PDA

View Full Version : கலியுக கர்ணன் வள்ளல் கணேசன்



sivaa
19th October 2015, 05:42 AM
கலியுக கர்ணன் வள்ளல் கணேசன்

வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாமல்
அள்ளிகொடுத்தவர் நமது கலியுக கர்ணன்
வள்ளல் சிவாஜி கணேசன் அவர்கள்

ஆனால் இது எத்தனைபேருக்கு தெரியும்?
தான் செய்யும் நல்லகாரியங்களை தான் ஏன் வெளியே
தெரியப்படுத்தவேண்டும் என அவர் பெருந்தன்மையாக
நடந்துகொண்டிருக்கலாம்.

அண்மையில் சிலை விவகாரம் பத்திரிகைகளில் செய்தியாக
வெளிவந்தபொழுது இவர் நாட்டுக்கு என்ன செய்தார்
என்றெல்லாம் அவரின் கொடைபற்றி தெரியாமல்
அறியாமல் சிலர் எழுதியிருந்தார்கள்

அப்படிப்பட்ட சிலரின் அறியாமையை தெளிவுபடுத்த
அவரின் கொடைகள்பற்றிய திரி இது

நமது வள்ளலின் கொடைகள்பற்றிய தகவல்கள்
ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்றன
அவற்றை இங்கே ஒன்றிணைப்போம்
வாருங்கள் நண்பர்களே
நன்றி

sivaa
19th October 2015, 05:48 AM
முகநூலில் இருந்து

https://scontent-yyz1-1.xx.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-0/s526x395/12009629_441524586051234_3893325586985170481_n.jpg ?oh=e815bdd486dc0400b2541721aab27c91&oe=56A856CB


தானமும் தர்மமும் தவமும் தனி மனிதனின் ஆத்ம திருப்திக்காக உணர்வுப்பூர்வமான சந்தோஷத்திற்காக இதில் விளம்பரம் தேவையில்லை என்பது என் கருத்து அப்பொழுதும் சரி இப்பொழ...ுதும் சரி நானும் பிரபுவும் சமூக சேவைக்கும் கஷ்டப் படும் மக்களின் மேம்பாட்டிற்கும் இயன்றதை செய்து வருகிறோம் இதற்காகவே சிவாஜி பிரபு சாரிட்டீஸ் டிரஸ்ட் என்ற தார்மீக ஸ்தாபனத்தை உருவாக்கியுள்ளோம் என் தாயார் தயாள குணமிக்கவர்கள் ஏழ்மையிலும் பிறருக்குக் கொடுத்து வாழ வேண்டும் என்பதை எங்கள் குடும்பக் கலாச்சாரமாக மாற்றி விட்டார்கள் அதையேதான் என் மனைவியும் செய்து வருகிறாள் ஆனால் எங்கள் யாருக்கும் இக்காரியங்களில் வரும் விளம்பரம் பிடிக்காது NADIGAR THILAGAM

sivaa
19th October 2015, 05:55 AM
நண்பர் வாசுதேவன் அவர்களின் பதிவிலிருந்து

http://i59.tinypic.com/314a00p.jpg


http://i61.tinypic.com/2e49imd.jpg

http://i59.tinypic.com/1z6e1vr.jpg

http://i59.tinypic.com/25jl8k8.jpg

sivaa
19th October 2015, 06:16 AM
முகநூலில் இருந்து


1964-ல் விருது நகர் மாவட்டம் மம்சாபுரத்தில் கால்நடைகளுக்காக ஒரு பெரிய கால்நடை மருத்துவமனை அமைத்து கொடுத்து வாயில்லா ஜீவன்களான கால்நடைகள் நலம் பெற வழி செய்தவர் வள்ளல் சிவாஜி


https://fbcdn-photos-f-a.akamaihd.net/hphotos-ak-xpl1/v/t1.0-0/s526x395/12096047_446054558931570_305243773194221379_n.jpg? oh=5ef69d3c59c563aba00a4a1d9e0dafc3&oe=56D2398F&__gda__=1451867205_f4be31b79d73d69f87fe4e4e90bab96 2

sivaa
21st October 2015, 08:48 AM
திரை உலகில் நுழைந்த புதிதிலேயே உதவி செய்திருக்கிறார் என்றால்
வள்ளல்தனம் அவருடைய பிறவிக்குணமாக இருந்திருக்கிறது.


http://i58.tinypic.com/2i6p1td.jpg

வாழ்க வள்ளல் சிவாஜி!
தருமகுலசிங்கம் என்று ஒருவர் என்னை இன்று வந்து சந்தித்தார். கொழும்புவைச் சேர்ந்தவர். வயது 60 இருக்கும். யாழ்ப்பாணத் தமிழில் பேசினார். நடிகர்திலகம் சிவாஜிகணேசனின் மேல் தீவிர அபிமானமுள்ளவர் என்பது அவரின் பேச்சிலிருந்து தெரிந்தது. அவர் சிவாஜி பற்றி வெளியாகும் எல்லாப் புத்தகங்களையும் உடனுக்குடன் வாங்கிப் படித்துவிடுவாராம். அப்படி விகடன் பிரசுரத்தில் வெளியிட்ட புத்தகங்களையும் வாங்கிப் படித்திருப்பதாகச் சொன்னார். “சிவாஜி பற்றி வெளியான எல்லாப் புத்தகங்களிலும் ஏதேதோ செய்திகள் இருக்கு. ஆனால்இ நாங்கள் பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் ஒரு செய்தியை மட்டும் எந்தப் புத்தகத்திலும் பார்க்க முடியவில்லை” என்றார். “அதென்ன செய்திங்க?” என்றேன். “சிவாஜிகணேசன் நடித்து ‘பராசக்தி’ என்று ஒரே ஒரு படம் மட்டும் ரிலீஸாகியிருந்த சமயத்தில்இ அவரை வேறு யாரும் பெரிய அளவில் கௌரவிப்பதற்கு முன்னால் யாழ்ப்பாணம் மக்களாகிய நாங்கள்தான் அவருக்குப் பெரிய வரவேற்பு கொடுத்துக் கௌரவித்தோம். சிவாஜி முதன்முதல் சென்ற வெளிநாடு இலங்கைதான்!” என்றார். தொடர்ந்துஇ “விகடன் பொக்கிஷம் பகுதியில்இ பல ஆண்டுகளுக்கு முன்னால் அவர் லட்ச ரூபாய் நிதி தந்தது பற்றியும்இ அதற்கு விகடனில் அந்தக் காலத்தில் தலையங்கம் தீட்டிப் பாராட்டியது பற்றியும் குறிப்பிட்டிருந்ததைப் படித்தேன். ஆனால் அதற்கு முன்பேஇ அதாவது 1953-ல் அவர் ஒரு நாடகம் நடத்திஇ அதில் வசூலான தொகை முழுவதையும் (கிட்டத்தட்ட ரூ.25இ000) எங்கள் ஊரில் ஆஸ்பத்திரி வளர்ச்சி நிதியாகக் கொடுத்துவிட்டார். அதன்பிறகுதான் அவர் இதே முறையில் பல ஊர்களிலும் நாடகங்கள் நடத்திஇ அதில் வசூலாகும் தொகையை பல நல்ல காரியங்களுக்கு அன்பளிப்பு வழங்குவது என்கிற வழக்கத்தைக் கைக்கொண்டார்” என்றார் தருமகுலசிங்கம். உண்மையில்இ 1953-ல் ரூ.25இ000 என்பது மிகப் பெரிய தொகை என்பது ரூ.10இ 7இ 5இ 2 என நாடகத்துக்கான டிக்கெட் விலைகளைப் பார்த்தாலே புரிகிறது. யாழ்ப்பாணத்தில் உள்ள அந்த மருத்துவமனையின் பெயர் ‘மூளாய்’. அது ஒரு கூட்டுறவு மருத்துவமனை. அதன் சபைத் தலைவராக இருந்தவர் பி.எம்.சங்கரப்பிள்ளை என்பவர். அவர்தான் சிவாஜிகணேசனை யாழ்ப்பாணத்துக்கு வரவழைத்துஇ பெரிய வரவேற்பு கொடுத்தவர். அந்த மூளாய் ஆஸ்பத்திரியை விரிவுபடுத்தும்பொருட்டு நிதி திரட்டித் தரும்படி அவர் சிவாஜிகணேசனிடம் கோரிக்கை வைக்கஇ சிவாஜியும் உடனே மனமுவந்து இதற்காகவே தமது கோஷ்டியாருடன் இலங்கை போய் ‘என் தங்கை’ என்ற நாடகத்தைச் சிறப்பாக நடத்திக் கொடுத்திருக்கிறார். சுமார் மூன்று மணி நேரம் நடந்த ‘என் தங்கை’ நாடகத்தின் இறுதியில்இ பராசக்தி படத்தில் பேசி அசத்திய கோர்ட் சீன் வசனத்தை ரசிகர்களுக்காகப் பேசிக் காண்பித்திருக்கிறார் சிவாஜி கணேசன். அன்றைக்கு வெளியிடப்பட்ட நாடக விளம்பர நோட்டீஸில் இதுவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘30.11.53 திங்கட்கிழமை இரவு 8-30 மணிக்குஇ மூளாய் ஆஸ்பத்திரி நிதிக்காகஇ கொழும்புஇ ஜிந்துப்பிட்டி முருகன் டாக்கீஸில்இ ‘பராசக்தி’ புகழ் சிவாஜி கணேசனும் 30 ஆண்இ பெண் நடிகர்களும் சேர்ந்த அவரது திருச்சி ஜி.எஸ். நாடக சபா கோஷ்டியாரும் நடிக்கும் ‘என் தங்கை’ நாடகம் நடைபெறும். நாடக முடிவில் சிவாஜி கணேசன் ‘பராசக்தி’ படத்தில் பேசிய கோர்ட் சீன் வசனங்கள் பேசுவதைக் கேட்கத் தவறாதீர்கள்’ என்று அந்தக் காலத்தில் அச்சிடப்பட்ட நோட்டீஸை திரு.தருமகுலசிங்கம் காட்டியபோது எனக்குச் சிலிர்ப்பாக இருந்தது. சிவாஜியை யாழ் நகருக்கு வரவழைத்து கௌரவித்த அந்த பி.எம்.சங்கரப்பிள்ளையின் மகன்தான் இன்று என்னை வந்து சந்தித்த தருமகுலசிங்கம். அன்றைக்கு சிவாஜிஇ நாடகம் முடிந்ததும் தங்கள் வீட்டுக்கு வந்திருந்து தங்களோடு ஒன்றாக அமர்ந்து விருந்துண்டு மகிழ்ந்ததை நினைவுகூர்ந்தார். சிவாஜிக்கு அளித்த வரவேற்புரையில் பேசும்போதுஇ “திரு.கணேசனை ஒரு நடிகர் என்ற அளவில் மட்டும்தான் நாம் அறிந்திருந்தோம். ஆனால்இ அவர் வெறும் நடிகர் மட்டுமல்ல; சிறந்த அறிவாளி. தமிழ் மக்களுக்காகப் பணி புரிவதில் மிகுந்த பற்றுடையவர் என்பதையும் இப்போது தெரிந்து கொண்டோம். இவர் தமது நடிப்பாற்றலால் வாழ்வில் மேன்மேலும் உயர்நிலையை அடைவார் என்பது திண்ணம்” என்று சிவாஜியின் நடிப்புத் திறனையும் சேவை மனப்பான்மையையும் மிகவும் பாராட்டிப் பேசியுள்ளார் திரு.சங்கரப்பிள்ளை. “இங்கே யாழ்ப்பாணம் மக்களாகிய நீங்கள் நாடகக் கலையை இந்த அளவுக்கு ஆர்வத்துடன் ரசித்து வரவேற்பதைக் கண்டு நான் மிகவும் மகிழ்கிறேன். தமிழகத்தில் உள்ள ஏனைய நடிக நண்பர்களிடமும் உங்களின் ஆர்வத்தை எடுத்துக் கூறிப் பெருமைப்படுவேன்” என்று தமது ஏற்புரையில் கூறி நெகிழ்ந்தார் சிவாஜி. இது அன்றைக்கு ‘வீரகேசரி’ பத்திரிகையில் செய்திக் குறிப்பாக வெளியாகியிருக்கிறது. (மேலே உள்ள படத்தில் மூளாய் மருத்துவமனைக் குழுவினரோடுஇ மத்தியில் மையமாக அமர்ந்திருப்பவர் சிவாஜி. அவருக்கு இடப் பக்கத்தில் டை கட்டிக்கொண்டு அமர்ந்திருப்பவர் பி.எம்.சங்கரப்பிள்ளை.) நானும் ஒரு சிவாஜி ரசிகன் என்பதில் பெருமைப்படுகிறேன். வாழ்க வள்ளல் சிவாஜி! .

நன்றி விகடன்
வாழ்க வள்ளல் சிவாஜி! என்ற தலைப்பில் விகடன் எனதுடயறி பகுதியில் .

sivaa
24th October 2015, 02:47 AM
வள்ளல் குணம் பிறப்பிலேயே இருந்திருக்கிறது

இவர் சினிமாவுக்கு வருவதற்குமுன் வந்து நடித்து உழைத்த சீனியர் நடிகர்கள் எல்லாம்
100 200 தான் கொடுத்திருக்கிறார்கள் ம் ம் ம்



10. 1952-ன் இறுதியில் தமிழகமெங்கும் கடும்புயல், பெருமழை காரணமாக பலத்த சேதங்கள் ஏற்பட்டு, நிவாரணப் பணிகள் அரசால்
மேற்கொள்ளப்பட்டன. புதுமுக நடிகரான சிவாஜி, நிவாரண நிதியாக ரூ.1000/- வழங்கினார். அப்போதிருந்த சீனியர், நட்சத்திர நடிகர்களெல்லாம் சிவாஜியை விட குறைவாக ரூ.100/-ம், ரூ.200/-ம் நிவாரண நிதியாக வழங்கினார்கள். இதனைக் குறிப்பிட்டு அப்போது, 'குண்டூசி' சினிமா இதழ், சிவாஜியைப் புகழ்ந்தும், குறைவாகக் கொடுத்த நடிகர்களை கிண்டல் செய்தும் செய்தி வெளியிட்டிருந்தது.

sivaa
25th October 2015, 01:58 AM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/011_zps8d76dc1c.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/011_zps8d76dc1c.jpg.html)

sivaa
25th October 2015, 09:22 PM
http://i59.tinypic.com/b8sjrc.jpg

http://i58.tinypic.com/2qlfo2e.jpg

sivaa
25th October 2015, 09:25 PM
ரூபாய் ஒரு லட்சம் உதவி




http://i60.tinypic.com/166yv7t.jpg

sivaa
26th October 2015, 10:50 PM
ஒரு வரலாற்றின் வரலாறு மலரில் இருந்து


http://i58.tinypic.com/2i8zuz9.jpg

sivaa
26th October 2015, 10:52 PM
ஒரு வரலாற்றின் வரலாறு மலரில் இருந்து



http://i60.tinypic.com/2nm19qh.jpg

sivaa
2nd November 2015, 06:54 AM
சிரித்தத முகத்துடன் கொடுக்கும்
கொடை வள்ளலின் அழகை பாருங்கள்




http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4736a-1.jpg

1965-ம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் எல்லை யுத்தத்தின் போது நமது தேசத்தின் பாதுகாப்பு மற்றும் யுத்த நிதிக்கு தனது 200 பவுன் மதிப்புள்ள தங்கப்பேனாவை நமது நடிகர் திலகம் நன்கொடையாக பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம் வழங்குகிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. இந்தத் தங்கப்பேனா தனது "ஸ்கூல் மாஸ்டர்(1958)" கன்னடப் படத்தில் கௌரவ நடிகராக நடித்ததற்காக பந்துலு அவர்கள் நடிகர் திலகத்திற்கு அன்புப்பரிசாக வழங்கிய பொருள்.


பக்தியுடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.

sivaa
17th November 2015, 09:51 AM
ஒரு வரலாற்றின் வரலாறு மலரில் இருந்துஒரு வரலாற்றின் வரலாறு மலரில் இருந்து






http://i68.tinypic.com/e3jh3.jpg

sivaa
19th November 2015, 04:14 AM
ஒரு வரலாற்றின் வரலாறு மலரில் இருந்து

http://i67.tinypic.com/2yor8rb.jpg

திரிச்சியிலுள்ள ஜமால்-முகம்மது கல்லூரி கட்டிட நிதிக்காக 1968 ம் ஆண்டு வியட்நாம் வீடு நாடகம் நடத்தி ரூ.1.30,000/-கொடுத்தார்.

இது பொதுப்பணி

sivaa
19th November 2015, 04:21 AM
ஒரு வரலாற்றின் வரலாறு மலரில் இருந்து
http://i68.tinypic.com/dqj3f4.jpg

1968ஆம் ஆண்டு மயிலாப்புரிலுள்ள விவேகானந்தா கல்லூரியின் கட்டிட நிதிக்காக ரூ.40,000/- அளித்தார்.


இது பொதுப்பணி

sivaa
19th November 2015, 04:32 AM
ஒரு வரலாற்றின் வரலாறு மலரில் இருந்து


http://i67.tinypic.com/2cz3q00.jpg

சிவாஜி- பிரபு அறக்கட்டளை அமைத்து, திரையுலகில் நலிந்த பிரிவிலுள்ள கலைஞர்களின் பிள்ளைகள்
பிள்ளைகள் பள்ளிப்படிப்பை தொடர வளிவகுத்தார். மாநகராட்சி,நகராட்சி கிராமப்பஞ்சாயத்தினர் நடத்தும்
பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இத்திட்டம் முன்னுரிமை அளிக்கிறது.இதுவரை பல லட்சக்கணக்கான பணம்
செலவிடப்பட்டுஏராளமானஏழை,எளியவர் பயன் பெற்றுள்ளனர்.


இது பொதுப்பணி

RAGHAVENDRA
11th December 2015, 01:56 PM
https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xlp1/v/t1.0-9/12311039_1017658931618112_1391483271003708985_n.jp g?oh=10bd00b8aac391b8ec671400fd8c6632&oe=56D652AD&__gda__=1458334904_a9c71ce86606cccb7c23521df61ddbf 9



From the Chevalier Sivaji Ganesan Felicitation Souvenir

sivaa
11th September 2016, 09:27 AM
முகநூலில் இருந்து


1964-ல் விருது நகர் மாவட்டம் மம்சாபுரத்தில் கால்நடைகளுக்காக ஒரு பெரிய கால்நடை மருத்துவமனை அமைத்து கொடுத்து வாயில்லா ஜீவன்களான கால்நடைகள் நலம் பெற வழி செய்தவர் வள்ளல் சிவாஜி






https://fbcdn-photos-f-a.akamaihd.net/hphotos-ak-xpl1/v/t1.0-0/s526x395/12096047_446054558931570_305243773194221379_n.jpg? oh=5ef69d3c59c563aba00a4a1d9e0dafc3&oe=56D2398F&__gda__=1451867205_f4be31b79d73d69f87fe4e4e90bab96 2

http://oi65.tinypic.com/117foy0.jpg

sivaa
4th December 2016, 11:37 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/10420405_646162108821145_7406483021127632999_n.jpg ?oh=fc2d97c2f2f907c17e30fbece71375fe&oe=58B9B8D9

எழுபதுகளின் துவக்கத்தில் வறுமையின் பிடியில் சிக்கி வாடிய கக்கன் மற்றும் அவரது குடும்பத்துக்கு நிதியளித்து உதவ எண்ணிய நடிகர்திலகம் சிவாஜி, அதற்காக, தான் அப்போது ...நடத்திவந்த 'தங்கப்பதக்கம்' நாடகத்தினை சென்னைக்கு வெளியே பெரிய நகரமொன்றில் நடத்த திட்டமிட்டு அதற்கான முயற்சிகளில் இறங்கினார். தான் சார்ந்திருந்த காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர்களில் ஒருவரும், பல ஆண்டுகளாக அமைச்சராக இருந்தவருமான கக்கன் அவர்களுக்காக நடத்தப்படும் நாடகத்துக்கு பெருந்தலைவர் தலைமையேற்றால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணி அவரை அணுக, சாதாரணமாக இதுபோன்ற நாடக விழாக்களில் கலந்துகொள்ளும் பழக்கமில்லாத பெருந்தலைவர், கக்கன் அவர்களுக்காகவும் நடிகர்திலகத்துக்காகவும் வேண்டுகோளை ஏற்றார். நாடகம் கோவையில் நடந்ததாக நினைவு.
நாடகக்கலைஞர்களை சென்னையிலிருந்து அழைத்துச்சென்று திரும்பக் கொண்டு வந்து சேர்ப்பது, அவர்களின் சம்பளம், அரங்க வாடகை, நாடக செட்களுக்கான லாரிவாடகை, விளம்பரச்செலவு என அனைத்துச் செலவுகளையும் நடிகர்திலகமே ஏற்றுக்கொண்டார். அபூர்வமாக தங்கள் நகரில் நடிகர்திலகம் பங்கேற்று நடிக்கும் நாடகம், அதுவும் பெருந்தலைவர் தலைமையில் நடக்க இருப்பதையறிந்த ரசிகர்களும் பொதுமக்களும், இந்த அரிய வாய்ப்பைத்தவற விடக்கூடாதென்று பெரும் கூட்டமாகத் திரண்டு வந்தனர். வசூல் குவிந்தது.
நாடகத்துக்கான மொத்தச்செலவையும் நடிகர்திலகம் ஏற்றுக்கொண்டதால், நாடகத்தில் வசூலான தொகை முழுவதும் கக்கன் அவர்களின் குடும்பத்துக்காக, மேடையிலேயே தலைவர் கரங்களால் வழங்கப்பட்டது. நடிகர்திலகத்தின் இந்த சீரிய சேவையைப்பாராட்டி அவருக்கு பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் ஒரு தங்கப்பதக்கத்தினை பரிசாக அளித்தார். தலைவர் அளித்த அந்தப்பதக்கத்தையும் நடிகர்திலகம் விழாவில் ஏலம் விட்டார். அங்கிருந்த உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர் அதை 10,000 ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தார். (அன்றைய தினம் ஒரு சவரன் தங்கம் எழுநூறு ரூபாய்). ஏலத்தில் கிடைத்த பத்தாயிரத்தையும் கூட கக்கன் அவர்களுக்கே வழங்கிவிட்டார் நடிகர்திலகம்.
நன்றி தெரிவித்துப்பேசிய கக்கன், "பதக்கம் மட்டும் தங்கம் அல்ல, சிவாஜியின் மனமும் சொக்கத்தங்கம்" என்று மனம் நெகிழ்ந்து சொன்னார்.
PHOTO-(தங்கப்பதக்கம் நாடக இடைவேளையில், நாடகம் பார்க்க வந்திருந்த கானக்குயில் 'பாரதரத்னா' லதா மங்கேஷ்கருடன் நடிகர்திலகம்)

(முகநூலில் இருந்து)

sivaa
17th July 2018, 06:06 AM
http://oi65.tinypic.com/rib38w.jpg

sivaa
10th August 2018, 09:53 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/38717301_161382791423767_6624699475954761728_n.jpg ?_nc_fx=fyyz1-1&_nc_cat=0&oh=40dd73cd339664fd56daa3fa6a3d9653&oe=5BFEB8BE

sivaa
14th August 2018, 02:48 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/39057072_2282754515075286_5349095288554389504_n.jp g?_nc_fx=fyyz1-1&_nc_cat=0&oh=6eaac8be940a3cda4eb09612f1d15a47&oe=5BFF10AD

sivaa
18th August 2018, 03:43 PM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/39443074_546458765790423_2081634837210333184_n.jpg ?_nc_fx=fyyz1-1&_nc_cat=0&oh=b78a2b87d6c0b7557c12626e0fb17e49&oe=5C037F01

sivaa
31st December 2018, 06:35 AM
http://oi64.tinypic.com/k1qduc.jpg

sivaa
31st December 2018, 06:36 AM
http://oi67.tinypic.com/206obhe.jpg

sivaa
31st December 2018, 06:37 AM
http://oi67.tinypic.com/fbw1tl.jpg

sivaa
31st December 2018, 06:38 AM
http://oi68.tinypic.com/20t458l.jpg

sivaa
31st December 2018, 06:38 AM
http://oi64.tinypic.com/2mpfprb.jpg

sivaa
31st December 2018, 06:39 AM
http://oi63.tinypic.com/qounfc.jpg

sivaa
31st December 2018, 06:39 AM
http://oi67.tinypic.com/21j51xc.jpg

sivaa
31st December 2018, 06:40 AM
http://oi63.tinypic.com/23jmvr9.jpg

sivaa
31st December 2018, 06:41 AM
http://oi68.tinypic.com/2m2aoig.jpg

sivaa
31st December 2018, 06:50 AM
http://oi65.tinypic.com/6pqfwj.jpg

sivaa
5th January 2019, 11:24 AM
http://oi63.tinypic.com/nxkndc.jpg

sivaa
5th January 2019, 11:25 AM
http://oi65.tinypic.com/2pzh735.jpg

sivaa
5th January 2019, 11:35 AM
http://oi66.tinypic.com/28jvad3.jpg

sivaa
13th January 2019, 09:45 AM
http://oi68.tinypic.com/126bq13.jpg

sivaa
13th January 2019, 09:46 AM
http://oi68.tinypic.com/mlgiub.jpg

sivaa
16th February 2019, 03:10 PM
கள்ளர் குடியில் பிறந்த கொடை வள்ளல் " சிவாஜி "
------------------------------------------------
சிவாஜி கணேசன் மன்றாயர் எனும் உலகப்புகழ்பெற்ற மகா கலைஞனை நடிகர் திலகமாகவும், சிம்மக்குரலோனாகவும் அனைவரும் அறிவோம். சிவாஜி கணேசனின் கொடைத்தன்மையை பற்றி இந்த தலைமுறையினர் முழுமையாக அறிந்திருக்க வாயப்பில்லை. சிவாஜி கணேசன் திரைப்படத்தில் மட்டும் அல்லாது நிஜ வாழக்கையிலும் கர்ணனாகவே வாழந்தவர். சிவாஜி கணேசனை போல கொடை பண்பில் சிறந்தவர் வேறு யாரும் இலர் எனும் கூறும் அளவுக்கு, எந்த விளம்பரமும் இல்லாமல் இவர் செய்த கொடைகள் பல. இவர் தமிழ் இனத்தின் சொத்து. தமிழ் தாய் ஈன்ற முத்து. சிவாஜி கணேசன் அளித்த கொடைகளில் பொதுவெளியில் பதிவு செய்யப்படாதது பல. வெளி உலகத்திற்கு தெரியவந்தது சில.
அவற்றை காண்போம்.
* தமிழக அரசு ஆடும் வைஜெயந்தி மாலாவுக்கு மாதம் ரூ 1000 மும், பாடும் மதுரை சோமுவுக்கு மாதம் ரூ 1000 மும் அளித்துவிட்டு, வறுமையில் வாடிய கக்கன்ஜிக்கு வெறும் ரூ 500 ஐ அளித்தது. அதைக்கண்டு வெகுண்ட சிவாஜி கணேசன் தனது 10 பவுன் தங்க சங்கிலியோடு( இன்றைய மதிப்பில் 2,50,000 ரூ) சேலம் நேரு கலை அரங்கில் " தங்கப் பதக்கம்" நாடகம் நடத்தி கிடைத்த தொகை ரூ 15000 ( இன்றைய மதிப்பு 5 லட்சம்) அளித்தார்.
* பல கோடிகள் மதிப்புள்ள , தனக்கு சொந்தமான கோடம்பாக்கம் நிலத்தை நலிந்த நடிகர் நடிகைகள் வீடு கட்டிக்கொள்ள இலவசமாக அளித்தார்
* கயத்தாரில் கட்டபொம்மன் தூக்கிலப்பட்ட இடத்தை ( 47 சென்ட்) வாங்கி தனது சொந்த செலவில் கட்டபொம்மனுக்கு சிலை வைத்து அது நினைவு சின்னமாக திகழ்கிறது.
* பாண்டிச்சேரி பள்ளிகளுக்கு பகலுணவு நிதியாக ரூ 1 லட்சம்( இன்றைய மதிப்பில் ரூ 51 லட்சம்) அளித்தார்.
* மதுரையில் சரஸ்வதி பள்ளிக்கட்டிடம் இடிந்து விழுந்த பொழுது பாதிக்கப்பட்ட மாணவியருக்கு ரூ 1 லட்சம் அளித்தார்.( இன்றைய மதிப்பு ரூ 50 லட்சம்)
* கோயில் திருப்பணிகளுக்காக கிருபானந்த வாரியாரிடம் பல்லாயிரம் ரூபாய்களை நன்கொடையாக வழங்கினார்.
* தமிழக வெள்ள நிவாரண நிதியாக முதல்வர் எம்ஜிஆரிடம் நாடக வசூல் மூலம் ரூ 1 கோடிக்கு மேல் அளித்தார்.( இன்றைய மதிப்பு :11 கோடிக்கு மேல்)
* சென்னை கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் பகுதியில் அண்ணல் அம்பேத்காருக்கு சிலை அமைத்தார்.தமிழகத்தில் பல பகுதிகளில் அம்பேத்கார் சிலை அமைய தாராளமாக நிதியுதவி செய்துள்ளார்.
* சென்னை பெசன்ட் நகரிலுள்ள மங்கையர்கரசி மகளிர் மன்றக் கட்டிடத்திற்காக தங்கப்பதக்கம் நாடகத்தின் ஒரு நாள் வசூலை அளித்தார்.
* தேசப்பாதுகாப்பு நிதிக்காக தமிழகத்தின் சார்பில் ரூ 5 லட்சம் வசூலித்து கொடுத்தார்.
* 1965ல் இந்தியாவுடன் பாகிஸ்தான் போரிட்டபோது அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம், திருமதி. கமலா அம்மையாரின் 400 பவுன் தங்க நகைகளையும், பெங்களூரில் சிவாஜிக்கு பரிசாக கிடைத்த 100 பவுன் தங்க பேனாவையும், மொத்தம் 500 பவுன் இன்றைய மதிப்பு ரூ.1.5 கோடி கொடுத்து தேசத்தையே திரும்பி பார்க்க வைத்தவர்.
* மீண்டும் தமிழகமெங்கும் நாடகங்கள் நடத்தி தன்னுடைய வியர்வையில் விளைந்த வெள்ளிகாசுகளாம் 17 லட்சம் (இன்றைய மதிப்பு 8.5 கோடி) வாரி வழங்கி தேசம் வெற்றிபெற துணை நின்றவர் சிவாஜி.
* 1959ல் அன்றைய பாரத பிரதமர் நேருவிடம் , மதிய உணவு திட்டத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் (இன்றைய மதிப்பில் 70 லட்சம்) வழங்யுள்ளார்.
* சேலத்தில் தங்கப்பதக்கம் நாடகம் நடத்தி அதன்மூலம் வசூலான தொகையில் சேலம் முள்ளுவாடி கேட் அருகில் உள்ள மாவட்ட காங்கரஸ் கமிட்டி கட்டிடத்தை வாங்கிக் கொடுத்தார்.
* 1962 ல் இந்தியா சீனா போரின் போது பிரதமர் நேருவை சந்தித்து ரூ 40 ஆயிரம் யுத்த நிதியாக கொடுத்த முதல் இந்தியர் சிவாஜிதான்.( இன்றைய மதிப்பு :26 லட்சம்)
* 1962 ல் இந்தியா சீனா போரின் போது டெல்லியில் நடந்த பொதுக்கூட்டத்தில் மீண்டும் ரூ 25000 த்தை( இன்றைய மதிப்பு 16 லட்சம்) போர் நிதியாக கொடுத்தார்.
* 1962ல் சிவாஜி பிலிம்ஸ் தயாரித்து வெளியிட்ட ராக்கி திரைப்படத்தின் அகில இந்திய ஒரு நாள் வசூல் முழுவதையும் யுத்த நிதியாக அளித்தார்.
* 1960 களில் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை 112 முறை தொடர்ந்து நடத்தி அதன் மூலம் வசூலான 32 லட்சத்தை (இன்றைய மதிப்பு 22 கோடி) பல கல்லூரிகளுக்கு வாரி வழங்கி கல்வியின் சிறப்பை உலகிற்கு உணர்த்தினார்.
* பாகிஸ்தான் ஆக்கிரமிப்பின் போது அப்போதைய குடியரசு தலைவர் ஜாகிர் உசேனை சந்தித்து ரூ 50 ஆயிரத்தை(இன்றைய மதிப்பு 21 லட்சம்) யுத்த நிதியாக அளித்தார்.
* பெங்களூர் நாடக அரங்கம் கட்ட" கட்ட பொம்மன்" நாடகம் மூலம் ரூ 2 லட்சம்( இன்றைய மதிப்பு 1.5 கோடி) நன்கொடையாக அளித்தார்.
* பெங்களூர் மக்கள் நலனுக்காக ரூ 15 லட்சம்( இன்றைய மதிப்பு 10 கோடி) நிதியினை வழங்கினார்.
* கம்யூனிஸ்ட் கட்சிக்காக கட்டபொம்மன் நாடகம் நடத்தி தோழர் ஜீவாவிடம் நிதி உதவி அளித்துள்ளார்.
* அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் கருவூலத்தில் திமுகவை வளர்த்தவர்கள் வரிசையில் சிவாஜி கணேசனின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.
* திமுகவை வளர்க்க பல நாடகங்களை ஒரு பைசா கூட பெறாமல நடத்திக்கொடுத்தவர் சிவாஜி, மற்றும் பல நாடகங்கள் மூலம் நிதி வசூல் செய்து திமுகவிற்கு அளித்தவர் சிவாஜி என கலைஞர் தனது நூலான நெஞ்சுக்கு நீதியில் குறிப்பிட்டுள்ளார்.
* தேசத்தந்தை காந்திக்கு சிலை, நேருவுக்கு சிலை, இந்திரா காந்திக்கு சிலை, பெரியாருக்கு சிலை, கன்னியாகுமரியின் தந்தை ஐயா நேசமணிக்கு சிலை என நாட்டுக்காக உழைத்தவர்களுக்கு சிலை வைத்து அழகு பார்த்தார் சிவாஜி. பெருந்தலைவர் காமராஜருக்கு தமிழகமெங்கும் சிலைகள் வைத்து பெருமை சேர்த்தார்.
* தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம் கட்டிட நிதிக்காக " வியட்நாம் வீடு" நாடகம் மூலம் ரூ 30 ஆயிரம் நிதியை அளித்தார்.( இன்றைய மதிப்பு : 12 லட்சம்)
* வேலூர் பென்லன்ட் மருத்துவமனை கட்டிட நிதிக்காக வியட்நாம் வீடு நாடகத்தின் மூலம் ரூ 2 லட்சம் நிதி அளித்தார்.( இன்றைய மதிப்பு 80 லட்சம்)
* தென்னிந்திய நடிகர் சங்கத்தலைவராக 8 ஆண்டுகள் பணியாற்றினார். அப்போது பெரிய நாடக அரங்கம் ஒன்றினை சங்கரதாஸ் சுவாமி பெயரிலும், திரையரங்கம் ஒன்றினை தேவர் பெயரிலும் கட்டினார்.
* கோயில் நிதி என்றால் ரூ 2 ஆயிரம், வெள்ள நிவாரண நிதி என்றால் ரூ 75 ஆயிரம், பாரதி விழாவிற்கு ரூ 50 ஆயிரம், மருத்துவமனை கட்ட ரூ 50 ஆயிரம், பள்ளிக்கூடம் கட்ட ரூ 25 ஆயிரம், தேச பக்தர்களுக்கு சிலை அமைக்க ரூ 25 ஆயிரம், அறிஞர் பெருமக்களுக்கு பணமுடிப்பு அளிக்க ரூ 10 ஆயிரம் எனவும் அளித்துள்ளார்.
* சென்னையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமண மண்டபத்தின் கட்டிட நிதிக்காக தங்கப் பதக்கம் நாடகத்தின் ஒரு நாள் வசூலை அளித்தார்.
* நாகை மாவட்டம் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்திற்கு கோவில் மணி அமைக்கும் முழுச்செலவையும் ஏற்றார்.
*திருச்சி திருவானைக்கால் கோயில், தஞ்சை பெரிய கோயில், தஞ்சை முத்து மாரியம்மன் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில்களுக்கு யானைகளை வழங்கினார்.
*வல்லக்கோட்டை முருகன் கோயில் திருப்பணிக்காக ரூ 10 ஆயிரம் த்தை கிருபானந்த வாரியாரிடம் அளித்தார்.(இன்றைய மதிப்பில் பல லட்சம்)
* சென்னை கொசப்பேட்டை கந்தசாமி கோயில் தெப்பக்குளத்தில் செய்த திருப்பணி செலவை முழுமையாக ஏற்றார்.
* 1953 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புயல் நிவாரண நிதிக்காக விருது நகரில் தெருத்தெருவாக சென்று பராசக்தி வசனங்களைப் பேசி ரூ 12 ஆயிரம்( இன்றைய மதிப்பில் 10 லட்சம்) வசூலித்துக் கொடுத்தார்.
* 1957ல் இருந்து 1961 வரை பம்பாயில் நாடகங்கள் நடத்தி குழந்தைகளின் கல்விச் செலவுக்காக ரூ 5 லட்சத்தை ( இன்றைய மதிப்பு 3.5 கோடி) கொடுத்த முதல் இந்திய நடிகர் சிவாஜி கணேசன் தான்.
* 1960ல் தமிழகம் பெரும்புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது, சிவாஜி கணேசன் 1 லட்சம் உணவுப் பொட்டலங்களையும், 800 மூட்டை அரிசியையும் தானமாகக் கொடுத்தார்.
* 1961 ல் பிரதமர் நேருவிடம் கிழக்கு தாம்பரத்தில் காசநோய் மருத்துவமனை கட்டுவதற்கு ரூ 1 லட்சம் கொடையாக அளித்தார். (இன்றைய மதிப்பில் 70 லட்சம்)
* 1964 ல் மகாராஷ்டிரா கொய்னா பூகம்ப நிதியாக அம்மாநில முதல்வர் ஒய் பி சவானை சந்தித்து ரூ 1 லட்சம் கொடுத்த முதல் இந்திய நடிகர் சிவாஜி தான்.( இன்றைய மதிப்பு 60 லட்சம்)
* 1964 ல் விருதுநகர் மாவட்டம் மம்சாபுரத்தில் ஒரு பெரிய கால்நடை மருத்துவமனையை அமைத்துக் கொடுத்து வாயில்லா ஜீவன்கள் மீதான தனது பாசத்தை வெளிப்படுத்தினார்.
* 1965 ல் பிரதமர் நேருஜி நினைவு நிதியாக ரூ 1.5 லட்சம் கொடுத்தார்.
( இன்றைய மதிப்பு 75 லட்சம்)
* 1965 ஆம் ஆண்டு செப்டம்பர் 17-18 தேதிகளில் நீதியின் நிழல், களம் கண்ட கவிஞன் நாடகங்கள் நடத்தி வசூலான ரூ 1 லட்சத்தை யுத்த நிதியாக தமிழக முதல்வர் பக்தவச்சலத்திடம் அளித்தார்.( இன்றைய மதிப்பு 55 லட்சம்)
* 1966 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டபோது நிதியுதவியாக ரூ 10,000 அளித்தார்.( இன்றைய மதிப்பு :5 லட்சம்)
* 1967 ஆம் ஆண்டு உலக தமிழ் மாநாடு சிறக்க வள்ளுவர் சிலை அமைத்ததுடன் முதலமைச்சர் அண்ணா அவர்களிடம் ரூ 5 லட்சம் வழங்கினார்.( இன்றைய மதிப்பு : 2.5 கோடி)
* 1968 ஆம் ஆண்டு மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தர் கல்லூரியின் கட்டிட நிதிக்காக ரூ 40,000 அளித்தார்.( இன்றைய மதிப்பு 15 லட்சம்)
* 1968 ஆம் ஆண்டு திருச்சியில் உள்ள ஜமால் முகமது கல்லூரி கட்டிட நிதிக்காக ரூ 1,30,000 அளித்தார்.( இன்றைய மதிப்பில் 50 லட்சம்)
* 1971 ல் இராணுவ வீரர்கள் முகாமில் தானும் தனது மனைவி கமலாவும் இரத்ததானம் செய்து தனது ரசிகர்களிடம் இருந்து பெருந்தொகை வசூலித்துக் கொடுத்தார்.
* 1972 ல் காஷ்மீர் மாநில முதலமைச்சர் மீர்காசிமை சந்திந்து அம்மாநில தாழத்தப்பட்ட மாணவர்கள் கல்விநிதிக்காக ரூ 25 ஆயிரம் அளித்தார்.( இன்றைய மதிப்பு 8.5 லட்சம்)
*1972 ல் ஈரோடு ஸ்தாபன காங்கரஸ் மாநாட்டில் கட்சி நிதியாக ரூ 1.25 லட்சத்தை அளித்தார்.( இன்றைய மதிப்பில் 45 லட்சம்)
* 1972ல் ராஜா திரைப்படத்தின் மூலம் வசூலான ஒரு நாள் தொகையை விமானபடையில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கினார் சிவாஜி.
* 1974 ல் சிங்கப்பூர் சிறுநீரக மருத்துவமனைக்கு ரூ 45 ஆயிரம் அளித்தார்.( இன்றைய மதிப்பு 12 லட்சம்)
*1974 ல் கடற்படை வீரர்கள் நிதிக்காக அட்மிரல் குல்கர்னி அவர்களிடம் ரூ 50 ஆயிரம் வழங்கினார்.( இன்றைய மதிப்பு 14 லட்சம்)
* 1975 ஆம் ஆண்டு தன் வீட்டிற்கு வந்து ஆசீர்வதித்த காமராஜரிடம் ரூ 1 லட்சம் பொதுநிதியாக அளித்தார்.( இன்றைய மதிப்பு 30 லட்சம்)
* பீகாரில் வெள்ளம் ஏற்பட்டபோது பெரும் நிதியை நிவாரண நிதியாக அளித்தார்.
* 1975 ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் வறட்சி ஏற்பட்டபோது நிதியுதவியாக 1 லட்சம் அளித்தார்.( இன்றைய மதிப்பு 22 லட்சம்)
* 1977ல் தமிழக முதல்வராக எம்ஜிஆர் இருந்தபொழுது கொடி நாளுக்காக 1.2 கோடியை வசூலித்து கொடுத்தார்.
* 1978ல் புயல் நிவாரண நிதியாக மூப்பனாரிடம் ரூ 20 ஆயிரம் அளித்தார்.( இன்றைய மதிப்பு 4.5 லட்சம்)
* 1982 ஆம் ஆண்டு எம்ஜிஆர் அவர்களை இளைய திலகம் பிரபு நேரில் சந்தித்து தன் சார்பில் 25 ஆயிரமும் சிவாஜி கணேசன் சார்பில் ரூ 1 லட்சமும் சத்துணவு திட்டத்திற்கு அளித்தார்.( இன்றைய மதிப்பு 20 லட்சம்)
* 1993 ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் லாட்டூரில் ஏற்பட்ட பூகம்பத்திற்கு ரூ 1 லட்சம் அளித்தார்.( இன்றைய மதிப்பு 10 லட்சம்)
* 1999 ஆம் ஆண்டு கார்கில் போர் நிதியாக கலைஞரிடம் ரூ 1 லட்சம் கொடுத்தார்.( இன்றைய மதிப்பு 6 லட்சம்)
தன்னை வைத்து முதல் படம் எடுத்த திரு. பெருமாள் முதலியார் அவர்களின் வீட்டிற்கு வருடந்தோறும் பொங்கலன்று சென்று சீர் செய்து அவர்கள் குடும்பத்திற்கு தன் இறுதி மூச்சு உள்ளவரை உதவிவந்தவர் நடிகர் திலகம்.
நடிகர் திலகம் மறைந்த பின்பும், இளைய திலகம் பிரபு குடும்பத்துடன் சென்று வேலூரில் உள்ள பெருமாள் முதலியார் குடும்பத்திற்கு சீர் செய்து நன்றி செலுத்தி வருகிறார்கள் என்பது எத்துனை பேருக்குத் தெரியும்!
சிவாஜி கணேசன் தன் வாழ்நாள் முழுவதும் நாட்டு மக்களுக்காக வாரி வழங்க தவறியதில்லை. ஒரு நடிகர் என்பதையும் தாண்டி சிவாஜி கணேசன் தமிழ் உலகிற்கு செய்த தொண்டுகள் ஏராளம்.
சிவாஜி கணேசனுக்கு ஏன் அரசாங்க செலவில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என வினவியவர்கள் அவரை பற்றி முழுமையாக அறிந்துக்கொள்வது அவசியம். அவர் தமிழுக்கும் இந்திய தேசத்திற்கும் செய்த தொண்டுகளுக்கு எத்தனை மணிமண்டபங்கள் கட்டினாலும் ஈடாகாது.
தொகுப்பு : சியாம் சுந்தர் சம்பட்டியார்
(தகவல்கள் : புதுக்கோட்டை மாவட்ட நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப்பேரவை வெளியீடு:- நடிகர் திலகம் 90 ஆவது பிறந்தநாள் விழா சிறப்பு மலர் 27.01.2019)
http://oi66.tinypic.com/2ppjyv5.jpg

Vasudevan .S

sivaa
6th March 2019, 08:01 AM
http://oi65.tinypic.com/1zpp374.jpg

sivaa
11th March 2019, 10:07 PM
கோயில் நிதி என்றால் இரண்டாயிரம் வெள்ள நிவாரணம் என்றால் 75ஆயிரம் பாரதி விழாவுக்கு 50 ஆயிரம் பள்ளி கட்டிடம் கட்டவா 25ஆயிரம் மருத்துவமனை காட்டவா 50ஆயிரம் தேச பக்தர்களுக்கு சிலை அமைக்கவா இதோ 5ஆயிரம் அறிஞர் பெருமக்களுக்கு பணமுடிப்பு அளிக்கவா இதோ பத்தாயிரம் கலைத்துறையில் யாருக்கேனும் திருமணமா இரண்டாயிரம் என்று வாரிக்கொடுத்த வள்ளல் கணேசன் நேருஜி காமராஜர் அண்ணா கருணாநிதி ஆகியோர் மூலம் நாட்டுக்கு நடிகர்திலகம் கொடுத்த பகிரங்க நன்கொடையே பல லட்சம் தேறும் ஆதாரம் தமிழ் வாணன் எழுதிய நடிகர்திலகம் புத்தகத்தில் இருந்து
http://oi66.tinypic.com/jrbrjn.jpg

sivaa
12th March 2019, 08:04 PM
ஒவ்வோர் ஊரிலும் சிவாஜி நன்கொடையால் உருவான கல்லூரியோ பள்ளிக்கட்டிடமோ ,திருப்பணி கும்பாபிஷேகம் நடந்த கோயிலோ ,மருத்துவமனையோ தண்ணீர்த்தொட்டியோ ,தலைவர்கள் சிலையோ, இவற்றுள் எதாவது ஒன்று நிச்சயம் இருக்கும் இங்கு மட்டுமல்ல பெங்களூர் பம்பாய், கல்கத்தா ,டெல்லி, நகரத் தமிழர்களுக்கும் கலை மன்றங்களுக்கும் இவரது கொடைக்கரம் நீண்டதற்கு எத்தனையோ சான்றுகள் உண்டுதமிழ்வாணன் எழுதிய புத்தகத்தில் இருந்து
http://oi64.tinypic.com/67jotv.jpghttp://oi65.tinypic.com/2ngh9nr.jpg

நன்றி Vijaya Raikumar

sivaa
21st March 2019, 09:58 AM
படித்ததில் பிடித்தது மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் கலையரங்கம்ஒன்றை தரைத்தளம் முதல்மாடி அடங்கிய கட்டடத்தை கட்டுவதற்கு மிகப்பெரிய நிதியை அன்றைக்கு வழங்கி உள்ளார் இன்றைக்கும் அதற்க்கு சிவாஜி ஹால் என்ற பெயரும் உண்டுமனிதாபிமானம் அதற்க்கு மறு பெயர் சிவாஜியா நன்றி charlesinvento —

http://oi63.tinypic.com/2afxt20.jpg

நன்றி R vijaya

sivaa
6th May 2019, 07:46 AM
http://oi65.tinypic.com/13zmpah.jpg

sivaa
15th May 2019, 07:54 AM
http://oi66.tinypic.com/2ldwuvk.jpg

sivaa
15th May 2019, 07:54 AM
http://oi65.tinypic.com/era0ll.jpg

sivaa
15th May 2019, 07:55 AM
http://oi68.tinypic.com/2945hsz.jpg

sivaa
8th September 2019, 07:02 AM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/69817091_798055370590515_6881869331521601536_n.png ?_nc_cat=102&_nc_oc=AQnLwYe97xvGDl2wMPRbO2G5__JvoWFAl0SHzJCHHSt QV_yFg63pUyuYuFq58FtJa0k&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=e892bb618a43c6c800114858222aea08&oe=5DFE2922


இடது கை கொடுப்பது வலது கைக்கு தெரியாது அவர்தான் ஐயன் சிவாஜி

படம் உதவி நன்றி நிலா

sivaa
21st September 2019, 09:51 PM
படித்ததில் வியந்தது ஸ்ரீபெரும்புத்தூரில் இருந்து சுங்குவார் சத்திரம் போகும் வாய்ப்பு கிடைத்தால் இரண்டு ஊர்களுக்கும் இடையில் உள்ள நசர த்பேட்டை என்ற ஊரில் உள்ள அரசாங்க நடுநிலை பள்ளியில் உள்ள வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் சுற்று சுவர்களு க்கும் நடிகர் திலகத்தின் நன்கொடையால் கட்டப்பட்டவை என்று கட்டிடத்தின் மேல் பொறிக்கபட்டு இருக்கும்.இது நாம் வாகனத்தில் இருந்து பிரயாணம் செய்யும் இடது பக்கம் பார்த்தாலே தெரியும்.நன்றி ராமானுஜம் சமுத்திர பாண்டி


நன்றி Vijiya Raj Kumar‎ to Nadigarthilagam Fans

sivaa
8th October 2019, 12:49 PM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/71904450_426095968017678_4777089555503251456_n.jpg ?_nc_cat=107&_nc_oc=AQlQsjl8mDr-bUfMBTzhghfsrxxICDozSQUnBmDA7N_bgUt0B2kqhm4rhOr_TL 9GbOg&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=b6999d9c52b5574fdf80a0f37ba53efe&oe=5E1D577Ehttps://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/71572420_2137493193222971_6526955293132193792_n.jp g?_nc_cat=103&_nc_oc=AQnHBaVVfhZCpGF05c8Vg2sTwy01w6dd3QSGmILbQwp bGFcJOQTCq0aKTlizVY89j3I&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=882138529cbf54b8513ced2334bc383d&oe=5E281D84

sivaa
8th October 2019, 12:49 PM
ஆவணப் பொக்கிஷங்கள்.
மிக அரிய புகைப்படம்.


https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/71570255_376436353245163_7371163018178068480_n.jpg ?_nc_cat=100&_nc_oc=AQlFhHeBEl1dOgR-R8iwh9CKvOf4cIjhx77bmnn0L4SF36WIYQIFZjo2-Mhp0waI9cg&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=7adc11fdcd73ee2c07907cd13ed02dcb&oe=5E3AAAD8

sivaa
17th December 2019, 10:25 PM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/76765584_2548343758594225_209929742206369792_n.jpg ?_nc_cat=110&_nc_oc=AQkYfRC7yZDpL0mi4wst1SG2JlOzu6hWtNWfBPsG1cF 5mbFVoOo0ho4qH5uFdHIlr10&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=d8d2fb567d9f0bc77c975cfeee8dc5ab&oe=5E6CA88B

sivaa
31st December 2019, 08:27 AM
https://scontent.fyzd1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/80881220_2659512530804060_7508678392003166208_n.jp g?_nc_cat=100&_nc_oc=AQnaChyNo6pLOKEFC3VhNI4DQUMAxrPVdjkygYZyNj_ wtCZR_WBiskbtMLH3JqRl-FM&_nc_ht=scontent.fyzd1-2.fna&oh=ea48580e3bde994b8581e3a3a6a10f9e&oe=5EA16E17

sivaa
18th January 2020, 11:38 AM
https://scontent.fyzd1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/83369777_258402688456382_8364984657669783552_n.jpg ?_nc_cat=104&_nc_oc=AQmBwqZ-CMyrocxAiWue100Chfnbf2I8X770SEr-0yjiB5EuJlWUcZRTjLygXMHW3DQ&_nc_ht=scontent.fyzd1-2.fna&oh=aa5c4810ff4d628fc7b4ea1a5e44879c&oe=5ED61905

மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே..
தான் செய்த தர்மங்களை வெளியில்
சொல்லாமல் இருப்பவனே உண்மையான வள்ளல்.
... 1973ம் ஆண்டு, மதுரை ஒத்தக்கடைக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில், கோவில் கட்டுவதற்கு, பணத்தை கொடுத்ததோடு மட்டுமல்லாமல், அடிக்கல்நாட்டு விழாவிற்கும் வருகை தந்து சிறப்பித்துள்ளார். மேலும், கும்பாபிசேகத்திலும் கலந்து கொண்டதாக செய்தி உள்ளது.
அன்றே, கோவில் இருந்த பகுதிக்கு,
பத்மஸ்ரீ சிவாஜிகணேசன் நகர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது, என்பதனை பார்க்கும் போது, கிராமங்களில் நடிகர்திலத்திற்கு தான் செல்வாக்கு அதிகமாக இருந்திருக்கிறது, என்பது தெளிவாகிறது.
குரூப்ஸ் ஆஃப் கர்ணன் அமைப்பை சேரந்த கணேசன், அவர்கள் தான், இந்த தகவலை திரட்டி, சென்னையில் இருந்து வருகை தந்து, என்னையும் அழைத்து கொண்டு கோவிலுக்கு சென்றார்.
அப்போது, அங்கு கோவிலை நிர்வாகம் செய்பவர், கோவிலின் மேற்கூரை, பழுதடைந்து விட்டது, அதை சரிசெய்ய வேண்டும் என்று சொன்னார்.
இது, நடந்து ஒரு வருடம் இருக்கும் என்று நினைக்கிறேன்.
தற்போது, அதனை நினைவில் வைத்து,
பொங்கல் திருநாளன்று, கோவில் மராமத்து பணிக்காக, நன்கொடை கொடுக்க உள்ளனர்.
இது தான் மக்கள்தலைவர்,
தனது கண்மணிகளுக்கு, கற்று கொடுத்த பாடம்.
அன்பு இதயங்களே,
இந்த புனிதமான விழாவில், அனைவரும் கலந்து, நடிகர்திலகத்தின் ஆசியை பெறுவோம்.

sivaa
28th January 2020, 06:05 AM
https://scontent.fyzd1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/84355618_616150755611522_1118688635277803520_n.jpg ?_nc_cat=109&_nc_oc=AQnrm-XCh1hC0NiUlQ-XPMQgAHdgfF2AUng5BIPU-lkoTTPnY59RGobvupswXjJScCI&_nc_ht=scontent.fyzd1-2.fna&oh=450b70b6934bb2b8d6db881514c8aa41&oe=5ECC53F2

sivaa
6th March 2020, 02:45 AM
மதுரைக்குநடிகர்திலகம்
சிவாஜிகணேசன்அவர்கள்.
எவ்வளவோஉதவிகள்செய்துள்ளார்.
என்பதுயாவரும்அறிந்ததே!
அதுபோல்அதிதீவிரரசிகர்களும்
மதுரையில்அதிகம்.
தெருவுக்குநான்குசிவாஜிமன்றம்.
இருக்கும்அப்போது!
அப்படிஇருந்தகாலத்தில்அதாவது
1964ம்ஆண்டுமதுரையில்
சரஸ்வதிதொடக்கப்பள்ளி.ஒன்று
இருந்தது.
அப்பள்ளியில்500பிள்ளைகளுக்குமேல்
படித்துகொண்டிருந்தது.
1964ம்ஆண்டுஒருநாள்அப்பள்ளி
திடீரெனஇடிந்துவிழுந்தது.
அப்பள்ளியில்படித்தஏராளமான
பிள்ளைகள்இடிபாடுகளுடன்சிக்கி
கிட்டதட்ட37பிள்ளைகள்மரணம்
அடைந்தது.அதுஅரசாங்கம்
சிறுஉதவிமட்டுமேசெய்ததாக
தகவல்.
ஆனால்நடிகர்திலகம்கேள்வி
பட்டுதுடிதுடித்துகாணபுறப்பட்ட
போது7படங்கள்.
வரமுடியாதகாரணத்தால்
தனதுமகள்சாந்தியைஅழைத்து
நிதிகொடுத்துவரசெய்தார்.
எவ்வளவுதெரியுமா?
4.00000.
இன்றும்அந்தகுடும்பம்வணங்குகிறது.
அய்யனின்பெயரைசொல்லி!
ஆதாரம்.தத்தனேரிசுடுகாட்டில்
37சமாதிகள்இருக்கின்றன.
அக்குடும்பங்கள்வணங்கிவருகின்றனர்.
இத்தகவலைசொன்ன
சொக்கலிங்கம்பிள்ளை.
அவர்தங்கையையும்இடிபாட்டில்
மரணம்அடைந்தவர்.
மதுரையில்பழையவர்க்குதெரியும்.
மறைக்கப்பட்டஉண்மை.
தர்மபிரபுசிவாஜியின்கொடையை?

sivaa
10th April 2020, 04:47 PM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/92965800_2919179871532217_3203769268915142656_o.jp g?_nc_cat=109&_nc_sid=8024bb&_nc_oc=AQnv5ug3h6DkPHTm2vT7Ij9c--hBzGUkYui7shXn3E55U7jcJr6272eZy-UQmGSIrkvvb2glpjL2DeE8lPgs1Unl&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=c1893c1e13560c673055a45960e28873&oe=5EB7BAFD

1956 ஆம் ஆண்டின் காலகட்டத்தில் ஏழை எளிய மக்களின் கல்விக் கண் திறந்திடும் வகையில் தமிழக முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் யோசனையை ஏற்றுக் கொண்ட பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் பள்ளிகளில் இலவச மதிய உணவு திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டி நிதி வேண்டினார்,
அந்த சூழலில் நடிகர் திலகம் தேசத்திலேயே முதல் கொடையாளராக தன்னை முன்னிறுத்திக் கொண்டு பிரதமரின் மதிய உணவு திட்டத்திற்காக ரூபாய் ஒரு லட்சத்தை அளித்தார் ( இன்றைய மதிப்பில் அந்தத் தொகை நூறு கோடிக்கும் கூடுதலாகும்)
:- இந்து நாளேடு

sivaa
10th April 2020, 04:48 PM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/93060084_2582991408582338_1184619527187464192_o.jp g?_nc_cat=106&_nc_sid=8024bb&_nc_oc=AQlusCZWpy_XDFBkrALtFaQ-p93GweolNgqXhu-WPP1x2YtxGhQOqqzIpK_HGKhvsirJqMVUhh7c8Kb9q7c4rmQ8&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=0a638751fa79c8adaa7939f1d4ee4985&oe=5EB69728

sivaa
5th May 2020, 08:25 AM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/95444691_2603637846517694_7199811861930311680_o.jp g?_nc_cat=108&_nc_sid=8024bb&_nc_oc=AQlUgapCNb4I9G-YRHjasN828guMgopQIP40ujr9gzSpRqNrPhVH2yIszjfWdDISz n16rFvExV3EOs5jvgTr09Lh&_nc_ht=scontent.fyyz1-2.fna&_nc_tp=7&oh=72530271420a78884d3ccbda5c921865&oe=5ED7EF6F

sivaa
6th May 2020, 08:54 PM
நடிகர் திலகத்தின் தாராளமான நன்கொடை உதவிகளும்
அன்றைய பத்திரிக்கைகளின் தாராள மூடி மறைத்த செய்திகளும் என்று தான் யோசிக்க வேண்டியதாகிறது,
திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலை செப்பனிட்டு குடமுழுக்கு விழா செய்யவேண்டும் என தீர்மானித்து அதற்கான நன்கொடை வசூலிப்பதென செயலில் இறங்கினார்,
அன்றைய தமிழகத்தின் உச்ச நட்சத்திர நடிகர்களான நடிகர் திலகம் சிவாஜி மற்றும் எம்ஜிஆர் ஆகியோரிடம் முதலில் நன்கொடை பெறுவதேன முடிவெடுத்தவர் எம்ஜிஆர் திராவிட கொள்கை கொண்டவர் என்பதால் முதலில்.எம்ஜிஆர் ஐ சென்று பார்த்தார், எம்ஜிஆர் அவர்களும் உடனடியாக ரூ 10000 ஐ தாராளமாக நிதி கொடுத்தார், அடுத்து அன்னை இல்லம் சென்ற வாரியார் அவர்களை அன்னை இல்லம் பெரு மகிழ்வோடு வரவேற்று ஆசியை பெற்றுக் கொண்டனர்,
திருமுருக வாரியார் அவர்களும் கோவிலை செப்பனிட நிதி வசூல் பெற்று வருவதாகவும் இங்கு வருவதற்கு முன் எம்ஜிஆர் ஐ சந்தித்து அவரிடம் ரூ 10000 பெற்றுக் கொண்டதாகவும் கூறினார், மகிழ்ச்சி கொண்ட நடிகர் திலகம் சிவாஜி அவர்களும்.எப்போதுமே சிரிப்பூட்டும் விதமாக பேசும் வழக்கமென்பதால் " அண்ணன் பத்தாயிரம் கொடுத்திருக்கிறாரா? அப்படியா நான் பதினோராயிரம் கொடுக்கிறேன் என்று ரூ 11000 ஐ கொடுத்தனுப்பினாராம்,
மறுநாள் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களின் சீடர்கள் நமது திருப்பணிக்கு எம்ஜிஆர் கொடுத்த நிதி பற்றிய செய்தி மட்டுமே வந்திருக்கிறது சிவாஜி கொடுத்த நிதி பற்றிய செய்தியேதும் காணவில்லையே என்றார்களாம்,
வாரியாரோ ஒருவேளை சிவாஜி .நற்காரியங்களுக்கு. செய்யும் உதவியை தெரியப்படுத்தக் கூடாது என சொல்லியிருப்பாரோ என்னவோ என்றாராம்,
அவர் சொல்லவில்லை என்றாலும்.நமது வழக்கப்படி நன்கொடை அளித்தவர்கள் பட்டியலில் தவறாமல் சிவாஜி அளித்து நன்கொடை இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்றாராம்
(செய்தி ஆதாரம் நியூஸ் 7 சேனலில் இடம்பெற்ற கதைகளின் கதையிலிருந்து)

Thanks Sekar

sivaa
29th December 2022, 06:29 PM
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்...
நடிகர் திலகம் அள்ளித் தந்த கொடைகளை பற்றி தினம் ஒரு தகவலில் இன்று........
நடிகர் திலகம் தனக்கு கிடைக்காத கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளவர்........
அதன் விளைவாகவே அன்னை இல்லத்தின் முகப்பில் ஒரு சிறுவன் அமர்ந்து புத்தகம் படிப்பது போல் அமைக்கப்பட்டிருக்கும்....
இதே போல் சூரக் கோட்டை பண்ணை வீட்டின் நுழைவு வாயிலிலும் அமைக்கப்பட்டிருக்கும்...
நினைத்ததை நிறைவேற்றும் வகையில் தனது உடன் பிறந்த தம்பியை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைத்தார்......
குடும்ப உறவுகள் அனைவரையும் நன்றாக படிக்க வைத்தார்.......
கல்விக்கென நிதி கேட்டு யார் வந்தாலும் வாரி வழங்குவதை வழக்கமாக வைத்திருந்தார்....
வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட தடவைகள் மேடையேற்றி அதில் வந்த வருமானம் ₹ 32 லட்சரூபாயை பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு கொடையாக அளித்தார்....
அதில் ஒன்று தான் போடி தொழிற்பயிற்சி கல்லூரி......
கல்லூரி தொடங்க ₹ 2 லட்சத்தை அன்றைய அரசிடம் அளித்தார்.......
இன்றும் ஆண்டு தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சிவாஜி--பிரபு சாரிட்டீஸ் டிரஸ்ட் மூலமாக கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது......
விளம்பரமில்லாமல்....
அன்றைய 24 கேரட் தங்கம் 1 கிராம்
விலை # 9.30 பைசா.....
இன்றைய 24 கேரட் தங்கத்தின் 1 கிராம்
விலை ₹ 5471/--
இன்று இரண்டு லட்சத்திற்கான மதிப்பை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்.......
கர்ணன் என்றும் கர்ணன்தான்.......��
இன்றைய மதிப்பு ₹ 11,76,55,914/--
பதினோரு கோடியே எழுபத்தியாறு லட்சத்து
ஐம்பத்தைந்தாயிரத்து தொள்ளாயிரத்து பதினாங்கு ரூபாய் ....

5887

thanks G.Laksman (நடிகர் திலகம் சிவாஜி ரசிக நந்தவனப்பூக்கள்)

sivaa
30th December 2022, 09:42 AM
அனைவருக்கும் இனிய காலை வணக்கம் ��
நடிகர் திலகம் வழங்கிய கொடைகளை பற்றி தினம் ஒரு தகவல்*....
வேடிக்கை பார்க்க சென்ற இடத்தில்
தனது ஒரு மாத சம்பள பணத்தை
வழங்கிய நடிகர் திலகம்........
நடிகர் திலகம் தனது முதல் படமான பராசக்தி படத்தில் 1952ம் ஆண்டின் ஆரம்பத்தில் ஏவிஎம் ஸ்டுடியோவில் நடித்துக் கொண்டிருந்த போது, அருகில் உள்ள டென்னிஸ் கோர்ட்டுக்கு வேடிக்கை பார்க்க சகஸ்ரநாமம் அவர்களோடு செல்வார்......
அங்கு பிரபல டென்னிஸ் வீரர் ராமனாதன் அவர்கள் நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருப்பார்......
ஒரு நாள் விளையாடி முடித்த பிறகு தன் நண்பர்களிடம் ராமனாதன் அவர்கள் தன்னுடைய மகனை (ரமேஷ்) டென்னிஸ் பயிற்சிக்காகவும், டென்னிஸ் தொடர்களில் விளையாடுவதற்காகவும் வெளிநாட்டுக்கு அனுப்ப இருப்பதாகவும் அதற்கு அனைவரும் பண உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.......
அருகில் இருந்து இதனைக் கேட்டுக் கொண்டிருந்த நடிகர் திலகம் தனது சட்டை பையில் இருந்த ₹ 250/- ஐ எடுத்து ராமனாதன் கைகளில் தருகிறார்.........
ராமனாதனும் அவருடைய நண்பர்களும் திகைக்க, சகஸ்ரநாமம் அவர்கள் நடிகர் திலகத்தை அறிமுகம் செய்ய ராமனாதன் அவர்கள் நடிகர் திலகத்தை கட்டிப் பிடித்து நன்றி சொல்கிறார்...
அவருடைய நண்பர்களும் நடிகர் திலகத்தை பாராட்டுகின்றனர்.... ...
ராமனாதன் அவர்களிடமிருந்து விடைபெற்று வெளியே வந்தவுடன், சகஸ்ரநாமம் , கணேஷ் நேற்று தான் சம்பளம் வாங்கினாய்..... அதனைத் அப்படியே கொடுத்து விட்டாயே....
மாதம் முழுவதும் செலவுக்கு என்ன போகிறாய் என கேட்கிறார்.....
அதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம்
என்ற நடிகர் திலகம்....
அடுத்த சில வருடங்களில் டென்னிஸ் உலகில் இந்தியாவின் பெருமையை நிலை நாட்ட போகும் வீரனுக்கு என்னால் முடிந்த சிறு உதவி என்று சொல்லி விட்டு நகர்கிறார்........
பராசக்தி படத்தில் நடிக்க நடிகர் திலகம் வாங்கிய மாத சம்பளம் ₹ 250/- மட்டும்
அந்த ஒரு மாத சம்பளத்தைத்தான் ராமனாதன் அவர்கள் வசம் கொடுத்தார்........
1952ல் ₹250/- ன் இன்றைய மதிப்பு......
24 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை
1952ல் ₹ 7.60 பைசா......
2022ல் ₹ 5471/---
இன்றைய மதிப்பு ₹ 1,80000/--
நாடக மேடைகளிலும், திரைப்படங்களிலும்
நன்றாக வேஷம் போட்டு நடித்த நடிகர் திலகம்
ஒரு நாளும் வாழ்க்கையில் வேஷம் போடாதவர்.......
வைரத்தை எத்தனை ஆண்டுகள் மண்ணுக்குள் புதைத்து வைத்தாலும்
வைரம் வைரம் தான்....
நாளாக நாளாக வைரத்தின் மதிப்பு கூடுமே தவிர என்றும் குறையாது...

5889

Thanks G Laksmanan (Muktha films 60)

sivaa
10th January 2023, 09:09 AM
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
நடிகர் திலகத்தின் கஜ தானம்...........
நடிகர் திலகம் 6 க்கும் மேற்பட்ட யானைகளை கஜ தானம் செய்துள்ளார் தனது சொந்த செலவில்........
சென்னை அமெரிக்க தூதரகத்தின் மூலமாக நடிகர் திலகத்தின் நண்பருக்கு அமெரிக்காவில் உள்ள குழந்தைகள் பூங்காவிற்கு யானை ஒன்று வேண்டும்.
எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை . அதற்கான ஏற்பாடுகளை செய்ய முடியுமா எனக் கேட்டு வேண்டுகோள் வருகிறது........
நண்பருக்கு முந்தைய ஆண்டு புன்னை நல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு யானை வழங்கிய நடிகர் திலகத்தின் நினைவு வர, அது பற்றிய விவரங்களை அறிய நடிகர் திலகத்தை அணுகுகிறார்.......
நடிகர் திலகத்திடம் விவரங்களை சொல்ல,
குழந்தைகளுக்கு தானே நானே வாங்கித் தருகிறேன்.....
என சொல்ல நண்பர் திகைக்கிறார்...
சொன்னது போலவே அடுத்த சில நாட்களில் யானைக்குட்டி ஒன்றை வாங்கி அதற்கு தனது மூத்த மகள் சாந்தியின் பெயரை சூட்டி அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் வழங்குகிறார்.........
சிறப்பு விமானம் மூலம் சாந்தி இந்தியானா பொலிஸ் என்ற இடத்தில் உள்ள குழந்தைகள் பூங்காவிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.....
சாந்தி அங்கு சென்றவுடன் அந்த குழந்தைகள் பூங்காவின் புகழ் அமெரிக்கா முழுவதும் பரவி குழந்தைகளுடன் மக்கள் சாரை சாரையாக படையெடுத்தனர்......
.சாந்தியின் புகழும் நடிகர் திலகத்தின் புகழும் வெள்ளை மாளிகையில் எதிரொலித்தது......
காஞ்சி சங்கராச்சாரியார் அவர்களே நடிகர் திலகத்தின் கஜதானத்தை பற்றி பேசி, நடிகர் திலகத்திற்கு அருளாசி வழங்கியுள்ளார்.......
தெரிந்தது சில...தெரியாதவைகள் பல......
மண்ணும் விண்ணும் இருக்கும் வரை நடிகர் திலகத்தின் புகழ் இருக்கும்....������

5890
Thanks G ,Laksmanan(நடிகர் திலகம் சிவாஜி ரசிக நந்தவனப்பூக்கள்)

sivaa
10th January 2023, 09:12 AM
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.....
நடிகர் திலகம் எல்லோருக்கும் உதவி செய்தவர் கட்சி வேறுபாடு பார்க்காமல்......
சென்னை போக் ரோட்டில் அமைந்துள்ள தோழர் ஜீவா நினைவகத்தை திறந்து வைக்க வரும் போது தான் மேற்கு வந்த முதல்வர் ஜோதிபாசு அவர்கள் புரோட்டா கால் எனப்படும் சம்பிரதாயங்களை மீறி
அன்னை இல்லம் சென்று நடிகர் திலகத்தை சந்தித்து அளவளாவினார்.......
பேசிக் கொண்டிருக்கும் போது இப்போது தாங்கள் திறந்து வைக்க வந்திருக்கும் தோழர் ஜீவா நினைவகம் அமைக்க நடிகர் திலகம் ஒரு கணிசமான தொகையை தந்து உதவியதாக தோழர்கள் ஜோதிபாசு அவர்களிடம் சொல்ல, .......
ஜோதிபாசு அவர்கள் நடிகர் திலகத்தை பாராட்டியதோடு விழாவுக்கு தன்னோடு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்....
அழைப்பை ஏற்றுக் கொண்ட நடிகர் திலகம்
நான் விழாவுக்கு வருகிறேன்...
விழா முடிந்து போகும் போது அன்னை இல்லம் வந்து உணவருந்தி செல்லுமாறு அன்புடன் சொல்ல ஜோதிபாசு அவர்கள் புன்னகையுடன் சம்மதம் தெரிவிக்கிறார்....
அதே போல் மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு அவர்களோடு விழாவுக்கு சென்றார் நடிகர் திலகம்.....
கம்யூனிஸ்ட் தோழர்கள் நடிகர் திலகத்தை சிறப்பாக வரவேற்றார்கள்....
விழா முடிந்து அன்னை இல்லம் சென்று தோழர் ஜோதிபாசு அவர்கள் உணவருந்தி சென்றது வரலாறு.....
அந்தப்பகுதியில் உள்ள மூத்த கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு இந்த நிகழ்ச்சியைப் பற்றி
நன்கு தெரியும்.........
என்றும் நடிகர் திலகம் புகழ் பேசுவோம்..........
5891

5892


Thanks G.Laksmanan (நடிகர் திலகம் சிவாஜி ரசிக நந்தவனப்பூக்கள்)

sivaa
16th January 2023, 09:20 AM
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்....
நடிகர் திலகம் அவர்கள் நாட்டு மக்களுக்கு
துயரம் ஏற்படும் போதெல்லாம் தன்னால் முடிந்தளவு உதவிகளை செய்தவர்....
நாட்டின் முதுகெலும்பு எனப்படும் #விவசாயிகளுக்கு துன்பம் வந்த போது அவர்களுக்காக பலமுறை கட்டபொம்மன் நாடகத்தை நடத்தி அப்போது ,1961ல் விவசாயிகளுக்காக நிதி திரட்டிக் கொண்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ப.ஜீவானந்தம் அவர்களிடம்
₹ 5 லட்சத்தை வழங்கி, தோழர் ப.ஜீவானந்தம் அவர்களை பிரமிக்க வைத்தார்.....��
1961ல் 24 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 9.90 பைசா.....
இன்று 24 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 5513/--
நடிகர் திலகம் 1961ல் வழங்கிய ₹ 5 லட்சத்தின் இன்றைய மதிப்பு ₹ 27,84,34,343/-
இருபத்தியேழு கோடியே எண்பத்திநான்கு லட்சத்து முப்பத்தி நாலாயிரத்து முன்னூற்றி நாற்பத்தி மூன்று.......❤️❤️❤️

5893

Thanks G.Laksmanan. (Nadigarthilakam Fans)

sivaa
19th January 2023, 09:15 AM
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்....
நடிகர் திலகம் வழங்கிய தாழ்த்தப்பட்ட மக்களுக்குக்கான இடம்.....தகவல்....
1965ம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் கோரிக்கையை ஏற்று தேன் கூடு என்ற நாடகத்தை நடத்தி, காரைக்குடி கீழ ஊரணியை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் வீடுகள் கட்டிக் கொள்வதற்காக ஏவி மெய்யப்ப செட்டியார் அவர்களின் புதல்வர் ஏவிஎம் பழனி செட்டியாரிடம் இருந்து 2.55 ஏக்கர் நிலத்தை வாங்கி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கினார்...
தாழ்த்தபட்ட மக்கள்அந்த இடத்திற்கு
"சிவாஜி காலனி' என்று பெயரிட்டனர்....
ஏழை மக்களுக்கு இடத்தை பிரித்து கொடுப்பதற்காக நடிகர் திலகத்தால் நியமிக்கப்பட்டவர்கள் நடிகர் திலகத்திற்கும்
தாழ்த்தப்பட்டோருக்கும் செய்த துரோகத்தால்
இன்று வரை அந்த இடம் தாழ்த்தபட்டோருக்கு வழங்கப்படவில்லை...
அதனை அனுபவித்து வருபவர்களுக்கு எதிராக அம்மக்கள் சட்ட போராட்டம் நடத்தி வெற்றி கண்ட பிறகும் .,....,...
அவர்களிடம் இடத்தை ஒப்படைக்காமல் அதிகார வர்க்கத்தை சேர்ந்தவர்களின் துணையோடு இன்று வரை அனுபவித்து வருபவர்களுக்கு எதிராக அரசோ அல்லது தாழ்த்தப்பட்ட மக்களுக்கான கட்சிகளோ எந்த வித முன்னெடுப்பும் எடுக்கவில்லை.....
சுமார் 57 ஆண்டுகளுக்கு முன்பு தாழ்த்தப்பட்ட மக்களுக்காக நடிகர் திலகத்தால் வழங்கப்பட்ட , .......
இன்றைய தினத்தில் பல கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்தை ஆக்ரமிப்பு செய்து அதில் கடைகளை கட்டி வாடகைக்கு விட்டு சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு அரசு துறையை சேர்ந்தவர்களும் துணை போய்க் கொண்டிருக்கிறார்கள் என்பது மிகவும் வேதனை தரும் செய்தியாகும்........
இது பற்றிய தகவல்களை அளித்த அன்புத் தம்பி காரைக்குடி சுந்தரம் அவர்களுக்கு
எனது மனமார்ந்த நன்றி......

5896

5897

Thanks G.Laksmanan. (Nadigarthilakam Fans)

sivaa
3rd February 2023, 06:59 AM
சிவாஜி என்ற சொல்லுக்கு ஒரு ஆகர்ஷண சக்தி உண்டு. அவரை பலமுறை சந்தித்து இருந்தாலும் எனது தந்தையுடன் சென்று சந்தித்த அந்த நினைவு மட்டும் பசுமரத்து ஆணி போல மனதில் என்றும் நிலைத்து இருக்கிறது.
அப்போது எனக்கு வயது 16 என்று நினைக்கிறேன். சில சுதந்திரப்போராட்ட வீரர்கள் மற்றும் காந்தீய சிந்தனை கொண்டவர்கள் திரு சோமையாஜுலு தலைமையில் சிவாஜியை சந்தித்து அவர் கண்டிப்பாக திப்புவின் கதையில் நடித்து அவருடைய பெருமையை உலகிற்கு எடுத்துரைக்க வேண்டும் என்று நிர்பந்திக்க அவருடைய இல்லத்துக்கு சென்றனர். எனது தந்தையுடன் நானும்.
( அந்த "கஞ்ச" நடிகர் வீட்டில் குளிர்பானம் கொடுத்து அனைவரையும் உபசரித்தார்கள்.)
சிவாஜி வந்ததும் பேச்சு வார்த்தைகள் நடந்து முடிந்தது. அவருடைய இயலாமையை எடுத்து கூறினார். உடன் வந்த முக்தா ஸ்ரீனிவாசன் அவர்கள் தானே அதை தயாரிக்க போவதாக கூறியும் அன்றைய அவருடைய அரசியல் நிலைப்பாடு அவரை செய்யவிடவில்லை.
அனைவருக்கும் சூடாக உப்புமாவும் இனிப்பும் பரிமாறப்பட்டது. ( கஞ்சன் வீட்டில் சுமார் முப்பது பேருக்கு உணவு ) கிளம்பும் நேரத்தில் அந்த மாபெரும் நடிகர் எனது தந்தையிடம் இருந்து கதையை பெற்றுக்கொண்டார். "தநாயக்கன் கோட்டை" என்று பெயரிடப்பட்டு இருந்த அந்த கதை பலரால் தொகுக்கப்பட்டு இருந்தது.
வேண்டாம் என்று கூறியவர் கதையை படித்து பார்ப்பதாக சொல்லி வாங்கிக்கொண்டது பலருக்கு ஆச்சர்யம்.
இரண்டு வாரங்கள் கழித்து அவரிடம் இருந்து எனது தந்தைக்கு அழைப்பு. நானும் ஒட்டிக்கொண்டேன். சுமார் ஒரு மணி நேரம் கதையை பற்றி பேசிவிட்டு அன்றைய சூழலில் அவரால் ஏன் அந்த கதையில் நடிக்க இயலாது என்பதையும் விளக்கமாக கூறி எங்களை திருப்பி அனுப்பினார். என் தந்தையின் கையின் ஒரு துணிப்பை திணிக்கப்பட்டது. இதை உங்களுடைய காத்தீய சிந்தனை இயக்கத்துக்காக வைத்துக்கொள்ளுங்கள். தொடர்ந்து காந்தி அண்ணலின் புகழ் பரப்ப ஆவன செய்யுங்கள். என்னுடைய உதவி எப்போது தேவைப்பட்டாலும் தயங்காமல் வந்து என்னை சந்தியுங்கள் என்று கூறி வழியனுப்பினார்.
அந்த ஒரு நடிகனை பற்றி எத்தனை விமர்சனங்கள். ஒட்டு மொத்த ஊடகங்களும் ( இன்று போல் ) ஒரு சாராருக்கே சரணம் போட்டு வந்த நிலை அன்று. சிவாஜியின் வெற்றி இத்தகைய அனைத்து இன்னல்களையும் தாண்டித்தான் என்று நினைத்தால் வியப்பாக இருக்கிறது. சுமார் நாற்பதாயிரம் நன்கொடை வழங்கியதை ( சுமார் 45 ஆண்டுகளுக்கு முன் ) எனது தந்தை அவருடைய கடைசி காலங்களிலும் சொல்லி சிலாகித்தார்.நன்றி திரு Belge Ravi

5901

Thanks Udha Kumar (நடிகர்திலகம் சிவாஜி ரசிக நந்தவனப்பூக்கள் One and only sivaji)