PDA

View Full Version : மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5



Pages : 1 2 3 4 5 6 7 [8] 9 10 11 12 13 14

JamesFague
28th November 2015, 12:07 PM
Mr C K Sir,

தவறுக்கு மன்னிக்கவும். அந்த நட்சத்திரத்தை நீங்களே கூறிவிட்டால் இந்த தவறு இனிமேல் நடக்காது.

vasudevan31355
28th November 2015, 12:28 PM
//நான் தேடியது பழைய ‘உயிர்’ படப் பாடல்களை..ம்ம் இதுவரை சிக்கவில்லை..//

ம்ஹூம்....இப்போதைக்கு சான்ஸ் இல்லை.:)

chinnakkannan
28th November 2015, 12:33 PM
அதெல்லாம் முடியாத்..எஸ்.வி.டி. சார்.. இதெல்லாம் தவறே அல்ல.. அப்புறம் உங்கள் - மனதிலிருக்கும் நட்சத்திரம் எனக்கெப்படித் தெரியும்?


Mr C K Sir,

தவறுக்கு மன்னிக்கவும். அந்த நட்சத்திரத்தை நீங்களே கூறிவிட்டால் இந்த தவறு இனிமேல் நடக்காது.

chinnakkannan
28th November 2015, 12:34 PM
//ம்ஹூம்....இப்போதைக்கு சான்ஸ் இல்லை//அப்படி எல்லாம் விட்டுட ஏலாது :)

chinnakkannan
28th November 2015, 12:51 PM
எதையோ தேடப் போய் சிக்கியது மு.மேத்தா எழுதிய முதல் பாடல்..காத்து வீசுதே இளங்க் காத்து வீசுதே இங்கே கதிர்கள் கூட காதல் பேசுதே..அபபடியே தொடர்ந்திருந்தால் இன்னுமொரு இனிய பாட்லகிடைத்திருக்கும்..செல்லமமா சின்னம்மா என ம்ம்ம்

அதிலும் கவி வன்மை.. ஆத்தங்கரையில் மஞ்சக்குளிச்சு உன் ஆசையை உடம்பில் பூசிக் குளீச்சேன்.. நைஸ்



https://youtu.be/eqXlUEtjtTM

chinnakkannan
28th November 2015, 08:28 PM
மலையோரம் மயக்கிய கானங்கள்
*
இளமை. அழகு. வாலிபன், வாலிபி.. புதிதாக மணம் புரிந்தவர்கள்..புதிதாக மனதைப் புரிந்து கொள்ள விரும்புபவர்கள்..

பசுமை.. இயற்கைக் காட்சிகள். பனி. அழகு. உடன் அழகிய நங்கை.. இளமை. சொர்க்கம் வாலிபனுக்கு.. திரும்புகையில் ஒருவழியில் சத்தம்..

என்ன சத்தம்ங்க..

இந்த மலைஜாதிக்காரங்க பாட் பாடறாங்க திருவிழாவோ என்னவோ

போய்ப் பார்க்கலாமா.. தோகை மயிலின் மையிட்ட மையலிட்ட கண்கள் பேசுவதை இதழ்களும் திறந்து கேட்க வாலிபனால் மறுக்கவா முடியும்..

போகிறான்..கிறாள்.. கிறார்கள்..

ஏலேல்லாலா ஏலேலலா.. தோட்டம் கொண்ட ராசாவே சூடிக்கொண்ட ராசாத்தி..

இந்த மலைஜாதி மக்கள் பார்த்ததில்லை..ஆனால் தமிழ் சினிமாப் பாடல்களில் – அந்தக்கால- கட்டாயம் இடம்பெற்றுவிடுவார்கள்.. கோரஸிற்காகவும் பாக்ஸ் ஆஃபீஸிற்காகவும்..

இந்த தோட்டம் கொண்ட ராசாவே – பகலில் ஒரு இரவு – இளையராஜா. விஜயகுமார்… ஸ்ரீதேவி..

https://youtu.be/jwjBz06kAlg

chinnakkannan
28th November 2015, 08:59 PM
மலையில் மயக்கிய கானங்கள் – 3
ஹீரோ குடும்பம் பணக்காரர் எனக் காட்ட வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்.. அவர்களுக்கு மலை வாசஸ்தலத்தில் எஸ்டேட் இருக்க வேண்டும்.

ஆப்வியஸ்லி.. ஒரு திருவிழா வரும்.. ஹீரோ பாடுவார் முடிந்தால் ஹீரோயின் கும்பலோடு கும்பலாக.. அப்படி இல்லை எனில் ஹீரோவின் சகோதரன் பாடுவார்.. என்பதான விதி உண்டில்லையா தமிழ் சினிமாவில்..

மலைஜாதி மக்களின் பாடல்களில் கோரஸ் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.. எத்தனை பாடல்கள் வந்தாலும் இந்த – இப்போது கேட்கப் போகும் பாட் இருக்கே.. ஹோ ஹோ ஹோஹோ ஹோஹோ ஹோ ஹொய்னா ஹொய்னா ஹொய்னா ஹோ ஹோ…

மென்மையாய்ப் பி.பி.ஸ்ரீனிவாஸ் ஆரம்பிப்பார்

நல்லவன் எனக்கு நானே நல்லவன்ன்ன்ன் என இழுத்து சொல்லிலும் செயலிலும் வல்லவன் ( தம்பிக்குப் பார்க்க ப் போன பொண் தனக்கே பிடித்துவிட உண்மையைச் சொல்லாமல் லெட்டர் எழுதி – ஸிம்ப்பிள் மேட்டரை காம்ப்ளிகேட் ஆக்கிய கள்ளத்தனம் கொண்டவர்..பாத்திரத்தில் பாலாஜி.. கண்ணாடிக்குப் பின்னால் உள்ள கண்களில் அது மின்னும்)

அடுத்து வரும் சரணத்தில் ந.தி – அப்பாவி- படிக்காதவர் – முரடர்- ஆனால்வெகுளி.. முகத்தில் அவ்வளவு பாவங்கள்..ரசித்துப் பாடலில் இறங்குவார்..

உள்ளம் சொன்னதை மறைப்பவனில்லை
ஊருக்குத் தீங்கு செய்தவனில்லை
வல்லவன் ஆயினும் நல்லவன்..

அங்கே பி.பி.எஸ் மென்மை என்றால் கொஞ்சம் ஸ்ட்ராங்க்கான வாய்ஸில் டி.எம்.எஸ் பச்சக்கென்று பாடல் காட்சி மனசுக்குள் ஒட்டிக் கொள்ளும்

பள்ளம் மேடு சென்றால் பார்த்துச் செல்லும் பிள்ளை
நான் பாசம் என்ற நூலில் சேர்த்துக் கட்டிய முல்லை..

என அவர் சொல்ல

இல்லை இல்லை என்றே என்றும் சொன்னவன் இல்லை
என் கண்ணை நானே கண்டேன் அதில் என்னை நானே கண்டேன் என பாலாஜி சாவித்ரியைப் பார்த்துப் பாட சூடு பிடிக்கும் பாடல்..
வெள்ளை மனது கொண்ட, வேட்டையில் வீரம் மிக்க, அண்ணன் மீது பாசம் மிகக் கொண்ட முரட்டுப் பிள்ளை ( ந.தி) என்ன சொல்கிறது

சிட்டு போல வானில்
துள்ளிச் செல்ல வேண்டும்
கீரிப் பிள்ளை போலே
ஊர்ந்து செல்ல வேண்டும்

எனச் சொல்ல பாலாஜி – ஸ்மார்ட் அண்ட் கோழை..

தொல்லை என்ற பாம்பை
கவ்விக் கொல்ல வேண்டும்
தூய உள்ளம் வேண்டும் என்றும்
சேவை செய்ய வேண்டும்

எனச் சொல்லும் பதில்- எனக்குப்பிடிச்ச பொண் நான் கைபிடிக்க பொய் சொல்லிட்டேன்.. என்று முதல் வரியிலும் இதிலெல்லாம் பெரியவர்களுக்கோ மற்றவர் மீதோ பாசமெல்லாம் குறையாது என இரண்டாவது வரியிலும் சொல்வது அவரது பாத்திரத்தையும் பளிச்சிட வைத்து பார்ப்பவருக்கும் புரிய வைக்கும்..

கோரஸ் நடனமும் வெகு அழகு பாடல் முடிந்தபின் தொடரும் ஆட்டமும் அழகு.. முழுக்க முழுக்க உற்சாக டானிக் அருந்தி முகம் முழுக்க குஷியுடன் வெள்ளந்தி மனசை வெளிக்காட்டும் ந.தி,,, கொஞ்சம் கள்ளப்பார்வையை மறைத்த நல்ல பார்வை கொண்ட பாலாஜி என வெகு எழிலாய்க் காட்சி..ஒவ்வொரு தடவை கேட்கும் போதும் அட சட்னு முடிஞ்சுடுச்சே என எண்ண வைக்கும் பாடல்..

படித்தால் மட்டும் போதுமா.. ஸ்ரீ தேவியில் பார்த்த படம்.. ரீ ரன்னில்.. க்ளைமாக்ஸ் மட்டும் செதுக்கியிருந்தால் – அனாவசியமாக பாலாஜியைச் சாகடிக்காமல்- இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.ம்ம்

இப்போ பாட்..

https://youtu.be/-Bk08LHMcok

rajeshkrv
29th November 2015, 10:07 AM
Vanakkam

rajeshkrv
29th November 2015, 10:56 AM
ஒரு நல்ல பாடல்
ஒண்ணா இருக்க கத்துக்கனும் திரையில் ராஜாவின் இசையில் மனோவின் குரலில் அழகான பாடல்

https://www.youtube.com/watch?v=TxBZrCm52dI

madhu
29th November 2015, 03:42 PM
வாசு ஜி....

உ.இ.உ.வா வுக்கு நன்றியோ நன்றி...

ராகவ்ஜி...

இன்னைக்கு ஞாயிறு என்பதால் கண்ணுக்குள்ளே ஒரு பாடல் காட்சியே போட்டுக் காண்பித்து விட்டீர்கள்,.... சூப்பர் சூப்பர் சூப்பரே..

வாத்தியாரையா...
ஹவாயில் ஹாயாக இருந்து விட்டு திரும்பியாச்சா ? கடல் பார்த்தாச்சு... எப்போ ஏரி பார்க்க வரீங்க ? சென்னை முழுக்க எல்லா ஏரியாவும் ஏரியாதான் இருக்கு..

வாசுதேவன் ஜி..
தமிழிலும் உலகத் தரம் வாய்ந்த படங்கள் எடுக்கும் திறமை உள்ளவர்கள் உண்டு. ஆனால் அந்த வைரங்களைப் பட்டை தீட்டி ஜொலிக்க வைக்க தயங்கும் திரைப்பட உலகம் இங்கிருப்பதால்தான் இன்னும் மங்கியே இருக்கிறது. விரைவில் நாமும் மின்னுவோம்.

சிக்கா...
என்ன புரியலை ? வாசுஜி கேட்டது மதுதான் அரவிந்த கார்த்திக்கா என்று !! அட.. ஆமாம்பா ஆமாம்.

rajraj
29th November 2015, 09:19 PM
வாத்தியாரையா...
ஹவாயில் ஹாயாக இருந்து விட்டு திரும்பியாச்சா ? கடல் பார்த்தாச்சு... எப்போ ஏரி பார்க்க வரீங்க ? சென்னை முழுக்க எல்லா ஏரியாவும் ஏரியாதான் இருக்கு..


madhu: We will be there sometime next year (Aug-Sep), if my health permits long distance air travel. Hawaii is the longest air travel this year ! :) I hope the 'yeri' dries up by that time! :)

rajraj
30th November 2015, 01:22 AM
From manidhan maravillai (1962)

kaadfhal yaathiraikku.......

http://www..youtube.com/watch?v=2gKnDPk8WHc

This song is for chinnakkaNNan who is searching for 'uyir' songs ! :lol:

RAGHAVENDRA
30th November 2015, 11:15 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/p720x720/12289716_1012401935477145_557360220573998138_n.jpg ?oh=e4509dd240464989781a546112ad43bc&oe=56D69F8D

இன்று பிறந்த நாள் கொண்டாடும் வாணி ஜெயராாம் அவர்களுக்கு நமது உளமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். இறைவன் அவருக்கு நீண்ட ஆயுளையும், நல்ல ஆரோக்கியத்தையும் தொடர்ந்த குரல் வளத்தையும் அளிக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறோம்.

அவர் பாடிய அனைத்துப் பாடல்களுமே நெஞ்சில் நிலைத்து விட்டவை. அபூர்வமான பாடலோடு அவர் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மூழ்குவோம்.

அண்ணன் ஒரு கோயில் திரைப்படத்தில் மெல்லிசை மன்னரின் இசையில் வாணியின் மெஸ்மெரிஸக் குரலில் சூப்பர் ஹிட் பாடல்.

https://www.youtube.com/watch?v=cvEtTiOAgls

JamesFague
30th November 2015, 12:41 PM
Courtesy: Tamil Hindu

பானுமதி: 7. எம்.ஜி.ஆர். - பானுமதி சண்ட!

வசூலை வாரிக் குவிப்பதில் வணிக ரீதியாக முன்னிலை வகித்தது எம்.ஜி.ஆர்.- பானுமதி ஜோடி. இருவரும் இணைந்து நடிப்பதாக, ஸ்வஸ்திக் பிலிம்ஸ் மருதுபாண்டியன், பவானி, ராஜா தேசிங்கு போன்ற புதிய படங்களின் அறிவிப்புகள், பத்திரிகைகளில் வெளியான வண்ணம் இருந்தன.

‘பானுமதியைத் தவிர எம்.ஜி.ஆருக்குப் பொருத்தமான ஜதை வேறு யாரும் இல்லை’ என்று சகலரும் நினைத்தார்கள்.



சொந்தப் படத் தயாரிப்பில் பானுமதி - எம்.ஜி.ஆர். நேரிடையாக மோதும் சூழ்நிலை ஏற்பட்டது. இருவருக்கும் இடையே ஏதும் பிரச்னையோ, மனக்கசப்போ வராமல் பானுமதி சாமர்த்தியமாகத் தடுத்தார். எம்.ஜி.ஆரிடம் நேரிடையாகப் பேசினார்.

அதைப் பற்றி ‘வாத்தியாரே’ எழுதியுள்ளவை -

‘சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் ‘அலிபாபா’ படத்தில் நானும் திருமதி பானுமதி அவர்களும் நடித்துக்கொண்டிருந்தோம். அப்போது நாடோடி மன்னன் விளம்பரம் வெளியிடப்பட்டது.

இரண்டு மூன்று நாள்களுக்குப் பிறகு, பரணி பிக்சர்ஸாரின் விளம்பரமும் வந்தது. அன்று, படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. திருமதி பானுமதி அவர்கள் சொன்னார்கள் –

‘நாங்கள் எடுக்கும் கதையையே (‘ஜெண்டாவின் கைதி’ என்ற ஆங்கிலக் கதையின் தழுவல்) நீங்களும் எடுக்கப்போகிறீர்களாமே...!

நமக்குள் போட்டி வேண்டாம். உங்கள் கதையை மாற்றிக்கொள்ளுங்கள். நாங்கள் பல மாதங்களாகச் செலவு செய்து எல்லாமே தயாராகிவிட்டன’ என்று.

நான் சொன்னேன் -

‘நான் பல ஆண்டுகளாக உருவாக்கி வந்த உருவம் இது. எனது வாழ்வில் ஒரு திருப்பத்தை விரும்பி, அதற்காக இக்கதையை தேர்ந்தெடுத்தேன். அதிலும் நானே டைரக்டர் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளப்போகிறேன்’ என்று.

இது பற்றி மேலும் பேச்சு நடந்தது. முடிவாகச் சொன்னேன் -

‘நான் ஜெண்டாவின் கைதி என்ற கதையில் உள்ள ‘மன்னனாக மாற்றப்படும் காட்சி’யை மட்டும் வைத்துக்கொள்ளப்போகிறேன். மற்றவை எல்லாமே வேறாக இருக்கும்.

உங்களுக்கும் கதையை மாற்ற முடியாது இருக்குமானால், நீங்களும் எடுங்கள். நமக்குள் போட்டா போட்டியே வராது.

உங்கள் கதை ‘ஜெண்டாவின் கைதியின் நேர்ப்பதிப்பு. எனது கதை வேறு’ என்று சொன்னேன்.

‘உண்மையில் எனக்கும் குழப்பம்; அவர்களுக்கும் அதே நிலை. சில நாள்களுக்குப் பிறகு சொன்னார்கள் -

‘நாங்கள் அந்தக் கதையை எடுப்பதை நிறுத்திவிட்டோம். சந்தேகம் இல்லாமல் தாங்கள் படத்தை எடுக்கலாம்’ என்று. நன்றி தெரிவித்தேன், உண்மையான உள்ளத்துடன்.

‘நாடோடி மன்னனில்’ தனக்கு நடிக்கும் வாய்ப்பு இருக்கும் என அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை அப்போது.

எந்த நலத்தையும் எதிர்பாராமல் பானுமதி விட்டுக்கொடுத்தார்கள் என்பது உண்மை. அவர்களின் பெருந்தன்மையை எவ்வளவு போற்றினாலும் போதாது’.



*

பானுமதியால் நம்பமுடியவில்லை. எம்.ஜி.ஆரின் சொந்தப் படத்தில் அவர் ஹீரோயின் என்பதை. காரணம், இருவருமே தங்கள் சிம்மாசனத்தை எப்போதும், எதற்காகவும், யாருக்காகவும் கடுகு அளவுக்குகூட விட்டுத்தராதவர்கள்.

‘நான் எங்கு தொழில் செய்தாலும், சுதந்தரமாக இருக்கவும், தொழில் செய்யவும் விரும்புகிறவன். அதே குணத்தைப் படைத்தவர் திருமதி பானுமதி அவர்கள். நாங்கள் இருவருமே விட்டுக்கொடுக்காத மனோபாவம் உள்ளவர்கள்’ - எம்.ஜி.ஆர்.

டைரக்டர் கே. சுப்ரமணியத்தின் மேற்பார்வையில், நாடோடி மன்னன் ஷூட்டிங் தொடங்கியது.

பொதுவாக, பானுமதி சினிமாவில் பாட வேண்டுமானால் அவரைத் தேடிச் சென்று, ஒத்திகை பார்ப்பது வழக்கம்.

‘சம்மதமா... நான் உங்க கூட வர சம்மதமா...?’ பாடலுக்கு, தன் வீட்டில் ரிகர்ஸல் வைத்துக்கொண்டார் எம்.ஜி.ஆர்.

அதுவரையில், எந்த நடிகரின் வீட்டுப்படியையும் மிதிக்காதவர் பானுமதி. லாயிட்ஸ் ரோட்டுக்கு வந்து பாடிவிட்டுப் போனார்.

எம்.ஜி.ஆரின் எதிரிகளே மலைத்துவிட்டார்கள். புது ஜோரில் இதெல்லாம் சகஜம். இந்த நட்பும் ஒத்துழைப்பும் எத்தனை நாள்?

படம் முடிகிறவரையில், பானுமதி நிச்சயம் நடிக்கமாட்டார் என்று ஆருடம் சொன்னார்கள்.

எம்.ஜி.ஆரின் நொடிக்கு நொடி நிறம் மாறும், நிலையற்ற காட்சி அமைப்புகளால், பானுமதிக்கு நிம்மதி போய்விட்டது.

நடனம் ஆடுவதும் பானுமதிக்கு ஒத்துவராது. நாடோடி மன்னனில் அவருக்கு டான்ஸ் சீக்வன்ஸ் உண்டு. பானுமதி நேரடியாக எம்.ஜி.ஆரிடமே கேட்டுவிட்டார்.

‘எனக்கு நாட்டியம் சரிப்பட்டு வராதுன்னு உங்களுக்குத் தெரியுமே. அப்புறம் ஏன் அப்படி ஒரு சீன்?’

எம்.ஜி.ஆர். பதில் சொல்லவில்லை.

இன்னொரு தினம். சீன் சூப்பராக வரவேண்டி ஒரு டைரக்டராக பானுமதியை வேலை வாங்கினார். சுனாமியானார் நாயகி. வார்த்தைகள் தடித்துத் தகராறு ஆனது.

‘இதோ பாருங்க எம்.ஜி.ஆர்., ஒரே ஷாட்டை திரும்பத் திரும்ப எத்தனை முறை எடுப்பீங்க. இவ்வளவு நாளா சொல்ல வேண்டாம்னு இருந்தேன். எனக்கும் டைரக்ஷன் தெரியும். கே. சுப்ரமணியம் சாரை நிறுத்தினது தப்பு. அவர் ஒரு பெரிய டைரக்டர். அவர் போனதுக்கு அப்புறம் உங்க அசிஸ்டென்ட்ஸ் எங்கிட்ட வந்து டெய்லி புதுப்புது கதை சொல்றாங்க.

நீங்க என்ன எடுக்கறீங்கன்னு உங்களுக்கே தெரியல. நீங்களே இந்தப் படத்தோட ப்ரொடியூசருங்கறதால, எல்லா ஆர்ட்டிஸ்டும் உங்களை அட்ஜெஸ்ட் பண்ணிட்டுப் போறாங்க. நீங்க அதை ஒங்களுக்கு சாதகமா எடுத்துக்காதீங்க.



முதல்ல ஒழுங்கா கதையை முடிவு பண்ணுங்க. நான் கொடுத்த கால்ஷீட் முக்கால்வாசி முடிஞ்சுபோச்சு. இனிமேயாவது வேற டைரக்டரை போடுங்க. நான் தொடர்ந்து நடிச்சுத் தரேன். இன்னிக்கு எனக்கு மூடு போயிடுச்சு. நான் கிளம்பறேன். ஸாரி...

‘எம்.ஜி.ஆர்., பானுமதி மீது பெரும் மதிப்பு வைத்திருந்தார். பானுமதி இவ்வளவு தூரத்துக்குப் போவார் என எதிர்பார்க்கவில்லை. தன்னைத் தாழ்த்திக்கொள்ளும் உத்தேசம் எம்.ஜி.ஆருக்கு எப்போதும் கிடையாது. அவர் சுதந்தர சுயம்பு.

‘என் டைரக்ஷன்ல உங்களுக்கு நடிக்க இஷ்டம் இருந்தா நடிங்க. இல்லேன்னா விட்டுடுங்க’.

பானுமதிக்குள் தன்மானம் கூச்சல் போட்டது.

‘மிஸ்டர் ராமச்சந்திரன், நானும் அதைத்தான் சொல்றேன். குட் பை. வரேன்’.

பானுமதி தொடர்ந்து நடிக்காமல் போனாலும், அதை மனத்தில் கொள்ளாமல், எம்.ஜி.ஆர். மிகுந்த பெருந்தன்மையுடன் அவருக்காகப் பேசிய சம்பளம் முழுவதையும் செட்டில் செய்துவிட்டார்.

பானுமதி அதை ஜானகிக்குத் திருப்பி அனுப்பினார். கூடவே ஒரு கடிதமும்...

‘அன்புள்ள வி.என். ஜானகிக்கு, பானுமதி எழுதிக்கொண்டது. உங்கள் கணவரின் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்காக மிகவும் வருந்துகிறேன். இந்த செக்கை நான் ஏற்றுக்கொள்வதற்கு இல்லை. மன்னிக்கவும்’.

பானுமதி, இடைவேளையோடு நம்பியாரின் கத்தி வீச்சில் இறந்துவிடுவார். அதை, அம்பு பட்ட மான் செத்துக்கிடப்பதாக ஒரு ஓவியம் மூலம் எம்.ஜி.ஆர். காட்சிப்படுத்தினார்.

ஆனந்தவிகடன், நாடோடி மன்னன் சினிமா விமர்சனத்தில் பானுமதியைப் பாராட்டியது.

‘எம்.ஜி.ஆரும் பானுமதியும் முதல்ல மீட் பண்றதே காமிக்தான். பானுமதி, சொந்தக்குரலிலே ஒரு பாட்டுப் பாடிச்சு அண்ணே! தேனாட்டம் இருந்தது. பாடி ஆடி வேடிக்கை காட்டி பாதியிலே தியாகம் செய்துடறாங்க. பாவம்’.

‘நாடோடி மன்னன் வெற்றியில் பானுமதிக்கும் உரிய பங்குண்டு!’ என்று எம்.ஜி.ஆர்., அவரை மனமாரப் பாராட்டி, அதன் வெற்றி விழா மலரில் எழுதினார்.

‘எம்.ஜி.ஆர். தானே டைரக்ட் செய்து, தன் சொந்தத்தில் எடுக்கும் இப்படம் ஒழுங்காக முற்றுப்பெறுமா? நாடோடி மன்னன் வெளிவரும்போது பானுமதி அவர்கள் படத்தில் இருப்பார்களா...?

என்றெல்லாம் சந்தேகப்பட்டவர்கள், (அதைவிட எனது வீழ்ச்சியைக் காண ஆசைப்பட்டவர்கள் என்றால் பொருந்தும்) வெட்கித் தலை குனியும்படி பானுமதி அவர்கள் ஒத்துழைத்ததோடு மட்டுமல்ல, தான் ஏற்ற ‘மதனா’ என்கிற பாத்திரத்தை வேறு எவரும் இவர்போல் திறமையாக நடித்திருக்க முடியாது என்று மக்களே சொல்லும்படிச் செய்துவிட்டார்.



இவ்வாறு புகழப்படுவதைவிட, ஒரு நடிகையின் வெற்றிக்கு வேறு என்ன வேண்டும்’ - எம்.ஜி.ஆர்.

நாடோடி மன்னன் வெற்றிக் கொண்டாட்டங்கள் ஒவ்வொரு ஊரிலும் நடைபெற்றது. பானுமதி வெளியூர் வைபவங்களில் பங்கேற்கவில்லை.

சென்னையில் அண்ணா பங்கேற்ற பரிசளிப்பு விழாவில் மட்டும் கலந்துகொண்டார்.

நாடோடி மன்னனுக்கு ஒரு வாரம் முன்னதாக, 1958 ஆகஸ்டு 15-ல், சிவாஜி - பானுமதி நடித்த ‘சாரங்கதாரா’ ரிலீஸானது. தியாகராஜ பாகவதர் - கண்ணாம்பா நடித்து ஓஹோவென்று ஓடிய அசோக் குமாரும், அதுவும் ஒரே கதை. நடிகர் திலகத்தின் 50-வது படம். 50 நாள்களை எட்டிப் பிடிக்கவே சிரமப்பட்டது.

‘வசந்த முல்லை போலே வந்து’ பாடல் மட்டும் சாரங்கதாராவை இன்றும் நினைவூட்டுகிறது.

1959-ல், டி.ஆர். மகாலிங்கம் - பானுமதி ஜோடியாக நடித்தது ‘மணிமேகலை’. டி.ஆர். மகாலிங்கம் - பானுமதி இணைந்து பாடிய சூப்பர் ஹிட் டூயட் அதில் ஒலித்தது.

நாடோடி மன்னனுக்காக எம்.ஜி.ஆர். தனது மற்ற படங்களை நிறுத்திவைத்திருந்தார். அவை மெல்ல வளர்ந்தன. அவற்றில் பானுமதி நடித்த ராஜா தேசிங்கும் ஒன்று.

எம்.ஜி.ஆர்., ‘ராஜா தேசிங்கு - தாவுத்கான்’ என இரு மாறுபட்ட வேடங்களில் தோன்றியதால், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. மிகத் தாமதமாக, 1960 கோடையில் வெளியானது.

அதில் ‘வனமேவும் ராஜகுமாரா...’ கேட்கக் கேட்கத் தெவிட்டாத கானம்! சி.எஸ். ஜெயராமனுடன் இணைந்து பானுமதி பாடிய சூப்பர் ஹிட் பாடல்.

பானுமதியின் ஒப்பற்ற ஆற்றலுக்கு, ராஜா தேசிங்கு தீனி போடவில்லை. பானுமதி, எம்.ஜி.ஆருடன் கவுரவ வேடத்தில் வந்து போனதைப்போல் இருந்தது.

'தாவுத்கானாக’ எம்.ஜி.ஆர். தன் அற்புதமான நடிப்பை அங்குலம் அங்குலமாக வெளிப்படுத்திய படம் ராஜா தேசிங்கு. இருந்தும், இன்னொரு மதுரை வீரனாகவில்லை.

ராஜா தேசிங்கு தோல்விக்கான காரணத்தை கண்ணதாசன் வெளிப்படையாக எழுதியுள்ளார்.

‘ராஜா தேசிங்குக்குப் பகையாக வந்த தாவுத்கான், ராஜா தேசிங்கின் தந்தைக்கும் முஸ்லிம் மனைவிக்கும் பிறந்தவன் என்று நான் கதை எழுதிவிட்டேன். படம் வெளியானபோது, முஸ்லிம்களிடையே அது பெருத்த கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கதை சோடைபோனதன் காரணமாக, அதைத் தயாரித்த ‘கிருஷ்ணா பிக்சர்ஸ்’ கவிழ்ந்துவிட்டது’.

சிவாஜி, பத்மினி, வைஜெயந்திமாலா, பண்டரிபாய் ஆகியோருடன் பானுமதி நடித்தும் ராஜபக்தி தோல்வி அடைந்தது. பானுமதிக்கு வில்லி கம் ஹீரோயின் வேடம். சிவாஜியும் அவரும் மோதுவதில், சூடோ சுவையோ இல்லாமல், இருவரது நடிப்பும் எடுபடாமல் போனது.

லைலா மஜ்னு ஸ்டைலில் தமிழ் - தெலுங்கில் ஏ.நாகேஸ்வரராவ் - பானுமதி, சித்தூர் வி. நாகையா, என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ. மதுரம் நடிக்க, இளங்கோவன் வசனத்தில் ‘நூர்ஜஹான்’ பட அறிவிப்பு வெளியானது. ஆனால், வந்ததாகத் தெரியவில்லை.

அதற்குப் பதிலாக, 1961-ல் பரணி பிக்சர்ஸ் ‘கானல் நீர்’, ஒப்பற்ற முறையில் சரத் சந்திரரின் படைப்பில், பானுமதியின் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்த உருவானது. அவரது ராசியான ஹீரோ ஏ. நாகேஸ்வர ராவ், ‘கானல் நீர்’ கதாநாயகன்.

அதில், பானுமதி பாடிய ‘வழி தேடி வந்தேன்’ காலத்தை வென்ற கானம்!

‘இளம் விதவை மாதவியாக வருபவர் பானுமதி. அவர் இவ்வளவு மெலிந்திருப்பது ஆச்சரியம்! அதைவிட பெரிய ஆச்சரியம், முதல் கட்டம் தொடங்கி இறுதிக் காட்சி வரையில் தனக்கு இயல்பான அதிகப்பிரசங்கித்தனத்தை மறந்து ‘மாதவி’யோடு ஒன்றிவிட்டார்’ என்று ‘குமுதம்’ பாராட்டியது.



அதோடு மட்டுமல்ல, அந்த ஆண்டின் மிகச் சிறந்த நடிகையாகவும் தேர்ந்தெடுத்து கவுரவித்தது.

இத்தனைக்கும் 1961, சாவித்ரி நடிப்பில் சக்கை போடு போட்ட ஆண்டு. (சாதனைச் சித்திரங்கள் - பாசமலர், பாவமன்னிப்பு). சாவித்ரியைச் சற்றே புறக்கணித்துவிட்டு, பானுமதியின் நடிப்பைக் ‘குமுதம்’ கொண்டாடியது வியப்பின் விஸ்வரூபம்!

*

நாற்பதை நெருங்கிக்கொண்டிருந்தார் பானுமதி. கண்ணாடி அவருக்குப் பகை ஆனது. கோலிவுட் ஒட்டுமொத்தமாக சரோஜாதேவிக்கு மாறிய தருணம். தமிழில் பானுமதிக்குச் சுத்தமாகப் படங்கள் இல்லை.

நீண்ட காலத் தயாரிப்பாக, சிவாஜியோடு ‘அறிவாளியும்’, எம்.ஜி.ஆரோடு ‘கலையரசி’ ‘காஞ்சித்தலைவன்’ மிச்சம் இருந்தன.

விஜயா - வாஹினி, ஜெமினி, மாடர்ன் தியேட்டர்ஸ், ஜூபிடர், பட்சி ராஜா, விக்ரம் என அன்றைய அத்தனை ஸ்டுடியோ அதிபர்கள் தயாரித்த படங்களிலும் நடித்து, பெரிய ரவுண்டு வந்தாகிவிட்டது.

அந்த வரிசையில், ஏவி.எம். மட்டும் பாக்கி. மாபெரும் வெற்றி, வசூல் ராணி போன்ற வார்த்தைகள் பானுமதிக்கு பழகி ஓய்ந்தவை.

மெய்யப்பச் செட்டியாருக்கும் பானுமதிக்கும் இடையே சுமுகமான நட்பு கிடையாது. ‘ஏவி.எம்.மில் கால் வைக்கமாட்டேன்’ என்று பானுமதி எதன் பொருட்டோ சபதம் எடுத்திருந்தார்.

‘இளம் வாலிபனுக்கு அம்மாவாக ஏவி.எம்.மில் நடிக்கக் கூப்பிடுகிறார்கள்...’ என்றதும் நம்ப முடியவில்லை.

‘சும்மா கிடந்த நிலத்தைக் குத்தி...’ பாடல் காட்சியை ஏவி.எம்.மில் படமாக்கத் திட்டமிட்டது எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ். பானுமதி அங்கு வரமாட்டேன் என்று ஒற்றைக் காலில் நின்றார்.

அப்புறம், ‘நாடோடி மன்னனில்’ அவருக்காகவே விஜயா - வாஹினியில் ‘பேக் புரொஜெக்ஷன்’ வசதி செய்யப்பட்டது. வேறு வழி?

‘பானுமதி, ஏவி.எம். தயாரிப்பில் நடிப்பாரா...?’ என்பது அந்நிறுவனத்துக்கே, மில்லியன் டாலர் கேள்வியாகத் தோன்றியது.

இந்தியாவில், பானுமதியைத் தவிர வேறு யாராலும் நடிக்கமுடியாத மிக அபூர்வமான வேடம்.

‘அவரது சம்மதத்தைக் கேட்டுப் பார்ப்போம். சரி என்றால் படத்தை உருவாக்குவோம். மறுத்துவிட்டால் வேறு சினிமா தயாரிப்பது...’ என்கிற முடிவோடு பானுமதியை அணுகினார்கள்.

புதிதாக நடிக்க, இனியும் சாதிக்க ஏதும் இருக்கிறதா என்கிற யோசனைகளெல்லாம் காணாமலே போயின. குடும்பத்தில் முழுக்க மூழ்கிவிட்ட பின், ஏவி.எம். படத்தில் நடிக்க வேண்டுமா?

டி.ஆர். மகாலிங்கம், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என்று தமிழகத்தின் தன்னிகரற்ற கலைஞர்கர்களைத் தொடர்ந்து நாயகர்களாக்கிய நிறுவனம் ஏவி.எம்.

அந்நாளில், அங்கு ஹீரோ - ஹீரோயின்களை விடவும், கதைகளுக்கே கூடுதல் முக்கியத்துவம் தருவார்கள். அப்படிப்பட்ட செட்டியாரின் காம்பவுன்டில், முதன்முதலாக அவர்களே தேடிச்சென்று ஒப்பந்தம் செய்த ஒரே துருவ நட்சத்திரம் பானுமதி!

rajeshkrv
30th November 2015, 09:16 PM
Courtesy: Tamil Hindu

பானுமதி: 7. எம்.ஜி.ஆர். - பானுமதி சண்ட!


Mr.Vasudevan instead of pasting the entire content, just the tamil hindu link would do i guess.

rajraj
1st December 2015, 01:36 AM
From apoorva ragangaL

yezhu swarangaLukkuL .........

http://www.youtube.com/watch?v=csnyfoXugdE

eehaiupehazij
1st December 2015, 03:57 AM
நடிப்பின் பாலபாட அனுபவங்கள் Schools of Acting
நடிகர்திலகம் Vs காதல் மன்னர்


நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் நடிப்பின் இலக்கணமாக உருவகப் படுத்தப் படுமுன்னர் மிகக் கடினமான நாடக மேடைப் பேச்சு பாட்டு கூத்து நடனம் பாடல் ஆடல் என்று வகைவகையான அனுபவங்களைப் பெற்று மேடைக் கூச்சம் அறவே துறந்தவர்.
அவரது வசன நடையும் மனனம் செய்யும் திறமையும் உலக நடிகர்கள் எவருமே கற்பனை கூட செய்ய இயலாத வண்ணம் அவரது கடின உழைப்பின் பலனாக
அமைந்தது நாம் பெற்ற பேறே !

கடினமான பயிற்ச்சிகள் மற்றும் அவருக்கு இயல்பாக அமைந்த கற்பனை வளம் சினிமாவுக்குள் புயலாகப் பிரவேசம் செய்த பின்னரும் தான் ஏற்று நடித்த
கதாபாத்திரங்களுக்கு முப்பரிமாண மெருகைத் தந்து அப்பாத்திரங்கள் என்றுமே மறக்க முடியாத காவியங்களுக்கு அடிகோலின என்பது வரலாறு !பாடல்களுக்கு அவர் தந்த பொருத்தமான உதட்டசைவுகள் உடல்மொழி வெளிப்பாடுகள்....புதியபறவை குங்குமம் பலே பாண்டியா...வியட்நாம் வீடு...
பாடல்களே இல்லாமல் நாயன வாசிப்பில் அவர் காட்டிய முகபாவ உதட்டசைவு உடல்மொழிக் கூறு ....விஞ்ச முடியாத இமயமே!!


காதல் மன்னராக நிரந்தர முத்திரை பெற்ற ஜெமினி கணேசன் அவர்களோ எவ்வித நாடகமேடை அனுபவமோ முகபாவ உடல்மொழி பயிற்சிகளோ ஆடல்பாடல் முயற்சிகளோ இல்லாதவரக திரையுலகில் காலூன்றியவர் !
இவரது பண்பட்ட தோற்றமும் படிப்பின் பண்புகளும் இயற்கையான ஆணழகும் முகவசீகரமும் காதலைக் கண்ணியமாக திரையில் உருவகப் படுத்திய விதமும் இயல்பான மென்மையான நமது சக தோழர் போன்ற நடிக்கிறார் என்ற உணர்வே இல்லாத பாங்கும் நடிகர்திலகம் போலவே மனதை உலுக்கும் காட்சிகளில் நமது கண்களில் கண்ணீரை வரவழைத்த மாறுபட்ட பாணி நடிப்புத் திறனும் இன்றுவரை அசைக்க முடியாத இமேஜை அவருக்கு உருவாக்கி என்றுமே second to none என்னும் இடத்தை ரசிக நெஞ்சங்களில் பதித்திட்ட அபார சாதனையாளர்!
நடிகர்திலகத்துடன் எவ்வித ஈகோவுக்கும் இடம் தராமல் பதினைந்து படங்கள் இணைந்து நடித்து தனது நடிப்பின் தனித்தன்மையை உறுதி படுத்திய திறமையாளர்

இருவரும் தத்தம் முத்திரை பதித்த மதுரகானப் பாடல் காட்சிகளும் நடிப்புப் போட்டியும் !!

https://www.youtube.com/watch?v=___CnUWEADk

https://www.youtube.com/watch?v=gFcOsnk8DM0

https://www.youtube.com/watch?v=9ZghfWkD8gA

JamesFague
1st December 2015, 03:06 PM
a pleasant song from Khel Khel Mein. Hope everyone will enjoy this beauty.


https://youtu.be/cuYyeS60nlY

rajraj
2nd December 2015, 09:20 AM
We were in Hawaii in a beach front house. I thought I should post a few 'kadal' songs. The vegetaion in the village in HI reminded me of my ancestral village in Tanjore district-- thennai, vaazhai, maa, pappaaLi, thongumoonchi, poovarasu, eechcham, panai, aal and arasu. I think tamarind tree grows there. But, I did not see any.


From Raja Desingu (1960)

paal kadal alai mele......

http://www.youtube.com/watch?v=StcPEr1ZqL8

raagadevan
2nd December 2015, 10:23 AM
vaNakkam Raj! :) Glad to know that you had a great time in Hawaii, with your family.

I know this is not the type of "kadal" song you had in mind, but I will post it anyway...

ஆழ் கடலில் தத்தளித்து
நான் எடுத்த முத்து ஒன்றை
விதியவன் பறித்தது ஏன்... ஏன்...
உற்சவத்து சிலை இதன்
பூச்சரமும் உதிர்ந்தது
பூஜையதும் கலைந்தது ஏன்... ஏன்...

https://www.youtube.com/watch?v=2sg6ainNdXo

JamesFague
2nd December 2015, 10:37 AM
Nagumo song - in the Honey Voice of Dr K J Yesudoss.


https://youtu.be/QfHRVGLaM8g

raagadevan
2nd December 2015, 11:13 AM
vaNakkam Vaasu sir! :) Here is one of many movie versions of Thyagaraja Swami's "nagumOmu ganaleni..."
sung by KJY and Poorana Chandar; orchestrated by the one and only K.V. Mahadevan; from the 1990
Telugu movie "ALLADUGARU" featuring Mohan Babu and Shobhana...

https://www.youtube.com/watch?v=1T6hJKUqW1M

The same track was used in the Kannada version RAYARU BANDARU MAVANA MANEGE featuring Vishnuvardhan

https://www.youtube.com/watch?v=XxU9pIh0kDw

Interestingly, in the original Malayalam movie (CHITHRAM),
this one was sung by M.G. Sreekumar & Neyyattinkara Vasudevan

https://www.youtube.com/watch?v=22CaN6buSjs

JamesFague
2nd December 2015, 11:26 AM
My All Time favourite is Chithram than the other two Mr R D with a fine act by Mr Lal.

JamesFague
2nd December 2015, 11:30 AM
Great Song. No words to express the beauty of this song.


https://youtu.be/l0knnNMGg7g

raagadevan
2nd December 2015, 11:30 AM
My All Time favourite is Chithram than the other two Mr R D with a fine act by Mr Lal.

I agree! :)

eehaiupehazij
2nd December 2015, 08:16 PM
Heartfelt prayers for our people to get rid of the incessant rainfall and the instantaneous floods and to resume their normality on behalf of NT/GG threads
senthil

https://www.youtube.com/watch?v=2BH1a4RP16A

rajeshkrv
2nd December 2015, 09:41 PM
Chennai friends . stay safe. Let's pray for everyone's safety.
let's hope normalcy returns soon

eehaiupehazij
2nd December 2015, 10:24 PM
நடிப்பின் பாலபாட அனுபவங்கள் Schools of Acting
நடிகர்திலகம் Vs காதல் மன்னர்

Part 2


மோட்டார் சுந்தரம் பிள்ளை நடிகர் திலகத்தின் இயல்பான யதார்த்தமான நடிப்பின் உச்சத்தை உலகத் தரத்தில் உரக்கச் சொல்லிய குடும்ப உறவுகளில் இருக்கும் முரண்பாடுகளை மனவலியை அவர் வெளிப்படுத்திய உன்னதமான காவியம் ! ஒரு வகையில் ஜெமினி பாணியில் சிவாஜி கொடி நாட்டிய ரசிக நெஞ்சங்களில் இன்றும் நிறைந்த படமே !! ஜெயலலிதா, காஞ்சனா போன்ற பின்னாள் ஜோடிகளுக்கு அந்நாளிலேயே தந்தையாக நடிக்கும் மன தைரியம் யாருக்கு வரும்!! ஜெமினிகூட வயதான பின்னரே (வெள்ளிவிழா) இத்தகைய ரோல்களில் பொருந்துமளவு ஜெமினிக்கும் ரோல்மாடல் சிவாஜியே!!


வெள்ளிவிழாவில் சிவாஜி பாணியில் வயதான ஜெமினி குழந்தைகளால் கொஞ்சம் உதாசீனப் படுத்தப் படும் ரோலில் வாக்கிங்க் ஸ்டிக்கெல்லாம் சுழற்றிக் கொண்டு பிரமாதப் படுத்தியிருப்பார்....அந்த அளவு சிவாஜிக்கு இணையாக வயதான பாத்திரங்களிலும் தனது தனித் தன்மையான காதல் இனிமையைப் புகுத்தி புகழ் பெற்றார் ஜெமினி !!

https://www.youtube.com/watch?v=VHIRPF_7gK4

https://www.youtube.com/watch?v=vvfLzYCmfug

RAGHAVENDRA
2nd December 2015, 10:55 PM
Thank you Rajesh and Senthil for your concerns.
Of course, Chennai would not have prayed for this much of rain, though it was welcome at the initial stages.
Hope normaly restored soon.

RAGHAVENDRA
2nd December 2015, 10:58 PM
அபூர்வ கானங்கள்

காகித ஓடம்... இந்தப் படத்தின் பெயரைப் பலர் அறிந்திருக்க மாட்டார்கள். இந்த வார்த்தையைக் கொண்டு தொடங்கும் இசையரசியின் பாடலென்றால் அனைவருக்கும் தெரியும்.

ஆனால் இந்தப் படத்தைத் தெரியாதவர்களுக்குக் கூட இந்தப் பாடல் அத்துப்படி.

சந்தோஷமான சூழலில் எஸ்.பி.பாலாவும் சோகமான சூழலில் ராஜ்குமார் பாரதி, சசிரேகா இருவரும் பாடிய சூப்பர் ஹிட் பாடல். சங்கர் கணேஷ் இரட்டையருக்கு மிகவும் பெயர் பெற்றுத் தந்த பாடல்.

பொன்வீணையே என்னோடு வா...

https://www.youtube.com/watch?v=hmMntA5SxJA

எஸ்.பி.பாலா பாடிய பாடல் வீடியோவில் இணைப்பு கிடைக்கவில்லை. ஒரு வேளை ஆடியோ கிடைத்தால் கிடைக்கலாம்.

RAGHAVENDRA
2nd December 2015, 11:08 PM
அபூர்வ கானங்கள்...

ஜெயச்சந்திரன் பி.சுசீலா இணைந்த பாடல்களில் மிகவும் பிரபலமான பாடல். வழக்கம் போல் படத்தின் பெயர் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

சக்கரங்கள் நிற்பதில்லை படத்தில் சங்கர் கணேஷ் இசையில், மு.மேத்தா வரிகள்.

https://www.youtube.com/watch?v=CyuRuLRP4Ks

RAGHAVENDRA
2nd December 2015, 11:20 PM
அபூர்வ கானங்கள்

தேன் சிட்டுக்கள்..

இந்தப் படத்தைப் பற்றி வாசு சார் எழுதியிருக்கிறார் என நினைக்கிறேன். சின்னி பிரகாஷ் சுபாஷினி நடித்த படம். விஜயரமணி இசையமைப்பாளர்.

இதில் பாடல்கள் ஜனரஞ்சகமானவை. என்றாலும் கேட்கத் திகட்டாதவை. குறிப்பாக பாடகர் திலகம் வாணி ஜெயராம் பாடிய இப்பாடல் கலப்பிசையில் வித்தியாசமாக இருக்கும். பாடலாசிரியர் ஆலங்குடி சோமு

https://www.youtube.com/watch?v=JcvlBzbyMvs

RAGHAVENDRA
2nd December 2015, 11:31 PM
அபூர்வ கானங்கள்

இசையரசியும் கே.ஜே.யேசுதாஸும் இணைந்து பாடிய அபூர்வமான பாடல். மெல்லிசை மாமணி வி.குமாரின் இசையில் வசந்தம் வரும் திரைப்படத்திற்காக மு.பாவாணன் எழுதிய பாடல்.

http://psusheela.org/audio/ra/tamil/rare/raresong452.ram

மேற்காணும் இணைப்பில் உள்ள பாடல் ரியல் ஆடியோ வடிவில் உள்ளது. விஎல்சி மீடியா ப்ளேயரில் கேட்கலாம்.

rajeshkrv
2nd December 2015, 11:39 PM
அபூர்வ கானங்கள்

காகித ஓடம்... இந்தப் படத்தின் பெயரைப் பலர் அறிந்திருக்க மாட்டார்கள். இந்த வார்த்தையைக் கொண்டு தொடங்கும் இசையரசியின் பாடலென்றால் அனைவருக்கும் தெரியும்.

ஆனால் இந்தப் படத்தைத் தெரியாதவர்களுக்குக் கூட இந்தப் பாடல் அத்துப்படி.

சந்தோஷமான சூழலில் எஸ்.பி.பாலாவும் சோகமான சூழலில் ராஜ்குமார் பாரதி, சசிரேகா இருவரும் பாடிய சூப்பர் ஹிட் பாடல். சங்கர் கணேஷ் இரட்டையருக்கு மிகவும் பெயர் பெற்றுத் தந்த பாடல்.

பொன்வீணையே என்னோடு வா...

https://www.youtube.com/watch?v=hmMntA5SxJA

எஸ்.பி.பாலா பாடிய பாடல் வீடியோவில் இணைப்பு கிடைக்கவில்லை. ஒரு வேளை ஆடியோ கிடைத்தால் கிடைக்கலாம்.

இது கன்னடத்தில் சத்யம் செய்த பாடல்

solo SPB
duet: PS & M.Ramesh

https://www.youtube.com/watch?v=I7jhlngZNPU

JamesFague
3rd December 2015, 10:11 AM
Courtesy: Tamil Hindu

சினிமா எடுத்துப் பார் 36: துணிவே துணை!


எஸ்பி.முத்துராமன்


காவியக் கவிஞர் வாலி அவர்கள் மதுப் பழக் கத்தை நிறுத்தியதையும், இன்றைய தலைமுறை குடிக்கு எப்படி சீரழிகிறது என்பதையும் கடந்த வாரம் வருத்தத்தோடு பதிவு செய்திருந்தேன். கலங்கிய கண்களோடு அடுத்தவாரம் என்ன பகிரப் போகிறோம் என்பதை சொல்ல மனமில்லாமல் விட்டிருந் தேன்.

அந்த செய்தி வெளிவந்த நாளில் நாமக்கல் அருகே நான்கு பள்ளிக் கூட மாணவிகள் வகுப்பறையில் மது அருந்தி பிறந்த நாள் கொண் டாடிய செய்தியையும், மற்றொரு பள்ளியில் ஒரு மாணவிக்கு நான்கு மாணவர்கள் பாலியல் தொல்லை கொடுத்து அதனை வாட்ஸ் அப்-பில் வெளியிட்டிருக்கிறார்கள் என்ற கொடூரமான செய்தியையும் படிக்க நேர்ந்தது. இவர்களை நினைக்கையில் கண்ணீர் வந்தது.

அது இதயத்திலிருந்து வந்ததால் சிவப்பாக இருந்தது. இந்தச் சூழலில் குமரி அனந்தன் அவர்கள் சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை மதுவிலக்கை வலியுறுத்தி நடைபயணத்தை மேற்கொள்ள உள்ளார். நாம் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து துணிவே துணையாக போராட வேண்டிய நேரம் இது.

நான் இந்த வாரம் சொல்லப் போகும் படம் ‘துணிவே துணை’. இந்தப்படத்தை எப்படி தொடங்கி னோம் என்பதற்கு ஒரு வரலாறு உள்ளது. சேலம் மாடர்ன் தியேட் டரில் சில படங்களை தொடர்ந்து படமாக்கி வந்தோம். அந்த நாட் களில் படம் தயாரிக்க வேண்டும் என்ற ஆசையோடு தினமும் இரண்டு நபர்களாவது வருவார்கள். அவர்களிடம், ‘ பண வசதி எப்படி?’ என்று நானும், ஒளிப்பதிவாளர் பாபுவும் கேட்போம். ‘முதலில் பூஜையை போடுவோம். அப்புறம் பணத்தை புரட்டிவிடுகிறோம்?’ என்பார்கள்.

அதற்கு நாங்கள் ‘பூஜை போட்டு பாதியிலேயே படம் நின்று விடுவதற்கு நாங்கள் படம் எடுக்க மாட்டோம். பண பலத்தோடு வாருங்கள்’ என்று அனுப்பிவிடு வோம். இந்த நிலையில், எளிமை யாக வேட்டி சட்டை அணிந்து ஒரு மஞ்சள் பையுடன் எங்களை பார்க்க ஒருவர் வந்தார். ‘படம் எடுக்க வேண்டும்?’ என்றார். எல்லோரிடமும் சொல்வதைப் போல அவரிடமும் சொன்னோம். மேஜையில் மஞ்சள் பையை கொட்டினார். நோட்டுக்கட்டுகள் குவிந்தன. அதைப் பார்த்ததும் எங்களுக்கு ஆச்சரியம்.



இதற்கு மேலும் வங்கியில் பணம் இருக்கிறது என்று பாஸ் புக்கை காட்டினார். “நடிகர் ஜெய்சங்கரிடம் கேட்டுவிட்டு பதில் சொல்கிறோம்’’ என்று கூறினோம். நடிகர் ஜெய் யிடம் கூறியதும், ‘நாம இந்தப்படத்தை ஏன் கலர் படமாக எடுக்கக் கூடாது?’ என்று கேட்டார். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அப்படி தொடங்கப்பட்ட படம், ‘துணிவே துணை’ அதன் தயாரிப்பாளர் சேலம் பி.வி.துளசிராம்.

படத்துக்கு கதை, திரைக்கதை பஞ்சு அருணாசலம். இது சஸ்பென்ஸ் திரில்லர். படத்துக்கு சரியான தலைப்பை பிடிப்பது ஒரு முக்கியமான வேலை. ஆசிரியர் உயர்திரு. தமிழ்வாணன் அவர்கள் கல்கண்டு இதழில் ‘துணிவே துணை’ என்று லட்சிய வார்த்தையை போடுவார். அந்த தலைப்பு சரியாக இருக் கும் என்று பஞ்சு அவர்கள் கூற தமிழ் வாணன் அவர்களிடம் கேட்டோம். ‘தாராள மாக வைத்துக் கொள் ளுங்கள். எல்லோருக் கும் துணிவு வருகிற மாதிரி படத்தை எடுங் கள்’ என்றார். தமிழ் வாணன் - ‘மாஸ்டர் ஆஃப் ஆல் சப்ஜக்ட்’ என்ற அடைமொழிக்கு தன்னை தகுதி யாக்கிக்கொண்டவர். அவர் தந்த செல்வங்கள்தான் லேனா தமிழ்வாணனும், ரவி தமிழ்வாணனும்.

பொதுவாக கிளைமேக்ஸ் காட்சியில்தான் ஆடியன்ஸ் இருக்கை முனைக்கு வருவார்கள். இந்தப்படத்தில் முதல் 5 ரீல்களில் மக்கள் இருக்கை முனையில்தான் உட்கார்ந்திருந்தார்கள். ஆங்கிலப் படங்களுக்கு இணையாக அல்ல. அதற்கு மேலாக எடுக்கப்பட்ட படம் இது. ஒளிப்பதிவு பாபு. அவரது படப்பிடிப்பு பாராட்டுக்குறியது. எம்.எஸ்.வி அவர்களின் பாடல் களும், பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்த்தன. ஜெய் சங்கர், ஜெயபிரபா, அசோகன், விஜயகுமார், ராஜ சுலோச்சனா ஆகியோர் நடித்தனர். வில்லன் களுக்கு தலைமைப் பொறுப்பு வகிப்பவரை பெரிய வில்லனாக போடுவோம். இந்தப்படத்தில் வித்தியாசமாக பெண் கதாபாத் திரம் தலைமை ஏற்கட்டுமே என்று ராஜ சுலோச்சனாவை தலைவியாக்கினோம். அவர் நடிப்பில் வில்லன்களையே மிஞ்சி விட்டார்.

கலை இயக்குநர் ராதா மிக நுணுக்கமாக அரங்குகள் அமைத்தார். ஜெய்சங்கர் இரட்டை வேடத்தில் வரும் ‘அச்சம் என்னை நெருங்காது’ என்ற பாடலை வித்தியாசமாக படம்பிடித்தோம். மிகவும் சிரமப்பட்டு இரண்டு வேடங்களையும் மாஸ்க் முறை யில் பாபு ஒளிப்பதிவு செய்தார். அந்தப் பாடல் காட்சி மக்களிடத்தில் பெரிய வரவேற்பை பெற்றது. அந்த படத்தில் நடன அமைப்பாளர் புலியூர் சரோஜாவிடம் உதவியாளராக இருந்த ஒருவர் இன்று புகழ்பெற்ற நடன அமைப்பாளராக உள்ளார். அவர் யார்? அடுத்த வாரம் பார்ப்போம்.

eehaiupehazij
3rd December 2015, 08:03 PM
நடிப்பின் பாலபாட அனுபவங்கள்
Schools of Acting
நடிகர்திலகம் Vs காதல் மன்னர்

Part 3


காதல் மன்னரின் பாந்தமான ஜோடியாக சாவித்திரி வலம் வந்தாலும் எனக்கென்னவோ ஜெமினி வைஜயந்தி ஜெமினி சரோஜாதேவி ஜெமினி விஜயா காம்பினேஷன்கள் அதைவிட நன்கு அமைந்ததாக ஒரு எண்ணம் உண்டு !
ஜெமினி வைஜயந்தி ஜோடியில் தேன் நிலவும் பார்த்திபன் கனவும் வஞ்சிக்கோட்டை வாலிபனும் மறக்க முடியாத படங்கள் !!
வஞ்சிக்கோட்டை வாலிபனில் ஜெமினியை சுற்றிசுற்றி சுழன்றாடும் ராஜாமகள் ரோஜாமலர் பாடலும் காட்சியமைப்பும் இன்றுவரை என் மனதில் இனம் புரியாத ஒரு இனிமைப் பரபரப்பைத் தோற்றுவிக்கும் ! அதுபோலவே தேன் நிலவில் இவர்கள் இணைந்த பாடல் காட்சிகள் பரவசமானவை!! ஜெமினிக்கு நம்பர் ஒன பொருத்தமான கதாநாயகி உயரமாகட்டும் முகவசீகரமாகட்டும் நடிப்பில் காதல் வேதியியல் ஆகட்டும்......
சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம் ஜெமினி வைஜயந்தி இணைவில் நாம் காணும் இப்பாடல் காட்சிகளே !!

https://www.youtube.com/watch?v=c6w7JmD59Es

https://www.youtube.com/watch?v=zkHlWFI8sac


நடிகர்திலகத்துடன் வைஜயந்தி தோன்றும் கண்ணியமான இக்காதல் பாடல் காட்சியும் ஜெமினிகணேசனின் இனிமையான ஒரு பாடல் காட்சியைக் கண்டு களித்திட்ட ஒரு மன நிறைவைத் தரும் !! இரும்புத்திரை விலக்கி நடிகர்திலகம் இயல்புத்திரையில் மின்னும் மறக்க முடியாத மதுரகான காட்சி!!

https://www.youtube.com/watch?v=q48ihhHK5kg

rajeshkrv
3rd December 2015, 10:14 PM
gemini -sarojadevi super :thumbsup:

rajeshkrv
4th December 2015, 10:39 AM
uyir songs

thanks tfmlover

https://www.youtube.com/watch?v=URGr7S690ws

raagadevan
5th December 2015, 11:00 AM
Posting moved to a different thread.

eehaiupehazij
6th December 2015, 06:40 PM
நடிப்பின் பாலபாட அனுபவங்கள்

Schools of Acting
நடிகர்திலகம் Vs காதல் மன்னர்

Part 4

நடிப்புப் புயலும் நடிப்புத் தென்றலும்
The Cyclone Crossing The Gentle Breeze


பொதுவாகவே நடிகர்திலகத்துடன் காதல் மன்னரும் ஒரு படத்தில் இருக்கிறார் என்றால் அந்தக் கால ரசிகர் வட்டங்களில் ஒருவிதமான நடிப்புப் போட்டி எதிர்பார்ப்பு நிலவும்! நடிகர்திலகம் புயல்வீச்சாய் தனது நடிப்புக் கிரணங்களை வெளிப்படுத்தும்போது காதல்மன்னர் தனது பாணியில் குளிர்நிலவாய் தென்றலாய் நமது மனங்களை வருடுவார்.
கதையமைப்பில் சில சமயம் எதிர்பார்ப்புக்கு மாறாக தென்றல் புயலானதும் புயல் தென்றலாய் தணிந்ததும் ரசனைக்குரிய நிகழ்வுகளே!!

உலகத்திரைக்கே எடுத்துக்காட்டாக நல்ல நட்புணர்வுடன் கதைக்களத்தையும் பாத்திரத்தின் குணாதிசய முன்னிறுத்தலையும் மட்டுமே மனதில் நிறுத்தி பொறாமையற்ற Multi-Star Cast நடிப்புப் போட்டியை வழங்கி நம்மை மகிழ்வித்த நடிகர்திலகம் / காதல்மன்னர் புரிதலுடன் கூடிய நட்புணர்வை இனி எங்கே காண்போமோ!?



ஒரு புயல் தென்றலாய் கரை கடக்கிறது !

https://www.youtube.com/watch?v=SfVcsfcCxOk

ஒரு தென்றல் புயலாய் சீறுகிறது !!

https://www.youtube.com/watch?v=7rc90ZMn-MA

தென்றலும் புயலும் இணைந்து........... புயலுக்காக தென்றல் இசை மீட்டுகிறது !!

https://www.youtube.com/watch?v=Z2y6PQzszaY

eehaiupehazij
6th December 2015, 06:44 PM
நடிப்பின் பாலபாட அனுபவங்கள்

Schools of Acting
நடிகர்திலகம் Vs காதல் மன்னர்

Part 5

ரிச்சர்ட் பர்டன் பீடர் ஒடூல் நடிப்பில் தி பெக்கட் எனும் ஆங்கிலப் படத்தின் தழுவலே இந்தியில் ராஜேஷ்கன்னா அமிதாப் நடிப்பில் நமக் ஹராம் (உப்புத்துரோகம்) என்று வெளிவந்து அதன் தழுவலாக ஜெமினி சிவாஜி இணைவில் உனக்காக நான் ஆனது!!

https://www.youtube.com/watch?v=D3Dfj-Zi_0U

https://www.youtube.com/watch?v=DJNoWuLfxhc

https://www.youtube.com/watch?v=f_EQYsvrL1I

RAGHAVENDRA
6th December 2015, 08:57 PM
நண்பர்களே
நமது அன்பிற்கினிய நெய்வேலி வாசு சாரை கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ள முயற்சித்தும் இணைப்புக் கிடைக்கவில்லை அல்லது இணைப்புக் கிடைத்தாலும் ரெஸ்பான்ஸ் இல்லை. யாரேனும் தொடர்பு கொள்ள முடிந்ததா, அவர்கள் பகுதி எப்படி உள்ளது, விவரம் தெரிந்தால் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

JamesFague
7th December 2015, 10:44 AM
Courtesy: Tamil Hindu


சாவித்திரி 10




‘நடிகையர் திலகம்’ என போற்றப்பட்டவர் 

புகழ்பெற்ற தென்னிந்திய திரைப்பட நடிகை, இயக்குநர், தயாரிப்பாளரான சாவித்திரி (Savitri) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 6). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l அன்றைய மதராஸ் மாகாணத் தின் குண்டூர் மாவட்டம் சிறாவூ ரில் (தற்போது ஆந்திரப் பிரதேசத் தில் உள்ளது) 1935-ல் பிறந்தார். 6 மாதக் குழந்தையாக இருந்த போது தந்தையை இழந்தார். உள்ளூரில் உள்ள கஸ்தூரிபா உயர்நிலைப் பள்ளியில் பயின் றார்.

l சிஸ்தா பூர்ணய்யா சாஸ்திரிகளிடம் இசை, நடனம் பயின்றார். குழந்தை நட்சத்திரமாக விஜயவாடாவில் மேடைகளில் தோன்றி நடித்தார். என்.டி.ராமாராவ் நடத்திய நாடக கம்பெனியில் நடித்தார். பின்னர் சொந்தமாக ‘நவபாரத நாட்டிய மண்டலி’ என்ற நாடக கம்பெனியை தொடங்கினார். இவரது ‘ஆத்ம வஞ்சனா’ நாடகம் பெரும் வரவேற்பை பெற்றது.

l 1949-ல் ‘அக்னி பரீட்சா’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடிவந்தது. அப்போது இவருக்கு வயது 14. முதிர்ச்சியான அந்த வேடத்துக்கு பொருத்தமாக இருக்கமாட்டார் என்று கூறி, நிராகரிக்கப்பட்டார். பிறகு, ‘சம்சாரம்’ என்ற படத்துக்கு தேர்வானார். அதிக ரீடேக் வாங்கியதால், முக்கிய வேடத்தில் இருந்து நீக்கப்பட்டு, துணை வேடம் கொடுக்கப்பட்டது.

l ‘பாதாள பைரவி’ திரைப்படத்தில் 1951-ல் நடனமாடினார். ‘பெல்லி சேசி சூடு’ திரைப்படத்தில் 2-வது நாயகியாக இவர் நடித்தது, முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. அதில் இவரது நடிப்பும் நடன பாவங்களும் பல இயக்குநர்களின் கவனத்தை ஈர்த்தது.

l ‘தேவதாசு’ திரைப்படத்தில் சிறப்பாக நடித்து பாராட்டுகளைப் பெற்றவர், தெலுங்கு திரையுலகின் முன்னணி கதாநாயகி என்ற அந்தஸ்துக்கு உயர்ந்தார். தொடர்ந்து ‘சந்திரஹாரம்’, ‘அர்தாங்கை’, ‘மிஸ்ஸம்மா’, ‘டோங்கா ராமுடு’, ‘மாயாபஜார்’, ‘ஆராதனா’, ‘ரக்த திலகம்’, ‘பூஜாபலன்’ என ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்தார்.

l ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு திரைப்படங்களின் முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்தார். சிவாஜி கணேசன், எம்ஜிஆர், ஜெமினி கணேசன் ஆகியோருடன் நடித்துள்ளார். ‘மனம் போல் மாங்கல்யம்’ திரைப்படத்தில் நடித்தபோது, ஜெமினி கணேசனை திருமணம் செய்துகொண்டார்.

l 1950-களின் மத்தியிலும் 60-களிலும் தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் பல்வேறு வேடங்களில் சிறப்பாக நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். ஒருசில இந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

l களத்தூர் கண்ணம்மா, மிஸியம்மா, திருவிளையாடல், கந்தன் கருணை, படித்தால் மட்டும் போதுமா, பரிசு, பாசமலர், பாவ மன்னிப்பு, கைகொடுத்த தெய்வம் உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்கு பெயரையும் புகழையும் ஈட்டித் தந்தன.

l தமிழ்த் திரையுலகில் ‘நடிகையர் திலகம்’ என்று போற்றப்பட்டார். ‘சிவராக்கு கிலேடி’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் சிறந்த நடிகைக்கான குடியரசுத் தலைவர் விருதை 1960-ல் பெற்றார். தயாரிப்பாளர், இயக்குநராகவும் பணியாற்றியவர். ‘தென்னிந்திய மீனாகுமாரி’ என்று அழைக்கப்பட்டார்.

l அன்பு, பாசம், நேசம், காதல், கோபம், ஆவேசம், வீரம், நகைச்சுவை என எந்த வகையான உணர்ச்சியாக இருந்தாலும் இயல்பாகவும், தனித்துவம் வாய்ந்த திறனுடனும் வெளிப்படுத்தினார். பல்வேறு மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவரும், தனது அபார நடிப்புத் திறனால் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த வருமான சாவித்திரி 46-வது வயதில் (1981) மறைந்தார்.

RAGHAVENDRA
7th December 2015, 10:00 PM
http://www.indya101.com/gallery/Singers/L_R_Eswari/2012/10/12/L_R_Eswari_6_xklan_Indya101(dot)com.jpg

இன்று பிறந்த நாள் கொண்டாடும் எல்.ஆர். ஈஸ்வரி அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வளமாக வாழ வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறோம். அவருடைய இசை வெள்ளத்தில் நம்மை இன்னும் இன்னும் நீந்த வைக்க இறைவன் அவருக்கு நூறாண்டுகளுக்கு மேல் ஆயுள் தரவேண்டும்.

அவர் பாடிய பாடல்களில் என் மனம் கவர்ந்த பாடல்களில் ஒன்று...

சித்ரா பௌர்ணமி படத்திலிருந்து...

மெல்லிசை மன்னரின் இசையில்..

https://www.youtube.com/watch?v=fA0o1I2lflo

JamesFague
8th December 2015, 09:14 AM
Fantastic Song from Raja Nagam



https://youtu.be/spMEpLVlan8

JamesFague
9th December 2015, 11:49 AM
Where are you Mr CK


https://youtu.be/PvfWG-Jm_gg

rajeshkrv
9th December 2015, 09:33 PM
Cika is fine. he is not in mood to post due to flood in chennai. he is fine in muscat

eehaiupehazij
10th December 2015, 10:29 PM
Gap fillers!

GG Vs NTR! in their most handsome stature with the cute Savithri then!! Missiamma

GG!

https://www.youtube.com/watch?v=oRrnQg4SboQ

https://www.youtube.com/watch?v=daJdkHGeZ00

NTR!

https://www.youtube.com/watch?v=qoMI8OdajYY

https://www.youtube.com/watch?v=jXf1noLLokE

JamesFague
11th December 2015, 12:42 PM
Courtesy: Tamil Hindu

சூழல் ஒன்று பார்வை இரண்டு: தன்னை மறந்து மண்ணில் விழுந்து




இளமை என்னும் பூங்காற்று வீசும் பொழுது காதல் என்னும் மழை கொட்டுவது மனித உணர்வின் இயற்கையான நிகழ்வாக அமைந்துள்ளது. அப்பொழுது ‘சமா’ என்று இந்திக் கவிஞர்கள் அழைக்கும் சுற்றுச்சூழல் அழகாக ஆகிவிடுகிறது. இளமையின் ஆட்சியில் காதல் அரங்கேறும் சூழலை இரு விதமான பார்வைகளில் அணுகும் பாடல்களைப் பார்ப்போம்.

இந்த இரண்டு பாடல்களும் மிகச் சிறந்த இசையமைப்பு, நெஞ்சத்தை அள்ளும் பாடகரின் குரல், வளம் செறிந்த கவி வரிகள் ஆகியவற்றால் மட்டுமின்றி மோசமான பாடல் காட்சியாக்கம் என்ற வகையிலும் ஒற்றுமையைக் கொண்டிருக்கின்றன.

இந்திப் பாடல்:

படம்: கர் கர் கீ கஹானி (ஒவ்வொரு வீட்டின் கதை)

பாடலாசிரியர்: ஹஸ்ட்த் ஜெய்ப்பூரி

பாடியவர்: கிஷோர் குமார்

இசை: கல்யானஜி ஆன்ந்த்ஜி

சமா ஹை சுஹானா சுஹானா

நஷே மே ஜஹான் ஹை

கிஸி கோ கிஸி கீ கபர் ஹீ கஹான் ஹை

ஹர் தில் மே தேக்கோ முஹபத் ஜவான் ஹை

பொருள்:

சுற்றுச்சூழல் உள்ளது சுகமாக

பற்றியுள்ளது (கள்ளின்) மயக்கத்தை

யாருக்கும் மற்றவருடைய நினைவு (இல்லை)

யாருடைய இதயத்தில் காதல் இளமை உள்ளதோ

அங்கே பார்வைகள் பார்வையால் பாடுகின்றன

எவர் உள்ளம் கவர்ந்தாரோ அவர் அறிமுகம் நேர்கிறது

உள்ளத்தின் இந்த அதிசயக் கதையை உற்றுநோக்கி

உரைக்கின்றன விழிகள் நெஞ்சம் ஊமையாயிற்று

உள்ளங்கள் சங்கமித்து அழகாக ஆயின

அவரவர் காதலர் மேல் பைத்தியம் ஆனது

காதலர் வாழும் இடமே காதலும் வாழும்

காதல் எதுவோ காணும் தர்மமும் அதுவே

இப்பாடலைவிட மிக அழுத்தமான பொருள் உடைய கண்ணதாசன் கவி வரிகளும், இந்திப் பட நாயகியாக நடித்த பாரதியைவிட அழகும் கவர்ச்சியும் மிகுந்த தேவியின் தோற்றமும் அதைவிட அழகான நடிப்பும் தமிழ்ப் பாடலை ஒப்பிட இயலாத உயரத்திற்கு இட்டுச் செல்கிறது.

தமிழ்ப் பாடல்:

படம்: பகலில் ஓர் இரவு
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்பிரமணியன்
எழுதியவர்: கண்ணதாசன்
இசை: இளையராஜா


இளமை எனும் பூங்காற்று, பாடியது ஓர் பாட்டு

ஒரு பொழுது ஓர் ஆசை, சுகம் சுகம்

அதிலே ஒரே சுகம்

ஒரே வீணை ஒரே ராகம்…

தன்னை மறந்து மண்ணில் விழுந்து,

இளமை மலரின் மீது,

கண்ணை இழந்த வண்டு,

தேக சுகத்தில் கவனம்,

காட்டு வழியில் பயணம்,

கங்கை நதிக்கு…

மண்ணில் அணையா?

அங்கம் முழுதும் பொங்கும் இளமை,

இதம் பதமாய்த் தோன்ற,

அள்ளி அணைத்த கைகள்

கேட்க நினைத்தாள் மறந்தாள்

கேள்வி எழும் முன் விழுந்தாள்

எந்த உடலோ எந்த உறவோ?

மங்கை இனமும் மன்னன் இனமும்,

குலம் குணமும் என்ன?

தேகம் துடித்தால் கண்ணேது?

கூந்தல் கலைந்த கனியே

கொஞ்சி சுவைத்த கிளியே

இந்த நிலைதான் என்ன விதியோ?

இளமை எனும் பூங்காற்று, பாடியது ஓர் பாட்டு…

JamesFague
11th December 2015, 12:45 PM
Courtesy: Tamil HIndu


காற்றில் கலந்த இசை 33: மூங்கில் வனம் இசைக்கும் கீதம்

திரைப்படங்களுக்கான இசையமைப்பு என்பது ஏனைய கலைகள்போலவே பல்வேறு வாழ்வியல் கூறுகளை உள்வாங்கும் திறனின் அடிப்படையில் அமைந்தது. ஒரு பாடலைக் கேட்கும்போதே இது சிறு நகரத்தில் நடக்கும் கதை, இது வயல்வெளி சார்ந்த கிராமத்தில் நடக்கும் கதை, இது மலையடிவார கிராமத்தின் கதை என்று பிரித்தறிய முடிகிறது என்றால், அந்தப் பாடல் இளையராஜாவின் ஆர்மோனியத்திலிருந்து பிறந்தது என்று நிச்சயமாகச் சொல்லிவிடலாம். அந்த அளவுக்குத் திரைப்பாடல்களில் நுட்பமான வேறுபாடுகளைக் கொண்ட இசைப் பின்னல்களை அவர் உருவாக்கியிருக்கிறார். மோகன், நளினி நடிப்பில் 1984-ல் வெளியான ‘மகுடி’ திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் இதற்கான உதாரணங்களில் அடங்குபவை. (படத்தின் மற்ற இரண்டு பாடல்கள் சுமாரானவை!)

அப்பாவித் தோற்றம், நன்கு முடியப்பட்ட குடுமி என்று நாட்டுப்புறப் பாடகன் வேடம் மோகனுக்கு. வேடம் சற்றும் பொருந்தவில்லை. எனினும், இளையராஜாவின் அருட்கடாட்சம் நிரம்பப் பெற்றதால், புகழ்பெற்ற பாடல்களுடன் தொடர்புடைய நடிகராகத் திகழும் மோகனுக்கு இப்படத்திலும் அழகான பாடல்கள் கிடைத்தன.

காட்டாற்று வெள்ளமாகப் பொங்கி வழியும் கிராமிய இசைக் கலைஞனின் திறமையை ஒழுங்குபடுத்தும் பெண், கர்நாடக இசையை அவனுக்குக் கற்றுக்கொடுப்பாள். மெல்ல மெல்ல அவன் மீதான பரிவு காதலாக மலரும் காட்சியமைப்பு. ‘நீலக்குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன்’ எனும் பாடலை அந்தக் காட்சிக்குத் தந்தார் இளையராஜா. எஸ்பிபி, ஜானகி பாடிய இந்தப் பாடல் பாமர ரசிகனுக்குக் கர்நாடக இசையின் சுவையைப் பகிர்ந்தளித்த படைப்பு. திரைப்பாடல்களில் அபூர்வமாய்ப் பயன்படுத்தப்படும் ரசிகரஞ்சனி ராகத்தின் சாயலில் அமைந்த பாடல் இது.

நீளமான பல்லவியை நாயகி பாட, அதைப் பிரதியெடுத்து நாயகன் பாட என்று பாடல் நீண்டுகொண்டே செல்லும். நிரவல் இசையில் வீணைக்கும், ஒற்றை வயலினுக்கும் இடையில் ஒரு உரையாடல் நிகழும். தொடர்ந்து புல்லாங்குழலுக்கும் வீணைக்கும் இடையில் இசைப் பரிமாற்றம். அதைத் தொடர்ந்து, பரந்த நிலப்பரப்பாக விரியும் வயலின் இசைக்கோவை என்று அற்புதங்களை நிரப்பியிருப்பார் இளையராஜா. இரண்டாவது நிரவல் இசையில், நதியின் மேற்பரப்பில் நழுவிச் செல்லும் மெல்லிய நீர்ப்படலத்தைப் போன்ற ஒற்றை வயலின் இசையை ஒலிக்கவிடுவார்.

பின்னாட்களில் இளையராஜா வெளியிட்ட ‘ஹவ் டு நேம் இட்’ எனும் ஆல்பத்தின் சில கூறுகளை இப்பாடலில் உணர முடியும்.

இளையராஜா பாடிய ‘கரட்டோரம் மூங்கில் காடு’ பாடல், புல்வெளிகள், ஓடைகள், ஊசியிலைக் காடுகள் நிறைந்த மலைக் கிராமத்தின் காட்சிகளைக் கண்முன் நிறுத்தும் பாடல். கிராமிய இசைக் கலைஞனின் புல்லாங்குழலிலிருந்து வெளிவரும் எளிய, இனிய இசையுடன் பாடல் தொடங்கும். பச்சைப் புல்வெளிகளால் போர்த்தப்பட்ட குன்றுகளில் பட்டு எதிரொலித்து, அந்த நாட்டுப்புறப் பாடகனிடமே வந்து சேரும் கணத்தில், ‘கரட்டோரம் மூங்கில் காடு…’ என்று அவன் பாடத் தொடங்குவான். இயற்கையை நேசித்துக்கொண்டே வழிப்போக்கனைப் போல் அலைந்து திரியும் அந்த கிராமிய இசைக் கலைஞன், கண்ணில் படும் எல்லா விஷயங்களையும் வியந்து பாடுவதுபோன்ற காட்சியமைப்பு. எளிய, அர்த்தம் பொதிந்த வார்த்தைகள்.

இயற்கைக் காட்சிகளின் பின்னணியில் ஒலிக்கும் பாடல்கள் என்றாலே, ஆர்க்கெஸ்ட்ரேஷனில் பின்னியெடுக்கும் இளையராஜா இப்பாடலில் மிகக் குறைவான இசைக் கருவிகளையே பயன்படுத்தியிருப்பார். எனினும், நகர வாசனையின் தீண்டலுக்கு அப்பாற்பட்ட தொலைதூர கிராமத்தின் அழகை வர்ணிக்கும் பாடல் வரிகளும், இளையராஜாவின் குரலும் பாடலை வேறொரு தளத்துக்கு இட்டுச் செல்லும்.

நிரவல் இசையில் பூச்செடிகளை அசைத்தபடி பரவிச் செல்லும் காற்றைப் போன்ற புல்லாங்குழல் இசையை ஒலிக்கவிடுவார். தடைகளற்ற வெளியில் காற்று அலைந்து திரியும் பகுதியில் அமைக்கப்பட்ட மின்சார ட்ரான்ஸ்பார்மரிலிருந்து வரும் மெல்லிய ரீங்காரம் ஒலிக்கும். அந்த ரீங்காரத்தை ஸ்வீகரித்துக்கொண்டு பாடலைத் தொடர்வான் கிராமத்துக் கலைஞன். ‘தொட்டாப் புடிக்கும் அந்த/ துடிக்காரன் போட்ட கம்பி/ சீமையிலே சேதி சொன்னா… இங்க வந்து பேசுதில்லே’ எனும் வரிகள் ஒரு கிராமத்தானின் வியப்பை இயல்பாகப் பதிவுசெய்யும்.

‘காட்டச் சுத்தி வண்டு பறக்குது…’ எனும் வரிகளைத் தொடர்ந்து பாடலுக்குள் மூழ்கித் திளைக்கும் களிப்பில் ‘உய்யாரா உய்யாரா உய்யார உய்யா’ எனும் வெற்று வார்த்தைகளைப் பாடுவான் பாடகன். வரப்பில் நடந்து செல்லும் பெண்கள் அந்த வார்த்தைகளைப் பாடியபடி கடந்து செல்வதைப் போன்ற பெண் குரல்களின் கோரஸ் ஒன்றை ஒலிக்கவிடுவார் ராஜா. அதைத் தொடர்ந்து எங்கோ குழந்தை அழும் சத்தமும், அதை அதட்டும் அதன் தாயின் குரலும் ஒலிக்கும்.

குழந்தையைத் திட்ட வேண்டாம் என்று அந்தப் பெண்ணிடம் சொல்லிவிட்டு அந்தக் குழந்தைக்கு ஒரு சிறு தாலாட்டு பாடுவான் நாயகன். ‘… அத்தை அடிச்சா அம்மா இருக்கா, அழுவாதே… அந்த அம்மாவே அடிச்சிப்புட்டான்னு அழுவுறியா… கவலப் படாதடா’ எனும் ஆறுதல் வார்த்தைகளுக்குப் பின்னர், ‘என் பாட்டு இருக்கு அழுவாதே அதக் கேட்டு ஒறங்கு பொழுதோடே’ என்று பாடும்போது இளையராஜாவின் குரலில் இருக்கும் வெம்மை அத்தனை கதகதப்பைத் தரும். அந்தத் தாலாட்டில் மயங்கி உறக்கத்தைத் தழுவுவது அந்தக் குழந்தை மட்டுமல்ல, நாமும்தான்.

JamesFague
11th December 2015, 12:49 PM
Courtesy: Tamil Hindu

திரை வெளிச்சம்: பேரன்பின் பிரதிபலிப்பு!


‘ஆபத்துன்னா ஒடி வந்து உதவுறது சினிமாவுல மட்டும்தாம்பா’ என்ற கிண்டலைப் பொய்யாக்கி இருக்கிறது இந்த மாமழை. சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் ஓடி வருவோம் என்று செயலில் காட்டி நெகிழ்ச்சியில் ஆழ்த்திவருகிறார்கள் நம் திரையுலகினர்.

கனமழையில் நகரே சிக்குண்டு கிடக்கையில் அடுத்த தெருவில் இருக்கும் வீட்டிற்குச் செல்ல ஆட்டோவுக்கு ரூ.300, குடிநீர் கேன் ரூ.100 என்று முறையற்று சிலரின் அடாவடித்தனம் தொடரவே செய்தது. இப்படி ஒரு சூழ்நிலையில் தங்கள் கார்களையும், நண்பர்களின் வாகனங்களையும் கொண்டு வந்து கொஞ்சமும் விளம்பரம் இல்லாமல் மழையில் பாதிக்கப்பட்டவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்து நிஜ ஹீரோக்களாக வெளிப்பட்டார்கள் பல நடிகர்கள்.

தன் வீட்டிற்குள் வெள்ளம் புகுந்த அடுத்த சில மணி நேரங்களிலேயே, ‘ நான் நடிகன். வசதி படைத்தவன். எனக்கே இந்த நிலை என்றால், ஏழைகளின் நிலை என்னவாக இருக்கும்?’ என்று ட்விட்டரில் பதிவிட்டு நண்பன் ஆர்.ஜே.பாலாஜியை சேர்த்துக்கொண்டு களத்தில் இறங்கினார் நடிகர் சித்தார்த்.

“நடப்பதை வீட்டில் இருந்துகொண்டு பார்த்துக்கொண்டிருக்க முடியலை. அதனாலதான் தெருவில் இறங்கினோம். இரண்டு பேராக இருந்தோம். நான்கு நாட்களில் 500 பேராக மாறினோம். உடனடியாக என்ன தேவையோ அதைத்தான் செய்தோம். இனி, குழந்தைகள் பள்ளிக்குப் போக வேண்டும். மக்களை இயல்பு நிலைக்கு மாறச் செய்ய வேண்டும். இன்னும் இன்னும் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் உள்ளன. அதற்கு நாம் எல்லோரும் சேர வேண்டும்” என்று 5 நாட்கள் நிவாரணப் பணிகளை முடித்துவிட்டு சித்தார்த்தும், ஆர்.ஜே. பாலாஜியும் சேர்ந்து சொன்னபோது ‘நடிகர்களை ஏன் கொண்டாடுகிறோம் என்று தெரிகிறதா?’ என்று முகநூலில் ரசிகர்கள் வாழ்த்து மழை தூவத் தொடங்கினார்கள்.

இசையமைப்பாளர் இளையராஜா, ஒரு படகு முழுக்கப் போர்வையோடும், உணவுப் பொட்டலங்களோடும் பள்ளிக்கூட விடுதிகளை நோக்கியும், மத்திய சென்னை, வட சென்னைப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களைத் தேடியும் பயணம் செய்தார். விஷால், கார்த்தி இருவரும் நடிகர் சங்க சகாக்களை அழைத்துக் கொண்டு ‘ரெஸ்க்யூ சென்னை’ என்ற பெயரில் குழுவை உருவாக்கித் தெருக்களில் இறங்கினார்கள்.

வாத்துகளை வாங்கி, தான் நடைப்பயிற்சி செய்யும் சாலிக்கிராமம் பூங்காவில் விட்டு அனுதினமும் அதற்கு உணவளித்துவரும் நடிகர் மயில்சாமி இப்படி ஒரு பேய் மழைக் காலத்தில் ஜன்னல்களைப் பார்த்துக்கொண்டு இருந்துவிடுவாரா என்ன? கலங்கிய கண்களோடு களத்தில் நின்று உதவிகள் தொடர்ந்தார். கவிஞர் வைரமுத்து, நடிகர்கள் விதார்த், பார்த்திபன், சேரன், மோகன், சூர்யா, தனுஷ், ஜெயம்ரவி, விக்ரம் பிரபு, ராகவா லாரன்ஸ், சசிகுமார், இமான் அண்ணாச்சி, பிரசன்னா, நடிகை குஷ்பு, ஆர்யா, கோவை சரளா, வரலட்சுமி, ஹன்சிகா, ஷாலினி அஜித், இயக்குநர் இரா. சரவணன் இப்படி அடுக்கடுக்காகத் திரைப் பட்டாளங்கள் சென்னை மழை வெள்ளத்தில் ராணுவம்போல் இறங்கி மனதைக் குளிரச் செய்தனர்.

‘அப்பாவுடைய ஆசீர்வாதத்தாலும், கடவுளின் ஆசீர்வாதத்தாலும் வீட்டைச் சூழ்ந்த வெள்ள நீர் கொஞ்சம் கொஞ்சமாக வடிகிறது!’ என்றார் நடிகர் பிரபு. நடிகர் ராஜ்கிரண், நடிகை லட்சுமி உள்ளிட்ட திரையுலகினர் இந்த வெள்ளத்தில் சிக்கி சினிமாவில் மீட்கப்படுவதைப் போலத்தான் மீட்கப்பட்டனர்.

மின்சாரம் இல்லாமல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டபோது, பாதிப்புக்குள்ளான இடங்களை அடையாளம் காட்டியது சமூக வலைதளம்தான். ‘ஜாபர்கான் பேடடையை அடுத்த சூளைப்பள்ளம் பகுதிக்கு உடனடியாக 500 உணவுப் பொட்டலங்கள் வேண்டும்’, ‘அனகாபுத்தூர், பொழிச்சலூர் பக்கம் யாருமே உதவிக்குப் போகலையாம்... உடனே அங்கு ஒரு குழுவை அனுப்புங்க...’ இப்படி உடனடி நிவாரணத் தேவைகள் எங்கெங்கு, என்னென்ன வேண்டுமோ அதைச் சரியாகப் பட்டியலிட்டுத் துரிதப்படுத்தினார்கள் நம் திரைப் பட்டாளங்கள். அவர்களை ஒரு குடையின் கீழ் நின்று குழுக்களாக வேலை செய்ய வைத்தது முகநூல், டிவிட்டர் ஆகியவைதாம்.

வெளி மாநில நடிகர்களிடமிருந்தும் உதவிகள் குவிந்தன. சென்னையில் இருக்கும் தன் வீடுகளையும், நண்பர்கள் வீட்டு முகவரியையும் கூறி, ‘அங்கே சென்று தங்கிக்கொள்ளுங்கள்’ என்று மனமார ஆதரவுக் கரம் நீட்டினார், நடிகர் மம்முட்டி. ‘மன மெட்ராஸ் கோசம்’ என்ற பெயரில் நிவாரணப் பொருட்களைச் சேகரித்துவரும் தெலுங்குத் திரையுலகின் உதவி மெய்சிலிர்க்க வைக்கிறது. இங்கே சித்தார்த் இறங்கி வேலை பார்ப்பதைப்போல அங்கே ராணா, நானி உள்ளிட்ட தெலுங்குத் திரையுலகினருடன் சேர்ந்து நிதி திரட்டுவது, அத்தியாவசிய பொருட்களை சேகரிப்பது போன்ற வேலைகளை நடிகை சமந்தா கையில் எடுத்துக்கொண்டுள்ளார். ‘சென்னையில் இருக்கிற அப்பாகிட்ட பேசவே ஒரு வாரம் ஆச்சு. எப்படி எங்க மக்களை பார்த்துகிட்டு சும்மா இருக்க முடியும்?’ என்று படப்பிடிப்புக்கு விடுமுறை விட்டுக் களத்தில் இருக்கிறார் சமந்தா. தெலுங்குத் திரையுலகிலிருந்து முதலமைச்சர் நிவாரணநிதிக்கு நீண்ட முதல்கரம் அழகான நடிகர் என்று புகழப்படும் அல்லு அர்ஜுனுடையது.

பாலிவுட் முன்னணி நடிகரான ஷாருக் கான் மழை பாதிப்புக்காக ஒரு கோடி நிவாரண நிதி கொடுத்திருக்கிறார். ‘இன்னைக்கு பால் வாங்கக்கூட முடியலை. பாலாபிஷேகம், வானுயர கட் அவுட் என்று நம்ம தலைவனை கொண்டாடித் தீர்த்தோம்’என்று எட்டிப் பார்க்காத முன்னணி நடிகர்கள் சிலர் மீது ரசிகர்களுக்கு ஆதங்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது, இந்த கன மழை.

முதல்வர் நிவாரண நிதிக்குக் காசோலை ஒன்றைக் கொடுத்துவிட்டுப் புகைப்படம் எடுத்துக்கொண்டால் தானும் பங்கெடுத்திருக்கிறோம் என்பது பதிவாகிவிடும் என்று நினைக்காமல் களத்தில் இறங்கி வேலை பார்த்த நடிகர்களை மக்களுக்கு அடையாளம் காட்டிக்கொடுத்திருக்கிறது, இந்த மழை.

‘மனைவி, குழந்தைகளோடு 15 நிமிடங்கள் செலவிட்டதில்லை’, ‘அடுக்குமாடிக் குடியிருப்பில் இருக்கும் எதிர் வீட்டுக்காரர் என்ன பிசினஸ் செய்கிறார் என்பதுகூட தெரியாது’ என்று ஓடிக்கொண்டே இருந்த சென்னை வாசிகளை இந்த மழை ஒன்று சேர்த்து உலுக்கி உறைய வைத்திருக்கிறது. இந்தச் சூழலில், பெரிய அளவில் முதலீடு போட்டு, ஒவ்வொரு மணி நேரமும் வேலை வேலை என்று பம்பரமாய் சுழன்று கொண்டிருப்பவர்தான் திரை நட்சத்திரங்களும். அவர்களில் ஒரு சிலர் இந்த மழைப் பொழுதுகளை ஓய்வுக்கான நேரமாக எடுத்துக்கொள்ளாமல் பாதிக்கப்பட்டவர்களோடு நின்றது, தொடர்ந்து நிற்பது ரசிகனுக்கும், நடிகனுக்கும் இடையே உள்ள பேரன்பின் பிரதிபலிப்பே.

rajraj
12th December 2015, 08:35 AM
A song in his memory: Winchester Cathedral......

http://www.youtube.com/watch?v=BKi42jNhLTk

This was a popular song in mid 60s. His daughter Nancy Sinatra also sang this song. I used to listen to it in 1966 as a student in Chicago area ! :)

JamesFague
12th December 2015, 03:34 PM
Courtesy: Dinamani


பானுமதி: 8. ஒன் உமன் ஆர்மி!

நமது மிகச் சிறந்த டாக்கிகளெல்லாம் வங்காளத்தில் இருந்து வந்தவையே. தமிழ் சினிமா என்று கூறுவதைவிட, தழுவல் சினிமா என்பதே மிகப் பொருத்தமாக இருக்கும்.

டாக்டர். நிரஞ்சன் குப்தாவுக்கு நன்றி! ஏவி.எம். படைப்பான அன்னை, ‘மாயா ம்ருகா’ என்ற பெயரில் நிரஞ்சன் எழுதிய நாடகம். வங்க மக்களிடையே மிகப் பிரமாதமான வரவேற்பைப் பெற்றது.

செல்வச் சீமாட்டி அக்கா சாவித்ரி. தனக்குப் பிள்ளைப்பேறு இல்லாததால், உடன்பிறந்த ஏழைத் தங்கை சீதாவின் குழந்தையைத் தத்தெடுக்கிறாள்.

‘என் பிள்ளையிடம் எக்காரணம் கொண்டும் ‘நான்தான் உன் தாய்’ என்று சொல்லிவிடாதே’ என்று தன் சகோதரியிடம் சத்தியமும் வாங்கிக்கொள்கிறாள்.

பெற்றவளை மகன் சந்திக்கவிடாமல் தடுக்கிறாள். நிஜம் வெளிப்பட்டு, தன் சுவீகாரப் புத்திரன், தங்கையிடமே போய்விடுவானோ என ஒவ்வொரு நொடியும் தவிக்கிறாள். முடிவில், உண்மை வெளிப்படுகிறது. திருக்குறள் போன்று ரத்தினச் சுருக்கமான இலக்கியம்!

முழு கவனம் செலுத்தி மெய்யப்பன் உருவாக்கிய உன்னதச் சித்திரம்! மறக்க முடியாத செல்லுலாயிட் காவியமாக, ‘அன்னை’ இன்றுவரை சின்னத்திரைகளில் பூரண நிலவாக ஒளி வீசி உலா வருகிறது.



86 ஆண்டு காலத் தமிழ் சினிமாவில், உண்மையாகவே ஒரு குறிஞ்சி மலர் ‘அன்னை’.

நடிப்பின் எல்லைக்கே சென்று, தாய்ப்பாசத்தில் உருகி, பிள்ளைக்காகப் போராடி வெற்றிபெறும் ‘சாவித்ரி’யாக பானுமதி வாழ்ந்து காட்டினார்.

சுயமரியாதைச் சுடர் பானுமதி, ஏவி.எம்.மின் ‘அன்னை’யை ஒழுங்காகப் பூர்த்திசெய்து தருவாரா? தினந்தோறும், திகிலோடு ஷூட்டிங் நடந்தது.

பானுமதியுடன் எஸ்.வி.ரங்காராவ், சவுகார் ஜானகி, சந்திரபாபு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துக்கொண்டிருந்தார்கள். ஒரு நாள் படப்பிடிப்பின் இடையில், அன்னை பட டைரக்டர்களான கிருஷ்ணன் - பஞ்சு இருவரையும் பானுமதி அழைத்தார்.

‘என்னடா இது அவஸ்தை! வேதாளம் மறுபடியும் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறுகிறதோ?’ முன்பே, பானுமதியை ரத்னகுமார், நல்லதம்பி படங்களில் இயக்கியவர்கள்.

‘சார், இந்தப் படத்தில் தொடர்ந்து நடிக்க எனக்கு இஷ்டமில்லை. என்னை கேன்ஸல் செய்துவிடுமாறு மிஸ்டர் செட்டியாரிடம் சொல்லிவிடுங்கள். இனிமேல், ஏவி.எம்.முக்குள் நான் வரமாட்டேன்’ என்றார். ஏவி.எம். முதலும் கடைசியுமாக அதிர்ந்தது.

பானுமதியால், தாங்கள் ரணப்பட்ட அனுபவத்தை 1977 ஜூலையில் ஒரு சினிமா இதழில் பதிவு செய்துள்ளனர்.



‘அழகு, கவர்ச்சியைக் காட்டி, நாயகன் அல்லது நாயகிக்கு எதிராக இருப்பது மட்டும் வேம்ப் ரோல் அல்ல. முற்றிலும் மாறுபட்ட வகையில், இப்படியும் இருக்க முடியும் என்று அன்னையில் செய்துள்ளோம்.

பானுமதி ஏற்ற கேரக்டர், ‘வில்லி மீது அனுதாபம் ஏற்படுவதோ, வேம்ப் ஆக நடிப்பவர்களைக் கண்டு கண்ணீர் வடிக்கும்படிச் செய்வதோ முடியாது...’ என்பதை மாற்றி அமைத்தது.

எதையும் புரிந்துகொண்டு தன்னிச்சையாக நடிக்கக்கூடியவர் பானுமதி. உன்னதமான அவரது நடிப்பாற்றலால் அந்தக் கதாபாத்திரம் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டு, படம் பார்ப்பவர்கள் மனத்தை உருக்குமாறு செய்துவிட்டோம்.

பானுமதி எவ்வளவு பெரிய நடிகை. அதோடு மிகவும் புத்திசாலி! அந்தக் காட்சியில் தனக்கே முக்கியத்துவமும் பாராட்டும் கிடைக்க வேண்டும் என்ற ஆசையின் காரணமாக, பானுமதியின் ஒத்துழைப்பு குறைந்தது.

நாங்கள் எதிர்பார்க்காத இந்தச் செயல், பானுமதி மீது எங்களை ஆத்திரப்பட வைத்தது. எங்கள் எண்ணம் ஈடேறாத வகையில் அவரது நடவடிக்கைகள் அமைந்தன’ - கிருஷ்ணன் - பஞ்சு.

அடுத்து, தட்டுத் தடுமாறி, தயங்கிக்கொண்டே அப்பச்சியிடம் பானுமதியின் முடிவைத் தெரிவித்தார்கள்.

‘இத்தனை நாள்கள் அருமையாக நடித்து, அற்புதமாக ஒத்துழைத்த பானுமதி நடுவில் விலகுகிறேன் என்றால், அதற்கு ஏதாவது காரணம் இல்லாமல் இருக்காது. எதற்காக அவர் செட்டை விட்டுப் போனார்? அதை அவரிடமே கேட்டுத் தெரிந்துகொண்டு வாருங்கள்’ என்று சொல்லி, படைப்பாளிகளையும், வசனகர்த்தா கே.எஸ். கோபாலகிருஷ்ணனையும் பானுமதியின் வீட்டுக்கு அனுப்பினார்.

தூரம் அதிகமில்லை. ஏவி.எம்.முக்கு அடுத்தது பானுமதியின் பரணி ஸ்டுடியோ. அதன் உள்ளேயே, நீச்சல் குளத்துடன் கூடிய சொகுசு பங்களாவில் பானுமதி குடியிருந்தார்.



பானுமதியை அவரது சொந்த வீட்டிலேயே சந்திக்கப்போவது குறித்து, அந்த மூன்று மீசைகளுக்கும் உதறல், அச்சம், பயம், நடுக்கம், தயக்கம், தடுமாற்றம், பதற்றம் அத்தனையும் முகத்தில் படர்ந்தது. ஏதோ தப்பு செய்துவிட்டு, ஹெட்மாஸ்டரிடம் சிக்கிக்கொண்ட பள்ளிப்பிள்ளைகளாக வியர்வையைத் துடைத்தார்கள்.

நல்லவேளை. அவர்கள் நினைத்த மாதிரி, 111 டிகிரி உச்சி வெய்யிலாக பானுமதி தகிக்கவில்லை. அவர்களுக்குக் குடிக்கக் குளிர்ச்சியாக பானங்கள் தந்து அன்புடன் உபசரித்தார்.

லேசாகத் தெம்பு வந்தது. ஆனாலும் எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது என்கிற யோசனையில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

வருஷக்கணக்கில் ஓடிய வெற்றிப்படங்களை வழங்கியவர்கள். பானுமதி என்கிற நடிப்புப் பிரவாகத்துக்கு அணை போட முடியாமல், அவர்கள் நாற்காலியின் நுனியில் அமர்ந்திருந்தார்கள்.

பானுமதியே பேச்சை தொடங்கினார்.

‘என்ன விஷயமா வந்திருக்கீங்க...?’

மூவரில், பஞ்சு மெல்ல ஆரம்பித்தார்.

‘காலையில், நீங்கள் இனி அன்னையில் நடிக்கமாட்டேன் என்று சொன்னீர்கள். அதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள செட்டியார் எங்களை அனுப்பி இருக்கிறார்...’

‘யாருக்குப் பாசம் அதிகம்? பிள்ளையைப் பெற்றவளுக்கா, இல்லை வளர்த்தவளுக்கா. இதானே அன்னை கதையோட மெயின் மேட்டர்?’ என்று சீரியஸாக கேட்டார் பானுமதி.

‘இன்னிக்கு என்ன சீன் எடுத்தீங்க...? அதுல சவுகார் ஜானகி கடைசியா பேசின டயலாக் என்ன?’

‘‘என் புருஷன் உயிருக்குப் போராடிட்டு இருக்கிறப்ப, நீ என் பிள்ளையைக் கூட்டிக்கிட்டு வெளியூர் போறதா சொல்லி கிளம்பிப்போனியே... அப்ப, நான்தாண்டா உன்னைப் பெத்த அம்மான்னு ஒரே ஒரு வார்த்தை சொல்லி இருந்தா, நான் பெத்த புள்ள உன்கூட வந்திருப்பானா...?

அந்த நேரத்தில்கூட என் தாய்ப்பாசத்தை அடக்கிக்கொண்டேனே. அவன் என் பிள்ளைன்னு சொல்லிக்க, அதைவிடவா எனக்கு ஒரு சந்தர்ப்பம் வரப்போகுது..!’’

‘எனக்குத் தங்கையா நடிக்கிற சவுகார் ஜானகி. அந்த வசனங்களை அற்புதமான பாவத்தோட சொல்லி அனாயாசமா நடிச்சிட்டாங்க. நான் அதுக்கு ஈடுகொடுக்க முடியாம சிலை மாதிரி நின்னுட்டேன். அதோட அந்தக் காட்சியை நீங்க முடிச்சிட்டீங்க.

‘இனிமே படத்துல என் அக்கா கேரக்டர் நிக்கவே நிக்காது. அது காலையிலேயே சவுகார் நடிப்புல சுக்கு நூறாயிடுச்சி.

‘அடுத்து என்னதான் நான் உசுர கொடுத்து நடிச்சாலும், படத்துல அது எடுபடாது. அங்கேயே என் கேரக்டர் டம்மியாயிடுச்சி. அக்காவா நான் தொடர்ந்து நடிச்சி, இனிமே எந்தப் பிரயோசனமும் கிடையாது’.

பானுமதி, சாமி வந்தவர்போல் ஓர் ஆட்டம் ஆடித் தீர்த்ததும், மூன்று வேட்டிகளும் சுனாமியில் அவிழ்ந்ததுபோல், பிரக்ஞையற்றுப் போனார்கள்.

நிஜத்தில், தன் சாதூர்யமான வாதத்தால், அம்மூவரையும் பானுமதி கொன்றேவிட்டார்.

இன்றோடு அன்னை அவ்வளவுதானா? தமிழ் சினிமாவுக்கே மகுடம் சூட்டப்போகும் உன்னத சித்திரத்தை உறையில் போட்டு மூடிவிடச் சொல்லுகிறாரா பானுமதி...?

பஞ்சுவுக்குப் பற்றி எரிந்தது. ஆனாலும், தேன் தடவிய சொற்களால் பானுமதிக்கு உடுக்கை அடித்தார்.

‘மேற்கொண்டு அன்னையை உயர்த்திக் காண்பிக்க என்ன செய்யலாம். அதையும் நீங்களே சொல்லுங்கள்...?’

‘இப்ப நான் சொல்லப்போறதை நீங்க நல்லா புரிஞ்சிக்கணும். ‘அன்னை’ நீங்க நினைக்கிற மாதிரி சக்ஸஸ் ஆகணும்னா, என் கேரக்டர் நிச்சயம் ஜெயிச்சாகணும். சவுகாராடோ தங்கச்சி வேஷத்துக்கு முன்னால என் ரோல் தோத்துச்சின்னா, மொத்தப் படமும் சின்னாபின்னமாகி ஃபெயிலியர் ஆயிடும்.

‘ஜானகி பேசின வசனத்துக்கு மேலே, நிறைய ஸ்கோப்புள்ள டயலாக்கை பேசி நான் பதிலடி கொடுத்தால் ஒழிய, ஜனங்க ரசிக்க மாட்டாங்க’.

பானுமதியின் எதிர்பார்ப்பு நியாயமானது. ஆனால், அதற்கு ஏற்கெனவே அமைத்த திரைக்கதையில் சாத்தியம் கிடையாது. புதிதாக யோசிக்க வேண்டும்.

‘தங்கையான ஜானகி, தாய்ப் பாசத்தின் வீரியத்தைக் கொட்டித் தீர்த்த பின்பு, அக்கா பானுமதி பேசி ஜெயிக்க என்ன இருக்கிறது...! எங்களை மன்னித்துக்கொள்ளுங்கள்’ என்றார் பஞ்சு, நிதானமாக.

பானுமதி விடவில்லை.

‘எனக்கு நம்பிக்கை இருக்கிறது. கோபாலகிருஷ்ணனால் இன்னும் சிந்தித்து நன்றாக எழுத முடியும். நீங்க அனுமதிச்சா, அவரிடமிருந்து அக்காவுக்கான டயலாக் பேப்பரை நான் வரவழைத்துக் காட்டுகிறேன்’.

‘சண்டிராணியாகி’ பானுமதி சவால் விட்டார். ஏவி.எம்.முக்கு பானுமதியின் ஃபோனிலிருந்தே தகவல் போனது. மெய்யப்பனுக்கு இழந்த ஐஸ்வர்யம் திரும்பி வந்ததைப்போல் இருந்தது.

கோலிவுட்டில் மிகப்பெரிய கர்வி, மகா திமிர் பிடித்தவர், அகம்பாவம் நிறைந்தவர், ஆணவக்காரி என்று எல்லோராலும் சகஜமாக விமர்சிக்கப்பட்டவர் சாட்தாத் பானுமதி.

கதாசிரியருக்குக் கற்பனைச் சிறகுகள் விரிய வேண்டும் என்பதற்காக, மிகச் சிறந்த திரை ஆவணம் ஒன்று உருவாக வேண்டும் என மெனக்கெட்டு,

‘உங்களுக்கு என்ன தேவை என்றாலும் சொல்லுங்கள். என் சொந்த செலவில் வாங்கித் தருகிறேன். நல்ல விஷயம் வந்தாக வேண்டும்’ என்று சொல்லி,

கோபாலகிருஷ்ணனிடம், காபி, வெற்றிலைப் பாக்கு, மூக்குப் பொடி இம்மூன்றையும் தனது கைகளாலேயே எடுத்து மாறி மாறி நீட்டி, அவரை உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தார்.

மெய்யப்பன் உள்பட அவரது மொத்த சகாக்களும், அதுவரையில் சரித்திரம் காணாத மிக அபூர்வமான காட்சியைக் கண்டு ஆச்சரியத்தில் மூழ்கினர்.

‘அன்னை’ செட்டில் மீண்டும் லைட்ஸ் ஆன்.



‘ஒரு தாய் பல பிள்ளைகளைப் பெறலாம். அத்தனை பேருக்கும் தனது அன்பையும் பாசத்தையும் பகிர்ந்தளிக்கலாம். அப்படியொரு சக்தி மாதாவுக்கு உண்டு.

‘ஆனால், ஒரு பிள்ளைக்கு இரண்டு அம்மாக்கள் இருக்கவே முடியாது. அவர்கள் இருவராகப் பொழியும் நேசத்தை, ஒற்றை மகனால் சுமக்கவே முடியாது.

‘அந்தப் பிள்ளை ஜீவனோடு நடமாட வேண்டுமானால், ஒரே ஒரு தாயார் மட்டுமே இருக்க முடியும். அந்த ஒரே ஒரு அம்மா நம்மில் யார், நீயா… நானா...? என்பதை நீயே முடிவெடுத்துக்கொள்’.

மனக்கொந்தளிப்பில் உண்டான அனல் விநாடிகளின் உச்சக்கட்டத்தில், அக்கா பானுமதியின் எரிமலைத் தாக்குதலால், தங்கை சவுகார் ஜானகி திடுக்கிட்டு நின்றுவிடுவதாக அக்காட்சி முடிந்தது.

கோபாலகிருஷ்ணன் எழுதிய வசனங்களை தெளிவு, தீர்க்கம், அழுத்தம் திருத்தமாக, ஆவேசத்துடன் பேசி நடித்த பானுமதியை, செட்டியார் உள்பட ஒட்டுமொத்த அரங்கமும் கைத்தட்டல்களால் உள்ளம் குளிரச் செய்தது.

1962, டிசம்பர் 15. வெலிங்டன் தியேட்டரில், முந்தானைகள் கண்ணீர் மழையில் முழுக்க நனைந்தன. அழுது அழுது தாய்க்குலங்களின் கண்களும் முகமும் சிவந்தன.

யுவதிகள், கிழவிகள் என்றெல்லாம் விதிவிலக்கு கிடையாது. அங்குமாத்திரம் அல்ல. ஒட்டுமொத்த தமிழக மகளிரும், ஒரேயடியாக பானுமதி நடித்த அன்னை படத்தைப் பார்த்துவிட்டு பகிரங்கமாகவே விம்மினர்.

சிவாஜி - சாவித்ரிக்கு எப்படி பாசமலரோ, அப்படி பானுமதிக்கு அன்னை. பாசமலரிலாவது இரு திலகங்களும் வெற்றியைப் பகிர்ந்துகொண்டார்கள். அன்னை, ஒன் உமன் ஆர்மி!

அதிலும், வளர்ப்பு மகன் விபத்துக்குள்ளாகி வீட்டிலேயே சிகிச்சை பெறும் நேரத்தில் - பானுமதியின் நடிப்பு, இனி வரும் நூற்றாண்டுகளுக்கும் கட்டாயக் கலைப்பாடம்!

1. உறங்கும் பிள்ளையின் காதுகளில் சத்தம் விழக்கூடாது என்று டக்டக் பூட்ஸுடன் வரும் நர்ஸை, சிடுசிடுப்புடன் விரலைக் காட்டி வெளியேற்றுவதும்…

2. ரயில் சத்தம் கேட்கக் கூடாது என்று மெல்லப் போய் ஜன்னலைச் சாத்திவிட்டு வருவதும்…

3. கடிகாரத்தில் டிக் டிக் ஒலி கேட்டுத் திடுக்கிட்டு, அடி மேல் அடி வைத்துச் சென்று, பெண்டுலத்தை நிறுத்திவிட்டு வருவதுமாக…

‘பானுமதி, நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகை’ என்று பேரறிஞர் அண்ணாவை வாயார மனமார சொல்லவைத்தார்.

‘சிவாஜிக்கு ஈடு யார் என்று எங்கெங்கோ தேடினோமே, இதோ நான் இருக்கிறேன் என்கிறார் பானுமதி. க்ளைமாக்ஸில் மகனுக்கு உண்மை தெரியும்போது, தூணைப் பிடித்துக்கொண்டு அழுகிறாரே… அந்த ஒரு இடத்தில்தான் நடிப்பை மறந்துவிட்டார். அன்னை மெல்ல ஊர்கிறாள். ஆனால், பானுமதி வேகமாக உயர்ந்துவிட்டார்’

என்று ‘குமுதம்’ தனது அன்னை பட விமர்சனத்தில், பானுமதியை சிகரத்தில் தூக்கி நிறுத்தியது.



அவர்கள் மாத்திரம்தானா?

அன்னையின் ஹிந்திப் பதிப்பில், எஸ்.வி. ரங்காராவ் வேடத்தில் நடிக்க வந்தவர், வடக்கின் பிரபல குணச்சித்திர நடிகர் பால்ராஜ் சஹானி. அன்னை படத்தைப் பார்த்துவிட்டு, பானுமதிக்கு அவர் கடிதம் எழுதினார்.

‘அன்னை படத்தை நான் பார்ப்பது இது மூன்றாவது முறையோ என்னவோ. எனக்குத் தமிழ் மொழி தெரியாவிட்டாலும், இன்னும் ஒரு டஜன் தடவையாவது அன்னை படத்தைப் பார்ப்பேன் - உங்களது சிறப்பான நடிப்புக்காகத்தான்.

‘நீங்கள் வேறு படங்களில் இதைவிடச் சிறப்பாக நடித்து வரலாம். அது எனக்குத் தெரியாது. ஆனால், அன்னை படத்தில் உங்கள் நடிப்பு சிறப்பானது மட்டுமல்ல; மிக மிக உயர்வானது.

‘அநேக காட்சிகளில் வாய் திறந்து வசனம் எதுவும் பேசாமல், பார்வையாலும், நடை உடை பாவனைகளாலும் நீங்கள் வழங்கியிருக்கும் நடிப்பு பற்றி தரமான விமர்சகன் ஒரு புத்தகமே எழுதலாம். எனது பாராட்டுதல்கள் மட்டும் உங்கள் நடிப்புக்கு ஒரு பரிசாகி விடாது. மேல் நாட்டுப் படங்களில்கூட, மிக அபூர்வமாகத்தான் இம்மாதிரியான உயர்தரமான நடிப்பை நான் பார்க்க முடிந்திருக்கிறது’.

JamesFague
12th December 2015, 05:43 PM
Courtesy: http://cinemaexpress.com/cinemaexpress/story.aspx…

chinnakkannan
12th December 2015, 11:10 PM
எஸ்.வாசுதேவன், ராஜேஷ் நன்றி.. சற்றே மூட் அவுட் தான்..அதுக்காக அப்படியே இருக்க முடியுமா..அப்புறம் மக்கள்ஸ்லாம் சந்தோஷமா இருக்க ஆரம்பிச்சுடுவாங்களே

நெய்வேலி வாசுதேவன்., மதுண்ணா எப்படி இருக்கறீங்க .. நான் அனைவருக்கும் ப்ரே பண்ணிக் கொண்டே இருந்தேன்.. ராகவேந்தர் சார் முரளி சார் எப்படி இருந்தது வெள்ளம்..

*

சரி முன்னாலே எழுதியிருந்த கண்ணீர் போஸ்ட்ல இருந்து ஆரம்பிக்கட்டா.. :)

*

மீள் பதிவு..

**

கண்ணீர்க்காக 4 வரி நோட் டைப்பில் எழுதிப் பார்த்தது

**

கைகேயி “யூ ஹாவ் டு கோ டு ஃபாரஸ்ட் மை பாய்” எனச் சொல்லிவிட ராமர் காட்டிற்குப் புறப்படுகிறார்.. அவர் புறப்படுவதை சோகத்துடனும் அழுகையுடனும் பார்க்கும் மக்கள் எப்படி இருக்கிறார்களாம்..

*

வால்மீகி ராமாயணத்தில் இவ்வாறு வருகிறது…

*

ஒரு பெரிய தாமரைக் குளம்..தண்ணீர் முழுதும் நிரம்பி இருக்கின்றது.. அங்கே சின்ன,பெரிய, நடுத்தர மீன்களெல்லாம் கூட்டம்கூட்டமாய் வந்து அங்கு நிரம்பியிருக்கும் தாமரைத் தண்டுகளில் மோதுகின்றதாம்..அப்போது என்ன ஆச்சாம்.. குளத்திலிருந்து தண்ணீரெல்லாம் பலதிசையில் சிதறுகிறதாம்.. அது போல மக்களின் கண்ணீர் சிதறின.. என்கிறார் வால்மீகி..

*

சரி கம்பன் என்ன சொல்கிறார்..

*
ஆவும் அழுத அதன்கன்று அழுத;; அன்றலர்ந்த
..பூவும் அழுத;புனல்புள் அழுத கள் ஒழுகும்
காவும் அழுத: களிறு அழுத; கால்வயப்போர்
..மாவும் அழுத;- அம்மன்னவனை மானவே

ராமனுடைய பிரிவால் துன்பமுற்ற தசரதனைப் போல் பசுக்கள் அழுதன; பசுக்கள் ஈன்ற கன்றுகள் அழுதன;அப்போது மலர்ந்த பூக்கள் கூட அழுதன;யானைகளும் அழுதன\; காற்றின் வலிமை கொண்ட குதிரைகள் கூட அழுதன..
*
எனில் எதற்காக இவையெல்லாம்..ம்ம் கண்ணீர்.. இந்தக் காலத்துக் கவிஞன்(ம்க்கும்! ) என்ன சொல்றான்..
*
உன்னதத்தில் பொங்குகின்ற உணர்விலே தான்வரும்
கண்ணீரும் தருமோர் காட்சி – திண்ணமாய்
நெஞ்சிலே பட்டவலி நேர்படக் கண்ணீராய்த்
துஞ்சுவதும் ஓர்காட்சி தான்….
*
உன்னதம்..மகிழ்ச்சியிலும் கண்ணீர் வரும்; சோகத்திலும் கண்ணீர் வரும்.. ஆமாம்..இதே
ஸிம்ப்பிளா திரைப்பாடலில் வந்துருக்கே.
.
*
சிரித்தாலும் கண்ணீர் வரும் அழுதாலும் கண்ணீர் வரும்
உறவினிலே சிரிப்பு வரும் பிரிவினிலே அழுகை வரும்..
சிரித்தாலும் அழுதாலும் சுகமாக அமைதி வரும்..

அதெப்படி அமைதி..ஆமாம் வாய்விட்டு சிரிச்சா மட்டுமில்லை வாய்விட்டு அழுதாலும் பாரம் குறையும்..மனசு பாரம் கொஞ்சம் குறையும்..
*
திரைப்பாடல்கள்ல பார்த்தா காதல் க்கு மட்டும் தான் கண்ணீர் குத்தகை எடுத்திருக்காங்க..
இந்தாள் என்ன சொல்றார்…

கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்
வேறுஒன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால், எல்லாமே கையில் சேரும்
வேறுஒன்றும் தேவையில்லை, நீ மட்டும் போதும் போதும்
(காதலிக்கறப்ப இப்படித்தான் இருக்கும் குரு..கல்யாணம் ஆச்சுன்னா..ம்ம்பார்க்கலாம்!!)
*
இன்னொரு பொண்ணு..கண்ணனை நினச்சு தன்னோட கொழுக் மொழுக் உடம்பு உருக உருகப்பாடுது...

கண்ணன் முகத்தோற்றம் கண்டேன் கண்டவுடன் மாற்றம்கொண்டேன்
கண்டவுடன் ஏங்கி நின்றேன் கன்னிசிலையாக நின்றேன்
என்ன நினைந்தேனோ தன்னை மறந்தேனோ கண்ணீர் பெருகியதே.
.
கண்ணனைப்பார்த்துட்டாளாம்..பேச்சு வல்லை..மூச்சு மட்டும் ஓரிழையாய் வர எல்லாமே மறந்துபோகுது.. கண்ணுக்குள்ள இருந்து வாட்டர் டேங்க்ல தண்ணீர் ஜாஸ்தியா ஏறிச்சுன்னா கொட்டறாப்புல பொலபொலன்னு கண்ணீரா வருதாம்..ம்ம் இது ஆனந்தக் கண்ணீர்

*

சமத்தா பொண்டாட்டியோட சந்தோஷமா இருக்க வந்த ஆள பொசுக்குன்னு கடத்திட்டுப் போய்டறாங்க தீவிர வாதிங்க..பாவம்..சின்னப் பொண்ணாச்சே .. என்ன கஷ்டப் படறாளோ..வாழ்க்கையோட ஆரம்பத்திலேயே இப்படி ஆச்சே..ம்ம்னு நினச்சு மனசுக்குள்ள தேடிப்பாக்கறது பாட்டா திரையில் வருது..
*

காதல் ரோஜாவே , எங்கே நீஎங்கே
கண்ணீர்வழியுதடி கண்ணே
: கண்ணுக்குள் நீ தான், கண்ணீரில் நீ தான்

ம்ம் நல்ல பாட்டுதேன்..

*
கண்ணீர்ங்கறது என்ன பிரிவின் வேதனை உள்ளத்தின் வலியை உடல் வெளிப்படுத்தும் முறை..அது வந்து ஒரு அழுகை போட்டுக்கிட்டா கொஞ்சம் ரிலாக்ஸீம் ஆகலாம்..இல்லியோ.

*

இங்க பாருங்க இந்தப் பையன் புலம்பறத.. அந்தக் கண்ணீர் கண்ணுக்குள்ளயே தங்கிடுதாம்..அதோட வெப்பம் கண்ணையே சுட்டுப்பொசுக்குதாம்...

*

விழியில்லை எனும்போது வழி கொடுத்தாய்
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்
நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம்
தத்திச்செல்லும் முத்து சிற்பம் கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம்
இன்னும் என்ன நெஞ்சில் அச்சம் கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம்
முல்லை பூவில் முள்ளும் உண்டோ கண்டு கொண்டும் இந்த வேஷம் என்ன

*

நல்ல சிச்சுவேஷ்னல் பாட்டு.. ஆனா ஹீரோயினா இன்னும் நல்லா ஆடத்தெரிந்த யாரையாவது போட்டிருக்கலாம்..

*

காதலில் சோகம்னா சிவாஜி தான் முதலில் கண் முன் வர்றார்.. கண்ணதாசன் வரி, டிஎம் எஸ் குரல், நடிகர் திலக நடிப்பு..ம்ம் மறக்க முடியுமா இந்தப் பாட்டை..

*

காதல் கிளிகள் பறந்த காலம்
கண்ணில் தெரியும் நெஞ்சம் உருகும்
கண்ணீர் கலங்கி கண்ணில் இறங்கி
நெஞ்சில் விழுந்தால் சொந்தம் புரியும்

*

ம்ம் ஒரே பாடல்..உள்ளத்தைக் கவ்வும்..

*

அட இந்தக் காலப் பாட்டிலும் வந்துருக்கே.. என்ன கொஞ்சம் வித்தியாசமாக.

*
.
மார்கழித் திங்களல்லவா...
இதயம் இதயம் எரிகின்றதே இறங்கிய கண்ணீர் அணைக்கின்றதே
உள்ளங்கையில் ஒழுகும் நீர்போல் என்னுயிரும் கரைவதென்ன
இருவரும் ஒரு முறை காண்போமா இல்லை
நீ மட்டும் என்னுடல் காண்பாயா

**

நல்ல சாங் தானில்லை..

**
கடைசியா நம்மை விட்டுக் குறுகியகாலத்திலேயே பிரிந்த ஸ்வர்ணலதாவோட பாட்டு..

போறாளே பொன்னுத்தாயி பொல பொலவென்று கண்ணீர் விட்டு
தண்ணீரும் சோறும் தந்த மண்ணை விட்டு
பால் பீச்சும் மாட்ட விட்டு
பஞ்சாரத்து கோழியே விட்டு
போறாளே பொட்ட புள்ள ஊரை விட்டு

*

ம்ம் நிறையக் கண்ணீர் விட்டுட்டேன்னு நினைக்கறேன்..இன்னும் விடுபட்டுப் போயிருக்கும்.. நீங்கதான் இருக்கீங்களே..சொல்றதுக்கு..

eehaiupehazij
17th December 2015, 02:59 AM
Sir Humphrey Bogart - Ingrid Bergman starrer Casablanca remains a hallmark movie of Romance till today!
In Kalathoor Kannamma GG reprised the charisma of Bogart in his 'love failure' / misunderstanding scenes!!

https://www.youtube.com/watch?v=1_a57ZNlU6o


https://www.youtube.com/watch?v=w7IWLZcVU64

GG at his best...excels and wins hearts!

https://www.youtube.com/watch?v=SToylWoPsSc


ஜெமினி கணேசனின் அற்புதமான உள்ளத்தை உலுக்கும் நடிப்பின் வீச்சை அருகிலிருந்து குருகுல வாசமாக உன்னிப்பாக கவனித்துக் கற்றுக்கொண்ட குழந்தை கமல்ஹாசன் !
திரைத் தந்தை ஜெமினியே......என்னவொரு வாத்சல்யமான அன்பை இனிமையாக இதமாக வெளிப்படுத்தியிருக்கிறார் ஜெமினி!!


https://www.youtube.com/watch?v=UNhURRJerPY

rajraj
17th December 2015, 05:26 AM
A song from Sangamam

margazhi thingaL madhi niraindha.......

http://www.youtube.com/watch?v=9YpJIxhhHFs


Hope we don't get any more rains as we did last Tamil month.

raagadevan
17th December 2015, 11:18 AM
வணக்கம் ராஜ்! :) Here's another song that starts with "மார்கழி"; but not in Tamil...

https://www.youtube.com/watch?v=jiopDnjbQb0

Note: Kamalahasan acted in several Malayalam movies in his early days/years before becoming famous in Tamil and the rest of India!

rajeshkrv
17th December 2015, 11:22 AM
RD. in 70's he acted both in tamil and mal ( many good movies in malayalam.. ponni, kanyakumari , eeta and many more

raagadevan
17th December 2015, 11:27 AM
Yes, Rajesh; I agree! :)

chinnakkannan
17th December 2015, 11:59 PM
என்னுடைய மார்கழி பாடல்..ம்ஹூம் நீங்கள் நினைப்பதில்லை.. :)

https://youtu.be/OBavPhVbpjc

raagadevan
18th December 2015, 11:59 PM
மார்கழி பாடல் is food for the soul, bur here is a link to Margazhi food for the body! :)

http://www.thehindu.com/features/metroplus/chennais-sabha-food-trail/article8004878.ece?homepage=true

rajraj
19th December 2015, 01:30 AM
Wishing you all a very merry Christmas and a Happy New Year ! :)

Here is a Christmas song by Jose Feliciano:

Feliz Navidad......

http://www.youtube.com/watch?v=XwRIBpw7EwU

This is a very popular Christmas song. We moved from Virginia and missed the snow fall and white christmas. :(
That is why you see white christmas in the video ! :)

raagadevan
19th December 2015, 11:54 AM
For a change of scene...

படம்: உழைத்து வாழ வேண்டும் (1988)
இசை: தேவேந்திரன்
நடிப்பு: விஜயகாந்த் & ராதிகா
பாடகர்கள்: கே.ஜே. யேசுதாஸ் & சித்ரா

முத்துக்கள் பதிக்காத கண்ணில் முத்தங்கள் பதிக்கட்டுமா
தித்திக்க திகட்டாத முத்தம் மொத்தத்தில் கொடுக்கட்டுமா
உன் பெண்மை சிவப்பான முத்தம் கொடுக்கட்டுமே
என் கன்னம் கருப்பான கன்னம் சிவக்கட்டுமே...

https://www.youtube.com/watch?v=kuNIweDY3HY

RAGHAVENDRA
20th December 2015, 12:52 PM
https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xtp1/v/t1.0-9/10291694_10207815081354401_8424921518446738917_n.j pg?oh=63b5bfa2aeb16103571a06a8df7e30c8&oe=56DD6626

rajraj
21st December 2015, 06:21 AM
From Sakunthalai (1940)

engum nirai naadha brahmam........

http://www.youtube.com/watch?v=aNcfPoTj1wQ


Sakunthalai was released in December 1940.

raagadevan
21st December 2015, 10:11 AM
This surely is not a Bhakthi song; but one about sakunthaLa! From the Malayalam movie "SAKUNTHALA" (1965)...

https://www.youtube.com/watch?v=TdkXiktNAGs

Russellxor
23rd December 2015, 03:44 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/_Thangai__%20Full%20Tamil%20Movie%20_%20K.%20Balaj i_%20Sivaji%20Ganesan%20-%20240P_02_8549_zpsvx2fzz1n.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/_Thangai__%20Full%20Tamil%20Movie%20_%20K.%20Balaj i_%20Sivaji%20Ganesan%20-%20240P_02_8549_zpsvx2fzz1n.jpg.html)

தாளம் போட வைக்கும்.
எழுந்து ஆடத் தோன்றும்.
சோர்ந்து போனவர்களைக் கூட உற்சாகம் கொள்ள வைக்கும்.
மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும்.

அந்தப்பாடல்
கேட்டவரெல்லாம் பாடலாம்
பாடல்தான்.
டக்டக் டடகடக் ம்ம்ம் உகூம் ம்ம்ம்உகூம்டக் டக் டக் டடக ஹோஹோஹோஹோ ஹோய்
என கம்மிங்கை முடிக்கும் போது,
இடது காதை இடது கையால் தடவிக்கொண்டே
இசைக்குழுவைப் பார்த்து வலது
கையால் இசையைஆரம்பியுங்கள் என்று கையயால் ஒரு சிக்னல் கொடுப்பார்.
அ ந்த விரல் ஸ்டைல் படு பிரமாதமாயிருக்கும்.அது
எல்லோருக்குமே பிடிக்கும் அதிலிருந்து தான் ஆரம்பிக்கும் அவருடைய ஸ்டைல்களின் அட்டகாசம்.
25 வருடங்களுக்கு முன் கல்லூரி வகுப்பறையில் நடந்த நிகழ்ச்சி என் நெஞ்சில் வந்துநிற்கிறது.பிரிவை எண்ணி வருந்திக்கொண்டிருந்த கல்லூரிக்காலகட்டத்தின் கடைசி நேரங்களில் ஒன்று .பேராசிரியர் மற்றும் நாங்கள் மௌனமாக அந்த பொழுதை ஓட்டிய நேரம் அது.அந்த நிசப்தம் பேராசரியரையே வதைத்ததோ என்னமோ திடீரென்று
அவரே வகுப்பை கலகலப்பாக்க
எல்லோரும் ஒரு பாடல்,அவரவர்களுக்கு பிடித்த ஒரு பாடலை பாடலாம் என்று கூறி வகுப்பை உற்சாகமாக்க ஐடியா சொன்னார்.யாரும் பாடும் மனநிலையில் இல்லை.பார்த்தார் பேராசிரியர்.அவரே பாட ஆரம்பித்து விட்டார்.அன்று அவர் பாடிக் காண்பித்த பாடல்தான் இது.மேற்கொண்டு அந்தப் பாடலின் தனித்துவத்தையும் விளக்க ஆரம்பித்துவிட்டார்.ஒரு பாடலைக் கேட்டாலஅந்தப்பாடல் பாடலைக் கேட்பவர்களையும்தன்னிச்சையாக பாடத் தூண்டுவதோடு உற்சாகத்தையும் அளிப்பதாக இருக்கவேண்டும்.அந்த சக்தி இந்தப்பாடலுக்கு இருக்கிறது.இது போன்ற தருணங்களில் இது மாதிரியான பாடல்கள் ஆரம்பத்திலேயே பாடும்போது அது இன்னும் நம்மை மறந்து அந்த
இசை க்கு மனம் சுலபத்தில் மாறிவிடும்.மேடைப்பாடல்களின் ஈர்ப்புக்கு இந்த பாடல் சரியான தேர்வு,
என்று ஒரு நீண்ட விளக்கமும் அளித்தார்.இந்தப் பாடல் கேட்கும் போதெல்லாம் என்னால் அந்த நிகழ்வை மறக்க முடியாது.

ம்ம்க்ககும் மம்ம்க்க்கும்ஹஹூக்கும்
(ஹம்மிங்)
வாய் திறக்காமலே ஹம்மிங்.
இந்த இடத்தில் அந்த பாடி லாங்வேஜ்ஜை என்னவென்று எழுதுவது என்றே தெரியவில்லை.அதை வர்ணிக்க பொருத்தமான வார்த்தைகள் தேடினால் வார்த்தைகளுக்கே பஞ்சமா?என்று தோன்ற வைக்கிறது.வாயைத் திறக்காமலேயே வயிற்றில் உள்ள காற்றை நெஞ்சுக்கூட்டுக்குகொண்டு வந்தும்
வாயிலுள்ள காற்றை குரலிலே பாடகர் கொண்டு வந்ததை இம்மி பிசகாமல் நடிப்பிலே காட்டுவதற்கு எத்தனை சிரமம்.ஆனால் நடிகர்திலகத்திற்கு அது ஒரு பொருட்டாகவே இருந்திருக்காது என்பது அந்தக் காட்சியைப் பார்த்தால் நன்றாகவே தெரியும்.



கேட்டவரெல்லாம் பாடலாம்
என் பாட்டுக்குத் தாளம் போடலாம்
கமான் கிளாப்ஸ்..
கேட்டவரெல்லாம் பாடலாம்
என் பாட்டுக்குத்தாளம் போடலாம்.
பாட்டினிலே பொருளிருக்கும்.
பாவையரின் கதையிருக்கும்.
மனமும் குளிரும்
முகமும் மலரும்
ஒஹொஹொஹோஹோஹோஹோஹோ.

சீட்டுக் கட்டு ராணி மாப்பிள்ளைத் தேடி ஊர்வலம் போனாள் ஒரு நாளில்..
கூட்டத்தோடு நானும் பார்த்துக் கொண்டு நின்றேன் கூட வந்த தோழி என்னைப் பார்த்தாள்
கண்ணாலே ஜாடை செய்து கையோடு என்னைக்கொண்டு போனாள்
தோழியின் வயதோ அறுபதுக்கு மேலே
பாடலிலே நடித்தவர்கள் மட்டுமல்ல
அரங்கமே அதிரும் அல்லவா இந்தகாட்சிக்கு.முதல் இரண்டு வரிகளில் தேடலைச் சொல்லி பின் ஈர்ப்பதைச் சொல்லி அது காதலாக மாறியதைச் சொல்லி கடைவரியில் சஸ்பென்ஸ் வைத்து அது காமெடியாய் முடித்திருப்பாரே கவிகளுக்கு அரசர்.பிற்காலத்தில் புகழ்பெற்ற ஹைக்கூ கவிதை அமைப்பில் இந்த வரிகள் அமைந்திருக்கும்.
சீட்டுக்கட்டு ராணி என்று பாடும்போது இடது கை விரல்களை சுண்டிக்கொண்டே உடம்பை முறுக்கி வளைத்து ,விழிகளை விரித்து...
அருமை அருமை அருமை.
கூட்டத்தோடு நானும் என்பதில் அந்த கை சைகை,
பாலாஜி மேல் மோதி அதற்குமன்னிப்பு கோரும் பாவனை,
வயது அறுபதுக்கும் மேலே என்பதற்கு வயதான பெண்ணின் நிலையை காட்டும் தோரணை என்று தொடர்ச்சியான சின்ன சின்ன அசைவுகளில் கூட உஷாரான நடிப்பு.ஸ்வீட் சிக்ஸ்ட்டி என்று கண்ணடிப்பதும் அந்த உதட்டசைவும்
புருவமேற்றுவதும் பார்க்கும் அனைவரையும் அவர் நடிப்பை போற்ற வைக்கும்.பின்னால் கையைக்கட்டி கொண்டு மெல்ல ஆடிச் செல்லும் நடனம் என்று ரசிப்புகளை கூட்டிக்கொண்டே செல்வார்.

என் உறவினர் ஒருவர் வேறு நடிகரின் அபிமானி.என் சிறு வயதில் அவர் வீட்டிற்கு செல்லும்போதெல்லாம் அடிக்கடி இந்த பாடலை பாடிக்கொண்டேயிருப்பார்.நீங்கள் எப்படி இந்த பாடலை? என்று நானும் கேட்பேன்.எல்லா அம்சங்களும் நிறைந்த இந்த துள்ளலானபாடல் எனக்கு மட்டுமல்ல,திரைப்பட பாட்டை யார் விரும்பிக் கேட்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் பிடிக்கும்.ஆயிரம் இருந்தாலும் என் மனதில் இருந்து சொல்கிறேன்,கணேசனின் இந்த நடிப்பை யாராலும் செய்யமுடியாது.
நான் நினைத்துக் கொண்டேன்.
"யாரையும் கட்டிப் போடும் நடிப்பு
நடிகர்திலகத்தின் நடிப்பு".

..கேட்டவரெல்லாம் பாடலாம்.,
படிகளில் ஏறி நின்றுடான்ஸ் ஆடும் ஸ்டைலில் பட்டையைக் கிளப்புவார்.
உடலசைவுகளில் துள்ளல்கள் துள்ளி விளையாடும்.காண்போர் தம் கண்ணில்பரவசம் வந்து குடி கொள்ளும்.

அந்தப்புரம் போனேன் ராணி முகம் பார்த்தேன்
அச்சம் கொண்டு நின்றாள் அழகோடு
அழகோடு அழகோடு அழகோடுஎன
கே.ஆர்.விஜயாவைபார்த்து மெய் மறந்து மெல்ல சுதியைக் குறைத்துபின் இயல்பாகி,
ஒரு நடை நடந்து வருவாரே பாருங்கள்.நடனமும் நடையும் கலந்த அந்த நடையில் சொக்கி விடுவோம்.
அள்ளி வைத்த கூந்தல் துள்ளி விளையாட கள்ள நகை செய்தாள் கனிவோடு
கே ஆர் விஜயா இங்கே புன்னகைக்க,
நெஞ்சைப் பிடித்து அந்த திருப்தியை வெளிப்படுத்தும் பாங்கு இருக்கிறதே. பிரமாதத்திலும்பிரமாதம்.
அது போதும் போதுமென்று பலகாலம் வாழ்க வென்று இசை பாட நானும் வந்தேன் சுவையோடு....


கடைசியில் அந்த
பப்பரபப்பா பப்பரபப்பாப்பாபா
பப்பரபப்பாபா பப்பாராப்பா பப்பாவில்
ஆடும் ஆட்டம் எல்லாவற்றிக்கும் மேலான உச்சம்.அவர் போடும் ஸ்டெப்என்ன,கை தூக்கி ஆடும் அந்த டைல் என்ன,அந்த உற்சாகம் என்ன
லோக்கல் பாஷையில் சொல்வதென்றால்
"பட்டைய கிளப்பியிருப்பார்."


KETTAVARELLAM PADALAM.MOVIE: THANGAI.TMS: http://youtu.be/0ngxAPeHSO8

eehaiupehazij
24th December 2015, 07:48 PM
gods must be crazy?!

Dare Bare Body Incarnations by Heavenly Bodies!!


தெய்வம் மனித ரூபத்தில் மனிதனின் பக்தியை சோதிக்கவும் பக்திக்கு மெச்சி வேண்டும் வரம் தந்திடவும் பூமிக்கு இறங்கி வருவது உலகத்தின் அனைத்து மொழிப்படங்களிலும் தவிர்க்க இயலாத ஒரு பொழுதுபோக்கு சிறப்பம்சமே !! கற்பனை வளமும் வானளாவியதே!!

நடிகர்திலகம் சிவனார் மனித ரூபத்தில் நடத்தும் bare body திரு விளையாடல் கூத்தாட்டம் !

https://www.youtube.com/watch?v=U0viOT5Gowg


ஜெமினியின் சிவனார் சிவனடியார் சிவாஜியை கிடுக்கிப் பிடி போடும் same bare body திருவருட் செல்வர் சோதனை !!

https://www.youtube.com/watch?v=MOTgW8glTHk

raagadevan
25th December 2015, 11:44 AM
Season's greetings to all mayyam.com (hub) friends! :)

raagadevan
27th December 2015, 12:26 AM
In memory of Hindi actress Sadhna who passed away yesterday...

Song: "naina barse rimjhim rimjhim..."
Movie: Woh Kaun Thi (1964)
Stars: Sadhna & Manoj Kumar
Lyrics: Raja Mehdi Ali Khan
Music: Madan Mohan
Singer: Lata Mangeshkar

https://www.youtube.com/watch?v=5lyNZ0gca-M


Tamil version from Yaar Nee (1966), sung by P. Susheela:

https://www.youtube.com/watch?v=dtaiGjAjrbk

raagadevan
27th December 2015, 12:48 AM
Here is a Youtube link to an extended version of "naanE varuvEn...":

youtube.com/watch?v=sF0bRsHrRJU&feature=player_embedded

rajraj
27th December 2015, 08:32 AM
I have been reading Indian newspapers about the happenings in India. It reminded me of a song from manidhanum mirugamum (1953).

kaalam enum sirpi seyyum kavidhai thaai koviladaa.......

http://www.youtube.com/watch?v=3CByUVNgB2Q

raagadevan
29th December 2015, 12:21 PM
Song: "dhEva dhundhubi saandralayam divya vibhaatha shobhaana raagalayam..."
Movie- Ennennum Kannettante (1986)
Movie Director- Fazil
Lyrics- Kaithapram
Music- Jerry Amaldev
Singers: K.J. Yesudas, Satheesh Babu & Sunanda
Ragam: Bhimpalasi, and Bageshri

https://www.youtube.com/watch?v=3ZJ9IgwV42s

Link to the original Malayalam movie:

https://www.youtube.com/watch?v=RoVTyhSCDzs

The movie was a classic (in my opinion); but a box office failure. Fazil changed it a lot
and remade it into a box office hit in Tamil, "Varusham Padhinaaru":

https://www.youtube.com/watch?v=TKFZaZ-A2Kk

JamesFague
29th December 2015, 01:16 PM
Courtesy: Dinamani


பானுமதி: 10. டாக்டர் பானுமதி!

பானுமதிக்கு மீண்டும் வசந்தம்! 1973ல் பிரமிளா, லதா, ஜெயசித்ரா, ஜெயசுதா, ஸ்ரீபிரியா போன்ற புதுமுகங்கள் படையெடுத்த பின்னும் அரை டஜன் படங்கள் அணி வகுத்தன.

1974 தைத் திருநாளில் வெளி வந்தது ‘பத்து மாத பந்தம்’ வண்ணச் சித்திரம். கிருஷ்ணன் - பஞ்சு டைரக்ட் செய்தனர். மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடித்திருந்தது. சரோஜாதேவியும் அவர்களில் ஒருவர்.

அத்தனை பேரையும் மீறி வழக்கம் போல் கொடி கட்டிப் பறந்தவர் பானுமதி.

அதிலும் அவர் உஷா உதூப் ஆகி பாடிய ‘லெட் மீ சிங்... லெட் மீ சிங்... ‘முழு நீள மேற்கத்திய சங்கீதம் சகலரையும் சபாஷ் போட வைத்தது. அந்த ஆண்டின் சூப்பர் ஹிட் பாடல்! கல்யாண வீடுகளிலும், பிள்ளையார் கோயில் கச்சேரிகளிலும் தவறாமல் பாடப்பட்டது.

‘கர்நாடக சங்கீதத்துக்குத் தலையையும் உடம்பையும் அவ்வளவு அலட்டிக் கொள்ளாதிருக்கலாம் என்ற கடுகுக் குறை, பாப் மியூசிக் பாடும் பானுமதியின் லாகவத்திலும் இனிமையிலும் மறைந்து விடுகிறது. சபாஷ் பானுமதி அய்யர்!

நிர்மலாவிடம் ‘உனக்கும் அந்தத் தொற்று நோய் பற்றிக் கொண்டு விட்டதா?’ என்று காதலைப் பற்றி அவர் செய்யும் கண்டனமும், விமர்சனமும் க்ளாஸாக இருக்கிறதல்லவா?



பத்துப் பவுன் தாலிக் கயிற்றைத் தொட்டுக் காட்டி,

‘கொடுமைக்காரனாக இருப்பது கணவனது கர்மம். அவன் கட்டிய தாலியைத் தூக்கிப் போடாமல் இருப்பது இந்த மண்ணின் தர்மம்’! என்று சொல்லுகிறாரே, அந்தத் தோரணை, அந்த முக பாவம் - பானுமதிக்குத் தவிர வேறு யாருக்கு வரும்?’

பானுமதியை இனிக்க இனிக்கப் பாராட்டி ஒரு பாரா முழுக்க எழுதியது குமுதம்.

கே.எஸ். கோபாலகிருஷ்ணனின் ‘சுவாதி நட்சத்திரம்’ சினிமாவில் பானுமதிக்கு முதிய கன்னியாஸ்திரி வேடம். மாறுபட்ட கதையம்சம் இருந்தாலும் மக்களின் கவனம் பெறாமல் போனது.

‘தாய் பிறந்தாள்’ படத்தில் பானுமதியுடன், நடிப்புக்காக மூன்று முறை ‘ஊர்வசி’ பட்டம் பெற்ற சாரதா மருமகள் வேடத்தில் நடித்திருந்தார். பேரக் குழந்தைகளுக்காக ஏங்கும் பாட்டி வேடம் பானுமதிக்கு.

1. ‘முருகா எனக்கொரு வரம் வேண்டும்

என் பேரனாக நீ வந்து பிறந்திட வேண்டும்’

2. மாதுளை முத்துக்கள் மல்லிகை மொட்டுக்கள் சிந்திக் கிடப்பதென்னவோ...

இந்த மாளிகை வாசலில் ஆடிடும் செல்வங்கள் வாடிக் கிடப்பதென்னவோ...

என்று இரு பாடல்களையும் பாடினார் பானுமதி.

அந்த மூன்று சினிமாக்களும் 1974 முழுவதும் பரவலாகத் தமிழகமெங்கும் ஓடின. யுவதிகள் மத்தியில் பானுமதிக்கு மவுசு கூடியது.

1975 உலக மகளிர் ஆண்டு. வர்த்தக சூழல் சரி இல்லை என்று ஏவி.எம். போன்ற நிறுவனங்கள் படத்தொழிலில் இருந்து விலகிய நேரம்.

ஒரு தலைமுறை இடைவெளிக்குப் பின்னர், கோலிவுட்டில் பானுமதி மீண்டும் மிகத் தைரியமாக சினிமாத் தயாரிப்பில் ஈடுபட்டார். தன் புதிய படைப்புக்கு அவர் வைத்த டைட்டில் ‘இப்படியும் ஒரு பெண்!’



சிவகுமார், ஸ்ரீகாந்த் போன்ற இளைய தலைமுறை நடிகர்கள் பானுமதியின் இயக்கத்தில் நடித்தார்கள். கழக அரசின் ஊழல்கள் பற்றி மீடியா பரபரப்பாக எழுதிய சமயம்.

‘எம்.ஜி.ஆரின் கொள்கை கீதங்கள்’ ஸ்டைலில் பானுமதி ஒரு பாடலை மனோரமாவுடன் இணைந்து முதலும் கடைசியுமாகப் பாடினார். இருவரும் ஜெயிலில் அதைப் பாடுவதாகக் காட்சி.

‘அகப்பட்ட வரையில் சுருட்டிட்ட யாரும் சுகப்பட்டதில்ல’ என்று அதன் பல்லவி ஆரம்பமானது.

தியேட்டர்களில் விசில் பறந்தது. கை தட்டல்கள் அடங்க நேரமானது.

க்ளைமாக்சில் ஸ்ரீகாந்தை மடக்கி, ‘துரோகம் செய்த பெண்ணுக்கு தாலி கட்டப் போறியா இல்லையான்னு சவுக்கை எடுத்துச் சொடேர் சொடேர்னு’ அடித்த சினிமா - பானுமதியின் ‘இப்படியும் ஒரு பெண்!’

தாய்க்குலங்கள் திரண்டு வந்து முழு ஆதரவு தந்தனர். எல்லா ஊர்களிலும் பல வாரங்கள் ஓடி நன்றாக வசூலித்தது.

சட்டம் என் கையில் படத்தை நீங்கள் எல்லாரும் பார்த்திருப்பீர்கள். அது பானுமதி நடித்த ‘எடுப்பார் கைப்பிள்ளை’ கலர் சினிமாவின் அப்பட்டமான காப்பி!

தனக்குத் தண்டனை வாங்கித் தந்ததால் வக்கீல் பானுமதியின் குழந்தையைத் திருடி, எம்.ஆர். ஆர். வாசு திருடனாக வளர்ப்பார். அவரது பிள்ளையான ஸ்ரீகாந்த்தை பானுமதியின் காணாமல் போன மகனாக நடிக்க அனுப்பி வைப்பார்.

ஸ்ரீகாந்தை சுற்றத்துக்கு அறிமுகப்படுத்தும் விழாவில்

‘ மீட் மை சன்! வனவாசம் போய் திரும்பி வந்தான் என் மகன் மீட் மை சன்!’

என்று பாடி வரவேற்பார் பானுமதி.

ஜெய்சங்கர் நிஜ வாரிசாக, ஹீரோவாக பானுமதியுடன் இணைந்து நடித்த ஒரே படம் எடுப்பார் கைப்பிள்ளை. எமர்ஜென்சி காலத்திலும் மக்கள் கலைஞரின் வெற்றிச் சித்திரமாக அமைந்தது.



இப்படியும் ஒரு பெண் ஓடிய ஓட்டத்தில், ‘வாங்க சம்பந்தி வாங்க’ சினிமாவை 1976 மார்ச்சில் வெளியிட்டார் பானுமதி. அதில் ஹீரோயின் இளம் நாயகி பிரமீளா. தெலுங்கில் பெற்ற வெற்றி தமிழில் கிடைக்கவில்லை.

கர்நாடக கீர்த்தனையை அச்சு அசலாக ‘மகளிர் ஆண்டு உதயமான புது வருடம்’ என்கிற பாடலில் கையாண்டு நேயர் விருப்பத்தில் இடம் பெறச் செய்தார் பானுமதி.

பாரதிராஜாவின் வருகைக்குப் பிறகு தமிழ் சினிமாவில் இளமை ஊஞ்சலாடியது. பானுமதி முழு ஓய்வில் இருந்தார்.

முழுக்க முழுக்க குழந்தைகள் நடித்த ‘பக்த துருவ மார்க்கண்டேயா’ பக்திச் சித்திரத்தை உருவாக்கினார். 1983 ஆகஸ்டு 12ல் வெளியானது. அவரது அரிய சாதனைக்காக எம்.ஜி.ஆர்.அரசு ‘வரிவிலக்கு’ அளித்தது.

மிகக் குறைந்த கட்டணத்தில் எல்லாரும் பார்த்ததில் பானுமதிக்கு லாபம் ரெட்டிப்பானது.

1986 தீபாவளிக்கு ரிலிசான ‘கண்ணுக்கு மை எழுது’ படத்தில் மீண்டும் பானுமதியை மக்கள் திரையில் பார்த்தனர். நாயகி சுஜாதாவோடு பானுமதி நடித்த ஒரே படம்.



அதில் என்ன விசேஷம் தெரியுமா? இசை ஞானி போட்ட ட்யூனில் முதன் முதலாக பானுமதி பாடினார்.

1992 தமிழ்ப் புத்தாண்டு வெளியீடு செம்பருத்தி. இளையராஜா இசையில் பாபி ஸ்டைல் கதை. பிரசாந்தின் பாட்டியாக தொடக்கத்தில் மூர்க்கமாகவும், பிறகு உருக்கமாகவும் பானுமதியின் நடிப்பு இருபத்தியோராம் நூற்றாண்டிலும் ஜீவித்திருக்கிறது!

‘பானுமதி நடித்து வெள்ளி விழா கொண்டாடிய கடைசித் தமிழ்ப்படம்’

என்கிற பெருமை செம்பருத்திக்குக் கிடைத்தது. ‘செம்பருத்தி பூ’ என்று தொடங்கும் கோஷ்டி கானத்தில் பானுமதியின் குரலும் நிறைவாக இணைந்து ஒலித்தது.

‘என் ராசாவின் மனசிலே’, ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’ ஆகிய வெற்றிச் சித்திரங்கள் தெலுங்கில் ரீமேக் ஆனது. முறையே ஸ்ரீவித்யா, மனோரமா ஏற்ற வேடங்களில் பானுமதி நடித்திருந்தார்.

‘பாட்டி சொல்லைத் தட்டாதே’வில் மனோரமாவின் நடிப்பு பானுமதியை மலைக்க வைத்தது.

‘மனோரமா இந்த ரோலை கிரியேட் பண்ணிட்டாங்க. நான் அந்த ரோலில் ஆக்ட் பண்றேன். அவ்வளவுதான்.

‘ஐ டு நாட் நோ ஹவ் ஃபார் ஐ வில் ரீச் மனோரமா’ என்றார் பானுமதி.

மனோரமாவுக்கு வழங்கியதை விடவும் பல மடங்கு அதிகமான சம்பளத்தைக் கேட்டார். அவரது விருப்பத்தைப் பூர்த்தி செய்து உள்ளம் குளிரச் செய்தது ஏவி. எம். நிறுவனம்.

பானுமதி திரை வாழ்வினில் பெற்ற உச்சக்கட்ட ஊதியமாக அது இருந்திருக்கலாம்!

பானுமதியுடன் புதுமுகங்கள் நடிக்க, 1993ல் ‘பெரியம்மா’ என்ற பெயரில் பரணி பிக்சர்ஸ் புதிய சினிமாவைத் தயாரித்தது. பானுமதிக்கு அதில் மிகவும் வித்தியாசமாக ‘பால்காரி வேடம்’ என்பதாக நினைவு.

வாங்க ஆளில்லாமல் 22 ஆண்டுகளாகப் பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கிறது.

1973ல் ‘ஸ்டார் அன்ட் ஸ்டைல்’ பானுமதியைக் கேட்டது.

‘நீங்கள் இன்னமும் எவ்வளவு காலம் நடிப்பீர்கள்?’

‘எனக்கே அது தெரியாது. நான் விதி மீது அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளவள். வருவதை அப்படியே ஏற்றுக் கொள்பவள். ரசிகர்கள் விரும்பும் வரையில் நான் நடிப்பேன்.’

‘பெரியம்மா’--- பானுமதி நடித்த கடைசித் தமிழ்ப் படம்!

சொல்லும் செயலும் ஒன்றெனக் கொண்டவரா... ஸ்வர்க்க சீமா பானுமதி!

தென்னக சினிமாவில் நடிப்புக்காகப் ‘பத்மஸ்ரீ’ பட்டம் பெற்ற முதல் நட்சத்திரம்! அதற்காகப் பாராட்டு விழாவை நடிகர் சங்கம் 1966 பிப்ரவரி 11ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நடத்தியது.

1958க்குப் பின்னர் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் கழிந்து, எம்.ஜி.ஆரும் -சிவாஜியும் ஒன்றாக, ஒரே மேடையில் ஒற்றுமையாக வீற்றிருந்து பானுமதியைப் போற்றினார்கள்.

2003ல் தேசிய சர்க்கார் பானுமதிக்கு ‘பத்மபூஷண்’ விருது வழங்கியது.

ஆசியாவிலேயே முதன் முதலாக மூன்று மொழிகளில் ‘சண்டிராணி’ படத்தைத் தயாரித்து நடித்து இயக்கிய முதல் பெண்மணி பானுமதி!

பேரறிஞர் அண்ணா கதை வசனம் எழுதிய முதல் டாக்கி நல்லதம்பி, தமிழில் முதல் வண்ணப்படம் ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’, முதல் தேசிய விருது பெற்ற ‘மலைக்கள்ளன்’, பறக்கும் தட்டை திரைக்கதையில் இணைத்த முதல் விஞ்ஞானச் சித்திரம் ‘கலையரசி’, வட்டார வழக்கு மொழியில் முதலில் வெளியான ‘மக்களைப் பெற்ற மகராசி’ இவை யாவிலும் பானுமதியே கதாநாயகி என்பது கூடுதல் சிறப்பு!

கோடம்பாக்கத்தில் 1950களிலேயே சொந்தமாக பரணி ஸ்டுடியோவை உருவாக்கியவர். அங்கு தமிழிலும், தெலுங்கிலும் என்.டி.ராமாராவ், ஏ. நாகேஸ்வர ராவ், சிவாஜி கணேசன் நடிக்க சினிமாக்களைத் தொடர்ந்து தயாரித்தவர். தன் படைப்புகள் யாவற்றிலும் நாயகியாக நடித்தவர்.

1939 தொடங்கி 1992 வரையில் இடை விடாமல் ஏறக்குறைய 53 ஆண்டுகள் சொந்தக்குரலில் பாடல்களையும் பாடியவர்.

எம்.கே. தியாகராஜ பாகவதர், பி.யூ. சின்னப்பா, எம்.ஜி.ஆர்., டி.ஆர். மகாலிங்கம், ஜெமினி கணேசன், சிவாஜி கணேசன் என்று தமிழகத்தின் முதல் ஆறு சூப்பர் ஸ்டார்களுடனும் நாயகியாக நடித்த ஒரே நட்சத்திரம்!

கதை, திரைக்கதை எழுதி, ஏறக்குறைய 20 படங்களை சுயமாக இயக்கியவர். அவற்றில் சில படங்களுக்கு இசை அமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

அவரது இலக்கிய மேன்மையைப் பாராட்டி பானுமதி எழுதிய ‘அத்தை காரு’ நூலுக்கு ‘சாகித்ய அகாடமி’ விருது வழங்கியிருக்கிறது.

தமிழில் அவை ‘மாமியார் கதைகள்’ என்ற பெயரில் பிரபல வார இதழ்கள் அனைத்திலும் பிரசுரமாயின. எல்லாமே ஏறக்குறைய பானுமதியின் சொந்த அனுபவங்கள். ஆபாசமற்ற மிக மிக சுவாரஸ்யமான ஹாஸ்ய நிகழ்வுகள்.

நடிப்பின் சர்வ கலாசாலையாக நடமாடிய சிவாஜி, புரட்சி நடிகர் ஆகியோருக்கு வழங்கப்படும் முன்னமே ‘முனைவர்’ கவுரவம் பெற்றவர் பானுமதி.

மகளிர் ஆண்டையொட்டி 1975ல் ஆந்திரா யுனிவர்சிடி பானுமதிக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. மீண்டும் 1984 மார்ச்சில் அவருக்கு ‘திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தின் டாக்டர் பட்டம்’ கிடைத்தது.

இரு டாக்டர் பட்டங்கள் பெற்ற ‘முதல் மற்றும் ஒரே திரைத் தாரகை - பானுமதி!’ இது என் யூகம்.

அதற்காக ஒரு பாராட்டு விழாவை தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம் என்று பல்வேறு மொழிகளின் சினிமாப் பத்திரிகையாளர்கள் மயிலாப்பூர் உட்லண்ட்ஸ் ஹோட்டலில் நடத்தினார்கள்.

அவர்களுக்கு நன்றி தெரிவித்து பானுமதி ஆற்றிய உரை -

‘ நான் என் முதல் படமான வரவிக்ரயத்தில் நடிக்கவே இல்லை. வீட்டில் எப்படி இருந்தேனோ அப்படியே தோன்றினேன்.

என் ஆசையெல்லாம் சட்டம் படிக்க வேண்டும் என்பதே. ‘எடுப்பார் கைப்பிள்ளை’ படத்தில் எனது வக்கீல் நடிப்பை என் தந்தைக்குப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை.

மாலதி மாதவம் தெலுங்கு சினிமாவின் டைரக்டர் பி. புல்லையா. அவருடைய மாப்பிள்ளை தான் படத்தின் ஹீரோ. நான் நெருங்கினால் அவரும், அவர் கிட்டே வந்தால் நானும் விலகி விலகிச் சென்று ஷூட்டிங்கில் கண்ணாமூச்சி காட்டினோம். கடைசியில் மாலதி மாதவம் படு தோல்வி அடைந்தது.

காதல் கல்யாணம் முடிந்ததும் பதினைந்து ரூபாய் வாடகை வீட்டில் தனிக்குடித்தனம் நடத்தினோம். பஸ்ஸில் போய் சினிமா பார்ப்போம். அந்த மகிழ்ச்சி, இன்பம் இப்போது இம்பாலா காரில் துளியும் கிடைக்கவில்லை.

‘நடிப்பு இயற்கையாக இருக்க வேண்டும்’ என்பதில் மிகவும் விழிப்புடன் இருப்பேன். என் சொந்தப் படம் என்றாலும் சரி, மற்ற சினிமாக்கள் ஆனாலும் சரி, கதாபாத்திரத்தைப் பொறுத்த வரையில் கவனத்தோடு செயல்படுவேன்.



‘யாராவது இப்படி நடி, அப்படிப் பாடு...என்றால் என்னால் சரி வர ஒன்றும் செய்ய இயலாது.

தமிழ்நாட்டில் எனக்கு டாக்டர் பட்டம் வழங்கவில்லை. அதற்காக வருத்தப்படமாட்டேன். அதை விட வாயாடி, கர்வம் பிடித்தவள் போன்றப் பட்டங்களை வாங்கி இருக்கிறேன்.

சத்யஜித்ரேயின் படங்கள் எனக்குப் பிடிக்கும். ஆனால் பிடித்த டைரக்டர் சாந்தாராம். அவர் உருவாக்கிய ஆத்மி சினிமா மிகவும் பிடிக்கும்.

காலம் முழுவதும் அரிதாரம் பூசி ‘காஞ்சித் தலைவன்’ அண்ணா பாராட்டிய ‘கலையரசி’யாக, ‘அறிவாளி’யாக, ‘இப்படியும் ஒரு பெண்ணாக’ வலம் வந்த போதும், பானுமதியை மிகவும் கவர்ந்தது ஆன்மிகம்.

‘பட்டத்து ராணி’ படத்தில் நடித்துக் கொண்டிருந்த சமயம். ஸ்ரீ சிருங்கேரி சுவாமிகளிடம் ‘நவாக்ஷர’ உபதேசம் பெற்றவர்.

பானுமதி வீட்டில் நவராத்திரி கொலு பிரசித்தமானது. அதில் பொம்மைகள் மாத்திரம் அல்லாமல் பானுமதி வரைந்த ஓவியங்களும் காட்சி தரும்.

பானுமதியின் தூரிகைச் சித்திரங்கள் ஜனாதிபதி சர்வ பள்ளி ராதாகிருஷ்ணனின் மாளிகையில் முக்கிய இடம் பிடித்தன.

நடிப்பில் ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் எழுத்தில் தீவிரம் காட்டுவார். ஜார்ஜெட் ஹேரின் நாவல்களுக்கு தீவிர வாசகி.

பானுமதிக்கு ஒரே மகன் டாக்டர் பரணிகுமார். சென்னை பொது மருத்துவமனையில் பிரபல மருத்துவர் அண்ணாமலையிடம் பயிற்சி பெற்றவர்.



அமெரிக்காவிலும் சில ஆண்டுகள் பணியாற்றிய அனுபவமும் பரணிக்கு உண்டு. மகனைக் காண அமெரிக்கா சென்ற பானுமதியின் ‘கணவர் ராமகிருஷ்ணா’, எதிர்பாராத விதமாக அங்கேயே காலமானார்.

JamesFague
29th December 2015, 01:20 PM
Courtesy: Tamil Hindu

காற்றில் கலந்த இசை 35: சாகசப் பயணத்தின் பாடல்!



‘நான் போட்ட சவால்’

அகலமான தொப்பி, இடுப்பு பெல்ட்டில் துப்பாக்கி, முழங்கால் வரை நீளம் கொண்ட பூட்ஸ் அணிந்து குதிரை மீது பவனிவரும் கதாபாத்திரங்கள் கவ்பாய் படங்களில் பிரசித்தம். ‘வெஸ்டெர்ன்’ படங்கள் என்றறியப்படும் இவ்வகைப் படங்கள் தமிழிலும் பரீட்சித்துப் பார்க்கப்பட்டன. எம். கர்ணன் இயக்கி ஜெய்சங்கர் நடித்த பல படங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

கர்ணனைத் தவிர வேறு சிலரும் இவ்வகைப் படங்களை முயன்றிருக்கிறார்கள். பெரும்பாலும் 19-ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் நடப்பதாகவே ‘வெஸ்டெர்ன்’ கதைகள் அமைக்கப்பட்டன. ஆனால், தமிழில் காலம், இடம், கலாச்சாரம் என்பவற்றையெல்லாம் பற்றிக் கவலைப்படாமல் கலந்துகட்டி அடித்த ‘கவ்பாய்’ படங்கள்தான் வெளியாகியிருக்கின்றன. ரஜினி நடித்த ‘நான் போட்ட சவால்’ அவற்றில் ஒன்று. புரட்சிதாசன் என்பவர் இயக்கி 1981-ல் வெளியான இப்படம், வெஸ்டெர்ன் படமாகவும் அல்லாமல், சமூகப் படமாகவும் அல்லாமல் ஏனோதானோ என்று எடுக்கப்பட்டது.

தோல்விப் படம்தான். ஆனால், இப்படத்துக்காக இளையராஜா உருவாக்கிய பாடல்கள் படத்தின் தலைப்பை ரசிகர்களின் நினைவில் தேக்கிவைத்திருக்கின்றன.

ஹாலிவுட் மற்றும் இத்தாலி (ஸ்பாகெட்டி!) வெஸ்டெர்ன் படங்களின் இசைவடிவத்துக்குப் புதிய பரிமாணத்தைக் கொடுத்த இசை யமைப்பாளர் என்னியோ மாரிக்கோன். இவர் பங்கேற்ற படங்களில் பின்னணி இசைக்குப் பிரதான இடம் இருந்தது. அவர் உருவாக்கிய ‘தீம் மியூஸிக்’ பல, உலக அளவில் பிரசித்தமானவை. ‘தி குட் தி பேட் அண்ட் தி அக்லி’ படத்தின் டைட்டில் மற்றும் பிரதான தீம் இசையைக் கேட்காத திரைப்பட ரசிகர்களே இருக்க முடியாது.

கிட்டார், விசில், ஆண் குரல்களின் ஹம்மிங், டிரம்ஸ், டிரம்பெட், பான்ஜோ என்று வறண்ட பாலை நிலத்தின் காட்சிகளைக் கண்முன் நிறுத்தும் இசை அவருடையது. அவரது இசையின் தாக்கம் பலரிடம் உண்டு. ‘நான் போட்ட சவால்’ படத்தில் டி.எல். மகாராஜன் பாடிய ‘நெஞ்சே உன் ஆசை என்ன…’ எனும் பாடல், வெஸ்டெர்ன் இசையின் தாக்கத்தில் உருவானது எனலாம். இப்பாடலை இயக்குநர் புரட்சிதாசனே எழுதியிருந்தார். இலங்கை வானொலியின் பொற்காலத்தில் வாழ்ந்தவர்கள், இப்பாடலைக் கேட்காமல் இருந்திருக்க முடியாது.

உத்வேகம், உற்சாகம், ஆர்ப்பரிப்பு என்று எழுச்சியூட்டும் இசையை இப்பாடலில் வழங்கியிருப்பார் இளையராஜா. டிரம்ஸ் சிம்பல்ஸின் சிலும்பலுடன் சாகசப் பயணத்தைத் தொடங்கும் இப்பாடலின் முகப்பு இசையில், தேவாலய மணி, சாகசங்களுக்குத் தயாரான ஆண் குரல்களின் முரட்டு ஹம்மிங், டிரம்பெட் போன்ற இசைக் கலவைகள் பயன்படுத்தப்பட்டிருக்கும். அழுத்தம் நிறைந்த காற்றைக் கிழிக்கும் வீரியக் குரலில் பாடலைத் தொடங்குவார் மகாராஜன். ‘நீ நினைத்தால் ஆகாததென்ன…’ எனும் வரிகளைப் பாடும்போது அவர் குரலில் வைராக்கியம் மிளிரும்.

முதல் நிரவல் இசையில் டிரம்பெட் முழக்கத்துக்குப் பின்னர், கிலுகிலுப்பைகளின் ஒலிக்கு மேலாக வயலின் இசைக்கோவையை உருவாக்கியிருப்பார் ராஜா. அரிசோனா நிலப்பகுதியையும், தமிழகத்தின் சமவெளிகளையும் ஒருசேர நினைவுபடுத்தும் வகையிலான இசை அது. வித்தியாசமான உணர்வைத் தரும் அந்த இசையைத் தொடர்ந்து ஒலிக்கும் ஜலதரங்கமும், புல்லாங்குழலும் இது இந்திய அதாவது, தமிழ் நிலத்தில் நிகழும் பாடல்தான் என்று சொல்லிவிடும்.

வெளுத்து வாங்கும் வெயிலின் நடுவே நம்மைத் தழுவிச் செல்லும் தென்றலின் குளுமையை, அந்தப் புல்லாங்குழல் இசை உணர்த்தும். இரண்டாவது நிரவல் இசையில் ‘ஹா.. ஹூ’ எனும் ஆண் குரல்களின் கோரஸ் இப்பாடலின் ‘வெஸ்டர்ன்’ தன்மைக்கு மேலும் வலுசேர்க்கும். ‘சதர்ன்’ கவ்பாயாகக் குதிரை மீது வரும் ரஜினியின் உடல்மொழி ரசிக்க வைக்கும். ரஜினியின் ‘ஓபனிங்’ பாடல்களில் இதற்குத் தனியிடம் உண்டு.

இப்படத்தில் மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம் பாடிய ‘சுகம் சுகமே… தொடத் தொடத் தானே’ பாடல், அதிகம் கவனிக்கப்படாத அற்புதமான பாடல். இயற்கையின் குளுமையைக் கொண்ட பல பாடல்களை மலேசியா வாசுதேவனை மனதில் வைத்தே இளையராஜா உருவாக்கியிருக்க வேண்டும். வாசுதேவனின் குரலில் மழைக்காலப் பருவத்தை நினைவூட்டும் பாடல்களில் இதுவும் ஒன்று.

கருமேகங்கள் சூழ்ந்த பரந்த வெளியில் மழைக்காகக் காத்திருக்கும் தருணத்தை இப்பாடலின் முகப்பு இசை காட்சிப்படுத்தும். நிரவல் இசையில் வழக்கமான ஜாலங்களை நிகழ்த்தியிருப்பார் ராஜா. பேஸ் கிட்டார் கொடி மீது படபடத்து அமரும் பட்டாம்பூச்சியைப் போன்ற மெல்லிய புல்லாங்குழலை ஒலிக்க விடுவார். அதைத் தொடர்ந்து ஒலிக்கும் வயலின் இசைக்கோவையும் அதனூடே சிதறும் ஜலதரங்கமும் மென்மை எனும் உணர்வின் ஒலிவடிவங்கள்.

இரண்டாவது நிரவல் இசையில் காதலின் களிப்புடன் ஒரு கிட்டார் துணுக்கு ஒலிக்கும். இந்தப் படம் இந்தியில் டப் செய்யப்பட்டது எப்போது என்று தெரியவில்லை. 90-களில் இந்தி சேனல் ஒன்றில் இப்பாடலின் இந்தி வடிவத்தைப் பார்க்க முடிந்தது. தமிழ் நிலத்திலிருந்து வந்த இனிமையான அந்தப் படைப்பின் சுவையை எத்தனை வட நாட்டு ரசிகர்கள் உணர்ந்திருப்பார்களோ தெரியவில்லை. உணர்ந்தவர்கள் நிச்சயம் பாக்கியசாலிகள்!

JamesFague
29th December 2015, 01:23 PM
Courtesy: Tamil Hindu

சூழல் ஒன்று பார்வை இரண்டு: தேவனின் கருணை இன்றே கைகளிலே...


இந்திய மொழிகள் எல்லாவற்றை விடவும் பரப்பிலும் தளத்திலும் இணையற்றது என பலர் கருதும் இந்தி மொழித் திரைப் பாடல்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்குக்கூட கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடும் பாடல்களோ கிறிஸ்துவைப் பற்றிய பாடல்களோ இல்லை. இந்த நிலைக்கு முற்றிலும் மாறாக, கருத்து, இசை மற்றும் குரல் வளம் போன்ற அனைத்து அம்சங்களிலும் ஒன்றை ஒன்று விஞ்சக்கூடிய, ஏராளமான இனிமையான கிறிஸ்துமஸ் / கிறிஸ்து பற்றிய தமிழ்த் திரைப்படப் பாடல்கள் உள்ளன.

வியக்க வைக்கும் அளவு எளிமையும் இனிமையும் கூடிய சொற்களில் கிறிஸ்துமஸ் உணர்வை நமக்குள் ஏற்படுத்தும் கண்ணதாசன் பாடல் ஒன்றையும் அந்தச் சூழலின் வெகு தொலைவில் மங்கலாகத் தெரியும் பார்வையாக விளங்கும் இந்திப் பாடல் ஒன்றையும் பார்ப்போம்.

இந்திப் பாடல்:

படம்: ஷாந்தார் (பேரழகு)

பாடலாசிரியர்: ராஜேந்திர கிஷன்

பாடியவர்: கிஷோர் குமார்

இசை: லட்சுமிகாந்த் பியாரிலால்.

பாடல்:

ஆத்தா ஹை ஆத்தா ஹை

சாண்டா கிளாஸ் ஆத்தா ஹை

ஏக் ஹிரன் கி பக்கி பர்

கீத் சுனாத்தா ஆத்தா ஹை

மெர்ரி கிறிஸ்துமஸ் மெர்ரி கிறிஸ்துமஸ்





பொருள்.

வருகிறார் வருகிறார் சாண்டாகிளாஸ் வருகிறார்

மான் பூட்டிய வண்டியில் அமர்ந்து கொண்டு

தேன் இசைப் பாடல் பாடிக்கொண்டு

வருகிறார் வருகிறார் சாண்டாகிளாஸ் வருகிறார்

மெர்ரி கிறிஸ்துமஸ் மெர்ரி கிறிஸ்துமஸ்

உலகத்தில் உள்ள உன்னத பொம்மைகளை

உங்களுக்காகக் கொண்டுவந்திருக்கிறேன்

நீலம், மஞ்சள் மெஜந்தா நிறங்களில்

உங்களுக்காகக் கொண்டுவந்திருக்கிறேன்

குண்டு மாப்பிள்ளை, ரப்பர் மனைவி

தொண்டு கிழவன் துவண்ட கிழவி

டுக் டுக் ஆடும் குரங்கு

டக் டக் வாசிக்கும் கரடி

என்றைய தினம் கண்மணிக் குழந்தைகள்

எழுந்து காலையில் தங்கள்

தலையணை கீழே இருக்கும்

பொம்மையை எடுத்துக்கொண்டு

வெளியே ஓடுவார்கள்

அன்றைய தினம் அதை அனைவருக்கும் காட்டி

ஆடிப் பாடி அவர்கள் சொல்வார்கள் - என்ன தெரியுமா

மெர்ரி மெர்ரி கிறிஸ்துமஸ் மெர்ரி மெர்ரி கிறிஸ்துமஸ்

போகிறார் போகிறார் சாண்டாகிளாஸ் போகிறார்

அடுத்த ஆண்டு விரைந்து மறுபடி வருவார்

இந்த இந்திப் பாடலின் வரிகளுடன் எந்த வகையிலும் ஒப்பிட முடியாத உயரத்தில் நாம் பார்க்கும் தமிழ்த் திரைப் பாடல் எழுதப்பட்டுள்ளது.

படம்: கண்ணே பாப்பா

பாடலாசிரியர்: கண்ணதாசன்

பாடியவர்: பி. சுசீலா

இசை: எம்.எஸ். விஸ்வநாதன்

பாடல்:

சத்திய முத்திரை கட்டளை இட்டது

நாயகன் ஏசுவின் வேதம்

கட்டளை கேட்டவர் தொட்டிலில் கேட்பது

பாலகன் ஏசுவின் கீதம்

அது வானகம் பாடிய முதல் பாடல்

அந்தத் தூதுவன் ஆடிய விளையாடல்

மெர்ரி மெர்ரி கிறிஸ்துமஸ்

ஹேப்பி ஹேப்பி கிறிஸ்துமஸ்

மேய்ப்பன் அவனே ஆடுகள் எல்லாம் குழந்தை வடிவத்தில்

மன்னவன் அவனே மக்கள் எல்லாம் மழலை வடிவத்தில்

மேரி மாதா தேவ மகனைக் காப்பது எப்படியோ

தேவ தூதன் நம்மை எல்லாம் காப்பது அப்படியே

அவன் ஆலயம் என்பது நம் வீடு

மணி ஓசையைக் கேட்பது பண்பாடு

மெர்ரி மெர்ரி கிறிஸ்துமஸ்

ஹேப்பி ஹேப்பி கிறிஸ்துமஸ்

வாசல் கதவை மூடுவதில்லை தேவன் அரசாங்கம்

வந்தவர் வீட்டில் கண்டவர் நெஞ்சில் கருணை ஒளி பொங்கும்

ராஜ வாழ்வு தேவ அமைதி தோன்றும் சிலுவையிலே

நாளை அல்ல தேவனின் கருணை இன்றே கைகளிலே

அவன் பாதங்கள் கண்டால் அன்போடு

ஒரு பாவமும் நம்மை அணுகாது

மெர்ரி மெர்ரி கிறிஸ்துமஸ்

ஹேப்பி ஹேப்பி கிறிஸ்துமஸ்

rajeshkrv
1st January 2016, 07:02 AM
நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

https://scontent-atl3-1.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/2530_1190444504318660_2211450872114395105_n.jpg?oh =2e0eb77336db312ea381219b9dc83fde&oe=570EECEA

chinnakkannan
1st January 2016, 09:16 AM
நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

Russellxor
1st January 2016, 01:12 PM
என் இனிய நல்வாழ்த்துக்கள்!

Russellxor
1st January 2016, 01:15 PM
. Facebook ல் படித்தது

கவியரசர் கண்ணதாசன் பாடல்கள் ரசனைகள்.. 88

புராண இதிகாசங்கள் பார்வை வடக்கில் உள்ளவர்க்கு வேறு தெற்கில் உள்ளவர்க்கு
வேறு .
அதுவும் இந்தத் தமிழ் இரத்தத்திற்கு .. நன்றி சொல்லுதலும், வாக்கு மாறாமையிலும் ஒரு அதீத பற்று இருக்கவே செய்கிறது . அதையே அந்த சமுதாயம் தங்கள் வேதநீதி யாக்கிக் கொண்டிருப்பதில் வியப்பில்லை. இதிகாசங்களையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை.
மகாபாரதத்தில் , கர்ணன் என்ற மகோன்னதமான பாத்திரப் படைப்பை அன்று உபன்யாசம் செய்பவர்கள் அவ்வளவாக விமரிசிக்க மாட்டார்கள் .
ஆனால் கர்ணன் .. திரைப்படம் வந்தபிறகே எம் போன்றவர்க்கு அதில் பிடிப்பு ஏற்பட்டது .
இந்த எண்ணங்கள் யாவற்றையும் ஒரே பாடலில் கவிஞர் திறம்பட வெகு அழகாக
தனது முத்தான வரிகளில் பிரதிபலித்திருப்பார்.
பாரதப்போரின் இறுதிக்கட்டம் .. ஒரு நல்லவனை வஞ்சகம் செய்தே பாண்டவர் ஜெய்க்கும் நிலை . இப்படிச் சொன்னால் விவாதத்திற்கு உரியதாகிடும். வஞ்சித்த பழியை கண்ணன் ஏற்றதால்தான் .. தர்மம் நின்று வெல்லும் என்றாவது சொல்ல முடிகிறது.
சரி பாடலுக்கு வருவோம்..

' உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா ! கர்ணா !
வருவதை எதிர் கொள்ளடா.

கர்ணன் சிவாஜி மீது திட்டமிட்டபடியே அம்பெய்து.. குற்றுயிராக.. தர்மதேவதையின் அருளால் அவர் கிடக்க,
பாண்டவர்க்கு துணை செய்ய கண்ணன் ..என். டி.ராமராவ் தயாராகிறார் . வஞ்சகமாய் தர்மதேவதையின் முழுப்பலனையும் யாசித்துப் பெற ..தனக்கு அற்புதமாக பொருந்திய அந்தணர் வேடமிட்டு .. சீர்காழியார் குரலில் ..இயல்பான கம்பீரத்தில் பாடி வருகிறார்..
கர்ணன் நல்ல உள்ளம் கொண்டவன். நல்ல உள்ளங்கள் நிம்மதியாக என்றும் உறங்காது. அதாவது சோதனைகளைச் சந்தித்தே நிற்கும் . இது வல்லவன் வகுத்த நியதி எனத்
..தானே பரமாத்மா என்ற நிலையில் விளக்கம் சொல்கிறார் ..
அதனால் அடுத்து அவனிடம் வர இருக்கும் வஞ்சகத்தையும் அவன் எதிர் கொள்ள வேண்டும் ..என்று சூட்சுமமாக உரைக்கிறார்.

' தாய்க்கு நீ மகனில்லை
தம்பிக்கு அண்ணனில்லை
ஊர்ப்பழி ஏற்றாயடா.... நானும்
உன் பழி கொண்டேனடா..!'

வஞ்சிக்கப்பட்ட முறைகள் வரிசையாக
அறியாத பருவத்தில் ஈன்று அவனை ஆற்றில் விட்டவள் .. அதை மன்னித்து விடலாம் .ஆனால் பின்னாளில் மற்ற மக்களுக்காகவும்.. குறிப்பாக அர்ஜுனனுக்கு கூடுதலாக ஒரு வரம் கேட்டு அவனுக்குத் தாயுமில்லை , தம்பியுமில்லை என்ற அனாதை நிலை தந்தாளே.. வஞ்சித்தாளே.... இதுவே அவர்கள் பக்கத்தில் சேரும் பெரிய பாவம்.
ஆனால் பாரதம் நடத்தும் கண்ணன் தானே அப்பழியை ஏற்று கர்ணனுக்கு விதியாகிறான்.
' மன்னவர் பணியேற்கும்
கண்ணனும் பணிசெய்ய
உன்னிடம் பணிவானடா - கர்ணா
மன்னித்து அருள்வாயடா !'

கவியரசரின் சொல்லாடல் இங்கு வெகு அழகு.
ராஜகாரியங்களின் சாதுர்யப் பணிகளை கண்ண பரமாத்வாவே ஏற்றுக் கொண்ட நிலையில் அவரே அவனிடம் கர்ணனிடம்
பணிந்து செல்ல வேண்டிய நிலைமையை நாசூக்காக உணர்த்துகிறார். ஆமாம் .. தான் அவனிடம் பிச்சை வாங்கத்தானே அந்தணர் வேடத்தில் செல்வது .. யாசிப்பவன் கண்ணன் .. அவனை மன்னித்து அருள் செய் .. உண்மை ..யாசிப்பது வெறும் பொருள் அல்லவே . செய்த புண்ணிய பலன்கள் அனைத்துமன்றோ..?
இந்த வரிகள் கேட்கும் போதெல்லாம் நல்லவர் உள்ளம் வெதும்பும்.

அடுத்து, கண்ணன் சொல்லாக
இறுதியாக விவாதப் பொருளை உண்மையுடன் வஞ்சகமாக வைக்கிறார்.

'செஞ்சோற்றுக் கடன் தீர்க்க
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா- கர்ணா
வஞ்சகன் கண்ணணடா..'

சேராத இடம் சேர்ந்தாய் என்று முதலில் சொன்னால் அது பழியாகும் . செஞ்சோற்றுக் கடன் தீர்க்க .. இந்தச் சொல்லில் தர்மநீதி அடங்கி விட்டது.
வஞ்சகம் கண்ணன் செய்தான் .. சேராத இடம் சேர்ந்து .. எனச் சொன்னால் , அது அந்த வஞ்சகத்தில் அடங்கிவிட்டது.

எனவே இங்கும் கர்ணனுக்கு வரவிருக்கும் பழியை கண்ணனே சுமந்து கொள்கிறான்.
நம் உள்ளம் மெல்லிசை மன்னர்களின் இசையில் கரைந்தே போய்விடுகிறது.
கவியரசின் வரிகளில் ..கர்ணனின் கம்பீரம் நிமிர்கிறது.

Kothaidhanabalan

'

RAGHAVENDRA
1st January 2016, 05:12 PM
மதுரகான நண்பர்கள் அனைவருக்கும் உளமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

rajraj
2nd January 2016, 03:20 AM
Natalie Cole passed away.

May her soul rest in peace.

http://nyti.ms/1YTPMIO

There is a video clip in the news item.

Here is another video clip: Unforgettable............

http://www.youtube.com/watch?v=OQfyrfB2KRo

rajeshkrv
2nd January 2016, 10:02 AM
Jayetta sounds even younger these days..

What a song in Ravana prabhu

https://www.youtube.com/watch?v=tzeRfnQvPEU

JamesFague
2nd January 2016, 11:19 AM
Courtesy: Tamil Hindu

காற்றில் கலந்த இசை - 36: பருவங்களின் கூட்டிசை!


இளையராஜாவின் படைப்பாற்றல் உச்சத்தில் இருந்த சமயத்தில் தயாரிக்கப்பட்ட படங்களில் நடிக்கும் பாக்கியம் மோகனுக்கு அதிகமாகவே கிடைத்தது. இன்றும் மோகன் ஹிட்ஸ் என்ற பெயரில் விற்கப்படும் சிடிக்களில் அவரது படத்தைவிடப் பெரிய அளவில் சிரித்துக்கொண்டிருப்பது இளையராஜாதான். தமிழ்த் திரை இசையின் வசந்த காலமான 80-களில் மோகனை நாயகனாக வைத்து ஆர். சுந்தர்ராஜன், கே. ரங்கராஜ் என்று பல இயக்குநர்கள் ‘இனிய கானங்கள் நிறைந்த படங்களாக எடுத்துத் தள்ளிக்கொண்டிருந்தனர்.

அந்தப் பட்டியலில் இடம்பெறும் முக்கியமான இயக்குநர் மணிவண்ணன். ‘திரில்லர்’, குடும்பக் கதைகள், அரசியல் விமர்சனம் என்று பல்வேறு வகைப் படங்களை இயக்கிய மணிவண்ணன், இறுதிவரை இளையராஜாவின் மீது பெரும் மதிப்பும் அபிமானமும் கொண்டிருந்தார். 1983-ல் அவரது இயக்கத்தில் வெளியான ‘இளமைக் காலங்கள்’ படத்தின் பாடல்கள் மிகப் புகழ் பெற்றவை. கோவைத் தம்பியின் ‘மதர்லேண்ட் பிக்சர்’ஸின் இரண்டாவது தயாரிப்பு இப்படம்.

இப்படத்தில் எஸ்.பி.பி. ஜானகி பாடிய ‘இசை மேடையில் இன்ப வேளையில்’ பாடல் முகப்பு இசை தரும் சுகந்தம் செழுமையானது. வசந்தத்தை மீட்டும் பெண் குரல்களின் ஹம்மிங்குடன் பாடல் தொடங்கும். ஹம்மிங்கின் மேலடுக்கில் ஜானகியின் அதிரசக் குரல் சிணுங்கும். பள்ளத்தாக்கின் மீது படர்ந்திருக்கும் காற்றில், சிறகை அசைக்காமல் பறந்துகொண்டிருக்கும் பறவையைக் காட்சிப்படுத்தும் வயலின் இசைக் கோவையைத் தொடர்ந்து, ‘இசை மேடையில்…’ என்று பாடத் தொடங்குவார் ஜானகி.

பல்லவியின் சில நொடிகளில் எஸ்.பி.பி.யின் மெல்லிய ஹம்மிங் வந்துபோகும். இளமையின் உற்சாகத்தை உணர்த்தவோ என்னவோ குதிரைக் குளம்பொலியைப் போன்ற தாளக்கட்டை இப்பாடலுக்குத் தந்திருப்பார் இளையராஜா. நிரவல் இசை முழுவதும் வயலின்களின் ராஜாங்கம்தான். முகப்பு இசையில் பயன்படுத்தியதுபோலவே இரு வேறு அடுக்குகளில் ஜானகியின் ஹம்மிங்கையும், பெண் கோரஸ் குரல்களையும் ‘மிக்ஸிங்’ செய்திருப்பார் ராஜா.

மோகன் இளையராஜா கூட்டணியின் முக்கியக் கண்ணி எஸ்.பி.பி.யின் குரல். இந்தப் பாடலில் அதை உறுதியாக நிரூபித்திருப்பார் எஸ்.பி.பி. ‘முத்தம் தரும் ஈரம் பதிந்திருக்கும்’ எனும் வரியின் இறுதியில் சின்ன பிர்கா ஒன்றைத் தருவார். ‘கொன்னுட்டான்யா’ என்று தோன்றும். இரண்டாவது நிரவல் இசையில் ‘பாப்பபப பாப்பப’ எனும் ஹம்மிங்கை ஜானகி பாடுவார். அதைத் தொடர்ந்து வரும் ஹம்மிங் ஆண் தன்மையும், பெண்ணின் இனிமையும் கலந்த குரலாக ஒலிக்கும். அது ஜானகியின் ஹம்மிங்கா, எஸ்.பி.பி.யுடையதா என்று குழம்பாமல் அப்பாடலைக் கடந்துவர முடியாது. அந்த அளவுக்கு எதிர்பாராத சுவாரஸ்யங்களைத் தனது இசையில் இளையராஜா புகுத்திய காலம் அது.

இப்படத்தில் ஷைலஜா பாடும் ‘படிப்புல ஜீரோ நடிப்புல ஹீரோ’ பாடல், அக்கால ‘ஆடம் டீஸிங்’ பாடல்களில் ஒன்று என்றாலும், வேகமான அதன் தாளக்கட்டும் ஷைலஜாவின் கூர்மைக் குரலும் வித்தியாசமான அனுபவத்தைத் தரும்.

இப்படத்தில் சுசீலாவுடன் ஷைலஜா இணைந்து பாடும் ‘ராகவனே ரமணா ரகுநாதா’ பாடலில் பஜன் பாடல்களுக்குரிய பக்தி மணமும், காதல் ரசமும் ஒரு புள்ளியில் இணைவதை உணரலாம். நிதானமான தாளக்கட்டில் வீணை, புல்லாங்குழல் ஆகிய இசைக் கருவிகளுடன் தனது வயலின் ஆர்க்கெஸ்ட்ரேஷன் முத்திரையை இணைத்து இளையராஜா உருவாக்கிய பாடல் இது. இரண்டாவது நிரவல் இசையில் வயலின் இசைக் கோவையின் மேலடுக்கில் ஒலிக்கும் சுசீலாவின் ஆலாபனை, இப்பாடலின் உச்சபட்ச இனிமைத் தருணம்.

இப்படத்தில் ஜேசுதாஸ் பாடிய ‘ஈரமான ரோஜாவே’ பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. பேஸ் கிட்டாரின் அஸ்திவாரத்தில் எழுப்பப்பட்டிருக்கும் காதல் சோக கீதம் இது. தாளக்கட்டில் மிருதங்கத்தின் ஒரு துளி, முதல் நிரவல் இசையில் கனத்த நெஞ்சின் விம்மலைப் போன்ற வயலின் கீற்று, விரக்தியை வெளிப்படுத்தும் விசில் என்று இப்பாடலின் ஒவ்வொரு நொடியிலும் இசை நுணுக்கங்களைப் புதைத்திருப்பார் இளையராஜா. இரண்டாவது நிரவல் இசையில் பனியால் உருவான மேகத்தின் நகர்வைப் போன்ற வயலின் இசைக் கோவை, நம்மைத் தழுவியபடி நகர்ந்து செல்வதை உணர முடியும்.

இப்படத்தின் மிக முக்கியமான, அற்புதமான டூயட், ஜேசுதாஸ் சுசீலா பாடிய ‘பாட வந்ததோர் கானம்’ பாடல். சுசீலாவின் ‘லாலலா’வுடன் தொடங்கும் இப்பாடலிலும் தாளக்கட்டில் மிருதங்கத்தைப் பயன்படுத்தியிருப்பார் இளையராஜா. பல்வேறு இசைக் கருவிகளின் நடுவே பியானோவைப் பிரதானமாக ஒலிக்கச் செய்த அரிதான பாடல்களில் ஒன்று இது.

பல்லவியிலிருந்தே பியானோவின் உரையாடல் தொடங்கிவிடும். முதல் நிரவல் இசையில் விண்கல்லின் வீழ்ச்சியைப் போன்ற ஒற்றை வயலின் நீட்சி ஒலிக்கும். சரணத்தில், ‘கண்ணில் குளிர்காலம்… நெஞ்சில் வெயில் காலம்’ எனும் வரியின்போது அந்த இரண்டு பருவங்களையும் இசையாலேயே உணர்த்தியிருப்பார் இளையராஜா. பாந்தமான அமைதியுடன் ஜேசுதாஸும், காதலின் பரவசத்தை வெளிப்படுத்தும் குரலில் சுசீலாவும் அற்புதமாகப் பாடியிருப்பார்கள்.

இளையராஜா பாடல்களின் உடனடி வெற்றிக்கு, தனித்த சுவை கொண்ட மெட்டுக்கள் காரணம் என்றால் 30 ஆண்டுகள் தாண்டியும் அவை ரசிகர்களின் மனதில் வியாபித்திருப்பதற்குக் காரணம், வெவ்வேறு மனச் சித்திரங்களை எழுப்பும் அவரது ஆர்க்கெஸ்ட்ரேஷன்தான். இப்படத்தில் இடம்பெற்ற அத்தனைப் பாடல்களும் அவரது ஆர்க்கெஸ்ட்ரேஷன் மேதைமைக்குச் சான்றுகள்.



rajraj
4th January 2016, 07:41 AM
From anniyin aaNai (1958)

neeye gathi eswari.......

http://www.youtube.com/watch?v=HoCJ7Hxv-O4

JamesFague
4th January 2016, 09:47 AM
Courtesy: Dinamani

பானுமதி: 11. எனக்குள்ளே நான்...!

வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெளியான பானுமதியின் பேட்டிகளிலிருந்து சில பகுதிகள்-

‘நான் எப்பவுமே வெளியிலே ஒண்ணு மனசுல ஒண்ணுன்னு பேச மாட்டேன். எந்த விஷயம் ஆனாலும் சம்பந்தப்பட்டவங்க கிட்ட நேர்லயே கேட்டுடுவேன். என் நடிப்பெல்லாம் சினிமாவுல மட்டுமே.

வாழ்க்கையில எனக்கு நடிக்கத் தெரியாது. அப்படி யாரா இருந்தாலும் முகத்துக்கு நேரா ‘பட் பட்னு’ கேட்டுடறதால, ஆரம்பத்துல பல பேர் எங்கிட்ட வராம ஒதுங்கிப் போனாங்க.

பிற்பாடு அதுவே பிடித்துப் போய் சிறந்த நடிப்புக்காக என்னைத் தேடி வந்தாங்க. இதில ஒரு விசேஷம் என்னன்னா, என்னோட இந்த கேரக்டர் சினிமாவிலும் பிரதிபலிச்சது.

இந்த ‘ஸ்டைல்’ ஜனங்களுக்கும் பிடிச்சுது. பானுமதின்னா இப்படித்தான் நடிக்கணும்ங்கற அளவுக்கு அவங்க எதிர்பார்ப்பு இருந்தது.

‘பெரியம்மா’ வரைக்குமாய் இருபது படம் டைரக்ட் பண்ணினேன். நடிச்ச படங்களை பட்டியல் வெச்சுக்கலை. நூறுக்கும் மேலே இருக்கலாம். அதை ஒரு சாதனையா நெனைச்சா இல்ல, எண்ணிக்கிட்டு இருக்கணும்.



எனக்குள்ள ‘இசை’ எப்பவுமே பிரவாகமா ஓடிக்கிட்டே இருந்தது. அது அப்பா வழியில் எனக்குக் கிடைத்த சொத்து. அதனால என் இயக்கத்துல வர படங்களில் இசை அமைப்பாளர் பொறுப்பையும் நானே ஏற்று செய்தேன்.

இப்படியான இசை ஆர்வம் என் டைரக்ஷனில் நாலாவது படமான ‘சக்ரபாணி’யில் முழுமையாக வெளிப்பட்டது. அதில் முத்துஸ்வாமி தீட்சிதர், தியாகராயர் ஆகியோரின் கீர்த்தனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தேன்.

சென்னை காசினோ தியேட்டரில் சக்கரபாணி ரிலிஸ் ஆகி நாலு வாரம் ஓடுச்சு. இசை ஆர்வம் கொண்ட எல்லாரையும் படம் பெரிசா பாதிச்சது.

கீர்த்தனைகளுக்குக் கிடைத்த வரவேற்பு, அது மாதிரி வரும் எனது படங்களிலும் தொடரவே செய்தது. மானஸ சஞ்சரரே... என்ற கீர்த்தனையில் ‘நானே ராஜ கண்ணா’ பாடலை ‘இப்படியும் ஒரு பெண்! ’ படத்துக்காகப் பாடினேன்.

அருணாச்சல கவிராயர் பாடலை மையமா வெச்சு, ‘ராமனுக்கு மன்னர் முடி தரித்தாரே... ’ என்ற பாடலை பத்து மாத பந்தம் படத்துக்காகப் பாடினேன்.

என் பாட்டுக்கு இருந்த வரவேற்பு காரணமா, நான் தயாரிக்கிற ஒவ்வொரு படத்திலும் ஒரு பாட்டாவது பாடி விடுவேன். கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி சங்கீதம் தவிர மேற்கத்திய இசைப்பாடலையும் விட்டு வைக்கவில்லை.

எனக்குத் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தியில் நல்ல தேர்ச்சி உண்டு. அவை தவிர சிங்கள மொழியிலும் பாடும் வாய்ப்பு அமைந்தது.

‘மணமகன் தேவை’ படத்தில் சிங்களப் பாடல் ஒன்று இடம் பெற்றது. எனக்கு சிங்களம் தெரியாது என்றாலும் கூட, அந்த உச்சரிப்பு பற்றி தெரிந்து கொண்டு பாடி இருக்கிறேன்.

சிறு வயதிலிருந்தே பூஜை, விரதம் - கோயிலுக்குச் சென்று வருவது, பக்திப் பாடல்களைப் பாடுவது, பெரியவர்களிடம் புராணம் போன்ற நல்ல விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்வது எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

‘ஒரு புறம் பார்வதி, மறுபுறம் விநாயகரை அணைத்தவாறு அமர்ந்திருக்கும் சிவன்’ காட்சி அளிக்கும் ரவிவர்மாவின் ஓவியம் என் மனத்தில் எப்போதும் ஆழப்பதிந்துள்ளது.

கண்களை மூடி தியானம் செய்ய ஆரம்பித்தவுடன் என் கண் முன்னே நிற்கின்ற தெய்வங்கள் சிவன் - பார்வதியே!



அந்த உணர்வு மற்றக் கடவுள் விக்ரகங்களைக் காணுகையில் எனக்கு ஏற்படாது.

14 வயதிலேயே ‘கதை’ ஆர்வமும் எனக்குள் வெளிப்பட்டது. என்னை பாதித்த விஷயங்களை எழுத ஆரம்பித்தேன். முப்பது வயதில் எழுதுவதில் ஒரு பக்குவ நிலை வந்தது. அதற்குப் பிறகு நூறு கதைகளுக்கும் மேல் எழுதி விட்டேன்.

ஞாபகம் வர வேண்டி அவ்வப்போது எனக்குள் தோன்றுவதை டேப்பில் பதிவு செய்வது வழக்கம்.

எனது கதைகள் தமிழ், தெலுங்கு இரண்டிலுமாக புத்தக வடிவில் வெளி வந்திருக்கிறது.

நான் என்னைப் பற்றி எழுதிய ‘எனக்குள்ளே நான்’ நூலுக்கு ஜனாதிபதி விருது கிடைத்திருக்கிறது.

எனக்கு வயல் வேலைன்னா ரொம்ப இஷ்டம். சென்னையை அடுத்த பெருங்களத்தூர்ல பண்ணை இருக்கு. விவசாய ஆர்வம் வந்துட்டா மறு விநாடி அங்கே இருப்பேன். இப்பக் கூட இதுதான் நிலை.

எங்களுக்கு மெட்ரிகுலேஷன் பள்ளி இருக்குது. ஏழைப் பிள்ளைங்களுக்கு இப்பக் கூட அதுல இலவச படிப்புதான். பணம் இல்லைங்கற ஒரே காரணத்துக்காக திறமையான மாணவர்களுக்கு படிப்பு இல்லைன்னு ஆயிடக் கூடாது.

முதியோர்களுக்குன்னு ஒரு இல்லம் கட்டணும்ங்கறது என்னோட விருப்பம். என் வாழ்நாளில் நிச்சயம் அதைச் செய்து முடிப்பேன்.

எங்கள் பரணி ஸ்டுடியோவின் பொறுப்பை என் மகன் பரணி ஏற்றுக் கொண்ட பிறகு எனக்குக் கொஞ்சம் ஓய்வு கிடைக்கிறது.

மகன் வழியில் எனக்கு ஒரு பேரன், பேத்தி. பேரன் வெங்கடேஷ் எம்.ஏ., பேத்தி மீனாட்சி அவள் அப்பா மாதிரியே டாக்டராக வேண்டும் என்ற விருப்பத்தில் மருத்துவப் படிப்பு படித்து வருகிறாள்.

என் கலைப்பணிக்கு மட்டும் ஓய்வில்லை. சமீபத்தில் நான் படம் இயக்குவதைக் கேள்விப்பட்ட என்.எப். டி.சி.காரர்கள் ‘எங்களுக்கும் எடுத்துக் கொடுங்கம்மா... ’ என்று கேட்டு இருக்கிறார்கள்.

தொலைக்காட்சிக்கென நான் எடுத்து வரும் ‘மாமியார்’ சீரியல் எனக்குப் புதிய ரசிகர்கள் பலரை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

எனக்கு எப்பவுமே மேக் அப் போட்டுக்கப் பிடிக்காது. ‘என்ன மேக் அப் வேண்டிக் கிடக்கு’ என்று பல முறை சலித்திருக்கிறேன்.

வீட்ல இருந்து செட்டுக்குக் கிளம்பும் போதே, ‘இன்னிக்கு யாரையோ மகனேன்னு சொல்லி கண் கலங்கப் போறோம். யாரையோ புருஷனா வரிச்சிக்கிட்டு குடும்ப விஷயம் அலசப்போறோம்னு’ அலுத்துக்கிட்டே புறப்படுவேன். அது சினிமாவுக்கு அப்பாற்பட்ட பானுமதியோட எண்ணம்.

நடிகையா செட்டுக்குள்ள போனப்புறம் அதெல்லாம் மறந்துடும். என் கேரக்டர் மட்டுமே மனசிலே நிக்கும்.

இன்னிக்கும் ரசிகர்கள் என்னை மறக்காம இருக்காங்கன்னா, என்னோட ‘கேரக்டர் ஐக்கியம்‘ தான் காரணம்னு நினைக்கிறேன். ரசிகர்கள் புத்திசாலிங்க. அவங்களுக்குப் புடிச்ச விஷயம் இருந்தாத்தான் ரசிப்பாங்க.

எம்.ஜி.ஆர். முதல் அமைச்சரான பிறகும் பழசை மறக்கவில்லை. சினிமா கலைஞர்கள் மீது முன்பு வைத்திருந்த அதே பிரியத்தைக் காட்டினார். என் மீது மிகுந்த அன்புள்ளவர்.

‘உங்களுக்கு என்னம்மா... மகாலட்சுமி மாதிரி! ’ என்று அடிக்கடி சொல்லுவார் எம்.ஜி.ஆர்.

1958ல எனக்குக் ‘கலைமாமணி’ பட்டம் கொடுக்கணும்னு வந்தாங்க. அப்ப நான் அதனோட மதிப்பு தெரியாம, அதெல்லாம் வயசானவங்களுக்குத்தான் தருவாங்கன்னு சொல்லி, அந்த விழாவுக்குப் போகலை. நான் அப்படி செஞ்சது தப்பு. அதுக்கு இப்போ கூட ஃபீல் பண்றேன்.

‘அந்தம்மாவுக்கு இன்னும் கலைமாமணி பட்டம் கொடுக்கலையான்னு...? ’ எம்.ஜி.ஆர். இப்போ கேட்டாராம். உடனே, ஒரு டைரக்டரா எனக்குக் ‘கலைமாமணி’ கொடுத்துட்டாங்க.

1985 முதல் 1988 வரை ‘சென்னை இசைக் கல்லூரி’க்கு என்னை முதல்வராக்கி மகிழ்ந்தார். மியூசிக் காலேஜூக்கு முகப்பில் உள்ள ‘ஆர்ச்’ கட்டினது என் காலத்துலதான்.

தமிழ் இசைக்கும், தியாகராயர் கீர்த்தனைக்கும் பாதிப் பாதி என்று ஒதுக்கீடு செய்து, எல்லாத் தரப்பு இசையும் மாணவர்களிடம் முறையாகச் சென்று சேர ஆவன செய்தேன். - பானுமதி.

-------------------------

நேர் காணலுக்காக பானுமதியைச் சந்திக்கும் வாய்ப்பு இரு முறை எனக்கு அமைந்தது. சொந்தப் பட அனுபவம் குறித்து பிப்ரவரி 1993ல் பொம்மையிலும், இந்திய சுதந்தரப் பொன்விழா கொண்டாட்டம் பற்றி ஆகஸ்டு 1997ல் பேசும் படத்திலும் பேட்டி அளித்தார்.

முதலில் பொம்மையில் பிரசுரமான சில பகுதிகள்-

‘பரணி பிக்சர்ஸ் பேனர்ல இதுவரைக்கும் முப்பது படங்களுக்கும் மேலே எடுத்துருக்கோம். இப்ப ‘பெரியம்மா’ படத்தை எடுக்கக் காரணமா இருக்கிறவர் இளையராஜா.

நான் எடுத்த லைலா- மஜ்னு படத்தை நாற்பது தடவைகளுக்கு மேலே பார்த்திருக்கிறதா இளையராஜா சொன்னார்.

ஏழு வருஷங்களுக்கு முன் ‘கண்ணுக்கு மை எழுது’ படத்துல இளையராஜா இசையில நான் முதன் முதலா பாடினேன். அப்பத்தான் அவர் என் ரசிகர்னு தெரிஞ்சிக்கிட்டேன்.

கொஞ்ச நாட்களுக்கு முன்னே ஒரு விழாவில இளையராஜா பேசும் போது,


‘லைலா மஜ்னு’ படத்தை பானுமதி மறுபடியும் எடுக்கறதா இருந்தா, இசையமைச்சிக் கொடுப்பேன்’ன்னாரு.

உடனே பலரும் வற்புறுத்தவே நானும் அதற்கான ஏற்பாடுகளில் இறங்கினேன். ஆனா மஜ்னுவா நான் செலக்ட் பண்ணின ஹீரோ, கேட்ட சம்பளத்தை என்னால கொடுக்க முடியும்னு தோணல.

அகலக்கால் வெச்சு நஷ்டப்பட நான் விரும்பல.

இளையராஜாவோட ஒத்துழைப்பு கிடைக்கிற போது புதுசா, வேறே படம் எடுத்தா என்னன்னு, ‘பெரியம்மா’ கதையை எழுத வேண்டிய அவசியம் உண்டாச்சு.

இப்பவுள்ள டெக்னிகல் விஷயங்கள் எதுவுமே எனக்கு சரிப்பட்டு வரல. டப்பிங் தனியா செய்யறதால படத்தோட தரம் குறைஞ்சி போகுது.

பாடல் காட்சிகள்ள யதார்த்தத்தை மீறி எக்கச்சக்க கட் ஷாட் வெச்சி எடுக்கறாங்க. கதையில நாம என்ன சொல்ல வரோம்ங்ற ஜீவனே இதனால செத்துப் போகுது. ’

---------------பேசும் படம் இதழிலிருந்து-

நாம் விடுதலை பெற்ற போது நடந்த நிகழ்ச்சிகள் உங்கள் நினைவில் இருக்கிறதா...?

‘ 1947 ஆகஸ்டு 15 ஆம் தேதி அகில இந்திய வானொலில அப்போதைய பிரபல கலைஞர்கள் டி.ஆர். ராஜகுமாரி, ரஞ்சன், டைரக்டர் கே. சுப்ரமணியம், டி.ஆர். ராமச்சந்திரன், சூர்யகுமாரி, கே.ஆர்.ராமசாமி, சுந்தரிபாய் இவங்களோட நானும் சேர்ந்து பல்சுவை நிகழ்ச்சியை நடத்திய ஞாபகம் மட்டும் இருக்கு.

உங்களுக்கும் சுதந்தர போராட்டத்துக்கும் நெருங்கின தொடர்பு ஏதாவது?

‘என்னோட அப்பாவுக்கு நாம விடுதலை பெறணும்ங்ற ஆர்வம் அதிகம். ஆனால் கைதாகி ஜெயிலுக்கெல்லாம் போனதில்ல.

அடிப்படையில காங்கிரஸ் தொண்டர் அவர். கதர் உடுத்துவார். நானும் கல்யாணம் முடிஞ்சுதான் பட்டுப்புடவை கட்டிக்க ஆரம்பிச்சேன். அந்த அறியாப் பருவத்துல பட்டுப் பாவாடைகள் அணியணும்ற விருப்பம் இருந்தது. அப்ப நிறைவேறாத ஆசை அது!

இசை, சினிமா, இலக்கியம் என்று ஒவ்வொன்றிலும் கொடி கட்டிப் பறந்தவர் நீங்கள். அரசியலை மட்டும் ஏன் விட்டு வைத்தீர்கள்?

‘ஆரம்பத்திலிருந்தே அரசியல் ஈடுபாடு அதிகம் கிடையாது. நான் லோக் சபா உறுப்பினராக போட்டி போடணும்னு பல பெரிய தலைவர்கள் வற்புறுத்தினாங்க. ஆனால் என் கணவர் அதை விரும்பல.



‘ அரசியல்ல முதல்ல பூமாலைகள் விழும். பின்னால கல்லடிகள் கிடைக்கும்’னு அறிவுரை சொன்னார். இப்ப நடைமுறைல அதுதானே இருக்கு.

நடிகர் திலகத்துக்குப் பிறகு தமிழ்நாட்டிலிருந்து ‘தாதா சாகிப் பால்கே விருது’ பெறும் பரிபூரணத் தகுதி தங்களுக்கு இருக்கிறது. உங்களுக்கு அப்படிப்பட்ட ஆசை உண்டா?

‘எனது பணிக்காக ஏற்கனவே நிறைய கவுரவங்கள் கிடைத்திருக்கிறது. பானுமதி என்றால் இன்னமும் தனி செல்வாக்கு இருக்கிறது.

நான் நடிக்க வந்து ஆறு தலைமுறைகள் கடந்து விட்டன. தமிழில் தான் அதிகம் நடித்திருக்கிறேன். ரங்கோன் ராதா, அன்னை, மலைக்கள்ளன், கள்வனின் காதலி போன்ற படங்கள் திருப்தியானவை.

படங்களின் வெற்றிக்காக நான் சொன்ன மாற்றங்களை இயக்குநர்கள் ஏற்றுக் கொண்டு இருக்கிறார்கள். நடிப்பை தவமாக நாங்கள் கருதிய காலம் அது. இன்று அப்படியில்லை.

விடுதலை பெற்று இந்த ஐம்பது ஆண்டுகளில் நமது பெண்களின் வாழ்க்கைத் தரம் பற்றி?

‘பெண்கள் குறித்த கண்ணியம் இப்போது இல்லை. மகளிர் உரிமைகளுக்காகப் போராடுகிற மாதர்கள் குறைந்து வருகிறார்கள்.

ஆண் தாயாக முடியாது. ஆண் கையில் என்ன இருக்கிறது?

பெண்கள் தங்கள் பொறுப்புகளை உதறித் தள்ளக் கூடாது. ஆண் வேலி போட்டுவிட்டான் என்று ஏன் எண்ண வேண்டும்?

பெண்கள் தங்களுக்குத் தாங்களே வேலி போட்டுக் கொள்ள வேண்டும். பெண்ணின் தாய்மை உணர்வுதான் அவளுக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய பரிசு!

குடும்ப நலம் பேணினால் எல்லா நலமும் தன்னால் கிடைக்கும்.

1956 -57ல் ஆந்திராவில் எனக்காக நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டார் காமராஜர்.

அப்போது கூட ‘தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் கொடுங்க’ என்று தான் கேட்டார். அப்படி எப்போதும் நாட்டு நலனையே நினைவாகக் கொண்டவர்களை இப்போது பார்க்க முடிவதில்லை.

சரோஜினி நாயுடு, இந்திராகாந்தி போன்ற வலிமையுள்ள வழி நடத்தக் கூடிய பெண்கள் இப்போது தேவை! ’

-----------------------
மழலை பிறப்பதைக் கொண்டாடுவது போல் அஸ்தமனங்களும் சரித்திரத்தில் இடம் பெறுகின்றன. கலைவாணர், அண்ணா ஆகியோரின் இறுதி ஊர்வலத்துக்கு வந்த கூட்டம் பற்றிய வியப்பு, இன்னமும் அடித்தட்டு மக்களின் மனத்தில் ஜீவித்திருக்கிறது.

தற்போது திரைப் பிரபலங்கள் சிலரது தகனம் வரை சின்னத் திரைகளில் நேரடியாக ஒளிபரப்பாகின்றன.

உடல் நலக்குறைவால் படுத்த படுக்கையானார் பானுமதி. 2005 டிசம்பர் 24ல் இறைவனடி சேர்ந்தார். எம்.ஜி.ஆர். மறைந்த அதே தேதி!

பானுமதி வசித்த தி.நகர். வைத்தியராமன் தெருவைச் சுற்றிலும் ஏகப்பட்ட தமிழ், தெலுங்கு ஸ்டார்களின் குடியிருப்பு உள்ளது. அவர்களில் யாரும் கடைசி நாள்களில் பானுமதியைச் சந்தித்து நலம் விசாரித்ததாகச் செய்திகள் வரக் காணோம்.

ஏனோ பல்துறை வித்தகியான பானுமதியின் மரணம் மாத்திரம் போதிய கவனம் பெறாமலே போய் விட்டது.



ஆண் ஆதிக்க சமூகத்தில் பெண் என்பதாலேயே, ‘அஷ்டாவதானி’யாகத் தனி வரலாறு படைத்த, பானுமதியின் மேன்மைகள் அவரது பூத உடலோடு தணலில் வீழ்த்தப்பட்டதா?

விடை கிடைக்காத வினா!

பானுமதி என்ன லேசுப்பட்டவரா...?

‘பானுமதி’ என்றால் - ஞானத்தில் பானு. (சூரியன்), நளினத்தில் மதி! (சந்திரன்) என்று கவிதைச் சொற்களால் கண்ணதாசனால் கவுரவிக்கப்பட்டவர்.

துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதைகளுடன் எரியூட்டப் பட்டிருக்க வேண்டிய இரும்பு மனுஷி! இனி எந்தத் தலைமுறைகளிலும் அகப்படாத அபூர்வ சாதனையாளர்!

தாதா சாகிப் பால்கே விருது கொடுத்து பானுமதியை பரவசப்படுத்தியிருக்க வேண்டும் பாரதம்!

தொடர்ந்து ஆந்திர, தமிழக அரசுகள் மத்திய சர்க்காரிடம் பானுமதியின் அசாத்திய பங்களிப்பை எடுத்துச் சொல்லாமல் விட்டது தவறு.

உயிர் நீத்தவர்களுக்கும் பாரத ரத்னா வழங்கும் தருணம் இது. மறைந்த மேதைகளுக்கு ’பால்கே விருது’ தரும் திட்டம் உண்டா என்பது தெரியவில்லை.

அப்படியொரு சூழல் அமைந்தால் பானுமதிக்கு இனியாவது தாதா சாஹிப் பரிசு கிடைக்க இரு மாநில அரசுகளும் முயற்சித்தல் நல்லது.

JamesFague
4th January 2016, 11:56 AM
Nice melody from En Jeevan Paduthu

https://youtu.be/M2VtmnYiA_A

Russellxor
5th January 2016, 05:51 PM
Facebook


கெளரவம் படத்தின் தயாரிப்பாளர் 1973ம் ஆண்டு படத்தின் பாடல்களை எழுதவதற்காக கண்ணதாசனுக்கு முன் பணம் கொடுத்து புக் செய்திருந்தார் ஆனால் கவினரோ தன் வேலைகளை எல்லாம் மறந்து மலேசியாவில் வாழ்க்கையை ரசித்து கொண்டு இருந்தார்.

இது போன்று தன் வேலையை மறந்து சரியான நேரத்தில் பாடல்களை தராமல் தாமதப்படுத்துவார் என்பது கண்ணதாசனின் மீதான பரவலான கருத்து. அந்த சமயத்தில் அவருடைய உதவியாளர் படத்தின் தயாரிப்பாளரை சந்தித்து அவர் எப்போதும் இப்படிதான் தாமத்தப் படுத்துவார் என்று கவிஞரின் குறைகளை கூறி தனக்கு அந்த வாய்ப்பை தருமாறு கேட்டார் ( அவர் இப்போது பெரிய தயாரிப்பாளர்) ஆனால் தயாரிப்பாளரோ கண்ணதாசனே பாடல்களை எழுதட்டும் என்று காத்திருந்தார்.

கவிஞர் மலேசியாவிலிருந்து வந்தவுடன் இந்த செய்தியை கேள்விப்பட்டு மிகவும் மனவருத்தம் அடைந்தார். தான் தூக்கி வளர்த்து ஆளாக்கிய ஒருவர் தன்னை கவிழ்க்க பார்ப்பதை எண்ணி மனவேதனை அடைந்தார்.அடுத்த நாள் இயக்குனர் பாடலின் சூழ்நிலையை விளக்கினார். தான் எடுத்து வளர்த்த தன் வளர்ப்பு மகன் தன்னை எதிர்த்து நிற்கிறான் என்றார் இயக்குனர்.

வழக்கம்போல் தன் வாழ்கையின் வழியை அந்த படத்தின் பாடலில் எழுதியிருப்பார்.படத்தின் சூழ்நிலையை மறந்து இந்த சூழ்நிலையை மனதில் நினைத்தால் ஏதோ தனது உதவியாளர் செய்த துரோகத்திற்காக எழுதியது போலவே முழுப் பாடலும் இருக்கும். காலத்தால் அழியாத இந்த இரண்டு பாடல்களும் என்றும் மறக்க முடியாதவை.

இதோ வரிகள்

படம் : கெளரவம்

நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா
காலம் மாறினால் கெளரவம் மாறுமா
அறிவை கொடுத்ததோ துரோணரின் கெளரவம்
அவர்மேல் தொடுத்ததோ அர்சுனன் கெளரவம்

நடந்தது அந்தநாள் முடிந்ததா பாரதம்
நாளைய பாரதம் யாரதன் காரணம்
வளர்த்த என் கண்ணனோ தந்தையின் நெஞ்சிலே
மாறும் அவதாரமே இதுதான் உலகிலே.

ஆனால் இவ்வளவு நடந்தாலும் எல்லாவற்றையும் மறந்து மன்னித்து அந்த உதவியாளரை மீண்டும் சேர்த்து கொண்டார்.

பாலுட்டி வளர்த்த கிளி பழங்கொடுத்து பார்த்தகிளி
நான் வளர்த்த பச்சைகிளி நாளை வரும் கச்சேரிக்கு
சட்டமும் நான் உரைத்தேன் தைரியமும் நான் கொடுத்தேன்
பட்டம் மட்டும் வாங்கி வந்து பாய்ந்து செல்ல பார்க்கிறது

செல்லமா எந்தன் செல்லமா

நீதிக்கே துணிந்து நின்றேன் நினைத்ததெல்லாம் ஜெயித்து வந்தேன்
வேதனைக்கு ஒரு மகனை வீட்டிலே வளர்த்து வந்தேன்
ஆண்டவன் சோதனையோ யார்கொடுத்த போதனையோ
தீயிலே இறங்கிவிட்டான் திரும்பி வந்து கால் பணிவான்

கண்ணதாசன் எதையும் மனதில் வைத்து பழிவாங்க வேண்டும் என்று எவரையும் நினைத்ததில்லை. தான் நினைத்ததை பாட்டில் அழகாக வெளிபடுத்தும் அற்புத ஆற்றல் பெற்ற காலந் தீண்ட கவிஞர் நம் கண்ணதாசன்.

eehaiupehazij
5th January 2016, 11:55 PM
Gemini Ganesan is the Centroid of the Bermuda Triangle of Love Ocean!!

ஜெமினியே காதல் மகா சமுத்திரத்தின் பெர்முடா முக்கோணத்தின் புவியீர்ப்பு மையம் !!

இனிது இனிது........ காதல் மன்னரின் காதலே இப்புவியில் என்றும் இனிது!!


காதலை கொச்சைப் படுத்தாது பார்ப்பவர் மனதில் மென்மையாக இதயத்தில் மேன்மையாக இதமான உணர்வலைகளை பதமாக பதித்திட்ட காதலின் இணையற்ற திரைச்சக்கரவர்த்தியின் கண்ணியம் மீறாத மிருதுவான காதல் வெளிப்பாடுகளின் அமரத்துவமான காட்சியமைப்புகளின் நினைவலைகள்!!

காதல் கட(ல)லை 1 : மிஸ்ஸியம்மா!!


சந்தர்ப்ப சூழலால் கிறித்துவப் பெண்ணான சாவித்திரியும் இந்து வாலிபரான ஜெமினியும் புதுமண தம்பதியராக நடித்து ஒரே வீட்டில் தங்க வேண்டிய தர்ம சங்கடமான நிலையில் சில பல ஊடல்களுக்குப் பின் காதல் மலர்கின்ற வேளையில் கடலலையாக இரண்டுங்கெட்டான் ஜமுனாவின் பிரவேசம் !!

ஜெமினியின் இயல்பான மெல்லிய நகைச்சுவை இழையோடும் வாலிப வயசுக் குறும்புகளும் ஜமுனாவின் ஈர்ப்புகளும் சாவித்திரியின் காதல் படகை தடுமாற வைக்கும் ரசனை மிக்க எல்லை மீறாத காதல் மன்னரின் கண்ணிய இலக்கண வரையறைக்குட்பட்ட காவியக் காதல் காட்சியமைப்புக்களும் தேன் சொட்டும் பாடல் இசை பின்னணியும் ......மனதுக்குள் குளிராக ஊடுருவும் இனிமை!!



https://www.youtube.com/watch?v=HK3wowwYT6s

எல்லாம் உனக்கே தருவேனே...... இனிமேல் உரிமை நீதானே

https://www.youtube.com/watch?v=UU9nAcj05YQ

எத்தனை காலமாயினும் மனதில் பசுமரத்தாணியாகப் பதிந்துவிட்ட காதல் மன்னரின் தோள் குலுக்கல் !!

https://www.youtube.com/watch?v=f_rOnubYwTM

https://www.youtube.com/watch?v=S7ZYCcx-JXo

eehaiupehazij
8th January 2016, 11:00 PM
Belly Dancers!

Training the belly for dance is a cumbersome task of body art and science!
Dancing to the tune with rhythm has been a masterly art for these belly dancers!
A fantastic belly dance can be enjoyed in From Russia with Love /Goldfinger starring Sean Connery / The Man with the Golden Gun with Roger Moore as James Bond 007!
In Tamil it has been a rare event to witness such a belly dance....remember ammammaa keladi thozhi....!?

https://www.youtube.com/watch?v=XerKDTp1EEs

https://www.youtube.com/watch?v=-CTpzLphy5Q

https://www.youtube.com/watch?v=JnuJYS_Gzak

https://www.youtube.com/watch?v=JJYqlOX6Dvc

rajraj
9th January 2016, 06:25 AM
From Harichandra(1968)

kaasiyil vaazhum karuNaik kadale kadaikkkaN paaraai........

http://www.youtube.com/watch?v=qT3dXz4XpDk

rajeshkrv
9th January 2016, 07:22 AM
MArma veeran dubbed in hindi as Piya milan

here is a fantastic number by PS in hindi (dance by Vaijayanthimala)

https://www.youtube.com/watch?v=-5iSbrJFiHI

JamesFague
9th January 2016, 02:12 PM
Courtesy: Dinamani

டி.ஆர். ராஜகுமாரி: 1.செக்ஸ் அப்பீள்!



1941. பனிக்காற்றோடு பவனி வரும் தை மாத வெயில். ஆற்றங்கரை மரங்கள் கூடுதல் குளிர்ச்சியை வீசின. அதன் நிழலில் ஆயிழைகளின் மாநாடு.வீட்டுக்குப் போக மனமில்லாமல் ஒன்று கூடி களித்தார்கள். இடையில் குடத்தோடு அசைந்தாடி இளம் சிட்டுகள் மெல்ல நடை பழகினர்.

‘நீ என்ன தான் ஒயிலா நடந்தாலும் அவளை மாதிரி இல்லடி. அவ இடுப்புல குடத்தோட எத்தனை அழகு சொட்ட வர்றா தெரியுமோ...! ’

‘என்னோட அண்ணா இத்தோட நாற்பது தடவைக்கு மேலே ‘கச்ச தேவயானி’ பார்த்துட்டான்! ’

‘என் அண்ணா மட்டும் என்ன குறைச்சலாவா பார்த்துருக்கான்...? படிப்பை மொத்தமா மூட்டை கட்டி வெச்சிட்டான் ... சதா ராஜகுமாரி... ராஜகுமாரிங்கிற ஜெபம் தான். ’

சென்னை ராஜதானி என்கிற பாரதத்தின் பாதி தேசம் முழுமையும், கையில்லா ரவிக்கையில் (ஸ்லீவ் லெஸ்) கவர்ச்சியாகத் தோன்றிய டி.ஆர். ராஜகுமாரியின் திருநாமம் சொல்லி மகிழ்ந்தது.



‘கச்ச தேவயானி’யில் வெகு ஜோராக ‘யானை சவாரியும்’ செய்திருப்பார் டி.ஆர்.ராஜகுமாரி.

பட்டு மெத்தையில் துயில் கொண்ட பாக்கியவான்கள்... காட்டு பங்களா மைனர்கள்... வயல் வரப்போர கயிற்றுக் கட்டில் மிராசுகள், கட்டாந்தரையில் உடம்பை சாய்த்த கூலிகள்... என ஒருவர் பாக்கி இல்லை. மீசை முளைத்த எல்லாரும் ‘ராஜகுமாரி மோகம்’ கொண்டு திரிந்தனர்.

அதுவரையில் தமிழர்கள் காணாத திருநாள்! திரை பிம்பங்களாலும் இளமையை வீரிட்டெழச் செய்ய முடியும் என்பதை ஆண்கள் முதன் முதலாக உணர்ந்தார்கள்.

ராஜகுமாரி பற்றி அறிந்து கொள்வதற்காகவே எழுத்து கூட்டிப் பத்திரிகைகளை வாசித்தனர் படிக்காத பண்ணையார்கள்.

‘டி.ஆர். ராஜகுமாரியின் முழு பெயர் ‘தஞ்சாவூர் ரங்கநாயகி’ ராஜகுமாரி. 1922 மே 5 - வெள்ளிக்கிழமை அன்று பிறந்தவர்.

கலைகளில் கொடி கட்டிப் பறந்த ‘தஞ்சை குஜலாம்பாளின்’ குடும்ப வாரிசு! ரங்கநாயகி - ராஜகுமாரியின் தாயார், மற்றும் தஞ்சை குஜலாம்பாளின் இரண்டாவது மகள்.’

என்கிறத் தகவல் தெரிந்தவர்கள் உள்ளம் பூரித்துப் போனார்கள்.

நிராகரிக்கப்பட்டவர்கள் நிகழ்கால வரலாறாவது... கோடியில் ஓரிருவருக்கே கிட்டும் அதிர்ஷ்டம்! டி.ஆர். ராஜகுமாரியும் எடுத்த எடுப்பில் ஏற்கப்படாமல் தூக்கி எறியப்பட்ட ஏந்திழை!

கே.அமர்நாத் - முதல் ஸ்டண்ட் சினிமா ‘மின்னல் கொடி’யை உருவாக்கியவர். இயக்குநர்களின் யுகத்தைத் தொடங்கி வைத்தவர். அன்றைய நட்சத்திரங்களின் சிம்ம சொப்பனம். அவரிடம் டி.ஆர். ராஜகுமாரி நடிப்பதற்குச் சந்தர்ப்பம் கேட்டுச் சென்றார்.

உனக்கு அழகும் இல்லை. நடிப்பும் வராது என்று விடை கொடுத்தார் கே. அமர்நாத்.

டி.ஆர். ராஜகுமாரியின் சித்தி எஸ்.பி. எல். தனலட்சுமி சினிமா ஹீரோயின். ஹாலிவுட் டைரக்டர் எல்லிஸ் ஆர். டங்கன் இயக்கிய படம் ‘காளமேகம்’. அதில் நாதஸ்வர மேதை திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளைக்கு ஜோடியாக நடித்துக்கொண்டிருந்தார்.

தனலட்சுமி ‘ராஜாயி’யை டங்கனிடம் அறிமுகப்படுத்தி வாய்ப்பு கேட்டார்.

‘கருப்பு ரோஜா’ ராஜாயியை காமெடி ரோலில் நடிக்க வைப்பதாகக் கூறினார் டங்கன்.

ராஜாயியும் தனலட்சுமியும் ஏமாற்றத்தில் அதிர்ந்தார்கள். நாயகி அந்தஸ்தை மாத்திரமே அவர்கள் நாடிச் சென்றிருந்தனர்.

‘குமார குலோத்துங்கன்’ படத்தைத் தயாரித்த ‘டெக்கான் சினிடோன்’ ராஜாயியை ஹீரோயின் ஆக்கியது. சி.டி. கண்ணபிரான் - டி.ஆர்.ராஜகுமாரியின் முதல் கதாநாயகன்.

‘குமார குலோத்துங்கன்’ படத்தில் நடிக்கும் போது எனக்கு ராஜலட்சுமி என்று பெயர். வீட்டில் செல்லமாக ராஜாயி என்று அழைப்பார்கள். அந்தக் காலத்தில் திருமதி டி.பி. ராஜலட்சுமி பிரபலமாக இருந்தார்.

எனவே ‘குமார குலோத்துங்கன்’ தயாரிப்பாளர் ராஜாராவ் எனக்கு ராஜகுமாரி என்று பெயர் வைத்தார். அந்தப் பெயரே நிலைத்தது. நல்லதொரு புகழையும் எனக்கு வாங்கிக் கொடுத்தது. குமார குலோத்துங்கன் முதலில் வெளிவரவில்லை என்பதில் எனக்குக் கொஞ்சம் வருத்தம்.’- டி.ஆர். ராஜகுமாரி.

குமார குலோத்துங்கன் நீண்ட காலம் முடங்கிக் கிடந்தது. டி.ஆர். ராஜகுமாரியின் இரண்டாவது டாக்கி ‘மந்திரவாதி’. நேஷனல் மூவிடோன் படைப்பு. மார்க்கோனி என்கிற இத்தாலிய இயக்குநர் டைரக்ட் செய்தார். ராஜகுமாரிக்கு இணை எஸ். டி. சுப்பையா.

தடங்கல்களின் தாயகத்தில் இருந்தவருக்கு சித்தி மூலம் சொர்க்கத்தின் தாழ்ப்பாள் திறந்தது.

தனலட்சுமியைத் தனது படத்துக்காக ஒப்பந்தம் செய்யச் சென்றார் கே. சுப்ரமணியம். வாய்ப்பு வாசல் தேடி வந்திருக்கிற பரவசம்! தனலட்சுமியின் குரலில் உற்சாகத்தின் ஆனந்தத் தாண்டவம்!

‘அடியே ராஜாயி... சீக்கிரமா காபி கொண்டு வா...’ என்றவர் அக்கால வழக்கப்படி தாம்பூலத்தட்டையும் இயக்குநர் அருகே நகர்த்தினார்.

காபியை ஏந்தி வந்த காரிகை ராஜாயி - சுப்ரமணியத்தின் கண்களில் சுடர் விட்டுப் பிரகாசித்தார்.

கே. சுப்ரமணியம் என்கிற கலைச் சிற்பிக்கு மாத்திரமே தெரிந்திருந்தது... அந்தப் பூவிலும் வாசம் உண்டு என்று!

இனி தனலட்சுமி தேவையில்லை. ‘ராஜாயியே நாயகி’ என்கிற முடிவு டைரக்டரின் நெஞ்சை நிறைத்தது.



கிண்டி வேல் பிக்சர்ஸ் ஸ்டுடியோ. அரிதார நிபுணர் ஹரிபாபு. அவரிடம் ராஜாயிக்கு ஒப்பனை செய்ய உத்தரவிட்டார் சுப்ரமணியம்.

புதுமுகத்தைக் கண்டதும் எகிறினார் ஹரிபாபு. ‘அவளுக்கு என்னால் மேக் அப் போட முடியாது. இது திரைக்கேற்ற முகமே அல்ல. நிச்சயம் தேறாது...’ என்று மனக் கொதிப்பில் பதைபதைத்தார்.

‘கே. சுப்ரமணியத்துக்குப் பைத்தியம் பிடித்திருக்க வேண்டும். இல்லாவிடின் தியாகராஜ பாகவதர் போன்ற சூப்பர் ஸ்டார்களை அறிமுகப்படுத்தியவர்... இந்தப் பெண்ணிடம் ஏமாந்து போவாரா..?’

கே.சுப்ரமணியத்தின் வைராக்கியமே வென்றது. ராஜாயி மீது வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை.

‘வேல் பிக்சர்ஸ் ஸ்டுடியோவில் கச்ச தேவயானி படமாகியது. நன்றாகப் பாடத் தெரிந்த டி.ஆர். ராஜகுமாரியைத் துணிந்து அதில் கதாநாயகியாக நடிக்க வைத்தார் கே.சுப்ரமணியம்.

டி.ஆர். ராஜகுமாரியின் நடையில் ஒரு விதமான கோணல் அமைந்திருப்பதைக் கவனித்து விட்டு, அவரது இடுப்பில் படம் முழுவதும் தொடர்ந்து இருக்குமாறு ஒரு குடத்தை ஏற்றினார் டைரக்டர்.

குடமும் இடுப்புமாக டி.ஆர்.ஆர். நடந்து வந்ததில் அவரது கோணல் தெரியாமல் போயிற்று. - கொத்தமங்கலம் சீனு.(கச்ச தேவயானி ஹீரோ)

டி.ஆர். ராஜகுமாரி கதாநாயகியாக நடித்ததில் கச்ச தேவயானி முதலில் வெளியானது. குமார குலோத்துங்கன், மந்திரவாதி இரண்டும் பின் தங்கின.

அசுரர்களின் குல குரு சுக்ராச்சாரியார். அவரது அன்பு மகள் கச்ச தேவயானியின் புராணக் கதை திரையில் ஓடியது. டி.ஆர். ராஜகுமாரி தோன்றும் முதல் காட்சி. தன் தேன் குரலில்

‘குளிர்ப் பசுஞ்சோலை... ஆனந்த நீரோடை... பார்க்கப் பார்க்கத் திகட்டுவதில்லை’ என்று தித்திக்கத் தித்திக்கப் பாடியவாறு அன்ன நடை நடந்தார்.

இயற்கையின் எழிலைச் சொல்லும் பாடல். நாயகியின் இளமை அழகையும் உள்ளூர நெய்யாக உருக்கி வார்க்கப்பட்ட வரிகள்.

ஹீரோயின் இடுப்பில் இருந்த குடத்தில் தண்ணீர் தளும்பியதைப் போல் ரசிகர்களின் நெஞ்சமும் இன்பத்தில் தத்தளித்தது.

டி.ஆர். ராஜகுமாரியின் அறிமுகப்படலமே வெகு அமர்க்களமாக அமைந்தது.

‘மவுத் டாக்’ என்பார்கள் கோலிவுட் பண்டிதர்கள். அடிப்படைக் கல்வி வளர்ச்சி அறவே இல்லாத அடிமைகளின் தேசம்...

பாமர மக்களின் வாய் வழியாகவே மகுடம் சூட்டப்படாத மகாராணியாக ஓர் இரவில் உயர்ந்து நின்றார் டி.ஆர். ராஜகுமாரி!

1941 ஜனவரி 9. சென்னை கெயிட்டி தியேட்டரில் திரையிடப்பட்டு வெள்ளிவிழா கொண்டாடியது கச்ச தேவயானி. அங்கு மட்டுமல்ல தென்னாடெங்கும் பல நகரங்களில் நூறு நாள்களை அநாயாசமாகக் கடந்தது.

‘கோயில் சிற்பம், ஸ்வப்ன மோகினி, தந்த பொம்மை, ஆடும் மயில், கூவும் குயில்’ என்றெல்லாம் செல்லம் கொஞ்சி எழுதின சஞ்சிகைகள்.

டி.ஆர்.ராஜகுமாரியை கனவில் மொய்த்தார்கள் யுவன்கள். நேரில் காணவும் தவம் கிடந்தார்கள்.

‘செக்ஸ் அப்பீல்’ என்கிற சொல் முதன் முதலாக சபை ஏறியது. நமது கலாசாரம் பண்பாட்டுக்கு ‘இனக்கவர்ச்சியைத் தூண்டும் ஆடைகள்... அங்க அசைவுகள்... முக பாவங்கள்... கொண்ட டாக்கிகள் தேவையா இல்லையா...?’

என்று நாடு முழுவதிலும் பட்டி மன்றங்கள் நடந்தன.

எல்லிஸ் ஆர்.டங்கன் முந்திக் கொண்டார். தனது ‘சூர்ய புத்திரி’ படத்தில் டி.ஆர். ராஜகுமாரியைத் தொடர்ந்து நாயகியாக்கி, அவரது ‘திடீர் புகழில்’ நல்ல லாபம் பார்த்தார்.

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் இரு படங்களில் ஒப்பந்தம் செய்தது. 1. சதி சுகன்யா. 2. மனோன்மணி

மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி. ஆர். சுந்தரம். தனது நிறுவனத்தில் கலைஞர்களில் யார் ஒழுங்கீனமாக நடந்தாலும், கட்டி வைத்து சவுக்கால் அடிக்கும் ஆளுமை மிக்கவர்.

டி.ஆர். சுந்தரத்தின் கீழ் பணியாற்றியவர் எம்.ஏ. வேணு. பின்னாளில் சிவாஜி, என்.டி.ஆர்.- பத்மினி நடித்த ‘சம்பூர்ண இராமாயணம்’ தயாரித்தவர். தனது எம்.ஏ.வி. பிக்சர்ஸில் முக்தா சீனிவாசனை இயக்குநராக ’முதலாளி’ படம் மூலம் அறிமுகப்படுத்தியவர்.

டி.ஆர். ராஜகுமாரி குறித்து எம்.ஏ. வேணு-

‘சதி சுகன்யா’ அவுட்டோர் ஷூட்டிங் தொட்டியத்தில் காவேரி கரையில் நடைபெற்றது. கவர்ச்சியான கச்சைகள் அணிந்து முழு மேக் அப்பில் டி.ஆர். ராஜகுமாரி வருவார்.

யாருக்கும் எவ்விதமான தொல்லையும் தராதவர். மிகப் பிரபலமாக இருந்தாலும் எல்லாருடனும் பண்புடன் பழகுவார்.

அது வேண்டும் இது வேண்டும் என்றெல்லாம் தயாரிப்பு நிர்வாகிகளைத் தொந்தரவு கொடுக்க மாட்டார். தண்ணீர் டம்ளர்களைக் கூட வீட்டிலிருந்து தருவித்து வருவார்.

கம்பெனி தரும் டிபன் மற்றும் சாப்பாட்டை எதிர்பார்க்காமல், சொந்த சமையற்காரரை வைத்து வித விதமான சிற்றுண்டி, மற்றும் மதிய உணவு வகைகளைச் செய்து, பெரிய பெரிய கேரியர்களில் தன்னோடே எடுத்து வருவார்.

ஏதாவது ஸ்பெஷல் அயிட்டங்கள் கொண்டு வந்தால் யூனிட் முழுமைக்கும் அதனைப் பரிமாறச் சொல்வார்.

ஒருநாள் காமிராமேனுடன் டி.ஆர்.ராஜகுமாரி, தனது சாப்பாட்டைப் பகிர்ந்து கொண்டார்.

நான் விளையாட்டாக ஒளிப்பதிவாளரிடம்,

‘ என்னய்யா... ஹீரோயின் உங்களுக்கு மட்டும்தான் வீட்டுப் பதார்த்தங்களை சப்ளை செய்வாரா...?

டி.ஆர். ராஜகுமாரி உங்களை காக்கா பிடிக்கிறார் போலிருக்கிறது... என்றேன்.

கதை வசனகர்த்தா சாரி, முதலாளியிடம் உடனடியாக அதை வத்தி வைத்து விட்டார்.

காவிரி நதியில் விளையாடியவாறே முதலாளி டி.ஆர். எஸ். என்னிடம்,

‘டேய் வேணு... என்னடா சொன்னாய் டி.ஆர்.ராஜகுமாரியை... என்றவர், கரையோரம் நீளமாக வளர்ந்திருந்த கொடிக் கம்பைப் பிடுங்கி அடி அடியென அடித்து என்னை வெளுத்து வாங்கினார்.’

-------------

பல்வேறு பெருமைகளின் கலங்கரை விளக்கம் ‘மனோன்மணி!’

‘ பி.யூ. சின்னப்பா - டி.ஆர். ராஜகுமாரி’ இணைந்த முதல் படம். தமிழ்நாட்டுக்குத் தனியார் தொலைக்காட்சிகள் வரும் வரை டூரிங் டாக்கீஸ்களில் இடைவிடாமல் ஓடியது.

லட்சங்களைத் தாண்டித் தமிழில் மிக அதிக பொருட்செலவில் தயாரான முதல் பிரம்மாண்டச் சித்திரம்!

‘லார்டு லிட்டன்’ எழுதிய ரகசிய வழி (‘சீக்ரெட் வே’) பேராசிரியர் சுந்தரம் பிள்ளையால் ‘மனோன்மணி’ என்று தழுவப்பட்டது.

டி.ஆர். ராஜகுமாரி - பாண்டிய மண்டலத்தின் இளவரசி மனோன்மணி. பி.யூ. சின்னப்பா - நாயகியின் சொப்பனத்தில் தோன்றிய காதலன் - ‘சேர மன்னன் புருஷோத்தமன்’. இருவரும் கனவிலேயே காதலிக்கும் புதுமைக் கதை!

வில்லன் டி.எஸ். பாலையா - பாண்டிய மந்திரி குடிலன்.

டி.எஸ். பாலையாவால் ஏற்படும் இடையூறுகளைக் கடந்து பி.யூ. சின்னப்பாவும்- டி.ஆர். ராஜகுமாரியும் கை பிடிப்பது க்ளைமாக்ஸ். மனோன்மணியை மிக்க கவனத்துடன் டி.ஆர். சுந்தரமே இயக்கினார்.

1942 நவம்பர் 11- தீபாவளி தினத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது மனோன்மணி.



‘கண்டேன் கண்டேன் என் காதல் கனியைக் கண்டேன்’, ‘மோகன மாமதனா’,

‘வானமுதே மான் விழியே உனைக் காண்பேனோ’, ‘உன்றனுக்கோர் இணையாவோர் உலகில் இல்லை’

என்றெல்லாம் டி.ஆர். ராஜகுமாரி- பி.யூ. சின்னப்பா பாடிய காதல் கீதங்கள் தென்னாடெங்கும் தேன்மழை பொழிந்தன.

மனோன்மணியின் வரலாறு காணாத வசூலால் ‘தமிழ் சினிமாவின் முதல் கனவுக்கன்னி’ என்று டி.ஆர். ராஜகுமாரிக்குக் கீரிடம் சூட்டினார்கள் ரசிகர்கள் !

டி.ஆர். ராஜகுமாரியுடன் இணைந்து நடித்து பி.யூ. சின்னப்பா அடைந்த புகழின் சிகரத்தை, தாமும் கடக்க வேண்டும் என்று எம்.கே. தியாகராஜ பாகவதரும் விரும்பினார்.

அவரது ஆணையின் பேரில் கோவை பட்சிராஜா ஸ்டுடியோ, டி.ஆர். ராஜகுமாரியைத் தேடிப் பட்டணம் வந்தது.

டி.ஆர். ராஜகுமாரி பதம் பிடித்து ஆட, எம்.கே. தியாகராஜ பாகவதரின் ‘சிவகவி’ உருவானது. பிரபல இயக்குநர் ராஜா சாண்டோவை நீக்கி விட்டு, பட்சி ராஜா முதலாளி ஸ்ரீராமுலு நாயுடுவே ஆர்வத்துடன் முதன் முதலாக சிவகவியை டைரக்டு செய்தார்.

டி.ஆர். ராஜகுமாரியை வர்ணித்து இரு பாடல்களைப் பாடினார் ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதர்.

1. ‘வதனமே சந்திர பிம்பமோ... மலர்ந்த சரோஜமோ... ’ என்றைக்குக் கேட்டாலும் தித்திக்கும்.

2. ‘கவலையைத் தீர்ப்பது நாட்டியக்கலையே... கணிகையர் கண்களே மதன் விடும் கணையே’

என்ற ‘நாட்டக்குறிஞ்சி’ ராகப் பாடலும் சூப்பர் ஹிட் ஆனது.

சிவகவியின் மகோன்னத வெற்றி மேலும் டி.ஆர்.ராஜகுமாரியின் மவுஸைக் கூட்டியது.

டி.ஆர்.ராஜகுமாரியால் தாமும் பெருத்த செல்வம் பெற வேண்டும் என்று ஜூபிடரும் துடிதுடித்தது.

1943 ஜூலையில் பி.யூ. சின்னப்பா - டி.ஆர். ராஜகுமாரி ஜோடி நடிக்க ‘குபேர குசலா’ பக்திச் சித்திரத்தை வெளியிட்டது.

ஆர். எஸ். மணி ‘குபேர குசலா’ படத்தை இயக்கினார்.

குபேர குசலாவில் பி.யூ. சின்னப்பாவும் பாகவதருக்குப் போட்டியாக, டி.ஆர். ராஜகுமாரியைப் போற்றித் தன் பங்குக்குக் கம்பீரக் குரலில்

‘நடையலங்காரம் கண்டேன்!

அன்னப்பேடையும் பின்னடையும்... பொற்கொடி இவள் மலரடி

நடையலங்காரம் நளின சிங்காரம்’ என்று பாடினார்.

‘ராஜகுமாரியின் நாட்டியம் வெகு அழகு. நாயகியின் நடிப்பிலும் நல்ல ‘நகாஸ்’ என்று விசிறிகளின் அபரிதமான ஆதரவு கிடைத்தது. ஜூபிடருக்கும் அபரிதமான ஐஸ்வர்யம்!

eehaiupehazij
10th January 2016, 07:49 AM
பம்பாய் மிட்டாய்.....ஜெமினிகணேசன்!

Bambaai Mittai song ,,,,most popular in GG starrer Neethipathi...but this song was sung and enacted by the then ace singer actor KR Ramaswami....Nostalgia kindled on bambaai mittai.......wrist watches, rings, ...the lon stick holder on which this mittai is wrapped,,,

ஜெமினிகணேசன் கே ஆர் ராமசாமி நடிப்பில் வெளிவந்த நீதிபதி திரைப்படத்திலிருந்து ...
ஜெமினிக்கு மிக வித்தியாசமான ரோல் !


பம்பாய் மிட்டாய் ....சிறுவயதில் இந்த மாதிரி ஜவ்வு மிட்டாயை இழுத்து இழுத்து கடிகாரமகவும் மோதிரமாகவும் கையில் கட்டிவிடுவார்கள்...பள்ளிப் பருவத்தில் இலந்தைவடை, பம்பாய் மிட்டாய், மாங்காய் சீவல், குச்சி ஐஸ், பலகையில் பாட்டிமார்கள் ஒட்டிவைத்து பள்ளிக்கூடவாசலில் விற்கும் ஜம்பர் மிட்டாய் ...குச்சிமிட்டாய் குருவிரொட்டி ....என்ன......ஞாபகங்களை தூண்டி விட்டேனோ!?

https://www.youtube.com/watch?v=rH2zSsWmMl8

https://www.youtube.com/watch?v=aKwE7O1Ecio

eehaiupehazij
10th January 2016, 07:59 AM
ballroom dance! reminding Fred Astaire and Ginger Rogers!

https://www.youtube.com/watch?v=h6evloY0AtE

https://www.youtube.com/watch?v=mAB12aeI6nA

Ballroom dance with ice skating!! amazing!!

https://www.youtube.com/watch?v=zZ3fjQa5Hls

eehaiupehazij
10th January 2016, 09:30 AM
Just a jolly titile!

A hilarious presentation on the present trend of youth to become bodybuilders like Arnold!!

ஜிம்முக்குப் போன ஜெமினி கணேசன் ...கலாய்!

Gymmukkup pona gemini ganesan!!

https://www.youtube.com/watch?v=_Pn2qrfj3tw

rajraj
13th January 2016, 06:40 AM
From Rajamukthi(1948)

unnai allaal oru thurumbu asaiyumo.........

http://www.youtube.com/watch?v=AdctBhQTY2g

eehaiupehazij
14th January 2016, 07:45 AM
Russian Ballet! In tamil there was one actress who was trained in ballet dancing...?Laila?

https://www.youtube.com/watch?v=7oPsOut4by0

https://www.youtube.com/watch?v=Wz_f9B4pPtg

https://www.youtube.com/watch?v=eyjlZzMHUyo

JamesFague
14th January 2016, 09:40 AM
Courtesy: Tamil Hindu


சினிமா எடுத்துப் பார் 41: கமலும் ரஜினியும் இணைந்து நடித்தது எந்தப் படம்?

எஸ்பி.முத்துராமன்

‘புவனா ஒரு கேள்விக்குறி’ ஷூட்டிங் கில் வாத்தியார் லட்சுமி நாரா யணனை ரஜினிக்கு வசனம் சொல் லித் தர சொல்லிவிட்டு, ஒளிப்பதிவாளர் பாபுவும் நானும் செட்டுக்குள் சென்று லைட்டிங் வேலைகளைக் கவனிக்கச் சென்றோம். திடீரென்று ரஜினியைக் காணவில்லை. எங்கே என்று தேடிய போது ஒரு புரொடெக்*ஷன் பையன் ‘ரஜினி வாசல் பக்கம் போய்க் கொண் டிருக்கிறார்’ என்றார். அப்போது ரஜினி யிடம் கார் இல்லை. எங்கள் நிர்வாகியை அனுப்பி உடனே அழைத்து வரச் செய் தோம். வந்தவரிடம் என்ன விஷயம் என்று கேட்டோம். ‘‘பாலசந்தர் சார் படத்துல மொத்த வசனமுமே இவ்வளவுதான் இருக்கும். நீங்க ஒரு காட்சிக்கே இவ்வளவு வசனம் கொடுக்குறீங்க. என்னால பேசி நடிக்கிறது கஷ்டம்’’ என்றார். ‘‘முழு வசனத்தையும் ஒரே ஷாட்டில் எடுக்க மாட்டோம். பிரிச்சுப் பிரிச்சுதான் எடுப்போம். உங்களால எவ்வளவு பேச முடியுமோ, அதையும் உங்க ஸ்டைல்ல பேசுங்க, போதும்’’ என்றதும் ஒப்புக்கொண்டார்.

கதைப்படி சிவகுமார் தவறு செய்து விட்டு வருவார். அதனை தெரிந்து கொண்ட ரஜினி அவரை கண்டிப்பார். அதற்கு சிவகுமார், ‘‘பத்தோடு பதி னொண்ணு விட்றா’’ என்பார். உடனே ரஜினி ‘‘கடப்பாரையை முழுங்கிட்டு சுக்குத் தண்ணி குடிச்சா அது செரிக் காது. வயித்த கிழிச்சுக்கிட்டு வெளியே வரும்’’ என்று அழுத்தமாகச் சொல்வார். அன்றைக்கே பஞ்சு அருணாசலம் எழுதிய ‘பஞ்ச்’ டயலாக் அது. ரஜினி சொன்ன ஸ்டைலில் அது மக்களிடம் கைத்தட்டலை பெற்றது. அன்றைக்கு தமிழ் வசனம் பேச பயந்த அதே ரஜினி தான் இன்றைக்கு ‘சும்மா அதிரு துல்ல’ என பஞ்ச் வசனம் பேசி அதிர வைக்கிறார். அதற்குக் காரணம் ரஜினி யின் ஈடுபாடு, உழைப்பு, முயற்சிதான்!

‘புவனா ஒரு கேள்விக்குறி’ படத்தில் ரஜினி, மீரா இருவரும் காதலர்கள். இருவரும் ‘விழியிலே மலர்ந்தது/உயிரிலே கலந்தது/பெண்ணென்னும் பொன்னழகே/ அடடா எங்கெங்கும் உன்னழகே’ என்ற டூயட் பாடுவார்கள். பாடலை எழுதியவர் பஞ்சு அருணா சலம்; இசையமைத்தவர் இளையராஜா. அதில் இருந்த இனிமை இன்றும் இனிக் கிறது. என்றும் இனிக்கும். ஒரு காட்சியில் மீராவை மாடு துரத்தும், அதை பார்த்த ரஜினி அவரை காப்பாற்றப் பின் தொடர்ந்து ஓடுவார். மீரா, ஒரு பாழ் கிணற்றில் விழுந்துவிடுவார். ரஜினி கிணற்றில் குதித்து மீராவை தூக்குவார்.

இந்தக் காட்சிக்காக கிணறு கிடைக்கா மல் தேடி அலைந்தோம். கடைசியில் காட்சிக்குப் பொருத்தமான கிணறு போரூர் அருகே கிடைத்தது. ஷூட்டிங் சமயத்தில் ரஜினியும் மீராவும் கிணற்றில் இருந்து வெளியே வரும்போது, ஒரே துர்நாற்றம். எங்களால் அருகில் நிற்க முடியவில்லை. மொத்த யூனிட் ஆட்களும் தண்ணீரை ஊற்றி அவர் களை சுத்தம் செய்தோம். நாங்கள் படமாக்கிய கிணற்றில்தான் மொத்த போரூர் சாக்கடை நீரும் வந்து சேர்கிறது என்பது பிறகுதான் தெரிந்தது. ‘‘எதுவுமே விசாரிக்காமல் உங்களை கிணற்றில் குதிக்க வைத்தது என் தப்புதான்’’ என்று ரஜினியிடம் மன்னிப்பு கேட்டேன். உடனே ரஜினி, ‘‘சார் அதையெல்லாம் விடுங்க. காட்சி நல்லா வந்திருக்கா, அதை சொல்லுங்க’’ என்றார். அதுதான் ரஜினி. அவரின் பெருந்தன்மைக்கு நாங்கள் நன்றி சொன்னோம்.

தடாவில் ஒரு பாடல் காட்சியைப் பட மாக்க புறப்பட்டோம். அங்கு படப்பிடிப்பு சமயத்தில் திடீரென பிளே பேக் மெஷின் கெட்டுப்போனது. அது இருந்தால்தான் பாட்டைப் போட்டு பாடல் காட்சியைப் படமாக்க முடியும். எவ்வளவோ முயற் சித்தும் சரிசெய்ய முடியவில்லை. முழு யூனிட்டும் சென்னைக்குப் போய் அடுத்த நாள் படப்பிடிப்புக்கு வந்தால் செலவு அதிகமாகும். ரஜினியை மட்டும் சென்னைக்குச் சென்று வர ஏற்பாடு செய்துவிட்டு, நாங்கள் அனைவரும் அங்கேயே தங்க முடிவு செய்தோம்.

அப்போது ரஜினி, ‘‘நீங்க எல்லாரும் இங்கே தங்குறப்ப நான் மட்டும் ஏன் சென்னைக்குப் போயிட்டு வரணும்’’ என்றார். ‘‘இங்கே எந்த அடிப்படை வசதி யும் இல்லை; அதோ அந்த டீக் கடைக் காரர் சப்பாத்தி செய்து தருவதாகக் கூறியுள்ளார்; அந்த வீட்டு மொட்டை மாடி யில் படுக்கப் போகிறோம்’’ என்றோம். அதற்கு ரஜினி, ‘‘நீங்கள்லாம் என்ன செய்றீங்களோ, அதையே நானும் செய்து கொள்வேன்’’ என்று கூறி எங்களோடு டீக்கடை சப்பாத்தியைச் சாப்பிட்டு, மொட்டை மாடியில் உறங்கி, ஆற்றில் குளித்து முடித்து படப்பிடிப்புக்கு வந்து விட்டார். ஹீரோ என்கிற உணர்வு துளியும் இல்லை அவருக்கு. அன்று முதல் இன்று வரை அதே மாதிரிதான் பழகு கிறார். நிறைய புகழ் வந்துவிட்ட பிறகும் ஒருபோதும் அதை தலையில் தூக்கி வைத்துக் கொள்வதில்லை. கேமரா வுக்கு முன்னால் மட்டுமே நடிக்கிறார். கேமராவுக்கு பின்னால் மனிதநேயமுள்ள மனிதராக நடக்கிறார். பொய் சொல்லும் பழக்கமே இல்லாதவர். அவரு டைய 25 படங்களை இயக்கியிருக்கிறேன் என்பதில் எங்கள் குழுவுக்கு பெரிய மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியை ‘தி இந்து’ மூலம் வாசகர்களுடன் பகிர்ந்து கொள் வதில் இன்னும் மகிழ்ச்சி!

சுமித்ராவிடம் தவறாக நடந்து கொண்ட சிவகுமார், ஒருகட்டத்தில் அவரை கை கழுவி விடுவார். இதை அறிந்த ரஜினி சுமித்ராவை அழைத்துக் கொண்டுபோய் வாழ வைப்பார். ஊர் உலகத்துக்காக இருவரும் கணவன் - மனைவியாக நடிப்பார்கள். ஒருகட்டத் தில் ரஜினி, ‘‘ஏன் நாம் நடிக்க வேண்டும்? உண்மையான கணவன் மனைவியாக ஆகிவிட்டால் என்ன?’’ என்று சுமித்ரா விடம் கேட்பார். அதற்கு சுமித்ரா ‘‘உங்கள நான் தெய்வமா நினைக்கிறேன். நான் அழுகிப் போன பூ. என் தெய்வத்துக்கு அழுகின பூவை அர்ப்பணிக்க விருப்ப மில்லை. உங்க மேல இருக்கும் நம் பிக்கையிலதான் என் அறை கதவைக்கூட மூடுறதில்லை. ஒரு திரையை மட்டும் போட்டு வெச்சிருக்கேன். நான் சொல் றதை ஏத்துக்கலன்னா நீங்க எப்போ வேணும்னாலும் என் அறைக்குள்ள வரலாம்’’ என்று சொல்லிவிட்டு அறைக் குள் போய்விடுவார்.

ரஜினி அப்போது அசந்துபோய் ‘ராஜா என்பார்/மந்திரி என்பார்/ராஜ்ஜியம் இல்லை ஆள’. என்று பாடுவார். காட்சி யின் கருத்தாழத்தை அந்தப் பாடல் உணர்த்தும். ரஜினி சுமித்ரா இருவரின் நடிப்பும் அசத்தலாக இருக்கும். பஞ்சு அருணாசலத்தின் வரிகளும் இளைய ராஜாவின் இசையும் கதையை கண் முன் கொண்டுவந்து நிறுத்திவி்டும். ‘புவனா ஒரு கேள்விக்குறி’ பெரும் வெற்றி பெற் றது. ரஜினிக்கு ஸ்டைல் மட்டும்தான் தெரியும் என்று நினைத்த மக்கள் அவரை சிறந்த குணச்சித்திர கதாநாயகனாக ஏற்றுக்கொண்டார்கள். பத்திரிகைகள் பாராட்டின. ரஜினியின் வெற்றிப்படிகளில் ‘புவனா ஒரு கேள்விக்குறி’யும் ஒன்று.

கமலையும் ரஜினியையும் மாறி மாறி இயக்கும் சிறந்த வாய்ப்புகளை நான் பெற்றவன். இருவரைப் பற்றியும் மாறி மாறி எழுதப் போகிறேன். ஒரு படத்தில் என் இயக்கத்தில் கமலும் ரஜினியும் இணைந்து நடித்தார்கள். அது எந்தப் படம்?

Russellxor
14th January 2016, 07:15 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/20160114173201_zpsumxv1yu3.gif (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/20160114173201_zpsumxv1yu3.gif.html)

RAGHAVENDRA
14th January 2016, 11:05 PM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xfl1/v/t1.0-9/12565544_1036610813056257_2999273536545349181_n.jp g?oh=37d87368011c2c0604694233e445f8c1&oe=57429C7A

மதுர கான திரி அன்பர்கள் அனைவருக்கும் உளமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

திரியின் நாயகரே... தங்கள் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்...

RAGHAVENDRA
16th January 2016, 10:23 PM
நேற்று {15.01.2016} இரவு அன்பு நண்பர் நெய்வேலியாருடன் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. நீண்ட நாட்களாகத் திரிக்கு வராத காரணத்தால் ஒரு எதிர்பார்ப்புடன் இருந்ததில், அந்த உரையாடல் மிகவும் மகிழ்வூட்டியது. பணிச்சுமை மற்றும் வேலை பளுவாலும் வேறு பல காரணங்களாலும் திரியில் பங்கு கொள்ள இயலவில்லை எனக் கூறியவர், கூடிய விரைவில் இங்கு தொடர உள்ளதாகத் தெரிவித்தார்.

அவருக்கு நம் அனைவர் சார்பிலும் பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

RAGHAVENDRA
17th January 2016, 03:17 PM
https://www.youtube.com/watch?v=dxpQ1S1NJxs

எம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி என்னுடைய விருப்பப் பாடலைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

எம்.ஜி.ஆர். அவர்களின் படங்களைப் பொறுத்த மட்டில் இன்றளவும் மக்கள் மனதில் நிற்பதில் பாடல்களுக்குப் பெரும் பங்குண்டு. குறிப்பாக பாடகர் திலகம் டி.எம்.எஸ். அவர்களின் பங்களிப்பு, மற்றும் வாலியின் வரிகள். இசையமைப்பாளர்களைப் பொறுத்த மட்டில் யார் இசையமைத்தாலும் வாலியின் வரிகள் டி.எம்.எஸ். அவர்களின் குரலில் உயிர் பெற்று விடும்.

மெல்லிசை மன்னர், கே.வி.எம். சங்கர்-கணேஷ், ஜி.ராமநாதன் என பல இசையமைப்பாளர்கள் இசையமைத்திருந்தாலும் எஸ்.எம்.எஸ். எனப்படும் சுப்பய்யா நாயுடு அவர்களின் பாணியையே பின்பற்றி வந்துள்ளனர் என்பது புலப்படுகிறது. இதில் மெல்லிசை மன்னர் தன் இசைக்கருவிகளின் பிரயோகம், தன் விசேஷமான மெட்டு இவற்றால் தனித்து யாராலும் நெருங்க முடியாத உயரத்தில் இருக்கிறார்.

என்றாலும் கூட எம்.ஜி.ஆர். அவர்களின் படங்களில் ஆசை முகம் படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடலுக்கு இருக்கும் தனித்துவம் மற்ற பாடல்களை விட சற்றே உயர்த்திக் காட்டுகிறது எனலாம். இதற்கு டி.எம்.எஸ். அவர்களை எஸ்.எம்.எஸ். அவர்கள் பயன்படுத்திய வித்தியாசமான பாணியே ஆகும். குறிப்பாக கொள்கைப் பாடல்களுக்கு எஸ்.எம்.சுப்பய்யா அவர்களின் பாணியே இன்றளவும் பயன்பட்டு வருகிறது.

அந்த வகையில் எம்.ஜி.ஆர். அவர்களின் படங்களிலேயே என்னை மிகவும் அதிகம் ஈர்த்த பாடல் என்கிற கண்ணோட்டத்தில் நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு பாடல் நான் மிகவும் விரும்பிக் கேட்கும் பாடல்களில் ஒன்று.

குறிப்பாக வாலியின் வரிகள் ஒவ்வொரு மனிதனுக்கம் பொருந்தும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பிரச்சார நெடி அதிகம் இல்லாததும் இந்தப் பாடலின் சிறப்புக்கு ஒரு காரணம்.

உள்ளத்தில் வைத்ததை உதட்டிலும் வைப்பவன்
எவனோ அவனே மனிதன்
எவனோ அவனே மனிதன்
ஊரார் வேர்வையில் உடலை வளர்ப்பவன்
உலகத்தில் கோழைகள் தலைவன்
உலகத்தில் கோழைகள் தலைவன்

காட்டில் நிலவாய் கடலில் மழையாய்
காட்டில் நிலவாய் கடலில் மழையாய்
பிறந்தால் யாருக்கு லாபம்...
பிறந்தால் யாருக்கு லாபம்..

...இந்த இடத்தில் டி.எம்.எஸ். அவர்களின் குரல் நம்மை அப்படியே கூட அழைத்துக் கொண்டு விடும்.

பகையில் துணையாய்
பசியில் உணவாய்
இருந்தால் ஊருக்கு லாபம்
இருந்தால் ஊருக்கு லாபம்...

கூரைகளெல்லாம் கூட வளர்ந்தால்
கோபுரமாவதில்லை...
கோபுரமாவதில்லை..
குருவிகளெல்லாம் உயரப் பறந்தால்
பருந்துகளாவதில்லை...
பருந்துகளாவிதில்லை...

எம்.ஜி.ஆருக்கே உரித்தான பாணியில் அமைந்தாலும் இசையமைப்பிலும் டி.எம்.எஸ். அவர்களின் குரல் வளத்தினாலும் இந்தப் பாடல் தனித்து நம்மை ஈர்க்கிறது என்பது உண்மை.


http://www.filmibeat.com/img/2013/07/22-vaali-lyricist-01.jpg
Vaali

http://tamilweek.com/thiruvedkai/wp-content/uploads/2014/05/TMS052414.jpg
T.M.S.

JamesFague
18th January 2016, 01:34 PM
Courtesy: Dinamani

டி.ஆர். ராஜகுமாரி: 2. பார்த்து ரொம்ப நாளாச்சு...!

1.கச்ச தேவயானி, 2.மந்திரவாதி, 3.குமார குலோத்துங்கன், 4.சூர்யபுத்திரி, 5.ஆராய்ச்சி மணி, 6, சதி சுகன்யா, 7.மனோன்மணி, 8. சிவகவி, 9. குபேர குசலா...

டி.ஆர். ராஜகுமாரி சினிமாவில் அறிமுகமான ஐந்து ஆண்டுகளில், ஒன்பது படங்கள் வெளியாகி இருந்தன.

அதுவரை சித்தி தனலட்சுமி வீட்டில் தங்கி நடித்தவர் டி.ஆர். ராஜகுமாரி.

1943ல், தியாகராயநகரில் ஹபிபுல்லா சாலையில் ‘கன்னியாகுமரி பவனம்’ என்கிற சொந்த மாளிகையில் குடியேறினார்.

சென்னையில் பிரம்மாண்டமாக சொகுசு பங்களா கட்டி புதுமனை புகுவிழா கண்ட முதல் சூப்பர் ஸ்டார் டி.ஆர். ராஜகுமாரி!

---------------
1944. டி.ஆர். ராஜகுமாரி - டி.ஆர். ராமச்சந்திரன் நடிக்க, டி.ஆர். ரகுநாத் டைரக்ட் செய்ய ‘பிரபாவதி’ ரிலிஸானது. டைட்டிலை ‘டி.ஆர். பிரபாவதி’ என்று வைத்திருக்கலாம்.

ஹரிதாஸில் சாருகேசி ராகத்தில் ஒலித்தது ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ... ’ யவ்வனத்தின் தேசிய கீதம்!

‘நின் மதி வதனமும் நீள் விழியும் கண்டு... ’என்று பாடி வருகையில் இடையில் பாகவதர் ‘ரம்பா... ’ என்று குழைய , டி.ஆர். ராஜகுமாரி சற்று நெருங்கி க்ளோஸ் அப்பில் ‘ஸ்வாமி! என்று இன்ப லாகிரியில் அழைக்க, ‘என் மதி மயங்கினேன்’ என்று பாகவதர் பரவச நிலையில் மன்மத லீலையைத் தொடர திரை அரங்கங்கள் அமர்க்களப்படும்.

ஹரிதாஸில் அந்த ஒரு கணத்தைக் கண்ணாரக் காண, மக்கள் கூட்டம் ஆண்டுக் கணக்கில் அலை மோதியது.

இரண்டாம் உலகப் போரின் கடுமையானத் தாக்குதல். சென்னை ஏறக்குறைய காலி. எங்கும் பசி. பஞ்சம். பட்டினி.

தரித்திரத்தின் தர்பாரிலும் தலைநகரத் தமிழர்களுக்கு டி.ஆர். ராஜகுமாரி மீதான மயக்கம் அதிகரிக்கவே செய்தது.



1944 தீபாவளி ரிலிஸ் ஹரிதாஸ். சென்னை பிராட்வே தியேட்டரில் மூன்று தீபாவளிகளைக் கண்டு 114 வாரங்கள் தொடர்ந்து ஓடியது

அது மட்டுமல்ல மன்மத லீலை பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதும், சாருகேசி ராகத்துக்கும் சபை கூடியது.

ஹரிதாஸ் படத்தில் ‘தாசி ரம்பாவாக’ கொடூரமான வில்லி நடிப்பில் டி.ஆர். ராஜகுமாரி விஸ்வரூபம் காட்டினார்.

‘ஹரிதாஸி’ல் டி.ஆர். ராஜகுமாரி அடைந்த உச்சக் கட்டப் புகழை இன்று வரை எவரும் இலேசாகத் தொடக் கூட முடியவில்லை.

யார் திருஷ்டி பட்டதோ டி.ஆர். ராஜகுமாரியின் கண்களுக்கு நிஜமாகவே ஆபத்து வந்தது. சிகிச்சைக்காக சில மாதங்கள் ஓய்வில் இருந்தார்.

ரஞ்சன்- டி.ஆர். ராஜகுமாரி நடித்த சாலிவாஹனன் 1945ல் வெளியானது.

ஹரிதாஸ் வெளியான ஒரு மாதத்துக்கெல்லாம் 1944 டிசம்பரில் பாகவதர் எதிர்பாராத விதமாக சிறைக்குச் சென்றார். அவர் நடித்திருக்க வேண்டிய சினிமா ஜூபிடரின் வால்மீகி.

ஹொன்னப்ப பாகவதருடன் டி.ஆர். ராஜகுமாரி இணைந்து நடித்தார். வழக்கமான அவரது கவர்ச்சியைக் காணாமல் ரசிகர்கள் ஏமாந்தார்கள். 1946ல் வால்மீகி நல்ல டாக்கியாக உருவாகியும் வெற்றி வாய்ப்பை இழந்தது.

‘விகடயோகி’ டி.ஆர். ராஜகுமாரி நடித்த முதல் சமூகச் சித்திரம்! 1946 அக்டோபரில் வெளியானது.

ஹாலிவுட்டில் அபார வெற்றி பெற்ற ஆங்கில சினிமாவின் தழுவல். ராசியான பி.யூ. சின்னப்பா நாயகனாக நடிக்க, டி.ஆர். ராஜகுமாரியைப் பிரபலப்படுத்திய டைரக்டர் கே.சுப்ரமணியம் இயக்கினார். ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பைப் பொய்யாக்கி விகடயோகி சுமாராகவே ஓடியது.

‘தமிழ்நாடு டாக்கீஸ்’ புகழ் பெற்றப் பட நிறுவனம். 1947ல் அவர்களது படைப்பு பங்கஜவல்லி. பி.யூ. சின்னப்பா - டி.ஆர். ராஜகுமாரி மீண்டும் ஜோடி சேர்ந்தனர்.

டி.ஆர்.ராஜகுமாரி ஆண்களை வெறுக்கும் அல்லி ராணியாக மிக வித்தியாசமான பாத்திரம் ஏற்ற படம் பங்கஜவல்லி.

கரஹரப்ரியா ராகத்தில் ‘நீ இல்லாமல் அணுவும் அசையுமோ’ என்று டி.ஆர். ராஜகுமாரியிடம் பாடி அவரை வீழ்த்துவார் பி.யூ. சின்னப்பா. அப்பாடல் 1947ன் சூப்பர் ஹிட்.

‘பிரம்மரிஷி விஸ்வாமித்திரா, பங்கஜவல்லி ஆகிய சினிமாக்களில் டி.ஆர். ராஜகுமாரிக்குக் கிடைத்த வேடங்கள் சாதாரணமாக இருந்தன. அதனால் விசிறிகள் தியேட்டர் பக்கம் தலை காட்டவில்லை’ என்று நேற்றைய திரை இதழ்கள் கருத்து வெளியிட்டுள்ளன.

‘பிரம்மரிஷி விஸ்வமித்திரா’ கே.ஆர். ராம்சிங் - டி.ஆர். ராஜகுமாரி பங்கேற்றது. கே.ஆர். ராம்சிங் பிரசித்தமில்லாதவர். ஆனாலும் அவருடன் டி.ஆர். ராஜகுமாரி தயக்கமின்றி நடித்தார்.

---------------------
‘என்ன தயாராகி விட்டதா...? ’ ஜெமினி எஸ். எஸ். வாசன் கேட்டார்.

‘இன்னும் ஒரு அடி பள்ளம் வெட்ட வேண்டும் சார். ’

சூப்பர் ஸ்டார் டி.ஆர். ராஜகுமாரி... இருபது அடி உயரத்தில் ஏறி பார் விளையாடினால், ஏற்படக் கூடிய ஆபத்தைத் தவிர்க்க வாசன் போட்ட திட்டம் முடியும் தறுவாயில் இருந்தது.



டி.ஆர். ராஜகுமாரி நூலேணியில் முதலில் ஏறி, மேலே உள்ள ட்ரபீஸ் என்ற கம்பி ஊஞ்சலைக் கைப்பற்றி, அதிலிருந்து மற்றொன்றுக்குப் பாய வேண்டும்.

அதற்காக அவர் ஏற வேண்டிய உயரத்தைக் குறைத்து, காமிராவை தரைக்குக் கீழே கொண்டு சென்றார்கள்.

டி.ஆர்.ராஜகுமாரி மிகத் துணிச்சலாக இரண்டு அடிகள் உயரத்தில் உள்ள, கம்பி மீது காலைத் தூக்கி வைத்து ஏறினார். திரும்பினார். பின்புப் பெரிதாகப் பெருமூச்சு விட்டார்.

காமிரா சுழன்றது. அவர் பாரில் பாய்ந்து ஆடி, திரும்பவும், கம்பி ஊஞ்சலில் வந்து நின்றதாக அர்த்தம்.

ஒத்திகை முடிந்ததும் சர்க்கஸில் ஷூட்டிங்.

ராஜகுமாரி வந்தாச்சா...? வாசன் மீண்டும் களத்தில் குதித்தார்.

‘டோபா மட்டும் வைக்கணும். இதோ வந்திடுவார்... ’

நாயகியைப் போலவே அங்கு ஆஜர் ஆனது சர்க்கஸ் பையன். ராஜகுமாரிக்கான ‘விக்’ கை மாட்டிக்கொண்டு பூவையும் கூந்தல் நிறைய வைத்துக் கொண்டான்.

அவன் தலைக்கு மேலே உள்ள ஒரு மெல்லிய ஊஞ்சலில், கம்பியை இரு கைகளாலும் பற்றிக் கொண்டு நாற்காலி மீது ஏறி நின்றார் நிஜ டி.ஆர். ராஜகுமாரி. அதுவும் ஒளிப்பதிவானது.

முழு நீளப் படம் திரையில் ஓடும் போது டி.ஆர். ராஜகுமாரியையும், பையனையும் மாற்றி மாற்றிக் காட்டி,

‘டி.ஆர். ராஜகுமாரி சர்க்கஸ் அழகியாக அற்புதமாக பார் ஆடுகிறார்... ’ என்ற பிரமையை ஏற்படுத்தினார் வாசன்.

கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகள்... முப்பது லட்சங்கள் செலவில் மிக பிரம்மாண்டமாகத் தயாராகியது சந்திரலேகா.

‘1948 தைத் திருநாள் வெளியீடு’ என்று முதல் கட்ட விளம்பரங்கள் பறை சாற்றின.

காந்தி எதிர்பாரமல் துப்பாக்கி குண்டுக்குப் பலியானார். வாசனை பெரும் வட்டிச் சுமை யானையாக அழுத்தியது. தேசிய துக்கம் காரணமாகத் தன் பட வெளியீட்டைத் தள்ளி வைத்தார்.

சந்திரலேகா - அன்றையத் தமிழ் சினிமாவின் ஒட்டு மொத்த அடையாளம். அதன் வெற்றி தோல்வியைப் பொறுத்தே படத் தொழிலின் ஜீவன் ஓடிக் கொண்டிருந்தது.

1948 ஏப்ரல் 9. சந்திரலேகா ரிலீஸ்.

‘காக்கி நாடாவிலிருந்து கொழும்பு வரை தென் இந்தியா முழுவதும் 50 தியேட்டர்களில் பிரதி தினமும் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட ரசிகர்கள் கண்டு களிக்கின்றனர்’ ‘ஜெமினியின் அற்புத சிருஷ்டி சந்திரலேகா’என்றெல்லாம் விளம்பரங்களுக்காகவும் லட்சக்கணக்கில் வாரி இறைத்தார் வாசன்.

சென்னையில் வெலிங்டன், ஸ்டார், கிரவுன், பிரபாத் என நான்கு தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடியது.

‘ஐம்பது அடி உயரத்திலிருந்து அநாயாசமாக பார் விளையாடும் அழகி சந்திரலேகா’ என சர்க்கஸ் காட்சிகளின் தொடக்கத்தில் எஸ்.எஸ். வாசனின் கம்பீரக் குரல் முழங்கும். அத்தனை ஈடுபாடு அவருக்குத் தன் படைப்பின் மீது!

தென்னகத் திரையில் அரை மணி நேரத்துக்கு சர்க்கஸ் காட்சிகளைக் காட்டிய முதல் படம்.

சினிமாவும் சர்க்கஸூம் வெவ்வேறு பொழுது போக்கு பொம்மலாட்டங்கள். ‘டாக்கிக்குள் சர்க்கஸ்’ என்பது அந்நாளில் மிகப் புதுமை!

தன் வாழ்க்கையையே பணயம் வைத்து எஸ்.எஸ். வாசன் தயாரித்தது சந்திரலேகா. சுதந்தர பாரதம் முழுமையிலும் வெற்றி முரசு கொட்டிய முதல் இந்திய சினிமா!

1944 ஆனந்த விகடன் தீபாவளி மலரில் இன்றைக்கும் காணக்கிடைக்கிறது சந்திரலேகாவின் ஆரம்ப விளம்பரம். சர்க்கஸ் அழகி ஒருத்தி குடை பிடித்து ஆடும் போஸ் அதில் உள்ளது.



தொடக்கத்தில் கே.எல். வி. வசந்தா என்கிற வள்ளிக்கண்ணுவை சந்திரலேகாவாக நடிக்க ஒப்பந்தம் செய்தார்கள். ஏனோ அவர் சேலத்துக்கு ரயில் ஏறி திருமதி டி.ஆர். சுந்தரம் (மாடர்ன் தியேட்டர்ஸ்) ஆகி விட்டார்.

பிறகு ‘ஜெமினி சாம்ராஜ்யத்தின் மகாராணி’ என அழைக்கப்பட்ட நடிகை புஷ்பவல்லி(இந்தி ஸ்டார் ரேகாவின் அம்மா) நடிப்பதாக இருந்தது.

சர்க்கஸ் காட்சிகளில் அணியும் உடைகள் ஆபாசமாக இருப்பதாக அவரது கணவர் அட்வகேட் ரங்காச்சாரி குறை கூற, வேறு ஆடைகளை அணிவிப்பதற்குப் பதிலாக ஆளையே மாற்றினார் வாசன்.

ஜெமினியின் அதிர்ஷ்டம் டி.ஆர். ராஜகுமாரியின் ‘சந்திரலேகா’ அவதாரம்!

தங்கத்தின் மதிப்பு பத்து ரூபாய் கூட பெறாத காலம். டி.ஆர். ராஜகுமாரியின் மாண்பு அறிந்து அவருக்கு ஒரு லட்ச ரூபாய் ஊதியம் வழங்கினார் எஸ்.எஸ்.வாசன்.

க்ளைமாக்ஸில் இடம் பெற்ற ட்ரம் டான்ஸைக் குறிப்பிடாமல் சந்திரலேகா பூரணத்துவம் பெறாது. நீண்ட நெடுங்காலம் பாடுபட்டு நூறு முரசங்களில் நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்க, நூறு ஷாட்களில், உருவானது. 40 அடி உயரத்தில் நாயகி டி.ஆர். ராஜகுமாரியையும் பிரம்மாண்டமான முரசு மீது ஏற்றி ஆடச் செய்து பிரமிப்பூட்டினார் வாசன்.

டி.ஆர். ராஜகுமாரி அதிக பட்ச கவர்ச்சி காட்டி நடித்த படம் சந்திரலேகா. பார் விளையாட்டுக் காட்சிகளைக் கண்டு விநியோகஸ்தர்கள் விழி பிதுங்கினார்கள்.

நிஜார் அணிந்த டி.ஆர்.ராஜகுமாரியின் தொடைகள் கருப்பு வெள்ளையில் கூட மின்னலாகத் தாக்கியது. அவற்றை நீக்கினால் மாத்திரமே கேரளத்தில் திரையிடுவேன் என்றார் ஜியோ பிக்சர்ஸ் என். எஸ். ஜார்ஜ்.

எம்டன் வாசன். சந்திரலேகாவுக்காகவே எர்ணாகுளத்தில் ஜெமினியின் புதிய விநியோக நிறுவனத்துக்கு விதையூன்றினார்.

மலையாள மண்ணில் தமிழனின் பெருமை பேசி, வசூலைக் குவித்த முதல் சாதனைச் சித்திரமாகச் சரித்திரம் படைத்தது.



ஆரம்பம் முதலே ஆண் ஆதிக்கம் நிறைந்தது சினிமா சமூகம். அதை உடைத்தெறிந்தார் ஜெமினி எஸ்.எஸ். வாசன்.

‘சந்திரலேகா’வில் டி.ஆர். ராஜகுமாரியின் பெயரை எடுத்த எடுப்பில் டைட்டிலின் முதலில் போட்டார்.

எம்.கே. ராதா -ரஞ்சன் என்று இரு பிரபல ஹீரோக்கள், ஆற்றல் மிக்கக் கதா பாத்திரங்களில் நடித்திருந்தும், டி.ஆர். ராஜகுமாரிக்காகவே தயாரிக்கப்பட்டதோ என்கிற பிரமிப்பைத் தோற்றுவித்தது சந்திரலேகா.

ஜெமினி ஸ்டுடியோவில் ராஜகுமாரிக்கென்று தனியாக ஒரு மேக் அப் அறையை ஒதுக்கி இருந்தார் வாசன். ஏராளமான காஸ்ட்யூம்களில் டி.ஆர். ராஜகுமாரியை வெகு அமர்க்களமாக ரசிகர்களின் பார்வைக்கு இட்டுச் சென்றார்.

‘டி.ஆர். ராஜகுமாரி மாராப்புத் துணி இல்லாமல், ‘டைட் ஃபிட்டிங்’ டிரஸ்ஸில் வந்து,‘மனமோகன தாரனே, மதனாங்க சுந்தர சிங்காரனே! ’ என்று வில்லன் ரஞ்சனை வளைத்துப் போட, உடலை நெளித்து சாகஸத்தை உல்லாசக் கண்களில் தேக்கி ஆடுவார்.

இன்னொரு காட்சியில் ரஞ்சனின் கையில் பிடித்த மீனைப் போல் டி.ஆர். ராஜகுமாரி வழுக்கி வழுக்கி விழ, அவரைக் கட்டி அணைக்க முடியாமல் களைத்துப் போய் பெருமூச்சு விடுவார் ரஞ்சன்!

என்று சந்திரலேகாவில் நிறைந்திருந்த சல்லாப சம்பவங்களை நினைவு கூர்ந்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் ‘பொம்மை’ சாரதி.

‘ஸ்வீட் ராஸ்கல்’ என்பார்கள் கன்னியர். தங்களிடம் புத்திசாலித்தனமாகக் குறும்பு செய்யும் வசீகர வாலிபர்களை. சந்திரலேகாவின் வில்லன் சஸாங்கன் அந்த ரகம்! அவ்வேடத்தில் ரஞ்சன் குமரிகளுக்குக் குதூகலமூட்டி, மனம் கவர்ந்த ஸ்வீட் ராஸ்கலாக வெள்ளைக் குதிரையில் வெற்றி பவனி வந்தார்.

சந்திரலேகாவில் டி.ஆர். ராஜகுமாரியிடம் அவர் பேசும் டயலாக் - ‘பார்த்து ரொம்ப நாளாச்சு...! ’அந்தரங்க அர்த்தங்களுடன் யுவதிகளை குஷிப்படுத்தியது.

கல்கத்தாவில் சந்திரலேகா ரிலிஸ். டி.ஆர். ராஜகுமாரி ரஸகுல்லாவாகி வங்கத்து இளைஞர்களையும் இனிக்க இனிக்க வதைத்தார்.

ஒவ்வொரு இளைஞனும் டி.ஆர். ராஜகுமாரியின் ஃபோட்டோக்களை ஒளித்து வைத்துக்கொண்டான்.

‘பாக்கெட்டில் இருந்து அதை வெளியே எடுத்துத் தங்களுக்கும் காட்ட மாட்டானா...’ என்று பெரிசுகள் ஏங்கியதாம்.

சந்திரலேகா குறித்த டி.ஆர். ராஜகுமாரியின் மலரும் நினைவுகள்-

‘தமிழ் நட்சத்திரமாக மட்டும் திகழ்ந்த என்னை அகில இந்திய ஸ்டாராக, ஏன்... சர்வதேச நட்சத்திரமாக ஆக்கியவர் எஸ்.எஸ். வாசன்.

சந்திரலேகா சினிமாவையும் அதன் படப்பிடிப்பையும் இப்போது நினைத்துக் கொண்டாலும் பிரமிப்பாகவே இருக்கிறது.

அவ்வளவு பெரிய துணிச்சலான முயற்சியை எவராலும் எடுத்துக் கொண்டிருக்க முடியாது. அதன் வெற்றிக்காக வாசன் அவர்கள் எதைச் சொன்னாலும் செய்யக் காத்திருந்தேன்.

‘சர்க்கஸ்காரியாக மாற வேண்டுமா, தயார்! மலை மேல் ஏற வேண்டுமா, ரெடி’ என்று எதையும் செய்யச் சித்தமாக இருந்தேன்.



அப்படி உழைத்ததில் ஓர் இன்பம் இருந்தது. அந்த உழைப்பிற்குத் தக்க பலனும் கிடைத்தது.

ஜெமினியில் சந்திரலேகாவை முடித்து விட்டு வெளியே வந்த போது, நிஜத்தில் ஒரு குடும்பத்தைப் பிரிந்து வருகிற நிலையில் இருந்தேன் நான். ’

--------------
‘வெள்ளித் திரையில் டி.ஆர். ராஜகுமாரியின் ராஜாங்கம்’ பற்றி, ‘குண்டூசி’ சினிமா இதழின் முதல் ஆண்டு விழா மலரில் ஆசிரியர் கோபால் எழுதியவை---

‘ஒன்பது வருஷங்களில் இதுவரை பதினாறு சினிமாக்களில் நடித்துள்ளார். நடுத்தர உயரமும், கருப்பு நிறமும், கலகலப்பற்ற சுபாவமும் உடையவர்.

எவரிடமும் அனாவசியமாக பேசித் தன் கவுரவத்தை இழக்க மாட்டார்.

சுமாரான குரல். பாட்டுத் திறமை உடையவர். சம்பாஷணைகளை கனகச்சிதமாக பேசவும், காதல் கட்டங்களில் ரஸமாக நடிக்கவும் கூடியவர்.

கவர்ச்சி மிக்க உடல் அமைப்பையும், எந்தக் கோணத்திலிருந்து எடுத்தாலும் அழகாகத் தெரியும் முகத் தோற்றத்தையும், வசீகரக் கண்களையும் பெற்றிருக்கிறார்.

டி.ஆர். ராஜகுமாரி ஸ்டார் ஆக இருக்க இவையே காரணம்! ’

JamesFague
18th January 2016, 01:38 PM
Courtesy:Tamil Hindu


காற்றில் கலந்த இசை 38: தேனிசை வெள்ளம்!






இளையராஜாவின் இசைக் குழுவில் கிட்டார் இசைக் கலைஞராகவும், பாடலாசிரியராகவும் பணிபுரிந்த கங்கை அமரன், பின்னர் இசையமைப்பாளராகவும் இயக்குநராகவும் வளர்ந்தார். அவர் இயக்கிய முதல் படம் ‘கோழி கூவுது’. கிராமம் அல்லது சிறுநகரங்களுக்குள் நடக்கும் கதைகள், எளிய கதை மாந்தர்களை வைத்துக்கொண்டு ரசிக்கத் தக்க படங்களை இயக்கினார் கங்கை அமரன்.

மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவனின் குரல் மிக விசேஷமானது. உற்சாகம் கொப்பளிக்கும் ஆர்ப்பாட்டமான பாடல்களை அத்தனை இயல்பாகப் பாடக்கூடியவர் அவர். மற்றொரு கோணமும் உண்டு. வெளித் தோற்றத்தில் இறுக்கமானவர்களாகத் தோன்றினாலும், உள்ளுக்குள் அன்பும் ரசனையும் கசிந்துகொண்டே இருக்கும் மனிதர்களுக்கும் பொருத்தமான குரல் அவருடையது. இப்படத்திலும் முரட்டு இளைஞராக வரும் பிரபுவுக்குப் பாடிய ‘பூவே இளைய பூவே’ பாடலில் இறுக்கத்தை உடைத்துக்கொண்டு இனிமையை ரசிக்கும் மனதை வெளிப்படுத்தியிருப்பார்.

பிரபு ஊரை விட்டு வெளியேறி ராணுவத்தில் சேர்ந்துவிடுவார். கிராமத்தில் உள்ள எழுதப்படிக்கத் தெரியாத தனது காதலிக்கு (சில்க்), தனது நம்பிக்கைக்குரிய சுரேஷ் மூலம் கடிதம் எழுதுவார். அக்கடித வரிகளிலிருந்தே பாடல் தொடங்கும். பின்னணியில் கிட்டார் ஒலிக்க, ‘தம்பி ராமகிருஷ்ணா(வ்) கூச்சப்படாமல் மற்றவைகளையும் படித்துக் காட்டவும்’ என்று அவர் சொல்வதைக் கேட்டுப்பாருங்கள். அதிகாரமும் அன்பும் மிளிரும் குரல் அது.

வயல்வெளிகள், ஓடைகள், தோப்புகள் என்று இயற்கையின் ஆசீர்வாதங்கள் நிறைந்த கிராமங்களில் வளர்ந்தவர்களுக்கு இளையராஜாவின் பல பாடல்கள் தங்கள் வாழ்வுடன் ஒன்றிய அம்சங்களாவே இருக்கின்றன. இந்தப் பாடலின் நிரவல் இசையின் கற்பனை வளம் மனதுக்குள் உருவாக்கும் காட்சிகள் அத்தனை பசுமையானவை.

மெல்ல அழைப்பது போன்ற குரலில் பாடலைத் தொடங்குவார் மலேசியா வாசுதேவன். பெருமிதமும், ஏகாந்தமும் நிறைந்த குரலில் ‘எனக்குத் தானே…’ என்று பல்லவியை அவர் முடித்ததும், ‘லலால’என்று பெண் குரல்களின் கோரஸ் ஒலிக்கும். துள்ளலான தாளக்கட்டு, இயற்கையை விரிக்கும் வயலின் இசைக்கோவை, பறவைகளின் இருப்பை உணர்த்தும் புல்லாங்குழல், நீர்நிலைகளைக் காட்சிப்படுத்தும் ஜலதரங்கம் என்று இசைக் கருவிகளாலேயே இயற்கையின் ஓவியத்தை உருவாக்கியிருப்பார் இளையராஜா.

இப்படத்தில் வரும் ‘அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே’ எனும் குழுப் பாடலை சாமுவேல் கிரப், தீபன் சக்கரவர்த்தி, வித்யாதர் ஆகியோர் பாடியிருப்பார்கள். ஊருக்குள் சுற்றித் திரியும் காதல் ஜோடியைப் பற்றி பிரபுவிடம் அரசல் புரசலாகப் புகார் செய்யும் பாடல் இது.

இப்படத்தின் மிக முக்கியமான பாடல் கிருஷ்ணசந்திரன், எஸ். ஜானகி பாடிய ‘ஏதோ மோகம், மலையாளத் திரையுலகில் நடிகராகவும் பாடகராகவும் அறிமுகமானவர் கிருஷ்ணசந்திரன். ஒப்புமை இல்லாத தனித்தக் குரல் கொண்டவர். ‘ஆனந்த மாலை’ (தூரத்துப் பச்சை), ‘பூவாடைக் காற்று’ (கோபுரங்கள் சாய்வதில்லை), ‘அள்ளி வச்ச மல்லிகையே’(இனிமை இதோ இதோ), ‘தென்றல் என்னை முத்தமிட்டது’ (ஒரு ஓடை நதியாகிறது) போன்ற அற்புதமான பாடல்களைப் பாடியவர். ‘ஏதோ மோகம்’ பாடலின் சிறப்பு, மேற்கத்திய செவ்வியல் இசையின் கூறுகளைக் கொண்டிருந்தாலும், தமிழகத்தின் கிராமியக் காட்சிகளை உருவாக்கும் அதன் தனித்தன்மைதான்.

மெல்ல உருக்கொண்டு திடீரென முகிழ்க்கும் எதிர்பாலின ஈர்ப்பைச் சித்தரிக்கும் பாடல். ஒற்றை வயலின், வயலின் சேர்ந்திசை, புல்லாங்குழல், பேஸ் கிட்டார் என்று இசைக் கருவிகளின் மூலம் ஐந்தரை நிமிடங்கள் கொண்ட ‘மினி’ பொற்காலத்தைப் படைத்திருப்பார் இளையராஜா. தேன் சொட்டும் ரகசியக் குரலில் ‘ஏதோ மோகம்…ஏதோ தாகம்’ என்று பாடலைத் தொடங்குவார் ஜானகி.

கூடவே ஒலிக்கும் ஹம்மிங்கையும் அவர்தான் பாடியிருப்பார். அவர் குரலில் வெவ்வேறு சுருதிகளில் பதிவுசெய்யப்பட்ட ஹம்மிங்குகளை ஒருமித்து ஒலிக்கச் செய்திருப்பார் இளையராஜா. முதல் நிரவல் இசையில் நீண்டுகொண்டே செல்லும் ஜலதரங்கத்தினூடே ஒலிக்கும் குழலிசையும், அதைத் தொடர்ந்து வரும் வயலின் இசைக்கோவையும் மனதை மிதக்கச் செய்யும். இரண்டாவது நிரவல் இசையில் வெள்ளத்தைத் திரட்டிக்கொண்டே முன்னேறிச் செல்லும் ஆற்று நீரின் ஓட்டத்தைப் போன்ற வயலின் இசைக்கோவையைத் தந்திருப்பார் ராஜா. நெல் வயல் ஒன்றில் நிகழ்த்தப்பட்ட சிம்பொனி இப்பாடல்!

இப்பாடலைப் பாடிய அனுபவம் குறித்து தற்போது திருவனந்தபுரத்தில் வசிக்கும் கிருஷ்ணசந்திரனைக் கேட்டேன். “பிரசாத் ஸ்டூடியோவின் 70 எம்.எம். தியேட்டரில் இப்பாடலை ஒலிப்பதிவு செய்தார் ராஜா சார். 24 ட்ராக்குகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இசைக் கருவிகளுடன் பாடலை உருவாக்கியிருந்தார். அப்போது இருந்த பிரம்மிப்பு இன்று வரை எனக்கு இருக்கிறது” என்றார் சிலிர்ப்புடன்.

கிருஷ்ணசந்திரனின் குரலில் தமிழில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட முதல் பாடல் இதுதான் (ஆனால், ‘பூவாடைக் காற்று’ பாடல்தான் முதலில் வெளியானது!). தமிழில் மிகக் குறைவான பாடல்களைப் பாடியிருந்தாலும் இதுபோன்ற அபூர்வப் பாடல்கள் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார் கிருஷ்ணசந்திரன்!

rajraj
24th January 2016, 06:51 AM
From ethirpaaraadhadhu

thiru muruga endru oru dharam sonnaaal...........

http://www.youtube.com/watch?v=4iuXwdopG7Y

rajeshkrv
30th January 2016, 03:46 AM
என்னாச்சு ரொம்ப நாளா சத்ததையே காணோம்..

நம்ம குடும்ப தலைவர் வாசு ஜி எங்கே அவர் வரலை உடனே ஒருத்தரும் ஒழுங்க வர்ரதில்லை.


சரி நம்மளாவது நிசப்தத்தை உடைப்போம்


https://www.youtube.com/watch?v=j-MCpBgvxNM

rajeshkrv
30th January 2016, 03:47 AM
நேற்று {15.01.2016} இரவு அன்பு நண்பர் நெய்வேலியாருடன் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. நீண்ட நாட்களாகத் திரிக்கு வராத காரணத்தால் ஒரு எதிர்பார்ப்புடன் இருந்ததில், அந்த உரையாடல் மிகவும் மகிழ்வூட்டியது. பணிச்சுமை மற்றும் வேலை பளுவாலும் வேறு பல காரணங்களாலும் திரியில் பங்கு கொள்ள இயலவில்லை எனக் கூறியவர், கூடிய விரைவில் இங்கு தொடர உள்ளதாகத் தெரிவித்தார்.

அவருக்கு நம் அனைவர் சார்பிலும் பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

ஆஹா பிரமாதம் இதுவே எனக்கு போதும் ஆஹாஹ்ஹா ஆஹ்ஹ்ஹா....

JamesFague
30th January 2016, 08:39 AM
Courtesy: Dinamani

டி.ஆர். ராஜகுமாரி: 3.கூண்டுக்கிளி !

1948--ல் டி.ஆர்.ராஜகுமாரியின் மற்றொரு ஜாக்பாட் கிருஷ்ணபக்தி. லேனா செட்டியாரின் ‘கிருஷ்ணா பிக்சர்ஸ்’ உருவாக்கிய உன்னதச் சித்திரம்!

ரஸ்புடினின் பிரெஞ்சு நாவல் ‘தி மான்க்’ அதைத் தமிழுக்கேற்றாற் போல் வெற்றிகரமாகப் படைத்திருந்தார் டைரக்டர் ஆர்.எஸ். மணி.

‘கண்ணகி’ போல் அவரது படைப்புகளில் மறக்க முடியாத ஓர் அற்புத சிருஷ்டி கிருஷ்ணபக்தி.

முதலில் ஸ்திரிலோலன் என்பதை மறைத்து வாழும் கபட சந்நியாசி, பிற்பாதியில் தவறை உணர்ந்து திருந்தும் ஸ்வாமிகள் என்று பி.யூ. சின்னப்பா சிறந்த நடிப்பின் சிகரத்தில் பின்னிப் பிணைந்து நின்றார்.

வழக்கமாகத் திரையில் வசீகரமான தாசியாக வலம் வந்து, தனது கற்கண்டு பேச்சாலும், காண்போர் மயங்கும் கண் கவர் ஆடைகளாலும், கண்களின் வீச்சாலும், குளிர்ச்சி தரும் சந்தனப் புன்னகையாலும், நாயகர்களை மோகவலையில் விழ வைத்து, மோசம் செய்து ஏமாற்றித் துடிதுடிக்கச் செய்வார் டி.ஆர். ராஜகுமாரி.

கிருஷ்ணபக்தியில் அவர் ராஜநர்த்தகி தேவகுமாரி! - டி.ஆர். ராஜகுமாரியின் அபார நடிப்பாற்றலை அரங்கேற்றிய அட்சயப்பாத்திரம்!



மன்னனின் மஞ்சத்தில் விழ வேண்டிய மந்தார மலர் ‘தேவா’ சரஸத்தை ஏற்க மறுத்து, பி.யூ. சின்னப்பாவைச் சரணடைவார் நாயகி.

‘சாரஸம் - வசீகர கண்கள் சீர் தரும் - முகம் சந்திர பிம்பம்’

‘செக்ஸ் சாமியார்’ பி.யூ. சின்னப்பா சொப்பனத்தில் ‘மோகனாங்கி’ டி.ஆர். ராஜகுமாரியை வர்ணித்துப் பாடிய, கேட்கத் தெவிட்டாத கானம்!

‘தட்டு வாணிக்குத் தாலி பாக்கியம் கிடையாது’ என்று வசனம் பேசி,

தேவதாசிகளின் அவலத்தைக் கண்ணீர் மல்கச் சொல்லிக் கதறிய டி.ஆர். ராஜகுமாரி ரசிகர்களுக்குப் புதுசு!

தன் ஆசைக்கு இணங்காத ஆடல் அரசியின் கற்பைப் பறிக்க முயல்கிறான் அரசன்.

மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேறு வழியின்றி தன் மான்விழிகளைக் கத்தியால் குத்திக்கொண்டு, குருடாகிறாள் ‘தேவா’.

துறவறமே சிறப்பு என்று வாழும் தேவாவுக்கு ‘பகவான் ஸ்ரீகிருஷ்ணர்’ பிரசன்னமாகி மீண்டும் கண் ஒளி தருகிறார்.

கிடைத்த அருமையான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி டி.ஆர்.ராஜகுமாரி குணச்சித்திர நடிப்பின் உச்சம் தொட்டார்.

இன்றைக்கும் அவ்வப்போது சின்னத் திரைகளில் அதிசயமாகக் காணக் கிடைக்கிறது கிருஷ்ணபக்தி. மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வண்ணம் அமைந்த டி.ஆர். ராஜகுமாரியின் மகத்தான வெற்றிச் சித்திரம்!

பட்சிராஜா ஸ்ரீராமுலு நாயுடுவின் மற்றொரு தயாரிப்பிலும் டி.ஆர். ராஜகுமாரிக்கு அழைப்பு வந்தது. சூப்பர் ஸ்டார்களுடன் மாத்திரமே நடிப்பேன் என்று ஒருபோதும் டி.ஆர். ராஜகுமாரி அடம் பிடித்ததில்லை.

டி.ஈ. வரதன் என்ற நடிகர் ஹீரோவாக நடிக்க, டி.ஆர். ராஜகுமாரி நாயகியாக ‘பவளக்கொடி’ சினிமாவில் நடித்தார். 1949 தமிழ்ப் புத்தாண்டில் வெளியானது.

டி.ஆர்.ராஜகுமாரி இரு வேடங்களில் முதலும் கடைசியுமாகத் தோன்றிய டாக்கி விஜயகுமாரி. ஜூபிடர் தயாரிப்பு. எம்.ஜி.ஆரை ஹீரோவாக்கிய ஏ.எஸ். ஏ. சாமியின் இயக்கத்தில் 1950ல் வெளியானது.



அண்ணாவின் ‘வேலைக்காரி’யை அடுத்து வெளியான ஜூபிடர் படம்.

வேலைக்காரி மாதிரி சமூக விழிப்புணர்வுச் சித்திரமாக அமையவில்லை. மாயாஜாலக் கதையாகப் போனதால் மக்கள் நிராகரித்தனர்.

டி.ஆர். ராஜகுமாரியுடனானத் தனது அனுபவங்களை ஏ.எஸ். ஏ. சாமி எழுதி இருக்கிறார்.-

‘ஒன்பது மணி கால்ஷீட்டுக்கு எட்டு ஐம்பத்தைந்துக்கெல்லாம் முழு மேக் அப்போடு செட்டுக்குள் தயாராக இருப்பார்.

யூனிட்டின் ஃபேனை எதிர்பார்த்துக் காத்திராமல், அவருடைய பிரத்யேக மின்விசிறியைச் சுழல விடுவார்.

ஷூட்டிங் முடிந்து வீட்டுக்குப் போகும் வரை டி.ஆர். ராஜகுமாரி நடந்து கொள்ளும் விதமும் அவரது பண்பாடும் இருக்கிறதே ... அப்பப்பா!

சினிமா ஸ்டார்கள் குறிப்பாக நடிகைகள் பலரிடமும் காண முடியாத ஒரு தனித்தன்மையோடு நடந்து கொள்வார்.

இத்தனைக்கும் அம்மையார் புகழின் உச்சத்தில் இருந்த சமயம்!

தனக்கான காட்சிகள் ஓவர் என்று டைரக்டர் கூறுகிற வரையில் சேரை விட்டு எழுந்தது இல்லை. அங்கும் இங்கும் போவது, அரங்குக்கு வெளியே சென்று அரட்டை அடித்துத் திரிவது அறவே கிடையாது.

யாராக இருப்பினும் ஒரு வார்த்தை கூட வீணாகப் பேச மாட்டார்.

படப்பிடிப்பு சமயத்தில் நான் எடுக்க இருக்கும் காட்சியைப் பற்றி, இது எதற்கு அது எதற்கு என்றெல்லாம் குறுக்கு கேள்விகள் இருக்காது.

வீண் விவாதத்தில் ஈடுபட்டு படப்பிடிப்பு நேரத்தையும், தயாரிப்பாளரின் முதலீட்டையும் விரயம் செய்ய மாட்டார்.

ஷூட்டிங்குக்கு வருவதற்கு முதல் நாளே ஏதாவது சந்தேகங்கள் தோன்றினால், இயக்குநரிடம் முழு விளக்கமும் கேட்டுக் கொள்வார். தன் இஷ்டத்துக்குக் கருத்து சொல்ல மாட்டார். தேவை இருந்தால் மாத்திரமே அபிப்ராயங்களைத் தெரிவிப்பார்.

டைரக்டர் சொல்கிற மாதிரி நடிப்பில் செயல்படுவதைத் தனது தலையாய கடமையாகக் கருதியவர் டி.ஆர். ராஜகுமாரி.

----------------

டி.ஆர். ராஜகுமாரியுடன் மனோன்மணி, பவளக்கொடி ஆகிய டாக்கிகளில் இடம் பெற்றார் டி.ஆர். மகாலிங்கம்.

டி.ஆர்.கள் இருவரும் முதன் முதலில் ஜோடி சேர்ந்து நடித்த படம் சிட்டாடலின் இதயகீதம்.

மக்கள் கலைஞர் ஜெய்சங்கரை அறிமுகப்படுத்திய ஜோசப் தளியத்தின் படைப்பு. இனிய பாடல்களுடன் கூடிய காதல் சித்திரம். வெற்றிகரமாக ஓடியது.

1951ல் டி.ஆர். ராஜகுமாரி- பி.யூ. சின்னப்பா நிறைவாக இணைந்து நடித்த வனசுந்தரி, 1952ல் டி.ஆர். ராஜகுமாரி முதலும் கடைசியுமாக பாகவதருடன் ஜோடி சேர்ந்த எம்.கே. டி.யின் தயாரிப்பு அமரகவி இரண்டும் தோல்வி அடைந்தன.

1953ல் டி.ஆர். ராஜகுமாரியுடன் நடித்து, சித்தூர் வி. நாகையா இசை அமைத்து உருவாக்கிய சிறந்த படைப்பு என் வீடு பிரமாதமாக ஓடியது.

அதே ஆண்டில் எம்.ஜி.ஆர்.- டி.ஆர்.ராஜகுமாரி தோன்றிய பணக்காரி’ வசூலில் வறுமையைத் தழுவியது.



1954 ன் மனோகரா. மார்ச் 3ல் வெளியாகி தமிழ் சினிமா வரலாற்றில் புதிய அத்தியாயம் படைத்தது.

தொடர்ந்து சில தோல்விகளைச் சந்தித்துப் பொருளாதார ரீதியில், மிகவும் நலிவடைந்தது ஜூபிடர். நன்றி மறவாமல் மனோகராவில் பங்கேற்று டி.ஆர். ராஜகுமாரி ஜூபிடரைக் கைத்தூக்கி விட்டார்.

டி.ஆர். ராஜகுமாரி பொது நிகழ்வுகளில் கலந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டவர் அல்ல.

தனது புகழ் பெற்ற சொந்தத் தியேட்டரில் மனோகராவை திரையிட்ட அன்று, ஈவினிங் ஷோவில் இன்டர்வெல் நேரத்தில்,

அவையில் தோன்றி ரசிகர்களுக்கு ‘அதிசயக் காட்சி’யும் அளித்தார் டி.ஆர். ராஜகுமாரி.

‘வசந்தசேனை’ வேடத்தில் டி.ஆர். ராஜகுமாரி நடித்திருக்காவிடின், மனோகராவுக்கு மாபெரும் வெற்றி வாய்த்திருக்காது!

1936ல் தயாரான மனோகரா ஓடவில்லை. மனோகரா நாடகத்தை எழுதிய பம்மல் சம்பந்த முதலியாரே அதில் மனோகரனாக நடித்திருந்தார்.

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளில் உருவான டி.ஆர். ராஜகுமாரி படம் மனோகரா மாத்திரமே.

நடிகர்திலகமும் ‘வசந்தசேனை’யாக அநேக முறை நாடகங்களில் நடித்திருக்கிறார்.

கணேசனின் கண் எதிரிலேயே ஆளை மயக்கும் காஸ்ட்யூமில், போதை வழியும் விழி அசைவில், புருவங்களை உயர்த்தி, புயலின் சீற்றத்தைச் செந்தமிழ் உதடுகளில் உயர்த்திப் பிடித்து ... டி.ஆர். ராஜகுமாரி புத்தம் புது வசந்தசேனையாக வடிவெடுத்தார்.

கதைப்படி மட்டுமல்லாமல் நடிப்பிலும் வீழ்த்தி விடுவாரோ சிவாஜியை...! என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார்.

அத்தனை எளிதில் மறக்க முடியுமா...! டி.ஆர்.ராஜகுமாரி எழிலாகத் தோன்றி வஞ்சக மொழி பேசி வசீகரிக்கும் முதல் காட்சியை...

‘நான் சிரித்தால் போதும்... சிம்மாசனமே கிடைக்கும். மயக்குகின்ற ஒரு பார்வையை வீசினால் இந்த மண்டலமே என் காலடியில்..!

நான் நினைத்தால் இப்போதே ராணி. என் மகன் வசந்தன் இளவரசன்’

மு. கருணாநிதியின் திரைக்கதை வசனத்தில் டி.ஆர். ராஜகுமாரி நடித்த முதல் படம் மனோகரா.

முந்தானை நுனியைக் கைகளில் சுற்றிக் கொண்டு மந்திர ஆலோசனை புரிவது டி.ஆர். ராஜகுமாரி ‘ஸ்டைல்’! மனோகராவிலும் அது மகிழ வைத்தது.

-------------
மனோகராவோடு நடிப்பதைக் குறைத்துக் கொண்டார் டி.ஆர். ராஜகுமாரி.

ஒவ்வொர் விடியலிலும் சூர்யோதயமாக டி.ஆர். ராஜகுமாரியின் முகம் பார்க்கும் சுற்றம். சம்சாரக் கப்பலை எந்த வித சேதாரமும் இன்றி கரை சேர்த்தாக வேண்டும்.

பல ஆண்டுகள் அரிதாரம் பூசி செயற்கை அனலில் பாடுபட்டு சம்பாதித்த காசு பணம்... தன் தம்பிக்காகத் தைரியமாகப் படத் தொழிலில் முதலீடு செய்தார்.

டி.ஆர். ராஜகுமாரி கனவுக்கன்னியாக மட்டும் வெற்றி பெறவில்லை. தரமான படத் தயாரிப்பாளராகவும் பிரமாதப்படுத்தினார்.

தனது தம்பி டி.ஆர். ராமண்ணாவை பிரபல டைரக்டராக்கி அழகு பார்த்தார். ராமண்ணாவுக்காக அக்கா ஆரம்பித்த நிறுவனம் ஆர்.ஆர். பிக்சர்ஸ்.

நெப்டியூன் ஸ்டுடியோவில் ஒலிப்பதிவாளர் ராமச்சந்திரன். இளைய சகோதரர்கள் ‘ராமு அண்ணா’ என்று சேர்த்து அழைக்க, ‘ராமண்ணா’வானார்.

‘அக்கா நடிக்கும் காட்சிகள் இன்னமும் தரமானவையாக இருந்திருக்கலாம்... ’ என்று தினந்தோறும் டி.ஆர். ராஜகுமாரியுடன் தர்க்கம் செய்வார் ராமண்ணா.

‘ராமு, டைரக்டர் எப்படி நடிக்கச் சொல்றாரோ... அப்படியே நடிக்கிறேன். என் படத்துக்கு நீயா டைரக்டர்...?

நீ சினிமா டைரக்டர் ஆகும் போது என் பெர்ஃபாமன்ஸ் எப்படியிருக்கணும்னு சொல்லு. அப்பப் பார்த்துக்கலாம்.

வெளியார் யாரும் நிச்சயம் உனக்குத் துணிஞ்சு டைரக்டர் சான்ஸ் தர மாட்டாங்க. நாமே சொந்தமாப் படம் தயாரிச்சா நீ சொல்றது நடக்கும்.

உன்னை டைரக்டராக ஆக்குறதுதான் அதுக்கு ஒரே வழி. ’

டி.ஆர். ராஜகுமாரிக்கு மூன்று தம்பிகள். 1.ராமச்சந்திரன் என்கிற ராமண்ணா 2. சக்கரவர்த்தி 3.பார்த்தசாரதி

இரண்டு தங்கைகள் சேதுலட்சுமி மற்றும் ரங்க நாயகி.

எஸ்.பி. எல். தனலட்சுமி கடைசி சித்தி. விகடயோகியில் டி.ஆர். ராஜகுமாரியுடன் நடித்த டி.எஸ். தமயந்தி ராஜகுமாரியின் பெரியம்மா பெண். சொந்தங்களில் முதலில் திரையில் முகம் காட்டியவர் அவரே.

டி.எஸ். தமயந்தியின் மகள் குசலகுமாரி. கூண்டுக்கிளியில் சிவாஜியின் காதலியாகவும், கல்கியின் கள்வனின் காதலியில் ‘தங்கை அபிராமியாகவும்’ நடித்திருப்பார். ஜெமினியின் அவ்வையாரில் இளைய அவ்வை.



நேற்றைய தமிழகத்தின் நாட்டிய நடிகை. கொஞ்சும் சலங்கையில் குமாரி கமலாவுடன் அவர் ஆடிய போட்டி நடனம் வெகு பிரபலம்.

கவர்ச்சி சுனாமிகளில் உடன்பிறப்புகளான ஜோதிலட்சுமியும் -ஜெயமாலினியும் டி.ஆர். ராஜகுமாரியின் கலைக் குடும்ப வாரிசுகளே!

அவர்கள் இருவரும் டி.ஆர். ராமண்ணாவால் முறையே பெரிய இடத்துப் பெண், தாலியா சலங்கையா ஆகிய படங்களில் அறிமுகமாயினர். டாக்டர் சிவா ரிலிசில் முந்திக் கொண்டு ஜெயமாலினிக்குப் புகழ் பெற்றுத் தந்தது.

மேற்கூறிய அனைவரும் டி.ஆர். ராஜகுமாரியின் கன்னியாகுமரி பவனத்தில் ஒன்றாக வாழ்ந்தனர்.

டி.ஆர். ராஜகுமாரியின் கடுமையான உழைப்பு அவர்கள் அனைவருக்கும் அடைக்கலம் தந்தது.

குசலகுமாரி முதுமையாலும் வறுமையாலும் அவதியுற்றதை அறிந்ததும், முதல்வர் ஜெயலலிதா கருணையுடன் வீடு ஒன்றை ஒதுக்கித் தந்து அவர் கண்ணீரைத் துடைத்தார் என்பது வரலாறு.

‘சாய்பாபாவை’ கும்பிட்டு விட்டு ஆர்.ஆர். பிக்சர்ஸ் தன் சரித்திரத்தைத் தொடங்கியது. முதலில் ’வாழப்பிறந்தவள்’ படத்துக்கு பூஜை போட்டார்கள்.

‘இதோ பார்... நான் உன் சிஸ்டர், அது இதுன்றதெல்லாம் வீட்டோட. செட்ல நீதான் கமாண்டர். நீ சொல்ற மாதிரிதான் நாங்க நடக்கணும்.

நடிக்கும் போது நான் ஏதாவது தவறா செஞ்சிட்டா அதைத் திருத்தறதுக்கு நீ தயங்கக் கூடாது. ஆர்ட்டிஸ்டை கண்டிக்கப் பின் வாங்கக் கூடாது.

உன் படம் நல்லா இல்லேன்னா... பாதிக்கப்படப் போற முதல் நபர் நீ தான்... அதைப் புரிஞ்சி நடந்துக்க. ’

கட்டளை போல் ஒலித்தது அக்கா டி.ஆர். ராஜகுமாரியின் கனிவான குரல்.

அடுத்து கூண்டுக்கிளி.

‘தம்பி உங்களைப் பட விஷயமாகப் பார்க்கணும்ங்கறான். எப்ப ப்ரீயா இருப்பிங்க? ’

போனில் கணேசனிடம் அப்பாயின்மெண்ட் கேட்டார் டி.ஆர்.ராஜகுமாரி.

டஜன் ஆண்டுகளுக்கும் மேலாக தனித்துத் தெரிந்த ஒரே உச்ச நட்சத்திரம். வலிய வந்து நடிக்கக் கேட்கும் வேளையில், கணேசனின் மனத்தில் கூடுதல் குற்றாலம்!

‘நீங்க தேடி வந்தால் தயாரிப்பாளர்- நடிகர் உறவுதான். நாமெல்லாம் கலைஞர்கள். ஒரே குடும்பம்ற உணர்வு வரணும். உங்க ஆபிசுக்கு நானே வரேன். ’

சிவாஜியிடம் கால்ஷீட் வாங்குவதற்காக அத்தனை ஸ்டுடியோ அதிபர்களும் கால் கடுக்கக் காத்து நிற்க, கணேசனோ ஆர்வத்துடன் ஆர்.ஆர். பிக்சர்ஸ் அலுவலகத்துக்குள் நுழைந்தார்.

ராமண்ணாவுக்கு ஒரே ஆச்சர்யம். சிவாஜி என்கிற சிங்கத்தை எப்படி சிறைப் படுத்துவது என்று சிந்தித்துக்கொண்டிருந்த சமயம். அவரே எதிரில் வந்து நின்றால்..!

நேரடியாக மேட்டருக்குச் சென்றார் ராமண்ணா. ’உங்களோட எம்.ஜி.ஆரும் நடிக்கிறார்! ’

‘நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஆக்ட் பண்ணி, ஒரு படம் வெற்றியடைஞ்சா அது இன்டஸ்ட்ரிக்கே நல்லதுதானே. ’

‘ அட்வான்ஸ் எவ்வளவு தரணும் நாங்க? ’

‘கொடுக்கிறதை வாங்கிக்க. கொடுக்கலன்னா கேட்காதேன்னு எங்கம்மா சொல்லிட்டாங்க. ’

நட்பு நாடி வந்த கணேசனிடம் வெள்ளி நாணயங்களை மழையாகப் பொழிந்தார் ராமண்ணா.

சிவாஜிக்கு முன்பே எம்.ஜி.ஆரை ஒப்பந்தம் செய்து விட்டார்.

‘நாம்’ படுதோல்வியால் வருந்தி நின்றார் எம்.ஜி.ஆர். உடனே அழைத்து உற்சாகப்படுத்தி வாய்ப்பும் கொடுத்தார் ராமண்ணா.

கூண்டுக்கிளியில் ஹீரோ சிவாஜி. அவரோடு நடிக்கப் போகிறோம் என்றதும் எம்.ஜி.ஆர் மெய்யாகவே மகிழ்ந்தார்.

அந்த இன்பத்தின் முனையில் முன் பணம் ஒரே ஒரு ரூபாய் போதும் என்றார்.

‘சினிமா பாஷையில் கேட்கிறார்... ’ என்றெண்ணி ராமண்ணா பெரிய நோட்டை எடுத்துக் கொடுத்தார்.

‘அய்யோ நான் கேட்டது ஒரே ஒரு ரூபாய். ஆயிரம் கிடையாது. ’ அடம் பிடித்து ஒரே ஒரு ரூபாய் அட்வான்ஸ் வாங்கிச் சென்றார்.

என்ன காரணத்தினாலோ சிவாஜி - எம்.ஜி.ஆரோடு, டி.ஆர். ராஜகுமாரி கூண்டுக்கிளியில் நாயகியாக நடிக்கவில்லை.

ஒரே படத்தில் இரு திலகங்களுடன் ராஜகுமாரியும் நடித்திருந்தால் இன்னமும் பரபரப்பாகப் பேசப்பட்டிருக்கும் கூண்டுக்கிளி.

எம்.ஜி.ஆர்.- சிவாஜி, இருவருக்கும் ராமண்ணா ஒரே ஊதியம் வழங்கினார். ஆளுக்குத் தலா இருபத்தைந்தாயிரம்!

JamesFague
30th January 2016, 08:39 AM
Courtesy: Dinamani

டி.ஆர். ராஜகுமாரி: 3.கூண்டுக்கிளி !

1948--ல் டி.ஆர்.ராஜகுமாரியின் மற்றொரு ஜாக்பாட் கிருஷ்ணபக்தி. லேனா செட்டியாரின் ‘கிருஷ்ணா பிக்சர்ஸ்’ உருவாக்கிய உன்னதச் சித்திரம்!

ரஸ்புடினின் பிரெஞ்சு நாவல் ‘தி மான்க்’ அதைத் தமிழுக்கேற்றாற் போல் வெற்றிகரமாகப் படைத்திருந்தார் டைரக்டர் ஆர்.எஸ். மணி.

‘கண்ணகி’ போல் அவரது படைப்புகளில் மறக்க முடியாத ஓர் அற்புத சிருஷ்டி கிருஷ்ணபக்தி.

முதலில் ஸ்திரிலோலன் என்பதை மறைத்து வாழும் கபட சந்நியாசி, பிற்பாதியில் தவறை உணர்ந்து திருந்தும் ஸ்வாமிகள் என்று பி.யூ. சின்னப்பா சிறந்த நடிப்பின் சிகரத்தில் பின்னிப் பிணைந்து நின்றார்.

வழக்கமாகத் திரையில் வசீகரமான தாசியாக வலம் வந்து, தனது கற்கண்டு பேச்சாலும், காண்போர் மயங்கும் கண் கவர் ஆடைகளாலும், கண்களின் வீச்சாலும், குளிர்ச்சி தரும் சந்தனப் புன்னகையாலும், நாயகர்களை மோகவலையில் விழ வைத்து, மோசம் செய்து ஏமாற்றித் துடிதுடிக்கச் செய்வார் டி.ஆர். ராஜகுமாரி.

கிருஷ்ணபக்தியில் அவர் ராஜநர்த்தகி தேவகுமாரி! - டி.ஆர். ராஜகுமாரியின் அபார நடிப்பாற்றலை அரங்கேற்றிய அட்சயப்பாத்திரம்!



மன்னனின் மஞ்சத்தில் விழ வேண்டிய மந்தார மலர் ‘தேவா’ சரஸத்தை ஏற்க மறுத்து, பி.யூ. சின்னப்பாவைச் சரணடைவார் நாயகி.

‘சாரஸம் - வசீகர கண்கள் சீர் தரும் - முகம் சந்திர பிம்பம்’

‘செக்ஸ் சாமியார்’ பி.யூ. சின்னப்பா சொப்பனத்தில் ‘மோகனாங்கி’ டி.ஆர். ராஜகுமாரியை வர்ணித்துப் பாடிய, கேட்கத் தெவிட்டாத கானம்!

‘தட்டு வாணிக்குத் தாலி பாக்கியம் கிடையாது’ என்று வசனம் பேசி,

தேவதாசிகளின் அவலத்தைக் கண்ணீர் மல்கச் சொல்லிக் கதறிய டி.ஆர். ராஜகுமாரி ரசிகர்களுக்குப் புதுசு!

தன் ஆசைக்கு இணங்காத ஆடல் அரசியின் கற்பைப் பறிக்க முயல்கிறான் அரசன்.

மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேறு வழியின்றி தன் மான்விழிகளைக் கத்தியால் குத்திக்கொண்டு, குருடாகிறாள் ‘தேவா’.

துறவறமே சிறப்பு என்று வாழும் தேவாவுக்கு ‘பகவான் ஸ்ரீகிருஷ்ணர்’ பிரசன்னமாகி மீண்டும் கண் ஒளி தருகிறார்.

கிடைத்த அருமையான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி டி.ஆர்.ராஜகுமாரி குணச்சித்திர நடிப்பின் உச்சம் தொட்டார்.

இன்றைக்கும் அவ்வப்போது சின்னத் திரைகளில் அதிசயமாகக் காணக் கிடைக்கிறது கிருஷ்ணபக்தி. மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வண்ணம் அமைந்த டி.ஆர். ராஜகுமாரியின் மகத்தான வெற்றிச் சித்திரம்!

பட்சிராஜா ஸ்ரீராமுலு நாயுடுவின் மற்றொரு தயாரிப்பிலும் டி.ஆர். ராஜகுமாரிக்கு அழைப்பு வந்தது. சூப்பர் ஸ்டார்களுடன் மாத்திரமே நடிப்பேன் என்று ஒருபோதும் டி.ஆர். ராஜகுமாரி அடம் பிடித்ததில்லை.

டி.ஈ. வரதன் என்ற நடிகர் ஹீரோவாக நடிக்க, டி.ஆர். ராஜகுமாரி நாயகியாக ‘பவளக்கொடி’ சினிமாவில் நடித்தார். 1949 தமிழ்ப் புத்தாண்டில் வெளியானது.

டி.ஆர்.ராஜகுமாரி இரு வேடங்களில் முதலும் கடைசியுமாகத் தோன்றிய டாக்கி விஜயகுமாரி. ஜூபிடர் தயாரிப்பு. எம்.ஜி.ஆரை ஹீரோவாக்கிய ஏ.எஸ். ஏ. சாமியின் இயக்கத்தில் 1950ல் வெளியானது.



அண்ணாவின் ‘வேலைக்காரி’யை அடுத்து வெளியான ஜூபிடர் படம்.

வேலைக்காரி மாதிரி சமூக விழிப்புணர்வுச் சித்திரமாக அமையவில்லை. மாயாஜாலக் கதையாகப் போனதால் மக்கள் நிராகரித்தனர்.

டி.ஆர். ராஜகுமாரியுடனானத் தனது அனுபவங்களை ஏ.எஸ். ஏ. சாமி எழுதி இருக்கிறார்.-

‘ஒன்பது மணி கால்ஷீட்டுக்கு எட்டு ஐம்பத்தைந்துக்கெல்லாம் முழு மேக் அப்போடு செட்டுக்குள் தயாராக இருப்பார்.

யூனிட்டின் ஃபேனை எதிர்பார்த்துக் காத்திராமல், அவருடைய பிரத்யேக மின்விசிறியைச் சுழல விடுவார்.

ஷூட்டிங் முடிந்து வீட்டுக்குப் போகும் வரை டி.ஆர். ராஜகுமாரி நடந்து கொள்ளும் விதமும் அவரது பண்பாடும் இருக்கிறதே ... அப்பப்பா!

சினிமா ஸ்டார்கள் குறிப்பாக நடிகைகள் பலரிடமும் காண முடியாத ஒரு தனித்தன்மையோடு நடந்து கொள்வார்.

இத்தனைக்கும் அம்மையார் புகழின் உச்சத்தில் இருந்த சமயம்!

தனக்கான காட்சிகள் ஓவர் என்று டைரக்டர் கூறுகிற வரையில் சேரை விட்டு எழுந்தது இல்லை. அங்கும் இங்கும் போவது, அரங்குக்கு வெளியே சென்று அரட்டை அடித்துத் திரிவது அறவே கிடையாது.

யாராக இருப்பினும் ஒரு வார்த்தை கூட வீணாகப் பேச மாட்டார்.

படப்பிடிப்பு சமயத்தில் நான் எடுக்க இருக்கும் காட்சியைப் பற்றி, இது எதற்கு அது எதற்கு என்றெல்லாம் குறுக்கு கேள்விகள் இருக்காது.

வீண் விவாதத்தில் ஈடுபட்டு படப்பிடிப்பு நேரத்தையும், தயாரிப்பாளரின் முதலீட்டையும் விரயம் செய்ய மாட்டார்.

ஷூட்டிங்குக்கு வருவதற்கு முதல் நாளே ஏதாவது சந்தேகங்கள் தோன்றினால், இயக்குநரிடம் முழு விளக்கமும் கேட்டுக் கொள்வார். தன் இஷ்டத்துக்குக் கருத்து சொல்ல மாட்டார். தேவை இருந்தால் மாத்திரமே அபிப்ராயங்களைத் தெரிவிப்பார்.

டைரக்டர் சொல்கிற மாதிரி நடிப்பில் செயல்படுவதைத் தனது தலையாய கடமையாகக் கருதியவர் டி.ஆர். ராஜகுமாரி.

----------------

டி.ஆர். ராஜகுமாரியுடன் மனோன்மணி, பவளக்கொடி ஆகிய டாக்கிகளில் இடம் பெற்றார் டி.ஆர். மகாலிங்கம்.

டி.ஆர்.கள் இருவரும் முதன் முதலில் ஜோடி சேர்ந்து நடித்த படம் சிட்டாடலின் இதயகீதம்.

மக்கள் கலைஞர் ஜெய்சங்கரை அறிமுகப்படுத்திய ஜோசப் தளியத்தின் படைப்பு. இனிய பாடல்களுடன் கூடிய காதல் சித்திரம். வெற்றிகரமாக ஓடியது.

1951ல் டி.ஆர். ராஜகுமாரி- பி.யூ. சின்னப்பா நிறைவாக இணைந்து நடித்த வனசுந்தரி, 1952ல் டி.ஆர். ராஜகுமாரி முதலும் கடைசியுமாக பாகவதருடன் ஜோடி சேர்ந்த எம்.கே. டி.யின் தயாரிப்பு அமரகவி இரண்டும் தோல்வி அடைந்தன.

1953ல் டி.ஆர். ராஜகுமாரியுடன் நடித்து, சித்தூர் வி. நாகையா இசை அமைத்து உருவாக்கிய சிறந்த படைப்பு என் வீடு பிரமாதமாக ஓடியது.

அதே ஆண்டில் எம்.ஜி.ஆர்.- டி.ஆர்.ராஜகுமாரி தோன்றிய பணக்காரி’ வசூலில் வறுமையைத் தழுவியது.



1954 ன் மனோகரா. மார்ச் 3ல் வெளியாகி தமிழ் சினிமா வரலாற்றில் புதிய அத்தியாயம் படைத்தது.

தொடர்ந்து சில தோல்விகளைச் சந்தித்துப் பொருளாதார ரீதியில், மிகவும் நலிவடைந்தது ஜூபிடர். நன்றி மறவாமல் மனோகராவில் பங்கேற்று டி.ஆர். ராஜகுமாரி ஜூபிடரைக் கைத்தூக்கி விட்டார்.

டி.ஆர். ராஜகுமாரி பொது நிகழ்வுகளில் கலந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டவர் அல்ல.

தனது புகழ் பெற்ற சொந்தத் தியேட்டரில் மனோகராவை திரையிட்ட அன்று, ஈவினிங் ஷோவில் இன்டர்வெல் நேரத்தில்,

அவையில் தோன்றி ரசிகர்களுக்கு ‘அதிசயக் காட்சி’யும் அளித்தார் டி.ஆர். ராஜகுமாரி.

‘வசந்தசேனை’ வேடத்தில் டி.ஆர். ராஜகுமாரி நடித்திருக்காவிடின், மனோகராவுக்கு மாபெரும் வெற்றி வாய்த்திருக்காது!

1936ல் தயாரான மனோகரா ஓடவில்லை. மனோகரா நாடகத்தை எழுதிய பம்மல் சம்பந்த முதலியாரே அதில் மனோகரனாக நடித்திருந்தார்.

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளில் உருவான டி.ஆர். ராஜகுமாரி படம் மனோகரா மாத்திரமே.

நடிகர்திலகமும் ‘வசந்தசேனை’யாக அநேக முறை நாடகங்களில் நடித்திருக்கிறார்.

கணேசனின் கண் எதிரிலேயே ஆளை மயக்கும் காஸ்ட்யூமில், போதை வழியும் விழி அசைவில், புருவங்களை உயர்த்தி, புயலின் சீற்றத்தைச் செந்தமிழ் உதடுகளில் உயர்த்திப் பிடித்து ... டி.ஆர். ராஜகுமாரி புத்தம் புது வசந்தசேனையாக வடிவெடுத்தார்.

கதைப்படி மட்டுமல்லாமல் நடிப்பிலும் வீழ்த்தி விடுவாரோ சிவாஜியை...! என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார்.

அத்தனை எளிதில் மறக்க முடியுமா...! டி.ஆர்.ராஜகுமாரி எழிலாகத் தோன்றி வஞ்சக மொழி பேசி வசீகரிக்கும் முதல் காட்சியை...

‘நான் சிரித்தால் போதும்... சிம்மாசனமே கிடைக்கும். மயக்குகின்ற ஒரு பார்வையை வீசினால் இந்த மண்டலமே என் காலடியில்..!

நான் நினைத்தால் இப்போதே ராணி. என் மகன் வசந்தன் இளவரசன்’

மு. கருணாநிதியின் திரைக்கதை வசனத்தில் டி.ஆர். ராஜகுமாரி நடித்த முதல் படம் மனோகரா.

முந்தானை நுனியைக் கைகளில் சுற்றிக் கொண்டு மந்திர ஆலோசனை புரிவது டி.ஆர். ராஜகுமாரி ‘ஸ்டைல்’! மனோகராவிலும் அது மகிழ வைத்தது.

-------------
மனோகராவோடு நடிப்பதைக் குறைத்துக் கொண்டார் டி.ஆர். ராஜகுமாரி.

ஒவ்வொர் விடியலிலும் சூர்யோதயமாக டி.ஆர். ராஜகுமாரியின் முகம் பார்க்கும் சுற்றம். சம்சாரக் கப்பலை எந்த வித சேதாரமும் இன்றி கரை சேர்த்தாக வேண்டும்.

பல ஆண்டுகள் அரிதாரம் பூசி செயற்கை அனலில் பாடுபட்டு சம்பாதித்த காசு பணம்... தன் தம்பிக்காகத் தைரியமாகப் படத் தொழிலில் முதலீடு செய்தார்.

டி.ஆர். ராஜகுமாரி கனவுக்கன்னியாக மட்டும் வெற்றி பெறவில்லை. தரமான படத் தயாரிப்பாளராகவும் பிரமாதப்படுத்தினார்.

தனது தம்பி டி.ஆர். ராமண்ணாவை பிரபல டைரக்டராக்கி அழகு பார்த்தார். ராமண்ணாவுக்காக அக்கா ஆரம்பித்த நிறுவனம் ஆர்.ஆர். பிக்சர்ஸ்.

நெப்டியூன் ஸ்டுடியோவில் ஒலிப்பதிவாளர் ராமச்சந்திரன். இளைய சகோதரர்கள் ‘ராமு அண்ணா’ என்று சேர்த்து அழைக்க, ‘ராமண்ணா’வானார்.

‘அக்கா நடிக்கும் காட்சிகள் இன்னமும் தரமானவையாக இருந்திருக்கலாம்... ’ என்று தினந்தோறும் டி.ஆர். ராஜகுமாரியுடன் தர்க்கம் செய்வார் ராமண்ணா.

‘ராமு, டைரக்டர் எப்படி நடிக்கச் சொல்றாரோ... அப்படியே நடிக்கிறேன். என் படத்துக்கு நீயா டைரக்டர்...?

நீ சினிமா டைரக்டர் ஆகும் போது என் பெர்ஃபாமன்ஸ் எப்படியிருக்கணும்னு சொல்லு. அப்பப் பார்த்துக்கலாம்.

வெளியார் யாரும் நிச்சயம் உனக்குத் துணிஞ்சு டைரக்டர் சான்ஸ் தர மாட்டாங்க. நாமே சொந்தமாப் படம் தயாரிச்சா நீ சொல்றது நடக்கும்.

உன்னை டைரக்டராக ஆக்குறதுதான் அதுக்கு ஒரே வழி. ’

டி.ஆர். ராஜகுமாரிக்கு மூன்று தம்பிகள். 1.ராமச்சந்திரன் என்கிற ராமண்ணா 2. சக்கரவர்த்தி 3.பார்த்தசாரதி

இரண்டு தங்கைகள் சேதுலட்சுமி மற்றும் ரங்க நாயகி.

எஸ்.பி. எல். தனலட்சுமி கடைசி சித்தி. விகடயோகியில் டி.ஆர். ராஜகுமாரியுடன் நடித்த டி.எஸ். தமயந்தி ராஜகுமாரியின் பெரியம்மா பெண். சொந்தங்களில் முதலில் திரையில் முகம் காட்டியவர் அவரே.

டி.எஸ். தமயந்தியின் மகள் குசலகுமாரி. கூண்டுக்கிளியில் சிவாஜியின் காதலியாகவும், கல்கியின் கள்வனின் காதலியில் ‘தங்கை அபிராமியாகவும்’ நடித்திருப்பார். ஜெமினியின் அவ்வையாரில் இளைய அவ்வை.



நேற்றைய தமிழகத்தின் நாட்டிய நடிகை. கொஞ்சும் சலங்கையில் குமாரி கமலாவுடன் அவர் ஆடிய போட்டி நடனம் வெகு பிரபலம்.

கவர்ச்சி சுனாமிகளில் உடன்பிறப்புகளான ஜோதிலட்சுமியும் -ஜெயமாலினியும் டி.ஆர். ராஜகுமாரியின் கலைக் குடும்ப வாரிசுகளே!

அவர்கள் இருவரும் டி.ஆர். ராமண்ணாவால் முறையே பெரிய இடத்துப் பெண், தாலியா சலங்கையா ஆகிய படங்களில் அறிமுகமாயினர். டாக்டர் சிவா ரிலிசில் முந்திக் கொண்டு ஜெயமாலினிக்குப் புகழ் பெற்றுத் தந்தது.

மேற்கூறிய அனைவரும் டி.ஆர். ராஜகுமாரியின் கன்னியாகுமரி பவனத்தில் ஒன்றாக வாழ்ந்தனர்.

டி.ஆர். ராஜகுமாரியின் கடுமையான உழைப்பு அவர்கள் அனைவருக்கும் அடைக்கலம் தந்தது.

குசலகுமாரி முதுமையாலும் வறுமையாலும் அவதியுற்றதை அறிந்ததும், முதல்வர் ஜெயலலிதா கருணையுடன் வீடு ஒன்றை ஒதுக்கித் தந்து அவர் கண்ணீரைத் துடைத்தார் என்பது வரலாறு.

‘சாய்பாபாவை’ கும்பிட்டு விட்டு ஆர்.ஆர். பிக்சர்ஸ் தன் சரித்திரத்தைத் தொடங்கியது. முதலில் ’வாழப்பிறந்தவள்’ படத்துக்கு பூஜை போட்டார்கள்.

‘இதோ பார்... நான் உன் சிஸ்டர், அது இதுன்றதெல்லாம் வீட்டோட. செட்ல நீதான் கமாண்டர். நீ சொல்ற மாதிரிதான் நாங்க நடக்கணும்.

நடிக்கும் போது நான் ஏதாவது தவறா செஞ்சிட்டா அதைத் திருத்தறதுக்கு நீ தயங்கக் கூடாது. ஆர்ட்டிஸ்டை கண்டிக்கப் பின் வாங்கக் கூடாது.

உன் படம் நல்லா இல்லேன்னா... பாதிக்கப்படப் போற முதல் நபர் நீ தான்... அதைப் புரிஞ்சி நடந்துக்க. ’

கட்டளை போல் ஒலித்தது அக்கா டி.ஆர். ராஜகுமாரியின் கனிவான குரல்.

அடுத்து கூண்டுக்கிளி.

‘தம்பி உங்களைப் பட விஷயமாகப் பார்க்கணும்ங்கறான். எப்ப ப்ரீயா இருப்பிங்க? ’

போனில் கணேசனிடம் அப்பாயின்மெண்ட் கேட்டார் டி.ஆர்.ராஜகுமாரி.

டஜன் ஆண்டுகளுக்கும் மேலாக தனித்துத் தெரிந்த ஒரே உச்ச நட்சத்திரம். வலிய வந்து நடிக்கக் கேட்கும் வேளையில், கணேசனின் மனத்தில் கூடுதல் குற்றாலம்!

‘நீங்க தேடி வந்தால் தயாரிப்பாளர்- நடிகர் உறவுதான். நாமெல்லாம் கலைஞர்கள். ஒரே குடும்பம்ற உணர்வு வரணும். உங்க ஆபிசுக்கு நானே வரேன். ’

சிவாஜியிடம் கால்ஷீட் வாங்குவதற்காக அத்தனை ஸ்டுடியோ அதிபர்களும் கால் கடுக்கக் காத்து நிற்க, கணேசனோ ஆர்வத்துடன் ஆர்.ஆர். பிக்சர்ஸ் அலுவலகத்துக்குள் நுழைந்தார்.

ராமண்ணாவுக்கு ஒரே ஆச்சர்யம். சிவாஜி என்கிற சிங்கத்தை எப்படி சிறைப் படுத்துவது என்று சிந்தித்துக்கொண்டிருந்த சமயம். அவரே எதிரில் வந்து நின்றால்..!

நேரடியாக மேட்டருக்குச் சென்றார் ராமண்ணா. ’உங்களோட எம்.ஜி.ஆரும் நடிக்கிறார்! ’

‘நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஆக்ட் பண்ணி, ஒரு படம் வெற்றியடைஞ்சா அது இன்டஸ்ட்ரிக்கே நல்லதுதானே. ’

‘ அட்வான்ஸ் எவ்வளவு தரணும் நாங்க? ’

‘கொடுக்கிறதை வாங்கிக்க. கொடுக்கலன்னா கேட்காதேன்னு எங்கம்மா சொல்லிட்டாங்க. ’

நட்பு நாடி வந்த கணேசனிடம் வெள்ளி நாணயங்களை மழையாகப் பொழிந்தார் ராமண்ணா.

சிவாஜிக்கு முன்பே எம்.ஜி.ஆரை ஒப்பந்தம் செய்து விட்டார்.

‘நாம்’ படுதோல்வியால் வருந்தி நின்றார் எம்.ஜி.ஆர். உடனே அழைத்து உற்சாகப்படுத்தி வாய்ப்பும் கொடுத்தார் ராமண்ணா.

கூண்டுக்கிளியில் ஹீரோ சிவாஜி. அவரோடு நடிக்கப் போகிறோம் என்றதும் எம்.ஜி.ஆர் மெய்யாகவே மகிழ்ந்தார்.

அந்த இன்பத்தின் முனையில் முன் பணம் ஒரே ஒரு ரூபாய் போதும் என்றார்.

‘சினிமா பாஷையில் கேட்கிறார்... ’ என்றெண்ணி ராமண்ணா பெரிய நோட்டை எடுத்துக் கொடுத்தார்.

‘அய்யோ நான் கேட்டது ஒரே ஒரு ரூபாய். ஆயிரம் கிடையாது. ’ அடம் பிடித்து ஒரே ஒரு ரூபாய் அட்வான்ஸ் வாங்கிச் சென்றார்.

என்ன காரணத்தினாலோ சிவாஜி - எம்.ஜி.ஆரோடு, டி.ஆர். ராஜகுமாரி கூண்டுக்கிளியில் நாயகியாக நடிக்கவில்லை.

ஒரே படத்தில் இரு திலகங்களுடன் ராஜகுமாரியும் நடித்திருந்தால் இன்னமும் பரபரப்பாகப் பேசப்பட்டிருக்கும் கூண்டுக்கிளி.

எம்.ஜி.ஆர்.- சிவாஜி, இருவருக்கும் ராமண்ணா ஒரே ஊதியம் வழங்கினார். ஆளுக்குத் தலா இருபத்தைந்தாயிரம்!

JamesFague
30th January 2016, 08:42 AM
Courtesy: Tamil Hindu

நினைவுகளின் சிறகுகள்: தாய்மையின் குரல்! - எஸ். வரலட்சுமி



‘ஐந்தாவதாகப் பெண் பிறந்தால் அதிர்ஷ்டம்!’ என்றார்கள் மூத்த குடிகள். வரலட்சுமியின் பெற்றோர் தங்களின் கடைசி, ஐந்தாவது மகளைத் தத்துக்கொடுத்துவிட்டார்கள். குழந்தையில்லாத கர்நூல் பெரியம்மாவின் சுவீகாரப் புத்திரி வரலட்சுமியை, பெரியப்பா - ரங்கப்ப நாயுடு கானக் குயிலாக வளர்த்தார்.

“பெரியப்பா எல்லாத்துலயும் எனக்குச் செல்லம் கொடுப்பாரு. ஆனா சங்கீதப் பயிற்சியில கொஞ்சமும் கருணை காட்ட மாட்டார். காலையில நாலு மணிக்கு எழுந்து பாட்டு பாடலைன்னா காதைப் பிடிச்சித் திருகிடுவாரு. காது மடல் செவந்து கன்னிப்போயிரும். ஒரு பானையில் தண்ணி கொட்டி அதுல ஐஸ் கட்டிகளை மிதக்க விடுவார். குடத்தை அணைச்சபடி நான் பாடணும்.

பானையோட ஜிலுஜிலுப்பு என் நெஞ்சுல பட்டதும் ஒரு உதறல் வரும். பாடும்போது குரலே புதுசாகிப் பல சங்கதிகள் உருவாகும். அப்படியெல்லாம் கஷ்டப்பட்டு பயிற்சி பண்ணியிருக்கேன்” என்று எஸ். வரலட்சுமி சொல்லியிருக்கிறார்.

இரண்டு பாடல்கள்

கே. சுப்ரமணியத்தின் ‘சேவா சதனம்’ டாக்கியில் பத்து வயதில் எம்.எஸ். சுப்புலட்சுமியுடன் பாடி நடிக்கத் தொடங்கியவர் வரலட்சுமி. நிறைவாக கமல் ஹாஸனின் ‘குணா’வில் மாறுபட்ட அம்மாவாகத் தோன்றி, ‘உன்னை நானறிவேன்... என்னை அன்றி யார் அறிவார்...’ என்று அவர் பாடியது இளையராஜாவின் இசையில் தாய்மையின் குரலாக ஒலித்தது.

வரலட்சுமி திரையில் பாடி நடித்த இரு தாலாட்டுகள் சென்ற நூற்றாண்டுத் தமிழச்சிகளின் தாய் வீட்டு சீதனங்கள்!

1.சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே... ( படம் - வீரபாண்டிய கட்டபொம்மன் - கு. மா.பாலசுப்ரமணியம் பாடல் - இசை ஜி.ராமநாதன்)

2. ‘இந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப் பூவில் நான் தொட்டிலைக் கட்டி வைத்தேன்’ (படம் - நீதிக்குத் தலை வணங்கு; புலமைப்பித்தன் பாடல்; இசை எம்.எஸ். விஸ்வநாதன்) .

கட்டபொம்மனின் போட்டிப் படம் கண்ணதாசனின் ‘சிவகங்கைச் சீமை’. பரபரப்பான சூழலில் இரண்டிலும் ஒரே சமயத்தில் வரலட்சுமி பாடி நாயகியாக நடித்திருக்கிறார். ‘தென்றல் வந்து வீசாதோ... தெம்மாங்கு பாடாதோ...’ என்று ‘சிவகங்கைச் சீமை’யில் வரலட்சுமி பாடிக் கண்ணீரைச் சிந்திய தாலாட்டில், கவிஞரின் மண்ணின் மணமும் நாட்டுப்பற்றும் வேர் பிடித்து நின்றன. கனிவும் கம்பீரமும் தண்டவாளங்களாகத் தாங்கி நிற்க, வரலட்சுமியின் குரலில், நம் செவிகளில் வந்து சேர்ந்த சுக ராக ரயில்கள் ஏராளம்!

தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட பாடகி- நடிகைகளில் கணீர் கணீரென்று அட்சர சுத்தமாகத் தமிழை உச்சரித்தவர் எஸ். வரலட்சுமி மட்டுமே!

திரையிசைக்குத் தேசிய விருது

‘ஏமாற்றம்தானா என் வாழ்விலே’ என்று வரலட்சுமி சினிமாவுக்காகப் பாடியது சீக்கிரத்திலேயே பலித்தது. வரலட்சுமியின் நட்சத்திரப் பரமபதத்தில் அவர் ஏறிய ஏணிகளை விட, அவரது சங்கீதம் சாகடிக்கப்பட்ட தருணங்களே அதிகம். பாடல் பறிபோனதற்காக எஸ். வரலட்சுமியோடு சேர்ந்து கலைவாணரே வருந்திய நிகழ்வும் உண்டு.

நடிகர் திலகத்துடன் எஸ். வரலட்சுமி பாடி நடித்தவை, அவரை இருட்டடிப்பு செய்யாமல் பேரும் புகழும் பெற்றுத்தந்தன. 1959ல் தமிழின் முதல் சரித்திரப் படமான ‘வீரபாண்டிய கட்டபொம்ம’னின் ‘பட்டமகிஷி ஜக்கம்மா’வாக நடித்து அவர் பாடிய ‘மனம் கனிந்தருள் வேல் முருகா’ பார்ப்போர், கேட்போர் உள்ளத்தை உருக்கியது.

1967-ல் தமிழ்த் திரை இசைக்கு முதல் தேசிய விருதைப் பெற்றுத்தந்த ’கந்தன் கருணை’யில் இந்திராணியாக, கே.வி. மகாதேவனின் இசையில் (‘வெள்ளி மலை மன்னவா’), சிம்மக்குரலோன் ஜேம்ஸ்பாண்டாக நடித்த ஒரே வண்ணப் படம் 1969-ன் ‘தங்கச் சுரங்கம்’. அதில் தாயாக (‘பெற்ற மனம் சிறையிலே’) , 1973-ல் முதல் சினிமாஸ்கோப் வண்ணச் சித்திரமான ‘ராஜராஜ சோழ’னில் - பெரிய குந்தவையாக (ஏடு தந்தானடி தில்லையிலே, தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே!), 1974ல் சிவாஜி நடித்த கடைசி கருப்பு-வெள்ளை சினிமா ‘தாய்.’

அதில் நாயகனின் அம்மாவாக (’மங்கலம் காப்பாய் சிவசக்தி என் மாங்கல்யம் காப்பாய் சிவசக்தி’) ஆகிய பாடல்கள் அவரது குரலில் ஆன்மிக இனிமையின் உச்சமாக நேற்றைய வெள்ளிக் கிழமைகளில் விவித பாரதியில் தவறாது ஒலித்தது.

இரண்டாவது இன்னிங்ஸ்

1979-ல் சிவாஜி கணேசனின் 201-வது படம் கவரிமான். அதில் நாயகனின் அன்னையாக - பிரபலமான கர்நாடக இசைப் பாடகியாக எஸ். வரலட்சுமி! இளையராஜாவின் இசையில், மகாகவி பாரதியின் ‘சொல்ல வல்லாயோ கிளியே’ கவிதையைப் பாடினார்.

ஜெயலலிதாவின் பேரன்பைப் பெற்ற ‘அமர’ தீபங்களில் வரலட்சுமியும் ஒருவர். ‘மாட்டுக்கார வேலன்’, ‘சவாலே சமாளி’, ‘ஆதிபராசக்தி’ ஆகிய வெற்றிப் படங்களில் இருவரும் இணைந்து நடித்திருக்கிறார்கள். 1968-ல் ‘மீனாட்சி’ என்கிற ஆணவமிக்க சீமாட்டியாக, வரலட்சுமியின் அட்டகாச நடிப்பில் வெள்ளி விழா கொண்டாடியது கே.எஸ். ஜியின் ‘பணமா பாசமா.’

வரலட்சுமியின் நடிப்பாற்றலை முதலீடாகக் கொண்டு உடனடியாக, 1969-ல் கே.பாலசந்தரும் ‘பூவா தலையா’ 100 நாள் படம் கண்டார். கே.பி.யின் ‘காவியத்தலைவி’ போன்ற வெள்ளி விழா சினிமாக்களிலும் வரலட்சுமியின் பங்களிப்பு உண்டு. முதல் சுற்றைக் காட்டிலும் இரண்டாம் இன்னிங்ஸில் வரலட்சுமி நன்கு பிரகாசித்தார். ‘பணமா பாசமா’வில் வரலட்சுமியை இரும்பு மனுஷியாகக் காட்டியவர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.

தனது மிக பிரம்மாண்ட புராணச் சித்திரமான ‘ஆதிபராசக்தி’யில், தயையும் கருணையும் ததும்பும் லோக மாதாவாக வரலட்சுமியைக் கூடு விட்டுக் கூடு பாய வைத்தார். வரலட்சுமியை ‘அம்பாளாக’ ஏற்றுக்கொண்டனர் மக்கள். 1971-ன் தீபாவளி வெளியீடான ‘ஆதிபராசக்தி’ அமோக வசூலோடு வெள்ளிவிழா கொண்டாடியது.

எம்.கே. தியாகராஜபாகவதர் (சியாமளா), பி.யூ. சின்னப்பா (வனசுந்தரி), டி.ஆர். மகாலிங்கம் (மச்ச ரேகை) ஆகிய முன்னாள் மூன்று சூப்பர் ஸ்டார்களுடனும் இணைந்து நடித்து உடன் பாடிடும் வாய்ப்பையும் பெற்றவர் வரலட்சுமி.

‘ஜெமினி’ வெளியீடான ‘சதி முரளி’ டாக்கியில் நடித்தபோது அரும்பியது டி.ஆர். மகாலிங்கம் - வரலட்சுமியின் தோழமை. சில ஆண்டுகளுக்குப் பின்னர் இருவரும் வாழ்விலும் இணைந்தார்கள். மகாலிங்கம் மறைந்த பின்னர் கண்ணதாசனின் அண்ணன் - பட அதிபர் ஏ.எல். ஸ்ரீநிவாசனுடன் வாழ்வில் இணைந்தார் வரலட்சுமி. இத்தம்பதிக்கு இரு பிள்ளைகள். தமது 82 வயதில் சென்னையில் மறைந்த வரலட்சுமியின் குரலும் நடிப்பும் மறையவே மறையாது.

JamesFague
30th January 2016, 08:44 AM
Courtesy: Tamil Hindu

காற்றில் கலந்த இசை 40: இசை என்றொரு பெரும் வரம்!


திரைக்கதையின் நிகழ்வுகளுக்கேற்ப பொருத்தமான பாடல்கள் ஒலிப்பது இந்தியத் திரையுலகின் தொடக்கத்திலிருந்தே தொடர்ந்துவரும் மரபுதான். பரஸ்பரம் தங்கள் கலை வெளிப்பாட்டுடன் பகிர்ந்துகொண்டதன் மூலம், அந்த மரபின் செழுமையை, அதன் உள்ளார்ந்த அர்த்தத்தை ரசிகர்களுக்கு உணர்த்திய மேதைகள் இளையராஜாவும் மகேந்திரனும்.

இக்கூட்டணியின் முக்கியமான படைப்பு 1980-ல் வெளியான ‘ஜானி’. மகேந்திரன், இளையராஜா, ரஜினி என்று ‘முள்ளும் மலரும்’ படத்தின் வெற்றிக் கூட்டணி இப்படத்தில் மீண்டும் அமைந்தது. இவர்களுடன், இந்திரனின் மோதிரத்தைத் தவற விட்டுவிட்டதால் பூமிக்கு வர நேர்ந்த தேவதையான தேவியும் இணைந்துகொண்டார். ஐந்து பாடல்கள், படத்தின் மவுனங்களுக்கு இடையில் இழைந்தோடும் பின்னணி இசைக்கோவை என்று தேனில் தோய்த்தெடுத்த இசையை வழங்கியிருந்தார் இளையராஜா.

படத்தின் தொடக்கப் பாடலான ‘ஒரு இனிய மனது’ பாடல் சுஜாதா பாடியது. அமைதியைக் குலைத்துவிடாத மென் குரலில் ‘லால..லாலலா..லாலலா’ எனும் ஹம்மிங்; வழிந்தோடும் ஒற்றை வயலின் என்று முகப்பு இசையே பாடலின் தன்மையைச் சொல்லிவிடும். பல்லவியைத் தொடர்ந்து துயரங்களைக் கரையவிடும் ஒற்றை வயலின் ஒலிக்கும். ஐரோப்பிய கிராமத்தின் வனப்பை விரிக்கும் சிம்பனி பாணி இசைக்கோவை அதைத் தொடரும்.

இரண்டாவது நிரவல் இசையில் சாக்ஸபோன், புல்லாங்குழலைத் தொடர்ந்து மீண்டும் ஒரு ஒற்றை வயலின். இந்த முறை அதில் தொனிக்கும் துயரம், அன்பின் வரவுக்காகக் காத்திருக்கும் அர்ச்சனாவின் மனதைப் பிரதிபலிக்கும். சில்ஹவுட் பாணியிலான ஒளியமைப்பில், தலைமுடி தங்கமாக மின்ன மேடையில் பாடிக்கொண்டிருக்கும் ஸ்ரீதேவியின் அழகு வர்ணனைகளுக்கு அப்பாற்பட்டது. பாடல் தரும் பரவசத்தில் ‘வந்த வேலையை’ மறந்து வேறு உலகத்தில் மூழ்கிவிடுவான் ஜானி.

‘முள்ளும் மலரும்’ படத்தில் வரும் ‘ராமே(ன்) ஆண்டாலும்’ பாடலில் மலைவாழ் மக்களின் குரல்களையும் இசைக் கருவிகளையும் பயன்படுத்தியிருந்தார் இளையராஜா. ‘ஜானி’ படத்தில் ஷைலஜா பாடும் ‘ஆசையைக் காத்துல’ பாடலும் அந்த வகையைச் சேர்ந்தது. கானகத்தின் கனத்த மவுனத்தைப் பிரதிபலிக்கும் புல்லாங்குழல், மலை முகடுகளில் எதிரொலிக்கும் பழங்குடியினப் பெண்களின் கோரஸுடன் தொடங்கும் இப்பாடல் மலைக் காடு ஒன்றில் இரவில் தங்கும் அனுபவத்தின் சிலிர்ப்பைத் தரக்கூடியது.

வித்தியாசமான தாளக்கட்டில் அதிரும் பாடல் இது. முதல் சரணத்துக்கு முன்னதாக, ‘யோ…யோ’ எனும் பெண் குரல்களைத் தொடர்ந்து எதிர்பாராத வகையில் ஷெனாயை ஒலிக்க விடுவார் இளையராஜா. தீக்காய்தலுக்காக மூட்டப்பட்ட நெருப்பிலிருந்து பரவிச் செல்லும் புகையைப் போல் பாடல் முழுவதும் புல்லாங்குழலைக் கசிய விட்டிருப்பார். இப்பாடலில் தோன்றும் நடிகை சுபாஷிணி, பாடலுக்கு வாயசைக்காமல் நடனம் ஆடுவதாகக் காட்சிப்படுத்தியிருந்தார் மகேந்திரன். “என்னங்க இது, இப்படிப் பண்ணிட்டீங்களே என்று மிஸ்டர் இளையராஜா என்னிடம் கேட்டார்” என்று ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் புன்னகையுடன் குறிப்பிட்டார் மகேந்திரன்.

வாவா பெடல் கருவியுடன் சேர்ந்து ஒலிக்கும் கிட்டாருடன் டிஸ்கோ பாணியில் ஆர்ப்பாட்டமாகத் தொடங்கும் ‘ஸ்னோ ரீட்டா ஐ லவ் யூ’ பாடல், அகன்ற கண்ணாடியும் பெல்பாட்டமும் கலைந்த கேசமுமாய் வளையவரும் ரஜினியின் ஸ்டைலுக்காகவே உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். அத்தனை வேகம் கொண்ட பாடல் இது. அதேசமயம், கரடுமுரடான பாத்திரமான வித்யாசாகருக்குள் எழும் காதல் உணர்வைப் பிரதிபலிக்கும் மெல்லிசையை, பாடல் நடுவே கசிய விட்டிருப்பார் இளையராஜா.

முதல் நிரவல் இசையில் சற்றே நகைச்சுவை உணர்வு ததும்பும். வா வா பெடல் இசைக்குப் பின்னர், பாறையிலிருந்து விழும் அருவியின் சாரல் போன்ற வயலின் இசைக்கோவை ஒலிக்கும். பாடல் காட்சியிலும் அதையே பிரதிபலித்திருப்பார் மகேந்திரன். இரண்டாவது சரணத்துக்கு முன்னதாக ஒலிக்கும் ஒற்றை வயலின், அதைத் தொடர்ந்து, கைக்கெட்டும் தொலைவில் மிதக்கும் மேகத்திலிருந்து விழும் தூறலைப் போன்ற இசை என்று இனிமையைச் சேர்த்துக்கொண்டே போவார் ராஜா. எஸ்.பி.பி. குரலின் கம்பீரம், பாடலின் புத்துணர்ச்சியை இரட்டிப்பாக்கும்.

ஜென்ஸி பாடிய மிகச் சிறந்த பாடல், ‘என் வானிலே ஒரே வெண்ணிலா’. பியானோவின் அதிகபட்ச இனிமையை வெளிக்கொணர்ந்த அதி உன்னதமான பாடல்களில் ஒன்று இது. மெலிதான முணுமுணுப்பாகத் தொடங்கும் பியானோ, ரஷ்ய நாவல்களில் வருவதுபோல், மெலிதான பனிப்படலம் போர்த்திய ஸ்டெப்பி புல்வெளி நிலத்தில் இருக்கும் ஒற்றை வீட்டை நினைவுபடுத்தும். அர்ச்சனாவைப் பொறுத்தவரை, தவறான நோட்ஸைத்தான் பியானோவில் ஜானி வாசிப்பான்.

ஆனால், அதுவே நம்மை உருக வைக்கப் போதுமானதாக இருக்கும். அர்ச்சனாவின் வாசிப்பில் அவள் வீட்டின் வரவேற்பறையில் உருக்கொள்ளும் இசை, மெள்ளப் பெருகிக்கொண்டே வந்து ஒரு கட்டத்தில் இடம்கொள்ளாமல் வெளியே மிதந்து சென்று, மாலை நேரத்தின் மலைப் பிரதேசங்களில் உலவத் தொடங்கிவிடும். நிரவல் இசையை அப்படித்தான் உருவாக்கியிருப்பார் இளையராஜா. அடிவானத்தில் மெல்லியக் கீற்று போல் தோன்றி வளர்ந்துகொண்டே வரும் வானவில்; மலை முகடுகளின் வழியே எல்லைகளற்ற பயணத்தில் நீண்டு செல்லும் மாலை நேரச் சூரியனின் கதிர் என்று வயலின் இசை மூலம் ஒரு தேர்ந்த ஓவியனின் படைப்பாற்றலுடன் காட்சிகளை உருவாக்கியிருப்பார்.

சரணம் தொடங்குவதற்கு முன்னர், மலை மீதிருந்து மிதந்து வரும் இசை மீண்டும் வரவேற்பறையில் பரவும். இரண்டாவது நிரவல் இசையில் வால்ட்ஸ் பாணி தாளத்தில் பியானோ, புல்லாங்குழல், வயலின் என்று இசைக் கருவிகள் ஒன்றையொன்று தழுவியபடி பாலே நடனம் ஆடுவதைப் போன்ற விரிவான இசைக்கோவையைத் தந்திருப்பார். அதைத் தொடர்ந்து வரும் ‘நீ தீட்டும் கோலங்கள்’ எனும் வரி, உண்மையில் இளையராஜாவைக் குறிப்பதாகவே தோன்றும்.

சிறந்த பாடல்கள் நிறைந்த இந்த ஆல்பத்தின் மிக முக்கியமான பாடல், ஜானகி பாடிய ‘காற்றில் எந்தன் கீதம்’. பொன்னிற மழைத்துளிகளின் நடுவே சில்லிடும் மாலை நேரக் காற்றாக, கிட்டார் இசைக்கு மேல் ஒலிக்கும் ஜானகியின் ஆலாபனையுடன் பாடல் தொடங்கும். காதலனின் வருகைக்காகத் துடிப்புடன் காத்திருக்கும் இதயத்தின் புலம்பல் இப்பாடல். முதல் நிரவல் இசையில் மெல்லிய முணுமுணுப்பாகத் தொடங்கும் புல்லாங்குழல், அதைத் தொடரும் சாக்ஸபோன், சந்தூர், கிட்டார் இசைக் கலவை ஆகியவை துயரார்ந்த மனதுக்குள் இருக்கும் வார்த்தைகளின் இசை வடிவங்களாக வெளிப்பட்டிருக்கும்.

ஆனால், அதைத் தொடர்ந்து விவரிக்க முடியாத சோகத்தின் வெளிப்பாடாக ஒலிக்கும் அமானுஷ்யம் கலந்த பேரோசை சாதாரணமாகத் திரைப்படப் பாடல்களின் தென்படாத நுட்பத்தைக் கொண்டது. தனது அன்புக்குரியவர் தொலைதூரத்தில் எங்கோ அலைந்துகொண்டிருக்கிறார் என்று கற்பனை செய்யும் ஆழ்மனதின் வெளிப்பாடு இந்த இசைக்கோவை. இப்பாடல் அமரத்துவம் பெறுவதற்கான அடிப்படை ஆன்மா இந்த இடம்தான். இரவுகளில் தனிமையில் அமர்ந்து இப்பாடலைக் கேட்கும்போது இந்த இடத்தில் மிகப் பெரிய வெற்றிடத்தை உணர முடியும்.

இரண்டாவது நிரவல் இசையிலும் இதுபோன்ற இசைக்கோவை உண்டு. சந்தூர் இசையைத் தொடர்ந்து, அடை மழை சற்றே குறைந்து சாரலாவது போன்ற வயலின் இசைக்கோவையை ஒலிக்கச் செய்வார் ராஜா. அதைத் தொடர்ந்து ஒலிக்கும் எலெக்ட்ரிக் கிட்டார் மற்றும் கிட்டாரின் சம்பாஷணையும் மனதின் பரிதவிப்பைப் பதிவுசெய்திருக்கும். துயரத்தில் தளும்பும் குரலில் பாடியிருப்பார் ஜானகி. கிளைமாக்ஸ் பாடலான இப்பாடலுடன் படம் சுபமாக முடிவடையும். அப்போது ‘மியூசிக் இஸ் தி லைஃப் கிவர்’ எனும் வாசகம் திரையில் ஒளிரும். இளையராஜா போன்ற அபூர்வக் கலைஞர்களின் படைப்புகள் இருக்கும் வரை இந்த வாசகம் சாஸ்வதமானது!



JamesFague
30th January 2016, 08:47 AM
Courtesy: Tamil Hindu


திரை வெளிச்சம்: கோடம்பாக்கத்தின் இன்றைய சூதாட்டம்!




தமிழ் சினிமா கோடிகள் புழங்கும் துறையாகிப் பல ஆண்டுகள் ஆகின்றன. இந்தத் தொகையை முதலீடு செய்வது தயாரிப்பாளர்கள்தான் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படிப்பட்ட தயாரிப்பாளர்கள் எவ்வளவு பணக்காரர்களாக இருக்க வேண்டும். எவ்வளவு வசதியாக இருக்கு வேண்டும்.

ஆனால் உண்மை நிலவரம் வேறு. இன்று பெரும்பாலான தயாரிப்பாளர்கள் வாடகை காரில் செல்ல, நடிகர்கள்தான் விதம்விதமான சொகுசு காரில் வலம் வருகிறார்கள். செல்வம் கொழிக்கும் எந்தத் துறையிலும் முதலாளிகள் அல்லது தயாரிப்பாளர்களின் நிலை இப்படி இல்லை. ஆனால் இதுதான் இன்றைய தமிழ் சினிமாவின் யதார்த்தம்.

ஏன் இந்த நிலை?

தமிழ் சினிமாவின் வியாபாரத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றம்தான் இதற்குக் காரணம் என்கிறார்கள் திரைத் துறையைச் சேர்ந்தவர்கள். “ஒரு நடிகருக்கு ஒரே ஒரு படம் பிரம்மாண்ட வெற்றியடைந்துவிட்டால், அந்த நடிகர் அடுத்த படத்துக்கான தனது சம்பளத்தில் 3 கோடி வரை உயர்த்திவிடுகிறார். சம்பளம் உயரும்போது படத்தின் தயாரிப்புச் செலவு உயருகிறது.

அதே நடிகரின் படம் தோல்வியடையும் பட்சத்தில் சம்பளத்தைக் குறைக்கிறாரா என்றால் கண்டிப்பாக இல்லை. சம்பளத்தைக் குறைப்பது என்பது தங்கள் தன்மானத்துக்கு இழுக்கு என நடிகர்கள் கருதுகிறார்கள்” என்று பெயரை வெளியிட விரும்பாத ஒரு தயாரிப்பாளர் கூறுகிறார்.

இந்த உதாரணத்தைப் பார்த்தால் அவர் சொல்வது எவ்வளவு உண்மை என்பது புரியும். 2015-ம் ஆண்டு ஒரு நடிகரின் படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து ஒரு தயாரிப்பாளர் அவரை வைத்துப் படம் பண்ண அணுகியிருக்கிறார். அந்த நடிகர் கேட்ட சம்பளத்தால், அப்படியே திரும்பிவிட்டார்.

படத்தின் விநியோக வியாபாரத்திலும் பெரும் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. ‘கரகாட்டக்காரன்' படத்தின் தயாரிப்புச் செலவு 22 லட்சம். படத்தின் மொத்த வசூல் சுமார் 6.5 கோடி என்கிறார்கள். அந்தத் தயாரிப்பாளருக்கு, அதே நடிகர் அடுத்த படம் பண்ணுகிறார். முதல் படம் 6.5 கோடி வசூலானது, இப்படமும் அந்த அளவுக்கு வசூலாகும் என்று கணக்குப் போட்டு 6.5 கோடிக்கு மேல் விற்பனை செய்ய முனையவில்லை. ரூ. 28 லட்சம் ரூபாய் பொருட்செலவில் படத்தைத் தயாரித்து அதில் சில லட்சங்களை மட்டும் லாபம் வைத்து விற்றார்கள்.

இது இப்போது எப்படி இருக்கிறது என்று பாருங்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முன்னணி நடிகரின் படம் ரூ.14 கோடி செலவில் தயாரானது. அது சுமார் ரூ.18 கோடிக்கு வியாபாரம் ஆனது. சுமார் ரூ.35 கோடி வசூலை அள்ளியது. அந்த நடிகர் உடனே தனது சம்பளத்தைக் கணிசமாக உயர்த்தினார். அதே நடிகரின் அடுத்த படத்தினை ரூ.34 கோடிக்கு ஒரு முன்னணி நிறுவனம் வாங்கி விநியோகம் செய்தது.

அதில் பெருத்த நஷ்டமே கிடைத்தது. ஆனால் இந்த நஷ்டம் வாங்கியவருக்குத்தான். நடிகருக்கு அல்ல. அவர் ஏற்றிய சம்பளம் ஏற்றியதுதான். அதன் பிறகு அவருக்கு வெற்றிகளும் தோல்விகளும் மாறிமாறி வந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும் இன்றுவரை அவரது சம்பளம் ஏறுமுகத்தில்தான் உள்ளது.

தயாரிப்பாளர்களாக மாறும் நடிகர்கள்

முன்னணி நடிகர்கள் பலரும் தயாரிப்பாளர்களாக மாறிவருகிறார்கள். அதற்குக் காரணம், தயாரிப்பாளர்கள் குறைந்துகொண்டேவருவதுதான். தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்த ஏ.வி.எம்., சூப்பர் குட் பிலிம்ஸ் போன்ற நிறுவனங்கள் தங்களது படத் தயாரிப்புகளை வெகுவாகக் குறைத்துக்கொண்டன. காரணம், தற்போதைய மாற்றம்தான். பட வியாபாரத்தின் இன்றைய நிலவரத்தின் சூட்சுமம் தெரியாமல் வரும் தயாரிப்பாளர்கள் பலரும் ஒரே படத்தோடு ஓட்டமெடுக்கிறார்கள்.

தொலைக்காட்சி உரிமத்தில் பிரச்சினை, இசை உரிமை விலைகுறைவது, தொழிலாளர்களின் சம்பள உயர்வு, நடிகர்கள், இயக்குநரின் சம்பளவு உயர்வு, தொழில்நுட்பக் கலைஞர்களின் சம்பள உயர்வு... இதையெல்லாம் பார்க்கும் போது ஒரு படத் தயாரிப்பாளரின் நிலைமை என்பது பெரும் சோகக் கதைதான். இவ்வாறு பல்வேறு தயாரிப்பாளர்கள் தங்களது தயாரிப்பை நிறுத்திக்கொண்டதால் நடிகர்களே தங்களது படத்தைத் தயாரிக்கிறார்கள்.

தமிழ்நாடே கொண்டாடும் ஒரு முன்னணி நடிகரின் அடுத்த படத்துக்குத் தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. 3 படங்களுக்குப் பிறகு ஒரு தயாரிப்பாளருக்குப் படம் பண்ணித் தருகிறேன் என்று வாக்குறுதி அளித்திருக்கிறார். அந்த தயாரிப்பாளரைத் தற்போது அழைத்து எனது அடுத்த படத்தின் தயாரிப்பாளர் நீங்கள்தான் என்று தெரிவித்திருக்கிறார்.

விளம்பரங்களில் மட்டுமே வெற்றி

ராமராஜன், மோகன் உள்ளிட்ட பழைய நடிகர்கள் எல்லாம் நடித்துக்கொண்டிருந்த போது தயாரிப்பாளர்கள் லாபமடைந்து தொடர்ச்சியாகப் படம் பண்ணினார்கள். ஆனால், இன்றைய தயாரிப்பாளர்கள் நிலைமை அப்படி அல்ல. தமிழ்த் திரையுலகில் தற்போதைய தயாரிப்பாளர்கள் லாபம் அடைகிறார்களா என்று கேள்வியை முன்வைத்தால் கண்டிப்பாக இல்லை என்று சொல்லலாம். ஏனென்றால், ஒரு படம் ஓடுவது அதிகபட்சம் 25 நாட்கள்தான். பல படங்கள் ஒரு வாரம்கூடத் தாக்குப்பிடிப்பதில்லை.

ஒரு தயாரிப்பாளரிடம் போய், உங்கள் தயாரிப்பு செலவு எவ்வளவு, வசூல் எவ்வளவு என்று கேட்டால் அவர்களால் சரியான தகவல்களைச் சொல்ல முடியாது. ஒவ்வொரு படத்தின் வசூல் கணக்கின் உண்மையான நிலவரம் வருமான வரி சமர்ப்பிக்கும் பேப்பரில்தான் இருக்கும். 100 கோடி வசூல், பிரம்மாண்டமான வசூல், எதிர்பாராத, திகைக்க வைக்கும் ஹிட் எல்லாம் விளம்பரங்களோடு சரி. மிகச் சில படங்களே இதற்கு விதிவிலக்கு.

பெரிய நடிகர்கள் சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என்ற குரல் அவ்வப்போது தமிழ் திரையுலகில் எழுந்துகொண்டே இருக்கிறது. இது குறித்து தயாரிப்பாளர் சங்கம் ஒரு நல்ல முடிவுக்கு வர வேண்டும் என்று பல்வேறு தயாரிப்பாளர்கள் தெரிவித்துவருகிறார்கள். ஒரு படம் ஓடினால் சம்பளத்தை உயர்த்தும் நீங்கள் தொடர்ந்து உங்கள் படங்கள் நஷ்டமடைந்தால் சம்பளத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள் என்று நடிகர்களைப் பார்த்துத் தயாரிப்பாளர்களால் கேட்க முடியவில்லை.

அந்தச் சம்பளத்தைக் கொடுக்க மாட்டேன் என்று சொல்ல முடியவில்லை. காரணம், அதே நடிகரின் அடுத்த படம் நன்றாக ஓடிவிட்டால் தனக்குப் பெரிய லாபம் கிடைக்குமே என்ற எதிர்பார்ப்புதான். இப்போதெல்லாம் ஒரு படம் நன்றாக ஓடினால் தெலுங்கு, இந்தி மொழிகளில் மறுஆக்க உரிமை உள்படப் பல விதங்களில் பெரும் லாபம் கிடைப்பதால் முன்னணி நடிகர் யாரையும் பகைத்துக்கொள்ள முடியாத நிலை. எனவே தொடர்ந்து இந்தச் சூதாட்டம் நடக்கிறது.

JamesFague
30th January 2016, 08:49 AM
Courtesy: Tamil Hindu

‘சிரிக்கும்போது சந்தோஷமாக இருக்கிறேன்’ - கல்பனா ரஞ்சனி அஞ்சலி


தமிழில் ‘சின்ன வீடு’ படம் தொடங்கி ‘சதி லீலாவதி’, ‘டும் டும் டும்’, ‘பம்மல் கே சம்பந்தம்’ வரை மறக்க முடியாத கதாபாத்திரங்களில் நடித்த கல்பனா, ‘குண்டு கல்பனா’ என்றே இங்கே பொதுவாக அறியப்பட்டிருந்தார். தென்னிந்தியாவின் சிறந்த நடிகைகளில் ஒருவரான ஊர்வசியின் அக்காவும் மிகச் சிறந்த குணச்சித்திர நடிகையுமான கல்பனா ரஞ்சனியின் அகால மரணம் தமிழ் சினிமாவுக்கும் மலையாள சினிமாவுக்கும் உண்மையாகவே இழப்புதான்.

இன்னும் அவர் நடிக்க வேண்டிய கதாபாத்திரங்கள் நிறைய இருந்தன. அவற்றை கல்பனாவைத் தவிர வேறு யாரும் செய்ய முடியாது என்று கூறியுள்ளார் மலையாள நடிகர் முகேஷ்.

‘சதி லீலாவதி’ படத்தில் அவர் தனது சேலை முந்தானையை உதறி ஆத்திரமும் அழுகையுமாய் பேசி கமல் ஹாசனுக்கு ஈடாகப் பிய்த்து உதறும் காட்சிகள் தமிழ் சினிமா ரசிகர்களின் ஞாபகத்தில் எப்போதும் இருக்கும். அவர் நடித்த அந்தக் கதாபாத்திரத்தை அதன் இந்தி மறுஆக்கமான ‘பீவி நம்பர் 1’-ல் கரிஷ்மா கபூர் ஏற்றார்.

1977-ல் குழந்தை நட்சத்திரமாக ‘விதருண்ண மொட்டுகள்’ மலையாளப் படத்தில் தன்னுடைய நடிப்பு வாழ்வைத் தொடங்கிய கல்பனா, நாயகி, குணச்சித்திர வேடம் என தனது மரணம் வரை 300 படங்கள் வரை நடித்து பிஸியாகவே இருந்துள்ளார்.

தேசிய விருதுக் கலைஞர்

நகைச்சுவை நடிப்பிற்காகவே கல்பனா உடனடியாக ஞாபகத்திற்கு வந்தாலும் சீரியசான கதாபாத்திரத்திரங்களிலும் சோபித்தவர் அவர். 2012-ல் ‘தனிச்சல்ல ஞான்’ படத்துக்காகச் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது பெற்றவர். மலையாள சினிமாவின் கலைமுகங்களில் ஒருவரான இயக்குநர் ஜி.அரவிந்தனின் ‘போக்குவெயில்’ படம்தான் இவர் நாயகியாக அறிமுகமான படம்.

சமீபத்தில் மொழி பேதம் கடந்து தென்னிந்தியா முழுவதும் ரசிக்கப்பட்ட ‘பெங்களூர் டேஸ்’ மலையாளப் படத்தில் நாயகன் நிவின் பாலியின் அசமந்தமான, விட்டேற்றியான, பொறுப்பற்ற அம்மாவாக அவர் ஏற்ற கதாபாத்திரம் எல்லாராலும் மிகவும் ரசிக்கப்பட்டது. கணவனாலேயே பாலியல் தொழிலுக்குத் தள்ளப்பட்டு எய்ட்ஸ் நோயால் அவதிப்படும் குயின் மேரிஸ் கதாபாத்திரத்தில், அதன் உள்மனப் போராட்டங்களை உணர்ந்து, அவர் நடித்திருந்த ‘சார்லி’ படம் இன்னும் கேரளத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

கலைக் குடும்பம்

கேரளத்தின் புகழ்பெற்ற நாடக நடிகர்களான வி.பி.நாயர் மற்றும் விஜயலட்சுமி தம்பதியருக்குப் பிறந்த கலாரஞ்சனி, கல்பனா, ஊர்வசி மூன்று சகோதரிகளும் நடிகைகளாகத் தனித்தனியாக அவரவர் வகையில் சாதனை செய்தவர்கள். கல்பனாவுக்குப் பெயர் பெற்றுத்தந்த மலையாளப் படங்கள் என்று ‘பஞ்சவடிப்பாலம்’, ‘பெருவண்ணப்புரத்தே விசேஷங்கள்’, ‘கவுத்துக வார்த்தகள்’, ‘டாக்டர் பசுபதி’, ‘ஊட்டயாள் பட்டாளம்’, ‘காந்தர்வம்’, ‘குடும்பவிசேஷங்கள்’, ‘மாம்பழக்காலம்’, ‘கேரளா கபே’, ‘இந்தியன் ருபீ’ மற்றும் ‘பெங்களூர் டேஸ்’ படங்களை மலையாள விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

இவர் உஷா உதூப்புடன் சேர்ந்து செய்த இசை ஆல்பமான ‘பலவட்டம்’ ரசிகர்களால் இன்றும் நினைவுகூரப்படுகிறது. இவர் மலையாளத்தில் எழுதிய சுயசரிதையான ‘ஞான் கல்பனா’, இவரைத் தேர்ந்த எழுத்தாளராகவும் அறிமுகப்படுத்தியது. இவரது திரை அனுபவங்களையும் இவர் ரசித்த படைப்புகளையும் பற்றிய நூல் அது. அந்தப் புத்தகத்தில் அவர், “ நான் என்னைப் பார்த்துச் சிரிக்கும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்” என்று எழுதியிருப்பார். எத்தனை ஞானமும் சத்தியமும் கொண்ட வார்த்தைகள் இவை. இவரது தங்கை ஊர்வசியும் இவரும் மத்திய வயதை எட்டுகையில் நட்சத்திர அந்தஸ்து எதையும் கருதாமல் சாதாரணமாக நகைச்சுவை மற்றும் குணச்சித்திர பாத்திரங்களுக்குத் தங்களைத் தகவமைத்துக் கொண்டதற்கு இந்த ஞானமே காரணமாக இருந்திருக்கும்.

இயக்குநர் சிகரத்தின் பாராட்டு

கே.பாக்கியராஜின் இயக்கத்தில் ‘சின்ன வீடு’ மற்றும் விசுவின் ‘திருமதி ஒரு வெகுமதி’ படங்களில் கல்பனா முன்னணி நாயகியாகவும் சிறந்த நடிகையாகவும் போற்றப்பட்டார். துயரத்தில் அழுந்திப் போராடும் பெண்களின் மன உணர்வை நன்கு வெளிப்படுத்துவதில் சரிதாவுக்கு இணை கல்பனாதான் என்று கே.பாலச்சந்தரால் பாராட்டப்பட்டவர் அவர்.

ஒரு இந்திய நடிகையிடம் பெரும்பாலும் எதிர்பார்க்கப்படும் கவர்ச்சிகரமான உடலமைப்பைக் கொண்டவர் அல்ல அவர். தனது குண்டு உடலையே தனது மந்திர விளக்காக மாற்றிய கலைஞர் அவர். புற அழகை வென்று அக அழகால் தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களை வென்ற சில நடிகைகளின் பட்டியலில் அவரும் இருப்பார்.

மலையாளத்திலும் தமிழிலும் அவர் சாதாரணப் பெண்களின் சாதாரண உணர்வுகளான நிராசை, ஏக்கம், ஏமாற்றம் மற்றும் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களிலேயே நடித்தார். அதுவே அவரது சாதனையும்கூட.

ஆயிரம் முத்தங்கள் கல்பனா சேச்சி!

துல்கர் சல்மானின் நெகிழ்ச்சியான ட்வீட்:

கல்பனா சேச்சி பற்றிய செய்தியைக் கேட்டு உடைந்துபோனேன். என்னைக் குழந்தையாகப் பார்த்தவர். எனக்கே தெரியாத எனது குழந்தைப் பருவத்துக் கதைகளை எனக்கு அவர் சொல்வார். சமீபத்தில் நானும் அவரும் ‘சார்லி’ படத்தில் நடித்தோம். அந்தப் படத்தில் சார்லி கதாபாத்திரம் மேரியை முத்தமிடும். நான் கல்பனா சேச்சியின் கன்னத்தில் முத்தமிட்டேன். அப்போது அவர் மிகவும் சந்தோஷப்பட்டார். குழந்தையாக இருந்தபோது அவர் என்னை முத்தமிடச் சொல்லி வற்புறுத்துவாராம். நான் கொடுக்காமல் ஓடிவிடுவேனாம். அவருக்கு என்னுடைய ஆயிரம் முத்தங்கள்.

JamesFague
30th January 2016, 08:53 AM
Courtesy: Tamil Hindu

சினிமா எடுத்துப் பார் 43: அறையில் அழுது கொண்டு இருந்த ஸ்ரீதேவி!


எஸ்பி.முத்துராமன்



வெளிநாட்டில் வித்தியாசமாக எடுக்க திட்டமிடப்பட்ட அந்தப் படத்தை, தமிழில் மட்டும் எடுத்தால் பொருட்செலவு அதிகமாகும்; நிச்சயம் கையைக் கடிக்கும். அதனால் கன்னடத்திலும் சேர்த்து எடுக்கலாம் என்ற ஐடியாவை பஞ்சு அருணாசலம் கூறினார். கன்னடத்தில் எடுக்கத் தயாரிப் பாளர் ராஜண்ணாவும் தயாராக இருந் தார். அந்தப் படம் ‘ப்ரியா’. இந்தப் படத் தைப் பற்றி இந்த வாரம் எழுதும் போது நான் சிங்கப்பூரில் இருக்கிறேன். 1978-ம் வருஷ சிங்கப்பூருக்கும் 2016 சிங்கப்பூருக்கும் எவ்வளவு மாற்றங்கள்!

முன்னாள் பிரதமர் லீ குவான் யூ ஒரு முறை ‘‘சிங்கப்பூரின் வளர்ச்சியில் தமிழர் களுக்குப் பங்கு உண்டு. தமிழர்களின் உழைப்பும் வேர்வையும் இந்த மண்ணில் கலந்துள்ளது’’ என்றார். சிங்கப்பூரின் ஆட்சிமொழிகளில் ஒன்றாக தமிழும் இருப்பது நமக்குப் பெருமை.

சிங்கப்பூரில் புக்கிட் பாஞ்சாங்கில் நடந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்டேன். தமிழர்களோடு, இந்தியர், சீனக்காரர், மலேசியர் என பல நாட்டு இன மக்களும் ஒன்றாகக் கூடி பொங்கல் வைத்தனர். சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் தியோ கோ பின் பட்டு வேட்டி, சட்டை, துண்டு அணிந்தும் அவர் மனைவி பட்டுப் புடவை அணிந்தும் கலந்துகொண்டனர். நான் தமிழ்நாட்டில் இருந்து வந்து கலந்துகொண்ட ஒரு மாமன்காரனாக தாய்நாட்டின் வாழ்த்து களை அவர்களுக்குக் கூறினேன். ‘ஒரே உலகம்; ஒரே இனம்’ என்று பார்க்க பூரிப்பாக இருந்தது

பஞ்சு அருணாசலத்தின் சகோதரர் கேஎன். சுப்புதான் ‘ப்ரியா’ படத் தயாரிப் பாளர். எழுத்தாளர் சுஜாதா எழுதிய ‘ப்ரியா’ நாவலைத்தான் படமாக்கினோம். வெளிநாடுகளில் நடக்கும் கதைக்களம். நானும் ஒளிப்பதிவாளர் பாபுவும் ‘ப்ரியா’ நாவலைப் படித்து கதையை உள்வாங் கிக்கொண்டோம். சுஜாதாவின் கதைகள் பெரும்பாலும் திரைக்கதை வடிவத்தில் இருக்கும். பிரம்மாண்டமான படங்களை எடுக்கும் இயக்குநர் ஷங்கரின் படங் களில் சுஜாதாவின் பங்களிப்பு சிறப்புடன் இருந்தது. சிறந்த கணினி விஞ்ஞானியான அவர், அவ்வளவாக கணினி புழக்கத் துக்கு வராத காலத்திலேயே கமலுக்குக் கணினி கற்றுக்கொடுத்து, திரைப்பட உருவாக்க வேலைகளை அதில் செய்ய வைத்தார். எழுத்தாளர் சுஜாதாவை இந்தக் காலத்தின் ‘திருமூலர்’ என்றே சொல்லலாம். அவருடைய ‘ப்ரியா’ கதைக்கு பஞ்சு அருணாசலம் தன் எழுத் தின் மூலம் மேலும் மெருகேற்றினார்.

‘ப்ரியா’ பட நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். நாயகி தேவி. கன்னட நடிகர் அம்ரிஷ், மேஜர் சுந்தர்ராஜன், தேங்காய் சீனிவாசன் என நடிகர்கள் தேர் வானார்கள். இளையராஜா புதுமையான பாடல்களை அற்புதமாக இசை அமைத்து, ‘இன்ரிகோ’ (INRECO) ஸ்டீரியோபோனிக் முறையில் ஒலிப் பதிவு செய்துகொடுத்தார். சூப்பர் ஸ்டா ரின் படத்துக்கு சூப்பராகவே பாடல்கள் அமைந்தன.

‘ப்ரியா’படத்தை சிங்கப்பூரில் படமாக் கும் வேலைகளைத் தொடங்கினோம். பொதுவாக வெளிநாடுகளில் பாடல் காட்சிகளை மட்டுமே எடுப்பது ஒரு விதம். முழு படத்தையும் எடுப்பது சாதாரணமானது இல்லை. படப்பிடிப் புக்குப் புறப்பட்டபோது, செலவோடு செலவாக மளிகை பொருட்களை எடுத் துக்கொண்டு, உடன் சமையல்காரரை யும் அழைத்துச் சென்றோம். அதிகாலையில் படப்பிடிப்புக்குப் புறப்பட்டால் டிபன் ரெடி ஆகியிருக்காது. புகழ்பெற்ற நடன இயக்குநர் சோப்ரா மாஸ்டர் பிரட்டில் ஜாம் வைத்து காலை உணவை தயார் செய்துகொடுப்பார். பஞ்சாபிக்காரரான சோப்ரா நல்ல மனிதர்.

படத்துக்குத் தேவையான சில காட்சிகளை சிங்கப்பூர் ஏர்போர்ட்டில் படமாக்க நினைத்தோம். ஏர்போர்ட் நிர் வாகத்தை அணுகியபோது, ‘‘பயணிகள் அதிகம் வந்து செல்லும் நேரத்தைத் தவிர்த்து எடுத்துக்கொள்ளலாம்’’ என்று சொல்லி அனுமதி அளித்தனர். அனுமதி கிடைத்த மகிழ்ச்சியோடு ‘‘தொகை எவ் வளவு கட்ட வேண்டும்?’’ என்று கேட் டோம். ‘‘இந்தப் படம் மூலமாக எங்கள் ஏர்போர்ட் பல நாட்டு மக்களுக்கும் தெரியப்போகிறது. இன்னும் பல நாட்டுக்காரர்கள் எங்கள் நாட்டுக்கு சுற்றுலா வருவார்கள். உங்கள் மூலம் எங்களுக்கு விளம்பரம் கிடைக்கும்போது ஏன் பணம் வாங்க வேண்டும்? எதுவும் வேண்டாம்’’ என்றார்கள். சுற்றுலாத் துறைக்கு சிங்கப்பூர் கொடுக்கும் முக்கியத்துவத்தை உணர முடிந்தது.



படப்பிடிப்புக்காக சிங்கப்பூர் ஏர் லைன்ஸ் நிறுவனம் ஒரு விமானத்தை சில மணி நேரங்களுக்கு இலவசமாகக் கொடுத்து உதவியது. சுற்றுலாவுக்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத் துவத்தை போல நமது இந்தியாவிலும் ‘இங்கே தடை; அங்கே தடை’என்று முட்டுக்கட்டை போடாமல் சுற்றுலாவின் வளர்ச்சிக்குத் திட்டமிட வேண்டும். இந்தியாவில் படப்பிடிப்புக்கு அனுமதி பெறும் கஷ்டம் இங்கு சினிமா எடுப்பவர்களுக்குத்தான் தெரியும்.

‘டார்லிங்… டார்லிங்… டார்லிங்’ என்ற இளமை துள்ளும் பாடலை சிங்கப்பூரில் அழகான ஒரு நீச்சல் குளத்தில் படமாக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தோம். அந்தப் பாடலுக்கு நடனம் ஆட வேண் டிய நாயகி தேவி உரிய நேரத்தில் படப்பிடிப்புக்கு வரவில்லை. விசாரித்துப் பார்த்தால் அவர் அறையில் அழுது கொண்டு இருக்கிறார் என்றார்கள்.

ஏன்? ஏன்?

rajraj
2nd February 2016, 07:53 AM
From kandhan karuNai

thirupparankundrathil nee sirithaal.....

http://www.youtube.com/watch?v=d9mhH4naphg

raagadevan
7th February 2016, 11:48 AM
Where's everybody??? :)

A nice song in Sivaranjani ragam; featuring Nedumudi Venu & Sumalatha (Actors),
Bichu Thirumala (Lyricist), Raveendran (Music Director), & K.J. Yesudas...

தேனும் வயம்பும் நாவில் தூவும் வானம்பாடி
ராகம் ஸ்ரீ ராகம்
பாடூ நீ வீண்டும் வீண்டும் வீண்டும் வீண்டும்...

https://www.youtube.com/watch?v=lg4U9xHo5gA

madhu
11th February 2016, 07:46 PM
எங்கே எங்கே ? நண்பர்கள் எல்லோரும் எங்கே போய் விட்டீங்க ?
மீண்டும் மதுர கானம் மலரட்டும்..

வருக வருக

rajeshkrv
12th February 2016, 06:09 AM
vandhom vandhom

Richardsof
12th February 2016, 09:07 AM
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் .
அபூர்வமான திரைப்பட விளம்பரங்கள் .
http://i64.tinypic.com/2u8fh3l.jpg

Richardsof
12th February 2016, 09:10 AM
http://i65.tinypic.com/vjitt.jpg

Richardsof
12th February 2016, 09:12 AM
http://i66.tinypic.com/313ozfd.jpg

Richardsof
12th February 2016, 09:13 AM
http://i63.tinypic.com/2rw259c.jpg

raagadevan
13th February 2016, 11:34 AM
From மறக்க முடியுமா ...

https://www.youtube.com/watch?v=W5aesdIQxjY

From காதல் படுத்தும் பாடு ...

https://www.youtube.com/watch?v=RYTcHTbWl3s

From நாம் மூவர்...

https://www.youtube.com/watch?v=sKzp-CxkZMU

From நாணல்...

https://www.youtube.com/watch?v=EOmWoYeyIGY

rajraj
14th February 2016, 09:23 AM
Happy Valentine's Day ! :)

madhu
16th February 2016, 08:00 PM
vandhom vandhom

odi vandha vegamenna rajesh ! nee appadiye nirpadhenna rajesh !

madhu
16th February 2016, 08:00 PM
ella ji-kkalum enge poyittanga ?

chinnakkannan
16th February 2016, 09:06 PM
ஹாய் ராஜ் ராஜ் சார், ரெண்டு எஸ்.வி சார்ஸ், ராகதேவன்,சிவாஜி செந்த்தில், ராஜேஷ், மதுண்ணா.... நலமா.

வண்ட்டோம் மதுண்ணா.ஹவ் இஸ்யுவர் ஹெல்த்..

கலையாகக் கூப்பிட்டீர் கண்ணனும்வந்தே
அழைப்பேன் அனைவரையும் ஆம்..

முன்னம் அழைத்த ரா.தேவனுக்கும் தாங்க்ஸூ.. :)

https://youtu.be/oPhkeqMoWag

chinnakkannan
16th February 2016, 09:34 PM
எல்லாரையும் லாங்க் லீவ் முடிச்சுட்டு பழைய ஜோஷ்லயே வரவேண்டும்னு சொல்லி ஒரு அந்தாதி..ஹிஹி..வரவேண்டும்னு சாங்க்ஸா போட்டுப் பாக்கலாம்னு பார்த்தா..இங்கன யார்... சிவகுமார் லத்து..

கல்யாண மாலை கொண்டாடும் வேளை வரவேண்டும் தரவேண்டும்..ங்கறாங்க.. பின்ன கல்யாண மாலை கொடுத்தாலே தரத்தானே வேண்டும்..ம்ம் ரெண்டாவதும் எஸ்பி பாட்டாப் போச்சு!

https://youtu.be/OJ5SE_MZ2js

chinnakkannan
16th February 2016, 09:39 PM
https://youtu.be/cl3ToU7HZfU

இன்னும் என்னெல்லாம் வரவேண்டும் இருக்கு

வரவேண்டும் வாழ்க்கையின் வசந்தம்
நீ வர வேண்டும் என்று எதிர் பார்த்தேன்..ஹப்புறம்......

chinnakkannan
16th February 2016, 09:55 PM
வரவேண்டும் ஒரு பொழுது
வராமல் இருந்தால் சுவை தெரியாது..

கலைக்கோவில்ல் ஆடுபவர் யாராக்கும்..


https://youtu.be/cwGqMFn7gD4

raagadevan
16th February 2016, 11:52 PM
இன்னும் என்னெல்லாம் வரவேண்டும் இருக்கு

வரவேண்டும் வாழ்க்கையின் வசந்தம்....


படம்: மயங்குகிறாள் ஒரு மாது (1975)
இசை: விஜயபாஸ்கர்
வரிகள்: பஞ்சு அருணாசலம்
பாடகர்: கே.ஜே. யேசுதாஸ்

வர வேண்டும் வாழ்க்கையில் வசந்தம்
அது தர வேண்டும் வளர் காதல் இன்பம்
உனக்கென்ன நானும் எனக்கென நீயும்
இல்லறம் தொடரட்டும் இனிதாக என்றும்

https://www.youtube.com/watch?v=gx6Abjus_tM

Sorry about the poor audio quality of the video!

rajraj
17th February 2016, 07:15 AM
illaRam ondre nallaram endru vaazhavum vida maattaar
peNNai vaazhavum vida maattaar

madhu
17th February 2016, 07:57 AM
illaRam ondre nallaram endru vaazhavum vida maattaar
peNNai vaazhavum vida maattaar

vaangayya vathiyarayya...

என்ன கோபமா விரக்தியா ? ஓ.... இது பாட்டா ? ஹி ஹி

Russellxor
17th February 2016, 07:58 AM
வரவேண்டும் பெண்ணே வரவேண்டும்
வலது கால் வைத்து வர வேண்டும்

madhu
17th February 2016, 08:03 AM
வரவேண்டும் ஒரு பொழுது
வராமல் இருந்தால் சுவை தெரியாது..

கலைக்கோவில்ல் ஆடுபவர் யாராக்கும்..


அது கலைக்கோவிலா ? எனக்கு நைட் கிளப போல தெரியுது... அது சாந்தா என்று தெரியலை என்றால் நெய்வேலி வாசுஜி சுரங்கத்தில் தள்ளி விட்டுவிடுவார். (அவளுக்கென்ன அழகியமுகம், பழமுதிர் சோலையிலே பாடல்களில் ஆடுனவர் )

rajraj
17th February 2016, 08:04 AM
என்ன கோபமா விரக்தியா ? ஓ.... இது பாட்டா ? ஹி ஹி

madhu: Welcome back ! I saw 'illaram' in RD's song. I posted the only song that came to my mind.

Hope things are back to normal in West Mambalam.

rajeshkrv
17th February 2016, 09:00 AM
https://www.youtube.com/watch?v=ZPQvgQBYLXI

rajeshkrv
17th February 2016, 09:01 AM
appada ippo thaan thirikku uyir vandhadhu Ankil, Cika, Madhunna, RD ena ellorum vandhu vittargale .. ada naanum vandhu vittene :)

JamesFague
17th February 2016, 09:34 AM
Welcome all

https://youtu.be/jcWTOCp0qH0

JamesFague
17th February 2016, 09:38 AM
Fine melody song

https://youtu.be/blx2qZmECXs?list=PLSQ3gPN0eV6KYG6mODhIC3EAjyMH2bOW C

chinnakkannan
17th February 2016, 10:44 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்.. தாங்க்யூ தாங்க்யூ ஆல்..வாங்க செந்தில்வேல்..

அதுஸ்ஸரி..கச்சேரி களை கட்ட ஆரம்பிச்சுடுத்து..ஈவ்னிங்க் வர்றேன்..பட் அதுக்கு முன்னாடி..மனசுக்குள்ற நிறைய க் கற்பனைகள் வரும், சம்டைம்ஸ் எழுதணும்னும் தோணும் பட் ஏதோ சோகத்தால எழுதாமயே விட்டுடுவோம்..அப்புறம் அப்படி எழுதாம இருக்கறதே ஒரு விதக் குறையா ஃபீல் பண்ண ஆரம்பிச்சுடுவோம்..இல்லியோ..அப்படி எனக்கும் ஃபீலாகி இருந்ததா..இப்போ ஒரே குஷாலா இருக்காக்கும்..

சில சமயங்கள் எழுதாக் கவிதைகள் ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும்னு சொல்லிக்க வேணும்னா செய்யலாம்..ஆனா கவிதை, கதை கட்டுரை எல்லாம் எண்ணவழி விரல் வழி வெளிப்பட்டு நாலு பேர் படிச்சு திட்டவோ குட்டவோ பாராட்டவோ செஞ்சாத்தான் நன்னா இருக்குமில்லியா..:)

இங்க பாருங்க.. ஒரு ஆள் (ஹப்பாடா விஷயத்துக்கு வந்துட்டேன் (மனிதன் மாறவில்லை :) ( நான் என்னைச் சொன்னேன்)) அவ எழுதாத பாடலாம் சரி.. தழுவாத பாவையாம்ல..என்ன சொல்றான்னு கேக்கலாம்..

https://youtu.be/zxj2dKGhvCs

Russellxor
17th February 2016, 10:47 AM
லதா மங்கேஷ்கரின் அரிதான தமிழ் பாடல்.இது இந்தி டப்பிங் படத்தில் இடம் பெற்ற பாடல். மேல் விபரங்கள் தெரிந்தவர்கள் பதிவிடவும்.

Lata rare Tamil song .wmv: http://youtu.be/kl2-gz1Xr4g

Russellxor
17th February 2016, 10:54 AM
Chinna Kannan Azhaikkirar http://youtu.be/dg3d0KQ2r5I

madhu
17th February 2016, 01:35 PM
vaanga Rajesh.... ஆஹா... திரு.ஜாஹீர் அவர்களுக்கு மெசேஜ் மேல் மெசேஜ் அனுப்பி தொந்தரவு செய்து யூடியூபில் பதிய வைக்கப்பட்ட பாட்டாக்கும் "என்ன தவம் செய்தேன்".... இன்றும் சுசீலாம்மாவின் இனிய குரலுடன் டி.எம்.எஸ் கொஞ்சம் மென்மையைக் குழைத்துப் பாடிய பாடல். ஸ்ரீவித்யாவின் களையான முகமும் .... அந்தக் காலத்தில் எங்க தாத்தா வீட்டு கொல்லைப் புறத்தை நினைவுபடுத்தும் தோட்டமும் கிணறும்....ஏதோ நினைவுகள்.. கனவுகள் மனதிலே மலருதே !!

chinnakkannan
17th February 2016, 02:11 PM
//அது கலைக்கோவிலா ? எனக்கு நைட் கிளப போல தெரியுது... அது சாந்தா என்று தெரியலை என்றால் நெய்வேலி வாசுஜி சுரங்கத்தில் தள்ளி விட்டுவிடுவார். (அவளுக்கென்ன அழகியமுகம், பழமுதிர் சோலையிலே பாடல்களில் ஆடுனவர் )// அ.எ.அமுக்கும் இந்தப்பாட்டுக்கும் முகத்தில ரொமப் வித்தியாசம் இருக்கே..

madhu
17th February 2016, 07:27 PM
//அது கலைக்கோவிலா ? எனக்கு நைட் கிளப போல தெரியுது... அது சாந்தா என்று தெரியலை என்றால் நெய்வேலி வாசுஜி சுரங்கத்தில் தள்ளி விட்டுவிடுவார். (அவளுக்கென்ன அழகியமுகம், பழமுதிர் சோலையிலே பாடல்களில் ஆடுனவர் )// அ.எ.அமுக்கும் இந்தப்பாட்டுக்கும் முகத்தில ரொமப் வித்தியாசம் இருக்கே..

அதெல்லாம் எனக்கு தெரியாது... இவர் " நீ" படத்தில் வரும் "ஒன் டே ஒன் வே" பாட்டுக்கும் நாகேஷுடன் டான்ஸ் ஆடி இருக்கார்... ( சர்வர் சுந்தரம் படத்திலேயே கூட சிலை எடுத்தான் ஒரு சின்னப் பெண்ணுக்கு பாடலிலும் விஜயாவுடன் ஆடுவார்)...

அந்த முகம்தான் இந்த முகம் !! ஒத்துக்காட்டி மஸ்கட்டில் பிஸ்கட் கிடைக்காமல் போகக் கடவது.

rajeshkrv
17th February 2016, 11:19 PM
அதெல்லாம் எனக்கு தெரியாது... இவர் " நீ" படத்தில் வரும் "ஒன் டே ஒன் வே" பாட்டுக்கும் நாகேஷுடன் டான்ஸ் ஆடி இருக்கார்... ( சர்வர் சுந்தரம் படத்திலேயே கூட சிலை எடுத்தான் ஒரு சின்னப் பெண்ணுக்கு பாடலிலும் விஜயாவுடன் ஆடுவார்)...

அந்த முகம்தான் இந்த முகம் !! ஒத்துக்காட்டி மஸ்கட்டில் பிஸ்கட் கிடைக்காமல் போகக் கடவது.

avare thaan ivaru ivare thaan avaru (pazhamudhir cholayile .. avare thaan inspector shantha)

chinnakkannan
18th February 2016, 12:00 AM
அலுவலகத்தில் அவனுக்கு ஒரு பிரச்னை.. எந்த வண்ணம் சென்றால் அதைத் தீர்க்கலாம் என கணிணியின் முன்னமர்ந்து யோசித்திருக்கையில் அறைக்கதவு தட்டப்பட்டு “உள்ளே வரலாமா “ என மெல்லிசையாய் ஆங்கிலத்தில் குரலெழும்ப “ஆம்” எனப் பதிலிறுத்த வினாடியில் அவள் உள் நுழைந்தாள்.. கரு நீல வண்ண மேலாடையில் மஞ்சள் வண்ணத்தில் குட்டிக்குட்டியாய்ச் சூரிய காந்திப் பூக்கள்..அதேவண்ணத்தில் காலிறுக்க ஆடையில் ப்பளீர் குட்டித்தேவதைதான்...அதையே தமிழில் அவளிடம் சொன்னான் அவன்..உன் வண்ணம் தான் தேவதைகள் இருப்பார்களாமே – வண்ணமாய் அவன் சொல்ல அவள் கண்ணாடிக்கோப்பையில் களுங்கென விழும் பனிக்கட்டிகளைப் போல் ச்சிலீரெனச் சிரித்து “இவ்வண்ணம் நீங்கள் சொல்வதில் உங்களுக்கு வண்ணமாய்க் கவி எழுத வரும் எனத் தெரிகிறது” எனச் சொல்லி மெல்ல அவன் கை தொட அவனுக்குச் சிலிர்த்தது..!

ம்ம்..வெய்ட் வெய்ட்..பயந்துட்டீங்களா..ச்சும்மா வண்ணம் வைத்து எழுதிப்பார்த்தேன்..:)

இந்த வண்ணம்ங்கற வார்த்தையின் அர்த்தம் பல - வழி, நிறம், விதம், என்று.ஆற்றல்..

கம்பன் என்னவாக்கும் சொல்றார்..

இவ்வண்ணம் நிகழ்ந்தவண்ணம் இனியிந்த உலகுக்கெல்லாம்
உய்வண்ணம் அன்றி மற்றோர் துயர்வண்ணம் உறுவதுண்டோ
மைவண்ணத் தரக்கி போரில் மழைவண்ணத்து அண்ணலே
உன் கைவண்ணம் அங்கு கண்டேன் கால்வண்ணம் இங்கு கண்டேன்..

ஆக இந்த விஸ்வாமித்ரர் இருக்காரே அவர்..லார்ட் ராமாவைப்பார்த்துச் சொல்றா மாதிரி வருது..அகலிகையோட சாப விமோசத்துல..

ஹே ராம்..உன் கால் பாதம் பட்டு இந்தக் கல் பெண்ணாக மாறி இவ்வண்ணமாக ஆனதே இது,இந்த உலகமெல்லாம் உய்கின்ற வழியல்லவா..இதைவிடுத்து வேறு வழிகளில் அடைய முடியுமா கரிய நிறத்து அரக்கியுடன் கருமேகம் போன்ற நிறமுடைய ராமா போரிட்டு நீ ஜெயித்த போது உன் கைகளுடைய ஆற்றலைக் கண்டேன்..இதோ உன் கால்களுடைய ஆற்றலைக் காண்கிறேன்..

ஆக சொல்ல வந்தது என்னன்னாக்க..சரி சரி.. வண்ணமாய்ச் சொல்லட்டா..வண்ணம்..

வண்ணம் நு பெயர்ல என்னெல்லாம் பாட்டு இருக்கு..

வண்ணவண்ணப் பூஞ்சோலையில் பூப்போலவே

வண்ணங்கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ

பொன் வண்ணம் போல மின்னும்…

வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி என்னருகில் வந்தாள்

வண்ணத்தையே வண்ணமாய்ச் சொன்ன பாடல்..

பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்
கண் வண்ணம் அங்கே கண்டேன்
கை வண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்

கன்னம் மின்னும் மங்கை வண்ணம்
உந்தன் முன்னம் வந்த பின்னும்
அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசையில்லையா?

கார் வண்ணக் கூந்தல் தொட்டு
தேர் வண்ண மேனி தொட்டு பூ வண்ணப் பாடம்
சொல்ல எண்ணம் இல்லையா ம்ம் கண்ணதாசன் சமர்த்தா நிமிண்டிட்டார்..

சொல்லாமல் ஏக்கம் என்னை சிதைக்கிறதே
கண்ணெல்லாம் கண்ணன் வண்ணம் தெரிகிறதே லேசா லேசாவில் வரும் வரிகள்..

\ஜனனம் மரணம் அறியா வண்ணம் நானும் மழைத்துளி ஆவேனோ.. சாமுராயில் ..இங்கு வண்ணம் போல என்ற தொனியில் வருகிறது..

நிறைய வண்ணப்பாட்டு இருக்கு..ஆனால் வண்ணத்துக்கு நிறம் பூசப்பட்டிருக்கு.. நிறம் என்ற அர்த்தத்தில் தான் இருக்கு..சொல்லத் தானே போறீங்க.. சரி..இப்ப இதுக்கு என்ன பாட் போடலாம்

https://youtu.be/-SQmfVcAIik

லேசா லேசா.. நீயில்லாமல் வாழ்வது லேசா.. கொஞ்சம் வித்தியாசமான பாடல்..முகம்மறைத்த நங்கை..ம்ம்.. (படத்தில் கடைசி வரை யாரெனத் தெரியாமலிருப்பது சுவாரஸ்யம்)

ம்ம் வண்ணங்களின் அணீவகுப்பு ஆரம்பமாகட்டும்..:)

chinnakkannan
18th February 2016, 12:15 AM
அந்த முகம்தான் இந்த முகம் !! ஒத்துக்காட்டி மஸ்கட்டில் பிஸ்கட் கிடைக்காமல் போகக் கடவது.// ம்ஹூஹூம்.. பிஸ்கட் கிடைக்கலைன்னா பரவால்ல..அதைச் சாப்பிடறதில்லை..டயட்டாக்கும் :)

chinnakkannan
18th February 2016, 12:18 AM
எந்தன் கண்ணாளன் கரை நோக்கிப் போகிறான் நதியிலே..ஹிஹி..இதுக்கெல்லாம் மதுண்ணா ராஜ் ராஜ் சார் இருக்காங்க..செந்தில்..

chinnakkannan
18th February 2016, 12:21 AM
எ.த செ பாட்கு டாங்க்ஸ் ராஜேஷ்..ரேடியோ சிலோன் இல் கேட்ட பாடல் இப்போ பார்த்து மகிழ்ந்தேன்..

madhu
18th February 2016, 04:26 AM
அந்த முகம்தான் இந்த முகம் !! ஒத்துக்காட்டி மஸ்கட்டில் பிஸ்கட் கிடைக்காமல் போகக் கடவது.// ம்ஹூஹூம்.. பிஸ்கட் கிடைக்கலைன்னா பரவால்ல..அதைச் சாப்பிடறதில்லை..டயட்டாக்கும் :)

நான் சொன்னது தங்க பிஸ்க்ட் !!

வண்ணம் ... இந்த வஞ்சியின் வண்ணம்... நீ விரும்பிய வண்ணம்... நெஞ்சில் அரும்பிய வண்ணம்..
நீ வேண்டிய வண்ணம்.. நான் வழங்கிட இன்னும் ஓராயிரம் ஆயிரம் வண்ணம்... வண்ணம்... வண்ணம்..

பிரேம பாசத்தில்.....

https://www.youtube.com/watch?v=CQ77tSY7yxU

raagadevan
18th February 2016, 06:05 AM
நூற்றுக்கு நூறு/கே. பாலச்சந்தர்/வாலி/வி. குமார்/பி. சுசீலா...

நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன்
நீ வரவேண்டும்
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன்
நீ வரவேண்டும்
கடந்த வருடம் நடந்ததெல்லாம்
பழைய ஏட்டிலே
கனிந்து வரும் புது வருடம்
புதிய பாட்டிலே...

https://www.youtube.com/watch?v=H_Hh2gGuh1k

rajraj
18th February 2016, 06:57 AM
எந்தன் கண்ணாளன் கரை நோக்கிப் போகிறான் நதியிலே..ஹிஹி..இதுக்கெல்லாம் மதுண்ணா ராஜ் ராஜ் சார் இருக்காங்க..செந்தில்..

From Udan Khatola(1955)

More saiyanji utharenge paar ho nadiya dheere baho......

http://www.youtube.com/watch?v=w8-hN7tasW8

From vaana ratham, Tamil dubbed version of udan khatola (already posted by senthil)

endhan kaNNaalan karai nokki pogiraan nadhiye neeyum mella po.....

http://www.youtube.com/watch?v=rHeaX5qDyds

I think I posted these songs in jugalbandi earlier! :)


ChinnakkaNNan: Happy now? You made madhu much older ! :lol:

madhu
18th February 2016, 12:57 PM
Ok... அடுத்து வருவது ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு படத்திலிருந்து எஸ்.பி.பி., சுவர்ணா குரல்களில்..

கண்ணெல்லாம் உன் வண்ணம் நெஞ்செல்லாம் உன் எண்ணம்

https://www.youtube.com/watch?v=VtzlkAvHGQs

chinnakkannan
18th February 2016, 02:24 PM
கண்ணெல்லாம் உன் வண்ணம்..இங்கு வண்ணம்ங்கறதுக்கு எழில்னு வருதில்ல.. தாங்க்ஸ் மதுண்ணாவ்..

//ChinnakkaNNan: Happy now? You made madhu much older ! // அப்ப்டில்லாம் இல்லை ராஜ் ராஜ் சார் :)

chinnakkannan
18th February 2016, 02:28 PM
//நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன்
நீ வரவேண்டும்
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன்
நீ வரவேண்டும்// டாங்க்ஸ் ராக தேவன்.. ஒரே பாடல் ஒவ்வொரு வெர்ஷனாகச் சொல்லப் படுமோல்லியோ நூற்றுக்கு நூறு படத்தில் (ஆமா விஜயலைதா எப்படி மார்க்கெட்டில் இருந்தார்..பார்க்க நன்னாவே இருக்க மாட்டார்),, இது போல வேறு பாடல்கள் ஏதாவது..

பிரேமா பாசம் இனிமே தான் போய் பார்க்கணும் மதுண்ணாவ்.. ஆமா ப்ரேமா யாரு :)

chinnakkannan
18th February 2016, 02:49 PM
இந்தப் பாட்டு கேட்டிருக்கேனான்னு தெரியலை..லிரிக்ஸ் பாத்தேன் பிடிச்சூ..:)

ஒரு நாள் பழகிய பழக்கமல்ல
மறு நாள் மறப்பதென் வழக்கமல்ல
நீயென்றும் நானென்றும் இருவரல்ல
நிழல் தான் உடலை பிரிவதல்ல

raagadevan
18th February 2016, 06:25 PM
இந்தப் பாட்டு கேட்டிருக்கேனான்னு தெரியலை..லிரிக்ஸ் பாத்தேன் பிடிச்சூ..:)

https://www.youtube.com/watch?v=yWhb4xjkokw

Russellxor
18th February 2016, 06:41 PM
நீள வண்ண ஆகாயமும்
பசுமையாய் பரந்து விரிந்த மலைப்பிரதேசங்களும் கொண்ட பிரதேசம்.
கரு நீல வண்ணகோட்டும் வெள்ளை பேன்ட்டும் அணிந்து
மன்மதனாய் நம் நடிகர்திலகம்.
சரிந்த அந்த மலைச்சரிவில் மெல்ல இறங்கி ஆகா ஓஓ ஓஓ என்று ஹம்மிங் செய்தபடி வருவது அழகு.அந்த இயற்கையும் நடிகர்திலகம் வாணிஸ்ரீயின் உடையலங்காரமும் கண்களுக்கு விருந்து.வாணிஸ்ரீயும ஹ்ம்மிங
செயதபடி ஸைடைலாக திரும்புவதை காமிராபின்னோக்கி நகர்ந்துஇயற்கையை அள்ளிக்கொண்டு வரும்.
இனியவளே என்று பாடியபடி வருவார் பாருங்கள்.அடேங்கப்பா என்ன ஒரு ஸ்டைலிஷ்மேன்.தோள்களை மெல்ல அசைத்து தலையை ஆட்டியபடி வரும் அழகுக்கு நிகரேது.நடிகர்திலகம் பாடி முடித்ததும் வாணி ஸ்ரீ இனியவனே என்றுதொடங்கும் போது ஒலிக்கும் ட்ரம்ஸ் அடி கலக்கலோ கலக்கல்.
இதழால் உடல் அளந்தாள் என்ற வரிக ளின் போது வரும் இசையும் நடிகர்திலகத்தின் ஆட்டமும் வெகு ஜோர்.ரம்மியமான இயற்கை காட்சிகளின் ஊடே அருமையான ஒரு காதல் பாடலை படம்பிடித்த விதம் அருமை.இயற்கையும் இசையும் நம்மை மெய் மறக்கச் செய்யும்.

ஓ.*ஓ... ஏ... ஆ...

ஆஹா ஆ... ஹா...*
எஹேஹேஹே அஹஹாஹா ( இசை )
ஓஹோ... ஓஹொஹோ ஹோ

ஏஹே ஏஹே ஏஹே ஏஹே*
இனியவளே என்று பாடி வந்தேன்

ம்... ம்... ஆஹா ஹா ஹா ஹா...


இனியவளே என்று பாடி வந்தேன்
இனி அவள் தான் என்று ஆகி விட்டேன்
இன்பமெல்லாம் ஏந்தி வரும் இளமை கொண்டவள்
இன்பமெல்லாம் ஏந்தி வரும் இளமை கொண்டவள்

ஆஹா ஹா ஹா ஹா...
இனியவனே என்று பாடி வந்தேன்
இனி அவன் தான் என்று ஆகி விட்டேன்
ஏழிசையில் மோகனமாம் இனிமை தந்தவன் ஆ...
ஏழிசையில் மோகனமாம் இனிமை தந்தவன்*


ஓராயிரம் காலம் இந்த உள்ளம் ஒன்றாக

ஒன்றானவர் வாழ்வில் இன்ப வெள்ளம் என்றாக

துணை தேடி வரும் போது*
கண்ணில் என்ன நாணமோ

குணம் நாட்டில் உருவான*
பெண்மை என்ன தோணுமோ

திரு நாள் வரும் அதோ பார்

தருவார் சுகம் இதோ பார்

திரு நாள் வரும் அதோ பார்

தருவார் சுகம் இதோ பார்

பொன் மாலையில்

பூ மாலையாய்

நெஞ்சில் சூடவோ

சூடவோ

சூடவோ

இனியவனே என்று பாடி வந்தேன்
இனி அவன் தான் என்று ஆகி விட்டேன்

தாலாட்டிடும் நெஞ்சம் தன்னை தங்கம் என்றாளோ

பாராட்டிடும் இன்பம் தன்னை மங்கை கொண்டாளோ

நினைத்தாலும் சுகம் தானே இந்த நெஞ்சின் காவியம்

கொடுத்தாலும் நலம் தானே எனை கொஞ்சும் ஓவியம்

இதழால் உடல் அளந்தால்

இவளோ தன்னை மறந்தாள்

இதழால் உடல் அளந்தால்

இவளோ தன்னை மறந்தாள்

ஏன் என்பதை

நான் சொல்வது

இன்னும் மௌனமேன்

மௌனமேன்

மௌனமேன்

இனியவளே என்று பாடி வந்தேன்
இனி அவள் தான் என்று ஆகி விட்டேன்
இன்பமெல்லாம் ஏந்தி வரும் இளமை கொண்டவள்

ஆ... லாலலலா ஓஹொஹொஹோ
ஒஹொஹோ ஓஹொஹோ...
ஒஹொஹோ ஓஹொஹோ...

madhu
18th February 2016, 07:48 PM
பிரேமா பாசம் இனிமே தான் போய் பார்க்கணும் மதுண்ணாவ்.. ஆமா ப்ரேமா யாரு :)

வேற யாரு ? நம்ம ஆஷா கேளுண்ணிதான்...

madhu
18th February 2016, 07:50 PM
செந்தில்வேல் ஜி...

இனியவளே பாடல் அன்றும் இன்றும் என்றுமே .... கேட்கும்போது எங்கோ மலைச்சாரலில் இருக்கும் உணர்வைக் கொடுக்கும்.

chinnakkannan
18th February 2016, 08:59 PM
நான் மதுண்ணாவை வழி மொழிகிறேன் செந்தில்வேல்..அதுல பாருங்கோ உற்சாகத் துள்ளல் இருக்கே அப்படியே பார்ப்பவரிடம் ஒட்டிக் கொண்டு விடும்..ம்ம்

பாட் போடவேணாம்னு விட்டீங்களா.. ஹிந்தியோட சேர்த்துப் பார்ப்போமா..

https://youtu.be/ql1-jjEPErw


https://youtu.be/MUeGwllKFsU




செந்தில்வேல் ஜி...

இனியவளே பாடல் அன்றும் இன்றும் என்றுமே .... கேட்கும்போது எங்கோ மலைச்சாரலில் இருக்கும் உணர்வைக் கொடுக்கும்.

rajraj
19th February 2016, 05:53 AM
konjum mozhi peNgaLukku anjaa nenjam veNumadi
vanjakarai ethirthidave vaaLum yendha veNumadi

madhu
19th February 2016, 08:00 AM
konjum mozhi peNgaLukku anjaa nenjam veNumadi
vanjakarai ethirthidave vaaLum yendha veNumadi

நீலமலைத்திருடன் !!!

வhttps://www.youtube.com/watch?v=CLVNofQ7j7U

chinnakkannan
19th February 2016, 09:49 PM
கொஞ்சம் பழைய மதுரகானம் முதல் பார்ட் பார்த்துக்கினு இருந்தேனா..விட் போன கேக்காத பாட் இருக்கான்னு பார்த்தேனா..இது சிக்கிச்சு..

நெய்வேலி அன்பர் நம் நண்பர் வாசுவின் உரையும்...அந்த்த்தப் பாடலும்.....(இதுல வேற எந்தெந்த வெர்ஷன் எந்தெந்த லாங்க்வேஜ்ல இருக்கு..தமிழ் தெலுகு தவிர)

**

//ராஜேஷ் சார் இந்தப் பாடலைப் பாருங்கள். பாலாவும், இசையரசியும் பாடுவார்கள்.

என்.டி.ஆரின் 'சிம்ஹ பாலுடு' படத்தில் அவரும், வாணிஸ்ரீயும் நம் 'வான் நிலா நிலா அல்ல' பாடலை 'ஓ..செலி சலி' என்று பாடுவதைப் பாருங்கள். திரும்ப அது 'சிம்மக் குரல்' என்று தமிழில் 'டப்' செய்யப்பட்டு மூலம் திரும்ப 'ஓர் கனி கனி' என்று நம்மகிட்டேயே எதிரொலித்தது. (நம் கிருஷ்ணா சாருக்கு ரொம்பப் பிடிக்கும் என்று நினைக்கிறேன்).

தெலுங்கில் இசையரசி அற்புதமாகப் பாடியிருக்கிறார். ஸோ.. 'வான் நிலா'வையும் விட்டு வைக்கவில்லை இசையரசி //

https://youtu.be/g1F2Oc80Svo

chinnakkannan
20th February 2016, 09:43 AM
ச்சின்னதாய் அரும்பாய் வளர்ந்து பின் செடியாகிக் கொடியாகி மலர்ந்து மணம் பரப்பி பின் மரமாகி நெடு நாளிருந்து கிளை பரப்பி பின்ன்ன்ன் இயற்கையாயோ அல்லது செயற்கையாயோ வெட்டப்பட்டு வீழ்ந்து பின் அதே இடத்தில் மறுபடி முளைக்கிறதைப் பார்க்கும் போது என்ன தோன்றும்..

ஸிம்ப்பிள்..வியப்பு தான்.. இயற்கை சுழற்சி தான் என்றாலுமே கூட அது அதிசயம் தான்.. ஆச்சர்யம் தான்..அதையே வார்த்தையில் எப்படிச் சொல்வது..ம்ம் இருக்கே..தமிழ்ல.. ஆத்தாடி…கிராமிய வார்த்தை தானோ..

ஆத்தாடி...நேத்துத் தான் பார்த்தா மாதிரி இருக்கு புள்ள ..இம்பூட்டு வளந்துட்ட..என்ன பண்ற..

போ ஆத்தா..எப்போதும் கிண்டல் பண்ணிகிட்டு..இப்பதான் ப்ளஸ் ஒன்

அ..

ஒன் பாஷைல பதினொண்ணாப்பு..

ஓ..அது சரி புள்ள.. கொஞ்சம் அடக்கமொடுக்கமா இருக்கக்கூடாதாங்காட்டியும்..இதப்பாரு டி.பில இப்படியா டைட்டா உசரத்தப் போடுவ…

ஒசரம்? ஓ.. டாப்பா…ஆத்தா..சரி..பாட்டீ பேசறது வாட்ஸப்ல..இப்படியா அட்வைஸ் பண்ணனும்.. நா அப்புறம் வாரேன்..

என்றெல்லாம் உரையாடல் நடந்து கொண்டு தானிருக்கிறது..:)

எனில் இந்த ஆச்சர்ய விளி..ஆத்தாடி..எம்பூட்டு பாட்டு இருக்குன்னு பாக்கலாமா.. ஸாரி எத்தனை பாடல்கள் இருக்கின்றன எனப் பார்க்கலாமா :)

ஆத்தாடி அம்மாடி தேன் மொட்டு தான்
கூத்தாட தூறல்கள் நீர் விட்டு தான்
உருகுதோ மருகுதோ
குழந்தை மனமும் குறும்பு தனமும் இனிமையே
கொடியிலே அரும்பு தான்
குளிரும் மழையில் நனையும் போது
சொல்லம்மா சொல்லம்மா வெட்கத்திலே
ஏதேதோ வந்தாச்சோ எண்ணத்திலே

ம்ம் குதித்துக் குதித்து மழையில் நனைந்து படிப் பாடும் கிரிஜா இதயத்தைத் திருடாதே வில்.. அதற்கப்புறம் படங்களில் நடிக்கவே இல்லியோ..

ஹப்புறம்..

ஆத்தாடி இள மனசொன்னு ரெக்கைகட்டி பறப்பது சரிதானா
அடி அம்மாடி

ரேகா..கொஞ்சம் ஓரக்கண், கொஞ்சம் தெற்றுப்பல் கொஞ்சம் ஒல்லியான தேகம் இருந்தாலும் முகத்தில் கொஞ்சம் ரஸ்ட் இருக்கும்..துருதுரு இல்லியோ..கடலோரக் கவிதைகள் என நினைவு..
*

கொஞ்சம் பூசினாற்போல இருந்த குயிலியின் அழகைக்கண்டு முரளி வியந்து பாடுவதாக வைரமுத்து எழுதியது என்னவாம்

ஆத்தாடி பாவாடை காத்தாட
ஆவாரம் பூ நெஞ்சு கூத்தாட
குளிக்குது ரோஜா நாத்து
ஹே தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து

அதே குயிலியை வைத்து இளையராஜா என்ன எழுதியிருக்கார்..

அடி ஆத்தாடி நான் பாட்டாளி ஒன் கூட்டாளி..ம்ம் ஜனகராஜ் பாடறா மாதிரி அமைந்த இந்தப்பாட்டு குயிலியின் கரியர்ல ஒரு டர்னிங்க் பாய்ண்ட்டாக்கும்..இல்லியோ..

*

அந்தக் காலத்துல பட்டணம் தான் போகலாமடி ந்னு சீர்காழி கோவிந்தராஜன் பாடினாரோன்னோ..ஜமுனாராணிகிட்ட.. எங்க வீட்டு மஹாலஷ்மில்ல..

ராத்திரி பகலா ரிக்சா இழுப்பேன் நைஸா பேசி பைசா இழுப்பேன்
ட்ராமா சினிமா சர்க்கஸ் பார்ப்பேன் ராஜா மாதிரி சிகரெட்டும் பிடிப்பேன்
வேத்துப் புடுங்கினா பீச்சுக்குப் போவேன் மீந்தப் பணத்திலே மீனு வாங்குவேன்
ஆத்தாடி உன் கையில குடுப்பேன் ஆக்கச் சொல்லியே சாப்பிட்டுப் படுப்பேன்

மேல இதுக்கு மேல சொல்ல மாட்டேண்டி பொம்பள இந்த ஊரில் இருக்க மாட்டேண்டி - நான்
இப்போதே போவணும் உங்கொப்பாவைக் கேட்டு ஏதாச்சும் வாங்கி வாடி

(ம் அந்தக்காலத்தில் அப்பாவைக்கேட்டு துட்டு வாங்கியா என்பது இந்தக்காலத்தில் இருக்கிறதா என்ன..பெர்ஸண்டேஜ் குறைந்திருக்கும் என்று தான் சொல்லவேண்டும்)

*

ஜேசு தாஸூம் உமா ரமணனும் மனைவி சொல்லே மந்திரத்துல மைக் மோகன் குதிரை நளினி மூலமா என்ன சொல்றாங்க..

ஆத்தாடி அதிசயம்
பார்த்தாலே பரவசம்
என் வீட்டில் இந்நேரம்
எல்லாமே பொன்னாகும்
இனிமேலும் நகை வேண்டாம்
என் மேனி என்னாகும்

ம்ம் பாட்டோட மூவ்மெண்ட்ஸ் பார்த்தா புலியூர் சரோஜா மூவ்மெண்ட்ஸ் போல இருக்கே..

https://youtu.be/rdDKxyXgJ1k

*

இந்தக் காதலர்கள் பாருங்க..காதல்னாலே மனசு மயங்கும்..கொஞ்சூண்டு வாழ்க்கை வெறுக்கும் இல்லையோ.. அப்படியே பல கேள்விகள் எழும்பும் தத்துவமாகக் கூட.. என்ன கேக்கறாங்க.. நான் பூவா நீ காத்தா..ம்ம் கேள்வி கேட்கும் நேரமல்ல இதுன்னு வேற பாட்டை கேட்டிருக்க மாட்டாங்க போல..

காத்தோடு பூ உரச
பூவை வண்டுரச
உன்னோடு நான்
ஆஆஆஆஆஆஆஆ என்னோடு நீ
பூவாக் காத்தா உரச


ஆறாதோ தாகம் வந்தா
ஆசை மோகம் வந்தா
ஆத்தாடி ஆளாகி நாளாச்சுதோ

https://youtu.be/3fn_YkSj7dA

ரஜினிகாந்த் ரத்தி அக்னிஹோத்ரி.. நன்னாத் தான் இருக்கு காம்பினேஷன் இல்லியோ..

*

அடி ஆத்தாடி..ஜஸ்ட் லைக் தட் ட்ரை பண்ணா இம்பூட்டு ப் பாட் வந்துடுச்சே.. சரி.. விட்டுப் போன பாட்ஸ் சொல்வீங்க தானே..

அம்மாடி யும் ஆச்சர்ய விளி தான்..அப்படி வரும் போது பெண் என்பதும் பெண்ணை அழைப்பதும் குறிப்பதும் வந்துவிடும் என நினைக்கிறேன்..அதுபற்றி அப்புறம் சொல்லலாமா..

பின்ன வாரேன்..:)

JamesFague
20th February 2016, 11:34 AM
Courtesy: Tamil Hindu


திரையில் மிளிரும் வரிகள் 2: அமுதமும் மோகமுள்ளும்


தி. ஜானகிராமனின் ‘மோகமுள்' நாவல் திரைப்படமாக்கப்பட்டபோது இளையராஜா இசையமைத்த ‘சொல்லாயோ வாய் திறந்து' என்ற பாடல் பிரிவின் ஏக்கத்தைப் பாடுகிறது. சண்முகப்பிரியாவின் ரசத்தை அப்படியே பிழிந்து கொடுத்துவிட்டார் இசைஞானி. பொதுவாக பக்தியை வெளிப்படுத்தும் பாடலுக்குத்தான் சண்முகப்பிரியாவை எடுத்துக்கொள்வார்கள். அந்த ராகம் பக்தியை வெளிப்படுத்தும் அளவுக்கு இன்னொரு ராகத்தால் முடியுமா என்பது தெரியவில்லை. ஆனால் நிறைய திரைப்படங்களில் காதல் பாடல்கள் சண்முகப்பிரியாவில் இடம் பெற்றிருக்கின்றன. பக்தியின் ஒரு வெளிப்பாடுதானே காதலும் காமுமும்.

சொல்லாயோ வாய் திறந்து வார்த்தையொன்று சொல்லாயோ வாய் திறந்து

நில்லாயோ நேரில் வந்து நான் அழைக்க நில்லாயோ நேரில் வந்து

ஊஞ்சல் மனம் அன்றாடம் உன்னோடு மன்றாடும் வேளை...

மனத்தை ஊஞ்சலோடு ஒப்பிடும் பாடல் வரிகள் ஏற்கெனவே ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படத்தில் இடம் பெற்றது. ‘ஒரு நூலில் ஆடுகின்ற ஊஞ்சல் போன்றதடி நாளும் மாறுகின்ற உன் மனம்' என்று தன்னைக் கைவிட்ட கதாநாயகியைச் சாடுகிறான் கதாநாயகன். ஆனால் மோகமுள் கதாநாயகியின் மனமும் கதாநாயகனின் மனமும் ஒருவரை ஒருவர் தாலாட்டவே ஊஞ்சலாய் அலைந்து மன்றாடுகின்றன.

வாலி எழுதிய இந்தப் பாடலை எஸ். ஜானகியும் மலையாளப் பாடகர் எம்.ஜி. ஸ்ரீகுமாரும் பாடியிருக்கிறார்கள். இளையராஜாவின் ஆஸ்தான புல்லாங்குழல் கலைஞரான அருண்மொழியும் இப்பாடலைப் பாடியிருக்கிறார். ஆனால் திரைப்படத்தில் அது இடம் பெறவில்லை.

ஆகாய சூரியன் மேற்கினில் சாய

ஏகாந்த வேளையில் மோகமுள் பாய

தூண்டிலில் புழுவாக திருமேனி வாட

தாமதம் இனி ஏனோ இருமேனி கூட

அந்தி வரும் தென்றல் சுடும் ஓர் விரகம் விரகம் எழும்

என்று வரும் இன்ப சுகம் ஊன் உருகும் உருகும் தினம்

நாள் முழுதும் ஓர் பொழுதும் உன் வண்ணங்கள் எண்ணங்கள் நெஞ்சுக்குள் நிறைந்திடும்.

சொல்லாயோ வாய் திறந்து



அழகு கொட்டிக் கிடக்கும் இளம் பெண் தங்கம்மாவின் கதறலே இவ்வரிகள். வறுமையின் காரணமாகக் கிழவன் ஒருவனுக்கு வாழ்க்கைப்படுகிறாள். கிழவனோ வாயில் சளுவாய் ஒழுக உறங்கிக்கொண்டிருக்கிறான். கதாநாயகன் பாபு ஏற்கெனவே அவளோடு உறவு கொண்டிருந்தாலும், தற்போது அவளைக் கண்டுகொள்ளாமல் விட்டு விலகி நிற்கிறான். அவன் மனமோ யமுனாவை நினைத்து “சொல்லாயோ வாய் திறந்து” எனப் பாடுகிறது.

‘மாலையும் வந்தது மாயன் வாரான்' என்கிறார் பராங்குசநாயகியாகத் தன்னை வரித்துக்கொள்ளும் நம்மாழ்வார். பிரிந்திருக்கும் காதலர்களுக்கு வாழ்க்கையின் எல்லா சிறந்த விஷயங்களுமே துயரத்தையே தருகின்றன. மாயன் வராததால் மாலை வந்ததற்கான அறிகுறிகளாக பசுக்களும் காளையும் அணைந்து நடக்கையில் தோன்றும் மணி ஓசையும் குழலோசையும், மல்லிகை முல்லை மலர்களில் தேனுண்ட வண்டுகளில் ரீங்காரமும் கடல் ஓதத்தின் ஒலியும் பாரங்குசநாயகிக்குப் பிறிவாற்றாமையை மேலிடச் செய்கின்றன.

தங்கம்மாவோ மோகமுள் தைத்துக் கிடக்கிறாள். தூண்டிற் புழுவைப் போல் துடிக்கிறாள். காதலனின் உருவமும் ஞாபகமும் எந்நேரமும் அவள் நினைவில் அப்பிக் கிடக்கின்றன.

நாள்தோறும் பார்வையில் நான் விடும் தூது.

கூறாதோ நான் படும் பாடுகள் நூறு.

நானொரு ஆண்டாளோ திருப்பாவை

பாட

ஏழையை விடலாமோ இதுபோல வாட

வெள்ளிநிற வெண்ணிலவில் வேங்குழலின் இசையும் வரும்

நள்ளிரவில் மெல்லிசையில் தேன் அலைகள் நினைவில் எழும்

ஓர் இதயம் உன்னால் எழுதும் இந்நேரத்தில் கண்ணா உன் மவுனத்தை தவிர்த்து

சொல்லாயோ வாய் திறந்து

பார்வையால் தூது விட்டு விட்டு ஓய்ந்துபோய், “நானொரு ஆண்டாளோ திருப்பாவை பாட” என்று கேட்கிறாள். கிணற்றில் இருந்து தண்ணீரை இரைத்துத் தன் மேல் ஊற்றிக்கொண்டு காமத்தைத் தணிக்கப்பார்க்கிறாள். கடைசியில் ஊர்க்குளத்தில் அவள் உடல் மிதக்கிறது. அம்பின் வாய் பட்டுத் துடிப்பவர்களைப் போல் காதல் அதன் வயப்பட்டவர்களை வதைக்கிறது. இந்த வேதனை ஆண்டாளுக்கும் உண்டு. அவள் வாயாலே இப்படிக் கூறுகிறாள்:

ஆரே உலகத் தாற்றுவார் ஆயர்பாடி கவர்ந்துண்ணும்

காரேறுழக்க வுழக்குண்டு தளர்ந்தும் முறிந்தும்

கிடப்பேனை

ஆராவமுத மனையான் தன் அமுத வாயிலூறிய

நீர்தான்

கொணர்ந்து புலராமே பருக்கி யிளைப்பை

நீக்கிரே

ஆயர்பாடி முழுவதும் கொள்ளைகொண்டு அனுபவிக்கிற கறுத்த எருது போன்ற கண்ணன் மீது காதல் கொண்டு துன்பப்பட்டுக் கிடப்பதாகப் புலம்புகிறாள் ஆண்டாள். ஏங்கி ஏங்கித் தளர்ந்து முறிந்து கிடக்கும் அவள் இடும்பையைத் தீர்க்க யார் இருக்கிறார்கள்? அதனால் அவளே அதற்கான மருந்தையும் சொல்கிறாள். உண்ண உண்ணத் திகட்டாத அமுதமாகிய ஆராவமுதனின் வாயில் ஊறிய அமுதத்தை எடுத்து வந்து, அது உலர்வதற்கு முன்னதாகவே கொண்டு வந்து பருகக் கொடுத்தால் அவளுடைய வலி அகலுமாம்.

ஒருவேளை கண்ணன் வாயமுது கிடைக்கவில்லையென்றால் அவன் ஊதும் வேய்ங்குழலின் துளையில் ஒழுகும் நீரைக் கொண்டுவந்தாவது முகத்தில் தெளியுங்கள் என்கிறாள் இன்னொரு பாசுரத்தில்.

ஒருவேளை ஆண்டாள் போல் தங்கம்மாவும் திருவாய்மொழியோ நாச்சியார் திருமொழியோ திருப்பாவையோ பாடியிருந்தால் அவளுக்கு பாபு கிடைத்திருப்பானோ?

JamesFague
20th February 2016, 11:39 AM
https://youtu.be/_MJuaLsi1wc

JamesFague
20th February 2016, 11:41 AM
One more beautiful song from Moghamul

https://youtu.be/Y1Ea_8j3P3M

JamesFague
20th February 2016, 11:48 AM
Melody from Ragangal Maruvathillai

https://youtu.be/Pbcp9VAZc6U

madhu
21st February 2016, 04:06 AM
ஒருவேளை ஆண்டாள் போல் தங்கம்மாவும் திருவாய்மொழியோ நாச்சியார் திருமொழியோ திருப்பாவையோ பாடியிருந்தால் அவளுக்கு பாபு கிடைத்திருப்பானோ?
தங்கம்மாவுக்கு திருமணம் ஆகிவிட்டதே ! அதனால்தான் ஆண்டாள் என்பது பொருந்தாமல் போய் விட்டது. ஒரு வேளை தன்னை மீரா என்று நினைத்திருந்தால் கண்ணன் (பாபு) கிடைத்திருக்க வாய்ப்பு இருந்திருக்கலாம் !!!

rajraj
21st February 2016, 07:27 AM
What is the pp song? :lol:

madhu
21st February 2016, 07:32 PM
What is the pp song? :lol:
endha paattu vathiyarayya ?

rajraj
22nd February 2016, 02:17 AM
From thookku thookki (1954)

sundhari soundhari nirandhariye.......



http://youtu.be/VlULJclM6IQ


madhu: I thought I was in pp thread ! :)

chinnakkannan
22nd February 2016, 10:29 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..

சுந்தரி செளந்தரி நல்ல பாட்ட்..அப்படியே சுந்தரின்னு யோசிச்சா..

சுந்தரி பாய்னு ஒரு ஆக்ட்ரஸ்.. ஒரு டைரக்டரோட சம்சாரம்..

சு..சுந்தரி..ந.தியோட டயலாக் சுமதி என் சுந்தரில்ல

பாட்ஸ் பார்த்தா..

சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் சேர்ந்திருந்தால் திருவோணம்

சுந்தரி கண்ணால் ஒரு சேதி..(விஷூவல் ல எப்படியோ இருக்கும்..)

இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தாளோ

சீர்காழி சிவசிதம்பரம் முதல் பாட்டுன்னு நினைக்கறேன்..திடீர்னு மிருதங்க ச் சக்கரவர்த்தில வரும்..

அபினய சுந்தரி ஆடுகிறாள் என் ஆசைக் கனவை த் தூண்டுகிறாள்
விழிகளில் கடிதம் தீட்டுகிறாள் இன்ப வீணையில் சுருதி கூட்டுகிறாள்..ப்ரபு சுலோச்சு..

சொல்லால் அடிச்ச சுந்தரி..

சுந்தரி சிறிய ரெட்டை வால் சுந்தரி..

சித்தாடை கட்டிக்கிட்டு சிங்காரம் பண்ணிகிட்டு
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி மயிலாட வந்தாளாம்..

அடிமை இந்த சுந்தரி..என்னை வென்றவன் ராஜ தந்திரி..

அது சரி சுந்தரின்னா.. சுந்தர வண்ணம் கொண்டவள்..ரூப லாவண்யம் கொண்டவள், ரொம்ப லட்சணமான பெண்..அழகு மிகக் கொண்டவள் நு மட்டுமா.. நோ.. அவளுக்கு நல்ல குணமும் இருக்கணுமாம்.. அழகும் குணமும் இணைந்து கண்களில் மின்னலும் குறும்பும், நாசி செண்பக்ப்பூ, உதடு செம்மாதுளைச்சிவப்பு கன்னம் தாமரைப்பூங்கன்னம் பின் மற்ற அவயவங்கள் சாமுத்திரிகா லட்சணங்கள் கோண்ட பெண் ப்ளஸ் நல்ல குணம் =சுந்தரி..சரிதானே..

அந்தியின் செவ்வண்ணம் ஆங்கே அழகுடனே
சுந்தரி வந்தாளே ஜோர்..

என்ன பாட் போடலாம்..

https://youtu.be/y-VTqi52pL0

chinnakkannan
22nd February 2016, 10:43 AM
முக நூலில் ஒரு நண்பர் இரண்டு படங்கள் பிடிக்குமெனச் சொல்லி எல்லோரம் நல்லவரே, இளையராணி ராஜலட்சுமி எனச் சொல்லியிருந்தார்..எ. ந. தெரியும்..இளைய ராணி ராஜ லட்சுமி?

rajeshkrv
22nd February 2016, 11:39 AM
cika

https://www.youtube.com/watch?v=QmAAsSsbrFg

chinnakkannan
22nd February 2016, 12:13 PM
Thanks rajesh. Ennavaakkum kathai..

madhu
22nd February 2016, 03:08 PM
36 ஆண்டுகாலமாக தொடந்து வெளிவந்த சினிமா எக்ஸ்பிரஸ் இதழ், தனது நீண்ட நெடிய பயணத்தை 2016, பிப்ரவரி 16-29 இதழோடு நிறுத்திக் கொண்டுள்ளது.

1980-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ம் நாள் சினிமா எக்ஸ்பிரஸின் முதல் இதழ் வெளிவந்தது. அந்த இதழை அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். வெளியிட்டார்.

ஒரு லட்சம் பிரதிகள் விற்ற முதல் சினிமா பத்திரிகை என்கிற பெருமை சினிமா எக்ஸ்பிரஸுக்கு மட்டுமே உண்டு. தேசிய விருதுக்கு நிகராகக் கலைஞர்கள் சினிமா எக்ஸ்பிரஸ் விருதுக்கு மதிப்பு அளித்தார்கள்.

madhu
22nd February 2016, 03:12 PM
Thanks rajesh. Ennavaakkum kathai..

கோழைத் தம்பி ஸ்ரீகாந்தால் ஜமீனை ஆட்சி செய்ய முடியாததால் அக்கா ஸ்ரீவித்யா பொறுப்பெடுத்துக்குறார். பக்கத்து ஜமீன் ஜெய்சங்கர் இவரைத்தான் கல்யாணம் செய்வதாக உறுதியுடன் இந்த ஜமீனுக்கு வேலையாளாக வர்ரார்.. கடேசில தம்பி வீரனாகி அக்காவையே எதிர்க்க அடுத்த ஊர் ஜமீனைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டு போயிடறார்.... இந்த மாதிரிதான் கதைன்னு நினைவு. நல்ல கணவனுக்கு மனைவியானவள் அந்த கடவுளுக்கே நன்றி கூறுவாள் அப்படின்னு வாணி ஜெயராம் பாட்டு ஒண்ணு அப்போ அடிக்கடி ரேடியோல போடுவாங்க..

chinnakkannan
22nd February 2016, 05:29 PM
தாங்க்ஸ்ங்கோவ்..ஹச்சோ அப்ப ஜெய்சங்கர் கதி.. காதலிலே தோல்வியுற்றான் ஜமீன் ஒருவன்னு பாடுவாரா.. பட் இந்தப் படத்தை சிலாகித்து ஒருத்தர் சொன்னாரே முக நூலில்..ம்ம்

chinnakkannan
22nd February 2016, 05:30 PM
நான் சினிமா எக்ஸ்ப்ரஸ் தொடர்ந்து வாங்கும் ஒரு வாசகன்.. நல்ல கட்டுரைகள் டீஸண்ட்டான புகைப்படங்கள்..கொஞ்சம் எப்படி இருக்கீங்க என பழைய நடிக நடிகையர் பற்றி, கன்னட டாக்கீஸ் மலையாள டாக்கீஸ் ஹிந்தி , ஆங்கிலப்படங்கள் என நன்றாகவே எழுதிக்கொண்டு இருந்தார்கள்..டபக்கென நிறுத்த என்னகாரணமோ..

madhu
22nd February 2016, 05:48 PM
தாங்க்ஸ்ங்கோவ்..ஹச்சோ அப்ப ஜெய்சங்கர் கதி.. காதலிலே தோல்வியுற்றான் ஜமீன் ஒருவன்னு பாடுவாரா.. பட் இந்தப் படத்தை சிலாகித்து ஒருத்தர் சொன்னாரே முக நூலில்..ம்ம்

அதாகப்பட்டது பக்கத்து ஜமீன் ஜெய்சங்கர்தான் அடுத்த ஊர் ஜமீன். அவரைத்தான் ஸ்ரீவித்யா கல்யாணம் செஞ்சுகிட்டு போயிடறார். படம் நல்லாவே இருக்கும். ஸ்ரீவித்யா கேரக்டர் பிரமாதமாக இருக்கும்.

madhu
23rd February 2016, 04:17 AM
சிக்கா... ஒரு சீன் ரொம்ப நல்லா இருக்கும். ஜெய்சங்கர் இந்த ஜமீனில் வேலைக்காரனாக இருக்கறப்போ அவர் ஜமீனிலிருந்து அவருக்கு சிலமபம், குஸ்தி எல்லாம் சொல்லிக் கொடுத்த வாத்தியார் வருவார். அவர் கோழை ஸ்ரீகாந்திடம் அவங்க ஜமீன் கோழை என்று ஏசி சண்டைக்கு வரும்படி கூப்பிடுவார். உடனே ஸ்ரீவித்யா கையில் கம்பை எடுத்துக் கொண்டு கிளம்ப நாமெல்லாம் அவரே சண்டை போடப்போகிறார் என்று நினைப்போம். ஆனா அவர் ஜெய்சங்கரை கூப்பிட்டு இந்த ஜமீனில் வேலை செய்யுற உங்களுக்கு நன்றி இருந்தா சண்டை போட்டு ஜெயிச்சுட்டு வாங்க என்று சொல்லிவிடுவார். வேறு வழியில்லாமல் வாத்தியாரையே ஜெய் அடிக்க வேண்டி வரும். அங்கங்கே பல நல்ல டிவிஸ்ட் ( டான்ஸ் இல்லை ) இருக்கும்.

rajraj
23rd February 2016, 06:59 AM
chinnakkaNNan:

Here is another 'sundhari' song:

un athaanum naandhaane sattai pothanum nedhaane
........................
sundhariye andharangame.............

JamesFague
23rd February 2016, 09:35 AM
Instant Hit of the 80's. Superb melody from Sivappu Malli


https://youtu.be/5MksKJmFC2w

chinnakkannan
23rd February 2016, 10:27 AM
hi good morning all :)

மதுண்ணா இளைய ராணி ராஜலட்சுமி யூட்யூபில் இருக்கா என்ன பார்க்கணும்.. தாங்க்ஸ்

வாத்யாரையா..ராஜ் ராஜ் சார்.. நன்றி..

எஸ்.வாசுதேவன்..இந்த் ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம் மெட்டுக்கு முதல்ல கவிஞர் வைரமுத்து எழுதிய வரிகள் எது தெரியுமோ..

மொட்டு வச்ச வாசனை மல்லி
வாங்கி வந்தேன் ஆசையில் அள்ளி

அப்புறம் அது ஏனோ தயாரிப்பாளருக்கு பிடிக்காமல் போக ரெ. க. ச.கி எழுதிட்டார்..பட் எழுதினதை வேஸ்ட் பண்ணலையே..
நெய்வேலிக்குப் பிடிச்ச கருடா செளக்கியமா படத்துல யூஸ் பண்ணிக்கிட்டாராக்கும்..:)

rajeshkrv
23rd February 2016, 10:46 AM
https://www.youtube.com/watch?v=G6fZ5S-xBps

JamesFague
24th February 2016, 09:25 AM
Mr CK,


Will you sleep after watching this song?


https://youtu.be/LO0O4VJFGL8

raagadevan
24th February 2016, 09:49 AM
Thank you Mr. S. Vasudevan for the enchanting composition by MSV (in Chandrakauns raga), unusual for a Bharathiyar song, beautifully sung and choreographed! :)

raagadevan
24th February 2016, 10:46 AM
MSV's version sounds like in Kalyana Vasantham ragam! :)

chinnakkannan
24th February 2016, 10:55 AM
தாங்க்யூ எஸ்.வாசுதேவன்.. வீட் போய்க் கேக்கறேன்..எனக்கு மிகப்பிடித்த பாடல்களில் இது ஒன்று..

ஆமா..ஒண்ணு விட்டுப் போச்சே..

குட்மார்னிங்க் ஆல்..

எஸ்.வாசுதேவன் ஆரம்பிச்சு வச்சுட்டார்..எனில் இந்த மிஸஸ் மன்மதன் பத்திப் பேசலாமா..

ரொம்பக் கட்டிச் சமர்த்து..மன்மதன் ஹேண்ட்ஸம்னா இவங்க ப்யூட்டிஃபுல்.. தமிழ் சினிமால ஆ ஊன்னா ரதி ரதின்னு தான் பாடல் வரில வரும்..வருமா என்ன.. ( முழியும் முழியுமா ஒரு பொண்ணுக்கு ரத்தின்னு பேர்வச்சு பாரதிராஜா அழகு பார்த்தார்..ரியல் நேமே ரத்தியா என்ன)

காதலுக்குத் தான் ரத்தின்னு சொல்லணும்னு இல்லை.. வீட்ல பொறந்த பொண் குழந்தையைக் கொஞ்சுறதுக்கும் யூஸ் ஆகும்ல..இதோ..

இது சங்கீத திருநாளோ
புது சந்தோஷம் வரும் நாளோ
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ
சிறு பூவாக மலர்ந்தளோ
சின்ன சின்ன அசைவில் சித்திரங்கள் வரைந்தாள்
முத்த மழை கண்ணம் விழ நனைந்தாளே
கொஞ்சி கொஞ்சி பிஞ்சு நடை நடந்தாளே

**
செவ்வேல் விழியைக் கண்டு மான் விழியைப் படைத்தான் பிரம்மா
செந்தேனிதழைக் கண்டு ரதியின் சிலையை செதுக்கினான் விஸ்வகர்மா
என் சிறந்த மேனியைக் கண்டு தேவியை ஓவியமே தீட்டினான் ரவிவர்மா

இந்தப் பாட்டுக் கேட்டதில்லை..கண்ணதாசன் எழுதினதாம் அன்பு எங்கேக்கு..காயா பழமா சொல்லுன்னுஆரம்பிக்குமாம்..

*
ஜதி என்னும் மழையினிலே
ரதி இவள் நனைந்திடவேங்கறார் டி.ஆர். சலங்கையிட்டாள் ஒரு மாது பாட்டில

*

இந்த ரதிப்பொண்ணு இருக்காளே..எல்லாரையும் விட சிறந்த அழகியாம்ல.. ஆனா கண்ணதாசன் என்னவாக்கும் சொல்றார்..

ரதியும் நாடும் அழகிலாடும் கண்கள்..

அஃதே.. வரி சொன்னவுடனே கவிஞருக்கு அது ரொம்பப் பிடிச்சுப் போய் தனக்குத் தானே சபாஷ் போட்டுக்கிட்டு பாட்டிலயும் ஸ்ரீதேவி சொல்றாமாதிரி வச்சுருப்பார்..

*

சிலோன் ரேடியோ ஏழு முப்பத்தொண்ணுலருந்து எட்டு பூம்புனல்.. காலைல அப்பா கடைக்கு ஏழு அம்பதுவாக்குல சைக்கிள்ல கிளம்ப குட்டிக் கண்ணா தினமணியை மேயறப்ப எதிர் வீட்டு மாடியில் சத்தமா வைக்கற பொங்கும் பூம்புனலும்ல கேட்ட பாட்டு..

மீன் கொடித் தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்..
ரதியோ மதனின் பிடியில்..ஸம்திங்க் வரும்..

*

சரி .. காலங்கார்த்தால நல்ல மெலடி கேக்கலாம்..சிப்பியிருக்குது முத்துமிருக்குது..எனிடைம் கேக்கக்கூடிய பாட்..

https://youtu.be/5JS0fPN3_hA

இந்தப் படம் வந்த ரெண்டு மூணு வருஷங்கள்ல டில்லி போகும் வாய்ப்பு.. பார்க்கும் பசுமையெல்லாம் இந்தப் படலொகேஷனை நினைவு படுத்திச்சு..டெல்லி புல்வெளி, பசுமை எல்லாம் கொஞ்சம் வெளிர் பச்சையா வித்தியாசமான அழகா இருக்கும்..ம்ம்

JamesFague
24th February 2016, 11:21 AM
Mr CK,


Enjoy


Meen Kodi Theril Manmadha Rajan


https://youtu.be/QIZnYfA6crA

madhu
24th February 2016, 04:20 PM
சிக்கா....

ரதி தேவி சன்னிதியில் ரகசிய பூஜை..
திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள்
காதல் ரதியே கங்கை நதியே
அன்பே உன் பேர் என்ன ரதியோ
மதனோற்சவம் ரதியோடுதான்
பொன்னோவியம் ஒன்று ரதியின் வடிவிலே
மலையின் மீது ரதி உலாவும் நேரமே
காதல் தருவது ரதியின் கதை
மாலை வேளை ரதிமாறன் பூஜை
அந்த ரதிமாறன் கண்டாலும் தொலைந்தானடி
ரதியும் அதன் பதியும் பெறும் சுகமே உதயம்
பதினாறு ஆண்டு ரதி தேவியாக பனிமாலை சூடி வருக
உன்னை விட ரதியும் அழகில்லை.. பொய் சொல்லாதே
அந்த ரதிக்கு நான் தங்கை
மதனும் ரதியும் போல் வாழவே... கம்பனும் வம்பனும் கண்டு...

இப்படி இன்னும் எக்கசக்க ரதிகள்..............

chinnakkannan
24th February 2016, 04:48 PM
வாவ்..மதுண்ணா.. டபக்குன்னுமனசுல வந்ததத் தான் எழுதினேன்..இவ்ளோ ரத்தீஸ்ஸா.. ஸோ அவ்வளவு மன்மதனும் இருக்கணுமே

சரீ ரீ

மலையின் மீது ரதி உலாவும் நேரமே
காதல் தருவது ரதியின் கதை
மாலை வேளை ரதிமாறன் பூஜை
அந்த ரதிமாறன் கண்டாலும் தொலைந்தானடி

பதினாறு ஆண்டு ரதி தேவியாக பனிமாலை சூடி வருக
உன்னை விட ரதியும் அழகில்லை.. பொய் சொல்லாதே
அந்த ரதிக்கு நான் தங்கை
மதனும் ரதியும் போல் வாழவே... கம்பனும் வம்பனும் கண்டு...

இதெல்லாம் கேட்டா மாதிரியே இல்லியே..ஈவ்னிங்க் போய் செக் பண்ணனும்..ஏதாவது புடிச்ச சுவையான ரதி யிருந்தா தகவலோடு தாங்க.. ரதிதேவின்னு ஒரு நடிகை கூட இருந்தாங்கள்ள..

madhu
24th February 2016, 07:55 PM
சிக்கா.....

மலையின் மீது ரதி உலாவும் நேரமே - ஆயிரம் மலர்களே மலருங்கள் - நிறம் மாறாத பூக்கள்
காதல் தருவது ரதியின் கதை - வீணை பேசும் - வாழ்வு என் பக்கம்
மாலை வேளை ரதிமாறன் பூஜை - சாமந்திப்பூ ( எஸ்.பி.பி.,ஷைலஜா டூயட்- மலேஷியா வாசுதேவன் இசையில் )
அந்த ரதிமாறன் கண்டாலும் தொலைந்தானடி - படைத்தானே பிரம்ம தேவன் -எல்லோரும் நல்லவரே

பதினாறு ஆண்டு ரதி தேவியாக பனிமாலை சூடி வருக - வாடியம்மா பொன்மகளே - பாலூட்டி வளர்த்த கிளி
உன்னை விட ரதியும் அழகில்லை.. பொய் சொல்லாதே - ஜனவரி நிலவே சுகம்தானா - என் உயிர் நீதானே
அந்த ரதிக்கு நான் தங்கை - பிராயச்சித்தம் படத்தில் மனோரமாவின் கிளப் டான்ஸ்
மதனும் ரதியும் போல் வாழவே... கம்பனும் வம்பனும் கண்டு - வனிதாமணியே இனி வாராய் அமுத கனியே - அடுத்த வீட்டுப் பெண்

ஓகேவா ?

chinnakkannan
24th February 2016, 08:28 PM
மலையின் மீது ரதி உலாவும் நேரமே - ஆயிரம் மலர்களே மலருங்கள் - நிறம் மாறாத பூக்கள்
காதல் தருவது ரதியின் கதை - வீணை பேசும் - வாழ்வு என் பக்கம்

அந்த ரதிமாறன் கண்டாலும் தொலைந்தானடி - படைத்தானே பிரம்ம தேவன் -எல்லோரும் நல்லவரே
உன்னை விட ரதியும் அழகில்லை.. பொய் சொல்லாதே - ஜனவரி நிலவே சுகம்தானா - என் உயிர் நீதானே
மதனும் ரதியும் போல் வாழவே... கம்பனும் வம்பனும் கண்டு - வனிதாமணியே இனி வாராய் அமுத கனியே - அடுத்த வீட்டுப் பெண்

வாவ்ங்கோவ்.. மிக்க தாங்க்ஸ்.. எவ்ளோ அழகா சொல்லியிருக்கீங்க.. நான் கேட்ட பாடல்கள் மேலே இருப்பவை..விட்டுப்போனவை கேட்க இருப்பவை..

ஒரு பிக் ஓ + தாங்க்ஸ் அகெய்ன்..உங்களுக்கு ரதியின் அருள் பரி பூர்ணமாகக் கிட்டக் கடவது..:)
\

மாறன் கணையால் மயங்குகின்ற ஊர்வசியாள்னு ஒரு பாட்டு சடனா நினைவுக்கு வருது.. மாறன் கணைல ஊர்வசி மயங்கிய கதை என்னவாம்..

rajraj
24th February 2016, 10:57 PM
lajjaavathiye ennai asathura rathiye.............

:lol:

chinnakkannan
24th February 2016, 11:40 PM
எங்கேயோ போய்ட்டீங்க ராஜ் ராஜ் சார் :)

rajeshkrv
25th February 2016, 06:34 AM
ravi varaman ezhuthatha kalaiyo
rathidevi vadivana silayo

cika ungakukkku thaan :)

https://www.youtube.com/watch?v=hcwDvd7m6JI

rajraj
25th February 2016, 07:09 AM
எங்கேயோ போய்ட்டீங்க ராஜ் ராஜ் சார் :)


:) :) :)

chinnakkannan
25th February 2016, 08:56 AM
ஹாய் குட்மார்னிங் ஆல்

ஆஹா ரதிப்பாடல்களோடு நேற்றைய பொழுது கழிந்ததா..ஆனால் இந்த மன்மதன் அம்பு.. என்றெல்லாம் சொன்னாலும் அது எல்லாம் ரதியின் நினைவாகத் தான் இருக்கிறது ஆடவருக்கெல்லாம்..ம்ம்

இங்க பாருங்க ஒரு மெலடி படம் கொஞ்ச்ம் புச்சு தான்..

உன்னைக் கண்ட நாள் முதல் என் தூக்கம் போனது..(பயந்துருப்பாரா இருக்கும் ஹீரோயின் கொஞ்சம் சுமார் தான்..விஜய் ஆண்ட்டனி அண்ட் ஹீரோயின் யாரு)

https://youtu.be/nSuy6ucSJ4E?list=RDLO0O4VJFGL8

chinnakkannan
25th February 2016, 09:10 AM
அள்ளிக்கொடுக்க அன்பு இருக்கையில் உலகம் புதுசாச்சு..ட்ரூ இல்லியோ

ஈ படம் நோக்கிட்டில்லா..அதாவது ஒரு ஊர்ல ரெண்டு ராஜா..பட் ப்ரியா ஆனந்த்(லத்துவிற்கு தூரத்து உறவு போல.. சுட்டுப் போட்டாலும் நடிப்புகொஞ்சம் கண்ணக்கட்டும்!) பிடிக்கும்னு ஈ பாட்டு இப்போ கேட்டேனா..

மழைக் காத்தா நீஇங்க அடிக்க.. நல்லாத்தான் இருக்கு..ப்ரியா ஆனந்தின் முதுகு ஹிந்தி டி.வி சீரியல்களை நினைவு படுத்துகிறது..:)

https://youtu.be/6AYgoyrX1_I?list=RDLO0O4VJFGL8

Richardsof
25th February 2016, 03:38 PM
1949 -1960 களில் வெளிவந்த தமிழ் படங்களின் புதுமையான விளம்பரங்கள் அன்றைய ஆங்கில நாளிதழில் வந்தன . நண்பர்கள் பார்வைக்கு .

1949

http://i64.tinypic.com/27y4rq1.jpghttp://i1273.photobucket.com/albums/y412/esvee6/20160219_100610-1_zpsvc2j0fkn.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/20160219_100610-1_zpsvc2j0fkn.jpg.html)

Richardsof
25th February 2016, 03:41 PM
http://i68.tinypic.com/1zz0494.jpg

Richardsof
25th February 2016, 04:17 PM
http://i67.tinypic.com/20p6b1s.jpg

Richardsof
25th February 2016, 04:19 PM
http://i67.tinypic.com/fm3lgp.jpg

Richardsof
25th February 2016, 04:22 PM
http://i65.tinypic.com/2ywis9j.jpg

Richardsof
25th February 2016, 04:24 PM
http://i64.tinypic.com/1622xp5.jpg

eehaiupehazij
25th February 2016, 08:19 PM
From GG Island with Love!


Directors' Delight (DD) GG's Cameo Attendance in song sequences!!


புகழின் உச்சியில் வீற்றிருக்கும் ஒரு கதாநாயகன் சில சமயங்களில் திரைக்கதையோட்டத்தில் பாடல் காட்சிகளிலோ உரையாடல் காட்சிகளிலோ வெறுமனே வந்துபோக வேண்டிய இக்கட்டான சூழலில் இமேஜ் கருதி சுணக்கம் காட்டும் நிகழ்வுகள், இயக்குனருடன் 'மனக்கசப்புகள்', ரசிகர்களின் 'கொந்தளிப்புக்கள்' சகஜமே! ஆனால் Second to None ஜெமினியோ எந்தக் காலத்திலும் ஈகோ சுணக்கங்களைத் தவிர்த்து இயக்குனர்களின் தேர்வலராகவே Directors' Delight DD GGயாகவே வலம்வந்து அந்த ஒரு உள்ளேன் ஐயா ரகக் காட்சியிலும் தனது முத்திரையைப் பதித்து ரசிக நெஞ்சங்களை ஈர்க்கத் தவறியதில்லை !


Attendance16 Avvai Shanmugi! rukku rukku rukku.

உள்ளேன் ஐயா ஜெமினிகணேசன் !

வருத்தப் படாத வயோதிகர் Vs வஞ்சிக்கோட்டை வாலிபன் !

வஞ்சிக்கோட்டை வயோதிகரின் காதல் லுக்கு ஷண்முகியை கவரும் கந்தர்வ சிரிப்பு டெக்னிக் ......காதல் மன்னரை அசைக்க முடியுமா?
நடிகர்திலகமே அசந்துபோய் காதல் மன்னன் ஒரே ஒருவர்தான் அது ஜெமினிதான் என்று அங்கீகரித்தாராமே !!

As usual scene stealer GG!

வருத்தப் படாத வயோதிகர் !

https://www.youtube.com/watch?v=DTRA_Ng6WEU

இதே வெற்றுடம்புடன் வஞ்சிக்கோட்டை வாலிபனாக ,,,,,! The one and only Emperor of Love!

வஞ்சிக்கோட்டை வாலிபன் !The crowned King of Love!

https://www.youtube.com/watch?v=zkHlWFI8sac

rajeshkrv
25th February 2016, 10:17 PM
ஹாய் குட்மார்னிங் ஆல்

ஆஹா ரதிப்பாடல்களோடு நேற்றைய பொழுது கழிந்ததா..ஆனால் இந்த மன்மதன் அம்பு.. என்றெல்லாம் சொன்னாலும் அது எல்லாம் ரதியின் நினைவாகத் தான் இருக்கிறது ஆடவருக்கெல்லாம்..ம்ம்

இங்க பாருங்க ஒரு மெலடி படம் கொஞ்ச்ம் புச்சு தான்..

உன்னைக் கண்ட நாள் முதல் என் தூக்கம் போனது..(பயந்துருப்பாரா இருக்கும் ஹீரோயின் கொஞ்சம் சுமார் தான்..விஜய் ஆண்ட்டனி அண்ட் ஹீரோயின் யாரு)

https://youtu.be/nSuy6ucSJ4E?list=RDLO0O4VJFGL8

my fav in recent times. hemachandra has sung so well

chinnakkannan
26th February 2016, 09:37 AM
மதுரையில் உள்ள அல்மோஸ்ட் 90 சதவிகிதம் தியேட்டர்களில் படம் பார்த்திருக்கிறேன்..இருந்தாலும் ஒரு தியேட்டர் போகாமலேயே இருந்தேன்..

வில்லாபுரத்தில் மது தியேட்டர் தான் எல்லை..அதைத்தாண்டி சென்றதில்லை..அதை த் தாண்டியும் ஒரு தியேட்டர் கட்டியிருந்தார்கள்..பத்மா என நினைவு..இப்போதும் இருக்கிறதா தெரியவில்லை..

விகடனில் விமர்சனம் படித்து மார்க் பார்த்து போய்வந்துகொண்டிருந்த கால கட்டம் அது..ஆஹா ஓகோ..புதிய இளைஞர்களின் கூட்டணி என்று புகழ்ந்திருந்தாலும் அதில் விஜயகாந்த் க்ம்பீரமாக நடித்திருக்கிறார் என வந்த நினைவு..வி.கா. படங்கள் என்று இழுத்துக்கூட்டிப் போன து கிடையாது..அதுவும் இந்தப் படம் ரிலீஸ் ஆனது பத்மா மட்டும் வேறு லோகல் தியேட்டர் நினைவில்லை..

நைட் ஷோ வீட்டிலிருந்து மொபெட்டில் கிளம்பி ஜம் என்று போய் படம் முடிந்து வருகையில் கொஞ்சம் மனதிற்குள் உதறல் தான்.பட் பயம் எல்லாம் ஒன்றும் இல்லை..ஜிவ்வென்று வீட்டிற்கு வந்து விட்டேன்...

ஓ என்னபடம்.. அவ்ளோ தூரம்னு சொன்னேனில்லையா.. முதல் பாடல் ஆரம்பிக்கும் போது தான் போய்ச் ச்சேர்ந்தேன்.. ராத்திரி நேரத்துப்பூஜையில்.. யெஸ் படம் ஊமை விழிகள்.. த்ரில்லர் என்பது என்றைக்குமே பிடிக்கும் என்பதால் சுவாரஸ்யமாகத் தான் இருந்தது..திடுக் திடுக்கெனப் போய்க் கொண்டிருக்க திடீரென படத்தில் அதுவரை வராத ஒரு ஜோடி வந்து டபக்கென இளமை இன்னிசையுடன் இசைவாய்க் காதலித்த படி பாட.அந்தப் பாடலும் பிடித்து விட்டது..

மாமரத்து பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடவா
பூமரத்து நிழல் எடுத்து போர்வையாக்கி மூடவா
கண்ணே புது நாடகம் விரைவில் அரங்கேறிடும்

கூந்தலில் பூச்சூடினேன் கூடலையே நாடினேன்
கூடிவிட மனது துடிக்குது...ஆ ஆ
கூடவந்த நாணம் தடுக்குது


கடலோடு பிறந்தாலும் இந்த அலைகள் ஏங்குது
உடலோடு பிறந்தாலும் இந்த மனமும் ஏங்குது

சித்திரப்பூவிழி பாரம்மா சிற்றிடை மெலிந்ததேனம்மா
பத்துவிரல் அணைக்கத்தானம்மா...ஓ ஓ
முத்து ரதம் எனக்குத்தானம்மா

உனக்காக உயிர் வாழ இந்த பிறவி எடுத்தது
உயிரோடு உயிரான இந்த உறவு நிலைத்தது

லிரிக்ஸ் ஆபாவாணன் என நினைக்கிறேன்..காட்சி கார்த்திக் சசிகலா..(கொஞ்சம் வித்யாசமான pair. இந்தப் படத்திற்குப் பிறகு
இணைந்து நடித்திருக்கிறார்களா தெரியாது..

https://youtu.be/jIdqIXOkFXs


எவ்வளவோ பூ இருக்க எப்படி மாமரத்துப் பூ பிடிச்சாருன்னு தெரியவில்லை..இன்னொருமாம்பூ பாட்டும் நினைவுக்கு வருது..

மாம்பூவே சிறு மைனாவே - மச்சானைப் பார்த்தீங்களான்னு படமாம்..பார்த்த நினைவில்லை..இப்பத் தான் பாட் பார்க்கறேன்..முன்னாடி சிலோன்ல கேட்ட நினைவு..சிவகுமார் கிருதா கொஞ்சம் தமாஷா இருக்கு..

https://youtu.be/td4dNSb0xwM

*

எஸ் வி சார் வாங்க வாங்க.. அமர்க்களமான விளம்பரங்கள் நன்றி.. கொஞ்சம் அடிக்கடி வாங்க :)

வாங்க சிவாஜி செந்தில்.. தீவு மன்னரே.. நீங்களும் இந்தத்தீவின் குடிமகன் என்பதை மறக்காமல் அடிக்கடி வருக வந்து ஆங்கிலப் படங்களைத்தருக!

Richardsof
26th February 2016, 09:44 AM
MKTB ''SIVAKAVI''

http://i63.tinypic.com/2qd4ep1.jpg

Richardsof
26th February 2016, 09:46 AM
http://i66.tinypic.com/27y0rcw.jpg

chinnakkannan
26th February 2016, 09:47 AM
சிவகவி வெளியான தியேட்டர்கள் ஜோர்.. எஸ் வி சார்..பட் இப்ப 10 பெர்சண்ட் தியேட்டராவது இருக்குமா..

Richardsof
26th February 2016, 09:48 AM
http://i68.tinypic.com/1zz1f8z.jpg

Richardsof
26th February 2016, 09:50 AM
சிவகவி வெளியான தியேட்டர்கள் ஜோர்.. எஸ் வி சார்..பட் இப்ப 10 பெர்சண்ட் தியேட்டராவது இருக்குமா..
99 % திரை அரங்குகள் தற்போது இல்லை என நினைக்கிறேன் சின்ன கண்ணன் சார் .

Richardsof
26th February 2016, 09:52 AM
http://i64.tinypic.com/30xbz10.jpg

chinnakkannan
26th February 2016, 10:03 AM
99 % திரை அரங்குகள் தற்போது இல்லை என நினைக்கிறேன் சின்ன கண்ணன் சார் . சோகம் தான் எஸ்வி சார்..

ம்ம் நான் அங்கிட்டுப் போய் - பல நாளா கேட்க மட்டும் செஞ்ச பாட் பார்த்துக்கிட்டிருந்தேனாக்கும்.. உங்களுக்குத் தர்றதுக்காக..கேட்கறச்சே கொஞ்சம் சோகப் பாட்டோன்னு நினைக்கத்தோன்றியது.. யெஸ் சோகப் பாட்டுன்னே நினைச்சுருந்தேன்..இப்போ விஷூவல் பார்த்தா அது ரொமாண்டிக் பாட்..யாராக்கும்..ம.தி..லத்தூ .. சிம்ப்பிளான விஷூவல்..அதுவே நன்னாயிட்டு இருக்கு..

https://youtu.be/WR9LejeNzaY

Richardsof
26th February 2016, 10:29 AM
http://i64.tinypic.com/28jznt3.jpg

Richardsof
26th February 2016, 10:30 AM
http://i65.tinypic.com/23wmdg4.jpg

Richardsof
26th February 2016, 10:34 AM
http://i67.tinypic.com/20itht5.jpg

Richardsof
26th February 2016, 10:37 AM
http://i64.tinypic.com/2hi8hp3.jpg

Richardsof
26th February 2016, 10:39 AM
http://i65.tinypic.com/anyfe8.jpg

Richardsof
26th February 2016, 02:19 PM
http://i63.tinypic.com/30bkxnk.jpg

நடிகை லதா - நினைத்ததை முடிப்பவன் '' படபிடிப்பில் ....

http://i64.tinypic.com/acryh.jpg
தாய்லாந்து நடிகை மேத்தா ''உலகம் சுற்றும் வாலிபன் ''

JamesFague
27th February 2016, 09:26 AM
Courtesy: Tamil Hindu

சூழல் ஒன்று பார்வை இரண்டு: கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம்

வாழ்க்கையின் கவலை மிகுந்த தருணங்களில் நம்பிக்கையைத் தக்கவைத்துக்கொள்ளும் மனநிலையை முடிந்தவரை நாம் மேற்கொள்ள வேண்டும். இந்த மனப்பாங்கைக் குழந்தைகளுடன் இணைந்து ஆடிப் பாடும் பாடல் வரிகளில் காட்டுவது திரைக் கவிஞர்களது மரபு. அம்மரபில் அமைந்த தமிழ், இந்திப் பாடல்களைப் பார்ப்போம்.

இந்திப் பாடல்.

படம்: மிலி (நாயகியின் பெயர்)

பாடல்: யோகேஷ்

பாடியவர்: லதா மங்கேஷ்கர்

இசை: எஸ்.டி பர்மன்.

பாடல்:

மைனே கஹா பூலோன் ஸே

ஹஸோ தோ வோ கில்கிலாகே ஹஸ்தியே

அவுர் யே கஹா ஜீவன் ஹை பாயீ

மேரே பாயீ ஹஸ்னே கேலியே

பொருள்:

பூக்களிடம் நான் சொன்னேன்

புன்னகை செய்வதனால் அவை

பூத்துக் குலுங்கிப் புன்னகைக்கட்டும்.

அப்பொழுது இவர்கள் (குழந்தைகள்) சொன்னார்கள்

வாழ்க்கை என்பதே புன்னகைக்கவே என் சகோதரர்களே

சூரியன் சிரித்தால் (ஒளி) கிரணங்களாகச் சிதறும்

சிரித்தான் சூரியன் சிதறிய செந்நிறக் கிரணங்களால்

அழகாய் ஆகியது இப்பூமி.

அப்பொழுது சொன்னேன் கனவுகளிடம், செம்மையாக்கினால்

சிரித்துக்கொண்டு அதைச் செய் என

இவர்கள், வாழ்க்கையே அலங்கரிப்பதுதானே என்றார்கள்

மாலைப் பொழுது சிரித்தது ஒரு மணப்பெண் போல

நீல வானிற்குப் பொன்னிறம் போர்த்தியது போல

நிறைத்தது அச்சூழலை.

நிறங்களுடன் செல்வதாயின் இந்த உலகம் முழுதும்

நிறையட்டும் எழில் நிறங்களுடன் எனச் சொன்னேன்.

இவர்கள் வாழ்க்கை என்பதே எழில் வழங்கத்தானே என்றனர்

பருவ காலம் என்னைப் பார்த்தது ஒரு நாள்

நில் நில் விளையாடு நீ என்னோடு என்றேன்

நின்றது பருவ காலம் ஆனால் நிசப்தமாக

செல்வதாயின் என்னோடு செல்ல வேண்டும்

என்னைப் போல எனச் சொன்னேன்

இவர்கள் வாழ்க்கை என்பதே செல்லுவதுதானே சகோதரா

ஓ சகோதரா என்றார்கள்.

இந்தி மொழிக்கே உரிய சிறப்பாக விளங்கும் சிறு சிறு சொற்பதங்களால் அமைந்த இந்தப் பாடலுக்கு இணையாகச் சிறிய, எளிய அன்றாடத் தமிழ் வார்த்தைகளால் மனித மன இயல் தத்துவத்தை வெளிப்படுத்தும் கண்ணதாசனின் கவி வரிகளைப் பார்ப்போம்.

புகழ் பெற்ற ஆங்கிலப் படமான ‘sound of Music’ என்ற படத்தின் டைட்டில் மெட்டில் அமைந்ததாகக் கூறப்பட்ட இப்பாடல், அதன் இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதனின் சிகரத்தில் ஒரு முத்தாகத் திகழ்கிறது.

படம்: சாந்தி நிலயம்

பாடல்: கண்ணதாசன்

பாடியவர்: பி.சுசீலா

இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

கடவுள் ஒரு நாள் உலகைக் காணத் தனியே வந்தாராம்

கண்ணில் கண்ட மனிதரையெல்லாம் நலமா என்றாராம்

ஒரு மனிதன் வாழ்வை இனிமை என்றான்

ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான்

படைத்தவனோ உடனே சிரித்துவிட்டான்

கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம் நான் தந்தது

காசும் பணமும் ஆசையும் இங்கே யார் தந்தது

எல்லை இல்லா நீரும் நிலமும் நான் தந்தது

எங்கும் சொந்தம் என்னும் எண்ணம் ஏன் வந்தது

இறைவனுக்கே இது புரியவில்லை

மனிதனின் கொள்கை தெரியவில்லை

(ஒரு மனிதன்...)

பள்ளிக்கூடம் செல்லும் வழியில் இறைவன் நின்றானாம்

பச்சை குழந்தை மழலை மொழியில் தன்னைக் கண்டானாம்

உள்ளம் எங்கும் செல்லம் பொங்கும் அன்பைக் கண்டானாம்

உண்மை கண்டேன் போதும் என்று வானம் சென்றானாம்

(ஒரு மனிதன்...)

chinnakkannan
27th February 2016, 11:24 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..

எஸ்.வி சார்.. நன்றி.. லத்து புகைப்படத்திற்கு :)

காலையில் நெய்வேலி வாசு நினைவு.. ஒரு வெகு அழகான பாடல் இ.ஸ்பெஷலில் போட்டிருந்தார் முன்பு.. லஷ்மி ஏ.வி.எம் ராஜன்..

லிரிக்ஸ்ம் எனக்குப் பிடிச்சுருந்தது..

அத்தைமகள் முத்துநகை ரத்தினத்தை
மெத்தையிட்டு மற்ற கதை சொல்லித் தரவோ

விட்டகுறை தொட்டகுறை
மிச்சமில்லை என்றபடி
அத்தனையும் அள்ளித் தரவோ

காலாலே நிலம் அளந்து
கண்ணாலே முகம் அளந்து
நூல் போலே இடை அசைத்து
நூறுமுறை ஜாடை செய்வேன்

https://youtu.be/E85hQ10aDGU

காலங்காலையில் இன்னொருபாட் பார்த்தேன்.. நான் பேச வந்தேன் சொல்லத் தான் ஓர் வார்த்தை இல்லை..

https://youtu.be/9ZNJncW2220?list=PL4SxysG_X0Wm-AlpRZL5QsJ3M37XN7STO

chinnakkannan
27th February 2016, 11:36 AM
ஆடறது பாரதியா என்ன..ம்ம் மறந்தே போச்சு..

https://youtu.be/tIVMAJA7Bpo?list=PL4SxysG_X0Wm-AlpRZL5QsJ3M37XN7STO

JamesFague
27th February 2016, 01:08 PM
Super melody from Kannil Therindha Kadhaigal


https://youtu.be/V7ZmRuw_0r0

JamesFague
27th February 2016, 01:13 PM
Viji song from Parvaiyin Marupakkam.


https://youtu.be/4dAEbpp-3bE

saradhaa_sn
27th February 2016, 06:19 PM
“மோகமுள்”

இதற்கு முந்திய பதிவொன்றில், தி.ஜானகிராமனின் 'மோகமுள்' நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் பற்றிக்குறிப்பிட்டபோது, அதைப்பற்றிய குறிப்பொன்றை தனிப்பதிவாக இட்டால் என்ன என்று தோன்றியது. தி.ஜானகிராமனின் அவ்வளவு பெரிய நாவலைப்படித்து, அதன் உணர்வுகளை உள்வாங்கியவர்களுக்கு, படத்தைப் பாக்கும்போது ஏமாற்றம் தோன்றுமே தவிர, புதிதாக படத்தை மட்டும் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் படம் பிடித்துப்போகக்கூடும். நாவலில் சொல்லப்பட்டிருக்கும் பல உணர்ச்சிப் பூர்வமான இடங்களை காட்சியமைப்பில் கொண்டுவருவது என்பது சிரமமான காரியம் மட்டுமல்ல, பல சமயங்களில் இயலாத காரியமும் கூட. அதெப்படி மனதில் நினைப்பதையெல்லாம் காட்சியில் கொண்டுவர முடியும்?.

அதுவும் 686 பக்கங்களைக்கொண்ட ஒரு நாவலை வெறும் இரண்டரை மணி நேரத் திரைப்படமாக்குவது என்பது பகீரதப்பிரயத்தனம். அதனாலேயே பல விஷயங்களை அவசரப்பட்டு முடிக்க வேண்டிய நிலையும், இன்னும் சிலவற்றை தொங்கலில் விடவேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை வருடக்கணக்கில் அல்லது குறைந்தபட்சம் மாதக்கணக்கில் இழுக்கக்கூடிய தொலைக்காட்சித்தொடராக எடுக்கப்பட்டிருந்தால் சற்று முழுமையாக சொல்லப்பட்டிருக்க முடியுமோ என்னவோ. ஆனால் இவற்றையும் மீறி படத்தை ரசிக்க முடிகிறதென்றால், அதில் ஒட்டியிருக்கும் யதார்த்தம் எனும் மிகைப்படுத்தப்படாத நிலை, செயற்கைத்தனமில்லாத காட்சியமைப்புக்கள்.

இவ்வளவு பெரிய கதையை படமாக சுருக்க வேண்டியிருந்ததாலோ என்னவோ கதாபாத்திரங்களும், நிகழ்வுகளும் துண்டு துண்டாக நின்றன. யமுனாவைப்பார்க்க வரன்கள் வருகிறார்கள், போகிறார்கள்.. ஆனால் அவளுக்கு மட்டும் திருமணம் ஆகவேயில்லை. அதற்கான காரணங்கள் அழுத்தமாகச் சொல்லப்படவில்லை – படத்தில். இறுதியில் தஞ்சாவூரில் இருந்து ஒரு மைனர் வருகிறார், திருமணம் செய்துகொள்ளாமல் ‘வாழ்க்கை’ நடத்துகிறேன் என்று. பாபுவின் மனம் யமுனாவினால் ஈர்க்கப்படுவது தெரிகிறது.

படத்தின் முக்கிய பாத்திரமாக வரும் பாபுவின் கேரக்டரில் சற்று குழப்பம் அதிகம். அதைப்புரிந்துகொள்கிற நேரத்திலேயே ஒருபகுதி போய்விடுகிறது. கிழவரைத் திருமணம் செய்துகொண்டு எந்த சுகமும் காணாத தங்கம்மாவின் வலைவீச்சில் விழுந்து பலியாகிவிடும் பாபு, பின்னர் அவளுக்கு அட்வைஸ் பண்ணுவது பாபு கேரக்டரை கீழே சரித்து விடுகிறது. அத்தகைய நிகழ்வு நேராமல் சுதாரித்து கழன்றுகொண்டு, பின் அட்வைஸ் செய்தானென்றால் இன்னும் அந்த கேரக்டர் எடுபட்டிருக்கும். பாவம் இயக்குனர் என்ன செய்வார். கிடைத்த நேரத்துக்குள் எல்லாவற்றையும் சொல்லி முடிக்க வேண்டும்.
பாபு கேரக்டரில் நடித்திருப்பவர், இன்று சின்னத்திரை அபிஷேக். அப்போது சின்னப்பையன்.

கதையில் ரொம்ப சிலாகித்துச்சொல்லப்படுகிற நண்பன் ராஜம் கேரக்டர் ரொம்ப சின்னதாகக் குறைக்கப்பட்டுள்ளது. தங்கம்மாவின் சாவு சட்டென்று ஒரு வசனத்தில் சொல்லி முடிக்கப்படுகிறது. அவளுக்காக பாபு ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்துவதாகக்கூடக் காண்பிக்கப்படவில்லை. தங்கம்மா அலங்கார பூஷிதையாக அலங்கரித்துக் கொண்டு வந்து நிற்க, கிழட்டுக்கணவன் உறக்கத்தில் ஆழ்ந்துவிடும் காட்சியிலெல்லாம் நம் மனது ரொம்பவே வலிக்கிறது. இன்னொருபக்கம் யமுனாவுக்கு முப்பத்து நாலு வயது வரை திருமணம் ஆகாத நிலை

இவற்றைப்பார்க்கும்போது ‘மேட்டுக்குடிகளில்’ ரொம்பவே கொடுமைகள் நடந்திருப்பது தெரிகிறது.
அதனால் கதையில் அழுத்தமாகச்சொல்லப்பட்டிருக்கும் பாபுவின் தந்தை வைத்தி ரோல் எல்லாம், போகிறபோக்கில் வந்து போகிறது. ஆனால் பாபுவின் சங்கீதகுருவான ரெங்கண்ணா, கதாநாயகியான யமுனா மற்றும் அவள் அம்மா என்ற நான்கு கேரக்டர்கள் மட்டும் சற்று விலாவரியாக சொல்லப்படுகிறது, இடையில் வந்து மாண்டுபோகும் தங்கம்மாவை தவிர்த்து விட்டுப்பார்த்தால். தங்கம்மாவின் மரணத்தைப்பார்த்தபின், அவள் பாபுவை தன் ஆசைக்குப்ப்லி கொண்டது தவறு என்று தோன்றாது. மாறாக ஒரு அனுதாபமும் அக்கால சம்பிரதாயங்களின் மீது எரிச்சலும் ஏற்படும்.

படத்துக்கு செலவு என்றால், நடித்தவர்களுக்கு சம்பளமும், பிலிம்ரோல் வாங்கிய காசும் மட்டும்தான் ஆகியிருக்குமோ என்று சொல்லுமளவுக்கு, அப்படியே கேமரா கும்பகோணத்து தெருக்களில் புரண்டு எழுகிறது. அந்த அளவுக்கு யதார்த்தம், இயற்கைத்தன்மை எல்லாம் கொடிகட்டிப்பறக்கிறது. ‘ஸ்டுடியோ செட்’ என்பதெல்லாம் எப்படியிருக்கும் என்று கேட்டிருக்கிறார்கள் படத்தில். கும்பகோணம் வீடுகள் கோயில்கள், குளங்கள் என்று எல்லாம் அப்படியே கண்முன்னே.

படத்தை பெரும்பங்கு ஆக்கிரமித்துக்கொண்டு, ஒரு பெரிய இசை சாம்ராஜ்யமே நடத்தியிருப்பவர் 'இசைஞானி' இளைய்ராஜா. நம் உயிரோடு ஒன்றிப்போகும் இசை. அவருக்கு பக்க பலமாக நின்றிருப்பவர்கள் ஜேசுதாஸ், எஸ்.ஜானகி மற்றும் அருண்மொழி. கலக்கியெடுத்து விட்டார்கள் என்ற கடின வார்த்தைப் பிரயோகத்தை விட, மனதை மென்மையாக வருடி, மயக்கியிருக்கிறார்கள் என்பது பொருத்தமாக இருக்கும்.

அன்றைய நாட்களில் பிராமணப்பெண்களுக்கு திருமணம் நடப்பது என்பதை ஒரு எவரெஸ்ட்டில் ஏறுவது போன்ற கடினமாக்கிக் காட்டியிருப்பது ஏன்?. கடைசியில் கூட யமுனா, திருமணம் செய்துகொள்ளாமல்தான் பாபுவிடம் தன்னை இழக்கிறாள். அவனுள்ளிருக்கும் இசைக்கு உயிர்ப்பூட்டுவதற்காம். புரியவில்லை என்பதைவிட ஒப்பவில்லை என்பது கொஞ்சம் அதிகம் பொருந்தும். அதுமட்டுமல்ல, பாபுவிடம் தன்னை இழந்ததுமே, உடனே தம்பூராவை அவன் கையில் கொடுத்து இசைக்கச்சொல்கிறாள். படம் வெளிவந்த நேரத்தில் இது எப்படி ஆட்சேபிக்கப்படாமல் போனது?. இசையென்பது சுத்தமானது அல்லவோ?. அதை இசைப்பவர்களும் சுத்தமாக இருக்க வேண்டாமோ?.

படத்தை இயக்கியிருப்பவர் ஞான ராஜசேகரன். ரொம்பவே கவனமாக கத்திமேல் நடப்பதுபோல கதையைக் கையாண்டிருக்கிறார். கையாண்ட விதத்தில் வெற்றியடைந்து விட்டார் என்றே சொல்ல வேண்டும். நேர்த்தியான இயக்கம்.

'மோகமுள்' படத்தைப் பார்க்க விரும்புபவர்கள், தி.ஜானகிராமன் எழுதிய நாவலைப்படிக்கும் முன் பார்த்து விடுங்கள். நிச்சயம் புதிய அனுபவமாக இருக்கும்.

Russellxor
27th February 2016, 06:45 PM
கதையோடு இணைந்த, ஹாஸ்யத்தை மையப்படுத்திய தாலாட்டுப்பாடல் என்று தமிழ்சினிமாவில் தேடினால்அப்படிப்பட்ட
பாடல்களை தேடுவது சற்று சிரமமாகத்தானிருக்கிறது.
பெரும்பாலும் மகிழ்ச்சியாகவோ சோகத்தை கலந்தோதான் தாலாட்டுப்பாடல்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
ஹாஸ்யம் கலந்த தாலாட்டுப்பாடல் என்றதும் இந்த பாடலை தவிர வேறேதுவும் நினைவுக்கு வருவதில்லை.

இரண்டு நாட்களுக்கு முன்பு டி.வி.யில் பார்த்த பாதிப்பால் இந்தப்பாடலை ஆய்வு செய்து எழுதலாம் என்றும் முடிவு செய்து மேற்கண்ட பாராவை எழுதி முடித்தபின் பாடல்வரிகளுக்காக, நெட்டில் தேடியபோது...

ஏற்கெனவே ஏராளமான பேர் இதை அனுபவித்து எழுதியதைப் பார்த்தபின் மேற்கண்ட பாராவோடு நிறுத்திவிட்டேன்.நமது வாசு சார்,சின்னக்கண்ணன்,கார்த்திக்அவர்களும் எழுதியுள்ளதைப் படித்து ரசித்தேன்.மீள்பதிவுகளாக இருந்தாலும் மறுபடியும் ரசிக்க...



வாசு சாரின் பார்வையில்:
கடன்காரன் வந்தால் நடுங்காத நெஞ்சம்
அடங்காத பிள்ளை அழுதாலே அஞ்சும்'

முடிந்ததும் முழங்கைகளை மடக்கி, இரு உள்ளங்கைகளையும் ஒன்றின் மேல் ஒன்று வைத்தாற்போன்று தலைக்கு பின் பக்கம் கோர்த்து, இடுப்பை ஒடித்தபடி தலையை வெட்டி, வெட்டி நடந்து வரும் அந்த 7 ஸ்டெப்ஸ்.

அது என்ன ஒயிலா
அது என்ன அழகா
அது என்ன அற்புதமா
அது என்ன நளினமா
அது என்ன வெறுப்பா
அது என்ன துன்பமா
அது என்ன ஸ்டைலா
அது என்ன நடையா

முடிந்தால் சொல்லுங்கள்.

சின்னக்கண்ணன் அவர்களின் எழுத்துகளில்:
கலாட்டா கல்யாணத்தில் ந.தி வெகு இளமையாய் இயல்பான நகைச்சுவை பாடிலேங்க்வேஜ் ரொமான்ஸ் எனப் பின்னியிருப்பார்..அதுவும் அப்பப்பா நான் அப்பனல்லடா விற்கு முகபாவங்கள்,


கார்த்திக் சாரின் பாணியில்:
பணக்காரன் வீட்டு பச்சைக்குழந்தையை கடத்தியாச்சு. ஆனால் அதை வைத்துக்கொண்டு எப்படி சமாளிப்பது?. அதுவும் இரண்டு ஆண்களால்?. படாத பாடு படுகிறார்கள் இருவரும். அந்த குழந்தையை சமாதானப்படுத்தும் சாக்கில் தங்கள் அவஸ்தையை சொல்லத்தான் இந்தப்பாட்டு. பாட்டு கதாநாயகனுக்கு மட்டும்தான். இந்த பாடல் முழுக்க கொஞ்சம் கூட சிரிக்காமல் முகத்தை சீரியசாக வைத்துக் கொள்வதுதான் நடிகர்திலகத்தின் அசாதாரண திறமை. உடன் இருக்கும் நாகேஷ் கூட இதில் சறுக்கி விடுவார்.

பாடகர் திலகத்தின் குரலில்...

லு...லு..லு...ஆரி ஆரி ஆரி ஆரிரரோ
அப்பப்பா நான் அப்பனல்லடா
தப்பப்பா நான் தாயுமல்லடா
எங்கே எவனோ பெத்த பிள்ளையோ
இங்கே வந்த தத்துப் பிள்ளையோ
ஆரிராரோ ஆரி ராரி ராரோ

கல்யாணம் இன்னும் ஆகாத வேளை
கைமீது பிள்ளை தீராத தொல்லை
தாலாட்ட சொன்னால் பாட்டொன்று சொல்வேன்
பாலூட்ட சொன்னால் நான் எங்கு போவேன்

அப்பப்பா நான் அப்பனல்லடா
தப்பப்பா நான் தாயுமல்லடா
எங்கே எவனோ பெத்த பிள்ளையோ
இங்கே வந்த தத்துப் பிள்ளையோ
ஆரிராரோ ஆரி ராரி ராரோ

கணக்காக பிள்ளை பெறுகின்ற திட்டம்
உனக்காகத்தானோ ஏற்பட்ட சட்டம்
கடன்காரன் வந்தால் கலங்காத நெஞ்சும்
அடங்காத பிள்ளை அழுதாலே அஞ்சும்

அப்பப்பா நான் அப்பனல்லடா
தப்பப்பா நான் தாயுமல்லடா
எங்கே எவனோ பெத்த பிள்ளையோ
இங்கே வந்த தத்துப் பிள்ளையோ
ஆரிராரோ ஆரி ராரி ராரோ

திராவிட மன்மதன் மெலிந்து அழகோவியமாக திகழ்ந்த காலகட்டத்தில் வந்த படம்தான் இது. இப்பாடலில் ஜஸ்ட் ஒரு வெள்ளை பேன்ட், வெள்ளை அரைக்கை சட்டை, சுருள் சுருளான சொந்த தலைமுடியில் சிம்பிளாக ஆனால் வெகு அழகாக இருப்பார். கையில் கைக்குழந்தை.

***************************************
அவஸ்தையை காட்டும் முகபாவங்கள்,
முழங்கால்களை விரித்து இணைத்து என்றாடும் ஆட்டம்,
புல்லாங்குழல் வாசித்துக்கொண்டே ஆடும் போது போடும் ஸ்டெப்ஸ்,
நாகேஷை உதைத்துக்கொண்டே ஆடுவதும் அதே சமயம் முகபாவனைகளில் படும் அவஸ்தையை இயல்பாக வெளிப்படுத்துவது,
நாகேஷ் தூங்குவதைப் பார்த்து காட்டும் ரியாக்சன்,
என்று எல்லாமே
எல்லோருக்குமே பிடிக்குமே.

chinnakkannan
27th February 2016, 11:47 PM
வாவ்.. வாங்க சாரதா வாங்க.. அடியேனும் உங்கள் எழுத்துக்களின் பல தீவிர ரசிகர்களில் ஒரு தம்மாத்தூண்டு ரசிகன்.. இன்னும் இன்னும் எழுதுங்கள்..

செந்தில்வேல்,.. ம்ம் அப்பப்பா நான் அப்பனல்லடா.. மறக்க இயலாத பாடல்.. நினைவுட்டலுக்கு நன்றி..

rajraj
28th February 2016, 07:05 AM
From thigambara saamiyaar (1950)


kaakka veNdum kadavuLe........

http://www.youtube.com/watch?v=hiL3V6hUWV8

eehaiupehazij
28th February 2016, 08:49 AM
From GG Island with Love!


Nostalgia on the Second to None GG!

அமரர் ஜெமினி கணேசன் அவர்களின் நெருங்கி வரும் நினைவு நாள் March 22 நினைவலைகள் !

Moon Raker Gemini Ganesan!


நிலவு....நிதர்சனமான வானவியல் அற்புதம்....சுதர்சனமான வாழ்வியல் தத்துவமும் கூட.....

பூமியின் துணைக்கோளாக பூமியிலிருந்து சூரியனின் ஒளியின் பிரதிபலிப்பைப் பெற்று ஒளிரும் நிலவால் காதல் நெஞ்சங்கள் குளிரும்!

நிலவு என்றதும் தமிழ் மக்களுக்கு நினைவு வருவது நமது பாட்டியம்மா நிலவு வட்டத்துக்குள் கால் நீட்டி அமர்ந்து வடை சுட்டுக்கொண்டு இருக்கிறார் என்பதே !
அதற்கப்புறம் நிலவொளியில் அந்தப் பாட்டியைக் காட்டி பால் சோறூட்டிய அம்மா......நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடி வா....பள்ளிப் பாடல்.......நிலவில் ஆர்ம்ஸ்ட்ராங் கால் பதித்த மனித குல சாதனை....நிலவைச் சுற்றி மினுமினுக்கும் விண் தாரகைகள்......இரவில் மொட்டை மாடியில் மல்லாந்து வானை நோக்கி டார்ச் அடித்து விண் மீன்களை எண்ணிய சுவாரஸ்யமான வெட்டி வேலைகள்......நிலவு கூட வளர்ந்து தேய்ந்து மீண்டும் வளர்ந்து.... வளர்பிறை, தேய்பிறை , மூன்றாம் பிறை..... பௌர்ணமி... அமாவாசை ஜாலங்கள்......

இதெல்லாம் ஜெமினிகணேசன் என்னும் காதல் மன்னர் திரைக்காதல் சிம்மாசனத்தைக் கைப்பற்றி காதல் சாம்ராஜ்யத்தை உருவாக்கி இந்த நொடிவரை எவராலும் நெருங்கமுடியாத காதல் சக்கரவர்த்தியாக அரியாசனம் அமரும் வரையே .....அப்புறம்.....நிலவு என்பது காதலர்களின் கைப்பந்தாக மாறிவிட்ட அதிசய நிகழ்வு....நிலவோடு நம்மால் பேச முடியும்....நமக்கான காதல் தூதுவராக நிலவை பயன்படுத்தலாம் காதல் தோல்வியை பகிர்ந்து கொள்ளலாம் என்பது போன்ற வாழ்வியல் கண்டுபிடிப்புக்கள் உயிரோட்டம் பெற்று
இன்று காதல் வாழ்வின் வழிகாட்டும் ஒளிவிளக்காக காதல் ஜோதி ஏற்றி வைத்த பெருமை ஜெமினியையே சாரும்!! நிலவையே அசத்தி தனது கைப்பிடிக்குள் கொண்டுவந்த Moonraker ஜெமினியின் நெருங்கி வரும் நினைவுநாள் நினைவலைகள் மன வலைக்குள் ஆரம்பம்!

Part 1 : Missiamma....miss not kind of song and romance!

Moon as the Ambassador of Love Kingdom owned by the one and the only Emperor of Love Gemini Ganesan!


தானொரு பண்பான காதலன் என்பதை தன்னைப் பற்றி தவறாகவே எண்ணிக் கொண்டு வறுத்தெடுக்கும் மிஸ்ஸியம்மா சாவித்திரிக்கு புரிய வைக்க நிலவோடு ஒப்பந்தம் செய்து கொண்டு நிலவொளிக்குள் காதலியைக் கொண்டுவந்து கிறங்க வைக்கும் காதலின் மாமன்னர் ஜெமினி!

அவர் நிலவோடு பேசக்கூடியவர் என்பது தெரிய வந்ததும் பிரமித்துப் போன அசட்டு சாவித்திரி தனது மனப்பூட்டை திறக்கும் சாவியை காதல் மன்னரிடம் ஒப்படைத்து ஜெமினி தனது அசடு வழியும் முக எண்ணையில் காதல் திரியை பற்ற வைக்கும் ஜாலம் ஹாலிவுட் வரை தெரியாமல் போனது அவர்களுக்குத்தானே இழப்பு !!

வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையை ...பாடலும் பாடல் சூழலும் நிலவை காதல் தூதுவராக்கிட மையப்படுத்திய காட்சியமைப்பும்...காலத்தால் மறையாத காதலுணர்வுகளின் கண்ணியமான வெளிப்பாடுகளும்....Gemini The Greatest!

https://www.youtube.com/watch?v=f_rOnubYwTM

eehaiupehazij
28th February 2016, 10:01 AM
Nostalgia on the Second to None GG!

அமரர் ஜெமினி கணேசன் அவர்களின் நெருங்கி வரும் நினைவு நாள் நினைவலைகள் !

Part 1/1.2

Addendum to Vaaraayo Vennilaave song : lyrics, color improvisation and karaoke!

https://www.youtube.com/watch?v=xABo0pPflR4

colour tried version!But cue did not glue properly!!

https://www.youtube.com/watch?v=K6fGw2kf6xY

A Karoake too!!

https://www.youtube.com/watch?v=mxRs8Uasa3Q

eehaiupehazij
28th February 2016, 02:27 PM
From GG Island with Love!

Nostalgia on the Second to None GG!

அமரர் ஜெமினி கணேசன் அவர்களின் நெருங்கி வரும் நினைவு நாள் நினைவலைகள் !

Part 1/1.3

Addendum to Missiammaa!


மிஸ்ஸியம்மா (1955) தமிழில் வெளிவந்த தலைசிறந்த என்றும் ரசித்து மகிழத் தக்க நகைச்சுவைத் திரைப்படங்களில் நம்பர் ஒன் காதலிக்க நேரமில்லை திரைக் காவியத்தை அடுத்து என்றும் இரண்டாமிடத்தில் வீற்றிருக்கிறது!

வண்ணக் கலவை இல்லையே என்ற காலம் தொழில்நுட்பம் சார்ந்த சிறு குறையைத்
தவிர்த்து நோக்கினால் ஸ்ரீதரின் வாழ்நாள் சாதனைத் திரைப்படமான இசையாலும் தொழில்நுட்பத்தாலும் பாடல்களாலும் நகைச்சுவைத் தெளிப்பினாலும்
நடிகர்களின் பங்கேற்பினாலும் முதலிடம் வகிக்கும் காதலிக்க நேரமில்லையை விட எந்த விதத்திலும் குறைவில்லாத இழுவையற்ற கச்சிதமான காட்சி
அமைப்புக்களால் விறுவிறுப்பாகச் செல்லும் மனமகிழ் காவியமே !

வேலைதேடி வந்த இடத்தில் வீடு கிடைக்க வேண்டிய சங்கடமான சூழலில் ஒரே வீட்டில் ஜெமினிசாவித்திரி தம்பதிகளாக தங்கவேண்டிய நிலையில் ஏற்படும் குழப்பங்களும் சாவித்திரியின் பிளாஷ் பேக் மர்மங்களை விடுவிக்க தங்கவேலுவின் சரவெடி காமெடிகளும் ரங்கராவ் தம்பதியினரின் ஆதுரமான அன்பும் இரண்டுங் கெட்டான் ஜமுனாவின் காதல் அம்புகளும் சாவித்திரியின் கடுப்பிலி ருந்து தப்பிக்க காதல் மன்னரின் பிராண்ட் உத்திகளும் நம்பியாரின்கோணங்கித்தனமும் சாரங்கபாணியின் டைமிங் பஞ்சுகளும் தெளிந்த நீரோடையான ராஜேசுவரராவின் இசையில் நீந்தும் செவிக்கினிய பாடல்களும் கண்ணுக்கும் மனதுக்கும் இதமான இனிமை ததும்பும் பாடல் காட்சியமைப்பும் ஜெமினியின் ஆளுமை மிக்க நடிப்பும் நிறைந்த அற்புதக் காவியம் !

https://www.youtube.com/watch?v=MOKCZgis44w

பெண்களின் பாஷையில் வார்த்தைகளின் உள்ளர்த்தங்களே வேறுதான் என்பதைப் புரிந்து காதல் கனி கவரும் ஜெமினிக் கள்வர்!

முடியுமென்றால் படியாது படியுமென்றால் முடியாது வஞ்சியரின் வார்த்தையிலே அர்த்தமே வேறுதான் ...ஜெ(மினியி)ன் காதல்துறை வெற்றி ரகசியம் 1
Gemini Ganesan ILS (Indian Love Service)!

https://www.youtube.com/watch?v=gQL0B8l3WG0

eehaiupehazij
28th February 2016, 02:30 PM
From GG Island with Love!

Nostalgia on the Second to None GG!

அமரர் ஜெமினி கணேசன் அவர்களின் நெருங்கி வரும் நினைவு நாள் நினைவலைகள் !

Part 1/1.4

Addendum to Missiammaa!

Jamuna sprinkling Nuts onto the Comedy Chachobar!!

In this hilarious comedy the then upcoming beauty queen Jamuna too made ripples by way of her innocence and a sort of infatuation over GG deriving the rivalry of Savithri....finally the knot of Savithri-Jamuna relationship unfolds! Joy and mirth floats in Jamuna scenes!

நிலை மாறிடும் ஆண்களுடன் நெருங்காமலே பழகிட தெரிந்து கொள்ளனும் பெண்ணே !

GG's responsive facial expressions are simply superb and lovely!!

https://www.youtube.com/watch?v=HK3wowwYT6s

chinnakkannan
28th February 2016, 08:51 PM
ஹாய் ஆல்.. செளக்கியமா.. வந்ததுக்கு ஒரு சிலோன் ரேடியோவில் கேட்ட் பாட் கேட்கலாமா..

https://youtu.be/RxNJ-Qsj26U

வித்தூ வின்செண்ட்டாம் படம் உன்னைச் சுற்றும் உலகமாம்..கேள்விப் பட்டதில்லையே.. வின்சென் ட் ஒளிப்பதுவு செய்பவர் தானே..

chinnakkannan
28th February 2016, 08:55 PM
தேன் மலர் கன்னிகள் மாறனை நேசிக்கும்மோகமென்ற தேன் கண்டேன்..ஓ..அதில் துளி மட்டும் துளிமட்டும் நான் குடித்தேன்.. நைஸாக் காதலைச் சொல்கிறாங்க தானே..ஆனால் பாடல் சிலோன் ரேடியோவில் கேட்ட போது ஏதோ சிங்களப்பாட்டுன்னு நினைச்சேன்..பாத்தாக்க மதனோற்சவத்தோட டப்பாமில்ல..ஹீரோயின் ஜரீனா வஹாப் பாமே உண்மையா..(எக்ஸ்பெக்டிங்க் பக்கெட்ஸ் :) )

https://youtu.be/z4K2ffSgRn8

chinnakkannan
28th February 2016, 09:10 PM
சரி சரி கொஞ்சம் விளையாடலாம்..

செண்டுமல்லிப் பூப்போல் அழகிய பந்து.. கமல் சுஜாதா..படம் இதயமலராமில்ல.. ஹையா..சி.செ வந்து ஜெமினி டைரக்ட் பண்ண டீடெய்ல்ஸ் தருவாரே :)

https://youtu.be/PEl-Ydya2nw?list=PL9GJnO4yLNq0oj-0f1yYDjuJSpFxQcNPl

Russellxor
28th February 2016, 09:54 PM
200வது பக்கத்திற்கு 200வது படத்தில் இருந்து ஒரு பாடல். "Thirumaalin Thirumaarbil" | Thirisoolam | Sivaji…: http://youtu.be/caaEI93uIuM

raagadevan
28th February 2016, 09:56 PM
தேன் மலர் கன்னிகள் மாறனை நேசிக்கும்மோகமென்ற தேன் கண்டேன்..ஓ..அதில் துளி மட்டும் துளிமட்டும் நான் குடித்தேன்.. நைஸாக் காதலைச் சொல்கிறாங்க தானே..ஆனால் பாடல் சிலோன் ரேடியோவில் கேட்ட போது ஏதோ சிங்களப்பாட்டுன்னு நினைச்சேன்..பாத்தாக்க மதனோற்சவத்தோட டப்பாமில்ல..ஹீரோயின் ஜரீனா வஹாப் பாமே உண்மையா..(எக்ஸ்பெக்டிங்க் பக்கெட்ஸ் :) )

https://youtu.be/z4K2ffSgRn8

kaNNa: Here is the original version of தேன் மலர் கன்னிகள்...

https://www.youtube.com/watch?v=a4NuR0c_5XA

chinnakkannan
28th February 2016, 11:25 PM
thanks ragadevan..details vaenumE...:)

raagadevan
29th February 2016, 03:40 AM
thanks ragadevan..details vaenumE...:)

You asked for it, and you got it! :) Don't complain about the length of my posting!

Madanolsavam was a 1978 Malayalam masala movie which was a box-office super hit starring Kamal Hasan
and Zarina Wahab in lead roles. Salil Chowdhury’s music was one of the keys to the movie’s success.

The movie was dubbed into Tamil as Paruva Mazhai, Telugu as Amara Prema, and Hindi as Dil Ka Saathi Dil. All songs
were super hits in Malayalam, and were dubbed into the other versions too. Salilda also reused the tunes in Bengali
and other language movies. All Malayalam versions are available on YouTube, but only a few of the other versions
are available on video.

I will post the Malayalam videos and the Tamil audio versions of the songs here:

“maada praavE vaa…” (KJY)

https://www.youtube.com/watch?v=36-2G5arjg0

maadapuraavE vaa… (Tamil audio)
http://www.salilda.com/songs/film/tamil/paruvamazhai/madappurave.mp3

“sandhyE kaNNeerethenthE sandhyE…” (S. Janaki)

https://www.youtube.com/watch?v=MwCI7lpUJ-k

angE sengathir saaynthaal ange… (Tamil audio)
http://www.salilda.com/songs/film/tamil/paruvamazhai/ange.mp3

“ee malar kanyakaL…” (S. Janaki)

https://www.youtube.com/watch?v=EjGwLTpjZvE

thEnmalar kannigaL… (Tamil audio)
http://www.salilda.com/songs/film/tamil/paruvamazhai/thenmaler.mp3

“saagaramE saanthamaaka nee…” (KJY)

https://www.youtube.com/watch?v=PXTU9f3NH1o

kaalamagaL mEdai naadagam… (Tamil audio)
http://www.salilda.com/songs/film/tamil/paruvamazhai/kalamagal.mp3

“mElE poomala…” (KJY & Sabita Chowdury)

https://www.youtube.com/watch?v=dcldzUjwV-k

kaadal sangamE… (Tamil audio - KJY & S. Janaki)
http://www.salilda.com/songs/film/tamil/paruvamazhai/kaadal_sangame.mp3

“nee maayum nilaavO…” (KJY)

https://www.youtube.com/watch?v=x3tCwloFoS4

nee thEyum nilaavO en aathmaavin kaNNeerO… (Tamil audio)
http://www.salilda.com/songs/film/tamil/paruvamazhai/nee_theeyum.mp3

chinnakkannan
29th February 2016, 10:16 AM
குட்மார்னிங்க் ஆல்..

ராகதேவன்..வாவ்.. தாங்க்ஸ் ஃபார் ஆல் த பாட்டூஸ்..வீட் போய்க் கேக்கறேன்..படம் எப்படி இருக்கும் பார்த்திருக்கிறீர்களா..

chinnakkannan
29th February 2016, 10:07 PM
ராகதேவன்..அனைத்துப்பாடல்களையும் பார்த்தேன் கேட்டேன்..வெகு அழகு..தாங்க்ஸ்..பருவமழை தமிழ்ப்படம் கிடைக்கவில்லை..