PDA

View Full Version : மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5



Pages : 1 2 3 4 5 6 7 8 9 [10] 11 12 13 14

chinnakkannan
9th April 2016, 08:56 PM
அமர காவிய'மாகி இருக்க வேண்டிய படம் சாதா காவியமா சொதப்பிடுச்சி...'// செம தெகிரியம்ப்பா.. ம்ம்.. நான் இதயம் பேசினால் பாட்டுக்கே பயந்து பயந்து எழுதினேன்..இன்னும் நீங்க போட்ட பாட் பார்க்கலை..

chinnakkannan
9th April 2016, 09:09 PM
ஹச்சோ.. நான் இந்தக் கூட்டணி பத்திக் கேள்விப் பட்டதே இல்லியே.. :)

ஆகாயம் ஏன் இன்று அழுகின்றது
அதில் உன் அழுகை ஏன் விழுகின்றது

சொர்ண புஷ்பம் , கேப்டன் + மழை..

https://youtu.be/OTUbSuOxbhU

chinnakkannan
9th April 2016, 09:32 PM
தொட்டது போலே கனவு கண்டேன் தூக்க க் கலக்கமா
என் தோளைத் தழுவும் காளையைக் கண்டேன்
துணைவன் மயக்கமா..

அது சரி.. கனவு கண்டா சரி..அதுக்காக வண்டு வந்து பூவில் வந்தது எக்ஸடீரான்னு இப்படித் தான் அபினயம் பிடிச்சு நாட்டியம் ஆடுவாங்காங்காட்டியும்..ம்க்கும்..
அதாவது பரவால்ல ஹீரோ என் ட்ரி குடுட்தவுடனே அசக் அசக்னு டப்பாங்குத்தும் ஆடற்து இருக்கே..என்னமோ போங்க :)

https://youtu.be/EGG9huQcYdU

கெளரிகல்யாணத்தில் ரவிச்சந்திரன் ஜெயலலிதா..ஆமா படம் எப்டி இருக்க்கும்..ம் முன்னால கேட்ட படத்துக்கே யாரும் சொல்லலை.இதுக்கு சொல்லவா போறாங்க..(கண்ணா திங்க் பாஸிட்டிவ்... ஏதாச்சும் மீனு மாட்டும்! :) )

rajraj
10th April 2016, 12:50 AM
From Satyavan Savitri

Ambikaiye gathi nee......


http://www.youtube.com/watch?v=ADy1OyFOojg

Russelldvt
10th April 2016, 02:08 AM
http://i66.tinypic.com/qzjius.jpg

Russelldvt
10th April 2016, 02:09 AM
http://i64.tinypic.com/538ch4.jpg

Russelldvt
10th April 2016, 02:11 AM
http://i64.tinypic.com/2j3ldz6.jpg

Russelldvt
10th April 2016, 02:12 AM
http://i65.tinypic.com/2lvfn7s.jpg

Russelldvt
10th April 2016, 02:13 AM
http://i63.tinypic.com/dlg5cg.jpg

Russelldvt
10th April 2016, 02:15 AM
http://i66.tinypic.com/16asnli.jpg

Russelldvt
10th April 2016, 02:17 AM
http://i67.tinypic.com/4rcfnt.jpg

madhu
10th April 2016, 04:24 AM
சிக்கா.. கௌரி கல்யாணத்தில் ஜெய்சங்கரும் இருக்காரு.. தெரியுமில்ல... ஆனா அவருக்கு பெரிய மாமா ரோல்... அதாகப்பட்டது அம்மு... அம்மாவுக்கு அண்ணன்... இவங்க தபால்காரன் தங்கை..

அந்தக் கால போஸ்டர்களில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்காங்க... கவனிச்சீங்களா... அதுவும் பண்டரிபாய் நடிக்கிற படம் என்றால் ஹீரோ காணாமலே போயிடுவார் போலிருக்கே ?

vasudevan31355
10th April 2016, 09:08 AM
காலையில் காவடியுடன் தொடங்குவோம்.

'காபரே பாடல்களில் மட்டும்தானா கலக்குவேன்....காவடிப் பாட்டிலும் காவியம் படிப்பேன்'

என்கிறோரோ 'எல்லார்' எண்ணத்திலும் நிறைந்த எல்.ஆர் ஈஸ்வரி. (ஏற்கனவே 'பழனி சந்தன வாடை' பிடித்தவராயிற்றே)

'பேபி' சுமதியின் பொய்க் கால் குதிரை ஆட்டம், ஜெயாவின் மயிலாட்டம், காவடி ஆட்டம்.... அப்புறம் சப்போர்ட்டுக்கு இருக்கவே இருக்கு தேங்கா.

'மகளுக்காக' படத்தின் மறந்து போன பாடல்.


https://youtu.be/EHMYGSiyXqU

vasudevan31355
10th April 2016, 09:21 AM
'கௌரி கல்யாண'த்தில் போட்டி நாயகர்களுக்கிடையே பலப்பரீட்சை பார்க்கும் அற்புதமான பலமான சண்டைக் காட்சி ஒன்று உண்டே! அப்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டதாமே! நிஜமாகவே அருமையாகத்தான் இருந்தது.

46.55க்கு தொடக்கம். பார்த்துட்டு எங்கிட்ட சண்டை போடாதீங்க.:)


https://youtu.be/ZgKTTn3srZ0

Gopal.s
10th April 2016, 09:24 AM
[QUOTE=vasudevan31355;1291207]//ஸ்ரீதேவில பார்த்த படம்னா இது.. பட ஆரம்பத்திலயும் கமல் சிவகுமாருக்கு ஒரு பாட் இருக்கும்னு நினைவு..//

'பாடலைச் சொல்லவா?
கேட்க நீ மெல்ல வா'

'என் காதலி யார் சொல்லவா?...

ஹச்சா!...நானும் கவி.

பாலா, ஏசு குரல்களில் அப்போதைய சூப்பர் டூப்பர் ஹிட்.

'வரவேண்டும் வயதான மாது
அந்த இளமையிலே ஆடாத ஆட்டங்கள் எது?

/QUOTE]

வாசு,

வர வர உன் பதிவுகளில் தவறுகள் ரொம்ப அதிகமாகி வருகிறது.நம் மதிப்புக்குரிய ஜேசுதாஸ் அண்ணா இலமயிலெ என்று பாடுவார். திருத்தி கொள்.

vasudevan31355
10th April 2016, 09:51 AM
[QUOTE=vasudevan31355;1291207]//ஸ்ரீதேவில பார்த்த படம்னா இது.. பட ஆரம்பத்திலயும் கமல் சிவகுமாருக்கு ஒரு பாட் இருக்கும்னு நினைவு..//

'பாடலைச் சொல்லவா?
கேட்க நீ மெல்ல வா'

'என் காதலி யார் சொல்லவா?...

ஹச்சா!...நானும் கவி.

பாலா, ஏசு குரல்களில் அப்போதைய சூப்பர் டூப்பர் ஹிட்.

'வரவேண்டும் வயதான மாது
அந்த இளமையிலே ஆடாத ஆட்டங்கள் எது?

/QUOTE]

வாசு,

வர வர உன் பதிவுகளில் தவறுகள் ரொம்ப அதிகமாகி வருகிறது.நம் மதிப்புக்குரிய ஜேசுதாஸ் அண்ணா இலமயிலெ என்று பாடுவார். திருத்தி கொள்.

'பில்லைத் தமிழ்' பாடிவிட்டேன் பிள்ளைகாள்.:) பிழை பொறுக்க. பிழைத்துப் போக விடுக. 'மதுர கானங்கள்' இன்று அதிரும் சப்தம் கேட்கிறதே....என்ன நடக்கப் போகிறதோ! எச்சரிக்கை. அனைவரும் 'ஜாக்ரதோ...ஜாக்ரதோ'.:)

ஆண்டவா! இன்று எப்படியாவது பாண்டியில் 'கர்ண'னுக்கு டிக்கெட் கிடைக்க வேண்டுமே! 'கர்ணன்' யாரையுமே கைவிடுவதில்லை.:)

vasudevan31355
10th April 2016, 10:02 AM
முத்தையன் அம்மு சார்,

அற்புதமான பாட்டுப் புத்தகங்களின் அட்டைப்பட அணிவகுப்புகள் ஜோர். மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

Russelldvt
11th April 2016, 02:49 AM
http://i67.tinypic.com/29cn9sz.jpg

Russelldvt
11th April 2016, 02:50 AM
http://i63.tinypic.com/2n204t3.jpg

Russelldvt
11th April 2016, 02:52 AM
http://i64.tinypic.com/2ib23ps.jpg

Russelldvt
11th April 2016, 02:53 AM
http://i65.tinypic.com/2s770k0.jpg

Russelldvt
11th April 2016, 02:55 AM
http://i65.tinypic.com/2iuokcg.jpg

Russelldvt
11th April 2016, 02:56 AM
http://i66.tinypic.com/ictlwo.jpg

Russelldvt
11th April 2016, 02:58 AM
http://i63.tinypic.com/21ejb7.jpg

madhu
11th April 2016, 10:31 AM
ஆஹா... அந்தக் காலத்தில் சில பாடல் புத்தகங்களின் பின் அட்டையில் இந்த "தலை வெட்டி முனியப்பன்" பட விளம்பரம் பார்த்த நினைவு உண்டு... அது வந்துச்சா இல்லையா ?
ம்ம்.. ஆசை அண்ணா அருமைத் தம்பி என்றொரு படப்பாட்டு புத்தகம் தூள் தூளாக உதிர்ந்து மின்விசிறி போட்டதும் பறந்தே போயிடுச்சு.. கரையான்கள் ஒழிக !

RAGHAVENDRA
11th April 2016, 04:59 PM
முத்தையன் சார்
தங்கள் சேவையைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.
அபூர்வமான பாடல் புத்தகங்களை வழங்கி அசத்தி வருகிறீர்கள்.
நன்றி

vasudevan31355
11th April 2016, 07:55 PM
ஆஹா... அந்தக் காலத்தில் சில பாடல் புத்தகங்களின் பின் அட்டையில் இந்த "தலை வெட்டி முனியப்பன்" பட விளம்பரம் பார்த்த நினைவு உண்டு... அது வந்துச்சா இல்லையா ?
ம்ம்.. ஆசை அண்ணா அருமைத் தம்பி என்றொரு படப்பாட்டு புத்தகம் தூள் தூளாக உதிர்ந்து மின்விசிறி போட்டதும் பறந்தே போயிடுச்சு.. கரையான்கள் ஒழிக !

தேர்தல் நேரம் பார்த்து மதுண்ணா கரெக்டாக 'ஒழிக' கோஷம் போட்டுட்டாரே!:) கரைகள் ஒழிக.

madhu
12th April 2016, 03:49 AM
தேர்தல் நேரம் பார்த்து மதுண்ணா கரெக்டாக 'ஒழிக' கோஷம் போட்டுட்டாரே!:) கரைகள் ஒழிக.

ஹிஹி.. "அண்ணா-தம்பி" மட்டுமில்லை.. "அம்மா" எங்கே கூட போயாச்சுன்னு நினைக்கிறேன்.. :rofl:

rajraj
12th April 2016, 07:41 AM
From Akbar, Tamil dubbed version of MUghal E Azam (1960)

kanavu kaNda kaadhal kadhai kaNNeer aachche........

http://www.youtube.com/watch?v=qpQk4puv_fg

From the Hindi original Mughal E Azam

mohabbat ki jhooti kahani pe roye.....

http://www.youtube.com/watch?v=Rk2Tooe-CXo

vasudevan31355
12th April 2016, 08:28 AM
'அம்மா எங்கே' எங்கே?

RAGHAVENDRA
12th April 2016, 09:32 AM
'அம்மா எங்கே' எங்கே?

"தந்தைக்குப் பின் தனயன்" படம் பார்க்கப் போயிருப்பாங்களோ?

chinnakkannan
12th April 2016, 10:27 AM
//"தந்தைக்குப் பின் தனயன்" படம் பார்க்கப் போயிருப்பாங்களோ?// சத்தியமா புரியலை இந்த கான்வர்சேஷன்.. பட் ஒன் திங்க் நன்னாவே புரியுது..ராகவேந்திரா சாருக்கு ஆதவன் ரவியோட தமிழ் தான்பிடிக்கும்..(ம்ம் கண்ணா நீ எப்போ இம்ப்ரூவ் ஆகப் போற :sad: :)

chinnakkannan
12th April 2016, 10:29 AM
தேவிகா பற்றி எதுவும் சொல்லாமல் கர்ணன் ரைட் அப் புதியதாக எழுதிய வாசுவை...யாரங்கே..பாண்டியிலிருந்து கொண்டு வந்த மோரை ஒரு குவளையில் கொண்டுவா..

vasudevan31355
12th April 2016, 11:01 AM
தேவிகா பற்றி எதுவும் சொல்லாமல் கர்ணன் ரைட் அப் புதியதாக எழுதிய வாசுவை...யாரங்கே..பாண்டியிலிருந்து கொண்டு வந்த மோரை ஒரு குவளையில் கொண்டுவா..

'தொடருவேன்' என்று போட்டிருந்தேனே...பார்க்கலையோ....தேவிகா போர்ஷன் முனிவர் சாபத்துக்கு பிறகுதானே. இப்போதானே 'பாட சாலை தீ' ...க்கே வந்திருக்கேன். அவசரம்...எல்லாத்துலேயும் அவசரம்.:) பாண்டி புளிச்ச மோர் யாருக்கு வேணும்? உவ்வே....:banghead:

vasudevan31355
12th April 2016, 11:02 AM
//(ம்ம் கண்ணா நீ எப்போ இம்ப்ரூவ் ஆகப் போற,//,

தேவிகா நினைப்பிலேயே இருந்தா எங்கே இம்ப்ரூவ் ஆகிறதாம்....ஹி...ஹி.:)

JamesFague
12th April 2016, 12:38 PM
Till further writeup from Neyveliar, Let Mr CK enjoy this song till such time

https://youtu.be/qCO-xsCktVo

chinnakkannan
12th April 2016, 12:42 PM
ஓய்.. நான் எப்போதுமே அப்டுடேட் நு உமக்குத் தெரியாதா..:) Songs that made an impact on us திரியில் பெங்களூர் நாட்கள் பற்றி எழுதியது.. அப்புறம்

ஃபேஸ் புக்கில் எழுதிய தோழா விமர்சனம் அதற்குக்க் கீழே..

//கொஞ்சம் நன்றாக ஊறிய தயிர்வடையைப்போன்ற கன்னம், க்ராஸ் பண்ணலாமா பண்ணினால் அருகில் பிடிக்க வருவானா என்ன செய்யலாம் என்ற யோசனையுடன்பார்க்கும் பூனைக்குட்டியின் துறுதுறு கண்கள், நன்றாக கொஞ்சம் மீடியம் சைஸ் வெள்ளரிப்பிஞ்செடுத்து அதன் தோல் நீக்கி நெட்டுவாக்கில் ஒல்லி ஒல்லியாய் வெட்ட பளீரிடும் விதைகள் போலப் பளீரிடும் பெப்ஸோடெண்ட் பற்கள், வேறு உவமை அகப்படாததால் பழைய அன்றலர்ந்த செண்பகப்பூவைப் போன்ற நாசி, சொய்ங்க் என்று ஒட்டி வாராமல் கொஞ்சம் ஷாம்ப்பூ போட்டுக்காயவைத்தாற்போலச் சிலும்பும் தலைமுடி – இது அன்று இருந்த இன்றைய நஸ்ரியா ஃபகத் ஃபாசில்

கொஞ்சம் ஆஞ்சனேயர் வடையைப் போன்றத் தட்டைக் கன்னம், கொஞ்சம் ஆழ்கடலில் கிடைக்கும் அமைதியைப் பெற்றிருக்கும் கண்கள், துளியேனும் கவலைப்படாமல் நன்றாக வாரிய கரெண்ட்கட் இருட்டின் நிறத்தில் கூந்தல், தீர்க்கமான மூக்கு, மூன்று வருடமாக ஏறவே ஏறாத வயதும் இளமையும் – இது ஸ்ரீதிவ்யா

எதற்காக இந்தக் கம்பேரிசன் – பெங்களூர் டேஸ் மலையாளத்திற்கும் பெங்களூர் நாட்கள் தமிழுக்கும் நாயகிகள் இவர்கள்..

என்னமோ ஸ்ரீதிவ்யாவிற்கு நடிக்க வராது இன்னும்செய்திருக்கலாம் ஒன்றும் சரியில்லை..ஒரிஜினல் நஸ்ரியா அளவுக்குச் செய்யவில்லைஎன முக்கால் வாசி விமர்சனங்கள் வந்திருக்கின்றன..பட் பார்த்தால் ஸ்ரீ திவ்யா ஒன்றும் அவ்வளவு மோசமில்லை.. நன்றாகவே செய்திருக்கிறார்..

என்ன முதலில் மலையாள பெங்களூர் டேஸ் வந்துவிட்டது.அதனால் தான்..

மலையாளத்தில் பார்த்த போது சில விஷயங்கள் புரியவே இல்லை. என்ன பேஸிக் விஷயமான இவர்கள் கஸின்ஸ்..மூவரும் ஒன்று விட்ட சகோதர சகோதரி என்பதே எனக்குப் புரியாமல் இருந்தது..பட் இருந்தும் விஷூவலில் மிக மிக ஈர்த்திருந்தது படம்..தட்டூ நித்யா மேனன் இறுதியில் வரும் இரு நிமிடங்கள்..

தமிழ் பெங்களூர் நாட்களும் நேற்று கொஞ்சம் தயங்கிய வண்ணம் தான்பார்த்து முடித்தேன்..அப்படியொன்றும் மோசமில்லை.. தவிர மலையாளம்பார்க்காமல் த்மிழில் பார்த்தால் வியக்கத் தான் வைக்கும்..

எவ்ளோ ஆக்டர்ஸ் ஆக்ட்ரஸஸ் ஸ்ரீதிவ்யா,(ம…நஸ்ரியா) (இருவரிடமும் பொங்கி வழியும் இளமை) ஆர்யா (மலையாளத்தில் துலகர் சல்மான்) பாபி சிம்ஹா, ராணா(ஃபஹத் பாசில் ) லஷ்மி ராய், சமந்தா( நித்யா மேனன்) ப்ரகாஷ் ராஜ் ராதிகா, ஸ்ரீதிவ்யாவின் அம்மா அப்பா எல்லாமே சரியான தேர்வுகளே..

அதிலும்.. ஃபஹத் பாசில் ரோல் (முன்னால் ஃபீமேல் கோட்டய வில்லனாய்ப் பார்த்தது) இதில் இறுகிய கணவனாக நன்றாகவே மலையாளத்தில் செய்திருந்ததை – ராணா (பாகுபலி பல்லாள தேவன்) ஃப்பூ என ஊதித் தள்ளியிருக்கிறார்.. பேண்ட் ஷர்ட் க்ளாஸஸில் தெரிகின்ற கம்பீரம், மெல்ல மாட்டுவண்டி போலக் கார் ஓட்டுவதிலாகட்டும், பின் இறுதியில் சீறிப்பாய்ந்து வேகமெடுக்கும் காட்சியிலாகட்டும் சமந்தாவுடன் வ்ரும் இரு நிமிடமாகட்டும் நன்றாகவே செய்திருக்கிறார் மனிதர்..(த்ரிஷா ரினிவல் பண்ணுவதைப்பற்றி யோசிப்பது நல்லது!)

என்ன தான் அம்மா செய்த வெங்காய சாம்பார் வாசனை சுவையில் அதிகமாகத் தான் இருக்கும்.. அதே ரெஸிப்பி வைத்து வீட்டில் மனைவி வைத்தால் அந்த் அளவு வராது தான்.. ஏனெனில் அது ரீமேக்.. பட் அதற்காக மோசம் என்றெல்லாம் சொல்லக் கூடாது..(சொல்லவும் முடியாது வெ.சா பொறுத்தவரை என்பது வேறு விஷயம்)

அது போலவே பெங்களூர் நாட்கள்.. நன்றாகவே இருக்கிறது..தைரியமாகப் பார்க்கலாம்.

பார்வதி மேனனை விட்டு விட்டேன்.. வெகு அழகிய நடிப்பு..அவர் வரும் பாட்டு எனக்குப் பிடித்திருந்தது..உங்களுக்கு..//

தோழா..

*
//
முகத்தில் மட்டும் எக்ஸ்ப்ரஷன் படம் முழுக்க க்காட்டி வீல்சேரில் உட்கார்ந்த படி அடக்கி வாசிக்க மனோதிடமும் அசராத உழைப்பும் தொழில் பக்தியும் வேண்டும் அது இருக்கிறது நாகார்ஜூனுக்கு..அசத்தல் நடிப்பு தோழாவில்..

கார்த்தி ரொம்ப நாட்களுக்குப் பின் நடித்திருக்கிறார் எல்லாருக்கும் பிடித்தபடி..அனுஷ்கா, ஸ்ரேயா,விவேக்,கல்பனா,ஜெயசுதா, கார்த்தியின் தங்கை,பிரகாஷ்ராஜ் என குட்டிக்குட்டி ப் பாத்திரங்கள் ஆனாலும் சுவை..

வருகின்ற முக்கால் வாசிக்காட்சிகளில் உம்மென முகம் கடைசியில் மலர் சிரிப்பு என கார்ஜியஸ் தமன்னா..என் மனதில் இருக்கும் தேவிகா அமலாவை அசைத்துவிட்டார்!

அமலா அழகியாம் அன்றானால் இன்றோ
தமன்னாபோல் யாருமிலை தான்

நாகார்ஜுன் பாரிஸில்டேட் செய்யும் அழகியும் ஓ.கே.. வெகு நாட்களுக்குப் பின் வாய்விட்டுச் சிரித்து குடும்பத்துடன் பார்த்து மகிழ்ந்த படம் “தோழா” எனச் சொல்லலாம்..//

இப்போ நயனத்தில் நின்ற நயன் நு தொடர் எழுதலாமான்னு யோசிச்சுக்கிட்டிருக்கேனாக்கும் :)

madhu
12th April 2016, 05:49 PM
//"தந்தைக்குப் பின் தனயன்" படம் பார்க்கப் போயிருப்பாங்களோ?// சத்தியமா புரியலை இந்த கான்வர்சேஷன்.. பட் ஒன் திங்க் நன்னாவே புரியுது..ராகவேந்திரா சாருக்கு ஆதவன் ரவியோட தமிழ் தான்பிடிக்கும்..(ம்ம் கண்ணா நீ எப்போ இம்ப்ரூவ் ஆகப் போற :sad: :)

இதெல்லாம் மே 16 ரிலீஸ் படத்தோட டைட்டில்ஸ் சிக்கா...

chinnakkannan
12th April 2016, 06:11 PM
கபாலி?

madhu
12th April 2016, 07:44 PM
கபாலி?

வாசு ஜி வந்து உங்களுக்கு இஞ்சி ஜூஸ் கொடுக்கப் போறாரு....
ஹி.ஹி.. மே 16 தமிழ் நாட்டில் தேர்தலுங்கோ...

vasudevan31355
13th April 2016, 05:56 AM
//"தந்தைக்குப் பின் தனயன்" படம் பார்க்கப் போயிருப்பாங்களோ?//


இதெல்லாம் மே 16 ரிலீஸ் படத்தோட டைட்டில்ஸ் சிக்கா...

'நீங்கள் கேட்டவை' யேசுதாஸ்.:)

vasudevan31355
13th April 2016, 06:03 AM
சின்னா!

இன்னா.... நேத்து முச்சூட ஒரு மார்க்கமா இருந்தா மாதிரி தெரியுது. தேவிகா, அமலா, தமன்னா.....ம்ம்....

புதுப்படம்லாம் பாக்கறீங்களா? என்ன இரும்பு இதயமப்பா உங்களுக்கு. விமர்சனம் வேறயா? 'தோழா'! இது தகுமா?:) .அன்றைய 'மதுரை நாட்கள்' போல இன்றைய 'பெங்களூர் நாட்கள்' வருமா? நாகார்ஜுனா! நாகார்ஜுனா!அமலாவின் வூட்டுக்காரர் என்பதை மறந்தும் பொறாமையின்றி அர்ஜுனாவை பாராட்டும் உம்ம மனசே மனசு.:) 'நினைக்கத் தெரிந்த மனமே.... உனக்கு மறக்கத் தெரியாதா?

vasudevan31355
13th April 2016, 06:04 AM
வந்தனம் தந்த தம்பிக்கு வளமான நன்றி!

RAGHAVENDRA
13th April 2016, 09:19 AM
//"தந்தைக்குப் பின் தனயன்" படம் பார்க்கப் போயிருப்பாங்களோ?//



'நீங்கள் கேட்டவை' யேசுதாஸ்.:)

https://www.youtube.com/watch?v=yEiF1a8b-Lo

நல்ல பாட்டு. வாழ்க்கையின் தத்துவம் நிறைந்த பாட்டு.. அவ்வளவு தானுங்கோ.. சொன்னா நம்பணும்...

chinnakkannan
13th April 2016, 10:17 AM
//பொறாமையின்றி அர்ஜுனாவை பாராட்டும் உம்ம மனசே மனசு. 'நினைக்கத் தெரிந்த மனமே.... உனக்கு மறக்கத் தெரியாதா?// :) வாஸ்ஸூ ஜி..பொற்ற்றாமை லாம் இல்லை.. ச்சும்மா ஒரு ரசனை தான்..(உமக்குத்தெரியாதா என்னைப் பற்றி..)

“மதுரை நாட்கள்” போல பெங்களூர் நாட்கள் வருமா // வராதே வாஸு.. ஆனா அந்தக்கால மதுரை டிவிஎஸ் நகரில் எடுத்தபாட்.. பட்டம் பாட்.. நினைவிருக்கா அதுலயே மதுரை பஸ்ஸ்டாண்டும் வரும்.. இப்பல்லாம் கொலை அடிதடி பேக்ரவுண்ட்டுக்காக மதுரை யூஸ் பண்றது கஷ்டமாத் தான் இருக்கு (மதுரை ஸ்ரீ தேவி தியேட்டரிலேயே முழுக்க முழுக்க எடுத்த படம் “ஹவுஸ் ஃபுல்” என்று அறிவீர்கள் தானே)


கனவு காணும் வாழ்க்கை யாவும்.. ரொம்ப பிடிக்கும் ராகவேந்தர் சார்..உடம்பு என்பது உண்மையில் என்ன கனவுகள் காணும் பை தானே..

தத்வப் பாட்டுல்லாம் லிஸ்ட் நு போட்டா


வீடு வரை உறவு
போனால் போகட்டும் போடா
சமரசம் உலாவும் இடமே
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
பிறக்கும் போதும் அழுகின்றாய்
சட்டி சுட்டதடா
போனால் போகட்டும் போடா
படைத்தானே படைத்தானே
அவனுக்கென்ன தூங்கிவிட்டான்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான் வாழும் வகை புரிந்துகொண்டான்..
ஆட்டுவித்தால் யாரொருவர்
மனிதன் நினைப்பதுண்டு
அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே
இதயம் இருக்கின்றதே தம்பி
பிள்ளைக்குத் தந்தை ஒருவன்
எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திடு மகளே

இது கொஞ்சம் தான் இன்னும் நிறைய இருக்கு..பின்ன வாரேன்

மதுண்ணா.. ஓஹ்..தடால்னு என் சிற்றறிவுக்கு அது எட்டவில்லை விளக்கத்துக்கு நன்றி..

இன்றைய தத்வ ப் பாட்டு..!

https://youtu.be/R_806iQ86Ns

vasudevan31355
13th April 2016, 10:46 AM
காலை 10 மணிக் காட்சி பக்கா அனுபவங்கள்.

http://4.bp.blogspot.com/-I00wvE8YwOM/VF2UXZJa1LI/AAAAAAAASrI/VpQ5iF3Ncu8/s640/Andham-Kosam-Pandem_09-12-1971_03.jpg

'மன்மத லீலை' கமலின் காமக் குதிரை போல் 70-களின் பக்கம் திரும்பி மனம் ரிவர்ஸ் அடிக்கிறது. என்ன பொன்னான தருணங்கள்! குடும்ப பாரமறியா குதூகல வாழ்க்கை. நல்லது கெட்டது அவ்வளவாகத் தெரியாத வயது. 'சினிமாவுக்குக் கூட்டிப் போ' என்றால் அப்போது அவன்தான் கெட்ட பையன். கோலி, கிட்டி விளையாண்டு, சோர்வுக்கு கோலி சோடா உடைத்து, காலி பண்ணின ஜாலி காலமது.

விஷயத்திற்கு வருகிறேன். காலைக் காட்சி என்று தனியே அப்போது போடுவார்கள். நான் எட்டாவது படிக்கும் போதே 'சனி, ஞாயிறு காலை பத்து மணி காட்சிக்கு மட்டும்' என்று நீலக்கலர் பவுடரில் பிரஷ்ஷால் தோய்த்து எழுதிய எழுத்துக்கள் ஒரு வால் போன்ற நீள்பேப்பரில் போஸ்டரின் மேல் எழுதி கிராஸாக ஒட்டப்பட்டிருக்கும். தனியாகவே அது நன்றாகத் தெரியும்.

காலை பத்துமணிக் காட்சி என்றாலே தெலுங்கு டப்பிங் படங்கள்தாம் கோலோச்சும். காந்தாராவ், என்.டி.ஆர் இந்த இரண்டு ஹீரோக்களின் படங்கள் வாராவாரம் எங்கள் கடலூர் கமரில் 10.00 மணிக் காட்சிக்கு திரையிடப்படும். படம் ஒரு வாரத்திற்கு முன் மெயின் பிக்சரின் இடைவேளையின் போது டிரைலராக காட்டப்படும்.

விட்டலாச்சார்யாவின்

'மன்னனைக் காத்த மாவீரன்'

என்று பழுப்புக் கலர் ப்ரின்ட்டில் டிரைலர் போடுவார்கள். இடைவேளையில் வெளியே 10 பைசா டீயை அரை ஜான் அளவு கிளாசில் முழுக்கப் பார்த்து 'நிறைய கொடுத்திருக்கான் டோய்' என்று மனசில் சந்தோஷப்பட்டு குடித்தால் ஐந்தாறு முனரில் கிளாஸ் காலியாயிடும். (ஆமா! முனருக்கு பெரிய ' று' வா சின்ன 'ரு' வா?... பேச்சு வழக்கு வார்த்தைதானே அது?) டீ குடித்து முடிப்பதற்குள் 'திடு'மென பத்து மணிக்காட்சி படம் டிரைலராக ஓட, 'டங்.. டங்' என்ற கத்திச் சத்தம் கேட்க, வேகவேகமாக இருட்டில் ஓடி, அனைவர் கால்களையும் மிதித்து, திட்டு வாங்கி இருக்கையை தேடித் பிடித்து அமர்ந்து, முன்னாடி இருக்கையில் அமர எத்தனிப்பவர்களை 'மறைக்கிறான் பார்'' என முறைத்து, மனதுக்குள் வசை பாடி, என்.டி. ஆரைக் கண்டவுடன் எக்காளக் குதூகலமிட்டது அந்தக் காலம்.

https://cdn.veblr.com/download/201303111362990104282705786.jpg

ஒரு நான்கைந்து நட்சத்திர ஷேப் வடிவங்கள் சிறிதும், பெரியதுமாய் லாங் ஷாட்டிலும், ஷார்ட் ஷார்ட்டிலும் தூர தூர போய், கிட்ட கிட்ட வந்து ஒளிர, அதன் நடுவே 'மாயா ஜாலங்கள் நிறைந்தது' என்று எழுத்துக்கள் 360 டிகிரி ஆங்கிளில் சுற்றி வரும். பார்க்கும் போது மனம் பரவசமடையும். பெரும்பாலும் ராஜநாளா தான் ஹீரோவிடம் கத்திச் சண்டை செய்து 'லெக்கின்ஸ்' கிழிந்து நிற்பார் பரிதாபமாக. அப்படியே அடுத்த காட்சியாக ராஜஸ்ரீயோ இல்லை விஜயலலிதாவோ ஸ்டுடியோ செட்டில் வெட்டப்பட்ட சின்ன குளத்தில் அழுக்குத் தண்ணியில் வெள்ளை உடை தரித்து 'ஓ...என் மதன ராஜா' என்று டிராக் பாடுபவர்களின் பின்னணயில் பாடுவார்கள். அப்போது அரங்கு திடீரென்று நிசப்தமாகி விடும். உச்சக்கட்ட மாணவப் பருவமாதலால் நம்மையறியாமல் இருக்கையில் நாம் உயருவோம்.:) பின்னால் இருப்பவர் நம் தலையில் தட்டி 'மறைக்குது....குனிந்து உட்கார்' என்று மிரட்டுவார்.

திடீரென்று குளியல் காட்சி மறைந்து அகோர உருவம் ஒன்று ராட்சஸனாக வந்து அவதாரம் எடுத்த ஆண்டவன் போல வந்து நின்று தடித்த குரலில் வசனம் பேசும். அப்படியே நாயகனை 'அலேக்'காகத் தூக்கி வீசும் போது நம் நெஞ்சமெல்லாம் நடுங்கும்.

'பயங்கரக் காட்சிகள் நிறைந்தது' என்று எழுத்துக்கள் மின்னியவாறு வந்து போகும்.

உடனே ஒரு டூயட்.

https://cdn.veblr.com/download/20130311136299018628969535.jpg

'ஏ... பெண்ணே! அழகுப் பெண்ணே!' என்று ஆலமர விழுதைப் பிடித்து காந்தாராவ் தொங்கி வருவார். சம்பந்தமே இல்லாமல் படுகவர்ச்சியாக காபரே உடை அணிந்து ஜோதிலஷ்மி இடுப்பை கிரைண்டராக மாற்றுவார். கொட்டாயில் சும்மா விசில் பிச்சி உதறும்.

'கவர்ச்சி நடனங்கள் நிறைந்தது' என்று எழுத்துக்கள் ஓடியாரும்.

அடுத்து காட்சி மாறி கண் தெரியாத நாயகனின் அம்மா சென்டிமெண்ட் வசனம் பேசுவார்கள். வசனம் பேசி முடித்தவுடன்தான் நம் காதுகளில் அது கேட்கும். 'ச்சூடம்மா' என்பது வசனகர்த்தாவின் சாதுர்யத்தால் 'பாரம்மா' என்று கேட்கும். 'பாடல்கள் புரட்சிதாசன்' என்று டைட்டில் வரும்.

ஒன்றா.... இரண்டா.. இப்படி மாயாஜாலப்படங்கள் வரிசயாக. தியேட்டர் கண்டிப்பாக நிரம்பி விடும். பெண்கள் யாருமே வரமாட்டார்கள். போஸ்டரில் கூட்டத்தை இழுக்க 'தெலுங்கு எம்.ஜி.ஆர்' காந்தாராவ் நடித்தது' என்று பட்டமெல்லாம் புத்திசாலித்தனமாக கொடுத்திருப்பார்கள்.

மன்னனைக் காத்த மாவீரன்,

வீரவாள்,

மாயத்தீவு ரகசியம்,

பட்டி விக்கிரமாத்தன்,

காவேரி மன்னன்,

மாய மோதிரம்,

https://i.ytimg.com/vi/m1YxtQVXX7E/hqdefault.jpg

இந்த மாதிரி ராஜ மந்திரக் கதைகள் நிறைந்த படமே ஆரமபத்தில் காலைக் காட்சிப் படங்களாக வெற்றிநடை போட்டு ஆந்திரக் கதாநாயகர்களை ஈஸியாக தமிழ் பாமர ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி நெஞ்சில் பதிய வைத்தன.

இதில் இன்றுவரை அதிசயக்கும் விஷயம் என்னவென்றால் காந்தாராவ், ராமாராவ் அணியும் அன்றைய உடலின் நிறத்தை அப்படியே காட்டும் 'லெக்கின்ஸ்' உடைகள்தான். இதுபற்றி எங்களிடம் விவாதமே நடக்கும். அது 'எலாஸ்டிக் டிரஸ்' என்று ஒருவன் சாதிப்பான். 'போடா முண்டம்... பின்னால 'ஜிப்' இருக்கும்டா... நம் கண்ணுக்கு அது தெரியாம மறைச்சி காண்பிப்பாங்க'.... என்று இன்னொருவன் புத்திசாலியாவான்.

எப்படியோ இப்படி ஒரு டைட்டான உடை அணிந்த தெலுங்கு நாயகரின் கஷ்டத்தை நாம் பாராட்டத்தான் வேண்டும். எப்படித்தான் அதை அணிந்து நடித்தார்களோ!

பின் ஒரு கட்டத்தில் ரசிப்பு முன்னேற்றத்தின் காரணமாக நவீன சமூக படங்கள் மாயாஜாலப்படங்களை தள்ளி ஓரம் கட்டிவிட்டு அவைகளின் இடத்தைப் பிடித்தன.

http://www.iqlikmovies.com/modules/articles/dataimages/The_James_Bond_of_Telugu_Cinema_2013_07_17_09_43_2 2.jpg

இப்போது கிருஷ்ணாதான் 74,75 களின் காலைக்காட்சி ஹீரோ. போஸ்டரில் துப்பாக்கி பிடித்தபடி கிருஷ்ணா வீரமாக போஸ் கொடுக்க, கீழே விஜயலலிதா டைட் பேன்ட் போட்டு, மேலே ஷர்ட் போட்டு அதை முடிச்சியும் போட்டு இடுப்பில் கைவைத்தபடி டான்ஸ் போஸ் கொடுப்பார். அப்புறம் கிருஷ்ணா வில்லனுடன் மோதுவது போல ஒரு காட்சியும் அதில் இருக்கும். கத்திச் சண்டைகளையும், மாய வேஷங்களையும் பார்த்து சலித்து, புளித்துப் போன போது புது தீபாவளி துப்பாக்கி 'டுமீல்...டுமீல்' சப்தம் காதுகளுக்குள் இனிமையாக விழுந்தது.

நாகேஸ்வரராவ் 'சோகராவ்' என்பதால் காலைக் காட்சிகளில் அவருக்கு இடம் இல்லை.

https://i.ytimg.com/vi/K-kd2QhVqVk/hqdefault.jpg

இந்தப் படங்களில் பழைய வில்லன்கள் இருக்க மாட்டார்கள். சத்யநாராயணா, பிரபாகர் ரெட்டி என்று வில்லன்கள் 'கௌபாய்' ரேஞ்சில் துப்பாக்கி பிடித்து ஓரிரு பெண்களை கற்பழித்து, 'கேம்ப்ளிங்' விடுதி நடத்தி, அதில் காபரே ஆடவிட்டு, பல கொலைகள் செய்து, நம்பிக்கை துரோகம் செய்து காட்டிக் கொடுத்த தன் கூட்டத்து ஆளை முதலை வாயில் தள்ளி, மற்றவர்களுக்கும் அதே நிலைமைதான் என எச்சரித்து எக்காளமும், கும்மாளமும் இடுவார்கள்.

வெட்டவெளி சென்னை மகாபலிபுரம் தார் ரோட்டில், சவுக்குத் தோப்புகள் சரமாரியாய் சைடில் வளர்ந்து கிடக்க, ஒப்பன் ஜீப்பில் வில்லன் ஜீப்பை துரத்துவார் ஹீரோ. ஜீப்களின் டயர் திரும்பும்போது 'குளோஸ்-அப்' ஷாட் அதம் பறக்கும். வெத்து ரோடு 'விர்'ரென்று பறக்கும் வளைவுகளில் வந்த ஷாட்களே திரும்பத் திரும்ப வரும். அதைக் கண்டு பிடித்து பெயர் வாங்கி விடுவேனாக்கும். ஹ.. ஹ. ஹீரோ' கிருஷ்ணா வந்து (இவர் தெலுங்கு 'ஜேம்ஸ் பாண்ட்') வில்லன்களுடன் படம் முழுக்க பத்து சண்டைகள் போட்டு, இறுதியில் போலிசிடம் பிடித்துக் கொடுத்து படத்தின் முதல் டூயட் பாடலை இறுதியில் மீண்டும் நாயகியுடன் சேர்ந்து நான்கு வரி பாடி நம்மை மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு அனுப்புவார்.

இப்படி

மோசக்காரனுக்கு மோசக்காரன்,

கில்லாடிக்குக் கில்லாடி;

துடிக்கும் துப்பாக்கி,

கத்திக்குத்து கந்தன்

சென்னையில் சி.ஐ.டி 77

(இந்தப் படத்தில் கிருஷ்ணாவுக்கும், வில்லனுக்கும் கைபலப் பரிசை போட்டி ஒன்று நடக்கும் சூதாட்ட விடுதியில். இருவரும் அவரவர்கள் கைகளை டேபிள் மீது வைத்து கோர்த்து வலது பக்கமும் இடதுபக்கமும் ஒருவரை ஒருவர் சாய்த்து மிஞ்சப் பார்ப்பார்கள். இதில் என்ன விசேஷம் என்றால் வலது பக்கம், இடது பக்கம் இரு பக்கங்களிலும் பெரிய கொடுக்கு கொண்ட தேள்கள் சில நகர்ந்து கொண்டிருக்கும். வில்லன் கிருஷ்ணாவின் கைகளை பிடித்து சாய்த்து அப்படியே ஜெயிப்பது போலக் கொண்டு போகும் போது தேள்கள் கொடூரமாய் கிருஷ்ணாவின் கையைக் கொட்ட எக்கும். பார்க்கும் நாங்கள் படுடென்ஷனாக நகம் கடிப்போம். பின் பதிலுக்கு கிருஷ்ணா வில்லனின் கைகளை சாய்த்து இறுதியில் தேள் வில்லன் கைகளைக் கொட்டும்போது நம் முகத்தில் சின்னா தமன்னாவைப் பார்த்தால் எவ்வளவு சந்தோஷப்படுவாரோ அதைவிட சந்தோஷ ரேகைகள் எங்கள் முகத்தில் படர்ந்த காலம் அது.

அடுத்த நாள் திங்களன்று ஸ்கூலில் பத்து மணிக் காட்சி பார்த்த கதை நடக்கும். சுற்றி அனைத்து நண்பர்களும் காதில் ஈ புகுவதைக் கூட கவனியாமல் கதை கேட்பார்கள். இதில் நண்பர்கள் கேட்கும் முதல் கேள்வி என்ன தெரியுமா?

'படத்துல எத்தனை சண்டைடா?'

http://www.thehindu.com/multimedia/dynamic/00204/2009040350400402_204316g.jpg

ஏன்னா அத்தனை பசங்களுக்கும் சண்டைக் காட்சின்னா அவ்வளவு உயிர். எட்டு சண்டைகளாவது ஒரு படத்தில் இருக்க வேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு சண்டைக் காட்சிகள் அதிகமாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு பசங்களுக்குப் பிடிக்கும்.

அப்புறம் ஹீரோக்கள் டாமினேஷன் போரடிச்சுப் போய் ஹீரோயின்கள் கட்டிப் பிடித்து ஸ்டன்ட் பண்ணி, ரிவால்வார் பிடித்து 'டுமீல்' பண்ணி எதிரிகளை துவம்சம் செய்தார்கள். குறிப்பாக ஜோதிலஷ்மி, விஜயலலிதா. இந்தப் படங்களுக்கு கூட்டம் எக்ஸ்ட்ராவாக வரும். இடம் கிடைக்காமல் நின்று கொண்டே பார்ப்போம். கவர்ச்சிக் காட்சிகள் வேறு அதிகம்.

https://i.ytimg.com/vi/la6N7aJZVaY/hqdefault.jpg

ரிவால்வார் ரீட்டா,

கன் பைட் காஞ்சனா

இப்படி படங்கள் வந்து சக்கைப் போடு போடும்.

இதுவல்லாமல் கன்னட ராஜ்குமார் தமிழ் பேசுவார். அவர் படங்களுக்குத் தக்கவாறு' கோவாவில் சி.ஐ.டி, பெங்களூரில் சி.ஐ.டி, காட்டுக்கு ஒரு தோட்டக்காரன்' என்று சாமர்த்தியமாக வியாபாரத் தந்திரப் பெயர் சூட்டிவிடுவார்கள்.

பக்த ஆஞ்சநேயா, ஸ்ரீ ராம ஹனுமான் யுத்தம், லட்சுமி கடாட்சம் என்று பக்திப் படங்களும் அவ்வப்போது காலைக் காட்சியில் மிளிருவதுண்டு.

பத்துமணிக் காட்சி முடிந்து ஞாயிறு அன்று மதியம் ஒரு மணிக்கு வீட்டுக்குப் போனால் பாட்டி 'எங்கேடா போயிட்டு வர்றே?' என்று தன் அதிகாரத்தைக் காட்டும்.

'இன்னைக்கி ஸ்கூல்ல்ல 'ஸ்பெஷல் கிளாஸ்' பாட்டி' என்று கூசாம பொய் சொல்லிட்டு, மீன் நடுமுள்ளை மட்டும் விட்டுவிட்டு, 'முதல் மரியாதை' தலைவர் கணக்காய் இழுத்து இழுத்து உறிஞ்சி ருசித்து சாப்பிட்டது மறந்து போகுமா?

http://www.joblo.com/images_arrownews/gz01.jpg

அப்புறம் இதெல்லாம் போரடிச்சுப் போய் இங்கிலிபீஷ் படங்கள் தமிழ்ப்படுத்தப்பட்டன. காட்ஜில்லா, கிங்காங் என்று இப்படி படங்கள். 'இன்னா சொல்லு... இங்கிலிஷ்காரன் இங்கிலிஷ்காரன்தான்... அவனை மாதிரி எடுக்க முடியாது... என்று காந்தாராவை புகழ்ந்து பேசிய வாய் அப்படியே தடம் புரளும்.

இதன் நடுவில் நாகேஷ் இங்கு பிரபலம் என்பதால் அவர் நடித்த தெலுங்குப் படங்கள் தமிழாக்கம் செய்து வெளியிடப்படும். 'நகைச்சுவை நாயகன்' நாகேஷ் என்று போஸ்டர் அடித்து வந்த 'நியூவேவ்' பாணி படம் ஒன்றை நான் அப்போது ரசித்துப் பார்த்திருக்கிறேன். கீழே 'இது ஒரு நியூவேவ் படம்' என்று போஸ்டரில் படித்தது நினைவிருக்கிறது. ஆனால் படத்தின் பெயர் நினைவில்லை. ஆனால் நிறைய கவர்ச்சி நாயகிகள்.

அப்புறம் பேய்ப்பட வரிசையில் டப்பிங்கில் பேயோட்டம் ஓடியது 'கதவைத் தட்டிய மோகினிப் பேய்'.

காந்தாராவ், ராமாராவ் இவர்களெல்லாம் அரச கதைகளிலிருந்து மீண்டு வந்து கால மாற்றம் காரணமாக 'பாண்ட்' பாணியில் துப்பாக்கி பிடித்து தோற்றுப் போனார்கள். காந்தாராவ் பேன்ட் சூட் அணிந்தால் யார் பா ர்ப்பார்கள்? அவருக்கு விட்டலாச்சார்யா பாணி டிரஸ்தான் பொருத்தம். பின்னாளில் நரசிம்மராஜு அதைத் தக்க வைத்துக் கொண்டார்.

ஆனால் கிருஷ்ணாவை வெல்ல வேறு எந்த நாயகர்களின் துப்பாக்கிகளும் இல்லை. அவர் இளமை மாறா தனிக்காட்டு 'சுடு'ராஜா.

'மெக்கனாஸ் கோல்ட்' தாக்கத்தில் மனைவி விஜயநிர்மலா எடுத்த 'மோசக்காரனுக்கு மோசக்காரன்' படம் தெலுங்கிலும், தமிழிலும் சக்கை போடு போட்டது.

இதற்கு மேல் எழுதினால் கோபால் 'கொல்டி...அவன் வேலையைக் காட்டிவிட்டான் என்று 'அறம்' பாடுவார்.

இத்தோடு விட்டு விடுகிறேன் என் காலை காட்சி அனுபவங்களை.

நீங்களும் மல்லாந்து படுத்து பழசை அசை போட்டு, உங்க காலைக் காட்சி அனுபவங்களை எழுதுங்களேன்.

நம்ம கிருஷ்ணா சாருக்கு இப்படிப்பட்ட பதிவுன்னா ரொம்ப பிடிக்கும். மனுஷர் சிக்க மாட்டேன் என்கிறார்.

chinnakkannan
13th April 2016, 11:08 AM
//அப்புறம் பேய்ப்பட வரிசையில் டப்பிங்கில் பேயோட்டம் ஓடியது 'கதவைத் தட்டிய மோகினிப் பேய்'. // இந்த டைட்டில் சொல்லணும்னு நினைச்சிருந்தேன் சொல்லிட்டீங்க..பேயோட்டம் ஓடியதா..மதுரை இம்ப்பீரியலோ வெள்ளைக்கண்ணு மட்டும் தான் இந்த கருஞ்சிவப்பு, கருமஞ்சள், கரும்பச்சை நிறத்தில் கருப்பு எழுத்துக்களில் போஸ்ட்ர் ஒட்டியிருப்பாங்க..அதில் பார்த்த நினைவு..

காலைக்காட்சி ரைட்டப் மிக்க நன்று..அண்ட் நன்றி..ஆனாக்க மதுரைல சனி ஞாயிறு ரெகுலர் படங்கள் தான் 4 காட்சிகள்.. வீக் டேல தான் 11 மணிக் காட்சி மட்டும் நு போடுவாங்க.. மீனாட்சில சில பழைய படங்கள் பார்த்திருக்கேன்..ம்ம் நைட் ம.ப யோ பின் எழுதறேன் :)

chinnakkannan
13th April 2016, 11:10 AM
//இதற்கு மேல் எழுதினால் கோபால் 'கொல்டி...அவன் வேலையைக் காட்டிவிட்டான் என்று 'அறம்' பாடுவார். // நீங்க தமிழனா அல்லது தமிழ் கற்றுக்கொண்ட தமிழனா?! :)

vasudevan31355
13th April 2016, 11:16 AM
//இதற்கு மேல் எழுதினால் கோபால் 'கொல்டி...அவன் வேலையைக் காட்டிவிட்டான் என்று 'அறம்' பாடுவார். // நீங்க தமிழனா அல்லது தமிழ் கற்றுக்கொண்ட தமிழனா?! :)

க்ரீன் தமிழன்:)

chinnakkannan
13th April 2016, 12:46 PM
Oh. Green T yaa :) aamaa ji yai engae kaanavillai..

// சின்னா தமன்னாவைப் பார்த்தால் எவ்வளவு சந்தோஷப்படுவாரோ அதைவிட சந்தோஷ ரேகைகள் எங்கள் முகத்தில் படர்ந்த காலம் அது.// ஓய் மொதல்ல படிக்கச்சொல்ல இந்த லைன் விட்டுட்டேன்.. :) டாங்க்யூ

chinnakkannan
13th April 2016, 12:49 PM
//சின்ன குளத்தில் அழுக்குத் தண்ணியில் வெள்ளை உடை தரித்து 'ஓ...// அது நல்ல தண்ணீர் தான் ப்ளாக் அண்ட் ஒய்ட்ல கறுப்பாத் தான் இருக்கும்.. ஆமா.. முனரு என்ன கடலூர் பாஷையா மிடறு தானே வரும்..

chinnakkannan
13th April 2016, 12:56 PM
எப்படியோ இப்படி ஒரு டைட்டான உடை அணிந்த தெலுங்கு நாயகரின் கஷ்டத்தை நாம் பாராட்டத்தான் வேண்டும். எப்படித்தான் அதை அணிந்து நடித்தார்களோ!// அந்தக் கால சென்சாருக்குப் பயந்து ஹீரோயின்கள் அணியும் ஸ்கின் ட்ரஸ் பற்றி எதுவும் சொல்லியிருக்கிறீர்களா.. ஐ திங்க் திருவருட் செல்வரிலும் பத்மினி ஸ்கின் அணிந்து இருப்பார்..பட் எல்லாமே ஹாரிபிளா இருக்கும்..

chinnakkannan
13th April 2016, 03:33 PM
சுசீலாம்மா பாட்ல இது மறக்க முடியுமா..ஹம்மிங்க்க்.. அண்ட் பி.பி.எஸ்..

https://youtu.be/5FvC0Bf_f9U

RAGHAVENDRA
13th April 2016, 05:20 PM
ஐ திங்க் திருவருட் செல்வரிலும் பத்மினி ஸ்கின் அணிந்து இருப்பார்..பட் எல்லாமே ஹாரிபிளா இருக்கும்..

4 மணி நேரம் ஐந்து மணி நேரமாய் கஷ்டப்பட்டு அப்பர் வேஷம் போட்டு தலைவர் மாங்கு மாங்குன்னு உழைச்சி நடிச்சி நல்ல பக்திப் படத்தைக் கொடுத்தா...அந்தப் படத்தை எதற்காக பார்த்திருக்கிறீர் என இப்போத் தான் தெரியுது ஓய்...

raagadevan
13th April 2016, 05:46 PM
Song: : kasme waade pyaar wafa sab
Movie: Upkaar (1967)
Lyrics: Indeevar
Music: Kalyanji-Anandji
Singer: Manna Dey
Featuring Pran and Manoj Kumar

https://www.youtube.com/watch?v=oIiHAKDfksk&nohtml5=False

chinnakkannan
13th April 2016, 08:19 PM
4 மணி நேரம் ஐந்து மணி நேரமாய் கஷ்டப்பட்டு அப்பர் வேஷம் போட்டு தலைவர் மாங்கு மாங்குன்னு உழைச்சி நடிச்சி நல்ல பக்திப் படத்தைக் கொடுத்தா...அந்தப் படத்தை எதற்காக பார்த்திருக்கிறீர் என இப்போத் தான் தெரியுது ஓய்...

பெரியவா ஷமிக்கணும் :) சித்தமெல்லாம் எனக்கு சிவ மயமேன்னு உங்களுக்குத்தெரியாதாங்காணும்.. (டாமில் லிட்ரேச்சர்ல கோள்கள் என்ன செய்யும் கவனீச்சீங்க தானே.. உஸ்கே பாத்..அதற்கப்புறம் இடர் களையும் பதிகத்துக்கு வேற சின்ன உரை எழுதிப் பார்த்திருக்கேனாக்கும்) சட்டுனு கண்ணீல் ரொம்ப நாளைக்கு முன்னாடி பட்டது நினைவுக்கு வந்ததைச் சொன்னா தப்பா..:) ( அப்பரையும் அவரை க் கண்முன் கொணர்ந்தவரைப் பத்தியும் முன்னமேயே எழுதியிருந்தேன் )

chinnakkannan
13th April 2016, 09:31 PM
துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறையிரைவா நின்ற வளை

என்ன அர்த்தமாம்..

என் ஆளு இருக்கானே.. செம்ம.. ரொம்ப ச் சமர்த்து...அழகன் ஹேண்ட்ஸம்.. அவன் பார்த்து ரசிக்கணும்னு நான்பார்த்துப்பார்த்து காசுகொடுத்து இந்த வளையல்களை வாங்கி என் கையிலிட்டு அழகு செய்தேன்.. அவையும் கம்பீரமாய்ச் சிரித்து கலகலவென்றிருந்தன..

ஆனா என் ஆளு என்னை விட்டுப் போய்ட்டான்.. அது எனக்குத் தெரியலை..இந்த வளையல்களுக்குத்தெரிஞ்சுடுத்து போல..என் கைகளிலிருந்து நழுவி விழுந்துவிட்டன.. அப்படி விழும்போதாவது... அடி பெண்ணே..உன் தலைவன் உன்னை விட்டுப் போய்ட்டான்னு ஒரு கோடி..சொல்லியிருக்க வேணாமோ சொல்லலையே

எனப் புலம்புகிறாள் தலைவி...எனச் சொல்கிறார் வள்ளுவர்..

அது சரி..இதையே ஒரு பாட்டில கண்ண தாசன் சொல்றார்..என்னவாக்கும்..

கையிலே வளையலில்லை
கண்ணிரண்டில் தூக்கமில்லை
கட்டியுள்ள ஆடைகளும் ,கடலலையே -என்
சிற்றிடையில் தங்கவில்லை கடலலையே

பாவம் இந்தப் பொண்ணுக்கு தலைவன் பிரிந்திருந்த துக்கத்தில் உடல் இளைத்து கட்டியிருந்த ஆடைகளும் நெகிழ்கின்றனவாம்.. ம்ம்

பாட் சுசீலாம்மா.. ஆடியோ தான் கிடைச்சது..

https://youtu.be/SZysNIvToDg

eehaiupehazij
13th April 2016, 11:02 PM
gap filler from the same GG starrer Porchilai!

https://www.youtube.com/watch?v=ufdC38lwPfo

madhu
14th April 2016, 04:15 AM
வாசு ஜி.... வாவ்... அப்படியே மறுபடி 10 மணி ஷோவுக்கே அழைச்சுக்கிட்டு போயிட்டீங்க...

ம்ம்... அப்போ ரிலீசான ஒரு டப்பிங் படத்தின் எழுத்துக்களை என்ணி "பறக்கும் மனிதனும் பயங்கரப் பேய்களும்" மொத்தம் 21 எழுத்து வருது. அதனால் இனிமேல் "ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி" படம் நீளப் பெயர் கொண்டது இல்லைனு பெரிய டிஸ்கஷன் எல்லாம் நடந்திருக்கு...

"Fantastic three superman" படத்தை "மூன்று எம்.ஜி.ஆர். வீரர்கள்" என்ற பெயரில் போட்டாங்க.. அதுக்கு அலைமோதிய கூட்டம் ... அப்பாடியோ..

சிக்கா.. ராகவ்ஜி சொல்றது என்னன்னா... அப்பர் படத்துக்கு போயிட்டு ஏன் லோயர் போர்ஷனை கவனிச்சீங்க... அப்படின்னுதான்.. வேற ஒண்ணுமில்லே..:)

ம்ம்.. அப்புறம் "நீ போகுமிடமெல்லாம்" பாட்டில் சுசீலாம்மா அங்கங்கே ஹம்மிங் கொடுப்பார். ஆனா இந்தப் பாட்டில் முழுக்க ஹம்மிங்தான்..

https://www.youtube.com/watch?v=0x9hJk8cVnY

madhu
14th April 2016, 04:16 AM
பாட் சுசீலாம்மா.. ஆடியோ தான் கிடைச்சது..


ம்ம்... உங்க ஃபேவரைட் விஜயகுமாரி நடிச்ச காட்சின்னு நினைக்கிறேன்.... அதான் இதுவரைக்கும் யாரும் வீடியோ தேடலையோ என்னவோ ?

rajraj
14th April 2016, 07:54 AM
.

Happy Tamil New Year ! :)

vasudevan31355
14th April 2016, 07:56 AM
//சிக்கா.. ராகவ்ஜி சொல்றது என்னன்னா... அப்பர் படத்துக்கு போயிட்டு ஏன் லோயர் போர்ஷனை கவனிச்சீங்க... அப்படின்னுதான்.. வேற ஒண்ணுமில்லே..:)//

நன்றி மதுண்ணா!

மேலே நீங்க எழுதியிருக்கிறதை படிச்சிட்டு சிரிக்கிறேன்...சிரிக்கிறேன்....சிரித்துக் கொண்டே இருக்கிறேன்:)...அம்மாடியோ...வயிறு வலி கண்டிடிச்சு. குறும்பு...குறும்பு.:) உங்க சிக்கா 'ஸ்கின்' பத்தி எழுதினதும் எனக்கென்னவோ 'sin of adam and eve' படம் மனசுல 'பாவமா' ஓடுது.:)

vasudevan31355
14th April 2016, 08:29 AM
'டக்'கென்று இந்தப் பாடல் மூளையின் ஒரு மூலையில் மின்னியது.

வித்தியாசம் கொஞ்சம் தெரியும். மலையாள பாலச்சந்திரனும், நம்ம பேவரிட் கீதாஞ்சலியும் ஊட்டி ஹேர்பின் பெண்டுகளில் காரில் உல்லாசப் பயணம். உபயம் 'தெய்வத்தின் தெய்வம்'. பாடலும் விறுவிறு. டியூனும் ஜோரான ஜோர்.

பிபிஎஸ் 'லிலி லிலி லிலி லி' ஹம்மிங் தரும்போது 'க்ளுக்' என்று சிரிக்காமல் இருக்க முடியாது.


https://youtu.be/_BE3Hqgcl2M

chinnakkannan
14th April 2016, 10:21 AM
//சிக்கா.. ராகவ்ஜி சொல்றது என்னன்னா... அப்பர் படத்துக்கு போயிட்டு ஏன் லோயர் போர்ஷனை கவனிச்சீங்க... அப்படின்னுதான்.. வேற ஒண்ணுமில்லே..// :) ஓய்.. தோள்ல தான் அவங்க ஸ்கின் போட்டிருப்பாங்கன்னு நினைவு.. ஸோ நானும் தோளைத் தான் சொன்னேன்..

chinnakkannan
14th April 2016, 10:22 AM
//எனக்கென்னவோ 'sin of adam and eve' படம் மனசுல 'பாவமா' ஓடுது.// நம்ம தோஸ்த் கோபால் இருந்தார்னா இதப் பத்தி ஒரு வியாசமா ஏதாவது எழுதியிருப்பார்.. நான் இந்தப் படம்லாம் பார்த்ததில்லையே..ம்ம்..

chinnakkannan
14th April 2016, 10:59 AM
அந்தக் காலத்தில.. ச்ச்சின்னக் கண்ணன் வேலை சேர்ந்த புதிதில்
இருந்த இளம் மலையாளப் பெண்ணிடம் தயங்கிய வண்ணம் இன்னிக்கு
உங்களுக்கு விஷூ தானே ஹாப்பி விஷூன்னு சொன்னானா..அதுக்கு
அந்த சேர நனனாட்டிளப் பாவை வெள்ளரிக் கீற்றை வெள்ளியில் வடித்தாற்போல
பளீர்ச்சிரிப்பு க் கொடுத்து யெஸ் கண்ணுன்னு சொல்லி கை குலுக்கினாளா
சடனா நினைவுக்கு வந்துச்சா.. இதை எழுதிட்டேனா..( நம்பணும்ங்க.)

ஆமா மெனச்சொல்லி அல்லிவிழி மேலுயர்த்தி
தாமாகக் கைகொடுத்த தண்ணிலவே - போனாலும்
நீங்கா திருக்கிறதே நின்நினைவு நெஞ்சத்தில்
பாங்காய்ச் சிரிக்கிறதே பார்....

//மனச் சோலையிலே வட்டமிடும் வாசமென
உள்ளத்தில் நீ பொங்க// ம்ம்.. டி. ராஜேந்தர்..

https://youtu.be/F75_LCOzjeA

Gopal.s
14th April 2016, 11:48 AM
ஏதோ ஒரு புண்ணியவான் அருமையாக மிக்ஸ் செய்து ஒரு காட்சி விரிகிறது. பாலும் பழமும் சாந்தியுடன் இணைத்து பார்க்க முடியாவிட்டாலும் ,பாட்டின் துடிப்பில் இணைய முடிகிறது. மூல படத்தில் சௌகாரை வைத்து படமாகியிருந்ததாக ஞாபகம்.இதுவும்,காதலெனும் வடிவம் கண்டேன் பாடலும் சுசீலா (கின்னஸ் சாதனை நாயகி) குரலில் அப்படி....அப்படி...இருக்கும். ஒரு இளம் பெண் தண் மனத்தை கட்டுக்குள் வைக்காமல்,மணத்தில் வைத்தால் இப்படித்தான் என்ற இலக்கணம் ,தேன் குரலில் சொல்ல படும் அதிசயம்.(ராட்சசிக்கும் அம்மம்மா கருப்பு பணம் உண்டே?)

http://youtubehd.in/watch/ptyn9VWa_MA

Richardsof
14th April 2016, 05:37 PM
P.SUSEELA'S MELODY VOICE.

https://youtu.be/KpPiNH7Erk0

vasudevan31355
14th April 2016, 07:11 PM
கோ,

நாம் இது பற்றி போனில் நிறைய தடவை பேசியிருக்கிறோம். அந்த இரண்டுடன் இதையும்தான் நான் சேர்த்துக் கொள்வேன். இரண்டுக்கும் இது இளைத்ததல்ல...சளைத்ததல்ல. இரண்டுமே இன்பத் தென்றல்கள் தாம்.

இது இன்னும் உற்சாகம் கொப்பளிக்கும் தென்றல்.

கதவு திறந்ததா காட்சி தெரிந்ததா
காணும் உலகம் புரிந்ததா
காணும் உலகம் புரிந்ததா

'ஹஹ..ஹஹா... ஒஹொஹொஹோ...ஹோஹோஹஹோ'

இந்த ஹம்மிங் ஹசத்தல்தானே!

இதோ இதோ இந்த பூமியிலே
எத்தனை ஜாலங்கள் பாதையிலே
அதே அதே நிலை நீ அறிந்தால்
ஆனந்தம் வேறில்லை வாழ்க்கையிலே

சிலை சிலை ஒன்று நேரினிலே
சிரிப்பதன் காரணம் புரிகின்றதா
அலை அலை என்று கண்களிலே
ஆயிரம் கலைகள் தெரிகின்றதா

மலர் மலர் மணம் வருகின்றதா
மயக்கத்திலே மனம் அசைகின்றதா
இனம் இனம் அது புரிகின்றதா
இயற்கையின் ரகசியம் தெரிகின்றதா

பாடலின் ஆரம்பத்தில் வரும் சுசீலாவின் ஹம்மிங் கொஞ்சம் 'நெஞ்சம் மறப்பதில்லை'யை நினைவூட்டத்தான் செய்யும்.

பாடலின் மூன்று சரணங்களின் முதல் வரிகளில் ஒரே வார்த்தை இரண்டாக இனியவளின் குரலில் ஒலித்து இனிக்கும் சுவையை நாம் பெற என்ன தவம் செய்தோமோ!

http://img.youtube.com/vi/IX8GKUqMVlo/mqdefault.jpg

கோபுரக் கொண்டையில் காட்டுவாசிப் பெண் வேடம் பத்மினிக்கு பரிமளிக்காதுதான். யெஸ்.ஜோடியும் பொருந்தாதுதான். ('ராஜா'வுக்கு 'ராணி'யை ஜோடியாய் பார்த்துவிட்டு ராஜேந்திரனுக்கு எப்படி பார்ப்பதாம்!)

மலைப்பாங்கான இடங்களின் வெளிப்புறப் படப்பிடிப்ப்பின் ஜாலமும், பாடலின் நாயகி குரலும், உற்சாக இசைவெள்ளமும், தவழ்ந்து படர்ந்து செல்லும் பனி மேக மூட்டங்களும் பரவசம் அடைய வைக்கும்தானே!

மாமாவின் முத்திரையைப் பற்றி கேட்கவே வேண்டாம். அது பற்றி உங்களுக்கு நான் சொல்லுவதா?

'இனம் இனம் அது புரிகின்றதா
இயற்கையின் ரகசியம் தெரிகின்றதா'

என்று இன்பம் நிறைந்த வாழ்க்கையின் நிலையை ரசிக்கக்கூடிய, முகம் சுளிக்க முடியாத இரண்டே வரிகளில் 'நாட்டு' நாயகனுக்கு 'காட்டு ரோஜா' விளக்கி விடுவது தனி அழகுதானே!

இப்போ ஆடியோ மட்டும் வீடியோவில் கேளுங்கள். மனம் மறுநாள் வரை உற்சாகம் குறையாமல் இருப்பதையும் கவனியுங்கள்.

இப்போது வீடியோவைத் திறவுங்கள். காட்சி தெரியாது. கானம் மட்டுமே.


https://youtu.be/4jfQxMcjR9s

chinnakkannan
14th April 2016, 08:29 PM
ஹாய் வாஸ்ஸூ நீவிர் போட்ட பாட் ஏற்கெனவே போட்டாச் போட்டாச்சாக்கும்.. நெய்வேலி யானையும் மஸ்கட் பூனையிடம் சறுக்குமாக்கும்.. இருப்பினும் கோ வைக் கொஞ்சி தாங்கள் செய்த வர்ணனை யாமும் ரசித்தோம்.. நன்றி ந்றி றி...:)

http://www.mayyam.com/talk/showthread.php?11536-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%A F%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-5/page52

chinnakkannan
14th April 2016, 08:33 PM
வாங்க எஸ்வி சார்.. நினைக்கும் போதே தனக்குள் சிரிக்கும் மாது முன்பே ரேடியோவில் கேட்ட நினைவு.. ஆனால் உ.சு.வா எனத் தெரியாது..படமாக்கப்பட்டதா என்ன..

chinnakkannan
14th April 2016, 08:57 PM
நண்பர்கள் அனைவருக்கும் அவர் தம் குடும்பத்தினருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகள்..

eehaiupehazij
14th April 2016, 10:25 PM
தமிழ் புத்தாண்டு முத்திரை பதிக்கும் சித்திரை வெயிலுக்கான குளிர் வாழ்த்துக்கள் ...!

Bed of Roses and Path of thorns! Bouquet and Brickbat in GG starrers!

காதல் மன்னரின் படங்களின் மலர்மஞ்ச இன்பமும் முட்பாதை துன்பமும்!

Part 1 அவளுக்கென்று ஒரு மனம் !


மனித வாழ்வு சுழற்ச்சியில் மலர்ப் படுக்கை போன்ற இன்பமும் முள்பாதை போன்ற துன்பமும் மாறி மாறி அலைக்கழிப்பது இயல்பே!

மனித வாழ்வியலை உருவகப் படுத்தும் திரைப்படங்களிலும் சிலசமயம் கதைக் கருவுக்கேற்ற திரைக்கதை சீராக அமைந்து ஒரு மலர்படுக்கையில் நாம்புரள்வது போன்ற ரசனை இன்பத்தைத் தருவதும் வணிகரீதி கண்ணோட்டத்தில் பலசமயம் திரைக்கதை தடம் புரண்டு சீரற்ற வரிசையில் பயணிக்கும்போது
முள்பாதையாக மாறிக் குத்துவதும் காலம்காலமாக நாம் கண்ணுற்று அனுபவிப்பதே !

மலர்க்கொத்தாயினும் கல்லடியாயினும் காதல் மன்னர் பெரும்பாலும் தனது பங்கை சீராக அளித்து தனது பாத்திரப் படைப்பை மக்கள் ரசனைக்கேற்ப பதமாக மனதில் பதிப்பதில் வல்லவரே! பாலைவனத்தில் சோலைகளும் (Oases) பயணப் பாதையில் பூங்காக்களும் (Traffic Islands) கண்ணுக்கும் மனதிற்கும் இதமே!

தோல்வியடைந்த படங்களிலும் தனது பங்களிப்பை செவ்வனே நிறைவேற்றும் காதல் மன்னரின் படங்களின் மலர்மஞ்ச இன்பமும் முட்பாதை துன்பமும்!



இயக்குனர் செம்மல் ஸ்ரீதரின் கைவண்ணத்தில் உருவான அவளுக்கென்று ஒரு மனம் திரைப்படம் கல்யாண பரிசு அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆவலாக எதிர்பார்க்கப் பட்டு எதிர்பாராத விதமாக தோல்வியையே தழுவ நேர்ந்தது !
கல்யாணப் பரிசு திரைப்படத்தின் இளமை மந்திரத்தை ஸ்ரீதரால் மீண்டும் பிரயோகிக்க முடியவில்லை ...வயது ஏறுவது வெளிப்படையாகத் தெரியும்
ஜெமினி காஞ்சனா முத்துராமனுடன் பாலைவன சோலையாக பயணப் பாதைபூங்காவாக மச்ச கன்னி பாரதி.......ரோஜா மலர்ப்படுக்கை சுகமாக
மனதை வருடும் மெல்லிசை மன்னரின் சுகந்தமான இசையமைப்பில் காதுகளில் தேன் பாய்ந்த இனிமையான பாடல்கள் ...ஜெமினியின் இதமான
சீரான மனதை ஈர்க்கும் மிகையற்ற மிருதுவான நடிப்பின் வெளிப்பாடுகள் ....இருந்தும்.....தோல்வியே!

ரோஜா மலர் படுக்கையில் தேனை அள்ளிப் பருகும் வண்டாக நாம் !

1.இப்படத்தின் மூலம் நமக்கு ஒரு சாகாவரம் பெற்ற காதல் மனதின் உருவகப் பாடல் 'உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' கிடைத்தது!
அந்தக் கால கட்டத்தில் எனக்குத் தெரிந்து தினமும் இந்தப் பாடல் அளவு வேறு எந்தப் பாடலும் நேயர்களால் வானொலியில் விரும்பிக் கேட்கப்படவில்லை! சாதனைப் பாடல் !
ஸ்ரீதருக்கும் மெல்லிசை மன்னருக்கும் பாடலை உயிர்பித்த ஜெமினி பாரதி இணைவிற்கும் நன்றிகள்!!

https://www.youtube.com/watch?v=vHVwDiEr64Q

2. காதல் மன்னர் என்னை அடிமையாக்கிய மிகச் சிறந்த பாடல் காட்சியமைப்பில் எஸ்பி பாலசுப்ரமணித்தின் ஜெமினிக் குழைவிலான இப் பாடலுக்கு என்றும் என் மனதில் தனியிடமே!

Enjoy the english translation of the lyrics as subtitles!!

https://www.youtube.com/watch?v=o1vOgWuXqhM


பயணப் பாதை கரடுமுரடான முள் படுகையானதால் நொந்துநூலான நாம்!
1. திரைக்கதைத் தடுமாற்றத்தில் நம்மைக் கடித்துக் குதறிய கற்பனைப் பஞ்சமான பாடல் காட்சி!

https://www.youtube.com/watch?v=7Srv1I9aOF4

eehaiupehazij
14th April 2016, 10:45 PM
The Traffic Islands Mirages and Speed Breakers in GG Starrers!

Part 1 அவளுக்கென்று ஒரு மனம் !


நெரிசல் நிறைந்த போக்குவரத்தில் வேகத்தடைகளும் கானல்நீர் தோற்றங்களும் பாதையோர பசுமைப் பூங்காக்களும் சகஜமே !

பசுமைப் பூங்கா

https://www.youtube.com/watch?v=6fiqHLAHhLE

பாலைச் சோலை

https://www.youtube.com/watch?v=b-ZNNHnNlRQ

வேகத்தடை/கானல்நீர் தோற்றம் !

https://www.youtube.com/watch?v=AcZIhu9xXWg

https://www.youtube.com/watch?v=e_5pjnQ2rUU

madhu
15th April 2016, 04:47 AM
அருமை சி.செ.ஜி..
அவளுக்கென்று ஒரு மனம் ( அது ஒரு மனமா அல்லது ஓர் மனமா என்று பெரிய குழப்ப கிச்சடி நடந்ததும் உண்டு )... நல்லா ஓடியிருக்க வேண்டிய படம். அதன் ஹிந்தி பதிப்பும் (துனியா க்யா ஜானே ) இதன் வழியே நடந்து விட்டது. காவியத் தலைவனாக நடித்தவர் இப்படி மழையில் குதிக்கலாமா என்று கேட்டவர்களுக்கு அதுதான் வெர்சடைல் ஆக்டிங்... அப்பராக நடித்த நடிகர் திலகம் அடுத்த படங்களில் ஜிலுஜிலு டான்ஸ் ஆடிக் காட்டவில்லையா என்று சொல்லி வாயடைத்தார்கள். படம் மறந்து போனாலும் பாடல்கள் இன்னும் ரீங்காரமிட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

உங்க லிஸ்ட் போக இன்னும் காஞ்சனா பூஜை செய்யும் "மனமெல்லாம் உன் கோவில்" மற்றும் கடைசியில் பாரதி சிறைக்குச் செல்லும்போது ஒலிக்கும் "ஒளி வழங்கி மறைகின்ற கற்பூரம்" பாடல்கள் அதிகம் ஒலித்ததில்லை..

Richardsof
15th April 2016, 05:28 AM
சின்ன கண்ணன் சார்
உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்காக பதிவு செய்ய பட்ட சுசீலாவின் பாடல் படத்தில் இடம் பெறவில்லை .நினைத்ததை முடிப்பவன் படத்திற்காக பதிவு செய்யப்பட்ட சுசீலாவின் பாடல் ஒன்று படத்தில் இடம் பெறவில்லை .

madhu
15th April 2016, 07:48 AM
சின்ன கண்ணன் சார்
உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்காக பதிவு செய்ய பட்ட சுசீலாவின் பாடல் படத்தில் இடம் பெறவில்லை .நினைத்ததை முடிப்பவன் படத்திற்காக பதிவு செய்யப்பட்ட சுசீலாவின் பாடல் ஒன்று படத்தில் இடம் பெறவில்லை .

நீ தொட்டுப் பேசினால் தங்கமாகுவேன் பாட்டு படத்தில் லேது..

சிக்கா... சுசீலா பாடி படத்தில் இடம் பெறாத பாடல் லிஸ்ட் போடுவோமா ? ம்ம்.. சில பாடல்கள் பின்னர் நீக்கப்பட்டும் இருக்கலாம்.

1. நினைக்கும்போது - உலகம் சுற்றும் வாலிபன்
2. நீ தொட்டு பேசினால் - நினைத்ததை முடிப்பவன்
3. மன்னன் ஒருவன் மஞ்சத்தில் - கலாட்டா கல்யாணம்
4. நீராடும் கண்கள் இங்கே - வெண்ணிற ஆடை.
5. மஹாராஜன் உலகை ஆளலாம் - கர்ணன் ( டி.எம்.எஸ்)
6. கண்ணழகின் சன்னதியில் - நானும் ஒரு பெண்
7. தென்றல் வரும் சேதி வரும் - பாலும் பழமும்
8. மேகம் வந்தது மின்னல் வந்தது - கவிதா
9. அத்தான் நிறம் சிவப்பு - நிறைகுடம்
10.கண்களினால் காண்பதெல்லாம் - நாடோடி (டி.எம்.எஸ் )
11. கொடுக்க கொடுக்க இன்பம் - நான் ஆணையிட்டால் ( எம்.எஸ்.வி)

தொடருங்க...

madhu
15th April 2016, 07:50 AM
ராகவ் ஜி...

நெஞ்சிருக்கும் வரை படம் அந்தக் காலத்தில் நான் பார்த்ததில்லை. ஆனால் வானொலியில் "எங்கே நீயோ நானும் அங்கே" பாடல் இரு வெர்ஷன்கள் ( ஒன்று நார்மல் மற்றது சோகம் ) கேட்டிருக்கிறேன். அனேகமாக நார்மல் பாட்டுதான் கேட்பேன். ஆனால் பிற்காலத்தில் படம் பார்த்தபோது சோகப்பாட்டு மட்டும்தான் இருந்தது. இப்போதும் நெட்டிலும் எங்கேயும் அந்த நார்மல் வெர்ஷன் வீடியோ இல்லை. ( ஆடியோ கிடைக்குது )

அது படத்தில் இருந்துச்சா இல்லையா ?

chinnakkannan
15th April 2016, 10:40 AM
ஹாய் ஹாப்பி ராம நவமி டு ஆல்

மதுண்ணா.. பி சுசீலா படத்தில் வராத பாடல்களுக்கு தாங்க்ஸ்..

இந்த பாடினார் கவிஞர் பாடினார் எனக்கு ரொம்ப பிடிக்கும்..

அதே போல ஊ.வ உ லைஉம் ஒரு பாட் உண்டே மறந்து போச்..

புத்தம் புது காலையும் படத்தில் கட் பண்ணியிருந்தார்கள்..வெகு நாட்கள் கழித்து வெகு வருடங்கள் கழித்து போன வருடமோ முந்தின வருடமோ வீடியோ யூட்யூபில் பார்த்தேன்.. நல்லவேளை கட் பண்ணினார்கள் என நினைத்துக் கொண்டேன்..

ஈவன் பொதிகை மலை உச்சியிலே யில் ஒரு பாரா கட் பண்ணியிருப்பார்கள்..ஆனால் அது சென்சார்க்காக..

நானும் நெஞ்சிருக்கும் வரை அந்தக்காலத்தில் பார்த்ததோடு சரி..மேக்கப் இல்லாமல் ந.தி பார்க்கலாம்..கே.ஆர்.வி..ம்ஹுஹூம்..

ராமன் பாட்டென்று லிஸ்ட் போட்டால்

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்

ராமன் எத்தனை ராமனடி

ஜகம்புகழும் புண்ணிய கதை ராமனின் கதையே
வசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ (மிஸஸ் ராமன்)
சீதை அங்கு நின்றிருந்தால் ராமன் கதை இல்லையே..

பழகிய ராமன் வரவை எண்ணி பார்வையில் அவள் பூத்திருந்தாள்..ஸாரி டைப்போ பாதையில் அவள் காத்திருந்தாள் :)

ராமனுக்கு மன்னன் முடி தரித்தானே..

ராமா ராமாஸ்ரீராமா

ராமன் கதை கேளுங்கள்

https://youtu.be/ra6qETtPYz0

சீதா ராம சரிதம்..(ஜெகம்புகழும் ரீமேக்..ஒட்டலை)




தேவர்கள் சிந்திக்க நாவெல்லாம் தித்திக்க சீதா ராமர் கதை இது ( இது ஓ.கே.. காரணம் டயானா மரியம் குரியன்!)


https://youtu.be/TMBXi7NBA8M


இன்னும் நிறைய ராம் இருக்கோன்னோ..எனக்கு நினைவுக்கு வரலை...

chinnakkannan
15th April 2016, 10:43 AM
ராகவ் ஜி.. வியட் நாம் வீடுக்கான உங்கள் கருத்து தான் அடியேனோடதும்.. தாங்க்ஸ்ங்க்ணா..

vasudevan31355
15th April 2016, 10:58 AM
மதுண்ணா!

படங்களில் இடம் பெறாத சுசீலாவின் பாடல்களை பட்டியல் போட்டுட்டீங்க ஜோராகவே. இதோ முன்பு நான் பதிந்த 'கண்ணழகின் சன்னதியில்'

http://www.mayyam.com/talk/showthread.php?11121-%26%232990%3B%26%232985%3B%26%232980%3B%26%233016% 3B-%26%232965%3B%26%232997%3B%26%232992%3B%26%233009% 3B%26%232990%3B%26%233021%3B-%26%232990%3B%26%232980%3B%26%233009%3B%26%232992% 3B-%26%232965%3B%26%233006%3B%26%232985%3B%26%232969% 3B%26%233021%3B%26%232965%3B%26%232995%3B%26%23302 1%3B-%26%232951%3B%26%232992%3B%26%232979%3B%26%233021% 3B%26%232975%3B%26%233006%3B%26%232997%3B%26%23298 0%3B%26%233009%3B-%26%232986%3B%26%233006%3B%26%232965%3B%26%232990% 3B/page324

Gopal.s
15th April 2016, 11:03 AM
https://www.youtube.com/watch?v=A9aJH7D334w

இதில் 7 நிமிடம் சென்று 11 நிமிடம் வரை குதூகலம்.குமார் என்ற இசையமைப்பாளர் கொடுத்த இன்ப அதிர்ச்சிகளுக்கு கணக்கே இல்லை.1965 முதல் 1975 வரை தொடர்ந்தவற்றில் இந்த மாப்பிள்ளை அழைப்பும் வாலியுடன் அவர் கொடுத்த இன்ப அதிர்வே 1972 இன் மாப்பிள்ளை அழைப்பு..

வழக்கொழிந்து போன ராகவன் ,ராட்சஷி இணைவில் இது ஒரு ஜாலி திருவிழா. நமது ஈஸ்வரி கடாத்ஷத்தில் அந்த ஹ , வ்வா வ்வா வ்வா வ்வா ,அடடா.....என்ன குழைவு....என்ன கொஞ்சல்.....என்ன ஜாலி இசை..... ராகவன் தனது அற்புதமான பாடும் முறையால் ஈஸ்வரியுடன் இழையும் -இணையும் அழகு.

சராசரி காட்சி.நாகேஷிடம் இருந்து ஜூனியர் காஞ்சனா (என்னா சூடு,வீ.பா குழந்தை,உணர்ச்சிகள் உணர்ச்சி விதவை,கிண்ணத்தை ஏந்திய நம் குறுகிய கால அண்ணி)எதையோ எடுக்க ,தேங்காய் துணையுடன் நடிக்கும் சாதாரண காட்சி.

மாப்பிள்ளை அழைப்பில் உள்ளத்தில் நூறு நினைக்கும் நாயகி நமது விஜயலலிதாவாக்கும்.காலம் வெல்லும் புகழ் மாதங்கன் கதை .வசனத்தில் ,நமது மருத நாட்டு வீரன் ரகுநாத் இயக்கம்.

இந்த படத்துக்கு ரெண்டு பேர். பலே ஆனந்தன் என்று நினைக்கிறேன்.
ஜாலி படம் ஹீரோ miscast ஆனதால் படு தோல்வி கண்டது.

vasudevan31355
15th April 2016, 11:13 AM
ஹாய் வாஸ்ஸூ நீவிர் போட்ட பாட் ஏற்கெனவே போட்டாச் போட்டாச்சாக்கும்.. நெய்வேலி யானையும் மஸ்கட் பூனையிடம் சறுக்குமாக்கும்.. இருப்பினும் கோ வைக் கொஞ்சி தாங்கள் செய்த வர்ணனை யாமும் ரசித்தோம்.. நன்றி ந்றி றி...:)

சின்னா!

நீங்க தான் யானை. உங்க அவ்தாரை ஒருதரம் பாருங்கோ.:) பூனையாய் இருப்பதே பூலோகத்தில் சிறந்தது. அப்போதான் இருட்டில் திருட்டுத்தனம் பண்ண முடியுமாக்கும். ஐ மீன் பால் குடிப்பதை சொன்னேன். பசும்பால்.:) ஒரு பாட்டை மறுதரம் போட்டா சறுக்கலா?:banghead: அதற்க்கும் முன்னாடியே அதை நான் போட்டுட்டேங்காணும்.:yessir: அது எனக்கும், கோபாலுக்கும் மட்டுமே சொந்தம் என்று நாங்கள் சொல்லிக் கொள்வது. அந்தப் பதிவு அவருக்கு மட்டுமே. ராமு ராஜா நட்பு. ஆமா! அது என்ன? 'கோ'வைக் கொஞ்....சி..... ('நற நற நன்றி ந்றி றி' வேற):) நான் எங்கேப்பா கொஞ்சினேன்? 'புதுப் புது அர்த்தங்கள்' நகம் கடிக்கும் கீதா கணக்கா பொசஸிவ் கிளம்பி பூந்து விளையாடுதே! நீர்தாம்பா எனக்கு சித்தாரா.:) கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஆட....

vasudevan31355
15th April 2016, 11:30 AM
இதே எல்.காஞ்சனா அதே நாகேஷுக்கு தங்கையாக ஒரு படம் நடித்து 'ஸ்ரீ' யுடன் ஜோடி சேர்ந்து ஒரு அட்டகாசமான டூயட் அடித்தாரே. டூயட்டில் பாலா குரல் வருவதால், தொடர் பாதிக்கும் என்பதால் பாட்டி சொன்ன விடுகதையா... புதிரா சொல்றேன். புதிரை மதுண்ணா அவிழ்த்துடுவார்னு தெரியும். சின்னா கவிழ்த்திடுவார்னும் தெரியும்.:)

chinnakkannan
15th April 2016, 01:21 PM
//புதுப் புது அர்த்தங்கள்' நகம் கடிக்கும் கீதா கணக்கா பொசஸிவ் கிளம்பி பூந்து விளையாடுதே! நீர்தாம்பா எனக்கு சித்தாரா. கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஆட// கொஞ்சிக்கொஞ்சி அலைகள் ஆட (எனக்குப் பிடிக்காத ) ரோஜாவோன்னோ...” கோபாலுக்குத் தெரிந்த நல்லவர் நீர் மட்டும் தான்.. நீங்களும் சும்மா இல்லை..கோ சுடச்சுட பஜ்ஜி கொடுத்தாலும் அதை ஐஸ்க்ரீமா நினச்சு உருகுவீர்..” என்றெல்லாம் ஆன்றோர்கள் சொல்வார்கள் :) (ஆனா இப்பல்லாம் கோபால் முன்பை விட வெகு அழகாக பிரமாதமாக எழுதுகிறார் என்று நான் சொல்வதை ரசிக்காவிட்டாலும் அது அவருக்கே தெரியும்..இப்படியே தொடர்வார் என எதிர்பார்க் பார்க் க்கிறேன்.. :) ஹைய்யா கோச்சுண்டு ஒருமாசம் வரமாட்டாரே :) )

உமக்குத்தான் உவமை சொல்லத்தெரியுமா..சலங்கை கட்டிக்கொண்டு ச்சும்மா சுழன்று சுழன்று ஆடிக்கொண்டே பானுப்ரியா மம்முட்டியிடம் அழகனில் சொல்வாரே..லவ் இஸ் நாட் பொஸாஸிவ்.. நு என்னமோ ஒரு தத்வம்..அந்த மாதிரி பொஸஸிவ்வா இருந்தா தப்பா. ஆனா நான் பொ..இல்லை.. நட்புல பொ இருக்கப்படாது..இருக்கவும் இருக்காது..இல்லியோ..ராமு ராஜா நட்பா.. ம்ம் பாவம் விழி..அடிக்கடி இமை கோச்சுக்குமே..

எல்.காஞ்சனாவை இனிமே தான் பார்க்கணும்..:)

chinnakkannan
15th April 2016, 01:24 PM
நன்றி எஸ்வி சார்..ம.தி படங்களில் இன்னும் விட்டுப்போன வராத பாடல்கள் இருக்கின்றதா..


சின்ன கண்ணன் சார்
உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்காக பதிவு செய்ய பட்ட சுசீலாவின் பாடல் படத்தில் இடம் பெறவில்லை .நினைத்ததை முடிப்பவன் படத்திற்காக பதிவு செய்யப்பட்ட சுசீலாவின் பாடல் ஒன்று படத்தில் இடம் பெறவில்லை .

vasudevan31355
15th April 2016, 01:36 PM
//கோபாலுக்குத் தெரிந்த நல்லவர் நீர் மட்டும் தான்//

கோபாலுக்குத் தெரியாத கெட்டவனும் நான்தான்:)

vasudevan31355
15th April 2016, 01:38 PM
//
எல்.காஞ்சனாவை இனிமே தான் பார்க்கணும்..:)

இதுக்கு மட்டும் ஸ்மைல் எப்படி வருதுன்னே புரியலையே!:)

vasudevan31355
15th April 2016, 01:44 PM
'அவளுக்கென்று ஓர் மனம்' அடுத்து ஸ்ரீதருக்கு 'அலைகளா'ய் தோல்வி. முன்னதை விட தோல்வி. சொல்ல முடியாத அளவுக்கு அலைஅலையாய் அடுக்கடுக்காய் துன்பங்களை ஸ்ரீதர் நாயகி இதிலும் அனுபவிக்க, அநியாய தோல்வி கிடைத்தது மீண்டும் ஸ்ரீதருக்கு.

https://i.ytimg.com/vi/78rcHhkh7dM/hqdefault.jpg

விஷ்ணு ஜெயச்சந்திரன் மூலம் 'சந்திரகலா' சுவைத்து 'பொன்னென்ன பூவென்ன கண்ணே'வை வைத்த போது 'அலைகளி'ல் அது மட்டுமே நம் கண்ணாடி உள்ளத்தில் அழியா பிம்பமாய் இன்றும் பிரதிபலிக்கிறது.

முன்னது பாடல்களில் மணிமகுடம் தரித்தது. சுசீலா, ஜானகி அவரவர்களுக்கென்று நம் மனதில் மீண்டும் ஓர் இடத்தைப் பிடித்தார்கள்.

ஆனால் 'அலைகளி'ல் ராட்சஸி பிரளய சுனாமி நடத்துவர். ஆனால் சுனாமி எடுபடாமல் அடங்கிவிட்டது. பிரபலம் ஆகாவிட்டால் என்ன! நம்மில் சிலர் இருக்கிறோமே அந்த அபூர்வ முத்துக்களைப் பொறுக்கி ரசிப்பதற்கு. அது போதும்.

'பச்சை இலை போலே பட்டுச் சிறகாலே
ஆகாயம் செல்லும் பறவைகளே!
உச்சிவரை பறந்து பூமியை மறந்து
ஊர்வலம் நடத்திடும் அழகுகளே!
அச்சம் என்பதில்லையே!
ஆசை கொண்டதில்லையே!
என்றும் உங்கள் வாழ்வில் விடுதலையே!'

என்று உல்லாச குதூகலமிட்டு காதுகளுக்கு அமுதூட்டும் ஈஸ்வரியை மிஞ்ச யார்? எழுபத்து மூன்றோடு மறந்து விட்ட பாடல். ஆனால் எந்நாளும் நான் கேட்டு கேட்டு இன்புறும் பாடல். 'பிராப்த'த்தின் 'சலசல ஆத்தோட்ட'மும் நினைவுக்கு வந்து போகும். இதுவும் சந்திரகலாவே.

ஜானகியும் அழ வைப்பார் அபூர்வமாக.

'ஊமைப் பெண்ணை பேசச் சொன்ன உறவோ...
இது நினைவோ... வெறுங்கனவோ'

கேட்கையில் வெறுமையில் நம் மனம் வெதும்புவதை உணர முடியும். மனதில் இனம் புரியா பாரங்கள் வந்து அழுத்தும். கண்களில் நீர் மல்கும்.

'கானல் சிலர் கண்ணில் நீராகத் தெரியும்
காணும் கண் செய்த தவறு'

முடிந்தவுடன் வரும் புல்லாங்குழலின் அவசர ஓசைகள் அநியாய அதிசயம். 'நெஞ்சிருக்கும் வரை' நினைவிருக்கும் ஒற்றுமையும்.

'இது நினைவோ... வெறுங்கனவோ' வருகையில் மனம் உருகாமல் இராது.

'வாங்கையா..பேரெடுக்க' ராவடி பாட்டு. சுமார் ரகம் 'வாத்தியாரே'. அரங்கேற்றம்...வாயாடி பாணி.

'அவளுக்கென்று ஓர் மனம்' போல பாடல்கள் அமையாவிட்டாலும் 'அலைகளு'க்கென்று தனி ரசனை மனங்கள் உண்டு. அதிலொன்று இந்த மனம்.

இன்று கேட்டு கொஞ்சம் அப்செட்தான்.

நான்கு அலைகளுக்கும்

http://www.friendstamilmp3.com/index.php?page=A-Z%20Movie%20Songs&spage=Alaigal

Richardsof
15th April 2016, 03:26 PM
ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி!

எனக்கு மிகவும் பிடித்த பழைய திரைப்படப் பாடல்களிலொன்று 'ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி'. எம்.எஸ்.வி/ டி.கே.ராமமூர்த்தி ஆகியோரின் இசையில் எஸ்.ஜானகியின் நெஞ்சையள்ளும் குரலில் ஒலிக்கும் இந்தப் பாடல் எம்ஜிஆர்/சரோஜாதேவி இணைந்து நடித்த 'பாசம்' திரைப்படத்தில் வருகிறது.

டி.ராமண்ணாவின் இயக்கத்தில் எம்ஜிஆர் திருடனாக நடித்திருப்பார். அத்திருடனைக் காதலிக்கும் நாயகியாக வரும் சரோஜாதேவி மாட்டு வண்டியில் மேற்படி பாடலைப் பாடியபடி வருவார். திருடனைக் காதலிக்கும் நாயகி தன் காதலைப் கூறும் பாங்கு சுவையானது. ஒரு திருடனின் வாழ்வுடன் சம்பந்தப்பட்டிருக்கும் விடயங்களைக் கொண்டே கவிஞர் இப்பாடலை இயற்றியிருப்பார். காட்டில் நாயகியைக் கண்ட திருடனான நாயகன் தன் இயல்பின்படி அவளிடன் உள்ளதைக் கொடு என்று வற்புறுத்தவே நாயகியோ கையில் எதுவும் இல்லாத காரணத்தால் தன் கண்ணில் உள்ளதைக் கொடுத்து விட்டேன் என்று பின்வருமாறு பாடுகின்றாள்.

காட்டில் ஒருவன் எனைக் கண்டான்
கையில் உள்ளதை கொடு என்றான்
கையில் எதுவும் இல்லை என்றே
கண்ணில் உள்ளதை கொடுத்து விட்டேன்

அது மட்டுமா திருட வந்த அவனைத் தானே திருடி விட்டதாகவும் கூறுகின்றாள். நாயகிக்கோ திருடுவதில் நாயகனைப்போல் பரிட்சயமில்லை. இதுதான் அவளது முதல் திருட்டு. முதல் திருட்டு என்பதால் அவளுக்குப் போதிய அனுபவமில்லை. அதனால் அவனை அவளால் முழுவதுமாகத் திருட முடியாமல் போய் விட்டதாம்.

அவன்தான் திருடன் என்றிருந்தேன்.
அவனை நானும் திருடிவிட்டேன்
முதல் முதல் திருடும் காரணத்தால்
முழுதாய் திருட மறந்துவிட்டேன்

அத்துடன் அவன் மேல் காதல் கொண்ட நாயகி தன் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட அந்தத் திருடனைக் கைது செய்து தன் உள்ளத்துச் சிறையினில் வைக்கப்போவதாகவும் அதிலிருந்து அவனை என்றுமே விடுதலை செய்யப்போவதில்லையென்றும், இவ்விதம் அவனைக் கைது செய்து ஆயுள் தண்டனைக் கைதியாகச் சிறையினுள் வைப்பதற்குத் தான் ஒருபோதும் விளக்கம் கூறப்போவதில்லையென்றும் கூறுகின்றாள்:

இன்றே அவனை கைது செய்வேன்
என்றும் சிறையில் வைத்திருப்பேன்
விளக்கம் சொல்லவும் முடியாது
விடுதலை என்பதும் கிடையாது

ஒரு திருடனைக் காதலிக்கும் நாயகியென்பதால், திருடனுடன் சம்பந்தப்பட்ட திருட்டு, சிறை, கைதி, விடுதலை போன்ற சொற்களை வைத்தே பாடலை இயற்றிய கவிஞரின் சொல்நயம் என்னைக் கவர்ந்தது. அத்துடன் மெல்லிசை மன்னர்களின் இசையும், எஸ்,ஜானகியின் குரலும் மேற்படி பாடல் என்னைக் கவர்வதற்கு மேலதிகக் காரணங்கள். அத்துடன் கன்னடத்துப் பைங்கிளியின் காதல் ததும்பும் குறும்புடன் கூடிய நடிப்பையும் தவிர்ப்பதற்கில்லை.

எத்தனை தடவைகள் கேட்டாலும் ஜானகியின் உள்ளத்தைக் கவரும் அந்தக் குரல் என் உள்ளத்தைத் திருடத் தயங்குவதில்லை. அவ்விதம் என் உள்ளத்தைத் திருடிவிடும் இந்தக் குரலுக்கும் என்றுமே என் உள்ளத்திலிருந்தும் விடுதலை கிடையாது. நீங்களும் ஒருமுறை கேட்டுப்பாருங்கள். உங்கள் உள்ளங்களையும் திருடிவிடுமிந்தப் பாடல். அதன்பின் உங்கள் உள்ளங்களிலிருந்தும் என்றுமே இந்தப் பாடலுக்கு விடுதலை கிடைக்கப்போவதில்லை.

courtesy - giridharan.net

madhu
15th April 2016, 05:26 PM
அலைகள் பற்றிய நினைவைக் கிளறி மனக்குளத்தில் வட்ட வட்டமான அலைகளை எழுப்பிட்டீங்க வாசுஜி..

புகை வண்டியோடு ஆரம்பிக்கும் முதல் பாதி வேகமாக நகர இண்டர்வெல்லுக்கு அப்புறம் மாட்டு வண்டியில் ஆரம்பிக்கும் அடுத்த பாதி அதே வேகத்தில் போவதாக ஒரு பத்திரிகை விமர்சனம் செய்திருந்தது..

ஆனால் கறுப்பு வெள்ளையில் ஏற்காட்டின் அழகை அள்ளி எடுத்து ( அந்த ஏரிக்கரையில் இப்போ எத்தனை கட்டிடங்கள் ... ?? ) வழங்கிய படமல்லவோ ?

இதோ வாசுஜியின் ராட்சசி பாடல்களின் வீடியோக்கள்

பச்சை இலை போலே

https://www.youtube.com/watch?v=YLi16sw3OEI


வாங்கையா

https://www.youtube.com/watch?v=h-4sydCLyhM

vasudevan31355
15th April 2016, 05:49 PM
ரொம்ப ரொம்ப நன்றி மதுண்ணா! சின்ன வயதில் ஒரே முறை அலை பார்த்தது. எதுவும் நினைவில்லை. ஆஜானுபாகுவாக ஒரு வில்லன் மட்டும் நினைவில் இருக்கிறார். 'அலைகள்' செல்வகுமார் என்றே பின்னாளில் அவர் அழைக்கப்பட்டார் என்று நினைவு. கொஞ்சம் மனோகரை காப்பி அடிப்பார். குரலும் இரவல்தான். ராட்சஸியின் பாடல்களை ராட்சஸத்தனமாக கண்டு ரசித்துக் கொண்டிருக்கிறேன்.

முடிந்தால் அந்த ஜானகி பாடலும்.:)

தமிழிலேயே சில அப்லோடர்கள் 'யூ ட்யூபி'ல் டைட்டில் தருவதால் வீடியோ கண்டு பிடிக்க சற்று சிரமமாக உள்ளது.

மீண்டும் மீண்டும் நன்றி மதுண்ணா.

RAGHAVENDRA
15th April 2016, 05:56 PM
https://www.youtube.com/watch?v=aIEPHm7ye6U

வாசு சார்
என்ன சொல்வது.. எப்படிப் பாராட்டுவது.. அலைகள் பாடல்கள் நான்குமே மிகவும் வித்தியாசமானவை. நிச்சயமாக பிரபலமாகாது என்று தெரிந்தே ஸ்ரீதர் கேட்டு வாங்கிய பாடல்கள். ஒரே ஒரு தகவல் கேள்விப்பட்டேன். அது உண்மையா இல்லையா என்பதை இந்தப் படத்தில் பணியாற்றியவர்கள் யாராவது சொன்னால் உண்டு. ஸ்ரீதர் வேண்டாமென்று நிராகரித்த மெட்டுத் தான் கண்ணிலே என்ன உண்டு என்று அவள் ஒரு தொடர்கதை படத்தில் இடம் பெற்றது என்பார்கள். அதற்கு பதிலாகத் தான் இந்த ஊமைப் பெண்ணைப் பேசச் சொன்னால் உறவோ பாடல். இந்தப் பாடலில் மெல்லிசை மன்னரின் உருவாக்கம் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதலாம். முடிந்தால் பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம். ஆனால் இப்போதைக்கு இந்த்ப பாடல் காட்சியை பார்ப்போம் கேட்போம்.

vasudevan31355
15th April 2016, 06:14 PM
அருமை ராகவேந்திரன் சார். எங்கிருந்தாலும் நீங்கள் இன்று வந்து விடுவீர்கள் என்று நம்பகமாகத் தெரியும். வந்தது மட்டுமல்ல... மது அண்ணா போல தாங்களும் 'அலைகள்' பற்றி அற்புதமான தகவலைப் பகிர்ந்து கொண்டீர்களே! அதுதான் 'ரசிக வேந்தர்' என்று எங்களை கூப்பாடு போட வைக்கிறது. இப்படிப்பட்ட படங்களைப் பற்றி கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதில்தான் எத்துணை மகிழ்ச்சி!

vasudevan31355
15th April 2016, 06:15 PM
மதுண்ணா! ராகவேந்திரன் சார்,

விஷ்ணுவர்தனுக்கு பின்னணிக் குரல் யாருன்னு இப்போதான் 'அலைகள்' பார்த்து கொஞ்சம் கண்டு பிடிச்சேன். நீங்களும் சொல்லி அது மேட்ச் ஆயிட்டா தொகுதி நிலவரத்தை ஜனங்களிடம் வெளியிட்டு விடலாம்.:)

Gopal.s
15th April 2016, 06:24 PM
எஸ்வி,

குடும்பத்தினர் நலமா? நீங்கள் போட்ட ஜல் ஜல் பாடல் எனக்கு மிக பிடித்தங்களில் ஒன்று. ஆரம்ப கால ஜானகி பாடல்களில் ஒரு அற்புதம். வண்டி பாடல் என்றால் டி.கே.ராமமூர்த்திக்கு உற்சாகம் பிய்த்து கொள்ளுமே?(சாட்டை கையில் கொண்டு)

முதல் முதல் திருடும் காரணத்தால் முழுசாய் திருட மறந்து விட்டேன்.

கவியரசர் கவியரசரே.

ராமண்ணாவின் நன் முயற்சி சரியான நட்சத்திர தேர்வு இல்லாததால் பிசுபிசுத்து விட்டது. பாசம் நல்ல படம்.

நன்றி எஸ்.வீ.

மாப்பிள்ளை அழைப்பு - ஆஹா இன்னொரு பெயர் பலே ஆனந்தன் கிடையாது.அலேக் ஆனந்தன்.

vasudevan31355
15th April 2016, 07:00 PM
'கண்ணிலே என்ன உண்டு?... கண்கள்தான் அறியும்' என்ற கவிதாவின் கதறலை விட 'ஊமைப் பெண்ணை பேசச் சொன்னால்' அந்த சோகமே தாக்கத்தை மனதில் அதிகம் ஏற்படுத்தும் என்பது என் சொந்தக் கருத்து. அப்படி இருந்தால் ஸ்ரீதரின் முடிவே சாலச் சிறந்தது. ஸ்ரீதர் ஸ்ரீதர்தான் பாடல்களை தெரிவு செய்வதில்.

Richardsof
15th April 2016, 07:24 PM
மக்கள் திலகத்தின் ''பாசம் '' நல்ல திரைப்படம் என்று கூறியதற்கு மனமார்ந்த நன்றி திரு கோபால்
.தங்களின் அன்புக்கும் மிக்க நன்றி .

vasudevan31355
15th April 2016, 07:27 PM
ஒருத்தரு ஏ.எல்.ராகவன் மூடுல இருக்கறதனாலே அவருக்கு இந்தப் பாட்டு.:) நடிச்சதும் ராகவனே. ராஜஸ்ரீயை ராகிங் பண்ணுவார். தயாரிச்சதும் அவருதானே! நாயகரோ 'பாடகர் திலகம்'

வழக்கம் போல ராகவனின் நாக்கு பிறழல்கள், தொண்டை கமறல்கள் கலாட்டா உண்டு. (தகதிமிபூபா... தகதிமிபூபா) கூட நாகு வேற. (வழக்கமான கால் முட்டி மாற்றல்கள் உண்டு) சி.ஐ.டி சகுந்தலா உள்ளிட்ட நடன மாதர்கள் பிளாக் பிகினியில் உண்டு. சின்னா தூக்கம் போச்.:) வெஸ்டர்ன் கிடார் வெளுத்து வாங்குதே! ஆனா பாட்டு மனசுல நிக்கல. ஹிட்டும் அடிக்கல. இருந்தாலும் பார்த்து கேட்டு வைப்போம்.

'ஐயா ஊரு ஆப்பிரிக்கா காடு
எங்கம்மா வீடு எங்கே?'

இப்படி கூச்சல் போட்டா எப்படி 'கல்லும் கனியாகும்?' ம்...


https://youtu.be/FDffUlscw-8

vasudevan31355
15th April 2016, 07:34 PM
சின்னா!

'ராஜா' நட்பு பாசம் பறி போயிடும் போலிருக்கே!:) 'வினோத' நட்பு உருவாவுதே! உம்மா பேச்சை கேக்காம 'பாச'த்தால் மோசம் போனேனே!:)

'கோபலனோடு நான் ஆடுவேனேi
நந்த கோபாலன்...ஹாங்...
வேணு கோபாலன்
ஹாங்...

chinnakkannan
15th April 2016, 07:38 PM
அலைகள் சாந்தியில் தான் பார்த்தது என நினைக்கிறேன்..வெகு சின்ன வயதில் தான்.. சந்திரகலா பரிதாப ப் பட்ட பெண்ணாக வந்து விஷ்ணுவர்த்தனைக் காப்பாற்றுவார் காப்பாற்றி கடிமணம் புரிவார் இல்லியோ.. ஊமைப்பெண்ணை பேசச்சொன்னால் உறவோ, பொன் என்ன பூவென்ன கண்ணே இரண்டும் நினைவிருக்கிறது..மற்ற பாடல்களுக்கும் நன்றி வாசு ராகவேந்தர் மதுண்ணா..

எஸ்விசார்.. ஜல் ஜல் எனும் சலங்கையொலி என்னை மிகக் கவர்ந்த பாடல்களில் ஒன்று..அதுவும் சிலோன் ரேடியோவில் எத்தனை முறை கேட்டிருப்பேன்.. நன்றி..

chinnakkannan
15th April 2016, 07:39 PM
சின்னா!

'ராஜா' நட்பு பாசம் பறி போயிடும் போலிருக்கே!:) 'வினோத' நட்பு உருவாவுதே! உம்மா பேச்சை கேக்காம 'பாச'த்தால் மோசம் போனேனே!:)

'கோபலனோடு நான் ஆடுவேனேi
நந்த கோபாலன்...ஹாங்...
வேணு கோபாலன்
ஹாங்...

எல்லாம் காலம் வாஸ்ஸு.. தேர்தல் காலம்! எதுவும் நடக்கும் :)

chinnakkannan
15th April 2016, 07:47 PM
ஆனால் கறுப்பு வெள்ளையில் ஏற்காட்டின் அழகை அள்ளி எடுத்து ( அந்த ஏரிக்கரையில் இப்போ எத்தனை கட்டிடங்கள் ... ?? ) வழங்கிய படமல்லவோ ?// ஏற்காடு எனக்கு மிகப்பிடித்த ஊர்..சின்ன வயதில்..அதாவது கல்லூரி முடித்த இளமைக் காலத்தில் ஒரு நாள் காலையில் சேலத்தில் கிளம்பிச்சென்று இரவில் திரும்பியிருக்கிறேன்..பட் அந்த ஒரு நாள் முழுக்க நன்றாகவே மகிழ்ந்திருந்தது நினைவில் இருக்கிறது..அதன் பிறகு இரண்டாவது முறையாகவும் ஒரு நாள் போய்வந்தது நினைவில்.. நல்ல க்ளைமேட்..அவ்வளவாக ஸ்பாய்ல் ஆகாத பசுமை..அங்கிருந்த பள்ளி..ம்ம் இப்போ நிறையக் கட்டிடங்களா..

ஊட்டியும் அப்படித்தான்.. ஆறுவருடம் முன் ஜூனில் போனால் - இங்கு டிசம்பர் மாத மஸ்கட்டில் மெலிதாய் குளிரிருக்கும் - அதுபோலவே தான் இருந்தது..நிறையக் கட்டிடங்கள் + நிறையக் குப்பை..காஞ்ச் அந்திப்பட்டு பேசலாமே பாடும் நீர்வீழ்ச்சி(?) யில் பாறைகள் மட்டும் தான் கொஞ்சூண்டு தண்ணீர் சாஸ்திரத்திற்கு..ம்ம் கொடைக்கானலும் மாறிவிட்டது என்று சொன்னார்கள் கொடை..98ல் போனது..அதன் பிறகு இல்லை..

vasudevan31355
15th April 2016, 07:52 PM
ஆனால் கறுப்பு வெள்ளையில் ஏற்காட்டின் அழகை அள்ளி எடுத்து ( அந்த ஏரிக்கரையில் இப்போ எத்தனை கட்டிடங்கள் ... ?? ) வழங்கிய படமல்லவோ ?// ஏற்காடு எனக்கு மிகப்பிடித்த ஊர்..சின்ன வயதில்..அதாவது கல்லூரி முடித்த இளமைக் காலத்தில் ஒரு நாள் காலையில் சேலத்தில் கிளம்பிச்சென்று இரவில் திரும்பியிருக்கிறேன்..பட் அந்த ஒரு நாள் முழுக்க நன்றாகவே மகிழ்ந்திருந்தது நினைவில் இருக்கிறது..அதன் பிறகு இரண்டாவது முறையாகவும் ஒரு நாள் போய்வந்தது நினைவில்.. நல்ல க்ளைமேட்..அவ்வளவாக ஸ்பாய்ல் ஆகாத பசுமை..அங்கிருந்த பள்ளி..ம்ம் இப்போ நிறையக் கட்டிடங்களா..

ஊட்டியும் அப்படித்தான்.. ஆறுவருடம் முன் ஜூனில் போனால் - இங்கு டிசம்பர் மாத மஸ்கட்டில் மெலிதாய் குளிரிருக்கும் - அதுபோலவே தான் இருந்தது..நிறையக் கட்டிடங்கள் + நிறையக் குப்பை..காஞ்ச் அந்திப்பட்டு பேசலாமே பாடும் நீர்வீழ்ச்சி(?) யில் பாறைகள் மட்டும் தான் கொஞ்சூண்டு தண்ணீர் சாஸ்திரத்திற்கு..ம்ம் கொடைக்கானலும் மாறிவிட்டது என்று சொன்னார்கள் கொடை..98ல் போனது..அதன் பிறகு இல்லை..

அங்க யாராவது கைகுலுக்கினா(ங்க)ளா?:)

madhu
15th April 2016, 08:07 PM
மதுண்ணா! ராகவேந்திரன் சார்,

விஷ்ணுவர்தனுக்கு பின்னணிக் குரல் யாருன்னு இப்போதான் 'அலைகள்' பார்த்து கொஞ்சம் கண்டு பிடிச்சேன். நீங்களும் சொல்லி அது மேட்ச் ஆயிட்டா தொகுதி நிலவரத்தை ஜனங்களிடம் வெளியிட்டு விடலாம்.:)

உங்க "ராஜா"வும்... சிக்காவின் வடமொழிப் பெயரும் இணைந்து வெற்றி எனும் இனிஷியல் கொண்டவர்தானே ?

chinnakkannan
15th April 2016, 08:14 PM
ஜெ.ராஜகிருஷ்ணாவா யார் அது ?!

ஏற்காட்டில யாரும் கை குலுக்கலை.இன்ஃபேக்ட் சேலத்தில் இருந்த அக்கா அத்திம்பேர் தான் ஒரு வருடத்தில் அய்யம்பேட்டை ட்ரான்ஸ்ஃபரில் செல்ல அங்கு மனது குலுக்கியவரைப் பற்றி ஏற்கெனவே பகின்றிருக்கிறேன் என்பதை நீவிர் அறிய மாட்டீரா என்ன வாஸ்ஸு.. (ஹா..என்னே தமிழ்)

vasudevan31355
15th April 2016, 09:03 PM
உங்க "ராஜா"வும்... சிக்காவின் வடமொழிப் பெயரும் இணைந்து வெற்றி எனும் இனிஷியல் கொண்டவர்தானே ?

கரெக்ட்...கரெக்ட். அதுதான்...அதேதான். வீஜீ தான். உங்களுக்கு விஜயம்தான். கோகலே! கோகலே:smile2:

RAGHAVENDRA
15th April 2016, 10:03 PM
வாசு சார்
எண்ண அலைகளைப் பாய விட்டு விட்டீர்கள்...

முதன் முதலில் ஓடியன் தியேட்டரில் பார்த்த பொழுது மெல்லிசை மன்னரின் இசைக்காகவும் ஸ்ரீதரின் இயக்கத்திற்காகவும் இப்படத்தை விரும்பிப் பார்த்தேன். எப்படி அவளுக்கென்று ஓர் மனம் முடிவில் ஒரு Hangover ஏற்படுத்தியதோ அதை விட அதிகமாக அலைகள் ஏற்படுத்தியது. குறிப்பாக இந்தப் பாடல் தான் நெஞ்சில் நெகிழ்வூட்டியது. அன்று முதல் அடிக்கடி மனதில் இப்பாடல் எங்கோ ஓர் மூலையில் நினைவு படுத்திக்கொண்டே இருக்கும். அந்த அளவிற்கு நிலைத்து நின்ற பாடல். உண்மையில் இப்போது பார்க்கும் போது, மெல்லிசை மன்னர்-கவியரசர்-எஸ்.ஜானகி இவர்களின் கூட்டணியை வைத்து ஸ்ரீதர் கொண்டு வந்த அற்புதமான பாடல் ஊமைப்பெண்ணைப் பேசச் சொன்னால். தாங்கள் கூறியது மிகவும் சரி. இந்த ட்யூன் தான் இதற்கு மிகவும் பொருததமாய் அமைந்து விட்டது.

இனி இப்பாடலைப் பற்றி என் எண்ண அலைகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

https://youtu.be/aIEPHm7ye6U

நாயகி சந்தர்ப்ப வசத்தால் ஒரு காமுகனால் விலைமாதராக வாழ்க்கையில் தள்ளப்படுகிறாள். நாயகன் அவளை எதிர்பாராத விதமாக அவளை சந்திக்கும் போது அவள் நிலை அறிந்து வருந்துகிறான். அவளுக்கு வாழ்வைக் கொடுக்க முன் வருகிறான். அவளுடைய சூழ்நிலை, அதற்கான காரணம் போன்றவற்றைக் கேட்கிறான். அவள் நேரில் சொல்லாமல் நழுவுகிறாள். தன் அறையில் இருக்கும் பொழுது அவள் அங்கே வருவது போன்று ஒரு பிரமை அவனுக்கு ஏற்படுகிறது. அப்போது அவள் அங்கே தோன்றி தன் மனநிலையை பாடலில் சொல்கிறாள். அவனுக்கோ இது உண்மையாய் அவள் சொல்கிறாளா இல்லை தான் ஏதாவது கனவு காணுகிறேனா என புரியாமல் அந்த பிரமையினுள்ளேயே மூழ்குகிறான்.

இந்த சூழ்நிலையில் தான் இந்தப் பாடல் அலைகள் படத்தில் இடம் பெறுகிறது. எஸ்.ஜானகியின் குரலில் இப்படி ஒரு உயிரோட்டமான உணர்வினை நாம் கேட்கும் போது நம்மை நாம் மெய்ம்மறந்து போவது உறுதி.

அவள் நுழைவதைச் சுட்டிக்காட்ட ஒரு Chord. Guitar and Sitar combination. அதனுடனே ஒலிக்கும் ஹம்மிங்குடன் பாடல் துவங்குகிறது.
இப்போது நாயகி அவன் கண் முன் வருகிறாள். அவனுக்கும் அது கனவா இல்லை நினைவா என ஐயம் எழுகிறது., அவன் ஒரு விதமான சந்தேகப் பார்வையுடன் பார்க்கிறான். இதற்கான சூழ்நிலையை இந்த ஹம்மிங்கிலேயே மன்னர் உணர்த்தி விடுகிறார்.

...ஹம்மிங்...ஒலிக்கிறது...

பாடல் தொடங்குகிறது..

ஊமைப் பெண்ணைப் பேசச் சொன்னால் உறவோ இது நினைவோ வெறும் கனவோ
மீண்டும் வெறும் கனவோ என ஐயத்தை எழப்புவதன் மூலம் தன் ஐயத்தை அவன் மேலும் திணிக்கிறாள்.

அவனுக்கு தன் சூழ்நிலை என்பது கொஞ்சம் மறக்கும் நிலை ஏற்படுகிறது. உண்மையிலேயே அவள் தான் முன்னால் நிற்கிறாளா என உற்றுப் பார்க்கிறான்.

இதற்குப் புல்லாங்குழலும் குழு வயலின்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவனுடைய இந்த திடுக்கிடும் மனநிலையை சரியாக பிரதிபலிக்கும் வகையில் இந்த இசையமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தனி புல்லாங்குழலை ஒருவிதமான மர்ம சூழலை பிரதிபலிக்க மன்னர் பயன்படுத்தியிருப்பது அவருடைய மேதைமையைப் புலப்படுத்துகிறது.

இப்போது சரணத்திற்கு முந்தைய பின்னணி இசை. ஷெனாய் என்னமாய் ஒலிக்கிறது..

(இது போன்ற ஷெனாய் இசையையெல்லாம் நாம் கவனிக்காமலேயே விட்டு விடுகிறோம். எல்லோருக்கும் தெரிந்தவற்றை விட்டு வெளிவந்து இது போன்ற அபூர்வ முத்துக்களைத் தேர்ந்தெடுத்து வெளியுலகிற்கு சொல்வதே மெல்லிசை மன்னருக்கு நாம் செய்யும் சிறந்த பணியாக இருக்கும் என்பது என் தாழ்மையான அபிப்ராயம்.)

இப்போது...ஆஹா. தொடரும். அந்த சாரங்கி இசையை எப்படி சொல்வது.. அவனுடைய மன நிலையை - என்ன சொல்வது, என்ன செய்வது ஒன்றுமே தெரியாமல் விழிக்கும் த்த்தளிக்கும் மனநிலையை அந்த சாரங்கி சொல்கிறது.. அவளை சந்தித்த சூழலை சொல்கிறது...

இப்போது வயலின் மிகவும் குறைந்த மாத்திரை இடைவெளியிலும் சரணத்தை இணைக்கிறது. அதோடு அவள் மனதையும்...

இப்போது அவள் அவனை சந்தித்த அனுபவத்தை சொல்கிறாள்..

கூண்டுக்கிளியாக வாழ நினைத்தேன்.. தாங்கும் கை ஒன்று கண்டேன்...

அவளுக்கு அடைக்கலம் கொடுக்க அவன் முன் வந்ததை அவள் மனம் இவ்வாறு சொல்கிறது. கவியரசரின் பங்கிற்குக் கேட்கவா வேண்டும்.

இப்போது அவள் முகத்தில் வடியும் கண்ணீரை ஒரு கை துடிக்கிறது.
இங்கே இயக்குநரின் பங்கினை நாம் காண்கிறோம். அந்தக் கை யாருடையது என காட்டவில்லை.

அவள் அவனைத் தான் சொல்கிறாளா என்ற ஐயத்தை எழுப்பும் வகையில் இந்த கை மட்டும் திரையில் காட்டப்படுகிறது..

அது யாருடையதாக இருக்கும் என்ற ஐயத்தை பாடலைக் கேட்போர் பார்ப்போர் அறிய வேண்டாமா.. அதற்கு அந்த மர்மத்தை சொல்ல மீண்டும் புல்லாங்குழல் இங்கே...

இது வரை இருந்த தாளம் மாறி இப்போது தபேலா துவக்கம்...

இப்போது அந்த மர்மத்தை உடைத்து அந்த வரியை மீண்டும் பாடியபடியே அவள் அவனைப் பார்க்கிறாள். அவனுக்கு மனம் ஒரு நிலைக்கு வருகிறது..

இதற்குத் தான் தபேலா பயன்படுத்தினாரா மன்னர்.. கேள்வி எழுகிறதல்லவா...

நின்றன சொர்க்கங்கள் என் வாழ்வில் என்று ஓடி வர நோக்கி நின்றேன்...
தன் மனதில் எழுந்த சலனத்தை அவள் வெளிப்படுத்துகிறாள். தனக்கு ஓர் ஆறுதல், புகலிடம் கிடைத்த்து என்று மனம் லேசானதை வெளிப்படுத்துகிறாள். அதை எதிர்பார்ப்பதாக உணர்த்துகிறாள். இப்போது அவளுக்கு அது கோயிலாகத் தெரிகிறது. இதனை உணர்த்தும் வகையில் திரையில் ஒரு கோபுரம் நிழலாக மேலெழும்புகிறது...

இத்தனையும் நினைவு தானோ இல்லை கனவாகப் போய் விடுமோ என்று அவளுக்கு மனதில் ஓர் ஆதங்கம்.. இப்போது மிருதங்கம் (அல்லது டோலக்?) ஒலிக்கிறது.

பல்லவி ஒலிக்கிறது. முடியும் போது அவள் திரையிலிருந்து மறைகிறாள். அவன் அவள் மறையும் திசையைப் பார்க்கிறான்.

இப்போது முதலில் அவளை சந்தித்த போது ஏற்பட்ட கசப்பான நிகழ்வு அவன் மனத் திரையில் நிழலாடுகிறது. இது மறக்க வேண்டிய சம்பவம் என்பதாக அவன் முகத்தை திருப்பிக் கொள்கிறான். இதை சித்தரிக்க இங்கே மீண்டும் ஷெனாய்.. மனத்திரையில் இக்காட்சி முடியும் போது மிக்க் குறைந்த மாத்திரை அளவிற்கான நேரத்திற்குள் ஒரு சாரங்கி மீண்டும் ஒலிக்கிறது.

இந்த சாரங்கி அவள் உள் மனதை உலுக்குவதற்கு பயன்படுத்தப் பட்டுள்ளது. அவள் பாடுகிறாள். தன் மனசாட்சியை வெளிப்படுத்துகிறாள்.

பெண்ணின் மனசாட்சி பேசும் பொழுது என்னை நீ காண முடியும்...

இந்த வரியின் மூலம் ஏராளமான விஷயங்கள் சொல்லப்படுகின்றன. அவளால் பேச முடியாத நிலை. அவள் பேசும் பொழுது அவனைப் பற்றிய அவளுடைய உயர்ந்த எண்ணங்களைக் கூறுவாள். அதற்கான சந்தர்ப்பம் வரும் என்கிற நம்பிக்கை.. இத்தனையும் இந்த ஒரு வரியில்... கவியரசராயிற்றே...

முடியும் என்கிற பொழுது ஜானகியின் குரலில் வெளிப்படும் அந்த சங்கதிகள், அவள் மன நிலையை சொல்வதில் அவளுக்குள்ள உறுதியான நிலைப்பாட்டை சொல்வதாய் அமைத்திருக்கிறார்.

ஒவ்வொரு சங்கதிக்கும் மன்னர் ஒரு காரணம் வைத்திருப்பார் என்பதற்கு இதை விட சான்று வேண்டுமா..

கேயில் தீர்த்தங்கள் அபிஷேகமானால் எண்ணம் உனைத் தேடி அடையும்...
இரண்டாம் முறை அடையும் சொல்லும் போது அந்த ம்.. எழுத்திற்கு சங்கதி.. இங்கும் அவள் மன உறுதியை வெளிப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

மீண்டும் அவள் மனம் ஏங்குகிறது. இது நினைவோ வெறும் கனவோ..
ஆனால் இந்த முறை அது ஏக்கமாக பிரதிபலிக்கிறது. இது நினைவாக இருக்கக் கூடாதா என அவளுக்குள்ளேயே கேட்டுக் கொள்கிறாள்.

இப்போது பல்லவிக்குப் பிறகு அடுத்த சரணத்திற்கு முந்தைய பின்னிசை. இருவரின் மனநிலையும் மீண்டும் அல்லாடுகிறது. அதே போல அதை சித்தரிக்க மீண்டும் ஷெனாய், அதைத் தொடர்ந்து சாரங்கி.. பின் இந்த தெளிவற்ற மனநிலையை உணர்த்த புல்லாங்குழல் மீண்டும் ஒலிக்க, சரணம் தொடங்குகிறது..

பாலும் சிலர் கண்ணில் நீராகத் தெரியும் காணும் கண் செய்ய தவறு..

கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்கிற வழக்கினை இந்த வரியில் கவியரசர் என்னவாய் வெளிப்படுத்துகிறார். அது அவளுடைய மன நிலை, அவன் அவளை சரியாகப் புரிந்து கொள்ளாத மனநிலை, ஏனென்றால் அவள் அவனுடைய காதலியாய் இருந்தவள் சந்தர்ப்ப வசத்தால் இது போன்ற சூழலில் அவனைப் பார்க்கிறாள், அதைத் தன் மனதின் குரலாய் வெளிப்படுத்துகிறாள்.

பாவங்கள் ஏதேனும் இருந்தால் யாவும் நான் கொண்ட அழகு... என்று தன்னைத் தானே நொந்து கொள்கிறாள்..

பல்லவி மீண்டும் தொடர ...

கனவோ கனவோ ... என்று அவளுக்கு மனதிற்குள் இது கனவாகப் போய் விடுமோ என்கிற பயம்... அதனை வெளிப்படுத்தியவாறே மறைகிறாள்..

ஒரு மூன்று நிமிடங்கள் நம்மையும் அவர்களின் உலகத்தில் அழைத்துக் கொண்டு போய் விடுகிறார். மெல்லிசை மன்னர்..

இப்போது நமக்குள்ளும் ஒரு ஐயம் எழுகிறது..
மெல்லிசை மன்னர் மறைந்து விட்டார்... இது நினைவோ அன்றி கனவோ...
வேண்டாம் அவர் மறைவு என்பது கனவு..

அவர் நம்முடன் வாழ்கிறார் என்பது தான் நினைவு..
அது தான் நிஜம்...

rajraj
15th April 2016, 10:04 PM
'கோபலனோடு நான் ஆடுவேனேi
நந்த கோபாலன்...ஹாங்...
வேணு கோபாலன்
ஹாங்...


From vaazhkkai (1949)

http://www.youtube.com/watch?v=9WkssnWrwxE

eehaiupehazij
15th April 2016, 10:45 PM
From the Treasure Island of GG with Pleasure!

கலாய்க்கிறாரே காதல் மன்னர் !....கும்பல் கூட இருக்கும் தைரியத்தில்.....


ஜெமினி கணேசன் அவர்கள் காதல் நாயகனாக வலம் வந்த போதும் காதலியுடன் இணைநது இனிமையான பாடல் காட்சிகளைத் தந்த போதும் இளமையான கூட்டத்தோடு சேர்ந்து காதலியைக் கலாய்க்கும் பாடல் காட்சிகளிலும் எல்லை மீறாத கண்ணியத்தைக் கடைப்பிடித்தார்!

பகுதி 1 பாக்கியலக்ஷ்மி.......(1961)காந்தக் கண்ணழகி ஈ வி சரோஜாவின் சிங்காரச் சோலையான இளமைக் கொண்டாட்டத்தில்.......

https://www.youtube.com/watch?v=KYAkCv1UYLo

பகுதி 2 காதல் என்பது எதுவரை.....ஆராய்ச்சி முனைவர் ஜெமினி அம்பாரி ஆனையின் மேலே...
பாதகாணிக்கை!

https://www.youtube.com/watch?v=stFj0OrPi4w

பகுதி 3
பெண்கள் இல்லாத உலகத்திலே.....ஆண்களினாலே என்ன பயன்! சரணாகதி அடையும் காதல் கைதியும் ஜெமினியே!!...ஆடிப்பெருக்கு

https://www.youtube.com/watch?v=TwO31yVw8vY

பகுதி 4 வீர அபிமன்யு

கடவுளையே கலாய்க்கலாமா கன்னிப் பெண்கள் கூட்டம் ? மாயக் கண்ணனாக மயக்குகிறார் லீலா கிருஷ்ணர் ஜெமினி!!

https://www.youtube.com/watch?v=JHSH63HPf7Q

chinnakkannan
16th April 2016, 12:31 AM
அவர் நம்முடன் வாழ்கிறார் என்பது தான் நினைவு..
அது தான் நிஜம்...// நன்றாக அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள் ராகவேந்திரர் சார்.. நன்றி..

eehaiupehazij
16th April 2016, 07:19 AM
From GG's Treasure Island with Pleasure!

ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு காணுது மனது ....மன்னரின் தன்னம்பிக்கைக் கனவுகள்!

நாளை நாமொரு ராஜாங்கம் அமைப்போம் ....புன்னகை வண்ணங்கள்!

https://www.youtube.com/watch?v=TwiWbFoDyEY

இது நடிகர்திலகத்தின் தன்னம்பிக்கைக் கனவுப்பறவை சிறகடிக்கும் ...நெஞ்சிருக்கும் வரை...நினைவிருக்கும்!

https://www.youtube.com/watch?v=NaItT2DZVXU


மனமிருந்தால் பறவைக் கூட்டில் மான்கள் வாழலாம் வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம் .....சுமைதாங்கும் நெஞ்சக் கனவலைகள்...இதமான கடற்கரை காற்றின் ஸ்பரிசத்தில்......... மணலில் பதிந்த பாதச் சுவடுகளில்....அந்தி முடிந்த ஆரம்ப இரவின் மடியில்...

https://www.youtube.com/watch?v=6Eg20JQwGYY

vasudevan31355
16th April 2016, 09:16 AM
ராகவேந்திரன் சார்,

http://www.penmai.com/forums/attachments/penmai-emagazine/70905d1334750115-penmai-emagazine-october-month-65motw.gif

சான்ஸே இல்லை. பட்டை உரித்து விட்டீர்கள். நான் ஊமைப் பெண்ணின் உறவைப் பெற்றி என்னென்ன எழுத வேண்டுமென்று நினைத்திருந்தேனோ அதைவிட பலமடங்கு பிரமாதமாக எழுதி குறிப்பாக சாரங்கி, புல்லாங்குழல் வாத்தியங்களின் ஆளுமையை அற்புதமாக விவரித்து அணுஅணுவாக ரசிக்க செய்து விட்டீர்கள். இதைத்தான் விஸ்வரூபம் எடுப்பது என்பார்களோ.

chinnakkannan
16th April 2016, 09:18 AM
வாஸ்ஸூ வந்தாதிட்டுவார்..பாட் இங்க கேக்கலாம்..எக்ஸ்ப்ளனேஷன் அவர் கொடுக்கட்டும்...


https://youtu.be/F7uQPqQpGuU


காலம் எனக்கொருபாட்டெழுதும்
காற்று வந்தே இசை அமைக்கும்
தாளம் போடும் நீர் அலைகள்
தாவி பாயும் நினைவலைகள்

chinnakkannan
16th April 2016, 09:24 AM
https://youtu.be/M_qPZWuHpT0

நெடு நாள் ஆசை ஒன்று இந்த நெஞ்சினில் உதித்ததுண்டு
அதை நேரிடையாகச் சொல்ல நான் நாணமில்லாதவள் அல்ல..

vasudevan31355
16th April 2016, 10:34 AM
இந்தப் பாடலும் ஏனோ மனதில் பாரம் ஏற்றுகிறது. பாரத்தை ஏற்றுவது 'சிசுபாலன்'.

https://i1.ytimg.com/vi/UzjqNGEAN7o/hqdefault.jpg

பாடலின் சிச்சுவேஷன் இதுதானா?

ருக்மணி நினைவில் உலகை வெறுப்பதாக நடிக்கும் சிசுபாலன் மனைவி வைசாலினியையும் மறந்து, பெற்ற தாய் சொல்லையும் கேளாமல், தான் திருமணம் செய்யவிருந்த ருக்மணியை கவர்ந்து சென்ற கண்ணனை மேலும் எதிர்க்க முடிவு செய்கிறான். நூறு குற்றங்கள வரை பொறுத்துக் கொள்வதாக கிருஷ்ணன் கெடு வைக்க, 60 குற்றங்களுக்கு மேல் தவறுகள் புரிகிறான் சிசு. (ஆனால் கண்ணனை உண்மையாக மனதில் வைத்து பொய்யாக எதிர்க்கும் வேஷம். பிறவி சாபங்கள் முடிந்து திருமாலை சீக்கிரம் அடையவே இந்த குறுக்கு வழிகள். வேண்டுமென்றே.)

மனைவியும், தாயும் புத்திமதி சொல்ல அவர்களை வேண்டுமென்றே எடுத்தெறிந்து பேசிவிட்டு, பின் மன உளைச்சலில் நிம்மதியற்று இந்தப் பாடலைப் பாடுகிறான்.

காட்சிக்கான கதை இதுதான் என்று நினைக்கிறேன்.

குன்னக்குடியார் போட்ட நல்லதொரு டியூன். தான் வேஷதாரியாய் இருக்க வேண்டிய துர்நிலையையும், வெளியே சொல்ல முடியாத ரகசியங்களை மனதில் வைத்து படும் வேதனைகளையும், தாய், மனைவியைக் கூட அலட்சியப்படுத்துவதிற்கான அவலநிலையையும் உணர்த்தும் சிசுபாலனின் இந்தப் பாடல் அற்புதமாய் நம்முள் ஆழமாக இறங்குகிறது.

நாடகக் காவலருக்கு டைட்டில் ரோல். அவருக்கு திருநெல்வேலி சாப்பிடுவது போல. ஒரு பக்கத்து நெஞ்சை ஏற்றி இறக்கி, இரண்டு கால்களில் ஒன்றை மாற்றி மாற்றி அடிக்கடி தாங்கியவாறே கலக்கி விடுவார்.

(கடலூரில் மஞ்சை நகர் மைதானத்தில் நடந்த ஒரு பொருட்காட்சியில் நாடகம் போட்டு, மேக் -அப் கலைக்கும் போது 'புளித்த ஏப்பமாக வருகிறது' என்று சோடா குடித்துக் கொண்டே இருந்தார் மனோகர். அனைவரையும் ஏப்பம் விட்ட ராவணேஸ்வரனுக்கே இந்த நிலைமை. 'ஆ' என்று வாய் பிளக்காமல் பார்த்து வியந்து கொண்டிருந்தேன் சிறுவயதில்).

பாடிய பாடகரின் வித்தியாசக் குரல் நன்றாக இருக்கிறது. ஆனால் யாரென்று எளிதில் உணரமுடியவில்லை. ராஜேஷ் என்று டைட்டிலில் போடுகிறார்கள். (குன்னக்குடி பெயரும் உண்டு) இவர் வேறு ஏதும் பாடல் பாடியிருக்கிறாரா இல்லை இந்தப் பாடலைப் பாடியது வேறு யாராவதா என்பதை ஜாம்பவான்கள் விளக்குக.

பாடலின் ஆரம்பத்தில் மனோகரின் நடை சற்று சிரிப்பை வரவழைக்கிறது. பின் சமாளித்துக் கொள்வார். வில்லன் அழுதால் விவகாரம்தானே!

பூவை செங்குட்டுவனின் பாடல் வரிகள். நல்ல பாடல்.

இறைவனுக்கே தெரிந்து விடும்
எண்ணமெல்லாம் புரிந்து விடும்
என் நிலையில் அவன் இருந்தால்
அவன் மனமும் கல்லாகும்

தாமரையில் நூலெடுத்தே
தறி நெய்தால் பலனுமில்லை
பாமரரின் கண்களுக்கு
பாவபுண்யம் தெரிவதில்லை
ஒருவர் செய்த பாவபுண்யம்
மற்றவர்க்கே சேர்வதில்லை

தண்ணீரும் உலகினிலே
மூன்றுமுறை பிழை பொறுக்கும்
கண்ணனோ நூறுமுறை நான் செய்யும் பிழை பொறுப்பான்
பொன்னான மனையாளும் முன்னூறு பிழை பொறுப்பாள்
என் தாயும் எனக்காக எத்தனைதான் பிழை பொறுப்பாள்?


https://youtu.be/Zo3vp1blmaw

vasudevan31355
16th April 2016, 10:40 AM
//நெடு நாள் ஆசை ஒன்று இந்த நெஞ்சினில் உதித்ததுண்டு
அதை நேரிடையாகச் சொல்ல நான் நாணமில்லாதவள் அல்ல..//

ஏன் இந்த சுருக்?... இந்த சரணாலயம் பாடலுக்கு சரண்டர் ஆன காலம் ஒன்றுண்டு. கொஞ்சம் மறந்திருந்தேன். நினைவில் மலரச் செய்து விட்டீர். நிஜமாகவே ரசித்த ரசிக்கக் கூடிய பாடல். தேங்க்ஸ் சின்னா.

chinnakkannan
16th April 2016, 11:17 AM
ஏன் இந்த சுருக்?..// ஏற்கெனவே எழுதியிருக்கிறேன் என நினைவு வாஸ்ஸூ.. நல்ல பாட்டு தான்..இன்னொன்று காட்டுக்கும் மலருக்கும் கல்யாணமாம் கானக் கருங்குயில்கள் கச்சேரியாம்..

vasudevan31355
16th April 2016, 11:56 AM
ஏன் இந்த சுருக்?..// ஏற்கெனவே எழுதியிருக்கிறேன் என நினைவு வாஸ்ஸூ.. நல்ல பாட்டு தான்..இன்னொன்று காட்டுக்கும் மலருக்கும் கல்யாணமாம் கானக் கருங்குயில்கள் கச்சேரியாம்..

அது 'காட்டுக்கும் மலருக்கும்' இல்லே...

'காற்றுக்கும், மலருக்கும்'

குதிரைமுக் ஸாரி குதிரைமைக் குதி கும்மாளம்.:)

Gopal.s
16th April 2016, 02:23 PM
namakku raghu dhasai oomai penninaal.:ty::ty::ty::ty:

Gopal.s
16th April 2016, 02:27 PM
ராகவ் ஜி...

நெஞ்சிருக்கும் வரை படம் அந்தக் காலத்தில் நான் பார்த்ததில்லை. ஆனால் வானொலியில் "எங்கே நீயோ நானும் அங்கே" பாடல் இரு வெர்ஷன்கள் ( ஒன்று நார்மல் மற்றது சோகம் ) கேட்டிருக்கிறேன். அனேகமாக நார்மல் பாட்டுதான் கேட்பேன். ஆனால் பிற்காலத்தில் படம் பார்த்தபோது சோகப்பாட்டு மட்டும்தான் இருந்தது. இப்போதும் நெட்டிலும் எங்கேயும் அந்த நார்மல் வெர்ஷன் வீடியோ இல்லை. ( ஆடியோ கிடைக்குது )

அது படத்தில் இருந்துச்சா இல்லையா ?

padaththile ore version. Muthu Raman kudichittu varum podhu. intha maathiri paadalgalthaan aambilaigalai kalyanam pannikkave thoondi ,kuzhiyil thallugirathu. Susilavin maya jalam.:-D

adiram
16th April 2016, 03:13 PM
டியர் வாசு சார் மற்றும் ராகவேந்தர் சார்,

அலைகள் படத்தின் "ஊமைப் பெண்ணை பேசச்சொன்ன உறவோ" பாடலை விவரமாக எழுதி மனதை கனக்க வைத்து விட்டீர்கள். உங்கள் இருவருக்கும் எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை.

எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல். யாராவது ஒரு எழுத்து வேந்தர் இப்பாடலைப் பற்றி எழுத மாட்டார்களா என்று ஆவலோடு காத்திருந்தேன். அபூர்வங்களைத் தோண்டியெடுத்து தருவதை வாடிக்கையாக கொண்ட நீங்கள் இருவரும் அதை செவ்வனே செய்து விட்டீர்கள்.

'கண்ணிலே என்ன உண்டு' மெட்டை நிராகரித்து இந்த மெட்டை தேர்ந்தெடுத்த ஸ்ரீதர் ஒரு ஜீனியஸ். சிச்சுவேஷனுக்கு தகுந்த ட்யூனை செலெக்ட் செய்வதில் அவரை மிஞ்ச ஆள் கிடையாது என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிரார்.

நானும் ஓடியனில் தான் பார்த்தேன். முதல்முறை பார்த்தபோதே இப்பாடல் மனதில் இனம்புரியாத பாதிப்பை ஏற்படுத்தியது. கௌரவம், பூக்காரி, பாக்தாத் பேரழகிஎல்லாம் பார்த்த பிறகு மீண்டும் அலைகள் பார்த்தேன், (இந்தப் பாடலுக்காகவே). நெகிழ்ந்து போனேன்.

நீண்ட இடைவெளிக்குப்பின் மீண்டும் அந்த நினைவுகளை உள்ளத்தில் ஏற்படுத்திய உங்கள் இருவருக்கும் நன்றிகள்.

chinnakkannan
16th April 2016, 04:39 PM
பாவம் ஊமைப் பெண்ணைப் பேசச் சொன்னால் பாடல் கேட்டு எல்லாரும் மனம் கனத்து இருக்கிறார்கள்..எனில் ஒரு பாஸ்ட் சாங்க் போட்டு விட்டுடலாமா :)

ஆக்சுவலா நேத்திக்கு ஸ்ரீ ராம நவமிக்குப் போட்டிருக்க வேண்டியது.. ஏன்னாக படம் பெயர் ஜானகி ராமுடு..:)

அதிரண்டி மாமா அதிரண்டி லோ.. புதிரண்டி.. சம்திங் சம்திங் லோ...

நாகார்ஜுன் விஜயஷாந்த்தி.. எஸ்பி பி. சுசீலாம்மா..என ப் போட்டிருக்கிறது சுசீலாம்மா தானா.. இரண்டு பேர் வாய்ஸும் டிஃபரண்ட்டாக இருப்பது போல் பிரமை..

https://youtu.be/yl_HcuTQoOQ

வாசு தமிழ் டப் வந்ததா பார்த்திருக்கிறீரா..

adiram
16th April 2016, 07:03 PM
டியர் வாசு சார்,

பத்து மணி ஸ்பெஷல் காட்சிகள் ஆய்வில் அன்றைய தெலுங்கு டப்பிங் படங்களின் சூறாவளியை தங்களுக்கே உரித்தான நடையில் நகைச்சுவை மிளிர தந்திருந்த விதம் அட்டகாசம்.

சென்னையில் இவை ரெகுலர் ஷோக்களிலேயே வந்து ஒருவாரம் ஓடி வசூலை அள்ளின. எல்லாப்படங்களும் ஒரே மாதிரியாக இருந்தும் திரும்ப திரும்ப இவற்றுக்கு கூட்டம் குவிந்ததுதான் ஆச்சரியம். அதற்குக் காரணம் தியேட்டர்களில் இப்படங்களுக்கு வைக்கப்படும் ஸ்பெஷல் ஸ்டில்கள். படத்தில் இடம்பெறும் "அந்த மாதிரியான" காட்சிகளை மட்டும் கொண்டு அந்த ஸ்டில்கள் தயாரிக்கப்படும். நம்ம ஆட்களுக்குத்தான் அது போதுமே. அரங்கை நிறைத்துவிட மாட்டார்களா. தமிழ்ப்படங்கள் தாய்க்குலத்தை நம்பியே ஓடின என்றால், இப்படங்கள் தாய்க்குலத்தை நம்பாமலே ஓடி அசத்தின.

நீங்கள் சொன்ன படங்களோடு இன்னும் நினைவுக்கு வரும் சில படங்கள்
ஜாக்பாட் ஜாங்கோ
பெண்ணின் சவால்
கராத்தே கமலா
ராஜ்மகால் ரகசியம்
கப்பல்தீவு காதல் ராணிகள்
ஜில்ஜில்மேனி செக்ஸ் ராணி (பயங்கர திகில்)
ரைபிள் ராஜா
இப்படி நிறைய. எல்லாவற்றுக்கும் ஒரே திரைக்கதைதான்.

இவை போக மலையாள படங்களும் நிறைய வந்து ரசிகர்கள் பாக்கெட்டை கொள்ளையடித்தன. அந்த சமயத்தில் வந்த படங்களென்று பார்த்தால்
அவளோட ராவுகள்
சத்திரத்தில் ஒரு ராத்திரி
ரதி நிர்வேதம்
மழு (மழு என்றால் மலையாளத்தில் கோடரி என்று அர்த்தமாம். ஆனால் அதுக்கு தமிழ் விநியோகஸ்தர் கொடுத்த டைட்டில் 'மாமனாரின் இன்ப வெறி'.... கொடுமை)

உங்கள் ஆய்வில் மூன்று பிரிவாக மாயாஜால யுகம், ஜேம்ஸ்பாண்ட் யுகம், லேடி ஜேம்ஸ்பாண்ட் யுகம் என்று பிரித்து ஆய்ந்திருக்கிறீர்கள். எப்படி எந்த ஒரு ஆய்வையும் டாக்டரேட் அளவுக்கு உங்களால் பண்ண முடிகிறது என்று எனக்கு ஆச்சரியம்.

அடுத்த அதிரடி ஆய்வு என்ன (சொல்ல மாட்டீர்கள். பதித்த பின்னர்தான் தெரியும்)

vasudevan31355
16th April 2016, 10:36 PM
காலை 10 மணிக் காட்சி பக்கா அனுபவங்கள். ...தொடர்கிறது.

மிக்க நன்றி ஆதிராம் சார்!

தங்கள் ஊக்கப்படுத்தலுக்கும், உற்சாகப்படுத்தலுக்கும் நன்றி. எந்த ஒரு பதிவுக்கும் மேலதிக விவரங்களை மிகச் சரியாக தந்து பதிவுகளை தாங்கள் மேம்படுத்துவதற்கும் மிக்க நன்றி.

ஒரே ஒரு குறை. உங்களை நாங்கள் மிகவும் மிஸ் செய்கிறோம். நடிகர் திலகம் திரியிலும் சரி....மதுர கானங்களிலும் சரி! அடிக்கடி காணமல் போய் விடுகிறீர்கள். அதனால் இழப்பு எங்களுக்குத்தான்.

தங்களுடைய விவரப்பதிவுகளுக்கு நான் முதல் ரசிகன் என்றே சொல்லலாம். விடுபட்டுப் போன அல்லது மறந்து போன நினைவுகளை 'அட... ஆமாமில்லே... ஆதிராம் சரியாக நினைவு கூர்ந்து விட்டாரே' என்று நான் பலமுறை ஆச்சரயப்படுமளவிற்கு நீங்கள் விஷய ஞானம் உள்ளவர் என்பது நித்ய உண்மை. நிச்சயமாக இதை நான் வெறும் புகழ்ச்சிக்கு சொல்லவில்லை.

மது அண்ணா, நீங்கள், ராகவேந்திரன் சார், கோபால் போன்ற அனைவரும் நிச்சயம் காலைக் காட்சிகளை கண்டு மகிழ்ந்திருக்கிறோம். பொதுவாக சிட்டியில் உள்ளவர்களுக்கு இது போன்ற வாய்ப்புகள் கம்மி. சிட்டி தள்ளி உள்ள பகுதிகளிலும், நடுத்தரமான கடலூர், சிதம்பரம், விழுப்புரம் போன்ற நகரங்களிலும் இந்த காலை 10.30 மணிக் காட்சி மிகவும் பிரசித்தம். 'எப்படா சனி, ஞாயிறு வரும்' என்று தவம் கிடப்போம். வெள்ளிக் கிழமைதான் தியேட்டர் வாசலில் அது சம்பந்தமான போஸ்டர் ஒட்டுவார்கள்.

மறந்து போன, இது போன்ற, மேலும் உள்ள டப்பிங் படங்களை நீங்களும், மது அண்ணாவும் அட்டகாசமாக தந்து விட்டீர்கள். கொஞ்சம் 'டீப்'பாக சிந்தனை செய்த போது இன்னும் சில படங்கள் கூட ஞாபகத்துக்கு வந்தன. தெலுங்குப் படங்கள் அல்லாது கன்னடப் படங்களுக்கும் இத்தகைய பெருமை உண்டு.

https://i.ytimg.com/vi/9yI7gT17EVc/hqdefault.jpg

அதில் முக்கியமானது விஷ்ணுவர்தன், துவாரகீஷ் நடித்த 'கள்ளா குள்ளா' என்ற படம் நிஜமாகவே நல்லா 'கல்லா' கட்டியது. கடலூர் முத்தையாவில் ரெகுலர் ஷோவாக கலக்கி எடுத்து பின் காலைக் காட்சியாகவும் இன்னொரு ரவுண்ட் வந்தது. செம என்டெர்டெயின்மென்ட் மூவி. கலர் வேறு.

அப்புறம் கன்னட ராஜ்குமார் நடித்த 'மயூரா' என்ற 'அரச' படம் தமிழ் பேசி ஏகோபித்த பாராட்டுதல்களை பெற்றது. ராஜ்குமாரின் லாவகமான வாள்வீச்சு படத்தை தூக்கி நிறுத்தியது. பிரம்மாண்டமான தயாரிப்பு.

https://i.ytimg.com/vi/nvOHSxDrEbU/hqdefault.jpg

'சகோதர சவால்' என்ற கன்னடப்படம் 'சகோதர சபதம்' என்று வெளிவந்து விஷுணுவர்த்தன், ரஜினி நடிப்பில் நன்றாக ஓடியது. ரஜினி அப்போது தமிழில் வேகமாக முன்னுக்கு வந்து கொண்டிருந்த நேரத்தை தயாரிப்பாளர்கள் விடுவார்களோ! செமையாக பயன்படுத்திக் கொண்டார்கள்.

http://4.bp.blogspot.com/-w6StyR2PAk4/UoGrJXvDxCI/AAAAAAAAN40/2iq_3prHeMs/s640/G.HANUMANTHA+RAO.jpg

தெலுங்கில் கிருஷ்ணாவும், என்.டி.ஆரும் இணைந்து நடித்த 'கடவுள் படைத்த மனிதர்கள்' (தெலுங்கில் 'தேவுடு சேசின மனுஷுலு') அந்த மாதிரி இன்னொரு படம். நாயகி ஜெயா மேடம்.

அப்புறம் நாகேஸ்வரராவ் நடிப்பில் வெளிவந்த ஆக்ஷன் மூவி 'வைரக் கிரீடம்'

ராமகிருஷ்ணா இன்னொரு ஆக்ஷன் ஹீரோ. இவர் நடித்து வெளிவந்த 'பைட்டர் பகவான்' சக்கைப் போடு போட்டது.

ரஜினியின் வளர்ச்சி காலத்தில் அவர் நடித்த மொழி மாற்றுப் படம் 'இன்ஸ்பெக்டர் ரஜினி'. 'உங்க சௌத்ரியை எங்கள் இன்ஸ்பெக்டர் ரஜினி முந்திட்டார்' என்று அப்போதைய ரஜினி ரசிகர்கள் எங்களிடம் செம காமெடி பண்ணினர்.

https://upload.wikimedia.org/wikipedia/en/c/ce/Tigertelugufilm.jpg

பிறகு ரஜினியும், என்.டி ஆரும் இணைந்த படம்' என்ற விளம்பர வாசகத்தில் வெளிவந்து தோல்வியைத் தழுவிய 'டைகர்'. ரஜினிக்கு ஜெயசுதாவின் தங்கை சுபாஷிணியும், ராமாராவிற்கு ராதா சலூஜாவும் ஜோடி

என்.டி.ஆர் தனியே ஹீரோவாக நடித்த 'ராயல் டைகர் ராமு',

என்.டி.ஆர், வாணிஸ்ரீ ஜோடியில் 'சிம்மக்குரல்'.

கிருஷ்ணா நடித்த 'ரத்த சம்பந்தம்'

லேடி ஆக்ஷன் மூவி 'பொல்லாத பெண்'. இதில் லதா, சரத்பாபு ஜோடி.

இன்னும்

https://i.ytimg.com/vi/s2P6Xr-63go/maxresdefault.jpg

கௌபாய் குள்ளன்,

ஜூடோ சுந்தரி,

லேடி பைட்டர் ரேகா,

நேபாளத்தில் சி.ஐ.டி 999,

'டெத் ரைட்ஸ் எ ஹார்ஸ்' ஆங்கிலப்படத்தின் தழுவலான, மிக பாப்புலரான 'ரிவால்வார் ரீட்டா',

துப்பாக்கி ரங்கன்,

கத்திக்குத்து கந்தன்,

http://www.mangomobiletv.com/vod_images/B0000001A61.jpg

டூபான் மெயில் (இந்தப் பெயரில் மஞ்சுளா நடித்த தெலுங்கு தழுவல் ஒன்றை பார்த்திருக்கிறேன். 'அழகி'க்கு ஹீரோ நரசிம்ம ராஜு. கிரிபாபு, விஜயலலிதாவும் உண்டு )

டூபான் க்வின்

இப்படி நிறைய.



ஆதிராம் சார்,

இன்னொரு படம் தங்களுக்கு நினைவில் இருக்கும் என்று நினைக்கிறேன்.

'நகரத்தில் திருடர்கள்' என்று ஒரு படம் வந்ததே...நினைவிருக்கிறதா?...படுபயங்கரமான படம். காலைக் காட்சி பார்த்துவிட்டே நடுங்கிப் போய் வீட்டுக்கு வந்தேன் வேர்க்க விறு விறுக்க.

இன்னும் கூட சில நினைவுக்கு வருகின்றன.

பூதம் எனது நண்பன்,

மாய சக்தி,

ராக்கெட் ராணி,

நாக சக்தி

இப்படியும் படங்கள் காலை காட்சியாக உலா வந்தன.

மலையாளத்தில் வின்சென்ட் நடித்த (அவரது நூறாவது படம் என்று நினைக்கிறேன்) 'பிக்னிக்' என்ற படம் பார்த்ததும் உண்டு.

https://upload.wikimedia.org/wikipedia/en/thumb/0/00/Ponni_film.jpg/220px-Ponni_film.jpg

நம்ம கமல், லஷ்மி நடித்த 'பொன்னி' என்ற படம் கூட பின்னாளில் கமல் ஸ்டாரான பிறகு 'கொல்லிமலை மாவீரன்' என்று வெளிவந்தது.

https://merryfrolics.files.wordpress.com/2009/01/pyasa18.jpg?w=476&h=351&crop=1

அப்புறம் கமல் நடித்த 'ஏழாம் இரவில்' என்ற மொழி மாற்றுப் படமும் இந்தக் காலைக் காட்சி லிஸ்ட்டில் சேருமே. கமலுக்கு கோராமை மேக்-அப். இது இந்தியிலும் 'பியாசா சைத்தான்' என்று மொழி மாறியது

https://horrorpediadotcom.files.wordpress.com/2013/03/darwaza-1978-hindi-horror-ramsay-brothers.jpg

இதுவல்லாமல் நேரிடையாகவே வந்த இந்திப்படம்... பேய்ப்படம் ஒன்று 'தர்வாஜா'. ஐயோ! குலை நடுங்க வைக்கும் படமல்லவா அது.

இன்னும் நிறைய இருக்கிறது. ஞாபகம் வர,வர தரலாம்.

இதெல்லாம் செம ஜாலியான காலங்கள். பின் இவைகளின் காலம் போய் நீங்கள் சொன்ன மாதிரி மலையாள 'A' சர்டிபிகேட் படங்களே பின்பு காலைக்காட்சி படங்களாய் நெடுநாள் கோலோச்சின. இந்தப் படங்கள் வெறும் முக்கால் மணி நேரத்தில் முடிந்து விடும். இவைகளிலும் சண்டைக் காட்சிகள் உண்டு. உடலுறவு சண்டைக் காட்சிகள்.

https://i.ytimg.com/vi/Jw5tqA1b_Mk/hqdefault.jpg

நீங்கள் குறிப்பிட்ட 'மழு' (ஆயுதம்) நிஜமாகவே நல்ல படம். பாலன் கே.நாயரின் கடின உழைப்புக்கு ஒரு சான்று அந்தப் படம். 'பாப்பாத்தி' ரதி தேவி மருமகள். சந்தர்ப்பவசத்தால் ஒருமுறை மருமகளுக்கும், மாமனாருக்கும் ரசாபாசம் நடந்துவிட (இது படத்தில் டீசென்ட்டாகவே இருக்கும்... அது கூட படத்தின் முக்கால்வாசி பாகத்திற்குப் பிறகு... சுகுமாரன் என்ட்டர் ஆவதற்கு முன் ) நம்ம ஆளுங்க அதை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, முண்டு உடுத்திய 'பாப்பாத்தி' ரதிதேவியின் போஸை எட்டு சீட் போஸ்டராக ஒட்டி,'மாமனாரின் இன்ப வெறி'யாக மாற்றி, தமிழகத்தையே காம வெறி பிடிக்கச் செய்து விட்டார்கள் பாவிகள். அந்தப் படத்தில் கடும் கிராமத்து உழைப்பாளியாக வாழ்ந்து காட்டியிருப்பார் நாயர்.

அது போல ஜெயபாரதியின் முதுகை மட்டும் பெரிதான போஸ்டராக்கி 'இதோ இவிட வரே' படத்துக்கு பெரியவர் முதல் சிறியவர் எல்லோரையும் வரச் செய்து விட்டார்கள். நல்ல வேளை. 'சோமனின் காமம்' என்று இதற்கு தமிழில் பெயர் சூட்டாமல் விட்டார்களே! அதுவரை பிழைத்தோம்.

சரி! சப்ஜெக்ட் வேறு திசை நோக்கி பாய எத்தனிக்கிறது. நிறுத்திக் கொள்வோம்.

எது எப்படியிருந்தாலும் சரி! எழுபதுகளின் வெயிலில் தியேட்டர்களின் கதவுகளைத் திறந்து வைத்து, காற்றுக்காக அங்கேயே ஏங்கி, வேர்த்து நின்று விஜயலலிதா, கிருஷ்ணா, ஜோதி இவர்களின் பழுப்பு கலர் திரைப்படங்களின் சண்டைக் காட்சிகளையும், குதிரையோட்டங்களையும் ரசித்த காலங்களை காலாகாலத்துக்கும் மறக்க முடியாது.

காலைக்காட்சி அல்லாது மீதி மூன்று ஷோக்களும் என் 'இதய தெய்வ'த்தின் படங்களுக்கே முதலிடம். அதிலும் 'ஞான ஒளி'க்கு பிரதான இடம் அன்றும் இன்றும் என்றும். அப்புறம்தான் மற்ற படங்கள் எல்லாம்.

காலைக்காட்சிகள் நினைவை மீண்டும் கிண்டி விட்ட தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

chinnakkannan
17th April 2016, 12:42 AM
//அதில் முக்கியமானது விஷ்ணுவர்தன், துவாரகீஷ் நடித்த 'கள்ளா குள்ளா' என்ற படம் நிஜமாகவே நல்லா 'கல்லா' கட்டியது. கடலூர் முத்தையாவில் ரெகுலர் ஷோவாக கலக்கி எடுத்து பின் காலைக் காட்சியாகவும் இன்னொரு ரவுண்ட் வந்தது. செம என்டெர்டெயின்மென்ட் மூவி. கலர் வேறு// மதுரையில் சிந்தாமணியில் கள்ளனும் குள்ளனும் என்று பார்த்த நினைவு..மாட்னி ஷோ.அப்போது பத்தாவது படித்துக்கொண்டிருந்தேன். பார்த்துவிட்டு பின் செய்ண்ட்மேரிஸ் ஸ்கூலில் ஏதோ ஒரு கண்காட்சிக்குப் போய்விட்டு 12 ஏ மஹால் டு ஆரப்பாளையம் பஸ் பிடித்து எட்டு மணிக்கு வீடுவந்த நினைவு..

மதுரையைப் பொறுத்த வரை காலைக் காட்சி என்றால்பதினொரு மணிக் காட்சி தான்..அதுவும் பழைய படங்கள் தான்..ரெகுலராகவே இந்த மலையாளப்படங்கள் வாடகைக்கு ஒரு இருதயம், இன்ப தாகம் (ஈட்டா), அவளுடே ராவுகள் (சென் ட்ரல் என நினைவு) மா இ வெ(மீனாட்சி என நினைவு) ..போட்டிருந்தார்கள்.. பட் நான் எதுவும் பார்த்ததில்லை..சீரியஸாகவே..

ஏனெனில் தமிழில் விட்டுப்போன சிவாஜி படங்கள் எனத் தொடர்ந்து பார்த்திருந்தபருவம் பத்து,ப்ளஸ் ஒன் ப்ளஸ் டூ.. காலேஜ் போன பிறகு தான் கொஞ்சம் அக்கரைக்குச் சென்று படம் பார்க்க முடிந்தது..காலேஜ் கட்டடிப்பது என்பது சனிக்கிழமை மட்டுமே.. மார்னிங்க் ஷோமோஸ்ட்லி சென் ட்ரல் என நினைக்கிறேன்.. பேய் ப் படம் ஹிந்தி என்றால் நினைவில் வருவது புராணா மந்திர்.. அப்புறம் த்ரில்லர் பஹேலி..இதுவும் சென் ட்ரல் தான் ..

காலேஜ் முடித்து ப்ரொபஷனல் கோர்ஸ் சேர்ந்த பிறகு பார்த்த படம் ஒன்று நினைவில் சுந்தரம் ஏ.சி.யில் (அண்ணா நகர்) ஹீரோ.. ஐ திங்க் ஹிந்திப்படத்தில் நான் பார்த்த ஐந்தாவதோ ஆறாவதோ படம்.

மலையாளம் எப்போது பார்த்தேன் என நினைவில்லை..பார்த்த தியேட்டர் நினைவிருக்கிறது.. தங்கம். படம் சலனம்..லஷ்மி மோகன் ப்ளாக் அண்ட் வொய்ட்..தூஷிக்கிறான் என்பது போல ஒரு பாட்டுவரும்..

தேவி தியேட்டர் வொர்க்*ஷாப் ரோட்டிலேயே கொஞ்சம் ஆறு முச்சந்தி தாண்டி சிம்மக்கல் போகும் பாதையில் ஆட்டு மந்தைக்கு முன்னால் ஒரு பெரிய பஸ் ஷெட் வித் லாட் ஆஃப் எம்ப்டி ஸ்பேஸ் இருக்கும் சிலபல பஸ்கள் ரிப்பேர் செய்யப் படுவதை அரைடிராயர் வயதில் பார்த்திருக்கிறேன்..பிற்காலத்தில் அந்த பஸ் ஷெட் மாறி அங்கு தீபா ரூபா தியேட்டர்கள் குட்டியாய் வந்தன..அங்கு தான் நீங்கள் சொன்ன சில படங்கள் ஏ ரெகுலர் ஷோபோடுவார்கள்..குப்பை தியேட்டர் ஏசி மற்றும் விலை அதிகம் (பாக்கெட் மணிக்குக்கட்டாது) எனில் ஸ்ரீதேவியே சரணமாக இருந்த நாட்கள்..

ம்ம் உங்க அளவுக்கு காலைக் காட்சி பார்த்ததில்லை வாசு.. :).

chinnakkannan
17th April 2016, 12:46 AM
பரமேஸ்வரியில் யாதோங்கி பாரத் 200 நாட்களுக்கும் மேல் ஓடியதாக நினைவு. ஷோலேயும் அப்படியே.. காலேஜ் டயமா பள்ளி டயமா தெரியவில்லை.. அவுர் கோன் என்ற திரைப்படம் பரமேஸ்வரியில் திரையிடப் பட அதைப்பார்த்த என் நண்பன் என்னிடம் கதைகதையாகச் சொல்ல ஆ என க் கேட்டது இப்போது நினைவுக்கு வருகிறது.. (மார்ச்சுவரிக்குள்ள அந்த ஹீரோவோட ஃப்ரெண்ட் போய் ஒவ்வொரு பாடியாப் பாப்பான் பாரு..அப்பஒரு பாடியத்தெறக்கறச்சே ஒருகை வந்துஅவ்னைத் தொடுமா..

அப்புறம் என்ன ஆகுண்டா.. - விரல் நகம் கடித்தபடி நான்..

ம்ம் ஒண்ணும் ஆகாது..இல்லை அந்த ஃப்ரெண்ட் ஷாக்லயே ஹார்ட் அட்டாக் வந்து செத்துடுவான்..

பிற்காலத்தில் ராதா நடித்து அதுவே அதே இரவில் லோ வேறுபெயரோ வந்த நினைவு..

madhu
17th April 2016, 04:33 AM
ராகவ் ஜி...

ஊமைப் பெண்ணின் தாக்கம் எப்போதுமே அடி மனதில் இருக்கும். இப்போ நீங்க கிளறி விட்டுட்டீங்க...

ஆரம்ப வரிகளில் ஃப்ரேமுக்குள் தெரியும் சந்திரகலாவின் பிம்பம் "ஊமைப் பெண்ணை பேசச் சொன்ன" என்ற வரிகள் வரை மௌனமாக சிலை போலிருந்து விட்டு "உறவோ.." என்ற வார்த்தையிலிருந்து வாயசைக்கும் விதத்தில் ஸ்ரீதரின் அனுபவம் பேசும்.

நான் ஒரு லிரிக்ஸ் பித்தன் என்பதால் சில வார்த்தைகளை சரி செய்து பாடல் வரிகளை மீண்டும் எழுதுகிறேன் ( உங்க அனுமதியுடந்தான் )

ஊமைப் பெண்ணை பேசச் சொன்ன உறவோ
இது நினைவோ வெறும் கனவோ

ஊமைப் பெண்ணை பேசச் சொன்ன உறவோ
இது நினைவோ வெறும் கனவோ

இது நினைவோ வெறும் கனவோ
வெறும் கனவோ

கூண்டுக் கிளி போல வாழ நினைத்தேன்
தாங்கும் கையொன்று கண்டேன்
மீண்டன சொர்க்கங்கள் என் வாழ்வில் என்று
வேண்டி வரம் கேட்டு நின்றேன்

இது நினைவோ வெறும் கனவோ

ஊமைப் பெண்ணை பேசச் சொன்ன உறவோ
இது நினைவோ வெறும் கனவோ

இது நினைவோ வெறும் கனவோ

பெண்ணின் மனசாட்சி பேசும்போது
என்னை நீ காண முடியும்
கண்களில் தீர்த்தங்கள் அபிஷேகமானால்
உண்மை உனைத் தேடி அடையும்

இது நினைவோ வெறும் கனவோ
இது நினைவோ வெறும் கனவோ

பாலும் சிலர் கண்ணில் நீராகத் தெரியும்
காணும் கண் செய்த தவறு

பாவையின் பாவங்கள் ஏதேனும் இருந்தால்
யாவும் நான் கொண்ட அழகு

ஊமைப் பெண்ணை பேசச் சொன்ன உறவோ
இது நினைவோ வெறும் கனவோ
நினைவோ.. கனவோ..கனவோ..

madhu
17th April 2016, 04:45 AM
சிக்கா... நீங்க சொன்ன "காலம் எனக்கொரு பாட்டெழுதும்" பாடலுக்கு இசை அமைத்தவர் ஒரு பிரபலத்தின் தந்தை.. தெரியுமில்லே ?

Gopal.s
17th April 2016, 06:39 AM
சிக்கா... நீங்க சொன்ன "காலம் எனக்கொரு பாட்டெழுதும்" பாடலுக்கு இசை அமைத்தவர் ஒரு பிரபலத்தின் தந்தை.. தெரியுமில்லே ?

மது அண்ணா,


திலீப்பின் பெருமைக்குரிய ஆனால் துரதிருஷ்ட சாலியான தந்தை குலசேகரை பற்றி பாகம் ஒன்றில் அலசும் போது ,இந்த பாடலை குறிப்பிட்டு தங்கள் புதிருக்கு விடையளித்திருந்தோம்.

சேகர் ஒரு திறமைசாலி. முழு ரகுமான் இல்லாவிட்டாலும் முக்கால் ரகுமான் என்று அவரை நன்கு தெரிந்தவர்கள்,அறிந்தவர்கள்,புரிந்தவர்கள் கூறுவார்கள்.

ஏ.கே .வேலன், நீர்க் குமிழியில் பாலச்சந்தரும் புதுசு, வாய்ப்பை ஏற்க தயங்கிய குமாரும் புதுசு என்பதால் அனுபவசாலி சேகர் சேர்த்து கொள்ள பட்டார். குமாரின் ஆரம்ப கால சாதனைகளில் சேகரின் பெயரும் எழுத பட்டே ஆக வேண்டும். வண்ண விழி மேடை, என்னதான் பாடுவது,நேற்று நீ போன்ற பாடல்கள் சேகரின் கை வண்ணமே.தவிர பின்னணி ,இணைப்பு இசை எல்லாமே சேகரின் தலையில்.

சேகர் ,தமிழில் ஒரு படம் கூட சொந்தமாக இசைக்கா விட்டாலும், மலையாளத்தில் தீவிர இசை ரசிகர்களை தீவிரமாக கவர்ந்து போற்ற படுபவர். இவரின் நூறு பாடல்களும் மலையாள தேசத்து பிரத்யேக மண்ணிசை சாதனை சரித்திரம்.

புகழேந்தியும் ,இவரும் ரொம்ப நெருக்கம். அவரிடம் சொல்வாராம் ,நாம ஜெயிக்காட்டாலும்,நம்ம பசங்க ஜெயிப்பாங்க.திலீப் ஜெயித்த பிறகு தன் தந்தையை நினைத்ததை விட காதன் ஹசரி போன்றவர்களை நினைத்தது , ஹூம்.... என்ன சொல்ல? ராஜகோபாலும்,குலசேகரனும் கல்லறையில் சுழன்றிருப்பார்கள்.

RAGHAVENDRA
17th April 2016, 06:45 AM
மது
ரொம்ப ரொம்ப நன்றி. காதில் வைத்துக் கேட்கும் பொழுது ஒரு சில வார்த்தைகள் தவறாக கேட்டு எழுதியிருக்கிறேன். போலும். பிழை திருத்தி சரியான வரிகளைத் தந்தமைக்கு உள்ளபடியே உளமார்ந்த நன்றி.

சரியான வரிகளைப் படிக்கும் போது தான் பாடலின் பரிமாணம் முழுமையாகத் தெரிகிறது.

RAGHAVENDRA
17th April 2016, 06:50 AM
கோபால்
ஆர்.கே. சேகர் எ குலசேகர் தமிழில் தனியாக இசையமைத்து ஓரிரு படங்கள் உள்ளன. கிராமஃபோன் ரிக்கார்டுகள் பார்த்த ஞாபகம். அதில் இந்தப் பாடல் இடம் பெற்ற படமும் இன்னும் ஓரிரு படங்களும் உள்ளன.

வி.குமாரைப் பொறுத்த மட்டில் குணசிங்கும் சேகரும் இல்லையென்றால் இந்த அளவிற்கு அவரால் வந்திருக்க முடியாது. எம்.எஸ்.வி.க்கு கோவர்தன் போல குமாருக்கு குணசிங். துரதிருஷ்டவசமாக அதிகம் வெளியே அறியப்படாமலே இருந்து விட்டார். சங்கு புஷ்பங்கள் படம் என்றும் குணசிங்கின் பெயர் சொல்லும்.

RAGHAVENDRA
17th April 2016, 06:51 AM
வாசு சார்
இனிமேல் கடிகாரத்தில் காலை 10 மணியானால் போதும் அந்தக் காலம் மீண்டும் நினைவுக்கு வரும் அளவிற்கு எழுதி அசத்தி விட்டீர்கள்.
எப்படிப் பாராட்டுவது..
யூ ஆர் கிரேட்

RAGHAVENDRA
17th April 2016, 06:55 AM
மிகப் பெரும்பாலான காலைக் காட்சிகளில் நான் பார்த்தது நடிகர் திலகத்தின் படங்கள் மட்டுமே. அது மட்டுமின்றி காலைக் காட்சிகளில் சென்னை நகரைப் பொறுத்த மட்டில் டப்பிங் படங்கள் அதிகம் போட மாட்டார்கள். பழைய தமிழ்ப்படங்கள் மட்டுமே. அதனால் இந்தப் படங்களின் பெயர்களெல்லாம் கேள்விப்பட்டதுண்டே தவிர பார்க்கும் வாய்ப்பு ...ம்ஹ்ம்... கிடைக்கவேயில்லை...ஒரு சில மட்டும் ரெகுலர் ஷோவில் வெளியாகும். அசல் தமிழ்ப்படங்களைப் பார்ப்பதற்கே முன்னுரிமை கொடுத்துப் பழகிவிட்ட காரணத்தால் மேற்கூறிய படங்களெல்லாம் பெயரோடு நெஞ்சில் நிலைத்து விட்டன. பார்ப்பதற்கு மனம் செல்லவில்லை..

Gopal.s
17th April 2016, 07:27 AM
வாசு சார்
இனிமேல் கடிகாரத்தில் காலை 10 மணியானால் போதும் அந்தக் காலம் மீண்டும் நினைவுக்கு வரும் அளவிற்கு எழுதி அசத்தி விட்டீர்கள்.
எப்படிப் பாராட்டுவது..
யூ ஆர் கிரேட்

வாசு,

சொன்னால் நம்புவாயோ என்னவோ, ராகவேந்தர் டென்ட் கொட்டாய் என்று ஒன்று ஆரம்பித்ததாய் ஞாபகம்.(இவர் ஆரம்பித்து தபேலென்று விட்டு விட்ட திரிகளின் புள்ளி விவர கணக்கை வைக்க இனி ஒரு பிலிம் நியூஸ் ஆனந்தன் பிறந்து வந்தால் மட்டுமே சாத்தியம்)

அதில் எழுத நினைத்தவை இந்த பத்து மணி காட்சிகள். நெய்வேலி அமராவதி திரையரங்கில் ,மாதம் இரு சனி ,ஞாயிறுகளில் ஆங்கில படங்கள்.(கன்ஸ் ஆப் நவரான்,டோரா டோரா டோரா,கிளியோ பாத்ரா போன்று).மீண்ட இரு சனி,ஞாயிரு நம் டப்பிங் படங்கள். கான்வென்டில் படித்த பொறியியலாள தந்தை(தாத்தா ,அப்பா,நான் எல்லோருமே கிண்டி பொறியியல் கூடமே) ஆங்கில படங்களையும்,என்.எல்.சி பாய்ஸ் ஹை ஸ்கூல் ,திடீர் குப்ப நண்பர்களை கொண்ட தனயன் டப்பிங் படங்களையும்தேர்வு செய்தது இயற்கையே. நானும் என் தந்தை வழியில் ஆரம்பம் முதல் சென்றிருந்தால்,இந்த திரி நல்ல சில எழுத்துக்களை இழக்க நேர்ந்திருக்கலாம்.

நிற்க, எனது டப்பிங் தேர்வுகள். மாய மோதிரம்(இந்தா இந்தா எடுத்துக்கோ),கப்பல் தீவு காதல் ராணிகள்,மாய மன்னன்,பல்லவ செல்வங்கள்,கோவாவில் சி.ஐ.டி 999(லட்சுமி நீச்சல் உடையில்),
நைட் கிளப் மோகினி (நான் குளு குளு தாரகை),அவளோட ராவுகள் (எல்பின்ஸ்டன்),சத்திரதண்டே ஒரு ராத்திரி (பெருத்த ஏமாற்றம்),மழு (மாமனாரின் இன்ப வெறி),தூமம் (இண்டர்வல் முடிந்து ஐந்து நிமிட சொர்க்க காட்சிகள்),நடுவில் சுதேசி கொள்கைக்காக ஜம்பு (சென்சாரின் கண்ணில் மண் பரங்கி மலை ஜோதி),ஆடதண்டே அலசா (என் வீடு எங்கே தெரியுமா ,நேரா போனா ரெண்டு மலை ,ஒரு பால் கடை, அதையும் தாண்டினா சின்ன பள்ளம், அதையும் தாண்டினா காட்டிற்கு நடுவில் பெரிய பள்ளம்,தங்குவதற்கு வா) ,தேவிகாவின் நிஜமு செப்பிதே நம்மரு, சுஜாதாவின் 60 நம்பூதிரிகளை பழி வாங்கும் வீர வரலாறு, சாவித்திரி அம்மாவாக ,சுஜாதா மகளாக ஒரு மலையாள படம்.

80 வாக்கில் டெக் வந்து விட்டதால் ,பேசாத, நல்ல பின்னணி இசை கொண்ட (ஒ யா , ஹாங் ,ஹாங் ,ஆஆஆஆஒ, டக் டக் டக் ,ஆங்கிலம் பக்கம் திரும்பி விட்டாலும், 90 களில் அறுபது நாடுகளிலும் அவர்கள் கலாசார பெருமை அறிய ஒவ்வொரு நாட்டு படங்களையும் தேர்வு செய்து ,கண்டு களித்து ,உண்டு,உயிர்த்து ,உற்றறிந்தேன்.

Gopal.s
17th April 2016, 07:42 AM
காலம் எனக்கொரு பாட்டெழுதும் போன்ற பாடல்கள் ,மலையாள ரசிகர்களின் போற்றுதலுக்குரிய மெட்டுக்கள்.

ஞாபகம் இருக்கா ,தேவராஜன் மாஸ்டர் இதே அடித்தளம் கொண்ட இசையில் ,டி.எம்.எஸ் ஐ வைத்து கொடுத்த துலாபார சிரிப்போ,இல்லை நடிப்போ ? எனது பிடித்தங்களில் ஒன்று.

vasudevan31355
17th April 2016, 07:45 AM
கோ,

நீங்கள் குறிப்பிட்ட திலீபின் பெருமைப்படக் கூடிய தந்தையார் ராஜகோபால குலசேகரா இவர்தானே! சலீல், தேவராஜன் மாஸ்டர் இவர்களிடமும் பணி புரிந்தவர்.

http://1.bp.blogspot.com/-rJa8uFf3XNI/ThDTc2EyryI/AAAAAAAAACA/KgJStIuus5g/s1600/ar+rehman%2527s+father2.JPG

https://rahmaniac.files.wordpress.com/2009/04/rk-sekhar.jpg?w=510

http://speechable.s3.amazonaws.com/images/88d5p1em.png

https://rahmaniac.files.wordpress.com/2009/04/boss-11931.jpg

vasudevan31355
17th April 2016, 07:57 AM
காலம் எனக்கொரு பாட்டெழுதும் போன்ற பாடல்கள் ,மலையாள ரசிகர்களின் போற்றுதலுக்குரிய மெட்டுக்கள்.

ஞாபகம் இருக்கா ,தேவராஜன் மாஸ்டர் இதே அடித்தளம் கொண்ட இசையில் ,டி.எம்.எஸ் ஐ வைத்து கொடுத்த துலாபார சிரிப்போ,இல்லை நடிப்போ ? எனது பிடித்தங்களில் ஒன்று.

ஏற்கனவே எழுதியது நினைவுக்கு வந்தது கோ.

இன்றைய ஸ்பெஷல் (61)

நேற்றைய விடுமுறைக்கும் சேர்த்து 'இன்றைய ஸ்பெஷலி'ல் ஓர் அருமையான பாடலைப் பார்க்கப் போகிறீர்கள்.

உங்களுக்கு மனது சரியில்லையா? சோகமாய் இருப்பது போல் உணருகிறீர்களா? போரடிக்கிறதா? உறசாகம் குறைந்து களையிழந்து காணப்படுகிறீர்களா?

கவலையே படாதீர்கள்.

இன்றைய இந்தப் பாடலை 'புக்மார்க்' செய்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும் போது 'கிளிக்'குங்கள். கரை புரண்ட உற்சாக வெள்ளம் உங்களை சூழ ஆரம்பிப்பதை நீங்கள் உணரலாம்.

நான் மிக மிக அனுபவித்து ரசித்து ரசித்து எழுதிய பதிவு இது. 'இன்றைய ஸ்பெஷலி'ல் மிக மிக சந்தோஷமாக நான் இட்ட பதிவும் கூட.

படம்: துலாபாரம்

மூலக்கதை: தோப்பில் பாஸி

வசனம்: 'சவாலே சமாளி' புகழ் 'மல்லியம்' ராஜகோபால்.

இசை: தேவராஜன்

ஒளிப்பதிவு: நம்முடைய பி.என்.சுந்தரம்.

தயாரிப்பு: ராமண்ணா

இயக்கம்: வின்சென்ட்

'துலாபாரம்' படத்தில் டேம் பிக்னிக் செல்லும் கல்லூரி மாணவ மாணவிகள். இளமை பொங்கத் துள்ளும் கல்லூரி மாணவன் 'நவரசத் திலகம்' முத்துராமன். படு கியூட்டாக. இதுவரை எந்தப் படத்திலும் பார்த்திராத வகையில் படு ஸ்டைலாக, உற்சாகம் கரைபுரண்டோட செம ஜோர் அண்ணாச்சி. அருமையாக 'tuck in' செய்யப்பட்ட சிறுசிறு கட்டங்கள் அடங்கிய கைகள் மடித்துவிடப்பட்ட செக்டு ஷர்ட். அதற்கு தோதாக 'நச்'சென்று பொருந்தும் வகையில் பிளிட் வைத்து தைக்கப்பட்ட டைட் பேன்ட். பேண்டின் சைடு பாக்கெட்டுகள் இரண்டும் விரிந்து கொடுத்து கொள்ளை அழகாக இருக்கும் முத்துராமனுக்கு. முத்துராமன் அதைவிட அருமையான அழகாக, படு ஸ்லிம்மாக, கல்லூரி மாணவனைப் போல் இருப்பார் இந்தப் பாடலில்.

கண்களை கசக்கி கசக்கிப் பார்த்தேன். முத்துராமனா அது?! அடேங்கப்பா! என்ன ஒரு துள்ளல்! என்ன ஒரு உற்சாகக் கொண்டாட்டம்! என்ன ஒரு சுறுசுறுப்பு! துறுதுறுப்பு! இப்படி இவரைப் பார்ப்பதே அபூர்வம். சிருங்கார ரசம் சொட்ட சொட்ட, ஜாலியாக ஆடிக் கொண்டும் பாடிக்கொண்டும், இளசுகளைக் கலாய்த்துக் கொண்டும் மனிதர் அமர்க்கள அநியாயம் பண்ணி விட்டார் போங்கள். சில இடங்களில் எம்ஜிஆர் அவர்களை ஞாபகப்படுத்தும் விதமாக அவர் ஸ்டைலில் ஆக்ஷன்கள், கை அசைப்புகள் வேறு.

'இளம் கொடிவிட்ட பூவென இடைவிட்ட பூவுக்கு
ஆசையை விரிப்பேனா'

இந்த வரிகள் வரும் இடத்தில் பேண்ட் சைட் பாக்கெட்டுகளின் இரு பக்கங்களிலும் கட்டைவிரல்களால் கிடுக்குப் பிடி பிடித்து, ஸ்டைலாக துள்ளாட்டம் போட்டபடியே ஒரு அருமையான நடை நடப்பார் பாருங்கள் முத்துராமன். நிஜமாகவே அசந்து போவீர்கள். ராஜாங்கம் நடத்துவார் 'நவரசத் திலகம்' அவர்கள். (அப்படியே பின்னாட்களில் அவர் மகன் கார்த்திக் நடப்பது போலவே குறும்பு கொப்பளிப்பதை நன்றாக கவனிக்கலாம்! விதை ஒன்று போட்டால் துரை ஒன்றா முளைக்கும்?) அதே போல பாடலின் இடையிசையின் போது ஓட்டமும், நடையுமாக அவர் நடப்பது இன்னும் அருமை.

கல்லூரி மாணவிகளாக ஊர்வசி சாரதாவும், கட்டழகி காஞ்சனாவும். இணைபிரியா தோழிகளாக இருவரும் கைகளை இணைத்தபடியே.

முத்துராமன் தங்களை சுற்றி சுற்றி வந்து பாடும் போதெலாம் அதுவும் இரட்டை அர்த்தம் தொனிக்க அவர் பாட, அதை தோழியர் இருவரும் புரிந்து கொண்டு வெட்கப்பட்டு ஓடுவதும், திரும்பிக் கொள்வதும் சுகமோ சுகம். 'சிரிப்போ இல்லை நடிப்போ' என்று முத்து பாடும் போதெல்லாம் காஞ்சனாவும் சாரதாவும் 'இல்லை' என்பது போல ஜாலியாக தலையாட்டுமிடம் அப்படியே அள்ளும் சுகம். அதுவும் 'விழிப்போ... வலை விரிப்போ' என்னும் போது காஞ்சனா நாக்கைத் துருத்தி, சற்று வெளியே நீட்டி முத்துவை பழித்துக் காட்டி கேலி செய்யும்போது பார்க்கும் அனைவரும் அம்பேல்! என்ன அழகான பழிகாட்டல்!

'பார்க்கின்ற நெஞ்சுக்கு பால் தருவாள்
என்று பாத்திரம் படைத்தானோ'

என்ற கவிஞனின் பொல்லாக் காம வரிகளின் போது அதைப் புரிந்து கொண்டு காஞ்சனா வெட்கத்துடன் முன்னழகை மறைத்து பின்னழகைக் காட்டி, அதே சமயத்தில் சட்டென்று சாரதாவையும் திருப்பிவிடுவது ரசமான இடம்.

'அந்த பனிமுத்துத் துளிகளைப் பருகிடவே
எனை மாத்திரம் படைத்தானோ'

என்று முத்துராமன் பாடும்போது அதைப் புரிந்து கொண்டு காஞ்சனா சாரதாவிடம் 'பார்த்தியா?' என்பது போல ஒரு பார்வை பார்த்து, பின் வெளியே எதையும் காட்டிக் கொள்ளாமல் பெண்மைக்கே உண்டான வெட்க அமைதி காப்பார். காஞ்சனா கொடிகட்டுவார் இந்தக் காட்சியில்.

இப்பாடலுக்கு அர்த்தம் கேட்டீர்களானால் வண்டி வண்டியாக எழுதலாம். அவ்வளவு அர்த்தங்கள் புதைந்து கிடக்கின்றன இந்தப் பாடலில். காமரசம் சொட்டும் இப்பாடலை சற்றும் விரசமில்லாமல் எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. அதே சமயத்தில் கவிஞனும் பாடகனும், நடித்தவர்களும், இசையமைப்பாளரும் ஒருசேர வெற்றி பெற்ற பாடல் இது.

மலையாள தேவராஜனின் மயக்கும் இசையில் பாடல்கள் அனைத்தும் மாம்பழச் சுவை.

இப்படத்தின் டைட்டில் பாடல் வாழ்விலே மறக்க முடியாத மகோன்னதப் பாடல்.

சாரதாவும், காஞ்சனாவும் 'கல்லூரி' விழாவில் பாடும்

'வாடி தோழி கதாநாயகி'

ஜேசுதாசின் எவர்க்ரீன் பாடல்

'காற்றினிலே பெருங்க காற்றினிலே'

பாடகர் திலகமும், பாடகியர் திலகமும் அருமையாகப் பாடி அமைதியாக நம் கண்களில் நம்மையறியாமலேயே கண்களில் நீரை வரவழைத்த, நம் நெஞ்சில் ஆழ ஊடுருவிய காவியப்பாடல்


'பூஞ்சிட்டுக் கன்னங்கள் பொன்மணி தீபத்தில்
பால் பொங்கல் பொங்குது கண்ணீரிலே'

'சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப் புலவர் காத்த தமிழ்'

என்று நம் மனதில் ஆழமாய் ஊறிவிட்ட பாடல்கள்.

இன்னொன்று.'ஊர்வசி' விருது என்றாலே சாரதாதான் என்று உடனே நாம் நினைக்குமளவிற்கு மலையாளத்திலேயும்,தமிழிலேயும் 'துலாபாரத்'தில் அருமையாக நடித்து சிறந்த தேசிய நடிகை விருது
பெற்ற, நடிகர் திலகம் தமிழில் நாயகியாக 'குங்கும'த்தில் அறிமுகப்படுத்திய சாரதாவை மறக்க முடியுமா?

சரி! 'இன்றைய ஸ்பெஷல்' பாடலுக்கு வந்து விடுவோம்.

பாடகர் திலகத்தின் பட்டை கிளப்பும் 'கணீர்'க் குரலில்,

இனி பாடலின் வரிகள்

சிரிப்போ இல்லை நடிப்போ
இது சிங்காரப் பொன்னூஞ்சல் அழைப்போ
விழிப்போ வலை விரிப்போ
எனை விருந்து பருகச் சொல்லும் துடிப்போ

சிரிப்போ இல்லை நடிப்போ
இது சிங்காரப் பொன்னூஞ்சல் அழைப்போ
விழிப்போ வலை விரிப்போ
எனை விருந்து பருகச் சொல்லும் துடிப்போ
சிரிப்போ ஹோஹோஹோஹஹோ

கோபுரக் கலசத்தைக் கூந்தலில் மறைக்கும்
கோலத்தை ரசிப்பேனா
கோபுரக் கலசத்தைக் கூந்தலில் மறைக்கும்
கோலத்தை ரசிப்பேனா
இளம் கொடிவிட்ட பூவென இடைவிட்ட பூவுக்கு
ஆசையை விரிப்பேனா
இளம் கொடிவிட்ட பூவென இடைவிட்ட பூவுக்கு
ஆசையை விரிப்பேனா
அந்த ஆற்றினில் மிதப்பேனா
ஆ....ற்றினில் மிதப்பேனா

சிரிப்போ இல்லை நடிப்போ
இது சிங்காரப் பொன்னூஞ்சல் அழைப்போ
விழிப்போ வலை விரிப்போ
எனை விருந்து பருகச் சொல்லும் துடிப்போ
சிரிப்போ ஹோஹோஹோஹஹோ

ஊர்வலம் போகின்ற தேவியர் மேனியை
நான் வலம் வருவேனா
ஊர்வலம் போகின்ற தேவியர் மேனியை
நான் வலம் வருவேனா
அவர் ஒரு பக்க ஜாடையை கலைவட்ட மேடையை
ஓவியம் வரைவேனா
அவர் ஒரு பக்க ஜாடையை கலைவட்ட மேடையை
ஓவியம் வரைவேனா
அதில் என் உள்ளத்தை வரைவேனா
உள்...ளத்தை வரைவேனா

சிரிப்போ இல்லை நடிப்போ
இது சிங்காரப் பொன்னூஞ்சல் அழைப்போ
விழிப்போ வலை விரிப்போ
எனை விருந்து பருகச் சொல்லும் துடிப்போ
சிரிப்போ....ஹோஹோஹோஹோ

பார்க்கின்ற நெஞ்சுக்கு பால் தருவாள்
என்று பாத்திரம் படைத்தானோ
பார்க்கின்ற நெஞ்சுக்கு பால் தருவாள்
என்று பாத்திரம் படைத்தானோ
அந்த பனிமுத்துத் துளிகளைப் பருகிடவே
எனை மாத்திரம் படைத்தானோ
அந்த பனிமுத்துத் துளிகளைப் பருகிடவே
எனை மாத்திரம் படைத்தானோ
இதுதான் வாழ்க்கை என்றுரைத்தானோ
வா...ழ்க்கை என்றுரைத்தானோ

சிரிப்போ இல்லை நடிப்போ
இது சிங்காரப் பொன்னூஞ்சல் அழைப்போ
விழிப்போ வலை விரிப்போ
எனை விருந்து பருகச் சொல்லும் துடிப்போ

ஹஹ்ஹஹ்ஹஹ்ஹ ஹோ.


https://youtu.be/k92VcSvmkt8

Gopal.s
17th April 2016, 08:12 AM
திருச்சியில் நான் படித்த (.p .u .c )ஒரு வருடம்(1974-1975),திருச்சி ராஜா திரையரங்கில் 30 சிவாஜி படம் காலை காட்சி பார்த்துள்ளேன். (நண்பன் ராஜா குண சிங் உடன்.பஞ்சாபி அல்ல திருநெல்வேலி பாத்திரக்கடை நாடார்)அருணோதயம்,தங்கைக்காக,எங்க ஊர் ராஜா, வளர்பிறை,பார்த்தால் பசி தீரும்,தங்க மலை ரகசியம் இப்படி சில)

அருணோதயம் பார்த்து வெறுத்து போனேன். சிவாஜி-சரோஜாதேவி,மதுரை திருமாறன் ,கே.வீ.மகாதேவன் இப்படி பல திறமைசாலிகள் உழைப்பு வீண். சிவாஜி கொள்ளை அழகு. திராவிட மன்மதனின் அழகு பொற்காலம். (1968-1974)1971 இல் இருதுருவம்,தங்கைக்காக,அருணோதயம் ,குலமா குணமா(ஓடி விட்டதால் மன்னிக்கலாம்),பிராப்தம் என்று அவர் அழகின் வீரியத்தை வீணடித்த படங்கள். சி.வீ.ஆர் வாழ்க. சுமதி என் சுந்தரி வந்து அழகு கோட்டையை கொடி நாட்ட வைத்தது. தொடர்ந்த சவாலே சமாளியில் வேட்டி கட்டிய திராவிட மன்மதனை ஆயுட்காலம் முழுதும் கண் கொட்டாமல் ரசிக்கலாம். வேட்டிக்கே ஒரு தனி களை வந்து விடும்.(சங்கு மார்க் லுங்கிகளுக்கு எங்க மாமா, பைசன் பனியன்களுக்கு ஊட்டி வரை உறவு)

அருணோதயத்தின் ஆச்சர்யங்களில் ஒன்று. தங்கை கணவனை திருத்த திட்டமிட்டு (கொக்கு தலையில் வெண்ணை-உபயம் முக்தா சூத்திரம்) தன்னுடைய பெயரை கெடுத்து கொண்டு ,உலகம் தன்னை பழிக்கிறதே என்ற கதாநாயக புலம்பல்.(தண்ணி பாம்புக்காக படம் முழுதும் மகுடி)

Gopal.s
17th April 2016, 08:17 AM
வாசு,

எப்படி ரஜினியின் அத்தனை படங்களின் நடிப்பும் ,உத்தம புத்திரன் விக்ரம்,நவராத்திரி டீ .ஐ.ஜி ,எங்கள் தங்க ராஜா பைரவனிடம் மையம் கொண்டே இயங்குகிறதோ , அதே போல கார்த்திக்கின் அத்தனை படங்களின் ஈர்ப்பு நடிப்பும் முத்துராமனின் துலாபாரம்,உறவு சொல்ல ஒருவன் (ஹை கவிதா, ஹ ஆங்)நடிப்பை மையம் கொண்டது.

vasudevan31355
17th April 2016, 08:27 AM
//நடுவில் சுதேசி கொள்கைக்காக ஜம்பு//

வாழ்க சுதேசி:)

//நானும் என் தந்தை வழியில் ஆரம்பம் முதல் சென்றிருந்தால்,இந்த திரி நல்ல சில எழுத்துக்களை இழக்க நேர்ந்திருக்கலாம்.//

அதானே பார்த்தேன்... ம்...இருந்தாலும் உண்மை. என்ன செய்து தொலைக்க.:)

//சத்திரதண்டே ஒரு ராத்திரி (பெருத்த ஏமாற்றம்)//

எனக்கும்தான். ஆனால் மஞ்சுபார்கவியும், சின்ன அம்பிகாவும் வரும் ஒரு காட்சி நினைவிருக்கா?:) சங்கரன் நாயர் மேல் சலிப்பு ஏற்பட்டது உண்மை.

//(சென்சாரின் கண்ணில் மண் பரங்கி மலை ஜோதி)//

'சென்சாரின் கண்களில் பரங்கிமலை' என்றே படிக்கிறேன்.

//சுஜாதாவின் 60 நம்பூதிரிகளை பழி வாங்கும் வீர வரலாறு//

படம் பெயர் 'பிரஷ்து'

//சாவித்திரி அம்மாவாக ,சுஜாதா மகளாக ஒரு மலையாள படம்.//

'சுழி'

https://i.ytimg.com/vi/bd5I-qki_0Q/hqdefault.jpg

சாவித்திரியின் குலம் கெடுக்க வந்த படம். குடிகார, வயதான, முகமெல்லாம் ஊதிப் போன, சாவித்திரி. படத்திலும். சாவித்திரி அதிக சம்பளம் வாங்கிய படமும் கூட. சாவித்திரியின் வறுமையை சாமர்த்தியமாக பயன்படுத்திக் கொண்டது மலையாள பட உலகம். ஜெமினியின் வேண்டுகோளையும், கட்டளையையும் நிராகரித்து சாவித்திரி நைட் கவுனில் விரகதாபம் பொங்க நடித்தார். 'சுழி' சும்மா இருந்தாதானே! நிஜமாகவே அதிர்ச்சி. ஆனால் சகிக்காது.

நீங்கள் விட்டுவிட்ட ஒரு ஆங்கிலம் சொல்கிறேன். மொழிமாற்றுதான்.

'It is hot in paradise'. (Orijinal டைட்டில் 'Spider Island') தமிழில் டைட்டில் என்ன தெரியுமா?

'சொர்க்கத்தில் சூடான சுந்தரிகள்'. ஞாபகம் வருதா?:)

http://s3.amazonaws.com/auteurs_production/images/film/horrors-of-spider-island/w448/horrors-of-spider-island.jpg

'சுந்தரிகள் எங்கே'? என்று சின்னா கேட்காமல் இருக்க மாட்டார். ஆனால் போட்டால் தாங்க மாட்டார்.:)

Gopal.s
17th April 2016, 08:30 AM
ராமண்ணா விற்கு ,வின்சென்டுக்கு ,டி.எம்.எஸ் ஓபன் வாய்ஸ் க்கு முத்துராமன் வாயசைத்து நடித்த விதம் பிடிக்கவில்லையாம். தங்க சுரங்கம் கட்டழகு பாப்பாவை காட்டி அவரை நடிக்க வைத்ததாய்,ராமண்ணா விடம் இந்த பாடலை சுட்டி நான் சொன்ன போது (சிரிப்போ) அவர் என்னிடம் சொன்னது. இது நடந்தது என்னை போல் ஒருவன் படத்தின் ஜெமினி லேப் பிரத்யேக காட்சியில்.

vasudevan31355
17th April 2016, 08:40 AM
வாசு,

எப்படி ரஜினியின் அத்தனை படங்களின் நடிப்பும் ,உத்தம புத்திரன் விக்ரம்,நவராத்திரி டீ .ஐ.ஜி ,எங்கள் தங்க ராஜா பைரவனிடம் மையம் கொண்டே இயங்குகிறதோ , அதே போல கார்த்திக்கின் அத்தனை படங்களின் ஈர்ப்பு நடிப்பும் முத்துராமனின் துலாபாரம்,உறவு சொல்ல ஒருவன் (ஹை கவிதா, ஹ ஆங்)நடிப்பை மையம் கொண்டது.

நூறு சதம் உண்மை. (ரங்கதுரை வாத்தியார் ராமசாமியிடம் சுருளி போடும் 'ஜல் ஜங்க்' பட்டம் கிடைத்தாலும் பரவாயில்லை).:) அதுவும் 'துலாபாரம்' அருமையோ அருமை.

Gopal.s
17th April 2016, 08:46 AM
அறுபதுகளின் பிற்பகுதிகளில், மூவேந்தர்கள்,கலையுலக இளவரசன் தவிர்த்த படங்களில் எனக்கு நிறைய ஆச்சயம் தந்தவர் குமார். இவரின் வெகுளி பெண்ணில் டி.எம்.எஸ் இன் எங்கெல்லாம் வளையோசை, எனக்கு சிரிப்போ அளவிற்கு பிடித்தம்.

இதே வெகுளி பெண்ணில் ,மது அண்ணா ஒரு அற்புத ராட்ஷஷி பாடலை குறித்துள்ளார் .

RAGHAVENDRA
17th April 2016, 08:54 AM
சொன்னால் நம்புவாயோ என்னவோ, ராகவேந்தர் டென்ட் கொட்டாய் என்று ஒன்று ஆரம்பித்ததாய் ஞாபகம்.(இவர் ஆரம்பித்து தபேலென்று விட்டு விட்ட திரிகளின் புள்ளி விவர கணக்கை வைக்க இனி ஒரு பிலிம் நியூஸ் ஆனந்தன் பிறந்து வந்தால் மட்டுமே சாத்தியம்)

எந்தத் திரியுமே நமக்கு எப்போது வேண்டுமோ அப்போது பதிவு செய்து கொள்ளலாம் என்கிற சௌகரியத்திற்காகத் தான். இதற்கு வரையறை ஏதுமில்லை. அதனால் தொங்கலில் விடவுமில்லை. அப்படியே தொங்கல் என்று வைத்தாலும் கூட எப்போது வேண்டுமானாலும் பிடித்துக் கொண்டு ஏறுவதற்கோ இறங்குவதற்கோ பயன்படுமல்லவா.

இன்னும் சொல்லப்போனால் இந்தக் காலைக்காட்சி தொடர் கீற்றுக்கொட்டகைத் திரிக்காகவே வாசு எழுதியது போல் அமைந்துள்ளது. இதை அதிலும் பதிவிட அவரிடம் நான் வேண்டுகிறேன்.

Gopal.s
17th April 2016, 08:55 AM
எஸ்.வீ,

அந்த திரிக்கு மட்டுமே உரியதை அங்கு விட்டு விட்டு,எங்களுடன் பொது ஜோதியில் இணையுங்கள் ,ஜமாய்க்கலாம்.எங்களை துளி கூட கவராத மூன்றெழுத்தை திணிக்காமல், நண்பராக வந்தால் ,உங்கள் பங்கெடுப்பு மெருகேறும்.

vasudevan31355
17th April 2016, 09:24 AM
எந்தத் திரியுமே நமக்கு எப்போது வேண்டுமோ அப்போது பதிவு செய்து கொள்ளலாம் என்கிற சௌகரியத்திற்காகத் தான். இதற்கு வரையறை ஏதுமில்லை. அதனால் தொங்கலில் விடவுமில்லை. அப்படியே தொங்கல் என்று வைத்தாலும் கூட எப்போது வேண்டுமானாலும் பிடித்துக் கொண்டு ஏறுவதற்கோ இறங்குவதற்கோ பயன்படுமல்லவா.

இன்னும் சொல்லப்போனால் இந்தக் காலைக்காட்சி தொடர் கீற்றுக்கொட்டகைத் திரிக்காகவே வாசு எழுதியது போல் அமைந்துள்ளது. இதை அதிலும் பதிவிட அவரிடம் நான் வேண்டுகிறேன்.

நிச்சயமாக ராகவேந்திரன் சார். கண்டிப்பாகப் பதிவிடுகிறேன்.

vasudevan31355
17th April 2016, 09:40 AM
மது அண்ணா!

'ஊமைப் பெண்ணை பேசச் சொன்னால் உறவோ' என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் அர்த்தம் ஒட்டவில்லை. சரியாக ஆதிராம் சார் 'ஊமைப் பெண்ணை பேசச் சொன்ன உறவோ' என்று தன்னுடைய பதில் பதிவில் அழகாக குறிப்பிட்டிருந்தார். அப்புறம் காதுகளை தீட்டி வைத்துக் கொண்டு 'சொன்ன' வார்த்தையை உணர்ந்தேன். சிலது மனதில் பதிந்தால் அவ்வளவு எளிதாக மாறுவேனா என்கிறது. நீங்களும் அதை அழகாக, அதுவும் முழுப் பாடல் வரிகளையும் அளித்து ஊர்ஜிதப்படுத்தி விட்டீர்கள். நன்றி அண்ணா!

ஆதிராம் சாருக்கும் மிக்க நன்றி!.

vasudevan31355
17th April 2016, 09:41 AM
பதித்து விட்டேன் ராகவேந்திரன் சார்.

vasudevan31355
17th April 2016, 09:44 AM
அத்தனை பேர் பங்களிப்பிலும் 'மதுர கானங்கள்' அற்புதமாய் பரிமளிக்கிறது. அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி!

vasudevan31355
17th April 2016, 09:59 AM
வெகுளிப்பெண் 'வெண்ணிற ஆடை நிர்மலா'விடம் 'வெண்ணிற ஆடை...வெண்ணிற ஆடை சின்னக்கா...மின்னற மின்னும் பின்னற பின்னும் என்னக்கா!' பாடும் குரல் யாருது?

vasudevan31355
17th April 2016, 10:05 AM
மதுண்ணா முன்னம் பதிவிட்ட 'தித்திக்கின்றதா முத்தமிட்டது' நிரம்ப வித்தியாசம். தித்தித்துக் கொண்டேதான் இருக்கிறது. ஜமுனாராணியா அது? அடி சக்கை. என்னா ஒரு போதை! குமார் எங்கயோ போய்விட்டார். பாடலில் இளமை மாறா புதுமை வரிக்கு வரி தெரிகிறது.

RAGHAVENDRA
17th April 2016, 10:15 AM
மிக்க நன்றி வாசு சார்

madhu
17th April 2016, 10:17 AM
வாசுஜி... தித்திக்கின்ற பாடலில் ஜமுனா ராணியுடன் சுவர்ணாவும் பாடி இருக்காராமில்ல.. ?

கோபால் ஜியின் பத்துமணி படப் பதிவுகள் இன்னும் பல பட டிரெயிலர்களை மனசுக்குள் ஒட்டுதே !

chinnakkannan
17th April 2016, 10:20 AM
இது என்ன ஒரு நாள் ராத்திரியிலேயே மூன்று பக்கங்களா..பேஷ் பேஷ்..திருஷ்டி சுற்றிப் போட வேண்டும்

காலம் எனக்கொரு பாட்டெழுதும் ஏ.ஆர் ரஹ்மானின் தந்தை சேகர் என எனக்குத் தெரியாது.. தாங்க்ஸ் மதுண்ணா..

சொ சூ சு.. ஐ திங்க் பரமேஸ்வரி போஸ்டரில் பார்த்த நினைவு.. English title Its hot in paradise என்பதுபோல் வரும்..இஸிண்ட் இட்.. :)

ஊமைப் பெண்ணை ப் பேசச்சொன்னால்.. கேட்ட போது எனக்கும் கொஞ்சம் இடித்தது லிரிக்ஸ்..பின் எழுதலாம் என இருந்தேன் மதுண்ணா எழுதிவிட்டார்.. தாங்க்ஸ்..

கோ அஸ்யூஸ்வல் குட் கலக்குங்கள்..

chinnakkannan
17th April 2016, 10:40 AM
காலையில் மனதிற்குள் வந்த பாடல்.. டி.எம்.எஸ் பி.எஸ்.. ஈவ்னிங்க் வீட் போய்ப் பார்கக்ணும்..மாய்ந்து மாய்ந்துபாதி ஆங்கிலத்தை தமிழ் ப்படுத்தி எழுதினால்..பின் ஏற்கெனவே வேறு ஒரு சைட்டில் இருக்க வெறுத் போனேன்.. அழகிய பாட் ..பட் ந.திக்குக் கொடுத்திருக்கலாம்..ஐ திங்க் ராகவேந்தர் சாரும் சொன்ன நினைவு..



உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணா
சொல்லால் சொன்னால் அதில் சுவையில்லை கண்ணா கண்ணா..

கன்னத்துக்குள்ளே கனிந்திருப்பது ஆயிரம் கண்ணே
கண்ணால் அதைக் கண்டால் மட்டும் சுகமில்லை கண்ணே

அல்லிப்பூவை ப் போலிருக்கும் அழகிய மேனி
நான் அங்கு வந்து தேனெடுத்துப் பாடிடும் தேனி

இங்கு போதை கொண்டு ஜாடை காட்டும்
மலையினில் ஏறி
நான் பொய்கை மீது தாவிடுவேன்
உன் பெயர் கூறி

வாழை தோட்டம் போட்டது போல்
கால்கள் இரண்டு
அதை வட்டம் போட்டு வருவதென்ன
கண்கள் இரண்டு
நல்ல பாலும் தேனும் பெண் வடிவில்
ஒன்று திரண்டு
உன்னைப் பருக சொல்லி உருகியதோ
அருகினில் வந்து

மெல்ல மெல்ல கண்ணை மூடி
திறந்திட வேண்டும்
கதை சொல்லச் சொல்ல இதழ் இரண்டும்
சிவந்திட வேண்டும் (பேய்க் கதையா இருக்குமோ)

சொல்லும் போது பெண்ணை கொஞ்சம்
கவனிக்க வேண்டும்
என்னை தோழி பார்த்து சிரித்திடாமல்
அருள் செய்ய வேண்டும்

*

வெகு நாசூக்கான வரிகள்.. தோழி பார்த்துச் சிரித்திடாமல் அருள் செய்யணுமாம்..பட் அந்தக்காலப் பாட்டுல (?!) என்ன வருதுன்னா..

தலைவியின் அம்மாக்கு டென்ஷன்..என்னபண்றது..ஆசையா வளர்த்த மகள்..கொஞ்சம்கொஞ்சம் ஜாடையாச் சொல்லிடலாம்..மற்றபடி மகளே உன் சமர்த்துத்தான்..காலையில் கல்யாணம் இப்போ இந்தப் பொண்ணு மாப்பிள்ளையோட இருக்கப் போறா.. சரி சந்தோஷமா இருந்தாளா.. மறு நாள் தோழியை அனுப்பிக் கேக்கறா அம்மா..

தோழி வந்து கன்னஞ்சிவந்த அடையாளங்கள் கீறல்கள் சொல்ல அம்மாக்காரி அந்த நகம் மேலும் மேலும் வளரட்டும்னு வாழ்த்தறாளாம்..! அப்படின்னு சங்கப்புலவர் சின்னக்கண்ணனார் சொல்றாராம்.. :)

வளமாய்த் தலைவியின் வாழ்க்கையைச் சொல்லி
நலமே பயக்கும் நகம்

சரி இப்ப பாட் கேட்டுப் பார்க்கலாமா :)

https://youtu.be/DUgmdCmb898

Gopal.s
17th April 2016, 10:45 AM
சின்னா,

இந்த பாடல் திட்டமிட பட்டதல்ல.படம் பார்த்த நடிகர்திலகம்,ரொம்ப சீரியஸ் என்று மக்கள் புறக்கணிக்க வாய்ப்புள்ளதால்,ரிலாக்ஸ் பண்ண இதை வைக்க சொன்னாராம்.

இன்னொரு நடிகருக்கு, தன்னுடைய இணையை விட்டு கொடுத்து காதல் பாடல் வைத்த பெருநதன்மை. இது எஸ்.எஸ்.ஆர் ,டி.வீயில சொன்னது.
என் பிடித்தமும் கூட.

chinnakkannan
17th April 2016, 10:49 AM
ஓ. கோபால்..தாங்க்ஸ் ஃபார் த வாழ்த்துகள் அண்ட் தாங்க்ஸ் ஃபார் த க்விக் ஃபீட் பேக்..

ம்ம்..யா..பெருந்தன்மை தாங்க..யாருக்கும் வராது.. அழகான பாட்

vasudevan31355
17th April 2016, 11:18 AM
சொ சூ சு.. ஐ திங்க் பரமேஸ்வரி போஸ்டரில் பார்த்த நினைவு.. English title Its hot in paradise என்பதுபோல் வரும்..இஸிண்ட் இட்.. :)



சின்னா! போட்டிருக்கேனே! படிக்கலியா?

chinnakkannan
17th April 2016, 11:29 AM
//சின்னா! போட்டிருக்கேனே! படிக்கலியா?// ஃபாஸ்ட் ரீடிங்ல நினைவில் தங்கவில்லைவாஸ்ஸு..சாரி..

chinnakkannan
17th April 2016, 05:39 PM
அந்தப் பக்கம் என்னமோ இடி மின்னல் மழை போலத் தெரியுதே..புகை கூட வருது..ம்ம் அதனால நமக்கென்ன நாம பாட் கேப்போம் :)


எண்ணம்போல கண்ணன் வந்தான் அம்மம்மா ( நான் என்னை ச் சொல்லலை!) :)

சுசீலாம்மாவின் குரல் வெகு இனிமை..


https://youtu.be/LKJ2BTbrIS4

Gopal.s
17th April 2016, 06:33 PM
-deleted with warning-

eehaiupehazij
17th April 2016, 07:29 PM
From GG's Island !

Quite unexpected and energetic dance by GG!!

Thaththakkaa puththakkaa naalu kaalu.....?!

https://www.youtube.com/watch?v=Bkn4OgRcapY

The lyrics of this song has reference in a Vadivelu comedy movie Piraku! enjoy!!

https://www.youtube.com/watch?v=3mWY1B4YTM8

chinnakkannan
17th April 2016, 10:31 PM
கிலுக்காதே கிலுங்குன்ன கிலுக்காம்பெட்டி நின் கிண்கிணி அரண்மனை எவிடே

(கலகலவென சதங்கைச் சரவொலிகளாய் வருகின்ற நங்கையே..உன் கிண்கிணிச் சிரிப்புகளால் ஆக்ரமித்து அழகுறும் அரண்மனை எங்கு உள்ளது)

சிரிக்காத சிரிக்குன்ன சிரிக்கொடுக்கே நின் சித்திரச் சிலம்புகள் எவிடே

சிரிக்காமல் சிரித்துக் கொண்டு சிரிப்பை வழங்கும் ஓவியமே.. உனது அழகிய சித்திர வேலைப்பாடுகள் அமைந்த கொலுசுகள் எங்கே

ஒளிச்சு வச்சு ஞான் ஒளிச்சு வச்சு

அன்பரே அதை நான் ஒளித்து வைத்துவிட்டேன்..

ப்ரியத்ம லயிக்கும் ப்ரேம ரசத்தில் ஒளிச்சு வச்சு ஞான் ஒளிச்சுவச்சு

உனது ப்ரியங்களுடன் கூடிய காதல் ரசத்தில் அந்தக் கொலுசுகளை ஒளித்து வைத்துவிட்டேன்..

**

என்னது அப்புறமா அதெல்லாம்முடியாத்.. இதுக்கு மேல ட்ரான்ஸ்லேஷன் மாதிரி பண்ணிப்பார்க்க த் தெரியலை..

படம் மந்திரக் கொடி பாடியவர்கள் ஜெயச்சந்திரன் பி.சுசீலா நடிப்பு.. பிரேம் நசீர் விஜய ஸ்ரீ..

(வாஸூ விஜய ஸ்ரீ பற்றி அலசும் போது ஈ படத்தை நீர் பேசினிரோ)

அழகானபாடல்..

https://youtu.be/30bIS9Qve9k

அதே படத்தில் இன்னொரு பாடல் சுசீலாம்மா

கதிர் மண்டபமொருக்கி யாமொரு மண்டபமொருக்கி
நானொரு கல்யாண ப் பந்தலொருக்கி

https://youtu.be/BTtagW8_pT0

மந்திரக் கொடி பாடல்கள் தொடரும் :)

chinnakkannan
17th April 2016, 10:33 PM
மந்திரக் கொடி பாடல்கள் தொடர்கிறது

அப்புறம் ..
இங்க பார்ங்க மன்மதன் தமிழ்காரெக்டர்னு தானே நினைச்சோம்..

மலரம்பனெழுதிய மலையாளக் கவிதையாம் விஜயஸ்ரீ.. நான் சொல்லலை
ப்ரேம் நஸீர் சொல்றார்..

https://youtu.be/W9IhWDCLw28


இந்தப் பாட்டைப் போடலைன்னா வாஸு மன்னிக்க மாட்டார்..எல்.ஆர். ராட்சஸி.. நாகப் பாம்பாய் குரல் வளைத்துப் பாடும் பாடல்..

ஆடி வருன்னு ஆடிவருன்னு ஆயிர மாயிர பெள்ர்ணமிகள்..சிஐடி சகுந்தலா மற்றும் ஜெயபாரதி..

https://youtu.be/og3xL18FoOM

சஸ்பென்ஸ் படம் போல இருக்கே.. ப்ரேம் நசீர் சிஐடி வேணு..வல்சலையாக ஸாரி வத்சலையாக விஜய ஸ்ரீ.. கண்ணா நீ எப்ப இந்தப் படம் பார்க்கப்போற…

திடீர்னு தேடிக்கொண்டிருக்கையில் கிட்டிய பாடல்கள்..நன்னா இருக்கா..(போட்டாச் சா?)

Richardsof
18th April 2016, 05:57 AM
one of the musical hit.

https://youtu.be/3GYp_B2J_hI

rajraj
18th April 2016, 07:11 AM
From Dhisai Maariya ParavaigaL

arutjothi dheivam enai aaNdukoNda dheivam........ (preceded by a Sanskrit verse)

http://www.youtube.com/watch?v=QNmUD72zyeY

chinnakkannan
18th April 2016, 10:21 AM
ஒரு நண்பர் வானம்பாடி படத்தில் வரும் ஆண்கவியை வெல்ல வந்த பெண்கவியே வருக பாடலில் வரும் தாதி தூது தீது பாடலின் அர்த்தம் கேட்டார்,, அவருக்கு நான் சொன்ன பதில்:

அனைவருக்கும் புரியறா மாதிரி கண்ண தாசன் எழுதிட்டாரே..

அடிமைத்தூது பயன்படாது கிளிகள் பேசாது
அன்புத் தோழி தூது சென்றால் விரைவில் செல்லாது
தெய்வத்தையே தொழுது நின்றால் பயனிருக்காது
இளம் தேகம் கொண்ட தோழி வாழ இனியது கூறு..

ஆக்சுவலா இது அர்த்தம் இல்லை.. அது என்னான்னு தெரிஞ்சுக்கணும்னா ஹீ ரோட் திஸ்னு ஒரு கேள்விய மன்சுக்குள்ள கேட்டுக்கணும்..

யார் எய்தினா இந்த போயம்..

ஒரு க்ரேட் கவி.. கவிராஜ காள மேகம்பாங்க.. கொஞ்சம் குறும்பும் ஜாஸ்தி அவருக்கு..

அவர்கிட்ட ஒங்களை மாதிரி ஒரு தோஸ்த் போய் “யோவ்... ஓரெழுத்துல ஒரு பாட்டுச் சொல்லுமேன்”னு கேட்டாராம்..
காளமேகம் புன்சிரித்து “பா” என்றாராம்..

இல்லை ஓய்.. அதாவது க கா கி கீ என் ஒரே ஒரு எழுத்து வ்ரிசையினால பாடல்..பாடமுடியுமா உம்மால..
ம்றுபடியும் சிரிப்பு காளமேகமிடம் இருந்து..

சரி நான் பாடுவேன் நீர் அர்த்தம் சொல்லும் எனச் சொல்லி பாடின பாட்டு என்ன தெரியுமா..

தாதிதூ தோதீது
தத்தைதூ தோதாது
தூதிதூ தொத்தித்த
தூததே தாதொத்த
துத்திதத் தாதே
துதித்துத்தேத் தொத்தீது
தித்தித்த தோதித்திதி

கேட்ட நண்பருக்குச் சின்னதாய் தலை, அறை, உலகம் எல்லாம் சுற்ற
மடமடவென வார்ட்ரோபைத்திறந்து சின்னதாய் சோம பானக் குடுவையை
எடுத்து இர்ண்டு பெக் போட்டுக் கொண்டு காளமேகத்திட்ம்..

ஸ்வாமி.. இப்படி எமமைத் துன்புறுத்தலாகுமா” என நாடக நங்கையரைப் போல பணிவாய்ப் பொருள் கேட்டார்..

ஏன்..

இது சும்மா. தூ தூன்னு வெத்தலை போட்டுத்துப்பற மாதிரி எழுதியிருக்கறா மாதிரி எனக்குப் படற மாதிரி இருக்கிறது

எத்தனை மாதிரியயா.. புரிஞ்சுதா இல்லையா

ப்ளீஸ் இதற்கு அர்த்தம் கூறி இந்தாரும் எம் பரிசு இதையும் பெற்றுக் கொள்ளும்..

காளமேகம் சொன்னார்:

தலைவியிடம் சொல்வது போல் அமைந்திருப்பது இந்தப் பாடல்...

தாதி தோழியிடம் தலைவனுக்கு தூது அனுப்பினால் அவளால் ஒழுங்காகச் செய்ய முடியுமா எனச் சொல்ல முடியாது.. தோழியின் நாக்குக் குழறலாம்..
வெட்கப் படலாம்..இன்னும் ஏன் தோழியே தலைவனைக் காதலித்து கதையை +தலைவன் மனதை மாற்றலாம்.. ஸோ தாதி தூது தீது

தத்தை தூது தோதாது - கிளி என்ன பார்க்க நல்லா இருக்கும்.. சேப்பு மூக்கு பச்சை நிறம்.. சொல்றதைத் திருப்பி உன்கிட்ட் தான் சொல்லும்.. தலைவன் கிட்டப் பறந்து போய் அதுக்குச் சொல்லத் தெரியாது.. அது தோதுப் படாது வேஸ்ட்

அப்புறமேல்ட்டுக்கு என்ன.. நீ பாட்டுக்கு தலைவனை நினைத்த படி பஞ்சணையில் புரண்டபடி பாலும் கசந்ததடி சகியே பஞ்சணை நொந்ததடின்னு சொல்லிக்கிட்டிருப்ப.. ஒழுங்கா சாப்பிட மாட்ட..கண்கள் வெறிச்சோடும் உடல் இளைக்கும்..இந்த பிரிவுத்துயரம், ப்ளஸ் பருவத் துயரத்துக்கு ஒரு நோய் வேற பீடிக்குமே..உனக்குத் தெரியாதா பசலை நோய்..

அதுக்கு தலைவியே, நீ இன்னா செய்யணும் தெர்யுமா..

கோவிலுக்கு அல்லது வீட்டிலேயே சாமி கும்பிடு.. ஓ காட், என்னை என்னோட தலைவன்கிட்ட சேர்த்து வை அப்படின்னு ப்ரே பண்ணிக்கிட்டே, கூடவே உன் தலைவனோடஞாபகத்தையும் குவித்து வச்சுரு.. சரியா.. டோண்ட் வொர்ரி..ஆல் வில் பி வெல்..”
இதான் அர்த்தமாம்

சரி தானே

(இதே நாள் 2013 இல் முக நூலில் எழுதியது)

https://youtu.be/8GTpHGuobXo

madhu
18th April 2016, 02:08 PM
தித்தா... ம்ம்.. ச்சட்... சிக்கா..

அது "இளம் தேகம் கொண்ட தோழி வாழ இனியது கூறு.." இல்லே.... இளம் தேமல் கொண்ட கன்னியாக்கும்...

chinnakkannan
18th April 2016, 02:53 PM
இளம் தேமல் கொண்ட கன்னிவாழ இனியது கூறு..அப்படின்னா.. தேமல் நா விட்டமின் டிஃபீஸியன்ஸியோன்னோ.. வீட் போய் பாட் கேட் பாக்கணும்

http://www.tamilsongslyrics123.com/detlyrics/636

chinnakkannan
18th April 2016, 02:56 PM
http://songlyrics.lakshmansruthi.com/song_detail_list.php?&id1=&id=4748&mode=Language&Language=0

இதுல இளம் தேவை கொண்ட கன்னி வாழ இனியது கூறுன்னு போட்டிருக்காங்க :) தமிழிசைல இளம்தேமல்..

madhu
18th April 2016, 05:50 PM
சிக்கா...

http://isaiyarasi.blogspot.in/2008/07/blog-post_2843.html

madhu
18th April 2016, 05:52 PM
சிக்கா...

காதலில் வாடும் பெண்ணின் உடலில் தேமல் படரும் என்பதை வள்ளுவர் கூட பசப்புறு பருவரல் என்ற அதிகாரத்தில் சொல்லி இருக்காரு.. ப்ளீஸ் நோட் த பாயிண்ட்

chinnakkannan
18th April 2016, 08:56 PM
தினம் ஒரு பாவின் பதிலில் இருந்து எடுத்தது..//தெனாலிராமன் படத்தில் இடம்பெற்ற தந்தகாரப் பாடலும் காளமேகம் கொடுத்ததுதான். அந்தப் பாடல்,

தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது
தூதிதூ தொத்தித்த தூததே – தாதொத்த
துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது
தித்தித்த தோதித் திதி

தெனாலிராமன் படத்தில் வரும் இந்தப் பாடலின் ஒலி/ஒளி வடிவம் கிடைக்கவில்லை. மெல்லிசை மன்னர் இசையில் டி.எம்.சௌந்தரராஜன் மிக அழகாகப் பாடியிருப்பார்.

இந்தப் பாடலுக்குப் பொருள்?

தாதிதூ தோதீது – தாதி தூதோ தீது – தாதி(பணிப்பெண்) செல்லும் தூது தீயது
தத்தைதூ தோதாது – தத்தை தூதோதாது – தத்தை தூது ஓதாது – கிளியானது தூதைச் சிறப்பாகச் சென்று ஓதாது
தூதிதூ தொத்தித்த தூததே – தூதி தூது ஒத்தித்த தூததே(தூது அதே) – தோழி செல்லும் தூது தள்ளிப்போடப்பட்டுக் கொண்டேயிருக்கும் தூதாகி விடும்
தாதொத்த துத்தி தத்தாதே – தாது ஒத்த துத்தி தத்தாதே – பூந்தாதை ஒத்த பசலை நிறம் கொண்ட தேமல் என் மேல் படராது
தேதுதித்த தொத்து தீது – தே துதித்த தொத்து தீது – தே(இறைவனை) துதித்துத் தொற்றிக் கொள்வதும் தீதே

அப்போ எதுதான் நல்லது?

தித்தித்த தோதித் திதி – தித்தித்தது ஓதித் திதி – தித்திப்பான காதலன் பெயரையே ஓதிக் கொண்டிருப்பேனாக!

இதுதான் இந்த அழகான பாடலின் விளக்கம்.//

இந்தப் பாட் தெனாலி ராமன் ல தேடிப் பார்த்தேன் கிடைக்கலை..

ஆக இளம் தேமல் என்றால் பசலையா.. அது ஒரு நோயோன்னோ..தேமல் என்பது தோல் நிறத்தில் நடுவே பேட்ச் போல வருவது அன்றோ..ம்ம் என்னமோ போங்க :)

vasudevan31355
18th April 2016, 11:15 PM
சின்னவரே!

சில திருத்தங்கள்.

'தெனாலிராமன்' படத்தில் 'தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது' பாடலை நடிகர் திலகத்துக்காகப் பாடியவர் வி.என்.சுந்தரம் என்று நினைவு. அது டி.எம்.எஸ்.அல்ல.

தாதிதூ தோதீது ---- அடியார்களுடைய தூது தீமையைப் பயப்பது
தத்தை தீதோதாது--- கிளி போய் தூது சொல்லாது
தூதிதோ தொத்தித்த தூததே---தோழியின் தூதானது நாட்கடத்தி வைக்கப்பட்டதாகும்
துதித்ததே தொத்தீது----தெய்வத்தை வழிபட்டுத் தொடர்வது பயன்தராது. வீணாகும்.
தாதொத்த துத்தி தத்தாதே--- முந்தாதி போன்ற தேமல் என் உடல் மேல் பாய்ந்து அதிகப் படாமல்
தித்ததோ தித்திதி-- இனிமையான தலைவன் நாமத்தைச் சொல்லி என்னைக் காப்பாற்றுக.

இதுதான் பொருள். உம் விளக்கமும் இதையொத்துதான் உளது.

இப்படி பொருள் தந்து அருமையாக அறிவிலிக்கும் புரியும்படி விளக்க நடிகர் திலகத்தை விட்டால் வேறு எவருண்டு?

ஆதியும் அந்தமும் எங்களுக்கு அவர்தானே!

madhu
19th April 2016, 04:10 AM
சிக்கா... தாதொத்த என்பதற்கு பூக்களில் உள்ள மகரந்தப் பொடி(தாது) படர்ந்தது போன்ற தோற்றம் கொடுக்கும் தேமல் என்று அர்த்தம் என ஒரு தமிழாசிரியர் சொல்றார்

eehaiupehazij
19th April 2016, 10:01 AM
From the calm waters surrounding Jai's Archipelago!

Monotony breaker!
From The Cow Boy genre D'Jango starring Franco Nero! 1966

Besides Sean Connery's James Bond OO7 , 'Makkal Kalaignar' Jai Sankar was the perfect fit for tamilized cow boy movies replacing Clint Eastwood, Terence Hill and Franco Nero's depictions to suit tamil moods!

https://www.youtube.com/watch?v=Bz7VrgkgMMA

https://www.youtube.com/watch?v=lYF6K1HGKIs

The Clint Eastwood western sphagatti 'For a Few Dollars More' theme music by the greatest composer Ennio Morricone!!

https://www.youtube.com/watch?v=WtblCZQXRsA

adiram
19th April 2016, 10:19 AM
தேமல் என்பதும் பசலை நோய் என்பதும் ஒன்றல்ல. இரண்டுமே தோலின் மீது படர்வதால் ஒன்றென கொள்ளக்கூடாது. தேமல் என்பது நிரந்தரமாக தோலின் மீது படிந்து விடுவது. பசலை என்பது சாம்பல் போன்ற ஒரு படர்க்கை. துணியால் துடைத்தால் நீங்கி விடுவது.

தலைவனைப் பிரிந்த தலைவி தன்மீது படர்ந்த பசலையை ஒருபுறம் துடைத்துக் கொண்டு இருக்கும்போதே மறுபக்கம் பசலை படர்ந்து கொண்டிருந்தது என்பதாக ஒரு இலக்கிய குறிப்பு உண்டு.

chinnakkannan
19th April 2016, 10:21 AM
நன்றி.. நேற்று ஒரு ரைட் அப் எழுதினேன்..கொஞ்சம் குறள் குறுந்தொகை என.. மக்கள்ஸ் ஜொள் பார்ட்டி எனச் சொல்லிவிடுவார்கள் என்ற பயத்தில் நீக்கிவிட்டேன்..பட் ஈவ்னிங்க் படித்து ஓகே என்ப்பட்டால் -எனக்கு - மறுபடி இடுகிறேன்.. :)

chinnakkannan
19th April 2016, 10:22 AM
தேமல் என்பதும் பசலை நோய் என்பதும் ஒன்றல்ல. இரண்டுமே தோலின் மீது படர்வதால் ஒன்றென கொள்ளக்கூடாது. தேமல் என்பது நிரந்தரமாக தோலின் மீது படிந்து விடுவது. பசலை என்பது சாம்பல் போன்ற ஒரு படர்க்கை. துணியால் துடைத்தால் நீங்கி விடுவது.

தலைவனைப் பிரிந்த தலைவி தன்மீது படர்ந்த பசலையை ஒருபுறம் துடைத்துக் கொண்டு இருக்கும்போதே மறுபக்கம் பசலை படர்ந்து கொண்டிருந்தது என்பதாக ஒரு இலக்கிய குறிப்பு உண்டு.

நன்றி ஆதிராம்.. இது பற்றி த் தான் நேற்று எழுதிய போஸ்ட்..இப்போது என்னிடமில்லை ஹோம் பிசியில் உளது.. ஈவ்னிங் வர்றேன்.. பட் பசலை என்பது நோய் என்கிறார்கள் சில இடத்தில் .. படர்ந்த பசலை என ச் சொல்கிறீர்கள்.. மீன்ஸ் அது தோலின் நிறமாற்றம் என்றே நினைக்கிறேன்..இல்லியோ..

chinnakkannan
19th April 2016, 10:24 AM
சிக்கா... தாதொத்த என்பதற்கு பூக்களில் உள்ள மகரந்தப் பொடி(தாது) படர்ந்தது போன்ற தோற்றம் கொடுக்கும் தேமல் என்று அர்த்தம் என ஒரு தமிழாசிரியர் சொல்றார்

மகரந்தப் பொடியின் நிறம் வெளிர் மஞ்சள் தானே அண்ணா..மீன்ஸ் கொஞ்சம் கறுத்தம்மா வாக இருக்கும் தலைவியின் உடலில் இது போல் வந்தால் ஓகே படக்கெனத் தெரியுமில்லியா..ஆனால் அது அப்படி இல்லை என்றே நினைக்கிறேன்..

chinnakkannan
19th April 2016, 10:31 AM
சின்னவரே!

சில திருத்தங்கள்.

'தெனாலிராமன்' படத்தில் 'தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது' பாடலை நடிகர் திலகத்துக்காகப் பாடியவர் வி.என்.சுந்தரம் என்று நினைவு. அது டி.எம்.எஸ்.அல்ல.

தாதிதூ தோதீது ---- அடியார்களுடைய தூது தீமையைப் பயப்பது
தத்தை தீதோதாது--- கிளி போய் தூது சொல்லாது
தூதிதோ தொத்தித்த தூததே---தோழியின் தூதானது நாட்கடத்தி வைக்கப்பட்டதாகும்
துதித்ததே தொத்தீது----தெய்வத்தை வழிபட்டுத் தொடர்வது பயன்தராது. வீணாகும்.
தாதொத்த துத்தி தத்தாதே--- முந்தாதி போன்ற தேமல் என் உடல் மேல் பாய்ந்து அதிகப் படாமல்
தித்ததோ தித்திதி-- இனிமையான தலைவன் நாமத்தைச் சொல்லி என்னைக் காப்பாற்றுக.

இதுதான் பொருள். உம் விளக்கமும் இதையொத்துதான் உளது.

இப்படி பொருள் தந்து அருமையாக அறிவிலிக்கும் புரியும்படி விளக்க நடிகர் திலகத்தை விட்டால் வேறு எவருண்டு?

ஆதியும் அந்தமும் எங்களுக்கு அவர்தானே!

பெரியவரே! :)
முநதாதி போன்ற தேமல் என்றால்.. முற்றிய நிறம் கொண்ட என்று அர்த்தமா..

வாஸ்ஸூ..யூ நோ ஒன் திங்க்.. ட்யூரிங்க் மை காலேஜ் முடித்த டேஸ் ஐ ஹேட் த ஸேம் ப்ராப்ளம் மீன்ஸ் லவ்லாம் இல்லாமலேயே தேமல் வெரி லைட்டா தோளில் வந்தது..

அந்த சமயம் என் சகோதரி அய்யம்பேட்டையில் இருந்தார்கள்..எனில் தஞ்சாவூர் சென்று ஒரு டாக்டரிடம் காண்பித்தோம் (அந்தக்காலத்தில் தஞ்சாவூர் இஸ் பெஸ்ட் ஃபார் டெர்மடாலஜிஸ்ட் என அத்திம்பேர் சொன்னார்) பாஷ் வீடு..ஆனால் டாக்டர் சிம்ப்பிள்..ஜஸ்ட் பார்த்து விட்டு ஏதோ ஒரு க்ரீம் எழுதிக் கொடுக்க அது பத்து ரூபாயோ என்னமோ.. வாங்கி மறுபடி அய்யம்பேட் வந்து இரவில் தோளில் தடவ..கொஞ்சம் செவேல் நிறம் கொண்டது.. பட் சொன்னா நம்ப மாட்டீங்க.. காலையில் பார்த்தால் தேமல் போயே போச்சு இட்ஸ் கான்..

அப்போல்லாம் இந்தப் பசலை நோய் பத்திக் கண்ணாக்குத்தெரியாது.. அந்தக்கால- ச்ங்க கால வைத்தியர்களுக்கும் தெரியாதென்றே நினைக்கிறேன்...:)

madhu
19th April 2016, 12:41 PM
இரவில் தோளில் தடவ..கொஞ்சம் செவேல் நிறம் கொண்டது.. பட் சொன்னா நம்ப மாட்டீங்க.. காலையில் பார்த்தால் தேமல் போயே போச்சு இட்ஸ் கான்..


அதுக்கு சரியான காரணம் தெரிஞ்சு போச்சு.... நீங்க அந்த க்ரீம் பிசுபிசுன்னு இருந்ததால் மறு நாள் நல்லா குளிச்சீங்க.. ( காலேஜ் முடிச்ச டேஸ்-ல வாரம் ஒரு முறை குளியல்தானே ?...ஹெய்..ஹெய்.. உண்மையை சொல்லிடுங்க சிக்கா ? )

நல்ல காவேரித் தண்ணி குளியல் என்பதால் தேமல் கலரில் இருந்த கறை போயே போச்... அதுதான் விஷயம்..

( இப்போ அடி வாங்குமுன் நான் ஜூஊஊஊஊஊட்ட்ட்ட் )

madhu
19th April 2016, 12:50 PM
வாசு ஜி..

ரொம்ப நாளைக்கு முன்னாடி நான் தேடிக் கொண்டு இருப்பதாக சொன்ன ஜெயச்சந்திரன் பாட்டின் வீடியோ இன்னைக்கு யாரோ போஸ்ட் செஞ்சிருக்காங்க

பௌர்ணமி நிலவில் (ssssssnake ) படத்தில் விஜயன்... ( கூட யாருங்கோ ? ).. முழு நிலவு காயும் நேரம்.. தாழை மடல் பூவின் வாசனை

https://www.youtube.com/watch?v=ZLEpVuDGovo

chinnakkannan
19th April 2016, 01:19 PM
ங்க அந்த க்ரீம் பிசுபிசுன்னு இருந்ததால் மறு நாள் நல்லா குளிச்சீங்க.. ( காலேஜ் முடிச்ச டேஸ்-ல வாரம் ஒரு முறை குளியல்தானே ?...ஹெய்..ஹெய்.. உண்மையை சொல்லிடுங்க சிக்கா ? )// அதெப்படி உங்களுக்குத் தெரியும்! :) கண்ணா எந்தக்காலத்துலயும்குளிச்சுட்டு தான் ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடுவானாக்கும்.. பட் அந்த க்ரீம் ஒரே ஒரு தபா தான் தடவிக்கிட்டேங்க.. அப்புறம் அந்த சுவடே காணோம்..இது நாள்வரை என் மனதில் பொதிந்து இருக்கும் விந்தை அது (ஹை என்னே தமிழ்) :)

JamesFague
19th April 2016, 01:38 PM
Mr CK

Is it true that during your college days you are taking bath only once in a week.

chinnakkannan
19th April 2016, 04:55 PM
Mr CK

Is it true that during your college days you are taking bath only once in a week.

S.Vasu ji.. வதந்திகளை நம்பாதீர்கள்.. :)

madhu
19th April 2016, 05:28 PM
S.Vasu ji.. வதந்திகளை நம்பாதீர்கள்.. :)

சிக்கா... வதந்திகளை நம்பக் கூடாதுன்னு சொல்வது சரி.. ஆனா அந்த குளியல் செய்தி வதந்தி என்று நீங்கள் மறுக்காததால் அது உண்மை என்று ஆகிவிட்டது. அதனால்
தைரியமாக நம்புகிறோம்

madhu
19th April 2016, 05:29 PM
Mr CK

Is it true that during your college days you are taking bath only once in a week.

may be wrong... Because weekly once is during after-college days... what you heard may be monthly one during college days..

I escape... I run... I thappichu odifying.... from Chikka

vasudevan31355
19th April 2016, 06:49 PM
மதுண்ணா!

நானும் ரொம்ப நாளாக பௌ.நி பாடல் சர்ச் செய்து ஓய்ந்து விட்டேன். இப்போது பார்க்கக் கிடைத்து விட்டது. பதித்ததற்கு ஒரு 'ஓ'

அப்படியே தெலுங்கு வெர்ஷன் பாடலையும் பார்த்து வைப்போம். இங்கே மேனகாவும், சிரஞ்சீவியும். 'புன்னமி ராதிரி...பூவுல ராத்ரி' யில் சின்னா போன்றவர்களை புளகாங்கிதம் அடைய வைக்கிறார்கள். சிரஞ்சீவியைப் பார்த்தால் ஏனோ 'திண்டுக்கல்' லியோனி ஞாபகம் வருது.:)

சரி இந்தப் பாடல் வேறெந்தப் பாடலின் டியூன்? சின்னா! கண்டுபிடிக்க.


https://youtu.be/yrV51sj7w-o

vasudevan31355
19th April 2016, 06:57 PM
மதுண்ணா!

உங்களுக்கு பத்மப்ரியா நினைவு வந்திருக்குமே!:) அதுவும் வண்ணம் வேறு.

vasudevan31355
19th April 2016, 07:08 PM
அதே ஷாந்தா ஜானகிராமன் அவர்கள் தரவேற்றிய 'பௌர்ணமி நிலவு' படப் பாடலில் பாவம், நடிப்பு என்றால் 'கிலோ என்ன விலை?' என்று எப்போதுமே கேட்கும் விஜய்பாபு 'பசிக்குது இலை போடம்மா' என்று பூமாதேவி போல வாழ்ந்த ஜீவனை வளர்த்தவரிடம் வச(ந்)தியாகக் கேட்கிறாரே. (அந்த பெல்பாட்டமும், ஸ்டெப் கட்டிங்கும் இல்லாத விஜய்பாபு ரொம்ப ரேர்). அப்போ படமும், பாடல்களும் பரபரப்பைக் கிண்டியது நெசந்தான்.


https://youtu.be/3yK2t2z9noY

madhu
19th April 2016, 07:40 PM
மதுண்ணா!

உங்களுக்கு பத்மப்ரியா நினைவு வந்திருக்குமே!:) அதுவும் வண்ணம் வேறு.

ஹி ஹி... வாசு ஜி.. நீங்க ஒரு மந்திரக் கண்ணாடி..

chinnakkannan
19th April 2016, 07:49 PM
“நான் போய்ட்டு வர்ரேன்னு சொன்னார்ப்பா.. சரி இங்க இருக்கு மஸ்கட்டு தோ ரெண்டரை அவர் ல வந்துருவாராங்காட்டியும்னு போய்ட்டுவா மாமான்னேன்

போனார் போனாருதான்.. அதுசெரி.. பேசறாரான்னு கேக்கறியா.. ம்ம்..அதுமாட்டுங்கெடக்கு...வாஸ்ஸப் ஐஎம்மோ.. அப்பப்ப தும்பிக்கையாட்டம் டை கட்டிகினு புது க்ளாஸ் போட்டுகினு போட்டு அனுப்பிகினு தான் இருக்கார்..என் ஃபோட்டோ ஆனமட்டும் அனுப்புன்னு கெஞ்சறார்.. மாட்டேன் முடியாதுன்னுட்டேன்..

ஏன்ங்கறியா.. நான் இன்னாத்த சொல்வேன்..அது பாட்டுக்கு போய்டுச்சு..வரத்துக்கு அடுத்தவருஷம் தான் வருமாம்.. என்னதான் பேசி போட்டோலாம் பாத்துகினு இருந்தாலும் நேர்ல கூட இருக்கறா மாதிரி வருமா.. வராது தான்.. உனக்குத் தெரியுது..என் உடம்புக்குத் தெர்லையே..


இத்தனைக்கும் வெளிய கூட போறதில்லை..ஹிந்தி சீரியலும் பார்க்கறதுல்ல..சாப்பாடு எப்பவும் கொஞ்சமாத்தான் சாப்பிடுவேன்னு உனக்குத் தெரியும் பட் பசிக்கலை.. கொஞ்சம் செவேல்னு இருப்பேன்னு அடிக்கடி நீ பொறாமைப் படுவியே..இப்ப எப்படி இருக்கேன்.. கொஞ்சம் கறுத்துட்டேனில்லை..ம்ம் காரணம் அந்தச் சண்டாளன் தான்..திருட்டுப் பயபுள்ள.. அவர் பிரிஞ்சதாலத் தான் எனக்கு இப்படி ஆகிடுத்து “ என்று ஒரு தலைவி தன் தோழியிடம் பகிர்ந்து கொள்கிறாள் என்பதை வள்ளுவர் கீழ்க்கண்டவாறு உரைக்கிறாராக்கும்..


நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தஎன்
பண்பியார்க்கு உரைக்கோ பிற.

ஸோ இது பசலைங்கறது நிறமாற்றம்.. அதாவது காதலன் பிரிந்ததால் ஏற்பட்ட நிற மாற்றம்..

இதையே ஒரு திரு நெல்வேலிக் காரம்மா என்னவாக்கும் சொல்றாக..

“ஆமா வந்துட்ட கேக்கறதுக்கு..என்னத்த சொல்வேன் போ..அவிய ஊருக்குப் போய்ட்டாக.. ஆமா.. அதுக்கென்ன..

தோ..அங்க பாரு..புதுசா வாங்கின ஜெர்ஸிப் பசு.. கோனார் வரலை.. நானும் மறந்துபுட்டேன். பார்த்தா என்னாச்சா
பால் முச்சூடும் காம்பிலிருந்துபொங்கி தரையில கொட்டிக்கிட்டிருக்கு..ம்ம் கன்னுக்குட்டிய அவுத்து வுடலாம்னா ரொம்பச் சின்னதா தூங்கிவழிஞ்சுது..விட்டுட்டேன்..அப்புறமா ஃபீடிங்க் பாட்டில்ல கொடுக்கலாம்னு..

என்னது..எளச்சுருக்கேனா.. எக்ஸர்ஸைஸா.ஸூம்பா க்ளாஸஸா.அதெல்லாம் இல்லை.. தானா இளைக்குது..உடம்பும் கொஞ்சம் கறுத்துப் போச்சுதேன்..எல்லாம் இந்தப் பால் இப்படி கன்னும் குடிக்காம நமக்கும் உபயோகப்படாம வேஸ்ட் ஆச்சு பாத்தியா..அது போல ஹும் என்னோட யூத் எல்லாம் வேஸ்ட் ஆகட்டும்..அவிய தான் இல்லையே..எப்போ வருவாரோ எந்தன் கலிதீர... சிரிக்காத புள்ள..வகுத்தெரிச்சல்”

இதைத்தான் ஒரு குறுந்தொகைப் பாடல் சொல்கிறது..

கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல ஆன் தீம் பால் நிலத்து உக்காஅங்கு
எனக்கும் ஆகாது, என்னைக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே.

இங்க தலைவி பசலையை நோய் என்றே சொல்கிறாள் போல..

ம்ம் ஒரு பாட்டுல கூட வரும்ல

மாலைக்கு நோயாகிப் போனேன்
காலை மலருக்குப் பகையாக ஆனேன் .. என்கிறா இந்தப்பொண்ணு..

எதுக்காம்.. அந்த ஹீரோப்புள்ளையாண்டன் கொஞ்சம் லூஸு போல..
மொதல்லையே நைஸா விண்ணப்பிக்கிறா..

அழகானபழம் போலும் கன்னம்
அதில் தரவேண்டும் அடையாளச்சின்னம்

இது இருக்கே ஜடம் தத்தி (சிசெ..கோச்சுக்கப்போறார்)

பொன் போன்ற உடல் மீது மோதும்
இந்த கண் தந்த அடையாளம் போதும்

அதுக்கப்புறம் தான் இந்த மாலைக்கு நோயாகிப் போனாளாம்.. ஃபீலிங்க்ஸ்..அழகாச் சொல்றா பாருங்க.பிரிஞ்சாலும் கஷ்டம் கூட இருந்து சும்மா இருந்தாலும் கஷ்டம்..:) யாருக்கு யாருக்கோ :)

வாங்க பாட் பார்க்கலாம்..

துயிலாத பெண்ணொன்று கண்டேன் எங்கே இங்கே என்னாளும்..ம்ம்

https://youtu.be/k-os3ksSZVY

//நேற்றெழுதி இட்டு சரியா வரலையோன்னு சந்தேகப்பட்டு டெலீட் பண்ணி மறுபடியும் இடுகிறேன்..ஓகேயா//

madhu
19th April 2016, 07:54 PM
வாசு ஜி...

அந்த "பசிக்குது" பாட்டைப் பார்த்த பிறகுதான் உடனே அங்கே ஒரு ரிக்வெஸ்ட் வச்சேன். யூடியூபில் இந்தப் பாட்டுக்கு கீழேயே இருக்கு பாருங்க... சிலர் இது போல் கையில் இருந்தா உடனே அப்லோட் செய்வாங்க... நீங்க முழுப்படமும் கேட்டிருக்கீங்க.. பரங்கிமலை ஜோதியில் ரிலீஸ் ஆனபோது பார்த்தேன். அப்புறம் கண்ணில் படவே இல்லை.. கிடைச்சா மறுபடி பார்க்கலாம்.

madhu
19th April 2016, 08:05 PM
சிக்கா.. துயிலாத பெண்ணை தூங்க வைக்கப் போறீங்களா ?

பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்னு சொல்வது எந்த நோய் ? சொல்லுங்க..

chinnakkannan
19th April 2016, 08:26 PM
சிக்கா.. துயிலாத பெண்ணை தூங்க வைக்கப் போறீங்களா ?

பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்னு சொல்வது எந்த நோய் ? சொல்லுங்க..

தூங்க வைக்கப் போறீங்களா மீன்ஸ்.. போரடிக்குதா..

நாம பேசற நோய் தான்.. உணர்வுகளை உடலை உருக்கும்... பட் பாலும் கசந்ததடிங்கற மாதிரி சாப்பிடாம கொள்ளாம இருந்தா நோய் தானே வரும்..

இந்த தெ.ரா பாட் ஏன் போடலை வாசு :)

vasudevan31355
20th April 2016, 06:32 AM
இந்த தெ.ரா பாட் ஏன் போடலை வாசு :)

அது பாடல்கள் வரிசையில் வராது. போட்டிக்கவிக்கு புத்தி புகட்ட ராமகிருஷ்ணா ஈற்றடி தந்து பின் உரைக்கும் வெண்பா. அதனால் அது அம்பிகாபதி நூறுக்கு முன் பாடிய கடவுள் துதி போல 'தெனாலிராமன்' படப் பாடல் வரிசையில் இடம் பெறாமல் போய் விட்டது. உங்களுக்கு வேண்டுமென்றால் சொல்லுங்க செல்லம்.:) நான் என் டிவிடியிலிருந்து எடுத்து அப்லோட் செய்கிறேன். அதே உங்க ஓ.கே.யா?

இன்னொன்று. என்னுடைய நடிகர் திலகத்தின் டாப் 10 வரிசையில் எப்போதுமே 'தெனாலிராம'னை வைத்திருப்பேன். அவ்வளவு அறிவுபூர்வமான படம் அது. இரண்டாவது நடிகர் திலகம் திரையில் நடிக்க வந்து நான்கு ஆண்டுகளிலேயே, அதாவது 1956 -ல் இந்த அற்புதமான 'தெனாலி ராமன்' என்ற வெளியே எளிமையாக தமாஷாகத் தெரியும் அவ்வளவு கடினமான பாத்திரத்தை சிறு வயதிலேயே தலையில் சுமந்து அட்டகாசம் செய்தார் தன் அபார நடிப்பால். (அப்போது அவருக்கு வயது இருபத்து எட்டு தான்) இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அவரது விழிகளும், முகபாவங்களும் புரியும் அதிசயங்களை எப்படிப்பட்டவரும் வார்த்தைகளில் வடித்து விட இயலாது. எவ்வளவோ அதியற்புதமான பாத்திரங்களை அவர் ஊதித் தள்ளியிருக்கிறார். ஆனால் அதில் 'தெனாலிராமன்' தனி ரகம் என் உயிரான 'ஆண்டனி அருண்' போல.

இதை நான் நடிகர் திலகம் திரியில் எழுதலாம். ஆனால் 'தெனாலிராமன்' படத்தில் ராமன் ஒரு கவி என்பதால் படத்தின் ஆரம்பத்தில் இருந்து ராயரிடம் பணியில் சேர்ந்து, போட்டியாளர்களை சந்தித்து அவரகளை தன் அறிவுத் திறனால் ஓட ஓட விரட்டி முடிக்கும் வரை நிறைய சிறு சிறு கவிகளும் வெண்பாக்களும் பாடல் வடிவில் இப்படத்தில் அடிக்கடி ஒலிக்கும். அதனால்தான் இங்கு எழுதினேன். இந்தப் படத்தில் நடிகர் திலகம் கவி பாடும் போது அதற்கு பின்னணிக் குரல் கொடுப்பவர் வி.என்.சுந்தரம் என்ற அற்புதமான கலைஞர். இவர் புகழ் பெற்ற நடிகரும் கூட.

ஒரு மூன்று மணி நேர ஓய்வு கிடைத்தால் இந்த அற்புத படத்தை அணுஅணுவாக கண்டு ரசித்து மகிழுங்கள். ஜென்மமே சாபல்யம் அடைந்தது போல இறுதியில் உணரலாம்.

படத்தின் டைட்டிலின் போது பின்னணியில் ஒலிக்கும் 'உலகெலாம் உனதருளால் மலரும்...'கிருபாகரியே! மஹேஸ்வரியே!' என்ற அருமையான பாடலை மறக்கவே முடியாது. அமைதியும், சாந்தமும் ஒருசேரப் பொங்கினால் அது இந்தப் பாடலே. (இதே பாடல் ஜமுனா பாடும் சோக வடிவத்திலும் உண்டு)

rajraj
20th April 2016, 07:02 AM
From Tenali Raman (1959)

ulagelaam unadharuLaal........

http://www.youtube.com/watch?v=4-perS-xQGc

RAGHAVENDRA
20th April 2016, 07:51 AM
வாசு சாருக்கு எங்கே தட்டினா எங்கே வலிக்கும் என நல்லா தெரியும்.
தெனாலி ராமனை வைத்து என்னை இங்கே இழுத்து விட்டார்..
நடிகர் திலகத்தின் முதல் பத்தில் இதுவும் இடம் பெற வேண்டும்.

தெனாலி ராமன் படத்திற்காகப் பதிவு செய்யப்பட்டு கடைசி நேரத்தில் படத்தில் இடம் பெற முடியாமல் போன பாடல் உங்களுக்காக

http://www.pradosham.com/msv/1956%20-%20Thenali%20Raman/Thenali%20Raman-1956%20-%20ThennavanThaainattu(2)-P.Leela-Kannadasan.mp3

தென்னவன் தாய்நாட்டு சிங்காரமே..

இந்த ராகத்தை ரீதி கௌளை என்பார்கள். இதை முதலில் கவிக்குயில் படத்தில் தான் பயன் படுத்தியதாகக் கூறி வந்தார்கள் சிலர். ஆனால் எப்படி நடிப்பில் எதிலும் முதன்மையாக பல வகை நடிப்பை நடிகர் திலகம் கொண்டு வந்தாரோ அது போல இசையில் அத்தனை விதமான அம்சங்களையும் முதலில் கொண்டு வந்தவர் மெல்லிசை மன்னர். அதே போல் இந்த ரீதி கௌளை ராகத்தை 1956லேயே கொண்டு வந்து விட்டார்.

இந்த ராகம் கேட்க மிகவும் இனிமையாகவும் அதே சமயம் மனதில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கும் படியும் திகழும் தன்மை வாய்ந்தது.

குறிப்பிடத்தக்க சில பாடல்கள்

சின்னக்கண்ணன் அழைக்கிறான், தலையைக் குனியும் தாமரையே, உன்னி கிருஷ்ணன் பாடிய ஒரு பாடல், முதல்வன் படத்தில் அழகான ராட்சசியே உள்ளிட்ட பாடல்கள் இந்த ராகத்தில் அடங்கும்.,

madhu
20th April 2016, 08:38 AM
Hi all ...

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்... ரோஜாவின் ராஜா படத்தில் வரும் "ஜனகனின் மகளை" பாடலை எழுதியவர் வாலியா, கண்ணதாசனா, புரட்சிதாசனா ?
சொல்லுங்க் ப்ளீஸ்..

RAGHAVENDRA
20th April 2016, 09:36 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/12998504_1100195180031153_2751287524225706901_n.jp g?oh=2d568c73cf87725710acca6dfc6eaa35&oe=57754658p

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/13012862_1100195150031156_5093228853409695240_n.jp g?oh=99f66cd17f5fd8cdcf4b5aef9532758a&oe=5777B58D

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xlp1/v/t1.0-9/13006457_1100195146697823_6699750549612065340_n.jp g?oh=f2c9558d03b60bc4aeb3600549770231&oe=57AACD11

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/12998703_1100195143364490_1550338306812571778_n.jp g?oh=31f95e2a198b48588d5986bb41271eb0&oe=57BE5DF9

vasudevan31355
20th April 2016, 10:12 AM
நெஞ்சை மறைத்தாள் நினைவை மறைத்தாள்
கண்களை மறைக்கவில்லை

ஒரு மன்னவன் யாரோ வில்லை எடுத்தான்
ஜானகி கலங்கிவிட்டாள்.

அவரைத் தவிர வேறு எவரால் இப்படி எழுத முடியும்? கண்ணனின் தாசனுக்கு நாமெல்லாம் தாசர்கள்தானே! மதுண்ணாவின் சந்தேகத்தை தனி ஒருவராக ஆதாரத்தின் மூலம் தீர்த்து வைத்த ரசிக வேந்தருக்கு நன்றியோ நன்றி! அதே போல தெனாலி ராமனைக் கண்டு ஓடோடி வந்து பெருமைப்படுத்தியதற்கும் நன்றி. சந்தேகத்தைக் கிளப்பியவருக்கும் அதே அதே.

chinnakkannan
20th April 2016, 10:16 AM
ஒரு மூன்று மணி நேர ஓய்வு கிடைத்தால் இந்த அற்புத படத்தை அணுஅணுவாக கண்டு ரசித்து மகிழுங்கள். ஜென்மமே சாபல்யம் அடைந்தது போல இறுதியில் உணரலாம். // ஏற்கெனவே பார்த்திருக்கிறேன் வாசு.. பல வருடங்களுக்கு முன்..பட் சுத்தமாய் மறந்துவிட்டது.. எனிவே மறுபடி பார்க்கப் பார்க்கிறேன்.. அழகாய் எழுதியிருப்பதற்கு தாங்க்ஸ்..பின்னூட்டம் அளித்த ராகவேந்தர் சாருக்கும் ஒரு ஓ..

ரோ.ரா வும் இதுவரை முழுமையாகப் பார்த்த்தில்லை..ம்ம்

vasudevan31355
20th April 2016, 10:21 AM
ரோ.ரா வும் இதுவரை முழுமையாகப் பார்த்த்தில்லை..ம்ம்

முழுமையாய் செய்த ஏதாவது ஒன்றிரண்டை பட்டியலிடவும்.:)

vasudevan31355
20th April 2016, 10:22 AM
சின்னா!

உங்கள் பதிவுகளை இனிமேல்தான் படிக்கப் போகிறேன். கொடைக்கானல் போவதற்குள் படித்து விடுகிறேன்.:)

chinnakkannan
20th April 2016, 10:23 AM
ஹி ஹி..:) இப்படி டபக்குன்னுகேட்டா எப்படி.. இருந்தாலும் லிஸ்ட் கம்மியாத்தான் இருக்கும்.. :)

chinnakkannan
20th April 2016, 10:24 AM
இது என்ன.. திடீர் பயணம் ..என்சாய்.. ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே எடுத்த இடம் சாந்தி valley தானே..அங்கும் சென்று பாருங்கள்..பட் கொஞ்சம் மேலே ஏறினால் பூம்பாறை என ஒரு ஊர் அதைத் தாண்டி மன்னவனூர்.. பார்த்ததில்லை எனில் டோண்ட் மிஸ்..

vasudevan31355
20th April 2016, 10:51 AM
அண்ணா! சின்னா! (ஹய்... ரைமிங்... டைமிங்)

உண்டாயின் உண்டென்று மணம் கொள்ளுவோம்
இல்லாயின் இல்லென்று வான் செல்லுவோம்.

காதலியின் மனதில் புதைந்து கிடக்கும் காதலின் ஆழத்தையும், உறுதியையும், நம்பிக்கையையும் அற்புதமாக வார்த்தைகளில் வடித்தெடுத்துத் தந்த கவிஞன். எப்போது கேட்டாலும் இவ்விரு வரிகளையும் இசையோடு கேட்கும்போது கண்கள் ஆச்சர்யத்தால் விரிவடையும்.

நமக்கு லக் இருந்தால், கடவுள் அருள் இருந்தால், உனக்கு நான்... எனக்கு நீ என்பது உண்மையானால் நாம் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்ளலாம். இல்லை நம் காதலுக்கு பெற்றோர்களாலோ அல்லது மற்றோர்களாலோ தடையோ அல்லது வேறு ஏதும் தடங்கல்களோ இருந்தால் அதுபற்றியும் கவலை கொள்ளவேண்டாம். விதி விட்ட வழி என்று மனமொத்து, மரணமெய்தி, மண்ணைத் துறந்து விண்ணை அடைவோம்.

இந்த அர்த்தத்தில்தானே காதலி அப்படி கானமிசைக்கிறாள்?

'உண்டாயின் உண்டென்று மனம் கொள்ளுவோம்' என்பது பாடல் புத்தகத்தில் உள்ள வரி.

அது சரி! 'மணம்' சரியா, 'மனம்' சரியா அல்லது இரண்டுமே பொருந்துமா?

சந்தேகத்தை நிவர்த்தி செய்பவர்களுக்கு இரண்டு விஜயகுமாரி சோகப் பாடல்கள் பரிசாக வழங்கப்படும்.

அப்பாடா! இதைப் படித்து மதுண்ணா கண்டிப்பாக பதில் தெரிந்தும் சொல்லாமல் எஸ்கேப் ஆகி விடுவார்.:)
இன்னொருத்தர் கண்டிப்பாக வலையில் சிக்குவார் என்று நம்புவோமாக.:)

vasudevan31355
20th April 2016, 11:06 AM
தேங்க்ஸ் சின்னா!

பார்க்கிறேன். ஒன்றுமில்லை. பெரிய பையன் காலேஜ் லீவில் (4 நாட்கள் மட்டுமே) பொங்கலுக்குப் பிறகு வீட்டுக்கு வந்திருக்கிறான். எங்காவது வெளியே நெய்வேலியை விட்டு 'போய் வரலாமே' என்றான். முதலில் ஏற்காடு ப்ளான் பண்ணி, அப்புறம் பிச்சாவரங்காடு மாற்றி, பின் வெயிலில் இரண்டுமே அவ்வளவாக சரிப்பட்டு வராது என்று மீண்டும் குழம்பி, இறுதியில் கொடைக்கானல் முடிவு செய்யப்பட்டது. இன்று இரவு 11 மணிக்கு பயணம். தங்கை ஆத்துக்காரர் 'கொடை'யில் டெலிபோன் எக்ஸ்சேஞ்சில் ஆபிஸராக முன்பு பணிபுரிந்ததால் அங்கு தங்க ஏற்பாடு செய்து விட்டார். பிள்ளைகளும் சிறுவயதில் பார்த்ததுதான். அதான் கொஞ்சம் ஜாலியாக....

கொடைக்கானல் சென்றதும் முதலில் செல்ல இருப்பது வழக்கம்போல 'ஞானஒளி' தேவாலயம்தான். அப்புறம்தான் மற்றதெல்லாம். ஆமாம்! 'குணா' பாறை பார்க்க முடியுமா?

கோடைக்கானல் தோட்டம்
இங்கு கொஞ்சும் பறவை கூட்டம்

அடுத்த வரி தங்களுக்கு:)

ஆடிக் கலக்கும் ஆட்டம்:)
அதில் ஆணும் பெண்ணும் நாட்டம்

ஹையா! சொந்தக் கதையோடு நைஸா பாட்டையும் இணைச்சாச்சு. அதுவும் 'குலம்' போற்றும் 'குண'வானின் பாட்டு.

'உலகில் இரண்டு கிளிகள்'.


https://youtu.be/wkqLdxfHaPE

RAGHAVENDRA
20th April 2016, 11:13 AM
வாசு சார் நீங்கள் கோடைக்கானல் போவது அறிந்ததும் எங்களுக்கெல்லாம்...

https://www.youtube.com/watch?v=ygjqxrk-Hsc

vasudevan31355
20th April 2016, 11:14 AM
'பூம்பாறையில் பொட்டு வைத்த பூங்குருவி'யை பார்த்துவிட்டு வரவா?' ஹோம்காரம்மா பக்கத்திலேயே இருப்பாக.:) பட்டை உரிக்கப்பட்டுவிடும்.:) அப்புறம் 'தடியன் குடிசை' என்ற பகுதியில் மசாலாப் பொருட்கள் கிட்டுமாமே!

vasudevan31355
20th April 2016, 11:47 AM
அனைத்துப் பதிவுகளுக்கும் சளைக்காமல் 'லைக்' குகள் தந்து உற்சாகப்படுத்தும் 'கோபு' சாருக்கு உளமார்ந்த நன்றிகள் என்றென்றும். :ty:

chinnakkannan
20th April 2016, 12:48 PM
Good..Cool Vasu..Relax and enjoy your trip. (oru payanak katturai ezhuthunga)

ரெண்டு வி கிடைச்சாலும் நோ பயம்..அது மணம் தான்.. விரிவா ஈவ்னிங்க்.. முடிஞ்சா..

ஒருமனமாய்ச் சொல்லிடுவேன் உள்ளத்தின் எண்ணம்
திருமணம்தான் என்றே திரி.. :)

madhu
20th April 2016, 02:48 PM
கோக்கர்ஸ் வாக்கில் எடுக்கப்படாத படங்கள் கம்மி... வாசு ஜி... குணா குகைக்குள் இறங்க விடுவதில்லை. மேலேயிருந்து எட்டிப் பார்க்கலாம். பேரிஜம் ஏரி, தொப்பி தூக்கி பாறை போயிட்டு வாங்க.. வருஷம் தோறும் வசந்தம் தேடி போவோம் அங்கே...

( விஜயகுமாரின்னு சொல்லாட்டியும் நான் எஸ்கேப்புதான் )... ஹாப்பி ஜர்னி....

madhu
21st April 2016, 04:54 PM
நானும் என் பங்குக்கு கொடைக்கானலில் படமாக்கப்பட்ட ஒரு பாடலை இங்கே போஸ்டி விடுகிறேன். வாசுஜி வந்து இப்படி இருந்த இடம் இப்போ எப்படி ஆயிடுச்சுனு சொல்லட்டும்..

https://www.youtube.com/watch?v=3iNa9AA81zI

madhu
22nd April 2016, 04:47 PM
சிக்கா... நீங்க எங்கே தலைமறைவாயிட்டீங்க ?

யாரும் இல்லாதபோது வந்து புதுசா எதாவது தலைப்பு ஆரம்பிக்கலாமில்ல ?

chinnakkannan
22nd April 2016, 08:23 PM
ஹாய் மதுண்ணா.. தலை மறைவாய் த் தான் இருக்கேன்..இங்க வெய்யில் ஆரம்பிச்சுடுத்து :) இன்னிக்கு ஃப்ரை டேயா தண்டா தண்ட்டா கூல் கூல் ஆயில் தேய்ச்சுக் குளிச்சனா வீக்லி பர்ச்சேஸ் கூட போகலை.. லஞ்ச் சாப்பிட்டா (டயட் காய்கறிகள்) அதுக்கே கண்ணைக் கட்டிண்டு வந்தது.. டயட் நு சொல்றேனேஒழிய இன்னிக்கு க் கொஞ்சம் சீட்டிங்க் தான்..

ரொம்ப நாளைக்கப்புறம் கொத்தவரங்காய் பருப்புசிலி, சேனை எரிசேரி, வத்தக் குழம்பு, சீராமிளகு ரசம், காலிஃப்ளவ்ர் ரைஸ்(ரைஸ்க்கு ப் பதிலாக) ம்ம் சுகமாயிட்டு சாப்பாடு சுகமாயிட்டு தூக்கம்..இப்ப எழுந்து வீக்லி ஷாப்பிங்க் போகணும்..

என்ன த்லைப்பு நீங்களே சொல்ங்க..:)

வீட் பால்கனி தரை சுடுது..மீன்ஸ்..ஸம்மர்..

வெயிலுக்கேத்த நிழலுண்டு
வெயிலோடு விளையாடி..

ம்ம் சட்ட்னு வெயில் பாட் வரலை.. நைட் வர்றேன்..

eehaiupehazij
22nd April 2016, 08:28 PM
From GG's Treasure Island....commemoration of our own world...GG songs!

Earth Day 2016!


This world is a clockwork Orange! We do not know when this orange like entity came into existence alongside millions and trillions of Stars and Planets around us in this Universe!!

The beauty of this globe on which we survive is the Centre of Gravity that keeps us intact even as the world is revolving on its own slant axis and orbiting around the Sun!! The Sun is the prime mover supplying all energy to all living and inanimate objects of our environment!!

The world is so cool and warm on its mantis but boiling as the volcanic magma as we go deep and deep!!So are the eruptions of human mind when explore or implore ourselves by way of the human relationships and interactions therin!!

ஜெமினி கணேசன் அவர்களின் நடிப்புப் பார்வையிலோ இது ஒரு சின்னஞ்சிறு உலகம்!

https://www.youtube.com/watch?v=QQkDoi9biAQ

உள்ளமென்பது உலகமாகலாம்.............. உலகமென்பது உள்ளமாகுமோ?

https://www.youtube.com/watch?v=IDhaiDfXfok

பழகத்தெரிய வேண்டும் உலகில் பார்த்து நடக்க வேண்டும் ...மிஸ்ஸியம்மா!

https://www.youtube.com/watch?v=FkRV2zhjZB0

இறைவன் உலகத்தை படைத்தானா.....

https://www.youtube.com/watch?v=f_EQYsvrL1I

eehaiupehazij
22nd April 2016, 10:06 PM
நகைச்சுவை கலைஞர்களின் பார்வையில் இந்த உலகம் !!

https://www.youtube.com/watch?v=Eeod3MiL-YQ

https://www.youtube.com/watch?v=UMskywbSCDQ

https://www.youtube.com/watch?v=FUKVgcKmtXw

adiram
23rd April 2016, 04:43 PM
டியர் வாசு சார்,

கொடைப்பயணம் வெற்றிகரமாக (அதாவது இனிமையாக, இடைஞ்சல் இல்லாத,மகிழ்ச்சியாக, வெட்டிச்செலவுகள் குறைவாக) அமைய வாழ்த்துக்கள்.

நான் இந்தியா வந்ததும் நாமிருவரும் (முடிந்தால் மற்ற நண்பர்களும்) சேர்ந்து செல்லவேண்டிய சாத்தனூர் பயணம் ஒன்று நாம் ஏற்கெனவே திட்டமிட்டு உள்ளோம் என்பதை நினைவூட்டுகிறேன்).

adiram
23rd April 2016, 05:09 PM
எதிர் பாராமல் சின்னக்கண்ணன் புதுப்புது தலைப்புகளில் பாடல் பட்டியல் இடுகிறாரே நாமும் அதுபோல செய்தால் என்ன என்று (அசட்டுத்தனமாக) தோன்றியதால் எழுதிப் பார்த்தேன். முரளி சாருக்கும், சீனா கானாவுக்கும் பிடிக்கும் தலைப்பு (நம்ம திரியின் தலைப்பிலேயே சின்ன உல்டா)

மனதைக்கவரும் 'மதுரை' கானங்கள்

மதுரையில் பறந்த மீன் கொடியில் (பூவா தலையா)
மதுரை மரிக்கொழுந்து வாசம் (ராமராஜனின் எதோ ஒரு படம்)
தேரோடும் எங்க சீரான மதுரையிலே (பாகப்பிரிவினை)
தென் மதுரை வைகை நதி பாடும் தமிழ் பாட்டு (தர்மத்தின் தலைவன்?)
மச்சான் பேரு மதுரே (மதுர)
வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை (மாநகர காவல்)
மானாமதுரை குண்டு மல்லிகை (மேட்டுக்குடி) ஓ..அது வேறு ஊரோ?.

மதுரை நல்ல ஊர்தானே, அப்புறம் ஏன் இப்படி ஒரு பாட்டு
'மதுரைக்கு போகாதடீ' (அழகிய தமிழ் மகன்)

chinnakkannan
23rd April 2016, 09:09 PM
இன்னிக்கு ஜானகியம்மா பிறந்த நாளாமே.. வாழ்த்துக்கள் சொல்லி அவர் பாட் ஒண்ணு போடலாமா

வீணை மீட்டும்கைகளே.. வாழ நினைத்தால் வாழலாம் படமாம்.. பாடல் அழகு படமாக்கம் ஸோ ஸோ

வீணையொலி வீணை எஸ்காயத்ரியினுடையதாம்..

https://youtu.be/GCkrKM_t9s0

யாராக்கும் ஆக்ட்ரஸ்..

chinnakkannan
23rd April 2016, 09:46 PM
//எதிர் பாராமல் சின்னக்கண்ணன் புதுப்புது தலைப்புகளில் பாடல் பட்டியல் இடுகிறாரே நாமும் அதுபோல செய்தால் என்ன என்று (அசட்டுத்தனமாக) தோன்றியதால் எழுதிப் பார்த்தேன். முரளி சாருக்கும், சீனா கானாவுக்கும் பிடிக்கும் தலைப்பு (நம்ம திரியின் தலைப்பிலேயே சின்ன உல்டா)// ஆதிராம் சார் நன்றி :)

மதுரைப் பாடல் தொகுப்புகள் ஜோர்.. பட் இன்னும் தேடிப் பாக்கலாமா என்று ஸ்ட்ரெய்ட்டாக ச் சொல்லவெல்லாம் சின்னக்கண்ணனால் முடியாதாக்கும்.. ( அப்படிச் சொன்னா அது சீனா கானா இல்லை..

ஆதிராம் குரு.. என்னைக் கிளறிவிட்டீர்கள்..அதாவது என் நினைவுகளை..பதினொரு பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னால் சந்தவசந்தம் புலவர் மின் குழுவில் நானும் ஒரு சிறு துகளாய் இருந்தேன்.. அப்போது ஒரு கவியரங்கத்தில் கலந்து கொண்டேன்.எனது முதல் கவியரங்கம்...தலைப்பு என்ன தெரியுமா..எங்கள் ஊர்..


அதற்கு நான் படித்தது என்னவென்று சொல்லட்டுமா ( சொல்லித்தொலை..வேணாம்னா விடவா போற.. யார்ப்பா அங்க குரல் விடறது :)) பின் தேடி டிஎஸ்ஸியிலிருந்து யூனிகோட்டிற்கு மாற்றி இதோ..உங்களுக்காக..

(எழுதும் போது பட்ட நடுக்கம்..எல்லாரும் சிறந்த பாவலர்கள்.. வெகு அருமையாகக்கவிதை நெய்பவர்கள் மரபிலே.. நானோ சிறியேன்..கொஞ்சம் புதிதாய்க் கல்யாணமான இளம்பெண் பதட்டத்துடன் பாற்கரம் நடுங்க உள் நுழைவது போல் நுழைந்தேனாக்கும்..:) )

**

*

*******************
இறை வணக்கம்..
*******************
முந்தி வணங்கிடுவேன் முக்கண்ணன் மைந்தனாம்
தொந்திக் கணபதியின் தாள்

*************
தலைவர் வணக்கம்..

***********

மணிமணியாய்ச் சொல்வளத்தில் பேசுகின்ற தன்மை
மனதினிலே தொட்டிலிட்டு மயங்கவைக்கும் மென்மை
அணிஅணியாய் வார்த்தைகளில் தோரணங்கள் கட்டி
அழகுறவே நடத்துகிறார் சுவைபலவே கூட்டி

**

பனித்திரையில் இவரெடுத்த ஒளிப்படங்கள் எல்லாம்
பளிச்சென்றே இவர்திறமை தெளிவாகக் காட்டும்
மணித்தலைவர் இவரென்றே சொல்லிநானும் இன்று
வணங்குகிறேன் அவைத்தலைமை அழகுக்காய் நன்கு..

**
அவை வணக்கம்
***************

பவித்திரமாய்ப் பைந்தமிழைப் போற்றிவரும் பாவலர்காள்
கவித்திறனில் அடியேனோ கைக்குழந்தைக் கீடாவேன்
குவிந்திருக்கும் கற்பனையில் கொஞ்சமென இங்கெடுத்து
நவில்வதற்கு முன்னும்மை வணங்குகிறேன் வாழ்த்துவிரே..

**
எங்கள் ஊர்:
***********

கற்பனை என்றுவிட்டேன் இல்லையிலை கண்களுக்குள்
பற்பல ஆண்டுகளாய்ப் புதைந்திருக்கும் பேரழகு
கற்றவர் பலவிதமாய்க் கவிபாடிச் சென்றதது
மற்றவூர் முன்னாலே மலர்ந்திருக்கும் மதுரையதே...

**

மனமெல்லாம் முதிராத பாலகனாய் இருந்தமுதல்
கனவுகளில் பூப்பறிக்கும் காளையிளம் பருவம்வரை
கணப்பொழுதில் மறைந்துவிட்ட காலத்தைக் கழித்தவிடம்
தனமென்றே என்மனதில் தங்கிவிட்ட மதுரையதே..

**

துயிலாத நகரமெனத் தென்னாட்டில் போற்றுவர்தான்
கயிலாய மலையீசன் கண்ணான மீனாட்சி
உயிராக நின்றங்கே உணர்வில்நல் ஆட்சிதன்னை
குயிலதனின் குரலினிமை போலங்கே வழங்குகிறாள்..

**

சதுரச் சதுர வீதிகளாம் சற்றும் குறையா அழகுகளாம்
புதுமை சற்றும் ஏறாமல் பழமை தன்னைக் கொண்டதுவாம்
பதுமை உயிராய் வந்ததுபோல் பாங்காய் நங்கையர் நடந்திடுவர்
மதுரை அழகை நினைக்கையிலே மலரும் நவரச நினைவுகளே..

***

அன்னை மீனாள் கோவிலிலே ஆடி வீதி வெளியிலுண்டு
பின்னர் உள்ள தெருக்களுக்கும் பாங்காய் மாதப் பெயருமுண்டு
வண்ணச் சித்திரை ¢ வீதியின்பின் ஆவணி வீதி வந்துவிடும்
இன்னும் மாசி, வெளியென்றே வீதி எல்லாம் உண்டங்கே..

***

8* சற்றே நீளம் ஆகிடுமோ சிந்தை மயங்க வைத்திடுமோ
கற்ற இடமும் அங்கேதான் காதல் வந்ததும் அங்கேதான்
மற்ற கவிஞர் சுவையுடனே தம்மூர் வளத்தைச் சொல்கின்றார்
சுற்றி வளைத்துப் போகாமல் சுருங்கச் சொல்லப் பார்க்கின்றேன்.

**

சுருங்கச் சொல்வதால் எங்கள் ஊரின்
அழகெதுவும் சுருங்கிடாது கேளும்நீவிர்.

**

பாரதியார் சிலகாலம் பணிபுரிந்த பள்ளி1
படித்தேன்நான் சிலவாண்டு பாங்குடனே அங்கு
ஆரத்தைக் கழுத்தினிலே சூட்டியது போலே
அறிவூற்றின் கண்களையே திறந்துவிட்டார் நன்கு...

**

மாற்றங்கள் வாழ்வினிலே வேண்டுமென அன்று
மரியன்னைப் பள்ளியிலே சேர்த்துவிட்டார் அண்ணா..
ஆற்றலையும் அழகினையும் ஒருங்கிணைத்த மஹலும்2
அப்பள்ளி அருகினிலே அமைந்திருந்த தன்றோ..

*

எத்திசையில் இருந்து நோக்கின் மக்கள்வெள்ளம்
சித்திரைத் திருவிழாவில் பொங்கி மோதும்..
பத்திரமாய் நிற்கின்ற ஆல்பர்ட் விக்டர்3
பாலத்தில் பேருந்தும் அணியாய் நிற்கும்..

**

தங்கக் குதிரை வாகனத்தில் தரமாய் அழகர் பெருமாளும்
சிங்கம் போலே இறங்கிடுவார் சிறப்பாய்த் தரிசனம் தந்திடுவார்
பங்கம் ஏதும் விளைக்காமல் பாங்காய் மக்கள் கூட்டமதும்
தங்கத் தோற்றம் பரவசமாய் தங்கள் மனதில் நிறுத்திவிடும்.

**

நறுமணத்தை வீசுகின்ற மல்லிகையும்
நன்றாக மதுரையதன் புகழ்பரப்பும்
அறுசுவையாம் உணவுகளும் எங்களூரில்
அழகாக உமிழ்நீரைப் பெருக்கிவிடும்..

**

3aசுறுசுறுப்பாய் இரவினிலே போடப்படும்
சூடான, மனங்கொத்தும் பரோட்டாவும்
விறுவிறுப்பாய்த் தாளலயம் கொண்டுவந்து
வீதியதன் அமைதியையும் கலைத்துவிடும்..

**

ஆவி பறக்கும் நள்ளிரவில் ஆவிபறக்கும் இட்டலிகள்
தாவிமனமும் செல்கிறதே தாக்கம் நெஞ்சில் இனிக்கிறதே..
நாவில் இட்டால் வழுக்கித்தான் நயமாய் ஓடும் அல்வாவும்
காவி அணிந்த முனிவரையும் கருத்தை மயக்கிக் கிறங்கவைக்கும்..

**

கோபியெனும் அய்யங்கார் ஹோட்டல் சட்னி
கூப்பிட்டு வரவழைக்கும் கண்ணில் நீரை..
3baகாபியென்றால் நாகரீக உணவக முண்டு..
3c கரும்பதன் சாற்றுக்கும் நல்ல கடையுமுண்டு...

**

பலபுலவர் பலஇசைஞர் உருவான மதுரை
பார்த்ததிலே நானறிந்த பொன்னுச்சாமி4, சோமு..
கலகலப்பாய்க் கேட்டிடுமே முன்னவரின் நாதம்
காதுகளில் ரீங்கரிக்கும் மற்றவரின் கீதம்..

**

உற்றார் உறவினர் கூட நன்றாய்
சுற்றுலா செல்லுமிடம் அழகர் கோவில்
வற்றாத அருவியாய்க் கொட்டி நிற்கும்
நூபுர கங்கையுண்டு சோலை5 மேலே..

*

குடையைப் பிடித்த கரத்துடனே6 குமரி பூரணி விழுந்திருந்த
குன்றம் இங்கே அருகில்தான் குமரன் அருள்வான் அங்கேதான்..
தடைகள் வாழ்வில் வந்தாலே தகர்த்தே எறியும் மாகாளி
6aமடப்புரம் தன்னில் இருக்கின்றாள் மாறா அருளும் செய்கின்றாள்..

**

இன்னும் இன்னும் எங்கள்ஊர் எழிலைச் சொல்லி மாளாது
இன்னும் அரங்கில் பெருங்கவிஞர் இனிதாய்ச் சொல்ல இருப்பதனால்
வண்ண நினைவில் சற்றேதான் வாழ்ந்து பார்த்த அடியேனும்
சின்னக் கவிதை ஒன்றினையே சொல்லி இங்கே முடிக்கின்றேன்..

**

வானுறையும் தேவமயன் வையகத்தில் கட்டியதாம்
நான்மாடக் கூடல் நகர்..7

************************************************** **********

1. சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் பாரதியார் சிலகாலம் ஆசிரியப்பணி ஆற்றினார். அங்கே
படித்தது 6.7ம் வகுப்பு.

2. திருமலை நாயக்கர் மஹால்.. அதன் அருகில் இருந்தது தூயமரியன்னைப் பள்ளி..

3.ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம்..பல வெள்ளங்கள் பார்த்தும் பலவருடங்கள் (200 என நினைக்கிறேன்)
ஆகியும் அசையாமல் கம்பீரமாய் நிற்கின்றது..

3a:மதுரையில் இரவு நேர சாலையோர அசைவ உணவகங்கள் அதிகம்.. அதுவும்இரவு சுமார் பதினொரு
மணி வாக்கில் அங்கு போடப் படும் கொத்துப் பரோட்டாக்களின் சப்தம் 'டக டக டக டக்' ஒருவித
இசைத்தன்மை கலந்து இருக்கும்..

3b:நாகரீக உணவகம் - மாடர்ன் ரெஸ்டாரண்ட் - டவுன்ஹால் ரோட்டில் உள்ளது 3c: தலைமைத் தபால்
நிலையத்தின் அருகில் கரும்புச் சாறு கடை ஒன்று உண்டு.. பள்ளி கல்லூரி நாட்களில் பலதடவை அதை
ருசித்து மகிழ்ந்திருக்கிறேன்..

4. கல்லூரி நாட்களில் நடராஜ சுந்தரம் என நண்பன் ஒருவன்.. அவன் அப்பா வாசிக்கும் நாதஸ்வரத்தைப்
போலவே வெடவெடவென ஒல்லியாக இருப்பான்..அவனது தந்தை எம்.பி.என்.பொன்னுச்சாமி..நடிகர்
திலகம் தில்லானா மோகனாம்பாள் படத்தில் வாயசைப்பதற்காக- பொன்னுச்சாமியையும் சேதுராமனையும்
வாசிக்கச் சொல்லி- முடித்ததும் அதேபோல் செய்து காட்டினாராம்..அப்படியே தி.படத்திலும் இடம்
பெற்றிருக்கிறது..ந.சு. கல்லூரி முடித்ததும்உடனே அவனுக்குத் திருமணமும் செய்துவிட்டார்கள்..அந்தத்
திருமணத்தில் வாசித்தவர் யார் தெரியுமா.. நாமகிரிப் பேட்டை கிருஷ்ணன்.

4a மதுரை சோமு நல்ல பாடகர்..கணீர்க் குரலுக்குச் சொந்தக் காரர்.. ஆடிவீதியில் இவரது
கச்சேரி கேட்டதாக நினைவு.

5.பழமுதிர்ச் சோலை..முன்பெல்லாம் அழகர் கோவில் மலை மீது ஏறிச்செல்வதே இனிய
அனுபவம்..அந்தக் காடுகள் இப்போதும் இருக்கிறதா தெரியவில்லை..

6. நா.பாவின் குறிஞ்சி மலரில் அவரது கதாநாயகி பூரணி திருப்பரங்குன்றத்தில் உள்ள ஒரு
தெருவில் மயங்கி விழுவாள்.. ஒரு அழகிய கவிதை வரும்.."குடையைப் பிடித்த கரம்-மனக்
கொதிப்பைச் சுமந்த முகம்; பெரும்பசியில் தளர்ந்த நடை..' என..முழுதும் நினைவில்லை..

6a: மடப்புரம் காளியம்மன் மிகவும் சக்திவாய்ந்தவள்..எதிரிகள் அழியவேண்டும் என்று காசு வெட்டிப்
போடுபவர்கள் இன்றும் உண்டு..ஒரு தடவை சென்றிருக்கிறேன். ஒரு ஒன்றரை மணி நேரப் பேருந்துப் பயணம்
என நினைவு..

7.பரிபாடலில் வரும் ஒரு வெண்பாவின் ஈற்றடி மட்டும் நிமிண்டினேன்..பரிபாடலில் இன்னொரு பாட்டும்
நினைவில் நிற்கிறது..

**
'ஈந்தாரைக் கொண்டாடி ஏற்போரைப் பார்த்துவக்கும்
சேய்மாடக் கூடலும் செவ்வேள் பரங்குன்றும்
வாழ்வாரே வாழ்வா ரெனப்படுவார் மற்றையார்
போவாரார் புத்தே ளுலகு'

**

7a. மதுரை மேலமாசி வீதியில் இருக்கும் பிள்ளையாரின் பெயர் ஸ்ரீ நேரு ஆலால சுந்தர விநாயகர்.
(நேருவிற்கு அவருக்கும் என்ன சம்பந்தம் என்பது எனக்கு இன்னும் தெரியாத புதிர்). அங்கு தான் வைகுண்ட
ஏகாதசி அன்று பட்டி மன்றங்கள், வழக்காடு மன்றங்கள் நடக்கும்.

8. முன்பின் கவியரங்கில் கலந்துகொண்டதில்லையாதலின் முதலில் நீளமாகச் சில
எழுதியிருந்தேன்.பின் மாற்றி எழுதியது தான் மேற்கண்டது..சுவைக் குறைவின் மன்னிக்க..

***********
அன்புடன்
சி.க.

**

நம் நண்பர்களுக்கும் தான்.. நாஸ்டால்ஜியாவில் படுத்தி விட்டேனென்றால் பொறுக்க வேண்டுகிறேன் :)

மதுரை வீரன் தானே அவனை உசுப்பி விட்டேன் நானே (உங்களைச் சொல்லலீங்க்ணா பாட்டு..) :)

மதுரை அரசாளும் மீனாட்சி.. மா நகர்க் காஞ்சியிலே காமாட்சி..

ஆடல் காணீரோ திருவிளையாடல் காணீரோ பாடல் மதுரையில் ராஜ செளந்திர
பாண்டியராம் எங்கள் ஆண்டவன் திருவிளையாடல் காணீரோ.. (உடுமலை நாராயண கவியாக்கும்)

பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த கலை அன்னமே ந்னு நெய்வேலி ஓடி வருமாக்கும்..

சிங்கார மதுரையின் வெள்ளையம்மா கதை தினம் தினம் நடக்குதடி..

adiram
24th April 2016, 11:17 AM
சின்னக்கண்ணன் சார்,

'கொஞ்சம் உசுப்பி விட்டால் போதுமே, சாமியாடி விடுவாரே' என்று ஒரு சொல்வழக்கு உண்டு. நெய்வேலியாரை போல நீங்களும் அந்த ரகம் போலும். சும்மா அதிர வச்சுட்டீங்களே. கவிதை சூப்பரோ சூப்பர். அதுவும் அத்துனூண்டு வயதிலேயே.

Hats Off.

chinnakkannan
24th April 2016, 01:25 PM
//அதுவும் அத்துனூண்டு வயதிலேயே. // :) நன்றி ஆதிராம் சார்..கடைசியில வச்சீங்க பாருங்க பன்ச்.. கல் நாயக்கோட சாயல் தெரிகிறது..அவரும் இப்படித்தான்..ரொம்ப நாளாக் காணோம்..

கலகலக்குது காத்து சலசலக்குது கீத்து
பளபளக்குது சோலையெல்லாம் பருவப் பெண்ணைப் பாத்து

ஆஹாஹாஹா ஓஹோஹோஹோ ம்ஹ்ம்ம்ஹ்ம்

இந்தப் பாட்டு காலைலருந்து முணுமுணுத்துக்கிட்டிருக்கேன்..
ஆமா வளர்பிறை படமாம்..வீடியோ கிடைக்கலை..

madhu
24th April 2016, 03:10 PM
சிக்கா... வளர்பிறை பட வீடியோ யார்கிட்டேயோ சிக்கிகிட்டு இருப்பதாக் ராகவ்ஜி சொன்ன நினைவு. அதிலும் ஒரு பாட்டு இல்லையாம். பூஜ்ஜியத்துக்குள்ளே, கூண்டு திறந்ததம்மா, கலகலக்குது காத்து, மௌனம் மௌனம் மௌனத்தினாலே, பச்சைக்கொடியில், கன்னங்கருத்த மச்சான்... இப்படி பல பாடல்கள். எல்லாமே நல்லா இருக்கும். ( ஹிஹி.. நாமெல்லாம் பழமை ரசிகர்களாச்சே )

வைகையின் வெள்ளம் போல கவிதை பொங்கி வழியுதே.. பலே பலே !

பிறந்து வளரவில்லை என்றாலும் "மது"ரை எனக்கும் பிடிச்ச ஊராச்சே.. பொற்றாமரைக் குளக்கரை விபூதிப் பிள்ள்ளையாரைக் கேட்டால் சனிக்கிழமை சாயந்திரம் 5 மணிக்கு அவர் பக்கத்தில் வந்து படிக்கட்டில் உட்காரும் அந்த அழகான (?) ஓகே..ஓகே.. சுமாரான இளைஞனைப் பற்றி சொல்லுவார். ( இந்த வம்பு போதுமா ? )

chinnakkannan
24th April 2016, 04:43 PM
ஹப்புறம்.. அங்க யாரப் பார்த்தீஙக்ளாம்.. நான்பொற்றாமரைக் குளத்திலெல்லாம் அமர்ந்ததில்லை..ஆடி வீதி தான்..ரொம்ப ச் சின்னப் பையனா இருந்தப்ப ராஜம் சந்தானம், லஷ்மி நரசிம்மன் (முக்கூரில்லை) போன்றவர்களின் கதாகாலட்சேபத்திற்காக அம்மாவுடன் சென்றிருக்கிறேன்..(உப்புக்கடலை நன்னா இருக்கும்..) அம்ம்புட்டு தான்.. ஆயிரங்கால் மண்டபம் நான் பார்த்ததில்லை தெரியுமா..

madhu
24th April 2016, 04:53 PM
ஆதிராம் சார், சிக்கா... மதுரை மணத்தை மனதில் நிறைத்து விட்டீங்க

பல்லவியில் மதுரையுடன் இன்னும் பல பாடல்கள் உண்டு

மதுரைக்கு சென்றால் மேகங்களே - தாலியா சலங்கையா
மயங்குகிறாள் இந்த் மதுரை மீனாட்சி - பிராயச்சித்தம்
மாணிக்க மூக்குத்தி மதுரை மீனாட்சிக்கு - முகூர்த்த நாள்
மதுரை மீனாட்சி மணிக்கரத்தில் - செல்லக்கிளி
என் ஊரு மதுரை பக்கம் என் பாட்டு மனசில் நிக்கும் - வாசலிலே ஒரு வெண்ணிலா
மதுரை பக்கம் என் மச்சான் ஊரு மச்சானும்தான் கை வச்சான் பாரு - படம் பேரு மறந்து போச்சு
மதுரை பக்கம் என் சொந்த ஊரு - தர்ம தேவன்
தென் மதுரை வீதியிலே ஊர்வலம் போனாள் - அன்புக்கோர் அண்ணன்

இன்னும் நடுவுல மதுரை வர பாட்டுகள் நெறைய இருக்குங்க..

அதாவது..

மாலை வெய்யில் வேளையில் மதுரை வரும் தென்றலே - உதய கீதம்
நாடு கடந்து மதுரைக்கு வாராக...தென் மதுரைக்கு வாராக.. - காவியத் தலைவன்
மதுரை மீனாட்சி கிளியைக் கேட்டேன் - அமர்க்களம்
காணும்போது இனிக்கும் மதுரை கதம்பம் போல மணக்கும் - ஆட்டுக்கார அலமேலு
வெற்றி ஒருவனுக்கோ மதுரை தமிழனுக்கோ - திருவிளையாடல்
ஏ..மதுரை ராஜ்ஜியம் என்னது.. உனக்கொரு பாதியை - முள்ளும் மலரும்
மதுரையிலே வாங்கி வச்ச மருக்கொழுந்து வாடும் முன்னே - மனிதரில் மாணிக்கம்

madhu
24th April 2016, 04:55 PM
சிக்கா... அது ஒரு பெர்ர்ரிய கதை. பி.வி.ஆர் எழுதிய மதுர நாயகி கதை படிச்சிருக்கீங்களா ? அருமையாக இருக்கும்.

eehaiupehazij
24th April 2016, 06:36 PM
From GG's Treasure Island with Pleasure Inland!!

அமரர் ஜெமினி கணேசன் அவர்களின் ஏ அம்மாடி ரக தத்தக்கா புத்தக்கா டப்பாங்குத்து நடனங்கள் !...சீனிசர்க்கரை கட்டிகளே!!

Gemini Ganesan's typified simple dancing steps!


GG had never been so 'good' at his dance steps in song sequences....some times he explicitely exhibits his nervousness when he happened to dance alongside dance queens like Vaijayanthi Maala or Padmini.....but who cared...when he was delivering the hammer blows of his acting skills in a smooth and suave corporate pattern inculcating dignity and perfections to the roles he essayed!!
However, very rarely GG too had astonished us with his energetic dance movements....in films like Kurathi Magan, karpukkarasi, Adhisaya thirudan, vaazhavaiththa theivam...but you can easily define a watershed for his dancing boundaries as in these films almost he performs only typified steps or movements....!!!!

ஜெமினியின் நடனவட்டம் மிக சிறிதே !

GG's thaththakkaa puththakkaa dabbaanguththus!

GG dance 1 : Adhisaya Thirudan : Yeh Ammaadi....!!

https://www.youtube.com/watch?v=vvSgA7CW54g

GG dance 2: Karpukkarasi : Thaththakka Puththakka...

https://www.youtube.com/watch?v=Bkn4OgRcapY

GG dance 3 : Vaazha Vaiththa Deivam : Chinnalapattiselai!

https://www.youtube.com/watch?v=SVv8ykcGf54

GG dance 4 : Kuraththi magan : Kuraththi vaadi....

https://www.youtube.com/watch?v=UYZ4Ou8GcY0

madhu
24th April 2016, 06:36 PM
எஸ். ஜானகியின் பாடல்களில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதம் பிடிக்கும்..

எனக்குப் பிடித்த பாடல்களில் ஒண்ணு இது..

என் ராகங்கள் இன்று எல்லாம் பாடல்களே... யூடியூபில் வீடியோ இருந்தது இப்போ காணும்.. தேடிப் பாக்கணும். இப்போதைக்கு ஆடியோ

https://www.youtube.com/watch?v=4jbEWgdyj0M

chinnakkannan
24th April 2016, 06:39 PM
சிக்கா... அது ஒரு பெர்ர்ரிய கதை. பி.வி.ஆர் எழுதிய மதுர நாயகி கதை படிச்சிருக்கீங்களா ? அருமையாக இருக்கும்.

padichirukEn.. kalki yil vanthathu..neenga sonnappO ninaivukku varalai.. kaakkaa thOppu therullaam varum.. Innoru kathai.. aathmaavin raagangaL.. na. paa voda novel

adiram
24th April 2016, 07:35 PM
நான் ஆரம்பிக்கிற தலைப்புகள் யாருக்கு பிடிக்கிறதோ இல்லையோ, நிச்சயம் தமிழ்நாடு டூரிஸம் டெவலப்மெண்ட் டிபார்ட்மெண்டுக்கு பிடிக்கும்.

ஏன்னா, அடுத்தது தஞ்சாவூர்...

தஞ்சாவூரு சீமையிலே கண்ணு தாவி வந்த (பொண்ணுக்கு தங்க மனசு)
தஞ்சாவூரு மண்ணு எடுத்து தாமிரபரணி தண்ணிய விட்டு (பொற்காலம்)
நாம்பொறந்தது தஞ்சாவூரு சூரக்கோட்டையிலே (என் தம்பி)
தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே (ராஜராஜ சோழன்)
தஞ்சையில் பறந்த புலிக்கொடியை உன் பெண்மையில் கண்டேனே (பூவா தலையா)
தஞ்சாவூர் போகாதடி தலை ஆட்டாமல் பொம்மை நிக்கும் (அ.த.மகன்)
தஞ்சை வள நாட்டை தாயாகி காப்பவளாம் (இதயக்கனி)

adiram
24th April 2016, 07:43 PM
சின்னக்கண்ணன் சார்,

யாருடைய சாயலும் இல்லாம எழுதனும்னா இனி நான் லத்தீன் மொழியிலதான் எழுதணும்.

உதாரணத்துக்கு ஒரு வரி

s356b1*(&)n4bv+)(*&^$#@!%^&*()+#*&^%(#$@!)_$%#

chinnakkannan
24th April 2016, 08:44 PM
சின்னக்கண்ணன் சார்,

யாருடைய சாயலும் இல்லாம எழுதனும்னா இனி நான் லத்தீன் மொழியிலதான் எழுதணும்.

உதாரணத்துக்கு ஒரு வரி

s356b1*(&)n4bv+)(*&^$#@!%^&*()+#*&^%(#$@!)_$%# :) எனக்குப்புரிஞ்சுடுச்சே..:) இதுல கூட கொஞ்சம் ஷெல்லியோட வாசனை இருக்கு! :)

மதுண்ணா மதுரைப் பாடல்களுக்கு பல்லவியுடன் நன்றி :) ஆனா வாசு வந்தா திட்டும்! முக்கியமான பாட்..வி.கு சொல்லாம விட முடியுமா (வி.கு தானே)

மதுரா நகரில் தமிழ் சங்கம் அங்கு மங்கல கீதம்முழங்கும்..

chinnakkannan
24th April 2016, 08:56 PM
தஞ்சாவூர் ஜில்லாக் காரி கச்சேரிக்கு வாயேண்டி - சுறாவாம்.. படம் கடிக்கும்னு படத்தை பார்த்ததில்லை பாட்டும் கேட்டதில்லை..

தஞ்சாவூர் ம்ம் நினைவுகள் முட்டுது.. ஆனா பாட் எதுவும் கிடைக்காததால ஐயா ஸேடாகிட்டேன்..:)

RAGHAVENDRA
25th April 2016, 08:57 AM
https://i.ytimg.com/vi/zjAOJ9xOP-w/hqdefault.jpg

இன்று ஏப்ரல் 25 - தேவிகா அவர்களின் பிறந்த தினம்.

உயிருடன் இருந்திருந்தால் 73 ஆண்டுகளைக் கடந்திருப்பார்கள்.

https://en.wikipedia.org/wiki/Devika

சில பாடல்கள் தேவிகாவின் பிறந்த நாளையொட்டி..

https://www.youtube.com/watch?v=feo5rQr8Hng

RAGHAVENDRA
25th April 2016, 08:59 AM
எத்தனை கோடி பணமிருந்தாலும் நிம்மதி வேண்டும் வாழ்விலே...

அன்பு எங்கே

https://www.youtube.com/watch?v=YeV5vHjTpXA

RAGHAVENDRA
25th April 2016, 09:03 AM
https://www.youtube.com/watch?v=WKC3N9Ny-6Q

கண்ணில் தெரிந்தும் கைக்கு வராத கானல் நீர் -

RAGHAVENDRA
25th April 2016, 09:10 AM
https://www.youtube.com/watch?v=hJVHq886BOE

நேற்று வரை நீ யாரோ .. வாழ்க்கைப் படகு

madhu
25th April 2016, 10:42 AM
என் பங்குக்கு... தேவிகா பிறந்த நாள் நினைவாக..

வெகுளிப்பெண் ( டைரக்டர் அவங்க வீட்டுக்காரர் தேவதாஸ் இல்லையோ ).... சுசீலாம்மா குரலில்

https://www.youtube.com/watch?v=BMyZYVr5M44

Russellxor
25th April 2016, 01:58 PM
தஞ்சாவூர்...

தஞ்சாவூரு மேளம்
தாலி கட்டும் நேரம்
கேட்பதற்குத்தானே
பாடுபட்டேன் நானும்
தங்கச்சிக்கு டும் டும் டும்..
தங்கைக்கோர் கீதம்

yoyisohuni
25th April 2016, 02:55 PM
வானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை ; யாரிங்கு கட்டி இங்கு கொடுத்தது
ஊருக்கு பாடு பட்டு இளைத்த கூட்டமோ வீடின்றி வாசலின்றி தவிக்குது
https://www.youtube.com/watch?v=BefkDBj5gSw

vasudevan31355
25th April 2016, 09:11 PM
என் பங்குக்கு... தேவிகா பிறந்த நாள் நினைவாக..

வெகுளிப்பெண் ( டைரக்டர் அவங்க வீட்டுக்காரர் தேவதாஸ் இல்லையோ ).... சுசீலாம்மா குரலில்



அண்ணா!

என்ன சொல்வது? வார்த்தைகள் வரவில்லை. நா எழவில்லை. எவ்வளவு காலம் எதிர்பார்த்திருந்த பாடல்! என்ன ஒரு குரல் ஜாலம்! அப்படியே பாடல் வரிகள் நம்மை கட்டிப் போடுகின்றன. பாடலின் ஊடே வரும் ஷெனாய் ஓசைகள் அருமை.

'வெண்ணிற ஆடை' நிர்மலாவின் பரிதாப நிலைமை. நம்மை கண்கலங்க வைக்கிறார். தேவிகா தேகம் முற்றி இருந்தாலும் நடிப்பின் தேர்ச்சி அதைவிட முற்றி தெரிகிறது.

என் பழைய பாடல் கேசட்டுகளை எடுத்தால் ஒவ்வொன்றிலும் இப்பாடல் முதல் பாடலாக இருக்கும். தங்கள் உயரிய ரசனைக்கு என்றுமே நான் அடிமை இப்பாடலின் அடிமை போலவே.

நன்றி அண்ணா! சொர்க்கத்தை இந்த 'வெகுளி'க்குக் காட்டியதற்கு.:)

vasudevan31355
25th April 2016, 09:22 PM
மதுண்ணா!

இதோ என் பங்கிற்கும் தேவிகா அவர்களின் பிறந்த நாளை ஒட்டி ஒரு பாடலை இடுகை செய்கிறேன். நீங்கள் தந்ததைப் போலவே.

அதே முதிர்ந்த தேவிகா அதே போல் கையில் குழந்தையுடன் அதே சுசீலா குரலில் 'பாபு....மணி பாபு...நீ தெய்வம் தந்த பிள்ளை அல்லவோ!' என்று பிள்ளைக்கு அன்னையாக 'பிள்ளைச் செல்வ'த்துடன் பாடும் பாடல்.

தெலுங்கு வாடை தெள்ளத் தெளிவு. இசை சக்தி குமார் என்பவர். ராகவேந்திரன் சார்....டீடெயில்ஸ் ப்ளீஸ்.

குழந்தைக்குத் தகப்பனார் படத்தில் எஸ்.வி.ரங்காராவாம். 'தாத்தா'ன்னா பொருத்தமா இருந்திருக்கும்.:) 'மாஸ்டர் ராமு' தனி ஆளாக காட்டில் மிருகங்களிடம் சிக்கித் தவிக்கும் காட்சிகள் இன்றைக்கும் திகிலூட்டும்.

நாகேஷ், மனோகர், சந்திரபாபு, அசோகன், தங்கவேலு, சோ கூட உண்டே!


https://youtu.be/ABqSdufyowc

eehaiupehazij
25th April 2016, 09:26 PM
Thanks to Shri Raghavendar's reminder on Devika's birth day commemoration 73 today.....
She has given unforgettable movies with NT and GG,,,and also with Muthuraman and SSR!

தேவிகா அவர்களின் பிறந்த நாளை ஒட்டி ....
ராகவேந்தர் அவர்களின் நினைவுறுத்தலுக்கு நன்றி பகன்று...
மென்மையான ஜெமினியின் மேன்மைத்திரி சார்பாக ....!

With GG!!

https://www.youtube.com/watch?v=oGCv1mrcMUc

https://www.youtube.com/watch?v=5p4AUtrmVVU

with NT!

https://www.youtube.com/watch?v=96WAGOzyBTs

vasudevan31355
25th April 2016, 09:27 PM
மதுண்ணா!

ஆமாம்!'பிள்ளைச் செல்வ'த்தில் 'கலைச் செல்வி' எங்கிருந்து வந்தார். கொடுமைடா சாமி!:banghead: இதில் 'மக்கள் கலைஞ'ரின் ஜோடி குமாரி பத்மினி அல்லவோ!

https://i.ytimg.com/vi/WFa4qFFOt2o/maxresdefault.jpg

vasudevan31355
25th April 2016, 09:52 PM
நீண்ட நாட்கள் சென்று திரிக்கு வருகை புரிந்திருக்கும் காட்டுப் பூச்சி அவர்களே!

வருக! வருக! தங்கள் பங்களிப்பைத் தருக. நாட்டை பஞ்சமில்லாமல் செய்யும் புன்செய், நன்செய் இவற்றை வஞ்சனை இல்லாமல் ரசித்தேன். கமலின் இன்னொரு அற்புதம். முடிவான ராஜீவ் காந்தி காட்சி சொதப்பல். யானை அடி சறுக்கும். முன்னம் குமுதத்தில் பொய் சண்டை போட்டு உண்மை சண்டை போல நம்மை ஏமாற்றிய காதல் மன்னனும், காதல் இளவரசனும் கலக்கலாய் நடித்த, நல்ல மெசேஜ் சொன்ன படம்.

காட்டுப் பூச்சி அவர்களே! உங்களால் முடியும்.

vasudevan31355
25th April 2016, 09:57 PM
வானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை ; யாரிங்கு கட்டி இங்கு கொடுத்தது
ஊருக்கு பாடு பட்டு இளைத்த கூட்டமோ வீடின்றி வாசலின்றி தவிக்குது

வானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை
யாரிங்கு கட்டி வைத்துக் கொடுத்தது.:)