PDA

View Full Version : மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5



Pages : 1 [2] 3 4 5 6 7 8 9 10 11 12 13 14

Russellxor
25th September 2015, 04:53 PM
வாசு சாரின் வருகை மிக்க மகிழ்ச்சி அளித்தது.திரியில் எழுதும் வேகம் போலவே
வந்தார்
பேசினார்
சென்றார்.
அதிகம் பேச நேரமில்லை என்ற ஒரு வருத்தம் தான்.

Russellxor
25th September 2015, 05:31 PM
SPB யின் ஆரம்பகால குரல் இனிமையில் ஒரு பாட்டு.

திரைப்படம்: மேயர் மீனாட்சி
பாடல்: கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம்
பாடகர்கள்: P.சுசீலா, S.P.பாலசுப்பிரமணியம்
இசை: பழையது


கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம்
அங்க்கே உல்லாச ஊர்வல ஓடம்
மணமகன் மணம்கள் மணவறைக் கோலமே

(கண்டேன்)

செம்பொன் மீனாட்சி நடத்தும் ராஜாங்க்கம்
சிரிக்கும் பூந்தோட்டமோ - இது
சேலை முந்தானை விரிக்கும் பூமாது
ஆடும் கொண்டாட்டமோ
அலைகள் நீரோட்டம் அம்மன் தேரோட்டம்
பருவப் பெண்ணாட்டமோ - பனி
மலைகள் தாலாட்டும் மலர்கள் பாராட்டும்
கலைகள் வெள்ளோட்டமோ
இது அத்தாணின் முத்தாரமோ - இந்த
அத்தானின் அச்சாரமோ
ராஜாவின் வட்டாரமோ - இந்த
ராஜாத்தி வித்தாரமோ

(கண்டேன்)

வரிசைப் பல்முத்து அழகுப் பூங்க்கொத்து
நகையில் நான் ஆடவா
வதனச் செவ்வல்லி சரியும் வண்ணத்தில்
மெதுவாய் நான் பாடவா
அடிமைப் பெண்ணேனும் உடமை உன்னோடு
அதிகம் நான் சொல்லவா
அணைக்கும் கையுண்டு ரசிக்கும் பெண்ணுண்டு
பருவம் தேனல்லவா
நான் கண்ணாடி பார்த்தாலென்ன - அதைக்
கன்னத்தில் பார்த்தாலென்ன
நெஞ்சத்தைப் பார்த்தாலென்ன - அதை
மஞ்சத்தில் பார்த்தாலென்ன

(கண்டேன்)


kanden kalyana pen pondra megam: http://youtu.be/JwmNjFuFsvM

madhu
25th September 2015, 06:07 PM
ராகவ் ஜி..

உங்களுக்காக வெகுளிப்பெண் படத்தில் இருந்து ஜமுனா ராணி பாடியிருக்கும் இந்தப் பாடல்..

( படத்தில் இந்தக் காட்சி வந்ததா என்றும் தெரியவில்லை. முன்பு வானொலியில் இது எல்.ஆர்.ஈஸ்வரி பாடியது என்று கூறி ஒலிபரப்பிய நினைவும் இருக்கிறது )

இந்தப் பாடல் பற்றிய மேலதிக விவரங்கள் கிடைத்தால் மகிழ்வோம்

https://www.youtube.com/watch?v=Hvh2AhyVX-s

eehaiupehazij
26th September 2015, 12:24 AM
OMG (Oh My God) Melodies and Melancholies!!

கடவுளுக்கே கேள்விக் கணைகளான மானுட கீதங்கள்!!


மனித மனம் ஒரு விசித்திரமான உணர்வுகளின் கலவைக் களமே !
அதில் கடவுள் நம்பிக்கையும் அவநம்பிக்கையும் சம விகிதத்தில் கலந்தே தெளிக்கப் பட்டிருக்கிறது !

எந்தக் கவலையுமின்றி எல்லா வளங்களும் நிறைந்து இன்புற்றிருக்கும் சமயங்களில் நாம் நாத்திகராகி நமது கண்களுக்கு இறைவன் தெரிவதில்லை !
துன்பச் சூழலில் சிக்கிச் சீரழியும் போது ஆத்திகராக மாறி கடவுள் நமது கண்களுக்குத் தெரிய வேண்டும் நமது பிரார்த்தனைகள் அவர் செவிகளுக்குச் சென்றடைய வேண்டும் என்று கடவுளின் பாதார விந்தங்களில் பணிகிறோம் !!

பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு கண்களுக்குப் புலப்படாமல் எங்கும் நிறைந்த பரம்பொருளை நமது இஷ்டத்துக்கு வளைத்து நாம் வாசிப்பதற்கேற்ப அவர் ஆட வேண்டும் என்று எண்ணுவது பேதமையே !!

OMG Melancholy 1 / Gemini Circus!!

பாசவலைக்குள் நாம் கட்டுண்டு கிடக்கும்போது நம்மைச் சார்ந்தவர்கள் நம்மால் நேசிக்கப் படுபவர்கள் அல்லலுறும்போது காணச் சகிக்காமல் கடவுளே உனக்குக் கண்ணில்லையா இறைவனே உனக்கு இதயமில்லையா என்றெல்லாம் பிதற்றுவது மனிதத்தின் வாடிக்கையே !
ஒரு கூட்டுப் புழுக்களாக ஜீவிதம் காணும் தொழிலாளி வர்க்கம் முதலாளி வர்க்கத்தால் சுரண்டப் பட்டு நெஞ்சொடிந்து மடியும் தருவாயில் நண்பரின் கோபம் இறைவன் மேல் திரும்புவது வேடிக்கையான வாடிக்கையே !



மனதை நெகிழச் செய்யும் நடிப்புப் பரிமாணங்களிலே இதயங்களில் நுழைந்து ஈர விழிகளிலே வெளிவரும் குறளி வித்தைக்காரர் ஜெமினியே !!

https://www.youtube.com/watch?v=f_EQYsvrL1I

எங்கெங்கும் நீக்கமற நிறைந்தவன் இறைவனே !
ஈசனடியாரான நடிகர்திலகத்துக்கே இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடுதல் வேண்டாம் என்று எடுத்துரைக்கிறார் மானுட ரூபத்தில் வந்து பாட்டால் பாடாய்ப் படுத்தி எடுக்கும் ஜெமினி சிவன் !!

https://www.youtube.com/watch?v=MOTgW8glTHk

eehaiupehazij
26th September 2015, 01:14 AM
OMG Melodies and Melancholies Part 2


ஆனானப் பட்ட ஈசனுக்கும் சனி பகவான் பிடியிலிருந்து விடுபட முடியாமல் பிரம்மஹத்தியால் பிச்சையெடுத்து பாவம் தீர்க்க வேண்டிய சூழல் !


https://www.youtube.com/watch?v=9l1NsHpGUsE

rajraj
26th September 2015, 01:51 AM
From Vaanaratham(1955), Tamil dubbed version of Udankhatola(1955)(Hindi)

endhan kaNNaaLan karai nokki pogiraan nadhiye neeyum mella po...

http://www.youtube.com/watch?v=JFHMUuw0NRw

From the Hindi original

more saiyanji utharenge paar nadhiya dheere baho.......

http://www.youtube.com/watch?v=w8-hN7tasW8

madhu
26th September 2015, 04:18 AM
முட்டைக் கண்ணு மோகனம்... என்று புகழப்பட்ட திரு சோ. ராமஸ்வாமி அவர்கள் மறைந்து விட்டதாக ஒரு வதந்தி..

உணமையா பொய்யா என பொழுது விடிந்ததும் தெரிந்து விடும். பொய்யாகவே இருக்கட்டும் என வேண்டுவோம்

https://www.youtube.com/watch?v=cq4BC5hRNvg

rajeshkrv
26th September 2015, 09:15 AM
இசையரசியின் இனிய கானங்கள் புத்தம் புதிய தொடர்.. மதுண்ணாவின் விருப்பம்.

இந்த தொடரில் அடிக்கடி நாம் கேட்காத இசையரசியின் பாடல்களையும், ஊடே ஊடே சில அடிக்கடி கேட்டு மகிழ்ந்த முத்துக்களையும் பார்ப்போம்

தொடரின் முதல் பாடலாக மனைவி திரைப்படத்தில் இசையரசி இசைத்த “பெண்ணின் பெருமையே பெருமை”
பெண்ணின் பெருமையை பெண்மையின் குரலான இசையரசி பாடாமல் யார் பாட முடியும்.

மனைவி படம் சுமார் தான். பாடல்கள் கூட கொஞ்சம் சுமார் ரகம் தான். வாசு ஜி இதில் ராட்சசி பாடிய பாடல் ஒன்று மிகவும் இனிமையான பாடல் “அன்னைபோல என்னை காத்த அன்பு தெய்வமே “
சரி பாடலுக்கு வருவோம். பெண்ணின் பெருமையை அழகாக பாடல் .. அண்ணி ஸ்தானத்தில் உள்ள விஜயகுமாரி தன் கணவன் ஜெமினியின் தங்கை ரமாபிரபாவிற்கு பெண்ணின் பெருமையை விளக்கும் விதமாக அமைந்த பாடல்

பாடல் தான் எவ்வளவு இனிமை. இசையரசி பாடிய விதமோ இன்னும் அழகு..

பெண்ணின் பெருமையே பெருமை
பெண்ணின் பெருமையே பெருமை
அன்புடன் பண்பும் ஆசையும் பாசமும்
அழகும் குணமும் இயற்கையில் அமைந்த
பெண்ணின் பெருமையே பெருமை

ஆண்டவன் உலகத்தைப் படைத்து விட்டான்
அவன் அன்றுடன் பணியை முடித்துக் கொண்டான்
அவன் படைத்த உலகத்தைக் காத்திடவே
பண்புள்ள பெண்மையை அனுப்பி வைத்தான்

மஙல நினைவுகள் மனதினில் மலர்க
மஞ்சள் குங்குமம் மனையினில் வாழ்க
நெஞ்சில் கனிவு கண்களில் விளக்கு
நெற்றியில் திலகம் அழகுடன் விளங்க
பெண்ணின் பெருமையே பெருமை

பிறந்த வீட்டின் பேர் விளங்க
நீ புகுந்த வீட்டில் வாழ்ந்திடுக
பிறந்த வீட்டின் பேர் விளங்க
நீ புகுந்த வீட்டில் வாழ்ந்திடுக
இந்த அறிவுரை தான் என் சீர் வரிசை
இந்த அறிவுரை தான் என் சீர் வரிசை
இதைப் பெறுவது தான் உன் குலப் பெருமை

பெண்ணின் பெருமையே பெருமை
அன்புடன் பண்பும் ஆசயும் பாசமும்
அழகும் குணமும் இயற்கையில் அமைந்த
பெண்ணின் பெருமையே பெருமை
தமிழ் பெண்ணின் பெருமையே பெருமை

திரையிசைத்திலகம் கே.வீ.மகாதேவனின் இசையில் மிகவும் அழகான பாடல். அடிக்கடி கேட்காத பாடல்
விஜயகுமாரிக்கு பொங்குவதற்கு மிகவும் குறைந்த வாய்ப்பு இந்த படத்தில்.

https://www.youtube.com/watch?v=NYaQ7HcoCv8

அடுத்த பாடல் விரைவில்.

eehaiupehazij
26th September 2015, 09:15 AM
நீலகிரி எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் சோ ராமசாமி அவர்களின் நகைச்சுவைப் பங்களிப்பு நினைவில் நிற்பதாகும்
https://www.youtube.com/watch?v=vZ8zu_IPGjE

vasudevan31355
26th September 2015, 11:51 AM
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்

(நெடுந்தொடர்)

38

'இன்றுமுதல் நாளை வரை என் மடியில் நீ இருந்தால்'

'சூதாட்டம்'

இன்றைய பாலாவின் தொடரில் 'இன்றுமுதல்' தேன் பாடல்.

http://i.ytimg.com/vi/SfwqFVJnlm8/hqdefault.jpg

'சூதாட்டம்' 1971-ல் வந்த படம்.

ஜெய்சங்கர், முத்துராமன், சிவக்குமார், மேஜர், தேங்காய், சோ, வி.எஸ்.ராகவன், சஹஸ்ரநாமம், கே.ஆர்.விஜயா, நிர்மலா, மனோரமா, 'சி.ஐ.டி' சகுந்தலா, ஜெயகுமாரி ('நடனம்' ஜெயகுமாரி என்று ஸ்பெஷல் கார்ட் போடுவார்கள்), ஜெயகௌசல்யா ஆகியோர் நடித்திருந்தனர். சுருளி கூட உண்டு.

மதுரை திருமாறன் கதை, வசனம் எழுதி இயக்கிய படம். எம்.எஸ்.காசி தயாரித்த படம் இது. அருமையான பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் கவிஞர். இந்தப் படத்திற்கு கலைமணி உதவி இயக்குனராகப் பணி புரிந்திருப்பார். இசை....சொல்லவே வேண்டாம். 'சூதாட்டம்' மூலம் நம் இதயத்தில் இசை ஆட்டம் போட்ட எம்.எஸ்.வி தான். 'மெல்லிசை மன்னர்'தான்.

நண்பன் முத்துராமனிடம் சதா சூதாட்டமே கதியெனக் கிடக்கும் நாயகன் ஜெய், அவரைத் திருத்த முயற்சி செய்யும் குடும்ப 'விளக்கேற்றி வைக்கும்' மனைவி நாயகி கே.ஆர்.விஜயா, படித்த சிவக்குமாரை விரும்பும் தங்கை நிர்மலாவையே சூதாட்டத்தில் முத்துராமனிடம் பந்தயம் வைக்கும் நாயகன் என்று கிராம பாணியில் படம் பயணிக்கும். எல்லா அம்சங்களுமே அமைந்த திருப்தியான படம் இது. 100 நாட்கள் வெற்றிகரகமாக ஓடி வசூலையும் குவித்தது. (கொஞ்சம் நடிகர் திலகத்தின் 'பொன்னூஞ்சல்' படத்தையும் காட்சியமைப்புகளில் ஞாபகப்படுத்தும்.)

'புன்னகை அரசி'தான் படத்தின் பிரதான ஆணிவேர். பாந்தமும் இயற்கையுமாக மிக இயல்பாக நடித்து அனைவர் இதயங்களையும் கவர்வார். ஜெய்யின் அட்டூழியங்களை அழுது புலம்பமால் சர்வ அலட்சியமாக எதிர்கொண்டு அவருக்கு புத்தி கூறி திருத்துவது அழகு. டயலாக் டெலிவிரி டக்கர்.

'தேவர் மகனி'ல் கமல் 'சாந்து பொட்டு... ஒரு சந்தனப்பொட்டு' பாடி எதிரிகள் நெற்றியில் சிலம்பத்தால் பொட்டு வைப்பாரே....அது போல குங்குமப் பொட்டு வைக்கும் சிலம்பாட்டம் ஒன்று 'நவரசத்'திற்கும், 'மக்கள் கலை'க்கும் சூடாகவே உண்டு.

http://i.ytimg.com/vi/SkP5y65ZEJw/hqdefault.jpg

சுசீலா சூதாட்டத்தில் பாடிய 'விளக்கேற்றி வைக்கிறேன்' பாடல் வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிகளில், திருவிழாக்களில், திருமண சுப வைபவங்களில் சரமாரியாக ஒலித்தது. சாதாரண ஹிட்டல்ல. பேய் ஹிட்.

ஈஸ்வரி, சுசீலா பாடிய 'ஆடுகின்ற கைகளுக்கு ராசி என்ன ராசியோ' பாடலை ஏற்கனவே அலசியாகி விட்டது.

இந்தப் படத்தில் அதே போல அருமையான இளமை பொங்கும் ஒரு டூயட்.

இரவில் 'தோட்டத்தில் சந்திப்போம்' என்று சிவக்குமார் நிர்மலாவுக்குக் கடிதம் அனுப்பி வரச் சொல்ல, பார்க்கில் படம் எடுத்திருப்பார்கள்.:) (கிராமத்தில் ஏது வெளிச்சம் உமிழும் ஸ்ட்ரீட் லைட்களோடு கூடிய அம்சமான பார்க்?)

இரண்டாவது சரணத்தில் வேறு 'மஞ்சள் வெயில் மாலை மணக்கோலம்' என்று கவிஞர் வேறு எழுதிக் கொடுத்து விட்டதால் இரவுப் பின்னணி படமாக்கல் இப்போது பகல் பின்னணிப் படமாக்கலாய் தலை கீழ் மாறி இருக்கும். (அது சரி! அடிக்கடி நிர்மலாவும் சிவாவும் இரவென்றும் பகலென்றும் பாராமல் சந்திக்கிறார்கள் என்று எடுத்த்துக் கொண்டு விட்டுப் போவியா?....பெருசா குத்தம் சொல்ல வந்துட்டே!" என்று நீங்கள் சொல்வது என் காதுகளுக்குக் கேட்கிறது.):)

'தாவணித் தேவதை'யாக 'பாம்பிடை' நிர்மலா.:) (குடை ஜிமிக்கி 'கும்'மென்று தூக்கும் இவரின் முகத்திற்கு) அவருக்கு தோதாக மார்கண்டேய சிவக்குமார். சிவக்குமாரும், நிர்மலாவும் அவ்வளவு 'கியூட்'டாக இருப்பார்கள் Made for each other போலே. செமை ஜோடிப் பொருத்தம். இருவரும் கண்பட்டுவிடும் அழகு. என்.எஸ்.வர்மாவின் கண் கவரும் ஒளிப்பதிவும் 'பளிச்'.

நிர்மலாவுக்கு சுசீலாம்மா குரலும் சரி! ஈஸ்வரி குரலும் சரி! ஜானகி குரலும் சரி! சரியாகவே பொருந்தும். சிவக்குமார் டூயட் என்பதால் உடன் சற்றே துடிப்பாய் பாட ராட்சஸி. இளம் சிவக்குமாருக்கு இளம் பாலா பின்னணி. சிவா பயமெல்லாம் தெளிந்து டூயட்டில் புரட்சி செய்யத் தொடங்கியிருப்பார்.:) 'ஒன்று முதல் நூறு வரை நல்ல கதை நான் படிப்பேன்' என்று வாயசைக்கும் போது நிர்மலா நம்மை சொக்க வைப்பார்.

http://i58.tinypic.com/2132cll.jpg

இரண்டாவது சரணத்திற்கு சிவாவுக்கு ஜிப்பா டைப் ஷர்ட், 'வெண்ணிற ஆடை' அழகிக்கு அம்சமான புடவை.

சரணங்களுக்கு முன் வரும் ஷெனாய் ஓசைகள் பிரமாதம். துவக்க இசையும் துள்ளாட்டம் போட வைக்கும்.

பாலாவும், ராட்சஸியும் பாடிய இன்னொரு உற்சாகத் துள்ளல் பாடல்.

அந்தக் கொஞ்சல்களும், கெஞ்சல்களும் காதுகளை விட்டு அகலாதவை.

பாலா பக்கா. ஊதித் தள்ளியிருப்பார். அனுபவம் பேசும். 'கொட்டிக் குவிக்க' என்றிவர் முடிக்க, அதையே திரும்ப அவர் எடுத்து பின் 'தட்டிப் பறிக்க' தொடர, இருவரும் இன்பத்தை இணையில்லாமல் நமக்குக் கொட்டிக் கொடுப்பார்கள் என்பதுதான் நிஜம்.

இந்த இருவரும் இணைந்த இன்னொரு அதகள நிகழ்வு இந்தப் பாடல். எனக்கு மிக மிக பிடித்தமானது.

http://i62.tinypic.com/2a7wp4g.jpg

இன்றுமுதல் நாளை வரை
என் மடியில் நீ இருந்தால்
ஒன்று முதல் நூறு வரை
நல்ல கதை நான் படிப்பேன்

இன்றுமுதல் நாளை வரை
என் மடியில் நீ இருந்தால்
ஒன்று முதல் நூறு வரை
நல்ல கதை நான் படிப்பேன்

தொட்டுத் துடிக்க
நான் கட்டிப் பிடிக்க
உன் நெஞ்சில் விழுந்தேன் (நிஜமாகவே நெஞ்சில் விழுவது போலவே அனுபவித்துப் பாடுவார் ஈஸ்வரி)
கொட்டிக் குவிக்க
கொட்டிக் குவிக்க
தட்டிப் பறிக்க

இன்றுமுதல் நாளை வரை
என் மடியில் நீ இருந்தால்

ஒன்று முதல் நூறு வரை
நல்ல கதை நான் படிப்பேன்

(ஷெனாய் குதூகலம். அடடா! என் செல்போனின் ரிங்க் டோனாக முன்னம் இருந்தது.)

தேனோட்டம் இதழ்களிலே மின்ன
பூவாட்டம் கைகளிலே பின்ன
தென்னை வண்ண மேனி தாலாட்ட
தேனோட்டம் இதழ்களிலே மின்ன
பூவாட்டம் கைகளிலே பின்ன
தென்னை வண்ண மேனி தாலாட்ட

சுவை தோன்றுமா? பசி தீருமா?
அந்த சொர்க்கம் எங்கே கொண்டு செல்லம்மா...ஹாஹாஹாங் (பாலா கொஞ்சல்... கெஞ்சல்)

தேரோட்டம் கால்களிலே கண்டு
நூலாட்டம் இடையினிலே நின்று
கன்னம் கொஞ்சம் நேரம் கனியானால்
சுவை தோன்றலாம்... பசி தீரலா...ம் (ராட்சஸி 'லா' க்களில் அலட்சியப் பட்டை உரிப்பார் )
அந்த சொர்க்கம் என்னவென்று சொல்லலாம்

இன்றுமுதல் நாளை வரை
என் மடியில் நீ இருந்தால்

ஒன்று முதல் நூறுவரை
நல்ல கதை நான் படிப்பேன்

லாஹஹாஹா லாஹஹாஹா
லாஹஹாஹா ஹஹாஹாஹா

பூச்சூடும் கூந்தலினால் மஞ்சம்
போடாதோ காதலியின் நெஞ்சம்
தொட்டில் என்று எண்ணி எண்ணி நீயாட

(பாலா 'ஆ ஆ ஆ ஆ ஆ' என்று அலட்சிய இழுவை ஒன்று இழுப்பார் இன்பமாக)

பூச்சூடும் கூந்தலினால் மஞ்சம்
போடாதோ காதலியின் நெஞ்சம்
தொட்டில் என்று எண்ணி எண்ணி நீயாட

மலர் வாடையோ
சிறு போதையோ (ராட்சஸி 'போதை' சொல்லும் போது நிஜமாகவே போதை ஏறும்)
இந்த மங்கை சொல்லும்
இன்பம் ஒன்றல்ல

நீரோடும் நதியினிலே வெள்ளம்
ஏதேதோ எண்ணுதடி உள்ளம்
மஞ்சள் வெயில் மாலை மணக்கோலம்

நான் உன்னிடம் நீ என்னிடம்
நீ சொல்லச் சொல்லக் கேட்பேன் சொல்லலாம்.

தொட்டுத் துடிக்க
நான் கட்டிப் பிடிக்க
உன் நெஞ்சில் விழுந்தே....ன்
கொட்டிக் குவிக்க

கொட்டிக் குவிக்க
தட்டிப் பறிக்க

இன்றுமுதல் நாளை வரை
என் மடியில் நீ இருந்தால்

ஒன்று முதல் நூறுவரை
நல்ல கதை நான் படிப்பேன்

லாஹஹாஹா லாஹஹாஹா
லாஹஹாஹா லாஹஹாஹாஹா


https://youtu.be/SfwqFVJnlm8

JamesFague
26th September 2015, 12:46 PM
Courtesy: Tamil Hindu


சினிமா தொழில்நுட்பம்: ஷங்கர்-ராஜமௌலிக்கே சவால் விடலாம்!

‘10,000 பிசி’ படத்தில் ஒரு காட்சி | 3டி டேட்டா ஸ்கேனர்
மலை, அதன் மேலிருந்து விழும் அருவி, அதே மலையில் இரவில் காயும் நிலா, அங்கே குடியிருக்கும் ஆதிவாசிகளின் குடியிருப்பு, அங்கொரு மலைக்கோயில் எனப் படத்தில் இடம்பெறும் பாடல் காட்சிகளுக்குப் பிரம்மாண்ட செட்களை நிர்மாணித்துப் படம்பிடித்தவர் டி. ராஜேந்தர். தொண்ணூறுகளின் தொடக்கத்தில் அவர் இயக்கிய பல படங்களின் இப்படிப்பட்ட பிரம்மாண்ட செட்களை நிர்மாணிக்கப் படத்தின் பட்ஜெட்டில் 40 சதவீதத்தை ஒதுக்கியதாக அவரே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அவர் எதிர்பார்த்தது போலவே பாடல் காட்சிகளின் இத்தகைய செட் பிரம்மாண்டங்களுக்காகவும் அவரது படங்கள் வெற்றிபெற்றிருக்கின்றன. அந்தக் காலகட்டத்தில் ரசிகர்களை அவை கவர்ந்தாலும், அவற்றின் செயற்கைத் தன்மை இன்று அந்தப் பாடல் காட்சிகளைப் பார்க்கும்போது நமக்குப் புன்முறுவல் பூக்கச் செய்யலாம்.

காரணம் இன்று செட் என்பதே டிஜிட்டல்மயமாகிவிட்டது. அதாவது இன்றைய படங்களில் நாம் காணும் காட்சிகளில் வாய்பிளக்க வைக்கும் இடங்கள் பலவும் டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்டவை. இவற்றின் சிறப்பம்சமே செயற்கைத் தன்மை என்ற பேச்சுக்கே இடமில்லாமல் இது நிஜம்தான் என்று நம்பவைத்துவிடும் ‘மாய யதார்த்தத்தை’ நமக்கு சிருஷ்டித்துக் காட்டிவிடுவதுதான்.

இது எப்படிச் சாத்தியமாகிறது? இப்படி உருவாகும் செட்களுக்கு அடிப்படை இயற்கை + செயற்கை இரண்டையும் கச்சிதமாக இணைத்துக் காட்டும் போட்டோ ரியலிஸ்டிக் கிராஃபிக்ஸ் நுட்பம். இது பல தொழில்நுட்பங்கள் ஒன்றாக இணைந்து உருவாகும் ஒரு முறை. இதில் முக்கியப் பங்கு வகிப்பது அதிநவீன 3டி டேட்டா ஸ்கேனிங் முறை. உங்களை ஒரு படத் தயாரிப்பாளராக கற்பனை செய்துகொள்ளுங்கள். எகிப்து பாலைவனத்தில் இருக்கும் உலக அதிசயமான பிரமிட்தான் நீங்கள் தயாரிக்கப்போகும் வரலாற்றுப் படத்தின் கதைக்களம் என்று வைத்துக்கொள்வோம். அடிமைகளைக் கொண்டு பாரோ மன்னர்கள் அந்த பிரமிடைக் கட்டிக்கொண்டிருந்த காலகட்டத்தில் அங்கே ஒரு அடிமையாக உங்கள் கதாநாயன் இருக்கிறார் என்பது காட்சி. இப்போது இதை எப்படிப் படமாக்க முடியும்?

ராஜஸ்தான் பாலைவனத்துக்குப் போய் பிரமிடை செட் போட்டுப் படம்பிடிக்க உங்களிடம் பட்ஜெட் இல்லையா? கவலையே வேண்டாம். இந்த இடத்தில்தான் 3டி டேட்டா ஸ்கேனிங், டிராயிங், 3டி மாடலிங், அனிமேஷன், செட் எக்ஸ்டென்ஷன்(set extension), மேச் மூவிங் (matchmoving), கேரக்டர் அண்ட் கிரவுட் ப்ளேஸ்மெண்ட்(character and crowd placement) உள்ளிட்ட பல விஷுவல் எஃபெக்ட் தொழில்நுட்பங்கள் ஒன்றாக இணைகின்றன.

இப்போது நீங்கள் தயாரிக்கும் பீரியட் படத்துக்கு வருவோம். முதலில் அதிநவீன 3டி டேட்டா ஸ்கேனர் கொண்டு, கதைக்களத்துக்குத் தேவைப்படும் பாலைவனத்தை வெறுமையாக (vacant) ‘டேட்டா கேப்சர்’ என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மிக மிகத் துல்லியமாகப் படம்பிடித்துக்கொள்கிறோம். அகச்சிவப்பு மற்றும் புற ஊதாக் கதிர்களைப் பயன்படுத்தி மிகத் துல்லியமாக முப்பரிமாண முறையில் எக்ஸ்ரேவைவிடத் துல்லியமாக இந்த லேசர் ஸ்கேனர்கள் படம்பிடித்துத் தரும்.

தற்போது 3டி முறையில் படம்பிடிக்கப்பட்ட இந்த முப்பரிமாணப் பாலைவனக் காட்சியை கம்ப்யூட்டரில் உள்ளிட்டு, அதில் அடிமைகள் வேலை செய்வதுபோலவும், பிரமிடின் முதல் அடுக்கில் தொடங்கி அது நிறைவடையும் வரை படிப்படியாகக் கட்டுமானம் செய்வது போலவும் கிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்க முடியும். சிறிய அளவில் மினியேச்சராக பிரமிடைச் செய்தும் அதை 3டி டேட்டாவுடன் இணைக்க முடியும். இதைத்தான் மேச் மூவிங் என்கிறார்கள்.

கடந்த 2008 கிராஃபிக்ஸ் மிரட்டலோடு வெளியான ‘10,000 பிசி’ திரைப்படம் தமிழ் உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. அதில் கி.மு. பத்தாயிரம் ஆண்டுகளில் வாழ்ந்த மக்கள் எகிப்தின் கைசாவில் அமைந்த மூன்று பிரமிடுகளைக் கட்டுவது போன்ற காட்சி இடம்பெற்றது. பிரமிடுகளைக் கட்டுவதற்கு அந்தக் காலத்தின் பழங்குடி மக்கள் யானை இனத்தின் முன்னோடியான நீண்டு சுருண்ட தந்தங்களைக் கொண்ட மம்மூத் யானைகளைப் பயன்படுத்துவதுபோலக் காட்சி உருவாக்கப்பட்டது.

இந்தக் காட்சிக்காக நமீபியாவின் பாலைவனம் முதலில் வெறுமையாக 3டி ஸ்கேன் செய்யப்பட்டது. பிறகு மினியேச்சராக பிரமிடு கட்டப்படுவது போன்ற 3டி மாடலின் விஷுவல் டேட்டா அதனுடன் இணைக்கப்பட்டது. 3டி முறையில் வரைந்து உருவாக்கப்பட்ட மம்முத் யானைகள் தேவையான இடங்களில் பொருத்தப்பட்டு அவை அனிமேட் செய்யப்பட்டன. பிறகு காட்சிக்கு எந்த இடங்களிளெல்லாம் மக்கள் கூட்டம் தேவைப்பட்டதோ அவை கிரவுட் ரீப்ளேஸ்மெண்ட் தொழில்நுட்பம் மூலம் நிரப்பப்பட்டது.

இந்தக் காட்சியுடன் நடிகர்கள் ஸ்டூடியோவில் க்ரீன்மேட் பின்னணியில் நடித்த லைவ் ஆக்*ஷன் காட்சி உள்ளே புகுத்தப்பட்டு முக்கிய கதாபாத்திரம் எந்த இடத்தில் இருக்க வேண்டுமோ அந்த இடத்தில் கம்பாசிட் செய்யப்பட்டது. கற்பனை எத்தனை பிரம்மாண்டமாக இருந்தாலும் படத்தின் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகளுக்கான முன்தயாரிப்பு முறையில் சரியான திட்டமிடல் இருந்தால் நீங்கள் இயக்குநர் ஷங்கர், ராஜமௌலி இருவருக்கும் சவால் விடும் தரத்தை கிராஃபிக்ஸில் கொண்டுவர முடியும். அத்தகைய திட்டமிடலின் துல்லியங்களை அடுத்துப் பார்ப்போம்!

Russellxor
26th September 2015, 12:54 PM
இனிமையான மழைப்பாடல்ஒன்று



thuli thuli-puthu vellam: http://youtu.be/ueI41Mea_FQ

madhu
26th September 2015, 02:30 PM
பெண்ணின் பெருமை சொன்ன ராஜேஷ்... இன்று முதல் நாளை வரை பாட வைத்த வாசுஜி... ஷங்கரைத் தோற்கடிக்க வழி சொல்லும் வாசுதேவன் ஜி, மழையில் துளித் துளியாக நனைய வைத்த செந்தில்வேல் ஜி... எல்லோருக்கும் நன்றி.. ( சிகிச்சையில் இருப்பதால் அதிக வரிகள் டைப் அடிக்க இயலவில்லை)

Russellxor
26th September 2015, 03:27 PM
எல்லோருக்கும் நன்றி.. ( சிகிச்சையில் இருப்பதால் அதிக வரிகள் டைப் அடிக்க இயலவில்லை)


நல் ஆரோக்கியம் பெருக!

eehaiupehazij
26th September 2015, 10:42 PM
நடிகர்திலகத்தின் பிறந்தநாள் நினைவஞ்சலி

சிவாஜி / ஜெமினி கணேசன்களின் இணைவின் முன்னோட்ட நினைவலைகள் !


சம அந்தஸ்தில் மக்களின் வரவேற்பைப் பெற்று புகழ் வெளிச்சத்தில் மின்னி ஒளிர்ந்த இரு நடிப்புச் செம்மல்கள் நடிகர்திலகமும் காதல் மன்னரும்!
அகில உலக அளவிலும் ஒரு நல்ல புரிதலுடன் கதைக் களத்தின் வெற்றிகரமான நடிப்பு உருவகத்தை மட்டுமே மனதில் இருத்தி எந்த வித ஈகோவுக்கும் இடம் தராது பதினைந்து படங்கள் இணைந்து இரு கதாநாயகர்கள் கலக்கியது பெருமையுடன் நினைவுகூரத் தக்க சாதனையே !!
வீரபாண்டிய கட்டபொம்மன்,கப்பலோட்டியதமிழன், பாசமலர், பாவமன்னிப்பு,பதிபக்தி, பந்தபாசம், நாம் பிறந்த மண், சரசுவதி சபதம், திருவருட் செல்வர், கந்தன் கருணை போன்ற படங்களில் நடிகர்திலகத்துடன் கதை முக்கியத்துவம் கருத்தில் கொண்டு அளவாக அடக்கி வாசித்திருப்பார் காதல் மன்னர் !
சாவித்திரியை தனது பாசமலர் தங்கையாகவும் ஜெமினியை மாப்பிள்ளை என்றுமே நிஜ வாழ்விலும் மதித்தவர் நடிகர்திலகம்! குலமகள் ராதை படத்தில்உலகம் இதிலே அடங்குது என்னும் பாடல் காட்சியில் சினிமாக்காரங்க படத்தைப் போட்டா பத்திரிகைகள் கடைகளில் விரைவில் தீர்ந்துவிடும் என்ற கருத்துப்பட வரும் காட்சியில் நடிகர்திலகம் தன்னை முன்னிலைப் படுத்தாது ஜெமினி சாவித்திரி படங்களைக் காட்டி தனது கர்ணன் காலத்துத் தொடர்ச்சியான நன்றியறிதலையும் (கட்டபொம்மனில் எஸ் எஸ் ராஜேந்திரன் அவர்கள் நடிக்க இயலாத இக்கட்டான சூழலில் நடிகர்திலகத்தின் பாசமலர் வழி வேண்டுதலை ஏற்று எந்த ஈகோவுமின்றி உடனே வந்து நடித்துக் கொடுத்து படத்திற்கே இனிமையும் பெருமையும் சேர்த்தவர் ஜென்டில்மேன் ஜெமினி) மரியாதையையும் வெளிப்படுத்தி அவர்களைப் பெருமைப்படுத்தியிருப்பார் !!
பெண்ணின் பெருமை, பார்த்தால் பசி தீரும், உனக்காக நான் திரைப்படங்களில் இன்னும் ஒருபடி மேலே போய் ஜெமினிகணேசனின் பாத்திரப்படைப்பை கதையின் நாயகனாக முன்னிலைப் படுத்தும் வண்ணம் தனது விட்டுகொடுக்கும் மனப்பாங்கை வெளிப்படுத்தியிருக்கிறார் நடிகர்திலகம் !!

https://www.youtube.com/watch?v=3qMekkGIgLg

https://www.youtube.com/watch?v=9ZghfWkD8gA

eehaiupehazij
27th September 2015, 08:20 AM
Evergreen Hero ...Everlasting songs!

Dev Anand's Birthday reminiscence!

ஹிந்தி மார்க்கண்டேயன் தேவ் ஆனந்தின் 92 வது பிறந்தநாள் நினைவஞ்சலி!

https://www.youtube.com/watch?v=7B5wuV9F8ek

ஹாலிவுட் கிரிகிரி பெக்கின் எதிரொலியான பாலிவுட்டின் தேவ் ஆனந்துக்கு பேஸ்மென்ட் ஸ்ட்ராங் தலை மட்டும் வீக்!! ஆடிக்கொண்டே இருக்கும்!!

https://www.youtube.com/watch?v=3lVxnIAGDFk

vasudevan31355
27th September 2015, 08:28 AM
கோவைப் பயணத்தில் ஆருயிர் நண்பர்கள் சிவாஜி செந்தில் சார், டாக்டர் ரமேஷ் பாபு (லாரென்ஸ் (மேஜர் அல்ல) மற்றும் டேவிட்) மற்றும் செந்திவேல் சிவராஜ் சார் அனைவரையும் சந்தித்தது பெரும் மகிழ்வு. சிவாஜி செந்தில் சாரின் கலகலப்பு, ரமேஷ் சாரின் குதூகலிப்பு, சிவராஜ் சாரின் நடிகர் திலக, இளைய திலக, விக்ரம் பிரபு ஆர்வம் என்று அந்த ஒரு சில மணித்துளிகள் மகிழ்ச்சி வெள்ளம் எங்களிடையே கரை புரண்டு ஓடியது. அப்படியே எல்லோரும் சேர்ந்து ஒரு எஸ்.கே.சி. சிவராஜ் சார் சொன்னது போலவே வெட்கப் படவோ பாடலை அருமையாக எழுதி இருந்தார். அவருக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள். நடிகர் திலகத்தைப் பற்றிய பேச்சு தவிர வேறு எதுவும் பிரதானமில்லை. . கார் எடுத்து வந்த காதல் மன்னரின் கண்ணியமான ரசிகர், நடிகர் திலகத்தின் தீவிர பக்தருக்கு என் மனமுவந்த நன்றிகள். டாக்டர் சார் திரிக்கு வர வேண்டும். செம ஜாலி டைப். அனைவரும் பிரிய மனமில்லாமல் பிரிந்தோம். நட்பை உருவாக்கித் தந்த நடிகர் திலகத்திற்கும், ஹப்பிற்கும் மனமார்ந்த நன்றி. அனைத்து திரி நண்பர்களும் ஒன்றாக இது போல ஓரிடத்தில் சந்தித்து மனம் மகிழ ஆசை. விரைவில் ஏற்பாடு செய்கிறேன்.

vasudevan31355
27th September 2015, 08:35 AM
ராஜேஷ்ஜி!

ஸ்வீட் குரல் சுசீலாம்மாவின் புதுத் தொடருக்கு வாழ்த்துக்கள். பெண்ணின் பெருமை பேசிய பாடல் மூலம் துவங்கியிருக்கிறீர்கள். பாடலின் ஆரம்பக் காட்சியைக் கண்டு அரண்டே ஏன் மிரண்டே போய் விட்டேன்.:) இப்படியா எடுத்தவுடன் பயமுறுத்துவது? சி.க கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார் என்றால் நீங்களுமா?:) சும்மா... ஜாலியாய் சொன்னேன். ம்ம்...ஜமாயுங்கள் தல.

vasudevan31355
27th September 2015, 08:38 AM
மதுண்ணா!

உடல் வருத்தி பதிவுகள் இட வேண்டாம். சிகிச்சை முடிந்ததும் உங்கள் முத்திரைகளைத் தொடருங்கள். நீங்கள் முழு குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

eehaiupehazij
27th September 2015, 08:55 AM
Pray for your speedy convalescence Madhuji! Get Well Soon!!

senthil

தனி ஒருவர் .!

https://www.youtube.com/watch?v=JjRs0KjYzbo

vasudevan31355
27th September 2015, 09:03 AM
ஆடு பாடல்களில் நண்பர்கள் அனைவரும் 'ஆடு... ஆடு' என்று ஆடி விட்டனர். அதுவும் சுந்தர பாண்டியன் சார் ஒரு படி மேலே போய் ஆட்ட அனுராதவைக் காட்டி 'ஆடு' ஆராய்ச்சி பண்ணி விட்டார். //'அனுராதா "ஆடு ஆடு" ன்னு ஆடுற பாட்டு உங்களுக்கு'//....சுந்தரமான நகைச்சுவை. சிரித்துக் களித்தேன். நம் நண்பர்களுக்குத்தான் எத்துணை நகைச்சுவை உணர்வு!

எனக்குத் தெரிந்த ஆடு பாடல்களைத் தருகிறேன். போட்டாச்சான்னு தெரியல.

'இரை போடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே'

ஆடு மேல் நடிகையர் திலகத்திற்கு கரிசனம். அதன் மூலம் நமக்குத் தத்துவம். அன்புடன் ஆடு அணைத்துக் கொண்டிருக்கும் பீம்சிங்கின் கருணை புத்தர் படம் பார்த்து மன சஞ்சலம் காட்டும் ஜெமினி. ஆட்டம் காட்டும் ஆடுகளை அரவணைத்து 'டேயன்னா...ட்ரியோ டேயன்னா' ஓட்டும் சாவித்திரி. குயில் குஞ்சு போலக் கூவும் அதிசயப் பாடகியின் ஆளுமைக் குரல்வளம். நம் மனமெல்லாம் 'ஆடு'ம்.

பாடலின் டியூன் 'ஜீவன் மே பியா தேரா சாத் ரஹே' (Gunj Uthi Shehnai) வரிகளை ஞாபகப்படுத்தினால் அதற்கு நான் பொறுப்பல்ல.:) அதையும் போட்டு விடுகிறேன். (என்ன பாட்டு நைனா!)) 'தர்த்தி' நாயகனின் ஷெனாய் கேட்டால் அவனவன் ஷெத்தான்.

'இரை போடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே'


https://youtu.be/m8_1sGeHID8

'ஜீவன் மே பியா தேரா சாத் ரஹே'


https://youtu.be/COfZJ8tPyzU

vasudevan31355
27th September 2015, 09:38 AM
இன்னொரு 'ஆடு'ப் பாட்டு

இங்கே பா(ஆ)டுவது ரதி ஆடு ஹோத்ரி.

'ஆடு நனஞ்சுதுன்னு அழுததடி ஓநாயொன்னு' 'அன்புக்கு நான் அடிமை' பாடல். நாகப்பன் என்ற 'கராத்தே மணி' ஓநாயை கவ்விய ரஜினியையே கலாய்க்கும் மன்மதனின் நாயகி. கேரோவில் கலக்கும் கோரஸ். பாஸ்ட்டாகப் பாடும் 'பாடகியர் திலகம்'. டேஸ்ட்டாக டப்பாங்குத்து போட வைக்கும் ராஜாவின் தாரை தப்பட்டை.



https://youtu.be/XzhYqNug84I

vasudevan31355
27th September 2015, 10:30 AM
இங்கே கடல் பூக்களால் பூக்குது. அப்படியே 'ஆடு மேயுதே'. 'கானா' போட்டு காணமல் போன தேவாவின் விரல் விட்டு எண்ணக் கூடிய தேவாமிர்த கானம். இதில் பரிதாபமென்னவென்றால் பாடலில் பங்கு கொண்ட பிரதியுக்ஷா என்ற பிஞ்சு ஆடும், முரளி என்ற முரட்டு ஆடும் மேயும் அழகை நாம் பார்க்க இன்று அந்த ஆடுகள் நம்மிடையே இல்லை.:( கொஞ்சம் இதயம் கனக்கத்தான் செய்கிறது. பாடலும் மனதுக்குள் அதற்கேற்றார் மாதிரி புகுந்து ஒரு மாதிரியான இன்ப சித்திரவதையோ துன்ப சித்திரவதையோ செய்கிறது.


https://youtu.be/XmlpGav9LWo

vasudevan31355
27th September 2015, 10:47 AM
ரூபா இல்லாத எச்சில் இரவுகளின் பிச்சைக்காரி ரூபாவுக்கு பித்துப் பிடித்த காதல் பிரதாப் போத்தன் மேல். ஆனால் மைன்ட் வாய்ஸ்?!

பூத்து நிக்குது காடு
பாத்து நிக்குது ஆடு

ஜென்ஸியின் 'கீச்'சும், மலேஷியாவின் ஆண்மை நிறை 'கணீரு'ம் சேர்ந்து 'பிரகாச'மான பாடலாகிறது ராஜாவின் ரசனையால். ஆட்டு நாளாச்சு ஸாரி கேட்டு நாளாச்சு.:)


https://youtu.be/4-DsAMXu2RA

vasudevan31355
27th September 2015, 10:56 AM
'பாச வலை'க்குள் மாட்டிக் கொண்ட குட்டி ஆடு குள்ள நரிக்கு சொந்தம். குள்ள நரி மாட்டிகிட்டா கொறவனுக்கு சொந்தம்.

எம்.கே.ராதாவின் கீழ்ப்பாக்க சேட்டைகள். பராசக்தி நாயகனின் ஜெராக்ஸ். ஆனால் நாயகனுக்கு வெகு நாள் முன்னோடி. ஆனால் பராசக்தி நாயகனோ எல்லோருக்கும் முன்னோடி.


https://youtu.be/2y3VpcLQXB8

vasudevan31355
27th September 2015, 11:05 AM
திரும்பிப் பாருங்கள். ஆவன்னா டூனா சேர்ந்தா என்னா? 'ஆடு'தானே! பண்டரிபாய் பள்ளிக் குழந்தைகளுக்கு ஆடாமல் சொல்லிக் கொடுக்கும் வீர சிவாஜி, கட்டபொம்மன் சரித்திரங்கள். சரித்திரப் படங்கள் உருவாகி சாதனை படைப்பதற்கு முன்பாகவே நடிப்புப் பகலவனின் பெருமையை பறைசாற்றிவிட்டன இப்பாடலின் வரிகள் தெரிந்தோ தெரியாமலோ.


https://youtu.be/AKsRyckxFbw

vasudevan31355
27th September 2015, 12:16 PM
செந்தில் சார்,

உங்களைப் பார்த்த சந்தோஷத்தில் உங்களுக்கு என் பரிசுப் பாடல் ஒன்று. 'நடிகர் திலகம்' ஸ்டைல் நெற்றியில் வளைந்து புரளும் முடி ஒப்பனையோடு உங்கள் 'காதல் மன்னர்' 'அபிநய சரஸ்வதி'யை யாருமில்லாத நேரத்திலே, ஆற்றங்கரை ஓரத்திலே, காற்றாட வந்த போது, கண்ணாரக் கண்டு, காதல் பாட்டு எடுத்து விடுகிறார் 'அன்பளிப்பு' 'வள்ளிமலை மான் குட்டி எங்கே போறே?") மாதிரி. அதிலே சின்ன மாட்டு வண்டி. இதிலே கார். 'அபிநய'த்துக்கு இரண்டிலும் ஒரே ஒப்பனைதான். முற்றிவிட்டது முகம் என்றால் என்னை மொத்தி விடுவார் ஜி.:) காப்பாத்துங்கோ!:)


https://youtu.be/CSMVoVFHK1M

chinnakkannan
27th September 2015, 03:39 PM
குட் ஆஃப்டர் நூன் ஆல்..

//ஜென்ஸியின் 'கீச்'சும், மலேஷியாவின் ஆண்மை நிறை 'கணீரு'ம் சேர்ந்து 'பிரகாச'மான பாடலாகிறது ராஜாவின் ரசனையால். ஆட்டு நாளாச்சு ஸாரி கேட்டு நாளாச்சு.// வாசு, கோவை போய்விட்டு வந்து நகைச்சுவை ஜாஸ்தியாகிவிட்டதே..

ஆட் பாடல்களுக்கு தாங்க்ஸ்.. ஹோம் ஒர்க் இனிமேல் தான் செய்யணும்..அதுக்குமுன்னால் ஒரு ஹாப்பி நியூஸ் அண்ட் ஒரு ஸேட் நியூஸ்..

ஹேப்பி நியூஸ்.. என் டயட் காரணமாக் சுகர் நில் என்று நின்றுவிட டாக்டர் ஷுகர் டேப்லட் வேண்டாம் எனச் சொல்லிவிட்டார்.. எடையும் பெருமளவில் குறைந்திருக்கிறது ( தைரியமாக வாசுவை மீட் பண்ணலாம்..(அதற்குள் இன்னும் ஒல்லியாகிவிடுவேன்) அவர் குட்டியானை என சொல்லமாட்டார் என்னை)

ஸேட் நியூஸ்.. நேற்று ஃப்ரண்ட் வீட்டிற்குச் சென்று சாப்பிடப் போனேனா.. கொஞ்சம் தரையில் அமர்ந்து உண்டு எழுகையில் இடது கையில் அழுத்தி அழுத்தி எழுந்ததில் மஸில்ஸ் புரண்டிருக்கிறதோ தெரியவில்லை.. மணிக்க்ட்டை ஆட்டினால் வலிக்கிறது..விரல்களும் டைபபடிக்க தடுமாறுகின்றன.. ம்ம் சரியாய்டும்..

chinnakkannan
27th September 2015, 05:47 PM
உன் கண்களிலோ கனிகள்.. திடீரென இந்தப் பாட் வந்து தொந்தரவு செய்கிறது மனதில்..பாகம் 3 இல் வாழ்க்கை அலைகள் என வாசு போட்ட நினைவு..யார் பாடுவார்கள்..

கனி பத்திப் பேசியாச்சா..

chinnakkannan
27th September 2015, 05:50 PM
//'அபிநய'த்துக்கு இரண்டிலும் ஒரே ஒப்பனைதான். முற்றிவிட்டது முகம் என்றால் என்னை மொத்தி விடுவார் ஜி// அருணோதயத்தில க.பை.. கொஞ்சம் பிரம்மாண்டமா இருப்பாரோன்னோ.. என்னையும் ஜி மொத்துவதற்கு முன்..எஸ்ஸ்ஸ்கேப்..

பட் க.பை.. தங்க மலை ரகஸ்யத்தில் அழகு யெளவனம் பாட்டில் குட்லுக்கிங்கில் இருப்பார் ப்ளஸ் மானைத்தேடி மச்சான் வரப் போறான் பாடலிலும்..என ஆன்றோர்கள் சொல்வார்கள் :)

RAGHAVENDRA
27th September 2015, 06:41 PM
வாசு சார்
பாலாவின் இன்று முதல் நாளை வரை பாட்டு அன்று முதல் இன்று வரை நெஞ்சில் ரீங்காரமிடும் அருமையான பாட்டு. நினைவூட்டியதற்கும், அற்புதமான தகவல்களோடு தொகுக்கப்பட்ட விளக்கவுரைக்கும் உளமார்ந்த பாராட்டுக்கள்.

அது மட்டுமா பல்வேறு பாடல்களில் தங்களுடைய பாண்டித்யத்தின் பிரதிபலிப்பாக இன்று அளித்துள்ள பாடல்களும் சூப்பரோ சூப்பர்.

RAGHAVENDRA
27th September 2015, 06:42 PM
பட் க.பை.. தங்க மலை ரகஸ்யத்தில் அழகு யெளவனம் பாட்டில் குட்லுக்கிங்கில் இருப்பார் ப்ளஸ் மானைத்தேடி மச்சான் வரப் போறான் பாடலிலும்..என ஆன்றோர்கள் சொல்வார்கள்

சி.க. சார்

http://www.scasd.org/cms/lib5/PA01000006/Centricity/Domain/1379/jumping_rope_children_animated.gif

RAGHAVENDRA
27th September 2015, 06:49 PM
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcS2CRemc9QCS8wbFKN9pMYkGdLWLD9zU SJsBwkkBQLRl3dQosRTDQ

நகைச்சுவைத் தென்றல் நாகேஷின் பிறந்த தினம் இன்று. தமிழ் சினிமாவின் வரலாற்றை இவர் பெயர் விட்டு எழுத முடியாது. பல நகைச்சுவை நடிகர்களுக்கும் பல விதமான நகைச்சுவை நடிப்பிற்கும் முன்னோடி.

நகைச்சுவையைத் தாண்டி குணசித்திர பாத்திரங்கள், கதாநாயகன் பாத்திரங்கள் என இவருடைய ஆட்சி செல்லாத திசையே இல்லை.

அவருடைய நடிப்பில் என் மனம் கவர்ந்த உன்னதத் திரைப்படம் கல்யாண ஊர்வலம்.

ஆண்டவன் முகத்தைப் பார்க்கணும் என்று அவர் கூற, அவர் முகத்தைப் பார்க்கணும் என நாம் விரும்புகிறோம்.


https://www.youtube.com/watch?v=HbbAjvwhBuE

RAGHAVENDRA
27th September 2015, 06:53 PM
இதைப் போன்ற சித்தப்பா யாருக்கு வாய்க்கும்

https://www.youtube.com/watch?v=46zrAXLBWlc

பாடல் முடியும் போது ஜானகியின் ஹம்மிங்... ஆஹா... வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத மென்மை

RAGHAVENDRA
27th September 2015, 06:58 PM
உலக அளவில் நாகேஷை உயர்த்திச் சென்ற பாடல் காட்சி

நீர்க்குமிழி ... கன்னி நதி ஓரம்...

https://www.youtube.com/watch?v=ap6sNjUgPI8

RAGHAVENDRA
27th September 2015, 07:00 PM
https://www.youtube.com/watch?v=1NHIGCFm5Oo

பத்தாம் பசலி திரைப்படத்திலிருந்து..

vasudevan31355
27th September 2015, 08:24 PM
நாகேஷ் பிறந்த தின சிறப்புப் பாடல்.

ராகவேந்திரன் சார்,

நன்றி! நாகேஷின் பிறந்த தினத்தை நினைவு கூர்ந்து அமர்க்களமான பாடல்களை அள்ளித் தெளித்து விட்டீர்கள். குறிப்பாக 'ஆண்டவன் முகத்த பார்க்கணும்' பாடல். எளிமையான பாடல் என்றாலும் அமர்க்களமான பாடல். இந்தப் பாடலைப் பற்றி இருவரும் நிறைய கைபேசி வழியாகப் பேசியிருக்கிறோம்.

நாகேஷின் பிறந்த நாளில் 'படகோட்டி' படத்தில் இருந்து படத்தில் இடம் பெறாத ஒரு பாடலை இப்போது கேட்டு மகிழலாம்.

http://thiruttudvd.net/wp-content/uploads/2014/02/Padagotti0000001.jpg

வழக்கமாக ஏ.எல்.ராகவன், ஈஸ்வரி இருவரும் நாகேஷ், மனோரமாவுக்கு 'சீட்டுக்கட்டு ராஜா' ரேஞ்சுக்குப் பாட, நிறையப் பேர் இந்தப் பாடலைக் கேட்டிருக்க முடியாது.

ரொம்ப அழகான பாடல். படத்தில் இடம் பெறாமல் போனது துரதிருஷ்டவசமே. .மெல்லிசை மன்னர்களின் அமர்க்களமான இசை மற்றும் டியூன். பாடலின் நடுவில் வரும் மீனவ மியூசிக் ('டொண்டொடட... டொண்டன்... டொக்க) 'வார்ரே வா' என்று கூப்பாடு போட வைக்கிறது. தண்டுக் குரலில் ராட்சஸி ரகளை.

அதுவும்,

'முன்னம் ஒருநாளில் சொல்லி அனுப்பினேன் தன்னந்தனியான போது' ரிப்பீட்டின் போது நான்கு வார்த்தைகளையும் இழுத்து இழுத்து ஈஸ்வரி இசைப்பது அருமையோ அருமை.

'உங்க உடம்பிலே எண்ண எலும்பில்லே
ஆனா வேகம் கொறயவில்லை'

என்று நாகேஷின் உடற்கூற்றை கிண்டலடிக்கும் வரிகளும் வழக்கமாய் உண்டு. நாகேஷ் ரிக்கார்ட் போட்டதும் பேயாட்டம் போட்டு ரகளை செய்வதை அழகாக பாட்டில் வடித்திருப்பார்கள்.

'வாழைத்தண்டு போல உடம்பு அலேக்' பாடலில் வரும் 'போட்டுடாதே' பன்ச் மாதிரி இதுல ராகவன் 'அதச் சொல்லு' என்று சொல்லும் 'பன்ச்'சும் உண்டு.

பாடலை அன்புடன் அளித்த அசோக் சாருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி!

http://i.ytimg.com/vi/RkyiHTTeDE8/maxresdefault.jpg

பருவ கால ஏட்டினிலே
பாடி வச்ச பாட்டினிலே
பல்லவி நான் அனுபல்லவி நீ
பல்லவி நான் அனுபல்லவி நீ

நத்தையும் நாரையும் நண்டுடன் தேரையும்
அத்தை மகனுக்குத் தூது
முன்னம் ஒருநாளில் சொல்லி அனுப்பினேன்
தன்னந்தனியான போது

நத்தையும் நாரையும் நண்டுடன் தேரையும்
அத்தை மகனுக்குத் தூது
முன்னம் ஒருநாளில் சொல்லி அனுப்பினேன்
தன்னந்தனியான போது

முன்னம் ஒருநாளில் சொல்லி அனுப்பினேன்
தன்னந்தனியா ன போது

பருவ கால ஏட்டினிலே
பாடி வச்ச பாட்டினிலே
பல்லவி நீ அனுபல்லவி நான்
பல்லவி நீ அனுபல்லவி நான்

கன்னி இளமயில் கானக்கருங்குயில்
ஆசை அடங்கவில்லை
இன்னும் எரியாத ம(ன்)ம்முதனாருக்கு
பூசை தொடங்கவில்லை

கன்னி இளமயில் கானக்கருங்குயில்
ஆசை அடங்கவில்லை
இன்னும் எரியாத ம(ன்)ம்முதனாருக்கு
பூசை தொடங்கவில்லை

சொத்து பிரிச்சதும் துள்ளித் துடிச்சதும்
சொத்து பிரிச்சதும் துள்ளித் துடிச்சதும்
வெட்கம் மறையவில்லை
உங்க உடம்பிலே எண்ண எலும்பில்லே
ஆனா வேகம் கொறயவில்லை
ஆனா வேகம் கொறயவில்லை

அதச் சொல்லு

பருவ கால ஏட்டினிலே
பாடி வச்ச பாட்டினிலே
பல்லவி நீ அனுபல்லவி நான்
பல்லவி நீ அனுபல்லவி நான்

கண்ணுக்குள்ளே ரெண்டு மீனிருக்க
கண்டு காதல் வலை விரிச்சேன்
பொங்கும் இரவுக்கு பூத்த மலருக்கு
காத்திருந்து சிரிச்சேன்

ஓடக்கரையிலே ஈரத் தரையிலே
தூக்கம் பிடிக்கவில்லை
ஓடக்கரையிலே....ல்லே
ஈரத் தரையிலே...ல்லே
தூக்கம் பிடிக்கவில்லை
அந்திப் பொழுதிலே ஆடும் நாடகத்தை
இன்னும் ஆடி முடிக்கவில்லை
இன்னும் ஆடி முடிக்கவில்லை

பருவ கால ஏட்டினிலே
பாடி வச்ச பாட்டினிலே
பல்லவி நான் அனுபல்லவி நீ

பல்லவி நீ அனுபல்லவி நான்

பாடலைடவுன்லோட் செய்ய

http://pradosham.com/msv/1964%20-%20Padakotti/Padakotti-1964%20-%20Paruvakaalam-ALR,LRE-Not%20in%20the%20film.mp3

chinnakkannan
27th September 2015, 08:40 PM
பெண்ணின் பெருமையே பெருமை பாடலுக்கு தாங்க்ஸ் ராஜேஷ்..கண்மூடிக் கேட்டேனாக்கும் நான்!

//இரவில் 'தோட்டத்தில் சந்திப்போம்' என்று சிவக்குமார் நிர்மலாவுக்குக் கடிதம் அனுப்பி வரச் சொல்ல, பார்க்கில் படம் எடுத்திருப்பார்கள்.// :)

//'தாவணித் தேவதை'யாக 'பாம்பிடை' நிர்மலா. (குடை ஜிமிக்கி 'கும்'மென்று தூக்கும் இவரின் முகத்திற்கு) அவருக்கு தோதாக மார்கண்டேய சிவக்குமார்.// பாம்பின் இடை தலை முதல் கால் வரை ஒரேமாதிரியாகத் தானே இருக்கும்..மெல்லிய இடை எனக் குறிப்பிட்டால் அது தப்பு தானே.. மிஷ்ஷ்டேக் யுவர் ஹானர்..:) இன்று முதல் நாளை வரைப்பாடல் நன்று.. வாசு..

இன்றுமுதல் நாளை வரை என்மடியில் நீ இருந்தால்..னு பாடறச்சே.. கால் மரத்துப் போகாதான்னு எனக்குத் தோன்றியிருக்கிறது..சில சமயங்களில்..

நன்றி வாசு..

ராகவேந்தர் சார்.. கன்னி நதியோரம் பாட்டு எல்லாவற்றையும் பின்னுக்குத்தள்ளிவிட்டது எனலாம் நன்னாவே டான்ஸ் ஆடியிருப்பார் நாகேஷ்..

chinnakkannan
27th September 2015, 08:45 PM
//பருவ கால ஏட்டினிலே
பாடி வச்ச பாட்டினிலே
பல்லவி நான் அனுபல்லவி நீ //அந்திப் பொழுதிலே ஆடும் நாடகத்தை
இன்னும் ஆடி முடிக்கவில்லை // வாஸ்ஸூ.. எங்கிட்டிருந்து இந்த ப் பாட்டெல்லாம் பிடிக்கிறீர்கள்.. முதன் முறை கேட்கிறேன்..வெரி நைஸ்.. தாங்க்ஸ்ங்க்ணா..

chinnakkannan
27th September 2015, 08:55 PM
நாகேஷின் பாடல்களில் எனக்குப் பிடித்தவை என லிஸ்ட் போட்டால்

கன்னி நதியோரம் மின்னி விளையாடும்..
ஆடி அடங்கும் வாழ்க்கையடா..
குபுகுபு குபுகுபு நான் இஞ்சின்
மலரென்ற முகமின்று சிரிக்கட்டும்.
தாமரைக் கன்னங்கள்
அவளுக்கென்ன அழகிய முகம்
உலகமெல்லாம் படைச்சவளே ஓங்காரி
முத்துக்குளிக்க வாரீகளா
பாப்பா பாட்டு பாடிய பாரதி நான் தானே..
பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே
தேனாற்றங்கரையினிலே

ஹச்சோ அல்மோஸ்ட் எல்லாம் சொல்லிட்டேனா..


யாருக்கு யார் சொல்லித் தெரியும் கண்ணா..

https://youtu.be/XC-7SeeGYfk

Russellxor
27th September 2015, 09:13 PM
சின்னக்கண்ணன் சார் இந்த பாடல்?

இறைவன் உலகத்தை படைத்தானாம்

UNAKAGA NAAN IRAIVAN ULAGATHAI: http://youtu.be/f_EQYsvrL1I

chinnakkannan
27th September 2015, 09:17 PM
//சின்னக்கண்ணன் சார் இந்த பாடல்?

இறைவன் உலகத்தை படைத்தானாம்// பிடிக்கும் செந்தில்வேல்..( சி.கன்னே கூப்பிடுங்க..சார்லாம் வேண்டாம்..) நன்றி.. எங்கே பிரபு மீனா இருக்கும் ஒரு நல்ல பாட்..( நான் நினைக்கறதையே நீங்க போடறீங்களான்னு பார்க்கலாம்..பட் அனலைஸ் பண்ணனும் :) ) ஒரு க்ளூ அந்தப் படத்தில் ப்ரபுக்கு ஒரு குழந்தை இருக்கும் நு நினைக்கறேன் (குரு.. படம் எதுவும் நினைவுக்கு வரலை..ஒரு நல்ல பாட் இருக்குன்னு மட்டும் நினைவிருக்கு )

rajraj
28th September 2015, 12:33 AM
From Neerkkumizhi

aadi adangum vaazhkkaiyadaa......

http://www..youtube.com/watch?v=I_FjGGGSEko

madhu
28th September 2015, 04:59 AM
எனக்குப் பிடித்த ஆனால் சிக்காவில் லிஸ்டில் விட்டுப் போன நாகேஷ் பாட்டுகள்

அந்தப் பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ
சாப்பிடத்தான் தெரியும் எனக்கு சமைக்கத் தெரியலையே
அம்மனோ சாமியோ அத்தையோ மாமியோ
வாழும் வரை போராடு

vasudevan31355
28th September 2015, 08:50 AM
நாகேக்ஷின் தத்துவ சோகம். பூவும் போட்டும் படத்தில் மாண்டலின் வைத்து நொந்து நூடுல்ஸ் ஆகிப் பாடுவார். கொஞ்சம் ஓவராகத் தெரியும். பாடகர் திலகம் பாவத்துடன் பாடியிருப்பார்.

முதல் என்பது தொடக்கம்
முடிவென்பது அடக்கம்
விடை என்பது விளக்கம்
விதி என்பது என்ன


https://youtu.be/C6JvATe09bQ

vasudevan31355
28th September 2015, 08:55 AM
அதே பாணியில் இன்னொன்று. உலகம் இவ்வளவுதான் படத்தில் தத்துவ உதிர்ப்பு. வெறுப்பு உமிழ்வு சிரிப்பு.

காலம் போற போக்கைப் பார்த்தா
யாரு பேச்சைக் கேட்பது
கவலைப்பட்டு என்ன பண்ண
ஆனபடி ஆகுது

நடிகர் திலகம் போல வெட்ட வெளிகளில் கையில் டிரங்க் பெட்டி எடுத்து, வெளிறித் திரிந்து பாடுவார் நாகேஷ். கிடார் சாம்ராஜ்யம்.


https://youtu.be/oyfRNGTWX10

vasudevan31355
28th September 2015, 09:08 AM
'சித்தி'யில் சதனுடன் கூத்து. தத்துவத்தை ஜாலியாக உரைக்கும் டைப். சதன் நல்ல ஈடு. யோகா டைப் அக்ரோபெடிக் எல்லாம் உண்டு. இங்கே ஹார்மோனியம் முக்கியப் பங்கு.

இங்கே தெய்வம் பாதி மிருகம் பாதி மனிதன் ஆனதடா
அதிலே கள்ளம் பாதி உள்ளம் பாதி உருவம் ஆனதடா

ராகவன் அண்ணாச்சிக்கு அன்னாசிப் பழம் சாப்பிடுவது போல நாகேஷுக்குப் பாடுவது. நாகேஷ் ஆடும் சில ஸ்டப்களை பின்னால் வந்த நீதி படத்தில் நடிகர் திலகம் ஆடிப் பார்க்கலாம். அப்படியே இருக்கும். அருமையான பாடல்.

தந்திரத்தில் நரிகளடா
தன்னலத்தில் புளிகளடா
அந்தரத்தில் நிற்கையிலே
மந்திரத்தில் ஆசையடா

மனிதனின் பொத்தம் பொதுவான மாறாத, மாற்ற முடியாத இயல்புகளை புட்டுப் புட்டு வைக்கும் பாடல். எக்காலத்திற்கும் பொருத்தம்.


https://youtu.be/J03BRoBPdWI

vasudevan31355
28th September 2015, 09:19 AM
ஆட்ட நாயகி சகுந்தலாவுடன் ஆட்ட நாயகனின் டூயட். கை நிறைய காசு பை நிறைய நோட்டு இருந்தால் கை கூடும் காரியம்தானே!

கள்ளில் ஊறிய காவியம் இதுதான்
காதல் நாடகக் காட்சியும் இதுதான்

இரட்டை வேட நாகேஷ் படத்திற்கு இரட்டையர்கள் இசை. ஈஸ்வரியின் குரல் டி.எம்.எஸ்ஸின் குரலோடு ஒலிக்கிறது.


https://youtu.be/jH_cOcXNVcM

vasudevan31355
28th September 2015, 09:56 AM
'சாது மிரண்டால்' படத்தில் டாக்ஸி டிரைவரின் கருத்தாழம். Tragedy, comedy கலந்து கட்டிய நாகேஷின்,

What a tragedy
comedy
tragedy
comedy
tragedy
comedy

நாடகமே இந்த உலகம்
ஆடுவதோ பொம்மலாட்டம்

பொருத்தமான ராகவன் குரலில்


https://youtu.be/wkz4FN0-ag8

vasudevan31355
28th September 2015, 09:57 AM
இங்கே மாதவியுடன் நாகேஷ் ஜாலி.

வெள்ளைக்காரக் குட்டி
என் விருந்துக்கேத்த ரொட்டி
காதல் டியூட்டி பார்க்கும் பியூட்டி
பூனை கண்ணைச் சிமிட்டி

ராகவன், ஈஸ்வரி கும்மாளம்.


https://youtu.be/3QRxPBpztWI

vasudevan31355
28th September 2015, 10:07 AM
முடிவைத் தவிர வேறு எங்கும் அழாமல் நம் எல்லோரையும் அழவைத்த நாகேஷ். 'ஆடி அடங்கும் வாழ்க்கை'யை விடவும். வித்தியாச விஸ்வரூபம். ஜெயகாந்தனின் அழியாத ஓவியம். உள்ளம் உடைந்து எவரும் அழாமல் இருக்கவே முடியாது. இவன் யாருக்காக அழுதனோ ஆனால் நம்மை நெஞ்சடைத்து அழ வைத்துக் கொண்டே இருக்கிறான்.

உருவத்திலே இவன் மனிதன்
கொண்ட உள்ளத்திலே ஒரு பறவை
பருவத்திலே ஒரு குழந்தை
நெஞ்சில் பாசத்தில் உலகத்தின் தந்தை

தேஸட்டனின் ஆதி கால 'பொம்மை'க் குரல். நாகேஷின் நிழலுருவங்கள் நெஞ்சில் என்றும் நிழலாடும்.


https://youtu.be/Vpdfvitmyao

chinnakkannan
28th September 2015, 10:18 AM
hi good morning all..

ore nagesh collections aa irukku...தாங்க்ஸ் வாசு, மதுண்ணா..

இருந்தாலும்

உன்னைத்தொடுவது இனியது மறக்க முடியுமா என்ன

கண்ணே பூர்வ ஜன்மம்...

ஹப்புறம் திக்குவாயாக நீல வானத்தில் நகைச்சுவை..

ம்ம் அப்புறம் வர்றேன்..

vasudevan31355
28th September 2015, 10:21 AM
கிறுக்கு நாகேஷ் அழகு ஜெயந்தியிடம் திக்குவாய் கொண்டு திக்கி திக்கி தப்புத் தப்பாக பாடும் பாடல். வழக்கமான ராகவன் குரலில்.

என்ன இல்லை எனக்கு
எதுதான் உந்தன் கணக்கு
சின்ன வயசு சிரிக்கிற மனசு
டிப்டாப் கண்டிஷன் ஒடம்பு

நாகேஷின் புது புராணம்

பகல் கொள்ளைக்காரன் வால்மீகி
அவன் பாரத்க் கதையை எழுதலையா

பாவலனாம் கவி காளிதாசன் ஒரு பார்த்திபன் கனவை வரையலயா?

(நடுவில் திக்கும் போது 'மன்னிச்சுக்க ...ஸ்ட்ரக் ஆய்ப் போச்சு... ஆரம்பத்திலிருந்து வரேன்' என்று ரிப்பீட் வேற)

ஜெயந்தி 'எல்லாம் தலைகீழாய் சொல்றீயே' என்றதும்,

'அது நான் சிரசானனம் போட்டுகிட்டு படிச்சது'

என்று நாகேஷ் சமாளிப்பது ஆஹா! ஓஹோ! பேஷ்! பேஷ்!


https://youtu.be/bX6zzXQgCP0

vasudevan31355
28th September 2015, 10:24 AM
//ஹப்புறம் திக்குவாயாக நீல வானத்தில் நகைச்சுவை//

அதான் போட்டுகிட்டு இருக்கோம்ல. அவசரம்...எல்லாத்துலேயும் அவசரம்.:)

அது நீலவானம் இல்ல சின்னா!. அன்னை இல்லம்.

ஆமா! கை சரியாயிடுச்சா? வலி பரவாயில்லையா? ரெஸ்ட் எடுங்க சின்னா! நேத்து நைட் செம அரட்டை இல்லே:)....என்ஜாயிபிளா இருந்தது. தேங்க்ஸ்.

vasudevan31355
28th September 2015, 10:28 AM
Hot Discussion Topics

A brief study on the Cholas (Cholar) of the Medieval Period
Tamils of Tamil Nadu should unite as "Tamilians" - and not under their 'Caste Names'
Thala Ajith's 56th Film-Vedhalam-Veeram Siva-AMRathnam - Anirudh - Winning combo
Few Basics in preventing the death of Tamil Language & Culture in Tamil Nadu itself 2
A brief historical study of Thiruppathi Venkateswarer temple
Battle of the Brick !
ஓவியப் போட்டி
ஊதாரி
மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5
Brief historical study of Mathurai (Madurai) Meenaakshi Amman Temple
"Super Star" Rajinikanth in & as "கபாலி" - Ranjith**Santhosh Narayan**
Chicken Quesadilla - recipe
Tamil movie Reviews - Yatchan?
A brief study on the Pandiyas (Paandiyar) of the "early" Period of Tamil Nadu
A brief study on the Pandiyas (Paandiyar) of the "early" Period of Tamil Nadu
I am the song the best composers of India. Flac, lossless, Wav
A brief study on the Paandiya kings after the fall of Madurai to Muslim Invaders
Few Basics in preventing the death of Tamil Language & Culture in Tami Nadu itself
நட்புக்கு அப்பால்!
Evolution of Saivaism and it's development in Tamil Nadu
A Brief Study on the Actual Age of the Sanskrit Raamaayana of Sage/Poet Vaalmiki
A Brief Study on the Actual Age of the Sanskrit Raamaayana of Sage/Poet Vaalmiki
“Thirukkural” an ancient Tamil treatise on Code of Ethics
வனஜா என் தோழி!
A brief study on the Tamil Dalits (Untouchables) of Tamil Nadu
The Seaport Cities of Kotkai, Thondi & Kaayalpattinam of the Paandiyan Kingdom
Demise of Ex-President of India - a Tamilian of Tamil Nadu
A brief study on the Pandiyas (Paandiyar) of the post third Sangam Period
Re-name the Chennai Airport as "Rajaraja Cholan International Airport"
A brief study on the Tamil Chettiyaars (Vanikars) of Tamil Nadu
A brief study on the Tamil Thevars (Devars) of Tamil Nadu
A brief historical study of Singapore (A.D.1025-1275)
Where I Can Download Telugu & Hindi Music
A brief study on the Tamil Vanniyar of Tamil Nadu
A brief study on the Tamil Vanniyar of Tamil Nadu
விளங்கவில்லை விமலாவிற்கு!
A brief study on the Tamil Naadaar (Naadaalvaar) of Tamil Nadu
A brief study on the Tamil Gounders (Tamil Kaamundan) of Tamil Nadu
A brief study on the Tamil Gounders (Tamil Kaamundan) of Tamil Nadu
No Murder Tonight
A brief study on the 63 - Tamil Saiva Saints (Naayanmaars) of Tamil Nadu and Kerala
A brief study on the 63 - Tamil Saiva Saints (Naayanmaars) of Tamil Nadu and Kerala
Best of tamil cinema in 2015
My Choice – Raga based Songs
Tamil Nadu - Studies in it's History, Culture, and Traditions
Hotels in Kanyakumari
Introducing a food blogger
நன்றே செய் ! அதுவும் இன்றே செய் !
A Brief Study on the Significance of Thaali among the Tamils

chinnakkannan
28th September 2015, 11:20 AM
//ஆமா! கை சரியாயிடுச்சா? வலி பரவாயில்லையா? ரெஸ்ட் எடுங்க சின்னா! நேத்து நைட் செம அரட்டை இல்லே....என்ஜாயிபிளா இருந்தது. தேங்க்ஸ்.// konjam ippo thaevalai. Me too enjoyed the arattai. Thanks for the jeyanthi song. :) Will come after some time.

madhu
28th September 2015, 11:41 AM
சிக்கா...

சமீபத்தில் இந்தப் பாட்டை ரெஃபர் செஞ்சு எதையோ சொன்னீங்க இல்லையோ ?

மறுபடியும் ஹீரோயின் யாருன்னு கேட்டு வாசுஜியின் ரத்த அழுத்தத்தை அதிகமாக்காதீங்க.. அது கன்னட மஞ்சுளாவேதான்

https://www.youtube.com/watch?v=aOMObJ2NVYA

chinnakkannan
28th September 2015, 12:15 PM
//சமீபத்தில் இந்தப் பாட்டை ரெஃபர் செஞ்சு எதையோ சொன்னீங்க இல்லையோ ?

மறுபடியும் ஹீரோயின் யாருன்னு கேட்டு வாசுஜியின் ரத்த அழுத்தத்தை அதிகமாக்காதீங்க.. அது கன்னட மஞ்சுளாவேதான்// நன்றி மதுண்ணா.. எப்படி உங்களுக்கு மட்டும் கிடைக்குது..

ஹப்படியே உன் கண்களிலோ கனிகளும் கொடுங்க.. :)

vasudevan31355
28th September 2015, 12:41 PM
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்

(நெடுந்தொடர்)

39

'உள்ளங்கள் பலவிதம்...எண்ணங்கள் ஆயிரம்'

'திருமகள்'

http://www.inbaminge.com/t/t/Thirumagal/folder.jpg

இன்றைய பாலாவின் தொடரில் கோவிந்தராஜா பிலிம்ஸ் 'திருமகள்' (1971) படத்தில் மிக மிக அற்புதமான ஒரு அழகான பாடல். ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கத்தில் 'திரை இசைத் திலகம்' கே.வி.மகாதேவன் இசையில் மலர்ந்த மொ(மெ)ட்டு. கவிஞரின் கை வண்ணத்தில்.

https://i.ytimg.com/vi/De9ejXwLMKU/hqdefault.jpg

ஜெமினி, ஏ.வி.எம்.ராஜன், சிவக்குமார், பத்மினி, லஷ்மி, நாகேஷ், மேஜர், குமாரி பானுமதி, எஸ்.வரலஷ்மி, ஜெயகுமாரி நடித்த இத்திரைப்படம் தனக்கு நிச்சயமான காதலன் (அத்தான் உறவு முறைதான்) தற்செயலாக விபத்தில் இறந்துவிட, அவன் தயவில் படித்து வரும் இளைஞன் ஒருவனிடம் தன்வசப்பட்டு கற்பைப் பறி கொடுப்பதால் ஏற்படும் சிக்கல்களைப் படம் பிடித்தது.

ஜெமினி பத்மினி ஆதர்ஷ தம்பதிகள். ஜெமினிக்குத் தங்கை லஷ்மி. பத்மினிக்கு தம்பி ஏ.வி.எம்.ராஜன். வக்கீலுக்குப் படிக்கும் ராஜனுக்கு அக்கா பெண் லஷ்மி மீது காதல். லஷ்மிக்கும், அவ்வாறே அத்தானிடம் காதல். ராஜன் தன்னுடன் படிக்கும் ஏழையான சிவக்குமாரை தன்னுடன் தங்க வைத்து அவருக்கு சகல விதங்களிலும் உதவுகிறார். அவர் ஏழை என்ற தாழ்வு மனப்பான்மை வராமல் பார்த்துக் கொள்ளச் சொல்லி லஷ்மியிடமும் கூறுகிறார். இதனால் லஷ்மி சிவக்குமாரிடம் சகஜமாகப் பழகுகிறார். இதை ராஜன், பத்மினி வேறு மாதிரி புரிந்து கொள்கின்றனர். ராஜன் ஒருமுறை சிவாவிடம் 'நீ லஷ்மியைக் காதலிக்கிறாயா?' என்று கேட்டுவிட, துடிதுடித்துப் போகிறார் சிவா. 'என்னை எப்படி சந்தேகப்படப் போயிற்று?' என்று குமுறுகிறார். அவரது நல்ல உள்ளத்தைப் புரிந்து கொண்ட ராஜன் அவரிடம் மன்னிப்பும் கேட்கிறார். லஷ்மியின் தூய்மையான உள்ளத்தை அண்ணி பத்மினியும் புரிந்து கொள்கிறார்.

இப்போது ராஜனுக்கும், லஷ்மிக்கும் திருமணம் நடைபெறப் போகிறது. இதற்கிடையில் நீச்சல் குளத்தில் குளிக்கப் போகின்றனர் நண்பர்கள். அங்கு எதிர்பாராவிதமாக நீச்சலுக்காக டைவ் செய்யும் போது அடிபட்டு இறந்து விடுகிறார் ராஜன்.

லஷ்மி மற்றும் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகின்றனர். ஜெமினி சிவாவை ஜூனியர் வக்கீலாக அங்கேயே தங்க வைத்து விடுகிறார். விதவை போன்று இளம் லஷ்மியும், இளமையான சிவக்குமாரும் ஒரே வீட்டில் இருப்பதை ஏற்க மறுக்கிறார் பத்மினி. அவர் பயந்தது போலவே ஒரு குளிர் இரவில் பஞ்சும் நெருப்பும் தங்களையறிமலேயே பற்றிக் கொள்கின்றன. குளுமையில் இளமை வலிமையாக வளமை வேலையைக் காட்டிவிட லஷ்மி கர்ப்பமாகிறார்.

அப்புறம் லஷ்மி, சிவக்குமாரின் குற்ற உணர்ச்சி. சிவாவின் அம்மா வரலஷ்மி கல்யாணத்திற்கு எதிர்ப்பு, கர்ப்ப விஷயம் வெளியே தெரிவதற்கு முன் லஷ்மிக்கு பத்மினி சிவக்குமாருடன் கல்யாண ஏற்பாடு, பல போராட்டங்களுக்கிடையே இறுதியில் திருமணம், செய்த தவறுக்கு லஷ்மி பிரசவ நேரத்தில் அனைவருக்கும் தான் செய்தது துரோகம் என்று கருதி ஒரு லெட்டர், உயிருக்குப் போராட்டம், இறுதியில் உயிர் பிழைப்பு முடிவாக சுபம் என்று படம் முடியும்.

நிச்சயமான ஒரு பெண்ணுடன் வேற்று இளைஞன் ஒருவன் பழகினால் என்னென்ன தீங்குகள் விளையும் என்பதை பகிரங்கமாக எடுத்துக் காட்டும் கதை. வசனம் ஆரூர்தாஸ்

ஓரியண்டல் பிக்சர்ஸ் அளித்து, 'கோவிந்தராஜா பிலிம்ஸ்' தயாரித்த இப்படத்தில் 'திரை இசைத் திலக'த்தின் பாடல்கள் மறக்க முடியாதவை.

'புன்னகையில் பூப்பூக்கும் திருமகளே'

'காலாலே நிலம் அளந்து' (லஷ்மி, ராஜன் அருமையான் டூயட்)

தொடரின் பாடலான,

'உள்ளங்கள் பலவிதம்...எண்ணங்கள் ஆயிரம்'

என்று பவர்ஃபுல்லான பாடல்கள்.

லஷ்மி, அவர் அத்தான் ஏ.வி.எம்.ராஜன் இருவரும் ராஜனின் தயவில் படிக்கும் இளைஞனான சிவக்குமாருடன் பிக்னிக் போவது போன்ற காட்சி. (படத்தின் ஒளிப்பதிவாளர் நம் 'ஜம்பு' கர்ணன் தான்)

http://i61.tinypic.com/241uxb4.jpg

அப்போது மூவரும் பாடும் பாடல் காட்சி.

உள்ளங்களையும், உள்ளங்களால் ஏற்படும் உறவுகளையும் அழகாகச் சித்தரிக்கும் பாடல்.

படத்தில் ராஜன் இறந்துவிட, சிவக்குமாரிடம் லஷ்மி தன்னை இழப்பது போன்ற காட்சி உண்டு. இதைக் கவிஞர் படத்தின் முன்பாதியில் வரும் இந்தப் பாட்டிலேயே நாசூக்காக எடுத்துரைத்து விடுவார்.

'கிழக்கே ஓடும் நதி
தெற்கேயும் பாயலாம்
கிளி உண்ணக் கனிந்த கனி
அணிலுக்கும் போகலாம்'

என்ற வரிகளின் மூலமாக.

அருமையான பேஸ் கிடார் இசையுடன் தொடங்கும் இப்பாடலை சுசீலா தன் இனிய குயில் குரலால் தொடங்க, 'பாடகர் திலகம்' அம்சமாகப் பின்னாலேயே வர,

இவர்கள் இவருக்குப் பின்னால் வந்து நம் 'பச்சிளம் பாலகன்' பாலா சிவக்குமாருக்கு மழலையை விட குழைவான குரல் தந்து அசத்த,

நமக்குக் கிடைத்ததோ என்றும் திகட்டாத விருந்து.

பாடும் மூவரின் பங்களிப்பும் மிக அழகாக இருக்கும். சமமாக இருக்கும். அவரவர்களும் அவரவர் பாணியில் அசத்துவார்கள்.

http://i61.tinypic.com/2j63iuo.jpghttp://i59.tinypic.com/el5ke0.jpghttp://i58.tinypic.com/2mzecsn.jpg

பாடலில் லஷ்மி வெகு இயல்பு. அழகு. ராஜன் அநியாத்துக்கு நடிகர் திலகத்தைக் காப்பியடிப்பார். பேன்ட் பாக்கெட்டுக்குள் விரல் கொக்கி, அணைக்கட்டு மேல் நடை, உடை, டான்ஸ் மூவ்ஸ் என்று தன்னை நடிகர் திலகமாகவே நினைத்துக் கொண்டு அநியாயத்துக்கு எரிச்சல் கிளப்புவார். சிவக்குமார் அமெச்சூர். பாடல் முழுதும் பார்க், அணைக்கட்டு என்று அவுட்டோரில் படம் பிடிக்கப் பட்டிருப்பது ஆறுதல்.

பாடல்கள் பலவிதம். இந்தப் பாடல் ஒரு தனிரகம்.

https://i.ytimg.com/vi/jwXcIeRFWDs/hqdefault.jpg

உள்ளங்கள் பலவிதம்
எண்ணங்கள் ஆயிரம்
உறவுகள் வளர்வதற்கு
மனம்தானே காரணம்

உள்ளங்கள் பலவிதம்
எண்ணங்கள் ஆயிரம்
உறவுகள் வளர்வதற்கு
மனம்தானே காரணம்
உள்ளங்கள் பலவிதம்

மலையில் பிறந்த நதி
கடலுக்குப் போவதேன்
மண்ணில் பிறந்த மலர்
கூந்தலில் வாழ்வதேன்

மலையில் பிறந்த நதி
கடலுக்குப் போவதேன்
மண்ணில் பிறந்த மலர்
கூந்தலில் வாழ்வதேன்

எங்கோ பிறந்தவர்கள்
இங்கே இணைவதேன்

என்னவோ சொந்தமெல்லாம்
கண்ணிலே தெரிவதேன்

எங்கோ பிறந்தவர்கள்
இங்கே இணைவதேன்

என்னவோ சொந்தமெல்லாம்
கண்ணிலே தெரிவதேன்

உள்ளங்கள் பலவிதம்
எண்ணங்கள் ஆயிரம்

உறவுகள் வளர்வதற்கு
மனம்தானே காரணம்
உள்ளங்கள் பலவிதம்

கிழக்கில் ஓடும் நதி
தெற்கேயும் பாயலாம்
கிளி உண்ணக் கனிந்த கனி
அணிலுக்கும் போகலாம்

நதிவழி போவது போல்
மனவழி போகலாம்

நடக்கும் வழிகளெல்லாம்
நல்வழி ஆகலாம்

நதிவழி போவது போல்
மனவழி போகலாம்

நடக்கும் வழிகளெல்லாம்
நல்வழி ஆகலாம்

உள்ளங்கள் பலவிதம்
எண்ணங்கள் ஆயிரம்
உறவுகள் வளர்வதற்கு
மனம்தானே காரணம்

மறைத்தால் மறைவதில்லை
மங்கையின் கனவுகளே

பிரித்தால் பிரிவதில்லை
வளர்ந்திடும் உறவுகளே

மறைத்தால் மறைவதில்லை
மங்கையின் கனவுகளே

பிரித்தால் பிரிவதில்லை
வளர்ந்திடும் உறவுகளே

அடித்தால் அழுவதில்லை
ஆனந்த நினைவுகளே

அன்பில் இணைந்தவர்கள்
வார்த்தையில் ஊமைகளே

அடித்தால் அழுவதில்லை
ஆனந்த நினைவுகளே

அன்பில் இணைந்தவர்கள்
வார்த்தையில் ஊமைகளே

உள்ளங்கள் பலவிதம்

எண்ணங்கள் ஆயிரம்

உறவுகள் வளர்வதற்கு
மனம்தானே காரணம்

உள்ளங்கள் பலவிதம்

அஹ்ஹோஹோஹோஹோஹஹோ
அஹ்ஹோஹோஹோஹோஹஹோ


https://youtu.be/jwXcIeRFWDs

Russellxor
28th September 2015, 01:20 PM
வெற்றிக்கு ஒருவன்

தோரணம் ஆயிரம் பாடல்

பாடல் ஆரம்பித்து 37 விநாடிகள் வரை சூறாவளியைப் போன்ற இசையும் இயற்கை மிரட்டலை சார்ந்த
ஒளிப்பதிவும் படம் பார்க்கும் எந்த ஒரு நபரையும் இருக்கையில் சற்று அழுத்தியும் நெஞ்சை நிமிர்த்தியும் பார்க்க வைக்கும்.

ஒரே பிரேமில் பல முகங்ளைக் காட்டும் (MIRROR SHOT)ஆரம்ப ஷாட், அது டைரக்ஷன் SPமுத்துராமன் என்று
அடையாளம் காட்டவோ?

நீள செவ்வகத்தை குறுக்காக ஒரு கோடு கிழித்து (இடது கீழ் புறம் ,வலது மேல்புறம்)மேல் பகுதியில் ஆகாயமாகவும் கீழ் பகுதி புல்தரையாகவும் பார்க்கும்படி காமிரா கோணத்தில் அந்த பாடலின் ஆரம்பம் ஒளிப்பதிவு செய்யப்பட்டு பாடல் முழுவதும் வெவ்வேறு கோணங்களில் மிரட்டலாக படம் காட்சியாக்கப்பட்டிருக்கும்.



லாலலா லாலலா லாலலா லாலலா
லால லால லாலலா லால லால லாலலா

தோரணம் ஆடிடும் மேடையில் நாயகன் நாயகி
MIRROR SHOT
ஸ்ரீப்ரியா பாடி ஆட.,நாயகன் என்னும் வார்த்தை வரும்போது சரியாக அந்த பிரேமுக்குள் நுழைவார்.
தோரணம் ஆடிடும் மேடையில்
நாயகன் நாயகி
௯ஸ்ரீப்ரியா ஆடிக்கொண்டே வர
நடிகர்திலகம் மெல்ல நடந்து வர
பின் நெடிய அந்த மரம்,விரிந்து பரந்த ஆகாயம் எல்லாம் அடக்கிய ஒரே பிரேம்.
SUPER SNAP
தரையை ஒட்டியோ அல்லது தரையிலிருந்து அதிக உயரம் இல்லாமல் காமிராவை வைத்து படம் பிடித்திருக்கலாம்.GLARE இல்லாமல் பளிச்சென இருப்பதுதான் சிறப்பு.

மேளமும் ராகமும் நாலுபேர் ராஜ்ஜியம் சேருதே வாழ்விலே ஆனந்தம்
(தோரணம்

பக்கம் இருந்து காட்சியை படம் பிடித்த காமிரா அப்படியேபின்னால் சென்று லாங்சாட்டுக்கு மாறி மறுபடியும் பக்கம் வந்து படம் பிடித்து பின் லாங்ஷாட்டுக்கு மாறி மறுபடியும் பக்கம் வந்து படம் பிடித்திருப்பார் ஒளிப்பதிவாளர் பாபு. இந்த பாடலை வெவ்வேறு கோணங்களில் படம் பிடித்து பாடலை சிறப்பாக்க வேண்டும் என்பதில் அவரின் சிரத்தைதெரியும்.


ஜோடி இது போலிருந்தால் ஆகா என பாராட்டுவார்

ஓங்கி வளர்ந்த மரங்களை கொண்ட அந்த வனப்பகுதியை காமிரா காட்டுவது அழகு.
வாழ்க என பண்பாடவா!வாழ்வோம் சுகம் நூறாகவே
நாம் இன்று இங்கு பண்பாடவே
வீணையின் நாதமும் பூவிலே வாசமும்போலவே சேர்ந்து நாம் வாழுவோம் வாழுவோம்
(தோரணம்
இருவரும் நடந்துவர காமிராவும் நகர்ந்து கொண்டே வரும் அந்த
கிரேன் ஷாட் சூப்பர்.மலைப் பிரதேச அழகின் செழுமை கண்களுக்கு குளிர்ச்சி.

ஆராரோ ஆராரிஆரோ ஆராரோ ஆராரிஆரோஆராரிராரி ஆரி ஆரி ஆரி ஆராரி ராரி ஆராரிரோ ஆராரி ஆரோ ஆராரோ
தாலாட்ட வைக்கும் ஹம்மிங்.
தாளம் போடவும் வைக்கும்.



பேரன் கொஞ்ச வேண்டும் என்று அப்பா எந்தன் காதில் சொன்னார்
நடிகர்திலகத்தின் அழகு மிகுந்த பாவனையை காட்டும் குளோசப் ஷாட்.

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Qs7qA4l58BQ_X_0520_zpsn4japvjo.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Qs7qA4l58BQ_X_0520_zpsn4japvjo.jpg.html)


பேத்தி கொஞ்ச வேண்டும் என்று அத்தை எந்தன் காதில் சொன்னார்
போகட்டுமே ரெண்டும் பெத்துக்கொடு
ரெண்டுதான்!போதுமே!அளவுடன் வாழ்வதே நாளுமே நல்லதே
வாழ்விலே வாழ்விலே
(தோரணம்

Russellxor
28th September 2015, 01:28 PM
சி.க சார்இந்தப்பாடலா
இதுவென்றால் பிரபுவுக்கு இதில் இரண்டு குழந்தைகள்

Ilavenirkala Panjami - Manam Virumbuthe Unnai Tam…: http://youtu.be/YcqbtPzB8gw

chinnakkannan
28th September 2015, 01:44 PM
செந்தில் வேல்.. படம் இது தான்.. ம வி உ.. (ஒரு குழந்தை என தப்பாகச் சொல்லிவிட்டேன்) பாட் இதானா எனக் கேட் சொல்கிறேன் ஈவ்னிங்க்.. தாங்க்யூ..

தோரணம் ஆடிடும் பாட்க்கும் தாங்க்ஸ்.. :)

chinnakkannan
28th September 2015, 01:47 PM
படத்தில் ராஜன் இறந்துவிட, சிவக்குமாரிடம் லஷ்மி தன்னை இழப்பது போன்ற காட்சி உண்டு. இதைக் கவிஞர் படத்தின் முன்பாதியில் வரும் இந்தப் பாட்டிலேயே நாசூக்காக எடுத்துரைத்து விடுவார்.

'கிழக்கே ஓடும் நதி
தெற்கேயும் பாயலாம்
கிளி உண்ணக் கனிந்த கனி
அணிலுக்கும் போகலாம்'

என்ற வரிகளின் மூலமாக.// வாஸ்ஸூ.. இது ஆனாலும் கொஞ்சம் பயங்கரக் கற்பனையா இருக்கே.. ஏவிஎம் ராஜனை க் கிளியாகவும் சிவகுமாரை அணிலாகவும் கற்பனை பண்ணாலே ஸ்ஸிலிர்க்குது :)

//குளுமையில் இளமை வலிமையாக வளமை வேலையைக் காட்டிவிட // ம்ம்..வாஸ் கெட் போய்ட்டார்.. :)
பாட் நல்ல பாட். நல்ல மெலடி.. எனக்கும் பிடிக்கும்.. தாங்க்ஸ்ங்க்ணா..:)

vasudevan31355
28th September 2015, 01:48 PM
செந்தில்வேல்,

வீடியோ மறந்து விட்டீர்களா?


https://youtu.be/Qs7qA4l58BQ

vasudevan31355
28th September 2015, 01:51 PM
படத்தில் ராஜன் இறந்துவிட, சிவக்குமாரிடம் லஷ்மி தன்னை இழப்பது போன்ற காட்சி உண்டு. இதைக் கவிஞர் படத்தின் முன்பாதியில் வரும் இந்தப் பாட்டிலேயே நாசூக்காக எடுத்துரைத்து விடுவார்.

'கிழக்கே ஓடும் நதி
தெற்கேயும் பாயலாம்
கிளி உண்ணக் கனிந்த கனி
அணிலுக்கும் போகலாம்'

என்ற வரிகளின் மூலமாக.// வாஸ்ஸூ.. இது ஆனாலும் கொஞ்சம் பயங்கரக் கற்பனையா இருக்கே.. ஏவிஎம் ராஜனை க் கிளியாகவும் சிவகுமாரை அணிலாகவும் கற்பனை பண்ணாலே ஸ்ஸிலிர்க்குது :)

பாட் நல்ல பாட். நல்ல மெலடி.. எனக்கும் பிடிக்கும்.. தாங்க்ஸ்ங்க்ணா..:)

சின்னா!

சிவக்குமார் இல்லை என்று சொன்னாலும் முன்னமேயே லஷ்மி மீது அவரையுமறியாமல் அவருக்கு ஒரு கண் என்பதை இந்த வரிகள் சொல்லாமல் சொல்லும். சிவக்குமார் இல்லை நரிக்குமார்.:) இந்த மாதிரி பூனைகளை நம்பவே கூடாது சாமி. :)

Russellxor
28th September 2015, 01:57 PM
[QUOTE=vasudevan31355;1254902]செந்தில்வேல்,

வீடியோ மறந்து விட்டீர்களா?
வாசு சார் நன்றி!
கருடா சௌக்கியமா? மீள்பதிவு..

Russellxor
28th September 2015, 02:29 PM
சொல்ல மறந்த "ஆடு"
இது புரியாத வெள்ளாடு




ISAI DEIVAM TMS SONGS ONLY SONG PURIYAATHA VELLAA…: http://youtu.be/9TCbJhMx7ak

vasudevan31355
28th September 2015, 04:24 PM
[QUOTE=vasudevan31355;1254902]செந்தில்வேல்,

வீடியோ மறந்து விட்டீர்களா?
வாசு சார் நன்றி!
கருடா சௌக்கியமா? மீள்பதிவு..

நடிகர் திலகம் திரியில் போட்டிருக்கிறேன். பாருங்கள் செந்தில்.

chinnakkannan
28th September 2015, 06:15 PM
என் வண்ணக் கனவு பலிக்குமா?!

vasudevan31355
28th September 2015, 06:32 PM
என் வண்ணக் கனவு பலிக்குமா?!




கலர் கண்ணா! கலக்கல் கண்ணா! வண்ணக் கண்ணா! நீல நிறக் கண்ணா! கை சரியில்லாமல் இதெல்லாம் தேவையா கண்ணா?:) எண்ணம் போல வண்ணம் தாங்கி கண்ணன் வந்தான். கருமை நிறக் கண்ணன் போனான்.

eehaiupehazij
28th September 2015, 08:06 PM
Glycerin songs !! கண்ணீர் கான மதுரங்கள்!


சிரித்தாலும் கண்ணீர் வரும் ...அழுதாலும் கண்ணீர் வரும்......
சிரிக்காமலும் அழுகாமலும் கண்ணீர் வருமா... ? வருமே...
வெங்காயம் உரித்தாலும் ! பதுக்கி வைத்த வெங்காயம் அழுகும் போதும் ...வெங்காயத்தின் விலை பட்டம்போல ஏறிப் பறக்கும் போதும்....!

GG starrer பெண் என்றால் பெண் திரைப்படத்தில் ..

https://www.youtube.com/watch?v=T27GLHlJKe0

rajeshkrv
28th September 2015, 08:55 PM
ராஜேஷ்ஜி!

ஸ்வீட் குரல் சுசீலாம்மாவின் புதுத் தொடருக்கு வாழ்த்துக்கள். பெண்ணின் பெருமை பேசிய பாடல் மூலம் துவங்கியிருக்கிறீர்கள். பாடலின் ஆரம்பக் காட்சியைக் கண்டு அரண்டே ஏன் மிரண்டே போய் விட்டேன்.:) இப்படியா எடுத்தவுடன் பயமுறுத்துவது? சி.க கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார் என்றால் நீங்களுமா?:) சும்மா... ஜாலியாய் சொன்னேன். ம்ம்...ஜமாயுங்கள் தல.


நீங்கள் மட்டுமல்லா நானும் தான் மிரண்டே போனேன் .. போக போக பரவாயில்லை ...

வாழ்த்துக்களுக்கு நன்றி.. பல மிரட்டும் பதிவுகளூடே என் பதிவுகளை இடுகிறேன்

rajeshkrv
28th September 2015, 09:10 PM
இசையரசியின் கீதங்கள் -2

நமது எதிர் நீச்சல் தெலுங்கில் திரு சலம் அவர்களே தயாரித்து நடித்த சம்பராலா ராம்பாபு.
சாரதா ஜெயந்தி வேடமேற்றார்.
கீதாஞ்சலிக்கு செளகார் வேடம்

வி.குமார் இசை தெலுங்கிலும்.

பொருகிண்டி மீனாட்சம்மன - அடுத்தாத்து அம்புஜத்த பாத்தேளா

தமிழில் இல்லாத ஒருவித சூழல் தெலுங்கில் .. குழந்தை அழுவதை நிறுத்த சலம் பாடுவதாக அமைந்த மாமா சந்தமாமா
இது முதலில் ஒரு முறை தான் பதிவு செய்யப்பட்டது. பாலாவின் குரலில்
பாடலை கேட்ட இசையரசி டியூன் மிக அருமை .. நானும் பாடுகிறேனே என்று வாய் விட்டு கேட்டே விட்டாராம் குமாரிடம்
அப்படி அமைந்தது தான் இந்த பாடல்
மாமா சந்தமாமா .. கேட்டு மகிழுங்கள்

https://www.youtube.com/watch?v=iWdxISsNXHA

chinnakkannan
28th September 2015, 09:15 PM
//நீங்கள் மட்டுமல்லா நானும் தான் மிரண்டே போனேன் .. // (சாலமன் பாப்பையா குரலில்) ஏம்ப்பா.. குளிச்சா தப்பாய்யா..சங்ககாலப் புலவர் சின் கண்ணர் என்ன சொல்லியிருககார்னு தெரியுமாய்யா..

தென்றலில் குளித்த பூக்கள்
...தீஞ்சுவை கொண்டு ஆங்கே
வண்ணமாய் பொலியும் மேலும்
...வாசமும் மனதை அள்ளும்

பண்ணென இடியைக் கொண்டு
..பாங்குடன் விளக்கிற் காக
மின்னலை மழையும் கூட்டி
..மேதினி குளிக்க வைக்கும்

வழமையாய் வண்ணக் கண்ணன்
...வாகுடன் குழலில் நன்றாய்
சலசல அருவி போல
...தக்கன இசைக்க அங்கே
பழமையும் மறந்து போக
..பக்குவம் வந்து சேர
கலகலப் பான கானம்
..குளித்தது காதில் அன்றோ

ம்ம் நடத்துங்க..:)..

rajeshkrv
28th September 2015, 09:16 PM
//நீங்கள் மட்டுமல்லா நானும் தான் மிரண்டே போனேன் .. // (சாலமன் பாப்பையா குரலில்) ஏம்ப்பா.. குளிச்சா தப்பாய்யா..சங்ககாலப் புலவர் சின் கண்ணர் என்ன சொல்லியிருககார்னு தெரியுமாய்யா..

தென்றலில் குளித்த பூக்கள்
...தீஞ்சுவை கொண்டு ஆங்கே
வண்ணமாய் பொலியும் மேலும்
...வாசமும் மனதை அள்ளும்

பண்ணென இடியைக் கொண்டு
..பாங்குடன் விளக்கிற் காக
மின்னலை மழையும் கூட்டி
..மேதினி குளிக்க வைக்கும்

வழமையாய் வண்ணக் கண்ணன்
...வாகுடன் குழலில் நன்றாய்
சலசல அருவி போல
...தக்கன இசைக்க அங்கே
பழமையும் மறந்து போக
..பக்குவம் வந்து சேர
கலகலப் பான கானம்
..குளித்தது காதில் அன்றோ

ம்ம் நடத்துங்க..:)..

குளிச்சா தப்புன்னு யார் சொன்னது. ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

chinnakkannan
28th September 2015, 09:21 PM
மாமா சந்தமாமா பாட்கு தாங்க்ஸ் ராஜேஷ்.. நல்ல சோகப் பாடல்..குரல் காதுகளில் ரீங்கரிக்கிறது..ஆனாக்க ஜெயந்த் ஜெயந்த் தான்..இல்லியோ ( நான் ரோலைச் சொன்னேன்..)

rajeshkrv
28th September 2015, 09:25 PM
மாமா சந்தமாமா பாட்கு தாங்க்ஸ் ராஜேஷ்.. நல்ல சோகப் பாடல்..குரல் காதுகளில் ரீங்கரிக்கிறது..ஆனாக்க ஜெயந்த் ஜெயந்த் தான்..இல்லியோ ( நான் ரோலைச் சொன்னேன்..)

ஜெயந்தி சாரதா எல்லாமே நல்ல நடிகர்கள் தான் சி.க
ஜெயந்தி ஒரு ரகம் சாரதா ஒரு ரகம்
எனக்கு சாரதாவின் நடிப்பு ( நேச்சுரல் ரொம்ப பிடிக்கும்)

eehaiupehazij
28th September 2015, 10:23 PM
நடிகர்திலகத்தின் பிறந்தநாள் நினைவலைகள்

பார்ட் 3 நடிகர்திலகத்தின் கம்பீர உச்சரிப்பால் பெருமை பெற்ற ஆங்கில வார்த்தைகள் !!

NT's songs with English interludes!!

Never ...I don't care....No peace of Mind....To be or Not to be ..You too Brutus ....Twinkle Twinkle Little Star .....I am a little tea pot ....Get Out!!

முறையான பள்ளிவழி ஆங்கிலக் கல்வி கற்றவறல்ல என்றாலும் தனது உச்சரிப்புத் தனித் தன்மையாலும் அபார ஞாபகசக்தி திறனாலும் பகுத்தறியும் தன்மையாலும் ஆங்கிலத்தையும் ஆர்வத்துடன் கற்றுத் தேர்ந்தவர் நடிகர் திலகம் !

https://www.youtube.com/watch?v=aGyhXnU05nk


கௌரவம் திரைப்படத்தில் ஒரு MGM சிங்கம் போல அவர் கர்ஜிக்கும் NEVER என்னும் வார்த்தையும், சாந்தி திரைப்படத்தில் தனது தர்ம சங்கடமான சூழலில் அந்தக் கால ராமராஜனான எஸ் எஸ் ஆர் திரும்பி வந்து தன்னுடன் வாக்குவாதம் முற்றும் பொது உறுமும் I don't care வார்த்தைகளின் ஏற்ற இறக்க Modulation ...ஞான ஒளி திரைப்படத்தில் போலீஸ் நண்பனால் இம்சிக்கப் படும் போது மனம் வெறுத்து பாடும் No peace of Mind..... உதட்டசைவு...பிரஸ்டிஜ் பத்மநாபனின் மணிப் பிரவாள ஆங்கில வசன நடை ...புதிய பறவையின் Pleasure is mine சௌகாரிடம் வெளிப்படுத்தும் மிடுக்கு......தங்கப் பதக்கத்தின் Twinkle Twinkle Little Star........என்னைப் போல ஒருவனில் I am a Little Tea Pot....ராஜபார்ட் ரங்கதுரையின் To be or Not to be.....சொர்க்கம் திரைப் படத்தில் இறுதிக் கட்ட ஜூலியஸ் சீசரின் You too Brutus.....

இதற்கெல்லாம் சிகரம் பாசமலரில் பல்லைக் கடித்துக் கொண்டு ஆத்திரத்தையும் கோபத்தையும் பென்சில் சீவுவதில் வெளிப்படுத்தி காதல் மன்னரை Get Out என்று விரல் சுட்டி விழியால் வெளியே வழிகாட்டும் காட்சியே !
(காதல் மன்னரின் Each for All and All for Each முறையான மேற்கத்திய பாணி ஆங்கில உச்சரிப்பு அவரது பள்ளிவழி ஆங்கில போதனையாலும் பின்னாளில் அவரது கல்லூரி விரிவுரையாளர் பணி மூலமும் இயற்கையாக அமைந்ததே !)


https://www.youtube.com/watch?v=wfEPBX1mdVU

என்னதான் மேஜர் சுந்தரராஜனும் வி எஸ் ராகவனும் ஆங்கிலத்திலும் தமிழிலும் மாறி மாறி பீட்டரடித்தாலும் நடிகர்திலகத்தின் தனித் தன்மையான ஆங்கில உச்சரிப்பு பாராட்டுதலுக்குரியதே!!

மறக்க முடியாத நினைவலைகள் தலைவா!! RIP (Rest in Peace but Return If Possible)

செந்தில்

Russellxor
28th September 2015, 10:35 PM
படம்:காவலுக்கு கெட்டிக்காரன்
இசை :இளையராஜா
நடிப்பு:பிரபு,நிரோசா
பாடியது:மனோ.சித்ரா


ஸஸஸஸஸ நிஸ*
ஸஸஸஸஸ நிஸ*
ரிரிரிரிரி ஸ ரி*
ரிரிரிரிரி ஸ ரி*
கக ரி ரீஸஸ*
கக ரி ரீஸஸ*
ஸஸஸஸஸ நிஸ*
ரிரிரிரிரி ஸ ரி*
ஸ ரி க க ரி ரீ ஸஸ சா*
ஹும்ம் ஹும்ம் ஹும்ம் ஹும்ம்*

சோலை இளைங்குயில் யாரை எண்ணி எண்ணி*
ராகங்கள் பாடுதோ.... ஆஹா....... ராகங்கள் பாடுதோ*
வானவில்லில் ஒரு மாலை கட்டி வந்து*
யாரென்று தேடுதோ.... ஆஹா.....யாரென்று தேடுதோ*
ஏதேதோ சங்கீதம் எண்ண எண்ண சந்தோஷம்*
நான் பாடவோ உனைத்தான் தீண்டவோ*

சோலை இளைங்குயில் யாரை எண்ணி எண்ணி*
ராகங்கள் பாடுதோ.... ஆஹா....... ராகங்கள் பாடுதோ*

காதலில் வானத்து சந்திரனோ*
வாலிப தேசத்துச் சூரியனோ*
காதலில் வானத்து சந்திரனோ*
வாலிப தேசத்துச் சூரியனோ*
தோளில் தாவிடும் தாரகையே*
வானத்தில் ஏறிடும் தாமாரையே*
இசையே மீட்டிடு எனையே*
கனலே மூட்டிடு தினமே*
பூமகளே உனைத் தேடுகிறேன்*
பூவில் வண்டென கூடிடத்தானே*

சோலை இளைங்குயில் யாரை எண்ணி எண்ணி*
ராகங்கள் பாடுதோ.... ஆஹா....... ராகங்கள் பாடுதோ*
வானவில்லில் ஒரு மாலை கட்டி வந்து*
யாரென்று தேடுதோ.... ஆஹா.....யாரென்று தேடுதோ*

பாலோடு தேனூரும் பாத்திரம்*
நாள்தோறும் நான் அள்ள மாத்திரம்*
பாலோடு தேனூரும் பாத்திரம்*
நாள்தோறும் நான் அள்ள மாத்திரம்*
நான் என்றும் நீ என்றும் வேறில்லையே*
வாலிபம் போகுது வா முல்லையே*
நான் என்றும் நீ என்றும் வேறில்லையே*
வாலிபம் போகுது வா முல்லையே*
உயிரே காதலின் சுடரே*
கிளியே பாடிடும் கவியே*
ஆயிரம் பூமழைத் தூவிடுதே*
வானமும் பூமியும் வாழ்த்துக்கள் சொல்ல*

சோலை இளைங்குயில் யாரை எண்ணி எண்ணி*
ராகங்கள் பாடுதோ.... ஆஹா....... ராகங்கள் பாடுதோ*
வானவில்லில் ஒரு மாலை கட்டி வந்து*
யாரென்று தேடுதோ.... ஆஹா.....யாரென்று தேடுதோ*
ஏதேதோ சங்கீதம் எண்ண எண்ண சந்தோஷம்*
நான் பாடவோ உனைத்தான் தீண்டவோ*
சோலை இளைங்குயில் யாரை எண்ணி எண்ணி*
ராகங்கள் பாடுதோ.... ஆஹா....... ராகங்கள் பாடுதோ*
சோலை இளைங்குயில் யாரை எண்ணி எண்ணி*
ராகங்கள் பாடுதோ.... ஆஹா....... ராகங்கள் பாடுதோ

rajraj
29th September 2015, 01:59 AM
From iru sagotharigaL(1957)

summaa saappida vaanga ammaa kooppiduraanga.......

http://www.youtube.com/watch?v=SHwXeDWLXoU

madhu
29th September 2015, 03:53 AM
ராஜேஷ்... மாமா சந்தமாமா மிக இனிமை... தமிழில் இந்த சிச்சுவேஷனுக்கு பாட்டு இல்லை என்று நினைக்கிறேன். ஹிந்தியில் "சந்தா ஓ சந்தா" பிரபலாமானதல்லாவோ !

வாசுஜி... சிக்கா, ராஜேஷ் வரிசையில் சி.செ.ஜியும் சேர்ந்து கொண்டு சிரிக்கும் ஜெமினியுடன் அழும் வி.குவை காட்டி மிரட்டி விட்டார் பாருங்க ...

வாத்தியாரையா... உங்க பாட்டைக் கேட்டு ஜெ.அரசு அதை அம்மா உணவக தீம் சாங் என்று அறிவிக்கப் போவதாக வதந்தி.

rajeshkrv
29th September 2015, 04:15 AM
மதுண்ணா வாங்க
உடல் நலம் எப்படி

முகனூல் படம் கூட குட்டி கண்ணனாக மாறிவிட்டதே ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

rajraj
29th September 2015, 04:21 AM
வாத்தியாரையா... உங்க பாட்டைக் கேட்டு ஜெ.அரசு அதை அம்மா உணவக தீம் சாங் என்று அறிவிக்கப் போவதாக வதந்தி.

Good idea ! :) Then 'summaa' should mean 'free' ! :lol:

madhu
29th September 2015, 05:53 AM
மதுண்ணா வாங்க
உடல் நலம் எப்படி

முகனூல் படம் கூட குட்டி கண்ணனாக மாறிவிட்டதே ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

ஹாஹா... ராஜேஷ்... அது நீண்ட காலமாகவே இதே படம்தான். ஆனால் வீட்டுக்கு வந்த குட்டிப் பையன் ஒருவன் அதை ஏதோ இந்திய கொடி கலருக்கு மாற்றி விட்டான். அது கண்ணனின் நீல நிறத்தை மறைத்ததால் நான் மறுபடி பழைய படமாக மாற்றினேன்.

அட... இருப்பதைக் கூட மறுபடி காட்டினால் சட்டுனு எல்லோருக்கும் தெரிகிறதே...

அதுக்காகத்தான் பழைய நல்ல நல்ல அரிய பாடல்களை எல்லாம் மறுபடி மெருகேற்றி இங்கே போடணும் என்கிறது..

vasudevan31355
29th September 2015, 10:15 AM
//வாசுஜி... சிக்கா, ராஜேஷ் வரிசையில் சி.செ.ஜியும் சேர்ந்து கொண்டு சிரிக்கும் ஜெமினியுடன் அழும் வி.குவை காட்டி மிரட்டி விட்டார் பாருங்க ...//

ஆமாம் மதுண்ணா! எல்லோரும் சேர்ந்து ஒரு வழி பண்ணி விட்டார்கள்.:)

vasudevan31355
29th September 2015, 10:15 AM
சின்னா!

தனி மடல் பாருங்கள்.

vasudevan31355
29th September 2015, 10:26 AM
ரவி சார், கிருஷ்ணா சார், வினோத் சார், குமார் சார், கல்நாயக், ஆதிராம் சார், கலைவேந்தன் சார் மற்றும் அனைவரும் திரியில் பங்கு கொண்டு பதிவுகள் இடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Richardsof
29th September 2015, 11:13 AM
இனிய நண்பர் திரு வாசுதேவன் சார்
29.9.1972
http://i62.tinypic.com/i50oih.jpg
43 ஆண்டுகள் முன்பு 29.9.1972 அன்று வசந்த மாளிகை முதல் நாள் முதல் காட்சி வேலூர் அப்சரா அரங்கில் ரசிக மன்ற சார்பாக நடந்த சிறப்பு காட்சியில் படம் பார்த்த அந்த இனிய நாளை மறக்க முடியாது .படம் துவங்கியது முதல் இறுதி வரை ரசிகர்களின் ஆராவாரம் , கைதட்டல்கள் , விசில்என்று அட்டகாசமாக ரசிகர்கள் மத்தியில பார்த்த அனுபவம் இனிமையான நாளாகும்
இடை வேளையில் ''வருகிறது '' என்ற ஸ்லைடு விளம்பரத்தில் மக்கள் திலகத்தின் ''இதய வீணை ''போட்டதும் எழுந்த ஆராவாரங்கள் [ எதிர்ப்பும் ஆதரவும் ] கரகோஷம் அடங்க சிறிது நேரம் பிடித்தது .

vasudevan31355
29th September 2015, 12:58 PM
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்

(நெடுந்தொடர்)

40

'மாலை நேரத் தென்றல் என்ன பாடுதோ'

'நீரும் நெருப்பும்'

அடுத்து பாலாவின் தொடரில் 1971-ம் ஆண்டு வெளிவந்த 'நீரும் நெருப்பும்' படப் பாடல்.

http://i.ytimg.com/vi/OBu41cFE-ns/sddefault.jpg

என்ன பாடல்?

கொஞ்சம் அதிகம் பிரபலமாகாத பாடல்தான்.

'மாலை நேரத் தென்றல் என்ன பாடுதோ'

ஜெமினியின் 'அபூர்வ சகோதர்களே' மீண்டும் தமிழில் 'நீரும் நெருப்பும்' ஆனது. எம்.கே ராதா இருவேடங்களில் நடித்த பழைய 'அபூர்வ சகோதர்கள்' திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் இரு வேடங்களில் நடித்து 'நியோ மணிஜே' சினி புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் 'நீரும் நெருப்புமா'ய் வெளிவந்தது. (நடிகர் திலகம் நடித்து 100 நாட்கள் ஓடி வெற்றி வாகை சூடிய காவியப் படமான 'இருமலர்கள்' படத்தைத் தயாரித்ததும் 'மணிஜே' தான். சரியா ராகவேந்திரன் சார்?)

ஜெயலலிதா, அசோகன், மனோகர், ஆனந்தன், டி.கே.பகவதி, சோ, 'தேங்காய்' சீனிவாசன், ஜோதிலஷ்மி என்று நட்சத்திரக் கூட்டம்.

உரையாடல் எம்.ஜி.ஆர் அவர்களின் ஆஸ்தான சொர்ணம். பாடல்கள் 'வாலிபக் கவிஞர்'. (மூடில் இல்லை போல)

பல மொழிகளில் ஒலிக்கும் ஈஸ்வரியின் 'விருந்தோ நல்ல விருந்து' சமையல் பாட்டை வயலார் (மலையாளம்) கொசராஜ் (தெலுங்கு) விஜய நரசிம்ஹா (கன்னடம்) ஆகியோர் எழுதியிருப்பார்கள். இந்தியில் வரும் வரிகளை டி.ஏ.மோத்தி பாடியிருப்பார் என்பது தனி சிறப்பு.

இந்தப் படத்தின் கதை அனைவரும் அறிந்த ஒன்று. அதனால் தேவை இல்லை என்று விட்டு விட்டேன்.

ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசனுக்கு திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் அஞ்சலி செலுத்தி படம் ஆரம்பிக்கும்.

'இதயக்கனி' இயக்குனர் ஏ.ஜெகந்நாதன் இப்படத்தின் உதவி இயக்குனர்.

ராமூர்த்தியின் அருமையான ஒளிப்பதிவு காடு, வனாந்திரம் என்று 'பளிச்' பளிங்கு. தேக்கடி யானைக் கூட்டங்கள், குதிரைகள் என்று அருமையாக படம் பிடித்திருப்பார்.

இயக்கம் நீலகண்டன். நீளமாகப் படமெடுத்து நீள் பெருமூச்சு விடச் செய்திருப்பார். எல்லோரையும் ஏமாற்றிய படம்.

'கடவுள் வாழ்த்துப் பாடும் இளம் காலை நேரக் காற்று' பாடல் ஒன்று பட்டுமே பிரமாதம்.

மற்ற பாடல்கள்.

'கொண்டு வா... இன்னும் கொஞ்சம்' (சுசீலா போதை)

https://i.ytimg.com/vi/e6LsxtXK_60/hqdefault.jpghttp://indian.tv.cybernewsblog.com/wp-content/uploads/2015/03/kattu-mella-kattu-mgr-jayalalith-480x360.jpghttps://i.ytimg.com/vi/S2paL0_VQB8/hqdefault.jpg

'கன்னி ஒருத்தி மடியில்' (சுமார் டூயட் )

'கட்டு... மெல்லக் கட்டு' (ஈஸ்வரி ஜோதிலஷ்மிக்கு)

அப்புறம் தொடர் பாடல்.

இதில் மணிவண்ணன் என்ற பாத்திரத்தில் நடிக்கும் எம்.ஜி.ஆர் அவர்களுக்கும், அவரது நாயகி ஜெயலலிதாவிற்கும் ஒரு டூயட். இந்தப் படம் முடிந்து இறுதிக் கட்ட நேரத்தில் அவசர அவசரமாக இப்பாடல் பதிவு செய்யப்பட்டு படமாக்கப்பட்டதாம். (கிளாமர் நோக்கமா எனத் தெரியவில்லை அல்லது படத்திற்கு ஒரு டூயட் போதாது என்று இரண்டாவதாக 'திடு'மென நினைத்து எடுத்தார்களோ என்னவோ!) 'அவசரக் கோலம்' கதை போல்தான் இப்பாடலும் ஆகி விட்டது.

'ஓஹோ...ஆஹா' என்று சொல்ல முடியாமல் இது ஒரு ஆவரேஜான பாடலே.

அரண்மனை செட்களில் செயற்கைத்தனம் அதிகமாகவே தெரிகிறது. ஒரே ஒரு நீரூற்று 'பொய்'கையை வடிவமைத்துவிட்டு மற்றதையெல்லாம் வெறும் பொய்யாக்கி விட்டார்கள். நாடகக் காட்சிகள் போல பின்னால் ஓவியங்கள் வரையப்பட்ட அட்டைகள் நின்று பரிதாபமாய் பல்லிளிக்கின்றன. சுரத்தே இல்லாமல் பாடலுக்கு ஏனோதானோவென்று செட்டிங்க்ஸ்.

ராஜா ராணிக் கதை போலும் இல்லாமல், ஜமீன் கதை போலும் இல்லாமல், சமஸ்தானக் கதை போலும் இல்லாமல் இது ஒரு மாதிரிக் குழப்பும் கதை என்பதால் என்ன செட் போடுவது என்று ஆர்ட் டைரக்டருக்கு குழப்பம் போல.:) அது போல ஆடை வடிவமைப்பாளர் ஆடிப் போய்விட்டார் போல.

ஜெயா மேடத்திற்கு கிளாமரான நவநாகரீக உடையமைப்பு கொஞ்சமும் கதாபாத்திரத்திற்குப் பொருத்தம் இல்லாமல். எம்.ஜி.ஆர் அவர்களுக்காகவாவது ஆடை பரவாயில்லை. ஏதோ ஒப்பேற்றி விடுகிறார்கள். எம்.ஜி.ஆர் உடலமைப்பு கச்சிதம். ஆனால் முகம் வயதைக் காட்டிக் கொடுக்கிறது. படத்தில் (பாடலில் அல்ல) சுறுசுறுப்புக்குப் பஞ்சமில்லை. (குறிப்பாக லாவகமான கத்தி சண்டைகள். சபாஷ் ஷியாம் சுந்தர்.)

ஜெயா மேடத்திற்கு காதருகே கிரேன் தூக்கி கொக்கி போல அவ்வளவு பெரிய வளைந்த கிருதா எதற்கு எனப் புரியவில்லை. ஆனால் மேடம் 'ஜிகு ஜிகு'வென ஜொலிக்கும் அணிகலன்களை அணிந்து ஜொலிப்பது கொஞ்சம் ஆறுதல்.

எம்.ஜி.ஆர் அவர்களும், மேடம் அவர்களும் ஒரு கட்டத்தில் தங்களுடைய தோள் பட்டைகளை மா(ற்)றி மா(ற்)றி ஆட்டுவதும் என்னவோ போல உள்ளது.:) நடனத்திலும் ஒரு விறுவிறுப்பு இல்லை. (ஒரு கால் முன் உயர்த்தி கும்மி அடிப்பது போன்ற அசைவுகள்) சுறுசுறுப்பு இல்லை. ஏதோ ஒப்புக்கு எடுத்தது போல இருக்கிறது இந்த டூயட்.

http://i.ytimg.com/vi/XCW5UPohUn8/hqdefault.jpg

நடனம் பி.எஸ்.கோபாலகிருஷ்ணன், சலீம், ஏ.கே.சோப்ரா என்று மூன்று பழுத்துக் கொட்டை போட்ட ஜாம்பவான்கள். இருந்தும் பிரயோஜனமில்லை.

ஆரம்பத்தில் பிரம்மண்டமாய், ஆர்ப்பாட்டமாய் 'மெல்லிசை மன்ன'ரின் இசை ஒலித்து இந்தப் பாடல் ஆரம்பிக்க, மிக எதிர்பார்த்து ஒரு அருமையான பாடல் கிடைக்கப் போகிறது என்று உட்கார்ந்தால் பெருத்த ஏமாற்றமே மிஞ்சுகிறது.

'மெல்லிசை மன்ன'ரும் 'தண்ணீர் தண்ணீர்' நீர்ப் பஞ்சம் போல் 'நீரும் நெருப்பும்' படத்திற்கு பாடல் டியூன் போட்ட அன்று டியூன் பஞ்சத்தில் சிக்கிக் கொண்டார் போல. அவர் பங்குக்கு அவரும் கொடுக்க வேண்டியதைக் கொடுக்காமல் 'சப்'பென்று எதையோ டியூன் போட்டு பாடலாக்கித் தந்து போய் விட்டார். (எம்.ஜி.ஆர் அவர்கள் பக்கத்தில் இல்லையோ!)

பாடலை பாலாவும், சுசீலாவும் காப்பாற்ற முயன்று அவர்களும் களைத்துத் தோற்றுப் போய் இருப்பார்கள். (ஆயிரம் நிலவே வா' வுக்கு அப்படியே நேரெதிர்). பல்லவி முடிந்து இடையிசைக்குப் பின் வரும் கோரஸ் குரல்களும் கவரவில்லை.

பாடலின் முதல் சரணம் ஒரு டியூனிலும், இரண்டாவது சரணம் வேறொரு டியூனிலும் பயணிக்கும். முதாலவதைவிட இரண்டாவது பரவாயில்லை. கொஞ்சம் கேட்கிற மாதிரி வார்த்தைகளை விட்டு விட்டு அடுக்கி பாலா கொஞ்சம் தேற்றுவார். (கண்மணி... என்மனம்... உன்வசம்... வந்தது... உன் மந்திரப் புன்னகையோ!)

"மெல்ல நான் அள்ளவோ!....செல்லமாய்க் கிள்ளவோ!" வரிகள் முடிந்தவுடன் வார்த்தைகளுக்குப் பஞ்சம் போல. கேப் ஃபில்லராய் 'ஆஹஹா... ஆஹஹா' போட்டு நிரப்புவார்கள்.:)

மொத்தத்தில் சராசரிக்கும் கீழான பாடல். கிட்டத்தட்ட எம்.ஜி.ஆர் அவர்களின் ரசிகர்கள் கூட நிராகரித்த பாடல் இது. கேட்க மறந்த, பார்க்க மறந்த பாடல் கூட. இதுதான் இதில் அபூர்வம்.

இந்தப் பாடலை அடிக்கடி கே.டி.வியில் போட்டு 'சன்' க்ரூப் சந்தோஷப்பட்டுக் கொள்ளும்.:)

http://sim01.in.com/ae59df773a1719e18a94d50aa540a3d5_ls_lt.jpg

மாலை நேரத் தென்றல் என்ன பாடுதோ
என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ
மாலை நேரத் தென்றல் என்ன பாடுதோ
என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ

மஞ்சள் வண்ண வெயில் எங்கு போனதோ
என் மங்கை மேனி தங்கம் என்று நாணுதோ
மஞ்சள் வண்ண வெயில் எங்கு போனதோ
என் மங்கை மேனி தங்கம் என்று நாணுதோ

பூவிருந்த சோலை என்ன எண்ணுதோ

இந்தப் பூவைப் போல மென்மை இல்லை என்றதோ

மாலை நேரத் தென்றல் என்ன பாடுதோ
என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ

தங்க நிறக் கலசம் எடுத்து நடக்கும் தேரோடு

பக்கம் வந்து பதமாய் இதமாய் உறவாடு

தங்க நிறக் கலசம் எடுத்து நடக்கும் தேரோடு

பக்கம் வந்து பதமாய் இதமாய் உறவாடு

அணைத்தாலும்

அடங்காதோ

அது போகப் போக இன்னும் கொஞ்சம் விளங்காதோ

அணைத்தாலும்

அடங்காதோ

அது போகப் போக இன்னும் கொஞ்சம் விளங்காதோ

விளங்காதோ ஓஓ ஓஓ

மாலை நேரத் தென்றல் என்ன பாடுதோ

என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ

கண்மணி என்மனம் உன்வசம் வந்தது
உன் மந்திரப் புன்னகையோ
உன் மந்திரப் புன்னகையோ

கன்னி என் பொன்முகம் உன்னிடம் கண்டது
நீ முத்தாடும் வித்தைகளோ

கைவண்ணம் என்னென்று சொல்லவோ

கட்டும் நேரத்தில் பூப்பந்தாய்த் துள்ளவோ

கைவண்ணம் என்னென்று சொல்லவோ

கட்டும் நேரத்தில் பூப்பந்தாய்த் துள்ளவோ

மெல்ல நான் அள்ளவோ
செல்லமாய்க் கிள்ளவோ

ஆஹஹா

ஆஹஹா

ஆஹஹா

ஆஹஹா

ஆஹஹா...ஆஹஹா

அஆ அஆ...

மாலை நேரத் தென்றல் என்ன பாடுதோ
என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ

மஞ்சள் வண்ண வெயில் எங்கு போனதோ
என் மங்கை மேனி தங்கம் என்று ஆனதோ

பூவிருந்த சோலை என்ன எண்ணுதோ

இந்தப் பூவைப் போல மென்மை இல்லை என்றதோ

மாலை நேரத் தென்றல் என்ன பாடுதோ
என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ

அஹஹா அஹஹாஹா அஹஹா அஹஹாஹா
அஹஹா அஹஹாஹா அஹஹா அஹஹாஹா


https://youtu.be/XCW5UPohUn8

RAGHAVENDRA
29th September 2015, 01:26 PM
வினோத் சார்
வசந்த மாளிகை வெளியீட்டு நாளை நினைவூட்டி அதனுடன் ஒரு அருமையான அபூர்வமான அதிகம் வெளிவராத ஸ்டில்லையும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

RAGHAVENDRA
29th September 2015, 01:32 PM
வாசு சார்
நீரும் நெருப்பும் படத்தைப் பொறுத்த மட்டில் மெல்லிசை மன்னர் இன்னும் பாடல்களில் கவனம் செலுத்தியிருக்கலாம் எனத் தோன்றுவது இயல்பே. ஆனால் உற்று கவனித்தால் அவரிடம் சொல்லப்பட்டிருக்கக் கூடிய காட்சியமைப்பை மனதில் வைத்தே அவர் பாடலை இசையமைத்திருப்பது நன்றாகத் தெரியும். பாடலின் இசைக்கேற்றவாறு காட்சியமைப்பு இருந்திருந்தால் இந்தக குறை தோன்றியிருக்காது.

இது என் தனிப்பட்ட கருத்து.

அப்படியும் இந்தப்பாடல் காட்சியில் அவர் ஃப்யூஷன் எனப்படும் கலப்பிசை அடிப்படையில் பாடலை அமைத்திருப்பதை உணராலம்.

மெட்டு சற்று ஏமா்ற்றினாலும் பாடலின் பின்னணி இசை ஏமாற்றவில்லை.

vasudevan31355
29th September 2015, 09:08 PM
நம்ம நவரசத் திலகம் திடீர் திடீரென பிகர்களுடன் பிக்னிக் போய் வியக்கத் தக்க வகையில் பாடி ஆடிடுவார். அப்படி சில பாடல்களைப் பார்ப்போம்.

'பத்துமாத பந்தம்' படத்தில் பெரிய குரூப்பாக சரோஜாதேவி, ராஜஸ்ரீ, மனோரமா, மற்றும் இளம் சிட்டுக்களுடன் முத்துராமன் டிப்-டாப்பாக உடை அணிந்து அதுவும் கலரில் பாடி ஆடுவது கொஞ்சம் வியப்புத்தான். தேங்காயும் தொடை தட்டி உடன் ஆடுவார். முத்துராமனுடன் ஆடும் சிட்டுக்களில் ஒருவர் பின்னால் புகழ் பெற்ற நடிகையானார். சங்கர் கணேஷ் இசையில் பாடல் அமர்க்களம்.


https://youtu.be/FKRcP6rwySY

vasudevan31355
29th September 2015, 09:13 PM
இங்கே துலாபாரத்தில் முத்துராமன் காஞ்சனா, சாரதா சகிதம் கல்லூரி மாணவ மாணவிகளுடன் உல்லாசப் பயணம் போய் அட்டகாசமான பாடல் பாடி குறும்புத்தனத்தில் நம்மைக் குதூகலப் படுத்துவார். சற்றே விலகி நின்று முத்துவின் பாடலை ரசிக்கும் சாரதா, காஞ்சனாவின் கூச்சம் கலந்த இயல்பான வெட்கம் அருமை.

பாடகர் திலகத்தின் திறமைக்கு ஒரு சான்று.

முத்தான முத்துராமனின் பாடல். என் நெஞ்செமெல்லாம் நிறைந்து எந்நாளும் சுவை கூட்டி மகிழ்ச்சியடையச் செய்யும் பாடலும் கூட. தேவராஜன் தந்த தேவ ராகங்களில் ஒன்று.


https://youtu.be/Md8lIx_OdyE

vasudevan31355
29th September 2015, 09:18 PM
இங்கே முத்து டூர் போக வில்லை. வசந்த மாளிகை நடிகர் திலகத்தின் 'ஒரு கிணத்தை ஏந்துகிறேன்' ரேஞ்சிற்கு இளம் மொட்டுக்களுடன் ஏழெட்டுப் பெண்கள் பக்கம் இருக்க அவர்களுடன் ப்ளே-பாயாக நீச்சல் குளத்தில் சுறுசுறு ஆட்டம். இதுவும் வண்ணமே.

ஷப்னம், ரேணுகா, மீனா, விஜயலட்சுமி என்று துணை நடிகைகளுடன் 'பதிலுக்கு பதில்' தரும் 'ஜலசா'ராமன். ஜலக்கிரீடை ராமன்.(இந்தப் படத்தில் ஜெய்சங்கர் இருப்பதாக இணையத்தில் தவறான தகவல். கௌபாய் என்றால் அது ஜெய் தான் என கண்மூடித்தனமான முடிவு. 'நடிப்புச் சுடர்' கனைக்கும் குதிரையில் குந்தி 'கன்' ஏந்தி சுட மாட்டாரா?) 'குட்டி' பத்மினி இதில் குமாரி பத்மினி ஆகி விடுவார் டைட்டிலில். அப்போ ஏ.பி.நாகராஜனின் ஆஸ்தான 'குமாரி' பத்மினி?


https://youtu.be/K6BG05uMXHk

vasudevan31355
29th September 2015, 09:48 PM
இங்கே கொடியிடை ஜெயகுமாரி கிளப்பில் ஆட 'அநாதை ஆனந்தனை'த் தீர்த்துக் கட்டத் துடிக்கும் வில்லன் முத்துராமன் சரக்கு போட்டுக் கொண்டு போதையில் குமாரி மேல் 'குபீர்' என்று பாய ரெடியாய் இருகிறார். உடன் தள்ளாடி ஆடவும் செய்கிறார். இதுவும் கலரே.

ஜெயகுமாரிக்கு மட்டுமே பாடல். பின்னணி? வேறு யார் இதற்கெல்லாம் சூட் ஆவார்கள்? ஒரே ஒரு ராட்சஸி தானே?

ஆனால் பாடல் அமர்க்களமோ அமர்க்களம்.

இங்கு பார்ப்பதை யாருக்கும் சொல்லாதே
நீ பார்
இனி பள்ளிக்கு வேறெங்கும் செல்லாதே
என்னைப் பார்
கண்ணைப் பார்
ஹோ..பெண்ணைப் பார்.


https://youtu.be/ADwqGQstoSk

Russellxor
29th September 2015, 10:26 PM
வசந்தகால நதிகளிலிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் நீரினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்
நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் தொடந்து வந்தால் காமனவன் மலர்க்கணைகள்

முதல் அடியின் முடிவெழுத்து
அடுத்த அடியின் தொடக்க எழுத்தாக எழுதப்பட்ட து இப்பாடலின் சிறப்பு.
இது போல் மற்றும் சில பாடல்கள் இருந்தால் கூறவும்.

vasudevan31355
29th September 2015, 10:27 PM
இது ரொம்ப அபூர்வம்.

'குல கௌரவம்' காக்கும் தந்தை முத்துராமன் பெற்ற முத்து தோழி தோழர்களுடன் 'நான் வாழ்கிறேன்...தேன் இசையிலே' என்று வயலின் துணை கொண்டு பாடுகிறார். பாட்டு ரொம்ப நாளாச்சு கேட்டு.


https://youtu.be/8yx23rknt2s

rajeshkrv
29th September 2015, 10:34 PM
enna ji
vanakkam ji

Russellxor
29th September 2015, 10:35 PM
ஜேசுதாஸின் இனிமையான குரலில் அனைவரும் விரும்பப்படும் இந்தபாடல் இன்றைய இரவுத்தாலாட்டுக்கு...

ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
ஏனடி நீராடுது...
ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
ஏனடி நீராடுது...

அதன் இதழ்களின் மீது பாண்டிய நாட்டு
முத்துக்கள் யார் தந்தது..
ஆ..ஆ..ஆ.. ஆ..*
அதன் இதழ்களின் மீது பாண்டிய நாட்டு
முத்துக்கள் யார் தந்தது..
ஆ..ஆ..ஆ.. ஆ..*

ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
ஏனடி நீராடுது...ஏனடி நீராடுது...


மாலையிலே வரும் மன்னனுக்கென்று
மன்மத ஆராதனை..
ஆ ஆ ஆ ஆ*
மாலையிலே வரும் மன்னனுக்கென்று
மன்மத ஆராதனை..

அந்த மகிழ்வினில் நெஞ்சம் மயங்கிட நின்று
மங்கல நீராடுது..மங்கல நீராடுது..
ஆ..ஆ..ஆ..ஆ..

ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
ஏனடி நீராடுது...

பார்வையில் கொஞ்சம் பருகிய அழகை
கைகளும் சுவைத்துப் பார்க்கட்டுமே
பாதத்தில் தொடங்கி கூந்தலின் வரையில்
ஆனந்த ராகம் கேட்கட்டுமே
கண்படும்போதே கசங்கிய மேனி
கைபடும்போது என்னாகும்*
கண்படும்போதே கசங்கிய மேனி
கைபடும்போது என்னாகும்*

காவலை மீறிப் போகிற வேளை
செவ்விதழ் மேலும் புண்ணாகும்

ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
ஏனடி நீராடுது...ஏனடி நீராடுது...


பூரண கும்பம் ஏந்தி நடந்தால்
நூலிடை பாவம் வருந்தாதோ
காதலன் கைகள் தாங்கி நடந்தால்
பாரமும் கொஞ்சம் குறையாதோ
என்னென்ன சுகங்கள் எங்கெங்கு என்று
சோதனை போட்டால் ஆகாதோ
இரவினில் தோன்றி விடிந்த பின்னாலும்
மோகன மயக்கம் தீராதோ

ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
ஏனடி நீராடுது...ஏனடி நீராடுது...
மாலையிலே வரும் மன்னனுக்கென்று
மன்மத ஆராதனை..

அந்த மகிழ்வினில் நெஞ்சம் மயங்கிட நின்று
மங்கல நீராடுது..மங்கல நீராடுது..
ஆ..ஆ..ஆ..ஆ..

ஏரியிலே ஒரு..
ஆ ஆ ஆ*
காஷ்மீர் ரோஜா..
ஆ ஆ ஆ ஆ
ஏனடி நீராடுது...
ஆ ஆ ஆ ஆ


Eriyile Oru Kashmir Roja ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா: http://youtu.be/nHOmH4G3kbo

vasudevan31355
29th September 2015, 10:43 PM
vanakkam ji. nalamaa?

madhu
30th September 2015, 08:24 AM
வசந்தகால நதிகளிலிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் நீரினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்
நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் தொடந்து வந்தால் காமனவன் மலர்க்கணைகள்

முதல் அடியின் முடிவெழுத்து
அடுத்த அடியின் தொடக்க எழுத்தாக எழுதப்பட்ட து இப்பாடலின் சிறப்பு.
இது போல் மற்றும் சில பாடல்கள் இருந்தால் கூறவும்.

அதே படத்தில் இடம் பெற்ற "ஆடி வெள்ளி தேடி உன்னை" பாடலும் அந்தாதி தானே ?

madhu
30th September 2015, 08:27 AM
முத்துக்கு முத்தான எங்க வாசு ஜிக்கு அர்ப்பணம்... மல்லிகைப்பூ வாசனையில் நவரசத்திலகம்

பா ப ம க பா நி நி... பாட்டை ரசிப்பா பா பா

https://www.youtube.com/watch?v=sBlF7X1e2C0

vasudevan31355
30th September 2015, 08:44 AM
அமர்க்களம் மதுண்ணா!

என்ன ஒரு ஆச்சர்யம்! நேற்று இரவு 'மல்லிகைப்பூ' என்று கூகுளிக்கும் போதே கண் அயர்ந்து விட்டேன். இப்போது பார்த்தால் 'பாட்ட ரசிக்க' நீங்கள் அழகாகத் தந்து விட்டீர்கள். சரசமுள்ள சரசாவை விமர்சிக்க ஒருவர் வருவார் பாருங்கள். என்ன அழகான பாடல்! பாடகர் திலகத்தின் குரலும், கோரஸும் நெஞ்சை அள்ளுகிறது. முத்துவே சில ஸ்டெப்ஸ்களை அநாயாசமாக ஆடுவார். கூட ஹலம் வேறு. எனக்கு மிக மிக பிடித்த பாடல். நன்றி அண்ணா!

vasudevan31355
30th September 2015, 08:58 AM
'இதயக்கனி' படத்தில் 'தொட்ட இடமெல்லாம் தித்திப்புடன் இருக்கும்' பாடலில் சரணத்தில் வரும் வரிகளில் முடியும் வார்த்தைகள் அடுத்த வரிகளில் தொடங்கும்.

எங்கேயோ பார்த்த ஞாபகம்
என் மேலே சாய்ந்த ஓவியம்
பொன் வண்ணம் தேன் சிந்தும்
மலர்க்காவியம்

மலர்க்காவியம் எழில் ராணியின் இதழ் நாடகம்
இதழ் நாடகம் தமிழ்க் காதலின் புகழ்க் கோபுரம்
புகழ்க் கோபுரம் அகப்பாடலின் சுமை தாங்குமே
சுமை தாங்கியும் இமை மூடியும் சுகம் காணலாம்.

தளிர் மேனியில் விரல் பட்டதும் குளிர் போனதே
குளிர் போனதும் மழைக் கூந்தலின் புகழ் பாடினேன்
புகழ் பாடியே தினந்தோறுமே முகம் தேடினேன்
முகம் கண்டதும் புதுக் காதலில் நடம் ஆடினேன்

மிக மிக அம்சமான பாடல். வரிகளும்...இசையும்...இவை எல்லாவற்றையும் விட அந்த அற்புத பாடகர் திலகத்தின் அருமையான குரலும், பாவமும்.... சான்ஸே இல்லை.


https://youtu.be/X2YdnVtiUOY

rajeshkrv
30th September 2015, 09:44 AM
வணக்கம் ஜி, மதுண்ணா

madhu
30th September 2015, 10:03 AM
வணக்கம் ராஜேஷ்... சுஸ்வாகதம்

rajeshkrv
30th September 2015, 10:21 AM
வாசு ஜி ,

பாலா தொடர் அருமையாக செல்கிறது. வாழ்த்துக்கள்

vasudevan31355
30th September 2015, 10:27 AM
இதோ 'தெய்வாம்சம்' படத்தில் அருமையான ஒரு பட்டு. சந்திரகலாவிடம் பிள்ளைப் பாட்டுப் பாடி நலங்கு வைக்கும் வரலஷ்மி. (ஈஸ்வரி, ஜானகி கலக்கலில்) தேசியத் தலைவர்களை ஞாபகப்படுத்தும் இது போன்ற பாடல்கள் இப்போதெல்லாம் ஏது? இசை யார்? குன்னக்குடியா?

அந்தப்புர மந்திரத்தின் ஆனந்தத் தாண்டவம்
அள்ளி வந்து கொடுத்தது பிள்ளைப்பாட்டு


https://youtu.be/oSiangHfLcM


இப்பாடலைக் கேட்டால்

மஞ்சள் இட்ட நிலவாக
மை பூசும் கலையாக
மாலை கட்டும் மலராக
ஆரம்பம்

சுசீலாவின் பாடல் நினைவுக்கு வருகிறேதே. ஏன்?

எது முன்னால் வந்தது? 'தெய்வாம்சம்'தானே?


https://youtu.be/jVp03BLrLoY

rajeshkrv
30th September 2015, 10:32 AM
இசையரசி இசைத்த கீதங்கள் – 3

ஷீலா நடித்த அஸ்வமேதம் மிகவும் அருமையான படம். தொழு நோயாளாளியாக பிரமாதமாய் நடித்திருப்பார்
சத்யன் பற்றி சொல்லவேண்டியதே இல்லை.
தேவராஜன் வயலார் இசையரசி கூட்டணி மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றிக்கூட்டணி

அப்படி அமைந்த இந்த படத்தில் பிரபலமான பாடல் ஏழு சுந்தர ராத்ரிகள் ..
ஆனால் மிகவும் அர்த்தமுள்ள இந்த பாடல் நம்மை உலுக்கிவிடும்.
பூமியை ஒரு காராக்கிரகமாக சொல்கிறார் வயலார். எவ்வளவு கடினம். எவ்வளவு வேதனை இருந்தால் இந்த நாயகி இப்படி பாடுவாள்

இசையரசி குரலில் இந்த பாடல் நம்மை என்னவோ செய்யும் எங்கோ கொண்டு போகும் ..
ஷீலாவின் மிகச்சிறந்த படங்களில் இதுவும் ஒன்று.


https://www.youtube.com/watch?v=dtzw7X3m_EY

chinnakkannan
30th September 2015, 11:06 AM
hi good morning all..

கூத்தாடும் முத்து பாடல்களுக்கு நன்றி வாசு, மதுண்ணா.. டபக்னு நினைவுக்கு வருவது..அனுபவி ராஜா அனுபவியில் அழகிருக்குது உலகிலே பாட் தான்..

வாஸ்ஸு.. தொட்ட இடமெல்லாம் பாட் எனக்கு மிகப் பிடித்த ஒன்று..அதிலும் அந்தாதி பாட் கண்டு பிடிச்சுட்டீங்களே..

செந்தில்.. இந்தக் காலத்திலொரு அந்தாதி பாட் இருக்கே.. முழுக்க முழுக்க இல்லாட்டாலும்..

கரிகாலன் காலப் போல கருத்திருக்குது குழலு
குழலில்லை குழலில்லை தாஜ்மகால் நிழலு..

சேவலோட கொண்டை போல செவந்திருக்குது உதடு
உதடில்லை உதடில்லை மந்திரித்த தகடு..

அனுஷ்கா ஹைட் என்பதால் விஜய்யையும் அனுஷ்ஷையும் தள்ளித் தள்ளி பாட வைத்திருப்பார்கள்..

பட் இந்த தாஜ்மகாலுக்குப் பதிலா கார்கால இரவுன்னு போட்டிருந்தா இன்னும்பொருத்தமா இருந்திருக்கும்..

பின்ன வாரேன்..

chinnakkannan
30th September 2015, 11:11 AM
வாசுவின் அனுமதியில்லாமலேயே அவர் போட்ட ஒரு பாடலின் மீள் பதிவு..

***

சின்னக் கண்ணன் சார்!,

ஹோம் வொர்க் கொடுத்துட்டீங்க. ஆனா சந்தோஷமான ஹோம் வொர்க். கடலை மிட்டாய் சாப்பிட கசக்குமா?

அதுவும் நடிப்பின் தெய்வம் நடித்த பாடல் வேறு. போதாக் குறைக்கு என் அழகு மஞ்சுளா மைனா வேறு.

தலைவர் என்னா ஒரு பியூட்டி! வெரி ஸ்மார்ட். வெறி பிடிக்க வைக்கும் ஸ்மார்ட். மஞ்சுளா கண்ணுக்கு நிறைவாக கவர்ச்சிக் கன்னி. பாவாடை தாவணி இந்தப் பச்சைக் கிளிக்கென்றே பிறந்ததோ.

நடிப்புச் சரித்திரம் காதல் சரசம் புரிந்த அவன் ஒரு சரித்திரம்.

http://i1.ytimg.com/vi/Dcjg3f6aEhA/maxresdefault.jpg

இணையத்திலும் சரி, வெளி இடங்களிலும் சரி, மிகச் சிறந்த நடிகர் திலகத்தின் முதல் 10 காதல் பாடல்களில் இப்பாடல் இடம் பிடித்துள்ளது.
இப்பாடலைத் தெரியாதவர்களே இருக்க முடியாது. படத்தைக் கேட்டால் மறந்திருப்பார்கள். ஆனால் பாடலின் முதல் வரியைக் கேட்டதும் பச்சக்'கென்று பிடித்துக் கொள்வார்கள்.

ரொம்ப நாகரீகமான பாடல். தமிழின் அருமை பெருமையை உணர்த்தும் பாடல். முழுவதும் தூய தமிழிலேயே! வாணி, பாடகர் திலகம் அருமையான காம்பினேஷன். மெல்லிசை மன்னர் தன் பட்டப் பெயரை மீண்டும் தக்க வைத்துக் கொள்வார்.

அதிலும் பெண்மணிகளுக்கு மிகவும் பிடித்த பாட்டு. வாசலில் கூட்டிக் கொண்டிருந்த எங்காத்து அம்மா இப்பாடலைக் கேட்டதும் அப்படியே ஓடி வந்து கேட்டுவிட்டுதான் போனார்கள்.

இந்தாங்க புல் மீல்ஸ்.

அம்மானை
அழகுமிகும் கண்மானை
ஆடிவரும் பெண்மானை
தேடிவரும் பெருமானை
தேடிவரும் பெருமானை

(அப்பாடி! எத்தனை 'னை')

(அழகான கண்களைக் கொண்ட பெண்மான் அவளுடைய பெருமானைத் தேடி வருகிறாளாம். நட்சத்திரம் நம்பியிருப்பது வானைத்தானே! மண்ணும் விண்ணும் மாறிவிடலாம். உன்னை நேசிக்கும் இந்தப் பெண்ணின் மனம் மாறிவிடக் கூடுமோ!)

நம்பிய பெண் ஒரு தாரகை
அவள் நாடிய நீ ஒரு வானகம்
நம்பிய பெண் ஒரு தாரகை
அவள் நாடிய நீ ஒரு வானகம்
விண்ணகம் மாறிய போதிலும்
இந்தப் பெண்ணகம் மாறுவதில்லையே
விண்ணகம் மாறிய போதிலும்
இந்தப் பெண்ணகம் மாறுவதில்லையே

அம்மானை
அழகுமிகும் கண்மானை
ஆடிவரும் பெண்மானை
தேடிவரும் பெருமானை
தேடிவரும் பெருமானை

காதலன் சிலாகிக்கிறான் .

(பாலில் சுவை மறைந்துள்ளது கண்ணே! அதே மாதிரி என் விழியில் நீ ம(நி)றைந்திருக்கிறாய். ஆழியில் மணி மறைந்திருக்கிறது. அதுபோல நீ என்மேல் கொண்ட ஆசையில் என் மனம் மறைந்திருக்கிறது. )

பாலினுள் மறைந்துள்ள சுவையென
விழி பளிங்கினுள் மறைந்தது உன் முகம்
பாலினுள் மறைந்துள்ள சுவையென
விழி பளிங்கினுள் மறைந்தது உன் முகம்

ஆழியில் மறைந்துள்ள மணியென
உன் ஆசையில்
மறைந்துளதென் மனம்
ஆழியில் மறைந்துள்ள மணியென
உன் ஆசையில்
மறைந்துளதென் மனம்

(இந்தக் கன்னிக்கு அச்சம், மேடம், நாணம், பயிர்ப்பு குணங்கள் உண்டு. நான் பா(ப)த்திரமாக உன் வசம் இருக்கிறேன். அதில் தேன் மழையாய் உன் முகம் மட்டுமே இருக்கிறது.)

கன்னியின் நால்வகை சாத்திரம்
தன் காதலன் கண்களில் மாத்திரம்
உன்னிடம் நான் ஒரு பாத்திரம்
அதில் ஊற்றிய தேன்மழை உன் முகம்
உன்னிடம் நான் ஒரு பாத்திரம்
அதில் ஊற்றிய தேன்மழை உன் முகம்

(தலைவர் பேண்ட்டை மடித்து விட்டு தண்ணீரை கால்களால் உதைத்தபடி நடக்கும் அழகும் தனிதான்)

அம்மானை
அழகுமிகும் கண்மானை
ஆடிவரும் பெண்மானை
தேடிவரும் பெருமானை
தேடிவரும் பெருமானை

பொன்னிற வண்டுகள் பாடின
அவை பூவெனும் மெத்தையில் கூடின
என்னிரு கண்களும் தேடின
அவை ஏக்கத்தில் உன்னிடம் ஓடின

மங்கலச் சங்குகள் அழைத்தன
இரு மந்திர முல்லைகள் இழுத்தன
உன்னுடன் உடல் உயிர் கலந்தன
(நடிகர் திலகத்துடன் எங்கள் உயிர் கலந்தது போல)
இங்கு ஒன்றுமில்லை இனி எனக்கென
(எல்லாம் நீயே! பிறகென்ன கவலை?!)

அம்மானை
அழகுமிகும் கண்மானை
ஆடிவரும் பெண்மானை
தேடிவரும் பெருமானை
தேடிவரும் பெருமானை


https://www.youtube.com/watch?v=ZEQk5NmR4ZE&feature=player_detailpage

vasudevan31355
30th September 2015, 10:51 PM
கலையுலகின் பிதாமகருக்கு பிறந்த நாள்.

மதுர கானங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறது.

http://3.bp.blogspot.com/-wZfG4VOm6n4/TdaL1oMOFdI/AAAAAAAADf4/u5fpxIZgySs/s1600/Sivaji+Ganesan+%252816%2529.jpg

RAGHAVENDRA
30th September 2015, 11:00 PM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xaf1/v/t1.0-9/11138070_986326991417973_852416687887541368_n.jpg? oh=0e72cc4668ea24be42d996dfac0cfe8a&oe=56A0E012

rajeshkrv
1st October 2015, 12:21 AM
ராகவ் ஜி
அருமையான புகைப்படம். வாழ்த்துக்கள்
நடிகர் திலகத்தின் பிறந்த தினத்தை நினைவூட்டியமைக்கு நன்றிகள்

மற்ற திரியில் உங்களை வம்புக்கு இழுக்கும் சிலரை மன்னித்து நீங்கள் எப்பொழுதும் போல் கல கலவென இருங்கள்

chinnakkannan
1st October 2015, 12:33 AM
வாசு, ராகவ் ந.தி பிறந்ததினம் நினைவூட்டியமைக்கு நன்றிகள்..

ந.தி பங்கு பெற்ற உற்சாகப் பாடல்கள் பத்து அதைப் பற்றி ஒரே ஒரு சின்ன பாரா மாதிரி போடலாமா..

ந.தியின் இளமை த்துள்ளலில் பிடித்த படம் நிறைய உண்டு கொஞ்சூண்டு லிஸ்ட் போட்டால்

ராதே உனக்குக் கோபம் ஆகாதடி
ஒரு தரம் ஒரே தரம்
அங்கே மாலை மயக்கம் யாருக்காக
தேவன் வந்தாண்டி ஒரு சேதி சொன்னாண்டி.
ஹெ லிட்டில் ஃப்ளவர்

இருந்தாலும்... விடிய விடிய கதைகள் சொல்ல வருவேன் நான்கல்யாணப் பெண்ணாக..
மனம் இனிக்க இனிக்க வருவாய் நீ கல்யாணப் பெண்ணாக...பிடிக்க்கும்..

சிவகாமியின் செல்வன் ஸ்ரீதேவியில் ரிலீஸான புதிதில் பார்த்த போது ரொம்பச் சின்ன சிறுவன்.. படம் புரிந்து கொள்ளுமளவிற்கெல்லாம் தெரியாது.. மொத சிவாஜி செத் போய்டறார்..குட்டி சிவாஜி அழகா இருக்கால்லம்மா என்று கேட்டிருப்பேன் என நினைக்கிறேன்..( ஆராதனா சகோதரிகளுடன் (ஆண்பிள்ளைத் துணை) என மீனாட்சியில் பார்த்த நினைவு (சரியா முரளி (எங்கே ரொம்ப நாள் காணோம்))

அப்புறம் வ.வ.பிறகு ரொம்ப நாள் கழித்து - கல்லூரி முடித்த பின் தான் பார்த்துப்புரிந்த நினைவு..(ஜெகதா என நினைக்கிறேன்)

https://youtu.be/gaN278K2mKs

Russellxor
1st October 2015, 12:21 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/vasantha-maligai_135381811711_zpshz8ydhql.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/vasantha-maligai_135381811711_zpshz8ydhql.jpg.html)

eehaiupehazij
1st October 2015, 06:03 PM
நடிகர்திலகத்தின் பிறந்தநாள் நினைவலைகள் !

இன்று முதியோர் பாதுகாப்பு தினமும் கூட!!


ஆலமரம் போல விழுதுகளுடன் வேரூன்றி நிலைத்து நிற்க எடுத்துக் காட்டான கூட்டுக் குடும்ப வாழ்வியலை வாழ்ந்தே காட்டியவர் நடிகர் திலகம் !!
பெத்தமனம் பித்து பிள்ளைமனம் கல்லு என்பதை வியட்நாம் வீடு விளங்க வைத்தது !
முதுமைப் பருவத்திலும் சுய மரியாதையையும் தன்னம்பிக்கையையும் இழக்கக் கூடாது என்பதை எங்க ஊர் ராஜாவாக எடுத்துரைத்தார்!
சிறகு முளைக்கும் பறப்பது இயல்பாயினும் முதுமையிலும் கௌரவத்தை நிலை நாட்டினார் பாரிஸ்டர் ரஜினிகாந்த்தாக!!

நான் பெற்ற செல்வம் நலமான செல்வமே ..நான் அவனுக்காக உழைத்து சம்பாதித்து படிப்பித்து அவனை உயர்த்தும் வரை.....

https://www.youtube.com/watch?v=jcfAofXtCVM

வயதாகி விட்டால் ...அவனும் தனிக் குடும்பஸ்தனாகி விட்டால்....
தென்னையைப் பெத்தா இளநீரு ..பிள்ளையைப் பெத்தா கண்ணீரே!
முதியோரை இல்லத்தில் வைத்திராது முதியோரில்லத்திற்கு அனுப்பி வைக்கிறதே கல்மனம் !!

https://www.youtube.com/watch?v=pPy4jnZe5B8

madhu
1st October 2015, 06:13 PM
எத்தனை எத்தனையோ கதாபாத்திரங்களில் நடிகர் திலகம் நடித்திருக்கிறார். ஆனால் இந்தப் படத்தைப் பார்த்தபோது
முதலில் இருந்தே அது ஒரு மாதிரியான டாக்டர் என்று மட்டுமே தோன்றியதே தவிர சிவாஜி கணேசன் என்றோ மிகப்
பெரிய கதாநாயகன் என்றோ எதுவுமே தோன்றவில்லை... இது எனக்கு மட்டுமல்ல... என்னை இந்தத் திரைப்படத்துக்கு
அழைத்துச் சென்ற என் பெற்றோருக்கும்தான்..

அதன் பின் எத்தனையோ தடவை என் அப்பா "எப்படி நினைத்துப் பார்த்தாலும் அது சிவாஜி என்றே தோன்றவில்லையே" என பல முறை வியந்திருக்கிறார்.

படம் எத்தனை நாள் ஓடிச்சோ தெரியாது.. இந்தப் பாட்டு இன்னைக்கு வரை மனசுக்குள் ஓடிக்கிட்டேதான் இருக்கு..

கரஹரப்ரியா கொஞ்சம் வெள்ளித்திரை வண்ணத்துடன்...

https://www.youtube.com/watch?v=TwRkv0yk_OQ

rajraj
2nd October 2015, 07:47 AM
From Thiruttu Raman (1956)

bhale saadhu engal Bapuji......

http://www.youtube.com/watch?v=HxSDTcjHNUk


From Dong Ramudu(1955), Telugu version of Thiruttu Raman

Bhale Thatha Mana Bapuji.........

http://www.youtube.com/watch?v=semFRIOg90A

eehaiupehazij
2nd October 2015, 08:28 AM
காந்தி ஜெயந்தி நினைவலைகள் !

https://www.youtube.com/watch?v=Zt_MmVBUv84

https://www.youtube.com/watch?v=_SakitCoNYc

chinnakkannan
2nd October 2015, 10:56 AM
ஹாய் குட் மார்னிங்க் ஆல்..

காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்..

ம்ம் கொஞ்சம் வேலை நெட்டி எடுத்து சென்று கொண்டிருந்ததால் அடிக்கடி வரவியலவில்லை..

பி.சுசீலாம்மாவின் பழைய பாடல் ஒன்றை புதியதாகக் கேட்டேன்.. மணமாக இருக்கும் ஒரு பெண்ணின் உணர்வுகள்.. லிரிக்ஸ் வெரி நைஸ்..

" வருக வருக என்று சொல்லி அழைப்பார் ''

https://www.facebook.com/bethuraj.mv/videos/429630657224599/

chinnakkannan
2nd October 2015, 10:58 AM
தோட்டத்துப் பூவில வாசமிருக்கு
இதைச் சொந்தம் கொண்டாட ஒரு ஆசையிருக்கு..

துள்ளல் பாட்டு

https://youtu.be/kjtx4kmNss8

chinnakkannan
2nd October 2015, 11:06 AM
இன்னும் நிறைய பதிவுகள் வரவேண்டுமே.. மக்கள்ஸ் எல்லாருமே பிஸியாக இருக்காங்க போல..

அவங்களை வரவழைக்க என்ன செய்யலாம்..

வீ ஆல் ஸிட் அண்ட் ப்ரே...


ஓம் ஷாந்தி ஓம்... :)

https://youtu.be/p92YbtfeI58

vasudevan31355
2nd October 2015, 06:17 PM
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 'ராமன் எத்தனை ராமனடி' படத்திலிருந்து ஒரு அற்புதமான பாடல்.

http://i.ytimg.com/vi/jzd1Em-5Z9U/hqdefault.jpg

சேர சோழ பாண்டி மன்னர் ஆண்ட தமிழ் நாடு
திராவிடத்தை வேறு யாரும் ஆள்வதென்பதேது

இந்திய தேசத்தின் ரத்தங்களே
இணையாதிருக்கும் உள்ளங்களே
சிந்தய ரத்தம் போதாதோ
தேசம் நாசம் ஆகாதோ


https://youtu.be/1kF8D5HWKPg

Russellxor
2nd October 2015, 06:53 PM
Delete

vasudevan31355
2nd October 2015, 08:38 PM
சின்னா!

ரொம்ப அபூர்வப் பாடலான இதுவரை திரியில் தராத,

'தோட்டத்துப் பூவில வாசமிருக்கு
இதைச் சொந்தம் கொண்டாட ஒரு ஆசையிருக்கு'

பாடலைப் பதித்ததற்கு தேங்க்ஸ். ஆமா! 'முட்டைக்கண்' கூட ஆடும் முக அழகி நடிகை யாரென்று சொல்லுங்கள் பார்ப்போம்.

chinnakkannan
3rd October 2015, 01:35 AM
வாஸ்ஸூ.. தாங்க்ஸ்.. என் நெஞ்சுக்குள் அப்படியே கேள்வி கேக்கலாம்னு நெனச்சு அப்புறம் திட்டி கன்னட மஞ்சுளான்னு சொல்வீங்களோன்னு பயந்துக்கிட்டு இருந்தேன்..ஆமா..யாராக்கும் அது..

இன்னொரு கொஸ்டீன்..இன்னிக்கு ஒரு டுபாக்கூர் படம் பார்த்தேன்..காதலிக்க வாங்க புதுயுகம் சேனல்ல..ஜெய்ஷங்கரோட ஜோடி, ஸ்ரீகாந்தோட ஜோடியா நடிச்சவர் யார்னு தெரியலை..( காஞ்சுபோன கண்ணன்னெல்லாம் வத்தாத வாசுவப் பாத்து ஆறுதலடைவானாக்கும் :) உங்க்ளுக்கும் தெரியாதுன்னு சொல்லிடாதீங்க..)

ஹப்புறம் கை..கழுத்துல்லாம் ரத்தமா இருக்குவாசு அதோட டைப்படிக்கறேன்.. ஏஏன்னாக்க ‘புலி’ கடிச்சுடுச்சு..:sad:

vasudevan31355
3rd October 2015, 08:46 AM
சின்னா!

அது 'மேஜிக்' ராதிகா. ரொம்ப சின்னப் பெண்ணா அந்தப் பாடலில் தெரிவார். இவரைப் பற்றி நம் மதுர கானத்தில் விவரங்கள் தரப்பட்டிருக்கிறது. எந்தப் பாகம் என்று நினைவில்லை.

'சிவந்த மண்' படத்தில் கப்பலுக்கு வெடிகுண்டு வைக்க நடிகர் திலகம் செல்வாரே! அப்போது மிக வித்தியாசமாய் ஒலிக்கும் 'மெல்லிசை மன்னரி'ன் இசைக்கு நெஞ்சு பதைபதைக்க ஆடுபவர் இவர்தான். சில படங்களில் கவர்ச்சி ஆட்டம். காதல் மன்னருடன் 'சின்னஞ்சிறு உலகம்' பட ஜோடி. 'புத்திசாலிகள்' படத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே ஹீரோவாகத் தலை காட்டும் ஜெய்க்கும், படம் முழுக்க வரும் ஜெய் டூப்புக்கும் இவரே ஜோடி. இவரது தந்தையும் ஒரு மேஜிக் நிபுணர்.

மேலும் இவரைப்பற்றி முழு விவரங்கள் தெரிந்து கொள்ள கீழே சொடுக்குங்கள்.

https://antrukandamugam.wordpress.com/2013/08/11/magic-radhika/

vasudevan31355
3rd October 2015, 08:59 AM
//இன்னிக்கு ஒரு டுபாக்கூர் படம் பார்த்தேன்..காதலிக்க வாங்க புதுயுகம் சேனல்ல..ஜெய்ஷங்கரோட ஜோடி, ஸ்ரீகாந்தோட ஜோடியா நடிச்சவர் யார்னு தெரியலை.//

சரியா சொன்னீரு. ஒன்னாம் நெம்பர் டுபாக்கூர் படம்.

ஜெய்ஷங்கருக்கு ஜோடி கவிதா. 'ஓ மஞ்சு' கவிதா இல்லை. இவர் வேறே. ஆனா பியூட்டியாக இருப்பார்.

https://i.ytimg.com/vi/UkcSGYKKZeA/hqdefault.jpghttps://s2-ssl.dmcdn.net/IKEDs/526x297-zUP.jpg

ஸ்ரீகாந்துக்கு ஜோடி விஜயகிரிஜா என்பவர். ஷப்னம் என்ற இன்னொரு கவர்ச்சி ஆட்ட நடிகை 'புலி'யுடன் துணிச்சலாக நடித்திருப்பார். ஐ மீன் நிஜப் புலி.:) உமக்கு ரத்தம் வடிய வச்ச 'புலி' அல்ல.தெரிஞ்சே 'புலி' வாயில் தலை நுழைத்த உம்மை.....

மேஜருக்கு ஜோடி ஆச்சி. தமிழ்வாணன் எடுத்த மோசமான ஒரு படம்.

vasudevan31355
3rd October 2015, 09:11 AM
ஆனா காதலிக்க வாங்க படத்துல ஒரு சில பாட்டுக்கள் நன்னாயிட்டு.

குறிப்பா உனக்கும் எனக்கும் உறவு தந்து யாரோ

மக்கள் கலைஞர் ஒரே நேரத்தில் ரெண்டு குதிரைகளை சமாளிக்கிறாரே.:)


https://youtu.be/ZO_WAuphBGw

vasudevan31355
3rd October 2015, 09:12 AM
'காதல் என்றாலே தேனல்ல்லவா!' பாடலும் நன்றாகவே இருக்கும்.


https://youtu.be/kqhuNRuqWW8

rajeshkrv
3rd October 2015, 09:23 AM
வணக்கம்

vasudevan31355
3rd October 2015, 09:40 AM
இதே கவிதா 'வசந்த மாளிகை' படத்தில் நடிகர் திலகத்துடன் ஒரு காட்சியில் நடித்து வாழ்நாள் முழுக்க தனக்கு பெருமை சேர்த்துக் கொண்டார். ('அத்தானைப் பத்திக் கேள்விப் பட்டிருக்கேன். இப்போ நேரிலேயே பார்த்துட்டேன்')

http://i57.tinypic.com/212c0m.jpg

http://i57.tinypic.com/1zowzn5.png

vasudevan31355
3rd October 2015, 09:40 AM
வணக்கம்ஜி! எங்கே ஆளையே காணோம்?

chinnakkannan
3rd October 2015, 10:37 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..

வாஸ்ஸூ.. வள்ளலே.. மேஜிக் ராதிகா பார்த்த நினைவு..ஆனால் படித்த நினைவில்லை..செம்மையா வாரி வழங்கியிருக்கிறீர்கள்.. லிங்க்கிற்கும் தாங்க்ஸ்.. சி.ம பிஜிஎம் காதில் ஒலிக்கிறது..வித்யாசமாக அந்தக்காலத்தில் புதுமையாக இருக்கும்..பாடலே இல்லாமல்.. தாங்க்ஸ்..

//மக்கள் கலைஞர் ஒரே நேரத்தில் ரெண்டு குதிரைகளை சமாளிக்கிறாரே// :) :)

ஜெ.வின் காதலியும்(கவிதா) சரி ஸ்ரீ யின் காதலி விஜய கிரிஜாவும்சரி.. லோ பட்ஜெட் படமென்பதாலோ என்னவோ முழுக்க முழுக்க குட்டைப் பாவாடை, ஹாஃப் ட்ராயர் என பவனி வருவார்கள்..ப்ளஸ் படத்தில் அங்கங்கே குட்டி க் குட்டியாய் ப் பஞ்ச் சிரிக்க வைக்கும்..தமிழ்வாணன் என்பதால் பார்த்தேன்.. பட் ஸோ மச் டிஸப்பாயிண்ட்டட்.. ஆரம்பத்திலேயே மூன்று பேரும் ஜெய்,ஸ்ரீகாந்த்,சுந்தர்ராஜன் - போலீஸ் ஆஃபீஸர்ஸ் என்று யூகித்து விட்டேன்.. வாவ்..கேட்காத ஷப்னம் பற்றிச் சொன்னதற்கும் தாங்க்ஸ்.. இந்த ஷப்னம் கவிதா சண்டை ஒன்று இருக்கிறது..தமாஷ்..

பாட்லகளுக்கு நன்றி..

புலி பொறுத்தவரை நண்பர் எனக்கு வியாழனே புக் செய்துவிட்டார்.. வீ.பக்கத்தில் உள்ள தியேட்டர் என்பதாலும் ஒன்பது மணி இரவுக்காட்சி ( இந்திய நேரம் பத்தரை) என்பதாலும் இன்று லீவ் என்பதாலும்..போ...னே...ன்... சில சில வரிகள் புன்னகைக்க வைத்தன பாடல்களில்... உன்னை முத்தமிட்ட மூச்சுக்காற்றில் ரோஜாவாசம்! நீ பகலுக்கு நல்லவள் இரவில் கெட்டவள்..! ஸ்ரீதேவி தான் ஹன்சிகா,ஸ்ருதியை விட அழகு..அதையும் கொடுங்கோல் ராணி என்ற பெயரில் அவரை முறைக்கவைத்து கண்மை தீட்டியிருப்பார்கள்! சுருதிஹாசன் சொந்தக்குரலில் பேசாமல் இருந்தால் நலம்.. அல்லது வடிவேலை விட்டு டப் செய்யச் சொல்லலாம் :) அந்த வாய்ஸ் பெட்டரா இருக்கும்! ரொம்ப்ப்ப்பக் கடி....


சரி இன்றைய பாட்..

ஆசை வந்த பின்னே அருகில் வந்த பெண்ணே

பக்கத்திலே நான் வரவா
பாடம் சொல்லித் தான் தரவா

கள் வடியும் வீணையிலே
பாவை சொன்ன ஜாடையிலே
பழகிவரும் பழக்கத்திலே பகலுமில்லை இரவுமில்லை.. (யார் யார் யார் இவர் யாரோ ? :) )


https://youtu.be/hUOhMQTfJfI

chinnakkannan
3rd October 2015, 07:56 PM
காணாமல் போய்விட்ட அன்பு நண்பர் கல் நாயக்கின் நினைவாக ச் சில நிலவுப் பாடல்கள்..

தேடிடுதே வானமிங்கே.. தேன் நிலவே நீ போனதெங்கே...
பாடுது பார் ஒரு வானம்பாடி
வாடுது பார் அதன் ஜீவ நாடி..

https://youtu.be/qfCcG0VsF10

உத்தமி பெற்ற ரத்தினம் யாராக்கும்..

chinnakkannan
3rd October 2015, 07:59 PM
வாணிஸ்ரீயின் முதல் படத்தில் வெள்ளி நிலா வானத்திலே வந்து போகுதுங்க..

வெள்ளி நிலா வானத்திலே வந்து போகுதடா
அது வந்து போன சுவடு அந்த வானில் இல்லையடா..( காதலனை டா போட்டுக் கூப்புடறது அந்தக்காலத்திலேயே இருக்கு போல :) )


https://youtu.be/32TjlUzV5yw

chinnakkannan
3rd October 2015, 08:10 PM
எப்போ கேட்டாலும் என்னமா பாடியிருக்காங்க என பிரமிக்க வைக்கும் பாடல்.. இப்போ தான் வீடியோவில் பார்க்கிறேன்..வாவ்..

தேசுலாவுதே தேன்மலராலே.... தேசுலாவுதேன்னா வாசம் உலவுகிறதுன்னு அர்த்தமா..




ஓடி வா வெண்ணிலாவே
இங்கு ஓடி வா வெண்ணிலாவே
வருவாய் நிலாவே
வாழ்வினிலே ஒரு நாள் இதுவே நிலவே

ஓடி வா வெண்ணிலாவே
கண்ணால் பேசும் காவியமே
கண்ணால் பேசும் காவியமே
காவியமே புகழ் காதல் இன்பமே

காவியமே புகழ் காதல் இன்பமன
ஊஞ்சல் ஆடுவோம் உல்லாசமாய் சல்லாபமாய் .. ஆ. ஆ ..ஆ ..ஆ
தேசுலாவுதே தேன் மலராலே...

https://youtu.be/XHa71KRLXqY?list=RDGjK8twYITOQ

chinnakkannan
3rd October 2015, 08:22 PM
மஞ்சள் மகிமை படம் பார்த்ததில்லை..பட் இந்தப் பாட் எக்கச்சக்கமா கேட்டிருக்கிறேன்..


இன்னலாகத் தோன்றும் மின்னல்
இடை மறித்தாலும் இடி எதிர்த்தாலும்
கண்மணித் தாரகை தன்னைக் கைவிடேன் என்றே
களிப்பொடு சென்றே
அலங்காரத் தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே
ஆனந்தம் தேடுதே

ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா
அலங்காரத் தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே
ஆனந்தம் தேடுதே



https://youtu.be/F_qoAQEGf0s?list=RDGjK8twYITOQ

uvausan
3rd October 2015, 10:26 PM
வாசு , உங்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது ஒரு அருமையான தகவலை எனக்குத் தந்தீர்கள் - மது சார் உங்கள் இல்லம் வந்ததையும் , நலமுடன் இருப்பதையும் - கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சி யாக இருக்கிறது . அவர் தொடங்கி வைத்த இந்த திரி இன்னும் வேகமாகவும்,சிறப்புடனும் செல்லவும் , இங்கு பதிவிடும் , படிக்கும் அன்பர்கள் அனைவரும் எல்லாம் பெற்று இன்புடன் வாழவும் இந்த பதிவை ஒரு காணிக்கையாக சமர்ப்பிக்கிறேன் .

வாழ்த்தும் பயனும்

பிறர் நலமாக வாழ வேண்டும் என்ற நினைவோடு எழும் ஓர் ஒலியே வாழ்த்து என்ற வார்த்தையாகும். வாழ்த்து என்றாலே அதை நினைக்கும்போதும், அதை சொல்லும்போதும் மனத்திலே ஓர் அமைதியான இயக்கம் ஏற்படும்.

"வாழ்க வளமுடன்" என்று மற்றவரைப் பார்த்து சொல்லும்போது எல்லாப் செல்வங்களையும் உங்களுடைய வாழ்க்கையில் பெற்று சிறப்பாக வாழ வேண்டும் என்று கருத்தை உள்ளடக்கியதாக அமைகிறது என்று வேதாத்திரியம் கூறுகிறது.

வாழ்க என்ற வார்த்தையில் உள்ள 'ழ்' என்ற சிறப்பான எழுத்தை உச்சரிக்கும்போது நமது நாக்கு மடிந்து மேலண்ணத்தில் நன்கு தொட்டு அழுத்துகிறது. இந்த அழுத்தம் உள்ளே இருக்கும் பிட்யூட்டரி சுரப்பியையும், பீனியல் சுரப்பியையும் நன்கு இயக்குவதற்குத் தூண்டுகிறது. உடலியக்கத்திற்குத் தலைமைச் சுரப்பி பிட்யூட்டரி சுரப்பி. மன இயக்கத்திற்கு தலைமைச் சுரப்பி (Master Gland) பீனியல் சுரப்பி. இவ்விரு சுரப்பிகளுகம் இயக்கம் பெறுவதால் நமது உடல்நலமும், மன நலமும் சிறப்படைகின்றன. பீனியல் சுரப்பியை 'மனோன்மனி' என்றும் அழைக்கின்றனர். மனத்திற்குரிய ஒரு நல்ல ஆற்றல் உள்ள கருவி என்பதற்காக மன+உள்+மணி என்ற 3 வார்த்தைகளைச் சேர்த்து மனோன்மனி என்று சொல்லப்படுகிறது. மனத்திற்கு உட்பொருளாக உள்ள இரத்தினம் என்பது பொருள். அதனால் நாம் வாழ்த்தும்போது மனோன்மனியோடு தொடர்பு கொண்டு எண்ணற்ற பலன்களை பெறுகிறோம்.

வாழ்த்தின் நன்மை

1 "வாழ்க வளமுடன்" என்று சொல்லும்போது பிறர் உள்ளத்திலே நமது கருத்தும் உயிராற்றலும் ஊடுருவி இரண்டு பேருக்குமிடையே ஓர் இனிய நட்பை வளர்க்கிறது.

2 இந்த வாழ்த்துப் பயிற்சியினால் சினம் அடிக்கடி வருவதைத் தவிர்க்கலாம்.

3 அப்படி வாழ்த்தி, வாழ்த்தி எப்பேர்பட்டவர்களையும் நண்பர்களாக மாற்றி பகைமையைத் தவிர்க்கலாம். அவர்களுடைய செயல்களைத் திருத்திவிட முடியும்.

4 ஒரு செடியைப் பார்த்துக் கூட "வாழ்க வளமுடன்" என்று சொன்னால், அந்தச் செடியில் இருக்கக் கூடிய பலவீனம் நீங்கி அது நல்லதாக மாறும்.

வாழ்க வளமுடன் என்ற மந்திரத்திற்கு வலு அதிகம். தவம் செய்த முடிக்கின்ற போது சொல்லும்போது வாழ்த்துக்கு இன்னும் வலிமை கூடுகிறது. உதாரணமாக ஒரு வில்லில் அம்பு எய்வதற்கு எவ்வளவு தூரம் நாணை இழுக்கிறோமோ, அந்த அளவுக்கு அம்புக்கு வேகம் கூடும். அதுபோன்று மனம் எவ்வளவு அமைதி நிலையிலிருந்து வாழ்த்துகிறதோ அந்த வேகத்தில் அந்த வாழ்த்து செயலுக்கு வரும்.

வாழ்த்து அலை

வாழ்த்து என்பது அலை. இந்தச் சீவகாந்த அலைக்கு 5 வகையான இயக்கங்கள் உள்ளன.
1 மோதுதல் (Clash)
2 பிரதிபலித்தல் (Reflection)
3 சிதறுதல் (Refraction)
4 ஊடுருவதல் (Penetration)
5 இரண்டிற்கும் இடையே ஓடிக் கொண்டிருத்தல் (Interaction)

ஒருவர் மற்றவரை வாழ்த்தும்போது அந்த வாழ்த்து இருவருக்கிடையே ஓடிக் கொண்டே இருக்கும். இவ்விருவருக்கும் இடையே ஓர் உயிரோட்டம் உண்டாகி விடுகிறது. அது ஆயுள் முழுவதும் இருக்கும். நீங்கள் அன்போடு நல்ல எண்ணத்தோடு பாய்ச்சி விட்டால் போதும். அவர் உங்களை பார்த்தாலும், பார்க்காவிட்டாலும் அவரது உயிரிலிருந்து நன்மையான அலை வீசிக் கொண்டே இருக்கும்.

https://www.youtube.com/watch?v=Jzk82Dk7mo0

uvausan
3rd October 2015, 10:37 PM
இது ஒரு உண்மை சம்பவம்.

1892 ஆம் ஆண்டு. அமெரிக்காவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவன் அவன். அவனுக்கு உற்றார் உறவினர் எவரும் இல்லை. தன்னுடைய படிப்பிற்கான கட்டணத்தை கட்ட கூட அவனுக்கு வசதியில்லை. அவனும் அவன் நெருங்கிய நண்பன் ஒருவனும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வருகிறார்கள்.

பிரபல இசைக் கலைஞர் ஒருவரை வைத்து கல்லூரியில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் இவர்கள் படிப்பிற்கு தேவையான நிதியை திரட்டுவது என்று முடிவானது. அதற்காக அந்த சமயத்தில் அமெரிக்காவிலும் ஏன் உலகம் முழுதும் உலகப் புகழ் பெற்று விளங்கிய போலந்து நாட்டை சேர்ந்த பியானோ இசைக்கலைஞர் இக்னேஸி ஜே.பேட்ரெவ்ஸ்கியை சந்தித்து தேதி கேட்டார்கள். அவரது மேனேஜரோ “சார் வருவார்…. ஆனால் நீங்கள் அவருக்கு $2000 தரவேண்டும்” என்று கூற, இவர்களும் சந்தோஷமாக ஒப்புக்கொள்கிறார்கள்.

பேட்ரெவ்ஸ்கி வருவதாக சொன்னதே மிகப் பெரிய வெற்றி என்பதால் இவர்கள் அந்த நிகழ்ச்சியை சூப்பர் ஹிட்டாக்க முடிவு செய்து அல்லும் பகலுமாக நிகழ்ச்சிக்காக திட்டமிட்டு உழைக்கிறார்கள்.

நிகழ்ச்சிக்கான அந்த நாளும் வந்தது. அந்த நாளில் எதிர்பாராதவிதமாக நகரில் வேறு சில முக்கிய நிகழ்வுகள் இருந்தபடியால் எதிர்பார்த்தபடி டிக்கெட்டுகள் விற்பனையாகவில்லை. ஆகையால் அரங்கம் நிரம்பவில்லை. அரும்பாடுபட்டு விழாவை ஏற்பாடு செய்த இவர்களுக்கு எப்படி இருக்கும்? மனதை திடப்படுத்திக்கொண்டு பேட்ரெவ்ஸ்கியை சந்தித்து நடந்ததை கூறி, நிகழ்ச்சியை ரத்து செய்து விடலாம் என்கிறார்கள். ஆனால் பேட்ரெவ்ஸ்கி மறுத்துவிடுகிறார். “நான் திட்டமிட்டபடி நடத்தியே தீருவேன்” என்கிறார்.

ஒரு வழியாக நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவரை சந்திக்கும் மாணவர்கள் அவரிடம் $1600 கொடுத்து, “இது தான் மொத்தம் வசூலான தொகை. மீதியுள்ள தொகைக்கு முன் தேதியிட்டு செக் கொடுத்துவிடுகிறோம். கூடிய சீக்கிரம் அந்த கணக்கில் பணம் செலுத்திவிடுகிறோம். பெரிய மனதுடன் வாங்கிக்கொள்ளுங்கள்” என்று கூறி கெஞ்சியபடி அவரிடம் பணத்தையும் காசோலையையும் கொடுக்க, அதை வாங்கி காசோலையை கிழித்துப் போடும் பேட்ரெவ்ஸ்கி அவர்கள் கொடுத்த தொகையை அவர்களிடமே கொடுத்து “நீங்கள் எனக்கு தரவேண்டிய கட்டணத்தை தரவேண்டாம். அதை தள்ளுபடி செய்கிறேன். இந்த பணத்தை வைத்துக்கொண்டு உங்கள் படிப்புக்கான கட்டணத்தை கட்டுங்கள்”. என்கிறார்.

அவர்கள் கண்கள் கலங்கியபடி அவருக்கு நன்றி கூறுகின்றனர்.

நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு வாடகை கொடுக்க கூட வசதியின்றி அந்த மாணவர்கள் சிரமப்படுவதை அறிந்துகொள்ளும் பேட்ரெவ்ஸ்கி அந்த தொகையையும் இறுதியில் தானே செலுத்திவிடுகிறார்.

பேட்ரெவ்ஸ்கி மிகப் பெரிய செல்வந்தர். அவரை பொறுத்தவரை அது சாதாரண தொகை தான். ஆனால் அவருக்குள் இருந்த மனிதாபிமானத்தை அந்த சம்பவம் உணர்த்தியது.

யாரோ முன் பின் தெரியாத இரு மாணவர்களிடம் ஏன் பேட்ரெவ்ஸ்கி இப்படி நடந்துகொள்ளவேண்டும்? அதனால் அவருக்கு என்ன லாபம்?

“எரியும் வீட்டில் பிடிங்கிய வரை லாபம் என்று கருதுவது தானே புத்திசாலித்தனம். நாம விட்டுக்கொடுத்தாலோ இல்லை உதவி பண்ணினாலோ அதுனால நமக்கு என்ன லாபம்?” இப்படித் தான் பெரும்பாலானோர் நினைப்பார்கள்.

ஆனால் பேட்ரெவ்ஸ்கி, “நான் உதவாவிட்டால் இவர்களுக்கு வேறு யார் உதவுவார்கள்? இவர்களுக்கு உதவுவதால் நாமொன்றும் குறைந்துபோகப்போவதில்லை…” என்று கருதியே அந்த உதவியை செய்தார்.

ஆண்டுகள் உருண்டன.

பேட்ரெவ்ஸ்கி காலப்போக்கில் மேலும் புகழின் உச்சிக்கு சென்று ஒரு கட்டத்தில் போலந்து நாட்டின் பிரதம மந்திரியாகவே ஆகிவிட்டார். மிகப் பெரும் தலைவராக விளங்கி நல்லாட்சி நடத்தி வந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக முதல் உலகப் போர் துவங்கிய காலகட்டம் அது. போலந்து நாடு போரின் பிடியில் சிக்கி சின்னாபின்னமானது. போர் முடிவுக்கு வரும் தருவாயில் மக்கள் அனைத்தையும் இழந்து வறுமையில் உழன்றனர். எங்கும் பஞ்சம் தலைவிரித்தாடியது. இது 1918 ஆம் ஆண்டு.

எப்படி நிலைமையை சமாளிப்பது? பசியோடிருக்கும் தன் லட்சக்கணக்கான மக்களுக்காக யாரிடம் போய் உதவி கேட்பது? கலங்கித் தவிக்கிறார் பேட்ரெவ்ஸ்கி. கடைசியில் அமெரிக்காவின் ஆபத்துக்கால உதவிக் குழு அராவை அணுகுகிறார். (American Relief Administration ARA). அதன் தலைவராக இருந்தவர் ஹெர்பெர்ட் ஹூவர் என்பவர். (இவர் பின்னாளில் அமெரிக்காவின் 31 வது ஜனாதிபதியானார்.)

பேட்ரெவ்ஸ்கி கேட்டுக்கொண்டதையடுத்து அமெரிக்காவின் உதவிக்கரம் போலந்துக்கு நீள அடுத்த சில நாட்களில் அமெரிக்காவிலிருந்து போலந்து நாட்டிற்கு ஆயிரக்கணக்கான டன்கள் உணவு தானியங்கள் மற்றும் மளிகை பொருட்கள் அனுப்பப்பட்டன. அதன் மூலம் சுமார் 1.5 மில்லியன் போலந்து மக்கள் பசியாறினர்.

ஒரு பேரழிவு மற்றும் பஞ்சத்திலிருந்து போலந்து மக்கள் தப்பினர். பேட்ரெவ்ஸ்கி நிம்மதி பெருமூச்சுவிட்டார். தான் கேட்டவுடன் தன் மக்களுக்கு உணவு பொருட்களை டன் கணக்கில் அனுப்பி அவர்களை பட்டினி சாவிலிருந்து காப்பாற்றிய அமெரிக்காவின் ஆபத்துக்கால உதவிக் குழுவின் (American Relief Administration) தலைவரை நேரில் சந்தித்து நன்றி சொல்ல விரும்பினார் பேட்ரெவ்ஸ்கி.

ஹெர்பெர்ட் ஹூவரை நேரில் சந்தித்து கண்கள் பனிக்க நன்றி தெரிவிக்கிறார்.

“நோ… நோ… மிஸ்டர் ப்ரைம் மினிஸ்டர். நீங்கள் நன்றி சொல்லக்கூடாது. நீங்கள் செய்த உதவியை தான் நான் உங்களுக்கு திருப்பி செய்தேன். உங்களுக்கு நினைவிருக்கிறதா? 25 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே கல்லூரி மாணவர்கள் இருவருக்கு அவர்கள் ஃபீஸ் கட்ட உங்கள் நிகழ்ச்சியை இலவசமாக நடத்திக்கொடுத்து உதவினீர்கள் அல்லவா?அந்த மாணவர்களில் ஒருவன் தான் நான்” என்கிறார் ஹெர்பெர்ட் ஹூவர்.

பேட்ரெவ்ஸ்கி கண்கள் கலங்கியபடி அவரை அணைத்துக்கொள்கிறார்.

காலம் எப்போது யாரை எங்கு வைக்கும் என்று ஒருவராலும் கூற முடியாது.

இத்தோடு முடியவில்லை ஹூவரின் நன்றிக்கடன். இரண்டாம் உலகப் போர் முடிந்த தருவாயில் (1946) போலந்துக்கு உதவுவதற்கு என்றே ஒரு தனி கமிஷன் ஹூவர் தலைமையில் அமைக்கப்பட்டது. அதன் சார்பாக போலந்துக்கு நேரில் சென்ற ஹெர்பர்ட் ஹூவர், அந்நாட்டிற்கு அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு தேவையான உணவுத் திட்டங்களை வகுத்துக்கொடுத்துவிட்டு அவற்றிற்கான அமெரிக்க அரசின் உதவிகளையும் ஏற்பாடு செய்துவிட்டு வந்தார். இதன் காரணமாக போலந்து நாட்டின் நாடாளுமன்றத்தில் ஹெர்பெர்ட் ஹூவரை புகழ்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவருக்கு போலந்து நாட்டு பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டங்கள் வழங்கின. போலந்து மக்கள் மனதில் ஒரு ஹீரோவாக வாழ்ந்து வந்தார் ஹெர்பெர்ட் ஹூவர்.

அதுமட்டுமல்லாமல் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் UNICEF & CARE என்று இரண்டு புதிய சர்வதேச தொண்டு அமைப்புக்களை ஹூவர் ஏற்படுத்தினார். அதன் மூலம் உலக முழுதும் பல லட்சம் மக்கள் இன்றும் பசியாறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனிப்பட்ட ஒருவருக்கு செய்த உதவி, எப்படி ஒரு நாட்டிற்கே பன் மடங்கு திரும்ப கிடைத்தது பார்த்தீர்களா?

அதனால் தான் நம் பாரதி, ‘தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று பாடினான். அவன் தீர்க்கதரிசி.

இந்த சம்பவம் உணர்த்தும் நீதி ஒன்றா! இரண்டா!

* ஒருவருக்கு உதவி செய்வதன் மூலம் உண்மையில் நீங்கள் உங்களுக்கு உதவி செய்துகொள்கிறீர்கள்.

* நீங்கள் எதை விதைத்தாலும் அதை பன்மடங்கு அறுவடை செய்வீர்கள்.

* அன்னயாவினும் புண்ணியங்கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்.

* காரணமின்றி காரியங்கள் நடப்பதில்லை.

* எந்த தீமைக்குள்ளும் ஒரு நன்மை இருக்கும்.

* எல்லாம் நன்மைக்கே

* விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை; கெட்டுப்போகிறவர் விட்டுக்கொடுப்பதில்லை

* தர்மோ ரஷதி. ரஷித.....
தர்மத்தை நீங்கள் காப்பாற்றினால் அது உங்களை காப்பாற்றும்.

அதுமட்டுமல்லாமல் நான் இதுவரை அளித்த பதிவுகளில் அதிகபட்ச திருக்குறள்களை தன்னகத்தே கொண்டது இந்த பதிவு தான். அதாவது இந்த ஒரு பதிவிலேயே பல திருக்குறள்கள் புதைந்திருப்பதை காணலாம்.

சாம்பிளுக்கு சில குறள்களை மட்டும் தந்திருக்கிறேன்.

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது (குறள் 102)

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது. (குறள் 103)

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார். (குறள் 104)

எனவே அடுத்த முறை, இக்கட்டில் சிக்கித் தவிக்கும் எவருக்கேனும்
நீங்கள் உதவ நேர்ந்தால், உண்மையில் நீங்கள் உங்களுக்கு உதவிக் கொள்கிறீர்கள் என்று நினைத்துக்கொள்ளுங்கள்.

இந்த உலகில் நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதை பன்மடங்கு அறுவடை செய்வீர்கள்.

ஏனெனில்…… விதைத்தவன் உறங்கினாலும், ஏன் அந்த படைத்தவனே உறங்கினாலும் விதைகள் ஒரு போதும் உறங்குவதில்லை! பலன் கருதாமல் பேட்ரெவ்ஸ்கி செய்த உதவி இது. ஆனால் காலத்தினால் செய்த உதவியாயிற்றே…..காலம் குறித்து வைத்துகொண்டது.

https://www.youtube.com/watch?v=LU-ROrm-iR8

uvausan
3rd October 2015, 10:44 PM
மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்.

இரண்யனைக் கொல்வதற்காக நரசிம்மர் தூணில் இருந்து வெளிப்பட்டார். அதிபயங்கர உருவம். சிங்க முகம்...மனித உடல்...இதுவரை பார்க்காத வித்தியாசமான அமைப்பு. இதைப் பார்த்தார்களோ இல்லையோ...இரண்யனின் பணியாட்கள் தங்கள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு ஓடிவிட்டனர்.

தனிமையில் நின்ற இரண்யனை மகாவிஷ்ணு அப்படியே தூக்கி மடியில் வைத்தார். குடலைப் பிடுங்கி மாலையாகப் போட்டார். இதைக் கண்டு வானவர்களே நடுங்கினர். அவர்கள் நரசிம்மரைத் துதித்து சாந்தியாகும்படி வேண்டினர். பயனில்லை. மகாலட்சுமி கூட அவர் அருகில் செல்ல பயந்தாள்.

""என் கணவரை இப்படி ஒரு கோலத்தில் நான் பார்த்ததே இல்லை. முதலில் யாரையாவது அனுப்பி அவரை சாந்தமாக்குங்கள், பிறகு நான் அருகில் செல்கிறேன்,'' என்றாள்.

அவர் அருகில் செல்லும் தகுதி, பக்தனான பிரகலாதனுக்கு மட்டுமே இருந்தது. தேவர்கள் அவனை நரசிம்மர் அருகில் அனுப்பினர். பிரகலாதன் நரசிம்மரைக் கண்டு கலங்கவில்லை. அவனுக்காகத்தானே அவர் அங்கு வந்திருக்கிறார்!

தன்னருகே வந்த பிரகலாதனை நரசிம்மர் அள்ளி எடுத்தார். மடியில் வைத்து நாக்கால் நக்கினார்.

""பிரகலாதா! என்னை மன்னிப்பாயா?'' என்றார்.

அவனுக்கு தூக்கி வாரிபோட்டது.

""சுவாமி! தாங்கள் ஏன் இவ்வளவு பெரிய வார்த்தையைச் சொல்லுகிறீர்கள்?'' என்றான்.

""உன்னை நான் அதிகமாகவே சோதித்து விட்டேன். சிறுவனான நீ, என் மீது கொண்ட பக்தியில் உறுதியாய் நிற்பதற்காக பல கஷ்டங்களை அனுபவித்து விட்டாய். உன்னைக் காப்பாற்ற மிகவும் தாமதமாக வந்திருக்கிறேன். அதற்காகத்தான் மன்னிப்பு,'' என்றார்.
இதைக்கேட்டு பிரகலாதனுக்கு கண்ணீர் வந்துவிட்டது.
""மகனே! என்னிடம் ஏதாவது வரம் கேள்,'' என்ற நரசிம்மரிடம், பிரகலாதன்,""ஐயனே! ஆசைகள் என் மனதில் தோன்றவே கூடாது,'' என்றான்.

பணம் வேண்டும், பொருள் வேண்டும் என அந்த மன்னாதி மன்னன் கேட்டிருக்கலாம். ஆனால், ஆசை வேண்டாம் என்றான் பிரகலாதன்.
குருகுலத்தில் அவன் கற்றது சம்பாதிக்க அல்ல! பண்பாட்டை வளர்த்துக் கொள்வதற்கு! பிரகலாதனின் இந்தப் பேச்சு நரசிம்மரின் மனதை உருக்கிவிட்டது. பகவானைக் கண்டு பக்தன் தான் உருகுவான். இங்கோ கோபமாய் வந்து, வேகமாய் இரண்யனின் உயிரெடுத்த பகவான் பக்தனைக் கண்டு உருகி சாந்தமாகிப் போனான் நரசிம்மப் பெருமான்.

""இந்த சின்ன வயதில் எவ்வளவு நல்ல மனது! ஆசை வேண்டாம் என்கிறானே!'' ஆனாலும், அவர் விடவில்லை. விடாமல் அவனைக் கெஞ்சினார், ""இல்லையில்லை! ஏதாவது நீ கேட்டுத்தான் ஆக வேண்டும்,''.

பகவானே இப்படி சொல்கிறார் என்றால், "தன் மனதில் ஏதோ ஆசை இருக்கத்தான் வேண்டும்' என்று முடிவெடுத்த பிரகலாதன், ""இறைவா! என் தந்தை உங்களை நிந்தித்து விட்டார். அதற்காக அவரைத் தண்டித்து விடாதீர்கள். அவருக்கு வைகுண்டம் அளியுங்கள்,'' என்றான்.

நரசிம்மர் அவனிடம்,""பிரகலாதா! உன் தந்தை மட்டுமல்ல! உன்னைப் போல நல்ல பிள்ளைகளைப் பெற்ற தந்தையர் தவறே செய்தாலும், அவர்கள் பரமபதத்திற்கு வந்துவிடுவார்கள். அவர்களின் 21 தலைமுறையினரும் புனிதமடைவர்,'' என்றார்.

நல்ல பிள்ளைகள் அமைந்தால் பெற்றவர்களுக்கு மட்டுமில்லை. அவர்களது வருங்கால சந்ததிக்கும் நல்லது.

https://www.youtube.com/watch?v=SNePlhFN5hw

vasudevan31355
3rd October 2015, 11:06 PM
ரவி சார்!

வருக! வருக!

சற்று இடைவெளிக்குப் பின் வரும் உங்களை வருக! வருக! என வரவேற்கிறேன். வழக்கம் போல தங்கள் முத்திரையுடன் கூடிய அருமையான நீதிகளை சொல்லும் பதிவுகள் பாடல்களோடு என்று நீங்கள் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியிருப்பது மிகுந்த சந்தோஷம் அளிக்கிறது. பதிவுகளைப் படித்து விட்டு பின்னர் எழுதுகிறேன். அசத்துங்கள்.

rajeshkrv
4th October 2015, 05:14 AM
இசையரசி இசைத்த கீதங்கள் – 4
டாக்டர் சக்ரவர்த்தி .. மிக அருமையான படம்.
கீதாஞ்சலி நாகேஸ்வர ராவின் தங்கை. அவர் இறந்துவிட , அது போல பாடும் சாவித்திரியை தன் தங்கை போல் பாவிக்க ஆனால் அவள் கணவனுக்கும்(ஜெக்கய்யா) , இவர் மனைவிக்கும்(செளகார் ஜானகி)க்கும் சந்தேகம் எழ அப்படி போகிறது கதை.

கீதாஞ்சலிக்கு மிகவும் புகழ் சேர்த்த பாடல் இது. இசையரசியின் குரலை பற்றி சொல்லவும் வேண்டுமோ

பாடமனி நன்னடகவலெனா பாடனா…. ராஜேஸ்வரராவ் அவர்களின் இசையில் கானசரஸ்வதியின் சாரீரத்தில்
அற்புத பாடல் இதோ…
https://www.youtube.com/watch?v=mW3hm68v0us

rajeshkrv
4th October 2015, 05:18 AM
ரவி ஜி. உங்களை மீண்டும் பார்த்ததில் உள்ளம் கொள்ளை போகுதே உன்னை கண்டதால்
வருக வருக. அருமையான பதிவுகளை தருக தருக


ஜி. கொஞ்சம் வெளியூர் சென்றிருந்தேன் இப்பொழுது வந்துவிட்டேன் ..
தொடர்கள் இனி இனிதே தொடரும்.

இந்த வருடன் காந்தி ஜெயந்தியன்று ராஜ்காட்டில் இசையரசி பஜன் பாடினார்.
https://scontent-lga3-1.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/11219712_10207668720186740_5223294085135695580_n.j pg?oh=a141874f77a7283a59556b812fdf24a2&oe=56A51569

https://scontent-lga3-1.xx.fbcdn.net/hphotos-xat1/v/t1.0-9/12096544_10207669765532873_7180004857786140324_n.j pg?oh=2fd43e59c8ef198446e598145d667c8c&oe=56D2C2D1

https://scontent-lga3-1.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/12036846_10207668724306843_8970571102363802492_n.j pg?oh=913211b86323d38a1157622c6dff1d99&oe=5690B3B7

eehaiupehazij
4th October 2015, 07:39 AM
Hai friends!

From GG Island with Love!

The indisputable King of Romance GG's PBS songs and Karaoke!!

ஜெமினியின் குரலார் பி பி ஸ்ரீநிவாஸ்

பாடல் 9

கண்படுமே பிறர் கண்படுமே நீ வெளியே வரலாமா
உன் கட்டழகான மேனியில் ஊரார் .....காத்திருந்த கண்கள்

ஒரு பெரிய கார் ஒரு சிறிய சைக்கிளிடம் கவிழ்ந்த கதை பாடலாக !


காரோட்டும் சாவித்திரியின் பின்னாலேயே சைக்கிளை எடுத்துக் கொண்டு துரத்தி துரத்தி கூடை ஐஸை அவர் தலையில் கோன் ஐஸாகக் கவிழ்த்து பிகர் மடிக்கிறார் காதல் மன்னர் !
அந்த லூசுப் பொண்ணும் கார் கண்ணாடி வழியே பெருமையாக லுக் விட்டுக் கொண்டே மன்னரின் காதல்வலையில் சிக்கிக் கொள்கிறார் !



https://www.youtube.com/watch?v=T9LIXZIZ--Q

A karaoke!

https://www.youtube.com/watch?v=WV5d-q9NO9M

அட நம்ம ரஜினிகூட காதல் மன்னரின் இப்பாடலுக்கு ரீமிக்ஸ் அடிக்கிறாரே! என்ன படமோ?!

[url]https://www.youtube.com/watch?v=JsQ8D-g6PSs

For more tour to GG island...welcome!

vasudevan31355
4th October 2015, 07:48 AM
சிவாஜி செந்தில் சார்

வாங்க. வாங்க. நீங்க இல்லாம என்னவோ போல இருக்கு.

ஆமா! காலையிலே வரும் போதே காதல் பாடலா? அதுவும் காதல் மன்னன் பாடல்.

கண் படுமே! கண் படுமே!

vasudevan31355
4th October 2015, 07:49 AM
ஜி

'டாக்டர் சக்ரவர்த்தி' பாடல் அமர்க்களம். பஜன் பாடும் இசையரசி படமும் சூப்பர்.

eehaiupehazij
4th October 2015, 09:46 AM
Gap filler

Ghost Beauties ! / அழகுப் பேய்கள் ..கற்பகம் விஜயா முதல் மாயா நயன்தாரா வரை !


பேயாக வந்தாலும் பெண்ணென்றால் அழகுப் பேயே !
பெண்ணென்றால் பேயும் இரங்குமாமே அந்தப் பெண்ணே பேயாகி மேகங்கள் மேலே ஏறி இறங்கி வருவதெல்லாம் நமக்குத்தான் சாத்தியம் !

ஒரு வசதிக்காக காதல் மன்னர் இறந்து போன மனைவி பேயாக வெள்ளாடையில் வந்து தன்னை இன்னொரு கல்யாணம் பண்ணிக்கொள்ள வற்புறுத்தியதாக கதை பண்ணி சாவித்திரியை இரண்டாம் கல்யாணம் பண்ணினாலும் பண்ணினார் ....
அவரையே ரோல் மாடலாக வைத்துக் கொண்டு ரவியும் அசோகனும் பெண் பேய்களுடன் குலாவும் கற்பனை வளம் மிக்க காட்சிகளும் ...

https://www.youtube.com/watch?v=1nn_QDc8hsI

Ravichandran too caught by the same ghost!

https://www.youtube.com/watch?v=6ZByhP1ebCQ

two ghosts at a time!!

https://www.youtube.com/watch?v=scDfbr5pAA0

uvausan
4th October 2015, 10:06 AM
வாசு , ராஜேஷ் மிக்க நன்றி . ஏனோ தெரியவில்லை இந்த திரி பிறந்த வீட்டுத்திரி போல் ஆகிவிட்டது , வெளிநடப்பு செய்தாலும் அதிகமாகத் தாக்கு பிடிக்கமுடியவில்லை - இதற்கு இங்கு இருக்கும் நட்பின் அருமை என்பதா ? பாசத்தின் பிடிப்பு என்பதா ? புரியவில்லை ...

uvausan
4th October 2015, 10:07 AM
செந்தில் சார் , நீங்களும் வாசுவும் என்ற தலைப்பில் உங்கள் சந்திப்பைப்பற்றி நீண்ட தொடர் உங்களிடம் இருந்து வரும் என்று எதிர்ப்பார்த்தேன் . சற்று ஏமாற்றமே !!

uvausan
4th October 2015, 10:07 AM
சமீபத்தில் திரு ஆதவன் ரவி அவர்களின் கவிதையில் இப்படி குறிப்பிட்டிருந்தார் ....

" ஒரு குதிரையின் மீது சிங்கம் சவாரி பண்ணுவதை அனைவரும் வியப்புடன் பார்த்தார்கள் என்று "

இந்த நினைப்புடன் " புலியை " சந்திக்க நண்பர்களுடன் சென்றேன் . பார்த்த பிறகு , இப்படித்தான் எழுத தோன்றுகிறது .

" நாங்கள் பார்க்கப்போனதோ "புலி"
அங்கே காத்திருந்ததோ ஒரு "குழி "
இது விதி செய்த "சதி "
மொத்தத்தில் நாங்கள் எல்லாம் "பலி " .

eehaiupehazij
4th October 2015, 04:49 PM
பூனைக்கும் புலிக்கும் வித்தியாசமுண்டு...எலி பெருச்சாளி பன்றி நீர் யானை மற்றும் யானை வித்தியாசமுண்டு....மனிதனுக்கும் குரங்குக்கும் கரடிக்கும் வித்தியாசமுண்டு ......

ஆவி, பேய், பிசாசு ,பூதம், குட்டிசாத்தான், வேதாளம் ...இவற்றை எப்படிப் பகுத்தறிவது?
அவற்றால் எப்படி மதுர கானங்கள் பாட முடியும் ?


திகில் பாண்டிகள் / குறுந்தொடர்

பகுதி 1 ஆவி
(ஆத்மா விடைபெறுதலே சுருக்கமாக ஆவி என்று அழைக்கப் படுகிறது !)

காயமே இது பொய்யடா காற்றடைத்த பையடா...இந்தக் காற்று ஆத்மாவாக உடலில் தங்கியிருந்து உடல் உயிரற்றதானதும் ஆவியாகப் பிரிகிறது!

ஆவி புகை போன்று எந்த உருவமாகவும் ஷேப்பை மாற்றிக் கொள்ளும்; நடக்காது ஆனால் மிதக்கும் பறக்கும் பரவும்! கால்கள் கிடையாது!! முகம் போன்ற முகமூடிக் குழிக்குள் ஞானக்கண் கொண்டு எல்லோரையும் பார்க்கும்! டெர்மிநேடர் 2 வில்லன் மாதிரி எல்லாப் பொருள்களையும் ஊடுருவ வல்லது!!

குமுதம் படத்தில் அய்யா தெரியாதையா ராமாராவ் இந்தக் கால சிம்ரனுக்கே முன்னோடியாக இடுப்பாட்டி டான்ஸ் ஆடுவதையும் பதிலுக்கு சரக்கடிப்பது பற்றி எம் ஆர் ராதா குதித்தாடிப் பாடுவதையும் ஆவியுடன் சம்பந்தப் படுத்த இயலவில்லை ! ஆனால் சரக்கடித்தவர் கால்கள் பூமியில் பதியாமல் ஆவி போல தள்ளாடுவர்!

சரக்கு உள்ளே போனால் ஆவிக்கும் கேடே !
கள்ளச்சரக்கு உள்ளே போனால் உடலை விட்டு ஆவி பிரிந்து விடும் !!


https://www.youtube.com/watch?v=ii3PyQmRPW0

https://www.youtube.com/watch?v=P2bAYgz96GE

Ghostbusters!

[url]https://www.youtube.com/watch?v=OiC5_qROyMw

eehaiupehazij
4th October 2015, 05:04 PM
செந்தில் சார் , நீங்களும் வாசுவும் என்ற தலைப்பில் உங்கள் சந்திப்பைப்பற்றி நீண்ட தொடர் உங்களிடம் இருந்து வரும் என்று எதிர்ப்பார்த்தேன் . சற்று ஏமாற்றமே !!

ரவிஜி

திகில்பாண்டிகள் தொடர் முடிந்த பிறகு...நீங்களெல்லாம் நடுநிசியிலும் நிம்மதியாக தூங்கும் நிலைக்கு திரும்பும் போது.....நானும் வாசுவும்நெடுந்தொடர் ஆ'ரம்பமாகும்' !!

Russellxor
4th October 2015, 06:01 PM
பாட்டிலும் தேன்
குரலிலும் தேன்
கேட்பதிலும் தேன்.

அன்பு எனும் நல்ல தேன் கலந்து இங்கு நான் கொடுத்தேன் இந்த நல்விருந்து
இந்த மன்னனைத் தேடிய பாவை ஒரு மாடி வீட்டு ஏழை

அறுசுவை அன்னம் அரண்மனை வாசம் நீ இல்லை என்றால் யார் கேட்டது
ஒரு பிடி சோறு ஒரு முழ ஆடை உன் கைகள் தந்தால் பொன் போன்றது
உன் கைகள் தந்தால் பொன் போன்றது
(அன்பு)


கூந்தலில் போவும் குங்குமச் சாந்தும் நீங்காத செல்வம் நீ தந்தது
குறு நகை என்னும் ஒரு நகை போதும் ஆனந்த வெள்ளம் நான் கண்டது ஆனந்த வெள்ளம் நான் கண்டது (அன்பு)

கடல் வழி செல்லும் படகுகள் ரெண்டும் காலங்கள் வந்தால் கரையேறலாம்
இலையுதிர் காலம் ஒரு சில மாதம் இளவேனில் பின்னால் எதிர்பார்க்கலாம்
இளவேனில் பின்னால் எதிர்பார்க்கலாம்
(அன்பு)
படம் : மாடி வீட்டு ஏழை
குரல் : P சுசீலா
இசை : எம்.எஸ்.வி. நடிகை : சுஜாதா

Russellxor
4th October 2015, 08:42 PM
கேட்கத் திகட்டாத கானம் ஒன்று
Odam kadal odum - YouTube: http://youtu.be/jZo1MC5BczM

vasudevan31355
4th October 2015, 09:28 PM
சரக்கு உள்ளே போனால் ஆவிக்கும் கேடே !
கள்ளச்சரக்கு உள்ளே போனால் உடலை விட்டு ஆவி பிரிந்து விடும் !!

:):):):):)

vasudevan31355
4th October 2015, 09:30 PM
//நெடுந்தொடர் ஆ'ரம்பமாகும்' !! //

நெடுந்தொடர் 'ரம்'மாகும்' !!:)

vasudevan31355
4th October 2015, 09:45 PM
செந்தில் சார்,

இந்த காலுள்ள பேய் பயமுறுத்துவதைப் பாருங்கள். தேங்காய், நாகேஷ், மாலி, ரவி, மூர்த்தி குரூப் குலை நடுங்க

'கால்களில் சலங்கை
வெண்ணிற ஆடை
குலுங்கிட வந்தேன் நாதா'

என்று இது நாதப் பேய். ரமாபிர'பேய்'.


http://www.dailymotion.com/video/x15yozb_thenaatramkaraiyinil-utharavindri-ulle-vaa-1971_shortfilms

rajraj
4th October 2015, 10:54 PM
From Manampol mangalyam(1953)

maappiLLai doi maaappiLLai doi maNiyaana madharasu maappiLLai doi........

http://www.youtube.com/watch?v=lLj6RmmRQ8A



assignment for chinnakkaNNan: Write a similar song for 'America maappiLLai' or 'Muscat'u maappiLLai ! :)

uvausan
5th October 2015, 06:22 AM
அனைவருக்கும் காலை வணக்கம்

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/MAAYAM_zpsqo0sh6h6.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/MAAYAM_zpsqo0sh6h6.jpg.html)

uvausan
5th October 2015, 06:25 AM
பழமொழிகளும் அவைகளின் உண்மை வடிவமும் :

கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் இருந்து தோன்றிய பல பழமொழிகள் இன்னும் நம் புழக்கத்தில் உள்ளன . ஆனால் அவைகளில் பல உண்மை வடிவத்தை இழந்து வேறு வகையில் திரிக்கப்பட்டு இன்று நம் உபயோகத்தில் உள்ளன . சில பழமொழிகள் திரிக்கப்பட்டதால் , பலரின் வாழ்க்கையிலும் மீலாத துன்பங்களையும் விதைத்திருக்கின்றன . இங்கு சில பழமொழிகளை ஒரு சிறிய அலசலக்காக எடுத்துக்கொண்டுள்ளேன் .

பதிவு 1

"ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்."

இது ஒரு பழமொழி என்பது நம்மில் பலருக்கும் தெரியும். ஆனால் இது ஒரு மருத்துவக் குறிப்பு. இதனின் ௨ட்பொருள் ஆனையைப் பிாித்தால் ஆ + நெய். அதாவது ' ஆ ' என்பதற்கு பசு என்று பொருள் ௨ண்டு. அதாவது பசுவின் நெய் என்று பொருள் கொள்ள வேண்டும். பசு நெய்யை நாற்பது வயது வரை தாராளமாக ௨ணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நாற்பது வயதுக்குமேல் பசுவின் நெய்யை படிப்படியாக குறைத்துக் கொள்ள வேண்டும். நெய்யை குறைக்காமல் சாப்பிட்டு வந்தால் கொழுப்பு சத்து ௨டலில் சேர்ந்து மாரடைப்பு வர வாய்ப்பு அதிகம் உள்ளது.


பூனைக்கு என்பதை பூ + நெய் என்று பிாித்துப் பார்க்கும்போது, பூவில் இருந்து எடுக்கக்கூடிய தேனுக்கும் ஒரு காலம் வரும். அதாவது நாற்பது வயதுக்குமேல் நெய்யை சுருக்கி தேனை ௯டுதலாக சாப்பிட வேண்டும் என்பதன் பொருளாகும். தேன் எளிதில் ஜீரணமாகும் ௨ணவு மற்றும் மருத்துவ குணம் நிறைந்ததாகும்.

பழமொழியின் பொருள் நாற்பது வயது வரை பசும் நெய்யையும், நாற்பது வயதுக்குமேல் தேனையும் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம். ஆயுளும் வளரும்

https://www.youtube.com/watch?v=uPJC_T-iEAA

uvausan
5th October 2015, 06:26 AM
பழமொழிகளும் அவைகளின் உண்மை வடிவமும் :

பதிவு 2

"கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை "

சங்க காலத்தில் நம் முன்னோர்கள் படுக்க பாய் மட்டுமே பயன்படுத்தினார்கள்.

அந்த பாய் புல்லுகொண்டு தயாரிக்கப்பட்டதாகும். அந்த புல்லு கற்பூரபுல், கோரைப்புல் என இரு வகைப்படும். கோரைபுல்லுக்கு கழு என்று வேறு ஒருபெயர் உண்டு. கற்பூரபுல்லு கொண்டு தயாரிக்கப்படும் பாயில் கற்பூர வாசனை வரும். கற்பூர பாயின் விலை அதிகம் பெரிய செல்வந்தர்கள் தான் அதனை பயன்படுத்துவார்கள்.

கோரை புல்லு கொண்டு தயாரிக்கப்படும் பாய் சாதாரணமாக இருக்கும்.இதன் விளையும் குறைவு பாமர மக்கள் பயன்பாட்டிற்கு உதவும். இதனை மனதில் வைத்து வந்த பழமொழிதான் "கழு தைக்க தெரியுமா கற்பூர வாசனை" கழுஎன்றகோரைபுல்லின் பெயருடன் தைக்க என்ற செயலும் இணைந்து 'கழுதைக்க, கழுதைக்க' என்று சொல்லி சொல்லி அவ்வார்த்தை மருவி 'கழுதைக்கு' என்று ஆகிவிட்டது.

அதன்உண்மையான அர்த்தம் "கழு என்ற கோரைபுல்லு கொண்டு செய்யப்படும் பாயில் எப்படி கற்பூர வாசனை வரும்?" என்பது தான்.அது தான் தற்பொழுது மருவி "கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை" என்று ஆகி விட்டது.


https://www.youtube.com/watch?v=bwCAIViReug

uvausan
5th October 2015, 06:29 AM
பழமொழிகளும் அவைகளின் உண்மை வடிவமும் :

பதிவு 3

"ஆண் மூலம் அரசாளும் , பெண் மூலம் நிர்மூலம் "

இந்த பழமொழி திரிக்கப்பட்டு பல பெண்களின் வாழ்வில் குறுக்கிட்டு , அவர்கள் , திருமணம் செய்து கொள்ள முடியாமல் செய்து விடுகிறது . இந்த பழமொழியின் உண்மை வடிவத்தை படித்த பின்பாவது தடைப்பட்ட திருமணங்கள் நல்ல படி நடந்தால் , என்ன விட சந்தோஷப்படுபவன் யாருமே இருக்க முடியாது .

நிர்மூலம் என்பது மூலம் அற்றது என்று ஒரு பொருள் உண்டு . படைப்பு தொடங்கும் போது ஒருவனாக இருந்த பரம்பொருள் தன்னை ஒரு ஆணாகவும் , பெண்ணாகவும் செய்துகொண்டு படைப்புத் தொழிலைத் தொடங்கியது - எதிலிருந்து படைப்பு ஆரம்பித்ததோ அது தாய்மை ஆகிவிடுகிறது, பெண்மையாகி விடுகிறது , ஒன்றை பலவாகத் தரக்கூடிய ஆற்றல் உடையது - அதனால் அது மூலமற்றது . ஆணுக்கு வேண்டுமானாலும் மூலம் இருக்கலாம் . பெண்ணுக்கு மூலம் இல்லை - அது மிகவும் உயர்வானது , போற்றத்தக்கது என்ற பொருள் வருகிறது . மூல நச்சத்திரத்தில் பிறந்த பெண்கள் மிகவும் உன்னதமானவர்கள் , உயர்ந்த ஞானம் உள்ளவர்கள் , அப்படிப்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்பவர்கள் வாழ்வில் என்றுமே நன்றாக இருப்பார்கள் .

https://www.youtube.com/watch?v=2-HUJ9PPqHI

uvausan
5th October 2015, 06:33 AM
பழமொழிகளும் அவைகளின் உண்மை வடிவமும் :

" ஆண்டி பண்டாரம் "

பண்டாரம் என்றால் நிதி என்று அர்த்தம் . காலப்போக்கில் ஆண்டிப்பண்டாரம் என்பது ஒன்றுமே இல்லாதப்பட்டவர்களை வசதி இல்லாதப்பட்டவர்களை , வசதி இல்லாதவர்களைப் "பண்டாரம் " என்று சொல்ல ஆரம்பித்துவிட்டோம் .

உலகத்தில் உள்ள எல்லா சுகங்களையும் துறந்துவிட்டு , எது பெரிய பொக்கிஷமோ அந்தப்பொக்கிஷத்தை அனுபவித்துக்கொண்டிருப்பவர்கள் , இறைவனை அறிந்து அனுபவிப்பவர்கள் என்பதனால் அந்தப்பெயர் வந்தது .

https://www.youtube.com/watch?v=LTwHc4UBbM0

uvausan
5th October 2015, 06:39 AM
தியானம் என்றால் என்ன?

ஒரு சிறுவனுக்கு நெடு நாட்களாய்த் தீராத சந்தேகம். அந்தச் சிறுவனின் பெற்றோருக்கோ சிறுவனுக்குப் புரிந்த மொழியில் சொல்ல முடியாத இயலாமை.

ஒருநாள் மூவரும் ரமண மகரிஷியைச்சந்திக்கச் சென்றிருந்த போது சிறுவன்ரமணரை நெருங்கி, தன் கேள்வியை முன் வைத்தான். சிரித்துக் கொண்டே அந்தச்சிறுவனுக்கு இலையில் ஒரு தோசையைப் பறிமாறச் சொன்னார். சிறுவனிடம், "நான் எப்போ 'ம்' சொல்றேனோ,அப்போ சாப்பிட ஆரம்பிக்கணும். அதே மாதிரி எப்போ 'ம்' சொல்றேனோ அதுக்கப்புறம் இலையில் தோசை இருக்கக் கூடாது. புரிஞ்சுதா?" என்றார் சிரித்துக் கொண்டே.

சிறுவனுக்கு ஒரே உற்சாகம். சுற்றியுள்ளோருக்குக் குழப்பம். மகர்ஷியின் 'ம்' க்காகத் தோசையில் ஒரு கையை வைத்தபடி தவிப்புடன் அவர் முகத்தைப் பார்த்தபடி இருந்தான். சிறுவனைச் சிறிது காக்க வைத்து சற்றைக்குப் பின் 'ம்' சொன்னார் ரமணர்.

அடுத்த சில நிமிஷங்களுக்குள் இரண்டாவது 'ம்' வந்து விடக் கூடாதே என்ற பதைப்புடன் பெரிய பெரிய விள்ளல்களாக எடுத்து அவசர அவசரமாகத் திணித்துக் கொண்டே
மகரிஷியின் முகத்தைக் கவனிப்பதும், தோசையைப் பிய்த்து உண்பதுமாக நேரம் கரைந்தது.

புன்னகை மாறாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாரே ஒழிய 'ம்' சொல்வதாக இல்லை. தோசையோ சிறுத்து ஒரு சிறு விள்ளலாக மாறியிருந்தது இப்போது.

சிறுவனும் அந்த விள்ளலில் கையை வைத்தபடி எப்படா இந்தத் தாத்தா 'ம்' சொல்லுவார் என்று காத்திருந்தான்.

சுற்றியுள்ளவர்களுக்கும் என்னதான் நடக்கப்போகிறது என்றறிய ஆவல்.

எதிர்பாராத ஒரு நொடியில் 'ம்' சொல்லவும் சிறுவன் சடாரென்று கடைசி விள்ளலை வாயில் போட்டுக் கொண்டான்.
"இரண்டு 'ம்' களுக்கு நடுவில் உன் கவனம் எப்படித் தோசை மேலும் என் மேலும் இருந்ததோ, அதே போல் நீ எந்தக் காரியம் செய்தாலும் அடிநாதமாக இறைவன் மேல் கவனம் வைத்திருப்பாயானால் அதன் பேர் தியானம். புரிந்ததா இப்போ?" என்றார்.

மகரிஷி புன்னகைத்தபடி. கதை முடிந்தது.

ரமணர் சொன்ன இரண்டு 'ம்' கள் வாழ்வும், சாவும் எனவும், இடைப்பட்ட காலத்தின் எல்லா நேரமுமே ஒருவன் தியானத்தில் அமிழ வாய்த்திருப்பதைப் புரிந்து கொள்ள முதிரும் காலமே வேறுபடுகிறது .

https://www.youtube.com/watch?v=v81DeOYUiZA

eehaiupehazij
5th October 2015, 08:03 AM
என்ன ரவிஜி
கையிலே வெண்ணையிருக்க நெய்க்கு அலைவானேன் !

Watch from 3 : 45!

https://www.youtube.com/watch?v=rBCWmQ9J-vg

uvausan
5th October 2015, 08:21 AM
செந்தில் சார் , வெண்ணை கையில் இருந்தாலும் , நறுமணமுள்ள நெய் (வேலி ) போல் கிடைக்குமா என்ன ? -இன்று முதல் பதிவே இந்த பாடல் தான் சார் . இவ்வளவு சீக்கிரமாகப்படித்த உங்களுக்கும் , திரு கோபு சாருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

rajeshkrv
5th October 2015, 09:44 AM
அமரர் புகழேந்தியின் இசையில் இசையரசியின் குரலில் முருகன் பாமாலை
இதை விட அழகாக வேறு எவராலும் எந்த கொம்பனாலும் கொம்பியாலும் பாட முடியாது.

https://www.youtube.com/watch?v=y8sTgjKuJDQ

vasudevan31355
5th October 2015, 11:10 AM
'வெள்ளிக்கிண்ணம்தான்... தங்கக் கைகளில்'

http://i.ytimg.com/vi/4BdsKO2Aoac/maxresdefault.jpg

'உயர்ந்த மனிதன்' பிறந்தநாள் சிறப்புப் பாடல்.

நடிகர் திலகத்தின் பிறந்த நாளில் வேலை நிமித்தம் காரணமாக பாடல்கள் அளிக்க இயலவில்லை. இன்று நமது 'இமய'த்தின் இமயம் தொட்ட பாடல் ஒன்றை அளித்து எனது ஆசையை நிறைவேற்றிக் கொள்கிறேன் சுயநலத்தோடு.

நடிகர் திலகத்தின் பாடல்களில் எனக்குப் பிடித்த முதன்மையான காதல் பாடல். காதல் பாடல்களுக்கெல்லாம் தலையாயது. இனிமை...இனிமை...இனிமை. அதைத் தவிர ஒன்றுமே இல்லை. வனப்பும், வாளிப்புமாக வாலிப வடிவழகனாக நடிகர் திலகம். ஒட்டுமொத்த நடிகர் திலக ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற வாணிஸ்ரீ ஜோடி. அப்புறம் என்ன?

'வெள்ளிக் கிண்ணந்தான்
தங்கக் கைகளில்
முத்துப் புன்னகை
அந்தக் கண்களில்'

http://i60.tinypic.com/x3xpgh.jpghttp://i57.tinypic.com/v6m0wy.jpg

வெள்ளிக்கிண்ணத்தை தங்கக் கைகளில் ஏந்தி தங்கமகள் முதல் இரவுக்கு வரும்போது நடிகர் திலகம் சேரில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கும் அழகே அழகு. கழுத்தைக் கவர் செய்யும் அந்த ஜிப்பா அவர் மனதைப் போலவே வெண்மையானது. தூய்மையானது.

வெள்ளிக்கிண்ணம் வாங்கி வைத்து, சுமந்து வந்த கைகளை சுகமாக முத்தமிட்டு, வாணியின் 'வழுவழு' கன்னத்தில் அதைவிட வழுவழுப்பான தன் இதழ்கள் பதித்து, முத்துப் புன்னகையை அவ்விடத்தில் படரவிட்டு, அந்த காந்தக் கண்களாலேயே காதலியின் கண்களை சுட்டிக் காட்டி, அப்படியே மலர்த் தோரணங்கள் அலங்கரித்த கட்டிலுக்குக் வைரச் சிலையை மெதுவாகக் கொண்டு சென்று, அமர வைத்து, அவள் எதிரே கீழ் அமர்ந்து கை பிடித்தவளின் கையை நுனியிலிருந்து மேல்வரை உதடுகள் விரித்து, தொட்டுக் கலந்து, கழுத்தில் முகம் புதைத்து 'இதுதான் சுகம்' என்று அங்கு சொர்க்கத்தைக் காணும் சுகக் கணவன். பார்ப்பவர்களை பரவசப்படுத்தும், கண்ணியக் காதலை வெளிப்படுத்தும் கண்கவர் அழகன்.

மெத்தையில் புரளும் தத்தையின் அருகில் வந்து, கவிழ்ந்து படுத்து, கால்களை நீட்டி மடக்கி குழந்தையாய் ஒரு வினாடி படுக்கையில் தவழ்ந்து, கன்னியின் கன்னத்தோடு கன்னம் வைத்து, அவளுடன் கட்டிலில் காவிய நாயகன் சாய்வது தொட்டிலுக்காகவா?

முதலிரவுக் காட்சியின் போது கணவன் ஸ்தானத்தை விட காதலன்தான் அதிகமாகத் தெரிவான். சற்றே காமத்தை அதிகமாகக் கா(கொ) ட்டுவான். மெல்லிய வேகம் கொண்டு மெல்லிடையாள் மேல் படருவான்.

அப்படியே கொஞ்சம் நாளாகி, தாம்பத்ய அந்நியோன்னியம் அதிகமாக அதிகமாக, நெருக்கத்தின் நாகரீக வெளிப்பாடு பாடலில் கொஞ்சம் கொஞ்சமாகத் மேம்படும். காமம் சற்று குறையும். உல்லாசப் பயணங்களில் உவகை பெருகும். காதல் மேலும் வளரும். சிகை அலங்காரம் கூட கண்ணியமாக மாறி இருக்கும். உடையும், நடையும் கூட.

வெளிப்பயணத்தில் நதியின் குறுக்கே நிற்கும் அந்த போல்ட்டுகள் தைத்த இரும்புப் பாலத்தில் இருவரும் மாறி மாறி அரை வட்டமிட்டு சாய்ந்து சல்லாபம் புரிய, பின் சற்றே 'பாலும் பழமும்' டாக்டரை ஞாபகப்படுத்தும் ஹேர் ஸ்டைலுடன் ப்ளாக் ஸ்வெட்டர் அணிந்து, அந்த மலைபிரதேச சரிவில் பாடலின் இடையிசையில் வாணிஸ்ரீ முன்னால் ஆடிக் கொண்டு ஓட, பின்னால் கைகள் உயர்த்தி ஒரே ஒரு துள்ளலுடன், பின் கைகள் தளர்த்தி மான் போல குதித்து ஓடி வரும் என் இதய தெய்வத்தை கவனியுங்கள்.

படகுத் துறையின் அருகே ஓடி வந்து, வாணியின் கரம் பிடித்து, படகில் நிற்க வைத்து, அவருடைய சித்திர விழிகளின் கீழ் 'மீனோ..மானோ' என்று தன் விரல் கொண்டு தீட்டிக் காட்டி, வாணி படகில் அமர்ந்தவுடன்,

'செவ்விதழ் வடித்ததென்ன பாலோ தேனோ'

என்று பாடியபடி இடது தோள் பட்டையையும், உடலையும் சற்றே சைடு வாங்கி, இடுப்பை லேசாக ஒருக்களித்து ,வளைத்து, அன்னத்தின் அருகே அமர்ந்து, வாணியின் உணர்ச்சிமிகு உதடுகளை தன் விரல்களால் பிடித்து ஒன்று குவிக்க வைத்து, படகில் கைகளை மாற்றி மாற்றி, அழகாகத் துடுப்பு வளித்துக் கொண்டே 'இன்னும் சொல்லவோ... இன்பமல்லவோ' என்று பாவம் காட்டுவதை பத்தாயிரம் தரம் பார்த்தாலும் திருப்தி ஏற்படாது.

('மோகத்தில் துடித்ததென்ன நீயோ நானோ' வரிகளில் கைகளை உள்வாங்கி மாற்றி ஒருதரம் துடுப்பு போடும் அழகைக் கவனியுங்கள்.)

http://i60.tinypic.com/2q9f9s1.jpghttp://i59.tinypic.com/ekjg9e.jpg

கொஞ்சமே கொஞ்சம் முதுகு வளைத்து, உடலை முன்னிறுத்தி பாடும் 'இன்னும் சொல்லவோ... இன்பல்லவோ' வரிகளில் 'சொல்... லவோ' எனும்போது நாக்கை மேலன்னத்தில் சில வினாடிகள் மடித்து வைத்து, பின் ரிலீஸ் செய்து வாயசைத்து, மிக அழகாகத் தலையாட்டி, 'இன்பமல்லவோ' வில் 'வோ' முடிகையில் கழுத்தை லேசாக இடப்புறம் வாங்கி இழுத்தசைப்பது யாரைத்தான் இந்த மனிதரின் மேல் வெறி கொள்ள வைக்காது? ('சொல்....லவோ எனும் போது ஒரே தடவை என் கடவுள் கண் மூடித் திறக்கும் கண் கொள்ளாக் காட்சியும் உண்டு)

முதல் சரணம் முடிந்து ஒரு குயில் 'ஹஹ்ஹஹஹ்ஹஹா' உலகின் ஒட்டுமொத்த இன்பத்தையும் குரலில் வைத்து கூவுமே! அப்போது வரும் இடையிசைக்கு தூரத்தே பனிபடர்ந்த கற்பாறை மலைகளும், பள்ளத்தாக்குகளும் தெரிய, நடிகர் திலகமும், வாணிஸ்ரீயும் போடும் அந்த ஸ்டெப்ஸ். ஆஹா! இருவரும் எதிரெதிர் நடந்தபடியே, இரு கைகளையும் இடுப்பருகே கொஞ்சமாக நீட்டி மாற்றி மாற்றி ஆட, அதே இசை திரும்ப தொடர்கையில் இருவரும் முதுகுப்புறமும், முன்புறமும் தோள்களை இணைத்து, பின் விலக்கி உடலை ஷேக் செய்தபடியே நின்றவாக்கில் ஆடியவாறு திரும்புவது அவ்வளவு எளிதில் திகட்டக் கூடியதா என்ன?

'கட்டுடல் சுமந்த மகள்' பின்னால் கட்டுக் குலையாத கட்டழகன் நடக்கும் பெருந்தன்மையான பேராண்மை நடையழகுதான் என்ன!

இடது இடுப்பில் கைவைத்து, குனிந்தபடி, வாணிஸ்ரீ இல்லாத தனி போஸாக, வலது புற தலைமுடி பம்பையாய் மேலே அழகோவியமாய்த் தூக்கி வாரி சீவப்பட்டு,(கோரைப் புற்கள் மொத்தமாக மேல்நோக்கி வளைந்து காற்றில் பறப்பது போல) 'காலத்தை நில்லென்று சொன்ன மாயம் என்ன?" என்று கண் சிமிட்டி, பளிங்குப் பற்கள் காட்டி, கள்ளமில்லா கணவனாய் களிப்புடன் சிரிப்பது கடவுளைக் கூட மயக்கி விடுமே!

http://i61.tinypic.com/wm1h6w.jpghttp://i57.tinypic.com/znmruq.jpg

'கண் பட்டுக் கலந்து கொண்ட வேகம் என்ன' எனும் போது கணவனின் உரிமை எல்லை மீறாமல், ஆனால் அதே சமயம் எல்லை மீறி விடுமோ என்ற நமது அப்போதைய அச்சத்தை வினாடியில் பொய்யாக்கி, இந்தக் கணவனின் கைகள் எங்கோ செல்ல எத்தனித்து, இறுதியில் இதய இருப்பின் குறுக்குப் பாதையில் பயணித்து, நாயகியின் கழுத்தை விரல்களால் பதமாக இதமாக வருடி, நெக்லஸின் வளைவுகளோடு சேர்ந்து வரைவுக்கோடு வரைந்து, நம் மனதில் அந்தக் கணம் நினைத்ததை இன்று வரை கூட நெருங்கியவர்களிடம் கூட சொல்ல முடியாதபடி நமக்குள்ளாகவே இனபச் சிறகுகளை சிறகடிக்க வைக்குமே! இந்த வியத்தகு விந்தையை தொட்டும் தொடாமலும், பட்டும் படாமலும் கண்ணியம் கெடாமலும் இந்த உயர்ந்த மனிதனைப் போல எவர் செய்து காட்டிவிட முடியும்?

அந்த இயற்கையான ரம்மிய சூழ்நிலையில் தன்னிலை மறந்து, மனைவியுடன் ஒரு கை கோர்த்து, மறு கை அவள் இடுப்பை வளைத்திருக்க, அவளை அணைத்து, அரவணைத்து புல்பாதையில் நடந்தபடி, அவளை வலதும் இடதுமாக சாய்த்து சாய்த்துப் பிடித்துத் தாங்கி, அரை சதவீத உதட்டோர அழகுக் கோணலில் 'தொட்டுக் கலந்தால்' பாடி உதட்டசைவாலும், உடல் அசைவாலும் உள்ளம் தொட்டுக் கலந்த நம் 'உயர்ந்த மனிதனி'ன் முத்திரைகளை முறியடிக்க வேறு யார்?

பக்கத்து மலைகளில் பனிப்படலம் புகையாய்த் தவந்து தென்றலில் மிதந்து வந்து குளிர்சுகம் தர, 'லல்லல்லல்லா' முடிவதற்குள் அவசரமாய் அதே ராகத்தில் ஷெனாய் முந்திக்கொண்டு அதைவிடவும் அங்கம் சிலிரிக்க வைக்க, நடையழகு மன்னவன் நாயகியுடன் இணைந்து ராஜ நடை போட்டு, அசால்ட்டாக அன்னத்துடன் அழகு நடை நடந்து, பின் அவள் முன் வந்து இடம் மாறி, அவள் கையைப் பிடித்து, அவளை அப்படியே வாங்கி, கைகளை ஆட்டியபடி பார்ப்பவர் அத்தனை பேர் மனதையும் ஆட்டிவிட்டுச் செல்வானே!

ஒரு கணவன் அதுவும் புதுக் கணவன் அதுவும் இயற்கை அழகு சூழ் வெளிப்புறங்களில் அழகு மனைவியுடன் தன்னந்தனியே பயணிக்கும் போது செய்ய வேண்டியவை என்ன என்பதை குரு பாடமாக கற்றுக் கொடுக்க இந்தப் பாடலை விட்டால் வேறு பாடல் இல்லை. செய்து காட்ட இந்த மனிதரை விட்டால் வேறு மனிதரும் இல்லை.

வாணிஸ்ரீ. வன தேவதை. எளிமையான எழில். கொஞ்சும் இளமை. பூலோக அழகனுடன் இணை சேர்ந்த பூரிப்பு பரிபூர்ணமாக, வெட்ட வெளிச்சமாகத் தெரியும் அந்த பிரகாச முகத்தில். 'வசந்த மாளிகை'யின் ஆடம்பர ஜோடி அதற்கு முன்னமேயே இதில் இயற்கை விந்தைகளுக்கிடையே வெகு இயல்பாய் இணைந்து ஒட்டிக் கொள்ளும். கட்டிக் கொள்ளும். பெயரைத் தட்டிக் கொள்ளும்.

ஆணழகனுக்கு ஏற்ற குரலழகன். சௌந்தரராஜன். திரைக்குப் பின்னால் நின்று குரலால் மனதை நிறை செய்தவன். நடிப்புத் திலகத்திற்கு 'பாடகர் திலகம்' பாடிய காதல் பாடல்களில் முதன்மையானது....முழு நிறைவானது.

'ஹஹ்ஹஹ்ஹஹ்ஹா' ஹம்மிங்கிலேயே ஹார்ட்டில் பட்டாம்பூச்சிகளைப் பறக்கவிடும் மாயப் பாடகி சுசீலாம்மா. மரணப் படுக்கையில் இருப்பவன் கேட்டால் கூட மகிழ்ச்சியில் துள்ளி எழுந்து எமனை விரட்டுவான்.

'பாடகர் திலகம்' பாடலின் பல்லவி வரிகளை ஒவ்வொன்றாக முடிப்பதற்கு முன்னமேயே தொடங்கிவிடும் இந்த இசைத் தேவதையின் இனிமையான 'ஆ.......ஆ' ஹம்மிங்க்குகள். இது பாடலுக்கே தனிச் சிறப்பு. நமக்கு கேட்கும் போதெல்லாம் மெய் சிலிர்ப்பு.

பாடல் முழுதும் இசை சாட்டை எடுத்து இன்ப அடி அடிக்கும் 'மெல்லிசை மன்னன்'.

வாலியின் வரிகள் சிருங்காரம் அள்ளிக் கொட்டுகின்றன. கொடைக்கானலின் இயற்கை அழகை பி.என்.சுந்தரம் தன் காமராவில் அடக்கி நாம் ரசிக்க ரசிக்க ஊட்டுவார்.

இணையற்ற இசையாலும், அருமையான இயற்கை சூழல் இடங்களாலும், இதயம் கவர்ந்த இணையில்லா ஜோடியாலும், பாடலின் வரிகளாலும், இசைக் கருவிகளின் ஆளுமைகளாலும், வளமான பாடகர்களாலும், குறிப்பாக ஆண்மைநிறை அழகானாலும், அவர் ஸ்டைலாலும், ஆயுள் முழுக்க என்னை ஆளுமை செய்யும் நடிகர் திலகத்தின் காதல் பாடல். மனதில் என்றும் முதலிடம். நிரந்தரமான இடம்.

http://i60.tinypic.com/20i89b5.jpghttp://i58.tinypic.com/ic1v81.jpg

வெள்ளிக் கிண்ணந்தான்
தங்கக் கைகளில்
முத்துப் புன்னகை
அந்தக் கண்களில்
வைரச் சிலைதான்
எந்தன் பக்கத்தில்
தொட்டுக் கலந்தால்
அதுதான் சுகம்.

வெள்ளிக் கிண்ணந்தான்
ஆ.......ஆ
தங்கக் கைகளில்
ஆ.......ஆ
முத்துப் புன்னகை
ஆ.......ஆ
அந்தக் கண்களில்
ஆ.......ஆ ஆ

சித்திர விழிகள் என்ன மீனோ மானோ
ஹஹ்ஹஹ்ஹா
செவ்விதழ் வடித்ததென்ன பாலோ தேனோ
ஹஹ்ஹஹ்ஹா
முத்திரைக் கன்னங்கள் என்ன பூவோ பொன்னோ
ஹஹ்ஹஹ்ஹா
முத்திரைக் கன்னங்கள் என்ன பூவோ பொன்னோ
மோகத்தில் துடித்ததென்ன நீயோ நானோ
மோகத்தில் துடித்ததென்ன நீயோ நானோ
இன்னும் சொல்லவோ
இன்பமல்லவோ

ஹஹஹாஹஹா
ஹஹஹாஹஹா

ஹஹ்ஹஹ்ஹஹ்ஹா
ஹஹஹா...
ஹஹ்ஹஹஹ்ஹஹா
ஹஹஹா.....
ஹஹ்ஹஹ்ஹஹ்ஹா
ஹஹஹாஹா

கட்டுடல் சுமந்த மகள் முன்னே செல்ல
ஹஹ்ஹஹ்ஹா
கை தொட்டுத் தலைவன் அவள் பின்னே செல்ல
ஹஹ்ஹஹ்ஹா
காலத்தை நில்லென்று சொன்ன மாயம் என்ன
ஹஹ்ஹஹ்ஹா
காலத்தை நில்லென்று சொன்ன மாயம் என்ன
கண் பட்டுக் கலந்து கொண்ட வேகம் என்ன
கண் பட்டுக் கலந்து கொண்ட வேகம் என்ன

இன்னும் சொல்லவோ
இன்பமல்லவோ

லலலாலலா
லலலாலலா

வெள்ளிக் கிண்ணந்தான்
ஆ.......ஆ
தங்கக் கைகளில்
ஆ.......ஆ
முத்துப் புன்னகை
ஆ.......ஆ
அந்தக் கண்களில்
வைரச் சிலைதான்
ஆ.......ஆ
எந்தன் பக்கத்தில்
ஆ.......ஆ
தொட்டுக் கலந்தால்
ஆ.......ஆ
அதுதான் சுகம்.

லல்லல்லல்லல்லா
லலலா
லல்லல்லல்லல்லா
லலலா


https://youtu.be/UqNg4Y-iQFE

அடுத்தது....

சொல்கிறேன் விரைவில்.

uvausan
5th October 2015, 12:09 PM
" வெள்ளிக்கிண்ணம் வாங்கி வைத்து, சுமந்து வந்த கைகளை சுகமாக முத்தமிட்டு, வாணியின் 'வழுவழு' கன்னத்தில் அதைவிட வழுவழுப்பான தன் இதழ்கள் பதித்து, முத்துப் புன்னகையை அவ்விடத்தில் படரவிட்டு, அந்த காந்தக் கண்களாலேயே காதலியின் கண்களை சுட்டிக் காட்டி, அப்படியே மலர்த் தோரணங்கள் அலங்கரித்த கட்டிலுக்குக் வைரச் சிலையை மெதுவாகக் கொண்டு சென்று, அமர வைத்து, அவள் எதிரே கீழ் அமர்ந்து கை பிடித்தவளின் கையை நுனியிலிருந்து மேல்வரை உதடுகள் விரித்து, தொட்டுக் கலந்து, கழுத்தில் முகம் புதைத்து 'இதுதான் சுகம்' என்று அங்கு சொர்க்கத்தைக் காணும் சுகக் கணவன். பார்ப்பவர்களை பரவசப்படுத்தும், கண்ணியக் காதலை வெளிப்படுத்தும் கண்கவர் அழகன்."
====

வாசு , பாடலை விட உங்கள் வர்ணனை மிகவும் பிரமாதம் . ஒவ்வொரு எழுத்துக்களும் உங்கள் ஈடுப்பாட்டை எடுத்துச்சொல்லும் . இந்த பாடலை பிடிக்காதர்வர்கள் என்று யாருமே இருக்க முடியாது - இந்த பாடலை கலரில் நினைத்துப்பார்த்தால் விடை " மயக்கமென்ன , இந்த மௌனமென்ன !" என்ற பாடாலாகத்தான் இருக்க முடியும் . அழகான காதல் மிகவும் மென்மையாக சொல்லப்பட்டிருக்கின்றது . இவ்வளவு முறைதான் இந்த பாடலை கேட்கவேண்டும் , படத்தைப்பார்க்க வேண்டும் என்ற ஒரு கட்டுப்பாடு இருந்தால் , அதை உடைத்தெரியக்கூடிய பாடல் , படம் .

அடுத்ததை தெரிந்துக்கொள்ளும் ஆவல் அதிகமாகின்றது .......

Russellzlc
5th October 2015, 03:27 PM
நண்பர்களுக்கு வணக்கம்,

மக்கள் திலகம் திரியில் புதிதாக பங்கேற்ற திரு.மயில்ராஜ் அவர்கள் பிரச்சினைக்குரிய விதத்தில் பேசினார் என்று கூறி அவருக்கு நிரந்தரமாக தடை விதித்திருக்கிறார்கள். அவர் என்ன தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டாரா? ஒருவேளை அவர் ஆட்சேபகரமான சிலவற்றை சொல்லியிருக்கலாம். அவருக்கு எச்சரிக்கை விடுத்திருக்கலாமே? அல்லது அடையாளமாக ஒரு சில நாட்கள் மட்டும் தடை விதித்திருக்கலாம். ஆனால், நிரந்தரமாக நீக்கும் அளவுக்கு இங்கு சிலர் சொல்லாததை அவர் என்ன பெரிதாக சொல்லி விட்டார்?

மக்கள் திலகத்தைப் பற்றி திரு.கோபால் கூறாதவற்றையா திரு.மயில்ராஜ் கூறிவிட்டார்? அல்லது தனிப்பட்ட நபர்களை, நண்பர்களை திரு.கோபால் மோசமாக விமர்சித்ததைப் போல விமர்சித்தாரா? சமீபத்தில் கூட திரு.எஸ்.வி. அவர்களை ‘பசுத்தோல் போர்த்திய நரி’ என்றார். என்னைப் பார்த்து ‘பொய் சொல்கிறேன்’ என்று குற்றம் சாட்டினார். வயதில் தன்னைவிட மூத்தவர்களை நாய், சொறிநாய் என்றெல்லாம் பேசினார். திரு.சிவாஜி கணேசன் அவர்களையே, ‘கிழட்டு மூஞ்சி’ என்று விமர்சித்தார். ‘அவரது பிற்காலப் படங்களை எப்படி பார்க்கிறாய்?’ என்று என் மனைவி கேட்கிறாள் என்றார். நேருவை பெண் பித்தன் என்றார். அவர் நிரந்தரமாக நீக்கப்படவில்லை.

திருச்சி பாஸ்கர் என்பவர் திரு.சிவாஜி கணேசன் அவர்களை அரசியலில் முட்டாள் என்றார். நேற்று கூட சுமூக சூழ்நிலையை கெடுக்கும் வகையில் மீண்டும் பதில் சொல்வேன் என்று எச்சரிக்கிறார். ‘குள்ளநரிகள்’ என்கிறார். ‘கொக்கரிக்காதே வேதகிரி’ என்கிறார். அவர்களை எல்லாம் அனுமதிக்கிறார்கள். அவர்கள் கூறிய வார்த்தைகளும் இன்னும் அப்படியே இருக்கின்றன.

செல்வி. ஜெயலலிதாவை பார்த்து விட்டு வந்த சிவாஜி குடும்பத்தினரை ‘துரோகம் செய்யாதீர்களடா, இனத்துரோகிகளா’ என்றும் ஒரு மாநிலத்தின் முதல்வரை ‘பாம்பு’ என்றும் பல்வேறு அர்ச்சனைகள். அதற்காக நான் அவரது ஆதரவாளர் அல்ல. எப்படி எல்லாம் மோசமான தாக்குதல்கள் என்பதற்கு சொல்கிறேன். அவர்கள் மீது நடவடிக்கை இல்லை. இந்த வார்த்தைகள் எல்லாம் நீக்கப்படவும் இல்லை.

ஆனால், இப்படி எல்லாம் வரைமுறை கடந்து எதுவும் கூறாத திரு.மயில்ராஜை நிரந்தரமாக நீக்கியிருக்கிறார்கள். நல்ல நியாயம்.

இப்படி பாரபட்சமாக மாடரேட்டர்களும் மய்யம் இணையதள நிர்வாகிகளும் நடந்து கொள்வது வேதனையளிக்கிறது. இங்கு நீதியில்லை. ஒருவன் கையை கட்டிப்போட்டு விட்டு இன்னொருவன் கையில் ஆயுதம் கொடுத்து இரண்டு பேரும் மோதிக் கொள்ளுங்கள் என்று சொல்வதும் கைகள் கட்டப்பட்ட நிராயுதபாணிகளை தாக்குவதும் கோழைத்தனம். நியாயவான்கள் என்றால் எங்களுக்கும் முழு சுதந்திரம் அளித்துப் பாருங்கள். திரு.மயில் ராஜ் அவர்களை நிரந்தரமாக நீக்கியது அநீதி.

இப்படி பாரபட்சமாக செயல்படும் இந்த இணையதளத்தில் நான் நீடிக்க விரும்பவில்லை. இப்படி நியாயத்தை கேட்பதற்காகவே என்னையும் நிரந்தரமாக தடை செய்யலாம். நீங்கள் என்ன என்னை தடை செய்வது? நானே வெளியேறுகிறேன்.

தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று நினைத்துக் கொண்டு எப்போதும் உண்மைக்கு மாறானதை மட்டுமே பேசிக் கொண்டிருக்கும் திரு.கோபால், உங்கள் பொய்களுக்கு பல ஆதாரங்கள் என்னிடம் உள்ளது.

உதாரணத்துக்கு ஒன்று மட்டும் சொல்கிறேன். உங்களை எல்லாரும் தெரிந்து கொள்ளட்டும்.

பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களை கடுமையாக தாக்கினீர்கள். அதற்காக, உங்களுக்கு நான் கண்டனம் தெரிவித்தேன். உடனே, அவர்தான் என்னை முதலில் தாக்கினார் என்று கூசாமல் பொய் சொன்னீர்கள். நான் அதை மறுத்து ஆதாரத்தோடு என்ன நேரத்தில் இருவரும் பதிவுகளை வெளியிட்டீர்கள் என்று பதிலளித்தேன். உடனே, நீங்கள் பல்டியடித்து ‘நான் திமுக பேராசிரியரை (அதாவது திரு.அன்பழகன் அவர்களை, அடைப்புக்குறிக்குள் இருப்பது என் விளக்கம்) சொன்னேன் என்று வழிந்தீர்கள்.

மக்கள் திலகம் திரி பாகம் 15 பக்கம் 328 பதிவு 3271.

http://www.mayyam.com/talk/showthread.php?11415-Makkal-Thilakam-MGR-PART-15/page328

-----------------------------
Quote Originally Posted by KALAIVENTHAN View Post
திரு.கோபால்,

‘‘பேராசிரியர் உங்களை அத்துமீறி விமர்சித்த பிறகுதான், உங்கள் கருத்தை அவர் பெயர் குறிக்காமல் வெளியிட்டேன்’’ என்று கூறியிருக்கிறீர்கள். இதுவே தவறு.

//பேராசிரியர்களே புளுகித்தள்ளும் கலிகாலமாயிற்றே// என்று உங்கள் திரியில் 14-ம் தேதி காலை 11.27 மணிக்கு பதிவிட்டு (பதிவு எண் 2979) நேரடியாக அவரை அத்துமீறி முதலில் தாக்கியது நீங்கள்தான்.

அதன் பிறகே பேராசிரியர் அவர்கள், அதற்கு பதில் சொல்லும் வகையில் உங்களை பெயர் குறிப்பிடாமல் பதிவு போட்டார். அவர் பதிவிட்டது 14ம் தேதி இரவு 8.58 மணிக்கு, எங்கள் திரியில் பதிவு எண்.3104.

இதிலிருந்தே யார் சொல்வதில் உண்மை உள்ளது என்பது எல்லாருக்கும் புரியும். பேராசிரியர், பேராசிரியர்தான்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
நான் மேலே சொல்லியிருந்த பதிலுக்கு திரு.கோபால் அவர்களின் விளக்கம் இது....

//கலைவேந்தன்,

அடடா ,அப்படி ஒரு அர்த்தம் வந்து விட்டதா? அது கலைஞர் பாடல் சம்பந்த பட்ட பதிவு என்பதால் தி.மு.க பேராசிரியர் ஞாபகம் வந்து விட்டார்.// ......(அவர்கள் திரியில் பதிவு எண்.3173)

ஓ... ஹோ....அப்படியா விஷயம்? மன்னிக்கவும் கோபால். இன்று காலையில் நீங்கள் போட்டிருந்த பதிவில்,(உங்கள் திரியில் பதிவு எண்.3166) திமுக பேராசிரியரின் பயோ டேட்டாவை கேட்கிறீர்கள் என்று தெரியாமல் திரு. செல்வகுமார் அவர்களின் பயோ டேட்டாவைத்தான் கேட்கிறீர்களோ என்று நினைத்து பதிலளித்து விட்டேன். மீண்டும் மன்னிக்கவும். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

-----------------------

இனிமேலாவது உண்மையை மட்டுமே பேசுங்கள். மற்றவர்களை கண்ணியப்படுத்துங்கள். முக்கியமாக, எல்லாருக்கும் புரியும்படி எழுதக் கற்றுக் கொள்ளுங்கள். நான் வெளியேறுகிறேன். எனவே என்னை தடை செய்தாலும் கவலையில்லை என்ற நிலையில் நான் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் உங்களை பேசிவிட்டு வெளியேற முடியும். குறிப்பாக, திரு.ராகவேந்திரா சாரையும் திரு.சிவாஜி செந்தில் அவர்களையும் நீங்கள் என்ன வார்த்தை கொண்டு தாக்கினீர்களோ, அதை விடவும் மோசமாக பேசமுடியும். ஆனால், உங்கள் அளவுக்கு தரக்குறைவாக கீழிறங்க நான் தயாரில்லை.

விடை பெறுகிறேன் நண்பர்களே. இந்தப் பதிவும் கூட நீக்கப்படலாம். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. பார்க்கும் நண்பர்கள் நியாயத்தை புரிந்து கொண்டால் போதும்.

வாழ்க ஜனநாயகம்.

எந்தக் கொம்பன் நினைத்தாலும் எக்காலத்திலும் அழிக்க முடியாத புரட்சித் தலைவர் புகழ் ஓங்குக!

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

eehaiupehazij
5th October 2015, 06:44 PM
From GG Island with Love!

The indisputable King of Romance GG's PBS songs with karaoke!


பாடல் 14
காற்று வெளியிடை கண்ணம்மா உந்தன் காதலை எண்ணிக் களிக்கிறேன் ! / கப்பலோட்டிய தமிழன்


இதுவும் நடிகர்திலகத்தின் ஒன் மேன் ஷோதான் எனினும் இனிமைக் காரணி இடைச்செருகலாயினும் ஜெமினி சாவித்திரி ஜோடியே !
பாரதியாரின் பாடலுக்கு சீனிவாசின் ஜெமினிக் குழைவு காலங்களைக் கடந்து பெருமை சேர்க்கிறதே !!

இந்தப் பாடல் காட்சி படமாக்கப் பட்டபோது ஜெமினிக்கு கொஞ்சம் ஹிப் ஜாயிண்ட் வலி இருந்ததால் அடிக்கடி இடுப்பில் கைவைத்து சமன் செய்து கொள்ளப் போக ரசிகர்கள் அதையே அவரது காதல் பாடல்களின் ஸ்டைலாக்கி முத்திரை குத்தி விட்டனராம் !!

(சிலசமயம் மறந்துபோய் கதாநாயகியின் இடுப்பிலும் கைவைத்து சமாளித்துக் கொள்வார் எல்லாம் ஒரு பேலன்சிங்தான் !!)
https://www.youtube.com/watch?v=rNNDekY5QnY

https://www.youtube.com/watch?v=Rl0Ce_4Ruww

eehaiupehazij
5th October 2015, 07:05 PM
From GG Island with Love!

The indisputable King of Romance GG's PBS songs with karaoke!


பாடல் 15
எந்தன் பருவத்தின் / பார்வையின் கேள்விக்கு பதிலென்ன சொல்லடி ராதா ....சுமைதாங்கி

சாத்தனூர் or மலம்புழா டேம் ? (Vaasu sir?)
மிக மிக இனிமையான தேனிசைப் பாடல் !
பாலாஜி நடிகர்திலகத்தை வைத்து எடுத்த எல்லாப் படங்களிலும் நாயகன் நாயகி பெயர்கள் ராஜா ராதா என்பது இப்பாடலின் இன்ஸ்பிரேஷனோ ?!

https://www.youtube.com/watch?v=eprrnrKgYnU

https://www.youtube.com/watch?v=NpG1XUnF4jo

https://www.youtube.com/watch?v=2B-mzh-nLBE

eehaiupehazij
5th October 2015, 08:34 PM
திகில் பாண்டிகள் / பகுதி 2 அமானுஷ்ய அசரீரி கானங்கள்!

பேய் / பிசாசு / குட்டிச்சாத்தான் :banghead:


உடலைவிட்டுப் பிரிந்தேகும் ஆவி தனது ஆத்ம தேவைகள் குடும்ப கடமைகள் இலட்சியங்கள் ஆசைகள் முழுவதுமாக நிறைவேறியிருந்தால் மட்டுமே Cloud o'9 ஒன்பதாம் மேக அடுக்கு தாண்டி தனது கர்மவினைகளுக்குத் தகுந்த மாதிரி சித்திரகுப்தனின் திரிப் பதிவுப்படி எமராஜன் என்னும் திரி மாடரேடரின் வழி காட்டுதலில் சொர்க்கத்துக்கோ நரகத்துக்கோ திரி சங்கு சொர்கத்துக்கோ செல்வது சாத்தியம் !

நிறைவேறாத ஆசைகளை ஆவி சுமந்தால் கனம் தாங்காது புவியீர்ப்பு விசை காரணமாக வான் நோக்கி பறக்க முடியாமல் பூமியிலேயே விழுந்து விடும் !
அப்படி விழும்போது பஞ்சபூதங்களின் கிரக நிலைப்படி பேயாகவோ பிசாசாகவோ கொள்ளிவாய்ப் பிசாசாகவோ மாறி மனித இனத்திநூடே அமானுஷ்யமாகக்
கலந்து விடுமாம்! நாய் பூனை பல்லி ஆந்தை நரி கண்களுக்கு மட்டுமே புலப்படுமாம்!!
சிலசமயம் மந்திரவாதிகள் சுடுகாட்டுக்கு சென்று இவைகளின் சங்கங்களுடன் சங்கு ஊதி அவற்றின் உள்ளேயும் வெளியேயும் கலவை பூசி கவலை இல்லாத குட்டிச் சாத்தான்களாக மாற்றுவதும் உண்டு! இவை உக்கிரமானவை! மனிதர்களை ரத்தம் கக்கி சாகடிக்குமாமே!

ஜேம்ஸ் பாண்டுக்கே நல்லாக் கெளப்பறாங்க பீதி !

https://www.youtube.com/watch?v=dtaiGjAjrbk

https://www.youtube.com/watch?v=HBswfjIM_cU

குட்டிசாத்தானுடன் வடிவேலு !

https://www.youtube.com/watch?v=vH5aYV9cyw8

eehaiupehazij
5th October 2015, 10:34 PM
From GG Island with Love!

The indisputable King of Romance GG's PBS songs with karaoke!


பாடல் 16
கவலைகள் கிடக்கட்டும் மறந்து விடு காரியம் நடக்கட்டும் துணிந்து விடு / பந்தபாசம்


ஜெமினிகணேசன் சிவாஜிகணேசனை விட எட்டு வயது மூத்தவர் ! பெண்ணின் பெருமை / பாவ மன்னிப்பில் காதல்மன்னர் நடிகர்திலகத்தின் அண்ணனாக நடித்திருப்பார் !

பந்தபாசத்தில் தம்பியாகவும் வீரபாண்டிய கட்டபொம்மன்/ கப்பலோட்டிய தமிழன் / நாம் பிறந்த மண் படங்களில் சிவாஜிக்கு இளையவராக
நடித்திருப்பார்! பிற படங்களில் சம வயதினராக நடித்திருப்பார்!

அண்ணன் என்னடா தம்பி என்னடா என்று மாற்று டைட்டில் வைத்திருக்க வேண்டிய அளவு சகோதர மனஸ்தாபம் புரிதலின்மை வெளிப்படுத்தப் பட்ட படம்!
இனிய கானங்கள் நிறைந்தது !

https://www.youtube.com/watch?v=9ZghfWkD8gA

vasudevan31355
6th October 2015, 09:22 AM
ரவி சார்,

பிரகலாதன் இரணியன் கதை மூலம் கூறியிருந்த கருத்துக்கள் அற்புதம். ஆசையின் முழு அர்த்தமும் அதில் வெளிப்பட்டது.


//* ஒருவருக்கு உதவி செய்வதன் மூலம் உண்மையில் நீங்கள் உங்களுக்கு உதவி செய்துகொள்கிறீர்கள்.

* நீங்கள் எதை விதைத்தாலும் அதை பன்மடங்கு அறுவடை செய்வீர்கள்.

* அன்னயாவினும் புண்ணியங்கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்.

* காரணமின்றி காரியங்கள் நடப்பதில்லை.

* எந்த தீமைக்குள்ளும் ஒரு நன்மை இருக்கும்.

* எல்லாம் நன்மைக்கே

* விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை; கெட்டுப்போகிறவர் விட்டுக்கொடுப்பதில்லை//

அருமை! அருமை!

பழமொழிகளும் அவைகளின் உண்மை வடிவமும் பதிவும் புதுமையான அசத்தல் தங்கள் பாணியிலே.

"கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை "

உண்மை விளக்கம் ஏ.ஒன்.தியானத்திர்கான சிறுவன் கதையும் நல்ல விளக்கம்.

நல்ல பதிவுகள். தொடருங்கள்.

vasudevan31355
6th October 2015, 09:27 AM
ரவி கூட பேயோ பிசாசோ என்று பயந்து சவுக்குத் தோப்புகளில் ஒளிந்து இந்த வெள்ளை மோகினியை இருட்டில் தொடர்கிறாரே!

வெள்ளை மோகினி வேறு ஒருவருடன் ஜோடி சேர்வதையும் கண்டு ரவி அதிர்ச்சியடைய, இன்னும் அதிர்ச்சியூட்ட பாலோ பண்ணும் ரவியையே இன்னொரு உருவம் பின்தொடர்ந்து கிலி ஏற்படுத்துகிறதே.


https://youtu.be/pNKUrrN8WYs

vasudevan31355
6th October 2015, 09:34 AM
நடிப்புச் சுடர் செய்யாத கொலைக்கு பயந்து நடுங்கி, இரவில் தனியே படகில் போகும் போது 'நீ எங்கே?' குரல் கேட்டு, திடுக்கிட்டு, ஏரியின் மேல் வெள்ளை தேவதை வெளிச்சமாய்த் தெரிய, விழிகள் பிதுங்கி, மிரண்ட ராஜன் ராத்திரி மோகினி வசம் சிக்கினாரா?


https://youtu.be/cgdx80KR0zY

rajeshkrv
6th October 2015, 10:02 AM
ஜி

ராஜனின் திகில் முகத்திற்கு விளக்கம் சூப்பர்

vasudevan31355
6th October 2015, 10:11 AM
காதல் மன்னனைத் தாக்க வந்த மோகினி அல்ல. மன்னவன் அழுவது பொறுக்காமல் மீண்டும் அவரை வாழச் சொல்லி வற்புறுத்தும் அன்பு 'விஜய' மோகினி.


https://youtu.be/1nn_QDc8hsI

rajeshkrv
6th October 2015, 10:15 AM
இசையரசி இசைத்த கீதங்கள் – 5

இசையரசியின் கீதங்களில் அடுத்ததாக நாம் கேட்டு மகிழப்போவது அப்பா டாட்டா திரையில்
ஒலித்த “ கின்னத்தில் தேனெடுத்து எண்ணத்தால் மூடி வைத்தேன் “ மிகவும் இனிமையான பாடல்
சோகமும் ஊடே வரும்.. பாடலும் , பாடிய விதமும் , பத்மினியின் அழகான நடிப்பும் எல்லாமும் சேர்த்து பாடலை இன்னும் மெருகேற்றியிருக்கிறது என்பது 100% உண்மை

https://www.youtube.com/watch?v=lctCA_elJko

vasudevan31355
6th October 2015, 10:18 AM
வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு ஓடிப் போன கணவனை ரயில் நிலையத்தில் தினம் தேடி உலாவும் பரிதாப உயிர் மோகினி ஸ்வர்ணா. ஸ்வர்ணாவுக்கு ஓடுவதைக் கற்றுத் தந்தது அண்ணன் (ஒரு கோயில்) வாணியின் வளமான குரலில். திகிலூட்டும் இசைப் பின்னணியில்.

'குங்குமக் கோலங்கள் கோயில் கொண்டாட'


https://youtu.be/cvEtTiOAgls

rajeshkrv
6th October 2015, 10:25 AM
ஜி\
இதோ இன்னும் சில திகிலூட்டும் கானங்கள்

https://www.youtube.com/watch?v=1qTcYaGRUdo

https://www.youtube.com/watch?v=XfQzQ989RqM

rajeshkrv
6th October 2015, 10:27 AM
https://www.youtube.com/watch?v=Q7qlGhW3kl4

rajeshkrv
6th October 2015, 10:29 AM
https://www.youtube.com/watch?v=TQZ9d9l-KtE

uvausan
6th October 2015, 11:47 AM
அனைவருக்கும் மதிய வணக்கம்

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/Picture1_zpsgpvmiwzo.gif (http://s818.photobucket.com/user/jravikumar/media/Picture1_zpsgpvmiwzo.gif.html)

uvausan
6th October 2015, 11:50 AM
அன்னமிட்ட கைகளுக்கு ------

கர்ணன் போரில் , கண்ணனின் சூழ்ச்சியால் விழுந்து கிடக்கிறான் - உயர் பிரிகிறது . சொர்க்கத்தில் அவனை வரவேற்க பலத்த ஏற்பாடுகள் நடந்த வண்ணம் உள்ளன . தேவர்கள் புடை சூழ கர்ணன் சொர்க்கத்தில் கொண்டு செல்லப்படுகிறான் .

ஒருநாள் கர்ணனுக்கு பசி எடுக்க ஆரம்பித்தது . அங்கு இருக்கும் எல்லோருக்கும் மிகுந்த ஆச்சிரியம் . சொர்க்கம் என்றாலே ஏது பசி , ஏது பிணி , ஏது மூப்பு ? கர்ணனுக்கும் ஒரே ஆச்சிரியம் - இந்த பசி எப்படி தனக்கு மட்டும் எப்படி வந்தது ? அங்கு இருக்கும் யாராலுமே கர்ணனனின் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை . எது சாப்பிட்டாலும் அவன் பசி தீரவில்லை .

வேத குருவான பிரகஸ்பதியிடம் கர்ணன் ஓடினான் . " குருவே என் பசி தீரவில்லை , என்ன பாவம் செய்தேன் என்று புரியவில்லை - சொர்க்கம் வந்தும் என் துன்பங்கள் என்னைத்தொடர்கின்றன - தாங்கள் தான் ஒரு உபாயம் எனக்கு சொல்லவேண்டும் " என்று கெஞ்சினான் . பிரகஸ்பதி சிறிது நேரம் கழித்து " கர்ணா - என்னுடைய இந்த ஆள் காட்டி விரலை உன் வாயில் சிறிது நேரம் வைத்துக்கொள் " என்றார் .

கர்ணனும் ஒன்றும் புரியாமல் அவர் குறிப்பிட்ட விரலை தனது வாயினில் வைத்துக்கொண்டான் - பசி இருந்த இடம் தெரியாமல் மறைந்தது ... ஆச்சிரியம் ! ஆனந்தம் !!

" குருவே , மிக்க நன்றி , என் பசி முழுவதும் மறைந்து விட்டது - ஆனால் நெஞ்சில் ஒரு கேள்வி - எப்படி உங்கள் விரல் என் பசியைப்போக்கியது ? "

பிரகஸ்பதி சிரித்துக்கொண்டே சொன்னார் " கர்ணா - நீ பூலோகத்தில் எவ்வளவோ தர்மங்கள் செய்திருக்கலாம் , பொன்னையும் ,பொருளையும் வாரி வாரி தந்திருக்கலாம் - ஆனால் நீ செய்ய மறந்தது அன்ன தானம் - யாருக்குமே நீ இந்த தர்மத்தை செய்யவில்லை - அதனால் தான் நீ சொர்க்கம் வந்தும் உனக்கு பசி எடுத்துள்ளது .. தானத்தில் சிறந்த தானம் அன்ன தானம் - வேறெதிலும் வராத " போதும் " என்ற வார்த்தை இதில் தான் கிடைக்கின்றது .... "

கர்ணன் கண்ணீர் மல்க கேட்டான் " தவறு செய்து விட்டேன் குருவே ! இன்னும் ஒரே ஒரு கேள்வி - " எப்படி உங்கள் ஆள் காட்டி விரல் என் பசியைப்போக்கினது ? "

பிரகஸ்பதி சொன்னார் " ஒரு தடவை பசி என்று உன்னிடம் வந்தவனிடம் - நீ உன் ஆள் காட்டி விரலினால் - அதோ அங்கே செல் - அன்னதானம் செய்கிறார்கள் , உனக்கு உணவு அங்கு கிடைக்கும் " என்றாய் - அந்த புண்ணியத்திர்க்காக உனக்கு வந்த வந்த பசி என் விரல் மூலம் மறைந்தது "

இது ஒரு கதையாகவே இருந்தாலும் ஒரு உயர்ந்த பண்பு நமக்கும் இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதாக உள்ளது . அன்னதானமும் , கண் தானமமும் நம் வாழ்வில் மிகவும் முக்கியமானவை , மிகவும் உயர்ந்தவை ..

https://www.youtube.com/watch?v=FfGqjXfIYlQ

https://www.youtube.com/watch?v=N8YaT8Rh0D0

eehaiupehazij
6th October 2015, 05:33 PM
திகில் பாண்டிகள் / அமானுஷ்ய அசரீரி கீதங்கள் !
பகுதி 3
பூதமும் குட்டிசாத்தானும் !

அம்மாடியோவ் ....அமானுஷ்ய சரீரங்களிலேயே விசித்திரமானது பூதமும் குட்டிசாத்தானும்!
இரண்டுமே புட்டிக்குள்ளோ பெட்டிக்குள்ளோ அடைபட்டுக் கிடக்கும் வரை தொந்தரவில்லை !
திறந்து விட்டாலோ ....ரணகளம்தான்!
பட்டணத்தில் பூதம் / அலாவுதீனும் அற்புத விளக்கும்! Genie!

பூதங்கள் பொதுவாக நன்மையே செய்ய வல்லவை ! ஜீபூம்பா ஜாவர் ....ஆலம்பனா அசோகன் ...மறக்க முடியுமா!

https://www.youtube.com/watch?v=uSlqdZjEK_g

ஜெமினியும் வித்தியாசமான வில்ல பூதமே !
https://www.youtube.com/watch?v=_u_swT6AR-s

[url]https://www.youtube.com/watch?v=DRoUp3dnRsA

குட்டிசாத்தானோ பில்லி சூனியத்தின் சூத்திரதாரியே !

My Dear Kuttisaaththaan ! Enjoy Goundamani Senthil kuttisaaththaan comedy from villu paattukkaaran!

ரத்தக் காட்டேரி குட்டிசாத்தான் !

[url]https://www.youtube.com/watch?v=3vfPqRJnMOU

vasudevan31355
6th October 2015, 06:26 PM
செந்தில் சார்,

'ஈஸா வாக்கியம் இதம் சர்வம்' என்று முழங்கும் 'கண்ணாமூச்சி' உடையப்ப தேவர் பூதத்தை மறந்து விட்டீர்களே!

அதே போல சாத்தான் சொல்லைத் தட்டாதே செந்தில் பூதமும் புகழ் பெற்ற பூதம் ஆயிற்றே.

http://i.ytimg.com/vi/eV3cPfcMEVs/hqdefault.jpg

uvausan
6th October 2015, 08:37 PM
ஐயோ , வாசு , செந்தில் சார் - ராத்திரியெல்லாம் தூக்கமே வருவதில்லை உங்கள் பூதாகாரமான பதிவுகளைப்பார்த்தபின் - கதவுகளை யாரோ நடுநிசியில் தட்டுகிறார்கள் .. நாய்களின் ஊளை சத்தம் , "மல்லிகை என் மன்னன் மயங்கும் " என்று என்காதில் மட்டும் விழும் பாடல் , கொலுசுவின் ஒலிச்சத்தம் ---- " காக்க காக்க செந்தில் காக்க " என்று என்று எவ்வளவு தடவைகள் எனக்குள் சொல்லிக்கொள்கிறேன் என்று கணக்கு வைக்க முடியவில்லை .... ஆன்மிக பதிவுகள் எவ்வளவு போட்டாலும் நீர்மோரை காச்சித்தான் பருகுகிறேன் - நீங்கள் இருவரும் இப்படி எல்லோரையும் பயமுறுத்துவது நியாமா ?? நீதியா ?? அந்த பேய்களுக்கே இது அடுக்குமா ??

eehaiupehazij
6th October 2015, 10:26 PM
திகில் பாண்டிகள் / அமானுஷ்ய அசரீரிகள்!
நிறைவுப்பகுதி 4 வேதாளம்


விக்கிரமாதித்தனின் மிகச்சரியான பதிலால் அவன் மௌனம் கலைந்ததால் மீண்டும் வேதாளம் அவனிடமிருந்து விடுபட்டு முருங்கை மரத்தில் ஏறிக்கொள்ளும் தன் முயற்ச்சியில் மனம் தளராத விக்கிரமாதித்தன் சலிக்காமல் முருங்கை மரமேறி வேதாளத்தை வெட்டி வீழ்த்தி தோளில் சுமந்து செல்வார்

வேதாளமும் புதிய தனது புதிர்க்கதையை அவிழ்த்துவிட்டு விடுகதைக்கான பதிலை விக்கிரமாதித்தனிடம் வற்புறுத்தும்.....அம்புலிமாமா கதையேதான் மக்களே!

ஆறறிவு மனிதனை விட அரையறிவு அதிகமுள்ள வேதாளம் ஓர் அறிவுஜீவி அமானுஷ்யமே!


https://www.youtube.com/watch?v=yeTNsCtnQl8

https://www.youtube.com/watch?v=owsgRlRn_Lo

Russellxor
6th October 2015, 10:52 PM
ஒரே எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகளைக் கொண்டு கதை எழுத முடியுமா?
அகரத்தில் ஓர் இராமாயணம்.
இராமாயண கதை முழுதும்
'அ' என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால் வடிவமைக்கப் பட்டுள்ளது.
" இதுவே தமிழின் சிறப்பு.."
++++++++++++++++++++++++++++++
அனந்தனே
அசுரர்களை
அழித்து,
அன்பர்களுக்கு
அருள
அயோத்தி
அரசனாக
அவதரித்தான்.
அப்போது
அரிக்கு
அரணாக
அரசனின்
அம்சமாக
அனுமனும்
அவதரித்ததாக
அறிகிறோம்.
அன்று
அஞ்சனை
அவனிக்கு
அளித்த
அன்பளிப்பு
அல்லவா
அனுமன்?
அவனே
அறிவழகன்,
அன்பழகன்,
அன்பர்களை
அரவணைத்து
அருளும்
அருட்செல்வன்!
அயோத்தி
அடலேறு,
அம்மிதிலை
அரசவையில்
அரசனின்
அரியவில்லை
அடக்கி,
அன்பும்
அடக்கமும்
அங்கங்களாக
அமைந்த
அழகியை
அடைந்தான் .
அரியணையில்
அமரும்
அருகதை
அண்ணனாகிய
அனந்தராமனுக்கே!
அப்படியிருக்க
அந்தோ !
அக்கைகேயி
அசூயையால்
அயோத்தி
அரசனுக்கும்
அடங்காமல்
அநியாயமாக
அவனை
அரண்யத்துக்கு
அனுப்பினாள்.
அங்கேயும்
அபாயம்!
அரக்கர்களின்
அரசன் ,
அன்னையின்
அழகால்
அறிவிழந்து
அபலையை
அபகரித்தான்
அங்கேயும்
அபாயம்!
அரக்கர்களின்
அரசன் ,
அன்னையின்
அழகால்
அறிவிழந்து
அபலையை
அபகரித்தான்
அந்த
அடியார்களில்
அருகதையுள்ள
அன்பனை
அரசனாக
அரியணையில்
அமர்த்தினர்.
அடுத்து
அன்னைக்காக
அவ்வானரர்
அனைவரும்
அவனியில்
அங்குமிங்கும்
அலைந்தனர்,
அலசினர்.
அனுமன்,
அலைகடலை
அலட்சியமாக
அடியெடுத்து
அளந்து
அக்கரையை
அடைந்தான்.
அசோகமரத்தின்
அடியில் ,
அரக்கிகள்
அயர்ந்திருக்க
அன்னையை
அடிபணிந்து
அண்ணலின்
அடையாளமாகிய
அக்கணையாழியை
அவளிடம்
அளித்தான்
அன்னை
அனுபவித்த
அளவற்ற
அவதிகள்
அநேகமாக
அணைந்தன.
அன்னையின்
அன்பையும்
அருளாசியையும்
அக்கணமே
அடைந்தான்
அனுமன்.
அடுத்து,
அரக்கர்களை
அலறடித்து ,
அவர்களின்
அரண்களை ,
அகந்தைகளை
அடியோடு
அக்கினியால்
அழித்த
அனுமனின்
அட்டகாசம் ,
அசாத்தியமான
அதிசாகசம்.
அனந்தராமன்
அலைகடலின்
அதிபதியை
அடக்கி ,
அதிசயமான
அணையை
அமைத்து,
அக்கரையை
அடைந்தான்.
அரக்கன்
அத்தசமுகனை
அமரில்
அயனின்
அஸ்திரத்தால்
அழித்தான்.
அக்கினியில்
அயராமல்
அர்பணித்த
அன்னை
அவள்
அதி
அற்புதமாய்
அண்ணலை
அடைந்தாள்.
அன்னையுடன்
அயோத்தியை
அடைந்து
அரியணையில்
அமர்ந்து
அருளினான்
அண்ணல் .
அனந்தராமனின்
அவதார
அருங்கதை
அகரத்திலேய
அடுக்கடுக்காக
அமைந்ததும்
அனுமனின்
அருளாலே.
தமிழின் பெருமையை வாழ்நாள் முழுவதும் பேசினாலும் ஒரு துளிக்கும் ஈடாகாது.


யாரோ...

eehaiupehazij
6th October 2015, 11:18 PM
Gap filler / Monotony breaker!

https://www.youtube.com/watch?v=kHW0TvlOgnk

vasudevan31355
7th October 2015, 07:20 AM
ஜி!

உங்க இன்பாக்ஸ் ரொம்பி வழியுது. பி.எம் மாட்டேங்குது. கொஞ்சம் கிளியர் பண்ணுங்கோ.

uvausan
7th October 2015, 07:57 AM
அனைவருக்கும் காலை வணக்கம் - இந்த நாளும் ஒரு இனிய நாளாக எல்லோருக்கும் அமையட்டும் !!

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/mayam_zpsjkjsa6di.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/mayam_zpsjkjsa6di.jpg.html)

uvausan
7th October 2015, 08:10 AM
செந்தில் வேல் - ஒரு வரி ராமாயணம் அருமை !!. உங்களைப்பற்றி பல நல்ல விஷயங்களை வாசுசார் சொல்லக்கேட்டிருக்கிறேன் . உங்களையும் , செந்தில் சாரையும் விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன் - உங்கள் உழைப்பில் எனக்கு என்றுமே ஒரு பொறாமை உண்டு . அரிமா எப்படி செல்கிறது? - சிங்க நடையைப்பற்றி என்ன சொல்ல வேண்டும் என்று கேட்க்கிறீர்களா ?? உங்களுக்காக 16 வார்த்தைகளில் இராமாயணம் -இதோ !!

16 வார்த்தை ராமாயணம்
******************************
பிறந்தார் வளர்ந்தார் கற்றார் பெற்றார்
மணந்தார் சிறந்தார் துறந்தார் நெகிழ்ந்தார்
இழந்தார் அலைந்தார் அழித்தார் செழித்தார்
துறந்தார் துவண்டார் ஆண்டார் மீண்டார்

விளக்கம்:
************
1. பிறந்தார்: ஸ்ரீராமர் கௌசல்யா தேவிக்கு தசரதரின் ஏக்கத்தைப் போக்கும்படியாக பிறந்தது.

2.வளர்ந்தார்: தசரதர் கௌசல்யை சுமித்திரை கைகேயி ஆகியோர் அன்பிலே வளர்ந்தது

3.கற்றார்: வஷிஷ்டரிடம் சகல வேதங்கள் ஞானங்கள் கலைகள் முறைகள் யாவும் கற்றது.

4.பெற்றார்: வஷிஷ்டரிடம் கற்ற துனுர்வேதத்தைக் கொண்டு விஸ்வாமித்ரர் யாகம் காத்து விஸ்வாமித்ரரை மகிழ்வித்து பல திவ்ய அஸ்திரங்களை பெற்றது.

5.மணந்தார்: ஜனகபுரியில் சிவனாரின் வில்லை உடைத்து ஜனகர்-சுனயனாவின் ஏக்கத்தை தகர்த்து மண்ணின் மகளாம் சீதையை மணந்தது.

6.சிறந்தார்: அயோத்யாவின் மக்கள் மற்றும் கோசல தேசத்தினர் அனைவர் மனதிலும் தன் உயரிய குணங்களால் இடம் பிடித்து சிறந்து விளங்கியது.

7.துறந்தார்: கைகேயியின் சொல்லேற்று தன்னுடையதாக அறிவிக்கப்பட்ட ராஜ்ஜியத்தை துறந்து வனவாழ்வை ஏற்றது.

8. நெகிழ்ந்தார்:

*அயோத்தியா நகரின் மக்களின் அன்பைக் கண்டு நெகிழ்ந்தது.
*குகனார் அன்பில் நெகிழ்ந்தது.
*பரத்வாஜர் அன்பில் நெகிழ்ந்தது.
*பரதரின் அப்பழுக்கற்ற உள்ளத்தையும் தன் மீது கொண்டிருந்த பாலனைய அன்பினையும் தன்னலமற்ற குணத்தையும் தியாகத்தையும் விசுவாசத்தையும் கண்டு நெகிழ்ந்தது.
*அத்ரி-அனுசூயை முதல் சபரி வரையிலான சகல ஞானிகள் மற்றும் பக்தர்களின் அன்பிலே நெகிழ்ந்தது.
*சுக்ரீவர் படையினரின் சேவையில் நெகிழ்ந்தது.
*விபீஷணரின் சரணாகதியில் நெகிழ்ந்தது.
*எல்லாவற்றுக்கும் மேலாக ஆஞ்சநேயரின் சேவையைக் கண்டு, 'கைம்மாறு செய்ய என்னிடம் எதுவுமில்லை. என்னால் முடிந்தது என்னையே தருவது' எனக் கூறி ஆஞ்சநேயரை அணைத்துக் கொண்டது.

9.இழந்தார்: மாய மானின் பின் சென்று அன்னை சீதையை தொலைத்தது.

10.அலைந்தார்: அன்னை சீதையை தேடி அலைந்தது.

11.அழித்தார்: இலங்கையை அழித்தது.

12.செழித்தார்:

*சீதையை மீண்டும் பெற்று அகமும் முகமும் செழித்தது.
*ராஜ்ஜியத்தை மீண்டும் பெற்று செல்வச் செழிப்பான வாழ்க்கைக்கு திரும்பியது.

13.துறந்தார்:

அன்னை சீதையின் தூய்மையை மக்களில் சிலர் புரிந்து கொள்ளாத நிலையில் மக்களின் குழப்பத்தை நீக்குவதற்காக அன்னை சீதையை துறந்தது.

13.துவண்டார்:

அன்னை சீதையை பிரிய நேர்ந்தது சீராமருக்கு மிகுந்த வலியை தந்தது. அந்த வலி அவரை சில காலம் மனதளவில் துவள செய்தது.

15.ஆண்டார்:

என்ன தான் மனதினுள் காயம் இருந்தாலும் மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் குறைவற செய்து மக்கள் உடலால், மனதால் ஆரோக்கியமானவர்களாகவும் செல்வச் செழிப்புடன் வாழும்படியும் பார்த்துக் கொண்டது.

16.மீண்டார்:

பதினோறாயிரம் ஆண்டுகள் நல்லாட்சி செய்து மக்கள் அனைவரையும் ராமராகவும் சீதையாகவும் மாற்றி தன்னுடனே அழைத்துக் கொண்டு தன் இருப்பிடமான வைகுண்டம் மீண்டது.

ஜெய் ஸ்ரீராம்.


https://www.youtube.com/watch?v=RA5ecj775MU

uvausan
7th October 2015, 08:23 AM
வாடா மல்லிக்கு வண்ணம்
உண்டு வாசமில்லை,
வாசமுள்ள மல்லிகைக்கோ
வயது குறைவு.

வீரமுள்ள கீரிக்கு கொம்பில்லை,
கொம்புள்ள மானுக்கோ
வீரம் இல்லை.

கருங்குயிலுக்குத்
தோகையில்லை,
தோகையுள்ள மயிலுக்கோ
இனிய குரலில்லை.

காற்றுக்கு
உருவமில்லை
கதிரவனுக்கு நிழலில்லை
நீருக்கு நிறமில்லை
நெருப்புக்கு ஈரமில்லை,

ஒன்றைக் கொடுத்து
ஒன்றை எடுத்தான்,

ஒவ்வொன்றிற்கும் காரணம்
வைத்தான்,

எல்லாம் இருந்தும்
எல்லாம் தெரிந்தும்
கல்லாய் நின்றான்
இறைவன்.

எவர் வாழ்விலும் நிறைவில்லை,
எவர் வாழ்விலும் குறைவில்லை,

புரிந்துகொள் மனிதனே
அமைதி கொள் !

-படித்ததில் பிடித்தது.

uvausan
7th October 2015, 08:26 AM
உலகையே மிரள வைத்த திருநள்ளாறு கோவில்! நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!

இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு,உளவு என பல்வேறு கார ணங்களுக்காக பயன்படுத் தப்படுகிறது. சில வருடங் களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதி யை கடக்கும் பொது மட்டு ம் 3 வினாடிகள் ஸ்தம்பி த்து விடுகிறது. 3 வினாடிக ளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது.

எந்தவித பழு தும் அதன் செயற்கை கோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது. இது எப்படி சாத்தியம்??? – என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகை யே மிரள வைத்தது.

ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்து விடுகின்றன. அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ??? ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கி றது. இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த கரு நீல கதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கரு நீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்துவிடுகின்றன. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.

இதில்குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த கோவில்தான் இந்துக்களால் ‘சனி பகவான்’ தலம் என்று போற்றபடுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர். மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர். அவர்களும் சனிபகவானை கையெடுத்துகும்பிட்டு உணர்ந்தனர். இன்றுவரை விண்ணில் செயற்கை கோள்கள் திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது.” இந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து கட்டாயம் பிரமிக்கவேண்டும்.

நாம் பல செயற்கை கோள்கள் கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி, கதிர் வீசுகள் அதில் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறி விக்கும் திறமையை, நம்மால் நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து பிரமிக்காமல் இருக்க முடியவில்லை...

rajeshkrv
7th October 2015, 09:23 AM
ஜி!

உங்க இன்பாக்ஸ் ரொம்பி வழியுது. பி.எம் மாட்டேங்குது. கொஞ்சம் கிளியர் பண்ணுங்கோ.

இதோ இப்பவே கிளியர் செய்கிறேன்

vasudevan31355
7th October 2015, 11:26 AM
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்

(நெடுந்தொடர்)

41

http://i62.tinypic.com/t8u8ug.jpg

'ஜாம் ஜாம் என்று சந்தோஷமா'

'யானை வளர்த்த வானம்பாடி மகன்'

அடுத்து பாலாவின் தொடரில் 'யானை வளர்த்த வானம்பாடி மகன்' படப் பாடல். 1971-ல் ரிலீஸ் ஆகி நன்றாகவே ஓடிய வண்ணப்படம்.

http://4.bp.blogspot.com/-OAtctrjdUIM/TwKXUzUWWpI/AAAAAAAAF2Y/bfOJxOhOoAA/s1600/AANA+VALRTHIYA+VANAMBADI.JPG

1960-ல் நீலா ப்ரொடக்ஷன்ஸ் மலையாளத்தில் தயாரித்த 'ஆன வளர்த்திய வானம்பாடி' என்ற படம் வெளியாயிற்று. தமிழிலும் 'டப்' செய்யப்பட்டு வெளி வந்தது. இதில் வானம்பாடி ரோலுக்கு குமாரி என்ற நடிகை நடித்திருந்தார். நாயகன் ஸ்ரீராம்.

'யானை வளர்த்த வானம்பாடி மகன்' இப்படத்தின் தொடர்ச்சி என்று கொண்டாலும் அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை.

சரி! விஷயத்திற்கு வருவோம்.

இந்தப் படத்தில் நாயகனாக நடித்தவர் 'விஜயபுரி வீரன்' C.L.ஆனந்தன். கட்டுமஸ்தான உடல் கொண்டவர் ஆதலாலும், மிருகங்களுடன் சண்டைக் காட்சிகளில் 'டார்ஜான்' ரேஞ்சுக்கு மோதும் தைரியம் பெற்றிருந்ததாலும் இந்த ரோலுக்குப் பொருந்தினார். மனோகர் இப்படத்தின் வில்லன் என்று நினைவு.

http://i58.tinypic.com/scytle.jpg

முழுவதும் காடுகளில் எடுக்கப்பட்ட இந்த வண்ணப்படத்தில் கவர்ச்சி அம்சங்கள் தூக்கலாகவே இருந்தது. 'திரை இசைத் திலகம்' இப்படத்திற்கு இசை. மலையாளத்தின் தேவராஜன் இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் என்று சொல்வோரும் உண்டு. ஆனால் அது தவறு. ஆனால் நான் மேற் சொன்ன 'யானை வளர்த்த வானம்பாடி' படத்திற்கு இசை 'பிரதர்' லஷ்மணன்

நிஜமாகவே பாடல்கள் நல்ல பாடல்கள்தான்.

நம் 'பேபி' ஸ்ரீதேவி சிறு பெண்ணாகவும், 'மாஸ்டர்' பிரபாகரனும் (சிறிய வயது ஆனந்தன்) இணைந்து பாடும்

'ராஜா மகன் ராஜாவுக்கு யானை மேலே அம்பாரி
ராஜாவோட கூட வந்தா ராணிப் பொண்ணு சிங்காரி'

பாடல் அப்போது பிரசித்தம்.

இப்போது தொடரின் பாடல்.

http://i57.tinypic.com/2cxu834.jpg

யானை வளர்க்கும் வானம்பாடி மகன் சிறுவன் பிரபாகரன் தன் அன்னையை வளர்த்த பீமா என்ற யானை மேல் அமர்ந்து பாடி வரும் பாடல். பாடலிலேயே சிறுவன் பெரியவனாக வளர்ந்து ஆனந்தன் ஆகி விடுவதைக் காட்டி விடுவார்கள். ரொம்ப அற்புதமான பாடல். நெடிதுயர்ந்த தேக்கு மற்றும் காட்டு மரங்களுக்கிடையே யானையில் புலித்தோல் உடை அணிந்து 'ஜம்'மென்று அமர்ந்து பிரபாகன் சுசீலா அம்மா குரலில் பாடி வருவது அமர்க்களம். அற்புதமாகப் படமாக்கப்பட்டிருக்கும். காட்டு யானைக் கூட்டம், புகையாய்க் கொட்டும் வெள்ளை வெளேர் சிலீர் அருவிகள், வாயைத் திறந்து பயமுறுத்தும் சிறுத்தைப் புலி, ஓடையில் அழகாக நீந்தும் அன்னப்பறவை என்று பாடல் முழுதும் இயற்கை ரம்மியம் ரகளை செய்கிறது.

பாடலின் இடையே சிறுவன் பெரியவனாக வளர்ந்த ஆனந்தனாக அறிமுகம். யானை மேல் பம்பை முடியுடன், விரிந்த வெற்று மார்புடன், புலித்தோல் உடையுடன், புலி நக டாலருடன் பாடியபடி சிறுவர்களைக் கவருவார். கேரக்டருக்குப் பொருத்தமான் ரோல். வீர சாகசங்களுக்கு தோதானவர். சிறுத்தை, முதலை இவற்றுடன் சண்டைகள் உண்டு. பீமா யானையின் அசைவுகளும் கொள்ளை அழகு.


நான்கு சரணங்கள் கொண்ட இப்பாடலில் முதல் மூன்று சரணங்கள் பிரபாகரன் நடிக்க சுசீலாம்மா பாடுவதாக வரும். ஆனந்தன் அறிமுகத்தில் அவருக்கு நம் பாலா அதாவது நான்காவது சரணத்திற்கு அற்புதமாகக் குரல் தந்து கம்பீரக் களையுடன் கானமிசைத்திருப்பார்.

ஒரே ஒரு சரணம் என்றாலும் பாலா 'பளிச்'

'ஹா ஹா ஹா' என்று படுகம்பீரமாக ஆனந்தன் அறிமுகத்தில் பாலா ஹம்மிங் எடுப்பது அந்தக் காடுகளில் உள்ள தேனை சுவைத்தது போல் அவ்வளவு இனிப்பு. கலக்கி விடுவார். வெகு வித்தியாசமான குரல் வளம் இந்தப் பாடலில். ஆனந்தனுக்கு அருமையாக சூட் ஆகும். காட்டுவாசிப் பாடல் என்பதால் பாலாவுக்கும் இது புது அனுபவமாய் இருந்திருக்கும். அதனால் இன்னும் அனுபவித்துப் பாடியிருப்பார்.

பிரபாகரனுக்குப் பாடும் சுசீலா அமாவின் குரல் தேவாமிர்தத்தை மிஞ்சும். அவருக்கு மூன்று சரணங்கள். இந்த தேவதையின் தெளிவான தமிழ் உச்சரிப்பையும், ('அந்த காட்டானை கூட்டத்திடம் தந்தமிருக்கு') பிள்ளைக்கான அப்பாவித்தனத்தை தன் குரலில் பிரதிபலிக்க வைக்கும் அழகையும் கேளுங்கள்.

மகாதேவன் யானை அசைந்து அசைந்து செல்வதற்குத் தக்கபடி அம்சமான பின்னணிகளை ஒலிக்க வைத்திருப்பார். ரீரிகார்டிங் அவ்வளவு பிரமாதமாய் வந்திருக்கும். கிடார் ஒலிகளும், ஷெனாய் இசையும் இனிமையோ இனிமை. பிரபாகரன் ஆனந்தனாய் மாறும்போது வரும் இடையிசைப் பின்னணி நிஜமாகவே பிரம்மிக்க வைக்கிறது. இடைவிடாது ஒலிக்கும் டிரம்ஸ் ஒலிகளும், அழகான புல்லாங்குழல் இசையும், பாங்கோஸ் உருட்டல்களும் நம்மை அந்த வனாந்திர சொர்க்கத்திகே கூட்டிச் செல்கின்றன. இரண்டாவது சரணம் முடிந்து வரும் பல்லவி வரிகளை மாற்றி டியூன் போட்டிருப்பது அம்சமான அம்சம்.

'தளிர் நடை போடடா ராஜ பீமா
ஜாம் ஜாம் என்று சந்தோஷமா'

இந்தப் பாடலின் இசைச் சங்கதிகளை மகாதேவன் 'வாணி ராணி' படத்தில் 'முல்லைப் பூ பல்லக்கு போவதெங்கே' பாலா, சுசீலா டூயட்டில் அப்படியே முச்சூட அள்ளித் தந்திருப்பார். பாடலின் பிளிரும் முடிவிசை டாப்.

பாடல் வரிகள் ரசிக்கத்தக்கவை.

நிஜமாகவே 'ஜாம் ஜாம்' பாடல்தான். எல்லோரையும் சந்தோஷப்படுத்தும் பாடல்தான்.

http://i62.tinypic.com/35m2ob6.jpg

ஜாம் ஜாம் என்று சந்தோஷமா
நீ தளிர் நடை போடடா ராஜ பீமா
ஜாம் ஜாம் என்று சந்தோஷமா
நீ தளிர் நடை போடடா ராஜ பீமா
ஜாம் ஜாம் என்று சந்தோஷமா

தாயில்லா பிள்ளை போல் காடு கிடக்கு
அதைத் தாலாட்ட வானிலே மேகமிருக்கு
தாயில்லா பிள்ளை போல் காடு கிடக்கு
அதைத் தாலாட்ட வானிலே மேகமிருக்கு
வாயில்லா ஊமை போல் சோலையிருக்கு
அதை வார்த்தைகள் பேச வைக்க தென்றல் இருக்கு

ஜாம் ஜாம் என்று சந்தோஷமா
நீ தளிர் நடை போடடா ராஜ பீமா
ஜாம் ஜாம் என்று சந்தோஷமா

காடெங்கும் உன் ஜாதி சொந்தமிருக்கு
அந்த காட்டானை கூட்டத்திடம் தந்தமிருக்கு
காடெங்கும் உன் ஜாதி சொந்தமிருக்கு
அந்த காட்டானை கூட்டத்திடம் தந்தமிருக்கு
உங்களுக்கும் எனக்கும் பந்தமிருக்கு
இந்த உறவை நினைக்கையில் இன்பமிருக்கு

தளிர் நடை போடடா ராஜ பீமா
ஜாம் ஜாம் என்று சந்தோஷமா

தாயாரை வளர்த்தது நீதான் பீமா
உன்னை தாத்தா என்றே நானும் சொல்லலாமா
தாயாரை வளர்த்தது நீதான் பீமா
உன்னை தாத்தா என்றே நானும் சொல்லலாமா
வாயார முத்தமொன்றை இடலாமா
என்னை வளர்க்கும் பொறுப்பையும் தரலாமா

ஹாஹாஹா ஹாஹஹஹாஹஹாஹஹாஹா
ஓஹோஹோ ஓஹஹோஹோஹோஹோஹோ

காட்டிலுள்ள பாம்புகளில் நஞ்சுமிருக்கு
ஆனால் கடிக்கக் கூடாதென்ற நெஞ்சுமிருக்கு
நாட்டிலுள்ள மக்களிடம் நாலுமிருக்கு
நாட்டிலுள்ள மக்களிடம் நாலுமிருக்கு
அந்த நாலோடு சேர்ந்து கொஞ்சம் வாலுமிருக்கு

ஜாம் ஜாம் என்று சந்தோஷமா
நீ தளிர் நடை போடடா ராஜ பீமா

ஜாம் ஜாம் என்று சந்தோஷமா



https://youtu.be/9cRvq6pyU48

madhu
7th October 2015, 11:34 AM
வாசு ஜி...

ஜாம் ஜாமென்று நடை போட்டு வந்த பாட்டு எப்போது கேட்டாலும் இனிக்கும். ஹாஹா.. எனக்குத்தான் இந்தப் பாட்டைக் கேட்கையில் முல்லைபூ பல்லக்கு நினைவுக்கு வருது என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். எங்கேயோ லிங்க் இருக்கு எது என்று புரியாமல் இருந்தேன்... !!!!!!

"வாலுமிருக்கு" என்று கிண்டலாக பாலு சொல்வதை ரசித்து ரசித்து சிரித்ததுண்டு...

uvausan
7th October 2015, 11:34 AM
வாசு - "வெள்ளிக்கிண்ணம் தான் " பாடலின் அலசலுக்கு நிஜமாகவே ஒரு வெள்ளிக்கிண்ணம் உங்களுக்கு பரிசாகத்தரவேண்டும் என்று மனசு துடிக்கிறது - நீங்கள் இங்கு வரும்போது அந்த பரிசு தயாராக இருக்கும் - அதுவரையில் -----

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/download_zpsjftzlrwk.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/download_zpsjftzlrwk.jpg.html)

vasudevan31355
7th October 2015, 12:28 PM
வாசு ஜி...

"வாலுமிருக்கு" என்று கிண்டலாக பாலு சொல்வதை ரசித்து ரசித்து சிரித்ததுண்டு...

நன்றி மதுண்ணா.

உண்மைதான். பாலுவின் கிண்டல் தொனி கில்லி. அந்த வரிக்கு ஆனந்தன் கூட இடுப்பில் கைகளை வைத்து லேசாகப் பற்களைக் கடித்தபடி, மக்களின் வால்தனத்தைக் கடிந்தபடி வாயசைப்பதும் நன்றாகவே இருக்கும். மனம் மறப்பேனா என்கிறது பாடலை. சுற்றி சுற்றி 'ஜாம் ஜாம்'தான் 'ஜம்'மென்று சுழல்கிறது. இந்தப் பாடலிலும் நம் ஒத்த ரசனை வெளிப்பட்டு விட்டது. ரசனை தந்த இறைவனுக்கு நன்றி.

vasudevan31355
7th October 2015, 12:29 PM
வாசு - "வெள்ளிக்கிண்ணம் தான் " பாடலின் அலசலுக்கு நிஜமாகவே ஒரு வெள்ளிக்கிண்ணம் உங்களுக்கு பரிசாகத்தரவேண்டும் என்று மனசு துடிக்கிறது - நீங்கள் இங்கு வரும்போது அந்த பரிசு தயாராக இருக்கும் -

அப்போது 'முத்துப் புன்னகை'யை உங்கள் கண்களில் காணலாமா?:)

adiram
7th October 2015, 01:00 PM
டியர் வாசுதேவன் சார்,

எப்படி அருமையாக எழுதியிருக்கிறீர்கள், எவ்வளவு ஆழமாக அலசியிருக்கிறீர்கள் என்றெல்லாம் சொலவதற்கு முன், நாலு விஷயங்களை மட்டும் தெரிந்து வைத்துக்கொண்டு அதையே அரைத்த மாவாக அரைத்துக்கொண்டிருக்கும் இணையத்தில், புதிய புதிய மாவாக தேடிப்பிடித்து அரைக்கிறீர்களே அதற்கே முதல் பாராட்டு. பின்னே?. 'ஜாம் ஜாம் ஜாமென்று சந்தோஷமா' பாடலையெல்லாம் யார் எடுத்து இவ்வளவு விரிவாக ஆராய்வார்கள் சொல்லுங்கள்.

ஆனந்தன்

சுருட்டை முடியும், களையான முகமும், ஓரளவு முரட்டுத்தனமான நடிப்பும் கொண்ட ஆணழகன் ஆனந்தனை தமிழ்ப்பட உலகம் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றுதான் சொல்லவேண்டும் ஆனால் தமிழ்ப்படவுலகம் கண்டுகொள்ளாவிட்டாலும் நம் திரியில் அவரைப்பற்றி அதிகமாகவே அலசியிருக்கிறோம். அதன் தொடர்ச்சிதான் உங்கள் அருமையான ஆய்வு இப்படத்துக்கு டார்ஜான் வேடத்துக்கு தோதான ஆளாகத்தான் அவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் மெரிலேன்ட் சுப்பிரமணியம். ஆனந்தனும் அவரது நம்பிக்கையை காப்பாற்றியிருப்பார். 'யானை வளர்த்த வானம்பாடி மகன்' படம் சூப்பர் ஹிட்.

மாஸ்டர் பிரபாகரன்

வேலுத்தம்பி பிரபாகரனுக்கும், கேப்டன் பிரபாகரனுக்கும் முன்பே பிரபலமான பிரபாகரன் இவன்(ர்)தான் அப்போதைய எல்லாப்படங்களிலும் குழந்தை நட்சத்திரம் என்றால் பெரும்பாலும் பிரபாகர்தான்.. பாமா விஜயம்,சாதுமிரண்டால்,, இருகோடுகள், சாந்திநிலையம், எங்க மாமா, திருமலை தென்குமரி, ராமன் எத்தனை ராமனடி, பெண் தெய்வம், பதிலுக்கு பதில்,அனாதை ஆனந்தன் என்று ஏராளமான படங்கள். 'வா ராஜா வா' இந்த குட்டிப்புயலை புகழின் உச்சியில் வைத்தது. எதிர்காலத்தில் நன்றாக வருவான் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் நிலைமை மாறியது. ராஜா, இதயவீணை, தங்கதுரை, மணிப்பயல் என்று மாஸ்டர் சேகர் முன்னேற, இவன் பின்னுக்கு தள்ளப்பட்டான். கண்ணா நலமா படத்தின்போது குரல் உடைந்ததும் ஒரு காரணம். அதன்பின்னர் எழவே முடியவில்லை.

யானை வளர்த்த வானம்பாடி மகன்

படம் ரிலீசானபோது ஏனோதானோ என்று தியேட்டருக்கு போனால் கடுமையான கூட்டம். டிக்கட் கிடைக்கவில்லை. பின்னர் இன்னொருநாள் சீக்கிரமாக போய் பார்த்த படம். காட்டுப்பகுதிகளில் ஒளிப்பதிவு மிக நன்றாக இருந்தது. வண்ணம் சற்று கூடுதலாக கண்களுக்கு இதமளித்தது. இம்மாதிரிப் படங்களில் நாயகியர் போனால் போகிறதென்று கால்வாசி உடைகள்தான் அணிந்து வருவார்கள் என்பது நமக்குத்தெரியும். கியூவில் கூட்ட நெரிசலுக்கு அதுவும் ஒரு காரணம் மொத்தத்தில் படம் திருப்தியளித்தது.

உங்கள் பாடல் அலசல் பழைய நினைவுகளை கிளறிவிட்டது. நல்ல ஆய்வு. பாராட்டுக்கள்.

vasudevan31355
7th October 2015, 02:57 PM
நன்றி ஆதிராம் சார்.

புகழ் பெற்ற பாடல்களாக இருந்தாலும், பட ஆய்வுகளாய் இருந்தாலும் சரி! இல்லையாயினும் சரி!

எதுவொன்றைக் கொடுத்தாலும் அவற்றின் விஷயமறிந்து ஓடோடி வந்து உற்சாகப்படுத்துவதில், அது சம்பந்தமான சரியான மேலதிக விவரங்களைத் தருவதில் தாங்கள் கைதேர்ந்தவர். அதில் தங்களுக்கு இணை தாங்களே.

'மாஸ்டர்' பிரபாகரனின் படங்களைப் பட்டியல் இட்டதிலிருந்தே அன்றைய திரைப்பட விவரங்கள் அனைத்தையும் விரல் நுனியில் வைத்திருப்பவர் தாங்கள் என்று கூறவும் வேண்டுமோ? அருமை. அருமை. பாடல் பதிவுக்கேற்ற அழகான, தேவையான விவரங்கள். நன்றி ஆதிராம் சார்.

அந்த 'மாஸ்டரி'ன் முகம் வாலிப வயதில் வேறு மாதிரி ஆகிப் போனது. தவிரவும் குள்ளம் வேறு. மாஸ்டர் சேகருக்கோ 'வழுவழு' முகம். இன்னொரு அதிகப் பிரசங்கி மாஸ்டர் ஒருத்தர் இருந்தார். ஸ்ரீதர். ஓவராகக் கொல்லுவார்.

'யானை வளர்த்த வானம்பாடி மகன்' படம் 'மெரிலேன்ட்' சுப்பிரமணியம் தயாரித்த படம் என்று எவ்வளவு அழகாகத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்! இவர்தானே சூப்பர் ஹிட் பக்திப்படமான 'சுவாமி ஐயப்பன்' படத்தை தன் சொந்த பேனரான 'நீலா புரடக்ஷன்ஸ்' சார்பில் தமிழ், மலையாளம் ரெண்டிலும் எடுத்து கல்லா கல்லாவாக ரொப்பிக் கொண்டது?

மலையாளப் பட உலகில் 'மெரிலேன்ட்' ஸ்டுடியோ மிகவும் புகழ் பெற்ற ஒன்று.

http://i.ytimg.com/vi/_m-av78JOR0/hqdefault.jpghttp://i.ytimg.com/vi/i22Mih9h1-Y/hqdefault.jpg

'யானை வளர்த்த வானம்பாடி மகன்' வெற்றியைத் தொடர்ந்து அதே காட்டு பாணியில் வெளிவந்த இன்னொரு படம் 'மலை நாட்டு மங்கை'. ராணி புரடக்ஷன்ஸ் தயாரிப்பு. நம்ம ஜெமினி, சசிகுமார், விஜயஸ்ரீ அப்புறம் ஆனந்தன் கூட நடித்திருப்பார்கள். மலையாள வாடை அதிகம் அடிக்கும். இயக்கம் சுப்ரமணியம்தான். தேவநாராயணன் வசனம் எழுத பாடல்களுக்கு இசை வேத்பால் வர்மா என்பவர். பின்னணி இசை மட்டும் புகழேந்தி.

'வந்தாள் காட்டுப் பூச்செண்டு'

'நீலமாம் கடலலையில்'

போன்ற ஜேசுதாஸின் பாடல்கள் சுகம்.

உங்களுக்காக 'மாஸ்டர் பிரபாகரன்', அவர் தங்கை பேபி சுமதி இமேஜஸ் உள்ள வீடியோ கிளிப் இங்கே.


https://youtu.be/rB7aUWM3KJc

chinnakkannan
7th October 2015, 04:53 PM
ஹாய் ..

செளக்கியமா.. (என்னது இதுவரைக்குமா..)

யா.வ. வானம்பாடிமகன் பார்த்தது சிந்தாமணியில் புகையாய் நினைவிருக்கிறது..இந்த ஜாம் ஜாம் பாட்டு படத்தில் மற்றும் இசைக்களஞ்சியத்தில் ஓரிரு தடவைகள் கேட்டதுண்டு..

மோகினி பேய் என்று பதிவுகள்..இருந்தாலும் கும்னாம்போடவில்லையே.. பேய் வர்ராட்டாலும் அந்தக் குரல்.. இதுவே தமிழில் நாளை உனது நாள் என வர...அதுவும் சக்தி தியேட்டரில் சரியாக ஐந்து மணிக்கு (மதியக்காட்சி இறுதி) கரெண்ட் போய் ஆறுமணிவரை வெய்ட் செய்து கரெண்ட் வராததினால் க்ளைமேக்ஸ் பார்க்காமல் வந்தது ஒரு தனி அனுபவம்..

ம்ம் வாரேன் பின்ன..





https://youtu.be/Kjyr9JYd3-I

vasudevan31355
7th October 2015, 05:12 PM
கலர்புல் கண்ணா!

எண்ணத்தோடு வண்ணம் குழைத்து பதிவுகள் தர 'வருக வருக' என வரவேற்கிறேன்.

'கும்நாம் ஹே கோயி
பத்நாம் ஹே கோயி'

எங்கே பார்த்தாலும் பேயி:)

adiram
7th October 2015, 05:25 PM
டியர் வாசு சார்,

தூண்டிவிட்டால் போதுமே, கொழுந்துவிட்டு எரிவீர்களே. அதுதான் சாக்கு என்று தகவல்களை அள்ளி எறிவீர்களே. தெரிந்த கதைதானே. இன்று நேற்றா பார்க்கிறோம்.

மலைநாட்டு மங்கையை குறிப்பிட நினைத்து மறந்துவிட்டேன். அதில் ராஜஸ்ரீ, மனோரமாவெல்லாம் கூட இருப்பாங்க. மாஸ்டர் ஸ்ரீதர் பற்றி நீங்க சொன்னது சரியே. நல்லதொரு குடும்பத்துக்குள் நுழைந்துவிட்ட குறத்தி மகன் என்று சுப்பண்ணா சொன்னாரண்ணா.

கேள்விப்பட்ட செய்தி ஒன்று...

அப்போதைய தி.மு.க ஆட்சியில் சிறந்த திரைப்படங்கள் / கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கும் பழக்கம் கடைப்பிடித்து வந்தபோது 1969-ல் சிறந்த குழந்தை நட்சத்திரம் யார் என்பதில் 'வா ராஜா வா' பிரபாகருக்கும், 'கண்ணே பாப்பா' பேபி ராணிக்கும் கடும் போட்டி. (அந்த ஆண்டுதான் சிறந்த படமாக அடிமைப்பெண்ணும், சிறந்த நடிகராக தெய்வமகன் படத்துக்காக நடிகர்திலகமும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்).

தேர்வு முடிவுகள் அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியிடம் காண்பிக்கப்பட்டபோது 'சிறந்த குழந்தை நட்சத்திரம்' என்ற இடம் காலியாக இருப்பதைப்பார்த்து அவர் விவரம் கேட்க, இருவரில் யாருக்கு கொடுப்பது என்று குழப்பமாக இருப்பதாக தேர்வுக்கமிட்டியினர் கூறினராம், தலைநிமிர்ந்து பார்த்து புன்னகைத்த கருணாநிதி, "இருவருக்கும் கொடுத்தால் இ.பி.கோ. வில் கைது பண்ணிவிடுவார்களா?" என்று சிரித்தவாறு 'குழந்தை நட்சத்திரம்' என்பதை அடித்துவிட்டு, 'குழந்தை நட்சத்திரங்கள்' என்று எழுதி மாஸ்டர் பிரபாகர், பேபி ராணி இருவர் பெயரையும் எழுதிக்கொடுத்து "பெரியவர்கள் ஏமாற்றத்தை தாங்கிக்கொள்வார்கள், குழந்தைகள் தாங்க மாட்டார்கள்" என்று கூறினாராம்.

vasudevan31355
7th October 2015, 05:27 PM
சின்னா! சின்னா!


மாயமா மாயமா
வாழ்க்கை மாயமா
பெரும் கதைதான்
கடும் புயல்தான்
வாழ்க்கை வேஷமா

இந்தப் பேய் காயத்ரி பாட்டை சுட்டுகிச்சி. காப்பி அடிக்கிற பேய் போல இருக்கு.

ஆனா பாட்டு செம அமைதியா போகுது. அழுவாச்சி பேய்.


https://youtu.be/V21RJJV7Iq4

vasudevan31355
7th October 2015, 05:38 PM
இதோ 'அக்கினி'யின் புதல்வர் அரண்டு மிரண்டு இந்தப் பெண் பேய்களைப் பார்த்து செய்வதறியாது நிற்பதைப் பாருங்கள். எல்லாம் கிரிஜா பேய் செய்யும் வேலைகள்.

இதோ 'அக்கினி'யின் புதல்வர் அரண்டு மிரண்டு இந்தப் பெண் பேய்களைப் பார்த்து செய்வதறியாது நிற்பதைப் பாருங்கள். எல்லாம் கிரிஜா பேய் செய்யும் வேலைகள்.

'காட்டுக்குள்ளே பாட்டுச் சொல்லும் கன்னிப் பூவும் நான்தானோ'


https://youtu.be/k_OfAk-tIqo

vasudevan31355
7th October 2015, 05:44 PM
//நல்லதொரு குடும்பத்துக்குள் நுழைந்துவிட்ட குறத்தி மகன் என்று சுப்பண்ணா சொன்னாரண்ணா.//

'நல்லதொரு குடும்ப'த்தின் முன்னோடி 'ஒருவனுக்கு ஒருத்தி'யிலும்,

'சரவணன் சொன்னான்.... சங்கரன் கேட்டான்..... சாட்சிக்கு சுவாமிமலை'

இயக்குனர் சங்கரன்.ரா சொல்லிக் கேட்ட ஜெய், ஸ்ரீதர்.:)


https://youtu.be/Cz0tIzWbTvU

adiram
7th October 2015, 05:52 PM
பழைய ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடித்த 'தெய்வீக ராகங்கள்' படத்தில் ஒன்றுக்கு மூன்றாக பேய்கள் ஹீரோ வீட்டில் முகாமிட்டு அட்டகாசம் பண்ணுமே.

ஆயிரம் ஜென்மங்களில் லதாவையும் பேயாக பார்த்தாச்சு.

வர வர இந்த திரியில் பேய்கள் நடமாட்டம் அதிகமாகி விட்டதால் என்னை மாதிரி சின்னப்பசங்க (???????) வரவே பயப்படுறாங்க.

vasudevan31355
7th October 2015, 06:09 PM
பழைய ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடித்த 'தெய்வீக ராகங்கள்' படத்தில் ஒன்றுக்கு மூன்றாக பேய்கள் ஹீரோ வீட்டில் முகாமிட்டு அட்டகாசம் பண்ணுமே.



கங்கா யமுனா சரஸ்வதி
நீங்கள் குளித்த மூன்று நதி
கடலினில் விழுமுன்
புனிதத்தை இழந்தது
காரணம் உங்கள் தீயமதி

தென்னாட்டு ஓமர் ஷெரிப்புக்கு 'ஓமன்' கணக்காக 'உமன்' மோகினிகள்

பச்சை மோகினி மகராஜா
இதோ பரதமாடுது உன் ரோஜா
இச்சை தீர்ந்ததும் மறந்தாயே
இந்த தேவதை விடுவாளோ


https://youtu.be/MRI72CEvbMY

uvausan
7th October 2015, 06:20 PM
வாசு உங்கள் "யானை வளர்த்த வானம்பாடி மகன்' பாடல் அலசல் அருமை - ஜாம் ஜாம் என்று இருந்தது

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/images_zpsp6lz36jh.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/images_zpsp6lz36jh.jpg.html)

eehaiupehazij
7th October 2015, 09:08 PM
மேலைப் பேய்கள் ! பேயோட்டுபவர்கள்! Exorcists!! Dracula!!


இந்த பேய் பற்றிய பய உணர்வு எப்படித்தான் மனிதரின் ரத்தத்தில் கலந்தது என்றே புரியவில்லையே !
எத்தனை கதைகள் பேயைப் பற்றி !!
தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றமடைந்த மேலை நாடுகளும் இந்த பேய் பயத்துக்கு விதிவிலக்கல்ல !
நமது ஊரில் பூசாரி பேயோட்டுவார்! மேலை நாடுகளில் Exorcists பேயோட்டுவர்!
பேய்க்கு கால் இல்லை என்பது நமது ஐதீகம் !
ஆனால் சவப்பெட்டிக்குள் பகலெல்லாம் தூங்கி இரவில் ரத்தக் காட்டேரிகளாய் வெளியே வேட்டைக்கு வரும் டிராகுலா பேய்களுக்கு கூர்மையான பற்களோடு கால்களும் உண்டாமே!!

நம்ம ஊரு பேயோட்டிகள் !
https://www.youtube.com/watch?v=uL7loyuzg_4
மேலைநாட்டு பேயோட்டிகள் !!
https://www.youtube.com/watch?v=_c4intAvdrI

Christopher Lee has always been the definitive Dracula!

பகல் வெளிச்சம் பட்டால் டிராகுலா சிதைந்து விடும்

https://www.youtube.com/watch?v=NBHmS8pg2pc

ஜெமினியின் சாந்திநிலையம் படத்திலும் பாப்பம்மா என்னும் வேலைக்காரப் பெண்மணி பாத்திரத்தை அறிமுகப் படுத்தும்போது பேய் எபக்டில் காட்டியிருப்பார்கள்

chinnakkannan
7th October 2015, 11:04 PM
ராஜ் ராஜ் சார் வர்றதுக்குள்ள ஒரு ஜூகல் பந்தி போட்டுடலாம்..


இஸ்துனியா மெய்ன் ஜீனா ஹோ தோ..

ஹெலனின் துள்ளல் நடனம்..பாடல்



https://youtu.be/AGNSzhFkQn0

அதுவே தமிழில் அலையலையாப் பல ஆசைகளே எனக்கொஞ்சம் பார்க்க பயம்ம்மா இருக்கும்..

https://youtu.be/nLubEDsarp0

அகதா கிறிஸ்டியின் பிரபலமான நாவல் ஒன்றை (பெயர் மறந்து விட்டது..) 1965 இல் கும்னாமாக க் கதை சற்றே மாற்றி எடுக்க அதுவே பிற்காலத்தில் எண்பதுகளில் நாளை உனது நாள் ஆனது..

டபக் டபக்கென விழும் கொலைகள்..சுவாரஸ்யம் தான்..பட் இந்த இரண்டரை மணி நேரத்தில் உடையப்படும் படத்தின் சஸ்பென்ஸ் எனக்குத் தெரிய ஆறு மாதங்கள் ஆயிற்று..அப்போ தான் ஒரு நண்பன் கொலையாளியா..அது... என பதில் சொல்லி என் ஜென்ம சாபல்யம் அடைய வைத்தான்..

chinnakkannan
7th October 2015, 11:07 PM
வாஸ்ஸு.. பேய்ப் பாடல்களுக்கு தாங்க்ஸ்.. யாரது வை விடுங்கள்.. கொஞ்ச நாள் முன் யார் என்று ஒரு டுபாக்கூர் படம் பார்த்தேன் ( பட ஆரம்பத்தில் கர்ப்பிணீகள் பார்க்கப் படாத் என இருந்ததா பயங்கரமா இருக்கும் என்று ஒம்மாச்சி கும்பிட்டு விபூதி இட்டுக்கொண்டு உட்கார்ந்தால்... கொன்று விட்டார்கள்..) சினேகா,பூமிகா அப்புறம் தெலுகு ஆட்கள்..ம்ம்

eehaiupehazij
7th October 2015, 11:41 PM
மின்னலாய் மின்னி மறைந்த கலைஞர்கள் !
unsung Artists !

Once seen / One Scene Stars : Who is where? 1


மக்கள் கலைஞர் அறிமுகமான இரவும் பகலும் 1965 திரைப்படத்தில் ஒரு சுறுசுறுப்பான இளம் நடனக் கலைஞர் ரவிச்சந்திரனின் சாயலில் அற்புதமான
நடன அசைவுகளைத் தந்த ஒரு மதுர கீதம் ! கூத்தாடும் கொண்டையிலே கொஞ்சுதடி மல்லிகைப்பூ...TR பாப்பா இசையில்!

https://www.youtube.com/watch?v=_mKotvUtHPY

இவரை வேறு எந்தப் படத்திலும் மீண்டும் கண்டதாக நினைவில்லை ! சி ஐ டி சகுந்தலா ஜாடையில் உடன் ஆடும் அழகுப் பதுமையும் யாரென்று தெரியவில்லை !

eehaiupehazij
7th October 2015, 11:56 PM
சி க !
கும்நாம் (And Then ..there were None by Agatha Christie) சாயலில் வீணை பாலசந்தர் இயக்கத்தில் வந்த நடு இரவில் படத்தை விட்டு விட்டீர்களே !

https://www.youtube.com/watch?v=gs1s0rRYZ-A

கும்நாமில் முகமது ரபியின் சுறுசுறு பாடல் !

https://www.youtube.com/watch?v=XnBbjc5hmho

chinnakkannan
8th October 2015, 12:35 AM
ஆமாம் சி.செ. பட் நடு இரவில் பத்தி முன்னால பேசிய நினைவு.. பட் இந்த அண்ட் தென் தேர் வேர் நன்.. டைட்டில் சொன்னீங்களே..மத்யானத்துக்குள்ள இருந்து நன்னா யோசிச்சு யோசிச்சு காஞ்சு போய்ட்டேன்.. தாங்க்ஸ்.. கண் பார்த்த ஜாடையிலே காவியம் கண்டேன் மறக்க முடியுமா.. அந்தப் படத்துல ஆத்தோரம் எல்லா பாடியையும் புதைக்கறமாதிரி காட்டுவாஙக்..கதையில் ஒரு அறையில் போட்டிருப்பார்கள்.. கதையில் வில்லன் ஒரு ஜட்ஜ் என நினைவு..கடைசியில் அவரும் இறந்த்ருப்பார்..

இதையே வைத்து சமீபத்தில் பத்து வருடம் இருக்குமா ஐந்து வருடமா நினைவில்லை.. ஒரு கலர்ப் படமும் வந்தது..ஸ்ரீமன் என நினைவு..

நடு இரவில் படத்தில் கொலைகள்..பக் பக்கென இருக்கும்.. அம்மா வோட பீரோவத் தெறந்து பணம் எடுக்கலாம்னு போனா அங்கிருந்து அம்மாவான எஸ்.என்.லட்சுமி சரிவார்..விஷம் சாப்பிட்ட பால் குடித்த சித்தப்பா உத்தரத்தில் தொங்குவார்.. கெக்கெகெக்கே என சிரித்தபடி மாடியிலிருந்து எட்டிப் பார்க்கும் பண்டரிபாயைத் தள்ளிவிடும் இருகைகள் சர்ரியான த்ரில் படம்..வீணை எஸ்.பாலச்சந்தருக்கு ஒரு ஓ..சோ வின் இரண்டாவது படம் என நினைக்கிறேன்..முதல்படம் பா.ம.பா. இல்லியோ..

madhu
8th October 2015, 04:20 AM
சி.செ.ஜி... இரவும் பகலும் படத்தில் கூத்தாடுவது ஏ.சகுந்தலா என்றுதான் நினைக்கிறேன். ஆண் யாரோ தெர்லீங்

madhu
8th October 2015, 04:30 AM
அதென்னது ? எல்லோரும் வெள்ளை டிரஸ் போட்டு மல்லிப்பூ வச்ச பெண் ஆவி/பேய்/பிசாசுகளை பத்தியே பேசறீங்க ?

இளம்பெண்ணை சுற்றும் ஆண் ஆவி ஒண்ணு இருக்கே... கண்டுக்க மாட்டீங்களா ?

https://www.youtube.com/watch?v=548dRZQb2rw

எத்தனையோ பேய் இருக்கு நாட்டுக்குள்ளே என்று அம்ம்மா சொல்வது கேக்குதா ?

https://www.youtube.com/watch?v=byHSueQcpfY

rajeshkrv
8th October 2015, 07:13 AM
ஹாய் ..

செளக்கியமா.. (என்னது இதுவரைக்குமா..)

யா.வ. வானம்பாடிமகன் பார்த்தது சிந்தாமணியில் புகையாய் நினைவிருக்கிறது..இந்த ஜாம் ஜாம் பாட்டு படத்தில் மற்றும் இசைக்களஞ்சியத்தில் ஓரிரு தடவைகள் கேட்டதுண்டு..

மோகினி பேய் என்று பதிவுகள்..இருந்தாலும் கும்னாம்போடவில்லையே.. பேய் வர்ராட்டாலும் அந்தக் குரல்.. இதுவே தமிழில் நாளை உனது நாள் என வர...அதுவும் சக்தி தியேட்டரில் சரியாக ஐந்து மணிக்கு (மதியக்காட்சி இறுதி) கரெண்ட் போய் ஆறுமணிவரை வெய்ட் செய்து கரெண்ட் வராததினால் க்ளைமேக்ஸ் பார்க்காமல் வந்தது ஒரு தனி அனுபவம்..

ம்ம் வாரேன் பின்ன..







கும்னாம் ஹை கோயி எனக்கு மிகவும் பிடித்த பாடல்

rajeshkrv
8th October 2015, 07:15 AM
https://www.youtube.com/watch?v=c2xcH1Pzz6U

Russellxor
8th October 2015, 08:56 AM
[QUOTE=g94127302;1257856]செந்தில் வேல் - உங்களையும் , செந்தில் சாரையும் விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன் - உங்கள் உழைப்பில் எனக்கு என்றுமே அரிமா எப்படி செல்கிறது? - சிங்க நடையைப்பற்றி என்ன சொல்ல வேண்டும் என்று கேட்க்கிறீர்களா ?? உங்களுக்காக 16 வார்த்தைகளில் இராமாயணம் -

தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.வாசு சாரையும் அழைத்து வாருங்கள்.

16 வார்த்தை ராமாயணம் அருமை.


[

uvausan
8th October 2015, 12:12 PM
இனிய மதிய வணக்கம்

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/mayyam_zpsdrfxvvwh.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/mayyam_zpsdrfxvvwh.jpg.html)

uvausan
8th October 2015, 12:16 PM
ஒரு வார்த்தை பல லட்சம் புண்ணியங்கள் !!!

மது சார் - இந்த பதிவு உங்களுக்காக !

ஒரே வார்த்தையைக்கொண்டு மாயா ஜாலம் செய்தவர்கள் நம் முன்னோர்கள் - அதில் புதைந்திருக்கும் கருத்துக்கள் நம்மையெல்லாம் இன்னும் வாழ வைத்துக்கொண்டிருக்கின்றன .


பதிவு 1

கிருஷ்ணம் , கிருஷ்ணாஷிரியம் கிருஷ்ணம்
கிருஷ்ணம் , கிருஷ்ணாஷிரியம் ததா
கிருஷ்ணம் , கிருஷ்ணாஷிரியம் கிருஷ்ணம்
கிருஷ்ணம் , கிருஷ்ணாஷிரியம் பஜே

ஒவ்வொரு கிருஷ்ணனுக்கும் ஒவ்வொரு அர்த்தம் . கிருஷ்ணம் என்ற சொல்லுக்கு பல வேறு அர்த்தங்கள் உண்டு . இந்த பாடலை எடுத்துக்கொள்ளுங்கள் - எவ்வளவு கிருஷ்ணர்கள் ஒளிந்து கொண்டிருக்கின்றார்கள் என்று தெரிய வரும் . நம் கண்ணதாசனும் இந்த பாடலைக்கேட்டபின் தான் " கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா " என்ற காலத்தினால் அழிக்க முடியாத உன்னத பாடலை தந்துள்ளார் . ஒரு வித்தியாசம் - கண்ணதாசனின் அந்த பாடலில் கிருஷ்ணன் ஒன்று ஆனால் கோரிக்கைகள் பல . நாம் எடுத்துக்கொண்ட இந்த பாடலில் கோரிக்கை ஒன்று , கிருஷ்ணர்கள் பல .

இந்த பாடலில் 8 மொத்தம் கிருஷ்ணர்கள்

1. கிருஷ்ணன் : மஹா பாரதத்தை எழுதிய வியாசரின் பெயரும் "கிருஷ்ணன் " தான் .

2. அர்ஜுனனுக்கும் " கிருஷ்ணன் " என்ற பெயர் உண்டு .

3. திரௌபதிக்கும் " கிருஷ்ணா " என்று பெயர் .

4. யமுனை நதிக்கும் " கிருஷ்ணா " என்று பெயர் உண்டு .

5. கிருஷ்ணன் என்றால் " சியாமள வர்ணன் " - கருமை நிறம் கொண்டவன் .

6. கிருஷ்ணன் என்பதற்கு " மற்றவர்களை மயங்க வைப்பவன் " என்றும் ஒரு பொருள் உண்டு .

7. சதானந்த ரூபன் - எப்பவும் ஆனந்தமாக இருப்பவன் ஆனந்தத்தை மற்றவர்களுக்கும் அள்ளி அள்ளித் தருபவன் என்பதால் பெயர் "கிருஷ்ணன் . "

8. பரமாத்மாவானவன் என்பதால் கிருஷ்ணன்

அவனை பூஜிக்கிறேன் .


பதிவு 2

யாம் ஆமா? நீ ஆம் ஆம்; மாயாழீ! காமா! காண் நாகா!
காணா காமா! காழீயா! மா மாயா! நீ, மா மாயா!

இந்த வரிகள் திருஞானசம்பந்தர் - திருக்கடைக்காப்பில் , கௌசிகம் , மூன்றாம் "திருமுறையில் " வருகிறது .

யாம் - ஆன்மாக்களாகிய நாங்கள் கடவுளென்றால்.

ஆமா - அதுபொருந்துமா?

நீ : நீயே கடவுளென்றால்.

ஆம் ஆம் - முற்றிலும் தகுவதாகும்.

மாயாழீ - பேரியாழ் என்னும் வீணையை வாசிப்பவனே.

காமா - யாவரும் விரும்பத்தக்க கட்டழகனே.!

காண் - (தீயவும் நல்லவாம் சிவனைச் சேரின் என்பதை யாவரும்) காணுமாறு பூண்ட---

நாகா - பாம்புகளையுடையவனே. !

காணா காமா - கை, கால் முதலிய அவயவங்கள் காணாதனவாச் செய்தகாமனையுடையவனே. (காமனை யுருவழித்தவனே.)

காழீயா! : சீர்காழிப் பதியில் எழுந்தருளியிருப்பவனே!!

மாமாயா - இலக்குமிக்குக் கணவனான திருமாலாகவும் வருபவனே (நான்க னுருபும்பயனும் தொக்க தொகை) “நாரணன்காண் நான்முகன்காண்” என்பது திருத்தாண்டகம்.

மா - கரியதாகிய.

மாயா - மாயை முதலிய மலங்களினின்றும். நீ - எம்மை விடுவிப்பாயாக.

madhu
8th October 2015, 01:09 PM
நன்றி ரவி ஜி..

முக்கியமாக அந்த சம்பந்தரின் பதிகம் மாலை மாற்று என்பார்கள்... அதாவது கடைசியில் இருந்து திருப்பிப் படித்தாலும் அதேதான் வரும்.

chinnakkannan
8th October 2015, 01:11 PM
ஓவியர் கேஷவ் தினமும் முக நூலில் ஒரு கிருஷ்ணர் படம் இடுகிறார்.. அதற்கு இன்னொரு நண்பர் வெகுசுவையாக விளக்கம் எழுதி வெண்பாவும் தருகிறார்..

இன்று வரைந்த படம்

பின்னணி முழுக்கச் சிகப்பு..அதில் கிருஷ்ணன் கண்மூடி நிற்க கைகளில் ஒரு பசு..அதுவும் கண் மூடித்தூங்குகிறது..

நான் எழுதிப் பார்த்த வெண்பா முயற்சி

அந்தியில் மாடுகளை மேய்த்துவிட்டுத் திரும்பும் கண்ணன் சோர்வுறறிருக்கும் பசுவைப் பார்த்துக் கருணையுடன் அந்தப் பசுவையே கைகளில் ஏந்திக் கொள்கிறான்..அதுவும் கண்ணன் ஸ்பரிசத்தில் சுகமாகக் கண் துஞ்சுகிறது..

வாலைச் சுருட்டிவைத்து வண்ணமுடன் கண்ணுறங்கும்
வேலையைச் செய்திடும் வெண்பசுவே - மாலையில்
கண்ணனின் கைகளிலே கட்டுற நீசெய்த
புண்ணியஞ் சொல்லிவிட்டுப் போ

https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xlp1/v/t1.0-9/12088295_10204791943293663_3228870155662857858_n.j pg?oh=2c10041288a265a6d6e591d5bd04d555&oe=56CE60DD&__gda__=1452023427_d1409842ae1a2fe71b71ddb55c207f0 0

chinnakkannan
8th October 2015, 01:15 PM
இது நேற்று கேஷவ் வரைந்த ஓவியத்திற்கு எழுதிய பாடல்..


https://scontent-fra3-1.xx.fbcdn.net/hphotos-xta1/t31.0-8/q83/s960x960/12120136_10204787287897281_2098348155985743538_o.j pg

இக்கோலம் தான்பார்க்க வேண்டி நின்ற
..இளநங்கை யாரென்று கூறும் கண்ணா
தக்கனவாய் அரசனெனக் கூறும் வண்ணம்
..தங்கநகை மின்னுமுடைத் தோற்றங் கொண்டே
வக்கணையாய்க் கைகளையே இடுப்பி லூன்றி
...வாகாகப் பார்க்கின்ற பார்வை என்ன
இச்சுவையை இங்குதந்தாய் எந்தன் கண்ணா
..ஈரேழு ஜன்மமெல்லாம் எனக்கு இல்லை..

chinnakkannan
8th October 2015, 01:18 PM
இது இரு நாட்களுக்கு முன்பு எழுதிப் பார்த்தேன்..

https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xtp1/v/t1.0-9/12074834_10204780316763007_4996353075601984553_n.j pg?oh=805da3685555f7902efbf1fd1e379e22&oe=569F1B56&__gda__=1451589011_9c61ffebdadc3d4b0c7dc86d21579cc b


தனியாக நானாடத் தாங்குமா பூமி
அணியாக வந்த அழகும் - பனியென
இல்லாமல் போனதால் ஏதெண்ணும் பாமர
நல்லதிற்க் காடினேன் நான்..

கோபியர் கூட்டமும் கோமாதா இல்லையென
மேதினியில் என்னையே யாரெனப்- பேசியே
ஆசையாய்ச் சொன்னாய் அரன்நானும் ஒன்றெனவுன்
பாசம புரியுதப் பா..

eehaiupehazij
8th October 2015, 06:25 PM
மின்னல் கீற்றாய் மின்னி மறைந்த மின்மினிகள் !
unsung Artists !

Once seen / One Scene Stars : Who is where? 2


ஸ்ரீதரின் இளமை பொங்கும் காதல் காவியமான அழகே உன்னை ஆராதிக்கிறேன் படத்தில் பிரகாஷ் என்னும் புதுமுக நடிகர் அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க அடியேன் கொடுத்து வைத்தேன் இளையராஜா பாடலுக்கு துறுதுறுப்பாக நடன அசைவுகளை வெளிப்படுத்தி இவர்தான் அடுத்த ரவிச்சந்திர கமலஹாசன் என்று குமுதம் விமர்சனத்தில் பாராட்டுப் பெற்றார் !
ஆனால் இந்த மின்னல் கீற்றும் அடுத்து வந்த படங்களில் பார்க்க முடியவில்லையே !
https://www.youtube.com/watch?v=c9j4qQDIAWo

eehaiupehazij
8th October 2015, 08:09 PM
மின்னல் கீற்றாய் மின்னி மறைந்த மின்மினிகள் !
unsung Artists !

Once seen / One Scene Stars : Who is where? 3

ஆஹா திரைப்படத்தின் அட்டகாசமான துள்ளல் நாயகன் most Handsome ராஜீவ் கிருஷ்ணா !
ஆஹா திரைப்படம் விறுவிறுப்பான காதல் செண்டிமெண்ட் குடும்ப உறவுகளின் விரிசல்களை நேர்த்தியாக வெளிப்படுத்திய படம் !
நாயகன் ராஜீவ் கிருஷ்ணா (ஸ்ரீராம்) இயல்பான இளமைத்துள்ளல் மிகுந்த நடிப்பினைத் தந்து இந்தப் பாடல் காட்சியில் மனம் கவர்ந்தார்!!

https://www.youtube.com/watch?v=OqC-Y9YGNxE

ஆயினும் அவரது திறமைகள் ஏனோ சரியான புகழ் வெளிச்சத்துக்கு வரவில்லை !!

chinnakkannan
8th October 2015, 09:04 PM
//ஸ்ரீதரின் இளமை பொங்கும் காதல் காவியமான அழகே உன்னை ஆராதிக்கிறேன் படத்தில் பிரகாஷ் என்னும் புதுமுக நடிகர் அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க அடியேன் கொடுத்து வைத்தேன் இளையராஜா பாடலுக்கு துறுதுறுப்பாக நடன அசைவுகளை வெளிப்படுத்தி இவர்தான் அடுத்த ரவிச்சந்திர கமலஹாசன் என்று குமுதம் விமர்சனத்தில் பாராட்டுப் பெற்றார் !
ஆனால் இந்த மின்னல் கீற்றும் அடுத்து வந்த படங்களில் பார்க்க முடியவில்லையே !//



அப்ஜெக்ஷன் யுவர் ஹானர் சி.செ.. ஒரு வகையில் நீங்கள் சொன்ன பிரகாஷ் நட்சத்திரமாக மின்ன முடியவில்லை என்பது வாஸ்தவம் தான்..

ஆனால்…

நடன இயக்குனர், கோரியோ க்ராஃபர் என ஃபேமஸ் ஆன ஆளாக ஹிந்தியில் கோலோச்சினார்.. ஆரம்பத்திலிருந்தே அவர் உள் மன ஆசை ஹிந்தியில் பெர்ர்ரிய ஆளாக கோரியோக்ராஃபி எனப்படும் அவை பின்புலக் கலை (ஹை..தமிழ் சரியா இருக்கா) யில் ஈடுபாட்டுடன் இருந்தார்.. இரண்டு மூன்று படங்களில் உதவி கோரியாக்ராபியாக இருந்துவிட்டு ஸ்ரீதர் கண்ணில் எப்படியோ பட்டு இளைஞனாக அழகே உன்னை ஆராதிக்கிறேன் இல் அறிமுகம்.. பட் படத்தில் பாடல்கள் இருந்தும், லத்துவின் அழகு இருந்தும், அவருக்கு ஆட்டம் வந்தும் கூட (ஏற்கெனவே நடனக் கலை கற்றுக் கொண்டிருந்தவர்) படத்தில் கதை என ஒன்று இல்லாததால் படம் தோல்வி அடைய வாழ்க்கை நதிக்கரையில் சோக அலைகள் அவரை முட்ட்டித் தள்ளின..(கண்ணா..ஒனக்கு என்னமா எழுத வருதுடா!)

பின் என்ன.. மீண்டும் பெயர் மாற்றப் படாத பம்பாய் என அழைக்கப் பட்ட மும்பை..

புயத்தை விடுத்தபின் புத்தியை வைத்தே
முயற்சியைச் செய்துவா முன்…

என..சும்மா ச்சும்மா எக்ஸர்சைஸ் பண்ணி வராத நடிப்பு வாழ்க்கையை விட்டு விட்டு புத்தியை உபயோகித்து தனக்கு வரக்கூடிய நடனம், கோரியோக்ராஃபி என சிந்தனை கொண்டு அதில் உழைக்க உழைக்க வந்ததே வசந்தம் வந்ததே அவர் வாழ்வில்..

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்தெட்டாம் வருடம் (ஸாரி சடார்னு இந்தியன் நியூஸ் ரீல் நினைவுக்கு வந்துடுத்து) ஹீரோ ஹீராலாலில் அவருக்கு முழுக்க முழுக்க கொரியாக்ராபிக்கான வாய்ப்பு வந்துவிட சமர்த்தாய்க் கிடைத்த வாய்ப்பைப் பற்றிக்கொண்டு இறங்க, தொடர் வாய்ப்புகள் வந்தன..

இருந்தாலும் வெகு பழைய க்ளியரஸில் விளம்பரத்தில்… பொண்ணு அழகா இருக்கா…ஆனா முகத்துல பரு…என்பது போல…பையன் வித்யாசமாச் சிந்திச்சு பேக்ரெளண்ட்லாம் போடறான் தான்..ஆனா டபக்குன்னு சொல்லிக்கறா மாதிரி எதுவும் பாட்டு செய்யலையே என பாலிவுட்டில், முணுமுணுப்பு கேட்க ஆரம்பித்தது..

அகெய்ன் முயற்சி..செய்யச் செய்ய..அடிச்சாருங்க ஒரு ஹிட்..

ஜெயபாதுரியின் ஆத்துக்காரரான அமிதாப் பச்சன் கப்பெல்லாம் வச்சுக்கிட்டு கிமி கட்கர்கிட்ட

சும்மா முத்தம் தாடி
சும்மாச் சும்மா முத்தம் தாடி என்று ஹிந்தியில் கெஞ்ச

முத்தா மாட்டேன் போடா
முத்தா தர மாட்டேன் போடா
என கிமி கட்கர் கொஞ்சுவது ஹிந்தி மலையாளம் தமிழ் தெலுகு என எல்லா ரசிகர்களுக்கும் பிடித்த்துப் போய் மார்க்கெட் ஜிவ்வென எகிறியது…

சரி அந்தப் பாட்ட இப்பப்பார்த்துட்டு அடுத்த ப் போஸ்ட்குப் போலாமா…

(தகவல் உதவி.. சி.க வின் ஞாபக சக்தி, விக்கிப்பீடியா + கொஞ்சூண்டு மசாலா :) )




https://youtu.be/2hRkFIsWkT4

chinnakkannan
8th October 2015, 09:28 PM
வேறென்ன் ஆச்சு.. வரிசையாகப் படங்கள் எக்கச்சக்கமாக.. பட் நடிக நடிகையர் மட்டும் தான் நட்சத்திரம் எனச் சொல்லப்படுவதில்லை.. கொரியோக்ராஃபியும் நடனங்களும் தான்..

நாளாவட்டத்தில் நடனங்களில் மாற்றங்கள், காட்சிகளில் மாற்றங்கள் வந்ததனால் சின்னிப் ப்ரகாஷின் நடனங்களுக்கு கொரியோக்ராஃபிக்கு வாய்ப்புகள் வரவில்லை..

இருந்தாலும் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தக்ஷக் படத்தில் ரங்க்தே ரங்க்தே என தபு இடையால் மயக்க இடையில் இல்லாமல் பாடல் முழுக்க வந்த கோரியோக்ராஃபி எல்லாரையும் கவர்ந்தது என்று தான் சொல்லவேண்டும்..

2001க்கு ப் பிறகு வேறு எதுவும் செய்யவில்லை போலிருக்கிறது..

ஆரம்பகாலத்தில் சின்னி சம்பத் என்பவருடன் கொரியோக்ராஃபி பண்ணியிருக்கிறார்…சின்னி சம்பத் தான் சின்னி ஜெயந்த்( நடிகர்)தின் தந்தை எனக் கேள்விப்பட்ட ..எங்கேயோ படித்த நினைவு..

மனைவியும் அதே பின்புலக் கலை வல்லவி..பெயர் ரேகா சின்னிப்ப்ரகாஷ்..

இப்போ ரசிகா ஓ ரசிகா பாட் பார்க்கலாமா..ஹச்சோ ரங்தே ஹிந்தி ரசிகா டாமில்.. அறியாமலேயே ஜூகல் பந்தி வந்துடுச்சே..:)




https://youtu.be/ta21eWMuAgk



தமிழ் ஜோ நடனம் பட் choreography சின்னிப்ரகாஷ் இல்லை..



https://youtu.be/qlBPPRGX_4U

eehaiupehazij
8th October 2015, 10:33 PM
இப்படிப் பெண்டெடுக்கத்தான் சிக மாதிரி ஒரு ஆல் இன் ஆல் பழகுராஜா இந்தத் திரியிலே வேணுங்கறது !
பெட்ரோமாக்ஸ் என்னமா எரியறது !!
கலக்கிட்டீங்க சி க !

eehaiupehazij
8th October 2015, 11:27 PM
மின்னல் கீற்றாய் மின்னி மறைந்த மின்மினிகள் !
unsung Artists !

Once seen / One Scene Stars : Who is where? 4

மந்திரிகுமாரியில் ராஜா காலத்து கார்பரேட் வஞ்சக வில்லனாக ரசிக நெஞ்சகத்தை கவர்ந்து கலக்கியெடுத்த திரு எஸ் ஏ நடராஜன் அவர்கள்!
பிரதான நட்சத்திரமாக மக்கள் திலகம் வசனத்திற்கு கலைஞர் என்றேல்லாமிருந்தாலும் இந்தப் படத்தின் மின்னல்கீற்று நடராஜனே!
திருச்சி லோகநாதனின் அமரத்துவம் பெற்ற வாராய் நீ வாராய் பாடலில் மனைவியை தந்திரமாக மலையுச்சியிலிருந்து உருட்டிவிட நாக்கை துருத்தி உதட்டை ஈரமாக்கிக் கொண்டு வஞ்சக சிரிப்புடன் ஒரு திரைப் பிரளயத்தையே உருவாக்கியவர் கோவை சூலூர்க்காரரான நடராஜன் எனினும் அதற்கப்புறம் பெரிதாக சொல்லும்படி வாய்ப்புகளின்றி மங்கி விட்டார் !!

https://www.youtube.com/watch?v=T32rZg8M4xs

chinnakkannan
8th October 2015, 11:30 PM
இப்படிப் பெண்டெடுக்கத்தான் சிக மாதிரி ஒரு ஆல் இன் ஆல் பழகுராஜா இந்தத் திரியிலே வேணுங்கறது !
பெட்ரோமாக்ஸ் என்னமா எரியறது !!
கலக்கிட்டீங்க சி க ! Thanks சி.செ.. கண்ணை மூடினாலும் உங்க பெட்ரோமாக்ஸ் கமெண்ட் நினைவுக்கு வந்து சிரிச்சுக்கிட்டே இருக்கேன் :)

eehaiupehazij
8th October 2015, 11:47 PM
இருந்தாலும் சின்னக் கண்ணருக்கு என் கண்ணையே உங்களிடம் ஒப்படைக்கிறேன் ..... உங்கள் கண்களில் ஆனந்தக் கண்ணீர் மின்னிட!!

Enjoy the world's most famous Marilin Manroe's subway skirt scene!! The Seven Year Itch!!

https://www.youtube.com/watch?v=eDwiurNm13s

https://www.youtube.com/watch?v=rJ8ZHrp8wac

இதையே நம்ம ஊர் ரம்பா மன்றோ செய்யும்போது ....

ஒரு மதுர கான நடனப் புயலே வீசுகிறதே!

https://www.youtube.com/watch?v=nBAJrvKMLYQ

chinnakkannan
9th October 2015, 12:08 AM
என் கண்ணையே உங்களிடம் ஒப்படைக்கிறேன்// சொல்லவே இலலை :) தாங்க்ஸ் சி.செ.. மஸ்கட்டும் கோவையும் நம்பளை விட்டுட்டு அரட்டை அடிக்குதுன்னு நெய்வேலியும் சென்னையும் கோச்சுக்கும் :)

rajraj
9th October 2015, 01:50 AM
From amudhavalli (1959)

aadai katti vandha nilavo kaNNil medai katti.....

http://www.youtube.com/watch?v=G8QcPKPYc2Y

madhu
9th October 2015, 05:02 AM
ஆஹா ஹீரோதான் எஸ்.ஜே.சூர்யாவின் படமானா நியூட்டனின் மூன்றாம் விதி ( ஒருவேளை நாலாவதா ?) என்ற படத்தில் வில்லனாக வந்தார்...

சிக்கா... கோச்சுக்கும் என்பது ஒருமையா பன்மையா ?

eehaiupehazij
9th October 2015, 07:53 AM
சென்னையையும் நெய்வேலியயும் நமது அரட்டை வலையில் சிக்க வைக்கத்தான் சிக்கா இந்த மரிலின் மன்றோ தூண்டிலும் ரம்பா தூண்டில் பூச்சியும் மதுர கான வலைப் பின்னலும் !!

வந்து மாட்டுவார்கள் சிக !

rajeshkrv
9th October 2015, 09:39 AM
மதுண்ணா, சி.க, வாசு ஜி
இதோ ஒரு சூப்பர் கன்னட பாட்டு

https://www.youtube.com/watch?v=hnHHTdQx318

இசையரசியின் குரல் ப்ரமீளா ஜோசாய் (ஆம் வைதேகி காத்திருந்தாளில் விஜயகாந்தின் முறைப்பெண்ணாக வருவாரே அவர் தான்)

rajeshkrv
9th October 2015, 09:45 AM
வாசு ஜி
இதோ என் ப்ரியப்பட்ட ஜெயசந்திரனும் மாதுரியும் இசைத்த அற்புத டூயட்
இசையரசி பாடியிருந்தால் இன்னும் எங்கோ போயிருக்கும்

https://www.youtube.com/watch?v=kEtdRTFmEEA

chinnakkannan
9th October 2015, 10:05 AM
ஹாய் ஆல் குட் மார்னிங்க்..

ராஜேஷ்...ஓய்.. ப்ரமீளா ஜோஷாய்னு சும்மா சொன்னா எப்படிப் புரியும்.. மேக்னா ராஜோட அம்மான்னு சொல்லும்..( ப்ரமீளாவோட ஹஸ்பெண்ட் சுந்தர்.. காளியில் ரஜினியிடம் அடிவாங்குவார்..)

மலையாள ப்ளாக் அண்ட் ஒய்ட் பாடல் சுகமாய்ட்டு..பட் அந்த ஒல்லி ஒல்லி நடிகை யாருங்க்ணா..

மதுண்ணா.. கோச்சுக்கும்ங்க ந்னு சொல்லியிருக்கணும்..தப்புத்தான்.. :) ஆனாக்க அன்பின் மிகுதியால் ஒருமைல சொல்லிட்ட்டேன் :)

rajeshkrv
9th October 2015, 10:24 AM
ஹாய் ஆல் குட் மார்னிங்க்..

ராஜேஷ்...ஓய்.. ப்ரமீளா ஜோஷாய்னு சும்மா சொன்னா எப்படிப் புரியும்.. மேக்னா ராஜோட அம்மான்னு சொல்லும்..( ப்ரமீளாவோட ஹஸ்பெண்ட் சுந்தர்.. காளியில் ரஜினியிடம் அடிவாங்குவார்..)

மலையாள ப்ளாக் அண்ட் ஒய்ட் பாடல் சுகமாய்ட்டு..பட் அந்த ஒல்லி ஒல்லி நடிகை யாருங்க்ணா..

மதுண்ணா.. கோச்சுக்கும்ங்க ந்னு சொல்லியிருக்கணும்..தப்புத்தான்.. :) ஆனாக்க அன்பின் மிகுதியால் ஒருமைல சொல்லிட்ட்டேன் :)

சி.க அது நம்ம சுஜி (சுஜாதா)

chinnakkannan
9th October 2015, 10:37 AM
சி.க அது நம்ம சுஜி (சுஜாதா)

ஹச்சோ ராஜேஷ்..அடையாளமே தெரியலைங்க.. மறுபடி ஒரு தடவை பாட் கேட்டேன்...

உடலை மறைத்தே உணர்வினைத் தூண்டும்
புடவையில் பூத்ததே பூ..

என்னதான் இருந்தாலும் புடவை பெண்களுக்கு அழகுதான் இல்லியோ..ஹைய்யா..புடவைப் பாட்டா இன்னிக்குப்போடலாமில்லையா.. :)