்தலைவர்

[அன்று தமிழகத்தின் 19-வது மாவட்டம் "அண்ணா மாவட்டம்"].........

orodizli
14th September 2020, 05:01 PM
அமரர் எம்ஜிஆரைப் பற்றி அவரது ரசிகர்களுக்கும் சரி, பொதுமக்களுக்கும் சரி பல விஷயங்கள் தெரிந்திருந்த போதிலும் கூட, அவரது அரசியல் பிரவேஷம் எப்போது? சினிமாவில் தீவிரமாக நடித்துக் கொண்டிருந்தவர் எப்படி திடீரென ஒரு புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி உடனடியாக தமிழக முதல்வராகவும் ஆனார்? என்று தடாலடியாக யாராவது கேள்வி கேட்டால், திமுக எம் எல் ஏக்களை சொத்துக் கணக்கு காட்டச் சொல்லி பொதுமேடையில் விமர்சித்ததாலும், கட்சியின் செலவுக் கணக்கைக் கேட்டதாலும் தான் அவர் திமுகவிலிருந்து கருணாநிதியால் வெளியேற்றப்பட்டார் என்றும் அந்த உத்வேகத்தில் அவரது ரசிகர்கள் காட்டிய ஏகோபித்த அன்பிலும், வரவேற்பிலும் முகிழ்த்தது தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் எனும் கட்சி என்றும் பொத்தாம் பொதுவாக யார் வேண்டுமானாலும் பதில் சொல்லி விடுவார்கள்.

ஆனால் எம் ஜி ஆரின் அரசியல் வரலாறு அத்தனை எளிதாகச் சொல்லி முடித்து விடக்கூடியது அல்லவே! அவர் 1952 முதலே தம்மை மிகுந்த அரசியல் ஈடுபாடு கொண்டவராகவே காட்டிக் கொண்டிருந்துள்ளார். 1952 ல் பேரறிஞர் அண்ணாவின் தலைமையால் ஈர்க்கப்பட்டு திமுக வில் சேர்ந்த எம்ஜிஆர், தனது அரசியல் பிரவேசத்தின் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாபெரும் மக்கள் ஈர்ப்பு சக்தியாக விளங்கினார் என்பது யாருக்கும் சொல்லித் தெரியவேண்டிய விஷயமில்லை. அது ஊரறிந்த உண்மை! முதலில் கட்சியின் அடிப்படை உறுப்பினரகச் சேர்ந்து பிறகு தனது திரைப்படங்களில் வசனங்கள் மற்றும் பாடல்கள் வாயிலாக கட்சியின் பிரச்சார பீரங்கியாகி அப்படியே கட்சிப் போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்று, அதைத் தொடர்ந்து சில வருடங்களில் சட்டமன்ற மேலவை உறுப்பினராகி, சிறுசேமிப்புத் தலைவராகி, திமுகவின் பொருளாளராகி அடேயப்பா... எம் ஜி ஆர், தனிக்கட்சி தொடங்குமுன்னர் திமுகவில் ஆற்றிய பணிகள் தான் எத்தனை, எத்தனை?! அதை வரிசைக் கிரமமாக இந்த வாரம் தெரிந்து கொள்ளுங்கள்.

அது மட்டுமல்ல; திமுகவில் இயங்கிய போதும் சரி, திமுகவிலிருந்து விலக்கப்பட்டு தனிக்கட்சி தொடங்கி அரசியல் செய்தபோதும் சரி எம்ஜிஆர் என்ற ஆளுமை தேர்தல் களத்தில் தன்னை எதிர்த்து நின்றவர்களுக்கு சிம்ம சொப்பனமாகத்தான் இருந்திருக்கிறார். அதை அவர் போட்டியிட்டு ஜெயித்த தொகுதிகளின் பட்டியலைச் சரி பார்த்து தெரிந்து கொள்ளலாம். சரி இனி எம்ஜிஆரின் அரசியல் வரலாற்றைச் சுருக்கமாகவும், விளக்கமாகவும் ஆண்டு வரிசைப்படி தெரிந்து கொள்ளுங்கள்.

1952 - தி.மு.க. வில் சேர்ந்தார்.
1957 - முதல் முறையாக தி.மு.க.வை ஆதரித்து தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்தார். 15 இடங்களில் தி.மு.க. வென்றது.
1958 - சென்னை வருவதாக இருந்த நேருவுக்கு கறுப்புக் கொடி காட்ட தி.மு.க. முனைந்த போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர்., கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 6 நாட்கள் சாதாரண வகுப்பில் இருந்தனர் அவர்கள். பிரமுகர்களுக்கான வசதி, சலுகைகளை எம்.ஜி.ஆர். மறந்துவிட்டார். இந்த உண்மையை எம்.ஜி.ஆர். ஒரு போதும் வெளிப்படுத்திக்கொண்டது இல்லை.
1962 - இரண்டாம் முறையாக தி.மு.க.வை ஆதரித்து எம்.ஜி.ஆர். பிரச்சாரம் செய்தார். 52 இடங்களில் தி.மு.க. வென்றது.
1962 - சட்டமன்ற மேலவை உறுப்பினராக (m.l..c.) ஆனார்.
1964 - இந்த ஆண்டில் தி.மு.க.வில் கருணாநிதி ஏற்படுத்திய சர்ச்சைகள் காரணமாக ராஜினாமா செய்தார்."காமராஜர் என் தலைவர் அண்ணா என் வழிகாட்டி" என்று எம்.ஜி.ஆர். சொன்னதால் ஏற்பட்ட சர்ச்சை அது.
1965-இந்தி எதிர்ப்பு மொழிப் பிரச்சனை போராட்டத்தில் கலந்து கொண்டார்.
1967 - தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறுசேமிப்பு துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார்.
1971 - மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜூலையில் திராவிட முன்னேற்ற கழக பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1972 - திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து நீக்கப்பட்டார்.
1972 - அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற ஓர் அரசியல் கட்சியை ஏற்படுத்தினார்.
1974 - புதுவையில் அனைத்திந்திய அ.தி.மு.கழகம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
1977 - புதுவையில் இரண்டாவது முறையாகவும், தமிழகத்தில் முதல் முறையாகவும் அ.இ.அ.தி.மு.க. போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
1980 - அ.இ.அ.தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. (பாராளுமன்ற தேர்தல் தோல்வியின் காரணமாக)
1980 - தமிழகத்தில் நடந்த மறு சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு அ.இ.அ.தி.மு.க. ஆட்சி அமைத்தது.
1981 - மதுரையில் 5ம் உலகத் தமிழ் மாநாடு இந்திய பிரதமர் இந்திராகாந்தி தலைமையில் சிறப்புடன் நடத்தினார்.
1982 - மாநிலத்திற்கு அரிசி தேவைக்கு உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
1984 - அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிட்டு ஆட்சி அமைத்தது.
1987 - இலங்கைத் தமிழர்கள் அமைதி காக்க இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி - இலங்கை பிரதமர் ஜெயவர்த்தனா ஒப்பந்தம் ஏற்பட பாடுபட்டார்.


எம்ஜிஆர் போட்டியிட்ட இடங்கள் பெற்ற வாக்குகள்



எம்.ஜி.ஆர். பரங்கிமலை -54106. காங்கிரஸ் -26,432
எம்.ஜி.ஆர். பரங்கிமலை -65405 காங்கிரஸ் -40777
எம்.ஜி.ஆர். அருப்புக்கோட்டை -43065 தி.மு.க. -5415
எம்.ஜி.ஆர். மதுரை மேற்கு -57019 தி.மு.க. -35959
எம்.ஜி.ஆர். ஆண்டிப்பட்டி -60510 தி.மு.க. -28016

24.12.1987 - முதல்வர் எம்.ஜி.ஆர். அமரரானார்..........

orodizli
14th September 2020, 05:02 PM
சிவாஜி ரசிகர்களின் புலனாய்வுக்கு. நமது தீர்க்கமான பதில்
-------------------------------------------------------------

எம்ஜிஆர் படங்களை போல சிவாஜி படங்களும் வசூல் செய்ய சிவாஜி ரசிகர்கள் பேராசை
பட்டால் போதுமா? அதற்கான முயற்சியை சிவாஜி செய்ய வேண்டாமா?
எம்ஜிஆரை பொறுத்த வரை சிறு
வயதிலிருந்தே சினிமாவுக்காக தன்னை தயார் படுத்திக் கொண்டார். குதிரை ஏற்றம், சிலம்பாட்டம், வாள் பயிற்சி, உடல் கட்டமைப்பு அது போக திரைத்துரை சம்பந்தப்பட்ட அத்தனை நுணுக்கங்களையும், கலைகளையும் தன் வாழ்நாளில் பெரும்பகுதி செலவு செய்து கற்றுக் கொண்டார்.

ஹாலிவுட் படங்களுக்கு கதாநாயகனாக நடிக்க உள்ள அனைத்து தகுதிகளையும் பெற்றதோடு ஹாலிவுட் கலைஞர்களைப் போல இயல்பான நடிப்பிலும் சிறந்து விளங்கினார். உதாரணம் "சர்வாதிகாரி".
இவற்றில் எந்த தகுதியும் இல்லாமல் இவர் காட்டும் அஷ்ட கோணல் நடிப்புக்கு உள்ளூரிலே கூட படம் பார்க்க ஆளில்லாமல் முதல் நாளே வாய்பிளந்து நின்ற காட்சிகள் அநேகம்.

யானையை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டால் தானும் ஒரு யானையாக இருக்க வேண்டும். சிறு பூனையாய் இருந்து கொண்டு யானையை திருமணம் செய்ய முடியாது என்ற அடிப்படை உண்மை கூட புரியவில்லையா?அந்த மிகை நடிப்பை மட்டும் வைத்துக் கொண்டு நடிகப் பேரரசரிடம் மோத முடியுமா? சிவாஜிபோல் நடிப்பதற்கு எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.
ஆனால் எம்ஜிஆர் போல் நடிப்பதற்கோ நடனம் ஆடுவதற்கோ அவரைப்போல் சண்டை காட்சிகளில் வேகமான மூவ்மென்ட் கொடுப்பதற்கோ யாராலும் முடியாது.

சிவாஜியை விட சிறப்பாக இயல்பாக நடித்த நடிகை சாவித்திரிக்கு நடிகையர் திலகம் என்ற பட்டம் கொடுத்து அழகு பார்த்தோம்.
ஆனால் இன்று வரை அவருக்கு மாற்று கிடையாது. ஆனால் சிவாஜியின் மிகை நடிப்பை ஒரு சிறு பெண் நடிகை ஜோதிகா நடித்ததால்
அவருக்கு "பொம்பள சிவாஜி" என்று பெயர் வைத்து சிவாஜியை அசிங்கப் படுத்தினார்கள் இந்தக்கால ரசிகர்கள்.

ஒருவர் அளவுக்கு அதிகமாக மிகையாக நடித்து விட்டால் டேய்! இவன் சிவாஜி மாதிரி
நடிக்கிறாண்டா? என்று சிவாஜி நடிப்பை இழிவு படுத்துவதை கண்டிருக்கிறோம். எம்ஜிஆர் மாதிரி குதிரை ஏறத் தெரியாது. அப்படி ஏற்றி விட்டாலும் லாவகமாக அமர தெரியாமல் சற்று நேரத்திலேயே குதிரை வலி தாங்காமல் நெளிவதை "திருமால் பெருமை", "ராஜ ராஜ சோழன்", "சித்ரா பெளர்ணமி." போன்ற படங்களில் கண்டோம்.

நடிகர் 'விவேக்' ஒவ்வொரு படங்களிலும் கோபால்! கோபால்! என்று சரோஜாதேவியின் பேச்சை கிண்டல் செய்வதாக நினைத்து
சிவாஜியின் நடிப்பை கிண்டல் செய்வாரே! பார்க்கவில்லை. ஆரம்ப காலங்களில் நடிக்க வந்த புதுமுகங்களிடம் "பராசக்தி" வசனத்தை கொடுத்து பேசச் சொல்லுவது அவர்கள் திக்கு வாயா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ளத்தான்.

சிவாஜி சிலம்பம் சுற்றினால் பருவப் பெண்கள் கோலாட்டம் போடுவதை நினைவு படுத்துவது போல இருக்கும். சிவாஜி வாளை பிடித்துக் கொண்டு சண்டை போடுவது ஒரு பெண் நடன அசைவு கொடுப்பதை போல உணரலாம். பாட்டும் பரதத்தில் அவருடைய நாட்டியத்தை சகிக்காமல் படம் தோற்றதோடு நில்லாமல் அதை தயாரித்த கம்பெனியையும இழுத்து மூடி இருந்த இடம் தெரியாமல் போய் விட்டதை நாடறியும். அதிலும் ஒரு சிவாஜி ரசிகர் சிவாஜி 1966 வரை குண்டாக இருந்தும் அவரது நடிப்புக்காக மக்கள் பார்த்தார்களாம். ஆனாலும் சிவாஜி ரசிகர்களுக்கு இந்த காமெடி ஆகாதுப்பா. அவருடைய வெற்றி படங்களில் நடித்த ஜெமினி கணேசன் "காதல் மன்னன்" என்று பெயரெடுத்தவர். அவருக்காகவே பெண்கள் கூட்டம் அலைமோதும்.

மூவேந்தர்களில் ஒருவரான ஜெமினி மற்றும் ssr இவர்களை காண வந்த கூட்டத்தை சிவாஜிக்கு வந்த கூட்டமாக நினைத்தால் இந்த காமெடியை என்னவென்று நினைப்பது. அவ்வளவு மூடர்களா? சிவாஜி ரசிகர்கள். ஜெமினி தனியாக நடித்த பல படங்கள் வெள்ளிவிழா ஓடியதும் சிவாஜியோடு நடித்த படங்கள் வெற்றி பெற்றதும் அவரால்தான் என்று ஜெமினி ரசிகர்கள் கூறுகிறார்கள்.

அதே நேரத்தில் சிவாஜி தனியாக நடித்த பல படங்கள் படுதோல்வி அடைந்தததையும் எண்ணிப் பார்க்க வேண்டும். ஜெமினி தனியாக நடித்த வெள்ளி விழா படங்கள் 'கல்யாண பரிசு' 'வஞ்சிக்கோட்டை வாலிபன்' 'கணவனே கண் கண்ட தெய்வம்' 'பணமா பாசமா' என்று சொல்லிக்கொண்டே போகலாம். சிவாஜியுடன் நடித்து ஓரளவு ஓடிய படங்கள் 'பாச மலர்'
'பாவ மன்னிப்பு' 'பார்த்தால் பசி தீரும்' 'திருவிளையாடல்' 'சரஸ்வதி சபதம்' இது போன்ற சில படங்களை சொல்லலாம்.

ஆனால் சிவாஜி தனியாக நடித்து தோற்ற படங்கள் நூற்றுக்கணக்கில்
உண்டு. பாலாடை, வளர்பிறை, பாதுகாப்பு, புனர் ஜன்மம் , இரு துருவம் சாரங்க தாரா, சித்தூர் ராணி பத்மினி, அவள் யார், மனிதனும் மிருகமும். இது
போன்ற எண்ணற்ற படங்களை சொல்லிக்கொண்டே போனால் இந்த பதிவு பத்தாது. ஆனால் பாவம் யாரையோ பார்க்க வந்தவர்களை
சிவாஜிக்குத்தான் என்று யாரை ஏமாற்றுகிறார்கள் சிவாஜி ரசிகர்கள். அடுத்தபடியாக சிவாஜி ரசிகர்கள் குறிப்பட்டது "தங்கப்பதக்கத்தி"ன் வசூல். அரளி விதையில் உள்ள விஷத்தை விட சிவாஜி ரசிகன் -ரளி -------- டம் அதிக
விஷமிருக்கும் என்று நினைக்கிறேன்.

அவர்களின் காமெடிக்கு ஒரு அளவே இல்லாமல் போய் விட்டது. இதே பதிவில் "தங்கப்பதக்கத்தி"ன் வசூலுடன் தலைவர் படத்தின் வசூலையும் பதிவு செய்கிறேன், பார்த்துக் கொள்ளுங்கள். தூத்துக்குடியில் சிவந்த மண்ணை 101 நாட்கள் வடக்கயிறை போட்டு இழுத்தவர்களால் தங்கப்பதக்கத்தை
41 நாளிலே வடக்கயிறு அறுந்து படம் படுத்து விட்டது. "தங்கப்பதக்க"த்தை ஓட்டியதே 41 நாட்கள்தான்.

"தங்கப்பதக்கம்" 51 நாட்கள் விளம்பரத்தில் பாருங்கள் தூத்துக்குடி சார்லஸ் தியேட்டர் பெயர் இருக்காது. இப்பேர்ப்பட்ட சுமாரான படத்தை வைத்துக் கொண்டு 104 நாட்கள் ஓடிய "வாலிபனிடம்" மோதலாமா? அதுவும் 50 நாட்கள் ஓட்டியே தீர வேண்டும் என்று வெறியில் இருந்தவர்களுடன் தியேட்டர் கேன்டீன் மற்றும் சைக்கிள் ஸ்டாண்டு வைத்து நடத்தியவர்கள்
தியேட்டரில் கூட்டமே இல்லாத காரணத்தால் குத்தகை பணத்தை திருப்பி கேட்டதால். வேறு வழியில்லாமல் 41 நாட்களோடு நிறுத்தினார்கள்.

50 நாட்கள் கூட ஓட்ட முடியாத "தங்கப்பதக்கம்" எங்கே? 100 நாட்களை தாண்டி ஓடிய "உலகம் சுற்றும் வாலிபன்" எங்கே? ஆனாலும் ஓவர் குசும்பு இந்த சிவாஜி ரசிகர்களுக்கு. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். நான் பதம் பார்க்க அவர்களுக்கு சோற்றுப் பானையையே வைத்து விட்டேன். இனிமேலும் இது போன்ற காமெடி காட்சிகள் வேண்டாம். தெரியாமலா சிவாஜிக்கு 1 லட்சமும் எம்ஜிஆருக்கு 8 மடங்கு அதிகமாக 8 லட்சமும் அந்த நேரத்தில் கொடுத்தார்கள் பட அதிபர்கள்.

சரக்கு முறுக்காக இருந்தால் விலையும் ரொம்ப அதிகம்தான். நடிக்கும் காலத்திலேயே மக்களால் வெறுக்கப்பட்டு மூலையில் முக்காடுடன் அமர்ந்த நடிகருக்கு கொடி பிடிக்கும் கொடியவர்களே, சிவாஜி ரசிகர்கள். அரசியலில் புறமுதுகு காட்டி ஓடி பதுங்கு குழியில் பதுங்கியிருந்தவரை மீட்ட அவரது குடும்பத்தினர் வீட்டில் அவரை தனி அறையில் அடைத்து வைத்ததை மறந்து கணேசனின் புறமுதுகு புண்ணுக்கு ஒத்தடம் கொடுப்பதாக நினைத்து 'மன்னாதி மன்னனை' மீண்டும் சீண்ட வேண்டாம் என உபதேசம் செய்கிறேன். (கோழைகளுக்கு எச்சரிக்கை தேவையில்லை)

ஆசிய, ஆப்பிரிக்கா விருது அமெரிக்க நல்லெண்ண தூதர் பயணம், ஒரு நாள் மேயர் பதவி இது போன்ற அரசியல் காரணங்களுக்காக மேற்கொண்ட பயணங்களுக்கு நடிப்பு முத்திரை பூசும் நயவஞ்சகர்கள் நம் நாட்டையே முட்டாளாக்கும் திறன் படைத்தவர்கள். அன்று இந்தியா சார்பில் "லூஸ் மோகனை" அனுப்பியிருந்தால் கூட அவருக்கும் இத்தனை கவுரமும் கிடைத்திருக்கும்.
அது நாட்டுக்காக கொடுத்த மரியாதை. அதை கூட தனக்கு என்று திருட நினைக்கும் "திருடன்" ரசிகர்களை 'ஐயோ பாவம்' பைத்தியம் முற்றி விட்டது என்று நினைப்பதை தவிர வேறு என்ன செய்ய முடியும்?..........

fidowag
14th September 2020, 06:52 PM
பாட்டாலே*புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின் டிவியில் சகாப்தம் நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*27/08/20 அன்று அளித்த*தகவல்கள்*
================================================== =====================
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். முதல்வரான பின்பு ,லட்சோப*லட்சம் குழந்தைகள் பசி தீர வேண்டும் , அவர்கள் படிக்கிற*காலத்தில் பசி கொடுமை*, இளமையில் வறுமை எவ்வளவு கொடியது என்பதை*உணர்ந்தே*குழந்தைகள் சத்துணவு திட்டத்தை அமுல்படுத்தினார் .**


முந்தைய ஆட்சியில் யார் யாரோ ,பேரனுக்கு, பேத்திக்கு,மகளுக்கு, மகனுக்கு ,எல்லாம் பதவிக்காக*டெல்லியில் தங்கி இருந்து வீடு வீடாக* அலைந்து*திரிந்தார்கள் .ஆனால் எம்.ஜி.ஆர். டெல்லியில் தங்கவுமில்லை. யாருக்காகவும் பதவி கேட்டு அலையவுமில்லை .அனால்*தமிழகத்தில் சத்துணவு திட்டம் அமுல்படுத்த வேண்டி, டெல்லிக்கு சென்று*முறைப்படி,பிரதம மந்திரியை*சந்திப்பதற்கு முன் ,அவரது*உதவியாளர் யார் இருக்கிறார் ,அவருக்கு செயலாளர் யார், அவரை*சந்திக்க வேண்டும் என்று ,அப்போது சென்னையை*சேர்ந்த*திரு.பி.எஸ்.ராகவன்(தற்போது ,94 வயது )*அடையாறில்*வாழ்ந்து வந்தவரை போய் சந்தித்து*பேசினார் .அதாவது தமிழகத்தில் உள்ள* பள்ளி**குழந்தைகளுக்கு தினசரி ஒரு வேளை* சாப்பாடாவது போடும்*திட்டம் உள்ளது . அதற்கு*தேவையான அரிசி மத்திய தொகுப்பில்*இருந்து பெற்று தருவதற்கு தாங்கள் உதவ*வேண்டும் .நீங்கள் தமிழகத்தை சார்ந்தவர் என்பதால் உங்களிடம் உரிமையுடன் கேட்கிறேன் என்றார் .இதை கேட்ட*அந்த செயலாளர் வியந்து போனார் . காரணம்*பொதுவாக இந்த மாதிரி விஷயங்களில் ஒரு முதல்வர் நேரடியாக*பிரதமரை*அணுகி,அதன்பின் அவர் தன் உதவியாளரிடம் செய்தியை*பகிர்ந்து அதன்*பின்னர்தான்*செயலாளருக்கு தகவல்கள்*கிடைக்கும் .ஆனால் எம்.ஜி.ஆர். முறைப்படி* மத்திய உணவு துறையின்*ஆணிவேராக*உள்ள செயலாளரை முதலில் அணுகி*கோரிக்கையை வைத்தார்*. செயலாளரின் ஆலோசனைப்படி எம்.ஜி.ஆர். விவரங்கள் அறிந்து*பிரதமரின்*உதவியாளரை*தொடர்பு கொண்டு*பேசி ,அதன்பின் நேரடியாக*பிரதமரிடம் தனது*கோரிக்கை*மனுவை சமர்ப்பித்தார் .* பிரதமரின் அலுவலகம் எம்.ஜி.ஆரின் கோரிக்கையை*ஏற்று* போதிய அளவில் அரிசி வழங்க சம்மதித்தது .* அதன்பின் ஒவ்வொரு முறை எம்.ஜி.ஆர். டெல்லிக்கு*செல்லும்போதெல்லாம்* தன் ஜிப்பா பாக்கெட்டில் சில*அரிசி பொட்டலங்கள் வைத்திருப்பாராம் .அவற்றை*உணவுத்துறை செயலாளரிடம் காண்பித்து*இந்த மாதிரியான அரிசியை*அனுப்பினால் எங்கள் குழந்தைகள்*வளர்ச்சிக்கும், கல்வி அறிவை*பெருக்குவதற்கும் உதவியாக இருக்கும் என்று ஒரு அரிசி வியாபாரி போல நடந்து கொள்வாராம் .அந்த அளவிற்கு*குழந்தைகள் வளர்ச்சியில், அறிவு திறமை, கல்வி அறிவு போன்றவற்றில் அக்கறை கொண்டவராக எம்.ஜி.ஆர். திகழ்ந்துள்ளார் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம் .


1980ல் மக்களால்* எம்.ஜி.ஆரின் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவை கலைக்கப்படுகிறது .பின்னர் சட்டமன்ற பொது தேர்தல் பற்றி அறிவிப்பு வந்ததும்*தேர்தல் பிரச்சார கூட்டங்களில் கலந்துகொண்டு பேசிய*பின் ஒருநாள்*அ .தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு எம்.ஜி.ஆர். வருகிறார் .அப்போது செய்தியாளர்கள் கூட்டம்*நடைபெறுகிறது . அதில்*பிரபல*செய்தியாளர்* திரு.நூருல்லா*கலந்து கொள்கிறார் .* நிருபர்களுக்கு அளித்த*பேட்டியில்*எம்.ஜி.ஆர். பேசும்போது* இந்த முறை நாங்கள் வெற்றிபெறுவோம் என்பதை*சரியாக*கணிக்க முடியாது*என்பது*போல சற்று*நம்பிக்கையற்றவராக பேசினார் .* நான் நாள் முழுக்க மக்களை*சந்தித்து*பேசி வருகிறேன். நியாயம் கேட்கிறேன். அண்ணாவின் ஆட்சி, மக்களுக்கான ஆட்சி, நீதி, நேர்மை,நியாயம்* மிகுந்த ஆட்சி, என்கிற*கேள்விகளை மக்கள்முன்*வைத்துள்ளேன் . மக்களிடம்*என் உடம்பில்*உள்ள ரத்தம் சொட்ட*சொட்ட* ஆட்சியின் செயல்பாடுகள், மக்கள் பணி ஆற்றியது குறித்து விவரமாக தெரிவித்துள்ளேன் .இதற்கு*மக்களாகிய நீங்கள்தான் முறையான நீதியை*வரும் பொது தேர்தலில்*வாக்களித்து வழங்க வேண்டும் என்று பேசியுள்ளேன் .என்றவாறு சட்டையை*மடித்து கைகளில் உள்ள கீரல்கள் , ரத்த கறைகள்*செய்தியாளர்களுக்கு காண்பித்தாராம் . அவர்கள் இது எப்படி நடந்தது என*கேட்டபோது ,என்னை*பார்க்க, சந்திக்க*ஓடி வரும், முண்டியடித்து வரும்,ரசிகர்கள் கூட்டத்தை என்னால்*சில சமயங்களில் கட்டு படுத்த முடியவில்லை. அவர்களின் அன்பு தொல்லையில் இருந்து விடுபட முடிவதில்லை* .சிலர் என் கைகளை*பிடித்து கொள்கிறார்கள். தடவுகிறார்கள். கொஞ்சம்*அழுத்தமாக தொட்டு பார்க்கிறார்கள் .அதனால்*ஏற்பட்ட*கீறல்கள், ரத்த கறைகள் ,சிறு*காயங்கள் எனசிவந்த, புண்பட்டுப்போன**இரு கைகளையும் நிருபர்களிடம் காண்பித்தாராம் .என் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளிடம் நான் ரத்தம் சிந்தி*வாக்குகள்*கேட்டுள்ளேன் .எங்களுக்கு வெற்றி கிடைக்குமா*இல்லையா*என்பதை அவர்கள்தான்*தீர்மானிக்க வேண்டும் என்றார் .ஆனால் செய்தியாளர்கள்,கவலைப்படாதீர்கள். உங்கள் அணிக்கு, கூட்டணிக்கு இந்தமுறை*வெற்றி நிச்சயம் என்று அவரை*ஊக்கப்படுத்தி,உற்சாகப்படுத்தி* அடித்து சொன்னார்களாம் .அதாவது தன்னை ஒரு தொண்டனாக*நிலைநிறுத்தி*மக்களிடம் தனது ஆட்சியின் நிறைகளை*தெரிவித்து, தான்**சொல்ல வேண்டியதை*வேண்டிய அளவில் மக்களுக்கு**எடுத்துரைத்து.*மீன்டும்*அண்ணாவின் ஆட்சி மலர மக்களாகிய நீங்கள் தான் நல்லமுடிவெடுத்து எங்களை*தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முறைப்படி*வேண்டுகோள் வைத்தார் ..


அ.தி.மு.க. துவங்கிய*பின்னர்* சத்யா ஸ்டுடியோவில்**சில*காலத்திற்கு வெளியூரில்*இருந்து வரும் பக்தர்கள், தொண்டர்கள் நூற்றுக்கணக்கானவர்களுக்கு**மதிய*உணவு ஒரு திருமண வீட்டில்*நடைபெறுவது*போல தடபுடலாக* ஏற்பாடு செய்து வழங்கப்பட்டு வந்தது*அதை கண்காணித்து , முறைப்படி*நடைபெறுவதை*பார்த்து கொள்வதற்கு சில*வேலையாட்கள் நியமிக்கப்பட்டு பணிகள்*நடைபெற்று வந்தன .ஒருநாள்*மதிய உணவு வழங்கப்படும்நேரத்தில் எம்.ஜி.ஆர். விஜயம் செய்து ,உணவு தரமாக தயாரிக்கப்படுகிறதா, அனைவருக்கும் சரிசமமாக*பரிமாறப்படுகிறதா என்று விசாரித்த வண்ணம் இருக்க ,மதுரையில் இருந்து சுமார்*100 நபர்கள் உணவருந்த வந்திருந்தனர் .அவர்களில் ஒருவர் முன்னாள் மதுரை மேயர்*முத்துவை*பற்றி தர குறைவாக*பேசியபடி இருந்தார் .அதை கவனித்த எம்.ஜி.ஆர். அப்படியெல்லாம் பேச கூடாது என்று அந்த தொண்டரிடம்*கூறினார் .என்னை*பொறுத்தவரை*அவர் தி.மு.க. வில் இருந்தாலும் எனக்கு*முத்தண்ணன் தான் .என்றார் . அதாவது தன்னுடன் சேராதவர்கள் ,எதிரிகள்,மாற்று கட்சியில் உள்ளவர்களையும் மதிக்கும்*மாண்பை,மரியாதையாக நடத்தும் அரசியல்*, பண்பை*தொண்டர்கள் மத்தியில் விதைத்தவர் எம்.ஜி.ஆர்.*.


ராமாவரம் தோட்டத்தில் தினசரி எம்.ஜி.ஆரை சந்திக்க வெளியூரில்*இருந்து ரசிகர்கள், பக்தர்கள்*வருவது வழக்கம் . ஒருநாள்*லுங்கி, பனியனுடன், ஒரு நபர் கரை*வேட்டி கட்டிய பக்தர்கள் நடுவில் வந்து நிற்கிறார் .எம்.ஜி.ஆர். அவரை*மட்டும் தனியே அழைத்து, என்ன விஷயமாக*சந்திக்க வந்தீர்கள் என்று கேட்க .ஒன்றுமில்லை,உங்களை*பார்க்கவேண்டும் என்று ஆவலாக இருந்தது*. அதனால் வந்தேன் என்றுஎம்.ஜி.ஆர். கையில்*ஒரு எலுமிச்சை பழத்தை*கொடுத்தவாறு* முகமலர*பலமாக சிரித்தார் .அதுசரி,எனக்காக என்ன கொண்டு வந்தீர்கள் என்று கேட்க, லுங்கியை*மடித்து , அரை ட்ரவுசரில் , பாக்கெட்டில் உள்ள இரண்டு கடலை மிட்டாயை*எம்.ஜி.ஆரிடம் தருகிறார் .,அதைக்கண்ட அனைவரும் பதற்றமாய் இருக்க*அனைவரின்*முன்னிலையில் அதை ருசி பார்த்த எம்.ஜி.ஆர். தன் உதவியாளரிடம் அவர் பெயர், ஊர், என்னவாக இருக்கிறார் .என்ன தொழில் செய்கிறார்,குடும்ப நிலை என்ன* என்ற விவரங்கள் குறிப்பு*எடுக்க சொல்கிறார் .அதன் பின்னர் தன்சொந்த செலவில்*அவருக்கு*ஒரு சைக்கிள்*ரிக்ஷா வாங்கி*பரிசளித்தார் . அதாவது ஒருவர் தனக்கு*உதவி செய்ய வேண்டும் என்று கேட்காமலேயே உதவும் வள்ளல் தன்மை படைத்தவர் எம்.ஜி.ஆர். என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சான்று .


மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்று ஒரு பாடல் இருக்கிறது .அதை உறுதி படுத்துவது*போல இன்றைக்கும்*கள்ளக்குறிச்சியில் ஒய்வு* பெற்ற தலைமை ஆசிரியர்கள் படித்தவர்கள், அவரை நினைத்து கொண்டாடுகிறார்கள் . திருச்சி*மிளகுபாறையில்* உள்ள மஜீத் என்பவர்* நமது சகாப்தம் நிகழ்ச்சியின்*100 வது*தொடருக்கு*எம்.ஜி.ஆரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து மகிழ்ச்சி அடைகிறார் . என்றால் இன்றைக்கும் பலரை வழி நடத்துகிற பல்கலை*கழகமாக எம்.ஜி.ஆர். திகழ்கிறார் .அந்த பல்கலை கழகத்தின் வரலாறை அடுத்த அத்தியாயத்தில் தொடர்ந்து பார்ப்போம் .

நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
------------------------------------------------------------------------------------
1.காலத்தை வென்றவன் நீ* - அடிமைப்பெண்*

2. பெற்றால்தான் பிள்ளையா படத்தில் ஒரு காட்சியில் எம்.ஜி.ஆர்.

3.இந்த பச்சைக்கிளிக்கு*ஒரு செவ்வந்தி பூவில்*-நீதிக்கு தலைவணங்கு*

4.தேர் திருவிழா படத்தில் ஒரு காட்சியில் எம்.ஜி.ஆர்.

5.எம்.ஜி.ஆர்.-பத்மினி உரையாடல் -ரிக்ஷாக்காரன்*

6.அன்புக்கு நான் அடிமை - இன்று போல் என்றும் வாழ்க*

7.ஒன்றே குலம் என்று பாடுவோம்*- பல்லாண்டு வாழ்க .

orodizli
14th September 2020, 08:09 PM
Mgr தன்னுடய தலைவர் *பேரறிஞர் அண்ணா-வை* போற்றியது போல் வேறு எவரும் போற்றியதில்லை.

01. தன் தலைவர் ஊரின் பெயருடன் ''காஞ்சித்தலைவன் '' என்ற படத்தில் நடித்தார் .

02. ''நம் நாடு '' படத்தில் அண்ணாவை பெருமை படுத்தும் வகையில் அவர் பெயரில் இருந்த '' துரை '' என்ற பெயரின் கதா பத்திரத்தில் நடித்தார் .

03. 'அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப்போல்' இதய வீணை

04. 'அண்ணனின் பாதையில் வெற்றியே காணாலாம்' மீனவ நண்பன்

05. 'உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்' நவரத்தினம்

06. 'இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்' பல்லாண்டு வாழ்க

07. 'அண்ணா சொன்னவழி கண்டு நன்மை தேடுங்கள்' இதயக்கனி

09. 'என்அண்ணாவை ஒருநாளும் என் உள்ளம் மறவாது' நினைத்தை முடிப்பவன் .

10. 'அண்ணா அன்று சொன்னார் என்றும் அதுதான் சத்தியம்' உரிமைக்குரல்

11. 'நாட்டிற்காக உழைப்பதர்க்கே அண்ணா பிறந்தார்' நேற்று இன்று நாளை

12 'சந்தன பெட்டியில் உறங்குகிறார் அண்ணா' எங்கள் தங்கம்

13. 'சரித்திரம் புகழ்ந்திடும் அறிஞரின் வழி நடப்பான்' கண்ணன் என் காதலன்

14. 'மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்' பெற்றால்தான் பிள்ளையா

15. 'நான் செல்லுகின்ற பாதை பேரறிஞர் காட்டும் பாதை' புதிய பூமி

16. 'தம்பி! நான் பிறந்தேன் காஞ்சியிலே நேற்று' நேற்று இன்று நாளை

17. 'சந்தன பெட்டியில் உறங்குகிறார் அண்ணா சரித்திர புகழுடன் விளங்குகிறார்' எங்கள் தங்கம்

18. '....கேளம்மா கேளு நான் காஞ்சிபுரத்து ஆளு..' எங்கள் தங்கம்.........

orodizli
14th September 2020, 08:21 PM
பொன்மனத்திலகத்தின் "ஒளிவிளக்கு "திரைக்காவியம் பல திரையரங்குகளில் இரண்டு மூன்று நான்கு வாரங்கள் கடந்து வெற்றிக் கொடியை பறக்க விட்டுள்ளது.. குறிப்பாக பெரிய திரையரங்குகளில் மிகப் பிரம்மாண்டமான வெற்றியை கொடுத்த காவியத்தின் உச்சமாக ஒளிவிளக்கு திகழ்கிறது.

சென்னையில்....
1988....
நாகேஷ் 21 நாள்
நடராஜ் 21 நாள்
பிளாசா 14 நாள்
ஜெயராஜ் 14 நாள்
2013 மகாலட்சுமி
ஒளி விளக்கு 28 நாள்
2015....ல் 14 நாள்
சாதனைக்கு மேல் சாதனையை விதைத்த காவியம்...
கமலா
எம்.எம்.தியேட்டர்
பிருந்தா
கணபதிராம்
வாணி
கோபிகிருஷ்ணா
முரளிகிருஷ்ணா
ராதா
கிராண்ட்
ஸ்டார்
அண்ணா
புவனேஸ்வரி
சைதை ராஜ்
கணபதிராம்
இப்படி பல குளிர் சாதன அரங்குகளில் சாதனை..
6 மாத இடைவெளியில் பல அரங்கில் திரையிடப்பட்டுள்ளது.
மகாலட்சுமியில் மட்டும்
12 வருடத்தில்
9 முறை திரையீட்டு...
15 வாரங்கள் ஒடியுள்ளது...
50 க்கும் மேற்பட்ட அரங்கில் சாதனை..
கோடிகளை வார வெளியீட்டில் பெற்று... லட்சங்களை விநியோகஸ்தர் களுக்கும்...திரையரங்கு உரிமையாளர்களுக்கும்
தந்த ஒரே 100 வது காவியம்..இந்திய சினிமா உலகில் மக்கள்திலகத்தின்
ஒளி விளக்கு மட்டுமே! வெல்க திரையுலக வசூல் சக்கரவர்த்தி...புரட்சி நடிகர்...

அழியாத வெள்ளித்திரையின் திலகமே...
நம் மக்கள் திலகமாவார்...

மேலே சாதனையை எந்த படமாவது தாண்டியதுண்டா...
முடிந்தால்....
துணிந்தால்...
திரையிட்டால்...
பதிவிட முடியுமா!

தொடரும் ....
வள்ளல் திலகத்தின்
காவிய வரலாற்று சிறப்புகள்.........

orodizli
14th September 2020, 08:26 PM
2012 ல் உட்லண்ட்ஸ்*...
ஒரு வார வசூல் :*
1,45 ஆயிரம் ஆகும்.

1995 எம்.எம்.தியேட்டர்
ஒரு வார வசூல்
ரூ. 95, 160.00 ஆகும்.

2019 அகஸ்தியா 70mm.,
ஒரு வார வசூல் ( 2 காட்சி)
ரூ. 1லட்சத்து 30 ஆயிரம் ஆகும்.

காலம் கடந்தும் வசூலை அள்ளி தரும் திரையுலகின் அட்சயதிலகம்
மக்கள் திலகமே... திரையுலகை வாழ வைத்த அன்பு திலகமாவார்.

அடுத்து... ஒளிவிளக்கு திரைப்படம்...


குறிப்பு...
**********
தில்லானா,என் தம்பி,
க.கல்யாணம், உ.மனிதன்,
எ.ஊர்.ராஜா, தி.பெருமை
ல.கல்யாணம், அரிசந்திரா..
இதில் எந்த படம் எத்தனை திரையில் வெளிவந்தது....
தெரிந்தால் சொல்லவும்
பதிவிடவும்.............

orodizli
14th September 2020, 08:28 PM
மக்கள் திலகத்தின் மதுரைவீரன்
திரைக்காவியம்....
திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, கரூர், புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, மன்னார்குடி, திருவாரூர் ஆகிய*
9 நகரங்களில் 100 நாட்களை கடந்து சாதனை படைத்த ஒரே திரைப்படமாக இன்று வரை திகழ்கிறது.

வண்ணப்பட வரிசையில்*
உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை, கரூர்* உட்பட*
6 நகரங்களில் 100 நாட்களை கடந்து சாதனை ஆகும்.

மக்கள் திலகத்தின் திரைக்காவியங்கள் அதிக அளவில் திருச்சி தஞ்சை மாவட்டங்களில் திரையிடப்பட்டு*
6, 7, 8 திரையரங்குகளில்*
50 நாட்களை, 75 நாட்களை கடந்த சாதனையில்...* 50 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள்* ஒடியுள்ளது கடந்துள்ளது.

திருச்சியிலும், தஞ்சாவூரிலும்*
வெள்ளிவிழாக் கண்ட திரை காவியமாக எங்கவீட்டுப்பிள்ளை திகழ்கின்றது.

திருச்சி தஞ்சை மாவட்டங்களில்
ஏ பி சி சென்டர் என சொல்லப்படும் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட ஊர்களில் மக்கள் திலகத்தின் காவியங்கள் பல சாதனைகளை படைத்துள்ளது.இதுப்போன்ற சாதனையை இதுவரை எந்த நடிகர் படமும் பெற்றதில்லை..........*

orodizli
15th September 2020, 08:15 AM
இதையெல்லாம் விட ரிக்க்ஷாக்காரன் வீசிய வசூல் அணுகுண்டு, உலகம் சுற்றும் வாலிபன் வரும் வரை எல்லா படங்களையும் தகர்த்தெறிந்தது. 51 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் 50 லட்சம் வசூல் செய்து, அரசுக்கு வரியாக மட்டும் 20 லட்சம் கொடுத்துள்ளார் ரிக்க்ஷாக்காரன். விநியோகஸ்தர் தரப்பு அதிகாரபூர்வ விளம்பர ஆதாரம் இணைத்துள்ளேன். தமிழ்நாட்டில் 50 நாட்களில் ராஜா திரைப்படம் பெற்ற மொத்த வசூல் எவ்வளவு? அதிகாரபூர்வ விளம்பரத்துடன் சிவாஜி கணேசன் ரசிகர்கள் சொல்வார்களா? 50 நாளிலேயே தமிழகம் முழுவதும் 50 லட்சம் வசூல் என்றால் நூறாவது நாளில் ரிக்க்ஷாக்காரன் பெற்ற வசூல் பற்றி சொல்ல வேண்டுமா? ரிக்க்ஷாக்காரன் வசூல் சாதனையை உலகம் சுற்றும் வாலிபன்தான் முறியடித்தார். இதை நாம் சொல்லவில்லை. தேவி பாரடைஸ் தியேட்டர் முதலாளி வரதராஜன் ஆனந்த விகடன் இதழுக்கு சில ஆண்டுகளுக்கு முன் அளித்த பேட்டியில் சொன்னார். அப்போது வாலிபன் படத்துக்கு பத்திரிகையாளர் காட்சியின்போது கரண்ட் கட் ஏற்படக்கூடாது என்பதற்காக ஜெனரேட்டர் வைத்து ஓட்டினோம் என்றும் அந்தப் பேட்டியில் சொல்லி இருந்தார். அந்தப் பேட்டியின் பகுதியையும் இணைக்கிறேன். இறுதியாக ஒன்று.. தமிழ்நாட்டில் ரிக்க்ஷாக்காரன் 12 தியேட்டர்களில் 100 நாள் ஓடியது. இதற்கும் விநியோகஸ்தர் விளம்பர ஆதாரம் இணைக்கிறேன். வாலிபன் வரும்வரை ரிக்க்ஷாக்காரனை எந்த ராஜா-வும் அசைக்க முடியவில்லை. ஏனென்றால் மக்கள் திலகம் ராஜா என்ன... சக்ரவர்த்திகளுக்கெல்லாம் சக்ரவர்த்தி என்பது தெரிந்ததுதானே!.........

orodizli
15th September 2020, 08:21 AM
நடிகப் பேரரசர்,

ஏற்கெனவே சென்னை தேவி பாரடைஸ் அரங்கில் ராஜா படத்தின் வசூல் மர்மம் பற்றி கேள்வி எழுப்பினீர்கள். அதற்கு சிவாஜி கணேசன் ரசிகர்கள் பதில் சொன்னதாக நண்பர்கள் என்னிடம் கூறினார்கள். விஷயம் என்னவென்றால் இவ்வளவு காட்சி ஹவுஸ்புல் ஆனால், இவ்வளவு தொகைதானே வரவேண்டும். ஆனால், கூடுதலாக இவ்வளவு தொகை எப்படி? என்று நீங்கள் கேட்ட கேள்விக்கு 11 சிறப்புக் காட்சிகள் கூடுதல் என்று கணக்கு காட்டியிருக்கிறார்களாம். சரிதான். ஏற்றுக் கொள்ள வேண்டிய கணக்குதான். ஆனால் வெறும் 50 நாள் கணக்கை அதுவும் தேவி பாரடைஸ் அரங்கில் மட்டும் காட்டி மொத்தமாக ரிக்*ஷாக்காரனை விட ராஜா திரைப்படம் அதிக வசூல் செய்த படம் என்று காட்ட முனைந்திருக்கிறார்கள். ஆனால் உண்மை நிலை என்ன?.. பார்ப்போம்.

நீங்கள் போட்ட போட்டில் அவர்களிடம் இருந்து ஒரு உண்மை வெளிவந்துள்ளது. அதாவது, ரிக்க்ஷாக்காரன் படத்துக்கு பிறகு 1972 ம் ஆண்டில் ஜனவரியில் தியேட்டர் டிக்கெட் கட்டணங்களை உயர்த்தினார்கள் என்ற உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அப்படி டிக்கெட் கட்டணங்கள் உயர்த்தியதால்தான் தேவி பாரடைஸ் அரங்கில் 50 நாட்களில் ரிக்க்ஷாக்காரனைவிட ராஜா திரைப்படம் ஒரு சில ஆயிரங்கள் கூடுலாக வசூல் பெற்றுள்ளது என்ற உண்மையை அவர்களை அறியாமல் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். படிப்பவர்கள் நன்றாக கவனிக்கவும். தியேட்டர் டிக்கெட் கட்டணம் உயர்வுதான் முதல் 50 நாட்களில் ராஜா படத்தின் ஓரளவு கூடுதல் வசூலுக்கு காரணம். இன்னொன்றையும் முக்கியமாக கவனியுங்கள். அப்படி கட்டணம் உயர்த்தப்பட்டும் கூட 50 நாட்களில் மட்டுமே ராஜா திரைப்படம் தேவி பாரடைஸ் அரங்கில் மட்டும் கூடுதல் வசூல் பெற்றுள்ளது. 75 மற்றும் 100 நாட்களில் ரிக்க்ஷாக்காரனை ராஜா-வால் நெருங்க முடியவில்லை. அப்படி நெருங்கியிருந்தால் சும்மா இருப்பார்களா? இதோ ஆதாரம் என்று குதிக்க மாட்டார்களா?

அதுவும் இந்த 50 நாள் வசூல் கூடுதல் கணக்கு வெறும் தேவி பாரடைஸ் தியேட்டரில் மட்டும்தான். ஒட்டுமொத்தமாக சென்னையில் ரிக்க்ஷாக்காரன் தேவி பாரடைஸ், ஸ்ரீகிருஷ்ணா, சரவணா தியேட்டர்களில் முதல் 50 நாளில் பெற்ற வசூலுக்கும் ஒட்டு மொத்தமாக சென்னையில் ராஜா திரைப்படம் தேவி பாரடைஸ், அகஸ்தியா, ராக்ஸி தியேட்டர்களில் முதல் 50 நாளில் பெற்ற வசூலுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. இரண்டு படங்களின் 50 நாள் விளம்பரத்தில் உள்ள தொகையை கூட்டிப்பார்த்தால் இந்த உண்மை தெரியும்.
இடமின்மையால் தொடர்ச்சி அடுத்த பதிவில் ............

orodizli
15th September 2020, 03:26 PM
என் அண்ணாவை ஒரு நாளும் என் உள்ளம் மறவாது
பொற்கால ஆட்சி வழங்கிய பொன்மனச் செம்மல் அவர்களை “இதயக்கனி” என்று போற்றிய பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளாகிய இன்று, அவரின் பெருமைகள் பற்றியும், அவர் உருவாக்கிய தி.மு.க.வையும் அதன் சின்னமாகிய உதயசூரியனையும் பிரபலப்படுத்தும விதமாக நமது மக்கள் திலகம் அவர்கள் தனது திரைக் காவியங்கள் மூலமும். அரிசயல் நிகழ்வுகள் மூலமும் எப்படியெல்லாம் நினைவு கூர்ந்தார் என்பதை விளக்கும் பதிவு இது :

1. திரைக்காவியம் : நாம்
அண்ணா வாழ்கவே, குமரஅண்ணா வாழ்கவே!
2. திரைக்காவியம் : பெற்றால்தான் பிள்ளையா
மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்
3. திரைக்காவியம் : நம் நாடு
தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார்
4. திரைக்காவியம் : எங்கள் தங்கம்
சந்தனப் பெட்டியில் உறங்குகிறார் அண்ணா – சரித்திரப் புகழுடன் விளங்குகிறார்
5. திரைக்காவியம் : உரிமைக்குரல்
அண்ணா அன்று சொன்னார் என்றும் அதுவே
6. திரைக்காவியம் : நேற்று இன்று நாளை
நாட்டுக்காக உழைப்பதற்கே அண்ணா பிறந்தார்
7. திரைக்காவியம் : பல்லாண்டு வாழ்க
இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்
8. திரைக்காவியம் : பணம் படைத்தவன்
தனக்கொரு பாதையை வகுக்காமல் என் தலைவன் வழியிலே நடப்பான்
9. திரைக்காவியம் : இதயவீணை
அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப் போல்
10. திரைக்காவியம் : நவரத்தினம்
உங்களில் நம் அண்ணாவைப் பார்க்கிறேன்
11. திரைக்காவியம் : மீனவ நண்பன்
அண்ணனின் பாதையில் வெற்றியே காணலாம்
12. திரைக்காவியம் : நினைத்ததை முடிப்பவன்
என் அண்ணாவை ஒருநாளும் என்னுள்ளம் மறவாது
13. திரைக்காவியம் : கண்ணன் என் காதலன்
சரித்திரம் புகழ்ந்திடும் அறிஞரின் வழி நடப்பான்
14. திரைக்காவியம் : புதிய பூமி
நான் செல்லுகின்ற பாதை பேரறிஞர் காட்டும் பாதை

இவைகள் தவிர --------
1. “விக்கிரமாதித்தன்” திரைக் காவியத்தில் தி.மு.க. வின் சின்னமான “உதய சூரியனை” தனது நெற்றியில் திலகமாக வைத்துக் கொள்வார்.
2. “சக்ரவர்த்தி திருமகள்” காவியத்தில் தந்து கதாபாத்திரத்தின் பெயருக்கு “உதய சூரியன்” என்று சூட்டி மகிழ்ந்தார்.
3. “நல்லவன் வாழ்வான்” திரைக் காவியத்தில் “சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் என்ற பாடல் காட்சியின் இடையே “உதய சூர்யன் எதிரில் இருக்கையில் உள்ளத் தாமரை மலராதோ, எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இருண்ட பொழுதும் புலராதோ என்ற வரிகள் ஒலிக்கும்.
4. “விவசாயி” திரைக் காவியத்தில்,
a) இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக் கொடி, எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி என்ற பாடல் வரிகளில் இறுதியாக பறக்க வேண்டும் எங்கும் ஒரே சின்னக் கொடி என்று காட்சி வரும் போது, தி.மு.க. வின் கொடியை காண்பித்து மகிழ்வார்.
b) அதே பாடல் வரிகளில், பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி என்ற வார்த்தை வரும் பொழுது, பேரறிஞர் அண்ணா அவர்கள் திரு வுருவமும் காண்பிக்கப் படும்.
5. “எங்கள் தங்கம்” திரைக் காவியத்தில் “கேளம்மா கேளு, நான் காஞ்சி புரத்தாளு” என்று பதில் சொல்லி பரவசம் அடைவார்.
6. நரசிம்ம பல்லவர் கதையை விளக்கும் காவியத்துக்கு “காஞ்சித் தலைவன்” என்று பெயரிட்டு பேருவகை கொண்டார்.
7. “ரிக்ஷாக்காரன்” திரைக் காவியத்தில் இடம் பெற்ற “அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு” என்ற பாடலில் அறிஞர் அண்ணாவின் புகைப்படம் அருகே நின்று கொண்டு பாடுவார்.
8. “தெய்வத்தாய்” திரைக் காவியத்தில் இடம் பெற்ற “மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்” என்ற பாடலையை, ‘அண்ணா” என்ற மூன்று எழுத்தையும், தி.மு.க. என்ற மூன்று எழுத்தையும் குறிக்கும் விதமாக பாடப் பட்டிருக்கும்.
9. “நான் ஆணையிட்டால்” திரைக்காவியத்தில், “பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே” பாடலின் இடையில் வரும் வரிகளாக “உதய சூரியனின் நல் வரவு” என்று ஒலிக்கும்.
10. “இதயக்கனி” திரைக் காவியத்தில், புரட்சித் தலைவரை ‘இதயக்கனி’ என்று அழைத்ததற்கான விளக்க உரையோடு அறிஞர் அண்ணா பேசுவது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.
11. “அன்பே வா” திரைக் காவியத்தில், “புதிய வானம் புதிய பூமி” என்ற பாடல் வரிகளின் இடையே சூரியனின் உதயத்தை காண்பித்து, “உதய சூரியனின் பார்வையிலே; உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே” என்று பாடி உவகை அடைவார்.
12. “எங்க வீட்டு பிள்ளை” திரைக் காவியத்தில், “நான் ஆணையிட்டால்’ என்ற பாடலின் இடையே வரும் வரிகளாக, “என் தலைவன் உண்டு, அவன் கொள்கை உண்டு” என்று இடம் பெற்றிருக்கும்.
13. “என் அண்ணன்” திரைக் காவியத்தில், “நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா” என்ற பாடல் காட்சியில் குதிரை வண்டி ஒட்டிக் கொண்டு வரும் பொழுது பேரறிஞர் அண்ணா அவர்களின் சிலையை வணங்குவது போல் காட்சி இடம் பெறும்.
14. “கணவன்” காவியத்தில், “அடி ஆத்தி ஆத்தி” என்ற பாடல் காட்சியின் நடுவில், “அன்பு வழி நடந்தவனோ நாட்டினை பிடித்தான்” என்ற வரி வரும் போழ்து, அறிஞர் அண்ணாவின் பொம்மை காண்பிக்கப்படும். அறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது 06-03-1968. இக்காவியம் குறுகிய இடைவெளியில் 15-8-1968ல் வெளியாகி, இந்த பாடலின் வரிகள் இடம் பெற்றது தனிச் சிறப்பு. இது கவனத்தில் கொள்ளத் தக்கதும் கூட.
15. “அன்னமிட்ட கை” திரைக் காவியத்தை, வெள்ளிக்கிழமையாக வரும் அண்ணா பிறந்த நாளன்று 1972ல் அதாவது 15-09-1972 அன்று வெளியிடச் செய்தார்.
16. “ஒரு தாய் மக்கள்” என்ற திரைக் காவியத்தின் “இங்கு நல்லாயிருக்கனும் எல்லோரும்’ என்ற பாடலின் இடையே வரும் வரிகளாக, கருப்பும் சிவப்பும் கலந்திருக்கிற மேனியைப் பாரு” என்று இடம் பெற்றிருக்கும்.
17. அறிஞர் அண்ணாவின் உருவம் பொதித்த கட்சிக் கொடியை எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் வடிவமைத்து, அதனை “உலகம் சுற்றும் வாலிபன்” திரைக் காவியத்தில், காட்டி புளகாங்கிதம் அடைந்தார்.

அரசியல் என்று எடுத்துக் கொண்டால், தான் தோற்றுவித்த இயக்கத்துக்கு அறிஞர் அண்ணாவின் பெயரை வைத்து, கட்சியின் கோடியில் அவரின் உருவத்தை பதிக்கச் செய்து, கட்சிக் கொள்கைக்கு “அண்ணாயிசம்” என்று பெயர் வைத்து, தனது உரையை முடிக்கும் போழ்து “அண்ணா நாமம் வாழ்க” என்று கூறி, பெருந்தன்மையின் சிகரம் பேரறிஞர் அண்ணாவின் பெருமைகளை மேம்படுத்துவார். அது மட்டுமல்லாமல், தமிழக முதல்வராக பொறுப்பேற்று மக்கள் நல திட்டங்களை அறிவித்து செயலாற்றும் பொழுதும், இது “அண்ணாவின் அரசு” என்று கூறித்தான், பெருமிதம் கொள்வார்.

இப்படி பட்டியலிட்டுக் கொண்டே போகலாம் ..... அண்ணாவின் பெருமைகளை புரட்சித் தலைவர் அவர்கள் பறை சாற்றியது பற்றி !

பேரறிஞர் அண்ணா அவர்களின் உண்மைத் தம்பி, அருமைத் தம்பி, அன்புத் தம்பி, அவரின் இதயக் கனி நம் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். தான். .........

fidowag
15th September 2020, 09:09 PM
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின்*டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*28/08/20அன்று அளித்த*தகவல்கள்*
--------------------------------------------------------------------------------------------------------------------------

நம்பிக்கை விதையாக, உற்சாக ஊற்றாக, நிழல் தரும் மரமாக நெஞ்சமெல்லாம் இனிக்கிற நினைவுகளாக மக்கள்* திலகம் எம்.ஜி.ஆர் திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பூரித்து போகின்ற மனங்கள் பெருகி கொண்டே இருக்கிறார்கள் .


மும்பை தாராவி புலவர் ராமச்சந்திரன், திருச்சி மிளகு பாறை மஜீத் போன்றவர்கள் ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சியை பற்றி* சொல்லி சொல்லி மகிழ்கிறார்கள் . அன்பே வா படத்தில் வரும் பாடலை கம் செப்டம்பர் பாடலுடன் ஒப்பிட்டு சொன்னீர்களே அது அபாரம் என்கிறார்கள் .அப்படி இன்னமும் அவரை ரசிக்கின்ற ரசிகர்களாக ,அவரை நேசிப்பவர்களாக, அவரை உள்ளத்தில் ஏந்தி கொள்பவர்களாக லட்சக்கணக்கான நபர்கள் இருக்கின்றார்கள் என்பதற்கு சாட்சியாக பல்வேறு விஷயங்களை நாம் தெரிவித்து வருகிறோம்.* காரணம் எம்.ஜி.ஆர். என்பவர் வெறும் நடிகர் மட்டுமல்ல .ஒரு அரசியல்வாதி மட்டுமல்ல. ஒரு நம்பிக்கை நட்சத்திரம் .ஒரு காலத்தில் வளர்ச்சியடையாத சென்னையில் மாதம் ரூ.15/- க்கு வாடகை வீட்டில் குடியிருந்த ஒரு எளிய, சாதாரண, சாமான்ய மனிதர் தனது வாழ்க்கையின் இறுதி காலத்தில் தமிழகத்தையே ஆளும் முதல்வராக வரக்கூடிய வல்லமை பெற்றார் .வாய்ப்பை பெற்றார், மக்கள் அவருக்கு அப்படி ஒரு உன்னத வாய்ப்பை அளித்தார்கள் என்றால் அவர் என்னவிதமாக வாழ்ந்தார் ,எப்படி வாழ்ந்தார்.எப்படி மக்களின் உள்ளங்களை அறிந்து கொண்டார் என்பதெல்லாம் நமக்கு கிடைத்த பாடம் ,படிப்பினை, அவர் ஒரு பல்கலை கழகம் .அந்த பல்கலை கழகத்தில் உள்ள பாடங்களை சகாப்தம் நிகழ்ச்சியில் தொடர்ந்து பார்ப்போம் .


திருப்பதிசாமி என்கிற நடிகர் பெயர் இல்லாமல் எம்.ஜி.ஆர். படங்கள் இல்லை என்கிற காலம் உண்டு . அப்படி அவரது பெரும்பாலான படங்களில் , மன்னராகவோ, மந்திரியாகவோ,நீதிபதியாகவோ, காவல்காரராகவோ, மருத்துவராகவோ, இன்ஸ்பெக்டராகவோ, காவலராகவோ,,அடியாளாகவோ* வேடங்கள் ஏற்று நடித்தவர் .அந்த அளவிற்கு எம்.ஜி.ஆரின் அன்பை பெற்றவர் .உற்ற நண்பனாகவும் இருந்தார் . எம்.ஜி.ஆர். நாடக குழுவில் உறுப்பினராக இருந்தவர் . எம்.ஜி.ஆர். சினிமாவில் பிரபலம் ஆகுவதற்கு முன்பே தொடர்பில் இருந்தவர் . எம்.ஜி.ஆரின் நட்புக்கு இலக்கணமாக இருந்தவர் . திருப்பதிசாமிக்கு*ஐந்து குழந்தைகள் .அவர்களை படிக்க வைக்கவும் ,திருமணம் செய்து வைக்கவும் அனைத்து உதவிகளை எம்.ஜி.ஆர்.தான் செய்தார் . திருப்பதிசாமியின் குடும்பநலனில் மிகுந்த அக்கறை கொண்டு, அனைத்து விஷயங்களிலும்*எம்.ஜி.ஆர். பங்கேற்று* அவரது குடும்ப விளக்கை ஏற்றி வைத்தார் . இப்படி பலரது குடும்ப பொறுப்புகளை தானே வலியவந்து அவர்களது சுமைகளை ஏற்று சுமந்தவர் எம்.ஜி.ஆர். என்பது இந்த கால நண்பர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை .


நடிகர் தங்கவேலு அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் எம்.ஜி.ஆருடன் நடித்திருப்பார் . அப்போது வேலை தேடி வந்த திரு.ரவீந்தர் ( இவர் ஒரு இஸ்லாமியர் .பின்னால் இவர் பெயரை ரவீந்தர் என எம்.ஜி.ஆர். மாற்றி வைக்கிறார் )தங்கவேலுவை தேடி வருகிறார் . தங்கவேலு ஒரு சிபாரிசு கடிதம்*எழுதி கொடுத்து அவரை எம்.ஜி.ஆரை சந்திக்க வைக்கிறார் . ரவீந்தர் எம்.ஜி.ஆரை சந்தித்ததும், உங்களுக்கு என்ன தெரியும், என்ன அனுபவம் இருக்கிறது என்று எம்.ஜி.ஆர். கேட்க, தான் எழுதிய நாடக கதையை காண்பிக்கிறார் .அப்போது உங்கள் பெயரை ரவீந்தர் என்று மாற்றி வைக்கிறேன் என்கிறார் . அந்த ரவீந்தர் எம்.ஜி.ஆர். குறித்து ஏராளமான நூல்கள் எழுதியுள்ளார் .கோடி மாலைகள் தாங்கிய எம்.ஜி.ஆர்.* தோள்கள்**என்ற சிறப்பான நூலையும் எழுதியுள்ளார் .பல காலம் எம்.ஜி.ஆருடன் பயணித்தவர் ரவீந்தர் . தன்னை நம்பி வந்தவர்களின் நலத்தில், வளர்ச்சியில்,முன்னேற்றத்தில்* மிகுந்த அக்கறை கொண்டவர் எம்.ஜி.ஆர்.என்பதற்கு பல சான்றுகள் கூறலாம் . அதனால்தான் நாடோடி மன்னன் படத்தில் அதற்கேற்றாற் போல ஒரு வசனம் இருக்கும் . என்னை நம்பாமல் கெட்டவர்கள்* பலருண்டு .நம்பி கெட்டவர்கள் இன்றுவரை இல்லை .அந்த வசனத்திற்கு அன்றும் சரி, இன்றும் சரி,பலத்த கைதட்டல்கள்*அரங்குகளில் எதிரொலிக்கும் .


எம்.ஜி.ஆர். விழுப்புரம் பக்கம் செல்லும்போதெல்லாம் ஒரு குறிப்பிட்ட இடத்திலபெட்ரோல் பங்கில்**பெட்ரோல் போடுவதற்கு*காரை நிறுத்திவிட்டு ,அந்த ஆறாவது மர நிழலில் ஒரு மூதாட்டி வடை விற்கிறார் .அவரிடம் சென்று ரூ.200 /- கொடுத்து வாங்கி வாருங்கள் , மீதி பணம் திரும்ப வாங்க வேண்டாம் .எவ்வளவு வடைகள் தருகிறார்களோ* அதை மட்டும் வாங்கி வாருங்கள் என்று சொல்லி அனுப்புகிறார் உதவியாளரிடம் . ஆனால் அந்த மூதாட்டியிடம் மீதி பணம் தருவதற்கு சில்லறை இல்லை . எம்.ஜி.ஆர். எப்போது இந்த பக்கம்* சென்றாலும் இதே போல வடைகள் வாங்கிவிட்டு மீதி பணம் வாங்க வேண்டாம் என்று சொல்கிறார் .இது தொடர்கதை ஆகிறது . இந்த மூதாட்டிக்கு சந்தேகம் . இவர்கள் யார் என்று தெரியவில்லை .மீதி பணம் வாங்காமல் செல்லுகிறார்கள் என்று அருகில் உள்ள நபர்கள், டிரைவர்களிடம் விசாரிக்கிறார் .ஆனால் முறையான, பதில், விடை கிடைக்கவில்லை .ஒருநாள் தட்டிலே வடைகள் வைத்துவிட்டு ஒரு ஓரமாக நின்று அந்த மூதாட்டி நோட்டமிட்டபடி இருந்துள்ளார் . அப்போது எம்.ஜி.ஆரின் கார் அருகிலுள்ள பெட்ரோல் பங்க் முன்பு நிற்பதையும் அவரின் உதவியாளர் தட்டில் பணம் வைத்துவிட்டு வடைகள் எடுத்து செல்வதையும் பார்த்துவிட்டு, பின்னாலேயே ஓடி வந்து எம்.ஜி.ஆரிடம்,ஐயா ,தர்மபிரபுவே, நீங்கள்தான் எனக்கு கணக்கில்லாமல் பணம் கொடுத்து ,இந்த ஏழையின்* வடைகள் வாங்குகிறீர்கள் என்பது எனக்கு இத்தனை நாட்கள் தெரியாமல் போனது .*நீங்க நல்லா இருக்கோணும் என்கிறார் .அதாவது உங்களுக்கு அன்பளிப்பாகவோ, நன்கொடையாகவோ பணம் கொடுத்தால் ,உங்கள் உழைப்பை மதிக்காதது போல் ஆகிவிடும் என்றுதான் பணம் கொடுத்து வாங்கினேன்,நீங்கள் தவறாக எடுத்து கொள்ளக்கூடாது* என்று கூறி மேலும் கொஞ்சம் பணம் கொடுத்தார் . வறியோர்கள், முதியோர்கள் ,ஆதரவற்றோர்களை காப்பாற்ற* இது போன்ற உதவிகள் அவ்வப்போது செய்து வந்தது மட்டுமில்லாமல், தான் முதல்வரானதும் ,முதியோர்,நல உதவி திட்டம் ஒன்றை அரசு சார்பில் தொடங்கி வைத்தார் .இந்த திட்டம் பற்றி 1958ல் வெளிவந்த நாடோடி மன்னன் படத்தில் அறிவிக்கும் பல திட்டங்களில் இதுவும் இடம் பெற்றிருக்கும் . என்பது குறிப்பிடத்தக்கது ..*மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும் .


நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
----------------------------------------------------------------------------------
1.ஆடி வா ,ஆட பிறந்தவளே ஆடி வா - அரச கட்டளை*

2.தாய் மேல் ஆணை, தமிழ் மேல் ஆணை- நான் ஆணையிட்டால்*

3.எம்.ஜி.ஆர்.-திருப்பதிசாமி உரையாடல் - தேடிவந்த மாப்பிள்ளை*

4.ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலேதான் -குடியிருந்த கோயில்*

5.எம்.ஜி.ஆர். -ராமதாஸ் உரையாடல் - ரிக்ஷாக்காரன்*

6.நாடோடி மன்னன் படத்தில் எம்.ஜி.ஆர்.*.*

orodizli
16th September 2020, 09:22 AM
சொல்வதெல்லாம்
உண்மை .
______________________
மக்கள் திலகத்தின் படங்களில் 99 சதவீதம் மறு வெளியிட்டில் தான் பார்த்தேன் .

படம் பார்க்க பெற்றோரகளிடம் கடும் தவம் புரியவேண்டும் .

முருகன் திரையரங்கம் வீட்டின் அருகில் இருந்ததால் இத் திரையரங்கில் மட்டும் பெற்றோர்கள் கருணை கண் திறப்பர் .

பள்ளிக்கு செல்லும் பொழுது என் தலையாய கடமை முருகன் திரையரங்கில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டில்ஸ்களை பார்ப்பது .

அப்படி காணும் பொழுது கன்னித்தாய் படத்தின் ஸ்டில்ஸ் ஒட்டப் பட்டிருந்தது .

என் மூளை சுறுசுறுப்பு அடைந்தது .

சொன்னாலும் புரியாது
சினிமா பார்க்க போடும் திட்டங்கள் .

திட்டம் நிறைவேறியதால் படம் பார்க்க புறப்பட்டேன் .

டிக்கட் 56 பைசா என்னிடம் 65 பைசா இருந்தது என்னுள் ஒரு திமிர்.

சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த கன்னித்தாய் படத்தின் போஸ்டர்களை பார்த்தவாறே பெருமிதத்துடன் நடந்தேன் .

சம்பரதாய தள்ளு முல்லுகளை அனபவித்து ஒரு வழியாக கன்னித்தாய் படத்தினை காண ஆயுத்தமானேன் .

படம் போட்டவுடன் விசில் சத்தம் அதிரந்தது .

ஆனால் படம் திரையிட்டது தனிப்பிறவி !

அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் முகத்தில் ஒருவருக்கும் கேள்வி குறிகளோ ? ஆச்சரியக்
குறிகளோ தென்படவில்லை !

மக்கள் திலகம் ஓர் அதிசயமே !

எங்களுக்கு தேவை அவர் முகம் மட்டுமே சொல்லாமல் விளக்கிய ரசிகர்கள் கூட்டம் !

நான் சொன்னதெல்லாம் உண்மை .......... Hd.,

orodizli
16th September 2020, 09:24 AM
தலைசிறந்த மாமனிதரின் கொள்கைப்பற்று
********************
நான் எனக்கென்று எதையும் சேமித்து வைக்கும் எண்ணம் கொண்டவன் கிடையாது....

எதாவது தனக்கு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதும் கிடையாது.

உழைக்கின்றேன்....
வறுமையில் வாடுபவர்களுக்கு அதன் மூலம் என் பணியை செய்கின்றேன்.

நான் மனிதர்களை மட்டும் பார்க்கும் ஒரு சாதாரண மனிதனாக
வாழ்கின்றேன்.

எல்லோரும் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று நான் நினைத்தால் அது என் தவறாகும்.

(புரட்சியார் விதைத்த அழமான கருத்தில் இருந்து..... 1972)

"தியாகத்தையே வாழ்க்கையாக கொண்டு வாழ்ந்த புரட்சித்தலைவரின் வழியில்".....யாம்.........ur

orodizli
16th September 2020, 01:02 PM
"இதயக்கனி": வண்டு துளைத்தது என்று துரோகிகளால் தூக்கியெறியப்பட்ட கனி எதிரிகளின் ஊழல் கோட்டையை
தகர்த்து. ஊழல் பெருச்சாளிகளை
விரட்டி விட்டு மக்கள் ஆதரவு பெற்ற
நல்லாட்சியை அமைத்துக் கொடுத்தது. அரசியலில் மட்டுமல்ல கலைத்துறையிலும் 1975 ம் ஆண்டு திரையிட்ட அநேக படங்களை தூக்கியெறிந்து முதல் இடம் பெற்ற படம்தான் "இதயக்கனி".

எதிர் முகாமிலிருந்து வந்த ஒரு பழம் பெரும் தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் அவர்கள் "இதயக்கனி"யின் வெற்றி விழாவில் எம்ஜிஆரின் ஒவ்வொரு படமும்
மற்ற நடிகர்களின்
25 படங்களுக்கு சமம் என்ற உண்மையை ஒப்புக்கொண்டதை
திரைப்படத்துறையை சார்ந்த அனைவரும் வரவேற்றார்கள்.

அந்த தயாரிப்பாளரும் பல படங்கள் தயாரித்து கையில் உள்ள சில்லரையை இழந்து ஒரு படமாவது எம்ஜிஆரை வைத்து தயாரித்திருக்கலாமே என்ற ஏக்கத்தில் பேசியது, திருடனுக்கு தேள் கொட்டியது போல மாற்று அணி ரசிகர்கள் வாய் பேச முடியாமல் மெளனம் காத்தனர். இன்று அவர்கள் வாய்க்கு வந்ததை எல்லாம் சிவாஜி படத்தின் வசூலாக புலம்பி வருகின்றனர். இவர்களுக்கு யார் இந்த கற்பனை வசூலை தியேட்டர் பங்கு, விநியோகஸ்தர் பங்கு என பிரித்து கொடுக்கிறார்களா? தெரியவில்லை.
இதற்கான தொழிற்கூடத்தை கண்டு பிடிக்க வேண்டும்.

சிவாஜியால் நஷ்டமடைந்த தயாரிப்பாளர்களிடம் அவர்களை ஒப்படைத்தால் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.அதிலும் ஒரு உளறுவாயன் சிவாஜி நடித்த படங்கள்தான் ஒரு ஆண்டில் 60 சதவீத வசூல் கொடுக்கிறதாம். மற்ற நடிகர்களின் எல்லா படங்களும் சேர்ந்தே 40 சதவீத வசூல்தான் கொடுக்கிதாம். இப்படி கீழ்ப்பாக்க கேஸ்கள் நிறைய அலைகிறது. 1975 ல் வெளியான மொத்த படங்கள் 59
என்கின்றன புள்ளி விபரங்கள். அதில் எம்ஜிஆர் நடித்த படங்கள் 4.

"நினைத்ததை முடிப்பவன்" "நாளைநமதே" "இதயக்கனி" "பல்லாண்டு வாழ்க" ஆகியவை. முக்தா சீனிவாசன் கூறிய படி "இதயக்கனி" மட்டுமே 25 படங்களின் வசூலுக்கு சமம் என்றால் மற்ற எம்ஜிஆர் படங்கள் எல்லாம் சேர்த்து சுமார் 80 சதவீதத்துக்கும் மேலே வசூல் செய்தால் மீதம் இருக்கின்ற 20 சதவீதத்தில் பாவம் கணேசனின் பங்கு என்ன? என்று முடிவு செய்ய முடியும். அதனால்தான் சிவாஜி படம் எடுப்பவர்கள் சீக்கிரம்
i p கொடுத்து விடுகிறார்கள் போலும்.

அப்படிதான் தற்போது "வெள்ளை ரோஜா" என்று புலம்பி வருகின்றனர்."வெள்ளை ரோஜா"வில் யார் நடித்தாலும் அது ஹிட் ஆகியிருக்கும். "போஸ்ட் மார்ட்டம்" என்ற சூப்பர் ஹிட் அடித்த
மலையாளப் படத்தின் ரீமேக்தான் "வெள்ளை ரோஜா" அது எல்லா மொழிகளிலும் வெற்றி பெற்ற படம்.
ஏதோ சிவாஜி நடித்ததில் ஹிட் ஆன மாதிரி ரீல் விடுகிறார்கள். அதிலும் அவர் மெயின் ரோல் கிடையாது.
சிவாஜியை போல் மிகையில்லாமல் அவரது மகன் பிரபு நடித்திருப்பார்.

அவர் பெரியப்பா, எம்ஜிஆரின் ரசிகர் அல்லவா? அவர்தான் கதாநாயகன், நாயகி அம்பிகா,ராதா.
இது போன்ற இளம் நாயகர்களின் தேரோட்டமாக வந்து "இதயக்கனி" டைரக்டர் a.ஜகந்நாதன் இயக்கத்தில்
வெளியான படம். படத்தின் வெற்றிக்கு சொந்தக்காரர் பிரபு அம்பிகா ஜோடி. இதில் குணசித்திர வேடத்தில் நடித்த சிவாஜி என்ன செய்தார் என்று தெரியவில்லை.
வேறு நல்ல நடிகர்களை கூட நடிக்க வைத்து படம் வெற்றியடைந்தால் தன்னால்தான் என்று சிவாஜி ரசிகர்கள் கூவுவது வழக்கமாகிவிட்டது. படம் தோல்வியடைந்தால் கண்டு கொள்ளவே மாட்டார்கள்.

மகனாக இருந்தாலும் அதேகதிதான்.
இப்படி அடுத்தவர்கள் வெற்றியில் குளிர்காய்வது சிவாஜி ரசிகர்களுக்கு வாடிக்கை. அது பிரபுவின் வெற்றிதான் என்பதை
அடுத்தடுத்த படங்களில் நிரூபித்தார்.
அதுவும் "சின்னதம்பி"யின் வெற்றி சிவாஜியால் நினைத்துகூட பார்க்க
முடியாத ஒன்று. அதேபோல் சிவாஜியும் தனது அடுத்தடுத்த படுதோல்வி படங்கள் அவருக்கும் "வெள்ளை ரோஜா"வின் வெற்றிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதை நிரூபித்தார்.

"இரு மேதைகள்" "படிக்காத பண்ணையார்"
"எமனுக்கு எமன்""
(தயாரிப்பாளர்களுக்கு) "நாம் இருவர்" இன்னும் இது போல
பல படங்கள் தயாரிப்பாளர்களை பார்சல் பண்ணியதை மறக்க முடியுமா? . தோல்வி ஒன்றா! இரண்டா! எடுத்துச் சொல்ல..ஆதலால் தயவுசெய்து "வெள்ளை ரோஜா" வை விட்டு விடுங்கள். சிவாஜியின் அட்டகாசம் தாங்க முடியாமல் பிரபுவும் தகப்பருடன் சேர்ந்து நடிக்க மறுத்து விட்டார்.

இந்த பொய் வசூல் கணக்கை அப்போதே தயாரிப்பாளர்களிடம் கொடுத்திருந்தால் அவர்களில் நிறைய தயாரிப்பாளர்கள் காப்பாற்றப்பட்டிருப்பார்கள். பேப்பரில் எழுதிக் காட்டியதெல்லாம் வசூலாகுமா? ஆனால் அவர்கள் எழுதிக் காட்டி ஏமாற்றிய வசூல் கணக்குகளை தாண்டி புரட்சி தலைவரின் "இதயக்கனி" வசூல் ஈட்டிய ஆதாரங்கள் இதோ உங்களிடம்.

இதயக்கனி சென்னை நகர மொத்த வசூல் ரூ 19,87,875.39.
சத்யம். 105. ரூ 8,56,362.50
மகாராணி. 105. ..4,64,984.50
உமா. 105. 3,78,876.49
கமலா. 72. 2,87,651.90
. ........... ----------------------
387 19,87,875.39
----------------------
மதுரை. சிந்தாமணி 146. 5,52,218.33
கோவை சென்ட்ரல். 105. 4,96,451.55
வேலூர் கிருஷ்ணா. 100. 4,02,884.76
சேலம் அப்சரா. 107. 5,08,748.20
திருச்சி பேலஸ். 118. 3,87,790.35
ஈரோடு ராயல். 109. 2,85,329.54
நெல்லை சென்ட்ரல்100. 2,88,223.70

சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், ஈரோடு, வேலூர், நெல்லை ஆகிய எட்டு ஊர்களில் மட்டும் பெற்ற வசூல் ரூ 50 லட்சத்தை கடந்து இமாலய சாதனை படைத்தது. மேலும் 1975 ல் தமிழகத்தில்
50, 75, 100 நாட்கள் அதிக திரையரங்குகளில் ஓடி 5 மாத காலத்துக்குள் 46 திரையரங்குகளில் 1 கோடியே 10 லட்சம் வசூலாக பெற்று புதிய சாதனையை படைத்தது. சென்னையில் மிக குறுகிய காலத்தில் அதிக வசூல் பெற்ற காவியம் "இதயக்கனி.".........

orodizli
16th September 2020, 01:19 PM
சில 'உதவாக்கரைகள்' சூரியனை பார்த்து ஏதோ குரைக்கிறது என சொல்வார்களே அது போன்று உளறி கொட்டுவதாக நண்பர் சொன்னார். நான் அவருக்கு சொன்னேன், பாவம் அவர்கள் ஆதங்கம், இயலாமை, முடியாமை, எந்த ஜென்மத்திலும் தீராத அபிலாஷைகள் அந்த நடிகர் குடும்ப உறுப்பினர்கள் கூட கவலைப்படாத சில ஆசைகளை நிறைவேற்ற கொஞ்சம் கூட திறமையோ வேறெதுவும் இல்லாமல் (ரெண்டும் கெட்டான்) ஆகவே இருந்து போய் சேர்ந்தாரே.. என்ற சொல்லொண்ணா துயரத்தில் புலம்புவது, வெம்புவது அவங்களுக்கு புதிதில்லை. அப்பப்ப பதில் வினைகள் ஆற்றுவதாக நினைத்து எப்போதும் முட்டாளாக, மூடர்களாக இருந்து வருவதில் நமக்கெங்கும் நஷ்டமில்லை, குறைவில்லை...அவ்வளவே...

orodizli
16th September 2020, 06:05 PM
#கள்வர்களுக்கு #அருளிய #நன்னெஞ்சே

1964 ஆம் ஆண்டு வாத்தியார், ஒரு நாடகத்திற்குத் தலைமை தாங்க காரில் மதுரைக்குச் சென்று கொண்டிருக்கிறார்...உடன் நடிகர் திருப்பதிசாமி, புத்தூர் நடராசன், கட்டரத்தினம், எம்ஜிஆர் அண்ணன் மகன் சுரேந்திரன் மற்றும் டிரைவர் சாகுல் அமீது...இரவு நேரம்...கார் விரைவாகச் சென்று கொண்டிருக்கையில், ஒரு சாலையின் நடுவே ஒரு கூஜா...கார் ஹெட்லைட் வெளிச்சத்தில் பார்க்கையில் அது 'வெள்ளிக்கூஜா' என்று தெரிந்தது...

பாவம் ...! நமக்கு முன்னர் வந்த யாரோ ஒருவர் இந்த கூஜாவைத் தவறவிட்டிருக்கவேண்டும், போய் அதை எடுத்து வா...! அதை வரும்வழியிலுள்ள காவல்நிலையத்தில் ஒப்படைத்துவிடலாம்...!!! என டிரைவரிடம் கூறித் தானும் இறங்குகிறார்...நல்ல கும்மிருட்டு ஒருவர் முகம் மற்றொருவருக்குத் தெரியாத அளவிற்கு...

அப்போது திடீரென 10 பேர் கம்புகளுடன் சூழ்ந்துகொண்டு, 'மரியாதையா கார்ல உள்ள பொருட்களை எடுத்து எங்ககிட்ட கொடுத்துட்டு கெளம்பிடுங்க...! உங்கள ஒன்றும் செய்யமாட்டோம் என்று கூறினர்...

அவர்கள் திருடர்கள் என அறிந்த வாத்தியார், 'இப்ப தரமுடியாதுன்னா என்ன பண்ணுவீங்க' அப்படின்னதும் கூட்டத்திலிருந்த ஒருவன், 'உங்க எல்லாரையும் அடிச்சுப்போட்டுட்டு எடுத்துட்டுப்போவோம்' ன்னு சொன்னான்..

அதைக்கேட்ட வாத்தியார் தனது டிரைவரிடம், 'சாகுல், கார்ல இருக்கிற கம்பை எடு' ன்னு சொல்லி கம்பை கையில் வாங்குகிறார்...
'நா எந்தப்பொருளையும் தரமாதிரி இல்ல...சண்டைக்கு நா ரெடி...ஒவ்வொருவரா வர்றீஙகளா அல்லது மொத்தமா வர்றீங்களான்னு' கேட்டு தனது கையிலுள்ள கம்பைச் சுழற்றி தாக்குதலை ஆரம்பிக்க...

அதிர்ச்சியடைந்த திருடர்கள், 'இத்தனை தைரியசாலி யாருடா, அந்த ஆள் முகத்தைப் பாக்கணும்னு' சொல்லி ஒருவன் தீக்குச்சியைக் கொளுத்தி முகத்தைப் பார்க்க, அதிர்ச்சியுற்று டேய்! நம்ம வாத்தியாருடா'ன்னு சொல்ல, அனைவரும் உற்சாகமடைந்தனர்...
'எங்கள மன்னிச்சுடுங்க வாத்தியாரே!' எனக் கோரஸாக அனைவரும் மன்னிப்பு கேட்டனர்...

'ஏம்பா! உங்களுக்கெல்லாம் உடம்பு நல்லாத்தானே இருக்கு...இப்படி திருடறீங்களே, உங்களுக்கே கேவலாமல்ல...இந்த ரோட்ல எத்தனை பேர் அவசர வேலையா வருவாங்க, நோயாளிகள், கர்ப்பிணிகள், இப்படி...அவங்களெல்லாம் உங்களால எந்தளவு பாதிக்கப்படுவாங்கன்னு உங்களுக்குத் தெரியாதா? எத்தகைய பாவச்செயல் நீங்க செய்யறது? அப்படீன்னு வாத்தியார் சொல்ல...

அனைவரும் "இனிமே நாங்க திருடவே மாட்டோம்னு" சொல்ல..
'நீங்களனைவரும் சத்தியம் செஞ்சாதான் நம்புவேன்னு' வாத்தியார் சொல்ல...அவரின் கையில் அடித்து சத்தியம் செய்தனர்...

வாத்தியார், அந்த பத்து பேருக்கும் தலா ரூ.1000/- வழங்க (1964 ம் வருடம் 1000 ரூபாய் என்பது இன்றைய தேதியில் குறைந்தது ஒரு லட்சம்) அதை அவர்கள் வாங்க மறுத்தனர்...உடனே வாத்தியார், ' இந்தப் பணம் நீங்க உழைச்சுப் பிழைப்பதற்காக, ஏதாவது கடை வைத்து பிழைத்துக்கொள்ளுங்கள்...'ன்னு சொன்னபிறகு அவர்கள் வாங்கிக்கொண்டு சென்றனர்...

இப்படி வாத்தியாரின் வாழ்வில் வரும் ஒவ்வொரு சம்பவமும் பல திருவிளையாடல் தான்............

orodizli
16th September 2020, 08:51 PM
நினைத்ததை முடித்த நம் தலைவர் உடன் ஒரே அந்த படத்தில் நடித்தவர் சாரதா அவர்கள்.

துலாபாரம் படத்துக்கு அவர் நடிப்பில் வியந்து தேசிய விருது கொடுத்தது மைய அரசு.

மலையாளம் தெலுங்கு மற்ற பிற மொழி படங்களில் மிகவும் அவர் பிசி ஆக இருந்த நேரத்தில்" நினைத்ததை முடிப்பவன் " படத்தில் அவரை தலைவருக்கு தங்கை வேடத்தில் நடிக்க கோரிய போது.

வேண்டாம் நான் பல மொழி படங்களில் பிசி.
அவரோ அரசியல் மற்றும் சினிமாவில் பிசி...இருவர் தேதியும் ஒன்றாக செல்ல முடியாமல் படத்துக்கு ஆபத்து வரும்...என்று மறுக்க.

தலைவர் அவர் சொன்ன செய்தி அறிந்து முதலில் அவரே தேதிகளை நடிக்க கொடுக்கட்டும்.

அதே தேதியில் நான் சம்மதிக்கிறேன் என்று சொல்லுங்கள்...இந்த வேடத்துக்கு அவரே மிகவும் பொருத்தமாக இருப்பார் என்று நான் சொல்லியதாக அவரிடம் சொல்லுங்கள் என்றவுடன்....

மறுப்பு தெரிவிக்க முடியாமல் அன்று உச்சத்தில் இருந்த ஊர்வசி சாரதா அவர்கள் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு நடிக்க..

இதுவரை அவர் கதாநாயகி ஆக கூட நடித்த படத்துக்கு கொடுக்க படாத உயர்வான தொகையை தலைவர் பேசி அவருக்கு வாங்கி கொடுக்க....

அசந்து வியந்து போனார் நடிகை சாரதா அவர்கள்..என்ன ஒரு தீர்க்கதரிசி அவர் என்று படம் வெற்றிக்கு பின் பல நாட்கள் புலம்பி தீர்க்கிறார் அவர்.

படம் தலைவர் எண்ணம் போல அருமையாக வந்து மாபெரும் வெற்றி அடைந்த வரலாறு அவருக்கு மட்டுமே சொந்தம்..

பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த என்ற பாடல் அன்று ஒலிக்காத திருமண வீடுகளே இல்லை.
ஏன்...இன்று வரை கூடவே.

அன்று ஊர்வசி சாரதா அவர்கள் நடிப்பை பார்த்து கண்ணீர் சிந்தாத தாய்மார்கள் தமிழகத்தில் இல்லை

அதுதான் தலைவரின் வெற்றி ரகசியம்..யாரை எந்த ரோலில் போட்டு உடன் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து.

நினைத்ததை முடித்தவர் அவர் புகழ் என்றும்...காப்போம்.

நன்றி..உங்களில் ஒருவன்...தொடரும்..

திரையில் மட்டும் அல்ல இந்த தமிழ் தரையில் கூட கணிக்க முடியாத தலைவர் அவர்..நன்றி..........

orodizli
16th September 2020, 08:52 PM
எம்ஜிஆரைப் பற்றி அவரது ரசிகர்களுக்கும் சரி, பொதுமக்களுக்கும் சரி பல விஷயங்கள் தெரிந்திருந்த போதிலும் கூட, அவரது அரசியல் பிரவேஷம் எப்போது? சினிமாவில் தீவிரமாக நடித்துக் கொண்டிருந்தவர் எப்படி திடீரென ஒரு புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி உடனடியாக தமிழக முதல்வராகவும் ஆனார்? என்று தடாலடியாக யாராவது கேள்வி கேட்டால், திமுக எம் எல் ஏக்களை சொத்துக் கணக்கு காட்டச் சொல்லி பொதுமேடையில் விமர்சித்ததாலும், கட்சியின் செலவுக் கணக்கைக் கேட்டதாலும் தான் அவர் திமுகவிலிருந்து கருணாநிதியால் வெளியேற்றப்பட்டார் என்றும் அந்த உத்வேகத்தில் அவரது ரசிகர்கள் காட்டிய ஏகோபித்த அன்பிலும், வரவேற்பிலும் முகிழ்த்தது தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் எனும் கட்சி என்றும் பொத்தாம் பொதுவாக யார் வேண்டுமானாலும் பதில் சொல்லி விடுவார்கள்.

ஆனால் எம் ஜி ஆரின் அரசியல் வரலாறு அத்தனை எளிதாகச் சொல்லி முடித்து விடக்கூடியது அல்லவே! அவர் 1952 முதலே தம்மை மிகுந்த அரசியல் ஈடுபாடு கொண்டவராகவே காட்டிக் கொண்டிருந்துள்ளார். 1952 ல் பேரறிஞர் அண்ணாவின் தலைமையால் ஈர்க்கப்பட்டு திமுக வில் சேர்ந்த எம்ஜிஆர், தனது அரசியல் பிரவேசத்தின் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாபெரும் மக்கள் ஈர்ப்பு சக்தியாக விளங்கினார் என்பது யாருக்கும் சொல்லித் தெரியவேண்டிய விஷயமில்லை. அது ஊரறிந்த உண்மை! முதலில் கட்சியின் அடிப்படை உறுப்பினரகச் சேர்ந்து பிறகு தனது திரைப்படங்களில் வசனங்கள் மற்றும் பாடல்கள் வாயிலாக கட்சியின் பிரச்சார பீரங்கியாகி அப்படியே கட்சிப் போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்று, அதைத் தொடர்ந்து சில வருடங்களில் சட்டமன்ற மேலவை உறுப்பினராகி, சிறுசேமிப்புத் தலைவராகி, திமுகவின் பொருளாளராகி அடேயப்பா... எம் ஜி ஆர், தனிக்கட்சி தொடங்குமுன்னர் திமுகவில் ஆற்றிய பணிகள் தான் எத்தனை, எத்தனை?! அதை வரிசைக் கிரமமாக இந்த வாரம் தெரிந்து கொள்ளுங்கள்.

அது மட்டுமல்ல; திமுகவில் இயங்கிய போதும் சரி, திமுகவிலிருந்து விலக்கப்பட்டு தனிக்கட்சி தொடங்கி அரசியல் செய்தபோதும் சரி எம்ஜிஆர் என்ற ஆளுமை தேர்தல் களத்தில் தன்னை எதிர்த்து நின்றவர்களுக்கு சிம்ம சொப்பனமாகத்தான் இருந்திருக்கிறார். அதை அவர் போட்டியிட்டு ஜெயித்த தொகுதிகளின் பட்டியலைச் சரி பார்த்து தெரிந்து கொள்ளலாம். சரி இனி எம்ஜிஆரின் அரசியல் வரலாற்றைச் சுருக்கமாகவும், விளக்கமாகவும் ஆண்டு வரிசைப்படி தெரிந்து கொள்ளுங்கள்.

1952 - தி.மு.க. வில் சேர்ந்தார்.
1957 - முதல் முறையாக தி.மு.க.வை ஆதரித்து தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்தார். 15 இடங்களில் தி.மு.க. வென்றது.
1958 - சென்னை வருவதாக இருந்த நேருவுக்கு கறுப்புக் கொடி காட்ட தி.மு.க. முனைந்த போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர்., கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 6 நாட்கள் சாதாரண வகுப்பில் இருந்தனர் அவர்கள். பிரமுகர்களுக்கான வசதி, சலுகைகளை எம்.ஜி.ஆர். மறந்துவிட்டார். இந்த உண்மையை எம்.ஜி.ஆர். ஒரு போதும் வெளிப்படுத்திக்கொண்டது இல்லை.
1962 - இரண்டாம் முறையாக தி.மு.க.வை ஆதரித்து எம்.ஜி.ஆர். பிரச்சாரம் செய்தார். 52 இடங்களில் தி.மு.க. வென்றது.
1962 - சட்டமன்ற மேலவை உறுப்பினராக (m.l..c.) ஆனார்.
1964 - இந்த ஆண்டில் தி.மு.க.வில் கருணாநிதி ஏற்படுத்திய சர்ச்சைகள் காரணமாக ராஜினாமா செய்தார்."காமராஜர் என் தலைவர் அண்ணா என் வழிகாட்டி" என்று எம்.ஜி.ஆர். சொன்னதால் ஏற்பட்ட சர்ச்சை அது.
1965-இந்தி எதிர்ப்பு மொழிப் பிரச்சனை போராட்டத்தில் கலந்து கொண்டார்.
1967 - தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறுசேமிப்பு துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார்.
1971 - மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜூலையில் திராவிட முன்னேற்ற கழக பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1972 - திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து நீக்கப்பட்டார்.
1972 - அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற ஓர் அரசியல் கட்சியை ஏற்படுத்தினார்.
1974 - புதுவையில் அனைத்திந்திய அ.தி.மு.கழகம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
1977 - புதுவையில் இரண்டாவது முறையாகவும், தமிழகத்தில் முதல் முறையாகவும் அ.இ.அ.தி.மு.க. போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
1980 - அ.இ.அ.தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. (பாராளுமன்ற தேர்தல் தோல்வியின் காரணமாக)
1980 - தமிழகத்தில் நடந்த மறு சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு அ.இ.அ.தி.மு.க. ஆட்சி அமைத்தது.
1981 - மதுரையில் 5ம் உலகத் தமிழ் மாநாடு இந்திய பிரதமர் இந்திராகாந்தி தலைமையில் சிறப்புடன் நடத்தினார்.
1982 - மாநிலத்திற்கு அரிசி தேவைக்கு உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
1984 - அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிட்டு ஆட்சி அமைத்தது.
1987 - இலங்கைத் தமிழர்கள் அமைதி காக்க இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி - இலங்கை பிரதமர் ஜெயவர்த்தனா ஒப்பந்தம் ஏற்பட பாடுபட்டார்.


எம்ஜிஆர் போட்டியிட்ட இடங்கள் பெற்ற வாக்குகள்



எம்.ஜி.ஆர். பரங்கிமலை -54106. காங்கிரஸ் -26,432
எம்.ஜி.ஆர். பரங்கிமலை -65405 காங்கிரஸ் -40777
எம்.ஜி.ஆர். அருப்புக்கோட்டை -43065 தி.மு.க. -5415
எம்.ஜி.ஆர். மதுரை மேற்கு -57019 தி.மு.க. -35959
எம்.ஜி.ஆர். ஆண்டிப்பட்டி -60510 தி.மு.க. -28016

24.12.1987 - முதல்வர் எம்.ஜி.ஆர். அமரரானார்..........

orodizli
16th September 2020, 10:14 PM
முந்தைய வசூல் சில...
***************************
1984 பாரகன் 14 நாள்
வசூல் : 1,01,789.04
1985 நாகேஷ் 14 நாள்
வசூல் : 93, 250.00
1988 பிளாசா 14 நாள்
வசூல் :1,03,325.00
1988 நாகேஷ் 21 நாள்
வசூல் : 1,58,847.35
1988 நடராஜ் 21 நாள்
வசூல் : 1,50,792.40
1988 ஜெயராஜ் 14 நாள்
வசூல் : 65,690.45
1990 எம்.எம் தியேட்டர்
7 நாள் : 94,382.00
16 காட்சி House Full
1991 கமலா 7 நாள்
வசூல் : 97,509.50
15 காட்சி House Full*
1991 பிருந்தா 7 நாள்
வசூல் : 91,224.65
11காட்சி House Full*
இன்னும் ஏராளமான அரங்கில்
1984 முதல் 1993 வரை சென்னையில் இடைவிடாது சாதனையில்..மக்கள் திலகத்தின்
100 வது காவியம் ...
கோடிகளுக்கு மேல் வசூலை வாரி குவித்துள்ளது....

மேலும் பல புள்ளி விவரங்கள் தொடரும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.........

UR.
*

orodizli
16th September 2020, 10:16 PM
மக்கள் திலகத்தின் நூறாவது திரைப்படமான" ஒளி விளக்கு " திரைக்காவியம் பற்றி சில புள்ளி விபரங்கள்....
சென்னை நகரில் 1984 ஆம் ஆண்டு பாரகன் திரையரங்கில் திரையிடப்பட்ட ஒளிவிளக்கு காவியம் முதல் வாரத்தில் நடைபெற்ற 28 காட்சிகளும் அரங்கு நிறைந்து.... கொட்டும் மழையில்* இரண்டாவது வாரமாக 18
காட்சிகள் அரங்கு நிறைந்து மொத்தம் 46 காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனை படைத்த ஒரே காவியம் ஒளிவிளக்கு....

நாகேஷ் திரையரங்கில் திரையிடப்பட்ட ஒளிவிளக்கு 1985ல் 14 நாட்கள் நடைபெற்றது.*
இதில் 26 காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனையாகும்.

1988 ஆம் ஆண்டு நடராஜ், நாகேஷ் திரையரங்குகளில் 21 நாட்கள் ஓடி மிகப்பெரிய வெற்றியை வசூலைக் கொடுத்து... 40க்கும் மேற்பட்ட காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனை.

சென்னை பிளாசா, ஜெயராஜ் திரையரங்குகளில் 14 நாட்கள் ஓடி இரண்டு அரங்கிலும் கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனை.

கோவை மாநகரில் (07.08.1992 ) ஒளிவிளக்கு திரைக்காவியம்*
ஒரே வாரத்தில் இரண்டு திரையரங்குகளில் திரையிடப்பட்டது. கங்கா மற்றும் ராஜா திரையரங்குகளில் திரையிடப்பட்டு மாபெரும் வெற்றியை படைத்து சாதனை.
ஒரே நாளில் 8 காட்சி ஒடியது....
ஒரே வாரத்தில் ஒடிய.
56 காட்சி வசூல் : 2,45,860.80

2013 ஆம் ஆண்டு சென்னையில் ஒரே நேரத்தில் ஒளிவிளக்கு திரைக்காவியம் அண்ணா, மகாலட்சுமி இரண்டு திரையரங்குகளில் திரையிடப்பட்டு அண்ணா திரையரங்கில் ஒரு வாரத்தில் ஒரு லட்சத்து*
26 ஆயிரத்து வசூலை கொடுத்தது.
அதேபோல மகாலட்சுமி திரையரங்கில் 4 வாரங்கள் ஓடி*
3 லட்சத்திற்கு மேல் வசூலை வாரிக் கொடுத்து 12 காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனையாகும்-
மீண்டும் அதே மகாலட்சுமி திரையரங்கில் 2017 ஆம் ஆண்டு இரண்டு வாரங்கள் நடைபெற்ற திரைக்காவியம் ஒளி விளக்கு ஆகும்......இத்தகைய சாதனை படைத்த மற்ற யாருடைய படங்களேனும் உண்டா?!.........

orodizli
16th September 2020, 10:20 PM
இதயக்கனி திரைப்படத்துக்கு சென்னையில் மட்டும் 3 நாட்களுக்குள் ரிசர்வேஷன் வசூலே 90 ஆயிரத்தை தாண்டி புதிய சாதனை செய்தது. இந்த சாதனையைப் பார்த்து மிரண்டு போனது அப்போதைய திமுக ஆட்சி. உண்மையிலேயே அவ்வளவு வசூல் ஆகியிருக்கிறதா என வணிகவரித்துறை அதிகாரிகள் தியேட்டர்களில் சோதனை செய்தனர். சோதனை என்ற பெயரில் மக்கள் கூட்டம் வருவதை தடுக்கும் வகையில் கெடுபிடிகள் செய்தனர். ஆனால், மக்களின் துணையோடு இதையெல்லாம் புரட்சித் தலைவர் எதிர்கொண்டு வெற்றிபெற்றார். சென்னை சத்யம் தியேட்டரில் முதன் முதலாக 100 நாள் ஓடியபடம் இதயக்கனி. ரஷ்யா சர்வதேச பட விழாவிலும் இதயக்கனி படம் கலந்து கொண்டு சாதனை செய்தது.

புரட்சித் தலைவருக்கு வந்த சோதனைகள் வேறு எந்த நடிகருக்கு வந்தாலும் தாக்குப் பிடித்திருக்கமாட்டார். விஸ்வரூபம் 2 படத்துக்கு சோதனை வந்தபோது கமல்ஹாசன், ‘நாட்டைவிட்டே போய்விடுவேன்‘ என்றார். இப்பவும் சமீபத்தில் ‘கட்சியைக் கலைத்துவிடுவேன்’ என்கிறார். நடிகர் ரஜினிகாந்த் இதோ.. அதோ... என்கிறாரே தவிர, அரசியலுக்கு வர இன்னும் தயக்கம் காட்டுகிறார். சிவாஜி கணேசன் எதிர்ப்புகளை சந்தித்தது இல்லை. பிரச்சினை இல்லாமல் இருப்பதற்கு ஆளும் கட்சிக்கு ஆதரவாகவே இருந்தார். தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி போனாலும், கருணாநிதிக்கு நண்பராகவே இருந்தார். காமராஜர் மறைந்ததும் அவருக்கு துரோகம் செய்து நெருக்கடி காலத்தில் இந்திரா காந்திக்கு பயந்து மத்தியில் ஆளும் இந்திரா காங்கிரஸில் சேர்ந்தார். அங்கு மரியாதை இல்லை என்றதும் ஜானகி அம்மாளுக்கு ஆதரவு என்ற பெயரில் தனிக்கட்சி. அந்த அணி ஆட்சிக்கு வரும் என்ற தப்பு கணக்கு போட்டார். இல்லாவிட்டால் சேர்ந்திருக்க மாட்டார். என்னை சுற்றியிருந்தவர்கள் சுயநலத்துக்காக என்னை கட்சி ஆரம்பிக்கும்படி தூண்டினர் என்று சுயசரிதையில் அவரே சொல்லி இருக்கிறார். அவராக விரும்பி கட்சி ஆரம்பிக்கவில்லை. சுற்றியிருப்பவர்கள் பேச்சைக் கேட்டு லாபம் கிடைக்கும் என்று நம்பியிருக்கிறார். அது போனியாகாமல் தேர்தலில் திருவையாறில் தோற்றதால் கட்சியைக் கலைத்துவிட்டு மத்தியில் ஆளும் கட்சியான ஜனதா தளத்தில் சேர்ந்தார். வி.பி. சிங்கை காலியாக்கி அவருக்கு பிரதமர் பதவி போய்விட்டது, தனக்கும் மார்க்கெட் இல்லை என்ற பிறகு இனிமேல் வண்டி ஓட்ட முடியாது என்று தெரிந்து அரசியலை விட்டே ஒதுங்கினார். சினிமாவிலும் அரசியலிலும் எதிர்ப்புகளை எதிர்த்து நின்று துணிச்சலாக சமாளித்து உலகத்திலேயே வெற்றி கொண்ட ஒரே நடிகர் மக்கள் திலகம்தான்..........ஸ்வாமி...

fidowag
16th September 2020, 11:48 PM
தனியார் தொலைக்காட்சிகளில் நிருத்திய* சக்கரவர்த்தி எம்.ஜி.ஆரின் திரைக்காவியங்கள் ஒளிபரப்பான*பட்டியல் ( 09/09/20 முதல் 16/09/20வரை )
------------------------------------------------------------------------------------------------------------------------
09/09/20* - சன் லைப்* -காலை 11 மணி - நாளை நமதே*

* * * * * * * * *ஜெயா மூவிஸ் -இரவு 10 மணி -சிரித்து வாழ வேண்டும்*

10/09/20* *சன் லைப் - மாலை* *4 *மணி -- புதிய பூமி*

* * * * * * * *புதுயுகம் டிவி -இரவு 7மணி -* தனிப்பிறவி*
* * ** * * * * * * * *ஜெயா மூவிஸ் -இரவு* 10 மணி - இதய வீணை*

11/09/20-ராஜ் டிஜிட்டல் -காலை 9.30 மணி - மாட்டுக்கார வேலன்*

* * * * * * * *சன்* லைப் - காலை 11 மணி - - இதயக்கனி*

* * * * * * * *மெகா 24 - பிற்பகல் 2.30 மணி - வேட்டைக்காரன்*

* * * * * * * ஜெயா மூவிஸ் -இரவு 10 மணி - ஊருக்கு உழைப்பவன்*

12/09/20-* மீனாட்சி டிவி* - இரவு 9.30 மணி - நல்ல நேரம்*

14/09/20 - சன் லைப் -* காலை 11 மணி - அன்பே வா*

* * * * * * * *விஷ்ணு டிவி -காலை 11 மணி -மாட்டுக்கார வேலன்*

* * * * * * * மெகா 24 -* பிற்பகல் 2.30 மணி - தாயின் மடியில்*

* * * * * * * புதுயுகம் டிவி -இரவு 7 மணி- தாயை காத்த தனயன்*

* * * * * * * மூன் டிவி* - இரவு 8 மணி* * - நல்ல நேரம்*

15/09/20-முரசு டிவி -மதியம் 12மணி/இரவு 7மணி-தாயின் மடியில்*

* * * * * * * சன் லைப் -* மாலை 4 மணி - ஆசைமுகம்*

* * * * * * *பாலிமர் டிவி -இரவு 11 மணி -சங்கே முழங்கு*

16/09/20 -சன் லைப் - காலை 11 மணி - தேடி வந்த மாப்பிள்ளை*

* * * * * * * மூன் டிவி* - இரவு 8 மணி* - முகராசி*

* * * * * * *பாலிமர்*டிவி*- இரவு 11 மணி - நல்ல நேரம்* *

*


* * * * * * * *

orodizli
17th September 2020, 07:48 AM
#ஒரு #பைசாக்கூட #தராத #எம்ஜிஆர்

மகாகவி காளிதாஸ் படப்பிடிப்பு ... சிவாஜி, காளிதேவி சிலையின் முன் அமர்ந்து பாடுவதாகக் காட்சி...பிரம்மாண்ட செட் போடப்பட்டிருந்தது...

மும்மரமாக ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கும் வேளையில், எதிர்பாராத மின் கசிவினால் "செட்" தீப்பிடிக்க ஆரம்பித்துவிட்டது. குழுவினர் அனைவரும் போராடி தீயை அணைத்தனர். ஆனால் பரிதாபமாக, அங்கு பணிபுரிந்துகொண்டிருந்த ஐந்து டெக்னீஷியன்கள் தீக்கு பலியாயினர்.

இறந்தவர்களின் உறவினர்களுக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது... அவர்களது மனைவிமார்களும், முக்கிய உறவினர்களும் ஸ்பாட்டுக்கு வந்திருந்தனர்..குடும்பத்திற்காக கஷ்டப்படுபவர் போயிட்டாரேன்னு கதறினர்...சாப்பாட்டுக்கு என்ன செய்வோம்...புள்ள குட்டிங்களை எப்படி கரைசேர்ப்போம்னு புலம்பினர். இதைப் பார்த்து வருத்தமுற்ற உடனிருந்த டெக்னீஷியன்களும், குழுவினரும் தங்களால் முடிந்த தொகையைக் கொடுத்து உதவினர்...

இந்த ஸ்பாட்டுக்கு சிறிது தூரத்தில் எம்ஜிஆரின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. இதைக் கேள்விப்பட்ட எம்ஜிஆர் உடனே பாதிக்கப்பட்ட இடத்திற்குச் சென்று நடந்ததை விசாரித்தார். எல்லோருக்கும் இந்த துக்கத்திலும் சிறிது மகிழ்ச்சி...ஏனெனில் எம்ஜிஆர் வந்துட்டார்...கண்டிப்பாகணிசமான தொகையைக் கொடுத்து உதவுவாரென்று. ஆனால் #எம்ஜிஆர் #ஒரு #பைசா #கூடத்தராமல் கிளம்புகிறார். அனைவருக்கும் அதிர்ச்சி... 'கேட்காமலே உதவி செய்யற வள்ளலாச்சே...' மனிதநேயமிக்க எம்ஜிஆரா இப்படி...
ஏன் இப்படி நடந்துகொண்டார்..."
என்று அனைவருக்கும் அதிர்ச்சி கலந்த வருத்தம்...

மறுநாள் காலை, பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து அவர்களின் மனைவிமார்களுக்கும், முக்கிய உறவினர்களுக்கும் ராமாவரம் தோட்டத்திலிருந்து அழைப்புவிடுக்கப்பட்டு...
என்ன ஏதென்றறியாமல் அங்கு செல்கின்றனர்...

எம்ஜிஆர் அவர்களை வரவேற்று உபசரித்து, அவர்கள் சிறுதொழில் தொடங்குவதற்காக கருவிகளையும், அதற்கான இடத்தையும், மூலதனத்தையும் அளிக்கிறார்...

வந்திருந்தவர்கள் உறைந்துபோய், 'அண்ணே! நீங்க நேத்து பணம் தராததுனால உங்கள தப்பா நெனச்சுட்டோம். எங்கள மன்னிச்சுடு சாமி' ன்னு கதறினர்... 'நீங்க நல்லா இருக்கணும் மவராசா' ன்னு வாழ்த்தினர்...

அப்ப கூட எம்ஜிஆர் வாயைத் திறக்கவில்லை...வழக்கம் போல தன் (பொ)புன்சிரிப்பையே பதிலாக அளித்தார்...

#நம் #இறைவன் #இதயதெய்வத்துக்குத் #தெரியாதான்ன! யாருக்கு என்ன செய்யணும்னு............

fidowag
17th September 2020, 02:27 PM
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். - வின்*டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*30/08/20 அன்று அளித்த*தகவல்கள்*
------------------------------------------------------------------------------------------------------------------------

சகாப்தம் நிகழ்ச்சி பல்வேறு தரப்புகளில் இருந்து நல்ல வரவேற்பை பெற்று கொண்டிருக்கிறது என்பதற்கு காரணம் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை முறை , அவர் வாழ்ந்த விதம் , அவர் திரைப்படங்களின் மூலம் வாத்தியாராக இருந்து மக்களுக்கு போதிப்பது என்கிற லட்சியம்தான் .ஒரு திரைப்படம் தயாரிப்பதற்கு நாம் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் செலவழிக்கிறோம் . அதன் மூலம் மக்களுக்கு ஏதாவது நல்ல விஷயங்கள், சமூக கருத்துக்கள் பயன்படக்கூடிய வகையில் தெரிவிக்க வேண்டும் என்பதில் முனைப்பாகவும், மிகவும் கவனமாகவும் இருந்துள்ளார் எம்.ஜி.ஆர்.*


இன்றைக்கு வாழ்க்கையில் நம்பிக்கை* ஊட்டக்கூடியதாக, உத்வேகம் தர கூடியதாக பல்வேறு விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது . இன்றைக்கு தமிழத்தில் பல்வேறு நகரங்கள், ஊர்கள், கிராமங்களில் இருப்பவர்கள், வெளிநாடுகளில் இருப்பவர்கள் எல்லாம் தன்னுடைய சொந்த மண்ணோடும், சிநேகத்தோடும் ஒட்டுறவோடும் இருக்கிற ஒரு நம்பிக்கை இருக்கிறதென்றால் அது மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பாடல்களினால்தான்*


ஒரு முறை ஆவடியில் இருந்து விமான நிலையம் வரை புதிய சாலை அமைக்கும் பணி துவக்கப்படுகிறது* .அது மிக நீண்டதூரத்திற்கான* பெரிய சாலை .அந்த சாலை செல்லும் வழியில் கே.கே.நகர் அருகில் கொட்டபாளையம் என்கிற இடத்தில* ஒரு அம்மன் கோவில் உள்ளது .அந்த அம்மன் சிலையுடன் கூடிய அந்த கோவிலை சாலை விரிவாக்கத்திற்கு இடையூறாக உள்ளதால்*அங்கிருந்து அகற்ற வேண்டும் என்பது பொதுப்பணி துறை அதிகாரிகளின் வேண்டுகோள் .அதை அகற்றினால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், போராட்டம் நடத்த முன்வருவார்கள். சட்ட பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்ன செய்யலாம் என்று குழப்பத்தில் உள்ள பொதுப்பணி துறை அதிகாரிகள் முதல்வரின் கவனத்திற்கு கொண்டுசெல்கிறார்கள் .உடனே*முதல்வர் எம்.ஜி.ஆர். காஞ்சி பெரியவர் சங்கராச்சாரியாரை சந்தித்து இது குறித்து*ஆலோசனை செய்கிறார் . நீங்கள் மாற்று இடம் தேர்ந்தெடுங்கள் .இந்த மாதிரியான இடம் முடிவு செய்யுங்கள். அங்கு இந்த அம்மன் சிலையை வைத்து பிரதிஷ்டை செய்யுங்கள்* அதன் பிறகு அங்கு முறைப்படி கோவிலை கட்டி ,பொதுமக்கள் வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யுங்கள் என்று காஞ்சி பெரியவர் கூறினார் .இதே போல பல்வேறு தரப்பில் உள்ள பண்டிதர்களை எல்லாம் அழைத்து இந்த விஷயம் குறித்து கருத்துக்கள் கேட்டறிந்தார் . அதன் பிறகு*பொதுமக்கள் சிலரை அழைத்து இவர்கள் எல்லாம் இப்படி,கருத்துக்கள், யோசனைகள் தெரிவிக்கின்றனர் உங்களுக்கு சம்மதம்தானே ,ஏதாவது ஆட்ஷேபம் உள்ளதா என்று அவர்களின் கருத்தையும் இறுதியாக கேட்டறிந்து அதே பகுதியில் ,அனைவருக்கும் உகந்த*,மாற்று இடத்தில முறைப்படி கோவில் கட்டமைக்கப்பட்டது . இன்றைக்கும் பொதுமக்கள் வழிபடும் முக்கியத்தலமாக*அந்த கோவில் அமைந்துள்ளது .ஆகவே, மத விஷயங்களிலும் சரி, மக்களின்* மனம் குறித்த* விஷயங்களிலும் சரி ஒரு முடிவு எடுப்பதாக இருந்தால் அவர் தன்னை முதல்வர் என்று கருதாமல் மக்களில் ஒருவனாக, சாமானிய மனிதராக*முக்கியஸ்தர்கள் பலரிடம் கருத்துக்களை கேட்டறிந்து ,அதை முறைப்படி நிறைவேற்றுவதில் எம்.ஜி.ஆருக்கு நிகர் அவரேதான் .


1970களில் சென்னையில் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடக்கும்போதெல்லாம்*நிறைய பேர் கையில் ட்ரான்ஸிஸ்டர் ,அல்லது பாக்கெட் ரேடியோ வைத்து*கிரிக்கெட் வர்ணனை கேட்டு கொண்டிருப்பார்கள் . 1974ல் ஒரு முறை சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஒரு போட்டியை காண எம்.ஜி.ஆர். தன் உதவியாளர்கள், நெருங்கிய நண்பர்கள் சிலருடன் பார்ப்பதற்காக*முதல் வகுப்பு டிக்கட் வாங்கிவிட்டு ஸ்டேடியம் செல்கிறார் . அந்த காலரிக்கு எம்.ஜி.ஆர். செல்லும்போது பார்த்தால் , முன் வரிசையில் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் இருக்கையில் ஆக்கிரமித்து அமர்ந்துள்ளனர் . ஆனால் எம்.ஜி.ஆர். தன்னுடன் வந்தவர்களுடன் தனக்கு ஒதுக்கப்பட்ட பின்வரிசை இருக்கைகளில்*அமருகிறார் . போட்டியை*பார்க்க எம்.ஜி.ஆர். வருகை*தந்த*விஷயம் அறிந்த*பார்வையாளர்கள் கூட்டத்தின் பெரும்பான்மை பகுதியினர் எம்.ஜி.ஆர். இருந்த காலரியை*நோக்கி படையெடுக்க பரபரப்பு தொற்றிக் கொண்டது . இனிமேல் இந்த மாதிரி போட்டிகளை*நாமும் ரசிக்க முடியாது . பார்வையாளர்களும் ஒழுங்காக*பார்க்க மாட்டார்கள் .இதனால் போட்டி* தொடர்ந்து நடைபெறுவதில்*பிரச்னைகள்* ஏற்படலாம் என்று கருதி*உடனே,அங்கிருந்து தன்னுடன் வந்தவர்களை அழைத்துக் கொண்டு*,அந்த மக்கள் கூட்டத்தில் இருந்து விலகி*காரில்*புறப்பட்டு நேராக தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். அலுவலகம் சென்றடைந்தார் .பின்னர் தன் உதவியாளர்கள் மூலம் உடனடியாக ஒரு கருப்பு*வெள்ளை டிவி*வாங்கி வர செய்து, அதற்கு முறையான இணைப்புகள்*செய்ய வைத்தபின்*அன்று போட்டியை முழுமையாக ரசித்து பார்த்தாராம் .


எம்.ஜி.ஆர். தன் ராமாவரம் தோட்டத்து*வீட்டில்*கீழ் தளத்தில் உள்ள மிக பெரிய நூலகத்தில்*இல்லாத நூல்களே இல்லை எனலாம் .நாடகம், நாட்டியம், இசை, இலக்கியம் இலக்கணம் குறித்த*நூல்களும் இதில்*அடங்கும் . ஏறக்குறைய*600க்கு மேற்பட்ட நூல்கள் ஆங்கிலத்திலும் , இதர 3400 நூல்கள்*தமிழிலும்*அந்த நூலகத்தில் இடம் பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன . அதே*போல அமேரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, நார்வே*ஜப்பான் போன்ற நாடுகளின்*நாணயங்களை சேகரிப்பதை அவர் வழக்கமாக வைத்திருந்தார் .ஏனென்றால் அவை அந்தந்த நாடுகளின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றின் பிரதிபலிப்பு என்பதை அவர் உணர்ந்திருந்தார் .மற்ற தகவல்கள்*அடுத்த அத்தியாயத்தில் தொடரும் .

நிகழ்ச்சியில் ஒலித்த*பாடல்கள்*/காட்சிகள் விவரம்*
---------------------------------------------------------------------------------
1.நான் பாடும்*பாடல் நலமாக வேண்டும் - நான் ஏன் பிறந்தேன்*

2.ஓடி*ஓடி உழைக்கணும் - நல்ல நேரம்*

3. என்னை தெரியுமா*- குடியிருந்த* கோயில்*

4.எம்.ஜி.ஆர். -எம்.ஆர்.ராதா உரையாடல் --பெரிய இடத்து பெண்*

5.பறக்கும் பந்து பறக்கும் - பணக்கார குடும்பம்*

6.எம்.ஜி.ஆர்.-சரோஜாதேவி -டி.ஆர்.ராமச்சந்திரன் -அன்பே*வா*

7.ஏய் நாடோடி போகவேண்டும் ஓடோடி*- அன்பே வா*

orodizli
17th September 2020, 02:50 PM
லண்டனில் மக்கள் திலகத்திற்கோர் மாபெரும் வரவேற்பு விழா.
அன்று [30.07.1973] மகாத்மா காந்தி மண்டபத்தில் மக்கள் திலகம் எம்.ஜி . ஆருக்கு ஒரு மாபெரும் வரவேற்பு விழா [இந்தியன் ஒய்.எம். சி.ஏ.] அங்கு கண்ட காட்சி, அப்பப்பா ...கூட்டம் அலை மோதியது. லண்டன் தமிழர்களின் வரலாற்றிலேயே இது வரை இப்படிப்பட்ட கூட்டம் கூடியதில்லை. அனைவரும் ஆவலுடன் காத்திருக்க சிறிது நேரத்திலேயே மக்கள் திலகம்,லதா, ப.நீலகண்டன், சித்ரா கிருவடிணசாமி ஆகியோர் வந்து சேர்ந்தனர். விழாவை ஏற்பாடு செய்த தமிழ் திரைப்பட சமூகக் கழகத்தினரின் அறிவிப்பாளர் திரு ஜெயம் குமாரநாயகம் அனைவருக்கும் வரவேற்பு கூறி ஒவ்வொருவராக மேடைக்கழைத்தார். கழகத்தின் செயலாளர் திரு. லத்திப் ஷா அவர்களின் வரவேற்பு உரையில் திரு .சித்ரா கிருஷ்ணசாமியும் திரு.ப . நீலகண்டனும் சிறு சொற்பொழிவாற்றினர். "உலகம் சுற்றும் வாலிபன் " படத்தை ரஷ்யாவின் மாஸ்கோவில் திரையிட வந்தவர்கள் அப்படியே லண்டன் வந்ததாகவும் கூறி மாஸ்கோவில் தமிழ் மக்கள் தங்களிடம் காட்டிய அன்பையும் வரவேற்பையும் அங்கு நடந்த சில சுவையான சம்பவங்களையும் இவர்கள் விபரித்தவர். லதா தானும் அ.தி.மு.க.வில் ஒரு அங்கத்தினர் என்று பெருமையாக கூறியதோடு தனது ஒரு நிமிட உரையை அழகாக முடித்து விட்டார்.
மக்கள் திலகத்தைப் பேச அழைத்தனர். "கையொலி வானைப் பிளந்தது". சாதாரன தொனியில் பேச்சை ஆரம்பித்த மக்கள் திலகம் இடி முழக்கத்துடன் அதை நிறைவு செய்தார். அவரது பேச்சில் இருந்த ஆழமும் கருத்துச் செறிவும் அங்கிருந்தோர் என்பவரையும் மெய் மறக்கச் செய்துவிட்டது. மக்கள் தன்னைப் போன்றவர்களுக்குக் காட்டும் இந்த அன்பும் ஆதரவும் எத்தனை காலத்திற்கு நிலைக்கும்?!. உயிர் உடலை விட்டுப் போனபின்னும் மக்களின் உள்ளங்களில் இடம் பிடித்தவர் எத்தனை பேர்?!. கலைவாணரின் கதி என்னவாயிற்று? என்று அழகாகக் கூறிய எம்.ஜி.ஆர் இன்று மக்களின் உள்ளங்களில் இடம் பிடித்திருப்பதைப் போல என்றும் இருக்கவேண்டும் என்பதுதான் தனக்குள்ள பேராசை என்று கூறிய பொழுது எழுந்த கையொலி நீங்கள் அதைக் கூறியிருக்கவே வேண்டாம் என்று அவரிடம் கூறுவது போல இருந்தது.
நீண்ட நேரம் பேசாமல் சுருக்கமாகத் தன் பேச்சை முடித்த எம் .ஜி. ஆரை ரசிகர்கள் சும்மா விட்டு வைக்கவில்லை. மேடை ஏறிச் சென்று பல கேள்விக்கணைகளை தொடுத்தனர் ,. ஈழத்தமிழர் பிரச்சினை பற்றியும் , தமிழ் நாட்டிற்கு லண்டனிலிருந்து பணம் அனுப்புவதிலும் பிரமாண பத்திரம், பாஸ்போர்ட் புதிப்பித்தலிலும் உள்ள தொல்லைகளையும் பற்றிக்கட கேள்விகள் கேட்கப்பட்டன. அ.தி.மு.க.தேவையா ? என்ற கட ஓர் அன்பர் கேட்டார் . இன்னொருவர் சில புள்ளி விபரங்களின் மூலம் எம்.ஜி.ஆரை .மடக்கி விடப்பார்த்தார். அனைவரின் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் அழகான ஆழமான முத்துப் போன்ற பதில்களை எம்.ஜி.ஆர். அளித்தார். மடக்க முயன்றவர்கள் அடங்கிப் போயினர். நேரமோ 10 ஆகி விட்டது. யாருமே அதைப்பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இதற்கிடையில் அவைத்தலைவர் குறுக்கிட்டு எம்.ஜி.ஆருக்கும் ஓய்வு கொடுத்து அன்பர்களின் ஆவலுக்கும் அணை போட்டார். மேடையில் திரை விழுந்தது. மக்கள் திலகமும் மற்றவர்களும் கிழே இறங்கி வந்து ரசிகர்கள் மத்தியில் அமர்ந்தனர் . இதன் பின் சிற்றுன்டிகள் வழங்கப்பட்டன. அறிவிப்பாளர் தன்னால் இயன்ற மட்டும் கத்தியும் யாரும் தத்தம் இடங்கலிள் அமர்ந்து பின் நடந்த நிகழ்ச்சிகளை ரசிக்க முயலவில்லை. தேனுண்ட வண்டுகள் மறுபடியும் மலரைச் சுற்றி மொய்ப்பது போலவே அனைவரும் எம்.ஜி.ஆரை மொய்த்தனர். அவரோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள, அவரின் கையெழுத்தை வாங்க, அவரோடு ஏதாவது பேச இப்படியாக அவரைச் சுற்றி பலர் துடித்துக் கொண்டு நின்றனர். எம்.ஜி.ஆர். பொறுமையோடு அனைவரையும் திருப்திப்படுத்தினார்.
மேடையில் நிகழ்ச்சிகள் நடந்தபடி இருந்தன . “ வார்டன் ஸ்டேஜ் கிரியேஷன்சார் " அளித்த ஒரு நவீன பாடல் கச்சேரி இடம் பெற்றது. திரு. செந்திவேலின் பாடல்களுக்கு திரு.இளம்பூரணன் மிருதங்கம் இசைக்க திருவாளர்கள் குரூப், தேவராஜ் ராஜ்புட் ஆகியோர் பக்க இசை அளித்தனர் . இதன்பின் திருமதி ராஜ்குமார் அவர்களின் மாணவிகளது மோகினி ஆட்டமும், செல்வி தேவராணி தம்பிராஜாவின் நடனமும் இனிக்கத்தான் செய்தன. இந்நிகழ்ச்சிகளை ரசனையோடு அனுபவித்தவர்கள் சிலரே எனினும் கலைஞர்கள் தளராது நிகழ்ச்சிகளைத் தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது... இறுதியில் அறிவிப்பாளர் நன்றியுரை சுறி விழாவை முடித்த போது மணி 11 க்கு மேலாகி விட்டது .
இவைகளையெல்லாம் பார்த்துவிட்டு மனதில் ஒரு உண்மை பளிச்சிட்டது. அரசியல்வாதி என்றோ, திரைப்பட நடிகர் என்றோ எம்.ஜி.ஆரை யாரும் நினைக்கவில்லை . தங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைக்கிறார்கள். அதனால்தான் இத்தனை பாசமும் நேசமும். மக்கள் திலகம் உண்மையிலேயே மக்களுக்குத் திலகம் தான்..........

orodizli
17th September 2020, 05:42 PM
"ரிக்ஷாக்காரன்" போட்டியில். படு தோல்வியடைந்த "ராஜா" வுக்கு ஆதரவா கைபுள்ளைங்க ஆத்திரத்தில் ஏதேதோ உளறுகிறார்கள். தோல்வி நமக்கு சகஜம்தானே பாஸ். எம்ஜிஆரிடத்தில் புதுசாவா நாம தோற்கிறோம் என்று நினைத்து ஆறுதல் கொள்ளுங்கள்.. "ராஜா"வுக்கு அதிகமாக 11 காட்சிகள் திரையிட்டார்களாம். அதுதான் வசூலில் முன்னணி பெற்றதற்கு காரணமாம். அய்ய்--- அக்கா கால்ல ஆறுவிரல் என்று "அடிமைப்பெண்ணி"ல் வரும் ராணி என்ற குழந்தை சொன்னவுடன் சந்திரபாபு சும்மா இரும்மா! ஐந்து விரல்ல அள்ளி சாப்பிடவே சோத்தைக்காணோம் இதிலே ஆறாவது விரல் வேறயா? என்பார்.

அதே மாதிரி 3 காட்சிகளை hf ஆக்கவே மூச்சு வாங்கும் போது எக்ஸ்டிரா 11 காட்சிகள் போட்டா டங்குவார் அறுந்து போகாது. எக்ஸ்டிரா காட்சியை போட்டா சாயம் வெளுத்து விடும் என்று பயந்து காட்சி ஓடாமலே hf
ஆக்கியிருப்பாங்க போல தெரியுது.
அதனால்தான் இன்னெரு சிவாஜி ரசிகர் 35 நாளில் மொத்தம் 107 காட்சிகள்தான் ஓடியது என்று முந்தைய சிவாஜி ரசிகரை இவர் காட்டி கொடுத்து விட்டார்.

பொய் சொன்னால் எல்லா சிவாஜி ரசிகர்களும் ஒரே மாதிரி பொய்யை சொல்ல வேண்டாமா?.
ஒருவர் 2 காட்சிதான் எக்ஸ்டிரா என்கிறார். இன்னொருவர் 11 காட்சிகள் எக்ஸ்டிரா என்கிறார்.
முதலாமவர் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள் 107 என்கிறார்.
இரண்டாமவர் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள் 146 என்கிறார்.
எப்படியோ "ரிக்ஷாக்காரன்" வசூலை முறியடிக்க நினைத்து போட்ட திட்டம் முடியாமல் குறைந்த பட்சம் தேவி பாரடைஸிலாவது முறியடிப்போம் என்று செயல்பட்டிருக்கிறார்கள்.

ஆனால் 50 நாட்கள் வரை உயிரை கையில் பிடித்து ஓடிய "ராஜா" 50 நாட்கள் தாண்டியதும் ரத்த வாந்தி எடுத்து ஸ்டெச்சரில் படுத்து விட்டார் . பின்பு ஸ்டெச்சரோடு ராஜா வை இழுத்து சென்ற அவல காட்சியைத்தான் நாங்க பார்த்தோமே!. சிவாஜி அடிக்கடி படங்களில் வாஷ்பேசின் அருகே சென்று இருமி கைகுட்டையால் துடைக்கும் போது குங்குமத்தை கரைத்து கர்சீப்பில் ரத்தவாந்தி எடுத்ததை போல காண்பிப்பார்கள். "ராஜா" வுக்குப் அதே நிலைதான்.

அதற்கு காரணம் போட்டி என்பது தனது உடல்தகுதிக்கு தகுந்தவரோடு போட வேண்டும். இதுதான் "ராஜா" "ரிக்ஷாக்காரனோ"டு நடந்த காமெடி போரில் புறமுதுகு காட்டி ஓடி படுதோல்வி அடைந்த சம்பவம் . இப்போது "வெள்ளை ரோஜா" என்று லாலி பாடும் சிவாஜி ரசிகர்களின் மானத்தை அதோடு கூட வந்த "தூங்காதே தம்பி தூங்காதே" "தங்கைக்கோர் கீதம்" படத்தின் வசூல் விபரங்களை வெளியிட்டால் தெரிந்து விடும். அந்த நிலைக்கு போக விடாதீர்கள் சிறுவர்களிடம் தோற்று உங்கள் மானம் கப்பலேறி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்

"ராஜா" தோற்ற விஷயம் தற்போது வெட்ட வெளிச்சமாகி விட்டது. இனி என்ன பயன்? உண்மையை ஒத்துக்கொண்டு போவதை தவிர வேறு வழியில்லை. மேலும் ரிக்ஷாக்காரன் 75 நாளிலேயே 12 லட்சத்தை தாண்டி முன்னேறினான். ஆனால் ராஜா 100 நாட்களில் ஓட முடியாமல் மெல்ல நடந்துதான் 12 லட்சத்தை கடந்தது பரிதாபத்தை உண்டு பண்ணி விட்டது. முன்பாவது பரவாயில்லை எப்படியாவது கஷ்டப்பட்டு பணத்தை செலவு செய்து ஓட்டி வசூலை காண்பித்தார்கள். இப்போது அந்தக் கவலையில்லை. நேராக தொழில் பேட்டை சென்று இவர்கள் சொல்லுகின்ற வசூலை போட்டுத்தர அதுவும் வரி,விநியோகஸ்தர் பங்கு வரைக்கும் பிரித்து தர ஆட்கள் தயாராக இருக்கும் போது சிவாஜி ரசிகர்களுக்கென்ன கவலை. சும்மா தாறுமாறாக வசூலை போட்டு தந்து விடுகிறார்கள்.

இந்த வசூல் உண்மையிலேயே வந்திருந்தால் அன்றே பேப்பரில் போட்டு விண்ணுக்கும் மண்ணுக்கும் குதித்திருப்பார்களே கணேசன் ரசிகர்கள். .இப்போது fb ல்
போட்டு யாரை ஏமாற்றுகிறார்கள். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த சிவாஜி ரசிகர்கள் அப்பாவி எம்ஜிஆர் ரசிகர்களை ஏமாற்றுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். மேலும் நாம் எம்ஜிஆரின் 4,5 படங்களின் வசூலைத்தான் போடுகிறோமாம். மீதமுள்ள படங்கள் பெரிதாக ஒன்றும் வசூலாகவில்லை என்று குறைபட்டுக் கொள்கிறார்கள்.
எங்களுடைய 4,5 படங்களுக்கே
உங்களுக்கு நாக்கு தள்ளுவதை பார்க்கிறோம். மீதமுள்ள படங்களின் வசூலையும் நாங்கள் தெரிவித்தால்
நீங்கள் அடையப்போகும் கதியை நினைத்து பயந்துதான் சற்று ஒதுங்கி இருக்கிறோம்.

இது உண்மையான வசூல் என்றால் சிவாஜி படத்தயாரிப்பாளர்கள் ஏனய்யா கையில் திருவோடு ஏந்தப் போகிறார்கள்.?
இதில் "புனர் ஜன்மம்" என்ற படம் எடுத்த தயாரிப்பாளர் பேருந்து நிலையத்தில் பிச்சை எடுப்பதாக பிரபல நாளிதழ்களிலும் வார இதழ்களிலும் வந்த செய்தியை நினைத்து பாருங்கள். அந்த தயாரிப்பாளரின் வயித்தெரிச்சலை வாங்காதீர்கள் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

"ராஜா" வை மிகவும் கஷ்டப்பட்டு தேவிபாரடைஸ் மற்றும் ராக்ஸியில் மட்டும் 100 நாட்கள்
ஓட்டியதோடு தற்போது அகஸ்தியரவையும் சேர்த்துக் கொண்டார்கள். மய்யத்தில் மையம் கொண்ட சிவாஜி ரசிகர்களே மையத்தில் நின்றால் வெற்றி கிடைக்காது. சுற்றி ஓடினால்தான் வெற்றி என்பதை புரிந்து கொண்டு இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்ற முடியும்?, யதார்த்த நிலைக்கு வாருங்கள் என்று அழைக்கிறோம்..........

orodizli
17th September 2020, 05:46 PM
#புரட்சிதலைவர்
#கலைவேந்தர்
#பொன்மனச்செம்மல்
மன்னாதி மன்னbன் எம்.ஜி.ஆர்
#அவர்களின்_ஆசியோடு_இனிய
#காலை_வணக்கம்...

புரட்சி தலைவர் எம்ஜியார் ரசிகர்கள் பலதரப்பட்ட வகையினர். அவர்களில் ஒருவர் கர்னாடக இசைத்துறையைச் சேர்ந்த, மறைந்த மாண்டலின் இசைமேதை யூ. ஸ்ரீனிவாஸ். தனது தீவிர ரசிகராக இருந்தவரின் இசைக்கு, பின்னர் எம்.ஜி.ஆரே ரசிகராக மாறினார். அத்தகைய பெருமையை பெற்றவர் மாண்டலின் ஸ்ரீனிவாஸ்.

தூர்தர்ஷனில் 1983-ம் ஆண்டு இசை அரங்கம் நிகழ்ச்சியில் ஸ்ரீனிவாஸின் மாண்டலின் இசை நிகழ்ச்சி ஒளிபரப்பானது. நிகழ்ச்சி முடிந்தவுடன் தூர்தர்ஷன் இயக்குநருக்கு தொலைபேசி அழைப்பு. மறுமுனையில் பேசியவர் முதல்வர் எம்.ஜி.ஆர்.! எதற்காக அழைக்கிறார் என்று அவர் யோசித்துக் கொண்டிருந்தபோதே, ‘‘இப்போது தூர்தர்ஷனில் மாண்டலின் வாசித்த சிறுவனின் வாசிப்பு அபாரம். அந்தப் பையனின் தொலைபேசி எண் வேண்டும்’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார்.

அப்போது, வடபழனியில் தனது குருவின் வீட்டிலேயே தங்கி மாண்டலின் கற்றுக் கொண்டிருந்தார் ஸ்ரீனிவாஸ். அந்த வீட்டில் தொலைபேசி கிடையாது. எனவே, வீட்டு முகவரியை எம்.ஜி.ஆருக்கு தூர்தர்ஷன் இயக்குநர் அளித்தார். மறுநாள், எம்.ஜி.ஆர். அனுப்பி வைத்தவர் வந்து ஸ்ரீனிவாஸை சந்தித்து, முதல்வர் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்தார். மேலும், ‘‘எம்.ஜி.ஆர். தலைமையில் விரைவில் நடக்க உள்ள விழாவில் மாண்டலின் கச்சேரி செய்ய வேண்டும்’’ என்றும் கூறினார். அந்த விழா, நடிகர் கமல்ஹாசனுக்கு எம்.ஜி.ஆர். தலைமையில் நடந்த பாராட்டு விழா!

கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் கலந்துகொள்ள வந்த எம்.ஜி.ஆரை வெகு அருகில் பார்த்து மகிழ்ச்சியில் மனம் நிறைந்தார் ஸ்ரீனிவாஸ். அந்த விழாவில் மாண்டலின் கச்சேரியை ரசித்துக் கேட்ட எம்.ஜி.ஆர், தமிழக அரசின் ஆஸ்தான கலைஞராக ஸ்ரீனிவாஸை நியமிக்கப் போவதாக மேடையிலேயே அறிவித்தார். அந்த வருடம் வெளியான ஆஸ்தான கலைஞர்கள் பட்டியலில் வாய்ப்பாட்டு கலைஞர் மகாராஜபுரம் சந்தானம், பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம், வயலின் இசைக் கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்டவர்களுடன் மாண்டலின் ஸ்ரீனிவாஸ் பெயரும் இடம் பெற்றது.

ஆஸ்தான கலைஞராக நியமிக்கப் பட்டபோது மாண்டலின் ஸ்ரீனிவாஸுக்கு வயது பன்னிரண்டுதான்! ஒருவரிடம் இருக்கும் திறமையை மட்டுமே எம்.ஜி.ஆர். பார்ப்பாரே தவிர, வயதை அல்ல என்பதற்கு இது ஓர் உதாரணம். பின்னர், தஞ்சையில் ஆஸ்தான கலைஞர்களை நியமிக்கும் விழா நடந்தபோதும் ஸ்ரீனிவாஸின் மாண்டலின் கச்சேரியை எம்.ஜி.ஆர். ரசித்துக் கேட்டார்.

அதன் பின்னர், கச்சேரிகள் செய்வதற் காக விமானப் பயணம் மேற்கொள் ளும்போது, சென்னை விமான நிலையத்தில் சில சமயங்களில் அங்கு வந்த முதல்வர் எம்.ஜி.ஆரை மாண்டலின் ஸ்ரீனிவாஸ் பார்த்திருக்கிறார். எம்.ஜி.ஆரிடம் பேச வேண்டும் என்று அவருக்கு ஆசை. என்னதான் இசைமேதையாக இருந்தாலும் சிறுவனான அவருக்கு எம்.ஜி.ஆரிடம் போய் பேசத் தயக்கம். அதுபோன்ற நேரங்களில், எம்.ஜி.ஆரே ஸ்ரீனிவாஸை அழைத்து, அன்புடன் விசாரிப்பார். ‘‘அது நான் செய்த பாக்கியம்’’ என்று பெருமை பொங்கக் குறிப்பிட்டிருக்கிறார் மாண்டலின் ஸ்ரீனிவாஸ்.

எம்.ஜி.ஆரின் வசீகரமான முகமும் பார்ப்பவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் துடிப்பான நடிப்பும் சிறுவயதிலேயே மாண்டலின் ஸ்ரீனிவாஸை ஈர்த்தது. அவரது படங்களில் இடம் பெற்ற அற்புதமான பாடல்கள், அதற்கான அபாரமான இசை ஆகியவற்றால் சொக்கிப்போனார். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக மாறிய ஸ்ரீனிவாஸ், மீண்டும் மீண்டும் எம்.ஜி.ஆர். படங்களை பார்த்து ரசிப்பார். அவர் மட்டுமின்றி, டி.வி.யில் எம்.ஜி.ஆர். படங்கள் ஒளிபரப்பானால் அவரது ஒட்டுமொத்த குடும்பமுமே பார்த்து ரசிக்கும்.

1984-ம் ஆண்டு கச்சேரிக்காக ஆஸ்திரேலியாவுக்கு ஸ்ரீனிவாஸ் சென்றிருந்தார். அப்போது ஓய்வு நேரங்களில் எம்.ஜி.ஆர். படங்களை பார்த்து தீர்த்தார். எம்.ஜி.ஆரின் ரசிகர் என்பதால், காரில் வெளியூர்களுக்கு ஸ்ரீனிவாஸ் செல்லும்போது எம்.ஜி.ஆர். படப் பாடல்களைத்தான் விரும்பிக் கேட்பார். ‘‘தன் படத்தில் இடம் பெறும் பாடல்களை எம்.ஜி.ஆரே கேட்டு டியூன்களை ஓ.கே. செய்வார் என்று கேள்விப்பட்டது உண்டு. அந்தப் பாடல்களை கேட்கும்போது, அவரது அபாரமான இசை ரசனையை புரிந்துகொள்ள முடிகிறது’’ என்று சிறுவயதிலேயே இசைப் புலமை மிக்கவராகத் திகழ்ந்த மாண்டலின் ஸ்ரீனிவாஸ், எம்.ஜி.ஆரின் இசை ரசனையை வியந்து போற்றியுள்ளார்.

இசையை ரசித்தவர் மட்டுமல்ல; இசைபட வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்.!

எம்.ஜி.ஆர். நடித்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் இசையமைப்பாளர் வயலின் இசைக் கலைஞர் குன்னக்குடி வைத்திய நாதன் என்றுதான் முதலில் விளம்பரம் வெளியானது. ஆனால், பின்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்தார். 1977-ம் ஆண்டு மார்ச் 5-ல் வெளியான எம்.ஜி.ஆர். நடித்த ‘நவரத்தினம்’ படத்துக்கு குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைத்தார். அவர் இசையமைத்த ஒரே எம்.ஜி.ஆர். படம் "நவரத்தினம்".........

orodizli
17th September 2020, 05:50 PM
"குடும்பத் தலைவன்" .
______________________
3 வருடங்களுக்கு முன் மதுரை நண்பன் மதுரை பஸ்டான்டிலிருந்து பஸ் ஏறி படம் படம் பார்க்க அழைத்துச் சென்றான் .

ஏதோ அருகில் என்று பார்த்தால் இரண்டு மணி நேரபயணம் .

ஜெயந்திபுரம் அரவிந்த் தியேட்டர் படம் குடும்பத் தலைவன் .

தமிழர்கள் இரத்தத்தில் ஊறியது காதல், வீரம்.

இவ்விரண்டும் இப்படத்தில் சற்று தூக்கல் .

கபடி ,ரேக்ளா ரேஸ் இது போன்ற போட்டிகள் நிறைய . கபடி போட்டியில் மக்கள் திலகத்தின் லாவகம் அலாதியானது .

எம் ஜி ஆர் : இத பார் அம்மா அது சொன்னாங்க அப்பா இது சொன்னாங்க ன்னு வீட்டை விட்டு போனே !
தேவி : என்ன செய்விஙகளாம் ?
எம் ஜி ஆர்: ம்.... உயிரே விட்டுடுவே !

இயற்கையான இலக்கணத்தை வகுத்த காதல் .

இடையில் ஒரு பாடல் .
மழை பொழிந்துக் கொண்டே இருக்கும் உடல் நனைந்து கொண்டே இருக்கும்

மனம் நிறைந்து நிறைந்து
எண்ணம் வழிந்து வழிந்து
உயிர் மிதந்து கொண்டே இருக்கும் .

பல முறை படம் பார்திருந்தாலும் ஏனோ இப்பாடல் என்னை முதன் முறையாக ஈர்த்தது .

இசையில் சொக்கி போனேன் செல்போனில் கேட்பதைவிட திரையரங்கில் நூறு சதவீதம் இனிமை கூடல் .

எனக்கு இசை ஞானம் அறவே கிடையாது இருப்பினும் தொடர்ந்த அந்த பேங்குஸ் சத்தம் என் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது .

அப்பொழது stereo system கிடையாது
Mono system தான் இருப்பினும் திரையில் இந்தப் பாடல் இனிமை என்னை பிரமிக்க வைத்தது .

பொறுமை தாளாமல் என் நண்பன்
ஶ்ரீ குமாரை அனுகினேன் அவன் மிகுந்த இசை ஞானம் உடையவன் அவன் தாயார் முறைப்படி
கர்நாடக இசையை பயின்றவர்.

அவனிடம் கேட்டேன் இதில் வாசித்துள்ள இசைக் கருவிகள் என்னென்ன என்று.

Vibro phone, guitar ,
violins , Hawaiian guitar ,
maybe xylophone ?
Rhythm bango , tabla etc .

என்று என் சந்தேகத்தை
தெளிய வைத்தான் ..........

orodizli
17th September 2020, 08:02 PM
"புரட்சித்தலைவரின் விஸ்வரூபம்;"

1962 க்குப் பிறகு புரட்சித்தலைவரின் சினிமா வெற்றி, யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வளர்ச்சி அடைந்தது. தர்மம் தலை காக்கும், பெரிய இடத்துப் பெண், ஆனந்த ஜோதி, நீதிக்குப் பின்பாசம், காஞ்சித் தலைவன், வேட்டைக்காரன், பணக்கார குடும்பம், தெய்வத்தாய், தொழிலாளி, படகோட்டி, எங்க வீட்டுப் பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன், அன்பே வா, ஆணையிட்டால், நாடோடி, தனிப்பிறவி, தாயிக்குத் தலைமகன் போன்ற படங்கள் சூப்பர் ரூப்பா வெற்றி அடைந்தன.

இந்த படங்களின் காட்சிகளில், வசனங்களில், பாடல்களில் எல்லாம் தி.மு.க வெற்றிக்கு புரட்சித்தலைவர் மட்டும்தான் காரணம் என்பதை உறுதியாகவே நம்பினார்கள். அதனால்தான் அன்றைய நிலையில் கலைஞார் கருணாநிதியும் ஒரு கவிதை எழுதி எம்.ஜி.ஆரைப் பாரட்டினார்.

இதுதான் கலைஞர் கருணாநிதி புரட்சித்தலைவரை வெளிப்டையாகப் பாரட்டி எழுதிய கவிதை.

கருணாநிதி – எம்.ஜி.ஆர்.
‘வென்றாரும் வெல்லாரும்

இல்லாத வகையில் ஒளிவீசம் தலைவா..

குன்றனைப் புகழ்கொண்ட குணக்குன்றே ‚

முடியரசர்க்கில்லாத செல்வாக்கொல்லாம்

முழுமையுடன் விளக்கம் முழுமதியே‚

தென்னாடும் தென்னவரும் உள்ள வரை

மன்னா உன் திருநாமம் துலங்க வேண்டும்.

உன்னாலே உயர் வடைந்த என் போன்றோர்’’

உள்ளங்கள் அதைக்கண்டு மகிழ வேண்டும்‚”

இந்தத் தேர்தலில் பரங்கிமலைத் தொகுதியில் போட்டியிட்டு, சட்டமன்ற உறுப்பினராக எம்.ஜி.ஆர் வெற்றி அடைந்தார். எம்.ஜி.ஆருக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என்று நினைத்த பேரறிஞர் அண்ணா, அமைச்சர் பதவிக்கு இணையான சிறுசேமிப்புத் துணைத் தலைவர் பதவியைக் கொடுத்து கௌரவப்படுத்தினார்.

புரட்சித்தலைவரின் விஸ்வரூபம்;

யாருமே எதிர்பாராத வகையில் 1969 ஆம் ஆண்டு அண்ணா மறைந்தார். தற்காலிக முதல்வாரன நாவலர் நெடுஞ்செழியன், நிரந்தர முதல்வர் பொறுப்புக்கு வருவார் என்று கட்சினரும் மக்களும் எதிர்பார்த்தனர். ஆனால் புரட்சித்தலைவரிடம் சரண் அடைந்தர் கருணாநிதி. தன்னை முதல்வராக தேர்ந்தெடுக்க உதவும்படி கேட்டுக்கொண்டார். புரட்சித்தலைவரும் அவரின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார். காட்சிகள் மாறின. தன்னை நம்பிவந்த கருணாநிதிக்காக, தி.மு.க. எம்.எல்.ஏக்களை அழைத்துப் பேசினார் புரட்சித்தலைவர். அனைவரையும் தன் வசம் இழுத்து கருணாநிதியை முதல்வர் பதவியில் அமரச்செய்து அழகு பார்த்தார்.

மீண்டும் 1971 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் வந்தது. பேரறிஞர் அண்ணா இல்லாத நிலையில் தி.மு.க வெற்றிக்காக புரட்சித்தலைவர் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன் விளைவாக 184 தொகுதிகளில் வெற்றிபெற்று தி.மு.க மாபெரும் சாதனை படைத்தது.

அப்போது தி.மு.க வின் பொருளாளராக இருந்த புரட்சித்தலைவருக்கு சுகாதாரத் துறை அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று கட்சியின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் விரும்பினார்கள். எம்.ஜி.ஆர் பதவியில் இருந்தால்தான் கட்சி கட்டுக்கோப்பாக இருக்கும், தவறுகள் நடக்காது என்று தலைவர்கள் நம்பினார்கள். அனால் இந்தக் கோரிக்கையை தட்டிக்கழிக்க திட்டம் தீட்டினார் கருணாநிதி. தனக்கு விருப்பம் இருப்பது போலவும், ஆனால் சட்ட விதிப்படி, அமைச்சராக இருப்பவர் திரைபடங்களில் நடிக்கக்கூடாது என்று இல்லாத ஒரு தடையை இருப்பதாகச் சொல்லிப் போலியாக நடித்தார். பேரறிஞர் அண்ணா அமைச்சருக்கு இணையான பதவியை புரட்சித்தலைவருக்குக் கொடுத்தபோது, நடிப்பதற்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்கவில்லை‚ ஆனால். கருணாநிதியோ அப்படியொரு விதி இருப்பதாகச் சொல்லி முதலைக் கண்ணீர் வடித்தார்.

ஊழலை அம்பலப்படுத்தினார்;

பெரும்பாலான தலைவர்கள் புரட்சித்தலைவர் அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்று வலியுறுத்தி வந்தாலும், பதவி விவாதத்திற்கு உள்ளாவதை புரட்சித்தலைவர் கொஞ்சமும் விரும்பவில்லை. அதனால் அமைச்சராக பதவி ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையை சட்டென்று நிராகரித்து, தன்னுடைய ஆளுமைத் திறனைக் காட்டினார். அப்போது புரட்சித்தலைவருக்கு, உண்மையிலே சினிமாதான் முதல் விருப்பமாக இருந்தது பதவியை அவர் ஒரு பொருட்டாக மதிக்கவே இல்லை என்பதுதான் உண்மை‚

பெரியார் அண்ணா கருணாநிதி ஆகியோருடன்… எம்.ஜி.ஆர்.
1971ஆம் தேர்தலுக்குப் பிறகு கலைஞர் கருணாநிதியின் போக்கில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. கட்சி ஆட்சி இரண்டும் தன்னுடைய கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்கவேண்டும் என்று நினைத்தார். புரட்சித்தலைவருடைய புகழையும் செல்வாக்கையும் குறைக்க நினைத்தார். தன்னை வலுவாக நிலை நிறுத்திக் கொள்வதற்கு, சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு வேண்டும் என நினைத்தார். அதனால், அவர்கள் செய்யும் தவறுகளைக் கண்டுகொள்ளாமல், அனுசரித்து ஆட்சி நடத்தத் தொடங்கினார். தங்களைக் கட்டுப்படுத்த யாரும் இல்லை என்ற நிலையில், தி.மு.க. ஆட்சியில், ஊழல் கரை புரண்டு ஓடியது‚

இதனைக் கண்டு ஆவேசமான பெருந்தலைவர் காமராஜர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தி.மு.க.வின் ஊழல்களை அம்பலப்படுத்தினார். ஆனால் கருணாநிதியோ எதிர்க்கட்சிகளின் அறைகூவல்களை காதில் வங்கவே இல்லை‚

அடுத்த கட்டமாக, தன்னுடைய அரசியல் வாரிசாக மு.க. முத்துவை நுழைப்பதில் முழுமூச்சாக இறங்கினார். முதலில் மு.க.முத்துவை புரட்சிதலைவருக்குப் போட்டியாக சினிமாவில் கொண்டுவந்தார். புரட்சித்தலைவர் போலவே, அவதாரம் புரட்சித்தலைவர் போலவே நடித்த முத்துவின் பெயரில் தி.மு.க.வில் ஏராளமான ரசிகர் மன்றங்கள் தொடங்கப்பட்டன. எம்.ஜி.ஆர் பெயரில் ரசிகர் மன்றங்கள்

தொடங்குவதற்கு அனுமதி மறுக்கபட்டு, முத்துவின் பெயரில் மன்றங்கள் ஆரம்பிக்கும்படி கட்சியின் கிளைச் செயலாளர்களுக்கு வாய்மொழி உத்தரவுகள் பறந்தன.

மதுரையில் நடந்த தி.மு.க. மாநாட்டில் மு.க.முத்து தலைமையேற்று ஊர்வலம் நடத்தியதைக் கண்டு புரட்சித்தலைவரின் ரசிகர்கள் அதிர்ந்து நின்றார்கள். எம்.ஜி.ஆர் மன்றங்களை முத்து மன்றமாக மாற்றுவதற்கு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. ஏராளமான ஊர்களில் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம் முத்து ரசிகர் மன்றமாக வலுக்கட்டாயமாக மாற்றப்பட்டன. இதைக் கண்டு தமிழகமெங்கும் புரட்சித்தலைவரின் ரசிகர்கள் ஆத்திரம் அடைந்தனர்.

நான் அப்போது தீவிர எம்;.ஜி.ஆர் ரசிகர் மன்ற உறுப்பினர். எம்.ஜி.ஆர் மன்றத்துக்கு நாங்கள் உருவாக்கிய தாமரைக் கொடி அப்போது திமுகாவில் பெருத்த சலசலப்பை எற்படுத்தியிருந்தது. எம்.ஜி.ஆர் மன்றங்களுக்கு ஏற்படும் சோதனைகளைக் கண்டு எங்கள் மனம் பொறுக்கவில்லை. அதனால் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்ற எதிர்காலம் குறித்து சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடத்த முடிவு செய்தோம். எம்.ஜி.ஆர் மன்றத்தின் அடையாளச் சின்னமாக நாங்கள் ஏற்றியிருக்கும் தாமரைப்பூ கொடிக்கு அங்கீகாரம் பெற முடிவு செய்தோம். இதற்காக நாங்கள் நடத்தும் ஆலோசனைக் கூட்டத்திற்கு வருகை தர வேண்டும் என்று புரசத்சித்தலைவரை மன்றாடிக் கேட்டுக்கொண்டோம். புரட்சித்தலைவரும் ஒப்புக்கொண்டார்.


1972ஆம் ஆண்டு அக்டோபர் ஒன்று எம்.ஜி.ஆர். மன்றங்களின் சென்னை மாவட்ட ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியா திருமண மண்டபத்தில் (அதுதான் இப்போது அ.தி.மு.க.வின் தலைமையகம்) ஆர்.எம்.வீரப்பன் தலைமையில் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் புரட்சித்தலைவர் ஆட்சிக்கு எதிராகப் பேச வாய்ப்பு இருக்கிறது என்பதை முதல்வர் கருணாநிதி அறிந்துகொண்டார். உடனே அதனை தடுக்கும் முயற்சியாக, சில தலைவர்களை சமாதானம் பேசுவதற்காக புரட்சித்தலைவரிடம் அனுப்பி வைத்தார். கட்சியிலும் ஆட்சியிலும் இனிமேல் எந்தத் தவறுகளும் நடக்காது, தவறு செய்தவர்கள் உடனடியாக தண்டிக்கப்படுவார்கள் என்று உத்திரவாதம் கொடுத்தார். முதல்வரின் உத்தரவாதத்தை புரட்சித்தலைவர் நம்பிக்கையுடன் ஏற்றுக்கொண்டார். அதுதான் எம்.ஜி.ஆரின் குணம்.

அதனால் அன்றைய கூட்டத்தில் புரட்சித்தலைவர், “ திமுகதான் நமது ஒரே அமைப்பு தி.மு.க. கொடிதான் நம்முடைய கொடி தனித்த வேறு அடையாளம் எதுவும் நமக்குத் தேவை இல்லை. தாய்க் கழகம் வேண்டுமா, சேய் மன்றம் வேண்டுமா என்று என்னிடம் கேட்டால் நான் தாய்க் கழகம்தான் வேண்டும் என்பேன். தாய் தன் குழந்தையை விட்டுத்தரமாட்டாள்” என்றார்.

புரடசித்தலைவரின் பிரகடனத்தைக் கலைஞர் கருணாநிதியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இதற்காவே காத்திருந்தது போன்று, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார் அவசரம் அவசரமாக செயற்குழு, பொதுக்குழுவைக் கூட்டி, கட்சியின் கட்டுப்பாட்டுக்கு ஊறு விளைவிப்பதாக 1972, அக்டோபர் 10 ஆம் தேதி தி.மு.க.வில் இருந்து புரட்சிதலைவரை நீக்கினார். அப்பபோது, ‘அண்ணா ஒப்படைத்து விட்டுச் சென்ற கனியில் வண்டு துளைத்துவிட்டது. அதனால் வேறு வழியின்றி கனியை எறிய வேண்டியதானது” என்று விளக்கம் கொடுத்தார் கலைஞர் கருணாநிதி.

புரட்சித்தலைவர் கட்சியல் இருந்து வெளியேற்றப்பட்டதும், தமிழகமே ஸ்தம்பித்து நின்றது‚ ‘எம்.ஜி.ஆர் வாழ்க, கருணாநிதி ஒழிக” என்று வாசகம் எழுதப்பட்ட வாகனங்கள் மட்டும் ஓடின. எம்.ஜி.ஆர். செய்தி தாங்கிவந்த நாளிதழ்களின் விலையும் பன்மடங்கு அதிகரித்தது. யாருடைய தலைமையும் இல்லாமல் தமிழகத்தில் தன்னெழுச்சிப் புரட்சி ஏற்பட்டது. அ.தி.மு.க. உதயமானது.

பிரமிக்கவைத்த வெற்றி;

கட்சி தொட்ங்கிய ஆறு மாதத்திலேயே தி.மு.க. என்றால் எம்.ஜி.ஆர் தான் என்பதை அழுத்தம் திருத்தமாக புரிய வைக்கும நிகழ்வு நடந்தது. திண்டுக்கல்லில் 1973 ஆம் ஆண்டு மே 20 ஆம் தேதி நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மாயத்தேவர் நிறுத்தப்பட்டார். அப்போது ஆளும் கட்சி சார்பில் புரட்சித்தலைவருக்கு ஏகப்பட்ட நெருக்கடிகள் கொடுக்கபட்டன.

புரட்சிதலைவருக்கு இந்தத் தேர்தலில் இரட்டை இலை சின்னம் கொடுக்கப்பட்டது. எம்.ஜி.ஆரின் சின்னம் – உதயசூரியன் என்று தான் மக்கள் நம்பிக் கொண்டு இருக்கிறார்கள். இரட்டை இலை எடுபடாது என்று தி.மு.க.வினர் கணக்குப் போட்டனர். அதேபோன்று தி.மு.க. பிளவுபட்டதால், இந்தத் தேர்தலில் கமாராஜர் தலைமையிலான காங்கிரஸ்தான் வெற்றிபெறும் என்று கணிப்புகள் வெளியாகின.

திண்டுகல் இடைத்தேர்தல் வாக்குச்சீட்டில் ஏழாவது இடத்தில் இரட்டை இலையும், எட்டாவது இடத்தில் உதயசூரியனும் இடம் பிடித்தன. அந்தத் தேர்தலில் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் மாயத்தேவர் லட்சக்காணகான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலில், அ.தி.மு.கவுக்கு அடுத்த இரண்டாவது இடத்தை. காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் பிடித்தது. ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க. மூன்றாவது இடத்தைத்தான் பிடிக்க முடிந்தது. அதுமட்டுமின்றி, சொற்ப ஓட்டுகளில்தான் டெபாசிட் தொகையை தக்க வைத்தது.

புதிய சின்னம், கட்சிப் பிளவு, காங்கிரஸ் வெற்றி என சொல்லப்பட்ட அத்தனை கணிப்புகளையும் புரட்சித்தலைவர் செல்வாக்கு அடித்து நொறுக்கியது. இந்த திண்டுக்கல் தொகுதி மட்டுமின்றி, இதுவரை தி.மு.க.பெற்றுவந்த அனைத்து வெற்றிகளுக்கும் புரட்சித்தலைவர்தான் மூலகாரணம் என்பது நிரூபணமானது‚

திரையிலும் வெற்றி;

தி.மு.க.வில் இருந்து வெளியேறி முழு நேர அரசியல்வாதியாக எம்.ஜி.ஆர் மாறியதும், அவரது சினிமா வெற்றி முடிவுக்கு வந்துவிடும் என்றுதான் அனைவரும் நம்பினார்கள். ஆனால், தனக்கு எப்போதும், எதிலும் தோல்வி இல்லை என்று புரட்சித்தலைவர் நிரூபித்துக் காட்டினார்.

கட்சியில் இருந்து புரட்சித்தலைவர் வெளியேறிய பிறகு வெளியான முதல் படமான இதயவீணையும், அடுத்த படமான உலகம் சுற்றும் வாலிபனும் ஏராளமான இடைஞ்சல்களை சந்தித்தன. இந்தப் படங்கள் வெளிவரவே முடியாது என்ற அளவுக்கு தொந்தரவகள் இருந்தன. ஆனால், அத்தனை சவால்களையும் தாண்டி வெளியான இந்தப் படங்கள் சாதனை வெற்றி பெற்றன.

இதனையடுத்து, வெளியான உரிமைக்குரல், நினைத்ததை முடிப்பவன், நாளை நமதே, இதயக்கனி, பல்லாண்டுவாழக், நீதிக்குத் தலைவணங்கு, உழைக்கும்கரங்கள், இன்று போல் என்றும் வாழ்க, மீனவ நண்பன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் என்று கடைசிப் படம் வரையில் வெற்றிபெற்றார்

இன்றைய அ.தி.மு.க ஆட்சி மட்டுமல்ல, எதிர் காலங்களிலும் தொடர்ந்து அமைய இருக்கும் அ.தி.மு.க வின் ஆட்சிகளுக்கும் ஆணி வேராகப் புரட்சித்தலைவர் என்றென்றும் இருபார். இந்தப் பூவுலகில் கடைசி மனிதன் இருக்கும்வரை புரட்சித்தலைவரின் புகழ் நீடுழி நிலைத்து நிற்கும்..........mgn.,

orodizli
17th September 2020, 08:04 PM
ஒருதவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் தேவன் என்றாலும் விடாதவர் நம் தலைவர்..அதுக்கு என்ன என்கிறீர்களா பதிவை தொடருங்கள்.

ஆரம்ப காலங்களில் ஜிவாஜி படங்களை எடுத்து பின் தலைவர் உடன் இணைந்து பல வெற்றிகளை குவித்தவர் சரவணா பிலிம்ஸ் அதிபர் ஜி.என்.வேலுமணி அவர்கள்...

குடியிருந்த கோவில் படம் முடிந்து திரை விநியோகஸ்தர்கள் பார்த்து வியந்து வியாபாரங்கள் முடிந்து படம் வெளிவரும் நேரம்.

தலைவரின் 96 வது படம்..வந்த தேதி 15.3.68...இல்...படப்பெட்டிகளை வாங்க விநியோகம் செய்வோர் சரவணா பிலிம்ஸ் அலுவலகம் வர அங்கே இருந்த மேலாளர் ஆளுக்கு 5000 பணம் அதிகம் தந்தால் மட்டுமே பட பெட்டியை உங்களுக்கு கொடுக்க சொல்லி தயாரிப்பாளர் முடிவு என்று சொல்ல.

இது என்ன பேசி முடிவான தொகை விட அதிகம் இது அவர் தலைவரை தேடி ஓட அவர் வேலுமணி அவர்களை தொடர்பு கொள்ள அவர் வெளியூரில் இருந்த படியால் அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில்.

தலைவர் சரி அவர்கள் கேட்கும் தொகையை கொடுத்து படத்தை வெளியிடுங்கள் ...நஷ்டம் வந்தால் நான் பொறுப்பு என்று சொல்லி படம் வெளிவந்தது.

சூப்பர் ஹிட் ஆனது படம்.....வெளியூரில் இருந்து திரும்பிய வேலுமணி அவர்கள் படத்தின் வெற்றியை குறித்து தலைவருடன் பகிர்ந்து கொள்ள விரும்ப போதிய மகிழ்ச்சி இல்லை தலைவர் தரப்பில்.

பேசிய வார்த்தைகள் மாறி விட்டதால் தலைவருக்கு வருத்தம்.
தன்னிலை விளக்கம் கொடுக்க முயற்சித்த அவருக்கு தலைவர் தரப்பில் போதிய வரவேற்பு இல்லை.

அடுத்த படம் அவர் எடுத்தார் நம்ம வீட்டு தெய்வம் என்ற பெயரில் முத்துராமன் அவர்கள் மற்றும் கே ஆர் விஜயா அவர்கள் நடிப்பில் ..படம் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற...

அடுத்த படம் அன்னை அபிராமி என்று அவர் தயாரிப்பில் வர படம் பெரும் தோல்வி அடைய...

அதல பாதாளம் நோக்கி பயணம் பயணம் ஆரம்பம் அவருக்கு..
மீண்டும் ஜிவாஜி அவர்களிடம் போக முடியாது....தலைவர் இடமும் சின்ன வருத்தம்...

சோர்ந்த மனநிலையில் அவர் தவிக்க அவரின் நண்பர் எழுத்தாளர் மா.லட்சுமணன் உங்கள் இந்த பள்ளத்தை சரி செய்ய அவரால் மட்டுமே முடியும் உங்கள் சார்பில் நான் போய் அவரிடம் பேசுகிறேன் என்று வர.

சந்தர்ப்பம் சூழ்நிலை ஒரு மனிதரை தடம் மாற வைக்கிறது என்று அவர் ஆரம்பிக்க.

தலைவர் எந்த சந்தர்ப்பத்திலும் தடம் மாறதவரே சிறந்த மனிதர் என்று சொல்ல.

முடிவில் ஜி.என்.வீ...அவர்கள் நிலை குறித்து தலைவரிடம் அவர் எடுத்து சொல்ல..
கடைசியாக அவர் எடுத்த படத்துக்கு கே.ஆர்.விஜயா அவர்களின் கணவர் வேலாயுதம் தான் பண பொறுப்பு என்று சொல்ல..

தலைவர் அவரிடமே விசாரிக்க....அதுவே உண்மை என்று தெரிந்த உடன்...என் படத்துக்கு பேசிய தொகையை விட கடைசி நேரத்தில் அதிகம் பணம் வாங்கினால் அது என் மீது இருந்த நம்பிக்கையை வீண் செய்வது போல அல்லவா..

சரி நாளை காலை கற்பகம் அரங்குக்கு அவரை அழைத்து வாருங்கள் என்று சொல்ல அதன் படி.

தலைவர் தவறுகளை மறந்து தன் 96 வது படத்துக்கு பின் 4 வருடங்கள் கழித்து 116 ஆவது தலைவர் படம் ஆக மீண்டும் அந்த ஜி.என் வேலுமணி அவர்கள் உடன் இணைந்து வெளி வந்த படம்தான்.

நான் ஏன் பிறந்தேன்.

படம் வெளிவந்த தேதி
09.06.1972...படத்தில் தன் கணவர் எடுத்து தோல்வி அடைந்த அவருக்கு ஆக கே.ஆர் விஜயா அவர்கள் நடிப்பில் இணைய 100 நாட்கள் தாண்டி ஓடிய வெற்றி குடும்ப படம் அது..

அவர்தான் பொன்மன செம்மல் எம்ஜிஆர் அவர்கள்...நன்றி.

வாழ்க அவர் புகழ்..........
தொடரும்...உங்களில் ஒருவன்..........

fidowag
17th September 2020, 09:07 PM
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில் சகாப்தம் நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி* 01/099/20 அன்று அளித்த*தகவல்கள்*
-----------------------------------------------------------------------------------------------------------------------
இந்த கால தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர்.அப்படி என்ன செய்து தி.மு.க.விற்கு சாதித்துவிட்டார் என்று கேள்வி எழுப்புகின்றனர் . அந்த கால தி.மு.க.வினர்*இப்படி கேள்வி கேட்கமாட்டார்கள்.ஏனென்றால் எம்.ஜி.ஆருடன் கட்சியில் அவர்கள் பயணித்தவர்கள். கண்கூடாக பார்த்தவர்கள் .பலனை அனுபவித்தவர்கள் .அவரை கட்சியில் இருந்து நீக்கியபின் விளைவையும் கண்டு நொந்து போனவர்கள் . எம்.ஜி.ஆர். தி.மு.க.விற்கு அப்படி என்ன செய்து விடவில்லை என்றுதான் கேட்கவேண்டும் .தி.மு.க.வின் சின்னமான உதயசூரியன் பெயரை சூட்டி**,1957ல் சக்கரவர்த்தி திருமகள் படத்தில் நடித்தார்அந்த படத்தில் ஒரு வசனம் நாளைய போட்டியில் உதயசூரியன் என்ன ஒரு உதவாக்கரை போட்டியிட்டாலே ஜெயித்துவிடுவான் . . 1962ல் விக்கிரமாதித்தன் படத்தில் உதயசூரியன் சின்னத்தை தன் நெற்றியில் திலகமாக இட்டு நடித்தார் .புதிய பூமி படத்தில் தன்னுடைய பெயரை கதிரவன் என வைத்துக் கொண்டார் .பல படங்களில் தன் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் நாமத்தை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகைகளில் அவரை பற்றி வசனங்கள், பாடல்கள், அவரது பெயரின் பின் பாதியான துரை என்கிற வேடத்தில் நடித்தார் . தி.மு.க.வில் இருக்கும்போது, உதயசூரியன் சின்னம் பிரபலம் ஆகும் வகையில் வசனங்கள் .உதாரணம் : குடை பிடிச்சா சூரியன் மறையாது - சந்திரோதயம் .* நீ அஸ்தமிக்கும் சூரியன் .அஸ்தமிக்கும் சூரியன் அடுத்த நாளே உதயமாகும் - ஆயிரத்தில் ஒருவன் .* உதயசூரியன் எதிரில் இருக்கையில் உள்ள தாமரை மலராதோ, எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இருண்ட பொழுதும் புலராதோ -பாடல் -நல்லவன் வாழ்வான் . சூரியன் உதிச்சதுங்க இங்கே காரிருள் மறைஞ்சதுங்க ,சரித்திரம் மாறுதுங்க ,இனிமே சரியா போகுமுங்க -பாடல் -நம்நாடு .புதிய சூரியனின் பார்வையிலே ,உலகம் விழித்து கொண்ட வேளையிலே -அன்பே வா . தாமரை அவளிருக்க ,இங்கே சூரியன் நானிருக்க ,ஒய் சாட்சி சொன்ன சந்திரனே நீ போய் தூது சொல்லமாட்டாயோ - படகோட்டி*இப்படி பல உதாரணங்கள் சொல்லிக் கொண்டே போகலாம்உதயசூரியன் சின்னத்தை தன் சட்டையில் பல படங்களில் அணிந்தபடி நடித்தார் . பல படங்களில் கருப்பு,சிவப்பு வண்ணத்தில் உடைகள் அணிந்து கட்சிக்கு விளம்பரம் தேடி தந்தார் .*.உதயசூரியன் உதயமாகும் பல காட்சிகள் திரைப்படங்களிலே காணலாம் .தி.மு.க.வின் தேர்தலநிலை அறிக்கை தயாராவதற்கு* முன்பே நாடோடி மன்னன் படத்தில் என்னவெல்லாம் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்து*தான் அறிவிக்கும் தி.மு.க.வின் கொள்கை திட்டங்களான குடிசை மாற்று வாரியம், முதியோர் ஒய்வு ஊதிய திட்டம் விவசாயிகள் நலத்திட்டம் , மாணவர்கள் உதவித்தொகை திட்டம் ,நகர்ப்புறஅபிவிருத்தி* திட்டம், கல்விநிதி திட்டம் , பெண்களுக்கு பாதுகாப்பு திட்டம்,குடும்ப நல* திட்டம்* இப்படி பல்வேறு திட்டங்களை மலைக்கள்ளன் படத்தில் இருந்து நாடோடி மன்னன் வரையில் வசனங்கள், பாடல்கள் மூலம் மக்களுக்கு எடுத்துரைத்துள்ளார் .மலைக்கள்ளன் படத்தில் தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம்,கல்வி தெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம் , கருத்தாக பல தொழில் பயிலுவோம், ஊரில் கஞ்சிக்கில்லையென்ற சொல்லினை** போக்குவோம்*ஆளுக்கொரு வீடு கட்டுவோம்,அதில் ஆன கலைகளை சீராக பயில்வோம் என்று பாடியுள்ளார் .நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னவல்லாம் செய்வோம் என்பதை வசனங்கள், பாடல்கள் மூலம் தானே* அறிவித்து வரும் காலத்தில் அதை செய்து காட்டுவோம் என்றார் .அதனாலேயே 1967ல் நடைபெற்ற தி.மு.க மாநாடு அண்ணா தலைமையிலும் ,அதற்கு பின்னால் ஒரு மாநாட்டை எம்.ஜி.ஆர். தலைமையிலும் நடைபெற்றது என்பது வரலாற்று சிறப்பு பெற்ற நிகழ்வு .


நடிகன் குரல் பத்திரிகையில் எம்.ஜி.ஆரை நிருபர்கள் பேட்டி எடுத்த விஷயங்கள் வெளியாகி இருந்தது . அதில் சில கேள்விகள் கேட்கப்பட்டன .அதற்கு எம்.ஜி.ஆர். சாதுர்யமாக பதிலளித்தார் . நீங்கள் ஏன் சொந்த படம் எடுத்தீர்கள்* என்னுடைய சொந்தப்படம் என்பது ,சொந்த கதை, சொந்த கற்பனை, என்னுடைய சொந்த ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும் எனது சொந்த திறமையை வடிவமைத்து காட்ட வேண்டும் . அதை மக்கள் பார்த்து வெற்றியடைய செய்ய வேண்டும் என்பதற்காக நான் எடுத்த ரிஸ்க் . அந்த ரிஸ்க்கை, அந்த கடினமான பணியை வேறு ஒருவரின் காசில், செலவில் செய்து பரீட்சித்து பார்க்க விரும்பவில்லை.அதனால்தான் . நான் என் சொந்த செலவில் முயற்சித்து* .வெற்றியை ருசிக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது ..உங்களுக்கு அரசியல் தெரியாது என்று நடிகர் சிவாஜி கணேசன் கருத்து தெரிவித்திருக்கிறாரே நீங்கள் ஏன் அவரை கடுமையாக சாடவில்லை என்பதற்கு எனக்கு அதுபற்றி சரியான தகவல் வரவில்லை என்று தட்டி கழிக்கிறார் . இப்படி யார் எந்த எதிரிகள் சாடினாலும் ,அவர் எப்போதும் வேண்டாத வம்புக்கு, வேண்டாத விஷயத்துக்கும் ஒரு போதும்* தீனி கொடுத்தவர் அல்ல . எப்போதும் மற்ற மனிதர்களின் மாண்பை, பண்பை, கருத்துக்களை மதித்தவர் .


பேரறிஞர் அண்ணா*கூறியது போல தம்பி சிவாஜி*கணேசன் எங்கிருந்தாலும் வாழ்க என்று எம்.ஜி.ஆர். கூறியிருக்கிறார் .அவர் ஒவ்வொரு இடத்திலும் அதற்கேற்றது போல சூழ்நிலைக்கு தகுந்தபடி நடந்து வந்துள்ளார்* *நடிகன் குரல்*பத்திரிகை சார்பில்*பேட்டி அளிக்கும்போது அவர் நடிகர் சங்க*தலைவராகத்தான்*பதிலளிக்கிறார் .அங்கு வந்து எம்.ஜி.ஆர். என்கிற தனி மனிதன் செயல்பாடு இல்லை .தமிழக முதல்வராக இருக்கும்போது முதல்வராகத்தான் செயல்படுகிறார் .கட்சியின்*தலைவராக*இருக்கும்போது கட்சி சார்பில் பொறுப்பாக நடந்து கொள்கிறார் .கட்சி தலைவராக இருக்கும்போது ஜெயலலிதா பேரவை தொடங்கப்பட்டபோது ஜெயலலிதாவை பக்கத்தில் அமர்த்தி கொண்டு ,இந்த பேரவையை யார் தொடங்கினார்கள் ,எப்படி தொடங்கினார்கள்.அவர்கள் மீது நடவடிக்கை கட்சி*ரீதியில் எடுக்கப்படும் , தனி நபர் துதி பாடல் நமது*கட்சியில் இருக்க கூடாது*என்று கூறி ,ஜெயலலிதா முன்னிலையில் அவர்கள்மீது*நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார் . கட்சியை*வழி நடத்துபவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக எம்.ஜி.ஆர். நடந்துகொண்டார் .*


அதே போல எம்.ஜி.ஆர். முதல்வராகவும், கட்சி*தலைவராகவும் இருந்த*நிலையில்*சேலம்*ஆத்தூர்*பகுதியில்*கட்சி பணியில் இருந்த ஒருவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி விடுகிறார் .* அடுத்த சில நாட்களில் ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆருடன்,அமைச்சர் கே.ஏ.கிருஷ்ணசாமி ஆகியோருடன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவரும் அமர்ந்து*உணவருந்துகிறார் .அதை கண்ட*அமைச்சர் ,எம்.ஜி.ஆரிடம் கேள்வி*கேட்டபோது ,அவர் கட்சியின் உறுப்பினராக இங்கு வரவில்லை*,கட்சி பணிகளை, தன் கடமைகளை முறையாக நிறைவேற்றாததால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்* ஆனால் இப்போது இவர் என் உடன்பிறவா தம்பி ,என் உறவு .ராமச்சந்திரன் என்கிற தனி மனிதனாக*அவரை*உபசரிக்கிறேன்*என்றாராம் .இப்படி நாம் வைக்கிற இடத்தில வைக்கவேண்டிய பாத்திரத்தை சரியாக*வைக்க* வேண்டும் என்பதில்*ஒவ்வொரு பணியிலும், ஒவ்வொரு கட்டத்திலும் , ஒவ்வொரு காலத்திலும் சரியாக இருக்கிறார் என்பதால்தான்*அவரது வரலாறு இந்த பதிவுகளில் முக்கியத்துவம் பெறுகிறது .


அரசியல் சூழ்நிலைகளில் எம்.ஜி.ஆரை பின்பற்றி ரஜினிகாந்த் வருகிறார் என்று சொல்லப்படுகிறது .அல்லது எம்.ஜி. ஆரோடு ரஜினிகாந்தை ஒப்பீடு செய்வது சரியா*தவறா என்று கேள்வி எழுப்பப்படுகிறது .எம்.ஜி.ஆரை ஒரு போதும் யாருடனும் ஒப்பீடு செய்வதற்கில்லை* ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர்**அந்த மன்னாதி மன்னன் . ஆனாலும்கூட அவர் தடம் பதித்த சினிமாவும் சரி, அரசியலும் சரி ,அந்த வழியில் வந்த எல்லோரையும் எல்லோரும் ஒப்பிட்டுத்தான்* பார்ப்பார்கள். அதை தவறு என்று சொல்லிவிட முடியாது .எப்படி ஒரு மிகப்பெரிய ஆலமரம் இருக்கிறதோ, அந்த ஆலமரம்தான்* ஒரு ஊரின் வழிகாட்டியாகவும், திசை காட்டியாகவும் உள்ளது* அப்படி திரையிலிருந்தும் அரசியலில் இருந்தும் உதித்த ஆலமரம்தான் இமயம் போன்ற எம்.ஜி.ஆர் . அவரை ஒப்பிடாமல், திரும்பி பார்க்காமல் யாரும் அரசியலில்*எதுவும் செய்துவிட முடியாது இந்த தமிழக அரசியலில் என்பதற்காகத்தான்*பலரும் வந்து ரஜினிகாந்திடம் பேசியிருக்கிறார்கள் .பேசுகிறார்கள்.ஊடகங்களில் அதை பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன . அதை தவறு என்று சொல்லிவிட முடியாது .

இமயம் என்றைக்கும் இமயம்தான் . ஆனால் அதன் சாயல் பலருக்கும் மற்றவர்களுக்கும் பரவ வாய்ப்பிருக்கிறது என்று ஒப்பிட்டு பார்ப்பதில் தவறில்லை என்று நினைக்கிறேன்* எம்.ஜி.ஆர் அவர்களை சிலர் கேட்டிருக்கிறார்கள் ஏன் நீங்கள் தர்மேந்திரா போல, திலீப்குமார் போல, ராஜேஷ் கன்னா போல நடிக்க முயலவில்லை என்று .* அதற்கு எம்.ஜி.ஆர். பதில் சொன்னது என்னவென்றால் நான் ஏன் அவர்களை போல் நடிக்க வேண்டும் , ஆட வேண்டும், வாழ வேண்டும் எம்.ஜி.ஆர். என்கிற தனி மனிதனுக்கு தனி பாணி இருக்கிறது .தனி முத்திரை இருக்கிறது அதன்படிதான் நான் செய்வேன் என்று தனக்கென* உள்ள பாணியை வைத்துக் கொண்டு திரையுலகில்* எம்.ஜி.ஆர். நின்றார், வென்றார், ஜெயித்தார்*. நடிகர் ரஜினிகாந்த் அவர்கள்,சமீபத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா குறித்தும், எம்.ஜி.ஆர். சிலை திறப்பது குறித்தும்*எம்.ஜி.ஆர். பல்கலை கழகத்தில் திரு.ஏ.சி.சண்முகம் முன்னிலையில் பேசிய போது எம்.ஜி.ஆரின் அரசியல் தந்திரம், திறமை, வெற்றிகள் ,காய் நகர்த்துவது மற்றும் சினிமாவில் சிகரத்தை தொட்டது திரையுலகில் அவர் கடைபிடித்த வெற்றிகரமான பார்முலா ,வசூல் சக்கரவர்த்தி என்று வானளாவ புகழ்ந்து பாராட்டியுள்ளார் .அப்படி ஒரு* சிகரம் தொட்டஅசைக்க முடியாத** இமயம் போன்றவர் எம்.ஜி.ஆர்.*


ரஜினிகாந்த் பேசியது : புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசுவதில் பங்குபெறுவதில் பெருமையும், பெருமகிழ்ச்சியும் அடைகிறேன் .அடிப்படையில் நான் சிவாஜி கணேசனின் ரசிகன். நான் சென்னைக்கு வந்த பிறகு சினிமாவிற்குள் நுழைந்த பிறகு, மக்கள் திலகம் ,பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர்.அவர்களை பற்றி கேள்வி பட்ட பிறகு அவருடைய வாழ்க்கை வரலாறை படித்து, அவரது படங்களை ரசித்து பார்த்து ,வாழ்க்கையில் அவருடைய பெரிய ரசிகன் ஆகிவிட்டேன் .* அவருடைய பெரிய விசிறி, வெறியனும் ஆகிவிட்டேன்.இப்போ சொல்றேன்.அவருடைய சாதனைகள் என்னவென்றால் 1950களில்* ஒரு பெரிய ஆக்க்ஷன்* ஹீரோவாக இருந்தார் .மலைக்கள்ளன் ,அலிபாபாவும் 40 திருடர்களும், மதுரை வீரன் போன்ற இமாலய வெற்றிகள் கொடுத்திருந்தார் .1952ல் ஒரு சாதாரண நடிகராக வந்த நடிகர் சிவாஜி கணேசன் ஒரே படத்தில் புகழின் உச்சிக்கு சென்றார் .அதனால் பெரிய பட தயாரிப்பாளர்கள் சிவாஜி கணேசனை வைத்து படமெடுக்க படை எடுத்தார்கள் .அப்போது தன் திறமைகளை வெளிப்படுத்த , மக்களுக்கு சினிமாவில் தான் யார் என்று நிரூபிக்க எம்.ஜி.ஆர். சொந்தப்படம் எடுக்க தீர்மானித்தார் .* அந்த படத்திற்கு பெரும் பொருட்செலவு, காலவிரயம், தாமதம் ஆனதால் எம்.ஜி.ஆர். கதை இத்துடன் முடிந்தது என்று திரையுலகில் அவருக்கு வேண்டாதவர்கள் பிதற்றினார்கள் . ஆனால் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்து ,தானே அதை இயக்கி வெற்றிகரமாக வெளியிட்டார் .தன்னை பற்றியும் ,படத்தை பற்றியும் விமர்சித்தவர்களுக்கு இந்த படம் வெற்றியடைந்தால் நான் மன்னன் இல்லாவிட்டால் நான் நாடோடி என்றார் .ஆனால சாதாரண வெற்றி அல்ல .பிரம்மாண்ட வெற்றி பெற்றார்படம் இதிகாசம் படைத்தது .இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் நிலைகுலைந்து போனார்கள் . .விமர்சகர்கள் வாயை அடைத்தார். வசூல் சக்கரவர்த்தி என புகழ் பெற்றார் . சிறந்த படம், சிறந்த இயக்குனர் பரிசுகள் கிடைத்தன .**அந்த சூழ்நிலையில் படப்பிடிப்பிற்கு எம்.ஜி.ஆர். வந்தாரென்றால்,இயக்குனர்கள்,தயாரிப்பாளர்களுக்க ு வியர்வை வரும் .அந்த அளவிற்கு பெரிய தாக்கத்தை கொடுத்திருந்தார் .* அப்படியொரு வரலாறு, சாதனை, சரித்திரம் படைத்தவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.*அந்த காலத்தில் அவருக்கும் நடிகர் சிவாஜி கணேசனுக்குத்தான் போட்டி .ஆனால் அவரைவிட பெரிய மார்க்கெட்டை பிடித்து, பெரிய சம்பளத்தை பார்த்து , அவரைவிட மிக பெரிய படங்களை மக்களுக்கு அளித்து சாதனை, சரித்திரம், வரலாறு படைத்து, திரையுலகில் இமயம் போல் நின்றார் இல்லையா .அவர்தான் எம்.ஜி.ஆர். மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும்*

நிகழ்ச்சியில் ஒலித்தபாடல்கள் /காட்சிகள் விவரம்*
--------------------------------------------------------------------------------
1.எம்.ஜி.ஆர். நாகேஷ் உரையாடல் - ஆயிரத்தில் ஒருவன்*

2.எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்* இந்த நாட்டிலே -மலைக்கள்ளன்*

3.எம்.ஜி.ஆர்.-நம்பியார் உரையாடல் -ஆயிரத்தில் ஒருவன்*

4.எம்.ஜி.ஆர். -ஜெயலலிதா உரையாடல் - அடிமைப்பெண்*

5.ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில் - உரிமைக்குரல்*

6.ரஞ்சித் -சுந்தரம் -எம்.ஜி.ஆர். உரையாடல் -நினைத்ததை முடிப்பவன்*


**

orodizli
18th September 2020, 11:55 AM
மதுரையில்
கணேசனின் மூன்று படங்கள் பெற்ற வசூலை ....குறைந்த நாளில் துவம்சம் செய்த காவியங்கள்...
உரிமைக்குரல் 129 நாள் வசூல் :5,61,924.00
உ.சு.வாலிபன் 139 நாள்
வசூல் : 5,62,195.10
பட்டணம்மா
182 நாள் வசூல்
5,61,495.20
வறண்ட மாளிகை
200 நாள் வசூல்
5,30,536.15
தகரபதக்கம்
134 நாள் : 5,42,902.00
மதுரையில்..
1977 வரை கணேசனின் படங்களை ஒட்டுமொத்தமாக
முறியடிக்கபட்டது...

கணேசனின் போலி பொய் கூட்டம்...
மதுரையில் முக்காடிட்டுள்ளது...
சென்னை தெய்வமகன்
3 அரங்கில் 100 நாள் ஒட்டி மட்டமான தெய் (திருட்டு) மகன் வசூல்
சாந்தி,கிரவுன்,புவணே
300 நாள் : 8,71,870
கேவலமான வசூல்...
1966 ல்
பெ.தான் பிள்ளையா
வசூல் : 9,04,385.40
(ஸ்டார் 100, மகாராணி100, நூர்ஜகான் 84, உமா 80)
மக்கள் திலகத்தின்
நல்லநேரம்
வள்ளுவர் 50 நாள்
வசூல் : 84,518.04
வ.மாளிகை
50 நாள் அதே வள்ளுவர் அரங்கில் வசூல் :66,049.37.மேலே பழனி நகர் ஆகும்.
[ஈரோடு நகர் மலரில்
1956 ல் அலிபாபா திரைப்படம் 100 நாள் ஒடியுள்ளது என தகவல்..
.
சென்னை நகரில்
திரையிட்ட
நல்லநேரம்
4 அரங்கில் (சாதாரண அரங்கில் டிக்கட் கட்டணம் குறைந்த அரங்கில் திரையிட்டு) 100 நாள் ஒடி முடிய பெற்ற வசூல் : 12,67,127.60

கணேசனின் ராஜா (கூஜா) படம்
தேவிபாரடைஸ்
என்ற பெரிய அரங்கில் திரையீட்டு 99 நாள் (2காட்சி) மற்றும்
அகஸ்தியா, ராக்ஸி
ஒடி முடிய பெற்ற வசூல்
12,53,559.81 ஆகும்.
தேவிபாரடைஸ் 140 காட்சி வரை டிக்கட் கிழித்து அரங்கு நிறைந்த போர்ட் வைக்கப்பட்டு...
99.2 நாளில் காலாவதியான கூஜா வசூல் போலியானது....

பட்டணம்மா
சாந்தி 146
கிரவுன் 111
புவனேஸ்வரி 104 ஒடி
13 லட்சத்தை தாண்டாத மட்டமான வசூல்...
அடுத்து...
வறண்ட மாளிகை
சாந்தி 175 நாள்
கிரவுன் 140 நாள்
புவனேஸ்வரி 140 நாள்
ஒடி முடிய பெற்ற வசூல்
16 லட்சத்திற்கும் குறைவாகும்...
(நாள் : 455 நாள்)

நகரில் ரிக்க்ஷாக்காரன்
குறைந்த நாளில்...
அதாவது
தேவிபாரடைஸ் 142
கிருஷ்ணா 142
சரவணா 104
வசூல் : 16,84,958.32
(நாள்..388 நாள்)

கணேசனின்
மற்ற படங்களின் வசூலை பந்தாடிய
விபரம்...
ஞான ஒளியை விட
நான் ஏன் பிறந்தேன் வசூல் அதிகம்...
தருதலைப்புதல்வன் படத்தைவிட
ராமன் தேடிய வசூல் அதிகம்.
தர்மம் எங்கே என கேட்ட திருடன் படத்தை விட
அன்னமிட்டகை வசூலில் சூப்பர்.
நீதி படத்தை விட இதயவீணை பெற்ற வசூல் அதிகம்.
இதில் என்னட உங்க வசூல்....
சென்னையில்
நல்லநேரம்
ஒடி முடிய வசூல்
16 லட்சத்தை கடந்தது.
இதயவீணை
ஒடி முடிய 13 லட்சத்தை கடந்தது.
நான் ஏன் பிறந்தேன்
ஒடி முடிய 10 லட்சத்தை கடந்தது...
ராமன் தேடிய சீதை
ஒடி முடிய 9 லட்சத்தை கடந்தது..
சங்கே முழங்கு, அன்னமிட்டகை தலா
8 லட்சத்தை கடந்து...
மொத்தம் 6 காவியங்கள்...
சென்னை முழுவதும் திரையிட்டு ...
வசூல் 65 லட்சத்தை கடந்தது...
ஆனால் கணேசனின்
படங்கள் முதல் வெளியீட்டிற்கு பின் பெரிய அளவில் திரையீடு இல்லை...
இது தவிர தமிழகமெங்கும்
மாபெரும் சாதனையில் 6 படங்கள் திகழ்ந்தது.
ஆனால் கணேசனுக்கு
வறண்ட மாளிகை மட்டும் தான் குறிப்பிட்ட ஊரில் வசூல் ஆகும்.
மொத்தத்தில்
1972 ல் அதிக வசூல்
அதிக திரையரங்கு சாதனை...
அதிக நாட்கள் 50,75 எல்லாம் மக்கள் திலகத்திற்கு மட்டுமே.. ராஜூ..........

orodizli
18th September 2020, 11:55 AM
அதே வருடத்தில்*
தாய்க்குப்பின் தாரம் தாரம் காவியம் வெளியாகி தமிழகமெங்கும் மிகப்பெரிய வெற்றியை உருவாக்கியது.*
சமூக திரைப்படத்தின் வரலாறாக திகழ்ந்தது.* எங்கும் ஒரு புரட்சியை...... மிகப்பெரிய வெற்றியை, வசூலை கொடுத்தது
என்று சொல்லலாம்.

அலிபாபாவும் 40 திருடர்களும்
************************************
சென்னை சித்ரா 92 நாள்
சென்னை பிரபாத் 92 நாள்
சென்னை சரஸ்வதி 92.நாள்
மயிலாடுதுறை 92 நாள்
தஞ்சை 92 நாள்
திண்டுக்கல் 92 நாள்
விருதுநகர் 92 நாள்
குடந்தை 92 நாள்
நெல்லை 86 நாள்
வேலூர் 84 நாள்
காஞ்சிபுரம் 92 நாள்
கரூர் 84 நாள்

100 நாளை கடந்த ஊர்கள்
*********************************
சேலம் 154 நாள்
திருச்சி 147 நாள்
மதுரை 141 நாள்
கோவை 126 நாள்
ஈரோடு 100 நாள்
இலங்கை (2) அரங்கு*
100 நாள்...
பெங்களுர் 105 நாள்
கோவில்பட்டி 78 நாள்
கடலூர் 77 நாள்
சிதம்பரம் 77 நாள்
திருப்பூர் 75 நாள்

மற்றும் 50 க்கும் மேற்ப்பட்ட ஊர்களில் 50 நாட்களை கடந்த முதல் தென்னிந்திய திரைப்படம்
புரட்சி நடிகரின்...
பிரமாண்டமான வண்ணப்படைப்பு
அலிபாபாவும் 40 திருடர்களும்
திரைப்படமாகும்.
மக்கள் திலகத்தின் சரித்திர திரைப்படங்கள் ஆரம்ப காலத்தில் மாபெரும் வெற்றிகளை படைத்துள்ளது.*
அந்த வரிசையில் பார்த்தால் ராஜகுமாரி திரைப்படத்திற்குப் பின் மந்திரிகுமாரி, மர்மயோகி, சர்வாதிகாரி திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் படைத்துள்ளது.*

1954 ஆம் ஆண்டு வெளியான மலைக்கள்ளன் பல இடங்களில்
100 நாட்களை வெற்றிக்கண்டு*
பல ஊர்களில் 12 வாரங்களை கடந்து சரித்திரம் படைத்துள்ளது. இப்படி மகத்தான வெற்றியை தந்த*
மலைக்கள்ளன் காவியத்திற்கு பின் .....

1955 ல் குலேபகாவலி திரைக்காவியம் மிகப்பெரிய வரலாற்று சாதனையையும்*
அதிக திரையரங்குகளில்*
100 நாட்களையும்...பல அரங்கில்*
12 வாரங்களை கடந்தும் ஓடி வெற்றியை படைத்தது.

1956 ம் ஆண்டு பொன்மனச் செம்மல் எம் ஜி ஆர் அவர்கள் திரைப்பட உலகின் சகாப்தம் நாயகனாக திகழ்ந்தார். ஒரே ஆண்டில் வெளியான மூன்று திரைப்படங்கள் கோலாகலமான வெற்றியை படைத்த முதல் காவிய நாயகனாக புரட்சி நடிகர்*
எம். ஜி ஆர் வலம் வந்தார்.
அலிபாபாவும் 40 திருடர்களும் திரைக்காவியம்......*
12 .01 .1956 ஆம் ஆண்டு வெளியானது. மதுரைவீரன் திரைக்காவியம் 13 .04.1956 ஆம் ஆண்டு வெளியானது.
பல இடங்களில் அலிபாபாவும் 40 திருடர்களும் திரைப்படம் மதுரை வீரன் திரைப்படத்தின் வெெளியீட்டிற்காக 92 நாட்களில் எடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 100 நாட்கள்*
ஓட வேண்டிய அலிபாபாவும் 40 திருடர்களும் காவியம் ஏழு ஊர்களில் மட்டும் 100 நாட்கள் ஓடியது. மதுரைவீரன் வரவில்லை என்றால் அலிபாபா திரைக்காவியம் கண்டிப்பாக*
20 திரையரங்கில் 100 நாட்களை கடந்து இருக்கும்.
அதன் பின் வெளியான மதுரைவிரன் திரைக்காவியம்*
40 திரையரங்குகளில் தமிழகத்தில் திரையிடப்பட்டு 33 திரையரங்கில் 100 நாட்களை வெற்றி கொண்ட திரைப்படமாக தென்னக சினிமாவில் சாதனை படைத்தது.
[15/09, 9:59 pm] Raju BS: 65 ஆண்டு கால சரித்திரத்தில்
இக்காவியத்தின் வரலாற்று வெளியீடுகள்....
கடல் போன்றவையாகும்....
1931 முதல் 1960 வரை வெளியான
திரைப்படங்களில்..
குலேபகாவலி
அலிபாபாவும் 40 திருடர்களும்
மதுரை வீரன்
தாய்க்குப்பின் தாரம்
சக்கரவர்த்தி திருமகள்
புதுமைப்பித்தன்
நாடோடி மன்னன்
பாக்தாத் திருடன்
திரைக்காவியங்கள்*
2019 வரை வெள்ளித்திரையில்
பல ஊர்களில் வெளியாகி*
உலக சரித்திரம் படைத்துள்ளது.
உலகதிரையின் அதிசயமாகும்.
நிலைத்து நிற்கும் சின்னங்களாகும்.......

வாழ்க!* 60 ஆண்டுகளை கடந்த
வரலாற்று பெரும் காவியங்களை தந்த...... சகாவரம் பெற்ற வெள்ளித்திரையின் ஒரே ஒப்பற்ற
நிழற்ப்பட கதாநாயகன்
மக்கள் திலகத்தின் புகழ்!

1960 வரை வந்த மற்ற நடிகர்களின் படங்கள் மறைந்து போனதப்பா....

நிலைத்து நின்று புகழ் கண்டோதோ மக்கள் திலகத்தின்
காலத்தால் அழியாத காவியங்களப்பா....

இனியும் நிலை பெற்று நிற்கும் திரைப்படங்கள் என்றால் அது பொன்மனச் செம்மலின் தரம் குறையாத காவியங்களப்பா....

தொடரும்...UR.........

orodizli
18th September 2020, 11:57 AM
திருடன் ரசிகனுங்க
என்றுமே உண்மை பேசிய வரலாறு கடந்த 60 வருடங்களாக கிடையாது...
சொன்னதை சொல்லியும்...
போட்ட பதிவையே போட்டு...போட்டு.....
சத்தியத்தின் கழுத்தை நெறிக்கும் கயவர்கள்...
அதனால் தான் தலைவர்....
ஒரு தாய் மக்கள் திரைப்படத்தில்...
சொல்லும் கருத்து இது!
" சத்தியத்தின் கழுத்தை நெறிப்பவர்களை...
சத்தியமாக விடமாட்டேன் என்பார்"

மற்றொன்று....
கணேசனின் எச்சிலை கூட்டம்...
சென்னை
சாந்தியை வைத்தே
பொய் வசூலை விதைப்பானுங்க...
100 க்கும் மேற்ப்பட்ட படங்கள் வெளி திரையரங்கில் ஒட்டப்பட்ட ரகசியம் தாண்டவமாடும் பொழுது..
சாந்தி...
கிரவுன்...
புவனேஸ்வரியின்...
கோல்மால் ..கணக்கு
1977 க்குப் பின்னும் தொடர்ந்துள்ளது போலும்..

உ. சு. வாலிபன்
இதயக்கனி
மீனவ நண்பன்
வசூலை விட..
கணேசனின் படம் தான் அதிகம் என ஊளையிடும் கூட்டத்தின் கனவு இன்னும் பொய் பதிவு மூலம்..... மய்யம் முகநூலில் தொடர்ந்த வண்ணமுள்ளது...

திரையுலகில் ஆண்டுகள் 43 யை கடந்த மக்கள் திலகம்...
மறைந்து 33 ஆகியும்
கணேசன் ரசிகனின் பொய் பித்தலாட்ட வேலை வெறிபிடித்த பைத்தியங்கள் போல்
வலம் வருகிறது...
இந்த பைத்தியங்களை கீழ்பாக்கம் கொண்டு தான் சேர்க்க வேண்டும்!

தமிழகம் முழுவதும் வெளியீட்டு வெற்றி கண்டால் தான் அந்த படம் மகத்தான வெற்றி! மாபெரும் வெற்றி! இமாலய வெற்றி என சொல்ல வேண்டும்..

அதை விட்டு...
2,3 தியேட்டரில் வெற்றி என தம்பட்டம் அடித்தால்...அது தயாரிப்பளாருக்கு
தோல்வியை தான் கொடுக்கும்...

ராஜா
தோல்வி......
நீதீ
மட்டமான தோல்வி......
ஞானஒளி
மரணஅடி........
தர்மம் எங்கே படுகேவலமான
தோல்வி........
தவப்புதல்வன்
பலத்த அடி.........
பட்டணம்மா
மதுரை...சேலம் மட்டும்
தப்பியது...
வ.மாளிகை....
ரி.காரன் பெற்ற வசூலில் பாதி கூட வராத தோல்வி...
இந்த லட்சனத்தில்
6 படம் 100 நாளாம்....

40 தியோட்டரில்..
ஒரு படம் 2 ஊரில் வசூல்!
இன்னொரு படம்
40 ல் 1மட்டும் வசூல்!
மற்றொரு படம்
வசூல் இல்லாது
100 தேய்தது...
இப்படி எல்லாம் ஒரு கேவலமான வெற்றி க்கு பெயர் தான்..
ஹீரோ 72 என்ற பொருளா?
அல்லது...
எங்களால் பொய்யை விலைக்கு வாங்கி மெய் ஆக்குவது தான் கணேசனாரின் படங்களில் நீங்கள் செய்யும் தொழிலா....

கணேசனின் பொய்யர்கள் குறைந்து விட்டனர்... இன்னும் 4,5,கணேசனின் போலி ரசிகர்கள் ஏதோ புலம்பி திரிகின்றனர்...
அவர்களின் நகைசுவை பதிவை பார்க்கும் போது வேடிக்கையாக உள்ளது. இன்னும் எத்தனை நாள் இவர்களின் பதிவோ....

திருந்தாத ஜென்மங்கள்
வாழும் பைத்தியங்கள் ஆகும்...
உ.ரா..

orodizli
18th September 2020, 12:01 PM
"நல்லவன் வாழ்வான்"... - மக்கள்திலகம் நடித்து 1961 -ம் வருடம் பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய கதை. இயக்குனர் நீலகண்டன் அவர்களின் சொந்த முதல் தயாரிப்பு... இந்த திரைப்படத்துக்கு டைட்டில் எவ்வளவு பொருத்தமாகவும் , மிக ஆழ்ந்த அர்த்தங்களுடன் அமைந்துள்ளது ? மக்கள்திலகம்-mr .ராதா -வில்லன் -ஆக திறம்பட நடித்த படம். தேர்தல் வெற்றி-தோல்வி என திரைகதை நுணுக்கமாக கையாளப்பட்ட காட்சிகளை கொண்டிருந்தது ...இன்றைய தலைமுறையினர் பார்க்க வேண்டிய படமாகும்..
இருட்டு இருந்தால் தான் வெளிச்சத்தின் அருமை தெரியும். அதுபோல், துன்பங்களையும், எதிர்ப்புகளையும் எதிர்கொண்டு வெற்றி பெற்றால் தான், அதன் முழுப்பலனை நாம் உணர முடியும்.
வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துபவை எண்ணங்கள். கண்ணிலே புரை இருந்தால் பார்வை சரியாக தெரியாது. மூக்கிலே அடைப்பு இருந்தால் நறு மணத்தை நுகர முடியாது. வாயிலே புண் இருந்தால் உணவினை சுவைக்க முடியாது. அது போல், சிந்தனை இல்லாவிட்டால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது.
சிலர் தேவையற்ற வீண் அச்சத்திற்கு ஆளாகி மகிழ்ச்சியான நேரங்களில் கூட மன சஞ்சலத்திற்கு ஆளாகிறார்கள். இந்த வீண் பயத்தைப் போக்கி, துணிச்சலுடன் செயல்பட்டால் வாழ்வில் வெற்றி நிச்சயம்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தைத் தோற்றுவித்த நம் இதயதெய்வம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சந்திக்காத சோதனைகளா? அந்தச் சோதனைகளை சாதனைகளாக்கி, இந்த மாபெரும் இயக்கத்தை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியவர் நமது இதயதெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்...........

orodizli
18th September 2020, 12:02 PM
#பொன்மனச்செம்மல்புகழ்ஓங்குக!!!!!!
#பதவியிலும்_பணிவு...#நம்_தலைவர்

ஒரு விழாவில் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்குறது. விழா மேடையில் கலைஞர்கள், பழம்பெரும் நடிகர் திரு.எம்.கே.ராதா மற்றும் நடுநாயகமாக மாண்புமிகு தமிழக முதல்வர் பொன்மனச்செம்மல் அவர்கள் அருகே அமைச்சர் திரு.நெடுஞ்செழியன்... இப்போது விருது வழங்கும் நிகழ்ச்சி : முதல்வர் அவர்கள் கலைஞர்களுக்கு விருது வழங்கிக்கொண்டிருக்கிறார். அவர்களும் மகிழ்ச்சி யோடு வாங்கிசெல்கின்றனர். இப்போது ராதா அவர்கள் விருது வாங்க செல்லும்போது முதல்வர், அவ்விருதை நெடுஞ்செழியனை வைத்து தரச்செய்கிறார். திரு ராதாவுக்கும் மற்றவர்களுக்கும் அதிர்ச்சி. ராதா அவர்களுக்கும் மிக ஆதங்கம் முதல்வர் கையினால் வாங்கமுடியமுடியவில்லையே என்று. நொந்தபடியே தன் இருப்பிடத்திற்கு திரும்பியபோது ஓர் அதிர்ச்சி...!!!

மேடையில் முதல்வரைக் காணவில்லை. !!!

குனிந்து பார்த்தால் முதல்வர் தன் காலில் விழுந்து நமஸ்காரம் செய்வதைப்பார்து இன்னும் அதிர்ச்சி ...!!!

திரு. ராதா ஏதோ சொல்லமுயலும் போது...அவரை தடுத்து நம் செம்மல் கூறியதாவது : "நான் ஆரம்பகாலத்தில் கஷடபடும்போது தங்கள் பெற்றோர் என்னை மகன் போலவும் தாங்கள் என்னை சகோதரன் போலவும் கருதி இருக்க இடம் உணவு உடையும் கொடுத்து எனக்கு சினிமாவில் வாய்ப்பும் கொடுத்து நான் இந்த நிலையை அடைய மூல காரணமாக இருந்த தங்களுக்கு நான் போய் விருது வழங்குவது தஙகளை அவமதிக்கும் செயலாகும். "தங்களன்றோ என்னை ஆசீர்வதுத்து அருளி இச்சபையின் முன் கௌரவிக்கவேண்டும் " என்று சொன்னது தான் தாமதம்...

திரு.ராதா உள்பட அனைவரின் கண்களும் குளமாயின... ஒரு மாநிலமுதல்வர் கௌரவம் பார்க்காமல் தனது நன்றியையும் விசுவாசத்தையும் உலகறியச்செய்து திரு ராதா அவர்களுக்கு ப் பெருமை சேர்த்ததை புகழ வார்த்தைகள் தான் ஏது???.........

orodizli
18th September 2020, 12:04 PM
நடிகன் குரல் பத்திரிகையில் வாசகர் கேள்விக்கு நம் தலைவர் அளித்த பதில்..........

புரட்சியார் ரசிகன் என்பவர் 15.04.1973 அன்று கேட்ட கேள்வி.

உங்களை மட்டும் இல்லாது உங்கள் குடும்ப பெண்கள் அதுபோல சில தனிப்பட்ட நல்லவர்களின் வீட்டு பெண்கள் பற்றியும் தரக்குறைவான செய்திகளை வெளியிட்டு வருகிறதே நாத்திகம் என்னும் பத்திரிகை.?

தலைவர் பதில்.

அவர்கள் தங்கள் கடந்த கால சொந்த வாழ்க்கையை எண்ணி பார்த்து கொண்டு இருப்பார்கள் என்றால் உங்களுக்கு இந்த கேள்வி என்னிடம் கேட்கும் வாய்ப்பு வந்து இருக்காது...

நான் இது பற்றி பதில் கேட்டு ஒரு ரூபாய் 60 காசுகள் செலவில் அவர்களுக்கு ஒரு பதிவு தபால் அனுப்பி இருந்தேன்..

இதை பெற்று கொள்ள மனம் இல்லை என்ற குறிப்பு எழுத பட்டு அந்த தபால் என் கைகளுக்கு திரும்ப வந்து விட்டது..

ஒருவேளை தபாலில் குண்டுக்கு பதில் குண்டு இருக்குமோ என்று பயந்து விட்டார்கள் போல.

என்று பதில் சொல்லி இருக்கிறார் பொன்மனம்.....

தரம் கெட்டவர்கள் இடம் இருந்து வேறு நல்ல செய்திகளா வரும்?!...........

orodizli
18th September 2020, 12:11 PM
திமுக ஆதரவு நண்பர் ஒருவர்
"கலைஞர(மு.கருணாநிதி) இழுக்காட்டி உங்களுக்கு தூக்கம் வராதே...
நன்றாக கதறவும்.."

என என் பதிவில் பின்னூட்டம் இட்டிருந்தார்.
நானும் பதிலுக்கு கலைஞரை, நான் தினம் காய்ச்சிக் காய்ச்சிக் கழுவிக் கழுவி ஊற்றுவதற்கு, சில காரணங்களைக் கூறியிருந்தேன். அவருக்குத் திருப்தி இல்லை போலும்.

"வேற...?"
எனக்கேட்டிருந்தார்.

ஒரு புத்தகமே போடலாம்.

ஆனால் சுருக்கமாக ஒரு பதிவாவது போட்டுவிடலாம் என எண்ணி இந்தப் பதிவை மற்ற நண்பர்களுக்கும் முன் வைக்கிறேன்.

ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல.
1. முதல் துரோகம் சொல்லின் செல்வரின் நிர்வாகத்திறமையைப் பார்த்து அவருக்குப் பின்னால் ஒரு தலைவர் கூட்டமே நிற்பதைப்பார்த்து இந்த மனிதர்தான் தனக்குக்கட்சியில் உள்ள பெரிய தடை என திராவிட நாடு கோரிக்கையில் அண்ணாவுக்கும் சம்பத்துக்கும் இடையில் இருந்த கருத்து வேறுபாட்டைப்பயன் படுத்திக்கொண்டு அவரை செயற்குழுக் கூட்டத்தில் மதுரை முத்து போன்ற ரௌடிகளை வைத்து சட்டையைப்பிடித்துச் செருப்பாலடிக்க வைத்துக் கட்சியை விட்டு வெளியேறச் செய்து சம்பத் கவியரசர் பழ நெடுமாறன் சிவாஜி கணேசன் போன்றவர்கள் கட்சியை விட்டு வெளியேற வைத்தார். தலைமைப் பதவிக்கு எப்போதாவது வர நினைத்தால் தனக்கிருந்த ஒரே இடைஞ்சல் EVK சம்பத் தான்.
தனது சுயநலத்துக்காக முதல் கட்சி உடைப்பு.

2.எம்ஜியாருடன் கைகோத்துக்கொண்டு நெடுஞ்செழியனைச் செல்லாக்காசாக்கிப் பதவி நாற்காலியைப் பிடித்தது.
ஆரம்பகாலத்தில் கட்சியில் ஐம்பெரும்தலைவர்கள் என திமுகவில் அறியப்பட்டவர்கள் அண்ணா, EVK சம்பத், இரா. நெடுஞ்செழியன், கே. ஏ. மதியழகன், என். வி. நடராசன். ஒரிஜினல் Big five லிஸ்ட்லயே இல்லாதவர் திரு மு க அவர்கள்.

3. எந்த எம்ஜியாரி.ன் ஆதரவால் பதவிக்கு வந்தாரோ அதே எம்.ஜி.ஆர்.
"மாநாட்டுக்கு வசூல் பண்ணின காசையெல்லாம் என்ன பண்ணினய்யா?"
ன்னு கணக்குக் கேட்டவுடன் அவரைக் கட்சியை விட்டு வெளியேற்றி கழகத்தை பலவீனப்படுத்தி அடுத்த தேர்தலிலேயே கழகத்தைத் தோல்வி முகம் காணக் காரணமாயிருந்தவர் இதே மகானுபாவன்தான்..
இரண்டாம் முறை கட்சியை உடைத்தது இன்னொருவர் தனக்குப்போட்டியாக வந்து விடக் கூடாதென்று.

4.வைகோ வளர்ந்து வரும் வேகத்தைப்பார்த்து மகனுக்குப் போட்டியாக வந்து விடக்கூடாதேயென்று கொலைமுயற்சிக்குற்றம் சாட்டிக் கட்சியை விட்டு வைகோவை வெளியேற்றிக் கழகத்தில் இன்னொரு பிளவை உண்டு பண்ணி அதுவரை ஜாய்ன்ட் ஸ்டாக் கம்ப்பெனியாக திமுக என்று இருந்த கட்சியை The MK (திமுக) Private Limited என, பிரைவேட் லிமிடெட் கம்பெனியாக மாற்றியது.
மூன்றாம் முறை கட்சியை உடைத்தது பொதுச் சொத்தைக் குடும்பத் சொத்தாக்க.

5.பியூன்கள் குமாஸ்தாக்கள் அதிகாரிகள் மட்டத்தில் 5 ரூபாய் 50 ரூபாய் 100 ரூபாய்களில் இருந்த லஞ்சத்தை லட்சக்கணக்கில் உயர்த்தி லஞ்சத்துக்குப் ப்ரோமோஷன் கொடுத்தது. அவை கடைசியாகப் பல கோடிகளில் போய் நின்றது.

ஒவ்வொரு வேலைக்கும் ஒரு விலை ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு விலை என ஊழலை வாழ்க்கை நெறியாக்கியது.

6. சிறுபான்மையினர் வாக்குகளுக்காக அவர்களை சந்தோஷப்படுத்த இந்து மத ஆச்சார அனுஷ்டானங்களையும், ஆச்சார்யர்களையும், இந்து மதக் கடவுள்களையும் நையாண்டி பண்ணியது, அவமானப்படுத்தியது.

7. தமிழகத்தில் இன்று நிலவும் கலாச்சாரச் சீரழிவுக்கு, சீர்கேட்டுக்கு
அடிக்கல் மட்டும் நாட்டவில்லை கட்டடமே எழுப்பினார்.
அந்தக்கட்சியின் தலைவர்களில் மாவட்டம் வட்டம் உட்பட சின்ன வீடு இல்லாத ஒரு தலைவர் உண்டா இன்றைய தலைவரைத்தவிர? இருந்தால் அவருக்கு ஒரு கோவிலே எழுப்பிவிடலாம்.

8. எந்த இந்திரா காந்தி எமெர்ஜென்சி காலகட்டத்தில் தனது கட்சிக்காரர்களையே உள்ளே தூக்கி வைத்து நொங்கு நொங்கென்று நொங்கினாரோ அவருடனேயே
"அரசியலில் யாரும் எந்தக்கட்சியும் நிரந்தர நண்பனுமில்லை நிரந்தப் பகைவனுக்குமில்லை."
என தனது மானங்கெட்ட பல(ப)வட்டரைத் தனத்துக்கு ஒரு சமாதானம் சொல்லிக் கழகத்தின் தன்மானத்தைக் காற்றில் பறக்க விட்டது.

9. கலைஞர் பலதார மணச் சட்டத்தின் படி குற்றவாளி. தயாளு அம்மாள் கோர்ட்டுக்குப் போகாததால் ஜெயிலுக்குப்போகாமல் தப்பினார்.

இது போதுமா இன்னும் வேண்டுமா?

சட்டத்தால் தண்டிக்க முடியாததால் கொலைகாரன், கொலைகாரன் இல்லை என்று அர்த்தமல்ல. சந்தேகத்தின் பலன் குற்றம் சாட்டப்பட்டவனுக்குத் தரப்பட்டிருக்கிட்டது.
சட்டம் போட்ட பிச்சை அவனுக்குக் கிடைத்த உயிர்ப்பிச்சை.

அதேபோல திருடன் சட்டத்தால் தண்டிக்கப்படவில்லை என்பதால்
அவன் மாசறு பொன்னாகி விடமாட்டான்..

நீங்களே சொல்லுங்கள் நான் என்னுடைய தினசரிக்கடமையாக கலைஞர் பெருமானைக் காய்ச்சிக் காய்ச்சிக் கழுவிக் கழுவி ஊற்றுவது சரியா இல்லையா என்று.

மிக்கநன்றி
Kothai Nachiar.........

orodizli
18th September 2020, 12:34 PM
அறிஞர் அண்ணாவுக்குச் சிலை வைக்க நினைத்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அண்ணாவைப் போட்டோ எடுத்துவரச் சொன்னார். புகைப்படம் எடுப்பவரிடம் அண்ணா 5 விரலைக் காட்டி புகைப்படம் எடுக்கச் சொன்னார். அதற்கு,” உங்களை ஒரு விரல் காட்டித்தான் படம் எடுத்து வரச் சொன்னார். ” என்றார் போடோகிராபர். அண்ணாவுக்கு அதன் அர்த்தம் புரியவில்லை. ”சரி, தம்பி ராமச்சந்திரன் சொன்னால், அதற்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கும். ” என்று ஒரு விரல் காட்டி, போட்டோவுக்குப் போஸ் கொடுத்தார். பிறகு புரட்சித்தலைவர் எம்.ஜி. ஆரைப் பார்த்தபோது, ”ஐந்து விரலை விரித்துக் காட்டினால், நம் கழகத்தின் சின்னத்தைக் குறிக்கும். ஒரு விரலை காட்டினால் என்ன அர்த்தம்?” என்று கேட்டார். ”ஒன்றே குலம்; ஒருவனே தேவன் என்ற உங்கள் பொன்மொழியை மக்கள் புரிந்து கொள்வார்கள். ” என்றார் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சிலாகித்துப்போன அண்ணா புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரைப் பாராட்டி மகிழ்ந்தார்..........

fidowag
18th September 2020, 07:18 PM
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின்*டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*(02/09/20)அளித்த*தகவல்கள்*
---------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் வாழ்க்கை முறை, அவர் வாழ்ந்த விதம் ,*ஆகியவற்றின் மூலம் திரைப்படங்களில் மக்களுக்கு தான் கற்ற, அறிந்த செய்திகளை வாத்தியாராக இருந்து கொண்டு போதித்து வந்தார் .


தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். ஒரு முறை தஞ்சை அரண்மனைக்கு விஜயம் செய்ய வருகிறார் .அவரை வரவேற்க தஞ்சை மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகள் வருகின்றனர் .தஞ்சை அரண்மனையை அவர் பார்வையிடுகிறார் .பார்த்துவிட்டு வரும்போது குறிப்பிட்ட* இடத்தில ஒரு சுரங்க பாதை ஒன்று இருக்கிறது என்கிறார் . ஆனால் அதிகாரிகள் மாவட்ட அலுவலக ஆய்வின்படி அப்படி ஒன்றுமில்லை என்கிறார்கள் .அப்படி இல்லை. என்று கூற முடியாது .எனக்கு தெரிந்த வகையில் இருக்கிறது என்றுதான் சொல்லமுடியும் .அதிகாரிகளான நீங்கள் தான் சரியாக ஆய்வு செய்து கூற வேண்டும் என்றார் .அதிகாரிகள் இது குறித்து உடனடியாக தொல்பொருள் ஆராய்ச்சி துறை மூலம் ஆய்வு செய்து தங்களுக்கு தெரிவிக்கிறோம் என்றார்கள் . எம்.ஜி.ஆர். முதல்வராவதற்கு முன்பு எத்தனையோ மன்னர்கள் ஆண்டார்கள். முதல்வர்கள் ஆட்சியில் இருந்தார்கள் .யாருக்கும் இதுபற்றி தெரியவில்லை .கண்டுபிடிக்கவும் இல்லை .ஆனால் எம்.ஜி.ஆர். முதல்வராக வந்து விஜயம் செய்துகண்டுபிடித்து* சொன்ன பிறகுதான் இந்த விஷயம் மக்களுக்கு தெரியும்* வகையில் வெளிச்சத்துக்கு வந்தது, கண்டுபிடிப்பதற்கும் வழி ஏற்பட்டது .


கதாநாயகர்கள் காலால் சண்டையிடுவது ,உதைப்பது என்பதெல்லாம் நடிகர் விஜயகாந்த் சினிமாவில் நுழைந்த பிறகுதான் பிரபலம் என்று பலர் பேசுவதுண்டு .ஆனால் உண்மை அதுவல்ல .* அதற்கும் முன்னோடி எம்.ஜி.ஆர்தான் .எங்கள் தங்கம் படத்தில் ஒரு காட்சியில் ஜெயலலிதாவை மறித்து நகைகளை பறிக்கும் காட்சியில் அந்த இடத்திற்கு வரும் எம்.ஜி.ஆரும்* ,சோவும்* ஸ்டண்ட் நடிகர்கள் குண்டுமணி,மற்றும் புத்தூர் நடராஜனிடம்* நகைகளை கேட்கும்போது ஏற்படும் வாதத்தில் நாங்கள் அரை* பங்கை கொடுத்து விடுகிறோம் எனும்போது ,சோ சொல்லுவார் . நீங்கள் கொடுத்து அண்ணன் வாங்கி கொள்ள மாட்டார் .வேண்டுமானால் அண்ணன் கொடுப்பார் நீங்கள் வாங்கி கொள்ளுங்கள் என்பார் .அப்போது இவர்களுக்கு அரை எதற்கு கால் ஒன்றே போதும் என்று சொல்லி எம்.ஜி.ஆர். காலால் உதைத்து சில நிமிடங்கள் அவர்களுடன் சண்டை போடுவார் .

எம்.ஜி.ஆர். ஆரம்ப காலத்தில் இருந்தே சண்டை காட்சிகளில்* புதிய புதிய மரபு சார்ந்த ஆயுதங்களை பயன்படுத்துவது, புதிய புதிய யுக்திகளை கையாளுவது*என்பதில் முனைப்பாக இருந்தார் .உதாரணத்திற்கு ரிக்ஷாக்காரன் படத்திற்கு சுருள்வாள் வீசி சண்டை காட்சியில் நடித்திருப்பார் . சுருள்வாள் வீசுவது அவ்வளவு சுலபமான காரியமல்ல .பார்வையாளர் ஒருவர் .சுருள்வாள் வீசும்போது அந்த காட்சியை பார்த்து இது என்ன பிரமாதம் என்று விமர்சனம் செய்வது மிக எளிது . ஆனால் அதை சுயமாக வீசி பார்த்தால்தான்* அதிலுள்ள சிரமங்கள் தெரியும்* ஏனென்றால் சுருள்வாள் வீசுபவர் அந்த சமயத்தில் அவரே பலமாக காயப்படக்கூடிய சூழ்நிலை உள்ளது இந்த காட்சியில் எம்.ஜி.ஆர். ஒரு பெரிய மேஜை மீது முட்டிகள் போட்டு, மிகவும் விறுவிறுப்பாக, சுறுசுறுப்பாக*வீராவேசமாக,அதே சமயத்தில் அநாயாசமாக* பல நிமிடங்கள் காட்சியில் நடித்து ரசிகர்களை பிரமிக்க செய்தார் .அந்த காட்சியில் அரங்கத்தில் கைதட்டல்கள் அடங்க வெகுநேரமாகியது .தமிழ்த்திரையுலகில் இந்த மாதிரி சுருள்வாள் வீசி சண்டை காட்சியில்**பிரமிக்கத்தக்க வகையில் வேறு எந்த நடிகரும் இதுவரை நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது .*


எம்.ஜி.ஆர். உழைக்கும் கரங்கள் படத்தில் மான் கொம்பு ஒன்றுடன் சண்டையிடும் காட்சி ரசிகர்களால் மறக்க முடியாதது .அந்த படம் வெற்றியடைந்ததற்கு முக்கிய காரணம் அந்த சண்டை காட்சிதான் என்று**அந்த காலத்தில் பேசப்பட்டது .* மான்கொம்பூ சண்டை என்றாலே என்னவென்று தெரியாத ஒரு சமூகம் இருக்கிறது . இந்த மான்கொம்பு சண்டை என்பது நமது முன்னோர்கள் அறிந்திருந்த பாரம்பரிய சண்டைக்கலை . இந்த கலையை மக்கள் மனதில் நிலைநிறுத்தவும், மக்களுக்கு நினைவுபடுத்தவும் இந்த சண்டை காட்சியை எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்தினார் . இந்த காட்சியிலும் மிகவும் விறுவிறுப்பாக, சுறுசுறுப்பாக,,சிலம்ப நடையுடன் ,பாவனைகள், அபிநயங்கள் காட்டி* ,அபாரமாக நடித்திருப்பார் எம்.ஜி.ஆர். இந்த காட்சி திரையில் சுமார் 10 நிமிடங்கள் வரை ஓடும். ஆனால் ரசிகர்கள் /பக்தர்கள் கைதட்டல்கள், விசில்சத்தம்* தொடர்ந்து எழுந்தவண்ணமிருக்கும் .* இந்த மாதிரியான சண்டை காட்சியிலும் தமிழ் திரையுலகில் வேறு எந்த நடிகரும் இதுபோல் நடித்து சாதித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது இந்த படம்*. சென்னை சாந்தம்,ஸ்ரீகிருஷ்ணா, உமா, கமலா அரங்குகளில் வெளியானது ..***சாந்தம் அரங்கில் 75 நாட்கள் (தினசரி 4 காட்சிகள் )-* *ஸ்ரீகிருஷ்ணாவில் 82 நாட்கள் (தொடர்ந்து 100 அரங்கு நிறைந்த காட்சிகள் ) உமாவில் 68நாட்கள் ஓடியது . சேலம் அலங்காரில் 96 நாட்கள் ஓடியது .சுமார் 25 அரங்குகளுக்கு மேல் 50 நாட்கள்* கடந்து ஓடியது .


எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த ராஜகுமாரியில் இருந்து மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரை (1947 முதல் 1978 வரை) பல படங்களில் கத்தி சண்டை, வாள் சண்டை காட்சிகளில் நடித்து அசத்தியிருப்பார் .* பல படங்கள் இவரது சண்டை காட்சிகளுக்காகவும், கத்தி சண்டை, வாள் சண்டைகளுக்காகவும் பெரும் வெற்றி பெற்று , ரசிகர்கள், பொதுமக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளன . எம்.ஜி.ஆர்., நம்பியாருக்கு அடுத்து தமிழ் திரையுலகில் அபாரமாக கத்தி சண்டை, வாள் சண்டை காட்சிகளில் நடித்து புகழ் பெற்றவர் எவருமிலர் .இவர்கள் இருவரும் முறைப்படி சண்டைக்கலை யுக்திகளை அறிந்தவர்கள்*.பல படங்களில் இவர்கள் இருவரும் மோதும் காட்சிகளில் அனல் பறக்கும் .ரசிகர்களின் ஆரவாரம் ,கைதட்டல்கள் பலமாக இருக்கும் . உதாரணத்திற்கு*சர்வாதிகாரி,நாடோடி மன்னன் , பாக்தாத் திருடன் , அரசிளங்குமரி ,கலையரசி , ஆயிரத்தில் ஒருவன் ,அரச கட்டளை, மீனவ நண்பன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் ஆகிய படங்கள் .நீரும் நெருப்பும் படம் எம்.ஜி.ஆர் மணிவண்ணன் வேடத்தில் நல்லவனாகவும், கரிகாலன் வேடத்தில் வில்லனாகவும்இரு வேடங்களில்* நடித்து அசத்தியிருப்பார் . மணிவண்ணன் எப்போதும் இடது கையில் சிரித்துக் கொண்டே சண்டையிடுவார் . கரிகாலன் எப்போதும் கோபமாக, முரட்டுத்தனத்துடன் ,ஆக்ரோஷமாக வலது கையில் சண்டை போடுவார் . இருவரும் ஒட்டி பிறந்த , உடன்பிறந்த சகோதரர்கள் . ஆனால் இரு வேறு குணங்கள் . ஆகவே எம்.ஜி.ஆரை பொறுத்தவரையில் இது வழக்கத்திற்கு மாறான சற்று வித்தியாசமான படம் .கத்தி சண்டையில் ஒரு நேர்த்தி, அழகு, நளினம் எல்லாவற்றையும் காட்டி நடித்திருப்பார் கத்தி சண்டை காட்சிகளை ஒரு நடன காட்சிக்கு ஈடாக செய்திருப்பார் .


ஆங்கில படங்களில் உபயோகப்படுத்தும் கத்தியான sword ஒரு மாதிரியான வடிவில் இருக்கும் . அதே போல தமிழ் சினிமாவில் கத்திகள், வாள்கள் எப்படி இருக்கும் ,அதை எப்படி வீச வேண்டும் என்பதில் முறையான தேர்ச்சி பெற்றவர் எம்.ஜி.ஆர். அந்த காலத்தில் பலர் பேசுவதுண்டு .அதாவது ஆங்கில நடிகர் ஏரால்*பிளைன் என்பவர் கத்தி சண்டை ,வாள் சண்டை காட்சிகளில் நடிப்பதில் வல்லவர் .அவரை போல் எம்.ஜி.ஆர். நடிக்கிறார் என்று .ஆனால் தான் எழுதிய சுய சரிதையான நான் ஏன் பிறந்தேன் என்கிற தொடரில் ,தனக்கும், ஏரால்* பிளைன் என்பவருக்கும் கத்தி சண்டை ,வாள்* சண்டை* காட்சிகளில் நடிப்பதில் உள்ள வித்தியாசங்கள் பற்றி* தெளிவாக எழுதி இருக்கிறார் .எம்.ஜி.ஆர். சண்டை கலைகளை முறையாக* பயின்றதால் ,சிலம்பம், கம்பு சண்டை, குத்து சண்டை ,கத்தி சண்டை, வாள் சண்டை காட்சிகளில் எதிரிகளுடன் போராடி நடிப்பது*அவருக்கு கைவந்த கலையாக இருந்தது . அந்த காட்சிகளை ரசிகர்கள் /பக்தர்கள்ஏன் பொதுமக்கள் கூட நல்ல வரவேற்புடன் ,ரசித்து மகிழ்ந்தார்கள் .இதனால்தான் எம்.ஜி.ஆர். படங்களை மீண்டும் மீண்டும் ரசிகர்கள் பார்க்க ஆர்வமாக இருந்தார்கள் .இதற்கு காரணம் எம்.ஜி.ஆருக்கு* முன்பும், பின்பும் நடித்தவர்கள் கூட கத்தி சண்டை, வாள் சண்டை காட்சிகளில் நடித்த நடிகர்கள் பலருண்டு .ஆனால் எம்.ஜி.ஆர். போல சோபித்தவர்கள் எவருமிலர் . இதை பல நடிகர் நடிகைகள், இயக்குனர்கள் ,தயாரிப்பாளர்கள் தங்களது பேட்டியில் குறிப்பிட்டு பேசி இருக்கிறார்கள் .எம்.ஜி.ஆரின் இந்த பிரம்மாண்ட வெற்றிக்கு காரணம் ,சினிமா தொழில் மீது இருந்த பக்தி, பற்று, அக்கறை, ஈடுபாடு, அர்ப்பணிப்பு ,கற்று கொள்ளும் ஆர்வம் ,பல கலைகளை மக்களுக்கு தெரியப்படுத்தும் நோக்கம் ,ஆகியவைதான் .அந்த காலத்தில் பலர் சொல்வார்கள் எம்.ஜி.ஆர். அட்டை கத்தி வீசுவதில் வல்லவர் என்று கிண்டலும் , கேலியும் பேசியதுண்டு . உண்மையில் அட்டை கத்தி வைத்து சண்டை காட்சியில் நடிக்க முடியாது . மரக்கட்டையில் கத்தி வைத்தும் ,உலோகத்தில் கத்தி வைத்தும் பயன்படுத்தி இருப்பார்கள் .இதை*எம்.ஜி.ஆர். தனது சுய சரிதையில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார் .மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும்*

நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம் .
-------------------------------------------------------------------------------
1.மூடி திறந்த இமை இரண்டும் பார் பார் என்றது -தாயை காத்த தனயன்*

2.சண்டை காட்சியில் எம்.ஜி.ஆர். - எங்கள் தங்கம்*

3.அதிசயம் பார்த்தேன் மண்ணிலே - கலையரசி*

4.சுருள்வாள் சண்டை காட்சியில் எம்.ஜி.ஆர்.-ரிக்ஷாக்காரன்*

5.மான் கொம்பு சண்டை காட்சி - உழைக்கும் கரங்கள்*

6.கடவுள் வாழ்த்து பாடும் - நீரும் நெருப்பும்*

7.எம்.ஜி.ஆர்.-நம்பியார் சண்டை காட்சி - கலையரசி*

orodizli
18th September 2020, 07:28 PM
மக்கள் திலகம் தலைவரும் இயக்குனர் திலகம் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் அவர்களும் நல்ல நட்பில் இருக்க..

அவர் காங்கிரஸ் இயக்கத்தில் அதிக நாட்டம் கொள்ள தலைவர் வேறு திசையில் பயணிக்க தலைவர் பற்றி மற்றவர்களை போலவே தரக்குறைவாக பேச ஆரம்பிக்க.

மதுரைக்கு வந்து இருந்த அவருக்கு நம் தலைவர் ரசிகர்கள் கோவத்தில் சிறப்பு வழிபாடு நடத்த...விஷயம் அறிந்த தலைவர் நிகழ்வை கண்டிக்க.

ஆத்திரத்தில் தன் தாக்குதலை தலைவர் மீது அதிக படுத்தினார் கே.எஸ்.ஜி.

பணமா பாசமா படத்துக்கு ரஷ்ய நாட்டு கலைவிழாவில் அந்த படம் திரை இட பட அங்கே போய் இருந்தார் அவர்.

இங்கே சென்னையில் மொட்டை மாடியில் விளையாடி கொண்டு இருந்த அவரின் கடைசி மகன் 5 வயது குமார் நிலை தவறி தலை குப்புற கீழே விழ.

மண்டை உடைந்து பலத்த காயங்கள் உடன் சென்னை அரசு மருத்துவ மனைக்கு அந்த குமார் அனுமதிக்க பட.

பதறி பறந்து செல்கிறார் தலைவர்.
மருத்துவமனை டீனை சந்தித்து நல்ல சிகிச்சை செய்யுங்கள் என்ன மருந்து வேண்டுமானாலும் எங்கு இருந்தும் கொண்டு வந்து சிகிச்சை செய்யுங்கள்.

அனைத்து அதிக செலவுகளுக்கும் நான் பொறுப்பு என்று சொல்ல...அனுதினமும் குமார் உடல் நலம் பற்றி தலைவர் விசாரிக்க.

அடுத்தவந்த நாட்களில் அந்த குமார் நலம் அடைந்து வீடு திரும்ப.

ரஷ்ய நாட்டில் இருந்து விழா முடிந்து வந்த கே.எஸ்.ஜி. அவர்களிடம் அவர் மனைவி கண்ணீர் மல்க ஏங்க நம் பையன் குமார் உயிருடன் இருக்க பெரும் உதவி செய்த புண்ணியவான் மனித தெய்வம் எம்ஜிஆர் அவர்களும் ஒரு முக்கிய காரணம் இன்றி சொல்ல...வாய்அடைத்து போகிறார் அதன் பின் கே.எஸ்.ஜி.அவர்கள்.

அவர்தான் தலைவர்.
அன்னை சத்தியாவின் புதல்வர்...வாழ்க அவர் புகழ்...நன்றி..தொடரும்..........

உங்களில் ஒருவன்...

orodizli
18th September 2020, 07:29 PM
#பெரியார் மீது #எம்ஜிஆருக்கு மிகுந்த மதிப்பு உண்டு.

1978-79-ல் எம்.ஜி.ஆர்.ஆட்சியில் பெரியார் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பெரியார் நினைவுத் தூண் எழுப்பப்பட்டது.

பெரியாரின் பொன்மொழிகள் நூல் வடிவில் கொண்டுவரப்பட்டன. அவரது வாழ்க்கை வரலாறு மாவட்ட தலைநகரங்களில் ஒளி-ஒலி காட்சியாக நடத்தப்பட்டது.

பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை எம்.ஜி.ஆர். அமல்படுத்தினார். அதுவரை அதை
கண்டுகொள்ளாதிருந்த கருணாநிதி,
எம்.ஜி.ஆர். ஆட்சியில் அறிமுகமானது
என்பதற்காக 'முரசொலி'யிலோ,
தி.மு.க. சார்பு விசயங்களிலோ உடனே பயன்படுத்தாமல், காலம் தாழ்த்தி செய்தார். இதை பகுத்தறிவு (!) பீரங்கிகள் கி.வீரமணியிடம் கேட்க
வேண்டும்.
தமிழ் நாளிதழ்களில் 'தினமலர்' எழுத்து
சீர்திருத்தத்தை முதன் முதலில் பயன்படுத்தி பெருமை பெற்றது.

சென்னையில் #பெரியார் அவர்களின் உருவச்சிலையை தன்னுடைய முதல் ஆட்சி காலத்தில் 17 செப்டம்பர் 1977-ஆம் ஆண்டில் தமிழக முதல்வர் #எம்ஜிஆர் தலைமையில் அனைத்து கட்சி தலைவர்களும் கலந்து கொள்ள, அன்றைய மத்திய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சர்
#பாபு_ஜெகஜீவன்ராம் திறந்து வைத்தார்.

இந்த சிலையை தி.மு.க.வினர் கண்டு கொள்வதேயில்லை.

1979-ம் ஆண்டு பெரியார் பிறந்த நாளில் ஈரோட்டை தலைநகராகக் கொண்டு பெரியார் மாவட்டத்தை உருவாக்கினார் எம்.ஜி.ஆர்.

இருவருக்குமே டிசம்பர் 24-ம் தேதிதான் நினைவு நாள்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இங்கேயுள்ள புகைப்படத்தில், வேலூர்
சி.எம்.சி.மருத்துவமனையில் பெரியார்
சிகிச்சை பெற்ற போது எம்.ஜி.ஆர். அவரது உடல்நலம் விசாரித்த காட்சி.
அருகில் கி.வீரமணி.

இதயக்கனி எஸ். விஜயன்..........

orodizli
19th September 2020, 07:49 AM
நெஞ்சிருக்கும்வரை நினைவிருக்கும் - 2

ஆனால் இவளவு குறுகிய காலத்துக்குள் எவ்வளவு தூரம் இறுகிவிட்டது எங்கள் நட்பு ! எங்கள் குடும்ப நண்பரும் பழம்பெரும் ஹாஸ்ய நடிகருமான திரு. டி.எஸ். துரைராஜ் அவர்கள்ளின் மகளின் திருமணத்திற்காக சென்றவருடம் நான் தமிழகம் சென்றிருந்தேன் . அப்பொழுதுதான் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு முதன் முறையாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டேன். பேரும் புகழும் செல்வமும் படைத்த அவர் முதல் சந்திப்பிலேயே தன் அன்பு முழுவதையும் கொட்டியதை நினைக்கும் போது இப்பொழுதும் உடம்பு சிலிர்க்கின்றது . சென்னையிலுள்ள தன் வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்று அவர் கூறியவை இன்னும் காதுகளில் ங் காரமிடுகின்றன "இந்த வீட்டைக் கொழும்பிலுள்ள உங்கள் சொந்த வீடுபோலவே நினைத்துக்கொள்ளுங் கள். இலங்கையிலிருந்துவரும் தமிழர்கள் தமிழகத்திற்கு வரும்பொழுது ஒரு அந்நிய நாட்டில் இருக்கிறோம் என்ற நினைவே ஏற்படக்கூடாது. அவர்களும் நம்மவர்கள். தாய் நாடு - இலங்கை சேய்நாடு என்றார்கள் . இத்தகைய சொற்களை எம்.ஜி.ஆர் . அவர்களைத் தவிர வேறு யாரால் சொல்ல முடியும்?"

நான் சென்னைக்குச் சில நாட்களுக்கு முன்புதான் புதிதாக கார் ஒன்று வாங்கியிருந்தார். சில மைல்கள் கூட ஓடி இருக்கமாட்டார். அவ்வளவு புத்தம்புதிய கார். அந்தக் காரை என்னிடம் கொடுத்து படப்பிடிப்பு வேலைகள் அதிகமாக இருப்பதால் உங்களை முக்கியமான இடங்களுக்கு அழைத்துச் சுற்றிக்காட்ட முடியவில்லை. அதற்கு ஈடாக இந்தக் காரையே உங்களிடம் கொடுத்துவிட்டேன், நீங்கள் தமிழ் நாட்டில் இருக்கும் வரை இந்தக் கார் உங்களுடையது என்னுடைய தல்ல என்று கூறினார் . அன்புள்ளம் கொண்ட எம். ஜி.ஆர் . நண்பர்களுக்காக எதையும் செய்யத் தயாராயிருப்பவர். அவருடன் ஒரு நாள் பழகினாலே போதும் - யுக யுகாந்திரமாகப் பழகியதைப் போன்ற பந்தம் ஏற்பட்டுவிடும்.
எம்.ஜி.ஆர். அவர்களைப் போலவேதான் இவரது அண்ணன் திரு. சக்ரபாணி அவர்களும் - தம்பிக்கேற்ற அண்ணனாகவே குணத்திலும் செயலிலும் ஒரேமாதிரியகவே இருக்கின்றார்கள். உருவத்தில் வேறுபட்டவர்கள்; உள்ளத்திலும் செயலிலும் இருவரும் ஒருவர் என்றே கூறவேண்டும். சில மாதங்களுக்கு முன்பு வைத்திய சிகிச்சையின் நிமித்தம் சென்றிருந்த எனக்கு திரு . சக்ரபாணி அவர்கள் தன் இல் லத்திலேயே பிரபல வைத்தியர் ஒருவரை வைத்து சிகிச்சை பார்த் தார்கள் . திரு.சக்ரபாணி அண்ணாச்சி அவர்களுக்கு எவ்வளவோ வேலைகள் இருந்தும் என் பக்கத்திலேயே இருந்து வைத்தியம் செய் ததை நினைக்கும் பொழுது காலஞ்சென்ற என் தந்யைார் திரு.பட் டக்கண்ணு சுப்பையா ஆச்சாரி அவர்களே பக்கத்தில் இருப்பது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது - மெய்சிலிர்த்தது. மகனுக்குத் தந்தை செய்யும் உப சரணைகள் போன்றிருந்தது இவரது உபசரணை அதை எப்படி எழுதுவது என்றே தெரியவில்லை. மக்களுக்காகவே உழைக்கவும் அவர்கள் தந்த பணத்தை நல்லவழியில் அவர்களுக்கே செலவிட்டு மகிழ்வதிலும் இன்பம் காணும் புரட்சி நடிகர் எம். ஜி.ஆர். அவர்களும் பண்புமிக்க அண்ணாச்சி சக்ரபாணி அவர்களும் இலங்கையிலுள்ள எண்ணற்ற இரசி கர்களைப்போல, நானும் எங்கள் நாட்டிற்கு சீக்கிரம் வரவேண்டும் என்று தான் விரும்புகிறேன். கவிஞர் கண்ணதாசன் பாடியது போல்:
"நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும் நினைவிருக்கும் வரை அவர் முகமிருக்கும்" என்பது போல் என் நெஞ்சில் என் றும் அவர்கள் நினைவு நிலைத்திருக்கும்.

[கலை,இலக்கிய ஆர்வமும் பொதுவாழ்வில் ஈடுபாடுமுடைய திரு.சற்குருநாதன் அவர்கள் கொழும்பிலுள்ள நகை மாளிகை ஒன்றின் உரி மையாளர். எம்.ஜி.ஆர். அவர்களின் நெருங்கிய நண்பர். மக்களின் திலகமாக மதிக்கப்படும் தன் நண்பரைப் பற்றி இங்கே எழுதுகின்றார்]..........

orodizli
19th September 2020, 07:55 AM
“அன்புக்கு அர்த்தம் மக்கள் திலகம் தான்”
- ஜானகி எம்.ஜி.ஆர்
https://www.thaaii.com/?p=48526
எனக்குத் தெரிந்த எம்.ஜி.ஆர் : தொடர் – 14

“தொண்டராக இருந்து தலைவராகி, முதல்வராகப் பத்தாண்டுகளுக்கும் மேல் சேவை செய்த செம்மல், உலக அரங்கிலேயே இவர் ஒருவராகத்தான் இருக்க முடியும்.

நான் அறிந்து மூன்று இதழ்களுக்கு அவர் ஆசிரியராக இருந்தவர். அதில் ‘அண்ணா’ இதழும் ஒன்று.

எந்த இதழுக்காவது அல்லது சிறப்பு மலர் எதற்காவது கட்டுரை தருவதாக ஒப்புக் கொண்டால், உதவியாளரிடம் கருத்துக்களைச் சொல்லி கட்டுரை தயாரிக்கவோ, குறிப்புகளைத் தேடித் தயார் செய்து தரும்படியோ ஒருபோதும் கேட்கவே மாட்டார்.

அவரே கைப்பட எழுதித் தருவார். அவரது குறிப்பு நோட்டில் ஒரு சில சின்ன அடித்தல் திருத்தல்களோடு, அது அப்படியே உரியவருக்குச் செல்லும்.

ஒருவேளை அதனை வெளியிடுகிற அவர்களுக்கு – அதைப் புரிந்துகொள்வது எளிதில்லை என்று உணர்ந்தால் மட்டுமே, உடனே தமிழ் தட்டச்சில் அடித்து அளிக்கும்படி உதவியாளர்களை நாடுவார்.

‘சதிலீலாவதி’ முதல் ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ வரை 136 படங்கள் அவரது திரைப்படச் சாதனைச் சரித்திரம். இதில் தமிழில் வந்த முதல் வண்ணப்படமான ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ படத்தின் முதல் நாயகர் இவரே. இப்படி, இவர் ஒரு சகலகலா வல்லவர் – சாதனையாளர் என நான் நிறைய அடுக்கிக் கொண்டே போகலாம்.

அநேகமாக உங்கள் இதயத்தில் என்றும் வாழுகிற என்னவரைப் பற்றி தெரியாததைச் சொல்வது சிறந்தது என்பதால், சிலவற்றை மட்டும் இங்கே சொல்கிறேன்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை என்று கருதுகிறேன். அங்கே ஒரு பஸ் டிரைவர் விபத்தில் சிக்கி விட்டார்.

காலில்தான் பலத்த அடி. அப்போதைய நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து அவரது காலை எடுக்காவிட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்று டாக்டர்கள் அந்த இளைஞரின் அம்மாவிடம் தெரிவித்து விட்டார்கள்.

“காலை இழந்து விட்டு ஊனமுற்ற பிறவியாக வாழ்வதைவிட சாவதே மேல்” என்று பிடிவாதமாக அந்த இளைஞர் அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொள்ளவில்லை.

அவரது அம்மா – பிள்ளையைப் பெற்ற தாய் அல்லவா? அப்படி இருக்க முடியுமா? எப்படியாவது தனது பிள்ளையைப் பிழைக்க வைத்து, இந்த உலகத்தில் வாழ வைக்க வேண்டுமென்று ஆசைப்பட்டார் அந்தத் தாயார்.

தன் மகனைச் சாவு நெருங்க நெருங்க அந்தத் தாய் பதறிக் கதறித் துடித்தார்.

“பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு” என்பார்களே, அது தான் அங்கே நிகழ்ந்தது. அறுவை சிகிச்சைக்கு அந்தப் பிள்ளை ஒத்துக்கொள்ளவில்லை. வயதான அம்மாவை அன்போடு கவனித்துக் கொள்ள வேண்டிய வயதில் இப்படியா?

ஒரு மகனின் கடமை தொடங்க வேண்டிய நேரத்தில் அந்த அம்மாவுக்கு பாரமாக இருக்கக் கூடாது என்பது தான் அந்தப் பிள்ளையாண்டானின் தவிப்பு கலந்த வாதம்.

இந்த இரண்டு உள்ளங்களும் எவ்வளவு உயர்வானது? அந்த அம்மாவுக்குத் தன் மகனைக் காப்பாற்ற ஒரு வழி தான் தெரிந்தது. பெற்ற பிள்ளையைக் காப்பாற்ற இன்னொரு பிள்ளையை அழைத்து வர முடிவு செய்துவிட்டாள். அது முடியுமா? இயலுமா? என்று அவர் யோசிக்கவில்லை. நம்பிக்கையோடு புறப்பட்டு விட்டார் அந்தத் தாயார்.

யாரைப் பார்க்க?

அந்தத் தள்ளாத வயதில், தளராத உறுதியோடு “எப்படியாவது என் மகனைப் பிழைக்க வைத்து விடுவேன்” என்ற எண்ணத்தோடு மட்டுமே அந்த வாசலுக்கு அவர் வந்துவிட்டார்.

யார் வீட்டு வாசல்?

‘எங்க வீட்டுப் பிள்ளை’ என்றால் எல்லோருக்கும் தெரியும்.

அந்த அம்மாவின் உதடுகள் சொல்ல முடியாத வார்த்தைகளை அவர் கண்களில் வழிந்த கண்ணீர், வரி வடிவமாகப் வரைந்து காட்டியது.

இந்தத் தோட்டத்துத் தூயவரும் தாயின் துயர் அறிந்து உடனே மருத்துவமனைக்கு விரைந்தார்.

அச்சத்தோடு இருந்த அந்த இளம் டிரைவர், “ஆதரவுக்கு நான் இருக்கிறேன்” என்கிற அன்பான ஆறுதல் மொழிகளைக் கேட்டு நம்பிக்கை விதைகளைத் தன்னுள் விதைத்துக் கொண்டார்.

ஆண்டவன், ஒரு சகோதரனுக்கு இன்னொரு சகோதரன் மூலம் அன்று அச்சத்தை விரட்டினார்.

அந்த இளம் டிரைவருக்குத் துணிவு துணையானது. காலை இழந்தாலும் நம்பிக்கையோடு செயற்கைக் காலின் உதவியால் நடக்கத் தொடங்கினார்.

ஓடிக்கொண்டிருந்த அந்த அன்புச் சகோதரனுக்கு கடை வைத்து ஓரிடத்தில் உட்கார்வதற்கு உதவினார் நம் அன்புத் தலைவர்.

தாய்க்கும் மகனுக்கும் தாங்காத ஆசை என்ன தெரியுமா? தன் தங்கத் தலைவரைப் பார்த்து “நன்றி” என்ற மூன்று எழுத்தைச் சேர்ப்பிக்க வேண்டும் என்பதுதான்.

அப்போது அன்புத் தலைவர் சொன்ன பதில் இது…

“என்னைத் தேடி அந்த அன்னை வந்தபோது தன் பிள்ளைகளில் ஒருவனாகத்தான் என்னைக் கருதினார். ஒரு சகோதரனாகத் தான் அந்தத் தம்பியை நான் நினைத்தேன். நன்றி சொல்ல அவர்கள் வருவதென்றால் நான் அந்நியனாகிவிடுவேன்.

தாயாக, தம்பியாக எப்போது வேண்டுமானாலும் வரலாம். தாய்க்கு ஒழுங்காக ஆதரவு காட்டி அவர் அன்பாக நடத்தினால் போதும்.

அதுவே என்னைப் பார்ப்பதற்குச் சமம்”

17.07.1988.........

orodizli
19th September 2020, 10:19 AM
மக்கள் திலகத்தின் ''ஒளி விளக்கு '' ஒரு சிறப்பு பதிவு ..........

20.09.1968... Producers, Distributors, Exhibitors Lime Light Money Spinners always...In time...Every time...

52 ஆண்டுகள் நிறைவு நாள் .

1936 ல் ஜெமினியின் தயாரிப்பில் சதிலீலாவதி - தமிழ் படத்தின் மூலம் சிறு வேடங்களில் நடிக்க துவங்கி 10 ஆண்டுகளில் பல போராட்டங்களுக்கு பிறகு1947ல் தமிழ் சினிமாவில் -ராஜகுமாரி படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி 1968ல் 100 வது படமான ஜெமினியின் தயாரிப்பில் வந்த
படம் ''ஒளிவிளக்கு ''

பிரம்மாண்ட வண்ணப்படம்

மக்கள் திலகத்தின் அசத்தலான அலங்கார உடைகள் -ஒப்பனைகள் - ஸ்டைல் காட்சிகள் .

குடியின் தீமைகளை பாடல் காட்சிகளில் மூலம் சித்தரித்த மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பு .

திருடுவதால் ஏற்பாடும் தீமைகள் - சமூகத்தில் கிடைக்கும் கேட்ட பெயர் - யாருமே திருடனாக
மாறக்கூடாது என்ற சமூக சீர்திருத்த கதையில் நடித்த புரட்சி நடிகர் .

1968ல் அன்றைய அண்ணாவின் அரசின் சாதனைகளை ''நாங்க புதுசா '' என்ற பாடல் மூலம்
கொள்கைகளை பரப்பியவர் எம்ஜிஆர் .

மெல்லிசை மன்னரின் அட்டகாசமான டைட்டில் இசை - மக்கள் திலகத்தின் போஸ் சூப்பர் .

ஆரம்ப காட்சியில் மனோகருடன் மோதும் சண்டை காட்சி -புதுமையான முறையில் இருந்தது .

சொர்ணம் அவர்களின் வசனங்கள் - பல இடங்களில் நெஞ்சை தொடுவதாக இருந்தது .

நான் கண்ட கனவில் நீ ..... பாடலில் ஜெயாவின் அறிமுகம்

மாங்குடி கிராமத்திற்கு மக்கள் திலகம் செல்லும் காட்சி

சோ வின் சந்திப்பு

ஜமீன்தார் வீட்டில் சௌகார் ஜானகி அறிமுகம்

அவருக்கு செய்யும் மக்கள் திலகத்தின் சேவை

கள்ள பார்ட் நடராஜனை புரட்டி எடுத்த காட்சி

சௌகாரை மீட்டு தன் வீட்டுக்கு அழைத்து வருதல்

வலுக்கட்டாயமாக மக்கள் திலகத்தை குடிக்க வைக்கும் காட்சியும்- ஜெயாவின் நடனமும்
மெல்லிசை மன்னரின் பிரமாதமான இசையும் அதை தொடர்ந்து ''தைரியமாக சொல் ''
பாடலும் காண்போர் உள்ளங்களை கொள்ளை கொள்ளும் அளவிற்கு படம் விறுவிறுப்பாக செல்லும் .

சௌகாரை கேவலமாக பேசிய ஜஸ்டினை மக்கள் திலகம் படிக்கட்டுகளில் ஏறி தூங்கி கொண்டிருந்த அவர எழுப்பி வீதிக்கு அழைத்து வந்து புரட்டி எடுக்கும் இடம் - சூப்பர் .

கவர்ச்சி வில்லனிடம் ''வீரன் கோழையான வரலாறு ''என்று அசோகன் கூறும் பிளாஷ் பேக் காட்சி

மொட்டை நடராஜனிடம் மக்கள் திலகம் மோதும் ஆவேசமான சண்டை

''ருக்குமணியே '' என்ற வித்தியாசமான பாடலில் அந்தரத்தில் தொங்கி கொண்டே மக்கள் திலகம்

பாடல் காட்சி - புதுமை

திருடன் என்று பெயர் வாங்கியதால் எங்குமேவேலை கிடைக்காமல் சோர்வுடன் திரும்பும் எம்ஜிஆரின் நடிப்பு - முக பாவம் அசத்தல் .

தீயில் சிக்கிய குழந்தையை காப்பாற்றும் காட்சி - மரணப்படுக்கையில் இருந்த மக்கள் திலகத்தின் உயிரை காப்பாற்ற ஆண்டவனிடம் சர்வ மதத்தினரும் பிராத்தனை - சௌகாரின் பாடல் -உருக்கமான காட்சிகள் -

மாம்பழ தோட்டம் -பாடல் சீர்காழி - ஈஸ்வரி குரலில் இனிமையான பாடல் .

இறுதி காட்சிகளில் மக்கள் திலகம் - மனோகர் சண்டை

மக்கள் திலகம் - அசோகன் சண்டை என்று 15 நிமிடங்கள் விறுவிறுப்பாக சென்ற காட்சிகள் என்று ''ஒளிவிளக்கு '' படம்
ரசிகர்கள் - பொதுமக்களுக்கு விருந்து படைத்த படம் .

மொத்தத்தில் எம்ஜிஆரின் ஒளிவிளக்கு -

உலகம் உள்ளவரை எம்ஜிஆரின் ''அணையா விளக்கு ''.........

orodizli
19th September 2020, 10:22 AM
"பணத்தோட்டம்" 1963 ஜன 11 ம்தேதி திரைக்கு வந்த மாபெரும் வெற்றிப் படம். அடுத்தடுத்து வந்த தலைவரின் படங்களை சமாளித்து வெள்ளித் திரையில் வெற்றிகரமாக பவனி வந்த படம். அடுத்து வந்த "கொடுத்து வைத்தவள்" அதையடுத்து வந்த "தர்மம் தலை காக்கும்" என தொடர் தாக்குதலால் துவளாமல் நல்ல வெற்றியுடன் மகத்தான வசூலுடன் ஓடிய படம். 100 நாட்களுக்கு மேல் ஒடிய மற்ற நடிகர்களின் படத்தை விட குறுகிய காலத்தில் அதிக வசூலை ஈட்டிய படம்.

சில நடிகர்களின் படங்கள் தமிழ்நாடு முழுவதும் எடுத்து விட்டாலும் எங்காவது ஒரு திரையரங்கில் மட்டும் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும். அங்கே 100 நாட்கள் ஓட்டியவுடன் 100 நாள் விளம்பரம் முழு பக்க அளவில் கொடுத்து மகிழ்வார்கள். இது தொன்று தொட்டு நடந்து வரும் சிவாஜி ரசிகர்களின் உளவாரப்பணி.

தலைவருடன் இயக்குநர் k.சங்கர் இணைந்த முதல் படம். மாற்று நடிகரின் கூடாரத்தில் இருந்து வந்த அவர் "பணத்தோட்டம்" இயக்கிய அதே நேரத்தில் "ஆலயமணி" என்ற படத்தையும் இயக்கிக் கொண்டிருந்தார். மிகை நடிப்பையே பார்த்து பழகியிருந்த அவர் தலைவரின் இயல்பான நடிப்பு முதலில் அவருக்கு பிடிக்கவில்லை.
நிறைய ரீடேக்குகள் போய்க் கொண்டிருந்தவுடன் தலைவர் அவரை கூப்பிட்டு என்னிடம் எது(இயல்பான) கிடைக்குமோ அதை மட்டும் வாங்கிக் கொள்ளுங்கள். மற்ற நடிகர்களின்(மிகை) நடிப்பை என்னிடம் எதிர்பார்க்காதீர்கள் என்று கூறியதாக ஒரு செய்தி உண்டு.

குடும்பக் கதையில் கொள்ளை கூட்டம் கலந்திருந்தாலும் படம் மிக விறுவிறுப்பாக செல்லும். கள்ள பணத்தை கண்டுபிடிக்க தலைவர் எடுக்கும் வேஷங்கள் சுவையானது.
"என்னதான் நடக்கும் நடக்கட்டுமே" பாடல் அனைவருக்கும் வாழ்வில் நம்பிக்கையூட்டுவதாக அமைந்தது.
"பேசுவது கிளியா"? மெல்லிசையில்
ஒரு தென்றல் கலந்து வீசியது போல இருந்தது.

"ஒருவர் ஒருவராய் பிறந்தோம்" மேல் நாட்டுப் பாணியில் இசை முழங்க அதை தலைவர் வாத்யத்தை வாசிக்கும் விதமும் மேக்கப்பும் அந்த காட்சியை வர்ணிக்க இயலாது. "ஜவ்வாது மேடையிட்டு" தலைவரின் போதை நடிப்புக்கு ஈடு கொடுத்து சரோஜாதேவியும் பாடும் பாடலின் ஆரவாரம் அடங்க நெடுநேரம் ஆகும். படம் பார்த்து விட்டு வந்தவர்கள் தண்ணி போடாதவர்கள் கூட போதை மயக்கத்தில் நடந்து போவதை பார்த்தால் அதுதான் எம்ஜிஆரின் நடிப்பு.

நாகேஷ் வீரப்பன் காமெடி மிகவும் அருமையாக அமைந்தது. இரவுக்காட்சிக்கு நாங்கள் சென்ற
போது கூட்டம் அதிகமாக இருந்தது.
ஆங்காங்கே நின்றிருந்த மக்கள் எல்லாம் "ஜவ்வாது மேடையிட்டு" பாடல் காட்சி வந்தவுடன் படம் அரை மணி நேரத்தில் முடிந்து விடும் என்று அனைவரும் அப்போதே டிக்கெட் எடுக்க முண்டியடிக்க ஆரம்பித்து விட்டார்கள். அதிலிருந்து டிக்கெட் கொடுக்கும் வரை நெரிசலில் நின்று டிக்கெட் எடுத்தபின் சென்றோம்.

ஜவ்வாது பாடலில் அதிலும் 'ஹே' என்று தலைவர் சொல்லும் போது தியேட்டரே,
அதிரும். "குரங்கு வரும் தோட்டமடி" தலைவரின் மாறுவேட நடிப்புக்கு
எடுத்துக்காட்டு. மொத்தத்தில் படம் முடிந்து வரும் அனைவரும் உற்சாகத்தின் எல்லைக்கே சென்று வருவார்கள். சில நடிகர்கள் வெளியில் நாம் படும் பாடு போதாது என்று அவர் பாட்டையும் நம் தலையில் கட்டி படம் பார்த்து வருபவர்களை வேறு வேலைக்கு போக விடாமல் செய்து விடுவார்கள்.

மேலும் அவர்களை தலைவலி காய்ச்சலில் தள்ளிவிடுவதுடன் 2 நாளைக்கு கனத்த மனதுடன் அலைய விட்டு விடுவார்கள். அதனால்தான் தலைவர் படத்துக்கு கூட்டம் அள்ளுகிறது. சென்னையில் பிளாசா கிரவுன் மேகலாவில் வெளியாகி பிளாசாவில் 84 நாட்களும் கிரவுன் மேகலாவில் 70
நாட்களும் ஓடி மகத்தான வெற்றி பெற்றது. இதுபோல் முக்கியமான நகரங்களில் 10 வாரங்களை கடந்தும் மற்ற ஊர்களில் 50 நாட்களை தாண்டியும் நல்லதொரு வெற்றியை பெற்ற படம்தான் சரவணா பிலிம்ஸின் "பணத்தோட்டம்.".........

orodizli
19th September 2020, 01:56 PM
courtesy - yaazh sudhagar

Olivilakku 53rd Anniversary.
20.9.1968

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நூறாவது படம் 'ஒளி விளக்கு'.

யாழ்ப்பாணம் ராஜா திரை அரங்கில்... அறுபதுகளின் இறுதியில் வெளி வந்து ஒரு கலக்குக் கலக்கிய படம்.

அதன் பின்பு 12 வருடங்களுக்குப் பிறகு இதே படம் ...பழைய படமாக யாழ் ராஜாவில் திரையிடப்பட்ட போது...தினசரி நான்கு காட்சிகளாக நூறு நாட்கள் ஓடி புதிய வரலாறு படைத்தது.

இந்தப் படத்தில் பி.சுசீலா பாடிய 'இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணி விளக்கு...தலைவா உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளி விளக்கு... ஆன்டவனே உன் பாதங்களை கண்ணீரில் நீராட்டினேன்...'
என்ற பாடல் தான் எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் உயிருக்காகப் போராடிய போது...இந்தியாவின் மூலை முடுக்குகளில் உள்ள கோயில்களில் எல்லாம் ஒலித்தது.

1986 இல் நான் 'பொம்மை' பத்திரிகையில் பணியாற்றிய போது...நடிகை சௌகார் ஜானகி அவர்களைப் பேட்டி கண்ட போது...ஒளி விளக்கில் அவர் பாடி நடித்த இந்தப் பாடல் பற்றி நெகிழ்ச்சியுடன் கூறினார்...இப்படி...

'.... உயிருக்காகப் போராடும் எம்.ஜி.ஆர் அவர்கள் உடல் நலம் பெறப் பிரார்த்தனை செய்வது போலப் படத்தில் நான் பாடிய பாடல் ....பதினைந்து வருடங்கள் கழித்து உண்மையாகவே அவர் உயிருக்காகப் போராடிய போது மக்களால் பிரார்த்தனைப் பாடலாகப் பயன்படுத்தப்பட்டது...என்னை நெகிழ வைத்தது...' என்றார்.

உண்மை தான். இந்தப் பாடலில் மட்டுமல்ல... எம்.ஜி.ஆருக்காக எழுதப்பட்ட பல பாடல்களில்... வரப் போவதை முன் கூட்டியே சொன்ன ஒரு தற்செயலான தீர்க்க தரிசனத்தை நானும் கண்டு சிலிர்த்திருக்கிறேன்..........

orodizli
19th September 2020, 01:57 PM
திமுக கோஷ்டி என்னதான் ராம்சாமி பற்றி சொன்னாலும், ராம்சாமி மேல் திமுக தலைவர்களுக்கு எக்காலமும் ஒரு வன்மம் இருந்தது என்பதும் , வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் அதை வெளிபடுத்தினார்கள் என்பதும் உண்மை

பின் அவர்களுக்கு புரட்சித் தலைவரின் மக்கள் சக்தியால் ஆட்சி கிடைத்தபின் டெல்லிக்கு எதிரான அரசியல் செய்ய ராம்சாமியினை தூக்கிபிடித்து வஞ்சக நரிதந்திர அரசியல் செய்தார்களே அன்றி, ராம்சாமியிடம் இருந்து அவர்கள் பிரிந்த அந்த 1950க்கும் 1967க்க்கும் இடைபட்ட காலம் காமெடியாய் இருந்தது

"இவனுகளுக்கு கட்சி தொடங்க என்ன யோக்கியதை இருக்குண்ணே" என ராம்சாமி கேட்க, "அவரிடம் அரசியல் பயின்ற தகுதி இருக்கின்றது" என இவர்கள் சொல்ல தமிழகமே சிரித்தது

"இவனுக என் சொத்தை உருட்ட திட்டம் போட்டானுக, என்ன கொல்ல பாத்தானுக, வாரிசுக்காகத்தான் கல்யாணம் செய்தேன்" என ராம்சாமி சொல்ல திமுகவிடம் அதற்கு பதில் "நாங்கள் பொதுவுடமைவாதிகள் பொறுக்கிகள் அல்ல" என வந்தது

பொதுவுடமை என்றால் என்ன என்பதை இப்போதைய திமுக தலைவர்கள் சொத்து பட்டியலிலே தெரிந்து கொள்ளலாம்

இவர்களை கடுப்பேற்றவே காமராஜரை ஆதரித்தார் ராம்சாமி, ராம்சாமியினை கடுப்பேற்ற புரட்சித் தலைவரை தூக்கிபிடித்தது திமுக கோஷ்டி

"அய்யய்யோ கூத்தாடி கட்சி" என ராம்சாமி தலையில் அடிக்க , ராம்சாமியினை தங்கள் படத்தில் வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் சீண்டியது திமுக கோஷ்டி

அப்படி ஒரு படம் அவர்களுக்கு சிக்கியது அது "நாடோடி மன்னன்"

என்னதான் அது புரட்சித் தலைவர் சொந்த படமென்றாலும் பின்னணியில் அண்ணா உட்பட திமுக பிம்பங்கள் வேலையும் இருந்தது

இப்படம் புரட்சிபடம் என சொல்லிய திமுக கோஷ்டிகள், ராம்சாமியினை மிக அழகாக வைத்து செய்தன*

வீரப்பா தாங்கிய கதாபாத்திரம் ராம்சாமியின் அடாவடியினை அப்படியே கொண்ட பாத்திரம், குரு கோலத்தில் நிறுத்தினார்கள்

ராம்சாமி செய்த அவ்வளவு அட்டகாசத்தையும் வீரப்பா வடிவில் காட்சியில் வைத்து மகிழந்தார்கள்

அதில் மகா முக்கியமான காட்சி, தன் வளர்ப்பு மகளான சரோஜா தேவியினை (சரோஜா தேவிக்கு அதுதான் முதல்படம்) வீரப்பா திருமணம் செய்ய முனையும் காட்சி

அந்த காட்சி இப்படி வரும்

வீரப்பா அவர் ட்ரேட்மார்க் சிரிப்போடு தான் மகள் போல் வளர்த்த சரோஜா தேவியிடம் சொல்வார் –

"ரத்னா, என்னை அப்பா என்று அழைக்காதே, அத்தான் என்று அழை

என் செவிகள் குளிர்ந்து சிந்தை நிறையட்டும், ம்ம் அழை அத்தான் என ஆசையா அழை"

படம் வந்தபின் கொஞ்சகாலம் ராம்சாமி வாயே திறக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது, அன்றே புரட்சித் தலைவரை சுடும் முடிவினை ராம்சாமியின் சீடன் எம்.ஆர் ராதா எடுத்திருக்கலாம்.
போன நூற்றாண்டில் புரட்சித் தலைவரூக்கு முன் புரட்சித் தலைவருக்கு பின் என்பதே உண்மையான தமிழக அரசியல் வரலாறு.
அதுவே இன்று வரை தொடர்கிறது.
இன்றும் புரட்சித் தலைவர் கொடுத்த கட்சி கொடியும் இரட்டை இலை சின்னம் தானே அனைத்து எதிர் கட்சிகளுக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்கிறது ..........

orodizli
19th September 2020, 01:59 PM
"ஒளி விளக்கு"

ஆனந்த விகடனுக்கு நன்றி...

படம்

வந்தபோது(1968) எழுதப்பட்ட விமர்சனம்.

புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த நூறாவது படமான ‘ஒளி விளக்கு’ படத்தை, பல்வேறு துறையில் ஈடுபட்டிருக்கும் சிலர் ஓர் இடத்தில் கூடி, விமர்சித்தார்கள். அந்த விமர்சன உரையாடலில் பங்கு பெற்றவர்கள்…
1. திரு. கே.திரவியம், ஐ.ஏ.எஸ்.
2. திருமதி லீலா திரவியம், குடும்பத் தலைவி.
3. திரு. வி.கே.கிருஷ்ணமூர்த்தி, டைரக்டர், ஓரியன்டல் மெர்க்கன்டைல் டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ், சென்னை.
4. திருமதி சாந்தி கிருஷ்ணமூர்த்தி, குடும்பத்தலைவி.
5. திருமதி குப்பம்மாள், தமிழ் வளர்ச்சித் துறை.
6. திரு. ஏ.ஆர்.ரங்கநாதன். ஏ.ஸி. கல்லூரி மாணவர், சென்னை.
7. திரு. ஆர்.சீனிவாசன், ஆசிரியர், வழுத்தூர்.
திரவியம்: இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். எல்லோருக்கும் நல்லவராக இருக்கணும்னு பாடுபடுகிறார். அதே மாதிரி ‘ஜெமினி’யும் எல்லோருக்கும் நல்ல படமா கொடுக்கணும்னு பாடுபட்டிருக்காங்க. கறுப்பும் சிவப்பும் கண்ணைப் பறிக்குது. கடவுளும் பக்தியும் கலந்திருக்கு. அவர்களுக்கு வேண்டியதையும் கொடுத்திருக்காங்க; இவர்களுக்கு வேண்டியதையும் கொடுத்திருக்காங்க!

லீலா: ஆமாம்! எம்.ஜி.ஆரோட இந்த ஒரு படத்திலேதான் கடவுள் பக்தி கொஞ்சம் அதிகமாக வந்திருக்குன்னு நினைக்கிறேன்.
சீனிவாசன்: தான் ஒரு குணசித்திர நடிகர்னு இதிலே காட்டிட்டார் எம்.ஜி.ஆர்.
லீலா: கடைசியிலே, குழு நடனம் ஒண்ணு வருதே… அப்படி ஒரு நடனம் நம்ப தமிழ்நாட்டிலே உண்டா?

துணை ஆசிரியர்: இருபது முப்பது வருஷங்களுக்கு முன்னால, காமன் பண்டிகைன்னு ஒண்ணு தமிழ்நாட்டிலே கொண்டாடுவாங்க. அது, இந்த மாதிரிதான் இருக்கும். இப்போ அது நடை முறையிலே இல்லாமல் போனதாலே, நமக்குப் புதுசா இருக்கு!
ரங்கநாதன்: படத்திலே ‘விஷ சுரம்’, ‘விஷ சுரம்’னு மைக்ல சொல்றதும், மக்கள் ஓடறதும் இயற்கையா இல்லேன்னு நான் நினைக்கிறேன்!

சாந்தி: அது பிளேக் மாதிரி ஒரு பயங்கர நோயா இருக்கலாம்!
சீனி: அப்படித்தான் இருக்கணும். ஒரு கிராமத்திலே அந்த அளவுக்குச் சொல்லிப் பயமுறுத்தலேனா, கிராமத்து ஜனங்கள் புரிந்துகொள்ளமாட்டார்கள். கஷ்டப்படுவார்கள்!

குப்பம்மாள்: மருமகளா வந்த சௌகார்ஜானகியைப் பாராட் டாம இருக்கமுடியாது! அடேயப்பா, என்னமா நடிச்சிருக் காங்க!
சீனி: எல்லாத்துக்கும் கதைதான் காரணம். இது கருத்தாழம் மிக்க கதை. மக்களைத் திருத்தக் கூடிய கதை. ‘ஒருவன் திருடனா கவே பிறப்பதில்லை; சமுதாயத்தாலேதான் அவன் திருடனாக்கப் படுகிறான்’ என்பதை எடுத்துக் காட்டுகிற கதை. அப்புறம் மதுவை வெறுத்து ஒரு காட்சி, அதை ஒட்டி ஒரு பாட்டு வருது பாருங்க. அது எனக்கு ரொம்பப் பிடிச்சுது.

திரவியம்: வாலியின் பாடல்கள் என்றால் வளமாயிருக்கும்! அந்தக் குறவன் குறத்தி பாட்டிலே, ‘சீர்திருத்தக் கல்யாணம் பண்ணிக் கிட்டோம், சிக்கனமா பெத்துப் போடுவோம்’னு வருதே… அதிலே நல்ல கருத்து இருந்தது.

சீனி: அந்த நெருப்புக் காட்சிக்கு அப்புறம் சௌகார் பாடறாங்களே ஒரு முருகன் பாட்டு, அதுதான் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.

திரவியம்: அந்தக் காட்சியில் என் மனத்தில் பட்ட கருத்து இதுதான்… ‘கடவுள் பக்தி இல்லாதவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் கூட கண்ணியமான, கட்டுப்பாடான வாழ்க்கை நடத்தமுடியும்; அவர்களும் நல்லவர்கள்தான்’.

சீனி: இந்தப் படத்தில் காதல் காட்சிகளோ, டூயட்டோ கிடையாது, கவனிச்சீங்களா? ஓடிப் பிடிச்சு, குதிச்சு வெளையாடற விஷயமே கிடையாது!
திரவியம்: அது சிறந்த அம்சம் தான். ஆனால், கிளப் டான்ஸ்கள் கொஞ்சம் அதிகம்னு எனக்குப் பட்டுது.
ரங்க: இந்தப் படத்திலே எல்லாமே இருக்கு. ரொமான்ஸ் இருக்கு; கத்திச் சண்டை இருக்கு; கிளப் டான்ஸ் இருக்கு; சோகக் காட்சிகள் இருக்கு. ஜனரஞ்சக மான படத்திற்குத் தேவையான எல்லாமே இருக்கு. வசனமும் ரொம்ப நல்லா இருக்கு. ‘வானத் திலிருந்து விழும் தண்ணி காவிரி யிலே விழுந்தா, தூய்மையாகுது. புழுதியிலே விழுந்தா, சேறாகுது. அதே போல சந்தர்ப்பத்தினாலே தான் ஒருத்தன் திருடனாகிறான்’னு சொல்றாங்களே, அது ரொம்ப நல்ல கருத்து. என்னைப் போன்ற கல்லூரி மாணவர்கள் இந்தப் படத்தை விரும்பிப் பார்ப்பாங்க!

சாந்தி: எம்.ஜி.ஆர். குடிச்சுட்டு சௌகார் கிட்டே வராரே… அங்கே சௌகார் பயப்படறதும், அந்த இடத்திலே என்ன செய்துடுவாரோனு நாம பயப்படறதும்… அந்தக் காட்சியை ரொம்ப அழகா எடுத்திருக்காங்க.

ரங்க: அதே போல, குருட்டுப் பாட்டிக்கும் எம்.ஜி.ஆருக்கும் உள்ள அன்பை ரொம்ப அழகா காட்டியிருக்காங்க. அந்தப் பாட்டி இறந்த காட்சி, ரொம்ப உருக்கமா இருந்தது.

சீனி: நெருப்பு ஸீன் ரொம்பத் தத்ரூபம்! எம்.ஜி.ஆர். நெருப்புக்குள்ளே போனபோது எனக்குக் கொஞ்சம் பயமாவே இருந்தது. தமிழ்ப் படத்திலே இப்படி ஒரு ஸீனை நான் பார்த்ததே இல்லை. பின்னே, ‘ஜெமினி’ படம்னா ஒரு முத்திரை இருக்கணுமே!
குப்: ஜெயலலிதாவுக்குதான் பாத்திரம் சரியா அமையலே.

சீனி: சௌகார் ஜானகியின் அபார நடிப்பாலே ஜெயலலிதா வின் நடிப்பு மங்கிப் போயிட்டதோ?!
கிருஷ்ணமூர்த்தி: ஷி ஈஸ் கிளாமரெஸ்! அது போதாதா? எல்லாரும் ஒரு படத்திலே நடிக்கணும்னா முடியுமா? கவர்ச்சியா இருக்காங்க. கண்ணுக்கு விருந்து. அவ்வளவுதான்!
திரவியம்: மொத்தத்திலே, நல்ல படம் பார்த்த ஒரு திருப்தி! ‘இவர் கெட்டவர்னா, ஆயிரம் ஆயிரம் கெட்டவர்களை உலகத் துக்குக் கொடு’ன்னு இதிலே ஒரு வசனம் வருது. அந்த மாதிரி, ‘இதுதான் தமிழ்ப் படம்னா, இது போன்ற ஆயிரம் ஆயிரம் தமிழ்ப் படங்களை ரசிகர்களுக்குக் கொடுக்கணும்’னுதான் நான் சொல்லுவேன்..........

orodizli
19th September 2020, 07:53 PM
1973 ன் வெற்றியின்
சாதனை நாயகன் கலைப்பெரும் தனித்திலகம....
ஒரே திலகம்.....
மக்கள் திலகம்!
30 க்கும் மேற்ப்பட்ட திரைப்படங்களின் வசூலை ஒட்டுமொத்தமாக
ஒடி முடிய முறியடித்து...
இன்று வரை உச்சம் தொட்டுக்கொண்டு வரும் காவியம்...
எம்.ஜி.யார். பிக்சர்ஸின்
"உலகம் சுற்றும் வாலிபன்"

பாரத விலாஸ்...
ராஜராஜசோழன்...
கெளரவம்...
பொன்னுஞ்சல்...
எங்கள் தகர ராஜா...
ராஜாபார்ட்...

படங்களை ஒட்டு மொத்தமாக முறியடித்து ....
100 நாளில்
1கோடியை தாண்டி....
6 மாதகாலத்தில்
2 கோடியே 15 லட்சத்தை வசூலை தாண்டி.....
40 அரங்கில்
75 நாளை கடந்து...
23 அரங்கில்
100 நாட்களை கடந்து...
25 ஊரில் 100 காட்சிகள்
தொடர்ந்து அரங்கு நிறைந்து....
வெள்ளிவிழாவை
சென்னை
மதுரை
திருச்சி
சாதனை படைத்து...
தென்னகத்தில்
85 அரங்கில் 50 நாட்களை கடந்து சரித்திரம் ஆகும்!

மேலே அத்தனை படங்களையும் எல்லாவற்றிலும் முறியடித்து சாதனையின் சிகரமாக
இன்று வரை தொடரும் காவியமாக....
இந்திய திரையின் ஒரே வசூல் சக்கரவர்த்தி
பொன்மனச்செம்மலின்
உலகம் சுற்றும் வாலிபன்....ஒன்றே!

தகர ராஜா 12 திரையில் 50 நாள் ஒட்டப்பட்டு...
9 திரையில் 100 ஒட்டப்பட்டது....
சோழன் படம் படுதோல்வி...
11 திரையில் 50 நாள் மட்டுமே...
கெளரவம் 11 திரையில் 50 நாளும் 4 திரையில் 100 நாளும்....
பாரத விலாஸ்....
11திரையில் 50 நாளும்
6 திரையில் 100 நாளும்....
ராஜபார்ட்....
8 திரையில் 50 நாளும்
......
பொன்னுஞ்சல்
மனிதரில் மாணிக்கம்
இரண்டும்
50 நாள் இன்றி படுதோல்வி......

ஒரே ஒரு படம் கணேசனின் 73 ம் ஆண்டில் வெளியான அத்தனை படங்களையும் குழியில் போட்டு...
சரித்திரம்....சகாப்தம் படைத்தார்
மக்கள் திலகம்.

தொடரும்...ur.........

orodizli
19th September 2020, 07:54 PM
சென்னையில்...
மக்கள் திலகத்தின்
" உலகம் சுற்றும் வாலிபன்"
கடந்த ஆண்டுகளில்
வெளியீடு பற்றிய விபரங்கள்.....

1973 ம் ஆண்டு...
****************
தேவிபாரடைஸ்
182 நாட்கள்
அகஸ்தியா
176 நாட்கள்
உமா
112 நாட்கள்
மொத்தம் : 470 நாட்கள்
வசூல் 23 லட்சத்து
40 ஆயிரத்தை கடந்தது.

அடுத்து....
ராம் 28 நாள்
சீனிவாசா 21 நாள்
காமதேனு 21 நாள்
வீனஸ் 35 நாள்
நேஷனல் 28
தங்கம் 14
முருகன் 28
கமலா 14
பழனியப்பா 21
சித்ரா 14
நேஷனல் 14
நடராஜ் 14
சன் 14
ராஜகுமாரி 14
மற்றும்...
ஸ்டார், லஷ்மி, கபாலி
லிபர்ட்டி, பிரபாத், பிளாசா, சரவணா, சரஸ்வதி, பத்மனாபா
கிருஷ்ணவேணி
மொத்தம்...
50 வாரங்கள்...
350 நாட்கள்....
வசூல் 10 லட்சத்தை கடந்தது......
இது முதல் வெளியீட்டின்...... சென்னை நகர
வரலாறு ஆகும்.
(1973 ,1974 ம் ஆண்டுகளின் ஒட்டம்)
வசூல்... 35 லட்சத்தை தொட்டது...
சென்னை நகர வரலாற்றில் மாபெரும் சாதனையில் 1978 வரை முன்னனி மட்டுமின்றி...

அதன் பின்....
2 வது வெளியீடு
1974....ல்
18 அரங்கில் மீண்டும் வெளியீடூ...
3 வது வெளியீடு
1976 ....ல்
16 அரங்கில் வெளியீடு...
4 வது வெளியீடூ...
1979....ல்
அலங்கார், அபிராமி, ராம்...... தொடர்ந்து
20 தியேட்டரில் சாதனை.

5 வது வெளியீடு..
1982 ல்....
வெலிங்டன், கமலா மற்றும் 15 அரங்கில் வெளியீடூ....

6 வது வெளியீடூ...
1985 ல்...
பாரகன் 4 காட்சியில்
தொடர்ந்து 20 சென்டருக்கு மேல் சாதனை...

7 வது வெளியீடு..
1987 ல்
பிருந்தா 2 வாரம்
பைலட் 2 வாரம்
நடராஜ் 2 வாரம்
சரவணா 2 வாரம்
பிராட்வே 2 வாரம்
மற்றும் 25 அரங்கில் 1988 மார்ச் பிளாசா கடைசி வாரம் வரை இடைவிடாது சாதனை
20 லட்சம் வசூல்...

18 மாத இடைவெளியில்
8 வது வெளியீடு.....
திவ்யா பிலிம்ஸ் வெளியீடு...
ஆல்பட், பிருந்தா, சீனிவாசா வெளியீட்டுக்குப் பின்...
20 அரங்கு வெளியிடப்பட்டது.
ஆல்பட் 16 நாள்
பாரத் 14 நாள்
கமலா 14 நாள்
நடராஜ் 14 நாள்
என 25 வாரங்களை கடந்து...
வசூல் : 25 லட்சத்தை தொட்டது...

அடுத்து....
9 வது வெளியீடு...
1993 டிசம்பர்....
கிரவுன்,பாரகன்,ராம்
மற்றும் இடைவிடாது
20 அரங்கில் வெளியீடு.....
வசூல் 15 லட்சத்தை தொட்டது..

1995 ல்
10 வது வெளியீடு...
அலங்கார் 13 நாள்
முரளிகிருஷ்ணா 7 நாள்
பிராட்வே.. 7 நாள்
3 அரங்கில் ஒடி முடிய
5 லட்சத்தை தொட்டது வசூல்....
மற்றும் 18 திரையில் ஒடி மொத்தம் 30 லட்சம் வசூல்.....

1997ல்
11வது வெளியீடு....
சங்கம் 10 நாள்
கமலா
பிருந்தா
கணபதிராம்
கிருஷ்ணா
நாகேஷ்
வசந்தி
முரளிகிருஷ்ணா
புவனேஸ்வரி
ஸ்டார்
மற்றும் 20 அரங்கில் வெளியீட்டூ 25 லட்சத்திற்கு மேல் வசூல்.....

1999 லிருந்து 2007 வரை ஹைகோர்ட் , மற்றும் நியூ டெல்லி சுப்ரீம் கோர்ட் வரை கடுமையான உரிமை பிரச்சனையில்...
சென்னை செங்கல்பட்டு
வேலூர், கடலுர் பிரச்சனை காரணமாக
9 ஆண்டுகள் படம் வெளிவரவில்லை...
மற்ற மாவட்டங்களில் திரையிடப்பட்டது...

2008 ல் மீண்டும்
வெளியீடு...
பைலட் 10 நாள்
மோட்சம் 10 நாள்
மகாராணி 10 நாள்
பிருந்தா 10 நாள்...
முதல் 4 தியேட்டரில்
15 லட்சம் வசூல் ஆகும்......
மற்றும் 20 திரையில் வெளியிடப்பட்டது.
ஒ.எஸ் மணியன் வெளியீடு... 2008 முதல்
2010 வரை வெளி வந்தது...

2013 ல் மீண்டும்
பைலட் திரையிடப்பட்டது...
தொடர்ந்து பல அரங்கில் சாதனை...

2014 முதல் 2020 மார்ச் வரை வெளியீடு இல்லை.... காரணம் புதிதாக 4k டிஜிட்டல் Atmos Format மெருக்கேற்றல், வடிவாக்கம் வேளைகளில் 2017, 2018, 2019, படத்தை வெளியிட முயற்சித்தும், அவசரப்படாமல் வெளியிடலாம் என பூரண உரிமையாளர்கள் ரிஷி மூவீஸ் திரு நாகராஜன் & Co., கருதியதும் ஆகும்...

2021 ல் திண்டுக்கல் நாகராஜ் புதிய பரிமாணாத்தில்
"உலகம் சுற்றும் வாலிபன்" காவியத்தை வெளியீடலாம் என்று நினைக்கின்றோம்.....

குறிப்பு :
மேலே சென்னை மட்டும்
உ.சு.வாலிபன் சாதனைகளின் வரலாறு......
தென்னகமெங்கும்
ஒடிய அரங்கு
ஒடிய நாட்கள்
படைத்த சாதனை
பெற்ற வசூல்....
பிரமிக்கவைக்கும் !

கணேசனின்
100 வது படம்,
125 வது படம்,
150 வது படம், 175 வது படம்,
200 வது படம்
அத்தனை படங்களாலும் ஏறேடுத்து பார்க்க முடியாத... இமாலய வெற்றியில்..
புரட்சித்தலைவரின்
"உலகம் சுற்றும் வாலிபன்"...

மீண்டும்
புதிய பரிமாணத்தில்
2021 ல் வரலாம்....
கோடியை வசூலில்
பெறலாம்....

தொடரும்......... UR...

fidowag
19th September 2020, 08:32 PM
பாட்டாலே*புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின் டிவியில் சகாப்தம் நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*03/09/20 அன்று அளித்த*தகவல்கள்*
--------------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் திரைப்படங்களின் ஒவ்வொரு காட்சியையும் ,பார்த்து ரசித்து* ,மகிழ்ந்து பூரிப்பு அடையும் பக்தர்கள் பெருகி கொண்டே வருகிறார்கள் .

எம்.ஜி.ஆர்.தன்னுடைய படங்களுக்கு பெயர் வைப்பது, கதாபாத்திரங்களை* எப்படி உருவாக்குவது*,அதற்குண்டான பெயர்கள், நடிகர் ,நடிகைகள், இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள் ,கவிஞர்கள், ,தொழில்நுட்ப கலைஞர்கள் ,போன்றவர்களை தேர்வு செய்வது என்று ஒவ்வொரு விஷயத்திலும் அதிக அக்கறை, கவனம் கொண்டு செயல்பட்டார்.தாய்க்கு பின் தாரம், ராஜ ராஜன், மன்னாதி மன்னன் , நாடோடி மன்னன் , நல்லவன் வாழ்வான், தாய் சொல்லை தட்டாதே, திருடாதே, தாயை காத்த தனயன் குடும்ப தலைவன் ,தர்மம் தலை காக்கும் ,காஞ்சி தலைவன் ,நீதிக்கு பின் பாசம் ,தொழிலாளி, படகோட்டி, ஆயிரத்தில் ஒருவன் ,எங்க வீட்டு பிள்ளை ,கலங்கரை விளக்கம், முகராசி ,தனிப்பிறவி ,காவல்காரன் ,தாய்க்கு தலை மகன், விவசாயி , குடியிருந்த கோயில், ஒளி விளக்கு , நம் நாடு, தலைவன் ,எங்கள் தங்கம் ,ரிக்ஷாக்காரன் , சங்கே முழங்கு , நான் ஏன் பிறந்தேன், அன்னமிட்டகை ,உலகம் சுற்றும் வாலிபன், உரிமைக்குரல், சிரித்து வாழ வேண்டும் ,நினைத்ததை முடிப்பவன் ,நாளை நமதே, இதயக்கனி, பல்லாண்டு வாழ்க ,நீதிக்கு தலை வணங்கு, உழைக்கும் கரங்கள் , ஊருக்கு உழைப்பவன் ,இன்று* போல் என்றும் வாழ்க , மீனவ நண்பன் ,மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் என்று உன்னதமான, ஆக்கபூர்வமான தலைப்புகள் தேர்வு செய்து தன் ரசிகர்களையும்,பக்தர்களையும் கவர்ந்தார் .அது மட்டுமல்ல இவைதான் என் லட்சியம், கொள்கை ,வாழ்வின் இலக்கணம் ,அரசியல் பயணம் ஆகியவற்றுக்கான படிக்கட்டுகள் என்று சொல்லி வந்தார் ... இந்த தலைப்புகள் மற்ற நடிகர்களுக்கு பொருந்துமா என்பது சந்தேகம் .இந்த தலைப்புகள் மூலம் சினிமாவில் தான் நிரந்தர வசூல் சக்கரவர்த்தி என்ற நிலையை 1947 முதல் 1977 வரை ,சில வருடங்கள் நீங்கலாக வென்று காட்டினார் ஆகவே அவர் எண்ணுவதெல்லாம் ,அவர் முயற்சியெல்லாம் பெரும்பாலும் வெற்றியில் முடிந்தன ..அவர் நினைத்ததெல்லாம் சினிமாவில் , அரசியலில் நடந்ததா என்றால் ஆம் அதனால்தான் அவர் நினைத்ததை முடிப்பவன் அல்ல நினைத்ததை முடித்தவன் என்று ஆயிரம் பேர் அல்ல லட்சம் பேர் அல்ல கோடிக்கணக்கான தமிழ் உள்ளங்கள் இன்றும் சாட்சியாக* உள்ளன .


மக்கள் நலம் ,பிறர் நலன், பிறர் மீது அன்பு, அக்கறை கொண்டவர் எம்.ஜி.ஆர்.*பிறர் மீது அன்பு செலுத்துங்கள் என்றார் ,அறம் செய்ய விரும்பு என்பதற்கு இலக்கணமாக வாழ்ந்தார் . அறம் செய்ய விரும்ப வேண்டும் என்பது முக்கியமல்ல .அறம் செய்ய விரும்பினாலே* அவர்களுக்கு அருள் கிடைக்கும்* அந்த அறத்தை தன் வாழ்நாள் முழுக்க செய்து வந்தவர் இந்த எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர். அறம்* எனும் கோட்பாடே, உலக இலக்கியங்களிலும் சரி, தத்துவங்களிலும் சரி ,ஒரு உயர்ந்த கோட்பாடு, அது மட்டுமல்ல அந்த அறம் என்கிற வார்த்தைக்கான நேர்த்தி ,தர்மம் என்று சொல்வார்களே, அந்த தர்மம்என்பது மற்ற* உலக நாட்டு மொழிகளில் அதற்கான சரியான அர்த்தம் என்பது கிடையவே கிடையாது .ஏனென்றால் இது இந்திய தன்மை உடைய வார்த்தை . இந்திய தன்மை உடைய அந்த வார்த்தை உடைய அந்த தர்மம் என்பதற்கு வாழ்க்கையில் பல்வேறு வித மான விளக்கங்கள்* உள்ளது* *அப்படியான அர்த்தம் புரிந்த, ஆழமான ,சுய தர்மம் என்பதை நீங்கள் கடைபிடிக்க வேண்டும் .இங்கு ஒவ்வொரு மனிதனும் பிறக்கும்போது ஏதோ ஒரு காரணத்திற் காகத்தான் அவன் படைக்க பட்டிருக்கிறான்*. அந்த படைப்பின் நோக்கம் என்னவாக இருக்கும் என்பது பற்றி யாருக்கும் தெரியாது . அந்த படைப்பின் நோக்கம் நிறைவேறுவதற்காகத்தான் ஆண்டவன் படைப்பு இருக்கிறது .அந்த நிறைவேற்றுகின்ற ஒரு கருவியாகத்தான் நம்மை நாம் அடையாளப்படுத்திக்கொள்ள* வேண்டும் என்பதில் எம்.ஜி.ஆர். உறுதியாக இருந்தார் .


எம்.ஜி.ஆர். ஒருபோதும் அகங்காரம் பிடித்து தான் தலைவன் என்று அறிவித்துக் கொண்டதில்லை . இதையே தான் முதன் முதலாக சொந்தமாக தயாரித்து இயக்கிய நாடோடி மன்னன் படத்தில் 1958லேயே சொல்லி இருப்பார் . இனிமேல் மன்னராட்சி என்பதே கிடையாது . யாரும் பரம்பரை* உரிமை கோர முடியாது*அப்படி எதுவும் இருக்காது . நான் ஒருபோதும் அதை விரும்பியதில்லை .என்பார் .தனது 19வது* வயதில் தான் பார்த்த நான் மன்னனானால் என்கிற ஆங்கில படம் தன்னை வெகுவாக கவர்ந்தது ,பாதித்தது .. அதை நாடோடி மன்னன் படமாக தயாரிக்க விரும்பி தான் சிறுக சிறுக சேர்த்த பணங்களை வைத்து, தனது லட்சிய கனவுகளை* நனவாக்க ,மக்களுக்கும் ,மற்றவர்களுக்கும்* என் ஆற்றல், திறமைகளை வெளிப்படுத்தி பல நல்ல சமூக கருத்துக்களை சொல்ல வேண்டும்*என்று எண்ணி படமெடுத்தேன்* .இன்றைக்கும் அந்த படம் ஒரு சாகாவரம் பெற்ற படமாக உள்ளது . ,தான் அரசியலுக்கு வந்தால் என்ன செய்ய வேண்டும் .எந்த மாதிரி அணுகுமுறைகளை கையாள வேண்டும் ,ஏன் ,எப்படி அரசியல் உருவாகிறது ஏன் ஒருவர் அரசியலுக்கு தள்ளப்படுகிறார் என்பதற்கு புரட்சிக்காரனாக வரும் வீராங்கன் வேடத்தில் வரும் எம்.ஜி.ஆர். ராணியாக உள்ள எம்.என்.ராஜத்திடம் பேசும் வசனம் ஒன்றே போதும் சான்று கூற ..


அரசியலில் யாரை எதிர்க்க வேண்டும் , யார் எதிரி, என்று மக்களுக்கு சொல்லி, சொல்லி ,அவர் யாரை எதிர்த்தாரோ ,அவரை மக்கள் எம்.ஜி.ஆர். உயிருடன் இருக்கும்வரையில் எதிர்த்தே வந்தார்கள் .எம்.ஜி.ஆர். தனக்கு பின்னால் யார் என்பதை அடையாளம் காட்டினாரோ ,அவரை மக்கள் ஆதரித்தார்கள்இப்படி* .ஒவ்வொரு திரைப்படத்தின் ,பாடல்கள், வசனங்கள், காட்சிகள் மூலம் ஒரு மிக பெரிய பட்டாளத்தையே எம்.ஜி.ஆர். உருவாக்கி இருந்தார் .* அதனால்தான் அவரால் ஒரு மன்னாதி மன்னனாக திகழ முடிந்தது .அவரது எண்ணமும், செயலும் ஒன்றாக இருந்தது .அதனால்தான் ஒன்றை நினைத்தார் .ஒன்றை செயல்படுத்தினார் .ஒன்றை நடத்தி காட்டினார்* ஆகவே நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான் நான் என்று பாடிய பாடல் அவருக்கு கச்சிதமாக பொருந்தியது .


இன்றைக்கும் பல ஆயிரம் பேர்.அவர்களில் பலர் படித்தவர்கள், பட்டதாரிகள், ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள்,அரசு அதிகாரிகள் ,பல்வேறு அரசு,துறைகளில் பணியாற்றி ஒய்வு பெற்றவர்கள் இப்படி பலரை உருவாக்கினார்* இவையெல்லாம் வியப்பாக, விந்தையாக உள்ளது .அப்படிப்பட்ட எம்.ஜி.ஆர். என்கிற ஒரு தத்துவம் ,ஒரு கோட்பாடு ,ஆகியவற்றை ஆராய்ந்து* கொண்டே போகலாம் .* அந்த ஆராய்ச்சி நமக்கெல்லாம் நம்பிக்கை ஊட்டுகிற ஒரு நிழல், வெளிச்சம் ஒளி விளக்கு,கலங்கரை விளக்கம் .அந்த வெற்றி பாதையில் தொடர்ந்து நாம் பயணித்து தகவல்களை அறிவோம் அடுத்த அத்தியாயத்தில் .

நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
--------------------------------------------------------------------------------
1.சிரித்தாலும் போதுமே,செவ்வானம் தோன்றுமே -நீதிக்கு பின் பாசம்*

2.நான் ஆணையிட்டால் ,அது நடந்துவிட்டால் -எங்க வீட்டு பிள்ளை*

3.இதயவீணை படத்தில் ஒரு காட்சியில் எம்.ஜி.ஆர்.

4.நான் ஏன் பிறந்தேன் பாடல் - நான் ஏன் பிறந்தேன்*

5.எம்.ஜி.ஆர்.-எம்..என்.ராஜத்திடம் பேசும் வசனம் -நாடோடி மன்னன்*

6.எம்.ஜி.ஆர்.-ரங்காராவ் உரையாடல் - நம் நாடு*

7.நினைத்ததை நடத்தியே முடிப்பவன் - நம் நாடு*

orodizli
19th September 2020, 10:12 PM
பகைவனுக்கும் அருளும் மக்கள் திலகத்தின் தாய் உள்ளம் எல்லாரும் அறிந்ததுதான். அதற்கு இன்னொரு உதாரணம். இயக்குநர் திலகம் கே.எஸ். கோபால கிருஷ்ணன்... காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். ஜெமினி கணேசன், சிவாஜி கணேசனை வைத்து படங்கள் எடுத்தவர். ஜெமினி கணேசன் நடித்த அவரது ‘பணமா பாசமா’ படம் நன்றாக ஓடியது. அந்த மயக்கத்தில் மதுரையில் நடந்த பணமா பாசமா விழாவில் படத்தின் வசூல் பற்றி எல்லாம் குறிப்பிட்டு மக்கள் திலகம் பற்றியும் கே.எஸ். கோபால கிருஷ்ணன் தவறாக விமர்சித்தார். நமது ரசிகர்கள் பொங்கி எழுந்துவிட்டனர். அதனால், கே.எஸ்.கோபால கிருஷ்ணனால் வெளியே தலைகாட்ட முடியவில்லை. எங்கு சென்றாலும் எதிர்ப்பு.

கடைசியில் ஒரு யோசனையுடன் மக்கள் திலகத்தை கோபாலகிருஷ்ணன் சந்தித்தார். ‘‘உங்களை வைத்து நான் ஒரு படம் எடுக்கப் போவதாக பத்திரிகையில் சும்மா பெயருக்கு ஒரு விளம்பரம் கொடுக்கிறேன். அப்போதுதான் ரசிகர்கள் சமாதானம் அடைவார்கள். அப்படி விளம்பரம் கொடுக்க உங்கள் அனுமதி வேண்டும்’’ என்று வேண்டினார். மக்கள் திலகமும், எதையும் மனதில் கொள்ளாமல் பெருந்தன்மையாக ‘பரவாயில்லை. விளம்பரம் கொடுங்கள்’ என்று அனுமதித்தார். கேஎஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் மக்கள் திலகம் நடிப்பதாக ‘தங்கத்திலே வைரம்’ என்ற பெயரில் அப்போது கொடுக்கப்பட்ட விளம்பரம்தான் இது. இந்த விளம்பரத்துக்குப் பின் ‘கோபால கிருஷ்ணனும் நம்ம ஆளுதான், ஏதோ உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டார்’ என்று நமது ரசிகர்கள் சமாதானம் அடைந்தனர். ரசிகர்களை சமாதானப்படுத்த மட்டுமே கே.எஸ்.கோபால கிருஷ்ணன் கொடுத்த விளம்பரம் இது. படப்பிடிப்பும் நடக்கவில்லை. படமும் வரவில்லை. பின்னர், சங்கே முழங்கு படத்தில் கேஎஸ்.கோபால கிருஷ்ணன் கதை, வசனத்தை பயன்படுத்திக் கொள்ள மக்கள் திலகம் அனுமதித்தார்.

பகைவனுக்கும் அருளும் தாயுள்ளம் கொண்டவர் மக்கள் திலகம். அதை உணர்ந்த ஒரு தாய் மக்கள் திலகத்தை எப்படி அணைத்துக் கொண்டிருக்கிறார் பாருங்கள்..........

orodizli
19th September 2020, 10:17 PM
பணத்தோட்டம் அற்புதமான த்ரில்லர், சஸ்பென்ஸ் படம். எலக்ட்ரிக் சேர் எல்லாம் அப்போது புதிது. அதில் உட்கார்ந்து எஸ்.வி. சுப்பையா கடைசியில் தற்கொலை செய்து கொள்வார். மறுபடி மறுபடி காட்சியை எடுத்த டைரக்டர் சங்கரிடம் ‘‘என்னிடம் என்ன மாதிரி நடிப்பை எதிர்பார்க்கிறீர்கள்? ஒவ்வொருவருக்கு ஒரு நடிப்பு பாணி உண்டு. மற்றவர்களின் நடிப்பை என்னிடம் எதிர்பார்க்காதீர்கள்’’ என்று மக்கள் திலகம் சொன்னது உண்மைதான். இதை சங்கரே சொல்லி இருக்கிறார். மக்கள் திலகத்துக்கென்று இயற்கையான நடிப்பு பாணி உள்ளது. அதை சங்கர் புரிந்து கொண்டார். அதன் பிறகு மக்கள் திலகத்தை வைத்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்தார்.

மக்கள் திலகம் சிறந்த நடிகர் மட்டுமல்ல, சிறந்த டைரக்டரும் கூட. தனது சொந்த படங்களான நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன் படங்களை அவரே இயக்கினார். என்றாலும் கே.சங்கரின் உழைப்பையும் திறமையையும் நேர்மையையும் தெய்வபக்தியையும் பார்த்து தனது சொந்தப் படமான அடிமைப் பெண் படத்தை இயக்கும் வாய்ப்பை சங்கருக்கு தந்தார். அவரை தனது சம்பந்தியாகவும் ஆக்கிக் கொண்டார்..........

orodizli
19th September 2020, 10:19 PM
நாம் அடிக்கடி சொல்வது போல மக்கள் திலகத்தின் வள்ளல் தன்மை, சினிமாவில் அவரது சண்டைக் காட்சிகள், இயக்கம், எடிட்டிங், வசூல் சக்ரவர்த்தியாக திகழ்ந்தது, மக்கள் செல்வாக்கு, அரசியல் வெற்றிகள் பேசப்பட்டதுபோல அவரின் நடிப்புத் திறன் பேசப்படவில்லை. நாமும் அதில் அவ்வளவு அக்கறை காட்டவில்லை.

பணத்தோட்டத்தில் மக்கள் திலகம் சிறையில் இருந்து தப்பி சரோஜா தேவி வீட்டுக்கு மாடி வழியே ஏறி வீட்டுக்குள் வந்து அவரை சந்திப்பார். சத்தம் கேட்டு சரோஜா தேவியின் தந்தை எஸ்.வி. சுப்பையா அங்கு வந்து மக்கள் திலகத்தை விசாரிப்பார். திருமணமாகாத பெண்ணை இப்படி சந்திப்பது தவறு என்றும் உனக்கு ஒரு தங்கை இருந்து இதே மாதிரி நிலை ஏற்பட்டால் என்ன செய்வாய்? என்றும் ஒரு பெண்ணின் தந்தையாக நியாயமான கேள்வியை கேட்பார்

மக்கள் திலகம் பதில் சொல்ல முடியாமல் தவறை நினைத்து வருந்தி கும்பிட்டு மன்னிப்பு கேட்பார். அப்போது, தன் நிலையை எண்ணி லேசாக விம்முவார். அற்புதமான நடிப்பு. தவறு செய்துவிட்ட மனசாட்சியுள்ள அந்த சூழ்நிலையில் ஒரு மனிதன் இப்படித்தான் நடந்து கொள்வான். மன்னிப்பு கேட்டுவிட்டு சட்டென திரும்பி வந்தவழியே போக முயற்சிப்பார். அப்போது, சுப்பையா, ‘போகும்போதாவது இப்படி போ’ என்று வாசல் வழியை காட்டுவார். அவமானம் தாங்காமல் சுப்பையாவின் முகத்தை பார்க்க முடியாமல் தலைகுனிந்து இடது கையால் ஒரு கண்ணை மூடியபடி கூனிக்குறுகி மக்கள் திலகம் வெளியேறுவார். இன்னும் கண்ணிலேயே நிற்கும் காட்சி அது..........

orodizli
19th September 2020, 10:25 PM
#புரட்சிதலைவர்
#பாரத_ரத்னா
#டாக்டர்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
#அவர்களின்_ஆசியோடு_நண்பர்கள் #அனைவருக்கும்_இனிய #திங்கள்கிழமை_வணக்கம்..

நம் புரட்சி தலைவர்க்கு உள்ள தனிப்பட்ட சிறப்பு தன்னைப் போற்றுவோருக்கு மட்டுமின்றி, கடுமையாக தூற்றுவோருக்கும் உதவிகள் செய்வார். சொல்லப் போனால், தன் மீது கல் வீசுவோருக்கு கனி தரும் மரம் போல, தன்னைக் கடுமையாக தாக்கிப் பேசுவோருக்கு அதிகமாகவே உதவுவார். அவர்கள் திறமையாளர்களாக இருந்துவிட்டால் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு, அவர்களின் திறமைக்கு உரிய கவுரவமும் அங்கீகாரமும் அளிப்பார்.

எம்.ஜி.ஆர். நடித்த சூப்பர் டூப்பர் ஹிட் படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. படத்தின் க்ளைமாக்ஸுக்கு முன் ஒரு பாடல். அடிமை முறையை ஒழித்து சுதந்திர சமுதாயம் காணப் புறப்பட்ட ஒரு புரட்சி வீரன் பாடுவது போன்ற பாடல்.அந்தக் காட்சிக்கு பலர் பாடல் எழுதியும் எம்.ஜி.ஆருக்கு திருப்தி ஏற்படவில்லை.

அப்போது ஒரு கவிஞர் ஏற்கெனவே எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்தவர்தான். அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக எம்.ஜி.ஆரை மேடைகளில் கடுமையாக விமர்சித்து வந்தார்.
ஆனாலும், அந்தக் கவிஞர் என் படங்களில் பாடல் எழுதக் கூடாது என்று எம்.ஜி.ஆர். கூறிய தில்லை.
எம்.ஜி.ஆர். படங்களுக்கு நான் பாடல் எழுத மாட்டேன் என்று அந்த கவிஞரும் சொன்ன தில்லை.
மேடைப் பேச்சுக்கள் ஏற்படுத்திய தர்ம சங்கடத்தால் எம்.ஜி.ஆர் படங்களின் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் கவிஞரை அணுகத் தயங்கினர். அதனால், எம்.ஜி.ஆரின் சில படங்களில் அவர் பாடல்கள் இடம்பெறவில்லை.

‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் மேலே குறிப் பிட்ட காட்சிக்கான பாடலுக்காக பல கவிஞர்கள் எழுதியும் திருப்தி ஏற்படாத நிலையில், எம்.ஜி.ஆரை விமர்சிக்கும் அந்தக் கவிஞரை விட்டே அந்த பாடலை எழுதச் சொன்னால் என்ன? என்ற யோசனை பிறந்தது. படக்குழுவினர் கவிஞரிடம் விஷயத்தைச் சொல்ல, அவரும் எழுதிக் கொடுத்தார். எம்.ஜி.ஆருக்கு அந்தப் பாடல் மிக வும் பிடித்துப் போனதுடன் கவிஞரின் திறமையை பாராட்டி அந்தப் பாடலை ஓ.கே. செய்தார்.

அந்தப் பாடல்தான் காலத்தால் அழியாத

‘அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்…’

அந்தப் பாடலை எழுதியவர் கவியரசு கண்ணதாசன். அவர் கடுமையாக தாக்கிப் பேசுவாரே தவிர, மனதில் ஒன்றும் கிடையாது என்பதும் எம்.ஜி.ஆருக்குத் தெரியும்.

எம்.ஜி.ஆர். நடித்த வெள்ளிவிழா படமான ‘மாட்டுக்கார வேலன்’ படத்தில்,

‘பூ வைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா?’

என்ற இனிமை யான பாடலை எழுதியவர் கண்ணதாசன். நாயகி யைப் பார்த்து எம்.ஜி.ஆர். பாடும் வரிகளில்

‘பள்ளிக் கணக்கு கொஞ்சம் சொல்லிப் பழக்கு, நீ இல்லையென்றால் நான் தொடுப்பேன் காதல் வழக்கு’

என்று வரும்.

பதிலுக்கு நாயகி, ‘போடுங்கள்.. கூண்டில் ஏற்றுங்கள்.. நான் போதும் என்று சொல்லும் வரை நீதி சொல்லுங்கள்’

என்று பாடுவதுபோல எழுதியிருந்தார் கண்ணதாசன். நாயகி பாடும் வரிகள் எம்.ஜி.ஆருக்கு திருப்தி இல்லை. கண்ணதாசனிடம் சொல்லி அந்த வரிகளை மாற்றச் சொன்னார்.

கண்ணதாசன் உடனே மாற்றிக் கொடுத்த வரிகள்தான்,

‘போடுங்கள் கூண்டில் ஏற்றுங்கள், உங்கள் பொன்மனத்தை சாட்சி வைத்து வெற்றி கொள்ளுங்கள்’.

நட்பு ஒருபுறம் இருந்தாலும்,
எம்.ஜி.ஆரின் மனதை பொன்மனம் என்று வர்ணித்தாலும், அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக எம்.ஜி.ஆர் முதல்வரான பிறகும் அவரை தாக்கி பேசுவதை கண்ணதாசன் நிறுத்தவில்லை.

ஒருநாள், முதல்வர் வீட்டில் இருந்து கண்ணதாசன் வீட்டுக்கு தொலைபேசி அழைப்பு. தனது மகன் திருமண விஷயமாக கண்ணதாசன் வெளியூர் சென்றிருந்தார். இப்போதுபோல அப்போது செல்போன் எல்லாம் கிடையாது. தீவிர முயற்சிக்குப் பிறகு, கண்ணதாசனை தொடர்பு கொண்ட எம்.ஜி.ஆர்., அவரை உடனே புறப்பட்டு சென்னை வரச் சொன்னார்.

எதற்காக வரச் சொல்கிறார் என்பது புரியாமலே தன்னை சந்தித்த கண்ணதாசனுக்கு எம்.ஜி.ஆர். இன்ப அதிர்ச்சி அளித்தார். ‘‘தங்களை தமிழக அரசின் அரசவைக் கவிஞராக நியமிக்க முடிவு செய்திருக்கிறேன். சம்மதம் என்ற ஒரே வார்த்தையை மட்டுமே உங்களிடம் எதிர்பார்க்கிறேன்’’ என்றார். எம்.ஜி.ஆரின் அன்பிலும் மகிழ்ச்சியிலும் திக்குமுக்காடிப் போனார் கண்ணதாசன்.

‘அரசவைக் கவிஞர்’ பட்டமளிக்கும் விழாவில் உணர்ச்சிவசப்பட்ட கண்ணதாசன், ‘‘நான் இறந்துவிட்டால் எனக்கு அரசு மரியாதை கிடைக்கும். இந்த சிறப்பை எனக்கு வழங்கிய எம்.ஜி.ஆருக்கு முன்கூட்டியே நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.

அவர் கூறியது போலவே நடந்தது. அமெரிக் காவுக்கு சிகிச்சைக்காக சென்ற கண்ணதாசன் வெறும் உடலாகத்தான் திரும்பினார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின் இறுதி ஊர்வலத்துக்குத் தயாரானது. கண்ணதாசன் உடல் வாகனத்தில் ஏற்றப்பட்ட பின், யாரும் எதிர்பாராத வகையில் முதல்வர் எம்.ஜி.ஆர். மின்னலாய் அந்த வாகனத்தின் மீது ஏறிவிட்டார். கண்ணதாசன் உடலை சற்று உயர்த்தி சிறிய ஸ்டூல் மீது அவரது தலையை பொருத்தி கட்டி விட்டு கீழே இறங்கிய எம்.ஜி.ஆர்., ‘‘இப்போது, கவிஞரின் முகம் பொதுமக்கள் பார்க்க வசதியாக நன்றாக தெரிகிறது’’ என்றார்.

எம்.ஜி.ஆர்… அதிலும் தமிழகத்தின் முதல்வர். கண்ணசைத்தால் காரியம் செய்ய காத்திருப்போர் ஆயிரம் பேர். என்றாலும் கண்ணதாசனின் முகத்தை பொதுமக்கள் இறுதியாக பார்த்து அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதற்காக, தானே வேன் மீது ஏறினார் என்றால், கவிஞர் மீது அவர் கொண்டிருந்த அன்பும், எதையும் மக்களின் கோணத்தில் இருந்தே பார்க்கும் எம்.ஜி.ஆரின் நுண்ணறிவும் பிரமிக்கத்தான் வைக்கும்.

சினிமாவில் பொதுவாக பெண்களின் அழகைத்தான் கவிஞர்கள் வர்ணிப்பார்கள். ஆண்களின் அழகையும் வர்ணிக்க முடியும் என்றால் அது எம்.ஜி.ஆருக்குத்தான் பொருந்தும்.

‘குடும்பத் தலைவன்’ படத்தில் ‘கட்டான கட்டழகு கண்ணா, உன்னைக் காணாத பெண்ணும் ஒரு பெண்ணா?’

என்று எம்.ஜி.ஆரை வர்ணித்திருப்பார் கண்ணதாசன்.

எம்.ஜி.ஆரின் அழகை, ஆளுமையை ‘நீதிக்குப் பின் பாசம்’ படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலில், நாயகி பாடுவது போல கண்ணதாசன் விவரித்திருப்பார். அந்த வரிகள்…

‘தேக்கு மரம் உடலைத் தந்தது

சின்ன யானை நடையைத் தந்தது

பூக்கள் எல்லாம் சிரிப்பை தந்தது

பொன்னல்லவோ நிறத்தை தந்தது’

இந்த வரிகளைப் படித்தாலே நினைவுக்கு வருபவர் எம்.ஜி.ஆராகத்தான் இருக்க முடியும்.

எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த கண்ண தாசன் பாடல் ‘மன்னாதி மன்னன்’ படத்தில் அவர் எழுதிய ‘அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா...’பாடல். காரில் எம்.ஜி.ஆர். செல்லும்போது அவர் கேட்டு ரசிக்கும் பாடல்களில் இந்த பாடல் தவறாமல் இடம் பெறும்....

அன்புடன்
படப்பை rtb.,

orodizli
19th September 2020, 10:29 PM
Mgrன்
வரலாற்று சாதனை

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர். 1973-ம் ஆண்டில் மதுரை வந்த பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்து மாநில அரசு மீது புகார் கொடுக்க முடிவு செய்தார்.
M.g.r. சென்னையில் இருந்து மதுரைக்கு ரயிலில் வருகிறார் என்கிற செய்தி அறிந்த மக்கள் வழி நெடுக ஒவ்வொரு இரயில் நிலையங்களிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி விடுகிறார்கள் அந்த இரவு நேரத்தில் கூட மக்களின் உற்சாகமான வரவேற்பை ஏற்றுக் கொண்டு ஒவ்வொரு இரயில் நிலையங்களிலும் புரட்சி தலைவர் கண் விழித்து தொண்டர்களுக்கும் தாய்மார்களுக்கும் நன்றியை தெரிவித்து கொண்டு வந்தார் இதன் காரணமாக, காலை7 மணிக்கு மதுரை வரவேண்டிய பாண்டியன் எக்ஸ்பிரஸ் மாலை5மணிக்கு 10 மணி நேரம் தாமதமாக மதுரை வந்தடைந்தது
திட்டமிட்டபடி பிரதமர் இந்திராகாந்தி அவர்களை
சந்திக்க முடியாவிட்டாலும்
1977- ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக - இந்திரா காங்கிரஸ் இடையே கூட்டணி ஏற்பட்டது. மதுரையில் நடந்த பிரம்மாண்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் எம்.ஜி.ஆரும். இந்திரா காந்தியும் ஒரே மேடையில் பிரசாரம் செய்தார்கள்...
மாபெரும் வெற்றி அடைந்தார் mgr

எம்ஜிஆர் என்கிற தனிமனித உழைப்பால் உருவானது தான்
அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்
நன்றி
எம்ஜிஆர்நேசன்.........

orodizli
19th September 2020, 10:33 PM
தலைவருக்கும் இயக்குனர் கே. சங்கருக்கும் உள்ள நெருக்கம் அலாதியானது.

சங்கர் ஒரு முறை வீரஜகதீஷ் படம் பார்த்தேன் அப்போதே புகைபிடிப்பது தவறு என்று சுட்டி காட்டி இருந்தது என் மனதில் ஆழமாக பதிந்து விட்டது....

சிலர் உயரே வந்தவுடன் பழையதை தொலைத்து விடுவார். ஆனால் எம்ஜியார் மட்டும் அப்படி இல்லை.

என் கடைசி மகளுக்கு திருமணம்...பெரிய அளவில் ஏற்பாடு செய்து விட்டேன்.

எனக்கு சிலரிடம் இருந்து வரவேண்டிய பணம் கிடைக்கும் என்று நம்பி..

ஆனால் அப்படி நடக்கவில்லை....திருமண நாளும் வந்தது...பெரிய இயக்குனர் என்பதால் அனைத்து செலவுகளுக்கு அட்வான்ஸ் மட்டுமே பெற்று கொண்டனர்.

கண் முன்னே நான் செட்டில் பண்ண வேண்டிய தொகை என்னை மிரட்டியது..

அனைத்து முக்கிய முக்கிய பிரமுகர்கள், நண்பர்கள், திரை துறையினர் வந்து சேர நிகழ்வுகள் தொடங்க

வாத்தியாரும் வந்து சேர திருமணம் முடிந்து இன்னிசை கச்சேரி முடிந்து விருந்து முடிந்து அனைவரும் புறப்பட்டு கொண்டு இருந்தனர்.

நான் பொய் சிரிப்பை முகத்தில் காட்டி அனைவரையும் வரவேற்று வழி அனுப்ப.

சாப்பிட்டு முடித்த எம்ஜியார் என்னை கண் ஜாடையில் அழைக்க கை கழுவும் இடம் தாண்டி என்னை அழைத்து ஜிப்பாவுக்குள் இருந்த ஒரு பேப்பர் பண்டிலை என்னிடம் யாரும் பார்க்காவண்ணம் கொடுத்து நான் பார்சலை வாங்கி

திரும்பும் முன் என் கண்களை விட்டு மறைந்து விட்டார்... நான் பதட்டத்துடன் அந்த குறை வெளிச்சத்தில் பண்டிலை பிரித்து பார்க்க.

இன்னும் இதை போல இன்னொரு திருமணம் முடிக்கும் அளவுக்கு அதில் பணம் இருந்தது.

எத்துனை நடிகர்களை நான் இயக்கி இருந்தேன்...
அத்துணை பேரிடம் இல்லாத இரக்க குணம் இவரிடம் மட்டும் எப்படி வந்தது என்று மொத்த கவலைகளும் என்னை விட்டு பறக்க மீண்டும் புதிதாய் பிறந்தேன் என்கிறார் இயக்குனர் கே. சங்கர்.

ஏன் என்பதில் என்ன சந்தேகம்...அவர் மனித புனிதர் ஆவார்.

வாழ்க எம்ஜியார் புகழ்.

தொடரும்.. நன்றி. உங்களில் ஒருவன் நெல்லை மணி...

orodizli
20th September 2020, 07:03 AM
புரட்சித்தலைவரின் கருணையுள்ளம் காவல்காரன் திரைப்படத்தில் நடந்த சம்பவம் :

நடிகர் கே. கண்ணன் கூறியது :

காவல்காரன் படத்தில் புரட்சித் தலைவருடன் நான் சண்டை செய்யும் காட்சிக்காக ஸ்டண்ட் குழுவினருடன் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தேன் சத்யா ஸ்டுடியோவில் ! எதிர்பாராத விதமாக எனது கால் நன்றாக பிசகி விட்டது. காற்றோட்டமாக இருக்கட்டுமென்று என்னை வெளியில் மணலில் தூக்கிக் கொண்டு வந்து படுக்க வைத்திருந்தனர். இந்த நிகழ்ச்சி நடந்தபோது புரட்சித்தலைவர் வாகினியில் படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டு இருந்தார். அவருக்கு செய்தி எப்படியோ எட்டியிருக்கிறது. உடனே சத்யா ஸ்டுடியோவிற்கு வந்து பாசத்தோடு என்னை விசாரித்தார். டாக்டரிடம் அழைத்துச் செல்வதற்கு ஏற்பாடு செய்தார். எனக்கு கால் பிசகி இருப்பதால் அது சரியாகும் வரையில் 10 நாட்கள் படப்பிடிப்பை தள்ளி போடும்படி கூறினார். நான் ஏற்றிருப்பது சாதாரண வேடம் தான். எனக்கு பதில் வேறு யாரையாவது போட்டு படப்பிடிப்பை உடனடியாக முடித்திருக்கலாம். 10 நாட்கள் படப்பிடிப்பை தள்ளிப் போடுவதால் எவ்வளவு சிரமம் செலவு ஏற்படும் என்பதை பற்றி எல்லாம் புரட்சித் தலைவரும் ஆர்.எம்.வீயும் கருதவில்லை. எனக்கு பதில் வேறு யாரையும் போடாமல் நான் குணமடைந்து நடிக்க வரும் வரை படப்பிடிப்பைத் தள்ளிப்போட்ட புரட்சித்தலைவரின் கருணை உள்ளத்தை, பேரண்பை இப்போது நினைத்தாலும் மெய்சிலிர்க்கிறது.

( நடிகர் கே. கண்ணன் கூறியது )

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க.........

orodizli
20th September 2020, 07:04 AM
#தலைமுறையாய் #தொடரும் #பக்தி

#சோ, தன் துக்ளக் பத்திரிகையில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் தொடரும் செல்வாக்கு பற்றிக் கூறும்போது ஒரு சம்பவத்தை மிக வியப்புடன் குறிப்பிட்டிருப்பார்...

அவர் தான் வரும் வழியில் பிளாட்பாரத்தில் ஒட்டப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் படத்தை ஒரு சிறுவன் வணங்கிவிட்டு வந்ததைப் பார்த்திருக்கிறார்.

அவனை அழைத்து ` இப்ப என்ன செய்தாய்?' என்று கேட்டபோது, அவன் அவரிடம் `#எம்ஜிஆரை #கும்பிட்டால் #நல்லா #படிப்பு #வரும். #அதனால #கும்பிட்டுட்டுப் #போறேன்' என்றதும் சோ அதிர்ந்திருக்கிறார்...

இவன் வளர்ந்து பெரியவனாகும்போது, தன் பிள்ளைகளுக்கும் இதை சொல்லி பெருமிதம் கொள்வான்...

அவர்களும் `என் அப்பா தீவிர எம்ஜிஆர் பக்தர்' என்று அவர்கள் பிள்ளைகளிடம் சொல்வார்கள். இப்படி எம்ஜிஆர் மீதான அன்பு, பக்தியாகப் பல இடங்களில் கனிந்துவிட்டது...

எம்ஜிஆரைத் தவிர வேறு ஒருவரும் உலகில் இப்படி இருந்ததில்லை..
இருக்கப்போவதுமில்லை..............

orodizli
20th September 2020, 07:05 AM
உலகத்தில் எந்த நடிகரின் 100 வது படமும் ...வெளியான நாள் முதல் இன்று வரை சாதித்த வரலாறு.........
எங்கள்
மக்கள் திலகத்தின்
100 வது
திரைக்காவியமான
"ஒளிவிளக்கு"
போல் ஒடிய வரலாறு கிடையாது!
எக்காலத்திலும்
இனி கிடையாது...

இன்றுடன்
(20.09.1968 - 20.09.2020) 52 ஆண்டுகளை நிறைவு செய்தும்......
காலத்தை வென்று நிற்கும் ஒப்பற்ற காவியமாக...

கலைப்பேரரசர்
திரையுலக சக்கரவர்த்தி
வசூல் படமாமன்னன்
நிறைக்குடம் தழும்பாத
வெற்றியை தந்த
மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர்.அவர்களின்
ஒளிவிளக்கு மட்டுமே!
எல்லோராலும் பேசப்படும் 100 வது சரித்திரமாகும்.....

100 நாளை வெற்றிக்கொண்ட ஊர்கள்....
இலங்கை ஜெயின்ஸ்தான்
162 நாள்
ராஜா 161 நாள்
மதுரை 147 நாள்
திருச்சி 116 நாள்
குடந்தை 101 நாள்..
1984 ல் இலங்கை மீண்டும் 4 வது வெளியீடு..
ராஜா 105 நாள்

அடுத்து....
***********
சென்னை
பிராட்வே 92 நாள்
அகஸ்தியா 31 நாள்
தஞ்சை 85 நாள்
ஈரோடு 85 நாள்
மாயூரம் 85 நாள்
மன்னார்குடி 85 நாள்
சேலம் 91 நாள்
கோவை 85 நாள்
பாண்டி 80 நாள்
வேலூர் 85 நாள்
(லஷ்மி/ கிரவுன்)
சென்னை
மகாலட்சுமி 77 நாள்
மிட்லண்ட் 70 நாள்
நூர்ஜகான் 70 நாள்
திண்டுக்கல் 70 நாள்
மற்றும் 30 திரையில்
50 நாளை கடந்தது...
இலங்கையில்
1984,1992 இரண்டுமுறை
10 வாரங்கள் கடந்து சாதனையாகும்....

53 வது ஆண்டின் சாதனையை நோக்கி
சாகாவரம் பெற்ற வெள்ளித்திரையின்
வெற்றியில்
ஒளிவிளக்கு... பவனி!

ஒளிவிளக்கு வெற்றியின் ஒரு பகுதி தான் மேலே....
இன்னும் உள்ளது....பல

53 வது தொடக்கத்தில்
கொராணா நீங்கி
அனைவருக்கும்
மக்கள் திலகத்தின் ஆசியின்...
ஒளிவிளக்கு
ஒளிரட்டும் வாழ்வில்............

உ.ரா..

orodizli
20th September 2020, 02:07 PM
1969 மே1 மற்றும் 1970 ஜன 14 பொங்கல் திருநாள், இந்த இரண்டு நாட்களிலிருந்து தொடர்ந்து மக்கள் அலைஅலையாக 'அடிமைப்பெண்' மற்றும் "மாட்டுக்கார வேலன்" திரையிட்ட திரையரங்குகள் நோக்கி
படையெடுக்க ஆரம்பித்தார்கள்.
எங்கும் ஒரே பேச்சு படம் பார்த்தாச்சா? என்பதுதான். இரண்டு நாளிலும் வேறொரு நடிகரின் படமும் வந்தது.

"அடிமைப்பெண்ணு"டன் சேர்ந்து வந்த படத்தை பாவம் வேடிக்கை பார்க்க கூட மக்கள் செல்லவில்லை ."மாட்டுக்கார வேலனு"டன் சேர்ந்து வந்த படம் பொங்கல் திருநாள் அன்று வந்ததால் மற்ற படங்களின் டிக்கெட் கிடைக்காத கூட்டம் முதல் இரண்டு நாட்கள் வந்ததால் ஒரளவு கூட்டம் வந்தது. படத்துக்கு எதிர்மறை விமர்சனங்கள் கிளம்பியதால் படம் விரைவில் படுத்து விட்டது. ஸ்டெச்சரில் கூட தூக்க முடியாத அளவுக்கு நிலமை மோசமானதால் அப்படியே 'அம்போ'வென போட்டு விட்டு சென்று விட்டார்கள்.

அதிலும் ஹிந்தியில் வெளிவந்த "பிரம்மசாரி" படத்தில் நடித்த நடிகரின் நடிப்பு திறமையால் அந்த படம் வெள்ளி விழா போனது. தமிழில் மிகை நடிப்பு நாயகன் நடித்து படத்தை சொதப்பி படத்தை போர் படமாக மாற்றி விட்டார். படத்தை தொய்வில்லாமல் கொண்டு போக தெரியாமல் விறுவிறுப்பு குன்றி கூட வந்த மாபெரும் வெற்றி படத்துடன் மோதி தோல்வியை பரிசாக பெற்றது. அதன்பின்பு அந்த நடிகரை வைத்து கலர் படம் எடுக்க தயாரிப்பாளர்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டனர்.

அதனால் நிறைய கருப்பு வெள்ளை படங்களில் குறைந்த பட்ஜெட்டில் நடிக்க ஆரம்பித்தார். ஜெய்சங்கர் படத்துக்கு ஆகும் செலவில் ஒரு படம் மாற்று நடிகரை வைத்து எடுத்து விடலாம் என்று நினைத்த தயாரிப்பாளர்கள் படம் தோற்றாலும் சிறிய பட்ஜெட் என்பதால் ஒரிரு லட்ச இழப்போடு தப்பி விடலாம் என்று நினைத்தனர். அப்படியும் அந்த நடிகரின் மிகை நடிப்பால் பல கறுப்பு வெள்ளை படங்களும் தோல்வியை தழுவ ஆரம்பித்தன. உதாரணமாக "அஞ்சல் பெட்டி" ,"குருதட்சணை", "அன்பளிப்பு" ,"நிறைகுடம்", "அருணோதயம்" இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

ஒரு வருடத்தில் வருகின்ற 8 அல்லது 9 படங்களில் 7 படங்கள் தோல்வியை தழுவின. ஒரு சில படங்களில் நடிகர் சொதப்பினாலும் ஏதோ காரணத்திற்காக சுமாராக ஓடியதும் உண்டு. திடீரென்று ஒரு படம்
ஓடிவிட்டால் போதும் கைபிள்ளைங்களை கையில் பிடிக்க முடியாது. ஏதோ அந்த நடிகரின் நடிப்பால்தான் படம் வெற்றி பெற்றதை போன்ற தோற்றத்தை உருவாக்கி விடுவார்கள். அப்படி ஒடிய "பட்டிக்காட்டு" படத்தை தூக்கி வைத்து லாலி பாடினர். அப்படியும் அந்த படம் முதல் வெளியீட்டோட சரி. மறு வெளியீட்டில் எங்கும் தலைகாட்டவில்லை.

எம்ஜிஆர் படம் எப்படி ஓடும் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
என்ன இருக்கிறது அந்த படத்தில் இப்படி ஓடுகிறது என்று தெரியவில்லை என்று வருவோர் போவோரிடம் அங்கலாய்த்து. பேசுவார்கள். . அதன்பிறகு அந்தப்படத்தின் மீது காழ்ப்புணர்ச்சி கொள்வது அவர்களது வழக்கம். எப்போதும் அந்தப் படத்தை திட்டி தீர்ப்பார்கள். அதனால்தான் "அடிமைப்பெண்", "மாட்டுக்கார வேலன்" "ரிக்ஷாக்காரன்" போன்ற படங்கள் எல்லாம் அவர்களுக்கு சிம்ம சொப்பனங்கள்.

இரவில் கூட கண்விழித்து அலறுவதும் உண்டு.
அதற்கு காரணம் "அடிமைப்பெண்ணு"ம் "மாட்டுக்கார வேலனும்" நான்கு தியேட்டரில் வெளியான படங்கள். அவர்களுக்கும் நான்கு தியேட்டரில் வெளியான ஒருசில படங்களில் மூன்று படங்களை ஸ்டெச்சர் உதவியுடன் 100 நாட்கள் ஓட்டியிருக்கிறார்கள். அவர்களுக்கு படங்களை 100 நாட்கள் ஓட்டுவது சுலபம். தியேட்டர் வாடகை கட்டி ஒட்டி விடுகிறார்கள்.பின்பு எவ்வளவு வாடகை கட்டினோம் என்பதை வைத்து வசூல் விபரங்களை போட்டு அசத்துவது அவர்கள் வழக்கம்.

ஆனால் அந்த நடிகர் தன் வாழ்நாளில் நடித்த 300 படங்களில் ஏதாவது ஒரு படமாவது நான்கு தியேட்டரிலும் 400 காட்சிகள்
அரங்கம் நிறைத்து ஓட்ட முடிந்ததா?. நெவர். ஒரு காலத்திலும் அந்த சாதனையை செய்ய முடியவில்லை. எனக்கு தெரிந்து தமிழ்ப்பட உலகில் அந்த சாதனையை செய்த இரண்டு படங்களும் தலைவர் படங்களே. காவிரியில் வெள்ளம் வந்தால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அரசாங்கம் எச்சரிக்கை செய்வது போல தலைவர் படம் வெளியானால் தமிழகத்தில் உள்ள அநேக ஊர்களில் 50,75,100 என்று ஓடி மக்கள் வெள்ளம் அடங்க ஒரு 2 முதல் மூன்று மாதம் வரை ஆகும்.

புரட்சி நடிகரின் 100 வது படம் "ஒளிவிளக்கு" மதுரையில் 100 காட்சிகளுக்கு மேல் தொடர்ந்து hf ஆனது. ஆனால் உங்கள் 100 வது படம் எங்காவது 50 காட்சிகளாவது தொடர்ந்து அரங்கு நிறைந்ததா? ஆனால் 100 நாட்கள் சென்னையில் 4 திரையரங்கிலும் ஸ்டெச்சரில் தூக்கி கரை சேர்த்த அனுபவம்
உண்டு. எங்களது சாதனைகள் அனைத்துக்கும் ஆதாரங்கள் அளித்திருக்கிறேன். பார்த்து புத்தியை சானடைசர் போட்டு கழுவிக் கொள்ளவும்.

ஆனால் மாற்று அணியில் ஏதாவது ஒரு ஊரில் சிறிது பள்ளம் தோண்டி அதில் நீரை ஊற்றி ஆ! வெள்ளம்!
என்று அலறுவதை பார்த்தால் கோமாளித்தனமாக இல்லையா?
இதையெல்லாம் நாம் சுட்டிக் காட்டினால் சில சிவாலய மடாதிகள் கூவம் நதிநீர் குடித்து வளர்ந்தவர் போல அசிங்கமான வார்த்தைகளால் தலைவரை அர்ச்சனை செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள்.

அவர்களின் ஒரு படத்தை 100 காட்சி அரங்கம் நிறைப்பதற்கே ஸ்டெச்சர் தேவைப்பட்டதை சென்ற பதிவில் பார்த்தோம். ஒரு படத்தை 100 காட்சிகள் அரங்கு நிறைத்ததை. ஒரு முழு பக்க விளம்பரம் கொடுத்து கொண்டாடியவர்கள் 400 காட்சிகள் அரங்கம் நிறைத்தால் அவ்வளவுதான் ஆனந்தத்தில் ஹார்ட் அட்டாக் வந்து உயிர் போய் விடும் என்பதால் விட்டு விட்டார்கள் போலும். அதனால்தான் அவர்கள் நடு இரவில் பயந்து போய் கெட்ட சொப்பனங் கண்டு முழித்து வேங்கையா! வேலா! என்று அலறுவதை பார்த்தால் பரிதாபமாக இருக்கும். .

இந்தப் படங்களின் தொடர் hf காட்சிகள் சென்னையில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் அப்படித்தான். அதுதான் பிரளய வெற்றி. அதிலும் குறிப்பாக "உலகம் சுற்றும் வாலிபன்" தமிழகத்தில் சுமார் 25 திரையரங்குகளில் தொடர்ந்து 100 காட்சிகளுக்கு மேல் அரங்கம். நிறைந்தது அவர்களுக்கு பேதியை உருவாக்கி விட்டது. ஆனால் அவர்கள் ஒவ்வொரு படத்தையும் ஸ்டெச்சரில் தூக்கி கொண்டு 100 நாட்கள் சுமந்து பின் அதை இறக்கி விடுவது வாடிக்கையான செயலாகி விட்டது.

எங்காவது ஒரு தியேட்டரில் அந்த சமூக சேவை நடத்தி மனம் குதூகலிப்பது ஒரு மனநோயாக கூட இருக்கலாம். பின்னர் பெருமையாக நாங்கள் 90 படங்களை ஸ்டெச்சரில் தூக்கி சாதனை படைத்தோம் என்று சொல்வது எவ்வளவு பெரிய வேதனை. ஆனால் அதை விடாமல் இன்று வரை சிவகாமி, ராஜபார்ட் வரை அலுக்காமல் செய்ய ஒரு பெரிய மனது வேண்டும். வாழ்க உங்கள் ஸ்டெச்சர் பணி என்று வாழ்த்துகிறோம் .

அரசியலில் புறமுதுகு காட்டி ஓடியதற்கு ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் தோல்வி தோல்விதானே! சாரி படு தோல்விதானே.! தோற்றவன் பிதற்றுவது சகஜம்தான். சினிமாவில் சிறுவர்களை அண்டி பிழைத்த கொடூரத்தை மறைக்க போலி வசூல் கணக்கை காட்டும் புல்லுருவிகளை என்ன சொல்லி புரியவைக்க!. அனைத்து தோல்வி படங்களையும் வெற்றி படமாக்க ஆதாரமில்லாத பொய் வசூல் காட்டும் ஜாலக்காரர்களின் ஜாலம் எத்தனை நாள் கை கொடுக்கும்.
அரசியலிலும் சினிமாவிலும் வெற்றியை நிரூபித்த வெற்றித்
திருமகன் புரட்சி தலைவர் ஒருவரே.

தன் படத்தை மக்கள் நிராகரிக்கிறார்கள் என்றவுடன் ஆபாசத்தின் எல்லைக்கே சென்று நடித்த "சிவகாமியின் செல்வன்" மற்றும் "லாரி டிரைவர் ராஜா கண்ணு" போன்ற படங்கள் ஊத்திக் கொண்டதும் சிறுமிகளுடன் ஜோடியாக நடித்தால் படம் ஓடி விடும் என்று நினைத்து ஸ்ரீதேவி ஸ்ரீப்ரியா போன்ற இள நடிகைகளுடன் நடித்தார். அந்த படங்களும் ஓடவில்லை. சிவாஜி குண்டா நடித்த படங்களை கூட ஓரளவு ஓட்ட முடிந்தது, ஆனால் வயிற்றில் அண்டாவுடன் நடித்த படங்களை மக்கள் திரும்பிக்கூட பார்க்கவில்லை என்றதும் கட்டாய ஓய்வில் தள்ளப்பட்டார்.

சிவாஜிக்கு கிடைக்க வேண்டிய 80 சதவீத ஆதரவு ஜானகி அம்மாவுக்கு ஆதரவு கொடுத்ததால் கிடைக்க வில்லை என்று ஒரு ஞானசூன்யம் கூறியிருப்பது உலக மகா ஜோக்.
ஜானகி அம்மாவின் ஆதரவால் அவருடைய டெப்பாசிட் பிழைத்தது.
இல்லையென்றால் "தில்லானா"வில்
கத்திக்குத்துக்கு உருண்டதை போல் உருண்டு அழுது ஆர்ப்பாட்டம் செய்திருப்பார்.
இவ்வளவு ஆதரவு உள்ளவர் கட்சியை ஏன் கலைத்தார் என்று நீங்க விளக்கலையே. அடுத்த தேர்தலில் cm ஆகும் வாய்ப்பை இழந்து விட்டாரே. சும்மா அவரை வைத்து காமெடி, கீமெடியெல்லாம் பண்ணாதீங்கப்பா! பெரிய குடும்பமே பாத்து சிரிக்குதப்பா! உங்க பேச்சை கேட்டு.

முடிவில் ஒரு சின்ன ஜோக். ஜோக்காக இருந்தாலும் இது உண்மை:
------------------------------------'---------------------

சிவாஜி ரசிகர் :
ஏம்ப்பா சிவாஜியின் 4 பழைய படத்துக்கு வசூல் வேணும்.
எவ்வளவு பணம் வேணும்.?

தியேட்டர் பழைய துப்புரவு பணியாளர்:
பரவாயில்லையே! இது நல்ல தொழிலாயிருக்கே? சிவாஜி படம் வசூலானதை விட இந்த பொய் வசூல் கொடுக்கிறதிலே வருமானம் அதிகமிருக்கே! அடிச்சு விடுவோம்.

சிவாஜி ரசிகர்களுக்கு. இந்த ஜோக் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்..........ks.,...

orodizli
20th September 2020, 02:28 PM
தமிழக முன்னாள் அமைச்சர், காளிமுத்து எழுதிய, 'வாழும் தெய்வம்' என்ற நூலிலிருந்து:

ஒருமுறை, எம்.ஜி.ஆர்., திருச்சிக்கு செல்லும் போது, வழியில் ரயில்வே கேட் குறுக்கிட, அவரது கார் நின்றது. அப்போது, அருகில் வயல்களில் வேலை செய்த மக்கள், ஓடி வந்து, எம்.ஜி.ஆரின் காரை சூழ்ந்து கொண்டனர். அவர்களின் பாசத்தில் திக்குமுக்காடி போனார்
எம்.ஜி.ஆர்.,
'எல்லாரும் நல்லா இருக்கீங்களா...' என்று, எம்.ஜி.ஆர்., விசாரித்த போது, அவர்கள், 'மகராசா நீங்க நல்லா இருந்தாலே போதும்; நாங்க நல்லா இருப்போம்...' என்று சொல்லி, கையெடுத்துக் கும்பிட்டனர். அவர்களின் கைகளை பற்றி நெகிழ்ந்து போனார், எம்.ஜி.ஆர்.,
அவர்களிடம் விடைபெற்று காரில் பயணித்த போது, நெகிழ்ந்த குரலில், 'நான் நல்லா இருந்தாலே, தாங்களும் நல்லா இருப்போம்ன்னு சொல்ற இந்த மக்களுக்கு, நான் என்ன கைமாறு செய்யப் போறேன்...' என்றார்.
மக்கள், தன் மீது காட்டிய பாசத்தை போலவே, அவரும் மக்கள் மீது காட்டிய அன்பையும், அக்கறையையும் அன்று நேரில் பார்த்தேன்.
அவரது ஆட்சியின் போது, ஒருமுறை, ராமேஸ்வரத்தில் கடுமையான புயல் மழை; குடியிருப்பு பகுதிகளில் பலத்த சேதம். தகவல் கிடைத்ததும், உடனே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்றார் எம்.ஜி.ஆர்., அவருடன் நானும் சென்றேன்.
சேறும், சகதியுமான வீதிகளில் கண்ணீரும், கம்பலையுமாக நின்றிருந்தனர் மக்கள். அவர்களை பார்த்ததுமே, காரிலிருந்து இறங்கிய எம்.ஜி.ஆர்., சிறிதும் யோசிக்காமல், வேட்டியை மடித்துக் கட்டி, முழங்கால் அளவு தண்ணீரில் நடக்க, பதறிப் போன மக்கள், 'அய்யா... எங்களுக்கு ஒண்ணும் பிரச்னையில்ல; உங்கள பாத்ததே போதும்; சகதியில் நடக்காதீங்க...' என்று தடுத்தும் கேளாமல், அவர்கள் அருகில் சென்று, ஆறுதல் கூறினார்.
பின், மின்னல் வேகத்தில், நிவாரணப் பணிகளுக்கும் உத்தரவிட்டார். மக்களின் குறைகளை கோட்டையி

உத்தரவிட்டார். மக்களின் குறைகளை கோட்டையில் உட்கார்ந்து கேட்டவர் அல்ல; தெருவுக்கே வந்து தீர்த்து வைத்தவர், எம்.ஜி.ஆர்.,
முதல்வராக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், அமரராகும் வரையிலான, 11 ஆண்டுகளில், ஒரு சென்ட் நிலமோ, வீடோ அவர் வாங்கியது கிடையாது. அதேசமயம், திரையுலகில் தான் சம்பாதித்த சொத்துகளை, மாற்றுத்திறனாளி குழந்தைகளின் நலனுக்கும், கட்சிக்கும் என, தமிழக மக்களிடமே திருப்பிக் கொடுத்தார். அவர் போல் மக்களின் இதயங்களில் இடம் பிடித்தவர், வேறு யாரும் இல்லை. ஏனெனில், தான் சம்பாதித்த மாபெரும் சொத்து, மக்களின் செல்வாக்கு என நினைத்தார்; அதை மதித்ததுடன், கடைசி வரை கட்டிக்காக்கவும் செய்தார்.
இதற்கு உதாரணமாக, இன்னொரு சம்பவத்தையும் கூறலாம்.
ஒருமுறை எம்.ஜி.ஆருடன் காரில் சென்றேன். அவரது காரைப் பார்த்ததும், சாலையின், இருபுறமும் திரண்ட மக்கள், 'தலைவா வாழ்க! எம்.ஜி.ஆர்., வாழ்க...' என்று கோஷமிட்டனர். இதைப் பார்த்த எம்.ஜி.ஆர்., என்னிடம், 'இவங்க எல்லாருமே எம்.ஜி.ஆர்., வாழ்கன்னு வாழ்த்தறாங்களே தவிர, ஒருத்தர் கூட, முதலமைச்சர் வாழ்கன்னு ஏன் சொல்லலன்னு தெரியுமா?' என்று கேட்டார்.
'உங்க மூன்றெழுத்து பெயர்; அவங்களுக்கு மந்திரம் மாதிரி; அதனால் தான்...' என்றேன்.
'அதுமட்டுமல்ல; முதலமைச்சர் வாழ்கன்னு சொன்னா, அது பதவியை வாழ்த்துற மாதிரி.
எம்.ஜி.ஆர்., வாழ்கன்னு சொன்னா தான், என்னை வாழ்த்துற திருப்தி. இதுதான் நான் சம்பாதிச்ச சொத்து. இதை நான் பத்திரமா காப்பாத்தியாகணும்...' என்றார்.
இறுதி வரை, அவர் சொன்னது போலவே நின்றார்.............

orodizli
20th September 2020, 02:37 PM
எங்கிருந்தாலும் என் சிந்தை முழுவதும் செந்தமிழ் நாட்டில்தான்! - 1
[வெளிநாடு செல்லும் முன் முதல்வர் விடுத்த செய்தி]

நான் அமெரிக்க பேரரசு விடுத்த அன்பழைப்பினை ஏற்று, உங்கள் அனைவரின் நல்வாழ்த்துக்களோடு அமெரிக்கா, மெக்ஸிகோ, பிரிட்டன் , ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு என்னுடைய ஐந்து வாரப் பயணத்தை மேற்கொள்ளுகிறேன். இதற்கு மூன்னரும் நான் ஆசிய ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்கு சுற்றுப் பயணம் சென்றிருக்கிறேன் என்றாலும் இம்முறை மேற்கொள்ளும் பயணத்தை தனிச் சிறப்புடையதாகக் கருதுகிறேன். இப்போது தான் தமிழக மக்களின் பிரதிநிதியாக இந்த நாடுகளுக்குச் செல்லுகிறேன் என்பதை எனக்குக் கிடைத்துள்ள அரிய நல்வாய்ப்பாகக் கருதுகிறேன்.

அமெரிக்காவிலும் நான் செல்ல இருக்கின்ற இதர நாடுகளிலும் எவ்வாறு வாழ்க்கையில் மக்கள் முன்னேற்றம் பெற்றிருக்கிறார்கள் தொழில் வளர்ச்சி எந்தெந்த வகையிலெல்லாம் ஏற்பட்டிருக்கிறது. மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு அங்குள்ள அரசுகள் மேற்கொண் டுள்ள நடவடிக்கைகள் ஆகியவற்றை நான் நேரடியாக அறிந்து கொள்வதற்கும், அறிந்தவற்றை நம்முடைய மக்களின் முன் னேற்றத்திற்குப் பயன்படுத்துவதற்கும் என்னுடைய இந்தப் பயணம் சிறந்த வாய்ப்பாக அமையுமென்று நம்புகிறேன்.

ஐந்து வாரங்கள் தமிழக மக்களோடு நேரடியாகத் தொடர்பு வைத்துக்கொள்ளும் வாய்ப்பு இல்லாமல் போகிறதே என்கிற ஏக்கம் - மனக்குறை எனக்கு இருந்தாலும் வெளிநாடுகளில் தான் பெறும் அனுபவத்தை, மக்களுக்கு பயன்படுத்தும் வாய்ப்புக் கிடைக்கிறதே என்கிற எண்ணத்துடன், ஏக்கத்தைப் போக்கிக்கொண்டு, உங்களின் நிறைந்த நல்வாழ்த்துகளோடு என்னுடைய பயணத்தை மேற் கொள்ள முடிவு செய்தேன்.

ஐந்து வாரங்கள் தமிழகத்திலே தான் இல்லாமல் போனாலும் என்னுடைய அன்புக்கும் தமிழ் மக்களின் நம்பிக்கைக்கும் உரிய என்னுடைய உடன்பிறப்புக்களைக் கொண்ட அமைச்சரவையும், கடமை தவறாமல் பணிபுரிகின்ற அனுபவமிக்க அதிகாரிகளும் நாட்டு மக்களின் கடமைகளை செவ்வனே நிறைவேற்ற இருக்இறார்கள், தமிழக மக்களும்,அனைத்துக் கட்சித் தலைவர்களும் அரசுப் பணிகளும் மக்கள் முன் னேற்றப்பணிகளும் தொடர்ந்து சீரோடும் சிறப்போடும் நடைபெற அரசுக்கு முழு ஒத்துழைம் பினையும் அளிப்பார்கள் என்பதி லும் எனக்கு முழு நம்பிக்கை உண்டு.

தொடரும் ..............

orodizli
20th September 2020, 08:32 PM
திரைப்படத் துறையில் மக்கள் திலகம் இருந்தவரைக்கும் அவர்தான் வசூல் சக்கரவர்த்தி. 1971-ம் ஆண்டு பேசும்படம் பத்திரிகையில் கேள்வி பதில் பகுதியில் தென்னகத்தின் வசூல் சக்கரவர்த்தி யார்? என்ற கேள்விக்கு, ‘எம்.ஜி.ஆர்!’ என்று பதில் சொல்லியிருந்தார்கள். பேசும்படம் மக்கள் திலகத்தின் ஆதரவு பத்திரிகை இல்லை. 1973-ம் ஆண்டு பொம்மை பத்திரிகை கேள்வி பதில் பகுதியில் ‘எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவரில் அதிகம் சம்பளம் வாங்குவது யார்?’ என்ற கேள்விக்கு ‘‘இப்போதுவரை எம்.ஜி.ஆர்.தான் அதிக சம்பளம் வாங்குகிறார்’ என்று பதில் சொல்லியிருந்தார்கள். பொம்மையும் நடுநிலையான பத்திரிகைதான். மக்கள் திலகம் வாங்கிய சம்பளத்தை கடைசிவரை சிவாஜி கணேசன் வாங்கவே இல்லை.

அன்பே வா படத்துக்கு மக்கள் திலகத்துக்கு முதலில் ரூ.3 லட்சம் ரூபாய் சம்பளமாக பேசப்பட்டது. பின்னர், மக்கள் திலகம் மேலும் ரூ.25 ஆயிரம் கேட்டு ஏவிஎம் செட்டியார் கொடுத்தார். இதை ஏவிஎம் சரவணன் மற்றும் அந்தப் படத்தின் வசனகர்த்தா ஆரூர்தாஸ் கூறியுள்ளனர். அதேநேரத்தில் 1966-ல் ஆரம்பிக்கப்பட்டு ஏவிஎம் தொழிலாளர் வேலை நிறுத்தம் காரணமாக 1968-ல் வெளியான உயர்ந்த மனிதன் படத்துக்கு ஒன்றரை லட்ச ரூபாய்க்கு மேல் சிவாஜி கணேசனுக்கு சம்பளம் தர முடியாது என்று செட்டியார் மறுத்துவிட்டார். இதையும் ஆரூர்தாஸ் கூறியிருக்கிறார். ஏவிஎம் சரவணனும், ஆரூர்தாசும் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்கள். மக்கள் திலகத்தின் சம்பளத்தில் பாதி கூட சிவாஜி கணேசனுக்கு ஏவிஎம் கொடுக்க விரும்பவில்லை. அவரது மார்க்கெட் வேல்யூ அவ்வளவுதான். இது சிவாஜி கணேசன் ரசிகர்களுக்கும் தெரியும். Swamy.........

orodizli
20th September 2020, 08:33 PM
‘உன்னை அறிந்தால்.. நீ உன்னை அறிந்தால்.....

தலைவர் நடித்த வேட்டைக்காரன் படத்தில் இடம் பெற்ற, கவியரசரின் வரிகளில், ‘மாமா’ மகாதேவன் அவர்களின் இசையில், தெய்வப்பாடகரின் கம்பீரக் குரலில் கேட்டாலே தன்னம்பிக்கையும் எழுச்சியும் கொடுக்கும் ‘உன்னை அறிந்தால்...’

‘உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலைவணங்காமல் நீ வாழலாம்...

மானம் பெரியதென்று வாழும் மனிதர்களை
மானென்று சொல்வதில்லையா?
தன்னைத் தானும் அறிந்து கொண்டு
ஊருக்கும் சொல்பவர்கள்
தலைவர்கள் ஆவதில்லையா?....

மானத்திலே மயிர் நீப்பின் உயிர்வாழா கவரிமான் போல இருக்க வேண்டும். தன்னையும் அறிந்து கொண்டு ஊருக்கும் வழிகாட்டும் அறிவுரைகளை சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா? அப்படி ஊருக்கு நல்லது சொல்லி தலைவர் ஆனவருக்கு நம் தலைவரே உதாரணம்.

பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
சாமிக்கு நிகரில்லையா?
பிறர் தேவை அறிந்து கொண்டு
வாரிக் கொடுப்பவர்கள்
தெய்வத்தின் பிள்ளையில்லையா?.....

இப்புவியில் நேராக, நேர்மையாக வாழும் எல்லோருமே சாமிக்கு நிகர்தான். இதைத்தான் வள்ளுவரும் வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவர்கள் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்கிறார். பெரியவர்கள் சொல்வார்கள். தெய்வத்திடம் அதுவேண்டும், இது வேண்டும் என்று கேட்காதீர்கள். உனக்கு எது வேண்டும்? என்று தெய்வத்துக்கு தெரியாதா? என்று. அது போல பிறரின் தேவை அறிந்து கொண்டு வாரிக் கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளைகள். அப்படி மக்களுக்கு தேவை அறிந்து வாரிக் கொடுத்த தலைவரும் தெய்வத்தின் பிள்ளைதானே?

மாபெரும் சபைகளில் நீ நடந்தால்
உனக்கு மாலைகள் விழவேண்டும்
ஒரு மாற்றுக் குறையாத
மன்னவன் இவனென்று போற்றிப் புகழ வேண்டும்...

இந்த வரிகளுக்கு பொருத்தமானவர் தலைவர்தான் என்றாலும், நம்மையும் இதுபோல சபைகளில் நடக்கும்போது மாலைகள் விழுவதற்கும் மாற்றுக்குறையாத மன்னவன் என்றும் மற்றவர்கள் போற்றிப் புகழும் அளவுக்கும் உயர்ந்திட வேண்டும் என்கிறார். தான் உயர்ந்தது போல நாம் ஒவ்வொருவரும் சமுதாயத்துக்கு பயன்பட்டு அதன் மூலம் பாராட்டு பெறும் அளவுக்கு உயர வேண்டும் என்கிறார்.

இந்தப் பாடலில் தலைவரின் கெளபாய் டிரஸ்சும் ஸ்டைலும் அட்டகாசம். ‘மா.... ஹூ.. ஹா.. என்ற ஏ.எல்.ராகவனின் தாளக்கட்டு குரலுக்கேற்ப குதிரையில் இருந்து லாவகமாக தலைவர் இறங்கும் அழகை பார்த்துக் கொண்டே இருக்கலாம். தலைவர் எப்போதுமே நடித்துக் கொண்டிருக்கும்போதும் கூட, சூழ்நிலை குறித்து கவனமாக இருப்பவர். கடைசி பாராவின் போது, நடிகையர் திலகம் சாவித்திரியுடன் தலைவர் வேகமாக, ஸ்டைலாக நடந்து வருவார். சாவித்திரியின் பின்னால் குதிரை வந்து கொண்டிருக்கும்.

ஒரு கட்டத்தில் சாவித்திரியின் முதுகை முட்டுவது போல அவரது நடையை விட வேகமாக குதிரை வரும். பெரிய ஆபத்து ஒன்றும் இல்லை என்றாலும் கூட, குதிரை தன் முகத்தால் சாவித்திரியின் முதுகை தள்ளினால் அவர் கீழே விழலாம். அல்லது தடுமாறி ரீ டேக் எடுக்கும் நிலை ஏற்படலாம்.

குதிரை சாவித்திரியின் பின்னால் முட்டுவதைப் போல வருவதை ஓரக்கண்ணால் கவனிக்கும் தலைவர், அதன் முகத்தை பிடித்து பக்கவாட்டில் தள்ளிவிடுவார். குதிரையும் தள்ளிச் செல்லும். இரண்டு நாட்களுக்கு முன் நண்பர் திரு.சிவாஜி செந்தில் தரவேற்றிய இந்தப் பாடலில் இக்காட்சியை கவனித்தால் தெரியும். இதில் ஆச்சரியம் என்னவென்றால் பாடல் வரிகளுக்கும் சரியாக வாயசைத்துக் கொண்டே குதிரையையும் கவனித்து அதன் முகத்தைப் பிடித்து தள்ளிவிடும் கவனமும், நுட்பமும், திறமையும், விழிப்புணர்வும் தலைவருக்கே சொந்தம்.

சரி... இப்படி உலகத்தில் போராடி, உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலைவணங்காமல் வாழ வேண்டும், பூமியில் நேராக வாழ வேண்டும், மாபெரும் சபையில் நடந்தால் மாலைகள் விழ வேண்டும், பிறர் தேவையறிந்து வாரிக் கொடுக்க வேண்டும், ஊருக்கும் நல்லது சொல்லி தலைவர்கள் ஆக வேண்டும் ..........இந்த வேண்டும்கள் எல்லாம் நடக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

உன்னை அறிந்தால்.. நீ உன்னை அறிந்தால்... என்று தலைவர் வழிகாட்டுகிறாரே. அப்படி நம்மை அறிய வேண்டும். அப்படி அறிந்தால் இந்த சிறப்புகளைப் பெறலாம். அது மட்டுமல்ல....

‘ஜீவாத்மா (மனிதன்) வேறு, பரமாத்மா (தெய்வம்) வேறு அல்ல, இரண்டும் ஒன்றே’ என்று அத்வைத தத்துவத்தை போதித்த ஆதிசங்கரரும் நம்மை நாம் அறியச் சொல்கிறார். (நாம் வேறு, தெய்வம் வேறு என்பது இரண்டாக பார்க்கும் கொள்கை. நாமும் தெய்வமும் வேறு அல்ல ஒன்றே, என்பதை விளக்குவதே அத்வைத கொள்கை. த்வைதம் என்றால் இரண்டாக காண்பது, அத்வைதம் என்றால் இரண்டல்லாமல் ஒன்றாக பார்ப்பது. சாத்தியம் என்பதற்கு எதிர்ப்பதமாக முன்னாலே ஒரு ‘அ’ சேர்த்து அசாத்தியம் என்கிறோமே. அதேபோல த்வைதம், அதற்கு எதிர்ப்பதம் அத்வைதம்)

அப்படி, தெய்வம் வேறு நாம் வேறு அல்ல, என்பதை நாம் உணர்ந்தால் உபநிடதங்களில் ஒன்றான பிரகதாரண்ய உபநிடதத்தில் ஆதிசங்கரர் போதித்த ‘அஹம் பிரம்மாஸ்மி’ என்ற முடிவுக்கு வருவோம். அதாவது நாமே கடவுள் என்று பொருள். மனிதனே கடவுள். மகாகவி பாரதியாரும் ‘தெய்வம் நீ என்று உணர்’ என்று கூறியிருக்கிறார்.

கடவுள் தனியாக எங்கும் இல்லை. இதைத்தான் ‘மக்கள் தொண்டே மகேசன் தொண்டு’, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’ என்றார் பேரறிஞர் அண்ணா.

அதன்படி, மக்களை, ஏழைகளை... தெய்வமாக அவர்களுக்கு செய்யும் சேவையையே இறைவன் தொண்டாக உணர வேண்டுமானால், நம்மை உணர வேண்டும். அப்படி நம்மை உணர்ந்தால்

அதாவது.....

உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால்..... அஹம் பிரம்மாஸ்மி.

இந்தப் பாடலை இன்று எழுதலாம் என்று தோன்றி விட்டது என்று முதலில் கூறினேனே. அந்த உந்து சக்தி ஏற்படக் காரணம், மேலே கூறியபடி அத்வைத தத்துவத்தை போதித்த ஆதிசங்கரர் அவதரித்த நாள் இன்று.

‘அஹம் பிரம்மாஸ்மி’.

Couretsy
Kalaivendhan sir.........

orodizli
20th September 2020, 08:36 PM
நெஞ்சிருக்கும்வரை நினைவிருக்கும் - 1

சென்னையிலே ஒரு வீட்டின் முன்னால் எந்த நாளும் எந்த நேரமும் ஆகக்குறைந்தது நூறு பேராவது ஆவல் ததும்பும் முகத்துடன் நிற் கின்றார்களென்றால் அந்த கொடைவள்ளலாகவும் உயர்பண்புகளின் உறைவிடமாகவம் விளங்கும் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்களின் வீடு என நிச்சயமாகச் சொல்லலாம்.

ஆம்! அன்புள்ளம் கொண்ட எம்.ஜி.ஆர். அவர்கனின் அழகுருவத்தை ஒரு தடவையாவது பார்த்து விடவேண்டும் என்ற ஆசையால் வருபவர் பலர் . அவருடன் உரயைாடி மகிழவேண்டும் என்ற ஆவலில் வருபவர் பலர். அவருடைய ஆசியையும் ஆதரவையும் பெறவேண்டுமென்ற அவாவுடன் வருபவர் பலர். எல்லாரையும் கனிவுடன் வரவேற்கிறார் . அன்புடன் உரையாடுகின்றார், கஷ்டங்களை விசாரிக்கின்றார் . தரமறிந்து தகுதி கண்டு தக்க ஆலோசனைகள் கூறு கின்றார். தகுந்த பணவுதவியும் செய்கிறார். காலஞ்சென்ற கலைவாணர் கிருஷ்ணன் அவர்களின் அடிச்சுவட் டைப் பின்பற்றி அவரையும் விட சிறந்த வள்ளலாக விளங்குகின்றார். நாளாந்த வேலைகளில் உணவு உட் கொள்ளுவதிலும் பார்க்க இத்தகைய வேலைகள்தான் முக்கியமானவையாக எம். ஜி. ஆர். அவர்கட்குத் தோன்றுகின்றன. தன் நடிப்பின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்துள்ள அவர் தன் அன்புள்ளத்தினால், தாராள மனப்பான்மையினால், தியாக சிந்தையினால் பல லட்சம் மக்களைக் கவர்ந்துள்ளார். எனக்கும் எம்.ஜி.ஆர், அண்ணா அவர்கட்கும் வெகுசமீபத்தில் தான் தொடர்பு ஏற்பட்டது.

தொடரும்.............sb.,

orodizli
20th September 2020, 08:42 PM
நோயில்லா அரசு

நிர்வாகத்தில் நிகரிலா நாணயம்
தலையீடில்லாச் சக்கரச் சுழற்சி
காலத்தாலே காரியம் செய்தல்
இன்ன தேவை இப்பொழுதென்று
அன்னதை மட்டும் அளந்து முடித்தல்
வெற்றுப் பேச்சுகள் விளம்பர மேளம்
அண்டா திருக்கும் அட க்கப் பெருநிலை
மந்திரி என்னும் மமதையில்லாமல்
கலந்து பழகும் கண்ணியப் போக்கு
போலீஸ் கூட்டம் புடைசூழாமல்
மக்கள் நடுவே வலம்வரும் அழகு வேளாண்மைக்கு வியத்தகும் உதவி தமிழின் மேன்மையைத் தரணியில் காக்க
புதுப்புதுச் செயல்கள் ! பொன்னெழுத்தாக எழுதும்
வண்ணம் இயக்கும் திறமை;
குறையையே தேடும் கூட்டங்களுக்குத் தீனிபோடாத செம்மையும் மேன்மையும் பற்றாக் குறையெனப் பதறா திருத்தல்
கடன்களை எழுப்பிக் கவலை தராமல்
நிவாரணப் பணிஎன நிதிதிரட்டாமல் திட்டத்துடனே செயல்படும் உயர்வு!
கட்சிக்காரனைக் கட்டுப் படுத்தி ஆட்சி நேர்மையின் அறத்தினைக் காத்தல்;
வள்ளுவன் வகுத்த வழிகளுக்கிணங்க
நல்லர சொன்றை நடாத்திக்காட்டுதல்;
இவையெலாம் பெற்றதே இன்றைய ஆட்சி!
சுவையெலாம் திரண்டு சோற்றில் விழுந்தபோல்
பசியுள பேர்க்கெலாம் பயனுள விருந்து புகழ்ந்து
பேசாது போகின்றவர்களும் இகழ்ந்து பேசிட எதுவுமே இல்லை;
நல்லர சென்று நவிலும் முறைக்கு இலக்கணம் வகுத்தது இன்றைய ஆட்சி:
ஓராண்டு போல உயர்ந்து வளர்ந்து நூறாண்டு வாழ்கஇந் நோயில்லா அரசு.

அரசவைக்கவிஞர் கண்ணதாசன்....சை. பா.

orodizli
21st September 2020, 06:50 AM
பணத்தோட்டம் அற்புதமான த்ரில்லர், சஸ்பென்ஸ் படம். எலக்ட்ரிக் சேர் எல்லாம் அப்போது புதிது. அதில் உட்கார்ந்து எஸ்.வி. சுப்பையா கடைசியில் தற்கொலை செய்து கொள்வார். மறுபடி மறுபடி காட்சியை எடுத்த டைரக்டர் சங்கரிடம் ‘‘என்னிடம் என்ன மாதிரி நடிப்பை எதிர்பார்க்கிறீர்கள்? ஒவ்வொருவருக்கு ஒரு நடிப்பு பாணி உண்டு. மற்றவர்களின் நடிப்பை என்னிடம் எதிர்பார்க்காதீர்கள்’’ என்று மக்கள் திலகம் சொன்னது உண்மைதான். இதை சங்கரே சொல்லி இருக்கிறார். மக்கள் திலகத்துக்கென்று இயற்கையான நடிப்பு பாணி உள்ளது. அதை சங்கர் புரிந்து கொண்டார். அதன் பிறகு மக்கள் திலகத்தை வைத்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்தார்.

மக்கள் திலகம் சிறந்த நடிகர் மட்டுமல்ல, சிறந்த டைரக்டரும் கூட. தனது சொந்த படங்களான நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன் படங்களை அவரே இயக்கினார். என்றாலும் கே.சங்கரின் உழைப்பையும் திறமையையும் நேர்மையையும் தெய்வபக்தியையும் பார்த்து தனது சொந்தப் படமான அடிமைப் பெண் படத்தை இயக்கும் வாய்ப்பை சங்கருக்கு தந்தார். அவரை தனது சம்பந்தியாகவும் ஆக்கிக் கொண்டார். .........

orodizli
21st September 2020, 06:51 AM
நாம் அடிக்கடி சொல்வது போல மக்கள் திலகத்தின் வள்ளல் தன்மை, சினிமாவில் அவரது சண்டைக் காட்சிகள், இயக்கம், எடிட்டிங், வசூல் சக்ரவர்த்தியாக திகழ்ந்தது, மக்கள் செல்வாக்கு, அரசியல் வெற்றிகள் பேசப்பட்டதுபோல அவரின் நடிப்புத் திறன் பேசப்படவில்லை. நாமும் அதில் அவ்வளவு அக்கறை காட்டவில்லை.

பணத்தோட்டத்தில் மக்கள் திலகம் சிறையில் இருந்து தப்பி சரோஜா தேவி வீட்டுக்கு மாடி வழியே ஏறி வீட்டுக்குள் வந்து அவரை சந்திப்பார். சத்தம் கேட்டு சரோஜா தேவியின் தந்தை எஸ்.வி. சுப்பையா அங்கு வந்து மக்கள் திலகத்தை விசாரிப்பார். திருமணமாகாத பெண்ணை இப்படி சந்திப்பது தவறு என்றும் உனக்கு ஒரு தங்கை இருந்து இதே மாதிரி நிலை ஏற்பட்டால் என்ன செய்வாய்? என்றும் ஒரு பெண்ணின் தந்தையாக நியாயமான கேள்வியை கேட்பார்

மக்கள் திலகம் பதில் சொல்ல முடியாமல் தவறை நினைத்து வருந்தி கும்பிட்டு மன்னிப்பு கேட்பார். அப்போது, தன் நிலையை எண்ணி லேசாக விம்முவார். அற்புதமான நடிப்பு. தவறு செய்துவிட்ட மனசாட்சியுள்ள அந்த சூழ்நிலையில் ஒரு மனிதன் இப்படித்தான் நடந்து கொள்வான். மன்னிப்பு கேட்டுவிட்டு சட்டென திரும்பி வந்தவழியே போக முயற்சிப்பார். அப்போது, சுப்பையா, ‘போகும்போதாவது இப்படி போ’ என்று வாசல் வழியை காட்டுவார். அவமானம் தாங்காமல் சுப்பையாவின் முகத்தை பார்க்க முடியாமல் தலைகுனிந்து இடது கையால் ஒரு கண்ணை மூடியபடி கூனிக்குறுகி மக்கள் திலகம் வெளியேறுவார். இன்னும் கண்ணிலேயே நிற்கும் காட்சி அது..........ஸ்வாமி...

orodizli
21st September 2020, 06:52 AM
நடிகப்பேரரசர், பதிவு அருமை. நான் ஏற்கெனவே நமது இந்தப் பக்கத்தில் கமெண்ட் பகுதியில் ரிக் ஷாக்காரன் வசூல் விவரம் பற்றி விளக்கம் கொடுத்து, மக்கள் திலகம் குழுக்களிலும் பதிவிட்டுவிட்டேன். சந்தடி சாக்கில் ராஜா திரைப்படம் சென்னை அகஸ்தியாவிலும் 100 நாள் ஓடியது என்று பொய் சொல்லும் அளவுக்கு போய்விட்டார்கள். உண்மையில் அது தேவி பாரடைஸ் மற்றும் ராக்ஸியில்தான் 100 நாள் ஓடியது. ஆனால், ரிக் ஷாக்காரனை வசூலில் மிஞ்சியதாக காண்பிக்க அகஸ்தியாவிலும் 100 நாள் ஓடியதாக எப்படி எல்லாம் பொய் சொல்கிறார்கள்? நம்மிடம் 4 , 5 படங்களின் வசூலை மட்டுமே போடுகிறோம் என்று சொல்பவர்கள் இருதுருவம், பாதுகாப்பு, தங்கைக்காக, போன்ற பல படங்களின் வசூலை டி.சி.ஆர் காப்பியுடன் வெளியிட்டுவிட்டு நம்மிடம் கேள்வி கேட்டால் நன்றாக இருக்கும்....ஸ்வாமி......

orodizli
21st September 2020, 01:40 PM
#வாத்தியார் #ஸ்டைல்

#புதியசூரியனின் (உதய) #பார்வையிலே என்ற காலத்தால் அழிக்கமுடியாத பாடலின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது...

எம்ஜிஆருக்கு பின்புலமாக சூரியன் தெரியும் வகையில் ஷாட் அமைந்தால் நன்றாக இருக்கும் என்று நானும், இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தரும் பேசிக் கொண்டிருந்தோம். ஆனால் அங்கிருந்த உயரமான மலைக் குன்றின் ஏறி நின்றால் தான் அந்த ஷாட்டை எடுக்க முடியும்.

ஏற்கனவே உயரமான
பகுதியில்தான் படப்பிடிப்பை நடத்திக்கொண்டிருந்தோம். இன்னும் உயரமானப் பகுதிக்குச் சென்றால், ஆக்ஸிஜன் குறைவாக இருக்கும் என்பது பற்றியும் நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம்.

அப்போது ‘#நான் #ரெடி’ என்று ஒரு குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தபோது, நானும், திருலோகசந்தரும் கூறிய இடத்தில் நின்று கொண்டிருந்தார் #எம்ஜிஆர். படத்தில் ஒரு பிரேம் நன்றாக வர வேண்டும் என்பதற்காக அவர் அந்த அளவுக்கு முயற்சி எடுத்துக் கொண்டது எங்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் அளித்தது...

#avmசரவணன்
--------------------------------------------------------------------
வாத்தியாரின் தொழில்நுட்ப அறிவு வார்த்தைகளால் விவரிக்க இயலாதது. எந்த நவீன வசதியும் இல்லாத அக்காலகட்டத்திலேயே இன்றைய திரைப்படங்களுக்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு பிரமிக்கத்தக்க வகையில் காட்சிகளை அமைத்திருப்பார். அதற்காக மெனக்கெடுவார்.

வாத்தியாரே ! நீ வசனமே பேசவேண்டாம்...பாட வேண்டாம்...ஆட வேண்டாம். ஸ்டைலா உன் பாணியில் ஒரு கையை மட்டும் உயர்த்து...அதுக்காகவே எங்க உயிரையே விட்டுடுவோமே!

இன்றைய காலகட்டத்தில் நம்ம வாத்தியார் மட்டும் இருந்திருந்தால்...

உலக திரைப்பட வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தையே படைத்திருப்பார்............bsm...

orodizli
21st September 2020, 01:45 PM
மலரும் நினைவுகள் ...
முதல் வெளியீட்டில் 1960 - 1978

மக்கள் திலகம் எம்ஜிஆர் திரைப்படங்கள் பற்றிய செய்திகள் , திரைப்பட விளம்பரங்கள் , படப்பிடிப்பு செய்திகள் படித்தது .

எம்ஜிஆர் படம் வெளிவரும் திரை அரங்கில் ஒட்டப்படும் ''வருகிறது '' போஸ்டர்களை கண்டு மகிழ்ந்தது
.
எம்ஜிஆர் படம் ''வருகிறது '' போஸ்டர் நகரம் முழுவதும் ஒட்டப்பட்டதை கண்டு பரவசம் அடைந்தது .

வேறு படங்களுக்கு சென்று எம்ஜிஆர் புதுப்படம் வருகிறது என்ற ஸ்லைடு கண்டு ரசித்தது .

எம்ஜிஆர் படம் ''இன்று முதல் '' விளம்பரம் கண்டு ஆனந்தமடைந்தது
.
எம்ஜிஆர் படம் வெளிவரும் திரை அரங்கில் வைக்கப்பட்ட ஸ்டில்ஸ் களை பார்த்து வியந்தது .

எம்ஜிஆர் படம் வெளிவரும் திரை அரங்கில் ஸ்டார் மற்றும் தோரணங்கள் அலங்கரிப்பை கண்டு வியப்படைந்தது.

எம்ஜிஆர் படம் வெளிவரும் நாளில் கூடிய ஆயிரக்கணக்கான ரசிகர்களின் ஆரவாரத்தை கண்டு பரவசமடைந்தது

எம்ஜிஆர் ரசிகர்கள் நடத்திய பிரமாண்ட அலங்கார ஊர்வலத்தை பார்த்து ஆனந்தமடைந்தது .

எம்ஜிஆர் மன்றங்கள் சார்பாக விநியோகித்த வரவேற்பு நோட்டீஸ் மற்றும் இனிப்புகள் வழங்கிய காட்சிகளை மறக்க முடியாதது .

எம்ஜிஆர் படத்தின் பெட்டியை திரை அரங்கில்; எடுத்து செல்லும்போது ரசிகர்கள் எழுப்பிய ஆரவாரங்கள்

இடைவேளை நேரத்தில் எம்ஜிஆர் படத்தின் பாடல் புத்தகத்தை வாங்க ரசிகர்கள் முண்டியடித்த காட்சிகள்
.
எம்ஜிஆர் படத்தின் முதல் நாள் முதல் காட்சியில் திரை அரங்கில் ரசிகர்களின் விசில் மற்றும் கைதட்டல்கள்

எம்ஜிஆர் படம் - சென்சார் காட்சி தொடங்கியதும் துவங்கிய காட்சி முதல்
எம்ஜிஆர் படத்தின் டைட்டில் தொடர்ந்து எம்ஜிஆர் அறிமுக காட்சிகள் , பாடல் காட்சிகள், சண்டை காட்சிகள் சிறந்த நடிப்பு காட்சிகள்
என்று படம் இறுதி காட்சி வரை ரசிகர்களை மகிழ்வித்த எம்ஜிஆரை பாராட்டி வெளியே சிரித்த முகத்துடன் வெளிவந்தது
படம்
பிரமாதம் என்று வர்ணித்த ரசிகர்களின் உணர்வுகளை மறக்கவே முடியாத நாட்களாகும்......... .vh....

orodizli
21st September 2020, 02:32 PM
"ஒளி விளக்கு" மக்கள் திலகத்தின் 100 வது படம். வானவில்லின் ஏழு வர்ணங்களை இணைத்து. வரும் வர்ண ஜாலங்களை திரையில் ஜொலிக்க செய்த ஜெமினியின் வண்ணக்காவியம்தான் "ஒளிவிளக்கு". ரசிகர்களின் கனவுப்படம் என்று சொன்னால் அது மிகையாகாது.

1968 செப் 20 ந்தேதி தீபாவளிக்கு முந்தைய மாதத்தில் வெளியான ஒரு அற்புதமான ரசனை மிகுந்த காவியம். எம்ஜிஆரின் ஸ்டைலுக்கும் அழகுக்கும் வண்ணமிகு நேர்த்தியான ஆடை வடிவமைப்புக்கும், அலங்காரத்துக்கும்
எத்தனை முறை பார்த்தாலும் இன்னோரு சொர்க்கலோகம் போல கண்ணுக்குள் நிழலாடிக் கொண்டிருக்கும் எழில்மிகு ஓவியம்.

எம்ஜிஆரின். ஸ்டைலோடு கலந்த சுறுசுறுப்பை படத்தில் காணலாம். தீபாவளி ஒரு மாதத்திற்கு முன்பே வந்தது போல தமிழ் நாட்டில் "ஒளிவிளக்கு" திரையிடப்பட்ட திரையரங்குகள் விழாக்கோலம் பூண்டது. கிராமத்திலுள்ள மக்கள் அனைவரும் முந்தைய நாளே திரையரங்கின் முன் குவிந்ததால்
ஊரில் ஜனநடமாட்டம் அதிகம் காணப்பட்டது.

தூத்துக்குடியில்
தியேட்டர் வாசலில் டெலிவிஷன் மாடலில் செய்யப்பட்ட பெட்டியில் எம்ஜிஆரின் திரு உருவத்துடன் "ஒளிவிளக்கு" எம்ஜிஆரின் 100 வது
படம் என்ற வாசகத்துடன் கலர் விளக்குகளை சுழல விட்டு எம்ஜிஆர் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்தனர் எம்ஜிஆர் மன்றத்தினர். அதை பார்க்க மக்கள் கூட்டம் முண்டியடித்து தியேட்டர் வாசலை நிரப்பி விடுவார்கள்.

"ஒளிவிளக்கு" படத்தின் வால் போஸ்டர் புதுமையான முறையில் கறுப்பு பார்டர் வைத்து மிக உயர்ந்த பேப்பரில் அடித்திருப்பார்கள். அதை எவ்வளவு நேரம் பார்த்தாலும் அலுப்பு தெரியாது. அதை பார்க்க எத்தனை கூட்டம் டிராபிக் ஜாம் ஆகிவிடும் அளவுக்கு. முதல் மூன்று நாள் தியேட்டர் முன்பு டிராபிக் தடை செய்யப்பட்டது.

சிலர் புலம்பிக் கொண்டே செல்வதை பார்த்திருக்கிறேன் சே! இந்த எம்ஜிஆர் படம் போட்டால் இந்த வழியில் வரவே முடியவில்லை.சிவாஜி படம் போட்டா எந்த பிரச்னையும் கிடையாது. இனிமேல் இந்த மாதிரி தியேட்டரில் எம்ஜிஆர் படம் போட அனுமதிக்க கூடாது என்று "பாலகிருஷ்ணா" தியேட்டரை வசை பாடிச் சென்ற அந்த பகுதி மக்களின் கஷ்டம் சிவாஜி ரசிகர்களுக்கு மட்டும் நன்றாகவே புரிந்திருக்கிறது. ஏனென்றால் எந்தச் சூழ்நிலையிலும் அவர்கள் மக்களுக்கு இப்படி ஒரு கஷ்டம் கொடுத்ததில்லை என்பதை நினைக்கும் போது அவர்களின் சமூக சேவை வெகுஜன பாராட்டுதலுக்கு உரியது.

சென்னையில் 5 தியேட்டரில் வெளியாகி 100 நாட்கள் ஓடாமலேயே 9,28,171.28. ரூ வசூலாக பெற்று சாதனை செய்தது. தமிழகத்திலும் கர்நாடகாவிலும் மொத்தம் 64 தியேட்டரில் வெளியாகி 63 திரையரங்குகளில் 50 நாட்கள் ஓடிய ஒரே தமிழ் படம் "ஒளிவிளக்கு"தான். இதை நாங்கள் ஒரு நாளும் சொல்லி தம்பட்டம் அடித்ததில்லை. ஆனால் சிவாஜி ரசிகர்கள் சில நாட்களுக்கு முன்
"சிவந்த மண்" 37 தியேட்டரில் 50 நாட்கள் ஓடியதாக விளம்பர பேப்பரை காட்டி இணையத்தில் சவால் விட்டதை பார்த்துதான் இந்த பதிவை நான் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். சிவாஜி ரசிகர்களை கேட்கிறேன், உங்களின் எந்த படமாவது 50 தியேட்டரிலாவது வெளியாகி இருக்கிறதா? இருந்தால் வெளியிடுங்கள். அதன் பிறகு 50 நாளை பற்றி பார்க்கலாம்.

அந்த மாதிரி பிரமாண்ட செயல்களை செய்யக்கூடிய "ஜெமினி" நிறுவனத்தையே
"விளையாட்டு பிள்ளை"யால் மூட வைத்த பெருமை பெற்றவர்களே
இனி ஒரு சாதனை இதைப்போல் கிட்டுமோ?. அரிச்சந்திரா வில் ஒரு வசனம் சிவாஜி பேசுவார் முடி சூடிய மன்னனும் முடிவில் பிடி சாம்பலாவார் என்று. அது அவரை வைத்து படம் எடுத்துதான் என்பதை உணர்ந்தோம்.

நம்ம வடிவேலு பாணியில் சொல்வதானால் அய்யா! அய்யா! "எமனுக்கு எமன்" படம் நடிச்சீங்களே அய்யா! அந்த எமன் யாருன்னு தெரியாம உங்களை வைச்சு படமெடுத்து அழிஞ்சுட்டாங்களே அய்யா! இன்னும் உங்க கண்ணுல படாம நிறைய பேர் தப்பிச்சு இப்ப எங்க கழுத்தை அறுக்கிறானுவளே அய்யா!. நீங்கதான்யா நம்ம ரசிகனுவளை காப்பாத்தணுமய்யா. அவனுவளை அன்றே நீங்க கவனித்திருந்தால் இன்றைக்கு எங்களுக்கு இந்த நிலை வருமா அய்யா? சரி விஷயத்துக்கு வருவோம். இன்று வரை அதிக தியேட்டரில் 100 நாட்கள் ஓடிய சாதனை "மதுரை வீரனு"க்கே. அதேபோல் அதிக தியேட்டரில் 50 நாட்கள் ஓடிய சாதனை "ஒளி விளக்கு" படத்துக்குக்குதான் என்பதை உணருங்கள்.

எல்லா சாதனையும் தன்னலம் கருதாத எங்கள் தலைவனுக்கே எனும்போது மட்டற்ற மகிழ்ச்சியாக இருக்கிறது. இலங்கையில் முதல் வெளியீட்டில் மட்டும் 8 தியேட்டரில் 50 நாட்கள் ஓடியதை நாங்கள் கணக்கில் சேர்க்கவில்லை. அடுத்தடுத்து பலமுறை 50 நாட்களும் 100 நாட்களும் ஓடியதை கணக்கில் சேர்க்கவில்லை. "ஒளிவிளக்கு" Houseful போர்டை பார்த்தே மிரண்டு நம்ப மறுக்கும் நீங்கள் உண்மை என்பது கபசுர குடிநீர் போல மிகவும் கசப்பானது என்பதை உணர்ந்து அதை குடித்து உங்கள் எதிர்ப்பு நோயை தீர்த்துக் கொள்ளுங்கள்.

"ஒளிவிளக்கி"ன் மறு வெளியீட்டு சாதனையை அவ்வளவு எளிதில் சொல்லிவிட முடியாது என்பதால் உங்கள் நோய் தீர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்க விழைகிறோம்.........KS.,

orodizli
21st September 2020, 02:34 PM
தலைவரின் 100 வது படம் அதுவும் ஜெமினி நிறுவன படம் என்ற பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்து வெற்றி பெற்ற சிறந்த படம் ! புதுவையில் அக்காலத்தில் நவீனா என்ற திரையரங்கில் படம் வெளிவந்தது ! எங்கள் மன்றத்தின் சார்பாக திரையரங்கின் வெளிமுகப்பு முழுவதும் செஞ்சி கோட்டை போல 50 அடி அகலம் செட் போட்டு அலங்கரித்து மலர் வெளியிட்டு வழக்கம் போல இனிப்புகள் வழங்கி விழாக்கோலம் பூண்டு அமர்கலப்படுத்தினோம் ! மறக்க இயலாத மலரும் நினைவுகள் ! அருமையான பதிவு ! நன்றிகள் பல ! ...spmp.,

orodizli
21st September 2020, 02:37 PM
இந்த காலங்களில் கை கால் உதறுனா ஸ்டைல் என்று சொல்கிறார்கள் அந்த காலங்களில் எங்கள் புரட்சித்தலைவர் படங்களில் ஸ்டைல்கள் அற்புதமாக அழகாக இருக்கும் அதில் "ஒளிவிளக்கு" திரைப்படத்தில் மின்னும் அழகில் புரட்சித்தலைவர் ஸ்டைல்கள் சூப்பர் ஆக இருக்கும் அதை கண்கோடி மக்கள் கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளனர் இப்பொழுதும், எப்பொழுதும் மகிழ்ச்சி தான்������.........அருமை... "ஒளிவிளக்கு" காவியத்தின் அன்றைய சரித்திர சாதனை அளவீடுகள் நுட்பமாக சொன்னீர்கள். அன்று மட்டுமல்ல, இன்றும்...என்றும் இப்படத்தின் டிஜிட்டல் விநியோக உரிமைகள், தொலைக்காட்சி உரிமைகள் வாங்க போட்டா போட்டி நடந்தேறி வருகின்ற முக்கியமான தகவல்கள் நிச்சயம் எடுத்து சொல்ல வேண்டும். முக்கிய விநியோகஸ்தர்கள்(மிக பெரிய அளவில்) மும்பை (பம்பாய்) சென்று வாங்கிவிட பெரும் முயற்சிகளை இன்னும் மேற்கொண்டு வருகின்றனர் என்பதை எல்லோருக்கும் தெரிய படுத்துவோம்..........தஞ்சை கிருஷ்ணா திரை அரங்கில் வெளியானது!
அப்போது நான் தஞ்சை
St. Antony's High school ல்
படித்து கொண்டிருந்தேன்!

அந்த
" தைரியமாக சொல் நீ மனிதன் தானா" பாடலும்
5 MGR களின் ஸ்டைலும் , வாவ்!
நான் பள்ளி நாட்களில் பார்த்து ரசித்து பரவசமாகி, நண்பர்களிடம் பகிர்ந்து மகிழ்ந்த நாட்கள் இன்னமும் நினைவில் பசுமைமாறாமல் உள்ளன!.........

orodizli
21st September 2020, 02:39 PM
நடிகை பேரரசு என்ற எம்ஜிஆரின் ஆவலைத் தூண்டும் அன்பருக்கு வணக்கம் இந்தப் படம் ரிலீஸானபோது அந்த சினிமா தியேட்டர் திருப்பூர் உள்ள டைமண்ட் தியேட்டர் என்ற சிறப்பு பெற்ற திரையரங்கம் அந்த தியேட்டரில் ஓனர் தோள் மேல் கை வைத்து விட்டால் படம் பார்த்துவிடலாம் நாங்கள் போனது 10:00 10 மணிக்கு போய் இரண்டு மணி டிக்கெட் கிடைக்கவில்லை இரண்டு மணி டிக்கெட் முடிந்த பத்து மணி டிக்கெட் கிடைக்கவில்லை திரும்ப ஒருமுறை டிக்கெட் மட்டுமே என்னை தொட முடிந்த அவர் நாள் ஆகையால் 32 ஷோ முடிந்து மூன்றாவது பாட்டு வந்த அந்த நிலையில் அந்த தியேட்டரில் மதிப்பில் பைசா முடிந்து என்று நினைக்கிறேன் அஞ்சனா 31 காசுகள் கொடுத்து அந்தத் திரைப்படம் பார்த்த ஞாபகம் எனக்கும் இன்னும் உள்ளது ஒன்பது வயதில் அந்த படத்தை திரையிட்டார் அப்போது முதல் இன்று வரை அந்த தியேட்டருக்கு என்று திருப்பூரில் நல்ல மதிப்பும் இன்றும் உள்ளது ஆகையால் நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை உண்மை என்று சொல்லி வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் வணக்கம் ஐயா... 1984ல் மறு வெளியீட்டில் சென்னையில் திரையிடப்பட்ட அத்தனை தியேட்டரிலும் இரண்டு வாரம் ஹவுஸ் புல்லாக ஓடியது. அப்போது சென்னையில் புயல் கனமழை காரணமாக அண்ணா சாலையில் அத்தனை திரையரங்கிலும் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. ஆனால் பாரகன் திரையரங்கில் கூடிய கூட்டம் காரணமாக ஒளிவிளக்கு படம் மட்டுமே திரையிடப்பட்டது என்பது கூடுதல் தகவல்.........

orodizli
21st September 2020, 07:44 PM
வாத்யாருக்கு வாத்யார்!
---------------------------------------
எம்.ஜி.ஆரும் கண்ணதாசனும் இன்றையப் பதிவை அலங்கரிக்கிறார்கள்!
"நாடோடி மன்னன்!"
எம்.ஜி.ஆரின் கை வண்ணத்தால் தமிழ் திரையுலகம் கண்ட பிரம்மாண்ட வளர்ச்சி!
இந்தப் படத்தைச் சார்ந்த சுவையான தகவல்களைச் சொல்லுமாறு என்னிடம் கேட்ட ஜெயசுதாவுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்!
இந்தப் படத்துக்கு முதலில் கண்ணதாசனைத் தான் வசனம் எழுதச் சொன்னார் எம்.ஜி.ஆர்!
உதிரம் சிந்தி நீங்கள் உருவாக்குவீர்கள்! நானோ
உட்கார்ந்த இடத்தில் முழுப் படத்துக்குமான வசனங்களையும் எழுதித் தர இயலாத அளவுக்கு எனக்குப் பணிச் சுமை! ரவீந்திரனை வைத்தே வசனம் எழுதிக் கொள்ளுங்களேன் என்று கவிஞர் கேட்டுக் கொண்டதற்கு ஒப்புக் கொண்ட எம்.ஜி.ஆர்,,கூடவே கவிஞருக்கு ஒரு அன்புக் கட்டளையிட்டார்!
முக்கியமான பதினைந்து இடங்களை நான் குறித்து வைக்கிறேன். அந்த இடங்களில் மட்டுமாவது நீங்கள் தான் வசனங்களை எழுத வேண்டும்!!
கவிஞர் ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து--
கவிஞர்--ரவீந்திரன் இருவராலும் வசனம் எழுதப்ப்பட்டது!
கவிஞரிடம் இருந்த ஒரு பழக்கம் அன்றையத் திரையுலகத்தில் வெகுப் பிரசித்தம்!
அது??
பாடல் எழுத எந்தக் கம்பெனிக்கும் அவர் குறிப்பிட்ட நேரத்தில் சென்றதே கிடையாது! அதாவது--
நேரம் தவறிச் செல்வதையே அவர்-
தவறாமல் கொண்டிருந்தார்!
அன்று,,எம்.ஜி.ஆர்,,கவிஞரிடம் சொல்கிறார்--
ஆண்டவனே,, நாளைக்கு பாடல் கம்போஸிங்குக்கு நேரம் தவறாமல் வந்துடுங்க!
அந்த விஷயத்துல தான் உங்கக் கிட்ட எனக்கு பயமே??
நாளைக்கு எட்டு மணிக்குத் தானே கம்போஸிங்? நான் கரெக்ட்டா 7.50க்கு இருப்பேன்.போதுமா??
கவிஞர் உறுதியுடன் சொல்கிறார்--
மறு நாள்--
எட்டாயிற்று,,ஒன்பதாயிற்று,,பத்தும் ஆயிற்று--
கவிஞர் தம் கொள்கையை விட்டுக் கொடுப்பாரா என்ன??
பத்தே முக்காலுக்கு வேக வேகமாக வருகிறார்--
எம்.ஜி.ஆர்,,கவிஞரை வரவேற்கிறார்--
வாங்க ஆண்டவனே,,சொன்ன நேரத்துக்கு வந்துட்டீங்களே??
அசட்டு சிரிப்புடன் எம்.ஜி.ஆரின் குத்தலை வாங்கிக் கொள்கிறார் கவிஞர்!
ஆண்டவனே,,இவ்வளவு நேரமா வெயிட் பண்ண நேரத்தை வீணாக்க வேணாமேன்னு,,நம்மப் பட்டுக்கோட்டையார் கிட்டே ஒரு பாட்டு எழுதி வாங்கினேன். எங்கயாவது திருத்த வேண்டியிருக்கான்னு பாருங்க??
அதாவது--
பதிவின் தலைப்பு?
தம்பி பட்டுக்கோட்டையோட தமிழை நான் திருத்தறதா?? அதை விட அவரையும் அவர் தமிழையும் வேற எப்படியும் அவமானப்படுத்த முடியாது??
மறுக்கின்ற கவிஞரிடத்தில் தான் எத்தனைப் பெருந்தன்மை?
எம்.ஜி.ஆரும் விடுவதாய் இல்லை--
எனக்காகக் கொஞ்சம் பார்த்துடுங்களேன்??
கவிஞரும் அந்தப் பாடல் வரிகளில் விழியை ஓட விடுகிறார்!
ஆம்! தூங்காதே தம்பி தூங்காதே பாடல் தான் அது!
எம்.ஜி.ஆர் சுட்டிக் காட்டிய இடத்தில் படித்தக் கவிஞர்,,இதுக்கு லேட்டா வந்த என் கன்னத்துலே நீங்க அறைஞ்சிருக்கலாமே என சிரித்துக் கொண்டே கூற--குழந்தையைப் போல் குலுங்கிச் சிரிக்கிறார் எம்.ஜி.ஆர்--
எம்.ஜி.ஆர்,,கவிஞரிடம் காட்டிய அந்த வரிகள்--

போர்ப் படை தனில் தூங்கியவன்
வெற்றி இழந்தான்--உயர்ப்
பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்
கடைதனில் தூங்கியவன் முதல் இழந்தான்-கொண்டக்
கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான்?
இன்னும் பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால்--பல
பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா!!
என்ன தோழமைகளே??
ரசிக்கும்படி தானே இருக்கிறது???!!!.........

orodizli
21st September 2020, 07:48 PM
தான் இறக்கும் சமயத்தில் எம் .ஜி .ஆர் .,அவர்களுக்கு மட்டும் தகவல் சொல்லி அனுப்புங்கள் என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சொல்லியதாக ஒரு பத்திரிகையில் படித்தேன்.....

நீங்கள் அவரை எப்போது கடைசியாக சந்தித்தீர்கள் என்று
துங்கபத்ரா அணைக்கட்டு பகுதியில் இருந்து கே.என்.காடுமுத்து என்றவர் கேட்ட கேள்விக்கு தலைவர் சமநீதி என்ற இதழில் அவர் அளித்த பதில்.

ஆம் நெஞ்சம் பதறுகிறது...அவரை நான் கடைசியாக பார்த்தது நான் கால் முறிந்து சிகிட்சையில் மருத்துவமனையில் இருந்த போது என்கிறார் தலைவர்.

தலைவர்கள் நேரத்துக்கு ஏற்ப காலத்துக்கு வேண்டி உருவாகலாம்...ஆனால் உண்மை தலைவர்களே காலம் கடந்தும் மக்கள் சான்றோர்கள் நினைவில் இருப்பார்கள் என்பதற்கு...இந்த நிகழ்வே பெரும் சாட்சி ஆக அமைகிறது.

வாழ்க தலைவர் புகழ்.

வாழ்க பட்டுக்கோட்டையார் நினைவுகள்...நன்றி..........

orodizli
21st September 2020, 07:52 PM
அமெரிக்க அரசின் அழைப்பின் பேரில் அங்கு செல்லும் தமிழக முதல்வர் திரு.எம்.ஜி.ஆர், தனது லண்டன் அனுபவங்களை அழகாக எடுத் துரைக்கின்றார்

லண்டன் கேள்வி-பதில்

கேள்வி : அமெரிக்கா செல்லவிருக்கும் நீங்கள் அங்கு அவதாவித்து தமிழகத்தில் மாறுதல் உண்டாக்க இருப்பவை எவையோ?

பதில் : மெக்ஸிக்கோ சென்று கரும்புச்சக்கையில் காகிதம் உற்பத்தி - அதுவும் பத்திரிகைகளுக்கான காகிதத்தயாரிப்பு - பற்றிய இலகுவான வழி முறைகளைக் கண்டறிந்து அதைத் தமிழக மக்கள் பயன்படும் படியாக வழி கோலுவேன். கூடவே அமெரிக்க ஐக்கிய ராஜ்ஜியத்தில் மூன்று வார காலம் தங்கியிருந்து அங்கு காவல்துறை ஆற்றும் சேவையைக் கவனிப்பதுடன் , காவல்த்துறையினர் கண்ணிய மாகக் கடமையாற்றும் விதங்களையும் தெரிந்துகொள்வேன் . பின்னர் ஜப்பான் சென்று அங்கு குடிசைக் கைத்தொழில் வளர்ச்சிபற்றி நோடியாகவே காண்பதுடன் தமிழக மக்களும் அவ்விதம் செயல்படுத்தலைத் தொடங்க ஏற்ற நடவடிக் கைகளை எடுப்பேன். சிங்கப்பூர் சென்று இருநாட்கள் தங்கிவிட்டு, டிசம்பர் முதல்வாரத்தில் எனது பயணத்தைப் பூர்த்திசெய்வேன்.

கேள்வி : தமிழகத்தில் தர்மத்தின் ஆட்சி நிலவுவதாகப் பரவலாக எங்கும் பேசப்படும் அதே வேளையில் அண்மையில் நடைபெற்ற உறர்த்தாலைத் தொடர்ந்து கலைஞரின் வீடு சேதமுற்றதே?

பதில் : தீங்கு எங்கு நடந்தாலும் அது துடைப்பது தான் அரசின் வேலை . எனவே சம்பந்தப்பட்டவர்கள் எந்தக் கட்சியாலும் விசாரணைக்குத் தப்ப மாட்டார்.

கேள்வி : அப்படியாயின் சக்காரியா கமிஷனில் குற்றம் சாட்டப்பட்ட எத்தனை யோபேர் இப்பொழுது அகில இந்திய அ.தி.மு.கவில் இருக்கின்றார்கனே.அவர்க எனைவரும் துய்மையடைந்துள்ளார்களா?

பதில் : அங்குதான் நீங்கள் தவறிழைக்கின்றீர்கள், குற்றம் நிருபிக்கப்படும் பொழுது அவர்களும் தண்டனைக்குத் தவறமாட்டார்கள், ஊழல்கள், வஞ்சங்கள் போன்றவற்றை விரட்டியடிப்பது தான் எமது இலட்சியம். நீதிதேவதையின் தண்டனை அவர்களை விட்டுவைக்கும் என்பதல்ல.

கேள்வி : தங்களது மந்திரிசபையில் சுதெலாக வழக்கறிஞர்களே காணப்பசென்றார்களே? ஏனோ?

பதில் : திறமைக்கு முதலிடம் கொடுப்போம். முன்பின் தெரியாத ஒன்றைப்பற்றித் தீவிரமாக ஆராய்ந்து வழக்காடக்கடிய அவர்கள் நாட்டுக்கு நன்மையான திட்டங்களைக்கூடச் செம்மையாக ஆராய்ந்து செயல்பட மாட்டார்கள் என்பதற்கு என்ன சான்று.

கேள்வி : தென்மா நில முதல்வர்கள் அண்மையில் ஒன்று கடினீர்களே? வெற்றியளித்ததா?

பதில் : இந்தித் திணரிப்பு முற்றாக நிறுத்தப்படவேண்டும் என்பதில் அனைவருமே ஏகோபித்த ஒற்றுமையான அபிப்பிராயத்தைக் கொண்டிருந்தனர். எனவே அது வெற்றியளித்தது. தவிர நதிப்பங்கீடு தொடர்பாகவும் அரிசிக்கான உத்தரவாத விவேயை நிர்ணயிப்பது பற்றியும் விரைவில் மீண்டும் கூடி தீர்மானமெடுப்போம்.

கேள்வி: மத்தியில் ஜனதா அரசை ஆதரிக்கும் அ.இ.அ.தி.மு. க . இடைத் தேர்தலில் இந்திராகாந்தியை ஆதரிக்கின்றதே?

பதில் : மத்தியில் எந்த ஆட்சி எனினும் நல்லவை செய்யும் பொழுது அதற்கு ஆதரவு கொடுக்கவும், தீமையை எதிர்க்கவும் அகில இந்தியா அ.தி.மு.க . தயங்காது - ஆனால் இந்திராகாந்தி கண்டிப்பாகப் பாராளுமன்றத்தில் இருக்கவேண்டியவர் அதனால் ஆதியாரித்தோம்.

கேள்வி "இந்தியை முழு மாநிலங்களுக்கும் திணிப்பதை ஏற்க மறுக்கும் தங்களுக்கு, ஈழத்தில் பரவலாக சிங்களம் புகுத்தப்பவெதை வேற்க முடிகின்றதா?

பதில் " முதலாவதை எதிர்த்து நாம் போராடுகின்றோம், பின்னதை எதிர்த்து ஈழத்தவர்கள் போராடுகின்றார்கள், தவிர ஈழத்தவர்கள் இந்தித் திணிப்பை எதிர்த்தோ அல்லது நாம் சிங்களத் திணிப்பை எதிர்த்தோ சுக்குரலிடுவதில் பயனில்ல.

கேள்வி : பங்களாதேஷிடம் பிரிவினைப் போரின் போது இந்தியாவிலிருந்து உதவியது போல, தமிழ் ஈழப் போராட்டத்துக்குத் தமிழகத்தின் பணியென்ன?

பதில் : தமிழர் எங்கிருந்தாலும், அவதியுறும் பொழுது உதவுவதற்கு , தமிழர்கள் எங்கிருந்தாலும் தவறமாட்டார்கள். ஆனால் இலங்கை ஜனாதிபதி திரு. ஜே.ஆர். ஜெயவர்த்தன அண்மையில் சந்தித்தபோது இலங்கைத் தமிழரின் வளமானவாழ்வுக்குத் தான் வழிகோவியதாகத் தெரிவித்ததுடன் தமிழ் அமைச்சர்களே தனது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளதால் பிரிவினைவாதிகளால் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரமில்லை என்றார்.

கேள்வி :இலங்கைச் சிந்தளவர் மத்தியிடம் தமிழர் மத்தியிடம் அமோக செல்வாக்குப் பெற்றுள்ள நீங்கள், பிரச்சனைகளுக்கு மத்தியஸ்தம் வகித்து தீர்வுகாண வழிசெய்ய முடியாதா?

பதில் : முதலாவது, வேறு நாடொன்றின் பிரச்சனை அது! அதில் எனக்கு வேலையில்லே! இரண்டாவது மத்தியஸ்தலம் எனப்பவெது இரு சாரருக்கும் பொதுவான நடுநிலை ஆனால் எங்கே ஒரு தரப்பினர் மத்தியஸ்தலம் வகிப்பவர் மற்றொருவர் எண்ணுகின்றாரோ , அப்பொழுதே சரியான தீர்ப்பும் கிடைக்குமென அவர் எதிர் பார்க்கமாட்டார். எனவே இந்த நிலையில் என்னால் செய்யக்கூடியது எதுவுமேயில்லை.

கேள்வி : அரசியல் பழுவிற்கும் சினிமா வாழ்வுக்கும் உள்ள ஒற்றுமை பற்றி?

பதில் : இரண்டுமே மக்களுடன் நேரடித் தொடர்பைக் கொண்டுள்ளவை .

கேள்வி : திரும்பியும் நடிக்கும் ஆர்வம் ..... ? சமயம் வரும்பொழுது நடிக்கத் தவறமாட்டேன்!

அண்ணா நாமம் வாழ்க! எனக்கூறியவாறே , அடுத்தவருடன் தனது அலுவல்களைத் தொடருகின்றார் முதல்வர்.........சை. பா.,

orodizli
21st September 2020, 10:02 PM
"ஒளிவிளக்கு " காவியம் திரைப்படத்தில் மக்கள் திலகம் ஸ்டைலில் கலக்கியிருப்பார். அதற்கு தனிப் பதிவு எழுதலாம். டைட்டிலில் ப்ரீசிங் ஷாட் இந்த படத்தில்தான் முதலில் காட்டினார்கள். டைட்டிலில் ‘ஒளிவிளக்கு’ பெயர் போடும்போது மக்கள் திலகத்தின் ஸ்டைல் போஸ் ஒன்று போதும். தியேட்டரே இரண்டுபடும். ட்ரெஸ் Red & Red...(இவருக்கு மட்டுமே எந்த வண்ணமும் அப்படியே பொருந்தும்...இறைவன் ஆசிகளை பெற்ற மஹான்)...

ஒளிவிளக்கு திரைப்படம் வசூலைக் குவித்து 100 நாட்கள் கண்ட வெற்றிப்படம். என்றாலும் சென்னை பிராட்வே தியேட்டரில் 98 நாட்கள் ஓடி 2 நாட்களில் 100 நாள் கொண்டாட்டத்தை தவறவிட்டது. பிராட்வேயில் 14வது வார அதிகாரபூர்வ விளம்பரம் நம்மிடம் உள்ளது. வெளியிட்டும் இருக்கிறோம். 2 நாள் தானே யார் கண்டுகொள்ளப் போகிறார்கள் என்று சென்னையிலும் 100 நாள் ஓடியது என்று நாம் சொன்னது இல்லை. மக்கள் திலகத்தின் படத்தை அதுவும் 100 வது படத்தை சென்னையில் 98 நாளில் எடுக்கிறார்கள். இன்னும் 2 நாட்கள் ஓட்டமுடியாதா? ஒரு கவுரவத்துக்காக சென்னையில் 100 நாள் ஓடவைக்க மக்கள் திலகம் தரப்பில் எந்த வற்புறுத்தலும் இல்லை என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். வடசென்னையில் பிராட்வேயுடன் அகஸ்தியா தியேட்டரிலும் ஒளிவிளக்கு வெளியானது. சென்னையில் 100 நாள் ஓடாவிட்டாலும் மக்கள் திலகத்தின் படங்கள் தியேட்டர்களில் மக்கள் ஆதரவுடன் வெற்றிகரமாக ஓடியவையே தவிர, மற்ற நடிகரின் படங்கள் போல சொந்தத் தியேட்டரில் ஓட்டி தங்களுக்கு தாங்களே ‘சாந்தி’ தேடியது இல்லை. குத்தகைத் தியேட்டர்களிலும் ஓட்டப்பட்டவை இல்லை. மொத்தமாக டிக்கெட்டை வாங்கி நாம் கிழித்துப் போடவும் மாட்டோம்.

தமிழகத்திலும் கர்நாடகாவிலும் 64 தியேட்டர்களில் வெளியாகி 63 தியேட்டர்களில் 50 நாள் கொண்டாடிய ஒரே தமிழ்படம் ஒளிவிளக்கு. இதற்கு இன்னொரு சிறப்பும் உள்ளது. கடல் கடந்தும் ஒளிவிளக்கு சாதனை படைத்துள்ளது. இலங்கையில் யாழ்ப்பாணம் ராஜா தியேட்டரிலும் கொழும்பு ஜெயின்ஸ்தான் தியேட்டரிலும் முதல் வெளியீட்டில் 160 நாட்கள் ஓடி நூலிழையில் வெள்ளிவிழாவை தவறவிட்டிருக்கிறது. (முதல் வெளியீட்டில் 150வது நாள் விளம்பரம் பதிவிட்டுள்ளேன்) வெள்ளிவிழாவை தவறவிட்டாலும் அதற்கு ஈடு செய்வதுபோல இதுவரை வெளிநாட்டில் இன்றுவரை எந்த தமிழ்ப்படமும் செய்யாத மற்றொரு சாதனையை ஒளிவிளக்கு செய்துள்ளது.

அதே யாழ்ப்பாணம் ராஜாவில் 1979ம் ஆண்டு மீண்டும் ஒளிவிளக்கு வெளியாகி அப்போதும் 100 நாள் ஓடியிருக்கிறது. அதுவும் தினசரி 4 காட்சிகளாக. இது வெளிநாட்டில் எந்த தமிழ்ப்படமும் மறுவெளியீட்டில் செய்யாத தகர்க்க முடியாத சாதனை. 1979-ல் ஒளிவிளக்கு 100 நாள் ஓடியபோது அப்போது நண்பருடன் படத்தை பார்த்ததை வானொலி அறிவிப்பாளர் யாழ் சுதாகர் என்பவரும் கூறியிருக்கிறார். மறுவெளியீட்டில் யாழ்ப்பாணம் ராஜாவில் ஒளிவிளக்கு 100 நாள் ஓடிய விளம்பரத்தையும் பதிவிடுகிறேன். அதுவும் சாதாரண ஓட்டம் இல்லை. 100 நாளில் 3 லட்சத்து 51, 403 ரூபாய் 75 காசுகள் வசூலாகி உள்ளது. 1979-ம் ஆண்டில் ஒரு மறுவெளியீட்டு படத்துக்கு இது பெரிய வசூல். அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட விளம்பரத்தில் இந்தத் தொகை கூறப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில் இலங்கையில் வெளியான சிவாஜி கணேசனின் கவுரவம், பாட்டும் பரதமும், மன்னவன் வந்தானடி போன்ற படங்கள் முதல் வெளியீட்டிலேயே கூட இந்த அளவு வசூல் பெறவில்லை என்பது முக்கியமானது.

இலங்கை யாழ்ப்பாணம் ராஜா தியேட்டரில் 1979-ல் மறுவெளியீட்டில் ஒளிவிளக்கு 100 நாள் கொண்டாடியதற்கான அதிகாரபூர்வ விளம்பரம். இந்த விளம்பரத்தில் 100 நாளில் மூன்றரை லட்சத்துக்கு மேல் வசூல் செய்த விவரம் அதிகாரபூர்வமாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒளிவிளக்கு விளம்பரத்துக்கு மேலே இன்னொரு அதிசயம். யாழ்ப்பாணம் ராணி தியேட்டரில் தினசரி 4 காட்சிகளாக உலகம் சுற்றும் வாலிபன் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த விளம்பரத்தில் மேலே பாருங்கள். 1979-ல் 5வது வாரமாக வெளுத்துக் கட்டியிருக்கிறார் வாலிபன்.

இதில் ஒளிவிளக்கு விளம்பரத்துக்கு கீழே கவனியுங்கள். 100வது நாளன்று இன்று கடைசி நாள் என்று குறிப்பிட்டு அதற்கும் கீழே ‘நாளை முதல் கொடுத்து வைத்தவள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மறுவெளியீட்டில் ஒளிவிளக்கு அள்ளிக் கொடுத்ததால் அடுத்ததாக ஒளிவிளக்கு படம் முடிந்த அடுத்த நாளில் இருந்து மக்கள் திலகத்தின் கொடுத்து வைத்தவள் படத்தை யாழ்ப்பாணம் ராஜாவில் திரையிட்டுள்ளனர். இந்தப் பெருமை எல்லாம் எந்த நடிகரின் படத்துக்கு கிடைக்கும். வசூல் சக்ரவர்த்தி மக்கள் திலகத்துக்கு ‘நிருத்ய சக்கரவர்த்தி’ என்ற பட்டத்தையும் வழங்கி இலங்கை மக்கள் மகிழ்ந்தனர். இந்தியாவில் மட்டுமல்ல, இலங்கையிலும் சாதனைச் சக்கரவர்த்தி மக்கள் திலகம் ஒருவரே!......... Swamy...

orodizli
22nd September 2020, 07:42 AM
1985-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆர்.ஆர்.பிக்சர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர், என்னுடைய வீட்டிற்கு வந்தார். ஆர்.ஆர்.பிக்சர்ஸ், இயக்குனர் டி.ஆர்.ராமண்ணாவின் சொந்த நிறுவனமாகும். இயக்குனர் டி.ஆர்.ராமண்ணா வேறு யாரும் அல்ல. டி.ஆர்.ராஜகுமாரியின் உடன்பிறந்த தம்பி. பல வித்தியாசமான படங்களையும், வெற்றிப் படங்களையும் இயக்கியவர். எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவரையும் இணைத்து ‘கூண்டுக்கிளி’ என்ற படத்தை எடுத்தவர். எனவே அவருடைய கம்பெனியில் இருந்து வந்தவரை அதிக ஆவலுடன் வரவேற்றேன்.

வந்தவர், ‘அண்ணா.. இலங்கேஸ்வரன் என்னும் மனோகர் நடத்தும் நாடகத்தைப் திரைப்படமாக எடுக்க இருக்கிறார். அதில் நீங்கள் ராவணனாக நடிக்க வேண்டும். விருப்பம் இருந்தால் சொல்லுங்கள்; நான் போய் அண்ணாவிடம் சொல்லுகிறேன். பிறகு நீங்கள் அலுவலகத்திற்கு வந்து, மற்ற விஷயங்களைப் பற்றியெல்லாம் பேசிக் கொள்ளலாம்’ என்றார். (ராமண்ணாவை அண்ணா என்று தான் சொல்லுவார்கள்)

‘கூண்டுக்கிளி’ படத்தில் இருந்து ராமண்ணா சார் இயக்கிய பெரும்பாலான படங்களை நான் பார்த்திருக்கிறேன். அவருடைய இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது நெடுநாளைய விருப்பம். கண்டிப்பாக நடிக்கிறேன். இருந்தாலும் எனக்கு நீங்கள் ஒரு உதவி செய்ய வேண்டும்’ என்றேன்.

‘என்ன உதவி செய்யவேண்டும்’ என்றார், வந்தவர்.

‘நான் டி.ஆர்.ராஜகுமாரி அம்மாவை பார்க்க வேண்டும், அவரோடு பேச வேண்டும்’ என்று கூறினேன்.

நான் சொன்னதைக் கேட்டவுடன் அவர் சிரித்துவிட்டார். ‘இது ஒரு பெரிய விஷயமே இல்லை; சீக்கிரம் ஏற்பாடு செய்கிறேன்’ என்றார்.

‘இலங்கேஸ்வரன்’ படப்பிடிப்பு நடக்கும் நாட்களிலெல்லாம், நான் அவரிடம் கேட்கும் கேள்வி ‘எப்பொழுது ராஜகுமாரி அம்மாவைப் பார்ப்பது?’ என்பது தான். படப்பிடிப்பின் கடைசிநாள் வந்தது.

‘இன்று அம்மாவைப் பார்க்கலாம்’ என்றார்.

எனக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி. ஷூட்டிங் முடிந்து மேக்கப்பையெல்லாம் கலைத்து விட்டு, என்னுடைய காரில் எழும்பூரில் உள்ள ராஜகுமாரி அம்மாவின் வீட்டிற்குச் சென்றேன். வரவேற்பு அறையில் உட்காரச் சொன்னார்கள். நான் உட்கார்ந்திருந்த இடத்திற்கு அருகில் மேல் தளத்திலிருந்து கீழே வருவதற்காக சுழல் மாடிப் படிக்கட்டுகள் இருந்தன.

ராஜகுமாரி அம்மா இப்பொழுது எப்படி இருப்பார்? என்கிற கற்பனையில் நான் ஆவலோடு உட்கார்ந்திருந்தேன். சிறிது நேரத்திற்குள்ளாக ஒரு அம்மா மாடிப் படிக்கட்டுகளில் இருந்து கீழே இறங்கி வந்தார். என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டே வந்தார்.

‘என்ன தம்பி, எப்படி இருக்கிறாய்?’ என்றார்.

நான் ‘நன்றாக இருக்கிறேன் அம்மா’ என்றேன்.

பதிலுக்கு நானும் நலம் விசாரித்தேன். ‘எனக்கென்ன தம்பி! என்னை ராமண்ணா தம்பி நன்றாகவே வைத்திருக்கிறது’ என்றார்.

நான் அன்று அவரைப் பார்க்கும் பொழுது அவருக்கு வயது 63. என்னால் அவரை சிறிதுகூட அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு கிராமத்தில் வேலை பார்க்கும் பள்ளி ஆசிரியை போல மிகவும் சாதாரணமாக இருந்தார். நான் அவரிடம் ஆசி வாங்கினேன்.

பிறகு ராஜகுமாரி அம்மா என்னிடம் பேசினார். ‘உன்னுடைய முதல் படத்தை நான் பார்த்தேன் தம்பி’ என்றார்.

‘அப்படியாம்மா?’ என்று கேட்டேன்.

‘நான் படத்தைப் பார்த்து விட்டு ராமண்ணா தம்பியிடம் “இந்த பையன் கணேசன் மாதிரி இருக்கிறான். நன்றாக நடிக்கிறான்” என்று சொன்னேன் தம்பி’ என்றார்.

கூண்டுக்கிளி படத்தில் சிவாஜி அண்ணனை நடிக்க வைத்த குடும்பத்தில் உள்ளவர்களின் வாயால் நான் பார்ப்பதற்கு சிவாஜி அண்ணன் மாதிரி இருக்கிறேன் என்று சொன்னது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது.

சாண்டோ சின்னப்பதேவர், குலேபகாவலி படத்தில் எம்.ஜி.ஆருடன் சண்டைக் காட்சி ஒன்றில் நடித்தது, தயாரிப்பாளர் பூர்ண சுந்தர்ராவ், டி.ஆர்.ராமண்ணாவின் ஆரம்பகால படங்களின் செங்கல்பட்டு விநியோகத்தை வாங்க வந்தது போன்ற பழைய கால விஷயங்களையெல்லாம் என்னிடம் கூறினார்.

பிறகு என்னைப் பார்த்து, ‘ஏன் தம்பி, என்னைப் பார்க்க அவ்வளவு முயற்சி செய்தாய்? என் மீது ஏன் உனக்கு அவ்வளவு பிரியம். எனக்கு ஒன்றுமே புரியவில்லை’ என்றார்.

‘நான் சிறுபிள்ளையாக இருக்கும்பொழுது, உங்களுடைய படங்களைப் பார்த்தவர்கள், உங்களை ஒருநாளாவது பார்த்துப் பேச வேண்டும் என்பதை வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டிருந்தனர் என்பது எனக்குத் தெரியும். அவர்களெல்லாம் பார்க்க முடியாத உங்களை, நான் பார்த்து விடவேண்டும் என்று ஆசைப்பட்டேன். நான் படங்களில் நடிக்க ஆரம்பித்த பிறகு, உங்களை எளிதாகப் பார்த்துவிடலாம் என்று நம்பியிருந்தேன். நீங்கள் யாரையும் பார்ப்பதில்லை. எந்த விழாக்களிலும் கலந்துகொள்வதில்லை என்பது பிறகுதான் தெரிந்தது. சமீபத்தில் ராமண்ணா சார் என்னை அவருடைய படத்தில் ஒப்பந்தம் செய்தபோது, உங்களைப் பார்க்க வேண்டுமென்ற வேண்டுகோளை வைத்தேன். அதனால் தான் உங்களைப் பார்க்கின்ற பாக்கியம் எனக்குக் கிடைத்தது’ என்றேன்.

சிற்றுண்டி கொடுத்தார்கள். அதை சாப்பிட்டு விட்டு விடைபெற்றேன்.

இந்த இனிப்பான செய்தியை, டி.ஆர்.ராஜகுமாரியின் உண்மையான ரசிகர்களிடம் சொன்னால் தான் பொருத்தமாக இருக்கும் என்று கருதி, யாரிடம் முதலில் சொல்லுவது என்று யோசனை செய்தேன். அவர்களில் யாருமே அன்று உயிருடன் இல்லை. அதனால் நான் அடைந்த வெற்றியையும் மகிழ்ச்சியையும், நானே உள்ளூர கொண்டாடிக் கொண்டேன்.

சில ஆண்டுகள் கழித்து ராமண்ணா சார் வீட்டுத் திருமணம், விஜயா ஷேஷ மகாலில் நடைபெற்றது. நான் திருமணத்திற்கு சென்றிருந்தேன். அங்கும் டி.ஆர்.ராஜகுமாரி அம்மாவை சந்தித்தேன். அப்போது அவருக்கு 73 வயது இருக்கும்.

சினிமா வாய்ப்பு அவரது வீடுதேடி வந்தது. ராஜாயீ என்பவர் டி.ஆர்.ராஜகுமாரி ஆனார். அவர் வாய்ப்பு தேடி எந்த படக் கம்பெனியும் ஏறி இறங்கவில்லை. நாடகங்களில் நடிக்கவில்லை. எந்தவித அவமானமும் எங்கும் அடையவில்லை. திருமணம் தான் அவரைத் தேடி வரவில்லை. ஆனால் செல்வமும், செல்வாக்கும் அதிகமாகவே இருந்தது.

ஏழு வயது மூத்தவரான எம்.ஜி.ஆர். கூட, டி.ஆர்.ராஜகுமாரி அம்மாவை மரியாதையின் காரணமாக அக்கா என்றுதான் கடைசி வரை அழைத்திருக்கிறார். எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருக்கும்பொழுது, 24 மணி நேரத்தில், எந்த நேரத்தில் ராஜகுமாரி அம்மா அவரைத் தொடர்பு கொண்டாலும் எம்.ஜி.ஆர். பேசுவார். அந்த அளவுக்கு செல்வாக்குடன் கடைசி வரை வாழ்ந்தார். எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்த சமயம், ஒரு நாள் இரவு 10 மணிக்கு ராமாபுரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு போன் செய்தார், டி.ஆர்.ராஜகுமாரி. அப்போது எம்.ஜி.ஆர். மாம்பலத்தில் உள்ள அலுவலகத்தில் இருந்தார். அதனால் உதவியாளர் தான் போனை எடுத்தார். வழக்கம் போல் எம்.ஜி.ஆர். தான் போனை எடுப்பார் என்று எண்ணிய டி.ஆர்.ராஜகுமாரி, வேறு ஒருவரது குரல் ஒலித்ததும், ‘ராமச்சந்திரன் தம்பி இருக்கிறாரா?’ என்று கேட்டிருக்கிறார்.

எம்.ஜி.ஆரின் பெயரைச் சொல்லி ஒருவர் அழைப்பதைக் கேட்டதும், அதிர்ச்சியடைந்த அந்த உதவியாளர், ‘நீங்கள் யாரம்மா?’ என்று கேட்க, ‘தம்பி இல்லையா?’ என்றிருக்கிறார் டி.ஆர்.ராஜகுமாரி.

அதற்கு உதவியாளர், ‘முதல்-அமைச்சர் வீட்டில் இல்லை. எப்போது வருவார் என்பதும் எங்களுக்குத் தெரியாது. அவர் வந்ததும் சொல்கிறேன்’ என்று சொல்லி இருக்கிறார்.

‘அப்படியாப்பா? ராமச்சந்திரன் தம்பி வந்ததும், ராஜகுமாரி அக்கா போன் செய்ததாக மட்டும் சொல்லுங்கள்’ என்று கூறி போனை வைத்து விட்டார்.

எம்.ஜி.ஆர். இரவு 1 மணி அளவில் வீட்டிற்கு வந்ததும், உதவியாளர் மூலம் டி.ஆர்.ராஜகுமாரி போன் செய்ததை அறிந்து, உடனடியாக அவரை தொடர்பு கொண்டிருக்கிறார்.

‘என்ன அக்கா! இந்த நேரத்தில் போன் செய்திருக்கிறீர்கள்? எதுவும் முக்கியமான விஷயமா? பிரச்சினையா?’ என்று கேட்டிருக்கிறார்.

‘தம்பி! நான் இப்பொழுது குடியிருக்கும் என்னுடைய வீட்டை, தம்பி ராமண்ணாவிற்கு உதவி செய்வதற்காக, ஒரு பெரிய தொகைக்கு அடமானம் வைத்திருந்தேன். அந்த தொகைக்கு சில மாதங்களாக சரியாக வட்டி கூட கட்ட முடியவில்லை. என்னுடைய வீடு என்னை விட்டு போய் விடும் போல் தெரிகிறது. பெரிதும் மனக்கவலையாக உள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில் உன்னைத் தவிர எனக்கு வேறு யாரும் நினைவிற்கு வரவில்லை. அதனால் தான் தம்பி உனக்குப் போன் செய்தேன்’ என்று டி.ஆர்.ராஜகுமாரி வருத்தத்துடன் பேசியுள்ளார்.

அதற்கு எம்.ஜி.ஆர். ‘அக்கா! அந்த வீடு எப்போதும் உங்களிடம் தான் இருக்கும். அதற்கு நான் பொறுப்பு. இப்போது நிம்மதியாகப் போய் தூங்குங்கள்’ என்று கூறியிருக்கிறார்.

மறுநாள் காலை 6 மணிக்கு பணம் கொடுத்தவருக்கு போன் செய்து, சம்பிரதாயமாக சில வார்த்தைகள் பேசிவிட்டு, ‘அப்புறம் ஒரு முக்கியமான விஷயம். இன்று காலை 9 மணிக்கு ராமாபுரம் வீட்டிற்கு காலை உணவு சாப்பிட வரமுடியுமா? வேறு எதுவும் உங்களுக்கு முக்கியமான வேலை இருக்கிறதா? அப்படி வருவதாக இருந்தால், டி.ஆர்.ராஜகுமாரி அம்மாவின் வீட்டு அடமானப் பத்திரத்தையும் எடுத்துக் கொண்டு வாருங்கள்’ என்று சொல்லியிருக்கிறார்.

அவர் தமிழகத்தில் உள்ள தொழில் அதிபர்களில் ஒருவர். அதிக செல்வாக்கு உள்ளவர். சமூக அங்கீகாரமும், ஆன்மிகத்தில் நாட்டமும் கொண்டவரான அவர், எம்.ஜி.ஆர். குறிப்பிட்ட சரியான நேரத்திற்கு ராமாபுரத்தில் இருந்தார். இருவரும் பேசியபடியே காலை உணவை சாப்பிட்டிருக்கிறார்கள். பின்னர் புறப்படும் நேரத்தில் தொழிலதிபர், தன்னிடம் இருந்த பத்திரத்தை எம்.ஜி.ஆரிடம் கொடுத்திருக்கிறார். அதைப் பெற்றுக்கொண்ட எம்.ஜி.ஆர்., வாசல் வரை வந்து தொழிலதிபரை வழியனுப்பி வைத்திருக்கிறார்.

ஆனால் பண விஷயம் பற்றி இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அந்தத் தொழில் அதிபரின் பிரச்சினைகளும் தேவைகளும் எம்.ஜி.ஆருக்கு நன்றாகத் தெரியும்.

அன்று காலை தலைமைச் செயலகத்திற்கு செல்லும் வழியில் ராஜகுமாரி அம்மாவின் வீட்டிற்குச் சென்று பத்திரத்தை அவருடைய கையாலேயே கொடுத்திருக்கிறார்.

மூன்று மாதங்கள் சென்றபின், அதே தொழிலதிபரை காலை உணவிற்காக மீண்டும் எம்.ஜி.ஆர். அழைத்தார். அவரும் வந்தார். முன்பு போல் பேசிக்கொண்டே சாப்பிட்டார்கள். இந்த முறை தொழிலதிபர் திரும்பிப் போகும் பொழுது, அவருடைய பிரச்சினைகளையும், தேவைகளையும், முழுமையாக சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு எம்.ஜி.ஆர். தீர்த்து வைத்தார். அந்த உதவி, டி.ஆர்.ராஜகுமாரி அம்மாவின் வீட்டு அடமானத் தொகையை விட பலமடங்கு லாபத்தை அந்த தொழிலதிபருக்கு கொடுத்தது.

இந்த விஷயத்தில் பயன் அடைந்தவர்கள், ராஜகுமாரி அம்மா மற்றும் தொழிலதிபர் மட்டுமல்ல.. எம்.ஜி.ஆர். அனுமதி அளித்து, தொழிலதிபருக்கு கொடுத்த திட்டத்தால் தமிழக மக்களும் தான்.

தன்னுடைய தம்பி ராமண்ணாவின் பிறப்பையும் இறப்பையும் பார்த்தவர், டி.ஆர்.ராஜகுமாரி. தம்பி பல திருமணங்கள் செய்யும்பொழுது, மறுப்பேதும் சொல்லாமல் அவருக்கு உதவியாக இருந்தார். தான் திருமணம் முடிக்காமல் இருக்கும்பொழுது, தம்பி மூன்று திருமணங்கள் செய்து கொள்கிறானே என்று ஒருநாள்கூட ராஜகுமாரி அம்மா எண்ணியதில்லை. ராமண்ணாவின் கஷ்டத்திலும் நஷ்டத்திலும், அவருக்கு உதவியாக இருந்து கைதூக்கி விட்டவர் அவர்.

ராஜகுமாரி அம்மா 1922-ம் ஆண்டு மே மாதம் 5-ந் தேதி தஞ்சையில் பிறந்தார். 77 வயது வரை வாழ்ந்து, 1999-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ந் தேதி மரணம் அடைந்தார். அவரது வீட்டிற்குச் சென்று இறுதி மரியாதையைச் செலுத்தினேன்.

*** - நடிகர் ராஜேஷ் , தினத்தந்தி இதழில் எழுதிய தொடரிலிருந்து.........

orodizli
22nd September 2020, 12:02 PM
"கொடுத்து வைத்தவள்" எம்ஜிஆரின்
உன்னதமான இயற்கை நடிப்புக்கு எடுத்துக் காட்டாக அமைந்த படம்.
எம்ஜிஆருடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்ற e v சரோஜாவின் ஆவலை பூர்த்தி செய்த படம். அவருடைய சகோதரன் ev ராஜன் தயாரிக்க ப.நீலகண்டன் இயக்க
"கொடுத்து வைத்தவள்" ராமண்ணாவின் மூன்றாவது மனைவியான சரோஜாவை கதாநாயகியாக வைத்து எடுத்த படம். L.விஜயலட்சுமி ஜோடியும் ரசிக்கும்படி அமைந்திருந்தாலும் பழகிய கண்கள் சரோஜாதேவியை
தேடுவது தவிர்க்க முடியாதது.

தங்கவேலு காமெடி ரசிக்கும்படி இல்லாதது படத்தில் ஒரு குறைபாடுதான். நாகேஷ் காமெடி இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். நாகேஷின் ஆரம்ப கால காமெடி ரசிக்கும் படி இருந்தது.
1963 ல் சங்கிலித் தொடராக வெளிவந்த 2வது படம். பிப் 9 அன்று பல போட்டி தலைவர் படங்களுடன் வெளியாகி நல்லதொரு வெற்றியை பெற்ற படம். படம் குடும்பப் படம்தான்
என்றாலும் தொய்வில்லாமல் அடுத்தடுத்து திருப்பங்களோடு இருக்கும் படி தலைவரின் ஆஸ்தான டைரக்டர் ப.நீலகண்டன் உருவாக்கி
கொடுத்தார்.

சீர்காழி கோவிந்தராஜன் எம்ஜிஆருக்கு "பாலாற்றில் தேனுறுது" பாடலை பாடி .இருப்பார்.
தலைவர் நினைவிழந்து நிற்கும் போது வரும் 'நீயும் நானும் ஒன்று' பாடலை சிறந்த முறையில்
இசையமைப்பு செய்து கொடுத்திருப்பார். 'என்னம்மா செளக்யமா'? டூயட் பாடல் படத்தின் உற்சாகமான நகர்வுக்கு ஏற்ப அமைந்திருக்கும். வழக்கம்போல தலைவரின் தத்துவப் பாடலாக வரும்
'நான் யார் தேரியுமா'? சிறப்பாக அமைந்திருந்தது.

'மின்னல் வரும் நேரத்திலே
மழை பொழியும்' பாடலில் அழுது வடிந்த சரோஜா அழகாக மகிழ்ச்சியாக தோன்றுவார். குடும்ப படத்தில் சோக காட்சிகள் இடம் பெற்றிருந்தாலும் தலைவரது நடிப்பு திறமையால் படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்வார் இயக்குநர். சென்னையில் காஸினோ மகாராணி புவனேஸ்வரியில் வெளியாகி. காஸினோ மகாராணியில் 77 நாட்களும் புவனேஸ்வரியில் 56 நாட்களும் ஓடி வெற்றியை பதிவு செய்த படம்.

தமிழகத்தின் பல ஊர்களில் 50 நாட்களை கடந்து வெற்றி பெற்ற படம். தமிழகத்தில்
முன்னர் வந்த "பணத்தோட்டத்தை"யும் பின்னர் வந்த "தர்மம் தலை காக்கும்" படத்தையும் அரவணைத்து சென்றது. ஒரே நேரத்தில் தலைவரின் 3 படங்களும் 9 திரையரங்கில் ஓடியது மற்றுமொரு அதிசயம் என்றே சொல்லலாம். அது
தலைவரின் பொற்காலம் என்றே சொல்ல வேண்டும்..........ks.........

fidowag
22nd September 2020, 07:28 PM
இலங்கையில்இருந்து* வெளியான உரிமைக்குரல்பத்திரிகை* செய்தி*
----------------------------------------------------------------------------------------------------------
கடைசி வார கதாநாயகனின் ஈழத்து ரசிகர்களுக்கு அரச திரைப்பட கூட்டுத்தாபனம் அளித்த பிச்சை . -- உத்தமன் வெள்ளி விழா*
--------------------------------------------------------------------------------------------------------------------------------
12/05/1978ல்* ஈழத்தில் திரையிடப்பட்ட உத்தமன்* வெள்ளிவிழா கொண்டாடிவிட்டதும் மார் தட்டுகிறார்கள் .* கணேசனின் விசில் குஞ்சுகள்*சாதனையாம் , அரிய பெரிய* சாதனையாம் .* வசூல் நாயகனாம் .* இப்படி கூறியும் பத்திரிகையில் எழுதினால் மட்டும் கணேசன் வசூல் நாயகனாகிவிட முடியுமா ?காலங்களில் அவள் வசந்தம், உத்தமன் , மதனமாளிகை , மன்மதலீலை,* பேரும் புகழும் இத்தனை படங்களும் ஒன்றுக்கொன்று ஒருவார , இருவார இடைவெளியில் திரையிடப்பட்டது .* ஆனால் இவற்றில் உத்தமன் படம் மட்டும் பிரபல நடிகரின் படம் என்பது குறிப்பிடத்தக்கது .உத்தமனை தவிர காலங்களில் அவள் வசந்தம் , பேரும் புகழும்* ஆகியவை நன்றாக இருந்தும் நன்கு ஓடவில்லை .* உத்தமன் படத்தில் கணேசன் செய்யும் அயோக்கிய செயலைவிட மன்மதலீலை படம் மக்களுக்கு நன்கு படிப்பினை தரக்கூடிய படமாக இருந்தும் குடும்பத்துடன் பார்க்க முடியாத ஆபாச படமென வி.சி.கணேசன் ரசிகர்களால் விமர்சனப்படுத்த பட்டு விட்டதால் அந்த படைத்தாலும் நன்கு ஓடமுடியாமல் போய்விட்டது .*




அரசு திரைப்பட கூட்டுத்தாபனத்திடம் வேறு படங்கள் கையிருப்பில் இல்லாமல் இருந்ததால் உத்தமனை மாற்றி திரையிட வேறு படங்களும் இல்லாததால் ஒட்டப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் யாழ்ப்பாணம் ராணி சினிமாவில்*27/10/1978 முதல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.நடித்த திருடாதே படம் திரையிடப்பட இருப்பதாக ராணி சினிமா வாசலில் தினமும் காவல்நின்று படம் தொடங்கிவிட்டாலும் வீடு செல்லாத ரசிகர்* ஒருவர் உட்பட பத்திரிகை வெளியிடும் ஒருவரும் இன்னுமொரு நண்பருமாக* யாழ் புகையிரத**நிலையத்தில் இருந்து*தபால் புகையிரதம் மூலம் கொழும்புக்கு அரச திரைப்பட கூட்டுத்தாபனத்துக்கு* சென்று உத்தமனை மாற்ற வேண்டாம் . நாங்கள் வெள்ளி விழா கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்து விட்டோம் . உத்தமனை மாற்றினாலும், திரையிடப்போவது பழைய படம்தானே . அதனால் வெள்ளிவிழா ஓடுவதற்கு கருணை காட்டுங்கள் என்று அவர்கள் காலில் விழுந்து வணங்கினார்கள் .* பின்பு சிலோன் எண்டெர்டெயின்ஸ் ஸ்தாபனத்திடம் ( தற்போது ராணி சினிமாவை நிர்வகித்தவரும் ) சென்று காலில் விழுந்ததால் திருடாதே படத்தை ஸ்ரீதர் அரங்கிற்கு மாற்றிவிட்டு , உத்தமனை வெள்ளி விழா* ஓட வாய்ப்பளித்தார்கள் .இப்படி கேவலமாக ஒரு படத்தை வெள்ளிவிழா ஒட்டிவிட்டால் மட்டும் போதுமா ? தங்கப்பதக்கம் , அவன்தான் மனிதன் போன்ற படங்களால் ஏன் இப்படி ஓட்ட முடியவில்லை . உத்தமனை விட , மேற்கண்ட இரு படங்களும் ஓரளவு நல்ல படங்கள்தானே .அப்படங்களை உங்களுக்கு பிடிக்கவில்லையா ? அல்லது மக்களுக்கு பிடிக்கவில்லையா ? உத்தமன் போல வேறு படங்கள் 6 அல்லது 7 மாதங்கள் திரையிடாமல்* இருந்திருந்தால் ,அவைகள் பொன்விழா , வைரவிழா என்று கொண்டாடி இருப்பீர்கள் அல்லவா? இது கேவலமில்லையா ? இப்படி எல்லாம் வெள்ளிவிழா கொண்டாடுவது என்றால் இப்படி வெள்ளிவிழா ஓட்ட வேண்டுமென்றால் எங்களது படங்கள் கூட வெள்ளிவிழா ஓட்ட முடிந்திருக்கும் .எங்களுக்கு அது தேவையில்லை . வி.சி.கணேசன் படங்களை போல சந்தர்ப்பம் கிடைத்தால் மட்டும் ஓடும் படங்கள் அல்ல எம்.ஜி.ஆரின் படங்கள் .என்பதை புரிந்து கொள்ளுங்கள் வி.சி.கணேசனின் பிள்ளைகளே, எடுபிடிகளே

fidowag
22nd September 2020, 08:27 PM
யூ ட்யூப்*-தமிழ் சானல்*செய்திகள் -1947 முதல் 1978 வரை பாக்ஸ்*ஆபிஸ்*ஹிட்*முதலிடம்*பெற்ற திரைப்படங்களின் பட்டியல் -மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படங்கள்*பெரும்பாலான வருடங்களில் முதலிடம்*பிடித்து சாதனை*
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
1947* * *-* ராஜகுமாரி*

1948 -* * * சந்திரலேகா*

1949 -* * * அபூர்வ சகோதரர்கள்*

1950* * -* * மருத நாட்டு இளவரசி*

1951* * - மர்மயோகி*

1952* *-* பராசக்தி*

1953* -* அவ்வையார்*

1954* *-* * மலைக்கள்ளன்*

1955* *-* * *மிஸ்ஸியம்மா*

1956* *-* * * *மதுரை வீரன்*

1957* * -* * * சக்கரவர்த்தி திருமகள்*

1958* * -* * * நாடோடி மன்னன்*

1959 -* * * * வீரபாண்டிய கட்டபொம்மன்*

1960* -* * * * பாக்தாத் திருடன்*

1961* -* * * *திருடாதே*

1962* -* * * *தாயை காத்த தனயன்*

1963* -* * * *பெரிய இடத்து பெண்*

1964* -* * * *பணக்கார குடும்பம்*

1965* *-* * * எங்க வீட்டு பிள்ளை*

1966* * -* * *அன்பே வா*

1967* * -* * * காவல்காரன்*

1968* *-* * * *குடியிருந்த கோயில்*

1969* -* * * * அடிமைப்பெண்*

1970* * -* * * *மாட்டுக்கார வேலன்*

1971* * -* * * *ரிக்ஷாக்காரன்*

1972* * -* * * *நல்ல நேரம்*

1973* * -* * * *உலகம் சுற்றும் வாலிபன்*

1974* * -* * * *உரிமைக்குரல்*

1975* * *-* * * *இதயக்கனி*

1976* *-* * * * *நீதிக்கு தலைவணங்கு*

1977* * -* * * * மீனவ நண்பன்*

1978* * - சிகப்பு ரோஜாக்கள்*

orodizli
23rd September 2020, 08:34 AM
#மொய் #விளக்கம்

1967 ஆம் ஆண்டு வேலூரில் நடந்த தனது ரசிகர் ஒருவரின் திருமணத்திற்கு மக்கள்திலகம் சென்றிருந்தார். அப்பொழுது எல்லோரும் மொய்ப்பணம் எழுதும் போது 11, 21, 51, 101 என்று பக்கத்தில் ஒன்று கூட்டி எழுதுகிறார்கள்...

ஏன் தெரியுமா ? என்று கேட்டார்...

பல பேர் பலவிதமான விளக்கங்களைக் கூறினாலும் யாரும் சரியான விளக்கத்தைக் கூறவில்லை...

இதனால் மக்கள்திலகமே தொடர்ந்தார்..

"10, 20, 50, 100 என்று எழுதும் போது கடைசியில் பூஜ்யம் வருகிறது. வாழப்போகும் தம்பதியினர் வாழ்க்கையும் பூஜ்யமாக ஆகிவிடக்கூடாது என்பதற்காக ஒன்றைக் கூட்டிக்கொள்கிறோம்...
திருமணத்திற்கு முன் பூஜ்யமாக இருந்திருந்தால், திருமணம் ஆன பின் ஒன்று கூடி ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்பதற்காகவே ஒன்று என்ற எண்ணைச் சேர்க்கிறோம்...
வாழ்க்கை என்பது முடிவு இல்லாமல் தொடர்ச்சியாக வாழ்வாங்கு வாழவேண்டும் என்பதற்காகவே 11,21,51,101 என்று நாம் மொய்ப்பணம் எழுதுகிறோம்..." என்றார்.

சின்ன விஷயமாக இருந்தாலும்...அதை வாத்தியார் சொல்லும் போது...அடடா...! என்ன ஒரு இனிமை...
அந்த விஷயத்துக்கே தனி அந்தஸ்து வந்துடுதுல்ல...

#கலக்குற #வாத்தியாரே.........

orodizli
23rd September 2020, 08:40 AM
அருமை சகோதரர்/ நண்பர் திரு லோகநாதன் அவர்கள் youtube. லிஸ்ட்டில் 1955 ம் வருடம் "குலேபகாவலி" என்பதே சரியான தகவல் ஆகும். மற்றும் 1978ம் ஆண்டு தியாகம் ஆக இருக்கலாம். விபரங்களை உறுதி செய்து Youtube நிர்வாகத்துக்கு நாம் சரியான தகவல்கள் அனுப்பலாம்.........

orodizli
23rd September 2020, 08:46 AM
எங்கள்ஊரில் தீவிர சிவாஜி ரசிகர்,. காங்கிரஸ் தொண்டர் ஒருவர் இருந்தார்,சிவாஜி என்றால் அவருக்கு உயிர்,ஊர்வலம் போவார் ,கொடி பிடித்த கூட்டத்தை கூட்டி கோஷங்கள் இடுவார்,தேர்தல் காலத்தில் உணவையும் மறந்து பணிபுரிவார் அவர் தந்தையார் அவரை வளரத்த விதம் அப்படி ,ஏன் என்றால் அவர் தீவிர காமராஜர் பத்தர் திராவிடகட்சிகள் நாட்டுக்கு கேடு என எண்ணம் அவர் மனதில் அசைக்க முடியாத கருத்தாய் இருந்தது!, அவர் மகனோ படித்து விட்டு வேலை இல்லாமல் இருந்தார், அப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சிதான் இருந்தது.அவர் முன்னேறத்திற்கோ,வேலை வாங்கிதரவோ எவரும் முன் வரவில்லை, அவர் நல்லநேரம் சிபாரிசு இன்றி சத்துணவு அமைப்பாளர் பணி கிடைத்தது... நாளடைவில் பல தரப்பட்ட மக்களோடு பழகும் போது எம். ஜி .ஆர்., ஆட்சியின் நல திட்டங்கள், ஏழை மக்களுக்கு மிகவும் உதவியாய் இருப்பதை உணர்ந்து எம் ஜி ஆரின் தீவிர தொண்டனாகவே மாறிவிட்டார். இப்பொ ழுதும் அவர் சிவாஜி ரசிகர்தான், ஆனால் எம் ஜி ஆரின் தொண்டன், நடிப்பு வாழ்க்கையாகாது என்பதை புரிந்து எம் ஜி ஆரின் கொள்கையாலும், குணத்தாலும் உணர்ந்து கொண்டவர்..........சாய்பாபா பாபு.........

orodizli
23rd September 2020, 01:36 PM
அரசியல் தத்துவம், சாதி ஆதிக்கம், பெண்ணடிமை தீண்டாமை என பல பக்கங்களை அலசிய நாடோடி மன்னன் படத்தில் எல்லாவற்றிற்கு மேலாக தன் தனித்தன்மையை ஒரே வசனத்தின் மூலம் நிலைநிறுத்தி தியேட்டரையே அதிரவைத்தவர் எம்ஜிஆர்..
‘’என்னை நம்பாமல் கெட்டவர்கள் உண்டே தவிர என்னை நம்பிக்கெட்டவர்கள் இன்று வரை இல்லை’’ ,சாகா வரம் பெற்றது அவரின் இந்த வசனம்..
வசனகர்த்தா ஜாம்பவான் கலைஞர் நாடோடிமன்னனில் இடம் பெறவில்லை. பெரும் பொருட்செலவில் தயாராகும் தனது கனவுப் படத்திற்கு கலைஞரை வசனம் எழுதவிட்டால், அவர் அதை அவரின் டிரேட்மார்க் படமாக கடத்திச் சென்று விடுவார் என்ற எச்சரிக்கை உணர்வு..
படத்தில் மன்னன்போல ஆட்சிக்கு வந்து ஒரு நாடோடி அறிவிக்கும் புரட்சிகரமான பட்ஜெட் காட்சிகள் முழுக்க முழுக்க தன் சிந்தனைகளாகவே தெரியவேண்டும் என்பதில் எம்ஜிஆர் தீர்மானமாக இருந்தார். அவை கலைஞரின் சிந்தனைகள் என்று பேச்சுவந்துவிடக்கூடாது என்பதே அவரின் மனஓட்டம்..
சேலம் மாடர்ன் தியேட்டர்ஸுக்கு கலைஞர் கருணாநிதி அவர்களை அறிமுகம் செய்து வைத்த கவி கா.மு.ஷெரீப் அவர்களைப்போல, காஜா மொய்தீனை எம்.ஜி.ஆரிடம் அறிமுகம் செய்து வைத்தவர் டணால் கே.தங்கவேலு அவர்கள்.
1953-ஆம் ஆண்டு மே மாதம் 24-ஆம் தேதி மாலை சுமார் 5 மணிக்கு நடிகர் தங்கவேலு அவர்களுடைய சிபாரிஸின் பேரில் முதன் முதலாக எம்.ஜி.ஆரை சந்திக்கச் செல்கிறார் காஜா மொய்தீன்.
எம்.ஜி.ஆர். அவர்கள் அப்போது லாயிட்ஸ் சாலையில் (தற்போது ஒளவை சண்முகம் சாலை) 160-ஆம் எண் இல்லத்தில் குடியிருந்தார். கருப்பு நிற டாட்ஜ் காரை அனுப்பி ஓட்டுனர் கதிரேசனிடம் காஜா மொய்தீனை அழைத்து வரச் சொல்கிறார் எம்.ஜி.ஆர்.
வீட்டு வாசல் முகப்பில் பெரியவர் எம்.ஜி.சக்கரபாணி, சின்னவர் எம்.ஜி.ஆர். இருவருக்கும் இடையே காஜா மொய்தீனை பணிக்கும் அமர்த்தும் தேர்வில் நடுவில் வீற்றிருந்தவர் எம்.கே.முஸ்தபா எம்.ஜி.ஆரின் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர். குறிப்பாக பெரியவர் எம்.ஜி.சக்கரபாணியின் பாசத்திற்குரியவர்.
“வாங்க.. வாங்க….” என்று அன்புடன் அழைத்து அங்கு போடப்பட்டிருந்த இருக்கையில் அமரச் சொல்கிறார் எம்.ஜி,ஆர்.
எம்.ஜிஆர் அவர்களின் உபசரிப்பை விவரிக்கையில் இஸ்லாமிய வரலாற்றில் மூன்றாவது கலீபாவான உதுமான் (ரலி) அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை தனது பதிவொன்றில் நினைவு கூர்கிறார் இவர்.
“உலகில் பெரிய பண்பு எது?” என்று கலீபா உதுமான் அவர்களிடம் கேட்கிறார் ஒருவர்.
“நம்மைத் தேடி வருபவர்களை உட்கார வைத்து பேசுவது” என்று வருகிறது கலீபாவின் பதில்.
இந்தச் சொல் என் நினைவுக்கு வந்தது என்று மனம் நெகிழ்ந்துப் போகிறார் பணித்தேர்வுக்குச் சென்ற காஜா மொய்தீன்.
வேலை தேடி வந்த அவரிடம் எம்.ஜி.ஆர். தொடர்கிறார். “உங்க ஊர் பெயரை தங்கவேலு சொன்னார். முஸ்லீம் மதத்தில் பிறந்த உங்கள் எழுத்து, தமிழுக்கு ரொம்ப சிறப்பைத் தருவதாக இருக்குதுன்னு சொன்னாரு. இவங்களும் உங்க இனம்தான் எம்.கே.முஸ்தபா, எங்க குடுமப நண்பர்.” என்று அவரை அறிமுகப்படுத்தினார்கள்.
காஜா மொய்தீனைப்பற்றி பற்றி ஏற்கனவே அறிந்து வைத்திருந்த எம்.கே.முஸ்தபா மேலும்சில தகவல்களை பகிர்கிறார், “சுதந்திர நாடு தின இதழில் இவர் நிறைய எழுதி வருகிறார். அதுமட்டுமின்றி பூவிழி என்ற பத்திரிக்கையையும் நடத்தி வந்தவர்”
“முஸ்தபா சொல்வதைப் பார்த்தால் நீங்க ஆறு வருஷத்துக்கு முன்னாலேயே நல்லா எழுதியிருக்கீங்க. இனிமேலும் பெரிய சந்தர்ப்பங்கள் வரலாம். உங்க சொந்த பெயரில் எழுதுவதைவிட ஒரு பொதுப் பெயரிலே எழுதினா நல்லாயிருக்கும். அதனால பெயரை மாத்தி வச்சுக்கிறீங்களா?”
“உங்க இஷ்டம். மாத்தி வைங்க” என்கிறார் காஜா மொய்தீன்.
“உங்களுக்கு எந்த ஆசிரியரைப் பிடிக்கும்?. பெரியவங்களா இருக்கணும்” – இது எம்.ஜி.ஆர்.
“ரவீந்திரநாத் தாகூரை எனக்குப் பிடிக்கும். அவுங்க கதை கவிதைங்க நிறைய படித்திருக்கிறேன்”
“சரி. அவர் ரவீந்திரநாத் தாகூர். நீங்க தாகூர்”
“ஆகா.. நாகூரிலிருந்து வந்த தாகூர், நல்ல பெயர்ப் பொருத்தம்” என்று சிரித்தபடியே சொல்கிறார் முஸ்தபா.
“நாத், வேண்டாம். உங்க பேரை ரவீந்தரன் என்று வச்சுக்குங்க” என்கிறார் பெரியவர் எம்.ஜி,சக்கரபாணி
“சரி” என்று சம்மதித்து தலையாட்டுகிறார் இவர்.
சிறிது நேரம் மெளனத்திற்குப் பிறகு ஏதோ மனக்கணக்கு போட்டவாறு “அதுகூட வேணாம். புனைப்பெயரா தெரியணும். அதனாலே “ரவீந்தர்” என்ற பெயர் சரியா இருக்கும். அப்படிப் பார்த்தா நியூமராலஜி 6 வரும். கலைக்கு நல்லது” என்கிறார் எம்.ஜி,ஆர்.
ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் முடி சூட்டிக்கொண்ட நாளில் அவருக்கும் புதுப்பெயர் சூட்டப்படுகிறது. பெரியவர், சின்னவர், எம்.கே.முஸ்தபா மூவரும் அவருக்கு வாழ்த்துச் சொல்கிறார்கள்.
“சரி. இனிமே உமக்கு எல்லாம் வரும். போய்ட்டு நாளைக்கு வாரும். கார் அனுப்பறோம்.” என்று வழியனுப்பி வைக்கிறார் பெரியவர் எம்.ஜி.சக்கரபாணி.
காஜா மொய்தீனாகச் சென்ற அவர் ரவீந்தராக வீடு திரும்புகிறார். ஒளிமயமான எதிர்காலம் அவர் உள்ளத்தில் தெரிகிறது
இப்போது எம்.கே.முஸ்தபாவின் கலைத்துறை வாழ்க்கையை சற்று பார்ப்போம். ரவீந்தருடன் நெருக்கமான நட்புறவு கொண்டிருந்த எம்.கே.முஸ்தாபாவின் பெயரும் பெரிதாக வெளியில் தெரிய வரவில்லை. நிறைகுடம் தளும்பாது என்பார்கள். இயக்குனர் சமுத்திரகனியின் பாஷையில் சொல்ல வெண்டுமென்றால் “இந்த இருவருமே இருக்கும் இடம் தெரியாமல் இருந்துவிட்டு போய்விட்டார்கள்’.
அதாவது நாடோடி மன்னன் படம் வசனம் என்றால் டைட்டிலில் கண்ணதாசன்- ரவீந்தர் என்றே வரும்.கலைஞருக்கு பதில் கண்ணதாசனை வசனம் எழுத அழைத்தார். மிகமிக முக்கியமான பதினைந்து காட்சிகளுக்கு மட்டுமே கண்ணதாசன் எழுதினார். மற்ற வசனங்களை எழுதியவர், எம்ஜிஆர் பிக்சர்சை சேர்ந்த ரவீந்தர்.தமிழ் திரை உலகின் நெம்பர் என் வசனகர்த்தாவான இளங்கோவனிடம் உதவியாளராக இருந்தவர்.
1942-ஆம் ஆண்டில் ஆர்.எஸ்.மணி இயக்கத்தில் சோமுவும் , மொகிதீனும் “ஜுபிடர் பிக்சர்ஸ்” பெயரில் தயாரித்து வெளியிட்ட “கண்ணகி” படத்திற்கு வீர வசனம் எழுதியது இளங்கோவன்தான். இந்தப் படத்தில், கண்ணகியாகவே மாறிவிட்டிருந்தார் கண்ணாம்பா. திரையரங்கில் ஒவ்வொரு வசன முடிவிலும் கரகோஷம் வானைப் பிளந்தது.

1958-ல் வெளிவந்த “நாடோடி மன்னன்” திரைப்படம்தான் ரவீந்தர் பெயரை முதன்முதலாக வெள்ளித்திரையில் வெளிச்சம் போட்டுக் காட்டியது என்று பலரும் எழுதுகிறார்கள். அது உண்மையல்ல. அதற்கு ஓராண்டுக்கு முன்பே “ராஜ ராஜன்” (1957) படத்தில் ரவீந்தருடைய பெயர் பட டைட்டிலில் காட்டப்பட்டது.இளங்கோவனுக்கும் ரவீந்தருக்கும் ஏராளமான ஒற்றுமை உண்டு. திரையுலகில் சிறந்த வசனகர்த்தாக்களாக பெயர் பெற்றிருந்தும்கூட இருவரும் இறுதிக் காலத்தில் பொருளாதார ரீதியில் கஷ்டங்களை அனுபவித்தவர்கள்.
இருவரும் தமிழ்த் திரையுலகிற்கு தங்கள் திறமையினால் அபார பங்களிப்பை வழங்கியவர்கள். இருவரும் தமிழக அரசின் “கலைமாமணி” பட்டம் பெற்றவர்கள்.
இருவரும் திரையுலகம் மறந்துப்போன முன்னோடிகள். ஊடகங்களால் கண்டும் காணாமலும் நிராகரிக்கப்பட்டவர்கள்
பிறமொழி நாவல்களை இறக்குமதி செய்து, தமிழ்மொழிக்கு ஏற்றவாறு வசனங்களை மாற்றியமைத்து இருவரும் திரையுலகிற்கு புதுமை சேர்த்தார்கள்.
Victor Hugo எழுதிய “Les Mis’erables” என்ற பிரெஞ்சு நாவலை அடிப்படையாகக் கொண்டு 1950-ல் உருவாக்கப்பட்ட படம் “ஏழை படும் பாடு” இளங்கோவனின் கைவண்ணத்தில் உருவான படம் இது.
அதேபோன்று Antony Hope எழுதிய “The Prisoner of Zenda” மற்றும் Justin Huntly Mccarthy எழுதிய “If I were King” ஆங்கில நாவல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட “நாடோடி மன்னன்” ரவீந்தரின் வசனத்தில் உருவான படம்.
இருவரும் திராவிடக் கட்சி எழுத்தாளர்களின் அரசியல் பின்புல ஆளுமையினால் பின்னுக்குத் தள்ளப்பட்டவர்கள்.
ரவீந்தர் என்பவர் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான வட்டத்தில் இருந்தவர். இஸ் லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த இவரின் இயற்பெயர் காஜா முகைதீன். சொந்த ஊர் நாகூர். எம்.ஜி.ஆர். வைத்த பெயர் ரவீந்தர். எம்.ஜி.ஆர். நாடகமன்றத்தின் ‘இடிந்த கோயில்’ நாடகத்துக்கு (இந்த நாடகம்தான் பின்னர் ‘இன்பக் கனவு’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது) வசனம் எழுதியவர். ‘நாடோடி மன்னன்’ படத்திலும் கவியரசு கண்ணதாசனுடன் சேர்ந்து வசனம் எழுதியுள்ளார். ‘நாடோடி மன்னன்’ படத்தின் வெற்றி பற்றி குறிப் பிடும்போது ரவீந்தரின் திறமையை எம்.ஜி.ஆர். பாராட்டியுள்ளார். எம்.ஜி.ஆரின் பல படங்களுக்கும் வசனம் எழுதியுள்ளார். ‘எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் ரவீந்தர்’ என்று அறியப்பட்டவர்.
ரவீந்தருக்கு 1958-ம் ஆண்டு திருமண ஏற்பாடுகள் நடந்தன. அதுபற்றி எம்.ஜி.ஆரிடமும் அவரது அண்ணன் சக்ரபாணியிடமும் ரவீந்தர் தெரிவித்தார். ‘‘திருமண தேதியை பெரியவர்கள் நிச் சயித்துவிட்டார்கள்’’ என்று ரவீந்தர் கூறி யதும், ‘‘ரொம்ப சந்தோஷம். எவ்வளவு பணம் வேண்டும்?’’ என்று சக்ரபாணி கேட் டார். ‘‘வெறும் பதினாறு ரூபாய் மட்டும் கொடுங்கள்’’ என்றார் ரவீந்தர். எம்.ஜி.ஆருக்கும் சக்ரபாணிக்கும் சற்று குழப்பம்.
பின்னர், கலகலவென சிரித்த சக்ர பாணி, ‘‘என்னய்யா 16 ரூபாய்க்கு கல்யாணம். ஒரு பிளேட் பிரியாணிக்குக்கூட ஆகாதே?’’ என்றார். அதற்கு ரவீந்தர், ‘‘எங்கள் வழக்கப்படி தாலி ஒரு கிராம் எடை யில் இருக்கும். இப்போது அதன் விலை பதினாறு ரூபாய். அதற்கு மட்டும் நீங்கள் பணம் கொடுத்தால் போதும். மத்த படி உங்க தயவுல என்கிட்ட இருக்கிற பணமே போதும்’’ என்றார்.
எம்.ஜி.ஆரும் சக்ரபாணியும் உள்ளே சென்றனர். சக்ரபாணி மட் டுமே வெளியே வந்து, ரவீந்தர் கேட்ட படி, பதினாறு ரூபாயை அவரிடம் கொடுத்தார். எம்.ஜி.ஆர். வர வில்லை. சிறிது நேரம் ரவீந்தர் அங் கேயே காத்திருந்தார். எம்.ஜி.ஆர். தனது கையால் அந்தப் பணத்தைக் கொடுக்கவில்லையே என்று ரவீந் தருக்கு குறை.
சற்று நேரம் கழித்து வெளியே வந்த எம்.ஜி.ஆர்., ரவீந்தரைப் பார்த்து, ‘‘என்ன ரவீந்தர்? இன்னும் பணம் வேணுமா? உமக்காக பத் தாயிரம் ரூபாய் எடுத்து வெச்சிருக்கேன். தர்றேன்’’ என்றார். 1958-ல் பவுன் விலை ஏறத்தாழ நூறு ரூபாய் விற்ற நிலையில், பத்தாயிரம் ரூபாய்க்கு கிட்டத்தட்ட நூறு பவுன் வாங்கலாம். இன்றைய பவுன் விலையோடு ஒப்பிடும்போது அன்றைய பத்தாயிரம் ரூபாய், இப்போது இருபது லட்ச ரூபாய்க்கு சமம்.
ரவீந்தர் உடனே, ‘‘அதுக்கில்லே அண்ணே, பதினாறு ரூபாயை உங்க கையாலேயே என்கிட்ட கொடுப்பீங் கன்னு நினைச்சேன்’’ என்று தன் ஆதங் கத்தை வெளிப்படுத்தினார். எம்.ஜி.ஆர். லேசாக புன்னகைத்து, ‘‘என்னய்யா புரி யாத ஆளா இருக்கே. கல்யாணத்துக்கு தாலி வாங்க பணம் கேட்கிறே. எங்க அண்ணன் புள்ளை குட்டிக்காரர். எனக்கு அந்த பாக்கியம் இல்லே. அதனால்தான் அவர் கையாலேயே உன்கிட்ட கொடுக்கச் சொன்னேன்’’ என்றார்.
எம்.ஜி.ஆரின் இந்த எதிர்பாராத பதிலையும் அவரது நல்லெண்ணத்தை யும் அறிந்து ரவீந்தர் அழுதேவிட்டோர். எம்.ஜி.ஆரும் கண்கலங்கி ரவீந்தரை அணைத்தபடி, ‘‘நல்லா இரும்’’ என்று வாழ்த்தினார். பின்னர், ரவீந்தர் ஆறு குழந்தைகளுக்குத் தந்தையானார்..........SBB.,

orodizli
23rd September 2020, 01:39 PM
ரவீந்தர் அவர்கள் நூல்கள்
முழுநேர எழுத்தாளராக தன் வாழ்க்கைப் பாதையை வகுத்துக் கொண்ட ரவீந்தர் அவர்கள் நூல்கள் ஏதேனும் எழுதியிருக்கிறாரா என்று வாசகர்கள் கேட்கலாம். அவர் எழுதிய நூல்கள் எண்ணிக்கையில் குறைவுதான். ஆரம்ப நாட்களில் `கன்னி`, `குற்றத்தின் பரிசு`, `பெண்ணே என் கண்ணே` ஆகிய மூன்று நாவல்களை எழுதியுள்ளார். “பொம்மை” பத்திரிக்கையில் எம்.ஜி.ஆரைப் பற்றி தொடர் கட்டுரை எழுதி வந்தார்.
பிற்காலத்தில் தன் நல்வாழ்வுக்கு வழியமைத்து வழிகாட்டி, தன்னைக் கூடவே துணையாக வைத்திருந்த எம்.ஜி.ஆரின் நினைவாக இரண்டு நூல்கள் எழுதினார். ஒன்று “விழா நாயகன் எம்.ஜி.ஆர்”.. மற்றொன்று “பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்”.
எம்.ஜி.ஆரைப் பற்றி எத்தனையோ பேர்கள் எத்தனையோ நூல்கள் எழுதியிருக்கின்றார்கள். எ.சங்கர் ராவ் எழுதிய “தரணி கண்ட தனிப்பிறவி”, நாகை தருமன் எழுதிய “மாமனிதர் எம்.ஜி.ஆர்.”, சபீதா ஜோசப் எழுதிய “மறக்க முடியாத மக்கள் திலகம்”, பா.தீனதயாளன் எழுதிய “எம்.ஜி.ஆர்.”, ரங்கவாசன் எழுதிய “மக்கள் ஆசான்”, ஆர்.முத்துக்குமார் எழுதிய “வாத்யார்”, மணவை பொன் மாணிக்கம் எழுதிய “எட்டாவது வள்ளல்”, எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பளராக பணியாற்றிய கே.பி.ராமகிருஷ்ணன் எழுதிய “மனிதப் புனிதம்” மற்றும் “எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம்” போன்ற எண்ணற்ற நூல்கள் பதிப்பாக வெளிவந்திருந்த போதிலும் கலைமாமணி நாகூர் கே.ரவீந்தர் எழுதிய இரண்டு நூல்களும் முக்கியப் பதிவாக எல்லோராலும் கருதப்படுகிறது.
எம்.ஜி.ஆரின் கலைவாழ்வில் ஆரம்ப நாட்கள் முதற்கொண்டே அவரது உயர்வு தாழ்வுகளின் போதெல்லாம் உடனிருந்து, இன்ப துன்பங்களில் பங்கு கொண்ட ரவீந்தரைத் தவிர எம்.ஜி.ஆரின் குணநலன்களை வேறு யாராலும் அவ்வளவு துல்லியமாக பதிவு செய்ய இயலாது. எம்.ஜி.ஆரின் பாராட்டத்தக்க பழக்க வழக்கங்கள், அவருடைய வாழ்க்கையில் ஏற்பட்ட சுவையான நிகழ்ச்சிகள், அவரது தாராள மனம், கொடைத்தன்மை, சந்தித்த நண்பர்கள் போன்ற விடயங்களை ஒன்று விடாமல் எழுதி வைத்திருப்பதால் ரவீந்தருடைய நூல்கள் வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது.
“முள்ளும் மலரும்” என்று தன் படத்திற்கு இயக்குனர் மகேந்திரன் பெயர் வைத்திருப்பார். அதன் பொருள் ஆங்கிலத்தில் ” Thorn and Flower” என்றுதான் நானும் நினைத்திருந்தேன். பிறகுதான் தெரிந்தது அந்த படத்தலைப்பின் பொருள் “Thorn also blossoms” என்று.
அதே போன்று விஜயா பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட ரவீந்தர் எழுதிய நூலின் தலைப்பு “விழா நாயகன்” ” என்பதாகும். விழாவுக்கெல்லாம் நாயகன் என்ற அர்த்தத்தில் அத்தலைப்பு கொடுக்கப்படவில்லை. அதன் பொருள் “விழா(த) நாயகன்” என்பதாகும். வாழ்க்கையில் மூன்று முறை பேராபத்துக்களைச் சந்தித்து “முப்பிறவி கண்டவர்” என்று பெயரெடுத்தவர் எம்.ஜி.ஆர். எத்தனையோ பேர்கள் அவரை வீழ்த்த நினைத்தபோதும் “விழாத நாயகனாக” இறுதிவரை தன் வெற்றியை நிலைநாட்டிக் கொண்டவர். இருபொருள் கொண்ட இந்த நூலின் தலைப்பு எல்லோர் கவனத்தையும் ஈர்த்து ஏகோபித்த பாராட்டுதலைப் பெற்றுத் தந்தது.
“விழா நாயகன்” நூலில் கீழ்க்கண்ட தலைப்பில் எம்.ஜி,ஆரின் வாழ்வில் நடந்த பல நிகழ்வுகளை கோர்வையாக சுவைபட தனக்கே உரிய எளிய நடையில் விவரித்திருப்பார் ரவீந்தர்.
ராமச்சந்திரன்,
செம்மலின் வாழ்க்கைக்கு,
புரட்சி குமார்,
நெஞ்சு குளிர்ந்த நிகழ்ச்சி,
நீங்களே எங்கள் மன்னர்,
கலைக்கு விலை,
தசாவதாரம்,
தமிழுக்குச் சிறப்பு எழுத்து,
திரை ஏணி, காவியம் எது?,
நாளை நடப்பதை அறிந்தவர்,
தங்க நிழல்,
உங்களில் ஒருவன்,
பெண் சிரித்தால்,
பூட்டு வந்த பின்தான்,
என்னைப் போல் நீங்கள்,
உலகம் உருண்டை ஏன்,
ஜானு சொன்னது,
படத்தின் தலைப்பு,
நேற்று இன்று நாளை,
மூன்றெழுத்து வேந்தன்,
நல்ல நேரம்,
இதோ.. இவர்கள்,
டாக்டர் பட்டம் யாருக்கு?,
தாய் சொல்லை தட்டவில்லை,
அவருடைய எண்ணம்,
ஆடவந்த தெய்வம்,
நட்பு என்பது,
இதய தெய்வம்,
மக்களின் நினைவில்
ரவீந்தரின் மற்றொரு படைப்பான “பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்.” என்ற நூலில் எம்.ஜி.ஆர். அவர்களின் வாழ்வில் இடம்பெற்ற அரிய பல நிகழ்ச்சிகளை அற்புதமான முறையில் விவரித்துள்ளார்.
எம்.ஜி.ஆரின் மனித நேயத்தை வாசகர்களுக்கும் எடுத்துரைக்கும் வண்ணம் பல சுவையான நிகழ்வுகளை ரவீந்தரின் நூல் நமக்கு விருந்து படைக்கின்றது. .........SBB...

orodizli
23rd September 2020, 01:46 PM
எம்ஜிஆர் குறித்து வெளிவந்த நூல்களின் மொத்தத் தொகுப்பு பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்...

எம்ஜி ஆரைப் பற்றித் தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் பல நூல்கள் வெளிவந்துள்ளன,தமிழ் நூல்கள்...
முதலமைச்சர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் - டி.வி.சிவப்பிரகாசம்,வெளியீடு - கல்வி உலகம், இளந்தேரி (1977))
புரட்சித்தலைவரின் பொன்மொழிகள் (ஆசிரியர் – சாலி.இக்பால், வெளியீடு – நூர் பதிப்பகம், சென்னை (1980))
மக்கள் திலகம் இருவரலாற்றுப்படை (ஆசிரியர் – புலவர்.கே.பெரு.திருவரங்கன்,வெளியீடு - இராமலட்சுமி பதிப்பகம் , சென்னை (1980))
அண்ணனுக்குப் பின் மன்னன்,(ஆசிரியர் – அடியார்,வெளியீடு - மல்லி பதிப்பகம், சென்னை (1978))
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – வித்துவான் வே.லட்சுமணன்,வெளியீடு – வானதி பதிப்பகம், சென்னை (1985))
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன்,வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1983))
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – நாகை தருமன், வெளியீடு - அறிஞர் அண்ணா பதிப்பகம், சென்னை (1979))
வரலாற்று நாயகன் (ஆசிரியர் – திருமூலன்,வெளியீடு – கவிதா பப்ளிகேசன்ஸ் , சென்னை (1978))
காலத்தை வென்றவர் (ஆசிரியர் – மணியன்,வெளியீடு - இதயம் பப்ளிகேசன்ஸ் , சென்னை (1985))
எம்.ஜி.ஆர். என் இதயக்கனி (ஆசிரியர் – அறிஞர் அண்ணா, தொகுப்பு- ஆர்.சீனிவாசன்,வெளியீடு – சத்தியத்தாய் பதிப்பகம் , சென்னை (1984))
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பிள்ளைத்தமிழ் (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம்,வெளியீடு – நீரோட்டம் வெளியீடு , சென்னை (1981))
அண்ணா தி.மு.க. வரலாறு (ஆசிரியர் – ஆர்.ரெங்காராவ்,வெளியீடு – செவ்வாய் வெளியீடு , சென்னை (1986))
நெஞ்சில் ஆடும் தீபம் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் டி.கே.மதியானந்தம்,வெளியீடு – கவிதாபானு, சென்னை (1983))
சத்துணவும் சத்துணர்வும் (ஆசிரியர் – கிருஷ்ணகாந்தன்,வெளியீடு – வள்ளி புத்தக நிலையம், சென்னை (1984))
அறிஞர் அண்ணா நமக்கு அறிவூட்டுகிற கடவுள் ( எம்.ஜி.ஆர். சொற்பொழிவுகள்) (ஆசிரியர் – தொகுப்பு-கழஞ்சூர் சொ.செல்வராஜ்,வெளியீடு – குத்தூசி குருசாமி பதிப்பகம், சென்னை (1985))
தங்கத்தமிழர் எம்.ஜி.ஆர். ஓர் ஆய்வு (ஆசிரியர் – மாணிக்கம்-சீனிவாசன், வெளியீடு – வெல்கம் பப்ளிகேஷன்ஸ் , சென்னை (1986))
எம் தலைவன் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன்,வெளியீடு – தில்லை நாயகி பதிப்பகம், சேலம் (1987))
அமெரிக்காவில் அண்ணா, எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – டாக்டர்.எம்.எஸ்.உதயமூர்த்தி,வெளியீடு – வித்வான் பதிப்பகம், சென்னை (1975))
பொன்மனமே நீடு வாழ்க (கவிதை) (ஆசிரியர் – ராஜவர்மன், வெளியீடு – ஏ.எஸ்.ஆர்.பப்ளிகேசன்ஸ், சென்னை (1984))
மக்கள் தலைவருக்கு மன்றத்தலைவர் டாக்டர் பட்டம்- சேலத்தில் எடுத்த விழா மலர் (ஆசிரியர் – தஞ்சை வி.எஸ்.இராசு, வெளியீடு – புரட்சிக்குயில் பப்ளிகேசன்ஸ், சென்னை (1983))
சரித்திரத்தை மாற்றிய சத்புருஷர் (ஆசிரியர் – டாக்டர் கோ.சமரசம், வெளியீடு – கோணப்பர் பதிப்பகம், சென்னை (1986))
நினைவுகளின் ஊர்வலம் (ஆசிரியர் – கவிஞர் புலமைப்பித்தன், வெளியீடு – திருமகள் நிலையம், சென்னை (1986))
எமனை வென்ற எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – தஞ்சை தமிழழகன், வெளியீடு - மக்கள் பதிப்பகம், சென்னை (1985))
டாக்டர் எம்.ஜி.ஆர் ஒரு பொருளாதார வல்லுநர் (ஆசிரியர் – அ.வசந்தகுமார், வெளியீடு – கண்ணம்மாள் பதிப்பகம், சென்னை (1985))
பொன்மனச் செமமலும், புன்னகை மலர்களும் (ஆசிரியர் – எஸ்.குலசேகரன், வெளியீடு - அமிழ்தம் பதிப்பகம், சென்னை (1985))
தெற்கு என்பது திசை அல்ல (கவிதை) (ஆசிரியர் – வலம்புரிஜான், வெளியீடு – கவிதாபானு, சென்னை (1984))
சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – பாலாஜி, வெளியீடு – கீதா பிரசுரம், சென்னை (1987))
டாக்டர். எம்.ஜி.ஆர் வீரக்காவியம் (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988))
அப்பலோ டு அமெரிக்கா (ஆசிரியர் – பா.ஜீவகன், வெளியீடு – மேத்தா பிரசுரம், சிவகாசி (1985))
சத்துணவு பாடல்கள் (ஆசிரியர் – புலவர்.பி.வெங்கடேசன், வெளியீடு - அறிவரசி பதிப்பகம், தருமபுரி (1984))
இந்தி ஆதிக்கப் போரில் புரட்சித்தலைவர் (ஆசிரியர் – கவிஞர் மணிமொழி-நாஞ்சில் நீ.மணிமாறன், வெளியீடு – புதியபூமி பதிப்பகம், சென்னை (1987))
நான் ஏன் பிறந்தேன்? (ஆசிரியர் – வேலன், வெளியீடு – வேல் பாண்டியன் பிரசுரம், சென்னை (1988))
புரட்சித்தலைவர் அரசின் சமதர்மச் சட்டங்கள், (ஆசிரியர் – கா.சுப்பு, வெளியீடு - அண்ணா தொழிற்சங்கப் பேரவை, சென்னை (1984))
நான் கண்ட எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – மணியன், வெளியீடு - இதயம் பப்ளிகேசன்ஸ், சென்னை (1985))
எம்.ஜி.ஆர் ஒரு குமணன் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு – தில்லை நாயகி பதிப்பகம், சேலம் (1988))
முப்பிறவி எடுத்த முதல்வர் (ஆசிரியர் – திருப்பூர் வெ.சம்பத்குமார், வெளியீடு - சாயிகீதா பதிப்பகம், சென்னை (1985))
சொல்லும் செயலும் (ஆசிரியர் – ஆ.அசோக்குமார், வெளியீடு – நியூ ஸ்டார் பப்ளிகேசன்ஸ், சென்னை (1985))
செந்தமிழ் வேளீர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – புலவர்.செ.இராசு, வெளியீடு – கொங்கு ஆய்வு மையம், ஈரோடு (1985))
எம்.ஜி.ஆர் சரணம் (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு - நெய்தல் பதிப்பகம், சென்னை (1988))
எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம் (ஆசிரியர் – நியூஸ் ஆனந்தன், வெளியீடு – தனலட்சுமி பதிப்பகம், சென்னை (1981))
1980-85 சட்டமன்ற நாடாளுமன்ற வேட்பாளர்கள் (ஆசிரியர் – எம்.சுப்பிரமணியம், வெளியீடு – சித்ரா பப்ளிகேசன்ஸ், சென்னை (1986))
சாதனைப்பூவின் சரித்திர வசந்தம் (ஆசிரியர் – டாக்டர் ஜெகத்ரட்சகன், வெளியீடு – அப்போலா வெளியீடு, சென்னை (1988))
முப்பிறவி கண்ட முதல்வர் (ஆசிரியர் – டி.எம்.சௌந்திரராஜன், வெளியீடு - ரேவதி பதிப்பகம், சென்னை (1985))
செம்மலின் பொன்மனம் (ஆசிரியர் – கவிஞர்.ச.பஞ்சநாதன், வெளியீடு – என்.எஸ்.பப்ளிகேசன்ஸ், மதுரை (1988))
புரட்சியார் ஒரு காவியம், (ஆசிரியர் – கவிஞர்.தெ.பெ.கோ.சாமி, வெளியீடு - சித்ரா பதிப்பகம், வேலூர் (1987))
எம்.ஜி.ஆர்.உயில்களும் உயில் சாசன சட்டங்களும் (ஆசிரியர் – வை.சண்முகசுந்தரம், வெளியீடு – கலைக்கருவூலம், சென்னை (1988))
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.உலா (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம், வெளியீடு – பூம்புகார் பிரசுரம், சென்னை (1983))
மக்கள் திலகம் பற்றிய மாணவராற்றுப்படை (ஆசிரியர் – மாருதிதாசன், வெளியீடு - அருள்ஜோதிப் பதிப்பகம், நாமக்கல் (1981))
உலா வரும் உருவங்கள் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் இளந்தேவன், வெளியீடு – கவிதாபானு, சென்னை (1984))
அ.இ.அ.தி.மு.க வின் தோற்றமும் வளர்ச்சியும் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன், வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1985))
சந்திரனைப் போற்றும் நட்சத்திரங்கள் (ஆசிரியர் – நாகை தருமன், வெளியீடு – புதியபூமி பதிப்பகம், சென்னை (1987))
புரட்சித்தலைவர் அவர்களுக்கு அறிஞர்கள் புகழ் மாலை (ஆசிரியர் – கழஞ்சூர் சொ.செல்வராஜி, வெளியீடு – குத்தூசி குருசாமி பதிப்பகம், வேலூர் (1985))
வெற்றித்தலைவர் வீர வரலாறு (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988))
எம்.ஜி.ஆர். ஒரு காவியம் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு - தில்லை பதிப்பகம், சேலம் (1987))
ஜீவ நதிகள் (ஆசிரியர் – கலைமாமணி மா.லட்சுமணன், வெளியீடு - அன்னை ஜே.ஆர். பதிப்பகம், சென்னை (1988))
புரட்சித்தலைவர் புகழ் அந்தாதி, (ஆசிரியர் – மலேசியக் கவிஞர் ஐ.உலகநாதன், வெளியீடு - தாமரைப் பதிப்பகம், சென்னை (1985))
தந்தை பெரியார் முதல் புரட்சித்தலைவர் வரை (ஆசிரியர் – ஏ.கே.வில்வம், வெளியீடு - ரோமா பதிப்பகம், சென்னை (1985))
வள்ளலும் உள்ளமும் (ஆசிரியர் – டாக்டர்.எஸ்.தங்கமணி, வெளியீடு - ஆரோம் பதிப்பகம், குமரி (1987))
நடிகர் திலகமும் புரட்சித்தலைவரும் (ஆசிரியர் – ரசிகன் அருணன், வெளியீடு - அருணா பப்ளிசிட்டி, சென்னை (1987))
திருக்குறள் பாதையில் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு – நெய்தல் வெளியீடு, சென்னை (1984))
எம்.ஜி.ஆர் பெயரில் மன்றம் தேவையா? (ஆசிரியர் – திருவை ஆ.அண்ணாமலை, வெளியீடு – நெல்சன் பதிப்பகம், சென்னை (1961))
தர்மம் வென்றது (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு – நெய்தல் வெளியீடு, சென்னை (1987))
எம்.ஜி.ஆர் கதை பாகம்-1 (ஆசிரியர் – எஸ்.விஜயன், வெளியீடு – ஜியோ பப்ளிகேசன்ஸ், சென்னை (1989))
மறு பிறவி கண்ட மக்கள் திலகம் (ஆசிரியர் – எம்.ஜி.ஆர் தாசன், வெளியீடு – கன்னி பதிப்பகம், சென்னை (1985))
சத்தியா மைந்தன் சாதனை (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988))
தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு – மறைதிரு எம்.ஏ.கோலாஸ், சேலம் (1978))
சத்துணவு நாயகன் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு - தில்லைநாயகி பதிப்பகம், சேலம் (1987))
இதயவானில் உதய நிலவு (ஆசிரியர் – தண்டு குன்னத்தூர் தமிழன், வெளியீடு - இளவளகி பதிப்பகம், வேலூர் (1985))
பரிபூரண அவதாரம் (நாடகம்) (ஆசிரியர் – டாக்டர் கோ.சமரசம், வெளியீடு – கோணப்பர் பதிப்பகம், சென்னை (1985))
எம்.ஜி.ஆர் கதை பாகம்-2 (ஆசிரியர் – எஸ்.விஜயன், வெளியீடு - அருள்மொழி பதிப்பகம், சென்னை (1991))
எம்.ஜி.ஆர் பொருளாதார அடிப்படை சரிதானா? (ஆசிரியர் – கி.வீரமணி, வெளியீடு – திராவிடர் கழக வெளியீடு, சென்னை (1982))
நிலவை நேசிக்கும் நெஞ்சங்கள் (ஆசிரியர் – இனியவன், வெளியீடு – அவ்வை மன்றம், சென்னை (1986))
புரட்சித்தலைவர் பிள்ளைத் தமிழ் (ஆசிரியர் – கவிஞர் அக்கினிப்புத்திரன், வெளியீடு - குறளகம், பழனி (1988))
புரட்சித்லைவர் எம்.ஜி.ஆர். வீர வரலாறு (ஆசிரியர் – ஜோதிமணவாளன், வெளியீடு – ஜோதி பப்ளிகேசன்ஸ், சிவகாசி (1993))
எம்.ஜி.ஆர் நிழலும் நிஜமும் (ஆசிரியர் – மோகன்தாஸ், வெளியீடு – பந்தர் பப்ளிகேசன்ஸ், பெங்களுர் (1993))
காலத்தை வென்றவர் (ஆசிரியர் – மணியன், வெளியீடு - இதயம் பதிப்பகம், நாகப்பட்டினம் (1991))
சரித்திர நாயகர் எம்.ஜி.ஆர். சாதனைகள் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன், வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1991))
சரித்திரம் படைத்த எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – ஏ.கே.சேஷய்யா, வெளியீடு – மயிலவன் பதிப்பகம், சென்னை (1993))
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கு.சண்முகசந்தரம், வெளியீடு – குமரன் பதிப்பகம், சென்னை (1992))
எம்.ஜி.ஆர். ஓர் ஆய்வு (ஆசிரியர் – மு.தம்பித்துரை எம்.ஏ, வெளியீடு – ஞானச்சுடர் பதிப்பகம், சென்னை)
தலைவனே எங்களுக்குத் தத்துவம் (ஆசிரியர் – மெய்க்கீர்த்தி, வெளியீடு - அன்னை சத்யா புத்தகப்பண்ணை, சென்னை (1978))
எம்.ஜி.ஆர் ஆட்சியும் சிவாஜி ரசிகர்களும் (ஆசிரியர் – எஸ்.வீரபத்திரன், வெளியீடு – புரட்சியார் ரசிகன், சென்னை (1985))
அண்ணா கொள்கைக்கு நாமம் (ஆசிரியர் – விடுதலை தலையங்கங்கள், வெளியீடு – திராவிடக்கழக வெளியீடு, சென்னை)
வெற்றி நமதே (ஆசிரியர் – ஜோதி மணவாளன், வெளியீடு – ஜோதி பப்ளிகேசன்ஸ், சென்னை (1991))
அரசும் தமிழும் (ஆசிரியர் – ஒப்பிலா மதிவாணன், வெளியீடு - தமிழ்ச்சுரங்கம், மதுரை (1986))
தன்னிறைவுத் திட்டத்தில் தமிழகம் (ஆசிரியர் – குமரிச் செல்வன், வெளியீடு - நாகர்கோவில் (1982))
காலத்தை வென்ற காவிய நாயகன் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – தேனி ராஜதாசன், வெளியீடு - மணிமேகலைப் பிரசுரம், சென்னை (2010))
எம். ஜி. ஆர். கொலை வழக்கு: சிறுகதைகள்- ஷோபாசக்தி - 2016
எம். ஜி. ஆர். ஓரு சகாப்தம் கே. பி ராமகிருஷ்ணன் - 2007
பொன்மனச் செம்மல் எம். ஜி. ஆர் கீர்த்தி - 2007
நான் கண்ட எம். ஜி. ஆர் நவீனன் - 2009
எம். ஜி. ஆர். ஒரு சகாப்தம் நியூஸ் ஆனந்தன் - 1987
எங்கள் தங்கம் எம்.ஜி.ஆர் S. தேவாதிராஜன் - 2011
விழா நாயகன் எம். ஜி. ஆர் கலைமாமணி கே ரவீந்தர் - 2009
காலத்தை வென்ற புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர் நாஞ்சில் ஸ்ரீவிஷ்ணு – 2004
எம். ஜி. ஆர்: அதிகம் வெளிவராத தகவல்கள். ஆனால், அத்தனையும் பா தீனதயாளன் - 2015
பொன்மனச் செம்மல் எம். ஜி. ஆர் கே ரவீந்தர் - 2009 - ‎
செந்தமிழ் வேளிர் எம். ஜி. ஆர்: ஒரு வரலாற்று ஆய்வு செ இராசு - 1985
8-வது வள்ளல் எம்.ஜி.ஆர் முரு. சொ. நாச்சியப்பன் - 1969 - ‎
எம். ஜி. ஆர். திரைப்படங்களில் காணப்படும் திராவிடர் இயக்கச் ...கோகிலவாணி கோவிந்தராஜன் - 2010
எம். ஜி. ஆர் ஒரு சகாப்தம் Rajasekaran - 2007 - ‎
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் என் ரமேஷ் - 2011
மக்கள் ஆசான் எம். ஜி. ஆர் ரங்கவாசன் - 2011 –
எனக்குள் எம்.ஜி.ஆர், காவியக் கவிஞர் வாலி வாலி - 2013
எம். ஜி. ஆர் கதை, திருத்தப்பட்ட பதிப்பு எஸ் விஜயன் - 2016
எல்லாம் அறிந்த எம். ஜி. ஆர் எஸ் விஜயன், விகடன் பிரசுரம் – 2008
எம்.ஜி.ஆர். பேட்டிகள்: மக்கள் திலகத்தின் அரிய பேட்டிகள் மற்றும் ...2013
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் எம். ஆர் ரகுநாதன் – 2015
பாரத ரத்னா: எம். ஜி. ஆர் சௌந்தர் - 2016 -
மக்கள் திலகம் புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர்
நம்மோடு வாழும் மக்கள் திலகம் எம். ஜி. ஆர் டி. எம் சண்முகவடிவேல் - 2010 - ‎
வாழ்ந்து காட்டிய வள்ளல் எம்.ஜி.ஆர் சாரதி - 2011 - ‎No preview - ‎
எட்டாவது வள்ளல் எம். ஜி. ஆர் மணவை பொன்மாணிக்கம் - 2000
வாத்யார்: எம். ஜி. ஆரின் வாழ்க்கை ஆர் முத்துக்குமார் - 2009
எம். ஜி. ஆர். ஓர் சகாப்தம் Kē. Pi Rāmakiruṣṇan̲, ‎Es Rajat - 2007 –
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஆசிரியர்: மேகலா சித்ரவேல் சேகர் பதிப்பகம்
ஆங்கில நூல்கள் (English Books)
Dr.M.G.R.A.Phenomenon (Author- Dr.Jagathrakshakan, Publisher- Appolo Publications, Chennai (1984))
All India Anna Diravida Munnetra Kazhagam (Author- Dr.R.Thandavan, Publisher- T.N.Academy of Political Science, Chennai (1984))
Poems- I Call M.G.R an Angel (Author- S.Yesupatham, Publisher- Packiam Publications, Chennai (1984))
Impact M.G.R.Films (Author- V.Kesavalu, Publisher- Movie Appreciation Society, Chennai (1990))
The Dynamic M.G.R (Author- A.P.Janarthanam M.P., Publisher- Chennai (1978))
M.G.R.-The Man and Myth (Author- K.Mohndass, Publisher- Panther Publishers, Chennai (1992))
The Image Trap (M.G.R Film & Politics) (Author- M.S.S.Pandian, Publisher- Sage Publications India, New Delhi (1992))
On the life and achievements of Marudur Gopalan Ramachandran, 1917-1987, Tamil film actor and former chief minister of Tamil Nadu, India.
Biography of Em. Ji. Rāmaccantiran̲, 1917-1987, actor and former chief minister of Tamil Nadu.
Biography of Em. Ji. Rāmaccantiran̲, 1917-1987, actor and former chief minister of Tamil Nadu... ......

orodizli
23rd September 2020, 01:49 PM
எம்.ஜி.ஆர். எந்த அளவுக்கு மத நல்லிணக்கம் கொண்டிருந்தார் என்பதற்கு ரவீந்தர் எடுத்துரைக்கும் இந்த சம்பவம் நம்மை பரவசப்படுத்துகிறது. பிற மதத்தவரை சகோதர பாசத்தோடு அரவணைத்துச் செல்லும் அவரது உயர்ந்த பண்பில் நாம் கரைந்து போகிறோம். இதோ “விழா நாயகன்” நூலில் ரவீந்தர் வருணிப்பதை நாம் காண்போம்.

ஒரு சமயம் காரில் செம்மலுடன் நானும் இசையமைப்பாளர் சுப்பையா நாயுடுவும் போய்க் கொண்டிருக்கிறோம். வட ஆற்காடு மாவட்டம் சேத்துப்பட்டு என்ற ஊரைக் கடந்து வேலூர் நோக்கிப் போகிறோம். காலை வேளை “பசிக்குது இங்கே எங்கேயாவது காரை நிறுத்தி டிக்கியில் இருக்கும் டிபனை சாப்பிட்டுக் கொள்ளலாம்” என்றதும் காரோட்டி கதிரேசன் அங்கு தென்பட்ட ஒரு மாதா கோயில் காம்பவுண்டுகுள்ளே காரை செலுத்தி நிறுத்தினார். அது பெரிய கோவில். சோலைக்குள் இருந்தது.

செம்மலின் கார் நம்பர் தமிழகத்தில் எல்லோருக்கும் தெரியும். கூட்டம் கூடி விட்டது.

கூட்டத்தைக் கண்ட ஒரு பாதிரியார் உள்ளிருந்து வந்தார். செம்மலைக் கண்டதும், “வாங்க, ஏன் இங்கேயே நின்று விட்டீங்க! உள்ளே வந்து சாப்பிடுங்க” என்று அழைத்துப் போனார். கோயில் பணியாட்களிடம் சொல்லி. காரில் இருந்து சிற்றுண்டிகளைக் கொண்டு வரச் சொன்னார்.

உள்ளே அழைத்துப் போய் பேராயரை அறிமுகப் படுத்தினார்கள். அவர் ரோமிலிருந்து வந்திருந்த பெரியவர். கம்பீரத் தோற்றம். அறிவுக்களை அருள் நிறைந்த முகம். செம்மலை அழைத்துப் போய் தன் உணவறையில் அமரவைத்து, தனக்கென வந்த உணவுகளையும் பரிமாறினார். அவரும் எங்களுடன் உண்டார். செம்மல் அவரையே பார்த்துக் கொண்டு சிற்றுண்டியைப் புசித்தார். பேராயாருக்கு இருபுறமும் இரு பூனைகள் வந்து மேசை மேல் அமர்ந்தன. பொசு பொசு என்றும் வால் மொத்தமாக முடி நிறைந்தும் பார்க்க அழகாக இருந்தது. செம்மல் அதனை ரசித்து இப்பூனைகள் எங்குள்ளவை என்று கேட்க. ”ஜாவா நாட்டுப் பூனை. ஒரு பக்தர் கொண்டு வந்து கொடுத்தார்.” என்று பெரியவர் சொன்னார். யாரிடமும் எதையும் கேட்காத செம்மல் “இது குட்டி போட்டால் ஒன்று கொடுங்கள்” என்று கேட்டார். அவரும் “தாராளமாக” என்றார்.

ஆலயத்தைச் சுற்றிக் காண்பித்தார்கள். செம்மல் மண்டியிட்டு முறைப்படி ஏசுவை வணங்கினார். கன்னிகா ஸ்திரீகள் வாழுமிடம், அனாதை குழந்தைகள் வசிக்குமிடம் அனைத்தையும் பார்த்த பின் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டோம். “இங்கு செலவழித்த இரண்டு மணி நேரத்தில் கண்ட நிம்மதியை வேறு எங்கும் காணவில்லை” என்று சொன்னார் செம்மல்.

காரில் போய்க் கொண்டிருக்கும் போது எங்களிடம் அப்பேராயரின் அன்பு, அடக்கம், அழகு, கம்பீரத்தைப் பற்றி பேசிக் கொண்டு வந்தார். ”மக்களுக்கு நேரிடையாக நின்று அருள்பணி புரிபவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும். அவர்களை நிமிர்ந்து பார்த்தால் கை எடுத்துக் கும்பிடும் அளவுக்கு அவர்கள் முகம் இருக்க வேண்டும்” என்றவர், அத்துடன் ”இப்பெரியவரைப்பார்த்த பின் எனக்கும் பாதிரியாக நடிக்க வேண்டும் போலிருக்கிறது” என்றார். இதுதான் ‘பரமபிதா’ படத்துக்கு அடிப்படை.

டிசூஸா என்ற கிருஸ்துவப் பெரியவர் லயோலா கல்லூரியின் முதல்வர். கறாரும் கண்டிப்பும் மிக்கவர். அவர் போப் ஆண்டவருக்கு கீழுள்ள பன்னிரண்டு கார்டினல்களில் ஒருவராக நியமிக்கப்பட்டு ரோமுக்கு போக இருக்கையில், டாக்டர் ரெக்ஸ் அவரை செம்மலிடம் அழைத்து வந்தார்.

செம்மல் முறைப்படி வரவேற்று ”என்னைப் பார்க்க நீங்க வந்ததை விட உங்களைப் பார்க்க நான் வந்திருந்தால் அதுவே முறையாக இருந்திருக்கும்” என்றார்.

அதற்கு அவர் “இல்லை, இல்லை, நான் ஒரு காம்பவுண்டுக்குப் பெரியவர், நீங்கள் இந்த நாட்டுக்குப் பெரியவர். உங்களைப் பற்றி என் அருமை நண்பர் ரெக்ஸ் சொன்னார். அதனால் பார்க்க வந்தேன்” என்றார்.

அதற்கு செம்மல் ”மிக்க நன்றி” உங்களை விட நான் எந்த வகையில் பெரியவன் என்று எனக்கு தெரியலை” என்றார்.

அதற்கு அப்பெரியவர் “இப்போது நான் வெளியே போனால் என்னை யார் என்று தெரியாது. ஆனால் நீங்கள் வெளியே தலைகாட்டினாலும் போதும், யார் என்று சொல்லிவிடுவார்கள். மக்களால் சூழப்படுபவன் எவனோ அவனே மகான்” என்றார். செம்மல் வழக்கம் போல் சிறு புன்னகை செய்து கொண்டார்.
அங்கு பேச்சு வாக்கில் ‘பரமபிதா’ படத்தின் பேச்சும் நடந்தது. அதன் கதையமைப்பை டிசூஸா கேட்டார். ”பாதிரியார் மனதில் சலனங்கள் கூடாது. கதையின்படி நாயகன் காதலில் ஈடுபட்டிருக்கிறான். அவன் அப்படியான சூழ்நிலைக்கு ஆளாகி இருக்கலாகாது. அப்படிப்பட்டவன் பாதிரியாக வர முடியாது. கதையின் அடிப்படையே தவறாக இருக்கிறது” எனச் சொன்னார் டிசூஸா.

அதைக் கேட்டபின் இரண்டாயிரம் அடி எடுத்திருந்த ’பரமபிதா’ படத்தை கைவிட்டார் செம்மல். வெகு நாட்கள்வரை டிசூஸாவின் பேச்சு கம்பீரம், அறிவு, அழகுக் கலையைப் பற்றியே பேசிக் கொண்டே இருந்தார் செம்மல்.

எம்.ஜி.ஆரை பண்புகளை அறிந்துக் கொள்ள விரும்புவர்களுக்கு ரவீந்தரின் நூல்கள் கலைக்களஞ்சியமாக விளங்குகிறது என்றால் அது மிகையாகாது............sbb...

orodizli
23rd September 2020, 01:53 PM
சினிமாத் துறையில் செம்பி நெய்னா காக்காவை தெரியாதவர் யாரும் இருக்க முடியாது, “செம்பி டிரேடர்ஸ் & பப்ளிசிட்டீஸ்” நிறுவனத்தின் மேலாளர்.
எம்.ஜி.ஆர்.அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி புதுக்கட்சி தொடங்க ஆயத்தமானபோது அவர் செய்த முதற் காரியம் என்ன தெரியுமா? அவருக்கு பழக்கமான நண்பர்களிடம் குறிப்பாக மிகநெருக்கமாக பழகிய முஸ்லீம் பிரமுகர்களிடம் நேரடியாகச் சென்று ஆதரவு திரட்டியதுதான். கட்சிக்கு நிதிதிரட்டும் பணியில் அவர்கள் தாராளமாக அள்ளித் தந்தார்கள்.
“கல்வித் தந்தை” என போற்றப்படும் பி.எஸ்.அப்துல் ரஹ்மான் அவர்களின் வீட்டிற்கு மக்கள் திலகம் வருகை தந்தபோது, சேனா அனா அவர்களின் துணைவியார் தமிழர் கலாச்சாரப்படி வெற்றிலை பாக்கு ஒரு தட்டையில் கொண்டுவந்து வந்து வாழ்த்தியிருக்கிறார்கள்.
அப்போது இரு வெற்றிலை ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டிருந்ததாம். அதையே ஒரு நல்ல சகுனமாகக் கருதி எம்.ஜி.ஆர். தன் கட்சிக்கு சின்னமாக இரட்டை இலையை பயன்படுத்தினார் என்கிறார்கள்.
��
சேனா ஆனா குடும்பத்தாருடன் எம்.ஜி.ஆர். – ஜானகி
அதற்கு முன்பு ஒருமுறை எம்.ஜி.ஆர் இவர்கள் வீட்டுக்கு வருகை தந்தபோது அவர்கள் குடும்பத்தில் யாரோ ஒருவர் அவருக்கு ஒரு தொப்பியை அணிவித்திருக்கிறார். இந்த கெட்-அப் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்துப்போக இதையே தன் Celbrity Image-க்கு நிரந்தரமாக்கிக் கொண்டுள்ளார்.
எம்.ஜி.ஆர். பகிரங்கமாகக் காலில் விழுந்து வணங்கியது ஒரு சிலருக்கு மட்டும்தான். அது அவரின் அன்பின் வெளிப்பாடாகவே நாம் கருத வேண்டும். கத்திச் சண்டை, இரட்டை வேடங்களுக்கு எம்.ஜி.ஆருக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்த நடிகர் எம்.கே.ராதா மற்றும் அவருக்கு ரோல் மாடலாக இருந்த ஹிந்தி டைரக்டர் சாந்தாராம். அதேபோன்று கையோடு கைசேர்த்து, தலைகுனிந்து பவ்யமுடன் ஆசிபெற்ற அன்பர்களில் குறிப்பிடத்தக்க இருவர். 1. இரண்டாம் முறை பதவியேற்றபோது நீதிபதி மு.மு.இஸ்மாயில், 2. எம்.ஜி.ஆரின் அன்புக்கு பாத்திரமான பி.எஸ்.அப்துல் ரஹ்மான்.
��
“சிரித்து வாழ வேண்டும் ” படத்தில் எம்.ஜி.ஆர்.
“ஜன்ஜீர்” என்ற இந்திப்படம் தமிழில் “சிரித்து வாழ வேண்டும்” என்ற பெயரில் தயாரிக்கப்பட்டபோது அதில் பிரான் ஏற்று நடித்த முஸ்லீம் பாத்திரத்தில் மக்கள் திலகம் நடித்தார். தன் நண்பருக்கு விசுவாசம் காட்டும் விதத்தில் அந்த பாத்திரத்திற்கு அப்துல் ரஹ்மான் என்ற பெயரை தேர்ந்தெடுத்தார்.
அத்தோடு நிற்கவில்லை. பாடலாசிரியர் புலமைப் பித்தனை அழைத்து தன் நண்பரின் பெயர் வருமாறு பாட்டை அமைக்க உத்தரவிட்டார்.
மெல்லிசை மன்னர் இசையமைக்க, டி.எம்.எஸ். பாட ரசிகர்கள் மனதில் இடம்பெற்ற பாடலிது:
ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்அவனே அப்துல் ரஹ்மானாம்ஆண்டான் இல்லை அடிமை இல்லைஎனக்கு நானே எஜமானாம்
உற்ற நண்பர் ஒருவருக்கு இதைவிட ஒரு அன்பான சமர்ப்பணம் வேறு என்ன செய்ய முடியும்..?
அதனைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட வரிகள் மறைந்த எம்.ஜி.ஆர். மற்றும் மறைந்த பி.எஸ்.அப்துல் ரஹ்மான் இருவர்களுக்கும் இப்பவும் பொருந்தும்
வந்தான் வாழ்ந்தான் போனான் என்றாஉலகம் நினைக்க வேண்டும் ?சொன்னான் செய்தான் ! என்றே நாளும்ஊரார் சொல்ல வேண்டும் !!!
காலத்தால் அழியாத வரிகள் இவை. Hats-Off to புலமைப் பித்தன்.
“இதயக்கனி” மற்றும் “உலகம் சுற்றும் வாலிபன்” படத்திற்கு பொருளாதார உதவி செய்தது பி.எஸ்.ஏ.ரஹ்மான் அவர்கள்தான். கீழைநாடுகளில் அதற்கான தங்கும் வசதி மற்றும் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி போன்றவைகள் பெற்றுத் தந்தது யாசீன் காக்கா அவர்கள். எம்.ஜி.ஆருக்கும் இவர்களுக்கும் இடைத்தரகராக செயல்பட்டவர் “இதயம் பேசுகிறது” மணியன்.
அதற்கு முன்பு, மணியன் ஒவ்வொரு நாடாக சுற்றி வந்து பயணத் தொடர்கதை எழுதுவதற்கு அந்தந்த நாடுகளில் பலவகைகளிலும் உதவி செய்தவர்கள் இந்த கீழக்கரை பிரமுகர்கள். ஆனால் அவரது பயணத் தொடரில் இவர்களைப் பற்றிய குறிப்பு எதையும் மணியன் எழுதி வைத்ததாக எனக்கு நினைவில்லை.
1970-ஆம் ஆண்டில் “உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்காக “எங்கள் தங்கம்” படம் முடிந்த கையோடு புறப்பட வேண்டியிருந்தது. இங்கு அரசியல் சூழ்நிலையும் அவருக்கு நெருக்கடி கொடுத்தது. “நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம். எல்லா ஏற்பாடுகளையும் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று யாசீன் காக்கா உறுதியளித்த பின்புதான் எம்.ஜி.ஆருக்கு உற்சாகமே பிறந்தது.
யாசீன் காக்கா, கலைஞர் தன் மகன் மு.க.முத்துவை கதாநாயகனாக நடிக்க வைத்து. முரசொலி செல்வத்தை தயாரிப்பாளராக்கி, “அஞ்சுகம் பிக்சர்ஸ்” என்ற பெயரில் “பிள்ளையோ பிள்ளை” (1972) படத்தை தயாரித்தபோது அதற்கான செலவு மொத்தம் 15 லட்சம்.
பிரபலமாகாத ஒரு புதுமுகத்தை வைத்து எடுக்கும் ஒரு படத்திற்கு யார்தான் தாமாகவே முன்வந்து பண முதலீடு செய்வார்கள்..?
இப்படத்திற்கான செலவை முன்கூட்டியே வழங்கி விநியோக உரிமையை பெற்றது கிரசெண்ட் மூவீஸ், சேது பிலிம்ஸ் டிஸ்டிரிபியூட்டர்ஸ், ராசி அண்ட் கோ இந்த மூன்றும்தான். இந்த மூன்று நிறுவனங்களிலும் யாசீன் காக்கா அவர்கள் பங்குதாரர்களாக இருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்தான சர்ச்சையில் துபாய் ETA நிறுவனத்தின் மேலாளர் சலாஹுத்தீன் அவர்களுக்கு இதில் தொடர்பு உள்ளது என்ற புகார் எழுந்தபோது, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா “பிள்ளையோ பிள்ளை” படம் எடுக்கப்பட்ட அந்தக் கால கதையை மறுபடியும் நினைவுபடுத்தி, சூசகமாகச் திமுக தலைவர் கருணாநிதிக்கும் இவர்களுக்கும் உள்ள தொடர்பை 2010-ஆம் ஆண்டு கோவை பொதுக்கூட்டத்திலேயே பகிரங்கமாக அறிவித்தார்.

சர்க்காரியா கமிஷன் விசாரணையின்போது, எத்தனையோ சாட்சிகளில் யாசீன் காக்காவும் ஒரு சாட்சியாக விசாரிக்கப்பட்டார். உண்மையே பேசி பழக்கப்பட்ட யாசீன் காக்கா சர்க்காரியா கமிஷன் முன்பு வழங்கிய வாக்குமூலம் இதுதான்.
“சாதாரண சமயமாக இருந்தால், ‘பிள்ளையோ பிள்ளை’ திரைப்படத்திற்கான விநியோக உரிமைகளை வாங்குவதற்கு நான் முன் வந்திருக்கவே மாட்டேன். இருப்பினும், அப்போது சென்னையில் உள்ள ஈஸ்ட் கோஸ்ட் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்தில் கூட்டுப் பங்குதாரராகவும் இருந்தேன். எனது நிறுவனம் தமிழக அரசுக்காக அண்ணா மேம்பாலம் கட்டும் முக்கிய ஒப்பந்தத்தை நிறைவேற்றிக் கொண்டிருந்தது. வேறு சில ஒப்பந்தங்களை நிறைவேற்ற முயன்று கொண்டிருந்தது. அந்த வியாபாரத்தில் குறிப்பிட்ட சில சலுகைகளுக்காக சென்னைக்குத் தெற்கிலுள்ள பகுதிகளுக்கு இத்திரைப்பட விநியோகஸ்தர் உரிமையை வாங்கிக் கொள்ளுமாறு நான் அப்போதைய ஆட்சியாளர்களால் வற்புறுத்தப்பட்டேன். அப்படத்திற்கான விநியோக உரிமையை வாங்கிக் கொண்டு கருணாநிதியை திருப்திப்படுத்துவதைத் தவிர வேறு மாற்று வழியேதும் எனக்கு இல்லை..”
அவரது இந்த வாக்குமூலம் அரசியல் வானில் ஒரு பெரும் பிரளயத்தையே உண்டு பண்ணியது. இச்செய்தி 31.03.2011 அன்று வெளிவந்த குமுதம் ரிப்போர்ட்டர் மற்றும் மாலைமலர் நாளிதழ்கள் வெளியிட்டு மீண்டும் பெரும் பரபரப்பை உண்டு பண்ணின..........SBB.........

fidowag
23rd September 2020, 10:14 PM
பாட்டாலே*புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*21/09/20 அன்று அளித்த*தகவல்கள் (122 வது தொடர் )
------------------------------------------------------------------------------------------------------
சகாப்தம் நிகழ்ச்சி இன்றைக்கு தமிழகம் முழுவதும்* மட்டுமல்லாமல் மலேசியா சிங்கப்பூர்,பிரான்ஸ் போன்ற பல்வேறு நாடுகளிலும் , இணையதளம் மூலமாக சென்று கொண்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு* , ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு ,நிர்வாகி திரு.லோகநாதன் ராமச்சந்திரன்*என்பவர் தகவல் அளித்துள்ளார் . குறிப்பாக கடந்த வாரம் மட்டும் சுமார் 1,00,000பேர் சகாப்தம் நிகழ்ச்சியை பார்த்திருக்கிறார்கள் என்பதை திரு.லோகநாதன் ராமச்சந்திரன் தனது வாட்ஸ் அப் தகவல் மூலமாக* தெரிவித்துள்ளார் .உண்மையிலேயே அவர் புகழை பரப்புவதற்காகவும் , அவருடைய புகழை காப்பாற்றுவதற்காகவும் இன்றைக்கும் இத்தனை பேர்கள் இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் அந்த மாமனிதரின் ஆன்மா .பகைவனுக்கும் அருள்வாய் நெஞ்சே என்கிற மாதிரி அவரிடமிருந்த அந்த மகோன்னதமான* மனிதத்துவம், பிறரை நேசித்தல் ,பிறர் மீது அக்கறை காட்டுதல் ,பிறருடைய உணர்வுகளை புரிந்து கொள்ளுதல் ,என்பதை தனது திரைப்படங்கள் என்கிற சாதனங்கள்*மூலம் கருத்துக்களை சொல்லிக்கொண்டே வந்தார் .அதனால்தான் இன்றைக்கும் அவர் மறைந்தும் மறையாத மக்கள் தலைவராக மக்கள் மத்தியில் இடம் பெற்று இருக்கிறார் .


மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தினசரி அதிகாலை 5 மணியளவில் எழுந்து ராமாவரம் இல்லத்தை சுற்றியுள்ள* தோட்டத்தில் நடைபயிற்சி* செய்துவிட்டு ,வீட்டுக்கு திரும்பியதும் சிறிது நேரம் உடற்பயிற்சி ,கிட்டத்தட்ட வியர்வை சிந்த*செய்தபின் குளித்துவிட்டு காலை 8 மணியளவில்* சிற்றுண்டி அருந்துவது வழக்கம் . அதன்பின் வீட்டை விட்டு புறப்பட்டு செல்பவர்எப்போது வீடு திரும்புவார் என்று தெரியாத நிலையில்* சுமார் 15 மணி நேரம் உழைத்த பின்தான் வீட்டுக்கு திரும்புவார் காரணம் அவருக்கு நேரம் என்பது அரிய வகை சொத்தாக இருந்தது .


ஒருநாள் படப்பிடிப்பிற்கு நடிகர்* அசோகன் கொஞ்சம் தாமதமாக வருகிறார்*அசந்து சற்று தூங்கிவிட்டேன் என்று சொல்கிறார். உடனே எம்.ஜி.ஆர். பதில் அளிக்கிறார் .அசோகன் நீங்கள் கிறிஸ்துவராக இருக்கலாம் ஆனால் ஒரு விஷயம் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் . நடராஜர் சிலையை பாருங்கள்*கலையின் வடிவமாக சொல்லப்படுகிற நடராஜர் ஒற்றை காலில் நிற்கிறார் .ஏனென்றால் ஒற்றை காலில் நின்றுகொண்டிருந்தால்* ஒருவர் தூங்கவே முடியாது . அப்படி உற்சாகமாக எப்போதும் உழைத்து கொண்டே இருக்க வேண்டும்*.என்பதை காட்டுவதற்காகத்தான்* இப்படி ஒரு கடவுள் சிலையை, சிற்பத்தை அமைத்திருக்கிறார்கள் . அதே போல விலங்குகளை பார்த்தால் பலத்திலே பெரியதாக சிங்கத்தை சொல்வார்கள் .உருவத்தில் பெரியதாக யானையை சொல்வார்கள் . ஆனால் வேகம் என்று பார்த்தால் குதிரையைத்தான் சொல்வார்கள் .இன்றைக்கு கூட குதிரை பவர் என்று சக்தியை அர்த்தமாக சொல்கிறார்கள் அந்த குதிரையானது ஒருபோதும்* படுத்து தூங்கியதில்லை . நின்று கொண்டேதான் தூங்கும் .நீங்கள் உழைப்பதற்கு என்று வந்துவிட்டீர்கள்*என்றால் கொஞ்சம் உறக்கத்தை குறைத்து கொள்ள வேண்டும் . அதாவது நீங்கள் கனத்தை தூக்க வேண்டும் என்றால் உங்கள் பலத்தை பெருக்கி கொள்ள வேண்டும்* பதவிக்கு வரவேண்டும் என்றால் தகுதியை பெருக்கி கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறினார் எம்.ஜி.ஆர். .


பிரபல அரசியல் தலைவர் திரு.லியாகத் அலிகான் அளித்த பேட்டி விவரம்*
-----------------------------------------------------------------------------------------------------------------------
நம்பிக்கை நாற்றாக விதைக்கப்பட்டு இருக்கிற அந்த மன்னாதி மன்னன் , இதயத்தில் இடம் பெறுவது என்பது சுலபமான விஷயம் அல்ல .ஆனால் இளம் வயதிலேயே மாணவனாக இருந்த திரு.லியாகத் அலிகான் அவர்களை அரசியலுக்கு மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். கையை பிடித்து இழுத்து வந்திருக்கிறார் . அவரது அனுபவங்களை நேரில் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் அதை தெரிந்து கொள்வோம்*


எம்.ஜி.ஆர். அவர்கள் பிரபல சினிமா நடிகர் ,வசூல் சக்கரவர்த்தி, வள்ளல் தன்மை*கொண்டவர் என்பதற்கெல்லாம் அப்பாற்பட்டு ஒரு கட்சியின் பொருளாளராக இருந்தவர் ,அந்த கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார் என்பதற்காக இவ்வளவு பேர்*தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தியது போல வேறு எவருக்காகவாவது நடத்தியது உண்டா ? அல்லது எம்.ஜி.ஆர். அவர்களுக்கு மட்டும்தான் நடந்ததா*அந்த சமயத்தில் கல்லூரி மாணவனாக இருந்த நீங்கள் எந்த ஈர்ப்பினால் இந்த மாதிரியான போராட்டங்களில் ஈடுபட்டீர்கள்*


லியாகத் அலிகான் : எங்கள் தந்தையார் அடிப்படையில் எம்.ஜி.ஆர். ரசிகர் .நான் என் தந்தையுடன் பார்த்த முதல் படம் தாய்க்கு பின் தாரம் . அந்த படத்தில் எம்.ஜி.ஆர். அவர்கள் காளையுடன்* போராடி அதை அடக்கும் காட்சி என்னை மிகவும் கவர்ந்தது .எனக்கு அப்போது சுமார் 8 வயது இருக்கும் . தொடர்ந்து எம்.ஜி.ஆர். படங்கள் பார்க்கும் சூழ்நிலையால் ,அவரது படங்களின் தாக்கம் ,சாகசங்கள் அவரது இமேஜ் ,உருவம் ஆகியன என் மனதில் ஆழ பதிந்துவிட்டதுஒரு கட்டத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 100 வது* படமாகிய* ஒளிவிளக்கு*100 வது நாள் வெற்றிவிழா**.கொண்டாடி , நான்கைந்து பேர் சேர்ந்து பணம் முதலீடு செய்து ,ஒளிவிளக்கு எம்.ஜி.ஆர்.ஸ்டில்லை போட்டோ எடுத்து (,அப்போதெல்லாம் போட்டோ பிரிண்ட் போடுவதற்கு 2 நாட்கள் காத்திருக்க வேண்டும் .இப்போதெல்லாம் ஒரு நிமிடத்தில் பிரிண்ட் வந்துவிடும் .)சுமார் 100 நபர்களுக்கு ரூ.400/- செலவு செய்து கொடுத்தோம் அந்த காலத்தில் இது ஒரு பெரிய தொகை .இந்த விஷயங்கள் எல்லாம் மனதில் ஆழ பதிந்து எம்.ஜி.ஆர்.எங்களுக்குள் ஐக்கியம் ஆகிவிட்டார் . பின்னர் 1972ல் அவரை கட்சியில் இருந்து நீக்கியபோது எங்களுக்கு மன உளைச்சலை கொடுத்தது .நான் அப்போது தி.மு.க.வில் கோவை மாவட்ட மாணவர் அணியில் மாணவ* பிரதிநிதியாக இருந்தேன் . எனக்கு அப்போது மேடை பேச்சு அனுபவம் கொஞ்சம் இருந்தது . அதனால் தி.மு.க.கட்சியினரிடம் நான் எம்.ஜி.ஆர். கட்சி நீக்கம் பற்றி அடிக்கடி வாதம் செய்து வந்தது அவர்களுக்கு பிடிக்காததால் ,நீ வயதில் சிறியவன் ,மாணவன் உனக்கு ஒன்றும் தெரியாது ,மேலிடத்தில் நடக்கும் விஷயங்கள் உனக்கு தெரிய வாய்ப்பில்லை தங்க கத்தி என்றால் வயிற்றில் குத்திக்* கொள்ளவா முடியும் என்று அவர்கள் பேசவே எனக்குள் ஆவேசம் பொங்கி எழுந்தது .என்னால் ஜீரணிக்க முடியவில்லை . அப்போது நான் உடுமலை கலை கல்லூரியில் மாணவர் சங்க* தலைவராக இருந்தேன் .அப்போது எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக ஊர்வலம் போராட்டங்கள் நடத்த நாங்கள் முடிவு செய்தபோது தி.மு.க. வினர் என்னை பிடிக்க முயன்றனர் .இதை அறிந்த நானும் ஒருசில முக்கிய நண்பர்களும் கனகராஜ் என்பவரின் வட்டிக்கடை வீட்டில் யாருக்கும் தெரியாமல் சில நாட்கள் தங்கினோம் .நாங்கள் 15/10/1972 அன்று உடுமலையில் ஊர்வலம் நடத்த திட்டமிட்டோம் .அக்டொபர்* 10மத்தேதி எம்.ஜி.ஆர். கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார் என்கிற செய்தி அறிந்து உடுமலையில் இஸ்மாயில் என்கிற எம்.ஜி.ஆர்.ரசிகர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் .இந்த செய்தி பத்திரிகையில் வெளிவராமல் தி.மு.க. வினர் தடுத்தனர் .உடுமலையில் உள்ள அச்சகங்களில் சென்று நோட்டீஸ் அச்சடிக்க முயன்றபோது ,தி.மு.க.வின் அராஜகம் காரணமாக ஒருவரும் முன்வரவில்லை. எல்லோரும் பயந்தனர் . அப்போது பாஷா என்பவர்*விடாமுயற்சியின் காரணமாக எம்.ஜி.ஆருக்காக இஸ்மாயில் என்பவர் உடுமலையில் விஷம் அருந்தி தற்கொலை என்று பத்திரிகையில்* செய்தி வெளிவரச்செய்தார் .இது குறித்து ஊர்வலம் நடத்த, நோட்டீஸ் அச்சடிக்க ஒருவரும் முன்வரவில்லை .அப்போது பாபு என்கிற எம்.ஜி.ஆர். பற்றாளர் அச்சகம் வைத்திருந்தார் . அவரும் நோட்டீஸ் அச்சடிக்க முன்வராமல் ஒரு பேப்பர் பண்டல் மட்டும் கொடுத்து உதவினார் .அதன்பின் நாங்கள் ஒரு ரகசிய இடத்தில கூடி , எங்கள் கைப்பட ,எம்.ஜி..ஆர்.அவர்களை தி.மு.க.வி.ல் இருந்து நீக்கியது தவறு .இது குறித்த கண்டன ஊர்வலம் உடுமலை கல்பனா அரங்கில் இருந்து காலை 9 மணிக்கு 15ந்தேதி புறப்படும் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு தருக என்று எழுதி எம்.ஜி.ஆர். ரசிகர்கள், பற்றாளர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு அளித்தோம் . ஊர்வலத்திற்கு ஆரம்பத்தில் சுமார் 30 நபர்கள்தான் இருந்தனர் .ஆனால் முடியும் தருவாயில் பார்த்தால் 3000 பேர் திரண்டு இருந்தனர் .அந்த கூட்டத்தில் என்னை எம்.ஜி.ஆர். மன்ற தலைவராக தேர்ந்து எடுத்தனர் .* இந்த சம்பவம் அடுத்த நாள் 16ந்தேதி தினமலர் நாளிதழில் வெளியாகி இருந்தது .அப்போது இதை அறிந்த எம்.ஜி.ஆர். அவர்கள் என் பெயரை பற்றி குறித்து வைத்திருந்தார் .அப்போது வழக்கறிஞர் குழந்தைவேலு அவர்கள் 20ந்தேதி சென்னைக்கு போக இருந்த சமயத்தில் நானும் சில நண்பர்களும் அவருடன் இணைந்து சென்றோம் அடுத்த நாள் 21ந்தேதி சென்னையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரை நாங்கள் சந்திக்க முயன்றோம் முடியவில்லை .அப்போது கே.ஏ.கே. அவர்கள்தான் புரட்சி தலைவர் முன்னிலையில் எங்களை கட்சியில் சேர்த்தார் .அனகாபுத்தூர் ராமலிங்கம் மூலம்தான் அ.தி.மு.க. தோற்றுவிக்கப்படுகிறது என்று முறையாக அறிவிப்பு 17/10/72அன்று வந்திருந்தது .21ந்தேதி புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருடன் சுமார் 2 மணி நேரம் பேசும் அருமையான வாய்ப்பு கிடைத்தது . அப்போது அ,தி,மு.க. கட்சி கொடியை உருவாக்கி* பிரபல சினிமா கலை இயக்குனர் அங்கமுத்து தயார் செய்து கொண்டு வந்ததை முறைப்படி எம்.ஜி.ஆர். அறிவிக்கிறார் .இந்த கொடியை* வடிவமைத்தவர் நடிகர் பாண்டு என சொல்லப்படுகிறது .அவர் அந்த கூட்டத்தில் கீழே அமர்ந்து கொள்கிறார் .அந்த கொடியில் பேரறிஞர் அண்ணா அவர்கள் தன்*ஆள் காட்டி விரலை வலது புறம் ,இடது புறம் காட்டும் வடிவத்திலும் ,அண்ணாவின் உருவம் நேராக இருப்பது போலும் உள்ள கொடிகளை எங்களிடம் காண்பித்து*,இதில் எது மிக நன்றாக இருக்கிறது என்று ஆலோசனை கேட்டார் .அதில் நான் முக்கிய பங்கு வகித்தேன் என்பது எனக்கு பெருமையான விஷயம்*என் வாழ்நாளில் எனக்கு இது மறக்கமுடியாத தருணம் .



காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நான்கு படங்களின் படப்பிடிப்பில் எம்.ஜி.ஆர். கலந்து கொள்கிறார் .அங்குள்ள தமிழர்கள் ,பலரும் தங்கள் வீட்டிற்கு எம்.ஜி.ஆர். உணவருந்த வரவேண்டும்*என்று விரும்பி, வற்புறுத்தி அழைக்கிறார்கள் .எம்.ஜி.ஆரிடம் கார் டிரைவராக இருந்த*அப்துல்லா என்பவர் அங்கிருக்கிறார் .எம்.ஜி.ஆருடன் சென்ற* உதவியாளர்**.ரவீந்தரும்*உடனிருக்கிறார் .அப்துல்லாவிற்கு உருது கலந்த காஷ்மீரி மொழி* பேசக்கூடியவர் .அப்துல்லா என்பவர் ரவீந்தரிடம் எங்கள் வீட்டிற்கு இந்தி நடிகர் திலீப்குமார், ராஜ்கபூர் போன்றவர்கள் எல்லாம் வந்துள்ளார்கள் .அதே போல எம்.ஜி.ஆர். அவர்களும் என் வீட்டிற்குஉணவருந்த* விஜயம் செய்ய வேண்டும் என்று கூறுகிறார் .இதை அறிந்த எம்.ஜி.ஆர். நாளை அவர் வீட்டிற்கு செல்லலாம் என்றார் மறுநாள் எம்.ஜி.ஆர். அப்துல்லா வீட்டிற்கு விஜயம் செய்கிறார் .வீட்டுக்குள் நுழைந்ததும் அப்துல்லாவின் தாத்தா காஷ்மீர் சால்வையில் பூ வடிவில்நேர்த்தியான* எம்ப்ராய்டரிமற்றும் ஜரிகை* வேலைகள் செய்து கொண்டிருக்கிறார் .அப்துல்லாவின் தந்தை வேறுவிதமான வேலையில் ஈடுபட்டிருக்கிறார் .அங்குள்ள பெண்களோ காஷ்மீர் சேலைகளில் வடிவமைக்கும் வேலைகள் செய்து கொண்டிருக்கிறார்கள் .அங்குள்ள குழந்தைகள் கூட அவர்களுக்கு உதவி செய்து வருகிறார்கள் .இவற்றை எல்லாம் நேரில் பார்த்த எம்.ஜி.ஆர்.பூரித்து போகிறார் . ஒரு வீட்டில் அனைவரும் தங்களுக்கு உகந்த ஏதாவது ஒரு வேலையில்* ஈடுபட்டிருப்பதை கண்டு ஆச்சரியமும், மகிழ்ச்சியும் அடைந்து புல்லரித்து போகிறார் .அந்த வீட்டில் விருந்து உண்டபின் ,அங்கிருந்த குழந்தைகளுக்கு தன் கை நிறைய பணத்தை அள்ளி கொடுக்கிறார் .எம்.ஜி.ஆர். புறப்படும்போது அவர் கால்களில் அணிவதற்கு ஒரு ஜோடி காஷ்மீர் செருப்பை தருகிறார்கள் .தலையில் அணிவதற்கு ஒரு தொப்பியை தருகிறார்கள் . அந்த தொப்பியை அப்துல்லாவின் தாத்தா எம்.ஜி.ஆருக்கு அணிவிக்கும்போது* உருது மொழியில் ஏதோ சொல்கிறார் .ரவீந்தருக்கு உருது,அரபி மொழிகள் நன்றாக தெரியும் .எனவே எம்.ஜி.ஆர். ரவீந்தரிடம் அவர் என்ன சொன்னார் என்று கேட்க ,நீங்கள் ஒரு பேரரசர்தான் ஆனால் இந்த ஏழையால்* உங்கள் தலைக்கு வைரக்கிரீடம் சூட்ட முடியவில்லை .அதனால் எங்கள் வீட்டிற்கு விஜயம் செய்து உணவருந்தியதற்காக இந்த ஏழையின் கைகளால் செய்த குல்லாவை உங்களுக்கு* அணிவிக்கிறேன் .உங்களோடு எப்போதும் அல்லா துணையிருப்பார் என்று வாழ்த்தியதாக ரவீந்தர் எம்.ஜி.ஆரிடம் கூறினார் .அப்படி வாழ்த்துக்களுடன் தலையில் அணிந்த குல்லாவுடன் எம்.ஜி.ஆர். படப்பிடிப்பு தளத்திற்கு வரும் வரை கழற்றவேயில்லை .* இவ்வளவு அன்போடும்,பரிவோடும்* வாழ்த்துக்களோடும் எனக்கு அணிவிக்கப்பட்ட இந்த காஷ்மீர் குல்லா இனி எம்.ஜி.ஆர். குல்லா என்று அழைக்கப்படுவதோடு என்னை விட்டு பிரியாது என்று சொன்னாராம் .மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும்*


நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
---------------------------------------------------------------------------------
1.சிரித்து வாழ வேண்டும்* - உலகம் சுற்றும் வாலிபன்*

2.எம்.ஜி.ஆர்.-சரோஜாதேவி உரையாடல் - அன்பே வா*

3.தூங்காதே தம்பி தூங்காதே - நாடோடி மன்னன்*

4.திரு.லியாகத் அலிகான் அவர்களின் பேட்டி*

5..ஒன்றே சொல்வான் ஒன்றே செய்வான் -சிரித்து வாழ வேண்டும்*

fidowag
23rd September 2020, 10:16 PM
தனியார் தொலைக்காட்சிகளில் கலைவேந்தன் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள் ஒளிபரப்பான*பட்டியல் (17/09/20 முதல் 23/09/20 வரை )
--------------------------------------------------------------------------------------------------------------------------------17/09/20* -மெகா டிவி - மதியம் 12 மணி -* ஆனந்த ஜோதி*

* * * * * * * * *புதுயுகம்* * *-பிற்பகல் 1.30 மணி - நீரும் நெருப்பும்*

* * * * * * * *மெகா 24* * * - பிற்பகல் 2.30 மணி -காதல் வாகனம்*

* * * * * * * *சன் லைப்* * - மாலை 4 மணி* * * *- நீதிக்கு* பின் பாசம்*


18/09/20 -சன்* லைப்* - காலை 11 மணி - பல்லாண்டு வாழ்க*

19/09/20 -சன் லைப் -* காலை 11 மணி - பெற்றால்தான் பிள்ளையா*

* * * * * * * பாலிமர் டிவி -இரவு 11 மணி** -இன்றுபோல் என்றும் வாழ்க*

*20/09/20-மெகா டிவி* *-மதியம் 12 மணி - குடியிருந்த கோயில்*

* * * * * * * *மெகா 24* * * *-பிற்பகல்**2.30 மணி -தாயை காத்த தனயன்*

21/09/20-சன் லைப்* *-காலை 11 மணி* * - நம் நாடு*

* * * * * * * * முரசு* -மதியம் 12மணி /இரவு 7 மணி -தாய் சொல்லை தட்டாதே** **

* * * * * * * * *புதுயுகம்* * * *- இரவு 7 மணி* -- காதல் வாகனம்* * * * * * * * **

* * * * * * * * *மீனாட்சி டிவி - இரவு 9.30 மணி -விவசாயி* * * * * * * *

* * * * * * * * *வேந்தர் டிவி -இரவு 10.30 மணி -தாயின் மடியில்*

* * * * * * * * * பாலிமர் டிவி -இரவு 11 மணி - நீதிக்கு பின் பாசம்*

22/09/20* *-சன் லைப் -* காலை 11 மணி - திருடாதே*

* * * * * * * * * சித்திரம் டிவி -காலை 11மணி /மாலை* 6மணி**-அபிமன்யு*

* * * * * * * * *வசந்த் டிவி -பிற்பகல் 1.30மணி -மருதநாட்டு இளவரசி*

* * * * * * * * *மூன் டிவி* *-இரவு 7.30 மணி -* நீதிக்கு பின் பாசம்*

23/09/20* * சன் லைப்* -காலை 11 மணி - நீதிக்கு தலைவணங்கு*

* * * * * * * * * மெகா 24* *-பிற்பகல் 2.30 மணி - முகராசி*

* * * * * * * * *மூன் டிவி* -இரவு 7.30 மணி -தாய்க்கு பின் தாரம்**

* * * * * * * * *தமிழ் மீடியா டிவி -இரவு 8.30 மணி -ஆயிரத்தில் ஒருவன்*
* * *

* * * * * * * **

orodizli
24th September 2020, 07:49 AM
’இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு’ பாடல்; 52 ஆண்டுகளானாலும் சரித்திரமாகி மறையாத ‘ஒளிவிளக்கு’ பாடல்! - எம்ஜிஆரின் ‘ஒளிவிளக்கு’; வாலியின் பாட்டு செய்த பிரார்த்தனை

எப்போதோ வந்த வடிவேலுவின் காமெடி, பல வருடங்களுக்குப் பிறகு டிரெண்டானது. இன்றைய கணினி யுகத்தில் இது சாத்தியமாகலாம். ஆனால் அப்போது ஒட்டுமொத்த தமிழகமெங்கும் ஒரு பாடல்... ஒலித்தது. ‘பாட்டு நல்லாருக்கு’ என்றோ ‘நல்ல வரிகள்’ என்றோ, ‘ரேடியோல பாட்டு போடுறாங்க, கேப்போம்’ என்றோ மட்டுமே பாட்டு ஒலிபரப்பவில்லை. அதற்காக மட்டுமே கேட்கப்படவில்லை. பிரார்த்தனைக்காக, வேண்டுதலுக்காக, உயிர் பிழைக்க வேண்டும் என்பதற்காக ஒலிபரப்பப்பட்டது. எல்லோரின் பிரார்த்தனையாகவும் இப்படி திரும்பத்திரும்ப ஒலித்த அந்தப் பாடல்... ‘இறைவான் உன் மாளிகையில்...’. அப்படி பாடலை ஒலிக்கவிட்டு, பிரார்த்தனை செய்தது... எம்.ஜி.ஆருக்காக!

ஜெமினி பிரமாண்டமான செலவில் தயாரித்த வண்ணப்படம் ‘ஒளிவிளக்கு’. சாணக்யாவின் இயக்கத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா, செளகார் ஜானகி முதலானோர் நடித்திருந்தார்கள். எம்.எஸ்.வி. இசையமைக்க, வாலி பாடல்கள் எழுத எம்ஜிஆரின் நூறாவது படமாக வந்தது ‘ஒளிவிளக்கு’.கொள்ளைக் கூட்டத்தில் இருந்தாலும் நல்ல மனமும் அன்பு குணமும் கொண்ட கதாபாத்திரம் எம்ஜிஆருக்கு. இன்றைக்கு கரோனா போல், அன்றைக்கு ஊரில் ஒரு நோய் வந்துவிட, ஊரே காலியாகிவிடும். ஒரு பங்களாவில் திருட வரும் எம்ஜிஆர், அங்கே உடல்நலமின்றி இருக்கும் செளகார் ஜானகியைப் பார்ப்பார். மனமிரங்கி உதவுவார். பிறகு ஒருகட்டத்தில் செளகாரை அழைத்துக்கொண்டு அடைக்கலம் தந்து காப்பார். கொஞ்சம் கொஞ்சமாக திருட்டுத் தொழிலை விடுவார்.
இதேகட்டத்தில், ஜெயலலிதாவை விரும்புவார். இவருடைய கொள்ளைக்கும்பல், குடிசைகளுக்கு தீவைத்துவிடும். எல்லோரையும் காப்பார். அப்படி ஒரு குழந்தையைக் காப்பாற்றும் போது, தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடுவார். செளகார் ஜானகி, எம்ஜிஆருக்காக, எம்ஜிஆர் குணமாக வேண்டும் என்பதற்காக பிரார்த்தனை செய்து பாடுவார்.
”இறைவா, உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு’ என்று மனமுருகி, கதறி, கண்ணீர்விட்டுப் பாடுவார். எம்ஜிஆர் குணமாவார்.

இந்திப் படத்தின் ரீமேக் இது. எம்ஜிஆரிஸம் கொண்ட கதை. தவிர, எம்ஜிஆருக்கு 100வது படமும் கூட. ‘தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா?’ என்றொரு பாடல். அநேகமாக, எம்ஜிஆர் குடித்துவிட்டு நடித்த படமும் போதையில் பாடுகிற படமும் இதுவாகத்தான் இருக்கும். ‘ருக்குமணியே பறபற’ என்றொரு பாடலும் ஹிட்டானது. ’மாம்பழத் தோட்டம்’ என்றும் ‘நான் கண்ட கனவினில்’ என்றும் பாடல்கள் உண்டு. ஆனாலும் ‘நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க’ என்ற பாடல், இந்தப் படத்தை பட்டிதொட்டியெங்கும் கொண்டுப்போய்ச் சேர்த்தது. மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற பாடலாக அமைந்தது1968 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ம் தேதி, வெளியானது ‘ஒளிவிளக்கு. இதன் பிறகு எம்ஜிஆர் எத்தனையோ படங்களில் நடித்தார். பிறகு கட்சி தொடங்கினார். 77ம் ஆண்டு ஆட்சியமைத்தார். பிறகு மீண்டும் தேர்தல் வந்தது. 80ம் ஆண்டு திரும்பவும் ஆட்சி அமைத்தார். அதன் பின்னர் 84ம் ஆண்டில் மீண்டும் தேர்தல் வரும் நேரத்தில், அவருக்கு உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டன. சென்னை மருத்துவமனை, அமெரிக்க மருத்துவமனை என சிகிச்சையில் இருந்தார்.
அப்போது, எம்ஜிஆருக்கு என்னென்ன நோய்களெல்லாம் இருக்கின்றன என்று தமிழகத்துக்குத் தெரிந்தது. மக்கள் கலங்கினார்கள். துடித்தார்கள். கதறினார்கள். வெடித்துக் கண்ணீர்விட்டு அழுதார்கள்.

எல்லோரும் ஒருமித்த மனதுடன் எம்ஜிஆர் குணமாகவேண்டும் என பிரார்த்தனை செய்தார்கள். அந்தப் பிரார்த்தனையின் முக்கிய அம்சம்... ‘இறைவா உன் மாளிகையில்’ பாடல்தான். கவிஞர் வாலி எழுதிய பாடல் இது.
இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணி விளக்கு, தலைவா உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளி விளக்கு,
ஆண்டவனே உன் பாதங்களை - நான் கண்ணீரில் நீராட்டினேன் இந்த ஓருயிரை நீ வாழ வைக்க இன்று உன்னிடம் கையேந்தினேன்.. முருகையா...
பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும் என்னிரண்டு கண்களிலும் இன்ப ஒளி உண்டாகும் உள்ளமது உள்ளவரை அள்ளித் தரும் நல்லவரை விண்ணுலகம் வாவென்றால் மண்ணுலகம் என்னாகும்.
மேகங்கள் கண் கலங்கும் மின்னல் வந்து துடிதுடிக்கும் வானகமே உருகாதோ வள்ளல் முகம் பாராமல் உன்னுடனே வருகின்றேன் - என் உயிரைத் தருகின்றேன் மன்னன் உயிர் போகாமல்
என்ற வரிகள் ஒவ்வொன்றும் எம்ஜிஆருக்காக, எம்ஜிஆரின் கேரக்டருக்காக, ‘ஒளிவிளக்கு’ படத்தின் கேரக்டருக்காக மட்டுமில்லாமல், எம்ஜிஆரின் இயல்பான குணத்தைக்கொண்டும் எழுதப்பட்டது. பி.சுசீலா, உருகி உருகிப் பாடியிருப்பார். அந்தப் பாடல் கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து, எம்ஜிஆரின் உடல் நலனுக்காக, பூரண குணம் அடைவதற்காக, தமிழகம் முழுவதும் ஒலித்தது. படம் வெளியான போது கூட அந்தளவுக்கு இந்தப் பாடல் முக்கியத்துவம் பெறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

அப்போது தியேட்டர்களில், கமல், ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக், முரளி, மோகன் என யார் நடித்த படங்கள் ஓடினாலும், படம் தொடங்குவதற்கு முன்னதாக, ‘ஒளிவிளக்கு’ படத்தின் ‘இறைவா உன் மாளிகையில்’ பாடல் காட்சி, ஒளிபரப்பாகும். மொத்த தியேட்டரும் எம்ஜிஆரைப் பார்த்து கதறியது. கைகூப்பியது. சூடமேற்றப்பட்டு, வேண்டிக்கொண்டது.
தமிழ் சினிமாவில், இப்படியொரு பாடல், ஒரு நடிகரின் திரையிலும் வாழ்விலும் மக்களுடனும் இரண்டறக் கலந்ததென்றால்... அநேகமாக இந்தப் பாடலாகத்தான் இருக்கும்.
‘ஒளிவிளக்கு’ படம் வெளியாகி, 52 ஆண்டுகளாகின்றன. எம்ஜிஆருக்கு நூற்றாண்டு விழாவெல்லாம் கொண்டாடப்பட்டு விட்டது. எம்ஜிஆரின் 200வது ஆண்டுவிழா கொண்டாடுகிற போதும் ‘இறைவா உன் மாளிகையில்’ பாடலும் அங்கம்வகிக்கும்.

https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/582169-oli-vilakku-52-years.html
நன்றி: இந்து தமிழ்.........VD.,.........

orodizli
24th September 2020, 07:51 AM
சினிமாத் துறையில் செம்பி நெய்னா காக்காவை தெரியாதவர் யாரும் இருக்க முடியாது, “செம்பி டிரேடர்ஸ் & பப்ளிசிட்டீஸ்” நிறுவனத்தின் மேலாளர்.
எம்.ஜி.ஆர்.அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி புதுக்கட்சி தொடங்க ஆயத்தமானபோது அவர் செய்த முதற் காரியம் என்ன தெரியுமா? அவருக்கு பழக்கமான நண்பர்களிடம் குறிப்பாக மிகநெருக்கமாக பழகிய முஸ்லீம் பிரமுகர்களிடம் நேரடியாகச் சென்று ஆதரவு திரட்டியதுதான். கட்சிக்கு நிதிதிரட்டும் பணியில் அவர்கள் தாராளமாக அள்ளித் தந்தார்கள்.
“கல்வித் தந்தை” என போற்றப்படும் பி.எஸ்.அப்துல் ரஹ்மான் அவர்களின் வீட்டிற்கு மக்கள் திலகம் வருகை தந்தபோது, சேனா அனா அவர்களின் துணைவியார் தமிழர் கலாச்சாரப்படி வெற்றிலை பாக்கு ஒரு தட்டையில் கொண்டுவந்து வந்து வாழ்த்தியிருக்கிறார்கள்.
அப்போது இரு வெற்றிலை ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டிருந்ததாம். அதையே ஒரு நல்ல சகுனமாகக் கருதி எம்.ஜி.ஆர். தன் கட்சிக்கு சின்னமாக இரட்டை இலையை பயன்படுத்தினார் என்கிறார்கள்.
��
சேனா ஆனா குடும்பத்தாருடன் எம்.ஜி.ஆர். – ஜானகி
அதற்கு முன்பு ஒருமுறை எம்.ஜி.ஆர் இவர்கள் வீட்டுக்கு வருகை தந்தபோது அவர்கள் குடும்பத்தில் யாரோ ஒருவர் அவருக்கு ஒரு தொப்பியை அணிவித்திருக்கிறார். இந்த கெட்-அப் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்துப்போக இதையே தன் Celbrity Image-க்கு நிரந்தரமாக்கிக் கொண்டுள்ளார்.
எம்.ஜி.ஆர். பகிரங்கமாகக் காலில் விழுந்து வணங்கியது ஒரு சிலருக்கு மட்டும்தான். அது அவரின் அன்பின் வெளிப்பாடாகவே நாம் கருத வேண்டும். கத்திச் சண்டை, இரட்டை வேடங்களுக்கு எம்.ஜி.ஆருக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்த நடிகர் எம்.கே.ராதா மற்றும் அவருக்கு ரோல் மாடலாக இருந்த ஹிந்தி டைரக்டர் சாந்தாராம். அதேபோன்று கையோடு கைசேர்த்து, தலைகுனிந்து பவ்யமுடன் ஆசிபெற்ற அன்பர்களில் குறிப்பிடத்தக்க இருவர். 1. இரண்டாம் முறை பதவியேற்றபோது நீதிபதி மு.மு.இஸ்மாயில், 2. எம்.ஜி.ஆரின் அன்புக்கு பாத்திரமான பி.எஸ்.அப்துல் ரஹ்மான்.
��
“சிரித்து வாழ வேண்டும் ” படத்தில் எம்.ஜி.ஆர்.
“ஜன்ஜீர்” என்ற இந்திப்படம் தமிழில் “சிரித்து வாழ வேண்டும்” என்ற பெயரில் தயாரிக்கப்பட்டபோது அதில் பிரான் ஏற்று நடித்த முஸ்லீம் பாத்திரத்தில் மக்கள் திலகம் நடித்தார். தன் நண்பருக்கு விசுவாசம் காட்டும் விதத்தில் அந்த பாத்திரத்திற்கு அப்துல் ரஹ்மான் என்ற பெயரை தேர்ந்தெடுத்தார்.
அத்தோடு நிற்கவில்லை. பாடலாசிரியர் புலமைப் பித்தனை அழைத்து தன் நண்பரின் பெயர் வருமாறு பாட்டை அமைக்க உத்தரவிட்டார்.
மெல்லிசை மன்னர் இசையமைக்க, டி.எம்.எஸ். பாட ரசிகர்கள் மனதில் இடம்பெற்ற பாடலிது:
ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்அவனே அப்துல் ரஹ்மானாம்ஆண்டான் இல்லை அடிமை இல்லைஎனக்கு நானே எஜமானாம்
உற்ற நண்பர் ஒருவருக்கு இதைவிட ஒரு அன்பான சமர்ப்பணம் வேறு என்ன செய்ய முடியும்..?
அதனைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட வரிகள் மறைந்த எம்.ஜி.ஆர். மற்றும் மறைந்த பி.எஸ்.அப்துல் ரஹ்மான் இருவர்களுக்கும் இப்பவும் பொருந்தும்
வந்தான் வாழ்ந்தான் போனான் என்றாஉலகம் நினைக்க வேண்டும் ?சொன்னான் செய்தான் ! என்றே நாளும்ஊரார் சொல்ல வேண்டும் !!!
காலத்தால் அழியாத வரிகள் இவை. Hats-Off to புலமைப் பித்தன்.
“இதயக்கனி” மற்றும் “உலகம் சுற்றும் வாலிபன்” படத்திற்கு பொருளாதார உதவி செய்தது பி.எஸ்.ஏ.ரஹ்மான் அவர்கள்தான். கீழைநாடுகளில் அதற்கான தங்கும் வசதி மற்றும் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி போன்றவைகள் பெற்றுத் தந்தது யாசீன் காக்கா அவர்கள். எம்.ஜி.ஆருக்கும் இவர்களுக்கும் இடைத்தரகராக செயல்பட்டவர் “இதயம் பேசுகிறது” மணியன்.
அதற்கு முன்பு, மணியன் ஒவ்வொரு நாடாக சுற்றி வந்து பயணத் தொடர்கதை எழுதுவதற்கு அந்தந்த நாடுகளில் பலவகைகளிலும் உதவி செய்தவர்கள் இந்த கீழக்கரை பிரமுகர்கள். ஆனால் அவரது பயணத் தொடரில் இவர்களைப் பற்றிய குறிப்பு எதையும் மணியன் எழுதி வைத்ததாக எனக்கு நினைவில்லை.
1970-ஆம் ஆண்டில் “உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்காக “எங்கள் தங்கம்” படம் முடிந்த கையோடு புறப்பட வேண்டியிருந்தது. இங்கு அரசியல் சூழ்நிலையும் அவருக்கு நெருக்கடி கொடுத்தது. “நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம். எல்லா ஏற்பாடுகளையும் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று யாசீன் காக்கா உறுதியளித்த பின்புதான் எம்.ஜி.ஆருக்கு உற்சாகமே பிறந்தது.
யாசீன் காக்கா, கலைஞர் தன் மகன் மு.க.முத்துவை கதாநாயகனாக நடிக்க வைத்து. முரசொலி செல்வத்தை தயாரிப்பாளராக்கி, “அஞ்சுகம் பிக்சர்ஸ்” என்ற பெயரில் “பிள்ளையோ பிள்ளை” (1972) படத்தை தயாரித்தபோது அதற்கான செலவு மொத்தம் 15 லட்சம்.
பிரபலமாகாத ஒரு புதுமுகத்தை வைத்து எடுக்கும் ஒரு படத்திற்கு யார்தான் தாமாகவே முன்வந்து பண முதலீடு செய்வார்கள்..?
இப்படத்திற்கான செலவை முன்கூட்டியே வழங்கி விநியோக உரிமையை பெற்றது கிரசெண்ட் மூவீஸ், சேது பிலிம்ஸ் டிஸ்டிரிபியூட்டர்ஸ், ராசி அண்ட் கோ இந்த மூன்றும்தான். இந்த மூன்று நிறுவனங்களிலும் யாசீன் காக்கா அவர்கள் பங்குதாரர்களாக இருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்தான சர்ச்சையில் துபாய் ETA நிறுவனத்தின் மேலாளர் சலாஹுத்தீன் அவர்களுக்கு இதில் தொடர்பு உள்ளது என்ற புகார் எழுந்தபோது, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா “பிள்ளையோ பிள்ளை” படம் எடுக்கப்பட்ட அந்தக் கால கதையை மறுபடியும் நினைவுபடுத்தி, சூசகமாகச் திமுக தலைவர் கருணாநிதிக்கும் இவர்களுக்கும் உள்ள தொடர்பை 2010-ஆம் ஆண்டு கோவை பொதுக்கூட்டத்திலேயே பகிரங்கமாக அறிவித்தார்.

சர்க்காரியா கமிஷன் விசாரணையின்போது, எத்தனையோ சாட்சிகளில் யாசீன் காக்காவும் ஒரு சாட்சியாக விசாரிக்கப்பட்டார். உண்மையே பேசி பழக்கப்பட்ட யாசீன் காக்கா சர்க்காரியா கமிஷன் முன்பு வழங்கிய வாக்குமூலம் இதுதான்.
“சாதாரண சமயமாக இருந்தால், ‘பிள்ளையோ பிள்ளை’ திரைப்படத்திற்கான விநியோக உரிமைகளை வாங்குவதற்கு நான் முன் வந்திருக்கவே மாட்டேன். இருப்பினும், அப்போது சென்னையில் உள்ள ஈஸ்ட் கோஸ்ட் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்தில் கூட்டுப் பங்குதாரராகவும் இருந்தேன். எனது நிறுவனம் தமிழக அரசுக்காக அண்ணா மேம்பாலம் கட்டும் முக்கிய ஒப்பந்தத்தை நிறைவேற்றிக் கொண்டிருந்தது. வேறு சில ஒப்பந்தங்களை நிறைவேற்ற முயன்று கொண்டிருந்தது. அந்த வியாபாரத்தில் குறிப்பிட்ட சில சலுகைகளுக்காக சென்னைக்குத் தெற்கிலுள்ள பகுதிகளுக்கு இத்திரைப்பட விநியோகஸ்தர் உரிமையை வாங்கிக் கொள்ளுமாறு நான் அப்போதைய ஆட்சியாளர்களால் வற்புறுத்தப்பட்டேன். அப்படத்திற்கான விநியோக உரிமையை வாங்கிக் கொண்டு கருணாநிதியை திருப்திப்படுத்துவதைத் தவிர வேறு மாற்று வழியேதும் எனக்கு இல்லை..”
அவரது இந்த வாக்குமூலம் அரசியல் வானில் ஒரு பெரும் பிரளயத்தையே உண்டு பண்ணியது. இச்செய்தி 31.03.2011 அன்று வெளிவந்த குமுதம் ரிப்போர்ட்டர் மற்றும் மாலைமலர் நாளிதழ்கள் வெளியிட்டு மீண்டும் பெரும் பரபரப்பை உண்டு பண்ணின..........SBB.........

orodizli
24th September 2020, 07:53 AM
தமிழக திரை உலக சரித்திரத்தில் பொன்மனச்செம்மல் மக்கள் திலகம் வசூல்பட பேரரசு எம்.ஜி.ஆர். அவர்களின் மிகப்பெரிய சாதனைகளின் தொகுப்புகள்....
ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாதனைகளை தமிழக திரைப்படத் துறையில் பதித்த ஒரே திரையுலக வேந்தன் பொன்மனச்செம்மல்*
எம் .ஜி .ஆர் ஒருவர் மட்டுமே!

போலிகெல்லாம் பல்லக்கில் வந்து சாதனையை படைத்தது என்று கொக்கரிக்கும் பொழுது.*
மக்கள் திலகத்தின் வெற்றி காவியங்களின் சாதனையை வெளியீடுவதில் மட்டற்ற மகிழ்ச்சியாகும்.
**************************************
சென்னை நகர வரலாற்றில்
மக்கள் திலகம் படைத்த முதன் முதல் சாதனையில் வெற்றிக் கொடி நாட்டிய. சரித்திரங்கள்....
**************************************
1) நகரில் நான்கு திரையரங்கில் 100 நாட்களை கடந்து முதன் முறையாக அதிக வசூலை படைத்த முன்னணி பெற்ற காவியம்*
புரட்சி நடிகரின் மதுரை வீரன் ஆகும்.*
திரையரங்குகள் : சித்ரா 105 நாள்,
பிரபாத் 126 நாள்,சரஸ்வதி126 நாள் காமதேனு 105 நாள்

2) சென்னை நகரில் ஆறு திரையரங்குகளில் திரையிடப்பட்ட முதல் காவியம் மக்கள் திலகத்தின் மகாதேவி ஆகும்.
வெலிங்டன் 56 நாள்,*
ஸ்ரீ கிருஷ்ணா 70 நாள்,
உமா 56 நாள், சயானி 42 நாள்,
ராஜகுமாரி 42 நாள், தங்கம் 35 நாள்11) சென்னை அண்ணாசாலையில் வெளியிடப்பட்ட நாடோடி மன்னன் திரைக்காவியம் ....
பாரகன் திரையரங்கில் 133 நாட்கள் (19 வாரங்கள் ) ஒடியப்பின் தொடர்ந்து சன் திரையரங்கில் (11வாரங்கள் ) 77 நாட்கள் ஓடி தொடர்ந்து 30 வாரங்கள்*
(210 நாட்கள்) ஓடி சாதனை பெற்ற திரைப்படமாக திகழ்ந்தது.

12).நாடோடி மன்னன் காவியத்திற்கு பின் 1961ம்*
ஆண்டு வெளியான திருடாதே,*
தாய் சொல்லை தட்டாதே இரண்டு திரைப்படங்களும் பிளாசா திரையரங்கில் 100 காட்சிகள் அரங்கு நிறைந்து ஒரே ஆண்டில் தொடர் சாதனையாகும்.

13) சென்னை பிளாசா திரையரங்கில் தொடர்ந்து*வெளியான
மக்கள் திலகத்தின் நான்கு திரைப்படங்கள் சாதனையின் வரிசையில்...*
திருடாதே
105 நாட்கள்.......
சபாஷ் மாப்பிள்ளை
47 நாட்கள்......
நல்லவன் வாழ்வான்
68 நாட்கள்.....
தாய் சொல்லைத் தட்டாதே**
105 நாட்கள்......
இதில் திருடாதே,
தாய் சொல்லை தட்டாதே 100 நாட்கள் ஓடி சாதனையாகும்.

14) மக்கள் திலகம் பவனி வந்த அதாவது தேவர் பிலிம்ஸில் தொடர்ந்து வெளியான தாய்க்குப்பின் தாரம் தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக் காத்த தனயன் சென்னை நகரில்
100 நாட்களை கடந்து வெற்றியை பெற்றது.

15 ) சென்னை நகரில் 1963 ஆம் ஆண்டு வெளியான பொன்மனச்செம்மல் எம் ஜி ஆர் அவர்களின் 9 திரைப்படங்கள் வெளிவந்து
கிட்டத்தட்ட அதிகமான திரைஅரங்கில் வெளிவந்து அனைத்து திரைப்படங்களும்
50 நாட்களை கடந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
பணத்தோட்டம்
84 நாட்கள்
கொடுத்து வைத்தவள்
71 நாட்கள்
தர்மம் தலைக்காக்கும்
70 நாட்கள்
கலையரசி
50 நாட்கள்
பெரிய இடத்துப்பெண்
101 நாட்கள்
ஆனந்த ஜோதி
56 நாட்கள்
நீதிக்குப்பின் பாசம்
63 நாட்கள்
காஞ்சித்தலைவன்
56 நாட்கள்
பரிசு
77 நாட்கள்...

மேலும் தொடரும்...
உரிமைக்குரல் ராஜூ...
3) நகரில் 3 திரையரங்குகளில் அதிக நாள் ஓடி 3 திரையரங்கு களிலும் 100 காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனை ஏற்படுத்தி... மதுரை வீரன் வசூலை வென்று முதலிடம் பெற்ற காவியமாக நாடோடி மன்னன் திகழ்ந்தது.

100 நாட்களுக்கு மேல் சாதனை புரிந்த திரையரங்குகள்*
ஸ்ரீ கிருஷ்ணா 147 நாட்கள்,
பாரகன் 133 நாட்கள்,*
உமா 127 நாட்கள்.

4)சென்னை நகரில் அதிக வசூலை பெற்ற நாடோடி மன்னன் திரைப்படத்தின் வசூலை ஏழு ஆண்டுகள் கழித்து எங்க வீட்டு பிள்ளை திரைப்படம் 1965 ல் வெளிவந்து முறியடித்து புதிய சாதனையை படைத்தது.

5).சென்னை நகர மையப்பகுதியான அண்ணா சாலையில் உள்ள சித்ரா திரையரங்கில் மக்கள் திலகத்தின் நான்கு திரைப்படங்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு சாதனையாகும்.*

அலிபாபாவும் 40 திருடர்களும்*
92 நாட்கள்.....
மதுரைவீரன் ...105 நாட்கள்
தாய்க்குப்பின் தாரம்*
119 நாட்கள்.....
சக்கரவர்த்தி திருமகள்
84 நாட்கள்.....
*
6) சென்னை காசினோ திரையரங்கில் முதன் முறையாக 100 நாள் கடந்த திரைப்படம்*
புரட்சி நடிகரின் மலைக்கள்ளன் திரைப்படம் ஆகும்.

7) சென்னை மிட்லண்ட் திரையரங்கில் முதன் முறையாக 100 நாள் ஓடிய காவியம்*
மக்கள் திலகத்தின் புதுமைப்பித்தன் ஆகும்.

8) சென்னை சத்யம் திரையரங்கில் முதல் 100 நாள் ஓடிய தமிழ் திரைப்படம் மக்கள் திலகத்தின் இதயக்கனி ஆகும்.

9).சென்னை நகரில் நான்கு காட்சியில் நூறு நாள் ஓடிய முதல் காவியம் என்ற பெருமையை மக்கள் திலகத்தின்.....*
நீதிக்குத்தலைவணங்கு பெற்றது.* அரங்கு : தேவிகலா 106 நாட்கள்
அரங்கு நிறைந்த காட்சிகள் : 266*

10) சென்னை காமதேனு திரையரங்கில் முதன் முறையாக நூறு நாட்கள் ஓடிய திரைப்படமாக மக்கள் திலகத்தின் மதுரை வீரன் சாதனையாகும்.......... Ur.........

orodizli
24th September 2020, 11:24 AM
"தர்மம் தலை காக்கும்" தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்ஜிஆர் நடித்த 5 வது படம். இதுவரை வெளிவந்த நான்கு படங்களும் 100 நாட்களை தாண்டி சிறப்பான வெற்றியை பதிவு செய்ததை தொடர்ந்து வெளியான படம். இதுவும் 100 நாட்களை தாண்டி ஓடியது குறிப்பிடத்தக்கது.

வழக்கம் போல தேவர் பிலிம்ஸின் ஆஸ்தான கலைஞர்களை கொண்டு தயாரிக்கப் பட்ட படம். சில டைரக்டர்கள் பாடுபட்டு உருவாக்கிய கதையை வசனம் பாடல்கள் என மெனக்கெட்டு ராசிக்காக 'ப,பா' வரிசையில் பெரும் நட்சத்திர கூட்டத்துடன் எடுத்த படத்தை எம்ஜிஆர் தேவருடன் இணைந்து
த வரிசையில் 10 முதல் 30 நாட்கள் வரை படப்பிடிப்பு நடத்தி 'ப' வரிசை படங்களை தூக்கி தூளியில் தூங்க வைத்து விட்டு 'த' வரிசையை தாயின் ஆசிர்வாதத்தால் வென்ற
கதை தெரிந்து கொள்ளுங்கள். 'ப' வரிசை படம் எடுத்தவர் பரிதாபமாக நின்றார். 'த' வரிசை படம் எடுத்தவர் தரணியில் தலைநிமிர்ந்து நின்றார்.

இதில் இருந்து தெரிந்து கொள்ளலாம் எம்ஜிஆர் என்ற தனி மனிதரின் ஆற்றல் என்னவென்று?.
படத்தின் ஆரம்ப காட்சி இருளில் தொடங்கி சற்று நேரம் வரை இருளிலேயே செல்வதால் முதலில் மாட்னி ஷோ பார்த்ததால் திரையில் நடப்பது என்னவென்று புரியவில்லை. பின்பு இரவுக்காட்சி பார்த்தவுடன்தான் காட்சிகள் புரிந்தது.

ஆரம்ப காட்சியிலேயே சஸ்பென்ஸ் வைத்து பரபரப்பை ஏற்றி விடுவார் தேவர். எம்ஜிஆர் டாக்டராக வந்தாலும் அவரை
ஜேம்ஸ்பாண்டாக மாற்றி விடுவார்.
அதுவும் படத்தில் வரும் பின்னணி இசை ஆங்கிலப்படத்தின் தழுவல் பிரமிப்பூட்டுவதாக இருக்கும்.
படம் பார்த்த அனைவரும் 'த' வரிசை படங்களை பற்றித்தான் அதிகம் பேசினார்கள். 'ப' வரிசை படுத்து விட்டது. 'த' வரிசை வென்று விட்டது.
'ப' வரிசை படங்கள் ஓட்ட ஸ்டிரெச்சர்
தேவைப்பட்டது. 'த' வரிசை படம் எடுத்தவர் இந்தி படம் எடுக்கும் அளவுக்கு உயரத்துக்கு சென்றதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

அருமையான பாடல்கள்தான் தேவர் எம்ஜிஆர் கூட்டணியின் சிறப்பு. எம்ஜிஆரும் k.v மாமாவுக்கு அதிகம்
முக்கியத்துவம் கொடுப்பவர். "அடிமைப்பெண்" "மாட்டுக்கார வேலன்" போன்ற பெரிய படங்களை மாமாவுக்கு கொடுத்தார்.
ஆனால் மாற்று நடிகரோ தன்னை நம்புவதை விட விஸ்வநாதன், கண்ணதாசன் போன்றவர்களைத்தான் நம்புவார்.
எம்ஜிஆர் எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் தன்னை மட்டுமே நம்புவார்.

அடுத்தவர் உழைப்பிலே தன்னை பெரிதாக காட்டிக் கொள்பவர்கள் மத்தியில் தலைவர் ஒரு தனிப்பிறவி. 'கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்' என்ற
பாடலை வரவழைக்க யாராலும் முடியவில்லை என்பதை உணர்ந்து மருதகாசியிடம் அந்த பாடல் வரிகள் ஒளிந்திருப்பதை தலைவர் கண்டறிந்தார் என்றால் அவருடைய திறமை அடுத்தவர் மனதிற்குள் நுழைந்து அறியும் ஆற்றல் பெற்றது
என்பதை உணர வேண்டும்.

மாற்று நடிகர் கண்ணதாசன் எழுதிய பாடலுக்கு எம் எஸ் வி
அருமையான மெட்டு போட்டு கொடுத்தாலும் அதற்கு உடனே நடிப்பு வரலையாம். உடனே பலவிதமான ஆங்கிலப்படங்களை பார்த்து முடிச்க ஒருவாரம் ஆனவுடன்
அந்த நடிப்பை, நடையை, சிகரெட் ஊதலை காப்பியடித்து நடித்ததாக படித்தேன். இது எப்படி இருக்கு?

இதில் சரோஜாதேவிக்கு இரண்டு தனிப்பாடல்கள். 'அழகான வாழை மரத்தோட்டம்' 'பறவைகளே பறவைகளே எங்கே போறீங்க' இரண்டு பாடலிலும் சற்று கூடுதல் அழகாக தெரிவார். 'தர்மம் தலை காக்கும்' பாடலில் தலைவர் கார் ஓட்டுவதை காணலாம். அந்த பாடலின் இசை மிகவும் அருமை.
மூன்று டூயட் சாங். மூன்றுமே அருமையான பாடல்கள். 'ஹலோ ஹலோ சுகமா'? போனிலே முழு பாடல் காட்சியும். புது முயற்சியில்
கலக்கியிருப்பார்கள்.

'மூடுபனி குளிரெடுத்து' 'தொட்டுவிட தொட்டுவிட தொடரும்' எல்லாமே தலைவரை தொட்டு விட்டால் அதிர்ஷ்டம் தொடரத்தானே செய்யும்.
ஒரு தனிப்பாடல் 'ஒருவன் மனது ஒன்பதடா' அதுவும் மனித மனங்களை பற்றி அமைந்த தத்துவப்பாடல். க்ளைமாக்ஸில் ட்விஸ்ட் என படம் பார்ப்பவர்களுக்கு
விருந்து படைத்திருந்தார்கள்.

மொத்தத்தில் படத்தை பார்த்த இளைஞர்கள் மீண்டும் மீண்டும் பார்த்தார்கள்..
சென்னையில் சித்ரா பிரபாத் சரஸ்வதியில் வெளியாகி மூன்றிலும் 70 நாட்கள் ஓடியது. கோவை ராயலில் 86 நாட்களும் சேலம் நியூசினிமாவில் 84 நாட்களும் ஓடி வெற்றி பெற்றது. தமிழகத்தின் பல இடங்களில் 50 நாட்களை கடந்து வெற்றி பெற்றது. ஆனால் இலங்கை கொட்டாஞ்சேனை கெயிட்டியில் 100 நாட்கள் ஓடி இலங்கை தலைவரின் வெற்றிச்சலங்கை என்பதை நிரூபித்தது..........ks...

orodizli
24th September 2020, 09:38 PM
நவம்பர் 1976

மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த '' ஊருக்கு உழைப்பவன்'' 12.11.1976 அன்று திரைக்கு வந்தது . சென்னை நகரில் பைலட் , மகாராணி , அபிராமி , கமலா திரை அரங்கில் வெளியானது . சென்சார் பிடியில் இப் படத்தில் இடம் பெற்ற எம்ஜிஆரின் ஹெலிகாப்டர் சண்டை காட்சிகள் , மற்றும் இந்தி ஸ்டண்ட் நடிகர் ஷெட்டியுடன் மோதும் அனல் பறக்கும் காட்சிகள் வெட்டப்பட்டன . இதனால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தார்கள் .

இந்த நிலையில் யாருமே எதிர்ப்பாராத வண்ணம் மக்கள் திலகம் எம்ஜிஆர் சென்னை நகரில் மேற்கண்ட 4 திரை அரங்கிற்கு சென்று ரசிகர்களுடன் அமர்ந்தது சில நிமிடங்கள் படத்தை பார்த்து விட்டு சென்றார் . ரசிகர்கள் அனைவரும் தங்களுடன் எம்ஜிஆர் படத்தை பார்த்ததை மிகவும் பெருமையாக கருதினார்கள் ............vd...

orodizli
24th September 2020, 09:39 PM
தலைவரே நீங்க வேறு லெவல்...இனி ஒருவரை எங்கே காண்போம் இது போல படிப்பினை திரையில் சொல்ல..வாழ்க உங்கள் புகழ்...நன்றி.

இதை போல கருத்து உள்ள பாடலை எங்கே இனி தேட...

அவர்போல முதல்வர் கனவில் மிதக்கும் பலர் வேறு பணம் தேடி சின்ன திரை தேடி அலையும் காலம் இது.

ஒரே பிக்பாஸ்..மாஸ்டர் எந்திரன் இந்திரன் எல்லாம் என்றும் இவரே..வேறு பக்கம் தேடி வீணாக போகவேண்டாம்..

நீங்கள் நடிக்கும் வரை எங்களுக்கு கவலை இல்லை ரசிப்போம்.
இவர் இடத்தை பிடிக்க நினைக்கும் போது உணர்வுகள் கொண்டு நியாயம் கேட்போம். இது சரியா என்று.

முடிந்தால் தலைவன் ஆகுங்கள்..இருந்தால் நீங்கள் இருந்தால் தொண்டர் ஆகிறோம்.

1967 இல் தலைவர் படத்தில் பாட்டு இது 93 வது படம் அவருக்கு. 53 வருடங்கள் முன்பு...

இதை போல கருத்து சொல்லும் பாடல்கள் உங்கள் படங்களில் வந்ததா சகோஸ்....Mn...

orodizli
24th September 2020, 09:39 PM
எங்க வீட்டுப் பிள்ளை திரைப்படம் 1965ம் ஆண்டில் 7 திரையரங்குகளில் வெள்ளி விழா கொண்டாடி அதுவரை வெளியான எல்லா படங்களின் வசூலையும் தூக்கியடித்து துவம்சம் செய்தது. மக்கள் திலகம் திரையுலகில் இருந்தவரை எங்க வீட்டு பிள்ளையின் 7 தியேட்டர் வெள்ளிவிழாவை எந்த நடிகரின் படமும் முறியடிக்கவில்லை.

கோழை ராமுவாகவும் வீரமிக்க இளங்கோவாகவும் படத்தில் மக்கள் திலகம் இரண்டு வெவ்வேறு மனிதர்களாகவே வாழ்ந்திருப்பார். ராமுவுக்கு சரோஜாதேவியை திருமணம் பேசி முடிக்க ரங்காராவ் வீட்டுக்கு நம்பியார் வருவார். மாப்பிள்ளை பற்றிய கேள்விகளுக்கு ‘ பட்டம்- ஜமீன்தார்’, ‘இஷ்டம்-என் இஷ்டம்’ என்று கேள்விகளுக்கு நம்பியார் பதில் சொல்வார். மாப்பிள்ளை என்ன கலர்? என்ற கேள்விக்கு, ‘ரோஸ் கலந்த சிகப்பு’ என்று பதிலளிப்பார்.

நீங்களே சொல்லுங்க... இந்த நிறத்தை குறிப்பிட்டு வேறு எந்த நடிகருக்காவது ஒரு வசனகர்த்தா வசனம் எழுதமுடியுமா?

ரோஜா நிறத் தலைவரின் அழகைப் பாருங்கள்.......... Swamy.........

orodizli
24th September 2020, 09:41 PM
இந்த பாடலை எழுதியவர் யார் ?

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்....
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்....
நீதிக்கு இது ஒரு போராட்டம் – இதை
நிச்சயம் உலகம் பாராட்டும்...... (வெற்றி)
வல்லோர்கள் சுரண்டும் பொல்லாத கொடுமை,
இல்லாமல் மாறும் ஒரு தேதி – அன்று,
இல்லாமை நீங்கி எல்லோரும் வாழ,
இந்நாட்டில் மலரும் சம நீதி – நம்மை
ஏய்ப்பவர் கையில் அதிகாரம்,
இருந்திடும் என்றும் கதை மாறும்
ஆற்றலும் அறிவும்
நன்மையை வளர்க்க,
இயற்கை தந்த பரிசாகும் – அதில்
நாட்டினைக் கெடுத்து,
நன்மையை அழிக்க
நினைத்தால், எவர்க்கும் அழிவாகும்.
நல்லதை வளர்ப்பது அறிவாற்றல்,
அல்லதை நினைப்பது அழிவாற்றல்.

‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் டைடில் பாடல் இது.

இந்தப் பாடலை எழுதியவர் புலவர் புலமைப்பித்தனாய் இருந்தாலும், பட பெயர் பட்டியலில் பாடலாசிரியர் வேதா என்று வெளிவந்தது. அந்த பாடலுக்கான ஊதியமும் அவருக்கே கொடுக்கப்பட்டது!

உரிய நேரத்தில் பாடலை வேதா எழுதித் தராதால், எம்.ஜி.ஆர். வேண்டுகோளின்படி புலமைப்பித்தன்
பாடலை எழுதித்தந்து வேதாவின் பெயரை டைட்டிலில் இடம் பெறச்செய்து
ஒத்துழைத்தார். இந்த விளக்க விபரம்
புலவர் கூறி 'இதயக்கனி' இதழில்
இடம் பெற்றது. 'இதயக்கனி' நடத்திய
விழா மேடையிலும் தெரிவித்தார்.

(திருத்தப்பட்ட மறு பதிவு)

‘#இதயக்கனி’.எஸ்.விஜயன்.........

orodizli
24th September 2020, 09:49 PM
#புரட்சி_தலைவர்
#இதயதெய்வம்
#மக்கள்_திலகம்
#பாரத_ரத்னா_டாக்டர்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். #அவர்களின்_ஆசியோடு_நண்பர்கள் #அனைவருக்கும்_இனிய
#வியாழக்கிழமை_காலை_வணக்கம்..

இதயதெய்வம் எம்ஜியார்
தன்னிடம் உதவி கேட்பவர்களுக்கு மட்டுமின்றி, கேட்காதவர்களுக்கும் அவர்களுடைய நிலையை அறிந்து உதவிகள் செய்யக் கூடியவர். இதற்கு உதாரணமாக எத்தனையோ சம்பவங்கள் உண்டு...

இசை நிகழ்ச்சிகள், நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் அவ்வளவாக அரங்குகள் கிடையாது. மயிலாப்பூரில் ரசிக ரஞ்சனி சபாவுக்கு சொந்தமான சுந்தரேஸ்வரர் அரங்கு, எழும்பூரில் அரசுக்கு சொந்தமான மியூஸியம் தியேட்டர், வால்டாக்ஸ் சாலையில் அமைந்திருந்த ஒற்றை வாடை தியேட்டர், மாநகராட்சி
அலுவலகத்தை ஒட்டிய வி.பி.ஹால், அண்ணா மலை மன்றம் போன்ற ஒருசில அரங்குகள்தான் இருந்தன.

இந்த அரங்குகளில் நடந்த பல கலை நிகழ்ச்சிகளுக்கு எம்.ஜி.ஆர். வருகை தந்து தலைமை தாங்கியிருக்கிறார். மாநகராட்சி அலுவலகம் அருகே இருந்த வி.பி.ஹாலில் ஒரு கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எம்.ஜி.ஆர். சென்றார். நிகழ்ச்சி முடிந்து கலைஞர்களை பாராட்டிவிட்டு காரில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அந்தக்
காலகட்டத்தில் அவர் ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் வசித்து வந்தார். சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்துக்கு எதிரே ஒரு ரயில்வே (பூங்கா ரயில் நிலையம்)
கேட் உண்டு. இப்போது அந்த பகுதியில் மேம்பாலம் உள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்து ரயில்வே கேட்டைக் கடந்து (சென்னை மத்திய சிறை பின்புறம்) சிந்தாதிரிப்பேட்டை வழியாக ராயப்பேட் டைக்கு எம்.ஜி.ஆர். செல்ல வேண்டும்.

எம்.ஜி.ஆரின் கார் வந்து
கொண்டிருந்தபோது ரயில்வே கேட் மூடப் பட்டிருந்தது. அது திறப்பதற்காக கார் காத்திருந்தது. ரயில்வே கேட் அருகே ஒரு குதிரை லாயம்.
(இன்றும் அந்த குதிரை லாயம் உள்ளது) காரில் எம்.ஜி.ஆர். செல்லும்போது, சுற்றும்முற்றும் கூர்ந்து கவனித்தபடி இருப்பார். அவர் பார்த்த போது குதிரை லாயம் அருகே சிறு கூட்டம். கூடவே அழுகை சத்தமும் கேட்டது. என்ன வென்று விசாரித்து வருமாறு காரில் இருந்த தனது மேனேஜர் சாமியிடம் எம்.ஜி.ஆர். சொல்ல, அவரும் விசாரித்து வந்தார்.

அங்கிருந்த ஒரு குதிரை
வண்டிக்காரருக்கு சொந்தமான
குதிரை திடீரென இறந்துவிட்டது. வண்டிக்காரரின் குடும்பமே குதிரை சவாரியை நம்பித்தான் இருந்தது. திடீரென குதிரை இறந்த அதிர்ச்சி, துக்கம், இனி பிழைப்புக்கு என்ன செய்வது என்ற கவலை எல்லாம் சேர, அவரது குடும்பமே இறந்த குதிரையின் அருகில் அமர்ந்து கதறியது. அதைவிடக் கொடுமை, அந்தக் குதிரையை அடக்கம் செய்யக்கூட அவர்களிடம் பணம் இல்லை.

இந்த விவரங்களை எம்.ஜி.ஆரிடம் மேனேஜர் சாமி தெரிவித்தார். பொறுமையாகக் கேட்ட எம்.ஜி.ஆர்., ‘‘புதுக் குதிரை வாங்க எவ்வளவு பணம் தேவைப்படும்?’’ என்றார். ‘‘600 ரூபாய் தேவைப்படலாம்’’ என்றார் சாமி. ஒரு பொருளின் விலையை கடைக்காரர் அதிகமாக சொன்னால், ‘‘என்னய்யா... யானை விலை, குதிரை விலை சொல்ற?’’ என்ற வசனத்தை முன்பெல்லாம் கேட்டிருப்போம். 50 ஆண்டுகளுக்கு முன் குதிரை விலை 600 ரூபாய் என்பது அதிகம்.

சாமி சொன்னதைக் கேட்ட எம்.ஜி.ஆர்., ‘‘புதுக்குதிரை வாங்கி வந்து வண்டியில் பூட்டி ஓட்ட வேண்டும். இதற்கு சில
நாட்கள் ஆகலாம். அதுவரை அந்த வண்டிக்காரரின் குடும்பம் கஷ்டப்படக் கூடாது. இறந்த குதிரையையும் அடக்கம் செய்ய வேண்டும். எனவே, குதிரை விலையோடு சேர்த்து தேவை யான பணத்தை வண்டிக்காரரிடம் கொடுத்துவிடுங்கள்’’ என்றார். பணத்தோடு சென்ற சாமி, வண்டிக்காரரிடம் விவரங்களைச் சொல்லி பணத்தைக் கொடுத்தார்.

வண்டிக்காரருக்கு இன்ப அதிர்ச்சி.
நம்ப முடியாமல் கூட்டத்தை விலக்கி எம்.ஜி.ஆர். வந்த காரைப் பார்த்தார். காரில் எம்.ஜி.ஆர். இருப்பதை கவனித்துவிட்டு இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி கும்பிட்டபடி, கண் ணீருடன் காரை நோக்கி ஓடிவந்து அப்படியே தரையில் விழுந்து
வணங்கினார். காரில் இருந்து இறங்கிய எம்.ஜி.ஆர்., அவரை தூக்கி ஆறுதல் சொன்னார். ‘‘இறந்த குதிரையை
அடக்கம் செய்துவிட்டு, புதுக் குதிரை வாங்கி தொழிலை கவனியுங்கள்’’ என்றார். அதற்குள், விஷயம் பரவி அங்கு பெரும் கூட்டம் சேர்த்துவிட்டது. அந்த நேரத்தில், ரயில்வே கேட் திறக்கப்பட, மக்களைப் பார்த்து கையசைத்து விடைபெற்றபடி எம்.ஜி.ஆர். புறப்பட்டார்.

அந்தக் குதிரை வண்டிக்காரர் நன்றி மறக்காதவர். அடுத்த சில நாட்களில் ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். வீட்டுக்கு புதிய குதிரை பூட்டிய வண்டியை ஓட்டிக் கொண்டு வந்துவிட்டார். எம்.ஜி.ஆரை சந்தித்து அவரது காலில் விழுந்து நன்றி சொன்னார். அவரை வாழ்த்தி குதிரையையும் பார்த்து மகிழ்ச்சியுடன் அதைத் தட்டிக் கொடுத்தார் எம்.ஜி.ஆர்.!

‘பல்லாண்டு வாழ்க’ படத்தில் ஜெயிலர் ராஜன் என்ற பாத்திரத்தில் எம்.ஜி.ஆர். நடித்திருப்பார். கொடிய குற்றங்கள் செய்த சிறைக் கைதிகள் 6 பேரை தனது பொறுப்பில் அழைத்துவந்து, அவர்களோடு தானும் வாழ்ந்து கைதிகளை திருத்தும் முயற்சியில் ஈடுபடுவார். குற்றவாளிகளில் ஒருவராக நடிக்கும் ஆர்.எஸ். மனோகர், கதைப்படி தனது மனைவியை கொன்றுவிட்டதால் சிறை தண்டனை அடைந்திருப்பார். அவரைப் பார்க்க மனோகரின் இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அவரது தாயார் வருவார்.

தனது தள்ளாத வயதில், வீடுகளில் வேலைசெய்து குழந்தைகளைக் காப்பாற்றி வருவதாகவும் தானும் இறந்துவிட்டால் இந்தக் குழந்தைகளின் கதி என்ன என்று மனோகரிடம் கூறி அவரது தாயார் கலங்குவார். என்ன செய்வதென்று புரியாமல் மனோகரும் கண் கலங்கும் கட்டம் பார்ப்பவர் மனதை உருக்கும்.

இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் எம்.ஜி.ஆர்., இரு குழந்தைகளையும் தான் பார்த்துக் கொள்வதாகக் கூறுவார். அந்தத் தாய், நன்றியும் மகிழ்ச்சியும் போட்டிபோட, உணர்ச்சிப் பெருக்கோடு எம்.ஜி.ஆரைப் பார்த்துச் சொல்வார்…

‘‘#இந்த_உலகத்துலே_ஏழைங்களோட #கஷ்டத்தைப்_புரிஞ்சவங்க_உன்னை #மாதிரி_வேற_யாரும்_இல்லப்பா!’’

எம்.ஜி.ஆர். குதிரையேற்றம் அறிந்தவர். மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரமும் குதிரை சவாரியில் விருப்பம் உள்ளவர். பல குதிரைகளை வளர்த்து வந்தார். மாடர்ன் தியேட்டர்ஸின் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ படத்தில் குதிரை சவாரி காட்சியில் எம்.ஜி.ஆர். ஓட்டியது, டி.ஆர். சுந்தரத்துக்கு சொந்தமான குதிரை....

அன்புடன்
படப்பை
ஆர்.டி.பாபு.........

orodizli
24th September 2020, 09:51 PM
#புர*ட்சித்த*லைவ*ரின் வ*ழித்தோன்ற*ல்க*ள்...

‘கொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியும் திருப்தியும்..’ -எம்.ஜி.ஆர். சொன்னதை செய்யும் அமைச்சர்கள்..

‘வாழும் கர்ணன்’ என, அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரைப் புகழ்ந்து மதுரையில் போஸ்டர் ஒட்டியிருந்தனர். காரணம் – மதுரை மாவட்டத்தில், கரோனா நோய்க் காலத்தில், மாநகர், புறநகர் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளுக்கு, 68 நாட்களாக, தினமும் மூன்று வேளை உணவளித்து வருகிறாராம்.

அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியும் அப்படித்தான்! சொந்த நிதியிலிருந்து, வறுமையில் வாடும் அ.தி.மு.க நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு, தொடர்ந்து லட்ச லட்சமாக வழங்கி வருகிறார். இதன் நீட்சியாக, தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில், கரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும், தலைமைக் கழகப் பேச்சாளர்களான சிவகாசி தீப்பொறி சின்னத்தம்பி, அருப்புக்கோட்டை சரவெடி சம்ஸ்கனி, விருதுநகர் இளந்தளிர் பழனிகுமார், சங்கரன்கோவில் சங்கை கணபதி, தீக்கனல் லட்சுமணன் ஆகியோருக்கு, தனது சொந்த நிதியிலிருந்து, தலா ரூ1 லட்சம் வீதம், மொத்தம் ரூ.5 லட்சம் நிதி வழங்கியிருக்கிறார்.

‘கட்சி நிர்வாகிகளோ, தொண்டர்களோ, பொதுமக்களோ, எத்தனை பேருக்குத்தான், இப்படி நிதி வழங்கி உதவிட முடியும்? கஷ்டப்படும் மக்கள் எங்கெங்கும் இருக்கிறார்களே? இது தேர்தல் நேரத்து அரசியல் என்றும் விமர்சிக்கப்படுகிறதே?’ என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தரப்பிடம் கேட்டோம்.

“பத்து வருடங்களுக்கு முன், அவர் அமைச்சராவதற்கு முன்பிருந்தே, நலிந்தோருக்கு உதவத்தானே செய்கிறார். தேர்தல் நேரத்து அரசியலென்றால், எதிர்க்கட்சிகளும், தாராளமாக இதைச் செய்ய வேண்டியதுதானே? யார் செய்தால் என்ன? எளியோருக்கு உதவி போய்ச் சேர்ந்தால், மகிழ்ச்சிதானே!

புரட்சித்தலைவரின் பேட்டி ஒன்றை ராஜேந்திரபாலாஜி அடிக்கடி நினைவுகூர்வார். எம்.ஜி.ஆரை அப்போது பேட்டி கண்டபோது, ‘உங்களைப் போல மற்ற நடிகர்கள் ஏழைகளுக்கு வாரி வழங்குவது இல்லையே?’ என்பதுதான் கேள்வி. அதற்கு எம்.ஜி.ஆர். “வாரியெல்லாம் நான் வழங்குவது இல்லை. தேவைகளைப் பார்த்துக் கொடுக்கிறேன். அதிலும், உதவி கேட்ட எல்லோருக்கும் செய்ய முடியவில்லை என்ற வருத்தம் எனக்கு உண்டு. மற்ற நடிகர்கள் செய்யவில்லை என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? அவரவர் வசதிக்கேற்ப கொடுத்துக்கொண்டுதான் இருப்பார்கள். வெளியே தெரியாமல் இருக்கலாம். கொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியும் திருப்தியும் அவர்களுக்குத் தெரியாமலா இருக்கும்?” என்று பேட்டி கண்டவரையே திருப்பிக் கேட்டார்.

‘இருப்பதையெல்லாம் கொடுத்துவிட்டால் என்னாவது? உங்களுக்குத்தானே இழப்பு? எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையே இல்லையா?’ என்று அமைச்சரிடம் உரிமையுடன் கேட்பவர்கள் உண்டு. அதற்கு அவர் ‘இழப்பா? எனக்கா? கொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியும் திருப்தியும், கொடுப்பதைவிட பல மடங்கு திரும்பக் கிடைக்கிறதே?’ என அன்று எம்.ஜி.ஆர். சொன்னதை ‘ரிபீட்’ செய்வார்.

ராஜேந்திரபாலாஜி பாசக்காரர் என்பது பலருக்கும் தெரியாது. தொகுதிக்கு வந்துவிட்டால், காலை மற்றும் இரவு உணவை அம்மா கையால்தான் சாப்பிடுவார். தற்போது, அவருடைய தந்தை தவசிலிங்கமும், தாயார் கிருஷ்ணம்மாளும், கரோனா தொற்றுக்கு ஆளாகி, மதுரையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதனால், அவர் வீட்டுக்கே செல்வதில்லை. இங்கே தனியார் கெஸ்ட் ஹவுஸில்தான், சாப்பாடு, தூக்கமெல்லாம்.” என்றனர்.

குடும்பப் பாசத்தோடு, தொகுதிப் பாசமும் இருந்துவிட்டால், நல்லதுதானே..

#தலைவ*ர்வ*ழி வ*ந்த* த*ங்க*ங்க*ள் எல்லாம் ஓர்வ*ழி நின்று நேர்வ*ழி சென்றால் நாளை ந*ம*தே! இந்த* நாளும் ந*மதே!.........Babu...

orodizli
24th September 2020, 10:06 PM
தர்மம் தலைகாக்கும் படத்தில் முகமூடி மனிதன் எம்.ஆர்.ராதா என்றே காட்டியிருப்பார்கள். கடைசியில் ட்விஸ்ட் எதிர்பாராதது. முகமூடி மனிதன் வரும் காட்சிகளில் திகிலூட்டும் பின்னணி இசை அருமை. மக்கள் திலகம் டாக்டராக அற்புதமாக நடித்திருப்பார். அவரது உடல்மொழி இயற்கையாக இருக்கும். மக்கள் திலகத்தை நோட்டம் விடுவதற்காக கையில் வலி என்று சின்னப்பா தேவர் வருவார். வேறொருவரை மக்கள் திலகம் பரிசோதிக்கும்போதே கதவை திறந்து வலி.. வலி. என்றபடி மக்கள் திலகத்தை நோட்டமிடுவார். அவரை வெளியே காத்திருக்குமாறு கூறி அவரது முறை வந்ததும் கம்பவுண்டரிடம் மக்கள் திலகம், ‘அந்த கைவலிக்காரரை வரச் சொல்லுங்க’ என்று ரொம்ப கேஷூவலாகச் சொல்லிவிட்டு, அவர் வரும்வரை தன் கையில் உள்ள பேனாவை ஸ்டைலாக பார்த்து ஆராய்ந்தபடி இருப்பார்.

அந்த சில விநாடிகளில் சுவற்றை வெறித்துப் பார்த்தபடியோ, கேமராவைப் பார்த்தபடியோவா இருக்க முடியும்? எதிரே வேறு ஆளும் இல்லை. எப்படி ரியாக்ட் செய்ய முடியும்? அந்த விநாடிகளில் மக்கள் திலகம் ஒரு டாக்டருக்குரிய மேனரிஸத்தைக் காட்டியிருப்பார். கம்பவுண்டர் வந்து தேவர் அங்கே இல்லை என்று சொன்னதும், மக்கள் திலகத்தின் முகம் .. ஏன்? எதற்காக காண்பிக்காமலேயே போய்விட்டார்? வந்தது யார்? .... என்ற சிந்தனையையும் குழப்பத்தையும் வசனம் இல்லாமலே பிரதிபலிக்கும்.

சிவாஜி கணேசனை வைத்து பீம்சிங் எடுத்த கடைசி படம் பாதுகாப்பு. அதுவும் பா வரிசைதான். அந்தப் படத்தால் பொருளாதார பாதுகாப்பு கிடைக்காமல் நஷ்டமடைந்து கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதோடு சிவாஜி கணேசனை பீம்சிங் தலைமுழுகியது உலகமே அறிந்ததுதான். ... Swamy

orodizli
24th September 2020, 10:12 PM
நடிகர் வி.சி.கணேசன் பிள்ளைகள் பொய்கள் வாரி இரைப்பார்கள். தனிப்பட்ட தங்கள் முகநூலில் புரட்சித் தலைவர் மீது அவதூறாக சொல்வார்கள். அவர்களை முதலில் நிறுத்த சொல்லுங்கள். சி.கணேசன் ரசிகர்கள் பொய் சொல்லுவான்கள் இத்ற்கு ஒரு உதாரணம். ஒரு ஆளு சொன்னதற்கு கோபி பீம்சிங் இன்னிக்கி செருப்பால அடிச்சா மாதிரி பதில் சொல்லிருக்கார். பாகப்பிரிவினை டைரக்டர் படம். சி.கணேசனால் மட்டுமே அந்தப்படம் ஓடவில்லை என்று சொல்லிருக்கார். இந்த கணேசன் ரசிகனுக்கு கொஞ்சம் கூட சினிமா அறிவு கிடையாது. பாகப்பிரிவினை இந்தியில் தோல்வி என்று பொய் சொல்லிருக்கான். அதுக்கு உனக்கு சினிமா வரலாறு தெரியுமா என்று கோபி பீம்சிங் நாக்கை பிடுங்கறா மாதிரி கேட்டிருக்கார்..........Feedbacks @fb.,

fidowag
24th September 2020, 10:21 PM
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*22/09/20 அன்று அளித்த*தகவல்கள்*
------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு புன்னகை என்பது*தொற்றிக் கொள்கிற நல்ல ஒரு உபாயம் என்பதை*மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் வாழ்க்கையில்*கற்று*கொடுத்திருந்தார் .இந்தி நடிகர்*திலீப்குமார் எம்.ஜி.ஆரின்*புன்னகை பல கோடி*அளவிற்கு*மதிப்புள்ளது என்று கருத்து*தெரிவித்துள்ளார் .தன்னுடைய திரைப்படங்களில் அதிகபட்சமாக சோக*காட்சிகள் , மன*அழுத்தம் ,துயரம் ,அழுகை, மன வருத்தம் தரும்*காட்சிகளை முடிந்த*அளவிற்கு*தவிர்த்து ,திரைப்படங்களை காண வருபவர்கள்அனைவரும்* எந்த காரணத்தை முன்னிட்டும் இந்த பாதிப்புகளை*அடைய கூடாது*என்பதால்* ஒவ்வொரு நொடியும்**திரைக்கதையை*அமைப்பதில்* முழு கவனம்*செலுத்தி*வந்தார்*.அதனால்தான் அவரது படங்களில் சோக முத்திரை இருக்காது .அதே சமயத்தில் மக்களின்*மனதில்*ஆழமாக*சில கருத்துக்களை*பதிய செய்தார் . அதாவது நீங்கள் கடுமையாக உழைத்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் .நீங்கள் நல்லவராக இருந்தால்*உங்களுக்கு வெற்றி என்பது*எப்போதும் சாத்தியம்*.* ஊருக்கு*உதவிகள்*, நன்மைகள் செய்தால் வாழ்வில்*உயர்வு பெறலாம்*என்ற படிப்பினைகள், பாடங்களை*மட்டுமே*தன் படங்களில் விதைத்திருந்தார் .*


குறிப்பாக*ஆண்டிபட்டியில் இருந்து திருமதி வசந்தி*அவர்கள் பேசினார்களே ,என்னுடைய* மரணத்தருவாயில் இருந்து காப்பாற்றிய பாடல்கள்*எம்.ஜி.ஆருடையது* என்று ,அப்படியான பாடல்களை* பலருக்கும் உருவாக்கி தந்தவர் எம்.ஜி.ஆர். என்றால் அவருக்கு*இசை ஞானம் இருந்தது . அவருக்கு*மொழி ஞானம் இருந்தது ,அவருக்கு*கர்நாடக சங்கீதம் ,படத்தொகுப்பு ,காமிரா*இயக்கம், தொழில்நுட்பம் ,மேல் நாட்டு இசை, நடிப்பு , இயக்கம், திரைக்கதை அமைப்பு, வசனங்கள் அமைப்பு , பாடல்கள்*தேர்வு செய்வது*,அவற்றை*திருத்துவது*என்று எல்லா*விஷயங்களிலும்,நுட்பங்களிலும்* கைதேர்ந்தவர் .என்பதால் திரைப்பட*துறையை அவர் பெரிதும்**நேசித்தார் அதில் சாதித்தார் .


திரைப்படத்துறையை எந்த அளவிற்கு*எம்.ஜி.ஆர்.நேசித்தார் என்பதற்கு ஒரு உதாரணம் கூறலாம் .அடிமைப்பெண் படத்திற்காக கிளைமாக்ஸ் காட்சியில் சிங்கத்துடன் மோதும்*காட்சியை*படம் பிடிக்க சத்யா*ஸ்டுடியோவில் ஒரு மரணக்கிணறு போல ஒருஅரங்கம்* வடிவமைக்கப்பட்டது .கிட்டத்தட்ட ஒருவார*காலமாக*படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அந்த கால கட்டத்தில்தான் பேரறிஞர் அண்ணா*மறைந்த*பின் அடுத்த தமிழக*முதல்வர்* யாராக இருக்க கூடும்*என்ற யூகம்,விவாதம் ஆங்காங்கே* பரவிக்கொண்டிருந்தது* அதைப்பற்றி அனைவரும் தீவிரமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் இந்த விஷயத்தில் எம்.ஜி.ஆரின்*முடிவு என்னவாக இருக்கும்*என்பதில்*பலரும்*தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தனர் .குறிப்பாக*சத்யா ஸ்டுடியோவில் தொழிலாளர்களும் இது குறித்து*தீவிரமாக பேசி கொண்டிருந்தார்கள் .எம்.ஜி.ஆர். சிங்கத்துடன் மோதும் காட்சிகள் பரபரப்பாக எடுத்து கொண்டிருந்த நேரம் ,எம்.ஜி.ஆர்.தன் உதவியாளரிடம்*இன்று மதியம் நாம் உணவருந்திய பின் ,மாலை 4 மணியளவில் கலைஞர் கருணாநிதி அவர்கள் வர உள்ளார் . அவருடன் வருபவர்களை ஸ்டுடியோவில் தங்குமிடத்தில் இருக்க வைத்து கருணாநிதி அவர்களை மட்டும் இந்த மரணக்கிணறு க்கு*அனுப்பி வைக்க சொன்னார் .வேறு யாரையும்*கண்டிப்பாக அனுப்ப கூடாது*என்று உத்தரவிட்டார் .* சத்யா ஸ்டூடியோ மேலாளர் திரு.பத்மநாபன் கருணாநிதியை மட்டும் மரண கிணறு அரங்கத்திற்கு அழைத்து செல்கிறார் . கருணாநிதியை பார்த்ததும்*எம்.ஜி.ஆர். கீழே இறங்கி வாருங்கள் என்கிறார் .கருணாநிதி நான் இதற்குள் இறங்கி வரவேண்டுமா என்கிறார் .பத்மநாபன் கருணாநிதியிடம் நீங்கள் கீழே இறங்கி*போங்கள்* அப்போதுதான்*நீங்கள் நல்ல முடிவோடு*மேலே வர முடியும்*.உங்களை*ஏற்றிவிடத்தான் உங்கள் நண்பர் எம்.ஜி.ஆர். காத்திருக்கிறார் என்றார்*.கருணாநிதி கீழே சென்றதும் எம்.ஜி.ஆருடன் ரகசிய ஆலோசனை நடத்தினார் .அந்த வார்த்தைகளின் ரகசியங்கள் எம்.ஜி.ஆர். கருணாநிதி ,சிங்கம்*ஆகிய மூவருக்கு*மட்டுமே தெரிந்தவை*.மேலே இருந்த*பத்மநாபனுக்கு* *கூட*தெரியாது .ஆனால் பேச்சு வார்த்தை முடிந்து மேலே வந்தபின் கருணாநிதி தமிழகத்தின் அடுத்த முதல்வராக அறிவிக்கப்பட்டார் . ஆகவே, எந்த தீர்மானம் ,எந்த முடிவு எடுப்பதாக* இருந்தாலும் ,எங்கு, எப்படி யாருடன்*பேசுவது*என்கிற*பண்பாடு, பழக்கம் , அனுகுமுறை*எல்லாம் எம்.ஜி.ஆருக்கு*கை*தேர்ந்த விஷயங்கள் .


திரு. கா.லியாகத்*அலிகானுடன் திரு.துரை பாரதி*பேட்டி*
------------------------------------------------------------------------------------------
இன்றைக்கும்*எம்.ஜி.ஆரின் வாக்கு வங்கி என்பது*தமிழகத்தில் பல்வேறு கட்சிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது .அது எப்படி சாத்தியம்*.மேலும் தி.மு.க. வின் முரசொலியில் திரு.செல்வம்*என்பவர் இன்றைக்கும் எம்.ஜி.ஆரை*பற்றி கேலி*சித்திரங்கள், கட்டுரைகள், விமர்சனங்கள் எழுதி வருகிறார்*அதுபற்றி உங்கள் கருத்து என்னஎன்று** திரு.துரை பாரதி கேட்க ,பின்வருமாறு திரு.லியாகத் அலிகான்*பேசினார் .

இதுபற்றி*விவரங்கள் அறிந்தபோது எனக்கு*முரசொலி செல்வம் மீது கோபம்தான் வந்தது . ஏனென்றால் எம்.ஜி.ஆர். வளர்த்த கட்சி*தி.மு.க.*,அவரால்தான் கட்சி*தமிழகத்தில் பிரபலம் ஆனது என்று பேரறிஞர் அண்ணாவே*பல மேடைகளில் குறிப்பிட்டு பேசியுள்ளார் .தி.மு.க. வெற்றி பெற்றதும் வெற்றி மாலையை அவருக்கு சூட்ட வரும்போது*இந்த மாலைக்கு சொந்தக்காரர் மருத்துவமனையில் உள்ளார்* அவருக்கு*போய் சூட்டுங்கள் என்றார்*.மந்திரிசபை பட்டியல் தயார் ஆனதும்*எம்.ஜி.ஆரின் நேரடி பார்வைக்கும் ,ஆலோசனைக்கும் அனுப்பி வைத்தவர்*அண்ணா . தி.மு.க.மாநில மாநாட்டை*ஒருமுறை எம்.ஜி.ஆர். தலைமையில் நடத்திய*பெருந்தமை*வாய்ந்த தலைவர் பேரறிஞர் அண்ணா .இப்படி தி.மு.க.விற்காக உழைத்த*புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை இவர்கள் விமர்சிப்பது ஏற்கத்தக்கது அல்ல .முரசொலி செல்வம்*அண்ணா*மறைந்தபோது அமரர் அண்ணா என்று பத்திரிகைகளில் எழுதினார் .அனைவரும் இதுசரியா என்று கேள்வி எழுப்பினார்கள் .* அமரர் என்றால் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று அர்த்தம் . அண்ணா*அவர்கள் என் இதயத்தில் மட்டும் அல்லாமல் தமிழர்கள் இதயங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்ற அர்த்தத்தில் தான் எழுதுவதாக கூறினார் . அதுபோலத்தான் எம்.ஜி.ஆர். அவர்களை இன்றைக்கும் தமிழர்கள் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று அனைவரும் கருதுகிறார்கள் ஜெயலலிதா அவர்கள், கருணாநிதி அவர்கள் எல்லாம் மறந்துவிட்டார்கள் அவர்களும் அமரர்கள்தான் .அவர்களை கேலியாக, கிண்டலாக செய்யவில்லை .ஆனால் காழ்ப்புணர்ச்சி*காரணமாக, இன்னும் காலம் கடந்து எம்.ஜி.ஆர். அவர்கள் மறைந்தும் மறையாமல்*மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் , அவருடைய வாக்கு வங்கியை அசைக்க முடியவில்லை*என்கிற காரணத்தால் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் நடைபெற்ற சில* குறைபாடுகளை சுட்டி காட்டி ,ஏன் தி.மு.க.வில் இருந்து விலகினார் , மத்தியில் உள்ள காங்கிரசின் நிர்பந்தம் காரணமாக விலகினார்* என்று சொல்லி*எம்.ஜி.ஆர். அவர்களை கொச்சைப்படுத்தி ஏன் இப்படி எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை .கருணாநிதி காலத்திலும், ஸ்டாலின் காலத்திலும் இப்படி எல்லாமில்லை* நாங்களும் போதிய இடைவெளி விட்டுத்தான் இவர்களிடம் உறவு கொண்டிருந்தோம் . .இப்போது என் இப்படி முரசொலி செல்வம் எழுதுகிறார் என்பது புரியாத புதிர் .இப்போது நான் முரசொலி செல்வத்திற்கு பண்புடன் சொல்லி கொள்வது என்னவென்றால் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் எவ்வளவு பெரிய* ஒரு நீதிமான் ,,நேர்மையானவர் , நியாயமானவர் என்பதை நாம் சொல்வதைவிட தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும்*.எம்.ஜி.ஆர் அவர்களுக்கு எவ்வளவு பெரிய வாக்கு வங்கி இருக்கிறது என்பதை*அவருக்கு தெரியாத காலகட்டத்தில் ,தனக்கு*இழைத்த அநீதிக்காக, ஏற்பட்ட கோபத்திற்காக ,184 சட்டமன்ற உறுப்பினர்களை தனியொரு மனிதனாக*நின்று திருக்கழுக்குன்றத்திலும், ராயப்பேட்டையிலும் எதிர்த்து ,மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார் .*யாராக இருந்தாலும் சரி, இன்று உலகத்திலே எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும் ,மிருகபலம்கொண்ட மெஜாரிட்டி** என்று சொல்வார்களே அப்படி பெரும்பான்மை பலம் பொருந்திய ஒரு அரசை, 184 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட அரசை*எதிர்க்க*ஒரு சாதாரண*தைரியம் இருந்தால் போதாது . காங்கிரஸ் கட்சியோ,அல்லது அவர்கள் சொல்வது*போல வேறு யார் பின்புறம் இருந்து இயக்குவதாக இருந்தாலும் அது நடக்கிற காரியம் இல்லை . தனது செல்வாக்கு மங்கிவிடுமேயானால் , தான் செல்லாக்காசு ஆகிவிடுவோம் என்ற நிர்பந்தத்தின் காரணமாக*,தன்னுடைய வாழ்க்கையை*பணயம் வைத்து எதிர்த்து குரல் கொடுத்தார்*நான் ஊழல் குற்றச்சாட்டு சுமத்துகிறேன் .. ஆரம்பத்தில் ஒன்றுமில்லாதவர்கள் எல்லாம் இன்று கோடிக்கணக்கில் ,லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள் இது எப்படி சாத்தியம்*என்று கேள்வி எழுப்பி கணக்கு கேட்டேன்,எப்படி வந்ததுஎன்ன தவறு* *என்று கேட்கக்கூடிய மனோதிடமும், தைரியமும்*படைத்த ஒப்பற்ற தலைவர் இன்றுவரையில்*வேறு எவரும் கிடையாது .இன்றைக்கு ஊழல் குற்றச்சாட்டு பொத்தாம்*பொதுவாக சுமத்தினாலே யாரும் அதை பொருட்படுத்துவது கிடையாது* ஆனால் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். கேள்வி எழுப்பிய நேரத்திலே*,யாருக்கும்*அந்த மாதிரி மனதைரியம் வரவில்லை .* திரைப்படங்களில் எப்படி வீரனாக நடித்தாரோ ,அதுபோல அரசியலிலும், பொது வாழ்விலும் வீரனாக வளர்ந்து வாழ்ந்து மறைந்தும் மறையாமல்*,வாழ்ந்து கொண்டிருக்கிற**ஒரே தலைவர் புரட்சி தலைவர் அமரர்* எம்.ஜி.ஆர்.தான் .


பழம்பெரும் நடிகர் திருப்பதிசாமி எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளர் . எம்.ஜி.ஆர் படப்பிடிப்பு* தளங்களில் அசதியாக ஓய்வெடுக்கும் நேரங்களில் எம்.ஜி.ஆரின் கால்களை பிடித்து விடுவார் .அவருக்கு உதவியாக கூடவே இருப்பார் .எம்.ஜி.ஆரின் படங்களில் அவர் இல்லாத படங்களே இல்லை என்ற அளவிற்கு*பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார் .ஒருமுறை ஊட்டியில் படப்பிடிப்பில் இருந்த சமயம் இடைவேளையில் உணவருந்திய பிறகு எம்.ஜி.ஆரின் கால்களை*பிடித்து அமுக்கி*கொண்டிருந்தார் .அந்த நேரத்தில் எம்.ஜி.ஆரின் கதை ஆசிரியர் ரவீந்தர் அங்கு வரும்போது ,அவரிடம் திருப்பதிசாமி சைகை மூலம் தான் ஒய்வு*அறைக்கு சென்று வருவதாக*சொல்லி*எம்.ஜி.ஆரின் கால்களை பிடித்து விடுமாறு கூறுகிறார் .* அதன்படி ரவீந்தர் எம்.ஜி.ஆரின் கால்களை பிடித்து விடுகிறார்*.தன் கால்களை பிடிக்கும் கைகளின் வேறுபாட்டை உணர்ந்த எம்.ஜி.ஆர். சட்டென விழித்து பார்க்கிறார் . ரவீந்தரிடம் நீங்கள் இதையெல்லாம் செய்ய கூடாது என்கிறார் எம்.ஜி.ஆர். அப்படி இல்லை ,நான் உங்களின் வளர்ப்பு தானே . உங்களுடன்தானே இருக்கிறேன் .இதை நான் செய்தால் என்ன தவறு என்று கேட்கிறார் ரவீந்தர் .* அப்படியல்ல. தமிழ் மொழியை எழுதும் இந்த கையால்*இந்த வேலைகள் செய்யக்கூடாது .உங்களுக்கு என்று பல்வேறு வேலைகள் உள்ளன . நீங்கள் இந்த வேலையை செய்ய கூடாது என்கிறார் .அப்படி தமிழ் மொழியையும், அதை எழுதுகிறவர் கையையும் நேசித்தவர் எம்.ஜி.ஆர். மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும் ...


நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம் .
--------------------------------------------------------------------------------
1.சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாய் -தாய் சொல்லை தட்டாதே*

2.நான் அளவோடு ரசிப்பவன்* - எங்கள் தங்கம்*

3.எம்.ஜி.ஆர்.சிங்கத்துடன் மோதும் சண்டை காட்சி -அடிமைப்பெண்*

4.திரு.கா.லியாகத் அலிகான் அவர்களின் பேட்டி*

5.அமுத தமிழில் எழுதும் கவிதை -மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்*

orodizli
25th September 2020, 07:47 AM
நினைப்பால்!

நடிப்பால்!

உழைப்பால்!

ஏழைகளுக்காகவே என

முப்பால் கண்டவர் எம் ஜி ஆர்!

எம்.ஜி.ஆர் என்று மூன்று எழுத்து நடிகராக எம்ஜிஆர் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தார் என்றால் ஆச்சரியபட வேண்டிய விஷயம் காரணம் இதை வடமாநில நடிகர்களே ஒப்புக்கொண்டுள்ளனர்.ஒரு முறை வடமாநில திரையுல ஜாம்பவான்களான ராஜேஷ்கன்னாவும் திலீப்குமாரும் கூட எம்ஜிஆர் படங்களை இந்தியில் ரீமேக் செய்கிறோம் அதில் அவரைப் போல நீங்கள் நடிக்க வேண்டும் என்று கேட்டதற்கு எங்களால் எம்ஜிஆர் போல நடிக்க முடியாது என தெரிவித்தனர்.

எம்.ஜி.ஆர் என்றால் நல்ல சுறுசுறுப்புத்தனம், அந்த சிவந்த உதட்டின் ஒரத்தில் எப்பொழுதும் உற்சாக பொருந்திய சிரிப்பு, எந்த நடனத்திற்கும் ஈடுகொடுக்கும் நடனம், சண்டைப் பயிற்சி, மாறாக்கொள்கை,ஏழைகள் மீது கருணை மற்றும் தொழிலாளர்கள் மீது அன்பு கலந்த மரியாதை,தாய் மீது பக்தி, தேசத்தின் மீதும் மக்கள் மீதுமான சேவை ஈடுபாடு போன்ற எம்ஜிஆரின் பாத்திரங்கள் மக்களை வசீகரித்தது. திரையுலகில் எப்படி வேண்டுமானால் நடித்துக் கொள்ளலாம் ஆனால் நிஜவாழ்வில் அவ்வாறு இருப்பது சற்று கடினம் ஆனால் இதில் எம்.ஜி,ஆர் விதிவிலக்கு பல லட்சக்கணக்கான திரைப்படத் தொழிலாளர்களையும் அவர்களின் குடும்பங்களையும் வாழ வைத்தார் எம்ஜிஆர் என்றால் என்ன சொல்வது திரையில் மட்டும் கதநாயகன் இல்லை நிஜத்திலும் கதாநாயகன் தான் இன்றும் அவருடைய திரைப்படங்கள் மக்களால் விரும்பி பார்க்கப்படுகின்றன.அதிக பெண் ரசிகர்களை கொண்ட நடிகராக அந்தக்காலம் முதல் தற்போது வரை வலம் வருபவர்..........

orodizli
25th September 2020, 07:48 AM
தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருவதால் ஏற்படும் அலைச்சல், பண விரயம், போக்குவரத்து சிக்கல் உட்பட மக்களின் பல்வேறு சிரமங்களைக் களையும் வகையில் திருச்சி மாவட்டத்தை 2-வது தலைநகராக்க முதல்வராக இருந்த எம்ஜிஆர் முடிவு செய்தார்.

அதன் தொடக்கமாக திருச்சி நவல்பட்டு அண்ணா நகரில் 1,000 ஏக்கரில் துணை நகரத்தை 1984 செப்.15-ம் தேதி எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது தொடக்கி வைத்தார். மேலும், திருச்சியில் தங்கிப் பணியாற்றும் வகையில் உறையூரில் குடமுருட்டி ஆற்றங்கரையில் எம்ஜிஆருக்கென பங்களாவும் வாங்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் எம்ஜிஆரின் கனவு நிறைவேறவில்லை..........

orodizli
25th September 2020, 07:49 AM
#புரட்சி_தலைவர்
#இதயதெய்வம்
#மக்கள்_திலகம்
#பாரத_ரத்னா_டாக்டர்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். #அவர்களின்_ஆசியோடு_நண்பர்கள் #அனைவருக்கும்_இனிய
#வியாழக்கிழமை_காலை_வணக்கம்..

இதயதெய்வம் எம்ஜியார்
தன்னிடம் உதவி கேட்பவர்களுக்கு மட்டுமின்றி, கேட்காதவர்களுக்கும் அவர்களுடைய நிலையை அறிந்து உதவிகள் செய்யக் கூடியவர். இதற்கு உதாரணமாக எத்தனையோ சம்பவங்கள் உண்டு...

இசை நிகழ்ச்சிகள், நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் அவ்வளவாக அரங்குகள் கிடையாது. மயிலாப்பூரில் ரசிக ரஞ்சனி சபாவுக்கு சொந்தமான சுந்தரேஸ்வரர் அரங்கு, எழும்பூரில் அரசுக்கு சொந்தமான மியூஸியம் தியேட்டர், வால்டாக்ஸ் சாலையில் அமைந்திருந்த ஒற்றை வாடை தியேட்டர், மாநகராட்சி
அலுவலகத்தை ஒட்டிய வி.பி.ஹால், அண்ணா மலை மன்றம் போன்ற ஒருசில அரங்குகள்தான் இருந்தன.

இந்த அரங்குகளில் நடந்த பல கலை நிகழ்ச்சிகளுக்கு எம்.ஜி.ஆர். வருகை தந்து தலைமை தாங்கியிருக்கிறார். மாநகராட்சி அலுவலகம் அருகே இருந்த வி.பி.ஹாலில் ஒரு கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எம்.ஜி.ஆர். சென்றார். நிகழ்ச்சி முடிந்து கலைஞர்களை பாராட்டிவிட்டு காரில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அந்தக்
காலகட்டத்தில் அவர் ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் வசித்து வந்தார். சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்துக்கு எதிரே ஒரு ரயில்வே (பூங்கா ரயில் நிலையம்)
கேட் உண்டு. இப்போது அந்த பகுதியில் மேம்பாலம் உள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்து ரயில்வே கேட்டைக் கடந்து (சென்னை மத்திய சிறை பின்புறம்) சிந்தாதிரிப்பேட்டை வழியாக ராயப்பேட் டைக்கு எம்.ஜி.ஆர். செல்ல வேண்டும்.

எம்.ஜி.ஆரின் கார் வந்து
கொண்டிருந்தபோது ரயில்வே கேட் மூடப் பட்டிருந்தது. அது திறப்பதற்காக கார் காத்திருந்தது. ரயில்வே கேட் அருகே ஒரு குதிரை லாயம்.
(இன்றும் அந்த குதிரை லாயம் உள்ளது) காரில் எம்.ஜி.ஆர். செல்லும்போது, சுற்றும்முற்றும் கூர்ந்து கவனித்தபடி இருப்பார். அவர் பார்த்த போது குதிரை லாயம் அருகே சிறு கூட்டம். கூடவே அழுகை சத்தமும் கேட்டது. என்ன வென்று விசாரித்து வருமாறு காரில் இருந்த தனது மேனேஜர் சாமியிடம் எம்.ஜி.ஆர். சொல்ல, அவரும் விசாரித்து வந்தார்.

அங்கிருந்த ஒரு குதிரை
வண்டிக்காரருக்கு சொந்தமான
குதிரை திடீரென இறந்துவிட்டது. வண்டிக்காரரின் குடும்பமே குதிரை சவாரியை நம்பித்தான் இருந்தது. திடீரென குதிரை இறந்த அதிர்ச்சி, துக்கம், இனி பிழைப்புக்கு என்ன செய்வது என்ற கவலை எல்லாம் சேர, அவரது குடும்பமே இறந்த குதிரையின் அருகில் அமர்ந்து கதறியது. அதைவிடக் கொடுமை, அந்தக் குதிரையை அடக்கம் செய்யக்கூட அவர்களிடம் பணம் இல்லை.

இந்த விவரங்களை எம்.ஜி.ஆரிடம் மேனேஜர் சாமி தெரிவித்தார். பொறுமையாகக் கேட்ட எம்.ஜி.ஆர்., ‘‘புதுக் குதிரை வாங்க எவ்வளவு பணம் தேவைப்படும்?’’ என்றார். ‘‘600 ரூபாய் தேவைப்படலாம்’’ என்றார் சாமி. ஒரு பொருளின் விலையை கடைக்காரர் அதிகமாக சொன்னால், ‘‘என்னய்யா... யானை விலை, குதிரை விலை சொல்ற?’’ என்ற வசனத்தை முன்பெல்லாம் கேட்டிருப்போம். 50 ஆண்டுகளுக்கு முன் குதிரை விலை 600 ரூபாய் என்பது அதிகம்.

சாமி சொன்னதைக் கேட்ட எம்.ஜி.ஆர்., ‘‘புதுக்குதிரை வாங்கி வந்து வண்டியில் பூட்டி ஓட்ட வேண்டும். இதற்கு சில
நாட்கள் ஆகலாம். அதுவரை அந்த வண்டிக்காரரின் குடும்பம் கஷ்டப்படக் கூடாது. இறந்த குதிரையையும் அடக்கம் செய்ய வேண்டும். எனவே, குதிரை விலையோடு சேர்த்து தேவை யான பணத்தை வண்டிக்காரரிடம் கொடுத்துவிடுங்கள்’’ என்றார். பணத்தோடு சென்ற சாமி, வண்டிக்காரரிடம் விவரங்களைச் சொல்லி பணத்தைக் கொடுத்தார்.

வண்டிக்காரருக்கு இன்ப அதிர்ச்சி.
நம்ப முடியாமல் கூட்டத்தை விலக்கி எம்.ஜி.ஆர். வந்த காரைப் பார்த்தார். காரில் எம்.ஜி.ஆர். இருப்பதை கவனித்துவிட்டு இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி கும்பிட்டபடி, கண் ணீருடன் காரை நோக்கி ஓடிவந்து அப்படியே தரையில் விழுந்து
வணங்கினார். காரில் இருந்து இறங்கிய எம்.ஜி.ஆர்., அவரை தூக்கி ஆறுதல் சொன்னார். ‘‘இறந்த குதிரையை
அடக்கம் செய்துவிட்டு, புதுக் குதிரை வாங்கி தொழிலை கவனியுங்கள்’’ என்றார். அதற்குள், விஷயம் பரவி அங்கு பெரும் கூட்டம் சேர்த்துவிட்டது. அந்த நேரத்தில், ரயில்வே கேட் திறக்கப்பட, மக்களைப் பார்த்து கையசைத்து விடைபெற்றபடி எம்.ஜி.ஆர். புறப்பட்டார்.

அந்தக் குதிரை வண்டிக்காரர் நன்றி மறக்காதவர். அடுத்த சில நாட்களில் ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். வீட்டுக்கு புதிய குதிரை பூட்டிய வண்டியை ஓட்டிக் கொண்டு வந்துவிட்டார். எம்.ஜி.ஆரை சந்தித்து அவரது காலில் விழுந்து நன்றி சொன்னார். அவரை வாழ்த்தி குதிரையையும் பார்த்து மகிழ்ச்சியுடன் அதைத் தட்டிக் கொடுத்தார் எம்.ஜி.ஆர்.!

‘பல்லாண்டு வாழ்க’ படத்தில் ஜெயிலர் ராஜன் என்ற பாத்திரத்தில் எம்.ஜி.ஆர். நடித்திருப்பார். கொடிய குற்றங்கள் செய்த சிறைக் கைதிகள் 6 பேரை தனது பொறுப்பில் அழைத்துவந்து, அவர்களோடு தானும் வாழ்ந்து கைதிகளை திருத்தும் முயற்சியில் ஈடுபடுவார். குற்றவாளிகளில் ஒருவராக நடிக்கும் ஆர்.எஸ். மனோகர், கதைப்படி தனது மனைவியை கொன்றுவிட்டதால் சிறை தண்டனை அடைந்திருப்பார். அவரைப் பார்க்க மனோகரின் இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அவரது தாயார் வருவார்.

தனது தள்ளாத வயதில், வீடுகளில் வேலைசெய்து குழந்தைகளைக் காப்பாற்றி வருவதாகவும் தானும் இறந்துவிட்டால் இந்தக் குழந்தைகளின் கதி என்ன என்று மனோகரிடம் கூறி அவரது தாயார் கலங்குவார். என்ன செய்வதென்று புரியாமல் மனோகரும் கண் கலங்கும் கட்டம் பார்ப்பவர் மனதை உருக்கும்.

இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் எம்.ஜி.ஆர்., இரு குழந்தைகளையும் தான் பார்த்துக் கொள்வதாகக் கூறுவார். அந்தத் தாய், நன்றியும் மகிழ்ச்சியும் போட்டிபோட, உணர்ச்சிப் பெருக்கோடு எம்.ஜி.ஆரைப் பார்த்துச் சொல்வார்…

‘‘#இந்த_உலகத்துலே_ஏழைங்களோட #கஷ்டத்தைப்_புரிஞ்சவங்க_உன்னை #மாதிரி_வேற_யாரும்_இல்லப்பா!’’

எம்.ஜி.ஆர். குதிரையேற்றம் அறிந்தவர். மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரமும் குதிரை சவாரியில் விருப்பம் உள்ளவர். பல குதிரைகளை வளர்த்து வந்தார். மாடர்ன் தியேட்டர்ஸின் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ படத்தில் குதிரை சவாரி காட்சியில் எம்.ஜி.ஆர். ஓட்டியது, டி.ஆர். சுந்தரத்துக்கு சொந்தமான குதிரை....

அன்புடன்
பாபு...

orodizli
25th September 2020, 07:52 PM
வசூல் சக்கரவர்த்தி!!
--------------------------------
எம்.ஜி.ஆருக்கு தமிழ் நாட்டில் வட மாவட்டங்களை விட தென் மாவட்டங்களில் உணர்ச்சி பூர்வ விசுவாசிகள் அதிகம்!
அதிலும்,,மதுரையை மீட்ட வீரனுக்கு அங்கேக் காணப்படுவது விசுவாசிகள் கூட அல்ல--பக்தர்கள்!!
இயக்குனர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்!!
கற்பகம் படத்தின் மூலமாக நமக்கு கே.ஆர்.விஜயாவையும் வாலியையும் தந்தவர்! குடும்பப் படங்களுக்கு ஒரு கோபாலகிருஶ்ணன் என்று பெயர் எடுத்தவர்!
அது,,அவரின் இயக்கத்தில் மலர்ந்த பணமா பாசமா படத்தின் வெற்றி விழா!
பணமா பாசமா?
கே.வி.மகாதேவன்--கண்ணதாசன் கூட்டணியில் எலந்தப் பயம்--எலந்தப் பயம் என்ற ஈடில்லா இலக்கியப் பாடல் இடம் பெற்ற படம்?
அந்தப் பாட்டுக்காகவே படம் ஓடியதோ என்னவோ யார் கண்டது?
மதுரை தங்கம் தியேட்டரில்,,படத்தின் வெற்றிவிழா நடக்கிறது!
கே.எஸ்.ஜி பேசும்போது--இந்தப் படத்தின் வசூல் மூலம் திரையுலகின் வசூல் சக்கரவர்த்தியாக ஜெமினிகணேசன் விளங்குகிறார் என்று குறிப்பிடுகிறார்??
அவர் அப்படிக் குறிப்பிடும்போது,,ரசிகர்கள் குரல் எழுப்பி ஆரவாரம் செய்கிறார்கள்!
நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த கே.எஸ்.ஜிக்கு பயங்கர அதிர்ச்சி??
ஆம்! அவரது கார் மிக நேர்த்தியாக,,தொழில் சுத்தமாக உடைக்கப்பட்டு,,பாகங்கள் ஒரு ஓரமாகக் குவிக்கப்பட்டு இருக்கிறது??
தங்கம் தியேட்டரின் நிர்வாகி,,கே.எஸ்.ஜியிடம் கூறுகிறார்--
சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி என்றால் அது எம்.ஜி.ஆர் ஒருவர் தான்!
நீங்கள் ஜெமினியைக் குறிப்பிட்டு,,அதுவும் இந்தத் தங்கம் தியேட்டரில் அப்படிப் பேசியிருக்கக் கூடாது1
ரசிகர்கள் சங்கேதமாக ஒலி கொடுத்து உங்களை எச்சரித்ததை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை!!
நீங்க தங்கியிருக்கற லாட்ஜுக்கு இப்போது போவது கூட உசிதமில்லை. ஓட்டலையே உடைப்பதற்கு ஒரு கூட்டம் பின்னால் வரும்!1
தியேட்டர் நிர்வாகி சொன்ன ஆலோசனையின் பேரில் ரகசியமாக ஒரு லாரியில் ஏறி,,செங்கல்பட்டில் அப்போது இருந்த அண்ணாதுரையிடம் தஞ்சம் புகுந்து விஷயத்தைச் சொல்ல--
அண்ணாதுரை,,எம்.ஜி.ஆரிடம் அதைப் பக்குவமாகத் தெரிவிக்க--எம்.ஜி.ஆரும்,,கே.எஸ்.ஜியிடம் வருத்தம் தெரிவித்து,,காருக்கான நஷ்ட ஈடைத் தாமே வழங்குகிறார்!
பிறகு ஏன் அண்ணா அப்படி சொல்ல மாட்டார்--
முகத்தைக் காட்டினால் முப்பதாயிரம் ஓட்டு!!!.........vt...

orodizli
25th September 2020, 07:54 PM
#காணாமல் #போனவை

#நம்நாடு திரைப்படத்தில், தான் சேர்மன் ஆக தேர்ந்தெடுக்கப்படும் இந்த காட்சியில் வாத்தியார் மிக சுருக்கமாக, உயர்ந்த கருத்துக்களை கொண்ட வரிகளைப் பேசுவார்.

'உண்மையா சொல்றேன்...!
நீங்க என்னெ தேர்ந்தெடுப்பீங்கன்னு
நான் எதிர்பார்க்கவே இல்ல...

ஆனா, ஒண்ணு மட்டும்
உறுதியா சொல்றேன்...!

என் உயிருள்ளவரை
கொஞ்சங்கூட சுயநலமில்லாம
உங்களுக்காக உழைப்பேன்
இது உறுதி.

மூத்தவங்கெல்லாம்
என்ன வாழ்த்துங்க...

இளையவர்களெல்லாம் எனக்கு
கைகொடுங்க...

இத்தோடு இக்கூட்டம்
கலைகிறது

நன்றி வணக்கம்'

என் மனதில் என்றுமே நிலைத்து நிற்கும் காட்சி... வாத்தியாரின் மிக எளிமையான பேச்சு, கனிவான, சாந்தம் நிறைந்த முகம், மிக எளிய ஆயினும் மிக பொருத்தமான உடுப்பு மற்றும் ஒப்பனை.. ...அத்தோடு வாத்தியார் கும்பிடற ஸ்டைல்...!!!......

orodizli
25th September 2020, 08:18 PM
அண்ணன் spபாலசுப்பிரமணியன் அவர்களின் மறைவிற்கு என் கண்ணீர் அஞ்சலி.

எஸ்.பி.பி.க்காக காத்திருந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் - ஆயிரம் நிலவே வா ரகசியம்
உழைப்பு உயர்வைக் கொடுக்கும். நல்ல நேரம் இருந்தால் உழைப்புக்கேற்ற பலனாக பெயரும் புகழும் பணமும் கிடைக்கும்.

உண்மையான திறமையிருந்தால்தான் உயர்ந்த நிலையைத் தக்க வைத்துக்கொள்ள முடியும். இது எல்லாமே பாலுவின் வாழ்க்கையில் நடந்திருக்கிறது.

தமிழில் பாட வருவதற்குள் சில தெலுங்கு படங்களுக்காகப் பாடியிருக்கிறார். தமிழில் முதலில் பாடிய பாடல் 'இயற்கையென்னும் இளைய கன்னி' என்ற டூயட்.

இது 'சாந்தி நிலையம்' படத்திற்காக மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பில் பாடியது. ஆனால் பாலுவை தமிழ்ப் பட உலக ரசிகர்களிடையே பிரபலமாக்கிய பாட்டு ஒன்று உண்டு.

எஸ்.பி.பாலசுப்ரமணியம்: சங்கீத உலகில் ஓர் அத்தியாயம்
அந்தப் பாடல் அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை எல்லாரையும் கவர்ந்த பாடல். ஒரே பாடலால் தமிழகம் முழுவதும் தெரிந்த பின்னணி பாடகர் எஸ். பி. பி. ஒருவராகத்தான் இருக்க முடியும். அவருக்கு புகழை வாங்கித் தந்த பாடல் 'ஆயிரம் நிலவே வா' என்று 'அடிமைப் பெண்'ணில் ஒலித்த பாடல்தான்.

'ஆயிரம் நிலவே வா' பாடலை எஸ்.பி.பி. பாடக் காரணமாயிருந்தவர் மக்கள் திலகம் தான். பாலு அந்தப் பாடலைப் பாட வேண்டிய நாளில், நல்ல காய்ச்சலில் படுத்திருந்தார் என்பதை முன்பே சொல்லியிருந்தார்.

பாலு இல்லாமல் கார் திரும்பி வந்ததும், விஷயத்தைப் புரிந்துகொண்ட மக்கள் திலகம், ரிக்கார்டிங்கை ரத்து செய்துவிட்டார்.

இந்த விவரம் பாலுவிற்குத் தெரியாது. தனக்கு பதிலாக வேறு யாரோ ஒருவர் அந்தப் பாட்டைப் பாடியிருப்பார் என்று தான் நினைத்திருந்தார்.

இரண்டு மாதத்திற்குப் பிறகு, மீண்டும் எம். ஜி. ஆர். பிக்சர்ஸ் கார் பாலுவை அழைக்க வந்தபோது, பாலுவிற்கு அதை நம்பவே முடியவில்லை.

எஸ்.பி.பாலசுப்ரமணியம்: சங்கீத உலகில் ஓர் அத்தியாயம்
தன்னைப்போல பிரபலமாகாத ஒரு பாடகனுக்காக எம். ஜி. ஆர். பிக்சர்ஸ் போன்ற ஒரு பெரிய நிறுவனம் இரண்டு மாதங்கள் காத்திருப்பார்கள் என்பதை பாலுவால் நம்ப முடியவில்லை.

பாடலைப் பாடிய பிறகு மக்கள் திலகத்தைச் சந்தித்து நன்றி சொன்னார். அப்பொழுது மக்கள் திலகம் பாலுவிடம் 'தம்பி என் படத்திலே பாட்டுப் பாடப் போறீங்கன்னு நீங்க எல்லார்கிட்டேயும் சொல்லியிருப்பீங்க. உங்க நண்பர்கள் இந்தப் படத்தில் உங்க பாடலை ஆவலோடு எதிர்பார்த்திருப்பாங்க, உங்களுக்கு பதிலாக வேறு ஒருவரைப் பாடவைத்து உங்களையும், உங்கள் நண்பர்களையும் ஏமாற்ற நான் விரும்பல. அதனால்தான் உங்களுக்காக இந்தப் பாட்டு காத்திருந்தது' என்று கூறி வழியனுப்பினார்.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.........ad.,

fidowag
25th September 2020, 11:14 PM
கண்ணீர் அஞ்சலி !!!
------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் அடிமைப்பெண் படத்தின்*பாடலான*ஆயிரம் நிலவே*வா பாடல் மூலம் திரையுலகிற்கு அறிமுகம் ஆகிய பாடும்*நிலா திரு.எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று மறைந்து விட்டார்*என்ற செய்தி அறிந்து*மிகவும் துயரமுற்றேன் .*

அவர் பாடியது*போல அவரின்*தேகம் மறைந்தாலும் உலகெங்கும்**இசையால்*மலர்ந்து கொண்டிருப்பார் .

மறைந்த*திரு.எஸ்.பி.பி.அவர்களின் ஆன்மா சாந்தி அடைய*அவரை*தமிழ் திரை உலகிற்கு*அறிமுகப்படுத்திய*இறைவன் எம்.ஜி.ஆர். அருள் புரியட்டும்*.அன்னாரது பிரிவால்*வாடும்*அவரது*மனைவி, மகன், மகள்,குடும்பத்தினர், உறவினர்கள் ,கோடிக்கணக்கான**அவரது*ரசிகர்கள் அனைவருக்கும் ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள்*குழு சார்பில்*ஆழ்ந்த அனுதாபங்களையும் ,இரங்கலையும் தெரிவித்துக்*கொள்கிறேன் .

ஆர். லோகநாதன் .

orodizli
26th September 2020, 12:49 PM
மன்னர் மகள் பார்க்க விரும்பிய நம் மன்னர்.

கதையல்ல நிஜம்..நம் தங்க தலைவரின் அற்புத நடிப்பில் உருவான ஏ.வி.எம். நிறுவனம் தயாரிப்பில் அமைந்த மாபெரும் வெற்றி சித்திரம் அன்பே வா.

தலைவர் நடிப்பில் முற்றிலும் மாறுபட்ட பொழுதுபோக்கு சித்திரம் இது.....சிம்லா மற்றும் காஷ்மீர் பகுதிகளில் கண்ணை கவரும் இடங்களில் படமாக்கப்பட்ட படம்.

படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்த வேளையில் நம் தலைவர்எம்ஜிஆர் அவர்கள் படப்பிடிப்புக்கு காஷ்மீர் வந்து உள்ள செய்தியை வட நாட்டு பத்திரிகைகள் முக்கியத்துவம் கொடுத்து எழுத.

செய்தியை படித்த ஒரு நாட்டு மன்னர் மகள் அப்பா நாம் குடும்பத்துடன் சென்று எம்ஜிஆர் அவர்களை சந்தித்து ஒரு புகைப்படம் எடுத்து கொள்ள வேண்டும் என்று அவர் ஆசையை சொல்ல...

நாட்டுக்கு மன்னர் என்றாலும் வீட்டுக்கு தலைவர் ஆக அவர் உடன் பட்டு அன்பே வா பட தயாரிப்பாளர் வசம் தங்கள் குடும்ப விருப்பம் சொல்ல.

அவரும் மகிழ்ச்சியுடன் சம்மதித்து மன்னர் அவர்களை குடும்பத்துடன் வர சொல்ல..

அவர்கள் வந்த நேரம் படத்தின் முக்கிய பாட்டில் நடனத்தில் நம் மன்னர் அசத்திய பாடல் ஏய்... நாடோடி போகவேண்டும் போக வேண்டும் ஓடோடி என்ற வரலாறு பேசிய அந்த அற்புத பாடல் காட்சி படம் எடுக்கும் நேரம் மன்னர் தன் மனைவி மற்றும் மகளுடன் வர.

முழு பாட்டு பாடல் காட்சிகள் எடுத்து முடியும் வரை காத்து இருந்து பாடல் காட்சிகள் எடுப்பதை பார்த்து இருந்து இடைவேளையில் எடுக்க பட்ட அரங்கில் நேபாள மன்னர் மகேந்திரா அவர்கள் அவர் மனைவி மற்றும் அவர் மகள் மூவரும் தலைவருடன் அந்த பாடல் உடையுடன் எடுக்க பட்ட அரிய படம் நம் குழுவினர் பார்வைக்கு.

மன்னர் குடும்பம் மகிழ்ச்சியுடன் தலைவர் அவர்களுடன் பேசி முடிந்து அவர்கள் வீடு திரும்பும் போது மன்னர் மகள் சொன்ன வார்த்தை அப்பா எம்ஜிஆர் அவர்கள் என்ன அழகு இல்ல என்று.

வாழ்க தலைவர் புகழ்.

என்றும் அவர் புகழ் காப்போம்...உங்களில் ஒருவன்...நன்றி..
தொடரும்...

அந்த கருப்பு டி.ஷர்ட்...அந்த கருப்பு pant இடையில் வெள்ளை பெல்ட்.. என்ன ஒரு அழகு நம் மன்னர் இல்லையா பின்னே.

சில தலைவர் உண்மை நெஞ்சங்கள் பதிவை தவறாக புரிந்து கொள்ள ஒரு விளக்கம்....நாடோடி பாடல் எடுக்க பட்ட அரங்கில் எடுக்க பட்ட புகைப்படம் பதிவில்..
பாடல் காட்சி எங்கு எடுக்க பட்டது...தெரியவில்லை.
ஊட்டியில் உள்ள ஒரு பங்களா என்றா சென்னையில் போட பட்ட அரங்கில் என்றா என்பது தெரியவில்லை.

அப்போது நேபாள மன்னர் குடும்பம் தமிழகம் வந்து இருந்தது தெரியும்..........Mn...

orodizli
26th September 2020, 12:53 PM
புரட்சி தலைவர் mgr......
======================
தேவர், பிள்ளை, முதலியார், செட்டியார், படையாட்சி , கவுண்டர், நாயக்கர், ஐயர், அய்யங்கார் என தங்கள் சாதி அடையாளங்களை பெருமையாக பேசி வந்த தமிழ் சினிமாவில்

(அதிலும் 50 களில் சாதி தீ கொழுந்து விட்டு எரிந்த அந்த கால கட்டத்தில்,)

58 ஆண்டுகளுக்கு முன் 1956 இல் வெளிவந்த "மதுரைவீரன்" திரைப்படத்தில்
நான் சக்கிலியன் என மார்தட்டி சாதி வேறுபாட்டை சாடி நடித்த நடிகர் எம்ஜிஆர். கலைவாணர் ns கிருஷ்ணன் - மதுரம் ஆகியோர் எம்ஜிஆரின் பெற்றோராக நடித்தது இன்னொரு சிறப்பு.

கதைகளிலே தன் கருத்தை வெளியிட இரண்டு நடிகர்களுக்குக் கற்பனை ஓட்டம் உண்டு.

ஒருவர் கலைவாணர். மற்றொருவர் புரட்சி நடிகர்.
இன்றைக்கும் சினிமா பொழுதுபோக்கிற்காகவும், பணம் பண்ணும் தொழிலாகவும் பார்க்கபடுகிறது.

இன்றைக்கும் கூட ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த வாலிப ஹீரோவாக யாரும் நடிப்பதில்லை.

சினிமா என்பது பொழுது போக்கு அம்சம் மட்டுமல்ல. சமூக புரட்சிக்கான ஆயுதம், அதை சரியாக பயன்படுத்தியவர் புரட்சி தலைவர் எம்ஜிஆர்.

ஏன் எம்ஜிஆர் மற்ற நடிகரிடம் இருந்து வேறுபடுகிறார். ஆதிக்க சாதிகளின் பெருமை பேசாமல்,

ஒடுக்க பட்ட மக்களின் பிரதிநியாக தன்னை முன்னிலை படுத்தி வர்க்க பேதத்தை சினிமா என்ற ஆயுதத்தின் மூலம் சாடினார்.

சாதித்தும் காட்டினார். மறைந்தும் மக்களின் நெஞ்சங்களில் எம்.ஜி.ஆர். வாழ்கிறார்..........Am...

orodizli
26th September 2020, 12:54 PM
எஸ்.பி.பி.,க்காக காத்திருந்த எம்.ஜி.ஆர்.,

எஸ்.பி.பி.க்கு தமிழில் முதன் முதலில் ஹோட்டல் ரம்பா என்ற படத்தில் பின்னணிப் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரியுடன் சேர்ந்து பாடும் வாய்ப்பை வழங்கினார் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். ஆனால் அந்தப் படம் வெளியாகவில்லை. அதன்பின் சாந்தி நிலையம் படத்தில் ''இயற்கை என்னும் இளைய கன்னி...'' என்ற பாடலை பி.சுசீலாவுடன் இணைந்து பாடினார். ஆனால் இதற்கு முன்னதாக எம்.ஜி.ஆர். நடித்த அடிமைப்பெண் படத்தில் இடம் பெற்ற 'ஆயிரம் நிலவே வா' பாடல் முதலில் வெளிவந்தது. இந்த பாடலின் பின்னணியில் ஒரு பெரிய சுவாரஸ்யமே இருக்கிறது.

அடிமைப்பெண் படத்தில் புலமைப்பித்தன் எழுதிய 'ஆயிரம் நிலவே வா' பாடலை எஸ்.பி.பி., பாடுவதாக இருந்தது. ஜெய்ப்பூர் அரண்மனையில் படமாக்க திட்டமிட்டிருந்த நிலையில், எஸ்.பி.பி.,க்கு காய்ச்சல். வேறு பாடகரை வைத்து பாடலை பதிவு செய்யவா என இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் கேட்டார். அதற்கு எம்.ஜி.ஆர், 'பத்திரிகையில் எம்.ஜி.ஆர்., நிராகரித்த குரல் என எழுதுவர். அது, சகாப்தம் படைக்க போகிற இளைஞனின் வாழ்க்கையை வீணாக்கிவிடும். படப்பிடிப்பை தள்ளி வைக்கிறேன்,' என்றார்.

சில மாதம் கழித்து எஸ்.பி.பி.,யை பாட அழைத்த போது, அவரால் நம்ப முடியவில்லை. பாடலை முடித்ததும் எம்.ஜி.ஆரை சந்தித்து நன்றி கூறினார். அப்போது எம்.ஜி.ஆர்., ''என் படத்தில் பாடுவதாக நண்பர்களிடம் தெரிவித்திருப்பாய். வாய்ப்பு கிடைத்தும் பாடும் வாய்ப்பு தடைபட்டால், நீ ராசியில்லாதவன் என பிறர் கூறத்தொடங்கி விடுவர். நீ வளர வேண்டியவன். உனக்காகவே இப்பாட்டு காத்திருந்தது' என்றார். இப்பாடலை இலங்கை வானொலி மூலம் உலகம் எங்கும் ஒலிக்கச் செய்தார் எம்.ஜி.ஆர்.......... Kannan...

orodizli
26th September 2020, 02:32 PM
"ராஜா" வை "ரிக்ஷாக்காரனு"க்கு போட்டியாக நினைத்து சிவாஜி ரசிகர்கள் மண்ணை கவ்வியதும் சும்மா இருக்கவில்லை. உடனே பாலாஜியின் அடுத்த படமான "நீதி"
"துஷ்மன்" என்ற பெரும் வெற்றி பெற்ற இந்தி படத்தை, தமிழில் சிவாஜியை வைத்து மொழிமாற்றம் செய்தார். அங்கு சில்வர் ஜீபிலி கொண்டாடிய படம், இங்கு ஒரே தியேட்டர் தேவி பாரடைஸில் ஸ்டெச்சர் உதவியுடன் போராடி 100
நாட்கள் ஓட்ட முனைந்தனர்.

என்ன செய்ய, ஸ்டெச்சரில் இருந்த பாடி 99 வது நாளில் கீழே குதித்து உயிரை மாய்த்து கொண்டது. அதையும் அவர்கள் விடவில்லை. "நீதி" 99 வது நாள் விளம்பரத்தை முழு பக்கம் கொடுத்து
மனதை தேற்றிக் கொண்டனர்.
A சென்ட்டரில் மட்டுமே இந்த ஜகஜால வித்தைகள்.மற்ற ஊர்களை எல்லாம் கண்டுகொள்ளவே மாட்டார்கள்.

அங்கெல்லாம் இரண்டே வாரங்களில் படத்தை தூக்கி விட்டு வந்த நஷ்டத்தை சமாளிக்க பழைய எம்ஜிஆர் படத்தை போட்டு ஓட்டி இழந்த காசை மீண்டும் எடுப்பார்கள்.
அதனால்தான் அநேக சிவாஜி படங்கள் தமிழகத்தில் 30 பிரிண்ட்கள்தான் போடுவார்கள். நிறைய ஊர்களில் 2 வது வெளியீடாகத்தான் வரும்.

இது தெரிந்தும் சிவாஜி ரசிகர்கள் உதார் விடுவது நகைப்புக்கிடமாக உள்ளது. எம்ஜிஆர் படங்கள் குறைந்தது 40 பிரிண்ட் முதல்
60 பிரிண்ட் வரை
திரையிடுவார்கள். அந்தக் காலத்தில் வெளியான எம்ஜிஆரின் சாதாரண திரைப்படமான "ராஜாதேசிங்கு" கிட்டத்தட்ட 40 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியானது.

ஆனால் மிகவும் எதிர்பார்த்த 1960 தீபாவளிக்கு வந்த சிவாஜி நடித்த "பாவைவிளக்கு" சுமார் 30 திரையரங்குகளில் தான் வெளியானது. சிவாஜி நடித்த "இல்லறஜோதி" மொத்தம் 21 திரையரங்குகளில்தான் வெளியானது.மொத்தமே இவ்வளவு திரையரங்குகளில் வெளியானால் எப்படி வசூலில் சாதனை செய்ய முடியும்?. ஏனென்றால் மறுவெளியீடு சிவாஜி படத்துக்கு அதிகம் கிடையாது. அதனால் அதிக பிரிண்ட் சிவாஜி படத்துக்கு தேவைப்படாது. தேவையில்லாத சரக்கை யார் வாங்குவார்கள்.

அதனால்தான் எம்ஜிஆருக்கு இங்கு "வசூல் சக்கரவர்த்தி" என்றும் இலங்கையில் "நிர்த்திய சக்கரவர்த்தி" என்ற பெயரையும் விநியோகஸ்தர்கள் கொடுத்தார்கள். "ஒளிவிளக்கு" கிட்டத்தட்ட 60 க்கும் அதிகமான பிரிண்ட்கள் போடப்பட்டன. முதன்முதலாக 1957 லேயே சென்னையில் 5 திரையரங்கில் வெளியான படம் "மகாதேவி". அதன்பிறகு "தாயின் மடியில்" "ரகசிய போலீஸ் 115" "ஒளிவிளக்கு" "நீதிக்கு தலை வணங்கு" முதலான படங்கள் 5 திரையரங்குகளில் வெளியான படங்கள்.

எம்ஜிஆரின் அநேக படங்கள் 4 திரையரங்குகளில் வெளியாகின. ஆனால் சிவாஜிக்கு ஒரு சில படங்கள்தான் 4 திரையரங்குகளில் வெளியாகின. மற்ற படங்கள் எல்லாம் அநேகமாக சாந்தி கிரவுன் புவனேஸ்வரி இல்லை யென்றால் சித்ராவுடன் ஜோடி சேரும் தியேட்டர்களில்தான் வெளிவரும். சென்னையில் மூன்று தியேட்டர்களில்தான் வெளிவரும் ஒரு சில படங்களை தவிர. குறைவான தியேட்டர்களில் வெளியிட்டு ஒரு தியேட்டரிலாவது 100 நாட்கள் ஓட்டி விட வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பார்கள்.

"புதிய பறவை" "திருவிளையாடல்" "சரஸ்வதி சபதம்" "தங்கப் பதக்கம்" "வசந்த மாளிகை" போன்ற பிரமாண்ட படங்களை மூன்று தியேட்டருக்கு மேல் வெளியிட மாட்டார்கள். ஆனால் தலைவருக்கு "அடிமைப்பெண்" "மா.வேலன்" "உரிமைக்குரல்" "நம்நாடு"
போன்ற பிரமாண்ட படங்களை 4 திரையரங்கில் வெளியிட்டு குறைந்த காலத்தில் நிறைந்த வசூலை தயாரிப்பாளர்கள் பார்த்து விடுவார்கள்.

தலைவர் படங்களுக்கு வசூல் மட்டும் தான் குறிக்கோள். ஆனால் மாற்று நடிகரின் படங்கள் வசூல் அதிகமானால் அது தயாரிப்பாளருக்கு அல்லவா போகும். அதைப் பற்றியெல்லாம் அதிகம் கவலை கொள்ள மாட்டார்கள். 100 நாட்கள் சாதனை தனக்கல்லவா வரும் என்பதை நன்கறிவார்கள்.
சாந்தி தியேட்டரே தன் சாதனையை
காட்டுவதற்காக வாங்கப்பட்டதுதான்.

சாந்தி தியேட்டர்தான்
"சந்திரமுகி"யை 5 அல்லது. 6 பேர்களை கொண்டே
800 நாட்கள் ஓட்டிய அதிசய திரையரங்கம் அல்லவா?
இப்பவே அப்படியென்றால் அப்போது நினைத்து பாருங்கள்.
சிவாஜி படங்கள் எல்லாம் அப்படி ஓட்டியதுதான். சாதனை என்பது தானாக நிகழ வேண்டும். நாமாக நிகழ்த்தக் கூடாது. பாகவதரின் "ஹரிதாஸ்" வெற்றி உண்மையான வெற்றி. ஆனால் "சந்திரமுகி"யின் வெற்றி உருவாக்கப்பட்ட வெற்றி.

அதுபோல் சிவாஜியின் சாந்தி தியேட்டர் சாதனையை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். சாந்தியின் முதல் சிவாஜி படமான "பாவ மன்னிப்பு" ஓட்டுவதற்கு பாடல் பரிசு போட்டி என பலவிதமான ஆசை வார்த்தைகளை காட்டியும் ஓட்ட முடியவில்லை என்பதை உணர்ந்து
பலூனை பறக்க விட்டார்கள். தியேட்டர் சைக்கிள் ஸ்டாண்டு மற்றும் ஸ்டால் நடத்தும் அனைவரின் நஷ்டத்தையும் பொருட்படுத்தாமல் 175 நாட்கள் ஓட்டி. தங்களது முதல். இழுவை சாதனையை
அரங்கேற்றியதை
அனைவரும் அறிவார்கள்.

"பாவமன்னிப்பை" 175 நாட்கள் ஓட்டுவதற்காக சொந்த படமான "பாசமலரை" கூட சித்ராவில் ரிலீஸ் செய்து விட்டு "பாவமன்னிப்பை" வெள்ளி விழா ஓட்டி. விட்டு வெள்ளி விழா கணக்கில் சேர்த்துக் கொண்டார்கள். 1961 ம் ஆண்டு 2 படங்களையும் வெள்ளிவிழா ஓட்டி இழுவையில் ஒரு புதிய சாதனையை தொடங்கி வைத்தார்கள். ஆனால் அந்த ஆண்டின் ப்ளாக்பஸ்டர் வெற்றி அந்த 2 படமும் கிடையாது. வெள்ளிவிழா ஓடாத "திருடாதே" மற்றும் "தாய் சொல்லை தட்டாதே" படங்கள்தான்.

இதுபோல ஒவ்வொரு படத்தையும் அவர்கள் இஷ்டத்திற்கு 100 நாட்கள் ஓட்டுவதும் வெள்ளிவிழா ஓட்டுவதும் அவர்கள் கையில்தான். வசூல் தேவையான அளவுக்கு கூட்டி காண்பிக்கவும் அவர்களால் முடியும்.
அதனால் சாந்தி தியேட்டர் சாதனையை பொதுவாக யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.. அது இயல்பான சாதனை கிடையாது. அவர்களது சொந்த இழுவை சாதனையாக வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளலாம்..........ks.........

orodizli
26th September 2020, 02:54 PM
ம*றைந்த* மாபெரும் இசைக்க*லைஞ*ர் எஸ்.பி.பால*சுப்பிர*ம*ணிய*ம் அவ*ர்க*ள் ந*ம் புர*ட்சித்த*லைவ*ருக்காக பாடிய* பாட*ல்க*ளின் அணிவ*குப்பு ..

1. ஆயிர*ம் நில*வே வா..அடிமைப்பெண்

2. நீராழி ம*ண்ட*ப*த்தில்..த*லைவ*ன்

3. வெற்றி மீது வெற்றி வ*ந்து...தேடிவ*ந்த* மாப்பிள்ளை

4. பாடும்போது நான் தென்ற*ல்காற்று..நேற்று இன்று நாளை

5. அங்கே வ*ருவ*து யாரோ..நேற்று இன்று நாளை

6. அவ*ள் ஒரு ந*வ*ர*ச* நாட*க*ம்..
உல*க*ம் சுற்றும் வாலிப*ன்

7. நாட் சோ ஈஸி டு ப்ரூவ்..
ஊருக்கு உழைப்ப*வ*ன்

8. இத*ழே இத*ழே தேன் வேண்டும்..இத*ய*க்க*னி

9. அன்பு ம*ல*ர்க*ளே ந*ம்பியிருங்க*ளே..நாளை ந*ம*தே

10. நான் ஒரு மேடைப்பாட*க*ன்..நாளை ந*ம*தே

11. லவ்விங் ஈஸ் ய கேம்..நாளை ந*ம*தே

12. இர*வுக*ளே பார்த்த*தில்லை..ப*ட்டிக்காட்டு பொன்னையா

13. நேர*ம் ப*வுர்ண*மி நேர*ம்..
மீன*வ* ந*ண்ப*ன்..

14. உங்க*ளில் ந*ம் அண்ணாவை பார்க்கிறேன்..ந*வ*ர*த்தின*ம்

15. மாலை நேர* தென்ற*ல் வ*ந்து பாடுதோ..நீரும் நெருப்பும்

16. உன் யோக*ஜாத*க*ம் நீ என்னை சேர்ந்த*து..இன்றுபோல் என்றும் வாழ்க*.

17. இர*ண்டு க*ண்க*ள் பேசும் மொழியில்..ச*ங்கே முழ*ங்கு

#வெளிவ*ராத* ப*ட*ங்க*ளின் பாட*ல்க*ள்..

1. என்னை தேடிவ*ந்தாள் த*மிழ் ம*க*ராணி..அண்ணா நீ என் தெய்வ*ம்

2. அன்ப*ர்க*ளே என் அருமை ந*ண்ப*ர்க*ளே..இதோ என் ப*தில்

3. வ*ண்ண*ப்பூஞ்சோலை..
இதோ என் ப*தில்

4. வீர*த்திலேக*வியெழுதி...
.........அடிமைப்பண் (ப*ட*த்தின் நீள*ம் க*ருதி ப*ட*மாக்க*வில்லை)

5. தாயில்லாம*ல் நான் இல்லை..அடிமைப்பெண் (ப*ட*த்தில் டி.எம்.எஸ். பாடிய*து ம*ட்டுமே இட*ம்பெறும்).........Rj, Ero

orodizli
26th September 2020, 07:39 PM
கிளம்பு!! ஆபத்து??
--------------------------
எம்.ஜி.ஆர் கண்ணில் பூ விழுந்தாலும் புழுவாகத் துடிப்பார்கள் மதுரை ரசிகர்கள் என்பார் நம் முக நூல் ஹயாத்!!
அப்படி ஒரு சம்பவத்தை இன்று காணலாம்!
நெல்லை கண்ணன்!
ஒட்டு மொத்தமாக அத்தனை பேரும் இவரைக் கட்சிக் கண்ணோட்டத்தில் தூற்றினாலும்--
எனக்கு மிகவும் பிடித்த மனிதர்! அதாவது இவரது மேடைப் பேச்சு,,கேட்பவரைக் கட்டிப் போடும்!
எம்.ஜி.ஆரைப் பற்றி இவர் பேசி நாம் கேட்க வேண்டும்! நகைச்சுவையும் நடிப்பும் கலந்து இவர் பேசும் பாணியில் எம்.ஜி.ஆரைப் பற்றி இவர் பேசுவது வெகு நிச்சயம் நம்மையே மறக்கச் செய்யும்!
தூத்துக்குடி துறைமுகம்!!
வரலாற்றில் ஒரு மைல் கல்லான இந்தத் துறைமுகம் எம்.ஜி.ஆர் ஆட்சியில் நடை பெறுகிறது!!
கேபினட் அமைச்சர் ஆர் வெங்கடராமன் அவர்கள் தூத்துக்குடி துறைமுகத்தைத் திறந்து வைக்கிறார்!
முதல்வர் எம்.ஜி.ஆர் முன்னிலை!
எம்.ஜி.ஆர் பேசும்போது குறிப்பிடுகிறார்--
ஒரு முதல்வர் என்ற முறையில் உரிய முறையில் எனக்கு அழைப்பு விடுத்திருக்க வேண்டும்! என்ன காரணத்தாலோ,,எவருடைய நிர்ப்பந்த்தினாலோ அதைச் செய்யாமல் விட்டு விட்டாரகள்.
என் தமிழ் நாட்டுக்கு இப்படியொரு துறைமுகம் அமைகிறதே என்ற மகிழ்ச்சியினாலேயே இந்த விழாவுக்கு நான் வந்திருக்கிறேன்??
எம்.ஜி.ஆர்,,இப்படிப் பேசியது தான் தாமதம்--
நெல்லைக் கண்ணன்,,அருகில் அமர்ந்திருந்த காங்கிரஸ் எம்.பி.கோசல்ராம் காதில் கிசுகிசுக்கிறார்--
நாமக் கிளம்பிடுவோம்? இனி ஒருக் கணம் இங்கிருந்தாலும் நமக்கு ஆபத்து?
குறிப்பாக மீனவக் குப்பத் தலைவர் பெர்னாண்டோவின் முகம் மாறுகிறதை கவனியுங்கள்!
கோசல்ராம் கேட்கிறார்--
அப்படி என்ன திடீர் ஆபத்து?
என்ன ஆபத்தா?? எம்.ஜி.ஆர் குறிப்பிட்டதைக் கவனீச்சீங்க இல்லே?
என் தலைவனை உரிய முறையில் கூப்பிடாமல் எங்கப் பகுதியில் நீங்க எப்படி விழா நடத்தலாம் என்று ஜனங்கப் பொங்க ஆரம்பிச்சுடுவாங்க!
அதிலும் இந்தக் குப்பத் தலைவர் பெர்னாண்டோ இருக்காரே--
கையை ஊனாமலேயேக் கர்ணம் அடிக்கறவர்??
கோசல்ராம் கவலையுடன் கேட்கிறார்--
அப்ப நம்ம மினிஸ்டர் ஆர்.வியோட கதி?
அவர் புத்திசாலித்தனமா எம்.ஜி.ஆர் கார்லேயே ஒட்டிக் கொண்டு போயிடுவார். நமக்குத் தான் ஒரு வண்டியும் கிடைக்காது??
இங்கே நிலவரம் இப்படியிருக்க--
மேடையில் பேசி முடித்த எம்.ஜி.ஆர்,,தன் கட்சியினரிடம் சொல்கிறார்--
ஆர்.வி.யை பத்திரமா காரில் அனுப்பிடுங்க. நான் இன்னிக்கு நைட் இங்கே தங்கிட்டு,,,காலையில் புறப்படுகிறேன்!!
அதாவது தாம் பேசும்போதே கூட்டத்தினரின் நாடித் துடிப்பை அளந்துவிட்ட முதல்வர்!!!
அன்று இரவு அங்கேத் தங்குகிறார் எம்.ஜி.ஆர்!
தூத்துக்குடி பிழைத்துக் கொள்கிறது!!!
கோட்டையில் ஒரு அரசாங்கம் நடத்திக் கொண்டே--மக்களின்--
இதயத்தில் ஒரு ஆட்சி செய்தவர் எம்.ஜி.ஆர் ஒருவர் தான் என்பதில் மறுப்பு உண்டா தோழமைகளே???.........

fidowag
26th September 2020, 10:37 PM
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில் சகாப்தம் நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*23/09/20 அன்று அளித்த தகவல்கள்*
-------------------------------------------------------------------------------------------------------------------------
புரட்சி தலைவர், பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். அவர்களின் ஆசி பெற்ற ரசிகர்கள் ,அவரது அன்புக்குரியவர்கள்*கூட்டம் நாளுக்கு நாள் பெருகி கொண்டே வருகிறது .குறிப்பாக சொல்ல போனால் திரு.லோகநாதன் ராமச்சந்திரன் என்பவர் (ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு,சென்னை ) எனக்கு ஒரு இ மெயில் அனுப்பி உள்ளார் .அந்த செய்தியில் கிட்டத்தட்ட* ஒரு நாளைக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இணையதளம் மூலமாக ,குறிப்பாக சென்னை பெருநகர முன்னாள் மேயர் திரு.சைதை துரைசாமி, பிரான்ஸ் எம்.ஜி.ஆர். பேரவை தலைவர் திரு.முருகு பத்மநாபன், பத்திரிகை ஆசிரியர் திரு.துரை கருணா உள்பட சுமார் 100 பேர்களுக்கு அனுப்புவதாக சொல்லியிருக்கிறார் .* கடந்த வாரம் மட்டும் அந்த இணைய தளத்தில் ஒரு லட்சம் பேர்கள் பார்த்திருக்கிறார்கள் .இது இந்த இணையதளத்தின் சாதனை என்று சொல்லி இருப்பதோடு, சில தவறுகளை சுட்டி காட்டியிருக்கிறார் .*நீங்கள் நேற்று இன்று நாளை படம் வெளியானது தேர்தலுக்கு முன்பாக என்று அறிவித்தீர்கள் .அது கட்சி தேர்தலுக்கு முன்பாக இல்லை என்று* பல்வேறு குற்றச்சாட்டுக்களை சொல்லி இருக்கிறார் .உண்மையிலேயே திரு.லோகநாதன் ராமச்சந்திரன் அவர்களுக்கு அந்த தவறுகளை சுட்டி காட்டியதற்கு வரவேற்று நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன் .சகாப்தம் நிகழ்ச்சி என்பது ஒரு வரலாற்று பதிவு அல்ல .இது வாழ்க்கைக்கு நம்பிக்கை ஊட்டுகின்ற ஒரு தொடர் .**


எம்.ஜி.ஆர். என்கிற சாதாரண ,சாமான்ய மனிதர் வடசென்னை வால்டாக்ஸ் சாலை அருகில் மாதம் ரூ.15/- வாடகைக்கு தன் தாய், அண்ணன் , அண்ணி ,ஆகியோருடன் குடியிருந்தவர் ,தமிழகத்தை சுமார் 11 ஆண்டுகாலம் ஆட்சி செய்தது எப்படி என்பதை 10வது வகுப்பு, 12 வது* வகுப்பு மாணவ சமுதாயம் தேர்வில் தோற்றதும் தற்கொலை செய்து கொள்ள முயல்கிறதே ,அந்த சமூகம் இந்த உண்மைகளை தெரிந்து கொள்ள வேண்டும் . அவர் படிப்படியாக தன்னை வறுமையில் இருந்தும் ,இல்லாமையில் இருந்தும் ,படிப்பறிவும் இல்லாமல் எப்படி தன்னை வளர்த்துக் கொண்டார் அந்த ஆளுமை நமக்கு சொல்லித் தருகின்ற* பாடங்கள் என்ன என்பதைத்தான் நாம் தொடர்ந்து பார்க்க உள்ளோம் .


ஆண்டிபட்டியில் இருந்து திருமதி வசந்தி என்கிற சகோதரி பேசுகிறார் .* அவர் சொன்ன விஷயம் என்னவென்றால், நாங்கள் இன்றைக்கு இந்த கொரோனா பயத்திற்கு ,அச்சமின்றி வாழ்ந்து கொண்டிருப்பதற்கு காரணம்* நீங்கள் தந்து கொண்டிருக்கிற சகாப்தம் தொடரில்அவர் குறித்து* அளிக்கிற தகவல்கள்தான் .நாங்கள் இரு சகோதரிகள் .எங்களுக்கு தாய், தந்தை இல்லை. ஆனாலும் கூட நாங்கள் எம்.ஜி.ஆர் அவர்களைத்தான் மூத்த சகோதரராக பாவித்து வாழ்ந்து வருகிறோம் .அவர் 1967 ஜனவரி 12ந்தேதி நடிகர் எம்.ஆர்.ராதாவால் துப்பாக்கியால் சுடப்பட்டார் . அன்றைக்கு நாங்கள் அழுத கண்ணீர் ஆறாக பெருகியது .அன்றைய தினம் முதல் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 12ந்தேதி நாங்கள் ஒரு சொட்டு தண்ணீர் கூட* நாள் முழுக்க**அருந்தாமல் உண்ணாவிரதத்தை கடைபிடித்து வருகிறோம் . அந்த மகானை போற்றி அவர் நினைவாகவே வாழ்ந்து வருகிறோம் இப்படிப்பட்ட ஒரு ஆன்மா, ஒரு படிப்பினை ,ஒரு பாடம் வேறு யாருக்காவது* இந்திய வரலாற்றில் இருந்திருக்குமா என்றால் சந்தேகமே .


திரு.கா .லியாகத் அலிகான் அவர்களின் பேட்டி*
--------------------------------------------------------------------------
அந்த காலத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் தனிப்பட்ட குணங்களா, அல்லது திரைப்பட வெற்றியின் குணங்களா ,எந்த குணங்களால் கல்லூரியில் இருந்து நீங்கள் எம்.ஜி.ஆர்.அவர்களால் ஈர்க்கப்பட்டீர்கள் .
கா.லியாகத் அலிகான் :* புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் எப்போதுமே ஆழ்மன ஆராய்ச்சி என்று ஒன்றை செய்வார் .ஒரு மனிதனை பார்த்த உடனேயே ,இவர் எதற்காக வந்திருக்கிறார் என்பதை அறிந்து கொள்வதில் வல்லவர் அவர் .வந்திருப்பவரின் குறையை,தேவைகளை கண்டுபிடித்து, அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக்கூடிய ஒரு மிக பெரிய எக்ஸ்ரே கருவிதான் அவர் .ஸ்கேனிங் மைண்டட் பர்சனாலிட்டிதான் எம்.ஜி.ஆர். அவர்கள் .எம்.ஜி.ஆரை பொறுத்தவரை அவரை சாதாரணமாக* யாரும் எளிதில் எடை போட முடியாது .அவர் பிறப்பிலேயே, தன வாழ்நாளில் மூன்று நாட்கள்* பட்டினி கிடந்து*உணவிற்காக திண்டாடிய நினைவுகளை**தான் முதல்வரான பின்பு*தைரியமாக நான் சிறு வயதில் பட்டினி கிடந்தது உணவிற்காக வருந்தியவன் ,இன்று நாட்டை ஆளக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது என்று கூறி சத்துணவு திட்டத்தை அமுலாக்கியவர் .இவற்றை சொல்வதற்கு கூச்சப்படுவதில்லை வெட்கப்படுவதில்லை .தன்னை நினைத்து பார்க்கக்கூடிய தனிப்பட்ட தகுதியுடையவர் .* இன்றைக்கு எப்படி பரதன் நாட்டை ஆளும் வாய்ப்பு வரும்போது ராமனின் பாதஅணிகளை,வைத்து** வணங்கி ஆட்சியை செய்தாரோ, அதுபோல அண்ணாவை மனதில் நிலைநிறுத்தி, எதற்கெடுத்தாலும் அண்ணா, அண்ணா என்று அண்ணாவின் உருவத்தை கொடியில் பதித்தார் .அண்ணா அளித்த ஸ்பேனர் என்ற கருவியை**வைத்து அண்ணா* தொழிற்சங்கம் உருவாக்கினார் .தி.மு.க. வில் இருந்து நீக்கியதும் அண்ணாவின் பெயரால் அண்ணா தி.மு.க. என்ற கட்சியை தொடங்கினார் .எதற்கும் அவர் பயப்படவில்லை காரணம் மக்கள், தொண்டர்கள் ,ரசிகர்களின் செல்வாக்கு .நீங்கள் சொன்னது போல காங்கிரஸ் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தபோது திரைப்படத்தில் தான் காளையை அடக்குவது போல நடித்து ,காங்கிரசின் சின்னமான காளையை நான் அடக்க கூடியவன் என்பதை மறைமுகமாக சுட்டி காட்டியதோடு அல்லாமல் ,காங்கிரஸ் கட்சியை, ஆட்சியை விமர்சித்து தி.மு.க.வின் சின்னம்*,உதயசூரியன் என்ற பெயரை பிரபலம் அடைய செய்தார் . 1962 தேர்தலுக்கு பின்னர் ஓரளவு காங்கிரஸ் விழித்து கொண்டபோது ,1966ல் வெளியான அன்பே வா படத்தில் உதயசூரியனின் பார்வையிலே உலகம் விழித்துக்கொண்ட வேளையிலே என்ற பாடல் வரிகளுக்கு நடித்தார் அப்போதைய தணிக்கைக்குழு அதை ஏற்காததால், பாடல் வரிகளில் மாற்றம் செய்து புதிய சூரியனின் பார்வையிலே என்று பாடலை வடிவமைத்தார் .இப்படி விடாமல் போராடி உதய சூரியன் சின்னத்தை பிரபல படுத்த திரைப்படங்களில் தனிப்பட்ட முயற்சி எடுத்து கொண்ட எம்.ஜி.ஆர்.அவர்களுக்கு இருந்ததை போல மனோதைரியம் வேறு எவருக்கும் இருந்ததில்லை என்று இருக்கும்போது அவர் மற்றவர்க்கு பயப்படுவார் ,பயந்து கொண்டு நடப்பார் என்று எப்படி இவர்களால் கருத்து சொல்ல முடிகிறது என்று தெரியவில்லை .*


ஆண்டிபட்டி சகோதரி வசந்தி அவர்களுக்கு வாழ்க்கையில் மிக பெரிய துயரம் .சமூகத்தில் இருந்து தள்ளி வைக்கப்பட்டார் .உறவினர்களால் புறக்கணிக்கப்பட்டார் .வருத்தம் ,சோகம், வாழ்க்கையில் தற்கொலை செய்துகொள்ளலாமா என்கிற நெருக்கடி .அந்த நேரத்தில் எம்.ஜி.ஆர்.அவர்களின் பாடல்கள்தான் மனதைரியம் கொடுத்தது ,என்னை காப்பாற்றியது என்று அவர் சொல்கிறார் .* வேட்டைக்காரன் படத்தில்வெள்ளிநிலா முற்றத்திலே**பாடலிலே அவர் பாடிய வரிகள் நான்கு பேர்கள் போற்றவும் , நாடு உன்னை வாழ்த்தவும் ,மானத்தோடு வாழ்வதுதான் சுயமரியாதை, நல்ல மனமுடையோர்* காண்பதுதான் தனிமரியாதை .அரச கட்டளை படத்தில் ,வேட்டையாடு ,விளையாடு *பாடலில் நேர்மை உள்ளத்திலே ,நீந்தும் எண்ணத்திலே, தீமை வந்ததில்லை தெரிந்தால் துன்பமில்லை .உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் சிரித்து வாழ வேண்டும் ,பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே, உழைத்து வாழ வேண்டும் ,பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே* என்று பல பாடல்கள் எனக்கு படிப்பினையாகவும், படங்களாகவும் இருந்தன . இந்த பாடல்களை யார் யார் எழுதினார்களோ,அவற்றை எனக்காகவே எழுதியது போல நான் நினைத்து என் மனதில் வைத்து நான் வாழ்ந்து காட்டினேன் என்று உறுதியாக ,அவரது பாடல் வரிகளுக்கு வரலாற்று சாட்சியாக ஆண்டிபட்டி சகோதரி வசந்தி இருந்து கொண்டிருக்கிறார் .


மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் ஒவ்வொரு பாடல் வரிகளிலும் ,காட்சிகள் அமைப்பிலும் ஏன் அவ்வளவு ஆழமாக ,ஒரு அர்ப்பணிப்போடு கவனம் செலுத்தியிருக்கிறார் என்பதற்கு காரணம் இது ஒன்றும் வெறும்* பொழுதுபோக்கு அல்ல .மற்றவர்களுக்கு வேண்டுமானால் இது பொழுதுபோக்கு சாதனமாக இருக்கலாம் .ஆனால் எனக்கு இது மக்களுக்கான ஒரு உறவுப்பாலம் .அதனால்தான் யார் எந்த படத்தில் நடித்தாலும் ,இது எம்.ஜி.ஆர். படம். எம்.ஜி.ஆர். பிக்ச்சர்ஸ் தயாரிப்பு .யார் தயாரித்தாலும் எம்.ஜி.ஆர். நடிக்கும்போது சில நிபந்தனைகள் போடுவார் .இந்த படத்தில் இடம் பெறும் பாடலோ, பேசுகின்ற வசனமோ ,சொல்லப்படுகின்ற கருத்துக்களோ,எல்லா விஷயங்களும் என்னுடைய அனுமதியின் பேரில்தான் இடம் பெறும்,என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் . உலக புகழ் நடிகர் மார்லன் பிராண்டோ கூட* இப்படி ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டதில்லை .இப்படி ஒப்பந்தம் செய்த முதல் நடிகர் உலகத்திலேயே எம்.ஜி.ஆர். ஒருவர்தான் .இதை அவரே பல பேட்டிகளில்* சொல்லி இருக்கிறார் . மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும் .

நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
--------------------------------------------------------------------------------
1.அன்பு மலர்களே, நம்பி இருங்களேன் - நாளை நமதே*

2.ஒரே முறைதான் உன்னோடு பேசி பார்த்தேன்* -தனிப்பிறவி*

3.ஒரு கொடியில் இரு மலர்கள் - காஞ்சி தலைவன்*

4.திரு.கா .லியாகத் அலிகான் அவர்களின் பேட்டி*

5.வெள்ளிநிலா முற்றத்திலே -வேட்டைக்காரன்*

6.நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன் - நான் ஆணையிட்டால்*

orodizli
27th September 2020, 01:06 PM
“ ‘அடிமைப்பெண்’ வெற்றியடைந்தது எப்படி?” - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-2

புதியவர்களும் இளைஞர்களும் `அது என்ன, எம்.ஜி.ஆரின் செல்வாக்கு இப்படிப் பெருகிக்கொண்டே போகிறதே!' என ஆச்சர்யப்பட்டு, அவர் படங்களை போனிலும் கம்ப்யூட்டரிலும் பார்க்கிறார்கள். ``பழைய படங்களை, என்னால் பத்து நிமிடம்கூடப் பார்க்க முடியாது'' என்று சொல்லும் எழுத்தாளர் ஜெயமோகன்கூட, ``எம்.ஜி.ஆர் படங்களை கடைசி வரை என்னால் பார்க்க முடிகிறது'' என்று ஆனந்த விகடனில் தெரிவித்திருந்தார். அதுதான் எம்.ஜி.ஆரின் வெற்றி ஃபார்முலா. பிடிக்காதவரையும் தம் படத்தைப் பார்க்கவைத்துவிடுவார்.
திரைப்படங்களில் வன்முறை அதிகரிப்பதுகுறித்து தனது கவலையைத் தெரிவித்த உளவியல் நிபுணர் ருத்ரைய்யாவும் “அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர் பத்து பேரை எதிர்த்து சண்டைபோடும்போது கஷ்டமாக இருக்காது; அருவருப்பாக இருக்காது; UNEASY-ஆக இருக்காது’’ என்று குறிப்பிட்டிருந்தார். ஏனென்றால், எம்.ஜி.ஆர் எப்படியும் ஜெயித்துவிடுவார் என்பதால், ரசிகர்கள் பயப்படாமல் படம் பார்க்கலாம். நல்லவன் வாழ்வான் என்பதில், எம்.ஜி.ஆர் படங்களில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை.
எம்.ஜி.ஆர் திரைப்படங்கள் மீது கடுமையாக விமர்சனம் வைக்கும் பலரும், அவரை ஏதேனும் ஒரு வகையில் ரசித்தனர். சிலர் அவர் திரையில் நடித்த காலத்தில் விமர்சித்துவிட்டு, பிற்காலத்தில் அவரைப் பாராட்டியதும் உண்டு. தூரத்தில் இருந்து அவரைப் பார்த்தும் கேள்விப்பட்டும் விமர்சித்தவர்கள் அவரை அருகில் நெருங்கிப் பார்த்துப் பழகியபோது, அவரது நற்குணங்களைக் கண்டு தம் தவறை உணர்ந்திருக்கின்றனர்.

ஒருமுறை சினிமாவில் எதிர் அணியைச் சேர்ந்த ஒருவர், தன் மகள் திருமணத்துக்கு பணம் இல்லாமல் அலைந்தபோது சிலர் அவரை “எம்.ஜி.ஆரிடம் போய்க் கேளுங்கள்'' என்றனர். அவரும் வேறு வழியின்றி போய்க் கேட்டார். எம்.ஜி.ஆர் ``உங்கள் முகவரியைக் கொடுத்துவிட்டு போங்கள்'' என்றார். இரவு ஆகிவிட்டது. பணம் கிடைக்கவில்லை. `இனி மானம் போய்விடும்' என்று நினைத்த அவர்கள், தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தனர். ஷூட்டிங் முடிந்து வீட்டுக்கு வந்த எம்.ஜி.ஆர்., சட்டைப் பையில் இருந்த முகவரிச் சீட்டைப் பார்த்தார். திடீரென ஞாபகம் வந்தவராக தன் உதவியாளரை அழைத்து உடனே பணம் கொடுத்து அனுப்பினார். நல்ல வேளை அவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்குள் எம்.ஜி.ஆரின் உதவியாளர் போய்விட்டார். எதிர் அணியைச் சேர்ந்தவர் என்பதால், அவர் உதவவில்லை என நினைத்திருந்த அந்தக் குடும்பத்தினர், தம் நன்றியைச் சொல்ல இயலாமல் திண்டாடினர். தங்கள் குடும்ப மானமும் தங்கள் மகளின் வாழ்க்கையும் காப்பாற்றப்பட்டுவிட்டதால், அவர்கள் எம்.ஜி.ஆரை தெய்வமாகக் கருதினர். இவ்வாறு நண்பர்-பகைவர் எனப் பாரபட்சம் பார்க்காமல், எம்.ஜி.ஆர் பலருக்கும் உதவியுள்ளார். அதனால்தான் இன்னும் அவரைப் பற்றி மக்கள் பேசிக்கொண்டே இருக்கின்றனர்.
எம்.ஜி.ஆர்., சினிமாவைவிட்டு விலகி நாற்பது ஆண்டுகளாகிவிட்டன; இந்தப் பூவுலகைவிட்டு மறைந்து முப்பது வருடங்களாகிவிட்டன. இன்னும் அவர் இருப்பது போன்ற ஓர் எண்ணமும் பேச்சும் நிலவிக்கொண்டிருப்பதை யாரும் மறுக்க இயலாது. காலத்தால் அழியாத காவிய நாயகனாக இன்றும் மக்கள் மனங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். இதற்கான காரணங்களை இப்போது வெளிவந்திருக்கும் `அடிமைப்பெண்' படத்தை மட்டும் வைத்து ஆராய்வோம்.
எம்.ஜி.ஆரிடம் “உங்களை எவ்வளவு நாள் மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள்?” என்று கேட்டபோது “என் படங்களின் நெகட்டிவ் இருக்கும் வரை'' என்றார். ஆம், அது சத்தியவாக்கு. அவர் படங்களின் நெகட்டிவ் இப்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் திரை அரங்குகளில் வெற்றி நடைபோடுவதைக் காண்கிறோம். இனி இந்தப் படங்களைப் பாதுகாப்பதும் எளிது. அவர் படங்களை திரை அரங்குக்குப் போய்தான் பார்க்க வேண்டும் என்றில்லை, நம்முடைய மொபைல்போனில்கூட நினைத்த நேரத்தில் நினைத்த காட்சிகளைப் பார்க்கலாம் என்ற நிலை தோன்றிவிட்டது. `பாகுபலி'யின் இமாலய வெற்றியும் கதைப் பொருத்தமும் இப்போது சேர்ந்துகொண்டு `அடிமைப்பெண்'ணுக்கு வெண் சாமரம் வீசுகின்றன.

அன்று அடிமைப்பெண்
`அடிமைப்பெண்' படம், 1969-ம் ஆண்டு மே தினத்தன்று வெளிவந்தது. அது ஒரு சாதனைப் படம். எம்.ஜி.ஆரின் முந்தைய சாதனைகளை அவரது படங்களே முறியடிப்பது வழக்கம். `எங்க வீட்டுப் பிள்ளை' படத்தின் சாதனையை முறியடித்து, புதிய சாதனை படைத்தது `அடிமைப்பெண்'. எம்.ஜி.ஆர் தமிழ் திரையுலகின் உச்சத்தை எட்டியபோது இந்தப் படம் வெளிவந்தது. `அடிமைப்பெண்' படம் எடுத்தபோது ஜெயலலிதாவும் அதிக செல்வாக்குடன் இருந்தார். இவரது ஆளுமையையும் செல்வாக்கையும் படம் முழுக்கக் காணலாம். இந்தப் படத்தை எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் தயாரித்தது, கே.வி.மகாதேவன் இசை அமைத்தார். எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் சம்பந்தி கே.சங்கர் இயக்கினார். கலைஞரின் மைத்துனர் சொர்ணம் வசனம் எழுதினார். ஜெயலலிதா கதாநாயகி மற்றும் வில்லி என இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இப்போது விளம்பரங்களில் அவரது வில்லி தோற்றத்தை அதிகமாக வெளியிடுகின்றனர். எம்.ஜி.ஆர்., அப்பா-மகன் என இரு வேடங்களில் நடித்திருந்தாலும், அப்பா வேடம் மிகவும் சிறியது. ஒரு சண்டைக் காட்சியும் சில வசனங்களும் மட்டுமே அவருக்கு உண்டு. ஜெயலலிதாவுக்கு இரண்டும் பெரிய கதாபாத்திரங்கள். அத்துடன் ஒரு பாடலும். இதற்கு திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன், எம்.ஜி.ஆரிடம் 90 மெட்டுக்கள் போட்டுக்காட்டினார். `அம்மா என்றால் அன்பு...' என்ற அந்தப் பாடல், எம்.ஜி.ஆர் பாடுவதற்காக டி. எம்.எஸ்-ஸைக் கொண்டு மீண்டும் குழுப்பாடலாகப் பதிவுசெய்யப்பட்டது. ஆனால், படத்தில் இடம்பெறவில்லை.

`அடிமைப்பெண்'ணின் சாதனை
தமிழில் 1969-ல் வெளிவந்த படங்களில் `அடிமைப்பெண்' மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த ஆண்டின் ஒரே வெள்ளிவிழா படம். சென்னை நகரில் முதன்முதலாக நான்கு திரை அரங்குகளில் திரையிடப்பட்டு, நூறு நாள்கள் ஓடிய வெற்றிப்படம். திருவண்ணாமலை, சேலம், கடலூர் ஆகிய ஊர்களில் மூன்று திரை அரங்குகள், கோவையில் இரண்டு திரையரங்குகள், பெங்களூரில் மூன்று திரை அரங்குகள், இலங்கையில் ஏழு திரையரங்குகளில் மட்டுமல்லாது, திரையிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றி வாகை சூடியது `அடிமைப்பெண்'. மதுரையில் சிந்தாமணி தியேட்டரில் வெளியிட்டு நூறாவது நாள் வெற்றி விழாவின்போது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, பண்டரிபாய், அசோகன் போன்றோர் ரசிகர்களுக்கு நேரடியாகக் காட்சியளித்தனர்.
இன்றைக்கு `அடிமைப்பெண்' (2017) வெளியாவதற்கு டிஜிட்டல் மாற்றம் காரணமாக பெரியளவில் விளம்பரம் செய்யப்படுகிறது. ஆனால், பத்து வருடங்களுக்கு முன்னால் சென்னையில் உள்ள மெலடி, அபிராமி, பிருந்தா போன்ற ஏசி திரையரங்குகளில் வெளியாகி, தன் வெற்றியை மீண்டும் பறைசாற்றியது `அடிமைப்பெண்'. இதேபோன்று மற்ற ஊர்களிலும் நல்ல லாபத்தைப் பெற்றுத்தந்தது. எம்.ஜி.ஆர் படங்களுக்குக் கிடைக்கும் வசூல் காரணமாக, அரசுக்கு நல்ல வரித்தொகையும் கிடைத்தது. இன்றைக்கு படங்களுக்கு வரிவிலக்கு கேட்கின்றனரே தவிர, வரி செலுத்த யாரும் முன்வருவதில்லை. ஆனால், எம்.ஜி.ஆர் பட விளம்பரங்களில் அரசுக்குச் செலுத்திய வரித்தொகையைக் குறிப்பிட்டு ஒருவரும் விளம்பரம் செய்வது கிடையாது. அரசுக்கு வரி செலுத்துவதைத் தவிர்க்கவே திட்டமிடுகின்றனர்.

அரசியலுக்கு அழைத்த ‘அடிமைப்பெண்’
‘அடிமைப்பெண்'ணின் வெற்றி, எம்.ஜி.ஆருக்கு அரசியலில் நேரடியாக அடி எடுத்துவைக்கும் ஊக்கத்தைக் கொடுத்தது. அரசியலுக்கு வந்தால் தன்னை ஆதரிப்பார்களா என்பதை அறிய விரும்பிய எம்.ஜி.ஆர்., தயாரிப்பாளர் நாகிரெட்டியிடம் இதுகுறித்து பேசி, தன்னை வைத்து ஒரு படம் எடுக்கும்படி கூறினார். இந்தியில் வெளிவந்து வெற்றிநடை போட்டுக்கொண்டிருந்த `அப்னா தேஷ்' என்ற படத்தை `நம் நாடு' என்ற பெயரில் தமிழில் எடுத்தனர். அந்தப் படம் `அடிமைப்பெண்' ரிலீஸாகி ஆறு மாதங்கள் கழித்து வெளிவந்தது. அதுவரை அவர் தன் படம் எதையும் வெளியிடவில்லை. 1969-ம் ஆண்டு நவம்பர் மாதம் எம்.ஜி.ஆரின் அதிர்ஷ்ட எண்ணான 7- நாள் அன்று தமிழகம் எங்கும் வெளியாயிற்று. சென்னையில் முதல் நாள் திரையரங்குக்கு வந்து நாகி ரெட்டியுடன் `நம் நாடு' படத்தைப் பார்த்த எம்.ஜி.ஆர்., ரசிகர்களின் வரவேற்பைப் பார்த்து அவரைக் கட்டிப்பிடித்து தன் மகிழ்ச்சியைக் வெளிப்படுத்தினார். ``மக்கள் என்னை ஏற்றுக்கொண்டுவிட்டனர். வெற்றி... வெற்றி!'' என்று கூறி மகிழ்ந்தார்.
பத்திரிகைகளில் `அடிமைப்பெண்'
`அடிமைப்பெண்' பற்றி பத்திரிகைகள் பல ஆண்டுக்கு முன்பிருந்தே செய்திகளை

வெளியிட்டுவந்தது. முதலில் பானுமதி, அஞ்சலிதேவி நடித்து வெளிவருவதாக இருந்தது. பிறகு, சரோஜாதேவி கே.ஆர்.விஜயா மற்றும் ஜெயலலிதா நடித்து படப்பிடிப்பும் நடந்தது. அப்போது ஏற்பட்ட தீவிபத்தினால் படம் நின்றுபோயிற்று. இந்தப் படத்தில் இளவரசியான ஜெயலலிதா அடிமைப்பெண்ணாக இருப்பதாகவும், அவரை எம்.ஜி.ஆர் காப்பற்றிக் கொண்டுவந்து அரசியாக்குவதாகவும் கதை அமைந்திருந்தது. இந்தக் கதை கிட்டத்தட்ட `நாடோடி மன்னன்' கதைபோல் இருப்பதால், புதிய கதை உருவாக்கப்பட்டு ஜெயலலிதாவுக்கு அதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
ஜெயலலிதா நடிப்பது முடிவானதும், தமிழின் முன்னணிப் பத்திரிகைகளில் `அடிமைப்பெண்'ணின் படப்பிடிப்பு குறித்து பல செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. பாலைவனத்தில் ஜெயலலிதா ஆடும் நடனத்துக்கு தைக்கப்பட்ட உடைக்கு பல மீட்டர் நீளமான துணி எடுக்கப்பட்டதாக ஒரு செய்தி வெளிவந்தது. அத்துடன் அவர் ஆடும் மற்றொரு நடனத்தில் அவர் சிறிய முரசுகளைக் கட்டிக்கொண்டு ஆடுகிறார். இதில் அவர் நடனங்கள் வெளிநாட்டுப் பாணியில் அமைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன. அவரது நடனப் பசிக்கு இந்தப் படம் நல்ல தீனியாக அமைந்ததை மறுக்க இயலாது. எகிப்தில் ஆடும் `பெல்லி டான்ஸில்’ உள்ள நடன அசைவுகளை `ஏமாற்றாதே ஏமாறாதே...' பாடலில் தமிழ்ப் படத்துக்கு ஏற்ற வகையில் நடன அசைவுகளை அளவாக வெளிப்படுத்தியிருப்பார் ஜெயலலிதா. `காவல்காரன்' படத்தில் `நினைத்தேன் வந்தாய் நூறு வயது...' பாடல் காட்சியிலும் இதே பெல்லி டான்ஸ் மூவ்மென்ட்ஸைப் பார்க்கலாம்.
புஷ் குல்லா
`அடிமைப்பெண்' படத்துக்காக படப்பிடிப்புக்குப் போயிருந்த வேளையில்தான் எம்.ஜி.ஆருக்கு புஷ் குல்லா பரிசாகக் கிடைத்தது. அது அவருக்கு அழகாக இருப்பதாக அவர் மனைவி ஜானகி சொன்னதால், அன்று முதல் அவர் அந்த புஷ் குல்லாவைத் தொடர்ந்து அணிந்துவந்தார். அப்போது ஒரு நிருபர், ``நீங்கள் வழுக்கையை மறைக்கத்தான் புஷ் குல்லா அணிகிறீர்களா?'' என்று கேட்டபோது, ``எனக்கு வழுக்கை இருந்தால், மக்கள் என்னை எம்.ஜி.ஆர் என்று ஏற்றுக்கொள்ள மாட்டார்களா?'' என்று பதில் கேள்வி கேட்டார். இந்தக் கேள்விக்கான பதிலை, அந்த நிருபர் எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் 1985-ம் ஆண்டில் சிகிச்சை பெற்றுவந்தபோது வெளியான புகைப்படங்களைப் பார்த்து மக்கள் அவருக்கு அமோகமாக ஓட்டளித்து வெற்றி பெறச்செய்தபோது புரிந்துகொண்டார். அவரது கதை கதாபத்திரம் மற்றும் கொடை உள்ளம் இவையே மக்களை மிகவும் கவர்ந்தன.

1936-ம் ஆண்டில் எம்.ஜி.ஆர் `சதிலீலாவதி' என்ற படத்தில் நடித்தது முதல் 1969-ம் ஆண்டில் `அடிமைப்பெண்' வெளிவரும் வரை அவரைப் பார்த்துக்கொண்டிருந்த மக்களுக்கு, அவர் வயது என்ன என்பதைக் கணக்கிடத் தெரியாதா? அவருக்கும் அந்தந்த வயதுக்குரிய உடலியல் மாற்றங்கள் வரும் என்பது புரியாதா? இருந்தாலும் அவரை மக்கள் ரசித்து மகிழ்ந்ததற்குக் காரணம், அவரது கதையமைப்பும் அதற்கேற்ற கதாபாத்திரப் பொருத்தமும் இளமைத் தோற்றமும் அவரது சுறுசுறுப்பும்தான்.
பாடல் காட்சிகளில் அவர் சும்மா நின்றுகொண்டு பாட மாட்டார். அவரிடம் ஒரு துள்ளலும் உற்சாகமும் ததும்பிக்கொண்டேயிருப்பதைப் பார்க்கலாம். அதனால்தான் `வேட்டைக்காரன்' பட விமர்சனத்தில் `கால்களில் சக்கரம் கட்டியிருக்கிறாரோ!' எனக் கேட்டிருந்தது. ஆக, `அடிமைப்பெண்' படப்பிடிப்புக்குப் பிறகு எம்.ஜி.ஆரின் உடல் மெரினாவுக்குக் கொண்டு சென்று அடக்கம் செய்யப்படும் வரை அவர் புஷ் குல்லா அணிந்திருந்தார்.
எம்.ஜி.ஆரின் கையில் ஒரு வாட்ச்
``நூறு முறையாவது `அடிமைப்பெண்' படத்தைப் பார்த்திருப்பேன்'' என்று கூறும் ஒரு ரசிகர், ஒருநாள் எம்.ஜி.ஆர் கையைப் பிடித்து முத்தம் கொடுத்து அவருடன் கைகுலுக்கி இருக்கிறார். அவர் எம்.ஜி.ஆர் ப்ரியர் அல்லர் வெறியர். எம்.ஜி.ஆர் கார் அங்கு இருந்து நகர்ந்த பிறகும் எம்.ஜி.ஆரைத் தொட்ட இன்பத்திலேயே திளைத்திருந்தார். அப்போது அந்தப் பகுதியில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது. எம்.ஜி.ஆரின் கார் சற்று தொலைவில் நின்றுவிட்டது. மீண்டும் எல்லோரும் கார் அருகில் ஓடினர். அவர் ஒரு வாட்சை நீட்டியபடி வெளியே எட்டிப்பார்த்தார். பிறகுதான் தெரிந்தது, இந்த ரசிகர் எம்.ஜி.ஆர் கையைப் பிடித்தபடி காருடன் சிறிது தூரம் ஓடியபோது, அவரது வாட்ச் கழன்று எம்.ஜி.ஆர் மடியில் விழுந்திருப்பது. ரசிகருக்கு இரட்டிப்பு சந்தோஷம். எம்.ஜி.ஆர் தொட்டுத் தந்த வாட்ச், இன்றும் அவருக்குப் பொக்கிஷமாகத் தெரிகிறது. அந்தப் பகுதியில் இரண்டு நாள்களுக்கு அதுதான் பேச்சு.
கொடுக்கக் கொடுக்க இன்பம் பிறக்குமே!
எம்.ஜி.ஆரின் கொடை உள்ளம் எல்லோருக்கும் தெரிந்ததுதான் என்றாலும், பாலைவனத்து ஒட்டகவாலாக்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஏராளமான ஒட்டகங்கள் இடம்பெறும் காட்சி ஒன்றில் நடிக்க பாலைவனத்துக்கு வந்த அவர்களுக்கு, தாகம் தீர்க்க எம்.ஜி.ஆர் கிரேடு கிரேடாக கோகோகோலா வரவழைத்துக் கொடுத்தார். அவர்கள் மனமுவந்து `பெரியமனுஷன்யா அவரு' என்ற அர்த்தத்தில் `படா ஆத்மி’ எனப் புகழ்ந்தனர். படப்பிடிப்புக்காக ராஜஸ்தான் வந்த எம்.ஜி.ஆர்., அங்கு நடந்த விபத்துக்கான நிவாரண உதவியாக பெருந்தொகை ஒன்றை முதலமைச்சரிடம் கொடுத்து உதவியிருக்கிறார். மறுநாள் பத்திரிகைகளில் எம்.ஜி.ஆரின் புகழ் கொடிகட்டிப் பறந்தது. எங்கு இருந்தாலும் மலர் மணக்கும் என்பதில் ஆச்சர்யமில்லையே! இந்தப் பாலைவனப் படப்பிடிப்பின்போது ஜெயலலிதாவால் மண்ணில் கால் புதைந்து நடக்க இயலவில்லை என்பதால், எம்.ஜி.ஆர் அவரை குழந்தைபோல தூக்கிக்கொண்டு சென்றாராம். உதவி என்பது, பணத்தால் மட்டுமல்ல... நல்ல மனத்தாலும் நடக்கும்.
நிலைத்து நிற்கும் பாத்திரப் படைப்பு
சமீபத்தில் வட மாநிலத்தில் ஒரு விவசாயி, தன்னிடம் உழவு மாடு இல்லாத காரணத்தால் தன் மகள்களை ஏரில் பூட்டி, தன் நிலத்தை உழும் செய்தியைப் படித்தோம். பலர் வருத்தப்பட்டனர். இதே நிலைதான் `அடிமைப்பெண்' படத்தில் வரும் பெண்களுக்கும். அவர்கள் வண்டி இழுக்க வேண்டும், ஏர் உழ வேண்டும், செக்கு இழுக்க வேண்டும். இவர்களை சூரக்காட்டு மன்னனிடமிருந்து வேங்கையன் (எம்.ஜி.ஆர்) காப்பாற்ற வேண்டும். `இது ஏதோ ராஜா காலத்துக் கதை. இதெல்லாம் இன்றைக்கு சரிவராது' என நினைத்து ஒதுக்க முடியாது. எம்.ஜி.ஆரின் படங்கள் எல்லா காலங்களுக்கும் பொருந்தும் கதையையும் கதாபாத்திரங்களையும் கொண்டிருப்பதால்தான், அவை இன்றும் இளைய சமுதாயத்தினராலும் விரும்பிப் பார்க்கப்படுகின்றன; வரவேற்பு பெறுகின்றன.
ஹீரோ-வை உருவாக்கும் ஜீவா
கிராமங்களில் கட்டுக்கடங்காத காளிபோல திரியும் ஒருவனைத் திருத்த வேண்டும் என்றால், `ஒரு கால்கட்டு போட்டுவிட்டால் சரியாகிவிடும்' என்பார்கள். அதாவது ஒரு பெண் அவன் வாழ்க்கையில் வந்து அவள் அவனைத் திருத்தி குடும்பப் பொறுப்புள்ளவனாக்கிவிடுவாள் என்பது நம்பிக்கை. இதுதான் ஜீவாவின் பாத்திரப்படைப்பு. மனித சஞ்சாரமற்ற தனிச்சிறையில் அடைந்து கிடந்த ஒருவனை, ஜீவாவின் கையில் ஒப்படைத்துவிட்டு அவளது தாத்தா இறந்துவிடுகிறார். அவள் அவனுக்கு நாகரிகம், பண்பாடு, பாதுகாப்புக் கலைகள், தன் வரலாறு என அனைத்தும் சொல்லிக்கொடுத்து மாவீரனாக உருவாக்குகிறாள். அவனும் தன் கடமையைத் திறம்பட நிறைவேற்றுகிறான். இது அன்றைக்கும் இன்றைக்கும் பொருந்தக்கூடியதுதான் என்பதால், இந்தக் கதாபாத்திரத்தை பெண்களும் ஆண்களும் ஏற்றுக்கொள்கின்றனர். திரையரங்கில் படம் பார்த்துக்கொண்டிருந்தபோது எம்.ஜி.ஆர்., ஜீவாவிடம் முத்தம் கேட்கும் காட்சியில் வைத்தியர் (சந்திரபாபு) ஜீவாவிடம் `இவன், உன்னிடம் தவறாக நடந்துகொள்ளப்போகிறான்' என்று எச்சரிக்கிறார். அப்போது திடீரென எங்கள் பின் சீட்டில் இருந்த ஒருவர் ``அதெல்லாம் சிவாஜி படத்தில்தான் நடக்கும்'' என்றார். ஒரு விநாடி பயங்கர அமைதி. அவர் அதுவரை வசனங்களை எல்லாம் முன்கூட்டியே சொல்லிக்கொண்டு வந்தவர், இப்படி ஒரு கமென்ட் அடித்தார்.
தாயின் வைராக்கியம்
வயதான மரத்தை வைரம் பாய்ந்த மரம் என்பர். அதுபோல வயதானவர்களும் வைராக்கியம் படைத்தவர்களாக இருப்பது வழக்கம். `அடிமைப்பெண்' படத்தில் வரும் ராஜமாதா (பண்டரிபாய்) தன் குடிமக்களை அடிமைப் பிடியிலிருந்து காப்பதுதான் தன் முதல் கடமை என்று நம்பியதால், அவர் தன் மகன் விடுதலை அடையாத நிலையிலும் ஓர் உறுதிமொழி எடுத்திருக்கிறார். எனவே, தன்னைக் காண வந்த மகனிடம் `என் முகத்தில் விழிக்காதே! நம் குலப்பெண்கள் அனைவரது காலிலும் உள்ள விலங்குகளை அகற்றிவிட்டு, பிறகு என்னிடம் வா'' என்று இரக்கமே இல்லாமல் அனுப்பிவிடுகிறார். இந்த வைராக்கியம் வேங்கையனுக்கு பெரும் ஊக்கமாக அமைகிறது. அப்போது அவர் பாடும் பாடல் மனிதத் தாயைப் பாடுவதாக இல்லாமல் அன்னை பராசக்தியையே எண்ணிப் பாடுவதுபோல அமைந்திருக்கும். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அ.தி.மு.க-காரர்கள் பலரது போனிலும் இந்தப் பாடலே (தாயில்லாமல் நானில்லை) காலர் ட்யூனாக இருந்ததை நாடறியும்.
சூரக்காடு ஏன்?
எம்.ஜி.ஆரின் சினிமா ரசிகர்கள் தம் எதிரியாகக் கருதிய சிவாஜி, சூரக்கோட்டையின் சொந்தக்காரர். ஆக, சூரக்கோட்டை இந்தப் படத்தில் `சூரக்காடு' என்றாயிற்று. கோட்டை என்றால், அவனை மன்னனாகக் காட்ட வேண்டும். இவன் மன்னன் அல்ல, மனிதப்பண்பு சிறிதும் இல்லாத காட்டான். அதனால்தான் அந்த நாட்டுக்கு பெயர் `சூரக்காடு'. இப்போது ரசிகர்களும் திருப்தி அடைவார்கள். படங்களுக்கும் கதாபாத்திரங்களுக்கும் பெயர் சூட்டுவதில் எம்.ஜி.ஆர் காட்டும் அளவுக்கு வேறு யாராவது அக்கறையும் கவனமும் காட்டியிருப்பார்களா என்றால் சந்தேகம்தான்.
ஜீவா – காதலின் கௌரவம்
எம்.ஜி.ஆர்., படங்களில் நடித்து கொஞ்சம் பிரபலமாகி வந்த நேரம் அவருடன் சில படங்களில் நடித்து வந்த (கதாநாயகியாக அல்ல) ஒரு நடிகைக்கு, இவர் மீது ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது. ஆனால் எம்.ஜி.ஆர்., காதலில் ஈடுபட்டு திரை வாய்ப்புகளைக் கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை. அவர் தொழிலில் கவனம் செலுத்தத் தொடங்கினார். அந்த நடிகை, எம்.ஜி.ஆருக்கு வெண்மை நிறம் பிடிக்கும் என்பதால் இரவில் வெள்ளை உடையில் இவர் இருந்த அறையின் கதவை வந்து தட்டினார். நல்ல பாடகியான அவர், நடத்தும் கச்சேரிகளுக்கு எல்லாம் எம்.ஜி.ஆர் முதல் வரிசையில் போய் அமர்ந்து ரசிப்பாராம். ஆனால், காதல் என்றவுடன் காத தூரம் ஓட ஆரம்பித்தார். பாவம் அவர் சூழ்நிலை அப்படி. அவர் அம்மாவிடம் காதல் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு போய் நிற்க இயலாது. அவரால் அந்தக் காதலை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால், அவர் வெற்று ஆசையை வளர்த்துக்கொள்ளவில்லை. பிறகு திரையுலகில் எம்.ஜி.ஆர் நல்ல நிலைக்கு வந்து சொந்தமாகப் படம் எடுத்தபோது, அந்தப் பாடகி நடிகையின் செல்லப்பெயர்களை, தான் திருமணம் செய்யும் கதாநாயகிகளுக்கு வைத்து அந்தக் காதலை கௌரவித்தார். `நாடோடி மன்னன்' படத்தில் சரோஜாதேவி, `அடிமைப்பெண்'ணில் ஜெயலலிதா, `உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில் சந்திரகலா ஆகியோருக்கு அந்தப் பெண்ணின் பெயர்தான் சூட்டப்பட்டது.
குழந்தைகள், ரசிகரான கதை
எம்.ஜி.ஆர் படங்களைப் பார்க்கும் சிறுவர்களுக்கு, அவை நல்ல போதனைகளாக இருந்தது மட்டுமல்லாமல், அவரைப் பின்தொடர வேண்டும் என்ற தீவிர எண்ணத்தையும் அந்தப் படங்கள் ஏற்படுத்தின. மற்ற தமிழ் திரைப்படங்களில்கூட சிறுவர்களைக் காட்டும்போது, அவர்கள் எம்.ஜி.ஆர் படப் பாடல்களைப் பாடுவது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பது இந்தக் கருத்தை உறுதிப்படுத்தும். இதுவும் ஒரு தொழில் உத்தி. அடுத்த தலைமுறையை தனக்கு ரசிகராகத் தயார்படுத்தும் சிறப்பான உத்தி. நடிகரும் பத்திரிகையாளருமான சோ, தன் துக்ளக் பத்திரிகையில் எம்.ஜி.ஆரின் தொடரும் செல்வாக்கு பற்றிக் கூறும்போது ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டிருப்பார். அவர் தான் வரும் வழியில் பிளாட்பாரத்தில் ஒட்டப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் படத்தை ஒரு சிறுவன் வணங்கிவிட்டு வந்ததைப் பார்த்திருக்கிறார். அவனை அழைத்து `என்ன செய்தாய்?' என்று கேட்டபோது, அவன் அவரிடம் `எம்.ஜி.ஆரை கும்பிட்டால் நல்லா படிப்பு வரும். அதனால கும்பிட்டுட்டுப் போறேன்' என்றானாம். இவன் வளர்ந்து பெரியவனாகும்போது, தன் பிள்ளைகளுக்கும் இதைத்தான் சொல்வான். அவர்களும் `என் அப்பா தீவிர எம்.ஜி.ஆர் பக்தர்' என்று அவர்கள் பிள்ளைகளிடம் சொல்வார்கள். இப்படித்தான் எம்.ஜி.ஆர் மீதான அன்பு பக்தியாகப் பல இடங்களில் கனிந்துவிட்டது. எம்.ஜி.ஆர் என்ற மனிதர் மாமனிதராகி இப்போது தெய்வமாகிவிட்டார்.
`அடிமைப்பெண்' படத்தில் குழந்தைகள் முதலில் எம்.ஜி.ஆரோடு சேர்ந்து படிப்பார்கள். பிறகு `காலத்தை வென்றவன் நீ...' பாடலில் அவரிடம் கொஞ்சிக் குலவுவார்கள். அவரோடு பேபி ராணிவும் இன்னொரு சிறுவனும் இருக்கும் கட் அவுட்டில் இவர்களுக்கு பதில் அஜித்தின் பிள்ளைகளை இணைத்திருந்தார்கள். மினிப்பிரியா தியேட்டர் வாசலில் வைக்கப்பட்ட அந்தக் கட் அவுட்டைப் பார்த்து பலரும் அஜித் ரசிகர்களின் விவேகத்தைப் பாராட்டினர். `அடிமைப்பெண்' படத்தின் பிற்பகுதியில் பெரியவர்கள் எல்லோரும் தவறான கருத்துடன் எம்.ஜி.ஆரிடம் விரோதப் போக்கைக் காண்பிக்கும்போது, சிறுவர்கள் மட்டும் அவரிடம் ஓடிவந்து `மாமா... மாமா' என்று அழைத்து அன்பு மழை பொழிவார்கள். குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்பதை நிரூபிக்கும் காட்சி இது.
இந்தப் படத்தில் பேபி ராணி முக்கியமான ரகசியத்தைக் கண்டுபிடிக்கும் புத்திசாலிப் பிள்ளையாகக் காட்டப்பட்டிப்பார். ஜீவாவுக்குப் பதில் பவளவல்லி வந்திருப்பதை அவள் காலில் இருக்கும் ஆறாவது விரலை வைத்து இந்தப் பாப்பா கண்டுபிடித்துவிடும் . அதை வைத்தியரிடம் வந்து கேட்கும்போது, அவர் தூக்கக்கலக்கத்தில் பதில் சொல்லும்போது `பட் பட்' என்று அவர் கன்னத்தில் அடிக்கும். படம் பார்க்கும் பெண்களும் ஆண்களும் குழந்தைகளும் சிரித்து ரசித்துப் பார்க்கும் காட்சி இது. கடைசிப் பாடல் காட்சியில் பிள்ளைகளும் தங்களை அந்த விடுதலைப் போரில் இணைத்துக்கொள்வர். `உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது...' என்ற பாடல் காட்சியில் சிறுவர்களும் பங்கேற்றிருப்பது இந்த நாட்டின் நன்மையில் அவர்களுக்கும் நேரடி பங்கு இருப்பதை எம்.ஜி.ஆர் சுட்டிக்காட்டியிருப்பதாகவே தெரிகிறது.
எம்.ஜி.ஆர் ரசிகர்கள் யார்?
எம்.ஜி.ஆருக்கு வயதானவர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள், குழந்தைகள் என அனைவரும் ரசிகர்கள்தான். அவரது படம், இவர்கள் அனைவரையும் கவரக்கூடியதாக இருந்தது.

கட்சிக் கொள்கை
எம்.ஜி.ஆர்., பகுத்தறிவு பாசறையைச் சேர்ந்தவர். அவர் தன் படத்தில் தன் கட்சியின் சின்னம் மற்றும் கொள்கைகள் இடம்பெறுவதை கட்டாயம் ஆக்கியிருந்தார். அதனால்தான் முக்கியமான தத்துவப் பாடலை தனிப்பாடலை அவர் பாடும்போது தன் கறுப்புச் சட்டை கட்சியைச் சேர்ந்தவன் என்பதை நேரடியாக உணர்த்துவதற்காக அவர் கறுப்புச் சட்டை அணிந்து நடிப்பார். கலர் படமாக இருந்தாலும் அவர் கறுப்புச் சட்டை அணிந்திருப்பார். `எங்க வீட்டுப் பிள்ளை'யில் `நான் ஆணையிட்டால்...' பாடல், `சந்திரோதயம்' படத்தில் `புத்தன், இயேசு, காந்தி பிறந்தது...' போன்ற பாடல் காட்சிகளில் அவர் கறுப்புச் சட்டை போட்டிருப்பதைச் சான்றாகக் கூறலாம்.
`அடிமைப்பெண்' படத்தில். பேய், பிசாசு, மாந்திரீகம் என்பவையெல்லாம் வெறும் பொய் பித்தலாட்டம் எனக் காட்டும் காட்சிகள் இடம்பெற்றன. இந்த விஷயத்தை வேடிக்கையாக நகைச்சுவையாகக் காட்டியிருப்பார். அம்முக்குட்டி புஷ்பமாலா வைத்தியராக இருந்து இப்போது மந்திரவாதியாக மாறி வந்திருக்கும் சந்திரபாபுவை மிரட்டுவதற்காக மண்டையோட்டை பறக்கவிடுவார். பிறகு தானே எலும்புக்கூடு உடையைப் போத்திக்கொண்டு எலும்புக்கூடு நடந்து வருவதுபோல் காட்டி அவரை பயமுறுத்துவார். பிறகு ``இதெல்லாம் பொய். இங்கே பார் மண்டையோட்டுக்குள் புறாவை அழுத்தி வைத்திருக்கிறேன். அதனால் அது அசைகிறது’’ என்பார். படம் பார்க்கும் பிள்ளைகள் சிரித்து மகிழ்வார்கள். சிரிப்புடன் சிந்தனையையும் ஊட்டும் காட்சிகள் இவை.........MGR., Fans International Associations Groups.........

orodizli
27th September 2020, 01:10 PM
"நான் கடவுள் பக்தி உள்ளவன்" கோயிலில் விளக்கேற்றிய எம்.ஜி. ஆர். பேச்சு

"நான் மிகுந்த கடவுள் பக்தியுள்ளவன். கடவுளிடம் எனக்குப் பூரண நம்பிக்கை உண்டு. கடவுளை வணங்காதே கோயிலுக்குப் போகாதே என்று ஒருபோதும் நான் யாரிடமும் கூறியது கிடையாது" இவ்வாறு கோயம்புத்தூர் மருதமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் பொருத்தப்பட்ட மின்சார ஒளி விளக்குகளை ஏற்றி வைத்து புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். பேசினார்.

எம்.ஜி.ஆர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு படக் தயாரிப்பாளரான சாண்டோ சின்னப்பா தேவர் மருதமலை சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் மின்சார ஒளி விளக்குகளைப் ஏற்றிவைக்கும் விழாவுக்கு புரட்சி நடிகரையும் அழைத்திருந்தார். எம்.ஜி.ஆர். தொடர்ந்து பேசுகையில் கோவில்களுக் செல்லுபவர்களால் எல்லோரும் பக்திமான் ஆகிவிடப்போவதில்லல். கடவுள் இல்லை என்றோ கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவன் நான் என்றோ ஒருபோதும் சொல்வவில் கடவுள் மேல் பக்தி செலுத்துபவன் நான். ஆனால் கடவுள் பேரைச் சொல்லி ஏமாற்றி பிழைப்பவர்களையும், அதற்கேற்ப சட்டதிட்டங்கள் வகுத்து வைப்பவர்களையும் தான நான் எதிர்கிறேன் என்று கூறினார். ...sb...

orodizli
27th September 2020, 01:17 PM
தாயகம் திரும்பினார் தமிழக முதல்வர் புரட்சித்தலைவர் - 3

*18 மாதங்களுக்கு முன்பு பதவி ஏற்றபோது மக்களுக்கு அனித்த வாக்குறுதியில் நாங்கள் சொன்னதைச் செய்ய முடியாமல் போகும்போது எங்கள் ' பதவியைத் தூக்கியெறிந்துவிட்டு மக்களோடு மக்களாக வந்து நிற்போம் என்பதை இங்கே மீண்டும் உறுதிப்படுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன்.

"இளைஞர்கள் எதிர்காலத் தில் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பொறுப்புகளைப் பெற்றாக வேண்டும். அதற்கான வாய்ப் ஏற்படுத்தித் தரும் மாபெரும் பொறுப்பு நமக்கு உண்டு.

"உழைப்பவர்களே உயர்ந்தவர்கள் என்ற தத்துவத்தைத் தமிழகத்தில் உருவாக்கிக் காட்டுவோம் என்று உறுதி கூறுகிறேன்.

" நான் வெளிநாட்டிற்குச் சென்றிருந்தபோது போராட்டங்கள், கலவரங்கள் இல்லாமல் தமிழகத்தில் அமைதி நிலவ வழி வகுத்த அரசியல் தலைவர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் அனைவருக்கும் எனது நன்றிபினைத் தெரிவித்துக் கொள்கிறேன், தலைமைச் செயலாளர் அவர்களுக்கும் மற்றும் அனைத்துத்துறை அமைச்சர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

"கடமையைச் செய்வதில் கண்ணியத்தோடும், பொறுப்போடும் கட்டுப்பாட்டோடும், பொறுப் புணர்வோடும் நடந்து கொள்ள வேண்டும் . எதிர்காலத்தில் உழைத்துத்தான் பிழைக்க வேண்டிய மக்களாக வேண்டும்.

" நான் சென்ற மேலை நாடுகளில் வேலைக்கு ஆள் இல்லை என்கிறார்கள். இங்கே ஆளுக்கு வேலை இல்லை. இந்த நிலையை மாற்றிக் காட்டுவோம். அதற்காகப் பல திட்டங்களைத் தீட்டி செயல்படுவது எதிர்காலக்கடமை என்பதை உணர்ந்து செயல்படுவோம் . "அந்த வகையில் நாங்கள் செய்யும் முயற்சிகளுக்கு உங்களுடைய ஒத்துழைப்பைத் தர வேண்டும் .

பிறகு, முதல்வர் அவர்கள் தலைமைச் செயலகம் வந்தார். அங்கு ஆயிரக்கணக்கான ஊழியர்கள் அவரை வரவேற்றார்கள், பிறகு தலைமைச் செயலாளர் திரு.வி.கார்த்திகேயன் அவர்கள் அவரை வரவேற்றார்.

முதல்வர் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டதாவது " என்னுடைய பயணம் பயன் உள்ள பயணமாகும். தமிழ் நாட்டுத் தொழில் வளர்ச்சிக்காக, தொழில் வளர்வதன் விளைவாக பல்லாயிரக்கணக்கானவர்களுக்குத் தொழில் வாய்ப்புப் பெருக, என்னால் ஆன அனைத்தும் செய்யக் கூடிய வகையில் பல புதிய விவரங்களையும் தொடர்புகளையும் பெற நல்ல வாய்ப்புப் பெற்றேன்.

"அமெரிக்க அரசு நன்றி கூறிப் பாராட்டும் அளவுக்குத் தங்கள் அதிகாரிகள் மூலமாக, பல்வேறு தனியார் துறையைச் சேர்த்த தொழில் அதிபர்கள் போன்றவர்களைச் சந்திக்கவும், மருத்துவத் துறை, கல்வித்துறை காவல்துறை போன்றவைகளில் அவர்கள் செயலாற்றும் விதத்தை ஓர் அரசு எந்த அளவுக்கு வெளிப்படுத்த முடியுமோ, அந்த அளவுக்கு முழு வாய்ப்பை அவர்கள் ஏற்படுத்தித் தந்தார்கள் எனக் கூறும்போது என் உள்ளத்தில் நன்றி உணர்ச்சி ஏற்படுகிறது என்பதை மனநிறைவோடு கூறிக் கொள்கிறேன்.

" நான் சென்ற நாடுகளில் எல்வாம் , குறிப்பாக அமெரிக்க நாட்டில் எங்கெங்கு சென்றேனோ அங்குள்ள இந்தியப் பேரரசின் தூதரக அதிகாரிகளைக் கொண்டு எணக்கம் என்னோடு வந்த என்னுடைய அந்தரங்கச் செயலாளர் லட்சுமிநாராயணனுக்கும் முழு ஒத்துழைப்பையும் தந்ததோடு, அந்தந்த நாட்டு அரசு அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு நாங்கள் பாரைச் சந்திக்க விரும்புகிறோமோ அவர் களைச் சந்திப்பதற்கான வாய்ப்புக்களை நிறைவேற்றித்தரவும், அவர்கள் எடுத்துக்கொண்ட அக்கறையையும் பொறுப்புணர்ச்சியையும், செயலாற்றும் முறையையும் பெரிதும் பாராட்டக்கட கடமைப்பட்டுள்ளேன்.

"என் பயணம், நான் மேலே சொன்ள பல பிரச்சினைகளைப் பற்றி இருந்தது என்றாலும் அத்தோடு கடல் அரிப்பினால் ஏற்படுகிற அபாயத்தைத் தடுத்து நிறுத்தவும், அண்மைக் காலங்களில் கடல் கொண்ட இடங்களைத் திருத்தி அமைத்து நிலமாக்கவும் வேண்டிய களையும் பெற்றதோடு மட்டும் அன்றி, சிங்கப்பூர் நாட்டில் அந்த ஆட்சியினர் இது விஷயத்தில் எடுத்துக்கொண்ட தடைமுறைச் செயல்களின் விளைவாக என்ன பலன் ஏற்பட்டுள்ளது என்பதை நேரடியாகப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும் என்னால் முடிந்தது என்பதைக் குறிப்பிட்டுக் விரும்புகிறேன்.

"தாயகம் திரும்பிய தமிழக முதல்வரைக் காண்பதற்கு தமிழகத்து மக்களே, சென்னை நகரில் திரண்டருந்தனர் என்றால் அது மிகையாகாது. .........sb...

orodizli
27th September 2020, 03:18 PM
#புரட்சி_தலைவர்
#இதயதெய்வம்
மன்னாதி மன்னன்
#பாரத_ரத்னா_டாக்டர்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். #அவர்களின்_ஆசியோடு
#என்_முகநூல்_சொந்தங்கள்
#மற்றும்_நண்பர்கள்_அனைவருக்கும்
#இனிய_ஞாயிற்றுக்கிழமை
#காலை_வணக்கம்...

#திரு_எஸ்_பி_பாலசுப்பிரமணியம் #அவர்களின்_மறைவால்_இரண்டு
#நாட்களாக_தலைவர்_பற்றிய_பதிவுகள்
#பதிவிட_இயலவில்லை
#மன்னிக்கவும்...

புரட்சி தலைவர் எம்ஜியார்
முறைப்படி பள்ளி, கல்லூரிகளில் பெரிய படிப்பு படித்தவர் அல்ல. என்றாலும் கல்லூரிகளில் படித்தவர்களைவிட அதிக விஷயங்களை படித்தவர். தமிழிலே ஆழமான புலமை மிக்கவர்.

சினிமா, அரசியல் என்று இரு துறை களிலும் முதல் இடத்தில் இருந் தவர் எம்.ஜி.ஆர்.! அதற்காக அவர் உழைத்த உழைப்புக்கே நேரம் போதாது எனும்போது, மற்ற துறைகளிலும் ஆழ்ந்த கவனம் செலுத்துவதற்கு எங் கிருந்து அவருக்கு நேரம் கிடைத்திருக் கும் என்று யோசித்தால் பிரமிப்புடன் கூடிய வியப்பு ஏற்படுவது நிச்சயம்.

பல துறைகளிலும் எம்.ஜி.ஆர். பெற்றிருந்த பரந்த, ஆழமான அறிவுக்கு அவர் அதிக அளவில் பல விஷயங் களைப் படித்ததே காரணம். தனது ராமாவரம் தோட்டத்து வீட்டில் நிலவறை கட்டி அதில் ஏராளமான நூல்களை வைத்திருந்தார். கிடைக்கும் நேரத்தில் நூல்களைப் படித்து ஆழமான பொது அறிவையும் தமிழறிவையும் பெற்றிருந்தார். அவர் பயன்படுத்திய நூல்களின் ஒரு பகுதி நினைவு இல் லத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

‘இணைந்த கைகள்’ என்ற படத்தை எடுக்க எம்.ஜி.ஆர். திட்டமிட்டார். பூஜை போடப்பட்டு சில காட்சிகள் படமாக்கப்பட்டன. என்றாலும் பல்வேறு காரணங்களால் படம் நின்றுபோனது. அந்தப் படத்துக்காக நாயகனை எண்ணி நாயகி பாடுவதுபோல, கவிஞர் வாலி எழுதிய ஒரு பாடலின் பல்லவி இது:

‘உன் கைக்கிளையில் நானமரும் கிளியாக மாட்டாமல்

கைக்கிளையில் வாடுகிறேன் கண்ணீரில் ஆடுகிறேன்’’

பல்லவியைக் கேட்டு எம்.ஜி.ஆர்., ‘‘பிரமாதம், பிரமாதம்’’ என்று வாலியைப் பாராட்டினார். அப்படி அவர் பாராட்டுகிறார் என்றால், ‘கைக்கிளை’ என்ற சொல்லை சிலேடையாக வாலி பயன்படுத்தியதை அவர் வெகுவாக ரசித்திருப்பதன் வெளிப்பாடு அது. தமிழ் அறிந்தவர்களுக்கே அந்த சிலேடை புரியும். முதலில் வரும் ‘கைக்கிளை’க்கு, ‘உன் கையாகிய கிளையில்’ என்று பொருள். இரண்டாவதாக வரும் ‘கைக்கிளை’க்கு ‘ஒருதலைக் காதலில் வாடுகிறேன்’ என்று அர்த்தம். அதன் பொருளை எம்.ஜி.ஆர். புரிந்து ரசித்திருப்பதன் மூலம் அவரது தமிழறிவை புரிந்து கொள்ள முடியும்.

‘இன்றுபோல் என்றும் வாழ்க’ படத்தில் ஆரம்பத் தில் ‘இது நாட்டைக் காக்கும் கை…’ என்ற பாடல் இடம் பெறும். பாடலின்போது ஒரு இடத்தில், மாணவர் களுக்கு ஆசிரியர் திருக் குறளை கரும்பலகை யில் எழுதி பாடம் நடத் துவதுபோல காட்சி. ‘சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம், அத னால் உழந்தும் உழவே தலை’ என்ற குறள் கரும்பலகையில் எழுதப்பட்டிருக் கும். காட்சி படமாக்கப்படுவதற்குமுன், கரும் பலகையில் எழுதப் பட்டிருந்த அந்தக் குறளில் பிழை இருப்பதை எம்.ஜி.ஆர். கவ னித்து திருத்தினார். அந்த அளவுக்கு தமிழறிவு மிக்கவர்.

நீதியரசர் மு.மு.இஸ்மா யிலை தமிழ் கூறும் நல்லுலகம் அறியும். நீதியின் மறு வடிவமாக விளங்கிய நடுநிலை தவ றாதவர். கம்பனில் தோய்ந்து கரை கண்ட இலக்கியவாதி. கம்பன் கழகத்தின் தலை வராகவும் பணியாற்றியவர்.

ஒருமுறை, கம்பன் கழகம் சார்பில் சென்னையில் நடந்த கம்பன் விழாவை எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்தார். நீதியரசர் மு.மு.இஸ்மாயில் உட்பட தமிழறிஞர்களே வியக்கும் அளவுக்கு கம்ப ராமாயணத்தில் கம்பனுடைய கவிதைகளில் இருந்து இலக்கிய நுணுக்கமும் பொருட்செறிவும் நிறைந்த சில கவிதைகளை எந்தக் குறிப்பும் இல்லாமல் எடுத்துக் காட்டிப் பேசினார். தமிழறிஞர்களின் கரகோஷம் விண்ணைப் பிளந்தது.

எம்.ஜி.ஆர். பேசி முடித்து இருக்கை யில் அமர்ந்ததும் அருகே அமர்ந்திருந்த நீதியரசர் மு.மு.இஸ்மாயில் அவரை பாராட்டிவிட்டு, ‘‘உங்களுக்கு கம் பனைப் படிக்கும் வாய்ப்பு எப்படி ஏற்பட் டது?’’ என்று கேட்டார். அதற்கு எம்.ஜி.ஆர்., ‘‘நான் சிறுவனாக இருக் கும்போது ‘சம்பூர்ண ராமாயணம்’ நாடகத்தில் நடிக்க வேண்டியிருந்தது. அப்போது கம்ப ராமாயணத்தைப் படித்திருக்கிறேன். அதனால்தான், அந்தப் பாடல்களைப் பற்றி இப்போது என்னால் பேச முடிந்தது’’ என்றார். எம்.ஜி.ஆரின் தமிழறிவை மட்டுமின்றி, நினைவாற்றலையும் கண்டு வியந்து போனார் நீதியரசர் இஸ்மாயில்.

இதேபோல, மற்றொரு முறையும் கம்பன் கழகம் நடத்திய விழாவிலே எம்.ஜி.ஆர். கலந்து கொண்டபோது, பரிசு பெற்ற சில இளைஞர்கள் பேசினர். தமிழ் இலக்கணத்தில் மெய்ப்பாடு என்று ஒன்று உண்டு. தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியத்திலே மெய்ப்பாட்டு இயல் என்று ஒரு இயலே உண்டு. அந்த இயலின்படி, நகை, அழுகை, இழிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்ற எட்டும் மெய்ப்பாடுகள் என்பது தொல்காப்பியரின் கூற்று.

விழாவில் பேசிய ஒரு இளைஞர், இந்த எட்டையும் குறிப்பிட்டுவிட்டு ‘சம நிலை’ என்பதையும் சேர்த்து மெய்ப்பாடு கள் ஒன்பது என்று பேசினார்.

பின்னால் பேசிய எம்.ஜி.ஆர். அந்த இளைஞர் பேசியதை சுட்டிக்காட்டி, ‘‘தமிழ் இலக்கண மரபுப்படி மெய்ப்பாடு கள் எட்டுதான். சமநிலை என்பது வடமொழி இலக்கியத்தில் இருந்து வந்து பின்னால் சேர்ந்தது’’ என்று கூறினார். எம்.ஜி.ஆரின் தமிழறிவைக் கண்டு இஸ்மாயில் உள்ளிட்ட தமிழறிஞர்கள் வியப்பின் உச்சிக்கே சென்றனர். எம்.ஜி.ஆரிடம், ‘‘இது எப்படி உங் களுக்குத் தெரியும்’’ என்று இஸ்மாயில் கேட்டார். அமைதியாக எம்.ஜி.ஆர். பதிலளித்தார்… ‘‘தொல்காப்பியம் படித்திருக்கிறேன்.’’ அசந்துபோனார் நீதியரசர் இஸ்மாயில்!

எவ்வளவோ விஷயங்கள் படித்திருந் தாலும் தனக்கு எல்லாம் தெரிந்தது போல எம்.ஜி.ஆர். காட்டிக் கொள்ள மாட்டார். ‘இதய வீணை’ படத்தில், ‘காஷ்மீர் பியூட்டிஃபுல் காஷ்மீர்...’ பாட லின் நடுவே, எம்.ஜி.ஆரைப் பார்த்து நடிகை மஞ்சுளா, ‘‘ஆமா, நீங்க எதுவரைக்கும் படிச்சிருக்கீங்க? ’’ என்று கேட்பார்.

அதற்கு, தான் படித்த உலகின் உயர் வான புத்தகம் குறித்தும், அந்தப் புத்தகம் தந்த தாக்கத்தால் அறிந்த தத்துவம் பற்றியும் பாடலின் மூலமே அடக்கத் துடன் எம்.ஜி.ஆர். இப்படி பதிலளிப்பார்...

‘சத்தியம்தான் நான் படித்த புத்தகம் அம்மா;

சமத்துவம்தான் நான் அறிந்த தத்துவம் அம்மா!’

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது தமிழறிஞர் களின் கோரிக்கையை ஏற்று, தஞ்சையில் தமிழுக்கு என்றே தனியாக தமிழ் பல்கலைக்கழகத்தை உருவாக்கினார். மற்ற பல்கலைக்கழகங்களைவிட பெரிதாகவும் எல்லா வசதிகளையும் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக 1,000 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி எம்.ஜி.ஆர். உத்தரவிட்டார்!

அன்புடன்
படப்பை பாபு...

fidowag
27th September 2020, 06:05 PM
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி* 24/09/20* அன்று அளித்த*தகவல்கள்*
-------------------------------------------------------------------------------------------------------
ஒரு புன்னகை என்பது தொற்றிக்கொள்கிற* ஒரு நல்* உபாயம் என்பதை மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் வாழ்க்கையில் கற்று கொடுத்திருந்தார் . இந்தி நடிகர் திலீப் குமார் எம்.ஜி.ஆர். அவர்களின் புன்னகை பல கோடி பெறும் என்று சொல்லி இருக்கிறார் . அந்த புன்னகை எல்லோருக்கும் வரவேண்டும் என்று விரும்பியவர் .தன்னுடைய திரைப்படங்களில் கூட அதிகபட்சமாக சோகரச காட்சிகள் இடம் பெறுவதை தவிர்த்து ,தன்னுடைய படங்களை பார்ப்பவர்கள்எல்லோரும்எந்த காரணத்தினாலும்** மன அழுத்தம்,துக்கம், துயரம் ஆகியவற்றுடன் வீடு திரும்ப கூடாது என்பதற்காக திரைக்கதைகள் அமைப்பதில்ஒவ்வொரு நொடியும்* மிகவும் கவனமாக இருந்தார் அதனால்தான் அவரது படங்களில் சோகம் என்பதை அவ்வளவாக காணமுடியாது . அதே நேரத்தில் ஆழமாக உழைத்தால் முன்னேறலாம் . நீங்கள் நல்லவராக இருந்தால் வெற்றி பெறலாம் .* நீங்கள் ஊருக்கு நன்மை செய்தால் உயர்வு பெறலாம் என்கிற படிப்பினைகள் பாடங்களை மட்டுமே தன்னுடைய படங்களில் வைத்திருந்தார் .


ஏதோ சில காரணங்களால் வீடு ஜப்தி செய்ய நேரிட்டால் நீதிமன்ற உத்தரவின்படி அமீனா வந்து அந்த வீட்டை ஜப்தி செய்வார் .* ஒருகால கட்டத்தில் எம்.ஜி.ஆரின் வீடு ஜப்தி ஆகும் நிலையிருந்தது .மாலையில் வந்த நீதிமன்ற உத்தரவால் அது தடுக்கப்பட்டது .அப்போது நெல்லையில் இருந்து ஆமினா என்ற இஸ்லாமிய தாயார் தன்னுடைய இரு மகன்களோடு வந்து எம்.ஜி.ஆரை பார்க்க காத்திருக்கிறார் .இதை அறிந்த எம்.ஜி.ஆரின் கதை இலாகாவை சேர்ந்த ரவீந்தர் அவர்களிடம் நீங்கள் என்ன விஷயமாக வந்தீர்கள். உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்கிறார் .இல்லை நான் எம்.ஜி.ஆர்.அவர்களை பார்க்க வந்துள்ளேன் .அவரிடம்தான் சில விஷயங்கள் பேசவும் ,சொல்லவும் வேண்டும் என்றார் .இதை ரவீந்தர் எம்.ஜி.ஆரிடம் சொன்னதும் .இந்த விதவை தாயார்* என்ன விஷயமாக* வந்திருப்பார்கள் என்று ஒரு கணம் யோசித்து ,ரவீந்தரிடம் சரி இவர்களை எதற்கும் சத்யா ஸ்டுடியோவிற்கு அழைத்து வாருங்கள் .நேரமாகிவிட்டது .அங்கு பேசலாம் என்றார் .


ராமாவரத்தில் இருந்து கார் மூலம் ரவீந்தர் அவர்களை அழைத்து கொண்டு சத்யா ஸ்டூடியோ* செல்கிறார் .* படப்பிடிப்பின் இடைவேளையின்போது அவர்களை எம்.ஜி.ஆர். அழைத்து என்ன விஷயமாக வந்தீர்கள் என்று கேட்கிறார் .ஆமினா என்கிற அந்த இஸ்லாமிய தாயார் தன்* கையில் உள்ள வீட்டு பத்திரத்தை எம்.ஜி.ஆரிடம் தருகிறார் . எங்களுக்கு நெல்லையில் ஜவுளிக்கடை, பாத்திரக்கடை எல்லாம் இருக்கிறது .இவர்கள் என்னுடைய மகன்கள் .இவர்களின் முன்னிலையில் எங்கள் வீட்டு பத்திரத்தை உங்களுக்கு அளிக்கிறேன் இது என் பிள்ளைகளின் சொத்துதான் .அந்த மகன்களுக்கு சுமார் 18, 20 வயது இருக்கும் . எம்.ஜி.ஆர்.இதை எல்லாம் கேட்ட பிறகு அவருக்கு ஒன்றும் சரியாக புரியவில்லை . இந்த வீட்டு பத்திரத்தை வைத்து உங்களுக்கு பணம் தர வேண்டுமா* அல்லது வேறு வகையில் ஏதாவது உதவி செய்ய வேண்டுமா என்று கேட்கிறார் .இல்லை ஐயா ,உங்கள் வீடு ஜப்தியாவதாக பத்திரிகைகளில் செய்திகள் படித்தேன் .நீங்கள் இந்த பத்திரத்தை வைத்து வீட்டை தற்சமயம் மீட்டு எடுத்து கொள்ளுங்கள் . உங்களுக்கு எப்போது முடியுமோ அப்போது பத்திரத்தை திருப்பி கொடுத்தால் போதும் ஏனென்றால் எங்களது வாழ்க்கை உங்களால்தான் மலர்ந்தது என்கிறார் . எம்.ஜி.ஆருக்கு அப்போதும் புரியவில்லை .நான் எப்படி உங்களுக்கு உதவிகரமாக இருந்திருக்கிறேன் நான் எப்போதாவது உங்களுக்கு* பண உதவியோ அல்லது வேறு ஏதாவது உதவியோ செய்திருக்கிறேனா என்று கேட்கிறார் .* இல்லை .தந்தையை இழந்த என்* பிள்ளைகள் தாறுமாறாக வளர்ந்து கொண்டிருந்தபோது எங்களது வாழ்க்கை முறையில் திரைப்படங்கள் பார்ப்பதே தவறு என்று ஒரு கட்டுப்பாடு இருந்தது நான் திரைப்படங்கள் பார்த்தது இல்லை .ஆனால் என் மகன்கள் உங்கள் படங்களை பார்த்து பார்த்து என்னையும் பெரியவர்களையும் மதிக்க கற்றுக்கொண்டார்கள் .என்னை போற்றி புகழ்கிறார்கள். அவர்கள் மனம் திருந்தி நல்ல வழியில் வாழ்க்கை நடத்துவதற்கு உங்களின் படங்கள் அவர்களுக்கு பாடங்களாக அமைந்தன .ஆதலால்தான் இந்த சொத்தை உங்களுக்கு நெருக்கடியான* நேரத்தில் கொடுத்து உதவ முன் வந்தேன் என்றார் .எம்.ஜி.ஆர். மனம் நெகிழ்ந்து,அந்த தாயாரை வணங்கி ,தனக்கு உதவ முன் வந்ததற்கு நன்றி தெரிவித்தார் .அத்துடன் என்னுடைய வீடு ஜப்தி ஆகவில்லை .நீதிமன்ற தீர்ப்பு சாதகமாக வந்துள்ளது . ஆகவே தங்களின் உதவும் பண்பிற்கு* நன்றி என்று சொல்லி அந்த தாயாரிடம் பத்திரத்தை திரும்ப கொடுத்ததோடு ஒரு சிறிய தொகை கொடுத்து நல்லபடியாக வீடு திரும்புங்கள் என்று சொல்லி அனுப்பியதாக இந்த சம்பவத்தை ரவீந்தர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார் .

திரு.கா .லியாகத் அலிகான் அவர்களின் பேட்டி*
----------------------------------------------------------------------------
ஆவேசம் எடுத்து ஒருஇளைஞர் பட்டாளமே திரண்டு வந்ததற்கு காரணம் திரைப்படங்களில் அவர் சொல்லிய படிப்பினைகள் பாடங்களா,அல்லது அவரது தனிப்பட்ட வாழ்க்கை வரலாற்றின் ஈர்ப்பா என்று திரு.துரை பாரதி கேட்க அதற்கு திரு.லியாகத் அலிகான் அளித்த பேட்டியின் விவரம்*

தனிப்பட்ட வாழ்க்கை வரலாறு என்று பார்த்தால்* ஓரளவு தான் மக்கள் மனதில் சென்றடையும் .அவர் திரைப்படங்களில் தான் நடித்தபடி, சொன்னபடி நடந்தார் என்பதால்தான் மக்களுக்கு ,இளைஞர்களுக்கு,குறிப்பாக மாணவர்களுக்கு எல்லாம் ஒருவித ஈர்ப்பு உண்டானது .அவர் திரைப்படங்களில் புகைபிடிப்பது போல நடித்ததில்லை .நிஜ வாழ்க்கையில் புகை பிடிப்பதில்லை .படங்களில் மது அருந்துவது போல நடித்ததில்லை .அதே போல நிஜத்திலும் மது அருந்தியவரில்லை .இந்த கால நடிகர்கள் பார்த்தீர்களேயானால் வாருங்கள் இன்று மகிழ்ச்சியாக கொண்டாடுவோம் என்று மது அருந்துவதில் நேரத்தை செலவழிக்கிறார்கள் .ஆனால் எம்.ஜி.ஆர். அவர்கள் ஒளிவிளக்கு படத்தில் மது அருந்துவது தவறு .தீமையை தர கூடியது என்ற வகையில் ஒரு எம்.ஜி.ஆர். மது அருந்துவது போல நடிப்பார் .இன்னொரு எம்.ஜி.ஆர். வந்து அவருக்கு அறிவுரை கூறியபடி தைரியமாக சொல் நீ மனிதன்தானா, நீ தான் ஒரு மிருகம் என்று பாடுவார் .அதன்படிதான் நடந்து காட்டினார் என்பதால் தான் மக்களுக்கு ,இளைஞர்களுக்கு,மாணவர்களுக்கு எல்லாம் அவர்மீது ஒரு மிக பெரிய ஈர்ப்பு ஏற்பட்டது .

தி.மு.க. வளர்ச்சியுற்ற காலத்திலும் சரி , எம்.ஜி.ஆர்.,சிவாஜிகணேசன் காலத்திலும் சரி, அந்த ரவிவர்மா பெயின்டிங் போல சிறு நரைகூட தெரியாதது போலமுடியே தெரியாத அளவிற்கு** சேவிங் செய்யப்பட்டு , வண்ணங்கள் தீட்டப்பட்ட ஓவியமாக இருந்தார் .என்று திரு.துரை பாரதி சொன்னதற்கு*திரு.லியாகத் அலிகான் அளித்த பதில் :நீங்கள் முதலில் சொன்ன வார்த்தை ரவிவர்மா ஓவியம் போல ஒரு சிறு* கருப்பு முடி கூட தெரியாமல் இருக்க வேண்டுமென்று எம்.ஜி.ஆர்.,சிவாஜிகணேசன் போன்றவர்கள் எல்லாம் இருந்தார்கள் என்று சொல்கிறீர்கள் அல்லவா ,எம்.ஜி.ஆர். அவர்களின் எண்ணம் என்னவென்றால் உணவு நமக்காக உண்ணுகிறோம் . வீட்டில் தனியாக உண்கிறோம். அல்லது குடும்பத்தினருடன் உண்ணுகிறோம் .நாம் என்ன உணவு அருந்துகிறோம் என்பதில் வெளியில் தெரிய வாய்ப்பில்லை .* ஆனால் உடை அணிவதை பிறருக்காக செய்கிறோம் பிறர் நம்மை கவனிக்கிறார்கள், பார்க்கிறார்கள்.பிறருடைய பார்வையில் நமது உடையும் ,தோற்ற பொலிவும் அவர்களை ஈர்ப்பது போல இருந்தால்தான் நம் மீது பிறருக்கு மரியாதை வரும் என்பது புரட்சி தலைவரின் சிந்தனை .அதனால்தான் அவர் வெளியே வரும்போதோ,தோன்றும்போதோ,லுங்கி அணிந்து வருவதோ கிழிசலான சட்டை மற்றும் உடைகள் அணிந்து வருவதையோ அவர் விரும்புவதில்லை .யாரும் அப்படி ஒரு தோற்றத்தில் பார்த்திருக்க முடியாது திரைப்படங்களில் தவிர .ஆனால்* பேரறிஞர் அண்ணா உடை விஷயங்களில் தனி கவனம் செலுத்துவதோ, அதை பற்றி கவலைப்படுபவரோ இல்லை .அது வேறு விஷயம் .எம்.ஜி.ஆர்.அவர்கள் நடிகராக இருந்ததால் மக்கள் அதையெல்லாம் எதிர்பார்த்தார்கள் . பேரறிஞர் அண்ணா,பெருந்தலைவர் காமராஜர் போன்றவர்கள் எல்லாம் சாதாரணமாக எளிய முறையில் உடை அணிந்து பழகியவர்கள் .அவர்களிடம் வேறு மாதிரி எதையும் எதிர்பார்க்க முடியாது*


எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரை வைத்து இயக்குனர் ஸ்ரீதர் சிவந்த மண் என்ற படத்தை துவக்க இருந்தார் .அந்த படத்தில் வசனங்கள் காட்சிகள் எம்.ஜி.ஆர். அவர்களின் கருத்துக்கள், எண்ணங்களுக்கு மாறுபட்டு இருக்கும்போது நடிக்க மறுத்துவிட்டார் . உடனே ,இயக்குனர் ஸ்ரீதர் ,நீங்கள் சித்ராலயா நிறுவனத்தின் படத்தில் நடிக்கிறீர்கள் என்பதை கொஞ்சம் கவனத்தில் வைத்து கொள்ள வேண்டும் என்கிறார் .பதிலுக்கு எம்.ஜி.ஆர். படப்பிடிப்பை ரத்து* செய்துவிட்டு புறப்பட தயாராகும்போது நான் பொழுது போக்கிற்காகவோ, பணத்திற்காகவோ உங்கள் படத்தில் நடிக்கவில்லை . பொறுப்பான நடிகர் என்ற முறையில் மக்களுக்கு உகந்த,மனித* சமுதாயத்திற்கு தேவையான கருத்துக்களை சொல்ல முற்படவே உங்கள் படத்தில் நடிக்க முடிவெடுத்தேன் . இனி நடிப்பதில்லை என்று மறுத்துவிட்டார் .பிறகு சில ஆண்டுகள் கழித்து சிவாஜி கணேசனை வைத்து சில வெளிநாடுகளுக்கு சென்று படம் எடுத்தார் . அப்படி எடுத்த படம்*வசூல் ரீதியாக நல்ல வெற்றியை பெறவில்லை .இயக்குனர் ஸ்ரீதர் அதன் பின்னர் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டார் . அந்த பாதிப்பில் இருந்து மீள முடியாமல் அவதிப்படும்* நிலையில் நேரடியாக எம்.ஜி.ஆர். அவர்களிடம் செல்லாமல் தயாரிப்பாளர் தேவர் அவர்களிடம் சொல்லி தனது இக்கட்டான சூழ்நிலையை சொல்லி மனம் வருந்தினார் . நான் மீண்டு வந்து திரையுலகில் எழுச்சி பெற ஏதாவது ஒரு நல்ல வழியை சொல்லுங்கள் என்றார் .உடனே தேவர் .கவலைப்படாதீர்கள் .ஆபத்து பாண்டவன், அநாதை ரட்சகன் முருகன்* இருக்கும்போது வீணாக மனதை அலட்டி கொள்ளாமல் எம்.ஜி.ஆரை போய் சந்தியுங்கள் என்றார் .ஆனால் ஸ்ரீதர் ஏற்கனவே அவரை வைத்து நான் ஒரு படம் எடுக்க இருந்தபோது நான் சரியாக நடந்து கொள்ள வில்லை என்று என்மீது அவருக்கு கோபம் இருக்கும் . நான் எப்படி அவரை நேரில் சந்திப்பது என்றார் .ஆனால் தேவர் எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி எம்.ஜி.ஆரிடம் அழைத்து சென்றார் ..எம்.ஜி.ஆர்.தன் வீட்டில் இருவருடனும்*உணவு அருந்தும்போது எதை பற்றியும் பேசவில்லை .உணவருந்திய பின் தேவர்*எம்.ஜி.ஆரிடம் இயக்குனர் ஸ்ரீதருக்கு ஒரு படம் நடித்து தாருங்கள் என்றார் .உடனே எம்.ஜி.ஆர். அதை ஸ்ரீதர் என்னிடமே நேரடியாக கேட்கலாமே .நீங்கள் ஏன் சிபாரிசு செய்ய வேண்டும் .அவர்மீது எனக்கு கோபமில்லை என்றார் .ஸ்ரீதருக்கு உடனே முகத்தில் ஒருவித மலர்ச்சி ஏற்பட்டது .பின்னர் சகஜமாக பேசும்போது*ஒரு பேப்பரில் சித்ராலயா நிறுவனத்தின் தயாரிப்பில் ,ஸ்ரீதர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடிக்கும் உரிமைக்குரல் என்று படத்தின் பெயரை குறிப்பிட்டு எழுதி கொடுத்தார் . அத்துடன் நீங்கள் எனக்கு அளித்த பழைய அட்வான்ஸ் தொகையே போதும் .முதலில் படத்தை எடுத்து முடியுங்கள் உடனடியாக கால்ஷீட்டுகள் தருகிறேன் .குறித்த காலத்தில் எடுத்து முடிப்போம் என்றார் .ஸ்ரீதர் இந்த தலைப்பு மிக அற்புதம் ,என்று சொன்னதோடு, எம்.ஜி.ஆரின் பெருந்தன்மையை வியந்து பாராட்டினார் .எம்.ஜி.ஆரின் குணாதிசயங்கள், பொறுமையின் சின்னத்தை ,ஆழ்ந்த மன உளைச்சலில் இருந்த ஒரு மனிதனை எப்படி,எவ்வளவு* சந்தோஷப்படுத்துவது என்கிற உணர்வை எண்ணி இயக்குனர் ஸ்ரீதர் மிக பெரிய ஒரு மலைப்பாக எம்.ஜி.ஆரை பற்றி பேசிய காலம் உண்டு என்று லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .


அள்ள அள்ள* குறையாத பெருமைகள்,தீராத வியாதிபோல நீண்டுகொண்டே இருக்கிறது .அப்படிப்பட்ட மக்கள் திலகத்தின்* நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்ற மக்கள் திலகத்தை தங்கள் நெஞ்சங்களில் வைத்து போற்றுகின்ற ஆண்டிபட்டி வசந்தி, சென்னை லோகநாதன் ராமச்சந்திரன், மும்பை புலவர் ராமச்சந்திரன் ,திருச்சி மிளகுபாறை மஜீத் போன்றவர்கள் எல்லாம் நமக்கு மிகவும் தெரிந்த பெயர்கள் .இன்னும் தெரியாத லட்சக்கணக்கானவர்கள் உள்ளனர் .எங்கே அவரை பற்றி தவறாக கருத்துக்கள் சொல்லிவிடுவோமோ என்றுவருத்தப்பட்டு* கண்ணீர் விட தயாராக உள்ள சகோதரிகளும் இருக்கிறார்கள் .


ஒரு மகா பெரிய புத்தகம் ,பொக்கிஷம் போல* ,ஒரு பல்கலை கழகமாக, பலருக்கு நம்பிக்கை நாற்றாக, ஊற்றாக இன்றைக்கும் இருந்து* இருக்கிறார் எம்.ஜி.ஆர்.* அந்த அற்புத நாயகன் என்பவரின்**சாதனைகள்* பற்றி சொல்வதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்ததற்கு நான் உண்மையிலேயே பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் .தொடர்ந்து மற்ற தகவல்களை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம் .




நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
----------------------------------------------------------------------------------------
1.சிரித்தாலும் போதுமே,செவ்வானம் தோன்றுமே -நீதிக்கு பின் பாசம்*

2.நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே - நம் நாடு*

3.நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி - பெற்றால்தான் பிள்ளையா*

4.திரு.கா.லியாகத் அலிகான் அவர்களின்* பேட்டி*

5.சண்டை காட்சியில் எம்.ஜி.ஆர். - காவல்காரன்*

6.காலத்தை வென்றவன் நீ காவியமானவன் நீ -அடிமைப்பெண்*

orodizli
27th September 2020, 06:52 PM
மக்கள் திலகம் எம் ஜி ஆரால் ...
மேல் ஆதிக்க காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்தது எம் ஜி ஆரால்

அண்ணா ,கருணாநிதி முதல் திராவிட ஆட்சி இன்று வரை நிலைத்திருப்பது எம் ஜி ஆரால்

தமிழக மக்கள் ஒரு பொற்கால ஆட்சி கண்டது எம் ஜி ஆரால்

சத்துணவு முதல் செருப்பு வரை காணாத மக்களை இவை பயன்பட்டது எம் ஜி ஆரால்

ப்ளஸ் டூ அண்ணா பல்கலைகழகம் உட்பட எட்டு பல்கலைகழகம் தொழிற்க்கல்வி அமைந்தது எம் ஜி ஆரால்

குடிசைகளும் ஒளி வீசியது எம் ஜி ஆரால்

கிராமங்களும் தன்னிறைவு திட்டத்தால் நகரம் ஆனது எம் ஜி ஆரால்

மக்கள் தாகம் தீர கிருஷ்ணா நதி வந்தது எம் ஜி ஆரால்

தமிழ் வளமானது எம் ஜி ஆரால்
தமிழகம் மேற்க்கல்வியில் உலகம் போற்ற சிறந்தது எம் ஜி ஆரால்

பொன்மன செம்மல் தந்தது பொற்கால ஆட்சி
எடுத்து பார்த்த மக்களை கொடுத்து பார்க்கும் முதல்வரை காண வைத்தது எம் ஜி ஆர்

ஆட்சியில் தன் வைத்திய செலவையையே திருப்பி அரசுக்கே கொடுத்த ஒரே இந்திய முதல்வர் எம் ஜி ஆர் ... உலக தலைவரும் எம்.ஜி.ஆர்., தான்...

போற்றுவோம் உலகம் உள்ளவரை பொன்மன செம்மல் எம் ஜி ஆர் புகழை

வளர்க...வாழ்க ...எம். ஜி .ஆர் .,புகழ்.........Amg...

orodizli
27th September 2020, 06:57 PM
ரொம்ப பதிவு சினிமாவைப் பற்றி போட்டாச்சு!. இனி அரசியல் பதிவு ஒன்றை போடலாம் என்று இந்தப் பதிவை வரைய விரும்புகிறேன்.
தலைவரின் அந்தக்கால சினிமா கிளைமாக்ஸ் காட்சிகளை பார்த்திருப்பீர்கள். கதாநாயகியை ஒரு கையில் பிடித்துக்கொண்டு மற்றொரு கையில் வாளேந்தி எதிரிகளை அவர்கள் கோட்டைக்குள்ளே வீழ்த்தி
ஆட்சியை கைப்பற்றி நாயகியையும் காப்பாற்றி கை பிடிப்பது போல் காட்சி அமைத்திருப்பார்கள்.

அதே காட்சி அவரது வாழ்க்கையிலும் அரசியலில் நடைபெற்றது. 1980 ல்
தலைவரது ஆட்சி கலைக்கப்பட்டதும்
அருகிலிருந்த அரசியல் துரோகிகள் அணி மாறிய காட்சி தீயசக்தியின் தூண்டுதலால் அவரின் திரைக்கதையில் தோன்றியவாறு நிகழ்ந்தது.

ஆனால் சற்றும் பதட்டமடையாத தலைவர், தன்னை நம்பி வருபவர்களை மட்டும். இருகம்யூனிஸ்ட், காகாதேகா போன்ற கட்சிகளை மட்டும் அரவணைத்துக் கொண்டு தமிழகத்தின் பெரும் கட்சிகளாக செயல்பட்டு வந்த இ.காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணியை எதிர்த்து தனியொருவனாக களத்தில் நிராயுதபாணியாக மக்கள் ஆதரவு
என்ற தேரில் ஏறி அமர்ந்து அதர்மத்தை அழிக்க சங்கொலி முழங்க களத்தில் முன்னேறி வரும் போது மற்றொரு பக்கம் தீயசக்தி தேர்தலுக்கு பின் அமையப்போகும் மந்திரி சபையில் யார் யார் இடம் பெறுவார்கள் என்ற
பட்டியலை தயாரிக்கும் அதிகார,சதிகார பணியில் இறங்கியிருந்தார்.

அத்தோடு நிற்கவில்லை. வள்ளுவர் கோட்டம் வண்ணமயமாக ஜோடிக்கப்பட்டு பதவியேற்பு விழாவுக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டுக் கொண்டிருந்தது. புரட்சித்தலைவரோ
சூறாவளி சுற்றுப் பயணத்தில், நான் செய்த தவறென்ன? என்று மக்களைப் பார்த்து கேள்வி எழுப்ப
மக்களோ மகராசா! உன்னிடம் ஏதும் குறை காணவில்லை. அதோ அந்த தவறான பொருந்தாத கூட்டணி மீதுதான் தவறு! என்று மனமேங்கிக் கொண்டு தர்ம தேவனுக்கு வாக்களிப்பது என்ற சங்கல்பத்தை
மேற்கொண்டு செல்லும் இடமெல்லாம் மலர்தூவி நின்றனர்
நம் காவிய நாயகனுக்கு. தேர்தல் வேளை வந்து விட்டது.

தம்முடன் அணி சேர்ந்த கம்யூனிஸ்டுகள் மற்றும் காகாதேகா ஆகிய சிறிய அணிகளுடன் பெரும் போரை நடத்தி எதிரிகளை முன்பைவிட பலமாக தாக்கி ஓட ஓட விரட்டி ஆட்சியை கைப்பற்றிய மாட்சி இருக்கிறதே அது சொல்லில் அடங்கா. இதே காட்சியை சிவாஜிக்கு நினைத்து பாருங்கள். ஆட்சி டிஸ்மிஸ் செய்தவுடன் "தில்லானா மோகனாம்பா"ளில் கத்திகுத்துக்கு உருண்ட மாதிரி இந்திரா அம்மையாரின் காலிலும் தீயசக்தியின் காலிலும் கதறி உருண்டு அழுதிருப்பார். புரட்சித்தலைவரின் வீரத்தையும், ஆற்றலையும் பார்த்தும் சில கோழைகளுக்கு வீரம் வரவில்லையே? என்ன செய்ய! கடவுள் வீரத்தை வாயிலேயே வைத்து விட்டான் வசனம் பேசுவதற்கு.

ஆனால் நம் தலைவரோ 'எதையும் தாங்கும் இதயம் கொண்டு' துரோகிகளை மக்கள் முன் நிறுத்தி தோலுரித்து காட்டி வெற்றி கண்டார். அந்தக் காட்சி "மந்திரி குமாரி"யில் கதாநாயகியை தூக்கிக் கொண்டு போர்புரியும் காட்சியை நினைவு படுத்தவில்லை? "மன்னாதி மன்னனி"ல் கட்டவிழ்த்து பாதபூஜை செய்யச் சொல்லும் போது கொதித்தெழுந்து சோழனின் குலப்பெண்ணையும் தூக்கிக் கொண்டு 'தாயை பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன்' என்று வீரத்தின் உச்சியில் எக்காளமிட்டு ரதத்தில் ஏறி அனைவரையும் கண்ணில் விரல் விட்டு ஆட்டி விட்டு தாயகம் திரும்பும் காட்சி நிழாலாடுகிறதா?.

சினிமாவில் மட்டுமல்ல வீரம்? அரசு வித்தைகளிலும் அவர் காட்டும் வீரத்தை மறக்க முடியுமா? 'புறமுதுகு காட்டி ஓடியவர்களுக்கு' இதெல்லாம் புரியுமா என்ன? ஒரு தேர்தலில் தோற்றதற்கு புறமுதுகு காட்டி ஓடி பதுங்கு குழியில் பதுங்கியவர்களுக்கு புரியுமா வீரத்தின் விளையாட்டை?. மீண்டும் சதிகாரனோடு சேர்ந்து சபையில் சங்கமித்து ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க மட்டுமே அவர்களுக்கு தெரியும்.
அந்த தேர்தலில் தன்னை நம்பிய கம்யூனிஸ்ட்கள் பெற்ற அதிகபட்ச வெற்றியே இதுவாகத்தான் இருக்கும்.

கம்யூனிஸ்டுகள் 20 சீட்களில் வெற்றி பெற்றார்கள். குமரி அனந்தனின் காகாதேகாவோ 6 சீட் வெற்றி பெற்றார்கள். இந்தத் தடவை முதலிலே புரட்சித் தலைவரின் வெற்றி அறிவிக்கப்பட்டது. மதுரை மேற்கில் சுமார் 20000 ஓட்டுகள் அதிகம் பெற்ற வெற்றியடைந்த செய்தி கேட்டு ஆனந்தக் கண்ணீர் வடித்த நினைவு நெஞ்சை விட்டகலா!. தீயசக்தி ஹண்டேயிடம்
வெற்றிக்கு அண்ணா நகரில் போராடி பின் தலைவரின் கடைக்கண் பார்வையால் வெற்றி கிடைத்த காட்சியை கண்டு தமிழகமே எள்ளி நகையாடியதும் மறக்க முடியாத காட்சி.

இந்திரா அம்மையாருக்கும் ஊழல் சாம்ராஜ்யத்தின் தலைமையோடு கை கோர்த்தது தவறு என்பதை உணர வைத்த அற்புதமான தேர்தல்.
புரட்சித்தலைவரின் புனிதப் போரில் அதிமுகவின் வெற்றியின் வீச்சு கூடியிருந்தது. தீயசக்திக்கு கணிசமான அளவு ஆதரவு குறைந்து காணப்பட்டது. அவருடைய ஆர்ப்பாட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.

தீயசக்தியின் பதவி ஏற்புக்கு அடிக்கப்பட்ட 'வால்போஸ்டர்' என்ன கதி ஆனதோ தெரியவில்லை. இது போன்ற ஒரு வித்தியாசமான தேர்தலை மக்களும் அரசியல் கட்சிகளும் கண்டதில்லை என்றே நினைக்கிறேன். இது ஒரு சரித்திர சாதனை என்றே சொல்ல வேண்டும்..........ks...

orodizli
27th September 2020, 07:20 PM
100% முற்றிலும் உண்மை. 1980ம் வருட தேர்தல் போன்று சிறப்பை பெற்றது வேறில்லை என அடித்து கூறலாம்... அமெரிக்க நாட்டின் TIME, Washington Post, Network Times உட்பட்ட உலக புகழ் வாய்ந்த பத்திரிகைகள் மக்கள் திலகம் அடைந்த பிரம்மாண்டமான வெற்றியை மிகவும் சிலாகித்து எழுதியிருந்த தகவல்கள் நாமறித்து சொல்லொண்ணா மகிழ்ச்சி கொண்டது நினைவிலாடுகிறது. இந்திய ஜனநாயக மாண்பை மிக பாராட்டி எழுதியிருந்தார்கள். மாநிலத்திற்கு யாருடைய ஆட்சி வேண்டும்?!, மத்தியில் எவருடைய ஆட்சி தேவை என்று பகுத்தறிந்து பொது மக்கள் மாபெரும் தீர்ப்பை அளித்திருந்தார்கள். அத்தகைய பெருமைமிகு நிகழ்வுகள் நமக்கெல்லாம் என்றுமே மகத்தான பெருமையே!!!������.........

orodizli
28th September 2020, 07:39 AM
" ஏழைப்பங்காளன் " ( 1963 ) - இந்த படத்தில் :

ஜெமினி கணேசன் மற்றும் ராகினி நடித்தது.

இந்த படத்தைத் தயாரித்தவர் ஒரு காங்கிரஸ் அபிமானி,

" ஏழைப் பங்காளன் " என்கிற பெயரையே அவர் , கர்ம வீரர் காமராஜ்

ஐ மனதிற்கொண்டே வைத்தாராம் !

" ஏழைப் பங்காளன் " படத்தை எடுத்த அவர் , அந்த படத்தைப் பார்க்க

வருமாறு காமராஜ் அவர்களை

- இழுத்துக் கொண்டு ( ! )

வந்தாராம் !


" எழைப் பங்காளன் ' படத்தைப் பார்த்தார் காமராஜ்

படத்தைப் பார்த்த அவர் வெளியே வந்தார்....

' விடு விடு/ என்று நடந்தார்....

காரை நோக்கி வந்தார்.....

கார் கதவு திறக்கப் பட்டது....

காரின் உள்ளே செல்ல தயாரானார்.....


" படம் எப்படி இருந்திச்சு, அண்ணாச்சி....ஒண்ணும்

சொல்லாமல் போறீங்களே ? "

- கேட்டவர் தயாரிப்பாளர் !



காமராஜ் அவரை நோக்கினார்.....சொன்னார் :



" அதெல்லாம் நடிக்க வேண்டியவங்க நடிச்சத்தான்

நல்லா இருக்கென்னேன் ! "



காமராஜ் ஏன் அப்படி சொன்னார் ?


" ஏழைப்பங்காளன் " படத்தில் ஜெமினிக்குப் பதில்

எம்ஜிஆர் நடித்திருந்தால் நன்றாக

இருந்திருக்கும் என்று காமராஜ் நினைத்தார் ! -...............Am...

orodizli
28th September 2020, 07:40 AM
#postive #approach.........



வாத்தியாரைப் பொருத்தவரை #தன்னைத்தேடி #வரும் #வாய்ப்புகளை அப்படியே #ஏற்றுக்கொள்வதில்லை. தன்னுடைய படத்தைப் பார்க்க வரும் ரசிகர்களுக்கு அதன்மூலம் #நம்பிக்கையூட்டும் #வகையில் என்ன #கருத்தை சொல்லப் போகிறோம் என்பதற்குத்தான் #முக்கியத்துவம் கொடுப்பார்.

புரட்சித்தலைவரை வைத்து உதயம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் "இதயவீணை" என்ற திரைப்படத்தைத் தயாரித்து மாபெரும் வெற்றியும் பெற்றது. அதைத் தொடர்ந்து எம்ஜிஆரை வைத்து இன்னொரு படம் தயாரிக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

எம்ஜிஆருக்கு பொருத்தமாக கதை சொல்ற அளவிற்கு ஒரு கதாசிரியர் வேணும்... அப்படிக் கிடைத்தாலும் அவரோடு ஒத்துப்போகிற அளவிற்கு அந்த கதாசிரியர் இருக்க வேண்டும். எம்ஜிஆர் சொல்கின்ற நியாயமான மாற்றங்களை ஏற்றுக் கொள்ளக் கூடியவராக இருக்க வேண்டும்'. தேடி அலைந்ததில் அப்படி யாரும் கிடைக்கவில்லை.

இறுதியில் இந்தியில் வெளிவந்த ஒரு படத்தைப் போய் பார்த்தார்கள். அந்தப் படம் எம்ஜிஆருக்குப் பொருத்தமாக இருக்கும் என்று நம்பினார்கள். அந்தப் படத்தின் தமிழ் ரீமேக் வாங்குவதற்கு முயற்சி செய்தார்கள்.

இந்தச் செய்தி எம்ஜிஆர் காதுகளுக்கு எட்டியது. உதயம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர்களை நேரில் அழைத்துப் பேசினார். என்ன படம் அது? யாருடைய படம் என்று கேட்டவருக்கு பதில் சொன்னார்கள். அது சாந்தாராமின் 'தோ ஹாங்கி பாராத்'. சாந்தாராமை எம்.ஜி.ஆர் தனது குருவாக வைத்து மதித்தவர். "சாந்தாராமின் படம்னா போட்டுக் காட்டுங்க பார்க்கலாம்," என்றார் எம்ஜிஆர்.

உதயம் புரொடக்ஷன்ஸ் மணியனும், வித்வான் வே.லட்சுமணனும் பார்க்க ஏற்பாடு செய்தார்கள். எம்.ஜி.ஆர். படத்தைப் பார்த்தார். ஒரு ஜெயிலர் கொடூரமான கைதிகளை தனது பொறுப்பில் வெளியே கொண்டு வந்து தனி இடத்தில் வைத்து அவர்களைத் திருத்துவதற்கு முயற்சி செய்கிறார். இறுதியில் ஜெயிலரை கொலை செய்துவிட்டு கைதிகள் தப்பி ஓடி விடுகிறார்கள். இதுதான் இந்திப் படத்தின் கதை.

படத்தைப் பார்த்த எம்ஜிஆர் எந்த கருத்தும் சொல்லாமல் எழுந்து வெளியே போனார். அவரைத் தொடர்ந்து போன மணியனும் வித்வான் லட்சுமணனும், "இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் ரைட்ஸை வாங்கி விடலாமா," என்று கேட்டார்கள்.

"இந்தப் படத்தை அப்படியே எடுக்க வேண்டும் என்றால் எனக்குப் பொருத்தமாக இருக்காது. கிளைமாக்ஸை மாற்ற வேண்டும். ஜெயிலரால் வெளியே அழைத்து வரப்பட்ட #கைதிகள் #இறுதியில் #திருந்தினார்கள் #என #முடியவேண்டும். #எனது #படம் #பார்க்க #வருகிறவர்களுக்கு #நம்பிக்கையைக் கொடுக்க வேண்டும். இந்தப் படத்தை #உண்மையான #கைதிகளே #பார்த்தாலும் #அவர்கள் #மனம்திருந்த #வேண்டும். #அப்படிப்பட்ட #கருத்தைதான் #நாம் #சொல்லவேண்டும் இதற்கு நீங்கள் சம்மதித்தால் ரைட்ஸ் வாங்குங்கள் இல்லையென்றால் என்னை விட்டுவிடுங்கள். வேறு யாரையாவது வைத்து படத்தை எடுத்து கொள்ளுங்கள்," என்றார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆரின் பேச்சைக் கேட்டதும் உதயம் புரொடக்ஷன்ஸ் அதிபர்கள் அலறினார்கள். "அய்யய்யோ... உங்களை வைத்துதான் நாங்கள் படம் எடுப்போம். நீங்கள் சொன்னபடியே இந்தப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை மாற்றி எடுப்போம்," என்றார்கள்.

அதற்கு எம்.ஜி.ஆர், "க்ளைமாக்ஸ் காட்சியை மாற்றி எடுப்பதாக இருந்தால் சாந்தாராமிடம் எடுத்துச் சொல்லி அதற்கும் அனுமதி பெற்று வாருங்கள்," என்று கூறி அனுப்பிவிட்டார். எம்.ஜி.ஆரின் கருத்தை சாந்தாராமிடம் தெரிவித்து, அனுமதி பெற்று சில மாற்றங்களுடன், கிளைமாக்ஸ் காட்சியையும் மாற்றி படத்தை எடுத்தார்கள். படமும் வெளியே வந்து பெரும் வெற்றிப் பெற்றது. அந்தப்படம்தான்

#பல்லாண்டு #வாழ்க'!.........bsm...

orodizli
28th September 2020, 07:41 AM
1964-ம் ஆண்டில் போலிக் கர்ணன்களை புறமுதுகு காட்டி ஓடச் செய்து வேட்டையாடிய நிஜக் கர்ணனான நம் வேட்டைக்காரனின் அமர்க்களமான ஸ்டில். மக்கள் திலகத்தின் இந்த ஸ்டைலான போஸை எப்படி வர்ணிப்பது? தாவுகிறாரா? தாண்டுகிறாரா? பறக்கிறாரா?

இந்த மாதிரி பக்கவாட்டில் கிட்டத்தட்ட 60 டிகிரி அளவுக்கு சாய்ந்த நிலையில் யாராவது நின்றால் அவர் விழுந்துவிடுவார். தனது உடலின் மொத்த எடையை இடதுகையால் மரத்தை பிடித்தபடி தாங்கி பேலன்ஸ் செய்து நிற்கிறார் மக்கள் திலகம். அப்போதும் அவரது முகத்தில் இதெல்லாம் எனக்கு சாதாரணம் என்பதுபோல ஸ்டைலான அலட்சிய குறும்பு. இந்த துள்ளலும் துடிப்பும் சுறுசுறுப்பும் கடைசிவரை மக்கள் திலகத்திடம் குறையவே இல்லை. ...

அது அந்த தனிப்பிறவிக்கு மட்டுமே உள்ள ஆற்றல்.......... Swamy...

orodizli
28th September 2020, 09:12 AM
அருமையான பதிவு. மலரும் நினைவுகள். 1980 பிப்ரவரி 17 புரட்சித் தலைவர் ஆட்சி கலைக்கப்பட்டது. அன்று ஞாயிற்றுக்கிழமை. பொதிகை தொலைக்காட்சியில் மாலை தியாகராஜ பாகவதர் நடித்தசிவகவி படம் ஒளிபரப்பினார்கள். அதை தலைவர் ரசித்து பார்த்துக் கொண்டிருந்தபோது ஆட்சி கலைக்கப்பட்ட செய்தி வருகிறது. தலைவர் கொஞ்சமும் கலங்காமல் படத்தை ரசித்து பார்த்தார். சமையல்காரர் மணியை அழைத்து இனிப்பு கொண்டுவரச் சொல்லி எல்லாருக்கும் கொடுத்துவிட்டு தானும் மகிழ்ச்சியோடு சாப்பிடுகிறார். இதை அந்த சமயத்தில் புரட்சித் தலைவருடன் உடனிருந்த மணியன் அப்போதே சொல்லியிருந்தார். இது சாதாரண விஷயமா? புரட்சித் தலைவருக்கு எவ்வளவு மன உறுதி. மக்களின் மீது அவருக்கு எவ்வளவு நம்பிக்கை. மக்களுக்கும் அவர் மீது அன்பும் நம்பிக்கையும் இருப்பதை தேர்தல் முடிவுகள் நிரூபித்தன..........Sy.

orodizli
28th September 2020, 09:13 AM
1980 தேர்தல் முடிவில் க்ளைமாக்சும் அதை புரட்சித் தலைவர் முடித்த விதமும் அற்புதம். "பல்லாண்டு வாழ்க" காவிய படத்தில் தன்னைக் கொல்ல வரும் நம்பியாரை மக்கள் திலகம் அடித்து வீழ்த்துவார். அடிதாங்காமல் சுருண்டு கிடக்கும் நம்பியாருக்கு ஒரு தம்ளரில் தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்துவார். அதேபோலதான் அந்தத் தேர்தல் முடிவும் அமைந்தது. சூழ்ச்சியால் புரட்சித் தலைவர் ஆட்சியை இந்திராவைக் கொண்டு கருணாநிதி கலைத்தார். தேர்தலில் மக்கள் ஆதரவுடன் புரட்சித் தலைவர் கொடுத்த அடியால் வீழ்ந்தார். தோல்வியை ஜீரணிக்க முடியாமல் அடி தாங்காமல் கருணாநிதி பெங்களூர் கிளம்பி போய்விட்டார். பல்லாண்டு வாழ்க படத்தில் அடிதாங்காமல் துவண்டு கிடக்கும் நம்பியாருக்கு மனிதாபிமானத்துடன் தண்ணீர் கொடுப்பது போல ஜூன் 3 ம் தேதி காலை கருணாநிதிக்கு போன் செய்து அவருக்கு தலைவர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். இதுதான் தலைவரின் மனிதாபிமானம். ஸ்டைல். தேர்தலில் கொடுத்த அடியைவிட பலமான அடி..........Sy...

orodizli
28th September 2020, 09:14 AM
1980 தேர்தலின்போது தமிழன் தமிழனாக வாழ திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு ஓட்டளிக்குமாறு சிவாஜி கணேசன் பத்திரிகை விளம்பரம் எல்லாம் கொடுத்தார். 1977 நாடாளுமன்ற தேர்தலில் புரட்சித் தலைவரை ஆதரித்தபோதும், 1984 தேர்தலில் ஆதரித்தபோதும் தமிழன் பற்றி அவருக்கு அக்கறை இல்லைபோல.... "நாடாளப்போகட்டும் கருணாநிதி. நடிக்கப்போகட்டும் எம்ஜிஆர்" என்று மேடையில் சிவாஜி கணேசன் வீரவசனம் பேசினார். அப்போதெல்லாம் மனது கஷ்டமாக இருக்கும். இவரை எல்லாம் தம்பி என்று தலைவர் அன்பு காட்டுகிறாரே என்று வருத்தமாக இருக்கும். தேர்தல் முடிவுகள் புரட்சித் தலைவரை அவதூறு பேசியவர்கள் வாயில் .....யை வைத்து அடைத்தது..........Sy.........

orodizli
28th September 2020, 02:50 PM
மக்கள் திலகத்தை முதன் முதலாக பார்த்தபோது.....நெல்லை முத்தையா

பாவேந்தர் நூல்களை வெளியிடுவதற்காக 1944 ல் முல்லைப் பதிப்பகம் தொடங்கப் பெற்றது. சென்னைக்கு வரும்போது அறிஞர் அண்ணா அவர்கள் பதிப்பகத்துக்கு வருவது வழக்கம். பாவேந்தர் அவர்களும் அடிக்கடி வருவார்கள்.

பாவேந்தரும், அறிஞர் அண்ணாவும் ஒரு முறை கூட பதிப்பகத்தில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டதில்லை.

பாவேந்தரைக் காண இலக்கிய நண்பர்களும் ரசிகர்களும் வருவார்கள்.

அண்ணா அவர்களைக் காண அரசியல் நண்பர்களும், கட்சித் தோழர்களும் அதிகமாக வருவார்கள்.

எஸ்.வி. லிங்கம், நடிகமணி டி.வி. நாராயணசாமி, அரங்கண்ணல், ஆர்.எம்.வீ., பேராசிரியர் அன்பழகன், நாவலர் நெடுஞ்செழியன், டி.எம். பார்த்தசாரதி, சொல்லின் செல்வர் சம்பத், திருமதி சத்தியவாணிமுத்து, முன்னாள் மேயர் முனுசாமி முதலானோர் அண்ணா அவர்களைக் காண பதிப்பகத்துக்கு வருவார்கள்.

முப்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி, என் உள்ளத்தில் பசுமையாகத் திகழ்கிறது.

1945-ல் ஒரு நாள் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்கள் பதிப்பகத்துக்கு வந்தார்கள். பார்த்ததும் நான் தெரிந்து கொண்டேன். அதற்கு முன் நான் பார்த்ததும் இல்லை, பேசியதும் இல்லை.

சிவந்த மேனி, சுருண்ட முடி, வெள்ளைக் கதர் ஜிப்பா, கை சுருட்டி விடப்பட்டிருந்தது. கவர்ச்சி மிகுந்த தோற்றம்.

நான் வணக்கம் தெரிவித்தேன்.

பதில் வணக்கம் கூறி, புன்முறுவலுடன், ‘அண்ணா வந்திருக்கிறார்களா?’ என்று கேட்டார்.

‘வருவார்கள். உட்காருங்கள்.’ என்று கூறி உபசரித்தேன்.

சிறிது நேரம் இருந்துவிட்டு, எழுந்து புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பீரோவைப் பார்த்து, ‘அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு, பாரதிதாசன் கவிதைகள், குடும்ப விளக்கு, காதல் நினைவுகள்’ ஆகிய நூல்களை எடுத்து, ‘இதற்கு பில் போடுங்கள்’ என்று கூறி நூறு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து என்னிடம் எடுத்து என்னிடம் நீட்டினார் புரட்சி நடிகர்.

(அப்போது நூறு ரூபாய் நோட்டைக் காண்பதே அரிது.) நான் பிரமித்து விட்டேன்.

‘ரூபாய் வேண்டாம் புத்தகங்களை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறினேன்.

‘இது வியாபாரம். மூலதனம் போட்டு அச்சிட்டிருக்கிறீர்கள். வருகின்றவர்களுக் கெல்லாம் பணம் வாங்காமல் புத்தகங்களைக் கொடுத்தால் தொழில் என்ன ஆகும்?’ என்று கூறி நோட்டை நீட்டியவாறு இருந்தார்.

அவர் கூறிய சொற்களும், நடந்து கொண்ட பெருந்தன்மையும் என் உள்ளத்தை நெகிழச் செய்துவிட்டது. அதன் பின் என்னால் மறுக்க இயலவில்லை. பணத்தை அந்தச் சிவந்த கரங்களிலிருந்து பெற்றுக் கொண்டேன்.

சிறிது நேரத்தில் அண்ணா அவர்கள் வந்து விட்டார்கள். புரட்சி நடிகரும் அண்ணாவும் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்து விட்டுப் புறப்பட்டார்கள்.

அப்போது அவர் புன்னகை தவழ எனக்கு வணக்கம் தெரிவித்து விட்டுப் புறப்பட்ட காட்சியும், அவரது பெருந்தகைமையையும் என் உள்ளத்தில் பசுமையாய் பதிந்து விட்டது.

இப்பொழும் அதை நினைத்துப் பார்க்கிறேன். ‘ இந்தப் புத்தகங்களை எடுத்துக் கொள்கிறேன்’ என்று கூறி (பணம் கொடுக்காமல்) எடுத்துச் சென்றவர்களைப் பார்த்திருக்கிறேன். சொல்லாமலேயே எடுத்துக் கொண்டவர்களையும் கண்டிருக்கிறேன்.

ஆனால் வற்புறுத்தி பணத்தைக் கொடுத்து புத்தகங்களைப் பெற்றுக் கொண்ட புரட்சி நடிகரை நினைக்கும் போது எனக்கு பிரமிப்பாக இருந்தது.
- நூல் பதிப்பாசிரியர் திரு. முல்லை முத்தையா. (1982-ல்)
...mgn.........

orodizli
29th September 2020, 07:49 AM
Old IS. GOLD திரைப்படங்கள் ...என்றும் மக்கள் திலகத்தின் காவியங்கள் மட்டுமே.. கடந்த பல ஆண்டுகளாக
மக்கள் திலகத்தின் காவியங்களை வைத்து தான் பல திரையரங்குகள் வாழ்வு பெற்றது.... லட்சத்தில்....
கீழே சிறு துளி விளம்பரங்கள்....

திரையிட்ட விளம்பர விபரங்கள்
++++++++++++++++++++++++++++
26.3.1999. படகோட்டி
திருச்சி பேலஸ் 2 வாரம் ஒடியது.
புதுக்கோட்டை ஈனா
23.9.2001 ரகசியபோலிஸ் 115
கோவை கர்னாடிக் 2 வாரம் ஒடியது.
25.05.1990 உலகம் சுற்றும் வாலிபன்
கோவை கவிதா 2 வாரம் ஒடியது.
01.03.1991 ஒளி விளக்கு
கோவை சண்முகா 14 நாள் ஒடியது.
22.07.1996 அன்பே வா
கோவை டிலைட் 2 வாரம்
11.11.2004 சக்கரவர்த்தி திருமகள்
மதுரை மீனாட்சி 13 நாள் ஒடியது
8.9.2000 குலேபகாவலி
மதுரை மீனாட்சி 2 வாரம் ஒடியது.
14.5.2004 மாட்டுக்கார வேலன்
மதுரை மீனாட்சி இணைந்த 4 வாரம்
திரையிடப்பட்டது.
சேலம் சபரி அடிமைப்பெண்
1997 ல் 2 வாரம்
சேலம் சங்கம் எங்கவீட்டுப்பிள்ளை
04.06.2000 ...15 நாட்கள் ஒடியது..........UR...

orodizli
29th September 2020, 07:50 AM
#உலகம் சுற்றிய எம்ஜியார்#

எந்த அதிகாரப் பதவியில் இல்லாதபோதும் பல்வேறு நாடுகளின் அழைப்பை ஏற்று அந்நாடுகளுக்குச் சென்றுள்ளார் மக்கள் திலகம்..ந*டிக*ரான ஒருவரை அவரது மக்கள் சேவைக்காக பல்வேறு உலக நாடுகள் அழைப்பு அனுப்பி கவுரவித்தது எம்.ஜி.ஆருக்கு மட்டுமே உள்ள சிறப்பு!
#ர*ங்கூன்
சிறு வயதில் நாடகத்தில் நடிப்பதற்காக எம்.ஜி.ஆர். ரங்கூனுக்குச் சென்றுள்ளார்.

#இலங்கை
1965-ம் ஆண்டு இலங்கையில் தொண்டு அமைப்புகள், பத்திரிகை சங்கங்கள் எம்.ஜி.ஆருக்கு அழைப்பு விடுத்தன. அதை ஏற்று, நடிகை சரோஜா தேவி, ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்டோருடன் இலங்கை சென்ற எம்.ஜி.ஆரை விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வரவேற்ற னர். முன்னும் பின்னும் பைலட் கார்கள் அணிவகுக்க எம்.ஜி.ஆருக்கு இலங்கை அரசு சிறப்பான வரவேற்பு அளித்தது. சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு நின்று வாழ்த்தொலி எழுப்பி வரவேற்றனர்.

யாழ்ப்பாணம் விளையாட்டு மைதானத்தில் நடந்த வரவேற்பு கூட்டத்துக்கு இலங்கை நீதிபதி தம்பையா தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், ‘‘எம்.ஜி.ஆர். சிறந்த கலைஞர் மட்டுமல்ல; சிறந்த கொடையாளி. என் வாழ்நாளில் இந்தப் பகுதியில் இப்படி ஒரு பெருங்கூட்டத்தை பார்த்ததில்லை. தன்னைக் காண இலங்கையிலும் பெரும் கூட்டம் கூடும் என்பதை எம்.ஜி.ஆர். நிரூபித்துவிட்டார்’’ என்றார்.
இலங்கை பிரதமர் டட்லி சேனநாயகாவை மரியாதை நிமித்தமாக சந்தித்த எம்.ஜி.ஆர், அவருக்கு தென்னிந்திய நடி கர் சங்கத்தின் சார்பில் தந்தத்தால் செய்யப்பட்ட நேரு சிலையையும் தன் சார்பில் தந்தத்தில் ஆன மேஜை விளக்கையும் பரிசளித்தார். சிங்கள திரைப்படக் கலைஞர்கள் சார்பில் இலங்கை விஜயா ஸ்டுடியோவில் எம்.ஜி.ஆருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தான் பிறந்த கண்டி நகரையும் சென்று பார்த்தார்.
1965 அக்டோபர் 22-ம் தேதி கொழும்பு விளையாட்டரங்கில் எம்.ஜி.ஆருக்கு பிரம்மாண்ட பாராட்டு விழா நடந்தது. இலங்கை உள்நாட்டு அமைச்சர் தகநாயகா வரவேற்புரை வழங்கினார். அப்போது பலத்த மழை. அப்படியும் எம்.ஜி.ஆரின் பேச்சை லட்சக்கணக்கானோர் நனைந்தபடியே கேட்டனர். இலங்கை கலாச்சாரத் துறை அமைச்சர் காமினி ஜெயசூர்யா, எம்.ஜி.ஆருக்கு ‘நிருத்திய சக்கரவர்த்தி’ என்ற பட்டம் வழங்கி சிறப்பித்தார்.

#சிங்க*ப்பூர்
சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு நிதி திரட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்த வருமாறு அந்நாட்டு அரசு எம்.ஜி.ஆருக்கு 1972-ல் அழைப்பு அனுப்பியது. அதை ஏற்று, ஜெயலலிதா, முத்துராமன், நாகேஷ் உள்ளிட்டோருடன் சிங்கப்பூருக்கு எம்.ஜி.ஆர். சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தினார். இந்தி நடிகர் சசிகபூரும் வந்திருந்தார். கலை நிகழ்ச்சிகளுக்கு ஏராளமான மக்கள் திரண்டு வந்தனர். சிங்கப்பூர் மேயர், எம்.ஜி.ஆருக்கு வர வேற்பு அளித்தார். எலிசபெத் ராணிக்குப் பிறகு வாகனங்கள் நிறுத்தப்பட்டு எம்.ஜி.ஆருக்கு வரவேற்பு அளிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது!
‘‘எங்கள் குழுவினரின் கலை நிகழ்ச்சி கள் மூலம் சுமார் ஒரு லட்சம் டாலர் வரை (செலவு போக) சேர்ந்திருக்கும் என எண்ணுகிறேன். அந்த வரவேற்பை, அந்நாட்டின் வளர்ச்சியை என்னால் என்றுமே மறக்க முடியாது’’ என்று 1973-ம் ஆண்டு ஜனவரி மாத ஃபிலிமாலயா இதழில் சிங்கப்பூர் பயணம் பற்றி எம்.ஜி.ஆர். குறிப்பிட்டுள்ளார்.

#மாஸ்கோ
மாஸ்கோவில் 1973-ல் நடைபெற்ற சர்வதேச படவிழாவில் கலந்து கொள்ள வருமாறு எம்.ஜி.ஆருக்கு ரஷ்ய அரசு அழைப்பு விடுத்தது. ரஷ்யா செல்லும் முன் டெல்லி சென்ற எம்.ஜி.ஆருக்கு கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஷ்ய படவிழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார்.
இந்திய அரசின் சார்பில் அப்போது செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சராக இருந்த ஐ.கே.குஜ்ரால் (பின்னாளில் பிரதமராகவும் பதவி வகித்தார்) கலந்து கொண்டு பேசினார். படவிழா பிரதிநிதிகளுக்கு எம்.ஜி.ஆரை அவர் அறிமுகம் செய்து வைத்ததோடு, தமிழகத்தில் அவரது செல்வாக்கு பற்றியும் அவரது படங்களின் மகத்தான வெற்றிகள் பற்றியும் எடுத்துரைத்தார். லெனின்கிராடு நகருக்கும் எம்.ஜி.ஆர் சென்றார். ரஷ்ய வானொலி நிலை யத்தினர் அவரைப் பேட்டி கண்டு அதை ரஷ்ய மொழியில் ஒலிபரப்பினர்!

#லண்ட*ன்
பின்னர், மாஸ்கோவில் இருந்து லண்டனுக்குச் சென்றார் எம்.ஜி.ஆர்.!
லண்டன் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் எம்.ஜி.ஆருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு ஏராளமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட எம்.ஜி.ஆர்., லண்டன் பி.பி.சி. வானொலிக்கு சிறப்புப் பேட்டி அளித்தார்.

#பாரீஸ்
அங்கிருந்து பாரீஸ் நகருக்குச் சென்று அங்கும் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்..

#கிழ*க்கு ஆப்பிரிக்கா
பின்ன*ர் லண்ட*னிலிருந்து கிழக்கு ஆப்பிரிக்கா சென்றுவிட்டு இந்தியா திரும்பினார்!

#மொரீஷிய*ஸ்
நடிகராக இருந்தபோது, ஒரு நாட்டின் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு!
1974-ம் ஆண்டு மொரீஷியஸ் நாட்டின் அழைப்பை ஏற்று அந்நாட்டு குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக எம்.ஜி.ஆர். கலந்துகொண்டார்!

#அமெரிக்கா
1974-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களின் அழைப்பை ஏற்று எம்.ஜி.ஆர். அமெரிக்கா சென்றார். அமெரிக்க அரசின் தூதர் வரவேற்று அழைத்துச் சென்றார். ஹவாய் பல்கலைக்கழகத்தில் அளித்த பேட்டியின்போது சிக்கலான கேள்வி களுக்கு எம்.ஜி.ஆர். சாதுர்யமாகவும், நேர்மையாகவும் பதிலளித்து வியப்பில் ஆழ்த்தினார்! புகழ்பெற்ற மவுன்ட் சினாரியோ கல்லூரி சார்பில் அவருக்கு வரவேற்பிதழ் அளிக்கப்பட்டது. அரிசோனா பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் அளிக்க முன்வந்த போது அதை ஏற்க எம்.ஜி.ஆர். மறுத்துவிட்டார்!
ஜப்பான் உள்ளிட்ட கீழ்திசை நாடுகளில் படமாக்கி, தயாரித்து, இயக்கி, எம்.ஜி.ஆர். நடித்த படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. நிஜத்திலும் அவர் உலகம் சுற்றிய வாலிபன்தான்!.........ns...

orodizli
29th September 2020, 02:30 PM
1972 அக் 20 தேதி வெளியான படம்தான் உதயம் புரடொக்ஷன்ஸாரின் "இதயவீணை". சென்னையில் குளோப் ஸ்ரீகிருஷ்ணா மகாலட்சுமி ராஜகுமாரி ஆகிய 4 திரையரங்குகளில் வெளிவந்து குளோபில் 105 நாட்கள் ஓடிய வெற்றிக் திரைக்காவியம்.
படத்தின் வெளிப்புற படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்தது. ஆரம்ப காட்சியிலேயே காஷ்மீரின் கொள்ளை அழகுடன் தலைவர் தோன்றும் காட்சி மிகவும் சிறப்பாக படமாக்கப்பட்டிருந்தது.

"உலகம் சுற்றும் வாலிபனின்" வெளிநாட்டு படப்பிடிப்புக்கு பேருதவியாக இருந்த மணியனுக்காக எம்ஜிஆர் நடித்துக் கொடுத்த படம். "உலகம் சுற்றும் வாலிபனுக்கு" முந்தி வந்து வெற்றி பெற்ற திரைப்படம். எம்ஜிஆரின் இயல்புக்கு மாறான கதை. மணியன் 'ஆனந்த விகடனில்' தொடராக எழுதி வெற்றி பெற்ற "இதயவீணை" என்ற நாவலின் கதை. பொதுவாக பத்திரிகையில் வருகின்ற கதை வெற்றி பெற்றால் அதை சினிமாவாக தயாரிக்கும் போது அநேக படங்கள் தோல்வியானதை பார்த்திருக்கிறோம். ஆனால் எம்ஜிஆரிடம் அதுவும் பொய்த்து விட்டது.

படம் வெற்றி பெற்று மணியனுக்கும் வித்வான் வே லெட்சுமணனுக்கும் ஒரு புது உத்வேகத்தை கொடுத்தது என்றே சொல்ல வேண்டும்.
பெரியவர் தலைவருக்கு தந்தையாக நடித்திருப்பார். 'பொன்னந்தி மாலைப்பொழுது' எத்தனை முறை பார்த்தாலும் புதிதாக தோன்றும். அப்படி ஒரு நேர்த்தி. பாடல் படமாக்கப்பட்ட விதம் அருமையாக இருக்கும். படத்தில் தலைவரின் ஆடை வடிவமைப்பு கண்கொள்ளா காட்சி.

'இன்று போல என்றும் வாழ்க' பாடல் சாந்தம் தவழும் தலைவரின் முகம் ஞானிகளை நினைவு படுத்தும். 'ஆனந்தம் இன்று ஆரம்பம்' பாடலில் பழைய "வேட்டைக்காரன்" ஸ்டைலில் இளமையாக வந்து கலக்கும் போது அனைவருக்கும் உற்சாகம் பீரிடுவதை பார்க்க முடியும். படத்தின் ஆரம்ப காட்சி ஷூட்டிங் அந்த பாடல் காட்சிதான் என்று நினைக்கிறேன். சிவகுமாரின் வயதுக்கு மீறிய நடிப்பை ரசிக்க முடியவில்லை. அவரெல்லாம் தலைவரை அடிக்கும் போது அவரிடம் மெச்சூரிட்டி இல்லாததை. அந்தக்காட்சி வெளிப்படுத்துகிறது.

நீராடும் அழகெல்லாம்' அருமையான மெலடி. 'ஒரு வாலுமில்லை பாடல்'
அன்றைய அரசியல் சூழ்நிலைக்கேற்ப எழுதிய பாடல் தலைவர் குழந்தையை வைத்து பாடியிருப்பார். கேமரா கோணங்கள் அந்த பாடலில் வெகு சிறப்பாக இருக்கும். 'வசந்தா உன் கையை அய்யா வசம்தா' போன்ற வசனங்கள் படத்துக்கு மேலும் சிறப்பு சேர்த்தது.
'தரையிலே ஓடுமே லாரி' என்று கேட்டதும் நம்பியார் உடனே 'தரையிலும் ஓடும் நான் நினைத்தால் நாலு பேர் தலையிலும் ஓடும்' என்பது அவரது குணாதிசயத்தை ரசிக்கக்கூடிய காட்சி.

தலைவர் அதிமுக ஆரம்பித்தவுடன் வெளிவந்த முதல் படம். அப்போதிருந்த சூழ்நிலையில் நல்ல அரசியல் விழிப்புணர்வு மிக்க படமாக இருந்திருந்தால் ரசிகர்களுக்கு ஊக்கம், உற்சாகம் அதிகமாக பெருகியிருக்கும். ஆனால் இது போன்ற குடும்ப கதைகள் வெளிவரவேண்டிய நேரம் அதுவல்ல. அந்த கால சூழ்நிலைக்கு ஏற்ற படம் "நம்நாடு" மாதிரியான திரைக்காவியம்தான் என்றாலும் தலைவர் படம் என்பதால் சென்னையில் சாதா திரையரங்கில் வெளியாகி 10 லட்சத்தையும் தாண்டி வசூல் செய்தது பிரமிக்க தக்கது.

சென்னையில் மொத்தம் 331 நாட்கள் ஓடி ரூ10,12,765.80 வசூலாகப் பெற்றது. நெல்லையில் 63 நாட்கள் ஓடி மொத்தம் 1,02,078.25 வசூலாக பெற்றது குறிப்பிடதக்கது. மதுரை தேவியில் தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனை செய்த முதல் படம் இதய வீணைதான். மொத்தம் 112 நாட்கள் ஓடி ரூ 3,11691.20 வசூலாக பெற்று சாதித்த படம் இதய வீணை.

திருச்சி பேலஸில் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. கோவையில் இரண்டு திரையரங்குகளில் தொடர்ந்து திரையிட்டு 116.நாட்களும், சேலத்தில் மூன்று தியேட்டரில் வெளியாகி 133 நாட்களும் ஓடியது.
தமிழகத்தில் மொத்தம் 31 திரையரங்குகளில் 50 நாட்கள் ஓடி முதல் ஆறு மாத காலத்துக்குள் 75 லட்ச ரூபாய் வசூல் செய்து சாதனை
படைத்தது.

சென்னை குளோபில் 105 நாட்களும் ஸ்ரீகிருஷ்ணா வில் 86 நாட்களும் மகாலட்சுமி மற்றும் ராஜகுமாரியில் 70 நாட்களும் ஓடி வெற்றியை பதிவு செய்தது. ஆனாலும் கோவையில் தலைவர் படத்துக்கே உரிய கெத்துடன் சிவாஜி படத்தின் வசூலை கால்பந்தாடி மகிழ்ந்ததை காணலாம். 'இதயவீணை'யின் 4 வார வசூலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் கணேசனின் படங்கள்
'தரிகிணதோம்' போட்டதை
பார்க்கவும். (இணைப்பில்). தூத்துக்குடி பாலகிருஷ்ணாவில் 40
நாட்கள் ஓடியது மேலும் சிறப்பு............ks.........

orodizli
29th September 2020, 09:11 PM
எல்லா நடிகர்களுமே தங்களுக்கு என்று ஒரு ஸ்டைல் வைத்திருப்பார்கள். திரையில் அதைக் காட்டுவார்கள். ஸ்டைல் என்ற பெயரில் சில நடிகர்களின் செயற்கையான போஸ்களும், வேண்டுமென்றே இழு....த்து, வெட்டி வெட்டி நடக்கும் நடையும் அஷ்டகோணல் முகங்களும் பார்க்கவே கண்றாவியாக இருக்கும். சில நடிகர்கள் திரையில் ஸ்டைல் என்ற பெயரில் ஏதாவது செய்வார்கள். நேரில், பொது இடங்களில் அவர்களின் நடவடிக்கைகள் மிகச் சாதாரணமாக இருக்கும். சீ.. சீ.. என்று ஆகிவிடும்.

ஆனால், திரையில் மட்டுமல்ல, நேரிலும், படப்பிடிப்பு இல்லாமல் இயல்பாக இருக்கும்போதும் பொது இடங்களிலும் எப்போதுமே ஸ்டைலாக தோற்றமளிக்கும் ஒரே நடிகர், ஒரே தலைவர், ஒரே மனிதர் மக்கள் திலகம் மட்டுமே. தாயின் மடியில் படத்தில் பிரம்பை வளைத்தபடி அவர் ஸ்டைலாக நிற்கும் போஸ் பாருங்கள். பிரம்பை நேராக பிடித்திருந்தால் ஸ்டைலாக இருக்காது. அதற்காக பிரம்பை அவர் எப்படி வளைத்து பயன்படுத்தியிருக்கிறார் பாருங்கள். புருவத்தை லேசாக நெரித்தபடி நெஞ்சை அள்ளும் புன்னகை. அடுத்தபடத்தை கவனியுங்கள். வழக்கமாக பொது இடங்களில் தோன்றும் தோற்றம். அப்போதும் ஸ்டைலாக நாடியில் கைவத்தபடி கலக்கல் போஸ். திரையிலோ, நேரிலோ எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் மாறாத, இளமை குன்றாத வசீகர சிரிப்பு அவருக்கு மட்டுமே சொந்தமானது.

ஸ்டைலில் மக்கள் திலகத்துக்கு ஒரே ஒருவர்தான் போட்டி. அது புரட்சித் தலைவர்தான்..........sy...

orodizli
29th September 2020, 09:12 PM
மக்கள் உள்ளத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

#நடந்த #நிகழ்ச்சி : .........

தென்காசிக்கு அருகேயுள்ள ஒரு கிராமத்தில் வேர்க்கடலை தோண்டும் வேலைகள் நடைபெற்றது. அங்கே ஏராளமான பெண்கள் வேலை பார்த்து வந்தனர். நாள் ஒன்றுக்கு 3 ரூபாய் கூலிக்கு வேலை பார்த்து வந்தார்கள். வேலை பார்க்கும் பெண்களுக்கெல்லாம் தலைவராக கமால்தீன் என்ற ஒருவர் உண்டு !

ஒரு நாள் கமால்தீன் எல்லாப் பெண்களையும் கூப்பிட்டு வரிசையாக நிறுத்தி அதாவது இந்த கிராமத்தில் 15 நாட்கள் தொடர்ந்து வேலை கொடுத்தது நாங்கள் தானே ?

நாளை ஒரு நாள் வேலை இருக்கும். அதனால் நாளை செய்யும் வேலைக்கு சம்பளம் கிடையாது. இலவசமாகச் செய்ய வேண்டும் என்றார். அதற்கு பெண்கள் எல்லோரும் நாங்கள் இலவசமாக செய்கிறோம் ஆனால் நீங்கள் ஒரு நாளைக்கு எம்.ஜி.ஆரை கூட்டி வந்து நேரில் காட்டி விடுங்கள் என்றார்கள். கமால்தீன் திகைத்துப் போனார். 3 ரூபாய் சம்பாதித்தால் தான் சாப்பாடு என்ற நிலையில் இருக்கும் பெண்களின் உள்ளங்களில் கூட புரட்சி நடிகர் குடிபுகுந்து இருப்பதை கண்கூடாகக் காண்கிறோம்.

நேரில் மக்கள் திலகத்தை காட்டிவிட்டால் எத்தனை நாளைக்கும் பட்டினி கிடக்க கூட தயாராக இருப்பார்கள் போல்.

( திரைச் செய்தி - 06- 05- 1967 )

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க...vs...

orodizli
30th September 2020, 07:49 AM
இந்திய அளவில் ...ஏன் உலக அளவில் ...கூட அதிகமான இரட்டை வேட வெற்றி படங்களை தந்தவர் நம் இதயதெய்வம் அவர்கள் மட்டுமே.

1958 இல் மன்னன் மார்த்தாண்டன், போராளி வீராங்கன் ஆக நாடோடி மன்னனில்...

1960 இல் தேசிங்கு மற்றும் தாவூத்கான் ஆக ராஜா தேசிங்கில்.

1961 இல் அறிவழகன் மற்றும் அவர் தந்தை ஆக அரசிளங் குமரியில்.

1963 இல் விண்வெளி கோமாளி மற்றும் போஜன் ஆக கலை அரிசியில்..

1965 இல் ராமு மற்றும் இளங்கோ ஆக எங்க வீட்டு பிள்ளையில்.

1965 இல் மனோகர் வஜ்ரவேல் ஆக நம் ஆசைமுகத்தில்.

1968 இல் மக்கள் திலகம்...மற்றும் சரவணன் ஆக தேர்திருவிழாவில்.

1968 இல் ஆனந்த் மற்றும் சேகர் ஆக நாம் குடியிருந்தகோவிலில்.

1969 இல் வீர வேங்கையன் மற்றும் அவர் தந்தை ஆக அடிமைபெண்ணில்.

1970 இல் வேலன் மற்றும் ரகு ஆக மாட்டுக்கார வேலனில்.

1970 இல் மக்கள் திலகம் மற்றும் தங்கம் ஆக எங்கள் தங்கத்தில்

1971 இல் மணிவண்ணன் மற்றும் கரிகாலன் ஆக நீரும் நெருப்பில்..

1973 இல் சரித்திர வெற்றிபடம் உ.சு.வா வில் முருகன் மற்றும் அவர் தம்பி ராஜு ஆக.

1973 இல் பொன்னையா மற்றும் முத்தையா ஆக பட்டிக்காட்டு பொன்னையாவில்..

1974 இல் மாணிக்கம் குமார் ஆக நேற்று இன்று நாளையில்..
ரத்தினம் என்றும் உண்டு.

1974 இல் ராமு மற்றும் உஸ்தாத் அப்துல் ரகுமான் ஆக சிரித்து வாழ வேண்டும் அதில்.

1975 இல் சுந்தரம் மற்றும் ரஞ்சித் ஆக நினைத்ததை முடித்ததில்..

1975 இல் மீண்டும் சங்கர் விஜயகுமார் ஆக நாளை நமதே இல்.

1976 இல் செல்வம் மற்றும் ராஜா ஆக ஊருக்கு உழைத்தத்தில்.

இன்னும் ஒப்பந்தம் செய்து வெளிவராத படங்கள் தவிர 19 இரட்டை வேட படங்களில் தனி முத்திரை பதித்த ஒரே நடிகர் நம் தலைவர் மட்டுமே ஆவார்.

வாழ்க அவர் புகழ்.
உங்களில் ஒருவன் நன்றி....தொடரும்.

முடிந்தால் மோதி பாருங்கள்... இருந்தால் ஆமோதிக்கிறோம்.

தலைவர் ஒரு பேட்டியில் சொல்கிறார்.

உங்களுக்கு பிடித்த படம் உங்கள் இரட்டை வேடங்களில் எந்த படம் என்று ..

அதற்கு அவர் சொன்ன பதில்..குடியிருந்த கோயில் என்று............Mn...

orodizli
30th September 2020, 02:08 PM
"சபாஷ் மாப்பிளே" 1961 ஜீலை 14ம் தேதி வெளியான முழு நீள காமெடி படம். மக்கள் திலகம் காமெடி முத்திரையில் நடித்த ஒரே படம்.
மக்கள் திலகத்திடமிருந்து இப்படி ஒரு காமெடி படத்தை மக்கள் எதிர்பார்க்கவில்லை. அதனால் அந்த காலகட்டத்தில் இந்த படத்தை சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை என்று நினைக்கிறேன். ஆனால் படம் வெளிவரும் நேரத்தில் பல தியேட்டர் காரர்கள் போட்டி போட்டார்கள் படத்தை எடுப்பதற்கு. அந்த அளவுக்கு படத்தின் மீது ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.

மும்பையில் படப்பிடிப்பு நடத்தியது ஒரு காரணமாக இருக்கலாம். மும்பையை பார்க்கும் போது ஏதோ வெளிநாட்டை பார்ப்பது போல மக்கள் ரசித்தார்கள். ரசிகர்களிடம். முன்பே இது முழுநீள காமெடி படம், என்ற விஷயத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தார்களானு தெரியவில்லை. எனக்கு மிகவும் பிடித்த படம் "சபாஷ் மாப்பிளே"

பாடல்கள் k v மகாதேவன் இசையில் அத்தனையும் ஜொலிக்கிறது. இருப்பினும் சீர்காழி கோவிந்தராஜனை சோகப் பாடலுக்கு மட்டும் பயன்படுத்தி இருக்கலாம். சூலமங்கலத்தின் குரல் தேனாக இனிக்கிறது.. 'மாப்பிள்ளே மாப்பிள்ளே வாராரு', 'ஜிகு ஜிகு உடையிலே', 'யாருக்கு யார் சொந்தம் என்பது' போன்ற பாடல்கள் காதுக்கு இனிமை சேர்க்கின்றது., 'வெள்ளிப்பணத்துக்கும் நல்ல குணத்துக்கும் வெகு தூரம்' இந்த பாடல் மட்டும் ராகவன் பாடியிருப்பார். 'தினம் சிரிப்பவர் சில பேர் அழுபவர் பல பேர்', 'முத்து போலே மஞ்சள் கொத்து போலே" போன்ற முத்தான பாடல்கள் நிறைந்த பொழுது போக்கு படம் "சபாஷ் மாப்பிளே".

எம்ஜிஆருக்கு ஜோடி மாலினி. படத்தின் டைரக்டர் ராகவனின் மனைவி என்று நினைக்கிறேன்..
ஏற்கனவே "சபாஷ் மீனா"விலும் இவர்தான் கதாநாயகி. இதைத்தவிர "அழகுநிலா" என்ற படத்திலும் நடித்த ஞாபகம். எம்ஜிஆருக்குள் இப்படி ஒரு காமெடி சென்ஸா என்று அதிசயிக்க வைத்த படம். வேலை தேடி மும்பை சென்று பணத்தை பறிகொடுத்து
பின் சினிமாவில் நடித்து என்று சோகமயமாக சில காட்சிகள் செல்வது நமக்கு கொஞ்சம் தளர்வாக இருந்தாலும் போகப்போக காமெடியின் உச்ச கட்டத்தில் கொண்டு விடுவார்கள்.

ரசிகர்கள் எம்ஜிஆரை காமெடி ரோலில் பார்க்க விரும்பவில்லை போலும். ஆனாலும் ஓரளவு சுமாரான வெற்றியை பதிவு செய்தது. மறு வெளியீட்டில் நிகரற்ற வெற்றியை பெற்றது. முதல் வெளியீட்டில் நான் பார்க்கவில்லை. ஆனால் பலமுறை தூத்துக்குடி ஜோசப்பில் மறுவெளியீட்டில் திரையிடும் போதுதான் பார்த்தேன். ஆனால் எப்போதுமே படம் எங்கும் ஓடுவதால் புதிய காப்பி திரையிடப்படவில்லை. மிகவும் 'கட்' ஆன பிரிண்டையே அடிக்கடி திரையிடுவார்கள்.

விநியோகஸ்தர்கள், எப்போதுமே இரண்டு காப்பி வைத்திருப்பார்கள். ஒன்று டூரிங் தியேட்டரில் ஓட்டுவதற்கு மற்றொன்று சிட்டியில் திரையிடுவதற்கு. நல்ல பிரிண்டை தலைகீழாக நின்றாலும் டூரிங் தியேட்டருக்கு கொடுக்க மாட்டார்கள். நாம் விநியோகஸ்தரை அணுகி பிரிண்ட் கேட்டால் எந்த ஊர்? என்று கேட்டு புரஜெக்டரின் தன்மை அறிந்து கொடுப்பார்கள்.

சில ஊரிலிருந்து வருபவர்களிடம் என்னப்பா பிரிண்டை இப்படி கொத்தி குதறி வைத்திருக்கிறீர்கள். அதை ஒட்டி எடுப்பதற்குள் 20 நிமிட காட்சி கட் ஆகிவிட்டதப்பா அதற்கு அபராதம் வசூலிக்க போகிறோம் என்று மிரட்டுவார்கள். அடுத்த தடவை புரஜெக்டரை மாத்தலைன்னா இந்த பக்கம் வந்திராதீங்க. வந்தாலும். எம்ஜிஆர் படம் தர மாட்டேன். அங்க பார் ஓடாத எத்தனையோ சிவாஜி படங்களும் மற்ற படங்களும் இருக்கு. எதையாவது எடுத்து போய் தொலை என்று சொல்லி விரட்டி அடிப்பதை பார்த்திருக்கிறேன்.

சில படங்களை சனியன் இங்கிருந்து போய் தொலைய மாட்டேங்குது. அடிக்கடி இதை நாமதான் ஓட்ட வேண்டியிருக்குது, தியேட்டரில் எங்க ஓடுது என்று அலுத்துக்கொள்வதையும் பார்த்திருக்கேன். சிவாஜி படம் போனால் ரிட்டர்ன் டிக்கெட்டோடத்தான் போகும். இரண்டு நாளில் திரும்பவும் பெட்டிக்குள் வந்து அடைந்து விடும். ஆனால் "சபாஷ் மாப்பிளே" எப்போதும் எங்காவது ஓடிக் கொண்டே இருக்கும். சென்னையில் மார்ச் 23 வெளியீடான "திருடாதே" ஓடிய அரங்குகளான பிளாசா, பாரத், மகாலட்சுமியில் ஜீலை 14 முதல் வெளியாகி சென்னையில் 48 நாட்களும் மற்ற ஊர்களில் அதிகபட்சமாக 70 நாட்களும் ஓடி சராசரி வெற்றியை பதிவு செய்தது.

"சபாஷ் மாப்பிளே" ஓடி முடிந்ததும் அதே அரங்குகளில் "நல்லவன் வாழ்வான்" ஆகஸ்ட் 31 முதல் திரையிடப்பட்டது. "நல்லவன் வாழ்வான்" 68 நாட்கள் ஓடியதை தொடர்ந்து நவ 7 ல் வெளியான "தாய் சொல்லை தட்டாதே" அதே திரையரங்குகளில் ரிலீஸ் செய்தார்கள். இப்படி ஒரே குரூப் திரையரங்குகளில் தொடர்ந்து தலைவரின் படங்களே வரிசையாக வெளிவந்து ஆண்டு இறுதி வரை ஓடியது ஒரு அதிசயமே..........ks.........

orodizli
30th September 2020, 02:09 PM
பொன்மனச்செம்மல்...தன் அன்றாட வாழ்வில் என்ன செய்தாரோ .. அதைச் சொல்ல ஒரு படம் -

"#நீதிக்குத் #தலைவணங்கு"

இந்த தலைப்பு மக்களை எந்த அளவு கவர்ந்தது என்பதற்கு ஒரு சிறு நிகழ்ச்சி ...

பாரிமுனையில் பழம் விற்கும் ஒரு தாய், புரட்சித்தலைவர் நினைவாற்றல் இழந்து படுத்திருக்கும் போது, அவர் துதித்து வந்த தாய் மூகாம்பிகைக்கு உயர்நீதிமன்றத்தின் சுவரை ஒட்டி ஒரு சிறு கோவில் அமைத்து, அந்த தாயும், சக வியாபாரிகளும், தலைவர் நலம் பெற வணங்கினர்.

தினசரி பூஜை புனஸ்காரங்களுக்கான செலவுகளுக்கு அந்த தாய் மிகவும் கஷ்டப்பட்டார்...அதைப்பற்றி கேட்டதற்கு..."எனக்கு ஒரு கஷ்டமும் இல்லப்பா, நாங்க எங்க உசுரான தலைவருக்கு, எங்க திருப்திக்காக தான் செய்யறோம்...அவர் கேக்கல...

இதில எங்களுக்கு கஷ்டம் என்னன்னா இக்கோயிலை இடிக்கச் சொல்றாங்க...நாங்க தினம் தினம் போராடறோம்..என்று கண்ணீர் மல்கினார்.

அது சரி கோயில் கட்ட இந்த இடத்தை ஏன் தேர்ந்தெடுத்தீங்க..? எனக் கேட்டதற்கு..

அந்த தாய் கூறியது ..."#என் #தலைவன் .. #நீதிக்குத் #தலைவணங்கினாருப்பா...#மத்தவங்க #போல "#நீதிக்குதண்டனை" #கொடுக்கலை...( 'நீ.தண்டனை.. படம் கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதியது)

கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்பது போல...
#பொன்மனச்செம்மல் #புரட்சித்தலைவரின் #திரைப்படங்களின் "#தலைப்புகள்" #கூட #மக்களின் #மனதில் #நற்பண்புகளை #விதைத்துவிடும்............bsm...

orodizli
30th September 2020, 03:18 PM
திருச்சி மாநகரில் திராவிடத்தின் தலைமகன் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் காலத்தால் அழியாத திரைக்காவியங்கள்* மகத்தான முறையில் ஓடி வரலாறு படைத்துள்ளது...

நகரில் அதிக அளவில் 100 நாட்களை கடந்து சாதனை படைத்த திரைப்படங்கள் இன்று வரை மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஒருவருக்கு மட்டுமே அதிகமாகும்.

நகரில் 100 காட்சிகளுக்கு மேல் அரங்கு நிறைந்து சாதனை படைத்த திரைப்படங்கள் யாவும் புரட்சித் தலைவருக்கு மட்டுமே அதிகமாகும்.

நகரில் வெள்ளி விழாவை கடந்து 200 நாட்களுக்கு மேல் சாதனை படைத்த காவியங்கள் இரண்டு...
எங்கவீட்டுப்பிள்ளை*
236 நாட்கள்*
உலகம் சுற்றும் வாலிபன்*
203 நாட்கள்

நகரில் மக்கள் திலகத்தின் அதிக கருப்பு-வெள்ளை திரைப்படங் களும், வண்ணப் படங்களும் அதிக அளவில் 100 நாட்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

மக்கள் திலகத்தின் காவியங்கள் தொடர்ந்து ஓடி சாதனைகளை படைத்து முதலிடம் வகிக்கிறது.

திரை உலக சக்கரவர்த்தி மக்கள் திலகத்தின் 43 திரைப்படங்கள் ஒரே திரையரங்கில் 100 நாட்களை கடந்து சாதனை படைத்த அதிசயம் எந்த நடிகருக்கும் கிடையாது.

12வாரங்களுக்கு மேல் ஓடி* தொடர் வெளியீட்டில் 17 காவியங்கள் 100 நாட்களை கொண்டாடி சாதனை படைத்து உள்ளது-

1977 வரை நகரில் மக்கள் திலகத்தின் திரைக்காவியங்களே அதிக அளவில் வசூலில் முன்னணி படைத்துள்ளது.*

100 நாட்களை வெற்றிக்கொண்ட திரைக்காவியங்கள் பட்டியல்.....
தொடர்கிறது.............ur...

orodizli
30th September 2020, 03:20 PM
திருச்சி மாநகரில் 100 நாட்களை கடந்த ஓடிய மக்கள் திலகத்தின் முதல் திரைப்படப் பட்டியல்....

1947 ராஜகுமாரி*
வெலிங்டன் 147 நாட்கள்*

1948 மோகினி*
கெயீட்டி 105 நாட்கள்

1950 மருத நாட்டு இளவரசி
*கெயீட்டி 105 நாட்கள்

1950 மந்திரிகுமாரி*
ஸ்டார் 140 நாட்கள்*

1951 மர்மயோகி*
வெலிங்டன் 126 நாட்கள்*

1951 சர்வாதிகாரி**
ஸ்டார் 117 நாட்கள்

1952 அந்தமான் கைதி*
வெலிங்டன் 105 நாட்கள்*

1952 என் தங்கை*
ஜூபிடர் 147 நாட்கள்*

1953 ஜெனோவா*
ராஜா 105 நாட்கள்*

1954 மலைக்கள்ளன்*
வெலிங்டன் 133 நாட்கள்**

1955 குலேபகாவலி*
பிரபாத் 166 நாட்கள்*

1956 அலிபாபாவும் 40 திருடர்களும்
வெலிங்டன்147 நாட்கள்*

1956 மதுரைவீரன்*
ஜூபிடர் 169 நாட்கள்*

1956 தாய்க்குப்பின் தாரம்*
ராக்ஸி 147 நாட்கள்

1957 சக்கரவர்த்தி திருமகள்*
கெயீட்டி 126 நாட்கள்*

1958 நாடோடி மன்னன்*
ராக்ஸி 161 நாட்கள்*

1961 திருடாதே*
ராக்ஸி 126 நாட்கள்*

1961 தாய் சொல்லைத்தட்டாதே**
ஜுபிடர் 126 நாட்கள்*

1962 தாயைக்காத்த தனயன்*
பேலஸ் 140 நாட்கள்

1964 பணக்கார குடும்பம்*
பேலஸ் 115 நாட்கள்

1965 எங்க வீட்டுப்பிள்ளை
ஜூபிடர்* 236 நாட்கள்**

1966 அன்பே வா*
ராஜா 126 நாள்*

1967 காவல்காரன்*
ஜுபிடர் 126 நாள்.*

1968 ரகசிய போலிஸ் 115
ஜூபிடர் 110 நாட்கள்

1968 குடியிருந்த கோயில்
ராஜா 126 நாள்

1968 ஒளி விளக்கு
ராஜா 116 நாட்கள்

1969 அடிமைப்பெண்
ஜூபிடர் 133 நாட்கள்

1969 நம்நாடு
வெலிங்டன் 119 நாட்கள்
+++++++++++++++++++++++
28 படங்கள் 100 நாட்களை கடந்துள்ள முதல் பட்டியல்...

அடுத்து வசூலுடன்*...
பட்டியல் தொடரும்.......ur...

orodizli
30th September 2020, 03:20 PM
1956 :.மதுரை வீரன்
ஜூபிடர் :169 நாள்
வசூல்: 2,46,381.17

1958 : நாடோடி மன்னன்
ராக்ஸி :.161 நாட்கள்
வசூல் : 2,69,706. 42

1965 : எங்கவீட்டுப்பிள்ளை
ஜூபிடர் : 236 நாள்
வசூல் : 3,36,407.50

1966: அன்பே வா
ராஜா : 126 நாள்
வசூல்: 2,45,781.05

1967 : காவல் காரன்
ஜூபிடர் : 126 நாள்
வசூல் : 2,20,137.50

1968 ரகசிய போலிஸ்115
ஜூபிடர் 110 நாள்
வசூல் : 2,15,306.77

1968 :குடியிருந்த கோயில்
ராஜா 126 நாள்
வசூல் : 2,68,922.30

1968 : ஒளி விளக்கு
ராஜா :116 நாள்
வசூல் : 2, 41,621.65

1969 : அடிமைப்பெண்
ஜூபிடர் : 133 நாள்
வசூல் :.3,14,323.24

1969 : நம்நாடு
வெலிங்டன் : 119 நாள்
வசூல் : 2,63,805.38
++++++++++++++++++

வசூல் விபரங்கள் தொடரும்.......ur...

orodizli
30th September 2020, 03:23 PM
திருச்சி நகரில் மக்கள் திலகம் படைத்த 2 வது சாதனை பட்டியல்....

1970 .....ல்
மாட்டுக்கார வேலன்
பேலஸ் 150 நாள் : 3,00,503.50
என் அண்ணன்
வெலிங்டன் 110 நாள் : 2,59,412.65
தேடி வந்த மாப்பிள்ளை
ராக்ஸி 84 நாள் : 2,17,995.55
தொடர்ந்து மத்மாமணி அரங்கில்*
18 நாட்கள் ஒடி...இணைந்து 100 நாளை கண்டது.....
எங்கள் தங்கம்
பேலஸ் 105 நாள் : 2,41,520.60
தலைவன்
ராக்ஸி 56 நாள் : 1,77,550.75
++++++++++++++++++++++++++
1971......ல்
குமரிக்கோட்டம்
பேலஸ் 86 நாள் :.2,19,503.30
ரிக்க்ஷாக்காரன்
பேலஸ் 142 நாள் : 3,37,402.55
நீரும் நெருப்பும்
ஜூபிடர் 78 நாள் : 2,23,467.45
+++++++++++++++++++++++++++
1972 ....ல்
நல்லநேரம்*
ஜூபிடர் 126 நாள் : 3,29,260.73
தொடர்ந்து ராமகிருஷ்ணாவில் வெளியாகி 28 நாள் ஒடியது.
இதய வீணை*
பேலஸ் : 112 நாள் : 3,11,900.42
+++++++++++++++++++++++++++
1973 ....ல்
உலகம் சுற்றும் வாலிபன்
பேலஸ் 203 நாள் : 5,14,729.73

நகரில் அதிக காட்சி (167) அரங்கு நிறைந்து முதன் முதலில்*
5 லட்சத்தை பெற்றக்காவியம் .
+++++++++++++++++++++++++++++
மேலும் சாதனைகள் தொடரும்.........

நன்றி ...
திருச்சி மாவட்ட எவர்கிரீன் ஹீரோ எம்.ஜி.ஆர் மன்ற மலர்..........ur...






*

fidowag
30th September 2020, 11:53 PM
தனியார் தொலைக்காட்சிகளில் நடிக மன்னன் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள்*24/09/20 முதல் 30/09/20 வரை வெளியான*பட்டியல் விவரம்*
------------------------------------------------------------------------------------------------------------------------------
24/09/20* - சன் லைப் - காலை 11 மணி - நவரத்தினம்*

* * * * * * * * * மெகா டிவி -மதியம் 12 மணி -கலங்கரை விளக்கம்*

* * * * * * * *புதுயுகம் டிவி - இரவு 7 மணி - சங்கே முழங்கு*

* * * * * * * * *பாலிமர்* டிவி -இரவு 11 மணி - விவசாயி*


25/09/20* *-சன் லைப் - காலை 11 மணி - எங்க வீட்டு பிள்ளை*

26/09/20 -* ஜெயா டிவி -மாலை 5.30 மணி -ஆயிரத்தில் ஒருவன்*

* * * * * * * *தமிழ் மீடியா* -இரவு* 8 மணி - உலகம் சுற்றும் வாலிபன்*

27/09/20 - மெகா டிவி* - அதிகாலை 1 மணி - குடியிருந்த கோயில்*

* * * * * * * *ராஜ் டிஜிட்டல் -காலை* 9.30 மணி - ரகசிய போலீஸ்* 115

* * * * * * * மெகா 24* * -பிற்பகல் 2.30 மணி -* தாய்க்கு தலைமகன்*

* * * * * * * *ராஜ் டிஜிட்டல் -இரவு 8.30மணி - தேடிவந்த மாப்பிள்ளை*

28/09/20 - சன் லைப் - காலை 11 மணி* - நல்ல நேரம்*

* * * * * * * * முரசு* -மதியம் 12மணி/ இரவு 7 மணி -பெற்றால்தான் பிள்ளையா*

* * * * * * * * புதுயுகம் டிவி -இரவு 7 மணி - பெற்றால்தான் பிள்ளையா*

29/09/20-* சன் லைப் - காலை 11 மணி* - காவல்காரன்*

* * * * * * * * மீனாட்சி டிவி -இரவு 9.30மணி - நல்ல நேரம்*

* * * * * * * * பாலிமர் டிவி -இரவு 11 மணி -நவரத்தினம்*

30/09/20 - சன் ;லைப் - காலை 11 மணி -நான் ஏன் பிறந்தேன்*

* * * * * * * * மூன் டிவி* - பிற்பகல் 12.30மணி -காதல் வாகனம்*

* * * * * * * *மெகா* 24 - பிற்பகல் 2.30மணி -தர்மம் தலைகாக்கும்*

* * * * * * * *மீனாட்சி*டிவி*-இரவு 9.30 மணி - வேட்டைக்காரன்*

* * * * * * * எம்.எம்.டிவி - இரவு 10 மணி - கணவன்*

orodizli
1st October 2020, 08:13 AM
கவிஞர் வாலி புரட்சித் தலைவரைப் பாராட்டி இப்படிச் சொன்னார்..

‘‘மனிதர்களில் எவ்வளவோ நடிகர்கள் உண்டு. நடிகர்களில் நான் பார்த்த முதல் மனிதன் நீதான்’’

அவர் சொன்னதுபோல சினிமாவில் எவ்வளவோ நடிகர்கள் இருக்கலாம். அவர்கள் எல்லாம் வெறும் நடிகர்கள். அவ்வளவுதான். கூலிக்கு மாரடித்து பணம் சம்பாதிப்பவர்கள். நடிப்புக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இருக்காது. கர்ணனாக நடிப்பவன் கஞ்சனாக இருப்பான். கடவுளாக நடிப்பவன் குடிகாரனாக இருப்பான். மனிதர்களிலேயும் நடிப்பவர்கள் உண்டு. ஆனால், நடிகராக இருந்தும் பணம் மட்டுமே வந்தால் போதும் என்று கண்ட படங்களில் நடிக்காமல், ஒரு கொள்கையோடு நடித்து, தனது நடிப்பால், உழைப்பால் கிடைத்த பணத்தையும் மக்களுக்காகவே அள்ளிக் கொடுத்தவர் புரட்சித் தலைவர்.

புகைப்படத்தை பாருங்கள். எந்த ஒரு நடிகரையோ, எந்த ஒரு தலைவரையோ ஒரு ஏழைக் கிழவி தனது சோகத்தைப் போக்க இப்படி கட்டி அணைத்தபடி ஆறுதல் தேட முடியுமா? புரட்சித் தலைவரும் வேறுபாடு பார்க்காமல், அருவெறுப்பு இல்லாமல் அந்த ஏழைக் கிழவியை எப்படி பாசத்தோடு ஆறுதலாக அணைத்திருக்கிறார் பாருங்கள்.

மக்கள் திலகம் வெறும் நடிகர் அல்ல. அதற்கு அப்பாற்பட்ட தலைவர் மட்டுமே அல்ல. அதற்கும் மேலாக நல்ல மனிதர் மட்டுமே அல்ல. அதை எல்லாம் தாண்டி ஏழைகளின் கண்கண்ட கடவுள்.
மகான் " எம்ஜிஆர் "......... Swamy.........

orodizli
1st October 2020, 08:15 AM
சபாஷ் மாப்பிள்ளை ரசிக்கத்தக்க படம். தனக்கு ஆக்*ஷன் நடிப்பு மட்டுமின்றி, காமெடி நடிப்பும் இயற்கையாக வரும் என்று மக்கள் திலகம் நிரூபித்த படம். திருட்டு கொடுத்த பணத்தை கம்பெனியில் கட்டுவதற்காக மக்கள் திலகம் மும்பை சென்று கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்து வந்து அதையும் திருட்டு கொடுப்பதும் ஜெயிலுக்கு போவதும் எதிர்பாராத ட்விஸ்ட். படம் வெளியான 49 வது நாளில் நல்லவன் வாழ்வான் படம் வெளியானதும் மாப்பிள்ளையின் ஓட்டம் தடைபட்டதற்கு காரணம். சபாஷ் மாப்பிள்ளை படத்தை பார்த்துவிட்டு 'சபாஷ் எம்ஜிஆர்' என்று அண்ணா பாராட்டி அது செய்தியாகவும் வந்தது. இதைவிட வேறு என்ன சிறப்பு வேண்டும்?.........Sy...

fidowag
1st October 2020, 04:24 PM
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின்*டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*29/09/20 அன்று அளித்த தகவல்கள்*
----------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் என்கிற மகோன்னதமான கலைஞன், மகோன்னதமான மனிதரின் மகோன்னதமான மகத்தான* பண்பு என்பது எந்த அளவிற்கு மக்களை சென்றடைந்துள்ளது என்பது விந்தையிலும் விந்தை .இன்றைக்கும் ஒரு பல்கலை கழகம் போல அவரது படங்களின் பாடங்கள், படிப்பினைகள் எவ்வளவு பேர்களின் வாழ்க்கைக்கு ஊக்கமும் , நம்பிக்கையும் தருவதாக இருக்கின்றது என்பதை நாம் பார்த்து கொண்டிருக்கிறோம் .


மும்பை தாராவியில் இருந்து புலவர் ராமச்சந்திரன் குறிப்பிட்டு சொல்கிறார் .நீங்கள் கண்டிப்பாக வத்தலகுண்டு ஆறுமுகம் பற்றி சொல்லித்தான் ஆகவேண்டும் .ஏனென்றால் அவர் எம்.ஜி.ஆரின் உண்மை விசுவாசி .உண்மையில் எம்.ஜி.ஆரின் குணம் என்னவென்றால் தனக்காக பாடுபட்டவர்கள், காயப்பட்டவர்கள்,அவதிப்பட்டவர்கள், உயிர் நீத்தவர்கள் இல்லத்திற்கு சென்று ஆறுதல் சொல்வது மட்டுமின்றி ,அவர்களின் குடும்பத்திற்கு தேவையான அளவு நிதி உதவி, அளித்திருக்கிறார் .தொடர்ந்தும் அதை செய்திருக்கிறார். நன்றி மறவாத நல்ல மனம் கொண்டவர் எம்.ஜி.ஆர். அவரே ஒரு படத்தில் இதை பாடியிருப்பார் .அதுவே என் மூலதனம் ஆகும் என்று .எம்.ஜி.ஆரிடம் என்றைக்கோ உதவி பெற்றவர்கள், கடிதம் பெற்றவர்கள் கூட ,அவர் முதல்வரான பின்பு, கோட்டைக்கு சென்று ,நீங்கள் எனக்கு இப்படி ஒரு கடிதம் எழுதி இருக்கிறீர்கள் நினைவிருக்கிறதா என்று காட்டி ,பேசி ,சில உதவிகள் பெற்றிருக்கிறார்கள் .மக்களோடு* நேரடியாக ,மக்களுக்காக மக்களிடமிருந்து கற்று கொண்டு ,மக்களை போலவே செய்து ,மக்களுக்காகவே இருந்தவர், வாழ்ந்தவர்* என்பதற்கு பல்வேறு சான்றிதழ்களை அவரது வாழ்க்கையில் குறிப்பிட்டு சொல்லலாம் .


தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கு இடையே காவிரி நீர் பிரச்னைபல காலமாக இருந்து வந்தது .இந்த பிரச்சினையை தற்காலிகமாக தீர்த்து வைப்பதற்கு எம்.ஜி.ஆர் திடீரென புறப்பட்டு பெங்களூரு செல்கிறார் .உள்ளூர் அமைச்சர் ரகுபதியை காண செல்கிறார் .அங்கு சென்றதும் ,ரகுபதியின் தாயார் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார் என தெரிந்து அவரை சென்று பார்க்கிறார் .அந்த தாயார் எம்.ஜி.ஆரிடம் பரிவுடன் ,நீங்கள் எங்கள் இல்லத்திற்கு சென்று உணவருந்தி விட்டுத்தான் செல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார் .நான் எப்படி உங்கள் வீட்டில் சாப்பிடுவது .உங்கள் மகன்தான் எங்களுக்கு தண்ணீர் தராமல் தண்ணி காட்டுகிறார் என்றார் .உடனே அவர் ரகுபதியின் கையை பிடித்து அவர் கேட்டபடி உடனே தண்ணீர் கொடு என்று கேட்டு கொள்ள ,ரகுபதி உடனே,மருத்துவமனையில் இருந்தபடியே*, கர்நாடக முதல்வர்,மற்றும் தேவகவுடா போன்றவர்களிடம் பேசி உடனடியாக குறிப்பிட்ட அளவு தண்ணீர் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விட ஏற்பாடு செய்தார் .இதுதான் எம்.ஜி.ஆரின் சாமர்த்தியம் ,உத்தி .,தந்திரம்,அன்பு வேண்டுகோள்* என்றுஅந்த காலத்தில் சொல்வார்கள் .


மலைக்கள்ளன் படப்பிடிப்பு நடந்து வந்த சமயம் .அன்றைக்கு படப்பிடிப்பு முடிந்ததும் இசை அமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவிடம் எங்கள் உறவினர் இல்லம் அருகில்தான் உள்ளது .வாருங்கள் போய்விட்டு வரலாம் என்று காரில் செல்கிறார் .அப்போது நள்ளிரவு நேரம் .அது ஒரு குடிசைவீடு .அந்த வீட்டில் எம்.ஜி.ஆரின் உறவினரான குஞ்சப்பனின்* உறவினர் தங்கியுள்ளார் .அந்த நள்ளிரவில் சாப்பிட என்ன உள்ளது என்று எம்.ஜி.ஆர். கேட்கிறார் .ஐயா ,மோர் குழம்பு சாதமும், வறுத்த மீன் உள்ளது என்கிறார்கள் .எம்.ஜி.ஆர். பரவாயில்லை இந்த உணவாவது கிடைத்ததே என்றார்.பிற்காலத்தில்* .பல கோடி குழந்தைகளின் வயிற்று பசியை போக்க* சத்துணவு திட்டம் அமுல்படுத்தியவர்*அன்றைக்கு தன்* நண்பருடன் எந்தவித சங்கோஜமும் இல்லாமல் அந்த எளிய உணவை அருந்தினார் .அதுமட்டுமல்ல அந்த வீட்டில் உள்ளவரிடம் நள்ளிரவு நேரத்தில் மோர் சாதம் அருந்துவதைவிட ,கொஞ்சம் ரசம் வைத்து கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டு விரும்பி சாப்பிட்டாராம் .பசித்த வயிற்றுக்கு உணவிட வேண்டும் இங்கு வாழும் மனிதர்களுக்கெல்லாம் என்பது போல அவர் சந்திக்கின்ற ஒவ்வொரு மனிதர்களை எல்லாம் வந்து, மனிதர்களின் மிக பெரிய பிரச்னை என்பது பசிதான் ,அந்த பசி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் மிக பெரிய பிரச்னைகள்,மிக பெரிய புரட்சிக்கான அடிப்படை காரணங்களே இல்லாமல் போயிருக்கும் .அப்படியான பசியை போக்குவது ,மற்றவர்களை உண்ணவைத்து பார்த்து ரசிப்பது என்பதில் சந்தோசம் அடைவது போன்ற பண்புகள் இருந்ததால்தான் அவர் மகோன்னதமான மனிதராக இன்றைக்கும் கருதப்படுகிறார் .*


நாடோடி மன்னன் படத்தில்*முதியோர் பென்ஷன் திட்டம், தொழில் கல்வி, குடிசை மாற்று வாரியம் ,விவசாயிகள் நல திட்டம் , பெண்கள் பாதுகாப்பு* திட்டம் என்று பல்வேறு திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் கடந்த காலத்தில் மட்டுமல்ல வரும் காலத்திலும் உள்ள தேர்தல் அறிக்கையில் இடம் பெறக்கூடிய விஷயங்களை எல்லாம் அப்போதே அவர் சிந்திப்பதற்கான அல்லது கட்சியின் திட்டத்தை இவரது திட்டமாக அறிவித்தாரா ,அல்லது கட்சிக்கு இந்த திட்டங்களை முன்வைத்தாரா என்று திரு.துரை பாரதி கேட்டதற்கு*


திரு.கா. லியாகத் அலிகான் அளித்த பதில் : புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். கட்சிக்கு நீங்கள் குறிப்பிட்ட படி இந்த திட்டங்களை முன்வைத்தார் .மக்களுக்காக இந்த திட்டங்களை அமுல்படுத்தவேண்டும் என்று அப்போதே அவர் யோசித்திருக்கிறார் .1957ல்* நாடோடி மன்னன் படம் ஆரம்பிக்கப்பட்டது .1958ல் ஆகஸ்ட் 22ந்தேதி படம் வெளியானது .அவர் எவ்வள்வு பெரிய ஞானி என்பதை சில செய்திகள் அவரது திரையுலக வாழ்க்கையில் நடந்ததை வைத்து அறிந்து கொள்ளலாம் .அசோக்குமார் என்கிற படத்தில் ஒரு காட்சி .அதில் தீயால் சுட்ட ஒரு இரும்பு கம்பியால் கதாநாயகனாக நடித்த தியாகராஜ பாகவதர்*கண்களில் குத்தி குருடாக்க வேண்டும் என்பது மன்னரின் கட்டளை .தவறினால்*இந்த தண்டனையை நிறைவேற்றாத குற்றத்திற்காக அவரது தலை வெட்டப்படும்.ஆனாலும் அந்த கொடுமையான காட்சியில் நடிக்க மறுத்துவிடுகிறார் .கண்ணீர் விட்டு கதறுகிறார் . இது வெறும் நடிப்புதான் ராமச்சந்திரா .அதுவும் கண்களை குத்துவதுபோல்* நிஜமாக படமாக்க போவதில்லை .வெறும் பாவனைதான் .நான் கண்ணிழந்தவன் போல் கத்தி கதறவேண்டும்* நடித்து சமாளித்துவிடுவேன் என்று கூறியும்.உங்கள் கண்களை பறிக்கும்* இந்த காட்சிக்கு என்னால் நடிக்க முடியாது என்று*.தீர்மானமாக மறுக்கவே ,வேறு வகையில் படமாக்கப்பட்டது .தான் கதாநாயகன் அந்தஸ்திற்கு உயராத* நிலையில் ,சிறு வேடங்கள், துணை வேடங்கள் நடித்து வந்த காலத்தில்*இப்படி அசாத்திய மனதைரியம் ,துணிவு, தெம்புடன் நான் இந்த மாதிரியான காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று மறுத்த தலைவன் அப்போதே உதயமாகிவிட்டான் .அதாவது ,இயக்குனர்,தயாரிப்பாளர் என்ன நினைப்பார்களோ என்று கூட யோசிக்காமல் திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைப்பதே அரிதான காலத்தில்,தனக்கு அப்படிப்பட்ட காட்சியும் வாய்ப்பும் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை என்று ஒதுங்கி கொண்டு**இப்படி ஒரு துணிச்சலான முடிவு எடுப்பதற்கு யாருக்கு மனமிருக்கும் .


திரு.துரை பாரதி : அடிப்படையிலேயே தனக்கொரு பாணி, பாதை, ஒரு பயணம் ,கொள்கை ,எதிர்கால வாழ்வில் நம்பிக்கை ,அதாவது வாழ்க்கையின் இளமை பருவத்தில் ,தான் முன்னுக்கு வராத காலத்தில் அடிப்படையிலேயே வறுமை, வேலை வாய்ப்பின்மை இருந்தபோது ,எதிர்காலத்தில் பிரகாசமான ஒரு நம்பிக்கை ஒளி யுடன் , தனக்கென்று சில கொள்கைகள் வைத்திருந்தார் .அந்த கொள்கைகளின் அடிப்படையில் நடைபோட்டதன் வெளிப்பாடுதான்* நாடோடி மன்னன் படத்தயாரிப்பு* பாவப்பட்ட ஏழை மக்களின் ஒரே நம்பிக்கை மனம்தான் .அதிலே நாம் கைவைக்க கூடாது .அதுவும் கடவுள் நம்பிக்கைக்கு எதிராக நடந்து கொள்ள கூடாது என்பதிலும் உறுதியாக இருந்துள்ளார் .


திரு.கா. லியாகத் அலிகான் : ஒரு கவிஞன் சொன்னது போல இயற்கையை நேசிக்கிறபோது எல்லா மனிதர்களுக்கும் இரண்டு யோசனைகள் வருமாம்*பணிகளை கவனித்து வரும்போது அவரது உள்ளத்திலே சில கடமைகள் பற்றி*யோசனை வருமாம் .தான் என்ன செய்ய வேண்டும் ,என் கடமை என்ன .தனக்குள்ள பிரச்னைகள் என்ன என்று . அதாவது இயற்கையை நேசிக்கும் போது*எப்படிப்பட்ட மனிதனுக்கும் இயற்கையையோ, அழகையோ ரசிச்சாலும் அவருக்கு செய்ய வேண்டிய கடமைகள் நினைவுக்கு வரத்தான் செய்யும் . ஆனாலும் அதை சரிசமமாக பங்கிட்டு அந்த இயற்கையை அனுபவித்தே ஆகவேண்டும் எம்.ஜி.ஆருக்கு*.* தான் இந்த காட்சியில் நடிக்கவில்லை .ஒருவரின் கண்களை பறிக்கும் காட்சியில் நடிக்க மனம் இடம் கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, அதை தவிர்த்துவிட்டோம் என்கிற மனநிறைவு*கிடைத்தது என்று நினைத்தாரே தவிர ,வேறொன்றும் நினைக்கவில்லை .


திரு.துரை பாரதி :எம்.ஜி.ஆர். அந்த காலகட்டத்தில் குலேபகாவலி, அலிபாபாவும் 40 திருடர்களும் ,பாக்தாத் திருடன் போன்ற அரேபிய கதைகளில்* இஸ்லாமிய*வேடத்தில் நடித்து வெற்றி படங்களை அளித்துள்ளார் .அதற்கு முன்பு மலைக்கள்ளன் படத்திலும் , சில காலம் கழித்து வெளிவந்த சிரித்து வாழ வேண்டும் படத்திலும் இஸ்லாமியர் வேடத்தில் நடித்துள்ளார் .


திரு.கா.லியாகத் அலிகான் :புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஒரு காலத்தில் இயேசு பிரானாக நடிக்க பரமபிதா என்கிற படத்திற்கு* ஒப்பந்தம் செய்யப்பட்டார்*ஆனால் சில பாதிரியார்கள் அந்த படத்தின் கதையை கேட்டறிந்து* கிறிஸ்துவ மத கோட்பாட்டுக்கு ஒவ்வாத சில காட்சிகள் இடம் பெறுவதாக கருதுவதால் இந்த படத்தில் நடிப்பதை எம்.ஜி.ஆர். அவர்கள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டு கொண்டதால் மேற்கொண்டு படத்தில் அவர் நடிக்காமல் கைவிடப்பட்டது .இன்றைக்கும் எம்.ஜி.ஆர். ஏசுபிரானாக வேடம் தரித்த புகைப்படங்களை காணலாம் .நாம் மனதில் கற்பனை செய்யும் ஏசுபிரானை போலவே எம்.ஜி.ஆரின் தோற்றம் தத்ரூபமாக* இருக்கும் .அந்த வேடம் அவருக்கு அவ்வளவு கச்சிதமாக பொருந்தியது* மேலும் அந்த ஏசுபிரான் வேடம் தரித்த*எம்.ஜி.ஆரின் புகைப்படங்கள் வைத்து சிலர்*பூஜைகள்,ஆராதனைகள் செய்து வணங்கி வந்ததாக*செய்திகள் எம்.ஜி.ஆர்.அவர்களுக்கு கிடைத்தது .அதை நினைத்து* மிகவும் மனம் வருந்தினார் .யாரும் அப்படி செய்ய கூடாது,எனக்கு*அதில் உடன்பாடு இல்லை**என்று அறிக்கை வெளியிட்டார்*. ஏசுபிரானாக எம்.ஜி.ஆர். நடிக்காமல்*போனதற்கு*இதுவும் ஒரு காரணம் என்று பேசப்பட்டது .நாடோடி மன்னன் படத்தில் வசனம் பேசியிருப்பார் .அதாவது அமைச்சரே, எனக்கு*வாள் பிடித்து களத்தில்**சண்டை செய்யவும் தெரியும்* கலப்பையை பிடித்துநிலத்தில்* ஏர் உழவும் தெரியும்*இருக்கின்ற 2000 உடைகளில்*எதை அணிவது*என்கிற*திண்டாட்டத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் .ஏதாவது ஒரு உடை இருந்தால் போதும் மானத்தை மறைக்கலாமே என்று மக்கள் இருக்கிறார்கள் .அப்படிப்பட்ட மக்களுக்காக*வாதாடத்தான் நான் இருக்கிறேன் .சட்டம் இயற்றும் அதிகாரம் முழுவதும் என் கையில் இருந்தால்தான் நான் மன்னன் ஆவதற்கு சம்மதிப்பேன் .என்று வசனம் பேசி அந்த காலத்திலேயே தான் யாருக்கும் அடிபணிய*மாட்டேன் .என் எண்ணங்கள், கொள்கைகள் ,திட்டங்கள் அனைத்தும் ஏழை எளியவர்களுக்கு செய்து முடிக்கும்*வரை நான் ஓயமாட்டேன் ,உறங்கமாட்டேன் என்பதில்*திட்டவட்டமாக இருந்தார் .நாடோடி மன்னன் படத்தை அவர் மிகவும் சிரமப்பட்டு ,கடன் வாங்கி ,சொத்துக்களை அடகு வைத்து ,தயாரித்தார் .அதனால்*அவருக்கு வேண்டாதவர்கள் அவர் நிச்சயம் நாடோடியாக போய்விடுவார் என்று கருத்து*சொன்னார்கள் . இந்த படம் தோல்வி அடைந்தால் நான் நாடோடி, வெற்றி பெற்றால்*மன்னன் என்று அவர்களுக்கு பதில் அளித்தார் .படத்தின் முடிவு எப்படி இருந்தாலும் என் எண்ணங்கள், கொள்கைகள் ,திட்டங்கள்*ஆகியவற்றை**ஏழை எளிய மக்களுக்கான நல்வாழ்வுக்காக என்பதை பறைசாற்றுவேன் என்று தெரிவித்தார் .ஆனால் எதிரிகள்*படம் வெளியாகி வெற்றி பெற்றதும் துவண்டு ,திக்கு திசை தெரியாமல் போய்விட்டார்கள் .படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது .எம்.ஜி.ஆர்.அவர்கள் சிறந்த நடிகர்,சிறந்த இயக்குனர் ,சிறந்த தயாரிப்பாளர் என்று பத்திரிகைகளும் ,பாராட்டின .மக்களின்*ஏகோபித்த ஆதரவு இந்த படத்திற்கு*கிடைத்தது .என்று திரு.லியாகத்*அலிகான் பேசினார் .


எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி பிரெஞ்சு புரட்சி ,ரஷ்ய நாவல்கள் ,ஆங்கில புத்தகங்கள் பலவற்றை*படித்திருந்தார் .அவர் ஒருமுறை தன் தம்பியிடம்*ராமச்சந்திரா ,இந்திய*சுதந்திரத்திற்குமுன்னால் இருந்த நல்ல பழக்கம் என்னவென்றால் எந்த ஆங்கிலேயன் எந்த ஒரு கட்டளை*இடுவதாக இருந்தாலும் மக்களுடைய சேவகனாகத்தான் இருந்தார்கள் .ஆனால் இன்றைக்கு நமது மக்கள் அதை மறந்துவிட்டார்கள் .இன்றைக்கு ,ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் அவர்களின் பதவி,அதிகாரத்தைத்தான் பெரிதாக நம்புகிறார்கள் .அவர்கள் மக்களின்*சேவகன் என்ற வாசகத்தை பயன்படுத்த வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் என்று கூறியிருந்தார்*


பொதுவாக ஆட்சிக்கு வந்த சில காலத்திற்கு பின்னர் ஆட்சியாளர்கள் நல்லவர்களாக இருப்பதில்லை .நல்லவர்களாக இருப்பவர்கள் ஆட்சியில் தொடர்ந்து நீடிப்பதில்லை இப்படிப்பட்ட கருத்துக்கள், ஆலோசனைகள் பலவற்றை*எம்.ஜி..சக்கரபாணி அவர்கள் தன் தம்பி எம்.ஜி.ஆர். அவர்களுக்கு அவ்வப்போது அறிவுரையாக கூறியுள்ளார் .ஆனாலும் கூட*தன் குடும்பத்தில் இருந்து எவரையும்*ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கொள்ளவோ ,தலையிடவோ*எம்.ஜி.ஆர். அனுமதிக்கவில்லை .அப்படி யாராவது*நடந்து கொண்டால்*அதற்கு அவர்களே*சொந்த பொறுப்பு .என்னை கட்டுப்படுத்தாது என்று பகிரங்க அறிக்கை வெளியிட்டார் .தன்* குடும்பத்தில் இருந்து அரசியல் வாரிசாக*யாரையும் எம்.ஜி.ஆர். அறிவிக்கவில்லை* நாடோடி மன்னன் படத்தில் அறிவித்தது போல குடும்ப வாரிசு, பரம்பரை வாரிசு ஆகியவற்றை அடியோடு*புறக்கணித்தார் எம்.ஜி.ஆர். மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும் .

நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள்*/காட்சிகள் விவரம்*
------------------------------------------------------------------------------------
1.வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ -தெய்வத்தாய்*

2.எம்.ஜி.ஆர். மனோகர்*உரையாடல் - ஆயிரத்தில் ஒருவன்*

3.நான் உங்கள் வீட்டு*பிள்ளை* - புதிய பூமி*

4.எம்.ஜி.ஆர்.-திருப்பதிசாமி உரையாடல் - விக்கிரமாதித்தன்*

5.சம்மதமா ,நான் உங்கள் கூட வர சம்மதமா -நாடோடி மன்னன்*

6.எம்.ஜி.ஆர்.உணவருந்தும் காட்சி*- மாட்டுக்கார வேலன்*

7.திரு.கா.லியாகத் அலிகான்*அவர்களின்*பேட்டி*

8.எம்.ஜி.ஆர்.-தேங்காய் ஸ்ரீநிவாசன் உரையாடல் - நம் நாடு*

9.மன்னனாக*திட்டங்கள் அறிவுக்கும் எம்.ஜி.ஆர்.-நாடோடி மன்னன்*


*

orodizli
2nd October 2020, 08:07 AM
#முயற்சியே #வெற்றி

எந்த ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டாலும், அது தமக்குப் புதியதாகவே இருப்பினும், அவ்விஷயத்தைத் துளியும் கௌரவம் பார்க்காமல் கற்றுணர்ந்து, தமது மிகையான தன்னம்பிக்கையாலும், புத்திக் கூர்மையினாலும் அதில் தேர்ச்சி பெற்று உச்சத்தை அடைவதென்பது வெறும் சாதாரணவிஷயமல்ல... ������

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்ற புரட்சித்தலைவரின் தாரகமந்திரத்தை தனது லட்சியமாகக் கடைபிடிக்கும்
புரட்சித்தலைவரின் தீவிர ரசிகை சாரதா கண்ணனுக்கு இது பெரிய விஷயமுமல்ல...������

தனது தன்னடக்கத்தினால் மேன்மேலும் உயர்வுபெறும் இவரின் கவிதைகள் பல பத்திரிகைகளிலும், தனியார் வானொலிகளிலும், யூ டியூப்பிலும் வெளிவந்துள்ளது அனைவரும் அறிந்த ஒன்று... ������

அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல... சமீபத்தில், பிரான்சில் வெளியான சிறந்த இலக்கிய இதழான "தமிழ் நெஞ்சம்"' என்னும் பத்திரிக்கையில் சாரதா கண்ணனின் 'முகப்புப்படமும், அவரைப்பற்றிய குறிப்புகளும், கவிதை வரிகளும்' இடம் பெற்றுள்ளன என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்... ������

கடல் கடந்து சாரதா கண்ணன் ஆற்றும் தமிழ்ப்பணி, இவ்வையகம் முழுவதும் பரவும் நாள் வெகுதொலைவில் இல்லை... ������

பொன்மனச்செம்மலின் அருளாசியுடன் சாரதாகண்ணனை வாழ்த்தி மகிழ்கிறேன்...������

கீழ்க்கண்ட link ல் Download. செய்து படிக்கவும்...

http://tamilnenjam.com/?p=5051.........MT...

orodizli
2nd October 2020, 08:14 AM
Chuck Norris
இவர்
World karate champion
இவர் Return of the dragon ல் நடித்தவர்
இவரின் Roundhouse kick மிகப் பயங்கரம்
எதிராளி கவனம் சிதறினால் மரணம் நிச்சயம் .
Van Damme: Bruce LeeJackie CJim Kelly
Tony : Jet Ll
இவர்கள் அனைவரும்
Martial arts super stars
இவர்களை இங்கே குறிப்பிட காரணம் நான் எம் ஜி ஆர் படங்களை மட்டும் பார்க்கவில்லை இந்த Hollywood ஜாம்பவான்களை வெகுவாக ரசித்தவன் ரசித்துக் கொண்டிருப்பவன் ஆனால் இவர்கள் மக்கள் திலகத்தை போல் மற்ற துறைகளில்
ஈடுபடாதவர்கள்
Kung fu வில் மட்டுமே கவனம் செலுத்து பவர்கள்.

குடியிருந்த கோவில் இந்த சண்டைகாட்சியை பாருங்கள்
Hand rotating punch
Neck Lock
Horse kick
ஒரே நேரத்தில்
Front kick
Back kick
என்ன லாவகமாக செய்கிறார் பாருங்கள்.

Hand rotating punch
மிக மிக கடினம் ஸ்பேரிங் செய்பவருக்குத்தான் அந்த வலி புரியும் .

மக்கள் திலகம் இந்த சண்டைகாட்சியில் நடித்து பத்தாண்டு கழித்து தான் கராத்தே வந்தது அப்போழுதே என்ன வேகம் பாருங்கள்.

அக்கால கட்டத்தில் உலக திரைப்பட சண்டைகாட்சிகளில்
எம் ஜி ஆர் தான் முதல்வர் என்றால் அது மிகையாகாது

ஹயாத் .
குறிப்பு : இந்த ஹாலிவுட் நடிகர்கள் தொழில்நுட்பம் வெகுவாக முன்னேறியபின் வந்தவர்கள் எம் ஜி ஆர் காலத்தில் ஒரு குருவியை படமெடுக்க மூன்று நாட்கள் காத்திருந்தனர் ........Hd...

orodizli
2nd October 2020, 01:39 PM
நம்ம கணேசனின் கைபுள்ளைங்க தொல்லை தாங்க முடியலைப்பா. சுத்தி சுத்தி மூட்டைப்பூச்சி கடிக்கிற மாதிரி கடிச்சுக்கிட்டே இருக்காங்க. அவங்க வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏத்தியாச்சு! அதனால தாங்கமுடியாம சும்மா புலம்புவதுடன் பொய் வசூல் தயார் பண்ணும் பேக்டரி உருவாக்கி வாய்க்கு வந்தது வராதது என்று சகட்டுமேனிக்கு கூவிட்டு வராங்க.

நாம என்ன செய்ய! சும்மா மரண அடி கொடுக்கிறாப்பல வசூல் விபரங்களை கொடுத்தவுடன் தலைவர் சினிமாவில் மன்னனாக இருந்தவரைக்கும் 1977 வரைக்கும் பதுங்கி இருந்தவனெல்லாம் இப்போ
ஏதாவது ஒரு மொக்கை சிவாஜி படத்தை தூசு தட்டி அதுக்கு பேக்டரிலே போய் புது வசூல் போட்டு கொண்டு வராங்க.

அதுவும் பழைய படங்கள் எல்லாம் வசூல் விபரங்களை ஏற்கனவே பதிவிட்டமையால் புதிதாக இதுவரை வசூல் விபரங்கள் வெளியிடாத படுதோல்விப் படங்களை தூக்கிட்டு போய் புதுசா வசூல் போட்டு நல்லா டெக்கரேஷன் பண்ணி போட ஆரம்பிச்சுட்டாங்க. "16 வயதினிலே" சப்பாணி மாதிரி 'சந்தைக்குப் போணும் ஆத்தா வையும் காசைக்கொடு' ன்னு அழ ஆரம்பிச்ச மாதிரி ஒரே அழுகை. தாங்க முடியலப்பா.!

சரி எம்ஜிஆர் சினிமாவை விட்டு அரசியலில் இறங்கி அங்கும் முடி சூடிய மன்னனான பிறகு பொறாமையில்
அல்லக்கைகள் அலற ஆரம்பித்தன.
தற்போது எம்ஜிஆர் சினிமாவில் இருக்கும் வரை தங்களால் ஒன்றும் செய்ய இயலாது என்று புரிந்து கொண்ட கைபுள்ளைங்க தற்போது கையில "வெள்ளை ரோஜா" வை எடுத்து சமாதானத்துக்கு வராமல் சண்டைக்கு வருகிறார்கள்..

சரி நம்மவர் தான் முதல்வர் ஆகிவிட்டாரே இனியென்ன நமக்கு என்று நாம் சும்மா இருந்தாலும் இருக்க விட மாட்டார்கள் போலும்!.
அதனால் நம்ம சிவாஜியின் 1983 தீபாவளிக்கு வெளியான "வெள்ளை ரோஜா" சினிமா ஜீனியர்களின் கையால் மரண அடி வாங்கி சீரழிந்த கதையை சொன்னால்தான் அடங்குவார்கள் என்று நினைக்கிறேன். அதனால் நம்ம தலைவர் ரசிகர்கள் கொஞ்சம் வேடிக்கை பாருங்கள் சின்ன நடிகர்களிடம் சிவாஜி படம் புறமுதுகு காட்டி ஓடுவதைக் கண்டு கை கொட்டி சிரிக்கலாம். ஏனென்றால் புறமுதுகு காட்டுவது அவருக்கு ஒன்றும் புதிதல்ல.

இப்போது சொல்லுங்கள் "வெள்ளை ரோஜா" வின் வசூலை. சென்னையில்
தேவி. 104. 722685.00
சபையர். 76. 815663.00
புவனேஸ் 104. 516565.50
கிரவுன். 104. 472690.60
உதயம். 104. 314695.00
அபிராமி. 104. 246618.50
-------------------
மொத்தம். 30,88,917.60
--------------------
இதுதான் "வெள்ளை ரோஜா" வின் மொத்த சென்னை நகர வசூல் என்று சொல்லியிருக்கிறார்கள். நாமும் சோதனை செய்யாமல் அப்படியே அதை எடுத்துக் கொள்வோம். தலைவர் நடித்துக் கொண்டிருந்தால். இந்த வசூலெல்லாம் வெளிச்சத்துக்கே வந்திருக்காது. என்ன செய்வது நம்ம கணேசனுக்கு களத்தில் எதிரி இருந்தாலே அரசியலில் நடுங்கிய மாதிரி கைகால் எல்லாம் உதறல் எடுத்து விடும். ஆளே இல்லாத களத்தில்தான் கொஞ்சம் தைரியமாக வெளியே வருவார்.

சரி, விஷயத்துக்கு வருவோம்.
1982 ல் வெளியான "சகலகலா வல்லவன்" சுமார் 4 அரங்கில் வெளியாகி 48 லட்ச ரூபாய் வசூலாக பெற்றதை முறியடித்தீர்களா?
இல்லையே. 1984 ல் வெளியான "காக்கிசட்டை"யின் 42 லட்ச ரூபாய் வசூலை முறியடித்தீர்களா? 3வதாக வசூலில் முன்னணியில் நிற்கும் படம் "முந்தானை முடிச்சு" அதுவும் சுமார் 42 லட்சங்களை வசூலாக பெற்ற படம். அதன்பின் வருவது "மைதிலி என்னை காதலி" அதுவும் 42 லட்சங்களை கடந்த படம்தான்.

"வெள்ளை ரோஜா" கூட வெளியான "தூங்காதே தம்பி தூங்காதே" "தங்கைக்கோர் கீதம்" பட வசூலையாவது முறியடித்தீர்களா?
அதையாவது நிரூபணம் செய்ய முயலுங்கள்.இதில் எதையும் நெருங்க முடியவில்லையே.
10 வருடங்களுக்கு முன்னால் உள்ள படங்களை வசூலில் கம்பேர் செய்தால் அய்யோ பாவம் மூளை குழம்பி விட்டதோ என்று நினைக்க தோன்றுகிறது. வேண்டுமானால் "உலகம் சுற்றும் வாலிபன்" வசூலை 1983 க்கு தகுந்தவாறு மாற்றி ஒப்பிட்டால் சரியாக இருக்கும்.

10 ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள டிக்கெட்டை. விலையை விட சுமார் 3 மடங்கு 1983 ல் அதிகம். அதை கணக்கில் எடுத்து "உலகம் சுற்றும் வாலிபன்" வசூலை மூன்றால் பெருக்கி பார்த்துக் கொள்ளுங்கள்.
23,40,000×3 = 70,20,000. இப்போ புரிகிறதா. வித்தியாசம் எவ்வளவு என்று. "வெள்ளை ரோஜா" வெறும் 30 லட்சம்தான். அதிலும் தலைகுனிவுதான்.

போய், முக்காடு போட்டு மூலையில் அமருங்கள். அதை விட்டு விட்டு அடுத்த வேலையை ஆரம்பித்து விட்டார்கள். உள் நாட்டில் விலை போகாத மாடு வெளிநாட்டில் விலை போகுமா? என்பார்கள், அதுபோல் தமிழகத்தில் படுதோல்வியடைந்த "உத்தமன்" இலங்கையில் என்ன ஊத்திக்கொண்டதோ தெரியவில்லை, கைபுள்ளைங்க சாதனை என்று சொல்லி அடுத்த வெட்டி வேலையை ஆரம்பித்து விட்டார்கள்.. இனிமேல் அதை பார்க்க வேண்டும். இப்படி எதையாவது சொல்லி அரிப்பை தீர்த்துக் கொள்ள முயலும் அவர்களை பார்த்தால் பரிதாபமாக இருப்பதுடன் பாவமாகவும் இருக்கிறது. ஐயோ, பாவம்..........ks.........

orodizli
2nd October 2020, 01:40 PM
#காந்தீயவாதி

#காந்தி #ஜெயந்தி #வாழ்த்துக்கள்

ஒரிஜனல் பாய்ஸ் நாடக கம்பெனி சென்னைக்கு வந்து "தேசம் காக்கும்" என்ற நாடகத்தை ஆரம்பித்து நடத்த ஏற்பாடு செய்தது. நடிகர்கள் தேர்வு நடந்தது. இந்த நாடகம் காந்தியவாதி, சுதந்திர போராட்ட கதை பெரிய நாடகம் ...

1930ல் இதில் நடிக்க எம்ஜிஆருக்கு ஒரு சிறப்பான வேடம், அதாவது தேசபக்தியுள்ள ஒரு சாமியார் வேடம், கிடைத்தது...

நாடகம் நடத்த அன்றைய வெள்ளையர் ஆட்சி காலத்தில் போலீஸ் தடை விதித்தது. ஆனால், தடையை மீறி நாடகம் நடத்தப்பட்டது. போலீஸ் தடியடி நடத்தியது. இதில் எம்ஜிஆரும் காயமடைந்து மூர்ச்சையானார்...

இந்த செய்தி சென்னை நகரில் மற்றும் அல்லாமல் தமிழ்நாடு முழுவதும் பெரிய பரபரப்பை உண்டாக்கியது "தேசபக்தி" என்றதும் இந்த நாடகத்திற்கு பொதுமக்கள் ஆதரவு பெரும் அளவில் ஏற்பட்டது.

"17 வயது பையன் சாமியார் வேசத்தில் நடிக்கிறான்..." என்றதும் மக்கள் திலகம் அவர்களுக்கு பொதுமக்களிடமிருந்து பாராட்டு கிடைத்தது...

பழுத்தபழம் போல், தேசபக்தியை விதைக்கும் சாமியார் வேடத்தில் மிக சிறப்பாக நடித்து இருந்தார் நம்ம புரட்சித்தலைவர்...

இப்படி ஒரு காந்தீயவாதியாக தனது கலையுலக வாழ்வைத் தொடங்கினார் மக்கள்திலகம்... Bsm...

orodizli
2nd October 2020, 08:29 PM
மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மனக்கும் என கூறியவர் அண்ணா! அதன் படி நடந்து செயலில் காட்டியவர் எம் ஜி ஆர்!
காங்கிரசும், அண்ணா தலைமையிலான திமுகவும் அரசியல் களத்தில் அனல் கிளப்பிவந்த 60 களில், எம்.ஜி.ஆரை மையமாகக் கொண்டு திமுகவில் ஒரு புயல் கிளம்பியது. அண்ணாவின் தலைமையிலான திமுகவில் முக்கிய தலைவர்கள் வரிசையில் கொண்டாடப்பட்ட எம்.ஜி.ஆர், எதிர் கூடாரத்திலிருந்த காமராஜர் மீது கொண்ட காதலுக்கு அந்த சம்பவம் சாட்சியானது.

கருத்தியல் ரீதியாக எம்.ஜி.ஆரை திமுகவிடமிருந்து தனிமைப்படுத்திய அந்த சம்பவம் ஒரு வரலாற்று நிகழ்வும்கூட. திமுகவில் ஒரு பெரிய புயலை கிளப்பிய அந்த சம்பவம் நிகழ்ந்தது 1965 ம் ஆண்டு காமராஜரின் 62 வது பிறந்தநாள் விழாவின்போது.
��
சென்னை, எழும்பூர் பெரியார் திடலில் நடந்த அந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர், மேடையில் சற்று உணர்ச்சிவயப்பட, பின்னாளில் அது பெரும் சலசலப்பை திமுகவில் உருவாக்கியது.

எம்.ஜி.ஆரின் சர்ச்சைக்குரிய உரை இதுதான்...

“காமராஜரின் பிறந்த தின விழாவில் நானும் கலந்து கொண்டு, அவரை வாழ்த்தி, அவர் நீடூழி வாழவேண்டும் என்று வாழ்த்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தமைக்குப் பெருமைப்படுகிறேன். தலைவர் காமராஜர், தோழர் காமராஜர், அய்யா காமராஜர் என்று பலர் அழைக்கும் நிலையை காமராஜர் அடைந்திருக்கிறார். எல்லோராலும் பாராட்டப்பட வேண்டியவர்; பாராட்டப்பட வேண்டும். நல்ல உள்ளம் கொண்டவர்களை எல்லோரும் பாராட்டித்தான் தீரவேண்டும். மனிதனை மனிதன் பாராட்ட வேண்டும். நல்லவனை நல்லவன் பாராட்ட வேண்டும்.

கொள்கைக்காக வாழ்கிறவனை, கொள்கைக்காக வாழ்கிறவர்கள் பாராட்டியாக வேண்டும். யார் யாரை மதிக்கிறார்களோ அவர்களைப் பாராட்ட வேண்டும். யாரால் மதிக்கப்படுகிறார்களோ அவர்களைப் பாராட்டியாக வேண்டும். இந்த நிலை மாறும்போது அருவருப்பான சூழ்நிலை ஏற்படுகிறது.
நண்பர் சிவாஜி கணேசன் ஒரு கட்சியில் (தி.மு.க.) இருந்து விட்டுப்போனவர். அவருடைய ‘கட்டபொம்மன்’ நாடகத்திற்கு எங்கள் தலைவர் அண்ணா போய் எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்தினார். சிவாஜி நம்மை விட்டுப்போய்விட்டாரே என்ற எண்ணத்திற்கே அங்கு இடமில்லை. அதுதான் நல்ல பண்பு.
��
காமராஜர் என்னை விட்டுப்போகவில்லை. நான் அவரைவிட்டு வந்தவன் (எம்.ஜி.ஆர். ஆரம்பத்தில் காங்கிரஸில் இருந்தவர்). நான் காமராஜரைப் பாராட்டிப் பேச வந்ததற்கு வேறு உள் காரணங்கள் தேடினாலும் கிடைக்காது. காமராஜர் வாழ்ந்தால் யாருக்கு லாபம்? வாழாமல் இருந்தால் யாருக்கு லாபம்? காமராஜர் ஒரு ஏழையாக வளர்ந்திருக்கிறார். யாரும் மேடையில் ஏறி அவர் சொத்து சேர்த்திருக்கிறார் என்று சொல்ல முடியாது. தன்னை ஈன்றெடுத்த தாய் நோய்வாய்ப்பட்டிருந்தாலும் அவரை 10 நிமிடங்கள், 5 நிமிடங்களுக்கு மேல் இருந்து பார்ப்பதில்லை.

தன் தாயை ஈன்ற இந்த நாட்டின் கடமைகளை விடாமல் செய்து வருகிறார். காமராஜரைப் புகழ்வதில் யாருக்கு நஷ்டம்? நான் ஒரு கலைஞன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர். அண்ணா வழியில் நடப்பவன். அவர் கொள்கை எனது உயிர். அப்படிப்பட்ட நான் காமராஜரையும், அய்யாவையும் (பெரியார்) பாராட்டாமல் வேறு யாரைப் பாராட்ட முடியும்?

இதே மேடையில்தான் பெரியாரைப் பாராட்டிப் பேசினேன். நமது தலைவர் காமராஜரைப் பாராட்டிப் பேசுகிறேன். நமது தலைவர் என்று நான் சொல்வது மக்கள் ஏற்ற தலைவர் அவர். அதனால் நமது தலைவர் என்று சொல்கிறேன். காமராஜர் இரவு-பகல் பாராமல் பாடுபடுகிறார். அவரை ஏன் பாராட்டக் கூடாது? என் கொள்கையை நான் கடைப்பிடிப்பதிலும் ஏன் இந்த இலக்கணத்தை பின்பற்றக்கூடாது? எங்கெங்கு நல்லது இருந்தாலும் அதனை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். ஏழைகளுக்கும், பின்தங்கிய மக்களுக்கும் உயர்ந்த நிலையை உருவாக்கித் தந்தவர் காமராஜர். ஏழைகளை வாழவைக்க வேண்டும் என்று காமராஜர் சொல்கிறார். நானும் அதைத்தான் சொல்கிறேன். என் கட்சியும் அதைத்தான் சொல்கிறது. அதனால் அவருக்கு மாலையிடுகிறேன்.
��
பண்புள்ளவன், பகுத்தறிவுள்ளவன் அண்ணா வழியில் நடப்பவன் மாலை இடுகிறான். காமராஜர் நேரில் இருந்திருந்தால் மாலைகளைக் குவித்திருப்பேன். ஏழைகளின் நல்வாழ்வுக்காக காமராஜர் தன்னையே தியாகம் செய்து கொண்டவர், அவருடைய லட்சியத்தில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்கமுடியாது. அவர் மேற்கொண்டுள்ள லட்சியம்தான் நம்முடைய வழி. நான் ‘நாடோடி மன்னன்’ படத்தில் சொன்ன கருத்துக்கள், போட்ட சட்டங்கள் அனைத்தையும் காமராஜர் அமல்படுத்தி வருகிறார். எல்லோருக்கும் இலவச கல்வி என்றேன். அது நடந்து வருகிறது. உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்குத்தான் எல்லா வசதியும் என்று இருந்த நிலைமையை மாற்றி தாழ்ந்த வகுப்பினருக்கும் எல்லாவற்றிலும் எங்கும் முதலிடம் என்று அமைத்தவர் காமராஜர்.

இங்கு காமராஜரை சந்தனக் கட்டைக்கு ஒப்பிட்டுப் பேசினார்கள். நான் இதை ஏற்க விரும்பவில்லை. ஏனென்றால், சந்தனக் கட்டையை அரைக்க அரைக்க மணம் வீசுவது உண்மை. ஆனால் அது தேய்ந்து மறைந்து விடுகிறது. ஆகவே சந்தனக் கட்டைக்கு ஒப்பிட்டுப் பேசுவது முறையல்ல சரியல்ல.
என்னைப் பொருத்தவரை காமராஜரை நான் உதயசூரியனுக்கு ஒப்பிடுகிறேன். சூரியன் கிழக்கிலிருந்து உதிர்த்து மேற்கில் மறைவதுபோல் தோன்றுகிறது. உண்மையில் அது மறையவில்லை. இருந்த இடத்தில்தான் இருக்கிறது. அதுபோல காமராஜரின் புகழ், தொண்டு உதயசூரியனைப்போல் பிரகாசித்துக்கொண்டு இருக்கிறது. நான் இதுவரை எந்தவித தியாகமும் செய்யவில்லை. அப்படிப்பட்ட சந்தர்ப்பமும் ஏற்படவில்லை. ஆனால் தியாகிகளின் கூட்டத்தில் கலந்து கொண்டு தியாகிகளால் பாராட்டுவதை கேட்கும்போது எனக்குப் பெருமையும், மகிழ்ச்சியும் ஏற்படுகிறது.

காமராஜர் அவர்கள் நூறு ஆண்டுகள் வாழ்ந்து நாட்டிற்குச் சேவை செய்ய வேண்டும். மக்களின் கவலைகளைப் போக்கி நல்வாழ்வைக் கொடுக்கவேண்டும். கல்யாண வீடு போல நாம் இங்கே சிரித்துப் பேசிக்கொண்டு இருக்கிறோம். அதோடு நாம் சிந்திக்கவேண்டும். அதற்கு நாம் காமராஜரை வணங்கித்தான் ஆகவேண்டும். மக்களை ஒற்றுமைப்படுத்தும் காமராஜர் நீடூழி வாழவேண்டும்.
��
ஜனநாயக சோஷலிசம் என்று காமராஜர் சொல்கிறார். இது சரியா என்று சிலர் கேட்கிறார்கள். சர்வாதிகார ஆட்சி வேறு, பரம்பரையாக நாட்டை ஆள்வது வேறு, ஜனநாயகத்தில் மக்கள் விருப்பத்துடன் அமல்படுத்தப்படுவது சோஷலிசம், பேதமற்ற சமுதாயம் காண்பதுதான் அதன் அடிப்படை. ராஜாஜி இங்கே முதல் அமைச்சராக இருந்தபோது குலக்கல்வி திட்டத்தைக் கொண்டு வந்தார். அதனை தி.மு.க.கழகம் எதிர்த்தது. காமராஜர் முதல் அமைச்சராக வந்தவுடனேயே மாற்றப்பட்டது. காங்கிரசின் திட்டத்தை அதே காங்கிரஸ்காரர் மாற்றினார். எப்படி மாறியது? ஒரு மனிதன் நல்லவனாக இருந்தால் கட்சிக் கொள்கையும் மாறுகிறது. அதற்கு எடுத்துக் காட்டு காமராஜர்.

இப்படிப்பட்டவரைப் போற்றாமல் தி.மு.க.கழகத்தில் எனக்கு வேறு என்ன வேலை இருக்க முடியும். தி.மு.க.வின் லட்சியங்களைக் காமராஜர் நிறைவேற்ற விரும்புகிறார். அதற்குக் காலதாமதம் ஆகலாம். காமராஜர் என் தலைவர். அண்ணா என் வழிகாட்டி. என்னைவிடச் சிறந்தவர்களை என் தலைவர்களாக ஏற்கிறேன். இங்கே பேசிய என்.வி. நடராஜன், ‘காமராஜர் எதிர்கட்சித் தலைவராக இருக்க வேண்டும்‘ என்று குறிப்பிட்டார். நல்ல ஒரு எதிர்க்கட்சி தேவைதான். காங்கிரசை தி.மு.க.கழகம் எதிர்க்கிறது. தி.மு.கவை காங்கிரஸ் எதிர்க்கிறது. இரண்டும் எதிர்க்கட்சிகள்தான். அதில் எது உயர்ந்த கட்சி என்பதை எதிர்காலம்தான் முடிவு செய்ய வேண்டும். மக்கள் மனமாற்றத்திற்கேற்ப மாறும் ஆட்சிதான் தேவை.

ஒருசமயம் காமராஜரை நேரில் சந்தித்து எங்கள் குறைகளை அவரிடம் ஒரு மணி நேரம் விளக்கிப் பேசினேன். அப்போது அவரது நல்ல எண்ணத்தைத்தான் கண்டேன். எண்ணி எண்ணிப் பூரித்தேன். என்னை அவர் தன்பக்கம் இழுக்கவோ, அவமானப்படுத்தவோ இல்லை. மாநகராட்சித் தேர்தலின்போது அவர் ‘வேட்டைக்காரன்’ வருகிறான் ஏமாந்து விடாதீர்கள் என்று ஏதேதோ பேசினார். நானும் பதிலுக்கு ஏதேதோ பேசினேன். அது அரசியல், தனிப்பட்ட முறையில் அவர் நல்லவர், பெரிய முதலமைச்சர் பதவியையே தூக்கி எறிந்தவர். தொண்டராய், தோழனாய் இருந்து மக்கள் சேவை செய்யமுடியும் என்று கருதி பதவியைத் துறந்தார்.
��
சாதாரண கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவரும் இதைப் பின்பற்ற வேண்டும். எம்.ஜி.ஆர். சிகப்பு, நான் கறுப்பு என்று (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) முகவை ராஜமாணிக்கம் குறிப்பிட்டார். மனிதனுக்கு இந்த இரண்டு ரத்தமும் தேவை. ஏதாவது ஒன்று அதிகமாகி விட்டால் வியாதிதான். கறுப்பு என்றால் களங்கம் அல்ல. இரண்டும் சேர்ந்தால்தான் ஜனநாயக சோஷலிசம் மலரும்." என்று பேசினார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆரின் இந்தப் பேச்சு திமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. 'கட்சியின் முக்கியத் தலைவர் அந்தஸ்தில் இருப்பவர், எப்படி மாற்றுக்கட்சியின் தலைவரை புகழலாம்' என கட்சியில் கலகக்குரல் எழுந்தது. குறிப்பாக, 'காமராஜரை தலைவர் எனக் குறிப்பிட்டது அண்ணாவை அவமதிக்கும் செயல்' என பரபரப்பு கிளப்பினர் எம்.ஜி.ஆருக்கு எதிரான கோஷ்டியினர்.

இருப்பினும் எம்.ஜி.ஆர் தன் நிலைப்பாட்டில் உறுதியாக நின்றார். அண்ணாவிடம் தன் நிலைப்பாட்டை அவர் ஒரு சந்தர்ப்பத்தில் எடுத்துரைத்தார். எம்.ஜி.ஆரை நன்கு புரிந்தவரான அண்ணா, மற்றவர்களின் பேச்சை பொருட்படுத்தவில்லை. .........sbb...

orodizli
2nd October 2020, 08:30 PM
MGRamachandiran
URIMAI KURAL
C.V.Sridhar
Le 7 novembre 1974
Le 124ème MGR

Review :
Chitryuga’s
URIMAI KURAL - 1974
starred
MGR,
Latha, SVSahasranamam, Anjali Devi, MNNambiyar & others...

In the period in which directors were distinctly branded as belonging to either MGR or Sivaji camps, Sridhar, in spite of having a separate identity for himself, was considered closer to Sivaji.

He had worked as a scriptwriter for Sivaji films like ETHIR PAARAATHATHU, UTHAMA PUTHIRAN, AMARADEEPAM and PUNARJENMAM ; and had directed Sivaji in VIDIVELLI, SIVANDHA MANN, OOTY VARAI URAVU and NENJIRUKKUM VARAI.

In the early 70s, some of Sridhar’s films didn’t do too well commercially – (AVALUKKENDRU OR MANAM, ALAIGAL, etc…).

He embarked on an ambitious project with Sivaji, grandly titled Hero - 72.

Due to various reasons, the filming ran into rough weather, and Sridhar was facing financial ruin.

(It is another story that Hero - 72 underwent some modifications and was finally released in 1975 as VAIRANENJAM).

Sridhar, in a “do or die” situation, approached MGR to help him out (I cannot help thinking that in similar circumstances, Sridhar ‘did’, while GV ‘died’ :
(- perhaps there aren’t people like MGR around any more).

In an interview, Sridhar recalled how magnanimous MGR was, and how he was treated with honor, understanding and respect :

In order not to give Sridhar a bad name that we went begging to MGR, “Makkal Thilagum” suggested that they have a discreet meeting in Nambhiyar’s house.

But Sridhar, insisting that he had no fear of such a ‘bad name’, went to Ramavaram Thottam.

Sridhar explained his circumstances, and asked MGR to help him out by acting a film in his direction.

MGR replied that he was happy to get a chance to work with Sridhar.

He then assured Sridhar of his fullest cooperation and gave him bulk dates.

He went one step further and gave a handwritten note that he was giving priority to complete Sridhar’s film.

Sridhar was overwhelmed when MGR explained that this note would help Sridhar to get the necessary finances for the venture.

It was a hit Telugu film - DASARA BULLUDU (starring Nageswara Rao) that was the inspiration for URIMAI KURAL, though Sridhar adapated it to suit MGR and the Tamil milieu.

However, MGR insisted on copying the attire of Nageswara Rao in the original, including the Andhra style dhothi.

As was his won’t, Sridhar wanted Kannadassan to write the lyrics.

Considering the fact the MGR and Kannadassan weren’t the thickest of pals (!), Sridhar asked MGR’s permission to do so, MGR readily gave the go ahead (“Kavignarudan thaan poosal, avar varigaludan alla- dhaaaralamaaga ezhuthattum”).

Sridhar got two songs written by Kannadassan and composed and recorded by MSVisuwanadhan (“Vizhiye kathai ezhuthu” and “Aambalaingala neenga aambalaingalaa”).

It was then that Kannadassan wrote a particularly virulent piece against MGR in a magazine, and Sridhar got the jitters, and asked MGR about the fate of the songs - MGR replied that he still had no objection to Kannadassan writing the songs.

However, if Sridhar felt that MGR fans might not take kindly to Kannadassan’s songs, he was free to change the lyricist, he would not interfere in the matter and it was up to Sridhar to decide.

Sridhar consulted some distributors, who advised him to use the two songs written by Kannadassan for some other film, and get the songs for URIMAI KURAL written by some other lyricist.

Accordingly, Sridhar approached Vaali and got a fresh set of songs written, composed and recorded.

(Sridhar approached Vaali only after explaining his predicament to Kannadassan, who agreed to the change).

When MGR got to know this, he called Sridhar and told him to retain Kannadassan’s two songs as well, as those songs were really good.

URIMAI KURAL went on to become a super hit, and the songs are popular to this day.

The soundtrack :

Vizhiye kathai ezhuthu
KJYésudass and PSusheela
Kannadassan

Aambalaingalaa neenga aambalaigalaa
LREswari
Kannadasan

Oru thaai vayitril vandha udanpirappil
TMSoundher Radjan
Vaali

Kalyana valaiyosai kondu
TMSoundher Radjan and PSusheela
Vaali

Nethu poothaale roja mottu
TMSoundher Radjan
Vaali

Ponna porandhaa aambalaikkitta
TMSoundher Radjan
Vaali

Maatikkittaaradi mayilakkaala
LREswari
Vaali

Though Vizhiye kathai ezhuthu was the pick of the lot, Kalyana valaiyosai kondu has its own folksy mellow enchantment- Latha carrying MGR’s sathunavu and walking towards the field, where MGR is engaged in an honest day’s labour.

Sighting his beloved and hearing her call, he wipes the sweat off his brow, and washes his hands in the pump-set, and wipes them in Latha’s mundhaanai.

He has his fill of both the lunch and Latha, and returns, fully refreshed, to yer-ottify!

Though KJYésudass and SPBalasubramanium were increasingly singing for MGR, the 70s too had some memorable TMSoundher Radjan and PSusheela s’duets in MGR s’ films- Kalyana valaiyosai kondu ranks along with Azhagiya thamizh magal ival, Nallathu kanney kanavu kanindhadhu, Kanni oruthi madiyil, Lily malarukku kondattam, Nee ennenna sonnalum kavithai, Inbamey undhan peyar pennmaiyo, Kanavugaley aayiram kanavugaley…......FL...

orodizli
2nd October 2020, 08:33 PM
சேலம் மாநகரில்*திரையுலக ஏக வசூல் சக்கரவர்த்தி...
கலையுலக பேரொளி*...
எம்.ஜி.ஆர். அவர்கள் படைத்த மாபெரும் வெற்றி சாதனைகள்*...
100 நாட்களுக்கு மேல் சாதனை புரிந்த திரைப்படங்களின் பட்டியல்கள்.....
++++++++++++++++++++++++++++
1947 ராஜகுமாரி
ஒரியண்டல்* : 115 நாள்
1948 மோகினி
ஒரியண்டல் 105 நாள்
1950 மருதநாட்டு இளவரசி
நியூசினிமா 100 நாள்
1950 மந்திரிகுமாரி
ஒரியண்டல் 147 நாள்
1951 மர்மயோகி
ஒரியண்டல் 126 நாள்
*1951 சர்வாதிகாரி
நீயூசினிமா : 116 நாள்
*1952 என் தங்கை
அம்பிகா : 105 நாள்*
1954 மலைக்கள்ளன்
ஒரியண்டல் :.147 நாள்*
1955 குலேபகாவலி
நியூ சினிமா 140 நாள்
1956 அலிபாபாவும் 40 திருடர்களும்
வெலிங்டன்* : 154 நாள்
1956 மதுரைவீரன்
ஒரியண்டல் : 161 நாள்*
1956 தாய்க்குப்பின் தாரம்
நீயூ சினிமா : 119 நாள்*
1957 சக்கரவர்த்தி திருமகள்
நீயூசினிமா :.112 நாள்*
1958 நாடோடி மன்னன்
நீயூசினிமா : 147 நாள்
1961 திருடாதே
நீயூசினிமா : 97நாள்*
1961 தாய் சொல்லை தட்டாதே
நீயூசினிமா : 116 நாள்*
1962 தாயைக் காத்த தனயன்
பேலஸ் : 126 நாள்*
1963 நீதிக்கு பின் பாசம்
நீயுசினிமா : 100 நாள்*
1963 பரிசு
ஒரியாண்டல் :105 நாள்*
1964 வேட்டைக்காரன்
நீயூசினிமா :.112 நாள்
1964 பணக்கார குடும்பம்
சென்ட்ரல் விக்டோரியா 112 நாள்*
1965 எங்க வீட்டுப் பிள்ளை
சாந்தி : 113 நாள்*
1965 ஆயிரத்தில் ஒருவன்
ஒரியண்டல் :125 நாள்*
1966 அன்பே வா
ராயல் : 112 நாள்*
1967 காவல்காரன்
ஒரியண்டல் : 110 நாள்*
1968 ரகசியபோலிஸ்115
ஒரியண்டல் :110 நாள்
1968 குடியிருந்த கோயில்
சங்கம் : 86 நாள்
1968 ஒளி விளக்கு
சங்கம் : 85 நாள்*
1969 அடிமைப்பெண்
சாந்தி : 133 நாள்
1969 நம்நாடு
பேலஸ் : 107 நாள்*
1970 மாட்டுக்கார வேலன்
ஜெயா : 156 நாள்*
1970.என் அண்ணன்
அலங்கார் : 110 நாள்*
1070 எங்கள் தங்கம்
பேலஸ் :* 105 நாள்
1971 குமரிக்கோட்டம்
பேலஸ் : 101 நாள்*
1971 ரிக்க்ஷாக்காரன்
அலங்கார் : 118நாள்
1972 நல்ல நேரம்
ஒரியண்டல் : 126 நாள்*
1973 உலகம் சுற்றும் வாலிபன்
சங்கம் : 126 நாள்*
1974 உரிமைக்குரல்
சங்கம் 127 நாள்*
1975 இதயக்கனி*
அலங்கார் : 115 நாள்
1975 பல்லாண்டு வாழ்க
அப்ஸரா* : 112 நாள்.........ur...

orodizli
2nd October 2020, 08:36 PM
1933 – 34 ஆண்டுகளில் எம்.ஜி.ஆர் காங்கிரசில் உறுப்பினராக சேர்ந்தார். அவர் காந்தியவாதியாகவும், காந்தியை நேசிப்பவராகவும் எப்போதும் இருந்தார். “புத்தன், ஏசு, காந்தி பிறந்தது பூமியில் எதற்காக?” என்று பாடியவருக்கு, புத்தர், ஏசுவை விட காந்தியை மிகவும் பிடிக்கும். “காந்தி மாதிரி ஒரு மகானைப் பார்த்தது இல்லை. இயேசுவும், புத்தரும் கூட மதத்தைத்தான் பரப்பினார்கள். ஆனால், காந்தி ஒருவர்தான் அரசியலை நேர்மையோடு நடத்தினார்” என்பார்.

. 1930ம் ஆண்டு வாக்கில் காரைக்குடியில் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி நாடகத்தில் எம்.ஜி.ஆர் நடித்துக்கொண்டிருந்த சமயம். காந்தியடிகள் காரைக்குடிக்கு வருகைதந்தார். அப்போது காந்தியை முதன்முதலாக பார்த்ததாக எம்.ஜி.ஆர் தெரிவித்திருக்கிறார்.

“காந்தியக் கொள்கைகளை முழுவதுமாக கடைபிடித்த தலைவர் அண்ணா மட்டுமே. அவருடைய புத்தகங்களை படித்தேன். அவருடைய நியாயமான கோரிக்கைகள்தான், தமிழகத்திற்கும், இந்திய துணை கண்டத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும் என்ற காரணத்தால் தி.மு.கழகத்தில் சேர்ந்தேன்.” என்று தி.மு.கவில் இணைந்த போதும் காந்திய கொள்கையில் பற்றுள்ளவராகவே இருந்தார்.

காந்தியடிகளின் பல்வேறு கொள்கைகளை தன்னுடைய வாழ்க்கையில் கடைபிடித்தார் எம்.ஜி.ஆர். அதிலொன்று கதர் சட்டை உடுத்துதல். நாடக நடிகராக இருந்த பொழுதிலிருந்து கதர் மீது பாசம் கொண்டவராக இருந்தார் எம்.ஜி.ஆர். இளம் வயதில் அணிந்திருந்த துளசிமாலையை துறந்தவிட்ட போது கூட, கதராடையை விடவில்லை.

அன்பே வா திரைப்படத்திற்கான படபிடிப்பு சிம்லாவில் நடைப்பெற்றது. படபிடிப்பு முழுவதும் முடிந்ததும், டெல்லியில் உள்ள காந்தி, நேரு போன்ற தலைவர்களின் சமாதிக்கு சென்றார் எம்.ஜி.ஆர். காந்தி சமாதியில் மலர்வளையம் வைத்து வணங்கியவர், சமாதியை ஒரு முறை சுற்றி வந்து வணங்கி அங்கேயே அமர்ந்து சில நிமிடங்கள் தியானமும் செய்திருக்கிறார்.

. “காந்திஜி கூறிய உயர்ந்த கருத்துக்கள், தத்துவங்கள் அனைத்துமே அன்றாட வாழ்க்கையில் பின்னிப் பிணைந்திருக்கின்றன. மது விலக்கை பற்றி யாராவது வலியுறுத்தினால் அங்கே காந்தி இருக்கிறார். தீண்டாமையை எதிர்த்து எவரேனும் போராடினால் அங்கே காந்தி இருக்கிறார்.உண்மை, எளிமை, அன்பு, நேர்மை ஆகிய பண்புகள் எங்கெங்கு இருக்கின்றனவோ, அங்கெல்லாம் காந்தி இருக்கிறார்” என்று காந்தியை நேசித்த எம்.ஜி.ஆர் மதுவிலக்கையும் தீவிரமாக கடைபிடிக்க எண்ணினார்.

காந்தியின் கொள்கையில் மதுவிலக்கை மிகவும் நேசித்தார் எம்.ஜி.ஆர். மதுவிலக்கு கொள்கையை அண்ணா கொண்டுவந்த போது அகம் மகிழந்தார். இருந்தும் அரசியல் காரணங்களுக்காக அடுத்தமுறை தி.மு கழக அரசு அதை நிறுத்தியது. அக்காலக்கட்டத்தில் மதுவிலக்கு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு செய்தார் எம்.ஜி.ஆர். “கள்ளுக்கடைப் பக்கம் போகாதே உன் காலைப் பிடித்து கெஞ்சுகிறேன்” என்று யாழ்பாணத்தினைச் சேர்ந்த திரு நித்தி கனகரத்தினம் பாடிய பாடலை, தமிழ்நாட்டின் மதுவிலக்கு பாடலுக்கு தேர்ந்தெடுத்தார் எம்.ஜி.ஆர்.

“அமைதியும் எளிமையுமே உருவான அவரை பார்த்ததும் ஏதோ தெய்வ தன்மை பொருந்திய ஒருவரை பார்ப்பது போன்ற பக்தி உணர்வு தான் ஏற்பட்டது. அந்த புன் சிரிப்பும், அவரது நடையும், குனிந்த தலையும் என் உள்ளத்தில் இன்றும் சித்திரமாக பதிந்து இருக்கின்றன.” என்று காந்தியை பார்த்த போது உணர்ந்தவற்றை பதிவு செய்திருக்கிறார் எம்.ஜி.ஆர்

. காந்தியின் அகிம்சையில் நம்பிக்கை கொண்டிருந்த எம்.ஜி.ஆர், உண்ணாவிரதம் கூட இருந்திருக்கிறார். தமிழ்நாட்டுக்கு மத்திய அரசாங்கம் அரிசி அனுப்பாததைக் கண்டித்து முதல்-அமைச்சராக இருந்த காலத்தில் எம்.ஜி.ஆர். 10 மணியிலிருந்து உண்ணாவிரதம் இருக்க தொடங்கினார். உண்ணாவிரதம் தொடங்கிய ஒரு மணிநேரத்திலேயே மத்திய உணவு மந்திரி ராவ்பீரேந்திரசிங் தொடர்பு கொண்டு டெல்லியில் வந்து பேசும் படி கூறினார். இருந்தும் எம்.ஜி.ஆர் திட்டமிட்டபடி மாலை 5 மணி வரை உண்ணாவிரததினை தொடர்ந்தார்.

காந்தியின் கொள்கைகளான மது விலக்கு, தீண்டாமை ஒழிப்பு, சமூக சேவை, எளிமை, உண்மை, தேசிய உணர்வு என்று அனைத்தையும் நேசித்தவர் எம்.ஜி.ஆர். இதனை நான் கண்ட காந்தி என்ற தலைப்பில் ஆனந்த விகடன் இதழுக்கு பேட்டியாக தந்திருக்கிறார். காந்திப் படத்தையும், அண்ணா படத்தையும் வழிபட்ட பின்பே முதல்வர் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார் எம்.ஜி.ஆர்........sbb...

orodizli
3rd October 2020, 06:41 AM
மதம், மொழி, இன வேறுபாடுகள் அற்றவர் எம்.ஜி.ஆர்


பாரத ரத்னா விருது இந்திய இலங்கையின் ஒற்றுமைக்காகப் பாடுபட்டதால் நம் நாட்டின் தேசியத் தலைவர்களுள் ஒருவரான எம்.ஜி.ஆருக்குக் கிடைத்தது. தென்னிந்திய மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் வடக்கே டில்லி பம்பாய் கொல்கத்தா ஆகிய நகரங்களிலும் அ.தி.மு.க கட்சி செயல்பட்டதால் எம்.ஜி.ஆர் தேசியக் கட்சி தலைவர் அந்தஸ்தை பெற்றார். இந்த அந்தஸ்துக்குரிய அஸ்திவாரம் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றங்களால் 1953 முதல் அமைக்கப்பட்டது. பாரதப் பிரதமராக லால் பகதூர் சாஸ்திரி இருந்த போது அவர் அந்தமான் தீவில் பணத்தோட்டம் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றத்தை திறந்துவைத்தார். இன்றும் உலகில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் எம்.ஜி.ஆர் பற்றிய நினைவுகள் பசுமையாக உள்ளன. வெளிநாடுகளில் குறிப்பாக ஃபிரான்ஸ், சிங்கப்பூர் மலேசியா போன்றவற்றில் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா வருடந்தோறும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. கர்நாடகாவின் தலைநகரான பெங்களூரிலும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. மகாராஷ்ட்டிராவின் எம்.ஜி.ஆர் மன்ற தலைவர் இதயக்கனி இதழுக்கு விளம்பரமும் நூற்றாண்டு விழா வாழ்த்தும் அனுப்புகிறார்.

நாடெங்கும் கட்சிஅலுவலகமாக மாறிய ரசிகர் மன்றம்

அவசர நிலையைப் பிரகடனம் செய்த பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் மாநிலக் கட்சிகளின் வளர்ச்சியை விரும்பவில்லை. அவற்றை ஒடுக்கிவிடுவார் என்ற தகவல் வந்தபோது எம்.ஜி.ஆர் தனது அண்ணா தி.மு.கவை அனைத்திந்திய அண்ணா தி மு க என்ற பெயரில் தேசியக் கட்சியாக மாற்றினார். இதற்காக மற்ற மாநிலங்களில் கட்சி அலுவலகங்கள் திறக்கப்பட்டன. உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. அ.தி.மு.க சார்பில் தேர்தலில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். அவர்கள் சட்டமன்றத்தில் அந்த மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்காக குரல் கொடுத்தனர். இவற்றுக்கெல்லாம் அடிப்படையாக இருந்தவை மற்ற மாநிலங்களில் இயங்கி வந்த எம்.ஜி.ஆர் ரசிகர்மன்றங்கள் ஆகும்.

எம்.ஜி.ஆர்

மற்ற மாநிலங்களுக்குச் செய்த உதவிகள்

எம்.ஜி.ஆர் நடித்து வந்த காலத்திலும் அரசியலுக்கு வந்த பிறகும் பிறருக்கு உதவுவதில் அவர் நம்மவர்,வேற்றவர் என்று வேறுபாடு கண்டதில்லை. எந்த மாநிலமாக இருந்தாலும் எந்த மொழி பேசும் மக்களாக இருந்தாலும் அவர் உதவி செய்யத் தயங்கியதே இல்லை. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல அவர் செய்த உதவிகளில் சிலவற்றை மட்டும் இங்கு காண்போம்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் வந்த போது உடனே எம்.ஜி.ஆர் போர் நிதியாக ரூ. 75,000 தருவதாக அறிவித்து முதல் தவணையாக காமராஜரிடம் 25,000க்கான காசோலையை தந்தார். அதற்கு பாரத பிரதமர் நேருஜி அவர்கள் நன்றி தெரிவித்து கடிதமும் அனுப்பினார்.

ஒரிசாவுக்கு நிவாரண நிதி திரட்டும் முயற்சியில் சென்னையில் ஒரு இந்தி படத்தைப் போட்டு அதன் வசூலை அனுப்ப சிலர் முயன்ற போது அதற்கான அழைப்பு எம்.ஜி.ஆருக்கு வந்தது. அந்தப் படத்தின் வசூல் தொகைக்குச் சமமான அளவு தொகையை எம்.ஜி.ஆர் தனிப்பட்ட முறையில் வழங்கினார்.

ராஜஸ்தானுக்கு அவர் அடிமைப்பெண் படப்பிடிப்புக்குச் சென்றபோது அண்மையில் அங்கு ஏற்பட்ட தீ விபத்துக்கு ஐம்பதாயிரம் நிதி உதவி அளித்தார். மறுநாள் செய்தித்தாள்களின் தலைப்புச் செய்தியாக இச்செய்தியே இடம்பெற்றது.

கர்நாடகாவில் ஒரு விழாவில் கலந்துகொள்ள எம்.ஜி.ஆர் சென்றிருந்த போது அங்கு பார்வையற்றோருக்கும் பேசும் திறனற்றோருக்குமாக ஐம்பதாயிரம் ரூபாய் உதவியளித்தார். எம்.ஜி.ஆர் அமெரிக்கா போய் சிகிச்சை பெற்று வந்த பிறகு அவருக்குப் பேசும் திறன் குறைந்தபோது அவர் அந்தக் கஷ்டத்தை உணர்ந்து தன் ராமாவரம் தோட்டத்தில் இக்குறைபாடு உடைய சிறுவர்களுக்குப் பள்ளி அமைக்கும்படி தன் உயிலில் எழுதிவைத்திருந்தார் என்று நம்மில் பலர் கருதுகிறார்கள். ஆனால், அவர நன்றாகப் பேசி வந்த காலத்திலேயே அவருக்கு மாற்று திறனாளிகள் மீது அன்பும் அக்கறையும் இருந்தது. அவர், அவர்களுக்கு பல உதவிகள் செய்திருக்கிறார். தமிழ்நாட்டிலும் அவர் பார்வையற்றோர் பள்ளிகளுக்கு நிறைய உதவியிருக்கிறார்.

கொல்கத்தாவுக்குப் பணம் படைத்தவன் படப்பிடிப்புக்குச் சென்றிருந்த போதும் அவர் அங்கு கொல்கத்தா தமிழ்ச் சங்கத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். அச்சங்கத்தின் வளர்ச்சிக்கு நிதி அளித்தார். பின்பு அவர் முதல்வரான பிறகு அங்கு சென்றிருந்த போது அவரை அங்குள்ள ஆளுநர் மாளிகையில் தங்கச் செய்தனர். ஆனால், அங்கிருந்த கெடுபிடிகளைப் பார்த்துவிட்டு என்னைப் பார்க்க வரும் பொது மக்களுக்கு இந்த இடம் வசதிப்படாது என்று சொல்லிவிட்டு ஓர் ஓட்டலில் வந்து தங்கினார். அங்கு எம்.ஜி.ஆரைப் பார்க்க வந்த தமிழர்களின் கையில் அவர் தனிச்செயலர் ரூபாய் நோட்டுக் கட்டிலிருந்து பிரித்து ரூபாய் நோட்டுகளைக் கொடுத்துக்கொண்டே இருந்தார்.

அமெரிக்காவுக்கு எம்.ஜி.ஆர் போயிருந்தபோது ஒரு பெண் அங்கு வந்து எம்.ஜி.ஆரிடம் உதவி கேட்டார். எம்.ஜி.ஆர் அவர் கேட்டதுக்கும் அதிகமான டாலர் நோட்டுக்களை அவருக்குக் கொடுத்து உதவினார்..........

orodizli
3rd October 2020, 10:39 AM
1980-ல்தமிழக சட்டமன்றத் தேர்தலில் அண்ணா திமுக
மீண்டும் அமோக வெற்றி பெற்றது . அந்தத் தேர்தலில்
ஆண்டிபட்டி தொகுதியில் கழகத்தின் சார்பில் நின்ற
இலட்சிய நடிகர் , புரட்சித்தலைவர் எம்ஜியாரை விட
அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் .
தேர்தல் முடிவு வந்த அடுத்தநாள் தலைவரை
சந்திக்க ராமாவரம் தோட்டம் சென்றார் எஸ்.எஸ்.ஆர் .
அவரை அகமகிழ்ந்து வரவேற்ற தலைவர் , அவருடன்
காலை சிற்றுண்டி உண்டபடியே , " என்ன ராஜு , மந்திரி
ஆகணுமா ? என்ன இலாகா வேண்டும் சொல் " என்று கேட்க ,

" அண்ணே ,மந்திரி எல்லாம் வேண்டாம் ; நான் முதல்
மந்திரி ஆகணும் " என்று சொல்ல ,

தலைவர் சிரித்துக்கொண்டே
" நான் இருந்தால் என்ன , நீ இருந்தால் என்ன நீயே இருந்து
கொள் " என்று சொல்ல , எஸ்.எஸ்.ஆர் சிரித்துக்கொண்டே
" அண்ணே நீங்கள் இருந்தால் நாங்கள் இருந்த மாதிரி ,
தொடர்ந்து இரண்டாம் முறையாக நீங்கள் முதலமைச்சர்
ஆக வேண்டும் .

அது மட்டுமல்ல நீங்கள் உள்ளவரை நீங்களே
முதல்வராக ஆள வேண்டும் என்ற என் விருப்பத்தை
நேரில் தெரிவிக்கவே வந்தேன் " என்று கூறினார்.
அதன் பிறகு அமைச்சருக்கு இணையான ,
' சிறு சேமிப்புத்திட்டத் துணைத்தலைவர் ' பதவியை
வழங்கி இலட்சி நடிகரை சிறப்பித்தார் புரட்சித்தலைவர்.

( இந்தப் பதவி திமுக ஆட்சியில் எம்ஜியார் வகித்த பதவி ).........bsm.........

orodizli
3rd October 2020, 10:39 AM
#டாக்டர் என்ற பட்டத்தை யாரெல்லாம் எதற்காகவோ வாங்கியிருக்கலாம்...
தமது பெயருக்கு முன் அதைப் போட்டுக்கொண்டு பெருமதிப்பைத் தேடிக்கொள்ள விரும்பலாம்...
பொன்மனச்செம்மலுக்குப் பல நாடுகளில் மொத்தம் 52 பட்டங்களை மக்களே விரும்பிக் கொடுத்துள்ளனர்...
தகுதி பார்த்தே தந்தனர்...

எந்தப்பட்டத்தையும் கொடுத்தபோது மறுக்காமல் வாங்கிக்கொண்டவர் மக்கள்திலகம் ...!!!

அதன் உண்மையான காரணத்தை ஒரு முறை மனம் திறந்தார்...

"நான் படிக்க ஆசை..ஆனால் முடியவில்லை...என்னை வக்கீலாக்க வேண்டும், அந்த உடை போட்டு என்னைப் பார்க்கவேண்டுமென்பது என் அம்மாவின் பெரிய ஆசை, வயிற்றைக் கிள்ளும் வறுமையால் பள்ளிக்கே செல்லமுடியாத நிலை..

ஆனால் .. எப்படியோ வளர்ந்து நானோ என் தாயோ நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத பதவியில் உக்காரந்துட்டேன்...
இப்போ இந்த பட்டம், அதை வாங்க ஒரு உடை. அந்த உடையோடு #என் #அம்மா #மேல்உலகத்திலிருந்தாவது #என்னைப் #பார்த்து #ஆனந்தப்படட்டும்..அதனால் தான் மறுக்காம வாங்கிக்கறேன் " என்று கண்ணீர் மல்கினார்.

#புரட்சித்தலைவர் #பயப்படுவது #மக்களின் #விமர்சனத்துக்கே. எந்த காரியத்தையும் அடுத்தவர் விமர்சிக்கும் அளவுக்கு செய்யமாட்டார்.
அவர்களை, டாக்டர் பட்டம் வாங்கிய தன்னை விட அறிவாளியாக ...
தன்னிடம் நலன் கண்டால் வாதிக்கும் வக்கீலாக...
தவறு கண்டால் தண்டனை தரும் நீதிபதிகளாகவே கருதினார்..

அந்த நினைப்பே புரட்சித்தலைவரைப் பதவியில் நிலைக்கவைத்தது............bsm.........

orodizli
3rd October 2020, 10:40 AM
காந்திஜியின் பேரில் எம்.ஜி.ஆர். கொண்டுள்ள பக்திக்கு அளவேயில்லை. இதோ… காந்திஜி பற்றி சொல்கிறார் எம்.ஜி.ஆர்.
��காந்திஜியை நீங்கள் எப்போது முதலில் பார்த்தீர்கள்?
1930ம் ஆண்டு என்று நினைக்கிறேன்.. காரைக்குடியில் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி நாடகத்தில் நான் நடித்துக்கொண்டிருந்த பொழுது காரைக்குடிக்கு வந்திருந்தார் காந்திஜி. அப்போது தான் அவரை பார்த்தேன்.
அவரை பார்த்ததும் முதன்முதலில் உங்களுக்கு எத்தகைய உணர்வு ஏற்பட்டது?
அமைதியும் எளிமையுமே உருவான அவரை பார்த்ததும் ஏதோ தெய்வ தன்மை பொருந்திய ஒருவரை பார்ப்பது போன்ற பக்தி உணர்வு தான் ஏற்பட்டது. அந்த புன் சிரிப்பும், அவரது நடையும், குனிந்த தலையும் என் உள்ளத்தில் இன்றும் சித்திரமாக பதிந்து இருக்கின்றன.
காந்திஜியின் கொள்கைகளில் உங்களுக்கு பிடித்தமானவை எவை?
மது விலக்கு, தீண்டாமை ஒழிப்பு, சமூக சேவை, எளிமை, உண்மை, தேசிய உணர்வு என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
காந்திஜியை பற்றி அண்ணா உங்களிடம் எப்போதாவது கருத்து பரிமாறிக் கொண்டதுண்டா?
கருத்து பரிமாறிக்கொள்ளும் அளவுக்கு நான் பேரறிஞர் அண்ணாவுக்கு சமமானவன் அல்ல. காந்திஜிக்கு முன்பு இருந்த அரசியல்வாதி“கள் எப்போதும் தாங்கள் எடுத்துக் கொண்ட காரியத்தின் வெற்றியை பற்றித்தான் கவலைப்பட்டார்களே தவிர அந்த வெற்றியை அடைவதற்கான வழிகளை பற்றி கவலைப்பட்டது இல்லை. காந்திஜி தான் அரசியல் உலகத்திலும் உண்மையையும், நேர்மையையும் கடைப்பிடித்து வெற்றி காண முடியும் என்று நிரூபித்தவர் என்று அண்ணா பல முறை கூறியிருக்கிறார்.
திரைப்படங்கள் மூலமாக காந்திஜியின் கொள்கைகளை எப்படி பரப்பலாம்?
காந்திஜி கூறிய உயர்ந்த கருத்துக்கள், தத்துவங்கள் அனைத்துமே அன்றாட வாழ்க்கையில் பின்னிப் பிணைந்திருக்கின்றன. மது விலக்கை பற்றி யாராவது வலியுறுத்தினால் அங்கே காந்தி இருக்கிறார். தீண்டாமையை எதிர்த்து எவரேனும் போராடினால் அங்கே காந்தி இருக்கிறார்.உண்மை, எளிமை, அன்பு, நேர்மை ஆகிய பண்புகள் எங்கெங்கு இருக்கின்றனவோ, அங்கெல்லாம் காந்தி இருக்கிறார். மனித வாழ்க்கையிலுள்ள நல்ல தன்மைகள் தான் மகாத்மா. சுருக்கமாக சொன்னால் மனித தன்மை தான் மகாத்மா. ஆகவே அவருடைய கருத்துக்களை பரப்புவதற்கென்று தனியாக படம் எடுக்க வேண்டும் என்பதில்லை.
உயர்ந்த கருத்துக்கள் உள்ள ஒரு படத்தை எடுத்தாலே, அது காந்திய கருத்துக்கள் உள்ள படம் என்று தான் பொருள்.
காந்திஜிக்கு மது, புகை இவை பிடிக்காது. இந்த கொள்கைகயை நடைமுறையில் கடைப்பிடித்து வரும் நீங்கள் அண்மையில் சிகரெட் கம்பெனி நடத்திய விழாவில் கலந்து கொண்டது ஏன்?
ஆரம்பத்தில் அதற்கு ஒப்புக்கொண்ட போது எனக்கு அந்த விவரம் தெரியாது. வறட்சி துயர் துடைப்பு பணிகளுக்காகம், ஸ்டான்லி மருத்துவமனைக்காகவும் நிதி சேர்க்கும் நல்ல காரியம் ஒன்று மட்டும் நினைத்து ஒப்புக்கொண்டேன். பிறகு தான் உண்மை தெரிந்தது. வருத்தப்பட்டேன். அத்துடன் நிற்கவில்லை அதை அன்று மேடையிலேயே கூறி விட்டேன். நிறைய செலவழித்து சிகரெட்டுக்கு விளம்பரம் செய்து மக்களை குறிப்பாக இளம் உள்ளங்களை கவர்வதை விட, இதே பண்தை எவ்வளவோ நல்ல காரியங்களுக்கு செலவழிக்கலாம் என்று பகிரங்கமாகவே பேசினேன். கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களுக்கு இதில் வருத்தம் தான். இருந்தாலும் எனக்கு சரியென்று பட்டதை மறைக்காமல் சொன்னேன். அப்படி பேசிய பிறகு தான் என் மனதுக்கு நிம்மதியாக இருந்தது.
ஆனந்த விகடன்- (08.10.2008)
நீங்கள் எந்த அரசியல் கட்சியில் முதலில் இருந்தீர்கள்?
காங்கிரஸில். காந்திய வழியில் சமதர்மத்தை விரும்பும் ஒருவனாக இருந்தேன்.
அந்தக் கட்சித் தலைவர்களில் நீங்கள் யாரிடம் ரொம்பவும் நெருங்கிப் பழகி இருக்கிறீர்கள்?
அந்த அளவுக்கு அப்போது நான் வளர்ந்திருக்கவில்லை. அதாவது நான்கு பேர் என்னைத் தெரிந்து கொள்ளுமளவுக்கு விளம்பரம் பெற்றிருக்கவில்லை.
தி.மு.க.வில் எந்த ஆண்டு சேர்ந்தீர்கள்?
1952-ஆம் வருடம் தி.மு.க.வில் சேர்ந்தேன்.
தி.மு.க.வில் சேரக் காரணம் என்ன?
எனது காந்திய வழிக் கொள்கைகள் அண்ணாவினால் உருவாக்கப்பட்ட தி.மு.க.வில் இருப்பதை அறிந்து சேர்ந்தேன்....sbb

orodizli
3rd October 2020, 10:42 AM
"அப்போது நான் ‘தாய்’ வார இதழில் உதவி ஆசிரியர்.

#எம்ஜிஆர் அவர்களால் நடத்தப்பட்ட இதழ் அது.

அவரது வளர்ப்பு மகன் அப்புவின் நிர்வாகத்தில் இயங்கிக் கொண்டிருந்த்து.

அப்போது எம்.ஜி.ஆர்-தான் தமிழகத்தின் முதல்வர். அது சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்த வேளை.

எனக்கு இன்னமும் நன்றாக நினைவிருக்கிறது அந்த நாள். ஜனவரி மாதத்தின் மூன்றாம் வாரத்தில் ஒரு திங்கட்கிழமை.

அன்றைக்கு வழக்கத்தைவிடவும் கொஞ்சம் சீக்கிரமாகவே அலுவலகத்திற்கு வந்துவிட்டேன்.

ஆசிரியர் வலம்புரி ஜான் அறையிலிருந்த டெலிபோன் ஒலித்ததும், அவர் வரத் தாமதம் ஆகும் என்பதால் நான் போய் எடுத்துப் பேசினேன்.

எதிர்முனையிலிருந்து ஒரு குரல்...

”நான் எம்.ஜி.ராமச்சந்திரன் பேசுகிறேன்… ஆசிரியர் இருக்கிறாரா?”

அந்த நொடி எனக்குள் லேசான அதிர்ச்சி. சுதாரித்துக் கொண்டு...

”இன்னும் வரலை சார்….”

”நீங்க யார் பேசறது?”

”நான் உதவி ஆசிரியர், கல்யாண்குமார்”

“சரி, கடந்த பொங்கல் தாய் சிறப்பு இதழில் எத்தனை அரசு விளம்பரங்கள் வந்தன என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார் எம்.ஜி.ஆர்.

என்னிடம் அதற்கான பதில் இல்லை. காரணம் நான் ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவன். விளம்பர சம்பந்தமான விபரங்களை நான் அறிய வாய்ப்பில்லை. ஆனாலும் சுதாரித்துக் கொண்டு,

”ஒரு ஐந்து நிமிடம் எனக்கு நேரம் தந்தால் அதுபற்றி முழுவிபரங்களையும் விளம்பர மானேஜர் பத்மானாபனிடம் கேட்டுச் சொல்லிவிடுகிறேன்.. அவர் ஏற்கனவே வந்து விட்டார்..” என்றேன்.

“இல்லை ஆசிரியர் வந்ததும் என்னை அந்த விபரங்களோடு தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள். நன்றி. வணக்கம்.”

-என்று நான் பதில் வணக்கம் சொல்லுமுன்னே போனை வைத்துவிட்டார்.

ஓ! திரையில் பார்த்துப் பிரமித்த ஒரு மனிதரிடம் போனில் பேசிவிட்டோம்! பிரமிப்பாகத்தான் இருந்தது எனக்கு அந்த வாரம் முழுக்க!

சற்று நேரத்தில் ஆசிரியர் வந்ததும் விபரத்தைச் சொன்னேன். அவரும் உடனடியாக அவர் கேட்ட விபரங்களை சேகரித்துக் கொண்டு திரும்ப எம்.ஜி.ஆரிடம் பேசினார்.

விஷயம் இத்தோடு முடிந்துவிடவில்லை. மறுநாள் அலுவலகம் வந்த ஆசிரியர் இன்னொரு புது விஷயத்தைச் சொன்னார்.

முதல் நாள் என்னோடு பேசுவதற்கு முன் எம்.ஜி.ஆர்., ஆசிரியர் வலம்புரி ஜானின் வீட்டுக்குப் போன் செய்திருக்கிறார்.

ஆனால் அப்போதுதான் ஆசிரியர், அலுவலகத்திற்குக் கிளம்பி இருக்கிறார்.

அப்போது அவரது குடும்பம் வெளியூர் போயிருந்தபடியால் வீட்டில் இருந்த பதின்மூன்று வயது வேலைக்காரச் சிறுமிதான் போனை எடுத்துப் பேசியிருக்கிறாள்.

அவளுக்கும் எம்.ஜி.ஆருக்குமான உரையாடல் இப்படி நிகழ்ந்திருக்கிறது:

”ஹலோ.. யாருங்க பேசறது?” இது வேலைக்காரச் சிறுமி.

”நான் எம்.ஜி.ராமச்சந்திரன் பேசுகிறேன். வலம்புரி ஜானிடம் பேசவேண்டும்”

#எம்ஜியார் எப்போது, யாருடன் பேசினாலும் தன் முழுப்பெயரையும் சொல்லித்தான் பேசுவாராம். அதனால் பேசுவது எம்.ஜி.ஆர் என்பது தெரியாமலே அந்த வேலைக்காரச் சிறுமி பதில் சொல்லியிருக்கிறாள்!

“அய்யா இப்பதான் ஆபீஸுக்குக் கிளம்பிப் போனாங்க”

“நீங்க யார் பேசறது?”

”நா இங்க வேலைபாக்குற பொண்ணு. அம்மா, அக்காவெல்லாம் ஊருக்குப் போயிருக்காங்க.”

“உங்க பேரு என்ன?”

“லச்சுமி”

“எந்த ஊரு?”

“தூத்துக்குடி பக்கத்துல வள்ளியூர் “

“இங்க வேலைக்கு வந்து எத்தனை வருஷமாச்சு?”

“மூணு வருஷமா இங்கதான் இருக்கேன்”

“அப்படியா? என்ன சம்பளம் கொடுக்குறாங்க?”

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. மாசாமாசம் ஊருக்கு அப்பாவுக்கு அனுப்பிடுவாங்க. எனக்கு சாப்பாடு போட்டு தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ்க்கு துணி எடுத்துக் கொடுத்துருவாங்க.”

“உன்னை நல்லா வச்சுக்கறாங்களா? சாப்பாடெல்லாம் நல்லா இருக்கா?”

“ம்ம்ம்… நல்லா இருக்கும்.. அய்யாவுக்கு தினம் கறிச்சோறு செய்வாங்க. எனக்கும் கொடுப்பாங்க”

“சினிமாவுக்கெல்லாம் கூட்டிட்டுப் போவாங்களா?”

“ஆமா. லீவு நாள்ல எல்லாரும் போவாங்க. என்னையும் கூட்டிட்டுப் போவாங்க..”

“உனக்கு அய்யாவைப் புடிக்குமா? அம்மாவப் புடிக்குமா?”

“ரெண்டு பேரையுமே புடிக்கும். அய்யா எதாவது கடைக்கு அனுப்பினா மிச்சக் காசை என்னையே வச்சுக்கச் சொல்லுவாரு. சேர்த்துவைக்கிறேன்.”

“எப்ப ஊருக்குப் போகப்போற?”

“எங்க அப்பா வந்து கூட்டிட்டுப் போவாரு. இப்பதான் பொங்கலுக்குப் போயிட்டு வந்தேன். இனி தீபாவளிக்குப் போவேன். புதுத்துணியெல்லாம் அம்மா எடுத்துக் கொடுப்பாங்க..”

“சரி, அய்யா வந்ததும் நான் பேசுனதாச் சொல்லு”

“உங்க பேரு என்ன சொன்னீங்க?”

“எம்.ஜி..ராமச்சந்திரன்”

“மறுபடி சொல்லுங்க….”

“எம்.ஜி.ராமச்சந்திரன்”

அப்போதும்கூட தான் எம்.ஜி.ஆர் என்பதை அவர் சொல்லிக் கொள்ளவேயில்லை!

இரவு வீட்டுக்குத் திரும்பிய ஆசிரியரிடம் அந்த வேலைக்காரச் சிறுமி இந்த போன் விபரத்தைச் சொல்லியிருக்கிறாள்.

அத்தனை நேரம் உன்னிடம் பேசிக் கொண்டிருந்தது, எம்.ஜி.ஆர் என்ற விபரத்தை ஆசிரியர் அவளிடம் சொன்னபோது அதை அவள் முழுசாய் நம்பவில்லை.

எம்.ஜி.ஆரின் முழுப்பெயர் அவளுக்குத் தெரியாததால், ‘அவரு எம்.ஜி.ஆருன்னு சொல்லவேயில்லையே.. எதோ ராமச்சந்திரன்ன்னுதானே சொன்னார், அய்யா பொய் சொல்கிறார்’ என்றுதான் நினைத்திருக்கிறாள்.

ஆனால் அடுத்தமுறை வலம்புரி ஜான், எம்.ஜி.ஆரைச் சந்திக்கப் போனபோது அந்தச் சிறுமி பற்றி விசாரித்த எம்.ஜி.ஆர் அவளிடம் சேர்ப்பிக்குமாறு ஒரு கணிசமான தொகையைக் கொடுத்துவிட்டிருக்கிறார்.

அவ்வளவு பணமும் தனக்குத்தான், அதுவும் எம்.ஜி.ஆரே கொடுத்து விட்டிருக்கிறார் என்று அறிந்தபோதுதான்...

சில நாட்களுக்கு முன் தன்னோடு பேசியது சாட்சாத் எம்.ஜி.ஆரேதான் என்பதை அவள் நம்பியிருக்கிறாள்.!"

-கல்யாண்குமார் | தாய் இதழ் உதவி ஆசிரியர்.....

orodizli
3rd October 2020, 11:12 AM
#புரட்சிதலைவர்
#இதயதெய்வம்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். #அவர்களின்_ஆசியோடு_நண்பர்கள் #அனைவருக்கும்_இனிய
#காலை_வணக்கம்...

இதயதெய்வம் டாக்டர் எம்ஜியார்
அதிமுகவை தொடங்கிய பின் சுதந்திரா கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவரை விரும்பி அழைத்து கட்சியில் சேர்த்துக் கொண்டார். தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தபோதும் மருத்துவரான அவரது சேவை கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகவும் ஆக்கினார். அவர்...டாக்டர் எச்வி.ஹண்டே.

‘‘எம்.ஜி.ராமச்சந்திரனை திமுகவில் இருந்து விலக்கியது மறைந்த அண்ணா அவர்களையே விலக்கியது போலாகும். தனித்துப் போராடுகிறார் எம்.ஜி.ஆர்.! மகாபாரத அர்ஜுனனைப் போல அவரை வெற்றி வீரர் ஆக்குங்கள்’’… திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டபோது மூதறிஞர் ராஜாஜி சொன்ன வாசகங்கள்தான் இவை. 1971-ம் ஆண்டு தேர்தலில் பெருந்தலைவர் காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸும் மூதறிஞர் ராஜாஜியின் சுதந்திரா கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு திமுகவிடம் கடும் தோல்வியை சந்தித்தன.

அதிமுகவையும் திமுகவையும் சமதூரத்தில் வைத்துப் பார்த்த காமராஜருக்கு, ராஜாஜியின் எம்.ஜி.ஆருக்கு ஆதரவான அறிவிப்பு ஏற்புடையதாக இல்லை. சுதந்திரா கட்சியில் இருந்த டாக்டர் எச்.வி. ஹண்டேயை அழைத்து தனது அதிருப்தியை ராஜாஜியிடம் தெரிவிக்குமாறு காமராஜர் கூறினார்.

அதற்கு ராஜாஜியின் பதில், ‘‘காமராஜரும் எம்.ஜி.ஆரை ஆதரிக்க வேண்டும்’’ என்பதே. அவரது பதிலோடு தன்னை சந்தித்த ஹண்டே யிடம், ராஜாஜியை அவரது பிறந்தநாளின்போது சந்தித்து பேசுவதாகக் கூறியிருக்கிறார் காமராஜர். ‘‘ஆனால், அதற்குள் ராஜாஜி உடல் நலம் பாதிக்கப்பட்டு மறைந்துவிட்டார்’’ என்கிறார் டாக்டர் ஹண்டே. ‘‘அடுத்த சில மாதங்களில் நடந்த திண்டுக்கல் இடைத்தேர்தலில் அதிமுக பெற்ற அமோக வெற்றி, ராஜாஜியின் கணிப்பை உறுதிப்படுத்தியது’’ என்றும் கூறுகிறார்.

சட்டப்பேரவையில் அப்போதைய திமுக அரசை எதிர்த்து சுதந்திரா கட்சியின் பேரவைத் தலைவராக இருந்த ஹண்டேயின் செயல்பாடுகளை பார்த்த எம்.ஜி.ஆர்., ‘‘ராஜாஜி என்னை ஆதரித்தார். அவரது விருப்பப்படி நீங்கள் அதிமுகவில் சேர வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார். அதன்படி, 1973 ஜூன் 19-ம் தேதி அதிமுகவில் ஹண்டே சேர்ந்தார். அதிமுகவின் முதல் தலைமை நிலையச் செய லாளர் ஆக அவரை எம்.ஜி.ஆர். நியமித்தார். 1980-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை அண்ணாநகர் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்டு 699 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை ஹண்டே இழந்தாலும், அவரை அமைச்சரவை யில் சேர்த்துக்கொண்டு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக்கினார் எம்.ஜி.ஆர்.!

எம்.ஜி.ஆருடன் சேர்ந்து பணியாற்றிய தனது அனுபவத்தில், அவர் தனது அரசியல் எதிரிகளைக்கூட கடுமையாகப் பேசி ஹண்டே பார்த்தது இல்லை. எதிர்க் கட்சியை சேர்ந்தவர்களின் தொகுதிகளுக்கும் பாரபட்ச மில்லாமல் அரசின் திட்டங்களை எம்.ஜி.ஆர். செயல்படுத்தியிருக்கிறார். அப்படி ஒரு அனுபவம் ஹண்டேவுக்கே உண்டு.

திமுக ஆட்சியில் சட்டப்பேரவை சபாநாயகராக இருந்தவர் புலவர் கோவிந்தன். கருணாநிதிக்கு நெருக்கமானவர். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக ஹண்டே இருந்தபோது, அவரை புலவர் கோவிந்தன் சந்தித்தார். வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள தனது செய்யாறு தொகுதியில் சுகாதாரத்துறை சார்பில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஒரு பட்டியலைக் கொடுத்தார்.

அந்தப் பட்டியலை எடுத்துக் கொண்டு முதல்வர் எம்.ஜி.ஆரை ஹண்டே சந்தித்து விஷயத்தைத் தெரிவித்தார். அதற்கு எம்.ஜி.ஆர்., ‘‘எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. அந்தப் பணிகளை உடனே நிறைவேற்றுங்கள். புலவர் கோவிந்தன் நல்ல மனிதர். அவர் திமுகவில் இருந்தாலும் நீங்கள் செய்யாறு தொகுதிக்கு நேரடியாகச் சென்று பணிகளை முடிக்க ஏற்பாடு செய்யுங்கள்’’ என்றார். இந்த பதிலால் ஹண்டேயின் மதிப்பிலும் மனதிலும் எம்.ஜி.ஆர். விஸ்வரூபம் எடுத்து நின்றார்.

தன் மீது வீசப்படும் கடுமையான விமர்சனங்களுக்குக் கூட எம்.ஜி.ஆர். கோபப்பட மாட்டார். அதே நேரம் அந்த விமர்சனங்களுக்கு அவர் அளிக்கும் பதில் மிகக் கூர்மையாக இருக்கும்.

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, பரமத்திவேலூர் என்ற இடத்தில் அதிமுக பொதுக்கூட்டம். அதில் கலந்து கொள்வதற்காக எம்.ஜி.ஆருடன் ஹண்டே சென்றார். ஹண்டேயின் கையில் அன்றைய மாலை நாளிதழ் இருந்தது. ‘‘என்ன நியூஸ்?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார். சொல்வதற்கு ஹண்டேக்கு தயக்கம். என்றாலும் தயங்கியபடியே சொல்லிவிட்டார். ‘‘திமுக தலைவர் கருணாநிதி உங்களுக்குப் பொருளாதாரம் தெரியாது என்று விமர்சித்திருக்கிறார்’’ என்றார் ஹண்டே.

அதைக் கேட்டு எம்.ஜி.ஆர். கோபமோ, வருத்தமோ அடையவில்லை. நிதானமாகச் சொன்னார்… ‘‘திமுக தலைவர் கூறுவது உண்மைதான். நான் பெரிய படிப்பு படித்தவன் அல்ல. பொருளாதாரம் பற்றி எனக்கு சொல்ல, அதுபற்றி நன்கு அறிந்த உயர் அதிகாரிகள் இருக்கிறார்கள். ஆனால், பல முதல் அமைச்சர்களுக்குத் தெரியாத விஷயம் எனக்குத் தெரியும். பசி என்றால் என்னவென்று எனக்குத் தெரியும். அந்தக் கஷ்டம் புரியும். மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய முதல் அமைச்சருக்கு இது தெரிந்தால் போதும்.’’

‘‘எம்.ஜி.ஆர். சொன்னது கரெக்ட்தானே’’ என்கிறார் டாக்டர் ஹண்டே!

மூதறிஞர் ராஜாஜி நகைச்சுவை உணர்வு உடையவர். எம்.ஜி.ஆரும் அப்படியே. அதிமுகவைத் தொடங்கிய புதிதில் ராஜாஜியின் ஆசியை பெறுவதற்காக அவரை எம்.ஜி.ஆர். சந்தித்தார். படப்பிடிப்பு இருந்ததால் அதை முடித்துவிட்டு ராஜாஜியை பார்க்கச் சென்றபோது தாமதமாகிவிட்டது. வருத்தம் தெரிவித்த எம்.ஜி.ஆர்., ‘‘ஷூட்டிங்கினால் தாமதமாகிவிட்டது’’ என்றார். அதற்கு, துப்பாக்கிச் சூடு சம்பவத்தை குறிப்பிடும் வகையில் ‘‘ஷூட்டிங்தான் ஏற்கெனவே முடிஞ்சுடுத்தே‘‘ என்று சிலேடையாக ராஜாஜி சொல்ல, ரசித்து சிரித்தார் எம்.ஜி.ஆர்.!

அன்புடன்...vr...

orodizli
3rd October 2020, 11:20 AM
எம் ஜி ஆர் நல்லவனுக்கு நல்லவன் ...
எம் ஜிஆர் வல்லவனுக்கு
வல்லவன் ...

சென்னையில் ஒரு பகுதி மிகுந்த பரபரப்பரப்பான ஏரியா ...அங்கு ஒரு சிறு வியாபாரி அந்த பகுதி ரௌடிகளால் தொலை அனுபவிக்கிறார் பல நாள் பொறுத்து கடைசியில் அவர் தினம் வணங்கும் பொன்மன செம்மல் எம் ஜி ஆருக்கு ஒரு கடிதம் போடுகிறார் தன் நிலைமையை குறித்து
ஒரு நாள் ரௌடிகள் கூடும் நேரம் ஒரு அரசு வண்டி வந்து நிற்க அதில் இருந்து சூரியன் போல் எம் ஜி ஆர் இறங்கி கடைகாரர் பெயரை கூப்பிட்டு நலமா ஏன் தோட்டத்திற்கு வரகூடாதா?! என நலம் விசாரித்துவிட்டு ஒரு பொட்டலம் பணம் கொடுத்து போகிறார் கடைகாரர் கடவுளை கண்ட பக்தனாக திகைத்து விட்டார்...
இதன் பின் அந்த கடைகாரரிடம் எவராவது வம்பு வளர்ப்பார்களா ...
எம் ஜி ஆர் நினைத்திருந்தால் போலீஸ் கொண்டு அடக்கி இருக்கலாம் ... ஆனால் அது கடைகாரரிடம் பகைதான் வளரும் என்று கருதியே தானே களம் இறங்கி உதவினார் ...

இது பொதிகை டிவியில் எம் ஜி ஆர் நூற்றாண்டு விழா மேடையில் அதன் தலைமை அதிகாரி உரையில் இருந்து அறியபட்டது

வாழ்க எம் .ஜி .ஆர் ., புகழ்.........vrh...

orodizli
3rd October 2020, 11:44 AM
சேலம் மாநகரில்*...
வசூலுக்கே இலக்கணம், இலக்கியம், இதிகாசம் படைத்த திரையுலக ஏக சக்கரவர்த்தியாம்...மக்கள் திலகத்தின் வெற்றிக்காவியங்கள் வசூலில் நிலைத்து நின்றவைகள் சில....

1956 : மதுரை வீரன்
ஒரியண்டல் : 161 நாள்
வசூல் : 2,25,481.38

1958 : நாடோடி மன்னன்
நீயூ சினிமா* 147 நாள்
சித்தேஸ்வரா 33 நாள்
மொத்த வசூல் : 2,47,160.22

1965 : எங்கவீட்டுப்பிள்ளை
சாந்தி 113 நாள்
பிரபாத் 50 நாள்
சித்தேஸ்வரா 44 நாள்
மொத்தம் 207 நாள்*
வசூல் : 2,74,776.99

1965 : ஆயிரத்தில் ஒருவன்
ஒரியண்டல் 100 நாள் : 2,16,266.22

1966 : அன்பே வா
ராயல் 107 நாள் : 2,18,617.30
1967 : காவல்காரன்
ஒரியண்டல் 106 நாள் : 2,07,198.20
1968 : ரகசியபோலிஸ் 115
ஒரியண்டல் 105 நாள் : 2,01,486.50
1968 : குடியிருந்த கோயில்
சங்கம் 86 நாள் : 2,06,316.60
1968 : ஒளிவிளக்கு*
சங்கம் 91 நாள் : 2,03,181.30

1969 ல் அடிமைப்பெண்
நகரில் 3 லட்சத்தை பெற்ற முதல் படம் இது....
சாந்தி 133 நாள் : 3,00,474.13
1969 : நம்நாடு
பேலஸ் 107 நாள் : 2,43,342.20

1970 ல் மாட்டுக்கார வேலன்
ஜெயா 156 நாள் : 3,61,307.90
ஜங்ஷன்ராம் 40 நாள்* * * * * :* * * *வசூல்* :* 42,600.35
தொடர்ந்து 196 நாள் ஒடி
மொத்தம் வசூல் :* 4,03,908 .25
நகரில் 4 லட்சத்தை ஒடி முடிய பெற்ற முதல் படம்....
1970 : என் அண்ணன்
அலங்கார் 110 நாள் :2,49,494.00
1970 : தேடி வந்த மாப்பிள்ளை
அலங்கார் : 71 நாள் : 1,85,414.25
தொடர்ந்து பிரபாத் 35 நாள் ஒடிய
மொத்த வசூல் : 2,19,370.40
1970 : எங்கள் தங்கம்
பேலஸ் 105 நாள் : 2,17,177.63

1971 குமரிக்கோட்டம்
பேலஸ் 108 நாள் : 2,29,396.96
1971 : ரிக்க்ஷாக்காரன்
அலங்கார் 118 நாள் : 3,81,692.80

1972 : நல்லநேரம்
ஒரியண்டல் 126 நாள் : 2,76,659.40
மற்றும் பிரபாத் 42 நாள்...
ஜங்ஷன் ராம் 35 நாள் ஒடியது.
மொத்த வசூல் : 3,48,107.80 ஆகும்.

1973 : உலகம் சுற்றும் வாலிபன்
சங்கம் : 126 நாள் : 5,65,662.70
(ரத்னா 41நாள்...நடராசா.. 40)
மொத்தம் 207 நாள்*
வசூல் : 6,46,320.17....
நகரில் தனி அரங்கில் 5 லட்சத்தை
கடந்தும் முதல் வெளியீட்டில் ஒடி முடிய 6 லட்சத்தை கடந்தும் சாதனை ஏற்படுத்திய காவியம்.

1974 : உரிமைக்குரல்*
சங்கம் 127 நாள் : 5,03,288.15
நகரில் 2 வதாக 5 லட்சத்தை வசூலில் பெற்றக்காவியம்...

1975 : நினைத்ததை முடிப்பவன்
ஜெயா 84 நாள் : 4,12,716.17
நகரில் 100 நாட்களை நெருங்காமலேயே 4 லட்சத்தை பெற்று..
பட்டணம்மா படத்தின்*
146 நாள் வசூல் உட்பட முறியடித்து அந் நடிகரின் அத்தனை படத்தையும் மண்ணோடு புதைத்த
காவியம் .....

1975. :* இதயக்கனி*
அலங்கார் : 105 நாளில்
5 லட்சத்தை கடந்த 3 வது காவியம்.
வசூல் : 5,08,748. 20 ஆகும்...

1975 : பல்லாண்டு வாழ்க
அப்ஸரா 104 நாள் : 3,68,725.65

1976 : நீதிக்குத்தலை வணங்கு
சங்கம் 105 நாள் : 3,72,900.20

1977 : மீனவ நண்பன்
அப்ஸரா 103 நாள் : 3,03,642.70
(தொடர்ந்து நடராசா 40 நாள்
ஜங்ஷன் ராம் 35 நாள்....)
வசூல் : 4,06,922.46 ஆகும்.
+++++++++++++++++++++++++
மேலும் பல திரைப்படங்கள் வசூலில் சாதனை செய்துள்ளது...
++++++++++++++++++++++++++++++
தொடரும் கோவை மாநகர் சாதனையில் மக்கள்திலகத்தின் காவியங்கள்.......ur...

fidowag
3rd October 2020, 08:26 PM
பாட்டாலே*புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*30/09/20 அன்று அளித்த தகவல்கள்*
-------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்கள் 1974ல் அமெரிக்காவிற்கு ஒரு சிறப்பு அழைப்பின் பேரில் செல்கிறார் . அங்கு சென்னைவாசியான திரு.பழனி பெரியசாமி பால்ட்டிமோர் பல்கலை கழகத்தில் பொருளாதார துறை பேராசிரியராக* இருக்கிறார்* திரு.பழனி பெரியசாமி அவர்களுக்கு எம்.ஜி.ஆர்.மீது அவ்வளவாக ஈர்ப்பு எல்லாம் இல்லாத நேரம் ..எம்.ஜி.ஆர்.அங்கு வந்தபோது அவருக்கு துணையாக இருந்து சில உதவிகள் செய்கிறார் . எம்.ஜி.ஆர்.ஒருநாள் வழக்கம் போல அவரை அழைத்து கொண்டு** நான் இங்கு அருகில் உள்ள ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும் ..அங்கிருந்து ரயிலில் பயணம் மேற்கொண்டு வேறு ஒரு இடத்திற்கு செல்லவேண்டும் என்று கூறி ,மேலும்4 பேர்களுடன் ரயிலுக்காக காத்திருக்கிறார் .ரயில் வந்துவிட்டது .ரயிலில் கூட வந்த 4 பேர்களும் ,பழனி பெரியசாமியும் ஏறிவிட்டார்கள் .ஆனால் எம்.ஜி.ஆர். ரயிலில் ஏறாமல் தன் வலப்புறம் பார்த்து கொண்டு நிற்கிறார் .ரயிலில் ஏறிய அனைவரும் இறங்கிவிடுகிறார்கள் .இந்த ரயிலை விட்டால் அடுத்து அரைமணி நேரத்திற்கு பின்தான்* அடுத்த ரயில் வரும் என்று எம்.ஜி.ஆரிடம்* பழனி பெரியசாமி கூறுகிறார் .பரவாயில்லை வலப்புறம் பாருங்கள். ஒரு பெண் தன் 3 வயது குழந்தையுடன் வேகமாக ஓடிவந்து கொண்டிருக்கிறார் .அவரை பார்த்துதான் தான் நின்றுவிட்டதாக எம்.ஜி.ஆர். கூறுகிறார் .* அந்த பெண் அருகில் வந்ததும் நீங்கள் யார் ? ஏன் இப்படி குழந்தையுடன் ஓடிவர வேண்டும் என்று எம்.ஜி.ஆர். கேட்க ,நான் சுமார் 150கி.மீ.தூரத்தில் இருந்து குழந்தையுடன் காரை சொந்தமாக ஒட்டி கொண்டுவந்தேன் . நீங்கள் இந்த ரயில் நிலையத்தில் இருந்து குறிப்பிட்ட நேரத்தில்* புறப்படுவதாக தகவல் அறிந்து வந்தேன் என்கிறார் .எம்.ஜி.ஆர். உடனே அந்த பெண்ணை ஆசுவாசப்படுத்தி , நீங்கள் எங்கு தங்கி இருக்கிறீர்கள் என்று விசாரித்து ,அவளுடைய குழந்தையை வாஞ்சையாக வாங்கி கொஞ்சி மகிழ்ந்து பின்னர் திருப்பி அனுப்பினார் .


இந்த மாதிரி நாம் பயணத்திற்கு தாமதம் செய்தால் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் குறித்த நேரத்தில் சென்றடைய முடியாது .சில இடங்களுக்கு, நிகழ்ச்சிகளுக்கு அடுத்த நாளோ அல்லது வேறு ஒரு நாளோதான் செல்ல முடியும் என்கிறார் பழனி பெரியசாமி .இருக்கட்டும் பரவாயில்லை .நான் பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து இந்த நாட்டிற்கு வந்திருக்கிறேன் .என்னை காணவேண்டும் என்பதற்காக* ஒரு பெண் தன் குழந்தையுடன் ,தன்னந்தனியாக150 கி.மீ. அவர்* காரை வேகமாக ஒட்டிக்கொண்டு வந்து ,ரயில் நிலைய நடைமேடையில் நடையும் ஓட்டமுமாக வந்து கொண்டிருக்கிறார் .அவர் மட்டும் என்னை காண முடியாமல் போயிருந்தால் மிகவும் வருத்தப்பட்டிருப்பார்.ஏமாற்றம் அடைந்திருப்பார் . .நானும் வேதனை அடைந்திருப்பேன் .அந்த பெண்ணின் எதிர்பார்ப்பை நான் நிறைவேற்றியதில்தான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் என்று தனது சந்தோசத்தை வெளிப்படுத்தினாராம்*


தமிழ் திரைப்பட கதாநாயகர்களில் மிக சிறந்த வாள் வீரர் என எம்.ஜி.ஆர். அந்த காலத்தில் பேசப்பட்டார் .அவரது வாள் வீச்சின்போது நடனமும் ஒளிர வேண்டும் .அதனால்தான் நீரும் நெருப்பும் படத்தில் கடவுள் வாழ்த்து பாடும் என்ற பாடலில்*வாள்வீச்சு பயிற்சியை சிறுவர்களுக்கு கற்று கொடுக்கும்போது சில நடனமும்*ஆடி அதை நடனக்காட்சியுடன் கூடிய வாள்* வீச்சாக படமாக்கி இருப்பார்கள் .அப்படி அந்த வாள் வீச்சிற்கு அப்படி ஒரு சிறப்பான பெயர் புகழ் வர காரணம்*கேரளாவில் குலதெய்வ வழிபாட்டில் முக்கியமானது வெளிச்சப்பாடு என்பது .வெளிச்சப்பாடுஎன்பது தங்கள்* குலதெய்வ கோயிலில் உள்ள சாமியின் முன்னால் நீண்ட ஒரு கத்தியை வைத்திருப்பார்கள் .அந்த கத்தி என்பது ஒரு குடும்பத்தின் குலத்தைசேர்ந்த**வாரிசு . அந்த கத்தியை எடுக்க கூடிய குழந்தை எத்தனை வயதிற்குள் இருக்கவேண்டும் என்பதற்கு வரம்பு இல்லை .எம்.ஜி.ஆர். அந்த வாளை* எடுத்து கொண்டு வந்து பூஜை செய்கிற அருளாளி,சாமியார் கைகளில் தரவேண்டும் அப்படி அந்த வாளை எம்.ஜி.ஆர். கொண்டுவந்து தருவார் .அதன்பின் அந்த பூசாரி தன்* கைவிரலில் வாளால்* கீறி வரும் ரத்தத்தை எம்.ஜி.ஆர். நெற்றியில் திலகமாக இடவேண்டும் .இதுதான் வெளிச்சப்பாடு என்பது .அந்த வெளிச்சப்பாட்டிலே அந்த வாளை* தூக்கி வந்து பூசாரியின் கைவிரல் ரத்தத்தால்*,நெற்றியில் திலகம் இட்டுக்கொண்ட அந்த எம்.ஜி.ஆர்.தான் பிற்காலத்தில் வாள் வீச்சில் மாவீரனாக திகழ்ந்தார் .


பல நடிகர்கள் சொந்த படம் எடுத்து எதற்கு கையை சுட்டு கொள்ள வேண்டும் என்பதற்காக சொந்தப்படம் எடுப்பதில்லை . ஆனால் ஒரு சில கருத்துக்களை சொல்வதற்காக ,[பரீட்சார்த்தமாக , தன் கையில் உள்ள அனைத்து சொத்து ,பணம் எல்லாவற்றையும் செலவழித்து சொந்த படம் தயாரிக்க எம்.ஜி.ஆர். அவர்கள் எடுத்த ரிஸ்க் இருக்கிறதே அதற்கு அசாத்தியமான மனதைரியம் ,துணிவு ,எதையும் தாங்கும் இதயம் இருக்க வேண்டும் .இவை எல்லாம் இருந்ததால் எம்.ஜி.ஆர். துணிந்து செயல்பட்டார் . அடிமைப்பெண் படம் வெளியானபின் அதை பார்த்த நடிகர் சிவாஜி கணேசன் ,எம்.ஜி.ஆர். அண்ணனின்**சொந்த பட தயாரிப்பில் உள்ள திறமை, துணிவு, தைரியம் ,சாமர்த்தியம்* வேறு யாருக்கும் இருக்க வாய்ப்பில்லை. இது ஒரு தனி மனித சாகசம்* என்று கருத்து வெளியிட்டார் .


திரு.கா.லியாகத் அலிகான்* : புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் தான் தயாரிக்கும் சொந்த படம் நல்லமுறையில் அமைய வேண்டும் ,காட்சிகள் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தன் சொத்துக்கள் சிலவற்றை விற்று ,சிலவற்றை அடகு வைத்து ,கடன் வாங்கியும் படத்திற்காக செலவழித்திருக்கிறார் .எம்.ஜி.ஆரின் அண்ணன் கடன் வாங்கி சொந்த படம் தயாரிப்பது தவறில்லை .ஆனால் உடனடியாக ரூ.10,000/- கேட்கிறாயே .நான் என்ன செய்வது என்று கேட்கிறார் .ஆமாம் உடனடியாக தேவை. ஒரு காட்சிக்கு சரவிளக்கு மேலே* தொங்க விடுவதற்கு தேவை .ஏற்பாடு செய்யுங்கள் என்றார் எம்.ஜி.ஆர். அந்த சரவிளக்கு சுமார் ரூ.7,000 மதிப்பில் வாங்கி தரப்பட்டு காட்சிக்காக பொருத்தப்பட்டது .எம்.ஜி.சக்கரபாணி அவர்கள் காட்சி படமாக்கியதும் அதை திருப்பி கொடுத்து விடலாம் என்ற எண்ணத்தில் வாங்கி வந்துள்ளார் .காட்சி முடியும் பட்சத்தில் அதை எம்.ஜி.ஆர். உடைக்க சொன்னார் .எம்.ஜி.சக்கரபாணி அவர்கள் இதை கண்டு ஏன் உடைக்கிறீர்கள் ,பணத்தை விரயம் ஆக்குகிறீர்கள் என்று கேட்க,காட்சியின்படி இதை உடைக்க வேண்டும் என்று* எம்.ஜி.ஆர். கூறினாராம் .பொருள் விரயம், நஷ்டம் பற்றி கவலைப்படாமல் காட்சி சிறப்பாக அமைய வேண்டும் என்பதில் கண்ணும் கருத்தாக இருந்தார் எம்.ஜி.ஆர் .


திரு.துரை பாரதி : 1960களில் வெளியான* கிளியோபாட்ரா ஆங்கில படத்தில்*கதாநாயகி வருகைக்கான காட்சி மட்டும் மிகவும் நீண்டு சுமார் 8 நிமிடங்கள் இருக்குமாம்* *அதே சாயலில் எம்.ஜி.ஆர். அடிமை பெண் படத்தில் ராணி பவளவல்லி* வேடத்தில் ஜெயலலிதா தோன்றும்போது அந்த காட்சியை அமைத்திருப்பார் .தமிழ் திரையுலகிற்கு ,இது ஒரு புதுமையான ,பெருமையான விஷயமாக பேசப்பட்டது .


திரு.கா. லியாகத் அலிகான் : எம்.ஜி.ஆர். அவர்களை ,அவர் திறமையை ,ஆற்றலை எப்படி புகழ்வது என்றே தெரியவில்லை .தன்னுடைய சிந்தனைகளை அனைத்தையும் தேக்கி வைத்து பயன்படுத்தினார் .பேரறிஞர் அண்ணா மறைந்திருந்த நேரம் . புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களை மறைமுகமாக* தி.மு.க. வில் இருந்து ஒதுக்கி வைப்பதற்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தன .அதை பற்றியெல்லாம் அவர் கவலைப்படவில்லை .1971 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.விற்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு 184 சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு ஆவதற்கான பணிகளில் இவருடையஉழைப்பின்* பங்கும் மிக பெரியது .அந்த தேர்தலில்* தி.மு.க.வினர் அந்த வெற்றியில் எம்.ஜி.ஆரின் பங்கை*ஒத்து கொள்ளவில்லை என்றாலும் தொண்டர்களுக்கு தெரியும்*எம்.ஜி.ஆரின் வாக்கு வங்கி எந்த அளவிற்கு*மதிப்புள்ளது ,பயன்பட்டது*என்று .ஏனென்றால் எம்.ஜி.ஆர்.அவர்களும் கடுமையாக உழைத்து பிரச்சாரம் செய்திருக்கிறார் .அந்த உழைப்பின் பலன்தான் 184 என்கிற மிருகபலம் கொண்ட*மெஜாரிட்டி தி.மு,க.விற்கு கிடைத்தது*

திரு.துரை பாரதி*: எம்.ஜி.ஆர். அவர்களுக்கு அந்த சமயத்தில் அமைச்சர் பதவி தரவில்லை என்று ஒரு புகார் இருக்கிறது .அதற்காக அவருக்கும் மனவருத்தம் இருந்ததாக சொல்லப்பட்டதே .

திரு.கா. லியாகத் அலிகான் :* எம்.ஜி.ஆர். அவர்கள் அதற்கெல்லாம் அப்பாற்பட்டவர் .அப்போது அமைச்சர் பதவி கேட்டிருந்தாலும் சினிமாவை அவர் கைவிட வேண்டும் என்று சொன்னபோது ,சினிமாதான் எனக்கு வாழ்க்கையை கொடுத்தது .அதைவிட்டு* எப்படி வரமுடியும் .அமைச்சர் பதவி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை என்ற முடிவில்தான் அவர் இருந்தார் .ஒருவேளை அவர் சினிமாவை புறக்கணித்து அமைச்சர் பதவியை*பெற்று இருக்கலாம் .ஆனால் சினிமா என்பது எத்தகைய*ஈர்ப்பு சக்தி கொண்டது .அதன் மூலம் தி.மு.க. கட்சி, சின்னம் , கொள்கைகள் ,திட்டங்கள் எல்லாம் மக்களிடம் பிரபலம் ஆகின .அதுமட்டுமல்லாமல் சினிமா மூலம் போதிய வருவாய் கிடைத்து*கணக்கில்லாமல் ,விளம்பரம் இல்லாமல் பலருக்கு*உதவிகள் செய்து வந்தார்*.அமைச்சர் பதவி கிடைத்தால் போலீஸ் சல்யூட், மரியாதைகள் கிடைக்குமே தவிர ,மற்றபடி சினிமா மூலம் ஒரு நடிகனுக்கு உள்ள* ஈர்ப்பு சக்தி*,அரசியலிலோ, அமைச்சர் பதவியிலோ*கிடைக்க*வாய்ப்பில்லை .இதை அப்போதே புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் உணர்ந்தே இருந்தார் .அவர்*அ .தி.மு.க. கட்சி , கொடியை*தேர்வு செய்யும்போது குறிப்பாக*எங்களை த்தான்* அழைத்து*கருத்து கேட்டார் .அப்போது நான், குழந்தைவேலு , கே.ஏ.கே. அண்ணன் ,அனகாபுத்தூர் ராமலிங்கம் போன்றோர்*அமைதியாகத்தான் இருந்தோம்.அண்ணே நீங்கள் பார்த்து முடிவு செய்யுங்கள் என்றோம் .*பிறகு எம்.ஜி.ஆர். அவர்கள்தான்*கொடியை*,கொடியில் அண்ணாவின் உருவத்தை தேர்வு செய்தார் .அப்போதே*அண்ணன் கே.ஏ.கே.முன்னிலையில் எம்.ஜி.ஆர். அவர்கள் தலைமையில் என்னை உடுமலை தொகுதிக்கு மாணவ அமைப்பாளராக நியமித்தார்கள் .இதுதான் எம்.ஜி.ஆர். அவர்கள் எனக்கு அளித்த*முதல் பதவி .* அதன் பிறகு உடுமலை*தொகுதியில் எம்.ஜி.ஆர். மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதையும் அங்கீகரித்தார் .அதன் பிறகு என்னுடைய செயல்பாட்டை கண்டு ,என்னை கலந்து ஆலோசிக்காமலேயே மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளராக எம்.ஜி.ஆர். அவர்கள்* நியமித்தார்கள் .எனது பணியின் வேகம், விவேகத்தை பார்த்து*.அப்படியே படிப்படியாக உயர்த்தி மாவட்ட மாணவ அமைப்பாளர்களில்* ஒருவராக நியமித்தார் .நானும், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகிய இருவரும் பணியாற்றி வந்தபோது ,என் செயல்பாட்டை கணித்து , அண்ணன் காளிமுத்துவை மாணவர் அணி செயலாளராகவும் ,என்னை துணை செயலாளராகவும் போட்டார்கள் .அப்போது இளைஞர் அணி செயலாளராக திருநாவுக்கரசையும் ,இளைஞர்* அணி துணை செயலாளராக ஜெ.சி .டி.பிரபாகரனையும் நியமித்தார்கள் .எங்களுடைய வேகமான பணிகள்,விமரிசையாக செய்வதை பார்த்துவிட்டு, ஏழெட்டு மாதங்களில்* என்னை மாணவர்* அணி செயலாளராகவும் , ஜெ.சி.டி.பிரபாகரனை இளைஞர்* அணி செயலாளராகவும் போட்டார்கள் .இப்படி படிப்படியாக என்னை உயர்த்திக்கொண்டே* வந்தார்கள்.எனக்கே ஆச்சர்யமாக இருந்தது . .அப்போது என்னை அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் சேர்மனாக நியமித்தார்கள் .எனக்கே நேரடியாக* சென்று ஏதாவது பதவி கொடுங்கள் என்று நான் கேட்பதற்கு* கொஞ்சம் பயமாக இருந்தது*


.ஆனால் உடுமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினராகிய அமைச்சர்* குழந்தைவேலு* என் உழைப்பை* பார்த்து நேரடியாக எம்.ஜி .ஆர். அவர்களிடம் அழைத்து சென்று*.இவருக்கு ஏதாவது பதவி வாங்கி கொடுத்தே ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் சந்தித்தார் .நான் வெளியில் இருந்தேன் .எம்.ஜி.ஆர்.அவர்களும் அமைச்சர் குழந்தைவேலுவும் உள்ளே பேசி கொண்டிருந்தார்கள் எம்.ஜி.ஆர்.அவர்களிடம் என் வெற்றிக்காக தொகுதியில் கடுமையாக பிரச்சாரம் செய்து உழைத்தார் . ஆகவே இவருக்கு*ஏதாவது பதவி கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று சிபாரிசு*செய்துள்ளார் .அமைச்சர் குழந்தைவேலு .பின்னர் இருவரும்*வெளியே வந்தார்கள் .அப்போது தலைவர் என் தோளின்மீது கைபோட்டபடி*மாடிப்படிகளில் நடந்து வந்தார் .அப்போது கோட்டையில் லிப்ட்*கிடையாது .நீ அரசு பதவி எதுவும் கேட்க கூடாது .கட்சியில் பதவி தருகிறேன் .நான் அளிக்கும் பதவியை கொண்டு நன்றாக செயல்படு என்று 1980 ஜூலை*மாதம் 10ந்தேதி சொன்னார் .உங்கள் கரங்களால் எந்த பதவி கொடுத்தாலும் வேலை செய்ய தயார் என்று சொன்னதும்*காரில்*சென்று அமர்ந்தார் .சில வினாடிகள்*கழித்து கார் கதவை திறந்து வெளியே வந்து* சில படிகள்*ஏறி மேலே வந்து என் கைகளை பற்றி குலுக்கினார் .சில*வினாடிகள்*என் கைகளை குலுக்கிவிட்டு காரில் சென்று*அமர்ந்தார் .உடனே அனைவரும் என்னை சூழ்ந்து கொண்டு*தலைவர் உனக்கு ஏதோ*பெரியதாக தருவார் போலிருக்கிறது என்றனர் .அதன் பிறகு நான் பெங்களூரு சட்ட கல்லூரியில் படிப்பதற்காக* சென்றுவிட்டேன் .ஒரு நாள் கழித்து ,உன்னை அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் கார்பரேஷனுக்கு சேர்மன் பதவிக்கு நியமித்துள்ளேன்* என்று பெங்களூருக்கு தந்தி* வந்தது .உடனே புறப்படவும் என தகவல் .1980 ஜூலை மாதம் 17ம் தேதி நான் அந்த பதவியை ஏற்றுக் கொண்டேன் .



கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை ஒரு திரைப்படமாக சொந்தமாக தயாரிக்க ஆசைப்பட்டார் எம்.ஜி.ஆர். அதற்காகவே இயக்குனர் மகேந்திரனை அவரது கல்லூரி நாட்களில் சந்தித்ததில்* இருந்து தொடர்பு கொண்டு, தன் வீட்டுக்கு வரவழைத்து வீட்டில் வைத்து திரைக்கதை**எழுதுவதற்காக மாத ஊதியம் கொடுத்து வந்தார் .அப்படி பொன்னியின் செல்வன் படத்தின் தயாரிப்பு* தாக்கம் என்பது பல்வேறு படங்களில் எதிரொலித்தது .மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் அறிந்து கொள்வோம்*


நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம் .
----------------------------------------------------------------------------------
1.ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில் -உரிமைக்குரல்*

2.நான் அளவோடு ரசிப்பவன் - எங்கள் தங்கம்*

3.சிரித்துவாழ வேண்டும் - உலகம் சுற்றும் வாலிபன்*

4.தம்பிக்கு ஒரு பாட்டு - நான் ஏன் பிறந்தேன்*

5.பம்பை உடுக்கை கொட்டி - ரிக்ஷாக்காரன்*

6.திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி*

7.பொன்னெழில் பூத்தது புதுவானில் - கலங்கரை விளக்கம்*

orodizli
3rd October 2020, 10:31 PM
'உத்தம புத்திரன்' 1940 ல் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் t r சுந்தரம் இயக்கத்தில் கலைமாமணி p.u.சின்னப்பாவின் இரட்டை வேட நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம். மாடர்ன் தியேட்டர்ஸிக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்த படம். நீண்ட நாள் திரைபில் இருந்து வெற்றி முத்திரை பதித்த படம்.

இந்த படத்தை மீண்டும் தயாரிக்கலாம் என்று வீனஸ் பிக்சர்ஸ் முடிவு செய்து ஸ்ரீதரை கதை வசனம் எழுதச் சொல்ல ஸ்ரீதர் கதாநாயகனாக சிவாஜியை போடலாம் என்று முடிவு செய்து விளம்பரம் நாளிதழில் கொடுத்து விட்டார்கள். ஆனால் அதே தினத்தில் எம்ஜிஆர் நடிக்கும் 'உத்தம புத்திரன்' விளம்பரமும் அதே நாளிதழின் மற்றொரு பக்கத்தில் வெளியானது.

அதைக்கண்ட வீனஸ் நிறுவனம் கலைவாணரை அணுகி எம்ஜிஆரை விட்டுத்தர சொல்லுங்கள் என்று கெஞ்ச கலைவாணரும் தூது சென்று எம்ஜிஆரை சந்தித்து பேசினார். உடனே எம்ஜிஆர் அதனாலென்ன இருவருமே தயாரிப்போம் எது சிறந்த படம்? என்று மக்கள் முடிவு செய்வார்கள் என்றார். அன்றே நடிப்பு போட்டிக்கு தயாரானார் புரட்சி நடிகர். அந்த மனஉறுதி எதிர்தரப்பில் இல்லை என்ன செய்வது. சிவாஜி ஒரு பயந்த கோழை என்பதை நாடறியும்.

இருவரும் தயாரித்தால் நிச்சயம் எம்ஜிஆர் வெல்வார் என்பதை உணர்ந்த சிவாஜி தரப்பு கலைவாணர் மூலம் எம்ஜிஆரிடம் கெஞ்சி வாபஸ் வாங்க வைத்தனர். நடிகப்பேரரசரிடம் நாம் தோற்றுப்போவோம் என்று உணர்ந்து இந்த சரணாகதி முடிவு எடுத்தனர். கலைவாணரும் ராமச்சந்திரா! சிவாஜி ஒரு சம்பளம் வாங்கும் ஒரு நடிகர். ஏற்கனவே வந்து வெற்றி பெற்ற படங்களை காப்பியடித்து நடிப்பது என்றால் அவருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி.

மேலும் பல வெளிநாட்டு படங்களை பார்த்து நடை உடை நடனம்
எல்லாம் செலக்ட் செய்து வைத்து விட்டான். பாவம் அவன் பிழைப்பில் மண்ணை அள்ளிப்போட வேண்டாம் நீ நினைத்தால் வேறு கதையை உருவாக்கி எளிதில் வெற்றி பெற முடியும் உன் திறமையை நான் மட்டுமல்ல நாடறியும்! என்று எடுத்துச் சொல்லி தடுத்து விட்டார். எம்ஜிஆரும் தம்பியின் கையறு நிலையை கருத்தில் கொண்டு தன் தயாரிப்பை கைவிட்டார்.

அதன்பின்பு எம்ஜிஆர் தயாரிப்பில் உருவான படம்தான் "நாடோடி மன்னன்". அதே மாதிரி இரட்டை வேடத்தை தேர்ந்தெடுத்து அவருடைய சொந்த மூளையை பயன்படுத்தி டைரக்ட் செய்து "உத்தம புத்திரன்" வெளியான அதே ஆண்டில் வெளியிட்டு மாபெரும் வெற்றியை பெற்றார். சிவாஜி நடித்த "உத்தம புத்திரன்" 2 தியேட்டர்களில் வடக்கயிறு போட்டு 100 நாட்கள் ஓட்டி அதற்கு விழாவும் எடுத்தார்கள். அந்த வெற்றிக்கும் நம்பியாரின் நயவஞ்சக நடிப்பே காரணம். எல்லாம் நடிகப் பேரரசரின் பாசறைமில் இருந்து வந்தவர் அல்லவா?. இவரை தவிர வேறு சிவாஜியின் ஆஸ்தான வில்லன் நடிகர்களை பயன்படுத்தினால் என்னவாகும் என்று தெரியுமா சிவாஜி கைபிள்ளைகளுக்கு.

ஆனால் "நாடோடி மன்னன்" எழுப்பிய புழுதி இன்று வரை அடங்கவே இல்லை. நடிகப் பேரரசருடன் மோதும் போது சற்று ஒரிஜினல் நடிப்பை வெளிப்படுத்தாமல் காப்பி நடிப்பை வெளிப்படுத்தி தோற்றுப் போனார்கள். அந்த கம்பெனி வீனஸ் பிக்சர்ஸ் கூட பின்னாளில் வெற்றியின் நாயகன் எம்ஜிஆரை
தஞ்சமடைந்து "என் அண்ணன்" "ஊருக்கு உழைப்பவன்" போன்ற மாபெரும் வெற்றிப் படங்களை எடுத்து தங்கள் நிலையை உயர்த்திக் கொண்டது நாடறிந்த விஷயம்தான்.

இந்த கையாலாகத்தனம்தான் புரட்சி நடிகர் மீது அவரது கைபுள்ளைங்களுக்கு தீராத கோபத்தை வரவழைத்தது,. என்ன செய்வது ஒருவரின் திறமை, உழைப்பு இதன் அடிப்படையில்தான் வெற்றி கிடைக்கும் என்பதை அறியாதவர்கள்தான் இந்த கைபுள்ளைங்க. காப்பி அடித்து கூட வெற்றி பெற முடியாதவர்தான் நம் கணேசன். பழைய "உத்தம புத்திரன்" பெற்ற வெற்றியில் கால்வாசி கூட வெற்றி பெறவில்லை என்று சொன்னார்கள் சின்னப்பாவின் சீடர்கள்.

இது மட்டுமா? இதே படத்தை சற்று உல்ட்டா பண்ணி "இம்சை அரசன் 23 ம் புலிகேசி" என்ற
பெயரில் எடுத்து மாபெரும் வெற்றி கண்டவர் சிம்புதேவன். வடிவேலுவின் இரட்டை வேட நடிப்பில் படம் அடைந்த வெற்றியின் அளவை விவரிக்க முடியாது. இவ்வளவு ஏன்? "தில்லானா"வை உல்ட்டா பண்ணி ராமராஜன் கனகா ஜோடி "கரகாட்டக்காரனி"ல் அடைந்த வெற்றி கைபிள்ளைகளுக்கு நினைவிருக்கும்தானே. சிவாஜியை விட இயல்பான நடிப்பில் கொடிகட்டி பறந்தார் ராமராஜன். படத்தின் வெற்றி பிரமிக்க வைக்கும் வெற்றி.
பாவம் "தில்லானா". இந்த வெற்றியும் ஒரு பெண்ணின் பரதநாட்டிய நடனம், முகபாவத்தை வைத்து கிடைத்த வெற்றி. இதையெல்லாம் வைத்து நமது பக்கத்தை பார்க்கும் கைபிள்ளைகளுக்கு சிவாஜியின் நிலையை எண்ணி சிப்பு சிப்பா வருதாம்.

எம்ஜிஆர் படங்கள் இதே போல் மாற்று மொழியில் இருந்து தமிழுக்கு மாற்றம் செய்யும் போது பல மாறுதல்கள் செய்துதான் கதையை தயார் செய்வார்கள். ஆனால் சிவாஜி படங்களோ ஜெராக்ஸ் காப்பி மாதிரி அப்படியே எடுப்பார்கள்.ஏனென்றால் அப்படியே காப்பி படத்தில் நடிப்பது சிவாஜிக்கு எளிதான வேலை அல்லவா. அதற்கென்று ஒரு ஜெராக்ஸ் டைரக்டரை கைவசம் வைத்திருந்தார். அவர் பெயர் c v ராஜேந்திரன்.

கொஞ்சநாள் ஸ்ரீதரின் பிரதி எடுக்கும் உதவியாளராக இருந்த அவரின் காப்பியடிக்கும் திறமையை அறிந்த சிவாஜி அவரை தன் அருகிலேய
வைத்துக் கொண்டது ஒரு கொசுறு தகவல். ஈ அடித்தான் காப்பி என்பது இவருக்குத்தான் பொருந்தும். படம் காப்பி பண்ணும் போது அந்த காட்சியில் இடம் பெற்ற பொருட்களை கூட அதே இடத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்வார்..........ks.,.........

orodizli
3rd October 2020, 10:43 PM
தலைவர் பெயரில் மன்றம் கண்ட எங்களை போன்றவர்களின் அனுபவங்கள்..

1971 தேர்தலில் தலைவர் முழுவேகத்துடன் பிரச்சாரம் செய்து அவரை முதல்வர் ஆக்கினார் மீண்டும்..

தலைவருக்கு இருந்த அபார செல்வாக்கை கண்டு அஞ்சினார் நன்றி கெட்ட அவர்.

எம்ஜிஆர் மன்றங்களை ஒடுக்க நினைத்து மன்றங்கள் கட்சி கிளை கழக நிர்வாகிகள் அனுமதியுடன் மட்டுமே செயல்பட வேண்டும் என்ற உத்தரவை மாவாட்டும் செயலர்களுக்கு சொன்னார்.

பிள்ளையோ பிள்ளை என்ற ஒரு நாடகத்தை தயாரித்து அதில் முத்துவை நடிக்க வைத்து அந்த நாடகத்தை தலைவர் தலைமையில் அரங்கேற்றி முத்துவுக்கு விளம்பரம் தேடினார்.

பின்னர் அந்த நாடகத்தை தன் சொந்த செலவில் படம் ஆக எடுத்து படம் பெட்டிக்குள் முடங்க.

கோவத்தில் 1972 மதுரையில் நடைபெற்ற ஆகஸ்ட் 5 மற்றும் 6 தேதிகளில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் எப்போதும் மாநாட்டில் கட்சி கொடியுடன் வலம் வரும் நம் தலைவரை புறக்கணித்து மு.க.முத்துவை முதல் நாள் ஊர்வலத்தில் யானை மீது கட்சி கொடி தாங்கி வர வைத்தார்.

நிகழ்வை பார்த்த தலைவர் ரசிகர்கள் கோவம் கொப்பளிக்க வெறுப்புடன் ஊர்வலத்தில் இருந்து கலைந்து சென்றனர்.

மறுநாள் அவருக்கு முன் தலைவர் மாநாட்டில் பேச அவர் பேசிய பின் ஒட்டு மொத்த மைதானமும் காலி ஆக மேடையில் மயக்கம் போட்டார் அந்த மனிதர்.

ஆத்திரத்தில் அடுத்து அடுத்து அவர் எடுத்த நடவடிக்கைகள் அவருக்கே எதிராக திரும்பிய வரலாறு நாடு அறியும்..நாமும் அறிவோம்.

படத்தில் எம்ஜிஆர் மன்ற கூட்டத்தில் பேசும் தலைவர்....

ஆர்.எம். வீ...அவர்கள், ராயப்பேட்டை சிவராமன் , எழும்பூர் தெய்வசிகாமணி, சென்னை மாவட்ட எம்ஜியார் மன்ற மறைந்த கல்யாண சுந்தரம் மற்றும் இன்னொரு மைக் அருகில் வட்டத்தில் சைதையார் அவர்கள்.

நெருப்பாற்றில் நீந்தி வந்து தலைவர் எண்ணத்துடன் இன்றும் வாழும் உண்மை தலைவர் எண்ணங்களே என்றும் பலிக்கும்...நிலைக்கும்.

வாழ்க தலைவர் புகழ்.

உங்களில் ஒருவன்...நன்றி...
தொடரும்....

பதிவிற்கு பின் படம் கலரில் தலைவர் நெஞ்சம் சரவணன் பெரியசாமி தர படம் புதிதாக இணைக்க பட்டு உள்ளது நன்றி சகோ..........Mn...

orodizli
3rd October 2020, 10:48 PM
எம்ஜிஆரின் வாத்தியார் காளி என்.ரத்தினம்!

சபாபதி படத்தில் வேலைக்காரன் சபாபதியின் நடிப்பை, இந்தத் தலைமுறை மக்கள் கூட இமை கொட்டாமல் ரசிக்கின்றனர். அந்த அளவுக்கு 1936 முதல் 1950 வரை தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த மூத்த நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகர் காளி என்.ரத்தினம்.

சிறந்த நடிகர், பாடகர், சண்டை பயிற்சி வாத்தியார், நடிப்பு வாத்தியார், அரங்க நிர்வாகி, பி.யு.சின்னப்பா, எம்ஜிஆர் போன்ற சூப்பர் ஸ்டார்களுக்கு ஆசான் என பல்வேறு சிறப்புக்களைக் கொண்டவர் அவர்.

காளி என். ரத்தினத்தின் சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள மலையப்பநல்லூர். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், சிறு வயதிலேயே நாடகக் கம்பெனிகளில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்து விட்டார்.

மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனிகள் பலவற்றில் பணியாற்றிய இவர், கோவலன் என்ற ஒரு நாடகத்தில், முதன் முதலாக காளி வேடம் போட்டார். அதில் அவரது நடிப்பை பார்த்து பலரும் அசந்து போயினர். அன்று முதல் அவர் காளி என்.ரத்தினம் என்று அழைக்கப்படலானார்.

அவர், காளி வேடம் கட்டி ஆடினால், அவர் ஆடும் உக்கிரமான ஆட்டத்தைப் பார்த்து பல பேர் சாமி வந்து ஆட ஆரம்பித்து விடுவார்கள்.

பி.யு. சின்னப்பா, எம்.ஜி.ஆர் போன்றவர்களுக்கு உச்சரிப்பு, நுணுக்கமான நடிப்பு, உடல் மொழி, வாள் சண்டை, கத்தி சண்டை, சிலம்பப் பயிற்சி போன்றவற்றை எல்லாம் கற்றுக்கொடுத்தவர் காளி என். ரத்தினம்.

தமிழ் சினிமாவில் வாத்தியார் என்றால் அது எம்.ஜி.ஆரை மட்டுமே குறிக்கும். ஆனால் எம்.ஜி.ஆரே, தமது வாத்தியார் காளி என். ரத்தினம் என்று, 1970-ம் ஆண்டு “நான் ஏன் பிறந்தேன்” என்ற தலைப்பில் ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய தொடரில் குறிப்பிட்டுள்ளார்

1936-ல் வெளியான பதிபக்தி என்ற படமே காளி என். ரத்தினம் நடித்த முதல் படம். முதல் படத்திலேயே அவர் இரண்டு வேடங்களை ஏற்று அற்புதமாக நடித்திருந்தார்.

அதைதொடர்ந்து, 1950 வரை சந்திரலேகா, பஞ்சாப் கேசரி, உத்தம புத்திரன், சபாபதி, திவான் பகதூர், ஸ்ரீ முருகன், ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி, ஆண்டாள் உள்பட 5௦ படங்களுக்கும் மேல் பாடி நடித்துள்ளார்.

காளி என். ரத்தினம் போல ஒரே காட்சியில் எண்ணற்ற முக பாவனை காட்டக் கூடிய நடிகர் வேறு யாரும் இல்லை என்று மூத்த திரை விமர்சகர்கள் பலராலும் இன்றும் பாராட்டப் படுகிறார்.

என்,எஸ்.கிருஷ்ணன்-டி.ஏ.மதுரம் ஜோடியைபோல, அந்தக் காலத்தில், காளி என். ரத்தினம்- சி.டி.ராஜகாந்தம் ஜோடி மிகவும் பிரபலமான ஜோடியாகும்.

காளி என். ரத்தினம் போடாத வேடமும் இல்லை, பாடாத பாடலும் இல்லை என்ற அளவுக்கு அசத்தி இருக்கிறார். கடைசியாக அவர் பொய்க்கால் குதிரை ஆட்டம் போடத் தயாரானபோதுதான், அவரை மரணம் தழுவிக்கொண்டது.

தி இந்து நாளிதழ் கூட காளி என். ரத்தினம் பாணியைப் பற்றி பல நேரங்களில் சிறப்பாகப் பாராட்டி எழுதி உள்ளது. இளைய தலைமுறையினர் காளி என். ரத்தினம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

காளி என். ரத்தினம் முதல் வரிசை நகைச்சுவை நடிகராக வலம் வந்த 1940 களில், அன்றைய சினிமா பத்திரிகை ஒன்று காளி என். ரத்தினம் பற்றி வெளியிட்ட செய்தியை நட்சத்திர தேடல்கள் என்ற கட்டுரையில், மறைந்த முன்னணி எழுத்தாளர் அறந்தை நாராயணன் பதிவு செய்துள்ளார்.

“ரத்தினம் பழங்கால கிராமிய பழக்க வழக்கங்களுக்கு நல்ல மெருகு கொடுத்து, சினிமா படங்களில் புகுத்தி, பட்டனப்புரங்களில் உள்ள புதுக்கால மனிதர்களும் அவற்றை தெரிந்து கொண்டு ரசிக்கும்படி செய்திருக்கிறார். கிராம மக்களோ தங்கள் சம்பந்தமான விஷயங்களை சினிமாவில் பார்க்கும்போது பிரமாதமான பூரிப்பு அடைகிறார்கள்.

இந்தக் காரணங்களினாலே அவர்கள் ரத்தினம் நடிக்கும் படங்களைப் பல தடவை பார்ப்பது வழக்கமாக இருக்கிறது. மாடர்ன் தியேட்டர்ஸ் படங்கள் நிறைய வசூலைப் பெற்று வந்ததற்கு ரத்தினத்தின் நடிப்பு ஒரு முக்கிய காரணமாகும்

படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை பாராட்டி மகிழும், மாபெரும் கலைஞன் காளி என். ரத்தினம், காலத்தால் மறைக்கப்பட்டு, இருந்த இடம் தெரியாமல் போனதை ஒரு சமூக அவலம் என்றே சொல்ல வேண்டும்........

orodizli
4th October 2020, 09:08 AM
சிவாஜி கணேசன் ரசிகர்கள் பொய்க்கு அளவே இல்லாமல் போய்விட்டது. உலகம் சுற்றும் வாலிபன் படத்தை தங்கப்பதக்கம் வசூலில் முந்தியதாம். இப்படி சொல்பவர்களை கவனித்து பார்த்தால் 40, 45 வயதுக்காரர்களாக இருப்பார்கள். விஷயம் தெரிந்த சிவாஜி கணேசன் ரசிகர்கள் இப்படி பேசமாட்டார்கள். அவர்களுக்கு உண்மை தெரியும். வாலிபன் வசூலுக்கு நம்மிடம் ஆதாரம் உள்ளது. ஆனால், நம்மிடம் ஆதாரம் கேட்பவர்கள் அவர்களது தங்கப்பதக்கம் வசூல் ஆதாரத்தை காட்டமாட்டார்கள். ‘தங்கப்ப............ தக்கம்’ என்று வடிவேல் காமெடி மாதிரி ஆகிவிட்டது.

1980-களில் கமல்ஹாசன், பாக்யராஜ், ரஜினிகாந்த் படங்களை சிவாஜி கணேசன் படங்கள் வசூலில் முறியடிக்க முடியாமல் திணறிய கதை இப்போதைய இளைஞர்கள் கூட அறிந்ததுதான். அதாவது பரவாயில்லை. அதைவிடவும் சிவாஜி கணேசனுக்கு மோசமான நிலை ஏற்பட்டது. மார்க்கெட் இழந்து அதே ரஜினிகாந்த், கமல்ஹாசன், பாக்யராஜ், விஜய்காந்த் போன்றோர் கதாநாயகனாக நடித்த படங்களில் அப்பா, அண்ணன், மிலிட்டரிக்காரன், அஜய் என்ற பிரபலமாகாத புதுமுக நடிகருக்கு (அஜய் என்பவர் ஒரு படத்தில்தான் நடித்தார் என்று நினைவு) தாத்தா என்று சிறிய வேடங்களில் துணை நடிகராக சிவாஜி கணேசன் நடித்தது எல்லாம் காலக் கொடுமை. கேட்டால் அவை எல்லாம் முக்கியமான வேடம் என்று சிவாஜி கணேசன் ரசிகர்கள் சொல்வார்கள். யார் வேண்டுமானாலும் அந்த வேடத்தை செய்யலாம்.தபால்காரர் கொடுத்த தபாலால் கதையில் முக்கிய திருப்பம் ஏற்படுகிறது என்றால் படத்தில் அந்த தபால்காரர்தான் முக்கிய கதாபாத்திரம் என்று புரிந்து கொள்ளும் மனநிலையில்தான் சிவாஜி கணேசன் ரசிகர்கள் இப்போதும் உள்ளனர்.

மக்கள் திலகமும் சிறிய வேடங்களில் நடித்து கதாநாயகரானார். ஆனால், ஒரு நிறுவனத்தின் பியூனாக வேலைக்கு சேர்ந்து உழைத்து அந்த நிறுவனத்துக்கு மேனேஜிங் டைரக்டர் ஆவது பெருமை. மக்கள் திலகம் அப்படித்தான் உயர்ந்தார். கடைசிவரை அவர் நிலை உயர்ந்து கொண்டே சென்றதே தவிர தாழவே இல்லை. சிவாஜி கணேசன் நிலைமை தலைகீழ். ஒரு நிறுவனத்தில் ஒருவர் மேனேஜிங் டைரக்டராக சேர்ந்து அதே நிறுவனத்தில் தனது தவறுகளால் பதவி இறக்கம் செய்யப்பட்டு பியூனாகியது போல, பராசக்தியில் கதாநாயகனாக அறிமுகமான சிவாஜி கணேசன், பணத்துக்காக கண்ட படங்களில் நடித்து தனது தவறுகளால் பதவி இறக்கம் செய்யப்பட்டு துணை நடிகராகி ஓய்ந்தார். அரசியலும் ‘திருவையாறு’ அவர்களை தூங்கவிடாமல் துரத்தும். இதை சிவாஜி கணேசன் ரசிகர்கள் புரிந்து கொண்டால் நல்லது.பின்குறிப்பு: சிவாஜி கணேசன் பிறந்த நாளுக்கு அவரது இளையமகன் பிரபுகூட சிலைக்கு மாலைபோட வரவில்லை. இதுதான் சிவாஜி கணேசனின் மரியாதை.......... Swamy...

orodizli
4th October 2020, 09:09 AM
நடிகப் பேரரசர் யாரது ராமச்சந்திரன் என்ற நபர் ? தரமில்லாமல் விமர்சிக்கிறார். சிவாஜி கணேசனின் ரசிகர்கள் நல்லவர்களாம். அன்பு, பண்பு உள்ளவர்களாம். அவர்களது உண்மையான முகம் என்ன என்பதற்கு இந்த ராமச்சந்திரன் ஒரு உதாரணம். ராமச்சந்திரன்.. உங்க பேரையாவது மாத்துங்க. எங்க தலைவர் பேரை வெச்சுக்கிட்டு இப்படி எழுதாதீங்க. நடிகப் பேரரசர், மாற்றுக்கருத்தை அனுமதிக்கலாம். நாகரிகம் இல்லாத கருத்துக்களை நீக்கலாமே.?...... Swamy...

orodizli
4th October 2020, 12:40 PM
கோவை மாநகரில்*
கொள்கை தங்கம் பொன்மனச்செம்மல்*
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் காவியங்கள் படைத்த அற்புத சாதனைகளும்......*
புரட்சி படைத்த வசூலில் முதலிடத்தை பெற்ற திரைக்காவியங்களின் வரலாறும்.....
++++++++++++++++++++++++++++++
நகரில் அதிக அளவில்*
100 நாட்களுக்கு மேல் ஓடிய திரைக்காவியங்கள் மக்கள் திலகத்தின் திரைப்படங்களே இன்று வரை சாதனையில் முன்னணி படைக்கிறது....
++++++++++++++++++++++++++++++
100 நாட்களை கடந்த காவியங்கள்
++++++++++++++++++++++++++++++
ராஜகுமாரி, மோகினி, மந்திரிகுமாரி, மர்மயோகி,*
என் தங்கை, மலைக்கள்ளன்
குலேபகாவலி,*
அலிபாபாவும் 40 திருடர்களும், மதுரை வீரன்,*
தாய்க்குப்பின் தாரம்,*
சக்கரவர்த்தி திருமகள்,*
நாடோடி மன்னன்,*
திருடாதே,*
தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக் காத்த தனயன்*
பணக்கார குடும்பம்,
எங்க வீட்டுப் பிள்ளை,*
ஆயிரத்தில் ஒருவன்*
குடியிருந்த கோயில் அடிமைப்பெண்
*நம்நாடு*
மாட்டுக்காரவேலன்*
ரிக்க்ஷாக்காரன்
நல்லநேரம்*
உலகம் சுற்றும் வாலிபன் உரிமைக்குரல்
இதயக்கனி*
+++++++++++++++++++++++
ஆகிய திரைப்படங்கள்*
ஒரே திரையரங்கில்*
100 நாட்களை கடந்து சாதனை படைத்துள்ளது....*

* நகரில் இரண்டு திரையரங்குகளில் திரையிடப்பட்டு 100 நாட்களை கடந்து வெற்றி காவியங்கள் பல.....

* நகரில் வெள்ளி விழாவை கடந்து* 190 நாட்கள் ஓடிய வெற்றிக் காவியம் : எங்க வீட்டுப் பிள்ளை
1965 : ராயல் 190 நாட்கள்*

* 2 திரையரங்கில் திரையிடப்பட்டு 150 நாட்கள் ஒடிய திரைக்காவியம் உலகம் சுற்றும் வாலிபன்*
1973 : ராஜா 152 நாட்கள்
1973 :.சண்முகா 14 நாட்கள்
மொத்தம் 164 நாட்கள்

* உரிமைக்குரல் திரைக்காவியம் வசூலில் வெற்றி கண்டு*
150 நாட்கள் ஓடி வெற்றி கண்டது
1974 : கீதாலயா 150 நாட்கள்

* மாட்டுக்கார வேலன் 144 நாட்கள் ஓடி வெற்றி சாதனை புரிந்தது.
1970 : இருதயா 144 நாட்கள்

* நகரில் அதிக வசூலை 1978ம் ஆண்டு வரை பெற்ற காவியங்கள் உரிமைகுரல்*
உலகம் சுற்றும் வாலிபன்
இதயக்கனி*
நகரில் தொடர்ந்து வெளியான மூன்று வண்ணப்படங்கள் சாதனையில் எவர் படமும் கிடையாது....

1969 அடிமைப்பெண்
ராஜா 120, சண்முகா 28
மொத்தநாள் : 148*
1969 நம் நாடு
ராஜா 105, ஜி.பி.21
மொத்தம் நாள் : 126
1970 மாட்டுக்கார வேலன்
இருதயா 144, ஜி.பி 40
மொத்த நாள் : 188*.........ur...

orodizli
4th October 2020, 12:41 PM
கோவை பெருநகரில்....
கலையுலக சக்கரவர்த்தி
எம்.ஜி.ஆர் அவர்களின்
வெற்றிகளை பதித்த*
வசூல் காவியங்கள்....
++++++++++++++++++++++
1956 மதுரை வீரன்
ராஜா 119 நாள் : 2,55 ,711.42

1958 நாடோடி மன்னன்
ராஜா 133 நாள் : 2,96,129.23

1961 திருடாதே
ராஜா 112 நாள் :* 2,40, 325.65

1964 பணக்கார குடும்பம்
சுவாமி 105 நாள் : 2,31, 943.35

1965 எங்க வீட்டுப்பிள்ளை
ராயல் 190 நாள் : 3,76,005.35
நகரில் 3 லட்சத்தை கடந்த முதல் காவியம்.

1965 ஆயிரத்தில் ஒருவன்
கர்னாடிக் 115 நாள் : 2,67,640.07
நகரில் ஒரே ஆண்டில் இரு வண்ணப்படங்கள் 100 நாளை கடந்து முதல் சாதனையாகும்.

1968 குடியிருந்த கோயில்
ராஜா 105 நாள் : 3,07,671.21

1969 அடிமைப்பெண்
ராஜா/சண்முகா 148 நாள்
வசூல் : 3,75,425. 37
1969 நம்நாடு
ராஜா 105 நாள் : 3,06,721.60

1970 மாட்டுக்கார வேலன்
இருதயா 144 நாள் : 3,41,875.04
1971 ரிக்க்ஷாக்காரன்*
ராஜா 120 நாள் : 3,72,216.16

1972 நல்லநேரம்
ராயல் 86 நாள்
சிவசக்தி* 40 நாள்
மொத்த நாள் : 126 நாள்
வசூல் : 3,86,192.60
நகரில் 1972 ல் அதிக வசூல்...
சரித்திரம் படைத்த வசூல் ஆகும்.

1972 நான் ஏன் பிறந்தேன்
தொடர் வெளியீடு...
இருதயா 77, அருள் 22
99 நாள் வசூல் : 2,88,930.43

1972 இதயவீணை
இருதயா 86, ஜி.பி. 30
மொத்த நாள் : 116
வசூல் : 3,15,942.50

1973 உலகம் சுற்றும் வாலிபன்
ராஜா /சண்முகா :164 நாள்
வசூல் : 7,01,693. 51
நகரில் 4,5,6,7 லட்சத்தை பெற்ற முதல்படம்.... தொடர்ந்து 172 காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனையாகும்.

1974 உரிமைக்குரல்
கீதாலயா 150 நாள் : 8,69,560.00
இவ்வசூலை 1978 வரை 4 ஆண்டுகள் எந்த படத்தாலும் வெல்ல முடியவில்லை..

1975 இதயக்கனி
சென்ட்ரல் 105 நாள் : 4,96,451.55

1975 பல்லாண்டு வாழ்க
சென்ட்ரல் /முருகன்* : 112 நாள்
வசூல் : 4,05.907.21
+++++++++++++++++++++
கோவை மாநகாரில்*
மக்கள் திலகமே எல்லா வகையிலும் முன்னனி ஆவார்...
மேலும் சாதனைகள் பல.....

Ur...

orodizli
4th October 2020, 12:45 PM
சென்னை தேவி திரை அரங்கில் 1970ல் ''மெக்கனாஸ் கோல்ட் '' நான் முதல் முதலாக பார்த்த படம் .47ஆண்டுகளுக்கு பிறகு தேவி அரங்கில் மக்கள் திலகத்தின் அடிமைப்பெண் திரைப்படம் காணும் வாய்ப்பு கிடைத்தது.

16.7.2017

சென்னை - தேவி திரை அரங்கம் .... இரவு 7.15 மணி காட்சி
மக்கள் திலகத்தின் ''அடிமைப்பெண் '' 2017 திரைப்படத்தை ரசிகர்களின் ஆரவாரத்துடன் அரங்கு நிறைந்த காட்சியில் நான் கண்டு களித்த அடிமைப்பெண் திரைப்படம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாகும்

படம் துவக்கத்தில் தாய் குலத்திற்கு பெருமை சேர்த்த அன்னை தெரசா, விண்வெளி பயணித்த கல்பனா ஆகியோருக்கும் சேவை செய்து வரும் தாய் குலத்திற்கும் இப்படம் சமர்ப்பணம் என்ற வாசகத்தோடு படம் துவங்குகிறது .

தேவி திரை அரங்கத்திற்கு மிக அருகில் இருக்கும் அறிஞர் அண்ணாவின் சிலை முன்பு மக்கள் திலகம் எம்ஜிஆர் 1977ல் பதவி ஏற்ற தினத்தன்று எடுக்கப்பட்ட மக்கள் வெள்ளத்தில் எம்ஜிஆரின் நிழற்படத்துடன் அவருடைய ''ரத்தத்தின் ரத்தமான என் உடன் பிறப்புகளே '' எம்ஜிஆரின் குரல் அகன்ற திரையில் தோன்றியதும் திரை அரங்கில் ரசிகர்களின் ஆரவாரமும் கைதட்டலும் அரங்கத்தையே அதிர வைத்தது .
அடிமைப்பெண் -2017 லோகோ மிக பிரமாண்டமாக கிராபிக்சில் திரையில் காட்டும் போது அரங்கமே விசில் சத்தத்தில் பிரமிக்க வைத்தது .அதற்கான நவீன தொழில் நுட்பத்தில் இசை அமைப்பும் 5.1 ஒலியில் மிரள வைத்தது .

அடிமைப்பெண் ஆரம்ப காட்சி முதல் இறுதி காட்சிகள் வரை துல்லியமாக புத்தம்புதிய படமாக ரசிகர்களுக்கு விருந்தாக இருந்தது . ஒவ்வொரு பிரேமிலும் எம்ஜிஆர் அவர்கள் மிக சிரத்தையுடன் எடுத்த காட்சிகள் நவீன தொழில் நுட்பத்தில் மேலும் மெருகூட்டப்பட்டுள்ளது . அத்தனை காட்சிகளும் கண்ணுக்கு விருந்தது .
அசோகனுடன் ஒத்தை காலில் எம்ஜிஆர் மோதும் சண்டை காட்சி
சிறையிலிருந்து தப்பித்து வரும்போது எம்ஜிஆரின் குனிந்த நடை
ஒகேனக்கல் நீர் அருவி காட்சிகள் - மிக பிரமாண்டம்
அம்மா என்றால் அன்பு - ஜெயாவின் இனிய குரல் பாடலில் எம்ஜிஆரின் அழகு தோற்றம் .
ஒகேனக்கல்லில் எம்ஜிஆர் சண்டை பயிலும் காட்சிகள்
தன்னுடைய தாயை காண பாசத்தோடு அருவியில் குதிக்கும் காட்சிகள்
தாயிடம் உரையாடும் உணர்ச்சிகரமான காட்சிகள்
அடிமை விலங்கை உடைத்தெறியும் காட்சிகள்
தாயில்லாமல் நானில்லை - எழுச்சியான பாடலில் எம்ஜிஆரின் நடிப்பு
காலத்தை வென்றவன் - மனதை கொள்ளை கொண்ட பாடல்
எம்ஜிஆர் - மனோகர் சந்திக்கும் காட்சியில் எம்ஜிஆரின் வசனங்கள்
எம்ஜிஆர் - ஜெயலலிதா பிரிந்து விடும் ஊட்டி வெளிப்புற காட்சிகள்
ராஜஸ்தான் பாலைவன காட்சிகள்-
ஏமாற்றாதே - பாடல் காட்சியில் எம்ஜிஆரின் நடிப்பு - ஜெயாவின் அருமையான நடனம்
ஜெய்ப்பூர் அரண்மனையில் எம்ஜிஆர் அவர்களின் வனப்பான தோற்றத்தில் கட்டு மஸ்தான உடல் வலிமையை காட்டும் காட்சி
எம்ஜிஆரின் பேரழகில் ஜெயா மயங்கி பாடும் ஆயிரம் நிலவே வா -பாடல்
மனோகரனுடன் மோதும் கத்தி சண்டை காட்சி
உன்னை பார்த்து இந்த உலகம் பாடல் ....
ஜஸ்டின் மோதும் ஆக்ரோஷமான கத்தி சண்டை கட்சி
இறுதியில் சிங்கத்துடன் போராடும் வீரமான காட்சி என்று அடிமைப்பெண் படம் 3 மணி நேரம் விறுவிறுப்பாக சென்றது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது .

தேவி திரை அரங்கின் அகன்ற திரையில் 5.1. ஒலியோடு புத்தம்புது படம் போல் காட்சிக்கு காட்சி ரசித்து பார்த்தேன் . எந்த குறையும் இல்லை . இன்றைய தொழில் நுட்பத்திற்கு ஏற்றார் போல் இசையில் சிறிது மாற்றம் செய்துள்ளார்கள் . மிகவும் அருமையாக இருந்தது .

மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நேரத்தில் அடிமைப்பெண் 2017
எம்ஜிஆர் ரசிகர்களுக்கு கிடைத்த மாபெரும் பரிசாகும் . இந்த பொன்னான வாய்ப்பை தந்த திரு திண்டுக்கல் நாகராஜனை மனமார பாராட்டுகிறோம் . வாழ்த்துகிறோம்......vds...

fidowag
4th October 2020, 06:27 PM
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின்*டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*01/10/20 அன்று அளித்த*தகவல்கள்*
-------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கலைஞர்களுக்கும், கலைத்துறையை சார்ந்தவர்களுக்கும் எவ்வளவு மரியாதை கொடுப்பார் என்பதற்கு பல்வேறு உதாரணங்களில் மிக சிறந்தது கவிஞர் கண்ணதாசனுக்கு அளித்தது எம்.ஜி.ஆருக்கும் ,கண்ணதாசனுக்கும் நாடோடிமன்னன் காலத்திற்கு முன்பே தொடர்புகள்* இருந்தாலும் அரசியல் கருத்து வேறுபாடுகளால் பின்னி, பிரிந்து இருந்தபோதிலும் கூட அவரை அரசவை கவிஞராக அலங்கரித்து பார்த்தவர் எம்.ஜி.ஆர். அவர்கள் .


கவிஞர் கண்ணதாசன் எம்.ஜி.ஆரை புகழ்ந்து பல பாடல்கள்* மிக சிறப்பாக*எழுதியுள்ளார் .அவற்றில் ஒன்று நீதிக்கு பின் பாசம் படத்தில் மானல்லவோ கண்கள் தந்தது என்ற பாடலில் தேக்கு மரம் உடலை தந்தது ,சின்னையானை நடையை* தந்தது ,பூக்களெல்லாம் சிரிப்பை தந்தது பொன்னல்லவோ நிறத்தை தந்தது என்கிற வரிகள் முழுக்க முழுக்க எம்.ஜி.ஆரை வர்ணித்து எழுதிய* பாடல் .அதே போல பணத்தோட்டம் படத்தில் பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா என்ற பாடலில் பாடுவது கவியா, இல்லை பாரிவள்ளல் மகனா ,சேரனுக்கு உறவா , செந்தமிழன் நிலவா என்கிற வரிகளும் எம்.ஜி.ஆரை வர்ணித்து பாடியதுதான் .கண்ணதாசனுக்கு அரசவை கவிஞர் பட்டம் அளித்தபோது ,நான் இதற்கு நன்றி சொல்வதற்கான வாய்ப்பு இருக்கிறதோ இல்லையோ ,இப்போதே அந்த நன்றியை முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு காணிக்கை ஆக்குகிறேன் என்றார் .அவர் அமெரிக்காவில் இறந்தபோது ,அவர் உடலை சென்னைக்கு கொண்டு வரச்செய்து , அரசவை கவிஞருக்கு உண்டான அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்தவரும் எம்.ஜி.ஆர்.தான்*


நாடோடி மன்னன் படத்தின் வெற்றி விழாவில் பல்வேறு தரப்பினரும் பலவகையான விஷயங்களை சொன்னாலும் , எம்.ஜி.ஆர்.சந்தித்த ஒவ்வொரு சோதனையும் அந்த கால கட்டத்தில் வளர்ந்து வரும் ஒரு நடிகர் தனக்கான வாய்ப்புகள் கொட்டி கிடக்கும்போது சொந்த படத்திற்காக இவ்வளவு ரிஸ்க் எடுக்கிறாரே* என்று**வருத்தப்பட்டவர்கள் பலருண்டு .* இத்துடன் அவர் மன்னனல்ல .நாடோடியாக போய்விடுவார் என்று விமர்சனங்கள் வந்த வண்ணம் இருந்தபோது ,அந்த சிரமமான நேரத்திலே ஒவ்வொரு நாளும் படத்தின் காட்சிகளை ,பாடல்களை,வசனங்களை,பல்வேறு விஷயங்களை* யோசித்து யோசித்து , வெற்றிகரமாக செய்தாரென்றால் அவர் தன் தொழிலமீது காட்டிய உண்மையான அக்கறை, பக்தி, பற்று ,திறமை, ஆற்றல் கவனம்தான் அவரை நாடோடி மன்னன் ஆக்கியது .* அந்த படத்திலே அவரே சொன்னதுபோல நாடோடி மன்னன் என்கிற படம் பேரை சொன்னால் ஊரை வாங்கலாம் என்பது போல நாடோடி மன்னன் படம் அவருக்கு பெயரை மட்டுமல்ல இந்த தமிழ்நாட்டையே*வாங்கி கரங்களில் ஒப்படைத்தது .


1936ல் ஜெமினி நிறுவனம் அதிபர் வாசனின் கதையில் முதல் படமாகிய* சதி லீலாவதி* படத்தில் எம்.ஜி.ஆர். அவர்கள் ஒருசில காட்சியில் மட்டும் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில்* வருவார் .*காலத்தின் கட்டாயம் என்பது போல அதே ஜெமினி நிறுவனத்தின் தயாரிப்பான எம்.ஜி.ஆரின் 100 வது* படமாகிய ஒளிவிளக்கு படத்தில் 1968ல் எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்து மகத்தான வெற்றி பெற்றது .ஒளிவிளக்கு படத்தில் எம்.ஜி.ஆர். மது அருந்துவது போல ஒரு காட்சி .அதன்பின் 5 எம்.ஜி.ஆர்.கள் வந்து குடிப்பதால் வரும் தீமைகளை விளக்கும் தைரியமாக சொல் நீ மனிதன்தானா என்ற* அறிவுரை கூறும்**பாடல் உண்டு .அந்த காட்சியில் 5 எம்.ஜி.ஆர் கள் தோன்றும் காட்சியில் மாஸ்க் ரிஸ்க் உள்ளது*அந்த படப்பிடிப்பு காலையில் தொடங்கி நள்ளிரவு வரை நடைபெற்றது .ஆனாலும் அந்த காட்சியில் அந்த 5 எம்.ஜி.ஆர்.கள் தோன்றும் காட்சி நன்றாக எடுக்கப்பட்டுள்ளதா என்று பார்ப்பதற்கு வாசனும் ,அவர் மகன் பாலசுப்ரமணியனும் எதற்கும் சரிபார்த்து விடலாம் என்று நள்ளிரவில் முடிவு எடுக்கிறார்கள் எம்.ஜி.ஆர். மிகவும் களைத்து போனதால் புறப்படுகிறார் .ஜெமினி ஸ்டுடியோவில் நாம் ரஷ் போட்டு பார்த்துவிட்டு எம்.ஜி.ஆர். அவர்களுக்கு நாளை காலையில் தொலைபேசியில் சொல்லிவிடலாம் என்று பேசிவிட்டு பார்க்கிறார்கள் .நேரம் நள்ளிரவை கடந்துவிட்டது .இருவரும் பார்த்து திருப்த்தி* அடைந்து நாளைக்கு எம்.ஜி.ஆர். அவர்களுக்கு சொல்லிவிடலாம் என்று பேசி கொண்டிருந்தபோது வாசனின் மகன் பாலு தோளில் ஒரு கை தட்டுகிறது .திரும்பி பார்த்தால் எம்.ஜி.ஆர். நிற்கிறார் .தான் நடித்த காட்சி நன்றாக வந்திருக்க வேண்டும் ,அதை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆவலில் வீட்டுக்கு செல்லாமல் திரும்பி வந்தவர் ஜெமினிக்கு வந்து அந்த ரஷ் காட்சிகளை சத்தம் போடாமல்*அவர்களுக்கு தெரியாமல்* வந்து**பார்த்திருக்கிறார் .இதற்கு காரணம் தொழிலமீது அவருக்கு இருந்த அக்கறை, பக்தி, பாசம், நேசம், பற்று ,கூடுதல் கவனம்*,என்று சொல்லிக்கொண்டே போகலாம் .


திரு.கா.லியாகத் அலிகான் :காங்கிரஸ் ஆட்சியில் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு என்கிற படத்திற்காக சுற்று பயணம் செய்து வர முடிவு செய்து பாஸ்போர்ட்டுக்கு மனு செய்தபோது அப்போது தர மறுத்துவிட்டார்கள் .அப்போது தமிழ்நாட்டில் பக்தவச்சலம் முதல்வராக இருந்தார் .காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் பக்தவச்சலத்திற்கு நெருங்கிய நண்பராக இருந்த காலம் அது .அவர் மூலமாக பக்த்வசலத்தை அணுகி* பாஸ்போர்ட் வாங்கிவிட்டு வெளியே வந்த பிறகு கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜீ படம் இப்போதைக்கு சரியாக அமையாது .எனவே அடிமைப்பெண் எடுக்கலாம் என்று மனதில் ஏற்றிக்கொண்டார்*காஞ்சிபுரம் எம்.எல்.ஏ .அமிர்தம் என்பவர்தான் எம்.ஜி.ஆருக்கு உதவியவர் .அப்போதே அவர் எம்.ஜி.ஆரிடம்* சொல்லியிருக்கிறார் .கவலைப்படாதீர்கள் .நீங்களும் ஒருநாள் இந்த இருக்கையை அலங்கரிக்கும் காலம் வரும் என்று .எம்.ஜி.ஆர். அமிர்தத்திடம் ,மாணவர்கள் எல்லாம் எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு கற்பனை எனக்கு இருக்கிறது அந்த கற்பனையை பற்றி யோசிக்கும்போது என் நினைவுக்கு வருகிறவன்,தெரிந்தவன்* இந்த லியாகத் அலிகான்தான் என்று சொல்லி இருக்கிறார்.அவன்தான் மாணவர் அணி எப்படி இருக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேனோ அதன்படி வெகு வேகமாக* செயல்படுகிறான் என்றாராம்* அப்படித்தான் நான் தலைவரிடம் நேரடியாகவோ, வேறு யார் மூலமாகவோ எனக்கு பதவி கொடுங்கள் என்று கேட்டதில்லை .எனக்கு கொஞ்சம் கூச்ச சுபாவம் இருந்தது .ஆனாலும் என் உழைப்பு,திறமை, ஆற்றல் இதையெல்லாம் கண்ட அமைச்சர் குழந்தைவேலு என் வெற்றிக்காக* பாடுபட்ட உனக்கு ஏதாவது ஒரு பதவி வாங்கி கொடுத்தே ஆகவேண்டும் என்று என்னை வற்புறுத்தி அழைத்து சென்றார் .என்னை கட்டாயப்படுத்தி அவர் அழைத்து சென்றதற்கு காரணம் ,அப்போது எனக்கு தேர்வு எழுத வேண்டி இருந்தது .6 தேர்வுகள் நான் எழுதவில்லை தேர்வுகள் எழுதாமல் அமைச்சர் குழந்தைவேலுவுக்காக சிறப்பு ஏஜெண்டாக தேர்தல் பணிமனையில் 1980ல் பணியாற்றினேன் .என் பணியின் வேகத்தை பார்த்து குழந்தைவேலு மெல்ட்* ஆகிவிட்டார் . அப்போது தமிழக ஆளுநராக பிரபுதாஸ் பட்வாரி இருந்தார் .



அமைச்சர் குழந்தைவேலுவின் அலுவலகத்தில் நாங்கள் தங்கியிருந்தபோது தி.மு.க.வினர் சிலர் உள்ளே புகுந்து ஐஸ் கடை ஆனந்தன் என்பவர் ஏதோ தவறு செய்தார் என்ற காரணத்திற்காக அடித்து காயப்படுத்தினார்கள் .அவர்களின் ஆட்கள் பலமானவர்கள் என்பதால் எங்களால் அவர்களை எதிர்க்க முடியவில்லை .அந்த நேரத்தில் அமைச்சர் குழந்தைவேலு அங்கு இல்லை .தலைவரோட தொலைபேசி எண் நல்லவேளையாக என்னிடம் இருந்ததால் அவருடன் தொடர்பு கொண்டு பேசினேன் .அப்போது தேர்தல் முடிந்த நேரம் அநேகமாக1980ல்* மே மாதம் கடைசியில் .ஆனால் ஒட்டு எண்ணிக்கை நடைபெறாத நேரம் .* தலைவருக்கு போன் செய்து மிகவும் படபடப்பாக அண்ணே ,நான் லியாகத் அலிகான் பேசுகிறேன் .இங்கு தி.மு.க.வினர் ரகளை செய்து எல்லோரையும் அடிக்கிறார்கள். வெளியே சுமார் 100 பேர் திரண்டு இருக்கிறார்கள் .வெளியே வந்தால் அடித்து நொறுக்கிவிடுவோம் என்கிறார்கள் என்றேன் .தொடர்ந்து 3 நிமிடம் பேசுகிறேன் .அனைத்தையும் கேட்டுக்கொண்டே உம் உம*சொல்லு என்று கேட்டு கொண்டார் .சரி,போனை வை .நான் கவனித்து கொளகிறேன் என்றார் சுமார் 15 நிமிடம்* கழித்து , 3 போலீஸ் வேன் வந்தது .தி.மு.க.வினருக்கு தாங்கள் எப்படியும் வெற்றி பெற்றுவிடுவோம் என்று நினைப்பு உடுமலை தொகுதியில் .எதிர்த்து நின்றவர் சாதிகபாட்சா .போலீஸ் வேனை பார்த்ததும் ,தி.மு.க.வினர் இருந்த இடம் தெரியாமல்* ஓடிவிட்டார்கள் .அவர்களை எல்லாம் விரட்டிவிட்டு , நாங்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டோம் .அடுத்த நாள் ஒட்டு எண்ணிக்கை முடிவில்மீண்டும் அதே தொகுதியில்* அ.தி.மு.க.வெற்றி பெற்றது .தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்திருந்தது .1980 நாடாளுமன்ற தேர்தலில் அவர்களின் கூட்டணி 37 தொகுதிகளை கைப்பற்றியது . கோபிசெட்டிபாளையம் ,சிவகாசி இரண்டு தொகுதிகளில் மட்டுமே அ .தி.மு.க. வெற்றி பெற்றது .எம்.ஜி.ஆர். வழக்கமாக அவர் காட்டும் இரட்டை இல்லை சின்னத்திற்கு அடையாளமாக இரு விரலை* காட்டுவார் இல்லையா அதனால் அவருக்கு கிடைத்த பரிசு இரண்டுதான் என்று தி.மு.க.வினர் அப்போது பரிகாசம் செய்த நேரம் .தலைவர் இந்த விமர்சனங்களை எல்லாம் ரசிப்பார் . கருணாநிதியே ஏதாவது கிண்டலாக பேசினால் கூட ரசிக்கும் மன பக்குவம் கொண்டவர் தலைவர் எம்.ஜி.ஆர். மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடருவோம்*


நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
-------------------------------------------------------------------------------
1.வாங்கய்யா வாத்தியாரய்யா* - நம் நாடு*

2.பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா -பணத்தோட்டம்*

3.மானல்லவோ கண்கள் தந்தது - நீதிக்கு பின் பாசம்*

4.உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் -வேட்டைக்காரன்*

5.காடு விளையாட்டும் பொன்னே - நாடோடி மன்னன்*

6.எம்.ஜி.ஆர். -மனோகர் உரையாடல் - ஒளி விளக்கு*

7.தைரியமாக சொல் நீ மனிதன்தானா - ஒளி விளக்கு*

8.திரு.கா.லியாகத் அலிகான் பேட்டி*

fidowag
4th October 2020, 06:42 PM
தினமணி*04/10/20
-----------------------------
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் மனித*நேயம்*
-----------------------------------------------------------------------
சத்யா ஸ்டுடியோவில் படப்பிடிப்பின்போது விலையுயர்ந்த எளிதில் கிடைக்காத காமிரா ஒன்றை தொழிலாளி ஒருவர் கீழே போட்டு விட்டார் .அது பழுதாகிவிட்டது .அங்கிருந்தவர்கள் எம்.ஜி.ஆர். என்ன சொல்ல போகிறாரோ என்று தயங்கி தயங்கி ஒப்பனை அறையில் இருந்தவரிடம் விவரத்தை சொன்னார்கள் .அவர் காமிரா பழுதானத்தைப்பற்றி கவலைப்படவில்லை .* அந்த தொழிலாளியை அழைத்து உனக்கு அடி எதுவும் படவில்லையே .பயப்படாதே. காமிரா பழுதை சரிசெய்துவிடலாம் என்று சொன்னதோடு ஸ்டூடியோ பொறுப்பாளரிடம் வயதான அந்த தொழிலாளியை இனிமேல் கனமான காமிராவை தூக்க சொல்லவேண்டாம் என்றார் .

1977ம் ஆண்டு எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது .செய்தித்துறை சார்பில் நலிந்த கலைஞர்களுக்கு கலைவாணர் அரங்கில் பொற்கிழி வழங்கும் விழா நடைபெற்றது .* ஒருவருக்கு பொற்கிழி வழங்கிய எம்.ஜி.ஆர். அவர் காலில் விழுந்து வணங்கினார் .* அங்கே இருந்தவர்கள், பார்த்தவர்கள் எல்லாம் ஆச்சரியப்பட்டனர் .அப்போது எம்.ஜி.ஆர்.ஒரு காலத்தில் நான் உணவிற்கு கஷ்டப்பட்டபோது எனக்கு உணவு வழங்கினார் என்று தன் நன்றி உணர்வை வெளிப்படுத்தினார் எம்.ஜி.ஆர்.*
கோட்டை செல்வம்*

orodizli
4th October 2020, 09:58 PM
மலரும் நினைவுகள்
தென்னிந்திய திரைப்பட வரலாற்றில் முதன் முதலில் வசூலில் சாதனைகள் புரிந்த சந்திரலேகா படத்தின் சாதனைகளை

முறியடித்த முதல் படம் மக்கள் திலகத்தின் ''மதுரை வீரன் '' 1956ல் நடந்தது .

மக்கள் திலகத்தின் ''நாடோடிமன்னன் '' 1958ல் வெளிவந்து அதற்கு முந்தய மதுரைவீரனின் வசூலை முறியடித்து ஒரு புதிய சாகப்தத்தை உருவாக்கினார் எம்ஜிஆர் .

1958 முதல் 1965 வரை நாடோடி மன்னன் வசூலை எந்த படமும் நெருங்க முடியவில்லை .

நாடோடிமன்னன் ரிக்கார்டை 1965ல் வந்த எங்க வீட்டு பிள்ளை முறியடித்தது மிகப்பெரிய சாதனை .

1965 முதல் 1969 வரை எங்க வீட்டு பிள்ளை - வசூலில் முதலிடத்தை தக்க வைத்து கொண்டார் .

1969ல் வந்த எம்ஜிஆரின் அடிமைப்பெண் முந்த சாதனைகளை முறியடித்து

முதலிடத்தில் மகுடம் சூட்டியது .

1970ல் மாட்டுக்கார வேலன்

1971ல் ரிக் ஷாக்காரன்
[
1972ல் நல்லநேரம்
வசூலில் சாதனைகள் தொடர்ந்தாலும்
1973ல் வெளிவந்த உலகம் சுற்றும் வாலிபன் - வசூல் வரலாற்றை உருவாக்கியது
1936-1973 வரை வெளிவந்த தமிழ் படங்களில் அதிக வசூல் மற்றும் சாதனைகள் புரிந்த காவியமாக உலகம் சுற்றும் வாலிபன் சரித்திரத்தில் இடம் பெற்று விட்டது .
1974ல் உரிமைக்குரல் 200 நாடகளுக்கு மேல் ஓடி பல இடங்களில் உலகம் சுற்றும் வாலிபன் வசூலை முறியடித்து விட்டது .

1975ல் இதயக்கனி மீண்டும் நிரந்தர வசூல் சக்கரவர்த்தி என்பதை நிரூபித்து காட்டிய படம் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் 1977ல் தமிழக முதல்வராக பதவி ஏற்று கோடிக்கணக்கான எம்ஜிஆர் ரசிகர்களின் கனவை நிறைவேற்றினார் .
1947- 1977
30 ஆண்டு காலம் இந்திய திரை உலகில் முடிசூடா மன்னன்
1977-1987
10 ஆண்டுகாலம் தமிழக முதல்வராக ஆட்சி நடத்திய புரட்சித்தலைவர் எம்ஜிஆர் .

1987 லிருந்து 2020 இன்று வரை 33 ஆண்டுகளாக எம்ஜிஆர் என்ற மாமனிதரின் திரை உலக ஆளுமைகள் , அரசியல் வெற்றிகள்
சமூக வலைத்தளங்கள் , ஊடகங்கள் , பத்திரிகைகள் தொடர்ந்து பயணித்து வருவது மூலம் உலகமெங்கும் வாழும் எம்ஜிஆரின் கோடிக்கணக்கான ரசிகர்கள் பெருமை கொள்கிறார்கள் . எங்கள் எம்ஜிஆர் வெற்றி பயணம் தொடரும்.........vds...

orodizli
5th October 2020, 08:20 AM
தாய் உள்ளம் எம் ஜி ஆர்

தமிழக சட்டமன்ற அலுவலக மேல்மட்ட அதிகாரி ஒருவரின் உதவியாளருக்கு ஒரு போன் வர ஹலோ என்று கூற இது தோட்டத்தில் இருந்து சி எம் ன் உதவியாளர் ஐய்யாவை மதியம் உணவு அருந்தும் முன் தோட்டத்திற்க்கு வர சொல்லுங்கள் சி எம் கூறினார் என கூற இதை அதிகாரியிடம் கூற நாம் ஏதுவும் தப்பு செய்துவிட்டமோ என எண்ணி பின் எதற்க்கு என்று எண்ணிவாறு மதியம் தோட்டம் செல்லுகிறார் அவரை சி எம் எம் ஜிஆர் வாங்க நலமா என விசாரித்து விட்டு வாங்க சாப்பிட போகலாம் என அழைக்க தயக்கத்தோடு எதற்க்கு அழைத்தீர்கள் என கூற அது ஒன்றும் இல்லை சில நாட்கள் முன் தோட்டத்தில் நடத்த ஒரு கூட்டத்தில் நீங்கள் நானும் உண்ணும் போது ஒரு கறியின் பெயரை சொல்லி அதை விரும்பி சாப்பிட்டீர்கள் அது இன்று இங்கு சமைக்க பட்டபோது உங்கள் ஞாபகம் வந்தது அது தான் சாப்பிட அழைத்தேன் எனகூற
என் கண்கள் குளமாகியது என் தாயை தவிர எவருமே உணவை இந்த அளவு அன்போடு நினைத்ததில்லை அப்போது எம் ஜி ஆர் வடிவில் என் தாயையே பார்த்தேன்
இது அந்த அதிகாரி எழுதிய நூலில் இருந்து

வாழ்க எம் ஜி ஆர் புகழ்.........Am...

orodizli
5th October 2020, 01:32 PM
"சிரித்து வாழ வேண்டும்" 1974 நவ 30 ம்தேதி வெளியான உதயம் புரடொக்ஷன்ஸாரின் வெற்றிக் காவியம். எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் கலக்கிய படம். அப்துல் ரஹ்மான் என்ற முஸ்லீமாகவும், இன்ஸ்பெக்டர் ராமுவாகவும் இரண்டு வேடங்களில் நடித்திருப்பார். ஜெமினி அதிபர், ஆனந்த விகடன் உரிமையாளர். S.S. வாசனின் மகன் S S பாலன் இயக்கிய ஒரே படம். உதயம் புரடொக்ஷன்ஸார் மொத்தம் 3 படங்கள் தலைவரை வைத்து எடுத்ததில் மூன்றுமே 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்றதில் இது இரண்டாவது படம்.

முதல் படம் "இதய வீணை" இரண்டாவது படம்தான் "சிரித்து வாழ வேண்டும்". ஒரு சிவாஜி ரசிகர் கமெண்ட்டில் எம்ஜிஆருக்கு இரண்டு படங்கள் ஒரே மாதத்தில் வெளிவந்திருக்கிறதா? என்று கேள்வி கேட்டிருந்தார். அவருக்கு "உரிமைக்குரல்" "சிரித்து வாழ வேண்டும்" இரண்டும் ஒரே மாதத்தில் வந்த படங்கள் என்று நினைவில் இல்லை என்று நினைக்கிறேன். இதற்கு முன்னாலும் இரண்டு படங்கள் ஒரே மாதத்தில் வெளிவந்து வெற்றி
பெற்றாலும் அதை சாதனையாக நாங்கள் எண்ணுவதில்லை. அதை தயாரிப்பாளர்களின் வேதனையாகத்தான் பார்க்கிறோம்.

இரண்டையும் ஒரே மாதத்தில் வெளியிடும் எண்ணம் இரண்டு தயாரிப்பாளர்களுக்கும் கிடையாது.
நெருக்கடியான காலகட்டத்தில் இரண்டு படங்களும் ஒரே மாதத்தில் வெளியாகின்ற சூழ்நிலை உருவாகி விட்டது. இரண்டு படங்களுமே 100
நாட்களை கடந்தாலும் "உரிமைக்குரல்"
200 நாட்கள் ஓடியது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி எனலாம்.
தமிழ்ப்பட உலகம் கண்டிராத மாபெரும் வெற்றி படமாக "உரிமைக்குரல்" அமைந்து விட்டது

நெல்லை சீமையிலே வெள்ளி விழா கொண்டாடி நகரிலேயே 182 நாட்கள் ஓடிய ஒரே படம் இன்று வரை "உரிமைக்குரல்"தான். இதே ஊரில் சிவாஜியின் எந்த படமும் 125 நாட்கள் கூட வடக்கயிறால் கட்டி இழுக்க முடியவில்லை என்பது மகாகேவலமான ஒரு சோக நிகழ்வுதான். எம்ஜிஆருக்கோ மதுரை வீரன் 132 நாட்களும், நாடோடி மன்னன் 127 நாட்களும், மாட்டுக்கார வேலன் 140 நாட்களும், எங்க வீட்டுப் பிள்ளை 149 நாட்களும் ஓடியது குறிப்பிடத்தக்கது.

"சிரித்து வாழ வேண்டும்" மதுரை நியூசினிமாவில் 104 நாட்கள் ஓடி நல்ல வசூலை பெற்றது. 24 சென்ட்டரில் 50 நாட்களை கடந்து சிறந்த வெற்றியை பதிவு செய்தது.
இருப்பினும் "உரிமைக்குரல்" படத்தின் வெற்றியின் வேகம் பின்னால் வந்த "சிரித்து வாழ வேண்டும்" படத்தின் வெற்றியை பாதித்தது என்றே சொல்ல வேண்டும்.

சென்னையை பொறுத்தவரை இரண்டு படங்களுமே 10 லட்சத்தை தாண்டி வசூல் செய்தது. தனியாக "சிரித்து வாழ வேண்டும்" வெளியாகி இருந்தால் மிகப் பெரிய வெற்றியை பெற்றிருக்கும் என்றே சொல்லலாம். பாடல்கள் எல்லாமே அருமையாக இருந்தாலும் 'பொன்மனச்செம்மலை' பாடல் மிக இனிமை. 'நீ என்னை விட்டு போகாதே' பாடல் மேலும் சிறப்பு. 'கொஞ்ச நேரம்' பாடல் கர்னாட்டிக் இசையில் சற்று மெதுவாக சென்றாலும் அனைவரும் ரசிக்கும்படி இருக்கும். தலைவர் பலவித உடைகளில் வந்து பரவசப்படுத்துவார். "மேரா நாம் அப்துல் ரஹ்மான்" பாடலில் பிரமிக்க தக்க செட்டிங்ஸை பார்க்கலாம். பாடலும் அருமை பாடலின் கருத்துகளும் அருமை. படத்தில் லதா பேசும் சேரி பாஷை அவ்வளவாக நன்றாக இல்லை.

'"ஆடுவது கடமையின் நினைவாக'" பாடல் நெடுநேரம் வந்தாலும் க்ளைமாக்ஸில் விறுவிறுப்பை உண்டாக்கி விடும். அதில் வரும் பாடல் வரிகள் ரசிகர்களை ஆனந்த கூத்தாட வைத்தது. படம் ஹிந்தியில்
அமிதாப் நடித்த "ஜஞ்ஜீர்" படத்தின் கதையாக இருந்தாலும் ஒரு சிலரைப்போல் ஜெராக்ஸ் காப்பி எடுக்காமல் தலைவர் தனக்கே உரிய பாணியில் கையாண்டிருப்பார். படம் சிறப்பாக இருந்தாலும் ஒரு தடவை பார்த்து விட்டு அடுத்த முறை பார்ப்பதற்கு "உரிமைக்குரலை"யே தேர்ந்தெடுத்தார்கள் ரசிகர்கள்.

அந்த வயதில் "சிரித்து வாழ வேண்டும்" சார்லஸில் இருமுறைதான் பார்த்தேன். ஆனால் "உரிமைக்குரலை" 17 முறை பார்த்தேன். நான் மட்டுமல்ல தலைவர் ரசிகர்கள் அனைவரும் "உரிமைக்குரலை"தான் அதிக தடவை பார்த்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். பார்க்க பார்க்க மீண்டும் அடுத்த முறை எப்போது பார்க்கலாம் என்ற எண்ணத்தை உண்டாக்கி விடும் படம்தான் "உரிமைக்குரல்".

சென்னையில் பிளாசா(83) கிருஷ்ணா(83) மகாலட்சுமி(62) கிருஷ்ணவேணி(62) ஆகிய திரையரங்குகளில் வெளியாகி
மொத்தம் 290 நாட்கள் ஓடி ரூ 10,55,974.05 வசூலாக பெற்று வெற்றி பெற்றது. மதுரை நியூசினிமாவில் 104 நாட்கள் ஓடி. ரூ 3,59,634.60 வசூலாக பெற்றது. திருச்சியில் 82 நாட்கள் ஓடி ரூ 3,12,875.00 வசூலாக பெற்றது.

மேலும் கோவையில் 81 நாட்களும் சேலத்தில் 90 நாட்களும் ஈரோட்டில் 77 நாட்களும் ஓடி வெற்றி பெற்றது.
மொத்தம் 24 திரையரங்குகளில் 50 நாட்களை கடந்து சாதனை செய்தது.
நெல்லையில் 62 நாட்கள் ஓடி ரூ. 1,41,732.55 வசூலாக பெற்று மகத்தான வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

நெல்லை கணேசன் ரசிகர்களுக்கு தொல்லையாகவும்
தலைவர் ரசிகர்களுக்கு வெற்றியின் எல்லையாகவும் இருந்தது எனலாம்.
"வசந்த மாளிகை"யை மதுரையில் 200 நாட்கள் வடக்கயிறு போட்டு இழுத்தவர்களால் நெல்லையில் 69
நாட்களுக்கு மேல் தேரை இழுக்க முடியாமல் பாதி வழியிலேயே நின்றது இழுவை ரசிகர்களுக்கு ஒரு சோகமான முடிவாகும்.......... Courtesy: KS.........

.

orodizli
5th October 2020, 05:18 PM
மிகச் சிறந்த கருத்துக்கள் மிக மிகச் சிறந்த கருத்துக்கள் புரட்சித் தலைவரை பற்றி நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள நடிகர் பேரரசர் எம்ஜிஆர் என்ற குழு உதவுகிறது மிகவும் பாராட்டுக்குரியது புரட்சித்தலைவரின் எந்த ஒரு திரைப்படமாக இருந்தாலும் 100 நாட்களுக்குக் குறையாமல் தான் ஓடியுள்ளது வசூலில் மிகப்பெரிய சாதனைகளை செய்துள்ளது உரிமைக்குரலை எடுத்துக்காட்டாகக் கூறலாம் ஸ்ரீதருக்கு வாழ்வு கொடுத்த படம் அதுவரை புரட்சித்தலைவரின் அருமை தெரியாமல் இருந்தவர் பின்னர் உணர்ந்துகொண்டார் அதை மனம்விட்டு பலமுறை கூறியுள்ளார் பொன்மனச் செம்மலின் வாழ்க்கை ஒரு காவியம் ஆகும் பரம்பொருளாகிய இறைவன் அவர் அளவுக்கு யாரும் இருக்க மாட்டார்கள் என்பதால் அவருக்கு மக்கட் செல்வம் வழங்க வில்லை அதனால் என்ன நாம் அனைவருமே புரட்சித்தலைவர் அவர்கள் பிள்ளைகள்தானே தயவுசெய்து புரட்சித் தலைவரைப் பற்றி நிறைய விஷயங்கள் வெளியிடுங்கள் சந்தோஷமாக உள்ளது படிப்பதற்கு பதிவிட்டமைக்கு நன்றி... Srinivasan Kannan...

orodizli
5th October 2020, 05:19 PM
தங்கள் பதிவு சூப்பர்!
"சிரித்து வாழ வேண்டும்" திரைப்படம் புரட்சித்தலைவர் இரட்டைவேட நடிப்பில் மாறுபட்ட படமாகவும், இந்து முஸ்லிம் ஒற்றுமையை விளக்கும் சிறப்பான படமாகவும் அமைந்தது அருமையான படம்.
��������������
புரட்சித்தலைவர் திரைப்படங்கள் அனைத்தும் ஆறு மாதங்களுக்கு ஒரு படம் என்று ரிலீஸ் ஆகி இருந்தாலும், சொந்த தியேட்டர் இருந்திருந்தாலும் எல்லா படங்களும் வெள்ளி விழா படங்களாக இருக்கும் ஆனால் புரட்சித்தலைவர் தன் ரசிகர்களுக்காக தொடர்ந்து தான் நடித்த படங்களை வெளியிட்டு மகிழ்ச்சி அடைந்தார். தலைவர் படங்களுக்கு தலைவர் படங்களே போட்டியாக வந்தது இருந்தும் அனைத்தும் வெற்றி பெற்றது வசூல் சாதனை புரிந்தது.
��������������
��������������... Kumar Govindarajan

orodizli
5th October 2020, 05:20 PM
புரட்சித் தலைவரின் எந்த படமும் சொந்த தியேட்டரில் 100 நாள் ஓட்டவில்ல. அவருக்கு சொந்த தியேட்டரே இல்ல. சத்யா ஸ்டுடியோ தான் வாங்கினார். பெரியார், அண்ணா மாதிரி புரட்சித்தலைவருக்கும் பிள்ளைங்க இல்லை. பிள்ளைங்க இருந்து அதுங்க அவர் வாங்கின சத்யா ஸ்டுடியோவை இடிச்சு காம்ப்ளக்ஸ் கட்டி விட்டு, அங்கே ஓரத்தில் சூம்பிப்போன தேங்கா மட்டை மாதிரி சிலை வெச்சு அதுவும் வெளங்காம போனா என்ன பண்ணறது? அந்த மாதிரி தறுதல பிள்ளைங்க மக்கள் செல்வம் பிறக்கறதுக்குப் பிறக்காமயே இருக்கலாம். இன்னொரு விசயம். சில நடிகர்கள் தொழிலுக்காக வெளியூர் போயிடுவாங்க. கூட்டுக் குடும்பத்தில் அவங்க தம்பிதான் வீட்டுல இருந்து குடும்பத்தில் எல்லாரையும் பார்த்துப்பாங்க. புரட்சித் தலைவருக்கு அந்த மாதிரி உதவிக்கு யாரும் இல்லை. தானே எல்லாம் செய்தார். சிரித்து வாழ வேண்டும் உட்பட அவரின் எந்த படமும் சொந்த தியேட்டரில் பிறர் உதவியோடு ஓட்டப்படவில்லை.......... Rajarajan...

orodizli
5th October 2020, 05:24 PM
சிரித்துவாழ வேண்டும் படத்தில் அப்துல் ரஹ்மானாக வரும் மக்கள் திலகம் கொஞ்சம் கரகரப்பான குரலில் பேசி வித்தியாசம் காட்டியிருப்பார். என்னைவிட்டுப் போகாதே.. பாடலின்போது பிளாக் சூட்டில் வரும் மக்கள் திலகம் கொள்ளை அழகு. கூடவே சுற்றுப்புறத்தையும் ஆட்களையும் எடைபோடும் கூர்மையான நிதானப் பார்வை. எல். காஞ்சனா அவரது கையைப் பிடித்து இழுத்தபோதும் நகராமல் ‘நீ இழுத்த இழுப்புக்கு நான் வர முடியாது’ என்பதுபோல வலுவாக அதே இடத்தில் நிற்பார். பிறகு, ‘ப்ளீஸ்’ என்று கெஞ்சியபிறகுதான் நடந்து செல்வார். அந்த இடத்திலேயே தான் யார், தனது கேரக்டர் என்ன என்பதை அற்புதமாக வசனமே இல்லாமல் உடல்மொழியால் காட்டியிருப்பார்.

‘ஒரே இடத்தில் இரண்டு அறிவாளிகள் இருந்தால் அங்கு வேலை நடக்காது... விவாதம்தான் நடக்கும் .அதனால், என் முதலாளியை நான்தான் கொன்னேன்’’... நம்பியாரின் அதிர்வேட்டு வசனத்துக்கு சொந்தக்காரர் ஆர்.கே.சண்முகம். லதாவை அடியாள் கூட்டம் துரத்தும்போதும், ரயில் தண்டவாளத்தில் மக்கள் திலகம் அடித்துப் போடப்பட்டிருக்கும்போதும் க்ளைமாக்ஸிலும் இருட்டில் எடுக்கப்பட்ட காட்சிகளில் கூட ஒளிப்பதிவு துல்லியமாக இருக்கும். இனிமையான பாடல்கள் போனஸ். கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்.. பாடலில் 8 வண்ண உடைகளில் மக்கள் திலகம் சொக்கவைப்பார். பாடல் காட்சியில் அதிகபட்ச உடைகளில் அவர் தோன்றியது இந்தப் பாடலில்தான்.

உரிமைக்குரல் வெளியாகி 24 வது நாளில் சிரித்துவாழ வேண்டும் வெளியானது. உரிமைக்குரலின் பிரம்மாண்ட வெற்றியால் மதுரையோடு தனது 100 நாளை சுருக்கிக் கொண்டது. இன்னும் சில மாதங்கள் கழித்து வெளியாகியிருந்தால் மேலும் பல ஊர்களில் 100 நாள் ஓடியிருக்கும். உரிமைக்குரலும் இன்னும் சில தியேட்டர்களில் வெள்ளி விழா ஓடியிருக்கும். ஒரு தியேட்டரில் மட்டும் 100 நாள் ஓடினால் அதற்கே பெருமைப்பட்டு பத்திரிகையில் விளம்பரம் கொடுக்கும் வழக்கம் நமக்கு இல்லை. நினைத்ததை முடிப்பவன் மதுரையில் 100 நாள் ஓடியபோதும் ஒரு தியேட்டர் என்பதால் அதற்கும் விளம்பரம் கொடுக்கப்படவில்லை.

ஆனந்த விகடன் பத்திரிகையில் வேலைபார்த்து வந்த பத்திரிகையாளர் மணியனை இதய வீணை படம் மூலம் திரைப்படத் தயாரிப்பாளராக மக்கள் திலகம் உயர்த்திவிட்டார். உதயம் ப்ரொடக்க்ஷன்ஸ் என்று அவரது நிறுவனத்துக்கு தானே பெயர் சூட்டினார். உதயம் ப்ரொடக்க்ஷன்சின் இதயவீணை வெற்றியைத் தொடர்ந்து அந்நிறுவனம் தயாரித்த சிரித்து வாழ வேண்டும், அடுத்து தயாரித்த பல்லாண்டு வாழ்க என்று மக்கள் திலகத்தை வைத்து தயாரித்த மூன்று படங்களுமே 100 நாட்களைக் கடந்து ஓடி வெற்றிப் படமானது. புரட்சித் தலைவர் யானையைப் போன்றவர். அவர் காலைத் தொட்டால் தொட்டவரை தலைக்கு மேல் தூக்கி வைத்துக் கொண்டு, ராஜ சவாரி செய்ய வைத்துவிடுவார். அப்படி சவாரி செய்து உயர்ந்த நிலையை அடைந்தவர்களில் மணியனும் ஒருவர்...... Swamy...

fidowag
5th October 2020, 11:47 PM
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.- வின்*டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*02/10/20 அன்று சொன்ன*தகவல்கள்*
-------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் அந்த காலத்திலேயே ஸ்டண்ட் கலைஞர்கள் மாடக்குளம் அழகிரிசாமி, தர்மலிங்கம் போன்றவர்கள் அவருடன் இருந்து*படங்களில் பணியாற்றியவர்கள் அவர்களிடம் இருந்து ஸ்டண்ட் பற்றிய பல்வேறு வித்தைகளை எம்.ஜி.ஆர். கற்றுக்கொண்டார் .எம்.ஜி.ஆர். முதல்வரான பின்பும் இவர்களுடன் தொடர்பில் இருந்தார் .தனக்கு பாதுகாப்பிற்கு அரசு சார்பில் காவல் துறை அதிகாரிகள் உடன் இருந்து பணியாற்றினாலும் ,இந்த ஸ்டண்ட் கலைஞர்களை தனி உதவியாளர்களாகவும் ,பாதுகாப்பிற்கும் வைத்து கொண்டார் .* காவல்துறை அதிகாரிகள் பதவியில் இருக்கும் வரையில் தான் பாதுகாப்பிற்காக துணை இருப்பார்கள் .5 ஆண்டுகள் முடிந்த பின்பு அவர்களது பாதுகாப்பு பணி இருக்காது என்பதனால் ஸ்டண்ட் கலைஞர்களிடம் எனக்கு எப்போதுமே நீங்கள்தான் நிரந்தரம் பாதுகாப்பிற்கும்,மற்ற உதவிகளுக்கும் என்று தனது இறுதி காலம் வரையில் வைத்து கொண்டு அவர்களுக்கு தேவையான தனி ,குடும்ப உதவிகள் எல்லாவற்றையும் செய்து வந்தார் .


தாய்க்கு பின் தாரம் தொடங்கி தனது இறுதி காலங்களில் வெளியான உழைக்கும் கரங்கள் படம் வரையில் பல்வேறு வகையான* சண்டைக்கலைகளை திரைப்படங்களில் புகுத்தினார் .தமிழர்களின் கலாச்சார , பாரம்பரிய சண்டை கலைகளான சிலம்பம், கம்பு சண்டை, வாள் சண்டை , சுருள்வாள் வீசுதல், மான் கொம்பு சண்டை ,பல்வேறு வகையான கத்தி, கோடாரி, ஈட்டி போன்ற ஆயுதங்கள் பயன்படுத்திய சண்டை காட்சிகள் ஆகியவற்றை பல திரைப்படங்களில் படமாக்கி பிரபல படுத்தினார் .சுருள்வாள் வீசுவது என்பது சாதாரண விஷயமல்ல .ரிக்ஷாக்காரன் படத்தில் சுருள்வாள் வைத்து சண்டை போடுவார் .அதை எக்கு தப்பாக பயன்படுத்தினால் வீசுபவர் உடலையே பதம் பார்த்துவிடும் .அப்படி ஒரு அபாயகரமான கலை .இது ஒரு தற்காப்பு கலை.அதே சமயத்தில் அதிக ரிஸ்க்கான கலை என்பது பலரும் அறியாத செய்தி .அதே போல உழைக்கும் கரங்கள் படத்தில் மான் கொம்பு சண்டை செய்வதற்கு முன்பு தனக்கு வாத்தியார், குரு , உஸ்தாதாக* நடிகர் திருப்பதிசாமியை எண்ணி* அவரிடம் ஆசி பெற்றபடி தலைவணங்கி பின்னர் சண்டை செய்வார் .


மதுரையை சார்ந்த திரு.ஷேக் உஸ்மான் என்பவர் கூறுகிறார் எம்.ஜி.ஆருக்கு தெரியாத சண்டை* கலை வித்தைகளே* கிடையாது .ஒவ்வொரு சண்டை கலைகளிலும் , சிலம்பத்திலும்* இத்தனை வீடு கட்ட வேண்டும் இத்தனை நடை இருக்கிறது .கருட வரிசை ,நாக வரிசை, புலி வரிசை என்று பல்வேறு வரிசைகள் உள்ளன .அந்த வரிசைகள் எல்லாவற்றையும் அறிந்தவர் எம்.ஜி.ஆர். அவர் முதல்வராக* இருந்து மதுரையில் உலக தமிழ் மாநாட்டை நடத்தும்போது பாரத பிரதமர் இந்திரா காந்தி தலைமையேற்று பார்வையிட வந்திருந்தார் .அந்த மாநாட்டில் சுமார் 100குழுக்களுக்கு சிலம்ப சண்டை கலையில் போட்டி வைத்தார் .சிறந்த பயிற்சியாளர்களுக்கு தங்க மோதிரம் பரிசளித்து பாராட்டினார் .அப்படி பரிசு பெற்றவர்களில் முக்கியமானவர் மதுரையை சேர்ந்த திரு.ஷேக் உஸ்மான் என்பவர் .* அப்படி தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை*வளர்ப்பதற்காகவே ,தமிழ் வளர்ச்சி துறையோடு*சேர்த்து* ,தமிழ் பண்பாட்டு வளர்ச்சி துறை ஒன்றை உருவாக்கி அந்த சிலம்ப கலைஞர்களெல்லாம் சோர்ந்து விடக்கூடாது*என்று கருதி*,அவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் ஸ்டண்ட் கலைஞர் மாடக்குளம் அழகிரிசாமி என்பவரின் வாரிசுதாரரை அந்த துறைக்கு தலைவராக* நியமித்தார் .

திரு.கா.லியாகத் அலிகான் :மதுரையில் இருந்து திருச்செந்தூருக்கு ,நீதி கேட்டு நெடிய பயணம் ஒன்றை கருணாநிதி மேற்கொண்டார் .அதாவது* சுப்ரமணிய பிள்ளை என்பவரின் மரணம் இயற்கையானது அல்ல அதற்கு காரணம் அப்போதைய அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன்தான் என்று குற்றம் சுமத்தியபோது தமிழக முதல்வராக* இருந்த எம்.ஜி..ஆர். பால் கமிஷன் என்று ஒரு குழுவை நீதி விசாரணை செய்ய அமைத்தார் .பால் கமிஷன் அறிக்கை தாயாராகி வெளியிட சில காலதாமதம் ஆகியது என்று சொல்லிவழக்கம் போலகருணாநிதி** தன் ஆட்கள் மூலம் செய்திகளை திரட்டி அறிக்கையை வெளியிட்டார் .நீதி விசாரணை குழுவின் அறிக்கை எப்படி கருணாநிதி கைகளுக்கு போய் சேர்ந்தது .நீதிபதியே கொடுத்தாரா அல்லது கருணாநிதியிடம் அறிக்கை ஒப்படைத்தது யார் என்று அரசு சார்பில் விசாரிக்கக்கூடாது என்று முரசொலி செல்வம் பத்திரிகையில் எழுதுகிறார் என்றால் எந்த வகையில் நியாயம் .காவல்துறையினர் முரசொலி அலுவலகத்தில் சென்று விசாரித்துள்ளனர் .இது தவறு என்று எம்.ஜி.ஆர்.அரசு அராஜக நடவடிக்கை என்று** குற்றம் சுமத்துகிறார் முரசொலி செல்வம் .இன்னொரு விஷயம் என்னவென்றால்,நீதி கேட்டு நெடிய பயணம் போவதாக சொல்லி மதுரைக்கு சென்றுவிட்டார் கருணாநிதி .அப்போது சென்னையில் இருந்து புரட்சி தலைவர் மதுரைக்கு போன் செய்து இந்த வயதில் இந்த பயணம் வேண்டாம். உங்கள் உடல்நலம் பாதிக்க கூடும் ,நீங்கள் கேட்டபடி விசாரணை கமிஷன் வைத்தாகிவிட்டது .அதன் அறிக்கையும் விரைவில் வெளியிடப்படும்*உங்கள் உடல்நலத்தை தயவுசெய்து கெடுத்து கொள்ளாதீர்கள் என்று பக்குவமான* ,கருணை மிக்க , நட்புக்கு இலக்கணம் வகுத்த மரியாதை கொடுத்த* ஒரு மாபெரும் தலைவன் அமரர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.பற்றி விமர்சிக்கும் என் உள்ளம் கொதிக்கிறது .கருணாநிதி நல்லவரோ, கெட்டவரோ .அவரும் அமரர்தான் .அவரைப்பற்றி நாங்கள் தவறாக பேசுவதில்லை .இ பி.எஸ்., ஓ பி.எஸ். கூட கருணாநிதி பற்றி எந்த விமர்சனமும் செய்வதில்லை .ஜெயலலிதா மறைந்துவிட்டார் .அவரும் அமரர்தான் .ஸ்டாலின் கூட ஜெயலலிதா அம்மையார் என்றுதான் பேசுகிறார் .எனவே அமரர் ஆனவரை பற்றி ,கடந்த கால*நிகழ்வுகளை சம்பந்தப்படுத்தி இன்றைய முரசொலியில் எழுதி வருவது சரியல்ல .உண்மை விசுவாசிகளான என்னை போன்ற எம்.ஜி.ஆர்.தொண்டர்களின் உள்ளங்கள் கொதிக்கின்றன அது மிகப்பெரிய தவறு.நியாயமும் இல்லை .

திரு.துரை பாரதி :தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் தன்னை கருப்பு எம்.ஜி.ஆர். என்று சொல்லி கொள்கிறார் .அது சரியா தப்பா என்று வாதிடவில்லை .எப்படியோ 29 சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்து அவருக்கு கிடைத்தது .அதே போல நடிகர் ரஜினிகாந்த் நான் ஆட்சிக்கு வந்தால் எம்.ஜி.ஆர்.*ஆட்சி அளிப்பேன் .ஆனால் நான் எம்.ஜி.ஆர். அல்ல .அப்படி நீங்கள் நினைத்தால்*நான் ஒன்றும் சொல்வதற்கில்லை .ஏனென்றால் எம்.ஜி.ஆர். ஒரு யுகபுருஷன் .மேலும் என்னால் எம்.ஜி.ஆர். அளித்த அந்த சாமான்ய ஆட்சி, ஏழை எளியோருக்கான ஆட்சி, மத்திய வர்க்கத்தினருக்கான* ஆட்சி தர முடியும்*என்கிற**இந்த வாதங்கள் எந்த அளவிற்கு எடுபடும்*


திரு.கா. லியாகத் அலிகான்*: இப்போது நான் அண்ணா தி.மு.க.வில் இருக்கிறேன் .அந்த கட்சிக்கு*உயிராக இருப்பது இரட்டை இலை சின்னம் .இப்போது தலைவர்களாக இருக்கும்*இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். ஆகிய இருவருக்குள்ளும் மனத்தாங்கல் வந்து ,அவர்கள் இருவருக்கும் இடையே சண்டை வந்துள்ளது என்று சொல்லி பிரயோஜனமில்லை .* இருவரும்*சண்டையிட்டு சமாதானமாகி இரட்டை இலை சின்னத்தை*மீண்டும்* கொண்டு வந்துள்ளனர் .தினகரன் அவர்களுக்கு இரட்டை இலை சின்னம் தரக்கூடாது*என்று வாதாடியபோதும்*எப்படியோ சாமர்த்தியமாக இருவரும்*இணைந்து போராடி இரட்டை இலையை***.தக்க வைத்துக் கொண்டதை பாராட்டியே ஆகவேண்டும் . அந்த இரட்டை இலை சின்னம் வருங்காலத்திலும் தோற்க கூடாது .அப்படி தோற்றால் எம்.ஜி.ஆர். தோற்றதாகத்தான் அர்த்தம் .ஜெயலலிதா தோற்றதாக அர்த்தம் அதனால்தான் நாங்கள் இரட்டை இலையின்*வெற்றிக்காக எந்த நேரத்திலும், எதற்காகவும் தயாராக இருக்கிறோம்*ரஜினிகாந்த் எம்.ஜி.ஆர்.ஆட்சி பற்றி பேசுகிறார் .அவர் அப்படி பேசினால் கூட தமிழருவி மணியன் அவரை விடமாட்டார் போலிருக்கிறது .நீங்கள் ஏன் எம்.ஜி.ஆர் ஆட்சி பற்றி பேசுகிறீர்கள் .வேறொரு ஆட்சி பற்றி பேசுங்கள் என்பார் .எப்படி சொன்னாலும் பரவாயில்லை.அப்படியெல்லாம் பேசுவதால் இங்குள்ள அ .தி.மு.க. தொண்டர்கள், எம்.ஜி .ஆர்.ரசிகர்கள் ஆகியோரின்* எம்.ஜி.ஆர். வாக்குவங்கி*மாறாது .ஜெயலலிதாவின் வாக்கு வங்கி மாறிவிடாது*.இரட்டை* இலைக்குத்தான்* அவர்களெல்லாம் வாக்களிப்பார்கள் .அதில் ஓரிரண்டு வாக்குகள்*மாறலாம் . சிதறலாம் .ஆனால் கணக்கில் வராது .தினகரன் கட்சியை பற்றி ஆரம்பத்தில் பெரிதாக பேசினார்கள் .நானும் சென்று பார்த்தேன் .நான் சொன்ன*ஆலோசனைகளை அவர்கள் ஏற்பதாக தெரியவில்லை .மதுசூதனன் அவைத்தலைவராக உள்ளார்*.அவர் அ.தி.மு.க.விற்காக போட்டியிடும்போது அவரை நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்று பிறர் மூலம் கோரிக்கைகள் வைத்தேன் .ஆனால் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளாமல் பின்னர் பணத்தினாலோ, சொந்த செல்வாக்கிலோ,வேறு ஏதாவது ஒரு பலத்தினாலோ வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்* என்றால் கூட இன்றைக்கு மதுசூதனன்தான் அவை தலைவராக*உள்ளார் .தினகரன் நிலைமை இன்றைக்கு என்ன என்று அனைவருக்கும் தெரியும் .என்று லியாகத் அலிகான் பேசினார் .


திரைப்படத்துறையை விட்டு வெளியே வந்து முதல்வராகிய பின்பும், ஸ்டண்ட்*கலைஞர்களை, ஸ்டண்ட் இயக்குனர்களை எல்லாம் அவர் காப்பாற்றி வந்தார் .நடிகன் குரல் பத்திரிகை ஆசிரியராக இருந்தபோது ஸ்டண்ட் நடிகர்களில் சிறந்தவர் யார் என்று கேட்டதற்கு ஜஸ்டின் என்று சொன்னார்*.தன்னிடம் உதவியாளர்கள், பயிற்சியாளர்கள் பலர் இருந்தாலும்கூட ஜஸ்டின் என்கிற ஸ்டண்ட் கலைஞனை உயர்த்தி*சொல்லும்*மனோபாவம் எம்.ஜி.ஆரிடம் இருந்தது .வில்லன் நடிகர் எம்.என்.நம்பியார் ,எம்.ஜி.ஆருக்கு துணையாக படங்களில் நடித்தபோதும் ,ஆர்.என்.நம்பியார் என்கிற ஸ்டன்ட் இயக்குனர்தான் எம்.ஜி.ஆருக்கு வாள்**சண்டை பயிற்சி அளித்தவர் அந்த ஆர்.என்.நம்பியார் என்கிற*ஸ்டண்ட்* இயக்குனரின்* குழுவின்*பங்களிப்பு* எம்.ஜி.ஆரின் நிறைய படங்களில் இருக்கும் .


சென்னை கீழ்ப்பாக்கம் நீரேற்று நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி மைதானத்தில்*உள்ள ஜிம்மில் இருந்து ஒருவர் வெளியே* வருகிறார் .அவரது கைகளில் இரட்டை இலை சின்னமும் , எம்.ஜி.ஆரின் உருவமும் வரைந்து இருக்கிறார் .அவரிடம்வணக்கம் சொல்லி , எம்.ஜி.ஆரை பற்றி உங்களின் அனுபவங்கள் இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்டதற்கு எங்கள் குடும்பத்திற்கு அவர்தான் குலதெய்வம் என்று சொன்னார் எப்படி என்று கேட்டால் அவருடைய அப்பாவிற்கு அப்பாவுக்கு வி.வி.சாமி என்பவர் சன்டை பயிற்சியாளராக இருந்தாராம் வி.வி.சாமியின் தம்பியும் சண்டை பயிற்சியாளராம் ..குடியிருந்த கோயில் படத்தில் கூட சண்டை காட்சியில் நடித்து இருக்கிறார்களாம் .* எங்கள் குடும்பத்தில் கிட்டத்தட்ட 3 தலைமுறை அளவிற்கு இல்ல திருமணங்களை நடத்தி வைத்தவர் எம்.ஜி.ஆர்.தான் .திரையுலகத்திற்கு வெளியே ,தொழில் ரீதியான நண்பர்களோடு நல்ல உறவு ,அந்த நண்பர்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அடியிலும் தனது முத்திரையை பதித்திருக்கிறார் .தனது அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார் .அக்கறையை காட்டி இருக்கிறார் எம்.ஜி.ஆர்.என்பதில்தான் அவரது வாழ்க்கை சகாப்தமாக இருக்கிறது .

இந்த நிகழ்ச்சியில் திரு.லியாகத் அலிகான் அவர்கள் எம்.ஜி.ஆர் அவர்களுடன் தன்* நிழல் அனுபவங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார் .அதன் தொடர்ச்சி ,ஆற்று நீராக, அன்பு பெருவெள்ளமாக தொடர்ந்து வந்து உங்களை நனைக்கும் .அந்த அன்பு பெருவெள்ளத்திலே தொடர்ந்து நாம் நனைவோம் .மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும் .

நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
----------------------------------------------------------------------------------
1.பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே - நான் ஆணையிட்டால்*

2.அன்புக்கு நான் அடிமை - இன்று போல் என்றும் வாழ்க*

3.சண்டை காட்சியில் எம்.ஜி.ஆர். - காவல்காரன்*

4.சண்டை காட்சியில் எம்.ஜி.ஆர்.-பெரிய இடத்து பெண்*

5.சைக்கிள் ரிக் ஷா சண்டை காட்சி - ரிக்ஷாக்காரன்*

6.மான் கொம்பு சண்டை காட்சி - உழைக்கும் கரங்கள்*

7.சண்டை காட்சியில் எம்.ஜி.ஆர்.- அடிமைப்பெண்*

8.கடவுள் வாழ்த்து பாடும்* - நீரும் நெருப்பும்*

9.சண்டை காட்சியில் எம்.ஜி.ஆர்.-நினைத்ததை முடிப்பவன்*

10.திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி*

fidowag
5th October 2020, 11:48 PM
தனியார் தொலைக்காட்சிகளில் கலைச்சுடர் எம்.ஜி.ஆரின் திரைக்காவியங்கள் ஒளிபரப்பான*விவரம் (01/10/20 முதல் 05/10/20 வரை )
------------------------------------------------------------------------------------------------------------------------------
01/10/20 - மெகா டிவி - அதிகாலை 1 மணி -கலங்கரை விளக்கம்*

* * * * * * * * * * * * மெகா 24 -* அதிகாலை 2மணி _ முகராசி*

* * * * * * * * * சன்* லைப்* - காலை 11 மணி - ரிக்ஷாக்காரன்*

* * * * * * * * *மெகா டிவி - மதியம் 12 மணி - விவசாயி*

* * * * * * * * *எம்.எம்.டிவி - பிற்பகல் 2மணி - குமரிக்கோட்டம்*

* * * * * * * * *பெப்பெர்ஸ்* டிவி -பிற்பகல் 2.30மணி - நல்ல நேரம்*

* * * * * * * * * புதுயுகம் டிவி -இரவு 7மணி - நீதிக்கு தலை வணங்கு*

02/10/20* * சன் லைப் -காலை 11 மணி - நீரும் நெருப்பும்*

* * * * * * * * *வெளிச்சம் டிவி-பிற்பகல் 2 மணி - தாயை காத்த தனயன்*

* * * * * * * * ஜெயா மூவிஸ் - இரவு 10 மணி - குடும்ப தலைவன்*


03/10/20 - முரசு டிவி -மதியம் 12 மணி /இரவு 7 மணி -ஆனந்த ஜோதி*

* * * * * * * * *ராஜ் டிவி - பிற்பகல் 1.30 மணி - அடிமைப்பெண்*

04/10/20* *மெகா 24 - பிற்பகல் 2..30 மணி - திருடாதே*

* * * * * * * * *பூட்டோ டிவி - இரவு 8.30 மணி - அன்பே வா*

05/10/20 -சன் லைப் - காலை 11 மணி* - உரிமைக்குரல்*

* * * * * * * * முரசு டிவி -மதியம் 12மணி/இரவு* 7மணி - தொழிலாளி*

* * * * * * * * வெளிச்சம் டிவி - பிற்பகல் 2 மணி - தனிப்பிறவி*

* * * * * * * *மெகா 24 - பிற்பகல் 2.30 மணி -நல்ல நேரம்*

* * * * * * * * புதுயுகம் டிவி -இரவு* 7மணி - அரச கட்டளை*

* * * * * * * *பாலிமர் டிவி - இரவு 11 மணி - நீரும் நெருப்பும்*


* * * * * * * **

orodizli
6th October 2020, 08:00 AM
1972 இல் சினிமா இதழ் பொம்மை குலுக்கல் முறையில் ஒரு வாசகரை தேர்ந்து எடுத்து அவர் நம் தலைவர் அவர்களை நினைத்ததை முடிப்பவன் படத்தின் காட்சிகள் எடுக்க பட்ட நேரத்தில் தலைவர் பேட்டி கொடுத்த அபூர்வ படம்...

பேட்டியின் போது அவர் பல கேள்விகளை கேட்க அதில் ஒன்று நம் குழுவினர் பார்வைக்கு.

கேள்வி...

நீங்கள் ஆங்கில படத்தில் நடித்தால் என்ன?

தலைவர் பதில்.

ஆங்கிலம் சரளமாக வராது....அடிமைபெண் படப்பிடிப்பின் போது ஹிந்தி படங்கள் தயாரிப்பாளர் ராஜஸ்ரீ பிக்சர்ஸ் நிறுவனர் நண்பர் தாராசந்த் ஒரு விருந்து கொடுத்தார் எங்களுக்கு..

அப்போது அவர் சொன்னார் நீங்க ஹிந்தி படங்களில் நடிக்க வேண்டும்...படம் எடுக்க நான் தயார் என்றார்..

எனக்கும் நானே தயாரித்து நானே நடிக்க ஹிந்தி மற்றும் ஆங்கில படத்தில் நடிக்க ஆசை..

ஆனால் அதை தாங்கி கொள்ளும் பக்குவம் சக்தி இருக்கும் என்றால் நான் தயார் என்கிறார் தலைவர்.

மிஸ் ஆகி விட்டதே தலைவர் நெஞ்சங்களே.

வாழ்க தலைவர் புகழ்.

தொடரும்...உங்களில் ஒருவன்..நன்றி...

தனிக்கட்சி தோன்றாவிட்டால் அதுவும் இனிதே நடந்து இருக்கும் போல.........Mn...

orodizli
6th October 2020, 08:03 AM
தஞ்சாவூரில் 1983இல் பெரிய கோயிலில் நடைபெற்ற ஒரு விஷேஷத்தின் பொழுது எடுக்கப்பட்ட படம் .

ஒரு நல்ல காரியம் நடக்கவேண்டும் என்றால் கோயிலுக்குப் போய் சாமி கும்பிட்டால் போதும் என்பது பலரது நம்பிக்கை.
ஆனால், தஞ்சை பெரிய கோயிலுக்கு மட்டும் பிரபலங்கள் போனால் எசகுபிசகாக ஏதாவது நடந்துவிடும் என்பது இன்னொரு நம்பிக்கை. காரணம், கடந்த 50 வருடங்களாக தஞ்சை பெரிய கோயிலின் கிழக்கு வாசல் தொடர்பாக நிலவும் மர்மம். அக்டோபர் முதல் வாரம், 1984.

அப்போதைய பிரதமர் இந்திராவும், முதல்வர் எம்ஜிஆரும் கிழக்கு கோபுர வாயில் வழியாகத் தான் தஞ்சை கோவிலினுள் நுழைந்து மேடையில் ஏறினார்கள். ராஜராஜன் சிலைக்கு இந்திராவால் அணிவிக்கப்பட இருந்த வைர கிரீடம், தயாராக மேடையில் வைக்கப்பட்டிருந்தது. கோயில் வளாகத்தினுள் கூட்டமே இல்லை. இந்திரா காரணம் கேட்க, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மக்களை உள்ளே விடவில்லை என்றார் எம்ஜிஆர்.

உண்மையில், தஞ்சை கோயிலுக்குள் இருவரும் நுழைய வேண்டாம் என்று பல எச்சரிக்கைகள் விடப்பட்டிருந்ததால், பிரச்னைகள் வேண்டாம் என்று எம்ஜிஆர் மக்களை ஆலயத்தினுள் விடவில்லை. இந்திராகாந்தி திருச்சி விமான நிலையத்திற்கு வந்தபோதே அவருக்கு மூட் சரியில்லை. தில்லியில் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் தொடர்பாக பல பாதுகாப்பு பிரச்னைகளைச் சந்திக்கவேண்டி இருந்தது. மேலும், தஞ்சாவூர் இடைத்தேர்தலில் ஆதரவு அளித்துவிட்டு, பிறகு விலக்கிக்கொண்ட எம்ஜிஆரின் மீது இருந்த கோபம் அவருக்கு தீரவில்லை.

‘‘நான் வைர கிரீடம் வைக்க, நீங்கள் மட்டும் பார்க்க, நமது இரண்டு பேருக்காகவா விழா? மக்களை உள்ளே அனுமதியுங்கள்...’’ என்று இந்திரா கூற, உடனே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட, மக்கள் உள்ளே வந்தார்கள். இந்திரா கடுமையாகப் பேசியதால், அப்போதே எம்ஜிஆருக்கு உடல் நலக்குறை ஏற்பட்டது. வைர கிரீடம் வைக்கப்பட்டு விழா முடிந்ததுமே, மயக்க நிலையை அடைந்தார். அப்போலோ மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார்.
அக்டோபர் 16, 1984.

அப்போலோவில் இருந்த எம்ஜிஆரை காண்பதற்காக தில்லி யில் இருந்து பறந்து வந்தார் இந்திரா காந்தி. பத்திரிகையாளர்களிடம் பின்னர் பேசிய அவர், எம்ஜிஆர் தன்னைப் பார்த்து சிரித்ததாகக் கூறினார். அதுவே இந்திராவின் கடைசி சென்னை விஜயம். அக்டோபர் 31ல், தனது சப்தர்ஜங் தெரு வீட்டிலேயே இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார்.

தஞ்சையில் ஒரே பரபரப்பு. ‘கிழக்கு கோபுர வாசல் வழியாக நுழைய வேண்டாம் என்று தலைப்பாடமாக அடித்துக் கொண்டோமே. அதிகாரிகள் கேட்கவில்லையே! இப்போது பாருங்கள்! ஒரு மாதத்திற்குள் இந்திரா இறந்து விட்டார்... எம்ஜிஆர் உடல்நலமின்றி கிடக்கிறார்...’ என்ற பேச்சு அடிபட்டது.எம்ஜிஆரும் அமெரிக்கா சென்று பெரும் போராட்டத்திற்குப் பிறகு மீண்டு வந்தார். ஆனால், மூன்று வருடங்கள்
மட்டுமே இருந்தார்.

ஜூன் 7, 1997. திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பிரகதீஸ்வரர் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் யாகசாலையில் யாகம் துவக்கிய நேரம், திடீர் என்று கும்பாபிஷேகத்திற்காக போடப்பட்டிருந்த பந்தல் தீப்பற்றி எரிய... விபத்தில் 48 பேர் இறந்து போனார்கள். இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இந்த விபத்திற்கும் கிழக்கு கோபுரம்தான் பழியை ஏற்றுக்கொண்டது.

ஏன் தஞ்சை பெரிய கோயிலின் கிழக்கு கோபுரம் அபசகுனமாகக் கருதப்படுகிறது..? இந்தக் கேள்விக்கான விடையாக மற்றொரு வினாவைத் தொடுக்கிறார்கள் சிலர். தஞ்சை பெரிய கோயில் இருந்த இடத்தில முன்பு என்ன இருந்தது?

கி.பி.985ம் ஆண்டு அருண்மொழி, ராஜராஜனாக பதவி ஏற்றுக்கொண்டார். அவருடைய ஆட்சியின் கடைசி காலத்தில்தான் தஞ்சை பெரிய கோயிலை எழுப்பினார். அதாவது அந்தக் கோயிலைக் கட்டி மூன்றாண்டுகளில் அவர் இறந்து போனார்...

தஞ்சை பெரிய கோவிலின் ராஜ கோபுர கும்பமேளாவிற்கு வருகை தந்தது.இந்த நேரத்தில்தான் தலைவருக்கு கோவிலை சுற்றி வரும்பொழுது மயக்கம் அடைந்தார்

தஞ்சை பெரிய கோயில் கிழக்கு கோபுரத்தைக் கடந்து மன்னர்கள் உள்ளே நுழைந்து வந்தால் அவர்கள் பதவியையோ, உயிரையோ இழப்பார்கள்... இந்திராவின் மரணம், எம்ஜிஆரின் மரணம் ஆகியவை சமீபத்திய உதாரணம்... என்பது சிலரது வாதம்.

1984 தஞ்சாவூர் மீட்டிங் அடுத்த நாள் தலைவரின் முதல் நாள் இரவு திருச்சியில் தலைவர் மீட்டிங்

இந்த நிகழ்ச்சி தான் திருமதி.இந்திராகாந்திக்கு கடைசி தமிழக நிகழ்ச்சி.......... Devaraj...

orodizli
6th October 2020, 08:04 AM
ரஜினியை எம்ஜிஆர்., அடித்தாரா? : மெய்க்காப்பாளர் மறுப்பு.

நடிகர் ரஜினியை முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் (எம்ஜிஆர்) அடித்ததாக கூறப்படும் செய்திகளை எம்ஜிஆரின் மெய்க்காப்பாளராக இருந்த கே.பி.ராமகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

கடந்த 1979ம் ஆண்டு, ரஜினிகாந்த், நடிகை லதாவை ஒருதலையாக காதலித்ததாகவும், அவரை கட்டாயப்படுத்தியதாகவும், இதை கேட்ட எம்ஜிஆர் கோபமடைந்து ராமாவாரம் தோட்டத்தில் வைத்து ரஜினியை அடித்ததாகவும் பேசப்படுவது உண்டு. நடிகை லதாவுடன் சேரமுடியாத காரணத்தால் தான் அதே பெயருடைய லதாவை, ரஜினி திருமணம் செய்ததாகவும் பேசப்பட்டு வந்தது.

இது குறித்து நடிகை லதா ஒரு தொலைக்காட்சியில் அளித்த பேட்டியில், ரஜினி பற்றி ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படி சொல்கிறார்கள். அப்படி எதுவும் நடக்கவில்லை. அது பற்றி எல்லாம் நான் பேச விரும்பவில்லை, எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், எம்ஜிஆர் திரைப்படத்தில் நடித்ததில் இருந்து அரசியலில் ஈடுபட்டது வரை சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக அவருக்கு மெய்க்காப்பாளராக இருந்தவர் கே.பி.ராமகிருஷ்ணன். சண்டை பயிற்சி கலைஞராகன இவர், எம்ஜிஆர்.,க்கு பல படங்களின் சண்டை காட்சிகளில் டூப் போட்டு நடித்துள்ளார்.

இவர், தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது: கடந்த 1979ம் ஆண்டு ரஜினியை எம்.ஜி.ஆர் ராமாவரம் தோட்டத்திற்கு அழைத்து அடித்ததாக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவல் தவறானது. ஒரு போதும் ரஜினியை எம்.ஜி.ஆர், அடிக்கவில்லை. உண்மையில் ரஜினி மீது எம்ஜிஆர் மதிப்பு வைத்திருந்தார். கோவையில் நடந்த கட்சிக் கூட்டத்தில் நெருக்கடியைப் பயன்படுத்தி பெண் தொண்டரிடம் சில்மிஷம் செய்த நபர் ஒருவரையே எம்.ஜி.ஆர் அடித்தார்.

இவ்வாறு அவர் கூறினார். Dr...

orodizli
6th October 2020, 10:59 AM
வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டியவர்கள் தொடர் 2, பாகம் 74 பேரரறிஞர் அண்ணா. .

அண்ணாவுக்கும்எம்ஜிஆருக்கும் உள்ள ஒற்றுமைகள் சில
1. அண்ணா எம்ஜிஆர் இருவரும் பிறப்பில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்கள். .
2, நோயின் காரணமாக இருவரும் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றவர்கள். .
3. அண்ணா இறக்கும் முன் என் எஸ் கிருஷ்ணன் சிலையை திறந்து வைத்தார். .எம்ஜிஆர் இறக்கும் முன் ஜவஹர்லால் நேரு சிலையைதிறந்து வைத்தார். 4, இருவரும் முதலமை*ச்ச*ராக இருக்கும் போதே மறைந்தவர்கள். .
5. இருவரது உடலையும் அருகருகே மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
6. அண்ணா எம்ஜிஆரை எனது இதயக்கனி என்றார் .எம்ஜிஆர் அண்ணாவை எனது இதயதெய்வம் என்றார்.
7. இருவரும் மக்களை ஈர்ப்பதில் தனித்துவம் பெற்றனர். அதில் வெற்றியும் பெற்றனர். 8. இருவரும் நள்ளிரவிலே மறைந்தனர்...
9. அண்ணா என்பது மூன்று எழுத்து தமிழில் எம்ஜிஆர் என்பது மூன்று எழுத்து ஆங்கிலத்தில். அண்ணாவின் முமு பெயர் அண்ணாதுரை எம்ஜிஆர் முமு பெயர் எம் ஜி ராமச்சந்திரன்.
10. திமுகவை தோற்றுவித்தவர் அண்ணா அதிமுகவை தோற்றுவித்தவர் எம்ஜிஆர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டிக்கு அறிஞர் அண்ணா என் வி நடராஜன் வுடன் பொதுக்கூட்டத்தற்காக செல்லும் போது கோவில்பட்டி அருகே அண்ணாவின் கார் ஒரு மரத்தடியில் அருகே நிறுத்தப்படுகிறது. வயல்வெளியில் தோட்டங்களில் வேலை பார்க்கும் விவசாயிகள் காரில் திமுக கொடி பறப்பதை கண்டு ஒடி வந்தனர். கார் அருகே வந்து நீங்கள் எல்லாம் எம்ஜிஆர் கட்சியா என்று அண்ணாவையும் நடராஜனையும் பார்த்து கேட்டனர். அதற்கு அண்ணாவும் ஆம் நாங்களெல்லாம் எம்ஜிஆர் கட்சித்தான் என்றவர் உங்களுக்கு எம்ஜிஆரை பிடிக்குமா? ? என்று கேட்டார்? ? .எம்ஜிஆர் எங்கள் உசுரு என்று சிலரும் அவர்தான் எங்கள் தலைவர் என்று சிலரும் எங்கள் வாத்தியார் அவர்தான் என்றும் அவரவர்க்கு தகுந்த பதில் கூறினார்கள். உடனே அங்குள்ள மக்கள் தாங்கள் வாங்கி வந்த பழங்கள் காய்கறிகள் டவல் துண்டுகள் யாவும் அண்ணாவிடம் கொடுத்து. இது எங்கள் தலைவர் எம்ஜிஆரிடம் கொடுங்கள் என்றார்கள். அவர்கள் அன்போடு கொடுத்ததை அண்ணா மறுக்காமல் வாங்கி கொண்டார். அதே நேரத்தில் அண்ணாவின் காரை துடைத்து தூய்மை படுத்தினார்கள். .எம்ஜிஆரிடம் நாங்கள் கேட்டதாக சொல்லுங்கள் என்றனர்..தான் ஒரு திமுகவின் தலைவராக இருந்தும் தன்னை யாருக்கும் தெரியவில்லை. .திமுக கொடி எங்கு பார்த்தாலும் பொதுமக்கள் எம்ஜிஆர் கட்சி கொடி என்றுதான் சொல்கிறார்கள் தவிர திமுக வில் உள்ள மற்ற தலைவர்கள் யாரும் அவர்கள் மனதிலும் இல்லை பார்வையிலும் இல்லை. என்று நினைத்து பெருமைப்பட்டு என் வி நடராஜனிடம் கூறினார். எம்ஜிஆர் செல்வாக்கு எப்படிப்பட்டது என்பதை அறிஞர் அண்ணா தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அத்தனை பேர்களுக்கும் முன்னால் கூறினார். அதனால்தான் எப்போதும் எந்த நிகழ்ச்சியிலும் எந்த பேச்சியிலும் செயலிலும் எம்ஜிஆரை விட்டு கொடுக்காமல் இருந்தார். .எம்ஜிஆரின் செல்வாக்கு எத்தகையது என்பதை விளக்கும் இச்சம்பவம் ஆகுக..குருவின் பெயரையும் மிஞ்சி குருவுக்கு புகழ் தேடி தந்த உண்மையான சீடனாக எம்ஜிஆர் இருந்தார். .......... Gunasekaran...

orodizli
6th October 2020, 11:01 AM
வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டியவர்கள் தொடர் 2, பாகம் 73 . பேரரறிஞர் அண்ணா

அண்ணா மீது அதிக பாசம் வைத்த எம்ஜிஆர் அண்ணா மரணம் அடைந்தபோது கதறி அழுதார். அழுதுக்கொண்டே இருந்தார். என் தந்தை இறந்த போது தெரியாது அப்போது நான் சிறுவன் தாயை இழந்த போது எனக்கு அதிகமாக துக்கம் இருந்தது. இருந்தாலும் என் கண்ணீரை அடக்கினேன். .அண்ணாவின் மரணம் என்னை கலங்க வைத்து விட்டது என் அழுகையை அடக்கமுடியல என்று தங்கதமிழ் மகனை வங்க கடலோரம் அடக்கிய பின் சொன்னார். என் பெரும் இழப்பு அண்ணாவின் இறப்பு என்று பலர் முன் புலம்பினார். .என்னை சந்திரன் என்றார்கள் அவர்களோ சூரியன். .சூரியன் இல்லாமல் சந்திரனுக்கு ஒளி ஏது? ? என்று வருந்தினார். ஒப்பாரியில் மிகவும் ரசிக்கத்தக்கதும் வருனை மிகுந்ததும் ராவணன் மனைவி காந்தாரி புலம்பியதும் கம்பன் வருனையில் களைக்கட்டி நிற்கும். .தமிழ் என்னை உன் இதயத்தில் வைத்திருப்பதாக சொன்னீர்களே ராமபாணம் அந்த இதயத்தை துளைத்த போது என்னையும் அல்லவா கொன்றிருக்க வேண்டும் என்று பொய் சொன்னீர்களா என கேட்டு அழுதாராம். அப்படி இந்த கோமகனும் தனக்குள் புலம்பினார். நடந்துக்கொண்டே வேட்டிக்கட்டும் அழகு எப்போ பார்ப்பேன். .மேடையிலே பிரசாங்கம் செய்யப்போறப்போ யாருக்கும் தெரியாமல் பொடி போடற பக்குவம் யாருக்கு வரும். என் உடன்பிறந்தவர்கள் கூட தம்பி என்று கூப்பிடறது இல்லை. நீங்கதானே கூப்பிடுவீங்க இனிமேல் யார் என்னை கூப்பிடற போறாங்க. என்றார். .

பேரரறிஞர் அண்ணா கேட்டுக் கொண்டதற்கு இணங்க எம்ஜிஆர் நாடகம் மன்றம் சார்பில் இன்பகனவு, .இடிந்தக்கோயில். ,மற்றும் அட்வகேட் அமரன். முதலிய நாடகங்கள் நடத்தி கட்சிக்கு நிதி சேர்த்துக்கொடுத்தார். நேரம் கிடைக்கும் போதல்லாம் கழகத்தின் முக்கிய தலைவர்களுடன் இனைந்து வெளியூர்களுக்கு சென்று சிறப்பு கூட்டங்களில் கலந்து கொண்டு கழகத்தின் கொள்கைகளை பிரசாரம் செய்தார். .எம்ஜிஆர் கலந்துக்கொண்ட சிறப்பு கூட்டங்களில் டிக்கெட் மூலம் கட்டணம் வசூலிக்கப்பட்டது. .மக்களும் காசு கொடுத்து கூட்டம் கூட்டமாக அவரைக் காணவும் அவரது பேச்சைக் கேட்கவும் திரண்டு வந்தனர். .அந்த நிதி முழுவதும் கட்சி வளர்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டது. திமுக கட்சிக்காக அதிகமாக உழைத்தவர்கள் பலர் இருந்தாலும் அவர்களின் முதன்மையானவர் புரட்சிநடிகர் எம்ஜிஆர் தான். முன்னப்போதும் கேள்வி படாத சரித்திர சாதனையாகும் இது? அதைப் பார்த்து அண்ணா பூரித்துப் போனார். அன்று நம்நாடு பத்திரிகைகளில் இப்படி எழுதினார். .
நண்பர் எம்ஜிஆருக்கும் எனக்கும் உள்ள உறவு எப்படிப்பட்டது என்பதை நாடு அறியும். எம்ஜிஆரை நான் பாராட்டுவது என்னை நானே பாராட்டி கொள்வது போன்றதாகும். ..
அவர் ஏற்றுக்கொண்டுள்ள கொள்கை எது என்பதை நாடறியும். முல்லைக்கு மணம் உண்டு என்பதை கூறவா வேண்டும். ? தி.மு.க கட்சியினால் எம்ஜிஆர். எம்ஜிஆரால் திமுக கட்சி. . இரவு பகல்.. உயர்வு தாழ்வு. ..கொடுப்பவன் வாங்குபவன். ..மேடு பள்ளம். .
இவையெல்லாம் எப்படி இயற்கையில் மாற்ற முடியாதோ. அதுபோல் தான் எம் ஜி ஆர் இல்லையென்றால் கட்சி இல்லை. கட்சியில்லையென்றால் எம்ஜிஆர் இல்லை. கட்சியும் எம்ஜிஆரையும் மாற்ற முடியாது. .என்று காந்தகம் போல் ஆகிவிட்டது. .என்று அருமையாக எழுதியிருக்கார் பேரரறிஞர் அண்ணா அவர்கள். அதைவைத்துதான்எம்ஜிஆரை அண்ணாவின் இதயக்கனி என்று எல்லோரும் சொல்கிறார்கள்...gs.........

orodizli
6th October 2020, 11:06 AM
எம்ஜிஆரின் வாத்தியார் காளி என்.ரத்தினம்!

சபாபதி படத்தில் வேலைக்காரன் சபாபதியின் நடிப்பை, இந்தத் தலைமுறை மக்கள் கூட இமை கொட்டாமல் ரசிக்கின்றனர். அந்த அளவுக்கு 1936 முதல் 1950 வரை தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த மூத்த நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகர் காளி என்.ரத்தினம்.

சிறந்த நடிகர், பாடகர், சண்டை பயிற்சி வாத்தியார், நடிப்பு வாத்தியார், அரங்க நிர்வாகி, பி.யு.சின்னப்பா, எம்ஜிஆர் போன்ற சூப்பர் ஸ்டார்களுக்கு ஆசான் என பல்வேறு சிறப்புக்களைக் கொண்டவர் அவர்.

காளி என். ரத்தினத்தின் சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள மலையப்பநல்லூர். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், சிறு வயதிலேயே நாடகக் கம்பெனிகளில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்து விட்டார்.

மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனிகள் பலவற்றில் பணியாற்றிய இவர், கோவலன் என்ற ஒரு நாடகத்தில், முதன் முதலாக காளி வேடம் போட்டார். அதில் அவரது நடிப்பை பார்த்து பலரும் அசந்து போயினர். அன்று முதல் அவர் காளி என்.ரத்தினம் என்று அழைக்கப்படலானார்.

அவர், காளி வேடம் கட்டி ஆடினால், அவர் ஆடும் உக்கிரமான ஆட்டத்தைப் பார்த்து பல பேர் சாமி வந்து ஆட ஆரம்பித்து விடுவார்கள்.

பி.யு. சின்னப்பா, எம்.ஜி.ஆர் போன்றவர்களுக்கு உச்சரிப்பு, நுணுக்கமான நடிப்பு, உடல் மொழி, வாள் சண்டை, கத்தி சண்டை, சிலம்பப் பயிற்சி போன்றவற்றை எல்லாம் கற்றுக்கொடுத்தவர் காளி என். ரத்தினம்.

தமிழ் சினிமாவில் வாத்தியார் என்றால் அது எம்.ஜி.ஆரை மட்டுமே குறிக்கும். ஆனால் எம்.ஜி.ஆரே, தமது வாத்தியார் காளி என். ரத்தினம் என்று, 1970-ம் ஆண்டு “நான் ஏன் பிறந்தேன்” என்ற தலைப்பில் ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய தொடரில் குறிப்பிட்டுள்ளார்

1936-ல் வெளியான பதிபக்தி என்ற படமே காளி என். ரத்தினம் நடித்த முதல் படம். முதல் படத்திலேயே அவர் இரண்டு வேடங்களை ஏற்று அற்புதமாக நடித்திருந்தார்.

அதைதொடர்ந்து, 1950 வரை சந்திரலேகா, பஞ்சாப் கேசரி, உத்தம புத்திரன், சபாபதி, திவான் பகதூர், ஸ்ரீ முருகன், ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி, ஆண்டாள் உள்பட 5௦ படங்களுக்கும் மேல் பாடி நடித்துள்ளார்.

காளி என். ரத்தினம் போல ஒரே காட்சியில் எண்ணற்ற முக பாவனை காட்டக் கூடிய நடிகர் வேறு யாரும் இல்லை என்று மூத்த திரை விமர்சகர்கள் பலராலும் இன்றும் பாராட்டப் படுகிறார்.

என்,எஸ்.கிருஷ்ணன்-டி.ஏ.மதுரம் ஜோடியைபோல, அந்தக் காலத்தில், காளி என். ரத்தினம்- சி.டி.ராஜகாந்தம் ஜோடி மிகவும் பிரபலமான ஜோடியாகும்.

காளி என். ரத்தினம் போடாத வேடமும் இல்லை, பாடாத பாடலும் இல்லை என்ற அளவுக்கு அசத்தி இருக்கிறார். கடைசியாக அவர் பொய்க்கால் குதிரை ஆட்டம் போடத் தயாரானபோதுதான், அவரை மரணம் தழுவிக்கொண்டது.

தி இந்து நாளிதழ் கூட காளி என். ரத்தினம் பாணியைப் பற்றி பல நேரங்களில் சிறப்பாகப் பாராட்டி எழுதி உள்ளது. இளைய தலைமுறையினர் காளி என். ரத்தினம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

காளி என். ரத்தினம் முதல் வரிசை நகைச்சுவை நடிகராக வலம் வந்த 1940 களில், அன்றைய சினிமா பத்திரிகை ஒன்று காளி என். ரத்தினம் பற்றி வெளியிட்ட செய்தியை நட்சத்திர தேடல்கள் என்ற கட்டுரையில், மறைந்த முன்னணி எழுத்தாளர் அறந்தை நாராயணன் பதிவு செய்துள்ளார்.

“ரத்தினம் பழங்கால கிராமிய பழக்க வழக்கங்களுக்கு நல்ல மெருகு கொடுத்து, சினிமா படங்களில் புகுத்தி, பட்டனப்புரங்களில் உள்ள புதுக்கால மனிதர்களும் அவற்றை தெரிந்து கொண்டு ரசிக்கும்படி செய்திருக்கிறார். கிராம மக்களோ தங்கள் சம்பந்தமான விஷயங்களை சினிமாவில் பார்க்கும்போது பிரமாதமான பூரிப்பு அடைகிறார்கள்.

இந்தக் காரணங்களினாலே அவர்கள் ரத்தினம் நடிக்கும் படங்களைப் பல தடவை பார்ப்பது வழக்கமாக இருக்கிறது. மாடர்ன் தியேட்டர்ஸ் படங்கள் நிறைய வசூலைப் பெற்று வந்ததற்கு ரத்தினத்தின் நடிப்பு ஒரு முக்கிய காரணமாகும்

படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை பாராட்டி மகிழும், மாபெரும் கலைஞன் காளி என். ரத்தினம், காலத்தால் மறைக்கப்பட்டு, இருந்த இடம் தெரியாமல் போனதை ஒரு சமூக அவலம் என்றே சொல்ல வேண்டும்......gr...

orodizli
6th October 2020, 02:36 PM
இலங்கைக்கு போவோம் வாரீயளா!
-----------------------------------------------------------
நம்ம கைபிள்ளைங்க, தமிழ்நாட்டில் சாதனை என்று எதை போட்டாலும் தலைவர் ரசிகர்கள் சீக்கிரத்திலே வெட்டவெளிச்சமாக்கி விடுகிறார்கள் என்ற எண்ணத்தில் அடுத்த புளுகுமூட்டையை எங்கே ஆரம்பிப்பது என்ற குழப்பத்தில் இருந்தவர்களுக்கு இராவணனின் கோட்டையான இலங்கை ஞாபகம் வந்து விட்டது. உடனே திரையிட்டு பல்லாண்டுகளான படுதோல்வி அடைந்த ஒரு படத்தை எடுத்து அதற்கு மாரீசன் போல பொய் வசூலை ஜோடித்து வெளியிட்ட படம்தான் 'உன்மத்தன்' சாரி 'உத்தமன்'.

தமிழ்நாட்டில் ஓடி ஒளிய இடமின்றி மதுரையம்பதியில் 100
நாட்கள் தலைமறைவாக திரிந்த "உத்தமனை" தேர்ந்தெடுத்தது இன்னும் விநோதம். மதுரை நியூசினிமாவில் போட்ட வடக்கயிறை இலங்கைக்கு எடுத்துச் சென்று இலங்கை கூட்டு ஸ்தாபன வர்த்தக சபை காலில் விழுந்து இலங்கையில் 200
நாட்கள் வரை இழுத்து சென்றதை அனைவரும் அறிவோம்.

சந்தடி சாக்கில் 'உன்மத்தன்' சாரி 'உத்தமன்' "உலகம் சுற்றும் வாலிபனை" வசூலில் தாண்டி விட்டதாக 'புதுக்கரடி' ஒன்றை
விட்டு ஏமாற்றி வருகிறார்கள். ஆனால் உண்மையில் பலமுறை வெளிவந்த "ஒளிவிளக்கு" மீண்டும் 100 நாட்கள் ஓடிய போது பெற்ற வசூலை கூட பெறமுடியாமல் தத்தளித்த கதை வெளியாகி இருக்கிறது.

ஒரு பழைய தலைவர் படத்துடனே தோல்வியடைந்த 'உத்தமனை' வைத்துக் கொண்டு "உலகம் சுற்றும் வாலிபனை" வெற்றி கொண்டது என்று சொல்லும் சிவாஜி ரசிகர்களின் மனதைரியத்தை பாராட்டி "நாடோடி மன்னனி"ல் அங்கமுத்து குளிக்க பயன்படுத்திய அண்டாவை பரிசாக அளிக்கிறாம்.. ஏனென்றால் முழு பூசணிக்காயை சோத்தில் மறைத்தால் சற்று சிரமமாக இருக்கும் என்பதால் அண்டாவை அனுப்பி வைத்தால் அவர்களுக்கு சற்று சிரமம் குறைபும் என்பதால்.

சிவாஜி ரசிகர்களை, m.சரோஜா(தங்கவேலு) பாணியில் கேட்பதானால், என்றைக்காவது ஒரு நாள் உண்மை பேசியிருக்கீங்களா? ஏன் இந்த பொய் பித்தலாட்டம்?. உன்னை விட பத்து மடங்கு சம்பளம் வாங்கும் தலைவரிடம் மோதலாமா? அரசியலுக்கு போயும் ஒண்ணுமில்லாம ஆன? 10 நாளைக்கு உப்பில்லாம கஞ்சி குடிச்சா எல்லாம் சரியாயிடும்.
போய் வேறு ஏதாவது உருப்படியான வேலையை பாருன்னு! சொன்ன மாதிரி இருக்கு.

இன்னும் எத்தனை அவதாரம் எடுத்தாலும் நாடக மிகை நடிப்பு இவரை விடாது,
நாளைய தலைமுறை இவரை பழிக்கும் என்றே சொல்கின்றேன். பல நாள் பொய்யன், ஒரு நாள் அகப்படுவான் பாவம் செய்தவன் தலைமுறை வரை தோற்பான், பார்க்கின்றேன், என சிவாஜி படத்தின் பாடல் வரிகளே அவருக்கு மிகவும் பொருத்தமாக அமைந்துவிட்டது.

அதற்காக மெனக்கெட்டு பழைய இலங்கை வசூல் விபரங்களை தேடிப்பிடித்து அவர்கள் பொய் முகத்திரையை அவிழ்த்து உண்மையான வசூலை வெளிப்படுத்தியிருக்கிறேன். "உலகம் சுற்றும் வாலிபன்" ஓடி முடிய இலங்கையில் பெற்ற வசூல் 25 லட்சத்துக்கும் மேலே. இதை பார்த்தால் சிவாஜி ரசிகர்களுக்கு வடிவேலு மாதிரி பேஸ்மென்ட் வீக்காகி கால்வழியாக துர்நாற்றம் கிளம்பி விடாமல் பார்த்துக் கொள்ளவும்.

இலங்கையில் புரட்சித்தலைவரின்
"உலகம் சுற்றும் வாலிபன்" படைத்த வசூல்கள்....யாரும் எளிதில் வெல்ல முடியாத ஒரு காவியமாக திகழ்ந்தது எனலாம்.....

கொழும்பு - கெப்பிட்டல்
203 நாள் : 9,84,588.75
கிங்ஸிலி 40 நாள்
வசூல் : 2,03,545.50
ட்ரியோ 35 நாள்
வசூல் : 1,69,185.75
கொழும்பில் மட்டும் முதல் ரவுண்டில் பெற்ற
278 நாள் ஒடி முடிய வசூல் :13,57,289.75

அடுத்து.....
யாழ் நகரில்
மனோகரா 80 நாள்
வசூல் : 3,01,351.75
ஸ்ரீதர் 48 நாள்
வசூல் : 1,56,281.70
யாழ் நகரில் பெற்ற
128 நாள் : 4,57,633.45

அடுத்து...
மட்டுநகர் விஜயா
116 நாள் ஒடி சாதனை.

திருமலை - சரஸ்வதி
72 நாட்கள் ஒடியது.

கட்டுகஸ்தோட்டா
நியூசிகீரி - 63 நாள்
வவுனியா
ராயல் - 57 நாள்
அக்கரைபற்று
சாரதா - 50 நாள்
கல்முனை
தாஜ்மகால் 43 நாள்
தெகிவளை
ரீயோ ...36 நாள்
மாணிப்பாய்
வெஸ்லி ....31
சங்காளை
சாந்தி....40 நாள்
சாவகச்சேரி
வேல்......23 நாள்

உலகம் சுற்றும் வாலிபன், இலங்கையில் முதல் ரவுண்டில் மட்டும் 25 லட்சத்தை
கடந்து வசூலில் ...... சாதனை செய்தது.

நன்றி : திரு டேவிட்
யாழ் - பிரான்ஸ்
திரு b.s.ராஜு

என்ன சிவாஜி ரசிகர்களே! இந்த சாதனை போதுமா? இதைவிட வேறு சாதனை வேண்டுமென்றால் சொர்க்கத்தின் புதிய தலைவராக வீற்றிருக்கும் எங்கள் சுந்தர பாண்டியரை மறுபடியும் கூட்டி வந்து "கிழக்காப்பிரிக்காவில் ராஜு" எடுக்கச் சொன்னால்தான் முடியும். அவர் சாதனையை அவரால்தான் முறியடிக்க முடியும். இதுதான் திரையுலக நியதி. சிங்கத்தை வெல்ல சிங்கத்தால்தான் முடியும். சிறு நரிகளால் என்ன செய்ய முடியும். அதை வேடிக்கை பார்க்கத்தான் முடியும்..........ksr...

orodizli
6th October 2020, 02:37 PM
"தவிதவிக்கிற ஏழைக்காக திட்டம் போடணும் - பொருளை
சரிசமமா பங்குவைக்க சட்டம் போடணும்
குவியக் குவிய விளைவதெல்லாம் கூறு போடணும் - ஏழைக்
குடிசைக்குள்ளே பாலும் தேனும் ஆறா ஓடணும்"
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்து 1965ல் வெளிவந்த "கன்னித்தாய்" என்ற படத்தில் இடம்பெற்ற "கேளம்மா சின்னப்பொண்ணு" என்ற பாடலின் வரிகள் தான் இவை. திராவிட இயக்கத்தின் பிரச்சார பீரங்கியாக எம்.ஜி.ஆர் இயங்கி கொண்டிருந்த காலத்தில் இப்படி அவரது படத்தில் சிவப்புச் சிந்தனை சிதறும் வரிகளை எழுதிய இவர் தான் இந்தப் படத்தின் அத்தனைப் பாடல்களையும் எழுதியவர். அவர் பெயர் "அருணன்". கண்ணதாசன் நடத்தி வந்த "தென்றல்" பத்திரிகையில் கவிதைகளும், கட்டுரைகளும் எழுதிக் கொண்டு பின்னாளில் அதன் உதவி ஆசிரியராக இருந்தவர்.
இதற்கு அடுத்த ஆண்டு (1965) எம்.ஜி.ஆருக்கும் அவரது படங்களில் தொடர்ந்து பாடல்கள் எழுதும் கவியரசு கண்ணதாசனுக்கும் பிணக்கு ஏற்பட்டு, இனி எனக்கு நீ வேண்டாம், உனக்கு நான் வேண்டாம் என்று பிரிந்த நேரத்தில் வெளிவந்த படம் "கலங்கரை விளக்கம்". அந்தப் படத்தில் இரண்டு சூழல்களுக்கான பாடல்களை கண்ணதாசன் எழுத வேண்டி இருந்ததால் அவசர உதவியாக இவரை எழுத வைத்திருக்கிறார் தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணி. வழக்கம் போல பதிவான பாடல்களை எம்.ஜி.ஆருக்கு தோட்டத்தில் போட்டு காண்பித்திருக்கிறார் வேலுமணி.
பாடல்களைத் திரும்பத் திரும்பக் கேட்டுவிட்டு " என்ன நெனச்சிட்டு இருக்கீங்க?? நான் கண்ணதாசன் வேண்டாம்னு அவ்வளவு தூரம் சொல்லியும் கேக்காம அவரையே எழுத வச்சிருக்கீங்க... மொதல்ல இதெல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு வேற யாரையாவது வச்சு எழுதுங்க.." என்று சீறிச் சினந்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.
"ஐயையோ.. இது கண்ணதாசன் எழுதினது இல்லங்க.. எழுதியவர் இன்னார் தான்" என்று இவரது பெயரை எவ்வளவோ சொல்லி மன்றாடி இருக்கிறார் வேலுமணி...
"எனக்கு தெரியாதா??
"தென்னை வனத்தினில் உன்னை முகம்தொட்டு
எண்ணத்தைச் சொன்னவன் வாடுகிறேன்
உன்னிரு கண்பட்டு புண்பட்ட நெஞ்சத்தில்
உன் பட்டுக்கை தொடப் பாடுகிறேன்"...
இதெல்லாம் கண்ணதாசனால மட்டும் தான் எழுத முடியும். மொதல்ல சொன்னதை செய்யுங்க" என்று திருப்பி அனுப்பிவிட்டார்..
(இத்தனைக்கும், "சின்னஞ்சிறிய வண்ணப்பறவை எண்ணத்தை சொல்லுதம்மா, மணமகளே மருமகளே வா வா" போன்ற காலத்தால் அழியாத பாடல்களை ஏற்கனவே எழுதி இருந்தவர் தான் அவர்)
பிறகு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வியே நேரில் சென்று உண்மையைச் சொல்லி விளக்கிய பிறகே நம்பிய எம்.ஜி.ஆர்.. "ரொம்ப நல்லா எழுதி இருக்காரு.. இனிமேல் என் படங்களுக்கு இவர் எழுதுவார் அப்படின்னு சொல்லிடுங்க" என்று பாராட்டி இருக்கிறார்.. அந்தப் பாடலாசிரியர் தான் பின்னாளில் தயாரிப்பாளர், இயக்குனர், கதாசிரியர், திரைக்கதை - வசனகர்த்தா, பத்திரிகையாளர், திரைப்பட விநியோகஸ்தர் என்று பல்வேறு துறைகளிலும் அளப்பரிய சாதனைகளை படைத்த
திரு. பஞ்சு அருணாச்சலம். (அருணன் என்பது அவரது புனைப்பெயர்)......

orodizli
7th October 2020, 08:15 AM
1969 ல் நம்நாடு முன் வசூலில் சிவந்த மண் தோல்வி அடைந்தது முந்தைய தலைமுறைக்கு தெரியும். அதேபோல் வேட்டைக்காரன் முன் போலிக் கர்ணன் வசூலில் தோற்றதும் தெரியும். சமீபத்தில் இந்த தலைமுறைக்கும் தெரியுமாறு சித்ரா லட்சுமணன் வேட்டைக்காரன் அளவுக்கு கர்ணன் வசூல் பெறவில்லை என்று உண்மையை யூடியூபில் போட்டு உடைத்துவிட்டார். அது இருக்கட்டும். சிவந்த மண் படம் காஞ்சிபுரத்தில் 85 பைசா டிக்கெட் 25 ரூபாய்க்கு பிளாக்கில் போனதாம். இப்படி ஒரு கற்பனைக் கதை. அதற்கு ஆதாரம் என்று ஒரு பொய்ச் செய்தி. இந்த செய்தியை பாருங்கள். தலைப்பில் ‘சாதனை’ என்ற எழுத்தை கவனியுங்கள். உள்ளேயும் ‘சாதனையை’ என்ற வார்த்தையை கவனியுங்கள். இந்த ‘னை’ என்ற எழுத்து பெரியார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அப்போது முதல்வராக இருந்த புரட்சித் தலைவரால் பெரியாரின் எழுத்து சீர்திருத்தமாக அறிவிக்கப்பட்டது.

1979க்குப் பிறகுதான் இந்த புது எழுத்து அமலுக்கு வந்தது. இப்போது நடைமுறையில் உள்ளது. அதற்கு முன்பு ‘னை’ என்பது ‘ன’ என்ற எழுத்துக்கு மேல் கொம்பு முளைத்தது போலிருக்கும். இளைஞர்களுக்கு இது தெரியாது. மூத்தவர்களுக்கு தெரியும். யானை தன் துதிக்கையை தூக்கி ஆசிர்வதிப்பது போல அந்த ‘னை’ இருக்கும். இதேபோல ‘விலை’ என்ற வார்த்தையிலும் கொம்பு முளைத்த ‘லை’க்கு பதில் சீர்திருத்த எழுத்தான இப்போதைய ‘லை’ உள்ளது. 1979ல் கொண்டுவரப்பட்ட சீர்திருத்த எழுத்து எப்படி 10 ஆண்டுக்கு முன்பே அச்சில் இருக்க முடியும்?இந்த நவீன எழுத்து மூலம் இந்த செய்தி 1969-ம் ஆண்டு வெளியான செய்தியல்ல என்பதை இதை வைத்தே தெரிந்து கொள்ளலாம். இது இப்போது இவர்கள் தயாரித்துள்ள பொய்ச் செய்தி. எல்லாருக்கும் வாய் இருக்கும் இடத்தில் சிவாஜி கணேசன் ரசிகர்களுக்கு பொய் இருக்கிறது.......... Swamy............

orodizli
7th October 2020, 08:16 AM
இந்தியாவில் மட்டுமல்ல, இலங்கையிலும் மக்கள் திலகம் வசூல் சக்கரவர்த்தி என்பதை ஏற்கெனவே ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளோம். அவ்வளவு ஏன்? ஒரு உதாரணம் போதும். மக்கள் திலகத்தின் 100 வது படமான ஒளிவிளக்கு 1969ல் முதல் வெளியீட்டில் யாழ்ப்பாணம் ராஜாவில் 160 நாட்கள் கடந்து ஓடி மகத்தான வெற்றி பெற்றது. 1979-ம் ஆண்டு இலங்கையில் ஒளிவிளக்கு மறு வெளியீட்டில் தினசரி நான்கு காட்சிகளாக அதே யாழ்ப்பாணம் ராஜாவில் மீண்டும் 100 நாட்கள் ஓடி 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. ( அதிகாரபூர்வ விளம்பர ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது)இதை சிவாஜி கணேசன் படம் மட்டுமல்ல, எந்த நடிகரின் படமும் இலங்கையில் இன்றுவரை மறுவெளியீட்டில் 100 நாள் என்ற இந்த சாதனையை முறியடிக்க முடியவில்லை.

இலங்கையில் பைலட் பிரேம்நாத் திரைப்படம் ஒரு வருடம் ஓடியது என்று வண்டி வண்டியாக பொய்யை அளந்து கொட்டுவார்கள். அப்படி அந்தப் படம் ஒரு வருடம் ஓடியதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. நம்மிடம் வசூல் விவரங்கள் கேட்பார்கள். 100 நாள் விளம்பரம் கேட்பார்கள். ஆனால், அவர்கள் வாயிலேயே வடை சுட்டு வசூலைக் குவித்து விடுவார்கள். நம்மிடமாவது சில படங்களுக்கு 100 நாட்கள், வெள்ளிவிழா கடந்து ஓடியதற்கு விநியோகஸ்தர் வெளியிட்ட வசூல் விவரம் உள்ளது. அவர்களிடம் அதுவும் கிடையாது. ஒன்றிரண்டு படங்கள் தவிர, முதல் வார வசூல், இரண்டு வார வசூலோடு அடக்கம் காப்பார்கள். அதை 100 நாட்கள், 25 வாரத்தோடு பெருக்கிக் கொள்ள வேண்டுமாம். நாட்டாமை படத்தில் ஒரு பெண்ணை மயக்க செந்தில், ‘ஊட்டியில டீ எஸ்டேட் இருக்கு’ என்பார். மறைந்து நிற்கும் கவுண்டமணி ‘ஊட்டியில இருக்குடா. உனக்கு இருக்கா?’ என்பார். அந்த மாதிரிதான் இவர்களின் வெற்றிகள், வசூல்கள் எல்லாம். அடுத்த பதிவில் இவர்களின் இன்னொரு பொய்யை சொல்கிறேன்..........ஸ்வாமி.........

orodizli
7th October 2020, 01:57 PM
ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டின் தொடக்க உரை - புரட்சித்தலைவர் [04-01-1981].

5 - வது உலகத் தமிழ் மாநாடு ஓராண்டுக்கு முன்பேயே நடத்தியிருக்கவேண்டும்; தவறிவிட்டது, இப்போதுகூட குறிப்பிடப்பட்ட நடத்துவார்களோ, மாட்டார்களோ பலர் சந்தேகப்பட்டனர். தள்ளி வைத்துவிடுவார்கள் என்று கூடச் சிலர் கருதினர்.

அறிஞர்கள், அதிகாரிகள் , இளைஞர்கள், பொறுப்பு மிகுந்த கட்சிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு முடிவு எடுத்தால், எதையும், எங்கேயும் நடத்திக்காட்ட முடியும் என்பதைத்தான் 5 - வது உலகத் தமிழ் மாநாட்டின் தொடக்க விழா எடுத்துக் காட்டுகின்றது.

உலகத் தமிழ் மாநாடு என்னும் அரிய மாநாட்டை தமிழகத்தில் தொடங்குவதற்கு வித்திட்ட, ஒப்புக்கொண்ட முன்னாள் முதல்வர் பக்தவத்சலம் அவர்களின் உழைப்பும், எனது தெய்வம், என் ஆசான் , பேரறிஞர் அமரர் அண்ணா அவர்கள் இரண்டாவது மாநாட்டில் ஏற்றிருந்த முழுமையான பொறுப்பும் என்னை ஆட்டிப் படைத்து இந்த மாநாட்டை நடத்துகின்ற வகையில் ஊக்கத்தைத் தருகின்றது. இன்று அமரர் அவர்கள் நம்மிடையே இல்லை; ஆனால், அவர் எனது இதயத்திலிருந்து எனக்கு ஊக்கத்தையும் நல்ல கருத்தையும் தந்து என்னை வழிநடத்திச் செல்கிறார் என்பதை நான் மறுக்க முடியாது; இது மூடநம்பிக்கை என சொல்லலாம். என்னைப் பொறுத்தவரை இது நியாயமான நம்பிக்கையாகும்.

பல பெரியவர்கள் இந்த மாநாடு கூடுவதற்கு ஆதரவு நல்கினார்கள் . இந்தி பேசும் மாநிலத்தவர்கள் , ஆந்திர மாநிலத்தவர்கள் , மராட்டிய மாநிலத்தவர்கள் , தொலைபேசியின் மூலம் அடிக்கடி தமிழ் மாநாடு எப்போது என்று என்னை வினவியவாறே இருந்தார்கள்.

இங்கே தமிழ் குறித்து பிரச்சினைகள் பேசப்பட்டன . அவற்றிற்கு வழிகாணும் முறைடற்றியும் சொல்ல முயன்றார்கள் . வெவ்வேறு கருத்துகளைச் சொன்னார்கள். அதற்காகத்தான் 5 - வது உலகத் தமிழ் மாநாடு கூட்டப்படுகிறது.

குழந்தையைப் பெற்றவர் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் . ஆனால் மற்றவர்கள், உற்றவர்கள் , இந்தச் சட்டையைக் குழந்தைக்குப் போடு , அந்தப் பள்ளிக் கூடத்தில் சேர், இந்த ஆசானைத் தேர்ந்தெடு என்றெல்லாம் கருத்துகள் தெரிவிப்பதுபோல, தமிழைப் பாதுகாக்க , தமிழை வார்க்க யோசனை சொல்கிறார்கள் என்பதை நாம் உணரவேண்டும்.

ஆராய்ச்சிக் கருத்தரங்கில் மாறுபட்ட கருத்துகள் சொல்லப்படுகின்றன . எல்லோரும் ஒரே எண்ணத்தைத் திரும்பத் திரும்பச் சொல்வதற்காக அல்ல மாநாடு ! அவர்கள் தங்களது ஆற்றலை, வலிமையைப் பயன்படுத்தி தமிழைப் பாதுகாக்கும் வழியைச் சொல்கின்ற மாநாடு இது.

தமிழ் எழுத்தில் சீர்திருத்தம் தேவை என்று சிலர் குறிப்பிடுகின்றனர் . வரவேற்கிறேன். சீர்திருத்தம் என்று சொல்லிக்கொண்டு மேலும் மேலும் எழுத்துகளைச் சேர்த்துக்கொண்டு போகக்கூடாது . ஆங்கிலத்தில் 26 எழுத்துகள் தான் உள்ளன . அது உலக மொழியாகும் வாய்ப்பைப் பெற்றுள்ளது . எனவே, தமிழ் எழுத்துச் சீர்திருத்தம், எழுத்துகளைக் குறைப்பதாக அமையவேண்டும் ; அதிகமாக்கக் கூடாது.

தமிழ் ஒரே மாதிரியாக இருக்க வேண்டுமென்று சிலர் குறிப்பிட்டார்கள் . இராமநாதபுரத்தில் ஒரு வகையாக, மதுார் மாவட்டத்தில் ஒரு விதமாக , நெல்லையில் ஒரு விதமாக, கோவையில் ஒரு விதமாக தமிழ் பேசப்படுகிறது . இவற்றை ஒன்று படுத்தவேண்டும் என்றால் , மிகப்பெரும் பணி செய்ய வேண்டும். தமிழக அரசு இதனைத் தக்க வகையில் செய்யும்.

தமிழ் மக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து பேசக் கூடிய பொழி வேண்டும் என்றார்கள். ஏற்றுக் கொள்வோம்; ஆனால், இலக்கண ரீதியாக அந்த மொழி அமைய வேண்டும் என்பது மட்டுமல்ல, ஏழை மக்களின் உள்ளத்தைத் தொடும் மொழியாக, அது இருக்கவேண்டும். பேசும் மொழியும், எழுதும் மொழியும் ஒருங்கினையும் நிலையை உருவாக்க வேண்டும் என்பது சுமையானதோர் பொறுப்பு : அதனை உணர்ந்து ஏற்றுச் செயல்புரிய வேண்டும்.

உலகத் தமிழ்ச் சங்கம் ஒன்றை இங்கே தமிழக அமைக்கும். போறிஞர்களிடம் அது ஒப்படைக்கப்படும்; நிருவாகத்தை மட்டும் அரசு கவனித்துக்கொள்ளும். இந்த உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ் மக்கள் அக்கறை கொள்ளவேண்டும். செப்டம்பர் திங்கள் 15 ஆம் நாளில் , பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் உலகத் தமிழ்ச் சங்கம் தமிழ் வளர்ச்சிக்கு விழா எடுக்கும்.

தமிழ் ஆட்சி மொழியில் அரசு அக்கறை கொண்டுள்ளது என்பது எல்லாருக்கும் புரிந்திருக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. தமிழ் வழக்கு மொழியாக, வழக்கத்தில் உள்ள மொழியாக மட்டுமல்ல ; வழக்கு மன்றத்தில் நீதிமன்றத்தில் தீவிரமாக்கப்பட முயற்சி நடைபெறும்.

உலகத்தில் பய நாட்டுப் பிரதிநிதிகளும் , தமிழைப் பாராட்டி பேச வந்திருக்கும் இந்த நேரத்தில் ஒன்றை நினைவுகூர்தல் வேண்டும். நாம் ஒரு போராட்டத்திற்குத் தயாராக வேண்டும். அந்தப் போராட்டம் யாரையும் எதிர்த்தல்ல; எந்த மொழியையும் எதிர்த்தல்ல; யாரையும் சிறையில் தள்ளுவதல்ல அந்தப் போராட்டம்; யாரையும் அழிவுப் பாதைக்கு அனுப்புவதல்ல அந்தப் போராட்டம்; நாமே நமக்குள் நடத்திக்கொள்ள வேண்டிய போராட்டம் அது, தமிழில்தான் எழுதுவேன் , தமிழில்தான் பேசுவேன் என்று நமது உள்ளத்து உணர்வுடன் போராடவேண்டும். நாம் "தமிழன் என்றொரு இனம் உண்டு" என்பதை திரைப்படத்தில் பாடிக் காட்டுவதோடு நின்றுவிடாமல், தமிழ் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பே இங்கு இருந்தது, இப்போது எப்படி இருக்கிறது என்பதையெல்லாம் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நான் முன்பு இலங்கை தி.மு.க. - வின் அழைப்புடன் இலங்கைக்குச் சென்றிருந்தபோது அங்கு என்ன பேசுவது என்பது குறித்து அமரர் அண்ணா அவர்களிடம் கேட்டேன். "இலங்கையில் உள்ள தமிழர்களுக்கும் நாக்கும் கலாச்சாரத் தொடர்பு உண்டே தவிர, அரசியல் தொடர்பு கிடையாது" என்று அண்ணா. அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள், அதை அங்கு சென்று நாள் தெரிவித்தேன்; இலங்கை தமிழர்கள் அதை ஏற்றுக் கொண்டார்கள்.

இலங்கைத் தமிழருக்கு எந்தெந்த வகையில் ஆதரவு தாமுடியுமோ அந்தந்த வகையில் எல்லாம் தருவோம். அந்த நாட்டின் ஆட்சி முறை குறித்து நாம் தலையிட முடியாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவிப்பது என் நீங்காத கடமை என உணர்கிறேன்.

அரசியல் சம்பந்தம் இன்றி முழுக்க முழுக்க தமிழுக்கு மட்டும் நடத்தப்படும் மாநாடு இது என்பதால், அரசியல் குறித்து நாம் கவலைப்படாமல், தமிழ் மொழி குறித்து, தமிழ் வளர்ச்சி குறித்து , இலக்கியம் குறித்து, கலாச்சாரம் குறித்து இம்மாநாடு கருத்துரை தெரிவிக்கிறது.

உலகத் தமிழர் அனைவரும் ஒன்றுபடுவோம் ! உலகத் தமிழர் அனைவரும் அறிவினால் ஒன்று படுவோம் . தமிழ் இனத்தவரிடம் ஒருமை உணர்ச்சி ஏற்பட, ஏற்றத்தாழ்வு அகன்றிட , மத பேதங்கள் நீங்கிட, ஜாதி வெறி மறைந்திட நாம் பாடுபடுவோம்.

தமிழைப் பயன்படுத்துவது குறித்து நாம் அக்கறை செலுத்தும்போது , சாதாரான உாழக்கும் மக்களுக்குத் தெரிந்த தமிழை நாம் உருவாக்குவோம். அப்படி உருவாக்கும் மொழியில் இலக்கியம் இருக்கவேண்டும்.

"கண்டிராஜன்" என்னும் நாடகத்தில் ஒரு பாடல் வரும். அந்தப் பாடலில் நயம் இருக்கும். யாருக்கும் அதன் பொருள் எளிதில் புரியாது . அப்படி இருந்தால் பயன் என்ன?

வாழ்க்கையில் அனைவரும் பேசும் ஒரே மாதிரி மொழியை அமைக்கவேண்டும். அதைச் செய்ய உலகத் தமிழ் ஆராய்ச்சிக் குழுவைத் தவிர வேறு ஒரு நிறுவனம் அந்தப் பணிக்கு நீங்கள் எல்லாரும் காட்டுகின்ற ஒத்துழைப்புக்கு அடையாளம்தாள் இந்த உலகத் தமிழ் மாநாடு.

அண்ணா நாமம் வாழ்க..........sb...

orodizli
7th October 2020, 01:57 PM
மக்கள் திலகம் என்று சினிமாவிலும் புரட்சித்தலைவர் என்று அரசியலிலும் சிறப்புப் பெயர்கள் அவருக்கு வழங்கப்பட்டாலும், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களால் உண்மையான உள்ளன்புடன் சூட்டப்பட்ட 'வாத்தியார்' என்ற பெயர்தான் இன்றுவரை அழியாப் புகழுடன் நிலைத்தும் நீடித்துமிருக்கிறது.

'திருடாதே பாப்பா திருடாதே' என்று குழந்தைகளுக்குப் பாடம் எடுப்பார். 'நான் ஆணையிட்டால்..அது நடந்துவிட்டால்' என்று ஏழை மக்களுக்கு நம்பிக்கை டானிக் ஊற்றிக்கொண்டிருப்பார். 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' என்று இளைஞர்களுக்கு உற்சாக உரம் போடுவார். கிராமம் முழுக்க அன்றைக்கு எம்.ஜி.ஆரின் குரலாக டி.எம்.சௌந்தர்ராஜன் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும். விவரம் அறிந்தவர்களுக்குத்தான் அது டி.எம்.எஸ். குரல். ஆனால்,கோடிக்கணக்கான மக்களுக்கு இன்றைக்கும் அது எம்.ஜி.ஆரின் குரல்தான். சினிமா பாடல்கள்மூலம் வாழ்வியலை சாமானியர்களுக்குக் கற்றுத்தந்தவர் எம்ஜிஆர். அதனால்தான், அவரை தங்களது மூச்சுக்காற்றாகக் கருதிய பாமர மக்கள் அவருக்கு, 'வாத்தியார்' என்று செல்லப் பெயர் சூட்டினார்கள்.

[
](https://www.facebook.com/photo.php?fbid=1139791396418153&set=p.1139791396418153&type=3&av=100011619095844&eav=AfYmlI0vAX9patzU0DbWXEqJlxp3EmHMIICcVDYP4tAYEc ToBKMEjWUtH3WBaiBJGtQ)

[
](https://www.facebook.com/photo.php?fbid=1139791396418153&set=p.1139791396418153&type=3&av=100011619095844&eav=AfYmlI0vAX9patzU0DbWXEqJlxp3EmHMIICcVDYP4tAYEc ToBKMEjWUtH3WBaiBJGtQ)[
](https://www.facebook.com/photo.php?fbid=1139791396418153&set=p.1139791396418153&type=3&av=100011619095844&eav=AfYmlI0vAX9patzU0DbWXEqJlxp3EmHMIICcVDYP4tAYEc ToBKMEjWUtH3WBaiBJGtQ).........SBB...

orodizli
7th October 2020, 01:59 PM
"என் அம்மாவின் ஆசைக்காக சொந்த வீடு வாங்கினோம். தாயின் ஆசை நிறைவேற காரணமாயிருந்த இந்த வீட்டில் வாழ்ந்த காலத்தில் தான் எத்தனை எத்தனை நிகழ்வுகள்...

'பட வாய்ப்பு கிடைக்காதா...?' என்று, ஏங்கி தவித்ததும், 'நிறைய படங்களில் நடிக்க வேண்டியிருந்ததால், நேரம் போதவில்லையே' என்று கவலைப்பட்டதும் இவ்வீட்டில் தான்.

நண்பரிடம் கடன் வாங்கி, காலம் கழித்ததும், என்னை வைத்து படமெடுத்த பட முதலாளிக்கே, கடன் கொடுத்ததும் உண்டு. படத் தயாரிப்பாளர்கள் ஒப்பந்ததாளில் எப்படிப்பட்ட ஷரத்துக்களை குறிப்பிட்டிருந்தாலும், மறுப்பு கூறாமல் கையெழுத்திட்டதும், அதேபோன்று, என் இஷ்டத்துக்கு, 'ஷரத்து'க்கள் எழுதப்பட்டு, பட முதலாளிகள், என்னோடு ஒப்பந்தம் செய்து கொண்டதும் உண்டு.

திரைப்பட கம்பெனி ஒன்றில், நானும் ஒரு பங்குதாரராக ஆனதும், படம் வெளியிடப்பட்டதும், அதிலிருந்து வெளியேறி, சொந்தமாக ஒரு திரைப்பட நிறுவனத்தை துவங்கி, படம் எடுத்து வெற்றி பெற்றதும், இங்கு வசித்த காலத்தில் நிகழ்ந்தவைகளே!

ஒரே குடும்பமாக, நானும், என் அண்ணனும், பல ஆண்டுகள் வாழ்ந்த இவ்வீட்டில் தான், 'வாழ்வு அவ்வளவு தான்...' என, மருத்துவரால் கைவிடப்பட்ட என் மனைவி, பல ஆண்டுகள் உயிரோடு இருந்து, பின், இறந்து போனதும் இந்த வீட்டில்தான்.

தி.மு.கழகம் தேர்தலில் ஈடுபட்டு, தமிழக சட்டசபையில், கழக உறுப்பினர்கள் இடம் பெற்றது; முதன் முதலில் நான், தமிழக மேல் சபை உறுப்பினன் ஆக்கப்பட்டதும், பின், அப்பதவியை ராஜினாமா செய்தது போன்றவைகள் இங்கு வாழ்ந்த போது நடந்தவையே!

அதேபோன்று, தென்னிந்திய நடிகர் சங்கம் தோற்றுவிக்கப்பட்டு, அதற்கு, கலைவாணர் தலைவரானதை கண்டு களிப்புற்று மகிழ்ந்ததும், பின், கலைவாணரை இழந்து, கண்ணீர் சிந்தியதும் இங்கு தான்.

எம்.ஜி.ஆர்., நாடக மன்றம் துவக்கப்பட்டு, பின், அது நிறுத்தப்பட்ட நிகழ்வும், சண்டைக் காட்சிகளில் சிறப்பாக நடிக்கிறேன் என்று போற்றப்பட்டதும், விபத்தில் கால் முறிவு ஏற்பட்ட போது, 'கால் ஒடிந்து விட்டது; இனிமேல் நடக்கவே முடியாது...' என்று ஏளனங்களை கேட்டதும் இங்கு வாழ்ந்த போது தான்!

ஆர்.எம்.வீரப்பன், என்னுடைய நாடகம் மற்றும் திரைப்பட நிறுவனங்களின் நிர்வாகப் பொறுப்பை ஏற்று, என்னிடம் சம்பளம் வாங்கி வேலை செய்ததும், பின், அவரே பட முதலாளியாகி, சத்யா மூவீஸ் நிறுவனத்தை அமைத்து, அதன் மூலம் தயாரித்த படங்களில், நான், அவரிடம் சம்பளம் வாங்கி, வேலை செய்தது என, ஏகப்பட்ட சம்பவங்களை என்னுள் பதிவு செய்தது, இவ்வீட்டில் வசித்த காலகட்டத்தில் தான்!

'நல்லதையே நினைக்கிறேன்; நல்லதையே செய்கிறேன்...' என்ற நம்பிக்கையில் ஒருவருக்கு ஒரு யோசனையை, நிபந்தனையை விதித்தேன். ஆனால், அதுவே, பிற்சமயம் அவர்களால் எனக்கு விதிக்கப்பட, அதற்கு கீழ்ப்படிந்து நடக்க நேர்ந்த போது, நான் அடைந்த அனுபவம் இருக்கிறதே அப்பப்பா...

'பாக்கெட் மார்' என்ற இந்திப் படத்தை எனக்கு காட்டிய ஏ.எல்.சீனிவாசன், அப்படக்கதையை தழுவி, தமிழில் படமெடுக்க விரும்புவதாகவும், அதில் நான் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். எனக்கும் அப்படத்தில் நடிக்க விருப்பம் இருந்தது.

ஏற்கனவே, அவருடைய தயாரிப்பில், 'ரத்னாவளி' என்ற படத்தில், நடித்துக் கொண்டிருந்தேன்; இப்படத்தில் கதாநாயகி, பத்மினி. அத்துடன், அஞ்சலி தேவி மற்றும் பானுமதி போன்ற பெரிய நடிகையரோடு, வேறு சில படங்களிலும் நடித்துக் கொண்டிருந்தேன்.

மேலும், இப்போது உள்ளது போல், அப்போது, எனக்கு நிறைய படங்கள் இல்லை. அத்துடன், சம்பளமும் குறைவு.
ஆனாலும், நிறைய நாடகங்களில் நடித்து வந்ததுடன், பொதுப் பணிகளிலும் ஈடுபட்டு வந்தேன்.

அதனால், படப்பிடிப்புக்கு கால்ஷீட் கொடுப்பதில் கஷ்டம் இருந்தது.
இந்நிலையில் தான், 'திருடாதே' எனும் அப்படத்தில் நடிக்க அழைத்தார், ஏ.எல்.சீனிவாசன்.

எனது அருமை நண்பரான ஏ.எல்.எஸ்., எவ்வளவு கஷ்டம் என்றாலும், எப்போதும் சிரித்த முகத்துடன் பேசும் குணமுள்ளவர்.
எதிராளியை அவமானப்படுத்த வேண்டும் என்ற கெட்ட எண்ணம் இல்லாமல், கள்ளம் கபடமின்றி, மனதில் பட்டதை பட்டென்று கூறி விடும் இயல்பு கொண்டவர்.

இக்குணத்தால், அவரை விரோதியாக கருதுவோரைக் கூட வெறுக்க மாட்டார்.
'விளையாட்டாக பேசினோம்; அதிலென்ன விபரீதம் வந்து விடும்...' என்று எண்ணும் வெள்ளை மனம் கொண்டவர்.

இத்தகைய குண அம்சம் கொண்ட ஏ.எல்.எஸ்., என்னை, #திருடாதே படத்தில் நடிக்க அழைத்த போது, 'என்னை, கதாநாயகனாக போட நினைப்பதற்கு ரொம்ப மகிழ்ச்சி; கதாநாயகி வேடத்திற்கு பெரிய நடிகையரைப் போட்டால் கால்ஷீட் பிரச்னை வரும். என் கால்ஷீட்டுகளை, வீணாக்காமல் பயன்படுத்தினால் தான் படம் விரைவில் எடுக்க
முடியும்...' என்றேன்.

'அப்படியே செய்றேன்... கதாநாயகியாக யாரை போடலாம், நீங்களே சொல்லுங்க; புதுமுகம்ன்னாலும் பரவாயில்ல...' என்றார். ஏ.எல்.எஸ்., அருகில் இருந்த இயக்குனர் ப.நீலகண்டன், 'புதுமுகத்தையே போடலாம்...' என்றார்.

உடனே நான், 'அந்த புதுமுகம், நான் கொடுக்கிற கால்ஷீட்டுகளில் வந்து நடிக்க தயாராக இருக்கணும். சேர்ந்தாற் போல், பத்து நாட்கள் கால்ஷீட் தந்தாலும், நேரம் காலம் பாக்காமல் நடிக்க வரணும்; இந்த நிபந்தனையோட, அந்த புதுமுகத்தை ஒப்பந்தம் செய்யுங்கள்...' என்றேன்.

என் நிபந்தனைக்கு சம்மதித்தார், ஏ.எல்.எஸ்., உடனே இயக்குனர், ப.நீலகணடன், 'பத்மினி பிக்சர்ஸின் தங்கமலை ரகசியம் படத்துக்காக, குரூப் டான்ஸ் காட்சி ஒன்றை இயக்கினேன். அதில் ஆடின ஒரு பெண்ணுக்கு நல்ல முகவெட்டு இருந்தது...' என்று, என்னிடம் சிபாரிசு செய்தார்.

யார் என்று விவரம் கேட்ட போது, 'அப்பெண்ணின் பெயர், சரோஜாதேவி; ஒருபுறம் பார்த்தா, வைஜயந்தி மாலா போன்றும், இன்னொருபுறம் பத்மினி மாதிரியான முகச் சாயல் இருக்கு.
தாய்மொழி கன்னடம்; தமிழ் அவ்வளவாக தெரியாதுன்னாலும் நாளடைவிலே பேசிப் பேசி பழக்கிடலாம்...'என்றார்.

அப்போது, சரோஜாதேவியை முதன் முதலில் பார்த்த நினைவு வந்தது; 'நாடோடி மன்னன்' படப்பிடிப்பு துவக்கியிருந்த நேரம்...

- ' நான் ஏன் பிறந்தேன் ' தொடரில்
மக்கள்திலகம் .............

orodizli
7th October 2020, 02:01 PM
#வள்ளல்தன்மைக்கே #தெய்வீகத்தன்மை #ஏற்படுத்தியவர்

டாக்டர் முத்துலட்சுமி, நடிகர் ஜெமினிகணேசின் அத்தை...இவர் சென்னை அடையாறில் ஒரு மருத்துவமனை கட்டிவந்தார்... ஆனால் பணப் பற்றாக்குறை...!
யாரைக் கேட்பது?
யோசனையில் ஆழ்ந்தார்...

ஜெமினி கணேசன் மூலமாக விஷயம் எம்ஜிஆர் காதிற்கு வர, முத்துலட்சுமியைச் சந்தித்து ரூ.30000/- (1960 களில் ��) தருவதாக வாக்களிக்கிறார்...
டாக்டருக்கோ ஒரே பிரமிப்பு...
இந்தக்காலத்திலும் இப்படியும் ஒருவரா? என்று...

வாக்களித்த வாத்தியாருக்கு வரவேண்டிய பணம் வந்து சேரவில்லை...என்ன செய்வது? வாக்களித்துவிட்டோமே என்ற உறுத்தல்...! சிறிது விநாடிகள் யோசித்த எம்ஜிஆர் தெரிந்தவரிடம் ரூ.30000/- பணத்தைக் கடனாக வாங்கி, டாக்டர் முத்துலட்சுமிக்கு அளித்தார்...

சிறிது காலத்தில் எம்ஜிஆர் கடன் வாங்கி கொடுத்த வாக்கைக் காத்ததையறிந்த நடிகர் ஜெமினி கணேசன் சிலாகித்தது...

"அண்ணன் எம்ஜிஆர் கொடைத்தன்மை நிறைந்தவர் என்பதை இந்த நாடறியும்... ஆனால் கடன் வாங்கியாவது கொடுத்த வாக்கைக் காக்கவேண்டும் என்பது எத்தகு உன்னதமான செயல்...! இதுபோன்ற ஒரு வள்ளல்தன்மையை அண்ணன் எம்ஜிஆரைத் தவிர வேறு யாராலும் நினைத்துக்கூடப் பார்க்க இயலாது..."

தன்னிடமுள்ளவற்றைப் பிறருக்குக் கொடுப்பது வள்ளல் தன்மை... ஆனால் கடன்வாங்கியாவது அடுத்தவருக்கு உதவ வேண்டும் என்று அந்த வள்ளல் தன்மைக்கே ஒரு தெய்வீகத்தை ஏற்படுத்தியவர் நம்ம வாத்தியார்...

ஆரம்பகாலங்களில் படங்களில் நடிக்கும்போது எம்ஜிஆரின் வருமானம் குறைவு. அந்தக்கால கட்டங்களிலும் தன்னிடமுள்ளவற்றைக் கொடுத்தோ, அல்லது தன் சம்பளப்பணத்தை அட்வான்ஸ் வாங்கியாவது மற்றவர்களுக்கு உதவுவார்...இது கொடைத்தன்மையை விட உன்னதநிலை...

கையில் இருப்பவற்றைக் கொடுப்பவர் கொடைவள்ளல் என்றால்...
கடன் வாங்கியாவது அடுத்தவர் கஷ்டத்தைத் துடைக்கும் வாத்தியாரை என்ன பெயர் சொல்லி அழைக்கலாம்...?????!!!!! Bsm...

orodizli
8th October 2020, 07:27 AM
ஆகா சூப்பர்!. ஒரு வழியாக "சிவந்த மண்ணி"ன் வசூலை வெளியிட்டு நம்மிடம் வசமாக சிக்கிக் கொண்டார்கள் சிவாஜியின் கைபுள்ளைங்க. இந்த வசூல் எந்த விளம்பரத்திலும் வரவில்லை. இருப்பினும் அவர்கள் தந்த வசூலை நாம் அப்படியே எடுத்துக்கொள்ளலாம்.. அது உண்மையா பொய்யா என்று நமக்குத் தெரியாது. ஏனென்றால் 72ம் ஆண்டு வெளியான வெள்ளி விழா ஓட்டிய "பட்டிக்காடா பட்டணமா"
6 வாரத்தில் பெற்ற வசூல் 30 லட்சம் தான். மொத்த வசூலே 40 லட்சத்துக்குள் அடக்கம். ஆனால் 69 ல் வெளியாகி வெள்ளிவிழா ஓட்டாத "சிவந்த மண்" பெற்ற வசூல் சுமார் 44 லட்சமாம். சரி ஏற்றுக்கொள்வோம்.

அதை வைத்துக் கொண்டு "சிவந்த மண்ணு"க்கு 6 மாதத்திற்கு முன்பு வந்த "அடிமைப்பெண்ணி"ன் வசூலை நாம் ஒப்பிட்டு பார்க்கலாம். "அடிமைப்பெண்" 100 நாட்கள் ஓடிய திரையரங்கின் வசூல் முன்னரே வெளிவந்த விபரங்கள் நம்மிடம் உள்ளன. இத்தனை ஆண்டுகளுக்கு பின்பு ஒரு சிறிய ஊரில் உள்ள தியேட்டர் முதற்கொண்டு வசூலை எந்த பேக்டரியில் போட்டு வருகிறார்களோ தெரியவில்லை.
நமக்கு அப்படிப்பட்ட பேக்டரி எதுவும் தெரியவில்லை. தெரிந்தால் பழைய தலைவர் படங்களுக்கு புது வசூல் போட்டு கொண்டு வரலாம். ஆனால் அவர்களுக்கு தெரிந்த வித்தையை
யாருக்கும் சொல்ல மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

சரி இரண்டு வசூலையும் ஒரு தடவை நன்றாக பாருங்கள். அதில் ஏதாவது "சிவந்த மண்" "அடிமைப்பெண்ணை" முந்தியிருக்கிறதா என்றால், ஆம் ஒரே ஒரு ஊரில் மட்டும் முந்தியிருக்கிறது. அது தூத்துக்குடிதான். எங்க ஊர் கதையை உங்களுக்கு ஏற்கனவே தனியாக எழுதியிருக்கிறேன். சிவாஜி படங்கள் பொதுவாக திருநெல்வேலி வசூலுக்கு தூத்துக்குடி வசூல் 50 சதமானம்தான் வரும். இதை எந்த சிவாஜி படத்தை வேண்டுமானாலும் சோதனைக்கு எடுத்துக் கொள்ளலாம்.

அந்த அடிப்படையில் பார்த்தால் சிவந்த மண்ணின் ஒரிஜுனல் தூத்துக்குடி வசூல் சுமார் ரூ 68000 தான். மீதி உள்ள வசூல் தூத்துக்குடி சிவாஜி ரசிகர்கள் வீடு, காடுகரை வித்த பணம்தான். அதனால் தூத்துக்குடி வசூல் ரூ68000 என்று எடுத்துக் கொள்ளலாம். மற்ற எந்த ஒரு ஊரை உற்றுப் பார்த்தாலும் ஒரு ஊரில் கூட "அடிமைப்பெண்ணை" நெருங்க முடியவில்லை. "அடிமைப்பெண்ணி"ன் வசூல் விபரங்கள் தெரியாமல் "சிவந்த மண்ணு"க்கு வசூலை போட்டு கொண்டு வந்து விட்டார்கள் போலும்.

"புதியபூமி"யில் காங்கேயன் பேசும் வசனம் இது. அங்கே "வேடன் வலையை விரித்து விட்டான், இங்கே நீ வெண்புறாவை பறக்க விடாதே" என்று. அருமையான வசனம். அங்கே "அடிமைப்பெண் "வசூல் என்ற வலையை விரித்து வைத்தவுடன் "சிவந்த மண்" வசூல் என்ற சிவப்பு புறாவே வலையில் சிக்கிக் கொண்டது. புறாவை பிடித்து
இறக்கையை நீக்கி பார்த்தால் புறா எலும்பும் தோலுமாக இருக்கு என்ன செய்ய. அவர்கள் கொடுக்கும் பில்ட்அப் அப்படி.

"உரித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது. உளறித் திரிபவன் வார்த்தையில் ஒரு உருப்படி தேறாது.". அவர்கள் ஐயன் உளறி வைத்த பாடல் ஒன்றே போதும் அவர்கள் நிலையை எடுத்தியம்ப. நாம் கொடுத்த வசூல் எல்லாம் 100 நாட்கள் ஓடிய தியேட்டர்களின் வசூல். அனைத்து b, c சென்ட்டர்களின் வசூலை எடுத்தோமானால் கைபிள்ளைகளுக்கு தீராத கலக்கம் உண்டாகி விடும். எதிரிகளின் பலமறிந்து மோத வேண்டும். இருப்பதையும் இழந்து நிற்காதீர்கள்
சக கைபிள்ளைகளிடம் எதையாவது பொய்யுரைத்து தேற்றுங்கள்.

ஒவ்வொரு ஊரிலும் ஏகப்பட்ட வசூல் வித்தியாசம். அதிலும் குறிப்பாக நாகர்கோவிலில் வெறும் ரூ76000 தான் வசூலாகி இருக்கிறது. "அடிமைப்பெண்" வசூல் ரு1,30,000 .
"குடியிருந்த கோயில்" 42 நாட்களிலேயே. ரூ 73000 பெற்று "சிவந்தமண்ணின்" வசூலை எட்டிப்பிடித்து விட்டது.
"அடிமைப்பெண்ணிடம்" வெட்கக்கேடாக தோற்ற "சிவந்தமண்ணி"ன் அவலம்
தற்போது கைபுள்ளைங்க மூலமாக வெளிச்சத்துக்கு வந்து விட்டது. இப்போது புரிகிறதா மக்கள் திலகத்துக்கு ஏன் உங்க ஆளைவிட அதிக சம்பளம் கொடுக்கிறார்கள் என்று.

அது மட்டுமா? "அடிமைப்பெண்"
சில ஆண்டுகள் கழித்து வெளியான போதும் "சிவந்த மண்ணை" சீரழித்து விட்டது. 18 நாளிலேயே ரூ1லட்சத்துக்கும் அதிகமான வசூலை நாகர்கோவிலில் பெற்றது உச்சக்கட்ட ஆச்சர்யமே..
இவ்வளவுக்கும் எந்த வெளிநாட்டிலும் "அடிமைப்பெண்ணை" படமாக்கவில்லை. "சிவந்த மண்ணை" சின்னாபின்னமாக்கி பெண்ணை பொன்னாக்கியவர் மக்கள் திலகம். அடிமைப்பெண்
மறுவெளியீடுகளில்
பொன் முட்டையிடும் வாத்தை போல்
செல்வத்தை வாரி வழங்கியது
அனைவரும் அறிந்ததே. 40 லட்சத்தில் எடுக்கப்பட்ட "அடிமைப்பெண்" வசூல் எங்கே? தமிழுக்கு மட்டுமே 80 லட்சத்துக்கும் மேலே செலவு செய்த "சிவந்த மண்" வசூல் எங்கே? வரி நீக்கி தியேட்டர் ஷேர் போக 20 லட்சம் ஸ்ரீதருக்கு தேறினாலே ஆச்சர்யம். மீதி 60 லட்சம். கணேசன் போட்ட கோவிந்தா!
அடுத்தது. "கர்ணன்"

"சிவந்த மண்" என்ற பிரமாண்டமான படத்தின் வசூல் விபரங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்,

100 நாட்களுக்கும் கூடுதல் ஓடிய அரங்குகள் 9

1)சென்னையில் 4 அரங்குகளில் ஒட்டுமொத்த வசூல். ரூ 12,32,970- 21.
அடிமைப்பெண் 13,60,256.82
"

5)மதுரை செண்ட்ரல்- ரூ.3,37,134-95. மதுரை சிந்தாமணி. ரூ. 4,34,643.75.
6)கோவை ராயல் - ரூ. 3,56,453-59. . அ. பெண். 3,75,635.85
7)சேலம். 2,28,740-60 ஓரியன்டல்ரூ.
அ.பெண்.. ... . சேலம் சாந்தி 2,63,258.89

8)திருச்சி
ராஜா - ரூ 2,42,268 10. அ.பெண் 2,75,575.40
9)தூத்துக்குடி
பாலகிருஷ்ணா- ரூ. 1,07,531-90 (வடக்கயிறு வசூல்) (68000)
அ.பெண். ... 1,05,816.13.

50 நாட்களை கடந்த அரங்குகள் 23
50 நாட்கள் வரையிலான வசூல் விபரங்கள்,
1)நெல்லை
செண்ட்ரல் 76 நாட்கள்- ரூ. 1,37,431- 25. ரூ 2,00,407.04
2) ஈரோடு. - ரூ 1,12,043- 15. ரூ. 1,44,612.25
3) வேலூர் - ரூ. 1,48,180- 85. ரூ.
4) தஞ்சை - ரூ. 1,05,194- 27. ரூ. 1,57,726.00
5) பாண்டிச்சேரி - ரூ 93,458- 70
6) தாம்பரம் - ரூ 87,697- 42
7) காஞ்சிபுரம் - ரூ. 82,050-50
8) பொள்ளாச்சி- ரூ. 81,628- 62
9) கும்பகோணம்- ரூ. 80,315- 52
10) நாகர்கோயில்- ரூ. 76,575- 60. 1,30,836.36
11) கடலூர் - ரூ 76,109- 20
12) திண்டுக்கல்- ரூ. 72,676- 49. 1,39,006.59
13) மாயவரம்- ரூ 62,698-00
14) ஊட்டி - ரூ 61,720-66
15) திருவண்ணாமலை- ரூ 61,454-10
16) விருதுநகர்- ரூ 56,355-52
17) ஆத்தூர் - ரூ. 51,834-46
18) பட்டுக்கோட்டை- ரூ. 47,230-59
19) காரைக்குடி- ரூ. 45,224-35
20) தர்மபுரி- ரூ 42,328-89
21) விழுப்புரம்- ரூ 78,358-43
பெங்களூர்
22) ஸ்டேட்ஸ்
பிக்ஸர் அவுஸ்- ரூ 1,24,698-80
23)அஜந்தா - ரூ. 96,437-00
24) சிவாஜி 42 நாட்கள்- ரூ. 75,225-00.
அ.பெண் ( 5,37,143.00 + 75,749.60 )

33 அரங்குகளில் 100+ நாட்கள் மற்றும் 50 நாட்கள் வரையிலான வசூல் விவரப்படி

மொத்தம் ரூ 44, 62,116- 72 ஆகும்,

மேலும் 20 அரங்குகளில் 50 நாட்கள் கடந்த சில நாட்களின் வசூல் விபரங்கள் சேர்க்கப்படவில்லை

ஒட்டுமொத்தமாக 50 இலட்சங்களை கடந்த வெற்றிப் படமாகும்,

பெரும்பாலான ஓடிய ஊர்கள் அரங்குகளில் வசூலான தொகை அதுவே முதலான வசூல் சாதனை எனப் பதிவாகியும் இருக்கிறது,

வசூல் சக்கரவர்த்தி என்றும் நடிகர் திலகமே!! இது கைபிள்ளைகளின் கூற்று.

ஆனால் மண் சிவந்தது புரட்சிக்காரன் சிந்திய ரத்தத்தால் அல்ல. ஸ்ரீதர் மிதமிஞ்சிய நஷ்டத்தால் வடித்த ரத்தக் கண்ணீரால் பூமி சிவந்து, சிவந்த மண் உருவானதோ என்று எண்ணத் தோன்றுகிறது. யோசித்து பாருங்கள் கைபிள்ளைகளே சாதாரண "ரிக்ஷாக்காரன்" 51 நாளிலே 50 லட்சம் வசூல் குவித்தது எங்கே? மிகுந்த செலவில் எடுக்கப்பட்ட "சிவந்த மண்" ஓடி முடிய பெற்றதாக சொல்லப்படும் 50 லட்சம் வசூல் எங்கே? உண்மையிலே படுதோல்வி படம் சிவந்த மண் , இதோ கண்முன்னே ஆதாரங்கள்.

நடிகப் பேரரசர், சினிமா உண்மை நிகழ்வுகளை ஆதாரத்துடன் கொடுப்பதால் அதை மாற்று தரப்பு ஆதாரத்துடன் மறுப்பதை விடுத்து கைபுள்ளைங்க தரக்குறைவாக
விமர்சிப்பதை பார்த்தால் உண்மையை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில். அவர்கள் இல்லை என்றே தெரிகிறது. அதனால் அசிங்கமான கமெண்ட்ஸ் போடுவதை பார்க்கும் போது "தாயைப் போல பிள்ளை நூலைப்போல சேலை" என்பார்கள்.அதைப்போல் கைபிள்ளைங்க ஆபாச வார்த்தைகளில் கதறும் போது அவர்கள் ஐயனோட வளர்ப்பின் மீது நமக்கு சந்தேகம் எழுவதில் வியப்பில்லை..........ksr...

orodizli
8th October 2020, 07:28 AM
சில ஆண்டுகளுக்கு முன் ஆதவன் என்ற தமிழ் படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு சரோஜாதேவி அவர்கள் நடித்தார்கள்.

ஒரு நாள் படப்பிடிப்பின் நடுவில் பிரேக்கில் உணவு இடைவேளை போது அவர் கொண்டு வந்து இருந்த இரு பொருட்கள் உடன் இருந்த மற்ற அனைவரையும் கவர்ந்தன..

அவர்கள் என்ன இது வெள்ளி தட்டு அத்துடன் ஒரு டம்ளர் போல அமைப்பில் மூடியுடன் ஒரு straa இணைக்க பட்டது போல ஒரு பாத்திரம்...என்று கேட்க.

அவர் சொல்ல அனைத்து பட குழுவினரும் ஆர்வமுடன் கேட்க..

எங்க வீட்டு பிள்ளை படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்த நேரம்...ஜமீன்தார் வீட்டு மணமகன் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் உடன் நானும் என் அப்பா வேடத்தில் நடித்த ரங்காராவ் அவர்களும் நடித்த ஒரு காட்சி.

ஒரு சூட்டிங் பார்க்க நாங்க போய் இருக்கும் போது குமரி பெண்ணின் உள்ளத்திலே என்ற பாடலில் அவர்கள் நடிக்க அதை பார்க்க போன நாங்கள் அந்த பாடலை தொடர்வதாக காட்சி அமைப்பு.

இதே போல இடைவேளையில் விலை உயர்ந்த புடவை அணிந்து கொண்டு தலைவர் பக்கத்தில் நான் அமர்ந்து இருக்கும் போது குடிக்க காபி கொடுக்க பட்டது.

நான் குடிக்க தலைவர் மறுக்க அப்போது ஒரு சொட்டு காபி என் புடவையில் சிந்தி விட பதறி நான் துடைக்க தலைவர் பார்த்து சிரிக்க.

அடுத்த சில நாட்களில் படப்பிடிப்பில் இது எனது பரிசு உங்களுக்கு இனி எந்த பானமும் உங்கள் உடையில் சிந்தாது என்று இந்த கிளாஸ் போன்ற இதையும் தட்டையும் இரண்டும் வெள்ளியால் செய்ய பட்டவை...எனக்கு பரிசாக கொடுத்தார்.

என்ன ஒரு மனது அவருக்கு....அன்று முதல் வெளிப்புற படப்பிடிப்பு எங்கு இருந்தாலும் இந்த இரண்டு பொருட்களும் என்னுடன் பயணிக்கின்றன இன்று வரை என்று சொல்லி முடிக்கிறார் அபிநய சரஸ்வதி சரோ அவர்கள்.

சுற்றி அதை கேட்டு கொண்டு இருந்தவர்கள் சாப்பிட்டு முடித்த பின் என்ன ஒரு அற்புத மனிதர் எம்ஜிஆர் அவர்கள் என்று மனதில் பேசி கொண்டது அரங்கம் முழுவதும் எதிர் ஒலித்தது சத்தியம்.

தலைவருக்கு பக்கத்தில் படத்தில் இரு பக்கமும் கை பிடி உடன் கூடிய அந்த வெள்ளி கிளாஸ்.

வாழ்க தலைவர் புகழ்.

தொடரும்...உங்களில் ஒருவன்.....நன்றி......Mn...

orodizli
8th October 2020, 07:28 AM
‘துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலன' என்பது இறைவனுக்கு மட்டுமல்ல எம்.ஜி.ஆருக்கும் பொருந்தும். இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் அவர் வாழ்வில் பல நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. எம்.ஜி.ஆர் திரையுலகில் இருந்த போதும் முதல்வரான பிறகும் தன்னை வளர்த்துவிட்ட திரையுலகுக்கு ஒரு காவலனாக இருந்தார். யாருக்குக் கஷ்டம் என்றாலும் நஷ்டம் என்றாலும் அத்தகவல் இவர் கவனத்துக்கு வந்தால் உடனே அவர்களை அந்த சிரமத்திலிருந்து மீட்கும் ரட்சகராக இருந்திருக்கிறார் என்பது பலரது பேட்டி வாயிலாகத் தெரிகிறது.

புரட்சித் தலைவரை நம்பினோர் கைவிடப்படார்

சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் இருக்கும் பிரபல ஜுவல்லரி ஒன்றில் நகை வாங்கிக்கொண்டு காரில் வந்த சரோஜாதேவியிடம் இருந்து திருடர்கள் அந்த நகையைக் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். காவல் நிலையம் சென்று புகார் அளித்த சரோஜாதேவி ‘எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா’ என்று கவலையுடன் தெரிவித்தார். எம்.ஜி.ஆர் இருப்பது தனக்கு ஒரு பாதுகாப்பு என்று அவர் நம்பியிருந்தார். இதுபோன்ற நம்பிக்கை பலருக்கும் இருந்திருக்கிறது.

நடிகை என்கிற ஒரே காரணத்தால் பெண்களுக்கு மற்றவர்கள் நெருக்கடி கொடுத்தபோது அவர்களை அந்தக் கயவர்களின் பிடியிலிருந்து எம்.ஜி.ஆர் விடுவித்த சம்பவங்கள் ஏராளம். இவரும் நடிகையரிடம் மிகவும் கண்ணியத்துடன் நடந்து கொண்டார் என்பதற்கும் சான்றுகள் உண்டு. அவர்களின் கண்ணியத்தைக் காக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் அவர் உறுதியுடன் இருந்தார். எனவே, அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர் தங்களின் காவலராக இருக்கிறார் என்ற நிம்மதி நடிகையருக்கு இருந்தது.

உடம்பை பார்த்துக்கொள்

சாவித்திரி சிவாஜியை வைத்து சொந்தப்படம் எடுத்து தன் சொத்தை எல்லாம் இழந்தார். சென்னை ஹபிபுல்லா ரோட்டில் இருந்த பெரிய மாளிகையும் ஏலத்தில் போய்விட்டது. இந்நிலையில் ஒரு நாள் அவர் எம்.ஜி.ஆரின் மாம்பலம் ஆஃபிஸுக்கு வந்து அவரைச் சந்தித்தார். எம்.ஜி.ஆர் அவரிடம் ஒரு குட்டிச்சாக்கில் ஒரு லட்சம் ரூபாயைப் போட்டுக் கொடுத்தார். அத்துடன் அவர் வசிப்பதற்கு ஒரு வீடும் ஏற்பாடு செய்து கொடுத்தார். உடம்பை கவனித்துக் கொள்ளம்மா என்று கூறி அனுப்பிவைத்தார். இந்த ஒரு லட்சம் ரூபாயை வைத்து சாவித்திரி முன்னேறிவிடப் போவதில்லை. அவர் எப்படிச் செலவழிப்பார் என்பது எம்.ஜி.ஆருக்குத் தெரிந்திருக்கும் எனினும் ஒரு மாபெரும் நடிகை உதவி என்று கேட்கும்போது அவருக்கு உதவுவதே மனுஷத்தனம் என்பது எம்.ஜி.ஆரின் கொள்கை.

திருமணம் செய்துகொள்

ஒரு முறை லட்சுமி வந்து எம்.ஜி.ஆரை பார்த்தார். அவருக்குத் திருமண வாழ்வு தோல்வியில் முடிந்திருந்தது. குழந்தையை அவரது அம்மா வைத்துக்கொண்டார். தனிமையில் இருந்த லட்சுமிக்குத் தொல்லைகள் ஏராளம் சூழ்ந்தன. எம்.ஜி.ஆரிடம் வந்து தன் பிரச்னையைக் கூறினார். எம்.ஜி.ஆர், நீ பொது வாழ்க்கைக்கு வா அல்லது குடும்ப வாழ்க்கையை ஏற்படுத்திக்கொள். அதுதான் உனக்குப் பாதுகாப்பு என்று ஆலோசனை தெரிவித்தார். லட்சுமியிடம் அரசியலுக்கு வருகிறாயா என்று கேட்டார். ‘அது தன்னால் முடியாது’ என்றார் லட்சுமி. ‘எந்தச் சாமி எந்தப் பட்டணம் போனாலும் நான் பத்து மணிக்கு தூங்கப் போய்விடுவேன். எனவே பொதுக்கூட்டங்களில் பேசுவது இயலாத காரியம்’ என்றார் லட்சுமி. ‘அப்படியென்றால் திரும்பவும் திருமணம் செய்துகொள். ஒரு பிள்ளையைத் தத்தெடுத்து வளர்த்து வா. உனக்கு வாழ்வில் ஒரு பிடிப்பு இருக்கும். பாதுகாப்பாகவும் உணர்வாய்’ என்றார் எம்.ஜி.ஆர். அப்படியே செய்தார் லட்சுமி. இன்றைக்குக் கணவர் குழந்தை என லட்சுமி நிம்மதியாக வாழ்கிறார்...da.,

fidowag
8th October 2020, 07:40 PM
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின்*டிவியில்*திரு.துரை பாரதி* 05/10/20 அன்று அளித்த*தகவல்கள்*
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
வெற்றி என்பது வானத்தில் இருந்து விழுகின்ற நட்சத்திரம் அல்ல . உழைப்பு ,,உண்மை, உறுதி, உயர்வு,ஆகியவற்றைத்தான் பாடமாக சொல்லி தந்துள்ளார்* புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இந்த சமூகத்திற்கு .அந்த வெற்றி என்பது அவருக்கும் அவ்வளவு சுலபமாக கிட்டி விடவில்லை .இதே சென்னை மாநகரத்திலே அவர் நடக்காத வீதிகள் இல்லை .பயணிக்காத இடங்கள் இல்லை அப்படியெல்லாம் சந்தர்ப்பத்திற்காக அலைந்தவர்தான் அவர் .ஆனாலும் கூட மேடைகளில் அவர் அவமானப்பட்டார் .வார்த்தைகளால் அடிபட்டார் , குட்டுப்பட்டார் . .இத்தனை பிரச்னைகளை எல்லாம் கடந்துதான் அவர் வெற்றி என்ற சிகரத்தை அடைந்தார் .இந்த வெற்றி என்பது உங்களுக்கான பாடம், நமக்கான பாடம்* நமக்கான .வழிகாட்டி


பசிப்பிணியை போக்குவதற்காகத்தான் வள்ளலார் அவர்கள் அவ்வளவுபெரிய தியாகத்தை**நடத்தினார்கள் . .இன்றைக்கும் அதற்கு அடையாளமாக வள்ளலார் வாழ்ந்த மரத்தின் கீழே அன்னதானம் செய்து வருகிறார்கள் .பசிப்பிணி என்பது எல்லோரும் அறிந்ததுதான் .உலகத்திலுள்ள எவ்வளவோ பெரிய தலைவர்கள் மட்டுமல்ல , மனிதனாக பிறந்த எல்லோருக்கும் பசி என்றால் என்ன என்று தெரிந்திருக்கும் .ஆனால் அந்த பசியை ஆற்ற வேண்டும் . பசியை தீர்க்க வேண்டும் என்கிற எண்ணம் உள்ள மனிதர்கள்தான் மாபெரும் தலைவர்களாக உயர்ந்தவர்கள் .அந்த தலைவர்களின் வரிசையில் முக்கிய இடத்தில எம்.ஜி.ஆர். வருகிறார் .* **



மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மட்டும் இந்தியாவில்,தமிழகத்தில்**பிறக்காமல்*பிரான்ஸ், ஜெர்மனி, அமேரிக்கா*போன்ற நாடுகளில்*ஏதாவது ஒரு நாட்டில்*பிறந்திருந்தால் உலகமே*அவருடைய நூலை, வாழ்க்கையை*பாடமாக*வைத்து பல பல்கலை*கழகங்களில் டாக்டர் பட்டம் அளித்து இருப்பார்கள் .* ஆனால் எம்.ஜி.ஆர். என்கிற*மனிதர் தமிழை*நேசித்தார் .தமிழை*வாசித்தார்*, தமிழை*உயிர் மூச்சாக*நினைத்தார்*, தமிழர்களோடு வாழ்ந்தார் . தமிழ் மண்ணிலேதான் மறைய வேண்டும் என்று ஆசைப்பட்டார்*அதனால்தான் அவ்வளவு பெரிய இலட்சியங்கள் எல்லாம் இருந்தாலும் கூட*தமிழ் மக்கள் மீது இருந்த*ஈடுபாட்டால்தான் அவருக்கு*கிடைத்த பல்வேறு விஷயங்களை*உதறி தள்ளிவிட்டு தமிழ் மக்களுக்காகவே வாழ்ந்தார் .இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பான காலத்தில் மாத வாடகை ரூ.15க்கு வாழ்ந்து வந்தவர் 11 ஆண்டுகாலம்*தமிழகத்தையே ஆண்டார் என்பது*சரித்திரம், சாதனை, சகாப்தம்*..உலக இலக்கியங்களில் எங்கெங்கோ தேடுகிற வேதாந்திகள் எல்லாம் சொல்வார்கள் நான் அவ்வளவு புத்தகம் படித்தேன் .இவ்வளவு புத்தகம் படித்தேன் என்று .எந்த தத்துவ வாதியும்*சொல்லாத எந்த மனிதனும், எந்த*மேதையும்*சொல்லாத ஒரு விஷயத்தை எம்.ஜி.ஆர். கண்டுபிடித்தார் .இங்குள்ள மக்களின் அடிப்படை பிரச்னை என்பது* பசி. அந்த பசியை*போக்க வேண்டும் என்பதற்காகத்தான் சத்துணவு திட்டத்தை கொண்டுவந்தார் .இன்றைக்கு கோடிக்கணக்கான குழந்தைகள் ஒருவேளையாவது பசியாறுகிறது என்றால்**அந்த மாமனிதர் எம்.ஜி.ஆரின்*கொடைதான்*அந்த சத்துணவு திட்டம்*


நீங்கள் எம்.ஜி.ஆர். அவர்களிடம் வியந்த ஒரு செய்தி என்ன*.

திரு.கா. லியாகத் அலிகான்*:* *புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.என்பவர் ஒரு வியப்புக்குரிய தலைவர் என்பதை*நான் மட்டுமல்ல தமிழகத்து பெரியோர்கள், தாய்மார்கள் அனைவரும்தான்*வியப்பாக பார்த்தார்கள் . ஏனென்றால் அவருடைய இளம் வயதிலேயே அவருடையான எடுப்பான*தோற்றம் , கட்டு மஸ்தான*உடற்கட்டு*அதை பாதுகாப்பது ,அவருடைய முகப்பொலிவு ,*அவருடைய தலைமுடியின் அளவு, அழகு ,அவற்றையெல்லாம் பார்க்கும்போது இளைஞர்களுக்கெல்லாம் ஒரு உந்துசக்தியாகவே திகழ்ந்தார் .வில்லன் நடிகர்*நம்பியார் சொல்லும்போது ஏன் சும்மா*லுங்கி அணிந்து கொண்டு வெளியே வரலாமே*.எதற்கு*வீணாக சிரமப்பட்டு உடைகள்*அணியவேண்டும் என்று எம்.ஜி.ஆரிடம் கூறியுள்ளார் .* அப்படியல்ல . என்னை*பார்ப்பவர்களுக்கு நான் தோற்ற பொலிவுடன் காட்சி*அளிக்க வேண்டும் .தோற்றப்பொலிவோடு இருந்தால்தான் அவர்களும்* அதை போல**சுறுசுறுப்பாக ,உற்சாகமாக*இளமை துள்ளலோடு*தங்களை*உருவாக்கி கொள்வார்கள் .* நான் எதற்குமே எடுத்துக்காட்டாக, ஒரு முன்னுதாரணமாக*இருக்க வேண்டும் என்பதிலேதான் மிகுந்த குறியோடு இருக்கிறேன் . .அதற்கு*காரணம் , இந்த பாமர*மக்கள், அல்லது படித்தவர்கள்* உட்பட**எல்லோரும்* என்னை பார்க்கிறபோது*சோம்பேறி தனத்தை*அறவே அகற்ற வேண்டும் .சுறுசுறுப்பை தனக்கு*தானே வரவழைத்து கொள்ள*வேண்டும் .தான் எடுத்த காரியத்தை நடத்தி முடிக்க கூடிய* தனது*தோற்ற பொலிவை* வரவேற்று கொள்ள வேண்டும் .அதைத்தான்* நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல தோற்ற பொலிவு என்பது பிறருக்காக செய்வது*உணவு அருந்துவது நமக்காக*உண்பது .நான் ஏதாவது உணவை சாப்பிட்டுவிட்டு* வெளியே சென்று ,நான் அறுசுவை உணவு அருந்தினேன் என்று கூட*சொல்லலாம் .பழைய சாதத்தை சாப்பிட்டுவிட்டு கூட*வெளியில் வந்து நான் அறுசுவை உணவு அருந்தினேன் என்று சொன்னால் கூட*மக்களுக்கு தெரியாது .ஆனால் நீ தோற்ற பொலிவு இன்றி**காட்சி அளிப்பா*யேயானால்*அந்த காட்சியே*உன்னை*குந்தக*படுத்துவதோடு ,உன்னை பார்க்க வந்தவருக்கு மனசோர்வை உண்டாக்கும் .ஆதலால் நம்மை பார்ப்பவர்கள், தங்களின்*தோற்ற பொலிவை அதிகப்படுத்துவதோடு சுறுசுறுப்பையும், விடாமுயற்சியையும் உருவாக்கி* கொள்வதற்கு எம்.ஜி.ஆர். ஒரு உதாரணம் என்று அவர்கள் நம்ப வேண்டும் அதைத்தான் இப்போது நான் கடைபிடித்து வருகிறேன் .அதைத்தான் நபிகள் நாயகம் அந்த காலத்திலேயே 1460வருடங்களுக்கு முன்பாகவே* என்ன சொல்லி*இருக்கிறார் என்றால் வெளியே வரும்போது*ஒருவர் வாசனை திரவியங்கள் கூட*போட்டுக் கொள்ளலாம்.தவறில்லை*ஏனென்றால் ,உனக்கு*எதிர் வரும் நண்பர்களுக்கு நல்ல தோற்ற பொலிவுடன் நீ இருந்தால்தான் அவர்களுக்கு நல்ல மனமகிழ்வு ஏற்படும் . அத்தகைய*உணர்வுகளை எல்லோரும் கடைபிடிப்பதற்கு இஸ்லாம் மதம் வழிகாட்ட வேண்டும் என்று அவர் தன்* வாழ்க்கை சரித்திரத்தில் குறிப்பிட்டதைத்தான் புரட்சி தலைவர* எம்.ஜி.ஆர். அவர்கள் தன்னுடைய*வாழ்க்கையில் கடைபிடித்து*அதை எம்.என்.நம்பியார் அவர்களுக்கு விவரமாக சொல்லி இருக்கிறார் .தோற்ற பொலிவு என்பது*மிக முக்கியமானது . சர்வாதிகாரி என்ற திரைப்படத்தில்*நடிப்பதற்காக செல்லும்போது**சேலத்தில்*ஒரு நதிக்கரையில் ஓரத்தில்*கதாநாயகி அஞ்சலிதேவி*நடிக்க தயாராகி நிற்கிறார் .. அவருக்காக ஒரு சாரட்*வண்டி தயாராக வந்து நிற்கிறது .நதியின் மறு கரையில்*அஞ்சலிதேவி*இருக்கிறார் .இந்த பக்கத்தில் இருந்து சாரட்*வண்டி உள்ளே போகிறது .இந்த பக்கம் தரையில்*எம்.ஜி.ஆர். அவர்கள் நின்று கொண்டு இருக்கிறார் .சாரட் வண்டி ஆற்றங்கரையில்* நடுவழியில்**நின்றுபோய் விடுகிறது .உடனே எல்லோரும் வந்து வண்டியை*தள்ள முயற்சிக்கிறார்கள் .ஆனால் முடியவில்லை .உடனே எம்.ஜி.ஆர்தானே . அங்கு வந்து ,அனைவரையும் விலகி போக சொல்லி ,மாட்டிக்கொண்டு இருக்கிற சாரட் வண்டியின் சக்கரத்தை ,தன் பலம் கொண்ட*மட்டும் இரு கரங்களால்* தூக்கி தள்ளி விடுகிறார் .அப்போது அவரது புஜங்கள்*மிகவும் பலமாக இருப்பதை பார்த்த இயக்குனர் பிரமித்து போய்விட்டார் .அந்த சக்கரத்தை அப்படியே தூக்கி,வண்டியை*தள்ளி**கொண்டுபோய் அப்படியே*மறுகரையில் அஞ்சலிதேவி நிற்கும் இடத்திற்கு கொண்டு*செல்கிறார் . .பின்னர் சாரட்* ஓட்டுனரை வண்டியில் அமரச்சொல்கிறார் .இந்த காட்சிகளை பார்த்து பிரமித்து போன இயக்குனருக்கு ஒரு காட்சி நினைவுக்கு வருகிறது . புரட்சி கலைவர்*எம்.ஜி.ஆர்.,அஞ்சலிதேவி இருவரும் சந்திக்கும் காட்சியை*வேறு விதமாக படமாக்க நினைத்த*இயக்குனர் ,இதையே*காதலின் தொடக்க காட்சியாக*வைத்து கொள்ள முடிவு செய்து , மறுபடியும் வண்டியை பள்ளத்தில் விழுவது*போல செய்து*,அதை தூக்கி விடக்கூடிய நாயகனாக*மக்கள் திலகம்* எம்.ஜி.ஆர். அவர்களை காட்டி ,அவரது*புஜ*பராக்கிரமத்தை காட்டி அவரது முக பொலிவையும் காட்டி ,அங்கே காதல் அரும்புவது போல காட்சியை*அடிப்படையாக* அமைத்து கொடுத்தது இயக்குனரின் சிந்தனையே என்றாலும் ,அங்கே எம்.ஜி.ஆர். அவர்கள் காட்டிய வீரம், அந்த சக்கரத்தை அவர் தூக்கிய விதம், அந்த அற்புதமான*செயல்*அந்த இயக்குனரையே ஈர்த்தது*என்றால் சாதாரண*மக்களாகிய நம்மை போன்றவர்களுக்கு அந்த ஈர்ப்பானது எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள் .



ஆகவே, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களிடம் கற்று கொள்ள வேண்டியது*நம்முடைய உடம்பை கட்டு கோப்பாக வைத்து கொள்ள வேண்டும் .முக பொலிவைவெளியே வரும்போது**மிக சிறப்பாக காட்டி கொள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும் அதில் ஒன்றும் தவறில்லை .நகத்திற்கு பாலிஷ்*போடுவது*வேண்டுமானால் தேவையற்றதாக இருக்கலாம். ஆனால் முகத்திற்கு அழகுபடுத்துவது என்பது ஒரு அத்தியாவசியமான தேவை .அதற்காக*அனைவரையும் கவரும் விதத்தில்*சினிமா நடிகர்*,நடிகை* போல மேக்*அப்*செய்து கொள்ள வேண்டிய தேவையில்லை .தலை முடியை*நன்றாக சீவி, முகத்திற்கு தேவையான அளவு மட்டும் பொலிவை*ஏற்படுத்தி நல்ல செயல்கள் மட்டும் செய்து ,புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். எல்லோருக்கும் முன் உதாரணமாக இருந்திருக்கிறார் . இன்னொரு விஷயம் என்னவென்றால் அவர் நோய் வாய்ப்பட்டு*அப்போல்லோ மருத்துவமனையில் இருந்த நேரத்தில் கூட நீங்கள் அவரை*முகத்தில்*ஷேவ் செய்யாத*தாடியுடன்*பார்த்திருக்க முடியாது .வெளியில் கூட இரண்டுநாள்*முளைத்த தாடியுடன் கூட*பார்த்திருக்க முடியாது .அவரை மருத்துவமனையில் யாரும் சென்று பார்க்க முடியாதவகையில் கட்டுகாவல் கடுமையாக இருந்தது .மருத்துவமனையில் இருந்து நவம்பர் 5ந்தேதி 1984ல் சிகிச்சைக்காக அமேரிக்கா* புறப்படுகிறார் .* அந்த சமயம்*அவர் செல்லுகின்ற விமானம் ஒரு சிறிய* மருத்துவமனையாக மாற்றப்படுகிறது .அனைவரும் பயந்துகொண்டிருந்த நேரம் .நான் மட்டும் எப்படியோ* *கட்டு காவலை*மீறி ,தப்பி, வேறு ஒரு வழியாக சென்று*எம்.ஜி.ஆர். அவர்கள் தங்கியுள்ள அறைக்கு வெளியே நின்று கொண்டேன் .அப்போது ஒரு ஸ்ட்ரெச்சரில் எம்.ஜி.ஆர். அவர்கள் படுத்த நிலையில்*வெளியில் அழைத்து*வரப்படுகிறார் .அப்போது அவருக்கு*சுய*நினைவில்லை என்று சொல்கிறார்கள் .அவர்மீது*போர்வை போர்த்தப்பட்டுள்ளது . அப்போது அவரது*வலது தோள் .மற்றும் புஜங்கள் தெரிகின்றன .அந்த சூழ்நிலையில் கூட*வெளியில் வரும்போது*அந்த போர்வையை*தன்* இடது கையால் இழுத்து கழுத்து*வரையில் போர்த்தியபடி செல்வதை*நான் பார்த்தேன் .அதாவது அந்த நேரத்தில் கூட தன்னுடைய உடம்பு வெளிப்பார்வைக்கு தெரியக்கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வு இயல்பாகவே,அனிச்சை செயல் என்பார்களே அதுபோல* அவருக்கு இருந்துள்ளது .இவ்வாறு திரு.லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .


எம்.ஜி.ஆர். அவர்கள் தன் வாழ்க்கையில் எத்தனையோ விஷயங்களை தான் நினைத்தது போல் நடத்தியவர் .நினைத்ததை எல்லாம் செய்தவர் . அவருக்கு தெரியாத தொழில்நுட்ப விஷயங்களே கிடையாது .எப்படி ஒரு மனிதனுக்கு ஜாதகத்தில் 12 ராசிகள், நட்சத்திரங்கள் இருக்கிறதோ அப்படி திரைப்பட துறையில் 12 தொழில் பிரிவுகள் இருந்தது .அத்தனை தொழில் பிரிவுகளையும் நேரடியாக அறிந்து தெரிந்து வைத்திருந்தார் .அன்னமிட்டகை படத்தில் பி.சுசீலா பாடிய பதினாறு வயதினிலே 17 பிள்ளையம்மா என்ற பாடல் உள்ளது .கவிஞர் வாலி முதலில் அந்த பாடலை 17 வயதிலே 18 பிள்ளையம்மா என்று எழுதி இருந்தார் .எண்* கணிதப்படி முதல் வரிசையில் 17 என்பதின் எண்ணிக்கை 8 வரக்கூடாது என்பதால் அதை மாற்றி 16 வயதினிலே என்று எழுத வைத்தார் எம்.ஜி.ஆர்.***


எம்.ஜி.ஆர். அவர்களுக்கு எண்* கணிதம் தெரியும் . புத்தகங்கள் மூலம் பல விஷயங்கள் தெரிந்து வைத்திருக்கிறார் இங்குள்ள மேதாவிகள் சிலர் சொல்கின்றனர் அவர் வெறும் நடிகர் என்று .அவர் நடிகர் மட்டுமல்ல .அவரது ராமாவரம் தோட்டத்து இல்லத்தில் உள்ள நூலகத்தில் அந்த காலத்திலேயே*15 லட்ச ரூபாய் அளவிற்கு புத்தகங்கள் இருந்தன உலகத்தில் உள்ள சிறந்த ,அரிய புத்தகங்களை எல்லாம் வாங்கி* குவித்து வைத்தவர் . அதில் சில முக்கிய புத்தகங்களை தன்* உதவியாளரான ரவீந்தரை படிக்க சொல்லி விஷயங்களை கற்று இருந்தார் .அந்த ரவீந்தர்தான் எம்.ஜி.ஆரை பற்றி ,கோடி மாலைகள் தாங்கிய தோள்கள் எம்.ஜி.ஆருடையது* என்ற* நூலை எழுதினார் எம்.ஜி.ஆர். ஒரு வேதநாயகம் என்ற நூலையும் எழுதியுள்ளார் . எம்.ஜி.ஆர் என்கிற மாமனிதர்*.இந்த மண்ணில்* வாழ்ந்ததனால் பல மேதாவிகளால் நினைவுபடுத்தப்படுகிறார் .* அதனால் அவர் ஒரு வாழ்க்கை, ஒரு தத்துவம் ,ஒரு பாடம் , ஒரு படிப்பினை , ஒரு பல்கலை கழகம் என்பதை புரிந்து கொண்டவர்கள் வெற்றிபெற்று வருகிறார்கள் .மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும் .

நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம் .
----------------------------------------------------------------------------------
1.உழைக்கும் கைகளே, உருவாக்கும் கைகளே - தனிப்பிறவி*

2.என்னதான் நடக்கும் நடக்கட்டுமே - பணத்தோட்டம்*

3.அன்னமிட்டகை ,நம்மை ஆக்கிவிட்ட கை - அன்னமிட்டகை*

4.எம்.ஜி.ஆர். - லதா உரையாடல் - சிரித்து* வாழ வேண்டும்*

5.திரு. கா. லியாகத் அலிகான் பேட்டி*

6.பதினாறு வயதினிலே _ அன்னமிட்டகை*

7.எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா உரையாடல் -குமரிக்கோட்டம்*

orodizli
8th October 2020, 08:54 PM
ஏற்றுக்கொண்ட பதவிக்கெல்லாம் பெருமையை தந்தவர் நம் இதயதெய்வம் ஆவார்..........

தலைவர் நடிகர் சங்க தலைவர் ஆக இருந்த போதே சங்கத்துக்கு என்று இடம் வாங்க பட்டு அதன் பின் அவர் ஆற்றிய நன்மைகள் அனைவரும் அறிவோம்.

இதை பற்றி தனி பதிவு ஆதாரங்கள் உடன் ஒருநாள்....கலை துறையினருக்கு வாரத்தில் 2 வது சண்டே விடுமுறை.

படப்பிடிப்புகள் அன்று நடக்காது...முழு ஓய்வு அன்று அந்த துறை சார்ந்த அனைவருக்கும்..

தலைவர் ஒருமுறை யோசித்து அந்த விடுமுறை நாள் அன்று அனைத்து நடிகர் நடிகையர் துறை சார்ந்தவர் அனைவரும் நடிகர் சங்க வளாகத்தில் கூட ஏற்பாடு செய்தார்.

தலைவர் ஏற்பாடு என்றால் சும்மாவா..ம்
காலை 7.30 மணியில் இருந்து இரவு 9.30 மணிவரை நிகழ்வுகள்.

விடுமுறை தினம் அன்று அவர்கள் வெளியே போய் அவர்கள் விரும்பும் பொருள்கள் வாங்குவது வழக்கம்.

ஆனால் அன்று சங்கம் வந்த போது சென்னையில் இருந்த அனைத்து முன்னணி நிறுவனங்களும் அங்கே ஸ்டால் அமைத்து இருந்தன.

துணிக்கடை நகைக்கடை விதம் விதம் ஆன சைவ அசைவ உணவே வகை அரங்கங்கள்....ஏதோ ஒரு மினி பொருள்காட்சி மைதானம் போல.

வந்து சேர்ந்த அத்துணை பேரும் இது என்ன மாயாஜாலம் எப்படி இப்படி என்று வியக்க.

அனைத்து வித விளையாட்டு போட்டிகள் ...ஆண்களுக்கு. ஜெமினி அவர்கள் தலைமையில் கிரிக்கெட் குழு, ஹாக்கி குழு...

கயிறு இழுக்கும் போட்டி சாக்குக்குள் கால்கள் நுழைத்து ஓடும் போட்டி

கோலம் போடுதல் போட்டி... விளக்கை கையில் கொண்டு அணையாமல் அடுத்த பக்கம் கொண்டு செல்லும் போட்டி.

பேச்சு போட்டி கவிதை போட்டி அனைத்தும் இருந்தன அன்று.

சிவாஜி ,எஸ்.எஸ்.ஆர்.மேஜர்...குணசித்திர நடிகர்கள் கோபால கிருஷ்ணன்....நாகேஷ்.

சந்திரபாபு...தங்கவேலு. ரங்காராவ்...சுப்பையா அவர்கள்...

சாவித்திரி ஜமுனா சரோ அஞ்சலிதேவி இன்னும் பல முன்னணி நடிகைகள்.

அனைவரும் கலந்து கொண்டு ஒரு குடும்பம் போல அன்று இணைந்து அனைவரும் அன்று இரவு வீடு திரும்பும் போது...

போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகளை சிவாஜி அவர்கள் கரங்கள் கொண்டு வழங்க வைத்து.

வந்த அனைத்து துறை சார்ந்த ஒருவர் விடாமல் பணம் நகை புடவை மற்ற பரிசுகள் அனைத்தையும் கொடுத்து அவர்களை தேடி தேடி வந்து உபசரித்து..

அவர்கள் அனைவரும் அன்று கலைந்து சென்ற பின் அனைத்து வகை செலவுகளுக்கும் பணத்தை அரங்க நிர்வாகிகளுக்கு கொடுத்து விட்டு..

இரவு 11 மணி அளவில் வீடு திரும்பி மறு நாள் காலை படப்பிடிப்புக்கு கிளம்புகிறார் நம் தலைவர்.

அடுத்த நிகழ்வுகளுக்கு கொடுக்க பணம் வேண்டுமே அதை சம்பாதிக்க அதிகாலை புறப்படுகிறார் நம் பொன்மன செம்மல்.

அது போன்ற ஒரு நிகழ்வு இன்று வரை நடிகர் சங்கத்தில் இன்று வரை நடக்கவில்லை..இனிமேலும் நடக்க வாய்ப்பு இல்லை.

ஏன் என்றால் அந்த தெய்வம் இன்று இங்கு இல்லை.

வாழ்க தலைவர் புகழ்.

நன்றி தொடரும்

உங்களில் ஒருவன்...

நடிகர்களில் நாம் பார்த்த முதல் மனிதர் தலைவர் மட்டுமே...

படத்தில் எங்கள் தங்கம் படத்தின் 100 வது நாள் கேடயம்...இதுவும் அடுத்தவருக்கு நடித்து கொடுத்ததே............Mn...

orodizli
8th October 2020, 08:54 PM
காஞ்சிபுரத்தில் சிவந்த மண் திரைப்படம் 85 பைசா டிக்கெட் 25 ரூபாய்க்கு ப்ளாக்கில் விற்றதாக இவர்களாக கற்பனை செய்தியை தயாரித்துள்ளதையும் அவர்கள் போட்டிருப்பது அப்போது வந்த செய்தி இல்லை, இப்போது இவர்கள் தயாரித்த பொய் செய்தி என்பதையும் சொல்லி அதை உணர்த்த சீர்திருத்த எழுத்தையும் ஏற்கெனவே உதாரணம் காட்டினேன். அவர்களிடம் உண்மையான செய்தி இல்லை. உண்மையிலேயே அப்படி நடந்திருந்தால் அப்போது வந்த செய்தியை வெளியிட மாட்டார்களா? அவர்கள் போட்டிருப்பது பொய் செய்தி என்பதை இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். பேசும்படம் அட்டையில் புதிய பறவை படத்துக்காக வரையப்பட்ட ஓவியத்தை ஒரு கண்ணில் அதிர்ச்சியும் ஒரு கண்ணில் பயமும் சிவாஜி கணேசன் காட்டியிருப்பதாக இவர்களாக கற்பனையாக எழுதியிருக்கும் பொய்யையும் ஏற்கெனவே சொன்னேன். இதுபோல நிறைய பொய் சொல்கிறார்கள். இன்னொரு உதாரணம்.

1954ல் வெளியான சிவாஜி கணேசன் நடித்த மனோகரா படம் சென்னையில் ஒரே வாரத்தில் 84,00, 276 ரூபாய் (நன்றாக கவனியுங்கள். 84 ஆயிரம் இல்லை. 84 லட்சத்து 276 ரூபாய் வசூலித்ததாம்.) அடேங்கப்பா. ஒரு வாரத்துக்கே இப்படி என்றால் ஓடி முடிய எவ்வளவு கோடிகள் வசூல் ஆகியிருக்கும். சென்னையில் மட்டுமே இப்படி என்றால் தமிழ்நாடு முழுக்க எத்தனை எத்தனை ஆயிரம் கோடிகள் வசூலாகியிருக்கும்? ஊமைப் பட காலத்தில் இருந்து இதுவரை உலகத்தில் வெளியான எல்லா படங்களின் வசூலையும் சேர்த்தாலும் இனிமேல் வெளியாக உள்ள விஜய்யின் மாஸ்டர், ரஜினியின் அண்ணாத்தே படங்களின் வசூலையும் சேர்த்தாலும் மனோகராவை நெருங்க முடியாது போல. சிவாஜி கணேசனை இப்படித்தான் வசூல் சக்ரவர்த்தியாக்க அவரின் ரசிகர்கள் முயற்சிக்கிறார்கள். ஆனால், அவர்களின் பொய்யை மக்கள் நம்பவில்லை, சிரிக்கிறார்கள். அதனால், தாங்களே பொய் வசூல் வெளியிட்டு, தாங்களே திருப்தி அடைகிறார்கள். இப்படித்தான் இவர்களின் சிவந்த மண் பொய் வசூலும். இதுதான் சிவாஜி கணேசனை அவரின் ரசிகர்கள் வசூல் சக்கரவர்த்தி ஆக்கிய கதை. பாவம்.. அவர்களின் இயலாமையைப் பார்த்து பரிதாபப்படலாம். வேறு என்ன செய்ய?... Swamy...

orodizli
8th October 2020, 08:55 PM
1969 ல்
நம்நாடு காவியத்தை விட ஒரு படம் அதிகம் ஒரு தியேட்டர் ஒடியதாம்..
விளம்பரத்தில் தியேட்டர் இல்லையாம் என ஒரு பதிவை முன்னால் பார்த்து இருக்கிறேன்...

நம்நாடு காவியம்
8 அரங்கில் 100 நாள் தான்.
ஆனால்...
50 நாள் 52 அரங்கு...
இதில் 18 அரங்கு
75 நாள்...
12 வாரம் 15 அரங்கு...

நம்நாடு 100 நாள்....
++++++++++++++++
மதுரை
மீனாட்சி 133 நாள்...
திருச்சி
வெலிங்டன் 119 நாள்..
சேலம்
பேலஸ் 109 நாள்....
குடந்தை
விஜயலட்சுமி 100 நாள்
சென்னை
கிருஷ்ணா 105 நாள்
சித்ரா 105 நாள்
சரவணா 105 நாள்

அடுத்து...
பட்டுக்கோட்டை 96 நாள்
மயிலாடுதுறை 96 நாள்
ஈரோடு 91 நாள்
தஞ்சாவூர் 85 நாள்
கரூர் 85 நாள்
வேலூர் 83 நாள்
பாண்டிச்சேரி 82 நாள்

அடுத்து....
சென்னை
சீனிவாசா 78 நாள்
நெல்லை 76 நாள்
திண்டுக்கல் 76 நாள்
நாகர் கோவில் 76 நாள்
++++++++++++++++++++
இப்படி அந்த நடிகரின் வெளிநாடு படம் ஒடியதுண்டா...

நம் நாடு காவியமே
இப்படி என்றால்....

அடிமைப்பெண்
15 அரங்கில் 100 நாள்..
இதில் ....
மதுரை 176 நாள்
திருச்சி 133 நாள்
சென்னை 133 நாள்
சேலம் 133 நாள்
கோவை,நெல்லை
120 நாள்....
திண்டுக்கல்,
சென்னை (4 ) நா.கோவில்,வேலூர்
தஞ்சை , தூத்துக்குடி, ஈரோடு......
மேலும் 15 திரையரங்கில்
11 வாரங்கள்...
பாண்டி 92
ராம்நாட் 84
ஆத்தூர் 80
விருதுநகர், விருதுநகர்
பழனி, சிதம்பரம்,
கரூர், ப.கோட்டை
தி.மலை, காஞ்சிபுரம்
கடலூர் பெங்களுர் (3)
++++++++++++++++++++
மொத்தம் 68 திரையில் 50 நாட்கள்...
இலங்கையில்
(சென்ட்ரல்) 100 நாட்களும்...
ராணியில் 85 நாட்களும் ஒடியது.
மைசூரில் முதன் முறையாக 2 அரங்கில் வெளியீட்டு 66 நாள் ஒடி சாதனை...
திருவண்ணாமலை நகரில் 3 அரங்கில் திரையிட்ட முதல் சாதனைகாவியம்
அடிமைப்பெண்...
(76 நாள்) சென்னை நீங்கலாக தமிழ்நாட்டில் ஒரே நேரத்தில் மூன்று தியேட்டர் வெளியிட்டது அன்று மிகப்பெரிய சாதனையாகும்....

இப்படி தோண்ட தோண்ட பல சாதனைகளை உருவாக்கும் வல்லமை படைத்த காவியங்களை தந்த ஒரே தனிப்பெரும் நாயகன் என்றுமே நம்
மக்கள் திலகமே........
Ur...

orodizli
8th October 2020, 08:56 PM
இந்திய திரையுலகில் ஒரே ஒரு தனிப்பெரும்
கதாநாயகன் மக்கள் திலகம் மட்டுமே...
சாதாரண நடிகர்கள் தான் நடிக்கும் எல்லாபடங்களிலும் சில முன்னனி நடிகர்களை சேர்த்து தான் கதை எடுபடும்...
ஆனால் மக்கள் திலகம் தனியாக நின்று சாதித்த
சாதனைகளின் வெற்றி நம் மூன்றெழுத்து மந்திரத்திற்கு மட்டுமே
பாரதத்தில் சொந்தமாகும்......

அதுப்போல தான்
நம்நாடு வெற்றி
மகுடம் என்றால்...
அடிமைப்பெண்
வெற்றி
மலையாகும்....

நம்நாடு எழுச்சி என்றால்
அடிமைப்பெண்
புரட்சி ஆகும்...

ஒரே ஆண்டில் சென்னையில் தொடர்ந்த வெளியான இரண்டு வண்ணக் காவியங்கள் ... 8 அரங்கில் வெளிவந்து
7 அரங்கில் 100 நாளை கடந்து 1969 ல் சாதனை..

அடிமைப்பெண்
++++++++++++++
கிருஷ்ணா 133 நாள்
133 நாளில் வடசென்னையில் வெள்ளிவிழா ஒடிய பிற நடிகர்களின் படத்தை
19 வாரத்தில் முறியடித்து
புதிய சாதனை...
மிட்லண்ட் 100 நாள்
மேகலா 105 நாள்
நூர்ஜகான் 100 நாள்

நம் நாடு
+++++++++
கிருஷ்ணா 105 நாள்
சித்ரா 105 நாள்
சரவணா 105 நாள்
ஸ்ரீசினீவாசா 78 நாள்

இது போன்ற இரண்டு காவியங்கள் படைத்த சாதனையை..... பின்னால் வந்த எந்த நடிகர் படமும்
தொடர்ந்து 8 அரங்கில்
ஒடியதில்லை
சென்னையில்....
இரண்டுத்திரைப்படமும்
8 அரங்கில் வசூல்
24 லட்சத்தை கடந்தது..
சென்னையில் முதல் வெளியீட்டில் ஒடி முடிய
32 லட்சத்தை கடந்தது...
+++++++++++++++++++
சாதாரண நடிகருக்கு
எப்பொழுதாவது
வரலாறு பதிவிடும்..
ஆனால்
தனிப்பெரும் கதாநாயகரான
மக்கள் திலகம்
அவர்களே...
தன் திரைப்படங்கள் மூலம் வரலாற்றை ஆண்டு தோறும் படைப்பார்.
அதையே முறியடித்து மீண்டும் புதிய வரலாற்றையும் எழுதுவார்....படைப்பார்!

தனிப்பெரும் கதாநாயகனின் திரை வரலாறு தங்க சுரங்கம் போன்றது...
வசூலை தந்து கொண்டு வரும் அமுதசுரபி.....
அட்சயபாத்திரம்...
ஆம் நம் கொடை வள்ளல் பிறருக்கு கணக்கில்லாமல் கொடுப்பது போல்...
அத்தலைவரின் அழியாத காவியமும்
திரையரங்கில் வசூலை அள்ளி அள்ளி கணக்கில்லாது கொடுத்து வந்தது..
இனியும் கொராணா முடிந்தும் கொடுக்கும்.........ur...

orodizli
8th October 2020, 08:56 PM
தலைவரின் நம்நாடு காவியம் பெற்ற சாதனை வசூல் வரலாறே மகத்தானது...

நம்நாடு படத்தயாரிப்பு செலவை விட ...
5 மடங்கு விஜயா நிறுவனத்திற்கு லாபம் கொடுத்த காவியம் நம்நாடு..
அத்திரைப்படத்தின் மறு வெளியீடு இன்று வரை சாதனையில் உள்ளது..
ஊரடங்கு வருவதற்கு முன்னால் கூட நம்நாடு
சென்னையில் மட்டுமே 2020 மார்ச் வரை
5 அரங்கில் வெளிவந்தது.

அடிமைப்பெண்
வசூல் வரலாறு எட்டாத தூரத்தில் அன்றும் இன்றும் என்றுமே உள்ளது...

தயவு செய்து
தாங்கள் நம் தலைவரின் காலத்தால் அழியாத
அடிமைப்பெண்
நம் நாடு
திரைப்படங்களை
வேறு நடிகரின் படங்களுடன் தயவு செய்து ஒப்பிடவேண்டாம்.

கடந்த 50 ஆண்டு காலத்தில்....
அடிமைப்பெண்
சென்னையில் மட்டும்
26 வெளியீடுகளையும்...
நம்நாடு
23 வெளியீடுகளையும்
பெற்றுள்ளது...

இந்த வெளியீட்டில் மட்டும்....
எத்தனை அரங்கு
எத்தனை கோடி வசூல்
யார் யார் பெற்றார்கள்
என்பதே பதிவிட முடியாத சாதனையாகும்.

ஒரு குறிப்பு :
1991 ல் புரசை
சங்கம் ac யில் அரங்கில் இரண்டு முறை திரையிட்ட ஒரே படம் நம்நாடு ஆகும்.
முதல் 6 நாள்
வசூல் : 1,04,246.00 ஆகும்.
மீண்டும் 6 நாள்
வசூல் : 88,711,05

அடுத்து...
2017 ல்
அடிமைப்பெண்
சென்னையில்
தேவி ஞாயிறு காட்சி மட்டும் அரங்கு நிறைந்த
ஒரு காட்சி வசூல் : 1லட்சத்து 60 ஆயிரத்தை கடந்தது.(1100 பேர்)
(ஒரு டிக்கட் விலை :152)
அது மட்டுமல்ல
ஆல்பட் அரங்கிலும் ஞாயிறு அன்று தீடிர் என திரையிட்டு 650 பேர்கள் பார்த்த நிகழ்வு......
இது வரை ஒரு பழைய திரைப்படத்திற்கு என்றால் அது நம் மக்கள்திலகத்தின்
காவியங்களுக்கு மட்டும் தான்.
மேலும் தாங்கள் கொடுத்த விளக்கபதிவு..
புள்ளிவிபரங்கள் யாவுமே மகத்தானது சார்...தொடரட்டும் தலைவரின் அழிவில்லா பணி......ur...

orodizli
9th October 2020, 07:25 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் ஒரு திமுக காரர், பின்பு பிரிந்து அதிமுக என்கிற கட்சியைத் துவங்கினார், முதல்வர் ஆனார். இவ்வளவுதானே நமக்கு தெரியும். ஆனால் பலருக்கு தெரியாத விஷயம் இருக்கிறது. எம்ஜிஆர் ஆரம்பத்தில் தீவிர காங்கிரஸ் ஆதரவாளர். காந்தியையும், கர்ம வீரர் காமராஜரையும் அதிகம் நேசித்தவர் என்பது தான்.

ஆரம்பம் தொட்டே கதர் ஆடை தான் அணிந்தார் எம்ஜிஆர். அதன் பின் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா,கலைஞர் ஆகியோர் நட்பு கிடைத்து திமுகவில் இணைந்தார். ஆனாலும், கடைசி வரை கர்மவீரர் காமராசர் மீது தீராத பாசம் வைத்திருந்தார் எம்ஜிஆர். நேரம் கிடைக்கும் போதெல்லாம் காமராஜரை சந்தித்து மகிழ்ந்தார்.

தனது இல்லத்திற்கு எத்தனையோ தலைவர்களை அழைத்து விருந்து கொடுத்து மகிழ்ந்த எம்ஜிஆருக்கு ஒரு தீராத ஏக்கம் இருந்தது.
ஒரே ஒரு முறை காமராஜரை தனது இல்லத்திற்கு அழைத்து வந்து விட வேண்டும் அருகே அமர்ந்து உணவு சாப்பிட வேண்டும். ஆனால் எப்போது அழைத்தாலும் காமராஜர் சிரித்தபடி "சொல்றேன்" என்கிற ஒற்றை*

வார்த்தையால் தவிர்த்து விடுவார். சிவாஜி, எம்ஜிஆர் பங்கு பெற்ற ஒரு விழாவிற்கு முதல்வர்* காமராஜர் வந்திருந்தார். கடைசியாக ஒருமுறை அழைத்து விடுவது என்கிற நம்பிக்கையில் வழியனுப்பும் *போது மீண்டும் அழைப்பு விடுத்தார் எம்ஜிஆர்.


அப்போதும் அதே புன்னகை மாறாமல்.., "ராமச்சந்திரா நான் உன் இல்லம் வரக் கூடாது* என்றில்லை. உன் வீட்டு விருந்து பற்றி நிறைய கேள்விப் பட்டுள்ளேன். அறுசுவை உணவும் மீன் இறைச்சியும் அசைவ உணவுகளும் நிறைந்திருக்கும் என்று கூறுவார்கள். நான் மக்கள் ஊழியக்காரன். ரெண்டு இட்லி, தயிர் சோறு தான் எனக்கு சரிப்படும் உன் வீட்டில் அறுசுவை உணவு சாப்பிட்டு விட்டால் திருப்பியும் அந்த ருசி நாக்கு தேடும்.. அதுக்கு நான் எங்கே போறது" என்று கூற *ஆடிப்போனார் எம்ஜிஆர்.

தன்னையும் அறியாமல் காமராஜரை வணங்கி விட்டாராம் மக்கள் திலகம் எம்ஜிஆர். அதுமுதல் காமராஜரை அழைப்பதில்லை..! இப்படி ஒரு முதல்வர் நமது தமிழ் நாட்டில் இருந்திருக்கிறார். மீண்டும் இப்படி ஒரு மக்கள் முதல்வர் நமக்கு கிடைப்பாரா?.........vr...

orodizli
9th October 2020, 07:27 AM
மக்கள் திலகத்தை திகைக்க வைத்தேன் - நடிகை சச்சு!

ஆம் முன்பெல்லாம் நான் எம்.ஜி.ஆர். அவர்களை "சார்" என்று தான் அழைத்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் "சச்சு! என்ன ஸார் வேண்டியி குக்கு .... அண்ணா என்று கூப்பிடு" என்று அவரே தான் சொன்னார். அதன் பிறகு "அண்ணா" என்று அழகா ஆரம்பித்தேன்.

கோவை , ஜூபிடர் ஸ்டூடியோவில், "ராணி" படம் தயாராகி வந்த தேரம் . அதில் சிறுமி பாத்திரத்தில் நான் நடித்து வந்தேன் . அப்பொழுது அங்கு "நாம்" படமும் தயாராகி வந்தது. முதன் முதலில் நான் எம். ஜி ஆரைச் சந்தித்தது அங்குதான். அன்று தொடங்கி "எப்போது பார்த்தாலும் என்ன ஓயாமல் எம். ஜி.ஆர் . பேச்சு" , என்று பாட்டியும் சகோதரர் சகோதரியரும் கடிந்து கொள்ளும் அளவுக்கு நான் அவர் ரசிகையாகி விட்டேன், எம்.ஜி.ஆர் . அண்ணாவை நான் ஒரு சமயம் திணற வைத்திருக்கிறேன்!.........

orodizli
9th October 2020, 07:28 AM
சில ஆண்டுகளுக்கு முன் ஆதவன் என்ற தமிழ் படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு சரோஜாதேவி அவர்கள் நடித்தார்கள்.

ஒரு நாள் படப்பிடிப்பின் நடுவில் பிரேக்கில் உணவு இடைவேளை போது அவர் கொண்டு வந்து இருந்த இரு பொருட்கள் உடன் இருந்த மற்ற அனைவரையும் கவர்ந்தன..

அவர்கள் என்ன இது வெள்ளி தட்டு அத்துடன் ஒரு டம்ளர் போல அமைப்பில் மூடியுடன் ஒரு straa இணைக்க பட்டது போல ஒரு பாத்திரம்...என்று கேட்க.

அவர் சொல்ல அனைத்து பட குழுவினரும் ஆர்வமுடன் கேட்க..

எங்க வீட்டு பிள்ளை படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்த நேரம்...ஜமீன்தார் வீட்டு மணமகன் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் உடன் நானும் என் அப்பா வேடத்தில் நடித்த ரங்காராவ் அவர்களும் நடித்த ஒரு காட்சி.

ஒரு சூட்டிங் பார்க்க நாங்க போய் இருக்கும் போது குமரி பெண்ணின் உள்ளத்திலே என்ற பாடலில் அவர்கள் நடிக்க அதை பார்க்க போன நாங்கள் அந்த பாடலை தொடர்வதாக காட்சி அமைப்பு.

இதே போல இடைவேளையில் விலை உயர்ந்த புடவை அணிந்து கொண்டு தலைவர் பக்கத்தில் நான் அமர்ந்து இருக்கும் போது குடிக்க காபி கொடுக்க பட்டது.

நான் குடிக்க தலைவர் மறுக்க அப்போது ஒரு சொட்டு காபி என் புடவையில் சிந்தி விட பதறி நான் துடைக்க தலைவர் பார்த்து சிரிக்க.

அடுத்த சில நாட்களில் படப்பிடிப்பில் இது எனது பரிசு உங்களுக்கு இனி எந்த பானமும் உங்கள் உடையில் சிந்தாது என்று இந்த கிளாஸ் போன்ற இதையும் தட்டையும் இரண்டும் வெள்ளியால் செய்ய பட்டவை...எனக்கு பரிசாக கொடுத்தார்.

என்ன ஒரு மனது அவருக்கு....அன்று முதல் வெளிப்புற படப்பிடிப்பு எங்கு இருந்தாலும் இந்த இரண்டு பொருட்களும் என்னுடன் பயணிக்கின்றன இன்று வரை என்று சொல்லி முடிக்கிறார் அபிநய சரஸ்வதி சரோ அவர்கள்.

சுற்றி அதை கேட்டு கொண்டு இருந்தவர்கள் சாப்பிட்டு முடித்த பின் என்ன ஒரு அற்புத மனிதர் எம்ஜிஆர் அவர்கள் என்று மனதில் பேசி கொண்டது அரங்கம் முழுவதும் எதிர் ஒலித்தது சத்தியம்.

தலைவருக்கு பக்கத்தில் படத்தில் இரு பக்கமும் கை பிடி உடன் கூடிய அந்த வெள்ளி கிளாஸ்.

வாழ்க தலைவர் புகழ்.

தொடரும்...உங்களில் ஒருவன்.....நன்றி......Mn...

orodizli
9th October 2020, 07:29 AM
""நான் எம்.ஜி.ஆரோடு 22 ஆண்டுகள் தொண்டனாக- தோழனாக- தம்பியாக எல்லாவகையிலும் இணைந்து வாழ்ந்திருக்கிறேன். அந்த 22 ஆண்டு காலம் என் நெஞ்சை விட்டு நீங்காத காலம். அதனை பொற்காலம் என்றே சொல்லலாம்.

நான் உண்மையாக வாழ்ந்த காலம் அந்த 22 ஆண்டுகாலம்தான். அவருடைய உதவியால்தான் தமிழின ஆயுதப்போர் தொடங்கினேன். அவரது உதவியுடன், ஈழப்போராட்ட உதவிக்குக் காரணமாக இருந்தவன் நான். என்னால் ஒரு காசு தமிழீழப் போருக்குத் தர முடியாது. எம்.ஜி.ஆர். பலகோடிகளை வாரிவாரிக் கொடுத்தார். அவர் வழங்கிய கைக்கு உதவியாக என்னுடைய கை பிடித்துக் கொடுக்க வைத்தது.

எம்.ஜி.ஆர். ஆயிரத்தில் ஒருவர் அல்ல; பத்துகோடிகளில் ஒரு மனிதர். அவரது கலை உலகம், நடிப்புலகம் ஒரே நாளில் உயர்ந்ததல்ல. படிப்படியாக, மெல்ல மெல்ல உயர்ந்து யாரும் எட்ட முடியாத எல்லையைத் தொட்டவர்.

அரசியலில் நெருக்கடி காரணமாக "உலகம் சுற்றும் வாலிபன்' படத்தை ரகசியமாக- உலக சினிமா அரங்கில் சுவரொட்டி ஒட்டாமல் வெளியிட்டார். அது மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது என்றால் அதற்குக் காரணம்- அவர் மக்கள் திலகம் என வலம் வந்ததால்தான்.

அரசியலைப் பொறுத்தவரையில் ஒருகால கட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து, அண்ணாமீது கொண்ட அளப்பரிய அன்பு காரணமாக தன்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டவர். தி.மு.க. வளர்ச்சியில் சரிபாதிக்கு மேல் அவருக்கு பங்கு உண்டு.

அண்ணா மறைந்த பின்னர் கருணாநிதியை முதலமைச்சராக்கியது எம்.ஜி.ஆர்.தான். முதலமைச்சரான கருணாநிதி தி.மு.க.விலிருந்து விலக்கியபின் முறைப்படி தனிக்கட்சி ஆரம்பித்தார். இதற்கு தனி மனித முனைப்பு காரணமாக இருந்தது. ஆனால் கருணாநிதி நினைத்தபடி எம்.ஜி.ஆர். காணாமல் போய்விடவில்லை. கட்சியை விட்டு விலகி தனிக்கட்சி ஆரம்பித்து ஐந்தே ஆண்டுகளில் ஆட்சி அமைத்தவர் எம்.ஜி.ஆர். அவர் உயிருடன் இருக்கும்வரை கருணாநிதி முதலமைச்சராக வர கனவுகூட காணமுடியவில்லை. இதுதான் எம்.ஜி.ஆரின் வெற்றி.

எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வந்ததாலேயே பல நன்மைகள் தமிழகத்துக்கு- தமிழக மக்களுக்கு கிடைத்தது. "தமிழ் தமிழ்' என்று பேசினார்கள் பலர். ஆனால் எம்.ஜி.ஆர். ஐந்தாவது உலகத்தமிழ் மாநாட்டை மதுரையில் சிறப்பாக நடத்தினார். அதுவும் தமிழாய்ந்த தமிழறிஞர்களுடன் இணைந்து அரசியல் கலப்பில்லாமல் நடத்தினார்.

தஞ்சையில் 1200 ஏக்கரில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாகக் காரணமாய் இருந்தவர். அதனுடைய வளர்ச்சிக்கு என்னென்ன செய்யமுடியுமோ அத்தனையும் செய்தார்.

தந்தை பெரியாருக்கு நூற்றாண்டு விழாவை ஓராண்டு முழுவதும் எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் நடத்தினார். பெரியார் நினைவுத்தூண் உருவாக்கினார். ஒலி, ஒளி காட்சியை உருவாக்கினார். அதேபோல மகாகவி பாரதி நூற்றாண்டு விழாவையும் செம்மையாக நடத்தினார். பெரியார், பாரதி நூற்றாண்டு விழா கவியரங்கங்கள் எங்கெங்கு நடந்தனவோ அங்கெல்லாம் தலைமை வகித்தேன்.

அண்ணா அவர்கள் லட்சோப லட்சம் தி.மு.க தொண்டர்களை, தோழர்களை தன் தம்பிமார்களாக ஏற்றுக்கொண்டார். 1967-ல் விருகம்பாக்கம் மாநாட்டில், "அன்புத் தம்பிமார்களே நாம் அத்தனை பேரும் ஒரே வயிற்றில் பிறப்பது சாத்தியம் இல்லை என்பதால் வெவ்வேறு தாய்மார்கள் வயிற்றில் பிறந்தாலும் நாம் அத்தனைபேரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்தான் என்பதை மறக்கக்கூடாது' என்றார். தி.மு.கழக தோழர்கள் ஒரு குடும்பம் என்றார். அதனால் அண்ணாவின் புகழ் வளர்ந்தது.

தன்னலம் சார்ந்த மனிதர்கள் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கிறார்கள். பொதுநலம் பேணுகிற மனிதர்கள் தாங்கள் சார்ந்த சமுதாயத்தையும் வாழவைத்து, தாங்கள் மறைந்த பின்னாலும் மறையாமல் வாழ்கிறார்கள்.''

- புலவர் புலமைப்பித்தன் ..........vr...

orodizli
9th October 2020, 07:35 AM
தலைவரின் "நம்நாடு" காவியம் பெற்ற சாதனை வசூல் வரலாறே மகத்தானது...

நம்நாடு படத்தயாரிப்பு செலவை விட ...
5 மடங்கு விஜயா நிறுவனத்திற்கு லாபம் கொடுத்த காவியம் நம்நாடு..
அத்திரைப்படத்தின் மறு வெளியீடு இன்று வரை சாதனையில் உள்ளது..
ஊரடங்கு வருவதற்கு முன்னால் கூட நம்நாடு
சென்னையில் மட்டுமே 2020 மார்ச் வரை
5 அரங்கில் வெளிவந்தது.

அடிமைப்பெண்
வசூல் வரலாறு எட்டாத தூரத்தில் அன்றும் இன்றும் என்றுமே உள்ளது...

தயவு செய்து
தாங்கள் நம் தலைவரின் காலத்தால் அழியாத
அடிமைப்பெண்
நம் நாடு
திரைப்படங்களை
வேறு நடிகரின் படங்களுடன் தயவு செய்து ஒப்பிடவேண்டாம்.

கடந்த 50 ஆண்டு காலத்தில்....
அடிமைப்பெண்
சென்னையில் மட்டும்
26 வெளியீடுகளையும்...
நம்நாடு
23 வெளியீடுகளையும்
பெற்றுள்ளது...

இந்த வெளியீட்டில் மட்டும்....
எத்தனை அரங்கு
எத்தனை கோடி வசூல்
யார் யார் பெற்றார்கள்
என்பதே பதிவிட முடியாத சாதனையாகும்.

ஒரு குறிப்பு :
1991 ல் புரசை
சங்கம் ac யில் அரங்கில் இரண்டு முறை திரையிட்ட ஒரே படம் நம்நாடு ஆகும்.
முதல் 6 நாள்
வசூல் : 1,04,246.00 ஆகும்.
மீண்டும் 6 நாள்
வசூல் : 88,711,05

அடுத்து...
2017 ல்
அடிமைப்பெண்
சென்னையில்
தேவி ஞாயிறு காட்சி மட்டும் அரங்கு நிறைந்த
ஒரு காட்சி வசூல் : 1லட்சத்து 60 ஆயிரத்தை கடந்தது.(1100 பேர்)
(ஒரு டிக்கட் விலை :152)
அது மட்டுமல்ல
ஆல்பட் அரங்கிலும் ஞாயிறு அன்று தீடிர் என திரையிட்டு 650 பேர்கள் பார்த்த நிகழ்வு......
இது வரை ஒரு பழைய திரைப்படத்திற்கு என்றால் அது நம் மக்கள்திலகத்தின்
காவியங்களுக்கு மட்டும் தான்.
மேலும் தாங்கள் கொடுத்த விளக்கபதிவு..
புள்ளிவிபரங்கள் யாவுமே மகத்தானது சார்...தொடரட்டும் தலைவரின் அழிவில்லா பணி...ur...

orodizli
9th October 2020, 01:31 PM
தாயை காத்த தனயன் தேவர் பிலிம்ஸில் எம்ஜிஆர் நடித்த மூன்றாவது படம். 1962 ஏப் 13 ல் வெளிவந்து 100 நாட்கள் பல திரையரங்குகளில் ஓடி வெற்றியை குவித்த படம். தமிழகத்தில் 7 திரையரங்குகளில் 100 நாட்களை தாண்டி ஓடியது குறிப்பிடத்தக்கது.
1962 ன் பிளாக் பஸ்டர் திரைப்படம் தாயைக் காத்த தனயன்தான். திரையிட்ட திரையரங்குகளிலெல்லாம் திருவிழாக் கோலம்தான்.

படப்பிடிப்பு வாகினியில் போட்ட செட் என்றாலும் காட்டுக்குள் சென்று படம் பார்த்த வித்தியாசமான உணர்வை கொடுத்தது. பாடல்கள் மகாதேவனின் இசையில் மயக்கும் மல்லிகையாய் மணம் வீசியது. ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்தான் காதல் பாடல்களில் நம்பர் 1 பாடல் என்றால் அன்பே வா க்கு முன்னால் காதல் பாடல்களில் தலைசிறந்த பாடலாக காவேரி கரையிருக்கு பாடல்தான் விளங்கியது எனலாம்.

எம்ஜிஆர் நல்ல சுறுசுறுப்பாக வந்து கம்புச்சண்டை போடும் அழகை எத்தனை முறை வேண்டுமானாலும் ரசித்துப் பார்க்கலாம். காட்டில் புலி படுத்தும் பாடு ஆங்கிலப் படங்களை பார்த்த த்ரில் அனுபவத்தை உண்டாக்கி வியர்க்க வைத்தது.
படம் பார்த்தவர்கள் இந்தக் காட்சியை சிலாகித்து பேசும் போது படம் பார்க்காதவர்களையும். பார்க்கத் தூண்டின.

கட்டித்தங்கம் வெட்டி எடுத்து அற்புதமான பாடல். T m s ன் குரலின் இனிமை இந்த பாடலில் பளிச்சென்று தெரியும். நடக்கும் என்பார் நடக்காது சோகப் பாட்டிலும் சுவையான பாடல். காட்டுராணி கோட்டையிலே சரோஜாதேவி அறிமுகப் பாடல் வழக்கம் போல் அவருடைய. அழகின் வெனிப்பாடு அருமையாக இருக்கும்.
மூடித்திறந்த இமையிரண்டும் இவை அத்தனையும் ஒருங்கே இணைந்து அறுசுவை விருந்து படைத்தது போல் இருந்தது.

M.r ராதா இரட்டை வேட நடிப்பை அபாரமாக வெளிப்படுத்தியிருப்பார். டீக்கடைக்காரனாக காமெடியிலும் வில்லத்தனத்திலும் முத்திரை பதித்தார். மொத்தத்தில் விறுவிறுப்பாக அனைவரையும் காட்டிற்கு அழைத்து சென்ற உணர்வோடு சிறந்த பொழுது போக்கும் உணர்வையும் ஏற்படுத்திய படம்.

சென்னையில் பிளாசா பாரத் மகாலட்சுமியில் வெளியாகி அனைத்து அரங்குகளிலும் 112 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. திருநெல்வேலி ராயலில் 70 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. தூத்துக்குடி ஜோஸப்பில் 63 நாட்கள் ஓடியது குறிப்பிடத்தக்கது. சுமார் 30 திரையரங்குகளில் 50.நாட்கள் ஓடி வெற்றி கொடியை உயர்த்தி பிடித்த படம். மதுரை கல்பனா, திருச்சி பேலஸ், சேலம் பேலஸ், மற்றும் கோவை கர்னாட்டிக் கிலும் 100 நாட்களை தாண்டி அதிகபட்சமாக 137 நாட்கள் வரை ஓடியது. இலங்கை கிங்ஸ்லி யிலும் 100 நாட்கள் ஓடி மகத்தான வெற்றி பெற்றது.

ஒரு சில நடிகர்கள் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு தியேட்டர்களில் வடக்கயிறு போட்டு இழுத்து 100 நாட்கள் ஓட்டி விட்டு 100 நாட்கள் விழாவுக்கு அந்த நடிகர் கம்பீரமாக வருவதை பார்க்கும் போது வியப்பாக இருக்கும். இதற்குதான் ஆசைப்பட்டாயா கணேசா? என்று கேட்கவேண்டும் போல தோன்றும். ஆனால் நம் புரட்சி நடிகரோ 7 தியேட்டரில் 100
நாட்கள் ஓடிய "தாயை காத்த தனயன்", "ஆயிரத்தில் ஒருவன்", 20 திரையரங்கில் ஓடிய "உலகம் சுற்றும் வாலிபன்" உட்பட பட படங்களுக்கு விழாவுக்கு வர மறுத்து விட்டார்.
எந்த பேரும் புகழையும் தேடிப் போகாதவர். நாடி வந்த விழாக்களையும் தவிர்க்கும் ஒரு மாமனிதர் மக்கள் திலகம் மட்டுமே..........ksr.........

orodizli
9th October 2020, 01:45 PM
இன்று பிற*ந்த*நாள் காணும் இடியோசை சிரிப்புக்குர*லோன் பி.எஸ்.வீர*ப்பா, மக்கள் திலகத்துட*ன் "ஜெனோவா" என்ற காவிய*த்தில் இட*ம் பெறும் காட்சி..

இவ*ர் த*லைவ*ருட*ன் ந*டித்துள்ள ப*ட*ங்க*ள்..

ஸ்ரீமுருக*ன்,
ராஜ*முக்தி,
நாம்,
ம*ருத*நாட்டு இள*வ*ர*சி, க*லைஅர*சி,
ச*க்க*ர*வ*ர்த்தி திரும*க*ள், ராஜ*ராஜ*ன்,
ம*காதேவி, ம*ன்னாதிம*ன்ன*ன், விக்கிர*மாதித்த*ன், ஆன*ந்த*ஜோதி, அர*ச*க*ட்ட*ளை,
நாடோடி மன்ன*ன், அலிபாபாவும் 40 திருட*ர்க*ளும்,

இத*ய*க்க*னி,
ப*ல்லாண்டு வாழ்க , ந*வ*ர*த்தின*ம்,
ஊருக்கு உழைப்ப*வ*ன், மீன*வ* ந*ண்ப*ன்,
ம*துரையை மீட்ட சுந்த*ர*பாண்டிய*ன் ஆகிய
பட*ங்க*ளில் ந*டித்துள்ளார்.

ஜெனோவா ப*ட*த்தில் த*லைவ*ரும், வீர*ப்பாவும் மோதும் வாள் ச*ண்டை 1953ல் என்ன வேக*த்துட*னும் ஆக்ரோஷ*த்துட*னும் இருக்குமோ அதே சுறுசுறுப்பிற்கு ச*ற்றும் குறையாம*ல் 1978ல் வெளிவ*ந்த* மதுரையை மீட்ட சுந்த*ர*பாண்டிய*ன் ப*ட*த்தில் #இருவ*ரும் மோதுவ*ர்.

1911ல் கோவை அருகே உள்ள காங்கேயம் என்ற* ஊரில் பிற*ந்தார். இன்று 109வ*து பிற*ந்த* தின*ம்..........Shm...

orodizli
9th October 2020, 01:50 PM
50.ஆண்டுகள் நிறைவு பெற்ற மக்கள் திலகத்தின் ''எங்கள் தங்கம் '' 9.10.1970.........

மக்கள் திலகம் எம்ஜிஆர் ''உலகம் சுற்றும் வாலிபன்'' படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்லும் முன் [செப் 1970 ] படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்றார் .மக்கள் திலகம் வெளி நாட்டில் இருந்த நேரத்தில் எங்கள் தங்கம் வெளியானது .மேகலா பிக்சர்ஸ் தயாரித்த முதல் வண்ணப்படம் .மக்கள் திலகம் எம்ஜிஆர் திமுகவிற்காக , இலவசமாக நடித்த படம் .

படமும் 100 நாட்கள் ஓடி மாபெரும் வெற்றியை பெற்றது .100 வது நாள் வெற்றி விழாவில் பேசிய முரசொலி மாறன் எங்கள் தங்கம் வெற்றி மூலம் தங்கள் நிறுவனம் கடனிலிருந்து மீண்டது என்றும் அதற்காக புரட்சி நடிகர் எம்ஜிஆர் அவர்களுக்கு நன்றி என்று தெரிவித்தார் ..........sb...vr...

orodizli
9th October 2020, 01:51 PM
இணைந்த கைகள்

ஏப்ரல் மாதம் [1970] ஈரானில் தமிழ் பிடிப்புக்காக புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். விரைவில் வெளிநாடு போகவிருக்கிறார். இத்தகவலை அவரே அண்மையில் நிருபர்களிடம் வெளியிட்டார்.

ஊட்டியில் வெளிப்புறக் காட்சிகள் படப்பிடிப்புக்கள் எம்.ஜி.ஆர். போயி ருந்த பொழுது [ செப்டம்பர் 1969 ] நிருபர்கள் அவரைப் பேட்டிகண்டார்கள்.

"இணைந்த கைகள்" படப்பிடிப்புக்காகத்தாம் வெளிநாடு செல்லவிருப்பதாக எம்.ஜி.ஆர். கூறினார் . வருகிற ஏப்ரல் மாதம் ஈரானி லும் அதன் சுற்றுவட்டாரத்திலுள்ள பகுதிகளிலும் படப் பிடிப்புகள் நாடாகும் என்றும் அதற்காக தான் வெளிநாடு போகவிருப்பதாகவும் அவர் கூறினார் ........sb...

orodizli
9th October 2020, 01:54 PM
#பொன்மனச்செம்மலும் #ஆன்மீகச்செம்மலும்

தமிழக முதல்வர் பொன்மனச்செம்மலும், கிருபானந்த வாரியார் சுவாமிகளும் ஒரு விழாவில் கலந்துகொண்டிருந்தனர்... விழா முடிந்தது...வாரியார் சுவாமிகள் மேடையிலிருந்து கீழிறங்கி காருக்காக வெளியில் காத்துக்கொண்டிருந்தார்...

புரட்சித்தலைவரை அனைவரும் சூழ்ந்து கொண்டதால் அவரால் மேடையை விட்டுக் கீழே இறங்கமுடியவில்லை...

அங்கிருந்தபடியே, வாரியார் சுவாமிகள் வெளியில் நிற்பதைப் பார்த்த எம்ஜிஆர் அதிர்ச்சியுற்று தமது உதவியாளரை அழைத்து சுவாமிகள் நிற்பதன் காரணத்தைக் கேட்கச்சொல்கிறார்...

உதவியாளரும், சுவாமிகள் வீட்டிற்குச் செல்ல கார் வராததால் அங்கு நின்று கொண்டிருக்கிறார் என எம்ஜிஆரிடம் சொல்ல... துணுக்குற்ற எம்ஜிஆர், விறுவிறுவென்று மேடையை விட்டுக் கீழிறங்கி வாரியார் சுவாமிகள் அருகில் செல்கிறார்...

தமது காரை வரச்சொல்கிறார்... வாரியாரிடம், 'சாமி, என் காரில் ஏறுங்க, நானே உங்களை விட்ல விட்டுடறேன்' என்று பணிவாக வாரியார் சுவாமிகளை தமது காரில் அமரச்செய்கிறார்...தானும் அவரருகில் அமர்கிறார்...

டிரைவரிடம், 'விடு காரை சிந்தாதரிப்பேட்டைக்கு' என்கிறார்... (வாரியார் வீடு சிந்தாதரிப்பேட்டையிலுள்ளது)

அதற்குள் சிந்தாதரிப்பேட்டையிலுள்ள காவல்நிலையத்திற்கு தகவல் பறந்துவிட்டது...மக்கள் கூட்டம் வேறு... வாரியார் சுவாமிகள் குடியிருந்த சிறிய தெருவான 'சிங்காணிச்செட்டித்தெரு' விற்குள் முதல்வர் கார் நுழைகிறது...இருபுறமும் மக்கள் புடை சூழ...

இதுவே வேறு யாராவது இருந்தால் என்ன பண்ணுவாங்க!! ...ஒரு வாடகை வண்டியை ஏற்பாடு செய்து அனுப்பிவைப்பாங்க!!!

தமிழக முதல்வர் நம்ம வாத்தியார் நினைத்திருந்தால் ஆயிரம்
கார்கள் அணிவகுத்து நின்றிருக்கும்...
ஆனால் அதைச் செய்யவில்லை!!

சாதாரண மானிடப்பிறவியா நம்ம வாத்தியார்... சராசரி எண்ணங்கள் தோன்றுவதற்கு ???

அவர் தான் பொன்மனச்செம்மல் ஆயிற்றே ...!!! ������...vr...

orodizli
9th October 2020, 01:56 PM
பொதுச்சேவைக்கான #புரட்சித்தலைவர் #எம்ஜிஆர் அவர்களுக்குபட்டங்களும் வழங்கியவர்களும்

கொடுத்துச் சிவந்த கரம் - #குடந்தை ரசிகர்கள்

கலியுகக் கடவுள் - #பெங்களூர் விழா

நிருத்திய சக்கரவர்த்தி - #இலங்கை

ரசிகர்கள்

பொன்மனச் செம்மல் - #கிருபானந்த_வாரியார்

மக்கள் திலகம் - #தமிழ்வாணன்

வாத்தியார் - #திருநெல்வேலி ரசிகர்கள்

புரட்சித்தலைவர் - கே.ஏ.#கிருஷ்ணசாமி

இதய தெய்வம் - #தமிழ்நாடு பொதுமக்கள்

மக்கள் மதிவாணர் - இரா. #நெடுஞ்செழியன்

ஆளவந்தார் - ம. பொ. #சிவஞானம்

#பொன்மனச்செம்மல்_புகழ்_ஓங்குக

செஞ்சி #முனியப்பன்.........

orodizli
10th October 2020, 07:36 AM
இன்று 10/10/2020 நகைச்சுவை நடிகை
ஆச்சி மனோரமா வின்...நினைவு நாள்
ஒரு பிலாஷ் பேக்...நம் தலைவர் படத்தின்

நம் நாடு 1969
நம் நாடு திரைப்படம் வெளியானபோது விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்!
ஓர் உரையாடல்

வி.எஸ்.சுப்பையா: இந்தப் படம் முதலிலிருந்து கடைசி வரை நல்ல ‘என்டர்டெய்ன்மென்ட்’டா இருக்கு. சில இடங்களில் நம்மையும் அறியாமல் கண்ணீர் விடுமளவு இருக்கு. கதாநாயகன் துரை, புடவை வாங்கித் தரும் இடம், குழந்தைகள் கதாநாயகனுக்குச் சர்க்கரைப் பொங்கல் கொண்டு வந்து தரும் இடம்… இதெல்லாம் உதாரணம்.

ஜெயராஜ்: சாதாரணமா கலர் படம் என்றால், வர்ணங்கள் கொஞ்சம் ‘டார்க்’கா இருக்கும். இந்தப் படத்தில் ரொம்ப லைட்டா, மனதுக்குக் குளிர்ச்சி அளிப்பதுபோல இருந்தது.
சீனிவாசன்: ஜெயராஜ் ஓவியர் அல்லவா? வர்ணத்தைப் பத்தி அவர் சொன்னால் சரியா தான் இருக்கும்.

மனோரமா: கதாநாயகன் கதாநாயகி முதன்முதலில் சந்திக்கும் இடம் – ஏதாவது விபத்திலேயோ, அல்லது எங்காவதோதான் சந்திப்பாங்க. இந்தப் படத்திலே அவர்கள் சந்திப்பு புது மாதிரியா இருந்தது. ஒருவருக்கு உதவி செய்யப் போக, தன் பணமே பிக்பாக்கெட் போக, ஹீரோயின் ஹீரோ சொக்காயைக் கேட்கறது, சண்டை போடறது, கடைசியிலே வாட்சை வாங்கிக்கிறது இதெல்லாம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அந்த ஹீரோயின் ஹீரோவை அதுவரைக்கும் விரும்பறாளா இல்லையான்னு காட்டாமல்,
‘உங்களுக்குப் பெண்ணை நான்தான் ‘செலக்ட்’ பண்ணுவேன்; என்னைக் கேட்காமல் செய்துட்டீங்களே’ன்னு சொல்றது, அதாவது அந்தப் பாத்திரம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதை ஜெயலலிதாவும் ரொம்ப நல்லா பண்ணியிருக்காங்க. காதலா இல்லாமல் வேற ஒரு விதமா அவங்க காதல் ஆரம்பித்திருக்கிறது நல்லா இருக்கு!

ஜெயராஜ்: இப்பல்லாம் தமிழ்ப் படங்களில், கட்டிப் பிடிச்சுக் காதல் பண்ணும் காட்சி அதிகமா இருக்கும். இந்தப் படத்திலே அப்படி இல்லை.
மனோரமா: ஆமாம்! நான் கூட, ஹீரோ ‘உன்னைத்தான் கல்யாணம் பண்ணிக்கறேன்’னு சொல்லிட்டு, வெளியே ஓடினதும் ரெண்டு பேரும் சேர்ந்து மழையிலே பாடப் போறாங்கன்னு நெனைச்சேன். இதிலே அது இல்லை. அதுவே நல்லா இருந்தது.
ராஜம் கிருஷ்ணன்: இந்தப் படத்திலே பொதுவா எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் இவர்களைத் தாக்குவதுபோல மனசில் படுது!

சீனிவாசன்: இல்லீங்க. பொதுவா அரசியலில் இருக்கும் எல்லோருக்குமே இது பொருத்தமா இருக்கும். அவர் நகரசபை சேர்மனா இருக்கும்போது, சிலர் தனக்கு ஒன்றும் செய்யவில்லை என்பதற்காக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வராங்க. இதிலே காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டுன்னு வேறுபாடே வேண்டாம். ஜனநாயகம் என்றைக்கு ஆரம்பித்ததோ, அன்றை யிலிருந்து இது போன்ற நபர்கள் அரசியலில் இருக்கத்தான் செய்கிறார்கள். பொதுவா சொல்லப் போனா, இது ஒரு நல்ல ‘மாரல் டீச்சிங்’. நல்ல கருத்துக்களை வெளிப்படுத்தும் படம்.

பிரேமா: வசனம் கூட ரொம்ப நல்லா இருக்கு. உதாரணமா, ரங்காராவ், ‘முன் ஜென்மத்திலேயே குழந்தை லஞ்சம் வாங்கியிருக்கும், அதனாலேதான் பிறக்கும்போது கையை மூடிக்கிட்டு பிறக்குது.’

சசிகலா: அப்புறம் எம்.ஜி.ஆர். தன் பிரதர்கிட்டே சொல்றாரே… ‘நான் ஊமைகளுக்காகச் செவிடர்கள்கிட்டே பேசிக்கிட்டு இருந்தேன்’னு, அந்த வசனமும் நல்லா இருந்தது.
ராஜப்பா: படம் ஆபாசம் இல்லாமல், விரசம் இல்லாமல் இருப்பதுதான் எனக்குப் பிடிச்சுது!

சுப்பையா: ‘வாங்கய்யா, வாத்தியாரய்யா‘ன்னு ஒரு பாட்டு வருதே, அதிலே ஏதாவது குறிப்பு இருக்கா? அது யாரையாவது குறிக்குதா? (சிரிப்பு)
மனோரமா: இல்லீங்க. முதல்லே முதியோர் கல்விக்காகத்தானே குப்பத்துக்கு வர்றார் துரை? அப்போ அவர் வாத்தியார்தானே?

ராஜம் கிருஷ்ணன்: படத்திலே காமெடியே அதிகம் இல்லை! நாகேஷ் இருந்தும் கூட அதிக ஹாஸ்யம் இல்லை.
சசிகலா: ஆமாம்! எம்.ஜி.ஆர். சேர்மன் ஆயிட்டபோது நாகேஷ் ஏன் நகரசபைக் கூட்டத்திலே அவர் பின்னாடியே நின்னுக்கிட்டு இருக்கார்?

சீனிவாசன்: செக்ரெட்டரி ஆகியிருப்பார்!
சசிகலா: அது சரி, பின்னாலே ஜெயலலிதா எப்படி இங்கிலீஷ் பேசறாங்க?

மனோரமா: முதியோர் கல்விக்காக வந்த ஆசிரியர் சொல்லிக் கொடுத்திருக்கலாம், இல்லியா?
சீனிவாசன்: சரி, நான் ஒண்ணு ஒண்ணு கேட்கிறேன். ஒரு படத் திலே எலந்தப் பழம் வந்தா, உடனே இன்னொரு படத்திலே மாம்பழம், அந்தப் பழம் இந்தப் பழம்னு ஏதாவது வந்தே ஆகணுமா என்ன?

ஜெயராஜ்: அந்தம்மாவைப் போய் கேட்டீங்கன்னா, அவங்க எப்படிச் சொல்லுவாங்க? புரொடியூஸரைத்தான் கேட்கணும். அதிருக்கட்டும், ரங்காராவைப் பத்தி யாரும் சொல்லலையே?

சீனிவாசன்: அவரை நல்ல மனுஷனா பார்த்துப் பார்த்து, இந்த மாதிரி பார்க்க ஆரம்பத்தில் ஒரு மாதிரி சங்கடமா இருந்தது. போகப் போக பிக்கப் பண்ணிடறாரு. அதாவது, பாதாள பைரவி வில்லன் மாதிரி திரும்பிடறாரு!

ராஜப்பா: அசோகன் மட்டும் என்னவாம்?
பிரேமா: ஆமாம்! ரொம்ப அடக்கமா நடிச்சிருக்கார். பகவதியும் நல்லா நடிச்சிருக்கார். சாதாரணமா கலர் படங்களில் டார்க் கலர் டிரஸ் போட்டுக்கிட்டு இருப்பார் எம்.ஜி.ஆர். இதிலே ரொம்ப ப்ளீஸிங் கலரைப் போட்டுக்கிட்டு, ரொம்ப இதுவா இருக்கார்!

சுப்பையா: மொத்தத்திலே அறிவுரைகள், கருத்துக்கள் எல்லாம் இருக்கு. அதையும் ‘என்டர்டெயின்மென்ட்’ எல்லாத்தையும் ஒண்ணா சேர்த்து, நல்லா போர் அடிக்காம எடுத்திருக்காங்க!
சீனிவாசன் விருதுநகர் எம் எல் ஏ (காமராஜரைத் தோற்கடித்தவர்)
மனோரமா................

orodizli
10th October 2020, 07:40 AM
புரட்சித்தலைவர் தன் திரைப்பட வெற்றிகளை
விளம்பரத்தில் போட்டு தான் வெற்றி என என்றுமே சொன்னதில்லை...
நம்நாடு
திரைப்படத்தின்
விளக்கத்தை
சாதாரண நடிகர்களின் ரசிகர்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை...
எங்கள் தலைவரின் சாதனையை விளக்கும் பதிவில் புகுந்து கொண்டூ எங்களை
நீ கேள்வீ கேட்க முடியாது.

இரும்பு அடிக்கும் இடத்தில் ஈ...களுக்கு
என்ன வேலை...
52 அரங்கில் ஒடியதும்
வசூல் பெற்றதும்
உலகத்திற்கு தெரியும்.
கடந்த ஆண்டுகளில் நம்நாடு காவியம் பெற்ற அசைக்க முடியாத சாதனையும் தெரியும்...
சாதாரண நடிகன் படம் எத்தனை தியேட்டர் ஒட்டபட்டால் என்ன..
பொய் விளம்பரம் கொடுத்தால் என்ன...
லட்சத்திற்கு மேல் டிக்கட் வாங்கி பொய்வசூல் காண்பித்தால் எங்களுக்கு என்ன..
வசூல் சக்கரவர்த்தி
எம்.ஜி.ஆர் என்பது
உலகத்திற்கே தெரியும்............ur...

orodizli
10th October 2020, 07:41 AM
"தாயைக் காத்த தனயன்" காவியம் விறுவிறுப்பான பொழுதுபோக்குப்படம். புலியை வேட்டையாடப் போகும் மக்கள் திலகத்துக்கு காலில் அடிபட்டு புலியிடம் இருந்து தப்ப சிறிய குகைக்குள் மறைந்து கொள்வார். வெளியே புலி குகையை நோக்கி பாயும் காட்சி 3டி போல மிரட்டும். அப்போது மக்கள் திலகம் முகத்தில் பய உணர்ச்சியையும் சோர்வால் கண் மூடுவதையும் திடுக்கிட்டு எழுவதையும் அற்புதமாக மிகவும் இயல்பாக காட்டியிருப்பார். தேவருடன் சிலம்ப சண்டை பொறி பறக்கும். சண்டைக்கு முன் மக்கள் திலகம் வைக்கும் ஸ்டெப்ஸ் ... தியேட்டரே அமர்க்களப்படும். இந்தப் படத்தில்தான் எம்ஆர்ஆர் வாசு அறிமுகம். சண்டிக் குதிரை... பாடலுக்கும் ஆடியிருப்பார்.

கட்டித் தங்கம் வெட்டி எடுத்து பாடல் காட்சியில் மக்கள் திலகம் காலில் அடிபட்டதால் முதல் பாராவில் குச்சியை ஊன்றியபடி நொண்டி நடப்பார். நமக்கு அதெல்லாம் பிடிக்காது என்பதை சரியாக உணர்ந்து கனவு காண்பது போல காட்சியை மாற்றி, அடுத்த பாராவில் பளீரென்ற தோற்றத்துடன் ‘சின்ன யானை’ நடைபோட்டு வருவார். அதைப் பார்த்தபிறகுதான் நமக்கு பாட்டில் சந்தோஷம் வரும். தியேட்டரில் கைதட்டலும் விசிலும் பறக்கும்....... Swamy...

orodizli
10th October 2020, 07:43 AM
இங்கே சிவாஜி ரசிகரான முகமது தமீம் என்ற நண்பர் நம்நாடு 50 நாள் விவரங்கள் கேட்டதற்காக நண்பர் ராஜூ கோபப்பட்டிருக்கிறார். யார் வேண்டுமானாலும் தாராளமாக இங்கே வந்து கேட்கட்டும். தெரிந்ததை, உண்மையை சொல்வோம். இதில் என்ன இருக்கிறது? நம்மிடம் உள்ள உண்மையான விவரங்களை சொல்வோம். தேர்த்திருவிழா, காதல் வாகனம் எல்லாம் 100 நாள் ஓடியது என்று நாம் பொய் சொல்லப் போகிறோமா? அந்தப் படங்கள் 100 நாள் ஓடாததால் மக்கள் திலகம் நம்பர் 1 இல்லை, வசூல் சக்கரவர்த்தி இல்லை, அதிகம் சம்பளம் வாங்கிய நடிகர் இல்லை என்று ஆகிவிடுமா? இதெல்லாம் நிரூபிக்கப்பட்ட வரலாறு. ஓடிய படங்களை ஓடியது என்று சொல்லப் போகிறோம். ஓடாததை ஓடவில்லை என்று சொல்லப் போகிறோம். நடிகப் பேரரசரே மக்கள் திலகத்தின் ஓடாத படங்களை ஓடவில்லை, எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை என்று உண்மையை சொல்லி இருக்கிறார். அதற்கான காரணங்களையும் சொல்லி இருக்கிறார். நானும் சொல்லி இருக்கிறேன். மக்கள் திலகத்தின் வெற்றி மறைவான, போலியான வெற்றி இல்லை. நம்நாடு வெற்றியும் போலியானது இல்லை.

அதே நேரம் இங்கே நீக்காத அவரது பதிவை நீக்கியதாக முகமது தமீமின் தவறான குற்றச்சாட்டை நண்பர் ராஜராஜன் சுட்டிக் காட்டியிருக்கிறார். ஏன் முகமது தமீம் சார் இப்படி செய்கிறீர்கள்? இப்படி செய்வதன் மூலம் உங்கள் நோக்கம் என்ன? எங்களைப் பற்றி சிவாஜி கணேசன் ரசிகர்களிடம் மேலும் தவறான தோற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதா? தாராளமாக இங்கே வந்து கேள்வி கேளுங்கள், உங்கள் கருத்தை சொல்லுங்கள். ஆனால், எங்கள் மீது இல்லாத, தவறான குற்றச்சாட்டை வெளியே சொல்லாதீர்கள். அடிக்கடி வாருங்கள். நன்றி. ...... Swamy...

orodizli
10th October 2020, 07:50 AM
புரட்சித் தலைவருக்கு உள்ள தனிப்பட்ட சிறப்பு தன்னைப் போற்றுவோருக்கு மட்டுமின்றி, கடுமையாக தூற்றுவோருக்கும் உதவிகள் செய்வார். சொல்லப் போனால், தன் மீது கல் வீசுவோருக்கு கனி தரும் மரம் போல, தன்னைக் கடுமையாக தாக்கிப் பேசுவோருக்கு அதிகமாகவே உதவுவார். அவர்கள் திறமையாளர்களாக இருந்துவிட்டால் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு, அவர்களின் திறமைக்கு உரிய கவுரவமும் அங்கீகாரமும் அளிப்பார்.

எம்.ஜி.ஆர். நடித்த சூப்பர் டூப்பர் ஹிட் படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. படத்தின் க்ளைமாக்ஸுக்கு முன் ஒரு பாடல். அடிமை முறையை ஒழித்து சுதந்திர சமுதாயம் காணப் புறப்பட்ட ஒரு புரட்சி வீரன் பாடுவது போன்ற பாடல்.அந்தக் காட்சிக்கு பலர் பாடல் எழுதியும் எம்.ஜி.ஆருக்கு திருப்தி ஏற்படவில்லை.

அப்போது ஒரு கவிஞர் ஏற்கெனவே எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்தவர்தான். அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக எம்.ஜி.ஆரை மேடைகளில் கடுமையாக விமர்சித்து வந்தார். ஆனாலும், அந்தக் கவிஞர் என் படங்களில் பாடல் எழுதக் கூடாது என்று எம்.ஜி.ஆர். கூறிய தில்லை. எம்.ஜி.ஆர். படங்களுக்கு நான் பாடல் எழுத மாட்டேன் என்று அந்த கவிஞரும் சொன்ன தில்லை. மேடைப் பேச்சுக்கள் ஏற்படுத்திய தர்ம சங்கடத்தால் எம்.ஜி.ஆர் படங்களின் தயாரிப்பாளர் களும் இயக்குநர்களும் கவிஞரை அணுகத் தயங் கினர். அதனால், எம்.ஜி.ஆரின் சில படங்களில் அவர் பாடல்கள் இடம்பெறவில்லை.

‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் மேலே குறிப் பிட்ட காட்சிக்கான பாடலுக்காக பல கவிஞர்கள் எழுதியும் திருப்தி ஏற்படாத நிலையில், எம்.ஜி.ஆரை விமர்சிக்கும் அந்தக் கவிஞரை விட்டே அந்த பாடலை எழுதச் சொன்னால் என்ன? என்ற யோசனை பிறந்தது. படக்குழுவினர் கவிஞரி டம் விஷயத்தைச் சொல்ல, அவரும் எழுதிக் கொடுத்தார். எம்.ஜி.ஆருக்கு அந்தப் பாடல் மிக வும் பிடித்துப் போனதுடன் கவிஞரின் திறமையை பாராட்டி அந்தப் பாடலை ஓ.கே. செய்தார்.

அந்தப் பாடல்தான் காலத்தால் அழியாத

‘அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்…’

அந்தப் பாடலை எழுதியவர் கவியரசு கண்ண தாசன். அவர் கடுமையாக தாக்கிப் பேசுவாரே தவிர, மனதில் ஒன்றும் கிடையாது என்பதும் எம்.ஜி.ஆருக்குத் தெரியும்.

எம்.ஜி.ஆர். நடித்த வெள்ளிவிழா படமான ‘மாட்டுக்கார வேலன்’ படத்தில்,

‘பூ வைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா?’

என்ற இனிமை யான பாடலை எழுதியவர் கண்ணதாசன். நாயகி யைப் பார்த்து எம்.ஜி.ஆர். பாடும் வரிகளில்

‘பள்ளிக் கணக்கு கொஞ்சம் சொல்லிப் பழக்கு, நீ இல்லையென்றால் நான் தொடுப்பேன் காதல் வழக்கு’

என்று வரும்.

பதிலுக்கு நாயகி, ‘போடுங்கள்.. கூண்டில் ஏற்றுங்கள்.. நான் போதும் என்று சொல்லும் வரை நீதி சொல்லுங்கள்’

என்று பாடுவதுபோல எழுதியிருந்தார் கண்ணதாசன். நாயகி பாடும் வரிகள் எம்.ஜி.ஆருக்கு திருப்தி இல்லை. கண்ணதாசனிடம் சொல்லி அந்த வரிகளை மாற்றச் சொன்னார்.

கண்ணதாசன் உடனே மாற்றிக் கொடுத்த வரிகள்தான்,

‘போடுங்கள் கூண்டில் ஏற்றுங்கள், உங்கள் பொன்மனத்தை சாட்சி வைத்து வெற்றி கொள்ளுங்கள்’.

நட்பு ஒருபுறம் இருந்தாலும், எம்.ஜி.ஆரின் மனதை பொன்மனம் என்று வர்ணித்தாலும், அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக எம்.ஜி.ஆர் முதல்வரான பிறகும் அவரை தாக்கி பேசுவதை கண்ணதாசன் நிறுத்தவில்லை.

ஒருநாள், முதல்வர் வீட்டில் இருந்து கண்ணதாசன் வீட்டுக்கு தொலைபேசி அழைப்பு. தனது மகன் திருமண விஷயமாக கண்ணதாசன் வெளியூர் சென்றிருந்தார். இப்போதுபோல அப்போது செல்போன் எல்லாம் கிடையாது. தீவிர முயற்சிக்குப் பிறகு, கண்ணதாசனை தொடர்பு கொண்ட எம்.ஜி.ஆர்., அவரை உடனே புறப்பட்டு சென்னை வரச் சொன்னார்.

எதற்காக வரச் சொல்கிறார் என்பது புரியாமலே தன்னை சந்தித்த கண்ணதாசனுக்கு எம்.ஜி.ஆர். இன்ப அதிர்ச்சி அளித்தார். ‘‘தங்களை தமிழக அரசின் அரசவைக் கவிஞராக நியமிக்க முடிவு செய்திருக்கிறேன். சம்மதம் என்ற ஒரே வார்த்தையை மட்டுமே உங்களிடம் எதிர்பார்க்கிறேன்’’ என்றார். எம்.ஜி.ஆரின் அன்பிலும் மகிழ்ச்சியிலும் திக்குமுக்காடிப் போனார் கண்ணதாசன்.

‘அரசவைக் கவிஞர்’ பட்டமளிக்கும் விழாவில் உணர்ச்சிவசப்பட்ட கண்ணதாசன், ‘‘நான் இறந்துவிட்டால் எனக்கு அரசு மரியாதை கிடைக்கும். இந்த சிறப்பை எனக்கு வழங்கிய எம்.ஜி.ஆருக்கு முன்கூட்டியே நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.

அவர் கூறியது போலவே நடந்தது. அமெரிக் காவுக்கு சிகிச்சைக்காக சென்ற கண்ணதாசன் வெறும் உடலாகத்தான் திரும்பினார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின் இறுதி ஊர்வலத்துக்குத் தயாரானது. கண்ணதாசன் உடல் வாகனத்தில் ஏற்றப்பட்ட பின், யாரும் எதிர்பாராத வகையில் முதல்வர் எம்.ஜி.ஆர். மின்னலாய் அந்த வாகனத்தின் மீது ஏறிவிட்டார். கண்ணதாசன் உடலை சற்று உயர்த்தி சிறிய ஸ்டூல் மீது அவரது தலையை பொருத்தி கட்டி விட்டு கீழே இறங்கிய எம்.ஜி.ஆர்., ‘‘இப்போது, கவிஞரின் முகம் பொதுமக்கள் பார்க்க வசதியாக நன்றாக தெரிகிறது’’ என்றார்.

எம்.ஜி.ஆர்… அதிலும் தமிழகத்தின் முதல்வர். கண்ணசைத்தால் காரியம் செய்ய காத்திருப்போர் ஆயிரம் பேர். என்றாலும் கண்ணதாசனின் முகத்தை பொதுமக்கள் இறுதியாக பார்த்து அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதற்காக, தானே வேன் மீது ஏறினார் என்றால், கவிஞர் மீது அவர் கொண்டிருந்த அன்பும், எதையும் மக்களின் கோணத்தில் இருந்தே பார்க்கும் எம்.ஜி.ஆரின் நுண்ணறிவும் பிரமிக்கத்தான் வைக்கும்.

சினிமாவில் பொதுவாக பெண்களின் அழகைத்தான் கவிஞர்கள் வர்ணிப்பார்கள். ஆண்களின் அழகையும் வர்ணிக்க முடியும் என்றால் அது எம்.ஜி.ஆருக்குத்தான் பொருந்தும்.

‘குடும்பத் தலைவன்’ படத்தில் ‘கட்டான கட்டழகு கண்ணா, உன்னைக் காணாத பெண்ணும் ஒரு பெண்ணா?’

என்று எம்.ஜி.ஆரை வர்ணித்திருப்பார் கண்ணதாசன்.

எம்.ஜி.ஆரின் அழகை, ஆளுமையை ‘நீதிக்குப் பின் பாசம்’ படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலில், நாயகி பாடுவது போல கண்ணதாசன் விவரித்திருப்பார். அந்த வரிகள்…

‘தேக்கு மரம் உடலைத் தந்தது

சின்ன யானை நடையைத் தந்தது

பூக்கள் எல்லாம் சிரிப்பை தந்தது

பொன்னல்லவோ நிறத்தை தந்தது’

இந்த வரிகளைப் படித்தாலே நினைவுக்கு வருபவர் எம்.ஜி.ஆராகத்தான் இருக்க முடியும்.

எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த கண்ண தாசன் பாடல் ‘மன்னாதி மன்னன்’ படத்தில் அவர் எழுதிய ‘அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா...’பாடல். காரில் எம்.ஜி.ஆர். செல்லும்போது அவர் கேட்டு ரசிக்கும் பாடல்களில் இந்த பாடல் தவறாமல் இடம் பெறும்.

Mgr பக்தன் சைதை s.மூர்த்தி.........

orodizli
10th October 2020, 01:39 PM
நமது தங்க தலைவரின் ரசிகர்கள் / பக்தர்கள் அனைவருக்கும் புரட்சி தலைவரின் ஆசியுடன் இனிய காலை வணக்கம்...

இன்று அக்டோபர் 10

1972ஆம் ஆண்டு அக்டோப*ர் 10 ஆம் தேதியான இன்றுதான் மக்கள் திலகத்தை திமுக*விலிருந்து நீக்கினார் க*ருணாநிதி. திமுக அமைச்ச*ர்க*ளும், செய*ற்குழு, பொதுக்குழு உறுப்பின*ர்க*ளும் த*ங்க*ள*து சொத்து க*ணக்கை மக்களிட*ம் ப*கிர*ங்க*மாக* வெளியிட* வேண்டும் என்று கேட்ட*த*ற்காக* இந்த* ந*ட*வ*டிக்கை.

ஆனால், உண்மையான கார*ணம் க*ட்சியை த*ன் முழுக்க*ட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும், த*ன*து வாரிசுக*ளின் அர*சிய*ல் எதிர்கால*த்திற்கு எம்ஜிஆர் முட்டுக்க*ட்டையாக இருந்துவிட*க் கூடாது என்ற* க*ருணாநிதியின் சுய*ந*லமே ஆகும்......

திமுகவிற்கு தலைவரின் கடைசி கும்பிடு....

என்.வேலாயுதன்
திருவனந்தபுரம்..........

orodizli
10th October 2020, 01:40 PM
48-ஆண்டுகளுக்கு முன்பு திரு.கருணாநிதி செய்த ஒரு வரலாற்று பிழை.. புரட்சித்தலைவரை திமுகவை விட்டு நீக்கியது..

அந்த பொன்னான நாள் இன்றுதான்...

ஆம்... அது 1972-ஆம் ஆண்டு அக்டோபர் 10-ஆம் தேதி..

திமுகவின் பொதுக்குழு கூடி நயவஞ்சகமாக நமது புரட்சித்தலைவரை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்குவதாக அறிவித்தது..

சொடக்கு போட்டு முடிப்பதற்குள், எண்ணி 7-ஆவது நாள் #அதிமுக என்ற தனி இயக்கம் கருவாகி உருவானது...

'இந்த நடிகனின் கூட்டம் நாடாளுமா?' என்று எகத்தாள பார்வை பார்த்த திரு.கருணாநிதிக்கு, அன்று தமிழகம் முழுவதும் எழுந்த எம்ஜியாருக்கான எழுச்சி பார்த்து பதட்டம் ஏற்பட்டது..

இயக்கம் தொடங்கப்பட்ட 1972 அக்டோபர் 17-ஆம் தேதியிலிருந்து 215-ஆவது நாளில், அதாவது 1973 மே 20-ஆம் தேதி நடைபெற்ற திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் 'இரட்டை இலை' என்ற சுயோச்சை சின்னத்தில் நின்று, திமுகவை மூன்றாம் இடத்திற்கு தள்ளி முதல் வெற்றியை சுவைத்தது நமது இயக்கம்...

அந்த வெற்றி திமுகவுக்குள் மிக பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. 'தப்பு செய்துவிட்டோமோ?' கலங்கிப்போனார் கருணாநிதி...

அன்று தொடங்கிய திமுகவின் வீழ்ச்சி.. இன்று வரையிலும் தொடர்கிறது..*

நம் இயக்கதை குறைத்து மதிபிட்டவிட்டதின் பலனை இன்றளவும் அவர்கள் அறுவடை செய்து கொண்டே இருக்கிறார்கள்..

அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட #திமுக, இன்று #அஇஅதிமுக வின் அடிமட்ட தொண்டனின் ஒவ்வொறு அரசியல் அசைவையும் கண்டு அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறது..

2021-சட்டமன்ற தேர்தலிலும் அவர்களுக்கு தேல்வியை பரிசளித்து, வெற்றிக்கனியை பறித்து #புரட்சித்தலைவர் மற்றும் #அம்மா அவர்களின் காலடியில் சமர்ப்பிக்க களமாடுவோமாக..

ஆயுத்தமாவோம்.... அணி திரள்வோம்... வெற்றி ஒன்றே நமது குறிக்கோள்........ Albert Paul...

orodizli
10th October 2020, 01:40 PM
8.10.1972 அன்று எம்.ஜி.ஆர் பேசிய அந்தப்பேச்சின் அடுத்தடுத்த நடவடிக்கைகளைத் தொடர்ந்துதான் திராவிட இயக்கத்தில் அ.தி.மு.க என்ற புதிய கட்சி உதயமானது. அரசியலில் அடுத்தடுத்த காய்நகர்த்தல்கள் அரங்கேறின. தமிழக அரசியல் வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்திய அந்தப்பேச்சு இதுதான்....

“திருக்கழுக்குன்றத்தில் பேசுகின்ற நேரத்தில் எனக்கு என்ன உணர்ச்சி ஏற்பட்டதோ என்ன என்ன பேச வைத்தார்களோ அதே சூழ்நிலையைத்தான் நான் இங்கு காண்கின்றேன். அண்ணா அவர்களுடைய உருவச் சிலையை அங்கே திறந்துவைத்து பேசிவிட்டு வந்திருக்கிறேன். ஆகவே, அண்ணா அவர்களைச் சந்தித்துவிட்டு வந்திருக்கிறேன். அண்ணாவின் அனுமதியோடு நான் பேசுகிறேன்.

‘எம்.ஜி.ஆர். என்றால் தி.மு.க.; தி.மு.க. என்றால் எம்.ஜி.ஆர்.’ என்று சொன்னேன். உடனே ஒருவர், “நாங்கள் எல்லாம் தி.மு.க. இல்லையா?” என்று கேட்டார். நான் சொல்கிறேன் நீயும் சொல்லேன். உனக்கும் உரிமை இருக்கிறது. எனக்கும் உரிமை இருக்கிறது. உனக்குத் துணிவில்லாததால் என்னைக் கோழை ஆக்காதே!

உனக்கு துணிவிருந்தால் நான்தான் தி.மு.க. என்று சொல்! நான் மறுக்கவில்லை. நான் மட்டும் தி.மு.க. என்றால்தான் கேள்வி! இதைக்கூட புரிந்துகொள்ளாத தமிழர்கள் கட்சியில் வந்து மாட்டிக் கொண்டார்களே என்பதை நினைத்து அனுதாபப்படுகிறேன். இந்தப் பிரச்னைகள் எல்லாம் தேவையற்றவை. மதி பேசுகையில் நான் கலைத்துறையில் பணியாற்றுவதோடு இன்னும் கொஞ்சம் அதிகமாக அரசியலில் பங்கு கொள்ள வேண்டும் என்று சொன்னார். இவ்வளவு கொஞ்சமாக அரசியலில் பங்கு கொள்வதையே சிலரால் தாங்கிக்கொள்ள முடியவில்லையே! இன்னும் அதிகமாக ஈடுபட்டால் எல்லோருக்கும் என்ன ஆகுமோ? பரிதாபத்துக்கு உரியவர்கள்!

முன்பொருமுறை சொன்னேன், காமராசர் அவர்களை தலைவர் என்றும் அண்ணாவை வழிகாட்டி என்றும். தலைவர்கள் பலர் இருப்பார்கள். இந்தக் கூட்டத்துக்கு அரங்கநாதன் தலைமை வகிக்கிறார். இன்னொரு கூட்டத்துக்கு இன்னொருவர் தலைமை வகிக்கலாம். இப்படித் தலைவர்கள் பலர் இருக்கலாம். ஆனால், கட்சிகளுக்குக் கொள்கைகளைத் தருகிற வழிகாட்டி ஒருவர்தான் இருக்க முடியும். இப்போது ஒப்புக் கொள்கிறார்கள். அண்ணா அவர்கள்தான் தி.மு.க-வுக்கு வழிகாட்டி, காங்கிரசுக்கு மகாத்மா காந்திதான் வழிகாட்டி. இதிலே ஒரு வேறுபாடு அப்போது ஏற்பட்டது.

அப்போதும் இதே மதுரை முத்து, தூக்கி எறிவோம் என்று சொன்னார். தூக்கி எறிந்தது பழக்கம்! ஆனால், யாரை என்றே தெரியவில்லை.
கழக நண்பர்களுக்குச் சொல்கிறேன். நான் மக்களைச் சந்திக்கிறவனே தவிர, தலைவர்களைத் தேடிப்போய் வாழ்க்கையை உயர்த்திக் கொள்ளவேண்டிய நிலையில் என் தாயும், தமிழகமும், அண்ணாவும் வைக்கவில்லை. நான் தொண்டர்களைச் சந்திக்கிறவன். மக்களை நம்புகிறவன். அண்ணா ‘மக்கள் குரலே மகேசன் குரல்’ என்று சொன்னது மாதிரி மக்களை நம்புகிறவன். எனக்கு ஒரு கொள்கை இருந்தது. முன்பு காங்கிரசில் இருந்தேன். அதற்குப் பிறகு நான்கு ஆண்டு காலம் எந்தக்கட்சியிலும் இல்லாமல் அஞ்ஞாதவாசம் இருந்தேன். எந்த அரசியல் கட்சியிலும் என் கொள்கை இருக்கும்.

கடைசியாக பணத்தோட்டம் என்ற அண்ணாவின் புத்தகத்தைப் படித்தபிறகு, அதிலுள்ள பொருளாதாரத் தத்துவங்களை உணர்ந்த பிறகு அதுதான் சரியான பாதை; அண்ணாவின் வழியில் செல்ல வேண்டுமென்று முடிவெடுத்துக் கொண்டு கழகத்துக்கு வந்தவன்.
கவிஞர் கண்ணதாசன் சொல்கிறார்; கருணாநிதி அவர்கள் என்னை கட்சிக்கு அழைத்து வந்தாராம். பாவம்! அண்ணாவை எனக்கு அறிமுகம் செய்தது டி.வி.நாராயணசாமி. எனக்கும் கருணாநிதிக்கும் அடிக்கடி விவாதம் ஏற்படும். நான் காங்கிரசைப் பற்றிப் பேசியிருப்பேன். அனுபேத வாதங்களைப் பற்றிப் பேசியிருப்பேன்.

ஒரு சமயம், கம்யூனிஸக் கொள்கைகளை ஏற்று தீவிரவாதியாக இருந்தவன். ரயில்கள் கவிழ்க்கப்பட்டபோது, அது எனக்குத் தெரிந்திருக்குமோ? என்னவோ? ஆனால், நேதாஜியைப் பற்றி கம்யூனிஸ்டுகள் ரஷ்யாவின் உத்தரவின் பேரில் குறை கூறியதும் என் தொடர்புகளை அறுத்துக் கொண்டேன். இந்தியத்துணைக் கண்டத்தின் அரசியலை இந்தியத் துணைக் கண்டம்தான் தீர்மானிக்கவேண்டுமென்ற கொள்கையை உணர்ந்தேன்.

இப்படி ஒவ்வொரு விதமாக உணர்ந்தபிறகு அண்ணாவின் கொள்கைதான் நாட்டுக்கு மறுமலர்ச்சியைத் தரும் என உணர்ந்து நான் கழகத்துக்கு வந்தவன். அண்ணாவைத் தெரிந்துகொண்டபோது நெற்றியில் விபூதியைப் பூசிக்கொண்டு செயின்ட் மேரிஸ் மண்டபத்தில் அவர்கள் தலைமையில் நடந்த சீர்திருத்த மாநாட்டில் மேடையில் இரண்டு நாள்களும் உட்கார்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன்.
நான் யாருக்கும் பயந்து கொள்கையை மாற்றிக்கொண்டவன் அல்ல. அப்படிப்பட்ட தேவையும் இல்லை. தேர்தல் நேரத்தில் தி.மு.கழகத்துக்கு வாக்குத் தாருங்கள்; இன்னென்ன கொள்கையை நிறைவேற்றுவோம் என்று சொன்னவன் நான். அப்படிச்சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென்று இப்போது சொல்ல உரிமை இல்லையா?

கழகத்துக்கு வாக்குத் தாருங்கள், இன்னென்ன காரியங்களை நிறைவேற்றுவோம், ஊழல் இருக்காது; நேர்மை இருக்கும் என்று சொன்னேனே; அப்படிப்பட்டவைகள் கழகத்தில் இருக்க வேண்டுமென்று விரும்புவதற்கு சொல்வதற்கு எனக்கு உரிமை இல்லையா?
திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து எம்.ஜி.ஆர். போய்விடுவார் என்று சொல்ல அவர்களுக்கு அச்சம், யாருக்கோ என்னுடைய கேள்வி உறுத்துகிறது. அமைச்சர்கல், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணக்குகாட்ட வேண்டுமென்று சொல்கிறோம். கணக்கு அங்கே காட்டிக்கொண்டிருக்கிறோம். ஆனால், இவர்களின் சொந்தக்காரர்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்ற கணக்கை தி.மு.கழகப் பொதுக்குழு ஏன் கேட்கக் கூடாது?

ராமச்சந்திரனுக்கு ஒரு பங்களா இருந்தால் அது ஆட்சிக்கு வந்தபிறகு வந்ததா, அதற்கு முன்னால் வந்ததா, என் மனைவி மீது, உறவினர்கள் மீது பங்களா, சொத்து வந்திருக்குமானால் அது எப்படி வந்தது, மாவட்ட, வட்ட, கிளைக் கழகச் செயலாளர்களுக்கு எப்படி வந்தது? ராமச்சந்திரன் சினிமாவில் நடிக்கிறான்; சம்பாதிக்கிறான்; நீ சம்பாதித்தால் அதற்கு கணக்குக் காட்டு!

இதை எதிர்க்கட்சிகள் கேட்க வேண்டியதில்லை. நாமே கேட்டுக் கொள்வோம். இந்தத் தீர்மானங்களை பொதுக்குழுவில் கொண்டுவர இருக்கிறேன். மக்கள் என் பக்கம் இருக்கிறார்கள் பொதுக்குழுவில் இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவு கிடைக்கவில்லை என்றால் தமிழகம் முழுவதும் இந்தக் கேள்வியைத் தீர்மானமாக உருவாக்குவேன். மக்களைச் சந்திப்பேன்.

மாவட்டச் செயலாளர்கள், கிளைக் கழகச் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள், பதவிகளில் இருப்பவர்கள் குடும்பத்துக்கு வாங்கியிருக்கிற சொத்துகள் இருந்தால் கணக்கு காட்ட வேண்டும். அவைகள் எப்படி வந்தது என்று விளக்கம் சொல்லவேண்டும். பொதுக்குழுவில் நிறைவேற்றி, அதற்காக குழு அமைத்து, அதனிடம் ஒவ்வொருவரும் தங்கள் கை சுத்தமானது என்பதை மக்கள் முன்னால் நிரூபிக்கலாம்.

நிரூபிக்க முடியாதவர்களை மக்கள் முன்னால் நிறுத்தி அவர்கள் தவறு செய்திருந்தால் அவர்களைத் தூக்கி எறிவோம். அண்ணாவின் கொள்கைக்கு ஊறு தேடியவர்களை எல்லாம் மக்கள் முன்னால் நிறுத்தி தூக்கி எறிவோம். 15-ம் தேதிக்குப் பிறகு சந்திக்கிறேன்......... Samuel...

orodizli
10th October 2020, 01:41 PM
பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். திமுகவை விட்டு முழுமையாக நீக்கப்பட்ட நாள் அக்டோபர் 14 தான். தமிழக அரசியலில் புதிய சகாப்தம் தொடங்கிய நாள் அக்டோபர் 14. ஆம், 1972ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதிதான் திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர். முழுமையாக டிஸ்மிஸ் செய்யப்பட்டார். திமுக பொதுக்குழு அக்டோபர் 14 அன்று கூடி திமுகவிலிருந்து எம்.ஜி.ஆரை நீக்கி தீர்மானம் போட்டது.

எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு நீக்கும் தீர்மானத்தை நாவலர் நெடுஞ்செழியன் கொண்டு வர, அதை முதலில் திமுக செயற்குழு நிறைவேற்றியது. அதைத் தொடர்ந்து திமுக பொதுக்குழு கூடி நிறைவேற்றியதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். திமுகவிலிருந்து முழுமையாக நீக்கப்பட்ட நாள் இன்று.
திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டதும் தமிழகமே கொந்தளித்தது. எம்.ஜி.ஆரின் ரசிகர்களும், அவருடைய ஆதரவாளர்களாக இருந்த திமுகவினரும் பெருவாரியாக திரண்டு வந்து எம்.ஜி.ஆர். பின் நின்றனர். திமுக உடைந்தது.. அதிமுக பிறந்தது.
எம்.ஜி.ஆர். விவகாரம் குறித்து மறைந்த கவியரசு கண்ணதாசன் தான் எழுதிய "நான் பார்த்த அரசியல்" என்ற நூலில் விரிவாக எழுதியுள்ளார். அதிலிருந்து...
என்னய்யா செய்யலாம்?
என்னய்யா செய்யலாம்?
கருணாநிதியும் நானும் இந்தக் கட்டத்தில் நன்றாகப் பழகிக் கொண்டிருந்தோம். உள்ளுக்குள்ளே அவர்கள் இருவருக்கும் (கருணாநிதி - எம்.ஜி.ஆர்) தகராறு நடந்து கொண்டிருந்தது. திடீரென்று ஒருநாள் கருணாநிதி எனக்கு டெலிபோன் செய்து , 'என்னய்யா செய்யலாம்' என்று கேட்டார்.
கணக்குத்தானே கேட்கிறார்..
கணக்குத்தானே கேட்கிறார்..
'சரி, அவர் கணக்குத்தானே கேட்கிறார். எல்லா ஊர்களிலேயிருந்தும் கணக்கு அனுப்ப வேண்டும் என்று செயற்குழுவிலே தீர்மானம் போட்டு, செயற்குழுவை ஒத்தி வைத்து விடுங்கள். கணக்கு வருவதற்கு ஒரு தலைமுறையாகும். அதுவரை என்னசெய்வார் என்று பார்க்கலாம்,'என்று நான் சொன்னேன்

ஒரேயடியாக ஒழித்து விட வேண்டியதுதான்
ஒரேயடியாக ஒழித்து விட வேண்டியதுதான்
செயற்குழுவுக்கு முதல் நாள் நண்பர் கருணாநிதி அவர்கள், எனக்கு டெலிபோன் செய்து, 'இல்லை இல்லை. அது ஒன்றும் நடக்காது. இன்று ஒரேடியாக ஒழித்துவிட வேண்டியது தான்' என்று சொன்னார். நான் சொன்னேன், 'சில மக்கள் பின்னணி இருக்குமே' என்று.
பத்துப் பேர் கத்துவான்.. பார்த்துக்கலாம்
பத்துப் பேர் கத்துவான்.. பார்த்துக்கலாம்
'என்ன, பத்துப்பேர் கத்துவான். பார்த்துக் கொள்ளலாம்' என்றார். மறுநாள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கும் போது, நண்பர் ‘சோ' அவர்கள் எனக்கு டெலிபோன் செய்தார். 'தெரியுமா விஷயம்?' என்று கேட்டார். 'என்ன?' என்றார். 'தெரியாது' என்றேன். 'எம்.ஜி.ஆரை டிஸ்மிஸ் செய்து விட்டார்கள்' என்றார். 'இருக்காதே' என்றேன். 'இப்பொழுது தான் எனக்குச் செய்தி வந்தது' என்றார். இது இரண்டு மணிக்கு நடந்திருக்கும் என்றால், எனக்கு இரண்டு ஐந்துக்கெல்லாம் இந்தச் செய்தி வந்தது.
கேள்விப்பட்டாயா?
கேள்விப்பட்டாயா?
அவர் டெலிபோனை வைத்த உடனேயே, டெலிபோன் மணி அடித்தது. கருணாநிதி பேசினார்: 'முதல் முதலாக உனக்குத் தானய்யா சொல்லுகிறேன். கேள்விப்ப ட்டாயா?' என்றார். 'உங்களுக்கு முன்னாலே சோ போன் பண்ணினார் அய்யா' என்றேன். 'என்ன நினைக்கிறாய்?' என்றார். 'கொஞ்சம் கலகம் இருக்குமே' என்றேன். 'பார்த்துக் கொள்ளலாம்'என்றார் அவர். 'என்ன, பத்து ஊரிலே கலகம் செய்வார்கள். பார்ப்போம்' என்றார்.
போட்ட கணக்கு தப்பாயிற்று
போட்ட கணக்கு தப்பாயிற்று
ஆனால் அவர் போட்ட கணக்கு தவறு. மக்கள் பின்னணி என்பது எழுச்சியாக எழுமானால் காரண காரியங்கள் இன்றியே அது பெருங்கூட்டமாகத் திரளும் என்பதை நான் பல கட்டங்களில் பார்த்திருக்கிறேன். 1971 பொதுத் தேர்தலே சான்று. அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு மிகப் பெரிய பின்னணி இருக்கிறது என்பதை கருணாநிதி கண்டு கொள்ள முடிந்தது.
தலைவரானார் எம்.ஜி.ஆர்.
தலைவரானார் எம்.ஜி.ஆர்.
1970 - 1974 க்கு இடைப்பட்ட காலத்தில் எம்.ஜி.ஆர். அரசியல் தலைவரானதை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அரசியலில் ஒரு கட்சியைத் துவக்க வேண்டும், தலைவராக வேண்டும் என்கின்ற விருப்பம் எப்போது மே எம்.ஜி.ஆருக்கு இருந்ததில்லை என்பது எனக்குத் தெரியும். சினிமா உலகத்தில் தன்னுடைய ஆதிக்கத்தை விட்டுவிடக் கூடாது, அரசியலில் தன்னுடைய பிடியை விட்டுவிடக்கூடாது என்றுதான் அவர் நினைப்பாரே தவிர, முழு அரசியல்வாதியாக முழு நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ள அவர் எப்போதும் விரும்புவதில்லை.
வலுக்கட்டாயமாக தலைவராக்கியவர் கருணாநிதி
வலுக்கட்டாயமாக தலைவராக்கியவர் கருணாநிதி
ஆனால் அவரை வலுக்கட்டாயமாக அரசியலில் ஒரு தலைவராக்கிய பெருமை நண்பர் கருணாநிதிக்கு உண்டு. கட்சியிலிருந்து அவரை விலக்கியதன் மூலமாக ஏராளமான கூட்டத்தை அவர் பக்கத்தில் ஓடவிட்ட பெருமையும் கருணாநிதிக்கு உண்டு. எம்.ஜி.ஆரைப் பின் தொடர்ந்து தொண்டர்கள் அனைவரும் போய் விட்டார்கள்.
அற்புதமான திமுக தொண்டர்கள்
அற்புதமான திமுக தொண்டர்கள்
எம்.ஜி.ஆர். விலக்கப்பட்ட பிற்பாடு, அவருக்குப் பின்னணியாக நின்றவர்கள் அனைவரும் மிக அற்புதமான தி.மு.கழகத் தொண்டர்களாக இருந்தார்கள். கட்டுப்பாடற்ற, முறையாக செயல்திட்டமற்ற தொண்டர்கள்தான் என்றாலும், ஒரே தலைவரின் கீழே திரண்டவர்கள். எம் .ஜி.ஆரிடம் அவர்கள் உயிரையே வைத்திருந்தார்கள்.
2வது முறையாக ஏற்பட்ட கொந்தளிப்பு
2வது முறையாக ஏற்பட்ட கொந்தளிப்பு
அந்த முறையில் எம்.ஜி.ஆரைப் பின்பற்றியே அனைவரும் போனார்கள் என்பது மட்டுமல்லாமல், அரசியல் கட்சியில் ஒரு தலைவர் நீக்கப்பட்டார் என்பதற்காக நாடு முழுவதிலும் கொந்தளிப்பு ஏற்பட்ட சம்பவம் இது இரண்டாவது முறையாகும் .இந்திராகாந்தி நீக்கப்பட்ட போது முதன் முதலில் எப்படி நாடு முழுவதிலும் ஒரு எதிரொலி ஏற் பட்டதோ, அப்படியேதான் எம்.ஜி. ஆர். நீக்கப்பட்டவுடனே தமிழ்நாடு முழுவதிலும் எதிரொலி ஏற்பட்டது.
பெரும் கிளர்ச்சி
பெரும் கிளர்ச்சி
இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைப் போலவே ஒரு மாபெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. ஆங்காங்கே கார்களையும், பஸ்களையும், லாரிகளையும், நிறுத்தி அதில் எழுதத் தொடங்கினார்கள். சின்னச் சின்னப் பள்ளி மாணவர்களிலேயிருந்து கல்லூரி மாணவர்கள்வரை, அதில் ஈடுபட்டார்கள். தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். கைவண்டி இழுப்பவர்களில் இருந்து, கடலை விற்போர்கள் வரையில் ஆத்திரப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
அதிமுகவைத் தொடங்க வேண்டிய நிர்ப்பந்தம்
அதிமுகவைத் தொடங்க வேண்டிய நிர்ப்பந்தம்
ஆகவே, ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' என்ற ஒரு பெரிய இயக்கத்தைத் துவக்க வேண்டிய நிர்பந்தம் எம்.ஜி. ஆருக்கு ஏற்பட்டது. அப்படித் துவங்கியவுடனே அது தமிழக அளவில் பெரிதாக வளர்ந்ததும் மிகச் சுலபமாக நடந்தது. வளர்ந்தது என்று சொல்வதைவிட வளர்ந்த நிலையிலேயே அது உருவாயிற்று என்று சொல்வது பொருந்தும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் கட்சியாகத் தமிழகத்தில் விளங்கும் என்று நான் எதிர் பார்த்ததுண்டு. அது நியாயமாக நடந்து விட்டது.

சாதாரண பிரியம் இல்லை
சாதாரண பிரியம் இல்லை
அதைச் சரிக்கட்டவும், ‘அப்படியொன்றும் இல்லை' என்று காட்டவும் நண்பர் கருணாநிதி பல்வேறு திசையில் பிரயாணம் செய்து பார்த்தார். பல ஊர்களில் அவர் பேசவே முடியாமல் போயிற்று. எம்.ஜி.ஆர். மீது ஜனங்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் இருந்த பிரியம் என்பது சாதாரணமானதாக இல்லை. அதற்குக் காரணம் நியாயமா இல்லையா என்று ஆராய்வதைவிட, ஏதோ சில காரியங்களை அவர் செய்திருக்கிறார், செய்யக்கூடியவர், நியாயமானவர், நேர்மையானவர், ஒழுக்கமானவர் என்றெல்லாம் மக்கள் எண்ணினார்கள். அப்படி எண்ணிய மக்களின் நம்பிக்கை வீண் போகவில்லை.
நிலைமையே வேறாக மாறியிருக்கும்
நிலைமையே வேறாக மாறியிருக்கும்
கருணாநிதியின் மீது மக்களுக்கிருந்த நல்ல பெயரை அது தான் போக்கடித்தது. எம்.ஜி.ஆரை அவர் விலக்காமல் இருந்திருந்தால் நிலைமைகள் வேறுபட்டிருக்கக் கூடும். திராவிட முன்னேற்றக் கழகத்தைக் தவிர வேறு யாரும் ஆட்சிக்கு வருவதென்பது இன்னும் ஒரு 25 ஆண்டுக் காலத்துக்கு நடக்காமலேயே போயிருக்கும்.
ஓங்கி வளர்ந்த அதிமுக
ஓங்கி வளர்ந்த அதிமுக
அதனால் எம்.ஜி.ஆருடைய விலகல் காரணமாக, எம்.ஜி.ஆர் விலக்கப்பட்டதன் காரணமாக, திராவிட முன்னேற்றக் கழகம் மெலியும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற கட்சி ஓங்கி வளரும் என்று நம்பினேன். மற்ற நடிகர்களைப் போல் அவரும் ஒரு நடிகர்தான் என்றாலும், அரசியல் ஈடுபாட்டில் அவருக்கு இருந்த பிடிப்பின் காரணமாக, சில அரசியல் தத்துவங்களையும் அவர் உணர்ந்து கொண்டிருந்தார்.
கெட்டிக்கார தலைவர்
கெட்டிக்கார தலைவர்
விஷயங்களுக்குப் பதில் சொல்வதில் கெட்டிக்காரராக விளங்கினார். பிரச்சனைகளுக்குப் பரிகாரம் தேடுவதிலும் கெட்டிக்காரராக விளங்கினார். ஒரு கட்சியை நடத்தக் கூடிய சாமர்த்தியம் தனக்கு இருக்கிறது என்பதையும் காட்டினார்.
பிரித்தலும் பேணிக் கொளலும்
பிரித்தலும் பேணிக் கொளலும்
'பிரித்தலும் பேணிக் கொளலும் பிரித்தார்ப் பொருத்தலும் வல்லது அமைச்சு'
- என்றும் அவர் காட்டினார். அவர் கட்சிக்குள் மிக முக்கியமான ஆட்களும் உள்ளே நுழை ய ஆரம்பித்தார்கள். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் அங்கம் வகித்தவர்களில் பட்டதாரிகள் அதிகமாக இருந்தார்கள். அதே அளவுக்கு பட்டமோ, படிப்போ இல்லாத கிராம வாசிகளும் அதிகமாக இருந்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் எவ்வளவு எரிச்சல் அடைந்தும் கூட இந்த வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை என்று கூறியுள்ளார் கண்ணதாசன்.
அந்த பரபரப்புத் தீர்மானம்
அந்த பரபரப்புத் தீர்மானம்
திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர் நீக்கப்படுவது தொடர்பான திமுக தீர்மானம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது.. அது இதுதான்... 'தி.மு.க.,செயற்குழு. எவ்வளவோ வாய்ப்பளித்தும், எம்.ஜி.ஆர்.,அதை பயன்படுத்திக்கொள்ளவில்லை. கழக பொதுச்செயலாளர் நாவலர் அவர்களால் எம்.ஜி.ஆர்.,மீது கழக சட்ட திட்ட விதியின்படி எடுத்துள்ள நடவடிக்கையை இந்த செயற்குழு ஒரு மனதாக ஏற்றுக்கொண்டு இந்த தீர்மானத்தை பொதுக்குழுவிற்கு பரிந்துரை செய்கிறது என்பதே அந்த தீர்மானம்.
ஒருமித்த முடிவு
ஒருமித்த முடிவு
எம்.ஜி.ஆரை நீக்குவது தொடர்பான தீர்மானம் திமுக பொதுக்குழுவில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அந்தக் கூட்டத்தில் மொத்தம் உள்ள 310 பேரில் 277 பேர் கலந்து கொண்டனர். மற்றவர்கள் வராததற்குக் காரணம், அவர்கள் எம்.ஜி.ஆர் ஆதரவாளர்கள் என்பது. கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருமே நீக்கத்தை ஆதரித்துப் பேசினர், வாக்களித்தனர்.
அக்டோபர் 14ல் நீக்கப்பட்டார் எம்.ஜி.ஆர்.
அக்டோபர் 14ல் நீக்கப்பட்டார் எம்.ஜி.ஆர்.
இதையடுத்து 1972ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி கூட்டப்பட்ட அந்த பொதுக்குழுவில், இன்று முதல் எம்.ஜி.ஆர்., திமு.கவை விட்டு முற்றிலும் நீக்கப்பட்டு விட்டார். இனி சமரசத்திற்கு இடமில்லை என்று திட்டவட்டமாக அறிவித்தது தி.மு.க.,பொதுக்குழு. இதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆரும், நான் தி.மு.கவிலிருந்து விலகிவிட்டேன். இரண்டொரு நாளில் புதிய அமைப்பு ஒன்றை துவங்குவேன் என்று அறிவித்தார்.
தமிழக அரசியல் வரலாற்றை மாற்றிப் போட்ட மறக்க முடியாத நாள் அக்டோபர் 8,10 மற்றும் 14.......Sml ...

orodizli
10th October 2020, 01:41 PM
பொன்மனச்செம்மல் எம்ஜிஆரது வளர்ச்சியைத் தாங்கிக் கொள்ள முடியாத கருணாநிதி, எம்ஜிஆர் உட்கட்சி விவகாரங்களை பகிரங்கமாகப் பேசி விளக்கம் கேட்டார் என்ற காரணத்தை முன் வைத்து 1972 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி எம்ஜிஆரை திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து தற்காலிகமாக நீக்கினார். தொடர்ந்து வந்த நாட்களில் அதே ஆண்டு, அக்டோபர் 14 ஆம் நாள் எம்ஜிஆர் திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். அந்த சமயத்தில் தான் எம்.ஜி.ஆர் நீக்கத்தை கண்டித்து கைது செய்யப்பட்டோரை விடுதலை செய்ய கோரி 2 பேருந்துக்களுக்கு சென்னையில் தீ வைக்கப்பட்டது. அதன் பிறகும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததால், தீ வைக்கப்பட்ட இடம் வழியாக சென்ற நடிகை சௌக்கார் ஜானகியின் கார் மீது கல் வீசப்பட்டது. இச்செய்திகளை கேட்ட அரசு உடனே கைதானவர்களை எல்லாம் விடுவித்தது. 20.10.1972ம் ஆண்டு அண்ணா திமுகவை ‘ஒட்டு காங்கிரஸ்’ என்று விமர்சித்தார் திமுக தலைவர் கருணாநிதி. மத்திய மந்திரி வருகை பற்றி கருத்து தெரிவிக்கும்போது, இது மத்திய அரசின் தூண்டுதலின் பெயரில் நடந்துள்ளது என்றும், அண்ணா திமுக என்பது ஒட்டு காங்கிரஸ் என்றும் தெரிவித்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக எம்.ஜி.ஆரோ, அண்ணா திமுக ஒட்டு காங்கிரஸ் இல்லை என்றும், அண்ணா திமுக என்பது தனித்து செயல்படும் கட்சி என்று விளக்கம் அளித்தார்.



புதிய கட்சி தொடங்க விரும்பிய எம்.ஜி.ஆர் அப்போது அனகாபுத்தூர் ராமலிங்கம் என்பவர், ‘அதிமுக’ என்ற பெயரில் பதிவு செய்து வைத்திருந்த கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார். அப்போது, ‘ஒரு சாதாரணத் தொண்டன் தொடங்கிய கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன்’ என அறிவித்ததுடன் ராமலிங்கத்துக்கு மேல்சபை உறுப்பினர் (M.L.C.) பதவியும் அளித்தார். இக்கட்சி பின்னர் ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இப்படித்தான் அக்டோபர் 17, 1972-இல் அதிமுகவுக்குத் தொடக்க விழா கொண்டாடப்பட்டது.

21.10.1972ம் ஆண்டு திமுகவை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் பலர் அதிமுகவில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டனர். அதில் முக்கியத்துவம் வாய்ந்தவர் திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ துரைராஜ். தீவிர எம்.ஜி.ஆர் ரசிகனான அவர் தொகுதி மக்களுடன் இதுபற்றி ஆலோசனை நடத்தியதற்கு பின்பு அதிமுகவில் தன்னை இணைத்துக்கொள்ள தயாரானார். இந்த சூழலில் திமுகவினர் கட்சி தாவுவதை எதிர்த்து திமுகவினரே பேருந்துக்களை கொளுத்தி, தகராறில் ஈடுபட்டனர். இதுபற்றி மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று எம்.ஜி.ஆர் கோரிக்கை வைக்க, புலன் விசாரனை நடப்பதாக மத்திய அமைச்சர் ஒருவர் தமிழக அரசிடம் கேட்ட கேள்விக்கு ஐஜி அருள் பதில் அளித்தார்.

அதன் பிறகு சென்னை கடற்கரையில் நடந்த பிரமாண்டமான கூட்டத்தில் அதிமுகவின் தொடக்கம் பற்றியும், அதிமுகவின் வருங்காலம் பற்றியும் எம்.ஜி.ஆர் பேசினார். ஆரம்பம் முதலே எம்.ஜி.ஆருக்கு உறுதுணையாக இருந்து வந்த ஜேப்பியாரும், முசிறிபுத்தனும் இக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். இக்கூட்டத்தில் திமுகவில் இருந்து விலகி, காளிமுத்து, முனுஆதி, துரைராஜ், எட்மண்ட் ஆகியோர் எம்.ஜி.ஆர். முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

இது எல்லாம் நடந்துக்கொண்டிருக்க, மெல்ல மெல்ல அதிமுக வளர்ச்சியை பெற்றுக்கொண்டிருந்தது. 1973ம் ஆண்டு திண்டுக்கல் தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜாங்கம் மரணமடைந்தார். அதன் பிறகு அத்தொகுதிக்கு மே 20ம் தேதி தேர்தல் என்று அறிவிக்கப்பட்டது. அந்த சமயத்தில் தான் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படம் வெளியாக காத்திருந்தது. திமுகவுக்கு எதிராகக் களம் இறங்கியதால் ’உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை வெளியிட திமுக அரசு தடையாக இருந்தது. ஆனால் எம்.ஜி.ஆரோ அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல், தேர்தல் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அதிமுக காணும் முதல் தேர்தல் அது தான். அதிமுக சார்பில், தொகுதி வேட்பாளராக வழக்கறிஞர் மாயத்தேவர் நிறுத்தப்பட்டார். மே 11ம் தேதி, உலகம் சுற்றும் வாலிபனை வெளியிட எம்.ஜி.ஆர் முடிவு செய்து போஸ்டர்களை ஒட்ட உத்தரவிட்டார்.

ஆனால் அப்போது அப்படத்திற்கு மட்டும் போஸ்டர்கள் மீதான வரியை சென்னை மாநகராட்சி மூலம் திமுக அரசு உயர்த்த, சென்னையை தவிர்த்து இதர நகரங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. திண்டுக்கல் தேர்தலோ மே 20, படம் வெளியீடு மே 11. இரண்டுக்கும் 9 நாட்கள் தான் வித்தியாசம். பிரமாண்டமான செலவில் எடுக்கப்பட்ட அத்திரைப்படத்தை எம்.ஜி.ஆரே இயக்கியும், தயாரித்தும் வெளியிட்டார். மே 11ம் தேதி திரைப்படம் வெளியானது. திரையரங்குகளில் அதிக அளவில் கூட்டம். எம்.ஜி.ஆரோ, தேவி தியேட்டரில் தன் ரசிகர்களுடன் அமர்ந்து படத்தைக் கண்டுகளித்தார்.
இது எல்லாம் ஒரு பக்கம் நடக்க ஜேப்பியார் அவர்கள், திண்டுக்கல் தொகுதி தேர்தல் நிதியாக தென்சென்னை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரிடம் 20 கோடி ரூபாயை அளித்தார். தேர்தலில் திமுக வெற்றி பெற அமைச்சர்கள் அனைவரும் களம் இறக்கப்பட்டனர். முதலமைச்சர் கருணாநிதி கிராமம் கிராமமாக சென்று பிரச்சாரம் செய்தார். எம்.ஜி.ஆரோ அனல் பறக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டார்...........Sml...

orodizli
10th October 2020, 01:42 PM
வரலாற்றில் ஒரு திரைப்படம் காவியம் அரசியலுடன் பின்னி பிணைந்தது என்றால் "உலகம் சுற்றும் வாலிபன்" தான் அ.தி.மு.க. வைத் தொடங்கிய நேரத்தில், புரட்சித்தலைவர் தாமே நடித்து, இயக்கி, தயாரித்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’படம் வெளியிடப்பட வேண்டிய நிலையில் இருந்தது. உடனே அந்தப் படத்தை வெளியிட விடாமல் தடுப்பதற்கான முயற்சிகளில் சிலர் ஈடுபட்டனர்.அதிகார வலிமை பெற்ற சிலர், அந்தப் படத்திற்கு விநியோக உரிமை பெற்றிருந்தனர் விநியோகஸ்தர்களையெல்லாம் சந்தித்து மிரட்டினார்கள். ”படம் வேண்டாம். கொடுத்தப் பணத்தைத் திருப்பிக் கொடுங்கள்” என கேட்கும்படி விநியோகஸதர்களை வற்புறுத்தினார்கள். ஆனால் காலம் காலமாய்த் திரைப்படத் துறையில் எம்.ஜி.ஆர். படங்களை வாங்கி விநியோகித்ததன் மூலமே பெரும் பணம் சம்பாதித்தவர்கள், அந்த விநியோகஸ்தர்கள்,அந்த உருட்டல் மிரட்டலுக்குப் பயந்து புரட்சித் தலைவரை நெருக்கடிக்குள்ளாக்கமறுத்துவிட்டனர்.பட விநியோகஸ்தர்களை மிரட்டிப் பணியவைக்க முடியவில்லை என்றதும் அவர்களது கவனம், திரையரங்குகளின் மேல் திரும்பியது. திரையரங்குளின் உரிமையாளர்களை அழைத்து, சட்டம், ஒழுங்கு மற்றும் திரையரங்குப் பாதுகாப்பு ஆகியவற்றைக் காரணம் காட்டிப் புரட்சித் தலைவரின் படத்தைத் திரையிட மறுக்கும்படி வற்புறுத்தினார்கள். ஆனால், லட்சம் லட்சமாய் வசூலை வாரித்தரும் எம்.ஜி.ஆர். படத்தைத் திரையிடாதிருக்க முடியாது எனத் திரையரங்க உரிமயாளர்கள் மறுத்துவிட்டனர். சில திரையரங்க உரிமையாளர்கள் மட்டுமே அந்த வற்புறுத்தலுக்கு செவி சாய்த்தனர். அவர்களுள் பலர் அதிகாரத்திற்கு அஞ்சித் தாங்கள் செய்த காரியத்தைச்சொல்லி புரட்சித் தலைவரிடமும் மன்னிப்புக் கோரினார்கள்!
பெரும்பாலான திரையரங்க உரிமையாளர்களும் எம்.ஜி.ஆர். படத்தைப் புறக்கணிக்கச் சம்மதிக்கவில்லை என்றதும் அவர்களை வேறு வகையில் மிரட்டத் தொடங்கினார்கள்.”எம்.ஜி.ஆர் படம் திரையிடப்பட்டால் தியேட்டரைக் கொளுத்துவோம்! திரையைக் கிழிப்போம்! படச்சுருளைப் பஸ்பமாக்குவோம்!” என்றெல்லாம் மிரட்டினார்கள்; கடிதம் எழுதினார்கள்; சிலர் அறிக்கை விடும் அளவுக்குத் துணிந்தார்கள்!
திரையரங்க உரிமையாளர்களுள் பலர் இந்த இரண்டாவது வகை மிரட்டலைக்கண்டு உண்மையிலேயே அஞ்சி நடுங்கினார்கள். பல லட்சம் ரூபாயைக் கடன் வாங்கிக் கட்டப்பட்ட திரையரங்குகள் கொளுத்தப்படும் என்னும் மிரட்டல் அவர்களுக்குக் குலை நடுக்கத்தை ஏற்படுத்தியது. அதனால், முன்னணித் திரையரங்க உரிமையாளர் பலர் ஏற்கெனவே வாக்களித்தபடி ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தைத் திரையிடத் தயங்கினார்கள்., பின் வாங்கினார்கள்.ஆனால், புரட்சித் தலைவர் இந்த உருட்டல் மிரட்டல்களுக்கோ, திரையரங்க உரிமையாளர்களின் பின் வாங்கலுக்கோ சற்றும் அஞ்சவில்லை. துணிந்து தம்முடைய படத்தை வெளியிட்டார்.தமிழகம் முழுதும் போஸ்டர்கள் ஓட்ட தடைவிதித்தார் கருணாநிதி அனாலும் தலைவர் சளைக்காமல் தினமும் வெளியாகும் நாளிதழ்களில் ஒருபக்க விளம்பரமாக தினமும் விளம்பர படுத்தினார் தமிழகம் முழுவதிலும் ஒரே நாளில் வெளியிட்டார். அந்தப் படம் திரையிடப்பட்ட ஐம்பதுக்கு மேற்பட்ட திரையரங்குகளிலும் வெற்றிகரமாய் ஓடியது! எந்த விதமான பெரிய விளம்பரமும் இல்லாமலே தாய்மார்களின் கூட்டம் படத்தைக் காண அலைமோதியது; இளைஞர்கள் கூட்டமோ மீண்டும் மீண்டும் அதே படத்தைப் பல முறை கண்டுகளித்தது. எனவே பல்வேறு திரையரங்குகளில் 25 வாரம் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது! மேலும் சில திரையரங்குகளில் 31 வாரம் ஓடி வசூலை அள்ளிக் குவித்தது!!......இப்பொழுதும் வசூல் புரட்சி நடத்திக்கொண்டேயிருக்கிறது... Sml...

orodizli
10th October 2020, 01:43 PM
நமது சிவாஜி ரசிகர்கள் நிறைய பேர் அதென்ன ஸ்டெச்சர், வடக்கயிறு என்றெல்லாம் கேட்கிறார்கள்.
அதனால் அதைப்பற்றி சற்று விளக்கமாக சொல்கிறேன். சிவாஜி ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும்.
ஆனால் மற்றவர்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டியது நம் கடமையல்லவா. உதாரணமாக சிவாஜி நடித்த "கர்ணன்" படத்தை எடுத்துக் கொள்ளலாம். ஏனென்றால் "கர்ணனு"க்குத்தான் ஓடி முடிய வார வசூலை அவர்களே கொடுத்திருக்கிறார்கள்.

அதை பார்க்கும் போது எந்த வாரத்திலிருந்து வடக்கயிறை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று அந்த சார்ட்டை பார்த்தால் நமக்கே புரியும். ஒரு வெற்றிப் படமென்றால்
குறைந்த பட்சம் 4 வாரங்களுக்கு வசூலில் எந்த மாற்றமும் இருக்காது.
மதுரையை போன்ற ஊரில் நல்ல வெற்றிப் படமென்றால் 100 காட்சிகள் தொடர்ந்து hf ஆகியிருக்கும். அதனால் 5 வாரம் வரை வசூல் ஒரே மாதிரி இருக்க வாய்ப்புண்டு.

ஆனால் "கர்ணன்" முதல் வார வசூல் ரூ46000. என்று வரும் போது 2 வது வாரத்தில் குறைந்த பட்சம் ரூ 40000 மாவது வரவேண்டும். ஆனால் வந்ததோ ரூ31000. இரண்டாவது வாரத்திலேயே படம் விழுந்து விட்டது.
மூன்றாவது வாரத்தில் பாருங்கள் ரூ
19000 வசூல். முதல் வாரத்துக்கும் மூன்றாவது வாரத்துக்கும் ரூ 27000 வசூல் வித்தியாசம்.
மிகக் குறைந்த வசூல். தங்கம் தியேட்டரில் முதல் வாரம் பொங்கல் வாரம். எக்ஸ்டிரா காட்சிகள் நிறைய நடந்திருக்கும் பட்சத்தில் வசூல் ரூ 50000 தாண்டி வந்திருக்க வேண்டும்.

ஆனால் "கர்ணன்"
முதல் வாரத்திலேயே வாயை பிளந்து விட்டார். மூன்றாவது வாரத்தில் கும்பகர்ண தூக்கத்துக்குபோய்விட்டார். அதனால் 50 நாட்கள் வரை தாஜா பண்ணி நடத்தியே சென்றிருக்கிறார்கள். 50 நாட்கள் தாண்டியவுடன் இது ஒப்பேறாது என்று தெரிந்தவுடன் தேரில் வடக்கயிறு கட்டி இழுத்த மாதிரி சிவாஜி ரசிகர்கள் தங்களது ஜீ பூம்பா வேலையை ஆரம்பித்து விட்டார்கள்.

தங்கத்தை பொறுத்தவரை வாரத்துக்கு ரூ7500 மினிமம் வந்தாக வேண்டும். இல்லையென்றால் படத்தை தூக்கி விடுவார்கள். "கர்ணன்", கும்பகர்ணனின் பெயரில் பாதி அல்லவா. நல்லா குறட்டை விட்டு தூங்க ஆரம்பித்தவுடன் அவசரமாக ஸ்டெச்சரை வரவழைத்து "கர்ணனை" தூக்கி மீதி 50 நாட்களுக்கு மேல் சுமந்தார்கள். வர வர வெயிட் தாங்க முடியாததால் வடக்கயிறு கொண்டு வந்து இழுத்து கரை சேர்த்தார்கள்.

சுமார் 7 வாரங்கள் மினிமம் வாடகையை தியேட்டருக்கு செலுத்தி. விட்டு வருகின்ற வசூலுடன் மேலும் டிக்கட் கிழித்து ஓட்டின்ர்கள். அதுதான் ரூ 3000 திலிருந்து 5000 வரை காண்பிக்க முடிந்தது. ஒருபடம் ஒருவாரத்தில் மினிமம் வசூலை எட்டிவிட்டால் அடுத்தவாரமே பணால் ஆகிவிடும்.
ஆனால் "கர்ணனோ" 50 நாட்கள் வரை உயிரை கையில் பிடித்துக் கொண்டே சென்றிருக்கிருக்கிறான்.. இப்போது வெகுஜன ரசிகர்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இது மதுரை தங்கத்தில்.

சென்னை சாந்தி பிரபாத் சயானியில் 100 நாட்கள் மிகவும் கஷ்டப்பட்டு பெரிய பெரிய வடக்கயிறு கொண்டு வந்து 100 நாட்கள் ஓட்டினார்கள். சாந்தியில் மிகக்குறைந்த வசூலாக 100 நாட்களில் 2,10,000 தான் வசூலாகியது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். எப்போதும் சாந்தி தியேட்டர் வசூலை முன்னிலை படுத்துபவர்கள் "கர்ணன்" விஷயத்தில் கன்ளத்தனமாக மறைத்து விட்டார்கள். மூன்று திரையரங்கும் சேர்த்து மொத்தம் 5 லட்சம்தான் வசூல். அதுவும் கடைசி 2வாரங்களில் ஒரு காட்சிக்கு 100 ரூ கூட வசூல் ஆகவில்லை என்பதிலிருந்து சாந்தி தியேட்டரின் இழுவை சக்தி மற்ற தியேட்டரை விட பல மடங்கு அதிகம் என்று புரிகிறதா.
"சந்திரமுகி"யை 800 நாட்கள் ஆளே இல்லாமல் ஓட்டி சாந்தியை பலான தியேட்டர் ஆக்கிய கதை அனைவரும் அறிந்ததே.

"கர்ணன்" மறு வெளியீடு 2012 ல் வெளியான போது ஸ்கூல் பிள்ளைகளை இம்சை படுத்தி தினசரி ஒரு ஸ்கூல் வீதம் அழைத்து சென்று டிக்கெட்டை இவர்களே எடுத்து கொடுமை படுத்தியதை அனைவரும் அறிவர். அந்த பிளைைகள் சிவாஜியின் கத்தலை பார்த்து பயந்து போய் சிறிது காலம் கழித்துதான் நார்மலுக்கு வந்ததாக தாய்மார்கள் கூறியதை நாம் புறந்தள்ள முடியாது. 50 நாட்கள் கூட ஓட தகுதியற்ற படத்தை 150 நாட்கள் சிறுவர்களிடம் பிச்சை எடுத்து ஓட்டியது சமூக வரம்பு மீறிய செயலாகும்.

இது போல அந்த காலத்தில் "கட்டபொம்மனை"யும் "க.ஓ.தமிழனை"யும் இம்சை படுத்தி குழந்தைகளை வற்புறுத்தி வாங்கிய பணத்தை வசூல் கணக்கில் சேர்த்தும் படத்திற்கு லாபம் வராதது சோகமே. என்னையும் ஏமாற்றி படம் பார்க்க வைத்து பணம் பெற்று வசூல் கணக்கில் சேர்த்தார்கள். ஆனால் "வேட்டைக்காரன்" தொட்டதோ சுமார் 8 லட்சம் .. "கர்ணன்" 50 நாட்கள் ஓட்டியது 15 திரையரங்குகள்தான். அதற்கு காரணம் 1964 பிப் 27 அன்று வெளிவந்த "காதலிக்க நேரமில்லை" என்ற மெகா ஹிட் படம்தான். இவர்கள் வடக்கயிறு போட்டு இழுத்த சுமார் 15 திரையரங்குகளை கபளீகரம் செய்து விட்டது. ஐயனின் கைபிள்ளை ஒன்று "கர்ணன்" தயாரிப்பு செலவு 18 லட்சம் என்றும் வசூல் 58.5 லட்சம் என்றும் லாபம் 12 லட்சம் என்றும் ஆதாரமில்லாமல் மோசடியாக கதறி நம்மிடம் வசமாக சிக்கிக் கொண்டது.

ஏற்கனவே ஆரம்பகால வசூலை "வேட்டைக்காரன்" வேட்டையாடி விட்டான். ஆக 40 லட்சத்துக்கும் அதிகமான செலவில் தயாரிக்கப்பட்ட பந்துலுவின் "கர்ணன்" (ஆதாரங்கள் இணைக்கப் பட்டுள்ளது) மொத்த வசூல் 20 லட்சத்துக்குள் முடங்கி சுவற்றில் அடித்த பந்து போல திரும்பி பந்துலுவின் கைகளில் தஞ்சமடைந்து விட்டான். இதுதான் "கர்ணனி"ன் உண்மைக் கதை. "கர்ணனா"ல் பந்துலுவின் கடன் சுமார் 30 லட்சம் வரை உயர்ந்தது. அது இன்றைய மதிப்புக்கு சுமார் 90 கோடி. இந்த மதிப்பும் நம் கணிப்பு அல்ல. ஐயக்குஞ்சு ஒன்று "சிவந்த மண்" காலத்தை ஒட்டி கணித்தது. அதுவும் 69 ல் வெளியான "சிவந்த மண்ணு"க்கு இப்போது செய்தி போட்டார்களாம். இதுதான் ஐயனின் கைபிள்ளை ஒன்று ஆடிய கபட நாடகக் .கதை. இது "கர்ணன்" காலம். அதே ஐயனின் கைபிள்ளையிடம் மதிப்பை கேட்டு தெரிந்து கொள்ளலாம்..
"கப்பலோட்டிய தமிழனி"ல் 7 லட்சம் கடன் ஆனதை அவரே ஒத்துக்கொண்டு பேட்டி கொடுத்தது நினைவிருக்கலாம்.

இது "கர்ணனு"க்கு மட்டும் நடந்த கதையல்ல. எங்கெல்லாம் சிவாஜி படங்கள் ஒரு தியேட்டர் 2 தியேட்டரில் 100 நாட்கள் ஓடியிருக்கிறதோ அங்கெல்லாம் சிவாஜி ரசிகர்களின் கை சிவந்து இருக்கும். "கர்ணனை" போல் கொடுத்து சிவந்த கரமல்ல. வடக்கயிறு போட்டு இழுத்து சிவந்த கரங்கள்.
"ராஜபார்ட் ரங்கதுரை" நாகர்கோவிலில் மறுவெளியீடு திரையிட்டு 60 நாட்கள் வரை 1 காட்சி ஓட்டினார்கள். அதையும் பல நாள் படம் பார்க்க ஒரு ஆள் கூட வராததால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.

ஆனாலும் தொடர்ந்து ஓடியமாதிரி வால்போஸ்டர் ஒட்டி ஆனந்தப்படுகின்றனர். எம்ஜிஆர் மீதுள்ள துவேஷம் அவர்களை மனநோயாளி ஆக்கிவிட்டது என்றே நினைக்கிறேன். படத்திற்கு 1 லட்சம் வாங்கும் சில்லரை நடிகர் சிவாஜி 10 லட்சத்துக்கும் அதிகம் வாங்கும் செல்வாக்கு உள்ள தலைவரை எப்படி வசூலில் மிஞ்ச முடியும். A v m செட்டியார் "உயர்ந்த மனிதனு"க்காக கொடுத்த 1 லட்சத்துக்கு மேல் கேட்ட ரூ25000 கூட தர மறுத்து அவர் மார்க்கெட் என்னவென்று எங்களுக்கு தெரியும், இதற்கு மேல் காசு தர முடியாது என்று கறாராக சொல்லி விரட்டியது கணேசன் ரசிகர்கள் அறிந்ததுதானே.

மார்க்கெட் வேல்யூ என்று இருக்கிறதல்லவா?. அது கணேசன் ரசிகர்களுக்கு புரியவில்லையா?. இதே "உலகம் சுற்றும் வாலிபன்" வசூலை கவனித்துப் பாருங்கள். கடைசி வரை ஸ்டெடியாக பயணப்பட்டிருக்கும். .31வது வாரம் கூட ரூ 12000 வசூலாகி இருக்கிறது. "கர்ணன்" மட்டுமல்ல "மோ சு பிள்ளை" "ரா எ ராமனடி"
"என் மகன்" இது போன்ற. பல சிவாஜி படங்கள் அத்தனையும் இந்த கேஸ்தான்.

100 நாட்கள் மதுரையில் ஓடினால் குறைந்த பட்சம் ரூ 2 லட்சம் வசூலாக வேண்டும். இல்லையென்றால்
அது தோல்விப்படம்தான் என்பதை சிவாஜி ரசிகர்களே உணருங்கள். மீண்டும் மக்கள் திலகத்துடன் மோத வேண்டாம். சிறு நடிகனுடன் கம்பேர் பண்ண எங்களுக்கு கேவலமாக இருக்கிறது. அதனால் தேங்காய் சீனிவாசன்,நாகேஷ்,சுருளி, இதுபோன்ற உங்களுக்கு இணையான நடிகனுடன் மோதிக் கொள்ளுங்கள்..........ksr.........

fidowag
10th October 2020, 11:39 PM
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின்*டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*06/10/20 அன்று அளித்த*தகவல்கள்*
----------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் ஒரு திரைப்படத்தில் அழுது நடித்தார் என்றால் அந்த படத்தின் தயாரிப்பாளர் தகுந்த வசூல் இன்றி அழுவார் என்று அர்த்தம் . சில படங்கள் விதிவிலக்கு .ஏனென்றால் அவர் அழுது நடிக்கும் காட்சிகளை பெரும்பாலும் அவரது ரசிகர்கள் ,பொதுமக்கள் விரும்புவதில்லை .சிரித்து நடிப்பது ,வீர சாகசங்கள் செய்வது போன்ற காட்சிகளைத்தான் ரசித்து பார்த்தனர் .ஒவ்வொரு படங்களிலும் எப்படி ஒவ்வொரு பக்தரும் தாங்கள் விருப்பப்பட்ட கடவுளுக்கு பல்வேறு அலங்காரங்கள் செய்து பார்க்க ஆசைப்படுவார்களோ , அப்படிதான் எம்.ஜி.ஆர். ரசிகர்களும் ஒரு தயாரிப்பாளர் என்பவர் தங்கள் அபிமான கடவுளாக பார்க்கப்படும் நடிகரை பல்வேறு ஆடை, அணிகலன்கள் மூலமாக அலங்கரித்து நடிக்க வைக்க வேண்டும் என்று விருப்பப்பட்டார்கள் .அதன்படியே பிறகு வந்த படங்களான ராமன் தேடிய சீதை, நேற்று இன்று நாளை , நினைத்ததை முடிப்பவன் , இதயக்கனி ,உலகம் சுற்றும் வாலிபன் போன்ற படங்களில் அவரது ஆடைகள், அணிகலன்கள் ,கழுத்தில் கட்டும் ஸ்கார்ப் ,தலையில் அணியும் விதவிதமான தொப்பிகள் , கை மணிக்கட்டுகளில் கட்டும்* துணி போன்றவை மிக பிரபலமாக அந்த காலத்தில் பேசப்பட்டது .ஏனென்றால் வட நாட்டில், அந்தக்கால கட்டத்தில் இந்தி நடிகர்கள் தேவ் ஆனந்த் ,தர்மேந்திரா போன்ற நடிகர்களின் படங்களை விட எம்.ஜி.ஆர். படங்கள்தான் ஷோ ரூம்களில் அதிகம் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது என்பது வரலாற்று சாதனை .


ரஷ்யாவில் புரட்சி காலத்தில் ,பிரபல அரசியல்* தலைவர் லெனின் மரத்தின் மீது*அமர்ந்து ஒளிந்து இருக்கிறார் . ராணுவம் அவரை தேடி கொண்டிருக்கிறது .அந்த சமயம் லெனின் என்ன திட்டமிட்டார் தெரியுமா* நாம் ஆட்சி அமைத்தால் இந்த ராணுவத்தை எப்படி நடத்துவது .மக்களுக்கு நன்மை செய்யும்படி திட்டங்கள் வகுக்க வேண்டும் .என்று யோசித்தாராம் . அப்படி ஒவ்வொரு நொடியும் எதையாவது இந்த மக்களுக்கு செய்ய வேண்டும் என்று யோசித்தவர் எம்.ஜி.ஆர்.*உதாரணமாக யானை கவுனி பகுதியில் அந்த காலத்தில் வாடகை வீட்டில் வசித்தவர் வால் டாக்ஸ் சாலையில் சில சமயம் நடந்திருக்கிறார் .வால் டாக்ஸ் சாலை என்றால்* சுவருக்கு வரி விதிப்பது .என்று புரிந்து கொண்டு இப்படியும் ஒரு வரி விதித்தார்களா என்று யோசித்து ,அதை நாடோடி மன்னன் படத்திலே வரி கொடுமைகளை பற்றி விமர்சிப்பது போல வசனங்கள் ,காட்சிகள் அமைத்தார் .எனவே தான் பார்க்கின்ற விஷயங்களை எல்லாம் மனதில் பதித்து ,ஒரு சிந்தனை சிற்பியாக திகழ்ந்தார் .அதனால்தான் இந்த தமிழ்நாட்டின் முதல்வராக மலர்ந்தார் .சாதாரணமாக வந்துவிடவில்லை . அவருடைய வறுமையிலும் அவருடைய சிந்தனை திறன் என்பது இங்குள்ள மற்ற பெரிய பட்டதாரிகள், பெரிய படிப்பாளிகள் ,பெரிய அறிவாளிகள், பெரிய மெத்த படித்தவர்களுக்கு எல்லாம் இல்லாத சிந்தனை மக்களை நேசிப்பது , மக்களுடன் வாழ்வது ,மக்களுக்கு உதவுவது , மக்களுக்காக சிந்திப்பது ,என்று தன்னுடைய வாழ்க்கையின் துணையோடு*.செயல்பட்டதால் ,அவருடைய வாழ்க்கை என்பது ஒரு வரலாறு, ஒரு பாடம், ஒரு பல்கலை கழகமாக இருக்கிறது .*


திரு.கா.லியாகத் அலிகான் பேட்டி :1954ல் கூண்டுக்கிளி என்கிற படம்* எம்.ஜி.ஆர்.அவர்களும் ,சிவாஜி கணேசனும் இணைந்து நடித்த ஒரே படம் . அந்த படத்தின் இயக்குனர் ராமண்ணா எம்.ஜி.ஆர். அவர்களிடம் ஒரு காட்சியில் நீங்கள் புகைபிடிப்பது போல் நடிக்க வேண்டியிருக்கும் என்கிறார் .அப்போதுதான் எனக்கு நல்ல வாய்ப்புகள் வந்து* கொண்டிருந்த நேரம் .என்னால் நேரடியாக முடியாது என்று மறுக்க முடியாத ஒரு சூழ்நிலை .எனக்குத்தான் புகை பிடித்து பழக்கமில்லை . பிடிக்கவும் தெரியாது .நீங்கள் இப்படி சொல்கிறீர்களே என்றார்* எம்.ஜி.ஆர். பதிலுக்கு இயக்குனர் புகை பிடிக்க தெரியவில்லை என்றால் என்ன, சிகரெட்டை பற்ற வைத்து ஒரு தடவை பிடித்து இழுத்து புகை விட்டால் போகிறது .அது ஒரு பெரிய விஷயமில்லை .என்கிறார் . விவரம் தெரியாமல் அந்த செயலை செய்யும்போது உடல் ரீதியாக ஏதாவது பாதிப்பு வந்தால் என்ன செய்வது என்றுவேண்டுமென்றே* அதை தவிர்ப்பதற்காக,மறுப்பதற்காக* எம்.ஜி.ஆர். சொல்கிறார் .*இந்த செயலை நான் செய்வதால் ,திரையில் இந்த காட்சியை பார்ப்பவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆரே புகைபிடிக்க ஆரம்பித்துவிட்டார். பிறகு என்ன ,நாமும் புகை பிடித்தால் என்ன என்று இளைஞர்கள்**யோசித்து ,புகை பிடிக்க ஆரம்பித்தால்* இளைய சமுதாயம் கேட்டு சீரழிவதற்கு நாமே வழிகாட்டுவது போலாகும் .இந்த தவறான உணர்வுகள் வருவதற்கு நாமே காரணமாக இருந்துவிட கூடாது .என்ன செய்வது .வேறு மாற்றுவழி ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் என்றார் எம்.ஜி.ஆர். அப்போது இயக்குனர் சிகரெட்டை பற்ற வைத்த* பின்னர் வாயருகே கொண்டுபோகும் போது* *அந்த காட்சி ரத்தாகும் .பின்னர் மீண்டும் கையில் வைத்திருப்பது , புகை மட்டும் சில நொடிகள் வந்துகொண்டிருக்கும் அப்போது மனசோர்வு ஏற்படும் காட்சியில் அதை தூக்கி எறிந்துவிடுவது .இந்த காட்சியில்தான் கூண்டுக்கிளியில் எம்.ஜி.ஆர். சிகரெட்டை வேண்டாவெறுப்பாக பயன்படுத்திய காட்சியை படமாக்கினார்கள் .



குடியிருந்த கோயில் படத்தில் மீண்டும் எம்.ஜி.ஆர். சிகரெட் பிடிப்பது போல* காட்சி அமைக்க இயக்குனர் திட்டமிட்டார் .* எம்.ஜி.ஆர். திட்டவட்டமாக மறுத்துவிட்டார் . அந்த காட்சியை குற்றவாளி எம்.ஜி.ஆர். சென்னையில் பல இடங்களில் போலீசாரிடம் இருந்து தப்பித்து காரில் செல்வது போல கையில் சிகரெட் வைத்திருந்து பயணிப்பது போல மாற்றி அமைத்தார்கள் . பிற்காலங்களில் அந்த மாதிரி காட்சிகள் அமைப்பதையும் தவிர்த்துவிட்டார் ஏனென்றால் நான் ஏற்கனவே சொன்னது போல இயக்குனர் ஸ்ரீதரிடம் எம்.ஜி.ஆர்.சொன்ன அந்த காட்சிதான் நினைவுக்கு வருகிறது .மற்றவர்கள் எல்லாம் பொழுது போக்கிற்க்காக சினிமாவில் நடிப்பார்கள்.* இந்த எம்.ஜி.ராமச்சந்திரன் பொழுதுபோக்கிற்காக நடிக்காமல் மற்றவர்களுக்கு* பாடமாக இருப்பதற்காக பொறுப்புணர்வோடு நடிக்கிறேன்**ஆகவே உங்கள் படத்தில் இப்படிப்பட்ட காட்சிகளில் நான் நடிக்க மாட்டேன் என்று படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு வந்தவர்தான் எம்.ஜி.ஆர். அவரிடத்தில் ,பொது மக்கள், இளைஞர்கள் கற்று கொள்ள வேண்டிய பாடம் நிறைய இருக்கிறது .**


திரு.துரை பாரதி*: தக்க சமயத்தில் அவர் ஒரு குருவாக, துணையாக*,ஒரு வழி காட்டியாக கூடவே இருந்தார் .திடீரென*நம்மை*விட்டு பிரிந்து சென்றது ,மறைந்தது*அனைவருக்குமே மிகவும் துரதிர்ஷ்டம் .அவர் மட்டும் நம்மிடையே இருந்திருந்தால் என்று பல நேரங்களில் நினைத்திருப்போம் அல்லவா ,அது பற்றிய உங்கள் கருத்து* என்ன .

திரு.லியாகத் அலிகான்*: எம்.ஜி.ஆர். அவர்கள் இல்லாமல் இருக்கிறார் .அவர் நம்மிடையே இல்லை என்ற வார்த்தைகளை*கிராமத்து*மக்கள் இன்னும் நம்ப தயாராக* இல்லை .இன்னும் அவர்கள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். படத்தை வைத்து கொண்டு*அண்ணனாகவோ,தம்பியாகவோ, மகனாகவோ , நினைக்க கூடிய*மூத்த மக்கள், நடுத்தர வர்க்கத்தினர் , சில இளைஞர்கள் இருக்கிறார்கள்*ஒரு விஷயம் என்னவென்றால்,நானே என்னை*பற்றி பெருமையாக பேசி கொள்ள கூடாது .நான் கதாநாயகனாக* ஏரிக்கரை*பூங்காற்றே* என்ற படத்தில்*நடிக்கிறபோது .புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். படத்தையும், என் தந்தையார் படத்தையும் வைத்துதான்*பூஜை போட்டேன் .பிற்காலத்தில் கூட*எப்போதும்*எம்.ஜி.ஆர் அவர்களின்*படத்தை*வைத்துக்கொண்டு இருப்பேன்*குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் திருப்பூர்*மணிமாறன் அவர்கள் சென்னையில் வசித்தபோது கடவுள்*படங்கள் நிறைய வைத்திருப்பார் .அந்த தெய்வங்களுக்கு நடுவில் எம்.ஜி.ஆர். படத்தையும் வைத்திருந்தார் .என்னை*அழைத்து* சென்று*அதையும் காட்டினார் .அவர் மறைந்துவிட்டதாகவே நினைக்கவில்லை . இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறார் என்று நம்பக்கூடிய ,வணங்கக்கூடிய லட்சக்கணக்கான மக்கள், குடும்பத்தினர் இன்றைக்கும்* இருக்கிறார்கள் . எல்லோருக்கும் ஒரு உந்துசக்தியாக அவர் இருக்கிறார் .நீங்கள் பல நேரங்களில் எம்.ஜி.ஆர். நினைவிடம்*சென்று*பார்த்தீர்களேயானால்*ஆயிரக்கண க்கான மக்கள் தேங்காய் உடைத்து, சூடம் காட்டி ,மாலையிட்டு அவரை*வணங்கி, வழிபடுபவர்கள்* இருக்கிறார்கள் .நான் ரஷ்யாவிற்கு சென்றபோது ,லெனின்கிரேடு* என்கிற*இடத்தில*லெனின்*அவர்களின் உடலை*அப்படியே பாடம் செய்து* வைத்திருப்பார்கள் .அவர் உடலை*பார்க்கும்போது அவர் தூங்குவது போலத்தான்* நான் உணர்ந்தேன் . அவர் இறந்து பல வருடங்கள் ஆகிய காரணத்தால் அவர் கைகளின் தோற்றத்திற்கும் , உயிரோடு இருப்பவர்களின் கைகளுக்கும் வித்தியாசம் இருப்பதை* காண முடிந்தது .அந்த நினைவிடத்தில் மணமாகிய*நூற்றுக்கணக்கான ஜோடிகள்*வந்து அவரிடம்*ஆசிர்வாதம் பெற்று கொள்வது போல நடந்து கொள்வதை கண்டேன் .அதே போல புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.நினைவிடத்தில் நூற்றுக்கணக்கான ஜோடிகள்*,திருமணம் செய்து கொண்டு வந்து ஆசிர்வாதம் பெற்று கொள்ளும் காட்சியையும் நான்* பலமுறை*பார்த்திருக்கிறேன் . லெனின் படத்தை போல புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். படம் வருவது போல ஒரு காலண்டர் தயார் செய்து* முன்னாள் அமைச்சர் திரு.வி.வி.சாமிநாதன்* எம்.ஜி.ஆர். அவர்களிடமே அதை காண்பித்தபோது புரட்சி தலைவர்* மெய்சிலிர்த்து போனார் என்று சொல்வார்கள்அந்த அளவிற்கு*அவரது*கொள்கைகள் பொதுவுடைமை கொள்கைகளாக இருந்தன*.


நீங்கள் நாடோடிமன்னன், சக்கரவர்த்தி திருமகள், மதுரை வீரன் ,மலைக்கள்ளன்,* அலிபாபாவும் 40 திருடர்களும் போன்ற படங்களில் அவர் சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை போதித்தார் .* liberty, equality, fraternity*என்று சொல்வார்கள் .சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்று சொல்லுகிறபோதுதான் அதை அவர் தன்னுடைய வாழ்க்கையில் கடைபிடித்தவர் .யாரையும் அவர் உதாசீனப்படுத்தியதில்லை . எந்த மதத்தை சார்ந்தவரையும்* வித்தியாசமாக பார்த்ததில்லை .* இஸ்லாமியரை போல அவர் தோற்றம் கொண்டதுண்டு . இந்துக்களை போல வாழ்ந்ததுண்டு .* கிறிஸ்துவர்களை போல ,ஏன் ஏசுபிரான்*போல வேடம் ஏற்று நடிக்கவும்* தயாராக இருந்த*தலைவர்தான் .* சமத்துவ சிந்தனை* உடைய எம்.ஜி.ஆர். அவர்கள்*அண்ணாயிசம் என்ற கொள்கையை அறிமுகம்* செய்தார் .* அண்ணாயிசம் என்றால் என்ன என்று கருணாநிதி கேட்டார் .சோஷலிசம், கேபிடலிசம் ,கம்யூனிசம் எல்லாம் சேர்ந்ததுதான் அண்ணாயிசம் என்று விளக்கம் கொடுத்தார் . உடனே தி.மு.க. வினர் கிண்டல் செய்தார்கள் .இந்த தத்துவத்தை புரிந்துகொள்ள மிகவும் சிரமபட வேண்டும் என்று சொல்கின்ற நேரத்திலே ,நான் மேடையிலே*எம்.ஜி.ஆர்.அவர்களை வைத்துக்கொண்டே சொன்னேன்*,அதாவது உடுமலைப்பேட்டை அருகே ஒரு இடத்தில*சிவசுப்பிரமணிய கவுண்டர் , கோவிந்தசாமி கவுண்டர் ஆகியோரின்* தலைமையில்,முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும்போது*அண்ணாயிசத்தை பற்றி கிண்டல் செய்து பேசுகிறார்கள் .ஆனால் கேபிடலிசம், சோஷலிசம், கம்யூனிசம் ,மூன்றும் சேர்ந்த*முதலாளித்துவம், சமத்துவம் ,கம்யூனிசம் ,பொதுவுடைமை, சமத்துவம் சேர்ந்ததுதான் அண்ணாயிசம் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள் .இதை தத்துவ குழப்பம் என்று தி.மு.க.வினர் சொல்கிறார்கள் .இன்றைக்கு இந்திய நாடு செல்லுகின்ற வழியே* உங்களுக்கு இந்த தத்துவத்தை*வழிநடத்துகிறது .ரஷ்யாவில் உள்ள பொது உடைமை, அமெரிக்காவில் உள்ள முதலாளித்துவம், உலக நாடுகளில் உள்ள சமத்துவம் எடுத்து கொள்வதுதான் இந்திய நாட்டின் கொள்கையாக இருக்கிறது .இதற்கு*மத்திய அரசு தருகின்ற வார்த்தை என்னவென்றால் தங்க வழி . அந்த வழியில்தான் மத்திய அரசு நடை போடுகிறது .என்பதை அறியாமல், புரியாமல் தி.மு.க.வினர் அண்ணன் எம்.ஜி.ஆரை கிண்டல் செய்கிறார்கள் .கேலி*பேசுகிறார்கள் .புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் பிராக்ட்டிகளாக வாழக்கூடிய ஒரு மாபெரும் தலைவர் .அந்த தலைவரின் வெற்றிக்காக பொதுமக்களே நீங்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று பேசியபோது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களே ,எழுந்து*வந்து என் தோளை* தட்டி பாராட்டிய*நிகழ்வுகள் எல்லாம் இப்போது என் நினைவுக்கு வருகிறது .இவ்வாறு, திரு.லியாகத் அலிகான்* பேட்டி அளித்தார் .


அந்த காலத்தில் மிக பெரிய அறிஞர்கள், மகோன்னதமான தலைவர்கள் இருந்திருக்கிறார்கள் .ஆனால் வலம்புரி ஜான் அவர்கள் சொல்வது போல மக்கள் தொகையை கணக்கெடுக்க வேண்டும் என்றால்* மலை போல இலை வேண்டும்*ஆனால் மனிதர்களை கணக்கெடுக்க வேண்டும் என்றால் மந்தார*இலை போதும்* என்று .அந்த மந்தார இலையில்*எழுதக்கூடிய ஒரு 10, 15 பேர்களில் நிச்சயமாக*எம்.ஜி.ஆர். என்கிற பெயர் இடம் பெறும்*. அவர் ஒரு சரித்திரம் .அந்த சரித்திர சாதனை*தொடர* அவர் வகுத்த பாடங்களை, படிப்பினைகளை பயில்வோம்*அடுத்த அத்தியாயத்தில் .


நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள்*/காட்சிகள் விவரம்*
-----------------------------------------------------------------------------------
1.சிரித்து வாழ வேண்டும் - உலகம் சுற்றும் வாலிபன்*

2.நெஞ்சம் உண்டு ,நேர்மை உண்டு , ஓடு ராஜா -என் அண்ணன்*

3.பாடும்போது*நான் தென்றல் காற்று*- நேற்று இன்று நாளை*

4.நாடோடி மன்னன் படத்தில் வசனம் பேசும் எம்.ஜி.ஆர்.*

5.திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி*

6.சுந்தரம் - ரஞ்சித் வேடங்களில் எம்.ஜி.ஆர். -நினைத்ததை* முடிப்பவன்*

orodizli
11th October 2020, 07:22 AM
மக்களின் சிந்தனையாளர் எம்.ஜி.ஆர் :

நடிகர் அசோகன் நம்முடைய புரட்சித் தலைவரை பற்றி கூறியது :

திரைப்படங்களிலே நடிப்பவர்கள் சாதாரணமாக நாட்டைப் பற்றியோ, மக்களைப் பற்றியோ சிந்திப்பவர்கள் மிகக் குறைவாகவே காணப்படுவார்கள். அவர்கள் விரும்புவதெல்லாம் அதிகப் படங்களில் நடித்து நிறைய பணமாக்க வேண்டும். தேவைக்கு மேல் பணம் சேர்ந்து இருந்த போதிலும் இன்னும் அதிகமாகவே சேர்க்க தமது கவனத்தை செலுத்துவார்கள். எனவே நாட்டைப் பற்றியோ, மக்களைப் பற்றியோ அவர்களால் சிந்திக்க முடியாது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் சிறந்த நடிகர் என்ற பாராட்டைப் பெற்று இருந்தாலும் அவரது சிந்தனை எல்லாம் பாமர மக்களின் நல்வாழ்வு நம் நாட்டின் முன்னேற்றம் போன்றவையாகும். குறிப்பாக தமிழகத்தில் வாழும் பாமர மக்களின் வாழ்வில் ஏதாவது தீங்குகள் நேரிட்டாலும், பயங்கர புயல் வீசுமேயானாலும் அம்மக்களை காப்பதில் மிகத் தீவிரமாகப் பங்குகொண்டு லட்சோப லட்சம் பணத்தை வாரி வழங்கி காக்கப்பட்ட கொடை வள்ளல் எம்.ஜி.ஆர் ! எனவேதான் அவருக்கு மக்களே மக்கள் திலகம் என்ற உயர்ந்த புகழை சூட்டியுள்ளனர்.

கொடை வள்ளல் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க.........vr...

orodizli
11th October 2020, 07:23 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகன்

பாய்ஸ் கம்பெனி நடிகராய் தொடங்கி, நாடக நடிகராய் மலர்ந்து, திரைப்படக் கதாநாயகனாய் உயர்ந்து, அரசியல் தொண்டராய் மாறி முதலமைச்சராய் முடிசூடி மக்களின் மனங்களில் இன்று வரை அகற்ற முடியாத பிம்பமாய் ஒளிரும் எம் ஜி ஆர் என்ற மாமனிதன் மக்கள் திலகமாய், புரட்சி நடிகராய், புரட்சித் தலைவராய், முதலமைச்சராய் என் மனதிலும் என்றும் நிலைத்திருப்பார்.

எம்ஜிஆர் ரசிகன் என்பதில் எனக்கு மிகவும் பெருமை.
எம்.ஜி.ஆர். எனும் மூன்றெழுத்து…

தமிழ் என்பது மூன்றெழுத்து.. சினிமா என்பது மூன்றெழுத்து.. அந்த தமிழ் சினிமா உலகில் தனக்கென தனி இடம் பிடித்த மூன்றெழுத்து..எம்.ஜி.ஆர். என்னும் சிகரம். அந்தச் சிகரத்திற்கு அறிமுகம் தேவையில்லை.

இளம் சூரியன் உந்தன் வடிவானதோ..
செவ்வானமே உந்தன் நிறமானதோ ..
பொன் மாளிகை உந்தன் மனமானதோ ..
என்ற பாடலுக்கேற்ப மாளிகை போன்ற மனதை உடையவர் எம்.ஜி.ஆர்.

திரையில் அவர் நடித்த படங்களில் இடம்பெற்ற பாடல்களில் கருத்தாழம் நிறைந்தது. ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை மக்களுக்கு பாடல் மூலம் பறை சாற்றிக் கொண்டிருந்தார். அது 2 வயது குழந்தை முதல் 100 வயது வரையிலான வயோதிகர் வரை சென்று சேர்ந்தது.

விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்..
தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும்..

என்ற வரிகளுக்கேற்ப தமிழினத்திற்காக பாடுபட்ட ‘மன்னாதி மன்னன்’ .. அவர்.

அவரது பாடல்களைக் கேட்டாலே புத்துணர்வு பிறக்கும். அது காதல் பாடல்களாக இருந்தாலும் சரி.. நல் அறிவுரை கூறும் பாடல்களாக இருந்தாலும் சரி.. எதிர்மறை எண்ணங்களே இல்லாது பார்த்துக் கொண்டிருந்தார். பாடல்கள் மட்டுமல்லாமல் அவருடைய படத்தின் பெயரும் எதிர்மறை எண்ணத்தைத் தவிர்த்து .. உதாரணம் – தாய் சொல்லை தட்டாதே.. மன்னாதி மன்னன், நல்லவன் வாழ்வான், தர்மம் தலைகாக்கும், காவல்காரன், ஒளி விளக்கு, இன்னும் பல..

இந்தப் பெயர்களால் ஒரு விதமான நம்பிக்கை மனதில் தோன்றுகிறதல்லவா.. தானும் உயர்ந்து தன்னை சார்ந்தவரையும் உயர்த்துபவன் தான் தலைவன். அந்த வகையில் எம்.ஜி.ஆர். ஒரு உண்மையான தலைவன்.

எதோ நடித்தோம், பணம் சம்பாதித்தோம், மறைந்தோம் என வாழும் நடிகர்களுக்கு மத்தியில் அவரின் சிந்தனையே சொல்லானது.. சொல்லே செயலானது.. அந்த செயலும் புனிதமானது. அந்த வகையில் அவர் புத்தனாகவும் யேசுவாகவும் கண்ணில் தென்பட்டார்.
Courtesy Net....VND...

orodizli
11th October 2020, 07:23 AM
வாரிக் கொடுக்கும் வள்ளல்
பாரி வழி வந்த கலைஞர்
இல்லை என்று கைவிரித்துப் பார்த்ததில்லை
இவர் ஏழை துயர் துடைக்க சளைத்ததில்லை

வானத்தில் சிதறிக் கிடக்கும் கோடிக்கணக்கான நட்சத்திரங்களில் ஒன்றே ஒன்றுக்குத்தான் சிறப்புண் . இருளகற்றிப் பிரகாசிக்கும் வீடி வெள்ளிக்குத் தான் பெருமையுண்டு.

சிப்பியில் விளையும் எல்லா முத்துக்களும் சிறந்து விடுவதில்லை. ஒன்றிரண்டு மட்டுமே விலைக்கு அடங்காமல் மதிப்புக்கு நிற்காமல் முற்றி வினைந்து முழுமை பெறகிறது.

வைரத்தின் வரிசையிலும் அப்படித்தான்.

நம்மில் நடமாடும் கோடிக்கணக்கான உயிர்களில் விடி வெள்னியாக . முற்றி விளைந்த முத்தாக, வைரமாக வாழ்த்து காட்டுகிறவர்கள் எண்ணிக்கை அளவில் இல்லை . சட்டிக்காட்ட மட்டுமே அபர்வமாகச் சிலர் உண்டு.

அவர்களின் செயல்களைத் தான் வரலாறு தான் வரலாறு தன் இதயத்தில் வடித்து வைத்துக்கொண்டு காட்டிப் பெருமைபட்டுக் கொண்டிருக்கிறது.

பற்றிப் படரக் கொம்பில்லாமல் துவண்டு கொண்டிருந்த கொடிக்குக் தேர்கொடுத்த பாரி, வறுமையிலும் செம்மையாக நடந்து கொண்ட குமணன் இவர்களெல்லாம் வள்ளல் தன்மைக்கு , கொடயின் சிறப்புக்கு வழிகாட்டியாய் அமைந்தனர்.

இவர்களின் அடிச்சுவட்டில் எல்லோருடைய பாதங்களும் பதித்துவிடவில்லை. கலை உலகப் பொறுத்தவரை தனக்கென எதுவும் சேமித்துக் கொள்ளாமல் வந்ததையெல்லாம் ஏழைகளின் துயர் துடைக்க பிறர் கேட்காமலேயே வாரி வழங்கி, வழிகாட்டியவர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்.

கொடைத் திறனுக்கு அவர் கோபுரம் அமைத்துவிட்டுப் போனார். அந்தக் கோடாக்கின் கலசமாக இன்று விளங்குபவர் புரட்சி நடிகர் எம்.ஜி. ஆர். எங்கே துயர் இருக்கிறதோ, அங்கே இவர் துணைநிற்பார் துயர் துடைப்பார்!

மக்களைப் பற்றி ஒரு அரசுக்கு இருக்க வேண்டிய கவல தனிப்பட்ட இவர் உள்ளத்தில் எப்பொழுதும் குடைந்துகொண்டே இருக்கும் . சென்னையைச் சுற்றியுள்ள சேரிகள் எப்பொழுது அகற்று குடிசைகள் இருக்கு மிடத்தில் நல்ல குடில்கள் அமைத்து கொடுப்பது. அவர் மேடையில் பேசும்போது மட்டுமல்ல, தனிமையில் இருக்கும் பொழுதுகட இதே சிந்தனயில் அவர் எண்ணம் இழுக்கப்பட்டிருப்பதைக் காணலாம் .

மழை பெய்து கொண்டிருக்கிறது. படப்பிடிப்பிற்காக எம்.ஜி.ஆர் . காரில் சென்றுகொண்டுஇருக்கிறார். கொட்டும் மழை மேனியில் வழிய ரிக்ஷா ஓட்டிக் கொண்டு வருகிறான் ஒரு தொழிலாளி . நாம் காரில் பாதுகாப் பாகச் செல்கிறோம். அவன் மழையில் நனைந்துகொண்டு வருகிறான். காரில் செல்லும் வசதி அவனுக்கு ஏற்படாவிட்டாலும் மழையிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டாமா. இந்தச் சின்ன உதவியைக்கூட அவனுக்கு நம்மால் செய்து கொடுக்க இயலாதா?

இரண்டு திங்களில் அதை செயல்படுத்தி பேரறிஞர் அண்ணா தலைமையில் ஆயிரக்கணக்கான ரிக்ஷா தொழிலாளர்களுக்கு மழைக்கோட்டு வழங்கினார். ...sb...

orodizli
11th October 2020, 07:24 AM
"நீரும் நெருப்பும் " காவியம் மிகப்பெரிய வெற்றியை பதித்தது ஏ சென்டர்களில்*
பி சென்டர்களிலும்*
சி சென்டர்களிலும் மிகப்பெரிய ஓட்டம் கண்டு வசூலையும் பெரிய அளவில் வெற்றி கொண்டது. பல நடிகர்களின் 100 நாள் ஓடிய வசூலை குறைந்த நாளில் வென்று காட்டிய காவியம் நீரும் நெருப்பும் ஆகும். தமிழகத்தில் 22 திரையரங்குகளில் 50 நாட்களை கடந்து இலங்கையில் பெரிய அளவில் வெற்றி பெற்றது.
சென்னையில் நீரும் நெருப்பும் தேவிபாரடைஸ்*
67 நாள் : 4,16,715.90
ஸ்ரீகிருஷ்ணா
67 நாள் : 2,65,278.45
மேகலா
53 நாள் : 1,87,112.65
ஒடிய மொத்த நாள் : 187
மொத்த வசூல் : 8,69,107.00
++++++++++++++++++++++++

சென்னையில்
100 நாள் ஒட்டபட்ட
ஞானஒளி, தவப்புதல்வன்
குலமா குணமா போன்ற படங்களின் வசூலை முறியடித்த காவியம் நீரும் நெருப்பும்...

தெய்வமகன்* ( சா/ கி/புவ)
300 நாள் வசூல் : 8,71,870.76
நீதி*
99 நாள் வசூல்: 9,91,013.41
எ.வந்தாள்*
300 நாள் : 10,21,074.00
1973 பாரத விலாஸ்
சா/கி/புவ (75 நாள்)
225 நாள் வசூல் : 9,84,577.10

நீரும் நெருப்பை விட*
117 நாட்கள் அதிகம் ஒடி...
சொர்க்கம் (304 நாள்)
4 தியேட்டரில் ஒடி முடிய
வசூல் : 10,73,183.00
இப்படி குறைந்த நாளில்*
அதிக வசூலை ஏற்படுத்திய காவியம் நீரும் நெருப்பும் ஆகும்.
50 லட்சம் செலவில் எடுக்கப்பட்ட தர்மம் எங்கே டப்பா படம் படுத்தோல்வி காண்டது
3 லட்சம் கூட வசூலாகாது போண்டியானது.

சென்னை தேவிபாரடைஸ்*
67 நாள் வசூல்...4,16,715.90
தர்மம் எங்கே
ஒடியன் 41 நாள்
மகாராணி 35 நாள்
மேகலா 42 நாள்
ராம் 34 நாள்
வசூல் :3,78,112.00
152 நாள் ஒட்டபட்டும் மேலே
நீரும் நெருப்பும் 67 நாள் ஒடிய*
4 லட்சத்தை கடக்க முடியவில்லை..
மேலும் சாதனை தொடரும்......... ராஜூ.

orodizli
11th October 2020, 07:25 AM
மதுரை சென்ட்ரல் திரையரங்கில்12 வாரங்கள் சாதனை படைத்தது. வசூல் கிட்டத்தட்ட மூன்று லட்சத்தை எட்டியது. அதேபோல திருச்சி சேலம் ஈரோடு கோவை மாநகரங்களில் எல்லாம் சாதனையை படைத்தது. புதுச்சேரியில் மற்ற நடிகர்களின் நூறாவது நாள் படங்களை இங்கு தவிடு பொடியாக்கியது. 54 நாட்கள் ஓடி அதிக வசூலை தந்தது நீரும் நெருப்பும் காவியம்.

50 நாள் திரையரங்குகள்...
++++++++++++++++
நெல்லை மதுரை விருதுநகர் திண்டுக்கல் சேலம் திண்டுக்கல் ஈரோடு கோவை திருச்சி தஞ்சை கும்பகோணம் மயிலாடுதுறை கரூர் பட்டுக்கோட்டை வேலூர் புதுச்சேரி ஆகிய இடங்களில் 50 நாட்களை கடந்து சரித்திரம் படைத்த காவியம் நீரும் நெருப்பும் ஆகும்.

1971 ஆம் ஆண்டு வெளியான மற்ற நடிகர்களின் திரைப்படங்கள்
ஓடியதைவிட அதிக திரையரங்குகளில்
50 நாட்களை வெற்றிகொண்ட காவியம் நீரும் நெருப்பும் ஆகும்

பாபு திரைப்படம் 13 அரங்கில் மட்டுமே
50 நாட்கள் பட்டிக்காடா பட்டணமா 13 அரங்கில் 50 நாட்கள்
ராஜா திரைப்படம்
13 அரங்கில் 50 நாட்கள் நீதி படம் 11 அரங்கில் 50 நாட்கள்
இப்படி இந்த படங்களை விட அதிகமான திரை அரங்குகளில்
50 நாட்களை வெற்றி கொண்ட காவியம்
நீரும் நெருப்பும் திரைப்படம் ஆகும்.

சென்னையில் பல திரைப்படங்களின் வசூலை வென்று காட்டியது.

தெய்வமகன் விளையாட்டுப் பிள்ளை ராமன் எத்தனை ராமனடி பாதுகாப்பு அருணோதயம் குலமா குணமா இரு துருவம் சுமதி என் சுந்தரி தேனும் பாலும்
மூன்று தெய்வங்கள் ஞான ஒளி
தர்மம் எங்கே தவப்புதல்வன்

திரைப்படங்களை விட மக்கள் திலகத்தின் நீரும் நெருப்பும் திரைக்காவியம் கிட்டத்தட்ட 160 தினங்களில் 8 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேல் வசூலை வாரிக் கொடுத்தது.
இலங்கை மாநகரில் மகத்தான வெற்றியைப் படைத்தது...

மேலும் தொடரும்...........ur...

orodizli
11th October 2020, 07:25 AM
இந்தியாவின் தனிப்பெரும் கதாநாயகன்
நமது மக்கள் திலகம் ...
காவியங்கள் திரையிடப்படும் அனைத்து அரங்கிலும் வெற்றியை ...
சாதனையை படைத்துள்ளது.

வேட்டைக்காரன்
சென்னையில்..
வெளியான 14.01.1964 அன்றே ஒரு சாதாரண நடிகரை மட்டும் வைத்து படம் எடுத்தால் போனி ஆகாது என நினைத்து ...
என்.டி. ராமாராவ் என்ற நடிகருக்கு கிருஷ்ணன் வேடம் தரபட்டது.
அவரையும் சேர்த்து எடுக்கப்பட்ட வண்ணபடமே
அந்த படம்.....

வேட்டைக்காரன்
சித்ரா, பீராட்வே, மேகலா
101 நாட்கள்...
ஆனால் இந்த படம் சாந்தியில் 100 நாள் ஒடிய வசூல் படுகேவலமாக இருக்கிறது...

மேலும்... பிரபாத்...சயானி
100 நாள் உண்மையில் ஒடீயதா..
அதை முதலில் கண்டு பிடிக்க வேண்டும்...

சென்னையில் 5 லட்சம் கூட கண்டிப்பாக போலி படம் வசூல் படைத்திருக்க வாய்பில்லை...

வேட்டைக்காரன் 3 அரங்கில் 6 லட்சத்திற்கு மேல் வசூல் ஆகியிருக்கும்...

சேலத்தில்...
நியுசினிமா 107 நாளும்
சித்தேஸ்வரா 42 நாட்களும் ஒடி மொத்தம் 149 நாள் ஒடியது.
போலி படம் 50 நாள் தான் ஒடியது.

அடுத்து வேட்டைக்காரன் 20 அரங்கில் 50 நாட்கள் ஒடியது...
மதுரை 84
திருச்சி 91
கோவை 77
ஈரோடூ, ஆத்தூர், வேலூர்
தி.மலை, பாண்டி, தஞ்சை, குடந்தை, மாயூரம், கரூர், ப.கோட்டை, விருது நகர்,
திண்டுக்கல், நெல்லை
காஞ்சிபுரம், ஆகிய இடங்களில் 50 நாட்களை கடந்தது...

வேட்டைக்காரன் செலவு
10 லட்சம்....
முதல் வெளியீட்டில் ஒடி முடிய 40 லட்சம் வசூல்...
10 லட்சம் போட்டு மேலும் 10 லட்சம் லாபத்தை தேவர் பிலிம்ஸ் பெற்றது.
இது 6மாதத்தில் மட்டும்..

அடுத்தடுத்து 5 ஆண்டுகளில் விற்பனை பன்மடங்கு லாபமாகும்.
7ஏரியா....
1969...1974...1979....1984.
1989....1994....1999...2004
2009... 2014...2019...
இப்படி ஒவ்வொரு 5 ஆண்டிலும் வேட்டைக்காரன் பெற்ற வசூல்...ஒவ்வொரு மாவட்டத்திலும் கைமாறி...கைமாறி போய்
எத்தனையே விநியோகஸ்தர்கள் லாபம் பெற்றதை... போலி க...படம் பெற்றதுண்டா...

1976 ல் சென்னையில் 7அரங்கு வெளியிடப்பட்டது
1982 ல் 5 அரங்கு வெளியிடப்பட்டது.
1990 முதல் 2019 வரை சென்னை சரவணா..
பாலாஜியில் மட்டும் 22 முறை வெளியிடப்பட்ட வசூல் பேரரசின் வேட்டைக்காரன்...
ஒரே தியேட்டர் இப்படி என்றால்... தமிழகமெங்கும் வேட்டைக்காரன் கடந்த 55 ஆண்டில் எப்படி என்பதை யூகித்துக் கொள்ளுங்கள்....

கறுப்பு வெள்ளை படங்களின் தொடர் வெளீயீட்டின் ஒரே திரையுலக சக்கரவர்த்தி..
இந்திய திரைவானில்
மக்கள் திலகம் மட்டுமே..

எல்லா ஏரியாவிலும் 100 க்கு 100 மார்க்கை வசூலில் படைப்பவரிடம்
4,5 தியேட்டரை மட்டுமே வைத்து ஓதும் பெயில் மார்க்கை பெறும் சாதாரண நடிகரின் படத்தை தயவு செய்து ஒப்பிட வேண்டாம் சார்.....

எத்தனை எங்க வீட்டுப்பிள்ளை தலைவரின் சவுக்கடி கொண்ட பதிவை தாங்கள் கொடுத்தாலும்
உறைக்குமா என்பது தெரிவில்லையே சார்..

மேலும் தங்கள் பதிவை விரைவில் எதிர் பார்க்கிறேன்... Ur...

orodizli
11th October 2020, 06:49 PM
கர்ணன் படத்தின் மதுரை தங்கம் வசூல் விவரம் 100 நாள் தேய்த்து ஓட்டியும் மிகவும் குறைவாக இருப்பதால் இப்போது சிவாஜி கணேசன் ரசிகர்கள் வெட்கப்பட்டு ஒரு டெக்னிக் கடைபிடிக்கிறார்கள். வசூல் பகுதியை மறைத்துவிட்டு 100 நாள் என்று உள்ள மேல் பகுதியை மட்டுமே போடுகிறார்கள்.

அதெல்லாம் இருக்கட்டும். இவ்வளவு விளக்கமே வேண்டாம். சென்னை மாநகராட்சி தேர்தல் பிரச்சாரத்தில் மக்கள் திலகம் பிரச்சாரம் செய்ய வந்தால் ஓட்டுக்கள் அவர் பக்கம் விழும் என்பதை புரிந்து கொண்ட காமராஜர், ‘வேட்டைக்காரன் வருவான்.. ஜாக்கிரதையா இருங்க.." என்று பேசினார். சினிமா பார்க்காத காமராஜர் மனதிலேயே வேட்டைக்காரன் பதிந்து விட்டார் என்றால் அவரின் வெற்றி வீரியத்தை உணர்ந்து கொள்ளலாம். ‘கர்ணன் (??????) வருவார், காங்கிரசுக்கு ஓட்டு போடுங்க’ என்று காமராஜர் பேசவில்லை. சிவாஜி கணேசனின் செல்வாக்கு அவருக்குத் தெரியும். அவரது ராசியும் தெரியும். அதனால்தான் கடைசி வரை கட்சியில் பெரிய பதவி கொடுக்காமல் சிவாஜி கணேசனை ஒதுக்கியே வைத்திருந்தார். இருந்தாலும் விதி யாரை விட்டது. 1975 அக்டோபர் 1 ம் தேதி சிவாஜி கணேசன் வீட்டுக்குப் போய் பிறந்த நாள் வாழ்த்து சொன்னார். மறுநாள் மண்டையைப் போட்டார். பின்குறிப்பு: எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடைசியாக தனது யூ டியூப்பில் சிவாஜி கணேசன் பற்றி பேசினார். அதுதான் அவர் கடைசி பதிவு. விதி வலியது......... Swamy...

orodizli
11th October 2020, 06:50 PM
#திமுகவை விட்டு #எம்ஜிஆர் நீக்கப்படுவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்.....

1972, அக்டோபர் 8ம் தேதி திருக்கழுகுன்றத்திலும், பின்னர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதிலும் நடந்த தி.மு.க. கூட்டங்களில் எம். ஜி. ஆர்.பேசியது... "எம். ஜி. ஆர்., என்றால் தி. மு. க.; தி. மு. க என்றால்
எம். ஜி. ஆர்." என்று சொன்னேன். உடனே ஒருவர், 'நாங்கள் எல்லாம் தி. மு. க., இல்லையா?' என்று கேட்டார். நான் சொல்கிறேன், நீயும் சொல்லேன்... உனக்கும் உரிமை இருக்கிறது !

முன்பு ஒரு முறை காமராஜர் அவர்களை `என் தலைவர்` என்றும் அண்ணா அவர்களை `வழிகாட்டி' என்றும் சொன்னேன். தலைவர்கள் பலர் இருப்பார்கள். ஆனால் கட்சிகளுக்கு கொள்கைகளைத் தருகிற வழி காட்டி ஒருவர்தான் இருக்க முடியும். அண்ணா அவர்கள் தான் தி.மு.க., வின் வழிகாட்டி. காங்கிரசுக்கு மகாத்மா காந்தி தான் வழிகாட்டி.

கழக நண்பர்களுக்குச் சொல்கிறேன், நான் மக்களை சந்திக்கிறவனே தவிர, தலைவர்களைத் தேடிப் போய், வாழ்க்கையை உயர்த்திக்கொள்ள வேண்டிய நிலையில் என் தாயும், தமிழகமும், அண்ணாவும் வைக்கவில்லை.

நான் யாருக்கும் பயந்து கொள்கையை மாற்றிக் கொண்டவன் அல்ல. அப்படிப்பட்ட தேவையும் இல்லை. தேர்தல் நேரத்தில் "தி.மு.க.,வுக்கு வாக்குத் தாருங்கள். இன்னென்ன காரியங்களை நிறைவேற்றுவோம், ஊழல் இருக்காது, நேர்மை இருக்கும்" என்று சொல்கிறோம். அதெல்லாம் கழகத்திலும் இருக்க வேண்டும் என்று விரும்புவதற்கு எனக்கு உரிமை இல்லையா?

மந்திரிகள், சட்டசபை, பார்லிமென்ட் உறுப்பினர்கள் கணக்குக்காட்ட வேண்டும் என்று சொல்கிறோம். கணக்கு அங்கே
காட்டிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இவர்களின் சொந்தக்காரர்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்ற கணக்கை தி.மு.க., பொதுக்குழு ஏன் கேட்கக்கூடாது.?

ராமச்சந்திரன் சினிமாவிலும் நடிக்கிறான், சம்பாதிக்கிறான், நீ சம்பாதித்தால் அதற்கு கணக்கு காட்டு. மாவட்ட செயலாளர்கள், கிளை கழகச் செயலாளர்கள், வட்டச் செலாளர்கள் பதவிகளில் இருப்பவர்கள் குடும்பத்திற்கு வாங்கியிருந்த சொத்துக்கள் இருந்தால் கணக்கு காட்ட வேண்டும். அவை எப்படி வந்தன என்று விளக்கம் சொல்ல வேண்டும். பொதுக் குழுவில் நிறைவேற்றி அதற்காக குழு அமைத்து, அதனிடம் ஒவ்வொருவரும் தங்கள் கை சுத்தமானது என்பதை கூறி, மக்கள் முன் நிரூபிக்கலாம். நிரூபிக்க முடியாதவர்களை மக்கள் முன்னாள் நிறுத்தி, அவர்கள் தவறு செய்திருந்தால் தூக்கி எறிவோம். அண்ணாவின் கொள்கைக்கு ஊறு தேடியவர்களை எல்லாம் மக்கள் முன் நிறுத்தி தூக்கி எறிவோம்."

#இதயக்கனி எஸ். விஜயன்...

orodizli
11th October 2020, 06:51 PM
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1980ல் மீண்டும் ஆட்சியை பிடித்தது முதலே
எம்.ஜி.ஆர் அரசு கலைக்கப்படும் என்ற செய்தி பரவிக் கொண்டிருந்தது..

முந்தைய ஜனதா ஆட்சியில் காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகள் கலைக்கப்பட்டன.

அதே வேளையில்,1980-ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில்
அஇஅதிமுக வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றதால், இந்திரா காந்தி
அவர்கள் எம்.ஜி.ஆர் ஆட்சியை கலைத்தார்.

அந்த சமயம் ஆளுநரிடம் புகார் பட்டியல் ஒன்றை கொடுத்தார் கருணாநிதி .
புகார் கொடுத்த மூன்றாம் நாள் அதிமுக அரசு கலைக்கப்பட்டது.

"சவாலை சந்திக்க தயார்" என்று அறிவித்தார் எம்.ஜி.ஆர். 1980ல் மே மாதம் 28 முதல் 31 வரை தேர்தல் என அறிவிக்கப்பட்டது.

சட்டமன்ற
தேர்தலைச் சந்திக்க
விரிவான, வலுவான கூட்டணியை உருவாக்கினார் தலைவர் எம்ஜிஆர்.

ஜனதா கட்சி 60க்கு மேற்பட்ட தொகுதிகளை கேட்டதால் அதை நிராகரித்து,

இடதுசாரிக் கட்சிகளுக்கு தலா 16 தொகுதிகள், குமரி ஆனந்தனுக்கு 12 தொகுதிகள் (கா .கா .தே. க.) பழ. நெடுமாறனுக்கு 7 தொகுதிகள் அளித்து,

168 தொகுதிகளில் அஇஅதிமுக போட்டியிடும் என அறிவித்தார்.
மேலும் சில உதிரி கட்சிகள் இரட்டை இலைச் சின்னத்திலேயே போட்டியிட்டன.
தொகுதி பங்கீட்டில் அதிகம் சிக்கல்கள் இல்லை.

எம்.ஜி.ஆரின் சூறாவளி பிரசாரத்திற்கு பதில் கொடுக்க கலைஞர் கருணாநிதிக்கு நடிகர் சிவாஜி கணேசன் உதவியாக இருந்தார். நாடாளுவதற்கு கலைஞர், நடிப்பதற்கு எம்.ஜி.ஆர். என கூட்டங்களில்
சிவாஜி கணேசன் பேசினார்.

பதிலுக்கு தி.மு.க.- இ .காங்கிரஸ் அணியை சந்தர்ப்பவாத கூட்டணி என்று எம்.ஜி.ஆர்.விமர்சித்து பிரசாரம் செய்தார்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் தோல்விக்கு காரணமாக சொல்லப்பட்ட இட ஒதுக்கீடு விஷயத்தில் சில மாற்றங்களை செய்தார்.

முக்கியமாக பிற்படுத்தப்பட்டோர் சலுகைக்கான 9000 ருபாய் வருமான வரம்பு வாபஸ் பெறப்பட்டது.
தவிர, பிற்பட்டோருக்கான இட ஒதுக்கேடு 31 சதவிகிதத்தில் இருந்து 50 ஆக உயர்த்த பட்டிருந்தது.
அதனால் திராவிடர் கழகத்தின் ஆதரவும் அஇஅதிமுகவுக்கு கிடைத்தது.

கூட்டங்களில் மக்கள் மத்தியில் நியாயம் கேட்டார் எம்.ஜி.ஆர்..
"நாங்கள் என்ன தவறு செய்தோம்" என்ற தலைப்பில் கேள்விகள் தயார் செய்யப்பட்டு மேடைக்கு மேடை அக்கேள்விகளையே எழுப்பினார்.

ஆட்சியில் லஞ்சம் இருக்க கூடாது என்று ஆசைபட்டேனே, அது தவறா ?
ஊழலை ஒழிக்க வேண்டும் என்று சொன்னேனே,
அது தவறா??
சட்டத்துக்கு முன், நீதிக்கு முன் கட்சி கண்ணோட்டம் இருக்க கூடாது என்றேனே அது தவறா???
கோட்டை வராண்டாவில் அரசியல்வாதிகள் நடமாடக்கூடாது என்றேனே, அது தவறா????
தவறு செய்பவர்கள் என் கட்சிகாரர்கள் என்றாலும் தயங்காமல் நடவடிக்கை எடுங்கள் என காவல்துறைக்கு சுதந்திரம் அளித்தேனே,
அது தவறா???

புயல், வெள்ளம், தீ விபத்து போன்றவற்றில் மக்கள் பாதிக்கபட்டபோது ஓடோடி சென்று உதவி செய்தேனே , அது தவறா?, எது தவறு என்று சொல்லுங்கள்,
என்ன காரணத்திற்காக ஆட்சியை கலைத்தார்கள்.?????

எம்.ஜி.ஆர். எழுப்பிய கேள்விகள் வாக்காளர்கள் மத்தியில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தின..

தமிழ் மக்களே,. நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் தந்த தீர்ப்பு தவறு என்று நினைத்தால் அதை இப்போது திருத்தி எழுதுங்கள்..

அஇஅதிமுகவுக்கு வாக்களியுங்கள் என்று எம்.ஜி.ஆரின் வேண்டுகோள் தேர்தல் களத்தில் திரும்ப திரும்ப
எதிரொலித்தன..

தேர்தல் முடிவுகள் வந்த போது எம்.ஜி.ஆர் அபார வெற்றி பெற்றிருந்தார்...

அஇஅதிமுக மட்டும் 129 இடங்களை கைப்பற்றியது.
சட்டமன்ற தேர்தலில் அஇஅதிமுக கூட்டணி இமாலய வெற்றியை அடைந்தது..

முதல்வர் நாற்காலியை மீண்டும் எம்.ஜி.ஆர். வசமே மக்கள் ஒப்படைத்தனர்.

அஇஅதிமுக அணியில் இடம் பெற்ற சி.பி.எம்.முக்கு 11, சி.பி.ஐ க்கு 10, கா.கா.தே கா. வுக்கு 6, நெடுமாறனின் காமராஜ் காங்கிர*ஸ் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றன. இவ*ற்றில் காமராஜ் காங்கிர*ஸ் மற்றும் காந்தி காமராஜ் தேசிய காங்கிர*ஸ் புதிய க*ட்சிகள். புதிய சின்னங்க*ளுட*ன் போட்டியிட்ட*ன.
அவ*ற்றையும் மக்களிட*ம் கொண்டு சேர்த்தார் த*லைவ*ர்.

1977ல் சென்னையில் ஒரு தொகுதியில் மட்டுமே (ஐச*ரி வேலன்-ராதாகிருஷ்ணன் நகர்) வென்ற அதிமுக 1980ல் 6 இட*ங்க*ளில் வென்றது..

மேலும் அண்ணா ந*க*ரில் ஹ*ண்டேவை எதிர்த்து போட்டியிட்ட க*ருணாநிதிக்கு வாயில் நுரைத*ள்ளி, தோற்றதாக அறிவிக்கப*ட்டு, பின் எம்ஜிஆரின் க*ருணையால் 510 ஓட்டுக்கள் வித்தியாச*த்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட*து.

தி.மு.க. 38 இடங்களையும், இ. காங்கிரஸ் 30 இடங்களையும் பெற்றன.

1980ல் ஜூன் மாதம் 9ம் தேதி தமிழக முதல்வராக 2-ம் முறை பதவி ஏற்றார் தலைவர்..

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என்பது எப்போதும் தவிர்க்க முடியாத ஒரு வரலாறு... ❤❤❤❤...da...

orodizli
11th October 2020, 06:51 PM
செருப்பின்றி நடந்து செருக்கின்றி வளர்ந்த தலைவா...

அனைத்தும் அறிவோம்...

பாருங்க... பொறுங்கள்.* என்றும் உங்கள் புகழ் காப்போம்....

இதுவே ஆரம்பம் என்று எப்போதும் எடுத்து கொண்டு பயணம்.

உங்கள் பயணங்கள் என்றும் முடிவதில்லை.....

உண்மை நெஞ்சங்கள் இருக்கும் வரை...

ஓடவிட்டு பின் முறையாக செய்வோம்.

வாழ்க தலைவர் புகழ்

நாங்க நெருப்புல நடந்தவங்க...ஆனால் நீதிக்கு பயந்தவங்க

தருமத்தை அழிக்க வந்தா எங்களை தந்து காப்போம் என்றும்.

இன்னும் இருக்கிறோம் உங்கள் விசில் அடித்த குஞ்சுகள்...

உங்கள் பாட்டு பாடி சொல்ல போனால் நல்லவற்கு நல்லவர் கெட்டவற்கு கெட்டவர் நாங்க...உங்கள் விழுதுகள்....என்றும்

மறக்க முடியாத நாள் நேற்று 10.10.1972..

பழிக்கு பழி...*

நீங்கள்* கொலுவில்* வைத்தவரை கீழே இறக்கி தெருவுக்கு கொண்டு வர சபதம் ஏற்ற நாள் இது..

வென்றோம் தலைவரே வென்றோம் நாம்.*.......... Sudharshan...

orodizli
11th October 2020, 06:52 PM
��மழை வரும்��

��நல்ல மனிதர்கள் மண்ணை ஆள வந்தால் மழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் என்பதை உண்மையை நிஜம் ஆக்க....

��முதன் முறையாக மக்கள் திலகம் முதல்வரான காலம் 1977 அந்த ஆண்டு பருவ மழை தென் மாவட்டம் முழுவதும் பெய்து ஒரு வழியாக வெள்ள காடாக மாற்றி சேதாரத்தை ஏற்படுத்தி விட்டது

��வெள்ள சேதாரத்தை பக்கத்து மாவட்டம் என பாதித்த பல பகுதிகளை சுற்றி பார்த்த முதல்வர் மதுரையில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கி மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆலோனையில் ஈடு பட்டிருந்தார்

��செளராஷ்டிரா பள்ளியை சேர்ந்த மாணவர்கள் தலைவராக இருந்த ஏ.ஜி.எஸ் ராம்பாபு தலைமையில் ஒரு சில மாணவர்கள் தாங்கள் திரட்டிய வெள்ள நிவாரண தொகையை முதல்வரிடம் கொடுக்க முற்பட்டனர் முன் அனுமதி பெறாத காரணத்தால் உள்ளே செல்ல விடாமல் காவலர்கள் தடுத்தி நிறுத்தினர்

��பத்திரிக்கை புகைப்பட காரர்கள் அவர்களை சுற்றி வளைத்து என்னவென்று விசாரித்ததில் மாணவர்கள் வெள்ள நிவாரணம் கொடுக்க வந்த மாணவர்களை பாராட்டி அதை எப்படியாவது முதல்வரிடம் சேர்க்க முற்பட்டனர்

��பேச்சுவார்த்தை முடித்து மாவட்ட கலெக்டர் ஒருவர் வெளியே வந்தார் அவரிடம் செய்தியாளர்கள் முறையிட்டனர்.உடனே அவர் உள்ளே சென்று முதல்வர் உதவியாளரிடம் தகவலை சொல்ல சொன்னார்.

��விசயத்தை கேள்வி பட்ட முதல்வர் உடனே அவர்களை உள்ளே வர அனுமதி தந்தார் மாணவர்களுக்கு எல்லை இல்லா மகிழ்ச்சி உடனே உள்ளே சென்றார்கள்

��முதல்வர் அவர்களை கண்டதும் எழுந்து வரவேற்றார் காரணம் பாதிக்கப் பட்டவர்களுக்கு கொடுத்து உதவ முன் வந்த அந்த உயர்ந்த மனங்களுக்கு மதிப்பளித்தார் என்பதே உண்மை அவர்களை ஆரதழுவி வரவேற்று என்ன படிக்குறீர்கள் பெயர் என்ன? அப்பா அம்மா என்ன? செய்கிறார்கள் என்று தாய் உள்ளத்தோடு பேசிய வார்த்தைகளை வச்ச கண் வாங்காமல் பார்த்த மாணவர்களுக்கு வார்த்தையே வராமல் அந்த ரோஜா முகத்தை அருகில் பார்த்து மலைத்து நின்றனர்.

��அவர்கள் திரட்டி வந்த 901 ரூபாய் நிதியை முதல்வரிடம் கொடுத்து புகைப்படம் எடுத்து கொண்டு விடை பெற்றனர்.

��மீண்டும் சந்திக்கும் வரை��

#எல்லா புகழும் எம்ஜிஆர்கே...

orodizli
11th October 2020, 07:02 PM
துப்பாக்கி ஆப்ரகாம் லிங்கனை கொன்றது ...
துப்பாக்கி ஜான் கென்னடியை கொன்றது ...
துப்பாக்கி காந்திஜீயை கொன்றது ...துப்பாக்கி இந்திரா காந்தியை கொன்றது ...

உலகில் பலரை கொன்ற துப்பாக்கி பொன்மனசெம்மலிடம் மட்டும் தோற்றது ...

துளைக்க வந்த தோட்டாவும் தங்கியது சிலகாலம் வந்தாரை வயிறு குளிரவைப்பவர் அல்லவா மக்கள் திலகம் ...

தர்மதேவதை காக்க தர்மதேவன் தர்மம் தனின் சிறப்பை காட்ட தோட்டா துளைக்க வைத்ததோ...

ஏழுவள்ளலும் ஒரு செய்கை மூலம் அறிய பட
எட்டாம் வள்ளல் எம்ஜிஆர் வாழ்நாள் முழுவதும் பதித்தார் வள்ளல் குணத்தை...

வாழ்க எம் ஜி ஆர் புகழ் ...