PDA

View Full Version : The history of dravidan movementmakkal thilagam mgr
15th September 2015, 09:56 PM
அன்புடையீர் வணக்கம் !

சகோதரர்களும், நண்பர்களும் பலர் கேட்டுக்கொண்டதற்கிணங்க,
தென்னாட்டு காந்தி, இந்நாட்டு இங்கர்சால், காஞ்சி கரிபால்டி, நமது இதய தெய்வம், பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளாகிய இந்த நன்னாளில், "திராவிட இயக்க வரலாறு" என்ற தலைப்பில், இன்றைய தலைமுறையினரும், வருங்கால தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் பொருட்டு ஒரு தொடர் எழுத வாய்ப்பு கிடைத்தமைக்கு பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

திராவிட இயக்க வரலாற்றில், பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு அடுத்தபடியாக, நம் புரட்சித்தலைவர் ஆற்றிய பங்கு மகத்தானதாக உள்ளதால், இந்த திரியினை மக்கள் திலகம் எம். ஜி. ஆர். திரியின் இணை திரியாக உருவாக்கி அதில் பதிவுகள் பதிவிடுவது தான் சாலப்பொருந்தும் என்ற எண்ணத்தில் தான் இதனை ஆரம்பிக்கிறேன்.

பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு அடுத்தபடியாக, நம் பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்களின் பங்கு மகத்தானது என்று கூறியதில் பலருக்கும் சிறு சந்தேகம் தோன்றலாம். 1971-76 கால கட்டத்தில், கலைஞர் கருணாநிதி அவர்கள் தலைமையிலான தி. மு. க. ஆட்சி செய்தபோது, ஊழல், லஞ்சம் பெருகி விட்டதை கண்டு, மக்கள், ஆட்சி மாற்றம் காணும் நிலை ஏற்பட்டது. அப்பொழுது, தி. மு. க. விற்கு மாற்றாக காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு முன்னுரிமை அளித்து வாக்களிக்க தயாராகி வந்த காலத்தில் மக்களின் மன ஓட்டத்தை நன்கு புரிந்து கொண்டு தக்க சமயத்தில், நம் புரட்சித்தலைவர் அவர்கள், பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயரில் புதிய கட்சி ஆரம்பித்து, அவரின் திருவுருவத்தை கட்சி கொ டியில் பதித்து, கட்சியின் கொள்கைக்கு அண்ணாயிசம் என்றும் பெயரிட்டு, மூச்சுக்கு மூச்சு,, பேச்சுக்கு பேச்சு பேரறிஞர் அண்ணா அவர்களை குறிப்பிட்டு, மக்களை திராவிட இயக்கத்தின் பால் கொண்ட ஈர்ப்பினை தக்க வைத்தார். உரிய நேரத்தில், நம் மக்கள் திலகம் கட்சி ஆரம்பிக்காமல் இருந்திருந்தால், கலைஞர் தலைமையிலான தி. மு. க. வெறுப்புணர்ச்சியில், மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வந்திருப்பர் மக்கள்.

இன்றும், அவர் ஆரம்பித்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான் ஆட்சி செய்து வருகிறது. அவர் தோற்றுவித்த இரட்டை இலை சின்னம் தான் வெற்றி பெற்று வருகிறது.

கலைஞர் அவர்களோ 1980 சட்டமன்ற தேர்தலின் போது, காங்கிரசுடன் சேர்ந்து கொண்டு, கூட்டணி ஆட்சி என்ற நிலையை முன் வைத்து காங்கிரஸ் கட்சியை நிலை நிறுத்த முயற்சி மேற்கொண்டார். ஆனால், நம் புரட்சித்தலைவர் அவர்கள் இந்த கூட்டணி ஆட்சி கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு, திராவிட இயக்கம் தான் இந்த தமிழகத்தில், தனியாட்சி செய்திட வேண்டும் என்று தீரமனமாக சொல்லி,, அதனை செயலிலும் நிரூபித்தார் மக்களின் மாபெரும் ஆதரவுடன்.

எனவே தான், திராவிட இயக்கத்தின் போர் வாளாக, பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு அடுத்தபடியாக, நம் புரட்சித்தலைவர் விளங்கினார், திராவிட இயக்கம் வளரவும், அது இன்றளவும் செழித்து நிற்பதற்கும் , சத்துணவு தந்த சரித்திர நாயகன் எம். ஜி ஆர். தான் காரண கர்த்தா என்று அறுதியிட்டு உறுதிபட ஆணித்தரமாக, ஆதாரப்பூர்வமாக அடித்து கூறுகிறேன். அதில் தவறு ஏதுமில்லை என்றும் உணர்கிறேன்.

திரி அன்பர்கள் அனைவரும், இதில் மக்கள் திலகம் சம்பந்தப்பட்ட சினிமா செய்திகள் பதிவிட வேண்டாம் என்று அன்புடன் கேட்டு கொள்கிறேன். இதில், முழுக்க முழுக்க அரசியல் செய்திகள் பதிவிடப்படும் என்பதனயும் தெரிவித்து கொள்கிறேன்.

தங்களின் மேலான ஒத்துழைப்பை நல்க அன்புடன் வேண்டும்,

சௌ. செல்வகுமார்

suharaam63783
15th September 2015, 10:08 PM
My Heartiest Wishes for the New Thread mr. Prof. sir...

makkal thilagam mgr
15th September 2015, 11:42 PM
தொடர் - 1.

ஆரியர்கள் தென்னாட்டில் எப்பொழுது புகுந்தனர் என்பது திட்டவட்டமாக கூற முடியாதாயினும், பஞ்ச காப்பிய காலத்திலேயே அவர்கள் தென்னாட்டில் ஆதிக்கம் பெற்று விட்டனர் என்று கூறலாம். பஞ்ச காப்பியங்களிலும், சங்க கால நூல்களிலும், இதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. அவர்கள் தென்னாட்டில் இடம் பெற்றது முதல், ஆரிய சித்தாந்தங்களை பரப்ப தொடங்கி விட்டார்கள்.

மக்களை அடிமைப்படுத்த, மதம் ஒன்று தான் ஏற்ற கருவி என உணர்ந்த தந்திரசாளிகளான ஆரியர்கள் வெகு சுலபமாக தமிழர்களின் மதாசிரியர் ஆகிக்கொண்டனர். பிராமணர்களை போற்றுவதும், அவர்களுக்கு தானங்கள் வழங்குவதும், சிறந்த மோட்ச வழியென தென்னாட்டு பெருநில மற்றும் குறுநில மன்னர்கள் நம்பி, அவர்களுக்கு சர்வ மானியமாக நிலங்கள் வழங்கலாயினர். மன்னர்களால் போற்றப்பட்டவர்களை பாமர மக்கள் போற்றுவதும் ஆச்சரியமில்லையே ! ஆகவே, பிராமணர்களே தென்னாட்டு பூ தேவர்கள் என போற்றப்பட்டனர். தமிழ் மூவேந்தர்கள் மறைந்து, பல்லவர்கள், நாயக்கர்மார்கள், ஆந்திரர், மராட்டியர், முகம்மதியர் ஆட்சி மாறி மாறி தென்னாட்டில் தோன்றிய போதும், ஆரியர் ஆதிக்கம் குறைய வில்லை. மாறாக, வளர்ந்து வந்தது எனவே சொல்ல வேண்டும்.

ஆங்கில ஆட்சி தென்னாட்டில் நிலை பெற்ற போது, பிரமாணர் அல்லாதவரே முதன் முதலில் செல்வாக்கு பெற்றிருந்தனர். ஆங்கிலேயர்கள், கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில், வர்த்தக சாலைகள் அமைத்த பொழுது, அவர்களிடம் முதலில் பழகியது பிராமணர் அல்லாதவர்களே ! துபாக்ஷிகளாகவும், தரகர்களாகவும், ஆங்கிலேய நட்பை பெற்ற இந்த பிராமணர் அல்லாத சமுதயதிதினருக்கு செல்வாக்கு பெருகி வந்தது. இதன் காரணமாக, ஆங்கிலேயரின் தேச நிர்வாகத்தில், பிரமாணர் அல்லாதவர்களே நிர்வாக உத்தியோகஸ்தர்களாக இருக்கலாயினர். இந்த கால கட்டத்தில், அரசியல் துறையில், முதலியார், நாயுடு, நாயக்கர், செட்டி, பிள்ளை போன்ற சமூகத்தினரே இடம் பெற்றிருந்தனர். அவ்வாறு இடம் பெற்றிருந்தவர்கள் பிற்காலத்தில், பிராமண சிறுவர்களுக்கு உதவி புரிந்து, அவர்களை உயரிய நிலைக்கு கொணர்ந்தனர். ஒரு நாயக்கரான தாசில்தார் உதவியால், காலஞ்சென்ற சர் டி. முத்துசாமி அய்யர் உயரிய நிலைக்கு வந்ததை உதாரணமாக கூறலாம். பிராமணர் அல்லாதோர், இயல்பாகவே நிர்வாகத்திறமை கொண்டதால், ஆங்கிலேயரின் நன் மதிப்பை வெகு எளிதில் பெற்றனர்.

அதுவரை, ஆங்கிலேயர்களை மிலேச்சர்கள் என்றும், ஆங்கிலம் மிலேச்ச மொழி என்றும் கருதி ஒதுங்கியிருந்த பிராமணர்கள், அரசியலில், பிராமணர் அல்லாதோர் ஆதிக்கம் பெற்று வருவதையும், சமூக வாழ்வில் மதிப்பையும் பெற்று வருவதையும் கண்டு, இனி மேலும், ஒதுங்கி இருந்தால் தமது சமூகம் வீழ்ச்சி அடைந்து விடுவது உறுதி என்று உணர்ந்த காரணத்தால் ஆங்கிலம் கற்க ஆர்வம் காட்டினர். அங்கிலேயரிடம் நட்பு பாராட்டவும் முன் வந்தனர். 100 ஆண்டுகளுக்கு முன்பு அடிகோலப்பட்ட சென்னை ராஜாங்க கல்லூரியில் பிராமணர்கள் ஆங்கிலம் பயிலுவதில் தீவிர ஆர்வம் காட்டினர். ஓதலையும், ஒதுவித்தலையும் குலத் தொழிலாக கொண்ட பிராமணர்கள் கல்வி பயிற்சியில் வெகு விரைவாக முன்னேற்றம் அடைந்ததினால், அரசாங்கமும், அவர்களுக்கு பல சலுகைகள் காட்ட தொடங்கினர். சென்னை மாகாண ராஜாங்க கல்லூரி நிறுவப்பட்ட போது, பிராமணர்களே ஆதிக்கம் செலுத்தினர். அது முதல், அரசியல் துறையிலும், பொது வாழ்விலும், பிராமண ஆதிக்கம் பெருகலாயிற்று. தமது சமூக நலனை பாதுகாத்து கொள்ளும் பொருட்டு, தமக்கு சொந்தமாக பத்திரிகைகள் உருவாக்கினர் பிராமணர் அல்லாதோர் நிலைமை சீர் குலைய தொடங்கி விட்டது.


தொடரும் ......

குறிப்பு : இத்தொடர் எவர் மனதை புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டது அல்ல. மேலும், இத்தொடரில் பதிவு செய்யும் கருத்துக்கள் பல, பண்டித எஸ். முத்துசாமி அவர்கள் எழுதிய "நீதிக்கட்சி வரலாறு" என்ற புத்தகத்திலிருந்து கையாளப்பட்டுள்ளது.
,

MGRRAAMAMOORTHI
16th September 2015, 08:10 AM
தங்களின் இந்த புதிய முயற்சி வெற்றிபெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்

ravichandrran
16th September 2015, 10:38 PM
http://s10.postimg.org/4ypa8uipl/dddds.jpg (http://postimage.org/)

ravichandrran
16th September 2015, 11:04 PM
http://s9.postimg.org/smhq2lomn/12011276_1695210544042216_7422595988755949218_n.jp g (http://postimage.org/)
Courtesy : Face Book

ravichandrran
16th September 2015, 11:06 PM
http://s23.postimg.org/mrmfeiky3/fdds.jpg (http://postimage.org/)

esvee
17th September 2015, 07:46 AM
திராவிட இயக்க வரலாறு - திரியை துவக்கிய இனிய நண்பர் பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் . தங்களின் கை வண்ணத்தில் திராவிட இயக்க வரலாறு பல அருமையான பதிவுகளுடன் , சான்றுகளுடன் வெற்றி நடை போட விழைகிறேன் .

Varadakumar Sundaraman
17th September 2015, 11:15 AM
திரு செல்வகுமார் சார்

திராவிட இயக்க வரலாறு - புதிய முறையில் எல்லோரும் அறிந்திடும் வகையில் பதிவிடவும் .
உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

jaisankar68
17th September 2015, 07:02 PM
திராவிட இயக்கத்தின் வரலாற்றுப் பாடத்தை நடத்தும் பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கு நன்றி. தங்களது சீரிய முயற்சி சிறப்பாக அமைந்து பலருக்கும் பயன்தர எல்லாம் வல்ல எம்.ஜி.ஆரின் ஆசிகள் என்றும் துணை நிற்க வேண்டுகிறேன்.

makkal thilagam mgr
22nd September 2015, 10:29 PM
தொடர் - 2 .

பிரமாணர் அல்லாதோர் புறக்கணிப்பு !

இந்தியர்களின் கோரிக்கைகளையும், குறைபாடுகளையும் பிரிட்டிஷ் சர்க்காருக்கு தெரிவித்து பரிகாரம் தேடவும், ஆள்வோருக்கும், ஆளப்படுவோருக்கும் ஒரு வித தொடர்பை ஏற்படுத்தும் நோக்கத்தில், இந்திய நலன் விரும்பும் பெரியோர்கள் பலர் முதன் முதல் நேஷனல் காங்கிரஸ் என்ற தேசிய மகாசபையை ஆரம்பித்தனர். ஆரம்ப காலத்தில் அது மிதவாதிகள் ஸ்தாபனமாகவே இருந்தது. ஆண்டு தோறும் கூடும் மகா நாடுகளில், ராஜ விசுவாச தீர்மானம் முதல் இடம் பெற்றிருந்தது.

ஆலன் ஆக்டேவியன் ஹியூம், w.c. பானர்ஜி, பதுருதீன் தயாப்ஜி, எஸ். ராமசாமி முதலியார், ரங்கைய நாயுடு, ராவ் பகதூர் சாஸ்திரி, சபாபதி முதலியார், சர். சங்கரன் நாயர் போன்ற நிதானமான அறிவாளிகள் காங்கிரசில் ஆதிக்கம் பெற்றிருந்தவரை அது ஓரளவு உண்மையான பிரதிநிதித்துவம் வாய்ந்த தேசிய மகாசபையாகவே இருந்தது. சென்னை மாகாணத்தில் உள்ள அறிவு விளக்கம் பெற்ற பிராம்மணர் அல்லாதோர் அதை ஆதரித்தும் வந்தார்கள்.

அந்த காங்கிரசின் பழைய இலட்சியங்கள் சில இப்போதும் காங்கிரஸ் இலட்சியங்களாக இருந்து வருகின்றன. ஆனால் அந்த லட்சியங்களை அடைய கையாளப்படும் முறைகளும், கையாளும் நபர்களும் கொடிய வகுப்பு வாதிகளாய் இருப்பதனால், காங்கிரஸ் இப்போது குறிப்பிட்ட சமூகத்தார் நலன் கோரும் வகுப்பு ஸ்தாபனமாக மாறி விட்டது. எனவே முஸ்லிம் சமூகத்தினரும் அதனை ஆதரிக்க வில்லை. காங்கிரஸ் பகட்டில் மயங்கி அதில் சேர்ந்த தென்னாட்டு பிராமணர் அல்லாத அறிவாளிகள் பலர், பின்னாளில், காங்கிரஸ் கட்சி வெளிப்பார்வைக்கு தேசிய சபையாகவும், உண்மையில் அது பிராமணர் அல்லாதோரை புறக்கணிக்கும் ஒரு இயக்கமாக இருப்பதையும் உணர்ந்து தமது சுயமரியாதையையும், கவுரவத்தையும் காப்பற்றிக்கொள்ளும் பொருட்டு கண்ணியமாக வெளியேறி விட்டனர்.

தொடர்ந்து நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தேர்தலில் பிராமணர் அல்லாதோர் சமூகத்தை சார்ந்த எஸ். ராமநாதனும், பி. ரத்தினவேல் தேவரும், தோற்கடிப்பட்டதும், சி. ராஜகோபாலாச்சாரி, டாக்டர் டி .எஸ். எஸ். ராஜன், எஸ். சத்தியமூர்த்தி மற்றும் ருக்குமணி லட்சுமிபதி (இவரின் பெயரில் சென்னை எழும்பூரில் இப்போதும் சாலை ஒன்று உள்ளது) போன்றவர்கள் வெற்றி பெற்றதும், பிராமணர் அல்லாதோர் காங்கிரஸ் கட்சியில் புறக்கணிக்கப் பட்டதை வெளிச்சம் போட்டு காட்டியது.

சமூக விஷயங்களில் பிற்போக்கான ஒரு சில பிராமணர்கள் காங்கிரஸ் கட்சியில் ஆதிக்கம் பெற்றதன் விளைவாய், காங்கிரஸ் சீர் குலைய தொடங்கிற்று !

தொடரும் ...

makkal thilagam mgr
29th September 2015, 09:39 AM
தொடர் - 3.

காங்கிரஸ் கட்சியில் பிளவு :

பிரிட்டிஷார் ஆட்சியில் பிராமணர் அல்லாதோர், முக்கியமாக ஒடுக்கப்பட்டவர்கள் சிறுக சிறுகவேனும் தலை தூக்கி மதிப்பு பெற்று வருவதும்,, பாதிரியார் உதவியினால் கல்வித் துறையில் ஒடுக்கப்பட்டவர்கள் முன்னேற்றமடைந்து வருவதும், ஆங்கிலக் கல்வியின் பயனாக நாட்டிலே மத உணச்சியும் குருட்டு நம்பிக்கைகளும் குறைந்து வருவதும், அந்த வைதீக அரசியல் வாதிகளுக்கு மிக்க அச்சத்தை உண்டு பண்ணின. பிராமணியத்துக்கு இந்து மதமே அரணாக இருந்து வருவதனால் இந்து மதாபிமானம் குன்றினால் பிராமணீ யம் ஒழிவது திண்ணம் என்று அவர்கள் உணர்ந்தனர். மதத்தையும்,, சுவர்க்க நரகங்களையும் காட்டி மக்களை ஏய்க்க முடியாத நிலை ஏற்படவே, தேசியத்தை காட்டி ஏய்க்க எண்ணம் கொண்டனர். எனவே, பிரிட்டிஷ் அரசாங்கம் மீது பாமர மக்களுக்கு துவேஷத்தையும், வெறுப்பையும் உண்டு பண்ணும் வழிகளை தேடலாயினர்.

இந்திய செல்வத்தை கொள்ளையடிப்பதும், இந்தியக் கலைகளையும் நாகரீகத்தையும் அழிப்பதே பிரிட்டிஷாரின் நோக்கம் என்றும், இந்தியக் கைத்தொழில்கள் மறைந்ததற்கும், இந்தியா வறுமை நாடனதற்கும் பிரிட்டிஷாரே காரணமென்றும், பிரிட்டிஷாரை ஒட்டி சுயராஜ்ஜியம் ஸ்தாபித்தாலே இந்தியா காப்பாற்றப்படும் என்றும் அவர்கள் விஷமப் பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்த முயற்சி ஆரம் பத்தில் பலனளிக்க வில்லையென்றாலும், காலப்போக்கில் அவர்கள் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் தலைவர்களும், ஆரம்பத்தில் இதற்கு செவி சாய்க்க வில்லை என்றாலும், நாளடைவில் மிதவாதிகள் அல்லாதோர் எண்ணிக்கை காங்கிரஸ் கட்சியில் பெருகலாயிற்று. பால கங்காதர திலகர் தலைமையில், அவர்கள் 1907ல் சூரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில், காங்கிரஸ் கட்சியை கைப்பற்ற முயன்றனர். அம்முயற்சி பலிக்க வில்லை. அன்று தொட்டு, காங்கிரஸ் கட்சியில் பிளவு உண்டாயிற்று.

தொடரும் ....