PDA

View Full Version : நெஞ்சம் மறப்பதில்லைRAGHAVENDRA
6th June 2015, 10:08 PM
பேசும் படம் தொடங்கிய காலத்திலிருந்து இன்று வரை நம் மனதில் நீங்கா இடம் பெற்ற பழைய திரைப்படங்களைப் பற்றிய நினைவுகள், அவற்றுக்கும் நம் வாழ்க்கைக்கும் உள்ள உளரீதியான தொடர்பு போன்றவற்றை பகிர்ந்து கொள்ளலாம். புதிய தலைமுறையினருக்கு பழைய திரைப்படங்களை அறிமுகப் படுத்தும் பாலமாகப் பயன் படுத்தலாம். படங்களின் விமர்சனம் என்பதைத் தாணடி அவற்றைப் பற்றிய தகவல் களஞ்சியமாகவும் பயன்படுத்தலாம்.

https://tamizharivu.files.wordpress.com/2011/03/atthemovies_0.jpg

நம் நெஞ்சம் மறக்காத பழைய திரைப்படங்களை அசை போட இது நல்ல வாய்ப்பாக அமையட்டுமே..

நெஞ்சம் மறப்பதில்லை.. திரியை நெஞ்சம் மறப்பதில்லை என ஆக்குவோம்.. நினைவுகளைப் பகிர்ந்து கொள்வோம்...

இந்த இழை துவங்குவதற்கான எண்ணம் நெய்வேலி வாசுவுடனான உரையாடலின் போது உதித்தது. எனவே இதனுடைய பெருமையும் சிறப்பும் அவருக்கு உரித்தாகிறது.

குறிப்பு..

1. கீற்றுக்கொட்டகை திரிக்கும் இதற்கும் சற்றே வேறுபாடு உள்ளது. இத்திரியில் திரைப்படங்களைப் பற்றிய விமர்சனங்கள், தகவல் துணுக்குகள் போன்றவை இடம் பெறலாம்.

2. Tamil Film Classics - Avoid films of Sivaji, M.G.R., Jai Shankar, Ravichandran and others for whom there are already separate threads.

3. திரைப்படங்களுக்கான காலகட்ட வரையறை - 1931 முதல் 1970 வரை.

4. இதில் வரிசைக்கிரமம் எதுவும் தேவையில்லை. அவரவருக்குத் தோன்றிய நினைவுகள், பாதித்த அல்லது பிடித்த படங்கள் போன்றவற்றைப் பற்றி பகிர்ந்து கொள்ளலாம்.

5. குறிப்பிட்ட படத்தைப் பற்றி விவாதிக்கும் போது, நடிக நடிகையர் அல்லது இதர பங்கேற்பாளர்கள் இவர்களைப் பற்றிய தனிப்பட்ட விமர்சனங்கள் வேண்டாம்.

6. முடிந்த வரை மக்கள் அதிகம் அறிந்திராத அல்லது கேள்விப்பட்டிராத படங்களைப் பகிர்ந்து கொண்டால் இன்னும் சுவையுள்ளதாய் அமையும்.

RAGHAVENDRA
6th June 2015, 11:05 PM
பல பழைய படங்கள், அவை எந்த நட்சத்திரங்களையும் சாராதவை, நம் மனதில் அவ்வப்போது நிழலாடும். அவ்வாறான திரைப்படப் பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் அப்படம் தொடர்பான நினைவுகளும் வந்து போகும். அதனை மறந்து விடாமல் நமக்கு நாமே பாதுகாத்துக் கொள்ளவும் இது பயன்படும்.

அவ்வகையில் நமக்குள் ஓர் பந்தத்தை ஏற்படுத்திய படங்களைப் பற்றி விவாதிக்கும் வகையில் என் மனதிற்கு நெருங்கிய படங்களை நானும் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

திக்குத் தெரியாத காட்டில்

http://i.ytimg.com/vi/jCvHKew62Gg/hqdefault.jpg

முழுக்க முழுக்க ஒரு காட்டில் நடக்கும் கதை. ஒரு குழந்தை காட்டில் தொலைந்து போவதும் அதைத் தேடும் பணியில் ஈடுபவர்களின் தவிப்பும் விறுவிறுப்பாக சொல்லப் பட்ட படம். மெல்லிசை மன்னரின் இசையமைப்பு இப்படத்தில் ஒரு கதாநாயகன் ரேஞ்சுக்கு அமைந்துள்ளது. படத்தைத் தூக்கி நிறுத்துவது அவருடைய இசையே. பாடல்கள் சூப்பர் ஹிட். குறிப்பாக எம்.எஸ். ராஜேஸ்வரியின் பூப்பூவா பறந்து போகும் பாடல், கேட்கும் போதே நம்மை ஓர் கானகத்துள் வித்தியாசமான அனுபவத்தைத் தரும் வகையில் அமைந்துள்ளது. நாகேஷ், வி.கே.ராமசாமியின் நகைச்சுவை அன்று ரசிக்கத் தக்கதாக இருந்தாலும் இன்றைய கால கட்டத்தில் சற்று போரடிப்பது உண்மை.

என்றாலும் சஸ்பெனஸ் திகில் நிறைந்த காட்சிகளுடன் படம் பார்வையாளரை ரசிக்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பாடல்கள் மிகப் பெரிய பலம்.

முழுப்படத்தையும் பார்ப்பதற்கான இணைப்பு

http://www.veoh.com/watch/v19340043qFmMsfCY?h1=Thikku+Theriyatha+Kaattil+www .techsatish.net

இப்படத்தில் குளிரடிக்குதே கிட்ட வா கிட்ட வா பாடலில் உள்ள சிறப்பம்சம், ஒரு கானகத்தில் நீரோடையில் என்ன சலசலப்பு ஏற்படுமோ அதை அப்படியே தன் இசையில் மெல்லிசை மன்னர் கொண்டு வந்திருப்பார். முன்பே ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு படத்தில் சலசல ராகத்திலே பாடலில் இசையரசியின் குரலில் அருமையான பாடலை இதே சூழலில் தந்திருந்தாலும் இப்பாடலுக்குள்ள விசேஷம், குழுவாக குளித்து கும்மாளமிடுவதையும் வெளிப்படுத்தும் வண்ணம் வைப்ரஃபோன் பயன்படுததியிருப்பார்.

மேலும் மாலி, மூர்த்தி, ஜூனியர் பாலையா, வி.கோபாலகிருஷ்ணன், ஜம்பு [நடிகை இளவரசியின் தந்தை] போன்ற நாயகனுக்கு அடுத்தடுத்த வரிசை நடிகர்களுக்கும் பாடல் காட்சி அமைத்திருப்பது சிறப்பு.

பார்க்கவும் கேட்கவும சலிக்காத பாடல்

குளரடிக்குதே கிட்டவா கிட்டவா

https://www.youtube.com/watch?v=N1NzuUb4Hb4

RAGHAVENDRA
6th June 2015, 11:23 PM
திக்குத் தெரியாத காட்டில் படத்தில் வாலிபர்களின் குழுவுக்கு பெயர் என்ன தெரியுமா

வருத்தமில்லா வாலிபர் சங்கம்

ஆமாம்.. இதையெல்லாம் அப்போதே செயது விட்டார்களாக்கும்..

இந்தப் பாடலைப் பாருங்கள்..

https://www.youtube.com/watch?v=KwgKMKtjSbM

திக்குத் தெரியாத காட்டில்... எஸ்.பி.பாலாவின் புகழை உச்சியில் கொண்டு சேர்த்ததில் இப்படத்திற்குப் பெரிய பங்குண்டு.

இந்தப் பாடல்களைப் பற்றிய விரிவான பதிவை நெய்வேலி வாசு சாரின் தொடரில் மதுரகானம் திரியில் படிக்கும் வரை பொறுத்திருப்போம்.

chinnakkannan
7th June 2015, 01:44 AM
அன்பான ராகவேந்திராசார்

புதிய திரி துவக்கியதற்கு முதற்கண் என்னிடமிருந்து ஒரு ஓ!

திக்குத்தெரியாத காட்டில் குளிரடிக்குதே கிட்ட வா கிட்டவா தெரிந்த பாடலென்றாலும் என் நினைவில் இருக்கும்பாடல் பூப்பூவாப்பறந்து போகும்பட்டுப் பூச்சியக்கா நீ பளபளன்னு போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா பாட்டு..

அல்லது இது பிள்ளைச் செல்வம் பாட்டா தெரியவில்லை..

6வது கண்டிஷனை தளர்த்திக் கொண்டால் சில பல படங்கள் கிடைக்கும் டைட்டில் படம் உள்பட

குரு.


சினேகிதனின் ஊருக்கு வருகிறான் கதானாயகன்.. அவன் பார்த்தறியாத கிராமம் அது..அவன் பாம்பேயைட் பம்பாய் வாசி..மும்பாய் என மாறாத பம்பாய்..வந்தவன் ட்ராவல் செல்லும் மாட்டுவண்டியை நிறுத்தி சினேகிதனிடம் சொல்கிறான்..

இவனே இங்கிருந்து கொஞ்சம் நடந்தால் ஒரு ஆலம்ரம் அதற்குப் பின் ஒரு ஏரி

நண்பனுக்கோ ஆச்சர்யம்..எப்ப்டிடா சரி போய்ப் பார்ப்போம்

பார்த்தால் உண்மை. ஆலமரமதன் பின்னால் ஏரி

எப்படிடா

தெரியலை குரு..இந்த கிராமம் அதன் சூழல் எனக்கு ஏற்கெனவே பழகினாற்போல்

ஏய்.. நீ பாம்பேக் காரன் தானே.. நிறைய இந்தி சினிமா பார்த்திருப்ப .. அதான்..சரி சரி வா வீட்டிற்குப் போலாம்

சொய்ங்க் என்று வீட்டில் போய் ஹீரோவை மாடியறையில் விட்டு..”இவனே நீ தூங்கு சமர்த்தா .. நாளைக்காலை கிராமம் சுற்றலாம்..”

காலை வருவதற்குத் தான் ஒரு முழு நீண்ட இரவு இருக்கிறதே

கதானாயகனோ இளைஞன் வாலிபன்

கனவுகளைத் தீட்டி கலைகளாய்க் கண்டே
நனவில் மிதந்துதான் நாளும் - கணப்பொழுதும்
துள்ளும் இளமை தூண்டிவிடும் தன்மையில்
அள்ளும் அழகாய் அவன்

(நல்லா இருக்கில்லை குரு (யொசிக்காமல் கரெக்*ஷன் பன்ணாமல் எழுதிய வெண்பா இது..கண்ணா நீ எங்கேயோ போறடா ..இல்லை இல்லை பழைய காலத்துக்கு)

இரவில் உறங்கலாம் என்றால் ஹீரோவிற்கோ உறங்க இயலவில்லை..காரணம் சிரிப்பு..சிரித்ததுபெண்

கேட்டான்..பின் அதேவீட்டினொரு அறையில் பார்த்தும் விட்டான்

தூரிகை தீட்டாத துன்பங்கள் பேசிடும்
காரிகை கண்ணென்றால் ஆமென்பேன் - வேறிடத்தில்
எங்கெங்கோ பார்த்த எழிலாய்த் தெரிகிறதே
சங்குக் கழுத்தழகும் தான்..

ஒரு அறையின் பின்னால் ஜன்ன்லைனூடே இரு கண்கள்..பின் அழகிய முகம் துடிக்கும் உதடுகள்..விலகிய தாவணி..ததும்பும் இளமை

யார் நீ எனக்கேட்க கண்கள் விலகின..அவளும் அறையினுள் காணாமல் போக பின் வந்து கதானாயகன் கண்ணை இறுக்க மூடி
வராத தூக்கத்தைகஷ்டப்பட்டு வரவழைத்து ப் பின்..கொர்ர்ர்.. இளைஞன்ர் தான் என்ன செய்ய..களைப்பு வந்தால் குறட்டை தானே வரும்..ஆன்றோர் வாக்கு (இல்லையா வாசு சார்)


மறு நாள் காலை நண்பனுடன் கிராமத்தை அறியப்புறப்பட கிராமத்தின் கோடியில் ஒரு பங்களா.

அதில் வசித்து உறவாடியது போல ஒருபிரமை

பின்


நாளின் முடிவில் என்ன வரும்

வழக்கம் போல் இரவு தான்

இரவு

இளமைப் பருவத்தில் ஏதும் சொலாமல்
கலகம் செய்யுமே காண்

ஆமங்க ஆண்ட்ரோஜன் ஈஸ்ட்ரோஜன் எனச்சொல்லப்படும் கெமிஸ்ட்ரி நார்மலா வாலிப வயசுல தூண்டித் தான் விடும்

இந்த ஹீரோ பயபுள்ள கல்யாண் நு அவன் பேர் வெச்சுக்கலாமா

கல்யாணுக்கு உறக்கம் வரவில்லை..

படுத்தான்..புறண்டான் உறக்கமில்லை..சங்க காலக் கதா நாயகிகள் போலே

பின்...

ரிக் ரிக் ரிக்னு இரவுக்கோழிகளோட கூச்சல்..இனம் புரியாத பறவைகலோட பரிபாஷை..”என்னய்யா ஒன்னோட் மாமா வந்துட்டானா பறந்து போயிருந்தானே’ ஒரு பறவை கேட்க மறு பறவை “என்ன வோய் கொஞ்சம் கூட தில்லில்லாத மனுஷனாங்காட்டியும் நீர்.. அவர் பக்கத்தூருக்குப்போயிருக்கார் அனேகமா காலைல தான் வருவார்..:

“ஏட்டி..இப்ப நா என்ன பண்ண”

‘அதையும் நாஞ்சொல்லணுமாங்காட்டியும்.. வாவேன்..” எனகிள்ளை மொழியில் அடுத்த பறவை சொல்வது அவன் காதில் விழுந்தாலும் அதையும் மீறி கேட்கும் குரல்..இல்லை இல்லை வீறிடும் குரல்

ஆஆஆஆஆ

வெளிச்சென்று பார்த்தால் முன்தினம் பார்த்த அறை பூட்டப்பட்டிருக்க நண்பணிடம் கேட்டால் மழுப்பியது நினைவுக்கு வர சரி போய் த்தூங்கலாம் எனக் கல்யாண் திகைத்தப்டி கட்டிலுக்குச் செல்ல அந்த கானம்...

ஆஆஆ...

நெஞ்சம் மறப்பதில்லை.. அது நினைவை இழப்பதில்லை

அது பாட்டா என்ன..எனக்கென்ன ஆகிறது என் நரம்புகளில் உட்புகுந்து ரத்த நாளங்களில் பாய்ந்து
என் உணர்வுகளைச் சூடேற்றி என்னவோ செய்கிறதே.. என் கண் நரம்புகள் துடிக்கிறது..என் உதடும்

என் இதயம் அதன் துடிப்பை ப் பலமடங்கு அதிகரிக்கிறது..

இது என்ன பாடல்.. என் உள்ளம், ஊன், உயிர் எல்லாவற்றையும் கொள்ளை கொள்கிறதே

பாடல் நேர்ந்த திசையில் செல்லலாமா

கல்யாண்முடிவெஉத்து நண்பனின் வீட்டிலிருந்து கீழிறங்கி,

கதவைத் திறந்து,
வெட்ட வெளியில் கலந்து,
நடுச் சாலையில்
பித்துப்பிடித்தவன் மாதிரித் தொடர

அந்த்க் குரல் அவனைக் கொஞ்சிக் கொஞ்சிப் பின் கெஞ்சிக் கெஞ்சி

அவன் இளமனது ப்ளஸ் வயதைத் தூண்டித்தூண்டி அவனை நடக்கவைத்துக்
கூட்டிச் செல்வது ஒருபாஆஆஆழடைந்தபஙகளா


அவனும் அங்குச் எல்ல அங்கே தான் புகையாய் ஒரு காரிகை அவளைப் பார்க்கிறான்..பாடியவாறே
அந்தப் புகை நங்கை அவனை அந்தப் பாழடைந்த சிலந்திக்கூடுகள் அடர்ந்த பங்களாவுக்குக்கூட்டிச் சென்று


ஓரிடத்தில் நிற்க

நம் கதானாயகன் கல்யாண் “ஹேய் பொம்பள..யார் நீ”

அந்தப் பெண் திரும்புகிறாள்..இல்லை இல்லை..

அவளது பலப்பலவான கதை சொல்லும் கண்கள் திரும்புகிறது..

இவள் இவள்..

வீலென்று கத்தியவண்ணம் நண்பன் வீட்டில்பார்த்த நங்கையின் கண்..

கல்யாணின் மனம் குழம்ப ஆரம்பிக்க

மேலும் பாடல் தொடர

அந்த புகை உருவம் அந்தப் பங்களாவின் மாடிப்படிமேல் ஏறி

ஒரு சமமான இடத்தில் நிற்க

அவனும் சென்றுபார்த்தால்..ஆச்சர்யம் தான்

அங்கு தென்படுவது அவனின் புகைப்படம்..

அதைப்பார்க்கப்பார்க்க

குளத்தில் கல்லெறிந்தால் குழம்பி

குட்டிக் குட்டி வட்டங்களாய் ஆரம்பித்துபெரிதாவது போல நினைவு


முன் ஜென்மத்தில் பண்ணையார் மகன் அவன்..அவள் கணக்கப்பிள்ளையின் மகள் நிறைவேறாக்காதல் பண்ணையார் எதிர்க்க பின் அவரால் காதல் ஜோடி மரணித்ததும்
ஒரு மணி நேரத் திரைப்படமாய்க் கண் முன் விரிய

பண்ணையார் மகன் தான் அவன் இந்த ஜென்மத்தில்.. நண்பனின் தங்கை தான் அவனது பூர்வ ஜென்ம மனைவி

சரி சரி என ந்ண்பனிடம் கதை சொல்லி நம்பாவிட்டாலும்

அவனது பைத்தியத் தங்கையைக் காட்டுக்குள் கூட்டிச் செல்லுகையில்ல்அருவருப்பு என்பது இதுவா

ஒரு கிழ உருவம்..கூனல் நடை..

தாத்தா..

என்ன

இதுஎன் மனைவியாகப் போகிறவள்பார்த்துக்கொள்ளுங்கள் இதோ வருகிறேன் எனச் சொல்லி எதற்கோ பிரிந்து செல்ல

அந்தக் கிழம் வேறு யாருமல்ல கல்யாணின் முன் ஜென்மத் தந்தை

சிரிக்கிறது

என்றோசொன்ன வார்த்தைகள் அதன் காதில் அலைமோதுகின்றன

இந்த ஜென்மமில்லை எத்தனை ஜென்மமெடுத்தாலும் உங்கள் காதலை நிறைவேற்ற விடமாட்டேன் எனச் சொன்னது

அதே போல இந்த ஜென்மத்திலும் போன ஜன்மக் கதானாயகனின் தந்தையான தன்னிடம்
அடைக்கலம் வந்திருக்கும் யுவதியைக் கொல்ல ஆவல் மிகக் கொண்டு கிழம் தூக்கிச் செல்ல முற்படுகையில்


கதானாயகனுக்குப் புரிய கிழத்துடன் சண்டை

முடிவில் புதைகுழியில் அவனது போன ஜன்மத்து அப்பா பண்ணையார் இறக்க இந்த ஜென்மத்தில் நண்பனின் தங்கைக்கு
சுய நினைவு திரும்பி வர

என்னாச்சு நீங்கள் யார்..

நானா நான் உன் அண்ணனின் நண்பன்

கல்யாண்..அவள் உதடுகளில் மென் முறுவல்..மனம் நெகிழ்ந்ததைக் சேலை காட்ட கொஞ்சம் இறுக்கிக் கொண்டு

என்ன ஆச்சுங்க எனக்கு..உங்களைப்பற்றி அண்ணா சொன்னதுபுகையாய்

கவலைப்படாதீர்கள்.. நாம் உங்கள் வீட்டிற்குப் போவோம் ..பின் அங்கிருந்த் நம் வீட்டிற்கு..

புதிராய் முதலில் புருவம் உயர்ந்தாலும் பின் புரிந்ததால் பருவம் உந்த அவன் மார்பில் சாய்கிறாள் அவள்

*

இது நெ.ம படத்தின் சுருக்க்கம்

கல்யாண் குமார் தேவிகா நம்பியார் நாகேஷ் என நட்சத்திரப்பட்டாளம்

த்ரில்லரில் முன்னோடி என்பேன் நான்..முதன் முதலில் சாந்தி தியேட்டர் (மதுரை) யில் பார்த்த போது
அந்தக் கிழ நம்பியார் தோன்றும் காட்சி என்னைத் திடுக்கிட வைத்தது.. மற்றவர்களையும் திடுக்கிட வைக்காமல் இருந்திருக்காது

கண்ணதாசன் எம்.எஸ்வி கூட்டணியில் இசையமைக்க வெகு நாள் எடுத்துக்கொண்ட பாடல் நெஞ்சம் மறப்பதில்லை எனக் கேள்விப் பட்டிருக்கிறேன்

தேனடி மீனடி, காடுமலை மேடுகண்ட மாட்டுப் பெண்ணெ, அழகுக்கும் மலருக்கும் ஜாதியில்லை, முந்தானை பந்தாட அம்மானை ஆடுங்கடி எனப் பாடல்கள் ஃபேமஸ் தான்..

அதன் பின் இதுவரை த்ரில்லர் என்பது தமிழ் சினிமாவில் வாராதது ஒருவித சோகம் தான் (சமீபத்திய டிமாண்டி காலனி த்ரில்லராம்.. நான் இன்னும் பார்க்கவில்லை)

ஸாரி ராகவேந்தர் சார்..எனக்கு த் தெரியாத பரிச்சயமில்லாத படங்களை நான்பார்த்ததில்லை..மன்னிக்கவும்.. :)

RAGHAVENDRA
7th June 2015, 06:33 AM
http://padamhosting.me/out.php/i53235_vlcsnap2010120610h55m30s150.png

சி.க. சார்
உள்ளபடியே மிகவும் அருமையாக நெஞ்சைத் தொடும் வகையில் நெஞ்சம் மறப்பதில்லை பற்றி எழுதியுள்ளீர்கள் [இது திரிக்கும் பொருந்தும்].

6 நிபந்தனையே அல்ல. ஒரு ஆலோசனை மட்டுமே.. தங்கள் நினைவிலாடும் எந்தத் திரைப்படமானாலும் தாங்கள் எழுதலாம், எழுத வேண்டும்.

தாங்கள் மட்டுமல்ல இம்மய்ய உறுப்பினர்கள் அனைவருமே பங்கேற்கலாம்.

RAGHAVENDRA
7th June 2015, 06:34 AM
த்ரில்லர் வகையில் தமிழில் அதிகம் வந்ததில்லை என்பது நம் அனைவருக்குமே ஒரு வகையில் சோகம் தான். ஓரளவிற்கு எஸ்.பாலச்சந்தர் சார் செய்திருக்கிறார். வரும் காலங்களில் அவருடைய படங்கள் பற்றி நாம் பகிர்ந்து கொள்வோம்.

RAGHAVENDRA
7th June 2015, 02:11 PM
குளிரடித்தும நடுங்கலாம். பயத்திலும் நடுங்கலாம்...

இரண்டாவதை இப்போது பார்ப்போமா..

சி.க. சார், இதோ நீங்கள் கேட்ட த்ரில்லர்...

எஸ்.பி. சாரின் நடு இரவில்... 1966ம் ஆண்டு வெளிவந்த வெற்றித் திரைக்காவியம்.

http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/1/1b/Nadu_Iravil.jpg/220px-Nadu_Iravil.jpg

எஸ்.பாலச்சந்தர், சௌகார் ஜானகி, வி.எஸ்.ராகவன், சோ, எம்.எஸ்.எஸ்.பாக்கியம், கே.விஜயன், சதன், கொட்டாப்புளி ஜெயராமன், மாலி, எஸ்.என்.லட்சுமி, கல்பனா, மேஜர் சுந்தரராஜன், வி.கோபாலகிருஷ்ணன், பண்டரிபாய், எஸ்.ஆர்.ஜானகி மற்றும் பலர் நடித்தது. தயாரித்து இயக்கி இசையமைத்தவர் எஸ். பாலச்சந்தர்.

ஒரு வீட்டில் குடியிருப்பவர்களில் ஒவ்வொருவராக மர்மமான முறையில் மரணமடைகிறார்கள். கொலையாளி யார்.

இவ்வளவு தான். இதை விட சிறப்பாக இந்தக் கதையை சொல்ல முடியுமா என நம்மை வியக்க வைக்கிற அளவிற்கு அருமையான திரைக்கதை, பின்னணி இசை. இரண்டே பாடல்கள், அநதக் காலத்திலேயே நீளம் குறைவான படம் என்று பல சிறப்பைப் பெற்றது.

திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் வெற்றி வாகை சூடிய படம் நடு இரவில்.

இளம் வயது சிறுவர்களை கட்டாயமாக திரையரங்குகளில் அனுமதிக்க மறுத்தது இப்படத்தின் சிறப்புக்கு எடுத்துக்காட்டு.

ஈஸ்வரியின் நாலு பக்கம் ஏரி, சுசீலாவின் கண்காட்டும் ஜாடையிலே இரண்டுமே நம்மை சொக்கிப் போட வைத்த பாடல்கள்.

கொலையாளி யார் என்பது தெரிய வரும் போது அனைவரின் முகத்திலும் எதிர்பாராத வியப்பு மேலிடும்..

நடு இரவில் தமிழ் சினிமா வரலாற்றில் தனியிடம் பிடித்த படம்.

https://www.youtube.com/watch?v=2s7dVJRWfJA&list=PLmZ62uZ36OMh1RJqAXe5pH_nMnsBYHZTo

adiram
7th June 2015, 03:12 PM
2. Tamil Film Classics - Avoid films of Sivaji, M.G.R., Jai Shankar, Ravichandran and others for whom there are already separate threads.

ராகவேந்தர் சார்,

மேற்குறிப்பிட்டவர்கள் தவிர ஜெமினி கணேஷ், ஸ்ரீகாந்த், முத்துராமன், ஜெயலலிதா ஆகியோருக்கும் தனித்திரிகள் உள்ளன.

திக்குத்தெரியாத காட்டில் பட ஆய்வு முத்துராமன் அல்லது ஜெயலலிதா திரிகளில் இடம்பெறத்தக்கது.

இவர்களை நீக்கிவிட்டுப்பர்த்தால், ஆனந்தனின் ஒருசில படங்களும் மதுரகானங்கள் திரியில் தீர அலசப்பட்டுள்ளன. எஸ்.எஸ்.ஆர். படங்களை வரிந்துகட்டிக் கொண்டு அலசுவோர் யாரும் தென்படவில்லை. பார்ப்போம்.

நடுஇரவில் ஆய்வு நன்றாக உள்ளது. பாராட்டுக்கள்.

chinnakkannan
7th June 2015, 03:17 PM
ராகவேந்திரரே.. இரவு போய் நடுஇரவில் எழுதலாம் என்றிருந்தேன்.. நீங்க்ள் முந்தி விட்டீர்கள்..

அந்த ந்நாலு பக்கம் ந் நாலுபக்கம் ந் நாலுபக்கம் ஏரி பாடும் போது அந்த ந் நின் அழுத்தம்.. நல்ல பாட்டு

சோ வின் இரண்டாவது படம்.. விஷத்தையாய்யா கொடுக்கப் போறேன் என்று விளையாட்டாகப் பேச, ஒரு கை விஷ பாட்டிலை க் கொண்டுவந்து போட,

அடுத்த காட்சி அந்தப் பாலை அருந்திய மனிதர் தூக்கில்...

அம்மாக்குத் தெரியாமல் பீரோவில் நகை எடுக்கலாம் என அலையும் நபர்கள்..கடைசியில் பீரோவில் அம்மாவின் உடல்...

ஒரே திக் திக் திடுக் திடுக் தான்..

ஒரு கை வந்து பண்டரிபாயைத் தள்ளிவிட அவரது முழியும் அலறலும்..

இன்னும் சில பல கொலைகள் நினைவிலில்லை.. நல்ல த்ரில்லர்..அறிமுகக் காட்சியில் இவ்வளோ கதா பாத்திரங்களா என க் கொஞ்சம் நினைக்க வைக்கும்..

படகில் தப்பி ஓடுபவனைச் சுடும் துப்பாக்கி..
ம்ம்

சரி சரி இன்னொருமுறை பார்த்தால் போயிற்று :)

chinnakkannan
7th June 2015, 03:27 PM
//எஸ்.எஸ்.ஆர். படங்களை வரிந்துகட்டிக் கொண்டு அலசுவோர் யாரும் தென்படவில்லை. // ஆதிராம் :) த்ரில்லர் வகையில் பார்த்தீர்களானால் எஸ் எஸ் ஆரும் நடித்திருக்கிறார். முத்துமண்டபம் மர்மப் படமென்க் கேள்விப் பட்டிருக்கிறேன் பார்த்ததில்லை..

அப்புறம் ஏன் அலசவில்லைஎனில் எஸ் எஸ் ஆரின் கூடவே வி.குமாரியை பற்றியும் பேசவேண்டும் என்பதால் இருக்கலாம்!

RAGHAVENDRA
7th June 2015, 07:00 PM
ஆதிராம் சார்
முதலில் தங்களுக்கு என் உளமார்ந்த நன்றியும் வரவேற்பும் கூற விரும்புகிறேன். தங்களுடைய தொடர்ந்த பங்களிப்பினைத் தர வேண்டும் என விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.
நடு இரவில் பாராட்டிற்கும் என் உளமார்ந்த நன்றி.

தாங்கள் கூறியது சரி. முத்துராமன் ஜெயலலிதா என அவர்களுக்கும் திரி உள்ள நிலையில் திக்குத் தெரியாத காட்டில் பதிவினை அவற்றில் தான் போட்டிருக்க வேண்டும். சுட்டிக்காட்டியதற்கு உளமார்ந்த நன்றி.

முடிந்த வரையில் இவற்றைத் தவிர்க்கலாம் என வைத்துக் கொள்வோம். முற்றிலும் தவிர்க்க முடியாது.

தங்களிடமிருந்தும் மலரும் நினைவுகள், நினைவில் நிற்கும் திரைப்படங்கள் பற்றிய கருத்துப் பரிமாற்றங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

RAGHAVENDRA
7th June 2015, 07:02 PM
சி.க. சார்
தாங்கள் கூறியது போல் நடு இரவில் படத்தில் சந்தேகம் எலலாரையும் சுற்றிச் சுற்றி வரும் ஒருவரைத் தவிர. அவர்தான் வீல்சேர் ராகவன்.
மனுஷன் உட்கார்ந்தவாறே படத்தை ஓட்டி விட்டார்.

chinnakkannan
8th June 2015, 10:28 PM
திடுதிப்பென வழக்கம் போல அந்தக்காலத்தில் - இரட்டைத் தெரு சந்திப்பில் ஒரு போஸ்டர்..

அழகிய பாடல்கள் நிறைந்தபடம் ஒவ்வொரு பாடலும் வளைந்து வளைந்து இருக்க முத்துராமன் பாலாஜி விஜயகுமாரி எஸ்வி சகஸ்ர நாமம் போஸ்டர்

பார்த்த பாடல்களெல்லாம் சிலோன் ரேடியோவில் கேட்டதே

படம் போலீஸ்காரன் மகள்..

கதையாவது யாதெனில்:

ரொம்பக் கறார் கட்டுப்பெட்டு போலீஸ்காரர் எஸ்.வி சகஸ்ர நாமம்.. சீட்டாடும் இடத்தில்பையன் முத்துராமன் இருந்தான் என்பதற்காக அவனையும் கைது செய்து லாக்கப்பில் அடைக்கும் கடின மனம் ..

முத்துராமனின் தங்கை விஜயகுமாரி

முத்துராமனுக்கு அவ்வளவாக நட்பில்லாத நண்பன் பாலாஜி

பாலாஜி எப்படி

தேன் உண்ணும் வண்டு .. பின் மலர் மாறும் வண்டு

பணக்காரப் பிள்ளை..செலவுகளுக்குப் பல வழி உண்டு..எனில் கெட்டவன் தான்

ஆனால் விஜயகுமாரியின் வெள்ளந்தித் தனத்தில் வந்து விடுகிறது காதல்..

பாலாஜியின் அப்பா பணக்காரர் எனில் பணம் வெளியில் போகக்கூடாது என நினைத்து தங்கை மகளைக் கல்யாணம் செய்தால் தான் சொத்து என்று விடுகிறார்..
தங்கை மகள் புஷ்பலதா..

இருப்பினும் விஜியைக் காதலித்துவிட்டேனே எனத்தவிக்கிறது மனசாட்சி..அப்பாவிற்கோ பையன் ஏராளமான பெண்களுடன் பழகுபவன் எனத் தெரியும்..எல்லாத்தையும் விட்டுட்டு கல்யாணம் கட்டிக்கோ எனச் சொல்ல பாலாஜியும் என்ன செய்வது எனச் சரி சொல்ல பின்னர் தான் வருகிறது சிக்கலே..

பாலாஜியிடம் பெண்களைக் காட்டி பணம்பறிக்கும் இருவர் பணம் கேட்க நிஜமாகவே கையில் பணம் இல்லை என பாலாஜி மறுக்க கோபம்.. பாலாஜியின் முன்னாள் காதலி வீட்டில் சென்று அவளது அப்பாவைக் கொலை செய்து விடுகிறார்கள்..

கொலை செய்த சமயம் பாலாஜி விஜயகுமாரியுடன் அன்புடன் பாட்டுப் பாடிக் கொண்டிருந்த சமயம்..

கொலைப்பழி பாலாஜி மேல்

இதனிடையில் போலீஸ்கார எஸ்வி சகஸ்ர நாமத்திற்கு பெண்ணின் காதல் தெரிய பொங்குகிறது சாட்டை அடியோ அடி பெண்மலரின் உடலெங்கும் காயங்கள்..

அவள் பாலாஜி வீட்டிற்குச் சென்று நிலையைச் சொல்லலாமென்றால் பாலாஜியைப் பார்க்க முடிவதில்லை.. ஒரு சந்தர்ப்பத்தில் பாலாஜி புஷ்பலதாவுடன் விஜயகுமாரியைப் பார்த்து யாரென்றே தெரியாது எனச் சொல்லிவிட,

விஜயகுமாரியும் கண்ணீரும் தான் உடன்பிறந்த சகோதரிகளாயிற்றே..பெருகுகிறது கண்ணீர்..

பாலாஜியிடம் சேர்த்து வைக்க முத்துராமன் எடுத்த முயற்சிகளும் பலனளிக்காமல் போய்விட

அங்கே பாலாஜியைக் கைது செய்கிறது போலீஸ்..ஆதாரங்கள் ஏராளமாக இருக்கின்றன.. எங்கிருந்தாய் கொலை நடந்த இரவு என்றால் பாலாஜி மெளனிக்கிறார்..

விஜயகுமாரியே வந்து அந்த தேதி அவர் என்னுடன் தான் இருந்தார் நாங்கள் பாடி மாலையெல்லாம் மாற்றிக் கொண்டோம் என உடல் நிலை சரியில்லாமல் சொன்னாலும் அதைக் கேட்பதாக இல்லை..பின்னர் அங்கு இருந்த இன்னொரு ஜோடி சந்திரபாபு மனோரமா சாட்சி சொல்ல
பாலாஜிக்கு விடுதலை..

விஜயகுமாரிக்கும் தன் உயிரிடமிருந்து விடுதலை..

எனச் சோகமாக முடியும் படம் தான்..

ஆனால் திரையிட்ட ஒருவாரம் சனி ஞாயிறு ஹவுஸ் ஃபுல், மற்ற நாட்களில் ஹவுஸ் ஃபுல் இல்லாவிட்டாலும் நல்ல கூட்டம்.. ஸ்ரீதேவி தியேட்டரில்.. நான் பார்த்தது வியாழக்கிழமை ஈவ்னிங்க் ஷோ.. என நினைக்கிறேன்
பாடல்கள்
ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்
இந்த மன்றத்தில் ஓடி வரும் இளம் தென்றலைக் கேட்கின்றேன்
பொன் என்பேன் சிறு பூ என்பேன் காணும் கண் என்பேன் வேறு என் என்பேன்
பொறந்தாலும் ஆம்பளையா பொறக்கக் கூடாது
கண்ணிலே நீரெதற்கு காலமெல்லாம் அழுவதற்கு

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது..

*
இதில் இந்தப் பொன் என்பேன் பாட்டு ரொம்ப்ப்பப் பிடிக்கும்

கொத்து மலர் எடுத்து முத்துச் சரம் தொடுத்து
சிட்டுமுகம் பார்த்தே சிரித்திருப்பேன்
தொட்டவுடன் நெஞ்சில் பொங்கிவரும் வெள்ளம்
கண்டு கண்டு நானும் களித்திருப்பேன்

சின்னச் சின்னப் பறவை அன்னையவள் மடியில்
தவழ்வதுபோல் நான் தவழ்ந்திருப்பேன்
கண்ணை மெல்ல மறைத்து உன்னைக் கையிலெடுத்து
காலமெல்லாம் நான் ரசித்திருப்பேன்

நினைவிலிருந்து எழுதுகிறேன்..ம்ம் நல்ல பாட்டு..படமும் ஓ.கே..ஆனால் விஜயகுமாரியின் அழுகை கொஞ்சம் ஓவர் தான்..

https://youtu.be/k2WRMygBvGE

பின்ன வாரேன்..

chinnakkannan
11th June 2015, 10:32 AM
சரி சரி..விஜயகுமாரி பத்தி எழுதினா யாருக்கும் பிடிக்காதுன்னு தெரியாமப் போச்சு..

ஏன் எஸ் பாலச்சந்தரோட பொம்மையைப் பத்தி எழுதப்படாது..

அந்தப் படம் பார்த்த போது( இருவருடம் முன் தான் பார்த்தேன்) ரொம்ப பிடிச்ச விஷயம் என்ன்ன்னா பட இறுதியில் வரும் டைட்டில்ஸ்.. எல்லாரோட ஃபோட்டோ போட்டு பெயர் போடறது.. கே.ஜே.ஜேசுதாஸ், எல்.ஆர்.ஈ, பி.சுசீலா எல்லாரும் வெகு இளமையா இருப்பாங்க..

vasudevan31355
20th June 2015, 09:33 PM
ராகவேந்திரன் சார்!

http://i49.tinypic.com/2zg9lhs.jpg

முதலில் தாங்கள் தொடங்கியிருக்கும் அற்புதமான திரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

முதலில் என்னை மன்னிக்க வேண்டுகிறேன். தங்களின் அற்புதமான நெஞ்சம் பறப்பதில்லை திரியை இன்றுதான் பார்க்க நேரிட்டது. பிள்ளைகள் படிப்பு, ஆபீஸ் என்று கடுமையாக வேலை. மதுர கானங்களில் பதிவு போடக் கூட நேரம் இல்லை.

நம் மனதிற்கு பிடித்த படங்களைப் பற்றி இங்கே நிச்சயம் நேரம் கிடைக்கும் போது என்னால் இயன்றவற்றை நான் பதிவிடுகிறேன். திரையுலக ஜாம்பவானான தங்கள் திரியில் நானும் பங்கெடுத்து கொள்வது எனக்கு மிக மிகப் பெருமையே.

எல்லாம் வல்ல நடிகர் திலகத்தின் ஆசியுடன் திரி வெற்றி நடை போடட்டும். மற்ற படங்களைப் பற்றி எப்படியோ தெரியாது இந்தத் திரியில் நடிகர் திலகம், மற்றும் அவருடைய படங்களைப் பற்றிய பதிவுகளை அதிகம் தர எண்ணியுள்ளேன். அதற்கு தங்கள் அனுமதியும் வேண்டுகிறேன்.

எவ்வளவோ நெஞ்சம் மறக்காத படங்கள், நடிகர்கள் இருந்தாலும் நமக்கு நெஞ்சமே நடிகர் திலகம்தானே! அவரைத்தான் இங்கு முன்னிலைப் படுத்துவேன். நன்றி!

vasudevan31355
20th June 2015, 09:37 PM
நெஞ்சம் மறக்குமா?

http://2.bp.blogspot.com/-YfEa-DpqyHU/VJ0NVCj_7gI/AAAAAAAACiY/wTTJ8Y0RX7U/s1600/Recently%2BUpdated.jpg

vasudevan31355
20th June 2015, 09:38 PM
http://3.bp.blogspot.com/-Go4nh_pQ83A/VJ0Pdam7UfI/AAAAAAAACik/YIYX5LFnFUQ/s1600/7.jpg

RAGHAVENDRA
22nd June 2015, 12:20 AM
வாசு சார்
உளம் மகிழ்வூட்டும் உற்சாகமான வரவேற்புரையுடன் இவ்விழையில் தங்கள் தடம் பதித்துள்ளீர்கள். தங்களுக்கு என் உளமார்ந்த வரவேற்பும் நன்றியும்.

தங்களுடைய நினைவுகளில் நீந்திக்கொண்டிருக்கும் ஏராளமான அனுபவங்கள் இத்திரியை அலங்கரிக்கக் காத்திருக்கின்றன என்பதை நான் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

நாம் முன்னமே குறிப்பிட்டது போல் இதுவரை இம்மய்யத்தில் திரி துவங்கப்படாத அந்நாளைய நடிக நடிகையர் மற்றும் கலைஞர்களின் பங்களிப்பில் வெளிவந்த பல திரைப்படங்களைப் பற்றிய நம் நினைவுகளை இங்கே பகிர்ந்து கொள்வோமே. நோக்கமே அது தானே. தங்களுடைய விருப்பத்தின் பேரில் தாங்கள் துவக்கமாக நடிகர் திலகத்தின் படத்தைப் பற்றிய தங்கள் நினைவுகள் ஆய்வுகள், விமர்சனங்கள் இவற்றுடன் துவங்கலாம். முடிந்தால், யாரும் பார்த்திராத, நடிகர் திலகம் கௌரவ வேடத்தில் அல்லது வேற்று மொழிப் படத்தில் ஏற்று நடித்த பாத்திரங்களைப் பற்றி பகிர்ந்து கொள்ளலாம்.

தொடரும் பதிவுகள் அநேகம் அதிகம் அறிந்திராத இதர கலைஞர்களின் பங்களிப்பில் வந்த படங்களாக இருக்கட்டுமே..

vasudevan31355
22nd June 2015, 10:18 AM
என்னதான் முடிவு?

http://www.inbaminge.com/t/e/Ennathan%20Mudivu/folder.jpg

எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை. கே.எஸ்.ஜி அவர்களின் 'என்னதான் முடிவு'? என்ற ஒரு படம். அப்படியா என்று ஆச்சர்யத்தில் நீங்கள் விரிவது உணரப்படுகிறது. தெய்வப்பிறவி, செல்வம், கை கொடுத்த தெய்வம், பணமா பாசமா, உயிரா மானமா, கண்கண்ட தெய்வம், கற்பகம் என்றெல்லாம் நம்மை ஈர்த்த அந்த இயக்குனரின் இன்னொரு அருமைதான் 'என்னதான் முடிவு'

ஆனால் 'நத்தையில் முத்து' தெரிந்த அளவிற்குக் கூட வெளியே தெரியாத நன்முத்து.

கதை.

ஒரு கட்டிட மேஸ்திரி. கல்யாண வயதுடையவன். அவனுக்கு சிறு வயதில் ஒரு தம்பி, அப்புறம் அவனை விட வயதில் சிறிய ஒரு தங்கை. மேஸ்திரி தம்பி தங்கை நல்வாழ்விற்காக திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்கிறான். அவனையே நேசிக்கும் ஒரு பெண் இருந்தும் கூட.

பள்ளி பயிலும் தம்பி சூதாட்டம் போன்ற கெட்ட வழக்கங்களில் ஈடுபடுகிறான். ஆனால் அவனிடம் உயர்ந்த குணம் ஒன்று. எக்காரணம் கொண்டும் பொய் சொல்லவே மாட்டான். நடந்த உண்மையை அப்படியே எடுத்துரைப்பான். ஆனால் முரடன்.

அண்ணன் தம்பியைக் கண்டிக்கிறான். ஒரு கட்டத்தில் தம்பி பொய் சொல்கிறான் என்று அவனை அடித்துவிட, அண்ணன் தன்னை நம்பவில்லையே என்று தம்பி கோபம் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறான். ரயிலில் ஒரு குடிகார பணக்காரரின் உயிரைக் காப்பாற்றி அவர் அன்புக்குப் பாத்திரமாகிறான். அவர் பராமரிப்பிலேயே வளருகிறான். அவர் அவனை சொந்த மகன் போல வளர்க்கிறார். தம்பியும் வளர்ந்து வாலிபன் ஆகிறான்.

நிறைய சொத்து இருப்பதனால் அவருடைய மேனேஜர் நயவஞ்சகம் புரிந்து அந்த சொத்துக்களை அபகரிக்க நினைக்கிறான். ஆனால் அந்தப் பணக்காரரை தம்பி நிழல் போல பாதுகாப்பதால் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

ஆகவே மேனேஜர் ஒரு சதி வலை பின்னி அந்தப் பணக்காரருக்கு விஷம் வைத்து அவரைக் கொன்று விட்டு, அந்தப் பழியை தம்பி மேல் போட்டுவிட்டு போலீசில் மாட்டிவிட்டு விடுகிறான். ஒன்றும் அறியாத அப்பாவி தம்பி ஜெயில் போகிறான். தன்னை மாட்டிவிட்ட அந்த மானேஜரின் மேல் கொலை வெறி கொள்கிறான் தம்பி.

மானேஜர் பணக்காரரின் சொத்துக்கள் முழுதையும் தன் வசம் ஆக்கிக் கொள்கிறான். ஆனால் அவன் மனைவி இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. அது பாவம் என்கிறாள்.

ஊருக்கு கார் பயணம் செல்லும்போது கார் விபத்தில் தன் மனைவியையும், மக்களையும் பறி கொடுக்கிறான் மானேஜர். குற்றுயிரும்,கொலை உயிருமாய்க் கிடந்த அந்த மானேஜரை மேஸ்திரி அண்ணன் மற்றும் அவனது தங்கை இருவரும் காப்பாற்றுகிறார்கள். அவன் பருவ வயது தங்கை அந்த மானேஜரை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்கிறாள். அவள் சேவையில் மனிதனாகிறான் அந்த மிருகம். தான் செய்த பாவம்தான் விபத்தில் தன் மனைவியையும், மகளையும் பிரிய நேர்ந்தது என்று உணர்கிறான்.

இப்போது தான் செய்த பாவங்களையும், குமரனை போலீசில் மாட்டி விட்ட குற்றத்தையும் நினைத்து நினைத்து மனசாட்சியுடன் போராடுகிறான் மானேஜர். தன்னை கவனித்துக் கொள்ளும் மேஸ்திரியின், அவன் தங்கையின் நற்குணங்களை கண்டு முழுதாக மனம் திருந்துகிறான்.

தன்னுடைய செல்வங்களை எல்லாம் நற்காரியங்களுக்கு செலவிட்டு தன் பாவத்தைக் கழுவ முயற்சிக்கிறான். அனுதினமும் தன் பாவங்களை எண்ணி எண்ணி சித்ரவதை அனுபவித்து துடிக்கிறான். மேஸ்திரிக்கு தானே திருமணமும் செய்து வைக்கிறான். மேஸ்திரிக்கு கட்டிடங்கள் கட்ட உதவி புரிகிறான். ஏழை எளியோருக்கு வாரி வழங்குகிறான்.

தம்பி இருக்கும் சிறைச்சாலையில் ஒரு கட்டிட வேலைக்காக அண்ணன் காண்ட்ராக்ட் எடுத்து வேலை செய்யும் போது அங்கே கைதியாய் இருக்கும் தம்பியைக் கண்டுகொள்கிறான். தம்பியும் அண்ணனை அடையாளம் கண்டு கொள்கிறான். தம்பி சிறையில் இருப்பதை அவமானமாக நினைக்கும் அண்ணன் அவனை வெறுக்கிறான். ஆனால் தம்பி தன் தங்கையை மட்டும் பார்த்துவிட அண்ணனிடம் அனுமதி வேண்டுகிறான். அண்ணனும் தங்கையைக் கொண்டு வந்து தம்பியிடம் காட்டுகிறான். தம்பியும் விடுதலை ஆகி வெளிவருகிறான்.

தம்பி நடந்த கதைகளை சொல்லி, மானேஜர் தனக்கு இழைத்த அக்கிரமங்களைக் கூறி, அவனைக் கொலை செய்வதுதான் தன் வாழ்வின் லட்சியம் என்று சூளுரைக்கிறான். அண்ணன் அது தவறான முடிவு என்று அவனைத் திருத்தப் பார்க்கிறான். ஆனால் அது முடியாது போல் இருக்கிறது.

தன்னை ஆதரிக்கும் மானேஜர் தான் தன் தம்பியை கொலை கேஸில் மாட்டிவிட்ட அந்தக் கயவன் என்று அண்ணனுக்குத் தெரியாது. அது போல தான் பழி வாங்கக் காத்திருக்கும் மானேஜர்தான் அண்ணனை வாழ வைத்தவன் என்று தம்பிக்குத் தெரியாது.

மானேஜர் சில விஷயங்களுக்குகாக வெளியூர் சென்று விடுவதால் அவன் தம்பியை பார்க்க முடியவில்லை. ஆனால் தன்னை வாழ வைத்த தெய்வம் அந்த மானேஜர்தான் என்று தம்பியிடம் சொல்லி சொல்லி அவர் மேல் ஒரு மரியாதையை உண்டாக்கி வைத்திருக்கிறான் அண்ணன். அவர் வந்தவுடன் அவரைத் தெய்வமாக வணங்க வேண்டும் என்றும் உறுதி வாங்கிக் கொள்கிறான் தம்பியிடம் அண்ணன்.

தங்கைக்கு திருமண ஏற்பாடுகளை செய்து அதற்கு தானே தலைமை தாங்கி நடத்தித் தருவதாக ஊரிலிருந்து போன் மூலம் தெரிவிக்கிறான் மானேஜர்.

இறுதியில் திருமண நாளும் வருகிறது. தம்பிக்கு மானேஜர் யாரென்றும் தெரிந்து விடுகிறது. கத்தியுடன் காத்திருக்கிறான். தங்கையோ திருமணக் கோலத்தில். என்ன நடக்கப் போகிறது?

இறுதியில் மானேஜரும், தம்பியும் சந்தித்தார்களா? தன் அண்ணின் வாழ்வில் விளக்கேற்றிய மானேஜரை தம்பி மன்னிப்பானா அல்லது தன்னை பழி போட்டு ஜெயிலுக்கு அனுப்பி தன்னை நாசப்படுத்திய அந்த கயவனைக் கொல்வானா?

தம்பி கொலை வெறி கொண்டு அலைவதை அண்ணனால் தடுக்க முடிந்ததா?

கயமைத்தனம் புரிந்த மானேஜர் உண்மையாகவே இன்று ஊர் போற்றும் நல்லவன். அவன் இந்த சூழ்நிலையில் என்ன பண்ணுவான்? தான் செய்த பாவங்களுக்காக சாவைத் துணிவுடன் ஏற்றுக் கொள்வானா? இல்லை சாவிலிருந்து தப்பிக்க தன்னைக் கொலை செய்யத் துடிக்கும் மேஸ்திரியின் தம்பியை கொல்வானா?

அன்பு வென்றதா?...பழி உணர்ச்சி வெற்றி பெற்றதா?

இப்படிப் பல கேள்விகள்.

இதற்கு

'என்னதான் முடிவு?'

அடுத்த பதிவு வரை காத்திருங்கள்.

RAGHAVENDRA
22nd June 2015, 08:00 PM
வாசு சார்

http://2.bp.blogspot.com/_V5FGJxuN-mo/TLzRFPddiTI/AAAAAAAAAK4/iZyMDfKqRfo/s1600/nanri.jpg

அருமையான தொடக்கம்... ஆஹா.. சென்னை கெயிட்டியில் வெற்றிகரமாக ஓடிய படம். நூறு ஐம்பது போன்ற இலக்க சிகரங்களை எட்டவில்லையென்றாலும் வணிகரீதியாக அத்திரையரங்கில் நல்ல வசூலைத் தந்த படம்.

எங்கள் நண்பர் ஒருவர் மூலமாக நாங்கள் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கிராமஃபோன் இசைத்தட்டைக் கேட்டு மகிழும் போது, அடிக்கடி நாங்கள் கேட்டு ரசித்தது, இந்த படத்தின் பாடல்களையே. நீண்ட நெடும் சுவரும் என்று டி.எம்.எஸ்.ஸின் கம்பீர குரல் அட்டகாசமாக ஒலிக்கும். அந்த 78 கிராமஃபோன் இசைத்தட்டின் பின்புறம் பொன்னைப் பார்த்து மயிலைக் காளை பாடல், சுசீலாவின் குரலில் நம்மை சொக்க வைக்கும்.

இதற்கு மேல் எழுதி தங்களுடைய ஸ்வாரஸ்யமான எழுத்திற்குக் குறுக்கே வர விரும்பவில்லை அடுத்த பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.

Gopal,S.
22nd June 2015, 08:44 PM
spring summer fall winter spring ----Korean -Kim Ki Duc

நான் கொரியா சென்றிருந்த போது அங்கு என் வியாபார நண்பியுடன் (ஜேமி ஜுங் )சுற்றி கொண்டிருந்த போது ,நான் விரும்பும் சில கொரிய இயக்குனர்களை குறிப்பிட்டேன். உடனே அப்போது சியோல் நகரில் திரையிட பட்டிருந்த இந்த படத்துக்கு அழைத்து சென்றாள் . சூழ்நிலை மறந்து ,மெய் மறந்து ,ரசித்து ,ஒரு இரண்டு மூன்று நாட்கள் எதிலும் கவனம் செல்லவில்லை. பிறகு இந்த இயக்குனரின் அத்தனை படங்களையும் ஒரு சேர வாங்கி, குறிப்பாக இந்த படத்தை தனிமையில் ஆளரவமில்லா இருட்டறையில், பிற சத்தங்கள்,தொல்லைகளற்று வெள்ளி இரவுகளில் 10 மணி தொடங்கி ,என்னை மறப்பேன்.எனக்கு பிடித்த படங்களில் முதலிடம் பெறுவது இதுவே. இதை ரசிக்க மொழி,வயது,இனம் ,ரசனை எதுவுமே தடையாக முடியாது.

பொதுவாக பொழுது போக்கு என்பதை பற்றி தவறான கருத்தாக்கங்கள் உருவாக்க பட்டு நம் கழுத்தை நெரிக்கின்றன.சில பாடல்கள், சண்டைகள்,சம்பந்தமில்லா நிகழ்வுகள்,மூளைக்கு தொல்லையில்லாமல் காணும் சலனங்கள் என்று . என்னை பொறுத்த வரை எந்த படம் ,கதாபாத்திரங்களுடன்,நிகழ்வுகளுடன் ,தோய வைத்து நம்மை கட்டி போட்டு பரவச படுத்துகிறதோ, அவைதான் பொழுது போக்கு. அவலமும் சுவையே,நகையும் சுவையே.வாழ்வின் சுவடுகளும் சுவையே.தூக்கம்தானே மிக சிறந்த பொழுது போக்கு?பின் வருவது தியானம்.

இந்த படம் ஒரு தியானமே. எனக்கு மதங்களை பிடிக்காது. லாட்சு,புத்தம் இவை பிரியமானது. இந்த படம் கொரியா சார்ந்த புத்த மதத்தின் கூறுகளை பின்னணியாக கொண்டது. நான்கு பருவங்களில் (வெவ்வேறு கட்ட நிலைகளில் 20 வருடங்கள்) நான்கு வித மனித உணர்வுகளின் பிரதிபலிப்பை , புத்தத்தின் சாரத்துடன், குறியீட்டுடன் வெளியிடும் அற்புத உணர்வு நிலை படம்.

புத்த துறவியிடம் ஒரு மாணவன் சேரும் மிதக்கும் தீவு போன்ற புத்த மடத்தில் நடக்கும் நிகழ்வுகளின் கோர்வை.தனிமையில் நிழலில்,நம் மன அழுக்குகளை, வக்கிரங்களை, ஆக்ரமிக்கும் ஆவேச உணர்வு நிலைகளை,குற்ற உணர்வுகளை,பாவ மூட்டைகளை,புனித வேள்விகளை சுமந்து திரிந்ததுண்டா? ஒரு வருடம் தனிமையில் ,ஆளரவமில்லா பூமியில் ,நம் உணர்வுகள் அலச பட்ட உணர்வு ,இரண்டரை மணிகளில்.

இது ஒரு புதிய அனுபவம். இதை புத்தகங்கள் கூட தர இயலாது.அப்படியே உங்களை வசிய படுத்தி ,உங்கள் வெவ்வேறு வகை கால பருவங்களில், மனிதர் தவிர்த்த (அவர்கள் ,சூழ்நிலை காரணகர்த்தா ஆயினும்) உங்கள் உணர்வு நிலைகளை ,ஆடை அணிவிக்காமல் தரிசித்த உணர்வு. Trans என்ற பரவச நிலை. நூறு தியானங்களுக்கு சமமான உணர்வு.

தயவு செய்து , உணவு கொறிக்காமல், தொலை அழைப்புகளுக்கு இணங்காமல்,இயற்கை உபாதைக்கு பதில் சொல்லாமல், அரை படுக்கை,இருள் அறையில் ,இந்த அனுபவம் பெறுங்கள்.

Gopal,S.
22nd June 2015, 08:48 PM
A Seperation -2011- Iran - Asghar Farhadi

பல விருதுகளை வென்று குவித்த ஈரானிய படம்.கே.எஸ்.ஜி படங்களை பார்த்து ரசித்த ,தமிழ் உள்ளங்களுக்கு அன்னியமாக தெரியாத குடும்ப படம். இந்த கால மெகா சீரியல் போல குடும்ப சிதைவை(குற்றங்களையும்) உள்ளடக்காது ,குடும்ப பிரச்சினைகளை, நாடு,மத,தனி மனித பின்னணியில் அணுகிய படம். அற்புதமான திரை கதை,இயக்கம், நடிப்பு என்று நம்மை அசத்தி அசத்தி ,அந்நிய தன்மை தோன்றாமல் செய்து விடும். கட்டி போட்டு விடும். மொழிக்கு subtitle தேவை ஆனாலும் ,மிக குறைந்த வசனங்களே .நடேர் என்ற கணவன்,
சிமின் என்னும் மனைவி,தோமே என்னும் பெண் குழந்தை,நடேர் தந்தை ,ரசியா என்னும் பனி பெண்,சாட்ஜா என்னும் அவள் கணவன் இவர்கள்தான் படத்தில் முக்கிய கதாபாத்திரங்கள்.

1)பெண்களுக்கு தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் கண்ணுக்கு தெரியும் அளவு,தங்களை நம்பி வாழும் மற்ற உறவுகளின் முக்கிய துவம் தெரியாது போலும். இது மத,இன,மொழி,நாடு வேறுபாடு கடந்த இணைப்பு சங்கிலி போலும்.

2)ஆண்களுக்கோ பல வித உறவின் முரண்களை அணைத்து நின்று , அனைவருக்கும் முக்கியத்துவம் அளிக்கும் பாத்திரம். ஆனாலும் ஒன்றை தேர்ந்தெடுக்கும் நிலை வரும்போது ,சுயநலம் அற்ற போக்கில் ஆண்களே முதன்மை.

3)எல்லா மதங்களும் தனி வாழ்விலும், சமூக பொது வாழ்விலும் இடையூறு செய்து மனிதம் குலைக்கும். ஒரு கால கிறிஸ்துவம் தேவாலயம் சார்ந்த சர்வாதிகாரம், ஹிந்து மதம் ப்ராமணம் அரசின் மீது செலுத்தி தன மக்களையே பிரித்த அநீதி,தற்காலங்களில் மட்டு பட்டாலும், இஸ்லாம் இன்னும் மனிதத்தை துறந்து மதமே என்று நாடுகளில் கோலோச்சும் வினோதம்.

4)மத்திய வர்க்கமே,இன்னொரு தாழ்ந்த தன வர்க்கத்தின் பிரச்சினையில் கண் மூடி சுயநலம் காட்டும் சுயநல ஆதிக்க வக்கிரம்.

5)வயதான மனிதர்கள் வாழ்வு ,மற்றவர்களின் வாழ்வை ஆக்கிரமித்து ,வாழ வேண்டிய வயதினரின் வாழ்வு குலைக்கும் ,நோக்கமில்லா துன்பங்கள்.

6)பணத்தை விட ,மத நம்பிக்கை,மனசாட்சி மனிதர்களின் மீது செலுத்தும் ஆதிக்கம்.

7)ஒரு பிரச்சினையின் பல கோணங்கள்.சிக்கல்கள். தெளிவான சுளுவான குழந்தைதன தீர்வு முறை.

நாடென்ன,மதமென்ன,இனமென்ன,மொழியென்ன,மதமென்ன, சமூக கட்டமைப்பை தூக்கி பிடிக்கும் மத்திய தர வர்க்கம் , தன்னுடைய பிரச்சினையின் தீர்வுக்கு ,அனைத்து கோணத்தையும் சீர் தூக்கி பார்க்கும் தெளிவு.

அவசியம் பார்த்தே ஆக வேண்டிய உன்னத படைப்பு.

Gopal,S.
22nd June 2015, 08:51 PM
Kill Bill (1 and 2)- Quentin Tarantino - 2003/2004.

எனக்கு மிக பிடித்த இயக்குனர்களில் முக்கியமானவர். இவருடைய pulp fiction என்ற படத்தை 1994 இல் இயக்குனர் பெயர் அறியாமலே பார்த்து ஈடுபாடு கொண்டு பலமுறை பார்த்துள்ளேன்.

இவர் நமது சம வயதினர். நடிப்பு பள்ளியில் பயின்று ஒரு video archieve கடையில் வேலை பார்க்கும் போது testing பண்ணும் வேலையில் எதையும் முழுசாக பார்க்க முடியாமல் ,துண்டு துண்டாக பார்த்ததில் ,இவருடைய புது பாணி பட முயற்சியான non -linear முறை அவருக்கு சாத்திய பட்டது.

இவருடைய சிறப்பு, பழைய இயக்குனர்கள், படங்கள் எல்லாவற்றையும் மரபு முறையில் தொடராமல், இணைப்பு மற்றும் புது வகை திரைக் கதையமைப்பால் சுவாரச்யமாக்கி புது மெருகுடன் தருவார். பழைய இசைகள், வெவ்வேறு பாணி இசைகள் என்று இவருடைய படங்களில்
இசையமைப்பு எப்போதும் படத்தை கூடுதல் ரசனைக்குரியதாக்கும்.

கில் பில் படத்தின் சிறப்புகள்.

1)ஜப்பானிய ,சீனா போர் முறை , இத்தாலிய பயங்கர குரூரம்,western sphegatti என்று அழைக்க பட்ட (Sergio Leone )பாணிகளை இணைத்து தந்த சுவாரஸ்ய படம்.

2)கதையின் துண்டு துண்டாக மரபற்ற இணைப்பு முறையுடன் , வன்முறையை அழகுணர்ச்சியுடன் தந்த Neo Noir வகையில் அமைந்த வித்தியாச பொழுது போக்கு படம்.(Stylised Revenge Flick )

3)முதல் முறையாக பெண்களை பெருமளவு உலகளவில் ஈர்த்த வன்முறை படம்.அவர்களின் பழியுணர்ச்சி கலந்த வன்முறை வக்கிர உணர்வுக்கு ஒரு fantasy தீர்வாக அமைந்தது ஒரு காரணம்.

4)உமா துருமன் என்ற நடிகை இந்த படத்தை தூக்கி நிறுத்தி ,பல விருதுகள் பெற்றார். அவர்தான் இந்த படத்தின் நாயக-நாயகி.அவரை சுற்றியே படம்.

5)சண்டையில் ஜெயிப்பது தவிர மனிதம்,மென்மை உணர்வுகளுக்கு இடமேயில்லை ,எதிர்ப்பது புத்தனே ஆனாலும் எதிரியை முடிப்பதே குறிக்கோள் என்ற ஜப்பானிய சண்டை தத்துவத்தில் ஊறிய படம்.

6)இயக்குனரின் சிறப்பு தனக்கு முன்னோடியாக அமைந்தவற்றை பல படங்களை ,இயக்குனர்களை குறிப்பிடுவார். இந்த விதத்தில் கமலுக்கு நேர் எதிர்.(ஏன் கமலின் ஹிந்தி ஆளவந்தான் கூட சண்டை காட்சிகள் Graphic பண்ண காரணம் என்று கமலுக்கே credit கொடுத்துள்ளார்)

இதை பற்றி சொல்லுவதை விட இரண்டு பாகங்களையும் ஒரு சேர கண்டு மகிழவும்.

எல்லா western ,cowboy ,அது எந்த நாட்டு,மொழி,இன படமாக இருந்தாலும், mafia கொலை கும்பல்,அது சார்ந்த பழிவாங்கல்,என்றே போகும்.
நமது காலம் வெல்லும்,கங்கா உட்பட.(நான் கர்ணன் விசிறி)

அதில்தான் வசீகரம் கலக்கிறார் டாரண்டினோ. நமக்கு பரிச்சயமான விஷயத்தில் ,அசாதாரண பின்னணிகள், வினோத கதை சொல்லல்,குரூரத்தை அழகுணர்ச்சியுடன் காட்டல் , உமாவை அற்புதமாக செதுக்கி ,இந்த படத்தை எங்கோ கொண்டு போய் விட்டார்.(இசை வேறு பின்னணிக்கு தோதாய்-ரசிகனையா இவன்)

இதன் பின்னணி bill (Snake Charmer )என்பவன் Deadly viper assassination squad(பாம்பு பெயர்கள் அங்கத்தினர்களுக்கு) என்ற அவனது gang இலிருந்து துரோகம் பண்ணி ஒதுங்கி விட்டதாக நினைக்கும் மணப்பெண் என்று அழைக்க படும் (2 ஆம் பாகத்தில் அவள் பெயர் Beatrix Kiddo என்பது தெரியவரும்.இவளுக்கு பாம்பு பெயர் Black Mamba ) அந்த பாத்திரத்தை ,அவள் மணநாளன்று ,தேவாலயத்தில் ,முழு மண விழா குழுவினரையும் குரூரமாக கொல்வதில் துவங்கும்.நான் உன் குழந்தையை சுமக்கிறேன் என்று பில்லிடம் மணப்பெண் சொல்லி விட்டு ,நினைவிழப்பாள் .


4 வருடம் கோமா நிலையில் இருந்து மீளும் மண பெண் (இடையில் Elle Driver மூலம் விஷ ஊசி போட்டு கொலை முயற்சி -பில் வேண்டாம் என்று திருப்பி விடுவான்)தன்னை நினைவிழந்த நிலையில் தன்னை உடலுறவுக்கு உபயோகித்தவனை கொன்று விட்டு தப்புவதில் தொடங்கி ,பழிவாங்கல் கதை தொடங்கும்.

முதல் பலி Vernita Green (copper Head ). குடும்பம் குட்டியுடன் செட்டில் ஆன இவளை மகள் முன்னாள் கொல்ல வேண்டாம் என்று வெளியில் அழைப்பாள் .ஆனால் ரகசியமாக துப்பாக்கி எடுக்க முயல்பவளின் நெஞ்சில் கத்தி பாயும்.

பிறகு O Ren Ishil(Cotton Mouth )என்ற அமெரிக்க .சீன -ஜப்பானிய பெண்.இவள் யகூசா என்ற ஜப்பானிய மாபியா புதிய தலைவி.(தன் பெற்றோர்களை கொன்ற பழைய தலைவனை,தன் தலைமையை கேள்வி கேட்கும் அல்லக்கையை கொன்று). அவளை டோக்யோ உணவு விடுதி ஒன்றில் கூட்டத்துடன் சந்தித்து (அதில் ஒருவராக நம் டரண்டினோ) அவளின் தலை மேற்பகுதியை இளநீர் போல சீவுவாள் .

Hatori Hanzo என்பவனை சந்தித்து தனக்கு ஒரு விசேஷ வாள் செய்து தர சொல்லி வேண்டுவாள் மணப்பெண் .அவரோ ஒதுங்கியிருப்பவர்.தன்னுடைய பழைய மாணவன் Bill தான் குறி என்றதும் உடன் படுவார். விசேஷ வாள் தயார்.

O Ren Ishil உதவியாள் Sophie என்பவளை சித்திரவதை செய்து Bill பற்றி செய்தியறிய மணப்பெண் முயல்வாள். sophie இடம், பெண் உயிரோடிருப்பது அவளுக்கு தெரியுமா என்று Bill கேட்பதில் முதல் பகுதி முடியும்.

அடுத்து பில்லின் தம்பி Budd(Side Winder ) . பில்லினால் எச்சரிக்க படும் Budd ,தயாராக ஒரு துப்பாக்கி. தோட்டாவுக்கு பதில் மலை உப்பு. அதனால் வீழ்த்த படும் மன பெண் உயிரோடு புதைக்க படுகிறாள்.அந்த விசேஷ வாளை Elle Driver (California Mountain Snake )என்ற ஒற்றை கண் பெண்ணிடம் கொடுத்து விற்க சொல்வான் Budd .

பில்லின் முயற்சியால் Pai Mei என்ற martial art விற்பன்னரிடம் சென்று கற்க முயல்வாள் மணப்பெண்.முதலில் அவளை எள்ளி நகையாடும் Pai Mei ,பிறகு அவளிடம் ஈர்க்க பட்டு, தன் விசேஷ வித்தையான Five Point Palm Exploding Heart Technique என்ற ஒன்றை கற்பிப்பார்.(ஐந்து முறை நடந்ததும் எதிரி மாண்டு வீழ்வான்).

Pai Mei கற்பித்த கலையை கொண்டு சவ பெட்டியில் உயிரோடு புதைக்க படும் மணப்பெண் (Beatrix )மீண்டு வருவாள்.(கொஞ்சம் அம்புலி மாமா சாயல்)

Elle(இவளும் Pai Mei சிஷ்யை.அவரால் ஒரு கண் இழந்து விஷம் வைப்பாள்) வாளில் mambasa விஷ பாம்பை வைத்து Budd ஐ கொன்று விட்டு வாளுடன் தப்ப முயல, Beatrix அவளுடன் சண்டையிட்டு அந்த இன்னொரு கண்ணையும் கொய்து விடுவாள்.(காட்ட படும்).விஷ பாம்புடன் கண்ணின்றி தனியாக அலறுவாள்.

தன் 4 வயது பெண் BB பில்லுடன் மெக்ஸிகோ வில் இருப்பதை அறிந்து ,அங்கு செல்வாள். அப்போது பில் அம்பு மூலம் உண்மை அறியும் மருந்தை (Truth Serum )அவளுக்கு செலுத்தி ,அவள் கூட்டத்துக்கு துரோகம் செய்த பின்னணி அறிவான்.Lisa வை பழிவாங்க கூட்டத்தால் அனுப்ப படும் Beatrix ,தன்னை கொல்ல லிஸா வால் அனுப்ப படும் Karen உடன் உடன்படிக்கை செய்து கூட்டத்தை விட்டு வெளியேறி புது வாழ்வுக்கு முயன்றதன் காரணம் தான் கற்பம் என்பதை அறிந்து குழந்தையின் நல்வாழ்வை முன்னிட்டே என்ற உண்மையை சொல்கிறாள் Beatrix .

இதனால் சமாதானமடையும் Bill தன் முடிவுக்கு தயாராகிறான்.Beatrix தான் Pai Mei இடம் கற்ற விசேஷ வித்தையை அவன் மீது பிரயோகிக்க அவன் ஐந்தடி எடுத்து வைத்து வீழ்கிறான்.Beatrix தன் மகள் BB யுடன் வெளியேறுவதில் படம் முடியும்.

Gopal,S.
22nd June 2015, 09:01 PM
Memento - Christopher Nolan -2000.

ஒரு கடினமான complex variable M .S c maths கணக்கு போட்டிருக்கிறீர்களா? Integration ,Differentiation பண்ணியதுண்டா? அதற்கு சற்றும் குறையாத புதிர் இந்த படம். சும்மா உட்கார்ந்து பார்த்து விட்டு கடக்க முடியாது.இந்த நூற்றாண்டின் சிறந்த படங்களில் ஒன்றாக நான் கருதும் புத்திசாலி படைப்பு. திரைக்கதை,எடிட்டிங் இரண்டிலும் வெளுத்து வாங்கிய Neo Noir வகை Psychological thriller .

கதாநாயகன் Antero Grade Amnesia என்ற மறதி நோய். எதையுமே ரொம்ப நேரம் ஞாபகம் வைத்து கொள்ள முடியாமல் புகை படம் ,குறிப்புகள்,நிரந்தர விஷயங்களை பச்சை குத்தி கொண்டு.(ஞாபகம் வந்து தொலைக்கிறது. இதைத்தான் உருக்குலைத்து கஜினி பண்ணி கழுத்தறுத்தார்கள். சிரிப்பு காப்பாற்றியது தமிழை. மூல இயக்குனருக்கு insult இந்த copy ) கருப்பு-வெள்ளை முன்னோக்கி விரிய, வண்ணம் பின்னோக்கி செல்ல., சந்திக்கும் மைய புள்ளியை புரிந்து கொள்ளும் அறிவை பெற எனக்கே தலை சுற்றியது. என் பையனிடம் விளக்கம் கேட்டேன். (அவன் என்னை விட தேர்ந்த அற்புத சினிமா ரசிகன்) இதுவும் நேர்கோட்டில் பயணிக்காமல் வெட்டி வெட்டி பயணிக்கும் வகையே. ஒரு துண்டு துண்டு கிழித்து போட்ட காகிதத்தை ஒட்ட வைத்தது போல நினைவுகள்,மாயைகள்,துக்கம் நிறைந்த சுய -பிரமைகள் ,கொஞ்சமே கொஞ்சமாய் நடப்பு நிஜம் என்று புகை நடுவே பிம்பமாய் படம் விரியும். புரியும்-ஆனால் புரியாது. இதுதான் என கையில் பிடிக்க முடியாது.(நமக்கே குறிப்புகள் வேண்டும் தொடர)

இந்த படத்திற்கு எனக்கு மூன்று முறை பிடித்தது புரிய. ஆனால் தொடர்ந்தால் கிடைப்பது ஒரு புதிரை விடுவித்து பரிசு வாங்கிய பரவசம்.

இவரின் Prestige எனக்கு மிக மிக மிக மிக பிடித்த படம். இரு மந்திரவாதி நிபுணர்களின் போராட்டம் பற்றியது. Inception பற்றி குழந்தை கூட பேசும்.

1970 இல் பிறந்து 1998 முதல் இயங்கி வரும் அதி புத்திசாலி இயக்குனர்(தம்பியும் சேர்த்தே) பிரிட்டன் -அமெரிக்க பின்னணி. சிறு வயது முதலே கனவு-நினைவு அனைத்தும் சினிமாதான் இவருக்கு.

Gopal,S.
22nd June 2015, 09:04 PM
Taxi Driver -1975-Martin Scorsese

Neo noir படங்களின் மூலகர்த்தாக்களில் ஒருவர்.அது என்ன Neo Noir ?அடிக்கடி சொல்கிறாயே என்கிறீர்களா? இதற்கு அர்த்தம் Theme (கருபொருள் )Content (உட்பொருள்கள் ),Style (அமைப்பு),Form (வடிவம்),Visual Element (காட்சி படிமங்கள்) எல்லாவற்றிலும் வேறுபட்ட புதிய கருப்பு படங்கள் . பெரும்பாலும் Anti -Hero படத்தின் protagonist ஆக இருப்பார்.Camera Placement ,Light &Shadows ,Low Key Lighting ,Visual எல்லாமே மாறுபட்டிருக்கும்.இதில் காதாநாயகர்கள் மன அழுத்தம் கொண்டு விரக்தியான விளிம்பு நிலையில் ,அழிவில் நீதி காணுவார்கள்.

எனக்கு பிடித்த மிசொகுசி,ரொசலினி,பெல்லினி,குப்ரிக்,அன்ட்ரே வாஜ்தா,ஆர்சென் வேல்ஸ்,பிரான்சிஸ்கோ ரோசி,ஹிட்ச்காக் போன்ற இயக்குனர்களால் உந்த பட்டவர் Martin Scorsese .இவரின் சமீப படங்கள் Gangs of Newyork ,Aviator ,Departed போன்ற படங்கள் எனக்கு பிடிக்குமென்றாலும்,taxi Driver தனி ரகம்.1975 இல் இதை பட விழாவில் பார்த்து விட்டு வந்த போது சக மாணவர்களின் பொறாமை தீயில் வெந்தேன். ஆனால் எனக்கு படம் பிடித்தது வேறு காரணங்கள்.(அந்த சமாசாரத்துக்கு மலையாள பிட் படம் போதுமே )

வியட்நாம் போர் என்பது அமெரிக்க மனசாட்சியை குலுக்கி விட்டது. சம்பந்தமே இல்லாத, எதற்கு என்ற காரணம் புரியாமல் ,கட்டாயமாக ராணுவ சேவைக்கு பல இளைஞர்கள் பரிச்சயமில்லாத நாட்டுக்கு ,குரூரம் புரிய அனுப்ப பட்டு உடலும்,மனமும் சிதைந்து ,மன அழுத்தத்திற்கு ஆட்பட்டார்கள். இதன் கதாநாயகன் ,மன அழுத்தம் கொண்டு ,தூக்கம் வராமல் இரவில் டாக்ஸி ஓட்டி, போர்னோ படம் பார்த்து கொண்டு நோக்கமில்லாமல் வாழ்வை கழிப்பவன்.(பெரும்பாலும் இந்த காலகட்டத்தில் ஹிப்பி culture அல்லது criminal tendency பல பேரை அமெரிக்காவில் ஆட்கொண்டது). ஒரு பெண்ணை கவர முயன்று தோல்வி கண்டு, ஏதோ ஒரு விபசார பெண் விஷயத்தில் obsession கொண்டு, அவளை விடுவிக்கும் போக்கில் கடைசியில் மன அழுத்த வெடிப்பில் குற்றங்களை செய்து , ஒரு உண்மை நாயகனாக கூட்டத்தால் கொண்டாட படுகிறான்.

அப்பப்பா ,முதல் காட்சியிலிருந்து படம் நம்மை கட்டி போடும். இந்த இயக்குனருக்கும் ,Robert Deniro வுக்கும் நம்ம பீம்சிங்-சிவாஜி அளவு chemistry . இந்த படத்தில் நண்டின் இயல்பில் நடிப்பார் . "He based the movement of his character Travis Bickle in Taxi Driver (1976) on that of a crab. He thought the character was indirect and tended to shift from side to side." நமது நடிகர்திலகமும் பல படங்களில் மிருகங்களின் இயல்பை தனது பாத்திரங்களில் கையாண்டு ,பாத்திரங்களை மெருகேற்றுவார். அத்தனை உலக நடிகர்களும் கையாண்ட இந்த உத்தியை ,நமது மேதை 50 களில் இருந்தே கையாண்டுள்ளார்.

இந்த படம் , எப்படி ஒரு Neo Noir படம் எடுக்க பட வேண்டும் என்ற ஒரு பாடம். ரொம்ப உட்புக மனமில்லையென்றால் ஒரு crime thriller மாதிரியும் ரசித்து விட்டு கடக்கலாம்.

Gopal,S.
22nd June 2015, 09:08 PM
Citizen Kane - Orson Welles -1941.

சில படங்களை பற்றி யாரை கேட்டாலும் சிலாகித்தே பேசுவார்கள். (உருளை கிழங்கு போல யாராலும் வெறுக்க முடியாது)அப்படி எல்லோரும் கொண்டாடிய ஒரு படம். வந்த காலத்தை மீறி நின்ற படம். தமிழிலும் அப்படி அந்தநாள்,புதியபறவை,காதலிக்க நேரமில்லை,தில்லானா மோகனாம்பாள் போன்ற படங்களும், ஹிந்தியில் மொகலே ஆசம் ,பியாசா,guide ,அமர்ப்ரேம் படங்கள் இப்படி பட்டவை. நூற்றுக்கு நூறு பேரால் விரும்ப படுபவை. ஒரேயடியாக துர் நடவடிக்கைகளில் neo noir வன்முறைகளில் திளைத்து, வாசுவிடம் டாக்ஸி டிரைவர் கெட்ட பெயர் வாங்கி விட்டோமே என்று மென்மையான இந்த படத்தை எடுத்து ஆராய்ந்து நற்பெயருக்கு முயல்வேன். (பழையதையும் நினைவு படுத்த வேண்டாமா ? அடுத்த நான்கும் 40,50,60 களின் கொடிதான்.கருப்பு-வெளுப்பு பொற்காலமே )

ஆர்சன் வெல்ஸ் ,தானே இயக்கி ,கேன் பாத்திரத்திலும் நடித்த இந்த படம் ,வந்த நாள் முதல் இன்று வரை சிறந்த உலக பத்துக்களில் ஒன்றாக கொண்டாட படுகிறது.இந்த படம் நமது சிறு வயதின் உன்னத ,மனதுக்கு நெகிழ்வான நினைவலைகளை அசை போட செய்யும் மென்மையுணர்வை கிளறி விடும். ஒரு மனிதனின் முன்னேறும் துடிப்பு, தேர்ந்தெடுக்கும் குறுக்கு வழிகள், செய்யும் தவறுகள் இவற்றை மீறி சாதித்தும் ,வெறுமையுணர்வு மிஞ்சி ,குழந்தைமையின் நேர்மையான, அப்பாவி சந்தோஷ நினைவுகளில் திளைத்து உயிர் விடும் மனிதனின் கதை.

ஆனால் ரோஷமான் படத்தின் கூறுகளாய் ,அவரை சுற்றி இருப்பவர் பார்வையில் கதை விரியும். இறுதி வரை மென்மை புதிர் விடுபடாது. இயக்குனரின் இறுதி காட்சி காணும் வரை.

இந்த படம் அப்போதைய March of Time என்ற பிரபல பத்திரிகையின் Dynamic எடிட்டிங், investigative reporting ,மிக குத்தலான ,கொழுப்பான பத்திரிகை நடவடிக்கைகளின் அங்கத சாடலாக சொல்வாரும் உண்டு. (கதாநாயகன் பத்திரிகை அதிபரும் கூட) வில்லியம் ,ஹென்றி என்று அப்போதைய பத்திதிகை ஆட்களை சாடும் முயற்சி என்று அர்த்த படுத்துவோரும் உண்டு.

பலவித யூகங்களுக்கு ஆட்படுத்தும் வித்தியாச, சுவாரஸ்ய, வினோத திரைக்கதையமைப்பு,நம்மை இப்போது பார்த்தாலும், இன்றைய தலைமுறை பார்த்தாலும் கட்டி போடும்.

Gopal,S.
22nd June 2015, 09:13 PM
Bicycle Thieves -Vittorio De Sica - Italy -1948.

நான் மட்டுமல்ல உலக பட இயக்குனர்கள் ஜப்பான் முதல் ஈரான் வரை ,சத்யஜித்ரே,பிமல்ராய்,முதல் பாலுமகேந்திரா வரை தெய்வமாய், நியோ ரியலிச படங்களின் தந்தையாய் தொழும் நபர் விட்டோரியோ டிசிகா . இவரின் நூறாவது பிறந்த நாளை கானடா நாட்டு montreal சூதாட்ட விடுதியில் ,நண்பர்களுடன் கொண்டாடினேன்.(7 ஜூலை 2001) இது முடிந்து ஊர் திரும்பியதும் (ஜகர்தா) இந்திய தூதர் தந்த விருந்தில் இருக்கும் போது ,நம் தெய்வம் நடிகர்திலகம் மறைந்த செய்தி வந்து என்னை மீளா துயரில் வீழ்த்தியது.

neo Realism என்ற பாணியை துவங்கியவர் ரோசலினி என்ற இத்தாலிய இயக்குனரே (1945இல்).இதை தொடர்ந்தவர் நமது டிசிகா Sciuscia (1946),Bicycle Thief (1948) போன்ற படங்களில். 5 முறை ஆஸ்கார் விருது வாங்கியவர் குருவாக ஏற்றது ரோசலினி ,சார்லி சாப்ளின் ஆகியோரை. சிறு வயதில் வறுமையில் வாடியவர், பிறகு நாடகம்,படத்துறை என்று பெரிய அளவில் சாதித்தார்.சூதாட்டத்தில் நாட்டம் கொண்டு பெருமளவில் இழந்தவர்.(சூதாட்ட விடுதியில் நாங்கள் நூறாம் ஆண்டு கொண்டாடிய காரணம்).

சக சூழலில், சக மனிதர்களின் பிரச்சினையை எடுத்து அதை கலை சார்ந்த அழகுணர்ச்சியுடன்,உண்மை தன்மை கெடாமல் கொடுப்பதே Neo Realism .தீர்வு கொடுப்பதை விட,தீர்வை நாடி நம்மை ஓட வைக்கும்.மனத்தை ஈரமாக்கி ,துயர் துடைக்க வழி இல்லையெனினும்,துயரில் பங்கு பெரும் மனிதம் வளர்க்கும். தொழில் முறை நடிகர்களை நாடாமல் அமெச்சூர் நடிகர்களை வைத்தே படம் எடுத்தார்.(தொழில் முறை நடிகர்கள் டப்பிங் கொடுத்ததாக நினைவு).

உலகத்திலேயே மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த சிறந்த படைப்பாக கருத படும் படைப்பு இது.பல உன்னத படங்கள் ஒரு புத்தகத்தை மையமாக கொண்டே இருக்கும். இதுவும் லுஜி பர்டோலோனி என்பவரின் நாவல் .சத்யஜித் ரே இந்தியாவின் வறுமையை வெளிச்சமிட்டு புகழடைபவர் என்ற குற்ற சாட்டு எழுந்தது போல, இவர் இத்தாலியின் வறுமையை வெளிச்சமிட்டு உலக புகழ் சேர்ப்பதாக ,இத்தாலியில் குற்றசாட்டு எழுந்தது. அதையும் மீறி ,இவர் படைப்பும்,ஐவரும் காலத்தில் அழியா புகழ் அடைந்தனர்.

அமெரிக்க Great Depression காலத்திலும், இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகள், இரண்டாம் உலக போருக்கு பின்னரும் சொல்லொணா வறுமை,வேலையில்லா திண்டாட்டம், இளம் தலை முறையின் கொதிப்பு, அதிகரித்த குற்றங்கள் என்று எல்லா சவால்களையும் சந்தித்தன. இதை பற்றி அந்தோனியோ ,மனைவி மரியா, மகன் ப்ருனோ சுற்றி பின்ன பட்ட சுருக்க கதை ,உலகம் போற்றும் classic படமானது.

வேலையில்லா அந்தோனியோ, போஸ்டர் ஓட்டும் வேலை கிடைக்கிறது. ஆனால் அதற்கு தேவை ஒரு சைக்கிள். மனைவி,தனது உயர் ரக (கல்யாண சீதனம்) விரிப்புகளை அடகுக்கு கொடுத்து பணம் வாங்குகிறாள். முதல் நாளே சைக்கிள் திருடு போய் ,அதை மீட்க அவன் படும் பாடு, மகனும் சேர்ந்து அவனுடன் படும் துயர் கதை. இறுதியில் பாடு பட்டும் தன் உடமையை மீட்க முடியாத விரக்தியில்,இன்னொரு சைக்கிள் ஐ களவாட போய் பிடிபட்டு, இறுதியில் உடமையாளரால் மன்னிக்க பட்டு,மகனுடன் வருத்தம்,விரக்தி,மீளா வறுமை,செயலற்ற நிலையுடன் அவமானமும் சுமந்து செல்லும் துயரம்.

இதன் பாதிப்பில் வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணி தந்த அற்புத படைப்பே பொல்லாதவன்.வருங்கால பொழுது போக்கு படங்களுக்கு புது பாதை போட்ட படைப்பு.

Gopal,S.
22nd June 2015, 09:17 PM
La Strada -Federico Fellini - 1954.

வாழ்க்கை என்பது நாம் காணும் நிகழ்ச்சிகளின் தொகுப்போ, நாம் படிக்கும் கேட்கும் விஷயங்கள் மட்டுமேயல்ல.ரியலிசம் மட்டும் உண்மையோ கலையோ ஆகாது.விஷயங்களை நம் மனம் வாங்கி கொள்ளும் முறை,அது சார்ந்து நம் மனம் நமக்கு காட்டும் முறைமை,உள்மன புயல்கள்,தேவையற்ற பயங்கள் ,வக்கிரங்கள், வன்மங்கள்,துயர் சிந்தனைகள்,நிழலான பகிர முடியாத எண்ணங்கள்,பிரத்யேக மன பிறழ்வுகள்,குற்ற உணர்வுகள்,சில நேரம் துன்பத்திலும் எள்ளும் வினோத குணம், வாழ்க்கையில் சேர்த்து கட்ட பட்டாலும் நேர்கோட்டில் வராத இரு பிரத்யேக குண விசேஷம் கொண்டவர்களின் சந்திக்காத மன உணர்வுகள்,அவர்கள் ஒருவர் வாழ்கையை மற்றவர் பாதிப்பதை உள்மன படிமங்களாக்குவது போன்ற ஆழமான விஷயங்களை ,மன விளையாட்டு பயிற்சியை,சத்தியமாக ரியலிச படங்களால் அணுகவே முடியாது.

Fellini புரிந்து கொள்ள படுவதற்கே ,தேர்ந்த ஆய்வாளர்களின் துணையுடன், படிப்பறிவு (துறை சார்ந்த),மனோதத்துவ பின்னணி,அழகுணர்ச்சி ,பல உலக படங்கள் பார்த்த தேர்ச்சி,இவை இருந்தாலே சாத்தியம். அப்படி ஒரு பாணி. Fantasy எனப்படும் மன பிரமை,Baroque என்ற கலை போல மிகை தன்மையுடன் நகர்வு சார்ந்த ஒருங்கிணைக்க பட்ட கலையுணர்வு, பூமியின் தன்மையுடன் (Earthiness )இணைவு பெற்றால் மட்டுமே நிகழும் அற்புத தருணங்கள். சிறு சிறு விஷயங்களும் நேர்த்தியாக காட்ட படும்.இது ஒரு Hollywood படங்கள் போல பொதுமையுடன் ,நீர்க்க செய்த வியாபார கலையல்ல. ஒரு மனிதன் தன் மனத்தை, அதன் தருணங்களை,அதன் சலனங்களை நம் மனத்தோடு பகிர என்னும் பிரத்யேக கலை படங்கள்.உள்மன விவரிப்பு படிமங்கள்,மனோதத்துவம் சார்ந்த யதார்த்தம்,மன உணர்வுகளின் மேன்மை-மென்மை -வறுமை-துயரம்-கொடூரம்-குழப்பம் இவற்றை மனிதம் கெடாமல் நம்மோடு பகிரும் ஒரு நேர்மையான நேர்த்தியான கலை.

இந்த படம் Zampano என்ற தெருவில் வித்தை காட்டி பிழைக்கும்(சங்கிலியால் கட்டி இழுக்கும் பல விளையாட்டு) ஒருவன் ,ரோஸா என்ற உதவி பெண் இறந்து விட்டதால், அவளுக்கு பதிலாக கேல்சொமினா என்ற அவளது தங்கையை 10,000 லிரா (இத்தாலிய காசுகள் சுமார் 600 ரூபாய் ) கொடுத்து வாங்கி உதவியாக வைத்து கொள்கிறான்.அவளிடம் மனித தன்மையற்ற குரூரம் காட்டி அனுதினமும் வதைக்கிறான்.அவன் ஒரு circus ஒன்றில் பணி புரிய நேரும் போது Matto என்ற கோமாளி கலைஞன் அவர்களை எதிர்கொள்கிறான். அவனுக்கு எதிலும் எப்போதும் விளையாட்டு மனநிலை இருந்தாலும் ,எந்த ஒன்றும்,எந்த ஒருவரும் ஒரு காரணத்தோடு படைக்க பட்டவர்களே என்ற மனிதம் நிறைந்த எண்ணங்கள் கொண்டவன். சம்பனோ வும் மட்டோ வும் ஆரம்பம் முதலே மோதல். ஒரு அசந்தர்ப்பமான தருணத்தில் மாட்டோ ,சாம்பநோவால் மடேர் மடேரென்று அடித்து கொல்ல பட்டு விடுகிறான்.(சாகும் போது மாட்டோ-என் வாட்ச் உடைந்து விட்டதே) .இந்த சம்பவத்துக்கு பிறகு மணந்து கொள்ள சொல்லும் கேள்சொமினா வை நிராகரித்து,நடை பிணமாக இருக்கும் அவளை விட்டு ஓடி விடுகிறான். அவள் நினைவுகளால் துரத்த பட்டு ,இறுதியில் கண்ணீர் வடிப்பதுடன் படம் முடிகிறது.

fellini தன் Autobiography என்று இதனை வர்ணித்துள்ளார்.உள் மனத்துயர் ,ஒரு லேசு பாசான (diffused )குற்றவுணர்வு,நிழல் ஒன்று மேல்தொங்குவது போன்ற உணர்வுகளுக்கு ஆட்பட்டு ஒரு மன சித்திரமாக உருவானவள் கேள்சொமினா. Zampano ,சிறு வயதில் பார்த்த பன்றிகளுக்கு காயடித்து பிழைப்பு நடத்தி வந்த ஒரு பெண் பித்தனின் உண்மை பாத்திரம்.இவை வைத்து உருவானது. Fellini படங்களிலேயே அவருக்கு அதிகம் சிரமம் தந்த படம்.(நேரம்,பொருள்,மன உளைச்சல்),Antony Quinn தான் Zampano .

இவரின் பிற படங்கள் La Dolce Vita , 8 1/2, Amarcord .Nino Rota இந்த படத்திற்கு தந்த இசை கவனிக்க பட வேண்டியது. காட்சிகள் படமாக்கம் மிக ஆழ-அழுத்தம் கொண்டு பலமான காட்சி அதிர்வை தரும். ஒரு perfectionalist Fellini .

Gopal,S.
22nd June 2015, 09:19 PM
Breathless -Jean Luc Godardt - French -1960.

இவர் ஒரு விமரிசகர்,நடிகர்,சினிமாடோ கிராபர் ,திரைகதையாசிரியர்,எடிட்டர்,இயக்குனர் தயாரிப்பாளர்.(உங்களுக்கு ராஜேந்தர்,பாக்யராஜ் ஞாபகம் வந்தால் டெட்டால் விட்டு குளித்து விட்டு வாருங்கள்)

கோடர்ட் ,தரமான படம் என்ற பழைய கோட்பாட்டை தகர்த்தவர். புதுமை விரும்பி.புது இயக்குனர்களால் சோதனை முயற்சி படங்கள் வர பிரயத்தனம் மேற்கொண்டவர்.இருத்தலியல் (existentialism )மார்க்ஸிஸம் இரண்டிலு ஈடுபாடு கொண்டவர். பிற்கால படங்களில் ஒரு மனிதம் கலந்த போராட்ட முரண்களை மார்க்ஸீய பின்னணியில் அணுகியவர். அரசியலை படங்களில் பேசியவர். அந்த கால நியூ வேவ் படங்களின் முன்னோடிகளான ட்ரூபோ ,ரெஸ்னாய் இவர்களுடன் இணைந்து பிரெஞ்சு படங்களை உலக அளவில் தர படுத்தியவர்.

நாம் பார்த்த ,பார்த்த இருக்கிற உலக இயக்குனர்கள் scorsese ,Tarantino ,Soderberg ,betrolucci ,pasolini ,karvai போன்றவர்கள் இவரால் உந்த பட்டு உருவானவர்களே.

இந்த படம் மைக்கேல் என்ற இளம் குற்றவாளி, கார்திருட்டில் ,ஒரு போலிசை சுட்டு விட்டு ,தப்பிக்கும் ஓட்டத்தில் பேட்ரீஷியா என்ற அமெரிக்க இளம் பெண்ணை (தெருவில் பேப்பர் விற்கும் ,journalism படிக்கும் மாணவி)கண்டு ,அவளால் அவளிருப்பிடத்தில் ஒளித்து வைக்க படுகிறான்.அவன் இத்தாலிக்கு தப்பி செல்ல பண முயற்சியில் இறங்கி, அந்த பெண்ணையும் வச படுத்துகிறான்.(seduction )அவனால் கர்ப்பமாகும் பெண்ணே ,அவனை காட்டியும் கொடுத்து அவன் சாவுக்கு காரணமாகிறாள். கடைசியில் சாகும் போது அவன் சொல்லும் வரிகள் படத்துக்கு முத்தாய்ப்பு.

ஒரு சாதாரண கதையை எடுத்து,அதனை நோக்கமில்லாமல் செலுத்தி,பல வித digressions என்று சொல்ல படும் திருகு வேலைகள் செய்து, புனித நோக்கங்களின் பின்னாலுள்ள நேரத்தின் அர்த்தமின்மை என்பதை புதிய பாணியில்,அலட்டாமல்,சுவாரஸ்யமாக சொன்ன படம். காட்சிகளின் புதுமை,பலம், jump cut என்ற எடிட்டிங் பாணி (இதன் பிறகே பிரபலம் அடைந்தது. சிகப்பு ரோஜாக்கள் ஞாபகம் உள்ளதா).இந்த படத்தை உலக அளவில் பேச படும் படமாக்கியது.

இயக்குனரின் பிற படங்கள் A Woman ,Contempt ,Week End போன்றவை.

Gopal,S.
23rd June 2015, 02:39 PM
Cries and Whispers - Ingmar Bergman - Sweden - 1972
ஒரு சிறிய நாட்டில் வசித்து கொண்டு (ஸ்வீடன்)நம்மை விட மிக மிக குறைந்த ஆட்களே பேசும் மொழியில் ,குறைந்த முதலீட்டில்,hollwood ,U .S போல வியாபார நிர்பந்தங்களுக்கு பணியாமல் ,பிரத்யேக படங்களை,யாரோ நம் அந்தரங்கத்தில் ஊடுருவியதை போல பதட்டம் தரும்,சினிமா மட்டுமே கண்டுணரக்கூடிய வார்த்தைகளற்ற மௌன ரகசியத்தை படங்கள் மூலம் பேசியவர் பெர்க்மன். இன்றும் கூட யாராவது நல்ல படம் தந்தால் ,பெர்க்மன் feel வருகிறது (உ.ம் மெட்டி,தேவர் மகன்)என்று சொல்ல வைத்த இயக்குனர் உலக அளவில் பேர் பெற்ற பெர்க்மன்.
நாம் சாவு,நோய் ,இதையெல்லாம் வெறுக்க கற்று, பிரிக்க முடியாத அவைகளுடன் ரகசிய சிநேகம் கொள்ள மறுக்கிறோம். பெர்க்மன் படங்கள் நம்பிக்கை,ஏமாற்றம்,சூன்யம்,மன பிறழ்வுகள்,நோய்,சாவு இவற்றை ஒரு அதீத மனித உணர்ச்சி குவியலுடன் ,ஒரு புதிர் தன்மையோடு ,அழகான கலையுணர்ச்சியோடு ,மனதுக்கு அருகில் சேர்த்தவை.
இந்த படம் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஒரு தனி பங்களாவில் ,சாவுடன் போராடும் ஆக்னெஸ் என்ற சகோதரியை பார்க்க வரும் மரியா ,கரீன் என்ற உடன் பிறப்புக்கள்,அன்னா என்ற மத நம்பிக்கையில் ஊறிய பணிப்பெண் இவர்களை சுற்றி படரும்.அமானுஷ்ய உணர்வு தரும் படம். அவள் இறந்து விடுவாளோ என்ற பயம் ஒரு புறம்,இறக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மறுபுறம். நினைவுகள் பின்னோக்கி போகும் flashback . அவர்களின் சிறுவயது வாழ்க்கை,அது சார்ந்த நினைவலைகள்,எண்ண எழுச்சிகள்,, மரியாவின் டாக்டர் நண்பனுடனான காதல்,தோல்வியில் முடியும் திருமணம்,கரின் தன்னை தானே துன்புறுத்தி,தன பெண்ணுறுப்புக்களை சிதைத்து கொண்டு கணவனை விரட்டி விடும் மிரட்சியான காட்சிகள்,அக்னேஸ் தன்னுடைய அம்மாவின் மீது வைத்த அளவு கடந்த அன்பு என்று போகும்.இதில் தன குழந்தையை சிறு வயதில் இழந்த அன்னா மட்டுமே சற்று நிதானமாக பிரச்சினையை அணுகுவார்.இறந்து விடும் அக்னேஸ் திரும்பி வந்து அவர்களின் நேசத்தையும் ,கவனிப்பையும் யாசிப்பது என்று படம் முடியும்.பெண்களின் மனோதத்துவம் அற்புதமாக கையாள பட்டிருக்கும்.முழுக்கவும் சிவப்பு விரிப்புகள் ,வெண்ணிற பொருட்கள் என்று வண்ணங்களின் வினோதம் மனோதத்துவ பின்னணியுடன் இணையும். காமெரா மேன் Nykvist மாயாஜாலம் புரிவார்.(ஆஸ்தான கேமரா மேன் ). பெர்க்மென் தன்னுடைய நடிக நடிகைகளை எல்லா படத்திலுமே திரும்ப திரும்ப பயன்படுத்துவார்.(Ullman -நாயகியாய் சுமார் எட்டு படங்களில்).சினிமா,தொலைகாட்சி,நாடகம் என்று இயங்கிய பெர்க்மன் உணர்ச்சிகளின் குழந்தை. 4 மனைவி,4 துணைவி,கணக்கில்லா பிள்ளைகள் என்று. பின்னாட்களில் வரி ஏய்ப்புக்காக charge sheet பெற்று மன உளைச்சலில்,படங்களை துறந்து நரம்பு தளர்ச்சி நோய்க்கு ஆட்பட்டார்.(பின்னர் விடுவிக்க பட்டாலும்)மகேந்திரனுடன் இப்படத்தை குறிப்பிட்டே, மெட்டியுடன் ஒப்பிட்டேன். (அவருக்கு DVD கொடுத்தேன்).இதை பேட்டியிலும் குறிப்பிட்டார்.(நடிகராக போகிறார் போல?)இவரின் ரசிக்க பட வேண்டிய பிற படங்கள் Seventh Seal ,Wild Strawberries ,Persona .

vasudevan31355
24th June 2015, 11:17 AM
என்னதான் முடிவு?...

முடிவை நோக்கித் தொடர்கிறது..தொடர்ந்து முடிகிறது.

http://i.ytimg.com/vi/-SIF_EPNkYI/hqdefault.jpg

தம்பியோ கைதி என்று மாப்பிள்ளை வீட்டாரால் அறியப்பட்டு திருமணம் தடைபடுகிறது. 'உன் பழி உணர்ச்சி தீர நீயே உன் தங்கையைக் கொன்றுவிடு' என்று அண்ணன் தம்பியிடம் கத்தியை வெறுப்புடன் எடுத்துத் தருகிறான். அப்போதும் தம்பி தான் பழிவாங்கக் காத்திருப்பவனை கொலை செய்து 'அந்த பிணத்தின் மேல் உன் கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன்' என்று தங்கையிடம் சூளுரைத்தபடி நிற்கிறான்.

கல்யாண வீட்டில் சலசலப்பு. மானேஜர் வந்துவிட்டார். திருமணத்திற்கு வரும் மானேஜர் பெரியவரை ஊரே வரவேற்கிறது. அவர் புகழ் பாடி தெய்வமாக அவரைக் கொண்டாடுகிறது. தூரத்தில் தெரியும் அவரை தம்பி உற்றுப் பார்க்கிறான். தெரிந்த முகம் போல் தெரிகிறது. ஊரார் அனைவரும் அந்த உத்தமரின் காலில். அண்ணன் விவரம் சொல்லுகிறான். தம்பி கொலை செய்யக் காத்திருக்கும் அந்தப் பெரிய மனிதரிடமே தம்பிக்கு புத்தி சொல்ல சொல்கிறான் அந்த அப்பாவி அண்ணன்.

தம்பியை நோக்கி வரும் மானேஜர் அவனை அடையாளம் கண்டு கொள்கிறார். கொஞ்சமும் அவர் சலனப்படவில்லை. அவர் முகத்தில் மரண பீதி இல்லை. நடுக்கம் இல்லை. செய்த பாவங்களுக்கு சந்தோஷத்துடன் அவர் தண்டனை அனுபவிக்கத் தயார்.

அவனிடம் 'என்னைத் தெரியலையா... நான்தான்... உன்னை கொலைகார பட்டம் கொடுத்து ஆயுள் கைதியாய் அனுப்பிய கொடும்பாவி நான்தான்.... உன் தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன்' என்று அவன் கையில் இருக்கும் கத்தி முன் தலை குனிகிறார்.

http://i.ytimg.com/vi/O8OzS5rbW3E/hqdefault.jpg

பழி உணர்ச்சியும் கொலை உணர்ச்சியும் மேலோங்கி இருக்க அந்தப் பெரியவரை தரதரவென ரூமிற்குள் இழுத்துச் சென்று தாழிட்டுக் கொள்கிறான் தம்பி. அனைவரும், பதட்டத்துடனும், அதிர்ச்சியுடனும் சென்று கதவை தட்டுகின்றனர். தாங்கள் வணங்கும் அந்த மனித சாமிக்கு ஏதாவது நேர்ந்தால் அத்தனை பேரும் தம்பியைக் கொல்லும் கொலைகாரர்கள் ஆவோம் என்று எச்சரிக்கிறார்கள். உள்ளே ஒரு சப்தமும் இல்லை. ஊரே கூடி கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தால்...பார்த்தால்?...

அந்த மனித தெய்வம் முன் மண்டியிட்டுக் கிடக்கிறான் தம்பி கண்களில் நீர் நிறைய. அவன் அவரைக் கொலை செய்யவில்லை. மாறாக அவர் பாதங்களை அவன் கண்ணீரால் கழுவி கதறுகிறான். அவருடைய நல்ல குணங்களை அவன் உணர்ந்து விட்டான். அவர் திருந்தியதை அறிந்து விட்டான். புத்தி தெளிந்து விட்டான். அவன் வாழ்வு சீர்குலையக் காரணமாயிருந்த அந்த பெரிய மனிதர் ஆனந்தத்துடன் கூடிய அழுகை அழுகிறார். 'வைஷ்ணவ ஜனதோ' பின்னணியில் ஒலிக்க இருவரும் மனதார தழுவிக் கொள்கின்றனர் மனமொத்த அன்பினால். அன்பு வென்றது. பாவம் உணர்ந்து செய்த புண்ணியம் வென்றது. செய்த தர்மம் அதர்மத்தை வீழ்த்தியது. பழி உணர்ச்சி தோற்றுப் போனது.

அருமையான பின்னணி விளக்கத்துடன் படம் முடிகிறது.

'மனிதன் தவறு செய்யாத போது மனிதனாகவே இருக்கின்றான்.

தவறு செய்யும் போது அதே மனிதன் மிருகமாக மாறி விடுகின்றான்.

மிருகம் தன்னை உணர்ந்து திருந்தும் போது தெய்வத் தன்மை அடைந்து விடுகிறது.

தெய்வத்தன்மை அடைந்த மனிதன் உலகத்தில் வாழத்தானே வேண்டும்?'

என்ன அருமையான ஒரு படம்! என்ன ஒரு மெஸேஜ்!

கொடுமைக்கார மானேஜராகவும் திருந்திய பெரியவராகவும் பாலையா நடிப்பில் கொடிகட்டிப் பறக்கிறார். பழுத்த அனுபவம் பேசுகிறது. 'பாவி என்னை மறுபடியும் பிறக்க வைக்காதே' என்று கோவில் கோவிலாக சென்று பாவங்களைத் தீர்க்க மனமுருக வேண்டுவது அருமை. தான தருமங்களை புத்திமதியோடு அளிப்பது அம்சம்.

பழி வாங்கும் இளைஞனாக ராஜன். ஏ.வி.எம்.ராஜன். உணர்ந்த, உயர்ந்த நடிப்பு. அண்ணனாக வி.எஸ்.ராகவன். இவர் நடித்த படங்களிலேயே இதுதான் இவரது சிறந்த நடிப்பைக் கொண்ட படம் என்பேன்.

குடிகார பணக்காரராக வி.கே ராமசாமி. ராகவனின் மனைவியாக அஞ்சலி தேவி. தங்கையாக 'பலே பாண்டியா' வசந்தி. (இவர் பி.ஏ பட்டப்படிப்பு முடித்தவர்) நிர்மலா ('வெண்ணிற ஆடை' அல்ல) என்ற முகம் அறியாத நடிகை ராஜன் ஜோடி. மற்றும் கே.எஸ்.ஜி படங்களின் ஆஸ்தான குத்தகை நடிகர்கள் கரிக்கோல் ராஜ், சாமிக்கண்ணு, கவர்ச்சி வில்லன் கண்ணன், 'அய்யா.. எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்' வீராசாமி, நம்பிராஜன், ராஜவேலு அனைவரும் உண்டு.

ரவி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு. பாடல்களை கொத்தமங்கலம் சுப்புவும், கோபாலின் காவிய கவிஞனான மாயவநாதனும் இயற்றி இருப்பார்கள்.

மகரிஷியின் மூலக்கதைக்கு திரைக்கதை, வசனம், எழுதி இயக்கி இருப்பார் கோபாலகிருஷ்ணன் என்னும் 'இயக்குனர் திலகம்'.

இசை ஆர்.சுதர்சனம். அருமையான பாடல்கள்.

பாடகர் திலகத்தின் 'பாவி என்னை மறுபடியும் பிறக்க வைக்காதே'

'நீண்ட மதிற்சுவரும்
நெட்ட நெடுங் கோபுரமும்
சூழ்ந்து மறைத்திருக்கும்
சுத்தவெளி பொற்சபையே'

உருக்கி, உருக்குலையச் செய்யும் பாடல்.


https://youtu.be/l62mkvoVwEA

'பொண்ணப் பார்த்து மயிலக் காள மயங்கிதிப்போது' சுசீலாவின் குரலில் கிறங்கடிக்கும் கிராம பாணிப் பாடல். அலுப்பே ஏற்படுத்தாத பாடல்.


https://youtu.be/DOGmJERSWMQ

'தமிழ்க் கலைதனில் விழுந்த களை எடுப்பாய்' என்ற கலைநிகழ்ச்சி நாட்டியப் பாடல். படத்தில் பாடுபவர் நமது எஸ்.ஏ.கண்ணன். லட்சுமி ராஜம், காஞ்சனா, உதய சந்திரிகா ( இவரே பின்னால் கே.எஸ்.ஜியின் 'சுவாதி நட்சத்திரம்' படத்தின் கண் தெரிந்தும் தெரியா நாயகி) இவர்களின் நடனத்தில். நவநாகரீகக் கலையை கேலி செய்து, தமிழ்க் கலைகளின் பெருமை குறைகிறதே, குலைகிறதே என்று கவலைப்படும் கலைப் பாட்டு.


https://youtu.be/ungtfrjVcCw

RAGHAVENDRA
24th June 2015, 11:32 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/song%20book%20covers/SONG%20BOOK%20PAGES/EMFW01_zpswnp10jxz.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/song%20book%20covers/SONG%20BOOK%20PAGES/EMFW01_zpswnp10jxz.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/song%20book%20covers/SONG%20BOOK%20PAGES/EMFW02_zpsth2hgqiu.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/song%20book%20covers/SONG%20BOOK%20PAGES/EMFW02_zpsth2hgqiu.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/song%20book%20covers/SONG%20BOOK%20PAGES/EMFW03_zpsvnefxoxk.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/song%20book%20covers/SONG%20BOOK%20PAGES/EMFW03_zpsvnefxoxk.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/song%20book%20covers/SONG%20BOOK%20PAGES/EMFW06_zpssusgowjh.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/song%20book%20covers/SONG%20BOOK%20PAGES/EMFW06_zpssusgowjh.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/song%20book%20covers/SONG%20BOOK%20PAGES/EMFW04_zpsjfxbaa4c.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/song%20book%20covers/SONG%20BOOK%20PAGES/EMFW04_zpsjfxbaa4c.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/song%20book%20covers/SONG%20BOOK%20PAGES/EMFW07_zps33lywgbe.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/song%20book%20covers/SONG%20BOOK%20PAGES/EMFW07_zps33lywgbe.jpg.html)

RAGHAVENDRA
24th June 2015, 11:41 AM
வாசு சார்
அருமை.... என்னதான் முடிவு படத்தை மிகச் சிறப்பாக மக்களுக்கு அறிமுகம் செய்துள்ளீ்ர்கள். சரியான திசையில் இத்திரியை எடுத்துச் செல்லும் தங்கள் பணியின் மூலம் புதிய தலைமுறையினருக்கு அந்நாளைய நல்ல படங்களை, மக்கள் அதிகம் அறிந்திராத படங்களை, அவற்றின் சிறப்பை எடுத்துச் சொல்ல ஏதுவாகிறது.

தங்களுக்கு என் உளமார்ந்த நன்றி.

அடியேனும் என் பங்கிற்கு சில அபூர்வ படங்களைப் பற்றிப் பகிர்ந்து கொள்கிறேன்.

மற்ற நண்பர்களுக்கும் இந்த வேண்டுகோளை விடுக்கிறேன்.

முரளி சார், கோபால், விநோத், கலைவேந்தன், சி.க., ராஜேஷ் உள்ளிட்ட அனைத்து நண்பர்களும் பங்கு கொள்ள வேண்டும் என விரும்புகிறேன்.

குறிப்பாக கிருஷ்ணாஜீ அவர்களின் நினைவாற்றலுக்கும் அநுபவங்களின் பகிர்தலுக்கும் இது சரியான தளமாக இருக்கும்.

Gopal,S.
24th June 2015, 11:48 AM
வாசு,அற்புதம் என்ற வார்த்தை தவிர எதை சொல்வது?(முரளியிடம் கடன்). என்னவோ நேரில் உன்னுடன் அந்த படத்தை பற்றி உரையாடுவது போல உள்ளது.எனக்கு பிடித்த மகரிஷி(பனிமலை) ,எனக்கு பிடித்த கே.எஸ்.ஜி இணைவு. ஏன் தோல்வி கண்டது என்ற கேள்விக்கு விடையில்லை. மறதி நோயால் ,பண்ணை வீட்டில் தங்கி ஓய்வு பெற்று வரும் கே.எஸ்.ஜி க்கு இதை யாராவது படித்து காட்ட வேண்டும்.நன்றி ,இவ்வளவு முயற்சிகளுக்கு.

RAGHAVENDRA
24th June 2015, 12:00 PM
நண்பர்களே
மேற்காணும் என்ன தான் முடிவு படப்பாடலான பாவி என்னை மறுபடியும் பிறக்க வைக்காதே பாடலின் பாதிப்பில் 80களின் கடைசி அல்லது 90களின் துவக்கத்தில், கிட்டத்தட்ட அதே மெட்டில் இன்னொரு பாடல் வெளிவந்து மிகப்பிரபலமானது.

கண்டு பிடிக்க முடியுமா

Gopal,S.
24th June 2015, 07:24 PM
Roshomon - Akira Kurosawa -Japanese -1950

Dont believe everything you hear .There are always three sides to a story. Yours,Theirs and the Truth........

பல பாத்திரங்கள்.பலவித மாற்று கூற்றுக்கள்,தன சுயநலமா அல்லது
தற்காப்பா ,ஒன்றுக்கொன்று முரண்பட்டு மாறுபடுவது ,அதுவும் பேச வந்த அல்லது விசாரணைக்கு வரும் ஒரே விஷயத்தை பற்றி. இந்த படம் உண்மையை கண்டறிவதில் ,அதன் இறுதியை இறுதி செய்வதில் அலையாமல் நிஜத்திற்கு பன்முகங்கள் உண்டு என்று காட்டிய படம்.

இந்த படம் ஒரு period Drama என்ற வகை.

கிகோரி என்ற விறகு வெட்டி Roshomon Gate (City Gate of Kyoto )என்ற இடத்தில் ஒரு வழிப்போக்கனுடன் இளைப்பாறும் போது , ஒரு கொலை செய்ய பட்டு கிடந்த சமுராய் உடலை பார்த்ததாக சொல்வான்.அங்கு வரும் இன்னொரு மத போதகர் சமுராய் தன மனைவியோடு காட்டு வழி போவதை பார்த்ததாக கூறுவார்.

இது விசாரணைக்கு வரும். முதலில் கொள்ளை காரன்(தஜமாறு) சாட்சி சொல்வான். தன மனைவியோடு போகும் சமுராயை ,பழைய வாட்கள்,கேடயங்கள் சேகரத்தை பார்க்கும் சாக்கில் அழைத்து அவனை கட்டி போட்டு அவன் மனைவியை (கோடரியால் தற்காத்து கொள்ள முயலுவாள்) Seduce செய்து கணவன் எதிரிலேயே உறவு கொண்டு விடுவான்.ஆனால் இருவர் எதிரில் இந்த நிகழ்ச்சி நடந்ததால் ,அவமான படாமல் தப்பிக்க ,தன் கணவனுடன் போராடி அவனை கொள்ள சொல்வாள்.தஜோமொரு ,சமுராயை ஜெயித்து கொன்று விட , அந்த விலையுயர்ந்த கவசத்தோடு மனைவி ஓடி விடுவாள்.

பிறகு அந்த மனைவியின் சாட்சி.கொள்ளைக்காரன் கற்பழித்து விட்டு ஓடி விட, தன்னை மன்னிக்க சொல்லி கணவனை கெஞ்சுவாள்.தன்னை கொன்று விட சொல்லுவாள். ஆனால் ஒரு வெறுப்பு கலந்த உதாசீனத்தொடு கணவன் பார்க்க ,மயக்கமுற்று விடுவாள்.எழுந்து பார்த்தால் மார்பில் கோடரியுடன் கணவன். அதை எடுத்து தன்னை மாய்த்து கொள்ள முயன்று தொல்வியுருவாள்.

பிறகு ஒரு மீடியம் மூலம் ,இறந்த சமுராயை கூப்பிட்டு அவனை சொல்லச் சொல்ல ,அவன் வேறு விதமாக சொல்லுவான்.வன்புணர்ச்சி செய்த கொள்ளைகாரன் ,தன்னோடு வந்து விடும் படி சமுராய் மனைவியை அழைக்க அவள் ஒப்பு கொண்டு கணவனை கொன்று விட சொல்கிறாள்.அதனால் வெறுப்படையும் தஜமுறு ,அவளை கொல்வதா வேண்டாமா என்று யோசித்து,சமுராயை விட்டு விட்டு சென்று விடுகிறான்.சமுராய் வெறுப்பில் தன்னை தானே மாய்த்து கொள்ள, அந்த கோடரியை யாரோ ஒருவர் மார்பிலிருந்து எடுப்பார்.

விறகு வெட்டி ,எல்லா கதையும் தப்பு என்று மறுத்து,தான் கண்டதாக ஒன்றை சொல்லுவான். தஜமுறு ,சமுராய் மனைவியை மணந்து கொள்ளும் படி கேட்க, அந்த பெண் சமுராயை தப்பிக்க விடுகிறாள்.ஆனால் கேட்டு போன பெண்ணிற்காக போராட கணவன் மறுக்க ,இருவர் ஆண்மையையும் பழித்து போராட தூண்டுகிறாள் அப்பெண்.சண்டை நடக்கும் போது தப்பியோடும் அப்பெண்ணை ,வென்ற கொள்ளை காரனால் பிடிக்க முடியவில்லை.

அப்போது விறகு வெட்டி,வழிப்போக்கன்,மத போதகர் ,அனாதையாக விடப்பட்ட குழந்தை ஒன்றை பார்க்க,அதன் ஆடையை திருடி போக நினைக்கும் வழிபோக்கனை கண்டிப்பான் விறகு வெட்டி.வழிபோக்கனோ, சாட்சி சொல்ல முன்வராத விறகு வெட்டியே கோடாலியை திருடியவன் என்று குற்றம் சாட்டி ,ஒரு திருடன் இன்னொருவனை குறை சொல்ல தகுதியில்லை என்று போய் விடுகிறான்.மத போதகனோ எல்லோரும் சுயநலமாக செயல் படுவதால் மனிதத்தில் நம்பிக்கை இழப்பதாக நொந்து கொள்வான். பிறகு விறகு வெட்டி,அந்த குழந்தையை எடுத்தணைத்து,தன்னுடைய ஆறு குழந்தைகளுடன் ஏழாவதாக வளர்த்து கொள்வதாக எடுத்து போவான். மனிதம் வாழும் நம்பிக்கையுடன் மழை நின்று மப்பு விட்டு சூரியன் தோன்றுவதில் படம் முடியும்.

இந்த பட இயக்குனர் அகிரா குரோசவா ,மேற்கத்திய நாடுகளால் பெரிதும் கொண்டாட பட்டவர். பலருக்கு ஊக்கு சக்தியாக,வழிகாட்டியாக விளங்கிய இயக்குனர்.இவரின் ikiru ,idiot ,seven samurai ,red beard முதலிய படங்கள் குறிப்பிட பட வேண்டியவை. இவர் திரைக் கதையே படத்தின் ஜீவன் என்று நம்பியவர். ஒவ்வொரு விஷயத்திலும் நுணுக்கமாக கவனம் செலுத்தியவர். திரைக்கதை எழுதுவது,design மேற்பார்வையிடுவது,நடிகர்களுக்கு ஒத்திகை ,ஒவ்வொரு ஷாட்டையும் தீர்மானிப்பது,எடிட்டிங் ,முதலான எல்லாவற்றிலும் கவனம் செலுத்துவாராம்.

உதாரணமாக seven samurai படத்துக்காக ,ஆறு பெரிய புத்தக குறிப்புகள்,சமுராய்களின் நடை,உடை,பாவனை,சாப்பாடு பேச்சு ,நடத்தை (அவர்கள் எப்படி காலனி அணிவார்கள் என்பது உட்பட)அனைத்து குறிப்புகளை எடுத்ததுடன் ,பல சமுராய் குடும்பங்களை அழைத்து ,நடிப்பவர்களை திருத்த சொல்வாராம்.

இவருக்கு நடித்த, இசையமைத்த,கேமரா இயக்கிய எல்லோரையும் குரோசவா குழு என்றே அழைப்பார்களாம். கேமரா ,எடிட்டிங்,இசை எல்லாவற்றிலும் பல புதிய நுணுக்கங்களை கையாண்டவர்.சப்தங்களை அளவறிந்து பயன்படுத்தியவர்.மியகாவா கேமரா . ஹயசாகா இசை. Toshiro miffune ஆஸ்தான நடிகர்.(பல நடிப்பு முறைகளில் நடிகர்திலகத்தை நினைவு படுத்துவார்)

வெளிச்சம்- நிழல்-இருள் எல்லாம் குறியீடுகள். பல பல சிந்தனையை தூண்டியவை.

ஆனால் இவர் நேரடி கதைசொல்லி, மேற்கத்திய பாணியில் சமரசம் செய்தவர், ஜப்பான் உலக போரில் அடைந்த அவமானத்தை சமாளிக்கும் போக்கில் படமெடுத்தவர்,படங்களில் பெண்களை போற்றாதவர் ,இவரை விட யசிஜிரா ஒசுவே சிறந்த இயக்குனர் என்று மேற்கத்திய விமர்சகர்களாலும், ஜப்பான் விமர்சகர்களாலும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டவர்.

எந்த விமரிசனமும் ,அதீத திறமைசாலியான இவர் புகழை குறைக்க முடியாமல்(,(நம் நடிகர்திலகம் போல) இவர் நூற்றாண்டின் சிறந்த இயக்குனராக பெயர் பெற்றார்.
இந்த படம் ரோஷோமோன் ஒரு சராசரி கேமரா லென்ஸ் வைத்து deep -focus முறையில் எடுக்க பட்டது .மூவர் சம்பந்த பட்ட close -up ஷாட் படத்தின் கருவின்கருவை காட்டி விடும்.

இந்த படத்தில் ஒவ்வொருவர் விவரிப்பிலும் 80% ஒற்றுமை. அங்கங்கே அவரவர் வசதிக்கு கொஞ்சம் மாறுபடும். இதை cameraman ஒவ்வொரு விவரிப்பிலும் காட்டும் வித்தியாச கோணங்கள் அபாரம். இத்தனைக்கும் சூரிய ஒளியில் ,கண்ணாடியை reflector போல வைத்து காட்டில் எடுக்க பட்ட காட்சிகள் ஜால விளையாட்டு.

ஒளியையும் ,நிழலையும், மழையையும்,சூரியனையும்,மப்பு மந்தாரத்தையும் கதாபாத்திர எண்ண எழுச்சிகள்,,மற்றும் குறியீடுகளாய் அமையும். இறுதி காட்சி அதற்கு சான்று. (இரண்டே செட் ரோஷோமோன் வாயில்,விசாரணை இடம்.மீதி காட்டில்.)
அந்த கால படங்களில் 200 சாட் இருந்தாலே பெரிசு. 407 ஷாட்கள் எடுத்து எடிட் டருக்கு செம வேலை. அழகாக டெக்னிகல் திறமை,அனுபவம் எல்லாவற்றையும் காமெரா,எடிட்டிங் காட்டி விடும் இயக்குனர் தலைமையில்.குரசோவா வுக்கு மௌன படங்கள் மிக பிரியம். படங்களில் மௌனம் பெரும் பங்கு வகித்தாலும் (இரைச்சல் படங்களை இன்னும் கடினமாக்கி விட கூடும்). இவர் பாத்திரங்கள் சூழ்நிலைகளுக்கு தக்க அப்போது பிரபலமான பாடல்,இசை ஆகியவற்றை உபயோகிப்பார். பெரும்பாலும் பாரம்பரிய இசை. அதிலும் counter -point என்பதில் பிரியம். (இளையராஜா ரசிகர்களிடம் கேளுங்கள்)

குரசோவா ,அப்பா இறந்ததும் புதிய பறவை கோபால் ரேஞ்சில் விரக்தியுடன் உலவும் போது ,ஒரு துள்ளலிசை கேட்டு மூட் மாறியதிலிருந்தே counter -point ரசிகராகி விட்டார்.படத்திலும் பரவலாக உபயோகிப்பார்.பின்னாட்களில் ,seven samurai ,படத்திலிருந்து Long Lenses ,Telephoto Lenses ,உபயோகித்து,பல காமிராக்களில் படம் பிடித்து, தொகுப்பில் ,நடிகர்களே எதிர்பார்த்திராத நடிப்பை,இயல்பாக கொண்டு வந்து விடுவாராம்.பின்னாட்களில் அகல திரைக்கும் போனார்.கம்ப்யூட்டர் இல்லாத காலத்திலேயே இவர் எடிட்டிங் நேர்த்தி அலாதி. வெட்டிலிருந்து ,எடிட்டிங் படத்தின் ஓட்டத்தோடு செல்லும் படி அமையும்.காமிராவை ஒரு நடிகர் அல்லது இடத்தின் அருகாமைக்கு கொண்டு சென்று பின் நகர்வதை, கிரேன் ஷாட் வைக்காமல்(Tracking Shots with Dissolve ),jump Cut match செய்து சாதித்தாராம். இதன் தன்மையே அலாதி.இத்தனைக்கும் இவர் படங்கள் நேர்கோட்டில்,சாதாரமாக, சம்பவங்களின் தொகுப்பில் ,பழைய பாணியிலே நகரும் தன்மையுடையது. ஆனால் படமாக்கும் விதத்தில்,திரைகதை நேர்த்தியில் பள பள புதுமையில் அனைவரையும் கட்டி விடும்.

vasudevan31355
24th June 2015, 08:37 PM
கோபால்.

http://nihilist.fm/wp-content/uploads/2015/01/clap_clap_clapping_by_Anima_en_Fuga.jpg

அனுபவித்து ஒவ்வொரு எழுத்தாகப் படித்துக் கொண்டிருக்கிறேன். இந்தக் கதையை மற்றவருக்கு வாயால் சொல்வது கூட ரொம்பக் கடினம். ஆனால் அகிரா கதை சொல்லும் தேர்ச்சி அதே நேர்த்தியை உங்கள் எழுத்தில் காணுகிறேன். இது வெறும் புகழ்ச்சியோ அல்லது தூக்கி வைத்துக் கொண்டாடுதலோ இல்லை. சகல திறமையும், உணமையான ரசிப்புத் தன்மையும் கொண்ட ஒரு அற்புதமான ரசிகனுக்கு, விமர்சகனுக்கு ஒரு ரசிகனாக நான் தரும் மரியாதை. ஏற்றுக் கொள்ளுங்கள். மய்யத்தின் கொண்டாடப்படவேண்டிய மகுடம் நீங்கள். உங்களால் உலக சினிமாக்களின் தரங்களைப் பற்றி இப்போது இலகுவாகத் தெரிந்து கொள்ள முடிகிறது. அதற்காக ஆத்ம நண்பனாக நான் பெருமிதம் கொள்கிறேன்.


Toshiro miffune

http://i.ytimg.com/vi/mzK0ug1dqdk/maxresdefault.jpg

'Roshomon' பற்றி என்ன சொல்ல? எனக்கு 10 பக்கங்கள் கூட போதாது. ஒரே வார்த்தை. இணையே இல்லா உலகத் தரம். அவ்வவளவுதான் சொல்ல முடியும். இதில் நடித்த நடிகர்கள் பெரும்பாலும் seven samurai படத்திலும் பங்கு பெற்றிருப்பார்கள் முற்றிலும் வித்தியாசமாக. இல்லையா?

Gopal,S.
26th June 2015, 03:10 PM
L 'Avventura(1960)/L'Notte(1961)/L'Eclisse(1962)- Trilogy-Italy- Michel Angelo Antonioni.
ஒரு கவிதையை, நாவலை திரையில் பார்த்து ,அதே உணர்வை காணொளி ஊடகம் மூலம் அதிசய உணர்வை அனுபவித்துள்ளீர்களா?படத்தை நகர்த்த கதை மாந்தர்களின் உள்ளுணர்வும் அவர்களது மன நிலை மட்டுமே போதும் , கதை சம்பவங்கள் தேவையே இல்லை, அப்படி நிகழ்ந்தாலும் கதையை மேலெடுத்து செல்லாமல், அவர்களே மீதி கதாபாத்திர உணர்வுகளை பார்வையிடுவது போல ,உணர்வின்,மாறும் மனநிலையின்(moods ),விரக்தி, சோர்வு,அயர்ச்சி (Boredom )இவற்றை திரையில் உணர்ந்து வாழ்க்கையோடு ஐக்கியம் கண்டிருக்கீர்களா?
நாடக முறையில் கதைசொல்லல், நடைமுறை யதார்த்தம் இவற்றை தூக்கி கடாசி விட்டு , nerration என்னும் சொல்லும் முறையை மாற்றி அமைத்த கவி இயக்கினர் நடைமுறைக்கு விளங்காத ,கடினமான mood pieces (துரித மனநிலை மாற்றங்களின் துண்டுகளை இணைத்தல்) விளக்கமாக ,விஸ்தாரமாக படங்களில் தொடுப்பார். படிமங்கள்,(images ),அமைப்பு முறை (Design )என்பதில் கவனம் செலுத்தி,கதாப்பாத்திரங்களின் விஸ்தார கதை சொல்லல் முறையை தவிர்ப்பார்.ஒரு வித்யாசமான ,மாறுபாடான அமைப்பு ,அது சார்ந்த பார்வை கோணங்கள்,பாத்திரங்களின் நடப்பு முறைகள் என்பது சினிமாவுக்கு எத்தனை சாத்தியங்கள் உள்ளது என்று நமக்கு உணர்த்தி விடும். ஒரு துரித நிகழ்தல் என்பதை தவிர்த்து சின்ன சின்ன விஷயங்களை ,கூரிய பார்வையில் ,மிக மிக விஸ்தார கவனத்துடன் செதுக்குவார்.
apu trilogy என்று சத்யஜித் ரே யின் பதேர் பாஞ்சாலி,அபராஜிதோ,அபுர் சன்சார் சொல்ல படுவது போல Adventure ,Night ,Eclipse என்று பொருள் படும் மூன்று படங்கள் trilogy என்ற வகை.
நான் சுருக்கி பின்னணி கொடுத்தாலும் ,இவை கதை கேட்டு ரசிக்க வேண்டிய படங்களல்ல. பார்த்து உணர வேண்டிய காவியங்கள்.(சன் டீவீ ,கலைஞர் டி.வீ திரைக்காவியங்கள் நினைவு வந்தால் மூளையை dry wash கொடுத்து பின் இங்கு வரவும்)
L 'Avventura அன்னா ,கிளாடியா என்று நண்பிகளையும்,அன்னாவின் ஆண் நண்பன் சாண்ட்ரா என்பரை சுற்றி சுழலும். அன்னா ஒரு அசாதாரண சூழ்நிலையில் மாயமாகி விட ,அவளை தேடியலையும் கிளாடியா,சான்டிரா ஈர்க்க பட, கிளாடியா ஒரு குற்ற உணர்வுடன் இதனை அரை மனதுடன் அணுகுகிறாள். இறுதியில் ,ஒரு நிகழ்வு ,சாண்ட்ரா ஒரு சந்தர்பத்தில் தவறி விட,கிளாடியா குற்றவுணர்வு குறைந்து ஏற்கும் மனநிலைக்கு வருகிறாள். இந்த படம் ஒரு உள்மன பயணம். காட்சியமைப்புக்கள் ,விஸ்தாரமாய் சொல்ல படும் உணர்வு நிலைகள் என்று ஒரு அற்புத படைப்பு.
L 'Notte என்பது கியோவன்னி என்ற கதாசிரியனுக்கும்,லிடியா என்ற அழகான மனைவிக்கும் இடையேயான திருமண பந்தம் சலிப்பும்,அலுப்பும் கொண்டு முறிவை நோக்கி நகரும்.கடைசியில் அவர்கள் வேகத்துடன் ,உறவில் திளைப்பதில் முடியும்.அவன் எனக்கு inspiration இல்லை நினைவுகள் மட்டுமே உள்ளன என்பதும், ஏதாவது செய்யத்தானே வேண்டும் என்று அவள் சொல்வதும்,கணவன் இன்னொரு பெண்ணிடம் அதீத நட்பு விழையும் போது பொறாமை கூட இல்லாத சலித்த மனநிலை அடைவதும்,தன்னை ஒரு காலத்தில் அடைய விரும்பிய நண்பனின் மரணம்,கணவன் தனக்கு எழுதிய பழைய காதல் (அவனுக்கே நினைவில்லாத)கடிதத்தை படிக்க கொடுப்பதும், விருந்தில் பைத்தியக்காரதனமான விரோத உணர்வில்(உப்பு பெறாத விஷயங்களில்) விருந்தினர் ஒருவரையொருவர் கலாய்ப்பதும் ,ஒருவருக்கும் வாழ்க்கையில் உந்துதலோ,நோக்கமோ அற்றிருப்பதை பல்லிளிக்க வைக்கும்.L 'Eclisse முடிவு trilogy . விட்டோரியோ ,ரிக்கார்டோவின் விருப்பமின்றியே மண மன முறிவுடன் தாயிடம் செல்கிறாள்.அங்கு பியரோ என்ற பங்கு சந்தை தரகனை பார்த்து விருப்பம் கொள்ள ,இறுதியில் இருவருமே குறிப்பிட்ட இடத்தில் சந்திப்பதாக சொல்லி ,இருவருமே வராத முடிவு. அப்பப்பா ,ஒரு கதையில் கூட கதாசிரியர் இவ்வளவு ஆழம் கொடுக்க முடியுமா?பங்கு சந்தை காட்சிகள் (அந்த கால), அங்கு ஒருவருக்கு இரங்கல் நேரத்தின் போதும் மணியடிப்பதும்,அது முடிந்தவுடன் ,உடனே பரபரப்பு திரும்புவதும்,இறந்த மனிதனை பற்றி கவலை படாமல் பியரோ ,காரில் விழுந்த ஒடுக்கி பற்றி கவலை படுவதும்,அம்மாவும் பணம் பற்றிய சிந்தையில்,இவள் பிரச்சினைகளை காது கொடுத்து கேட்க மறுப்பதும்,இவளுக்கே தப்பிப்பே இல்லாத ஆயுள் கிரகணம் பிடித்து விட்டதை காட்டும்.என் எழுத்தை தொடர்ந்து மற்றதை பார்க்க மனமில்லை என்றாலும், இந்த மூன்று கவிதைகளையாவது பார்த்து சுவையுங்கள்.

RAGHAVENDRA
26th June 2015, 03:57 PM
சமீப காலமாக பல திரைப்படங்கள் இணைய தளத்தில் தரவேற்றப் பட்டிருந்தாலும் நம் நாட்டில் அனுமதிக்கப் படாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணம் தெரியவில்லை. என்றாலும் நல்ல படங்களை பார்த்து ரசிக்க விரும்புவோர்க்கு இது ஏமாற்றமே. அந்த வகையில் மேற்காணும் மூன்று படங்களின் காணொளிப் பக்கங்களும் நம் நாட்டில் காண முடியாது. எனவே அவற்றின் நிழற்படங்கள் நம் பார்வைக்கு இங்கே.

மைக்கேலாஞ்சலோ அந்தோணியானி .. உலக சினிமா சரித்திரத்தில் தவிர்க்க முடியாத பெயர். காட்சிப்படுத்துதலில் பல இயக்குநர்களுக்கு முன்னோடி.


http://www.okcmoa.com/wp-content/uploads/2015/01/lavventura-movie-poster.jpg

http://41.media.tumblr.com/b65a21b5d757a7b6e04817e5e51620cd/tumblr_mtmjv0AylU1sds6tzo1_1280.jpg

https://upload.wikimedia.org/wikipedia/en/7/7a/L'Eclisse_film.jpg

vasudevan31355
26th June 2015, 09:04 PM
L'Avventura

http://www.rogerebert.com/reviews/great-movie-lavventura-1960

vasudevan31355
26th June 2015, 09:07 PM
http://classiq.me/wp-content/uploads/2013/01/LaNotte-1961-e1359287829949.jpg

vasudevan31355
26th June 2015, 09:08 PM
http://images2.static-bluray.com/movies/covers/61890_front.jpg

vasudevan31355
26th June 2015, 09:13 PM
https://suitesculturelles.files.wordpress.com/2010/12/l_eclisse-poster.jpg

Gopal,S.
27th June 2015, 05:29 AM
Knife in the Water -Roman Polanski -Polish -1962

ஒரே கருவில் உருவான Schindler 's List என்ற உலக புகழ் மொக்கை இயக்குனர் Steven Spielberg (உண்மை கதை)படத்தை பார்த்து விட்டு, கிட்டத்தட்ட இதே கருவில் உருவான இன்னொரு உண்மை கதை சார்ந்த (Wladyslaw Szpilman )pianist படம் பார்த்தவர்களுக்கு யார் உண்மை கலைஞன் ,எப்படி ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்பது புரிந்திருக்கும்.

ரோமன் போலன்ஸ்கி யும் இரண்டாம் உலக போரில் போலந்து நாட்டில் கிட்டத்தட்ட தப்பி பிழைத்தவர். இவர் உண்மை கதையையே யாராவது சினிமா ஆக்கலாம்.அமெரிக்கா வில் வாழ்ந்த போது இவர் மனைவி ,ஒரு குடும்பத்தால் கொலை செய்ய பட்டார். இவரே ஒரு மைனர் சிறுமியை கற்பழித்த குற்றத்தில் கிட்டத்தட்ட கைதாகும் நிலைக்கு சென்று தப்பினார்.(பின்னால் வளர்ந்த அந்த பெண்ணிடம் மன்னிப்பும் கோரினார்)பிரான்ஸ் நாட்டில் அடைக்கலமானார்.

பல கிரிக்கெட் ஆட்கள் (விஸ்வநாத்), Debut வில் century போடுவது போல ,முதல் படமே இவருடைய மிக சிறந்த படமாகி விட்டது விந்தை.உலக அளவில் கொண்டாட பட்டது.

மூன்றே பாத்திரங்கள். அந்த்றேஜ் என்ற கணவன்,கிறிஸ்டினா என்ற மனைவி,பெயர் தெரியாத அவர்களுடன் ஒட்டி கொள்ளும் வழிப்போக்கன்-இளைஞன். முழுக்க படகிலேயே நடக்கும் கதை. ஆனால் ஒன்றரை மணிநேர மனதத்துவ இயங்கு நிலை பாடம். உறவுகள்,அது சார்ந்த அசூயை(envy ),பொறாமை (jealousy ) என்று 90 நிமிட சுவாரஸ்ய பயணம்.

அன்றேஜ் தன மனைவி க்ரிஸ்டினாவுடன் உல்லாச பயணம் செல்லும் போது ,ஒரு வழிப்போக்கன் lift கேட்டு ஏறி கொள்ள அவனையும் அழைத்து செல்கிறான்.தண்ணீர் விளையாட்டுக்கள் அறியாத அவனுக்கு போதிக்கிறான் . ஆனால் போக போக கிரிஸ்டினாவுக்காக,இருவருக்கும் பொறாமையால் மோதல் போக்கு அதிகரித்து, ஆத்திரம் தூண்ட பட்டு ,கைகலப்பில் இளைஞன் தண்ணீரில் விழுந்து விடுகிறான். அவனுக்கு நீச்சல் தெரியாது என்று அவன் தெரிவித்திருந்ததால், அவனை தேடி பார்த்து இயலாமல்,கரைக்கு நீஞ்சி செல்கிறான் கணவன். காவலர்களை அழைத்து வர. ஒளிந்திருக்கும் இளைஞன் (தண்ணீரில்) படகுக்கு வந்து, நிர்வாணமாக சூரிய குளியல் செய்யும் கிரிச்டினாவுடன் ,வாக்குவாதத்துக்கு பிறகு உறவு கொண்டு விடுவான். பிறகு குதித்து தன் வழியே போய் விடுவான். கரைக்கு வந்த பின், கணவனுடன் செல்லும் கிறிஸ்டினா ,இதனை கணவனிடம் தெரிவிக்க........

ஒரு மனதத்துவ படம் ,சுவாரஸ்யமாக மூன்றே பாத்திரங்களை வைத்து ,90 நிமிடம் உலகத்தையே அதிசயிக்க வைத்து, ஒரு இயக்குனரின் மிக சிறந்த முதல் படமாக கொண்டாட பட்டது.

உலக பட ரசிகர் அனந்து ,இதிலிருந்து உருவி,பாலசந்தருக்கு மூன்று முடிச்சு போட உதவினார்.(ஆனால் கேவலமான பாலசந்தர் பாணி முடிச்சு. )

போலன்ஸ்கி யின் பார்த்து ரசிக்க வேண்டிய மற்ற படங்கள் Repulsion ,Rosemary 's Baby ,Pianist .

vasudevan31355
27th June 2015, 07:46 AM
https://foreverfrost.files.wordpress.com/2013/02/knife-in-the-water-a32.jpg

vasudevan31355
27th June 2015, 07:48 AM
http://museum.walterfilm.com/albums/photos_stills/knifeinthewaterst_b.jpg

vasudevan31355
27th June 2015, 07:49 AM
http://www.bestmoviesbyfarr.com/static-assets/images/articles/background/2014/07/2-w5bwfc.jpg

vasudevan31355
27th June 2015, 07:50 AM
https://twentyfourframes.files.wordpress.com/2011/05/knife-in-the-water-ad1.jpg

vasudevan31355
27th June 2015, 07:59 AM
கோ,

டிரைலரே காவியம் பேசுகிறது. அருமை. இனிமேல்தான் பார்க்கப் போகிறேன்.


https://youtu.be/LaBa2Wj3gHk

vasudevan31355
27th June 2015, 08:01 AM
கோ,

இந்தக் காட்சியின் இசைப் பின்னணியை வித்தியாசமாக உணர்ந்தேன். அதுவும் வீடியோவின் முடிவில்.


https://youtu.be/GPLg0uDB3U4

vasudevan31355
27th June 2015, 08:08 AM
காமிராக் கோணங்கள் கூட வியப்பாக உள்ளன.


https://youtu.be/ySypeMpsIbc

Gopal,S.
28th June 2015, 07:59 PM
Meghe Dhaka Tara (1960),Komal Gandhar (1961),Subarna Rekha (1962)-Rithwik Ghatak -Bengali,India .

என்ன ஒரேயடியாக ஈரான்,கொரியா,இத்தாலி என்று உதார் விடுகிறானே ,இந்தியாவில் யாருமே கண்ணில் படவில்லையா என்று சிலர் புலம்பல் கேட்கிறது. இதோ நான் மதிக்கும் யுகபுருஷன்,இயக்குனர் ரித்விக் கட்டாக்.

இவர் இணை கலை படங்களில் சத்யஜித்ரே ,மிருணாள் சென் இவர்களோடு பயணித்தாலும் என் பார்வையில் அவர்களை விட மிக சிறந்தவர். நேர்மையான,பாவனை தவிர்த்த படங்கள் தந்தவர். சிறிய சிறிய விஷயங்களிலும் கூர்மையான,குறிப்பான கவனம் செலுத்தி சமூக நடைமுறையை ,ரியலிச படங்களை, இடது சிந்தனைகளோடு தந்தவர்.

ஐம்பதே வயதில் மரித்தவர்,குடிக்கு அடிமையாகி,மனைவியை பிரிந்து,மனநிலை பாதிக்க பட்டு,மருத்துவமனையில் இரு ஆண்டுகள் கழித்தவர்.

நாடகத்தில் தொடங்கினார். மதுமதி(மறுபிறவி-ஆவி இன்னொரு உடலுக்குள் அடக்கம்)என்ற சிறந்த வெகுஜன படத்திற்கு திரைக் கதை எழுதியவர்.(பிமல்ராய் இயக்கம்)

மேலே சொன்ன முப்படங்களும் ,ரித்விக்கை மிக பாதித்த 1947 இன் பிரிவினை ,அது சார்ந்த சமூக,பொருளாதார,குடும்ப,அரசியல்,தனிமனித பிரச்சினைகள்தான் மூன்று படங்களின் மூலம்.

மேகே தாக்க தாரா , ஒரு பெண்ணின்(நீத்தா) நல்ல இயல்பு ,தியாகம் குடும்பத்தாரால் உபயோக படுத்த பட்டு, காதல்,வேலை,ஆரோக்கியம் இழந்து நிற்கும் போது கசக்கி எரிய பட்டு, சிறிதே ஆதரவு காட்டும் அண்ணனிடம் ,நான் வாழவே விரும்புகிறேன் என கதறி தோள் சாயும் பரிதாபம்.

கோமல் காந்தார் -இது இந்திய படங்களை முன்னெடுத்து செல்லும் முயற்சி. ஐரோப்பிய முறையில் தன் ரசனை,கருத்துக்கள் சார்ந்த தனிப்பட்ட படமாக்க முயற்சி.ஒரு இடது சாரி நாடக குழு (IPTA )அதில் விருகு,அனுசுயா என்ற பாத்திரங்கள். இலட்சியங்கள்,ஊழல்,கலைக்கும் வாழ்க்கைக்கும் ஆன தொடர்பு, கலையின் ஆளுமை,வர்க்க போராட்டம் என்று விவாதம் செய்து நகரும்.

சுபர்ண ரேகா, ஒரு தாழ்த்த பட்ட பையனை(அபி ) எடுத்து வளர்க்கும் பிராமணர்(ஈஸ்வர்) தன்னுடைய தங்கை சீதாவிற்கும் அபிக்கும் ஏற்படும் காதலை ஏற்க முடியாமல், அவர்கள் சேரியில் வறுமையில் உழன்று டிரைவர் ஆகும் அபி, ஒரு விபத்தில் மாட்ட,
வறுமை சீதாவை,ஒரு இரவு விடுதியில் தள்ள,ஹர பிரசாத் என்ற நண்பரின் உந்துதலால்,ஈஸ்வர் விரக்தியால்,தனிமையால் ,கல்கத்தா வந்து குடியில் தோய்ந்து,இரவு விடுதிக்கு வர, அங்கு அவர் தங்கையே அவருக்கு தேவை பூர்த்தி செய்ய வர, அவமானத்தால் உயிர்துறக்கும் தங்கையின் மகனை எடுத்து வளர்க்கிறார் ஈஸ்வர்.

குமார் சஹானி,மணி கவுல்,மீரா நாயர்,கேத்தன் மேத்தா,அடூர் என்று பல இயக்குனர்களின் உந்து சக்தி இந்த மேதை. இவர் படங்களை சுட்டு பல படைப்புகள். (reincarnation of peter proud ,karz ,எனக்குள் ஒருவன்,ஓம் சாந்தி ஓம் ,குல விளக்கு,மறக்க முடியுமா,அவள் ஒரு தொடர்கதை,மகாநதி ) .

நான் மிக மிக மிக மதிக்கும் இந்திய இயக்குனர்களில் முதல்வர்.

RAGHAVENDRA
28th June 2015, 08:24 PM
http://www.clipartbest.com/cliparts/xig/KrA/xigKrAa4T.gif

கோபால்
எப்படிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை. மீடியாக்களால் அளவுக்கு மீறி புகழப்பட்ட சத்யஜித் ரே, சென் வகையறாக்களையெல்லாம் தாண்டி, சினிமாவை சிறந்த விஷுவல் மீடியாவாக பயன்படுத்தி தான் சொல்ல வந்ததை தெளிவாக சொன்னவர் ரித்விக் கடக். இவரைப் பற்றி நீங்கள் எழுதிய உடனே எனக்கு சந்தோஷம் எல்லை மீறி விட்டது. இந்திய சினிமாவின் சரியான அடையாளங்களில் நடிகர் திலகத்திற்கு ஈடாக கருதக் கூடியவர் ரித்விக் கடக். நம்மவர் நடிப்பில் என்றால் கடக் இயக்கத்தில். அதுவும் Meghe Dhaka Tara படம், பார்த்து முடிந்த பின்னர் சில நாட்களுக்கு நமக்குள் ஹேங் ஓவரை ஏற்படுத்தும் படம். (கதை அவள் ஒரு தொடர்கதையை நினைவூட்டும்). நம் மக்கள் நமக்கு தெரியாத மொழிப் படங்களை நமக்களிப்பதில் வல்லவர்களாயிற்றே..

அதுவும் அந்த கடைசி காட்சி நமக்குள் ஏற்படுத்தும் பாதிப்பை நம்மால் வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது. ரித்விக் கடக்கின் மேற்சொன்ன மூன்று படங்களும் நமக்குள் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவையே. அதுவும் Meghe Dhaka Tara

https://upload.wikimedia.org/wikipedia/en/thumb/0/00/Meghe_Dhaka_Tara1.jpg/220px-Meghe_Dhaka_Tara1.jpg

இந்திய சினிமாவின் நூற்றாண்டு வரலாற்றில் பொன்னெழுத்துக்களில் பொறிக்கவேண்டிய பெயர் ரித்விக் கடக். என் அபிமான இயக்குநரைப் பற்றி எழுதியதற்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.

http://www.thehindu.com/multimedia/dynamic/01441/28cp_Ritwik_Ghatak_1441191g.jpg

இது வரை இப்படத்தைப் பார்க்காத நம் நண்பர்கள் பார்வைக்காக இதோ இப்படம்..

வாசு சார், இது வரை நீங்கள் பார்க்கவில்லையென்றால் கட்டாயம் பாருங்கள். கதாநாயகி சுப்ரியா சௌத்ரியின் நடிப்பில் நாம் நம்மை மறந்து விடுவோம்.


http://www.dailymotion.com/video/x25jzoy_meghe-dhaka-tara-kolkata-bangla-film-watch-bengali-movie-online-free_shortfilms

Gopal,S.
29th June 2015, 05:17 AM
Kyatapira -2010- Koji Wakamatsu -Japan .

1)முக்கால் வாசி இந்திய பெண்கள் கேட்கும் கேள்வி, எங்களுக்கு எங்கே ஞாயிறு?போராவது,அமைதியாவது? பெண்களுக்கு எங்கே விடிவு?ஆணை சார்ந்து வாழ்வு என்பது ,அவலத்தை சமூக திணிப்பாக சுமந்து வாழும் , இழிவு,பரிதாபம். இதில் மொழியென்ன,நாடென்ன,இனமென்ன ,மதமென்ன?

2)ஆண்கள் எப்படியிருந்தாலும் ஏற்றே ஆக வேண்டிய நிலையில் பெண்கள். (படித்து,பொருளாதார பலம் பெற்ற பின்பும் தொடரும் அவலம்).ஒரு தமிழ் நாடகம் நினைவுக்கு வருகிறது. உலகிலேயே அதிகம் தாழ்த்த பட்டது தலித் ஆண்களல்ல, அவர்களால் மேலும் தாழ்த்த படும் தலித்தின் மனைவியே என்று.

4)புனித போர், போர் நாயகர்கள் என்று உண்டா? போரில் குற்றவாளிகள் மட்டுமேதானே மிஞ்ச முடியும்?

மேற்கண்ட கருத்துக்களை வலுவூட்டும் விதமாக முகத்தில் காரி உமிழ்ந்து ,அறையும் குரூர அருவருப்புடன் சொன்ன படமே கம்பளி பூச்சி என பொருள் தரும் மேற்சொன்ன படம். படங்களில் அருவருப்பு தன்மையை சுமக்க இயலாத மனம் கொண்டவர்கள் தயவு செய்து பார்க்க கூடாத படம் ,எடோகொவா என்ற எழுத்தாளரின் தடை செய்ய பட்ட சிறுகதையை தழுவிய இப்படம்.
1930இன் ஜப்பான்-சீன போரின் பின்னணி. குரோகவா என்ற ஜப்பான் லெப்டினன்ட் போரில் பலர் குடலையுருவி,சித்ரவதை தண்டனைகளுக்கு பலரை ஆட்படுத்தி,பல பெண்களை கதற கதற கற்பழித்த பெருமையாளன் .போரில் முகம் சிதைந்து,தொண்டை அறுந்து, கைகால்கள் துண்டு பட்டு, சிறிதே உடல் ,பாதி முகம் என்று ஊரால் போர் கடவுளாக தொழ பட்டு ,பதக்கங்கள் மட்டுமே மிஞ்சின பிண்டம்.அவன் மனைவி தஷாஷியால் அவனை ஏற்க முடியாவிட்டாலும் ,ஊரின் கட்டளைக்கு கட்டு பட்டு அவனை ஏற்று சேவை செய்யும் கட்டாயத்துக்கு தள்ள படுகிறாள்.குரோகவாவுக்கு ,மனிதன் என்று சொல்ல மிஞ்சியிருப்பது குரூர வக்கிர உணர்வு,கோபம்,காமம்,பசி. தனக்காக எதுவுமே செய்ய இயலாதவன் சாப்பிடுவது,மல-ஜலம் கழிப்பது உட்பட. மனைவியை வற்புறுத்தி வினோத முறையில் உடலுறவுக்கு நிர்பந்திக்கிறான். (அவளை அடித்து துன்புறுத்தி கேவலமாக பில்லையில்லாதவள் என்று தூற்றியிருப்பான் நல்லாயிருந்த காலத்தில்)அவளை கோபமூட்ட, அவள் உடையணிந்து கிளம்பும் போது சிறுநீர் கழிப்பது,சாப்பாட்டை துப்புவது என்று மகா படுத்தல்.பதக்கங்களை ரசிப்பது ஒரே பொழுதுபோக்கு.

துன்புறும் ,வேதனையுறும் மனைவி, அவன் மறுத்தும் கேளாமல்,ராணுவ உடையை அணிவித்து ,அவனை தள்ளு வண்டியில் ஊர்வலம் போவாள். (என்ன அற்புத பழிவாங்கல்).

இறுதியில்,தேய்த்தே ,தவழ்ந்து சென்று குட்டையில் உயிர்விடும் பிண்டம். நம் பழங்கால கூத்தில் கட்டியக்காரன் போல,நம் மனசாட்சியாய் ஒரு கோமாளி.

இந்த மாதிரி படங்களே,போரை வெறுக்க,பெண்ணை சகாவாய் அங்கீகரிக்க நமக்கு கற்று கொடுக்கும்.

ஒரு சித்ரவதை போன்று நம்மை துடிக்க,துவள வைத்து,மனதை குதறி போடும் படம். ஆனால் முடிவில் ,இன்னும் மேன்மையாக்கும் நம்மை.

vasudevan31355
1st July 2015, 11:14 AM
ஏன்? (1970)

ம்ம். ராகவேந்திரன் சார் 'நெஞ்சம் மறப்பதில்லை' என்று கூறி விட்டார்.

அதனால் 'என்னதான் முடிவு?' என்று முடிவெடுத்து தந்தாகி விட்டது.

ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்?

ஏன்? இத்தனை ஏன்?

ஏன்? என்று பார்ப்போம்.

http://i.ytimg.com/vi/tlqQoHrJRWQ/maxresdefault.jpg

ஈ.வி.ஆர் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த படம்தான் 'ஏன்?' அதுதான் இவ்வளவு பீடிகை. கொஞ்சம் அபூர்வமும் கூட.

1970 இல் பொங்கலுக்கு வெளிவந்த இந்தப் படத்துடன் நடிகர் திலகத்தின் எங்க மாமா, திரு.எம்.ஜி.ஆர் அவர்களின் 'மாட்டுகார வேலன்' படங்களும் ரிலீஸ்.

குமுதம் இதழில் கிருஷ்ணா அவர்கள் எழுதிய 'மதுக்கிண்ணம்' என்ற கதையைத் தழுவி எடுக்கப்பட்ட படம் இது.

சரி! என்ன கதை? கொஞ்சம் சுருக்கமாகவே (!) பார்த்து விடலாம்.

ஏ.வி.எம்.ராஜன், லஷ்மி, மாஸ்டர் ஆதிநாராயணன் மூவரும் வீரராகவனின் பிள்ளைகள். வீரராகவன் ஒரு எஸ்டேட்டில் பணிபுரிகிறார். பிள்ளை ராஜனோ மதுரையில் தன் அத்தை வீட்டில் தங்கி பட்டப் படிப்பு படிக்கிறார். அத்தை சி.கே சரஸ்வதி ஒரு பணப் பேய். வீரராகவன் ராஜனுக்கு அனுப்பும் பணத்தையெல்லாம் அவர் எடுத்துக் கொள்கிறார். அவருடைய நல்ல மகன் நாகேஷ். அப்புறம் ராஜனின் படிப்பு ஏன்? என்னாயிற்று? என்று கேட்பீர்கள். வருகிறேன்.

லஷ்மி கவிதை எழுதும் ரவிச்சந்திரனைக் காதலிக்கிறார். ரவி லஷ்மி இருவர் வீட்டிலும் இவர்கள் திருமணத்திற்கு சம்மதம்.

தங்கையின் கல்யாணத்திற்கு ராஜன் புறப்பட்டு வருகிறார். சோதனை ஆரம்பமாகிறது. கல்யாணத்தன்று வீரராகவன் எதிர்பாராமல் வழுக்கி விழுந்து பிணமாகிறார். மணவீடு பிண வீடாகிறது. ரவியின் அம்மா அபசகுனமாக அதைக் கருதி கல்யாணத்தை நிறுத்துகிறார் மகன் ரவியின் வேண்டுகோளையும் மீறி.

அனாதைகளான மூவரும் அத்தை சரஸ்வதி வீட்டுக்கே வருகிறார்கள். வீரராகவன் இறந்ததும் அவருக்குண்டான எஸ்டேட் இறப்புப் பணத்தையும் சரஸ்வதி பிடுங்கிக் கொள்கிறார். லஷ்மியின் தம்பி சரஸ்வதியினால் துன்புறுத்தப்பட்டு காய்ச்சல் வந்து போலியோ நோயினால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் போகிறான்.

பணத்துக்கு வழியில்லாததால் ராஜன் சூதாட்டம் ஆடி சம்பாதிக்கிறார். லஷ்மிக்கு இது தெரியவர அவரைக் கண்டிக்கிறார். அத்தை தன் படிப்புக்கு வந்த பணத்தையெல்லாம் சுருட்டிக் கொண்டதால் தன்னால் படிப்பைத் தொடர இயலவில்லை என்று ராஜன் கூறுகிறார்.

பட்டணத்தில் தம்பிக்கு வைத்தியம் பார்க்க லஷ்மியும், ராஜனும் மதுரையை விட்டு புறப்படுகிறார்கள்.

https://i.ytimg.com/vi/ye0lcLc5nP4/hqdefault.jpg

பட்டணத்தில் ராஜனின் நண்பன் எம்.ஆர்.ஆர்.வாசு இவர்களுக்கு வீடு வாடகைக்கு எடுத்துக் கொடுத்து உதவுகிறார். ஆனால் இவர் ஒரு கேடி. லஷ்மியின் மீது காதல் கொண்டு அவருக்கு ஈவ் டீஸிங் டார்ச்சர் கொடுக்கிறார்.

அந்தக் காலனியில் இருக்கும் 'வெண்ணிற ஆடை' நிர்மலா ராஜனைக் காதலிக்கிறார்.

சி.கே சரஸ்வதி இறந்து போன தன் கணவரின் உறவினர் வி.எஸ்.ராகவன் வெளிநாட்டிலிருந்து சென்னை வந்திருப்பதாகவும், அவர் பெரிய பணக்காரர் என்றும், அவருடைய ஒரே மகளை தன் மகன் நாகேஷ் திருமணம் செய்து கொண்டால் சொத்துக்கள் முழுதும் தனக்கே சேரும் என்றும் முடிவு செய்து நாகேஷை பட்டணத்துக்கு வற்புறுத்தி அழைத்துச் செல்கிறார்.

ராஜன் திருடனாகிறார். ஒருசமயம் தம்பியின் வைத்தியத்திற்காக பணமில்லாமல் சிரமப்பட்டு லஷ்மி தன் வீட்டில் உள்ள வெள்ளித்தட்டை அடகு வைத்து பணம் கொண்டு வரும்போது அது ராஜனாலேயே திருடப் படுகிறது. இது தெரிந்து கொண்ட லஷ்மி கடுமையாக அண்ணனைச் சாடுகிறார். ராஜன் மனவருத்தத்துடன் வீட்டைவிட்டு வெளியேறுகிறார்.

இதற்கிடையில் ரவிச்சந்திரன் லஷ்மியின் நினைவால் வேறு திருமணம் செய்யாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறார்.

நிர்மலாவை ராஜன் அடிக்கடி கள்ளத்தனமாக சந்திக்கிறார். இது தெரிந்த லஷ்மி நிர்மலாவிடம் ராஜனை மறந்து விடச் சொல்கிறார். நிர்மலா மறுக்கிறார். காலனிக்கே இவர்களது கள்ளக் காதல் தெரிகிறது.

வீட்டுக்கார அம்மா சுந்தரிபாய் லஷ்மி நலன் கருதி அவரை பணக்காரப் பெரியவர் ராகவனை திருமணம் செய்து கொள்ளச் சொல்கிறார். அப்படியே தம்பியின் வைத்திய செலவுகளையும் பார்த்துக் கொள்ளலாம் என்கிறார். குடும்ப கஷ்டத்தின் சூழ்நிலையின் காரணமாக லஷ்மி தன்னைத் தியாகம் செய்ய முடிவெடுத்து ராகவனுக்குக் கழுத்தை நீட்டத் தயாராகிறார்.

ராஜன் போலிசாரால் பிடிபடுகிறார். அவரை ஜாமீனில் எடுக்க எம்.ஆர்.ஆர்.வாசு வக்கீல் (!) ரவிச்சந்திரன் உதவியை நாடுகிறார். அப்போது ரவி லஷ்மியை சந்திக்க நேரிடுகிறது. லஷ்மிக்காக இதுவரை திருமணமே செய்து கொள்ளாமல் இருப்பதை ரவி லஷ்மியிடம் கூறுகிறார். தான் தாயின் சம்மதத்தை பெற்று விட்டதாகவும், லஷ்மியை திருமணம் செய்து கொள்ளத் தயாராய் இருப்பதையும் கூற, லஷ்மி தான் ராகவனுக்கு வாழ்க்கைப் படப் போவதை கூறி விட்டு தன்னை மறந்து விடுமாறும் கூறிச் சென்று விடுகிறார்.

ஜெயிலில் இருந்து ஜாமீனில் வெளிவரும் ராஜன் லஷ்மி ராகவனைத் திருமணம் செய்து கொள்ள இருக்கும் விஷயம் தெரிந்து அவரைப் போய் தடுக்கப் பார்க்க, லஷ்மி 'குடும்பம் தழைக்க நான் எடுத்த இம்முடிவை மாற்ற இயலாது' என்று கூறி விடுகிறார்.

மனம் நொந்த அண்ணன் ராஜன் ஒருபுறம். காதலி வயதானவனுக்கு மனைவியாகப் போகிறாளே என்ற கவலையில் காதலன் ரவி ஒரு புறம்.

வைத்திய சாலையில் இருக்கும் தம்பிக்கு நடப்பதெல்லாம் தெரியவர, லஷ்மி ராகவனுக்கு மனைவியாகப் போகும் நேரம் தம்பியைக் காணவில்லை என்ற செய்தி வருகிறது. தம்பி அக்காளின் திருமணத்தைத் தடுக்க வைத்திய சாலையில் இருந்து தப்பித்து வருகிறான். லஷ்மி பதறிப் போய் ராகவனிடம் 'தம்பியைப் பார்த்து விட்டு வருகிறேன்' என்று சொல்ல, ராகவன் மறுக்க, அப்போது ராகவன் மார்பை ஒரு துப்பாக்கிக் குண்டு துளைக்கிறது. ராகவன் மரணம் அடைகிறார்.

கொலை செய்தது யார்? ஏன்?

காலனிக்காரர்கள் தன்னை அடித்து விட்டார்கள் என்று அவர்கள் மீது ஆத்திரம் கொண்டு வாசு காலனிக்கே வெடிகுண்டு வைத்துவிட, தம்பியும், அவன் நாயும் அதைக் கண்டுபிடித்து என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்க, அந்த நேரத்தில் அங்கு வரும் ராஜன் அதைத் தூக்கித் தூர எறிய முற்பட, வெடிகுண்டு அப்போது வெடித்து குற்றுயிரும், குலையுயிருமாக கிடக்கிறார் ராஜன்.

https://i.ytimg.com/vi/vJvABrx-4IY/hqdefault.jpg

போலீஸ் ராகவனைக் கொலை செய்தது யார்? என்று விசாரணை செய்கிறது. ரவி 'லஷ்மிக்கு இப்படி ஒரு வயதான கணவனா?' என்று மனம் நொந்து தான்தான் ராகவனை சுட்டதாக சொல்கிறார். பழியைத் தானே ஏற்கிறார்.

ஆனால் வெடிகுண்டில் காயமாகி கிடக்கும் ராஜன் உண்மை முடிச்சுகளை அவழ்த்து, போலீஸிடம் வாக்குமூலம் தருகிறார். தங்கைக்கு இப்படிப்பட்ட வாழ்வு அமைய வேண்டாம் என்று ராகவனைத் தான் சுட்டுக் கொன்ற உண்மையையும் கூறுகிறார். ரவி, லஷ்மி கைகளை இணைத்து வைத்து தன் உயிரை விடுகிறார்.

'வெண்ணிற ஆடை' நிர்மலா ராஜனை இழந்து வெண்ணிற ஆடை உடுத்தித்தானே ஆக வேண்டும்?

அப்பாடா! போதுமடா சாமி! தலை சுற்றுகிறது. :(

இந்தக் கதையை நீங்கள் முழுவதும் படித்தால் உங்களைப் போல பொறுமைசாலி பூமியிலே யாருமே இல்லை என்று அர்த்தம்.:)

மொத்தமாக சேர்ந்து எல்லோரும் நம் உயிரை எடுத்து விட்டார்கள்.:banghead:

ஒரே ஒரு நபரைத் தவிர.

அவர்தான் டி.ஆர்.பாப்பா.

ஏன்? நிறுத்திவிட்டாய்? என்று கேட்கிறீர்கள்.

ஏன்? என்று அடுத்த பதிவில் சொல்கிறேன்.:)

RAGHAVENDRA
1st July 2015, 07:42 PM
வாசு சார்
ஏன் என்று நான் கேட்க மாட்டேன்.
ஏன் என்றால், ஏன் படத்தைப் பற்றி நான் முன்னமே அறிந்திருந்தது மட்டுமல்ல, படத்தைப் பார்த்திருந்ததும் தான்.
ஏன் என்றால் கண்ணாடி பாத்திரத்தைக் கல்மீது வைப்பது போல் மெல்லப் பேசினால் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள்.
ஏன் என்றால் உரக்க இப்படத்தைப் பற்றிப் பேசினால் எல்லோருக்கும் போய் சேருமல்லவா..

சரி.. சரி. யாராவது கல்லைத் தூக்கி ஓடி வரப் போகிறார்கள். ஐயா வுடு ஜூட்..

ஏன் பாட்டுப் புத்தகப் பக்கங்கள் உங்களுக்கு பரிசாக..

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/OLDSONGBOOKPAGES/Yaenp01fw_zpssneregwt.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/OLDSONGBOOKPAGES/Yaenp02fw_zpsevjn3yxr.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/OLDSONGBOOKPAGES/Yaenp03fw_zpsmftfdbos.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/OLDSONGBOOKPAGES/Yaenp04fw_zpswarljyqa.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/OLDSONGBOOKPAGES/Yaenp05fw_zpsjy1f8t8k.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/OLDSONGBOOKPAGES/Yaenp06fw_zpsc9ui3akq.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/OLDSONGBOOKPAGES/Yaenp07fw_zpsxwqjegyb.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/OLDSONGBOOKPAGES/Yaenp08fw_zpss2b1jpva.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/OLDSONGBOOKPAGES/Yaenp09fw_zpsvo9ydhg6.jpg

RAGHAVENDRA
1st July 2015, 07:54 PM
நம் நெஞ்சையெல்லாம் கொள்ளை கொண்ட அற்புதப் பாடல்...

விவரமாக விஸ்தாரமாக எழுதப் போவதில்லை.. வாசு சாரின் எழுத்தில் இதைப் பற்றிப் படியுங்கள்.

https://www.youtube.com/watch?v=SD1WGCUcVgU

உள்ளத்தைக் கொள்ளை கொண்ட மற்றோர் பாடல் ஏன் படத்திலிருந்து...

கண்ணன் எனக்கொரு பிள்ளை.. சூலமங்கலம் ராஜலகஷ்மியின் குரலில்...

https://www.youtube.com/watch?v=XM9aIhxNCDU

vasudevan31355
8th July 2015, 09:07 AM
மறக்க முடியாத கலைஞர்கள்.

குசலகுமாரி

https://oldmalayalamcinema.files.wordpress.com/2013/02/t-d-kusalakumari-in-as-as-seetha-1960.jpg

நல்ல அழகான நடிகை. பரத நாட்டியத்தில் தேர்ந்த பயிற்சி. வழுவூர் ராமையாப் பிள்ளை, எம்.எஸ்.ராமசாமி பிள்ளை இருவரின் சிஷ்யை. நிறையப் படங்களில் நடனம் ஆடும் மங்கை.

நடிகர் திலகத்துடன் குசலகுமாரி

http://i.ytimg.com/vi/TkORvrbypl4/hqdefault.jpg

இவர் நடிகர் திலகத்தின் முதல் படமான 'பராசக்தி' படத்திலேயே நடித்திருப்பார். படம் டைட்டில் முடிந்தவுடன் ஆரம்பமாகும் நாட்டிய நிகழ்ச்சியில் குசலகுமாரி நடனமாடிப் பாடுவார்.

'வாழ்க வாழ்கவே
வளமாய் எமது திராவிட நாடு
வாழ்க வாழ்க வாழ்கவே'

என்ற பாடலுக்கு ஆடுவார்.

டைட்டிலில்

நடனம் குசலகுமாரி, குமாரி கமலா என்று போடுவார்கள். இவர் முகத்தை முதலில் 'பராசக்தி'யில் காட்டிய ராசி நடிகர் திலகத்திற்கு முதல் படத்திலேயே வானளாவிய புகழைப் பெற்றுத் தந்தது என்று கூட கூறலாம்.


https://youtu.be/TkORvrbypl4

அடுத்து

http://raretfm.mayyam.com/pow07/images/koondukili02.jpg

'கூண்டுக்கிளி' படத்தில் நடிகர் திலகத்தை விரட்டி விரட்டிக் காதலிக்கும் பெண்ணாக நடித்திருப்பார். தீபாவளிப் பண்டிகையின் போது ஒலிக்கும் வித்தியாச அற்புத பாடலான,

'வாங்க எல்லோருமே சேர்ந்து ஒன்றாகவே
தீப நன்னாளிதை ஒன்றாகக் கொண்டாடுவோம்'

கோஷ்டிப் பாடலில்

'மிகச் சிறியாரும் பெரியாரும் மகிழ்வே கொண்டே
ஆடித் திரிவார் இன்றே சுகம் பெறுவார் நன்றே'

வரிகளின் போது இவர் நடனமாடுவார்.


https://youtu.be/qzLwDNX2z0E

http://i59.tinypic.com/a0kplg.jpg

படத்தில் இவருக்கு சொக்கி என்று பெயர். நடிகர் திலகத்துடன் தனியாக இவருக்கு ஜாலியாக ஒரு பாடல் உண்டு. இந்தப் பாடலில் பாவாடை தாவணியுடன் கொஞ்சம் கிளாமராக வருவார்.

எனக்குத் தெரியல்லே
நெஜம்மா எனக்குத் தெரியல்லே
நெஜம்மா தெரியல்லே
ஒன்னும் புரியல்லே


https://youtu.be/aJj1XXFC8IQ

பாடல் முடிந்ததும் நடிகர் திலகம் குசலகுமாரி கன்னத்தில் ஓர் அறை விடுவார். அதற்கு குசலகுமாரி மறு கன்னத்தை சிரித்தபடி காட்டி 'இந்தக் கன்னத்திலே' என்பார். நடனமும், பாடலும் அம்சம்.

http://i59.tinypic.com/smartf.jpg

இன்னொரு காட்சியும் ரசம். தொழிலாளிகளுக்கு சாப்பாடு போடும் ஒரு கிழவியின் பேத்திதான் குசலகுமாரி. தலைவர் அந்தக் கிழவியிடம் சாப்பாடு கொடுக்கச் சொல்லி காசு தர வருவார். 'பாட்டி... பாட்டி' என்று கதவு தட்டி நடிகர் திலகம் கூப்பிட, 'இதோ வந்துட்டேன் பேரா' என்று குசலகுமாரி அங்கு வருவது அழகு. நடிகர் திலகம் பாட்டியை சாப்பாடு கொண்டு வந்து தரும்படி குமாரிடம் சொல்ல,அதற்கு குறும்பாக 'பாட்டி வராட்டி பேத்தி கொண்டு வந்து தரலாமா?' என்று சிரித்தபடி கேட்பதும் சுவை. 'எனக்கு வேண்டியது சாப்பாடு... இதுல பாட்டி கொண்டுகிட்டு வந்தா என்ன? பேத்தி கொண்டுகிட்டு வந்தா என்ன?' என்று நடிகர் திலகம் கடுப்பாக பதில் சொல்லி செல்வது இன்னும் டாப். (மனிதர் முகத்தில்தான் எவ்வளவு கடுப்பு?!) பின் நடிகர் திலகம் போனதும் பாட்டியிடம் தலைவரைப் பற்றி குமாரி சொல்லி மகிழும் நடிப்பு நன்றாக இருக்கும்.

இறுதிக் காட்சியில் எம்.ஜி.ஆர் அவர்கள் நடிகர் திலகம் கழுத்தை பிடித்து நெரிக்கும் போது குசலகுமாரி புத்தி சொல்லி அழுவது அவர் சிறந்த நடிப்பிற்கு சான்று.

அடுத்து,

'கள்வனின் காதலி' படத்தில் குசலகுமாரி தலைவரின் தங்கை அபிராமியாக வருவார். இதில் படம் முழுக்க தலைவருடன் வருவார்.

படத்தின் ஆரம்பத்தில் பானுமதிக்கு ஒரு கிழவருடன் கல்யாணம் நடக்கப் போகும் நேரத்தில் நடிகர் திலகம் பூங்குளம் ஊரில் இருக்கப் பிடிக்காமல் அவசரஅவசரமாக மூட்டை முடிச்சு கட்டி வெளியூர் செல்வார் குசலகுமாரியுடன். அண்ணனின் காதலுக்கு சப்போர்ட் பண்ணும் பெண் குசலகுமாரி.

http://i59.tinypic.com/ogw3gp.jpg

வெளியூரில் தங்கியிருக்கும்போது அங்கு பெரிய மனிதர் வேடம் போடும் டி.எஸ்.துரைராஜ் அவர்களின் கழுகுப் பார்வையில் சிக்கி குசலகுமாரி பரிதவிப்பது பரிதாபம்.

நடிகர் திலகம் கள்வனாகி நீண்ட நாள் சென்று பிரிந்த தன் தங்கையை மைத்துனர் டி.ஆர்.ராமச்சந்திரன் வீட்டில் சந்திக்கும்போது அந்தக் காட்சி நன்றாக உணர்ச்சிபூர்வமாக இருக்கும்.

'காவேரி' படத்தில் இவருக்கு ஒரு நடனக் காட்சி உள்ளது.

http://i57.tinypic.com/i1iekh.jpg

நடிகர் திலகம் மனம் குழம்பியிருக்கும் நிலையில் அவர் புத்தியைத் தெளிய வைப்பதற்காக பத்மினி, ராகினி, குசலகுமாரி, மாடி லஷ்மி மற்றும் நடன மாதர்கள் ஜிப்ஸி கூட்டம் போல பாடி ஆடுவார்கள். அந்தப் பாடலில்

கீழ்க்கண்ட

'சுந்தரனுக்காக தோகை மயில் கொண்டு வந்தோம்
சொந்தமாகத் தருவோமின்னா வந்த வேலை சரியில்லே'

வரிகளைப் பாடி ஆடுவது குசலகுமாரிதான். ஆனால் சொற்ப நேரமே வருவார்.

https://i.ytimg.com/vi/_7A2YHWyNBc/hqdefault.jpg

இதுவல்லாமல் 'நீதிபதி' இவர் நடித்த ஒரு முக்கியப் படம்.

மலையாளத்தில் 1960-ல் வெளியான 'சீதா' என்ற படத்தில் நசீர் ராமனாக நடிக்க இவர் பிரதான சீதை வேடத்தில் நாயகியாக நடித்திருப்பார். பிரேம் நசீருடன் சில படங்களில் இணைந்து நடித்துள்ளார். ('மரியக்குட்டி' 1959)

இவர் சிரிப்பும் கொள்ளை அழகுதான். குள்ளம் இவரது மைனஸ் பாய்ன்ட். 'கலைமாமணி' 'கலைச்செல்வம்' பட்டமும் இவர் பெற்றுள்ளார்.

வறுமையில் வாடி வரும் நடிகை குசலகுமாரி தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய வீட்டு வாடகை கட்ட முடியாமல் 2004 ல் அப்போதய முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்களிடம் உதவி கேட்டு கடிதம் எழுதியிருந்தார்.

இந்தக் கடிதத்தைப் பரிசீலித்த முதல்வர் ஜெயலலிதா குசலகுமாரியை கோட்டைக்கு வரவழைத்தார். அவருக்கு தமிழக அரசின் சார்பில் மாதந்தோறும் ரூ. 5,000 உதவித் தொகையை அறிவித்த முதல்வர் அதற்கான உத்தரவையும் அன்றே வழங்கினார். வாழ்நாள் முழுவதும் இந்த உதவித் தொகை குசலகுமாரிக்கு வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

அது சரி! இப்போது குசலகுமாரி என்ற நடிகையைப் பற்றி இப்போது ஏன் எழுதுகிறான் என்றுதானே நினைக்கிறீர்கள்?

விஷயம் இருக்கிறது.

அக்டோபர் ஒண்ணாம் தேதி தானாக உங்களுக்குத் தெரிய வரும்.

அதுவரை பொறுங்கள்.

இதோ ஒரு கலை நிகழ்ச்சியில் பங்கு கொண்ட சிறுவர்களைப் பாராட்டி குசலகுமாரி மேடையில் பேசும் பேச்சு. கண்டு களியுங்கள். இப்போதும் இளமையாகவே இருக்கிறார்.


https://youtu.be/KOymnocy1ow

RAGHAVENDRA
9th July 2015, 06:34 AM
வாசு சார்
குசலம் என்றால் நலம் விசாரிப்பதே அனைவருக்கும் நினைவு வரும். அதைத் தாண்டி குசல குமாரி என்ற அற்புதமான நடிகையை பலருக்கும் தெரிந்திருக்காது. அவரைப் பற்றி இவ்வளவு விரிவாகவும் அவருடைய நடிப்பாற்றல், அவர் நடித்த படங்களைப் பற்றியும் நினைவாற்றலுடன் எழுதக் கூடியவர் நீங்கள் ஒருவரே. வார்த்தைகளில்லை தங்களைப் பாராட்ட. தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.

கூண்டுக்கிளியில் அவருடைய புன்னகை நம் மனதைக் கொள்ளை கொண்டு போகும். சொல்லப் போனால், இவரை புன்னகை அரசி சீனியர் என்று சொல்லாம். இவரைப் பற்றி நம் நடிகர் திலக ரசிக நண்பர்கள் பலருக்கே தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அது சரி ஏதோ அக்டோபர் ஒண்ணாம் தேதி தெரிய வரும் என்கிறீர்கள். அதென்ன என்பதை அறிய ஆவலோடு காத்திருக்கிறேன்.

Varadakumar Sundaraman
11th July 2015, 02:40 PM
திரு ராகவேந்திரன் சார்
தாங்கள் விரும்பியதை போலவே என்னிடம் உள்ள பழைய திரைப்பட ஆவணங்கள் இந்த திரியிலும் பதிவிடுகிறேன் .கடந்த கால சினிமா விளம்பரங்கள் பார்க்கும் போது ஒரு வித மகிழ்ச்சி கிடைக்கும் என்று எண்ணுகிறேன் . நன்றி .

http://i60.tinypic.com/o3exw.jpg

Varadakumar Sundaraman
11th July 2015, 02:47 PM
http://i61.tinypic.com/33u5r4j.jpg

Varadakumar Sundaraman
11th July 2015, 02:50 PM
http://i59.tinypic.com/t649a8.jpg
http://i58.tinypic.com/2cnwgop.jpg

Varadakumar Sundaraman
11th July 2015, 02:58 PM
http://i59.tinypic.com/34g379t.jpg

Varadakumar Sundaraman
11th July 2015, 02:59 PM
http://i62.tinypic.com/13zpug5.jpg

RAGHAVENDRA
11th July 2015, 04:06 PM
அபூர்வ நிழற்படங்களை இங்கு பகிர்ந்து கொள்வதற்கு மிக்க நன்றி குமார் சார்.

சித்ராலயா சார்பில் துளசி என்றொரு படத்திற்கு ஸ்ரீதர் பூஜை போட்டார். அப்படத்தை நடிகர் திலகம் துவக்கி வைத்தார். அப்போது எடுக்கப் பட்ட நிழற்படம். பொம்மை மாத இதழிலிருந்து. இது வரை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். இப்போது நமக்காக, நம் பார்வைக்காக.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/THULASILAUNCHNTfw_zps14ec8f7a.jpg

RAGHAVENDRA
11th July 2015, 10:58 PM
பொக்கிஷப் புதையலைத் திறந்து அள்ளித் தரும் குமார் சார்,
தங்களுக்கு என் உளமார்ந்த நன்றி.
அதுவும் நெஞ்சம் மறப்பதில்லை திரியில் பகிர்ந்து கொள்வதற்கு இரட்டிப்பு நன்றி.

Varadakumar Sundaraman
12th July 2015, 09:19 AM
http://i58.tinypic.com/2yjrc7o.jpg

Varadakumar Sundaraman
12th July 2015, 09:20 AM
http://i59.tinypic.com/j0cygl.jpg

Varadakumar Sundaraman
12th July 2015, 09:22 AM
http://i62.tinypic.com/t04u81.jpg

Varadakumar Sundaraman
12th July 2015, 09:32 AM
http://i58.tinypic.com/2djtok.jpg

Varadakumar Sundaraman
12th July 2015, 09:33 AM
http://i61.tinypic.com/dnmv7s.jpg

Varadakumar Sundaraman
12th July 2015, 09:36 AM
http://i62.tinypic.com/2mm62jt.jpg

Varadakumar Sundaraman
12th July 2015, 09:37 AM
http://i62.tinypic.com/2ptvyh2.jpg

Varadakumar Sundaraman
12th July 2015, 09:39 AM
http://i58.tinypic.com/n3vtvn.jpg

Varadakumar Sundaraman
12th July 2015, 09:41 AM
http://i61.tinypic.com/rhvh1j.jpg

Varadakumar Sundaraman
12th July 2015, 09:43 AM
http://i62.tinypic.com/2drc2le.jpg

Varadakumar Sundaraman
12th July 2015, 10:14 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் ''நேற்று இன்று நாளை '' வெளியீட்டு தினமான இன்று [12.7.1974- 12.7.2015] 42 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த இனிய நன்னாளில் நாம் யாருமே பாத்திராத மக்கள் திலகத்தின் ''ராஜ குமாரி '' திரைப்படத்தின் விளம்பரத்தையும் , ''சிவாஜி ''பத்திரிகையில் 11.4.1947 அன்று வந்த விளம்பர ஆவணத்தையும் மிக மகிழ்ச்சியுடன் இங்கு பதிவிடுகிறேன் .

http://i60.tinypic.com/efm0b9.jpg
http://i60.tinypic.com/r0s47q.jpg
http://i60.tinypic.com/v7yukz.jpg
http://i57.tinypic.com/2i7biog.jpg
http://i60.tinypic.com/j7s361.jpg
http://i60.tinypic.com/211kx3c.jpg
http://i60.tinypic.com/2hxox7d.jpg

Varadakumar Sundaraman
13th July 2015, 01:25 PM
http://i59.tinypic.com/35mfud1.jpg

Varadakumar Sundaraman
13th July 2015, 01:26 PM
http://i60.tinypic.com/2uid8ao.jpg

Varadakumar Sundaraman
13th July 2015, 01:27 PM
http://i59.tinypic.com/2d0glsk.jpg

Varadakumar Sundaraman
13th July 2015, 01:30 PM
http://i62.tinypic.com/1679ph5.jpg

Varadakumar Sundaraman
13th July 2015, 01:30 PM
http://i60.tinypic.com/20h1vud.jpg

Varadakumar Sundaraman
13th July 2015, 01:32 PM
http://i61.tinypic.com/28i8d4h.jpg

Varadakumar Sundaraman
13th July 2015, 01:35 PM
http://i60.tinypic.com/1zzgzk8.jpg

Varadakumar Sundaraman
13th July 2015, 01:37 PM
http://i58.tinypic.com/bj7nn.jpg

RAGHAVENDRA
22nd July 2015, 02:19 PM
https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xtp1/v/t1.0-9/s720x720/10959714_861681647188138_2652668179677094487_n.jpg ?oh=653b159581667dda14f9974ab2b4420d&oe=561500F7

From the FB page of Chitra Lakshmanan

RAGHAVENDRA
22nd July 2015, 02:22 PM
https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/s720x720/10906578_844127575610212_6091815034470034694_n.jpg ?oh=2f7a92dbb4b4717a0170d3158c481438&oe=5657C15F

Wedding photo of Bharathiraja

from the FB page of Chithra Lakshmanan

vasudevan31355
25th July 2015, 07:30 AM
'குழந்தை உள்ளம்' (1969)

ஜெமினி சொல்ல சொல்லக் கேட்காமல் சாவித்திரி சொந்தப் படம் எடுக்க வேண்டும் என்று பிடிவாதம் செய்ய, அந்த பிடிவாதத்தின் விளைவாக 'குழந்தை உள்ளம்' வந்து விழுந்தது. ஜெமினியின் வாக்கு மெய் ஆனது. சாவித்திரியின் நம்பிக்கை சரிந்து விழுந்தது.

தமிழ், தெலுங்கு இரண்டிலும் கோலோச்சிய, அதுவும் 'நடிகையர் திலகம்' என்று பட்டம் வாங்கிய நடிகை நன்றாக யோசித்து முடிவெடுத்திருக்கலாம். விதி, ஆசை இரண்டும் யாரை விட்டது?

சரி! ஸ்ரீசாவித்திரி புரொடக்ஷன்ஸ் தயாரித்த, அதிகம் பேருக்குத் தெரியாத, 'குழந்தை உள்ளம்' படத்தின் கதையை அனைவரும் தெரிந்து கொள்ளும் வண்ணம் சுருக்கமாக இங்கு அளிக்கிறேன். பிற்பாடு தொடருக்கு வருகிறேன்.

https://antrukandamugam.files.wordpress.com/2013/07/gemini-vanisree-kuzhanthai-ullam-1969-1.jpg?w=593https://antrukandamugam.files.wordpress.com/2013/07/vanisree-manokar-kuzhanthai-ullam-1969.jpg?w=528&h=394https://antrukandamugam.files.wordpress.com/2013/07/vanisree-gemini-kuzhanthai-ullam-1969.jpg?w=593

காட்டுக்குள்ளே திரிந்து ஓவியங்கள் தீட்டிக் கொண்டிருக்கும் ஜெமினி அங்கு வேறு என்ன செய்வார்? நிச்சயம் அங்கு ஒரு பெண்ணைப் பார்ப்பார் இல்லையா? காட்டுவாசிப் பெண்ணான வாணிஸ்ரீயை சொன்னபடி பார்த்து லவ்ஸ் விடுகிறார். அவ்விடமும் சம்மதமே. ஆனால் வாணிஸ்ரீயின் முறைமாமன் முரட்டு வில்லன் மனோகர் 'வாணிஸ்ரீயை கட்டிக் கொண்டே தீருவேன்' என்று உறுதியாய் இருக்கிறார். வாணிஸ்ரீ இதற்கு ஒத்துக் கொள்வாரோ? இல்லை. அப்புறம் ஜெமனி வாணிஸ்ரீயை யாருக்கும் தெரியாமல் காட்டிலேயே கல்யாணம் செய்து அங்குள்ள ஒரு வீட்டில் குடித்தனமும் செய்கிறார்.

ஊரிலிருந்து வேலைக்காரப் பெரியவர் ரங்காராவ் ஜெமினியைத் தேடிக் காட்டுக்கு வருகிறார். 'ஜெமினியின் அம்மா சாந்தகுமாரிக்கு உடல்நிலை மோசமாகி விட்டது... உடனே புறப்பட வேண்டும்... அம்மா ஜெமினிக்கு உடனே திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறார்'... என்று ரங்காராவ் கூற, ஜெமினி தனக்கு வாணிஸ்ரீயுடன் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது ரங்காராவிடம் சொல்கிறார். ரங்காராவ் வாணிஸ்ரீயை 'இப்போது அழைத்து வர வேண்டாம்' என்று சொல்லி ஜெமினியைத் தனியே ஊருக்கு அழைத்துப் போகிறார்.

ஜெமினி அம்மாவிடம் தனக்கு வாணியுடன் நடந்த திருமணத்தைப் பற்றி சொல்ல, முதலில் அதை ஏற்க மறுக்கும் சாந்தகுமாரி பின் மனம் மாறி, ஜெமினியிடம் காட்டுக்குச் சென்று வாணிஸ்ரீயை அழைத்து வரச் சொல்கிறார். ஜெமினியும் சந்தோஷமாக வாணிஸ்ரீயை அழைத்து வர காட்டிற்குப் போக, அங்கு அவருக்கு பேரதிர்ச்சி. காட்டில் வெள்ளம் வந்து காட்டையே அழித்துவிட்டதாகவும், அதில் வாணிஸ்ரீ இறந்து விட்டதாகவும் அங்கிருப்பவர் சொல்ல மனம் உடைந்து ஊர் திரும்புகிறார் ஜெமினி.

பின் அம்மாவின் வற்புறுத்தலால் சௌகார் ஜானகியை திருமணம் செய்து கொள்கிறார். முதல் இரவில் தன்னுடைய துயர காதல் கதையை சௌகாரிடம் மறைக்காமல் சொல்லியும் விடுகிறார். எல்லா கதையும் தெரிந்த சௌகார் ஜெமினியிடம் வாணிஸ்ரீயை மறந்து விடுமாறு கேட்டுக் கொள்கிறார். வாணிஸ்ரீயை மறக்க முடியாமல் தவிக்கிறார் ஜெமினி.

இதற்கிடையில் வாணிஸ்ரீ காட்டில் உயிருடன் தப்பித்து ஜெமினியின் குழந்தைக்குத் (ரோஜாரமணிக்கு பையன் ரோல்) தாயாகிறார். தாய்மாமன் வில்லன் மனோகர் இப்போது மனம் திருந்தி அண்ணனாய் இருந்து வாணிஸ்ரீயை கவனித்துக் கொள்கிறார்.

இங்கோ காதல் மன்னனின் இன்னொரு முயற்சியால் சௌகாருக்கு பெண் குழந்தை பிறக்கிறது. காட்டில் வாணிஸ்ரீயும், நாட்டில் சௌகாரும் ஒரே சமயத்தில் குழந்தைகளை தாலாட்டி 'உத்தமபுத்திரன்' பட ரேஞ்சுக்கு ஒரு பாடலில் வளர்க்கிறார்கள். '(பூ மரத்து நிழலமுண்டு')

ஜெமினி தன்னைத் தேடி வராதது கண்டு கவலை கொள்கிறார் வாணிஸ்ரீ. தன் பையன் ரோஜாரமணி, மாமன் மனோகர் சகிதம் பட்டணம் புறப்பட்டு ஜெமினையைத் தேடுகிறார். ஒருவழியாக ஜெமினியின் வீட்டைத் தேடிக் கண்டுபிடித்துப் போனால் அங்கு சௌகார் தான் ஜெமினியின் மனைவி என்று காட்டிக் கொள்ளாமல் வாணிஸ்ரீயைத் தெரிந்து கொண்டு, சென்டிமென்ட் டயலாக் சொல்லி, 'ஜெமினிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது...அவர் மனைவி சந்தோஷமாக இருப்பதை தடை செய்ய வேண்டாம்' என்று சொல்லி வாணிஸ்ரீயை திருப்பி அனுப்பி விடுகிறார். வாணிஸ்ரீயும் சௌகாருக்காகத் தன் வாழ்வைத் தியாகம் செய்து, இறுதியில் ஜெமினியின் நினைவால் தன் உயிரையும் தியாகம் செய்து விடுகிறார். மனோகர் இப்போது பையனை வளர்க்கிறார். ரோஜாரமணியை படிக்க வைத்துப் பெரிய ஆளாக்க வேண்டும் என்று துடிக்கிறார்.

https://antrukandamugam.files.wordpress.com/2014/09/baby-rojaramani-vanisree-kuzhanthai-ullam-1969.jpg?w=593https://antrukandamugam.files.wordpress.com/2015/01/baby-shakila-rojaramani-kuzhanthai-ullam-1969.jpg?w=511&h=384https://antrukandamugam.files.wordpress.com/2013/07/r-s-manokar-kuzhanthai-ullam-1969-2.jpg?w=593

ஜெமினியின் இரு குழந்தைகளும் ஒன்றையொன்று தற்செயலாகச் சந்தித்து இணைபிரியா நண்பர்கள் ஆகின்றனர். அண்ணன் தங்கையாகவே பழகுகின்றன. எல்லா விஷயமும் தெரிந்த ரங்காராவ் நைஸாக வாணிஸ்ரீயின் பையன் ரோஜாரமணியை ஜெமினி வீட்டிற்கு அடிக்கடி கூட்டி வருகிறார். இரு குழந்தைகளின் நட்பும் இறுகுகிறது. சௌகாரின் கோப குணத்தால் தனக்குத் தெரிந்த எதையும் சொல்ல முடியாமல், தெரிந்தால் ஜெமினியின் நிம்மதி கெடும் என்று வாய் பேசாமல் ஊமையாய் இருக்கிறார் ரங்காராவ்.

காட்டுவாசிப் பையன் ரோஜாரமணி என்பதால் 'அவனுடன் பழகக் கூடாது' என்று சௌகார் தன் மகள் ஷகீலாவைத் தடுக்கிறார். ரொம்ப காலமாக அந்த வீட்டை சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு நல்ல பாம்பு யாரையும் ஒன்றும் செய்வதில்லை. ஆனால் அந்த பாம்பை பிடித்துக் கொல்ல சௌகார் ஒரு பாம்புப் பிடாரனை அழைத்துவர ரங்காராவிடம் சொல்ல, ரங்காராவ் பாம்பு பிடிக்கும் பிடாரன் மனோகரைக் கூட்டி வருகிறார். மனோகர் பாம்பைப் பிடிக்கும் போது அது கொத்தி உயிரை விடுகிறார். உயிர் விடும்போது வாணிஸ்ரீயின் பையன் அதாவது தன் மருமகனை ஜெமினி கையில் ஒப்படைத்து விட்டு இறந்து போகிறார் ஜெமினிதான் அக்குழந்தையின் தகப்பன் என்று தெரியாமலேயே.

இப்போது ஜெமினி ரோஜாரமணி தன் பிள்ளை என்று தெரியாமலேயே வீட்டில் பலத்த எதிர்ப்புகளுக்கிடையில் மனோகருக்குக் கொடுத்த வாக்கின்படி வளர்க்கிறார். ரோஜாரமணி சௌகார் மற்றும் அவர் குடும்பத்தினரால் கொடுமைப்படுத்தப்பட, ரங்காராவ் ரோஜாரமணியைத் தன் தோட்டத்து வீட்டில் கொண்டு போய் வளர்க்கிறார். ஜெமினி மனோகர் ஆசைப்படி அவனை கான்வென்ட்டில் சேர்த்து படிக்க வைக்க ஏற்பாடு செய்கிறார்.

ரோஜாரமணியால் ஜெமினிக்கும், சௌகாருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடுகளும், சண்டையும், சச்சரவும் ஏற்படுகிறது.

இதை உணர்ந்த ரோஜாரமணி தன்னால்தானே இவ்வளவு பிரச்னையும் என்று வீட்டைவிட்டுக் கிளம்ப, அதைக் கண்ட தங்கை ஷகீலா பின் தொடர்ந்து ஓடிவர, அந்த நேரத்தில் அங்கிருக்கும் பாம்பு ஷகீலாவைக் கொத்திவிட, காட்டுவாசி சிறுவன் ரோஜாரமணி தங்கையின் உடலில் கலந்த விஷத்தை உறிஞ்சி அவளைக் காப்ற்ற, விஷத்தை உறிஞ்சியதால் தான் உயிருக்குத் தவிக்க, முடிவில் தயாரிப்பாளர் சாவித்திரி டாக்டராக வந்து ரோஜாரமணியைக் காப்பாற்றி படத்தைக் காப்பாற்ற முடியாமல் போக, ரங்காராவும் ஜெமினியிடம் எல்லா விவரங்களையும் கூறி ரோஜாரமணி அவருடைய மகன் என்ற உண்மையை சொல்லி விட, இறுதியில் சௌகார் தவறு உணர்ந்து தன் மகளைக் காப்பற்றிய ரோஜாரமணியைத் தன் இன்னொரு குழந்தையாக ஜெமினி மனம் மகிழும்படி ஏற்றுக் கொள்ள, முடிவு ஒரு வழியாக சுபம்..

அப்பாடா! ஒரு வழியாக எப்படியோ கதை எழுதி முடித்துவிட்டேன். தலை சுற்றுகிறது. என்ன கதையோ! என்ன படமோ!

அப்புறம் ஏன் எழுதினாய் என்று நீங்கள் குமுறுவது புரிகிறது. எல்லாவற்றையும்தான் தெரிந்து கொள்ள வேண்டும். 'குழந்தை உள்ளம்' பற்றி பல பேர் பலவிதமாக நினைத்திருப்பார்கள். அதுவும் சாவித்திரியின் சொந்தப்படம் வேறு. இப்போது தெளிவாகி விடுமல்லவா.

https://antrukandamugam.files.wordpress.com/2013/08/rama-prabha-kuzhanthai-ullam-1969.jpg?w=593https://antrukandamugam.files.wordpress.com/2013/08/rama-prabha-thenkai-kuzhanthai-ullam-1969.jpg?w=593

ஜெமினி, வாணிஸ்ரீ, சௌகார் தவிர வி.கே.ஆர், தேங்காய், ரங்காராவ், சுருளிராஜன் மனோகர், வீரப்பன், ரமாப்ரபா, சாந்தகுகுமாரி, , சி.கே சரஸ்வதி, சுந்தரிபாய், கௌரவ நடிகையாக 'நடிகையர் திலகம்' என்று நட்சத்திரக் கும்பல். அத்தனையும் வேஸ்ட்.

படத்தின் மெயின் கதையைவிட நகைச்சுவைக் காட்சிகள் என்ற பெயரில் அனைவரும் செம பிளேடு போடுகின்றனர். ஜெமினிக்கும், சௌகாருக்கும் பழகிப் புளித்துப் போன ரோல். நமக்கும் இதுமாதிரிப் பார்த்து சலித்துப் போன படங்கள் ஏராளம்.

எத்தனை படத்தில்தான் ஜெமினி இரண்டு மனைவிகளுக்குக் கணவனாக வருவாரோ! எங்காவது காடு மலை என்று சுற்றி அங்கு ஒன்றை செட் அப் செய்து குழந்தையைக் கொடுத்துவிட்டு வந்து விட வேண்டியது. அப்புறம் இன்னொரு திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டியது. அப்புறம் முதல் சம்சாரம் திரும்ப குழந்தையுடன் உயிரோடு வரும். அப்புறம் இரண்டு சம்சாரங்களுக்கிடையில் சிக்கி நிம்மதி இல்லாமல் தவிக்க வேண்டியது. சம்சாரங்களையும் தவிக்க விடவேண்டியது. மனிதருக்கு இதே வேலைதானா நிஜ வாழ்க்கையைப் போன்றே?

https://antrukandamugam.files.wordpress.com/2013/07/vanisree-kuzhanthai-ullam-1969.jpg?w=593

வாணிஸ்ரீ காட்டுவாசிப் பெண். வயிறு இவருக்கு அடங்காது. சௌகார் எரிச்சல். இதிலும் முதல் இரவுக் காட்சில் அழுவார். இவர் தரும் சித்ரவதை சொல்லி மாளாது. ரங்காராவின் கடைசி காலம். அவரால் முடியாது. சிரமப்படுவார். இவருக்கு பொருத்தமே இல்லாமல் டி.எம்.எஸ்.பாட்டு வேறு.

காட்டுவாசிகள் என்று ஆந்திர வாடை அதிகம். வாணிஸ்ரீ காட்டுவாசிப் பெண். அழகாகவே இருக்கிறார். மனோகர் மேல் உடம்பு காட்டி, டார்ஜான் போல காட்டுவாசி டான்ஸ் ஒன்று போடுவது கொஞ்சம் புதுமை. ஜெமினியுடன் 'திருவாரூர்' தாஸ் புண்ணியத்தில் ஒரு ஃபைட்டும் உண்டு. கொடும் வில்லன் திடுமென்று அநியாயத்துக்கு நல்லவராக ஆகி விடுவார்.

நகைச்சுவை நடிகர்கள் படத்தை சர்வ நாசம் செய்வார்கள். தேங்காய் ஹிப்பி ரேஞ்சுக்கு செம அறுவை. வி.கே.ஆர் முதற்கொண்டு வீரப்பன் வரை அநியாயத்துக்கு நம் பொறுமை சோதிப்பார்கள்.

ஒரே ஒரு நல்ல விஷயம். சில நல்ல பாடல்கள்.

'பூமரத்து நிழலுமுண்டு...பொன்னி நதி பாட்டுமுண்டு'

'அங்கும் இங்கும் ஒன்றே ரத்தம்'

முத்துச் சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு (பாலாவின் அமர்க்களமான ஆரம்பகாலப் பாடல்)

என்று அருமையான பாடல்கள்.

'ஓ...தர்மத்தின் தலைவனே' (சுமார்தான்)

இசை தெலுங்கின் கோதண்டபாணி. நம் தொடர் நாயகர் பாலாவை நமக்கு முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர். (இவருடைய இனிஷியலும் எஸ்.பி.தான்) அருமையான மூன்று முத்தான பாடல்களைத் தந்திருப்பார். ஒளிப்பதிவு சேகர் சிங் அபாரம். தயாரிப்பு திரைக்கதை, டைரெக்ஷன் சாவித்திரி.

http://i61.tinypic.com/2hoflgn.jpg

சாவித்திரி ஹீரோயின் ரோல் எதுவும் எடுத்துக் கொள்ளாமல் டாக்டராக சிறிது நேரம் வருவார். ஆனால் சற்று உடல் இளைத்து மிக அழகாக அருமையாக இருப்பார். இயக்கத்தில் கவனம் செலுத்தியதால் நடிக்க அவாய்ட் செய்து விட்ட மாதிரி தெரிகிறது. தவிரவும் இந்த மாதிரி ரோல்களை சாவித்திரி நிறைய செய்தும் விட்டார். தன் கணவருடன் இணைந்தே. 'பார்த்தால் பசி தீரும்' ஒன்று போதாதா?

புகழ் பெற்ற நடிகைகளாய் இருந்தாலும் நடிகைகள் படமெடுக்கக் கூடாது....இயக்கமும் செய்யக் கூடாது (சில விதிவிலக்காக இருக்கலாம்) என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் இந்தப்படம். 'நினைத்தது ஒன்று... நடந்தது ஒன்று' தான் நினைவுக்கு வருகிறது. வெற்றி பெற்ற கதைகளை திரும்பத் திரும்ப எடுத்தால் அது தோல்வியில்தான் முடியும் என்று சாவித்திரிக்கு ஏன் தெரியாமல் போனது? வேறு புதுக் கதை ஒன்றைக் கையில் எடுத்திருக்கலாம்.

கொஞ்சம் அபூர்வமான இந்தப் படத்தைப் பற்றித் தங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.

நன்றி!

vasudevan31355
26th July 2015, 02:55 PM
'முத்துச் சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு'

'குழந்தை உள்ளம்' கதைப் பதிவு படித்து முடித்து விட்டீர்கள் தானே!

http://i.ytimg.com/vi/ULjpODgUpyY/hqdefault.jpg

பாலாவின் அற்புதமான ஒரு பாடல் இந்தப் படத்தில் ஒலிக்கும் சுசீலாவுடன் இணைந்து. அபூர்வமானதும் கூட. பாலாவை அறிமுகப்படுத்திய எஸ்.பி.கோதண்டபாணி அவர்களின் இசையிலேயே பாலா தமிழில் அட்டகாசம் புரிந்த பாடல்.

http://upload.mediatly.com/card_pictures/7b/a6/3f/7ba63f26-28b4-4abf-84d8-7d8ce1430e66.jpg

எனவே தங்கப் பாடகரை நமக்கெல்லாம் அறிமுகப்படுத்திய இசையமைப்பாளர் கோதண்டபாணி அவர்களுக்கு நம் வாழ்நாள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வோம். மதுர கானமும் அவருக்கு தன் மகத்தான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

காட்டில் ஜெமினிக்கும், காட்டுவாசிப் பெண் வாணிஸ்ரீக்கும் டூயட். பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்களுக்குப் பிறகு ஜெமினிக்கு பாலா மிக அம்சமாகவே பின்னணி பாடகராகப் பொருந்தினார். கவனியுங்கள். இயற்கை என்னும் இளையகன்னி, கற்பனையோ கை வந்ததோ, சிட் சிட் சிட் எங்கே போவோம், முத்துச் சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு, மங்கையரின் மகராணி, ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு என்று பாலா ஆரம்பத்தில் ஜெமினிக்கு அதிகமாகவே பாடி அத்தனையும் ஹிட் ஆயிற்று.

பாடல் படமாக்கலில் ஒன்றும் விசேஷம் இல்லை. ஆனால் ஜெமினி கச்சிதமாக, அழகாக, இளமையாகத் தெரிகிறார். நைட் கவுனுடன் பாடலைப் பாடுகிறார். தலையில் ஒற்றை பெரிய ரோஜாவுடன், நெற்றியில் ஸ்ரீதரின் 'சித்ராலயா' லோகோ போல பொட்டிட்டு (நங்கூரப் பொட்டு போலவும் தெரிகிறது) காதில் பெரிய ஜிமிக்கி அணிந்து, முகவாய்க் கட்டையில் ஃ போன்ற மூன்று கரும் புள்ளிகளுடன், கால்களில் தண்டையுடன், கைகளில் நிறைய கருப்பு வளையல்களுடன், நாகரீகக் காட்டுப் பெண் சேலையணிந்து வாணிஸ்ரீயும் அழகாத்தான் இருக்கிறார். அந்தக்கால முகத்தோடு முகம் வைத்தல், முகவாய்க் கட்டைகளை இணைத்தல், கன்னத்தோடு கன்னம் உரசல், இருவரும் இணைந்து சைட் குளோஸ் -அப் போஸ் தருதல் என்று அத்தனையும் இந்தப் பாடலிலும் உண்டு.

ஆனால் வாணிஸ்ரீயிடம் 'முன்னிடை மெலிந்து நூலாக' என்று ஜெமினி பாடும் போது சிரிப்பு நமக்கு பொங்கித்தான் வருகிறது.

பாலா தமிழுக்கு வந்த புதிதில் பாடியதால் கொஞ்சம் தமிழ் உச்சரிக்க சிரமப்படுவது போல் தெரியும். 'பூ வண்டு' என்பதை 'பூ வந்து' என்று உச்சரிப்பது போலத் தோன்றும்.

சரணங்களுக்கிடையில் சுசீலா அம்மா தரும் 'லா லா ல லா' ஹம்மிங்குகள் குளிர்த் தென்றலின் சுகம். மூன்றாவது சரணம் மட்டும் சுசீலா அம்மா அருமையாகப் பாடுவார் அந்த சரண வரிகள் 'தேன் தரும் நிலவு' போலவே. செட்-அப் முழு நிலவு 'பளிச்'சென்று காய, இரவுப் பின்னணியில் இந்த வரிகள் அருமையாகப் படமாக்கப் பட்டிருக்கும்.

நான் அப்போது இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் ஏ.எல்.ராகவன் தான் இப்பாடலைப் பாடுகிறாரோ என்று மனதிற்குள் நினைத்துக் கொள்வேன். நீங்கள் நன்றாக உன்னிப்பாக கவனித்தீர்களானால் ஏ.எல்.ராகவன் குரல் போலவே பாலாவின் குரல் இருக்கும். 1969-ன் படம் என்பதால் பாலாவின் குரல் மிக இளசாக இருக்கும்.

மிக அமைதியான பாடல். ரசிக்கத் தகுந்த ஆரம்ப கால பாலாவின் அபூர்வ ஜெம். பாடல் வரிகளை அளித்தது கவிஞர் கண்ணதாசன். இசை இன்ப மயம். பாடலில் தெலுங்கின் சாயல் வராமல் பார்த்துக் கொண்டது கோதண்டபாணியின் சாமர்த்தியம். இரண்டு எஸ்.பி.க்களான குருவும் சிஷ்யனும் பங்களித்து கலக்கிய பாடல்.

http://i.ytimg.com/vi/xTA8KQ6Q6BI/hqdefault.jpg

முத்துச் சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு
குடி கொண்டதே இன்பத் தேன் உண்டு
முதல் நாள் மயக்கம் வரக் கண்டு
மோனத்தில் ஆழ்ந்தது சுவை கொண்டு

முத்துச் சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு
குடி கொண்டதே இன்பத் தேன் உண்டு

தலைமகன் செய்தது சோதனையோ
தலைவிக்கு இன்பத்தின் வேதனையோ
கலைகளில் ஓவியம் ரசிக்கின்றதோ
கனவினிலே கண்டு சிரிக்கின்றதோ

முத்துச் சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு
குடி கொண்டதே இன்பத் தேன் உண்டு

முத்தமிட்ட இதழே பாலாக
முன்னிடை மெலிந்து நூலாக
கட்டி வைத்த கூந்தல் அலையாக
கட்டி வைத்த கூந்தல் அலையாக
கன்னங்கள் இரண்டும் விலையாக

முத்துச் சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு
குடி கொண்டதே இன்பத் தேன் உண்டு

தேன் தரும் நிலவே நீ சாட்சி
தென்றல் காற்றே நீ சாட்சி
வானும் நிலவும் உள்ளவரை
வளரட்டும் காதல் அரசாட்சி
வளரட்டும் காதல் அரசாட்சி

முத்துச் சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு
குடி கொண்டதே இன்பத் தேன் உண்டு
முதல் நாள் மயக்கம் வரக் கண்டு
மோனத்தில் ஆழ்ந்தது சுவை கொண்டு

முத்துச் சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு
குடி கொண்டதே இன்பத் தேன் உண்டு


https://youtu.be/xTA8KQ6Q6BI

RAGHAVENDRA
26th July 2015, 03:15 PM
வாசு சார்
நெஞ்சம் மறக்காத நினைவுகளில் அள்ளித் திளைக்கும் வண்ணம் ஆனந்தமான அந்நாள் பாடலைப் பற்றி எழுதியுள்ளீர்கள். படத்தையும் பற்றித் தான்.
பொறுமை... தங்களிடம் ஏராளம்... படத்தை முழுதும் பார்த்து கதையும் (?????????) சொல்லி, தயார் படுத்திய விதம் .. ஆஹா... தங்களுக்கே உரித்தான தனித்துவம்.
1969 ஜனவரி பொங்கல் நாளன்று வெளியாகியிருக்க வேண்டியது. கடைசி நேர தாமதம் காரணமாக தள்ளிப் போயிற்று. இல்லையென்றால் பாலா பாடி வெளிவந்த முதல் படத்திற்கு போட்டி வந்திருக்கும். அப்புறம் தணிக்கை தேதியை வைத்து தீர்மானம் செய்ய வேண்டியிருந்திருக்கும். நல்ல வேளை, பால் குடத்திற்கு (ஆடி மாதமாச்சே.. இது பால் குடம் சீசனல்லவோ...) பெருமை கிடைத்து விட்டது.

கோதண்டபாணி ஸ்டூடியோ சென்னை... இவர் பெயரில் பாலா நன்றிக்கடனுடன் அமைத்த ஸ்டூடியோ.. சமீப காலம் வரை கொடிகட்டிப் பறந்தது. இப்போது..

அதையெல்லாம் விடுங்கள்.. இனிமையான பாடலைப் பற்றி அழகாக எழுதி பாடலோடு தங்கள் எழுத்தும் சேர்ந்து நம்மையெல்லாம் கொள்ளை கொள்ளச் செய்து விட்டீர்கள்.

தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.

vasudevan31355
9th September 2015, 11:12 AM
'சபதம்'

http://cf-images.emusic.com/music/images/album/153/831/15383194/600x600.jpg'சபதம்' (1971)

தேவநாயகி பிலிம்ஸ் 'சபதம்' ஓர் அருமையான ஒரு படம். ரவிச்சந்திரன், கே.ஆர்.விஜயா, நாகேஷ், டி கே.பகவதி, வி.கே.ராமசாமி, சஹஸ்ரநாமம், அஞ்சலிதேவி, பண்டரிபாய் நடித்த இத்திரைப்படம் கதாநாயகிக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்த ஒரு படம். நடனத்தை சலீம் அமைத்திருப்பார். நமது பி.என்.சுந்தரம் ஒளிப்பதிவு இயக்குனராக பணியாற்றி இருப்பார். இயக்கம் நமது பிரிய பி.மாதவன்.[/COLOR][/B][/SIZE]

கதை

http://i.ytimg.com/vi/yPRAkU6T8zk/0.jpg

மிக நல்லவரான பெரிய மனிதர் செல்வநாயகத்திற்கு (டி கே.பகவதி) அவரைப் போலவே உருவ ஒற்றுமையும், குரல் ஒற்றுமையும் கொண்ட துரைசிங்கம் (டி கே.பகவதி) என்ற தறுதலை தம்பி. அண்ணனிடமிருந்து சொத்தை பாகம் பிரித்துக் கொண்டு குடி, காமம் என்று சொத்தை அழிக்கிறான் அவன். தம்பியின் போக்கு கண்டு, மனம் நொந்து, மறுபடியும் அவனைத் தன்னுடன் சேர்த்துக் கொள்கிறார் செல்வநாயகம். தன் மனைவி கண் தெரியாத ராஜேஸ்வரி (அஞ்சலிதேவி), மகன் முத்து மேல் அதிக பாசம் அவருக்கு. தம்பி துரைசிங்கத்திற்கு லஷ்மி (பண்டரிபாய்) என்ற பண்பான மனைவி.


வியாபார விஷயமாக அண்ணனும் தம்பியும் வெளியூர் புறப்பட, அந்த சந்தர்ப்பத்தைத் தனக்கு சாதமாக்கிக் கொள்கிறான் தம்பி. உருவ ஒற்றுமையைப் பயன்படுத்தி, அண்ணனைக் கொன்றுவிட்டு, அண்ணன் வேடத்தில் வந்து நல்லவன் போல ஊரில் கபடமாடுகிறான் துரைசிங்கம். ஊரும் அவனை செல்வநாயகம் என்று பரிபூரணமாக நம்பி ஏமாறுகிறது. குழந்தையுடன் இருக்கும் தன் அண்ணியை பைத்தியம் என்று பட்டம் கட்டி அவள் வீட்டை விட்டு ஓடும்படி செய்கிறான் செல்வநாயகம்.


தன் கணக்கப்பிள்ளை வள்ளிமுத்துவின் (சஹஸ்ரநாமம்) மகள் சிவகாமி (கே.ஆர்.விஜயா) என்ற பெண்ணின் மீது காமப் பித்து பிடித்து அலைந்து, அவளை ஆசைநாயகியாய் வைத்துக் கொள்ள வள்ளிமுத்துவிடமே அனுமதி கேட்கிறான். இல்லையென்றால் கொன்று விடுவதாக பயமுறுத்துகிறான். அவன் சுயரூபம் தெரிந்து கொண்ட வள்ளிமுத்து செய்வதறியாமல் திகைத்து தூக்கில் தொங்குகிறான். (உண்மையில் துரைசிங்கத்தால் தூக்கில் தொங்கவிடப் படுகிறான்) வெளியூரில் படிக்கும் சிவகாமி தன் தந்தை இறந்த சேதி கேட்டு துடிதுடித்துப் போகிறாள். தன் தந்தையின் கடிதம் மூலம் செல்வநாயகம் ஒரு காமுகன் என்று புரிந்து கொள்கிறாள். தந்தை சாவுக்குக் காரணமானவனை பழி வாங்கத் துடிக்கிறாள். ஆனால் செல்வநாயகம் போர்வையில் இருக்கும் துரைசிங்கம் ஊர்மக்களை அப்படியே தன்னை நல்லவன் என்று நம்பும்படி செய்திருக்கிறான். இதனால் சிவகாமி துரைசிங்கம் கெட்டவன் என்று ஆதாரத்துடன் ஊர் மக்களிடம் நிரூபித்தாலும் தன் சாமர்த்தியப் பேச்சாலும், பசுத்தோல் போர்த்திய புலி நடிப்பாலும் சிவகாமியின் ஆதாரங்கள் ஒவ்வொன்றையும் உடைத்தெறிகிறான் துரைசிங்கம். அவனை அயோக்கியன் என்று ஊர் மக்கள் முன்னிலையில் விரைவில் நிரூபிப்பதாக துரைசிங்கத்திடம் 'சபதம்' போடுகிறாள் சிவகாமி.


வீட்டை விட்டு ஓடிப்போன ஓடிப்போன ராஜேஸ்வரியின் மகன் முத்து (ரவிச்சந்திரன்) வளர்ந்து பெரியவனாகி எல்லா உண்மையையும் தன் தாயின் மூலம் அறிகிறான். முத்து சிவகாமியைக் காதலித்து துரைசிங்கம் மூலம் சிவகாமி பட்ட துயரங்களை அறிந்து கொள்கிறான். பாதிக்கப்பட்ட சிவகாமி, முத்து இருவரும் கூட்டணி அமைத்து, திட்டம் போட்டு துரைசிங்கம் வீட்டில் தம்பதிகளாக நுழைகிறார்கள். இவர்களுடன் துரைசிங்கத்தின் மகன் நாகேஷும் தன் தந்தையின் கபட நாடகத்தைத் தெரிந்து கொள்ள, மூவரும் துரைசிங்கத்துடன் ஆடு புலி ஆட்டம் விளையாட ஆரம்பிக்கிறார்கள். அவனுக்கெதிரான ஆதாரங்களைத் திரட்டி அவனை நிலைகுனிய வைத்து ஊருக்கு 'அவன் துரைசிங்கம்தான்...செல்வநாயகம் இல்லை' என்று புரிய வைக்கிறார்கள். இறுதியில் இறந்து போன செல்வநாயகமே உயிருடன் திரும்ப நேரில் வர, அதிர்ச்சியடைந்து தான் வாயாலேயே தன் அண்ணன் செல்வநாயகத்தைக் கொன்றதாக தன்னையுமறியாமல் ஊர் மக்கள் முன்னிலையில் கூறி காவலர் வசம் மாட்டிக் கொள்கிறான் துரை சிங்கம். ('புதிய பறவை' கோபால் போல) ஆனால் வந்தது உண்மையான அண்ணனா?..


இறுதியில் தன் 'சபத'த்தில் மாபெரும் வெற்றி காணுகிறாள் சிவகாமி.


'புன்னகை அரசி'க்கு இந்த மாதிரி சிவகாமி.ரோல் அல்வா சாப்பிடவது போல. கலக்கிவிடுவார். டி .கே.பகவதி நல்ல அண்ணனாகவும், கெட்ட தம்பியாகவும் அருமையான நடிப்பைத் தந்திருப்பார். படம் நெடுக கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் அமைதியாகச் சிரித்தபடியே வில்லத்தனம் புரிவது ஏ.ஒன். இந்தப் படம் சென்னையில் பாரகன், கிரௌன், புவனேஸ்வரி ஆகிய தியேட்டர்களில் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது.

'தொடுவதென்ன தென்றலோ மலர்களோ'

என்றுமே சிரஞ்சீவித்துவம் நிறைந்து மனமெல்லாம் சுகந்த தென்றலை இனிமையாக வீசச் செய்யும் பாடல். மிகச் சிறந்த தமிழ்ப் பாடல்களின் வரிசையில் முன்னால் நிற்க போட்டி போடும் பாடல். நீங்கள் எவ்வளவு சோகத்தில் இருந்தாலும் இந்த பாட்டை ஒருமுறை கேளுங்கள். பிளாட் ஆகி விடுவீர்கள். குரலினிமையா... குழலினிமையா என்று போட்டி வைத்தால் பாலாவின் குரல்தான் இனிமை என்று ஒட்டுமொத்தமுமே கூக்குரல் எழுப்பும் அளவிற்கு அவரது வசந்த சுகந்த குரலால் பாராட்டு பெற்ற பாடல். 'சபத'மிட்டு சொல்கிறேன்.

http://www.stephenprayog.com/image/gkvenkatesh.jpg

இந்தப் படத்தின் மிகப் பெரிய பலமான தூண் இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ். என்ன ஒரு திறமை! இவர் நம் திரையுலகிற்குக் கிடைத்த ஒரு குறிஞ்சி மலர். இசையமைப்பதோடு மட்டுமல்லாமல் வித்தியாசமான குரல் வளம் கொண்ட பாடகரும் கூட. இப்படத்தில் இடம் பெற்ற எஸ்.பி.பாலா தங்கக் குரலில் பாடிய சூப்பர் டூப்பர் ஹிட் பாடலான,

'தொடுவதென்ன தென்றலோ மலர்களோ'

பாடல் ஒன்று போதும் ஜி.கே.வெங்கடேஷ் அவரின் திறமையை காலம் முழுதும் பறைசாற்ற. நமக்கு இறப்பு என்று ஒன்று வரும்போது இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டே கண் மூடினால் கண்டிப்பாக சொர்க்கம் கிடைக்கும்.

RAGHAVENDRA
17th September 2015, 03:15 AM
Nadigar Thilagam Film Appreciation Association..

Next Programme...

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/ntfans%20programmes/KOTINVITESEP2015fw_zpskjzhznee.jpg

RAGHAVENDRA
13th October 2015, 09:09 PM
தமிழ் சினிமா - அபூர்வ தகவல்கள்

உ.யிரோவியம் - ராணிமுத்துவில் வெளிவந்த ஒரு நாவல்..

உயிரோவியம் - இந்த வார்த்தையில் துவங்கும் ஒரு பாடல் ஊருக்கு உழைப்பவன் படத்திற்காக பதிவு செய்யப்பட்டது.

இந்த உயிரோவியம் ... இன்னும் என்ன செய்தியுள்ளது..

தெய்வமகன் படத்திற்கு முதலில் வைத்த பெயர் .

உயிரோவியம்

RAGHAVENDRA
13th October 2015, 09:10 PM
தமிழ் சினிமா - அபூர்வ தகவல்கள்

விட்டில் பூச்சி -

சுமதி என் சுந்தரி படத்திர்கு ஒரிஜினலாக வைத்த பெயர்...

RAGHAVENDRA
13th October 2015, 09:11 PM
தமிழ் சினிமா - அபூர்வ தகவல்கள்

தங்கத்திலே வைரம் -
சிவகுமார், கமலஹாசன் நடித்து வெளிவந்த திரைப்படம் என்பது தெரிந்திருக்கலாம். தெரியாத விஷயம்.
நடிகர் திலகம் இரு வேடங்களில் நடித்த மனிதனும் தெய்வமாகலாம் படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட டைட்டில் இது தான்.

RAGHAVENDRA
13th October 2015, 09:12 PM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/11217174_991712114212794_4950255860067039241_n.jpg ?oh=678a4b55d4e7b87e942bba2425fe70bb&oe=56C7FF18

இணையத்தில் முதன் முறையாக காதல் பறவை படத்தின் ஸ்டில்

RAGHAVENDRA
13th October 2015, 09:13 PM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xat1/v/t1.0-9/12115882_991711747546164_5002034090452819533_n.jpg ?oh=20a4a9ecba97f28d515ccf37d5c6ba18&oe=56CDE881

இணையத்தில் முதன்முறையாக சிங்கப்பூர் சீமான் படத்தின் ஸ்டில்

RAGHAVENDRA
13th October 2015, 09:17 PM
இணையத்தில் முதன்முறையாக பால்குடம் படத்தின் ஸ்டில்...

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xta1/v/t1.0-9/12079565_991711094212896_1328354668463309384_n.jpg ?oh=82e6f78d453681a74197c13694c3be77&oe=56CEC38F

வாசு சார், மது சார், பால் குடம் படத்தின் வீடியோவைப் பார்க்காத குறையை இதைப் பார்த்து ஓரளவு திருப்திப் பட்டுக்கொள்ள வேண்டியதுதான்

RAGHAVENDRA
13th October 2015, 09:26 PM
தமிழ் சினிமா - அபூர்வ தகவல்கள்

மெல்லிசை மன்னர் இசையில் அமுதா படத்தில் ஒலித்த அன்பே அமுதா பாடலை மறக்க முடியுமா. பாடகர் திலகத்தின் குரலில் உயிரை உருக வைக்கும் அருமையான பாடல்.
அமுதா படத்திற்கு முதலில் வைத்த பெயர்...
குங்குமப் பொட்டு

RAGHAVENDRA
14th October 2015, 01:14 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/ntfans%20programmes/NIRAIKUDAMINVITEOCT201502fw_zpsrroauwvy.jpg

RAGHAVENDRA
15th October 2015, 07:21 AM
AVM 70 years - a documentary

https://www.youtube.com/watch?v=N4vXPRgfG_w

courtesy: youtube and AVM

RAGHAVENDRA
16th October 2015, 08:33 PM
https://scontent-cdg2-1.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/s720x720/12112183_992981280752544_5895951311280996154_n.jpg ?oh=26ce3c32044812871f2a1e7bea997c4a&oe=56C482BA

சில ஆயிரம் அடிகள் படம் பிடிக்கப்பட்டு ஏதோ காரணங்களால் நின்று போன நடிகர் திலகத்தின் படங்களில் ஒன்று நடமாடும் தெய்வம்.

நிழற்படம் நன்றி பேசும்படம்

RAGHAVENDRA
16th October 2015, 08:34 PM
https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xal1/v/t1.0-9/10455444_993012684082737_7784226142242069579_n.jpg ?oh=a7699d24af2cfdc3d463ce3ec4450ab7&oe=56C76FF9&__gda__=1452637614_6851167d52fbe3cc7631a02125beb9c f

https://scontent-cdg2-1.xx.fbcdn.net/hphotos-xap1/v/l/t1.0-9/12118670_993012660749406_2929654702443261464_n.jpg ?oh=039b76c658b9df5b22054bdce9525d47&oe=569555B4

ஸ்வாதி ப்ரொடக்ஷன்ஸ் என்ற ஒரு படத்தயாரிப்பு நிறுவனம் 60களின துவக்கத்தில் நடிகர் திலகத்தை வைத்து ஒரு படம் துவக்கியது. இரு முறை பெயர் மாற்றம் செய்யப்பட்ட அந்தப் படம் கடைசியில் வளராமல் நின்று போனது. ஒரு முறை பச்சை விளக்கு என்ற பெயரிலும் மற்றோர் முறை தங்க சுரங்கம் என்ற பெயரிலும் தயாரானது. பின்னாளில் இந்த இரு பெயர்களுமே நடிகர் திலகத்தின் வேறு படங்களுக்கு சூட்டப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது வரலாறு. அந்த படத்தின் இரு ஸ்டில்கள் நம் பார்வைக்கு.

RAGHAVENDRA
23rd October 2015, 03:18 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/OldTamilFilmStills5/AnnaiSonnaSolfw_zpsqelep89m.jpg

RAGHAVENDRA
23rd October 2015, 03:19 PM
https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xta1/v/t1.0-9/12039300_995810567136282_8518297928801647657_n.jpg ?oh=3c29faac37836fbdf5a1e454f09a2424&oe=56BAFAB7&__gda__=1455317310_e27214ac18bbda4203a383337c54c2f c

RAGHAVENDRA
23rd October 2015, 03:20 PM
ரங்க ராட்டினம் திரைப்பட நிழற்படங்கள்

https://scontent-frt3-1.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/10423283_995839957133343_8894672222272514148_n.jpg ?oh=f991444861388ac8d5681ce356d9adaf&oe=56CA88D2

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xat1/v/t1.0-9/1506651_995839943800011_2226964725266239232_n.jpg? oh=bec150cbf707e0731b286f326a350968&oe=56BCFC7B&__gda__=1456207503_672a36f17285da4ec895999703eaabb 7

RAGHAVENDRA
23rd October 2015, 05:03 PM
நண்பர் ஒருவரின் முகநூல் பக்கத்திலிருந்து..

https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/s720x720/11899790_888790434538798_1868496701697616194_n.jpg ?oh=25f737012f59fc2a80e20f5ffb04b1a3&oe=56BAF7DD

RAGHAVENDRA
6th November 2015, 10:37 PM
பழைய தமிழ்ப்படங்களின் டிவிடிக்கள் வெளியீடு ... விவரங்கள்..

மோசர் பேர், மாடர்ன், ராஜ் வீடியோ விஷன், உள்ளிட்ட இந்திய நிறுவனங்கள், பிரமிட், கொலம்பியா, அய்ங்கரன் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் பழைய தமிழ்ப்படங்களை டிவிடிக்களில் வெளியிட்டு வருகின்றன. அவற்றில் நம் பார்வைக்கு வந்த சிலவற்றை இங்கு பகிர்ந்து கொண்டால், இது வரை பார்க்காத படங்களை நண்பர்கள் பார்ப்பதற்கான வாய்ப்பு உருவாகட்டுமே..

இதில் சிவாஜி எம்ஜிஆர் படங்களின் டிவிடிக்களைப் பற்றிய தகவல்கள் இடம் பெறாது. மற்ற அபூர்வமான பழைய படங்களைப் பற்றி மட்டுமே பகிர்ந்து கொள்ள உத்தேசம்.

நண்பர்கள் தங்கள் வசம் இருக்கும் இது போன்ற அபூர்வமான பழைய படங்களின் டிவிடிக்களின் விவரங்களைப் பகிர்ந்து கொள்ளலாமே..

முன்பே இது போன்ற ஒரு தொடர் துவங்கப்பட்டிருந்தத. ஆனால் அது எங்கே எனத் தெரியவில்லை. எனவே மீண்டும் புதிதாக.

தொடக்கமாக ரவி, பாரதி நடித்த வாலிப விருந்து/ காரோட்டிக்கண்ணன் ...

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/vcdvd%20wrappers/VALIBAVIRUNDUKAROTTIKANNAN.jpg

RAGHAVENDRA
6th November 2015, 10:38 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/vcdvd%20wrappers/PATTALIYINVETRI.jpg?t=1340190787

RAGHAVENDRA
6th November 2015, 10:39 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/vcdvd%20wrappers/ENGALVATHYARKANMANIPOONGA.jpg

RAGHAVENDRA
6th November 2015, 10:39 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NILAVENEESATCHITHYAGAULLAM.jpg

RAGHAVENDRA
6th November 2015, 10:40 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/GUNASUNDARI.jpg

RAGHAVENDRA
6th November 2015, 10:41 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/MADHARKULAMANIKKAM.jpg

RAGHAVENDRA
6th November 2015, 10:42 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/ALLITHILAGAM.jpg

RAGHAVENDRA
6th November 2015, 10:42 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/vcdvd%20wrappers/TKTHAMPICHELLAPILLAI.jpg

RAGHAVENDRA
6th November 2015, 10:43 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/vcdvd%20wrappers/ORUVIRALANUBAVAMPUDHUMAI.jpg

RAGHAVENDRA
6th November 2015, 10:43 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/vcdvd%20wrappers/SENKAMALATHIVUKANNIYINSABADAM.jpg

RAGHAVENDRA
6th November 2015, 10:44 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/vcdvd%20wrappers/ALLAUDINWONDERLAMP.jpg

RAGHAVENDRA
6th November 2015, 10:44 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/vcdvd%20wrappers/ENGALKULADEIVAM.jpg

RAGHAVENDRA
6th November 2015, 10:45 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/vcdvd%20wrappers/YARUKKAGAAZUDHAN.jpg

RAGHAVENDRA
6th November 2015, 10:46 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/vcdvd%20wrappers/MANGALYABAKYAM.jpg

RAGHAVENDRA
6th November 2015, 10:46 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/vcdvd%20wrappers/NANVALARTHATHANGAI.jpg

RAGHAVENDRA
6th November 2015, 10:47 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/vcdvd%20wrappers/PUDHIYAPADHAI.jpg

RAGHAVENDRA
6th November 2015, 10:47 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/vcdvd%20wrappers/MOGANASUNDARAM.jpg

RAGHAVENDRA
6th November 2015, 10:48 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/vcdvd%20wrappers/APPMAGTTF.jpg

RAGHAVENDRA
6th November 2015, 10:49 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/vcdvd%20wrappers/PMTVNNMINF.jpg

RAGHAVENDRA
6th November 2015, 10:49 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/vcdvd%20wrappers/DrSavithriKMaligaiF.jpg

RAGHAVENDRA
6th November 2015, 10:50 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/vcdvd%20wrappers/LAKSHMIVIJAYAMKPODHUMAF.jpg

RAGHAVENDRA
6th November 2015, 10:51 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/vcdvd%20wrappers/SNEGIDHISTARMODERNF.jpg

RAGHAVENDRA
6th November 2015, 10:51 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/vcdvd%20wrappers/CRSINGARIKVBBF.jpg

RAGHAVENDRA
6th November 2015, 10:52 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/vcdvd%20wrappers/APACHANIANANDIVARAVERPUF.jpg

RAGHAVENDRA
6th November 2015, 10:52 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/vcdvd%20wrappers/NADUIRAVILKANTHIRANDADHUF.jpg

chinnakkannan
6th November 2015, 11:16 PM
இந்தக் கண்ணாடி மாளிகை சஸ்பென்ஸ் த்ரில்லர் என்று போட்டிருக்கிறதே.. எப்படி இருக்கும் ராகவேந்தர் சார்..

அக்கரைப் பச்சை யூ ட்யூபில் நல்ல ப்ரிண்ட் இல்லை.. நான் பார்த்த்தில்லை..பட் ஆடியோ..ஒலிபரப்பு ரேடியோ சிலோனில் கேட்ட நினைவு..

டிவிடி புகைப்படங்களுக்கு தாங்க்ஸ்..

RAGHAVENDRA
7th November 2015, 07:38 AM
பெரும்பாலும் மோசர் பேர் நிறுவனம் வெளியிட்ட அனைத்துப் படங்கள், மற்றும் மாடர்ன் சினிமா வின் சில படங்கள், தரத்தில் நன்றாயிருக்கும். ஆனால் பெரும்பாலானவை நமக்குக் கிடைக்கிறதே என்கிற ஒரு சந்தோஷம் மட்டுமே மிஞ்சும். தரங்களைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. நிறுவனங்களையும் நாம் குறை சொல்ல முடியாது. இருப்பதை எந்த அளவிற்கு நல்ல முறையில் நமக்குத் தர முடியுமோ அதை அவர்கள் செய்கிறார்கள்.

இருந்தாலும் ஒரு தகவலுக்காகவே இவை இங்கு பகிர்ந்து கொள்ளப் படுகின்றன.

RAGHAVENDRA
7th November 2015, 07:39 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/vcdvd%20wrappers/JPPNVF.jpg

RAGHAVENDRA
7th November 2015, 07:39 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/vcdvd%20wrappers/NMAMEPF.jpg

RAGHAVENDRA
7th November 2015, 07:40 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/vcdvd%20wrappers/PNPJAVNVNF.jpg

RAGHAVENDRA
7th November 2015, 07:40 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/vcdvd%20wrappers/PKPVAKPTHUNAIVIF.jpg

RAGHAVENDRA
7th November 2015, 07:41 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/vcdvd%20wrappers/AIAEFfw.jpg

RAGHAVENDRA
7th November 2015, 07:42 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/vcdvd%20wrappers/KAVITHAYPFfw.jpg

RAGHAVENDRA
7th November 2015, 07:42 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/vcdvd%20wrappers/PAAEANFfw.jpg

RAGHAVENDRA
7th November 2015, 07:43 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/vcdvd%20wrappers/ANAAPTRAMOFFW.jpg

RAGHAVENDRA
7th November 2015, 07:43 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/vcdvd%20wrappers/AKVPVKGFFW.jpg

RAGHAVENDRA
7th November 2015, 07:44 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/vcdvd%20wrappers/KMMSTMONNPFFW.jpg

RAGHAVENDRA
1st December 2015, 05:53 PM
நெடுந்தகடு முகப்புகளின் நிழற்படங்கள் ஒரு பக்கம் அணிவகுக்க, என்னிடம் உள்ள சில அந்நாளைய இசைத்தட்டுக்களின் முகப்புகளும் இங்கே தொடர உள்ளன.

துவக்கமாக, ஒய்ஜீமகேந்திரா இயக்கி, மெல்லிசை மன்னர் இசையமைத்த, கதை கதையாம் காரணமாம் திரைப்பட இசைத்தட்டின் நிழற்படம் நண்பர்கள் பார்க்க, பயனுற.

https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xft1/v/t1.0-9/p720x720/12301532_1013050468745625_7842642548935515088_n.jp g?oh=06f6bbef6cfb129f8b197f2d0a604e79&oe=56E858EE