PDA

View Full Version : மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5



Pages : 1 2 [3] 4 5 6 7 8 9 10 11 12 13 14

madhu
9th October 2015, 01:35 PM
சென்னையையும் நெய்வேலியயும் நமது அரட்டை வலையில் சிக்க வைக்கத்தான் சிக்கா இந்த மரிலின் மன்றோ தூண்டிலும் ரம்பா தூண்டில் பூச்சியும் மதுர கான வலைப் பின்னலும் !!

வந்து மாட்டுவார்கள் சிக !

வெளியே இருந்தால்தான் வந்து மாட்டுவாங்க.... நாங்க உங்க கூடவேதான் இருக்கோம்... அதைப் புரிஞ்சுக்குங்க...அக்ஹாங்

madhu
9th October 2015, 01:36 PM
ராஜேஷ்...
இப்போதான் முக நூலில் இதே பாட்டைக் கேட்டு ரசித்துவிட்டு வந்தேன்... தேன் கூட திகட்டும்.. இந்த இசையும் குரலும் என்றும் இனிமை..

vasudevan31355
9th October 2015, 02:57 PM
ஹச்சோ ராஜேஷ்..அடையாளமே தெரியலைங்க.. மறுபடி ஒரு தடவை பாட் கேட்டேன்...

உடலை மறைத்தே உணர்வினைத் தூண்டும்
புடவையில் பூத்ததே பூ..

என்னதான் இருந்தாலும் புடவை பெண்களுக்கு அழகுதான் இல்லியோ..ஹைய்யா..புடவைப் பாட்டா இன்னிக்குப்போடலாமில்லையா.. :)

சின்னா!

ஒரு சில நடிகைகளுக்குத்தான் புடவை ரொம்ப பாந்தமாக இருக்கும். அதில் முதன்மையானவர் அந்தகக் கால சுஜாதா. எனக்கும், ஜிக்கும் ரொம்பப் பிடித்த நடிகை. அவருடைய உடலமைப்பும் புடவைக்கு மிகப் பொருத்தம். அதுபோல் புடவை கட்டும் விதமும் அருமை. வாணிஸ்ரீயும் இந்த வகையே. இருவரும் அதற்குத் தகுந்த உயரம் உடையவர்கள் வேறு.

சரி! சரி! நெய்வேலியும், சென்னையும் உங்க தூண்டில்ல மாட்டாது நைனா. நல்லவேளை. இரண்டு நாளாக தெருவில் எலெக்ட்ரிகல் வேலை செய்ய வந்த ஆட்கள் டெலிபோன் கம்பத்திலிருந்து வரும் இன்டர்நெட் ஒயரை அறுத்து விட்டுப் போய் விட்டார்கள். சுத்தம்.

இன்று மதியம்தான் இணைப்பு மீண்டும் கிடைத்தது.

அப்புறம் மறக்காமல் சுஜாதாவைக் கேட்டீரே. அவர் ஜோடி யாரென்று கேட்ட்டீரோ? அதானே!

யாரென்று சொல்லுங்கள். ஒரு க்ளூ. நம்ம நடிகர் திலகத்தின் புகழ் பெற்ற படத்தில் கூட பிரதான ரோல் ஒன்றில் வருவார். இன்னொரு க்ளூ 'மூக்குறிஞ்சி'.

vasudevan31355
9th October 2015, 03:02 PM
சென்னையையும் நெய்வேலியயும் நமது அரட்டை வலையில் சிக்க வைக்கத்தான் சிக்கா இந்த மரிலின் மன்றோ தூண்டிலும் ரம்பா தூண்டில் பூச்சியும் மதுர கான வலைப் பின்னலும் !!

வந்து மாட்டுவார்கள் சிக !

ம்ம்...அவ்வளவு பலவீனமாகவா போய் விட்டோம்? ஏதோ மதுர கான வலைப் பின்னலில் மன்மதி மஞ்சுளாவை காட்டியிருந்தாலூம் பரவாயில்லை.:)

vasudevan31355
9th October 2015, 03:07 PM
பிரமீளா ஜோசாய்

http://chitraloka.com/images/gallery/Actress/pramila_josai/thumbs/pramila%20josai%20shabari%20movie%20image1_l.jpg

பிரமீளா ஜோஷாய் பொண்ணு யார் தெரியுமா? அதை விட்டு விட்டீர்களே!

அழகு தேவதை மெகன்னா ராஜ்.

https://lh3.googleusercontent.com/-bq17xu-osZQ/U2xn7Cv9iFI/AAAAAAAAISI/E9QN1LQWL9s/w480-h480/meghana_pramila.jpg

http://i2.wp.com/celebritykick.com/wordpress/wp-content/uploads/2014/12/Meghana-Raj-parents-mother-Pramila-Joshai.jpg

vasudevan31355
9th October 2015, 03:09 PM
அப்பா சுந்தர் ராஜ் அம்மா பிரமீளாவுடன் மகள் மெகன்னா ராஜ்.

http://i2.wp.com/celebritykick.com/wordpress/wp-content/uploads/2014/12/Meghana-Raj-parents-father-Sundar-Raj.jpg

vasudevan31355
9th October 2015, 03:12 PM
'வைதேகி காத்திருந்தாள்' படத்தில் பிரமீளா ஜோசாய்.

http://i.ytimg.com/vi/ubASfWCQrls/hqdefault.jpghttp://i.ytimg.com/vi/Dwx1U7IOeDs/hqdefault.jpg

RAGHAVENDRA
9th October 2015, 03:20 PM
என்னதான் இருந்தாலும் புடவை பெண்களுக்கு அழகுதான் இல்லியோ..ஹைய்யா..புடவைப் பாட்டா இன்னிக்குப்போடலாமில்லையா.

எந்தக் காலத்திலே ஓய் இருக்கீர்.. இது லெக்கிங் காலமாக்கும்...

யாராவது போர்கொடி தூக்கிடப் போறாங்க.. உஷார்..

https://www.youtube.com/watch?v=2ZnWq_yalFU

நாங்கள்லாம் அந்தக் காலத்திலேயே லெக்கிங்ஸையெல்லாம் பாத்துட்டோமாக்கும்...

RAGHAVENDRA
9th October 2015, 03:21 PM
பிரமிளா ஜோஷாய் ...

இருக்குது ரொம்ப பேஷாய்...

RAGHAVENDRA
9th October 2015, 03:22 PM
மணி 3.30 ஆகப்போகுது.. இன்னும் ஒரு மணி நேரத்துக்கு ஹப் லாகினோட மல்லுக்கட்டுறதை விட்டு விட்டு வேறு வேலை பாத்துட்டு வர்றேன்..

vasudevan31355
9th October 2015, 03:26 PM
மணி 3.30 ஆகப்போகுது.. இன்னும் ஒரு மணி நேரத்துக்கு ஹப் லாகினோட மல்லுக்கட்டுறதை விட்டு விட்டு வேறு வேலை பாத்துட்டு வர்றேன்..

100% correct sir.

vasudevan31355
9th October 2015, 03:29 PM
'புடவை கட்டிக் கொண்டு பூ ஒன்று ஆடுது'

நடிகர் திலகம் சரிதாவிடம் சின்னா ரேஞ்சுக்குப் பாடும் டூயட் பாட்டு 'சிம்ம சொப்பனம்' படத்தில்.


https://youtu.be/yvZiXcFtsC8

vasudevan31355
9th October 2015, 03:33 PM
ஜி க்குப் பிடித்தமான சரோ கிளி சோகத்தில் பாடுவது 'கல்யாணியின் கணவன்' படத்தில்

கல்யாணப் புடவை கட்டி
காலெடுத்து மனையில் வைத்து
பல்லாக்கு போல நின்றேன் நேரிலே
அந்த பருவ மகன் பறந்து விட்டான் தேரிலே


https://youtu.be/EHgXOUE2XDs

vasudevan31355
9th October 2015, 03:37 PM
பருவம் கனிந்து வந்த பாவை வருக
புடவை அணிந்து வந்த பூவே வருக.

சிவக்குமாரும், ஜெயஸ்ரீயும் 'யாரோ எழுதிய கவிதை'யில். ஆனால் ஸ்ரீதர் எழுதவில்லை.


https://youtu.be/qRfpO798gt4

vasudevan31355
9th October 2015, 03:50 PM
//ஸ்ரீதரின் இளமை பொங்கும் காதல் காவியமான அழகே உன்னை ஆராதிக்கிறேன் படத்தில் பிரகாஷ் என்னும் புதுமுக நடிகர் அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க அடியேன் கொடுத்து வைத்தேன் இளையராஜா பாடலுக்கு துறுதுறுப்பாக நடன அசைவுகளை வெளிப்படுத்தி இவர்தான் அடுத்த ரவிச்சந்திர கமலஹாசன் என்று குமுதம் விமர்சனத்தில் பாராட்டுப் பெற்றார் !
ஆனால் இந்த மின்னல் கீற்றும் அடுத்து வந்த படங்களில் பார்க்க முடியவில்லையே !//

இரண்டு சந்தேகங்கள்.

'அவள் தந்த உறவு' படத்தில் பாலாவின் அதியற்புதப் பாடலான 'நினைத்துப் பார்க்கிறேன்....என் நெஞ்சம் இனிக்கின்றது..பாடலைப் படத்தில் பாடுவது யார்?

'நூல்வேலி' நாராயண ராவ்? இல்லையென்றால் சின்னி?

இன்னொரு பிளாக் அண்ட் ஒயிட் படத்தில் பெரிதாக பெல்பாட்டமெல்லாம் போட்டுக் கொண்டு, ஸ்டெப் கட்டிங் வைத்துக் கொண்டு சின்னி பிரகாஷ் மாஸ்டர் மைக் பிடித்து ஸ்டேஜில் ஒரு பாடல் பாடுவார். பாடல் அருமையாக இருக்கும். ஆனால் எனக்கு நினைவில்லை. நண்பர்கள் ஹெல்ப் ப்ளீஸ்.

chinnakkannan
9th October 2015, 05:15 PM
//எந்தக் காலத்திலே ஓய் இருக்கீர்.. இது லெக்கிங் காலமாக்கும்.. யாராவது போர்கொடி தூக்கிடப் போறாங்க.. உஷார்.// ராகவேந்தர் சார்..ஹி.ஹி..:)

பிரமீளா ஜோஷாய் புகைப்படங்களுக்கு நன்றி வாசு.


.
//ம்ம்...அவ்வளவு பலவீனமாகவா போய் விட்டோம்? ஏதோ மதுர கான வலைப் பின்னலில் மன்மதி மஞ்சுளாவை காட்டியிருந்தாலூம் பரவாயில்லை//

இப்ப எதுக்கு இந்தக் குறைங்கறேன்..இதோ சேப்புச் சேப்பா பாட் தர்றேங்கறேன்…

சலசலகா உண்டுடா ஒய் ராமா ஒய் ராமா? :)




https://youtu.be/mi2D0cd8p8k

madhu
9th October 2015, 05:16 PM
சின்னி பிரகாஷுக்கு என்ன வயசு ? விக்கிபீடியாவில் அவர் 1962லிருந்து கோரியோகிராஃப் செய்வதாக போட்டிருக்காங்க...

வாசுஜி... உயிரோவியம் என்ற படத்தில் 1990 நடித்திருப்பதாக வேறு போட்டிருக்கு.. எனி ஐடியா ? சிக்கா... வந்து சொல்லுங்க.

chinnakkannan
9th October 2015, 05:18 PM
//ஒரு சில நடிகைகளுக்குத்தான் புடவை ரொம்ப பாந்தமாக இருக்கும். அதில் முதன்மையானவர் அந்தகக் கால சுஜாதா. எனக்கும், ஜிக்கும் ரொம்பப் பிடித்த நடிகை. அவருடைய உடலமைப்பும் புடவைக்கு மிகப் பொருத்தம். அதுபோல் புடவை கட்டும் விதமும் அருமை. வாணிஸ்ரீயும் இந்த வகையே. இருவரும் அதற்குத் தகுந்த உயரம் உடையவர்கள் வேறு.// கரெக்ட் வாசு.. புடவைக்காக நானும் உழைத்தேனாக்கும்..! சரோஜாதேவிக்கு அவ்வளவு பாந்தமாக இல்லை.. பிற்காலத்தில் ஒரு தலை ராகத்தில் உஷா நன்றாகக் கட்டியிருப்பார்.. பின் டி.ஆரைக் கட்டிக்கொண்டு பொய்விட்டார்..

புடவை கட்டும் விதங்கள் லாம் பார்த்து அதுக்குப் பொருத்தமா பாட் போடலாம்னாக்க ஒரு மகாராஷ்ட்ர உடை டைப் கிடைச்சது.. போய்ப் பார்த்தா அது இல்லை..

http://www.astroulagam.com.my/Default.aspx?TabId=4239&articleId=1337&language=ta-IN&fb_comment_id=979208082140926_984283274966740#f9b1 9dac


வாசுஅழகான புடவைப் பாடல்களுக்கு நன்றி.. தாங்க்ஸ்..

ம்ம் ஒரு பாட் செலக்ட் பண்ணிட்டேன்..அதுக்காக சில என்னோட பழைய பாட்டும் கொடுத்திருக்கேன்..




..

வதைக்கும்விழி அழைப்பால்மனங் கலங்கிக்குளச் சுழலாய்
பதைக்கும்பொழு தினிலேயவள் பருவத்தெழில் துணையில்
விதைப்பாள்சில விருப்பங்களை இதயம்மகிழ்ந் திடவே
கதைகள்பல் சொலியேமுகம் களிக்கும்படி உரைப்பாள்

வேல்விழிகள் நெஞ்சத்தை வேரோடே தானழிக்க
பால்நிறத்துக் கன்னமதும் பண்கூட்டிப் பாநவில
மேலாடை அணிந்திருந்தாள் மெய்யிலே பொய்கூட்டிக்
கேளாமல் கொன்றாளே காண்

அகராதியில் இருக்காதவோர் அசைத்தாடிடும் உணர்வாய்
பகராததாம் எழிலாயென பலபாவலர் திகைக்கும்
நகராமலே இதயந்தனில் நல்மாகவே எழும்பும்
நகங்கள்முதல் உடலெங்கிலும் துலங்குமவள் அழகே

இருந்தாலும் இந்தப் பாட்டில பார்த்தீங்கன்னா இந்த நங்கை எவ்ளோ அழகா தன்னோட உணர்வுகளைச் சொல்றான்னு தெரியும். .

இளமை பத்மினி (?!) எஸ்.எஸ்.ஆர்..

பத்மினியின் உடை மகாராஷ்டிரியன் உடையாகத் தெரிந்தாலும் அது புடவை இல்லை.. தாவணி ப்ளவுஸ் பின் சாஸ்திரத்துக்குத் துப்பட்டாவான்னு தெரியலை! மலர் மணம் வருகின்றதான்னு சொல்றச்சே கண்கள் சொருகுவது எஸ்.எஸ்.ஆருக்கு மட்டுமல்ல என ஆன்றோர்கள் சொல்வார்கள்!




https://youtu.be/8QR4pJrOaQo



கதவு திறந்ததா காட்சி கிடைத்ததா
காணும் உலகம் புரிந்ததா.. காணும் உலகம் புரிந்ததா


இதோ இதோ இந்த பூமியிலே
எத்தனை ஜாலங்கள் காதலிலே

அதே அதே நிலை நீ அறிந்தால்
ஆனந்தம் வேறில்லை வாழ்க்கையிலே அஹ அஹா… ஒஹ ஒஹோ..ஓஹோஹொஹோ..

சிலை சிலை ஒன்று நேரினிலே
சிரிப்பதன் காரணம் புரிகின்றதா

அலை அலை எனக் கண்களிலே
ஆயிரம் கலைகள் தெரிகின்றதா

மலர் மலர் மணம் வருகின்றதா
மயக்கத்திலே மனம் அசைகின்றதா..

இனம் இனம் அது புரிகின்றதா
இயற்கையின் ரகசியம் தெரிகின்றதா.. ( என்ன தாம்மே சொல்ற நீ):)

chinnakkannan
9th October 2015, 05:20 PM
//வாசுஜி... உயிரோவியம் என்ற படத்தில் 1990 நடித்திருப்பதாக வேறு போட்டிருக்கு.. எனி ஐடியா ? சிக்கா... வந்து சொல்லுங்க.// விக்கிப் பீடியா கன்ஃப்யூஸ் பண்ணுது மதுண்ணா..பட் அழகே உன்னை ஆராதிக்கிறேன் சின்னி ப்ப்ரகாஷ் தான் டான்ஸராவும் கொரியோக்ராஃபராகவும் பணியாற்றினார்னு படிச்சுருக்கேன்..

chinnakkannan
9th October 2015, 05:23 PM
அவள் தந்த உறவு' படத்தில் பாலாவின் அதியற்புதப் பாடலான 'நினைத்துப் பார்க்கிறேன்....என் நெஞ்சம் இனிக்கின்றது..பாடலைப் படத்தில் பாடுவது யார்?// அந்த வீடியோ போட்டீங்கன்னா பார்த்துச் சொல்றேன்.. யூட்யூப்ல படப் பாடல் நாட் அவெய்லபிள் ஒன்லி ஆடியோ தான் இருக்கு..

ஹப்புறம்..ஏதோ சுஜாதா வோட கூட நடிச்சவர் யார்னு சொன்னா கேட்டுட்டுப் போறேன்..யூஸீ..எனக்கு ஆண்கள் பற்றில்லாம் திங்க் பண்ண நேரமில்லை :)


நான் லாக் இன் பண்ணித் தானே வச்சுருக்கேன்..ஸேவ் பாஸ்வேர்ட் போட்டு.. அதே மாதிரி நீங்களும் ஏன் செய்யக் கூடாது..?

chinnakkannan
9th October 2015, 05:38 PM
https://youtu.be/ChmYVXTATjg

இதுல இருக்கறதும் அ.உ.ஆ ல இருக்கற்வரும் ஒண்ணாத் தான் தெரிகிறது.. 1962 ன்னா ரொம்ப சின்ன வயசுல ஹெல்ப் பண்ணீயிருக்கலாம்..இல்லியோ..

பாண்டியன் நான்..தப்புப் பண்ணிட்டேனா என்ன :sad: :)

madhu
9th October 2015, 05:40 PM
போனால் போகட்டும் போடான்னு ந.தி. சொல்லிட்டு போயிட்டார்..

சிக்காவுக்கு பிடிச்சமாதிரி சிக்குனு ஸ்ரீதேவி புடவையில் வந்து சூப்பர் ஸ்டாரிடம் சொல்லுவதைக் கேளுங்க

https://www.youtube.com/watch?v=loj1sXUx7Og

chinnakkannan
9th October 2015, 06:00 PM
ஸ்ரீதேவி பாட்டுக்கு தாங்க்ஸ் மதுண்ணாவ்..பட் அவரோட இன்னொரு பாட் கீழே போடறேன்.. :)


சேலையில வீடு கட்டவா சேர்ந்து ரசிக்க - சிம்ரன்

கட்டபொம்மன் பேரா கட்டிப்பிடி ஜோரா - குளிரடிக்கும் விஜயசாந்தி

உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்தப் பூமி பூ பூத்தது...வைரமுத்து..(மதுபாலாவிற்கு நன்னா இருக்காது..பட் வாயை மூடிப் பேசவும்ல புடவைல அழகா இருப்பார்)

தேன் பட்டுக் கன்னங்கள் நீ தொட்ட நேரத்தில் ... சந்திரகலா..ஸோ ஸோ தான் புடவை..ல்

பட்டுக் கரு நீலப் புடவை பதித்த நல்வயிரம் - கண்டுகொண்டேன் - பாரதியார் பாடல்- ஐஸ்வர்யா ராய் புடவை ஓ.கேயோ..

சொர்ண புஷ்பம் ஓ.கே..பூர்ணிமா ஜெயராம் ரொம்ப ஹோம்லியா தெரிவார்..

https://youtu.be/iETA1aeGKts

ஸ்ரீதேவிக்கு காலில் ஏதோ அடிபட்டிருந்த சமயம்.. எனில் உட்கார்த்தி நடக்க வைத்து ஷூட் பண்ணியதாகப் படித்த நினைவு புகையாய்..

eehaiupehazij
9th October 2015, 06:01 PM
நவம்பர்17 ஜெமினியின் 95 வது பிறந்த நாள் நினைவலைகள்!!

காதல் மன்னரின் குரல் மன்னர் ஏ எம் ராஜா ! Songs/karaoke/instrumental 1

சிறுவயதில் நான் முதல் முதலில் செவி மடுத்த திரைப்பாடல் தேன்மதுரக் குரல் ஏ எம் ராஜா ஜெமினிக்கு வழங்கிய பணிக் குழைவான மிஸ்ஸியம்மா கானம் வாராயோ வெண்ணிலாவே !
அந்த சிறுவயதிலேயே காதல் மன்னரின் டிப்டாப்பான உடையலங்காரம் நெற்றி நிறைய சுருண்டு தவழும் அடர்த்தியான கேசம் அவர் கண்களில் கொப்பளிக்கும்
குறும்பு மனதை வசீகரிக்கும் மேனர்ஸ் நிறைந்த பேச்சு எல்லாமே அவர்பால் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தது! இந்தப் படத்தில் இனிமையான இப்பாடல் காட்சியமைப்பு மனதை இதமாக வருடி ரசனையில் மூழ்கடிக்கும் இந்தக் காலம் வரை ஜெமினி என்றதும் மனதில் தோன்றும் ராஜாவின் குரலும் இப்பாடலும் சாகாவரம் பெற்றவையே ! சாவித்திரிய்ன் கோபதாபங்களும் முறுவலிக்க வைக்கும்!

https://www.youtube.com/watch?v=oRrnQg4SboQ

https://www.youtube.com/watch?v=Ad5ny2WQr8s

eehaiupehazij
9th October 2015, 06:22 PM
நூறாவது பக்கத்தை நெருங்கிவிட்ட காதல்மன்னரின் திரியில் அவரது 95வது பிறந்தநாள் நினைவஞ்சலியை முன்னிட்டு மது சார், ராஜ்ராஜ் சார், ராகவேந்தர் சார் வாசு சார் கோபால் சார் சின்னக்கண்ணன் சார் கோபு சார் ரவி சார் ராஜேஷ் சார் எஸ்வீ சார் ஆதிராம் சார் யுகேஷ் சார் கலை சார் வரதகுமார் சார் சைலேஷ் சார்முத்தையன் அம்மு சார் அரிமா செந்தில்வேல் சார்..அனைவரும் வருகை தந்து ஜெமினியின் நினைவுகளைப் பெருமைப்படுத்தும் பதிவுகளை அளித்து 100வது பக்கத்தை நிறைவு செய்து சிறப்பித்திட அன்புடன் வணங்கி வரவேற்கிறேன்!

செந்தில்

RAGHAVENDRA
9th October 2015, 06:30 PM
https://www.youtube.com/watch?v=xwtip74JdXk

யாராவது புடவை தாவணின்னு பாட்டுக் கேப்பீங்க இனிமே...

chinnakkannan
9th October 2015, 06:47 PM
//யாராவது புடவை தாவணின்னு பாட்டுக் கேப்பீங்க இனிமே...// :) சின்ன வயசு தாங்காதுங்ணா :)

மனிதன் மாறவில்லை..அவன் மயக்கம் தீரவில்லை!

https://youtu.be/xbRl7O37xJA?list=RDg0eDl2aUByE

vasudevan31355
9th October 2015, 06:56 PM
விக்கியை நம்பினா விக்கி விக்கி சில சமயங்களில் அழ வச்சுடுமே!

கதவு திறந்ததா ரொம்ப அருமையான பாட்டு சின்னா! அதுவும் சுந்தரக் குரலாளின் 'ஹஹாஹஹா' ஹம்மிங் 'ஓஹோஹோஹோ'

//இயற்கையின் ரகசியம் தெரிகின்றதா.. ( என்ன தாம்மே சொல்ற நீ)//

அங்கதான் பிராக்கட் போடணுமா?:) சரி! சரி! ஆண் வாடை புடிக்காத அர்ச்சுனரே!

//கதைகள்பல் சொலியேமுகம் களிக்கும்படி உரைப்பாள்//

சுளிக்கும்படி அப்படிங்கறதுக்கு பதிலா தெரியாம 'களிக்கும்படி' ன்னு டைப் அடிச்சுட்டீங்க சின்னா!:)

//பாண்டியன் நான்..தப்புப் பண்ணிட்டேனா என்ன//

சிரித்துக் கொண்டே ஸேடா?:)

'புலி' ராணிக்கு புடவை உண்டா?

vasudevan31355
9th October 2015, 07:09 PM
ஒரு அருமையான பாடல். 'அன்பின் அலைகள்' என்று ஒரு படம்.

நல்லவர் சொல்லை நாம் கேட்போம்
நலமாய் வாழ வழி வகுப்போம்
தலைவர்கள் சொன்ன வழி வகுப்போம்
தாய் நாட்டினையே வாழ வைப்போம்

பாடலைப் பாடியவர் லதாவாம். சூப்பர் ஸ்டாரின் லதாவா? மாதுரி, வசந்தா, சொர்ணா, எம்.ஆர்.விஜயா, சசிரேகா வரிசையில் கிறங்க வைக்கும் குரல். இசை மலையாளத்தின் ஏ.டி.உம்மர்.


https://youtu.be/ZPpGqjJmqzo

RAGHAVENDRA
9th October 2015, 07:18 PM
பாடலைப் பாடியவர் லதாவாம். சூ

அதுதான் வாசு சார், கண்ணா நீ வாழ்க...லதா எ புஷ்பலதா...

https://www.youtube.com/watch?v=K4NcTfRPYac

அம்மாவும் அப்பாவும் வெள்ளைப் பூனைகள் ... இது கூட அவங்க தானே...

இந்தப் பாட்டில் கூட தலைவரும் மெல்லிசை மன்னரும் விளையாடி இருப்பார்கள்..

மெல்லிசை மன்னர் இப்பாட்டிற்கு வித்தியாசமான லயத்தை உபயோகித்திருப்பார். அந்தத் தாளக் கட்டே மிகவும் ரம்மியமாக இருக்கும். இசைக் கருவிகளே வேண்டாம், அதையே கேட்டுக் கொண்டிருந்தாலே போதும் எனத் தோன்றும்.

தலைவரோ கேட்கவே வேண்டாம். அந்தத் தாளக்கட்டிற்கேற்ப அந்தக் குழந்தையின் இடுப்பில் தாளம் போடும் காட்சி கண்கொள்ளாக் காட்சி...

அதுவும் அந்தக் குழந்தை மாமாவின் மனசோ வெள்ளை மனசு, மறந்தும் அதிலே களங்கமில்லை என்ற வரிகளின் போது தியேட்டராக இருந்தால் அவ்வளவு தான்...உடனே தாளம் சற்றே மாறி பாடல் சிறிது ஸ்லோவாகி மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்பும்.

அந்த சரணம்... நினைத்தாலே மெய்சிலிர்க்கும்..

ஊருக்கு அவரோ கோமாளி
இந்த உறவுக்கு அவரோ ஏமாளி
நாளைக்கு அவர் தான் மேதாவி
என் நாக்கினில் சொல்பவள் ஸ்ரீதேவி...

இந்த வரிகளை தலைவர் ஆமோதிப்பது போல் தன் முகத்தில் காட்டும் பாவனை.,..

இனிமேல் இப்படி ஒரு இசையமைப்பாளரும் இப்படி ஒர் மக்கள் தலைவனும் கிடைப்பார்களா..

...

மன்னிக்கவும் நடிகர் திலகம் திரியில் போட வேண்டிய பதிவை லதாவுக்காக இங்கே போட்டு விட்டேன்...

அதனாலென்ன ... அங்கேயும் போட்டால் போச்சு...

vasudevan31355
9th October 2015, 08:08 PM
சின்னா!

உமக்கு பழைய பாக்கி ஒன்று இருக்கிறது. நான் சொன்ன அருமை அருவிப் பாடல்.

மலைப்பாறைகளுக்கு இடையில் பாலூற்றாய்க் கொட்டிக் கொண்டிருக்கும் தேனூற்று அருவிகள். அங்கு இடை ஒடித்து நடந்து குளிக்கச் செல்லும் குள்ளி குயிலி. கொட்டங்கச்சி வயலின் இசை போல ஆரம்ப இசை அதே அருவி போல நம்மை 'அலேக்'காக அள்ள, 'சின்னக்குயில்' சித்ரா சிதறாமல் ஹம்மிங் எடுக்க, வழுக்குப் பாறையில் சறுக்கிச் செல்லும் குயிலையை அவருக்குத் தெரியாமல் குளிப்பதை ரசிக்கும் 'மலை நாட்டு மச்சான்' 'சத்தத்' தியாகு. அங்கே மாதுரி டீசன்ட் என்றால் இங்கே குயிலி அபாய கட்டம்.:) கிணற்றுக்கடியில் 'ஆத்தாடி பாவாடை கூத்தாட' கட்டிக் குளித்து, முரளி மச்சானுக்கு 'பூவிலங்கு' போட்டவர் இங்கு கொட்டும் அருவியில் தனியே கொண்டாட்டம். தியாகுவின் கனவில் குயில் அவர் அருகில் வந்து ஆட புதுப் பையன் 'முழி முழி' என்று கை வைத்த பனியன் அணிந்து, கை கட்டிக் கொண்டு முழிக்கிறார்.! (உம்ம பாணியில் சொன்னா 'அசமஞ்சமாயா நீ?':)

முதல் சரணம் முடிந்து அந்த அருவி கொட்டும் அழகைக் காணக் கண் கோடி வேண்டும். அப்படியே படிகளின் அடுக்குகளில் பால் கொட்டுவது போல் 'வெள்ளை வெளேர்' என்று நீர் கொட்டுவது பிரம்மாண்டம். அருவியின் வளைவுகளுக்கும், அன்னத்தின் வளைவுகளுக்கும் இயக்குனர் போட்டி வைத்திருப்பார் போல.:) ஜெயிப்பது எது என்று தீர்மானிப்பது கஷ்டம்.

அதெல்லாம் கிடக்கட்டும்.

சித்ராவின் குரலும், M.S. முராரியின் அறிமுக இசையும் இந்தப் பாடலை எங்கோ தூக்கிக் கொண்டு போய் நிறுத்தி விட்டது. சித்ரா ஒவ்வொரு வரியையும் அனுபவித்துப் பாடியிருப்பார். ஒவ்வொரு வரி முடிவிலும் அவர் கொடுக்கும் அதிர்வுகள் நெஞ்சாங்கூட்டில் ஆழமாய் இறங்குகின்றன. இந்தப் பாட்டின் டியூனையும், அதன் இனிமையையும் சொல்ல வார்த்தைகளே வரவில்லை. இசைக் கருவிகள் ஒவ்வொன்றும் செய்யும் சாகச வித்தைகள் கொஞ்ச நஞ்சமல்ல. முராரி பார்த்து பார்த்து பாடலை செதுக்கியிருப்பார். மலைக்காட்டு கிராமப் பின்னணி இசை, குறிப்பாக மூங்கில் குழல்களின் சப்தம் நம்மை அப்படியே ஈர்க்கும். என்ன! கொஞ்சம் ராஜாவின் சாயல் இருக்கும். ஆனால் தனித்தன்மை முத்திரை பதிக்க தவறாது.

கேட்கும் போது மெய் மறந்து போவோம் என்பது உண்மை. உண்மை.

'மலை நாட்டு மச்சானே!'


https://youtu.be/JVsaXKmkHLM

vasudevan31355
9th October 2015, 08:20 PM
'மாமாவின் மனசு வெள்ளை மனசு
மறந்தும் அதிலே களங்கமில்லை'

அருமை அருமை ராகவேந்திரன் சார்! அத்தனை திரிகளிலும் போட வேண்டிய பாட்டு.

rajeshkrv
9th October 2015, 08:29 PM
ஜி

சுஜாதாவின் ஜோடி சுதீர் .
நல்லாவே இருப்பார்.

vasudevan31355
9th October 2015, 09:09 PM
நல்லாவே தெரியும் ஜி. சின்னாவை சீண்டிப் பார்த்தேன்.

'ராமன் எத்தனை ராமனடி' படத்தில் நடிகர் திலகத்தின் கிராம சிறுவயது தோழனாக, அவருக்கு சினிமாவில் நடிக்க சான்ஸ் வாங்கித் தரும் சிறுவனாக வரும் பிரபாகர்தான் பின்னால் வளர்ந்து சுதீர் ஆகி, கே.ஆர்.விஜயாவின் மகளான, அதாவது நடிகர் திலகத்தின் வளர்ப்பு மகளான எம்.பானுமதியைக் காதலிப்பார். அழகான தோற்றம் கொண்டவர். ஏனோ பின்னால் பல பெண்களின் துகில் உரியும் துச்சாதனன் ஆனார்.

இங்கே பாருங்கள். நடிகர் திலகத்திடம் வாங்கிக் கட்டிக் கொண்டு நிற்கும் சுதீரை.

http://i62.tinypic.com/23m776e.png

vasudevan31355
9th October 2015, 09:26 PM
ஜி! உங்களுக்கு நான் தரும் ஒரு அற்புதமான சாங். சுதீர் நடித்ததுதான். கூட இருக்கும் ஹீரோயின் யாரென்று சின்னா சொல்லுவாராக. அருமையான பாடல். அழகான சுதீர். தாஸேட்டன் கலக்கி எடுத்திருப்பார்.

'மாரிவில்லு பந்தலிட்ட' 'தீர்த்தயாத்ரா' படத்தில்.


https://youtu.be/j-kKIcA4ekQ

rajeshkrv
9th October 2015, 09:35 PM
ஜி
உமக்கு தெரியாதது உண்டோ .. :)

vasudevan31355
9th October 2015, 09:57 PM
அப்படியெல்லாம் இல்லைஜி! நிறையவே தெரியாது. 'திருவிளையாடல்' நாரதர் யாருன்னு இன்னும் கண்டு பிடிக்க முடியல்லையே ஈஸா.:)

chinnakkannan
9th October 2015, 10:20 PM
வாஸ்ஸூ.. தாங்க்ஸ்..

//உம்ம பாணியில் சொன்னா 'அசமஞ்சமாயா நீ?// :)'

//முதல் சரணம் முடிந்து அந்த அருவி கொட்டும் அழகைக் காணக் கண் கோடி வேண்டும். அப்படியே படிகளின் அடுக்குகளில் பால் கொட்டுவது போல் 'வெள்ளை வெளேர்' என்று நீர் கொட்டுவது பிரம்மாண்டம். அருவியின் வளைவுகளுக்கும், அன்னத்தின் வளைவுகளுக்கும் இயக்குனர் போட்டி வைத்திருப்பார் போல. ஜெயிப்பது எது என்று தீர்மானிப்பது கஷ்டம். // முதல்ல கண் செக் அப் செய்யும்.. குட்டியானைக்கும் அன்னத்துக்கும் வித்யாசம் தெரியலை :)

//அதெல்லாம் கிடக்கட்டும்.

சித்ராவின் குரலும், m.s. முராரியின் அறிமுக இசையும் இந்தப் பாடலை எங்கோ தூக்கிக் கொண்டு போய் நிறுத்தி விட்டது. சித்ரா ஒவ்வொரு வரியையும் அனுபவித்துப் பாடியிருப்பார். // ட்ரூ.. நடுல்ல கொஞ்சம் ஜானகிமாதிரி ஹம்மிங்க் டபக்குன்னுகொடுத்து விட்டிருக்கிறார்.. கேக்க இனிமையான பாடல்..அகெய்ன் தாங்க்ஸ்.

Russellmai
9th October 2015, 10:28 PM
வாசு சார்,
தீர்த்தயாத்ரா திரைப்படத்தில் சுதீருடன் உள்ள ஹீரோயின் படாபட் ஜெயலெட்சுமி
போல உள்ளதே.
கோபு.

chinnakkannan
9th October 2015, 10:28 PM
//ஜி! உங்களுக்கு நான் தரும் ஒரு அற்புதமான சாங். சுதீர் நடித்ததுதான். கூட இருக்கும் ஹீரோயின் யாரென்று சின்னா சொல்லுவாராக. அருமையான பாடல். அழகான சுதீர். தாஸேட்டன் கலக்கி எடுத்திருப்பார்.// ஓய்.. ஆண்களைத் தான் தெரியாதுன்னு சொன்னேன்..அதுவும் எங்க கால யூத் லேடீஸ்னா ஃபடாபட்னு சொல்ல மாட்டேனா என்ன :) பாட்டு அழகான பாடல் தாங்க்ஸ்..அதுவும் எங்கே அவர் முகத்தைக் காண்பித்தார்.. டபக் டபக்னு லாங்க் ஷாட்..அப்புறம் தரையில் விழுந்துடறார்.. கொஞ்சம் நிறுத்திப் பார்க்க வேண்டியதாப் போய்டுத்து.. கரெக்ட் தானே..

கமல் ஃபடாபட் சக்கபோடு போடு ராஜா நினைவிருக்கா..

chinnakkannan
9th October 2015, 10:29 PM
நான் தான் நான் தான் முதல்ல சொன்னேன்.. கோபு சார்..வாஸ்ஸூ கிட்ட சொல்லிடுங்க.. :)

vasudevan31355
9th October 2015, 10:37 PM
வாசு சார்,
தீர்த்தயாத்ரா திரைப்படத்தில் சுதீருடன் உள்ள ஹீரோயின் படாபட் ஜெயலெட்சுமி
போல உள்ளதே.
கோபு.

சபாஷ் கோபு சார். கரெக்டா கண்டு பிடிச்சுட்டீங்களே! (சின்னாவின் நிமதிப் பெருமூச்சை இங்கு கேட்க முடிகிறது)

ஆனா திரிக்குத்தான் அடிக்கடி வர மாட்டேன்றீங்க இவ்வளவு திறமைகளை வச்சுகிட்டு.

rajeshkrv
9th October 2015, 10:38 PM
சபாஷ் கோபு சார். கரெக்டா கண்டு பிடிச்சுட்டீங்களே! (சின்னாவின் நிமதிப் பெருமூச்சை இங்கு கேட்க முடிகிறது)

ஆனா திரிக்குத்தான் அடிக்கடி வர மாட்டேன்றீங்க இவ்வளவு திறமைகளை வச்சுகிட்டு.

theerthayathra had another stunning song by PS
AT ummer's beautiful composition

https://www.youtube.com/watch?v=EZd73Zn43xE

vasudevan31355
9th October 2015, 10:38 PM
10.28

10.28:)

rajeshkrv
9th October 2015, 10:46 PM
இதோ பாசமலரே அன்பில் விளைந்த வாச மலரே
மலையாளத்திலும் உண்டு. இசை கங்கை அமரன்
குரல்கள் யேசுதாஸ், இசையரசி, ஷைலஜா

https://www.youtube.com/watch?v=Y74MTkDl1_s

RAGHAVENDRA
9th October 2015, 10:56 PM
http://www.veeconme.com/files/image_news/ravindra_jain.jpg

இன்றைக்கு இசையுலகிற்கு என்ன கஷ்ட காலமோ தெரியவில்லை. இரு பெரும் ஜாம்பவான்களை இழந்து விட்டு கண்ணீர் உகுத்துக்கொண்டிருக்கிறது.

புல்லாங்குழல் ரமணி... சிவாஜி எம்ஜிஆர் போல ரமணி மாலி ரசிகர்கள் சண்டை மிகவும் பிரசித்தம். ரமணி நம்மவர் போலவும் மாலி எம்ஜிஆர் போலவும் மனதுக்குள் ரசிகர்கள் பாவித்துக்கொண்டு போடும் சண்டையைக் காணக் கண் கோடி வேண்டும்.. இசையின் அத்தனை நுணுக்கங்களையும் பிச்சி மேஞ்சிடுவாங்க...

அப்படி ஒரு மாபெரும் இசைக்கலைஞனான ரமணியின் இழப்பு ஈடு செய்ய முடியாததாகும்.

இன்னொருவர் ரவீந்திர ஜெயின்.

பார்வைக்கோளாறு ஒரு பொருட்டாகவே அவருக்குக் கிடையாது. இசையுலகில் முடிசூடா மன்னனாக, ஏராளமான ஹிந்திப் பாடல்களுக்கு இன்று வரை வாழ்வு கொடுத்து மக்கள் மனதில் தனிப்பெரும் சாம்ராஜ்யத்தையே உருவாக்கி வைத்திருந்தவர் ரவீந்திர ஜெயின். குறிப்பாக இவருடைய இசைக்காகவே சஷிகபூரின் சோர் மஜாயே ஷோர் மாபெரும் வெற்றி பெற்றது. மூன்று நான்கு முறை இப்படத்தைப் பார்த்திருக்கிறேன். சென்னை சத்யம் தியேட்டர் திறந்த புதிதில் தியேட்டர் பார்ப்பதற்கென்றே போன படம்.

இருவரின் ஆன்மாவும் சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திப்போம்

https://www.youtube.com/watch?v=K0_jpigjv1c

இந்தப் பாட்டில் ஒரு இடத்தில் தனி ஷெனாய் இசை ஒலிக்கும். நம்மூர் நாதஸ்வரம் போல வட இந்தியாவில் மங்கல இசைக்கு வாசிக்கும் வாத்தியம் ஷெனாய். ஆனால் நம்முடைய மக்களோ அதை சோக சூழ்நிலைக்கே பயன்படுத்தி ஒரு வழியாக்கி விட்டார்கள்.

chinnakkannan
9th October 2015, 10:57 PM
லதா-புஷ்பலதா வின் பாடலுக்கு வாசுவிற்கும் ராகவேந்திரருக்கும் நன்றி.. அம்மாவும் அப்பாவும் வெள்ளைப் பூனைகள்...அந்த டேப்ரெகார்டர் சிக்கிக் கொண்டுவிட ந.தி தவிக்கும் தவிப்பு..நன்றாக இருக்கும்.. சோவின் தலையைத் தொடாதே காமடி.. சிப்பியிலே முத்து அது சிப்பிக்குத் தான் சொந்தம்.. என கலைச்செல்வி கண்கலங்கும் பாட்..ம்ம்..அன்பைத்தேடி.. நல்ல படம்..

முக நூலில் நண்பர் ஒருவர் இட்டிருந்தபாடல்..வீணப் பூவே.. வீணைப் பூன்னு ஒன்று இருக்கிறதா..என்ன.. மோஹன் அண்ட் ஷீலா..பாட் ஜேசுதாஸ்.. ஷீலுவின் புடவை, கனகாம்பரம் நன்னாயிட்டு இருக்கு..!

https://youtu.be/V9BTSRhOb1g

chinnakkannan
9th October 2015, 11:00 PM
10.28

10.28:)

இன்னும் நம்பிக்கை இல்லீங்களா.... :sad: :)

chinnakkannan
9th October 2015, 11:02 PM
//இன்றைக்கு இசையுலகிற்கு என்ன கஷ்ட காலமோ தெரியவில்லை. இரு பெரும் ஜாம்பவான்களை இழந்து விட்டு கண்ணீர் உகுத்துக்கொண்டிருக்கிறது.

புல்லாங்குழல் ரமணி...
இன்னொருவர் ரவீந்திர ஜெயின்//. புல்லாங்குழல் ரமணி, ரவிந்திர ஜெயின் இருவர் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்..

raagadevan
9th October 2015, 11:08 PM
Musician Ravindra Jain passed away at Leelavati Hospital, Mumbai on Friday, the 9th of October 2015. He was born blind, but grew up to become a musical genius writing his own lyrics, composing music for them, and turning them into everlasting musical classics in many languages. He was also a singer. Ravindra Jain is one of the reasons for K. J. Yesudas becoming a singing sensation in Hindi movies. It is said that he was so fascinated by the way Yesudas sang his songs that Yesudas' face was the first he wanted to see if he ever received his vision. Here is a romantic melody written and composed by Jain for Rajshri Pictures' Hindi movie GOPAL KRISHNA (1979); sung by Yesudas and Hemlata, and featuring Zarina Wahab and Sachin.

https://www.youtube.com/watch?v=F1-WrzeYA3s

chinnakkannan
9th October 2015, 11:10 PM
theerthayathra had another stunning song by PS
AT ummer's beautiful composition// ரொம்ப அழகான பாடல் ராஜேஷ். தாங்க்ஸ்.மொதல்லயே போட்டிருக்கலாமில்லை..கொஞ்சம் ஈஸியா கண்டுபிடிச்சுருப்பேன்.. பட் வெகு இளமையா ஃபடாபட் என்ன அழகா இருக்காங்க..பாவம்.. சீக்கிரமா போயிருக்க வேணாம்.. முதல் தமிழ்ப்படம் பட்டிக்காட்டு ராஜான்னு நினைக்கறேன் இல்லியோ..

RAGHAVENDRA
9th October 2015, 11:15 PM
https://www.youtube.com/watch?v=JzECWv9z47M

மொழியறியா மக்களையும் இசை வயப்படுத்தி விடும் என்பதற்கான மிகச் சிறந்த உதாரணம்.

ஜேசுதாஸை தென்னிந்தியாவைத் தாண்டிச் செல்ல வைத்த பாடல். வட இந்தியர்களை கவனிக்க வைத்த பாடல்.

ராஜ் ராஜ் சார் சொன்னது போல ஸ்க்ரீன் பத்திரிகையில் ஒரு முறை ரவீந்திர ஜெயின் பேட்டியளித்திருந்தார். தன் கண்பார்வை வந்தால் முதலில் தான் பார்க்க விரும்பும் முகம் ஜேசுதாஸாகத் தான் இருக்க வேண்டும் என்று. அதற்கு வித்திட்டது இப்பாடல்.

இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் ஏனோ நதியோரம் பொறந்தேன் கொடி போல வளர்ந்தேன் வரிகள் ஞாபகத்திற்கு வருகிறது. ஏனோ தெரியவில்லை. அதையும் தான் கேட்போமே.

https://www.youtube.com/watch?v=wtd_9LkMxig

vasudevan31355
9th October 2015, 11:28 PM
//முதல் தமிழ்ப்படம் பட்டிக்காட்டு ராஜான்னு நினைக்கறேன் இல்லியோ.. //

http://i.ytimg.com/vi/TXlp1JF-htg/maxresdefault.jpg

chinnakkannan
9th October 2015, 11:35 PM
படமிருக்கு.. படம் இல்லையே?! என்ன திரைப்படம்.. தாங்க்ஸ் வாஸ்ஸு..ஆனாலும் நள்ளிரவில் பயங்கர சுறுசுறுப்பு தாங்க.. ..தாங்க்ஸ். அகெய்ன்

chinnakkannan
9th October 2015, 11:50 PM
வேறு எதையோ தேடப் போய்... வெகு நாட்களாய்.. அதாவது செந்தில்வேல் இந்தப் பாடலைப் போட்டபின் வாசுவும் இதைப் பற்றி எழுதியிருந்தது அப்போது சுத்தமாக நினைவிலில்லை..பின் தான் அவருடன் பேசிய போது நினைவுக்கு வந்தது..இப்போது அந்தலிங்க்..

http://www.mayyam.com/talk/showthread.php?11121-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%A E%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE/page239

நைஸ் வாசு..தாங்க்ஸ்.. அண்ட் ஸாரி என் ஞாபக மறதிக்கு..

rajeshkrv
10th October 2015, 12:14 AM
படமிருக்கு.. படம் இல்லையே?! என்ன திரைப்படம்.. தாங்க்ஸ் வாஸ்ஸு..ஆனாலும் நள்ளிரவில் பயங்கர சுறுசுறுப்பு தாங்க.. ..தாங்க்ஸ். அகெய்ன்

adhu irulum oliyum. She acted as sister to AVMrajan

rajraj
10th October 2015, 06:14 AM
May his soul rest in peace.

http://www.thehindu.com/news/flautist-n-ramani-passes-away/article7743461.ece?homepage=true?w=alstates

Here are two video clips of his renditions

Chinnanchirru kiLiye.....

http://www.youtube.com/watch?v=l-0vR_QU3j4

Theeraadha viLaiyaattu piLLai....

http://www.youtube.com/watch?v=NxxgMA4KlsM

The Hindu article reminded me of Tiruvarur Thyagaraja, KeevaLur(keezh vELur) Akshayalingam, Siikkil Singaravelan and Nagapattinam Neelayadhakshi, all temple deities. High school memories. Next time I visit India I should visit all these places ! :)

I attended two of his concerts in the US. Very unassuming person.

vasudevan31355
10th October 2015, 07:49 AM
//கமல் ஃபடாபட் சக்கபோடு போடு ராஜா நினைவிருக்கா..//

ருக்காவா?....ம்...நேரமய்யா நேரம்.

vasudevan31355
10th October 2015, 08:07 AM
//இப்ப எதுக்கு இந்தக் குறைங்கறேன்..இதோ சேப்புச் சேப்பா பாட் தர்றேங்கறேன்…

சலசலகா உண்டுடா ஒய் ராமா ஒய் ராமா?//

தமிழ்ல போடறது....:)

vasudevan31355
10th October 2015, 08:43 AM
கூத்து....நாடகம்...

அந்தக் கால சினிமாக்களில் ஊடால கூத்து, டிராமா, ஓரங்க நாடகம் போன்ற அயிட்டங்கள் பாடல்களுடன் அம்சமாக வந்து போகும். அதுவும் நடிகர் திலகத்தின் படங்களில் அது மாதிரி அதிகமாகவே இருக்கும். உடனே நம் நினைவுக்கு வருபவை நவராத்திரி, ராஜபார்ட் ரங்கதுரை. இதெல்லாம் அடிக்கடி பார்த்தாயிற்று. இருந்தாலும் சலிக்காது. இது போன்ற வேறு படங்களில் வரும் கூத்து, நாடகம் இவற்றை நண்பர்கள் கொஞ்சம் போட்டா நல்லா இருக்குமே.

முதலில் நடிகர் திலகத்தின் படத்திலிருந்தே தொடங்கி வைக்கிறேன்.

'சபாஷ் மீனா' வில் ஒரு நாடகம்.

http://www.geocities.ws/ganeshkumar_r/bg58saba.jpg

கனவான்களின் கூத்து. கும்மாளம். கன்னி மயில்களுடன் ஆட்டம். அங்கு வருகிறார் கோமாளி வேடத்தில் நடிகர் திலகம். நடக்கும் அக்கிரமங்களைத் தட்டிக் கேட்கிறார். மிக வித்தியாசமான கெட்-அப்பில் புளோரசென்ட் லிப்ஸ்டிக் அடித்து அவர் ஒரிஜினல் கோமாளி போல் மேடையில் சுற்றி வருவது நம்மை வாய் பிளக்கச் செய்யும். நடன அசைவுகளை ரொம்ப அலட்சியமாக பண்ணுவார். கால்களை கவனித்தீர்களானால் ஒரு இடத்தில் கூட நில்லாது. கடினமான வரிகள். வார்த்தைகள். விறுவிறு என்று வேறு பாடுவார் பாடகர் திலகம்.

'ஓ....சுயநல வெறிமிகு மாந்தர்களே
சுகம்தனில் மிதந்திடும் வேந்தர்களே
ஆட்டத்தை நிறுத்துங்கள்
அறிவுடன் விரைவினில் திருந்துங்கள்'

புத்தி சொல்லும் கோமாளியின் முகத்தில் கனவான் ஒருவன் கிரீம் எடுத்து அடித்து அவமானப்படுத்தி 'நிறுத்து' என்று கத்த,

அந்த ஏழைக் கோமாளியோ,

'நிறுத்து நிறுத்து நிறுத்து என்று கத்தாதே'

என்று எலும்பும், தோலும் காட்டும் வறுமைக் குழந்தைகளோடு பாடுகிறான்.

படத்தில் தந்தைக்கு நடிகர் திலகம் கூத்தாடுவது பிடிக்காது. அப்படிப்பட்டவர் இந்த ட்ராமாவுக்கு வந்துவிட, மேடையில் ஏழைகளுக்கு ஆதரவாக பாடி ஏய்ப்பவர் கூட்டத்திடம் சவால் விடும் நடிகர் திலகம்,

'கொற்றவனே வந்தாலும்
என்னைப் பெற்றவனே வந்தாலும்'

என்று பாடிக் கொண்டிருக்கும் போதே மேடையில் இருந்து தந்தையைப் பார்த்துவிட்டு, பயத்தில் பாடத்தை மறந்துவிட்டு, திரை மறைவில் ஒருவர் வசனத்தை எடுத்துக் கொடுக்க, ('முடியாது' என்று எடுத்துக் கொடுப்பார்) அதையே நடிகர் திலகமும் இனி தந்தை முன்னால் தன்னால் நடிக்க முடியாது என்பதை அதே

'முடியாது'

வார்த்தையை வைத்தே நடுங்கிப் பாடி பயந்து ஓட. இழுத்து மூடு ஸ்க்ரீனை.:)

செம ரகளை. சிரித்து சிரித்து வயிறே புண்ணாகி விடும். நடிகர் திலகத்தில் அசாத்திய கோமாளித் திறமை சேட்டைகளை அனுபவித்து பார்த்து ரசிக்கலாம். வழக்கம் போல வியக்கலாம்.

சோ, மனோரமா, நாகேஷ் இது போன்ற சினிமாக்களில் வரும் கூத்து நாடகங்களில் நிறைய நடித்திருப்பார்கள்.

இனி தேடிக் கண்டு பிடித்து குஷிப்படுத்துவது உங்கள் பொறுப்பு. பார்ப்போம். யார் யார் தூள் கிளப்புகிரீகள் என்று.:)


http://www.dailymotion.com/video/x2fjpf0

eehaiupehazij
10th October 2015, 08:58 AM
From GG Island with Love!

காதல்மன்னரின் பிறந்தநாள் நினைவோட்டம் !
மிஸ்ஸியம்மா மதுர கான நினைவலைகள் !


ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை திரைப்படமே இக்கணம் வரை மிகச்சிறந்த தமிழ் நகைச்சுவைப் படமாகக் கொண்டாடப் படுகிறது !
அருமையான வண்ணக் குழைவில் அற்புதமான விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை இணைவில் தேனினும் இனிய பாடல்களோடு இளமை பொங்கும் நாயக நாயகியர் நகைச்சுவை ஜாம்பவான்கள் பாலையா நாகேஷ்! ...சிவாஜி எம்ஜியார் ஜெமினி மூவேந்தர் திரையாண்ட காலகட்டத்தில் மக்கள் மனதில் இடம் பிடித்து வெள்ளிவிழா கண்டது சாதைனையே!

இருந்தாலும் அதற்க்கு முன்னரே கருப்புவெள்ளை காலகட்டத்தில் வழவழ கொழகொழ வசன இழுவைகளும் தடுக்கி விழுந்தால் பாடல்களும் இல்லாமல் யதார்த்தமான மெல்லிய நகைச்சுவை இழையோடும் கதையமைப்பில் சிரிப்பு விருந்தாக வெளிவந்து இன்றும் தியேட்டர்களுக்கு குடும்பங்களை ஈர்க்கும் தரமான நகைச்சுவை காவியம் மிஸ்ஸியம்மா !

பணி நிமித்தம் வெவ்வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் ஜெமினி கிறித்துவப் பெண்ணான சாவித்திரி தங்க இடமின்றி கணவன் மனைவியாக நடித்து ரங்காராவ் வீட்டில் வாடகைக்கு ஒன்றாகத் தங்க நேர்ந்த சூழலில் நடக்கும் சிரிப்புக் கூத்துகளும் கூத்திலே கோமாளியாக இரண்டுங்கெட்டான் ஜமுனா இடைசெறுகலாக அடிக்கும் லூட்டிகளும் துப்பறியும் தங்கவேலு வேடிக்கை வில்லனாக.. நம்பியார்..... டைமிங் காமெடியில் அந்தக்கால தம்பி ராமையா மைண்ட் வாய்ஸ் சாரங்கபாணி ....

தமிழின் மிகச் சிறந்த ஆபாசஅருவருப்பில்லாத மனதை லேசாக்கும் நகைச்சுவைக் காவியத்தில் இசையும் பாடல்களும் அபாரமான வரவேற்பு கண்டன !

https://www.youtube.com/watch?v=KvR9I7Jvzos

என்னவொரு பொசசிவ் காதலி சாவித்திரி !
இரண்டுங்கெட்டான் ஜமுனாவை ஜெமினி வலையில் விழாமல் ஒதுக்கி தனது மன்னரைத் தக்கவைக்க எப்படியெல்லாம் ஜமுனாவுக்கு எச்சரிக்கை மணியடிக்கிறார் !!

[url]https://www.youtube.com/watch?v=h7nBY1PLC14

ஜெமினி ஏ எம் ராஜாவின் தேன்குரலில் பாடலைத் தொடங்கும்போது அவர்மேல் கொண்ட கோபம் கதிரவனைக் கண்ட பனிபோல மறைந்து என்னவொரு பெருமிதமான ஆழ்மனக் காதல் லுக் விடுகிறார் நடிகையர்திலகம் !

[url]https://www.youtube.com/watch?v=Em1dcjlhnt4

rajeshkrv
10th October 2015, 09:25 AM
சிவாஜி செந்தில் ஜி
நீங்கள் சொன்னது 100%உண்மை
காதலிக்க நேரமில்லைக்கு முன்னரே வந்த அருமையான நகைச்சுவை சித்திரம் மிஸ்ஸியம்மா

chinnakkannan
10th October 2015, 09:37 AM
நேற்றைய கேஷவ்வின் ஓவியம்..

https://scontent-ams3-1.xx.fbcdn.net/hphotos-xfp1/t31.0-8/s960x960/12045443_10204796412365387_5801483254016117600_o.j pg

நான் எழுதிப் பார்த்த பாடல்..

மாயக் கிருஷ்ணன் மடியினை மஞ்சமென
தூயதாம் கன்றெண்ணித் துஞ்சியதோ – பாலகனும்
பார்த்துத்தான் கால்மடித்துப் பக்குவமாய்க் கண்மூடி
ஈர்க்கின்றான் நம்மையிங் கே

rajeshkrv
10th October 2015, 09:38 AM
சிக என்ன தைரியம் இருந்தால் கன்னடத்து பைங்கிளிக்கு புடவை பாந்தமில்லை என்று சொல்லியிருப்பீர். உம்மை என்ன செய்தால் தேவலை
இதோ என்ன அழ்காக இருக்கிறது பாரும் பார்த்து தீரும்..

https://www.youtube.com/watch?v=xiDpDeDt2Bo

https://www.youtube.com/watch?v=Nr86B4RpR7o

https://www.youtube.com/watch?v=y195WVjU3Tk

https://www.youtube.com/watch?v=G5c7GspEH9A



https://www.youtube.com/watch?v=YUjFZsYl2Yw

https://www.youtube.com/watch?v=2kW-cBhTmeU

https://www.youtube.com/watch?v=0_C8yqHSf50

https://www.youtube.com/watch?v=SaUc4S5E2Yg

இதுமட்டுமல்ல சுடிதார் மார்டன் ட்ரெஸ் என எல்லாமே கன கச்சிதமாக பொருந்தும் ..

rajeshkrv
10th October 2015, 09:44 AM
https://www.youtube.com/watch?v=z4CbKsqcpVI

https://www.youtube.com/watch?v=3uirtqg32sI

https://www.youtube.com/watch?v=sH4wqRdL5bM

https://www.youtube.com/watch?v=syqEFuG-i6o

chinnakkannan
10th October 2015, 09:46 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..

வாசு,

நாடகப் பாடல்களில் சபாஷ் மீனா பாட்டு நைஸ்..(சில நாட்களுக்கு முன் இதைப் போடலாம் என்று செலக்ட் செய்து விட்டிருந்தேன்) பட் அதுலயே இன்னொருட்ராமா ரிகர்ஸல்.. ஆசைக்கிளியே கோபமா.. நன்றாக இருக்கும்

சினிமாவுக்குள் நாடகம் என்றால் நினைவுக்கு வருவது

சோவின் ஆலாலங்கடிசோ - விளையாட்டுப் பிள்ளை
நாகேஷ் ஒய்.ஜி மகேந்திரா - நூற்றுக்கு நூறு
சுப்ரபாதம் - ஆர் எஸ் மனோகர்
சிம்லா ஸ்பெஷல் 0 சந்திர மண்டலத்தில் சங்கர சாஸ்த்ரி

கொஞ்சம் முழுமையான நாடகம்..ஆனால் ஒற்றை வரிக் கதை.. காதலன் காதலித்து மணந்தவளின் அழகில் மயங்கி இன்பத்திலெயே மூழ்கி எழுந்து கடலுக்குச் செல்ல மறுக்கிறான்..யோவ் இப்படில்லாம் இருக்கப் படாது..போய் வேலையைப் பார்க்கப் போ என அனுப்புகிறாள் அவள்..விதிவசத்தில் அவன் இறக்க அதை அறிந்த அவள் சோகத்தில் சிலையாகிறாள்..

புலமைப் பித்தனின் வரிகள் பானுப்ரியாவின் நடனம், கிழி கிழி கிழி டான்ஸ் மாஸ்டர் கலாவின் கொரியோக்ராபி + நடன அமைப்பு என பார்க்கையிலேயே ஈர்த்த பாடல்

கோழி கூவும் நேரமாச்சு தள்ளிப் போமாமா
ஓட மங்கை காத்திருப்பாள் ஓடிப் போ மாமா
விளையாடி விளையாடி பொழுதாகிப் போச்சு.. என இந்த வரியே அவள் சொல்வது போல வரும்படி எழுதியிருப்பார் கவிஞர்..

பானுப்ப்ரியாவின் கண்கள்..சொல்லியே தீரவேண்டும்..அந்த ஓடத்தையே அதில் விடலாம்..அவவளவு அழகாகப்பெரியதாக ஆழமான பாவங்களுடன் இருக்கும்..

https://youtu.be/-wghwODHyEo

chinnakkannan
10th October 2015, 09:50 AM
//சிக என்ன தைரியம் இருந்தால் கன்னடத்து பைங்கிளிக்கு புடவை பாந்தமில்லை என்று சொல்லியிருப்பீர். உம்மை என்ன செய்தால் தேவலை
இதோ என்ன அழ்காக இருக்கிறது பாரும் பார்த்து தீரும்..// ராஜேஷ் கண்ணா :) :) உணர்ச்சி வசப் பட்டு நிர் சர்ரூ பாட்டாத் தருவீங்கன்னு தெரியும் :) எல்லா சமயத்திலும் இருக்கா என்பது கேள்வி..:) மெல்ல மெல்ல பாட்டில் பார்த்தீர்கள் என்றால் நாலு உடை மாற்றுவார்..ப்ளாக் அண்ட் ஒய்ட்லயே நல்லாத்தான் இருக்கும் சரி சரி.. நல்லாத் தான் இருக்குங்க..அழாதீர் :)

JamesFague
10th October 2015, 10:02 AM
Courtesy: Tamil Hindu

சூழல் ஒன்று பார்வை இரண்டு: உன் பார்வை ஒரு வரம்


ஒரு அழகான பெண்ணின் விழிகளும் பார்வைகளும் ஈடிணையற்ற அழகு கொண்டவை எனக் கருதும் ஆண்கள் இருக்கிறார்கள். தன் காதலியின் விழிகளை உயிர்த் துடிப்பு மிக்க சக்தியாக, கடலைவிடவும் ஆழமானதாகக் கருதும் இந்தித் திரைப் பாடலையும் காதலியின் பார்வையை மலர் வனமாக, ஒரு வரமாகக் காணும் தமிழ்த் திரைப் பாடலையும் பார்ப்போம்.

இந்திப் பாட்டு

படம்: சஃபர் (பயணம்)

பாடலாசிரியர்: இந்திவர்

இசை: கல்யாண்ஜி ஆனந்த்ஜி

பாடியவர்: கிஷோர் குமார்.

ஜீவன் ஸே பரீ தேரி ஆங்க்கே

மஜ்பூர் கரே ஜீனே கேலியே ஜீனே கேலியே

சாகர் பீ தர்ஸத்தே ரஹத்தே ஹைன்

தேரா ரூப் கா ரஸ் பீனேகேலியே பீனேகேலியே

பொருள்:

உயிர்த் துடிப்பு மிக்க உன் விழிகள்

நான் வாழ்வதைக் கட்டாயப்படுத்துகின்றன.

ஆழ்கடலும் அலைபாய்கிறது உன்

அழகைப் பருகுவதற்கு

ஓவியன் வரைந்த ஓவியமோ

காவியம் படைக்கும் கவிஞனின் ஆக்கமோ

எதுகையும் மோனையும் இழைந்தது போல

எப்படி வந்தது இப்படி ஒரு அழகு

இதயத்தில் எழும் இனியதொரு துடிப்பு நீ

இயக்கத்தின் ஏதுவாய் இருக்கும் இன்னுயிர் நீ

நந்தவனத்தின் நறுமணம் உன் சுவாசத்தில்- உன்

அங்கத்திலோ தாமரையின் பரிசுத்தம்.

நன் கிரணங்களின் வீச்சு உன் முக வடிவில்

மான் இனங்களின் மருட்சி நின் இயல்பில்.- உன்

மேலாடையின் நூலிழைகள் அறுந்த இதய

நூலாடை எதையும் தைக்கும் எளிதில்.

இந்தி மொழியில் சாகர் என்ற சொல்லின் பொருள் கடல். அதே சொல்லின் உருது மொழிப் பொருள் மயக்கம் தரும் மது நிரம்பிய கோப்பை. இந்த இரு பொருளும் பொருந்தும் வண்ணம் இந்தப் பாடல் எழுதப்பட்டுள்ளது. நாயகியின் அழகைப் பருகுவதற்கு ஆழ்கடல் தாகத்துடன் தவிக்கிறது என்று பொருள் கொள்ளலாம். அவள் அழகைப் பருகுவதற்கு ஒரு மதுக் கோப்பையே தவிக்கிறது என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

இந்த அளவு ஆழ்ந்த மரபில் ஊறிய இலக்கிய நயமான வர்ணனை தமிழ்ப் பாடலில் சேர்க்கப்படவில்லை. ஆனால், நவீன வாழ்வோடு ஒட்டிய, இளம் தலைமுறையின் எதிர்பார்ப்புக்கேற்ப எழுதப்பட்டுள்ளது இந்தத் தமிழ்ப் பாடல். கற்பனை வளம் மிகுந்த பாடல் வரிகளுக்காகவும் இனிமையான இசைக்காகவும் இன்றும் விரும்பிக் கேட்கப்படும் பாடல் இது. வரம், கனிமரம், இளமையின் கனவுகள் துளிர்விடும் விழியோரம் என்றெல்லாம் காதலியின் விழிகள் வர்ணிக்கப்பட்டுள்ளதைப் பாருங்கள்.

தமிழ்ப் பாட்டு

படம்: நினைவெல்லாம் நித்யா

இசை: இளையராஜா

பாடல்: வைரமுத்து

பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

பனிவிழும் மலர்வனம்

உன் பார்வை ஒரு வரம்

இனி வரும் முனிவரும்

தடுமாறும் கனிமரம்

சேலை மூடும் இளஞ்சோலை

மாலை சூடும் மலர்மாலை

இருபது நிலவுகள்

நகமெங்கும் ஒளிவிடும்

இளமையின் கனவுகள்

விழியோரம் துளிர்விடும்

கைகள் இடைதனில் நெளிகையில்

இடைவெளி குறைகையில்

எரியும் விளக்கு சிரித்துக் கண்கள் மூடும்

காமன் கோயில் சிறைவாசம்

காலை எழுந்தால் பரிகாசம்

தழுவிடும் பொழுதிலே

இடம் மாறும் இதயமே

வியர்வையின் மழையிலே

பயிராகும் பருவமே

ஆடும் இலைகளில்

வழிகிற நிலவொளி இருவிழி

மழையில் நனைந்து மகிழும் வானம்பாடி

JamesFague
10th October 2015, 10:05 AM
Courtesy: Tamil Hindu

காற்றில் கலந்த இசை 25 - தரை மீது சிணுங்கும் மெல்லொலி

சமூக அமைப்பின் கரடுமுரடான அடுக்குகளாலும், குடும்பச் சிக்கல்களாலும் காயப்பட்டு, உள் சுருங்கும் மனதுடன் தங்கள் வட்டத்துக்குள்ளேயே முடங்கிவிடும் பாத்திரங்களைத் திரைப்படங்களில் மிக நுட்பமாகச் சித்தரித்தவர் மகேந்திரன். அன்பு நிறைந்த உலகின் பிரஜைகளைத் தனது பிரதான பாத்திரங்களாக அவர் உருவாக்கியிருப்பதை, அவரது எல்லாப் படங்களிலும் உணர முடியும்.

‘சாவி’ இதழில் தான் எழுதிய தொடர்கதையை அடிப்படையாக வைத்து அவர் இயக்கிய படம் ‘மெட்டி’ (1982). செந்தாமரை, விஜயகுமாரி, சரத்பாபு, ராஜேஷ், வடிவுக்கரசி, ராதிகா, வெண்ணிற ஆடை மூர்த்தி, சாமிக்கண்ணு போன்ற திறமையான கலைஞர்கள் பங்கேற்ற படம் இது. மகேந்திரன் உருவாக்கும் உணர்வுபூர்வமான காட்சிகளுக்கு உயிர் தரும் கலைஞரான இளையராஜாவின் இசையில் வெளியான படம்.

படத்தின் தொடக்கத்தில் இடம்பெறும் ‘மெட்டி ஒலி காற்றோடு’ பாடல், இளையராஜா ஜானகி பாடிய பாடல்களில் மிகச் சிறப்பானது. இப்பாடலில் ஆண்-பெண் குரல்கள் ஒலித்தாலும், பாடல் காட்சியில் இடம்பெறுவது ஆதரவற்ற தாயும் அவரது இரு மகள்களும்தான். கடலலைகளுக்கு அருகே பிரத்யேக உலகத்தை உருவாக்கிக்கொண்டு, அன்பின் திளைப்பில் மூழ்கும் அப்பெண்களைத்தான் பாடலில் காட்டியிருப்பார் மகேந்திரன். திருமணமான பெண்களின் அடையாளமான மெட்டியை இப்படத்தில் ஒரு குறியீடாகவே பயன்படுத்தியிருக்கும் மகேந்திரன், பாடலின் ஒலிவடிவத்தைக் கடந்த காலத்திலிருந்து ஒலிக்க விட்டிருப்பார்.

எழுந்துகொண்டிருக்கும் அல்லது மறைந்துகொண்டிருக்கும் சூரியனின் மஞ்சளும் சிவப்புமான கதிரொளியில் வானில் உருவாகியிருக்கும் பிரம்மாண்டமான ஓவியத்தின் கீழே பரவிச் செல்லும் இப்பாடலை, ஜானகியின் இனிமையான முணுமுணுப்பு தொடங்கிவைக்கும். மற்றொரு அடுக்கில், ஏகாந்தமான குரலில் இளையராஜாவின் ஆலாபனை ஒலிக்கும். இளையராஜாவின் சற்றே கணகணப்பான குரலில் காதலும் பாந்தமும் நிரம்பித் ததும்பும்.

பல்லவியையும் சரணத்தையும் இணைக்கும் இசைப் பாலத்தின் இழைகளை வயலினால் நெய்திருப்பார் இளையராஜா. 16 வினாடிகள் நீளும் அந்த ஒற்றை வயலின் இசையில், உலகின் சவுந்தர்யங்கள் அனைத்தையும் அடக்கி வைத்திருப்பார் மனிதர். அறியாத தீவு ஒன்றில், நாணல்கள் அடர்ந்த கடற்கரையில் உலவும் உணர்வைத் தரும் நிரவல் இசை அது.

முதல் நிரவல் இசையில் வயலின் இசை என்றால், இரண்டாவது நிரவல் இசையில் 13 வினாடிகளுக்கு நீளும் ஜானகியின் ஹம்மிங் நம்மை இருந்த இடத்திலிருந்து சில அடிகள் உயரத்தில் மிதக்கச் செய்துவிடும். தமிழ் தெரிந்த தேவதை ஒன்றின் வருகையை உணர்வது போல் தோன்ற வைக்கும் ஹம்மிங் அது. பாடலின் இடையே அவ்வப்போது சிணுங்கும் கணங்களிலும் ஜானகியின் குரல் சிலிர்ப்பூட்டும். ‘பார்வை பட்ட காயம்… பாவை தொட்டு காயும்’ எனும் கங்கை அமரனின் கற்பனை அலாதியானது.

திருமணம் செய்து கொள்வதாகக் கூறிக்கொண்டு தன் பின்னே சுற்றும் எழுத்தாளர் ராஜேஷிடம், ‘நிபந்தனை’களுடன் ராதிகா பாடும் பாடல், ‘கல்யாணம் என்னை முடிக்க’. மனதுக்கு மிக நெருக்கமான குரலில் இப்பாடலைப் பாடியிருப்பார் ஜென்ஸி. இடையிடையே, ரயிலில் திருமணம், ‘நொச்சிக்குப்பம் பச்சையப்பன் குரூப்’பின் நாதஸ்வர இசை என்று கலகலப்பான கற்பனைகளைக் கொண்ட பாடல் இது. அழுத்தங்களுக்கு இடையே சற்று சிரிக்கவும் தெரிந்திருக்கும் பெண்களின் மெல்லிய குறும்புகளை இப்பாடல் பதிவுசெய்திருக்கும்.

அதே படத்தில் மிக முக்கியமான மற்றொரு பாடல், கே.பி. பிரம்மானந்தன் பாடிய ‘சந்தக் கவிகள் பாடிடும் மனதினில்’. தனது தங்கையின் திருமணம் பற்றிய கனவுகளுடன் அண்ணனும், அண்ணனின் அளவற்ற அன்பில் திளைக்கும் தங்கையும் தோன்றும் இப்பாடல், ஒரு பாடலின் இனிமை குலையாமல் படமாக்குவது எப்படி என்பதற்கான பாடம் எனலாம். மெல்லிய மாலைப் பொழுதின் கடலலைகள், அடர் மரங்களின் நிழலால் போர்த்தப்பட்ட நிலங்கள், சூரிய ஒளியில் மின்னும் சில்வர் குடங்கள் என்று அசோக்குமாரின் மேன்மையான ரசனையின் துணையுடன் இப்பாடலைப் படமாக்கியிருப்பார் மகேந்திரன்.

வெல்லத்தின் பாகைக் குழைத்து இழையாக நீட்டிச் செல்வதுபோன்ற உச்சபட்ச இனிமை கொண்ட வயலின் இசையுடன் இப்பாடல் தொடங்கும். ‘…மனதினில் இன்பக் கனவுகளே’ எனும் வரிகளை ரசித்தபடி ஆமோதிக்கும் வகையில், வீணை இசையின் சிறு துணுக்கை ஒலிக்கவிடுவார் இளையராஜா. அந்த ஒற்றைக் கணத்தில் மனம் நிறைந்துவிடும். தொடர்ந்து ஒலிக்கும் பாடல் முழுவதும் அந்த இனிமையின் நீட்சிதான்.

மதுக்கூர் கண்ணன் எழுதிய ‘ராகம் எங்கேயோ… தாளம் எங்கேயோ’ பாடல், பிரம்மானந்தன், உமா ரமணன், சசிரேகா பாடியது. அழுத்தமான கஜல் பாடல் பாணியில் அமைந்த இப்பாடலில், தாயின் இழப்பு தரும் தாங்க முடியாத துயரத்தை இசைத்திருப்பார் இளையராஜா. மலையாளத்தில் மிக நுட்பமான பாடல்களைப் பாடியிருக்கும் பிரம்மானந்தன் தமிழில் பாடிய படம் அநேகமாக ‘மெட்டி’ மட்டும்தான். அந்த வகையில் அற்புதமான அந்தப் பாடகனுக்குத் தமிழ் மண் செலுத்திய மரியாதை தான், அவரது குரலில் ஒலிக்கும் இந்த இரண்டு பாடல்களும்!



uvausan
10th October 2015, 10:28 AM
அனைவருக்கும் காலை வணக்கம் - இந்த நாளும் ஒரு இனிய நாளாகவே இருக்கட்டும் ..


http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/maayam_zps7gdi7zwk.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/maayam_zps7gdi7zwk.jpg.html)

uvausan
10th October 2015, 10:31 AM
எதிர்மறை வார்த்தைகள் ஆனால் உள்ளர்த்தம் ஒன்றே !



( போபோ போபோ ------- வா வாவா )

பதிவு 1

சில திரைப்படப்பாடல்கள் நம்மை என்றுமே சிந்திக்க வைக்கும் திறன் உடையவைகள் . வார்த்தைகளில் தமிழும் விளையாடும் , அழுகும் விளையாடும் - அது மட்டும் அல்ல - வீரமும் காதலும் கலந்து மனம் வீசும் . பின்னணி பாடியவர்களும் சரி , படத்தில் வாயசிப்பவர்களும் சரி , தன் திறமைகளை , வாங்கும் பணத்தைவிட அதிகமாகவே திறன் பட காண்பித்திருப்பார்கள் . இந்த பாடல்களை பாருங்கள் - முதல் பாடல் ஒரு பூனையை கூட புலியாக்கும் ( தவறு தவறு - ஒரு சிங்கமாக்கும் ) அப்படிப்பட்ட அப்படிப்பட்ட வீரத்தை உண்டு பண்ணக்கூடிய பாடல் !! - பாடியவரும் ஒரு சிங்கம் - அதற்க்கு வாயசைத்தவரோ சிங்கங்களின் தலைவர் - கேட்கவா வேண்டும் , உணர்ச்சிகளை கொட்டுவதற்கு - நம் நரம்புகள் புடைப்பதற்கு ??

https://www.youtube.com/watch?v=5aigM0TMAOA


பதிவு 2

(போபோ போபோ ------- வா வாவா )

இந்த பாடல் மென்மையான காதலை உள்ளடக்கிய பாடல் - ஆடைகள் கலையப்படுவதில்லை ; கைகள் தேவையில்லாமல் யாழ் வாசிக்கவில்லை ; கைகள் கண்களை மறைக்க வேகமாக ஓடவில்லை ; காதுகள் மூடிக்கொள்ளவில்லை - ஐயோ இப்படிப்பட்ட வர்ணனைகளா என்று ..... மென்மையான பாடல் - இளமையான குரல்கள் , இனிய தம்பதிகள் ---- கேட்டுக்கொண்டே இருக்கலாம் ....

https://www.youtube.com/watch?v=5FvC0Bf_f9U

uvausan
10th October 2015, 11:07 AM
நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை !!

பதிவு 1

வாழ்க்கையில் மமதை நாம் எந்த நிலைமையில் இருந்தாலும் வரவேக்கூடாது என்பதை சித்தரிக்கும் பதிவு இது - கர்வம் (ஈகோ ) உள்ளவர்கள் கடைசி வரை நன்றாக இருந்தார்கள் என்று வரலாறே இல்லை - ராவணனை எடுத்துக்கொள்ளுங்கள் - அவனிடம் இல்லாத நல்ல குணங்களா ?? - ராமனை ஒரு சாதாரண மனிதன் என்று எடை போடும் அளவிற்கு அவனுக்கு மமதை வந்து விட்டது - பத்து தலைகள் இருந்தும் ஒன்றுமே அவன் சாவை தடுக்க முடியவில்லை - எல்லா தலைகளிலும் தேவைக்கு அதிகமான ஈகோவை சேர்த்து வைத்திருந்தான் - கம்சனும் அப்படியே , சிசுபாலனும் அப்படியே ! கழுகு எவ்வளவு மேலே மேலே பறந்தாலும் அதற்க்கு உணவு பூமியில் தான் - தலையை குனிந்துகொண்டுதான் பறக்க வேண்டும் ...



🌲கண்ணன் ஒய்யாரமாகப் படுத்துக் கொண்டிருந்தான். உறங்கவில்லை. ஆனால், உறங்குவதுபோல் தோற்றம் காட்டிக் கொண்டிருந்தான்.

🌴 அவன் உறங்குவதாக நினைத்து ஒருபக்கம் கருடனும், கண்ணன் கைச் சக்கரமும் ஏதோ பேசிக் கொண்டிருந்தன.

🌲கண்ணன் ஒரு முறுவலுடன் அவற்றின் பேச்சைச் செவிமடுத்தான்.

🌴கருடன் தன் மெல்லிய இறகுகளைக் கூர்மையான அலகால் கோதிக்கொண்டே பெருமை பொங்கச் சொல்லிற்று:

💥 ""சக்கரமே! திருமால் தான் இப்போது கண்ணனாய் இங்கே வந்திருக்கிறார் தெரியுமல்லவா? அதனால் தான் அவருக்கு எப்போது நான் தேவைப்படுவேனோ என்று இங்கே காத்துக் கொண்டிருக்கிறேன்.

🌴 கஜேந்திர மோட்சத்தின்போது என் உதவி இல்லாவிட்டால் அவரால் முதலையை வதம் செய்திருக்க முடியுமா என்ன? வாயு வேகம் மனோ வேகம் என்பார்களே, அப்படியல்லவா திருமால் நினைத்த மறுகணம் அவரைச் சுமந்துகொண்டு சம்பவம் நடந்த இடத்திற்குப் பறந்துசென்றேன்!''

🌼இதைக் கேட்ட சக்கரம் ஒரு சுற்றுச் சுற்றிக்கொண்டே கடகடவென்று சிரித்தது. ""நீ என்ன வேகமாக அவரைத் தூக்கிக் கொண்டு பறந்தாலும் நான் மட்டும் இல்லாவிட்டால் அவர் எப்படி முதலையை வதம் செய்திருக்க முடியும்? என்னை வீசித்தானே அவர் முதலையைக் கொன்றார்?

🌲நீ திருமாலுக்குச் செய்த உதவியின் பெருமையை விட நான் செய்த உதவியின் பெருமை தான் அதிகம்!''

🌲கண்ணன் உள்ளூர நகைத்துக் கொண்டான். "இவ்விரண்டிற்கும் சக்தியைக் கொடுத்ததே நான் தான். அப்படியிருக்க இவைகளுக்குத் தான் எத்தனை ஆணவம்? எனக்கு இவை உதவி செய்ததாமே?'

🌴அதற்குள் சலசலவெனப் பெண்களின் பேச்சுக் குரல் கேட்கவே, கண்ணனின் கவனம் குரல் வந்த பக்கம் திரும்பியது.

🌴 பேசிக் கொண்டிருந்தவர்கள் அவனது ராணிகள் தான்.

( தொடரும் )

uvausan
10th October 2015, 11:09 AM
நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை !!

பதிவு 2

��""நம் அழகால் கவரப்பட்டுத்தான் கண்ணன் நம்மைத் திருமணம் செய்துகொண்டான்.

��நமக்கு இணையான அழகிகள் உலகில் எங்குமில்லை!'' என்றாள் ஒருத்தி.

""அதென்னவோ உண்மைதான். ஆனாலும், உன்னைவிட நான் சற்றுக் கூடுதல் அழகு என்பதும் கூட உண்மைதானே?'' என்றாள் இன்னொருத்தி!
தங்களின் அழகைப் பற்றிய ராணிகளின் கர்வம் நிறைந்த பேச்சைக் கேட்டுக் கண்ணனுக்கு நகைப்பு வந்தது.

��"உடல் அழகாக இருந்து என்ன பயன்? உள்ளமல்லவா அழகாக இருக்கவேண்டும்? என் ராதைக்கு வாய்த்த உள்ளம்போல் வேறு யாருக்கு வாய்க்கும்?'
"இவர்கள் இப்படிக் கர்வப்படுகிறார்களே?

��ராமாவதாரத்தின் போது என் பக்தனாக மாறிய ஆஞ்சநேயன் எத்தனை ஆற்றல் மிக்கவன். ஆனால் எத்தனை அடக்கம் நிறைந்தவன்! அவன் சிரஞ்சீவி. இன்னும் வாழ்ந்து வருகிறான் அல்லவா? சரி

�� ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிக்க வேண்டியதுதான்! கருடன், சக்கரம், ராணிகள் அனைவரின் கர்வத்தையும் அடக்க ஒரு
வழிசெய்வோம்''.

��கண்ணன் எழுந்தான்.
""கருடா!'' என அன்போடு அழைத்தான். கருடன் பறந்தோடி வந்து பவ்வியமாய் நின்றது.

��"கந்தமாதன பர்வதம் என்ற பெயருடைய மலையில், குபேரனது ஏரியில், சவுகந்திக கமலம் என்ற அபூர்வமான தாமரை மலர்கள் பூக்கும் காலம் இது. மிக வசீகரமான வாசனை உடையவை அவை.

��நீ போய் என் ராணிகளுக்காகச் சில தாமரை மலர்களைப் பறித்து வருகிறாயா? நீதான் பலசாலி ஆயிற்றே? எந்த எதிர்ப்பு வந்தாலும் சமாளிப்பாயே. உன்னால் தானே மிக வேகமாகப் பறக்கமுடியும்?'

⚡கண்ணனே தன்னைப் புகழ்வதைக் கேட்டு கருடனுக்குப் பெருமை தாங்கவில்லை.
""இதோ மின்னல் வேகத்தில் மலர்களோடு வருகிறேன்!'' சொல்லிவிட்டு விண்ணில் பறந்தது அது

��ஆனால், அந்த இடத்தில்தான் அடக்கமே வடிவான ஆஞ்சநேயர் ராமநாம ஜபம் செய்துகொண்டு வசித்து வருகிறார் என்பதைக் கருடன் அறியவில்லை.

�� கருடன் பாய்ந்து பாய்ந்து அலகால் மலர்களைக் கொத்திப் பறிப்பதைப் பார்த்த ஆஞ்சநேயர் திடுக்கிட்டார்.
""யாரப்பா நீ? இந்த மலர்கள் குபேரனுக்குச் சொந்தமானவை. அவரிடம் மலர்களைப் பறிக்க அனுமதி பெற்றாயா?''

��"ஏ கிழட்டுக் குரங்கே! நான் யார் தெரியுமா? துவாரகை மன்னனான கண்ணனின் கருடன். கண்ணபிரானுக்காகத் தான் இந்த மலர்களைக் கொய்துகொண்டிருக்கிறேன்.
கண்ணனுக்கான சேவைக்கு யார் அனுமதியும் தேவையில்லை!
கருடனின் கர்வம் நிறைந்த பேச்சைக் கேட்டு, ஆஞ்சநேயருக்குக் கடும் கோபம் வந்தது.

⚡சடாரெனப் பாய்ந்து, கருடனைப் பிடித்துத் தன் ஒரு கையிடுக்கில் இடுக்கிக் கொண்ட அவர், கருடனோடு ஒரே தாவாகத் தாவி துவாரகை சென்றார்.
ஆஞ்சநேயர் செய்த கர்ஜனையால் துவாரகை அதிர்ந்தது.

""கர்வம் பிடித்த இந்த கருடனை சேவகனாகக் கொண்டவர் யார்?'' என்று அவர் முழங்கிய முழக்கத்தைக் கேட்ட கண்ணன்,

�� கஜேந்திர மோட்சத்தின் போது எனக்குக் கைகொடுத்த சக்கரமே! வந்திருக்கும் குரங்குடன் போரிட்டு அந்த கருடனைக் காப்பாற்றக் கூடாதா?'' என்று வினவினார்.
""இதோ! உடனே அந்தக் குரங்கை என்ன செய்கிறேன் பாருங்கள்! என்றவாறு சக்கரம் சீறிப் பாய்ந்தது. மறுகணம் தாவிச் சென்று அந்தச் சக்கரத்தைப் பிடித்துத் தன் இன்னொரு கையிடுக்கில் இடுக்கிக் கொண்ட ஆஞ்சநேயர், ""இந்த ஆணவம் பிடித்த சேவகர்களின் எஜமான் யார்?'' என்று உறுமினார்.

��அடுத்து, அந்தக் குரங்கு அரண்மனைக்குள் வந்தால் என்ன நேருமோ என ராணிகள் பயந்து நடுங்கி கண்ணனைத் தஞ்சம் புகுந்தார்கள். எப்படியாவது இந்தக் குரங்கை சமாளிக்க வேண்டும் என வேண்டினார்கள். கண்ணன் நகைத்தவாறே சொன்னான்.

��""என் அன்பிற்குரியவர்களே! வந்திருக்கும் குரங்கு வேறு யாருமல்ல. ராம பக்தனான ஆஞ்சநேயர் தான். அவரது வலிமைக்கு முன் யார் வலிமையும் செல்லாது. ஆனால், ராமரும் சீதாதேவியும் நேரில் வந்து ஏதும் சொன்னால் அதற்கு அவர் கட்டுப்படுவார். எனவே நான் ராமராக உரு மாறுகிறேன். உங்களில் யார் சிறந்த அழகியோ அவர்கள் சீதையாக உரு மாறுங்கள். சீதை உருவத்தால் மட்டுமல்ல, உள்ளத்தாலும் அழகிய பெண்மணி. உங்களில் மன அழகு யாருக்கு வாய்த்திருக்கிறதோ அவர்கள் பிரார்த்தியுங்கள். சீதையின் வடிவம் உங்களுக்குக் கிட்டும்''.

��எல்லா ராணிகளும் கண்ணை மூடிப் பிரார்த்தித்துப் பார்த்தார்கள். ஆனால் யாரும் சீதாதேவியாக உருமாற இயலவில்லை. கண்ணன் ராதையை அழைத்துவர உத்தரவிட்டான். ராதை வந்ததும் பிரச்னையைச் சொன்னான். ராதை கண்மூடிக் கைகூப்பி அமர்ந்துகொண்டாள்.
""எல்லாவற்றையும் நிகழ்த்துவது என் கண்ணன் தான். எனக்கென்று தனித்த பெருமை ஏதுமில்லை. அனைத்தையும் புரிவது கண்ணனே என்பது உண்மையானால், அவனது அருள் என்னை சீதாதேவியாக மாற்றட்டும்!'' என்று உரக்கச் சொல்லிப் பிரார்த்தித்தாள்.

அந்த விந்தையான பிரார்த்தனையைக் கேட்ட ராணிகள் திகைத்து தங்களின் ஆணவம் அகன்று நின்றார்கள்.

�� ஒரு கணத்தில் ராதை சீதையானாள்.

""இந்த ஆணவம் பிடித்த சேவகர்களின் அரசன் யார்?'' என்றவாறே அரண்மனையின் உள்ளே வந்த அனுமன் ராம பிரானையும் சீதாதேவியையும் கண்டு திகைத்தான்.
""பிரபோ! தாங்களா துவாரகையை ஆட்சி செய்கிறீர்கள்?'' என்று பக்திப் பரவசத்துடன் வணங்கினான்.

( தொடரும் )

uvausan
10th October 2015, 11:11 AM
நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை !!

பதிவு 3

��""அன்றைய ராமன்தான் இன்றைய கண்ணன்!'' என்று சிரித்துக் கொண்டே சொன்ன கண்ணபிரான், உன் கையிடுக்கில் உள்ள என் சேவகர்களை விட்டுவிடு. அவர்கள் ஆணவம் இன்றோடு ஒழிந்தது!'' என்றான்.

""அப்படியே ஆகட்டும் பிரபோ!'' என்ற அனுமன் தன் பிடியில் இருந்த கருடனையும் சக்கரத்தையும் விடுவித்தார்.

��கடவுள் பணி செய்பவர்களுக்கு அகந்தை ஆகாது! என அறிவுறுத்திவிட்டு, "ஜெய்ஸ்ரீராம்'⚡ என்றவாறே விண்ணில் தாவி மறைந்தார்.
ராமனாக மாறிய கண்ணனும். சீதையாக மாறிய ராதையும் பழைய உருவத்தை அடைந்தனர்.

��""நாங்கள் அடங்கிவிட்டோம்!'' என்று கருடனும் சக்கரமும் கண்ணனைப் பணிந்தபோது, ""நாங்களும் அடக்கத்தைக் கற்றுக் கொண்டுவிட்டோம்!'' எனக் கண்ணனின் ராணிகளும் ராதையைப் பணிந்து வணங்கினார்கள்.

""நீங்கள் அனைவரும் என் காலில் விழுந்து வணங்கும் இந்தப் பெருமையும் கூடக் கிருஷ்ணார்ப்பணம்!'' என்று ராதை கண்ணனை நோக்கிக் கைகூப்பியபோது�� அவனது மனம் நிறைவடைந்தது.


( தொடரும் )

uvausan
10th October 2015, 11:14 AM
நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை !!

பதிவு 4

இந்த பாடல் எவ்வளவு அமைதியான , அழகான பாடல் - எவ்வளவு வாய்ப்புக்குள் வாழ்க்கையில் வந்தாலும் அதற்காக அலட்டிக்கொள்ளாத , நாணல் , படகு - வளைந்து கொடுத்து வாழ்க்கையை கெட்டியாகப்பிடித்துக்கொள்கின்றன --- தென்னல் இளம் கீற்றை தாலாட்டும் தென்றலை பாருங்கள் - சிறிதே உயர்வு வந்தவுடன் அதற்க்கு கூடவே கர்வமும் வந்து விடுகிறது - தன்னுடன் நண்பானாக பழகிய தென்னம் கீற்றை கொஞ்சம் கூட கருணையே இல்லாமல் சாய்த்து வீழ்த்திவிடுகிறது . கடைசியில் அமைதியுடன் வாழ்வது அந்த சீற்றம் மிகுந்த தென்றல் அல்ல - வளைந்து கொடுத்த அந்த படகும் , நாணலும் தான் ---- கர்வம் தலையிலிருந்து இறங்கினால் , அங்கே கருணை மனதில் குடியேறும் என்பதை உணர்த்தும் அழகிய பாடல் - பல அழுகிய பாடல்களின் நடுவே அழியா வரத்தைப்பெற்ற பாடல் - கேட்டுக்கொண்டே இருக்கலாம் .

https://www.youtube.com/watch?v=zjAOJ9xOP-w

madhu
10th October 2015, 11:18 AM
ஆஹா.... இரண்டு நாட்களில் நாலைந்து பக்கங்கள்.... அதிலும் சீண்டி விடப்பட்டதால் சேலை கட்டிய கிளி பாடல்களை அள்ளி வழங்கிய ராஜேஷ்... நிமிண்டி விட்டு நிமிடத்தில் கவிதை சொல்லும் சிக்கா... சிம்மக்குரலோனை என்றும் சிந்தையிலும் பதிவிலும் கொண்ட ராகவ்ஜி மற்றும் என் நெய்வேலி வைரம். `படாபட் என்று கண்டுபிடித்த கோபுஜி... ஆளில்லாத் தீவுக்கரையின் நாணல் காட்டில் நடக்க வைத்த வாசுதேவன்ஜி...அந்தக் கால தேனை அள்ளி வழங்கும் வாத்தியாரையா... துவாரகையில் சீதையை வரவழைத்த ரவிஜி... விருந்தை மேலோட்டமாகப் பார்த்தாலே பசி தீருமே... மெல்ல மெல்ல ருசித்து ரசிக்கப் போகிறேன்.

chinnakkannan
10th October 2015, 03:53 PM
அருவிப் பாட்டுல இதைப் போட்டோமா என்ன.. (ஆரம்பத்துல மட்டும் அருவி வரும்..)

பட் ஹீரோயினைப் பார்த்தால் ராஜ ஸ்ரீ மாதிரி இருக்கு..ஆனா பாட்டுல ரஷ்யப் பொண்ணா நினைச்சுப் பாடறா மாதிரி இருக்கே..

அதுலயும் எல்.ஆர்.ஈ.. யாஈ இ ஈன்னு ஹம்மிங்.. நன்னாயிட்டு இருக்கு சீர்காழி கோவிந்தராஜனின் திருத்தமான தமிழ்க்குரல் உள்ளம் கொள்ளை போகிறது..

ஹை.. நெய்வேலி இதுல வருதே..

படம் உயிரா மானமா..
*
குற்றால மலையிலே குதித்து வந்த தமிழிலே
வற்றாத பேரழகே நீயாடு
தென்றல் வந்தாடும் அருவியிலே நீராடு

காவியத்தில் ஒரு மகளே
ஓவியத்தின் திருமகளே…
சோவியத்தின் பெருமகளே நீயாடு
எங்கள் சொந்தத்தமிழ் மருமகளே நீராடு

நீங்கள் எமக்களித்த நெய்வேலிப் பெருமை கண்டு
நாங்கள் உமக்களித்த நன்றியே
என்னை நானே உனக்களித்தேன் செல்வமே

தென்கோடித் தூத்துக்குடி நிறுத்தும் துறை முகத்தால்
பொன்கோடிக் குவிக்கும் எங்கள் தாயகமே
இன்ப ப் பூந்தோட்டம் ஆகும் எங்கள் தமிழகமே

தமிழ்மொழிகொண்ட தங்கை
தங்க நிறம் மின்னும் மங்கை
தவழும் கேரளத்து வெள்ளத்திலே நீ
தவழ்ந்தால் இனிமை வரும் உள்ளத்திலே ( ரஷ்யன் ஹீரோயின் கேரளா டிரஸ்போட்டிருக்கதால எப்படி தங்கை ஆவார்..)

https://youtu.be/BIVSyDEm_2g

chinnakkannan
10th October 2015, 04:18 PM
ஹை.. இந்தப் பாட் நன்னா இருக்கே ..அதாவது லிரிக்ஸ்..

கண்கள் இரண்டும் வண்டு நிறம்
கன்னம் ரோஜாச் செண்டு நிறம்
கலையே வடிவாய்
வருவாளவள் அங்கம் தங்க நிறம்..

விண்ணில் பிறந்தமின்னல் இறங்கி
மண்ணில் நடந்து வந்தது போல்
வண்ண மலர் காலில் கொண்டு
வாழ்வினிலே ஆசை கொண்டு
வந்திடுவாள் நாணம் கொண்டு
மண மகளும் நானே என்று
வாலிபரை அழகில் வென்று
வாழ்ந்திடுவாள் சபையில் நின்று..(வாவ்..எளிமை அழகு வரிகள்)

மோகத் தென்றலில் ஆடும் கூந்தல்
மேகத்தினோடு சினேகம்
குறியாகத் தோன்றிடும் நாணப் பார்வைகள்
வீரன் கணைவிடும் வேகம்! (அகெய்ன் வாவ்)
நல்ல நடை அன்னம் போலே
வெல்லும் இடை மின்னல் போலே
அன்பு மொழிக் கன்னல் (ஸ்வீட்) போலே
ஆடை மொழிப் பின்னல் போலே
நெஞ்சினிலே நேசத்தாலே நீந்திடுவேன் மீனைப் போலே

அங்கம் யாவும் தங்க நிறம்
ஆசையில் உள்ளம் பொங்கும் நிறம்
அழகே வடிவாய் வரும்
மங்கையின் மாமுகம் மஞ்சள் நிறம்

அழகுமிருந்து அடைய நினைந்திடும்
ஆண்மகன் எவரோ
அறிவுமிகுந்தொரு உறவு கலந்திட
அளவு தெரிந்தவரோ..

பகைவரிடம் பல்லைக் காட்டி
கலக்கத்திலே வென்றவர் வேண்டாம்
பாவையரை அருகில் வைத்துப்
பார்த்துருசி கண்டவர் வேண்டாம்
கடமையுணர்ந்தவர் அருகில் அமர்ந்திடக்
கண்கள் நிறைந்திடுதே
இளமை குலுங்கிடும் இவரை மணந்திட
இதயம் விரும்பிடுதே

(சுயம் வரத்தில இளவரசி செலக்ட் பண்ற இளவரசர் எம்.என்.ராஜம் தானே?!)

https://youtu.be/L7fXn1Hn0gk

யார் லிரிக்ஸ்னு தெரியலை..இதே அமுதவல்லி படத்தில் இன்னொரு வெகு அழகான பாடல் ஆடைகட்டி வந்த நிலவோ டி.ஆர்.எம் சுசீலாம்மா.. அதை எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்..

Russellxor
10th October 2015, 05:15 PM
கல்தூண்
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/..%20%20Kalthoon%201981%202%20-%20480P_1217_zpsblrnxbqg.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/..%20%20Kalthoon%201981%202%20-%20480P_1217_zpsblrnxbqg.jpg.html)

சிங்கார சிட்டுத்தான் என்ட புள்ளே
சிறுவாணித்தண்ணீரு என்ட புள்ளே

வார்த்தைகளும், வார்த்தைகளைஒலியாக்கிய குரலும்,குரலோடு கலந்து இனிமையாக்கிய இசையையும் இதுவரை கண்டிருக்கிறதா தமிழ்திரை?
தாலாட்டானாலும் கம்பீரத்தையும் சேர்த்தே விதைப்பது கொங்கு மண்ணுக்கே உண்டான மரபு.
அன்று"மணப்பாறை மாடுகட்டி மாயவரம் ஏறுபூட்டி" உழவுக்கும், உழவனுக்கும் பெருமை சேர்த்தது.
சிஙகார சிட்டுத்தான் பாடல் பிறப்புக்கும் அதன் வளர்ப்புக்கும்
பெருமை சேர்க்கிறது.
பாடல் சிறப்பாயிருந்தால் மட்டும் போதுமா?அதன் பழம்பெருமை பேச வைக்க யாரால் முடியும்?

தேவனாய் பிறந்து முதலியாரின் ஆதரவில் வளர்ந்து நாடாருக்கு பெருமை சேர்த்து பரமேஸ்வர கவுண்டராய் வாழ்ந்த நடிகர்திலகத்தால் மட்டுமே முடியும்.
பாடலைப் பார்ப்போம்.

சுற்றங்கள் சூழ்ந்திருக்க காப்பியத்தலைவன்(நடிகர்திலகம்)
தள்ளி நின்றிருக்க நடுக்கூடத்தில் ஊஞ்சல் ஒன்று.சிவப்பு பட்டுடத்தி
நாயகி(கே ஆர் விஜயா)குழந்தையை ஊஞ்சலிலே இட்டு மெல்ல ஊஞ்சலை ஆட்டிக்கொண்டே
சிங்கார சிட்டுத்தான் என்ட புள்ள
சிறுவாணித்தண்ணீரு என்ட புள்ளே கொங்கு நாட்டு அய்யாவு தந்த புள்ள
கோடானு கோடியிலெ ஒத்த புள்ளே
என்று பல்லவியில் ஆரம்பிக்கும் பாடல்.
வட்டார பாஷையில் பாட வேண்டுமென்றால் நன்றாக அந்த பாஷையை கேட்டு பழகி பாடும்போது ஒன்று பாடல் வார்த்தைகளின் உச்சரிப்பில் அந்தப்பாடல் தவறில்லாமல் அமைந்திருக்கலாம்.அதே சமயம் வழக்கமான குரல் நளினம்இல்லாமல் போக வாய்ப்புண்டு. ஜீவன் இருந்தால்
வட்டார பாஷை கேலிக்கூத்தாக மாறிவிட வாய்ப்புண்டு.அனுபவமும்,திறமையும் கொண்டவர்களுக்கே இது போன்ற பாடல்கள் பிடி கொடுக்கும்.இங்கே இரண்டும் சிறப்பாக அமைந்திருக்கும்.
முதல் இரண்டு வரிகளுக்குப் பின்னே வரும் பிண்ணனி இசையில்.,வலது தோளை சிறிதாக மெல்ல அசைத்து
சிறு அசைவில் தலையை ஆட்டி வலது கையை இடுப்பில் ஊன்றி நடிகர்திலகம் தன் இருப்பை காட்டும் விதம் அம்சமானது.இமை முடிஇமை திறப்பதற்குள் முடிந்து விடும் ஷாட்டானாலும் சரி,அதிலும் கூட நடிகர்திலகத்தின் அர்ப்பணிப்பு மெய் சிலிர்க்கும்.அதற்கு சிறு உதாரணம் இந்த பிரேம்.
"அதுதான்யாநடிகர்திலகம் "
இந்த வார்த்தைகளை திரையரங்கில் உச்சரிக்காத உதடுகள் உண்டா இத் தமிழ்நாட்டில்?

மனதை மயக்கும் மதுரகானம் தொடர்கிறது..
சிங்கார சிட்டுத்தான் என்டபுள்ளே
சிறுவாணித்தண்ணீரு என்ட புள்ளே
கொங்குநாட்டு அய்யாவு தந்த புள்ளே
கோடானு கோடியிலே ஒத்தபுள்ளே

1981 ஆம் வருடம் மே மாதம் 1ஆம் தேதி தமிழில் அதிகமாக ரசிக்கப்பட்ட
வார்த்தை "கொங்கு நாட்டு அய்யாவு"ஆகத்தான் இருக்கும்.
கொங்குநாட்டு அய்யாவு வார்த்தைகளின் போது நடிகர்திலகம் மீசையை முறுக்குவது போல் காட்சி வைத்தால் விசிலும் கைதட்டலும் பறக்குமே என்று அதை காட்சிப்படுத்தியதில் டைரக்டரின் "டச்அப்" அதில் தெரியும்.(டைரக்டர் மேஜர் நடிகர்திலகத்தின் கூடவே நெடுங்காலம் இருந்திருப்பதால் ரசிகர்களின் உணர்ச்சிகள் அவருக்கு நன்றாக தெரிந்திருக்குமே)
மீசையை முறுக்கி ராஜகளையை காட்டும் அந்தக் காட்சியினால்,

எங்க ஊர் ராஜா விஜயரகுநாத சேதுபதி மீசையை முறுக்குவது,
ராஜ ராஜ சோழன் மீசையை முறுக்குவது,
என்மகனில் ராமையாத்தேவன் மீசையை முறுக்குவது,
கட்டபொம்மன் மீசையை முறுக்குவது,
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.அவர் செய்தது ஒன்றா இரண்டா எடுத்துச்சொல்ல....
எல்லா உருவங்களும் அவரவர் சிந்தனைகளுக்கு தகுந்தபடி வந்து போகும்.
காட்சிக்கு வருவோம்.

அவங்க பாடிட்டாங்க நீங்க சும்மா நின்னுகிட்டு இருக்கீங்களே? நீங்க போயி உங்க சங்கதிய எடுத்து விடுங்க என்று சொந்தம் உசுப்பி விட,
ஆஜானுபாகுவான அந்த உடம்பை குலுக்கி குலுக்கிஅதையே ஒரு நடனமாக்கி.,
"இதோ வர்றேன் என்பாட்டை வச்சிக்கிறேன் "
என்பது போல நடந்து செல்லும் அந்த நடைக்கு தியேட்டரில் இசை கேட்காது.கை தட்டலில் தான் காது கிழியும்.
'இனி என் முறை' என்பது போல் ஆரம்பிப்பார்.

நீல மலக் காத்தாக நான் பெத்த புள்ள
மண்ணாளப் பொறந்தானடி

நீல மலக் காத்தாக நான் பெத்த புள்ள
மண்ணாளப் பொறந்தானடி
அட நீ என்ன தாயாரு நான் தான்டி அப்பேன்
என்னாலே வந்தானடி

மழலை ஒன்று பிறக்கும் வரை மனைவியை தாங்குவான் கணவன்.
மழலை வந்தபின் அதை கொஞ்சி
சீராட்டும்போது தன் குழந்தைஎன்பதிலே சற்று கர்வம் காட்டுவான்.மனைவியிடத்திலே பாசம் கொண்டிருந்தாலும் தன் பேர் சொல்லும் வாரிசு என்று சொல்வதில் மனைவியை விட அதிக உரிமை தனக்குத்தான் என்பதில் சற்று அகந்தை வருவது கிராமத்து(நகரத்திலும்உண்டு) மனிதர்களிடம் இன்றும் காணப்படும்ஆணாதிக்க வழக்கம்.அதைத்தான் அழகாக பாடலில் நடிகர்திலகம் வெளிப்படுத்தியிருப்பார்.
'அட நீ என்ன தாயாரு ' என்பதை
கே ஆர்விஜயாவின் தலையில் முட்டி,
பார்வையை குழந்தை மேல் வீசிக்காட்டி தகப்பனின் பெருமிதத்தை
' நான் தாண்டி அப்பன்'
என்று பாடி ஒரு தகப்பனின்உணர்ச்சிகளைகாட்டும் அந்த நடிப்பில்தன்னிகரற்று விளங்க நடிகர்திலகததால் மட்டுமே முடியும்.
'என்னால வந்தானடி '
என்பது தகப்பனின் உறவையும்உரிமையையும் நிலை நாட்டும் சொல்.அது
ஆண் கொள்ளும் கர்வம்.அதை வெளிப்படுத்தும்
அவர் நடிப்பு "சபாஷ்" போட வைக்கும் ஆண்களை.


இங்கிருந்து அங்கு அம்புஎய்தாகி விட்டது.தாய்க்குலம் விடுமா?யோசிக்கிறது,
தந்தைக்குலம் தொடுத்த தாக்குதலுக்கு எப்படி எதிர்அம்பு விடுவது என்று.ஒன்றும் பிடிபடவில்லை.

அட இதுக்கு என்னத்த ரோசனை? பெத்தெடுக்கிற யோக்யதை இல்லாட்டி ஆம்பளைக்கு எப்படி வரும் வீராப்பு?
தாய்க்குலத்தின் மூத்தகுலம் சங்கதி
எடுத்துக்கொடுக்க,

ஆரம்பமாகிறது வார்த்தை யுத்தம்.

பூமி வளமில்லாமே வெத என்ன ஆகும் ம்... ம்...
!ஆ... பூமி வளமில்லாமே வெத என்ன ஆகும்*
தாய் தானே முன்னாலய்யா
பூமி வளமில்லாமே வெத என்ன ஆகும்*
தாய் தானே முன்னாலய்யா
போட்ட வெதை தப்பாமே தந்தாரு சாமி
கருஉருவாச்சு என்னாலய்யா
அய்யா உருவாச்சு என்னாலய்யா

சத்தியத்தின் அடி வேர் எடுத்துக்காட்டப்படுகின்றன.யாரால் இதை மறுதலிக்க முடியும்?சரியான வார்த்தைகள் தானே இது?சாமியை வேறு துணைக்கு அழைக்கிறதே?
என்ன செய்ய?சவுக்கடி கொடுத்தது தவறோ என்று மூளையை குழப்பச் செய்கிறது?தகப்பன் குலம் மிரண்ட வேளையில்,

மனுஷனுக்கு விலாசம்அவனோட
முகந்தான்.ஜாடையைப் பாரு.யாரப் போலய்யா இருக்கு?இதக் கேளப்பா,
முதிர்ந்த குலம் உசுப்பி விட,

சற்றுமுன் ஓடிப்போன கர்வம் இப்போது வந்து ஒட்டிக்கொள்ள
தலையெடுக்கிறது தகப்பனின் வாய்ஜாலம்.

ஆஹே ஓம் போல பொறந்தானா நான்பெத்த ராசா
எம் போல இருக்கானடி
அட ஓம் போல பொறந்தானா நான் பெத்த ராசா
எம் போல இருக்கானடி
ஒரு காலம் பொறக்கட்டும் எம் போல ஆவான்
என் வாக்கு தப்பாதடி
அடியே என் வாக்கு தப்பாதடி

மாறி மாறி வீராப்பு பேசிக்கொண்டிருந்தால் குடும்பத்திற்கு ஆகுமா?நல்லகுடும்பம் விட்டுக்கொடுக்கும்.இருவருக்கும் புரிகின்றது.
"என்ட புள்ளே "இப்போது "அம்மபுள்ளே "
சிங்கார சிட்டுத்தான் அம்மபுள்ள
சிறுவாணித்தண்ணீரு அம்மபுள்ள
கொங்கு நாட்டு அய்யாவு தந்த புள்ளே
கோடானு கோடியிலே ஒத்தப்புள்ளே
ஜோஜோரி ஜோஜோரி ஜோஜோரி ஜோஜோரி ஜோஜொரிய்


மேற்குதொடர்ச்சி மலை அடிவாரம்.கண்ணுக்கெட்டிய தூரம் வரைசெழுமையாகக் காட்சியளிக்கும் வயல்வெளிகள்.எங்கும் பசுமை.நீர்வளங்கள்.இது போன்ற இயற்கைச் சூழலைஅனுபவிக்கும் பாக்கியம் பெரும்பாலும் விவசாயக் குடும்பங்களுக்கே கிடைக்கும்.

பாடல் ஆரம்பமாகிறது.
செழித்து வளர்ந்த வயல்வெளிகள் எங்கும்.அதில் ஆகாய நிற த்தில் சட்டையும் வெள்ளை வேட்டியுமாய் நடிகர்திலகம்.வயல் வேலைகளை
செய்து கொண்டு இருக்கிறார்.கஞ்சிப்பானையை தலையிலும்,குழந்தையை இடுப்பிலும் வைத்து கே ஆர் விஜயா நடந்து வருகிறார்.மனைவியை பார்த்ததும் உற்சாகம் தொற்றிக்கொள்கிறது.
தலைதான் நரைக்கும்.
ஆசையுமா?
எடுத்து விடுகிறார்.

கஞ்சிக்கலயம் கொண்டு வார புள்ளே
கட்டாக நீ இருக்க ரெண்டு புள்ள
என்று அவர் முடிக்க,

விவசாயிக்கு தெரியும் மண்வாசனை
மனைவிக்கு தெரியாமல் போகுமா புருஷனின் மன்மத வாசனை?
இதற்கு வேண்டுமே எல்லை
அதை மீறினால் தொல்லை
என்ற அர்த்தத்தில்.,

அத்தோடு நிற்கட்டும் நம்ம எல்ல
அடுத்தொன்னு பொறந்துட்டா ரொம்ப தொல்ல
என்று முடிக்க,

உடனே சுதாரித்து, தான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்ற
கருத்தில்..
கலங்காத என் தேவ இந்த பூமி
கடசிப்புள்ள தாண்டி நம்ம பழனிச்சாமி

பூமியைப் பெருக்கி
குடும்பத்தை சுருக்கி
வாழ்வைநிறைக்கலாம் எனும் அர்த்தத்தில் முடிப்பார்.

பெண்புத்தி முன்புத்தி.
ஆண்புத்தி அவசரபுத்தி..
ஒரு வீம்புக்கு ஆசைஇல்ல ன்னு ஆம்பளையை தடுத்தா,
சரிதானேன்னு ஆம்பள விலக,
அதையே குத்திக்காட்டுது
பொம்பள மனசு.

இருந்தாலும் பொல்லாத ஆளு நீங்க
இப்படித்தான் முந்தி கூட பேசுநீங்க
என்று இடிப்பார்.

நிற்க...

தன்னந்தனிக்காட்டு ராஜா

நடிகர்திலகத்தை தாண்டி யாராவது பயணிக்க முடியுமா என்ன?
கையில் வைத்திருக்கும் மண் வெட்டியை கே ஆர் விஜயா வருவதைப் பார்த்ததும்,எத்தனை நேரந்தான் இதையே புடிச்சுட்டிருக்கிறது ன்னு அப்படியே வலது கையால தூக்கி எறிவார் பாருங்கள்.சிரிப்பும்,ரசனையும் வரவழைக்கும் நமக்கு.கவுண்டரா காட்டு வேலை செஞ்சாலும் நடிகர்திலகம் நடிப்புக்கு திலகம்தான்.மண்வெட்டி தூக்கி எறியும் ஸ்டைலே தனி.
வேட்டியை ரெண்டு கையால தூக்கிக்கிட்டு வலது கால் மாத்தி இடதுகாலு,இடதுகால் மாத்தி வலதுகாலு ன்னு வயக்காட்டுல ஆடற அழகே அழகு. அதோட தொடர்ச்சியா தாளத்துக்கு ஏற்றமாதிரி அவர் ஆடிக்கொண்டே கொஞ்சம் லாங்கா டான்ஸ் ஆடிட்டு வர்ற அந்த கிரேன் ஷாட்டுல நடிகர்திலகத்தோட
டான்ஸ் மூவ்மென்ட் படு எதார்த்தம்.

படத்தில் டான்ஸ் ஆட ஸ்கோப் உள்ள ஒரே இடம் அதுதான்.கிடச்ச கேப்புல பூந்து விளையாடிருப்பார். அந்த ரெண்டே ஸ்டெப்ல படம் பார்க்கிற அத்தன பேரையும் ஆட வச்சுருவாரு.
தலைமுடிக் கொண்டையும் கதிர் அரிவாளை ஞாபகப்படுத்தும் அந்த மீசையும்,வெகு பொருத்தம்.மேல் பட்டன் இரண்டும் போடாத நிலையில் சாதாரணசட்டைதான்
அணிந்திருப்பார்.!ஆனாலும் அதில் இருக்கும் கம்பீரம் வியக்க வைக்கும்.

தொடர்கிறது...

பெற்றோரின் பெரும் சந்தோசங்களில் ஒன்று தங்கள் குழந்தை அம்மா என்றும் அப்பா என்றும் அழைக்கும் முதல் வார்த்தைகளுக்குத்தான்.
பழனிச்சாமி என்று பெயர் வைக்கப்பட்ட அந்த குழந்தை சற்று
பெரியவனாகி அம்மா அப்பா என்றழைக்கிறான்.
இவ்விடத்தில ஒருஉண்மையான தகப்பனின் மனநிலையை நடிகர்திலகம் வெளிப்படுத்தும் அழகே அழகு.கிராமத்து பாமரனின் இயல்புத்தன்மை யை அப்படியே பிரதிபலிப்பார்.
குழந்தை அப்பா என்று அழைத்ததைப் பார்த்ததும்
" அட்ரா சக்கன்னானா ஓஹோய்"
சத்தமிட்டு ஒத்தக்கால தூக்கி
உற்சாக ஆட்டம் போடுவது
அட்டகாசம்.

நல்லா தான் பேசிப் புட்டான் நம்ம கொழந்தே
நாலும் படிக்கப் போறான் நல்லா வளந்தே
அட நல்லா தான் பேசிப் புட்டான் நம்ம கொழந்தே
நாலும் படிக்கப் போறான் நல்லா வளந்தே
பெண்அம்மாவை கும்பிட்டேன் அள்ளித் தான் கொடுத்தாள்
ஆயிரம் பான வெச்சு பொங்கல் படைப்பேன்
இருவர்அம்மாவை கும்பிட்டோம் அள்ளித் தான் கொடுத்தாள்
ஆயிரம் பான வெச்சு பொங்கல் படைப்போம் ( இசை )
இருவர்ஹஹ்ஹா... ஹஹ்ஹா... ஹஹ்ஹா... ஹஹ்ஹா...*
ஹா... ஹா... ஹா... ஹா...*ஹா... ஹா...
ஹா... ஹா... *ஹா... ஹா... ஹா...*

சுபம்.
நடிகர்திலகத்தின் நடிப்பு ஒரு கோணம்
பாடலின் சிறப்பு ஒரு கோணம்
கிராமியம் ஒரு கோணம்
இந்த மூன்று கோணங்களும்
கலந்து பயணிக்கும்
மேற்கண்ட எழுத்து நடை.

நன்றி..

செந்தில்வேல்.


கொங்கு நாட்டு அய்யாவு http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/..%20%20Kalthoon%201981%202%20-%20480P_1529_zpsfvdm5qpw.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/..%20%20Kalthoon%201981%202%20-%20480P_1529_zpsfvdm5qpw.jpg.html)

வயல்காட்டில் கொண்டாட்டம் http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/..%20%20Kalthoon%201981%202%20-%20480P_6628_zps2irlqupp.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/..%20%20Kalthoon%201981%202%20-%20480P_6628_zps2irlqupp.jpg.html)

அட்ராசச்கைன்னானேன் http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/..%20%20Kalthoon%201981%202%20-%20480P_0977_zpsjtcqooaw.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/..%20%20Kalthoon%201981%202%20-%20480P_0977_zpsjtcqooaw.jpg.html)
பாடல்:
பல்லவி
பெண்சிங்காரச் சிட்டுத் தான் என்டே புள்ள
சிறுவாணித் தண்ணீரு என்டே புள்ள
கொங்கு நாட்டையாவு தந்த புள்ள
கோடான கோடியில ஒத்தப் புள்ள
கொங்கு நாட்டையாவு தந்த புள்ள
கோடான கோடியில ஒத்தப் புள்ள
சிங்காரச் சிட்டுத் தான் என்டே புள்ள
சிறுவாணித் தண்ணீரு என்டே புள்ள

இசைசரணம் - 1
ஆண்நீல மலக் காத்தாக நான் பெத்த புள்ள
மண்ணாளப் பொறந்தானடி
நீல மலக் காத்தாக நான் பெத்த புள்ள
மண்ணாளப் பொறந்தானடி
அட நீ என்ன தாயாரு நான் தான்டி அப்பேன்
என்னாலே வந்தானடி
அட நீ என்ன தாயாரு நான் தான்டி அப்பேன்
என்னாலே வந்தானடி
சிங்காரச் சிட்டுத் தான் என்டே புள்ள
சிறுவாணித் தண்ணீரு என்டே புள்ள

இசைசரணம் - 2
பெண்பூமி வளமில்லாமே வெத என்ன ஆகும் ம்... ம்...
ஆ... பூமி வளமில்லாமே வெத என்ன ஆகும்*
தாய் தானே முன்னாலய்யா
பூமி வளமில்லாமே வெத என்ன ஆகும்*
தாய் தானே முன்னாலய்யா
போட்ட வெதை தப்பாமே தந்தாரு
கருஉருவாச்சு என்னாலய்யா
அய்யா உருவாச்சு என்னாலய்யா

இசைசரணம் - 3
ஆண்அவ போல பொறந்தானா நீ பெத்த ராசா*
கேள்றா டேய்
ஆஹே ஓம் போல பொறந்தானா நான்பெத்த ராசா
எம் போல இருக்கானடி
அட ஓம் போல பொறந்தானா நான் பெத்த ராசா
எம் போல இருக்கானடி
ஒரு காலம் பொறக்கட்டும் எம் போல ஆவான்
என் வாக்கு தப்பாதடி
அடியே என் வாக்கு தப்பாதடி ( இசை )

சரணம்4
ஆண்:கஞ்சிக்கலயம் கொண்டு வார புள்ளே
கட்டாக நீ இருக்க ரெண்டு புள்ள

பெண்:அத்தோடு நிற்கட்டும் நம்ம எல்ல
அடுத்தொன்னு பொறந்துட்டா ரொம்ப தொல்ல
பெண்இருந்தாலும் பொல்லாத ஆளு நீங்க
இப்படித் தான் முந்தி கூட பேசினீங்க
இருந்தாலும் பொல்லாத ஆளு நீங்க
இப்படித் தான் முந்தி கூட பேசினீங்க

இருவர்:சிங்கார சிட்டுத்தான் அம்மபுள்ள
சிறுவாணித்தண்ணீரு அம்மபுள்ள
கொங்கு நாட்டு அய்யாவு தந்த புள்ளே
கோடானு கோடியிலே ஒத்தப்புள்ளே
ஜோஜோரி ஜோஜோரி ஜோஜோரி ஜோஜோரி ஜோஜொரிய்
குழந்தைஅம்மா... அப்பா... அம்மா...

ஆண்அட்ரா சக்கன்னானா ஓஹோய்...

இசைசரணம் - 5
ஆண்நல்லா தான் பேசிப் புட்டான் நம்ம கொழந்தே
நாலும் படிக்கப் போறான் நல்லா வளந்தே
அட நல்லா தான் பேசிப் புட்டான் நம்ம கொழந்தே
நாலும் படிக்கப் போறான் நல்லா வளந்தே
பெண்அம்மாவை கும்பிட்டேன் அள்ளித் தான் கொடுத்தாள்
ஆயிரம் பான வெச்சு பொங்கல் படைப்பேன்
இருவர்:அம்மாவை கும்பிட்டோம் அள்ளித் தான் கொடுத்தாள்
ஆயிரம் பான வெச்சு பொங்கல் படைப்போம் ( இசை )

இருவர்ஹஹ்ஹா... ஹஹ்ஹா... ஹஹ்ஹா... ஹஹ்ஹா...*
ஹா... ஹா... ஹா... ஹா...*
ஹா... ஹா... ஹா... ஹா... *ஹா... ஹா... ஹா...*
பெண்ஹஹ்ஹா... ஹஹ்ஹா... ஹஹ்ஹா... ஹஹ்ஹா...*
ஹா... ஹா... ஹா... ஹா...*

படப் பதிவு: டி.எம்.சௌந்தரராஜன் Kalthoon (1981) 2: http://youtu.be/HtI2WuwCvyI

chinnakkannan
10th October 2015, 05:17 PM
நாடகங்கள் கதைகள் நாவல்கள் எல்லாம் நிஜவாழ்வின் நடப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் கீற்றுக்கள் எனலாம்..

திரையில் ஒரு கதைக்குப்பொருத்தமான நாடகம் என வருவது என யோசித்ததில்…காதலியின் இழப்பில் பைத்தியமாக இருந்த ஒருவர் சுய நினைவு வந்தவுடன் எப்படி எல்லாவற்றையும் மறந்து விடுகிறார் என்பதனை வெகு பொருத்தமாய்ச் செய்திருக்கும் ந.தி.. இன் எங்கிருந்தோ வந்தாள்..

அதேசமயத்தில்..அவருக்கு நினைவு திரும்பப் போகிறது..அவர் குணமடைவதற்காக தன்னையே இழக்கும் பெண்ணுக்கு என்ன ஆகப் போகிறது என்பதை பார்ப்பவர்கள் பதைபதைக்கும் வண்ணம் முன்னோட்டமாக வரும் பாடல்..காவியப் பாடல் காளிதாச சகுந்தலை பாடல்..பொருத்தமான கவிஞர் கண்ணதாசனின் வரிகளுடன் அரங்கேறும் நாடகம்…

கன்னியவள் சகுந்தலையைக் கண்டுணர்ந்த மன்னவனும்
…காதலியை ஏற்பதற்குக் காடுவிட்டுச் சென்றுவிட
எண்ணமதில் தானுறங்கி உளத்தினிலே காதலனை
…ஏந்திழையும் ஏந்திநின்று உருகிநின்ற காலத்திலே
திண்ணமெனப் பசிகொண்டு துர்வாச முனிவனவன்
…தீர்க்கமாய் முனிகுடிலில் தாரகையை நோக்கிவிட
வண்ணமயில் ஆடாமல் சிலையாக நின்றதினால்
…வாழ்வினையே இழந்தகதை காவியமாய் ஆனதன்றோ..

ம்ம்

இனி பாடல்..

https://youtu.be/HjYpyT_tCq0

தோழிகள் என்னும் மான்கள் நடுவிலே தூய மானெனப் பள்ளி கொண்டவள்

அந்த மானை மறந்து போனவன் இந்த மான்மகள் அழகில் ஆழ்ந்தனன்….

துடிக்கின்ற சினமே துணையாகக் கொண்ட
துர்வாச முனிவன் தவமுடித்து
கொடிக்கன்று (வாவ்) நின்றிருக்கும் குடில் வந்தான்
குரல் தந்தான் யாரங்கே அங்கே யாரங்கே யாரங்கே

எந்த எண்ணம் உனைக் கொண்டதோ அதனை இன்று தீர்த்துவிடுகின்றேன்
அந்த மன்னவனின் உள்ளம் என்பதனை இன்று மாற்றி விடுகின்றேன்

( எப்போ கேட்டாலும் பார்த்தாலும் அலுக்காத கானம்)

chinnakkannan
10th October 2015, 06:11 PM
நான் கண்ட சொர்க்கம் - தங்க வேல் நடித்த படம்.. வெகு சின்ன வயதில் பார்த்திருக்கிறேன் என நினைக்கிறேன்.. ஆனால் சுத்தமாக நினைவிலில்லை..

ஆனால் அதில் திரையில் ஒரு நாடகம் வருகிறது.. காதல்பாடல் தான்.. என்ன தஙக்வேல் செள.. ஜோடி.. (செளவின் அப்பா அந்த் நாடகத்தைப்பார்த்து நொந்து போகிறார்..இ.உ வில் ந.தியின் மாமாவாக வந்தவர் சாயலில் இருக்கிறார்....)

https://youtu.be/x44kM1Lwc3c

செள பாட் என்பதால் நோ கலர் ஒன்லி ப்ளாக் அண்ட் ஒய்ட் :)

madhu
10th October 2015, 06:11 PM
சிக்கா...

அந்த கேரள தங்கை.. நங்கை.. மங்கை... நடிகை சௌகார் ஜானகி......... யின் சகோதரி கிருஷ்ணகுமாரிதானுங்க...

செவேல்ஜி.... கல்தூண் பாடலை கல்லில் வடித்த எழுத்தாக்கி விட்டீங்க... நன்றி...

eehaiupehazij
10th October 2015, 06:25 PM
Walking Stick Heroism!/ Rabologists.


வாக்கிங் ஸ்டிக் / கைத்தடி கான மதுரங்கள் !

வயதுள்ள போதும் வயதான பின்பும் கண்ணற்ற நிலையிலும் வாக்கிங் ஸ்டிக் நமக்கு பயனுள்ள தோழனே!
மலை முகடுகளில் செங்குத்தான பாறைகளில் வழித்தடங்களில் சறுக்கி விழாதிருக்கவும் வயதானவர்கள் நடக்கும் போது நிலை தடுமாறாமல் பேலன்ஸ்
பண்ணவும் விழியற்றோர் தடங்கலறிந்து நடைப்பயணம் மேற்கொள்ளவும் வாக்கிங் ஸ்டிக் வெகுவாக பயன்படுத்தப் படுகிறது !


ஏ வி எம் ஸ்டூடியோ படத்தயாரிப்புக்களில் பாடல் காட்சிகளில் வாக்கிங் ஸ்டிக் ஒரு செட் ப்ராபெர்டியாகவே மாறியிருந்தது! உயர்ந்த மனிதன், அதே கண்கள் போன்ற படங்களில் பாடல் காட்சிகளில் நடிகர்திலகமும் ரவிச்சந்திரனும் இளம் வயதிலேயே வாக்கிங் ஸ்டிக்கை ஸ்டைலாக பயன் படுத்துவார்கள்!

வயதான கெட்டப்பில் அந்தநாள் ஞாபகம் பாடலில் நடிகர்திலகம் அசால்டாக உள்ளங்கையில் வாக்கிங் ஸ்டிக்கை பேலன்ஸ் பண்ணுவதையும்,
அதேகண்களில் அசோகன் வாக்கிங் ஸ்டிக்குக்குள் கத்தியை சொருகி வைத்திருப்பதையும்...நெஞ்சம் மறப்பதில்லை..அது நினைவை இழக்கவுமில்லை!
வெள்ளிவிழா திரைப்படத்தில் காதல் மன்னரும் வாக்கிங் ஸ்டிக் ஸ்டைலில் பின்னுவார் ....

[url]https://www.youtube.com/watch?v=gcdZb_WIvYM

[url]https://www.youtube.com/watch?v=VtrnHY21zZw

[url]https://www.youtube.com/watch?v=NQv_NSIkGiU


More information on Walking Sticks!!


A walking stick is a device used by many people to facilitate walking, for fashion, or for defensive reasons.
Walking sticks come in many shapes and sizes, and can be sought by collectors. Some kinds of walking stick may be used by people with disabilities as a crutch. The walking stick has also historically been known to be used as a defensive or offensive weapon, and may conceal a knife or sword as in a swordstick.
Walking sticks, also known as trekking poles, pilgrim's staffs, hiking poles or hiking sticks, are used by hikers for a wide variety of purposes: to clearspider webs, or part thick bushes or grass obscuring the trail; as a support when going uphill or a brake when going downhill; as a balance point when crossing streams, swamps or other rough terrain; to feel for obstacles in the path; to test mud and puddles for depth; and as a defence against wild animals. Also known as an alpenstock, from its origins in mountaineering in the Alps, such a walking stick is equipped with a steel point and a hook or pick on top, as famously used by Sherlock Holmes in his trek in "The Final Problem".
A collector of walking sticks is termed a rabologist.
Courtsy : Net / Wiki

eehaiupehazij
10th October 2015, 06:28 PM
ஜான்வர் திரைப்படத்தில் ஷம்மி கபூரின் மறக்க முடியாத கைத்தடி கானம் !

https://www.youtube.com/watch?v=_o3y7fvoVNM

madhu
10th October 2015, 06:32 PM
ஏற்கனவே பாலுவின் தென்றல் தொட்ட பாடலில் வாசுஜி மென்ஷன் செஞ்சுட்டார்..

விஜயா ஜானகி குரலில் பாட விஜயலட்சுமி ஆட.... பாவையின் கூந்தலில் மின்னுதம்மா அந்த பாஞ்சாலி சபதம்...

https://www.youtube.com/watch?v=EfdjvtFEIcg

chinnakkannan
10th October 2015, 06:49 PM
நாடகம்னா என்னவாக்கும்..?

ஆடலுடன் பாடலென அழகுமிகும் நங்கையர்கள்
…ஆடவரின் துணையுடனே அரங்கேற்றி மகிழ்ந்தவிதம்
நாடகமே என்றாலும் நடிப்பதன் தன்மையெலாம்
… நல்லுலக வாழ்வியலும் நல்விதமாய்க் காவியமும்
சூடத்தான் செந்தமிழில் திக்கெட்டும் எழுதினரே
…சொக்கியதைப் பார்த்தவரும் சோர்வுதனை மறந்திட்டார்
வேடங்கள் பலவிதமாம் விந்தைகளும் கூடியின்றும்
… நாடகங்கள் நடக்கிறதே நல்மனிதர் வாழ்வினிலும்..

(என்ன தான்யா சொல்லவர்றேன்னுல்லாம் கேக்கப் படாது..ச்சும்மா விருத்தம் எழுதிப்பார்த்தேன்)

ஆக நாடகங்கள் அந்தக்கால வாழ்வியலில் பங்கேற்ற விதம் மறக்க இயலாத ஒன்று.. இப்போதோ எவ்வளவோ வந்துவிட்டன பொழுதுபோக்குகள்..இல்லியோ..

திரையில் மலர்ந்த நாடகங்களை நினைவு கூர்கையில்….

அவன் அழகன்…அவள்…ஸ்….மெல்லச் சொல்லுங்கள் மென்மையானவள்.. அழகி எனச் சொன்னால் எல்லா அழகுகளும் நம்மிடம் வெவ்வெவ்வே என அழகு காட்டும்.. அந்த அழகுகளுக்கே வக்கணை காட்டும் அழகு மிக்கவள் எனச் சொல்லலாம்..

ஆனால்.. காதல் வித்யாசம் பார்க்காது.. (அந்தக்காலத்தில்).. காதலனின் தந்தை கண்டிப்பாய்ப் பார்ப்பார்.. கெளரவம் என ஒன்று இருக்கிறதே..

இந்த அழகியோ நாடகத்தில் நடிக்கும் மங்கை..வாழ்வினில் நடிக்கத் தெரியாதவள்.. அவனிடம் இதயத்தைத் தொலைத்தவள்.. அவன் தந்தை வழக்கம்போல அவளை எச்சரிக்க அந்தப் பெரியவரிடம் எப்படிச் சொல்வது..

நாடகத்திலேயே சொல்கிறாள்..

யோவ் அழகா..
உன்னைத் தான் எனக்குத் தெரியும்

நீ ப்ரின்ஸா இருந்துட்டுப்போ
உன் அப்பா ராஜாவா இருக்கட்டும்
பட்
எனக்குத் தெரிஞ்சது.. நீ.. நீ மட்டுமே..

என தேவிகா துள்ளித்துள்ளிப் பாடும் நாடகப் பாடல்.. உன்னைத் தான் நானறிவேன்..மன்னவனை யார் அறிவார்..

https://youtu.be/LQ-8LoS5zJ0


யாரிடத்தில் கேட்டு வந்தோம்
யார் சொல்லி காதல் கொண்டோம்
நாயகனின் விதி வழியே
நாமிருவர் சேர்ந்து வந்தோம்
ஒன்றையே நினைத்து வந்தோம்
ஒன்றாக கலந்து வந்தோம்

காதலித்தல் பாபம் என்றால் கண்களும் பாபமன்றோ
கண்களே பாபம் என்றால் பெண்மையே பாபமன்றோ
பெண்மையே பாபமென்றால் மன்னவரின் தாய் யாரோ


[

chinnakkannan
10th October 2015, 06:56 PM
இந்த வளையாபதி முத்துக் கிருஷ்ணனைப் பற்றிப் பேசியிருக்கோ.. தூக்குத் தூக்கியில் உயிர் காப்பான் தோழனாய் வந்தவர்.. ஒரு பாடல் பார்த்தேன்..

ஏன் சிரித்தாய் என்னை பார்த்து ? - உன்
எழில்தனை பாடவா தமிழைச் சேர்த்து

https://youtu.be/_R1B_1gIeBo

இப்ப எதுக்கு இந்தப் பாட்டா..

இதுல நாடகம் வருதுங்க்ணா :)

விந்தைகள் பேசும் விண்மீன்கள் கூட்டத்திலே
விளையாடும் வெண்மதி நீதானா?

எந்தை முன்னோர்கள் இயல் இசை நாடகம்
பயின்றதெல்லாம் உன்னிடம்தானா ?

சோலை நடுவிலே தூய தமிழ் பாடும்
நீலக் குயிலும் நீதானா?

கானில் வாழ்ந்திடும் மானின் இனத்திலே
கவரிமான் என்பதும் உன் இனம்தானா?

(லவ் பண்றச்சே இவ்ளோ கொஸ்டீன்ஸெல்லாம் கேட்கப் படாதுங்காணும்..ம்ம் என்னமோ போங்க..) :)

madhu
10th October 2015, 07:06 PM
சிக்கா...
அதாகப்பட்டது நீ அண்டவெளியில் இருக்குறவளா ? இல்லாட்டி பூமியில் இருக்கும் புத்தகமா ? அல்லது பறவையா மிருகமா ? அப்படின்னு கேட்டா லவ்வர் அடிச்சுடுவா என்பதால் இப்படி கவிதையா கேட்கிறார்..

chinnakkannan
10th October 2015, 07:21 PM
சிக்கா...
அதாகப்பட்டது நீ அண்டவெளியில் இருக்குறவளா ? இல்லாட்டி பூமியில் இருக்கும் புத்தகமா ? அல்லது பறவையா மிருகமா ? அப்படின்னு கேட்டா லவ்வர் அடிச்சுடுவா என்பதால் இப்படி கவிதையா கேட்கிறார்..

madhunnaa :) :) :)

eehaiupehazij
10th October 2015, 09:52 PM
Monotony breaker / for a change!

கைத்தடி கானங்கள் மாற்றார் பூமியில் !

Three blind mice song!!(with lyrics)

https://www.youtube.com/watch?v=MfaChKSV8kg

A different version of the song in a Bond movie DrNo!!

[url]https://www.youtube.com/watch?v=nOAl8F-NyPs

madhu
11th October 2015, 04:15 AM
குணசித்திர நடிகை ஆச்சி மனோரமா அவர்கள் இரவு 12.10 a.m. க்கு காலமானார். அன்னாரது ஆன்மா சாந்தி அடைவதாக.

rajraj
11th October 2015, 08:52 AM
குணசித்திர நடிகை ஆச்சி மனோரமா அவர்கள் இரவு 12.10 a.m. க்கு காலமானார். அன்னாரது ஆன்மா சாந்தி அடைவதாக.

May her soul rest in peace.

Here is a song in her memory:

From Bommalattam (1968)

vaa vaathiyaare veettaaNde........

http://www.youtube.com/watch?v=oiqJrRG1b7s

eehaiupehazij
11th October 2015, 09:11 AM
நடிகர்திலகத்தின் தீவிர பக்தையாகவும் அவருடன் தோன்றிய படங்களையே தனது வாழ்நாள் சாதனையாகவும் பல சந்தர்ப்பங்களில் நினைவு கூர்ந்து பெருமைப்
படுத்திய மனோரமா அவர்களின் ஈடு செய்ய முடியாத இழப்புக்கு எங்கள் நினைவஞ்சலியை இறைவன் பாதங்களுக்கு சமர்ப்பிக்கிறோம்

Russellxor
11th October 2015, 09:31 AM
அஞ்சலி
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/1316063915283752_zpslvnxjss0.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/1316063915283752_zpslvnxjss0.jpg.html)

vasudevan31355
11th October 2015, 09:56 AM
http://i62.tinypic.com/jqgkz8.jpg

மாபெரும் நகைச்சுவை நாயகி, சகலகலாவல்லி நடிகை மனோரமாவின் மறைவு மனதை ரணமாக்கிவிட்டது. ஈடுசெய்ய முடியாத இழப்பு. அவர் செய்த சாதனைகள் கொஞ்சநஞ்சமல்ல. பொம்பளை நடிகர் திலகம் என்னும் அளவிற்கு தன் நடிப்பால் தமிழக மக்களைக் கவர்ந்தவர் அவர்.

அவருடைய ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.

chinnakkannan
11th October 2015, 10:09 AM
சகல கலா வல்லி நகைச்சுவை நடிப்பில் பல பரிமாணங்களைக் காட்டிய ஆச்சி மனோரமாவின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு..
அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போமாக..

vasudevan31355
11th October 2015, 10:37 AM
நகைச்சுவை நடிகை, கதாநாயகி, பாடகி, வில்லி, டான்ஸர், என்று பல அவதாரங்கள் எடுத்தவர் மனோரமா.

'மஞ்சக் கயிறு... தாலி மஞ்சக் கயிறு'

என்று 'உனக்கும் வாழ்வு வரும்' திரைப்படத்தில் மனோரமா தள்ளுவண்டியில் தாலிக் கயிறு விற்று பாடிய பாடல் மிகவும் புகழ் பெற்றது.

அது போல,

'வாழ நினைத்தால் வாழலாம்' படத்தில் 'கானாங் குருவிக்குக் கல்யாணமாம்' என்ற வாய் குழறிப் பாடும் பாடலும் அப்போது ரொம்பப் பிரசித்தம்.

'நீதி'படத்தில் ஜெயலலிதாவைவிட மனோரமாவே பிரதானம். இவரே நடிகர் திலகத்தின் ஜோடி என்னுமளவிற்கு நடித்திருப்பார். இவர் நடிகர் திலகத்திடம் 'ராசா... ராசா' என்று உருகுவது அப்படியே நிஜம். நடிப்பல்ல.

'காசேதான் கடவுளடா' படத்தில் ஆங்காரம் மிகுந்த பணக்காரியாய் நகைச்சுவை மிளிர இவர் நடித்தது யாராலும் மறக்க முடியாது.

'தில்லானா மோகனாம்பாள்' பற்றி சொல்லவும் வேண்டுமோ!

சட்டைக்காரியாக கவுன் அணிந்து ஆங்கிலம், தமிழ் கலந்து பேசி அசத்த மனோரமாவை விட்டதால் வேறு யார்? இந்த மாதிரி வேடத்தில் பல படங்கள்.

'ஜாம்பஜார் ஜக்கு'வைக் காதலிக்கும் சென்னைத் தமிழ் பேசும் 'சைதாப் பெட்டைக் கொக்கு' ஆச்சியை வேறு யாராலும் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.

ஆச்சியுடன் ஓரிருமுறை பேசி பழகிய சம்பவங்கள்....அவருக்கு தேநீர் வாங்கிக் கொடுத்த சம்பவங்கள் இப்போது நினைவுக்கு வந்து மிகுந்த துயரத்தில் ஆழ்த்துகின்றன. அவரிடம் 'வா வாத்யாரே ஊட்டாண்டே' பாடிக் காட்டி, அவர் வாய்விட்டு சிரித்ததை இன்று நினைத்தால் அழுகை பீறிடுகிறது. 'டிராக்டர் பொன்னம்மா'வை என் வாயால் புகழக் கேட்டு அவர் சந்தோஷமடைந்தது பசுமையாக நினைவில் இருக்கிறது.

'தியாகம்' படத்தில் ஐயராத்து மாமியாக வந்து சிலம்ப சண்டை போட்டு எப்படி அசத்துவார்!

நேற்று கூட சினிமாவில் கூத்து, நாடகம் தலைப்பிட்டு பதிவுகள் ஆரம்பித்ததும் இவரை மனதில் கொண்டே.

'ராஜாபார்ட்'டில் இவர் நாடக நாயகியாக வலம் வந்து பிகு பண்ணிக் கொள்வது அருமையோ அருமை.

அதையே பின்னால் 'எமனுக்கு எமன்' படத்தில் எமன் நடிகர் திலகத்தை 'ராசபார்ட்டு... ராசபார்ட்டு' என்று காலம் கடந்தும் கன் டின்யூட்டியாகத் தொடர்வது அற்புதமல்லவா!

திரு.எம்.ஜி.ஆர் அவர்களின் 'சந்திரோதயம்' படத்தில் நாகேஷை காசிக்கு ஓட வைக்கும் மனைவியாக அடிதூள் ஆச்சி.

நாகேஷுடன் எத்தனை படங்கள்! சோவுடன் ஜோடி சேர்ந்து அமர்க்களம். 'முகம்மது பின் துக்ளக்'கில் துக்ளக் நியமிக்கும் பெண் அமைச்சர். தேங்காயுடன் சேர் ந்து நடிகர் திலகத்தின் புகழ் பாடும் பாடல். சுருளியுடன் அனாயாசமாக ஜோடி சேர்ந்து இணை....கவுண்டமணியுடன் ஜோடி. மூர்த்தியிளிருந்து ஐ.எஸ்.ஆர் வரை. அடுக்கிக் கொண்டே போகலாம்.

எல்லாவற்றுக்கும் சிகரமாய் நடிகர் திலகத்துடன் இணைந்து 'ஞானப்பறவை'. நெடுநாள் ஆசைக்கனவு நிறைவேறியது இந்த ஞானப் பெண்ணுக்கு.

நடிகர் திலகத்தின் மறைவுக்கு சொந்த சகோதரியாய் இருந்து கதறியவர். எங்களைக் கதற வைத்தவர். இன்று பதறவே வைத்து விட்டார்.

இனி விண்ணுலக தேவர்களுக்கு சோகமில்லை. ஆச்சியின் நகைச்சுவையால் ஆண்டவர்கள் அனைவரும் ஆனந்த சிரிப்பிலே இனி மிதப்பார்கள். நமக்குத்தான் இனி ஆச்சி இல்லை. ஆனால் அவரின் திரையுலக ஆட்சி என்றும் நிலையானது.

பாதிப் பாடலாக 'மஞ்சக் கயிறு'


https://youtu.be/sJ42XaRPmJE

'கானாங் குருவிக்குக் கல்யாணமாம்'


https://youtu.be/WiPgv2Sh9Qw

vasudevan31355
11th October 2015, 10:47 AM
Radharavi at Aachi Manorama Death | Funeral Video


https://youtu.be/jFh5AHOhV4Y

vasudevan31355
11th October 2015, 10:50 AM
AACHI MANORAMA JOURNEY IN CINEMA


https://youtu.be/xzt5atKVMzM

vasudevan31355
11th October 2015, 10:52 AM
Aachi Manorama's Last Speech Before Her Death


https://youtu.be/P0HoxHw6Q0o

vasudevan31355
11th October 2015, 11:02 AM
'தரிசனம்' படத்தில் ஆச்சி 'சோ'வை சினிமாப் பாடல்களாகப் பாடி சித்ரவதை செய்வார் 'பாப்பா' என்ற பெயரில்.

போகாதே அய்யா போகாதே
நீ போனாலே என் பாட்டு வாழாதே
நான் பாடும் சங்கீதம் பிடிக்கலியா
என் ராகங்கள் உன்னை வந்து பிடிக்கலியா


https://youtu.be/tVXf_D5_XRc

vasudevan31355
11th October 2015, 11:10 AM
முயலுக்கு மூணே காலு நான் பார்த்தேன் புடிக்கையிலே
காள மாட்டுக்கு ரெண்டே வாலு நான் பார்த்தேன் கறக்கயிலே

ஆச்சி அந்த வயதில் தாவணி அணிந்து சிறுவர்களுடன் என்ன சுறுசுறு!

ஆச்சிக்கு ஜானகி குரல் தந்திருப்பார்.


https://youtu.be/qxjCfGyv07I

RAGHAVENDRA
11th October 2015, 11:45 AM
https://www.youtube.com/watch?v=M_hhcnKQvlc

தமிழ்ப் படப்பாடல்களில் சில காலத்தை வென்று நிற்பதோடு சம்பந்தப்பட்டவர்களின் வாழ்க்கையோடு இணைந்து விடுவதுண்டு.

இந்தப்பாடல் அந்த வகையில் சேர்ந்து விட்டதோ..

vasudevan31355
11th October 2015, 11:46 AM
1978 -ல் தீபாவளிக்கு முத்துராமன் நடித்து 'வாழ்த்துங்கள்' என்றொரு படம் வந்தது. கடலூர் ஓ.டி கமர் திரையரங்கில் அந்தப் படத்தைப் பார்த்தேன். ஒரு காட்சி கூட நினைவுக்கு வரவில்லை. ஆனால் அப்போதே ஜேசுதாஸ் பாடிய பாடல் ஒன்று அழியாமல் நெஞ்சில் நிலைத்து விட்டது.

'அருள்வடிவே! பரம்பொருள் வடிவே!
ஆனந்தமே! அருளே! பொருளே! புகழே!'

எப்போது கேட்டாலும் மனம் மயங்கும் பாடல். இந்தப் படத்தில் வேறு என்ன பாடல்கள் இருக்கின்றன?

RAGHAVENDRA
11th October 2015, 11:57 AM
https://www.youtube.com/watch?v=LlqQiHHul98

மக்கள் தலைவரைவாழ்த்திப் பாடும் மனோரமா... படம் நீதி

madhu
11th October 2015, 06:20 PM
வாசுஜி...

வாழ்த்துங்கள் படம் கூட நான் பார்க்கவில்லை. அந்தப் பாட்டு மட்டுமே எனக்கும் தெரிந்த ஒரே விஷயம்.. வேறு விவரம் இருக்கா ?

adiram
11th October 2015, 07:01 PM
மனோரமா அவர்களைப் பொருத்தவரை 'ஈடு செய்ய முடியாத இழப்பு' என்பது வெறும் சம்பிரதாய வார்த்தைகள் இல்லை. நிஜமாகவே ஈடு செய்ய முடியாத இழப்புதான். இவரைப்போல இன்னொருவர் தமிழ் திரையுலகுக்கு கிடைக்கவே இல்லை.

வெளிநாடுகளில் தமிழர்களுக்கு பெருமை தேடித் தந்த நடிகர்திலகத்தைப்போல ஒரு தமிழ் நடிகையான இவரும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்று தமிழ் திரையுலகிற்கு பெருமை சேர்த்து விட்டார்.

என்னென்ன விதமான கதாபாத்திரங்களையும் ரொம்ப அசாட்டாக செய்து அசத்தியவர்.

பட்டிக்காடா பட்டணமாபடத்தில் கோழியடித்து குழம்பு வைத்து எம். ஆர். ஆர். வாசுவை ஒரு வழியாக்கும் வெள்ளையம்மாளை மறக்க முடியுமா?.

தீபத்தில் சுருளியிடம் 'இன்னுமா ஆகலை?" , 'இன்னும்தான் ஆகலை?' கொஞ்சலை மறக்க முடியுமா?

அண்ணன் ஒரு கோயிலில் அப்பாவியாக வந்து வீட்டையே கொள்ளையடித்து கம்பி நீட்டும் கைகாரியை மறக்க முடியுமா?

நடிகனில் நடுத்தர வயதை கடந்த பின்பும் பாட்டுவாத்தியார் சத்யராஜுடன் காதல் அரும்பும் நளினத்தை மறக்க முடியுமா?.

தமிழ் திரையில் இன்னொரு மனோரமா சாத்தியமே இல்லாமல் போய்விட்டதே.

chinnakkannan
11th October 2015, 09:42 PM
//நடிகர் திலகத்தின் மறைவுக்கு சொந்த சகோதரியாய் இருந்து கதறியவர். எங்களைக் கதற வைத்தவர். இன்று பதறவே வைத்து விட்டார்.

இனி விண்ணுலக தேவர்களுக்கு சோகமில்லை. ஆச்சியின் நகைச்சுவையால் ஆண்டவர்கள் அனைவரும் ஆனந்த சிரிப்பிலே இனி மிதப்பார்கள். நமக்குத்தான் இனி ஆச்சி இல்லை. ஆனால் அவரின் திரையுலக ஆட்சி என்றும் நிலையானது.//

வெகு உண்மை வாசு..

எப்படி ஆரம்பிப்பது எனத் தெரியவில்லை..விரல்கள் வெகு நேரம் ஸ்தம்பித்தபடி தட்டச்சுச் சுவடியின் மேல் நிற்கின்றன.. மனதில் அவரது திரைப்படங்கள்.. பிடித்த வசனங்கள் எனக் கோர்வையாக வந்தாலும் கூட,

அட, நானும் ஒருமுறை அவரை பார்த்திருக்கிறேன் நேரில்.. ஆனால் பேச எல்லாம் இல்லை..எங்கே..

கல்லூரிப் பருவம் எண்பதுகள் என நினைக்கிறேன்.. மதுரையில் காதம்பரி என ஒரு நாடக சபா ..அதில் ஒரு உறுப்பினர் என் சகோதரியின் கணவரின் நண்பர்.. எனில் ஒரு வருட சந்தா என் ச.க. தலையில் கட்ட வைத்துவிட ,சகோதரியின் கணவர் அந்தப் பாஸை என்னிடம் கொடுத்து விட்டதால் எனக்கு அடித்தது லக்கி ப்ரைஸ் எனலாம்..

மாதமிரு நாடகங்கள் போடுவார்கள்..அதுவும் தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் ஹாலில்.. நிறைய நாடகங்கள் பார்த்திருக்கிறேன்..எஸ்வி.சேகரின் ஒன் மோர் எக்ஸார்ஸிஸ்ட், க்ரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம், மெளலி – அவன் அவள் அது. ஆர்.எஸ் மனோகர் துரோணர்,

.விசுவின் அவள் சுமங்கலி தான், குடும்பம் ஒரு கதம்பம்…அப்புறம் தான் ஆச்சியின் நாடகம்..இதுவும் கதை வசனம் டைரக்ஷன் விசு தான்.

ஆண்டாள் அவள் ஆண்டாள் என்பது நாடகத் தலைப்பு..விறுவிறுவென இருந்த நினைவு..கதைப்படி மனோரமாவாகிய ஆண்டாள் ஒரு அமைச்சர்.. அவர் குடும்பத்திலும், அமைச்சராகவும் எப்படி இருக்கிறார் என்பது கதை.. நன்றாகவே இருந்தது..

ஏன் அவுக தான் ஆடுவாகளா.. அவக அப்படி ஆடினா நான் ஓரமா இருந்து பாத்துக்கறேன்..என்ற நடிப்புக்கும், அந்த அமைச்சராக நடித்த கம்பீரத்துக்கும் வெகு தொலைவு..இரண்டுமே வெகு சுவையானவை..தமிழில் சொல்வதென்றால் சூப்பர் தான்..

கடைசி சீனோ முந்தையதோ சிஎம்மின் வாய்ஸ் மட்டும் வைத்து ஆச்சி சேரில் அமர்ந்த வண்ணம் பதில் கூறுவது பின் நடப்பது என உணர்ச்சிகரமான கட்டம்.. ஸம் திங்க் ஹேப்பண்ட்.. உணர்ச்சிகரமாய் வசனம் பேசி நடந்த போது ஐ திங்க் காதின் தோடு கீழே விழுந்துவிட்டது என நினைக்கிறேன் – ஆனால் கொஞ்சமும் சளைக்காமல் வசனம் பேசி முடித்தபிறகு கைதட்டல்கள் அள்ளியதாய் நினைவு.. நாடகம் முழுக்கச் சுமந்தது ஆச்சி தான்..

பலவருடங்களுக்கு முந்தைய குமுதத்தில் – விவாகரத்து கிட்டு பட்டு ஸ்டைல் என நாடகத்தின் கதை வந்தது..அதில் செளக்கு ப் பதிலாக மனோரமா ஆச்சி.. என நினைவு.. ஸ்டில்களும் வெகு அழகாக இருக்கும்..

ஆச்சியிடம் கவர்ந்தது என்னவென்றால் – ஒவ்வொருவருக்கும் – இது நம்ம அம்மா – இது நம்ம பாட்டி – என ஒவ்வொருவரும் நினைவு கூறும் வண்ணம் வாத்ஸல்யமான தோற்றம். – சிரிக்கும் கண்கள்..தெள்ளிய நடிப்பு.

அவர் நடிப்பில் எதெது பிடிக்குமென எதைச் சொல்ல எதை விட…. குறிப்பாய்ச் சொல்ல..

ஜில் ஜில் ரமாமணி, நடிகன் பேரிளம் பெண் ரோல் தொடர்ந்தால்...

சர்வர் சுந்தரம் – போங்க சார்.. நான் இப்படிச் செஞ்சாத் தான் எல்லோருக்கும் பிடிக்க்கும் என டைரக்டர் எஸ்வி ரங்காராவை மண்டைகாயவைக்கும் நடிகையின் வேடம்

இந்தியன் – இதோ இந்த க்ளார்க்குக்கு இரு நூறு, இவருக்கு முன்னூறு..இவனுக்கு ஐநூறு இந்தப்யூனுக்கு பத்துகொடுத்துட்டேனா இன்னிக்குப் பெரிய ஆஃபீஸர ப் பார்த்து பணம் வாங்கப் போறேன் எனச் சொல்லும் வெள்ளந்தி குணங்கொண்ட பெண்மணி

போலீஸ் காரன் மகள் – ஆயிரம் ஆயிரம் ஆண்களிலே ஐயா உன்னை நினைச்சேனே..அர்ச்சுனன் போல முகமிருக்க அனுமார் சாதியைப் பிடிச்சேனே என சந்திரபாபுவை கலாய்க்கும் காதலி

மணல் கயிறு – அன்பே நான் அங்கே நீ இங்கே வாழ்ந்தால் என கிஷ்மூவுடனான நடுத்தரவயது அக்கா வேஷத்தின் கொஞ்சல் அதே படத்தில் ஒரே வார்த்தை சொல்லிட்டானே நீயாருன்னு – என எஸ்வி சேகர் கேட்ட கேள்வியால் நோகும் ஒர்ரே ஒரு கண நொந்த முகத் தோற்றம்..

சிங்கார வேலன் தாயம்மா வாழ்வே மாயம் ஏர்ஹோஸ்டஸ், சின்னத்தம்பி,சின்னக் கவுண்டர் – அம்மாவேஷம், பொன் வண்டு யாருக்காக, ஞானப்பறவையில் ந.தியுடனான பக்குவ நடிப்பு

பட்டிக்காடா பட்டணமா ரோலும் காசே தான் கடவுளடா ரோலும் இரண்டுமே இரு துருவங்கள்.. வெகு அழகாகக் கையாண்டிருப்பார்

சூர்ய காந்தியில் வம்பு மாமி பாடும் தெரியாதோ நோக்கு, முகமதுபின் துக்ளக்கில் பாக்கலாமான்னு பாக்கறேன்னு சொன்னா – என பி.ஏவைத் திணறடிக்கும் லாகவமான பேச்சு…
ம்ம் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்..

ஒன்று மட்டும் உறுதி.. அவர் மறைந்திருக்கலாம்..ஆனால் மனித வாழ்க்கையில் நகைச்சுவை உள்ள வரையில் – தமிழ் சினிமாவில் அவரது நடிப்பை யாராலும் மறக்கவே முடியாது.. எல்லாமனங்களிலும் சிரஞ்சீவியாய்த் தான் இருப்பார் மனோரமா..

சென்று வாருங்கள் ஆச்சி.. ( இது நடக்காது எனத்தெரிந்தும் சொல்லாமல் இருக்க முடியவில்லை)

vasudevan31355
12th October 2015, 07:38 AM
வாசுஜி...

வாழ்த்துங்கள் படம் கூட நான் பார்க்கவில்லை. அந்தப் பாட்டு மட்டுமே எனக்கும் தெரிந்த ஒரே விஷயம்.. வேறு விவரம் இருக்கா ?

எப்படியாவது தகவல்கள் சேகரிப்போம் அண்ணா. முத்து ருத்திராட்சக் கொட்டையெல்லாம் போட்டுக்கொண்டு கேடிகளைப் பிடிக்க பக்த கோடி மாதிரி வேஷம் போட்டு இந்தப் பாடலைப் பாடுவார் என்பது மட்டும் மிக லேசாக நினைவிருகிறது. அதுவும் நிச்சயம் அல்ல. பிடிப்போம்.:)

rajeshkrv
12th October 2015, 08:16 AM
saravanan writes like this about
Vaazthungal

Saravanan writes:

�aruL vadivE paramporuL vadivE� from vaazhthungaL. Sung by K.J.Yesudas. Lyrics by Thelloor
Dharmarasan. Music by L.Vaidyanathan.

Senthamarai Combines� Vaazhthungal- 1978 starred Muthuraman and Chandrakala. It was directed by
C.V.Rajendran. Thelloor Dharmarasan, who also wrote the lyrics and the dialogues, produced the
film. I have not seen the film, but have heard that it was an unusual story beginning with a
girl�s birthday, and the three bizarre calls that the birthday brings with it: an anonymous caller
who threatens to kill her if her father doesn�t part with a specified sum of money, her father�s
friend who calls up hinting at ominous consequences if the money borrowed by her father is not
returned, and a third call from a persistent suitor, who warns of dire imprecations if she wasn�t
given in marriage to him!

There were 4 songs in the film:

poontherE chinna chinna kaaleduthu vaa- SPB
paadattuma aadattuma mOgathin vEgathil- VJ
pudhumugam tharum navarasam- SJ
aruL vadivE paramporuL vadivE- KJY

vasudevan31355
12th October 2015, 08:23 AM
மதுண்ணா!

இந்தப் படத்திற்கு இசை எல்.வைத்தியநாதன் அவர்களாம். பாடல்களைக் கேட்கும் போதே வித்யாசம் உணர முடிகிறதே. அருமையோ அருமை.

'சுக்ரா'வில் இந்தப் படத்தின் பாடல்களுக்கு விண்ணப்பித்திருந்தேன். அருமை நண்பர் கனி சிரமம் பாராமல் இப்படத்தின் பாடல்களை தேடக் கண்டு பிடித்து அளித்து மகிழ்ச்சிக் கடலில் நம்மைத் தள்ளி விட்டு விட்டார். கிடைக்காது என்றே நினைத்திருந்தேன். கனி பால் வார்த்தார். ஆனால் பாடல்கள் 'வாழ்த்துங்கள்' படப் பாடல்கள் தானா என்று உறுதி செய்துகொள்ள வேண்டும். உங்களுக்கு ஏதாவது பிடிபடுகிறதா என்று பாருங்கள்.

பாடல்கள்.

1.வாணி ஜெயராம் பாடும் 'ஆடட்டுமா....ஆடட்டுமா' பாடல் அட்டகாசம் அண்ணா! அப்படியே வருடுகிறது நெஞ்சை. முதலில் வரும் ஹம்மிங், இசை எல்லாமே ஆஹா!

'பாடட்டுமா ஆடட்டுமா
மோகத்தின் வேகத்தில் நான் உங்கள் நெஞ்சத்தில்
பாடட்டுமா ஆடட்டுமா'

'ராரராரரராராரரி' என்று வாணி பாடுவது 'இளமை ஊஞ்சலாடுகிறது', 'மாங்குடி மைனர்' இரண்டையும் கொஞ்சம் ஞாபகப்படுத்துகிறது.

http://www.mediafire.com/download/9k2n2jwyci3zn1n/Aaadaddumaa+Aaadaddumaa.mp3

2. 'பூந்தேரே சின்னச் சின்னக் காலெடுத்து வா...
பூலோக ரம்பை என்று பேரெடுத்து வா'

ஐயோ! செம ரகளை மதுண்ணா! பாலா கலக்கி விட்டார் கலக்கி. இப்போது கேட்டவுடன் பாடல் நினைவுக்கு வந்து விட்டது. நூறு சதவீதம் அப்படியே டி ராஜேந்தர் அப்போது போட்ட பாடல் போல சும்மா 'ஜிவ்'வுன்னு இருக்கு. வானத்தில் பறப்பது போல 'ஜம்'

http://www.mediafire.com/download/a6rk3k7aqdjkppj/Poonthere+Cinna+chinna.mp3

3. அடுத்து ஜானகி ஜமாய்க்கிறார்.

'புதுமுகம் தரும் மதுரசம் பெற வா'

http://www.mediafire.com/download/bgpiid2f3m3zkii/Puthu+mukamtharum.mp3

அரேபியன் மியூஸிக்குடன் 'யூ நாட்டி பாய்' என்று கொஞ்சுகிறார் ஜானகி வழக்கமான முக்கல் முனல்கலோடு.:) படம்தான் கொஞ்சம் சந்தேகமாய் இருக்கிறது.

4. அப்புறம் இருக்கவே இருக்கு நம்ம தாஸேட்டன் பாடும் 'அருள் வடிவே!' என்ன மாதிரிப் பாடல்! மனசு பஞ்சாய் லேசாகிறது இப்பாடலை ஜேசுதாஸ் குரலில் கேட்கும் போது. ஹேட்ஸ் ஆப் தாஸேட்டன்

http://www.mediafire.com/download/5x1sahuqxoaqswh/Arul+Vadiveparam...mp3

RAGHAVENDRA
12th October 2015, 08:30 AM
வாழ்த்துங்கள் படத்தைப் பற்றி ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களின் நூலில் உள்ள தகவல்கள்

நீளம் 3844 மீ.
தயாரிப்பு செந்தாமரை கம்பைன்ஸ்
தணிக்கை 11.01.1978
வெளியீடு 14.01.1978
தயாரிப்பாளர் - போளூர் சி.எம். காசிராஜன்
இயக்கம் சி.வி.ராஜேந்திரன்
வசனம் தெள்ளூர் தர்மராஜன்
இசை எல் வைத்தியநாதன்

நடிப்பு முத்துராமன், சந்திரகலா.

நான் படம் பார்க்கவில்லை. ஒரு நண்பர் சொன்ன கதைப்படி, மூன்று அநாமதேய தொலைபேசிகளே படத்தின் கரு. கடைசியில் தமிழ் சினிமாவின் வழக்கப்படி படம் சுபமாக முடிய வேண்டும் என்பதற்காக அந்த மூன்றுமே அவர்கள் குடும்பத்தில் ஒருவர் ஒரு த்ரில்லுக்காக செய்ததாக சொல்வதாகவும் ஆடியன்ஸைப் பார்த்து எல்லோரும் வாழ்த்துங்கள் என்று சொல்வது போல முடித்திருந்ததாகவும் சொன்னார்.

RAGHAVENDRA
12th October 2015, 08:32 AM
வாசு சார்
பாலுவின் பூந்தேரே பாட்டு சிலோன் ரேடியோவில் தினமும் 8.15 மணிக்கு ஒலிபரப்பாகும் நிகழ்ச்சியில் அடிக்கடி இடம் பெறும். சிலோனில் சூப்பர் ஹிட்.
நம்ம ரேடியோவில் அருள் வடிவே பாட்டைத் தவிர வேறெந்தப்பாட்டையும் ஒரு முறை கூட ஒலிபரப்பியதாக நினைவில்லை.

vasudevan31355
12th October 2015, 08:33 AM
ஜி!

நான் பாடல்கள் போஸ்ட் செய்துவிட்டு பார்த்தால் உங்கள் பதிவும் வந்திருக்கிறது. வாழ்த்துக்கள்.:) வாழ்த்துங்கள்.:) என்னப் பொருத்தம் நமக்குள் இந்தப் பொருத்தம். ஜி ஜிதான். கலக்குறீங்க ஜி!:)

vasudevan31355
12th October 2015, 08:35 AM
ராகவேந்திரன் சார்,

அடி தூள். மதுர கானங்கள் அன்பர்களா கொக்கா! பாடல்களை கேட்டால் பரம சுகம். நன்றி சார்.

vasudevan31355
12th October 2015, 08:35 AM
வாழ்த்துங்கள் படத்தைப் பற்றி ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களின் நூலில் உள்ள தகவல்கள்

நீளம் 3844 மீ.
தயாரிப்பு செந்தாமரை கம்பைன்ஸ்
தணிக்கை 11.01.1978
வெளியீடு 14.01.1978
தயாரிப்பாளர் - போளூர் சி.எம். காசிராஜன்
இயக்கம் சி.வி.ராஜேந்திரன்
வசனம் தெள்ளூர் தர்மராஜன்
இசை எல் வைத்தியநாதன்

நடிப்பு முத்துராமன், சந்திரகலா.

நான் படம் பார்க்கவில்லை. ஒரு நண்பர் சொன்ன கதைப்படி, மூன்று அநாமதேய தொலைபேசிகளே படத்தின் கரு. கடைசியில் தமிழ் சினிமாவின் வழக்கப்படி படம் சுபமாக முடிய வேண்டும் என்பதற்காக அந்த மூன்றுமே அவர்கள் குடும்பத்தில் ஒருவர் ஒரு த்ரில்லுக்காக செய்ததாக சொல்வதாகவும் ஆடியன்ஸைப் பார்த்து எல்லோரும் வாழ்த்துங்கள் என்று சொல்வது போல முடித்திருந்ததாகவும் சொன்னார்.

super.

rajeshkrv
12th October 2015, 09:03 AM
இசையரசி இசைத்த கீதங்கள் – 6

ஆச்சி நம்மைவிட்டு சென்றுவிட்டார். இதைவிட ஒரு இழப்பு இருக்க முடியுமா ..
இதோ ஆச்சிக்கு இசையரசியின் குரலில் சோகமான பாடல்

குந்தி புத்ருடு என்ற தெலுங்கு படத்திற்காக இளையராஜாவின் இசையில் அருமையான பாடல்


https://www.youtube.com/watch?v=YNsp02nNy8s

https://www.youtube.com/watch?v=pXk5bBPU6bw

https://www.youtube.com/watch?v=RwpIUc2FFnM

vasudevan31355
12th October 2015, 09:42 AM
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்

(நெடுந்தொடர்)

42

'நடப்பது சுகமென நடத்து'

https://i.ytimg.com/vi/svRAEAfMiwk/hqdefault.jpg

'மூன்று தெய்வங்கள்'

இன்றைய பாலா தொடரில் படுகுஷியான ஒரு பாடல். மூவர் கூட்டணி. அதுவும் நடிகர் திலகம், முத்துராமன், நாகேஷ் என்று. புவனேஸ்வரி மூவிஸ் 'மூன்று தெய்வங்கள்' (1971) படத்தில் நடிப்பின் தெய்வத்தோடு நவரசத்திலகம், நகைச்சுவைத் திலகம் இருவரும் இணைந்து அட்டகாசம்.

கோபுவின் கதை வசனத்தில் படமும் செம காமடி. அம்சமான ஒளிப்பதிவை பதித்தவர் கே.எஸ்.பிரசாத். தாதாமிராசியின் இயக்கத்தில் மூன்று ஜாலி புதிய பறவைகள் நம் கண்களுக்கு புதுமையாக.

மூவருக்கும் மூன்று பாடகர்கள் முறையே டி.எம்.எஸ், பாலா, சாய்பாபா என்று. மூவரும் அவரவர்கள் பாணியில் குரல் தந்து குதூகலப்படுத்தியிருப்பார்கள்.

நடிகர் திலகம், முத்துராமன், நாகேஷ் மூவருக்குமே வித்தியாசான கெட் -அப். வாக்கிங் ஸ்டிக், தொப்பி, கண்ணாடி, கோட், சூட், டை சகிதம் மூவரும் ஜாலியோ ஜாலி.

'நெஞ்சிருக்கும் வரை'யில் நடிகர் திலகம், முத்துராமன், கோபாலகிருஷ்ணன் மூவரும் சாலையில் வேகாத வெயிலில் ஆடிப் பாடும் நெஞ்சில் நிறைந்த பாடல் 'நெஞ்சிருக்கும் எங்களுக்கும் நாளை என்ற வாழ்விருக்கும்' பாடல்.

அது போல இந்தப் பாடலும் ஒரு பிரமாதமான பாடலே. கோபாலகிருஷ்ணனுக்கு பதில் இதில் நாகேஷ்.

அது வறுமையை பின்னணியாகக் கொண்ட, தன்னம்பிக்கையை தங்களுக்கே ஊட்டிக் கொண்ட வேலையில்லா தரித்திர இளைஞர்களின் தி(கொ) ண்டாட்டப் பாடல்.

இதுவோ ஜெயிலில் இருந்து தப்பி வந்து, முன்பின் தெரியாத ஒரு குடும்பத்தில் ஐக்கியமாகி, அந்தக் குடும்பத்து இளம் பெண்ணின் காதலை மட்டுமல்ல...அந்தக் குடும்பத்தையே வாழ வைக்கும் மூன்று திருடர்களின் கதை.

சந்திரகலாவின் காதலன் சிவக்குமாரின் மாமா வி.கே.ஆரை சரிகட்ட மூவரும் இளைஞர் நாடக மன்ற உடுப்புகளை மாட்டிக் கொண்டு மாறுவேடத்தில் பாடும் உல்லாச கீதம்.

இளம் சிறார்கள் இன்னிசை வாத்தியங்கள் வாசிக்க, மூவரும் மலை, கோவில் என்று வெளி இடங்களில் ஆடிப் பாடி மகிழும் பாடல். பாடல் முழுவதும் வெளிப்புறப் படப்பிப்பு.

http://i.ytimg.com/vi/9YiNDzAL3P4/hqdefault.jpg

காதில் கடுக்கணுடன், அனைத்து விரல்களிலும் வட்ட மோதிரங்கள் ஜொலிக்க, நடிகர் திலகம் செம ரிலாக்ஸாக, காமெடி பொங்க, அலட்சிய மூவ்ஸ் கொடுத்து வழக்கம் போல முதல் இடம். குழந்தைகளுடன் குழந்தையாக சின்ன சாக்ஸ் வாசித்து பாடகர் திலகத்தின் குரலில் பின்னி எடுப்பார். ஆட்டத்தில் உற்சாகம் கரை புரண்டு ஓடும். இந்தப் பாடலில் டி.எம்.எஸ் அவர்களின் வாய்ஸ் வழக்கத்தைவிடவும் நடிகர் திலகத்திற்கு இன்னும் பொருத்தமாக இருப்பது போல் தோன்றும்.

குறிப்பாக அந்த குறுகலான கருங்கல் தடுப்பு சுவர் பாலத்தில் 'டேப்' டான்ஸ் எனப்படும் ஆட்டத்தை நடிகர் திலகம் பின்னணி ஒலிகளுக்கு ஏற்ப சரவ சாதராணமாக ஆடி வருவது பலே பல் பல். கால்கள் அப்படியே அவர் சொன்ன பேச்சைக் கேட்கும். கால்களை மாற்றி மாற்றி வைத்து ஆடியபடியே கைகளை மார்புக்குக் குறுக்கே மடக்கியும் நீட்டியும் அவர் செய்யும் நடன அசைவுகள் அசாதாரணமானவை. அது மட்டுமல்லாமல் ஒரு கால் முழங்காலை மட்டும் உயர்த்தி முன்னும் பின்னும் ஆட்டியபடி அவர் கொஞ்சம் கூட பேலன்ஸ் தவறாமல் அந்த குறுகலான கற்பாலத்தின் மேல் ஆடி வரும்போது இந்த மனிதருக்கு தெரியாதது ஒன்றுமே இல்லையோ என்று வழக்கம் போல எல்லோர் மனமும் நினைக்காமல் இருக்காது. நன்றாக கவனியுங்கள். அவர் பின்னால் வரும் முத்துவும், ஏன் நாகேஷும் கூட இந்த இடத்தின் நடிகர் திலகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் திண்டாடுவார்கள்.

பின் ஒலிக்கும் விசில் சப்தத்திற்கு ஆடியவாறே ஷேக் நடை ஒன்று போட்டு வருவது படா ஷோக். தொடர்ந்து வரும் டிரம்பெட் ஒலிக்கு இடுப்பொடித்து இவர் ஆடுவது எவருமே நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.

ஸ்டிக் பிடித்து குனிந்து பின்பக்கம் உடலைத் தள்ளுவதைக் கூட மிகுந்த சிரத்தையுடன், பெர்பெக்ஷனுடன் செய்வார். மற்ற இருவரும் இந்த மூவ்மென்ட்டிலும் மூத்தவருக்குப் பின்னால்தான்.

கோவில் படிக்கட்டுகளில் கோயில் காளை போல துள்ளிக் குதித்து இறங்கி நண்பர்களுடன் கை கோர்த்து நடிகர் திலகம் கொண்டாட்டம் போடுவது கொள்ளை போக வைக்கும் மனதை.


முத்துராமனும் ஜாலியாக சாப்ளின் ஸ்டைலை பின்பற்றி ஆட்டம் போடுவார். நாகேஷ் பற்றி ஆட்டத்தில் சொல்லவும் வேண்டுமோ!

பாடலும், காட்சி அமைப்பும் என்னவோ காமெடி ஜாலிதான். ஆனால் நடன ஸ்டெப்கள் மிகுந்த சிரமமானவை. அதை கொஞ்சமும் சிரமம் பாராமல் மூவருமே சிரத்தை எடுத்து சிறப்பாக பாடலை முடித்துக் கொடுத்திருப்பார்கள். இதில் நடிகர் திலகத்தின் பங்கு ஜாஸ்தி. அதில் அள்ளும் வெற்றியும் ஜாஸ்தி.

நடனக்காட்சியை மிகச் சிறப்பாக அமைத்துக் கொடுத்த பி.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களும், பசுமரத்தி கிருஷ்ணமூர்த்தியும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

'மெல்லிசை மன்னர்' மிரட்டியிருப்பார். ஆரம்ப உற்சாக இசையின் ஊடே டி.எம்.எஸ் 'ஓஹோஹோ லா லா லா லலா ' என்று ஹம்மிங் எடுக்கும் அழகே அழகு. அவர் பின்னாடியே தொடரும் தொடரின் நாயகரும் தன் பங்குக்கு சளைக்காமல் பிரமாதமாக 'ஹம்'முவார்.

சின்ன சின்னதாய் அவ்வப்போது ஒலிக்கும் ஹார்மோனிய ஒலிகளும், ஆர்கன்களின் இனிமையும், 'ஜிகுஜிகு'வென புகுந்து புறப்படும் புல்லாங்குழல்களின் சப்தங்களும் 'மெல்லிசை மன்னரி'ன் இசையறிவுக்குச்
சான்றுகள்.

ச்சும்மா ஜாலிப் பாட்டுதானே என்று அலட்சியம் காட்டினீர்கள் ஆனால் பல இசைச் சித்து வேலைகளை கவனித்து ருசிக்காமல் கோட்டை விட்டு விட்டவர்கள் ஆவீர்கள். அவ்வளவு சங்கதிகள் இந்தப் பாடலில் கொட்டிக் கிடக்கின்றன. பாடலின் டியூனோ அதியற்புதமானது.


நாகேஷுக்குத்தான் சாய்பாபா குரல் எவ்வளவு பொருத்தம்! இந்த காமெடி மன்னனுக்கு ஏ எல்.ராகவன், சீர்காழி, டி.எம்.எஸ் என்று அனைத்துக் குரல்களும் பாங்காகப் பொருந்தி விடுகின்றன. இத்தனைக்கும் கொஞ்சம் 'கீச்' குரல் கொண்டவர் இவர்.

முத்துவுக்கு பாலாவின் குரல் ஓகே. பாலா பாடகர் திலகத்திற்கு இனிமையாகப் பாட முயற்சித்து அதில் வெற்றியும் கண்டிருப்பார். குரல் வழக்கம் போல பனிக்கட்டி பாதாம்கீர் இனிமை. தனித் தன்மையோடு இழைந்து, குழைந்து ஒலிக்கும்.

ஒரு இடத்தில் நாகேஷுக்கு சாய்பாபா குரல் இல்லாமல் பாலா குரல் பின்னணி ஆகி விடும். இது தவிர்க்கப்பட்டிருக்கலாம். கன்டின்யூட்டியில் விடும் கோட்டை. இது போல 'கலாட்டா கல்யாணம்' படத்தின் 'எங்கள் கல்யாணம்' பாடலிலும் குரல்கள் நடிகர்களுக்கு ஒரு சில இடத்தில் மாறும்.

அடைக்கலம் கொடுத்த குடும்பத்தின் பெண்ணை காதலனுடன் சேர்த்து வைக்க மூவரும் பாடும் பாடுவது அவர்கள் பாடும் பாடல் வரிகளிலும் பிரதிபலிப்பதை உணரலாம். ('கல்யாணம் பொய் சொல்லிக் கல்யாணம், சுகம் ஒன்று முடிந்திட எதுவும் வழியே இதுவும் சரியே) கண்ணதாசனின் மகத்தான பங்கு அது. ஒரு கல்யாணம் பண்ணி வைக்க, அது சுகமாய் முடிய, பொய் பித்தலாட்டம் பண்ணிக் கூட செய்யும் வழிகள் சரியே என்று கதையோடு ஒத்து வரும் கருத்துக்கள் சபாஷ் போட வைக்கின்றன இப்பாடலில்.

http://i57.tinypic.com/23ickex.jpg

ஓஹோஹோ லாலாலலா
லலலா லலலா ஹாஹஹா ஹோஹஹோ

டி.எம்.எஸ்

நடப்பது சுகமென நடத்து
வரும் நாளை உனதென நினைத்து
வாழ்வே பெரிதென மதித்து
நாம் வாழ்வோம் மனம் விட்டு சிரித்து

பாலா

நடப்பது சுகமென நடத்து
வரும் நாளை உனதென நினைத்து
வாழ்வே பெரிதென மதித்து
நாம் வாழ்வோம் மனம் விட்டு சிரித்து

லல்லல்லல் லலலல்லல்லல் லலலல்லல் லலலல்லல்லா

போதாது நீ கண்ட ராஜாங்கம்

பாலா

பேசாதே போலி வேதாந்தம்

சாய்பாபா

பாராதே வெறும் பஞ்சாங்கம்

டி.எம்.எஸ்

உனக்கொரு உலகத்தை அமைத்து
வளர்த்து எடுத்து நடத்து

பாலா

சொல்லாதே துன்பத்தை சொல்லாதே
பயணம் போகும் போது நில்லாதே

டி.எம்.எஸ்

சொல்லாதே துன்பத்தை சொல்லாதே
பயணம் போகும் போது நில்லாதே

மூவரும்

நானென்று பேர் சொல்லி நடை போடு
ஏனென்று கேட்போரை எடை போடு

டி.எம்.எஸ்

நடப்பது சுகமென நடத்து

பாலா

வரும் நாளை உனதென நினைத்து

டி.எம்.எஸ்

வாழ்வே பெரிதென மதித்து

பாலா

நாம் வாழ்வோம் மனம் விட்டு சிரித்து

டி.எம்.எஸ்

கல்யாணம் பொய் சொல்லிக் கல்யாணம்

பாலா

பெண் வேணும் வீட்டுக்குப் பொன் வேண்டும்

சாய்பாபா

கண் போடு மெல்லக் கை போடு

டி.எம்.எஸ்

சுகம் ஒன்று முடிந்திட எதுவும் வழியே இதுவும் சரியே

பாலா

அன்போடு நாம் கண்ட பண்பாடு
துணையைச் சேர்க்க வேண்டும் பெண்ணோடு

டி..எம்.எஸ்

அன்போடு நாம் கண்ட பண்பாடு
துணையைச் சேர்க்க வேண்டும் பெண்ணோடு

மூவரும்

செல்வங்கள் கை மாறி உருண்டோடும்
உள்ளங்கள் இடம் மாறி விளையாடும்

நடப்பது சுகமென நடத்து
வரும் நாளை உனதென நினைத்து
வாழ்வே பெரிதென மதித்து
நாம் வாழ்வோம் மனம் விட்டு சிரித்து


https://youtu.be/ZQABO4Dk7hQ

madhu
12th October 2015, 11:17 AM
வாசுஜி...

ம.க.ம.கா ஒரு அட்சய பாத்திரம் அல்லது அமுத சுரபி என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டு விட்டதால் எல்லோரும் "வாழ்த்துங்கள்" என்று கேட்டுக் கொள்கிறேன்.

அட கடவுளே... இந்த மூன்று பாடல்களுமே நான் கேட்டவைதான். ராகவ்ஜி சொல்லியிருக்கிறது போல இலங்கை வானொலியில் கேட்டிருக்கலாம். நினைவில் இல்லை. ஆனால் ஒவ்வொரு பாடலையும் கேட்க ஆரம்பித்ததுமே மெல்ல மெல்ல சரிந்தோடும் அருவி போல வரிகள் நினைவுக்கு வந்து விட்டன. ம்ம்.. இது போல எத்தனை எத்தனை முத்துக்கள் எந்தெந்த சிப்பிகளுக்குள் மறைந்து கிடக்குதோ ?

முத்துக் குளிக்க வாரீயளா ?

( ஆச்சியின் மறைவு அஞ்சலிகளில் பலரும் தில்லானா மோகனாம்பாளின் பாண்டியன் நானிருக்க பாடலும் அனுபவி ராஜா அனுபவி படத்தின் முத்துக் குளிக்க வாரீகளா பாட்டும் மனோரமா சொந்தக் குரலில் பாடியதாக வரிந்து கட்டிக் கொண்டு எழுதி இருக்காங்க..அவை எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலால் பிரபலமானவை அல்லவோ... திரை இசைப் பாடல்களை மிகவும் அறிந்து திறனாய்வு எழுதும் ஒருவர் தன் பதிவில் இவ்வாறு தவறுதலாக குறிப்பிட்டு எழுதி இருந்தார். இதை பதிவில் குறிப்பிட்டால் அவருக்கு கஷ்டமாக இருக்கும் என்று தனிமடல் அனுப்பினேன்... ஹிஹி.. என்னை குரூப்பிலிருந்து தள்ளிட்டாங்க )

vasudevan31355
12th October 2015, 06:22 PM
வாசுஜி...

திரை இசைப் பாடல்களை மிகவும் அறிந்து திறனாய்வு எழுதும் ஒருவர் தன் பதிவில் இவ்வாறு தவறுதலாக குறிப்பிட்டு எழுதி இருந்தார். இதை பதிவில் குறிப்பிட்டால் அவருக்கு கஷ்டமாக இருக்கும் என்று தனிமடல் அனுப்பினேன்... ஹிஹி.. என்னை குரூப்பிலிருந்து தள்ளிட்டாங்க )

'வெட்கப்பட வேண்டும் ஒவ்வொரு மனிதனும் சட்டப்படி
வேதனைப் பட வேண்டும்'

vasudevan31355
12th October 2015, 07:26 PM
ரவி சார்,

//நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை !! //

மகாபாரதத்தில் ராதை சீதை ஆன கதை படித்து பரவசப்பட்டேன். அருமையாக இருந்தது.

vasudevan31355
12th October 2015, 07:28 PM
சின்னா!

எங்கிருந்தோ வந்தாளின் நாடகப் பாடலை அளித்து ஆனந்தப் பட வைத்து விட்டீர்கள்.

//( எப்போ கேட்டாலும் பார்த்தாலும் அலுக்காத கானம்)//

உண்மை... உண்மை... முக்காலும் உண்மை. துஷ்யந்தன் தூள்.

vasudevan31355
12th October 2015, 07:56 PM
சினிமாவுக்குள் நாடகம்.

'உனக்காக நான்' படத்தில் மில் தொழிலாளிகள் நடத்தும் டிராமா.

https://i.ytimg.com/vi/nwrqwmVBIEE/mqdefault.jpg

காடு கண்டா வெறகு வெட்டுறது... ஆமா ஆமா
அதைக் கட்டுக் கட்டா வெலைக்கு விக்கிறது... ஆமா ஆமா
நாங்க தலையில் வைக்கிறது
நல்லா தளுக்கி விக்கிறது
யாரும் வடிக்க வந்தா வெறகுமில்லே
புலியைக் கண்டா உயிருமில்லே
அந்தரத்தில பொழைப்பு நிக்கிறது
அந்த ஆண்டவன்தான் துணைக்கு நிக்குறது

வி.கே.ஆர். புலியாக வந்து (அப்பா! எம்மாம் பெரிய தொப்பைப் புலி!:) பாவம் வி.கே.ஆர்.) நிர்மலா உள்ளிட்ட விறகு பொறுக்கும் பெண்களை செட்டில் விரட்டுவார்.

பெண்டுகள் நடுங்கி ஆறுமுக சாமியை வேண்ட, ஒய்.ஜி.மகேந்திரனின் ஹார்மோனியம் ஒலிக்க, ஆச்சி புலித்தோல் அணிந்து வேல் பிடித்து முருகனாக அவதாரம். பாகவதர் ரேஞ்சுக்கு பாடல். அலட்சிய நடை

'பாடுபடும் ஏழை நிலையே
பார்க்கவே சகிக்கலயே'

தொல்லை கொடுத்த புலி வி.கே ஆருடன் ஆச்சி முருகன் சண்டையிட்டு சூரசம்ஹாரம் பண்ணுவார்.

அப்படியே மேடையிலேயே யூனியன் லீடரை தேர்ந்தெடுக்க நாடகம் பார்க்கும் ஜனங்களிடம் ஓட்டு வேட்டை வேறு.

'சங்கரனை (ஜெமினி) தேர்ந்தெடுத்தா சங்கடமில்ல
தர்மலிங்கத் தாத்தா (எஸ்.வி.சுப்பையா) மேல நம்பிகையில்ல'

எஸ்.சி.கிருஷ்ணன், ஈஸ்வரி, ஆச்சி பாடியது.

சுவையான ஜாலி சாங்.

http://s2.dmcdn.net/C50ro.jpg


http://www.dailymotion.com/video/x1757wr_unakkaga-naan-1976-kaadu-kanda-viragu_shortfilms

madhu
12th October 2015, 08:07 PM
'வெட்கப்பட வேண்டும் ஒவ்வொரு மனிதனும் சட்டப்படி
வேதனைப் பட வேண்டும்'
ஆஹா.. ஆஹா... சமர்ப்பணம் படத்தில் எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடும் இந்தப் பாட்டை நினைவூட்டியதற்கு தாங்க்ஸுங்கோ வாசுஜி..

vasudevan31355
12th October 2015, 08:25 PM
'உணர்ச்சிகள்' படத்தில்

பொன்னாசையா
பெண்ணாசையா
மண்ணாசையா
மனிதன் ஆசைகள்

பாடல். சுமார்தான். ஆனால் வித்தியாசமான குரலில். சின்னா! குரல் யாரென்று தெரிகிறதா?


https://youtu.be/5YeCyVOwN7Q

rajeshkrv
12th October 2015, 08:52 PM
vanakkam ji

vasudevan31355
12th October 2015, 09:06 PM
வணக்கம்ஜி! வணக்கம் வாங்கோ! வாங்கோ!

vasudevan31355
12th October 2015, 09:09 PM
மதுண்ணா!

'சக்கரம்' படத்தில்

'ஒருநாள் இரவு ஒரு மணியளவு விழித்துக் கொண்டாள் ஒரு மாது'

என்று ராட்சஸி பாடும் ஒரு பாடல் உண்டே! படத்தில் யார் பாடுவது போல வரும்? நினைவில்லையே!

rajeshkrv
12th October 2015, 09:18 PM
வணக்கம்ஜி! வணக்கம் வாங்கோ! வாங்கோ!

Vandhen Vandhen ...

chinnakkannan
12th October 2015, 09:46 PM
//பாடல். சுமார்தான். ஆனால் வித்தியாசமான குரலில். சின்னா! குரல் யாரென்று தெரிகிறதா? // கோபு சார் வந்து எதுவும் சொல்லிவிடும் முன் நாம் நம்ம கெஸ்ஸ சொல்லிடலாம் ..என்ன மன்ச்சு.. சொல்லு எப்படியும் தப்பாத்தான் இருக்கப் போகுது..ஆனா நீ ஒரு கேள்வி கேக்கலையே.. ஹிஹி..அது ஷீலுவா இருக்கும்னு ஒரு சம்சயம்..ஆண்குரல் நாகூர் ஹனிபா சாயல்ல இருக்கு கரெக்டா..

ம்ம் வாழ்த்துங்கள் படப் பாட்டு தேடிக் கெடைக்கல..பட் நேத்துக்கு சிச்சுவேஷன்ல ஒரு எழுத்து மாறியபடபாட்டு கொடுக்க முடியலை..இப்பக் கொடுக்கறேன்..

பட் என்னா பாட்டு அது தெரியுமா.. சரிதாண்டி போடி என் தங்க வானம் பாடி..

https://youtu.be/i77xCHFRi-0

chinnakkannan
12th October 2015, 09:57 PM
வாழ்த்துங்களில் அருள்வடிவே பரம்பொருள் வடிவே தவிர வேறு எதையும் கேட்டதில்லை.. எனக்கு வாணி பாட் பிடித்திருந்தது.. எஸ்பிபி..ரேடியோவிலும் நான் கேட்டதிலலியே ..ஜானகி சோ சோ தான்..விவரங்கள் விளக்கங்கள் அளித்த ராஜேஷ் ஜி, ராகவேந்த்ர் சார் மதுண்ணா வாஸ்ஸூ அனைவருக்கும் ஒரு க்ரூப் தாங்க்ஸ்.. தப்போ..சரி ஒரு டோட்டல் தாங்க்ஸ் :)

eehaiupehazij
12th October 2015, 10:31 PM
கிச்சு கிச்சு தாம்பாளம் 1

In fond memory of Manorama!

Gap filler / Monotony breaker! Just for a change!!

தமிழ்த்திரை தந்தி மகாத்மியம் ! / Telegram Thrills in Tamil Cinema !


தந்தி சேவை என்பது தற்காலத்தில் செல்போன் தொழில்நுட்பங்கள் போட்ட போட்டில் நிரந்தர நினைவுச் சின்னமே ஆகி விட்டது !

தமிழ்த் திரையில் தந்தி என்பது பெரும்பாலும் கெட்ட சேதி தாங்கி வரும் ஊடகமாகவே பய(ன்)ப்படுத்திக் கொண்டிருந்தது திரைக் கதையோட்டத்தில் ஒரு சுவாரஸ்யம் திடுக் திடுக் திரில் வேண்டியே !!

https://www.youtube.com/watch?v=9Lz80YybGFU

chinnakkannan
12th October 2015, 10:39 PM
//ஒரு இடத்தில் நாகேஷுக்கு சாய்பாபா குரல் இல்லாமல் பாலா குரல் பின்னணி ஆகி விடும். இது தவிர்க்கப்பட்டிருக்கலாம். கன்டின்யூட்டியில் விடும் கோட்டை. இது போல 'கலாட்டா கல்யாணம்' படத்தின் 'எங்கள் கல்யாணம்' பாடலிலும் குரல்கள் நடிகர்களுக்கு ஒரு சில இடத்தில் மாறும்.

நடப்பது சுகமென நடத்து
வரும் நாளை உனதென நினைத்து
வாழ்வே பெரிதென மதித்து
நாம் வாழ்வோம் மனம் விட்டு சிரித்து//

நெசம்மாவே மறந்து போன பாடல் வாஸ்ஸு..அவ்வளவாக நெஞ்சில் நிற்கவில்லை எனலாம் படம் தியேட்ட்ரில் பார்த்த போதும் சரி.. பின்னர் வீடியோ டிவிடி எனப் பார்த்த போதும்சரி.. நின்றவை.. முதல் பாடல் மீன்ஸ் வெங்கடேசன்பாடல் அப்புறம் தாயெனும் செல்வங்கள்..ஆனால் அதில் எஸ்.பி.பி பாடியிருக்கிறார் எனத் தெரியாது.. வழக்கம்போல கலர்ஃபுல் நேர்ரேஷன்.

கன் டின்யூட்டி நீங்கள் குரலில் சொல்கிறீர்கள்.. நான் திரையிலேயே சொல்வேனாக்கும்..அதற்கு முன் (வேறு வழியில்லை..கதை கேட்டுத்தான் ஆகணும் :) )

கதை என்றவுடன் ரா.கி.ரங்கராஜன் எழுதிய கன் டின் யூட்டி என்ற கதை நினைவில்..

*

அவர் ஒரு ஆகச் சிறந்த டைரக்டர்..சிம்மன் என வைத்துக் கொள்ளலாம்.. அவருக்கு எல்லாமே பெர்பெக்டாக இருக்கவேண்டும்.. ப்ளஸ் கன் டின்யூட்டி அவருக்கு ரொம்ப முக்கியம்..பார்த்துப் பார்த்துத் திரையில் செதுக்குவார் அவர்..

ஒரு தடவை ஷூட்டிங்கில் ஏதோ தகராறு வர ஷூட்டிங் எடுத்த இடத்துக்குப் பக்கத்து வீட்டில் இருந்த ராம சுப்பிரமணியன் என்பவர் அந்தப் ப்ராப்ளத்தை சால்வ் செய்கிறார்..

ஏற்கெனவே சிம்மனுக்கு எடுக்கும் படக்கதை சரியில்லையோ என ஒரு சின்னக் குழப்பம் .. அந்தக் குழப்பத்துடன் ராம சுப்பிர மணியனுடன் பேசுகையில் எதிர் வீட்டில் ஒரு ஐந்து வயது சிறுவனைப் பார்க்கிறார்..

மனதுக்குள் ஃப்ளாஷ்.. கதையின் க்ளைமாக்ஸில் நாயகிக்கு மணமாகி குழந்தையாய் இந்த ச் சிறுவன் இருப்பது போலக் காட்டலாம்..முன்னாள் காதலனான கதா நாயகன் ஹெல்ப் பண்ணுவது போலவும் செய்யலாம்..ஒக்கார்ந்துயோசித்தால் நன்றாகவே வருமே..

ராமசுப்பு..அந்தப் பையன் நடிப்பானா..

ஓ.. நீங்க யாரைப் பத்திக் கேக்கறீங்க தெரியுமா

யாரு

திரிலோக சுந்தரி தெரியுமா அந்தக்காலக் கனவுக்கன்னி

யா..

அவங்களோட பேரன் தான் இவன்.. பாட்டியும் பேரனும் இப்ப இருக்கறது அமெரிக்கால.. இங்க ஹாலிடேக்காக வந்திருக்காங்க..

ஓய் கேட்டுப் பாருமேன் - சிம்மனுக்குமகிழ்ச்சி மனதில்..ஆகா நடிப்புக் குடும்பம்.. ஸோ நடிப்பு ஜீன் ல இருக்கும் எடுத்துடலாம்..

கேட்டால் இரண்டு மாத லீவ் என்பதாகவும் அதற்குள் முடித்து விட வேண்டும் என்றும் சரி இன்ன தொகை என தி.சு சொல்லி அதற்கு சிம்மனும் ஒத்துக்கொள்ள மடமடவென ஷூட்டிங்க் பத்து நாட்கள் தொடர்ந்தன

தி.சு பேரனும் சூப்பராகவே நடித்தான்.. ரொம்ப அழகு..

பதினோராவது நாள் ஷூட்டிங்க்கிற்கு பையன் வரலை..

வீட்டிற்கு ப் போய்ப்பார்த்தால் வீடு பூட்டி...

ராம சுப்பு..

ஓ.. தெரியலீங்களே..

சோர்வாய் ஸ்டூடியோ வந்தால் அமெரிக்காவிலிருந்து ஃபோன் தி.சு தான்.. பேரனின் அம்மாவிற்கு - அவள் மாட்டுப்பெண்ணிற்கு திடீரென உடம்பு சரியில்லாததால் உடனே புறப்பட வேண்டிவிட்டதாம்.. சாரிங்க.. பேரனை இப்பதைக்கு அனுப்ப முடியாது.. நீங்க வேற ஏற்பாடு பண்ணிக்கோங்க..

சிம்மன் மனதில் பிரளயம்.. க்ளைமாக்ஸ் மாத்தலாமா.. ச்சே ச்சே வேணாம்.. நல்ல கதை முக்காலே மூணுவீசம் முடிஞ்சாச்சு..இப்ப இப்படியா ஆகணும்..


ஒரு உ.டைரக்டர் உதவிக்கு வந்தான்..சார்.. என்னோட ரில்லேடிவ்க்கு ஒரு பையன் அவனுக்கும் அஞ்சு வயசு..கொஞ்சம் பாருங்க..

பார்த்தால் அசந்துபோனார் சிம்மன்..

அப்படியே தி.சுவின் பேரன்.. கொஞ்சூண்டு தான் வித்யாசம்..அதுவும் தெரியவில்லை..

தாங்க்ஸ் உதவி.. எனச் சொல்லி படத்தின் சில பல ஷாட்களை மடமடவென் எடுத்து படத்தை முடித்து... ரிலீஸ் செய்தால்...

படம் எக்கச்சக்க ஹிட்..

ஒரே புகழ் மழை தான்.. அதுவும் க்ளைமேக்ஸ் சூப்பர் .. முன்னாள் காதலனை பையனோட அம்மா கண்கலங்க கண்மை கரையப்பார்க்க, பையன் சிரித்தபடி டாட்டா அங்க்கிள் என்பது வெகு அழுத்தம், எதார்த்தம் என தமிழ் கூறும் நல்லுலகெல்லாம் உயரத் தூக்கிக் கொண்டாடினார்கள்..படத்தையும்..சிம்மனையும்..

படம் ரிலீஸான மறு நாள் எதேச்சையாக ராம சுப்புவைப் பார்த்தார் சிம்மன்..

ஹலோசார் செளக்கியமா

செளக்கியம் ராம சுப்பு.. நீங்க எப்படி இருக்கீங்க.. கண்ணிலே நின்றவள் பார்த்தீங்களா

ஓ.. பார்க்காம ரொம்ப ஜோர் சிம்மம் சார்.. கடைசியில வேற பையனை எடுத்துப்படத்தை முடிச்சுட்டீங்க போல இருக்கே

சிம்மம் அதிர்ந்தார்.. யாருக்கும் தெரியாமல் ரகசியமாய் மூச்சே விடாமல் படத்தின் டைட்டிலில் கூட முன்னாள் திரிலோக சுந்தரியின் பேரன் என்று மட்டும் போட்டு எடுத்த படம்..எப்படி இவருக்குத் தெரிந்தது.. யார் சொல்லியிருப்பார்கள்..

அவர் முகமாற்றத்தைப் பார்க்காமலேயே பேசிக்கொண்டு போனார் ராம சுப்பு..

ரொம்ப அழகாத்தான் பிடிச்சுருக்கீங்க.. கூர்ந்துபார்த்தா தான் ரெண்டு பசங்களுக்கும் டிஃபரன்ஸ் தெரியும்..ஆனா ஒரே ஒரு விஷயத்துல நீங்க கோட்டை விட்டுட்டீங்க.. நல்லவேளை யாரும் அதைப் பத்திப் பேசலை..ஆனா நான் கவனிச்சேன் சிம்மம் சார்

என்னய்யா கவனிச்ச.. வாய்வரை வந்த கத்தல் அடங்கி சிரித்து...என்ன கவனிச்சீங்க ராம சுப்பு சார்..

பட ஆர்மபக் காட்சியில ஹீரோவோட ஒரு பாட்டு அந்தப் பையன் பாடறான் இல்லியா அப்புறம் எண்ட்ல டாட்டா காட்டறான் இல்லியா..

ஆமா..

பாட்டில அந்தப் பையனுக்கு ஆறு விரல்.. டாட்டா காட்டறச்சே அஞ்சு விரல்..எப்படி கன் டின்யூட்டிய மிஸ் பண்ணீங்க..சிம்மம் சார்..

வாழ்க்கையே வெறுத்து விட்டது சிம்மத்திற்கு....எனக் கதையைமுடித்திருப்பார் ரா.கி. ரங்கராஜன்..

*
ம.தி. தேவிகா பாடும் வெகு அழகான பனியில்லாத மார்கழியா பாடல்

லாங்க்*ஷாட்டில் எல்லாம் தேவிகாவிற்கு பொட்டு இருக்காது. க்ளோஸப் ஷாட்டில் அவர் முகம் மாதிரியே கோபிப் பொட்டு இருக்கும்.. தென் ஆ ஆ அ அ..என்ற ஹம்மிங்கில் நோ பொட்டு, அடுத்த ஷாட் பொட்டு..

நிலையில்லாமல் ஓடுவதும் நினைவில்லாமல் பாடுவதும்
பகைவர் போலே பேசுவதும் - நோ பொட்டு


பருவம் செய்யும் கதையல்லவா? - பொட்டு இஸ் தேர் வித் சேஞ்ச் ஆஃப் ஹேர் ஸ்டைல் ஹி..ஹி..



https://youtu.be/WYNNiDOAgFY

chinnakkannan
12th October 2015, 11:07 PM
மனோரமா நினைவாக ( நிஜமாத் தாங்க..சொன்னா நம்பணும்..:) )

அடடா மன்னன் கண்ணனடி
ஆயிரம் கலையில் மன்னனடி
பருவம் கவரும் கள்ளனடி
பள்ளியில் பாடும் கவிஞனடி


அறியாத பெண்ணிடம் அவன்
சொன்ன வார்த்தை
விரிவாகச் சொல்லவோ அறியேனே தோழி
ஹோ என்னை அவன் மெல்ல
தன் கையிரண்டில் அள்ள
நான் மெல்ல மெல்லத் துள்ள
ஓ என்னவென்று சொல்ல

அவனைக் கண்டால் வரச் சொல்லடி
அன்றைக்குத் தந்ததை தரச் சொல்லடி
தந்ததை மீண்டும் பெறச் சொல்லடி
தனியே நிற்பேன் எனச் சொல்லடி

இரு வல்லவர்கள் மனோரமா, எல்விஜயலஷ்மி மற்றும் பலர்..

https://youtu.be/72-uy3b4kqY

chinnakkannan
12th October 2015, 11:27 PM
என்னமோ போங்க – 27

அக்னி நட்சத்திர வெயிலடித்த இரவில் ஆடியோடி வீடு வந்து சேர்ந்து – அதாவது மதுரையில் இருந்த பொழுது - கண்ணை மூடிப் படுக்கையில் தூங்குவதற்கு முயற்சிக்கும் போதே பொசுக்கென கரெண்ட் போய்விடும்..தடுமாறி எழுந்து கொஞ்சம் அந்தப்பக்க ப் பலகையில் வைத்திருக்கும் மெழுகுவர்த்தி அதன் பக்கத் தீப்பட்டி எடுத்து மெல்ல உரசி சின்னதாய் வைத்து,பின் இங்கிட்டு தானே பார்த்தோம் எங்குபோச்சு எனவிசிறியைத் தேடி எடுத்து படுத்தவாக்கிலேயே இரண்டு ஆட்டு ஆட்டினால் விசிறிவழி வரும் காற்று இருக்கிறதே பரம சுகம்.. காற்று தழுவத் தழுவ கண்ணுறக்கம் எப்போது வந்தது என்றே தெரியாது..

விசிறி – கரெண்ட் இல்லாமல்காற்று தரும்
விசிறி ( நடிக, நடிகையரின்) - சொந்தம் இல்லாமலே புகழ் பரப்புவர்

விசிறி – தூண்டி விடக் கைகள் வேண்டும்
விசிறி – ( ந, ந) – துண்டிவிட நடிப்பு வேண்டும்


வேறென்னவெல்லாம் சொல்லலாம்.. ஆமா இதை எதற்குச் சொல்றேன்.. அட.. ஏன் இப்படிப் பார்க்கறீங்க :)

அங்கே ஏனிந்தப் பார்வை அய்யய் அய்யய்ய..
ஆசைக்கென்ன காசா பணமா ஆடிப் பார்ப்போம் வாங்க
ஆடும் போதே துள்ளித் துள்ளிப் பாடிப் பார்ப்போம் வாங்க மாட்டீங்களா.. ம்ம் என்னமோ போங்க :)

https://youtu.be/AB7WmDS81ZM

rajraj
13th October 2015, 04:56 AM
From anubhavi raja anubhavi (1967)

muthu kuLikka vaareegaLaa......

http://www.youtube.com/watch?v=BiD6xmKQcwg


From the Hindi remake, Do Phool (1973)

muthu kodi kawari hada.....

http://www.youtube.com/watch?v=VWt9njK6u-o

rajeshkrv
13th October 2015, 10:00 AM
Cika
here is another fatafat song ..

https://www.youtube.com/watch?v=RZqTtTiECt8

chinnakkannan
13th October 2015, 10:28 AM
Hi good morning all..

Thanks rajesh.

நேற்றெழுதிய பாடல் கேசவ்வின் படத்திற்கு

மாலன் மடிதனில் மாறாத புன்னகையில்
ஆழ உறங்கும் அழகியலே – காலமும்
கண்ணன் மடியினில் கண் துஞ்ச நீயுந்தான்
என்னதவம் செய்தாய் இயம்பு..

https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xtp1/v/t1.0-9/12118757_10204808136178475_89812769341759506_n.jpg ?oh=f7faef60988a0d04e2d0339a4331fcf7&oe=56C85BAE&__gda__=1452565912_a3185907b75d2d8bb9b795465ed2139 5

கண்ணன் வருவான் கதை சொல்லுவான்..


https://youtu.be/P-p0zdfAUXg

chinnakkannan
13th October 2015, 12:29 PM
சரி மக்கள் பிஸியாக இருக்காங்க போல..ஸோ...

ஜூலி அறிமுகமான முதல் படம் பருவ ராகம் ..கன்னட நடிகர் ரவிச்சந்திரனின் ஜோடியாய் வந்து பின்னர் ஹிந்தியில் ஜூஹி சாவ்லா என பெயர் மாற்றி பல படங்களில் நடித்தவர்..

முதல் படத்தின் அழகே தனி.. நிறைய நல்ல பாடல்கள்.. ஒரு மின்னல் போல் என் முன்னால் போவதுயாரு.. அப்புறம் பூவே உன்னை நேசித்தேன்..

பூ.உ. நே திடீர்னு நினைவுக்கு வந்து தலைக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது


பூவே உன்னை நேசித்தேன்
பூக்கள் கொண்டு பூஜித்தேன்
கண்ணில் பாட்ம வாசித்தேன்
காதல் வேண்டும் யாசித்தேன்
சொல்லத்தான் வார்த்தை இல்லை கண்ணே
உள்ளத்தில் ஓசை இல்லை
ஊமைக்கு பாஷை இல்லை
கண்மணியே மெளனம் தானே தொல்லை..

நீயா என்னை நேசித்தாய் பூக்கள் கொண்டு பூசித்தாய்
உண்மை சொல்ல யோசித்தாய் கோழை போல யாசித்தா
ஏன் கண்ணா மீசை மேலே ஆசை

ஆணென்றால் வீரம்வேண்டும்
ஆண்மையினால் பெண்மை வெல்ல வேண்டும்

நல்ல பாட்..ஈவ்னிங்க் போய் பாக்கணும்.. :) பக்கெட்ல பழைய போட்டோ கொடுத்தா தேவலை :)

https://youtu.be/QxNz4rLPx9g

ஹம்ஸ லேகா எஸ்பிபி.. எஸ் ஜானகி..

vasudevan31355
13th October 2015, 01:16 PM
//சரி மக்கள் பிஸியாக இருக்காங்க போல//

ஆமா! காலையில இருந்து நடிகர் திலகம் திரியில் நடுவில் நின்னு போய் இருந்த சண்டைக் காட்சி தொடரை மறுபடி எழுதி தொடங்கியாச்சு. அதான் வர முடியல.

vasudevan31355
13th October 2015, 01:42 PM
சின்னா!

இந்தாங்க ராஜ் ராஜ் சார் பாணியில் ஒரு ஜுகல் பந்தி.

'chhod do aanchal zamaana kya kahega
o o o, chhod do aanchal zamaana kya kahega
haa haa haa, in adaaon ka zamaana bhi hai deevaana
deevaana kya kahega
haa haa haa, chhod do aanchal zamaana kya kahega'

'பேயிங் கெஸ்ட்' என்ற 1957ம் ஆண்டின் நெஞ்சமெல்லாம் நிறைந்த வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல். நூடன், தேவ் ஜோடி தூள் கிளப்பும் பாடல். கிஷோரும், ஆஷாவும் பாடும் முறை அப்படியே சொக்க வைத்து விடும். தேவின் கைவீசாத ஓட்டம் சிரிப்பை வரவழைத்தாலும் வித்தியாச ஸ்டைல். எஸ்.டி.பர்மன் பற்றி சொல்ல வார்த்தைகள் வரவில்லை. ஆஷா குரல்....சான்சே இல்லை. அலுப்பு என்பதே அண்டாத பாடல்.


https://youtu.be/SuMgYRG3vPU

இதே மெட்டை தமிழில் தேவர் பிலிம்ஸ் 'செங்கோட்டை சிங்கம்' படத்தில் காப்பி அடித்திருப்பார்கள். (ரைட்ஸு க்கு காசு தந்திருப்பர்களா?:smile:) டி.எம்.எஸ் அவர்களும், இந்தி மெட்டுக்களை தமிழில் பாடுவதற்கென்றே உருவெடுத்த கிருஷ்ணவேணியும்,

'ஆஹாஹா! ஆசை தீர ஆடலாமே ஊஞ்சல் மேலே'

பாடல் ஒன்றை பாடுவார்கள். நன்றாக இருந்தாலும் இந்தி ஒரிஜினலிடம் தாக்குப் பிடிக்காது. அது அதுதான்.

தமிழில் டி.எம்.எஸ்

'அடிக் கண்ணு
நாமினி ஒண்ணு'

என்று பாடும் போது என்னையறியாமல் சிரிப்பு வருகிறது.:smile: ஏன்?

அபிநய சரஸ்வதியும், கன்னட உதயகுமாரும் (எவ்வளவு அகலமான முகம்!)ஜோடி சேர்ந்து பாடும் பாடல் இது. சரோவின் சேலை பற்றி ஏதாவது கூறி நான் வம்பில் மாட்ட விரும்பலை. அதுக்கெல்லாம் சின்னாதான் சரிப்பட்டு வருவார். சரோ சரோன்னு 10 வீடியோவை தொடர்ந்து பார்க்கும் சக்தியும், தெம்பும் அவருக்கு உண்டு.:smile: விடு ஜூட்.


https://youtu.be/Z5naDq-k9ts

vasudevan31355
13th October 2015, 01:43 PM
சின்னா!

'பருவ ராகம்' படப் பாடல்கள் அத்தனையும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனா படம் போர்.

chinnakkannan
13th October 2015, 01:58 PM
Vasu. Thanks for the jugal banthi. வீட் போய் கேக்கறேன்..ஆமாம்.பருவராகம் பார்த்தது எங்கு தெரியுமா.சிவகாசியில்..! படம் போர் என்றெல்லாம் சொல்லப் படாது..செம போர்..!

chinnakkannan
13th October 2015, 02:01 PM
ராணி லலிதாங்கி எல்லாம் நான் பார்த்ததில்லை வாசு..எப்படி இருக்கும்..

JamesFague
13th October 2015, 02:28 PM
Paruva Ragam Padathai yarukkuga parthargal enbathu parthavargallkku theriyum.

vasudevan31355
13th October 2015, 02:29 PM
ராணி லலிதாங்கி எல்லாம் நான் பார்த்ததில்லை வாசு..எப்படி இருக்கும்..

இந்தாங்க சாம்பிளுக்கு ஒன்னு தாரேன். பார்த்துட்டு பார்க்கலாமா வேணாமான்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க. பார்த்து சின்னா! ஆண்டவரின் தாண்டவத்தில் உங்கள் மஸ்கட்டே ஆட்டம் காண வாய்ப்புண்டு. கவனம்.


https://youtu.be/T8uX0hsestI

vasudevan31355
13th October 2015, 02:59 PM
மதுண்ணா!

இந்தக் கூத்தைப் பாருங்கள்.

'துணிந்து நில்... தொடர்ந்து செல்'

யூ டியூபில் 'பால்குடம்' டைட்டிலில் பாடல் பெயருடன் ராஜன் பிரேமில் தெரிய ரொம்ப சந்தோஷப்பட்டேன். 'அப்பாடி! ரொம்ப நாள் ஆசை நிறைவேறிப் போச்சு' அப்படின்னு உள்ளே போய்ப் பார்த்தா 'வீட்டு மாப்பிளை' படத்தில் ராஜன், தேங்காய் கோஷ்டி இரவு 'பாரா உஷார்' கத்தி 'உலகம் உறங்கும் வேளை' பாடி ஊரைக் காத்து வருமே...அந்தப் பாடலின் காட்சியப் போட்டுவிட்டு ஆடியோவை நீக்கிவிட்டு 'பால்குடம்' ஆடியோவை துணிந்து ('துணிந்து நில்.... தொடர்ந்து செல்') அதில் சேர்த்து விட்டார்கள். இதைத்தான் 'துணிந்து நில்' அப்படின்னு பாடி வச்சாங்களோ.:) தொடர்ந்து சென்றது தப்பா போச்சே.:)

செம ஏமாற்றம். சின்னா மாதிரி 'என்னத்த சொல்ல!'

நீங்களே பாருங்க.


https://youtu.be/j7vWRItBMtk

madhu
13th October 2015, 03:42 PM
வாசு ஜி...

நான் முன்னாலேயே பார்த்து ஏமாந்தாச்சு.. அதான் முதலிலேயே பாடல் மட்டுமே பால்குடம். காட்சி அல்ல என்று புகை, டாஸ்மாக் ரேஞ்சுல சொல்லிட்டாங்களே.... விட்டுத் தள்ளுங்க.

madhu
13th October 2015, 03:46 PM
எனக்கு மட்டும் இந்த ஆடியோவையும் வீடியோவையும் ஒட்ட வைக்கத் தெரிஞ்சா படத்தில் இடம் பெறாத பாடல்களுக்கெல்லாம் வீடியோ ரெடி செஞ்சு சிக்காவை கதற வைப்பேன்.. ( ஹி.. ஹி.. விஜயகுமாரி வீடியோ நிறைய இருக்குதாமே )

என்ன செய்வது ? செய்யணும்னு மட்டும்தான் தோண்றது ? ஆனா எப்படி செய்யணும்னு தோணலியே !

vasudevan31355
13th October 2015, 06:25 PM
//( ஹி.. ஹி.. விஜயகுமாரி வீடியோ நிறைய இருக்குதாமே )//

ஹய்யய்யோ.... நான் இல்லே மாட்டுவேன்.:) வேணாம் இந்த விபரீத விளையாட்டு.

vasudevan31355
13th October 2015, 06:52 PM
சினிமாவில் நாடகம்.

ஹோட்டல் தொழிலாளர் சங்க ஆண்டு விழாவில் முத்துராமன் தயவில் ஆடும் நாகேஷும், ஜெய்குமாரியும். முத்துராமன் கற்பனையில் ஜெய்குமாரிக்குப் பதிலாக ஜெயந்தி வந்து பாடல் முழுக்க ஆடுவார். குமாரி சொற்ப நேரமே ஆடுவார். என்ன ஒரு குறை..... ஸ்க்ரீன் விலக்கி இருவரும் ஸ்டேஜில் ஆடுவதை முத்துராமன் பார்ப்பதைத் தவிர வேறு யாரும் பார்க்க மாட்டார்கள். முத்துராமன் சம்பந்தமே இல்லாமல் ஓரிடத்தில் நின்று நாட்டியத்தைப் பார்க்காமலேயே ரசித்துச் சிரித்து தனி ஷாட்டாக நடித்துக் கொடுத்திருப்பார்.

என்னாம்மா பொன்னம்மா
பக்கம் வாம்மா வாம்மா
பன்னீரும் வெந்நீராய் சுட்டதோடியம்மா

முந்தாநாள் மந்தாரைச்செடி ஓரம் ஓரம்
வந்தேனே சொல்லாமல் அந்தி நேரம் நேரம்

நாகேஷ் குச்சிக்கு முன் ஜெயந்தி ஆலமரமாகத் தெரிவார்.:) நடுவில் ஜெயகுமாரி முதுகை வில்லாக வளைப்பார்.

'எதிர்நீச்சல்' படத்துக்கு இசை குமார் என்றாலும் முன்னமேயே இந்தப் பாடலுக்கு எம்.எஸ்.வி இசை அமைத்துக் கொடுத்து விட்டதால் அதை மறக்காமல் டைட்டிலில் போடுவார்கள். அதனால் இந்தப் படத்திகும் 'மெல்லிசை மன்ன'ரின் பங்கு உண்டு.

பாடலை இயற்றியவர் ஜியின் பிரியப்பட்ட வாலி. பாடல் ஜாலி.


https://youtu.be/afA6BQIVHYo

vasudevan31355
13th October 2015, 07:08 PM
எனக்கு மிக மிகப் பிடித்த பாடல் இது.

'என்னடி மீனாட்சி' படத்தில்.

வாணி 'வார்ரே வா' என்று ஆனந்தக் கூப்பாடு போட வைப்பார்.

அப்புறம் மொழு மொழு ஸ்ரீப்ரியா.

சங்கர் கணேஷ் இரட்டையரின் மிரட்டும் இசை. கிடார் கொப்புளிக்கும்.

எல்லாம் ஒன்று சேர்ந்து அமர்க்களமாய் அமைந்த பாடல் இது.

ஸ்ரீப்ரியா பாப் தலைமுடி சகிதம் பச்சை வண்ண ஆடையில் ஆடுவார். உடன் அம்ஜத்கானின் நகல் அம்ஜத்குமார் வேறு ஆட்டம். பாதிப் பாடலுக்குப் பின் சிகப்பு ஆடைக்கு மாறுவார் ஸ்ரீப்ரியா.

'ஹோ மஞ்சள் வண்ண ரோஜா
தனி மஞ்சம் போடு ராஜா
நான் வஞ்சி என்ற எண்ணம் இல்லையோ'..

'ஹோ'வை என்னமாய் இழுக்கிறார் வாணி. அடேயப்பா!


https://youtu.be/CjVhSSylfLk

adiram
13th October 2015, 07:25 PM
“நடப்பது சுகமென நடத்து”

டியர் வாசு சார்,

இந்தப்பாடல் பற்றிய தங்கள் ஆய்வுக்கு போவதற்கு முன், முரசு தொலைக்காட்சிக்கு நன்றி. இப்படத்தின் எல்லா பாடல்களையும் ( இது போன்ற பல்வேறு படங்களின் அபூர்வ பாடல்களையும்) அடிக்கடி ஒளிபரப்பி, 'இப்படியும் அருமையான பாடல்கள் தமிழ்படங்களில் வந்துள்ளன' என்பதை மக்களுக்கு காண்பித்து வருவதற்காக.

முன்னமும் சேனல்கள் பாடல்களை ஒளிபரப்பினர். ஆனால் அவைகளைபொருத்தவரை ‘மூன்று தெய்வங்கள்’ படத்தில் ஒரேஒரு பாடல்தான். அது “வசந்தத்தில் ஓர் நாள்” மட்டும்தான் என்று கடிவாளம் கட்டிய குதிரைகளாக இருந்துவந்தனர். வருஷத்துக்கு ஒருமுறை தீபாவளிக்கு மட்டும் “தாயெனும் செல்வங்கள்” பாடலை தேடிஎடுத்து ஒளிபரப்புவர். மற்ற பாடல்கள் அம்போ.

ஆனால் தற்போது முரசு தொலைக்காட்சியில் இப்படத்தின் எல்லா பாடல்களையும் அடிக்கடி பார்க்க முடிகிறது. அவற்றில் ராட்சசி கலக்கியிருக்கும் “நீயொரு செல்லப்பிள்ளை” பாடலில் (சரணம் மெட்டு அட்டகாசம்) சிவகுமார், சந்திரகலா காதலை விட நான் ரசிப்பது வெண்ணிற ஆடை மூர்த்தியின் சேட்டைகளையே.

தற்போது நீங்கள் ஆய்ந்திருக்கும் “நடப்பது சுகமென நடத்து” பாடல் செம்மையான பாடல். மூவரும் நன்றாக என்ஜாய் பண்ணி ஆடியிருப்பார்கள். சொன்னால் நம்பவே மாட்டீர்கள். இந்த பாடலை உங்களை ஆய்வு செய்யச்சொல்ல வேண்டுமென்று நினைத்தேன். நீங்கள் உங்களை ரொம்ப வருத்திக்கொள்வீர்கள் என்பதால் கோரிக்கையை கைவிட்டேன். இப்போது சொலாமலே உங்களை வருத்திக்கொண்டுள்ளீர்கள்..

ஆய்வு படு சூப்பர். அழகாக, அருமையாக, அற்புதமாக, அட்டகாசமாக அமைந்துள்ளது. வழக்கம்போல ஆழ்ந்த, கூர்ந்த கவனிப்பு. பாலு, சாய்பாபா குரல் மாற்றத்தை நானும் கவனித்ததுண்டு. (இதேபோல ‘மாட்டுக்கார வேலன்’ படத்தின் “பூவைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா”' பாடலில் ஜெயலலிதாவுக்கு சுசீலாவும், லக்ஷ்மிக்கு ஈஸ்வரியும் பாடியிருப்பார்கள். ஆனால் ஒரு பல்லவியில் சுசீலாவின் குரலுக்கு லக்ஷ்மி வாயசைத்துக் கொண்டிருப்பார்.).

‘நடப்பது சுகமென நடத்து’ பாடலில் மூவரும் அருமையாக செய்திருந்தாலும் நம்ம தலைவர் ரொம்ப டாப். சிறிய பொம்மை சாக்சபோனைக்கூட எவ்வளவு சிரத்தையாக பாவத்தோடு வாசிப்பார்.

இன்னொரு சர்ப்ரைஸ் நாகேஷை விட முத்துராமன் நன்றாக ஆடியிருப்பார். பெரும்பாலான படங்களின் பாடல் காட்சிகளில் அட்டென்ஷன் பொசிஷனில் நிற்கும் முத்துவா இந்த அளவுக்கு ஸ்டைல் நடை போட்டிருக்கிறார் என்று ஆச்சரியப்படுவோம். முகத்தில் சிரிப்பும் அப்படியே. இப்பாடலில் நாகேஷுக்கு மூன்றாவது இடமே.

பார்க், பீச் என்று போகாமல் சூப்பரான லொக்கேஷன் செலக்ட் பண்ணியிருப்பார்கள். படத்தின் முதல் விளம்பரமே இந்த பாடல் காட்சியுடன் கூடிய கேள்விக்குறி விளம்பரம்தான் (நண்பர் செந்தில்வேல் அழகாக தந்துள்ளார். அவருக்கு நன்றி).

தொடரை தொடருங்கள். நடப்பது அனைத்தும் சுகமென நடத்துங்கள்.
வாழ்த்துக்கள்.

RAGHAVENDRA
13th October 2015, 07:29 PM
https://www.youtube.com/watch?v=KhDBxLbcmfQ

வாசு சார்
இது நேரடி நாடகக்காட்சி என சொல்ல முடியாவிட்டாலும் படத்தில் ஏதாவது ஒரு விஷயத்தை விளக்குவதற்கு வீட்டில் உள்ளவர்கள் குழந்தைகளோடு சேர்ந்து ஆடிப்பாடி நாடகமாடுவதாக வரும் சூழ்நிலை. இதுவும் பல படங்களில் வந்துள்ளது.

இன்னோர் உதாரணம், பாமா விஜயம் வரவு எட்டணா. பொதுவாக பாலச்சந்தர் படங்களில் இந்த உத்தி அடிக்கடி வரும்.

madhu
13th October 2015, 07:34 PM
வாசுஜி..

சக்கரப் பாட்டு சிக்கலியே... யோசிப்போம்

ராகவ்ஜி... எனக்கு அந்த நவாப் பாட்டு பிடிக்கும்.. கசின்ஸ் எல்லாருமாக சேர்ந்து ஊரிலிருந்த எங்க வீட்டு நாற்காலியின் மெத்தையைக் கிழித்து உள்ளே ரூபாய் இருக்கிறதா என்று பார்க்கவும் துணிந்த காலம் உண்டு.

vasudevan31355
13th October 2015, 08:48 PM
'ராஜா நவாபு மகராஜா'

அந்த கோரஸ் கும்மாளம்.

ராகவேந்திரன் சார்தான் மகராஜா.


பாடல்களின் மகாராணி எங்க ராட்சஸி பாடும் இன்னொரு பாடலும் அருமைதானே!

ஏண்டி கண்ணா அதிசயமா
எங்கே போறே ரகசியமா
உன்னைப் புரியாதா
ஒளிஞ்சாத் தெரியாதா
எங்கே மறைந்தாலும்
அங்கே வருவேன் நான்

அந்த

'கள்ளனகை புரிவதென்ன
ஹே ஹேய்'

ஓஹோ! ஓஹோ!

இன்னொருமுறை இதே பாடல் சற்று மாற்றத்தோடு

ஏம்மா கண்ணு அதிசயமா
எங்கே போறே ரகசியமா
உன்னைப் புரியாதா
ஒளிஞ்சாத் தெரியாதா
எங்கே மறைந்தாலும்
அங்கே வருவேன் நான்

ரெண்டுபடும் பாடல். ரெண்டுபடுத்தும் பாடல்.

'மன்மதனை அறிவாயோ
அவன் மறைவதும் அறிவாயோ'

எங்கள் ராட்சஸியின் திறமையை அறிவாயோ!

chinnakkannan
13th October 2015, 09:19 PM
என்னமோ போங்க - 28

சிலநேரம் நின்றாலும் சிந்தை நிரப்பும்
இளமையின் காலமன் றோ..

என்ன தான் சொல்லுங்கள்..ஒரு முறை தான் வரும் கதை சொல்லக் கூடும் உல்லாசம் உற்சாகம் காட்டும்
இளமை டாண்டாண்டா டடடான்ன ந்னு ஒரு பாட்டு..அதுகரீட்டு தான் இல்லியோ..

இங்க பாருங்க இந்த செயந்தியம்மா இளமை முடியும் முடியட்டும் இருவர் கதையும் தொடரட்டும்னு பாடறாங்க..


இமைகள் இரண்டும்குடை பிடிக்கும்
இரு விழி மெதுவாய் நடை நடக்கும்
பருவம் என்னும் படைகொடுக்கும்
பகலுக்கும் இரவுக்கும் விடை கொடுக்கும் ( கொஞ்சம் புரியலைம்மா.. ஈவ்னிங்க் தான் மீட் பண்ணனுமா என்ன)

கன்னீ ஈ இதழில் தேனிருக்கும்
கண்ணின் விழியில் மீனிருக்கும் ( அப்படியாம்மா)

அன்னம் கூட நானிருக்கும்
அழகைப் பார்த்தால் ஏனிருக்கும் ( நன்னாக் கேட்டம்மா ஒரு கொஸ்ட்டீன்)

பருவம் போகும் போகட்டும்
பழகிய நெஞ்சம் பழகட்டும் ( கொஞ்சம்கஷ்டம் தாம்மா)

நாளை...ஈ என்பது கிடக்கட்டும்
நடக்கும் வரைய்யில் நடக்கட்டும்ம்ம்ம்
நடந்தது கனவாய்ப் போகட்டும்
நடப்பது நலமாய் ஆகட்டும் ( ஆஹா என்னா ஒரு நல்லமனசும்மா ஒனக்கு..அந்தமோதிரத்தை என்ன பண்ணினே)

ஜெயந்தி நன்னாயிட்டே ஆடறாங்க..முத்துராமன் வேற..அழகான இசை..

ம்ம் நினைப்பது நிறைவேறும் படத்தோட டைட்டில்..ஸாரி டைப்போ.. நினைப்பதற்கு நேரமில்லையாம்..யாருக்கு ...யாருக்கோ..என்னமோ போங்க..


https://youtu.be/haB324oJSN4

rajeshkrv
13th October 2015, 09:39 PM
vanakkam Ji

chinnakkannan
13th October 2015, 09:40 PM
//அதுக்கெல்லாம் சின்னாதான் சரிப்பட்டு வருவார். சரோ சரோன்னு 10 வீடியோவை தொடர்ந்து பார்க்கும் சக்தியும், தெம்பும் அவருக்கு உண்டு. விடு ஜூட். // ஓய்.. நான் எங்கங்காணும் பார்த்தேன்.. ஏற்கெனவே டயட்ல இருக்கற்தால டயர்டா வேற இருக்கேன் ஹா..ஆ..ஆவ்... :)

இருந்தாலும் சோட் தோ ஆன்சல் ஸமானா க்யா கஹேகா - என் ஸ்கார்பைக் கொடு சுட்டிப்பையா உலகம் என்ன நினைக்கும்
ஹாஹா இன்னதோ கா ஸமானா பீஹை தீவானா - இந்த உலகமும் உன் விசிறி தான் இவளே

பாட் கொடுத்தமைக்கு நன்றி..செங்க் சிங்க் பாட்டிற்கும் நன்றி..;

//எனக்கு மட்டும் இந்த ஆடியோவையும் வீடியோவையும் ஒட்ட வைக்கத் தெரிஞ்சா படத்தில் இடம் பெறாத பாடல்களுக்கெல்லாம் வீடியோ ரெடி செஞ்சு சிக்காவை கதற வைப்பேன்..// என்ன ஒரு ஆசை மதுண்ணா :) நோ ப்ராப்ளம்.. இப்பல்லாம் கண்ணி நுன் சிறுத்தாம்பு சொல்லி தைரியம் வரவழைச்சுக்கிடுவேன்.. :)

chinnakkannan
13th October 2015, 09:42 PM
Paruva Ragam Padathai yarukkuga parthargal enbathu parthavargallkku theriyum.

எனக்கு அதெல்லாம் தெரியாமத் தான் பார்த்தேன் எஸ்.வாசு ஜி..

அப்புறம் ராஜேஷ் ஜி..வாங்கோ

RAGHAVENDRA
13th October 2015, 09:49 PM
எனக்கு அதெல்லாம் தெரியாமத் தான் பார்த்தேன் எஸ்.வாசு ஜி..

சி.க. சார்...

http://media.giphy.com/media/KaIEW4XAoOti0/giphy-facebook_s.jpg

இது தானே வேணாங்கறது...

RAGHAVENDRA
13th October 2015, 09:56 PM
http://www.thestonefoundation.com/wp-content/uploads/2012/06/batna.jpg

முதல் மரியாதை யாருக்கு...

நடிகர் திலக்ததிற்கா அல்லது தேவர் மகனுக்கா...

தூள் பறக்கும் விவாதம்..

தேடிப் பாருங்க....படியுங்க..

chinnakkannan
13th October 2015, 10:14 PM
இந்தாங்க சாம்பிளுக்கு ஒன்னு தாரேன். பார்த்துட்டு பார்க்கலாமா வேணாமான்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க. பார்த்து சின்னா! ஆண்டவரின் தாண்டவத்தில் உங்கள் மஸ்கட்டே ஆட்டம் காண வாய்ப்புண்டு. கவனம்.



வாஸ்ஸூ.. இப்ப தான் பார்த்து முடித்தேன்..வெகுசுவாரஸ்யமான காட்சியைக் கொடுத்து முழுப் படத்தையும் பார்க்கும் ஆவலைத் தூண்டி விட்டு விட்டீர்கள்.. என்னா ஆட்டம்..அஷ்டாவதானி ரோல் பானுமதிக்கு ஓ.கே தான் நடனம் தான் இடையில்லாமல் இடைவெளிவிடாமல் ஆடினாலும்.. ந.தியின் ஆட்டம் வெரி நைஸ்.. தாங்க்ஸ் அகெய்ன் ஃபார் த நைஸ் வீடியோ..

chinnakkannan
13th October 2015, 10:19 PM
சி.க. சார்...



இது தானே வேணாங்கறது... யூ டூ ராகவேந்திரர் சார்.. :)


கால்வண்ணம் கொண்டுமனம் சென்றகாலம் போனது
...கவிதைவழி கன்னிவிழி பார்த்தகாலம் போனது
ஆள்வண்ணம் அழகுயெண்ணி நின்றகாலம் போனது
..அமுதமொழி எண்ணியெண்ணி நின்ற காலம் போனது
மால்வண்ணம் முதுமையது வந்துவந்து மயக்குது
..மங்கையரை நினைக்கையிலே வெறுப்புவந்து விலக்குது
பால்வண்ணம் சின்னகண்ணன் நெஞ்சமெனத் தெரியுமா
..பாட்டுமட்டும் கொஞ்சகொஞ்சம் ரசிப்பேனெனப் புரியுமா :sad:

rajeshkrv
13th October 2015, 10:45 PM
rani lalithangi -- a nice movie.. idhula Vaijyanthimala, padmini ellam undu ..
vaijyanthi mala thaan jodi .. rani lalithangi agambavam one side love
padmini i guess T.Sbalaiah jodi ..

padam nallathaan irukkum

RAGHAVENDRA
14th October 2015, 12:33 AM
யூ டூ ராகவேந்திரர் சார்..

கால்வண்ணம் கொண்டுமனம் சென்றகாலம் போனது
...கவிதைவழி கன்னிவிழி பார்த்தகாலம் போனது
ஆள்வண்ணம் அழகுயெண்ணி நின்றகாலம் போனது
..அமுதமொழி எண்ணியெண்ணி நின்ற காலம் போனது
மால்வண்ணம் முதுமையது வந்துவந்து மயக்குது
..மங்கையரை நினைக்கையிலே வெறுப்புவந்து விலக்குது
பால்வண்ணம் சின்னகண்ணன் நெஞ்சமெனத் தெரியுமா
..பாட்டுமட்டும் கொஞ்சகொஞ்சம் ரசிப்பேனெனப் புரியுமா

நம்பிவி்ட்டேன் நாயகரே வெம்ப வேண்டாம் மனதில்
தும்பிக்கை நாயகரைத் துணையாய்க் கொண்டோரே
எல்லாமே நாடகமாய் என்னாளும் நடிக்கையிலே
ஏதேனும் வடிகாலில் ஓடட்டும் விழிநீரே
என்பதுவே தாத்பர்யம் இதுவே நம் ஐஸ்வர்யம்
இதிலேதும் தவறில்லை இயல்பாகக் கொள்வீரே...

madhu
14th October 2015, 06:30 AM
இன்னாபா இது ? அல்லாரும் இன்னாமோ பாஷையில பாட்டு கட்டினுகீறாங்க.. ஒண்ணும் பிரிலேபா !

RAGHAVENDRA
14th October 2015, 06:42 AM
rani lalithangi -- a nice movie.. idhula Vaijyanthimala, padmini ellam undu ..
vaijyanthi mala thaan jodi .. rani lalithangi agambavam one side love
padmini i guess T.Sbalaiah jodi ..

padam nallathaan irukkum

அது ராஜபக்தி ராஜேஷ்...

அதில் அகம்பாவம் பிடித்தவராக நடித்தது பானுமதி

vasudevan31355
14th October 2015, 07:08 AM
அது ராஜபக்தி ராஜேஷ்...

அதில் அகம்பாவம் பிடித்தவராக நடித்தது பானுமதி

மதாலஸா.

rajeshkrv
14th October 2015, 07:55 AM
மதாலஸா.

yes yes. naan sollavandhathu banumathi agambavamaga

oru korvaila seriya ezhuthala

mannikkavaum

thanks for the correction

rajeshkrv
14th October 2015, 07:55 AM
adhula thaan DEvika pradhana thozhi for Banumathi

rajeshkrv
14th October 2015, 08:02 AM
ஜி

வைராக்கியம் மற்றும் பணக்கார பிள்ளை பார்த்தேன்

வைராக்கியத்தில் ராட்சசியின் ஒரு பாடல் சூப்பர்

இரண்டு படத்திலுமே ஜோதிலெட்சுமி ஹீரோயின்
அதிலும் பணக்கார பிள்ளையில் அம்முவைவிட அதிகம் நேரம் வருகிறர். அழகாகவும் இருக்கிறார்

RAGHAVENDRA
14th October 2015, 08:15 AM
இணையத்தில் முதன்முறையாக பால்குடம் படத்தின் ஸ்டில்...

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xta1/v/t1.0-9/12079565_991711094212896_1328354668463309384_n.jpg ?oh=82e6f78d453681a74197c13694c3be77&oe=56CEC38F

வாசு சார், மது சார், பால் குடம் படத்தின் வீடியோவைப் பார்க்காத குறையை இதைப் பார்த்து ஓரளவு திருப்திப் பட்டுக்கொள்ள வேண்டியதுதான்



https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/11217174_991712114212794_4950255860067039241_n.jpg ?oh=678a4b55d4e7b87e942bba2425fe70bb&oe=56C7FF18

இணையத்தில் முதன் முறையாக காதல் பறவை படத்தின் ஸ்டில்



https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xat1/v/t1.0-9/12115882_991711747546164_5002034090452819533_n.jpg ?oh=20a4a9ecba97f28d515ccf37d5c6ba18&oe=56CDE881

இணையத்தில் முதன்முறையாக சிங்கப்பூர் சீமான் படத்தின் ஸ்டில்

vasudevan31355
14th October 2015, 08:40 AM
ஜி!

இந்தாங்க. 'ராணி லலிதாங்கி' படத்தில் பானுமதியின் தோழி தேவிகா. முகம் ரொம்ப அகலமாகத் தெரியும்.

http://i57.tinypic.com/izx8gy.jpg

RAGHAVENDRA
14th October 2015, 08:45 AM
ஜி!

இந்தாங்க. 'ராணி லலிதாங்கி' படத்தில் பானுமதியின் தோழி தேவிகா. முகம் ரொம்ப அகலமாகத் தெரியும்.



டைட்டிலில் பிரமிளா என்று இடம் பெற்றிருக்கும்

rajeshkrv
14th October 2015, 08:48 AM
yes pramilannu than irukkum. probably idhu thaan mudhal padamo ??

rajeshkrv
14th October 2015, 08:53 AM
இசையரசி இசைத்த கீதங்கள் – 7

அருமையான கன்னட பாடல்
சமஷய பலா என்ற திரையில் சலீல் செளத்ரியின் இசையில் இசையரசியின் குரல்

சோகமும் கூட இசையரசியின் குரலில் சுகமே

https://www.youtube.com/watch?v=uBMx4XbN1l0

vasudevan31355
14th October 2015, 09:17 AM
ஜி

வைராக்கியம் மற்றும் பணக்கார பிள்ளை பார்த்தேன்

வைராக்கியத்தில் ராட்சசியின் ஒரு பாடல் சூப்பர்



ஜி!

'தேருக்கு சேலை கட்டித் தெருவில் விட்டா
யாருக்கும் ஆசை வரும் பார்வை பட்டா'

நிர்மலா கழைக்கூத்தாடியா ஆடுவார். இந்தப் பாடலைத்தான் நீங்கள் ரசித்திருக்கக் கூடும்.

'ஏண்டா மனுஷன் ஏய்க்கிறான்' ஜோதி,நிர்மலா கூட்டு. (ஜோதிக்கு இடை அப்படின்னு ஒன்னு இருக்கா இல்லையா):)

(பாலக் கறக்குறான் சர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... சர்ர்ர்ர்ர்ர்ர்ர்)

ராட்சஸியா கொக்கான்னானம். சூப்பர் ஜி.


https://youtu.be/JxwE-QB2020

அப்புறம் ஜெமினி நிர்மலா டூயட் ஒன்னு.

'சொல்லத் துடிப்பது என்ன
மெல்லச் சிரிப்பது என்ன'

டி.எம்.எஸ், ராட்சஸி இணைவில் டூயட்.


https://youtu.be/WVi4l_UnGNo

அப்புறம் சினிமாவில் டிராமா.

வி.கோபாலகிருஷ்ணன் பாடும் பாட்டு ஒன்னு. இதுல இன்னொரு ஸ்பெஷல் இருக்கு.

'மதுவை எடுத்து கொஞ்சம் ஊற்று'

நாகேஷ் வந்து,

'கட்டப்பா... எட்டப்பா' என்று கிளப்புவார்.

எஸ்.எம்.எஸ்.பாணி அப்படியே தெரியும்.

இன்னொரு பாட்டும் ராட்சஸிக்கே.

'முனா
த்தன்னா
தனா
ம்மன்னா

வேண்டுமா மாமா ஹேய்':)

ஜோதி கிளப் டான்ஸ். தூள்.

vasudevan31355
14th October 2015, 09:17 AM
டைட்டிலில் பிரமிளா என்று இடம் பெற்றிருக்கும்

correct

RAGHAVENDRA
14th October 2015, 09:24 AM
வைராக்கியம் டீச்சரம்மா படங்கள் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் வந்தது என நினைவு. இரண்டு படங்களின் பாடல்களும் அடிக்கடி ரேடியோவில் அடுத்தடுத்து சொல்லி வைத்தாற்போல ஒலிபரப்புவார்கள். இந்தக் குழப்பத்தினால் டீச்சரம்மா படத்தில் இடம் பெற்ற வானத்தைக் கடவுள் பாட்டு சில சமயம் அறிவிப்பாளர்களே வைராக்கியம் என சொல்லி விடுவார்கள். பெரும்பாலும் நூற்றுக்குத் தொண்ணூறு சதம் தவறு வராது. ஒரு வேளை ஒரே இசைத்தட்டில் இரு படப்பாடல்களும் இருந்திருக்கலாமோ அல்லது ஒரே தொகுப்பில் அவை இடம் பெற்றிருக்கலாமோ காரணம் தெரியாது.

அப்படி குழப்படிக்கு ஆளான பாட்டுத் தான் இந்த வானத்தைக் கடவுள் பாட்டு. இந்தப் பாட்டின் மெட்டு அப்படியே செந்தூரப்பூவே படத்தில் இடம் பெற்ற சின்னக்கண்ணன் தோட்டத்துப்பூவாக பாட்டாக அமைந்திருக்கும்.

https://www.youtube.com/watch?v=v8frRQPpwYM

செந்தூரப் பூவே பாட்டு

https://www.youtube.com/watch?v=sgtNN2oflUA

rajeshkrv
14th October 2015, 09:40 AM
ஜி

ஆம் ஆம் தேருக்கு சேலை பாட்டு
நிர்மலா கொள்ளை அழகு

ஜோதிக்கு இடை உண்டோ ...
ஆம் சொர் சொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதுவும் தூள்


சொல்லத்துடிப்பது என்ன பாடலும் சூப்பர்.

rajeshkrv
14th October 2015, 09:50 AM
https://www.youtube.com/watch?v=uctnyieq0Bg

rajeshkrv
14th October 2015, 09:59 AM
எனக்கு மிகவும் பிடித்த வானமும் பூமியும் ஆலிங்கனம்

https://www.youtube.com/watch?v=-mW5rQJQyME

vasudevan31355
14th October 2015, 10:13 AM
சினிமாவில் டிராமா

சீதையை சிறையெடுத்த ராவண காஞ்சனா:) (அடையாளமே தெரியாது) அவளைத் தனக்கு இணங்குமாறு வற்புறுத்த, சீதை மறுக்க, ராவணனோ 'தொடாமல் வைத்து தூக்கி வந்தால் மிஞ்சுகிறாய்' என்று மிரட்டி 'இனி பலத்தால் உன்னை அடைவேன்' என்று சபதமிடுகிறா(ள்)ன்.:) நாடகம் பார்க்கும் நம்பியாரிடம் உண்மையில் சீதையின் நிலைதான் படத்தில் காஞ்சுவிற்கும். டைரெக்ஷன் யுத்தியாம். கற்பு பத்தி சீதை உரைக்கையில் நம்பியார் முகம் எப்படி எரிச்சல் அடைகிறது!:)

உடனே ஹனுமான் விஜயம். ஹனுமான் குரங்கு யார் தெரியுமா? 'நடிப்புச் சுடர்'தான்.

அப்புறம் ராவணனை ராஜன் மீட் செய்வது....காஞ்சனா ராவணன் 'யாரடா குரங்கே?' என்று ராட்சஸி குரலில் ராவுவது...

'அடா புடா' என்று ராவணன் தன்னை மரியாதை இல்லாமல் பேசியதால் ஹனுமான்,

'ராமதூதன் என்று அறியாமல் என்னை 'அடா' வென்று அழைக்கத் தொடக்கி'நாய'டா.:)

இந்தா நான் சொல்லும் 'அடா'க்களை எண்ணிக் கொள்.

அடா அடா அடா

அடடா அடடா அடடா

அடடடடா அடடடடா அடடடடா

அடடா! ராஜன் குரங்கு:) அதாவது ஹனுமான் என்னா குத்து குத்துகிறது!:)

'நூறாண்டு காலம் வாழ்க' படத்தில் வரும் ஜோர் ராமாயணம் இது.

ஒரு சமயம் இப்படத்தைப் பற்றி நானும், ராகவேந்திரன் சாரும் அகம் குளிர பேசி மகிழ்ந்திருக்கிறோம். படமும் என்கிட்டே முழுசா இருக்கே.:)


https://youtu.be/fM_rPQug3YY

chinnakkannan
14th October 2015, 10:18 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..

வாவ் ராகவேந்த்ர் சார்.. நைஸ் எண்சீர்..விருத்தத்தில் முக்கால்.. இன்னும் ஒருவரி (இரண்டு வரிகளாய் மடக்கி) எழுதியிருந்தால் முழுமையாகியிருக்கும்..

pinna vaaren



நம்பிவி்ட்டேன் நாயகரே வெம்ப வேண்டாம் மனதில்
தும்பிக்கை நாயகரைத் துணையாய்க் கொண்டோரே
எல்லாமே நாடகமாய் என்னாளும் நடிக்கையிலே
ஏதேனும் வடிகாலில் ஓடட்டும் விழிநீரே
என்பதுவே தாத்பர்யம் இதுவே நம் ஐஸ்வர்யம்
இதிலேதும் தவறில்லை இயல்பாகக் கொள்வீரே...

vasudevan31355
14th October 2015, 10:34 AM
ஜி!

நீங்க வேற ராட்சஸி பத்தி சொல்லி வெறி கிளப்பிட்டீங்க. கூடவே அடிஷனலா நிர்மலாவையும் சேர்த்து விட்டுட்டீங்க. நியாமா? தர்மமா?:) மனசு அங்கேயே நின்னு நகர மாட்டேங்குது.

இந்தப் பாட்டப் பாருங்க. ரெண்டு பேரும் சம்பந்தப்பட்டது. கூட 'மக்கள் கலைஞர்' வேறு.

'ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்'

'உங்களுக்காச்சு எங்களுக்காச்சு பாப்பமா
இந்த பொம்பளை என்ன ஆம்பளைகிட்ட தோப்பமா'

'சோ' வேற 'ஜெய்சங்கர்... ஜெய்சங்கர்' என்று 'ஜெய் ஜெய் ஷிவ் ஷங்கர்' பாட்டை சாக்கா வச்சுகிட்டு நிஜமாகவே மக்கள் கலைஞரை புகழ்வது போல இருக்கும்.

சும்மா 'பாடகர் திலகம்' ஆம்பளையா வரிஞ்சி கட்டிக்கிட்டு வருவாரே பார்க்கலாம்.

'உங்களுக்காச்சு எங்களுக்காச்சு பாப்பமா
இந்த ஆம்பளையெல்லாம் பொம்பளகிட்ட தோப்பமா'

கூட ஆடும் எக்ஸ்ட்ராக்கள் டான்ஸ் சூப்பரோ சூப்பர். இந்தக் கால ஆட்டம் போல இருக்கு.

'ஜுகுஜுகுஜுகுஜூ' என்று ராட்சஸி படா ஜோர்.

நடுவில நடிகர் திலகம், மக்கள் திலகம் வேற மாட்டுவார்கள் மறைமுகமாக.

'குதிர ஏறினா மதுர வீரனா
மீச வச்சவன் கட்டபொம்மனா'

நிர்மலா டிரெஸ் 'சிக்'கோ 'சிக்'. 'பூவா தலையா'வில ரெண்டும் தனியா சண்டை போட்டுக்கும். இதுல குரூப்போட வந்து சண்டை போடுதுங்க. அட சர்தான்...

இன்னா படம்னு சொல்லலியே...'முத்துக்கு முத்தாக' ன்னு கண்டசாலா பாடுவாரே அந்தப் படம்தான்.:)


https://youtu.be/_lOpyPns18s

vasudevan31355
14th October 2015, 10:51 AM
ஹலோ! மன தைரியம் உள்ளவங்க இந்த பார்ட்னர்களைப் பாருங்க. அப்பால நம்மள கொற சொல்லக் கூடாது.

லீலா வினோதம் புரியும் தேங்காய். அந்தபந்தமில்லாமல் தொப்பையும் தொந்தியுமாக. அவர் ஸ்டைலில் கழுத்தொடித்து.

கன்னங்கள் சிவப்பது எதனாலே
கண்களும் துடிப்பது எதனாலே
என்னென்ன நினைப்போ
ஏனிந்த நடிப்போ
உள்ளமே புரியாத பிள்ளைத்தனமோ

மகாபலிபுர கடற்கரையோர சவுக்குத் தோப்பில் சல்லாபக் காதல்.

தேங்காய் பண்ணுவதை காமெடி என்பதா...ஹீரோத்தனம் என்பதா...ஸ்டைல் என்று பொருள் கொள்வதா...கொடுமைடா சாமி.

உடை விஷயத்தில் 'கெட்டிக்காரி' லீலா.:)

மட்டை உரித்த தேங்காயாக 'தேங்காய்' :)

சுசீலா குரலில் பாடல் மட்டும் சுகமே. Hello Partners.... நிறுத்திக்கவா?:)


https://youtu.be/6jCaniwepqM

vasudevan31355
14th October 2015, 11:20 AM
நன்றிகள் ஆயிரம் ஆதிராம் சார். உங்கள் சந்தோஷமே எனக்கு மகிழ்வு. இப்போது போல எப்போதும் 'நாம் வாழ்வோம் மனம் விட்டு சிரித்து' தலைவர் சொன்னது போல.

'பூ வைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா' பாடலில் குரல்கள் மாறி நடிகைகள் வாயசைப்பதை கண்டுபிடித்து அநியாயத்துக்கு ஞாபகம் வைத்து இருக்கிறீர்கள். உண்மைதான். கில்லாடி சார் நீங்கள்.

பாடலின் துவக்கத்தில் பல்லவியில் மேடம் அவர்கள் ஈஸ்வரி குரலுக்கு வாயசைப்பார். அதே பல்லவி திரும்ப லஷ்மிக்கு வரும்போது அவருக்கு சுசீலா அம்மாவின் குரல்.

முதல் சரணத்தில் 'கண்பட்டு...உங்கள் கைபட்டு' லஷ்மிக்கு ஈஸ்வரி குரலில் மாறும். பின் அப்படியே தொடரும்

அடுத்த சரணத்தில் மேடத்துக்கு சுசீலா அம்மாவின் குரல். ('சொன்னால் தெரிவதில்லை எதுவும்... அதை உன்னால் தெரிந்து கொள்ள உதவும்')

பின் வரும் சரணத்தில் 'போடுங்கள்...கூண்டில் ஏற்றுங்கள்' லஷ்மிக்கு ஈஸ்வரி.

அப்புறம் மேடத்துக்கு சுசீலா குரல்தான்.

'நன்றாயிருக்குதிந்த உவமை
இந்த பெண்ணே உந்தன் சொந்த உடமை
இனி எல்லாம் பழகுவது உரிமை'

நடுவில், முடிவில் எல்லாம் கரெக்ட் தான். மேடத்துக்கு சுசீலா. லஷ்மிக்கு ஈஸ்வரி. இதுதான் கணக்கு. ஆரம்பம் மட்டும் மாறி விட்டது.

ஆனால் பாட்டு...அமர்க்களம். நிஜமாகவே கந்தர்வ கானம்தான். சலிக்கவே சலிக்காது.


https://youtu.be/DDAtnADiyGo

chinnakkannan
14th October 2015, 12:34 PM
//ஜி!

இந்தாங்க. 'ராணி லலிதாங்கி' படத்தில் பானுமதியின் தோழி தேவிகா. முகம் ரொம்ப அகலமாகத் தெரியும். // நற நற ம்ம் வீக் எண்ட்ல ராணிலலிதாங்கீ பார்த்தே தீரணும் போல இருக்கே :) யூ ட்யூப்ல ஃபுல் மூவி இருக்கா என்ன

//டைட்டிலில் பிரமிளா என்று இடம் பெற்றிருக்கும்// அதானே .. தேவிக்யூட்டி தேவிகா பத்தி ப் பேச்சு வந்ததேன்னுபார்த்தேன்..

சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னால்..

ஒரு பெரிய கவிஞர் எல்.வைத்தீஸ்வரன் ( கிணற்றில் விழுந்த நிலவைத் தூக்கிவ்டு என்ற கவிதை ரொம்பவே ஃபேமஸ்) சென்னையில் சந்தித்துப் பேசியது நினைவில்..அப்போதே அவருக்கு 60 வயதுக்கு மேல் என நினைக்கிறேன்.. அவர் அவரது இளமைக் காலத்தில் எஸ்.வி.சகஸ்ர நாமம் ட்ரூப்பில் நடித்திருந்தார்.. அவருடன் நடித்த பிரமீளா பற்றி நிறையச் சொன்னார்..அவர் தான் தேவிகாஎனப் பிற்காலத்தில் அறியப்பட்டவர் எனச் சொன்னதும் அனிச்சையாய்க் கைகள் பற்றிக் குலுக்கினேனாக்கும்.. :) எஸ்.வி. சகஸ்ர நாமமும் அவரது நாடக வாழ்க்கை பற்றியபுத்தகத்தில் பிரமீளா என்றே குறிப்பிட்டிருக்கிறார்..ம்ம்

chinnakkannan
14th October 2015, 12:36 PM
ஒரு பாலாஜி படத்தில் கூட அவர் ஜோடியாக ப்ரமீளாவை (பழைய) பார்த்த நினைவு..

vasudevan31355
14th October 2015, 12:53 PM
'கலாட்டா கல்யாணம்'

கலாட்டா மாற்றம்.

http://i.ytimg.com/vi/_E-c7FfPn58/hqdefault.jpg

'கலாட்டா கல்யாணம்' படத்தில் 'எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்' பாடலில் நடிகர் திலகம், ராஜன் இவர்களுக்கு டி.எம்.எஸ்.அவர்களின் குரல். நாகேஷுக்கு அப்படியே நைஸாக வி.கோபாலகிருஷ்ணனுக்கும் சேர்த்து பி.பி.ஸ்ரீனிவாஸின் குரல்.

'பத்துப் பதினாறு பிள்ளைகள் பெறலாமோ'

'ஆணைகளை வெறுத்தாயே'

இதை பி.பி.எஸ் நாகேஷுக்குப் பாடுவார். அப்படியே தொடரும் 'மன்மதன் நான்தானே' வரியை கோபாலகிருஷ்ணனுக்கு சாமர்த்தியமாகத் தந்திருப்பார்கள் அதே பி.பி.எஸ்.குரலில்.

இப்போதான் கொஞ்சம் மாறிவிடும்

'என்னை வாவென்று கூறும் கன்னங்கள்' என்று டி.எம்.எஸ்.அமர்க்களமாக பாட, வாயசைப்பவர் ராஜன். உடனே 'ஒன்று தாவென்று வேண்டும் எண்ணங்கள்' என்று சுசீலாவின் குரலுக்கு வாயசைக்கும் ஜோதி அடுத்த வரியான

'மின்னல் கோலங்கள் போடும் கண்ணென்ன'

பாடும்போது ஈஸ்வரியின் குரலுக்கு வாயசைப்பார். முன் வரியை சுசீலா குரலுக்கு ஜோதியைப் பாட வைத்தவர்கள் அடுத்த வரியை அதே ஜோதிக்கு ஈஸ்வரியின் குரலைத் தவறாகத் தந்தது முரண்தானே! அதுவும் அந்தக் காலக் கட்டத்திற்கு.

மறுபடியும் ஒரு தவறு. திரும்ப பதிலுக்குப் பாடும் ராஜனுக்கு அதே டி.எம்.எஸ் வாய்ஸ்தானே மீண்டும் ஒலித்திருக்க வேண்டும்? அப்படி இல்லாமல் மாறாக பி.பி.எஸ் குரல் ராஜனுக்கு மாறி

'முன்னம் காணாத இன்பம் என்னென்ன'

என்று ஒலிக்கும்.

இது எப்படி?

ஒரே ஜோடிக்கு முதலிரண்டு வரிகளை ஒரு பாடகர்களும், அடுத்த இரண்டு வரிகளை வேறு பாடகர்களும் ரிககார்டிங்கில் பாடியிருக்க முடியாது. அது பாடகர்கள் தவறல்ல. காட்சிப்படுத்தியவர்களின் பிழைதான் இது.

ஒருவேளை

'என்னை வாவென்று கூறும் கன்னங்கள்' டி.எம்.எஸ்.வரிகளை

நடிகர் திலகத்திற்கும்,

'ஒன்று தாவென்று வேண்டும் எண்ணங்கள்' சுசீலா வரிகளை

மேடத்திற்கும்

பிக்ஸ் செய்து இருக்கலாம். அந்த நேரத்தில் அவர்கள் வர இயலாமலும் இருந்திருக்கலாம். அதனால் அந்த வரிகளை ராஜனுக்கும், ஜோதிக்கும் கொடுத்து அட்ஜஸ்ட் பண்ணியுமிருக்கலாம். யார் கண்டது? அப்படியே வைத்துக் கொண்டாலும் அதற்கு முன்னம் வரும் வரிகள் ராஜனுக்கு பாடகர் திலகம் பாடியவையே. அது வேறு இடிக்கிறது. ஒரு வேளை நாகேஷுக்கும், மனோரமாவிற்கும் தர எண்ணியிருந்தாலும் நாகேஷுக்கு பி.பி.எஸ்.குரல் ஓ.கே. மனோரமாவிற்கு முன்னம் பாடியது சுசீலா இல்லையே. ஈஸ்வரிதானே. இங்கும் இடிக்கிறது.

அதே போல ஒருமுறை டவருக்குள் நடக்கும் போது 'நடிகர் திலகம் மிஸ்' ஆகி மற்ற மூவரும் இருப்பார்கள்.

'மாமியார்தான் மையெழுத' எனும்போது நாகேஷ் காணமல் போய் இருப்பார்.

ஒன்று மட்டும் உறுதி. இப்பாடலில் நடித்த அத்தனை நடிகர்களும் அப்போது செம பிஸி. அத்தனை பேருடைய கால்ஷீட்டும் ஒரே சமயத்தில் கிடைத்து பாடலை எடுப்பது என்பது குதிரைக் கொம்பு. அதில் பாதி வெற்றியும் பெற்றிருப்பார் நமது டார்லிங் இயக்குனர். மீதியை அட்ஜஸ்ட் செய்து எடுப்பதைத் தவிர வேறு வழியுமில்லை.

சரி! ஏதோ ஒன்று. பாடல் அருமை. படமாக்கலும் அருமை. இசையும் அருமை. பாடகர்களும் அருமை. நடிகர்களும், நடிகைகளும் அருமை. நடனமும் அருமை. ஒளிப்பதிவும் அருமை. இயக்கமும் அருமை. பொருட்காட்சியும் அருமை. அதைவிட அருமை நடிகர் திலகத்தின் இளமை.

என்ன சரிதானே!


https://youtu.be/ZpDSEwPYu6w

madhu
14th October 2015, 01:11 PM
இப்படி மாத்தி மாத்தி பாடுவதை எழுதினால் எதை எழுதியது யாருன்னே புர்லே ! கலாட்டா கல்யாணம் பத்தி ராகவேஷ் எழுத மாட்டுக்கார வேலன் பற்றி சின்னவாசு எழுதினாரா ? கொஞ்சம் நிதானமா படிக்கணும்...

வாசு ஜி... வைராக்கியம் படப்பாடல்களை யூடியூபில் பழைய பாடல்கள் பதிபவகளிடம் கேட்டு கேட்டு கேட்டு கடேசியா ஒருத்தர் அபய கரம் நீட்டி விட்டு எல்லா பாடல்களையும் போட்டார். இப்போ நிறைய பேர் பதிஞ்சுட்டாங்க.

அந்த சர்ர்ர்ர்ர்... எப்பவும் என் ஃபேவரிட் சர்ர்ர்ர்ர்ர்... கடைசில ஜோதிலட்சுமி சி.ஐ.டி. என்று மாத்தி புதியபறவை ரேஞ்சுக்கு கொண்டு போகப் பார்ப்பாங்களே !

ம்ம்ம்... மனிதரில் இத்தனை நிறங்களா படத்தின் "பொன்னே பூமியடி" பாட்டுக்கு ஸ்ரீதேவியும் மனோரமாவும் நடிக்க வாணியும், ஜானகியும் குரல் கொடுத்திருப்பாங்க... முதலில் ஸ்ரீதேவிக்கு ஜானகிதான் ஆரம்பிக்கிறார். ஆனா ஹீரோயினுக்கு அவங்க.. காமெடியனுக்கு நானா.. அப்படிங்கற பேச்சு வரவேண்டாம் என்று நினைத்தோ என்னவோ அப்பப்போ ஆளும் குரலும் மாறும்.

https://www.youtube.com/watch?v=5rfli7_pHmE

chinnakkannan
14th October 2015, 02:19 PM
இன்றைய கேஷவ்வின் படத்திற்கு எழுதியது..

காணாமல் நின்றாடும் கண்ணாவுன் காட்சிதனை
ஆனாலும் இங்கே அழகாக -கானாபோல்
ஓடும் கவிதையாய் ஓர்கோட்டில் தந்தாரே
ஆடுதே நெஞ்சமே ஆம்..

https://scontent-fra3-1.xx.fbcdn.net/hphotos-xtp1/v/t1.0-9/12105933_10204812949298800_5889000914545575046_n.j pg?oh=880a700b0e52e4657f5780b179dc6bdb&oe=568D366C


https://youtu.be/ZRsIu8UkAWw

rajeshkrv
14th October 2015, 09:28 PM
இப்படி மாத்தி மாத்தி பாடுவதை எழுதினால் எதை எழுதியது யாருன்னே புர்லே ! கலாட்டா கல்யாணம் பத்தி ராகவேஷ் எழுத மாட்டுக்கார வேலன் பற்றி சின்னவாசு எழுதினாரா ? கொஞ்சம் நிதானமா படிக்கணும்...

வாசு ஜி... வைராக்கியம் படப்பாடல்களை யூடியூபில் பழைய பாடல்கள் பதிபவகளிடம் கேட்டு கேட்டு கேட்டு கடேசியா ஒருத்தர் அபய கரம் நீட்டி விட்டு எல்லா பாடல்களையும் போட்டார். இப்போ நிறைய பேர் பதிஞ்சுட்டாங்க.

அந்த சர்ர்ர்ர்ர்... எப்பவும் என் ஃபேவரிட் சர்ர்ர்ர்ர்ர்... கடைசில ஜோதிலட்சுமி சி.ஐ.டி. என்று மாத்தி புதியபறவை ரேஞ்சுக்கு கொண்டு போகப் பார்ப்பாங்களே !

ம்ம்ம்... மனிதரில் இத்தனை நிறங்களா படத்தின் "பொன்னே பூமியடி" பாட்டுக்கு ஸ்ரீதேவியும் மனோரமாவும் நடிக்க வாணியும், ஜானகியும் குரல் கொடுத்திருப்பாங்க... முதலில் ஸ்ரீதேவிக்கு ஜானகிதான் ஆரம்பிக்கிறார். ஆனா ஹீரோயினுக்கு அவங்க.. காமெடியனுக்கு நானா.. அப்படிங்கற பேச்சு வரவேண்டாம் என்று நினைத்தோ என்னவோ அப்பப்போ ஆளும் குரலும் மாறும்.



Mdhunna chandrakala thaan CID.. hmmmmmmmmm

adhu seri intha SJ VJ paatukku romba kashtapattangalam. both VJ & SJ dont like each other.
when this song was recording they were in full hate mode .. it was tough for shyam to bring them together and made them sing is what i heard
each sang their portion and left ..

evlo dhooram unmaiyo :)

rajeshkrv
14th October 2015, 10:23 PM
https://www.youtube.com/watch?v=oPdrv1rP10Q

rajraj
15th October 2015, 06:39 AM
From RaNi Lalithangi(57)

aaNdavane illaiye........

http://www.youtube.com/watch?v=IPQLSXVWemY

rajeshkrv
15th October 2015, 08:14 AM
மதுண்ணா இதோ வைராக்கியம் முழு படம்

https://www.youtube.com/watch?v=pc_mfsQlppk

Russellxor
15th October 2015, 11:55 AM
"அவள் பறந்து போனாளே"

மாடிப்பட்டுக்களில் இறங்கி வரும் நடிகர்திலகத்தின் பூட்ஸ்கால்களைமட்டும் காட்டும் அந்த ஆரம்ப காட்சியே வித்தியாசமானதுதான்.. பொதுவாக இந்த மாதிரி காட்சிகள் கதாநாயகனின் அறிமுக காட்சிக்கு
மட்டுமே காட்டப்பட்டு வந்த உத்தியை படத்தின் சோக பாடலுக்கு பயன்படுத்திய சிறப்பு இப்பாடலுக்கு உண்டு.
பூட்ஸ் கால் ஒவ்வொரு படிக்கட்டாக இறங்கி மெல்ல வரும்.அப்படியே காமிரா மெல்ல உயர்ந்து இடுப்பு,நெஞ்சு, முகம்னு நடிகர்திலகத்தின் உருவம் காட்டப்படும் என்று நெஞ்சு நிமிர உட்கார......
பின்னர் பார்த்தால் சிவாஜி ரசிகர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் ஏமாற்றம்தான்.
இறங்கி வருகிற பூட்ஸ் கால்களோட தொடர்ச்சியா ,டீப்பாய் மேல வைத்துக்கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கிற வேற ஒரு கால்களை காண்பிப்பார்கள்.அந்தக் கால்களை தூக்கி நிலத்தில் நிற்கும் உருவத்தை காட்டும் காமிரா...
அது முத்துராமன் .
நடிகர்திலகத்தின் கால்களை மட்டும் காண்பித்து முகத்தை காட்டாமல் அதனின் தொடர்ச்சியாக வேறு கால்களை காண்பித்து அப்படியே முத்துராமனை காட்டுவது ஒரு வித சாதுர்யமான டெக்னிகல் உத்தி. இப்படி காட்டுவதால் அது ரசிகர்களின் உணர்ச்சிகளை தூண்டிவிட்டு பின் சற்று ஏமாற்றத்தையும் அளிக்கும்.அதே சமயம் தேர்ந்த திறமை வாய்ந்த டைரக்டர் அந்த காட்சியை காண்பிக்கிறார் என்றால் பின்வரும் காட்சிகள் ஏதோ ஒரு பிரளயத்தை உண்டு பண்ணுவதாக இருக்கும் என்பதுதான் அந்த உத்தியின் மூல காரணமாக இருக்கலாம்.

என்ன ஒரு டெக்னிகலான காட்சியமைப்பு.கறுப்பு வெள்ளை காலகட்டத்தில் உதித்த அந்த ஐடியா
பாராட்டப்பபவேண்டிய அம்சம்.சரி பீம்சிங் காரணமில்லாம இந்த ஷாட்டுகளை காண்பிக்கமாட்டாருன்னு நமக்கு நாமே அப்போது தேற்றிக்கொண்டோம் என்பதே உண்மை
முத்துராமனுமஅவள் பறந்து போனாளே பாடலின் பல்லவியைவீட்டிற்குள் பாடுவது போல் காட்சி.

அவள் பறந்து போனாளே
என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்கள் இரண்டைக் கவர்ந்து போனாளே

அந்தப் பல்லவியும் முடிஞ்சு இப்ப பிண்ணணி இசை ஓடிக்கொண்டு இருக்கும்.இப்ப இடம் வேற.பாறைகள் நிரம்பிய இடத்தில் நுரைகள் பொங்க
நீர் பெருக்கெடுத்து ஓடும் இடம்.பயத்தையும்,ஆச்சரியத்தையும்,ரசிப்பையும் கொண்ட இடம் அது.
"சந்திராராராரா"
ஓர் உரத்த கணீரெண்ற குரல் மட்டும் தான் இப்போது கேட்கும்.
அட TMS குரல் கேட்டாச்சு. தலைவரோட அதகளம் ஆரம்பிக்குப்போகுதுன்னு நிமிர்ந்து உட்காருவோம். திரும்பி நிற்கும் உருவ அமைப்பும் ஸ்டைலும் மறுபடியும் ஏமாற்றத்தை தரும்.
ஆனாலும் அதன் பின் வரும்காமிரா பதிவுகள் அசத்தல்.
அணைகட்டு நீரில் அலைகளாட,
அதில் முத்துராமனும் விஜய குமாரியும் ஆடும் காட்சி மிக்ஸிங்செய்யப்பட்டு DOUBLE EXPOSE'பாணியில் படமாக்கப்பட்டிருக்கும்.


முத்துராமன் நடந்து செல்லும் பாலைவன காட்சி யில் ஒளிப்பதிவு பிரமாதம்.
முத்துவோட நிழலைக் காண்பித்து அந்த நிழலிருந்து நிஜத்திற்கு மாறும் ஷாட் பிரமாதமாயிருக்கும்.
அப்போது திரையில் ஒலிக்கும் வரிகள்.
"என் நிழலுக்கு உறக்கமில்லை"
முத்துவின் பக்கமிருந்துஅப்படியே லாங்சாட்டுக்கு மாறி பாலைவனத்தை
காட்டுவது சிறப்பான ஒளிப்பதிவு.
பீம்சிங் படங்களில் ஒளிப்பதிவு தனி அம்சமாக விளங்கும்.
பல்லவி ,முதல் சரணம் முத்துராமனின் நடிப்பில் நிறைவு பெறுகிறது.

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/30-1419906016-volcano-600-jpg_zpsi3gosmon.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/30-1419906016-volcano-600-jpg_zpsi3gosmon.jpg.html)


திடீரென்று எரிமலை வெடித்துச் சிதறுவதை விட அந்த எரிமலை இப்ப வெடிக்கும் அப்பறம் வெடிக்கும் என்று பார்த்திருந்து,பார்த்திருந்து,
காத்திருந்து,காத்திருந்து ,ஒரு பதட்டத்தை ஏற்படுத்தி பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில் வெடித்துச்சிதறும் எரிமலை போல்
தான் இந்தக் காட்சியை இன்றும் நடிகர்திலகத்தின் ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள்.

மாடிப்படிக்கட்டுகளில் நிற்கும் நடிகர்திலகம் இந்த வீட்டுக்கு விளக்கில்லை என்று முதல் வரியை பாடி திரும்பி நிற்பார்.அப்போது வீட்டின் விளக்குகள்அணைந்து இருட்டில்
சில் ஹவுட்டாகநடிகர்திலகத்தின் உருவம் தெரியும்.
திரும்பிநிற்கும் நடிகர்திலகத்தைஅடுத்த ஷாட்டில் முன்பக்கம் காண்பிக்கும் அந்தக்கணம்எல்லா விளக்குகளும் எரியும்.அப்பொழுதே இது போன்ற டெக்னிகல் உத்திகளில் அதுவும் கறுப்பு வெள்ளையில் தெளிவான காட்சிகள் படம் பிடிக்கப்படிருப்பது பெருமையான விஷயம்.தொழில்நுட்ப வசதிகள் வளர்ந்த பிற்காலங்களில் சில திரைப்படங்கள் இந்தப்பாடலில் வருவது போன்ற காட்சிகள் அமைந்து ரசிகர்களை பிரமிக்க வைத்தது.ஆனால் பழமையான அந்தக்காலகட்டத்திலேயே கறுப்பு வெள்ளைகளில் சிறப்பான ஒளிப்பதிவுகள் தமிழ்சினிமாவில் கையாளப்படிருக்கிறது என்கிற வரலாற்றைத்தான் பிற்கால ரசிகர்கள் அறிந்து கொள்ள மறுக்கின்றனர் என்பதுதான் கசப்பான உண்மை.

நடிகர்திலகத்தை காட்டும்விதம்
ஒன்று போதும்.அந்தப்பாடலின்
சிறப்புக்கு.லைட்டிங் டெக்னாலஜியைப்பொறுத்தமட்டில் அந்தக்காலகட்டத்திலேயே இந்த மாதிரி டெக்னிகல் எபக்ட்ஸ் பயன்படுத்தப்பட்டு விட்டதால்
பிற்காலத்தில் வந்த சில படங்களை
சொல்வதில் புதுமையில்லை.

இல்லை என்பதில் முடியும் இரண்டாவது சரணத்தின் வரிகள்.
அதுபி.பி.எஸ்க்கு.
மூன்றாவது சரணத்தின் வரிகளும்
இல்லை என்ற வார்த்தையில் முடியும்
இது TMSக்கு.

இல்லை இல்லை என்று சொன்னாலும் அதில் இல்லாதது எதுவும் இல்லை.
சிறந்த நடிப்பு சிறந்த இசை சிறந்த ஒளிப்பதிவு சிறந்த லொகேஷன்
சிறந்த உடையமைப்புசிறந்த குரல்.etc...

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/BTWP02_zpsxmpn7iuy.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/BTWP02_zpsxmpn7iuy.jpg.html)



மறுபடியும் அந்த பாலைவனத்தில் அடுத்த சரணம்.முத்துராமன் பாடுவதாக இருக்கும்.சூறைக்காற்று வீச,புழுதிப்படலத்தின் பிண்ணணியில் அந்தக் காட்சி செல்லும்.இப்படியொரு பாடல் பாலைவனத்தில் எடுக்கப்பட்டிருப்பது வித்தியாசமான யோசனை. புதுமையும் கூட.

.....தன் சிறகை விரித்தாளே.


http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/TEMJ03_zpsafgrndam.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/TEMJ03_zpsafgrndam.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/NAPN02_zpskgdjvbna.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/NAPN02_zpskgdjvbna.jpg.html)



(இதற்குத்தானே ஆசைப்பட்டாய் சிவாஜி ரசிகனே...
நீ
நினைத்ததை
உன் தலைவன்
நிறைவேற்றாத
காட்சி
எதிலேனும்
உண்டா?)

(எது நடக்க வேண்டும் என்று சிவாஜி ரசிகன் நினைத்தானோ அது நன்றாகவேநடந்திருக்கும் பாடலின் முடிவில்.)

நடிகர்திலத்தின் விழிகளை பார்த்து பேசுவது பெரும் கலைஞர்களுக்கே
சிரமம் என்று சொல்வதுண்டு.அவருடைய இந்த விழிகளைப் பார்த்தால் அதை என்னவென்று சொல்வது?
முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு விழிகள் மேல் நோக்கி நிலைத்த நிலையில்
எந்த அசைவையும் காட்டாமல்
உட்கார்ந்திருக்கும் அந்தப் போஸ்
பார்ப்பவர்களை மிரளவே செய்யும்.

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/AFQB03_zpsry7yyu3t.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/AFQB03_zpsry7yyu3t.jpg.html)


"அவள் எனக்கா மகளானாள்"
"நான் அவளுக்கு மகனானேன்"
"என் உரிமைத் தாயல்லவா
என் உயிரை எடுத்துச் சென்றாள்."
என்று முடியும் பாடல்.

ட்ரிக்ஷாட்டில் எடுக்கப்பட்ட கடைசி வரிகளுக்கான படப்பதிவுகள்.

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/HCNU03_zpsnfib7017.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/HCNU03_zpsnfib7017.jpg.html)







(பி.பி. எஸ்
அவள் பறந்து போனாளே
என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்களiரெண்டைக் கவர்ந்து போனாளே

பி.பி. எஸ்
என் காதுக்கு மொழியில்லை
என் நாவுக்கு சுவையில்லை
என் நெஞ்சுக்கு நினைவில்லை
என் நிழலுக்கு உறக்கமில்லை
என் நிழலுக்கு உறக்கமில்லை

டி.எம்.எஸ்
இந்த வீட்டுக்கு விளக்கில்லை
சொந்தக் கூட்டுக்கு குயிலில்லை
என் அன்புக்கு மகளiல்லை
ஒரு ஆறுதல் மொழியில்லை
ஒரு ஆறுதல் மொழியில்லை

அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்களiரெண்டைக் கவர்ந்து போனாளே


பி.பி.எஸ்
என் இதயத்தில் பூட்டிவைத்தேன்
அதில் என்னையே காவல் வைத்தேன்
அவள் கதவை உடைத்தாளே
தன் சிறகை விரித்தாளே

டி.எம்.எஸ்
அவள் எனக்கா மகளானாள்
நான் அவளுக்கு மகனானேன்
என் உரிமைத் தாயல்லவா
என் உயிரை எடுத்துச் சென்றாள்
என் உயிரை எடுத்துச் சென்றாள்

இருவரும்
அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்களiரெண்டைக் கவர்ந்து போனாளே

Aval Paranthu Ponale: http://youtu.be/utaMgFouiF4

Russellxor
15th October 2015, 12:34 PM
Varam Movie Songs - Ningi Nela Song - Prabhu, Ama…: http://youtu.be/XLEUI7-Y66s
நல்ல இனிமையான தமிழ்பாடல்.
தெழுங்கில் கிடைக்கிறது.
தமிழில்?

தமிழ்ப்பாடல்:
வானும் மண்ணும் ஒன்றாய்க் கூடும் காதல் வைபோகம்
மழையும் அடிக்க வெயிலும் அடிக்க இங்கே கல்யாணம்.
காதல் மாலை சூடும் வேளை கண்ணில் கார்காலம்
கண்ணே உந்தன் கன்னம் ரெண்டில் கண்ணீர் ஊர்கோலம்.

இசை MSV
பாடியவர் ஜெயச்சந்திரன்.,சுசீலா?சித்ரா?

இப்பாடல் சென்னை தொலைக்காட்சியில் மெல்லிசை
பாடல்களில் அடிக்கடி ஒலிபரப்பு செய்யப்படும்.பாடலின் இனிமையும்,
மென்மையும் டைரக்டர் கேட்டு அது அவரை ஈர்த்திருக்கலாம்.அந்த சமயத்தில் அவர் எடுத்த இந்த திரைப்படத்திற்கு பயன்படுத்திக் கொண்டார்.படத்தின் சிச்சுவேசனும் இந்த வரிகள் மிகவும் பொருத்தமாய் அமைந்திருந்ததும் ஒரு காரணம்.
திரைப்படத்திற்காக சில வரிகள் பாடலாசிரியரிடம் கேட்டு மாற்றப்பட்டிருக்கலாம்.

டைரக்டர் RC சக்தி
கவிஞர் வைரமுத்து

நடிப்பு
இளையதிலகம்
அமலா
டாப்சிலிப் மூணாறு மலைப்பகுதிளை
ரசிக்கலாம்.

படம்:வரம்

adiram
15th October 2015, 01:53 PM
//சுசீலா வரிகளை மேடத்திற்கும் பிக்ஸ் செய்து இருக்கலாம். அந்த நேரத்தில் அவர்கள் வர இயலாமலும் இருந்திருக்கலாம். அதனால் அந்த வரிகளை ராஜனுக்கும், ஜோதிக்கும் கொடுத்து அட்ஜஸ்ட் பண்ணியுமிருக்கலாம். யார் கண்டது? அப்படியே வைத்துக் கொண்டாலும் அதற்கு முன்னம் வரும் வரிகள் ராஜனுக்கு பாடகர் திலகம் பாடியவையே. அது வேறு இடிக்கிறது. ஒரு வேளை நாகேஷுக்கும், மனோரமாவிற்கும் தர எண்ணியிருந்தாலும் நாகேஷுக்கு பி.பி.எஸ்.குரல் ஓ.கே. மனோரமாவிற்கு முன்னம் பாடியது சுசீலா இல்லையே. ஈஸ்வரிதானே. இங்கும் இடிக்கிறது.

அதே போல ஒருமுறை டவருக்குள் நடக்கும் போது 'நடிகர் திலகம் மிஸ்' ஆகி மற்ற மூவரும் இருப்பார்கள்.

'மாமியார்தான் மையெழுத' எனும்போது நாகேஷ் காணமல் போய் இருப்பார்.

ஒன்று மட்டும் உறுதி. இப்பாடலில் நடித்த அத்தனை நடிகர்களும் அப்போது செம பிஸி. அத்தனை பேருடைய கால்ஷீட்டும் ஒரே சமயத்தில் கிடைத்து பாடலை எடுப்பது என்பது குதிரைக் கொம்பு.//

டியர் வாசு சார்,

இது நடந்திருக்க வாய்ப்பு இல்லை. ஏனென்றால் அண்ணாநகர் உலக பொருட்காட்சியில் கூட்டம் குறைவான ஒரு செவ்வாய்க்கிழமை காலை 10 மணியிலிருந்து மதியம் 1 மணிக்குள் பாடல் காட்சியை படமாக்கி முடித்து வெளியேற வேண்டும் என்ற நிபந்தனையுடன் படப்பிடிப்பு குழுவினர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர் (தகவல்: அன்றைய குமுதம் இதழில் சித்ராலயா கோபுவின் "பொருட்காட்சியில் படக்காட்சி")

எனவே நேரம் போதாமை காரணமாக குரல் மாற்றம் குளறுபடிகள் நேர்ந்திருக்கலாம்.

RAGHAVENDRA
16th October 2015, 01:17 AM
https://scontent.fdel1-2.fna.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/12108953_992654377451901_4128915235637834500_n.jpg ?oh=0f3ec0d74cd60a74d9e3a65eb741f5f5&oe=56C81810

Image from Pesum Padam magazine.

Ungal Nanban was a short film screened during early 60s to bring police closer to the society. Nadigar Thilagam made a Special Appearance in the movie.

rajraj
16th October 2015, 04:43 AM
A song from Nallathambi(1949) in his memory:

vignaanathai vaLarkka poreNdi....... by N.S.Krishnan.

http://www.youtube.com/watch?v=nMBkOcKJSls

rajeshkrv
16th October 2015, 09:16 AM
https://www.youtube.com/watch?v=EtZdNR0POZQ

madhu
16th October 2015, 09:37 AM
ராகவ் ஜி..

ஒரு சின்ன சந்தேகம். தங்கப் பதக்கம் படத்தில்தானே எஸ்.பி.சௌத்ரி எனும் பெயர் பிரபலமானது ? அது 1974 வெளிவந்ததில்லையோ ? உங்கள் நண்பன் குறும்படம் Early 60s ல் வந்திருக்குமா ? அந்த கவிதையில் நடிகர் திலகத்தின் இந்த கதாபாத்திரத்தின் பெயர் வருகிறதே ? அந்த நாடகம் கூட அறுபதுகளின் இறுதியில்தானே அரங்கேறியது ?

அல்லது அந்தக் கவிதை பிற்காலத்தில் வெளியிடப்பட்டதா ?

சிக்கா வந்து கவிதையில் கேட்டு வைப்பார்... அதுக்குள்ள சொல்லிடுங்க.. இல்லாட்டி குழம்பிடுவீங்க !! ( நான் ஜூட்ட்ட் )

RAGHAVENDRA
16th October 2015, 10:03 AM
மது
அது என் உள்மனதின் வெளிப்பாடு..
ஆதங்கத்தின் எதிரொலி...
நிழற்படம் மட்டுமே பழையது..

சி.க. வுக்கு பயந்து பயந்து எழுதுதாக இருக்கு..

என்ன செய்றது.. சீர் செனத்தி எல்லாம் கொண்டு வந்தால் தான் தங்கை என்பது போல சொல்லி விடுவார்..

எதற்கும் முன் கூட்டியே ஒரு எக்ஸ்கியூஸ் கேட்டு வைக்கிறேன்..

சி.க. சார்.. கைண்ட்லி எக்ஸ்கியூஸ் மீ ஃபார் எனி எரர் ஆர் ஒமிஷன் ஆர் கிராமேடிகல் மிஷ்டேக்..

JamesFague
16th October 2015, 10:15 AM
Courtesy Dinamani

சிரிப்பு தேவதை


ளின் கலைஞரான இந்த நடிப்புக் கருவூலம் பற்றி எந்த வார்த்தைகளில் எழுதினாலும் சொற்கள் கர்வப்பட்டுக் கொள்ளும். மனோரமா என்று உச்சரிக்கும்போதே ரணப்பட்டுப் போன பாமர மனசு பூரித்து நிற்கும். நோயாளியின் முகமும் பரவசமாகும். மவுனமாக உடலில் புது ரத்தம் ஓடும்.

மனோரமா வெறும் நடிகை மாத்திரம் அல்ல. மன நலம் காக்கும் மருத்துவரும் கூட.

அன்றாடம் பணம் கொட்டும் ஏடிஎம் மெஷினாக எண்ணித் துரத்தும் உறவுகளுக்கு மத்தியில், வாழப் பிடிக்காமல் உயிரை விடத் துடிக்கும் நடிகைகள் வாழும் நாடு இது. மனோரமாவின் மடியில் விழுந்து ஆறுதல் தேடியவர்கள் அதிகம்.

காண்போரையெல்லாம் கவர்ந்த அந்த கலைத்தாய்க்கு ஈடாக(அதிக பட்ச வார்த்தை என்று எண்ணி விடாதீர்! காலம் காட்டும் உண்மை!) வேறு யாரைச் சொல்ல முடியும்!

உழைப்பைத் தவிர வேறு ஒன்றும் அறியாத நடிப்பின் ஜீவநதி மனோரமா! நூற்றுக்கணக்கான கதாநாயகிகளுக்கு மத்தியில் தனித்து நகைச்சுவைக்கென்றே உதித்து நாளடைவில் காவியத்தலைவி ஆனவர்.

மதுரம் தொடங்கி மதுமிதா வரையில் உலகில் தமிழ்நாடு போல் சிரிப்பு காட்டி திரைக்குச் சிறப்பு சேர்த்த பெண்கள் வேறு எங்கும் காணோம். அவர்களில் மனோரமா சிரஞ்சீவி. நிரந்தரமாகப் புகழ் மகுடம் சூட்டிக் கொண்ட ஒரே மகாராணி!

நடிப்பவர்களுக்கான முதல் அருகதை அவர்களது வசீகர வதனமும், கடல் போன்ற கண்களும். இரண்டுமே மனோரமாவுக்கு மைனஸ்.

சராசரிக்கும் குறைவான முகம். சின்னக் கண்கள். அவை மனோரமாவுக்கு உதவியது போல் வேறு யாருக்காவது உபயோகம் ஆகியிருக்குமா என்பது சந்தேகமே.அவருக்கு இறைவன் அளித்த மிகப் பெரிய வரம் குரல்! அந்தக் குரலில் மனோரமா வெளிப்படுத்திய நவரச பாவங்கள், வசன உச்சரிப்பில் ஏற்ற இறக்கங்கள் ஏராளம்... ஏராளம்.

எடுத்துக்காட்டுக்கு ‘கம்னு கட’ ஒன்று போதாதா!

காமெடி நடிகை என்பதால் மனோரமாவுக்கு நடிப்பில் எந்தத் தடைகளும் இல்லை. எப்படி வேண்டுமானால் நடிக்கலாம். எவ்வித இலக்கணங்களும் கிடையாது. சினிமாவில் காபரேவும் ஆடியிருக்கிறார். வில்லியாகவும் வலம் வந்திருக்கிறார்.

நினைத்த மாத்திரத்தில் கூடு விட்டுக் கூடு பாயும் ஆற்றல் முழுமையாக கை வரப் பெற்றவர் மனோரமா.

ஆயிரத்து முன்னூறு படங்களில் எத்தனை எத்தனை வேடங்கள்...! அன்றாட வாழ்க்கையில் தினம்தோறும் நாம் காணும் சக மனுஷிகளை செல்லுலாயிடில் செதுக்கியவர் மனோரமா.

விளைவு, கின்னஸில் இடம் பிடித்த ஒரே தமிழ் நடிகை என்கிற பெருமையைப் பெற்றார். ‘உன்னால் முடியும் தம்பி’படத்துக்குப் பிறகு அடுத்த ஆண்டே அபூர்வ சகோதரர்களும் புதிய பாதையும் சேர்ந்து மனோரமாவை முகம் மலர வைத்தன. தேசிய விருது முதல் முறையாக மனோரமாவைத் தேடி வந்தது.

மனோரமாவுக்கு மிகவும் பிடித்த ஹாலிவுட் ஸ்டார் ஷெர்லிமேக்ளின்.

மனோரமாவின் கால் தடம் பதிந்த முதல் படப்பிடிப்பு நிலையம் எது தெரியுமா?

‘நான் நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த நேரம். ஷூட்டிங் பார்க்க ஆசைப்பட்டேன். ஒரு நாள் எங்க குரூப்புடன் நியூடோன் ஸ்டூடியோவில் நுழைந்தேன். அன்று என்.எஸ். கிருஷ்ணனும் டி.ஏ. மதுரமும் நடித்த ராஜா ராணி படப்பிடிப்பு. அதுதான் நான் பார்த்த முதல் சினிமா ஷூட்டிங்.’- மனோரமா.

‘காக்கா’ ராதாகிருஷ்ணனில் ஆரம்பித்து ‘மயில்’ சாமியையும் கடந்து அவருடன் காமெடியில் கலக்கியவர்கள் எல்லோரும் ஜாம்பவான்கள். அநிருத் போன்ற சமீபத்திய பிரபலங்கள் நீங்கலாக எம்.எஸ். விஸ்வநாதன், வி.குமார், குன்னக்குடி வைத்தியநாதன், சங்கர் கணேஷ், இளையராஜா, சந்திரபோஸ், ஏ.ஆர். ரஹ்மான்... என இவர்கள் எல்லோரும் மனோரமாவை சொந்தக்குரலில் பாட வைத்த முன்னணி இசை அமைப்பாளர்கள்.

பொம்மலாட்டம் ‘வா வாத்யாரே ஊட்டான்டே’ மனோரமாவின் சிறப்பைப் பாட்டிலும் எதிரொலித்து இன்றும் பரவசப்படுத்துகிறது.

பேசும் படம் இதழ், ஒவ்வொரு இதழிலும் ‘இம்மாத நட்சத்திரம்’ என்று அம்மாதத்தில் வெளியான படங்களில் சிறப்பாக நடித்த நாயகன்-நாயகிகளைப் பாராட்டி மிக நீண்ட காலமாக எழுதி வந்தது.

கே.பாலசந்தரின் தாமரை நெஞ்சம், பொம்மலாட்டம் இரண்டும் ஒரே நாளில் 1968 மே 31ல் வெளிவந்தன. சரோஜாதேவி, கே. பாலசந்தரின் இயக்கத்தில் நடித்த ஒரே படம் அது. மிக அற்புதமாக கமலா எனும் கேரக்டரில் நடித்திருப்பார்.

சரோஜாதேவியை விட்டு விட்டு, அவ்வரிசையில் பொம்மலாட்டத்தில் சிறப்பாக நடித்ததற்காக மனோரமாவைத் தேர்வு செய்தது பேசும் படம். அனைவருக்கும் ஆச்சர்யம்!

பேசும் படத்துக்கு சோ உடனே ஒரு கடிதம் எழுதினார். ‘மனோரமா இம்மாத நட்சத்திரம் மாத்திரம் அல்ல. அவர் இந்தத் தலைமுறையின் நட்சத்திரம்!’ என்று.

அந்நாளில் சினிமா விமரிசனங்களில் மனோரமா குறித்துப் பெரிதாக எதுவும் எழுத மாட்டார்கள். சோ எழுதிய பதில் மீடியாவைத் திகைப்பில் ஆழ்த்தியது.

மனோரமாவின் திறமையை முழுதாக உணர்ந்தவர் சோ. பார் மகளே பார் படத்தில் சோ அறிமுகமானார். சோவின் முதல் ஜோடியாக மனோரமா நடித்தார்.

சோ இயக்கிய முதல் படம் முகமது பின் துக்ளக். அதில் மனோரமாவுக்கு இந்திரா காந்தி போல் ஒரு வேடத்தைக் கொடுத்து ஒட்டு மொத்த இந்தியாவையும் கலக்கினார். மத்திய மாநில அரசுகளின் கெடுபிடிகளைக் கடந்து துக்ளக் திரைக்கு வந்தது தனி வரலாறு. அடுத்து சோ - மனோரமா பங்கேற்ற அரசியல் நையாண்டி, தங்கப்பதக்கம் படத்தின் வசூலுக்கு உரமாக இருந்தது.

எம்.ஆர். ஆர். வாசு விவித் பாரதி சிறப்புத் தேன்கிண்ணத்தில் மனோரமாவை ‘திரையுலகில் என் ரவுடி தங்கச்சி!’ என்று பாராட்டி ‘வா வாத்யாரே வூட்டாண்டே’ பாடலை ஒலிபரப்பினார். எம்.ஆர்.ஆர். வாசு – மனோரமா கூட்டணியில் வெளிவந்த ‘பாரத விலாஸ்’ சிகரம்.

ரவிச்சந்திரனின் சொந்தத் தயாரிப்பு ‘மஞ்சள் குங்குமம். அதில் தேங்காய் -மனோரமா ஜோடி பாடி நடித்த தெலுங்குப் பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்.

‘ரா ரா பாவா ரா... ராங்கான பாதையில போத்தாவா அக்கட இக்கட சூஸ்தாவா அசடு போல பேஸ்தாவா’ என்று தொடங்கும் அந்தப் பாடலை எழுதியவர் கதாசிரியர் ‘தேவர் பிலிம்ஸ்’ மாரா. மனோரமாவுடன் பாடியவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.

பேசிப் பேசி சிரிக்க வைக்கும் மனோரமா ஊமையாக ‘வாழ நினைத்தால் வாழலாம்’ படத்தில் தேங்காய் சீனிவாசனுக்கு கதை சொல்லும் கட்டம் அட்டகாசம்! அதில் மவுன மொழியிலேயே ‘கானாங்குருவிக்கு கல்யாணமாம்’ என்று பாடல் வேறு. ஊமை பாடுவதா? அது மனோரமாவால் மட்டுமே முடியும்.

முதல்முதலாக ‘அபலை அஞ்சுகம்’ படத்தில் மெட்ராஸ் பாஷையில் வெளுத்துக் கட்டத் தொடங்கிய மனோரமா தொடர்ந்து அனாயசமாகப் பேசிய வட்டார மொழிகள் ஆய்வுக்குரிய வரலாறு. சின்னக் கவுண்டரில் எடுப்பான பல் அழகியாக கொங்குத்தமிழில் பேசி நெஞ்சம் கலந்தவர்.

‘சூரிய காந்தி’ யில் ‘தெரியாதா நோக்கு...’ என்று பாடி ஆடும் மடிசார் மாமிக்கும் ‘பரீட்சைக்கு நேரமாச்சு’ ‘நூன் ஷோ’ மாமிக்கும் நடிப்பில் எத்தனை வித்தியாசம்! முக்தா சீனிவாசனின் படங்களில் மனோரமாவின் பங்களிப்பை அத்தனைச் சீக்கிரத்தில் யாரால் மறக்க முடியும். மனோரமா மறைவுக்கு முக்தா சீனிவாசன் கதறி அழுத காட்சி இயல்பான தோழமை உணர்வின் வெளிப்பாடு.

தீபாவை கமல் ஜோடியாகத் தனது ’அந்தரங்கம்’ படத்தில் அறிமுகப்படுத்தியவர் முக்தா. அதில் தேங்காய், சோ, மனோரமா மூவரும் தஞ்சாவூர் பாஷை பெரிதா, கோவை, மதுரை ஸ்லேங் பெரிதா என்று மோதுவார்கள்.

‘பாஷையெல்லாம் மாத்தி மாத்திப் பேசறதுக்கு மனோரமாவை விட்டா வேற யாரு இருக்காங்க இப்ப’ ன்னு சிவாஜி என்னைப் பாராட்டிப் பேசினார். எனக்கு வானத்துல இறக்கை இல்லாமப் பறக்கற மாதிரி இருந்தது. அதுதான் முதலும் கடைசியுமா சிவாஜி என்னை நேருக்கு நேர் பாராட்டின ஒரே சந்தர்ப்பம். அதுக்கப்புறம் ரெண்டு மாசத்துக்கெல்லாம் அவர் இல்ல.’ - மனோரமா.

அதே மனோரமாதான் முகச்சவரம் செய்யும் குமரிமுத்துவின் மனைவியாக கே.பாக்யராஜின் பாமரத் தாயாக ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஜொலி ஜொலித்தது!

மைக்கேல் மதன காமராஜனில் ரூபிணியுடன் சேர்ந்து ‘சிவராத்திரி... தூக்கம் ஏது ஹோ...! என்று இரவில் மெழுகுவர்த்தி ஏற்றி ஆடிப் பாடியபடி வெளிப்படுத்திய சிருங்கார பாவங்கள் மனோரமாவைத் தவிர வேறு யாருக்கு வரும்?

பாரதிராஜா, மணி ரத்னம் என மிகச் சிலரைத் தவிர மனோரமாவுடன் சேர்ந்து பணியாற்றி, ரெடி டேக் ஆக்ஷன் சொல்லாத இயக்குநர்கள் யார்?

அவருடன் பணியாற்றிய இயக்குநர்களின் பட்டியலைப் பார்த்தாலே தமிழ் சினிமாவின் வரலாறும் அதன் அத்தனைப் பரிமாணங்களும் புரியுமே!

இயக்குநர்களில் விசு விசேஷமானவர். ஒரு வாரம் மட்டும் மனோரமாவை நடிக்க வைத்து, முதல்வர் எம்.ஜி.ஆர். தலைமையில் 25 வார விழாவைக் கொண்டாடியவர். முதல்முதலாகத் தமிழ் சினிமாவுக்கு தங்கத்தாமரை என்கிற இமாலயப் பரிசை ‘சம்சாரம் அது மின்சாரம்’ வெள்ளிவிழாப் படம் மூலம் அளித்தவர்.



மனோரமா நடிகர் திலகத்துடன் நடித்து வெளிவந்த முதல் படம் ’வடிவுக்கு வளைகாப்பு’. சிவாஜி பட டைட்டில் கார்டுகளில் மனோரமாவின் பெயர் முப்பது ஆண்டுகளைக் கடந்து கடைசி வரை தொடர்ந்தது. சிவாஜி-மனோரமாவுக்கு இடையேயான பந்தம் மிக அபூர்வமானது.

சிவாஜி ஜோடியாக ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்கிற ஏக்கம் மனோரமாவுக்கு இருந்தது. அதுவும் ஞானப்பறவை படத்தில் தீர்ந்தது. மனோரமாவின் ஆசையை நிறைவேற்றியவர் வியட்நாம் வீடு சுந்தரம்.

1958-ல் கவிஞர் கண்ணதாசனின் மாலையிட்ட மங்கை மூலம் அறிமுகமான மனோரமா அடுத்துப் புகழ் பெற்றது அபலை அஞ்சுகம் படத்தில். 1962-ல் நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் நாகேஷ் கம்பவுண்டராகவும் மனோரமா நோயாளி நவநீதமாகவும் நடித்தார்கள்.

‘நவநீதம்... நவநீதம்...’ என்று காட்சிக்குக் காட்சி வித்தியாசமாக பேசி நாகேஷ் பிரபலமானார். அதற்குப் பிறகு மனோரமாவுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

நாகேஷ் ஹீரோவாக அறிமுகமான சர்வர் சுந்தரம் படத்தில் அவருடன் சினிமா நடிகையாக சில நிமிடங்களுக்கு கவுரவத் தோற்றத்தில் வருவார் மனோரமா. எஸ். வி. ரங்காராவ் இயக்குநர்.அந்தக் காட்சியில் மனோரமா சரோஜாதேவியை ஞாபகப்படுத்துவது மாதிரி கொஞ்சும் தமிழில் பேசி நாகேஷை மிரள வைப்பது அபாரம்.

பொதுவாக எம்.ஜி.ஆரின் சினிமாவில் நாயகன், நாயகியைத் தவிர மற்றவர்கள் யாருக்கும் டூயட் இருக்காது. மனோரமா மட்டும் விதிவிலக்கு!

‘வேட்டைக்காரன்’ படத்தில் முதல்முதலாக நாகேஷ் - மனோரமா இருவரும் ஆடிப்பாடிய ‘சீட்டுக்கட்டு ராஜா’ என்கிற டூயட் அதில் சூப்பர் ஹிட் ஆனது. அதனால் தேவர் பிலிம்ஸ் படங்களில் எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதாவுடன் நாகேஷ்-மனோரமா ஜோடியும் சேர்ந்து கொண்டது.

தில்லானா மோகனாம்பாளில் ஜில் ஜில் ரமாமணியாக நடித்ததில் மனோரமா புகழின் உச்சிக்குச் சென்றார். கலைஞர் தலைமையிலான தமிழக அரசு மனோரமாவை சிறந்த துணை நடிகையாக கவுரவித்து விருது வழங்கியது.

மனோரமா ‘ரமாமணியாக’ மாறிய விதம் குறித்து என்னிடம் கூறியவை :

‘பாலையா அண்ணனைப் பார்த்து சிவாஜி சாரே பயப்படுவாங்க. அப்படிப்பட்ட மகா நடிகர் அவர். பாலையா அண்ணன், சிவாஜி, சாரங்கபாணி இவங்க கூடத்தான் எனக்கு முதல் ஷாட்.

‘என்ன சிக்கலாரே சவுக்கியமான்னு...’ விசாரிக்கிற சீன். அப்ப பாலையா அண்ணன் சொல்லுவாங்க. ‘இவங்க ஆட்டத்துல பேர் போனவங்கன்னு…’

அவங்களுக்கு முன்னால எனக்கு நடிக்கவே முடியல. பயமா இருக்கு. அழுகையா வருது. நான் தான் தொடர்ந்து வசனம் பேசணும். சிவாஜிக்கு என்னைக் கவனிக்கிற ஷாட் மட்டுமே. நான் ஏபிஎன். சாரைப் பார்க்கறேன். நடிப்பு வரல. அவர் என்னைக் கூப்பிட்டார்.

‘இந்த சீன்ல நீதான் பெரிய ஆள். அவங்கள மறந்துடுன்னு’ தைரியம் சொன்னாரு. அப்புறம் படபடன்னு பேசி நடிச்சேன்.

இப்பவும் நீங்க படத்தைப் பாத்தீங்கன்னா அந்த சீன்ல சிவாஜி வசனம் எதுவும் இல்லாம, ‘பரவாயில்ல போலிருக்கு. சின்னப் பெண்ணா இருந்தாலும் நல்லா ஆக்ட் பண்றே’னு என் நடிப்பையே ரசிக்கிறது தெரியும்.’ என்றார் மனோரமா.

ஏ.பி. நாகராஜனின் சின்ன பட்ஜெட் படங்களான திருமலை தென் குமரி, கண் காட்சி ஆகிய படங்கள் மனோரமாவுக்கு கை கொடுத்தது. இரண்டிலும் அவருக்கு அமைந்த புதிய ஜோடி சுருளிராஜன். ‘திருமலை தென்குமரி’ நூறு நாள்கள் ஓடியது. ’இந்தப் படம் ஓட வேண்டும் என்று நான் வேண்டாத தெய்வமே இல்லை’ என்று மனோரமா அதன் வெற்றி விழாவில் பேசினார்.

தமிழில் 150 படங்கள் பூர்த்தியான நிலையில் மனோரமாவுக்குத் தெலுங்கில் வாய்ப்புகள் வந்தன. அவர் நடித்த முதல் தெலுங்கு படம் ‘எதிர் நீச்சல்’ ரீமேக்.

1969 முதல் 1971 வரையில் சினிமாவில் மிகப் பெரிய வெற்றிடம். கடுமையாகப் போராடினார் மனோரமா. கோடம்பாக்கம் கை விட்டவுடன் சித்ராலயா கோபுவின் நாடகக் குழுவில் முழு மூச்சாக நடித்தார்.அங்கு உருவான ‘காசேதான் கடவுளடா’ நாடகம் சினிமாவானது. ஏவிஎம் தயாரிப்பில் நூறு நாள்கள் ஓடியது.

ஹீரோ முத்துராமனை விட மனோரமாவுக்கும் தேங்காய் சீனிவாசனுக்கும் மிகப் பெரிய திருப்புமுனை அந்தப் படம். மனோரமா செகண்ட் இன்னிங்ஸ்ஸில் கொடி கட்டிப் பறந்தார்.

ஜெய் சங்கர்-ஜெய்சித்ரா நடித்த ‘உங்கள் விருப்பம்’ படத்தில் தேங்காய் சீனிவாசன் - மனோரமா பாடி நடித்து, பிரபலமான ஒரு டூயட் - ‘மஞ்சள் பூசி மஞ்சம் வந்த ராதா ராதா.’ அன்றைய வானொலி நேயர்களுக்கு மிகவும் பிடித்தமானது. தேங்காய் சீனிவாசனுடன் மனோரமா நூற்று ஐம்பது படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.

மனோரமா சுயம்பு. விழுந்த சுவடே தெரியாமல் விரைவாக விஸ்வரூபம் எடுத்து நின்றவர். எம்.ஜி.ஆர். அரசியலில் முமு மூச்சாக ஈடுபட, மனோரமாவை மேலும் கை தூக்கி விட்டவர் மக்கள் கலைஞர் ஜெய் சங்கர். (‘ராமன் தேடிய சீதை’ எம்.ஜி.ஆருடன் மனோரமா பங்கேற்ற கடைசி படம்.)

தேவர் பிலிம்ஸ், முக்தா பிலிம்ஸ் போன்று கே.பாலாஜியின் தயாரிப்புகளில் மனோரமாவுக்கு நிச்சயம் ஓர் இடம் உண்டு.

நீதி படத்தில் மனோரமாவுக்காகவே டிராக்டர் ஓட்டும் கிராமத்து பொன்னம்மா கேரக்டரை கே.பாலாஜி உருவாக்கினார். சிவாஜியை ஒரு தலையாகக் காதலிக்கும் வேடம். விசிலுக்குக் கேட்க வேண்டுமா..? மீண்டும் வசந்தம்!

1981-ல் பாலாஜியின் படமான ‘சவால்’ மனோரமாவுக்கு பெரிய பிரேக். அதில் கமலுடன் பிக் பாக்கெட் அடிக்கும் ‘பர்மா பாப்பா’ வாக மனோரமா தூள் கலக்கி இருப்பார். ‘பந்தம்’ படத்தில் பேபி ஷாலினியுடன் செவிட்டுப் பெண்ணாக நடித்து குழந்தைகளைச் சிரிக்க வைப்பார்.

சினிமாவில் சிரிக்க சிரிக்கப் பேசி ஹாஸ்யங்கள் புரிந்த மனோரமாவின் சொந்த வாழ்க்கையில் சோகத்தின் சுவடுகளே அதிகம்.

அம்மாவை தெய்வமாக மதித்தவர். தாய் சொல்லைத் தட்டாதவர். சினிமாவில் நடிக்க வேண்டாம் என்று சொன்ன கணவரை, அன்னையின் ஆணைக்கேற்ப விட்டுப் பிரிந்தார். அம்மாவின் கனவை நிறைவேற்ற கலையுலகில் மாபெரும் சாதனையாளராக உயர்ந்தவர்.

‘கண் திறந்தது’ படம் மூலம் பிரபலம் ஆன ராமநாதன், மனோரமாவின் கணவர். மனோரமாவுடனான திருமண வாழ்க்கை முறிந்ததும் அவர் மறு விவாகம் செய்து கொண்டார். ஆனால் வாரிசுகள் இல்லை. 1992-ல் அவர் மறைந்தபோது தன் கணவருக்குக்குக் கொள்ளி வைக்க மகன் பூபதியுடன் சென்ற பெருந்தன்மைக்குரியவர் மனோரமா.

வெவ்வேறு திசைகளில் தமிழ் சினிமா பயணித்தாலும் மனோரமா தன் இடத்தை சாமர்த்தியமாகத் தக்க வைத்துக்கொண்டார்.

முப்பது ஆண்டுகளாக நகைச்சுவைக்கு ஒரே சிறந்த நடிகையாக ஆண்டு தோறும் விருதுகளைக் குவித்தவர் மனோரமா. சிவாஜியை மட்டும் அல்ல. எம்.ஜி.ஆருக்கு நிகரான பானுமதியையும் வியக்க வைத்தவர் அவர்.

‘பத்து மாத பந்தம்’ படத்தில் ‘தெய்வமகன்’ சிவாஜியைப் போல் அம்மாவாகவும் இரண்டு மகள்களாகவும் தினுசு தினுசாகப் புதுப்புது வடிவங்களில் மக்களை மகிழச் செய்தார்.

‘மொத்தம் மூன்று மனோரமாக்களைச் சந்திக்கிறோம். ஹைஸ்கூலில் காதலித்துக் கல்லூரியில் கல்யாணம் செய்துகொண்டு வாயும் வயிறுமாக ஹாஸ்யம் படைக்க வருகிறார் முதலில். அவர் தன் வயிற்றை மறந்து உற்சாகமாகக் குதி போடத் தொடங்குவதும் பிறகு ‘ஆ’வென்று வயிற்றைப் பிடித்தவாறு சோர்ந்து போவதும் வேதனையான வேடிக்கை. அவருடைய இரட்டைப் பெண்களாக மழலைக் கொஞ்சல் மனோரமாக்கள் வேறு. அமர்க்களம் போங்கள்!’ என்றது எவரையும் எளிதாகப் பாராட்டி விடாத குமுதம்.

பத்து மாத பந்தம் லேசான படமல்ல. கிருஷ்ணன்- பஞ்சு இயக்கியது. 1974 தைத் திருநாள் வெளியீடு.

பி. பானுமதி, சரோஜாதேவி, எம்.என். ராஜம், வெண்ணிற ஆடை நிர்மலா, ஏவிஎம். ராஜன், முத்துராமன், ரவிச்சந்திரன், அசோகன்... என நட்சத்திரப் பட்டியல் நிறைந்தது. அத்தனை பேருக்கும் நடுவில் நடிப்புக்கு இலக்கணம் வகுத்த பானுமதியோடு ஒரு வண்ணப் படத்தில் அவரையும் மீறி ஒருவர் பெயர் பெறுவது சாத்தியமே அல்ல.

சகலகலாவல்லியான பானுமதியுடன் சேர்ந்து அவரது இயக்கத்தில் ‘இப்படியும் ஒரு பெண்’ (1975 மே 1 ரிலீஸ்) படத்தில் ஜெயில் காட்சியில் பாடி நடித்திருக்கிறார் மனோரமா. ‘அகப்பட்ட வரையில் சுருட்டிட்ட யாரும் சுகப்பட்டதில்ல’ என்று அதன் பல்லவி ஆரம்பமாகும்.

1989-ல் ஏவிஎம்.மின் ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’ அவரது ஹாஸ்ய நடிப்பின் நிறைவான கட்டமாக இருந்தது. அதில் கம்புச் சண்டையும் போட்டு சிறுவர் சிறுமியரைத் தன் வசப்படுத்தினார். சந்திரபோஸ் இசையில் அவர் பாடிய டைட்டில் சாங் ஒலிக்காத ஊரே இல்லை. அன்றைய முதல்வர் கலைஞர் தலைமையில் வெள்ளி விழா நடந்தது. பாட்டி சொல்லைத் தட்டாதே படத்தைத் தெலுங்கிலும் ஏவிஎம் தயாரித்தது. அதில் மனோரமாவின் வேடம் பானுமதிக்கு.

‘மனோரமா இந்த ரோலை கிரியேட் பண்ணிட்டாங்க. நான் அந்த ரோலில் ஆக்ட் பண்றேன். அவ்வளவுதான். ஐ டு நாட் நோ ஹவ் ஃபார் ஐ வில் ரீச் மனோரமா’ என்றார் பானுமதி.வசிஷ்டை வாயால் பிரம்ம ரிஷி பட்டம் யாருக்குக் கிடைக்கும்? ஆந்திரத்து ஆஸ்கார் அல்லவா அது!

மூப்பு வந்ததும் வயதுக்கேற்ப மெல்ல குணச்சித்திர நடிப்பில் ஆர்வம் காட்டினார். கமல்- ஷங்கர் இணைந்த ஒரே படமான ‘இந்தியனில்’ மனோரமா ஏழைக் கிழவியாக உருக வைத்ததை யாரால் மறக்க முடியும்! அதற்குக் கிடைத்த பலன் - 1996ன் சிறந்த குணச்சித்திர நடிகையாக மனோரமாவை கவுரவித்தது பேசும் படம் இதழ்.



அவர் வயதான தாயாராக நடித்த சின்ன கவுண்டர், சின்ன தம்பி, நாட்டாமை போன்ற படங்கள் தாறுமாறாக ஓடி வெள்ளிவிழா கொண்டாடின. ஏராளமான வசூலைக் குவித்தன. தெலுங்கிலும் ஏராளமான கேரக்டர் ரோல்கள் மனோரமாவைத் தேடி வந்தன. தமிழைப் போலவே அற்புதமாக சுந்தரத் தெலுங்கிலும் மாட்லாடுவார் மனோரமா.

சுஜாதாவின் ‘கரையெல்லாம் செண்பகப்பூ’ சினிமாவாக வந்தது. நாட்டுப்புறப்பாடல் பாடும் கிழவியாக மனோரமா அநாயாசமாக நடித்திருப்பார். படம் ஓடவில்லை. அவ்வாறு மனோரமாவின் உழைப்பு தெரியாமல் போன படங்கள் எக்கச்சக்கம்.

ஐம்பது ஆண்டுகளைக் கடந்தாலும் ஜனங்களுக்கு மிகவும் பிடித்த ஜதை நாகேஷ் - மனோரமா. ஆறு ஆண்டுகளில் அலுப்பு சலிப்பில்லாமல் நூறு சினிமாக்களுக்கு மேல் நடித்த ஒரே காமெடி ஜோடி. அவை அத்தனையும் சிரஞ்சீவியான காட்சிப் பெட்டகம்!

கே.பாலசந்தரின் அனுபவி ராஜா அனுபவி படத்தில் வரும் ‘முத்துக் குளிக்க வாரீயளா...!’ பாடல் மனோரமாவின் இறுதி ஊர்வலத்திலும் இடம் பிடித்தது.

நவராத்திரி நேரத்தில் முப்பெரும் தேவியரோடு சேர்ந்து மனோரமாவும் சாமியாகி விட்டார்! என்றும் வாழும் அவர் புகழுக்கு அஞ்சலி எழுத வேண்டாம் என்று இருந்தேன். மனோரமாவை சிரிப்பு தேவதையாகப் பார்த்து பார்த்து ரசித்த பாழும் மனசு கேட்கவில்லை.

சிவாஜி, ஜெமினிக்கு செய்தது போல ஆச்சியின் தகனத்தையும் அரசு மரியாதைகளுடன் துப்பாக்கிக் குண்டுகள் முழங்க நடத்தியிருக்கலாம்.

chinnakkannan
16th October 2015, 12:04 PM
ராகவ் ஜி..

ஒரு சின்ன சந்தேகம். தங்கப் பதக்கம் படத்தில்தானே எஸ்.பி.சௌத்ரி எனும் பெயர் பிரபலமானது ? அது 1974 வெளிவந்ததில்லையோ ? உங்கள் நண்பன் குறும்படம் Early 60s ல் வந்திருக்குமா ? அந்த கவிதையில் நடிகர் திலகத்தின் இந்த கதாபாத்திரத்தின் பெயர் வருகிறதே ? அந்த நாடகம் கூட அறுபதுகளின் இறுதியில்தானே அரங்கேறியது ?

அல்லது அந்தக் கவிதை பிற்காலத்தில் வெளியிடப்பட்டதா ?

சிக்கா வந்து கவிதையில் கேட்டு வைப்பார்... அதுக்குள்ள சொல்லிடுங்க.. இல்லாட்டி குழம்பிடுவீங்க !! ( நான் ஜூட்ட்ட் )


மது
அது என் உள்மனதின் வெளிப்பாடு..
ஆதங்கத்தின் எதிரொலி...
நிழற்படம் மட்டுமே பழையது..

சி.க. வுக்கு பயந்து பயந்து எழுதுதாக இருக்கு..

என்ன செய்றது.. சீர் செனத்தி எல்லாம் கொண்டு வந்தால் தான் தங்கை என்பது போல சொல்லி விடுவார்..

எதற்கும் முன் கூட்டியே ஒரு எக்ஸ்கியூஸ் கேட்டு வைக்கிறேன்..

சி.க. சார்.. கைண்ட்லி எக்ஸ்கியூஸ் மீ ஃபார் எனி எரர் ஆர் ஒமிஷன் ஆர் கிராமேடிகல் மிஷ்டேக்..

ஹாய் குட்மார்னிங்க் ஆல்..

மதுண்ணா, ராகவ்ஜி..

இஃதென்ன மதுரைக்கு வந்த சோதனையால்ல இருக்கு! :)

உங்களின் நண்ப னென்றே
..உணர்வுகள் சொல்லும் போதில்
தங்களின் சிந்தை யுள்ளே
..தகதக வென்றே தோன்றும்
விந்தையாம் கேள்வி என்ன
..விளக்குவீர் சிறுவன் நானும்
சொந்தமாய் எழுதிப் பார்த்தும்
..சோர்வினைப் போக்கு வேனே! (ம்ம் பாவம் விதியாரை விட்டது) :)

மதுண்ணா சொன்னது போல் 60 களில் நடிக்கப்பட்ட உங்களின் நண்பன் குறும்படம் என்ற செய்தி படித்தால் என்ன தோன்றுகிறது..

அந்தக்காலத்தில் குறும்படம் இருந்ததா என்ன… ந.தி ஸ்பெஷல் அப்பியரன்ஸாக நடித்தார் சரி..எஸ்.பி செளத்திரியாகவா நடித்தார்..

கொஞ்சம் கோல்ட் மெடல் எனத் தமிழில் ”வாசு வாசு” பண்ணிப் பார்த்ததில்:

சிவாஜி நாடக மன்றம் என்ன காரணத்தாலோ கலைக்கப் பட்டு விட- அதில் நடித்திருந்த நடிகர்களான செந்தாமரை எஸ். ஏ கண்ணன் இருவரும் ஒரு நாடகக் குழு ஆரம்பித்து போட்ட நாடகம் – இரண்டில் ஒன்று.. அது 42 வது முறை அரங்கேறிய போது பார்க்க வந்தார் ந.தி.

அதில் ஒன்றி, மறுபடியும் செந்தாமரையிடம் “ செந்தாமரை.. நாளைக்கு எங்க போடப் போகிறீங்க”

செந்தாமரை பவ்யமாய் “ அண்ணா.. இன்ன இடத்தில் “ எனச் சொல்ல நாளையோட நாடகத்தை நிறுத்திக்குங்க”

செந்தாமரைக்கும், எஸ்.ஏ. கண்ணனுக்கும் ஷாக்.. “ஐயா…”

ந.தி சிரித்து..” இல்லைப்பா.. நானே அதில் நடிக்கிறேன்.. நம்ம சிவாஜி நாடக மன்றம் அதிலேயே இந்த நாடகம் வரட்டும் என்ன சொல்றீங்க”

மெய்யுடன் மேன்மை பொங்க
…மேதினி மக்கள் நெஞ்சம்
கொய்தவன் கேட்க உள்ளம்
…கோலமாய்த் துள்ளி ஆட
நெய்யினை விட்ட தீபம்
..நேர்பட மின்னற் போலே
செய்யலாம் என்றே சொன்னார்
…செந்தா மரையும் அங்கே..

வேறென்ன வேண்டும்.. நாங்கள்லாம் தம்மாத்தூண்டு நடிகர்கள்.. ஏதோ நீங்க தரலைன்னு நாங்க ஏதோ மகேந்திரன்னு ஒரு ரைட்டர் வச்சு நாடகம் போடறோம்.. உங்களுக்கு அந்தக் கதாபாத்திரம் பிடிச்சுருக்கா.. நடிக்கலாங்க – என்றனர் செந்தாமரையும் கண்ணனும்..

அப்படி தங்கப் பதக்கம் நாடகம் போடப்பட்டது..அதுபற்றி முதல் நாள் என்ன ஆச்சுன்னாக்க….அதை கதாசிரியர் மகேந்திரன் வாயிலாகவே கேட்போம்..


அடுத்து மூன்று நாட்கள் படப்பிடிப்பு முடிந்து வந்த பிறகு நாடக வசனங்களை படிக்கச் சொல்லி கண்மூடி கேட்டார் சிவாஜி. நான்காம் நாள் மேடையில் பிரதான ஒத்திகை. ஐந்தாம் நாள் "தங்கப் பதக்கம்' நாடகம் தலைவர் காமராஜர் தலைமையில் மியூசிக் அகாடமியில் அரங்கேற்றம் கண்டது.

அரங்கேற்ற தினத்தன்று ஒப்பனை அறையில் சிவாஜியை எட்டிப் பார்த்தேன். ஒப்பனை நடந்து கொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அவரது உடம்பு "எஃகு' போல் நிமிருகிறது. மூன்று நாள்தானே வசனம் படிக்கச் சொல்லி கேட்டார். எதையும் மறக்காமல் எப்படி வசனம் பேசுவார்? என்ற மாதிரியான கேள்விகள் எனக்குள் இருந்தது. மணி அடித்துவிட்டது.

நாடகம் தொடங்கியது. நான் எழுதிய ஒரு வசனத்தைக் கூட அவர் மறக்கவில்லை. எனக்குள் பிரமிப்பு! எப்படி இது சாத்தியம்? நாடகம் முடியும்வரை கைத்தட்டல் ஓயவில்லை.
நாடகம் முடிந்து ஒப்பனை அறைக்குள் போனேன். ஒப்பனை கலைத்து விட்டு களைப்போடு உட்கார்ந்திருந்தார் நடிகர் திலகம்.

நாடகம் முழுக்க அவர் காட்டிய கம்பீரத்திற்கும், ஓப்பற்ற நடிப்பிற்கும் அவர் தனது உடல் சக்தி அத்தனையையும் தந்து விட்டு இப்போது ஒப்பனை கலைந்ததும் செளத்ரியாக வாழ்ந்து நடித்தவர் தனது இயல்பு நிலைக்குத் திரும்பி அவர் அவராகி விட்டார் என்று தெரிந்தது. என்னைப் பார்த்ததும், ""என்னப்பா உன் டயலாக்கை எல்லாம் ஒழுங்காக பேசினேனா?'' என்று ஒரு மாணவனைப் போல கேட்டார் அந்த மாபெரும் நடிகர். என் கண்கள் கலங்கின.”

ஸோ..தங்கப் பதக்கம் நாடகமாகி பின் திரையில் 1974 இல் வந்தது என்றால் நாடகம் 1973 இல் போடப்பட்டு இருக்கவேண்டும் இல்லியோ..

மதுண்ணா கேட்டது போல 1960 இல் செளத்ரி பிறந்திருக்க (கதாசிரியரின் இதயத்தில்) வாய்ப்பே இல்லை.. ( நானே பிறந்திருக்கவில்லை ஹி..ஹி..)

ஓஹ்..அதான் ராகவேந்தர் ஜி சொல்லிட்டாரே..

//அது என் உள்மனதின் வெளிப்பாடு..
ஆதங்கத்தின் எதிரொலி...
நிழற்படம் மட்டுமே பழையது..//

ஓ..கே ஜி.. நீங்கள் கேட்டுக்கொண்ட படி மன்னித்தாகி விட்டது.. :)

//
என்ன செய்றது.. சீர் செனத்தி எல்லாம் கொண்டு வந்தால் தான் தங்கை என்பது போல சொல்லி விடுவார்..//

ராகவேந்தர் சார்.. நீங்கள் அவ்வப்போது கொடுக்கும் பழைய ஆவணங்களே எங்களுக்கு சீர் ஆக்கும்… எவ்வளவு நீங்கள் கொடுத்தாலும் இன்னும் வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொண்டிருப்போம்

தீர்க்கமாய்ச் சொல்லிடுவோம் தித்திக்கும் ஓவியங்கள்
சீர்களெனச் சாற்றிடுவோம் ஆம்..

ஹப்பாடி..முடிச்ச்சுட்டேன்.. :)

ஆனந்த விகடன் தங்கப் பதக்கம் விமர்சனம்.. ( சொல்ல மறந்துட்டேன்..தங்கப்பதக்கம் நான்பார்த்தது மதுரை சென் ட்ரல்.. புரியாமல் பார்த்தது..வெகு சின்னக் கண்ணன் எனச் சொல்லவும் வேண்டுமோ) :)

https://awardakodukkaranga.wordpress.com/2010/04/17/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%A F%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%A E%AE%E0%AF%8D/

chinnakkannan
16th October 2015, 12:23 PM
தசரதன் மகன் நான்
ஜனகனின் மகள் நீ
மாமனின் வீட்டிற்கின்று விருந்துக்கு வந்தேன்..

தேங்காய் ராமராகவும் மனோரமா சீதையாகவும்..இமாஜின் பண்ணினாக் கொஞ்சம் டைஜஸ்ட் பண்ணக் கஷ்டமாத் தான் இருக்கு :)

https://youtu.be/-cu0ELoiMWc

chinnakkannan
16th October 2015, 12:38 PM
//மதுரம் தொடங்கி மதுமிதா வரையில் உலகில் தமிழ்நாடு போல் சிரிப்பு காட்டி திரைக்குச் சிறப்பு சேர்த்த பெண்கள் வேறு எங்கும் காணோம். அவர்களில் மனோரமா சிரஞ்சீவி. நிரந்தரமாகப் புகழ் மகுடம் சூட்டிக் கொண்ட ஒரே மகாராணி!//

மீன்ஸ் தமிழ் சினிமாவில் நடித்த நகைச்சுவை நடிகைகள்..

சின்னதாய் லிஸ்ட் போட்டால்

டி.ஏ.மதுரம் - என் எஸ் க்ருஷ்ணன் - திரு நீலகண்டர்

நாகேஷ் - மாதவி - ( அதே கண்கள்)

மனோரமா

கோவை சரளா

நாகேஷ் சச்சு கா. நே

நாகேஷ் ரமாப் ப்ரபா - உ.இ. உ வா..

வெண்ணிற ஆடை மூர்த்தி - அந்தக் கூழாங்கல் மின்சார மோகினி - வெண்ணிற ஆடை படம் (பெயர் மறந்துவிட்டது)



மதுமிதா ( ஒருகல் ஒரு கண்ணாடி)

வேற யார் லாம் இன்பெட்வீன் இருக்காங்க..

ஓ. தங்கவேலு சரோஜா
தங்கவேலு - முத்துலட்சுமி (அதான் தெரியுமே)

இவங்க தான் அத்தை நமஸ்காரம் பண்ணிக்கம்மா..என நாகேஷ் சொல்ல அத்தை தொபீல் என விழ தியேட்டர் அலறும் - கலாட்டா கல்யாணம் - அவர் பெயர் மறந்து விட்டத்..

வேறு யாராக்கும் இருக்காங்க..

RAGHAVENDRA
16th October 2015, 12:48 PM
மன்னிப்பை ஏற்றுக்கொண்டேன்....சி.க.சார்...:bow:


வெண்ணிற ஆடை மூர்த்தி - அந்தக் கூழாங்கல் மின்சார மோகினி - வெண்ணிற ஆடை படம் (பெயர் மறந்துவிட்டது

அது ஷைலஸ்ரீ எ ஆஷா.


இவங்க தான் அத்தை நமஸ்காரம் பண்ணிக்கம்மா..என நாகேஷ் சொல்ல அத்தை தொபீல் என விழ தியேட்டர் அலறும் - கலாட்டா கல்யாணம் - அவர் பெயர் மறந்து விட்டத்..

எஸ்.என்.பார்வதி

லிஸ்டில் இன்னும் ஒன்றிரண்டு

அந்தக் காலத்தில் ...

அச்ச்சோ சித்ரா..
அம்முகுட்டி புஷ்பமாலா

இப்போது மோகன்ராமன் சார் புதல்வி.. வித்யுத்... சான்ஸ் நெறைய கிடைச்சா இந்த தலைமுறைக்கு மனோரமாவாக வரலாம்.. ஆனால் மதுமிதாவின் போட்டி ரொம்ப அதிகம்..

சற்று பூசினாற்போல உடம்பு வைத்துக்கொண்டு காமெடி பாத்திரங்களில் பிச்சி உதறியவர்களில்..

பிந்து கோஷ்

ஆர்த்தி..

RAGHAVENDRA
16th October 2015, 12:51 PM
தேங்காய் ராமராகவும் மனோரமா சீதையாகவும்..இமாஜின் பண்ணினாக் கொஞ்சம் டைஜஸ்ட் பண்ணக் கஷ்டமாத் தான் இருக்கு


அதுக்குத்தான் கையிலே எப்பவும் ஜெலுசில் இருக்கணும்கிறது.. தெரியுதில்லே.. டைஜஸ்ட் ஆகாதுன்னு தெரிஞ்சே சாப்பிட்டா அனுபவிச்சுத்தான் ஆகணும்...
என்ன நான் சொல்றது..
[சாமிக்கண்ணு மாதிரி தலையை சாச்சிப்பாத்தா கழுத்து சுளுக்கு தான் மிச்சம்]

vasudevan31355
16th October 2015, 12:57 PM
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்

(நெடுந்தொடர்)

43

'முள்ளில்லா ரோஜா'

http://i.ytimg.com/vi/nTVQkdmUtqo/hqdefault.jpg

'மூன்று தெய்வங்கள்'

இதோ இன்றைய தொடரில் பாலாவின் புயல் பாட்டு. சூறாவளி சாங். மேலும் புகழ் உச்சியில் அவரைக் கொண்டு நிறுத்திய, அமர்த்திய பாடல். ரோஜாவின் மென்மையை இந்த பாடக ராஜாவின் குரலில் உணரலாம். உடன் 'முள்ளில்லாத ரோஜா'வாக சுசீலா அம்மா குரலால் குல்கந்து சுகம் தருவதை உணரலாம்.

'மூன்று தெய்வங்கள்' படத்தில் பாலா, சுசீலா இணைவில் ஒருவர் விடாமல் அத்தனை தமிழ் நெஞ்சங்களும் கொண்டாடிய பாடல். ரசித்து மகிழும் பாடல் இன்றுவரை. என்று வரையும்.

வீட்டுக்கு வீடு ரோஜாச் செடி வைத்திருந்தார்களோ என்னவோ தெரியாது ஆனால் எல்லா வீடுகளிலும் வானொலிப் பெட்டிகளில் 'முள்ளில்லா ரோஜா'தான் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தது. அப்போதைக்கு வந்த அத்தனை டூயட்களையும் பின்னுக்குத் தள்ளி முன்னுக்கு வந்து பூத்த பாடல். நம் மனதை சுகமாய்த் தைத்த பாடல். அத்தனை வானொலி நிலையங்களும் போட்டா போட்டி போட்டு, போட்டுத் தாக்கிய பாடல்.

'மூன்று தெய்வங்களி'ல் மூன்று நாயகர்களுக்கு அப்புறம் நாலாவது நாயகர் இளம் சிவக்குமார். இவரும், சந்திரகலாவும் செய்யும் காதலை வைத்தே படத்தின் கதை சுழலும். (மூலக்கதை மதுசூதன் கலேல்கர்)

இருவரும் அவுட்டோரின் மலைப்பகுதிகளில் நெடிதுயர்ந்த காட்டு மரங்களுக்கு நடுவே, அந்தி இளம் வெயிலில் ஆடிப் பாடும் இந்தப் பாடல் ஆனந்தமாய் நம் இதயத்தை அள்ளுகிறது.

நடித்தவர்களை விட பாடகர்களே நெஞ்சை ஆக்கிரமிக்கிறார்கள். கூடவே ரகளையான இசைப் பின்னணியும்.

சிவக்குமார் இளமை ததும்பும் நாயகன். ஆனால் சந்திரகலா அழகில் சுமார்தான். சிவக்குமாரோ 'ஒயிட் அண்ட் ஒயிட்' ஷர்ட்டில் (பாடலுக்குப் பொருத்தமாக ஒயிட் ஷர்ட்டில் மலர்ந்தும் மலராத, முள்ளில்லா ரோஜாக்கள் இரண்டும், அதன் மேல் ஒரு ரோஜா மொக்கும் இருப்பது போல டைமிங்காக எம்பிராய்டெரி ஒர்க் என்று நினைக்கிறேன்.) கொள்ளை அழகு. அதனால் ஜோடிப் பொருத்தம் அந்த அளவிற்கு எடுபடாது. ஆனால் பாலா, சுசீலா குரலும், அருமையான ஒளிப்பதிவும், அழகில் தோய்த்தெடுத்த வண்ணமும், அமுதமான இசையும் அந்தக் குறையை அறவே போக்கி விடுகின்றன.

பாலா அழுத்தமான குரலில் கம்பீரமாக,

'முள்ளில்லா ரோஜா'

எனும் போதே நம் முகம் அனைத்தும் மலரத் தொடங்கி விடும்.

'முத்தாரப் பொன்னூஞ்சல் கண்டேன்'

முடித்தவுடன் வரும் ஷெனாய் ஒலி அருமை.

மிக உயர்ந்த மரங்களின் நிழல்களுக்கிடையே சூரிய ஒளிக்கதிர்கள் லேசாக அந்திப்பட்டு நேரத்தில் ஊடுருவிப் பாய, வெளிச்சங்களுக்கும், நிழல்களுக்கும் நடுவே, காதலர்கள் தங்கள் நீளமான நிழல்கள் நிலத்தில் விழ, ஆடிப் பாடுவது ரம்மியம்.

இந்தப் பாடலின் சரணங்கள் நடுவே வரும் இடையிசை கூட அனைவருக்கும் மனப்பாடமாய்த் தெரிந்திருக்கும் என்பது இப்பாடலின் தனிச் சிறப்பு. இப் பாடலைக் கேட்கும் போது, பலர் பாடலுடன் இணைந்து பாடும் போது, இடையிசையையும் மறக்காமல் தொடர்ந்து வாயால் அளிக்கக் கேட்டு நான் பார்த்திருக்கிறேன். அந்த அளவிற்கு 'மெல்லிசை மன்னர்' வாத்தியக் கருவிகளால் அதகளம் புரிந்திருப்பார்.

தலையில் கனகாம்பரப் பூவுடன், அதே கலரில் மேட்சாக மணி, பட்டுப்புடவை உடுத்தியிருக்கும் சந்திரகலா (இவரும் அழகாகப் புடவை கட்டுவதில் வல்லவர்தான்.) சிவாவை விட கொஞ்சம் உயரம் ஜாஸ்தி. ஆதலால் பெரும்பாலும் சரிவுப் பகுதிகளில் சந்திரகலாவை நிற்க வைத்து, மேடான பகுதியில் சிவக்குமாரை நிற்க வைத்து காதல் காட்சிகளை அட்ஜஸ்ட் செய்து எடுத்திருப்பார்கள். (இத்தனைக்கும் சிவா பிளாக் கலர் ஷூ வேறு போட்டிருப்பார். சந்திரகலா வெறும் கால்களுடனே நடித்திருப்பார்) பாடலினூடே தூரத் தெரியும் பச்சை பசேல் தேயிலைத் தோட்டங்கள் மலைகளின் படிக்கட்டுகளாகப் பரவித் தெரிவது கண்ணுக்குப் பசுமைப் பரவசமே.

http://i.ytimg.com/vi/pKuiEkGsTVY/hqdefault.jpg

முதல் சரணம் முடிந்ததும் சுசீலா 'ஹாஹஹா' எடுக்கையில் தூரத்தில் மரங்களுக்கிடையே ஓடி வரும் சந்திரகலாவையும், அருகில் மரங்கள் அல்லாத பகுதியில் நின்று பின் ஒரு சுற்று திரும்பி சந்திரகலாவின் ஓட்டத்திற்கு இணையாக வேகமாக நடந்து வரும் சிவக்குமாரையும், அவருக்கும் கீழே உள்ள சரிவில், அதே வேகத்துடன் டிராலியில் காமெரா வைத்து நகர்ந்து கொண்டே 'அண்டர் டு டாப்' ஷாட்டாக, இந்தக் காட்சியை மிக அற்புதமாகப் படம் பிடித்திருப்பார் ஒளிப்பதிவு இயக்குனர் கே.எஸ்.பிரசாத் அவர்கள். இந்த ஷாட் என் உள்ளம் கொள்ளை கொண்ட ஷாட்டாகும். மிக மிக அற்புதமாய் இருக்கும். ஒரே ஒரு குறை. இந்த ஷாட்டில் அந்த திரும்பி நடக்கும் நடைக்கு நடிகர் திலகம் இருந்திருந்தால்?....காலமெல்லாம் நம் சொல்லிச் சொல்லி மகிழ அற்புதமான இன்னொரு நடை நமக்குக் கிடைத்திருக்கும். ப்ச்!

இடையிசை முடிந்து வரும் பாலா, சுசீலா தரும் அந்த 'ஹாஹஹா' ஹம்மிங்...அடடடா! ஆஹா!

'மோகத்தின் வேகத்தில் நான் தந்த சின்னங்கள் மறைந்து போகுமோ'

வரிகளில் கவிஞர் அள்ளுவார். பாலாவும் 'மறைந்து போகுமோ' வார்த்தைகளை நாம் என்றுமே மறந்து போகாதவாறு அருமையாக உச்சரித்துப் பாடுவார். 'கண்ணுக்குள்' என்று பாலா ஒர் வார்த்தை கூற, அதற்கு சுசீலா 'கொஞ்சம் பாருங்கள்' என்று பதில் கூற, திரும்ப பாலா 'என்னென்ன' என்று பாட, 'உண்டு கேளுங்கள்' என்று இசையரசி முடிப்பது வார்த்தைகள் சுகம்.

சிவக்குமார் சின்னக் குழந்தை போல ஓட்டமும், நடையுமாக உற்சாகமாக செய்திருப்பார். சந்திரகலா பாந்தம்.

இந்தப் பாடலிலும் நிழல்களின் நீளங்கள் சில இடங்களில் மாறி படமாக்கப்பட்ட பகல், மாலை நேரங்களை நமக்குக் காட்டிக் கொடுக்கும்.

பொன்னூஞ்சல் போல நம் இதயத்தில் என்றும் ஊஞ்சலாடும் இளமைப் பாடல்.

http://s1.dmcdn.net/Cj6Zq/x240-VNE.jpg

முள்ளில்லா ரோஜா
முத்தாரப் பொன்னூஞ்சல் கண்டேன்
முள்ளில்லா ரோஜா
முத்தாரப் பொன்னூஞ்சல் கண்டேன்

பொன்னைப் போல் நின்றேன்
பூவென்னும் என் உள்ளம் பொன்னை அள்ளித் தந்தேன்

முள்ளில்லா ரோஜா

முத்தாரப் பொன்னூஞ்சல் கண்டேன்

மானென்னும் பேர் கொண்டு பெண்ணொன்று வந்தது
மார்பில் ஆடட்டும்
மானென்னும் பேர் கொண்டு பெண்ணொன்று வந்தது
மார்பில் ஆடட்டும்

ஏனென்று கேளாமல் நானிங்கு வந்த பின்
ஏக்கம் தீரட்டும்
ஏனென்று கேளாமல் நானிங்கு வந்த பின்
ஏக்கம் தீரட்டும்

கண்ணுக்குள்

கொஞ்சம் பாருங்கள்

என்னென்ன

உண்டு கூறுங்கள்

முள்ளில்லா ரோஜா
முத்தாரப் பொன்னூஞ்சல் கண்டேன்

ஆஹஹஹா.....ஹா
ஆஹஹஹா..... ஹா

தேன் பட்ட கன்னங்கள் நீ தொட்ட நேரத்தில் சிவந்து போகுமோ
தேன் பட்ட கன்னங்கள் நீ தொட்ட நேரத்தில் சிவந்து போகுமோ

மோகத்தின் வேகத்தில் நான் தந்த சின்னங்கள் மறைந்து போகுமோ
மோகத்தின் வேகத்தில் நான் தந்த சின்னங்கள் மறைந்து போகுமோ

சந்தித்தால்

கொஞ்சம் தொல்லைதான்

சிந்தித்தால்

இன்ப எல்லைதான்

முள்ளில்லா ரோஜா
முத்தாரப் பொன்னூஞ்சல் கண்டேன்

பொன்னைப் போல் நின்றேன்
பூவென்னும் என் உள்ளம் பொன்னை அள்ளித் தந்தேன்

முள்ளில்லா ரோஜா
முத்தாரப் பொன்னூஞ்சல் கண்டேன்

ஹாஹா ஹாஹா
ஹாஹா ஹாஹா


https://youtu.be/pKuiEkGsTVY

JamesFague
16th October 2015, 01:05 PM
Courtesy: Tamil Hindu

காற்றில் கலந்த இசை 26: காதல் வனத்தின் தேசிய கீதம்!




வெவ்வேறு நிலப்பகுதிகளுக்கு ஏற்ற இசையை வழங்குவது என்பது அந்தந்த நிலப்பகுதிகளில் பயன்படுத்தப்படும் இசைக் கருவிகள், சத்தங்கள் போன்றவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் மட்டும் சாத்தியமாவதல்ல. குறிப்பிட்ட அந்த இசையைக் கேட்பவர்களை அந்த நிலப்பரப்புக்கே அழைத்துச் செல்லும் அளவுக்கு, அந்த நிலப்பரப்பின் கூறுகளை இசைக் கருவிகளின் மூலம் நுட்பமாகப் பிரதிபலிக்கும் மேதமை தேவைப்படும் விஷயம் அது.

வெவ்வேறு கலாச்சாரங்களின் பின்னணியிலான படைப்புகளுக்கு இசையமைத்திருக்கும் இளையராஜா, இந்த விஷயத்தில் தனிக் கவனம் செலுத்தியவர். வனப் பகுதிகளில் படமாக்கப்பட்ட ‘கரும்பு வில்’ (1980) திரைப்படத்தின் பாடல்கள் அந்த ரகத்தைச் சேர்ந்தவை.

ஒய். விஜயா, சுதாகர், சுபாஷிணி உள்ளிட்டோர் நடித்தி ருக்கும் இப்படம் ஜி.ஆர்.பி. எண்டர்பிரைசஸ் தயாரிப்பில் விஜய் என்பவரது இயக்கத்தில் வெளியானது. காதல் கடவுளான மன்மதனின் ‘போர்க் கருவி’யான கரும்பு வில்லைத் தலைப்பாகக் கொண்ட இப்படத்துக்கு உயிர்ப்பான காதல் பாடல்களைத் தந்தார் இளையராஜா.

மலையும் மலை சார்ந்த இடமுமான குறிஞ்சி நிலமும், காடும் காடு சார்ந்த இடமான முல்லை நிலமும் சங்கமிக்கும் ஒரு பிரதேசத்தைக் கண் முன் நிறுத்தும் பாடல், ஜேசுதாஸ் பாடிய ‘மீன் கொடித் தேரில் மன்மதராஜன் ஊர்வலம் போகின்றான்’. எம்.ஜி. வல்லபன் எழுதிய பாடல். பழங்குடி மக்களின் வாழ்வு முறையை நினைவுபடுத்தும் இசை மற்றும் பாடல் வரிகளின் மூலம் வெவ்வேறான மனச்சித்திரங்களை உருவாக்கக்கூடிய பாடல் இது.

மாலை நேர ஒளி கவிந்திருக்கும் கானகத்தின் ஒற்றையடிப் பாதைகளின் வழியே, பழங்குடியின இசைக் கருவிகளை இசைத்துக்கொண்டு மலைக் கிராமத்து மக்கள் பல்லக்கு ஒன்றைத் தூக்கிச் செல்லும் காட்சி மனதில் தோன்றும். பல்லக்கில் நாயகன் அமர்ந்திருக்க, அவனது பிரிவைத் தாங்க முடியாத நாயகியின் குரல் மலைப் பாதைகளின் வழியே பின் தொடர்வதைப் போன்ற சிலிர்ப்பு மனதுக்குள் எழும்.

பழங்குடியினரின் பொது இசைக் கருவியாகக் கருதப்படும் பெரிய அளவிலான டிரம்ஸ் இசையின் பிரம்மாண்ட அதிர்வோடு பாடல் தொடங்கும். தொடர்ந்து ‘ஓலா… ஓலா… ஓலல்லா’ என்று பழங்குடியின பெண் குரல்கள் ஒலிக்கும். சீரான ஊர்வல நடையின் ஒலி வடிவமாக இப்பாடலின் தாளக்கட்டு ஒரே வேகத்தில் ஒலித்துக்கொண்டே இருக்கும். சூரிய ஒளி அத்தனை எளிதாக ஊடுருவ முடியாத அடர்ந்த வனத்தை ஊடுருவிச் செல்லும் ஷெனாய் இசையை ஒலிக்க விட்டிருப்பார் இளையராஜா.

வனப் பூக்களின் மீது துளிர்த்திருக்கும் பனித்துளியின் சிதறலைப் போல், சந்தூர் இசைக் கருவி ஒலித்து மறைய, ‘மீன்கொடி தேரில் மன்மதராஜன்’ என்று கம்பீரமும் கழிவிரக்கமும் கொண்ட குரலில் பாடத் தொடங்குவார் ஜேசுதாஸ்.

முதல் நிரவல் இசையில் பெண் குரல்களின் கோரஸ், பியானோ, புல்லாங்குழல் என்று வெவ்வேறு அடுக்குகளில் பிரிவின் ஏக்கமும், வனத்தின் ஏகாந்தமும் கலந்த இசைக்கோவையை உருவாக்கியிருப்பார் இளையராஜா. பெண் கோரஸ் குரல்கள் மெல்லத் தேய்ந்து மறைவதற்கும் பியானோ இசைக்கத் தொடங்குவதற்கும் இடையிலான நுட்பமான அந்த நிசப்தம், வனத்தில் தனித்திருக்கும் உணர்வைத் தரும். ‘காதல் ராகம் பாடியே…’ எனும் வரிகளைத் தொடர்ந்து, பாறையின் மீதேறி வழிந்தோடும் ஓடையை நினைவுபடுத்தும் சந்தூர் இசை தெறிக்கும்.

இரண்டாவது நிரவல் இசையில், புதர்கள் மண்டிய குன்றின் கீழே முன்னேறிச் செல்லும் ஊர்வலத்தை உயரமான இடத்திலிருந்து பார்ப்பதுபோன்ற உணர்வைத் தரும் ஷெனாய் இசையை ஒலிக்க விடுவார் இளையராஜா. பியானோ, புல்லாங்குழல், சந்தூர் என்று பொதுவான இசைக் கருவிகளை வைத்தே வனத்தின் காட்சிகளை உருவாக்குவதுதான் இப்பாடலின் தனிச்சிறப்பு.

இதே பாடலின் இன்னொரு வடிவத்தை ஜென்ஸி பாடியிருப்பார். உண்மையில், ஜென்ஸி பாடுவதுதான் படத்தின் முதன்மையான பாடல். அதன் சோக வடிவப் பாடல்தான் ஜேசுதாஸ் பாடுவது. அதீத உற்சாகம் கலந்த குரலில் ‘ஊர்வலத்தை’ ‘உர்வல’மாகக் குறுக்கி ஜென்ஸி பாடுவது குழந்தையின் குறும்பைப் போல் வேடிக்கையாகவும் களிப்பூட்டுவதாகவும் இருக்கும். பாடலின் எந்த வடிவமும் கண்களுக்கு இதமளிக்காது என்பதைச் சொல்லியாக வேண்டும்.

பழங்குடி பெண்ணின் சுயம்வரத்தில் கலந்துகொள்ளும் ஆண்கள் தங்கள் தகுதிகளை விளக்கிப் பாடும் ‘அடி நாகு…என் ராசாக்கிளி’ பாடலை ஜெயச்சந்திரன், டி.எல். மகராஜன் போன்றோர் பாடியிருப்பார்கள். குதூகலமான பாடல் இது.

மலேசியா வாசுதேவன் எஸ். ஜானகி பாடிய ‘மலர்களிலே ஆராதனை’ இப்படத்தின் முக்கியமான மற்றொரு பாடல். மன்மதனின் வியூகங்களுக்குள் அகப்பட்டுக்கொள்ளும் காதல் ஜோடி, காதலின் வேதனையை ஆராதித்துப் பாடும் இப்பாடலில் பெண் குரல்களின் கோரஸ், வயலின் இசைக்கோவை, புல்லாங்குழல், வீணை என்று இசைக் கருவிகளை வைத்து பிரத்யேகமான காதல் மொழியை உருவாக்கியிருப்பார் இளையராஜா. காதல் உலகுக்காக அவர் உருவாக்கிய தேசிய கீதங்களில் இப்பாடலும் ஒன்று!



JamesFague
16th October 2015, 01:06 PM
Courtesy: Tamil Hindu

காற்றில் கலந்த இசை 26: காதல் வனத்தின் தேசிய கீதம்!




வெவ்வேறு நிலப்பகுதிகளுக்கு ஏற்ற இசையை வழங்குவது என்பது அந்தந்த நிலப்பகுதிகளில் பயன்படுத்தப்படும் இசைக் கருவிகள், சத்தங்கள் போன்றவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் மட்டும் சாத்தியமாவதல்ல. குறிப்பிட்ட அந்த இசையைக் கேட்பவர்களை அந்த நிலப்பரப்புக்கே அழைத்துச் செல்லும் அளவுக்கு, அந்த நிலப்பரப்பின் கூறுகளை இசைக் கருவிகளின் மூலம் நுட்பமாகப் பிரதிபலிக்கும் மேதமை தேவைப்படும் விஷயம் அது.

வெவ்வேறு கலாச்சாரங்களின் பின்னணியிலான படைப்புகளுக்கு இசையமைத்திருக்கும் இளையராஜா, இந்த விஷயத்தில் தனிக் கவனம் செலுத்தியவர். வனப் பகுதிகளில் படமாக்கப்பட்ட ‘கரும்பு வில்’ (1980) திரைப்படத்தின் பாடல்கள் அந்த ரகத்தைச் சேர்ந்தவை.

ஒய். விஜயா, சுதாகர், சுபாஷிணி உள்ளிட்டோர் நடித்தி ருக்கும் இப்படம் ஜி.ஆர்.பி. எண்டர்பிரைசஸ் தயாரிப்பில் விஜய் என்பவரது இயக்கத்தில் வெளியானது. காதல் கடவுளான மன்மதனின் ‘போர்க் கருவி’யான கரும்பு வில்லைத் தலைப்பாகக் கொண்ட இப்படத்துக்கு உயிர்ப்பான காதல் பாடல்களைத் தந்தார் இளையராஜா.

மலையும் மலை சார்ந்த இடமுமான குறிஞ்சி நிலமும், காடும் காடு சார்ந்த இடமான முல்லை நிலமும் சங்கமிக்கும் ஒரு பிரதேசத்தைக் கண் முன் நிறுத்தும் பாடல், ஜேசுதாஸ் பாடிய ‘மீன் கொடித் தேரில் மன்மதராஜன் ஊர்வலம் போகின்றான்’. எம்.ஜி. வல்லபன் எழுதிய பாடல். பழங்குடி மக்களின் வாழ்வு முறையை நினைவுபடுத்தும் இசை மற்றும் பாடல் வரிகளின் மூலம் வெவ்வேறான மனச்சித்திரங்களை உருவாக்கக்கூடிய பாடல் இது.

மாலை நேர ஒளி கவிந்திருக்கும் கானகத்தின் ஒற்றையடிப் பாதைகளின் வழியே, பழங்குடியின இசைக் கருவிகளை இசைத்துக்கொண்டு மலைக் கிராமத்து மக்கள் பல்லக்கு ஒன்றைத் தூக்கிச் செல்லும் காட்சி மனதில் தோன்றும். பல்லக்கில் நாயகன் அமர்ந்திருக்க, அவனது பிரிவைத் தாங்க முடியாத நாயகியின் குரல் மலைப் பாதைகளின் வழியே பின் தொடர்வதைப் போன்ற சிலிர்ப்பு மனதுக்குள் எழும்.

பழங்குடியினரின் பொது இசைக் கருவியாகக் கருதப்படும் பெரிய அளவிலான டிரம்ஸ் இசையின் பிரம்மாண்ட அதிர்வோடு பாடல் தொடங்கும். தொடர்ந்து ‘ஓலா… ஓலா… ஓலல்லா’ என்று பழங்குடியின பெண் குரல்கள் ஒலிக்கும். சீரான ஊர்வல நடையின் ஒலி வடிவமாக இப்பாடலின் தாளக்கட்டு ஒரே வேகத்தில் ஒலித்துக்கொண்டே இருக்கும். சூரிய ஒளி அத்தனை எளிதாக ஊடுருவ முடியாத அடர்ந்த வனத்தை ஊடுருவிச் செல்லும் ஷெனாய் இசையை ஒலிக்க விட்டிருப்பார் இளையராஜா.

வனப் பூக்களின் மீது துளிர்த்திருக்கும் பனித்துளியின் சிதறலைப் போல், சந்தூர் இசைக் கருவி ஒலித்து மறைய, ‘மீன்கொடி தேரில் மன்மதராஜன்’ என்று கம்பீரமும் கழிவிரக்கமும் கொண்ட குரலில் பாடத் தொடங்குவார் ஜேசுதாஸ்.

முதல் நிரவல் இசையில் பெண் குரல்களின் கோரஸ், பியானோ, புல்லாங்குழல் என்று வெவ்வேறு அடுக்குகளில் பிரிவின் ஏக்கமும், வனத்தின் ஏகாந்தமும் கலந்த இசைக்கோவையை உருவாக்கியிருப்பார் இளையராஜா. பெண் கோரஸ் குரல்கள் மெல்லத் தேய்ந்து மறைவதற்கும் பியானோ இசைக்கத் தொடங்குவதற்கும் இடையிலான நுட்பமான அந்த நிசப்தம், வனத்தில் தனித்திருக்கும் உணர்வைத் தரும். ‘காதல் ராகம் பாடியே…’ எனும் வரிகளைத் தொடர்ந்து, பாறையின் மீதேறி வழிந்தோடும் ஓடையை நினைவுபடுத்தும் சந்தூர் இசை தெறிக்கும்.

இரண்டாவது நிரவல் இசையில், புதர்கள் மண்டிய குன்றின் கீழே முன்னேறிச் செல்லும் ஊர்வலத்தை உயரமான இடத்திலிருந்து பார்ப்பதுபோன்ற உணர்வைத் தரும் ஷெனாய் இசையை ஒலிக்க விடுவார் இளையராஜா. பியானோ, புல்லாங்குழல், சந்தூர் என்று பொதுவான இசைக் கருவிகளை வைத்தே வனத்தின் காட்சிகளை உருவாக்குவதுதான் இப்பாடலின் தனிச்சிறப்பு.

இதே பாடலின் இன்னொரு வடிவத்தை ஜென்ஸி பாடியிருப்பார். உண்மையில், ஜென்ஸி பாடுவதுதான் படத்தின் முதன்மையான பாடல். அதன் சோக வடிவப் பாடல்தான் ஜேசுதாஸ் பாடுவது. அதீத உற்சாகம் கலந்த குரலில் ‘ஊர்வலத்தை’ ‘உர்வல’மாகக் குறுக்கி ஜென்ஸி பாடுவது குழந்தையின் குறும்பைப் போல் வேடிக்கையாகவும் களிப்பூட்டுவதாகவும் இருக்கும். பாடலின் எந்த வடிவமும் கண்களுக்கு இதமளிக்காது என்பதைச் சொல்லியாக வேண்டும்.

பழங்குடி பெண்ணின் சுயம்வரத்தில் கலந்துகொள்ளும் ஆண்கள் தங்கள் தகுதிகளை விளக்கிப் பாடும் ‘அடி நாகு…என் ராசாக்கிளி’ பாடலை ஜெயச்சந்திரன், டி.எல். மகராஜன் போன்றோர் பாடியிருப்பார்கள். குதூகலமான பாடல் இது.

மலேசியா வாசுதேவன் எஸ். ஜானகி பாடிய ‘மலர்களிலே ஆராதனை’ இப்படத்தின் முக்கியமான மற்றொரு பாடல். மன்மதனின் வியூகங்களுக்குள் அகப்பட்டுக்கொள்ளும் காதல் ஜோடி, காதலின் வேதனையை ஆராதித்துப் பாடும் இப்பாடலில் பெண் குரல்களின் கோரஸ், வயலின் இசைக்கோவை, புல்லாங்குழல், வீணை என்று இசைக் கருவிகளை வைத்து பிரத்யேகமான காதல் மொழியை உருவாக்கியிருப்பார் இளையராஜா. காதல் உலகுக்காக அவர் உருவாக்கிய தேசிய கீதங்களில் இப்பாடலும் ஒன்று!



JamesFague
16th October 2015, 01:09 PM
Courtesy: Tamil Hindu


ஒரு வேடம் மிச்சமிருக்கிறது!







வெற்றிபெற்ற திரைக் கலைஞர்களுக்கு மூப்புமில்லை; மரணமுமில்லை. அவர்கள் சிரஞ்சீவியாக வாழ்கிறார்கள். அந்த வகையில் ஆச்சி மனோரமா உடல் மறைந்தாலும் ‘தில்லானா மோகனாம்பாள்’ ஜில் ஜில் ரமாமணியும், ‘அன்பே வா’ கண்ணம்மாவும் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அதே இளமையுடன் நம்முள் வாழ்ந்துகொண்டிருப்பார்கள்.

நாடகங்களிலிருந்து வந்ததாலோ என்னவோ திரைப்படங்களில் நாடகக் காட்சிகள் இடம் பெற்றால் வெளுத்து வாங்கிவிடுவார். ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் சிவாஜி கணேசன் குழு மற்றும் பத்மினி குழுவினர் கிளாஸிக்கல் இசை- நடனத்தின் பிரதிபலிப்பாக ஜொலித்தார்கள் என்றால் அடித்தட்டு மக்களைக் கவர்ந்த நாடக நடிகராக, ஒற்றையாளாக மனோரமா வெளுத்து வாங்கினார். சொந்த வாழ்வின் துயரங்களை மறைத்துக்கொண்டு மேடையில் ரசிகர்களை மகிழ்விக்கும் ஜில் ஜில் ரமாமணியாக, ரோஸ்ஸா ராணியாக செட்டிநாட்டுத் தமிழில் பேசி நடித்துத் தூள் கிளப்பினார்.

இப்படத்தின் இயக்குநர் ஏ.பி. நாகராஜன் முன்னர் தான் இயக்கிய ‘குலமகள் ராதை’ படத்தில் சிவாஜி கணேசன் வீட்டு வேலைக்காரப் பெண்ணாக மனோரமாவை செட்டிநாட்டு பாஷை பேச வைத்து நகைச்சுவைக் காட்சிகளை உருவாக்கினார். அப்படம் வெற்றி பெறாததால் அது மக்கள் மத்தியில் பரவலாகப் போய்ச் சேரவில்லை. ‘தில்லானா மோகனாம்பாள்’ மூலம் அதே பேச்சு வழக்கையே இன்னும் கொஞ்சம் இழுவையாக மெருகேற்றி, ஜில்லுவாக உச்சாணிக் கொம்பில் கொண்டுபோய் உட்கார்த்தி வைத்தார். அந்த வெற்றியின் பின்னணியில் ஆச்சியின் கடும் உழைப்பும் இருந்தது.

துரை இயக்கிய ‘ஒரு குடும்பத்தின் கதை’ படத்தில் ஆங்கிலோ இந்தியப் பெண் வேடம். ஆங்கிலம் கலந்த கொச்சைத் தமிழ் கொஞ்சி விளையாடும் அவர் நாவில். அதே கெட்-அப்பில் அரிச்சந்திரா நாடகத்தில் சந்திரமதியாக நடித்தால் எப்படியிருக்கும்? பாப் வெட்டிய தலை, கவுனுடன் லோகிதாசனை மடியில் கிடத்திக்கொண்டு ‘மவ்னே லோகிதாஸா’ என அவர் கொச்சை மொழி பேசியபோது தியேட்டர் அதிர்ந்தது. பின்னர் ‘ராஜபார்ட் ரங்கதுரை’ படம் நெடுகப் பல நாடகங்கள், நாடகங்கள் தோறும் பலப்பல கேரக்டர்கள். நாடக நடிகையாக அவர் செய்யும் அலம்பல்கள் அசல் நாடகக் கலைஞர்களைப் பிரதிபலித்தன. ‘காசி யாத்திரை’ படத்தில் அம்பிகாபதி நாடகத்தில் அமராவதியாக நடித்தார். எல்லா நாடகங்களுமே நிஜத்தில் சோக நாடகங்கள். ’கல்யாணராமன்’ படத்தில் தேங்காய் சீனிவாசனுடன் இணைந்து ‘மனோகரா’ நாடகத்தை சென்னைத் தமிழ் பேசி நடித்துக் குலுங்க, குலுங்கச் சிரிக்க வைத்தார்.

மாறுபட்ட சந்திரமதி

அரிச்சந்திரா, அம்பிகாபதி, மனோகரா நாடகங்களைப் பார்த்தால் யாராவது விழுந்து விழுந்து சிரித்திருக்கிறோமா? ஆனால், நகைச்சுவையால் அரங்கைக் குலுங்க வைக்கும் காட்சிகளாக அவை மாறியிருந்தன. மதுரை, கொங்குத் தமிழ், பிராமண பாஷை, சென்னைத் தமிழ் என தமிழகத்தின் அத்தனை வட்டார வழக்குகளும் அவருக்குத் தண்ணீர் பட்ட பாடு.

‘சரஸ்வதி சபதம்’ படத்தில் அவர் தத்தித் தத்திப் பேசும் தமிழும் ஓர் அழகுதான். ‘காசேதான் கடவுளடா’ படத்தில் பணத்தைப் பிசாசு போல அடைகாக்கும் பணக்காரப் பெண்ணாக, அப்பணத்தைச் சுற்றி வரும் அனைவரையும் தன் அதிகாரத்தால் கைக்குள் வைத்து அடக்கியாளும் கம்பீரமான ஒரு பெண்ணாக வந்து அசத்துவார். ‘ஆயிரம் பொய்’ என்று ஒரு படம். அதில் ‘அசோக்குக்கு உடம்பு சரியில்ல, அவனைப் பார்த்துக்க வீட்டோடு ஒரு டாக்டர் வேணும்’ என ஒரு டாக்டரைத் தேடுவார்.

அவரைக் காதலிக்கும் சோ, போலி டாக்டராக வந்து சேருவார். ‘அசோக் எங்கே இருக்கான்?’ என அவர் அப்பாவியாகக் கேட்க, அவரிடம் ‘அசோக்கை அவன் இவன் என்று சொல்லக் கூடாது’ என்று கொஞ்சும் குரலில் கண்டிஷன் போடுவார். கடைசியில் அந்த செல்ல அசோக் அவர் வளர்க்கும் நாய்தான் என்று ரசிகர்களுக்குத் தெரிய வரும்போது தியேட்டரே அதிரும். அப்பாவித்தனமும், அதே நேரத்தில் பணக்காரச் செருக்கும் கலந்து கலகலக்க வைப்பார்.

ஏற்காத வேடம்

இப்படி எத்தனை எத்தனை படங்கள், எத்தனை, எத்தனை பாத்திரங்கள் … கடந்த 50 ஆண்டுகளில் அனைத்து நடிகர்கள், நடிகைகளுடனும் இணைந்து நடித்துவிட்டார். அவரது உச்சக்கட்டம் 60, 70-கள்.

இக் காலகட்டத்தில் அவர் இடம் பெறாத படமே இல்லை எனலாம். தங்கவேலு, காக்கா ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.ராதா, அவர் மகன் வாசு, சந்திரபாபு, நாகேஷ், சோ, தேங்காய் சீனிவாசன், வெண்ணிற ஆடை மூர்த்தி, சுருளிராஜன், எஸ்.எஸ்.சந்திரன், கவுண்டமணி என எத்தனை நடிகர்களுடன் ஜோடி போட்டிருந்தாலும் ரசிகர்கள் மனங்களில் பிரிக்க முடியாத ஜோடியாக நாகேஷுடன் மட்டுமே நினைவில் நிற்பவர். ‘ஞானப்பறவை’ யில் நடிகர் திலகத்தின் ஜோடிப் பறவையாகவும் ஜொலித்தார்.

நகைச்சுவைப் பாத்திரங்கள் முடிவுக்கு வந்தபோது குணச்சித்திரப் பாத்திரங்களை நகைச்சுவை கலந்து மெருகேற்றித்தான் அளித்தார். 1980-களுக்குப் பிந்தைய நாயகர்கள் அனைவருக்கும் அம்மா, ஆத்தா, அக்கா, அண்ணியாக வாழ்ந்தார். அம்மா என்றால் சும்மா இல்லை. கனம் நிறைந்த உணர்வுப்பூர்வமான வேடங்கள். ‘மிச்சத்துக்கு நானிருக்கேன்’ என்று சத்துணவுக் கூடத்து அடுப்புத் தீக்குத் தன்னுடலைத் தரும் ’ஜென்டில்மேன்’ அம்மா, கண்களுடன் மனதையும் சேர்த்துக் கலங்க வைத்துவிடுவாரே! இது நம்ம ஆளு, இந்தியன், சூரியன், சின்னக்கவுண்டர், ராசுக்குட்டியின் அம்மாக்கள் அன்பும் கண்டிப்பும் கறாரும் நிறைந்தவர்கள் இல்லையா?

‘வா வாத்யாரே வூட்டாண்டெ’, ‘நான் மெட்ராஸச் சுத்திப் பாக்கப் போறேன்’ என்று அவர் பாடிய இரண்டு பாடல்களுக்கும் இடையில் இரண்டு தலைமுறை இடைவெளி. எவர் கிரீன் அசத்தல்கள்! நாகஸ்வர வித்வான், நாடக நடிகை, மடிசார் கட்டிய மாமி, கிராமத்துப் பெண், கோடீஸ்வரி, குப்பைக்காரி, காபரே டான்ஸர், பர்மா அகதி, ஈழத் தமிழ்ப் பெண் என்று அவர் ஏற்காத வேடங்கள் உண்டா? தந்தை பெரியாராக நடிக்க வேண்டும் என்ற நடிகர் திலகத்தின் கனவு எப்படி நிறைவேறவில்லையோ, அதுபோல மனோரமாவும் விரும்பி ஏற்க நினைத்த திருநங்கை வேடம் மட்டும் அவருக்குக் கிடைக்கவே இல்லை. காலம் அதற்குள் முந்திக்கொண்டது. எந்த நடிப்புக் கலைஞருக்கும் அவர்கள் ஏற்று நடிக்க ஒரு வேடம் மிச்சமிருக்கத்தான் செய்கிறது.

chinnakkannan
16th October 2015, 04:02 PM
வாசு சார்,

என்ன சொல்வது.. வழக்கம் போல என்றும் இந்த ப் பாடல் பதிவினில் ரசித்து எழுதுகிறீர்கள் எனச் சொல்லலாம்..

பாடல் எடுத்த நேரம், சிவகுமார் உயரம் மட்டு எனில் காலில் செருப்பில்லாமல் சந்திரகலா ப்ளாக் ஷூ சிவகுமார், அவரது சட்டையில் எம்ப்ராய்டரி, திறம்படச் சேலை கட்டும் மாதர்களில் – அதாவது புடவைக்குப் பொருத்தமாய் அளவான உயரத்தில் பூசினாற்போன்ற உடற்கட்டில்- சந்திரகலாவும் ஒருவர்,டிராலியில் கேமரா நடந்து கொண்டே வரும் ஷாட் என அனுபவித்து அழகாக வண்ணங்களில் எண்ணங்களை எழுத உம்மைப் போல் எவருண்டு.

நடிகர் திலகம் இருக்கவேண்டிய பாடல் என்றீர்கள்.. அப்படிப் பட்ட பாடல்கள் நிறையவே இருக்கின்றன..என்ன செய்ய..அந்தக்கால டைரக்டர்கள் புண்ணியம் கட்டிக் கொண்டார்கள்.

ஒளிப்பதிவு கே.எஸ். பிரசாத்.. இவர் தான் தில்லானா மோகனாம்பாளுக்கும் ஒளிப்பதிவு இயக்குனர். அந்த தில்லானா பாடலுக்குப் படமாக்கப் பட்ட கோணங்கள் மறக்க முடியுமா என்ன.. வேறு படங்கள் சட்டென எனக்கு நினைவுக்கு வரவில்லை..

சந்திரகலாவின் சுமாரான அழகுக்குக் காரணம் அவருடைய சிகப்பு நிற முகப்பவுடர் கலந்த ஒப்பனை தான்..ஏற்கெனவே கொஞ்சம் மாநிற உடற்கட்டுக் கொண்ட அவரழகை இன்னும் சுமாராக்கி விட்டது.. ஒளிப்பதிவைக் குற்றம் கூற இயலாது..

ரோஜா செடியிலிருந்து மலர்ந்து சிரித்தபடி இருக்கும்.. பறிக்கும் போது முட்குத்தும்.. ஆனால் இந்தப் பெண்ணோ ஏற்கெனவே தலைவனுக்காக மலர்ந்து பறிக்கப் பட்டு ப் புன்சிரிக்கும் பொல்லாத ரோஜாபோல் கன்னம் சிவந்து இருக்கிறாள்.. முத்தாரம் என்பதே பல நன்முத்துக்களால் கோர்க்கப் பட்ட ஆரம்.. அதுவும் அந்த முத்தாரங்களால் அலங்கரிக்கப்பட்டு தகதகவென ஆனிப் பொன்னால் செய்த ஊஞ்சலைப் போன்று மின்னும் மேனி கொண்டவள்.. இரண்டு வரிகளில் ஆழப் பொருள் தருவதற்கு கவிஞர் கண்ணதாசனை விட்டால் வேறு யார்..

நல்ல பாடல் தான் வாசு..

அன்புடன்

ஆதிராம். (அர்ஜூனன், நீலிமா ராணி புகழ்).

ஹி ஹி..வாஸ்ஸு.. ஆதிராம் சார் பாணியில் எழுதிப் பார்த்தேன்..

அர்ஜூனன் – இலை தெரிகிறதா இல்லை கிளை தெரிகிறதா இல்லை என்ன தெரிகிறது கிளி மட்டுமே தெரிகிறது

நீலிமா ராணி – மொழி படத்தில் பிருத்வி ராஜை ஒரு தலையாய்க் காதலிக்கும் பெண்ணாக நடித்தவர்.. அவருக்கு படத்தி பிருத்வி ராஜ் மட்டும் கண்ணுக்குத் தெரியும்..உடன் நிற்கும் பிரகாஷ் ராஜோ மற்றவரோ கண்ணில் தெரியமாட்டார்கள்!
சரி வாஸ்ஸு.. என் பங்கு பாராட்டு…

துள்ளிசைப் பாடல்களில் தூக்கிவிட்டே வந்திடுமே
முள்ளிலா ரோஜாவே முன்.

தேன்சிட்டுக் கன்னங்கள் தேடித்தான் தந்தீரே
எண்ணமெலாம் நின்றீரே தான்…

வழக்கம் போல நல்ல அலசல் நன்றி வாசு..

pinna vaaren :)

chinnakkannan
16th October 2015, 04:18 PM
கரும்பு வில் மீன்கொடித்தேரில் மன்மதராசன் ஊர்வலம் போகின்றான், மலர்களிலே ஆராதனை நினைவூட்டி விட்டுவிட்டீர்கள் எஸ்.வாசுதேவன் .. அந்தக்காலத்தில் கல்லூரியிலோ முடித்தோ.. நைட் பரீட்சை நேரங்களில் டீ குடிக்க வரும்போது இது டேப்ரிகார்டரில் ஒலிக்கும்..தவிர ரேடியோ வின் ஆல்டைம் ஃபேவரிட்..கடைசியில் படம் இங்கு வெளிவராமல் சிலோனில் ரிலீஸான நினைவு.. படிப்பினை ஊட்டும்குடும்பச் சித்திரம் என விளம்பரமும் கேட்ட நினைவு..

வாஸ்ஸூ, போகும் ஸ்லோவைப் பார்த்தால் நான் நினைத்திருக்கும் கமல் ஜெய்யூ பாட்டு வர நாளாகும் போலிருக்கே இன் எஸ்.பி.பி. :)

madhu
16th October 2015, 04:41 PM
முள்ளில்லா ரோஜா எப்போதும் வாடாததும் கூட...

chinnakkannan
16th October 2015, 05:18 PM
மதுண்ணா..சின்னப் பெண் ஒரு த்தி சிரிக்கின்றாள் தமிழில் வீடியோஇல்லையா என்ன ..படத்துலயே இல்லியா.. எனக்கு நினைவில்லை.. பார்த்தால் இந்த தெலுகு ரீமிக்ஸ் தான் வருது :)

https://youtu.be/11vlthrRpU4

chinnakkannan
16th October 2015, 05:28 PM
அது போல ஞான ஒளியில் உள்ளம் போ என்றது நெருங்கிப் பார் என்றது.. இதுவும் படத்தில் இல்லை தானே..

chinnakkannan
16th October 2015, 05:35 PM
Gap filler சி.செ. பாணியில்..

புது வீடு வந்த நேரம் பொன்னான நேரம் - ரவிச்சந்திரன் பாரதி

போட்டாச் இல்லைன்னு நினைக்கிறேன் :)

https://youtu.be/r3weV6CISI0

RAGHAVENDRA
16th October 2015, 05:38 PM
ஞான ஒளி பாடல் படத்தில் முதல் சில நாட்கள் மட்டும் இருந்தது என நினைவு.

பாப்ஜி ஜெயகௌசல்யா சைக்கிளில் வரும் போது நடிகர் திலகம் பார்ப்பது போல் ஒரு காட்சி வரும். அதற்கு முன்பு இப்பாடல் காட்சியைப்பார்த்தாக ஒரு நினைவு. இரண்டு நாட்களில் 55 காலைக் காட்சிகளில் இரண்டைப் பார்த்தேன். முதல் நாள் காலைக்காட்சி தேவி பேரடைஸில். மறுநாள் ஆனந்த் தியேட்டரில்.

அப்போது இந்தப் படத்தைத்திரையிட்ட சபாக்களின் பெயர்கள் சில நினைவிலுள்ளன

ஓம் விக்னேஸ்வரா கல்சுரல் அகாடெமி - இவர்கள் தான் முதன் முதலில் புதிய படத்தை சபாக்களில் திரையிடும் வழக்கத்தைக் கொண்டு வந்தவர்கள்.
மதி ஆர்ட்ஸ் அகாடெமி
அகஸ்தியா ஃபைன் ஆர்ட்ஸ்

அது வரை வெறும் கச்சேரி, நாட்டியம், நாடகம் மட்டுமே போட்டு வந்த பல சபாக்கள் ஞான ஒளி படத்தைத் திரையிட போட்டி போட்டு முன்வந்தன.

சென்னை நகரில் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி திரையரங்குகளிலும் படம் காலைக்காட்சி திரையிடப்பட்டது. தென்சென்னை மட்டுமின்றி வடசென்னையிலும் கூட.

RAGHAVENDRA
16th October 2015, 05:39 PM
எத்தனை முறை போட்டாலும் அலுக்காத பாடல்.. புது வீடு வந்த நேரம்..

ஒய் நாட் ஒன்ஸ் மோர்..

RAGHAVENDRA
16th October 2015, 05:41 PM
சின்னப்பெண் ஒருத்தி சிரிக்கிறா தெலுங்குப் படத்துக்காக கே.வி.எம். போட்ட மெட்டைத் தமிழிலும் பயன்படுத்திக்கொள்ளலாம் என முடிவு செய்து இசையமைப்பாளர் வேதாவும் சம்மதிக்க, டி.எம்.எஸ். பி.சுசீலா பாட பதிவும் செய்யப்பட்டு விட்டது. ஆனால் கடைசி நேரத்தில் என்ன காரணத்தாலோ படமாக்கப்படாமல் விட்டு விட்டனர். அந்தக் காலத்தில் ஏதோ ஒரு பத்திரிகையில் படித்த ஞாபகம்.

chinnakkannan
16th October 2015, 05:45 PM
ஜி.எஃப் 2 .. இதுவும் சிலோன் ரேடியோ பாட் தான்..இப்போ தான் பார்க்கிறேன் கருப்புச்சட்டை ஸ்ரீகாந்த் மஞ்சள் புடவை சங்கீதா (சென்சாருக்காக ரோஜாப்பூ மற்ற பூக்களைத்தவிர இந்தப் பாடலில் மயில் தென்னைமரங்கள் என வித்தியாசமாய்ப்படம் பிடித்திருக்கிறார்கள்)

https://youtu.be/7qeet9vIGms

ரெண்டு நாளா இங்கு புயல் மழை வரும் என்று சொல்லியிருப்பதால் உறக்கம் வரவில்லை..வெயில் சுமார் தான்..அதை ஊடிக்குளிர் காற்று வீசுகிறது..புயல் வராட்டாலும் பரவாயில்லை..கொஞ்சூண்டு மழை பெய்தால் தேவலை..யாராவது அமிர்த வர்ஷிணியில் பாட் போட்டா நன்ன இருக்கும்!

RAGHAVENDRA
16th October 2015, 05:46 PM
வாசு சார்
முள்ளில்லா ரோஜா பாடலில் நடிகர் திலகம் இருந்திருந்தால் என்ற ஆவல், நம் அனைவருக்குமே பல நினைவுகளை கொண்டு வருகிறது.

எத்தனையோ பாடல்கள் நடிகர் திலகத்திற்குக் கிடைத்திருந்தால் என நாம் துடித்திருப்போம். அப்படி சிலவற்றைப் பட்டியலிட்டு அவர் அதில் எப்படியெல்லாம் நடித்திருப்பார் என உருவகமும் பண்ணிப்பார்க்கலாமே...

நீங்கள் துவக்கி வையுங்கள். நாங்களெல்லாம் தொடர்கிறோம்...

தொடருக்கு தலைப்பு ...

ஓவர் டூ சி.க.

chinnakkannan
16th October 2015, 05:48 PM
தாங்க்ஸ் ராகவேந்திரர் சார்.. நான் சி.வ ஞா.ஒ. நியூ சினிமாவில் பார்த்த போது இல்லை என நினைக்கிறேன்.அதன் பிறகும் பார்த்த வீடியோக்களில் இல்லை என்றே நினைக்கிறேன்..
அதே கண்கள் பாடல் தகவலுக்கும் நன்றி..ஆமாம்..பு.வீ வ. நேரம் நல்ல பாட்..

chinnakkannan
16th October 2015, 05:52 PM
//தொடருக்கு தலைப்பு ...

ஓவர் டூ சி.க.// இது கொஞ்சம் ஓவராயில்லை..டி.ஆர் எம் பாணியில் என்னால் எப்படி முடியும்... சரி.. யோசிக்கிறேன் :)

RAGHAVENDRA
16th October 2015, 05:54 PM
பாண பத்திரரின் சீடரே பாட்டுப் பாடி அசைவை நிறுத்தும் போது..

பாண பத்திரரால் முடியாதது என ஒன்று உண்டா...

adiram
16th October 2015, 06:03 PM
வாசு,

மூன்று தெய்வங்கள் படம் சின்ன வயசில் மதுரையில் (ஏதோ ஒரு) தியேட்டரில் பார்த்ததாக லேசாக, கொஞ்சமாக... அப்புறம் அதென்ன ஆங் புகையாக நினைவு.

படத்தில் சிவாஜி இருக்கிறார் என்று நினைக்கிறேன். கூட இருப்பது முத்துராமனா அல்லது ஸ்ரீகாந்தா என்று நினைவில்லை. மூன்றாவது பார்க்க ஒல்லியாக... ஒருவேளை நாகேஷோ. மூவரும் ஏதோ ஜெயிலிலிருந்தோ அல்லது விடுதியிருந்தோ தப்பிவந்து ஒரு பெரியவர் வீட்டில் தஞ்சம் அடைவார்கள் என்று நினைக்கிறேன். பெரியவர் யார் சுப்பையாவா/. அதுவும் நினைவில்லை.

அந்த வீட்டில் ஒரு வயது வந்த பெண்ணும், ஒரு காது கேளாத (அல்லது கண் தெரியாத?) பெண்ணும் உண்டு என்பதும் புகையாக நினைவில். வயது வந்த பெண் பார்க்க ஸ்ரீவித்யா போல இருந்தார், அது சந்திரகலா என்று உங்கள் பதிவில் தெரிந்து கொண்டேன். அவருடன் பாடி ஆடும் இளைஞன் யார் என்று தெரியாமல் இருந்து, இப்போது அது சிவகுமார் என்று காட்டி விட்டீர்கள்..

முள்ளில்லா ரோஜா பாட்டு முழுசும் அவுட்டோரோன்னோ?, அது கலரா கருப்பு வெள்ளையா என்பது கூட புகையாக நினைவில். இப்போது உங்கள் பதிவின் மூலம் கலர் என்பதும் தெளிவாகிவிட்டது

யாரோ ஒருவர் எம்.ஆர்.ராதா குரலில் அடிக்கடி பெரியவரை மிரட்டுவார். ஒருவேளை வாசுவாக இருக்குமோ. (அட நீங்க இல்லீங்க)

சரி 'ரோஜா' என்று தொடங்கும் சில பாடல்கள் லேசாக நினைவில் உள்ளது. பட்டியல் போடுவோமா?.

(எழுதுகின்ற அத்தனை வரிகளையும் இப்படி சந்தேகத்தோடு எழுதுபவர் உலகத்திலேயே ஒருவர்தான் உண்டு. அவருக்கு சமர்ப்பணம்)

chinnakkannan
16th October 2015, 06:05 PM
இன் டர்வியூல்ல எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்னு கேட்டாங்க

அவ்வளவு ஈசியாவா கேட்டாங்க

ஆமா. அதான் ஏதோ பொடி இருக்கும்னு நினச்சு ஒன்பதுன்னு சொல்லிட்டேன்

*

இதுஒரு பழைய ஜோக்..அது என்னவோதிடீர்னு நினைவில்..பின்ன பாண பத்திரரா நானா..சொன்னது சும்மா உவ்வாக்கட்டிக்காக.. ம்ம் மொதல்ல வாஸ்ஸூ ஸ்டார்ட் செய்யட்டும்..(ஹைய்யா இன்னும் டைம் வாங்கலாம்)

chinnakkannan
16th October 2015, 06:11 PM
ஆதிராம் சார்.. ஹிஹி :) :) அண்ட் தாங்க்ஸ் கண்டு கொண்டதற்கு..( உங்கள் கோபத்திலும் ஒரு அழகிருக்கு :)

அப்ஜெக்*ஷன் யுவர் ஹானர்.. தியேட்டர் பேர்லாம் கரீட்டாச்சொல்லிடுவேன்.. பட் இந்தப் படம் உங்களுக்குத் தெரியவில்லை என நம்ப முடியவில்லை..

அப்ஜெக்*ஷன் இரண்டாவது யுவர் ஹானர்...எழுதுவது அனைத்தையும் தெரியவில்லை என்று சொல்ல மாட்டேன்..ஒரு 99 பெர்சண்ட் தான்..புகையாக இருக்குன்னு இருக்குன்னு தான் சொல்ல முடியும்..

மூ.தெ.. ஒரு இங்க்லீஷ் படம் என்று கூட எழுதியிருந்தேன்.. உங்கள் அளவுக்கு புள்ளி விவரங்கள் எல்லாம் எனக்குத் தெரியாதுங்காணும்..

எனிவே உங்கள் சமர்ப்பணத்திற்கு மிக்க்க நன்றி.. வழக்கமாய்க் கேட்கவேண்டிய கேள்வியையும் கேட்டு விடுகிறேன் (அதாவது மற்றவர்கள்) எங்கே கல் நாயக்.. அப்புறம்

நீங்களும் ஒரே ஒரு வெண்பா எழுதினீர்கள்..அப்புறம் ஏன் எழுதவில்லை..


சி.க.


வாசு,

மூன்று தெய்வங்கள் படம் சின்ன வயசில் மதுரையில் (ஏதோ ஒரு) தியேட்டரில் பார்த்ததாக லேசாக, கொஞ்சமாக... அப்புறம் அதென்ன ஆங் புகையாக நினைவு.

படத்தில் சிவாஜி இருக்கிறார் என்று நினைக்கிறேன். கூட இருப்பது முத்துராமனா அல்லது ஸ்ரீகாந்தா என்று நினைவில்லை. மூன்றாவது பார்க்க ஒல்லியாக... ஒருவேளை நாகேஷோ. மூவரும் ஏதோ ஜெயிலிலிருந்தோ அல்லது விடுதியிருந்தோ தப்பிவந்து ஒரு பெரியவர் வீட்டில் தஞ்சம் அடைவார்கள் என்று நினைக்கிறேன். பெரியவர் யார் சுப்பையாவா/. அதுவும் நினைவில்லை.

அந்த வீட்டில் ஒரு வயது வந்த பெண்ணும், ஒரு காது கேளாத (அல்லது கண் தெரியாத?) பெண்ணும் உண்டு என்பதும் புகையாக நினைவில். வயது வந்த பெண் பார்க்க ஸ்ரீவித்யா போல இருந்தார், அது சந்திரகலா என்று உங்கள் பதிவில் தெரிந்து கொண்டேன். அவருடன் பாடி ஆடும் இளைஞன் யார் என்று தெரியாமல் இருந்து, இப்போது அது சிவகுமார் என்று காட்டி விட்டீர்கள்..

முள்ளில்லா ரோஜா பாட்டு முழுசும் அவுட்டோரோன்னோ?, அது கலரா கருப்பு வெள்ளையா என்பது கூட புகையாக நினைவில். இப்போது உங்கள் பதிவின் மூலம் கலர் என்பதும் தெளிவாகிவிட்டது

யாரோ ஒருவர் எம்.ஆர்.ராதா குரலில் அடிக்கடி பெரியவரை மிரட்டுவார். ஒருவேளை வாசுவாக இருக்குமோ. (அட நீங்க இல்லீங்க)

சரி 'ரோஜா' என்று தொடங்கும் சில பாடல்கள் லேசாக நினைவில் உள்ளது. பட்டியல் போடுவோமா?.

(எழுதுகின்ற அத்தனை வரிகளையும் இப்படி சந்தேகத்தோடு எழுதுபவர் உலகத்திலேயே ஒருவர்தான் உண்டு. அவருக்கு சமர்ப்பணம்)

chinnakkannan
16th October 2015, 06:17 PM
எழுதுகிற விஷயத்தை ஆணித்தரமாக எழுதுவது என்பது விஷயம் தெரிந்தால் தானே எழுத முடியும் ஆதிராம் சார்.. தாங்க்ஸ் ஃபார் த அட்வைஸ்.. என் கண்ணைத் திறந்தீர்கள்..இனி சமர்த்தாய் விஷயம் தெரிந்து சந்தேகத் தொனி வராமல் எழுதுகிறேன்.. இதெல்லாம் சொன்னால் தானே எழுத முயற்சி செய்துகொண்டிருக்கும் என்னைப்போன்றவர்கள் திருத்திக் கொள்ள முடியும். :)

சந்தேகம் கேட்கலாம் தானே..

madhu
16th October 2015, 06:43 PM
சிக்கா....

இந்தாங்கோ... நம்ம ராஜேஷ் கண்ட இசைராஜங்கத்தின் சக்ரவர்த்தினி நம்மையும் உருக வைக்க இசைக்கும் குழந்தைகள் கண்ட குடியரசு படத்திலிருந்து அமிர்த வர்ஷம் பொழியும் அமிர்தவர்ஷிணியில் "அமுதே ஓடி வா"

https://www.youtube.com/watch?v=2pKZ6e-ke4c

அப்படியே கங்கா தேவியை பிரார்த்தனை செய்யும் இன்னொரு அமிர்தவர்ஷிணியும் பிடிங்க...

கங்கா கௌரியில் இருந்து ஜெயந்தி ஆட ஜானகி பாட... அழகிய மேகங்கள் வானத்தில் திரளாதோ ?

https://www.youtube.com/watch?v=OsvmKweamtA

madhu
16th October 2015, 06:57 PM
சிக்காவுக்காக...

தாஸேட்டன் குரலில் ஸ்ரீ ராகவேந்திரர் மழையை அழைக்கிறார்... அமிர்தவர்ஷிணியில்

https://www.youtube.com/watch?v=Q1_hopr_Izs

madhu
16th October 2015, 06:59 PM
சந்தேகம் கேட்கலாம் தானே..

இது அமிர்தவர்ஷிணிதானான்னு எல்லாம் கேக்கக் கூடாது. இண்டர் நெட்டு சொல்லுது.. நான் பதிகிறேன்.

adiram
16th October 2015, 07:00 PM
சி.க.

அது வேறொன்றுமில்லை. வாசுவின் முள்ளில்லா ரோஜா பாடலுக்கு என் பாணியில் பதில் பதிவு எழுதியிருந்தீர்கள் அல்லவா.

அதனால் உங்கள் பாணியில் நானும் ஒரு பதிவு எழுதிப் பார்த்தேன்.

நீங்கள் எழுதியதும் என்னுடையது போல இல்லை.
நான் எழுதியதும் உங்களுடையது போல இல்லை.

அதுதான் ஒற்றுமை.

chinnakkannan
16th October 2015, 07:04 PM
சி.க.

அது வேறொன்றுமில்லை. வாசுவின் முள்ளில்லா ரோஜா பாடலுக்கு என் பாணியில் பதில் பதிவு எழுதியிருந்தீர்கள் அல்லவா.

அதனால் உங்கள் பாணியில் நானும் ஒரு பதிவு எழுதிப் பார்த்தேன்.

நீங்கள் எழுதியதும் என்னுடையது போல இல்லை.
நான் எழுதியதும் உங்களுடையது போல இல்லை.

அதுதான் ஒற்றுமை.

தாங்க்ஸ் ஆதிராம் உங்கள் புரிதலுக்கு நீங்கள் சொன்னதும் புரிந்தது.. :) நானும் கலாய்த்தேன் நீங்களும்கலாய்த்தீர்கள் ..அம்புட்டு தான்.. நீங்கள் சொல்வது உண்மையே நடுல்ல என்பாணி ( ?!) வர்ணனை வந்துடுத்து..

அகெய்ன் தாங்க்ஸ்.. :)

chinnakkannan
16th October 2015, 07:07 PM
அமிர்த வர்ஷி்ணி பாடல்களுக்கு நன்றி.. முதல் ப்ளாக் அண்ட் வொய்ட் இனிமே தான் பார்க்கணும்..ரெண்டு ஜெ பார்த்தேன்..கங்காதேவி பாட். ராகவேந்திரர் பாட் இனிமேல்ட்டு தான் கேட்கணும் மதுண்ணா..

தற்போதைய நிலமை..எங்கிட்டோ பெய்யுது இன் ட்டீரியர்ல ந்னு நினைக்கிறேன் ( நாளை பேப்பரில் வரும்) ஆனா பால்கனி திறந்தா ச்சில்னு காத்து அடிக்குது

chinnakkannan
16th October 2015, 07:15 PM
தூங்காத விழிகள் ரெண்டும் அமிர்த வர்ஷினியாம்

இந்த ஒருவர் வாழும் ஆலயத்தில மலையோரம் மயிலே வெயிட் வெயிட் அது அமிர்த வர்ஷினி இல்லை.. அந்தப்பாட் எனக்கு ரொம்பப் பிடிக்கும் என சொல்லவந்தேன்..அதுலயே வானின் தேவி வருக என எஸ்பிபி ஜானகி பாட் இருக்கு..இப்பத்தான் கேட்டேன் நல்லா இருக்கு..ஆனா ஆடியோ தான் இருக்கு..

https://youtu.be/ABwrM8sM25w

RAGHAVENDRA
16th October 2015, 07:55 PM
மெல்லிசை மன்னரின் கைவண்ணத்தில் அம்ருதவர்ஷிணியில் அமுதே மழையாய்ப் பொழிகிறதே...

https://www.youtube.com/watch?v=uubrCumAOvk

தலைவரின் நடனத்தைக் காணக் கண் கோடி வேண்டும்.

rajraj
17th October 2015, 12:41 AM
Anandaamrutakarshini......... in Amritavarshini by Dikshithar rendered by Srivalsan Menon

http://www.youtube.com/watch?v=Vv1zb2AstzE

This composition sung by Dikshithar is said to have brought rain to Ettayapuram area.

chinnakkannan
17th October 2015, 01:29 AM
ராஜ் ராஜ் சார்..அமிர்த வர்ஷினிப் பாட்டுக்கு நன்றி..அனேகமாய் நாளைக்கு மழை வரும்..:) என நினைக்கிறேன்..பட் ஏற்கெனவே உள் நாட்டில் பெய்து கொண்டு இருக்கிறதாம்..பார்க்கலாம்..

vasudevan31355
17th October 2015, 09:08 AM
சின்னா!

வெடுக் வெடுக் கென்று பேசி சிரிக்க வைத்த அந்தக்கால சி.தி.ராஜகாந்தம்,

பார்த்தவுடனே சிரிக்க வைக்கும் அங்கமுத்து

ஆச்சிக்கு காமெடியில் ஈடான காந்திமதி

தேன் கிண்ணம் போன்ற சில படங்களில் காமெடி வழங்கிய விஜயசந்திரிகா

அப்புறம் ஹீரோயின் பட்டியலிலிருந்து மாறி பக்கென்று சிரிக்க வைத்த

ஈவி.சரோஜா (நிறையப் படங்களில் தங்கவேலு, சந்திரபாபுவுடன். அப்புறம் கதாநாயகர்களைக் கிண்டல் பண்ணி தோழிகளுடன் சேர்ந்து விரட்டி குத்துப்பாட்டு. பாதிப் பாட்டு முடிந்தவுடன் கதாநாயகன் கடுப்பாகி அதே பாட்டைப் பாடி இவரை விரட்டுவார். )

நம்ம பத்மினியின் தங்கை ராகினி உத்தம புத்திரனில்

நான் சொல்லும் ரகசியம் மாதிரி சில படங்களில் காமடியில் கொடி கட்டிய ஜி.சகுந்தலா குறிப்பா உயர்ந்த மனிதன்

அப்புறம் என் அண்ணன், பணம் படைத்தவன் படங்களில் கீதாஞ்சலி

நிறையப் படங்களில் குள்ள வனிதா

பாக்கியராஜின் ஆஸ்தான சரஸ்வதி

சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட அற்புதமான காமடி நடிகை ஷோபனா (வடிவேலுடன் ஒரு படத்தில் குறத்தியாக வருவார்)

இப்போ அதிகமாக மல்லு ஷகீலாவும் நகைச்சுவை செய்கிறார்.

புரொபெஷனலா இவங்கல்லாம் ஆச்சி மாதிரி நகைச்சுவை நடிகைகள் இல்லையென்றாலும் நம்மை நன்கு சிரித்த வைத்தவர்களே

இன்னும் இருக்கு.

vasudevan31355
17th October 2015, 09:17 AM
வாஸ்ஸூ, போகும் ஸ்லோவைப் பார்த்தால் நான் நினைத்திருக்கும் கமல் ஜெய்யூ பாட்டு வர நாளாகும் போலிருக்கே இன் எஸ்.பி.பி. :)

சின்னாச்சி

அது ஸ்லோ இல்லே. பொறுப்பு. முடிந்த வரை பொறுப்பா தரணும். ஒரு பாலா பதிவுக்கு மூணு நாட்களாவது தேவை. அப்போதான் முழுமையாகும். ஏற்கனவே சொல்லியிருக்கேன். முதல்ல படத்தை தேடி கண்டு பிடிக்கணும். அப்புறம் படம் பார்க்கணும்..தெரியாததற்கு கதை எழுதணும். பாடல் வரியை தப்பில்லாம டைப் அடிக்கணும். (இது செம வேலை) காட்சிகளைப் நல்லா வாட்ச் பண்ணனும். மியூசிக்க உத்து கவனிக்கணும். படம் புடிக்கணும். ஆய்வு எழுதணும். கலர் பண்ணனும். சும்மா எழுதிட்டுப் போ முடியாதுங்காணும். பாலா தொடர் முடிய இன்னும் ரெண்டு வருஷமாவது ஆகும். அவசரப்படாதேள்.:)

இது வேகம்.

chinnakkannan
17th October 2015, 09:18 AM
ஹாய் குட் மார்னிங்க் ஆல்..


ஆஹா..வாசு.. தாங்க்ஸ் ஃபார் தெ லிஸ்ட்.. நீங்கள் சொல்லச் சொல்ல நினைவுக்கு வருகின்றன.. இந்த சூசைட் பண்ணிக்கிட்ட பொண்யாரு நினைவில்லையே..

அங்க முத்து ஓ.கே. காந்திமதி நல்ல நடிகை தான்..குணச்சித்திரம் நா.. சிரிப் நினைவுக்கு வரவில்லை..

உயர்ந்த மனிதன் ல விகேஆர் மனோரமான்னோ..

அந்த படகோட்டி நாகேஷ் ஜோடி மாதவி சொல்லியாச்சுன்னு நினைக்கறேன்..

chinnakkannan
17th October 2015, 09:21 AM
சின்னாச்சி

அது ஸ்லோ இல்லே. பொறுப்பு. முடிந்த வரை பொறுப்பா தரணும். ஒரு பாலா பதிவுக்கு மூணு நாட்களாவது தேவை. அப்போதான் முழுமையாகும். ஏற்கனவே சொல்லியிருக்கேன். முதல்ல படத்தை தேடி கண்டு பிடிக்கணும். அப்புறம் படம் பார்க்கணும்..தெரியாததற்கு கதை எழுதணும். பாடல் வரியை தப்பில்லாம டைப் அடிக்கணும். (இது செம வேலை) காட்சிகளைப் நல்லா வாட்ச் பண்ணனும். மியூசிக்க உத்து கவனிக்கணும். படம் புடிக்கணும். ஆய்வு எழுதணும். கலர் பண்ணனும். சும்மா எழுதிட்டுப் போ முடியாதுங்காணும். பாலா தொடர் முடிய இன்னும் ரெண்டு வருஷமாவது ஆகும். அவசரப்படாதேள்.:)

இது வேகம்.

வாசுங்க்ணா,

இஃதென்ன இது.. பிறந்து வீட்டுப் பெருமையை உடன் பிறந்தான் கிட்ட சொன்னாளாம் ஒருத்தி! உம்மைப் பத்தித் தெரியாதா என்ன.. உங்க உழைப்பைப் பத்தித் தெரியாதா என்ன.. ஏதாவது ஹெல்ப் வேணும்னா சொல்லுங்க..ராமருக்கு அணில் உதவினா மாதிரி ஹெல்ப் பண்றேன்.. ஆனா ரெண்டு வருஷம்ங்கறது கொஞ்சம் ஜாஸ்தி..மே.பி ஒங்க மனசுல நினைச்சுக்கிட்டிருக்கற பாடல் எண்ணிக்கை அதிகமோ என்னவோ..சரியா..

vasudevan31355
17th October 2015, 09:22 AM
//இந்த சூசைட் பண்ணிக்கிட்ட பொண்யாரு நினைவில்லையே..//

http://www.chennaispider.com/attachments/Resources/3351-111058-1101-Shobana-E-L.jpg

vasudevan31355
17th October 2015, 09:24 AM
வாசுங்க்ணா,

மே.பி ஒங்க மனசுல நினைச்சுக்கிட்டிருக்கற பாடல் எண்ணிக்கை அதிகமோ என்னவோ..சரியா..

500 பழைய பாடல்கள் ஏன் அதுக்கு மேலேயே இருக்கு சின்னா! அத்தனையையும் ஒழுங்கா முடிச்சி பாலாகிட்ட கொடுக்கணும். இன்னும் ஐம்பதே முடியல. :)

raagadevan
17th October 2015, 09:25 AM
திரைப்படம்: கேளடி கண்மணி (1990)
இசை: இளையராஜா
பாடகர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரம் தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா...

https://www.youtube.com/watch?v=5-dtibGVb1c