PDA

View Full Version : மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5



Pages : [1] 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14

madhu
17th September 2015, 06:08 PM
மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5
***************************************

எப்போ தகத்து நினைவார்க் கிடரில்லை
கைப்போத கத்தின் கழல்

ஆதௌ கீர்த்தனா ரம்பத்திலே...

அட... மன்னிச்சுக்கோங்க... பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை என்று சொல்ல
இது இரட்டைக் கிளவியா ( காந்திமதி + வடிவுக்கரசி என்று சிக்கா சொல்வார் )
அதனால் ஆரம்பத்திலே என்ன சொல்லி நான் எழுத என்று சுவிஸ் குளிர் போல
கைகால்கள் நடுங்க......

முதலில் இந்த பாகத்தை துவக்கச் சொல்லி என்னை துவைத்து எடுத்த வாசுஜி அவர்களுக்கு
மனதின் அடித்தளத்திலிருந்து என் நன்றியைச் சொல்லிக் கொள்கிறேன்.

மனதைக் கவரும் மதுர கானங்கள் திரியின் ஒவ்வொரு கிளையிலும் மலர்களாகப் பூத்து
மணம் வீசிய பதிவுகளை அள்ளி வழங்கிய நண்பர்கள் சின்னக் கண்ணன், கோபால் ஜி, ரவி சார்,
ராகவ்ஜி, சி.செ.ஜி, முரளி ஸ்ரீனிவாஸ், எஸ்.வாசுதேவன் ஜி, சுந்தர பாண்டியன், கோபு,
வாத்தியாரையா, ராகதேவன், எஸ்.வாசுதேவன், ஆதிராம், எஸ்வீ, கிருஷ்ணா, கல் நாயக்,
கலை வேந்தன், வரதா ஜி மற்றும் யார் பெயராவது விட்டுப் போயிருந்தால் மன்னித்து விடும் மாண்பு
மிக்க நண்பர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

மருமகள் ந.தி. போல படுக்கையில் கிடந்த என்னை ரேவதி போல "அன்னையாக மாறவா..
அள்ளி வைத்து பாடவா" என்று தாலாட்டு பாடி எழுப்பி விட்ட பெருமை மதுரகானத் திரிக்கு சேரும்.

சட்டு புட்டுனு பூஜையை முடிச்சு லட்டைக் கொடுப்பியானு கேட்கும் குரலுக்காகவே இந்தப் பாடலுடன் திரியைத்
துவக்குகிறேன்.

பூவண்ணன் எழுதி ஆனந்த விகடனில் வெளியாகி மக்களின் மனம் கவர்ந்த "ஆலம் விழுதுகள்" என்ற நாவல்
திரைப்படமாகி "நம்ம குழந்தைகள்" என்ற பெயரில் திரையிடப்பட்டபோது டைட்டில் பாடலாக சீர்காழி கோவிந்தராஜன்
பாடிய இந்தப் பாடல் ஔவையார் இயற்றிய விநாயகர் அகவல்.

"சீதக் களப" என்று ஆரம்பித்து "சரணே சரணே" என முடியும் வரை முற்றுப்புள்ளி இல்லாத ஒரே வரியாக இருக்கும்
இந்தப் பாடலுடன் ஆரம்பிக்கும் நம் ஐந்தாம் பாகம் தடையின்றி இசை வெள்ளமாக நண்பர்கள் அனைவராலும்
மனதை நனைக்கட்டும் என ஆண்டவனை வேண்டுகிறேன்.

https://www.youtube.com/watch?v=y6gZb3Icsb4

எல்லா நண்பர்களும் எல்லா நலமும் பெற்று இனிதாக வாழ கணபதியை வேண்டுகிறேன்.

Richardsof
17th September 2015, 07:01 PM
இனிய நண்பர் திரு மது அவர்கள் இன்று துவங்கிய மதுர கானம் -பாகம் 5 வெற்றி பெற வாழ்த்துக்கள் .
மதுர கானம் பாகம் 4 சிறப்பாக நடத்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி .

மையத்தில் 8000 பதிவுகள் வழங்கிய திரு மது அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் .

chinnakkannan
17th September 2015, 09:05 PM
வாங்க வாங்க மதுண்ணா... வாழ்த்துக்கள்

மோதகந்த் தந்துதான் மேனி சிலிர்க்கவைத்தீர்
சோதனையாய் எண்ணினேன் சொற்களை - சாதகமாய்ச்
சொல்வேனே உம்மிடமே தெள்ளியதாய் நன்றாக
வெல்லுமிங்கு உம்பாட்டு விண்..

அது சரீ.. நிஜம்மாவே குறளுக்குஎன்னாங்க அர்த்தம்..!

eehaiupehazij
17th September 2015, 09:10 PM
பாகம் 5 மதுஜி துவக்கத்தில் இனிதே வளர்ந்திட தன்னந்தனியாக ஒரு ரோஜா மலருடன் வந்து வாழ்த்துகிறேன்!

https://www.youtube.com/watch?v=8sYjmMv5YfI

ஆனால் தனிமையிலே இனிமை காண முடியாதே !

https://www.youtube.com/watch?v=aBgwFy4ejd8

எனவே பாகம் 5ல் நாளை நாமொரு ராஜாங்கம் அமைப்போம்!

https://www.youtube.com/watch?v=TwiWbFoDyEY

chinnakkannan
17th September 2015, 09:15 PM
சத்தத்தினுள்ளே சதாசிவம் காட்டி
சித்தத்தினுள்ளே சிவலிங்கம் காட்டி...


மதுண்ணா...வெகு அழகான பாடல்..சிலிர்க்கிறது..முழுதும் கேட்டேன்.. மிக்க நன்றி.. வினாயகன் நம் நண்பர்கள் அனைவரின் இடரையும் அப்படியே என் இடரையும் களைந்திடுவான்.. அகெய்ன் தாங்க்ஸ் :)

chinnakkannan
17th September 2015, 09:21 PM
மதுண்ணா உங்கள் அவதாரத்தில் உள்ள குட்டிக் கிருஷ்ணனைப் போலவே குழந்தை உள்ளம் கொண்ட இரண்டாவது நபர் நீங்கள் (அப்ப ஃபர்ஸ்ட்.. நீயா.. மன்ச்சு..உன்னையார் இங்க வரச்சொன்னா :) )

எண்ணம் போல க் கண்ணன் வந்தான் அம்மம்மா
என்னை ஆளத் தன்னை த் தந்தான் அம்மம்மா.. தப்போ.. பெண்மை வாழத் தன்னைத் தந்தான் அம்மம்மா.. :)

https://youtu.be/_29q2lp_v7s

chinnakkannan
17th September 2015, 09:33 PM
சி.செ.. ரோஜாப்பூ குண்டா இருக்கே.. :) ஒல்லி ரோஜாப்பூ போடலாமா.. இல்லை அவர் குறள்ல தான் ஆரம்பிச்சார்..
குறள் படிப்போம்..



https://youtu.be/V_r1snwmiFw

பனிமழை மேகங்கள் பொழிகின்ற குளிரினில்
திருக்குறள் படிக்கட்டுமா கண்ணே (லூசாய்யா நீ :) )

RAGHAVENDRA
17th September 2015, 10:41 PM
ஆஹா...
காலை சென்று மாலை வருவதற்குள் பாகம் முடிந்து விட்டதே... என்ன வேகம் ....

மது சார்
தங்களுடைய அழகிலே கனிரசம், அன்பிலே மதுரசம்,
பாட்டு என்னென்ன, அதன் பாவம் என்னென்ன,
நோக்கம் என்னென்ன ஓ...ஓ...ஓ...
அனைத்தும் நினைவில் இருப்பதென்ன...

அருமையான அகவலுடன் ஆரம்பித்தீர் திரி ஐந்தை
அகமகிழும் பாடலெல்லாம் உறவாடும் சந்தை
மனம் போன போக்கினிலே மனம் நோகும் வாக்கினிலே
வெளிப்படுத்த இது இல்லை மந்தை
தேமதுர கானமதை தேனமுதாய்த் தானளித்து
செவியோடு குளிரவைக்கும் சிந்தை..

https://www.youtube.com/watch?v=j_OLdvar-do

Russellxor
17th September 2015, 10:49 PM
சொர்க்கம் "மது "விலே
எழுதும் அழகிலே
மது தரும் சுகம் சுகம் தினம் வரும் நிதம் நிதம்

எல்லாம் உறவு தான்

chinnakkannan
18th September 2015, 12:16 AM
அருமையான அகவலுடன் ஆரம்பித்தீர் திரி ஐந்தை
அகமகிழும் பாடலெல்லாம் உறவாடும் சந்தை
மனம் போன போக்கினிலே மனம் நோகும் வாக்கினிலே
வெளிப்படுத்த இது இல்லை மந்தை
தேமதுர கானமதை தேனமுதாய்த் தானளித்து
செவியோடு குளிரவைக்கும் சிந்தை..''//
//
சொர்க்கம் "மது "விலே
எழுதும் அழகிலே
மது தரும் சுகம் சுகம் தினம் வரும் நிதம் நிதம்

எல்லாம் உறவு தான்//


அட அடடா.. ராகவேந்தர் , செந்தில் நன்னாயிட்டுக் கவிதை வடிக்கறீங்கோ.. தாங்க்ஸ்..

ஞான் எந்து செய்யும்.. ரோசிக்கணும் :)

rajraj
18th September 2015, 02:13 AM
Vinayaka Chathurthi special for madhu ! :)

http://www.youtube.com/watch?v=5lX7w12YPxg

Here it is PiLLaiyar chathurthi without kozhukkattai. Therefore, those of you loaded up with 'kozhukkattai' should send me a few by ovenight delivery ! Otherwise I will load this thread with carnatic compositions on piLLaiyar,vinayaka,ganapathi,ganesa,....... till the next piLLaiyar chathurthi ! :lol:

That won't leave much space for madhu to post :lol:

Congratulations madhu. I hope you post the songs you sing ! :)

madhu
18th September 2015, 04:00 AM
வருக வருக என அன்புடன் அழைத்து பதிவுகள் தந்த எஸ்வீ, சிக்கா, சி.செ, செ.வேல் ஜீஸ் மற்றும் வாத்தியாரையா அவர்களுக்கும் என் மனம் கனிந்த நன்றி.
இப்போ ரெண்டு நாள் லீவில் கிளம்புகிறேன். திரும்ப வந்ததும் தேடிப்பிடிச்சு போடுவேன்.. அதாவது நல்ல நல்ல பாடல்களாக..

இன்னும் பழைய படங்களின் போஸ்டர் காட்டி ஜாலவித்தை புரியும் வரதா ஜி காணவில்லையே ! வருக வருக சாரே !

Russellmai
18th September 2015, 08:12 AM
மதுரகானம் பாகம் ஐந்தினைத் தொடங்கி உள்ள திரு மது அவர்களுக்கு
எனது நல்வாழ்த்துக்கள்.
அன்புடன் கோபு.

vasudevan31355
18th September 2015, 08:44 AM
மதுண்ணா!

http://s3.amazonaws.com/theoatmeal-img/md_nav/part5_on.png

மதுர கானங்கள் பாகம் ஐந்தைத் தொடங்கியதற்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். விநாயக சதுர்த்தி நன்னாளில் தங்களால் பாகம் 5 தொடங்கப்பட்டிருப்பது அந்த கணேச பெருமானின் அருளே! மிக அமர்க்களமான முன்னுரையுடன் திரியை நகைச்சுவை இழையோட தாங்கள் தொடங்கியிருப்பது தனி சிறப்பு. சுவை.

மிக அருமையான சீர்காழியின் பாடலான 'நம்ம குழந்தைகள்' பாடலுடன் திரியைத் தொடக்கி அமர்க்களப்படுத்தி விட்டீர்கள்.

மற்ற பாகங்களைப் போலவே மதுர கானங்கள் பாகம் ஐந்தும் வெற்றிநடை போடும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

மதுர கானங்கள் வெற்றிக்கு பாடுபட்ட அத்துணை நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!

இத்தனை பாகங்களுக்கும் ஆதரவு தந்து வெற்றிப் பெறச் செய்த மாதிரி இந்த ஐந்தாம் பாகத்திற்கும் அனைவரது ஒத்துழைப்பும் ஆதரவும் தேவை என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

திரியிலிருந்து ஒதுங்கியிருக்கும் ரவி சார், அப்புறம் கல்நாயக், கோபால் சார், எனதருமை கிருஷ்ணா சார், திடீரென காணாமல் போய்விட்ட ஜி, மற்றும் அனைவரும் இந்தப் பாகத்தில் தங்கள் பங்களிப்புகளை நல்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

Russellrqe
18th September 2015, 08:52 AM
மதுர கானம் 5ம் பாகத்தை துவக்கிய திரு மது அவர்களுக்கு இதயங்கனிந்த நல் வாழ்த்துக்கள் .
பல அருமையான பழைய பாடல்கள் , கவிதைகள் ,கட்டுரைகள் ,நிழற்படங்கள் என்று பிரமாதமாக திரி பயணிக்க வேண்டுகிறேன் .

vasudevan31355
18th September 2015, 09:00 AM
பாகம் ஐந்து துவக்கத்திற்கு என்னுடைய வாழ்த்துப் பாடல். மிக அருமையான பாடல். குற்றவாளி என்ற அதிகம் தெரியாத படத்திலிருந்து.

அக்கா தம்பியான சுலக்ஷ்ணாவும், ரகுவரனும் எவ்வளவு அழகாக வாழ்த்துச் சொல்கிறார்கள் என்று பாருங்கள். இது மதுர கானத்திற்கே வாழ்த்துச் சொல்லுவது போல் உள்ளது அல்லவா?

'வாழ்த்து சொல்லுங்கள்
வாழச் சொல்லுங்கள்'


https://youtu.be/TWmNXDrwARU

Russellrqe
18th September 2015, 09:02 AM
65 ஆண்டுகள் முன் ...... தமிழ் சினிமா
பாரி ஜாதம் என்ற மாத இதழ்
ஏப்ரல் -1950 சினிமா செய்திகள் .
http://i60.tinypic.com/dyqcrs.jpg

Russellrqe
18th September 2015, 09:03 AM
http://i60.tinypic.com/30adydh.jpg

Russellrqe
18th September 2015, 09:04 AM
http://i58.tinypic.com/9gaces.jpg

Russellrqe
18th September 2015, 09:05 AM
http://i60.tinypic.com/2qx9vzo.jpg

Russellrqe
18th September 2015, 09:06 AM
http://i59.tinypic.com/28kkebd.jpg

Russellrqe
18th September 2015, 09:09 AM
http://i58.tinypic.com/2n6pea.jpg

vasudevan31355
18th September 2015, 09:25 AM
கொஞ்சம் இடைவெளிக்குப் பின் வரும் வினோத் சார், குமார் சார்

இருவரையும் வருக வருக என வரவேற்கிறேன்.

குமார் சார்!

அருமையிலும் அருமை! எங்கே தேடினாலும் கிடைக்காத ஆவணப் பொக்கிஷங்கள். பாகம் ஐந்தை உங்கள் பங்குக்கு அமர்க்களமாக அலங்கரிக்கத் தொடங்கி விட்டீர்கள். மஜ்னு வேஷத்தில் மகாலிங்கம். ஆனால் படம் வந்த சுவடு தெரியாமல் மறைந்தது. நாகேஸ்வரராவ், பானுமதி நடித்த லைலா மஜ்னு ஹிட்டானது.

இந்தப் படத்திலிருந்து உங்களுக்காக ஒரு பாடல். திருவாங்கூர் சகோதரிகள் ஆடியது.


https://youtu.be/zSrh4Zd74-0

chinnakkannan
18th September 2015, 10:32 AM
ஹாய் ஆல்..குட்மார்னிங்க்...

எஸ்.வி.ஸார்.. மன்னிக்க .. நேற்றுக்கே வரவேற்றிருக்க வேண்டும்.. செளக்கியமாண்ணா.. ஆனா ஏன் அடையாளம் தெரியலைன்னா ம.தி பாட்டு நீங்க கொண்டுவரலையே..:)

வரதகுமார் சார் வாங்கோ வாங்கோ.. வந்தவுடனே ஹச் நு தும்ம வெச்சுட்டீர்..அதாவது தூள் பரத்துறீங்கன்னு சொன்னேங்க. ஆவணங்களுக்கு நன்றி...

வாஸ்ஸூ..ஷிப்ட்லாம் ஓவரா.. தூங்கி எழுந்தாச்சா..சரி அடுத்த போஸ்ட்ல ஒம்மோட பேசறேன்..

chinnakkannan
18th September 2015, 10:47 AM
நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி...இல்லை இல்லை இரண்டு நற்செய்தி...

ஏற்கெனவே ஒன்று எஸ்வி சார் சொல்லிவிட்டார்.. யெஸ்..அதே

மதுண்ணா எட்டாயிரம் போஸ்ட் கம்ப்ளீட் செய்ததற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..

சதிராடும் பாடல்கள் தக்கபடி போடுகின்ற
மதுவண்ணா வாழிநூ றாண்டு.

https://youtu.be/OgT-8S0hR84
.

ஹடுத்து... டைப்போ அடுத்து :)


பூசுமஞ்சள் பூரித்த கன்னி முகமும்
...புன்னகையின் கீற்றினிலே பொங்கு தற்போல்
ஆசுகவி என்றபெயர் பெற்ற கவிஞர்
...அழகாகத் திரையினிலே எழுத இங்கே
பாசமுடன் பக்குவமாய் இலையில் பரப்பி
..பந்தியெங்கும் படைத்திட்ட நமது நண்பர்
வாசுவின்று அடைகின்றார் வகையாய் எட்டில்
..ஆயிரமாம் பதிவுகளில் வாழ்த்து வோமே.


வாஸ்ஸு ஸார்... இன்னும் பலப் பலப் பாடல்கள் தந்து, பலப்பல ரசனைக் கவிதைகட்டுரைகள் படைத்து எங்களுக்குத் தருவீர்கள் தானே.. மிக்க நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் உங்களுக்கு..ப்ளஸ் நன்றிகள்...

பட்டுப் பூச்சிகள் வட்டமடித்தால் கட்டியணைக்கும் பூச்செண்டு
பட்டுப்பட்டாய் பாடல் தந்திடும் வாசு வாழிய பல்லாண்டு..


https://youtu.be/Pa7uPGx-4Dk

JamesFague
18th September 2015, 11:57 AM
Courtesy: Tamil Hindu


காற்றில் கலந்த இசை-22 கடற்கரையில் வீசும் இசைத் தென்றல்




பொதுவாக ஒரு பெண்ணுக்குத் திருமணம் ஆகிவிட்டால், தனது காதலின் நினைவுகளைக் கைவிட்டுக் குடும்ப வாழ்வில் ஈடுபடுவதுபோல் சித்தரித்த திரைப்படங்களுக்கு மத்தியில், கட்டாயத் திருமணம் செய்துவைக்கப்பட்டு ஏமாற்றப்பட்டு, தனது காதலனின் நினைவாகவே வாழ்ந்து மடியும் பெண்ணைப் பிரதானமாக வைத்து எடுக்கப்பட்ட படம் ‘ஆனந்த ராகம்’(1982). பரணி இயக்கிய இந்தத் திரைப்படத்தில் சிவகுமார், ராதா, சிவச்சந்திரன் நடித்திருந்தார்கள். ஆதரவற்ற மீனவ இளைஞராக வரும் சிவகுமாருக்கும், அவரது நண்பர் சிவச்சந்திரனின் தங்கை ராதாவுக்கும் இடையில் மலரும் காதலைப் பற்றிய கதை. தென்னங்கீற்றின் தென்றல் தவழும் மீனவ கிராமத்தில் நிகழும் இந்த எளிய கதைக்குத் தனது உயிர்ப்பான இசை மூலம் காவிய அந்தஸ்தைத் தந்தார் இளையராஜா.

படத்தின் தொடக்கத்தில் வரும் ‘கடலோரம் கடலோரம்’ பாடலை ஜேசுதாஸும், இளையராஜாவும் பாடியிருப்பார்கள். எல்லையற்று விரிந்துகொண்டே செல்லும் கடல் அன்னையின் புகழ் பாடும் இந்தப் பாடலை உற்சாகமாகப் பாடியிருப்பார்கள் இருவரும். மாலை நேரச் சூரிய ஒளியின் பின்னணியில் பொன்னிறத்தில் மின்னும் கடலுக்கு முன் படமாக்கப்பட்ட அந்தப் பாடலில், பொங்கும் அலையின் கட்டற்ற வீச்சை இசையாக்கியிருப்பார் இளையராஜா. சின்னச் சின்ன இசைத் துணுக்குகளில் கடல் கண் முன் விரியும்.

இப்படத்தின் மற்றொரு பாடலான ‘மேகம் கறுக்குது… மழை வரப் பாக்குது’ பாடல், கடலோர கிராமத்தின் நாட்டுப்பாடல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட எளிய பாடல். சில்லென்று காற்று வீசும் கடற்கரையில் ஒரு மீனவர் பாடிச் செல்லும் பாடலைத் தொடர்ந்து சிவகுமார் பாடுவார். பாடலை இளையராஜா தொடங்கிவைக்க, கைமாற்றிக்கொள்ளப்படும் மலர் போல அதைச் சுகமாகச் சுமந்தபடி பாடியிருப்பார் ஜேசுதாஸ்.

பாடல் வரிகளே சூழலின் தன்மையை உணர்த்திவிடும் என்று சமாதானமாகிவிடுவதில்லை இளையராஜா. சூழலுக்கு மிகப் பொருத்தமான இசைக்கோவைகளுடன் பாடலை மிளிரச் செய்துவிடும் அந்தக் கலைஞர், இப்பாடலில் சந்தூர், வயலின், புல்லாங்குழல் போன்ற இசைக் கருவிகளை அடக்கமாக ஒலிக்க விட்டிருப்பார். பள்ளி மாணவியான ராதா, அந்த நாட்டுப்பாடலை சிவகுமாரிடமிருந்து கற்றுக்கொண்டு பள்ளி விழாவில் பாடிக்காட்டுவது போல் அமைக்கப்பட்ட காட்சி அது. பாந்தமும் அன்பும் நிறைந்த இளைஞரின் மனதை அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார் ஜேசுதாஸ். காதல் அரும்பிய மலர்ச்சியில் குதூகலிக்கும் இளம் பெண்ணின் பாவங்களைக் குரலில் காட்டியிருப்பார் ஜானகி.

1967-ல் வெளியான ‘மிலன்’ இந்தி திரைப்படத்தில் முகேஷ் லதா மங்கேஷ்கர் பாடிய ‘சாவன் கா மஹீனா… பவன் கரே சோரு’ பாடலின் தாக்கம் இப்பாடலில் உண்டு என்று சொல்பவர்கள் உண்டு. படகோட்டி ஒருவன் தனது காதலிக்கு நாட்டுப்புறப் பாடலைக் கற்றுத்தருவதைத் தவிர இரு பாடல்களுக்கும் இடையில் வேறு பொருத்தங்கள் இல்லை. காதல் மையம் கொள்ளும் பாடல் என்றாலும், மெல்லிய சோகத்தை மீன்பிடி வலையைப் போல் நெய்திருப்பார் இளையராஜா. காதல் தோல்வியில் சிவகுமார் பாடும் ‘கனவுகளே கலைந்து செல்லுங்கள்’ பாடலை, தனிமையின் துயரம் தரும் வலியுடன் பாடியிருப்பார் ஜேசுதாஸ்.

இப்படத்தின் பிரதானப் பாடல் ‘ஒரு ராகம் பாடலோடு’. ஜேசுதாஸ், ஜானகி பாடிய இப்பாடல் மெல்லிய தென்றலின் வருடலும், கடலலையின் ஸ்பரிசமும் நிறைந்த தேவகானம். அர்ப்பணிப்பான காதல் உணர்வும், ஆழமாக வேர்பிடித்துவிட்ட உறவின் மேன்மையும் நிரம்பிய பாடல் இது. பெண் குரல்களின் ஹம்மிங்குடன் பாடல் தொடங்கும். அந்தக் குரல்களின் கருவி மொழியைப் போல் புல்லாங்குழலும் சேர்ந்து ஒலிக்கும்.

காதலின் மயக்கத்தில் சூழலை மறந்து வேறு உலகத்துக்குள் நுழையும் ஜோடியின் மனப்பிரதிகளாகப் பாடியிருப்பார்கள் ஜேசுதாஸும் ஜானகியும். காதலுக்கு வாழ்த்துச் சொல்லும் தேவதைகளின் குரல் போல், பெண் குரல்களின் ஹம்மிங் ஓரடுக்கில் ஒலித்துக்கொண்டே இருக்கும். பல்லவியைத் தொடர்ந்து ஒலிக்கும் முதல் நிரவல் இசை, தரையிலிருந்து மேலேறிப் பறக்கும் பறவையைப் போல் படரும். சிதார், வயலின்(கள்), புல்லாங்குழல் என்று காதலுக்காகவே படைக்கப்பட்ட இசைக் கருவிகளைப் பொருத்தமாகப் பயன்படுத்தியிருப்பார் இளையராஜா.

இரண்டாவது நிரவல் இசையைத் தொடங்கும் சிதார், காதலின் மவுனத்தைக் கலைப்பதுபோல் பரிவுடன் ஒலிக்கும். கைகூடாத காதல் என்பதை உணர்த்தும் விதமாக, பாடல் முழுவதும் மெல்லிய சோகத்தை இழையவிட்டிருப்பார் இளையராஜா. ‘ஏதோ நூறு ஜென்மம் ஒன்று சேர்ந்துவந்த சொந்தம்’ எனும் வரியில் ஏழைக் காதலனின் உணர்வுகளைப் பிரதிபலித்திருப்பார் கங்கை அமரன். அந்த வரியைப் பாடும்போது ஜேசுதாஸின் குரலில் காதலையும் மீறிய கழிவிரக்கத்தை உணர முடியும்.

காற்றின் அலைகளில் அசைந்தாடும் சிறகு, மேலும் கீழுமாக ஏறி இறங்குவதைப் போல், பாடலும் அலைபாய்வதை உணர முடியும். கடைசி முறையாகப் பல்லவியைத் தொடங்கும் ஜானகி, ‘ஒரு’, ‘ராகம்’, ‘பாடலோடு’ என்று வார்த்தைகளுக்கு இடையில் சற்று இடைவெளி விடுவார். காதலன் மீதான அன்பின் வெளிப்பாட்டில் திணறும் குரல் அது.

JamesFague
18th September 2015, 11:58 AM
Congrats Mr Madhu Sir for starting the Part V of Madhura Ganam.

vasudevan31355
18th September 2015, 12:16 PM
சின்னா!

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/GnanaOli-Uyirvanicomavi_001829744.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/GnanaOli-Uyirvanicomavi_001829744.jpg.html)

நன்றி! தங்களைப் போன்றவர்களின் ஊக்கத்தாலும், உற்சாகத்தாலும்தான் 8000 பதிவுகளை கடக்க இருக்கிறேன். இதற்கு உறுதுணையாய் இருந்த நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக ராகவேந்திரன் சார். அவர்தான் ஹப்பிற்கு வரச் சொல்லி என்னை ஊக்குவித்தவர். முரளி சாரும் கூட. நாட்கள் ஓடியே விட்டன. பம்மலார், ராகவேந்திரன் சார், முரளி சார், கோபால், கார்த்திக் சார், சாரதா மேடம் இவர்களுடன் ஒர்க் செய்தது மறக்க முடியாத பொற்காலங்கள்.

இப்போது மதுர கானங்களில் உயிரான அனைத்து நண்பர்களுடன் பணி புரிவதில் ஆனந்தம்.

எல்லாவற்றுக்கும் காரணமான நான் வணங்கும் தெய்வம் நடிகர் திலகத்திற்கே அனைத்தும் சமர்ப்பணம்.

vasudevan31355
18th September 2015, 12:21 PM
//பட்டுப் பூச்சிகள் வட்டமடித்தால் கட்டியணைக்கும் பூச்செண்டு//

பாலாவின் தொடரில் நிச்சயம் விரைவில் வரும் சின்னா!:)

vasudevan31355
18th September 2015, 12:25 PM
8000 ஆவது சிறப்புப் பதிவு

எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்

(நெடுந்தொடர்)

37

'பொட்டு வைத்த முகமோ'

'சுமதி என் சுந்தரி'

http://thumbnails107.imagebam.com/26605/c3bc38266041325.jpg

அடுத்து பாலாவின் பாடல்களில் மிக மிக ஸ்பெஷலாக வருவது 'சுமதி என் சுந்தரி' படப் பாடல். தமிழ்த் திரையுலக பாடல்கள் வரலாற்றையே புரட்டிப் போட்ட பாடல். திரு எம்.ஜி.ஆர், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், ஜெமனி, சிவக்குமார் என்று பாலா பலருக்கும் பாடிக் கொண்டிருந்த சமயத்தில் 1971-ல் இளைஞர்களின் கனவுப் படமாக வந்து இளமை விதையைத் தூவி அனைவர் நெஞ்சிலும் புதுமைக் காதல் பயிர் வளர புது வழி காட்டிய, புத்துணர்வுப் படமான 'சுமதி என் சுந்தரி' படத்தில் முதன் முதலாக நடிகர் திலகத்திற்குப் பாலா பாடி, தான் பாடிய அத்தனைப் பாடல்களையும் தானே முந்திச் சென்று 'பொட்டு வைத்த முகமோ' மூலம் எவருமே முந்த முடியாத முதல் இடத்தைப் பெற்றார்.

இதற்கு பாலா மட்டுமே காரணமல்ல. இதுவரை பாலா பாடிய பாடல்களின் மகத்துவமான வெற்றிக்கு அவரே முழுக் காரணம். ஆனால் 'பொட்டு வைத்த முகமோ' வெற்றிக்கு அவரால் அப்படி முழுக் காரணமாக முடியவில்லை. காரணம் 'நடிகர் திலகம்' என்ற ஜெயின்ட். அதை மீறி யாருமே ஒன்றுமே செய்ய முடியாது. டி.எம்.எஸ்ஸின் கம்பீரக் குரலிலேயே நடிகர் திலகத்தைப் பார்த்துப் பழகிப் போன நமக்கு டோட்டலாக மாறுதலுடன், இளமை பொங்கும் பாலா வாய்ஸுடன், அவர் இப்பாடலுக்கு மிகப் பொருத்தமாக நடித்திருப்பதை இன்று பார்க்கும் போதும் மிரட்சி அடங்கியபாடில்லை. நடிகனுக்காக பாடகனா? இல்லை பாடகனுக்காக நடிகனா? நடிகனுக்காக பாடகன் என்றால் பலர் இருக்கிறார்கள். ஜெமினிக்கு பி.பி.எஸ், எ.எம்.ராஜா. அத்தனை ஹீரோக்களுக்கும் பொதுவாக பாடகர் திலகம், தங்கவேலுவுக்கு எஸ்.சி.கிருஷ்ணன், நாகேஷுக்கு ஏ.எல்.ராகவன் இப்படி. பாடகனுக்காக நடிகனா என்றால் 'அதுவும் என்னால் முடியும்... இதுவும் என்னால் முடியும்' என்று சூளுரைக்க 'சூரக்கோட்டையாரை'த் தவிர வேறு ஒருவரை நினைத்துப் பார்க்க முடியாது.

http://thumbnails104.imagebam.com/26605/4ba340266040796.jpghttp://www.5eli.com/Lyrics/wp-content/uploads/2011/08/Sumathi-En-Sundari-500x500-300x300.jpg

1971-லோ நடிகர் திலகம் உடல் வனப்பில் உச்சம் தொட்டிருந்தார். வாளிப்பான உடல். 43 வயது. தோற்றமோ இருபது வயது வாலிபன் போல. கல்லூரிக் கட்டிளங் காளை போல. இத்தனைக்கும் மேக்-அப் ஹெவி எல்லாம் கிடையாது. அதனால் பாலாவுக்கு மிக மிக வாட்டமாகப் போயிற்று. சி.எஸ்.ஜெயராமன், சீர்காழி, மோத்தி, பி.பி.எஸ், சௌந்தர்ராஜன் என்று பாத்திர வார்ப்புகளுக்கு ஏற்ப பலர் நடிகர் திலகத்திற்கு பாடினாலும் பாடகர் திலகமே பின்னால் நடிகர் திலகத்தின் குரலாக பாடல்களில் முழு ஆக்கிரமிப்பு செய்து விட்டார்.

இப்போது அப்படியே ஒரு சேன்ஜ். இளமை பொங்கும் கலைக்குரிசிலும், கலைச்செல்வியும் ஜோடி. இயற்கை எழில் கொஞ்சும் தேயிலைக் காடுகளின், மலைகளின் சரிவுப் பாதைகள் நடுவே ரசமான பாடல். அடித்தது யோகம் பாலாவிற்கு. எம்.ஜி.ஆர் அவர்களுக்குப் பாடி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தாகி விட்டது. மற்ற துண்டு துக்கடாக்களுக்கும் பாடி ஓகே ஆகி விட்டது. இப்போது நடிப்பின் இமயத்திற்கு பாடி அதுவரை புகழின் 'தொட்டபெட்டா' தொட்டிருந்தவர் 'எவரெஸ்ட்'டில் ஏறி அமர்ந்து விட்டார். அமர்ந்தவர் அமர்ந்தவர்தான். கீழே இறங்கவே இல்லை.

சரிவருமா, குரல் பொருந்துமா என்ற சந்தேகங்கள் எல்லோருக்கும் பாலா உட்பட. திலகத்திற்கோ தன் திறமை மேல் எப்போதுமே திடமான நம்பிக்கை. பயத்தில் பாலா புலம்ப 'பாலு...நீ பாடு... மற்றதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று சர்வ அலட்சியமாக 'நடிப்பின் சர்வாதிகாரி' சொல்ல, தைரியம் வரவழைத்து அற்புதமாக பாடி முடித்து விட்டார் பாலா. இப்போது ரிசல்ட்டுக்காக வெயிட்டிங்.

இப்போது நடிகர் திலகத்தின் டர்ன். பாட்டை முழுவதும் கேட்டு உள்வாங்கியாகி விட்டது. கொஞ்சம் வழக்கத்தை விட கவனமாக. தான் நடிகர் திலகம் இல்லை.. 'சுமதி என் சுந்தரி' படத்தின் சுந்தர ஹீரோ...இளம் நாயகன். உடன் அழகு நாயகி. அது மட்டுமே. பாடகர் திலகத்தின் குரலுக்கு வாயசைத்து அசைத்து பழகி ஆகி விட்டது. இப்போது வேறு ஒரு இளைஞன் பாடுகிறான். அதற்கேற்ற மாதிரி வாயசைக்க வேண்டும்.அவ்வளவுதானே ! ஜூஜுபி.ஊதித் தள்ளி நடித்தாகி விட்டது. பாடலை பார் புகழ ஹிட் ஆக்கியும் கொடுத்தாகி விட்டது.

ரிசல்ட் என்ன! பாலா எவருமே தொட முடியாத புகழை இந்த ஒரு பாடல் மூலம் பெற்று விட்டார் நடிகர் திலகத்தின் வாயசைப்பு மூலமாக. அது போல தன்னுடைய அசாத்திய திறமை மூலமும். நடிப்பின் சமுத்திரமும், பாடல் கடலும் ஒன்று சேர்ந்து ஒரு இசைப் பிரளயத்தையே நடத்தி முடித்து விட்டன எம்.எஸ்.வி என்ற இன்னொரு இசைக் கடல் இணைவின் மூலம்.

மிக உற்சாகமாக ஆரம்பிக்கும் இசை. புள்ளி மானைப் போல மலைப் பாதைகளுக்கு இடையில் கலைச்செல்வி துள்ளி ஓடி வர, வெகு இயல்பாக 'நடிகர் திலகம்' நடந்து வந்து செடியிலிருந்து இலை கிள்ளிப் போட, அந்த நான்கு நிமிடப் பாடல் நான்கு ஜென்மம் எடுத்தாலும் மறக்க முடியாதது. ஒரு காலை மடக்கி ஸைடில் நிற்கும் போஸாகட்டும்...அல்லது பேன்ட்டின் முன்னிரண்டு பக்க பாக்கெட்டுகளில் கட்டை விரல் கொடுத்து கொக்கி போட்டு, இடுப்பொடித்து நிற்கும் அழகாகட்டும்... வலதுகாலை டைட் செய்து, இடது கால் மடக்கி உயரே செல்வி இருக்க, சரிவில் நின்றபடி 'பொட்டு வைத்த முகமோ' பாடல் தொடங்கும் போதே தியேட்டர் ஓனர் போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்து முடித்திருப்பார். வெளிர் நீல டைட் பேண்ட்டும், ஜவுளிக் கடைகளின் வெளியே அப்போதெல்லாம் விளம்பரத்திற்கு வைக்கப்பட்டு 'சுமதி என் சுந்தரி ஷர்ட்' என்று அமோக விற்பனை ஆன அந்தப் பெரிய செக்டு ஷர்ட்டும் அணிந்து ஏதோ பத்தாம் வகுப்பு பையனைப் போல ஆச்சர்யம் வரவழைக்க நடிகர் திலகத்தை விட்டால் வேறு யார்?

http://i.ytimg.com/vi/NaeKkH0hPus/hqdefault.jpghttp://i60.tinypic.com/2vtpmci.jpg

'தரையோடு வானம்' என்று கலைச்செல்வியின் ஒரு கை பிடித்து, இன்னொரு கையை வானம் நோக்கி உயர்த்தையிலே திரையரங்குகளின் கூரைகள் நொறுங்குமல்லவா? படத்தின் போஸ்டர்கள் இந்தப் போஸைத்தானே தாங்கி நிற்கும்! கை தூக்கி இடையொடித்து செல்வி நிற்கையிலே அவர் இடையின்மீது ஒரு கை வைத்து ('இடையோடு பார்த்தேன்.... விலையாகக் கேட்டேன்') இன்னொரு கையை தன் இடுப்பின் மீது நடிகர் திலகம் வைத்து ஸ்டைலாக நிற்கும் அடுத்த போஸ் அதற்குள் வந்து முன் போஸை ரசித்து முடிப்பதற்குள் நம்மைப் பாடாய்ப் படுத்துமே! அடுத்த சில வினாடிகளில் அதே விலையில்லா வரிகளுக்கு ஜெயா முன் நடக்க, அப்படியே பின்னால் தொடர்ந்து சற்று கழுத்தைச் சாய்த்து புற்களுக்கு மத்தியில் கால்களைத் தூக்கி வைத்து நடக்கும் அந்த ஸ்டெப்ஸ். (போலீஸ் உள்ளே நுழைந்து ஆர்ப்பாட்டம் பண்ணும் ரசிகர்களை அடக்க முயன்று தோற்றுப் போகும்) என்ன நடக்கிறது என்றே தெரியாது. வானம் இடிந்து விழுந்து விட்டதோ என்று எண்ணுமளவிற்கு ரசிகர்களின் ஆரவார சப்தம் ஒலிக்கும். 'செவ்வானம் போலே புன்னகை புரிந்தாள் என்றபடி கால் மடக்கி, படுத்து நாயகி கரம் பிடித்து, விருட்டென்று 'புரிந்தாள்' என்று முடித்தவுடன் கையை விசிறி விலக்குவது விசில் சப்தங்களை வீறிட வைக்கும். திரும்ப அதே வரி வரும் போது தாழ்நிலையில் பாய்வது போல் நிற்க, ஒரு நொடி குளோஸ்-அப் காட்டி பின் காமெரா தூர விலகி விடும். ஜெயாவின் கைபிடித்து ஒவ்வொரு முறையும் பின்னால் நடந்து வரும் ஸ்டைல் விதவிதமாக இருக்கும். 'குழலோ.. ஓ.. ஓ' என்று பாலா பாடும் போது அதற்குத் தகுந்தாற்போல் 'நடிகர் திலகம்' அந்த 'ஓ' வுக்கு தலையை சாய்த்து மிக அழகாக வாயசைக்கும் போது யாருக்குத்தான் 'ஓ' போடத் தோன்றாது?

'அந்தி மஞ்சள் நிறமோ' என்று வெகு அழகாக நெஞ்சு நிமிர்த்தி அவர் ஓர் முழு ஆண்மகனுக்குரிய தகுதியை உடல் மொழியாகக் காட்டுவார் பாருங்கள். (அதாவது முதல் சரணம் முடிந்து மீண்டும் பல்லவி வரும் போது)
காட்டிவிட்டு மீண்டும் உடனே உடல் தளர்த்துவார்)

அடுத்த சரணத்தில் ஜெயாவின் பின் நின்று, அவரது இரு கைகளையும் பின்பக்கம் இழுத்தவாறு பிடித்து ஊஞ்சல் ஆட்டுவது போல 'பொன்னூஞ்சல் ஆடி என்னுடன் கலந்தாள்' என்று பாடுவது கிளாஸ். என்னுடன் கலந்தாள்' இரண்டாம் தரம் ஒலிக்கையில் குளோஸ்-அப்பில் மிக அழகாக சிரிப்பார் கலைச் செல்வியைக் கட்டி அணைத்தபடி. வசந்தா குரலில் 'லலலா லலலா லலலா லால்லா' என்று ஜெயா இவர் அணைப்பிலிருந்து விலகி பின்புறம் சாய்ந்து ஹம்மிங் தரும் போது நடிகர் திலகம் தலையை முன் நீட்டி சைட் போஸில் சிரிப்பது செம ரகளை.

http://i62.tinypic.com/15hhcte.jpg

மூன்றாவது சரணமான 'மலைத் தோட்டப் பூவில்' வரிகளில் நிற்கும் உடல் மொழி அசர வைத்து விடும் நம்மை. தலையை ஒரு வெட்டு வெட்டி இந்த லைனை ஆரம்பிப்பார். வலது கை கட்டை விரல் பேன்ட் பாக்கெட்டில் கொக்கியாய் மாட்டியிருக்க, இடது கை நீட்டி 'மணமில்லையென்று' பாடிக் கொண்டிருப்பவர் சடேலென்று கையை வீச்சருவாள் வெட்டுவது போல விசிறி ஒரு ஆக்ஷன் செய்து கையை பின்னால் கொண்டு செல்வாரே பார்க்கலாம். இதற்கு நடுவில் தலை ஸ்டைலாக ஷேக் ஆவதையும், உடம்புப் பகுதிகள் வளைந்து நெளிவதையும் நாம் கவனிக்கத் தவறி விடக் கூடாது. இரு வினாடிகளில் இடைவிடாத அதிசய அசைவுகளைக் கா(கொ)ட்டி விடுவார். அப்படியே வரிகள் மீண்டும் தொடரும் போது படு அலட்சியமாக ஜெயாவைப் பின் தொடர்ந்து நடை போட்டு செல்வார். அப்படியே நின்று இடது காலை சற்று மடக்கி வலது கையை உயர்த்துவார்.

'நிழல் போல் மறைந்தாள்' என்னும் போது தியேட்டர் ரெண்டு பட்டு விடும். வலதுகையை மார்புக்கு நேராக நீட்டி ஓடும் ஜெயாவை சுட்டு விரலால் சுட்டிக் காட்டுவார். அய்யோ! அமர்க்களம் சாமி! அடுத்து வரும் போது வேறு வித போஸ்.

இப்படி பாடல் முழுதிற்கும் வினாடிக்கு வினாடி போஸ் முத்திரைகள், நினைத்துப் பார்க்க முடியாத விந்தை அசைவுகள், ஸ்டைல், நடை என்று தூள் பரத்துவார்.

பாலா குரலை அப்படியே தன்னுள் உள்வாங்கி, அதே போன்ற வாயசைப்போடு தன்னுடைய முத்திரைகளை மறக்காமல் அளித்து, அனைத்து ரசிகர்களையும் பரவசப்படுத்தி, பார்ப்போரை வியப்பிலாழ்த்தி நடிகர் திலகம் இந்தப் பாடலை எங்கோ கொண்டு சென்று விட்டார்.

கலைச்செல்வியும் நல்ல கம்பெனி. எளிமையான கண்களை உறுத்தாத சிம்பிள் மேக்-அப். உடையும் அது போலவே ரொம்ப எளிமை. வெளிர் வயலட் நிற சேலை மிகப் பொருத்தம். அழகில் அள்ளுகிறார். பி.வசந்தாவின் குரல் அப்படியே மேடம் பாடுவது போல அவ்வளவு பொருத்தம். இன்னும் கொஞ்சம் அந்த 'லலலா லலலா லலலா லால்லா' ஹம்மிங் வராதா என்று ஏங்குமளவிற்கு அற்புதம்.

பாடல் முழுதுமே இயற்கை எழில் கொஞ்சும் மலைப் பிரதேசங்களில் படமாக்கப்பட்டது. எத்தனயோ இயற்கை எழில் கொஞ்சும் மலைப் பிரதேசங்களில் பல பாடல்கள் படமாக்கப்பட்டிருந்தாலும் இந்தப் பாடல் அவற்றையெல்லாம் மீறிய தனிச் சிறப்பு கொண்ட காந்தத் தன்மை மிக்கது. அழகான காதலியை ரசித்து அவளைப் பின்பற்றியபடியே தொடரும் அவளைவிட அழகான இளைஞனின் காவிய ரசனைப் பாடல் இது.

'மெல்லிசை மன்னரி'ன் ஒவ்வொரு இசைக்கருவிகளும் இப்பாடலின் ஒவ்வொரு எழுத்தோடு இசைந்து இன்பம் தரும். சிதார், ஷெனாய், சந்தூர், கிளாரினெட், சாக்ஸ் , தபேலா, டோலக் என்று மனிதர் விளையாடி இருப்பார். நடிகர் திலகமும், கலைச்செல்வியும் தங்களை மெய்மறந்த நிலையில் அந்த பூங்காவின் பெஞ்சில் தழுவி கட்டுண்டு கிடக்க, பின்னால் ஒலிக்கும் அந்த கோரஸ் தொடர்ந்து வர இருக்கும் இந்த அற்புதப் பாடலுக்குக் கட்டியம் கூறி விடும். 'லாலா ஹாஹா ஹாஹா' என்று பெண்களின் குரல் ஒன்று சேர்ந்து கோரஸாக ஒலிக்கும் போது ஒவ்வொரு இளைஞனும் புளகாங்கிதம் அடைந்து விடுவான். மனதுக்குள் இனம்புரியாத கிலேசம் தோன்றி அனைவரையும் இன்பச் சித்ரவதை செய்துவிடும்.

படத்தின் துவக்க இசையே நம்மை உற்சாகத் துள்ளல் போட வைத்து விடும்.

பாலா நாம் யாருக்குப் பாடுகிறோம் என்பதை உணர்ந்து வெகு அழகாக பாடியிருப்பார். நடிகர் திலகத்திற்கே உரித்த கம்பீரமும் குறைந்து போகாமல், அதே சமயம் காதல் பாடலென்பதால் தன்னுடைய பாணி குழைவுகளையும் விட்டுக் கொடுக்காமல் வார்த்தைகளை தெள்ளத் தெளிவாக உச்சரித்து பாலா புகுந்து விளையாடியிருப்பார். தினைமாவுடன் சேர்ந்த தேனாக வசந்தாவின் ஹம்மிங் உலகம் உள்ளவரை பேசப்பட்டுக் கொண்டிருக்கும்.

இறப்பே இல்லாத சாகாவரம் பெற்ற பாடல்.

http://2.bp.blogspot.com/_78rwGPFYej0/SjO5YK3AdmI/AAAAAAAAARg/pK9c7KyKV_Y/s1600/2.jpg

பொட்டு வைத்த முகமோ
கட்டி வைத்த குழலோ
பொன்மணிச் சரமோ
அந்தி மஞ்சள் நிறமோ
அந்தி மஞ்சள் நிறமோ

பொட்டு வைத்த முகமோ
ஆஆஆ… கட்டி வைத்த குழலோ
பொன்மணிச் சரமோ
அந்தி மஞ்சள் நிறமோ
அந்தி மஞ்சள் நிறமோ

தரையோடு வானம் விளையாடும் கோலம்
தரையோடு வானம் விளையாடும் கோலம்
இடையோடு பார்த்தேன் விலையாகக் கேட்டேன்
இடையோடு பார்த்தேன் விலையாகக் கேட்டேன்
செவ்வானம் போலே புன்னகை புரிந்தாள்
புன்னகை புரிந்தாள்

பொட்டு வைத்த முகமோ
கட்டி வைத்த குழலோ
பொன்மணிச் சரமோ
அந்தி மஞ்சள் நிறமோ
அந்தி மஞ்சள் நிறமோ

ஆஆஆஆஆஆஆஅ………

மறுவீடு தேடி கதிர் போகும் நேரம்
மறுவீடு தேடி கதிர் போகும் நேரம்
மணமேடை தேடி நடைபோடும் தேவி
பொன் ஊஞ்சல் ஆடி என்னுடன் கலந்தாள்

லலலா லலலா லலலா லால்லா

என்னுடன் கலந்தாள்

லலலா லலலா லலலா லால்லா

ஆஆஆஆஆஆஆஆ……. ஹ ஹா ஹா

மலைத்தோட்டப் பூவில் மணமில்லை என்று
மலைத்தோட்டப் பூவில் மணமில்லை என்று
கலைத்தோட்ட ராணி கை வீசி வந்தாள்
ஒளியாகத் தோன்றி நிழல் போல் மறைந்தாள்

லலலா லலலா லலலா லால்லா

நிழல் போல் மறைந்தாள்

லலலா லலலா லலலா லால்லா

பொட்டு வைத்த முகமோ

ஓஓஓஓஓ….

கட்டி வைத்த குழலோ

ஓ...ஓஓஒ

பொன்மணிச் சரமோ
அந்தி மஞ்சள் நிறமோ

லலலா லலலா லலலா லால்லா

அந்தி மஞ்சள் நிறமோ

லலலா லலலா லலலா லால்லா


https://youtu.be/NaeKkH0hPus

Richardsof
18th September 2015, 12:41 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/5bcaa7ed-2dfc-4c50-8c04-e43838c90bbd_zps4yxigyhp.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/5bcaa7ed-2dfc-4c50-8c04-e43838c90bbd_zps4yxigyhp.jpg.html)

chinnakkannan
18th September 2015, 01:30 PM
வாஸ்ஸூ...

கலர்ஃபுல் எட்டாயிரமாவது போஸ்டிற்கு (8001 !) கலர்ஃபுல் பாட்டு கலர்புல் காட்சி கலர்ஃபுல் ரசனை..(எதுக்கு இத்தனை கலரா..விரைவில் தெரியும்!)

எனக்கு மிகப் பிடித்த பாடல் இது என்றால் கீழ்வாக்கியம் என்று சொல்லலாம்.அண்டர்ஸ்டேட்மெண்ட்.. ! இதைப் பிடிக்காதவர்கள் யாராவது இருக்கமுடியுமா...விஷூவல், இசை, வரிகள் எனக் கலந்து கட்டி கேட்டவரைப் பார்த்தவரை மிரட்டி மனதினுள் உட்கார்ந்த பாடல் எனலாம்..

தரையோடு வானம்
விளையாடும் கோலம்
இடையோடு பார்த்தேன்
விலையாகக் கேட்டேன்


எழுதியவரின் கற்பனையைக் காட்சிப் படுத்தி நடித்த க.செ, ந.தி ப்ளஸ் டைரக்டர் ஒளிப்பதிவாளர் அனைவருக்கும் இன்றும் ஓ போடாமல் இருக்கமுடியவில்லை..

இதுவும் ஒரு தரம் ஒரே தரம், ஓராயிரம் நாடகம் ஆடினாள் எத்தனை முறை கேட்டிருப்பேன் நினைவிலில்லை..

வெகு அழகான பாடல்..

இந்தப்படத்தையே சற்றே தழுவி பதினான்கு பதினைந்து வருடம் முன் இன்னொரு படம் வந்தது ஜுலியா ராபர்ட்ஸ்.. நடித்த நாட்டிங் ஹில்

தாங்க்ஸ் என்று சொல்லவும் வேண்டுமோ..:)

Gopal.s
18th September 2015, 01:38 PM
வாசு ,

எண்ணிக்கைக்காக பாராட்டுவது என்பதில் எனக்கு உடன்பாடில்லை. அது எவ்வளவு முறை பேதியானது என எண்ணி ,ஒரு மனிதனை பாராட்டுவது போன்றது.(இதில் நான் முரளி,வேலன் கட்சியாக்கும்) எத்தனை அதில் தரத்துடன், மற்றோருக்கு புதிய செய்திகளை சொன்னது என்று பார்த்தால், என்னை தவிர கார்த்திக் ,முரளி, நீ, ஓரளவு ராகவேந்தர்,பார்த்தசாரதி,சாரதா,பம்மலார், முத்தையன் அம்மு, கலைவேந்தன்,இவ்வளவுதான் தேறும்.ரவி,சின்னகண்ணன் இப்போது கொஞ்சம் தேறி வருகின்றனர். நான் மிக ரசிக்கும் பதிவாளர்கள் வெங்கி ராம்,பிரபுராம் முதலியோர் காண்பதேயில்லை.

இதில் உன் பாணி அலாதி. தரத்துடன்,மற்றவர் ரசனையையும் கணித்து,புது புது கான்செப்ட் பிடித்து, அதற்காக மெனக்கெட்டு உழைத்து,உன் தேகத்தையும் ,நேரத்தையும் தியாகம் செய்து இவ்வளவு சுவாரஸ்யத்துடன் ரசனை குழைத்து நீ நடத்திய இந்த 8000 குட யாகத்திற்கு எனது தலையாய தலை வணக்கங்கள்.

chinnakkannan
18th September 2015, 01:49 PM
கோப்ப்ப்ப்பால்...வாங்க வாங்க...

//சின்னகண்ணன் இப்போது கொஞ்சம் தேறி வருகின்றனர். // ஹச்சோ..வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி..ஹைய்யா.. என் மனது பொங்கிப் பிரவாகமெடுத்து அலைகள் எல்லாம் சுனாமி வந்தாற்போல தாவிக்குதிக்கின்றன.. :) :boo:

ஒரே ஒருகுறை.. நீங்கள் உங்கள் வாழ்நாளில் முதன்முறை செய்த மிகப்பெரிய தவறு என்றும் சொல்லலாம்..ரவியை என்னுடன் சேர்த்தது..அவர் லெவலெல்லாம் வேறு..மிக உயரம்.. வெகு அபாரமான மனிதர்..மென்மனசுக்காரர்...

நான் இன்னும் எழுதிப் பழகிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்வதற்கு எந்தக்காலத்திலும் வெட்கப் பட்டதில்லை.. அடுத்து ஒரு பதிவு இடுவீர்களா அல்லது அக்டோபரா என்று கேள்வி கேட்கலாமா..

உங்கள் ப்ளாக் வேலை எப்படி இருக்கிறது..ரசனையின் உச்சமான, எழுதுவதில் பல வித உச்சங்கள் கண்ட, படிப்பவரையும் ஒன்ற வைக்கும் எழுத்துக்கள் கொண்ட நீங்கள் இந்த இடைவெளியில் எதுவும் எழுதினீர்களா..சொன்னீர் என்றால் தன்யனாவேன்..சொல்ல வில்லை என்றாலும் பரவாயில்லை..கொஞ்சம் தேறி எழுதும் முயற்சியைத் தொடர்ந்து கொண்டிருப்பேன்...

ஒவ்வொரு பாக ஆரம்பத்திலும் உங்கள் பூஜை நடக்கும்.. இங்கு ஆரம்பமே கணபதி பூஜை ஆனதினால் நாலு பக்கம் லேட்.. :).

வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் டயரியா எனச்சொல்லும் உங்கள் மிகப்பெரியபரந்தமனதை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.. தொடருங்கள் தங்கள் அருமையான எழுத்துப்பணி.. :)

chinnakkannan
18th September 2015, 02:19 PM
வாஸ்ஸு..

பியூட்டிஃபுல் மார்வலஸ் எக்ஸலண்ட் வெரிவெரி எக்ஸலண்ட்..

வடிகட்டி உனைத் தேர்ந்தெடுத்து நான் போட்டேன் பூமாலை..:)


https://youtu.be/wmW_iv0dbH4

ஆமாம்… சோவோட ஆடற அக்கா (பாட்டி?!) யாருங்க..

Russellrqe
18th September 2015, 03:03 PM
ஏற்றமிகு எட்டாயிரம் பதிவுகளை பதிந்து
எட்டாத இமய புகழுக்கு சென்றவரே -----வாசு தேவரே
வாழ்த்துகிறேன் ...வாழ்க வளர்க உமது பயணம் ஒன்பதாயிரம் நோக்கி
மாலை நேர தென்றல் என்ன ...பாடுதோ - பாலாவின் அடுத்த மலர் கணை
மக்கள் திலகம் எம்ஜிஆர் உதட்டசைவில் ... காண காத்திருக்கிறேன் ....

Russellrqe
18th September 2015, 03:08 PM
கோப்ப்ப்ப்பால்...வாங்க வாங்க...


வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் டயரியா எனச்சொல்லும் உங்கள் மிகப்பெரியபரந்தமனதை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.. தொடருங்கள் தங்கள் அருமையான எழுத்துப்பணி.. :)
:clap::clap::clap::clap::clap::clap::clap::clap::c lap:

chinnakkannan
18th September 2015, 04:12 PM
ரேடியோ சிலோனில் அடிக்கடி கேட்ட பாடல் இந்தப் பாட்டு.. படம் பார்த்ததில்லை.. கல்பனா தியேட்டர் மாலை சூட வா என போஸ்டர் மட்டும்பார்த்தது நினைவில் புகையாக..

பட்டுப் பூச்சிகள் வட்டமடித்தால் பாடலைக் கேட்ட போது இந்தப் பாடல் நினைவுக்கு வந்து அட படம் பார்க்கவில்லையே பாடலாவது கேட்போம் என்று பார்த்தேன்.. நைஸ் தான். கொஞ்சம் வித்தியாசமாக ஒலிக்கிறது கே.ஜே.ஜேசுதாஸின் குரல்...

ஆமாம் ..ஐந்தாவது பாகத்தின் இரண்டாவது கேள்வி.. இந்த நடிகையாரு? விஜயசாந்தியின் சாயலில் இருக்கிறார். வி.சா.வின் அம்மாவா..

வரிகள் நைஸ்


https://youtu.be/wk4B1BhqasA

யாருக்கு யார் சொந்தம் நான் சொல்லவா
எனக்கென்றும் நீயே சொந்தம் மாலைசூடவா

குளிர்கொண்ட மேகம்தானோ மலர்க்கொண்ட கூந்தல்
கடல்கொண்ட நீலம்தானோ சுடர்க்கொண்ட கண்கள்
மடல்கொண்ட வாழைதானோ மனம்கொண்ட மேனி
தழுவாதபோது உறக்கங்கள் ஏது...

யாருக்கு யார் சொந்தம் நான் சொல்லவா
எனக்கென்றும் நீயே சொந்தம் மாலைசூடவா

கல்யாணமேளம் கேட்கும் நாளெந்த நாளோ
கச்சேரி ராகம் பாடும் பொழுதென்ன பொழுதோ
முதல் முதல் பார்க்கத்தோன்றும் இரவெந்த இரவோ
அலைபாயும் உள்ளம் அணைதாண்டி செல்லும்


பாடல்: யாருக்கு யார் சொந்தம்
படம்: மாலை சூட வா
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்.
வரி.. வாலியாகத் தான் இருக்கும்..ஆனால் ரொம்ப சிம்ம்ப்பிளா இருக்கு..

eehaiupehazij
18th September 2015, 06:14 PM
Hearty Congratulations for your 8K accomplishment Vasu Sir!
senthil

uvausan
18th September 2015, 07:30 PM
மது சார் , மனமார்ந்த வாழ்த்துக்கள் - பாகம் 5 உங்கள் கைவண்ணத்தில் ஆரோக்கியமாகவும் , அருமையாகவும் தொடங்கப்பட்டுள்ளது - இந்த பாகம் நல்ல வெற்றியை அடையவும் , உங்கள் தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கவும் இறைவனை மனமார வேண்டிக்கொள்கிறேன் .

eehaiupehazij
18th September 2015, 07:47 PM
மின்மினி கீதங்கள் !!

இரவில் ஒளிரும் சிறகுகளின் துணைகொண்டே இறைவன் படைப்பதிசயமான மின்மினிப் பூச்சிகள் இரை தேடிச் செல்கின்றன!!
இந்த மின்மினிகளுக்கு ஒப்பான கண்மணிகளைத் தேடும் கிண்கிணிகள்!!

https://www.youtube.com/watch?v=7f471aVOjJE

https://www.youtube.com/watch?v=0sbkb5KGE94

[url]https://www.youtube.com/watch?v=Yoo_WkRIgYU

uvausan
18th September 2015, 07:47 PM
வாசு - முதலில் எட்டாயிரம் , எட்டமுடியாத எண்ணிக்கை - இந்த இலக்கை நீங்கள் அடைந்ததிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் - ஒவ்வொரு பதிவும் பாதுக்காக வேண்டியவை - மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டுபவை . இதற்கு பின் எவ்வளவு உழைப்பு ! ஆத்மார்த்தமான கருத்துக்கள் - அலுவுலகத்தில் ஏற்பட்ட மனகசப்புக்களையும் ஒரு புறம் ஒதுக்கி வைத்து , தன்னை முழுவது ஈடுபடுத்திக்கொண்டு பதிவு போடுவது என்பது சாதாரணமான விஷயம் அல்ல - மிகுந்த மன உறுதி வேண்டும் . உங்கள் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தி பதிவுகளை இடுங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .

பாலாவின் பதிவுகளில் இன்று சிகரம் /பொட்டு வைத்தது போல சுமதி என் சுந்தரியின் பாடல் - உங்கள் வர்ணனை 25 வயதாக தெரியும் ந .தி யை 18 வயதுக்கும் குறைவாக ஆக்கிவிட்டது . இனி வரும் பதிவுகளில் இந்த பதிவில் உள்ள அளவிற்கு ஈர்ப்பு சக்தி இருக்குமா என்று தெரியவில்லை . பாலாவின் பாடல் அருமை என்றால் அதை தனக்குத்தான் என்று மாற்றிக்கொண்ட ந .தி யின் நடிப்பு , பாடலுக்கு வெகு பொருத்தமான இசை - எதிலுமே குறை இல்லாத பாடல் என்றால் இந்த பாடலைத்தான் சொல்ல வேண்டும். மிகவும் ரசித்து படித்தேன் - மிக்க நன்றி வாசு ..

eehaiupehazij
18th September 2015, 08:17 PM
கார்மேகத்தினூடே மறைந்து தோன்றும் நிலவாட்டம் ரம்மியமே !

மோகனப் புன்னகை சிந்திடும் நிலவே மேகத்திலே நீ மறையாதே.... ! வணங்காமுடியில்.....

https://www.youtube.com/watch?v=qh2rU3ap8Zg

chinnakkannan
18th September 2015, 09:02 PM
சி.செ..

இந்த மின்மினிக்குக் கண்ணில் ஒரு மின்னல் வந்தது என் கண்ணே

அஞ்சலி அஞ்சலி அஞ்சலி மின்னும் மின்மினி மின்மினி மின்மினி

மின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற தீபம் போல்
மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே

**


இன்னொன்று ஒரு படம் தான் நினைவுக்கு வருகிறது.,. கொஞ்சம் பத்துவருடம் இருக்குமா..
*
அவள் இளம்பெண்.. பெற்றோர்களால் கல்யாணம் நிச்சயிக்கப் பட்டு கல்யாண நாளை எதிர் நோக்கி இருப்பவள்..அப்போது வருகிறான் வீட்டிற்குஒரு வாலிபன்..

கலகலப்புக்கும் சுறுசுறுப்புக்கும் சொந்தக்காரனான அந்த வாலிபனின் தந்தை அந்தப் பெண்ணின் தந்தையின் நெருக்கமான நண்பர்..

சிலதினங்களில் அந்த வாலிபனுக்கு வேலை கிடைக்கிறது.. கல்யாணப் பெண்ணின் எண்ணத்தில் அவன் எப்படியோ விழுந்துவிடுகிறான்..அவனது பேச்சு, நடத்தை எல்லாம் நல்லவிதமாக ஆக்கி முதலில் நட்பாக பின் எப்படியோ தெரியாமல் பூக்கும் பூ ஒன்றிருக்கிறதே…காதல்..அதுவே அழையா விருந்தாளி போல் அவள் மனதுள் நுழைந்து சப்பணம் போட்டு உட்கார்ந்துகொண்டுவிடுகிறது..

இந்தப் பெண்கள் இருக்கிறார்களே.. காதல் வயப்படும் வரை தான்கொஞ்சம் குழம்புவார்கள், வெட்கம் சோகம் நாணம் எல்லாம் கொண்டு தன்னுணர்வுகளை பின்னுக்கு இழுத்து உயரத்தில் வைத்திருப்பார்கள்..காதல் வயப்பட்டால்..அம்புட்டு தான்.. மடைதிறந்த வெள்ளம் தான்..

இவளுக்கும் பொசுக்கென வெளிப்பட்டு ஹீரோவிடம் சொல்கிறாள்..

அரே பையா.. நான் உன்னைக் காதலிக்… நீ என்னைக் கண்டிப்பாகக் காதலித்துக் கல்யாணம் செய்யவேண்டும் புரிஞ்சுதா..

வாலிப ஹீரோவுக்கோ தயக்கம்.. அவனுடைய தந்தை சொல்லியனுப்பியஹ்டே அது தான்.. நீ எதுவும் என் நண்பனின் மனம் நோகச்செய்யக் கூடாது என்று

மறுத்து அவள் வீட்டைவிட்டே கிளம்பி விடலாம் என்று பார்த்தால் அவனால் முடியவில்லை..

சூழ் நிலையில் அவனும் அவளூம் ஒரு கல்யாண ஃபங்க்ஷனுக்குச் செல்லவேண்டி வருகிறது..

அங்கென்ன.. வரவேற்பில் பாடலும் பாடப்படுகிறது.. கல்லும் கசியும் வண்ணம் அந்தப் பெண் பாடுகிறாள்..

ஒரு தடவை சொல்வாயா
உன்னை எனக்குப் பிடிக்கும் என்று
ஒரு பார்வை பார்ப்பாயா
உன்னை எனக்கு பிடிக்கும் என்று
காதல் ஒரு புகையைப் போல
மறைத்து வைத்தால் தெரிந்துவிடும்
காதலில் தான் பூக்கள் மோதி
மலைகள் கூட உடைந்துவிடும்
உன்னை ஒளிக்காதே என்னை வதைக்காதே
என்றும் இதயத்தில் இலக்கணம் கிடையாதே

அவனும் பாடுகிறான்..

நதியில் தெரியும் நிலவின் உருவம்
நதிக்குச் சொந்தமில்லை
நினைப்பதெல்லாம் நடக்கும் வாழ்க்கை
யாருக்கும் அமைவதில்லை
உனக்கும் எனக்கும் விழுந்த முடிச்சு
தானாய் விழுந்ததில்லை
உலக உருண்டை உடையும் போதும்
காதல் உடைவதில்லை
மின்மினி தேசத்து சொந்தக்காரன்
விண்மீன் கேட்பது தவறாகும்
வரலாற்றில் வாழ்கின்ற காதல் எல்லாம்
வலியோடு போராடும் காதல் தானே

*

இதில்

மின்மினி தேசத்துச் சொந்தக்காரன்
விண்மீன் கேட்பது தவறாகும்

வரி அப்போதே நோட் பண்ணியிருந்தேன் சி.செ..வெகு அழகான வரிகள்..

பாடல் வரிகள் வைரமுத்து என நினைக்கிறேன்.. மிகச் சரியாக அந்தவாலிபனின்வேதனை வெளிப்பட்டிருக்கும்..
*
படம் வசீகரா.. விஜய் ஸ்னேகா..


https://youtu.be/eVF_KPRc2eo


*

chinnakkannan
18th September 2015, 09:19 PM
*

தர்ம சங்கடம் என்றால் என்ன..

*
ஒரு அருமையான பாடகர்..எல்லாவற்றிலும் எக்ஸ்பர்ட்.. உதாரணம் இவர் என்று சொல்லும் அளவுக்குப்பிரபலமான ஆள்..

எல்ல்லோருக்கும் ஒரு வடிகால் தேவைப்படும்..அதுவும் ஜீனியஸாக இருப்பவர்களுக்கு..

இவருக்கு அழகான குடும்பம் மனைவி மீது ப்ரியம், ஆனால் இசை ரசிகை அவள் மீதும் ப்ரியம்…. எவ்ளோ ஞானம் சங்கீதத்தைப் பற்றி என உள்ளுக்குள் வியப்பு..

ஒரு நாள் பொதேல் என அவளிடம் விழ, அவளும் கொஞ்சம் சில நாள் யோசித்து அவரை அங்கீகரிக்க…

இவருக்குக் குடும்பமும் வேண்டும், இவளும் வேண்டும்

இவர் வீட்டம்மாவிற்கு வீட்டில் வார்க்கும் தோசை, பாடகரின் உடல் நலன் அது மட்டுமே உலகம்..

அதில் இன்னொருத்தி வருகிறாள் எனத் தெரியும்போது முடிவெடுக்கிறாள்..

என்ன முடிவு.. பாடகர் பாடிக்கொண்டிருக்கிறார்..வருகிறேன் என்று சொன்ன மனம் கவர்ந்தவளைக் காணோம்..நாற்காலி காலியாயிருக்கிறது.. பாடவும் ஆரம்பித்தாகி விட்டது.. ஒரு வேலையாள் ஓடோடி வந்து காதில் ஏதோசொல்ல.. ஆரம்பித்த பாட்டை நிறுத்தவில்லை அவர்..

கண்களில் மட்டும் வெள்ளம்..

பாடுவது ஆனந்த நடனம் கேட்டசேதியோ வேறாயிற்றே.. தர்ம சங்கடம் என்பது இது தானோ..


https://youtu.be/j5BNN4m0X8Y?list=PL2EC83F9FF28FCF6B


கொஞ்சம் குட்டிப் பாட்டாக இருந்தாலும் வெகு டச்சிங்க்..

rajraj
18th September 2015, 10:27 PM
chinnakkaNNan: Here is a song about Siva's dance.

aananda natanam aadinaar.......

http://www.youtube.com/watch?v=s7Ps4y0_2zI

raagadevan
19th September 2015, 12:21 AM
ஆனந்த நடனம் continues...

https://www.youtube.com/watch?v=IvNJprJHzPk

chinnakkannan
19th September 2015, 12:25 AM
இசையும் கதையும்..

*

சின்னக் கண்ணன்.

*

கலர்ஸ்..

*

ஸினாப்ஸிஸ்..

*
1. நான்

2 அவள்

3. பிரச்னைகள் உருவாகும் சூழல்

4 கோபம் ஊடல்

5 கல்யாணத் தடை வருமோ

6 சிக்கல்கள் தீர்த்தது யாரோ

7 திருப்பங்களை வாழ்க்கை என மாற்றிவிடலாமா

8 வண்ணம் மாறுது நெஞ்சம் மாறுமா..

9 என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே

10 முடிவுரையா முன்னுரையா.. அல்லது அத்தியாயங்கள் தொடருமா யானறியேன்..இப்போதைக்கு இவ்வளவு தான்..

chinnakkannan
19th September 2015, 12:27 AM
*
இசையும் கதையும்..

*

சின்னக் கண்ணன்.

*

கலர்ஸ்..

*
1. நான்.
****************.
*

ஹாய்…..

ஏன் உங்கள் புருவங்கள் மேல் போகின்றன..

அது சரி நாலு நாள் தாடியும் கொஞ்சம் சிவந்த கண்களும் குமுறும் உள்ளமும் கொண்டு ஒரு நடுத்தர வயது உருவம் டபக்கென ஹாய் சொன்னால் ஆகத்தான் செய்யும்..

இதுவரை நான் எப்படி என்று என்னைப் படைத்தவனுக்கே தெரியாது.. என்னை எழுதுபவனைச் சொல்லவில்லை.. பிரம்மனைச் சொல்கிறேன்.

என் வாழ்க்கையில் அடித்த சுழல்களை, துன்பங்களை, சோகங்களை, அழுகைகளை எல்லாம் நான் பேசப்போவதில்லை..இப்போதும் துன்பத்தில் மனவருத்தத்தில் இருக்கிறேனே அதைப்பற்றியும். சொல்லப்போவதில்லை.. இன்பம் என்றால் எதிரொலிக்கும் இடத்தில் கத்தி கத்தி.. நான் ஹாப்பி எனச் சொல்லலாம்..மற்றவர்களும் கேட்கலாம்.. துயரங்கள் என்பது மனதுக்குள் புதைத்துக்கொள்வது தானே … மீனழுத கண்ணீர் போல..பழைய உவமையோ..

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால்…

கருவறையுள்ளே சிறு சிசுவாகத் தோற்றமுங்கொண்ட கணமென்ன
கவிதைச் சுவையாய் முதன்முறை மழலையில் அம்மாவென்ற கணமென்ன
சரசரவென்றே செல்லும் பாம்பைத் தள்ளியோடிய கணமென்ன
சலசலவென்றே சிரித்திடுமாற்றில் சில்லென மூழ்கிய கணமென்ன

பரபரவென்றே தெருவிலே ஓடிப் பாவையர் பார்த்த கணமென்ன
படபடவெனவே தாளினில் கிறுக்கி அவரிடம் கொடுத்த கணமென்ன
கரகரவெனவே காதிலே நரை அழையாமல் வந்த கணமென்ன
கலகலப்பெல்லாம் குறைந்தே ஈசன் நினைப்பெலாம் வந்த கணமென்ன…

ஹல்லோ..பயந்துட்டீங்களா..

இது என் இளமைப்பருவத்தில் நான் எழுதிப்பார்த்தது.. இப்போ எனக்குக் காதில் நரையெல்லாம் வரவில்லை.. ஐயாம் ஸ்டில் யங்க்..எஸ்..

இதுல பாருங்க.. நான் இப்படித் தான்.. கலகலப்பானவன்.. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதவன்..ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்ட் ஆசாமி..பாருங்கள் அறிமுகப் படுத்திக்கொள்ளாமலே பேச ஆரம்பித்துவிட்டேன்..

முதன் முறையாக சீரும் சிறப்புமாகத் தான் பிறந்தேன்..வைணவக் குடும்பம்..என் அப்பா தீவிர பெருமாள் பக்தர்.. பிறந்த இடம் மதுரை தான்..

என்னை வரப்ரசாதமாகவெல்லாம் கொஞ்சவில்லை..பத்தோடு ஒண்ணு பதினொண்ணு என்பது போல் மூன்றோடு ஒன்று நாலு.. ஏற்கெனவே இரண்டு அக்கா ஒரு அண்ணன்.. ஸோ கடைக்குட்டி..

இத்துடன் போதும் என நினைத்தாரோ என்னவோ புண்ணியாவாசனத்தின் (பெயர் சூட்டும் செரிமனி) போது அவர் அம்மாவிடம் (என்பாட்டி) சுந்தர ராஜ ஸ்ரீனிவாச நவனீத கிருஷ்ணன்னு பேர் வச்சுடும்மா எனச் சொல்ல பாட்டி அவரை முறைத்து மனதுக்குள் நற நறத்து தரையில் விரிந்து சிரித்துக்கொண்டிருந்த நெற்கோலத்தில் என் முழுப்பெயரையும் எழுதி என்னை தொப்பென்று போட்டு “இவளே ஒரு திக்கான காப்பி கொண்டா” எனக் கேட்டு வாங்கி குடித்துவிட்டு ஆசுவாசப் படுத்திக் கொண்டார்.. நான் வீறிட்டு அழுதேன்.. கொய்ங்க் என சர்க்கரையை எடுத்து வாயில் தீட்டிவிட்டு விட்டனர்..

அப்புறமென்ன செல்லமே செல்லம் சின்னக்குட்டி பட்டுக்குட்டி என வரும் சினிமாப்பாட்டை போல எல்லாரும் என்னைச் சீராட்டிப்பாராட்ட நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து கல்லூரியில் சேரும் காலகட்டமும் வந்தாயிற்று எனக்கு..

எஸ்.. நான் கட் கட் கட்டிளங்காளை.. நீஈஈஈளமான பெல்பாட்டம் பேண்ட், சட்டை அணிந்தால் முதல் இரண்டுபட்டன் கள் கழட்டி விட்டு இளவயது வாலிபர்கள் அலைந்து திரிந்த காலம் அது எனலாம்..அல்லது அவ்வண்ணம் சினிமாவில் காட்டிய காலம் எனலாம்..

மதுரையில் எனக்குப் பிடித்த பலப் பல விஷயங்களில் உணவுவகைகளில் முதலாவது சித்திரை வீதியில் இருக்கும் நாகப்பட்டணம் நெய்மிட்டாய்க்கடையில் கிடைக்கும் அல்வா.. இரண்டாவது இரண்டாவது..என்னிதயத்தில் இனிக்கும் அவளின் கனி இதழ்..

எஸ் நான் காதலில் விழுந்துவிட்டேனே மம்மி…

அவளது அப்பா ரசனைக்காரர்… எனில் அவளுக்கு ப் பெயரும் இட்டுவிட்டார் ரசனையுடன்.. மைவிழி..

ஓ அவ பேர் சொல்றப்பத் தான் என் பேரும் நான் சொல்லலைங்கறது என் நினைவுக்கு வருது..அதாவது ஷார்ட்டான என் பேரு..சுந்தரா.. நைஸ் இல்லியா..

ஹச்சோ நான் என்ன செய்வேன் நினைவு பறந்து அவள் அழகில் என் நெஞ்சம் மிதக்கிறதே.. அந்தப் பாட்டு பாடிக்கொள்ளட்டுமா…


https://www.youtube.com/watch?v=1ZNuuQsLdto&feature=youtu.be


கலையோ சிலையோ
இது பொன் மான் நிலையோ
பனியோ பூங்கிளியோ
நிலம் பார்க்க வந்த நிலவோ..

ஆடாத தேர் கோலம் தடை போட்டதோ
அறியாத உள்ளம் என்றும் மலராகுமோ
வடிவமோ கன்னிக்கோலம்
வாலிபம் பூமழை..

இப்படித் தான் அவ இருந்தாங்க..

அவளது அறிமுகம் வரும் திங்கள் சொல்கிறேன்..அதுவும் என்னவெனில் நான் முழி முழி என முழித்துக்கொண்டிருந்த தருணத்தில் சிறகுகள் இல்லாத சின்னத் தேவதையாக வந்து எனக்கவள் அருளிய கதை..

அப்புறம், வரட்டா...

(தொடரும் – வாரம் இரு முறை)

chinnakkannan
19th September 2015, 12:55 AM
ராஜ்ராஜ்சார்..நடனம் ஆடினார் சுதா ரகு நாதன் குரல் பாடல் வெகு அழகு ரசித்துக் கேட்டேன் ..மிக்க நன்றி

ராகதேவன்.. ஆனந்த நடனம் தொடர்ந்தமைக்கு நன்றி..மோகன்லால் மோனிஷா.. இப்போது தான் பார்க்கிறேன் கேட்கிறேன்..மிக்க நன்றி..வெகு அழகிய பாடல்ங்க..மோனிஷா தானே.. ஆண்டவன் சீக்கிரம் அவரை எடுத்திருக்க வேண்டாம்..ம்ம்..

சந்தோஷமான கர்னாடிக் நடனப் பாடல்கள் என்று பார்த்தால் எனக்கு இப்போது நினைவுக்கு வருவது சப்தபதி தான்..

நெமிலிகி நெர்ப்பின நடதளிரே... சபிதா பொம்மிடிப்பட்டி.. நடுவில் குழலோசை ஊடுருவ நின்று அகங்காரம் அழகு கொண்ட மயிலாய் நடைபயிலும் அழகு..


https://youtu.be/hb0j7N7a6fA

eehaiupehazij
19th September 2015, 01:22 AM
சி க
புது பாதையில் புது பார்வையில் திரியின் புதுமைப் பயணம் ..ராஜ்ராஜ் சார்/ராகதேவ் சாருடன்....ஜமாய்த்துக் கொண்டிருங்கள்!!
அடுத்த மூன்று வாரங்கள் எனக்கு கிரிடிகல் டைம் ! புது அசைன்மெண்ட் கால் பதித்ததும் வந்து கலந்து கொள்கிறேன்!
செந்தில்

rajraj
19th September 2015, 08:01 AM
Looks like people are taking a break with senthil. I will post some movie songs in Dwijavanthi and also a couple of carnatic compositions.

Here is one from Mr.Butler, a MalayaLam remake of a Tamil movie.

virahini radhe.....

http://www.youtube.com/watch?v=BwzydipTif4

vasudevan31355
19th September 2015, 09:56 AM
'சுமதி என் சுந்தரி' படத்தின் 'பொட்டு வைத்த முகமோ' பாடல் பதிவைப் படித்துப் பாராட்டிய திரு. வினோத் சார், சின்னக்கண்ணன் சார், கோபால் சார், குமார் சார், செந்தில் சார், ரவி சார், சுந்தரபாண்டியன் சார், அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Russellmai
19th September 2015, 11:48 AM
எட்டாயிரம் பதிவுகளைக் கடந்தமைக்கு வாசு அவர்களுக்கு
எனது பாராட்டுக்கள்.
அன்புடன் கோபு.

chinnakkannan
19th September 2015, 11:53 AM
சி.செ..மிக்க நன்றி தங்கள் பொன்னான ஊக்கத்திற்கு.. :) கவலைப்படாதீர்கள்..அவ்வப்போது பார்வையிட்டுக் கொண்டு இருங்கள் சமயம் வாய்க்கும் போது.... வேலை முடித்து வாருங்கள்..

*


என்னமோ போங்க - 26

**

படத்தின் பெயர் பிஞ்சு மனமாம்..வேறு டீடெய்ல்கள் இல்லை கே.ஜே.ஜேசுதாஸ் வாணிஜெயராம்..
அட வித்தியாசமாக இருக்கே எனக்கேட்கையில்

முத்துமுத்துப்புன்னகையைக் கண்டேன்
முத்தமிழில் முத்தமிட வந்தேன்.. என்றவரி கேட்டு கொஞ்சம் மண்டை காய்ந்தேன்..

இயற்றமிழ், இசைத்தமிழ் நாடகத்தமிழில் முத்தமா

இயற்றமிழ்…

அன்பே
சில்லென்ற காற்று உணர்வுகளைச் சூடாக்குகிறது..குளிர்விக்க கனியிதழ் கொடு எனக் கவிதை படிக்கலாம்

இசைத்தமிழில் பாட்டுப் பாடலாம்..முத்தமோ மோகமோ..

நாடகத்தமிழில் எப்படி முத்தம் கொடுப்பது..

“ஹா.. இளங்குருத்தான வாழைத்தண்டில் செய்யப்பட்ட சிற்பம் போன்ற காரிகையே.. அதில் பூத்திருக்கும் ரோஜாபோன்ற மென்னிதழில் இந்தக் காரிகன்.. ஸாரி காதலன் இனிமையாய் முத்தம் தரட்டுமா” என்று வசனம் பேசி முத் கொடுக் வேண்டுமா என்ன என யோசிக்க யோசிக்க உதடு தான் உலர்ந்து போயிற்று..!

சரி என மறுபடி கேட்கையில்…

முத்துமுத்துப்புன்னகையைக் கண்டேன்
என் முத்தமிழை முத்தமிட வந்தேன்..

என்கிறார் ஜேசுதாஸ்..தப்பிச்சேன்.. இயல் இசை நாடகம் எல்லாம் கலந்தவராம் ஜெய்சித்ரா..(யாருக்காவது தெரியுமாங்க..இன்னிவரை!) என்னமோ போங்க…:)

வாங்க பாட் கேக்கலாம்..

வானம் பொழிந்தது பூமி நனைந்தது..

முத்துமுத்துப்புன்னகையைக் கண்டேன்
என் முத்தமிழை முத்தமிட வந்தேன்..

*


https://www.youtube.com/watch?v=3DVxTd1jOGg&feature=youtu.be&list=PL9GJnO4yLNq0oj-0f1yYDjuJSpFxQcNPl

பின்ன வாரேன்..

vasudevan31355
19th September 2015, 12:04 PM
//ஆமாம் ..ஐந்தாவது பாகத்தின் இரண்டாவது கேள்வி.. இந்த நடிகையாரு? விஜயசாந்தியின் சாயலில் இருக்கிறார். வி.சா.வின் அம்மாவா.//

சின்னா! அது கன்னட மஞ்சுளா. அடிக்கடி உங்களைக் குழப்புபவர். எடுப்பார் கைப்பிள்ளை படத்தில் பொன்னும் மயங்கும் பாடலுக்கு ஜெய், நிர்மலாவை பொறாமையாய் பார்க்கும் நடிகை யார் என்று ஒவ்வொரு பாகத்திலும் கேட்பீர்களே!:) அவர்தான். புதுவெள்ளம் 'துளி துளி' மஞ்சுளா.

chinnakkannan
19th September 2015, 12:15 PM
வாசு.. ஒருவேளை அவரை ஒவ்வொரு பாகத்திலும் பார்ப்பதால் புதிதாகத் தெரிகிறார் போல :) ( ஹை..சின்னாக்கு சிலேடைல்லாம் வருதே :) )

vasudevan31355
19th September 2015, 12:16 PM
சின்னா!

ஒரு தடவை சொல்வாயா
உன்னை எனக்குப் பிடிக்கும் என்று

பாடல் வரிகளுக்கு நன்றி! எனக்கும் ரொம்பப் பிடிக்கும். ஆனால் விஜய் மேக்-அப் கோரம்.

//இவர் வீட்டம்மாவிற்கு வீட்டில் வார்க்கும் தோசை, பாடகரின் உடல் நலன் அது மட்டுமே உலகம்..//

'லதா மங்கேஷ்கரா பொடி அரைச்சி தருவா?' சுலக்ஷ்னா முனகல்.

உங்கள் தேவதை இசைக் கதை பாட்டு நன்னாயிட்டு. கலையோ சிலையோ கொஞ்சம் அபூர்வ பாட்டுத்தான்.

தெலுங்குப் பாட்டு பார்க்கலை. ஆனா ஆடுபவர் அழகாகத் தெரிகிறார். பார்த்துட்டு சொல்றேனே.

உங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி. எல்லோருக்கும்தான். அனேகமா நம் கிருஷ்ணா வந்தாலும் வரலாம். இப்பவே வரவேத்துடுவோம். வாங்க கிருஷ்ணா வாங்க.

vasudevan31355
19th September 2015, 12:18 PM
வாசு.. ஒருவேளை அவரை ஒவ்வொரு பாகத்திலும் பார்ப்பதால் புதிதாகத் தெரிகிறார் போல :) ( ஹை..சின்னாக்கு சிலேடைல்லாம் வருதே :) )

அதுக்குன்னு விஜயசாந்தி அம்மா போலன்னா எழுதி நெஞ்சுத் துடிப்பை எகிற வைக்கிறது?

ஆமா! கண் பவர் எவ்ளோ?:)

vasudevan31355
19th September 2015, 12:24 PM
சின்னா!

என்னவோ போங்க- வுல பிஞ்சு மனம் ரேர் சாங் போட்டு மது அண்ணா இல்லாத குறையை போக்கிட்டீரே! சபாஷ் சிங்கக்குட்டி. இன்னொரு சபாஷ் புலிக்குட்டி வேணும்னா இன்னும் ஒரு 5 மணி நேரம் செர்ச் பண்ணினாத்தான் கிடைக்கும். சொல்லிபுட்டேன்.:)

adiram
19th September 2015, 12:31 PM
டியர் வாசு சார்,

எவரும் எட்டாத தரத்தில் எட்டாயிரம் பதிவுகளைத்தந்த உங்களுக்கு என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.

அதில் மேலும் ஒரு இன்ப அதிர்ச்சியாக சுமதி என் சுந்தரி பாடலைப் பதித்து எட்டாயிரம் அடிகள் உயரத்தில் தூக்கி நிறுத்தி விட்டீர்கள்.

எப்படியாவது பதிவுகள் இட்டு எண்ணிக்கையை கூட்ட வேண்டும் என்பது ஒருவகை. எத்தனை பதிவுகள் இட்டோம் என்பதைவிட, எப்படிப்பட்ட பதிவுகள் இட்டோம் என்பது இரண்டாவது வகை இந்த இரண்டாவது வகையில் கூட அதிக பதிவுகள் இட்டு சாதனை நிகழ்த்த முடியும் என்பதற்கு நீங்களே சான்று.

ஒவ்வொரு பதிவுக்கும்தான் எப்படிப்பட்ட உழைப்பு. அப்பப்பா மலைக்க வைக்கிறது. எந்த ஒரு சீரீஸை எடுத்துக்கொண்டாலும் அதை சிறப்பாக கொண்டுவர வேண்டும் என்பதில் உங்கள் மெனக்கெடல் அற்புதம். பதிவர் என்றால் இப்படியிருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் நீங்கள். உங்கள் துளிவிஷம் பதிவை 'பாட்ஷா' பார்த்திருந்தால் "இந்த ஒரு பதிவு நூறு பதிவு மாதிரி ஹா.ஹா.ஹா." என்று பாராட்டியிருப்பார்.

எட்டாயிரத்தில்தான் எத்தனை எத்தனை அதிசயப்பதிவுகள். மக்களே மறந்துபோன பழைய படங்கள், பழைய பாடல்கள், பழைய (வெளிச்சத்துக்கு வராத) நடிகர் நடிகைகள், பாடகர் பாடகிகள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள். நினைத்தால் நிச்சயம் தலைசுற்றும். அத்தனை உழைப்பும் இந்த ஒல்லியான உடம்புக்குள்ளிருந்து.

பாலா நடிகர்திலகத்துக்காக பாடிய பாடல்களை ஒதுக்கி வைத்திருந்தபோதே ஒரு எண்ணம், ஏதோ ஒரு காரணத்துக்காக என்று நினைத்தேன். ஆனால் எட்டாயிரம் என்ற லேண்ட் மார்க்குக்காக என்று நினைக்கவில்லை. ஒளித்துவைத்து சமயம் பார்த்து பிரம்மாண்டமாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

பாடலின் ஒவ்வொரு பிரேமையும் நிறுத்தி நிறுத்தி விவரித்துள்ள பாங்கு உங்கள் தனித்திறமை. அந்த மூன்றாவது சரணத்தை இரண்டாம் முறை பாடிக்கொண்டு நடக்கும் அந்த அசால்ட் நடை எனக்கு எப்போதும் பிடித்தமான ஒன்று.

பதிவு என்றால் தேடிப்பிடித்து ஏதாவது குறைசொல்ல வேண்டுமல்லவா?. அதுதானே மனித இயல்பு. அந்த நோக்கில் தேடியதில் என் காதலன் சி.வி.ராஜேந்திரனையும், என் மாமா ஒளிப்பதிவாளர் தம்புவையும் குறிப்பிடவில்லை என்பதைத்தவிர வேறு குறைகளையே காணோம்.

'இரண்டில் ஒன்று' பாடலை ஒன்பதாயிரம் என்ற லேண்ட்மார்க்குக்காக ஒளித்து வைக்காமல் உடனே தாருங்கள்.

சலியாத உழைப்புக்கு பாராட்டுக்கள்,
எங்களை பரவசத்தில் ஆழ்த்தியதற்கு நன்றிகள்,
மேலும் மேலும் சாதிக்க வாழ்த்துக்கள்.

வாசுவின் பத்தாயிரமாவது பதிவுக்கு எப்படி வாழ்த்துச் சொல்லலாம் என்ற சிந்தனையுடன்.... உங்கள் ஆதி.

gkrishna
19th September 2015, 12:41 PM
விநாயக சதுர்த்தி அன்று மது அண்ணாவின் திருக்கரத்தால் போடப்பட்ட பிள்ளையார் சுழி பாகம் 5 வெற்றி நடை போட எல்லாம் வல்ல அந்த கணேச பெம்மானையும்,ராமச்சந்திர மகாபிரபுவையும் மற்ற எல்லா தேவ தேவதைகளின் அருள் வேண்டி வாழ்த்தும் அன்பு நண்பன்

கிருஷ்ணா
http://s1.dmcdn.net/AFxDf/1280x720-LwJ.jpghttp://dbsjeyaraj.com/dbsj/wp-content/uploads/2014/10/Thanipiravi.jpghttp://s1.dmcdn.net/Cj6YM/1280x720-QOM.jpg

JamesFague
19th September 2015, 12:42 PM
a writeup in the Tamil Hindu on the occasion of 50 years of Pazhani

பழனி (1965)

விவசாயம் அழிந்து கொண்டிருக்கும் காலம் இது. விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாறிக்கொண்டிருக்கின்றன. கார்ப்பரேட் நிறுவனங்கள் தொழிலகங்களை அமைக்க விவசாய நிலங்களையே விழுங்குகின்றன. இந்த நிகழ்கால அவலத்தைச் சித்தரிக்கும் திரைப்படங்கள் போதுமான அளவுக்கு சமீபகாலத் தமிழ் சினிமாவில் வெளிவராதது பெரும் சோகம்.

விவசாயியாக நடித்தால் எந்த சாகசங்களையும் செய்ய முடியாது என இன்றைய நாயகர்கள் நினைக்கலாம். ஆனால், எம்.ஜி.ஆரும் சிவாஜியும் சூப்பர் ஸ்டார்களாக இருந்த காலத்தில் பாமர விவசாயிகளாக நடிக்கத் தயங்கவில்லை. சிவாஜி எளிய விவசாயியாக, கள்ளம் கபடமற்ற அப்பாவியாக நடித்த பல படங்களில் அவருக்கு மகுடமாக அமைந்த படம் 1965-ல் வெளியான ‘பழனி’.

தியாக தீபம்

கிராமத்து விவசாயி சேற்றில் கால் வைத்தால்தான் நகரத்தில் வாழ்பவன் சோற்றில் கை வைக்க முடியும் என்று வழக்கமாகச் சொல்வதுண்டு. அப்படிப்பட்ட விவசாயியும் விவசாயம் சார்ந்த கிராம வாழ்க்கையும் காப்பாற்றப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியது பழனி படத்தின் கதை.

மனைவியை இழந்த கிராமத்து விவசாயி பழனி (சிவாஜி). இவருக்கு வேலு ( ராம்), ராஜூ (எஸ்.எஸ். ரேஜேந்திரன்), முத்து (முத்துராமன்) ஆகிய மூன்று தம்பிகள். இவர்களுடன் நிராதரவான அவர்களது அக்காள் மகள் காவேரியும் (தேவிகா) வசிக்கிறார். கிராமத்துப் பண்ணையார் சொக்கலிங்கத்தின் ( பாலையா) நிலத்தில் குத்தகை விவசாயம் செய்து, ஒற்றுமைக்குப் பேர்போன அண்ணன் தம்பிகளாக வசித்துவருகிறார்கள். இதே கிராமத்தைச் சேர்ந்த எமிலி (புஷ்பலதா) அருகிலுள்ள மதுரை நகருக்கு மிதிவண்டியில் சென்று கல்லூரியில் படித்துவருகிறாள். பழனியின் குடும்பத்தினருடன் நட்புடன் பழகிவருகிறாள். பழனியின் மூத்த தம்பியான வேலுவின் மனைவி நாகம்மா கூட்டுக் குடும்பத்தில் பிடிப்பில்லாமல் இருக்கிறாள். சமயம் பார்த்து சண்டையிட்டுத் தன் கணவனைத் தனியே பிரித்துச் சென்று தனிக்குடித்தனம் நடத்துகிறாள். பாம்பு கடித்து வேலு இறந்துவிட நாகம்மா கைம்பெண்ணாகிறாள்.

ஏழை விவசாயத் தொழிலாளர்களை வஞ்சிப்பதையே வாழ்க்கையாகக் கொண்ட பண்ணையார், எமிலியைத் தனது வீட்டுக்கு அழைத்துவந்து தவறாக நடந்துகொள்ள முயற்சிக்கிறார். இதனால் தனது தாயாருடன் கிராமத்தை விட்டுப் புறப்பட்டு சென்னை நகருக்குச் சென்றுவிடுகிறாள் எமிலி.

இதற்கிடையில் வினோபா பாவேவின் பூமி தான இயக்கம் பழனியின் கிராமத்துக்கு வருகிறது. பழனியின் விவசாய ஈடுபாட்டைக் கண்டு அவருக்கு ஐந்து ஏக்கர் நிலத்தைப் பண்ணையார் சொக்கலிங்கத்திடமிருந்து தானமாகப் பெற்றுத்தருகிறது. ஆனால், அது கடும் பாறை நிலம். அதைச் சீர்திருத்தி விளைநிலமாக மாற்ற 2,000 ரூபாயை பழனிக்குக் கடனாகத் தருகிறார் பண்ணையார். ஆனால், பழனி ரூ. 12,000 கடன் வாங்கியதாக ஊரை நம்ப வைத்து நிலத்தையும் பிடுங்கிக்கொள்கிறார். அண்ணனின் ஏமாளித்தனத்தைக் கண்டு குமுறும் தம்பிகள் ராஜு, முத்து இருவரும் அவரைப் பிரிந்து சென்னைக்குச் செல்கிறார்கள். அங்கே எமிலி அவர்களுக்கு வேலைக்கு ஏற்பாடு செய்கிறாள். ஆனால், நகர வாழ்க்கை ராஜூவைச் சிறையில் தள்ளுகிறது. தம்பிகளைக் காண சென்னை வரும் பழனி ராஜூவின் நிலையை எண்ணித் துடித்துப்போகிறார்.

கிராமத்திலோ பண்ணையாரின் கொடுமைகள் உச்சத்தை எட்டுகின்றன. தன் இச்சைக்கு இணங்காத நாகம்மாள் மீது அவர் இழிபெயர் சுமத்த, சாதுவாக இருந்த பழனி கொதித்தெழுகிறார். சிறையிலிருந்து விடுதலையாகி வரும் ராஜூ நடந்ததை அறிந்து சொக்கலிங்கத்தைத் தாக்குவதற்காகத் துரத்த, அவருடன் மொத்த கிராமமும் சேர்ந்துகொள்கிறது. உயிருக்கு பயந்து ஊர்க்கோயிலில் ஓடி ஒளியும் சொக்கலிங்கத்தை பழனி காப்பாற்றுகிறார். பழனியின் நல்ல குணத்தால் வெட்கித் தலைகுனியும் பண்ணையார் தான் செய்த குற்றங்களை ஏற்றுக்கொண்டு போலீஸில் சரணடைகிறார்.

இறுதியில் பண்ணையாரின் கைவசம் இருந்த பெரும் பகுதி நிலம் அவருடையது அல்ல என்பது தெரியவர, நிலத்தைக் கூட்டுறவுச் சங்கம் எடுத்துக்கொண்டு விவசாயிகளுக்குப் பிரித்துத் தருகிறது. மீண்டும் விவசாயம் செழிக்கிறது. அறுவடையின் முழுப் பலனும் உழுத விவசாயிக்கே கிடைக்கின்றன. பழனியும் சகோதரர்களும் பாசத்துடனும் ஒற்றுமையுடனும் வசிக்கிறார்கள்.

ஒரு பொங்கல் இரு திலகங்கள்

1965-ல் ஜனவரி மாதம் பொங்கல் தினத்தில் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியானது ‘எங்க வீட்டுப் பிள்ளை’. அதே நாளில் சிவாஜி நடிப்பில் வெளியானது ‘பழனி’. இரண்டு படங்களுமே வெள்ளிவிழா கொண்டாடிய படங்கள். ஏ. பீம்சிங் இயக்கம், சிவாஜி, ஜெமினி, சாவித்திரி, சரோஜாதேவி நடிப்பு, கண்ணதாசனின் பாடல்கள், விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை என்கிற வலுவான கூட்டணியில் வெளியான பல படங்கள் வெற்றிபெற்றன.

ஆனால், பழனி படத்தில் சிவாஜியுடன் எஸ்.எஸ். ராஜேந்திரன், ஆர். முத்துராமன், ஸ்ரீ ராம், தேவிகா, புஷ்பலதா ஆகியோர் இணைந்தனர். வில்லன்களாக டி.எஸ். பாலைய்யாவும் எம்.ஆர். ராதாவும் நடித்தனர். வில்லன்களோடு வளையவந்தாலும் நியாயத்தின் பக்கம் நிற்கும் நகைச்சுவையாளராக நாகேஷ் நடித்திருந்தார். சின்னக் கணக்குப்பிள்ளை சந்தானமாக நாகேஷ் செய்யும் கதா கலாட்சேபம் படத்தில் சிரிப்பு மழையைப் பொழிந்து, சிந்திக்கவும் வைத்தது.

விவசாயத் தொழிலின் மேன்மையையும் சகோதர பாசத்தின் உன்னதத்தையும் உயர்வாகப் பேசிய இந்தப் படத்தில் தமிழ்க் கலாச்சாரத்தின் முக்கிய அம்சமாக விளங்கிய கூட்டுக் குடும்ப முறையையும் முன்னிறுத்தியது பழனி படத்தின் கதையை எழுதியவர் ஜி.வி. ஐயர். படத்துக்குத் திரைக்கதை எழுதி, இயக்கியவர் ‘குடும்பப் படங்களின் பிதாமகன்’ பீம்சிங். தமிழ் கிராமியத்தைக் கண்முன் நிறுத்திய வசனங்களை எழுதியவர் எம்.எஸ். சோமசுந்தரம்.

விருதும் தாக்கமும்

படத்தில் நடித்த அனைவருமே குறைவான நாடகத்தனத்துடன் நடித்திருந்த படம் இது. தனது குடும்பத்தின் நலனுக்காகத் தியாக தீபமாக திருமணம் செய்துகொள்ளாமல் வாழும் அண்ணன் பழனியாக சிவாஜியின் நடிப்பும், தீமையை எதிர்க்கும் அவரது தம்பி ராஜூவாக எஸ்.எஸ். ராஜேந்திரனின் நடிப்பும் ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் பெரிதும் பாரட்டப்பட்டன.

சிறந்த படத்துக்கான நற்சான்றிதழை (தேசிய விருது) பழனி படம் வென்றது. படிக்காதவர்கள் நகரத்துக்கு வந்தால் பிழைக்க முடியாது என்ற எண்ணத்தை எடுத்துக் காட்டியது பிற்போக்கான கருத்தென்று விமர்சனங்களில் சுட்டிக் காட்டப்பட்டது. அதேபோல் கிராமத்து வாழ்க்கையைப் பற்றிய சித்தரிப்புகளில் வில்லன்கள் பெண் இச்சையோடும், ஏமாற்றுவதை மட்டுமே முழுநேரத் தொழிலாகக் கொண்டிருப்பார்கள் என்பதும் வழக்கமான சித்தரிப்பாக இருந்ததை மறுக்க முடியாது.

மறக்க முடியாத பாடல்கள்

இந்தப் படத்தில் கிராமத்து வாழ்க்கையைப் பாடல் காட்சிகள் வழியே சித்தரித்த விதம் இயக்குநர் பீம்சிங்குக்கே உரிய தனித்துவம். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் ‘ஆறோடும் மண்ணில் இன்றும் நீரோடும்’ பாடல் இன்றும் ஏர் உழும் காட்சியையும் நடவு நடும் காட்சியையும் நம் கண்முன் கொண்டுவரும். ஹரி காம்போதி ராகத்தில் சாயலில் அமைந்த இந்தத் தெம்மாங்குப் பாடல் மட்டுமல்ல, படத்தின் அத்தனை பாடல்களும் மறக்க முடியாத கதைப் பாடல்களாக அமைந்தன. இன்றைய சூழ்நிலையில் மறுஆக்கம் செய்யப்பட வேண்டிய படம் பழனி என்பதில் ஐயமில்லை.

Subramaniam Ramajayam
19th September 2015, 09:31 PM
the HINDU write-up PAZANI ENGAVEETUPILLAI 1965 JAN 14 RELESES EV PLLAI SIVER JUBLIE PAZANI TAMIL VERSION OF UPKKAR REALISTIC MOVIE BUT A UTTAR FLOP sorry to mention that is the fate of tamilrasanai prevailed thosedays.

rajraj
20th September 2015, 12:21 AM
From Madhuraiyai Meetta Sundhara PaNdiyan (1978)

amudha thamizhil ezhudhum kavidhai......

http://www.youtube.com/watch?v=syosMMrWl7M

vasudevan31355
20th September 2015, 11:06 AM
ஆதிராம் சார்!

தங்கள் மனமுவந்த பாராட்டுதல்களுக்கு மிக்க நன்றி! பாலா பதிவுகளில் தலைவர் பாடல் ஏன் தாமதமானது என்று அழகாகக் கண்டு பிடித்து விட்டீர்களே!

//பதிவு என்றால் தேடிப்பிடித்து ஏதாவது குறைசொல்ல வேண்டுமல்லவா?. அதுதானே மனித இயல்பு. அந்த நோக்கில் தேடியதில் என் காதலன் சி.வி.ராஜேந்திரனையும், என் மாமா ஒளிப்பதிவாளர் தம்புவையும் குறிப்பிடவில்லை என்பதைத்தவிர வேறு குறைகளையே காணோம்.//

கண்டிப்பாக சார். நிச்சயம் அது ஒரு குறைதான். பாலா தொடரில் ஒளிப்பதிவாளர்களையும், இயக்குனர்களையும், இதர டெக்னீஷியன்களையும் பெரும்பாலும் குறிப்பிடாமல் இருந்தது கிடையாது. இதில் குறிப்பிடவில்லை. காரணம் இரண்டு.

ஒன்று

நம் ஸ்டைல் சக்கரவர்த்தியின் அங்க அசைவுகளிலேயே மைண்ட் செட் ஆகி இருந்தது. வேறு எதையுமே நினைக்கத் தோன்றவில்லை. எத்தனை முறை பார்த்தாலும் அவரது ஸ்டைல் மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தது.

இரண்டு

நம் அனைவருக்கும் 'சுமதி என் சுந்தரி' பற்றி புள்ளி விவரமாகத் தெரியும். உங்களுக்கு மட்டுமல்ல... நம் ஒட்டுமொத்த நடிகர் திலகம் ரசிகர்களின் 'டார்லிங்' சி.வி.ஆர் தானே! ஒளிப்பதிவு இயக்குனர் தம்பு என்பதும் அனைவரும் அறிந்ததே.


இப்போது வட்டியும் முதலுமாகச் சேர்த்து டைட்டில் கார்டையே போட்டால் போயிற்று மூலவரையும் சேர்த்து.

அப்புறம் இன்னொரு சின்ன உரிமை வருத்தம். திடீரென்று அடிக்கடி சொல்லாமல் கொள்ளாமல் காணமல் போய் விடுகிறீர்கள். அலுவலகப் பணி அதிகமோ? பதிவுகளுக்கு தோதான துணைப் பதிவுகளையும் இணைப் பதிவுகளையும் சப்போர்ட்டாக அளிக்க உங்களை விட்டால் வேறு யார்? அதனால் நிறைய உங்களையும், நீங்கள் அளிக்கும் அற்புதமான விஷயங்களையும் மிஸ் செய்கிறோம். பாகம் 4 இல் நிறைய பதிவுகளுக்கு உங்கள் பின்னூட்டப் பதிவுகள் இல்லாமல் முழுமை பெறவில்லை. நல்லது கெட்டது என்று நடுநிலைமையுடன் எல்லாவற்றையும் சுட்டிக் காட்டுவதில் வல்லவர் தாங்கள். அதனால் திரியில் தொடர்ந்து பங்களிக்க வேண்டுகிறேன்.

அதே போல 'உங்கள் ஆதி'யை அதே உரிமையுடன் ஆனந்தமாய் அனுபவித்தேன். நன்றி!

http://i59.tinypic.com/2mrbkw1.jpg

http://i61.tinypic.com/11vpqfp.jpg

http://i59.tinypic.com/2cd7ehw.jpg

rajeshkrv
20th September 2015, 11:12 AM
மனதைக்கவரும் மதுர கானம் பாகம் 5 தொடங்கிய மதுண்ணாவிற்கு வாழ்த்துக்கள்

rajeshkrv
20th September 2015, 11:14 AM
அட மீண்டும் கிருஷ்ண விஜயம் ஆம் நமது கிருஷ்ணா ஜி மீண்டுவம் வந்திருக்கிறாரே

யாரங்கே திருஷ்டி சுற்றி போடுங்கள் ஐயா

vasudevan31355
20th September 2015, 11:54 AM
வணக்கம். வாங்கஜி. இப்பதான் வழி தெரிஞ்சுதா?

யாரங்கே முதலில் ஜி வந்ததற்கு திருஷ்டி சுற்றி போடுங்கள் ஐயா.:) அப்புறம் கிருஷ்ணாவுக்கு போடலாம். புலம்ப உட்டுட்டேளே! நியாயமா?

chinnakkannan
20th September 2015, 08:55 PM
அன்பின் கிருஷ்ணா சார்.. வருக வருக..

நேற்றே வரவேற்று இரு பாடல்கள், ப்ளஸ் சில முதல் ராத்திரிப்பாடல்கள் + சில விஷயங்கள் என எழுதியிருந்தேன்..பின் வேண்டாம் என்று
டெலீட்டும் செய்துவிட்டேன்..அதில் உங்கள் வரவேற்பும் இருந்தது..

எனில் தாமதமாக ச் சொன்னாலும் - வருக வருக தங்கள் வரவு நல்வரவாகுக

அன்புடன்

சி.க

**

Eid holdiays புதன் வியாழன் வெள்ளி சனி என இந்த தடவை நாலு நாள் தான்..வெள்ளி சனி வார இறுதி என்றாலும் இரண்டே இரண்டு நாள் விடுமுறையை பாவம் ஓமானியர்களால் தாள இயலவில்லை.. ம்ம்.. ஒர்ரே சோகம் ஆக இருக்கிறார்கள்..

எனில் வியாழனும் ஒரு எபிசோட் , சனிக்கிழமையும் ஒரு எபிசோட் முடிந்தால் எழுதலாம் என நினைக்கிறேன்..

இப்போது இரண்டாவதுபகுதி..

**


இசையும் கதையும்..

*

சின்னக் கண்ணன்.

*

கலர்ஸ்..

*
2. அவள்
****************.

ஹாய்…

சந்திப்பு வரும் வழி கண்டு
மனிதர் சந்திக்கும் இடங்களும் உண்டு
சிலர் சொந்தங்களாவதும் உண்டு
சிலர் தொடர்கதையாவதும் உண்டு
இறைவனும் மனிதனும் பயணம் செய்தாலே
எவரை எவர் வெல்லுவாரோ..

என்ற பாடல் வரி தான் எனக்கு நினைவுக்கு வந்தது அன்று..

ஏனாம்..

சுந்தரா எனப்படும் சுந்தர்ராஜன் என்ற கட்டுடல் பெற்ற கல்லூரியில் மூன்றாம் வருடம் படிக்கும் மாணவனாகிய நான் கொஞ்சம் அலைந்து திரிந்துகொண்டிருந்தேன்..

எதற்காக..

கல்யாண வேலைகள்

கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க.என்னோடகல்யாண வேலையெல்லாம் இல்லை.. என் இரண்டாவது சகோதரியின் கல்யாணம்..

மூத்த சகோதரிக்கு நான் ப்ளஸ்டூ படிக்கும் போதே ஆகிவிட்டது..இரண்டாவது சகோதரிக்கு ஒரு மாப்பிள்ளை துபாயிலிருந்து பறந்து வந்து அவரைப்பார்த்து உடன் இருவாரங்களிலேயே கல்யாணம் செய்து கொள்கிறேன் எனச் சொல்ல அதற்காகக் கல்யாண மண்டபம் முதல் எல்லா வேலைகளையும் குறுகிய காலத்தில் செய்து முடிக்க வேண்டிய கட்டாயம்..

நல்ல வேளை.. மதுரையில் தானப்ப முதலி தெருவில் இருந்த சற்றே பெரிதான கல்யாணமண்டபம் சுலபத்தில் கிடைத்துவிட்டது.. மற்ற வேலைகளை அப்பா அவர் தம்பிக்கும், என் அண்ணனுக்கும், சில்லறை வேலைகளை எனக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டார்..

அண்ணன் வடக்குவெளிவீதி க் கனராபாங்க்கில் காஷியர் எனில் ப்ராப்ளம் இல்லை..பேங்க் வேலை முடித்து அப்பாவின் சின்ன பிஸினஸ் எனப் பொழுது போய்க்கொண்டிருந்தது அவருக்கு.. எனில் அவரது இன்ஃப்ளூயன்ஸில் கல்யாணச்சமையல் காரர் கூட மாட ஆட்கள் என தேர்வு செய்து சித்தப்பாவிடம் வெரிஃபிகேஷன் செய்து ஃபிக்ஸ்ம் பண்ணிவிட்டார்..

இந்தக்காலம் போல அந்தக்காலத்தில் காண்ட்ராக்ட்ஸ் எல்லாம் அவ்வளவாகப் பிரபலமடையவில்லை.. எனில் எல்லாமே கல்யாண வீட்டுக்காரர்கள் தான் செய்யவேண்டும்..

சமையற்காரருக்கு சமையலுக்கான காய்கறிகள் இன்ன பிற விஷயங்களை வாங்கித்தரவேண்டிய மாபெரும் பொறுப்பு இந்தச்சின்னக் குருவி தலையில்..

லிஸ்ட் போட்டுகீழமாசி வீதியிலிருந்த ஒரு தெரிந்த கடையில் மளிகை சாமான்களுக்கு ஏற்பாடுசெய்தாயிற்று. காய்கறிகளும் மெய்ன் மார்க்கெட் எனச் சொல்லப்படும் இடத்தில் சென்று ஒரு கடையில் லிஸ்ட் கொடுத்தும் விட்டாயிற்று.. கல்யாணத்தன்று முதல் தினமான அவை வந்து இறங்கிவிட்டன..

அந்தக்காலத்தில் கல்யாணத்தில் தாலி மூன்றாம் பட்சமே.. முதலாவது உபசரிப்பு..அதற்கான உறவுக்கார ஆண்கள் பெண்கள் சித்தப்பாவின் பொறுப்பு..

இரண்டாவது விஷயம் என்ன

காப்பி.. டிஃபன்..

டிஃபன் சமையல்காரர் பார்த்துக் கொள்வார்..ஆனால் காஃபிக்குமெய்ன் இன்க்ரீடியண்ட் ஆன பால்.. அவ்வப்போது தான் வாங்கவேண்டும்..

எனில் அதுவும் என்னுடையதென்பதால் ஏற்கெனவே சொல்லிவைத்திருந்தேன். வீட்டு அருகாமையில் இருந்த ஆவின்பால் பூத்தில்

மாப்பிள்ளை அழைப்புக்குக் இவ்வளவு பாக்கெட் கல்யாணத்திற்கு நானூறு பேரோ என்னவோ எண் கொடுத்திருந்தாற்போல கல்யாண நாளின் காலை அஞ்சரைக்கே இவ்வளவு பாக்கெட் எனவும் சொல்லி விட்டிருந்தேன்..

மாப்பிள்ளை அழைப்பன்றெல்லாம் ஓ.கே..சரியாக முடிந்துவிட்டது.. இல்லை இல்லை..

மாப்பிள்ளையின் நண்பர்கள் குழாம் ஒன்று..அவர் முன்பு நெய்வேலியில் பாங்க் ஒன்றில் வேலை பார்த்தவராம்..அந்த பிராஞ்ச் ஆட்கள், அதன் பின் சேலத்தில் ஒரு ப்ராஞ்ச் அந்த ப்ராஞ்ச் ஆட்கள் எல்லாரும் வருவதாகச் சொல்லிவிட அவர்களும் ஒரு நூறு பேர் வந்துவிட – இரவுத்தங்கலுக்குச் சமயசஞ்சீவிச் சித்தப்பா சில லாட்ஜ்களில் சொல்லி வைத்திருந்ததால் பிரச்னை ஒன்றுமில்லை.. ஆனால் காஃபிக்கான இன்க்ரீடியண்ட் பால்.

எவ்வளவு வேணும் மாமா..

சமையல்கார க் கிருஷ்ணய்யங்கார் பளபள நெற்றியைத் தடவிக்கொண்டு..” வழக்கமா ஆர்டர் பண்ணியிருக்கியோன்னோ.. அத்தோட ஒரு 50 லிட்டர் பாரு”

ஏன் ஓய்.. தண்ணி கலக்கப்படாதா..

அதெல்லாம் எனக்குத்தெரியுண்டா குழந்தே.குறைஞ்ச பட்சம் பத்துலிட்டர் வாங்கிடு... பிள்ளை வீட்டில சில மில்க் ஸ்வீட்ஸ் வேணும்னு கேட்டிருக்கா..மாப்பிள்ளை அழைப்புல ஜிலேபி சாப்பிட்டயா நல்லாருந்ததா..

ஓ..சூப்பர் என மட்டும் சொல்லி மனசுக்குள் நற நற்த்து கல்யாணத்திற்கு வந்திருந்த இரு என்வயது சித்தப்பா பெரியப்பா பிள்ளைகளுடன் கலந்தாலோசித்தேன்.. காலீல வர்றீங்களாடா.. கொஞ்சம் பொன்னகரம் ஆராப்பாளையம் க்ராஸ் பூத்னு சுத்தலாம்.. நம்ம பூத்லயே கிடைக்குமான்னு பார்க்கலாம் பூத்காரன் இங்கேயே வெள்ளென டெலிவர் ஒரு ஆட்டோக்காரரை வச்சுபண்றேன்னு சொல்லியிருக்கான்.. பட் நேர்ல போனாத் தான் நடக்கும்..என்ன சொல்றீங்க...

இந்தபார் சுந்தரா.. நோ..ஏற்கெனவே பாக்கெட் போடணும் இன்னபிறன்னு பெரியப்பா (என் அப்பா) சொல்லியிருக்கார்.. அதுக்கே டயமாவும்.. உனக்காக நாங்க உசுரவே தருவோம் பட் இப்ப தூக்கத்தைத் தரமுடியாது..டேய் கல்யாணத்தன்னிக்கு நாங்க ஃப்ரெஷ்ஷா இருக்க வேண்டாமா என்ன..”

போங்கடா இவன்களே.. என்று தான் சொல்ல முடிந்தது

மாப்பிள்ளை அழைப்பு முடிந்து இரவெல்லாம் பாக்கெட்டில் தேங்காயெல்லாம் உறவுகள் சகிதம் போட்டு தூங்கலாம் என்று கண்சொக்க டயம் பார்த்தால் இரண்டரை.. கண் சொக்கினாலும் தூக்கம் வரவில்லை..கஷ்டப்பட்டு வரவழைத்தாலும் பால் நினைவு தான்.. வந்ததெல்லாம் பால் பாடல்கள் தான்..

பால் வண்ணம் பருவம் கண்டு
பால் மலர்ப்பால்

என்றெல்லாம் பாடல்கள் வர அது முடிந்ததும் கூடவே வாணிஸ்ரீயும் வந்து பால் போலவே வான்மீதிலே பாடியவண்ணம் ரெண்டு மூன்று பக்கெட் பாலை என்மீது ஊற்ற விழித்தால் நான்கு மணி..

முகம் கழுவி,டபக் டபக்கெனக் குளித்து சைக்கிள் எடுத்துக் கொண்டு பால்பூத்திற்குச் சென்றால் ஏற்கெனவே ஆவின் வண்டி வந்துசென்றிருக்க சோகையாய்ப்பால்பூத்காரன் மட்டும் இருந்தான்..

என்ன சுந்தரா..அன்ப்பிச்சுட்டேனே

சரி..எனக்கு எக்ஸ்ட்ரா பாக்கெட் வேணுமே அண்ணா

உங்கப்பாவ யாரு இன்னிக்குக் கல்யாணம் வைக்கச் சொன்னா..எவ்ளோமுகூர்த்தம் தெரியுமா.. டிமாண்ட் இருக்கற அளவுக்கு சப்ளை இல்லையாம்.. மாடு நிறைய அனேகமா இந்த பட்ஜெட்ல வாங்குவாப்படியாம் தெரியுமோ..

யோவ் என் அக்காக்கு க் கல்யாணம்யா இன்னிக்கு.நீ ஆவின் பட்ஜெட் பத்திப் பேசற. எனச் சொல்லிக்கொண்டிருக்கையில் புல்லாங்குழல் இசையில் தேன்,சர்க்கரை,பேரிச்சம்பழம் கலந்தாற்போன்ற ஒருகுரல் கேட்டது..

ஹல்லோ..

(அடுத்த போஸ்டில் பகுதி 2 தொடரும்) :)

chinnakkannan
20th September 2015, 08:58 PM
**


இசையும் கதையும்..

*

சின்னக் கண்ணன்.

*

கலர்ஸ்..

*
2. அவள்
****************.
(தொடர்ச்சி)

**

திரும்பினேன்..

அவள்….

முதன் முதலில் அவளை அப்போது தான் பார்க்கிறேன்.. பச்சை தாவணி, மஞ்சள் ரவிக்கை,வட்ட முகம் சற்றே கலைந்த தலை.. ஒழுங்காக வாராமல் கொஞ்சம் பஃப்பென முடிந்து வைட்டிருந்தாள்... கண்களில் கொஞ்சம் மிச்சத் தூக்கம், கொஞ்சூண்டு வெரி வெரி லைட்டாக மேக்கப் போலும்.. ஒரே ஒரு டாட் டாய் நெற்றியில் சாந்துப் பொட். கண்ணிமைகள் கண்கள் கருகரு நாவற்பழத்தின் கருமை.. காண்ட்ரவர்ஸியாய் முகத்திலேயே வெரிலைட் செவ்வண்ண இதழ்.. நிறமோ மா நிறத்துக்குச் சற்று மேலான பளீர்…

பட் இவையெல்லாம் நான் பார்த்தது – ஆயிரம் தாமரை இதழ்களை ஒன்றாக அடுக்கி வைத்து அதன் மீது ஒரு ஊசியைச் சொருகினால், அந்த ஊசியானது ஒரு இதழுக்கும் இன்னொரு இதழுக்கும் செல்லும் நேரம்- அது தான் ஷணம் என்பார்கள் – ஒரு கணம் தான்..

யெஸ்..

நீங்க… வித்யாக்காவிற்கு..

வித்யா – கல்யாணம் செய்துகொள்ளப்போகும் என் இரண்டாவது சகோதரியின்பெயர்..

ஒங்களுக்கு எப்படித்தெரியும்..

எங்க அக்கா உங்க அக்காக்கு ஃப்ரெண்ட்..சரி..ஒங்களுக்குப் பால் வேண்டுமா.. நான் வேணும்னா என் ரிஸோர்ஸஸ் கிட்ட ட்ரை பண்ணட்டா..

என்றவளைக் கொஞ்சம் அல்பமாகப் பார்த்துவிட்டு பால்பூத் காரனிடம்..”ஏண்ணே பொன்னகரம் பால்பூத்கிட்டக்க ட்ரை பண்ணட்டா..” எனச்சொல்லிவிட்டு சைக்கிளை எடுக்கப் போகையில் ஹல்ல்லோ
என்றாள் மறுபடி..

உங்களுக்குப் பால் வேணும்னா ஹெல் ப் பண்றேன்

எப்படி…என்றேன்..அவளுடைய அக்காவின் பேர் என்னவென்றெல்லாம் கேட்காமலேயே..

ஒரு நிமிஷம் இருங்க… நீங்க காலேஜா

ஆமாம் (என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை)

தம்மடிப்பீங்களா..

ம்ஹூஹும்.. (கோபம் வந்தது..என்னபண்ண பால் பொங்கி கோபத்தை அணைத்தது)

சரி அப்போ நூறுலருந்து தலைகீழா ஒரு நம்பர் குறைச்சு எண்ணிக்கிட்டிருங்க தோ வந்துடறேன்.இங்ஙனக்குள்ளதான் வீடு..

நீங்க சிவகங்கையா..

ம்.. எப்படிக் கண்டுபிடிச்சீங்க எனக் கேட்டு பதில் கேட்காமல்.

தாவிக்குதித்து ரெட்டைத்தெருவில் வாங்கிய பால் பாக்கெட்டுகளுடன்மறைந்து போனாள்

சரியாய் எண்பத்தெட்டு எண்ணிய போது வந்து விட்டாள்.. சற்றே முகம் திருத்தியிருந்தாள்..கூந்தலை வாரியிருப்பாள் போல .. நெற்றியில் கொஞ்சம் சுருளாய் முடிகள்..முகத்தில் சிரிப்பு

வாங்க போகலாம்

சைக்கிளை உருட்ட ஆரம்பித்தேன்..கூட நடந்தவாறே “ உங்க அக்காக்கு இன்னிக்குத் தானே கல்யாணம்..”

ஆமாம்..

வாட்ச் பாத்தீங்களா மணி அஞ்சேகால்.. பால்வேணும்ல..

ஆமா..

சரி சைக்கிள் எடுங்க நான் பின்னால உக்கார்றேன்..

தாவணியை இடுப்பில் முடிந்து தயாரான அவளை வியப்புடன் பார்த்தேன்.. சைக்கிள்ல ஏறத்தெரியுமா
மொபெட்டே ஓட்டியிருக்கேன்..

என்ன படிக்கறீங்க

சைக்கிள் மிதித்தவண்ணம் கேட்க, ப்ளஸ்டூ.. நீங்க

பி.எஸ்.ஸி மேத்ஸ் தர்ட் இயர்..எங்க போறோம்

இதோ இங்கன..இங்கிட்டுத்தான் விபி சதுக்கம் ரெண்டாவது தெரு ..இதோ திருப்புங்க.. இதோ நிப்பாட்டுங்க..

விபி சதுக்கத்தில் அந்தத்தெரு இன்னும் விடியாமலிருக்க நான் சைக்கிளை நிறுத்திய இடத்தின் முன்னால் கட்டப்பட்டிருந்த நாலைந்து எருமை மாடுகள் என்னை யார்யா நீ என்பது போல் பார்த்து தலைகுனிந்து அசைபோட ஆரம்பிக்க அவள் வாசலிலிருந்து “செல்வியம்மா”

கொஞ்சம் நரைக்க ஆரம்பித்த தலை சற்றே குண்டான உருவத்துடன் ஒரு அம்மா வந்து “யாரு மையூவா.. செல்லி இன்னும் முழிக்கலையே என்ன காலங்கார்த்தால. வந்திருக்க

செல்வியம்மா..இவங்க என் அக்காவோட ஃப்ரெண்டோட தம்பி எனச்சொல்லி விஷயம் விளக்கி பால் வேணுமே..

ஹச்சோ நேத்திக்கே சொல்லியிருக்க மாட்டியோ..எத்தினி வேணும்

பத்துப் பதினஞ்சு லிட்டரு..

ஒரு நிமிஷம்..டீக்கடைக்கு கறந்து வச்சுருந்தேன். கொண்டுபோகணும் என்கிட்ட நாலஞ்சு லிட்டர் தேறும் பரவால்லியா..

இன்னும் நாலுக்கு எங்கிட்டுபோவேன்.. செல்லியம்மா பத்தாவது கொடுங்க..

சரி கொஞ்சம் இரு.. ஏந்தம்பி கேன்லாம் கொண்டுவல்லியா வெறும் பைலயா பாலைத்தூக்கிட்டுப்போவ..

பாய்ண்ட் என நான் மலைக்கையில் சரி என் கேன் தர்றேன்..பத்துஅட்சஸ்ட் பண்றேன் பாஞ்சு நிமிஷம் வெய்ட் பண்ணு..

எனச் சொல்லி எப்படி அட்ஜஸ்ட் பண்ணினார் எனத்தெரியாது- கேன் பத் லிட் பால் ரெடியாகவர செல்லியம்மா வைத்திருந்த அஸிஸ்டண்ட் கேனை கேரியரில் கட்ட நான் ஏறிக்கிளம்ப..படக்கென நினைவு வந்து “ நீங்க”

நான் நடந்து போய்க்கிறேங்க.. அவள் சிரித்தாள்.. நீங்க உங்க கல்யாண வேலைகளைப்பாருங்க..

வேகவேகமாகச் செல்லுகையிலும் எனக்கு அவள் நினைவு எழவில்லை..காலத்தினாற் செய்த உதவி என்ற குறளெல்லாம் ஏட்டோடு போய் அக்காவின் சம்பந்திவீட்டார்க்கான மில்க் ஸ்வீட்டே மனதில் பாகு பதத்தில் கொதித்துக்கொண்டிருக்க கல்யாணமண்டபம் விரைவில் அடைந்து இறங்கி, கேனை இறக்கி சமையல்கட்டிற்குக்கொண்டு போனால்…பலபலவென விடிய ஆரம்பித்துக் காலைக்காப்பியெல்லாம் முடிந்து டிஃபன் வேலைகள் ஆரம்பித்திருந்தன..

கிருஷ்ணய்யங்கார் முகமெல்லாம் பல்லாக “வாராசா வா.. என் வயத்துல பால் வார்த்த” என்றார் சிம்பாலிக்காக.. இருக்கறத வச்சு போட்டுட்டேன்..பத்து தான் கெடச்சுதா பரவாயில்லை என் ரிஸோர்ஸஸ்கிட்ட சொல்லிவச்சுருந்தேனா அவாளும் பத்துமணிக்கு பத்துலிட்டர் தர்றேன்னுருக்கா சரிபண்ணிடலாம் என்கையில் தான் நினைவுக்கு வந்தது..ரிஸொர்ஸஸ் இதை இரண்டாம் முறை கேட்கிறோமா.. ஹச்சோ உதவி செய்த அந்தப் பெண்ணின் பெயரையோ அவள் அக்காவின் பெயரையோ கேட்கவில்லையே செல்வியம்மா மையூ என்றார்களே மெய்யூவா மெய்யழகியா..செட்டியார் பொண்ணா கலர் பார்த்தால் அப்படித்தெரியவில்லையே - என ஒரு நொடி நொந்து சுடச்சுடக் காப்பியை வயிற்றில் வார்த்ததும் மறந்தும் போனேன்..

ஒருவழியாய் வித்யாக்காவின் கல்யாணம் முடிந்து ஈவ்னிங்க் ரிஷப்ஷன் வரை அவள் நெஞ்சில் தலைதூக்கவே இல்லை..

ரிசப்ஷனில் தான் அவளைப் பார்த்தேன்..அவளுடைய அக்காவுடன் வந்திருந்தாள்.. லைட் எல்லோ வித் ரெட் பார்டர் போட்டபுடவையில் கொஞ்சம் வயதைக்கூட்டுவது போல் தோன்றினாலும் முகத்தில் இளமைத்துள்ளல் கண்களில் நட்சத்திர மின்னல், அவள் அக்கா ப்ளூ கலர் பட்டுப்புடவையுடன் வந்து ”சுந்தரா” என்று புன்னகைக்க அடையாளம் தெரிந்தது.. பூவிழி அக்காவின் ஃப்ரெண்ட்..இது என் தங்கை மைவிழி சிவகங்கைல படிச்சுக்கிட்டிருந்தா இங்க ப்ளஸ்டூ செய்ண்ட்ஜோசப்ல பாட்டிவீட்ல தங்கிப் படிக்கிறா என இண்ட்ரோ செய்ய நான் அவளைப்பார்க்க அவள் என்னைப்பார்க்க நான்கு விழிகள் கலந்தன..இரண்டு உயிர்கள் எக்ஸ்சேஞ்ச் ஆகின

ஏன் உங்க தங்கை இவ்ளோ ஐடெக்ஸ் போட்டிருக்காங்க..

சிரித்தாள் பூவிழி.. அவ கண்ணே அப்படி.. கருகருன்னு.. பொறக்கறச்சேயே இருக்கறதப்பார்த்து அப்பா வெச்ச பேருதான் அது.. எனப் பெயர்விளக்கம் சொன்னாள்.. மையூ கொஞ்சம் வெட்கிச்சிரிக்கையில் குட்டியாய் ஒற்றைக்கன்னக் குழி உற்பத்தியாகி என்னைக் குழியில் தள்ளியது. ஒரு ஓரவிழிப்பார்வை அக்கா அறியாமல் என்னைப் பார்த்து லிப்ஸ்டிக் போடாத லைட் பிங்க் இதழினால் மென்முறுவலிக்க எனக்குள் கிளர்ந்தது..

. https://youtu.be/PpxCJ7Z_SbA

கள்ளப்பார்வை கண்ணுக்கு இன்பம்
கள்ளச்சிரிப்பு நெஞ்சுக்கு இன்பம்…

இரண்டாம் முறை பார்த்தாலும் முதன் முறை பார்ப்பதுபோலவே இருக்க என் மனதில் பாடல் ஒலிக்க ஆரம்பித்தது..

https://youtu.be/agjyrRCVkUI

உன்னை நான்பார்த்தது வெண்ணிலா வேளையில்
என் வண்ணங்கள் கண்ணோடு தான்
என் எண்ணங்கள் உன்னோடு தான்..

அடுத்த எபிசோடில் எங்கள் காதல் வளர்ந்த கதையும் பிரச்னைகள் உருவான கதையும் சொல்லட்டா..

நான் வாரேன்… :)

தொடரும்..


**

vasudevan31355
20th September 2015, 09:12 PM
சின்னா!

மறுபடியும் பாலா பாட்டு. உங்க பாணியிலேயே சொல்றேன்.:) நானும் பார்த்துகிட்டே இருக்கேன்.:) இதுக்கு முன்னாலேயும் பாலா பாட்டு. சரியா? கதை படிக்கல. படிச்சுட்டு வீட்டுப் பாடம் எழுதறேன்.

Russellxor
20th September 2015, 09:27 PM
விரைவாக அதே சமயம்விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருக்கும் இத்திரைப்படத்தில்
இந்த இடத்தில் இந்தப்பாடல் வேகத்தடையோ என்று அன்று நம்மை சலனப்படுத்தியதுஉண்மை.
இசை ஆரம்பித்த சில விநாடிகளில் அந்தச் சலனம் சந்தோசமாக்கிவிடும்.
பாலுவின் வசீகர குரல் ஆழ்மனதில் ஊடுருவி மெய்மறக்கச்செய்யும்.பாலுவின் குரலில் "லாம்"மில் இழுக்கும் இழுப்பு
திணறலான இன்பம்.

இரவுநேரம் வேறு.இந்தப்பாடலை இன்றைய இரவுடன் கேட்டு மகிழுங்கள்.




படம்:உத்தம புருஷன்
பாடியவர்கள்:எஸ்.பி.பி,சித்ரா

தாய் பாடினால் அன்று நான் தூங்கினேன்
இன்று நான் பாடுவேன் ஆரிரோ ஆரிரோ
வான் தூங்கலாம் நீ தூங்கலாம்
உண்மை தூங்காதே ஏஏஏஏ

தாய் பாடினால் அன்று நான் தூங்கினேன்
இன்று நான் பாடுவேன் ஆரிரோ ஆரிரோ
வான் தூங்கலாம் நீ தூங்கலாம்
உண்மை தூங்காதே ஏஏஏஏ

தாய் பாடினால் அன்று நான் தூங்கினேன்
இன்று நான் பாடுவேன் ஆரிரோ ஆரிரோ

பூமாலை தோளில் கொண்டு என் வாசல் தேடி*
நீ வந்த கோலம் என்றும் மாறாது கோடி

பெண் பார்த்த போது மண் பார்க்க விரும்பினேன்
தூங்காமல் தேடும் நாள் தோறும் உன்மடி

உன் கண்ணில் ஏனடி கண்ணீரின் காவிரி

தாய் பாடினால் அன்று நான் தூங்கினேன்
இன்று நான் பாடுவேன் ஆரிரோ ஆரிரோ

வான் தூங்கலாம் நீ தூங்கலாம்
உண்மை தூங்காதே ஏஏஏஏ

தாய் பாடினால் அன்று நான் தூங்கினேன்
இன்று நான் பாடுவேன்*

ஆரிரோ ஆரிரோ

பொய்யான சேதி எல்லாம் மெய்யாக தோன்றும்
மெய்யான சாட்சி வந்து ஆகாயம் தோறும்

மேகங்கள் வானில் சாயாது சூரியன்
என்வானில் நீயோ தேயாத சந்திரன்

கூடாத கைகளும் ஓர் நாளீல் கூறலாம்

தாய் பாடினால் அன்று நான் தூங்கினேன்
இன்று நான் பாடுவேன் ஆரிரோ ஆரிரோ
வான் தூங்கலாம் நீ தூங்கலாம்
உண்மை தூங்காதே ஏஏஏஏ

தாய் பாடினால் அன்று நான் தூங்கினேன்
இன்று நான் பாடுவேன் ஆரிரோ ஆரிரோ
வான் தூங்கலாம் நீ தூங்கலாம்
உண்மை தூங்காதே ஏஏஏஏ

chinnakkannan
20th September 2015, 09:42 PM
வாஸ்ஸூ.. வெரி க்விக் ரெஸ்பான்ஸ்.. ஹச்சோ நான் எந்து செய்யும்..:) நானும் தேடித்தேடி ஜேசுதாஸ், டி.எம்.எஸ்னு எடுத்து வச்சுருந்தேனா.. எழுதும் வேகத்துல இந்தப்பாட் வந்துடுச்சா.. ஸாரிங்ணா...

பாலா பாட்ஸுக்கு ஒம்ம ட்ரீட்மெண்ட்டே தனிங்காணும்...என்னோடது கமர்ஷியல் வெஜிடபிள் புலவ்னா உங்களோடது ஜீரால ரொம்ப்ப நேரம் ஊறின குலோப்ஜாமூன் மாதிரி..ச்சோ ச்வீட்.

ஸரி இந்த மிஸ்டேக் அடுத்த முறை பண்ண மாட்டேன்.

கொஞ்சம் எபிஸோட் தான் நீளமாய்டுச்சு.. ஷமிக்கணும்..அடுத்த தடவை கம்மி பண்ணுகிறேன்..

*

தனியா ரிப்ளை போஸ்ட் போடக் கூடாதுன்னு எனக்குள்ள ஒரு முடிச்சு போட் வச்சுருக்கேன்..எனில்..

*

ஒரு மரமாய் இருந்தால் அது தனிமரம் என்பர் ..அதுவே மரங்களின் கூட்டமென்றால் தோப் என்று சொல்வர் (என்ன ஒரு கண்டுபிடிப்பு)

அந்தக்காலத்தில் நியூ சினிமாவில் பார்த்த நினைவு..இந்தக் கண்ணம்மா ..கே.ஆர்.வி ஒரு பாட்டில் ஐம்பது உடைகள் மாற்றினார் என்று குமுதமோ விகடனிலோ படித்த நினைவு.. இதுலபாருங்கோ.. சேலை காயப் போடும் போது பார்த்த ஞாபகம் பாட்டு .. மரம் அலசற்ப்பவே வந்துடுத்து.. இல்லியோ.. (ஆமாம் கூகுள்ல பாகம் மூணு பக்கம் பதினைந்து)
ஸோ அதை ப் போட முடியாது

வேற தோப்புப் பாடல்கள்ல

மாந்தோப்பில் நின்றிருந்தேன் அவன் மாம்பழம் வேண்டுமென்றான்..

தோப்பிலொரு நாடகம் நடக்குது ஏலேலக் கிளியே

சரி வாசு..ஃபார் எ சேஞ்ச் புரட்டாசி மாசம் பார்த்தால் முருகன் முகம் பார்க்கிறேன்..:)

https://youtu.be/pbRgaku1vsE

chinnakkannan
20th September 2015, 09:55 PM
தாய் பாடினால் அன்று நான் தூங்கினேன்.. நல்ல பாட்டு செந்தில்வேல்.. உத்தம புருஷனும் நல்ல படம் எனப் புகையாய் நினைவு..அமலாவுடன் போய் ஒரு கொலைக்குற்றத்தில் பிரபு சிக்கிக்கொள்வாரில்லையோ..

பாடல் வரிகளுக்கு நன்றி..

ஆனால் பிரபு நடித்த மூடு மந்திரம் என ஒரு படம் உண்டு..எதிர்பாராமல் வந்த த்ரில்லர் எனலாம்.. ஓ.கேயாக இருக்கும்.. வில்லனாக வித்தியாசமாக இருப்பார் பிரபு..

விழியோரம் பகல் நேரம் கனவுகள் வருமோ – பாடல் நினைவில்லை..கூகுளினால் கிடைத்தது..இதுவரை இங்கு குளிக்கப்படவில்லை..ஸாரி போடப்படவில்லை என நினைக்கிறேன்.. :)

https://youtu.be/YMZ61ZgH2l4

RAGHAVENDRA
20th September 2015, 10:07 PM
செந்தில்வேல்
அபூர்வமான அதே சமயம் அருமையான பாலா பாடலை உத்தம புருஷன் படத்திலிருந்து பகிர்ந்து கொண்டு மதுர கானத் திரியை அலங்கரித்துள்ளீர்கள்.

தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள்.

ஒரு வேண்டுகோள். தாங்கள் பதிவு செய்யும் பாடலைப் பற்றிய விவரங்களோடு அந்தப் பாடல் காட்சி அல்லது கேட்பதற்கான இணைப்பினை அளித்தால் நன்று.

இதோ உத்தம புருஷன் பாடலைக் கேட்டும் பார்த்தும் மகிழ்வோம்.


https://www.youtube.com/watch?v=OCRhBStx3Dg

RAGHAVENDRA
21st September 2015, 12:52 AM
எனதருமை நண்பர் திருநின்றவூர் திரு சந்தான கிருஷ்ணன் அவர்கள் எழுதும் தமிழ்த்திரையுலக இசை வரலாற்றினைப் பற்றிய தொடர் ஒன்றினை தினத்தந்தி சனிக்கிழமை தோறும் வெளியிட உள்ளது. இதன் முதல் பகுதி நேற்று 19.09.2015 தேதியிட்ட தினத்தந்தி நாளிதழில் வெளியாகியுள்ளது. அதன் இணைய தள நிழற்படம் இங்கே நம் பார்வைக்கு.

அவரைப் பற்றிய குறிப்பு நாளிதழிலேயே விரிவாக உள்ளதால், நான் தனியே எழுதவேண்டியதில்லை என எண்ணுகிறேன்.

http://www.dinathanthiepaper.in/1992015/MC_1909_ML_03_Cni6575.jpg

E Paper நிழற்படங்கள் ஒரு சில நாட்களுக்கு மேல் இணையதளத்தில் நிலைப்பதில்லை என அறிகிறேன்.

rajraj
21st September 2015, 01:20 AM
Raghavendra: The article by Santhanakrishnan has a few errors. Venkatesa Suprabhatham by MS was first recorded in LP, not CD. If you search you can still get the LP. The article is informative for youngsters. :)

RAGHAVENDRA
21st September 2015, 01:25 AM
Yes Sir. Such factual errors are not expected from such a legendary historian. Maybe proper checking of the article before publishing needs to be done intensely.

I think it was released in a 78 rpm series (may be 3 records of two sides each).

madhu
21st September 2015, 06:49 AM
நாலு நாட்களில் எட்டு பக்கங்கள்... எட்டாயிரம் கண்ட இணையிலா வாசுஜி, மீண்டும் இணைந்து வரும் கோபால் ஜி, கிருஷ்ணா ஜி, செந்தில் ஜி... என பதிவுகள் குவிந்திருக்க இதைப் படித்து முடிக்கவே இன்னும் நேரம் தேவை...

வாசு ஜி... சுமதி என் சுந்தரி பற்றி எல்லோரும் ரசித்து ரசித்து எழுதிய பின் நான் எழுத என்ன இருக்கிறது ?

ஆஹா... இருக்கு இருக்கு... முக்கியமான ஒரு விஷயம் இருக்கு... நான் மாம்பலம் ரங்க நாதன் தெருவில் சுடச்சுட (?) வாங்கி அணிந்து சென்று பள்ளியில் சீருடை இல்லாத நாளில் நண்பர்களை வியக்க வைத்த சுமதி என் சுந்தரி சட்டை மட்டுமல்ல....

கடைசிக் காட்சியில் ஓடும் ரயிலில் இருந்து குதிக்கும் ஜெயலலிதா என்ன பெயரில் ந.தியை அழைப்பார் ?

அது எனக்கு எப்பேர்ப்பட்ட பெருமை !! ஹய்யா...

vasudevan31355
21st September 2015, 08:52 AM
நாலு நாட்களில் எட்டு பக்கங்கள்... எட்டாயிரம் கண்ட இணையிலா வாசுஜி, மீண்டும் இணைந்து வரும் கோபால் ஜி, கிருஷ்ணா ஜி, செந்தில் ஜி... என பதிவுகள் குவிந்திருக்க இதைப் படித்து முடிக்கவே இன்னும் நேரம் தேவை...

வாசு ஜி... சுமதி என் சுந்தரி பற்றி எல்லோரும் ரசித்து ரசித்து எழுதிய பின் நான் எழுத என்ன இருக்கிறது ?

ஆஹா... இருக்கு இருக்கு... முக்கியமான ஒரு விஷயம் இருக்கு... நான் மாம்பலம் ரங்க நாதன் தெருவில் சுடச்சுட (?) வாங்கி அணிந்து சென்று பள்ளியில் சீருடை இல்லாத நாளில் நண்பர்களை வியக்க வைத்த சுமதி என் சுந்தரி சட்டை மட்டுமல்ல....

கடைசிக் காட்சியில் ஓடும் ரயிலில் இருந்து குதிக்கும் ஜெயலலிதா என்ன பெயரில் ந.தியை அழைப்பார் ?

அது எனக்கு எப்பேர்ப்பட்ட பெருமை !! ஹய்யா...

மதுண்ணா!

http://i61.tinypic.com/2eaqow1.jpg

'மது'ரமான மறக்காத நினைவு. மேடம் உங்களை கூப்பிடுகிறார் பாருங்கள். நடிகர் திலகம் அதற்குமுன் புறப்பட்ட ரயிலைக் கூட திரும்பிப் பார்க்காமல் மனதை பாறையாக்கிக் கொண்டு ஒரு கையை கழுத்தைச் சுற்றி வளைத்தவாறு டென்ஷனைக் காண்பித்துக் கொண்டு வருவார். மேடம் உங்கள் பெயரை குயில் கூவுவது போலவே அழகாக கூப்பிட்டு பின் ஓடி வருவார்.

rajeshkrv
21st September 2015, 09:46 AM
வணக்கம். வாங்கஜி. இப்பதான் வழி தெரிஞ்சுதா?

யாரங்கே முதலில் ஜி வந்ததற்கு திருஷ்டி சுற்றி போடுங்கள் ஐயா.:) அப்புறம் கிருஷ்ணாவுக்கு போடலாம். புலம்ப உட்டுட்டேளே! நியாயமா?

அட நான் இங்கே தானய்யா இருக்கேன் .

அது சரி சேதி தெரியுமோ ... மதுண்ணா இசையரசியை சந்தித்தார் ... சொன்னாரோ ???

madhu
21st September 2015, 09:50 AM
அட நான் இங்கே தானய்யா இருக்கேன் .

அது சரி சேதி தெரியுமோ ... மதுண்ணா இசையரசியை சந்தித்தார் ... சொன்னாரோ ???

வாங்கோ அண்ணா.. அட வாங்கோ அண்ணா...

அதைப் பற்றி நிதானமாக யோசித்து அவங்க கிட்டே விவரம் கேட்டு அறிந்த சில பாடல்களைப் பற்றி இந்த திரியில் கொஞ்சம் கொஞ்சமா எழுதலாம் என்றுதான் நினைத்துக்கொண்டு இருக்கிறேன்.

chinnakkannan
21st September 2015, 10:12 AM
ஹாய் குட்மார்னிங் ஆல்

ஹைய்யா புதிய தொடர் வருதே மதுண்ணாவால்.. சு.எ.சு.. ந.தி பேரு மதுவா ( யாரும் அடிக்க வருமுன் எஸ்ஸ்ஸ்கேப்!) :)

பாண்டிச்சேரி எப்படி இருந்தது.. ஏன் கொடை போகலை மதுண்னா..

vasudevan31355
21st September 2015, 10:34 AM
https://i.ytimg.com/vi/YMZ61ZgH2l4/mqdefault.jpg

'விழியோரம் பகல் நேரம் கனவுகள் வருமோ' (மூடு மந்திரம்)

சின்னா!

நீர் விளையாட்டாய் என்ன மாதிரி ஒரு பாட்டை போட்டிருக்கிறீர் என்று உமக்குத் தெரியுமா? நீர் போட்டது குளியல். இப்போது அதை மறந்து விடுவோம். மாதுரியை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்.

ஆனால் பாடல்....வாவ்... எப்படிப் பாராட்டுவது? இந்த ஒரு பாடலுக்காகவே (காட்சிக்காக அல்ல...இதை விடவெல்லாம் அம்மணியை நிறைய மலையாள, தமிழ்ப் படங்களில் பார்த்தாகி விட்டது. 'பாவம் கொடூரன்' இல்லை சின்னா) 'மூடு மந்திர'த்தை அப்போது மூன்று தடவை பார்த்தேன். இயக்குனர் யார் தெரியுமா? இப்போ காமெடியில் கலக்குகிறாரே ஒல்லிக்குச்சி மனோபாலா. அவரேதான்.

சரி பாடலுக்கு வருவோம். 80-களில் வந்த பாடல்களில் எனக்கு மிக மிகப் பிடித்த பாடல் சின்னா! அப்போதெல்லாம் இதைக் கேட்காத நாளே இல்லை எனலாம். இப்போதும் TDK 90 கேஸட்டில் ஆனந்தமாய் டேப் ரெகார்டரில் போட்டுக் கேட்பதுண்டு. 'இன்றைய ஸ்பெஷலி'ல் கூட எழுத நினைத்ததுண்டு.

இப்படத்திற்கு இசை சங்கர் கணேஷ். இந்தப் பாடலுக்கு பட்டை கிளப்பியிருப்பார்கள் இரட்டையர்கள். பாடியது 'சின்னக் குயில்'. வெகு அழகான குரல். ஆனால் சங்கர் கணேஷ் இசையமைப்பில் இளையராஜாவின் பாதிப்பு அப்பட்டமாகத் தெரியும். பாடலின் துவக்க இசையைக் கேளுங்கள். தெரியாதவர்கள் இளையராஜா இசையா என்றுகேட்டு விடுவார்கள். முக்கியமாக விட்டு விட்டு ஒலிக்கும் புல்லாங்குழல் இசை.

'விழியோரம் பகல் நேரம் கனவுகள் வருமோ
காதல் மன்மதன் பானமே! நெஞ்சில் பாய்ந்திடும் நேரமே!
வாலிபம் துள்ளுவதேனோ'

இந்த வரிகளை மாதுரிக்கு சித்ராவின் இரண்டு வாய்ஸாக ஒலிக்கும்படி ஜாலவித்தை புரிந்திருப்பார்கள் இரட்டையர்கள். ஒரு குரல் பாடலின் டியூனோடும், அதே சித்ராவின் இன்னொரு குரல் முன் குரலுடன் இணைந்து சற்று வசன நடையாகவும் சேர்ந்தே ஒலிக்கும். அற்புதமாக இருக்கும். பல்லவி முடிந்து இடையிசையில் அற்புதமான வயலின் இசைக் கோர்வைகளை தந்து ஆச்சர்யப்பட வைத்து விடுவார்கள் இன்னிசை வேந்தர்கள். சிகெரெட் ஆஷை விரல்கள் இடுக்குகளில் தட்டி குளிக்கும் மாதுரியை கவனிக்கும் அந்த ஆண் (Prabhu). த்ரில்லர் ரேஞ்சுக்கு. வயலின் இசை முடிந்து மேலே மலையிலிருந்து அந்த பெரிய பாறாங்கல் உருண்டு தண்ணீரில் விழும் போது கொடுக்கப்படும் சப்தமும் 'திக்திக்'.

'கன்னித் தாமரை ஆடுதே
இந்தப் பூங்குயில் பாடுதே
ஆசைகள் ஊர்வலம் போகுதே
ஆனந்த வெள்ளமும் பாயுதே'

திரும்பவும் 'கன்னித் தாமரை ஆடுதே' வரும்போது சித்ரா ஆடுதே என்பதை 'ஆஆ...டுதே' என்று இழுப்பதைப் பாருங்கள். அவ்வளவு அருமையாக இருக்கும்.

'நீராட தங்கத் தேரோட
பூமேனி இங்கு போ...ரா ட'

(இனி வரும் வரி உமக்காக சின்னா):)

'பார்க்கும் கண்ணிலே இன்ப போதை ஏறாதோ:)
தேவன் கையிலே இந்த தேகம் சேராதோ'

மாதுரி அழகாகப் பண்ணியிருப்பார். பாடலை கெடுக்காமல் அம்சமாகப் படமாக்கியிருப்பார் மனோபாலா. ஆபாசமாக இல்லாமல் இயற்கையாக கொஞ்சம் கூட முகம் சுளிக்காத முடியாதபடி கலைநயத்துடன் எடுக்கப்பட்டிருக்கும். குளியல் பாட்டுத்தானே என்று சாதரணமாக நினைத்துவிட முடியாது.

http://i.ytimg.com/vi/Q8XoBnifvXI/sddefault.jpg

மறுபடி வரும் இடையிசை. காட்டு பறவைகள், விலங்குகளின் குரல் சப்தங்கள். 'கு..ஊ' என்று ஒலிக்கும் பயமுறுத்தும் பறவை சப்தம்... தொடர்ந்து வரும் சிதாரின் சின்ன பிட்...பிறகு காட்டு மூங்கில் குழலின் அருமையான ஓசை... (இந்த இடத்தில் மாதுரி மிக அழகாக இடுப்பு வளைத்து ஆடி வருவார்) ஓடி வரும் அருவி நீரில் மிதந்து வரும் தாமரைப் பூக்களும், சாமந்திப் பூக்களும் கொள்ளை அழகு. நடுநடுவே பரபரப்பான ஜீப் டயர்களின் வேகம் காட்டும் காமெரா.. உள்ளே சிந்தனையுடன் அமர்ந்திருக்கும் கண்ணாடி போட்ட ரேகா. வேகமாக வெள்ளமென ஓடி வரும் அருவித் தண்ணீரின் 'சலசல' சவுண்ட் கலக்கலாக இருக்கும்.

இப்போது பாருங்கள்.

குளிக்கும் அந்த இளம் பெண்ணின் கர்வத்தை...தற்பெருமையை...

'சிந்தும் புன்னகை போதுமே!
தேசம் என்னிடம் சேருமே!'

அடடா! என்ன ஒரு ரசிக்கக் கூடிய அகந்தை! இவள் தன் அழகால் தேசத்தைப் பிடிக்கப் போய் விட்டாளே! அவ்வளவு தன்னம்பிக்கையா? எல்லா அழகுப் பெண்களுமே தேசத்தை ஆளக் கிளம்பிவிட்டால் சின்னாவின் நிலைமை என்ன? 'பழைய நெனப்புடா பேராண்டி பழைய நெனப்புடா' பா(ர்)ட்டிகளே தானே மிஞ்சும்? அதுகளை வைத்து என்ன பண்ண?

இன்னும் கவனியுங்கள்.

'ராஜ்ஜியம் ஆள்கிற கூட்டமே
நாளைக்கு என் துணை கேட்குமே
ராஜாங்க மங்கை நான்தானே

நான் கூட நாட்டை ஆள்வேனே'

பிடிச்சா பாருங்க பாயிண்ட்டை. இப்போது நாட்டை ஆளவே வந்து விட்டாள். பதவி ஆசை. அதுவும் இளம் கன்னிப் பெண்ணுக்கு.

'ஓரப் பார்வையில் ஆட்சி மாறும் என்னாலே'

போச்சுடா! வச்சா வேட்டு எதிர்க்கட்சிக்கு. இவ ஒரு ஓரப்பார்வை பார்த்தால் ஆட்சியே மாறிப் போய் விடுமாம்.

மாதுரியின் விழிகளில்தான் நாட்டை ஆள கனவு காணும் எத்தனை சந்தோஷம்? மாதுரி எளிமையாக அழகாகப் பண்ணியிருப்பார் சின்னப் பிள்ளை போல. அருவியில் குளிப்பதும், புரண்டு படுப்பதும், கவிழ்ந்து படுத்து கால்களை மாற்றி மாற்றி உயர்த்துவதும் என்று மிகவும் ரசிக்கும்படி பண்ணியிருப்பார்.

சின்னா! தெரிந்தோ தெரியாமலோ என் மனம் கவர்ந்த, ரொம்ப ரொம்ப மனம் கவர்ந்த பாட்டைக் கொடுத்து விட்டீர்கள். இதற்கு என்னுடைய வாழ்நாள் தேங்க்ஸ்.

இப்போது மறுபடி அந்தப் பாடலைப் பாருங்கள். வாத்தியங்களின் வலிமையை அனுபவித்து மகிழுங்கள். அருமையான இயற்கை ரம்மியங்களை ரசியுங்கள். சித்ராவின் குயில் குரலை லயித்துக் கேளுங்கள். சங்கர் கணேஷின் பின்னாளைய பாடல்களில் தலையானது.

பாடலை அமர்க்களமாக எழுதியவர் யார் தெரியுமா? புலமைப்பித்தன். இந்தப் பாடல் ஹிட் அடிக்கவில்லையே என்ற பெரும்குறை எனக்கு.

இப்பாடலைப் பற்றி ராகவேந்திரன் சார் மற்றும் மதுண்ணா கருத்தையும் அறிய ஆவல்.

இதே போல இதே ரேஞ்சில் இதே கால கட்டத்தில் இதே போன்ற ஒரு அருவிக் குளியல் பாடல் இதே போன்று அற்புதமாக அருமையாக இனிமையாக இருக்கும். நடிகை, இசையமைப்பாளர்கள் மாறுவார்கள். இந்தப் பாட்டிற்கு கொஞ்சமும் சளைத்ததல்ல அந்தப் பாடலும். வேண்டுமா?


https://youtu.be/YMZ61ZgH2l4

chinnakkannan
21st September 2015, 11:05 AM
வாஸ்ஸூ ..

விழியோரம் பகல் நேரம் கனவுகள் வருமோ
காதல் மன்மதன் பானமே! நெஞ்சில் பாய்ந்திடும் நேரமே!
வாலிபம் துள்ளுவதேனோ' //

இது ஒரு அருமையான பாட்டு என்பது மட்டும் தெரியும்.. மூடு மந்திரத்தில் முதலாவது பாடலாகவே வந்து மயக்கும்.. இன்ஃபேக்ட் படம் பார்த்த பிறகு நேற்றுத் தான் - செந்தில்வேல் சிவராஜ் உத்தமபுருஷன் பாடல் போட்டவுடன் நினைவுக்கும் வந்தது..

அந்தப் பாட்டை ஒரு முறை பார்த்த பிறகு தான் இட்டேன்..( நீர் சொன்னாற்போல ஆபாசமாகவெல்லாம் இருக்காது)

ஹப்பா என்னமா அலசியிருக்கீங்க..மாதுரி கூட சீலையை இப்படி அலசியிருக்க மாட்டார்..!

//பாடலை அமர்க்களமாக எழுதியவர் யார் தெரியுமா? புலமைப்பித்தன். இந்தப் பாடல் ஹிட் அடிக்கவில்லையே என்ற பெரும்குறை எனக்கு. // எனக்கும் தான் வாசு..


//சின்னா! தெரிந்தோ தெரியாமலோ என் மனம் கவர்ந்த, ரொம்ப ரொம்ப மனம் கவர்ந்த பாட்டைக் கொடுத்து விட்டீர்கள். இதற்கு என்னுடைய வாழ்நாள் தேங்க்ஸ். // ஐ ஹேவ் டு டெல் தாங்க்ஸ் டு யூ.. ரசனைக்கார நண்பா....:)


//இதே போல இதே ரேஞ்சில் இதே கால கட்டத்தில் இதே போன்ற ஒரு அருவிக் குளியல் பாடல் இதே போன்று அற்புதமாக அருமையாக இனிமையாக இருக்கும். நடிகை, இசயமைப்பாளர்கள் மாறுவார்கள். இந்தப் பாட்டிற்கு கொஞ்சமும் சளைத்ததல்ல அந்தப் பாடலும். வேண்டுமா?// இது என்ன கேள்வி.. இன்னொரு பலாச்சுளை தேனில் கலந்து தருகிறேன் என்றால் கசக்குமா என்ன..

வீட் போய் உங்களோடத மறுபடி படிச்சு மறுபடி பாட் பார்க்கணும்.. லீவ்ல மூடுமந்திரம் படமும் பார்க்கணும்னு நினைச்சிருக்கேன்.. அவெய்லபிள் ஆன் யூட்யூபாக்கும்..

மிக்க நன்றி வாசு அகெய்ன் :)

vasudevan31355
21st September 2015, 11:06 AM
மதுண்ணா !

இதோ நீங்கள் போன பாகத்தில் கேட்டிருந்த 'ஸ்கூல் மாஸ்டர்' படப் பாடலான ஆடியோ லிங்க்.

'பார்த்தா சிரிக்குதான் பாட்டி
இது தாத்தாவைக் கொண்டு வரும் கூட்டி
காதோரம் மெல்ல மெல்ல மாட்டி
சேதி தருவது இது செய்யும் டியூட்டி'

சிரமம் பார்க்காது கேட்டதும் தேடி அளித்த 'சுக்ரா' நண்பரான செல்வம் அவர்களிக்கும், ஜாக் அவர்களுக்கும், ப்ரொவ் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

'பார்த்தா சிரிக்குதான் பாட்டி'

http://www.mediafire.com/download/2578sdblyuadd3o/School+Master.rar

அதே போல எல்.ஆர்.அஞ்சலி குழுவினர் பாடிய இதே படத்தின் பாடலான 'ஓடி வாங்கடா... ஒண்ணா வாங்கடா'... அருமையான பாடலின் லிங்க்.

http://www.mediafire.com/listen/w5cwedw2wm12si6/SCHOOL+MASTER+-+Odi+Vaangada..Onna+Vaangada%28MSV%29.mp3

chinnakkannan
21st September 2015, 11:08 AM
செந்தில்வேலுக்கு உத்தம புருஷன் யூட்யூப் லிங்க் எடுத்து வைத்து விட்டு இந்தப்பாடல் நினைவு வந்ததில் இதைப் போட்டு அடுத்த போஸ்டில் அதை ப் போடலாம் என நினைத்திருந்த போது.., ராகவேந்தர் ஏற்கெனவே அந்தப் பாட்டைப் போட்டிருந்தார்.. ம்ம் அமர்க்களமாக இருக்கிறது அழகான பாடல்களின் அணிவகுப்பினால்..

சு.சு பாட்டுக்கள் அவ்வளவு தானா..இன்னும் கண்டின்யூ பண்ணுவீங்களா வாஸ்ஸூ.. உம் எழுத்தில் அப்பாட்டுக்களைக் கொண்டாட ஆசை..(சி.க வின் சின்னச் சின்ன ஆசை)

vasudevan31355
21st September 2015, 11:09 AM
//ஹப்பா என்னமா அலசியிருக்கீங்க..மாதுரி கூட சீலையை இப்படி அலசியிருக்க மாட்டார்..!//

அப்பவும் புத்தி எங்க போகுது பாரு.:) கண்ணா! நீ திருந்தவே மாட்டியா? (நான் சொல்லல... நீங்க தம்பி ராமையா மாதிரி அடிக்கடி மைண்ட் வாய்ஸ்ல சொல்றது):)

chinnakkannan
21st September 2015, 11:11 AM
ஓய்..ரெண்டு ஃபோன், நாலு வேலை.ஒரு ப்ராப்ளம் சால்வ் பண்ணிக்கிட்டே டைப் பண்ணினேன்..எனக்கு இப்படித் தான் எழுத வருது..மனசு வெள்ளைங்காணும் ! :) குளியல் பாட்டு என்று எழுதியிருந்ததும் அப்படித்தான் :)

vasudevan31355
21st September 2015, 11:11 AM
எது எப்படியோ செந்திவேல் அவர்களுக்கும் நன்றி! அவரால்தானே இப்படி ஒரு வைரப்பாடல் வெளியே வந்தது? அவர் போட்ட பாடலும் நன்றாகவே இருந்தது. தாங்க்ஸ் செந்தில்வேல்.

vasudevan31355
21st September 2015, 11:13 AM
ஓய்..ரெண்டு ஃபோன், நாலு வேலை.ஒரு ப்ராப்ளம் சால்வ் பண்ணிக்கிட்டே டைப் பண்ணினேன்..எனக்கு இப்படித் தான் எழுத வருது..மனசு வெள்ளைங்காணும் ! :) குளியல் பாட்டு என்று எழுதியிருந்ததும் அப்படித்தான் :)

நல்ல வேளை... நாலு வேலைக்குப் பதிலா நாலு சேலைன்னு எழுதாம விட்டீரே!:) அதுவரைக்கும் தப்பிச்சேன் சாமி:)

chinnakkannan
21st September 2015, 11:19 AM
இந்தக் காலகட்டத்துலவந்த அருவிப்பாட்டா..ஓடுகிற அருவியிலே ஒரசிவிட்டேன்சந்தனத்தையா..

சாரல் மழைச்சாரல்.. இது புச்சோன்னோ..

பாலாடைமேனி பனிவாடைக்காற்று இது நிறைய தடவை நினைவுகளை நனச்சாச்சே :)

வாசு..கண்டுபிடிக்க ட்ரைபண்றேன்..பண்ணி மனசுல வச்சுக்கறேன்.. நீர் எழுதியதும் சொல்றேன் ( ஹப்பா என்னமா சமாளிக்க வேண்டியதா இருக்கு - தெரியலைங்கறத) :)

தேனருவியில் நனைந்திடும் மலரோவா..சுஹா குளிக்க மாட்டாகளே

vasudevan31355
21st September 2015, 11:36 AM
//சுஹா குளிக்க மாட்டாகளே//

சுஹா குளிச்சா யார் பாக்குறது? அதுக்கு விஜயகுமாரி எவ்ளோவ் பெட்டெர்.:)

vasudevan31355
21st September 2015, 11:37 AM
//நீர் எழுதியதும் சொல்றேன்//

அதானே பார்த்தேன்.

chinnakkannan
21st September 2015, 11:38 AM
umakkunnu oru paat eduththu vachirukkEn..evening pOdarEn..very good combo.. asokan vijyakumari ! :)

vasudevan31355
21st September 2015, 11:50 AM
umakkunnu oru paat eduththu vachirukkEn..evening pOdarEn..very good combo.. asokan vijyakumari ! :)

அண்ணா! தயை கூர்ந்து இப்படிப்பட்ட சோதனை முயற்சிகள் வேணாம்.:) தாங்க மாட்டேன். அப்புறம் அழுதுருவேன்.:)

vasudevan31355
21st September 2015, 12:02 PM
எட்டாயிரம் பதிவுகளைக் கடந்தமைக்கு வாசு அவர்களுக்கு
எனது பாராட்டுக்கள்.
அன்புடன் கோபு.


நன்றி கோபு சார்.

vasudevan31355
21st September 2015, 12:08 PM
//இன்னொரு பலாச்சுளை தேனில் கலந்து தருகிறேன் என்றால் கசக்குமா என்ன//

இல்லே. ஷுகர் கிகர் எதாவது இருந்துச்சுன்னா?:)

chinnakkannan
21st September 2015, 12:23 PM
//இன்னொரு பலாச்சுளை தேனில் கலந்து தருகிறேன் என்றால் கசக்குமா என்ன//

இல்லே. ஷுகர் கிகர் எதாவது இருந்துச்சுன்னா?:)

நாங்கள்ளாம் டேப்லட் டயட்னு இருந்துடுவோம்ல... :)

chinnakkannan
21st September 2015, 01:38 PM
சர்க்கரை பற்றிப் பேச்சு வந்ததினால்...

ஜவ்வாது மேடையிட்டு சர்க்கரையில் பந்தலிட்டு

சர்க்கரை இனிக்கற சர்க்கரை

சர்க்கரைப் பந்தலில் தேன்மழை பொழியுது

சிக்ஸ்டீன் ஸ்வீட் சிக்ஸ்டீன்லாம் சர்க்கரைல்ல வராது..இன்னும்???

vasudevan31355
21st September 2015, 02:05 PM
சக்கரக் கட்டி ராசாத்தி

முத்து பவளம் முக்கனி சர்க்கரை

ருக்குமணியே பர பர பர
சர்க்கரைப் பெண்ணே

vasudevan31355
21st September 2015, 02:17 PM
சர்க்கரைக்கும் சீமெண்ணைய்க்கும் சந்தியிலே நிக்குறப்போ
சிந்திக்காம கண்ணிரெண்டை ஏன் திறந்தாய் (நான் பெத்த மகனே நடராஜா)

Russellxor
21st September 2015, 03:22 PM
இசையும் இளையராஜா
குரலும் இளையராஜா
என் உயிர் கண்ணம்மா படத்தில் இடம் பெற்ற இப்பாடல்திரியின் தலைப்புக்கு பொருத்தம் ஆகும்.


பூம்பாறையில் போட்டு வச்ச பூங்குருவி
வீம்பாகத்தான் சேர்ந்ததொரு ஆண்குருவி
தன்னந்தனி ஆளா இவ எங்கிருந்தா சாமி
இப்ப ரெண்டுங்கெட்டுப்போனா இதுக்கு என்னவழி காமி((பூம்பாறையில்)

தன்னாலே பெண்ணொருத்தி தாயாக ஆனதிங்கே
உண்டாக்கி வைத்தவனேஓர்நாளில்
வடித்ததிங்கே
கண்ணான காதலியைகண்ணில் வைத்து பாடுகிறான்
கல்யாண ஊஞ்சலை கற்பனையில் நாடுகிறான்
யாரோ போட்டு வைத்த ஆகாத விடுகதையை
ஊரார்க்கு போட்டு வைத்தாய் நீதானே
எண்ணாகும் நாளை எண்ணி ஏன் மறைத்தாய்(பூம்பாறையில்)

அந்நாளில் போட்டவிதைஇந்நாளில் வளரும் இங்கே
அன்பான காதல்கதை அன்றாடம் தொடரும் இங்கே
உல்லாச ராகத்திலே பாடுது ஓர்சோலை குயில்
சொலேலாமல் மௌனத்திலே வாடுது ஓர் ஏழைக்குயில்
வாய்ப்பூட்டு போட்டுக்கிட்டா
வந்ததை ஏத்துக்கிட்டா
பாய் போட்டு தரையில் அந்த பூந்தோகை
தன்னாலே வந்த வினை தான் சுமந்தா(பூம்பாறையில்)





POOMPAARAIYIL POTTU VACHA: http://youtu.be/_kB9JaZVjvI

Russellxor
21st September 2015, 06:47 PM
https://i.ytimg.com/vi/YMZ61ZgH2l4/mqdefault.jpg

[
'
http://i.ytimg.com/vi/Q8XoBnifvXI/sddefault.jpg


குளிக்கும் அந்த இளம் பெண்ணின் கர்வத்தை...தற்பெருமையை...

'சிந்தும் புன்னகை போதுமே!
தேசம் என்னிடம் சேருமே!'



https://youtu.be/YMZ61ZgH2l4
இந்தப்பாடல் சற்றும் நினைவில்லை.அப்போதே இரண்டு முறை பார்த்த படம்தான்.இப்பவும் அந்தப்பாடலை பார்க்கும் ஆசையும் வரவில்லை.ஆனால் உங்கள் வர்ணனையை மட்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகிறது.
படத்தில் இடம் பெற்ற "வானம் பேசுமா?"வை எழுதுங்களேன்.

ஞாபகங்கள் தாலாட்டட்டும்.
நன்றி...[emoji108]

Russellxor
21st September 2015, 06:51 PM
இன்னும் சர்க்கரை..,

.சர்க்கரைக்கட்டி சர்க்கரைக்கட்டி சந்தனப்பெட்டி
.உன் சமையலறையில் நான் உப்பா சர்க்கரையா?
.சர்க்கரை நிலவே சர்க்கரை நிலவே

vasudevan31355
21st September 2015, 08:28 PM
செந்தில்வேல் சார்,

சபாஷ். தெரிந்திருந்தும், யோசித்தும் 'சட்'டென நினைவுக்கு வரவில்லை. (சர்க்கரை)

வானம் பேசுமாவும் நல்ல பாடலே. விரைவில் எழுத முயற்சிக்கிறேன். நீங்கள் அந்தப் பாடலை பார்க்கலாம்.:)

madhu
21st September 2015, 08:45 PM
அருவிப் பாடல்களா ?

எனக்கு நினைவுக்கு வருபவை...

https://www.youtube.com/watch?v=f6efkuqrka4

அப்புறம்... இருக்கவே இருக்கு
அம்மம்மா காற்று வந்து மற்றும் தென்றலில் ஆடை பின்ன

madhu
21st September 2015, 08:47 PM
வாசு ஜி...

மூடுமந்திரம் பாட்டு மட்டுமே கேட்டிருக்கிறேன். ரொம்பப் பிடித்த பாட்டு. படம் பார்த்ததில்லை. இன்னும் இந்த வீடியோவும் பார்க்கவில்லை. அதையும் முடித்து விட்டு அப்புறம் எழுதுவேன்.

madhu
21st September 2015, 08:56 PM
அப்புறம் சர்க்கரைன்னா..

ஊத்துமலை தண்ணீரே என் உள்ளங்கை சக்கரையே.. ( கண்ணான பூமகனே ) - தண்ணீர் தண்ணீர்

சர்க்கரைப் பந்தல் நான் ( இன்பமே ) - இதயக்கனி

முத்தமிட்டு சர்க்கரை நோய் வந்தாலென்ன (மாயா மச்சீந்திரா ) - இந்தியன்

முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சர்க்கரை ( பொன்னெழில் ) - கலங்கரை விளக்கம்

தங்க கிளியே மொழி பேசு சர்க்கரை இதழால் கவி பாடு - வீரக்கனல்

சட்டென நனைந்தது நெஞ்சம் சர்க்கரையானது - கன்னத்தில் முத்தமிட்டால்

உன்னுடன் வாழும் ஒவ்வொரு நொடியும் சர்க்கரை தடவிய நொடியல்லவா (கதைகளைப் பேசும் விழி ) - அங்காடித் தெரு

சர்க்கரைப் பாகும் உந்தன் நாவில் வந்ததென்னமா ( கொடுத்துப் பார் பார் ) - விடிவெள்ளி

vasudevan31355
21st September 2015, 09:07 PM
இன்னொரு அருவிப் பாட்டு. 'சிவா' படத்துல கொடுத்து வச்ச ஜனகராஜ் 'விஜயபுரி வீரன்' மகளுடன் குளித்து மன 'சாந்தி', உடல் 'சாந்தி' அடைவார்.:)


https://youtu.be/ih0F4e2-c7I

vasudevan31355
21st September 2015, 09:09 PM
'சக்கரை வள்ளிக் கெழங்கு மாமா...........எப்படி?' சர்க்கரையில் சேருமா?:-:)

vasudevan31355
21st September 2015, 09:15 PM
இந்தி அருவிகள் பிரம்மாண்டம். அதுவும் 'ராம் தேரி கங்கா மெய்லி' அருவியை மறக்கவே முடியாது. ஆனாக்கா பாட்டை போட முடியாது.:)

chinnakkannan
21st September 2015, 09:21 PM
காலையில் சொன்னாற்போல் வாசுவைக் கொஞ்சம் தய்யாத்தக்கா எனக் குதித்து அழ வைக்க… :)

அஸ்ஸோகன், விசயகுமார்ரி.. பாட்…

சூலமங்கலம் ராஜலஷ்மி அண்ட் ஏ.எல்.ராகவன்.. படம் கைதியின் காதலியாம்..பட் லிரிக்ஸ் நல்லா இருக்குங்க்ணா.. பாட்டும் ஓகே ரகம் தான்....

https://youtu.be/-XVKM4hBipY

chinnakkannan
21st September 2015, 09:26 PM
அழுகையை நிறுத்தி அதே வாஸ்ஸு சிரிப்பதற்காக..
மை சாங் இஸ் ஃபார் யூ
மை லவ் இஸ் ஃபார் யூ
கெஸ் ஹூ ஹே கெஸ் ஹூ

போடலாம்னு நினச்சா முடியாத்.. ம்ம் எஸ்.பி.பி பாட்டு :ஸேட்: :sad: போட்டா திட்டுவார்..

vasudevan31355
21st September 2015, 09:33 PM
மலையாளக் கரையில் குஷ்பூ அருவியில் குளிக்கும் 'அனுபூதி தழுகி ஆத்யவர்ஷ மேகம்' பாடல் 'அனுபூதி' படத்தில். சித்ரா குரல் அருமை. உடன் 'கமிஷனர்' சுரேஷ்கோபி. கொஞ்சம் சர்க்கரை தூக்கல்தான்.:) வீடியோவை ஒருமுறை பார்த்துவிட்டு பாடலின் ஆடியோவை திரும்பத் திரும்ப கேட்கலாம். ஏனென்றால் இசை என் மனம் கவர்ந்த ஷ்யாம்.


https://youtu.be/KTOtUru54Fg

chinnakkannan
21st September 2015, 09:37 PM
பேயோட அருவி மலையாளப் பாட்டு முன்னால முதல் பாகத்துல பிரித்து மேய்ந்திருந்தாலும் கூட மறுபடி பார்க்கலாமோன்னோ.. :)

நிஷீதனே நிஷீதனே கேளடி என் கதையை
மோகம் மோகம் என் விரக தாகம்..


https://youtu.be/CndS2ISN7o0

vasudevan31355
21st September 2015, 09:39 PM
அழுகையை நிறுத்தி அதே வாஸ்ஸு சிரிப்பதற்காக..
மை சாங் இஸ் ஃபார் யூ
மை லவ் இஸ் ஃபார் யூ
கெஸ் ஹூ ஹே கெஸ் ஹூ

போடலாம்னு நினச்சா முடியாத்.. ம்ம் எஸ்.பி.பி பாட்டு :ஸேட்: :sad: போட்டா திட்டுவார்..

சின்னா! சாதரணமாகவே திட்டுவேன் என்பீர்கள். இப்போது இன்னும் ஒருபடி மேலே போய் நடிகர் திலகம் என்ற தேன் கூட்டிலேயே கை வைக்கப் பார்க்கிறீர்கள்.:) 'தியாகி' படத்தில் தலைவர் கன்வர்லால் ரோலில் உறுமுவார். 'கபர்தார்' அதுவேதான் உமக்கும். 'மூச்' விடப்படாது.:)

மறக்காம அழ வச்சுட்டீர். நீரும் அழுதிருப்பீர். நாம் ரெண்டு பெரும் இந்தப் பாட்டப் பார்த்து இந்த 'சின்னஞ்சிறு உலகத்தில்'

சிரிப்போம் சிரிப்போம் சிரித்துக் கொண்டிருப்போம் மூச்சும் பேச்சும் உள்ளவரை. ('கடோசி மூச்சு' நிக்கும் வரை... ராட்சஸி ரகளை)



https://youtu.be/rPI6lJxcn4c

chinnakkannan
21st September 2015, 09:54 PM
//சின்னா! சாதரணமாகவே திட்டுவேன் என்பீர்கள். இப்போது இன்னும் ஒருபடி மேலே போய் நடிகர் திலகம் என்ற தேன் கூட்டிலேயே கை வைக்கப் பார்க்கிறீர்கள். 'தியாகி' படத்தில் தலைவர் கன்வர்லால் ரோலில் உறுமுவார். 'கபர்தார்' அதுவேதான் உமக்கும். 'மூச்' விடப்படாது. //

தில்லானா மோகனாம்பாள் மனோரமா மாதிரி.. நான் பாடல சாமி..பாட் போடல சாமி.. சரியா.. :) நான் செலக்ட் பண்ணி வச்சுருக்கற சில பாட்ஸெல்லாம் எஸ்.பி.பி தான் பாடியிருக்கார் - எனக்குத் தெரியாமயே கேட்டுக்கிட்டிருந்தேன்னா நம்பணும் ..ம்ம்

சிரிப்போம் சிரிப்போம் நல்ல பாட்..முன்னால் கேட்டது..இனிமேதான் வீடியோ பார்க்..

இயர் மன் த் டேட் வச்சு ஹஸ்பெண்ட்னு பாட் வருமே போட்டாச்சா..போடலைன்னா உங்களுக்குக் காணிக்... :)

chinnakkannan
21st September 2015, 09:57 PM
இந்த ஜனகராஜ் அருவிப் பாட் தான் சொன்னீங்களா..

அருவி பத்தி ப் பேசும்போது பிரம்மாண்டமான பாகுபலி அருவியை நினைக்காம இருக்கமுடியாது.. அவ்வளவும் க்ராபிக்ஸ்னு தெரியவந்தப்போ ஆச்சரியமா இருந்தது..

இன்னும் ரெண்டு மூணு அருவிப்பாட்டு நீங்களும் மதுண்ணாவும் விட்டுப்புட்டீக.. :)

vasudevan31355
21st September 2015, 10:05 PM
//இந்த ஜனகராஜ் அருவிப் பாட் தான் சொன்னீங்களா..//

ஹய்யோ! ஹய்யோ! 'பகோடா' காதர் பாணியிலே தலையில அடிச்சிக்குறேன்.:) இந்தப் பாட்டு நல்ல பாட்டா? நான்தான் சொன்னேனே. 'விழியோரம்' பாட்டுக்கு ஈக்வல் ஆன பாட்டு. ம்...கண்டுபிடிச்சி வைங்க.

vasudevan31355
21st September 2015, 10:05 PM
//இன்னும் ரெண்டு மூணு அருவிப்பாட்டு நீங்களும் மதுண்ணாவும் விட்டுப்புட்டீக..//

அல்லாம் தெரியுமுங்க.:)

chinnakkannan
21st September 2015, 10:13 PM
//இந்த ஜனகராஜ் அருவிப் பாட் தான் சொன்னீங்களா..//

ஹய்யோ! ஹய்யோ! 'பகோடா' காதர் பாணியிலே தலையில அடிச்சிக்குறேன்.:) இந்தப் பாட்டு நல்ல பாட்டா? நான்தான் சொன்னேனே. 'விழியோரம்' பாட்டுக்கு ஈக்வல் ஆன பாட்டு. ம்...கண்டுபிடிச்சி வைங்க.

நெஜம்மாவே தலை காய வைக்கறீர்.. நீரே எழுதும்..ஸ்ஸரண்டர். :)

ஹப்புறம் பெண்டிங்க் சுபாஷிணி மேட்டர், சோ பாட் ஹீரோயின். க்ருஷ்ணா சார் எங்கே ..கல் நாயக் கடத்திட்டாரா :)

rajraj
21st September 2015, 10:31 PM
From Maragatham

maalai mayangukindra neram pachchai malai vaLarum aruvi Oram........

http://www.youtube.com/watch?v=3fS7rA13Ho0


Lyrics by Sudhanandha Bharathiyar

chinnakkannan
21st September 2015, 10:52 PM
ராஜ் ராஜ் சார்..தேடினால் இது ஒன்று தான் இருக்கிறது சுத்தானந்த பாரதியார் எழுதியது..வேறு இல்லையே.. நன்றி.

Russellxor
21st September 2015, 11:25 PM
அருவிப்பாட்டு...

ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே
குற்றால அழகை நாம் காண்பதற்கு

மற்ற அருவிப்பாட்டுகளுக்கு ஒரு கண்
இந்தப்பாட்டுக்கு ஆயிரம் கண்

rajraj
22nd September 2015, 12:27 AM
ராஜ் ராஜ் சார்..தேடினால் இது ஒன்று தான் இருக்கிறது சுத்தானந்த பாரதியார் எழுதியது..வேறு இல்லையே.. நன்றி.

N.C.Vasanthakokilam popularised his songs. If you are interested in his compositions listen to NCVs songs.

rajraj
22nd September 2015, 06:21 AM
From VaLaiyaapathi (1952)

kulungidum poovil ellaam then aruvi kandadhanaal........

http://www.youtube.com/watch?v=PIUTLcyYeP4

Lyrics by Bharathidasan.

The tune is copied from the Hindi song ' bade armanon se...' fom Malhar. I posted it in a jugalbandi.

madhu
22nd September 2015, 08:55 AM
அருவி மகள் அலையோசை.. இந்த அழகு மகள் வளையோசை
பொதிகை மலை மழைச்சாரல் உந்தன் பூவிதழின் மதுச்சாரல்...

madhu
22nd September 2015, 08:59 AM
உயிரா மானமான்னு கேட்டா இவரு "жизнь" or "самоуважение" என்று சொல்கிறார்..

https://www.youtube.com/watch?v=BIVSyDEm_2g

madhu
22nd September 2015, 09:00 AM
இது தமிழில் பெருகும் அமெரிக்க அருவி

https://www.youtube.com/watch?v=TtNF9vvE4ZA

chinnakkannan
22nd September 2015, 10:16 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..

மதுண்ணா, செந்தில்வேல், வாசு.. அருவிப் பாடல்களுக்கும் சர்க்கரைப் பாடல்களுக்கும் தேங்க்ஸ்..

அருவிகூட இனிமையாக சுரங்களைத் தேடுதுஎன ஒரு கெளரி மனோகரி பாட்டு நினைவுக்கு வருகிறது..பாட்டில் திருவையாறு பேக் க்ரெளண்ட் வரும்..

அட இப்படி அலசியதாய் நினைவிலில்லையே..பின்னணியில் தெரியும் இயற்கை..பேக்க்ரெளண்ட்..

சமீபத்திய ஒரு படத்தில் அனுஷ்கா சூர்யா பாடும் ஒரு சின்னத்தாமரை.. பாட்டோட பேக் க்ரெளண்ட் மஸ்கட்டிலிருந்து துபாய் போகும் வழியில் மலைகளும் மணல்கள் கொஞ்சம் கருமை வண்ணம் கொண்டது போல் காட்சியளிக்கும் இடத்தில் எடுக்க ப் பட்டது என நினைக்கிறேன்..ஹிந்தி ரேஸில் கூட லண்டன், ஸ்விஸ் எல்லாம் சொல்லி சேஸின் போது மஸ்கட் சாலைகளைக் காண்பித்திருப்பார்கள்..

நம்ம ஊர் ப் படங்களுக்கு க் கோவில்கள், அணைகள் தான்..இன்னும் இந்தக் கர்ணன் பாடல் எந்தக் கோவில் என்று தெளிவாக எனக்குத் தெரியாது..மஞ்சு பார்கவி சங்கராபரணத்தில் ஆடுவதும் இதே கோவில் போலவே இருக்கும்..

இது போல் சொல்லலாமே..

rajeshkrv
22nd September 2015, 10:29 AM
வணக்கம் சிக, வாசு ஜி, மதுண்ணா

vasudevan31355
22nd September 2015, 11:23 AM
சின்னா!

'கர்ணன்' பாடல் படமாக்கப்பட்ட இடம் கர்நாடகாவில் உள்ள புகழ்பெற்ற Halebidu என்னுமிடமாகும். (Kedareshwara Temple) அற்புதமான சிற்பங்கள் உள்ள கோவிலாகும். தலைவர் இங்குள்ள இடங்களில் நடந்து வரும் அழகே அழகு.

http://www.esamskriti.com/photograph/9-IMG_0610.jpg

Hoysaleswara Temple

https://upload.wikimedia.org/wikipedia/commons/7/7e/An_entrance_into_the_Hoysaleshwara_temple_in_Haleb idu.jpg


http://i.ytimg.com/vi/96WAGOzyBTs/hqdefault.jpghttp://i.ytimg.com/vi/nBEP4tl7NRk/hqdefault.jpghttp://i.ytimg.com/vi/F127oAkgaXw/hqdefault.jpg
http://www.goodlanka.com/uploads/thumbs/7a8782d94-1.jpghttps://i.ytimg.com/vi/5m2UsFq4yJY/hqdefault.jpghttp://i.ytimg.com/vi/WeDiod06xYw/hqdefault.jpg

RAGHAVENDRA
22nd September 2015, 11:24 AM
http://www.inbaminge.com/t/s/Sengottai%20Singam/

செங்கோட்டை சிங்கம் படத்தில் ஒரு பாடலுண்டே... தேனருவி பாதையிலே ஓ ஆசை மாமா...

RAGHAVENDRA
22nd September 2015, 11:28 AM
https://www.youtube.com/watch?v=xbc2ZK6RTgg

அருவியின் பின்னணியில் அபிநய சரஸ்வதி...

அருமையான பாடல் .. ஆஹா.. ஜிக்கியின் குரலில் சொக்குதே மனம்...

RAGHAVENDRA
22nd September 2015, 11:33 AM
https://www.youtube.com/watch?v=ZvohO2QAA1s

ஆஹாஹா.. ஆசை தீர பேசலாமே ஊஞ்சல் மேலே..

ஆனால் இது நாம் நினைக்கிற ஊஞ்சலில்லே... இவங்களோட ஊஞ்சல் எது என்று பாடலைப் பாருங்கள்..

அருவியின் பின்னணியில் இன்னொரு பாடல்..

செங்கோட்டை சிங்கம் படம் மட்டும் கலரில் எடுக்கப்பட்டிருந்தால் உள்ளம் கொள்ளை போயிருக்கும்.. படம் முழுதும் இயற்கை அழகு கொஞ்சும் வன மற்றும் மலைப்பிரதேசம்.. படத்தில் உதயகுமார் மேலாடை அணிந்த காட்சிகளை விரல் விட்டு எண்ணி விடலாம்.

கன்னட சினிமாவில் மிகப் பிரபலமான ஜோடியாக உதயகுமார் சரோஜாதேவி வலம் வந்த போது அந்த சென்டிமென்டை வைத்து அவர்களைத் தமிழில் நாயகன் நாயகியாக நடிக்க வைத்து எடுக்கப்பட்ட படமே செங்கோட்டை சிங்கம்..

அருமையான படம்..

RAGHAVENDRA
22nd September 2015, 11:35 AM
செங்கோட்டை சிங்கம் படத்தை இது வரை பார்க்காதவர்களுக்கக

முழுப்படத்திற்கான காணொளி

https://www.youtube.com/watch?v=ZvohO2QAA1s

ஆனால் இந்த காணொளியில் தேனருவி பாதையிலே பாடல் இடம் பெற்றதாகத் தெரியவில்லை.

eehaiupehazij
22nd September 2015, 11:50 AM
காதல் மன்னரின் மறக்க முடியாத கிளைமாக்ஸ் மதுர கீத காட்சிகள் !

பகுதி 1 கல்யாண பரிசு / ரோமன் ஹாலிடே


ஒரு படத்தைப் பார்க்கிறோம் கதையமைப்பின்படி நகரும் காட்சிக்கோர்வையை ரசிக்கிறோம் இனிய இசையமைப்பிலும் பாடல்காட்சிகளிலும் லயிக்கிறோம்!
பெரும்பாலும் ஒரு படத்தின் வெற்றி இடையிடையே வரும் காட்சிகளை விட அதன் கிளைமாக்ஸ் அமைப்பில்தான் உறுதி செய்யப்படுகிறது என்பது எனது தாழ்மையான கருத்து ! சிறந்த உதாரணங்கள் நடிகர் திலகத்தின் கர்ணன், புதிய பறவை, அந்த நாள், கௌரவம்...பாசமலர், வீரபாண்டிய கட்டபொம்மன்...காதல் மன்னரின் கல்யாணபரிசு, சுமை தாங்கி, சாந்தி நிலையம்.....ரவிச்சந்திரனின்
அதே கண்கள்....ஜெய்யின் நூற்றுக்கு நூறு.....ஹிட்ச்காக்கின் திகில் படங்கள்...முக்கியமாக சைக்கோ , வெர்டிகோ.... ஜேம்ஸ் பாண்ட் படங்கள்....கிரிகரிபெக்கின் ரோமன் ஹாலிடே........வெற்றிக்கோட்டையில் கொடிநாட்டிய காவியங்கள்!

கிளைமாக்ஸில் சொதப்பிய படங்கள் பெரும்பாலும் வெற்றியைக் கோட்டைவிடுகின்றன !

அந்தவகையில் கல்யாணப் பரிசு திரைப்படத்தில் விரக்தியோடு இலக்கின்றி போகும் திசையறியாது மனமும் உடலும் தள்ளாட காதலிலே தோல்வியுற்ற காதலனின் மொத்த உருவகமாக ஜெமினி ஒரு லாங்க்ஷாட்டில் சில்லவுட்டாக முதுகாட்டி நடந்து செல்லும் மகோன்னதமான காட்சி என் மனத்தைக் கவர்ந்த கிளைமாக்ஸ் ஆகும் !!

https://www.youtube.com/watch?v=NKfebNrglqY

ஆனால் ஸ்ரீதர் இந்தக் காட்சியை ரோமன் ஹாலிடே படத்தின் கிளைமாக்சில் கிரிகரிபெக் காதல் நழுவிய துக்கம் தொண்டையடைக்க நம்மை நோக்கி விரக்தியுடன் நடந்து வரும் ஷாட்டைத்தான் இன்ஸ்பிரேஷனாக கொண்டிருக்க முடியும்!!

https://www.youtube.com/watch?v=kIxNV9DSEwA

RAGHAVENDRA
22nd September 2015, 11:53 AM
http://media-images.mio.to/by_artist/P/PB.%20Sreenivas/PB%20Sreenivas%20Sanskrit%20Devotionals/Art-350.jpg

இன்று அமரர் பி.பி.ஸ்ரீநிவாஸ் பிறந்த நாள். வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாத பல பாடல்களைத் தந்த கந்தர்வக் குரலோன். இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் இனிக்கும்..

சரசா பி.ஏ. படத்தில் இரவின் மடியில் உலகம் உறங்கும்...

உள்ளே ஒருவன் உறங்குகின்றானே..
வெளியே ஒருவன் உலவுகின்றானே...
எல்லாம் தெரிந்தும் ஊமையைப் போலே
இருக்கின்றானே என் தலைவன்.. தலைவன்...தலைவன்...

என்ன கருத்தாழமிக்க வரிகள்...
வேதாவின் இசையில மெய்மறக்கச் செய்யும் பாடல்


https://www.youtube.com/watch?v=t9PVo_dlm6M

eehaiupehazij
22nd September 2015, 11:53 AM
[QUOTE=vasudevan31355;1253240]சின்னா!

'கர்ணன்' பாடல் படமாக்கப்பட்ட இடம் கர்நாடகாவில் உள்ள புகழ்பெற்ற Halebidu என்னுமிடமாகும். (Kedareshwara Temple) அற்புதமான சிற்பங்கள் உள்ள கோவிலாகும். தலைவர் இங்குள்ள இடங்களில் நடந்து வரும் அழகே அழகு.

வாசு சார்
அது ஹம்பி என்னும் புராதன இடம் என்று கேள்வி. ஹலிபாடுதான் ஹம்பியா என்று தெரியவில்லை!!

RAGHAVENDRA
22nd September 2015, 11:54 AM
செங்கமலத்தீவு படத்தில் விசில் துணையுடன்.. சூப்பர் ஹிட் பாடல்..

என்னைப் பார்த்தால் பரிகாசம்...

https://www.youtube.com/watch?v=x-qGJdNBqjo

eehaiupehazij
22nd September 2015, 11:55 AM
In line with Raghavendhra Sir
My Heartfelt birthday wishes to the lotus feet of immortal PBS!

https://www.youtube.com/watch?v=F0xW0-EfOrQ

RAGHAVENDRA
22nd September 2015, 11:56 AM
https://www.youtube.com/watch?v=kwnWPA8AT28


மலரைப் பறித்தாய் தலையில் வைத்தாய்... இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் மனம் அப்படியே லயித்து விடும்..

RAGHAVENDRA
22nd September 2015, 11:59 AM
நெஞ்சை நினைவலைகளில் மூழ்க வைக்கும் இன்னுமோர் இனிய பாடல்..

யானைப் பாகன் படத்திலிருந்து ..
அதே உதயகுமார் சரோஜாதேவி ஜோடி...

துள்ளி விழும் அருவியைப் போல்...

https://www.youtube.com/watch?v=HLcXlk29DLA

RAGHAVENDRA
22nd September 2015, 12:01 PM
பி.பி.எஸ்.சின் குரலில் இன்னுமோர் மதுர கீதம்...

மகளே உன் சமர்த்து படத்தில் ஜி.கே. வெங்கடேஷ் இசையில்,...

இசையரசியின் குரலும் இணைந்து நம்மை மெய்மறக்கச் செய்யும் இனிய பாடல்..

https://www.youtube.com/watch?v=Is9bbeAU8Vg

ஜி.கே.வி. அவர்கள் மெல்லிசை மன்னரிடம் பணி புரிந்து வந்த போதே தனியாகவும் இசையமைத்து வந்த கால கட்டத்தில் வெளிவந்த படம். இந்தப் பாடல் மெட்டு அப்படியே தென்றல் உறங்கிய போதும் பாடலை நினைவூட்டும். காட்சியமைப்போ வீரத்திருமகன் பாடாத பாட்டெல்லாம் பாடலை நினைவூட்டும்.

RAGHAVENDRA
22nd September 2015, 12:11 PM
a tribute to the legend from a budding artist..

chinna chinna kannanukku ennathan punnagaiyo

https://www.youtube.com/watch?v=fiyEflS7NjU

RAGHAVENDRA
22nd September 2015, 12:11 PM
And now, the original

https://www.youtube.com/watch?v=c8UIq19_dY4

RAGHAVENDRA
22nd September 2015, 12:12 PM
https://www.youtube.com/watch?v=wt9lkVLJB6U

WOW.. what a crystal clear print.. Hope all Tamil films come out in this quality

RAGHAVENDRA
22nd September 2015, 12:14 PM
Maayamani mix ...

https://www.youtube.com/watch?v=mBevPvn2cdg

Kalaa mangaiyo

RAGHAVENDRA
22nd September 2015, 12:16 PM
https://www.youtube.com/watch?v=75xnJ-q1huM

Another mix of the original Jimbo. PBS song.. rare one..

RAGHAVENDRA
22nd September 2015, 12:17 PM
And my ALLLLLLLLLLLLLLLLLLLLL TIME FAVOURITE....................

WHAT A SONG... இப்படி ஓர் இனிமையான பாடலை இதற்கு முன்னும் பின்னும் நான் கேட்டதில்லை..

மலரோடு விளையாடும் தென்றலே வாராய்... எஸ்.ஜானகியின் குரலில் இவ்வளவு குழைவா...

https://www.youtube.com/watch?v=ziK_PXAfMpM

RAGHAVENDRA
22nd September 2015, 12:21 PM
பி.பி.எஸ்.அவர்களுக்கு உலக முழுதும் லட்சக்கணக்கான ரசிகர்களை உருவாக்கிய பாடல்.. இதற்குப் பிறகு தான் மக்கள் பி.பி.எஸ்.சின் பக்கம் கவனத்தைத் திருப்பினார்கள்... முதல் வெளியீட்டிலிருந்தே சூப்பர் டூப்பர் ஹிட்டான பாடல்...

பாதை தெரியுது பார் ... இந்தப் படத்தை சாமான்ய மக்களும் இன்றும் நினைவில் வைத்திருக்க ஒரே காரணம்....

https://www.youtube.com/watch?v=Dw77uCP_PdI

chinnakkannan
22nd September 2015, 12:26 PM
வாசு கர்ணன் பட புகைப்படங்களுக்கும் தகவலுக்கும் நன்றி.. சி.செ க்ளைமேக்ஸ் ஈவ்னிங்க் தான் பார்ப்பேன்..ரைட் அப்பிற்கு தாங்க்ஸ்..ஜி..வாங்க வாங்க.

ராகவேந்தர் சார்ர்.. அருவி மழைப் பாடலகளுக்கும் பி.பி.எஸ்ஸின் மழையருவி போன்ற் இன்னிசைப் பாடல்களுக்கும் மிக்க தாங்க்ஸ்.. பி.பி.எஸ்..என்னுடைய ஃபேவரிட் சிங்கர்..

எங்கேயோ பார்த்த முகம் ...

மலரைப் பறித்தாய் தலையில் வைத்தாய்

பார்த்துப் பார்த்து நின்றதிலே பார்வையிழந்தேன்..

நெஞ்சம் அலைமோதவே

பறக்கும் பறவையும் நீயே

செக்கச்சிவந்த் இதழோ இதழோ பவழம் பவழம் செம்பவழம்.. ஹூம் வி.கு..

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..

ஒரு பெரிய லிஸ்ட்ட்ட்ட்டே இருக்கு.. ஒரு முறை தரிசித்துப் பரவசத்துடன் எதுவும் பேசாமல் உட்லண்ட்ஸில் சாம்பார் வடை மட்டும் சாப்பிட்டு வந்ததைப் பற்றி இன்னும் வருத்தம் உண்டு எனக்கு..

ஹப்புறம் வர்றேன்..

chinnakkannan
22nd September 2015, 12:28 PM
வாசு..இந்த ஃபோட்டோக்கள் எல்லாம் யூஎஸ்பியில் தனியாக வைத்திருக்கிறீர்கள் தானே.. என்ன ஒரு கடின உழைப்பு..உங்கள் ரைட்டிங்க்ஸிற்கும் பேக்கப் வைத்திருக்கிறீர்கள் தானே.. ஹச்சோ ஒண்ணு சொல் மறந்த் போச்..( ந.தி அண்ட்) தேவிக் ஃபோட்டோஸ்க்கு தாங்க்ஸ்.. :)

vasudevan31355
22nd September 2015, 12:43 PM
[QUOTE=vasudevan31355;1253240]சின்னா!

'கர்ணன்' பாடல் படமாக்கப்பட்ட இடம் கர்நாடகாவில் உள்ள புகழ்பெற்ற Halebidu என்னுமிடமாகும். (Kedareshwara Temple) அற்புதமான சிற்பங்கள் உள்ள கோவிலாகும். தலைவர் இங்குள்ள இடங்களில் நடந்து வரும் அழகே அழகு.

வாசு சார்
அது ஹம்பி என்னும் புராதன இடம் என்று கேள்வி. ஹலிபாடுதான் ஹம்பியா என்று தெரியவில்லை!!

செந்தில் சார்,

தலைவர் லாங் ஷாட்டில் நடந்து வரும் படத்தையும், நான் அளித்துள்ள படத்தையும் பாருங்கள். இரண்டும் ஒரே இடம். அதாவது Hoysaleswara Temple. ஹலபேட் என்று தமிழக மக்களால் அழைக்கப்படுகிறது. நான் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு போய் விட்டு வந்தேன்.

https://upload.wikimedia.org/wikipedia/commons/7/7e/An_entrance_into_the_Hoysaleshwara_temple_in_Haleb idu.jpg

http://i.ytimg.com/vi/96WAGOzyBTs/hqdefault.jpg

vasudevan31355
22nd September 2015, 12:49 PM
.//உங்கள் ரைட்டிங்க்ஸிற்கும் பேக்கப் வைத்திருக்கிறீர்கள் தானே//

இல்லை சின்னா! எதற்கும் பேக்-அப் எடுத்து வைக்கவில்லை. 'துளி விஷம்' கூட எடுத்து வைக்கவில்லை. சோம்பேறித்தனம், நேரமின்மைதான் காரணம். பாலா தொடர் மட்டும் கரெக்ட்டாக எடுத்து வைத்து வருகிறேன். ஆடியோ, வீடியோ மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் சேர்த்து. 100 முடிந்தவுடன் முதல் தவணையாக அனைத்தையும் பாலாவிடம் கொடுத்துவிட வேண்டியதுதான். இன்னும் 63 இருக்கே. அப்பாடா! எப்போ முடிப்பது?

ராகவேந்திரன் சாரின் 'பொங்கும் பூம்புனல்' தொடரை இப்போதுதான் சேகரிக்கத் தொடங்கியுள்ளேன். முழுசாக கலெக்ட் செய்தபின் ஒரே பக்கத்தில் லிங்க் கொடுப்பதாக உத்தேசம். அதே போல 'இன்றைய ஸ்பெஷலு'ம்.

chinnakkannan
22nd September 2015, 01:44 PM
எதற்கும் பேக்-அப் எடுத்து வைக்கவில்லை. //சோம்பல் எல்லாம்படாதீர்கள் வாசு.. எம்.எஸ் வர்ட் தானே..அதில் தானே சேமித்து போஸ்ட் செய்கிறீர்கள்.. இனிமேல் ஆரம்பியுங்கள்..

இஸ்பெ, பொ.பூ இன்னொரு இழை போல் போட்டு ஒட்டுக்க க் கொடுத்தீர்கள் என்றால் மன்றமையம் உள்ள அளவும், வலை உள்ள் அளவும் இருந்து உங்கள், ராகவேந்திரரின் பெயர் சொல்லும்.. மொத்தமாகப் படிக்கும் அழகே அழகு. இன்னும் ந.தி படக் கட்டுரைகளையும் ஒரு ஃபோல்டரில் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.. சரியா..

நிறைய எழுதிய விஷயங்கள் எல்லாம் முரசு அஞ்சலிலில் இருந்து யூனிகோட்க்கு மாறிய போது போய்விட்டது..ம்ம் அந்த வருத்தம் என் மன ஆழத்தில் இருக்கிறது.

chinnakkannan
22nd September 2015, 01:45 PM
தலைவர் லாங் ஷாட்டில் நடந்து வரும் படத்தையும், நான் அளித்துள்ள படத்தையும் பாருங்கள். இரண்டும் ஒரே இடம். அதாவது Hoysaleswara Temple. ஹலபேட் என்று தமிழக மக்களால் அழைக்கப்படுகிறது. நான் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு போய் விட்டு வந்தேன். // வாசு.. போனது சரி..கட் கட் கட்டுரை எங்கே..

எங்கே இரண்டு பதிவுகளுக்கு மிகாமல் சுவாரஸ்யமாக உங்கள் நடையில் எழுதுங்கள் பார்க்கலாம்.. சமர்த்தோன்னோ :)

RAGHAVENDRA
22nd September 2015, 01:57 PM
உங்கள் ராகவேந்திரரின்

சி.க. சார்
உங்களுக்கும் தான்...

madhu
22nd September 2015, 02:00 PM
And my ALLLLLLLLLLLLLLLLLLLLL TIME FAVOURITE....................

WHAT A SONG... இப்படி ஓர் இனிமையான பாடலை இதற்கு முன்னும் பின்னும் நான் கேட்டதில்லை..

மலரோடு விளையாடும் தென்றலே வாராய்... ஜமுனா ராணியின் குரலில் இவ்வளவு குழைவா...



ராகவ் ஜி... அது ஜமுனா ராணி அல்ல...எஸ்.ஜானகியின் குரல்.

இந்தப் பாட்டை தனிமையில் இருக்கும்போது கேட்டாலும் சரி.. கூட்டத்தில் இருக்கும்போது ஹெட்போனில் கேட்டாலும் சரி... நம்மை எங்கேயோ தூக்கிக் கொண்டு போய்விடும்..

madhu
22nd September 2015, 02:01 PM
கம்ப்யூட்டர் கைவசம் இல்லை. இது அண்ணன் வீட்டிலிருந்து அவசரப் பதிவு. நிதானமாக வந்து படிக்கணும்..

madhu
22nd September 2015, 02:03 PM
தாயின் கருணை பாடலும் ஏற்கனவே பதிவானதுதான் என்று நினைக்கிறேன்.

ஆனாலும் என்றும் இனிமை குறையாத பாடல்களில் இதுவும் ஒன்றல்லவோ

https://www.youtube.com/watch?v=zgoxSlDf_so

chinnakkannan
22nd September 2015, 02:33 PM
சி.க. சார்
உங்களுக்கும் தான்...

உங்கள், ராகவேந்திரரின் என்றிருக்க வேண்டும்.. கமா விட் போச்.. ராகவேந்தர்சார்.. நீர் என்றும் எங்களவர் தான்..

RAGHAVENDRA
22nd September 2015, 03:24 PM
'துளி விஷம்' கூட எடுத்து வைக்கவில்லை

வேண்டாம் சார், துளி கூட எடுத்து வைக்காதீர்கள்...அதற்கு அவசியமும் இல்லை.. நம் மனிதர்கள் நடுவே எப்போது வேண்டுமானாலும் 24 x 7 கிடைக்கக் கூடியதாயிற்றே...

RAGHAVENDRA
22nd September 2015, 03:26 PM
நன்றி மது.. அதென்னவோ தெரியவில்லை.. என்ன மாயமோ தெரியவில்லை.. கொஞ்சம் குரல் இழைவாகக் கேட்டு விட்டால் உடனே மனம் ஜமுனாராணி பெயர் சொல்லி விடுகிறது..

பதிவிலும் திருத்தி விடுகிறேன்.

gkrishna
22nd September 2015, 04:11 PM
நண்பர்கள் அனைவரின் வாழ்த்திற்கும் வரவேற்பிற்கும் மிக்க நன்றி

இறக்கை கட்டி பறக்குதையா மதுரகானம் திரி பாகம் 5 .
சு எ சு கலைச்செல்வி உதடு சுருக்கி அழைக்கும் மது ஸ்டில் அபாரம்
நமது திரி கொட்டட்டும் ' ஜெயா' பேரிகை .

மது என்றுடன் எனக்கு நினைவிற்கு வந்தது .
கிளாப் கிளாப் சுனந்தனி கூப்பிடும் 'மதுக்கண்ணா' .
(எந்த தண்ணீர் குடிச்சாங்க தெரியல) கரகர (ப்ரியா) ஹலம் கூப்பிடும் 'மது மது ' .ஸ்வீட்டி ஜெயப்ரதா கூப்பிடும் 'மது டியர்'.

ஏகப்பட்ட பாட்டுகள் அலசபடுகின்றன. எதைப்படிக்க எதை விட என்று தெரியவில்லை.

நேற்று கேரளாவில் குமிளிக்கு ஒரு தனியார் ஜீப்பில் அலுவலக நண்பர்கள் உடன் பயணித்தேன். ஜெயம் ரவி நடித்த பேராண்மை திரைப்படம் படப்பிடிப்பு நடந்த குட்டிகானம்,பாம்பனார் போன்ற பகுதிகளை கண்டு ரசிக்க முடிந்தது.

http://img1.holidayiq.com/photos/ku/Kumily-10434-0-jpg-uploadimages-travel-619x240-1334909005-cropped.jpghttp://tamil.gallery/images/2010/09/Peranmai-336.jpg

1985-2000 கால கட்டகங்களில் ராஜாவின் ராஜாங்கம் என்ற பாடல் தொகுப்பு கொண்ட CD ஒலித்து கொண்டு வந்தது. பாடல்கள் அனைத்திலும் tabelaa வாத்தியம் கொடி கட்டி பறந்தது.

சில பாடல்கள் ஒரே மெட்டு போன்றே தோன்றியது . எடுத்துகாட்டாக
'“பெரிய வீட்டு பண்ணக்காரன்” படத்திலிருந்து கே.ஜே. யேசுதாஸ் மற்றும் சித்ரா அவர்களின் குரலில் “மல்லிகையே மல்லிகையே தூதாக போ” மற்றும் சின்னவர் திரைப்படத்தில் இருந்து "கொட்டுங்கடி கொட்டு நாயனம் காற்றினில் " பாலாவின் அமுத குரல்


நட்புடன்

கிருஷ்ணா ஜி

chinnakkannan
22nd September 2015, 04:28 PM
ஆஹா...வாங்க கிருஷ்ணாஜி.. என்னவொரு இயற்கையான புகைப்படங்கள்.. (யாரங்கே.. நான் முதல் போட்டோவைத் தான் சொன்னேன் :) ) பேராண்மை எனக்குப் பிடித்த படமும்கூட.. க்ளைமேட் எப்படி இருக்கிறது..

ஒரு மெட்டுக்குப் பாட்டெழுதி அது செலக்ட் ஆகாமல் அந்தப்பாட்டுக்கு வேறு ஒரு பாட்டு எழுதிவிட்டாராம் கவிஞர். முதலில் எழுதிய பாட்டை வேறொரு மெட்டுக்கு உபயோகப் படுத்தி விட்டாரம்..புரியுது ஆனால் புரியலை இல்லை..

தன்னனா தனன்ன தன்ன க்கு மொட்டுவச்ச வாசன மல்லி என எழுதி அது காட் ரிஜக்டட்
தென் தெ போயட் ரோட் அஸ்... ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ண்ம ஸாங்க்..

அப்புறம் கருடாசெளக்கியமாக்கு ஒரு மெட் இசையமைப்பாளர் போட இவர் எழுதிய
மொட்டு வச்ச வாசனை மல்லி
வாங்கி வந்தேன் ஆசையில் அள்ளி

அதையே உபயோகப் படுத்திக்கொண்டாராம்..அந்த மெட்டுக்கு..அந்தக் கவிஞர் வைரமுத்து..ஒரு பேட்டியில் சொன்னார் இதை..

RAGHAVENDRA
22nd September 2015, 05:11 PM
KrishnaG

http://www.animatedgif.net/welcome/ctmwelcome_e0.gif

Long time .. no see...

RAGHAVENDRA
22nd September 2015, 05:13 PM
ஆஹா...வாங்க கிருஷ்ணாஜி.. என்னவொரு இயற்கையான புகைப்படங்கள்.. (யாரங்கே.. நான் முதல் போட்டோவைத் தான் சொன்னேன் )

இரண்டாம் ஃபோட்டோ எப்படியிருந்தால் இயற்கையாக இருக்கும் சி.க. சார்... கொஞ்சம் சொல்லுங்களேன்...

ஏனென்றால் இயற்கை என்றால் இங்கே ஏகப்பட்ட அர்த்தமிருக்கு... சிவாஜியையே எடுத்துக்குங்களேன்.. அவருக்கு கொஞ்சம் கூட இயற்கை நடிப்பு ஒத்து வர மாட்டேங்குதாம்..
(நான் சொல்லவில்லை சார்....)

Russellxor
22nd September 2015, 07:43 PM
படத்தின் பெயர் சொல்ல இன்று வரை நிலைத்து ரசிக்க வைக்கும் பாடல்.முதல் இரண்டுவரிகளைமீண்டும் மீண்டும் ரீவைண்ட் செய்து கேட்டுக் கொண்டே இருக்கலாம்.பாலாவின் தேன் மதுரக்குரல் மற்ற மெலடிகளை விட இதில் குழைவு அதிகம்.
பொதுவாக சந்தோசம்சொன்னால்தான் சுகம்.ஆனால் இதில் சோகம் சொல்வதும் இதம் என்பதை பாலு பாடும்போது மயங்க வைக்கிறது.
இளையராஜா +பாலு*பிரபு கூட்டணியில் மற்றும் ஒரு சூப்பர்ஹிட் பாடல்.இன்றைய இரவு நேர தாலாட்டாக வைத்துக் கொள்ளுங்கள்.

நிலவொன்றுகண்டேன் என் ஜன்னலில்
நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்
கனவொன்று கண்டேன் உன் கண்களில்
கரைகின்ற கண் மை
அது சொல்லும் உண்மை


(நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்)

கண்ணீரின் ஈரம் சுடுகின்ற நேரம்
பனித்தோட்டம் யாவும் அனலாக மாறும்
சோகம் சொன்னால் உன் பாரம் தீரும்
பூவுக்கு வாய்ப்பூட்டு
என் சோகம் நீ மாற்று
என் வாழ்விலே தீபம் ஏற்று

(நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்)

நான் பார்ப்பதெல்லாம் உன் பார்வைதானே
நான் சொல்வதெல்லாம் உன் வார்த்தைதானே
உடல்கள் வேறு உயிர் ஒன்று தானே
நான் இங்கு நானல்ல
என் துன்பம் யார் சொல்ல
என் தெய்வமே நீ பெண்ணல்ல

(நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்)

Nilavondru கண்டேன் - எஸ்.பி.பி. - ஜானகி -. Kairaa…: http://youtu.be/AXo8i3tVPWI
படம்:கைராசிக்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி

chinnakkannan
22nd September 2015, 08:22 PM
ஹச்சோ இந்த ஆட்டைக்கே வரலை ராகவேந்திரா சார்.. இரண்டாம் போட்டோவும் இயற்கையாவே இருக்கு சரியா :) அந்த என்.சி.சி மாணவிகளின் விளையாடும் போஸ்.
இயற்கையான நடிப்பு தான்.. நான் சொன்னது முதல் போட்டோ நேச்சர் பற்றித்தான்..

ஒரு நகைச்சுவைக்காகத் தான் சொன்னேன்..

இரண்டாவது பாரா என்னை மிகவும் வேதனைப் படுத்திவிட்டது..ந.திக்கு இயற்கையாக நடிக்கத் தெரியாதா..அப்படிச் சொல்பவர்களை எல்லாம் ஏன் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் ராகவேந்தர் சார்.. அவரைப் பற்றி உங்களுக்கு நிறையத் தெரியும்.. எனக்கு ஒரு தம்மாத்தூண்டு ரசிகன் என்ற முறையில் அவரது மேக்ஸிமம் படங்களைப் பார்த்தவன் என்ற முறையில் நன்றாகவே தெரியும்....எனில் மற்றவர் சொல்வதைக் கேட்டு வருத்தப் பட வேண்டிய அவசியமில்லை..அதற்காக சண்டை போட எனக்குத் தெரியாது..உள்ளுக்குள் வைத்துப் புழுங்கவும் மாட்டேன்.. ஐ வில் இக்னோர் தெம்..

வேறென்ன சொல்வது என எனக்குத் தெரியவில்லை..

RAGHAVENDRA
22nd September 2015, 08:54 PM
சி.க. சார்
நான் அதையெல்லாம் சட்டை செய்பவனே இல்லை. பொதுவான ஒரு பேச்சை சுட்டிக்காட்டினேன்.
மற்றபடி மனம் நோகும் விஷயமெல்லாம் ஏதுமில்லை. ஸோ.. கூல்....

இதோ பாருங்கள் உங்கள் பேர், நம்ம வாசு சார் பேர் எல்லாம் நடிகர் திலகம் சொல்கிறார். கேட்டு ஆனந்தப்படுங்கள்...

https://www.youtube.com/watch?v=RvzIQsSnb-c

பாடகர் திலகத்தின் உன்னதமான குரலில், மெல்லிசை மன்னரின் சூழலுக்கேற்ற மெட்டு மற்றும் பின்னணி இசையில், காலத்தை வென்று நிற்கும் சிறந்த பாடல். என்ன ஸ்டைல்.. தலைவர் நிற்பது, நடப்பது எல்லாமே இந்தப் பாட்டில் நம்மை கட்டிப்போட்டு விடும்.

குறிப்பாக அந்த வரி... குயில் இட்ட முட்டை என்று காக்கைக்குத் தெரியும், அது கூவும் போதும் தாவும் போதும் யாருக்கும் புரியும்..
இந்த வரிகளின் போது கை விரல்களாலேயே அதைப் பற்றிச் சுட்டிக்காட்டும் பாவனை..

ஆஹா... தமிழகம் பெற்ற தவப்புதல்வனல்லவா தலைவா நீ...எனக் கூவத் தோன்றும்.

எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

ஒரு மலரும் நினைவு.. மீள் பதிவாகக் கூட வைத்துக்கொள்ளலாம்.

இந்தப் படம் 1978ல் சென்னை சாந்தியில் வெளியான போது ந.தி.யின் படப்பட்டியலை எழுதி மாடியில் லௌஞ்சில் வைத்திருந்தேன். அதைப் பற்றிய செய்திக்குறிப்பு, செப்டம்பர் 1978ல் வெளிவந்த ஆனந்த விகடன் துணுக்கு ஸ்பெஷலில் மூன்றாம் பக்கத்தில் இடம் பெற்றது, மறக்க முடியாத விஷயம்.

vasudevan31355
22nd September 2015, 11:10 PM
கிருஷ்ணா சார்!

உங்களுக்காக சின்னா சார்பில் என்னுடைய பதில் இயற்கை போட்டோ. மோகன்லாலைப் பார்த்தால் கொஞ்சம் பத்திகிட்டு எரியுதுதான்.:) ஆனால் கூட இருப்பவ்களைப் பார்த்ததும் மனம் சாந்தியடைஞ்சிடுது. விழியோரம் சில நேரம் கனவுகள் வருமோ நாயகியைப் பாருங்கள். என்னமாய் காமெரா ஸ்டேன்டை பிடித்துக் கொண்டு நிற்கிறார்! எங்கள் நெய்வேலியில் தெருவில் கடை போட்டு சேலை விற்ற மாதுரியா இவர்! நம்பவே முடியல. சின்னா வேற நிக்கும் பிகர்களைப் பற்றி விவரம் கேட்பதற்குள் நான் ஓடியே போய் விடுகிறேன்.

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xta1/v/t1.0-9/10004000_233240170211364_765354648_n.jpg?oh=ae2d80 aeea80227980d65265271e8b4a&oe=56639EA1

vasudevan31355
22nd September 2015, 11:14 PM
ஹைய்யா ஜாலி! நாளை மறுநாள் நம் செந்தில் சாரை பார்க்கப் போகிறேனே! முடிந்தால் செந்திவேல் சாரையும். அப்புறம் ராகுல்ராம்.

vasudevan31355
22nd September 2015, 11:16 PM
சிவனேன்னு முழிக்கிற இந்தக் குழந்தைங்க யாருங்கோ?

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/1186698_227169687485079_1461873135_n.jpg?oh=382cd3 07579d5e8d9beb26b9b21d3b3c&oe=569D804Bhttps://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/1958382_227425970792784_1332337195_n.jpg?oh=02f07f b2197fb56b7db48841f321eaaa&oe=56A0FF3E

madhu
23rd September 2015, 04:11 AM
முதல் போட்டோவில் இருப்பது மார்க்கண்டேயனின் வாரிசுகள்... இரண்டாவதில் பெருசு ஈயடிக்கும் வில்லன் போல தெரிகிறது. சின்னது யாரோ ? கன்னட வாரிசா ?

vasudevan31355
23rd September 2015, 05:30 AM
கரீட்டு. அதேதான்.

rajraj
23rd September 2015, 06:22 AM
From ondru pattaal uNdu vaazhvu

sala sala raagathile........

http://www.youtube.com/watch?v=28pzpPyKzz0

Lyrics: Pattukkottai KalyaNasundaram

Reminds of my summers wading in Vettar river near my ancestral village ! :)

Russellxor
23rd September 2015, 07:44 AM
ஹைய்யா ஜாலி! நாளை மறுநாள் நம் செந்தில் சாரை பார்க்கப் போகிறேனே! முடிந்தால் செந்திவேல் சாரையும். அப்புறம் ராகுல்ராம்.
welcome

chinnakkannan
23rd September 2015, 09:10 AM
ஹாய் குட்மார்னிங் ஆல்..


ராஜ் ராஜ் சார். நான் கேட்டிராத பாட்டு.. சலசல ராக்த்திலே.. பட்டுக்கோட்டையார் எனப்து ஒரு போனஸ் தகவல்..வாவ்..

சலசல ராகத்திலே
டம்மு டும்மூ தாளத்திலே
சத்தங்கள் போடுவதேன் கங்கையக்கா நீ
சங்கீதம் கத்துக்கொண்டதும் எங்கேயக்கா

.


ஆத்துக்குள்ளே நானிருக்க அக்கரையிலே மனமிருக்க
அலைமேலே அலை எழுந்து ஆளை வந்து தள்ளிடுதே
நேரத்திலே போகணும் நீண்ட கதை பேசணும்
ஆழத்தையும் தாண்டியே அன்பு முகத்தைப் பாக்கணும்
அன்பு முகத்தைப் பாக்கணும்
.
.

பச்சை மலை சாரலிலே பனியுறங்கும் பாறையிலே
படைபோலே பறவையெல்லாம் பறந்து வந்து கூடுதே

மீனும் மீனும் மேயுதே வேடிக்கையாய்ப் பாயுதே
ஆனந்தமாய்க் கண்களும் அவரை நாடிப் போகுதே
அவரை நாடிப் போகுதே ஓஓஓஓ

*

எளிமையான் இசை..எளிமையான வரிகள்.. எளிமையான அழகுள்ள நடிகை (?)

தாங்க்ஸ்ங்கோவ்..

*

வாஸ்ஸூ.. நடுவில் உள்ளது லிஸ்ஸி போலத்தெரிகிறது..இந்தக் கார்னர் யார் எனத் தெரியவில்லை - கலர்ப்படத்தில்..

ப்ளாக் அண்ட் ஒய்ட்.. படம் தெரியவே இல்லீங்கோவ்..(மதுண்ணாவின் க்ளூவும் தலை சுற்றுகிறது..)

நெய்வேலி டு கோவை ரொம்ப தூரமோன்னோ..

*

ராஜ்ராஜ் சார் உங்களுக்காக..

https://youtu.be/Cnc0cHgUR4g?list=RD2sCowEs_Yuk

Russellmai
23rd September 2015, 09:16 AM
வாசு சார்,
ஏற்றி வைத்த தீபம் ஒன்று-என்னிடத்து வந்து நின்று-பார்த்து மகிழ்ந்த
தென்னவோ-பின்னர் பாராமல் போனதென்னவோ.
நடிகர் திலகம் கூறும் இவ்வரிகள் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரினைக் கூறுங்கள்.
அன்புடன் கோபு

chinnakkannan
23rd September 2015, 09:19 AM
//விழியோரம் சில நேரம் கனவுகள் வருமோ நாயகியைப் பாருங்கள். என்னமாய் காமெரா ஸ்டேன்டை பிடித்துக் கொண்டு நிற்கிறார்! // நக்கீரன் பப்ளிகெஷன்ஸின் “ நடிகையின் கதை” படித்திருக்கிறீர்களா வாசு..

படித்தால் துக்கம் தொண்டையை அடைக்கும்.என்னால் முழுக்கப் படிக்க இயலவில்லை...சில நடிகைகளின் கஷ்டங்கள் எப்படியெல்லாம் துன்பப் பட்டார்கள் என்பது.. மாதுரியைப் பற்றியும் அதில் போட்டிருந்தார்கள்..முக்கால் வாசி நடிகைகளுக்கு வெள்ளித்திரைக்குப் பின்னால் வாழ்க்கை முச்சூடும் சோகம் தானா.. பாவம்..:sad:

eehaiupehazij
23rd September 2015, 09:21 AM
Hearty welcome Vasu Sir to Coimbatore the city of Colleges, Motors and Pumps!! Nowadays not much of Tex mills!!
senthil and on behalf of senthilvel and raghulram and Dr Ramesh Babu!

rajraj
23rd September 2015, 09:46 AM
Have fun in CBE vasu! :) The Coimbatore i knew till 1965 is not there anymore. Like any other city it is crowded and polluted. Too many shopping centers and hotels! In 2006 we visited CBE on our way to Cochin and stayed in Residency on Avinasi road. Nice hotel. When I lived there I used to fequent BBH(Bangalore Briyani Hotel). It was not there.

I am sure you will enjoy the stay ! :) Visit Marudamalai for a change !

Russellxor
23rd September 2015, 11:32 AM
கலர் பாடல்கள்

1.சிவப்பு விளக்கு எரியுதம்மா
2.மஞ்சள் முகம் நிறம் மாறி
3.பச்சை நிறமே
4.நீலக்குயில்கள் ரெண்டு
5.ஊதா கலரு ரிப்பன்
6.ரோஸ் ரோஸ் ரோஸ் ரோஜாப்பூவே
7.வெள்ளைப்புறா ஒன்று
8.கறுப்புதான் எனக்குபுடிச்ச கலரு

வேறு கலர்கள்?

chinnakkannan
23rd September 2015, 12:39 PM
செந்தில்வேல்.. இதோ..கலர்ஸ் :)

**

இசையும் கதையும்..

*

சின்னக் கண்ணன்.

*

கலர்ஸ்..
*
முன் கதைச் சுருக்கம் (?!) நான் சுந்தரா..அவள் மைவிழி.. இரண்டு அத்தியாயங்களாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்!

*
3. நாடக மேடை…..திரையில்லை… நாயகி வந்தாள் கவி பாடி!
****************.
காதலில் மைவிழிப் பார்வையும் என் பார்வையும் எக்ஸ்சேஞ்ச் ஆகி உயிரும் எக்ஸ்சேஞ்ச் ஆகியிருந்தது என போன தடவை சொல்லியிருந்தேன்..

ஆனால் அப்படி உயிர் எக்ஸ்சேஞ்ச் ஆகியிருந்ததைப் புரிவதற்கே எனக்கு/engalukku ஒன்றரை வருடங்களுக்கு மேலாகியிருந்தது..

காதல் என்பது எந்தக் கணமும் பூக்கும் மலரும் என்பது உண்மை தான்..ஆனால் காதல்வயப்பட்டவர்கள் காதலனோ காதலியோ மற்றவர்களின் நினைவிலேயே உருகுவார்கள் என்பதெல்லாம் கதையில் நடக்குமே தவிர வாழ்க்கை என்பது வேறு..

எனக்கும் ஒரு சில கனவுகள் எல்லா வாலிபர்களைப் போல இருந்தது.. நிறையப் படிக்க வேண்டும்.. பெரிய பதவி, நிறையச் சம்பாதிக்க வேண்டும் என ஆசைகள் இருந்ததேயொழிய பெண்களின் நினைவுகள் அவ்வளவாக எழுந்ததில்லை எனலாம்..

பின்ன என்ன வர்ணிக்கவெல்லாம் செய்தாய் என்றால் என்னைப் பற்றி எழுதுபவர் செய்த செயல் அது..!

பின்னர் எங்கள் காதல் வளர்ந்த விதம் என்பதை விட எங்களுடைய சந்திப்புக்கள் ஆடிக்கொரு நாள் அமாவாசைக்கு ஒரு நாள் என்பது போல
அவள் என் வீடு வரும் பொழுதும், என் சகோதரி கல்யாணம் முடித்து ஒருவருடம் கழித்து வந்த போது அவளுடைய அக்கா பூவிழி வீட்டிற்குக் கூட்டிச் செல்லச் சொன்ன போதும் தொடர்ந்தது..

அப்போதும் கூட மையூவின் அழகெல்லாம் என் மனதில்புகுந்து இம்சிக்கவில்லை.. நெஜம்மா... நான் சொல்வதை நீங்கள் நம்பித் தானாக
வேண்டும்..

காதலனோ காதலியோ -தனிமையில் இருக்கும் போது மற்றவரை நினைத்துக் கனவு கண்டு எக்ஸ்ட்ரீம் எல்லைக்கெல்லாம் போவது என்பது ஒரு வகையில் ஹம்பக் தான்..மேக்ஸிமம் கொஞ்சம் ப்யாலஜிக்கல் நீட்ஸினால் கிளுகிளுப்பு தான் இருக்குமே யொழிய ரியல் லைஃபில்யாரும் கண்ணே மணியே கற்கண்டே கரும்புச் சாறே என்றெல்லாம் கனவு காண்பதில்லை..

தேவாமிர்தம் தேனிதழ்கள்
தேவதை இல்லை நான் வந்தேன்

மார்பின் அகலம் குன்றங்கள்
மலர்கள் இல்லை நான் வந்தேன்…..

என்றெல்லாம் டூயட் பாடுவதில்லை..!

கொஞ்சமே கொஞ்சமாக ஈர்ப்பு இருக்கிறது எனத்தெரிந்து.. வழக்கம் போல ப்ரபோஸெல்லாம் பண்ணாம்லேயே ஒரு நாள் தனிமையில் – அவள் வீட்டில் தான் ஹேய் ஐ லவ்யூடி எனச் சொன்னபோது அவள ப்ளஸ்டூ முடித்துக் கல்லூரியில் சேர்ந்த்திருந்தாள்.. நான் கல்லூரி முடித்து ஐ.சி.டபிள்.யூ ஏ கரெஸ்பண்ண ஆரம்பித்திருந்தேன்..

யோசிக்கவெல்லாம் செய்ய்யாமல் மி..டூ சுந்தரா..பட் பேச்சு மட்டும் வச்சுக்கலாம் என்றாள் கைகளைப் பற்றியவாறு..

சின்னதாய்க் கண்ணிமைகள் படபடக்க பட் நான் காலேஜ் முடிக்கணும்.. நீ ஒரு குட் ஜாப்ல உட்கார்ந்து செட்டில் ஆகணும் தென் ஒன்லி வி கேன் கோ ஃபார் மேரேஜ்”என என் மனதில் உள்ளதையே சொல்ல நானும் கண் சிமிட்டி அங்கீகரித்தேன்..

இந்தக் கதையெல்லாம் கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு முந்தையவை எனச் சொல்ல அவசியமாகிறது..

மதுரையில் நிறைய இடங்கள் கிடையாது காதலர்கள் சுற்றுவதற்கு.ராஜாஜி பார்க், மீனாட்சி கோவில் ரொம்ப தூர அழகர் கோவில் என வெகுசிலவே அந்தக்காலத்தில்..எனில் எனக்குத் தெரிந்த அவளுக்கும் தெரிந்த ஒரு சீக்ரெட் இடத்தில் சம்டைம்ஸ் வீ யூஸ்ட் டு மீட்..

செய்ண்ட் மேரீஸ் பள்ளியிலிருந்து செய்ண்ட் ஜோசப் பள்ளிக்குச் செல்லும் சாலையில் சற்றே போய் உடனே வலது கைப்பக்கம் திரும்பும் சாலையில் கொஞ்சம் சென்று வளைந்தால் ஒரு இடுகாடு வரும்..அதையும் தாண்டி கொஞ்ச தூரம் நடந்தால் பே எனப் பரந்து விரியும் மைதானம்..புல்தரைகள் மரங்கள் எல்லாம் இருக்கும்..அது நான் படித்த செ.மே. பள்ளிக்குச் சொந்தமானது என நினைக்கிறேன்..அங்கு தான் ஸ்போர்ட்ஸ் நாட்கள் எல்லாம் நடக்கும்..மற்ற் நாளில் ஈ காக்காய் இருக்காது..

(இப்போதும் அப்படியே இருக்கிறதா என்றும் தெரியாது)

என் வாழ்க்கையில் நடந்த்தைச் சொல்ல அந்த இடம் ஒரு அவசியமாகிறது..

என் வாழ்க்கையில் இருந்த அந்த நாளுக்கு உங்களை அழைத்துச் சென்றால்..:



என்ன நடக்கிறது..

https://youtu.be/yvbDJYvl1r0?list=PL4SxysG_X0Wm-AlpRZL5QsJ3M37XN7STO

chinnakkannan
23rd September 2015, 12:40 PM
இசையும் கதையும்..

*

சின்னக் கண்ணன்.

*

கலர்ஸ்..
*

*
3. நாடக மேடை…..திரையில்லை… நாயகி வந்தாள் கவி பாடி!

**** தொடர்ச்சி..


***

“தன்முகத்துச் சுட்டித் தூங்கத் தூங்கத் தவழ்ந்துபோய்
பொன்முகக் கிண்கிணி ஆர்ப்ப ப் புழுதி அளைகின்றான்
என்மகன் கோவிந்தன் கூத்தினை இள மாமதீ
நின் முகம் கண்ணுள ஆகில், நீ இங்கே நோக்கிப் போ……

அதாவது மையூ, என் சன் கோவிந்த் இருக்கானே அவன் முகத்தில இருக்கற நெற்றிச் சுட்டியானது டபக் டபக்குனு பலதடவை அசையுது.அதில் உள்ள மணிகள் எல்லாம் கலகலன்னு ஒலியெழுப்புது அப்படியே தவழ்ந்து போய் டஸ்ட் டெல்லாம் அளைஞ்சுண்டிருக்கான்..ஓ..மூனே.. உனக்கு ஐஸ்னு ரெண்டு இருந்துச்சுன்னா இந்தப் புள்ளையோட கூத்தைப் பார்னு அர்த்தம்” என சீரியஸாக நான் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே “யே” என்று கண்ணைக் கசக்க ஆரம்பித்தாள் மைவிழி..

“யோவ்.. உன் பேர் என்ன”

“சுந்தரா” விழித்தேன்..

“என்ன பண்ற இப்போ..”

“ஐசிடபிள்யூ ஏ பண்றேன்.. இண்ட்ட்ர் ஓவர் ஃபைனல் ல ஒரு பேப்பர் பாக்கி”

“ஃப்யூச்சர்ல”

“கொஞ்ச நாள்ள துபாய் போய்டுவேன்..பாங்க் ஃபோன் இண்டர்வியூல தேறிட்டேனாம்.. அத்திம்பேர் சொன்னார்..விசா வந்துடும்.. அப்புறம் ஒரு வருஷத்துல வந்து உன்னைக் கட்டிக்கினு இஸ்துக்குவேன்.. சரி தெரிஞ்ச விஷயத்தை ஏன் கேக்கற”

“பேசாதே.. நான் யாரு”

“என்னோட ஐடெக்ஸ் கண்ணு..” முறைத்தாள்..

இப்ப என்ன பண்ணிக்கிட்டிருக்கேன்..

மீனாட்சி காலேஜ்ல பி.எஸ்ஸி பிஸிக்ஸ்.. செகண்ட் இயர் ..எத்தனை வருஷம் படிக்கப் போறயோ..

யோவ்.. இது என்ன இடம்..

என்னடி..கேள்வியா கேக்கற அவுட்க்ரெளண்ட்.. அதாவது செய்ண்ட்மேரிஸ் ஸ்கூலோட அவுட்க்ரவுண்ட்னு சொல்வாங்க..ஸ்போர்ட்ஸ்லாம் இங்க தான் நடக்கும்.. நாம இருக்கற இடம் அழகான நிழல் தரக்கூடிய மரத்தடி.. கொஞ்சம் வெய்யிலா இருந்தாலும் அதோட எஃபெக்ட் இங்க இல்லை.. பசும்புல் வெளில்லாம் இருக்கு..இன்னிக்கு வீக்டே ஆனதினால யாரும் விளையாட வரலை..

இந்த இடத்தைச் சொன்னது யாரு..

நீதான்

கூட்டிக்கிட்டு வந்தது

நான் தான்..

டேய்.. ஒரு சிறுவயசுப் பொண்ணு ஒரு வீக்டேல்ல ஷையெல்லாம் விட்டுட்டு ஸோ கால்ட் லவ்வரோட தனியாவந்தா என்ன அர்த்தம்..

ஸத்தியமா புரியலை எனச் சொல்லிச் சிரித்தேன்.. முறைத்தாள்

என்ன திடீர்னு பாசுரம்லாம் படிக்கற..

நீ தான் மூஞ்சை மூஞ்சைப்பார்த்துக்கிட்டிருந்த..ஒன் முத் கொடுக்கவும் விடமாட்டேங்கற.. தள்ளி பஃப்னு டாலாட்டமா உட்கார்ந்துண்டிருக்க ஏதாவது பேசேன்ன..இன்னிக்குக் காலைல கேட்ட எம்.எஸ் பாட் நினைவுக்கு வந்தது..அதான் சொன்னேன்..

யோவ்.. நீ எல்லாம் ஒரு ஆளு..ஒனக்கு நானொரு ஆளு.. ஒனக்குன்னு ஒரு வண்டி..

கொஞ்சம் தள்ளிப் பார்க் பண்ணியிருந்த என் லேம்ப்ரெட்டாவை முறைத்தாள்..

ஏன் இதுக்கென்ன குறைச்சல்.. என்ன பிக்கப்.. அண்ணா வச்சுருந்தான்..அவன் ராஜ் தூத் வாங்கிட்டதால் எனக்குக் கொடுத்துட்டான் .. நல்லாத்தானே இருக்கு.. சினிப்ரியா வரைக்கும் வந்தயே..ஒடம்பு வலிச்சதா என்ன..

நீ எங்கே என்னை ப் படம் பார்க்கவிட்டே..ச்சும்மா ச்சும்மா கை நீட்டிக்கிட்டிருந்த.. தட்டிவிடறதுக்கே டயம் சரியா இருந்துச்சு..ஆமா ராஜ்தூத்னா சொன்னே

ஆமாம்…

நான் மரத்தடியில் சாய்ந்து உட்கார்ந்திருக்க அவள் சற்றே தள்ளி அமர்ந்திருந்தாள்..ரொம்ப தூரமும் இல்லை..ரொம்ப கிட்டவும் இல்லை..

இல்லை..இங்கருந்து பாக்கறச்சே ஒரு வண்டி இரண்டு மரத்துக்குப் பின்னால தெரியறது.. ராஜ் தூத்னு தான் நினைக்கறேன்.. உங்க அண்ணன் வண்டி என்ன கல.ர்..

சிகப்புக் கலர்..

ஹை..இதுவும் சிகப்புத் தான்.. குழந்தைத் தனமாகச் சொன்னாள்..

ஊர்ல ஆயிரத்தெட்டு சிவப்பு வண்டி இருக்கு


..கொஞ்சம் அனிச்சைச் செயலாய் எழுந்து எட்டிப்பார்த்தேன்.. வெளிறினேன்..

ஏனெனில் பக்கத்து மரத்தடியில் ராஜ்தூத் பக்கத்தில் இருந்தது…..என் அண்ணனே தான்..கூடவே இருந்தது…..பூவிழி!

https://youtu.be/ff2Xtqty4p4

தொடரும்.

vasudevan31355
23rd September 2015, 03:53 PM
//வாஸ்ஸூ.. நடுவில் உள்ளது லிஸ்ஸி போலத்தெரிகிறது..இந்தக் கார்னர் யார் எனத் தெரியவில்லை - கலர்ப்படத்தில்..//

இடது மாதுரி வலது அஸ்வினி.

vasudevan31355
23rd September 2015, 03:56 PM
மிக்க நன்றி ராஜ்ராஜ் சார். கோவை பற்றி பழைய மலரும் நினைவுகளா?

//Visit Marudamalai for a change ! //

முயற்சி செய்கிறேன் சார்.

vasudevan31355
23rd September 2015, 03:58 PM
செந்தில்வேல் சார்,

பி.எம்.பார்க்கவும்.

vasudevan31355
23rd September 2015, 04:00 PM
வாசு சார்,
ஏற்றி வைத்த தீபம் ஒன்று-என்னிடத்து வந்து நின்று-பார்த்து மகிழ்ந்த
தென்னவோ-பின்னர் பாராமல் போனதென்னவோ.
நடிகர் திலகம் கூறும் இவ்வரிகள் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரினைக் கூறுங்கள்.
அன்புடன் கோபு

'எங்கிருந்தோ வந்தாள்' கோபு சார்.

vasudevan31355
23rd September 2015, 04:14 PM
//ப்ளாக் அண்ட் ஒய்ட்.. படம் தெரியவே இல்லீங்கோவ்..(மதுண்ணாவின் க்ளூவும் தலை சுற்றுகிறது..)//

//முதல் போட்டோவில் இருப்பது மார்க்கண்டேயனின் வாரிசுகள்... இரண்டாவதில் பெருசு ஈயடிக்கும் வில்லன் போல தெரிகிறது. சின்னது யாரோ ? கன்னட வாரிசா ?//

சின்னா!

தலையில் கேப் போட்டுக் கொண்டு சூர்யா. அவரின் இடது பக்கத்தில் வழக்கம் போல கள்ளப் பார்வை பார்த்துக் கொண்டிருப்பவர் தம்பி கார்த்தி. இதைத்தான் மார்கண்டேயன் வாரிசுகள் என்று மதுண்ணா குறிப்பிட்டுள்ளார்.

பக்கத்து போட்டாவில் 'நான் ஈ' வெற்றிப்படத்தின் பிரதான வில்லன் சுதீப். (முக ஜாடை அப்படியே இருக்கிறதே) அவர் பக்கத்தில் நிற்கும் குட்டிப் பையன் கன்னட சூப்பர் ஸ்டார் வீரப்பன் புகழ் ராஜ்குமாரின் புதலவர், கன்னட உலகின் பிரதான நடிகர் புனித ராஜ்குமார். இதைத்தான் மதுண்ணா கன்னட வாரிசு என்று சொன்னார்.

http://www.top10cinema.com/dataimages/22274-a.jpghttp://www.indiancinemagallery.com/images/profile/thumb_Puneeth-Rajkumar-304.jpg

இதை சரியாக சொல்லலாமல் உமக்குத் தலை சுற்றியதால் உம்மை ஆறாவது வகுப்பிலிருந்து நான்காம் வகுப்பிற்கு கிளாஸ் இறக்கம் செய்கிறேன்.:)

vasudevan31355
23rd September 2015, 04:18 PM
//விழியோரம் சில நேரம் கனவுகள் வருமோ நாயகியைப் பாருங்கள். என்னமாய் காமெரா ஸ்டேன்டை பிடித்துக் கொண்டு நிற்கிறார்! // நக்கீரன் பப்ளிகெஷன்ஸின் “ நடிகையின் கதை” படித்திருக்கிறீர்களா வாசு..

படித்தால் துக்கம் தொண்டையை அடைக்கும்.என்னால் முழுக்கப் படிக்க இயலவில்லை...சில நடிகைகளின் கஷ்டங்கள் எப்படியெல்லாம் துன்பப் பட்டார்கள் என்பது.. மாதுரியைப் பற்றியும் அதில் போட்டிருந்தார்கள்..முக்கால் வாசி நடிகைகளுக்கு வெள்ளித்திரைக்குப் பின்னால் வாழ்க்கை முச்சூடும் சோகம் தானா.. பாவம்..:sad:

படித்திருக்கிறேன் சின்னா. உங்களைப் போலவே வேதனையும் பட்டிருக்கிறேன். ஆனால் கொஞ்சம் ஓவராகவே அளந்திருப்பார்கள்.

vasudevan31355
23rd September 2015, 04:26 PM
செந்திவேல் சார்,

'கைராசிக்காரன்' பாடல்கள் பலமுறை கேட்டாலும் அலுக்காதவை. 'நிலவொன்று கண்டேன்' எப்போதும் என் வாய் முணுமுணுக்கும் பாடல். அதே போல 'சில்க்'கும் பிரபுவும் பாடும் 'தேன் சுமந்த முல்லைதானா' பாடலும் பிடிக்கும். அருமையான பாடலை அளித்துள்ளீர்கள். 'இளையதிலக'த்தின் பாடல்கள் பல எனக்கு ரொம்பப் பிடித்தவை. அது பற்றி நேரம் கிடைக்கும் போது ஒவ்வொன்றாக பகிர்ந்து கொள்கிறேன். நன்றி!

அதிலும் பாலா

'பூக்கள் மொத்தமாய் வீழ்ந்ததால் பூமியும் நொந்தது
பாவை பாதமே பட்டதால் ஆறுதல் கண்டது
தீண்ட வந்த தென்றல் இன்று தாண்டவில்லை பெண்ணைக் கண்டு'

என்று பாடுவது

ஓஹோ!


https://youtu.be/P9W6bu9_omk

Russellmai
23rd September 2015, 05:29 PM
கலர் பாடல்கள் தொடர்ச்சி
1)மஞ்சள் முகமே வருக
2)கூந்தல் கருப்பு
3)பச்சை மரம் ஒன்று
4)பச்சைக்கிளி முத்துச்சரம்
கோபு

vasudevan31355
23rd September 2015, 05:41 PM
பேபி ராணியுடன் 'சித்தி'க்குப் பிறகு பத்மினி கொஞ்சி மகிழும் பாடல் 'குழந்தைக்காக' படத்தில். சுசீலா அம்மாவின் ஸ்வீட் குரலில் இதமாய் ஒலிக்கும். குறிப்பாக,

'பாலுக்கு வெண்மை படைத்தவன் எவனோ
பாப்பாவைப் படைத்தது அவன்தானே
பாப்பாவைப் படைத்த கைகளினாலே
பால் போன்ற நிலவைப் படைத்தானே'

அப்புறம் கேப் விட்டு, கேப் விட்டு அந்த குரல் அமிர்தமாய் இன்பம் தருமே!

முத்துரதம் ஏறும்

நிலவுக்கு நாங்கள்

கொட்டி வைத்த வைரம்

நட்சத்திரமாகும்

பூமாலை வெண்மேகமே!

இவ்வளவு அருமையான பாடலில் ஆரம்பத்தில் குழந்தைக்கு அன்னமூட்டும் பத்மினி மேலாடை சரிய போஸ் தந்து நிற்பது யாரைத் திருப்திபடுத்த என்று தெரியவில்லை.:) இந்தப் பாடலுக்கு இது நல்லாயில்லை.


https://youtu.be/Q1pb7zfCaag

இதே போல இயக்குனர் பத்மினியை மிக அற்புத பாடலான 'தொட்டுப் பாருங்கள்....ஜோடிப் பூவைப் போலக் கன்னங்கள்' (எனக்குப் பைத்தியமான பாடல். சுசீலா அம்மாவின் இன்னொரு அற்புதம். 'வாட்டம் உண்டு இங்கே! தோட்டக்காரன் எங்கே?' 'தொட்டுப் பா.........ருங்கள்' என்று 'பா' வை ஒரு இழு இழுப்பார் பாருங்கள். ஈடு இணை செய்ய முடியாத பாடகி) பாடலில் கவர்ச்சியாட்டம் போட வைத்து ராமதாஸ், மேஜர், மனோகர் இவர்களுடன் பார்வையாளர்களை சேர்த்து சந்தோஷப்பட வைத்திருப்பார்.

எது எப்படியோ இரண்டு பாடல்களும் கேட்க கேட்க அவ்வளவு சுகம். கேட்பவர்கள் கேட்டு விடுங்கள். பார்க்கிறவர்கள் மெய் மறந்து பார்த்துக் கொண்டிருங்கள்.:)


https://youtu.be/03ninGnTUAg

vasudevan31355
23rd September 2015, 05:44 PM
'தை மாத மேகம்' பாடல் போலவே 'தை மாதப் பொங்கலிட்டு' என்று சுசீலா பாடும் பாடல் ஒன்று உண்டு. 'நிலவே நீ சாட்சி' என்று நினைக்கிறேன். வீடியோ கிட்டுமா?

chinnakkannan
23rd September 2015, 08:09 PM
வாசு.. குழந்தைக்காக ரெண்டு பாட்டுமே அழகு.. அப்படி ஒன்றும் விரசமாகத் தெரியவில்லை.. நன்றி..

தைமாதை ப்பொங்கலிட்டு தேடினால்.. தைப்பொங்கல் பாட்டு த் தான் கிடைக்கிறது..தீர்த்தக் கரை தனிலே ச்ண்பகப் புஷ்பங்களே போட்டாச் தானே..

அடடா.. மார்க்கண்டேயர் என்றவுடன் நினைவுக்கு வந்திருக்க வேண்டும் இல்லையே. நான் ஈ சுதீப் சாயலெல்லாம் நான் பார்க்கவில்லையே நன்றி செண்பகப் பாண்டியனின் சந்தேகத்தைத் தீர்த்ததற்கு.. அஸ்வினி.. ஆனந்தக் கும்மி தானே..?

எந்தக் காதல் பாட்டானாலும் எஸ்.பி.பி தான் வருகிறார் அந்தக்க் காலப் பாட்டுக்களில்.. நீர் திட்டினாலும் பரவாயில்லை..ஒரு பாட் போட்டுக்கட்டா..அத்தியாயத்துக்கு செலக்ட் செய்து எடுத்துவைத்திருந்த பாடல்களில் 80 பர்சண்ட் எஸ்.பி.பி.


நெய்வேலிகோவை ட்ரெய்னா பஸ்ஸா..


ஊட்டி வரை உறவு இன் இந்தப் பாட்டு படத்தில் வராதாமே..எனக்கு நினைவிலில்லை..


https://youtu.be/vXr9_eFiuDc

chinnakkannan
23rd September 2015, 08:20 PM
கருப்பு தான் எனக்குப் பிடிச்ச கலரு
ஜிங்கிச்சா ஜிங்கிச்சா செகப்புக்கலரு ஜிங்கிச்சா
மஞ்சள் வெயில் மாலையிலே
நீலவண்ணக் கண்ணனே உனது எண்ணமெல்லாம் நானறிவேன்
வெள்ளை மனம் உள்ள மச்சான்
அழகிய செந்நிற வானம் – அழகிய பாடல் போட்டாச் ?

https://youtu.be/wDiwXWkMU0M

ரெண்டு பேருமே யார்னு தெரியலை...

vasudevan31355
23rd September 2015, 08:39 PM
//நெய்வேலிகோவை ட்ரெய்னா பஸ்ஸா..//

பஸ்தான் சின்னா! நேற்றே ஆன்லைனில் புக்கிங் பண்ணியாச்சு. இன்னும் ஒரு மணி நேரத்தில் கிளம்பணும். 7 மணி நேரப் பயணம்.உங்களை மாதிரியே ஊருக்கு புறப்படறச்சே அவசரமா பதிவு போடுறேன்.:)

vasudevan31355
23rd September 2015, 08:41 PM
//எந்தக் காதல் பாட்டானாலும் எஸ்.பி.பி தான் வருகிறார் அந்தக்க் காலப் பாட்டுக்களில்.. நீர் திட்டினாலும் பரவாயில்லை..ஒரு பாட் போட்டுக்கட்டா..அத்தியாயத்துக்கு செலக்ட் செய்து எடுத்துவைத்திருந்த பாடல்களில் 80 பர்சண்ட் எஸ்.பி.பி.//

. பாவம்...புள்ள கெஞ்சுது.:) போடுங்க சின்னா! நான் எங்கப்பா திட்டினேன்? அப்பப்பா வைவேன்.:) அவ்ளோதான்.

chinnakkannan
23rd September 2015, 08:46 PM
திடீர்னு பார்த்தா ஒரு பாட் சிக்கிச்சு..ஷாக்காயிட்டேன்..:)

எஸ்.எஸ். ஆர் லதா.. ஏங்க என்னதாங்க நடந்தது..?!

அது போட்டாச்?

அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்காக..சிலுச்சிலு குளுகுளு..

https://youtu.be/kEz09v7wPxI?list=PL2EC83F9FF28FCF6B

chinnakkannan
23rd September 2015, 08:50 PM
//பாவம்...புள்ள கெஞ்சுது. போடுங்க சின்னா! நான் எங்கப்பா திட்டினேன்? அப்பப்பா வைவேன். அவ்ளோதான்.// :) :) ஓ.கே.. சமர்த்தா போய்ட்டு வாங்க.. செந்தில் செந்தில்வேல் இருவரையும் ரொம்ப க் கேட்டதா சொல்லுங்க.. மருதமலை போனீங்கன்னா.. மயில் ரொம்ப இருக்குமாம் முருகனைப் பார்த்துட்டு பார்த்துவாங்க..அழகா இருக்கும் ( நான் நெஜம்மாவே பறவை மயில் சொன்னேங்க)

vasudevan31355
23rd September 2015, 08:50 PM
சின்னா!

நல்லா ஏமாந்தீரா? அது ஊட்டி வரை உறவு படத்தில் வரும் 'ராஜ ராஜஸ்ரீ ராணி வந்தாள்' பாட்டுத்தான். ரீமிக்ஸில் யாரோடும் பேசக்கூடாது பாட்டின் ஆடியோவைப் போட்டு கலந்து கட்டி விட்டார்கள். அநியாயத்துக்கு ஏமாளியாய் இருக்கீரே! இந்தாங்க 'ராஜ ராஜஸ்ரீ ராணி வந்தாள்'


https://youtu.be/hlUCEDlM-Wk

vasudevan31355
23rd September 2015, 08:51 PM
//அது போட்டாச்?//

இரட்டை மனிதன்

chinnakkannan
23rd September 2015, 08:54 PM
ல்லா ஏமாந்தீரா? அது ஊட்டி வரை உறவு படத்தில் வரும் 'ராஜ ராஜஸ்ரீ ராணி வந்தாள்' பாட்டுத்தான். ரீமிக்ஸில் யாரோடும் பேசக்கூடாது பாட்டின் ஆடியோவைப் போட்டு கலந்து கட்டி விட்டார்கள். அநியாயத்துக்கு ஏமாளியாய் இருக்கீரே! இந்தாங்க 'ராஜ ராஜஸ்ரீ ராணி வந்தாள்// ஹச்சோ அத முழுக்க கேக்க வேற கேட்டேன்.. தெரிஞ்ச மாதிரி இருக்கேன்னு வேறு ஒரு சம்சயம்.. ஸோ அந்தப் பாட்டு படத்துல இல்லையா..

vasudevan31355
23rd September 2015, 08:55 PM
//மருதமலை போனீங்கன்னா.. மயில் ரொம்ப இருக்குமாம் முருகனைப் பார்த்துட்டு பார்த்துவாங்க..அழகா இருக்கும் ( நான் நெஜம்மாவே பறவை மயில் சொன்னேங்க)//

மருதமலையிலே '16 வயதினிலே' ஓடுதா என்ன?:)

vasudevan31355
23rd September 2015, 08:57 PM
//அத முழுக்க கேக்க வேற கேட்டேன்//

உதட்டசவை கூடவா கவனிக்கிறதில்ல? நாலாங் கிளாஸ்ல இருந்து ரெண்டாங் கிளாஸுக்கு மாத்திட்டேன்.:)

vasudevan31355
23rd September 2015, 08:58 PM
//ஸோ அந்தப் பாட்டு படத்துல இல்லையா//

லேது:)

vasudevan31355
23rd September 2015, 09:01 PM
சின்னா!

இந்தாங்க நீங்க போட நெனச்சுது. சரியா? தன்வினை தன்னைச் சுடும். பெரியவா சொன்னது பொய் இல்ல.:)


https://youtu.be/4O4W1yeiBpk

Russellmai
23rd September 2015, 10:22 PM
வாசு சார்,
எங்கிருந்தோ வந்தாள் திரைப்படத்தில் இடம் பெற்ற,என் மனம் கவர்ந்த நான் உன்னை அழைக்கவில்லை-என் உயிரை அழைக்கிறேன் என்ற
பாடலைப் பதிவிடுங்கள்.
அன்புடன் கோபு.

chinnakkannan
24th September 2015, 01:19 AM
கோபு, இந்தாருங்கள்..


https://youtu.be/XNOjcAZJoSM

chinnakkannan
24th September 2015, 01:20 AM
//சின்னா!

இந்தாங்க நீங்க போட நெனச்சுது. சரியா? தன்வினை தன்னைச் சுடும். பெரியவா சொன்னது பொய் இல்ல.// டிஸ்லைக் திஸ் போஸ்ட்.. நற நற :)

நான் போட நெனச்சேன்னு சொன்னேனா என்ன..போட்டாச்சான்னு தானே கேட்டேன்..

rajeshkrv
24th September 2015, 02:11 AM
வாசு சிக மதுண்ணா எல்லாம் பட்டய கிளப்புகிறார்களே
அடி தூள்

madhu
24th September 2015, 06:10 AM
கோபு ஜி...

"ஏற்றிவைத்த தீபம் ஒன்று" என எங்கிருந்தோ வந்தாளில் ந.தி. சொல்லும் கவிதை எந்தப் படத்தில் என்று கேள்வி எழுப்பி விட்டு அதிலிருந்தே நான் உன்னை அழைக்கவில்லை என்று மறுத்துப் பேசுவது நியாயமா ?

வாசு ஜி..

கோவைக் கனிகளை கொத்தாமல் சங்கீதப் பழரசம் பிழிந்து கொண்டு வாருங்கள்.....

நானும் அவசரப் பதிவுகள்தான்.. என்ன சொல்ல என்ன சொல்ல ? எத்தனை பதிவு கொட்டிக் கிடக்குது ? ( படிப்பதற்கு !! )

சிக்கா.. மேற்கண்ட வரிகளை பாட்டாகவே படித்து விட்டு அந்தப் பாடலில் வீடியோவையும் பார்த்து விட்டு கோபப் பட்டால் கம்பெனி பொறுப்பில்லை.

ராஜேஷ்.... இசையரசியின் குரலில் ஒரு தொடர் போடுங்கோ..

RAGHAVENDRA
24th September 2015, 08:46 AM
சின்னா!

இந்தாங்க நீங்க போட நெனச்சுது. சரியா? தன்வினை தன்னைச் சுடும். பெரியவா சொன்னது பொய் இல்ல.:)


https://youtu.be/4O4W1yeiBpk

வாசு சார்
ஆனாலும் சி.க.வை நீங்கள் இப்படிப் பழி தீர்த்திருக்க வேண்டாம்... பாவம்.. சி.க.


பெரிவா சொன்னது பொய் இல்லை.. விதி வலியது...

rajraj
24th September 2015, 08:49 AM
From Paava Mannippu

ellorum koNdaaduvom....

http://www.youtube.com/watch?v=27nZJEdKEvw

rajeshkrv
24th September 2015, 09:17 AM
மதுண்ணா இசையரசி தொடர் தானே போட்டுட்டா போச்சு

நீங்க சொல்லி கேட்க மாட்டேனா ... ஆமா வேலனோடு ஒரே ஊர் சுற்றல் போல .. ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

chinnakkannan
24th September 2015, 09:38 AM
குட்மார்னிங்க் ஆல்..

ஈத் பெரு நாள் வாழ்த்துக்கள்..


//ஆனாலும் சி.க.வை நீங்கள் இப்படிப் பழி தீர்த்திருக்க வேண்டாம்... பாவம்.. சி.க// அதானே ராகவேந்தர் சார்.. எனக்கு பத் வி.கு பாட் கொடுத்தார் நான் ஒண்ணே ஒண்ணு வி.கு பாட் கொடுத்தேன்..அதுக்கே இப்படி..பேசாம தமிழ் சினிமாலல நியூ வில்லன் ரோல்க்கு ட்ரை பண்ணச் சொல்லலாமா.. :)

வாங்க ராஜேஷ்..ஹைய்யா இசையரசி தொடரா..எய்துங்க எழுதுங்க..

தாங்க்ஸ் பார் ஈத் விஷஸ் ராஜ் ராஜ் சார்..

முந்தா நாளிலிருந்து நான் இருக்கும் காம்பெளண்டில் கார்பார்க்கிங்க்ல் ஐந்தாறு ஆடுகள் வந்து இற்ங்கி விட்டன.. மேலும் பத்துபன்னிரண்டு ஆடுகள் வைக்க இடமில்லாமல் ஃப்ளாட்டின் மொட்டை மாடியில் டிஷ் ஆண்ட்டென்னா அருகிலேயே கட்டிப் போட்டு... செப்டம்பர் மாதத்தில் ...ஒரே “மே” சத்தம்...

நேற்று விடுமுறை இன்று விடுமுறை.. நாளை, நாளைமறு நாள் யூஸ்வல் வீக் எண்ட் என நாலு நாள் லீவ் என்றாலும் போன, முந்தைய வருடங்களைப் போல ஒன்பது நாட்கள் லீவ் விடாததில் இங்குள்ளவர்களுக்கு (இந்த நாட்டுக்காரர்களுக்கு) வருத்தமே..

நேற்றும் சில பல ஆஸ்திரேலியன் செம்மறி ஆடுகள் வந்திறங்கின..

புதன் கிழமை ஈவ்னிங்க் அலுவலக நண்பரிடம் கேட்டேன்..போன தட்வை ஆட்டின் விலை - குட்டி ஆடு பத்துப் பதினைந்து கிலோ தேறுகின்ற ஒன்றின் விலை போன வருடம் 50 ரியாலாம்.. (கிட்டத்தட்ட 8500 ரூபாய்) இப்போ எவ்ளோ இருக்கும்னு தெரியலை என்று கொஞ்சம் கவலையுடன் சொன்னார்..

ம்ம... ஆடு பாடல்கள் என ப் பார்த்தால்..

செம்மறி ஆடே செம்மறி ஆடே செய்வது சரியா சொல்

ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி இந்தாளைப் பாரு..

ஆடுவது வெற்றி மயில்..(இது வேற ஆடு..!)

வேறென்ன ஆடு இருக்கு..

RAGHAVENDRA
24th September 2015, 09:46 AM
இதோ ஒரு ஆடு பாடல்

https://www.youtube.com/watch?v=YNwwNagH_VE

நீங்க சொன்னது இந்த 'ஆடு' தானே

RAGHAVENDRA
24th September 2015, 09:49 AM
https://www.youtube.com/watch?v=LjZ_5UfE6RM

நான்: ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி ..(சி.க) மாமாவைப் பாரு... அவருக்கு என்னா வேணும்னு கேளு...

ஆட்டுக்குட்டி: ... அவருக்கு நல்ல பாட்டு இருந்தா போதும்.. வேறெதுவும் வேணாம்... அது எனக்குத் தெரியும்.. நீங்கள்ளாம் கொஞ்சம் ஒதுக்கிக்குங்க.. எப்பப் பாத்தாலும் லொள்ளு பண்ணிக்கிட்டு...

RAGHAVENDRA
24th September 2015, 09:52 AM
மது..

தமிழகம் சுற்றும் வேலனோடு பயணம் சிறப்பாக அமையட்டும்.

RAGHAVENDRA
24th September 2015, 09:52 AM
ராஜேஷ்
இசையரசியின் பாடல்கள் பற்றிய தொடருக்கு காத்திருக்கிறோம்.
அபூர்வமான பாடல்களை வெளிக்கொணருங்கள்.

rajraj
24th September 2015, 09:54 AM
வேறென்ன ஆடு இருக்கு..

Here is one from Rambaiyin Kaadhal

saanchaa saayira pakkame saayira semmari aadugaLaa......

http://www.youtube.com/watch?v=Osuwl_FCMWI

madhu
24th September 2015, 10:17 AM
ரா (ஜேஷ் மற்றும் கவ்ஜி )

பத்தில் ஒரு பங்கு இடங்களுக்குக் கூட நான் செல்லவில்லை. ஆனால் படங்களைப் பார்த்தால் ( வசூல் ராஜா படத்துக்கு கேரளாவில் ஜெய்சூரியா படத்தை முக்கால் போஸ்டருக்கு அடித்திருந்தார்கள்) நானும் உலகம் சுற்றுபவன் போலத் தெரியுது..

என்னவோ போங்கோ... வேட்டையாடுங்கோ.. விளையாடுங்கோ

https://www.youtube.com/watch?v=XxR53NQB7AU

madhu
24th September 2015, 10:21 AM
அப்புறம்..

ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக்குட்டி வந்த பதினாறு வயதினிலே பாட்டு....
ஒண்ணு ரெண்டு மூணூ நாலு அஞ்சு ஆறு
எல்லா ஆடும் இருக்குதான்னு அப்படின்னு லேட்டஸ்டா போஸ்ட் செஞ்ச கண்ணில் தெரியும் கதைகள் பாட்டு
வாடா கண்ணே வெள்ளாடு வாயிருந்தால் சொல்லி விடு என்ற தங்கதுரை பாட்டு
ஆட்டத்தை ஆடு புலியுடன் ஆடு... எனும் சபதம் பாட்டு
ஆட்டுக்கு வாலை அளந்து வச்சவன் புத்திசாலி என்ற புத்திசாலிகள் பாட்டு

chinnakkannan
24th September 2015, 11:16 AM
//நான்: ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி ..(சி.க) மாமாவைப் பாரு... அவருக்கு என்னா வேணும்னு கேளு...

ஆட்டுக்குட்டி: ... அவருக்கு நல்ல பாட்டு இருந்தா போதும்.. வேறெதுவும் வேணாம்... அது எனக்குத் தெரியும்.. நீங்கள்ளாம் கொஞ்சம் ஒதுக்கிக்குங்க.. எப்பப் பாத்தாலும் லொள்ளு பண்ணிக்கிட்டு...// ராகவேந்திரர் சார் :) :) தாங்க்ஸ் ஆடு பார்க்கலாம் ஆடு..இன்னிக்கு பாக்க முடியாது..பிரியாணி ஆகியிருக்கும்..

ராஜ்ராஜ்சார்..சாஞ்சா சாயறபக்கம் பாட்டுக்கு தாங்க்ஸ்..ஃபேமஸ் பாட்டு அது..இல்லியோ.. ரம்பையின்காதல் பள்ளிப் பருவத்தில் பார்த்த படம்..கோபத்தில் தங்கவேல் நண்பர்களை எருமையே கழுதையே எனத் திட்டிவிட தேவலோகம் போய்வந்த அருளினால் அவர்கள் அப்படியே மாறிவிட அவர் அம்மா வந்து..அடப்பாவி இதுவரை மனுஷங்களோட ஃப்ரெண்ட்ஸா இருந்த்..இப்போ எருமை கழுதையோட இருக்க என வருத்தப்பட..அவற்றைத் தொட்டு அம்மா இவன் ரங்கன் இவன் சங்கன் எனத் தொட்டுச் சொல்ல அவர்கள் சுய உருவம் பெறும் காட்சி ஹிலாரியஸ் ஆக இருக்கும்..

மதுண்ணா..வேட்டையாடு விளையாடு மற்றும் ஆடு பாடல்களுக்குத் தாங்க்ஸ்.. ராஜஸ்தான் ரெஸ்டாரெண்ட் எங்கிட்டு இருக்கு.. வசூல் ராஜா போஸ்டர் உவமை அழகு.. :)

chinnakkannan
24th September 2015, 11:24 AM
செம்மறி ஆடே செம்மறி ஆடே செய்வது சரியா சொல்..இதுவரை இங்கு வரவில்லை என நினைக்கிறேன்..

செவத்த பொண்ணு என்று வருகிறது..சே..லிரிக்ஸில மிஸ்டேக் :)


https://youtu.be/PrneRsXjiZ0

sss
24th September 2015, 03:06 PM
ஆடுகள் நனைகின்றன என்கிற படத்தில் வாணி ஜெயராம் பாடிய " ஆடு நனைசிதாம்" என்ற பாடல் ....

http://www.mediafire.com/listen/w3a7y3kpcm46xmq/Aadu_Nanajchaa_VJ_Aadugal_Nanaigindrana.mp3

ஆடு என்றால் கடா வும் அதில் சேர்த்தி தானே. வளர்த்த கடா முட்ட வந்தால் ... கல்தூணை சேர்க்கலாமா ?

வளர்த்த கடா என்றே ஒரு படம் உண்டு ஆடு பாடல் ஏதும் கிடைக்க வில்லை...

அனுராதா "ஆடு ஆடு" ன்னு ஆடுற பாட்டு உங்களுக்கு....

https://www.youtube.com/watch?v=tkxLh_RlN-w

chinnakkannan
24th September 2015, 05:18 PM
நன்றி சுந்தர பாண்டியன் சார்..

யெஸ்..ஆடுகள் நனைகின்றன மதுரை ஸ்ரீதேவியில் 3 நாட்கள் ஓடி அதில் ஒரு நாள் பார்த்து மறு நாள் படத்தையே மாற்றி வேறு ஒரு பழைய படம் போட்டிருந்தார்கள்..கதானாயகி ரூபா என நினைவு.. வளர்த்த கடா என்றவுடன் வாகை சூடவா வில் வரும் ஒரு கடா நினைவுக்கு வருகிறது.. ஹீரோ அதனிடம் நீஎன்ன புலியா எனக் கேட்டு முட்டு வாங்குவார்..

Russellxor
24th September 2015, 07:28 PM
ராஜாகண்ணு லாரி டிரைவரின் ரயில் பாட்டு



பச்சைப்பசேல் என்று எங்கும் மரம் செடிகள் நிறைந்த பகுதி.கண்களுக்கு ரம்மியமான காட்சி. கூட்ஸ் ரயில் வண்டி ஒன்று மெதுவாக ஊர்ந்து வந்து கொண்டிருக்கிறது.அதிக பெட்டிகளை கொண்டதாய் நீளமாய் அந்த ரயில் வண்டி வளைந்து செல்லும் அழகு எல்லோரையும் கவரும்.மேலே இந்தப் பிரபஞ்சத்தை நினைக்க வைக்கும் நீல நிற ஆகாயம்.ரயில் வண்டி செல்லும் இருபுறமும் பசுமை நிறைந்த காட்டுப்பகுதி.இப்போது கூரையில்லாத அந்த திறந்த நிலைப்பெட்டிகளில் பயணம் செய்ய விரும்பாத மனமும் உண்டோ இப்பூவுலகில்?ஒரு ஆணும் பெண்ணும்ஆடிக்கொண்டு அந்த இன்பத்தை அனுபவித்துக்கொண்டு வருகிறார்கள்.அது மேலும் உற்சாகத்தை கூட்டுகிறதே. இப்போது அவர்கள் பாடத்தொடங்குவார்கள் போல் தெரிகிறது.அவர்கள் பாடும் அந்த பாட்டை சற்று கேட்போமா?
இப்போது அந்த மங்கைஹம்மிங் செய்கிறாள்.

ஹாஹாஹாஹாஆகாகாகாகேகேகே
குரலிலே குயில் போலும்.இவ்வளவு நேரம் அதிசயித்த அந்த இயற்கையையே மறக்கசெய்த விட்டதே.சில நேரங்களில் இயற்கையையும் மீறிரசிக்க வைக்கும் ஆற்றல் மனிதர்களுக்கும் இருப்பதும் இயற்கைதானோ?

இப்போது ஒரு உயர்ந்த பாலத்தின் மேல் அந்த ரயில் சென்று கொண்டிருக்கிறது.கீழே அழகான நீர்நிலை.
மேலே ஆகாயம்,இடையில் பாலத்தில் செல்லும் ரயில்,கீழே ஒரு ஏரி.
ரசித்த மனம் இப்போது பிரமிப்பில்.இயற்கையும்,
செயற்கையும் கலந்த கலவையான காட்சி அது.
காட்டுப்பகுதியை பிளப்பது போல் வந்து கொண்டிருக்கிறதுஅந்த நீள ரயில் வண்டி.
அவர்களே இந்தக் காட்சியின் பிரதானம்என்பதால் இனி மங்கை, மன்னவன் என்று அழைப்போம்.

மங்கை தொடங்குகிறாள்:
வெட்கப்படவோ செல்லக்கிளியென வட்டமிடவோ
மெல்லத்தொடுகையில்பூவாகி,
காயாகி,கனியாகி வண்ணம் பெறவோ
மங்கை முடித்ததும் மன்னவர் தொடர்கிறார்...
ஹஹாஹாஹாஹாக ஹேஹேகாஹஹாஹாஹாஹா
அடேங்கப்பா என்ன ஒரு வசீகரமான குரலய்யா.இந்த ஹஹஹாஹாஹாஹஹாவுக்கு கே இப்படி ஒரு ஈர்ப்பு சக்தி என்றால் பாடலைக் கேட்டால்....
பக்கம் வரவோ பத்து விரல்களில்
பந்தல் இடவோ
வஞ்சிக்கொடியின் மேலாடை மேலாட
நூலாடைபோலாடஎண்ணம்
இல்லையோ

"மேலாடை மேலாட
நூலாடை போலாட"
என்று பாடுவதை கேட்கத்தான் எத்தனை இன்பம்.
மறுபடியும் அந்த ஹம்மிங்.
ஹஹஹஹஹஹாஹாஹாஹாஹாஹாஹாகஹஹஹஹஹஹாகாகஹா
'இந்த ஹம்மிங்கில் இன்னும்இனிமை.
இனிமை மென்மை
அந்த
மென்மை பெண்மையின் குரலில்
வெளிப்படும்போது கூடுதல் இனிமை.
ஆகாயப் பார்வையில் ரயில் நின்று கொண்டு இருப்பதை பார்ப்பதே அழகு.அது மலைப்பாதையில் ஊர்ந்து செல்வதை பார்ப்பது அழகிலும் அழகு.அப்படித்தான் இந்தக்காட்சிசெல்கிறது.
இருட்டான ஆகாயத்தில் முழுநிலவு
இருக்கும் போது பார்ப்பதற்கு எப்படி இருக்குமோ அது போல மலையை குகைபோல பாதையாக்கி.,அந்த குகைக்குள்ளிலிருந்து பார்த்தால் இருட்டு குகை வெளிப்பிரதேச வான் வெளிச்சத்தில் வான் +முழு நிலவுகாட்சியைப் போல் இருக்குமல்லவா?அதே போன்ற இடத்தை நோக்கித்தான் இந்த ரயில் பயணம் இப்போது ஆரம்பிக்கிறது.மன்னவனும்,
மங்கையும் இணைந்தபடி இருக்க
அந்தநீள் தொடர் ஊர்தி குகைக்குள்
செல்ல ஆரம்பிக்கிறது.ஊர்தி குகைக்குள் நுழைய நுழைய பக்கவாட்டு காட்சிகள் சிறிது சிறிதாக மறைந்து கொண்டே வர,கண்ணில் ஏற்படும்" க்ளாக்கோமா"நோய் போல்
அந்தக்காட்சி கண்கள் காணும் பேரின்ப கவிதை.மன்னவனும்,மங்கையும் குகையை நெருங்கும் சமயம் அவர்களின் மேல் மட்டும் வெளிச்சம் பட்டு அவர்கள் அந்தரத்திலே நிற்பது போல காட்சி அளிக்கும் அந்தக்
காட்சி க்கு மனம் மயங்கும். விழிகள் விரியும்.இப்படி ஒரு காட்சி கிடைக்கும் என்று யார்தான் யோசித்திருப்பார்கள்?
அந்த தண்டவாள ஊர்தி வட்டமான குகைப்பாதையில் நுழைந்ததும்
அந்த வட்டம் சிறிதாகி,மறைந்து இருள் சூழ்ந்து.,பின் சிறிது சிறிதாகபிறை போலஆரம்பித்து அந்த வட்டப்பாதை வெளிச்சம் பெறுவது,
கண்ணுக்கு கிடைத்த விருந்து.
மன்னவன் கீழே அமர்ந்திருக்க மங்கை நாணத்துடன்எழுந்து பொய்க்கோபத்துடன் நடக்கிறாள்.

மன்னவன் பாடுகிறான்:

நான் புஷ்பாஞ்சலிஒன்று செய்ய
நீ பொன்னோவியம் என்று மாற

மன்னவன் இடது புறமாக லேசாக சாய்ந்து வலது கையால்பாடல் வரிகளுக்கு காற்றில் அபிநயம் செய்வது வித்தைதெரிந்தவனின் ஜால வித்தை இது என்பது புரிகிறது.அவருடைய கை அசைவுகள் இவர் சாதாரண மனிதரில்லைஎன்பதை காட்டுகிறது."நான்ன்ன்ன் புஷ்பாஞ்சலி"என்று தொடங்குவது சுகமான ராகம்."நீ பொன்னோவியம் என்று மாற"என்பதை ஓவியம் வரைவது போல் காட்டும் விரல் அசைவுகள்
அதிக அலட்டல்கள் இல்லாமலும்
உடல் அசைவுகள் அதிகம் இல்லாமலேயே விரல்களின் அபிநயங்கள் மூலமாகக் கூட சிறந்த ரசிப்பை பார்ப்பவனுக்கு கொடுக்க முடியும் என்று மன்னவன் மூலம் நடிப்பை உணர முடிகிறது.

நான் புஷ்பாஞ்சலி ஒன்று செய்ய
நீ பொன்னோவியம் என்று மாற
அந்த ரசனைகளின் இந்த ரசிகையது
தேர்தேர்தேர் என்று ஆட
இன்பக் கவிதைகளின்வண்ணம் முழுவதையும் பார்பார்பார் என்று பாட

வெட்கப்படவோ செல்லக்கிளியென வட்டமிடவோ
மெல்லத் தொடுகையில் பூவாகி,காயாகி,கனியாகி
வண்ணம் பெறவோ...

சில பாடல்களை கேட்கும்போது நம்மையறியாமலேயே தாளம் போட வைக்கும். அதற்கு அந்தப்பாடல் உற்சாகமான மெட்டிலும் ,குஷியான இசையிலும் அமைந்திருக்க வேண்டும்.அப்படி ஒரு மெட்டிலும் இசையிலும் அமைந்த பாடல்தான் இது.இப்படி ஒருமெட்டு,இசைக் கலவையில் ,தேன் மதுர குரல்களும் சேர்ந்து கொண்டால் பார்ப்பவர்களுக்கு கொண்டாட்டம்தானே!

ரயில்
மலை
அலுக்காது.பார்த்துக் கொண்டே இருக்கலாம் .இப்போது இரண்டையும் ஒன்றாகப் பார்க்கும்போது அந்த இன்பம் இன்னும் மேல்.உயர்ந்த அந்த பாலத்தில் ரயில் செல்லும் அந்தக் காட்சி தமிழ் சினிமாவின் அப்போதைய பிரமாண்டம்.அதிரடி பாட்டுக்கள் சண்டைக்காட்சிகளுக்கு மட்டுமே இது போன்றரயில்காட்சிகளை படம் பிடித்து வந்த தமிழ்திரையுலகில் ஒரு மென்மையான காதல் பாட்டுக்கு
இந்த ரயில் பயண காட்சி படம் பிடிக்க பட்டிருப்பது புதுமையும் கூட.
யானைகள் நின்று கொண்டிருக்க மரம் செடி கொடிகளுக்கு இடையில் ரயில் செல்வது போல் படம் பிடிக்கப்பட்டிருப்பது காட்சிக்கு கூடுதல் சிறப்பு.

மங்கை பாடுகிறாள்:
நான் புல்லாங்குழல் என்று ஆக
நீ கண்ணன் விரல் என்று சேர

புல்லாங்குழல் இசை கேட்பது ஒரு சுகம் என்றால்,இங்கே புல்லாங்குழல் என்று பாடுவதைக் கேட்பதே அதனினும் சுகம்.
ரயில் செல்லும் விளைவால் பின்புல காட்சிகளும் மாயையால் நகர, அதனுடன் இருவரின் ஆடலும்,பாடலுமாயும் அந்தக் காட்சி
இனிமையாக சென்று கொண்டிருக்கிறது.

நான் புல்லாங்குழல் என்று ஆக
நீ கண்ணன் விரல் என்று சேர
என்று அவள் முடிக்க,
சின்னக்கொடிமலர்கள் கன்னங்கரு விழிகள் பார்பார்பார் என்று துள்ள
மன்னவனின் காந்தமும் சாந்தமும் இணைந்த குரல் நம்மை மென்மையாக மயக்க,

தன்னந்தனிமையிது தனிமை இனிமையிது யார்யார்யார் தடை சொல்ல
என பெண் முடிக்க.,
முடிப்பது மேலும் தொடராதோ
என நாம் ஏங்க...
ஒரு சுற்றுலா சென்று வந்த சந்தோசத்தை அளித்து விட்டது இப்பாடல்.

பாடல்:
பெண்:வெட்கப்படவோ செல்லக்கிளியென வட்டமிடவோ
மெல்லத்தொடுகையில் பூவாகி,காயாகி,கனியாகிவண்ணம் பெறவோ
ஆண்: பக்கம் வரவோ பத்து விரல்களில் பந்தலிடவோ
வஞ்சிக்கொடியின் மேலாடை மேலாட
நூலாடை போலாட எண்ணம் இல்லையோ
(வெட்கப்படவோ...
ஆண்:நான் புஷ்பாஞ்சலி ஒன்று செய்ய
நீ பொன்னொவியம் போன்று மாற
பெண்:அந்த ரசனைகளின் இந்த ரசிகையது தேர்தேர்தேர் என்று ஆட
ஆண்:இன்பக்கவிதைகளின் வண்ணம் முழுவதையும் பார்பார்பார் என்று பாட
(வெட்கப்படவோ.,
பெண்:நான் புல்லாங்குழல் என்று ஆக
நீ கண்ணன் விரல் என்று சேர
ஆண்:சின்னஞ்சிறு கொடிமலர்கள் கன்னங்கரு விழிகள் பார்பார்பார் என்று துள்ள
பெண்:தன்னந்தனிமையிது தனிமை இனிமையிது யார்யார்யார் தடை சொல்ல
(வெட்கப்படவோ...


Vetka Padavo - Lorry Driver Rajakannu: http://youtu.be/Y-78SiZynzw

chinnakkannan
24th September 2015, 10:07 PM
செந்தில்ல்ல்ல்வேஏஏஎல்...........செந்தில்வேல். ....

இது உற்சாகக் கூக்குரல்.. என் கரவொலி உங்களுக்குக் கேட்கிறதா.... :clap:

//ராஜாகண்ணு லாரி டிரைவரின் ரயில் பாட்டு// இந்தப் பாட்டு இதுவரை நான் கேட்காத, பார்க்காத பாடல்.. (படமும் நான் பார்த்ததிலலை)

//இப்போது ஒரு உயர்ந்த பாலத்தின் மேல் அந்த ரயில் சென்று கொண்டிருக்கிறது.கீழே அழகான நீர்நிலை.
மேலே ஆகாயம்,இடையில் பாலத்தில் செல்லும் ரயில்,கீழே ஒரு ஏரி.
ரசித்த மனம் இப்போது பிரமிப்பில்.இயற்கையும்,
செயற்கையும் கலந்த கலவையான காட்சி அது.// என் மனமும் இப்போது பிரமிப்பில் இருக்கிறது செந்தில்வேல்.. இவ்வளவு நாளாக எங்கிருந்தீர்..

//உடல் அசைவுகள் அதிகம் இல்லாமலேயே விரல்களின் அபிநயங்கள் மூலமாகக் கூட சிறந்த ரசிப்பை பார்ப்பவனுக்கு கொடுக்க முடியும் என்று மன்னவன் மூலம் நடிப்பை உணர முடிகிறது.// எஸ்.. அண்ட் நைஸ்...

//ஒரு சுற்றுலா சென்று வந்த சந்தோசத்தை அளித்து விட்டது இப்பாடல்.// யெஸ்.. உங்கள் நீரோட்டமான எழுத்தில் தெளிவான ரசனையில் காட்சிப்படுத்தியிருந்ததில்... என்று முன்னால் போட்டுக் கொள்ளுங்கள்..

ஒரே ஒரு குறை தான்.. ‘மன்னவன்’ காஸ்ட்யூம் கொஞ்சம் கோட் இல்லாமல் கேஸுவலாக விட்டிருக்கலாம்..

செந்தில்வேல் வெரிகுட்..கீப் இட் அப்... ப்

இன்னொரு சின்ன ரெக்வஸ்ட் ... ‘மன்னவன்’, பிரபு பாடல்களைத் தவிரவும் மற்ற நாங்கள் அறியாத கானங்களை தங்கள் எழுத்துக்கள் மூலம் காட்சிப் படுத்த வேண்டும் என ஆசைப் படுகிறேன்.. சரியா..

நன்றி நல்ல பாடல் அண்ட் ரசனை கலந்து தந்ததற்கு...

RAGHAVENDRA
24th September 2015, 11:17 PM
செந்தில்வேல்,
தங்களுக்குள் ஒளிந்திருக்கும் எழுத்து வன்மை எவ்வாறு வெளிப்படுகிறது பார்த்தீர்களா.. நடிகர் திலகம் உள்ளே புகுந்து விட்டால் அது தனி உதிர வகையாகி விடுகிறது. ஒவ்வொருவருக்கும் உள்ளே ஏற்படும் உத்வேகம் ஏதாவது ஒரு கலையில் அவனை அல்லது அவரை அல்லது அவளை மிகச் சிறந்த வகையில் பரிமளிக்க வைக்கிறது. அவ்வாறுள்ள போது தாங்களோ பல்துறை வித்தகராக பரிமாணம் எடுத்து வருகிறீர்கள்.

தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.

லாரி டிரைவர் ராஜாக்கண்ணு படத்தில் தலைவர் மிக அழகாக் தோற்றமளித்திருப்பார். சி.க. சார் சொன்னது போல், கோட் அணியாமல் இருந்திருந்தால் இன்னும் அழகாய் காட்சி தந்திருப்பார். எந்த பிரகஸ்பதியோ அவரை இந்த மாதிரி காட்சிகளில் சில படங்களில் கோட்டுப் போடவைத்து, கவனத்தை சிதறடிக்க வைத்து விட்டார்.

என்றாலும் இப்பாடல் காட்சியில் தலைவரின் ஸ்டைலே தனி.

தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள்.

eehaiupehazij
24th September 2015, 11:28 PM
Half Ticket / Half Saree songs!
தாவணி லாவணியும் அரை நிஜார் பேஜாரும் !!


குழந்தைப் பருவத்தில் என்ன டிரஸ் போட்டாலும் (போடாவிட்டாலும்?!) ஆணோ பெண்ணோ அழகுதான் !
அதே ரெண்டுங்கெட்டான் பருவத்தில் ஆடையமைப்பு ஆணுக்கும் பெண்ணுக்கும் முறையே அரை டிரவுசராகவும் தாவணியாகவும் மாறும்போது பெண்ணுக்கு அழகு ஏறுகிறது .....பையனுக்கு ?!

நிச்சயதாம்பூலம் படத்தில் நடிகர்திலகம் ஜமுனாவின் இளமைப் பருவத்தை மனதில் கொணர்ந்து பாடும் பாவாடை தாவணியில் பார்த்த உருவமா ....முதல்..
அட்டகத்தியில் வரும் ஆடி போனா ஆவணி....
தாவணி வரை பருவப் பெண்டிரின் உடையழகு வர்ணிக்கப்படுகிறது..என்ன செய்ய...?!
கால நாகரிக மாற்றங்கள் பாவாடை தாவணியை முற்றிலும் ஒழித்து சூரிதார் பக்கம் திரும்பியதும் ஒரு பாதுகாப்பு வசதி நன்மை கருதியே !

அரை டிக்கட்டுகளின் அரை டிரவுசரும் மாற்றங்களை அடைந்து அறுபது வயது பெருசுகளும் வெளிநாட்டுக்காரர் போல ஸ்டைலாக போடுமளவு இருக்கிறது நாகரிக முன்னேற்றம் !!

ராமன் எத்தனை ராமனடி, தங்கப் பதக்கம், வசந்த மாளிகை படங்களில் நடிகர்திலகம் துணிந்து அரை டிரவுசர் போட்டு வருவார் !! காதல் மன்னரும் தனது
பங்குக்கு தேன் நிலவு, ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் படங்களில் களத்தூர் கண்ணம்மா கமலஹாசன் ரேஞ்சில் அரைடிரவுசர் போட்டு கலக்குவார்!!

நான் படத்தில் ரவிச்சந்திரன் ரோசாப்பூ ரவிக்'கிக்'காரியில் சிவகுமார்.....

Part 1 : Half Trouser songs!!
காதல் மன்னர் Vs காதல் இளவரசர் !

காதல் மன்னரின் lake water surfing சாகசம் எழில் கொஞ்சும் மச்சகன்னி வைஜயந்தியுடன்!
https://www.youtube.com/watch?v=TgwgZyIe58k

காதல் இளவரசரின் அரைடிக்கட் பாலபருவம் !
https://www.youtube.com/watch?v=Axcrmw8OD4A

rajeshkrv
25th September 2015, 01:36 AM
செந்தில் ஜி,

அருமை அருமை. உங்கள் எழுத்து வளம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது.

போற போக்கை பார்த்தா வாசுஜியையே மிஞ்சி விடுவீர்கள் போல

eehaiupehazij
25th September 2015, 02:49 AM
24.09.2015 மாலை 5 மணிமுதல் 7 30 வரை என் வாழ்க்கைப் பயணத்தில் மதுரமான நிமிடங்கள்!!


திரிகளின் இரும்புக்கை எழுத்து மாயாவி திரைப்பாடல்களின் அக்குவேறு ஆணிவேரிஸ்ட் திரித்துவத்தின் வாஸ்து வாசு சாருடன்(அவரது தம்பியுடன்) அவர் வருகையால் குளிர்ந்த கோவை மாநகரில் எழுத்துக்களின் இளம்துருக்கியர் அரிமா செந்தில்வேல் மற்றும் நடிகர்திலகத்தின் பற்றுமிகு மருத்துவர் கனவான் டாக்டர் ரமேஷ் பாபுவுடன் அளவளாவிய இனிய பொன்மாலைப் பொழுது!!

உள்ளங்களையும் குளிர்வித்து நடிகர் திலகம் புகழ் பாடும் உணர்வுகளையும் ஒளிர்வித்தமைக்கு நன்றிகள் நன்றிகள்....நண்பர் வாசுஜி! Unforgetable moment with ever lingering memories!!

with regards,

senthil

இப்போது இப்படிப் பாடத் தோன்றுகிறது !

https://www.youtube.com/watch?v=CFj4Tb9KEYw

இன்னும் பத்து வருடங்கள் கழித்து இப்படிப் பாடுவோமோ?!

https://www.youtube.com/watch?v=VtrnHY21zZw

rajraj
25th September 2015, 04:47 AM
24.09.2015 மாலை 5 மணிமுதல் 7 30 வரை என் வாழ்க்கைப் பயணத்தில் மதுரமான நிமிடங்கள்!!


Just talk. No dinner ? :( Tamilnadu is changing ! :lol:

madhu
25th September 2015, 05:41 AM
செந்தில்வேல் ஜி..

கலக்கோ கலக்ஸ்... இது போன்ற மனம் மயக்கும் திறனாய்வுகளை கொண்டு வந்து கொட்டுங்க என்று வேண்டுகிறோம்.

கோவையில் நடந்த கோலாகல சந்திப்பில் அலசப்பட்டு வெளிவந்த பாடல்கள் பற்றிய தொகுப்பை எதிர்பார்க்கிறோம்.

வாத்தியாரையா... தமிழகத்தில் ஏழரை போன பிறகுதான் டின்னர்.. ( நான் ஏழரைனு சொன்னது நேரத்தைத்தான் )

eehaiupehazij
25th September 2015, 07:25 AM
மதுஜி/ராஜ்ராஜ்ஜி
டின்னெர் என்று சொல்ல முடியாது இரண்டுங்கெட்டான் நேரம்...அன்னபூர்ணாவில் சுவீட் காரம் காபிதான்! வாசுவுக்கு அதிக நேரமில்லை....பிளாஷ் விசிட்....!

eehaiupehazij
25th September 2015, 08:29 AM
Monotony breakers! / Gap fillers!!

திறந்திடு சி செ! மூடிடு சி செ ! இருவரிக் கப்சாக் கதைகள்!!

க க 1 : களத்தூர் கண்ணம்மா / வசந்த மாளிகை / ஒளிவிளக்கு !

மது/ரம் சீசா கானங்கள்!!

சி க சி செ விடம் விரும்பிக் கேட்டவை !( கப்சா!!)

காதலிப்பது சுகானுபவமே! ஆனால்..... காதலியே மனைவியாகி விட்டால் சிலருக்கு அது நரகமே ! அவர் சீசாவைத் திறக்கிறார்! கா(த)லி பண்ணுகிறார்!! தள்ளாடுகிறார்!!

https://www.youtube.com/watch?v=SToylWoPsSc


இந்தப் பாடம் கற்றுக்கொள்ளாததால் இவர் காதலிக்காக வேண்டி சீசாவை மூடி விட்டு இரண்டு மனமாக காதலியை நினைக்கலாமா அல்லது தொண்டையை நனைக்கலாமா என்று மதில்மேல் பூனையாகத் திண்டாடுகிறார்!

https://www.youtube.com/watch?v=Z2VHhYADomI

இவர்கள் ரெண்டுபேரும் காதல் விவகாரத்தால் நொந்து நெஸ்லே நூடுல்ஸ் ஆனதைக் கண்ணுற்று நமக்கு இந்த பாதை சரிப்படாது என்று தனி ஒருவனாக விலகி வேடிக்கை பார்க்கிறார் மக்கள்திலகம் ! களவும் கற்று மற என்ற வாக்கியத்தை பிடித்துக்கொண்டு இந்த மதுவில் என்னதான் இருக்கிறது என்று சீசா மூடியைத் திறந்து நுகர்ந்து பார்த்து அதிலேயே மட்டையாகி சீசாவை உருட்டிவிடுகிறார் ! உடனே அவரது மனசாட்சி விழித்துக்கொண்டு நால்வகை வேதங்களின் உருவங்களாய் வடிவெடுத்து அவரைத் தனித்தனி ஒருவ்ன்களாய் தனிஒருவனாக்கி வறுத்தெடுக்கிரார்கள் !! சந்தடிசாக்கில் தம்பிகளான ஜெமினிக்கும் சிவாஜிக்கும் குடியின் தீமையை முஷ்டி உயர்த்தி ஒரு வாத்தியாராக விளக்கப் பாடம் சொல்லித்தருகிறார் !!

https://www.youtube.com/watch?v=GscOC7aw97k

rajraj
25th September 2015, 08:30 AM
வாத்தியாரையா... தமிழகத்தில் ஏழரை போன பிறகுதான் டின்னர்.. ( நான் ஏழரைனு சொன்னது நேரத்தைத்தான் )

I forgot! I am used to having dinner around 6:30 pm ! :)

rajraj
25th September 2015, 09:11 AM
.அன்னபூர்ணாவில் சுவீட் காரம் காபிதான்!

Sweet, kaaram,coffee? Reminds me of my Kumbakonam college days. I used to commute to college by train. After college (4 pm) I used to walk to the railway station to catch the 4:30 pm train. The college on the banks of Kaveri was connected to the town by a foot bridge. At times people used to walk slowly crossing the bridge. Still, I used to walk to the railway station hoping for the train to be late! :) If it arrived and left on time I went for 'sweet, kaaram,coffee' in a restaurant near the station. It was always 'wheat halwa and degree coffee' with kaaram free. It was three and a half annas. I don't know what it costs now. Fifteen rupees?

rajeshkrv
25th September 2015, 09:28 AM
இசையரசி இசைத்த கீதங்கள் தொடர் விரைவில்... மதுண்ணா ப்ளீஸ் வெயிட்

JamesFague
25th September 2015, 04:41 PM
Courtesy: Tamil Hindu


காற்றில் கலந்த இசை- 23: பள்ளிப் பிராயத்துக் கோடைக்காலம்


‘பன்னீர் புஷ்பங்கள்’ படத்தில்...

வளரிளம் பருவத்தைச் சேர்ந்த நாயக நாயகிகளை மையமாக வைத்து ஒரே காலகட்டத்தில் (1981) இரண்டு படங்கள் வெளியாகின. ஒன்று, கார்த்திக், ராதா நடிப்பில் பாரதிராஜா இயக்கிய ‘அலைகள் ஓய்வதில்லை’. மற்றொன்று சுரேஷ், சாந்தி கிருஷ்ணா நடிப்பில் பாரதி-வாசு இயக்கிய ‘பன்னீர் புஷ்பங்கள்’. பள்ளிப் பருவத்தில் ஏற்படும் காதலைப் பற்றிப் பேசியது ‘அலைகள் ஓய்வதில்லை’. அந்த வயதில் ஏற்படும் காதலுக்கு என்ன பாதுகாப்பு என்ற கேள்வியை எழுப்பியது ‘பன்னீர் புஷ்பங்கள்’.

இரண்டு படங்களுக்கும் பொதுவான அம்சம், செறிவான இசைக்கோவைகள் அடங்கிய பாடல்களும், பின்னணி இசையும். இரண்டுக்குமே இசை, இளையராஜா. ’பன்னீர் புஷ்பங்கள்’ படத்தில் ஊட்டி கான்வென்ட் பள்ளியின் பின்னணியில், இயற்கையின் வசீகரப் பிரதேசங்களைத் தனது இசை மூலம் மேலும் அழகூட்டினார். அனைத்துப் பாடல்களையும் கங்கை அமரன் எழுதியிருந்தார்.

உமா ரமணனின் தனித்த குரலுக்குப் பொருத்தமான பல பாடல்களைத் தந்திருக்கும் இளையராஜா, இப்படத்தில், ஒழுங்கமைக்கப்பட்ட வெள்ளம் போன்ற இசைக் கோவை கொண்ட ‘ஆனந்த ராகம்’ பாடலைத் தந்தார். கள்ளமற்ற நட்புடன் பழகும் நாயகிக்கும், எதிர்பாலின ஈர்ப்பின் தாக்கத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தவிக்கும் நாயகனுக்கும் இடையில் மெலிதாக அரும்பும் அன்பின் வெளிப்பாடு இப்பாடல். ஆர்ப்பரிக்கும் அருவி நீர் பாறையில் விழுந்து தெறிக்கும்போது மேலெழும் சாரலைப் போல், இசைக் கருவிகளின் கலவைக்கு மேல் உமா ரமணனின் குரல் ஒலிக்கும்.

நிரவல் இசையில், இருவரின் குழப்பமான மனநிலையைப் பிரதிபலிக்கும் இசைக்கோவைகளைத் தந்திருப்பார் இளையராஜா. முதல் நிரவல் இசையில் வயலின் தீற்றல்களுக்கு நடுவே, ஷெனாயை ஒலிக்க விட்டிருப்பார். எதிர்பாராத இசைக் கலவை அது. சந்தோஷமான மனநிலையின் பின்னணியில் ஒலிக்கும்

இப்பாடல், படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நண்பர்கள் உதவியுடன் நாயகனும் நாயகியும் ஓடிச்செல்லும்போதும் பயன்படுத்தப்பட்டிருக்கும். விடலைக் காதலுக்குப் பின்னணியாக ஒலித்த அதே பாடல், கிளைமாக்ஸ் காட்சியில் அவர்களின் எதிர்காலம் குறித்து கவலையுறும் நடுத்தர வயதினரின் பரிவுடன் ஒலிக்கும். ஒரே இசை வடிவில், அதே குரலில் ஒரு படத்தில் இரண்டு முறை ஒலித்த பாடல் என்பது இதன் தனிச்சிறப்பு. இரவில் கண்ணை மூடி இப்பாடலைக் கேட்பவர்கள் வண்ணங்கள் கரைக்கப்பட்ட நதியில் இழுத்துச் செல்லப்படுவதைப்போல் உணர்வார்கள்.

எஸ்.பி.பி-எஸ். ஜானகி பாடிய ‘பூந்தளிராட பொன் மலர் சூட’ பாடல், அந்த ஜோடியின் மிகச் சிறந்த 10 பாடல்களில் ஒன்று. இளம் காலைப் பொழுதில் புதிதாக மலரும் மொட்டைப் போன்ற மலர்ச்சியான இசையுடன் தொடங்கும் இப்பாடலில், இசைக் கருவிகளுக்கு இணையாக, பெண்குரல்களின் ஹம்மிங்கைப் பயன்படுத்தியிருப்பார் இளையராஜா. கண்ணுக்குத் தெரியாத காதல் தேவதைகள் இளம் காதலர்களை வாழ்த்துவதுபோன்ற அலாதியான கற்பனை அது.

பொங்கி வரும் குதூகலத்தை அடக்கிக்கொண்டு அமைதியான தொனியில் பாடியிருப்பார் எஸ்பிபி. அறியாத வயதில் ஏற்படும் குறுகுறுப்பையும், தன் மீது காட்டப்படும் அன்பு ஏற்படுத்தும் நெகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் இளம் பெண்ணின் குரல் வடிவமாக ஜானகியின் குரல் ஒலிக்கும். பேஸ் கிட்டாரின் அஸ்திவாரத்தில் வயலின், புல்லாங்குழல், பியானோ என்று இசைக் கருவிகளின் சொர்க்கபுரியையே உருவாக்கியிருப்பார் இளையராஜா. பிரவாகமாகப் பொங்கும் வயலின் மற்றும் புல்லாங்குழல் இசையைத் தொடர்ந்து, மவுனத்தின் பின்னணியில் தொலைதூரத்துப் பறவையின் சத்தம் மென்மையாக ஒலிக்கும்.

‘லலலல்லல லலலல்லா’ என்று வசந்த காலத்து தேவதைக் குரல்களின் குரல் அதைப் பின்தொடரும். இந்தப் பாடலில் பங்குபெற்ற ஒவ்வொரு இசைக் கலைஞரும் தனது வசந்த கால நினைவுகளுடன் இளையராஜாவின் இசைக் குறிப்புகளை வாசித்திருக்க வேண்டும். இல்லையென்றால், ஒரு பாடலில் இத்தனை இனிமை சாத்தியமேயில்லை!

இயற்கையின் சுகந்தத்தைப் பிரதிபலிக்கும் பல பாடல்களை, மலேசியா வாசுதேவனுக்காகவே இளையராஜா உருவாக்கி யிருப்பாரோ என்று சில சமயம் தோன்றும். அந்த எண்ணத்துக்கு வலு சேர்க்கும் பாடல் ‘கோடைகாலக் காற்றே’. பள்ளிப் பருவத்துச் சுற்றுலாவின் குதூகலத்தை அசலாக வெளிப்படுத்தும் பாடல் இது. மவுத்-ஆர்கன் இசையுடன் தொடங்கும் இப்பாடலில், இளம்பிராயத்து நினைவுகளை மீட்டும் கிட்டார் பிரதானமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும். மலைப்பிரதேசத்தில் வீசும் கோடை காலக் காற்றின் மிதமான குளுமையுடன் பாடலைத் தொடங்குவார் மலேசியா வாசுதேவன்.

மாணவர்களைச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லும் ஆசிரியர் பிரதாப் போத்தன் பாடும் பாடல் இது. பொறுப்பும் கண்ணியமும் நிறைந்த ஆசிரியரின் குரல் மலேசியா வாசுதேவனிடம் தொனிக்கும். ஏகாந்தம் தரும் இயற்கையின் அழகைத் தானும் வியந்துகொண்டு, இளம் வயதினரிடம் ரசனையையும் அழகுணர்ச்சியையும் விதைக்கும் நடுத்தர வயது மனதின் வெளிப்பாடு இப்பாடல்.

‘வானில் போகும் மேகம் இங்கே யாரைத் தேடுதோ’ எனும் வரியில் அழகான சித்திரத்தைக் காட்டிவிடுவார் கங்கை அமரன். சூரிய ஒளியில் மிளிரும் விளிம்பு கொண்ட மேகங்களுக்குக் கீழே, பசுமையான குன்றுகளில், கவலையற்றுத் திரியும் மாணவப் பருவத்தை நினைவுபடுத்தும் இப்பாடல், இளையராஜா நமக்களித்த அன்புப் பரிசு!

JamesFague
25th September 2015, 04:43 PM
Courtesy: Tamil Hindu

சூழல் ஒன்று பார்வை இரண்டு: அந்நாளில் இல்லாத பொன்னான எண்ணங்களே...



காதலர்கள் தாங்கள் சந்தித்து மகிழும் இன்பத்தைவிட, சிறிது நேரமே கிட்டும் பரவச நிகழ்வுகளை நினைத்துப் பெறும் ஆனந்தம் எல்லையற்றது. அழகான கவிதை வரிகள், இனிய குரல், இசைவான மெட்டு ஆகியவற்றுடன் அந்த உவகை திரைப் பாடல்களாக வெளிப்படும்பொழுது, அவற்றைக் கேட்கும் நாம் பெறும் இன்ப உணர்வு இரட்டிப்பாகிறது.

காதலர்கள் சந்திப்பு என்ற ஒரே சூழலின் இரு அழகான பார்வைகளாக விரியும் இந்தி, தமிழ்ப் பாடல்களைப் பார்ப்போம். கருத்தில் மட்டுமின்றி காட்சியமைப்பிலும் ஒரே சூழலுடன் கூடிய இந்த இரண்டு பாடல்களும் காலத்தைக் கடந்து நிற்பவை.

இந்திப் பாடல்:

படம்: மெஹூப்கி மெஹந்தி (காதலியின் மருதாணி)

பாடலாசிரியர்: ஆனந்தபக் ஷி

பாடியவர்கள்: முகமது ரஃபி. லதா மங்கேஷ்கர்

இசை: லக்ஷ்மிகாந்த் பியாரிலால்

பாடல்:

இத்னோத் தோ யாத் ஹை முஜே கே

உன்ஸே முலாகாத் ஹூயீ

பாத் மே ஜானே க்யா ஹுவா

ஓஓ பாத் மே ஜானே கியா ஹூவா

ஹாய் நா ஜானே க்யா பாத் ஹூயீ … …

பொருள்:

இருவரும்:

இத்தனைதான் என் நினைவு ஓ ஓ

இத்தனைதான் நினைவு எனக்கு

சத்தியமாக அந்த சந்திப்பு நடந்தது

அப்புறம் என்ன நடந்தது அறியேன்

பிறகு சொன்னதும் நாங்கள் அறியோம்

காதலன்:

அள்ளிக் கொடுத்த உறுதிமொழி அத்தனையும்

தள்ளிவிட்டு, தவிக்கவிட்டு, எவருடைய

உள்ளத்தையோ கவர்வதற்கு ஓடி வந்தேன்

உன் விழிகளை சந்தித்தால் உறக்கத்தைத் தொலைத்து

என் சிந்தையில் ஏக்கத்தை இருத்தி ஓடி வந்தேன்

கழிந்துவிடும் எப்படியோ பகல் பொழுது

அது முடிந்து

எழுந்துவிடுமே இரவு, அப்பொழுது என்ன செய்வது

காதலி:

வீழ்த்தப்பட்ட நான், என் விழிகளைத் தாழ்த்திக்கொண்டு

புடவைத் தலைப்பைப் பொத்திக் கொண்டு, ஓடி வந்தேன்

உன் பரிதவிப்புக்கு இசைந்து என் அழகை

உனக்குக் காட்டுவதற்கு வந்தேன்

இத்தகு கள்ளத்தனம் என்னுடன் எப்போதும் இருக்கும் பொழுது

நான் யாரைக் குற்றம் கூறுவது

காதலன்:

இந்த வாழ்க்கை பழங்கதையாய் இருந்தது முன்பு

இரு கண்களால் அவளைக் கண்ட பின் ஜீவன் மீண்டது

காதலி:

அன்பே ஆகிவிட்டேன் ஆட்கொண்ட நாணத்தால்

தண்ணீராக ஊற்றெடுத்த வியர்வையில் நனைந்தேன்

எண்ணும்படியாக ஏதோ மழையில் நனைந்ததுபோல

தமிழ்ப் பாடல்:

படம்: காதலிக்க நேரமில்லை.

பாடலாசிரியர்: கண்ணதாசன்

பாடியவர்கள்: பி.பி. ஸ்ரீனிவாஸ், பி.சுசீலா.

இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி

அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்

அந்நாளில் இல்லாத பொன்னான எண்ணங்களே

பொன்னான கைபட்டுப் புண்ணான கன்னங்களே

தள்ளாடித் தள்ளாடி அவள் வந்தாள் ஆஹா

சொல்லாமல் கொள்ளாமல் அவளிடம் நான் சென்றேன்

அது கூடாதென்றாள் மனம் தாளாதென்றாள் ஒன்று

நானே தந்தேன் அது போதாதென்றாள்

கண்ணென்ன கண்ணென்று அருகினில் அவன் வந்தான்

பெண்ணென்ன பெண்ணென்று என்னென்ன கதை சொன்னான்

இது போதாதென்றான் இனி கூடாதென்றான்

இன்னும் மீதம் என்றேன் அது நாளை என்றான்

சிங்காரத் தேர் போல அவள் வண்ணம் ஆஹா

சித்தாடை முந்தானை தழுவிடும் என் எண்ணம்

அவள் எங்கே என்றாள் நான் இங்கே நின்றேன்

அவள் அங்கே வந்தாள் நாங்கள் எங்கோ சென்றோம்

பனி போல் குளிர்ந்தது கனி போல் இனித்ததம்மா

மழை போல் விழுந்தது மலராய் மலர்ந்ததம்மா

ஒரு தூக்கம் இல்லை வெறும் ஏக்கம் இல்லை பிறர்

பார்க்கும் வரை எங்கள் பிரிவும் இல்லை

அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்

அந்நாளில் இல்லாத பொன்னான எண்ணங்களே

பொன்னான கைபட்டு புண்ணான கன்னங்களே

தள்ளாடித் தள்ளாடி அவள் வந்தாள் ஆஹா.

Russellxor
25th September 2015, 04:43 PM
செந்தில்ல்ல்ல்வேஏஏஎல்...........செந்தில்வேல். ....


செந்தில்வேல் வெரிகுட்..கீப் இட் அப்... ப்

இன்னொரு சின்ன ரெக்வஸ்ட் ... ‘மன்னவன்’, பிரபு பாடல்களைத் தவிரவும் மற்ற நாங்கள் அறியாத கானங்களை தங்கள் எழுத்துக்கள் மூலம் காட்சிப் படுத்த வேண்டும் என ஆசைப் படுகிறேன்.. சரியா..

நன்றி நல்ல பாடல் அண்ட் ரசனை கலந்து தந்ததற்கு...


தங்களின் பாராட்டுகளுக்கு என் நன்றி..

JamesFague
25th September 2015, 04:46 PM
Courtesy: Tamil Hindu

நினைவுகளின் சிறகுகள்: ஜெமினி சாம்ராஜ்யத்தின் மகாராணி!- புஷ்பவல்லி


மூவரும் தயங்கி நின்றார்கள். மிக முக்கியமான காரியத்துக்காக வந்த பரபரப்பு முகங்களில் படர்ந்தது. தேடி வந்த நடிகை அவர்களைவிட கலைத் தொழிலில் இளையவர். ஆனால், புகழின் உச்சியில் கொடி கட்டிப் பறந்தவர். மாடியில் ஓய்வு எடுத்துக்கொண்டு இருப்பதாகச் சொன்னார்கள். யார் போய் அவரிடம் வந்த விஷயத்தைச் சொல்வது. நீண்ட நேரம் யோசனையில் ஓடியது. லேசான துணிச்சலுடன் காமெடி நடிகை படிகளில் வேகவேகமாக ஏறினார்.

“அம்மா, என்.எஸ்.கேயும், எம்.ஜி.ஆரும், கீழே காத்திருக்காங்க. ரொம்பக் கூச்சப்படறாங்க. நடிகர் சங்கத்துல உங்களை ஒரு மெம்பரா சேர்க்கணுமாம். அவங்க உங்களைப் பார்க்க, கொஞ்சம் நீங்க அனுமதி தர முடியுமா...?”

டி.ஏ. மதுரம் தனக்கே உரிய சினிமா சாமர்த்தியங்களுடன் சொல்ல, சுந்தரப் புன்னகையுடன் சம்மதித்தார். ‘ஜெமினி சாம்ராஜ்யத்தின் மகாராணி!’ என்று புகழப்பட்ட புஷ்பவல்லி.

புஷ்பவல்லியின் பூர்வீகம் ஆந்திராவில் பண்டாபாடு கிராமம். ராஜமகேந்திரபுரத்தில் இயக்குநர் பி. புல்லையாவுக்குச் சொந்தமானது ‘துர்கா’ சினிமா ஸ்டுடியோ. அங்கு ஷூட்டிங் பார்க்கச் சென்ற பேபி புஷ்பவல்லியை, புல்லையாவின் பங்குதாரருக்கு முதல் பார்வையிலேயே பிடித்துவிட்டது. ‘சல்மோகனரங்கா’ என்ற சினிமா மூலம் திரைக்கு அறிமுகம் செய்தார்.

புஷ்பவல்லி ஜெமினி ஸ்தாபனத்தில் நடிக்க ஒப்பந்தமானதும் பூமிப்பந்து அவரது காலடியில் சுழன்றது.

‘தாசி அபரஞ்சி’, ‘பாலநாகம்மா’, ‘சம்சாரம்’, ‘சக்ரதாரி’ என்று ஜெமினியின் தொடர் வெற்றிச் சித்திரங்களில் புஷ்பவல்லியின் இளமையும் எழிலும் ஆடை அலங்காரங்களும் அற்புதமான நடிப்பும் வசீகர நடனங்களும் சினிமா வணிகர்களுடைய கஜானாக்களின் எண்ணிக்கையைக் கூட்டின. இவையெல்லாம், எஸ்.எஸ். வாசனின் இதயத்திலும் புஷ்பவல்லிக்கு நிரந்தரமாக ஓர் இடத்தைப் பெற்றுத்தந்தன.

விடுதலைக்குப் பின்னர் இந்தியாவில் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்ற நேரம். ‘சம்சாரம்’ திரைப்படம் வெளியானது. வாக்காளர் பட்டியலை வாங்கி அனைத்து இல்லத்தரசிகளுக்கும், அதன் கதாநாயகி புஷ்பவல்லியே மடல் எழுதுவது போல் வாசன் செய்த புதுமை விளம்பரம், புஷ்பவல்லியின் அபரிதமான புகழை ரூபாய் நோட்டுகளாக மாற்றியது. உடனடியாக ‘சம்சாரம்’ இந்தியும் பேசியது.

ஒட்டுமொத்த இந்தியாவும் புஷ்பவல்லியோடு சோகக் காட்சிகளில் சேர்ந்து அழுதது.

“‘தாசி அபரஞ்சி’யில் நடித்தபோது கொத்தமங்கலம் சுப்பு மூலம் தமிழ் பேசக் கற்றுக்கொண்டேன். வீட்டிலிருந்து தயிர்வடைகளைச் செய்து எடுத்து வந்து சுப்புவுக்குக் கொடுத்து அவரைக் குஷிப்படுத்துவேன்.

ஆரம்பத்தில் ஜெமினி எனக்கு மாதாமாதம் வழங்கிய ஊதியம் இரண்டாயிரம் ரூபாய். வாசன் பெயருக்குத்தான் ஒப்பந்தம் போட்டார். ‘பாலநாகம்மா’வில் என் நடிப்பைப் பார்த்து, சகல சலுகைகளும் எனக்கு நாளடைவில் கிடைத்தன. நிறையவே பணம் கொடுத்து என் நடிப்பார்வத்தை வாசன் வளர்த்துவிட்டார். ஜெமினியில் நான் நடித்த கடைசி படம் ‘மூன்று பிள்ளைகள்” - புஷ்பவல்லி.

பி. பானுமதிக்கு 24 மணி நேரமும் புஷ்பவல்லியின் மலர்ந்த முகமே மனத்தில் நின்றது. தன் பெயரையும் கனகவல்லி என்று வைத்துக்கொள்ள முடிவு செய்தார். குடும்பத்தினர் அனுமதி தரவில்லை.

‘வரவிக்ரயம்’ தெலுங்கு படத்தில் தன் அபிமான நடிகை புஷ்பவல்லியோடு பி. பானுமதி, சேர்ந்து நடித்து ஜென்ம சாபல்யம் பெற்றார். ‘வரவிக்ரயம்’ பிரமாதமாக ஓடியது. அமோக வசூல்.

பானுமதி மட்டுமல்ல. உலக நாட்டியப் பேரொளியாகப் பிரபஞ்சமெங்கும் வலம்வந்த பத்மினியும் புஷ்பவல்லியின் தீராக் காதலி!

ஜெமினியில் ‘கல்பனா’ என்ற நாட்டியச் சித்திரம் உருவான நேரம். அதில் நடிக்கச் சென்ற பத்மினியின் அனுபவம்.

“புஷ்பவல்லி பெரிய கார் ஒன்றில் வருவார். அக்கா லலிதாவையும் என்னையும் ஜோடியாகப் பார்ப்பதில் புஷ்பவல்லிக்கு ரொம்ப ஆசை. ‘நீங்கள் இரட்டைக் குழந்தை மாதிரி இருக்கிறீர்கள்’ என்று சொல்லி, எங்களைத் தனியாக அழைத்துக்கொண்டு போய், அருகில் அமர்த்திப் பேசிக்கொண்டிருப்பார். ஸ்வீட் கிடைக்கும்.”

காண்பவர்கள் அனைவரையும் கவர்ச்சியால் கட்டிப் போட்டவர் புஷ்பவல்லி. மிகச் சாதாரண நிலையில், பணியாற்றிய ஓர் இளைஞரை விரும்பிச் சரண் அடைந்தார்.

“ஜெமினியில் நானும் புஷ்பவல்லியும் நடித்தபோது இருவருக்கும் காதல் பிறந்தது. ஒட்டிப் பழகினோம். திருமணத்தைப் பற்றி நாங்கள் எண்ணவே இல்லை. மனம் விரும்பிப் பழகுபவர்களுக்குத் திருமணம் ஒரு தடையில்லை. அவள் என் குழந்தையைச் சுமப்பது தனக்குக் கிடைத்த அதிர்ஷ்டம் என்றாள்.

பிறக்கப்போகும் குழந்தைக்கு முழுமையான அப்பாவாக இருக்க முடியாது என்பதை உணர்ந்தேன். நான் எத்தனையோ எடுத்துச் சொல்லியும் புஷ்பவல்லி அதை ஏற்றுக்கொள்ளவில்லை. பானு ரேகா பிறந்தாள். காலப்போக்கில் இருவரும் வேறு பாதையில் செல்ல வேண்டிவந்ததால் பிரிந்தோம்.

எங்களுக்குள் திருமணமாகாததால் விவாகரத்துப் பிரச்சினையும் எழவில்லை.” - ஜெமினி கணேசன்.

நாகையாவும் புஷ்பவல்லியும் இணைந்து நடித்த அருமையான பக்திச் சித்திரம் ‘சக்ரதாரி’. அதில் ஜெமினி கணேசனுக்கு பாண்டுரங்கர் வேடம். ஜெமினிகணேசனும் புஷ்பவல்லியும் இடம் பெற்ற இன்னொரு படம் ‘மூன்று பிள்ளைகள்’.

புஷ்பவல்லியின் முதல் கணவர் ரங்காச்சாரி. அட்வகேட். டி.ஆர். ராஜகுமாரிக்கு முன்பு ‘சந்திரலேகா’வில் நடிக்கும் வாய்ப்பு புஷ்பவல்லியைத் தேடி வந்தது. வாசன் எத்தனை சமாதானம் சொல்லியும் ரங்காச்சாரி கேட்கவே இல்லை. சர்க்கஸ் காட்சிகளில் புஷ்பவல்லிக்குத் தைக்கப்பட்ட ஆடைகள் மிகவும் ஆபாசமாக இருந்ததாகக் குற்றம் சாட்டினார்.

புஷ்பவல்லியை அம்மா வேடங்களில் அதிகம் பார்க்க முடியாமல் போனது. ‘சம்பூர்ண ராமாயாணம்’ படத்தில் (ராமர்-என்.டி. ராமாராவ்) கவுசல்யாவாகக் காணப்பட்டார். மற்றும் சிவாஜியின் அம்மாவாக ஓரிரு படங்களில் தோன்றினார். ‘மலேயா மாமியார்’ என்ற பெயரில் சொந்தப் படம் தயாரித்தார் புஷ்பவல்லி. லட்சக்கணக்கில் நஷ்டம். கடனை அடைப்பதற்காக மகள் ரேகாவை சினிமாவில் அறிமுகப்படுத்தும் கட்டாயம்.

தன் மகளுக்காக வாய்ப்பு கேட்டு எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவரிடமும் சென்றார் புஷ்பவல்லி. வியட்நாம் வீடு படத்தில் ரேகா நடித்துச் சில காட்சிகளும் படமாயின. “பெரும் புகழ் மிக்க ஸ்டாரான நீங்கள் உங்கள் மகளுக்காக, சான்ஸ் கேட்கும்போது அதை நிறைவேற்றுவது எனது கடமை” என்று புஷ்பவல்லிக்கு வாக்குறுதி அளித்தார் எம்.ஜி.ஆர்.

“கேட்பதற்கு இதமாகப் பேசும் எம்.ஜி.ஆர். இன்றுவரை என் மகளுக்கு சான்ஸ் தரவில்லை” என்று புஷ்பவல்லி புலம்பிய நேரம் இந்தியில் அழைத்தார்கள்.

ரேகா வடக்கில் வாகை சூடியது 1971-ல். ரேகா அகில இந்திய நட்சத்திரமாகப் புகழ் பெற்ற பின்னரே, அவர் தன்னுடைய கலை வாரிசு என ஜெமினி கணேசன் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.

JamesFague
25th September 2015, 04:48 PM
Courtesy: Tamil Hindu

நினைவுகளின் சிறகுகள்: ஜெமினி சாம்ராஜ்யத்தின் மகாராணி!- புஷ்பவல்லி


மூவரும் தயங்கி நின்றார்கள். மிக முக்கியமான காரியத்துக்காக வந்த பரபரப்பு முகங்களில் படர்ந்தது. தேடி வந்த நடிகை அவர்களைவிட கலைத் தொழிலில் இளையவர். ஆனால், புகழின் உச்சியில் கொடி கட்டிப் பறந்தவர். மாடியில் ஓய்வு எடுத்துக்கொண்டு இருப்பதாகச் சொன்னார்கள். யார் போய் அவரிடம் வந்த விஷயத்தைச் சொல்வது. நீண்ட நேரம் யோசனையில் ஓடியது. லேசான துணிச்சலுடன் காமெடி நடிகை படிகளில் வேகவேகமாக ஏறினார்.

“அம்மா, என்.எஸ்.கேயும், எம்.ஜி.ஆரும், கீழே காத்திருக்காங்க. ரொம்பக் கூச்சப்படறாங்க. நடிகர் சங்கத்துல உங்களை ஒரு மெம்பரா சேர்க்கணுமாம். அவங்க உங்களைப் பார்க்க, கொஞ்சம் நீங்க அனுமதி தர முடியுமா...?”

டி.ஏ. மதுரம் தனக்கே உரிய சினிமா சாமர்த்தியங்களுடன் சொல்ல, சுந்தரப் புன்னகையுடன் சம்மதித்தார். ‘ஜெமினி சாம்ராஜ்யத்தின் மகாராணி!’ என்று புகழப்பட்ட புஷ்பவல்லி.

புஷ்பவல்லியின் பூர்வீகம் ஆந்திராவில் பண்டாபாடு கிராமம். ராஜமகேந்திரபுரத்தில் இயக்குநர் பி. புல்லையாவுக்குச் சொந்தமானது ‘துர்கா’ சினிமா ஸ்டுடியோ. அங்கு ஷூட்டிங் பார்க்கச் சென்ற பேபி புஷ்பவல்லியை, புல்லையாவின் பங்குதாரருக்கு முதல் பார்வையிலேயே பிடித்துவிட்டது. ‘சல்மோகனரங்கா’ என்ற சினிமா மூலம் திரைக்கு அறிமுகம் செய்தார்.

புஷ்பவல்லி ஜெமினி ஸ்தாபனத்தில் நடிக்க ஒப்பந்தமானதும் பூமிப்பந்து அவரது காலடியில் சுழன்றது.

‘தாசி அபரஞ்சி’, ‘பாலநாகம்மா’, ‘சம்சாரம்’, ‘சக்ரதாரி’ என்று ஜெமினியின் தொடர் வெற்றிச் சித்திரங்களில் புஷ்பவல்லியின் இளமையும் எழிலும் ஆடை அலங்காரங்களும் அற்புதமான நடிப்பும் வசீகர நடனங்களும் சினிமா வணிகர்களுடைய கஜானாக்களின் எண்ணிக்கையைக் கூட்டின. இவையெல்லாம், எஸ்.எஸ். வாசனின் இதயத்திலும் புஷ்பவல்லிக்கு நிரந்தரமாக ஓர் இடத்தைப் பெற்றுத்தந்தன.

விடுதலைக்குப் பின்னர் இந்தியாவில் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்ற நேரம். ‘சம்சாரம்’ திரைப்படம் வெளியானது. வாக்காளர் பட்டியலை வாங்கி அனைத்து இல்லத்தரசிகளுக்கும், அதன் கதாநாயகி புஷ்பவல்லியே மடல் எழுதுவது போல் வாசன் செய்த புதுமை விளம்பரம், புஷ்பவல்லியின் அபரிதமான புகழை ரூபாய் நோட்டுகளாக மாற்றியது. உடனடியாக ‘சம்சாரம்’ இந்தியும் பேசியது.

ஒட்டுமொத்த இந்தியாவும் புஷ்பவல்லியோடு சோகக் காட்சிகளில் சேர்ந்து அழுதது.

“‘தாசி அபரஞ்சி’யில் நடித்தபோது கொத்தமங்கலம் சுப்பு மூலம் தமிழ் பேசக் கற்றுக்கொண்டேன். வீட்டிலிருந்து தயிர்வடைகளைச் செய்து எடுத்து வந்து சுப்புவுக்குக் கொடுத்து அவரைக் குஷிப்படுத்துவேன்.

ஆரம்பத்தில் ஜெமினி எனக்கு மாதாமாதம் வழங்கிய ஊதியம் இரண்டாயிரம் ரூபாய். வாசன் பெயருக்குத்தான் ஒப்பந்தம் போட்டார். ‘பாலநாகம்மா’வில் என் நடிப்பைப் பார்த்து, சகல சலுகைகளும் எனக்கு நாளடைவில் கிடைத்தன. நிறையவே பணம் கொடுத்து என் நடிப்பார்வத்தை வாசன் வளர்த்துவிட்டார். ஜெமினியில் நான் நடித்த கடைசி படம் ‘மூன்று பிள்ளைகள்” - புஷ்பவல்லி.

பி. பானுமதிக்கு 24 மணி நேரமும் புஷ்பவல்லியின் மலர்ந்த முகமே மனத்தில் நின்றது. தன் பெயரையும் கனகவல்லி என்று வைத்துக்கொள்ள முடிவு செய்தார். குடும்பத்தினர் அனுமதி தரவில்லை.

‘வரவிக்ரயம்’ தெலுங்கு படத்தில் தன் அபிமான நடிகை புஷ்பவல்லியோடு பி. பானுமதி, சேர்ந்து நடித்து ஜென்ம சாபல்யம் பெற்றார். ‘வரவிக்ரயம்’ பிரமாதமாக ஓடியது. அமோக வசூல்.

பானுமதி மட்டுமல்ல. உலக நாட்டியப் பேரொளியாகப் பிரபஞ்சமெங்கும் வலம்வந்த பத்மினியும் புஷ்பவல்லியின் தீராக் காதலி!

ஜெமினியில் ‘கல்பனா’ என்ற நாட்டியச் சித்திரம் உருவான நேரம். அதில் நடிக்கச் சென்ற பத்மினியின் அனுபவம்.

“புஷ்பவல்லி பெரிய கார் ஒன்றில் வருவார். அக்கா லலிதாவையும் என்னையும் ஜோடியாகப் பார்ப்பதில் புஷ்பவல்லிக்கு ரொம்ப ஆசை. ‘நீங்கள் இரட்டைக் குழந்தை மாதிரி இருக்கிறீர்கள்’ என்று சொல்லி, எங்களைத் தனியாக அழைத்துக்கொண்டு போய், அருகில் அமர்த்திப் பேசிக்கொண்டிருப்பார். ஸ்வீட் கிடைக்கும்.”

காண்பவர்கள் அனைவரையும் கவர்ச்சியால் கட்டிப் போட்டவர் புஷ்பவல்லி. மிகச் சாதாரண நிலையில், பணியாற்றிய ஓர் இளைஞரை விரும்பிச் சரண் அடைந்தார்.

“ஜெமினியில் நானும் புஷ்பவல்லியும் நடித்தபோது இருவருக்கும் காதல் பிறந்தது. ஒட்டிப் பழகினோம். திருமணத்தைப் பற்றி நாங்கள் எண்ணவே இல்லை. மனம் விரும்பிப் பழகுபவர்களுக்குத் திருமணம் ஒரு தடையில்லை. அவள் என் குழந்தையைச் சுமப்பது தனக்குக் கிடைத்த அதிர்ஷ்டம் என்றாள்.

பிறக்கப்போகும் குழந்தைக்கு முழுமையான அப்பாவாக இருக்க முடியாது என்பதை உணர்ந்தேன். நான் எத்தனையோ எடுத்துச் சொல்லியும் புஷ்பவல்லி அதை ஏற்றுக்கொள்ளவில்லை. பானு ரேகா பிறந்தாள். காலப்போக்கில் இருவரும் வேறு பாதையில் செல்ல வேண்டிவந்ததால் பிரிந்தோம்.

எங்களுக்குள் திருமணமாகாததால் விவாகரத்துப் பிரச்சினையும் எழவில்லை.” - ஜெமினி கணேசன்.

நாகையாவும் புஷ்பவல்லியும் இணைந்து நடித்த அருமையான பக்திச் சித்திரம் ‘சக்ரதாரி’. அதில் ஜெமினி கணேசனுக்கு பாண்டுரங்கர் வேடம். ஜெமினிகணேசனும் புஷ்பவல்லியும் இடம் பெற்ற இன்னொரு படம் ‘மூன்று பிள்ளைகள்’.

புஷ்பவல்லியின் முதல் கணவர் ரங்காச்சாரி. அட்வகேட். டி.ஆர். ராஜகுமாரிக்கு முன்பு ‘சந்திரலேகா’வில் நடிக்கும் வாய்ப்பு புஷ்பவல்லியைத் தேடி வந்தது. வாசன் எத்தனை சமாதானம் சொல்லியும் ரங்காச்சாரி கேட்கவே இல்லை. சர்க்கஸ் காட்சிகளில் புஷ்பவல்லிக்குத் தைக்கப்பட்ட ஆடைகள் மிகவும் ஆபாசமாக இருந்ததாகக் குற்றம் சாட்டினார்.

புஷ்பவல்லியை அம்மா வேடங்களில் அதிகம் பார்க்க முடியாமல் போனது. ‘சம்பூர்ண ராமாயாணம்’ படத்தில் (ராமர்-என்.டி. ராமாராவ்) கவுசல்யாவாகக் காணப்பட்டார். மற்றும் சிவாஜியின் அம்மாவாக ஓரிரு படங்களில் தோன்றினார். ‘மலேயா மாமியார்’ என்ற பெயரில் சொந்தப் படம் தயாரித்தார் புஷ்பவல்லி. லட்சக்கணக்கில் நஷ்டம். கடனை அடைப்பதற்காக மகள் ரேகாவை சினிமாவில் அறிமுகப்படுத்தும் கட்டாயம்.

தன் மகளுக்காக வாய்ப்பு கேட்டு எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவரிடமும் சென்றார் புஷ்பவல்லி. வியட்நாம் வீடு படத்தில் ரேகா நடித்துச் சில காட்சிகளும் படமாயின. “பெரும் புகழ் மிக்க ஸ்டாரான நீங்கள் உங்கள் மகளுக்காக, சான்ஸ் கேட்கும்போது அதை நிறைவேற்றுவது எனது கடமை” என்று புஷ்பவல்லிக்கு வாக்குறுதி அளித்தார் எம்.ஜி.ஆர்.

“கேட்பதற்கு இதமாகப் பேசும் எம்.ஜி.ஆர். இன்றுவரை என் மகளுக்கு சான்ஸ் தரவில்லை” என்று புஷ்பவல்லி புலம்பிய நேரம் இந்தியில் அழைத்தார்கள்.

ரேகா வடக்கில் வாகை சூடியது 1971-ல். ரேகா அகில இந்திய நட்சத்திரமாகப் புகழ் பெற்ற பின்னரே, அவர் தன்னுடைய கலை வாரிசு என ஜெமினி கணேசன் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.

Russellxor
25th September 2015, 04:49 PM
செந்தில்வேல்,
தங்களுக்குள் ஒளிந்திருக்கும் எழுத்து வன்மை எவ்வாறு வெளிப்படுகிறது பார்த்தீர்களா.. நடிகர் திலகம் உள்ளே புகுந்து விட்டால் அது தனி உதிர வகையாகி விடுகிறது. ஒவ்வொருவருக்கும் உள்ளே ஏற்படும் உத்வேகம் ஏதாவது ஒரு கலையில் அவனை அல்லது அவரை அல்லது அவளை மிகச் சிறந்த வகையில் பரிமளிக்க வைக்கிறது. அவ்வாறுள்ள போது தாங்களோ பல்துறை வித்தகராக பரிமாணம் எடுத்து வருகிறீர்கள்.


தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள்.


தங்களின் உழைப்பு அர்ப்பணிப்பு போன்றவற்றை பார்த்து வியந்தததின் தாக்கத்தின் விளைவே இது போன்ற
அணில் குஞ்சு முயற்சி

நன்றி