PDA

View Full Version : மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4



Pages : [1] 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

chinnakkannan
22nd May 2015, 09:30 AM
மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4
***************************************


முந்தி வணங்கிடுவோம் முக்கண்ணன் மைந்தனாம்
தொந்திக் கணபதியின் தாள்..

*

ஆகப் பலவாறாய் ஆடலும் பாடலுமாய்
பாகம் பிரித்திங்கே பக்குவமாய் – தேகஞ்
சிலிர்க்கவும் மென்மேலும் சிந்திக்கவும் வைத்தே
மிளிர்ந்ததே இந்தத் திரி..

*

ம்ம் என் இனிய வலை மக்களே..!

முதற்கண் பாகம் துவக்க அழைத்த வாசு அவர்களுக்கும் பணித்த கோபால் அவர்களுக்கும் வாழ்த்திய ராஜேஷ் எஸ்.வி,, கல் நாயக், ரவி, ராகவேந்தர் சிவாஜி செந்தில்,முரளி,கலைவேந்தன் எஸ்.வாசுதேவன் கோபு, ஆதிராம் ராஜ்ராஜ், ராகதேவன், நவ் வேலன் மற்றும் படிக்கும் எண்ணிலா நண்பர்களுக்கும் என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி சொல்கிறேன்.. மிக்க நன்றி..

மூன்றாம் பாகத்தில் மிளிர்ந்தவர்களை அடுத்த பதிவில் சொல்கிறேன் என்று சொன்னாலும் கூட இந்தப் பதிவில் ஒருவரைப் பற்றிக் கண்டிப்பாகச் சொல்லக் கடமைப் பட்டுள்ளேன்..அவர்.. இனிய நண்பர் கல் நாயக்..

கொஞ்சம் தொய்வடைந்து சோஓஓஒகமாய் இழை இருந்த போது.. ஹஹஹ..அஹோ வாரும் சி.க எனக் கைகோர்த்து சோர்வடையாமல் மாறி மாறி பதிவு செய்து இழையோட்டத்தை உணர்வோட்டமாய்ச் செய்த கல் நாயக்.. கொஞ்சம் கொஞ்சம் குட்டிக் குட்டிப் பாராவில் சிரிக்க வைத்திருந்தவர், முழுக்கையை மடித்து முழுவீச்சில் இறங்கிப் பதிவுகள் செய்தார்..அதுவும் ஒன்லைன் பஞ்ச்சாய் கடைசியில் எழுதும் ஒருவரியில் ஹி ஹி எனப் புன்முறுவல் தானாகவே முகத்தில் வந்து தொற்றிக் கொள்ளும்.. அவருக்கு நன்றி + மென் மேலும் எழுதிக் குவிக்க வாழ்த்துக்கள்..
வேலைப்பளுவின் காரணமாகவோ உடல் நிலை சரியில்லையோ என்னவோ வாராதிருக்கும் கிருஷ்ணாவும் வருவார் என மனசுக்குள் ஒரு நம்பிக்கை..

*
வான மகளுக்கு என்ன கோபமோ, சோகமோ கட்டியிருந்த கருமேகச் சேலையை முகத்தில் போர்த்தி க் கொள்ள காற்றோ வேண்டாம்மா ப்ளீஸ் கொஞ்சம் சிரியேன்.. ஏன் கண்ணா பாகம் ஆரம்பிக்கிறான்னு பயந்துட்டியா என்பது போல் கொஞ்சம் சீண்ட அதையும் மீறி க் கொஞ்சம் கண்ணோரம் துளியாய் நீர் கோர்த்து இறங்கிக் கீழே விட.. அந்தத் தூறல் மெல்ல மெல்லக் கீழிறங்கி விழுந்து மண்ணில் கலக்கும் போது வருமே ஒரு ச்சிலீர் மண் வாசனை..அடடா அடடா.. அது என்ன செய்யும்..

அப்படியே இதயத்தைக் கிளறி எத்தனையோ நினைவுகளைக் கிளர்ந்தெழ வைக்குமில்லையா.. அது போல என் இதயத்திலும் கொஞ்சம் நினைவுகள் பின்னோக்கி ஓட விரல் அதை முன்னோக்கி உங்களுக்காக அடிக்கிறது!
*
அதாகப் பட்டது மன அம்பாஸடரை ரிவர்ஸ் எடுத்து படக் படக்கென பலவருடம் பின்னோக்கிச் சென்றால்..யார் அது என்ன சொல்றது..

தெரியுமே தலைகீழ்ப் ப மீசை, ஒல்லி ஒல்லி சி.க.. கல்லூரி மாணவன் அதானே..

ஆமாங்க்ணா.. கல்லூரி படித்த இறுதியாண்டுஎன நினைக்கிறேன்.. என் கல்லூரி விமான நிலையத்துக்கு அருகில்.. ஆனால் க்விஸ் போட்டி என
விளாங்குடிக்கு அருகில் இருக்கும் ஃபாத்திமா கல்லூரிக்குச் சென்றிருந்தோம்..

எங்கள் கல்லூரியில் இருந்து திடுதிப்பென என் வகுப்பில் நானும் இன்னொரு நண்பரும்.. பின் சில பல கல்லூரிகள்.. ஐந்தாறு இருக்கும் என நினைக்கிறேன்..

க்விஸ் கேட்டது ஒரு ஐ.ஏ.எஸ். ஆஃபீஸர்.. நார்த் இண்டியன். பேசியது ஆங்கிலத்தில் தான்.. நிறையக் கூட்டமெல்லாம் இல்லை..

அவர் கேட்ட ஒவ்வொருகேள்விக்கும் படக் படக்கென மற்ற கல்லூரி மாணவர்கள் சொல்லிக்கொண்டே இருக்க நாங்களும், ஃபாத்திமா கல்லூரி மாணவிகள் இருவரும் முழிமுழியென மேடையிலேயே முழித்துக் கொண்டிருந்தோம்.. ஏதாவது கேள்விக்கு த் தெரிந்த ஆன்ஸர் என்று சொல்வதற்குள் மற்றவர்கள் சொல்லிவிட நானும் நண்பரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு இருக்க, கடைசியாய் ஒரு கேள்வி..

அந்தக் கேள்வி கேட்கும் போது அந்தக் கலெக்டர் உணர்ச்சி வசப்பட்டார்..இந்தப் பாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும்..ஏனெனில் இந்தப் பாட்டு என் தம்பிக்கு மிகப் பிடிக்கும்..ஆனால் அவன் மரித்துவிட்டான் ஒரு விபத்தில் எனச் சொல்லி டேப்ரிகார்டரில் அந்தப் பாட்டின் இடையில் வரும் இசையைப் போட்டு என்ன பாடல் எனக் கேட்க எங்கள் கண்களில் பலப்பல மின்னல்கள் அடிக்க கோரஸாய்ச் சொன்னோம் பாடலையும் படத்தின் பெயரையும்..

பாடல் செல்வமே..ஒரே முகம்காண்கிறேன் எப்போதும்.. படம் அமர காவியம்..

முக்கந்தர் கா சிக்கந்தர் என ஹிந்தியில் வந்து ஓட்டஓட்டமாய் ஓடிய படம்.. தமிழில் சிவாஜி மாதவி ஜெய்கணேஷ் என சினிப்ரியாவில் ரிலீஸாகி சகோதரி வெளி நாட்டிலிருந்து வந்திருந்த போது அவருடன், அவர் கணவருடன் சென்று பார்த்த படம்..

நன்றாகத் தான் இருக்கும் ஆனால் சற்றே நீளம் என நினைவு.. அதன் பிறகு அந்தப் படத்தைப் பார்க்கவில்லை..

பாருங்கள் இதயத்தின் ஆழத்திலிருந்து இவையெல்லாம் வருகின்றன..இவை சொல்லும் செய்தி என்னன்னாக்க..

சரி சரி..இதயத்தைப் பற்றிப் பாட்டுதான்..

கண்களில் மயக்கம் கொண்டுவிட்ட அக்கன்னி
.. காதலதன் தாக்கம் மேனியதை வாட்டிவிட
எண்ணமது பலவாய் எங்கெங்கோ செல்லும்படி
..ஏக்கமாய்ப் மூச்சும் எழிலாக வந்தபடி
தென்றலும் தீண்ட தேகமது சிலிர்க்காமல்
…தேனுடன் சுவையாய் தித்திப்பாய்ப் பாடுகிறாள்
கன்னமும் சிவக்க களிகொள்ளும் அவள்மனமும்
…காதலன் நினைப்பினிலே கவிதையெனப் பாடுகிறாள்..

இதயம் பேசினால்..

இதயம் பேசினால் உன்னிடம் ஆயிரம் பேசுமோ..
இதழ்கள் பேசுமோ மெளனமே போதுமோ..

ஒரு நாள் வானிலே வெண்ணிலா வந்தது
உன்னைத் தான் எண்ணினேன் என்னவோ பேசினேன்

நாடக மேடையைப் போலே இந்தப் பெண்ணின் கனவுகள்
நாளெலாம் யோசனை நாடினேன் தலைவனை

ஆசைகளின் பின்னலிலே அழகின் சோதனை
இரவில் வேதனை விடிந்ததும் சிந்தனை



ந.தி, க.தி (கண்களின் திலகம்) மாதவி,

https://youtu.be/Hz9oRsTibDg

அப்ப்புறம் க்விஸ் என்ன ஆச்சா.. :) வேறுகல்லூரி வின் பண்ணிச்சு..

..அப்புறம் வாரேன்..

**

chinnakkannan
22nd May 2015, 09:33 AM
**
சென் ட்ரல் சினிமாவில் புதுப்படம் வந்தால் கொஞ்சம் கஷ்டம் தான்.. நேரில் க்யூவில் நின்று வாங்க நிறைய நேரம் நிற்க வேண்டும்.. ராகவேந்திரரோ வேறு யாரோ நினைவில்லை.. தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சொன்னார்கள்..முன்னாலெல்லாம் சைக்கிள் டிக்கட் என்று ஒன்று உண்டு சைக்கிள் கொண்டு போனால் அதற்கு டிக்கட் கிடைக்கும் என..

அப்படி அப்பாவின் கொஞ்சம் கனமான உயரமான ராலே சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்று பார்த்த படம் இன்று போல் என்றும் வாழ்க..

டிபிகல் ம.தி படம்.. எண்ட் டர் டெய்னர்.. ம.தி அரசியலில் குதித்துசூடுபிடிக்க இருந்த கால கட்டம் என நினைக்கிறேன்..

வழக்கம் போல பாடல்கள் ஓஹோ தான்.. ஆனால் .. இந்தப் பாடல் நேற்று த் தேடியதில் அகப்பட்டு ரொம்ப நாளுக்கப்புறம் கேட்டுப் பார்த்ததில் நெஞ்சத்தில் கொஞ்சம் ச்சிலீர் செய்தது.. வாலி ஐயா வரிகள். கேள்விபதில் டைப்பாக இருந்து .வெகு கவித்துவம்.. ம.தி ராதா சலூஜா.. ரொமான்ஸ்..( இதயக்கனி மறக்க முடியுமா)

காதலன் காதலி பாட்டில் வெகு யதார்த்தமான வரிகள்..

மார்கழி பூம்பனி குளிர்கள் கொண்டு
மாலை சூடியதேன்
ஆண்டவன் நீயென வணங்கி நின்று
அவள் ஆண்டாள் ஆனதனால்
*
காவிரி போல் ஒரு உணர்ச்சி வெள்ளம்
உனை கண்டால் பாய்வதென்ன

காலடி ஒசை பிறக்கும் இன்பம்
கானம் பாடுவதால்
*
தாமரைக் கன்னி சூரியன் வந்தால்
தமிழ் போல் ஏன் சிரித்தாள் ( ஹை ரவி விட்டுட்டாரே இந்தப் பாட்டை!)

பூங்குல ராணி நீரினில் ஆட
மஞ்சள் தூவியதால்

*
நீ தொடும் வேளையில் கொதிப்பும் என்ன
எந்தன் நிழலும் சுடுவதென்ன

பெண்மையின் தீபம் கண்களில் ஏந்தி
திருநாள் தேடுவதால்
*
இதயத்திலிருந்து இதழ்கள் வரை அது
ஏதோ ஒரு வகை புதிய கலை

மனப் புயலுக்குப் பிறகு அமுத மழை
அதில் மலர் போல் வளர்வது என்ன கதை...
என்ன கதை...

அது காதல் கதை.. ( நல்ல கதை தான் இல்லியோ) :)

*

https://youtu.be/hLnbxYcYhXk

rajeshkrv
22nd May 2015, 09:40 AM
ஒருவர் ந.தி திரியில் பாகப்பிரிவிணை பற்றி பேச இங்கே 4’ம் பாகம் பிரித்தே ஆகிவிட்டது. ஆம் 4’ம் பாகம் இனிதே ஆரம்பம்..திருவிளையாடல் ஆரம்பம்..
ஆம் சி.கவின் குறும்பும் தொந்தி கணபதியின் ஆசீர்வாதமும் .. நல்ல இதயங்களின் வாழ்த்துக்களுடன் தொடங்கியாயிற்று.

எல்லாவற்றையும் விட நிஜமாகவே திரி கொஞ்சம் சோர்வடைந்த நிலையில் நிலவின் ஒளி வீசி வலைக்கு வெளிச்சம் தந்தவர் கல் நாயக் .. நிச்சயம் பாராட்ட பட வேண்டியவர்.. அதை இங்கே அழகாக செய்த சி.கவிற்கு மனமார்ந்த நன்றி.

வழக்கம் போல் வாசு ஜி, ராகவ் ஜி, ரவி, கலைவேந்தர் மற்றும் கோபால் இங்கே நிறைய வர வேண்டும் அருள் மழை பொழிய வேண்டும்
செல்ல அங்கிளும்(ராஜ்ராஜ்) ஜுகல் பந்தி விருந்து அளிக்க வேண்டும்.
இந்த திரியும் மள மளவென பக்கங்களில் மட்டுமல்லாமல் நட்பும் வளரவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

வாழ்த்துக்கள் சி.க

Richardsof
22nd May 2015, 09:40 AM
மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

துவக்கிய இனிய நண்பர் திரு சின்ன கண்ணனுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் .உங்கள் கவிதை நடையில் மேலும் மதுர கானம் சிறப்புற பயணம் செய்ய ஆவல் .

இந்த இனிய நாளில் திரியின் தலைப்புக்கு ஏற்ற எண் 4உடன் பொருந்துகின்ற ஓர் இனிய பாடலை பதிவிடுகிறேன் . இளமை திலகம் மக்கள் திலகம் உலக பேரழகன் எம்ஜிஆர் அவர்களின் சூப்பர் நடனமும் பாடலும் நம்மை மயக்கும்.
https://youtu.be/Zqvk5Vtw3Ts

rajeshkrv
22nd May 2015, 09:40 AM
கல் நாயக். மூன்றாம் பாகத்தில் மலையாளப்பாடல்களை கேட்டு மகிழ்ந்து பாராட்டியமைக்கு நன்றி.

rajeshkrv
22nd May 2015, 09:42 AM
சின்ன கண்ணன் பெயருக்கேற்ற பாடல்
உமக்குத்தானய்யா சின்ன கண்ணா ...
https://www.youtube.com/watch?v=YGe3M47Vmvg

rajeshkrv
22nd May 2015, 09:55 AM
பிண்ணனி இசையில்லாத ஒரு பாடல். இசையரசி குரல் மட்டுமே

https://www.youtube.com/watch?v=-isZJOFXsDQ

chinnakkannan
22nd May 2015, 10:21 AM
ராஜேஷ் எஸ்வி.சார்.. மிக்க நன்றி.. வெரி ஃபாஸ்ட் ஃபீட் பேக்.. ( வயிறெல்லாம்கலங்கினது எனக்குத் தான் தெரியும்)

*

சின்னக் கண்ணனுக்குள்ளே வந்த செல்லக்கண்ணனே எந்தன் சின்னக்கண்ணனே..
கண்ணா உந்தன் பேர் சொல்லியே குயில் ஒன்று கூவுது

உந்தன் பெயர் சொன்ன பூமரம் பனிப்பூவைத் தூவுது..
குழலோசை போலுந்தன் குரல் கேட்கும் போது

உருகாத ஓர் நெஞ்சம் உலகெங்கும் ஏது..
நல்ல பாட்டு ராஜேஷ் தாங்க்ஸ்..

*
எஸ்வி சார்..

மறுபடியும் எஞ்சாய் பண்ணிக் கேட்டேன் பார்த்தேன்.. சரியான குறும்புப் பாட்டு..தில் குஷியாய்டுத்து.. நன்றி..
*
மாடியிலே காலெடுத்து மடியிலே விழுந்தேன்
மாளிகைக்கு நன்றி சொல்வதா..
இல்லை ஜாடியிலே தேனெடுத்துத் தந்தாளே
அந்தத் தங்கத்துக்கு நன்/றி சொல்வதா
*
பருவம் பழகாதது பல நாள் தனியானது
எல்லாம் புதிதானது..ஆஹா எதையும் அறியாதது..
*
அச்சமும் நாணமும் தடுக்கும்
அதில் ஆசையும் தேவையும் இருக்கும்..
*
என்னா சீன்ஸ்..!
*

ராஜேஷ் மேற்சொன்னது எழுதி போஸ்ட் பண்ண வந்தால் பின்னணி இசையில்லாத பாட்டு.. வாவ் சுசீலாம்மா குரல்..
நாமணக்கப் பாடியே நன்றாக நீந்துகின்ற
தாமரைகள் மின்னும் தளம் ( குளம்) :)

சரிங்க நான் குளிக்கலைன்னு உங்களுக்கு எப்படித் தெரியும் :)

chinnakkannan
22nd May 2015, 10:38 AM
வாழ்க்கையில் இளமைப் பருவத்தில் மட்டும் எல்லாவிதமான கேள்விகளும் எழும்புகின்றன..(ஆரம்பிச்சுட்டான்யா ஆரம்பிச்சுட்டான்)

அதுவும் இந்த கெமிஸ்ட்ரி வாலிபப்பருவத்தில் செய்யும் வேலை இருக்கிறதே நிறைய கேள்வி எழுப்பி விடைகாணத் தவிக்க வைக்கும்..

தூங்காமல் ஏங்கிநிற்க தென்றலுமே தூண்டிவிட
பூங்கொடியின் நெஞ்சத்துள் பூ!

*
இங்கே ஸ்ரீகாந்துக்கும் ஒரு கேள்வி..ராஜஸ்ரீயோ தில்லாப் பதில் சொல்கிறார்..


பூங்கொடியே பூங்கொடியே பூவிருந்தால் தருவாயோ
பொன்னைக் கொண்டு மாலை கட்டி மாலையிட வருவாயோ

பூந்தோட்டம் நல்ல பூந்தோட்டம்
ஒரு புடவையில் ஒளிந்தது மெதுவாக
பார்க்கவோ பறிக்கவோ கேட்கவோ அணியவோ
பெண்ணின் மனதிலும் எண்ணம் உள்ளது கண்ணன் சொன்னால்
போதாதோ போதாதோ

கண்களிலே நாணம் வரும்
கைகளினால் மூடிவிட்டேன்

கைகளினால் மூடிவிட்டால் காதலுமா ஓடிவிடும்
கன்னங்களில் என்னென்னவோ மின்னல் விளையாடும்

தாங்கவோ தழுவவோ
உண்ணவோ உறங்கவோ

வருஷம் மாசம் போகப் போக
வளரும் ஆசை தீராது தீராது (பொய்!)

பூமியிலே வானம் வந்து போதைகொண்டு
சேர்ந்துவிடும்
சேர்ந்தவுடன் மழைபொழியும்
பூமிஎங்கும் வெள்ளம் வரும்

வெள்ளத்தினால் பிள்ளைகள் போல் முல்லை விளையாடும்

எடுக்கவோ
தொடுக்கவோ
கொடுக்கவோ
முடிக்கவோ ஓஓ

பெண்ணின் மனதிலும் எண்ணம் உள்ளது கண்ணன் சொன்னால்
போதாதோ போதாதோ

(அதான் சொல்லிட்டேன்லம்மா) :)

**

https://youtu.be/fuSfooy7rwA


ஸ்ரீகாந்த் ராஜஸ்ரீ – ஸ்கூல் மாஸ்டர் (வாசுங்க்ணா..போட்டாச் இல்லையே!)

uvausan
22nd May 2015, 10:55 AM
"இந்த திரியும் மள மளவென பக்கங்களில் மட்டுமல்லாமல் நட்பும் வளரவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்"

உயர்ந்த கருத்துக்கள் ராஜேஷ் . உண்மையில் எல்லோருடைய வேண்டுதலும் இதுவாகத்தான் இருக்க முடியும் .

Ck - இனிதான ஆரம்பம் -கணேசனை வேண்டிக்கொண்டு ஆரம்பித்துள்ளீர்கள் - எந்த விக்னங்களும் வரவே வராது . கவைப்படாமல் மேலேசெல்லுங்கள் - வாழ்த்துக்கள் .

திரு கல்நாயக் - உங்களுக்கு நன்றி சொல்லாமல் இந்த திரியில் முதலடி எடுத்து வைப்பது சரிப்பட்டு வராது - 3ஆம் பாகத்தை ஒருவருடன் இருவராக தாங்கிப்பிடித்துக்கொண்டு நிலவின் குளிமையை எங்களுக்கு தந்து உள்ளீர்கள் - 1000 கரங்கள் கூப்பி உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் .

ராஜேஷ் : நீங்கள் கை ராசிக்காரர் - நெய்வேலியில் ஒளிந்து இருந்த நெய் மனத்தை மீண்டும் இந்த திரியில் வரவழைத்து விட்டீர்கள் - இதற்கே ஒரு பெரிய சபாஷ் உங்களுக்கு போட வேண்டும் .

JamesFague
22nd May 2015, 11:02 AM
Naya(k)gan illaiyendral Kannan Ethu.


Mr CK.

Started the thread with a melody of NT. Now it is your turn to rock as usual.


Regards

kalnayak
22nd May 2015, 11:03 AM
சீனா கானா,

முதலில் வாழ்த்துகள் மதுர கானத் திரி பாகம் 4-ஐ கவிதை மணக்க மணக்கத் துவக்கியதற்கு.

பயந்த மாதிரியே பண்ணிவிட்டீர்களே!!!

- என்ன இப்படி சொன்னதற்கு மறுபடியும் பயந்து விட்டீர்களா? இல்லை, திரியை துவக்குவதை நினைத்து பயந்து இருந்தீர்களே - நல்ல படியா துவக்கணுமேன்னு. ஆதி மூல கணபதியை கும்பிட்டு துவக்கின பின்னாடி நீங்க பயந்தது போலவே நல்ல படியாக துவக்கி விட்டீர்கள்தானே என்று கேட்டேன். அந்த குஷியில்தான் கவிதை மழையாய் பொழிகிறீர்கள். அத்தோடு உங்கள் பின்னால் நினைவுகளும் கலந்து கட்டி கவிதையும், பாடலும்... தூள்.

மற்றபடி நான் அதிகமாக பங்கெடுத்தது மதுரகானத் திரியின் 3-ஆம் பாகத்தில்தான். உண்மை. வாசுவும் நீங்களும் தந்த உற்சாகம்தான் காரணம். ராஜேஷ், ரவி, கோபால், ராஜ்ராஜ் , கலைவேந்தன், சித்தூர் வாசுதேவன், முரளி, ராகவேந்தர், கோகுல் போன்றோர் அவ்வப்போது கொடுத்த ஆதரவும் இதற்கு காரணம். யாரையாவது குறிப்பிடாமல் இருந்தால் மன்னிக்கவும். கிட்டத்தட்ட 500 பதிவுகள் இட்டிருப்பேன் என்று நினைக்கிறேன் - 11 வருட மைய அனுபவத்தில், 70 சதவீதத்திற்கு மேல் இத்திரியில்தான் பதிந்திருக்கிறேன். பாராட்டிய அனைவருக்கும் தலை வணங்குகிறேன்.

நடிகர் திலகம் திரியில் நிறைய எழுத வேண்டுமென்று ஆசை இருந்தாலும் அங்கே இருக்கும் பெரிய ஜாம்பவான்களை பார்த்து நான் திமிங்கலங்களின் முன் சிறிய ஒரு மீனாய் உணர்கிறேன் அத்துடன் அந்த திரி சற்றே உணர்ச்சி வயப்படக் கூடியவர்கள் நிறைந்தது. அதனால் பயமாயும் இருக்கும். இந்த திரியில் உங்களைப் போன்ற திமிங்கலங்களுடன் சிறிய மீனாய் உற்சாக நீச்சல் அடிக்க முடிகிறது. அதற்காக நான் அனைவருக்கும் கடமைப் பட்டுள்ளேன்.

சரி உங்களுக்காக இந்த சின்ன கண்ணன் பாடல்:

https://www.youtube.com/watch?v=sgtNN2oflUA

மேலிருக்கும் பாட்டை விட அழகான பாடல் இதோ:

https://www.youtube.com/watch?v=Fo_dKWe-MoE

Gopal.s
22nd May 2015, 11:09 AM
என்ன ரவி,

கொதிக்கும் எண்ணெய் தொட்டி தயார் செய்து கொண்டு, ஒவ்வொரு மலராக எண்ணி கொண்டு வர ஆள் போட்டு ஆயிரம் கரங்கள் நீட்டி ஆயிரம் பதிவுகளுக்காக குலோத்துங்கன் போல காத்திருந்தேன். நீங்கள் ,அதற்குள், தப்பித்து கருவின் கருக்குள் போய் விட்டீகள். ஆவலுடன் உங்கள் புது கருவுக்காக காத்திருக்கிறோம்.

Gopal.s
22nd May 2015, 11:12 AM
சின்ன கண்ணா,

கணபதி தோத்திரம்(வம்பில்லாமல்), எனக்கு பிடித்த இதயம் பேசினால் என்ற அபூர்வ பாடல் போட்டு ,ஆவலுடன் ராஜேஷ் சொன்னது போல,கத்தியுடன் காத்திருந்த என்னை,மலர் செண்டு கொடுக்க வைத்ததற்கு ,வாழ்த்துக்கள்.

chinnakkannan
22nd May 2015, 11:33 AM
ரவி.., //எந்த விக்னங்களும் வரவே வராது . கவைப்படாமல் மேலேசெல்லுங்கள் - வாழ்த்துக்கள் // மிக்க நன்றி.. கருவை ப் பற்றிய தொடர் ஸ்டார்ட்...

எஸ்.வாசுதேவன்.. நன்றி

கல் நாயக் நன்றி

சின்னக்கண்ணன் தோட்டத்துப் பூவாக ஒரு தேவதை வந்தாள் அழகாக.. நான் கேட்டிராத பாடல் கல் நாயக் அழகு.. நன்றி..சின்னச் சின்னக்கண்ணனுக்கும் அழகான பாட்டு நன்றி

கோ, மலர்ச்செண்டுக்கு மிக்க நன்றி..( ஆண்டவா தொடர்ச்சியா வாங்கணுமே)
*
(தங்கச் சலஙகை கட்டித் தழுவுது பூச்செண்டு!

https://youtu.be/DyqNnDKWTjE

ஓடும் நதி.... ரவி ஷீலா) ப்ரிண்ட் தான் சரியில்லை

kalnayak
22nd May 2015, 11:38 AM
சீனா, கானா

நான் எழுதின நிலாப் பாடல்களை எல்லாம் காணாமல் போகச் செய்த நீங்கள் போட்ட நிலாப் பாடல் யாரும் கண்டார்களா இல்லையா தெரியவில்லை. நான் கண்டேன். பயந்தேன். வெளியே சொல்லவில்லை. எனது நிலாப் பாடல்களை வேண்டுமென்றே தொடர்ந்தேன். அதுதான் அன்பே ஆருயிரே படத்தில் நடிகை நிலா நடித்த மயிலிறகே என்ற பாடல்தான். அதிலிலேயே தெரிந்துவிட்டது நீங்கள் எவ்வளவு பயங்கரமான ஆள் என்று. இப்போது பூவின் பாடல்களில் பூமாலை பாடல்கள் எழுதிக் கொண்டிருந்தேன். நீங்கள் எப்படி கவிழ்ப்பீர்கள் என்று பயந்து எதிர்பார்த்தேன். நீங்கள் பாகம் 4-ஐ துவக்குவதில் கவனமானதால் யோசிக்கவில்லை என்று நினைக்கிறேன். நான் எதிர்பார்த்த வழிகள் இவையாக கூட இருந்திருக்கலாம்: பூமாலை படப் பாடல்களை போட்டிருக்கலாம். இல்லை 'பூ' படப் பாடல்களை போடலாம். யாரும் எதிர்பார்க்காத முறையில் கவிழ்ப்பவராயிற்றே. நீங்கள் எப்படி என் பூவின் பாடல்களுக்கு ஆப்பு வைப்பீர்கள் என்று நீங்களே சொல்லி விடுங்கள். நீங்கள் ஆப்பு வைத்தாலும் நான் தொடர்வேன் என்பது தெரிந்த கதைதானே.

kalnayak
22nd May 2015, 12:34 PM
என்ன ரவி,

கொதிக்கும் எண்ணெய் தொட்டி தயார் செய்து கொண்டு, ஒவ்வொரு மலராக எண்ணி கொண்டு வர ஆள் போட்டு ஆயிரம் கரங்கள் நீட்டி ஆயிரம் பதிவுகளுக்காக குலோத்துங்கன் போல காத்திருந்தேன். நீங்கள் ,அதற்குள், தப்பித்து கருவின் கருக்குள் போய் விட்டீகள். ஆவலுடன் உங்கள் புது கருவுக்காக காத்திருக்கிறோம்.

கோபால்,

நீங்கள் குலோத்துங்கன் என்று சொல்லாமல் இருந்திருந்தால் உங்களை ஒட்டக்கூத்தர் என்று நினைத்திருப்பார்கள்.

chinnakkannan
22nd May 2015, 01:31 PM
*
நேற்று க் கொஞ்சம் சாவைப் பற்றிய நினைப்பு வந்தது எனக்கு..

காரணம் இரண்டு வெண்பாக்கள்:

முதலாவது எனது எழுத்தாள நண்பர் இரா. முருகன் அவர்கள் எழுதியது:

பாலுக் கொருதினம் பட்டுடுத்திச் சுற்றத்தார்
மேலுக்குத் துக்கம் நடித்தழ நாலுநாள்
இந்துவிலா பிச்சுவரி இத்தணூண்டு ஃபோட்டோவும்
வந்தால் முடியும் இறப்பு

அவர் பாட்டிற்கு எசப்பாட்டாக திரு. கிரேஸி மோகன் எழுதியது

"செத்தாத்தான் என்னஒய் ! சேதாரம் சட்டைக்கே
பத்தானால் மாசம் பிறப்பிருக்கு-சொத்தா!
உசுருனக்கு மூடா ,உயிலெழுதிச் செல்ல
மசிரேபோச் சென்று மடி "

நானும் எழுதிப் பார்த்தேன்..

மடியில் சிரம்வைத்து மாய்ந்தது போக
நடித்திருந்த வாழ்க்கை நகரும் - துடிப்பாகப்
பொங்கிப் புனர்ஜென்மம் போகுமென் றெண்ணியே
இங்கிருந்து செல்வோம் இனி

ஆக பிறந்த தேதி தெரியும்.. மறையும் தேதி தெரியாது..ஏதோ போய்க்கொண்டிருக்கிறது வாழ்க்கை..

*
இந்தப் பெண்ணிற்கும் அப்படித் தான்… படித்தவள் புரொஃபசர்..அ வள் விரும்புவதும் ஒரு ப்ரொபஸரை..ஆனால் அவருக்கோ கான்ஸர்..சில நாட்களில் ஜீவிதம் முடியப் போகிறது..

ஆனால் அவளால் காதலிக்காமல் இருக்க முடியவில்லை..உன்னுடன் இருக்கிறேனே.. என்னுடல் பொருள் ஆவியெல்லாம் தருகிறேனே ஏற்றுக்கொள்..

ம்ஹூம்.. முடியாது..

அப்படியெல்லாம் சொல்லாதே எனச் சொல்லிப் பின் என்னவெல்லாமோ பேசி அவனுடன் இருந்து விடுகிறாள்..
இது நம்மவரில் வரும் கமல் கெளதமி பார்ட். ப்ரொபஸர் ஒரு முரட்டு மாணவனைத் திருத்தும் கதை மெயின் லைன்.. ஆனால் சைடாக வரும் காதல் மிக அழகாக ஆழமாக ப் படம்பிடிக்கப் பட்டிருக்கும்..

இந்தப் பாடலும் தான்..

படத்தில் பொசுக்கென முடிந்துவிடும் பாடலை இன்று தான் ஆடியோவில் கேட்டேன்.. நிறைய்ய இருக்கிறது..


*

உடையோடு பிறக்கவில்லை
உணர்வோடு பிறந்துவிட்டோம்..
வாழ்வின் தேவையை
வாழ்ந்து போகவந்தோம்

வாடி பூங்கொடி
பிரம்மன் படைப்பில்
எந்தன் பங்கு நீயடி
உன் பங்கு அது நான் தானே

ஆஹா மன்மதா
ரத்தம் சதையில் இத்தனை சொர்க்கம் உள்ளதா

ஆண் பெண்ணின் இந்தத் தேடல் தான்
தீராதா..
கண்டேன் காதலா
இங்கே மட்டும் துன்பம் கொண்ட இன்பமே
இன்றோடு உயிர் போனாலும் வாழ்வேனே..

வா வா முல்லையே..

சாவை வெல்லும் சங்கதி இதுபோல் இல்லையே
நூறாண்டு என்னை நீ வாழவைத்தாயே..

இடையோடு தொடுவதற்கு
இடைக்கால தடைஎதற்கு
இது பாதி வேளை தான்
மீதி நாளை தான்..
*
சுஜாதா மோஹன், எஸ்.பி.பாலசுப்ரமணியம்.. சென்சார் செய்யாத ஆடியோ

https://youtu.be/RozF-zKtX_k

தனியாக வீடியோ பாட்டுக் கிடைக்கவில்லை..

பாடலுக்கு முன்னால் கமல்,கெளதமி பேசிக்கொள்ளும் ஸ்வீட் நத்திங்க்ஸ் கொள்ளை அழகு.
*
(என்ன மன்ச்சு இப்ப வந்திருக்க..

சாவுன்னு ஆரம்பிச்சு ரொமான்ஸ் பாட்டுப் போட்டிருக்கயே.. உன்னை…)

பின்ன வாரேன்..

kalnayak
22nd May 2015, 02:07 PM
நீண்ட குறுந்தொடர். பூவின் பாடல்கள் 9: "பூமாலை போடும் வேளை"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ~~~~
அஜித் படமாங்க. பகைவன்னு பேராங்க. நாயகி பேரு அஞ்சலா ஜாவேரியா?

ஆட தயாரா இருக்கீங்களா. சரி ஆடிக்கோங்க.

https://www.youtube.com/watch?v=cKY5Xn685mg

இதுக்கு மேல தெரிஞ்சவங்க சொல்லுங்க.

vasudevan31355
22nd May 2015, 02:08 PM
சி.க,

முதலில் வாழ்த்துக்கள். என்ன தெளிஞ்சுட்டீங்களா?

நடிகர் திலகம் திரியில் பதிய ஒரு பெரிய பதிவு தயார் செய்து கொண்டிருந்ததால் மெய்மறந்து அதிலேயே மூழ்கி விட்டேன். (நமக்குதான் நடிகர் திலகம் என்றாலே நானூறு நாளுக்கு பசி, தூக்கம் இருக்காதே)

அதான் கொஞ்சம் லேட்! ஹி ஹி ஹி...

அமர்க்களமான துவக்கம். இனிதே ஆரம்பம்.

அந்தக் கணபதியும், எங்கள் கணேசனும் இருக்க வெற்றிக்கு எது பஞ்சம்?

//கொஞ்சம் தொய்வடைந்து சோஓஓஒகமாய் இழை இருந்த போது.. ஹஹஹ..அஹோ வாரும் சி.க எனக் கைகோர்த்து சோர்வடையாமல் மாறி மாறி பதிவு செய்து இழையோட்டத்தை உணர்வோட்டமாய்ச் செய்த கல் நாயக்.. கொஞ்சம் கொஞ்சம் குட்டிக் குட்டிப் பாராவில் சிரிக்க வைத்திருந்தவர், முழுக்கையை மடித்து முழுவீச்சில் இறங்கிப் பதிவுகள் செய்தார்..அதுவும் ஒன்லைன் பஞ்ச்சாய் கடைசியில் எழுதும் ஒருவரியில் ஹி ஹி எனப் புன்முறுவல் தானாகவே முகத்தில் வந்து தொற்றிக் கொள்ளும்.. அவருக்கு நன்றி + மென் மேலும் எழுதிக் குவிக்க வாழ்த்துக்கள்..//

நிஜமான, மெய்யான, நிதர்சனமான உண்மை. நாயக் மூன்றின் நாயகர். நேற்று கிருஷ்ணாவிடம் போனில் உரையாடும் போது இதையேதான் சொன்னேன். நீரும் இன்னொரு கதாநாயகர். ('காளி' ரஜினி விஜயகுமார் போல்) உங்கள் இருவருக்கும், மற்றைய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி! நல்லபடியாக மூன்றை தொடக்கி முடித்த ராஜேஷ்ஜிக்கும் நன்றி!

'இதயம் பேசினால்' அற்புதமான பாடல். வாணியின் முத்திரைகளில் சிறந்த ஒன்று. அதை ரசித்த உமது ரசனை அதனினும் பெரிது.

அப்புறம் இன்னொரு மகிழ்ச்சியான செய்தி. நம் எல்லோருக்கும் நல்லவரான நமதருமை கிருஷ்ணா இன்னைக்கு வரார்.:redjump: 'டும் டும் டும்'... அவரை இப்போதே வரவேற்கத் தயாராவோம். நேற்று அவரிடம் பேசி விட்டேன்.

சி.க,

சந்தோஷம்தானே! அப்புறம் போட்டாச்சு போட்டாச்சு:)

கிருஷ்ணா! வருக! வருக!

vasudevan31355
22nd May 2015, 02:09 PM
கல்நாயக்,

வருக! தருக! மூன்றின் நாயகர் அல்லவோ தாங்கள். வாழ்த்துக்கள்.

Russellzlc
22nd May 2015, 02:25 PM
இங்கு நல்லாயிருக்கணும் எல்லாரும்
நலம் எல்லாம் விளையணும் எந்நாளும்

மதுரகானம் திரியின் 4-வது பாகத்தை துவக்கியிருக்கும் நண்பர் சின்னக்கண்ணனுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள். நீங்கள் துவங்கியிருக்கும் இந்த திரி அபூர்வ பாடல்களாலும் அரிய தகவல்களாலும் நிரம்ப வாழ்த்துக்கள்.

நீங்கள் குறிப்பிட்டது போல கடந்த பாகத்தில் திரியை வெற்றிகரமாக கொண்டு சென்றதில் கல்நாயக்கின் பங்கு மகத்தானது. அவருக்கும் வாழ்த்துக்கள்.

சின்னக்கண்ணன் தொடங்கியிருக்கும் இந்த திரியில் பங்கு கொள்வோர், படித்து ரசிப்போர் மட்டுமின்றி எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்த்தி இந்த பாடலை தரவேற்ற வேண்டுகிறேன்.

ஒருதாய் மக்கள் படத்தில் இடம் பெற்ற திரு.வாலி அவர்களின் பாடல்.

இங்கு நல்லாயிருக்கணும் எல்லாரும்
நலம் எல்லாம் விளையணும் எந்நாளும்
நாம ஒன்னோடு ஒன்னாக சேரணும்
இந்த மண்ணெல்லாம் பொன்னாக மாறணும்

... எனக்கு ரொம்ப பிடித்தமான பாடல்.

பாடலில் மக்கள் திலகம், சில்க் ஜிப்பா, தார் பாய்ச்சி கட்டிய ஜரிகை வேட்டியுடன் மிக அழகாக இருப்பார். போடும் ஸ்டெப்ஸ் அமர்க்களம். ஓரிடத்தில் 4 பேர் குந்தியபடி உட்கார்ந்திருக்க எந்த பிடிமானமும் இல்லாமல் அடுத்தடுத்து பச்சைக்குதிரை மாதிரி அவர் தாண்டிச் செல்வது வியப்பு.

‘உச்சி வெயில் சூடுபட்டு உடம்பு கருத்தது
இந்த ஊருக்காக உழைச்சு உழைச்சு கண்கள் சிவந்தது
கருப்பும் சிவப்பும் கலந்திருக்கிற மேனியப்பாரு (அப்போது மக்கள் திலகம் திமுகவில் இருந்தார்)
நம்ம காலம் இப்போ நடக்குதுன்னு கூறடி கூறு (நாளை முதல்வராக பதவியேற்க உள்ள செல்வி. ஜெயலலிதா அவர்களுக்கு பொருத்தமான வரிகள். ஆளுநரை சந்தித்து அமைச்சர் பட்டியல் கொடுத்தாச்சு)

ஊரும் உறவும் சேர்ந்திருந்தா உசந்து வாழலாம்
எதையும் உனக்கு மட்டும் சேத்து வச்சா உலகம் ஏசலாம்
காத்தும் மழையும் யாருக்கும்தான் பொதுவில் இருக்குது
அந்த கடவுளுக்கும் பொதுவுடமை கருத்து இருக்குது

........என்ன அழகான, கருத்துள்ள வரிகள்.

இன்றுபோல் என்றும் வாழ்க பாடலை தரவேற்றியதற்காக நன்றி சின்னக்கண்ணன். அதற்காக உங்களுக்கு இதயத்தில் இருந்து இதழ்கள் வழியே நன்றி கூறுகிறேன். இதைப் பார்த்ததும் எனக்கு நினைவு வந்தது.

இன்றுபோல் என்றும் வாழ்க படத்தின் 100வது நாள் விழா, சென்னை உட்லண்ட்ஸ் ஹோட்டலில் நடந்தது. அப்போதைய ஆளுநர் திரு.பிரபுதாஸ் பட்வாரி விழாவில் கலந்து கொண்டு புரட்சித் தலைவர் உட்பட கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கினார். மக்கள் திலகத்தின் அழகையும் இளமையையும் வியந்து பாராட்டினார்.

அந்த விழாவில் திரு.வாலியும் கல்கண்டு பத்திரிகை ஆசிரியர் திரு. தமிழ்வாணனும் கலந்து கொண்டனர். தமிழ்வாணன் அவர்கள் திரு.வாலியை தாக்கியும் கவியரசர் கண்ணதாசனை தூக்கியும் எழுதுவார். ஒருமுறை கல்கண்டு பத்திரிகையில் கேள்வி பதிலில் இருவரையும் ஒப்பீடு செய்து ‘கண்ணதாசன் யானை, வாலி ஒரு கொசு’ என்று குறிப்பிட்டார்.

இந்த விழாவில் கலந்து கொண்டபோது, திரு. வாலியிடம் திரு.தமிழ்வாணன் சகஜமாக பேசிக் கொண்டிருந்துவிட்டு, பின்னர், ‘உங்களை நான் கொசு என்று குறிப்பிட்டது பற்றி வருத்தப்பட்டீர்களா?’ என்று கேட்டார். அதற்கு வாலி அளித்த பதில்...

‘வருத்தப்படவில்லை. ஆனால் ஒன்று மட்டும் சொல்கிறேன். கொசு கடித்தால் யானைக்கால் வரும்’.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

chinnakkannan
22nd May 2015, 03:06 PM
வாசுங்க்ணா.. வாங்க.. லேட்டானாலும் பரவாயில்லை..ஏதோ எஸ்.பி.பி யோட வருவீங்கன்னு நினச்சேன் ம்ம்.. ந.திக்கா.. ஒண்ணு அங்கிட்டு இன்னொண்ணு இங்கிட்டு ஓகேயா

//கொசு கடித்தால் யானைக்கால் வரும்// :) கலைவேந்தன் வழக்கம்போல் பஞ்ச்..உங்கள் பாட்டு தான் தேடினேன் கிடைக்கவில்லை

பாராட்டிய வாசுசார் கலைவேந்தனுக்குத் தனித்தனியாக நன்றிகள்..:)

கடலோரம் வீடு கட்டி கற்பனையால் சுவரெடுத்து
காதலினால் வாசல் வைத்துக் காத்திருப்பேன்

சிவகுமார் லஷ்மி கஸ்தூரிதிலகம்..

https://youtu.be/-qJOcjdxij8

i think ithu pOttach illai ena ninaikirEn :)

gkrishna
22nd May 2015, 04:55 PM
அனைவருக்கும் இனிய வணக்கம்

நீண்ட நாள் கழித்து நேற்று இரவு நம்மவர், நல்லவர், குணக்குன்று நெய்வேலியார் அவர்களிடம் தொலைபேசியில் உரையாடிய போது
மதுர கானம் திரி மூன்றாம் பாகம் இனிதே முடிந்து நான்காம் பாகம் மதுரை தங்கம் சி கே துவக்குகிறார் என்பது அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.அமர காவியம் பாடலுடன் இனிதே துவங்கி உள்ள இந்த பாகம் அமர காவியமாக விளங்க எல்லாம் வல்ல அந்த கணேச பெம்மானையும் ,ராமச்சந்திர பிரபுவையும் வணங்குகிறேன்.

வெண்ணிற ஆடை மூர்த்தியின் ஒரு வசனம் நினைவிற்கு வருகிறது.
குமரன் சன் ஒப் மகாலட்சுமி திரை படத்தில் இடம் பெற்றது.
'துவண்டு கிடந்த வியாபாரத்தை செங்குத்தாக தூக்கி நிறுத்திட்டே " என்று விவேக்கிடம் கூறும் போது அரங்கமே அலறும்.

அதே போன்று சற்று தொய்வு அடைந்த மூன்றாம் பாகத்தை எந்த மாச்சரியதிற்கும் ஆட்படாமல் தொடர்ந்து தூக்கி நிறுத்திய கல்நாயக் ஜி ,சி கே ஜி மற்றும் உறுதுணை புரிந்த ரவி ஜி ,கலை ஜி ,ராஜேஷ் ஜி,ஜுகல் பந்தி புகழ் பெரியவர் ராஜ் ஜி எல்லோருக்கும் வாழ்த்துகள். திக்கெட்டும் ஒலிக்கட்டும் மதுர கானம் .

உடன் நெய்வெலியாரின் 'ஜோதி' வேறு துணை இருக்க மதுர கானத்தின் வெற்றிக்கு யார் தடை போடுவர்.

மேலும் நண்பர் சி கே ஜி 7000 பதிவுகள் இட்டு தொடர்ந்து வெற்றி நடை போட்டு கொண்டு இருக்கிறார் என்பது அறிந்தும் அளவிலா ஆனந்தம் .
கொண்டேன். அவருக்கு சிறப்பு வாழ்த்துகள்.

வாழ்க தமிழ் வளர்க கலை .

https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcT3ImYZar4XIyRzThY_rRF0tKWPMNmQr zUrKrxkzmcbo5bDC16hSQ

குணக்குன்று நெய்வேலியாருக்கு ஒரு விண்ணப்பம் 'கீழ் கண்ட படத்தில் இருக்கும் 'குன்று' மன்னிக்கவும் நடிகையை பற்றி சிறு குறிப்பு ஒன்று வரையவும் :) மேற்படி படத்தில் குதிரை ஒலி மூர்த்தி-ஜோதியின் மகளாகவும் விவேக்கின் காதலியாகவும் வருவார்

https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcRyvFI4GEVJv_AGaXp-8yBeVo9K4LusQKJ4O8v3jOv4-m_wrXgHLg

Russellzlc
22nd May 2015, 05:18 PM
(சின்னக்) கண்ணனுக்கும் கிருஷ்ணா(சாரு)க்கும் வாழ்த்துரைப்போம் பாடி

சின்னக்கண்ணன், பாடலை எனக்காக தேடியதற்கு நன்றி. கிடைக்காவிட்டால் பரவாயில்லை. இருந்தாலும் புதிய திரியின் முதல் நாளில் நான் சொன்ன பாடலை தரவேற்ற முடியவில்லை என்ற குறை வேண்டாம். இந்தப் பாடல் கிடைக்கும் என்று நினைக்கிறேன். அருமையான பாடல். வாசு சார் விட்டிருக்க மாட்டார்.

திருமால் பெருமை படத்தில், ‘கண்ணனுக்கும் கள்வனுக்கும் பேதமில்லை தோழி...’ பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். திருமங்கை ஆழ்வாராக நடிகர் திலகம் திரு.சிவாஜி கணேசன் அவர்கள் சிறப்பாக நடித்திருப்பார்.

அந்தக் கண்ணனும் சரி, நீங்களும் சரி திருடர்கள் என்பதில் பேதமில்லைதான். ஆனால், அவன் திருடியது வெண்ணையை. நீங்கள் திருடுவது உள்ளங்களை. அன்பால் உள்ளங்களை திருடுவதும் நல்லதுதான். அதனால், புதிய திரியை துவங்கியுள்ள உங்களுக்காக....

‘நல்லதற்கு திருடுவதும் நாணயம்தான் தோழி
அதை நாட்டி வைத்த (சின்னக்) கண்ணனுக்கு வாழ்த்துரைப்போம் பாடி’

கிருஷ்ணா சார், எவ்வளவு நாளாகி விட்டது உங்களை சந்தித்து. மிக்க மகிழ்ச்சி.

கண்ணனும் கிருஷ்ணனும் ஒன்றுதானே. வருகை தந்துள்ள கிருஷ்ணா (சாருக்கும்) வாழ்த்துரைப்போம் பாடி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

gkrishna
22nd May 2015, 05:28 PM
(சின்னக்) கண்ணனுக்கும் கிருஷ்ணா(சாரு)க்கும் வாழ்த்துரைப்போம் பாடி

கிருஷ்ணா சார், எவ்வளவு நாளாகி விட்டது உங்களை சந்தித்து. மிக்க மகிழ்ச்சி.

கண்ணனும் கிருஷ்ணனும் ஒன்றுதானே. வருகை தந்துள்ள கிருஷ்ணா (சாருக்கும்) வாழ்த்துரைப்போம் பாடி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

வாழ்த்திற்கு மிக்க நன்றி கலை சார். என்றும் தொடர வேண்டும் நமது நட்பு

https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcQm35de25Uke8D8pXqVNFLSGk5gWcRGa 8TUZ6lBB_qsmj3r3c3c

uvausan
22nd May 2015, 06:19 PM
திரு கிருஷ்ணாஜி , நல் வரவு . உங்களை இங்கு மீண்டும் அழைத்து வந்த வாசுவிற்க்கும் , அவரை மீண்டும் இங்கு அழைத்து வந்த பாகம் , அந்த மூன்றை திறந்து , நெய்வேலியை உடைத்து , அதை பொது உடமையாக்கிய ராஜேஷ் அவர்களுக்கும் உங்கள் வரவு மூலம் மீண்டும் நன்றி சொல்ல கடமைப்பட்டுருக்கிறோம் .

நான்காம் பாகம் கலை ( அவர்களின் அருமையான பதிவுகள் மூலமும் ) கட்ட ஆரம்பித்து விட்டது - ஒரு பக்கம் நிலவின் அரசாட்சி , பூக்களின் புன்சிரிப்பு , மறு பக்கம் 7000 த்தை எட்டி பிடித்தவரின் பேனாவின் ( சாரி மௌஸ் இன் ) விளையாட்டு , -" பாலாவின் " பூகம்ப பதிவுகள் , திலகங்களின் சங்கமம் --- இதன் நடுவில் எந்த பக்கமும் வழித்தெரியாமல் தவிக்கும் நான் போடும் பதிவுகள் - இவைகளை ஒன்றாக இணைய வைக்கும் திறமை உங்கள் புல்லாங்குழலில் தான் உள்ளது ..

அன்புடன்

Richardsof
22nd May 2015, 06:21 PM
WELCOME KRISHNA SIR

https://youtu.be/YTM_u8xjTEI

RAGHAVENDRA
22nd May 2015, 06:42 PM
சி.க. சார்
பாகம் நான்கினை வெற்றிகரமாகத் துவக்கி கிருஷ்ணாவையும் வரவைத்து விட்டீர்கள். கண்ணனை நினைத்தால் சொன்னது நடக்கும் என்ற பாட்டு உண்மையாகி விட்டது பார்த்தீர்களா.
தங்களுக்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள்.
பாகம் மூன்றினை மிகச் சிறப்பாக நடத்திச்சென்றதற்கும் உளமார்ந்த பாராட்டுக்கள். நடுவில் கணினியின் கோளாறால் பல நாட்கள் பங்கேற்க முடியவில்லை என்றாலும் மிகவும் விறுவிறுவென பாகம் மூன்று பறந்து விட்டது. இதற்கு பெரிதும் துணை நின்றவர் பெயரில் மட்டும் கல்லை வைத்துக்கொண்டு உள்ளத்தில் மென்மையை வைத்திருக்கும் கல் நாயக் அவர்களே. அவருக்கே பெரும் பங்கு பாராட்டு சேரும். நிலாத் தொடரைத் தொடர்ந்து மலரைத் துவக்கி, மதுர கானம் திரி நிலவும் மலரும் பாட, நினைவில் தென்றலை வீச வைத்தார்.

முதலில் அவருக்குப் பாராட்டாக ஒரு பூப் பாடல்..

இந்தப் பூவின் மனசில் என்னவோ குழப்பம். அதை அவன் அறிவானா தெரியவில்லை. அவனே கேட்கிறான், பூவே என்ன போராட்டம்...நாமும் அறிந்து கொள்ள முயல்வோமே..

குலதெய்வம் ராஜகோபால் அவர்களின் புதல்வர்கள் சம்பத் மற்றும் செல்வன் இருவரும் இணைந்து இசையமைத்து, மறைந்த இயக்குநர் அமீர்ஜான் இயக்கிய ஓடங்கள் படத்திலிருந்து இனிமையான பாடல்...

https://www.youtube.com/watch?v=-6Zn1krKRCc

RAGHAVENDRA
22nd May 2015, 06:44 PM
கிருஷ்ணா ஜீ,
வாருங்கள்.. தாங்கள் இல்லாமல் அந்தக் குசும்பு இல்லாமல்.. திரி மூன்று சற்றே தொய்வில் இருந்தது. இருந்தாலும் சி.க. கல்நாயக் இருவரும் அவர்களுடைய பாணியில் தூள் கிளப்பி விட்டார்கள்.
இனி என்ன... தொடருங்கள்...
ஆவலுடன் காத்திருக்கிறேன்...

RAGHAVENDRA
22nd May 2015, 06:44 PM
கலை..
இதோ நீங்கள் கேட்ட ஒரு தாய் மக்கள் பாடல்..

http://www.dailymotion.com/video/x15opu3_neenga-nalla-irukanum-sug-oru-thaai-makkal-1971_shortfilms

RAGHAVENDRA
22nd May 2015, 06:46 PM
சி.க.
அமர காவியமாய் விளங்குகிறது தங்களின் இணைப்புரை இதயம் பேசினால் ஆயிரம் என்ன லட்சம் கூட பேசும். ஆனால் அதைப் பேச விடவேண்டுமே.. அது நடந்து விட்டால் மனித வாழ்க்கையில் எல்லாமே நல்லதாய் நடந்து விடும்..

vasudevan31355
22nd May 2015, 06:51 PM
ஆஹா! கிருஷ்ணா சார்!

http://www.akilan.8m.net/varuga.gif

http://dingoyoga.com/wp-content/uploads/2014/12/Krishna.jpg

http://img1.sendscraps.com/se/180/006.gif

வாருங்கள். வாருங்கள். அப்பாடி! எவ்வளவு நாட்கள் ஆகி விட்டது? தங்கள் வருகை அப்படியே பாகம் இரண்டை ஞாபகப்படுத்தி விட்டது. சற்று கிள்ளிப் பார்த்துக் கொண்டு பிறகுதான் நார்மலுக்கு வந்தேன். இனி கலகலப்புக்கு பஞ்சம் எது? கேள்விகளுக்கும், பதில்களுக்கும் பஞ்சமேது?

நேற்று இரவு தங்களுடன் கைபேசியில் உரையாடியதும், அப்போது என் வேண்டுகோளை ஏற்று "நாளை நான் கண்டிப்பாக நான்கில் பதிகிறேன்.... சின்னக் கண்ணனை வாழ்த்துகிறேன்" என்று சொன்னதும்தான் நிம்மதியாக உறங்கினேன். அதே போல் உங்களுக்கே உரித்தான பெருந்தன்மையுடன் நீங்கள் இங்கே களம் இறங்கி எங்களை எல்லையில்லாக் களிப்புக் கடலில் மிதக்க வைத்து விட்டீர்கள்.

எல்லாம் கண்ணனின் லீலைகள். அந்த நல்லதையே நினைக்கும் இனிய உள்ளம் தன் கைகளால் புதிய பாகத்தைத் துவங்கியவுடன் என் உயிர்க் கிருஷ்ணாவும் வந்து விட்டீர்கள். ராசியான கைகளுக்கு சொந்தக் காரர் சி.கவுக்கும் என் மனமார்ந்த நன்றி!

'வாராயென் தோழா வாராயோ' என்று திருமுருகன் பெயர் சொல்லி உங்களை வரவேற்கிறேன்.:)

கிருஷ்ணா வந்தவுடன் இப்படி ஒரு சந்தேகமா? எட்டாங்கிளாஸ் பையனிடம் எட்டாத உயரத்தில் ஒரு கேள்வியா? (வாசு... தூக்கம் போச்சேடா! மண்டை வெடிச்சுடுமே! மொதக் குத்தே இப்படி விழுந்துடுச்சே!):)

தங்கள் அன்புக்கு என் அளவில்லா ஆனந்த நன்றிகள்.

vasudevan31355
22nd May 2015, 06:55 PM
கிருஷ்ணா நீங்கள் திரிக்கு மீண்டும் வந்ததால்


https://youtu.be/M44UMo1yYZw

vasudevan31355
22nd May 2015, 06:59 PM
அன்பு ராகவேந்திரன் சார்,

பாகம் நான்கிற்கு தங்களை மனதார வரவேற்கிறேன்.

gkrishna
22nd May 2015, 07:03 PM
என்ன வரவேற்பு !

அமர்க்களம் போங்கள். இந்த சும்பனின் மீது காட்டும் வேந்தரின் வம்பு (சும்மா ஜாலிக்கு தான் :)),வாசு ஜி யின் அம்பு மன்னிக்கவும் அன்பு ,எஸ்வி அவர்களின் பாம்பு :) மன்னிக்கவும் பண்பு ,ரவி ஜி யின் கனிவு எல்லையில்லா இந்த நட்பு என்றும் தொடர வேண்டும் நண்பர்களே

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2012/IndruPolEndrumVazhga0000001.jpg
http://www.youtube.com/watch?v=ucIT-ESbXkA

vasudevan31355
22nd May 2015, 07:03 PM
ராகவேந்திரன் சார்,

'ஓடங்கள்' படப் பாடலுக்கு நன்றி!

ஒரு சந்தேகம். இந்தப் படம் நம் ராதாரவியின் சொந்தத் தயாரிப்புதானே?

ஆச்சிக்குக் கூட ஒரு பாட்டு உண்டே!

'கிழவிக்கு முதல் இரவு'

பார்த்தீங்களா சார்! கிருஷ்ணா வந்ததும் கிழவிக்கு கூட முதல் இரவு.:) எல்லாம் எப்படி அமைகிறது பார்த்தீர்களா?

vasudevan31355
22nd May 2015, 07:06 PM
என்ன வரவேற்பு !

அமர்க்களம் போங்கள். இந்த சும்பனின் மீது காட்டும் வேந்தரின் வம்பு (சும்மா ஜாலிக்கு தான் :)),வாசு ஜி யின் அம்பு மன்னிக்கவும் அன்பு ,எஸ்வி அவர்களின் பாம்பு :) மன்னிக்கவும் பண்பு ,ரவி ஜி யின் கனிவு எல்லையில்லா இந்த நட்பு என்றும் தொடர வேண்டும் நண்பர்களே



பெரிய க(கொ)ம்பனய்யா நீர். வம்பனும் கூட. :)

gkrishna
22nd May 2015, 07:13 PM
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTG6L-AMWZpDztcqQW7UFlmWQ3TS80n57hjC827oLmk8XBs9Pgq7Q

வாசு நாம் பாகம் இரண்டில் இந்த படத்தை பற்றி பேசி இருக்கிறோம்
28-jul -14 - பதிவு எண் 2527

இந்த ஓடங்கள் படம் ஷபீக் என்ற சஞ்சய் என்ற வருன்ராஜ் என்ற நடிகர் நடித்து வெளிவந்தது 1986 .
பாலச்சந்தர் உதவி இயக்குனர் அமீர் ஜான் இயக்கம்
psv ஹரிஹரன் தயாரிப்பு

வைரமுத்துவின் வைர வரிகளில் பாலாவின் இனிய குரல்

'சந்தன பூவா சந்தன பூவா சம்மதம் கேக்க போரேன் போரேன் .
பங்குனி மாசம் பரிசம் போட வாரேன் வாரேன்
உனது உதட்டில் எனது உதடு கவிதைகள் தீட்டுமே
காமன் தேசம் கடிதம் போட்டு பாராட்டுமே '

gkrishna
22nd May 2015, 07:21 PM
இந்த நடிகர் மலையாளத்தில் ஷபீக் என்ற பெயரில் அறிமுகம் ஆகி பின் சஞ்சய் என்ற பெயரில் ஓடங்கள் என்ற தமிழ் படத்தில் நடித்து
பிறகு 1992 கால கட்டத்தில் வருன் ராஜ் என்ற பெயரில் 'தூது போ செல்லகிளியே','கங்கை கரை பாட்டு '
போன்ற திரை படங்களில் மீண்டும் முயற்ச்சி செய்தார்.

gkrishna
22nd May 2015, 07:26 PM
http://www.youtube.com/watch?v=bhCb366fFgU

vasudevan31355
22nd May 2015, 07:27 PM
https://prabhuphotojournalist.files.wordpress.com/2010/06/untitled.jpeg

அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்.

நன்றாக நினைவில் இருக்கிறது.

ஜூன் 8 2014.

ஒரு விளையாட்டாக திடீரென்று பாடல்களுக்கென்று ஒரு திரி துவங்கப்பட்டது. என்ன ஆகும் ஏது ஆகும் என்றெல்லாம் அப்போது கவலை இல்லை. நண்பர்கள் நல்மனதுடன் ஆதரவு தந்தனர். அப்படியே அந்த சிறிய விதைக்கு அனைவரும் தத்தம் பங்கிற்கு தண்ணீர் ஊற்றி எருவிட்டு கண்ணும் கருத்துமாக வளர்த்தனர். யாருக்கும் எவர்க்கும் எந்த சுயநலமுமில்லை. பலன் எதிர்பாராது இரவும் பகலும் கண் விழித்து உயிராக அனைவரும் வளர்த்த இந்த செடி இப்போது ஆலவிருட்சமாக அண்ணாந்து பார்க்குமளவிற்கு வளர்ந்து மரமாகி நிற்கிறது. இந்த மரத்தின் கீழ் யார் வேண்டுமானாலும் சண்டை சச்சரவு இன்றி அமர்ந்து இளைப்பாறலாம். ஓய்வெடுத்துக் கொள்ளலாம். அழகான அரட்டைகள் அளக்கலாம். அணைத்து மகிழ்ந்து இன்புறலாம். செல்லமாக சீண்டியும் கொள்ளலாம். ஒவ்வொருவரின் பலன் பாரா உழைப்பு இம்மரத்திற்கு உண்டு. நீ,நான்,பெரியவன், சின்னவன் என்ற பேதமெல்லாம் இம்மரத்தை வளர்த்தவர்களுக்குக் கிடையாது.

இன்னும் ஒரு வருடம் கூட முடியவில்லை. அதற்குள் 4 பாகங்கள். எவ்வளவு தகவல்கள்! எத்தனை பாடல்கள்! எத்தனை பாடுபடல்கள்! எத்துணை விஷயங்கள்!

பழைய பாடல்களுக்கு 'போக வேண்டியதுதானே மதுர கானத்திற்கு' என்று சொல்லுமளவிற்கு அவ்வளவு விஷயங்கள், அம்சமான தொடர்கள்.

அனைவரும் இன்பம் பெற வேண்டும் என்றே வளர்க்கப்பட்ட மரம். பிரதிபலன் பாராமல் இம்மரத்தின் வளர்ச்சிக்கு ராப்பகலாக பாடுபட்ட நல் இதயங்கள் அனைத்துக்கும் என் இதயம் நெகிழ்ந்த நன்றி! நன்றி!

uvausan
22nd May 2015, 07:43 PM
திரு K .V - உங்களுக்குப் பிடித்த பாடல் - இதை நீங்களே போற்றிருந்தால் இன்னும் மகிழ்ச்சி அடைந்திருப்போம் . ( பிறகு தவறாக போட்டு விட்டேன் என்று கூட சொல்லியிருக்கலாம் - 5 நிமிடமாவது சந்தோஷப்பட்டிருப்போம் ) . எண்ணங்கள் இணையும் போது ஏன் மனங்கள் இணைவதில்லை என்று புரியவில்லை . அந்த மாதவ கண்ணன் சற்றே வளர்ந்தவுடன் திருடுவதை அதிகமாக தொடரவில்லை - ஆனால் நம்ம ( சின்ன ) கண்ணனோ இன்னும் திருடுவதை நிறுத்தவில்லை - xray/scan செய்து பார்த்தால் , நம் எல்லோருடைய இருதயங்களும் அவரால் என்றோ திருடப்பட்டது வெளிச்சத்திற்கு வரும் . திருடப்பட்ட இடங்களில் இன்று மலர்ந்துகொண்டு இருப்பது பூக்களின் கூட்டமே !!

அன்புடன்

https://youtu.be/qeOPR2QNVF8

kalnayak
22nd May 2015, 07:44 PM
வாங்க நெல்லை மைந்தர் கிருஷ்ணா அவர்களே வாங்க.

உங்களை அழைத்து வந்த வாசுதேவனுக்கும் நன்றி. அவர் அழைப்பை ஏற்று வந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரிக்கு கலகலப்பைக் கொண்டு வந்ததற்கும் நன்றி. எதோ நீங்கள் எல்லாம் திட்டம் போட்டு ஓய்வெடுத்துக்கொண்டு மீதம் இருக்கும் என்னைப் போன்றவர்களை எழுத விட்டு (உடன் சி.க.வை மட்டும் அனுப்பி விட்டீர்கள். அதற்காக நன்றி.) வேடிக்கை பார்த்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். வாய்ப்பிற்கு நன்றி. நீங்கள் எல்லாம் உடன் எழுதி நான் எழுத தொடர்ந்து வாய்ப்பு வழங்குவீர்கள் என்று வேண்டுகிறேன்.

ராஜ்ராஜும், கோகுல் அவர்களும் வரவேண்டும். அவர்கள் இருவரும் வந்தால் எல்லா உறுப்பினர்களும் மீண்டும் இணையும் உற்சாகத் திரியாகும்.

Russellzlc
22nd May 2015, 07:52 PM
அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்.

நன்றாக நினைவில் இருக்கிறது.

ஜூன் 8 2014.

ஒரு விளையாட்டாக திடீரென்று பாடல்களுக்கென்று ஒரு திரி துவங்கப்பட்டது. என்ன ஆகும் ஏது ஆகும் என்றெல்லாம் அப்போது கவலை இல்லை. நண்பர்கள் நல்மனதுடன் ஆதரவு தந்தனர். அப்படியே அந்த சிறிய விதைக்கு அனைவரும் தத்தம் பங்கிற்கு தண்ணீர் ஊற்றி எருவிட்டு கண்ணும் கருத்துமாக வளர்த்தனர். யாருக்கும் எவர்க்கும் எந்த சுயநலமுமில்லை. பலன் எதிர்பாராது இரவும் பகலும் கண் விழித்து உயிராக அனைவரும் வளர்த்த இந்த செடி இப்போது ஆலவிருட்சமாக அண்ணாந்து பார்க்குமளவிற்கு வளர்ந்து மரமாகி நிற்கிறது. இந்த மரத்தின் கீழ் யார் வேண்டுமானாலும் சண்டை சச்சரவு இன்றி அமர்ந்து இளைப்பாறலாம். ஓய்வெடுத்துக் கொள்ளலாம். அழகான அரட்டைகள் அளக்கலாம். அணைத்து மகிழ்ந்து இன்புறலாம். செல்லமாக சீண்டியும் கொள்ளலாம். ஒவ்வொருவரின் பலன் பாரா உழைப்பு இம்மரத்திற்கு உண்டு. நீ,நான்,பெரியவன், சின்னவன் என்ற பேதமெல்லாம் இம்மரத்தை வளர்த்தவர்களுக்குக் கிடையாது.

இன்னும் ஒரு வருடம் கூட முடியவில்லை. அதற்குள் 4 பாகங்கள். எவ்வளவு தகவல்கள்! எத்தனை பாடல்கள்! எத்தனை பாடுபடல்கள்! எத்துணை விஷயங்கள்!

பழைய பாடல்களுக்கு 'போக வேண்டியதுதானே மதுர கானத்திற்கு' என்று சொல்லுமளவிற்கு அவ்வளவு விஷயங்கள், அம்சமான தொடர்கள்.

அனைவரும் இன்பம் பெற வேண்டும் என்றே வளர்க்கப்பட்ட மரம். பிரதிபலன் பாராமல் இம்மரத்தின் வளர்ச்சிக்கு ராப்பகலாக பாடுபட்ட நல் இதயங்கள் அனைத்துக்கும் என் இதயம் நெகிழ்ந்த நன்றி! நன்றி!

வாசு சார், திரியை தொடங்கி வளர்க்க முக்கிய காரணமாக நீங்கள் இருந்தாலும் அந்த வளர்ச்சிக்கான பெருமையை எல்லாருக்கும் பகிர்ந்தளிக்கும் உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
22nd May 2015, 07:56 PM
[QUOTE=g94127302;1227571]திரு K .V - உங்களுக்குப் பிடித்த பாடல் - இதை நீங்களே போற்றிருந்தால் இன்னும் மகிழ்ச்சி அடைந்திருப்போம் . ( பிறகு தவறாக போட்டு விட்டேன் என்று கூட சொல்லியிருக்கலாம் - 5 நிமிடமாவது சந்தோஷப்பட்டிருப்போம் ) . எண்ணங்கள் இணையும் போது ஏன் மனங்கள் இணைவதில்லை என்று புரியவில்லை . அந்த மாதவ கண்ணன் சற்றே வளர்ந்தவுடன் திருடுவதை அதிகமாக தொடரவில்லை - ஆனால் நம்ம ( சின்ன ) கண்ணனோ இன்னும் திருடுவதை நிறுத்தவில்லை - xray/scan செய்து பார்த்தால் , நம் எல்லோருடைய இருதயங்களும் அவரால் என்றோ திருடப்பட்டது வெளிச்சத்திற்கு வரும் . திருடப்பட்ட இடங்களில் இன்று மலர்ந்துகொண்டு இருப்பது பூக்களின் கூட்டமே !!

அன்புடன்


நன்றி திரு.ரவி சார். மன்னிக்கவும். எனக்கு இந்த பாடலை தரவேற்றக் கூடாது என்ற எண்ணம் கிடையாது. உண்மையில், எனக்கு பாடல்களை தரவேற்றத் தெரியாது. தெரிந்தால் நானே பதிவிட்டிருப்பேன். இதுவரை எந்தப் பாடலையும் நான் தரவேற்றியதும் இல்லை. வாசு சார், சின்னக்கண்ணன், கல்நாயக் ஆகியோர்தான் நான் சொல்லும் பாடல்களை தரவேற்றி உதவியிருக்கிறார்கள். இருந்தாலும் விரைவில் கற்றுக் கொண்டு தரவேற்ற முயற்சிக்கிறேன். எனக்காக நீங்கள் தரவேற்றியதற்கு நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
22nd May 2015, 07:58 PM
[quote=raghavendra;1227550]கலை..
இதோ நீங்கள் கேட்ட ஒரு தாய் மக்கள் பாடல்..


நன்றி திரு. ராகவேந்திரா சார். ‘ஒருதாய் மக்கள்’பாடல் கிடைக்கவில்லை என்று சின்னக்கண்ணன் சொன்னதும் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. சிரமப்பட்டு தேடி கண்டுபிடித்து தரவேற்றியதற்கு மிக்க நன்றி சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

kalnayak
22nd May 2015, 07:58 PM
சி.க. சார்
பாகம் நான்கினை வெற்றிகரமாகத் துவக்கி கிருஷ்ணாவையும் வரவைத்து விட்டீர்கள். கண்ணனை நினைத்தால் சொன்னது நடக்கும் என்ற பாட்டு உண்மையாகி விட்டது பார்த்தீர்களா.
தங்களுக்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள்.
பாகம் மூன்றினை மிகச் சிறப்பாக நடத்திச்சென்றதற்கும் உளமார்ந்த பாராட்டுக்கள். நடுவில் கணினியின் கோளாறால் பல நாட்கள் பங்கேற்க முடியவில்லை என்றாலும் மிகவும் விறுவிறுவென பாகம் மூன்று பறந்து விட்டது. இதற்கு பெரிதும் துணை நின்றவர் பெயரில் மட்டும் கல்லை வைத்துக்கொண்டு உள்ளத்தில் மென்மையை வைத்திருக்கும் கல் நாயக் அவர்களே. அவருக்கே பெரும் பங்கு பாராட்டு சேரும். நிலாத் தொடரைத் தொடர்ந்து மலரைத் துவக்கி, மதுர கானம் திரி நிலவும் மலரும் பாட, நினைவில் தென்றலை வீச வைத்தார்.

முதலில் அவருக்குப் பாராட்டாக ஒரு பூப் பாடல்..

இந்தப் பூவின் மனசில் என்னவோ குழப்பம். அதை அவன் அறிவானா தெரியவில்லை. அவனே கேட்கிறான், பூவே என்ன போராட்டம்...நாமும் அறிந்து கொள்ள முயல்வோமே..

குலதெய்வம் ராஜகோபால் அவர்களின் புதல்வர்கள் சம்பத் மற்றும் செல்வன் இருவரும் இணைந்து இசையமைத்து, மறைந்த இயக்குநர் அமீர்ஜான் இயக்கிய ஓடங்கள் படத்திலிருந்து இனிமையான பாடல்...



ராகவேந்திரா அவர்களே,

எனக்குப் பாராட்டாக தாங்கள் வழங்கிய ஓடங்கள் படத்திற்கு நன்றி. சென்ற திரியில் வாசுதேவன் அவர்கள் பூக்கள் விடும் தூது படத்தைப் பற்றி சொன்னபோது இந்த படம் நினைவிற்கு வந்தது ஆனால் பெயர் உறுதியாக தெரியவில்லை. ஆனால் பி.எஸ். வீரப்பா அவர்களின் தயாரிப்பு என்பது நினைவில் இருந்தது. நான் வாசுதேவனிடம் கேட்கவில்லை. இப்போது எனக்கு பாராட்டாக கொடுத்துவிட்டீர்கள். இந்த பாடலை கொடுத்தபின்புதான் இங்கே நடப்பதை பார்கிறோமே... வாசுதேவனும், கிருஷ்ணா அவர்களும் தகவலுக்கு மேல் தகவலாக தந்து அசத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

RAGHAVENDRA
22nd May 2015, 08:10 PM
ரவி,
நிலவுக் கோளை கல்நாயக் சுற்ற, ஆதவனைத் தாங்கள் சுற்ற, நாங்கள் உங்களைச் சுற்றிச் சுற்றிப் பாடல்களைப் பெற்று மகிழ்கிறோம்.
இந்த வரிசையில் அடுத்த கோள் எதுவோ...
புதனோ, அங்காரகனோ, குருவோ...

ஆம்.. குருவை எடுத்துக் கொள்ளலாமே..

குருவின் பெருமையைத் தாங்கள் அழகாக எடுத்துரைப்பீர்களே...

kalnayak
22nd May 2015, 08:15 PM
பூவின் பாடல்கள் 10: "பூமாலை ஒன்று பூவோ இரண்டு"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பத்து மாத பந்தத்தில் இப்படி பாடுகிறார்கள்!!! ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? நடித்தவர்கள் ராஜ்ஸ்ரீயும், சரோஜாதேவியும்.

முழு படத்தையும் இங்கே பார்க்க பொறுமையில்லை. பார்த்தவர்கள் அல்லது பார்கின்றவர்கள் ஏன் இப்படி 'பூமாலை ஒன்று பூவோ இரண்டு' பாடிக்கொள்கிறார்கள் என்று சுருக்கமாக சொன்னால் தேவலை.

https://www.youtube.com/watch?v=yZ1mb_hU2WM

சரி நம்ப பூமாலை பாட்டுக்கு மட்டும் வரலாமா?

https://www.youtube.com/watch?v=qestgTsQjPs

uvausan
22nd May 2015, 09:10 PM
ரவி,
நிலவுக் கோளை கல்நாயக் சுற்ற, ஆதவனைத் தாங்கள் சுற்ற, நாங்கள் உங்களைச் சுற்றிச் சுற்றிப் பாடல்களைப் பெற்று மகிழ்கிறோம்.
இந்த வரிசையில் அடுத்த கோள் எதுவோ...
புதனோ, அங்காரகனோ, குருவோ...

ஆம்.. குருவை எடுத்துக் கொள்ளலாமே..

குருவின் பெருமையைத் தாங்கள் அழகாக எடுத்துரைப்பீர்களே...

Sir

குருவை விட ஒரு உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கும் ஒரு கருவை மயமாக்கி என் பதிவுகளைப் போடலாம் என்று நினைக்கிறேன் . திரு கல்நாயக் அவர்களிடம் சிறிது கெஞ்சி - அவர் சேகரிக்கும் பூக்களில் ஒரு அழகிய மாலையத்தொடுத்து அந்த கருவிற்கு அணிவிக்க இருக்கிறேன் - மீண்டும் ஒரு நீண்ட பதிவு - 100 யைத்தாண்டலாம் அல்லது தாண்டாமலும் போகலாம் . நிலாவின் சொந்தக்காரர்களின் அனுமதியும் தேவை - பூக்களை மிதிக்காமல் பார்த்து நடந்து செல்ல வேண்டும் - நெய்வேலியிலிருந்து கிளம்பும் சுனாமியையும் கடக்க வேண்டும் - இப்பொழுது காற்றினில் மிதந்து வரும் புல்லாங்குழலின் இனிமை , வேறு திசையில் என்னை திருப்பக்கூடும் - இதையும் மீறி பதிவுகள் போட்டால் திமிங்கலமாக வரும் திலகத்தின் சங்கமத்தை எதிர் கொள்ள வேண்டி வரும் . இத்தனையும் எதிர்க்கொண்டு என் பதிவுகளை தொடர முடியுமா என்ற ஒரு கேள்வி மனதில் எழுந்த வண்ணம் உள்ளது .

அன்புடன்

chinnakkannan
22nd May 2015, 09:51 PM
**

ஹை...கிருஷ்ணா ஜி.. வாங்க வாங்க.. வாங்க.. :) :boo:

லேட் வரவேற்புக்கு மன்னிக்க..அதுக்கு அடுத்தபோஸ்ட்ல ரீஸன் சொல்றேன்..

எப்படி இருக்கேள்..போம் ஓய்.. ஒம்ம கிட்ட நா அடிக்கடி கோச்சுண்டுருக்கேன் தெரியுமா – மனசுல.. சிலசில விஷயங்களுக்கு விவரம் தெரியாம கூகுளைத்தேட வேண்டியதாய்டுச்சு..லைட்டா ஒரு ஹிண்ட் கொடுத்தா சொய்ங்க்க்னு அதப் பத்தி டீடெய்லா சொல்றதுக்கு- உவமை இல்லாம போரா இருக்குல்ல- சின்னதா 100 கிராம் எள் மட்டும் கொடுத்தா டபக்குன்னு கிட்டத்தட்ட நாலஞ்சு ப்ளேட் வெரைட்டி பஜ்ஜி தருவது போல ( இதுவும்சரியில்லையோ!) – உங்கள் நினைவு தான் வந்ததும்ம்.. ஆகா மனது வைத்து வந்தீர்களே.. நாங்கள் தன்யனானோம் ஸ்வாமி.. :)

உமக்கு ஒரு ஹோம் வொர்க்.. மோஹினி பற்றி நீவிர் அறிந்தவைகளைச் சுருக்கமாக நாலு பாராவில் வரைக! (ஹை..போன தடவை சிகப்பு..இப்ப எந்தக் கலர் பக்கெட் :) )

https://youtu.be/Lr3frWrRwbw

சித்திரத்துத்தேரே வா
சிந்து நதி க் காற்றே வா..
கார்த்திக் மோஹினி .. நாடோடிப் பாட்டுக்காரன்னுபடமாம்.. மோஹினி கொஞ்சம் வித்யாசமான கன்னம் ஸாரி டைப்போ கண் கொண்டவரில்லையோ!
.
*
ராகவேந்தர் சார்.. நன்றிங்க வாழ்த்துக்களுக்கு.. எல்லாம் உங்கள் பாராட்டுக்களும் ஆசிகளும் தான் காரணம்.. பூவே பாட்டுக்கும் தாங்க்ஸ்.

*
கலை.. நீலவண்ணக் கலையே வாரும்..! அழகான பாடல் கண்ணனுக்கும் கள்வனுக்கும் பேதமில்லை தோழி.. தரவேற்றிய ரவிக்கு நன்றி ( திசை தெரியாம எழுதறாராம்.. ரவி சொல்லிக்கறார் அவரப் பத்தி....அப்பப்ப அவர் ஜோக்கடிப்பார்.. அது அவரோட அடக்கம்..)

*
தைரியமாக எழுதுங்கள் ரவி. நாங்க இருக்கோம்..:)

*

chinnakkannan
22nd May 2015, 09:53 PM
*
//என்ன தெளிஞ்சுட்டீங்களா// வாசு சார் ஒரு கட்டுரை.. திரைப்பாட்டு தான் என்றாலும் கூட டீப் பாக உள் நுழைந்து அதில் உள்ள நுணுக்கங்களை அலசி.. டைம் எடுத்து விரிவாக எழுதுவதில் உங்களுக்கு நிகர் நீங்களே.. உங்களிடம் ஆழமாக எழுதுவது எப்படி என்று கற்றுக் கொண்டேன் (இன்னும் கற்றுக் கொண்டே இருப்பதால் தான் சி.க.. இன்னும் வளரவேயில்லை)

நேற்று கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேலான பாடல்களில் புகுந்து புறப்பட்டிருப்பேன்..பன்னிரண்டு மணிக்கு மேல் தான் ஸ்பார்க்..ஆக ரெண்டு இதயம் பாடல்கள்..கிடைத்தன..ஹாஆஆவ் எனக் கொட்டாவி நீலாம்பரி பாடினாலும் கொஞ்சம் நோட்ஸ் எழுதிட்டு பின் படுக்கையில் விழுந்து தொபேல்… ஸ்ஸ்ஸ்ஸ் தூக்கம்..குறட்டையா இல்லியா எனக்குத் தெரியாது..

அப்புறம் காலையிலெழூந்து காஃபி மட்டும் குடித்துவிட்டு எழுதினேன். அப்புறம் தான் நிம்மதி.. காதலித்து மணந்தபெண் மாமியார் வீட்டுக்குச் சென்று புதிதாய் மாமியாருக்குப்பிடிக்கும் அவர் ஸ்பெஷலிஸ்ட் அந்தச் சமையலில் என அறிந்து காலிஃப்ளவர் மஞ்ச்சூரியன் (கண்ணா வேற எதுவும் தோணலியா.. மன்ச்சு..டயட்டுக்கு கா.பூ நல்லது!) செய்து செவேலென்ற சேல்விழிகளில் (காரணம் முதல் நாள் தான் மா.வீட்டுக்கு வந்து தாச்சித் தூங்கியிருக்கா – இதுக்கு நீ அந்தப்பொண்ணுக்கு முதல் இரவு முதல் நாள் நு சொல்லியிருக்கலாமில்லை – இப்ப நீ சொல்லிட்டியே மன்ச்சு) ஆவல் மிகக் கூடி செம்பருத்திப் பூவைப்போல ச் சிவந்திருக்கும் அந்த உணவைப் போட, மாமியார் ஒருபிட் எடுத்துவாயில் போட்டுக்கொண்டு கொஞ்சம் கண்மூடி மங்கையவள் பல்ஸை எகிறவைத்து முக மலர்ந்து.. “வாவ் இவளே.. எப்படிப் பண்ணினே” எனக் கேட்டால் எப்படி அந்த மா.பொ (மாட்டுப்பொண்ணு) மனம் மகிழ்வாளோ அது போல போஸ்ட் செய்த பிறகு வரும் கமெண்ட்ஸ் ஸைப் படிக்கையில் ஒரு நிம்மதி..

அதே மாட் பொண் சந்தோஷமான குடும்ப வாழ்க்கையில் ஒருவருடம் கழித்து நார்மல் டெலிவரியாகக் குழந்தை ஈன்ற மறு நாளில் அவளுக்கு ஏற்படும் களைப்பு என்னையும் தொற்றிக் கொள்ள,, மதியம் உண்டு பின் தூஊஊஊங்கி விட்டேன்.. இப்போது தான் எழுந்து இதோ என் விரல்களின் வழி வார்த்தைகள்..

( இதுக்கு டயர்டா இருந்துச்சு தூங்கிட்டேன் வாசுங்க்ணான்னு தல போல மேக் இட் ஸிம்ம்பிளா எழுதியிருக்கலாமில்லை – ஹி ஹி.. அப்படி எழுதாததுனால தான் நான் சி.க.. மன்ச்சு!)

https://youtu.be/EwGYXKkuTdE



**
பின்ன வாரேன் :)

Gopal.s
22nd May 2015, 10:08 PM
கிருஷ்ணா,
எங்கே ரொம்ப நாளாக காணோம் என்று வாசுவுடன் விசாரித்ததில் ,வடக்கில் வாழ்வதாக சொன்னார். உங்களை ரொம்பவே மிஸ் செய்தோம். வாங்க சார். இந்த தரம் நடிகர்திலகம் திரிக்கு தங்கள் பங்களிப்பை நிறைய எதிர்பார்க்கிறேன்.

rajraj
23rd May 2015, 02:31 AM
From Avan (1953), Tamil dubbed version of Aah (1953)

minnalpol aagim indha vaazhkkaiye.......

http://www.youtube.com/watch?v=jDIpi_Yb90g

Hindi original

Chhoti si ye zindagani....

http://www.youtube.com/watch?v=Cn9hEME2eLA

vasudevan31355
23rd May 2015, 07:50 AM
//இதுக்கு டயர்டா இருந்துச்சு தூங்கிட்டேன் வாசுங்க்ணான்னு தல போல மேக் இட் ஸிம்ம்பிளா எழுதியிருக்கலாமில்லை//

அது எப்படி சி.க நான் நெனச்சத அப்படியே சொல்றீங்க.:)

//– ஹி ஹி.. அப்படி எழுதாததுனால தான் நான் சி.க.. மன்ச்சு!)//

யப்பா! உமக்கா ஒண்ணுந் தெரியாது?:)

//மோஹினி பற்றி நீவிர் அறிந்தவைகளைச் சுருக்கமாக நாலு பாராவில் வரைக!//

வழக்கமா செல்லமா மோஹி என்றுதானே எழுதுவீர். இங்க 'மேகி'யை தடை பண்ணப் போறதா ஒரு வதந்தி.

vasudevan31355
23rd May 2015, 08:02 AM
கதிர் தந்து இப்போது கருவின் கருவை தர இருக்கும் ரவி சார்,

ஆவல் மிகுகிறது.

rajeshkrv
23rd May 2015, 08:19 AM
"இந்த திரியும் மள மளவென பக்கங்களில் மட்டுமல்லாமல் நட்பும் வளரவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்"

உயர்ந்த கருத்துக்கள் ராஜேஷ் . உண்மையில் எல்லோருடைய வேண்டுதலும் இதுவாகத்தான் இருக்க முடியும் .

Ck - இனிதான ஆரம்பம் -கணேசனை வேண்டிக்கொண்டு ஆரம்பித்துள்ளீர்கள் - எந்த விக்னங்களும் வரவே வராது . கவைப்படாமல் மேலேசெல்லுங்கள் - வாழ்த்துக்கள் .

திரு கல்நாயக் - உங்களுக்கு நன்றி சொல்லாமல் இந்த திரியில் முதலடி எடுத்து வைப்பது சரிப்பட்டு வராது - 3ஆம் பாகத்தை ஒருவருடன் இருவராக தாங்கிப்பிடித்துக்கொண்டு நிலவின் குளிமையை எங்களுக்கு தந்து உள்ளீர்கள் - 1000 கரங்கள் கூப்பி உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் .

ராஜேஷ் : நீங்கள் கை ராசிக்காரர் - நெய்வேலியில் ஒளிந்து இருந்த நெய் மனத்தை மீண்டும் இந்த திரியில் வரவழைத்து விட்டீர்கள் - இதற்கே ஒரு பெரிய சபாஷ் உங்களுக்கு போட வேண்டும் .

ரவி. நன்றி. என்னைவிட நெய்வேலியின் நெய் மனத்தை வீச செய்த பெருமை திரு கல் நாயக் அவர்களையே சாரும்.
நான் வாருங்கள் வாருங்கள் என அழைத்தேன், ஆனால் அவரோ ந.தி பற்றி பதிவிட்டு புற்றுக்குள் பதுங்கியிருந்த வாசுதேவ நாகத்தை வெளியே வர வைத்தே விட்டார்.... :)

rajeshkrv
23rd May 2015, 08:24 AM
ஆஹா ஆஹ . சங்மமம் சங்கமம் நல்ல இசை ரசிகர்களின் சங்கமம்

பழையவர்கள் எல்லோரும் வந்துவிட்டனர். குறிப்பாக கிருஷ்ணா ஜி. வருக வருக...
http://www.penmai.com/forums/attachments/introduce-yourself-here/86279d1358261416t-introducing-myself-nalvaravu.gif

rajeshkrv
23rd May 2015, 08:28 AM
இளையராஜா நடிகர்திலகத்திற்கு கொடுத்த பாடல்களில் அதுவும் குறிப்பாக டூயட்களில் இது தான் சிறந்த டூயட் என்னைப்பொருத்த வரையில்.

மெல்லிசை மன்னரின் சாயலில் அமைந்த பாடல்
திருத்தேரில் வரும் சிலையோ.. பாலுவின் குரலும் இசையரசியின் குரலும் அடேயப்பா ..

https://www.youtube.com/watch?v=rtQIyb7C3gQ

rajeshkrv
23rd May 2015, 08:29 AM
வாலியின் குறும்பு.
அதிசயப்பிறவி .. சூப்பர் ஸ்டாருடன் ஹிந்தி நடிகை ஷீபா
மலேசியா வாசுதேவன்.. என்ன பொருத்தமான குரல் ரஜினிக்கு

இதோ சிங்காரியை அழைக்கிறார்
https://www.youtube.com/watch?v=3dhxJag8ZJg

vasudevan31355
23rd May 2015, 08:45 AM
கலை சார்,

//திருமால் பெருமை படத்தில், ‘கண்ணனுக்கும் கள்வனுக்கும் பேதமில்லை தோழி...’ பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்//

தங்கள் பெருந்தன்மைக்கு நன்றி! திருமங்கை ஆழ்வார் சிவக்குமார் அவர்களின் கால்விரலில் மி(எ)ஞ்சியிருக்கும் ஆழியைக் கழற்ற முதலில் அவரின் பாதம் தொட்டு, கைகளால் முயன்று தோற்று, பின் ஆழி மின்னும் விரலை தன் பற்களால் கடிக்க முயலும் காட்சி என் கண் முன்னே வந்து நிற்கிறது தங்கள் பதிவால்.

நடிப்பு என்பதன் அர்த்தம் இது அல்லவோ! வயது வித்தியாசம், சின்ன நடிகர், பெரிய நடிகர் என்ற பேதம் பார்க்காமல் தான் ஏற்ற கேரக்டருக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டதனால்தான் நடிகர்களுக்கெல்லாம் நடிகராக, மாபெரும் நடிகர் திலகமாக எங்கள் குலதெய்வம் அமைந்தாரோ!

அதே போல,

'ஒருதாய் மக்கள்' படத்தில்

'இங்கு நல்லாயிருக்கணும் எல்லாரும்
நலம் எல்லாம் விளையணும் எந்நாளும்'

பாடலில்,

உங்கள் அன்புத் தலைவரின் ஆடை வடிவமைப்பு பற்றி சுருக்கமாக அழகாக வர்ணித்திருந்தீர்களே! (//மக்கள் திலகம், சில்க் ஜிப்பா, தார் பாய்ச்சி கட்டிய ஜரிகை வேட்டியுடன் மிக அழகாக இருப்பார்//.) அருமை! பாடலைப் பற்றிய விளக்கமும் சுவை.

அந்த '4 பேர் குந்தியபடி' அமர்க்களம். சிரிக்காமல் இருக்க முடியவில்லை .

இப்பாடலைக் கேட்கும் போது பல்லாண்டு வாழ்க' படத்தின் 'புதியதோர் உலகம் செய்வோம்' என்ற அருமையான பாடலும் நினைவுக்கு வருகிறது.


https://youtu.be/fcavjmHjDww

நல்ல பாடல்களை நினைவுறச் செய்தமைக்கு நன்றிகள் கலை சார்.

கிருஷ்ணாவை அவர் வண்ண நிறத்து எழுத்துக்கள் வாயலாக அருமையாக வரவேற்றதற்கு நன்றி!

uvausan
23rd May 2015, 08:47 AM
ராஜேஷ் - திரு கல்நாயக் அவர்களுக்கு நன்றி சொல்ல ஆரம்பித்தால் , ஒரு திரி போதாது - பதிவுகள் ஒரு முடிவில்லாமல் போய்க்கொண்டே இருக்கும் .

vasudevan31355
23rd May 2015, 08:50 AM
வணக்கம் ஜி!

வார்ரே வா! இன்னா மாதிரி ஒரு பாட்டை சர்வ சாதரணமா கொடுத்தீட்டீங்க.

ராஜாவின் மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று. அந்த பியாரி பியாரி எக்கோ தூள். 2.1 ஸ்டீரியோவில் ராஜாவின் நகாசு வேலைகளை எத்தனை முறை இப்பாடலில் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். நிஜமாகவே கதி கலங்கச் செய்யும் பாடல்.

நீங்கள் எமக்களித்த சுசீலாம்மா பாடிய பாடல்களை இன்னும் கேட்க வில்லை. மதுர கான புதிய பாகத்தில் மூழ்கி விட்டதால். நிச்சயம் கேட்கிறேன்.

பாகம் மூன்றின் துவக்கதாரர் வெற்றிகரமாக முடித்தமைக்கு நன்றி!

rajeshkrv
23rd May 2015, 08:52 AM
பி.வாசு சத்யராஜ் கூட்டணியில் சில நல்ல பாடல்கள் கிடைத்தன

வாலி ஐயாவின் அருமையான வரிகள்

https://www.youtube.com/watch?v=WTqQfaulNeE

அன்றைய நண்பர்கள் என்னவோ வருது வருது பாடலைத்தான் மிகவும் விரும்பினார்கள் :)

rajeshkrv
23rd May 2015, 08:53 AM
வணக்கம் ஜி!

வார்ரே வா! இன்னா மாதிரி ஒரு பாட்டை சர்வ சாதரணமா கொடுத்தீட்டீங்க.

ராஜாவின் மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று. அந்த பியாரி பியாரி எக்கோ தூள். 2.1 ஸ்டீரியோவில் ராஜாவின் நகாசு வேலைகளை எத்தனை முறை இப்பாடலில் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். நிஜமாகவே கதி கலங்கச் செய்யும் பாடல்.

நீங்கள் எமக்களித்த சுசீலாம்மா பாடிய பாடல்களை இன்னும் கேட்க வில்லை. மதுர கான புதிய பாகத்தில் மூழ்கி விட்டதால். நிச்சயம் கேட்கிறேன்.

பாகம் மூன்றின் துவக்கதாரர் வெற்றிகரமாக முடித்தமைக்கு நன்றி!

நன்றி நன்றி. எல்லாம் உங்களது ஊக்கமும் கோபாலின் குட்டுமே காரணம்... ஹி ஹி..

vasudevan31355
23rd May 2015, 08:53 AM
ரவி,

வணக்கம். வாங்கோ! 'கரு'விற்கு 'எரு' இட்டாயிற்றா? எங்கே?

vasudevan31355
23rd May 2015, 08:54 AM
கோபாலின் குட்டுமே காரணம்... ஹி ஹி..

குசும்பு! குசும்பு!அநியாயத்துக்கு குசும்பு!:)

uvausan
23rd May 2015, 08:54 AM
கதிர் தந்து இப்போது கருவின் கருவை தர இருக்கும் ரவி சார்,

ஆவல் மிகுகிறது.

வாசு - உங்கள் தரத்துடனும் , உழைப்புடனும் என் பதிவுகளை எதிர்ப்பார்க்காதீர்கள் - ஏமாற்றமே மிஞ்சும் . மிகவும் எளியதாக , தினுமும் நாம் காணக்கூடியதாக , வணங்க தவறிவிட்ட ,தவறக்கூடிய ஒரு கருவை பற்றித்தான் சொல்ல விரும்புகிறேன் .

எடுத்துக்கொள்ளும் கருத்துக்கள் எல்லோரும் அறிந்தவையே - எடுத்துச்சொல்லும் முறையில் சில மாற்றங்கள் இருக்கலாம் . மற்றவர்களின் அருமையான பதிவுகளின் நடுவே என் பதிவுகள் just a gap filling - அவ்வளவே .

vasudevan31355
23rd May 2015, 09:05 AM
ஜி,

அருமை! சத்யராஜ் வாசு கூட்டணி ராஜேஷ் கோபால் கூட்டணி போல அருமை.

'வேலையின்றி ஒருவன் இங்கே மேல வந்துட்டா அவன் ஆடும் ஆட்டம் தாங்க முடியல்லே'

அதே மாதிரி சத்யராஜ் படங்களில் சில பாட்டுக்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும்ஜி! ரொம்ப! ரொம்ப!.

அதுல சிலது உங்களுக்காக. சுயநலமும் உண்டு.

'பாகு வெத்தல... வச்சுக்க வச்சுக்க... நாக்கு செவக்க... வச்சுக்க வச்சுக்க.... வா...

'மஞ்சக்குருவி மஞ்சக் குருவி கொஞ்சப் பாக்குதடி.. (கூட யாரு?...யாருன்னு கேக்குறேன்):)

'வானம் தொடாத மேகம்' அருமையிலும் அருமை.

அது போல

'என் ராசிய ஊரெங்கிலும் கேட்டுப் பாரு'

ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஜி.

vasudevan31355
23rd May 2015, 09:09 AM
கல்நாயக்,

தங்கள் அன்புக்கு நன்றி!

பூவின் பாடல்களில் சக்கையான (சக்கை என்றால் இந்த இடத்தில் செமையான என்று பொருள்):) பாடல் தந்து அசத்தி விட்டீர்கள். படத்தையும் தந்து பாடலையும் தந்து விட்டீர்கள்.

என்றென்றும் ரசிக்கக் கூடிய பாடல். 'மஞ்சளும் தந்தாள்' போல. என்ன ஒரே சரோஜாதேவி மயமாய் இருக்கிறது. அங்கே பாகப் பிரிவினை, அப்புறம் பாலும் பழமும். அப்புறம் ஆலயமணி. இங்கே பூமாலை ஒன்று.

ம்ம்...ராஜேஷை எல்லோரும் சந்தோஷப் பட வைக்கிறீர்கள். லத்துன்னு செல்லமா ஒரே ஒரு தரம் கூப்பிட்டு பாத்துகிட்டதுக்கு 'கிடா' வெட்ட வறீங்களே!:)

என் மனம் கவர்ந்த பாடலை அளித்ததற்கு நன்றி என் கடலூர் நண்பா.

rajeshkrv
23rd May 2015, 09:17 AM
வாசு சத்யராஜ் கூட்டணி
குங்கும பொட்டு குலுங்குதடி போல் நடுவில் கண்ணாம்பாவின் வசனத்திற்கு பதில் கவுண்டமணியின் வசனம்

தங்க நிலவுக்குள்

https://www.youtube.com/watch?v=tS00FrWVe1I

vasudevan31355
23rd May 2015, 09:19 AM
ஜி!

ஷீபா வேஸ்ட். பார்க்கவும் நன்றாக இருக்க மாட்டார்.

அதுக்கு 'உன்னப் பார்த்த நேரம்' கனகா கலக்கல்.

rajeshkrv
23rd May 2015, 09:19 AM
வாத்தியார் வீட்டு பிள்ளையில் இந்த பாடலையும் யாரும் மறக்க முடியாது

https://www.youtube.com/watch?v=pWz4oAn5y4g

rajeshkrv
23rd May 2015, 09:21 AM
ஜி!

ஷீபா வேஸ்ட். பார்க்கவும் நன்றாக இருக்க மாட்டார்.

'அதுக்கு உன்னப் பார்த்த நேரம்' கனகா கலக்கல்.

ஆமாம் அப்போ நன்றாக இல்லை. இப்போ ஏதோ ஒரு ஹிந்தி சீரியலில் பார்த்தேன் பரவாயில்லை

rajeshkrv
23rd May 2015, 09:23 AM
ஜி நீங்கள் கனகா என்றவுடன் எனக்கு இந்த பாடல் ஞாபகம் வந்தது.

மனோ சித்ராவின் அழகான பாடல். கார்த்திக் எவர்கிரீன்

https://www.youtube.com/watch?v=kCeOlgAokjw

rajeshkrv
23rd May 2015, 09:25 AM
கோகுல் கிருஷ்ணா ஃபாசில் அவர்கள் படத்தின் வசன கர்த்தா
அவரே படம் இயக்கினார். முத்துக்காளை. கார்த்திக் சவுந்தர்யா
ராஜாவின் இசையில் வாலி ஐயாவின் அற்புத வரிகள்
இதோ

https://www.youtube.com/watch?v=g_Oxc9bokeo

rajeshkrv
23rd May 2015, 09:28 AM
இன்னொரு கனகா பாடல்
வண்ணச்சிந்து வந்து விளையாடும்

https://www.youtube.com/watch?v=Tei7dT9viGw

vasudevan31355
23rd May 2015, 09:38 AM
ஜி!

ரொம்ப ரிலாக்ஸ் ஆயிட்ட மாதிரி தெரியுது. கலக்கறேள்.

vasudevan31355
23rd May 2015, 09:43 AM
எதுக்கும் சி.க குடையறதுக்கு முன்னாடி ஷீபா படத்தை போட்டு விட்டுடுவோம்.

http://www.timescontent.com/photos/preview/22638/Sheeba.jpg

http://i.bollywoodmantra.com/albums/events/miscellaneous/imc-ladies-diwali-exhibition/sheeba___249524.JPG

rajeshkrv
23rd May 2015, 09:45 AM
4ஆம் பாகம் ஆரம்பமான மகிழ்ச்சி. நீங்கள் மற்றும் கிருஷ்ணா ஜியின் மீண்டும் விஜயம் எல்லாமே காரணம் ஜி.

உங்களுக்கு ஒரு தெலுங்கு பாடல் கொடுத்து நாளாயிற்று. இதோ
திரையிசைத்திலகத்தின் இசையில் தியாகராஜ கீர்த்தனை
பாலு,இசையரசியின் குரல்களில்
கே.விஸ்வ நாத் இயக்கத்தில் சுல்க்*ஷனாவின் முதல் படம். என்னா அழகு. காது தோடு படு அழகு.
சந்திரமோகனுக்கு இது போன்ற காமெடி வேடங்கள் கன கச்சிதம்

கந்தமு புய்யருகா பன்னீரு கந்தமு புய்யருகா

https://www.youtube.com/watch?v=aQPzBatwXFU

rajeshkrv
23rd May 2015, 09:47 AM
அதே சுபோதயம் திரையில் நம்ம ஆச்சி மனோரமாவிற்கு இசையரசியின் குரலில் அற்புத பாடல்

https://www.youtube.com/watch?v=XYXAVwQLVnI

Richardsof
23rd May 2015, 09:57 AM
GUESS ....

http://i59.tinypic.com/2qduzhu.jpg

chinnakkannan
23rd May 2015, 10:09 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..

ராஜ் ராஜ் சார் வாங்க நலமா.. இப்போது எப்படி இருக்கிறீர்கள்.. உங்களை ஒவ்வொருமுறை ப்ரே பண்ணும் போதும் நினைத்துக் கொள்கிறேன்..கூடிய சீக்கிரம் எல்லாம் சரியாகிவிடும்.
.
மின்னல் போலாகும் இந்த வாழ்க்கை- கேட்டேன்..ராஜ்கபூர்- ஹிந்தி முன்னால் கேட்டதாக நினைவு.. நன்றி..இந்த அந்தக்கால ஹிந்தி டு தமிழ் டப் படங்கள் நன்கு ஓடுயதா என்ன..
*
வாசு சார்.. எனக்கு இன்னும் ஒண்ணும் தெரியாதாக்கும் :)
*
கே.ஆர்.விஜயா இளைத்த்திருந்த பாட்டை ப் போட்டுவிட்டீர்களே ராஜேஷ்..ம்ம் நேற்றோ முன் தினமோ நான் சொன்ன நினைவு.. திருத்தேரில் வரும் சிலையோ

ஷீபா அழகே இல்லை..ம்ம் முன்பே பார்த்த போது அவசரத்தில் பிசைந்த சப்பாத்தி மாவைப்போல கோணா மானா வென்று இருப்பார்.. இப்போ டி.வி சீரியலா..டி.வி.சீரியலில் அதுவும் ஹிந்தியில் முதுகு தானே தெரியும் ஓய்!

வாஸ்ஸூசார்…. குயந்தைய இப்படி காலங்கார்த்தால ஷீபா படத்தைப் போட்டெல்லாம் பயமுறுத்தப்படாது..

கன்னுக்குட்டி பாட்டுக்கள் தெலுகுபாட்டுக்கள் பின்ன கேட் சொல்றேன்..

ஆமா ராஜேஷ்.. ஏன் இப்படி ட்ரையாய்டீங்க.. வேலை கிடைச்சுடுச்சு டுச்சுடுச்சு காதில் ஒலிக்கலை (அதுவும் பிவாசு சத்யராஜா அல்லது மணிவண்ணனா)

*
எஸ்.வி.சார்.. வாங்க… அங்க முத்து??

chinnakkannan
23rd May 2015, 10:36 AM
எல்லாருக்கும் பீச் சாங்ஸ்லாம் நிறையத் தெரிகிறது..எனக்குத் தான் ஒண்ணுமே தெரியலை.. :sad:

பீச் பொறுத்தவரை எனக்கு ரொம்பப் பிடித்த இடம்..துபாயில் இருந்த போது நண்பர்களுடன் போய் நீச்சல் –ம்ஹூம் அதெல்லாம் பேசப்படாது- நீராடி இருந்த ஒரு காலகட்டத்தில் 95 96 ம் வருடம் என நினைக்கிறேன் ஒரு நண்பரின் தந்தை..ச்சும்மா தைரியமா இறங்குப்பா சொல்லி நீச்சலைவிட ஃப்ளோட்டிங்க் கத்துத் தர்றேன் வா சொல்ல- வேணாம் சார்.. என்றேன்

ஏம்ப்பா

அப்புறம் நான் ஒரு மிதப்புலயே இருக்கேன்னு சொல்வாங்க

கொஞ்சம் முழித்து பின் சிரித்த அந்த ந.தந்தை “அடச்சீ கண்ணா வா..மல்லாக்கப்படு’ எனக் கடலைக் காட்ட இப்பொழுது முழிப்பது என் முறையாயிற்று..

பின் நீரிலேயே மல்லாக்கக்கால் அகட்டி முகம் நேரே வைத்து மூச்சை மெல்ல மெல்ல சீராக இழுத்து விட்டு மிதப்பதற்குள் கடல் நீரைக்குடித்து என் வயிறு நிரம்ப கடல் மண்ணையும் கொஞ்சம் முட்டி விட்டேன்.. அப்புறம் இரண்டு மணி நேரத்தில் மிதக்கக் கற்றும் கொண்டுவிட்டேன்..

அப்புறம் பீச் போகும் போதல்லாம் அதுவே வழக்கம் ( துபாயில் நிறைய பீச் அடிக்கடி போவது மம்ஸார் என நினைக்கிறேன்..ஜூமைராவும் தான்., மஸ்கட்டும் தான்.. ) ஆனது.. ஆனால் இப்போதெல்லாம் மிதக்க முடியாது..கடல் நீருடன் டச் விட்டுப்போனது ஒரு காரணம், உடல் எடை இன்னுமொருகாரணம்..

மிதந்து கொண்டே கண்கள் வெறித்து நீல வானத்தைப் பார்ப்பது எவ்வளவு அழகாக இருக்கும் தெரியுமா.. கொஞ்சம் சிந்தையையும அலைபாய விட முடியாது..வெறிச்சென்று தான் பார்க்க வேண்டும் மூச்சும் சீராக இருக்கவேண்டும் கை கால் குறுக்க முடியாது..குறுக்கினால் தொபீல் கீழேவிழுந்துவிடுவோம்..

வெட்டவெளி வானமது விழிகளிலே தான்பட்டும்
..வேகமென மூச்சதுவும் விடவும்தான் முடியாதே
தொட்டணைத்துத் தள்ளுகின்ற நீலநிறக் கடலலைகள்
..தோழனைப்போல் முதுகினிலே தட்டிவிடும் பாங்குடனே
விட்டகுறை தொட்டகுறை என்றங்கே நினைத்தபடி
…வீசிவரும் காற்றதுவும் தென்றலெனத் தான்மாறும்
முட்டுவதைப் போலவரும் அலைக்கரங்கள் தட்டிவிட
..மூழ்கிடுமே சிந்தனைகள் இதயத்தின் கதவுகளில்..

ம்ம் கொஞ்சம் வித்யாசமான அனுபவம் தான்..

இங்கயும் பாருங்க பாரதி ஓடி வந்து பாடறாங்க (ஆக்சுவலா இந்தப் பாட்டை மூன்று நான்கு வருடம் முன் முதன்முதல் முரசு வில் தான் பார்த்தேன்..கேட்டிருக்கிறேன் முன்பு. இன்னும் இந்தப் படம் பார்த்ததில்லை..எப்படி இருக்கும் மீண்டும் வாழ்வேன்..

வெள்ளி முத்துக்கள் நடனமாடும் வெள்ளம்
இளம் காற்று தாலாட்டு..பொன் மேனி நீராட

ராட்சஸி குரல்..ம்ம்

https://youtu.be/FSVDrTsMvBI

போட்டாச் இல்லையே?!

Richardsof
23rd May 2015, 10:41 AM
ANGAMUTHU - YOU ARE CORRECT C.K .SIR
ONE OF THE MOST HIT -BEACH SONG
https://youtu.be/8HrHWIMcHts

vasudevan31355
23rd May 2015, 10:49 AM
//போட்டாச் இல்லையே?!//

சி.க,

அந்தப் பாட்டில் கோரஸ் தரும் குரல்தான் உங்கள் கேள்விக்கு பதில்:)

vasudevan31355
23rd May 2015, 10:52 AM
இந்தாங்க என்னோட பீச் பேவரைட். கார்த்திக் சாரை ரொம்ப கவர்ந்த பாடலும் கூட.


https://youtu.be/PS4hAU1goVM

vasudevan31355
23rd May 2015, 10:53 AM
சி..க

ஒன்பது பக்கமும் அதம் பறந்து போச்சே!

Murali Srinivas
23rd May 2015, 10:58 AM
மதுர கானங்கள் பாகம் நான்கு

கண்ணா! மனம் நிறைந்த வாழ்த்துகள்!

கல்நாயக்! பாராட்டுகள்

ராஜேஷ்! வாழ்த்துகள்!

ரவி! பாராட்டுக்கள்

கிருஷ்ணாஜி! வருக! வருக!

ராகவேந்தர் சார்! nuances அடங்கிய திலக சங்கமத்திற்கு பாராட்டுக்கள்!

இவர்களுக்கெல்லாம் மய்யப் புள்ளியாக விளங்கும் வாசுவிற்கு மனம் நிறைந்த நன்றிகள்!

அன்புடன்

chinnakkannan
23rd May 2015, 11:11 AM
வாசு.. ம்ம்ம் போட்டாசசாக்கும் மறுபடி பார்க்காலாம்..?ஸாரி கேக்கவும் செய்யலாம் வெ.மு என்னா கலர்ஃபுல் ட்ரஸ்..

என்னென்னவோ நான் நினைத்தேன் பாடலுக்கு நன்றி

ஆமாம்ல ஒன்பது பக்கம் பறந்து தான்போச்ச்.. பார்வைகள் பார்த்தீர்களோ..அந்தப் பக்கம் சண்டையை வேற ஆரம்பிச்சிருக்கீஙக் ( நைஸ்..) எனக்கும் சண்டை போடத் தோணுது..அது என்னோட அடுத்த போஸ்டில்..

எஸ்வி .. ஹச்சோ..கடலோரம் வாங்கிய காத்து எனக்கும் ஃபேவரிட்.. எவ்ளோ முறை கேட்டிருப்பேன்..பார்த்துமிருப்பேன்.. நன்றிங்க.

அங்கே யார் சுருக் சுருக்கமா எழுதியிருக்கறது..முரளி.. மிக்க நன்றிங்க..:)

gkrishna
23rd May 2015, 11:45 AM
காலை வணக்கம்

'இறக்கை கட்டி பறக்குதையா பாகம் 4 '

மறந்த இருந்த ஷீபாவை நினைவு படுத்திட்டார் ராஜேஷ் ஜி மற்றும் வாசு ஜி. மோஹி என்ற மோகினி பற்றி சி கேக்கு குறிப்பு வரையணுமாம்

'ஒரு புறம் பார்த்தால் அதிசய பிறவி ஷீபா
மறு புறம் பார்த்தால் ஈரமான ரோஜாவே மோகினி'

மோகினி அமெரிக்கா சென்று யாரோ பரத் என்பவரை திருமணம் செய்து பின் கிறிஸ்துவ மதத்தை தழுவியதாக படித்து நெஞ்சில் நிழலாடுகிறது.
2008 இல் விவகாரத்து ஆகியதாக கேள்வி. விவாகரத்து ஆகவில்லை .என்றும் ஒரு தகவல் உண்டு. ஜட்ஜ்மெண்ட் டே அன்று அவர் கணவரும் கிறிஸ்துவ மதத்தை தழுவி மீண்டும் இணைந்தார்கள் என்று குருவியார் (தினத்தந்தி) கேள்வி பதிலில் படித்த நினைவும் உண்டு.

நிறைய மலையாள படம் நடிச்சாங்க. தமிழில் விக்ரமனின் நான் பேச நினைப்பது எல்லாம்,புதிய மன்னர்கள்,கார்த்திக் இன் நாடோடி பாட்டு காரன்,உடன்பிறப்பு இப்படி ஒரு ரவுண்டு வந்தாங்க.

ஜெயா தொலைகாட்சியின் திரும்பி பார்கிறேன் நிகழ்ச்சியில் பார்த்த நினைவு.தயாரிப்பாளர் கே ஆர் அறிமுகம் .இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன் நெல்லை மாவட்டத்தின் நாலுமாவடி என்ற ஊரில் மோகன் சி லாசரஸ் அவர்களின் 'ஆவிக்குரிய எழுப்புதல் கூட்டங்கள்' ஒன்றில் இவரும் நடிகை நக்மாவும் கலந்து கொண்டு சர்ச்சை வந்ததாக ஒரு தகவல் காதில் அடிபட்டது

ஆத்துகாரர் பரத் உடன் கல்யாண போட்டோ

http://www.marriagedivorce.in/uploads/marriage/2014/May/tamil-actress-mohini-and-bharath-marriage-pictures_1.jpg

கரகாட்டக்காரன் சொப்னசுந்தரி :)

gkrishna
23rd May 2015, 11:55 AM
மீண்டும் jkb போன்று வரவேற்ற கோபால் ஜி,முரளி ஜி ,கல்நாயக் ஜி,சி கே மற்றும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி

Gopal.s
23rd May 2015, 12:27 PM
மீண்டும் jkb போன்று வரவேற்ற கோபால் ஜி,முரளி ஜி ,கல்நாயக் ஜி,சி கே மற்றும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி

ஓஹோஹோ ,அப்போ வடக்கே நடந்ததெல்லாம் இந்த திருவிளையாடலா?

https://www.youtube.com/watch?v=AHB9TIC04Gc

JamesFague
23rd May 2015, 12:34 PM
Courtesy: Tamil Hindu


பசுமை போர்த்தியிருக்கும் ஏதோ ஒரு மலை வாசஸ்தலத்தை நோக்கிய நீண்ட பயணம். பேருந்தின் ஜன்னல்கள் வழியே சற்று வேகமாகத் தவழ்ந்து வரும் தென்றல் உடலையும் மனதையும் வருடிச் செல்கிறது. சாலையின் இரு புறங்களிலும் படர்ந்திருக்கும் இயற்கைக் காட்சிகள் மனதை அள்ளுகின்றன.

ஏகாந்தமாகக் கண் மூடி அமர்ந்திருக்கும் உங்களைத் தாலாட்டும், தன்னிச்சையாக மனதுக்குள் ஒலிக்கும் பாடல் ஒன்று. ‘எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்…’. சுட்டெரிக்கும் வெயிலில் உங்கள் பயணம் அமைந்தாலும் உங்கள் ஆன்மாவையே குளிர்விக்கும் ஆற்றல் கொண்ட பயணப் பாடல் இது.

சில பாடல்களைக் கேட்கும்போது இருந்த இடத்திலிருந்தே கற்பனை நிலப் பகுதிகளுக்கு மனம் நம்மை அழைத்துச் சென்றுவிடும். எங்கெங்கோ சுற்றியலையும் மனம், நினைவின் அடுக்குகளில் விரவிக் கிடக்கும் மகிழ்ச்சியான தருணங்களைத் திரட்டிச் சேர்த்துக்கொண்டே செல்லும். அப்படியான பாடல்களில் ஒன்று இது.

இந்தப் பாடல் இடம்பெற்ற திரைப்படம், ‘பட்டாக்கத்தி பைரவன்’. 1979-ல் வெளியான இந்தத் திரைப்படத்தில் கதாநாயகனாக சிவாஜி கணேசன் நடித்திருந்தார். தனது நாயக சகாப்தத்தின் இறுதிக் கட்டத்தில் அவர் நடித்த படங்களில் ஒன்று இது. ‘எங்கள் தங்க ராஜா’ படத்தில் ‘பட்டாக்கத்தி பைரவன்’ என்ற பெயரில் ஒரு பாத்திரத்தில் வருவார் சிவாஜி. அந்தப் படத்தின் இயக்குநர் வி.பி. ராஜேந்திர பிரசாத் இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு அந்தப் பெயரே தலைப்பாகிவிட்டது.

வானத்தை வருடும் பாடல்

ஒவ்வொரு நொடியிலும் இனிமையைத் தேக்கிவைத்திருக்கும் பாடல் இது. மென்மையான கிட்டார் இசையுடன் தொடங்கும் இந்தப் பாடல் காற்றின் அலைகளில் ஒவ்வொரு நிலையாகப் பரவி வயலின் இசைக்கோவை மூலம் வானம் வரை எட்டும்.

கம்பீரமான காதல் குரலில் பாடத் தொடங்குகிறார் எஸ்.பி.பி. ‘எங்கேங்கோ செல்லும் என் எண்ணங்கள்… இங்கேதான் கண்டேன் பொன் வண்ணங்கள்’ என்று தொடங்கும் எஸ்.பி.பி.யின் குரலுக்கு இனிய துணையாக ஒலிக்கிறது ஜானகியின் குரல். பல்லவியின் முடிவில் ‘என் வாழ்க்கை வானில்… நிலாவே… நிலாவே’ எனும் வரியைப் பாடும்போது காற்றில் மிதந்து மிதந்து தரையிறங்கும் மயிலிறகைப் போல் இருவரின் குரல்களும் கரைந்து மறையும்.

இரண்டு சரணங்களின் தொடக்கத்திலும், “ஹா…” என்றொரு ஹம்மிங்குடன் பாடலைத் தொடரும் எஸ்.பி.பி.க்கும் ஜானகிக்கும் பரிசாக இந்த உலகத்தையே தந்தாலும் இணையாகுமா! காதல் நுண்ணுணர்வின் பாவங்களைக் குரலில் காட்டத் தெரிந்த அற்புதக் கலைஞர்கள் அல்லவா அவர்கள். பாடலில் மெல்லிய மேகங்கள் மிதக்கும் வானத்தின் கீழ் பரவிக் கிடக்கும் நிலப்பரப்புகளில் ஒவ்வொரு இடமாக இன்னிசையை நடவு செய்தபடி கிட்டார் குறிப்புகள் நகர்ந்து செல்லும். அவற்றின் மேற்பரப்பில் பரவசமூட்டும் வயலின் இசைக்கோவை படரும் உணர்வு நம்முள் பரவும்.

இரண்டாவது சரணத்துக்கு முன்னதாக வரும் நிரவல் இசையில் கிட்டாரும் புல்லாங்குழலும் சங்கேத மொழியில் முணுமுணுப்பாய்ப் பேசிக்கொள்ளும். வயலின்களின் சேர்ந்திசை அந்த உரையாடலைக் கலைத்தபடி காற்றில் பரவிச் செல்லும். வானில் சிறகடிக்கும் பறவை ஒரு கட்டத்தில் இறக்கைகளை அசைக்காமல், சிறகுகள் காற்றில் அசைய மிதந்துகொண்டே தரையிறங்கும். அந்தப் பறத்தல் அனுபவத்தைத் தரும் பாடல் இது.

கடலலையைத் தழுவும் காற்று வீசும் கடற்கரை, பரந்த புல்வெளி நிலங்கள், எல்லையற்று விரியும் பாலைவனத்தைக் கடக்கும் சாலை என்று எந்த இடத்தையும் கற்பனை செய்துகொள்ளுங்கள். உங்கள் கற்பனைக்கு ஏற்ற காட்சிகள் இந்தப் பாடலின் ஒலி வடிவத்தில் உறைந்துகிடப்பது தெரியும். ‘கல்லானவன் பூவாகிறேன்… கண்ணே உன்னை எண்ணி’ போன்ற வரிகளில் ஆன்மாவின் காதலைக் கசியவிட்டிருப்பார் கண்ணதாசன்.


வந்து சென்ற தேவதை

எஸ்.பி.பி. - ஜானகி இணை பாடும் ‘தேவதை… ஒரு தேவதை’ பாடலும் இப்படத்தில் உண்டு. நாயகியின் மெல்லிய சிரிப்பைப் போல ஒலிக்கத் தொடங்கும் புல்லாங்குழல் எதையோ கண்டு ரசித்ததுபோல் ஆச்சரியக் குறியிடும்! பிறகு கம்பீரமான வயலின் ஆர்க்கெஸ்ட்ரேஷனுடன் தொடங்கும் அந்தப் பாடல் முழுதும் புல்லாங்குழலின் ராஜ்ஜியம்தான். அற்புதமான இந்தப் பாடலில் தோன்றும் நாயகி தேவி. அவருக்கு ஜோடி ஜெய்கணேஷ் என்பது பாடலின் பெருந்துயரம். படமாக்கப்பட்ட விதத்தைச் சொல்லி அழுவானேன்!

எஸ்.பி.பி. பாடிய ‘யாரோ நீயும் நானும் யாரோ’, ஜானகி பாடிய ‘ஜில் மாலிஷ் பூட் மாலிஷ்’, எஸ்.பி.பி. – சுசீலா பாடிய ‘வருவாய் கண்ணா நீராட’ போன்ற பாடல்களும் படத்தில் உண்டு. ரசிகர்களின் நினைவிலிருந்து மறைந்துவிட்ட இந்தப் படத்திலிருந்து ஜீவன் வற்றாத ‘எங்கெங்கோ

gkrishna
23rd May 2015, 12:56 PM
ஓஹோஹோ ,அப்போ வடக்கே நடந்ததெல்லாம் இந்த திருவிளையாடலா?

பொக்ரான் குண்டை விட பெரிய குண்டாக இருக்கிறதே இந்த வியட்நாமரின் குண்டு :).

'பத்த வைட்சுட்டியே பரட்டை'

http://tamil.filmibeat.com/img/2013/10/04-1380861676-16-vayathinile3-600.jpg

எனக்கும் வாசுவிற்கும் மட்டுமே பிடித்த உங்களது ப்ளூ கலர் favourite சிரிப்பு icon காணவில்லையே

gkrishna
23rd May 2015, 03:17 PM
உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981

http://mmimages.maalaimalar.com/Articles/2014/May/3b41d2b8-2382-443b-bd77-256b094f5665_S_secvpf.gif

ஓம்....ஓம்....ஓம்....

ஆதி பராசக்தி.... ஆதி பராசக்தி....

ஆதி பராசக்தி ஆதி பராசக்தி
உலகமெங்கனும்.... பரவி நின்றதும்....
உயிரினங்களில்.... மருவி நின்றதும்....
உலகமெங்கனும் பரவி நின்றதும்
உயிரினங்களில் மருவி நின்றதும்
அளவிலாததும் அழிவிலாததும்

ஆதி பராசக்தி ஆதி பராசக்தி

உண்மையாம் பிரம்மம் தன்னிலே
புணரும் பெண்மை யாவும் பெரும் மாய்கையாய்
கண்ணில் காணும் பல தோற்றம் ஆகிடும்
வண்ணமாக்கும் சக்தி
உண்மையாம் பிரம்மம் தன்னிலே
புணரும் பெண்மை யாவும் பெரும் மாய்கையாய்
கண்ணில் காணும் பல தோற்றம் ஆகிடும்
வண்ணமாக்கும் சக்தி

முகில் வண்ணனாகி மழை அன்ன தேவளர்
மண்ணைக் காக்கும் சக்தி
முக்கண்ணனாகியே அழிக்கும் சக்தி
ஆதி பராசக்தி....

எதிர்த்த பற்களை ஒழித்து முப்புரம்
எரித்த அற்புத சிவ சக்தி
இடர் செய்யும் அவுனர்கள் பொடிபட
மயிலவன் அயில் புகு ஜெய ஜெய ஜெய சக்தி

ஆதி பராசக்தி ஆதி பராசக்தி


வளர் திங்கள் நதி கங்கை
மலர் கொன்றை அணிகின்ற
சிவசம்பு மகிழ் சுந்தரி
வளர் திங்கள் நதி கங்கை
மலர் கொன்றை அணிகின்ற
சிவசம்பு மகிழ் சுந்தரி நிரந்தரி
மலை தந்தமகள்
சந்த்ர முக பிம்ப எழில் சிந்தும்
அரவிந்த பத அந்தரி புரந்தரி
அரவிந்த பத அந்தரி

மனதில் நிலை பெறும் இனிய கலைகளும்
புகழும் உயருறு தெருளும் பலபல
பொருளும் உலகியல் அறிவு தரும் சக்தி
மனதில் நிலை பெறும் இனிய கலைகளும்
புகழும் உயருறு தெருளும் பலபல
பொருளும் உலகியல் அறிவு தரும் சக்தி

தத் ஜம் தஜம் தரி தத் தலாங்கு
தலங் கெனும் படி ஜதி முழங்கிட
நடமிடும் சக்தி

ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம்....
https://antrukandamugam.files.wordpress.com/2013/07/jayalalitha-baby-sreedevi-aathi-parasakthi-1971-c.jpg?w=593

இன்று மீண்டும் தமிழக முதல்வராக பதவி ஏற்று உள்ள அன்னைக்கு வாழ்த்துகள்

uvausan
23rd May 2015, 04:32 PM
கருவின் கரு - பதிவு 1

அது ஒரு ரம்மியமான மாலை நேரம் - இறைவன் மனதில் ஒரு சின்ன உளைச்சல் - சொல்ல முடியாத ஒரு சங்கடம் . எல்லா தேவர்களையும் அழைத்தான் . நான் இதுவரை படைக்காத ஒன்றை படைக்க ஆசைப்படுகிறேன் - அந்த படைப்புக்கு மிஞ்சிய ஒரு படைப்பு இருக்க முடியாது - என் சக்தி எல்லாவற்றையும் சேர்த்து அந்த படைப்புக்கு வழங்க இருக்கிறேன் - என்னையும் மீறிய படைப்பு இது - நானே இந்த படைப்பைக்கண்டு வணங்க வேண்டும் - என் படைப்புத்தானே என்று எனக்கே கர்வம் வந்து விடக்கூடாது . உங்கள் எல்லோரையும் கூப்பிட்டதற்கு காரணம் இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும் - என்றான் . அழைத்த எல்லா தேவர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை - உங்களுக்கு மீறிய படைப்பா ?? நீங்களே வணங்க கூடிய படைப்பா - இறைவா - எங்களுடன் விளையாடாதீர்கள் - ஒன்றும் விளங்கவில்லை --

இறைவன் சிரித்தான் - அந்த சிரிப்பின் ஒளியில் ஒரு அழகே உருவான ஒரு மங்கை வெளி வந்தாள் -- இறைவனுக்கு இன்னும் முழுவதும் திருப்தி வரவில்லை - இளமை , அழகு , சௌந்தரியம் தவழும் இந்த மங்கை எப்படி நான் வணங்க இருக்கும் படைப்பாக இருக்க முடியும் - இவளிடம் அழகு இருக்கின்றது - ஆனால் பூமியின் பொறுமை இல்லை - மீன் போன்ற கண்கள் - ஆனால் அதில் கருணை சற்றே குறைவாக உள்ளது . தனக்காகவே வாழ ஆசைப்படும் இந்த பெண் , என் படைப்புக்கு உதவுவாளா ??

ஒரு குழந்தை அங்கே தவழ்ந்து வந்து இறைவனின் மடியில் அமர்ந்தது - இறைவனின் எண்ணங்கள் சிதறின --- அந்த குழந்தையை சற்றே கோபத்துடன் அங்கிருந்து அனுப்ப எண்ணும் வேளையில் , அந்த பெண் ஓடி வந்து அந்த குழந்தையை அள்ளி எடுத்துக்கொண்டாள் - அவள் கண்களில் முன்பு அதிகமாக வெளிப்படாத கருணை தெரிந்தது - கண்கள் குற்றாலத்தை நினைவுப்படுத்தின .

எல்லாம் தெரிந்த இறைவன் மீண்டும் சிரித்தான் - அவன் மனதிற்கு , அவன் கற்பனைக்கு ஒரு விடை கிடைத்து ... பெண்ணே நீ இந்த குழந்தைக்கு என்ன வேண்டும் ? - அந்த பெண் சொன்னாள் - அந்த குழந்தைக்கு இப்பொழுது நான் வேண்டும் - அதற்கு நான் வேண்டும் - எங்கள் இருவருக்கும் உறவு முறை தெரியாது ----- .

இந்த படைப்பைத்தான் படைக்க நினைத்தேன் - ஆனால் அதற்கும் முன்பு நீ என்னை படைத்து விட்டாய் தாயே !!

எல்லோரும் எப்பவும் விரும்பி அனுபவிப்பது - அழகான காலை உதயம் , பறவைகளின் காலை சங்கீதம் - வானத்தில் கோலம் இடும் வில் , பசுமையான காட்ச்சிகள் - யானையின் அழகு - சிங்கத்தின் நடையும் அதன் தலை சீவாத பரந்த முடியும் , தோகையை விரித்தாடும் மயிலும் , பூக்களின் கூட்டமும் ----------- சொல்லிக்கொண்டே போகலாம் . இவைகளை எவ்வளவு வயதானாலும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் - குறையாத குளிமை - மாறாத அழகு - இறைவன் இந்த அழகையெல்லாம் மனித படைப்பில் படைத்த உருவம் தான் தாய் --- இந்த படைப்பை விரும்பாத விலங்குகள் இல்லை , மனித இனமும் இல்லை

" அம்மா " ஒவ்வொரு குழந்தையின் அதரத்திலிருந்து உதிரும் முதற்சொல் ; அன்பு , பாசம் , நேசம் , பரிவு , தியாகம் , அனுதாபம் என்ற தன்மைகளைத் தன்னுள் அடக்கிய அழகான சொல் . பத்து மாதம் சுமந்து , குழந்தையை ஈன்றெடுத்து , பக்குவமாய்ப் பராமரித்து , அன்போடும் , அரவணைப்போடும் வளர்த்து , அக்குழந்தையை வாழ்வின் உயர்வுக்கு இட்டுச் செல்வது தாயன்பே . வாழ்வில் எத்தனை உயர்வடைந்தாலும் , ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய தாயை வாஞ்சையுடன் " அம்மா " என்றழைப்பதில் பெருமை கொள்கிறான் . தாய்மையின் தியாகம் சொற்களுக்கு அப்பாற்பட்டது .

பத்து மாதங்கள் சுமந்தவள் தாய் என்று சொன்னேன் - அது தவறு - தன் கடைசி மூச்சு இருக்கும் வரை நம்மை சுமந்து கொண்டுதான் இருக்கிறாள் - நமக்குத்தான் அதை புரிந்து கொள்ள முடிவதில்லை - நம்மை சுமந்தவளை கடைசியில் சுமப்பது முதியோர் இல்லம் என்ற அவள் பெறாத குழந்தைதான் .. நாலு பேருடன் நாமும் சுமக்கும் வேளையில் - மெதுவாக மகனே - உன் கால்கள் வலிக்கப்போகின்றன என்று சொல்வதும் அவளுடைய அசையாத மேனிதான் ---

Sri Ramanujacharya, Udayavar,-(traditionally, 1017–1137 CE) இவரை ஒரு அரசன் கேட்டானாம் - சுவாமி - இந்த அரண்மனை , அழகான தோட்டம் - குயிலின் பாட்டு , விளையாடும் மயில்கள் , ரம்மியமான சூழ்நிலை இவைகளில் உங்களை கவர்வது எது ?

உடனே ராமானுஜர் சொன்னாராம் - இவைகள் அனைத்தையும் என்னை பார்க்க வைத்த என் தாய் - அவள் தான் என்னை என்றும் கவர்ந்தவள் - அவளுக்கு மீறிய அழகு எந்த உலகத்திலும் எதற்குமே இல்லை ----

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/mathru_panchagam_zpsnhzkdrd5.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/mathru_panchagam_zpsnhzkdrd5.jpg.html)

ஆதிசங்கரர் தன் தாயை அவளுடைய கடைசி நேரத்தில் வந்து பார்ப்பதாக வாக்குறுதி கொடுத்திருந்தார் - ஆனால் வர முடியவில்லை - தகனம் செய்யும் நேரத்தில் அவர் பாடிய மாத்ருகா பஞ்சகம் , கல்லையும் கரையவைக்கும் - இன்றும் கயாவில் இந்த ஸ்லோகத்தை சொல்லச்சொல்லித்தான் பிண்டம் தாயிற்கு இடச்சொல்லுவார்கள் .

மாத்ருகா பஞ்சகம்

1.ஆஸ்தாம் தாவதியம் ப்ரஸ¨திஸமயே துர்வாரசூலவ்யதா
நைருச்யம் தநுசோஷணம் மலமயீ சய்யாச ஸாம்வத்ஸரீ I
ஏகஸ்யாபி நகர்பபார பரணக்லேசஸ்ய யஸ்ய க்ஷம :
தாதும் நிஷ்க்ருதிமுந்நதோsபி தநய:தஸ்யை ஜநன்யை நம:

தடுக்கமுடியாத பிரஸவ வேதனை ஒருபுறமிருக்க, வாய்க்கு ருசி இல்லாதிருத்தல், உடம்பு இளைத்தல், ஒரு வருஷகாலம் மல மூத்ரம் நிறைந்த படுக்கை ஆகியவையான கர்பகாலத்தில் பாரத்தைத் தாங்கிக்கொள்ளும் கஷ்டத்தில் ஒன்றையாவது தீர்க்க வளர்ந்த பிள்ளை முடியாதவனாகி விடுகிறானே! அக்கஷ்டங்களை தாங்கிக் கொள்ளும் தாயை என்னவென்று செல்ல? அந்த தாய்க்கு நமஸ்காரம்!


2.குருகுலமுபஸ்ருத்ய ஸ்வப்ன காலே து த்ருஷ்ட்வா
யதிஸமுசித வேஷம் ப்ராருதோ மாம் த்வமுச்சை :I
குருகுலமத ஸர்வம் ப்ராருதத்தே ஸமக்ஷம்
ஸபதி சரணயோஸ்தே மாதரஸ்து ப்ரணாம :II


ஹே தாயே! ஒரு சமயம் நான் படிக்கும் குருகுலம் வந்து கனவில், நான் ஸன்யாஸம் பூண்டதாக் கண்டு உறக்க அழுதாயே அப்பொழுது குருகுலம் முழுவதும் உன் எதிரில் அழுததே! உனது கால்களில் விழுந்து நமஸ்கரிக்கிறேன்!


3.ந தத்தம் மாதஸ்தே மரணஸமயே தோய மபிவா
ஸ்வதாவா நோதேயா மரணதிவஸே ச்ராத்தவிதிநா I
ந ஜப்தோ மாதஸ்தே மரணஸமயே தாரகமநு:
அகாலே ஸம்ப்ராப்தே மயிகுரு தயாம் மாதரதுலாம் II


தாயே! மரிக்கும் தருணத்தில் தண்ணீர்கூட கொடுக்கப் படவில்லை. மரித்த தினத்தில் சிராத்த முறைப்படி ஸ்வதா என்ற ஹவிஸும் கொடுக்க முடியாமலிருந்தது.
தாயே! உன் மரணவேளையில் தாரக மந்திரம்கூட ஜபிக்கப்படவில்லை. காலம் கடந்து வந்துள்ள என்மீது இணையற்ற தயை காட்டவேண்டும் தாயே!


4.முக்தாமணி ஸ்த்வம் நயனம் மமேதி
ராஜேதி ஜீவேதி சிரம் ஸுதத்வம் I
இத்யுக்தவத்யா ஸ்தவ வாசி மாத:
ததாம்யஹம் தண்டடுலமேஷ சுஷ்கம் II

என் முத்தல்லவா ! என் கண் அல்லவா ! என் ராஜா, என் குழந்தை சிரஞ்சீவியாய் வாழ வேண்டும் என்றெல்லாம் கொஞ்சினாயே தாயே! அத்தகைய வாயில் சாரமில்லாத பிடி அரிசியைத்தானே போடுகிறேன் !

5.அம்பேதி தாதேதி சிவேதி தஸமின்
ப்ரஸ¨திகாலே யதவோச உச்சை :I
க்ருஷ்ணேதி கோவிந்த ஹரே முகுந்தே –
த்யஹோ ஜநந்யை ரசிதோsயமஞ்ஜலி :II

அன்று ப்ரஸவ காலத்தில் ‘அம்மா’ அப்பா, சிவ என்று உறக்க கத்தினாயல்லவா தாயே! இன்று நான் கிருஷ்ணா, கோவிந்தா, ஹரே முகுந்தா என்று கூறி அஞ்சலி செய்கிறேன்.
===

அவள் இருக்கும் பொழுது அவள் அருமை தெரிவதில்லை - தண்ணீர் கொடுக்க கூட நாம் அருகில் இருப்பதில்லை - மறைந்த பிறகு யாருக்கு வேண்டும் இந்த தண்ணீர் பந்தல்கள் .

ஒரு தாய் மொபைல் ரிப்பேர் செய்யும் கடையில் கேட்டாளாம் கீழ்கண்டவாறு :

இது எனக்கு என் மகன் வாங்கிக்கொடுத்தது - ஒரு வாரம் கூட ஆக வில்லை - விலை மட்டும் பத்தாயிரத்திற்கும் மேலே இருக்குமாம் - அவள் முகத்தில் பெருமை சிதம்பரம் பொற்ச்சபையாக மாறியது ....

" அது சரி அம்மா - இதில் என்ன பிரச்சனை உங்களுக்கு - எல்லாம் நன்றாகவே இருக்கின்றது ?"

" அப்படியா பின் ஏன் மகனிடம் இருந்து ஒரு கால் கூட வருவதில்லை ?"

கடைக்காரன் அவள் கொடுத்த மொபைல் யை தன் கண்ணீரினால் கழுவிக்கொண்டிருந்தான் ..

இப்படிப்பட்ட உயர்ந்த தியாக உள்ளத்தை பூஜிக்கும் வகையில் சில பதிவுகள் போடலாம் என்ற ஒரு சின்ன ஆசை - அவள் வெறும் கருவல்ல - கருவின் கரு -- A Child gives birth to a Mother - கதிரவனின் தியாக உள்ளத்தை புரிந்து கொண்டோம் - அவனும் வணங்கும் ஒரு தாயின் பெருமைகளை பார்ப்போமா ?

முதலில் ஆதிசங்கரரின் மாத்ருகா பஞ்சகம் பாடலைபார்ப்போமா ? பிறகு நம் வரிசையில் ------ !!

அன்புடன்
ரவி



https://youtu.be/QDkKOzQzYtA

uvausan
23rd May 2015, 04:41 PM
கருவின் கரு - பதிவு 2

எமக்குக் காய்ச்சல் வந்தால் மருந்து தேவையில்லை ! அடிக்கடி வந்து
தொட்டுப்பார்க்கும் அம்மாவின் கையே போதுமானது ! அம்மாக்களைப் பற்றி எழுதப்பட்ட எல்லா கவிதைகளிலும் குறைந்தபட்சம்
இரண்டு சொட்டுக்கண்ணீர் ஈரம் உலராமல் ! --


தாயின் பெருமைகளை அந்த கணேசனை வணங்காமல் எப்படி ஆரம்பிப்பது ? புரியாத புதிரை புரிய வைக்கும் பாடல் இது .அன்னையின் ஆணை திரைப்படத்தில் கவிஞர் கா.மு.ஷெரிப் எழுதிய தாயாரிடம் கொண்ட அன்பை வெளிப்படுத்தும் பாடல் காட்சி.

https://youtu.be/U7LFlk8skas

uvausan
23rd May 2015, 04:47 PM
கருவின் கரு - பதிவு 3

தாயில்லாமல் யாருமே இல்லை - நான் மட்டும் எப்படி இருக்க முடியும் ?- எந்த சமயத்திலும் நம்மைப்பற்றி பெருமைப்பட்டு பூரிப்பு அடையும் ஒரே ஜீவன் அவள் தானே ?? மக்கள் திலகத்தின் மாபெரும் படைப்பில் , மறக்க முடியாத ஒரு பாடல் இது .

தாய் இல்லாமல் நான் இல்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்
தாய் இல்லாமல் நான் இல்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்
தாய் இல்லாமல் நான் இல்லை

ஜீவ நதியாய் வருவாள்
என் தாகம் தீர்த்து மகிழ்வாள்
ஜீவ நதியாய் வருவாள்
என் தாகம் தீர்த்து மகிழ்வாள்
தவறினை பொறுப்பாள்
தர்மத்தை வளர்ப்பாள்
தரணியிலே வளம் சேர்த்திடுவாள்
தவறினை பொறுப்பாள்
தர்மத்தை வளர்ப்பாள்
தரணியிலே வளம் சேர்த்திடுவாள்
தாய் இல்லாமல் நான் இல்லை

தூய நிலமாய் கிடப்பாள்
தன் தோளில் என்னை சுமப்பாள்
தூய நிலமாய் கிடப்பாள்
தன் தோளில் என்னை சுமப்பாள்
தன்மையில்லாமல் நான் மிதித்தாலும்
தன்மையில்லாமல் நான் மிதித்தாலும்
தாய்மையிலே மனம் கனிந்திடுவாள்
தாய் இல்லாமல் நான் இல்லை

மேக வீதியில் நடப்பாள்
உயிர் மூச்சினிலே கலந்திருப்பாள்
மேக வீதியில் நடப்பாள்
உயிர் மூச்சினிலே கலந்திருப்பாள்
மலை முடி தொடுவாள்
மலர் மணம் தருவாள்
மங்கல வாழ்வுக்கு துணை இருப்பாள்
மலை முடி தொடுவாள்
மலர் மணம் தருவாள்
மங்கல வாழ்வுக்கு துணை இருப்பாள்
தாய் இல்லாமல் நான் இல்லை

ஆதி அந்தமும் அவள் தான்
நம்மை ஆளும் நீதியும் அவள் தான்
ஆதி அந்தமும் அவள் தான்
நம்மை ஆளும் நீதியும் அவள் தான்
அகந்தையை அழிப்பாள் ஆற்றலை கொடுப்பாள்
அவள் தான் அன்னை மகாசக்தி
அகந்தையை அழிப்பாள் ஆற்றலை கொடுப்பாள்
அவள் தான் அன்னை மகாசக்தி


அந்த தாய் இல்லாமல் நான் இல்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்
தாய் இல்லாமல் நான் இல்லை

https://youtu.be/2K096xYEtsY

uvausan
23rd May 2015, 04:51 PM
கருவின் கரு - பதிவு 4

Teacher Amma 1968

அம்மா என்பது தமிழ் வார்த்தை - அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை !!!

அருமையான குரலில் , மனதை மயக்கும் ஒரு பாடல்

https://youtu.be/Xf1tuBY3S4Q

adiram
23rd May 2015, 04:54 PM
இன்று மீண்டும் தமிழக முதல்வராக பதவி ஏற்று உள்ள அன்னைக்கு வாழ்த்துகள்

Tomorrow Justice Kumarasamy is going to celebrate his Birth-Day.

Please send him a GOOD CACULATOR as your birthday gift. (I already sent one).

uvausan
23rd May 2015, 04:54 PM
கருவின் கரு - பதிவு 4

அம்மாவின்:) குரலில் ஒரு பாட்டு - அடிமைப்பெண்

அம்மா என்றால் அன்பு ----

https://youtu.be/tjz1NH06BOk

uvausan
23rd May 2015, 05:36 PM
கருவின் கரு - பதிவு 5



நான் பார்க்கும் ஆகாயம் - எங்கும் நீ பாடும் பூபாளம் ---------- படம் : தூங்காதே தம்பி தூங்காதே

அருமையான பாடல் - பாவாடை தாவணியில் பார்த்த உருவத்தை கமலின் அம்மாவாக பார்க்கிறோம் - கண்களில் அதே ஒளி , கருணை , காதல் -----


நானாக நானில்லை, தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே
பாசம், ஒரு நேசம்,
கண்ணாரக் கண்டான் உன்சேயே.....
.
(நானாக)
.
கீழ் வானிலே ஒளி வந்தது.
கூட்டை விட்டு கிளி வந்தது.
நான் பார்க்கும் ஆகாயம்,
எங்கும் நீ பாடும் பூபாளம்
வாடும் பயிர்வாழ
நீ தானே நீர் வார்த்த கார்மேகம்
.
(நானாக)
.
மணி மாளிகை மாடங்களும்,
மலர் தூவிய மஞ்சங்களும்,
தாய் வீடு போலில்லை
அங்கு தாலாட்ட ஆளில்லை
கோயில் தொழும் தெய்வம்,
நீயின்றி நான் காண வேறில்லை....
.
(நானாக)

https://youtu.be/rMpFjNTbCmA

uvausan
23rd May 2015, 05:46 PM
கருவின் கரு - பதிவு 6

படம் - மன்னன்

அம்மா - இவள் இருக்கும் போது நமக்குத் தெரிவதில்லை - தெரியும் போது அவள் இந்த உலகத்தில் இருப்பதில்லை .

அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே - ரஜினியின் மறக்க முடியாத படம் , பாடல்

https://youtu.be/DT8Zm3sY3wI

uvausan
23rd May 2015, 05:50 PM
கருவின் கரு - பதிவு 7

தாய் என்னும் செல்வங்கள் - தாலாட்டும் தீபம் ------ எல்லோரும் வாழும் நிலை வரட்டும்

https://youtu.be/0lFpu5z0oPU

uvausan
23rd May 2015, 06:09 PM
கருவின் கரு - பதிவு 8

தங்ககளே - நாளை தலைவர்களே -----------

நம் தாயும் மொழியும் கண்கள் ---

https://youtu.be/Xr4gvXXgCnU

ஒரு வயதான தாய் - Alzheimer வியாதியினால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தாள் - ஒரு நாள் அவன் மகன் அந்த தாயிற்கு பிடித்த ஒரு ஸ்டார் ஹோட்டல் க்கு அழைத்துச்சென்றான் - அவளால் உணவை சிந்தாமல் சாப்பிடத்தெரியவில்லை - அணிந்துகொண்டிருந்த உடையிலும் சாப்பிடும் போது வந்த கறைகள் - சுற்றி சாப்பிட்டவர்கள் இவர்கள் இருவரையுமே பார்த்துக்கொண்டு , கேலியும் செய்துக்கொண்டு சாப்பிட்டார்கள் - குடிக்கப்போகும் காபி யும் அவள் புடவையில் கொட்டிவிட்டது - தாயை கைத்தாங்கலாக வெளியில் அழைத்துச்சென்றான் அவள் மகன் - இதை பார்த்துக்கொண்டிருந்த ஒரு பெரியவர் - போய்க்கொண்டிருக்கும் மகனை கூப்பிட்டார் -- " தம்பி நீ எதையோ இங்கு விட்டு செல்கிறாய் "

அவன் சிரித்தபடி சொன்னான் " இல்லை பெரியவரே - ஒன்றும் விடவில்லை "

அதற்கு அந்த பெரியவர் சொன்னார் " இல்ல தம்பி - நீ விலை மதிக்க முடியாத ஒன்றை இங்கு விட்டுத்தான் செல்கிறாய் --- ஒரு தாயை எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஒரு உயர்ந்த பண்பை ஒரு பாடமாக இங்கு இருப்பவர்களுக்கு விட்டுச்செல்கிறாய் " என்றார் - புரிந்துக்கொள்ள முடியாத அந்த தாயின் முகத்தில் , ஒரு புரிந்து கொள்ளக்கூடிய புன்னகை தவழ்ந்து

uvausan
23rd May 2015, 06:20 PM
கருவின் கரு - பதிவு 9

கரு நீல மலை மேலே தாயிருந்தாள் - காஷ்மீர பனி மலையில் மகன் இருந்தான் - வர வேண்டும் பிள்ளை என்று காத்திருந்தாள் -வழி மீது விழி வைத்து பார்த்திருந்தாள் --- இதுதான் தாய்மை - இதன் அன்பின் ஒன்றினால் தான் இந்த உலகம் இன்னும் விழாமல் சுற்றிக்கொண்டிருக்கின்றது ...

காஷ்மீர பனி மலையில் பணி புரியும் நம் எல்லா சகோதரகளுக்கும் இந்த பாடலை காணிக்கையாக்குகிறேன் ...

https://youtu.be/lq5r-8ARgyk

uvausan
23rd May 2015, 06:25 PM
கருவின் கரு - பதிவு 10:):)

பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று
பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று ---


பெற்றால் தான் பிள்ளையா? - அன்பும் கருணையும் , தியாக உணர்வும் உள்ள எவருமே ஒரு தாய் தான் ...

https://youtu.be/PXLVA5CvTfo

adiram
23rd May 2015, 06:45 PM
Dear Ravi sir,

Heartiest Congrats for your wonderful 1,000 posts.

Best wishes to reach 2,000 very soon.

(I lost my Tamil converter. Otherwise oru paamaalaiye paadi iruppen)

Vasu sir, please give the link for Tamil font tamilchangathi.

uvausan
23rd May 2015, 06:48 PM
கருவின் கரு - பதிவு 11

அன்னை என்பவள் நீ தானா ?


ஒரு சிறுவன் அவனுடைய தாயை தனக்கு ஒன்றுமே வாங்கித்தருவதில்லை என்று திட்டிக்கொண்டிருந்தான் - அவன் தாயும் உனக்கு 18 வயது முடிவடையட்டும் - கண்டிப்பாக உனக்கு ஒரு பரிசை தருகிறேன் - நீ அதை நினைத்துக்கூட பார்த்திருக்க முடியாது - மகன் 17 வருடங்களை கடந்தான் - 18இல் கால் எடுத்து வைக்கும் நேரம் - அவனுக்கு திடீரென்று இதய வலி வந்து விட்டது - அவனைப்பார்த்த மருத்துவர்கள் அனைவரும் - அவன் பிழைப்பது கடினம் - இதய மாற்று சிகிச்சை செய்தால் பிழைக்க சிறு வாய்ப்பு உள்ளது என்று ஒரு மனதாக சொல்லிவிட்டனர் -- வலிக்கும் வலியிலும் , அந்த மகன் தாயிடம் கேட்க்கின்றான் - " அம்மா இப்பொழுது 18. என்னுடைய பரிசு எங்கே - இப்பொழுதும் நீ எனக்கு அதை கொடுக்காவிட்டால் இனி எப்பொழுதுமே எனக்கு அதை தர முடியாது " - " தருகிறேன் மகனே என்று அழுத வண்ணம் அவன் இருந்த அறையை விட்டு மருத்துவரை காண விரைந்து சென்றாள் .

மகனுக்கு வெற்றிகரமாக இதய மாற்றம் நடந்தது - கண் விழித்தவன் தன் உண்மையான கண்களை தேடினான் - மெதுவாக அவனிடம் ஒரு மடல் தரப்படுக்கின்றது - தாயின் கடைசி பரிசு அது " மகனே உன்னை என் இதயமாக வளர்த்தேன் -- நீ சிரிக்கும் ஒலி தான் இன் இதயத்தின் ஓட்டம் . இன்று உன் சிரிப்பைத் தொலைத்து விட்டேன் - என் இதயமும் நின்று விட்டது - நின்ற என் இதயத்தை மீண்டும் ஓடவிட்டு உன்னுள் என்னை ஒன்றாக்கிக் கொண்டேன் - நீ வாழவேண்டும் - நான் என்றும் உன்னுள் இருப்பதால் நீ நன்றாகவே இன்னும் 100 ஆண்டுகள் வாழ்வாய் - உனக்கு என் ஆசிகள்" -- உன் அம்மா . 18இல் அவனுக்கு கிடைக்காத ஒரு பொக்கிஷம் கிடைத்துவிட்டது ......
https://youtu.be/Qbv_H5aAKM0

uvausan
23rd May 2015, 07:00 PM
திரு ஆதிராம் - மிக்க நன்றி - கவனிக்கவே இல்லை - நீங்கள் சொல்லும் வரையில் - நம்பர்களில் எனக்கு நம்பிக்கை இல்லை - போடும் பதிவுகளில் புதிய கருத்துக்கள் இருக்க வேண்டும் - மற்றவர்களை புண் படுத்தும் வகையில் கண்டிப்பாக என் பதிவுகள் இருக்கவே கூடாது என்பதில் தான் மிகவும் கவனம் செலுத்துகின்றேன் - உங்களைப்போல பல நல்ல உள்ளங்களின் நடப்பு கிடைப்பதால் அதுவே என் பதிவுகளின் பெரிய வெற்றி என்று நினைக்கிறேன் . பல சாதனையாளர்கள் நிறைந்த இந்த திரியில் நான் சாதித்தது கடுகை விட மிகவும் சிறியது . மீண்டும் என் மனமார்ந்த நன்றி சார் ...

uvausan
23rd May 2015, 07:20 PM
மதுர கானங்கள் பாகம் நான்கு

கண்ணா! மனம் நிறைந்த வாழ்த்துகள்!

கல்நாயக்! பாராட்டுகள்

ராஜேஷ்! வாழ்த்துகள்!

ரவி! பாராட்டுக்கள்

கிருஷ்ணாஜி! வருக! வருக!

ராகவேந்தர் சார்! nuances அடங்கிய திலக சங்கமத்திற்கு பாராட்டுக்கள்!

இவர்களுக்கெல்லாம் மய்யப் புள்ளியாக விளங்கும் வாசுவிற்கு மனம் நிறைந்த நன்றிகள்!

அன்புடன்

நன்றி முரளி - உங்கள் பாராட்டுக்கள் ஒரு புதிய உற்ச்சாகத்தை கொடுக்கின்றன

chinnakkannan
23rd May 2015, 08:21 PM
ரவி ஈஈஈ..

எண்களில் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ உங்களது உழைப்பும் தமிழில் முன்னேற்றமும் உங்க்ள் பதிவுகளில் தெரிவது உள்ளங்கை நெல்லிக்கனி, அதற்குப் பாராட்ட இந்த ஆயிரம் ஒருசாக்கு அவ்வளவே.. நன்றாக எழுதிக் கொண்டிருக்கின்றீர்கள். தொடருங்கள்..


என்ன அன்னை பற்றி சரம் சரமாய்ப் பதிவுகள் போட்டு கதி கலஙக் வைத்துவிட்டீர்கள்..மிக அழகாக, பெருமையாக இருக்கிறது..

கருவின்கரு என்ற போதே நான் ஊகித்து விட்டேன்..ஆனால் சொல்லவில்லை.. குட். என் ஊகம் சரியானதில் எனக்கொரு (அல்ப) சந்தோஷம்..

ஆனந்த் ராகவ் என்றொரு எழுத்தாள நண்பர், நாடகாசிரியர் அவர் எழுதிய ஒரு கதை நினைவுக்கு வருகிறது..வெகு வயதான ஒரு அன்னையை கும்ப மேளாவில் குடும்பமே சென்று அவரை ஒரு இடத்தில் அமர்த்திவிட்டு பின் சென்றுவிடுவதாக. அந்த அம்மா வராத குடும்பத்திற்காகக் காத்திருப்பாளாம்..கண்களில் நீர் மல்க வைக்கும் கதை.பெயர் நினைவிலில்லை..

என் அன்னையின் இறுதி முகம் காண எனக்குக் கொடுத்துவைக்கவில்லை..( யார் யாருக்குஎன்ன வாய்க்கிறதோ அது தான் வாய்க்கும் என்பதை உணர்த்திய விஷயம் அது) இன்றுவரை வேதனைப் பட்டுக் கொண்டிருக்கிறேன்.

ம்ம் தொடர்ந்து எழுதுங்கள்..

RAGHAVENDRA
23rd May 2015, 08:21 PM
ரவி
ஆயிரம் பதிவுகள் ... அதிலும் பல்வேறு ஆய்வுகளை உள்ளடக்கிய தலைப்புகளும் அதற்குரிய கருத்துரைகளும் பாடல்களும் தங்களுடைய தனிச் சிறப்பாக மிளிர்வது பாராட்டுக்குரியது. தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.

அதிலும் கருவின் கரு என்கின்ற தற்போதைய தலைப்பு நெஞ்சுருக வைக்கும் நெகிழ வைக்கும் என்பதில் சற்றும் ஐயமில்லை.

மென்மேலும் தங்களுடைய ஆய்வுகளின் மூலம் ஆயிரக்கணக்கான பதிவுகளில் விஷய தானம் செய்ய வேண்டி, வாழ்த்துகிறேன்.

chinnakkannan
23rd May 2015, 08:29 PM
ஆதிராம்,

தமிழுக்கு நான் உபயோகப் படுத்துவது NHMwriter . கூகுள் செய்து அந்த Nhmwriter ai download செய்யுங்கள். அதை இன்ஸ்டால் செய்யும் போது எந்த மொழி எனக் கேட்கும். தமிழ் என்று போட்டு விட்டு செய்யுங்கள். பின் அந்த என்ஹெச் எம் ஐகானின் மீது டபுள் க்ளிக் செய்தீர்கள் என்றால் ஒரு பெல் (மணி) ஐகான் கம்ப்யூட்டரின் வலது பக்க மூலையில் தோன்றும்.

அதைக் க்ளிக் செய்தீர்கள் என்றால் மூன்றாவது ஆப்ஷன் Alt+2 Tamil Phonetic Unicode என்று வரும். அதில் க்ளிக் செய்துவிட்டு டபக் டபக் என அடிக்க வேண்டியது தான்.. அதாவது ஆங்கிலத்தில் (dabak dabak ena adikka veendiyathu thaan ) அடித்தால் தமிழில் வரும்.

சந்தேகம் ஏதாவது வந்தாள் கேளுங்கள்.

uvausan
23rd May 2015, 08:39 PM
CK - ஏழாயிரம் - வெறும் ஆயிரத்தை வாழ்த்தும்போழுது - ஏழு மடங்கு சந்தோஷம் பிறக்கின்றது . நீங்கள் சொல்வது உண்மை - காசியில் இதைவிட மோசமான , மனித நேயத்திர்க்கே கொல்லி வைக்கின்ற சில காட்ச்சிக்களை பார்த்தேன் - கண்களில் கண்ணீர் நின்று , இதயம் வழியாக இரத்தம் கசிந்தது - என் பதிவுகளில் இத்தகைய சம்பவங்கள் இடம் பெரும் . ... நீங்கள் உங்கள் தாயின் முகத்தை அந்திம நேரத்தில் பார்க்க முடியவில்லை என்று குறுப்பிட்டு இருந்தீர்கள் - கேட்கவே மிகவும் வருத்தமாக இருக்கின்றது . என் நிலைமை சற்றே வேறு மாதிரி - என் தாயின் அருகில் இருந்தேன் - என் கைகளை வருடிக்கொண்டிருந்த அவள் என்னை பார்க்க முடியாமல் பார்வை ( extreme stage of Glaucoma) இழந்த கண்களை கடைசியாக இழுத்து மூடிக்கொண்டாள்.

chinnakkannan
23rd May 2015, 08:41 PM
வாசு..ங்க்ணா.

ரொம்ப நாள் கழிச்சு மறுபடி தொடர்.. சண்டைக் காட்சிகள். ந,தி இழையில்... ரசித்துப் படித்தேன்.. இன்றைய காலகட்ட்த்தில் கிராஃபிக்ஸ் மற்றும் எவ்வளவோ முன்னேற்றங்கள் வந்தாலும் கூட அந்தக்காலத்தில் எதற்கெடுத்தாலும் சற்றே மெனக்கெடத் தான் வேண்டும்.. அது போல ந.தி யின் உழைப்பு நீங்கள் காண்பித்த காட்சியில் தெரிகிறது..

நன்றி.ங்கோவ்.. புதையல் பார்க்கவேண்டும் ..இதுவரை பார்த்திராத படம்..(அந்த இழையில் போடாததற்குக் காரணம் கோபால், சி.செ, ராகவேந்தர் முரளி போன்றோர்களின் பதிவுகளைப் படித்து மட்டும் நிறுத்திக் கொண்டதால்..அவங்க கோச்சுண்ட்டுட்டாங்கன்னா. .. கஷ்டம் தான்.. எனில் இங்கு)

uvausan
23rd May 2015, 08:42 PM
ரவி
ஆயிரம் பதிவுகள் ... அதிலும் பல்வேறு ஆய்வுகளை உள்ளடக்கிய தலைப்புகளும் அதற்குரிய கருத்துரைகளும் பாடல்களும் தங்களுடைய தனிச் சிறப்பாக மிளிர்வது பாராட்டுக்குரியது. தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.

அதிலும் கருவின் கரு என்கின்ற தற்போதைய தலைப்பு நெஞ்சுருக வைக்கும் நெகிழ வைக்கும் என்பதில் சற்றும் ஐயமில்லை.

மென்மேலும் தங்களுடைய ஆய்வுகளின் மூலம் ஆயிரக்கணக்கான பதிவுகளில் விஷய தானம் செய்ய வேண்டி, வாழ்த்துகிறேன்.

மிகவும் நன்றி சார் - உங்கள் ஆசியுடன் தான் இவ்வளவு தூரம் வந்துள்ளேன் - இனியும் அதன் துணையுடன் பல மையில்கள் கடப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது .

Gopal.s
23rd May 2015, 09:14 PM
ரவி,

அருமையான பங்களிப்பில் ஆயிரம் கண்டதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். கருவின் கரு ,சுவாரஸ்யம்.

uvausan
23rd May 2015, 09:26 PM
நன்றி திரு கோபால் - பார்த்த , அனுபவித்த சில கசப்பான உண்மைகள் வார்த்தைகளாக ப்ரவாகம் எடுக்கின்றது - புறாவின் வீடு கூட சற்று பெரிதாக இருக்கும் . காற்றே நுழையாத ஒரு எலிப்பொறியை போன்ற இடங்களில் சிலர் தாய்களை அடைத்து வைத்திருக்கும் ஒரு அவலத்தை சமீபத்தில் பார்க்க நேரிட்டது - அதன் பாதிப்புத்தான் இந்த "கருவின் கரு" . மீண்டும் என் நன்றி உங்கள் பாராட்டுக்களுக்கு ..

chinnakkannan
23rd May 2015, 10:18 PM
கிருஷ்ணா மோஹினிபற்றிய தகவல்களுக்கு நன்றி.. காதல் பகடை பாலச்சந்தர் சீரியலில் நன்கு நடித்திருப்பார்..

*
டின்னர் டயம்..ம்ம் என்னபண்ணலாம்..

சில நாட்களுக்கு முன் முக நூலில் மோர்க்களிக்குண்டோ இணை என ஒரு தோழி எழுதியிருந்தார்.. எனில் அது தப்பு போங்கு.. என ஒரு பதில் வெண்பா எழுதிப் பார்த்திருந்தேன்..

வார்த்தால் சிவந்தங்கே வண்ண முறுவலுடன்
ஆர்ப்பாட்ட மில்லா அழகுடன் – பார்க்கவும்
பேர்சொலும் தோசையது போலுண்டா சொல்லுங்கள்
மோர்க்களிக் குண்டு இணை

அப்புறம் கண்ணா பத்தித் தெரியும் தானே..யார் மனசும் நோகப் படாது எனில்
நானே எசப்பாட்டுப் பாடிப்பார்த்தேன்..

மோர்க்களிக் குண்டே இணையென்றே மோனையில்
வார்க்க இயலாத வாலிப – சோர்ந்துதான்
போகு மிதயம் பொலிவுறச் செய்வதெது
ஆ(க்)கும் அவ்வுணவே ஆம்

ஒடனே அங்கிட்டிருந்துபதில் சட்னி சாம்பார் இல்லாமல் எப்படி தோசை உள்ளே போகுமாம்?

பதில் சொல்லாமல் இருக்க முடியுமா..

தொட்டுக்கத் தேவையிலை தோசை முறுவலென்றால்
அப்படியே சாப்பிடலாம் ஆம்!

*
சரிங்க வீ.கா கிட்டக்க இருந்து அழைப்பு வந்துடுத்து.. கிச்சன்ல புதிய வார்ப்புகள் (தோசை) ரெடியாய்டுத்தாம்..

பின்ன வாரேன்..

தோசைப் பாட்டுக்கள் நா அச்சமில்லை அச்சமில்லை தான் கையில காசு வாயில தோசை..

அப்புறம்.. பதினாறு வயதினிலேயில் ஸ்ரீதேவி சொல்லும் வசனம் ஆசை தோசை அப்பளம் வடை

நிறைய இருக்கு..ஆனா வித்தியாசமான நேர்த்திக்கடன் பாட்டு கேட்க நேர்ந்தது..

அடி நேந்திகிட்டேன் அடி நேந்திகிட்டேன்
நெய் விளக்கு ஏத்திவச்ச உன்னோட
கன்னத்தில் முத்தம் கொடுக்க

https://youtu.be/BmieB0pj1JI

ஆச தோசை ஹே ஹே ஹே ஹே ஹே
நீ பேசும் பாஷையே புரியலையே ஹே ஹே

(ஜோதிகா ப்ரஷாந்த்.. ஸ்டார்னு படமாம்)

chinnakkannan
23rd May 2015, 10:46 PM
என்னமோ போங்க -1
**

வாழ்க்கையே ஒருகதை தாங்க..ம்ம் தோசை சாப்பிடலை..இனிமே தான்.. ஏனாம்..அது அப்புறம்.

இந்தக் கதை சிலபேருக்கு சந்தோஷமாகவும் சிலபேருக்கு சோகமாக்வும் இப்படியே மாறி மாறி போய்க்கிட்டே இருக்கா சமயத்துல பார்த்தா
ரிப்பீட் தான் ஆகிட்டிருக்கு..சுவாரஸ்யம் குறைய ஆரம்பிச்சுடுது.. இல்லியோ..( இப்ப என்ன சொல்ற ஏதாவது கதை பாட்டு கிடைச்சுடுத்தா..) ஆமாம்..


பொழுதெல்லாம் பேசச்சொல்லும் கதையொன்று கண்ணில் உண்டு
இரவெல்லாம் பாடச்சொல்லும் பாட்டொன்று நெஞ்சில் உண்டு

https://youtu.be/oF84MDVRa0U

ரவிச்சந்திரன் பாரதி தங்கதம்பி..அம்புலி போல் பெண்ணைக் கண்டேன்..

செந்தமிழே கண்ணில் திகழும் காண்பவர்க்கு தன்னால் புரியுமாம்.. ம்ம் என்னவோ போங்க..

தோசை ரெடி.. மிளகாப்பொடி செய்யணுமாம் அதுக்குள்ற ஃப்ரண்ட்ஸ் வந்துட்டாங்களா.. வீ.காவோட..எனில் கொஞ்ச நாழி கழிச்சுதான்..

அடுத்த போஸ்ட் ல வாரேன்..

chinnakkannan
23rd May 2015, 11:16 PM
என்னமோ போங்க - 2

*

இந்தப் பொண்ணுக்கு என்ன ஆச்சு..

ஆத்துல மீன் பிடிச்சு ஆண்டவனே உன்னை நம்பி
அக்கறையில் வாழ்ந்த பொண்ண இக்கரைக்கு வச்சகதை
விடுகதை..தொடர்கதை..

ஸ்ரீப்ரியா சுசீலாம்மா..அதெல்லாம் சரி..பாவம் இப்படி அத்துவானக் காட்டில தனியாத் தான் குளிக்கணுமா..ஃபரண்ட்ஸோட வந்திருக்கலாமில்லை...என்னமோ போங்க

https://youtu.be/S3iIVRE5Q68

rajeshkrv
23rd May 2015, 11:50 PM
ஆதிராம்,

தமிழுக்கு நான் உபயோகப் படுத்துவது NHMwriter . கூகுள் செய்து அந்த Nhmwriter ai download செய்யுங்கள். அதை இன்ஸ்டால் செய்யும் போது எந்த மொழி எனக் கேட்கும். தமிழ் என்று போட்டு விட்டு செய்யுங்கள். பின் அந்த என்ஹெச் எம் ஐகானின் மீது டபுள் க்ளிக் செய்தீர்கள் என்றால் ஒரு பெல் (மணி) ஐகான் கம்ப்யூட்டரின் வலது பக்க மூலையில் தோன்றும்.

அதைக் க்ளிக் செய்தீர்கள் என்றால் மூன்றாவது ஆப்ஷன் Alt+2 Tamil Phonetic Unicode என்று வரும். அதில் க்ளிக் செய்துவிட்டு டபக் டபக் என அடிக்க வேண்டியது தான்.. அதாவது ஆங்கிலத்தில் (dabak dabak ena adikka veendiyathu thaan ) அடித்தால் தமிழில் வரும்.

சந்தேகம் ஏதாவது வந்தாள் கேளுங்கள்.
அதே தான் நானும் உபயோகம் செய்கிறேன். மிகவும் எளியது

rajeshkrv
23rd May 2015, 11:51 PM
என்னமோ போங்க - 2

*

இந்தப் பொண்ணுக்கு என்ன ஆச்சு..

ஆத்துல மீன் பிடிச்சு ஆண்டவனே உன்னை நம்பி
அக்கறையில் வாழ்ந்த பொண்ண இக்கரைக்கு வச்சகதை
விடுகதை..தொடர்கதை..

ஸ்ரீப்ரியா சுசீலாம்மா..அதெல்லாம் சரி..பாவம் இப்படி அத்துவானக் காட்டில தனியாத் தான் குளிக்கணுமா..ஃபரண்ட்ஸோட வந்திருக்கலாமில்லை...என்னமோ போங்க

https://youtu.be/S3iIVRE5Q68

யோவ் நீர் ஒரு ... தனியா குளித்தால் தானே வில்லன் கண்ணில் படலாம் பட்டால் தானே காப்பாற்ற ஹீரோ வருவார்.
உமக்கு ஒன்னுமே தெரியல

chinnakkannan
24th May 2015, 12:00 AM
என்னமோ போங்க -3 ( இரவின் மடியில்னு அடிக்கடி ராகவேந்திரரோட டைட்டில ச் சுட மனசுவரலை அதான்)

**

இந்தப் பாட்ல பாத்தீங்கன்னா

காதலியும் மெட் ராஸ் காதலனும் மெட் ராஸ்..

மச்சான் உன் மூஞ்சப் பாத்தே நாஸ்தா துண்ணு நாளாச்சு

(இனிய காதலனே நான் வார்த்துவைக்கும் பொன்னிற தோசை + வெங்காய சாம்பார்+ தேங்காயுடன் இரண்டறக் கலந்த ஸ்ஸ்ஸ்ஸ் எனக் கண்ணில் நீர் மல்க வைக்கும் மிளகாயுடன் செய்யப்பட்ட காரச் சட்னியுடன் காலை உணவு நீ உண்டு தண்ணீர் குடித்து ஏவ் என்று ஏப்பமும் விட பின் ஆறி காட்டன் துணிபோல் ஆகியிருக்கும் தோசையை நீவிட்டு வைத்திருக்கும் கொஞ்சூண்டு சட்னியுடன் உன் கண்ணை ஆசை ஆசையாய்ப்பார்த்தபடி நான் காலை உணவு உண்டு ரொம்ப நாளாயிற்று அன்பரே என்று அர்த்தமாம்)

ஆயாக்கடை இடியாப்பம்னா பாயாக்கறியும் நீயாச்சு.. (பாயாக்கறி நான் இன்னும் உண்டதில்லை ரெஸிப்பி ப்ளீஸ்)

வா மச்சான் ஒண்ணாச் சேர்ந்து வாராவதிக்கே போகல்லாம் (அந்தக்காலத்தில் அகண்ட காவேரியில் ஆழம் + அழகாக நீர் வேறு பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கும்..அப்போது அதைப்பார்த்தபடி காதலர்கள் ஆற்றின் கரையோரம் அழ்காய் அற்புதமாய் கொஞ்சம் கள்ளம் நிறையக் காதல் கண்ணில் தேக்கிவைத்து நடந்துசெல்வார்கள்.. பட் வாட்டுடூ. நாம்பிறந்து வளர்ந்தது இந்தச் சென்னை..வாராவதி என்று ஸ்மெல் அடிக்கும் கூவம் கரைக்கே செல்லலாம் )

வாவாத்யாரே வூட்டாண்டே நீ வராங்காட்டினா வுடமாட்டேன் ( வா என் இனிய காதலா..என்னிடம் பற்பல விதமாய்க் காதல்பாடம் சொல்பவனே.. உன்னுடைய ஊர் ஜாம்பஜார்.. என்னுடைய ஊர் சைதாப்பேட்டை.. உன்பெயர் போய்யா வெட்கமாய் இருக்குது.. என்பெயர் சொக்கி.. உன்னை உன் கண்ணை உன் உணர்வை உன் உள்ளத்தை மயக்கி மீளா நிலைக்குக் கொண்டு செல்பவள்..)

இப்படித் தான் அர்த்தமா இருக்குமா இருக்கும் :) என்னமோ போங்க..

https://youtu.be/oiqJrRG1b7s

chinnakkannan
24th May 2015, 12:05 AM
என்னமோ போங்க -4

**

எப்பப் பார்த்தாலும் சரி பொய் பேசுவது என்று ஒரு சிலருக்கே கைவந்த கலை.

யாருன்னு பார்த்தீங்கன்னா ராஜேஷ் மாதிரி யூத்ஸ்க்குத் தானாம்..

இங்க பாருங்க ஒரு யூத் இன்னா சொல்லுது (ஸாரி லாஸ்ட் போஸ்ட்டோட மயக்கம்) என்னா சொல்லுது

உன் மைவிழி ஆனந்த பைரவி பாடும்


அப்ப மூக்கு என்ன முகாரி பாடுமா (மோனைக்காகச் சொன்னேன்)

கண் கானடா

உதடு - சிந்து பைரவி

அப்புறம் கீழே சரேலென்று இறங்கி இடைப்பக்கம் வந்தால்..ஆமாம் ஓய் அதே அதே மோகனம்

பின்..

கொஞ்சம் சென்சார்லாம் தாண்டி காலுக்கு வந்தால் மறுபடியும் மேலுக்கு வரவேண்டும் என்ற ஆசையில் பூபாளம் பாடுமோ கால்கள்.. ம்ம் என்னமோ போங்க..

**
முத் ராம் அண்ட் ப்ரமீளா ( கார்த்திக்குக்கும் வலை..அதானே பார்த்தேன் என நீங்கள் சொல்வது காதில் கேட்டுஃபையிங்க்)

https://youtu.be/FPcypPogwCA

chinnakkannan
24th May 2015, 12:08 AM
ராஜேஷ்.. ஹி ஹி..உங்க கமெண்ட் பார்க்கலை..இப்போ தான் பார்த்து ஃபையிங்க்க்..

அது கரீட்டு யார் வில்லன் ச்சும்மா சிவகுமார் வந்து ரெகார்ட் பண்ணிக்கிட்டு போய்டுவாரோன்னோ

rajraj
24th May 2015, 12:19 AM
'paayaa kari' ? chinnakkaNNan: I thought you were a vegetarian? paayaa is made of goat bones simmered overnight in low flame to be consumed next day. It is a muslim delicacy ! :) Enjoy! :)

chinnakkannan
24th May 2015, 12:46 AM
ராஜ் ராஜ் சார் தாங்க்ஸ்..ஃபார் த எக்ஸ்ப்ளனேஷன்..

நா மதுரைக்காரன்..ஆனால் வெஜிடேரியன்

பின் ஏன் மதுரைங்கறீங்களா.எங்கள் வீட்டிற்கு அருகாமையில் தேவி தியேட்டர் எனப்பலதடவை சொல்லியிருக்கிறேன்.அங்கு ஆம்லெட் மற்றும் மட்டன் ஸ்டால் உணவகங்கள் இரண்டு உண்டு...அதுவும் கொத்துபரோட்டோஎன்கிற சங்கதி இரவு 9 மணிக்குமேல் தான் சுதி சுத்தமாக ஆரம்பிக்கும் டக் டொய்ங்க் ட்யொங் டொய்ங்க் என..

வெஜ் ஆக இருந்தாலும் பரோட்டா சால்னா (எலும்பில்லாமல்) உண்டதுண்டு..அதுவும் முரளியைக் கேட்டால் தெரியும்..லேபர் ஹைஸ்கூல் பக்கத்தில் நிறைய ஸ்டால்கள் உண்டு - மட்டன் ஸ்டால்;கள் தான் ..கல்லூரி படிக்கும் போது ஓசைப்படாமல் ரெண்டு மூன்று கொத் பரோட்டா அல்லதுவெறும் பரோட்டா (குட்டிப் பெளர்ணமியாய் விகசித்திருக்கும்) உண்டது உண்டு..ம்ம் அதெல்லாமொரு நிலாக் காலம்..வராது..:sad: பாயாக்கறி கேட்டு பாட்டு எல்லாம் கேட்டிருக்கிறேன்.சாப்பிட்டதில்லை.. நன்றி அகெய்ன்.

Richardsof
24th May 2015, 05:59 AM
இனிய நண்பர் திரு ரவி சார்

ஆயிரம் பதிவுகளுக்கு அன்பான வாழ்த்துக்கள் .''கரு '' - தொடர் அமர்க்களம் .தொடர்ந்து அசத்துங்கள். நீங்களும் ஆயிரத்தில் ஒருவன் என்பதில் மிக்க மகிழ்ச்சி .

vasudevan31355
24th May 2015, 07:34 AM
முரளி சார்,

மிக்க நன்றி! தங்கள் பொன்னான எழுத்துக்களை இங்கே எதிர்பார்க்கிறோம்.

uvausan
24th May 2015, 07:57 AM
மிக்க நன்றி வினோத் சார் - உங்கள் திரி சார்பற்ற பாராட்டுக்கள் இன்னும் எழுத வேண்டும் - அவைகள் இன்னும் அருமையாக , பிறர்க்கு உபயோகப்படும் வகையில் இருக்க வேண்டும் என்ற ஒரு மன உறுதி யைத்தருகின்றன . சாதனையாளர்கள் மனமுவந்து வாழ்த்தும்போது அதன் இனிமையே தனிதான் ....

vasudevan31355
24th May 2015, 08:05 AM
கிருஷ்ணா!

இதுதான் கிருஷ்ணா என்பது. கேட்டவுடன் விஷயங்கள் அருவி மாதிரி கொட்டுகிறது. மோகினி பற்றி மோகனன் கேட்டதும் ஓடியாந்து தந்து விட்டீர்களே!

http://www.filmibeat.com/img/popcorn/profile_photos/mohini-4114.jpghttp://sim03.in.com/34252795ae651cf1a69c4bd834b68bfa_t.jpg

மோகினி நடிகர் திலகத்துடன் நடித்த கேயாரின் 'சின்ன மருமகள்' அவருடைய கேரியரில் குறிப்பிடத் தகுந்த படம். கேயாரின் செல்லக்குட்டி.

http://ttsnapshot.net/out.php/i14275_vlcsnap-2013-07-03-11h59m49s152.pnghttp://ttsnapshot.net/out.php/i14276_vlcsnap-2013-07-03-12h00m18s189.png
http://ttsnapshot.net/out.php/i14277_vlcsnap-2013-07-03-12h01m03s124.pnghttp://ttsnapshot.net/out.php/i14278_vlcsnap-2013-07-03-11h59m10s15.png
http://ttsnapshot.net/out.php/i14279_vlcsnap-2013-07-03-12h02m15s75.png

இந்தப் படம் பாண்டியில் சக்கை போடு போட்டது. வழக்கமாக சிவா மோகிக்கு ஹீரோ. (இவர் தன் நிஜ மனைவியை தண்ணி அடித்துவிட்டு வந்து சித்திரவதை செய்ததாக உலகத் தொலைகாட்சி வரலாறில் முதன் முறையாக பல தொலைக்காட்சிகள் சில ஆண்டுகளுக்கு முன்னால் வரிந்து கட்டிக் கொண்டு செய்திகளை அளித்தன. சிறைத் தண்டனை கூட அனுபவித்தார் போல. இப்போது சில விளம்பரப் படங்களில் தலை காட்டி கொண்டிருக்கிறார்) இவருக்கு குர்தா எடுப்பாக இருக்கும்தானே கிருஷ்ணா! நடிகர் திலகம் பத்திரிக்கைகளுக்கு கதை எழுதும் கண் தெரியாத எழுத்தாளர். தேவருக்கு 'முதல் மரியாதை' தராத மாமியார். அடங்கிப் போகும் மூத்த மருமகள் ரேணுகா. அவர் கணவன் ராஜேஷ் தம்பி. மாமியாரின் கொழுப்பை அடக்கும் 'சின்ன மருமகள்' மோகி. அதை ரசிக்கும் நடிகர் திலகம். பெண்களை அதிகமாக கவர்ந்த படம். ஒருமுறை தான் பார்த்தேன். அதை நினைவில் வைத்து எழுதுகிறேன்.

(அச்சா! நடிகர் திலகத்தைப் பற்றி இன்னைக்கு எழுதியாச்சு. எங்கும் நிறைந்த பரம்பொருள் அல்லவோ அவர்!)

அதே போல 'கண்மணி' படம் என்று நினைவு. மம்பட்டியான் மகன் ஹீரோ. மோகி திமிர் பிடித்த கல்லூரி மாணவி. நன்றாகவே செய்திருந்தார். ஒரு மாதிரி பூனைக்கண் அழகி நம் சின்னக் கண்ணனுக்கு பிடித்தாற் மாதிரி. நைஸாக பேசி விஷயத்தை கறந்து விட்டார் பார்த்தீர்களா?

http://1.bp.blogspot.com/_jo1xsRVxX7o/TT_tSNOaOUI/AAAAAAAAHe0/eaX-d76S3vc/s1600/Kanmani.jpg

'கண்மணி' சி.கவுக்காக:) 'உடல் தழுவத் தழுவ' பாடல். பாடல் நன்றாக இருக்கிறது. அப்புறம் சி.க கோவிச்சுக்குவார். அப்ப சீன் நல்லா இல்லையென்று?:)


https://youtu.be/P6v5taWdQRo

uvausan
24th May 2015, 08:07 AM
கருவின் கரு - பதிவு 12

புற்று நோயை , ஒரு குழந்தை என்று எண்ணி இவள் சுமக்கின்றாள் - அது அவளை சுமக்க ஆவலுடன் காத்திருக்கின்றது ... காதலின் பலனால் காதலித்தவனையே திருமணம் செய்துக்கொண்டவள் - சுமந்துகொண்டிருக்கும் தாய்மையினால் , தன் மரணத்தை கட்டிப்போட பார்க்கிறாள் . கற்பனையில் குழந்தை சிரிக்கின்றது - அவள் மனம் வானத்தில் மிதக்கின்றது - இவர்களை பார்த்து விதியும் சிரிக்கின்றது - என்ன அருமையான படம் ! அருமையான காதல் ஜோடி , அருமையான பாடல் - கண்களில் கண்ணீரை வற்ற வைக்கும் பாடல் இது - தாய்மையின் உச்சக்கட்டம் . கனவில் வரும் நிம்மதி , நிஜத்தில் வருவதில்லை

https://youtu.be/0e6d1uWErlQ

uvausan
24th May 2015, 08:14 AM
கருவின் கரு - பதிவு 13

என் தாய் சொன்ன ஒரு கதை - உழைத்து வாழவேண்டும் என்பதில் அவளிக்கிருந்த நம்பிக்கை என்னுள் இப்படி பரவி ஆலமரம் போல வளர்ந்துவிட்டது - மஹலக்ஷ்மியாக விளங்கும் அவளை வணங்குகிறேன் . அந்த தெய்வத்திற்கும் என்றும் என் நன்றி உரித்தாகுக -----



அந்த அழகிய கிராமத்திற்கு ஒரு முனிவர் வந்திருந்தார்..ஊருக்கு மத்தியில் இருந்த மரத்தடியில் அமர்திருந்தார்..யாருமே ஊரில் அவரைக்கண்டுகொள்ளவில்லை . முனிவர் அல்லவா ? கோபத்தில் சாபமிட்டார் அந்த ஊருக்கு ..” இன்னும் 50வருடங்களுக்கு இந்த ஊரில் மழையே பெய்யாது .வானம் பொய்த்துவிடும் ” … இந்த சாபம் பற்றி கேள்விப் பட்ட அனைவரும் என்ன செய்வது என்றே தெரியாமல் கவலையோடு அவரின் காலடியில் அமர்ந்து மன்னிப்பு கேட்டனர் .. சாபத்திற்கு விமோசனம் கிடையாது என்று கூறிவிட்டார் முனிவர் .வேறு வழியின்றி அனைவருமே அவரின் காலடியில் அமர்ந்து இருந்தனர் …மேலிருந்து இதைக் கவனித்த பரந்தாமன் தனது சங்கினை எடுத்து தலைக்கு வைத்து படுத்துவிட்டான் ( பரந்தாமன் சங்கு ஊதினால் மழை வரும் என்பது நம்பிக்கை ). இன்னும் 50 வருடங்கள்மழை பெய்ய வாய்ப்பில்லை என்பதால் இனி சங்குக்கு ஓய்வு என்றே வைத்து விட்டான் …) அந்த ஊரில் ஒரு அதிசயம் நடந்தது …ஒரே ஒரு உழவன் மட்டும் கலப்பையைக் கொண்டு தினமும் வயலுக்குச் சென்று வந்து கொண்டிருந்தான் .அவனை அனைவரும் பரிதாபமாகவே பார்த்தனர் .மழையே பெய்யாது எனும்போது இவன் வயலுக்கு போய் என்ன செய்யப் போகிறான் என்ற வருத்தம் அவர்களுக்கு … அவனிடம் கேட்டே விட்டனர் . நீ செய்வது முட்டாள்தனமாக இல்லையா என்று ..அதற்கு அவனின் பதில்தான் நம்பிக்கையின் உச்சம் ”’ 50 வருடங்கள் மழை பெய்யாது என்பது எனக்கும் தெரியும் . உங்களைப் போலவே நானும் உழுதிடாமல் இருந்தால் 50 வருடங்கள் கழித்து உழுவது எப்பிடி என்றே எனக்கு மறந்து போயிருக்கும் ..அதனால்தான் தினமும் ஒருமுறை உழுது கொண்டு இருக்கிறேன் ”என்றான் .

இது வானத்தில் இருந்த பரந்தாமனுக்கு கேட்டது..அவரும் யோசிக்க ஆரம்பித்தார் ..”50 வருசம் சங்கு ஊதமால் இருந்தால் எப்பிடி ஊதுவது என்று மறந்து போயிருமே ”.என்றே நினைத்து சங்கை எடுத்து ஊதிப் பார்க்க ஆரம்பித்தார் …. இடி இடித்தது …மழை பெய்ய ஆரம்பித்தது …நம்பிக்கை ஜெயித்து விட்டது .
” தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும் ”

https://youtu.be/kzqpT0JK6-g

Gopal.s
24th May 2015, 08:29 AM
கருவின் கரு.

எனக்கு பெரிய விழாக்களிலும் கொண்டாட்டங்களிலும் நம்பிக்கை இல்லை. என் கல்யாணமும் ஆகட்டும், என் மகன்களின் வர போகும் திருமணங்களும் ஆகட்டும், ஒரு திருமண ஒப்பந்தம்(சட்ட ஒப்பந்தம் இணைத்து),மணமக்களின் நெருங்கிய நண்பர்களுக்கு ஒரு விருந்து. பணபரிமாற்றங்களை வெறுப்பவன்.(வரதட்சினை,நகை, ETC ETC ,gifts )

இரண்டு மகன்களுக்கும் உபநயனம் செய்யவில்லை.(எனக்கும் அவர்களுக்கும் ஜாதி முறையில் உவப்பில்லாததால்).கலப்பு மணங்களில் மிக்க உடன்பாடு. (நடக்கவும் போகிறது)பெரியார் ஜாபகம் வருகிறார். என்னையா கலப்பு மனுஷனுக்கும் மனுஷனுக்கும் தானே??!!!

ஒரே விதிவிலக்கு .என் தாய் தந்தையர். அவர்களுக்கு 60, 70, 80 ஆகிய திருமணங்களை மிக மிக சிறப்பாக பிள்ளைகள் செய்தோம்.

சமீபத்தில் எங்கள் அன்னையின் 80 ஆவது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினோம்.அன்னையை மிகை படுத்தி சொல்வது உலக குறிப்பாக தமிழ் மரபு. எங்கள் அன்னையை பற்றி உள்ளதை சொன்னாலே மிக மிக மிகையாக தெரியும்.

அந்த கால பட்டதாரி 50 களில். அம்மன் போன்ற ஒளி மிகு தோற்றம்.பாடகி.நடன வித்தகி. ஓவியம் தெரிந்தவர்கள்.ஆனால் மன வாழ்வில் புகுந்த வீட்டினால் மிகதொல்லைகள். பலவித கஷ்டங்கள். சொல்லவொணா துயரங்கள். எங்களுக்கு தாயாக,தந்தையாக இருந்து எங்கள் நால்வரையும் உயர்நிலைக்கு கொண்டு வந்தவர். ஆசிரியை. அதுவும் ஒரு சிறப்பான பொறுப்பான புத்திசாலி ஆசிரியை.எங்களுக்கு அவர் சிறு வயது முதலே தோழமையாக நின்றவர்.(என் தந்தையும்).யாரையும் தாழ்த்தி பேச கூடாது ,எல்லா தொழிலுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று போதித்ததுடன் ,சிறு வயதில் நாவிதர்கள்,கழிவறை தொழிலாளி இவர்களையும் அவர் ,இவர் என்று மரியாதையாக விளிப்பதுடன்,அவர்களுக்கு தண்ணீர் ,தேநீர் இவற்றை நாங்கள் புழங்கும் பாத்திரங்களிலேயே அளிப்பார். சாத்திர சடங்குகளில் நம்பிக்கை கிடையாது.எங்களுக்கு பத்து வயது வரை ஜாதி என்ன என்பதே தெரியாது.(பிறகு அந்த புண்ணியத்தை செய்தவன் மகேந்திரன் என்ற தி.மு.க நண்பன்) வேலைக்கு சென்றும் பிள்ளைகளான எங்களுக்கு ஒரு வேளை கூட தவறாமல் அற்புதமான சுவை உணவு. வேலையாட்களும் கிடையாது. அப்பப்பா எவ்வளவு கடும் உழைப்பு,மனத்துன்பங்கள்.நினைக்கும் போது இப்போதும் கண்ணீர் முட்டி நிற்கிறது.இவ்வளவும் இருந்தும் எல்லா வயதினரிடமும் சமமாக நட்பு பாராட்டி ,பல உலக விஷயங்களை விவாதித்து இன்றும் இளமையோடு ,ஆரோக்யத்தோடு வாழ்பவர். இன்னும் அவரும் என் தந்தையும் தனியாக வாழ்ந்தாலும் ,ஒரு நாள் கூட அவர்களிடமிருந்து எந்த உதவி கோரிய வேண்டுகோளும் எங்களுக்கு வந்ததில்லை.(நாங்கள்தான் நிறைய உதவி நாடுவோம்)

அவர்களின் 80 வது பிறந்த நாளில் நான் எழுதி படித்த கவிதை.



இவள் அன்னையல்ல.




இவள் அன்னையல்ல. இந்தியாவின் அன்னைகளின் சித்தரிப்பு

நகல்களின் விஸ்தரிப்பு , அத்தனை கோடியிலும் தனி இவள்.




இவள் தெய்வமுமல்ல.




இவளை மக்களிடம் இருந்து பிரித்து பீடத்தில் ஏற்றி ,சூடம் கொளுத்தி

சிலுவையில் ஏற்றி தொழுது அண்ணாந்து பார்க்கும் மக்களை பெற்றவளில்லை




இவள் ஈன்று புறம் தந்தவள் இல்லை.




இவள் ஈன்று அகம் கொண்டவள். பசியாற மீனளிக்கும் அன்னை,தூண்டில் தர தந்தை

குளத்தில் மீன் பிடிக்கும் வித்தை கற்க குரு என மூன்றுமாய் இவளே




செல்ல துரையின் பட்டு பெண்ணிவள்.




பாதம் பட்டால் நோகாது தேவலோக பஞ்சை தரை விரித்த தந்தை

பாரதி சொன்னால் போதுமா, பாருங்கள் வித்தை கற்ற விந்தை பெண்ணை




கல்லாத வித்தையாய் எதிர்நீச்சல் வித்தகியாம்




அன்பின்மையால் சந்திக்கவொண்ணா சோதனைகள் சுமந்து தெப்பமென

சுற்றம் கரையேற்றிய சீலத்தை செப்ப சீரிளமை தமிழால் இயலுமோ.





அந்தரங்கம் தொந்தரவின் புனித பீடமல்ல என புனைநதவள்




வாழ்வின் இருள் மறைவிடத்தில் பதுங்காமல் ,சூரிய ஒளியில் ,சுற்றியிருப்போர்

சூழ வெளிப் படையான வெற்றி வாழ்வுக்கு விதையிட்டவள் இவளே




ஆக்கி மட்டும் பார்த்தவள் அழித்தலை முற்றும் அறியாதவள்




எங்கள் வாழ்வின் பொக்கிஷ அறைகளில் ,மனித எலும்பு கூடு , விடுங்கள்

மிருகங்களின் எலும்பு கூட்டை கூட சேர விடாத அறச் சுற்றத்தின் ஆக்கமிகு தலைவி.




தன்னை பிரதியெடுத்து மறு வெற்றி கண்டவள்




நல்லதோர் வீணையாய் நலன்கெட்டும், மெல்லதோர் மாற்று வீணைகளாய் மக்களை

சொல்லதோர் பிரதிகளாய் ,நாதம் கூட்டி நாலு பேர் இசைக்க,விசையுறு பந்தாகியவள்




ஒப்பாரும் மிக்காரும் இல்லா திறனாளியிவள்




ஒப்பிடுங்கால் மக்களாகிய நாங்களுமே மட்டு திறனாளிகளே ,இவள் கூட்டு

திறன்களை கொள்ள கௌரவர் அனைய கூட்டம் வேண்டும் ,நாங்களோ நால்வரே




தமிழையொத்த இளமை புதுமை இனிமை




அகவை எண்பதாம் , எட்டிலிருந்து எண்பது வரை யார் வரினும் இவள் அகவை அவரினும்

மிக்காது ஒன்றிரண்டை கழித்து தான் கொள்பவள் ,தமிழின் உண்மை தகைமகள்




எனக்கு சுயமில்லாது மாற்று பெயர் மட்டும் இட்டவள்




அன்னையின் நடமாடும் நிழலே நான் சுயத்தை தொலைக்காத இரவல் சுயமாய்

தும்மலிலும் மூச்சிலும் பேச்சிலும் கலையிலும் வாழ்வின் அலையிலும் இவளின் குறை பிரதியாய்

vasudevan31355
24th May 2015, 08:40 AM
கிருஷ்ணா!

உடுமலை நாராயணகவியை நினைவு கூர்ந்ததற்கு நன்றி! கவி இயற்றிய பாடலில் ஜனரஞ்சகமான எனக்கு பிடித்த பாடல்.

'நல்ல தம்பி' படத்திலிருந்து மதுரம் பாடும் எட்டு...ஏழு.... ஆறு.


https://youtu.be/THpHQM26F60

rajeshkrv
24th May 2015, 08:41 AM
மோகினி பற்றி மேலும் தகவல்கள்

என் அம்மா வேலை செய்த பூதான் போர்டில் அவருடன் தட்டச்சு அடிப்பவர் திரு செளந்தர்ராஜன். அவரும் இன்னொருவரும் சேர்ந்து தயாரித்த படம் ஈரமான ரோஜாவே .. அதில் நடிக்க புது முகங்களை தேடிக்கொண்டிருந்தனர். என் வகுப்பு முஸ்லிம் மாணவி தேர்வானார் . ஆனால் கடைசி நேரத்தில் நடிக்க மாட்டேன் என்று சொல்ல பின் மோகினியின் புகைப்படம் கிடைத்து அவரை ஒப்பந்தம் செய்தனர்.

நல்ல அழகு. ரஜினியே பாராட்டினாராம். நல்ல அழகும்மா நீ என்று.
மூக்கும் முழியுமாக நன்றாகவே இருந்தார்.
பல படங்களில் நடித்தார்.
தொலைக்காட்சியிலும் நடித்தார். அதுவும் பாலச்சந்தரின் காதல் பகடையை மறக்க முடியுமோ
மலையாளத்தில் நிறைய நடித்தார். கொஞம் நன்றாகவும் நடிப்பார்.

சரி மோகினியின் சில பாடல்கள்

எனக்கு மிகவும் பிடித்த பாடல் பாலு ஸ்வர்ணலதாவின் குரல்களில்

https://www.youtube.com/watch?v=8IvHstCnfg8

https://www.youtube.com/watch?v=dDOCDj8xbUw

மலேசியா ஜானகி குரல்களில் நல்ல பாடல்
https://www.youtube.com/watch?v=LjZOLx-P5Wo

மனோ ஜானகியின் குரல்களில் எனக்கு பிடித்த கலகலக்கும் மணியோசை

https://www.youtube.com/watch?v=Eq9nsMZyyT8

காதல் பகடை
https://www.youtube.com/watch?v=G4pvJv4Xayo

ஷெர்லாக் மாமி
https://www.youtube.com/watch?v=C7MLSGQyjF4

vasudevan31355
24th May 2015, 08:49 AM
ரவி,

அதிர்ந்து நிற்கிறேன். உங்களின் விஸ்வரூபம் கண்டு. 'கருவின் கரு' நான்காம் பாகத்தின் தனிச் சிறப்பு.

தாயவளை தாள் பணியாதோர் யார்?

நல்ல கரு. பொருத்தமான பாடல்கள். அருமையான நடை. வாழ்த்துக்கள்.

ஒவ்வொரு பாடல்களும் அருமையோ அருமை. அதுவும்,

'அம்மா என்பது தமிழ் வார்த்தை' என்றுமே அமரத்துவம் வாய்ந்தது.

அதே சமயம் இன்னொன்று. ஏன் இவ்வளவு வேகம்? ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று போதுமே. நாங்கள் அனுபவித்து படிக்க வேண்டாமா? வேகம் கதிர் ஒளியையும் விஞ்சுகிறதே?

குறுகிய கால சாகுபடி அல்ல உங்கள் பதிவுகள். போற்றிப் பாதுகாக்கப் பட வேண்டியவை. அதனால் ஒவ்வொன்றாக நிதானமாகத் தாருங்கள். மென்மையாக ரசித்துப் படிக்க வேண்டிய பதிவுகள்.

சாதனை சிகரங்களை நோக்கி பயணிப்பதற்கு வாழ்த்துக்கள் ரவி.

Gopal.s
24th May 2015, 08:51 AM
இன்று என்னுடைய முப்பதாவது திருமண நாள் என்பதால், என் வாழ்வின் மோகினியை தவிர எந்த மோகினியையும் நினைக்க முடியாத சீரியஸ் மூட் இல் உள்ளேன்.

ஞாநி அவர்களின் தந்தையார் மறைந்த போது ,அவர்களின் சகோதர சகோதரிகள் தந்தையை பற்றி எழுதிய குறிப்புகளை புத்தமாக போட்டு விநியோகித்தார். இது வைதீக சடங்குகளை விட முக்கியமாக பட்டது. இன்றைய தலைமுறை, உலக விஷயங்கள் தெரியும் அளவு, மூதாதையர், மண் சார்ந்த மரபுகள்,அவர்கள் வாழ்வு முறை தெரிந்து கொள்வதில்லை.(ஏன் மொழியையும் கூட) பழசு என்றாலே அலட்சிய மனோபாவம்.

இந்த முறையில் நம் மரபு சங்கிலி பற்றி ரெகார்ட் செய்த மாதிரியும் ஆகும். நன்றி ஞாநி .

vasudevan31355
24th May 2015, 08:52 AM
Tomorrow Justice Kumarasamy is going to celebrate his Birth-Day.

Please send him a GOOD CACULATOR as your birthday gift. (I already sent one).

ஆதிராம் சார்,

படித்து விட்டு நானும், என் பையனும், வீட்டுக்காரம்மாவும் விழுந்து விழுந்து சிரித்தோம். உங்களுக்கு என்ன கிப்ட் அனுப்புவது என்றுதான் இப்போது எனக்குத் தெரியவில்லை. செம டைமிங். நிஜமாகவே மனமார ரசித்தேன்.

chinnakkannan
24th May 2015, 08:52 AM
ஹாய் குட் மார்னிங்க் ஆல்..

கொஞ்சம் உடல் நிலை சரியில்லை எனில் லீவ். டேப்லட் போட்டுக் கொண்டு தூங்க வேண்டும்.. கொஞ்சூண்டு ப்ரெளஸ் பண்ண வந்ததில்..

வாசு சார்.. நைஸ்.. மோகினி பற்றிய படங்கள், திரைப்படங்கள்.. கொஞ்சம் வித்யாச அழகு கொண்ட மங்கை தான் அவர்.. கண்மணி பாட்டு முழுக்க கேட்டேன் தாங்க்ஸ்.. நன்றாகவே இருந்தது..

சின்ன மருமகள் நானும் பார்த்திருக்கிறேன்.. ந.தி முன் நடிக்க முடியாமல் கொஞ்சம் தவித்த மாதிரி படும் மோஹினி. பூனைக்கண் நு சொல்லப் படாது.. ஏதோ கொஞ்சம் வித்யாசமான படைப்புன்னு வெச்சுக்கலாம்..:) தாங்க்ஸ் அகெய்ன்..

chinnakkannan
24th May 2015, 08:56 AM
கோ..

முதலில் உங்க்ளுக்கு என்/எங்களின் முப்பதாவது திருமண ஆண்டு வாழ்த்துக்கள்.. மேன் மேலும் சந்தோஷம், பதவிகள், நிறைய நல்ல விஷயங்கள் உஙக்ளை வந்து சேரட்டும்.. (முப்பதாவது ஆண்டில் பொய் மட்டும் சொல்லலாம் போல..ம்ம்) :)

uvausan
24th May 2015, 08:56 AM
திரு கோபால் - அற்புதமான , கண்ணீரை வரவழைக்கும் பதிவு - நான் மூச்சு முட்ட 100 பதிவுகள் போட்டாலும் இவ்வளவு அழகாக தாயைப்பற்றி என்னால் எல்லோரும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் எழுதி இருக்க முடியாது - என் பதிவுகள் உங்களை உசுப்பி , இங்கு வரவழைத்து அருமையான பதிவையும் போட வைத்ததற்காக முதலில் என் நன்றியை உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன் - உங்களை பெற்றவள் எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று நினைக்கும் போது மலைப்பாக இருக்கின்றது - மீண்டும் ஒரு நன்றி ..

uvausan
24th May 2015, 08:57 AM
இன்று என்னுடைய முப்பதாவது திருமண நாள் என்பதால், என் வாழ்வின் மோகினியை தவிர எந்த மோகினியையும் நினைக்க முடியாத சீரியஸ் மூட் இல் உள்ளேன். ஞாநி அவர்களின் தந்தையார் மறைந்த போது ,அவர்களின் சகோதர சகோதரிகள் தந்தையை பற்றி எழுதிய குறிப்புகளை புத்தமாக போட்டு விநியோகித்தார். இது வைதீக சடங்குகளை விட முக்கியமாக பட்டது. இன்றைய தலைமுறை, உலக விஷயங்கள் தெரியும் அளவு, மூதாதையர், மண் சார்ந்த மரபுகள்,அவர்கள் வாழ்வு முறை தெரிந்து கொள்வதில்லை.(ஏன் மொழியையும் கூட) பழசு என்றாலே அலட்சிய மனோபாவம்.

இந்த முறையில் நம் மறுப்பு சங்கிலி பற்றி ரெகார்ட் செய்த மாதிரியும் ஆகும். நன்றி ஞாநி .

Hearty Congratulations and many more happy returns - Mr Gopal

chinnakkannan
24th May 2015, 09:01 AM
கோ..

உங்கள் அன்னையைப் பற்றிய தகவல்கள், பாடலைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி..

மிக ச் சிறப்பாக இருந்தது கவிதை..ஒரு முறைக்கு இரு முறை படிக்க வேண்டியிருந்தது.. உங்கள் தமிழ் ஆழம் தான்..

ஆனால் எனக்கு ஒரு குறை உங்களிடம் எப்போதும் உண்டு.. எளிமையாக எழுதக் கூடாது என்று கங்கணம் கட்டி, வெறுப்பு, நெகட்டிவ் தாட்ஸ், கொஞ்சம் கூட புன்முறுவல் கூடாது என்று நினைத்த படி ந.தி அல்லாத விஷயங்களை எழுதுவதாகப் படுகிறது எனக்கு..ஏன் இந்த வரையறை..

கொஞ்சம் ஸிம்ப்பிளாக எழுதினால் சர்வ நிச்சயமாக நிறைய ஃபாலோயர்கள் உங்களுக்கு வருவார்கள் (இப்போதும் இருப்பார்கள் இல்லையெனச் சொல்லவில்லை)

நீங்கள் மஹா பெரியவராக வாழ்க்கையில் பல்விதமாய் ஜெயித்த நிறைய பேரை வாழவைத்தவராக இருக்கிறீர்கள் என்று நீங்களே சொல்லியிருக்கிறீர்கள்..அப்படி இருக்கையில் கொஞ்சம் ஸாஃப்டாகவும் எழுதலாமே.. சொன்னது தவறென்றால் மன்னிக்க..

நீங்கள் உங்கள் தாயாரைப் பற்றி எழுதியது என்னை என் அனுபவத்தை எழுத வைக்கிறது..பின் எழுதுகிறேன்

vasudevan31355
24th May 2015, 09:03 AM
இன்று என்னுடைய முப்பதாவது திருமண நாள் என்பதால், என் வாழ்வின் மோகினியை தவிர எந்த மோகினியையும் நினைக்க முடியாத சீரியஸ் மூட் இல் உள்ளேன்.

எங்கேயப்பா ட்ரீட்? அப்புறம்தான் வாழ்த்தே! சரி போனா போகுது.

இருபது வருடம் முன்னாடியே சிவாஜி செந்தில் சாருடன் சேர்த்து வாழ்த்து சொல்லிடறேன்.:) பாட்டை வீட்டுக்கார அம்மாவுக்கும் காண்பிங்க. (கோ, உங்களுக்காக மட்டுமே!):):-D கண்டிப்பாக வீடியோவை ஆரம்பத்திலிருந்து முழுசா பாருங்கள்.


https://youtu.be/dvIQFMz771Q

uvausan
24th May 2015, 09:03 AM
வாசு - என்னமோ போங்க ! வேகத்தை குறைக்க முடியவில்லை - உங்கள் சுனாமியின் வீச்சை விடவா என் பதிவுகளில் வேகம் இருக்கின்றது - நானே வேட்டு வைத்து , வாசிப்பை குறைத்துக்கொள்கிறேன் - உங்கள் பாராட்டுக்களுக்கு என் நன்றி

uvausan
24th May 2015, 09:07 AM
CK - NHMwriter . நானும் download செய்தேன் - அதில் ஒரு அலெர்ட் message வருகின்றது - CK மாதிரி உங்களால் எழுத முடியாது என்று - இந்த issue வை தடுக்க உங்கள் உதவி தேவை ..

உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள் - எங்கள் எல்லோருக்கும் நீங்கள் பல யுகங்கள் தேவை

vasudevan31355
24th May 2015, 09:07 AM
கோ,

அமெர்ச்சூர்த்தனம் அம்பல அம்பேல்.:)

chinnakkannan
24th May 2015, 09:08 AM
ராஜேஷ்.. மோகினி பற்றிய தகவல்களுக்கு நன்றி.பாடல்கள் இனிமேல் தான் கேட்கவேண்டும்..காதல் பகடை எபிசோட் 1 இல் அவர் வரமாட்டாரே.. யுவராணின்னா வருவாங்க..( பார்க்கணும்)

ரவி..சொல்லடா வாய் திறந்து அம்மா என்று - எனக்கு மிகவும் பிடித்து நான் உருகியபாடல்.. நன்றி...

vasudevan31355
24th May 2015, 09:11 AM
வாசு - என்னமோ போங்க ! வேகத்தை குறைக்க முடியவில்லை - உங்கள் சுனாமியின் வீச்சை விடவா என் பதிவுகளில் வேகம் இருக்கின்றது - நானே வேட்டு வைத்து , வாசிப்பை குறைத்துக்கொள்கிறேன் - உங்கள் பாராட்டுக்களுக்கு என் நன்றி

என்னது இது? கோபால் எழுத்து மாதிரியே இருக்கு? ரவி... அசுர வளர்ச்சி...நன்னா தேறிட்டேள். எங்களுக்கு வேட்டு வைக்காம இருந்தா போதும் சாமி. சண்முக சுந்தரம் மகா கோவக்காரர் தெரியோமோன்னோ?:)

vasudevan31355
24th May 2015, 09:12 AM
ரவி..சொல்லடா வாய் திறந்து அம்மா என்று - எனக்கு மிகவும் பிடித்து நான் உருகியபாடல்.. நன்றி...

yes... yes....yes....yes....yes....yes....yes...

vasudevan31355
24th May 2015, 09:14 AM
//உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள் - எங்கள் எல்லோருக்கும் நீங்கள் பல யுகங்கள் தேவை//

ஆமாம் சி.க.

நன்கு ஓய்வெடுத்துக் கொண்டு வாருங்கள்.

RAGHAVENDRA
24th May 2015, 09:17 AM
இந்த டார்லிங், காஞ்சனா, காஞ்சனா 2, முனி என்று பேய் படங்கள் ஓடினாலும் ஓடியது. இங்கே ஒரே மோகினி நடமாட்டமா இருக்கே..

இதெல்லாம் முடிஞ்சப்புறம் சொல்லுங்க.. ஒரு துடைப்பத்துடன் வர்றேன்.. (ராத்திரி துடைப்பத்தைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு படுத்தால் மோகினி கனவெல்லாம் வராதாமே.. )

vasudevan31355
24th May 2015, 09:17 AM
ரவி சார்,

http://travelwriting2.com/wp-content/uploads/2013/11/1000-blog-posts.jpg

ஆங்... சொல்ல மறந்துட்டேன். ஷேமிக்கணும்.

ஆயிரம் பதிவுகளுக்கு ஆனந்தமான வாழ்த்துக்கள். மதுர கானம் மனதார உங்களைப் பாராட்டுகிறது.

RAGHAVENDRA
24th May 2015, 09:18 AM
இரவின் மடியில்னு அடிக்கடி ராகவேந்திரரோட டைட்டில ச் சுட மனசுவரலை அதான்

சி.க.சார்.. இது தானே வேணாங்கறது.. ஒரு பாட்டிலேருந்து இந்த டைட்டிலை எடுத்தேங்கிறது தெரிஞ்சிண்டு என்னை இப்படி கலாய்க்கிறேளே... இது நியாயமா..

ஹ்ம்ம்ம்... என்னமோ போங்க..

vasudevan31355
24th May 2015, 09:19 AM
ஒரு துடைப்பத்துடன் வர்றேன்..

கோபால் லைன்லதான் இருக்கார்.:)

RAGHAVENDRA
24th May 2015, 09:23 AM
கோபால்..
தங்களின் மண நாளையொட்டி என் உளமார்ந்த வாழ்த்துக்கள்..
தங்களின் குழந்தைகள் தங்களுக்கும் தங்கள் துணைவியாருக்கும் இடையேயான அந்நியோன்யமான புரிந்துணர்தலை, குறிப்பாக ஆரம்ப கால நாட்களைப் பற்றித் தெரிந்து கொள்ளுதல் இந்த மணநாளை சுவையாக்கும்... அவர்களுக்காக இதோ தலைவரின் நடிப்பில் வைரமுத்துவின் நினைவுப் பயணத்தில் சங்கர் கணேஷின் இசையில் தந்தை மகளிடம் தன் இல்லற வாழ்க்கையைப் பற்றி நெகிழ்வுடன் பகிர்ந்து கொள்ளும் இனிய பாடல்..

https://www.youtube.com/watch?v=yXnbMxFpT7A

rajeshkrv
24th May 2015, 09:30 AM
ஜி வாங்க வாங்க

RAGHAVENDRA
24th May 2015, 09:31 AM
கோபால் லைன்லதான் இருக்கார்.:)

விடு ஜூட்...

http://www.livefit4life.net/wp-content/uploads/2013/11/run.jpg

RAGHAVENDRA
24th May 2015, 09:32 AM
Rajesh,
Good morning.

rajeshkrv
24th May 2015, 09:35 AM
சத்யராஜ் பாடல்களின் தொடர்ச்சி

எனக்கு பிடித்த படம் உடன்பிறப்பு. ரஹ்மான் அடேயப்பா இன்றும் handsome

சத்யராஜ் சுகன்யா நல்ல பொருத்தமான ஜோடி

ஸ்வர்ணலதாவின் குரலில்
https://www.youtube.com/watch?v=vfFy9NB-XEg

https://www.youtube.com/watch?v=4d8-2rGzsl8

என் இதயத்தை திருடிவிட்டாய் திருப்பிக்கொடு
அந்த திருட்டுக்கு அபராதம் 100 முத்தம் கொடு. சத்துவுடன் சவந்து (என்ன இது சி.க சாயல் நம் மீது வீசுது)

https://www.youtube.com/watch?v=Hkd4yPJa3ak

rajeshkrv
24th May 2015, 09:37 AM
Rajesh,
Good morning.

ராகவ் ஜி, காலை வணக்கம்
உங்கள் திலக சங்கமம் என்ன பொருத்தமான பெயர். பல திலகங்கள் இங்கே மீண்டும் சங்கமமாவதை சொல்லாமல் சொன்ன உமக்கு மன்மார்ந்த நன்றிகள்

rajeshkrv
24th May 2015, 09:39 AM
பாத கொலுசுவில் சத்துவும் சுகன்யாவும் நிறைய பார்த்திருப்போம்
அதே படத்தில் நடு சாமத்துல பாடல் மிகவும் இனிமையான பாடல். பாலு ஜானகி
https://www.youtube.com/watch?v=eIjjpopYai0

rajeshkrv
24th May 2015, 09:41 AM
சித்திரை நிலவு சேலையில் வந்தது கண்ணே
ஜெயசந்திரன் மின்மிணி குரல்களில்
அற்புத பாடல் ,ஆனால் படமாக்கம் ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்

https://www.youtube.com/watch?v=G8Ncm2YOcQI

vasudevan31355
24th May 2015, 09:43 AM
ஜி!

வாங்'கோ'! மோகினி செலெக்ஷன் சூப்பர். ரெண்டிலும்தான்.

http://www.inbaminge.com/t/e/Engamma%20Sabatham/folder.jpg

விஜயபாஸ்கர் தயாரிப்பில் ஜெயசித்ரா, விதுபாலா (இதுக்கு முன்னாடி 'பொண்ணுக்கு தங்க மனசு தானே?) நடிச்ச 'எங்கம்மா சபத'மே வனஜா கிரிஜா ஆனது. முத்துராமன் ரோலுக்கு நெப்போலியனும், சிவக்குமார் ரோலுக்கு ராம்கியும், ஹீரோயின்களாக குஷ்பு, மோகினியும் நடிச்சாங்க. விசு கூட ஊர்வசியும் இருப்பாங்க. சரியாஜி? விஜயபாஸ்கர் மியூஸிக்கில் 'அன்பு மேகமே' பேய் ஹிட் இன்று வரை.

அந்த 'வா..இளமை அழைக்கின்றது' செம சூப்பர் பாடல்.

rajeshkrv
24th May 2015, 09:47 AM
ஜி!

வாங்'கோ'! மோகினி செலெக்ஷன் சூப்பர். ரெண்டிலும்தான்.

http://www.inbaminge.com/t/e/Engamma%20Sabatham/folder.jpg

விஜயபாஸ்கர் தயாரிப்பில் ஜெயசித்ரா, விதுபாலா (இதுக்கு முன்னாடி 'பொண்ணுக்கு தங்க மனசு தானே?) நடிச்ச 'எங்கம்மா சபத'மே வனஜா கிரிஜா ஆனது. முத்துராமன் ரோலுக்கு நெப்போலியனும், சிவக்குமார் ரோலுக்கு ராம்கியும், ஹீரோயின்களாக குஷ்பு, மோகினியும் நடிச்சாங்க. விசு கூட ஊர்வசியும் இருப்பாங்க. சரியாஜி? விஜயபாஸ்கர் மியூஸிக்கில் 'அன்பு மேகமே' பேய் ஹிட் இன்று வரை.

அந்த 'வா..இளமை அழைக்கின்றது' செம சூப்பர் பாடல்.
அதே. அசோகனின் ரோலில் விசு. எம்.என்.ராஜத்தின் ரோலில் கவிதா என அதே கதை..

vasudevan31355
24th May 2015, 09:50 AM
'வா..இளமை அழைக்கின்றது'


http://www.dailymotion.com/video/xmm5md_vaa-ilamai-azhaikkindrathu_auto

rajeshkrv
24th May 2015, 09:55 AM
சத்யராஜ் பற்றி பேசும்போது விஜயகாந்த் பற்றி பேசாமல் இருக்க முடியாது.

நல்லவன் என்று ஒரு படம், த்ரில்லர் படம்
விஜய்காந்த் உடன் ராதிகா

வான் மேகம் அது பூத்தூவும் பாடல் இனிமையான பாடல்

https://www.youtube.com/watch?v=dolslRym84M

Gopal.s
24th May 2015, 09:58 AM
சின்ன கண்ணன்,

உங்களுக்கு மிக நன்றி. உங்கள் அக்கறை புரிகிறது. என் அன்னை கவிதை புரிய நான் எழுதிய முன்னுரையே போதுமே?

எப்போதுமே உன்னத விஷயங்கள் பிறர் கவன ஈர்ப்பை ஆழமாக கோருபவை. நாம் தர வேண்டிய விஷயங்களை நம் புலமைக்கும்,ஞானத்திற்கும் ,கருத்தியலுக்கும் ஏற்ப தந்தேயாக வேண்டும். நான் எழுத விரும்புபவை ஆழமான விஷயங்களை இன்னும் ஆழமான அழுத்தமான எழுத்துக்களை கொண்டு. புலி வேட்டைக்கு கொக்கு சுடும் துப்பாக்கி எடுத்து போக கூடாது. எல்லாவற்றையும் புன் முறுவலுடன் அணுக முடியாது. அணுகவும் கூடாது.

நான் எழுதிய பதிவுகளில் ஏராள பதிவுகள் குசும்பு,வம்பு,நகைசுவை கொண்டதுதானே? எனக்கு கலப்பு பிடிக்காது. சாப்பிடும் கறிகளில் கூட உருளை,வெங்காயம்,காரட் ,என்று எல்லாம் கலந்தால் பிடிக்காது. நாம் மட்டும் கொடுக்க முடியும் என்பவற்றையே நான் தீவிரத் துவத்துடன் எழுதுவேன். ரசிகர்கள் எவ்வளவு என்பதை எண்ணி பார்த்தது கிடையாது. இன்னும் இருபது வருடம் தள்ளி போற்றுவார்கள். சுஜாதா(கிச்சு கிச்சு மூட்டும் வெகுஜன எழுத்து ) போன்ற சராசரிகளை விட அசோக மித்திரன்,கரிச்சான் குஞ்சு,பா.சிங்காரம் போன்றோர் காலம் கடந்தும் போற்ற படுவார்கள்.

vasudevan31355
24th May 2015, 09:59 AM
என்னமோ போங்க -1
**

வாழ்க்கையே ஒருகதை தாங்க..ம்ம் தோசை சாப்பிடலை..இனிமே தான்.. ஏனாம்..அது அப்புறம்.

இந்தக் கதை சிலபேருக்கு சந்தோஷமாகவும் சிலபேருக்கு சோகமாக்வும் இப்படியே மாறி மாறி போய்க்கிட்டே இருக்கா சமயத்துல பார்த்தா
ரிப்பீட் தான் ஆகிட்டிருக்கு..சுவாரஸ்யம் குறைய ஆரம்பிச்சுடுது.. இல்லியோ..( இப்ப என்ன சொல்ற ஏதாவது கதை பாட்டு கிடைச்சுடுத்தா..) ஆமாம்..


பொழுதெல்லாம் பேசச்சொல்லும் கதையொன்று கண்ணில் உண்டு
இரவெல்லாம் பாடச்சொல்லும் பாட்டொன்று நெஞ்சில் உண்டு



கண்ணா!

ரேர் சாங்க்ஸ் தேடுறவுங்க லிஸ்ட்ல உங்களை சேர்த்துட்டேன்.:) உங்க முயற்சி இங்கிருந்தே என் கண்ணுக்குத் தெரியுதே!:) சபாஷ் கண்ணா! இப்ப தான் நீங்க தங்கதம்பி இல்லே இல்லே தங்க அண்ணன்.:)

உதாரணம்

'பொழுதெல்லாம் பேசச் சொல்லும்'....

பத்துக்கு 4 மார்க்.:) பாஸாயிட்டே கண்ணா. இனி முழு மதிப்பெண்ணும் பெறணும்.:) ம்ம்...மது அண்ணா எனக்கு எவ்வளவு மார்க் போடுவாருன்னு தெரியலியே:)

vasudevan31355
24th May 2015, 10:03 AM
யப்பாடி! நைட் ஷிப்ட் முடிச்சுட்டு எல்லாருக்கும் பதில் போட்டாச்சு. இன்னும் பச்சத் தண்ணி பல்லுல படல. பொங்கல் வாசனை வேற தூக்குது. கொத்துமல்லி தொக்கு வேற. போய் வெட்டிட்டு கொஞ்சம் தூங்கிட்டு வரேன்.

rajeshkrv
24th May 2015, 10:03 AM
ரவி
கருவின் கரு அருமையான தொடர்.வாழ்த்துக்கள்
இன்றைய சூழலுக்கு ஏற்ற பதிவு. தொடருங்கள்

Gopal.s
24th May 2015, 10:10 AM
யப்பாடி! நைட் ஷிப்ட் முடிச்சுட்டு எல்லாருக்கும் பதில் போட்டாச்சு. இன்னும் பச்சத் தண்ணி பல்லுல படல. பொங்கல் வாசனை வேற தூக்குது. கொத்துமல்லி தொக்கு வேற. போய் வெட்டிட்டு கொஞ்சம் தூங்கிட்டு வரேன்.

பொங்கலுக்கு கொத்சு (வெங்காயம்-2, கத்திரிக்காய்-1,தக்காளி-1) ,தேங்காய் சட்னிதானே கேட்டிருக்கிறேன்?அது என்ன கொத்துமல்லி தொக்கு? சரியில்லையே. அண்ணியார் புது முயற்சி போல?

RAGHAVENDRA
24th May 2015, 10:12 AM
சுஜாதா(கிச்சு கிச்சு மூட்டும் வெகுஜன எழுத்து ) போன்ற சராசரிகளை விட அசோக மித்திரன்,கரிச்சான் குஞ்சு,பா.சிங்காரம் போன்றோர் காலம் கடந்தும் போற்ற படுவார்கள்.

Agreed intoto

rajeshkrv
24th May 2015, 10:14 AM
என்ன கோபால் அவர்களே, கண்டும் காணாமல் இருக்கீரே , ஏதேனும் கோபமா ....

நலம் தானே. திருமண நாள் நல்வாழ்த்துக்கள்

Gopal.s
24th May 2015, 10:16 AM
ராஜேஷ்,

கோபமா? உங்கள் மீதா? நீங்கள் மாற்று குறையாத தங்கமாயிற்றே? ரசித்து தொடர்கிறேன்.

rajeshkrv
24th May 2015, 10:22 AM
ராஜேஷ்,

கோபமா? உங்கள் மீதா? நீங்கள் மாற்று குறையாத தங்கமாயிற்றே? ரசித்து தொடர்கிறேன்.

ஹ்ம்ம்ம்

chinnakkannan
24th May 2015, 10:48 AM
//கலப்பு பிடிக்காது// கோ, விளக்கத்திற்கு நன்றி.. கலப்பு பிடிக்காது என்பது தெரிகிறது..இருப்பினும் எல்லாவற்றையும் மீறிய தான் என்ற தொனி - எவ்வளவு ஆழமாக எவ்வளவு அள்ளக் குறையாத தமிழ் வீச்சு இருந்தாலும் கூட - அது தான் என் மனதில் பச்சக் எனப் படிகிறது.. மற்றவர்க்ளுக்கும் அப்படித் தான் இருக்கும் என நினைக்கிறேன்..

எனக்கும் கொஞ்சம் கொஞ்சம் ஆழமாக எழுத வரும் தான் என நினைக்கிறேன்.

அசோக மித்திரன் கரிச்சான் குஞ்சு எல்லாம் அவர்கள்து பாணி..சுஜாதா வெகுஜனம் கமர்ஷியல் என்று எழுதுகிறார் என்று சொல்லப் பட்டாலும் அவர் சப்போர்ட் பண்ணியதென்னவோ
அ.மி. க. கு தான்.. ஏன் நா.பாவின் எழுத்துக்கள் அழகில்லையா..வெகுஜன பத்திரிகையில் வந்ததாலேயே அவை அழகற்றதா..அவரது சரித்திர நாவல்கள் எல்லாமே சீரியஸ் டைப் தான்..மணிபல்லவம் பாண்டிமா தேவி, கபாட புரம்.. சமூக நாவல்கள் குறிஞ்சி மலர் பொன்விலங்கு.. பட் அதில் தொனி எல்லாம் மென்மை தானே.. அதே சமயத்தில் சீரியஸான விஷயமும் பேசத் தவறியதில்லை அவர்..

நான் சொல்ல வந்தது நீங்கள் நகையாய் எழுதுங்கள் என்பதல்ல.. எளிமைப் படுத்தலாம் என்பதே..

adiram
24th May 2015, 11:12 AM
ஏன் நா.பாவின் எழுத்துக்கள் அழகில்லையா..வெகுஜன பத்திரிகையில் வந்ததாலேயே அவை அழகற்றதா..அவரது சரித்திர நாவல்கள் எல்லாமே சீரியஸ் டைப் தான்..மணிபல்லவம் பாண்டிமா தேவி, கபாட புரம்.. சமூக நாவல்கள் குறிஞ்சி மலர் பொன்விலங்கு.. பட் அதில் தொனி எல்லாம் மென்மை தானே.. அதே சமயத்தில் சீரியஸான விஷயமும் பேசத் தவறியதில்லை அவர்..

I also read all of the above novels by Na.pa.

But after reading 'Samudhaaya Veedhi', I throw him out of my heart.

Nadigar thilagaththai sirumaip paduththum evarum enakku thuchcham.

chinnakkannan
24th May 2015, 11:16 AM
சமுதாய வீதி நான் படித்ததில்லை ஆதிராம்..

adiram
24th May 2015, 11:19 AM
Dear Gopal sir,

Wish you Happy (30th) Wedding Anniversary.

I pray for permenant happiness for long more years for you and your family.

ungalai ninaikkumpothellaam ninaivukku varum thalaivarin paadal vari...

"uLLaththil iruppadhai vaarththaiyil maraikkum kabadam theriyaadhu".

vaazhga vaLaththudan. (vaLamudan enbadhu ilakkana pizhai).

adiram
24th May 2015, 11:28 AM
Dear Ravi sir,

Your 'Karuvin Karu' series is a wonderful one.

After reading your's, Gopal's and others posts about 'thaai' (sorry 'amma' endra vaarththai ippOdhu thamizhnaattil kochchaip paduththap pattu vittadhu), I want to throw my job in Saudi Arabia and want to go Tamilnadu to be with my mother. That much powerpul word "thaai". Thanks for all your writings.

I hope the next post in KK will be Rajini's "Amma nee sumandha pillai siragodindha kiLLai" from Annai ore aalayam (pOttach illaiye..??)

One among the rare songs of TMS & Ilaiyaraja combo.

Gopal.s
24th May 2015, 11:51 AM
சின்ன கண்ணன்,

எல்லாவற்றையும் படித்தவன் என்ற முறையில் சொல்கிறேன்.

மலின ரசனை கொண்டவர்களே நா.பா,ஜெகசிற்பியன்,மு.வ,அகிலன்,கோ.வி.மணிசேகரன ் போன்றவற்றை அணுக முடியும்.
இவற்றை தாண்டுவதில்தான் உயர் ரசனை அடங்கியுள்ளது.இவையெல்லாம் எழுத்துக்களே அல்ல. ஓரறிவு கொண்டவைகளுக்கான ஒற்றை பரிமாண மொக்கை எழுத்து.

தமிழில் ரசனை வளர்க்க கீழ்கண்டவற்றை படியுங்கள்.

அசோக மித்திரன், கு.ப.ரா, கரிச்சான் குஞ்சு,தி.ஜா, இந்திரா பார்த்தசாரதி,கு.அழகிரிசாமி,ஆதவன்,பா.சிங்காரம்,மௌனி ,புதுமை பித்தன்,நீல.பத்மநாபன், இமயம்,பெருமாள் முருகன், ரா.கி.ரங்கராஜன் என்கிற கிருஷ்ணகுமார் என்கிற டி.துரைசாமி என்கிற மோகினி என்கிற....,,சுந்தர ராமசாமி, வண்ண நிலவன்,வண்ண தாசன்,நாஞ்சில் நாடன்,தோப்பில்.முகம்மது மீரான்,தேவன், பாக்கியம் ராமசாமி, ஜெயகாந்தன்,சாண்டில்யன் ,சுஜாதாவின் கணையாழி ஆரம்ப சிறு-குறுங்கதைகள், சாரு .நிவேதிதா,ஜெயமோகன்,

ஏதாவது விட்டிருக்கலாம். இவர்களை படியுங்கள். ரசனை அனுபவமே தனி.

chinnakkannan
24th May 2015, 12:25 PM
*
கோ..

இமயம்,பெருமாள் முருகன் படித்ததில்லை.. மற்ற அனைவரது எழுத்துக்களையும் படித்திருக்கிறேன்.. சுந்தர ராமசாமி தனி (புளீய மரத்தின் கதை.. புதுக்கவிதைகள்) . ராகிரங்கராஜன் வேறு - மோகினி டிதுரைசாமி கிருஷ்ணகுமார் லலித் என்கிற பெயர்களில் எழுதியிருக்கிறார். ஜெயமோகனின் சில நாவல்கள்,, சாரு நிவேதிதாவின் சில எழுத்துக்கள் படித்திருக்கிறேன்..(எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை..ஆனால் ஜெயமோகனின் தமிழில் மதிப்பு உண்டு.. வெண்முரசு தொடர்ந்து படித்தேன்..இப்போது இல்லை.)


வண்ண நிலவனின் கடல் புரத்தில் வண்ண தாசன் என்கிற கல்யாண்ஜியின் கவிதைகள் எனக்குப் பிடிக்கும்.. ஆதவன் காகித மலர்கள் இரவுக்குப் பின் வருவது மாலை என்பெயர் ராமசேஷன் , அவரது சிறுகதைகள் பிடிக்கும் சாண்டில்யன் எல்லா நாவல்கள் தோப்பில் முகம்மது மீரானின் சில நாவல்கள் ( கடலும் கிழவனும்), அநுத்தமா, ஜெயகாந்தனின் அனைத்து நாவல்கள் சிறுகதைகள், தி.ஜானகிராமன் அனைத்து நாவல்கள் சிறுகதைகள் ( தி.ஜா. சிட்டி நடந்தாய் வாழி காவேரி படித்திருக்கிறீர்களா) இந்திரா பார்த்த சாரதி தரையில் இறங்கும் விமானங்கள், குருதிப் புனல், வி.ஸ காண்டேகரின் யயாதி (மொழிபெயர்ப்பு) நாஞ்சில் நாடன் ( புத்தகம் பதிப்பதைப் பற்றிய இவரது சிறுகதை மறக்க இயலாது) தி.ஜ.ர. தேவனின் எல்லா நாவல்கள் + சிறுகதைகள், பாசிங்காரம்- புயலில் ஒரு தோணி, பி.ஏ.கிருஷ்ணனின் புலி நகக் கொன்றை, இரா.முருகனின் சிறுகதைகள் நாவல்கள் (மூன்று விரல் அரசூர் வம்சம்) பாக்கியம் ராமசாமியின் சீரியஸ் நாவல் ஜா.ரா சுந்தரேசன் என்ற பெயரி ல் எழுதினார்..அவைகள் பூங்காற்று, மூச்சுத் திணறுகிறது.... சுஜாதாவின் எப்போதும் பெண், வைரங்கள்.. கவிஞர் கண்ணதாசன் சேரமான் காதலி (ஸோ ஸோ தான்) கவிஞர் வைரமுத்து வில்லோடு வா நிலவே ( இதுவும் ஸோஸோ) ஆனால் இப்போது குமுதத்தில்வரும் சிறுகதைகள் எனக்கு மிகப் பிடித்திருக்கின்றன. மு.மேத்தா- சோழ் நிலா, கிருஷ்ணமணி - வேர்கள்

ஓரளவு படித்திருக்கிறேன் கோ..உங்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும்

ந.பிச்சமூர்த்தியின் சிறுகதைகள் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்..மேலாண்மை பொன்னுச்சாமி, பொன்னீலன், பூமணி பிடிக்குமா.. பிரபஞ்சன் சில நாவல்கள் பிடிக்கும்

ஜெகச்சிற்பியன், நா.பா - உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை..

இந்தக்கால எழுத்தாளர்களில்
ராஜகேசரி பைசாசம், மதுர கவி(சிறுகதைகள்) கோகுல் சேஷாத்ரி, திருமலை திருடன்,விசித்திர சித்தன்ம் எம்டன் 1914 - திவாகர் , கடாரம் மாயா..அப்புறம் இப்போது படித்துக் கொண்டிருப்பது சோழ கங்கம். சக்திஸ்ரீ என்பவர் ..

நிறைய வர்ஜ்யா வர்ஜ்யம் இல்லாமல் படிப்பவன் தான் நானும் கோ.. உச்ச ரசனை சின்ன ரசனை என்றெல்லாம் பாகுபாடு கிடையாது..பிடித்திருந்தால் படித்து முடித்துவிடுவேன்.. என் புக் கலெக்ஷன்ஸ் பார்த்தால் உங்களுக்குப் புரியும்.

கோவி.மணி சேகரன் உங்களுடன் நானும் உடன்படுகிறேன்..ஆனால் உழைத்து எழுதுபவர் தான் அவரும்.. ஸ்ரீ வேணுகோபாலன் பிடிக்காது தானே..

chinnakkannan
24th May 2015, 01:01 PM
மோஹினி படங்கள் தகவல்கள் வாரி வழங்கிய கிருஷ்ணா, வாசு, ராஜேஷிற்க்காக ஒரு பாடல்…

மேலாடை காற்றாட மின்னலிடை கூத்தாட
பாவை நான் பந்தாட தேவை ஒரு பூமேடை

https://youtu.be/YEvB6DQ1Ipo

வாசு, நினைவிருக்கிறதா.. முதன் முதலில் நீங்களும் கோபாலும் பாட்டுக்குப் பாட்டை முற்றுகையிட்ட போது இந்தப் பாட் வீடியோ போட்டிருந்தீர்கள்.. என் கமெண்ட் – ஏன் ஜெயந்தி அடிக்கடி பட்டம் விடுவதுபோல் கைகள் ஆட்டுகிறார்..

Gopal.s
24th May 2015, 01:06 PM
தமிழில் படித்தே ஆக வேண்டிய சில.(தமிழ் மட்டுமே)


1)அசோக மித்திரன்- கரைந்த நிழல்கள்,தண்ணீர்,பதினெட்டாம் அட்ஷ கொடு மற்றும் பல சிறுகதைகள்.
2)மௌனி- சிறுகதை தொகுப்பு.
3)ஆதவன்- காகித மலர்கள்,என் பெயர் ராமசேஷன்.
4)தி.ஜானகி ராமன்-மோகமுள்,அம்மா வந்தாள் ,மர பசு.
5)சுந்தரராமசாமி- ஜே .ஜே .சில குறிப்புக்கள்.
6)நகுலன்- சிறுகதைகள்.
7)ஆ.மாதவன்- கிருஷ்ண பருந்து.
8)இந்திரா பார்த்தசாரதி- திரைகளுக்கு அப்பால்,தந்திர பூமி,குருதி புனல்.
9)ஜெயகாந்தன்- ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்,ரிஷி மூலம்.
10)நீல பத்மநாபன்- தலை முறைகள்,பள்ளி கொண்டபுரம்,உறவுகள்.
11)இமயம்- கோவேறு கழுதைகள்.
12)ஜெயமோகன்- ஏழாம் உலகம்,அறம் சிறுகதை தொகுப்பு.
13)சாரு நிவேதிதா- எக்ஸ்சைல் .
14)சா.கந்தசாமி- தொலைந்து போனவர்கள்,அவன் ஆனது.
15)நாஞ்சில் நாடன்- மிதவை,தலை கீழ் விகிதங்கள்.
16)புதுமை பித்தன்- சிறுகதைகள்.,குறுங்கதைகள்.
17)கு.ப.ரா- சிறுகதைகள்.
18)கரிச்சான் குஞ்சு- பசித்த மானிடம்.
19)தோப்பில்.முகம்மது மீரான்-கடலோர கிராமத்தின் கதை,சாய்வு நாற்காலி.
20)பிரபஞ்சன்- சிறுகதைகள்.
21)கு.அழகிரிசாமி- சிறுகதைகள்.
22)ஹெப்சிபா ஜேசுதாசன்- புத்தம் வீடு.
23)ரா.கி.ரங்கா ராஜன்- மறுபடியும் தேவகி,புரபசர் மித்ரா,படகு வீடு,ஒளிவதற்கு இடமில்லை,பட்டாம் பூச்சி,நான் கிருஷ்ண தேவராயன்.
24)சாண்டில்யன்- யவன ராணி,கடல் புறா,ராஜ முத்திரை.
25)பாக்கியம் ராமசாமி- மாணவர்தலைவர் அப்புசாமி,அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும்,காதல் காவலர் அப்புசாமி.
26)வண்ண நிலவன்- கடல் புறத்தில்,ரைநீஸ் ஐயர் தெரு.
27)வண்ணதாசன்- சிறுகதைகள்.
28)சுஜாதா- ஆரம்ப சிறுகதைகள்,இருபத்து நாலு ரூபாய் தீவு,நில்லுங்க ராசாவே
29)தேவன்- துப்பறியும் சாம்பு.
30)ர.சு.நல்ல பெருமாள்- கல்லுக்குள் ஈரம்.
31)வாண்டு மாமா- சிலையை தேடி,மற்றும் பல.

மேற்கண்டவை பலதர பட்ட எழுத்துக்களை அணைத்தவை.

adiram
24th May 2015, 01:07 PM
சாரு .நிவேதிதா,ஜெயமோகன்,

Gopal sir,

arumaiyaana ungal pattiyalil irandhu thirushti pottukkal ivargal.

Chandilyan ungalukku pidiththirukkiradhu, but Jegasirpiyanin 'Nandhivarman kaadhali' pidikkavillaiyaa?.

iththanaikkum Chandilyan same stereo typil vaLa vaLappavar.

adiram
24th May 2015, 01:27 PM
*
இந்திரா பார்த்த சாரதி தரையில் இறங்கும் விமானங்கள், குருதிப் புனல்,.

'Tharaiyil irangum vimaanangal' by Indhumathi. (her one & only master piece).

adiram
24th May 2015, 01:32 PM
//25)பாக்கியம் ராமசாமி- மாணவர்தலைவர் அப்புசாமி,அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும்,காதல் காவலர் அப்புசாமி.
//

Gopal sir,

When I read them, I feel some kind of abaththams, same like Savi's "Washingtonil thirumanam".

Ok, taste differs always.

chinnakkannan
24th May 2015, 01:38 PM
ஆதிராம்..வாங்க வாங்க :) தரையில் இறங்கும் விமானங்கள் இந்துமதி தான்..ஆனால் நான் தான் கொஞ்சம் கன்ஃப்யூஸ்.. இ.பாவினுடையது ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன (ரெண்டும் பறக்கறது தானே ஓய் :) ) ஏசுவின் மைந்தர்கள் இபா.

லிஸ்டிற்கு நன்றி கோ.. குறைந்தபட்சம் 85 சதவிகிதம் படித்திருக்கிறேன்..

சி.சு. செல்லப்பா - வாடிவாசல்

சாயாவனம் - சா. கந்தசாமி

புளிய மரத்தின் கதை- சுந்தர ராமசாமி

நானே நான், உடல்பொருள் ஆனந்தி, மின்னல் மழை மோகினி, பணம் பெண் பாசம் - ஜாவர் சீதாராமன்

சாகா வரம் ( நாவல்) நரிப்பல், அழகோ அழகு (சிறுகதைகள்)- வெ.இறையன்பு

மாலன் சிறுகதைகள்
இரா. முருகன் சிறுகதைகள் நாவல்.
அடிமையின் காதல் , தர்மங்கள் சிரிக்கின்றன, கையில்லாத பொம்மை, ராசி, ஒளிவதற்கு இடமில்லை, நான் கிருஷ்ண தேவ ராயன், வாளின் முத்தம், படகு வீடு, சின்னக் கமலா,
அழைப்பிதழ், ஹவுஸ் ஃபுல், ராத்திரிவரும் - ஓஹ்.. ரா.கி ரங்கராஜன் ( என் மானசீக குரு )

சாண்டில்யன் ஜீவ பூமி, கடல் ராணி, விலை ராணி மன்னன் மகள், கன்னிமாடம் இவையும் சேர்த்துக் கொள்ளலாம்..

chinnakkannan
24th May 2015, 01:42 PM
ஆதிராம்..பாக்யம் ராமசாமி இன்றும் எழுதிக் கொண்டிருக்கிறார்..அந்தக்காலத்தில் அந்த நாவல்களைப் படித்த போது வாய்விட்டுச் சிரிக்க வைத்தன..அவரது உவமை எல்லாம் படக்கென மொட்டவிழ்வது போல் சிரிப்பை வரவழைக்கும்.. சீதாப்பாட்டியின் சபதம், ஆயிரத்தொரு அப்பு சாமி இரவுகள் எல்லாம் ஒரு தேர்ந்த நாவலாசிரியராக முடித்திருப்பார்..

எஸ்.ஏ.பி பிடிக்குமா.. எனக்குப் பிடிக்கும்.. எனக்கென்று ஒரு இதயம் - மனதிற்குள் ந.தியை வைத்தே எத்தனை முறை படமெடுத்திருப்பேன்.. , மலர்கின்ற பருவத்தில் இனிய காதல் கதை..இன்றிரவு ... த்ரில்லர்..

chinnakkannan
24th May 2015, 01:46 PM
கோ.. வாண்டுமாமா.. சிலையைத் தேடி சொல்லியிருக்கிறீர்களே :) பைண்ட் பண்ணப்பட்ட புக்காய் எனக்குக் கிடைத்தது ..சித்திரத் தொடர்கதை..ஜெ....படங்கள் என நினைக்கிறேன்..வெகு சுவாரஸ்யமாக க கண்முன் விரியும் காட்சிகள்..

மூன்று மந்திரவாதிகள் படித்திருக்கிறீர்களா..

முத்துகாமிக்ஸின் இரும்புக் கை மாயவி பிடிக்கும்..ஆனால் இப்போது லார்கோவின்ச் என்றொரு நாயகன் வைத்து கலரில் கிராபிக்ஸ் நாவல்கள் முத்துகாமிக்ஸ் வெளியிடுகிறார்கள்..சுவாரஸ்யமாக உள்ளன

குமுதத்த்ல் வந்த சித்திரக் கதை ப்ளான் பட்டாபி..

chinnakkannan
24th May 2015, 01:53 PM
சரி ஒரு பாட் போட்டுக்கலாம்

*
ரம்யா கிருஷ்ணன்.. ஆரம்பகாலப் படங்களில் சோபிக்காதவர் பிற்காலத்தில் எல்லாவற்றிலும் பிரகாசமாகச் சோபித்தார்..
முதல் படம் வெள்ளை மனசாம் 1983.. அப்போது அவர் எட்டாம் வகுப்பில் படித்திருந்தாராம். நான் நினைத்தது முதல் வசந்தம் என நினைத்தேன்.. ஆறு அது ஆழம் இல்லை அது சேரும் கடலும் ஆழம் இல்லை..வெகு சின்னப் பெண்ணாய் இருப்பார்..
ஸ்வர்ணலதாவின் குரலில் ஆட்டமா தேரோட்டமா மறக்க இயலாது தமிழ் சினிமா உபயோகப் படுத்திக்கொள்ளவில்லை என்று தான் சொல்லவேண்டும் இவரை.. இப்ப என்ன 48 வயசாகிடுச்சாம்..பட் இன்னும் தெரியவில்லை வயது..
*

தென்றல் அடிக்குது வந்து சிரிக்குது தேனே
செண்பகப் பூவிழி என்னை மயக்குது மானே

*https://youtu.be/t5JbLAtH3N4

Gopal.s
24th May 2015, 02:06 PM
விட்டு போனவை

அம்பை- சிறகுகள் முறியும், வீட்டின் மூலையில் ஒரு சமையலறை.
பா.சிங்காரம்-புயலில் ஒரு தோணி.
நாகராஜன்- நாளை மற்றுமொரு நாளே.

நான் சொன்னவை படித்தே ஆக வேண்டிய அந்தந்த எழுத்தாளர்களின் தனித்துவம் வெளிப்படும் படைப்புக்கள்.

படிக்க கூடியவை என்ற வரிசையில் இந்துமதி- மலர்களிலே அவள் மல்லிகை,தரையில் இறங்கும் விமானங்கள். எஸ்.ஏ.பீ யின் எனக்கென்று ஓர் இதயம்,பிறந்தநாள்,ஓவியம்,காதலெனும் தீவினிலே,புனிதனின் அன்புள்ள ஆறாம் வேற்றுமை,அணைக்க அணைக்க, w .r .ஸ்வர்ண லதா வின் நாளை வந்தே தீரும், எஸ்,தேவகியின் நினைத்தேன் வந்தாய், ஜாவரின்- உடல் பொருள் ஆனந்தி, மணியனின் காதலித்தால் போதுமா,தேன் சிந்தும் மலர், பால குமாரனின் மெர்குரி பூக்கள்,இரும்பு குதிரைகள்,தாயுமானவன்,சேவல் பண்ணை, சுஜாதாவின்- ஸ்ரீரங்கத்து தேவதைகள்,முடிச்சு கதைகள்,விஞ்ஞான கதைகள் (முக்கியமாக சுல்தான்-விஞ்ஞானி)கௌசிகனின் சுழிக்காற்று, தமிழ்வாணனின் எங்கேயோ கேட்ட குரல்,இன்னொரு செருப்பு எங்கே,கி.ராஜேந்திரன்- விண்ணும் மண்ணும்,
கி.ராவின் கோபல்ல கிராமம்,பாலுணர்வு கதைகள்,பீ.வீ.ஆரின் தொடு வானம்,சென்ட்ரல் ,கூந்தலிலே ஒரு மலர், ஹேமா அனந்த தீர்த்தன் மன்னிப்பே கிடையாது,கமலா சடகோபன் கதவு,மகரிஷி வட்டத்துக்குள் ஓர் சதுரம், மாயாவியின் துள்ளும் உள்ளம்.
இந்த மாதிரி பல.

நாடகம்,மொழிமாற்று கதைகள், பிறமொழி கதைகள்,உலக கதை ஆர்வமிருப்பின் பின்னொரு நாள் விரிவாக அலசலாம்.

Russellzlc
24th May 2015, 02:07 PM
ரவி சார்,
ஆயிரம் பதிவுகள் கண்ட தங்களுக்கு வாழ்த்துக்கள். ஆயிரம் பதிவுகள் போடுவது பெரிதல்ல. அனைத்து பதிவுகளிலும் அருமையான கருத்துக்களை கூறி பதிவிடுகிறீர்களே? அது பெரிய விஷயம். வாழ்த்துக்கள்.

திரு.கோபால்,
தங்களுக்கு என் உளப்பூர்வமான திருமண நாள் வாழ்த்துக்கள். திடீரென எரிமலையாய், அடுத்த விநாடியே பனி மழையாய், ஊரையே அழிக்கும் காட்டாறாய், அனைவரையும் ரசிக்க வைக்கும் அழகிய தெளிந்த நீரோடையாய் மாறும் உங்கள் குணாதிசயத்துக்கு ஏற்ப வாழ்க்கை பாதையில் உங்களுக்கு ஈடு கொடுத்து பயணிக்கும் தங்கள் துணைவியாருக்கு என் பணிவான வந்தனங்கள்.

சின்னக்கண்ணன்,

என்னவோ போங்க பிரமாதம். ரம்யா கிருஷ்ணனின் வயதை கண்டுபிடித்து சொன்ன உங்கள் ஆராய்ச்சிக்கு நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
24th May 2015, 02:11 PM
நான் யார்? நான் யார்? நீ யார்?

குடியிருந்த கோயில் படத்தில் நான் யார், நான் யார், நீ யார் பாடல் ஆழ்ந்த பொருளும் சுவையும் நிறைந்த பாடல். ஜி.என்.வேலுமணியின் தயாரிப்பில் 1968 ஆம் ஆண்டு வெளியாகி வசூல் பிரளயம் செய்த படம். இந்தப் பாடல் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு முன்பே எடுக்கப்பட்டது. பண்டரிபாயின் தாய்ப்பாசத்தால் தன்னை மறந்து கார் ஓட்டிச் செல்லும்போது விபத்து ஏற்பட்டு மக்கள் திலகம் மனநிலை பாதிக்கப்பட்டிருப்பார். அவரை தங்கள் கஸ்டடியில் வைத்திருக்கும் போலீஸார், அவரைப் போல தோற்றமளிக்கும் அவரது தம்பியான (இரட்டையர்கள்) மக்கள் திலகத்தை வைத்து கொள்ளைக் கூட்டத்தை பிடிப்பதற்காக திட்டமிடுவர்.

மனநிலை பாதிக்கப்பட்டவரை காட்டுவதற்காக, அவரது தம்பியை போலீஸ் அதிகாரி சுந்தரராஜன் அழைத்து வருவார். அப்போது இந்தப் பாடல். மனநிலை பாதிக்கப்பட்ட மக்கள் திலகம் லூஸ் ஃபிட்டிங் முழுக்கை சட்டை அணிந்து சற்று குண்டாக தெரிவார். இளையவர் டி-ஷர்ட்டில் சிக். டாக்டராக வருபவர் இயக்குநர் கே.விஜயன் என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதான்.

நான் யார் நான் யார், நீ யார்
நாலும் தெரிந்தவர் யார் யார்
தாய் யார் மகன் யார் தெரியார்
தந்தை என்பார் அவர் யார் யார்

.... நான் யார் என்று சிந்தித்தால்..... நாலும் தெரிந்தவர்கள் (எல்லாம் தெரிந்தவர்கள்) என்று யாருமே கிடையாது. ஆத்திகர்களுக்கு மறுபிறப்பில் நம்பிக்கை உண்டு. ‘புனரபி ஜனனம், புனரபி மரணம்’ என்று கூறப்படுவதுபோல, மாறி மாறி வரும் பிறவிகளில், இப்பிறவியில் தாய், மகன், தந்தை என்கிறோம். ஆத்திகர்களின் கோட்பாட்டின்படி, மறுபிறப்பில் யாருக்கு யார் தாய், மகன், தந்தை என்றெல்லாம் தெரியாது.

உறவார் பகையார் உண்மையை உணரார்
உனக்கே நீ யாரோ?
வருவார் இருப்பார் போவார் - நிலையாய்
வாழ்வார் யார் யாரோ?

..... எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என்று வாழ்த்திய வள்ளலாரைப் போல எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்தினால் உறவேது? பகையேது? அந்த பேதமே வராது. அப்படி அன்பு செலுத்தாது போனால், நமக்கே நம்மிடம் வெறுப்புதான் மிஞ்சும். அப்போது.. உனக்கே நீ யாரோ?

உள்ளார் புசிப்பார் இல்லார் பசிப்பார்
உதவிக்கு யார் யாரோ?

..... (பணம்) இருப்பவர்கள் சாப்பிடுவார்கள். இல்லாதவர்களுக்கு கவுரமாக சொன்னால் தினமும் விரதம். அவர்களது உதவிக்கு யாருளர்?

வேலூர் அருகே விரிஞ்சிபுரம் என்ற ஊரில் 1520-ம் ஆண்டு பிறந்து பல்வேறு நூல்களை எழுதிய மேதை அப்பைய தீட்சிதர். சிறந்த சிவபக்தர். அவருக்கு தன் பக்தியின் மீது சந்தேகம். நால்வரில் ஒருவரான சுந்தரர், இறைவனை, ‘பித்தா’ என்று அழைத்து பாடினாரே, அப்படிப்பட்ட பித்தனை, நாமும் பித்து நிலையில் இருந்தால் பாட முடியுமா? என்று அறிய விரும்பினார்.

ஊமத்தங்காயை தின்று விட்டு அதனால் சித்தம் கலங்கியிருக்கும்போது தான் கூறுபவற்றை தன் சீடர்களிடம் எழுதி வைக்கச் சொன்னார். சித்தம் கலங்கி பித்து நிலையில் இருக்கும்போது அவர் பிதற்றலாக கூறியதை சீடர்கள் எழுதிக் கொண்டே வந்தனர். எல்லாம் முடிந்த பின், பார்த்தால் சிவபெருமான் மீது அவர் எழுதிய 50 சுலோகங்களாக அவை இருந்தன. ஏற்கனவே செய்த ஏற்பாட்டின்படி, சீடர்கள் மாற்றுமருந்து கொடுத்து பித்தம் தெளிந்தார். பித்து பிடித்து, உன்மத்த நிலையில் இருந்தபோது அவர் பாடிய 50 சுலோகங்கள் என்பதால் அவற்றுக்கு ‘உன்மத்த பஞ்சாசத்’ என்று பெயர்.

பித்து பிடித்த நிலையில் பாடினாலும் இறைவனைப் பற்றியே அப்பைய தீட்சிதர் பாடியது போல, மனநிலை பாதிக்கப்பட்ட பாத்திரத்தில் பாடப்படும் பாட்டு என்றாலும் தலைவருக்கு அப்போதும் ஏழைகள், இல்லாதவர்கள், பசியோடிருப்பவர்கள் பற்றிய சிந்தனைதான்.

அதில் இன்னொரு ஒற்றுமையை கவனித்தீர்களா? பித்துப் பிடித்த நிலையில் உள்ள பாத்திரம் பாடும் இந்த பாடலை எழுதியவர் கூட ஒரு பித்தன்தான். அவர் புலமைப்பித்தன். இது எதேச்சையாக நடந்ததா? அல்லது மக்கள் திலகம் அவரை விட்டு இந்தப் பாடலை எழுதச் சொன்னாரா? என்று தெரியவில்லை.

அடிப்பார் வலியார், துடிப்பார் மெலியார்
தடுப்பார் யார் யாரோ?

.... அதைத்தான் சமீபத்தில் ஆந்திரா வனப்பகுதியில் நடந்த துப்பாக்கிச் சுடு சம்பவத்தில் பார்த்தோமே? இதுபோன்று ஏழைகளை, கூலிகளை அடித்தும் சுட்டும் அவர்களது உயிரைப் பறித்து, அந்த ஏழைகளின் குடும்பங்களை துடிக்க வைக்கும் வலியார்களை தடுப்பவர்கள் யார்?

எடுப்பார் சிரிப்பார் இழப்பார் அழுவார்
எதிர்ப்பார் யார் யாரோ?

.....இழப்பவர்களின் அழுகையை விட எடுத்துக் கொண்டவர்களின் சிரிப்பு சத்தம்தான் பலமாகக் கேட்கிறது. இதையெல்லாம் எதிர்ப்பதற்கு யாருமில்லை.

பிணியார் வருவார் மருந்தார் தருவார்
பிழைப்பார் யார் யாரோ?
உயிரார் பறப்பார், உடலார் கிடப்பார்
துணை யார் வருவாரோ?

...பிறந்த உயிர்கள் அனைத்தும் இறந்தே ஆக வேண்டும். என்ன மருந்துகள் கொடுத்தாலும் உலகில் சாவை வென்று பிழைத்தவர் இவர் என்று யாரையாவது காட்ட முடியுமா? உயிர் பறந்து விட்டால் உடல் வெறும் கட்டையாய்தான் கிடக்கும். துணைக்கு யார் வருவாரோ? என்ற கேள்வி இருக்கட்டும். பட்டினத்து அடிகள் சொன்னதுபோல, ‘நாம் அரையில் அணியும் கோவணமும் வராதே?

கட்டையாக கிடக்கும் உடலை கவனிப்பாரின்றி அப்படியே போட்டுப் பார்ப்போமே. என்னாகும்? ‘நரியார், நாயார் கடிப்பார் முடிப்பார்’

என்னதான் படித்து, பெரிய பதவியில், அதிகாரத்தில் இருந்தாலும் கூட இதுதான் நமது உடலின் மதிப்பு.

எவ்வளவு அருமையான பாடல் பாருங்களேன். இன்னொன்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆத்திகர்கள் சொல்வது போல, ஞானத்தபோதனரை வாவென்று அழைக்கும் திருவண்ணாமலையில் அருள் பாலித்தாரே பகவான் ரமண மகரிஷி. அவரும் கூட இந்தக் கோயிலுக்கு போ, அந்த யாத்திரைக்கு செல். தினமும் இந்த தோத்திரம் சொல். என்றெல்லாம் சொன்னதில்லை. நான் யார்? நான் யார்? என்று ஆத்ம விசாரம் செய்யத்தான் சொன்னார்.

அவர் கூறியதுபோல ஆத்ம விசாரம் எல்லாம் நமக்கு, மன்னிக்கவும் எனக்கு தெரியாத விஷயம். ஆனால், நான் யார்? நிரந்தரமா? என்ன செய்தோம்? என்றெல்லாம் சிந்தித்தால் மற்றவர்களுக்கும் சமூகத்துக்கும் உதவி புரிபவர்களாக அதன் மூலம் நாம் வாழ்ந்த வாழ்க்கையின் தடம் பதித்தவர்களாக இருப்போம்.

இதில் இன்னொரு விஷயமும் உண்டு. பகவான் ரமண மகரிஷிக்கும் பேரறிஞர் அண்ணாவுக்கும் ஒற்றுமை உண்டு. இருவருக்கும் வந்தது புற்றுநோய் என்னும் கொடிய நோய்தான். அந்த நோய்தான் அவர்களை நம்மிடம் இருந்து பிரித்தது.

அந்த கொடுமையான நோய் யாருக்கும் வரவேண்டாம். நமக்கு வரவேண்டியது, அவர்களைப் போன்ற, மனிதனின் மேம்பாட்டுக்கும் சமூக முன்னேற்றத்துக்கும் உழைக்கும் பெரியார்கள் மீதான பற்றுநோய்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

chinnakkannan
24th May 2015, 02:44 PM
//அந்த கொடுமையான நோய் யாருக்கும் வரவேண்டாம். நமக்கு வரவேண்டியது, அவர்களைப் போன்ற, மனிதனின் மேம்பாட்டுக்கும் சமூக முன்னேற்றத்துக்கும் உழைக்கும் பெரியார்கள் மீதான பற்றுநோய்.// கலை கலக்கல்.. நீங்கள் எழுதியதிலேயே எனக்கு மிகவும் பிடித்த பதிவுஇது..


அவர் கூறியதுபோல ஆத்ம விசாரம் எல்லாம் நமக்கு, மன்னிக்கவும் எனக்கு தெரியாத விஷயம்// :) எனக்கும் தான்.. ஆமா ரம்யா கிருஷணன் பிடிச்சுருக்கு போல இருக்கே..

நானாக நானிருந்த காலமெப்போ என்று முன்பு எழுதிய கவிதை தான் நினைவுக்கு வருகிறது..

தானிருந்தால் தான் குழம்பு. தானில்லாவிட்டால் ரசமாக்கும்.. நான் போவதே ஆத்ம விசாரம் ..சரியா..

இந்தாங்க ஒங்க பாட்.. நம்ம பாட்..

https://youtu.be/ciE9Lrnd-X8

இது புலமைப் பித்தனின் முதல்பாட்டு என நினைக்கிறேன்..

gkrishna
24th May 2015, 02:52 PM
https://s-media-cache-ak0.pinimg.com/736x/da/ac/0f/daac0f53bb5478ec44c926fa7fbd9437.jpg

இன்று 30வது திருமண நாளை கொண்டாடும் கோபால்

வாழ்த்துக்கள்

gkrishna
24th May 2015, 02:54 PM
http://siamoilsociale.it/wp-content/uploads/2013/11/1000-festa.jpg

1000 பதிவுகள் கடந்த நண்பர் ரவிக்கு வாழ்த்துகள்

uvausan
24th May 2015, 02:57 PM
ரவி சார்,


ஆங்... சொல்ல மறந்துட்டேன். ஷேமிக்கணும்.

ஆயிரம் பதிவுகளுக்கு ஆனந்தமான வாழ்த்துக்கள். மதுர கானம் மனதார உங்களைப் பாராட்டுகிறது.

நன்றி வாசு - தடம் படைத்தவர்கள் வாழ்த்தும் பொழுது , தடம் புரளாமல் செல்லவேண்டுமே என்ற பயம் உள்ளுக்குள் எழுகின்றது .

uvausan
24th May 2015, 03:05 PM
ரவி
கருவின் கரு அருமையான தொடர்.வாழ்த்துக்கள்
இன்றைய சூழலுக்கு ஏற்ற பதிவு. தொடருங்கள்

மிகவும் நன்றி ராஜேஷ் - நீங்கள் போகும் வேகத்தில் என் பதிவுகளையும் படிக்க நேரம் கிடைப்பதற்கு உங்களுக்கு மிகவும் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன்

gkrishna
24th May 2015, 03:07 PM
இதில் இன்னொரு விஷயமும் உண்டு. பகவான் ரமண மகரிஷிக்கும் பேரறிஞர் அண்ணாவுக்கும் ஒற்றுமை உண்டு. இருவருக்கும் வந்தது புற்றுநோய் என்னும் கொடிய நோய்தான். அந்த நோய்தான் அவர்களை நம்மிடம் இருந்து பிரித்தது.

அந்த கொடுமையான நோய் யாருக்கும் வரவேண்டாம். நமக்கு வரவேண்டியது, அவர்களைப் போன்ற, மனிதனின் மேம்பாட்டுக்கும் சமூக முன்னேற்றத்துக்கும் உழைக்கும் பெரியார்கள் மீதான பற்றுநோய்.


அருமை கலை . சி கே சொன்னது போல் 'ஆத்ம விசாரம்' என்பது பெரிய subject . அதை தெரியாது என்று நீங்கள் சொல்லும் போதே அதை பற்றி நீங்கள் நன்கு அறிந்தவர் என்று தெரிகிறது



உங்களின் பல நல்ல பதிவுகளில் முதன்மையான பதிவு

uvausan
24th May 2015, 03:14 PM
கலை சார் - யாருமே நினைத்து எழுத முடியாத பதிவு - குடியிருந்த கோயிலில் வரும் பாட்டை ஆன்மிக முறையில் அலச உங்களால் மட்டும் தான் முடியும் - இதற்க்கு முன்பு வேட்டைக்காரனை ஆதிசங்கரருடன் இணைத்தீர்கள் - அந்த பதிவு இன்னும் நெஞ்சில் பசுமையாக இருக்கின்றது - இந்த பதிவின் மூலம் இன்னும் அதிகமாக பசுமையை தெளித்து இருக்கிண்டீர்கள் . நன்றி என்று ஒரு சின்ன வார்த்தை போதாதுதான் - இங்கு மற்றவர்கள் எல்லோரும் மற்ற எல்லா வார்த்தைகளையும் எடுத்துக்கொண்டு விட்டார்கள் - எனக்கு மிஞ்சியது இந்த சின்ன மூன்றெழுத்து வார்த்தை ஒன்று மட்டும் தான் .

uvausan
24th May 2015, 03:19 PM
1000 பதிவுகள் கடந்த நண்பர் ரவிக்கு வாழ்த்துகள்

மிக்க நன்றி கிருஷ்ணா ஜி - நீங்கள் மீண்டும் இங்கு வந்ததை விடவா - என் ஆயிரம் பதிவுகள் பாராட்டகூடியவை ??

uvausan
24th May 2015, 03:39 PM
Dear Ravi sir,

Your 'Karuvin Karu' series is a wonderful one.

After reading your's, Gopal's and others posts about 'thaai' (sorry 'amma' endra vaarththai ippOdhu thamizhnaattil kochchaip paduththap pattu vittadhu), I want to throw my job in Saudi Arabia and want to go Tamilnadu to be with my mother. That much powerpul word "thaai". Thanks for all your writings.

I hope the next post in KK will be Rajini's "Amma nee sumandha pillai siragodindha kiLLai" from Annai ore aalayam (pOttach illaiye..??)

One among the rare songs of TMS & Ilaiyaraja combo.

அன்புள்ள ஆதிராம் சார் - மிக்க நன்றி - என் கருத்துக்களும் , திரு கோபால் அவர்களின் கருத்துக்களும் உங்கள் மனதை மாற்றி உங்கள் தாயுடன் சேர்ந்து இருக்கவைத்தால் , உங்கள் தாயிக்கு நான் செய்த மிகப்பெரிய புண்ணிய சேவையாக எடுத்துக்கொள்வேன் - உங்கள் தாயின் மனம் மகிழும் அந்த சந்தோஷத்திற்கு ஈடு இணை வேறு இருக்க முடியுமா ? உங்கள் திறமைக்கு இந்தியா வில் கண்டிப்பாக வேலை கிடைத்தாக வேண்டுமே !

கண்ணீரை முழுவதும் செலவழித்து விடாதீர்கள் - இன்னும் மனதை கசக்கிப்பிழியும் உண்மை சம்பவங்கள் அதிகமாக வர இருக்கின்றன - வாசு சொன்னதைப்போல வேகத்தை சற்றே குறைத்துக்கொண்டதால் , இன்று என் quota முடிந்துவிட்டது , நாளை தொடர்கிறேன் .

எப்படி என் அடுத்த பாடலை இவ்வளவு சரியாக கணித்தீர்கள் - குமாரஸ்வாமியிடம் மட்டும் இப்படிப்பட்ட சரியாக கணிக்கும் திறன் மட்டும் இருந்திருந்தால் -----------


அன்புடன்

Richardsof
24th May 2015, 05:01 PM
இனிய நண்பர் திரு கோபால் அவர்களுக்கு இனிய நல் திருமண நாள் [30] வாழ்த்துக்கள் . தங்கள் தெய்வத்தாய் பற்றிய பதிவு மிகவும் அருமை .

இனிய நண்பர் திரு கலைவேந்தன் சார்
நான் யார் ... பாடலுக்குரிய விரிவான விளக்கம் மிகவும் நன்றாக இருந்தது ..புதுமையான தகவல்கள் . நன்றி .

chinnakkannan
24th May 2015, 10:22 PM
*
என்னமோ போங்க – 5
*
காற்றிலோடும் தேரில் ஏறி ப் போகலாம்
அங்கு கண்சிமிட்டும் மீன்களோடு ஆடலாம்..

பளிங்கு வண்ண மண்டபங்கள் காணலாம்
அங்கு பாரிஜாதப் பூப்படுக்கை போடலாம்..( ம்ம் அங்கே போய்த் தூங்கறதுக்கு இங்கேயே தூங்கலாமே எதுக்குப் போவோம் புதுவுலகம்ங்கறாங்க.. ) ம்ம் என்னமோ போங்க
https://youtu.be/DUBxPv-Z8N4

நடிப்புச் சுடர் காஞ்ச் இன் வீர அபிமன்யு..

**

chinnakkannan
24th May 2015, 10:23 PM
**
என்னமோ போங்க – 6
*
தீராத மோகம் நான் கொண்ட நேரம்
தேனாறு நீ வந்து சீராட்டத் தான்
காணாத வாழ்வு நான் கண்ட நேரம்
பூ மாலை நீ சூடிப் பாராட்டத் தான்

என்ன தான் சுகமோ நெஞ்சிலே
இது தான் வளரும் அன்பிலே
ராகங்கள் நீ பாடி வா இந்நாளில்
மோகங்கள் நீ காணவா எந்நாளும்
காதல் உறவே
*
ஏதாவது சொல்லலாம்னு பார்த்தா சொர்ண புஷ்பத்தைப் பார்த்ததும் எல்லாம் மறந்து போச்சு.. என்னமோ போங்க..

https://youtu.be/SDd2VeV5slo?list=PL2C7-ngh5jQbSIIlZiIk71WPBJG3IDj-b

மாப்பிள்ளையாம்.. ரஜினியாம்.. சொர்ண புஷ்பமாம்.. ம்ம்..
*

chinnakkannan
24th May 2015, 10:39 PM
*
என்னமோ போங்க -7

ஸீ காதல்ங்கறது எப்ப வருது.. ஆண் பெண் மனசு ரெண்டும் ஒண்ணாகி ஒரே வேவ்லெங்த்ல இருக்கறச்சயா.. அட அத நான் கேக்கலீங்க..

ஆணுக்கு இருபது இருபத்திரண்டு பெண்ணுக்கு பதினெட்டு வயசாச்சும் இருக்குமோன்னோ..அப்படின்னா அவங்க வளர்ந்தவங்கன்னு தானே அர்த்தம்..

இந்தக் காதலர்களைப் பாருங்களேன்.. வெட்டவெளில ஆடறாங்க… மேகம் சூழ்ந்து மழை வர்ற மாதிரி இருக்காம்.. மழைவருது மழை வருது குடை கொண்டுவா மானே உன் மாராப்பிலேயாம்.. சுத்தம்.. அவஙக் போட்டிருக்கறது சுடிதாரும் மிக்ஸியும் கலந்த ஒரு டிரஸ் ஸாரி மேக்ஸியும்.. என்னமோ போங்க..

https://youtu.be/ysSLP132LbY?list=PLE8183761959E53D5

பிரபு கெளதமி.. ராஜா கையை வச்சா படமாம்..

RAGHAVENDRA
24th May 2015, 10:55 PM
கோபால்
படிக்க வேண்டிய லிஸ்டில் நான் ஒன்றிரண்டு சேர்க்க எண்ணுகிறேன்.
முன்பே குறிப்பிட்டது போல், தேவி வார இதழில் தாமரை செந்தூர் பாண்டி தொடராக எழுதிய, தூங்கும் எரிமலைகள்.. உள்ளத்தில் பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்க முடியாது. ஒரு கிராமத்தை அதன் உள்ளிருக்கும் சோகத்தை அப்படியே கொண்டு வந்த நெஞ்சைத் தொடும் கதை.
இன்னொன்று ஆனந்த விகடன் இதழில் ஒரு குறநாவலாக பிரசுரமான பாலகுமாரனின் யாதுமாகி நின்றாய் ... ஆரம்பித்தால் முடிக்காமல் கீழே வைக்க முடியாத எழுத்து..

இதைத் தாங்கள் படித்திருப்பீர்கள் என எண்ணுகிறேன்.

RAGHAVENDRA
24th May 2015, 10:58 PM
சென்னை லாயிட்ஸ் சாலை - தற்போது அவ்வை சண்முகம் சாலை - யில் உள்ள அரசுப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர் புலவர் புலமைப்பித்தன். அவரைத் திரையுலகிற்கு அழைத்து வந்தவர் எம்.ஜி.ஆர். நான் யார் பாடல் தான் அவருடைய முதல் பாடல். அதன் பின் அவருக்கு மிகவும் பெயர் பெற்றுத் தந்தது அடிமைப்பெண் படப்பாடலான ஆயிரம் நிலவே வா.

இது ஒன்றும் புதிய தகவல் இல்லை என்றாலும் ஒரு நினைவூட்டலே.

chinnakkannan
24th May 2015, 11:02 PM
ராகவேந்தர் சார்.. ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி என் நினைவுக்கு வருகிறத்.

தூங்கும் எரிமலைகள் - ரசு நல்ல பெருமாளும் ஒரு நாவல் எழுதிய நினைவு..

யாதுமாகி நின்றாய் பாலகுமாரன் குறு நாவலா. ஆனந்த விகடனிலா.. நான் படித்ததில்லையே.. யாதுமாகி நின்றாய் காளி என ஒரு சிறுகதை எழுதியிருந்தார்.. காதலி வந்துவிட்டுப் போனதும் அவளது நினைவுகளைக் காதலன் சொல்வது போல.. பாலகுமாரனைப் படிக்க வைத்தது ஆனந்த விகடன் குறு நாவல் பச்சை வயல் மனது

கரையோர முதலைகள், பயணிகள் கவனிக்கவும், தாயுமானவன் என்றெல்லாம் க்ளாஸ் நாவல்கள் எழுதியிருக்கிறார். மரக்கால், சுக ஜீவனம், இனியெலாம் சுகமே என..அந்தக்காலத்தில்..

காற்றுக்கென்ன வேலி ஒரு நாவல் மிக நன்றாயிருக்கும்.. உடையார் ஆறு பாகம், கங்கை கொண்ட சோழன் நாலு பாகம் அவசியம் படிக்க வேண்டிய படைப்பு அவருடையது..

RAGHAVENDRA
24th May 2015, 11:20 PM
சி.க. சார்
தாங்கள் கூறியது சரி. ர.சு. நல்லபெருமாள் எழுதியது தான் தூங்கும் எரிமலைகள். ஆனால் தாமரை செந்தூர் பாண்டி எழுதிய தொடரின் பெயரும் அது போல் தான் இருக்கும். நினைவுபடுத்திக் கொண்டு பிறகு சொல்கிறேன்.

ஆம். யாதுமாகி நின்றாய் கிட்டத்தட்ட விகடன் இதழில் 120 பக்கங்களுக்கு மேல் நீண்டது. ஒரு சிறப்பிதழாக வெளிவந்த விகடனில் இது இடம் பெற்றது. அந்த சிறப்பிதழின் கிட்டத்தட்ட அனைத்துப் பக்கங்களும் இந்நாவல் தான்.

Richardsof
25th May 2015, 06:32 AM
INDRU PADAGAR THILAGAM NINAIVU NAL.

https://youtu.be/wLcddb8O4M4

rajeshkrv
25th May 2015, 09:26 AM
வணக்கம்

அம்மா பிள்ளை என்ற ஒரு படம்.
சங்கர் கணேஷ் இசையில் அழகான பாடல்
இனிய தென்றலே இரு கைகள் வீசி வா
https://www.youtube.com/watch?v=qz4Q5g1wb0I

rajeshkrv
25th May 2015, 09:33 AM
விழி மானோ வெள்ளி மீனோ

https://www.youtube.com/watch?v=hmmQTmtMvRU

rajeshkrv
25th May 2015, 09:46 AM
ஆயிரம் பொய் திரைப்படத்தில் புலவர் சொன்னதும் பொய்யே பாடல் பிரபலமே
ஆனாலும் இந்த பாடலும் ரசிக்கத்தக்க பாடலே .. குறும்பு கொப்பளிக்க இசையரசி பாடுவது அழகோ அழகு
தில்லையிலே சபாபதி சிதம்பரத்தில் கனக சபை

https://www.youtube.com/watch?v=o37U7J0vvu0

uvausan
25th May 2015, 10:45 AM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/IMG-20150523-WA0021_zpslatg0kbw.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/IMG-20150523-WA0021_zpslatg0kbw.jpg.html)

uvausan
25th May 2015, 10:52 AM
Ck - உடம்பு எப்படி இருக்கின்றது ? ( அதிகார தோரணை அல்ல - உண்மையில் அக்கறை உள்ள தோரணை ) - மிகவும் படிப்பை பற்றிய பதிவுகளாக வருவதால் - அவைகளில் பங்கேற்க முடியவில்லை . (அப்பவே என் அன்னை சொன்னாள் - நன்றாக படிடா - கவனம் படிப்பில் மட்டும் இருக்க வேண்டும் என்றாள் - கேட்டால் தானே ? - இப்பொழுது கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் !!)

உங்கள் "என்னமோ போங்க " - எப்படி எழுதறீங்க ! என்ற கேட்க்க வைக்கின்றது ....

uvausan
25th May 2015, 11:03 AM
கருவின் கரு - பதிவு 14


" அம்மா " என்று வருடத்தில் ஒருமுறை அழைத்தான் மகன் - வினாடிக்கு ஆயிரம் முறை அவன் பெயரை சொல்லி அழைப்பாள் அவள் . அவன் அழைப்பில் கடமை இருந்தது - கவனிப்பு இல்லை - அவள் அழைப்பில் பூரிப்பு இருந்தது ,அர்த்தம் இல்லை. அமெரிக்காவில் வாழும் மகனை ஆதம்பாக்கத்தில் இருக்கும் அவளுடைய முதியோர் இல்லம் இணைத்தது அவளுடைய எண்ணங்களால் மட்டுமே .... கொளுத்தும் சூரியனை அவள் இருந்த அறையினால் மூடி மறைக்க முடியவில்லை -- தென்றல் தொடாத இலக்கிய காதல் இல்லை அவள் வாழ்வினிலே - தென்றலே நுழைய முடியாத கசங்கிய வாழ்க்கை அவள் வாழ்ந்த நாட்களிலே !

ஒரு முறை கடைசியாக அவனைப்பார்க்க மாட்டோமா என்று அலைந்தது அவள் கண்கள் - அலையவே முடியாத அந்த சின்ன அறையில் ---- கண்களிலே அவனை சுமந்தாள் - மூட மனம் வரவில்லை - மூடியே ஆக வேண்டும் இன்று என்றான் இறைவன் .

மகனிடம் மானசீகமாக ஒரு உதவியை கேட்டாள் - மகனிடம் உதவியே செய்து வாழ்ந்தவளுக்கு அதை எப்படி அவனிடம் கேட்பது என்று தெரியவில்லை --

" மகனே இனி வரும் என் பென்ஷன் பணத்தில் நான் இருந்த அறையில் ஒரு குளிசாதனப்பெட்டியோ , ஒரு மின்விசிறியோ போட முடியுமா ? எனக்காக கேட்கவில்லை - நான் சென்ற பிறகு - என் அறையில் வேறு ஒரு தாய் வந்தால் அவள் துன்பப்படக்கூடாது அதனால் தான் கேட்க்கிறேன் "----

அவள் அவனை கடைசியாக நினைத்த நேரம் அது - அமெரிக்காவில் மகன் ரோல்ஸ் ராய்ஸ் இல் மனைவியுடன் உல்லாச விடுதிக்கு சென்று கொண்டிருந்தான் --------

யாரோ அவள் உடலின் அருகில் முனு முனுத்துக்கொண்டிருந்தார்கள் - " பாவம் தகனம் செய்ய மகனால் வர முடியவில்லையாம் - எதோ போர்டு மீட்டிங் ஆம் - ரொம்பவும் வேலை சுமையாம் ----"

இந்த வேலையையும் இப்பொழுதெல்லாம் outsource பண்ண ஆரம்பித்த விட்ட இந்த தலைமுறையைப் பார்த்து அவளை தழுவிக்கொண்டிருக்கும் நெருப்பு சிரித்தது .......


"அம்மா "

அம்மா....

நீ சுமந்த பிள்ளை
சிறகொடிந்த கிள்ளை
என் கண்களும் என் நெஞ்சமும்
கொண்டாடும் தெய்வம் - தாயே
அன்னை ஒர் ஆலயம்
அம்மா
நீ சுமந்த பிள்ளை
சிறகொடிந்த கிள்ளை

மண்ணின் என்ன தோன்றகூடும்
மழை இல்லத போது
மனிதனொ மிருகமோ
தாயிலாமல் ஏது
மண்ணின் என்ன தோன்றகூடும்
மழை இல்லத போது
மனிதனொ மிருகமோ
தாயிலாமல் ஏது

அன்னை சொன்ன வார்தை இன்று
நினைவில் வந்தது
அன்பு என்ற சொல்லே தாயின்
வழியில் வந்தது
எங்கே எங்கே
அம்மா
நீ சுமந்த பிள்ளை
சிறகொடிந்த கிள்ளை


வாழவைத்த தெய்வம் இன்று
வானம் சென்றதேனோ
உலகிலே உன் மகன்
நீர் இல்லாத மீனோ
வாழவைத்த தெய்வம் இன்று
வானம் சென்றதேனோ
உலகிலே உன் மகன்
நீர் இல்லாத மீனோ

மீண்டும் இந்த மண்ணில் வந்து
தோன்ற வேண்டுமே
வாழ்க வாழ்க மகனே என்று
வாழ்த்த வேண்டுமே
எங்கே எங்கே
அம்மா
நீ சுமந்த பிள்ளை
சிறகொடிந்த கிள்ளை

என் கண்களும் என் நெஞ்சமும்
கொண்டாடும் தெய்வம் - தாயே
அன்னை ஒர் ஆலயம்
அன்னை ஒர் ஆலயம்...

https://youtu.be/cGWc_Zu6_Ng

Gopal.s
25th May 2015, 11:56 AM
அப்பப்பா ...

இவ்வளவு சீரியஸ் டாபிக் கில் பங்கு கொண்ட சி.க (ஆரம்பித்ததே இவரால்தான்),ஆதிராம்,ராகவேந்திரா இவர்களுக்கு நன்றி. லட்சுமியின் பெண் மனம் விட்டு போனது. இன்னும் சில பல விட்டு போயிருக்கலாம்.

பிரத்யேக ரசனை என்பது வேறு. எனக்கு பிரத்யேகமாக சில ரமணி சந்திரன், குரும்பூர் குப்புசாமி ,ராஜேந்திர குமார் கதைகள் பிடிக்கும். ஆனால் ஒரு தராசில் நிறுத்தும் போது ,நாம் படித்த ,ரசித்த ,உலக அளவுகோலில் நிற்க கூடிய (நான் உலக இலக்கியங்கள்,இந்திய இலக்கியங்களில் பரிச்சயம் கண்டதால்,)விஷயங்களையே நான் உங்களுக்கு சிபாரிசு செய்ய முடியும். எனக்கு ரசவந்தி,நிக் கார்ட்டர்,சரோஜாதேவி,காதல் கிங் முதலியோர் பிடிக்குமென்றாலும் ,அதனை சிபாரிசு செய்ய முடியாது. பூமணி,தாமரை செந்தூர் பாண்டி,பொன்னீலன் ,மேலாண்மை பொன்னுசாமி,இன்னும் பலர் அவ்வப்போது கவர்ந்தாலும் ,பெரிதாக சொல்லி கொள்ள ஒன்றுமில்லை.
C .r .ரவீந்திரன் என்பவரின் ஒரு கதை(குத்தகை காரர்கள் பிரச்சினை) என்னை ரொம்ப கவர்ந்தது.பேர் ஜாபகமில்லை. சுமதியின் நாவல் ஒன்று (சவண்டி பிராமணர்களை பற்றி), விட்டல் ராவ் எழுதிய நதிமூலம் ,எல்லாமே குறிப்பிட வேண்டியவை.

kalnayak
25th May 2015, 12:13 PM
ரவி,

சற்றே தாமதத்திற்கு மன்னிக்கவும். முதலில் 1000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள். குறுகிய காலத்தில் மிக அதிக பதிவுகள். அதுவும் நான் செய்ததை விட கிட்டத்தட்ட 3 மடங்கு வேகம் அதிகம் இந்த மதுர கானத்திரியில்.

இரண்டாவதாக கருவின் கரு என்ற புதிய தொடருக்கு (அதற்குள் 14 பதிவுகள் முடிந்தது - நான்தான் தாமதம்.) நடிகர் திலகம் போன்று சில விஷயங்கள் தவிர மற்ற விஷயங்களுக்கு தனது கடினத் தன்மையை காட்டிய கோபால் அவர்களையே உருகி உருகி ஒரு பதிவு போட வைத்த தலைப்பு. பாருங்கள் ஆதிராம் கூட தனது வேலையை விட்டு விட்டு தாயுடன் வந்து இருந்து பார்த்துக் கொள்ள யோசிக்க வைத்துள்ளது. எல்லோருமே உங்கள் தொடரை படித்து விட்டு தங்கள் தாயை நினைத்து உருகுகிறார்கள். எனக்கும் அப்படித்தான். என் தாயும் மறைந்து கிட்டத்தட்ட எட்டரை வருடங்கள் ஆகியுள்ளது. நான் நினைக்காத நாளில்லை. தெய்வமாய் என்றும் என்னை காத்துக்கொண்டிருக்கிறாள். இவை யாவுமே உங்கள் தொடரின் வெற்றிக்கு சாட்சிகள். வாழ்த்துகள்.

uvausan
25th May 2015, 12:51 PM
திரு கல்நாயக் - நல்வரவு - பூக்களின் வாசத்தை அனுபவித்து பல நாட்கள் ஆகிவிட்டன என்றே எண்ணத்தோன்றுகின்றது . உங்கள் பதிவுகளைப்பார்க்காமல் உற்ச்சாகமாக எழுத முடியவில்லை . ஒரு சின்ன உதவி வேண்டும் . என் பதிவில் " பூ முடிப்பாள் " யை இணைக்க ஆசைபடுகிறேன் - உங்கள் அனுமதி தேவை . நீங்கள் வர்ணித்தால் அதன் சுவை பல மடங்கு இருக்கும் - இருந்தாலும் என் எண்ணகளில் அந்த பாடலை பார்க்க விரும்பிகிறேன் - உங்கள் தனிப்பட்ட வர்ணனையும் தேவை - சில பாடல்கள் சாகா வரம் பெற்றவை - எவ்வளவு தடவை கேட்டாலும் இன்னும் புதுமையாகவே இருக்கும் - உங்கள் பாராட்டுக்களுக்கு என் மனமுவந்த நன்றி -
பூக்கள் தொடரட்டும் ------- .

uvausan
25th May 2015, 12:58 PM
கருவின் கரு - பதிவு 15

A mother's advice to her grown up daughter !!

Sometimes you are
unsatisfied with your life,
while many people in
this world are dreaming
of living your life..

A child on a farm sees
a plane fly overhead &
dreams of flying. But,
A pilot on the plane sees
the farmhouse & dreams
of returning home.

That's life!! Enjoy yours...
If wealth is the secret to
happiness, then the rich
should be dancing on the
streets. But only poor kids
do that.

If power ensures security,
then officials should walk
unguarded. But those who
live simply, sleep soundly.

If beauty and fame bring
ideal relationships, then
celebrities should have
the best marriages.

Live simply. Walk humbly.
and love genuinely..!

kalnayak
25th May 2015, 01:16 PM
சி.க.

உங்கள் புதிய தொடர் என்னமோ போங்க - என்னமோ போங்க என்று விட்டுவிட முடியாத அருமையான தொடராக இருக்கிறது. சொல்வதையெல்லாம் சொல்லிவிட்டு கடைசியிலே சொல்றீங்களே என்னமோ போங்க-ன்னு இதுக்கு நாங்க என்ன சொல்லனும்னு எதிர் பாக்கறீங்க என்னமோ போங்கவை விட்டுவிட்டு. தனித் தனியா ஒவ்வொரு பதிவையும் எடுத்து சொல்ல நேரமில்லை மன்னிக்கணும். என்னமோ போங்க.

kalnayak
25th May 2015, 01:20 PM
ஹய்யோ மறந்து விட்டேனே.
கோபால்.

மன்னிக்கணும். சற்றே தாமதமான வாழ்த்துகள் உங்களுடைய 30 வருட வெற்றிகரமான மண வாழ்விற்கு. இன்னும் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு தாங்களும் தங்கள் சந்ததியினரும் எல்லா வளங்களும் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.

uvausan
25th May 2015, 01:21 PM
கருவின் கரு - பதிவு 16

ஆசை முகம் மறந்து போச்சே !!

என் தாய் அதிகம் படிக்காதவள் - தந்தை வைப்பதுதான் சட்டம் - யாராவது புதியவர்கள் வீட்டிற்கு வந்தால் கூட என் தந்தை ஒருவரே பேசி அவர்களை அனுப்பி விடுவார் - நடுவில் காப்பி இருந்தால் , அம்மாவின் முகம் தென் படும் . அம்மாவிற்கு உலக ஞானம் அதிகம் - ஆனால் அதைக்கூட காண்பித்துக் கொள்ள மாட்டாள் . அம்மாவின் திறமைகளை முழுவதும் புரிந்துக்கொள்ள எனக்கு அன்று ஒரு வாய்ப்பு கிடைத்தது . ஒரு பெரியவர் என் வீட்டுக்கு வந்திருந்தார் - என் அப்பா ஊரில் இல்லை . அம்மா என்னை கூப்பிட்டு அவரை வரவேற்றாள் . பரிட்ச்சைக்கு படித்துக் கொண்டிருந்தேன் - கவனம் அவர்களின் உரையாடல்களில் லயிக்க வில்லை - அவர் ஒருவரே பேசிக்கொண்டிருந்த நேரத்தில் என் அம்மாவின் குரல் கணீரென்று கேட்டு , என் படிக்கும் புத்தகங்களை சற்றே மூடின .

வாழ்க்கை முழுமை அடைவது எப்போது?! - இது அவர் வைத்த கேள்வி ......



படித்து முடித்து கை நிறையச் சம்பாதித்தேன். என் குழந்தைகளையும் நன்றாகப் படிக்கவைத்து, திருமணமும் செய்துவைத்தேன். ஓய்வும் பெற்று போதுமான அளவு ஓய்வூதியமும் வருகிறது. எந்தக் குறையுமில்லாமல், எல்லாவற்றையும் நிறைவாகச் செய்து முடித்துவிட்டதாக ஒருபுறம் மூளை சொல்கிறது. ஆனால் என் மனதில் ஒரு நிறைவின்மையும் வெறுமையும் இருக்கிறது. இன்னும் எதையோ தேடுகிறது. எதை நான் கோட்டைவிட்டேன், எனக்குப் புரியவில்லை. உங்களுக்குப் புரிகிறதா?

என் அம்மாவின் பதில் .

“ஒரு யோகி புதிதாக ஒரு கிராமத்துக்கு வந்தார். அவருடைய முகத்தில் ஒரு தெய்வீகக் களை இருந்தது. ஊர் மக்கள் அவரை வணங்கினார்கள். ‘சாமி, ஏதாவது கொஞ்சம் சொல்லிக் கொடுங்களேன்’ என்று கேட்டார்கள். ‘வாழ்க்கையை ஆனந்தமாக வாழ்’ என்றார் யோகி.

மக்கள் அடுத்தநாளும் வந்தார்கள். பணிந்து, ‘அடுத்த போதனை என்ன?’ என்று கேட்டார்கள். மனித மனம் இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம் என்று கேட்டுக்கொண்டேதான் இருக்கும். ‘வாழ்க்கையை ஆனந்தமாக வாழ்’ என்றார் மறுபடியும். அடுத்தடுத்த நாட்களிலும் அதையே அவர் சொல்லிக்கொண்டு இருந்தார்.

முதல் நாள் 1,000 பேர் வந்தார்கள். ஒரு வாரத்தில் அது பத்துப் பத்து பேராக குறைந்து, கடைசியில் எல்லோரும் வருவதையே நிறுத்திவிட்டனர். இப்போது யோகி தானாகவே ஒவ்வொரு வீடாகப் போய், அதே போதனையைச் சொல்ல ஆரம்பித்தார்.

அவர் எதிரே வந்தாலே, ‘ஐயோ, போதுமய்யா’ என்று மக்கள் ஓடி ஒளிந்துகொள்ள ஆரம்பித்தனர். ஊர்ப் பஞ்சாயத்து கூடியது. யோகியை அங்கே வரவழைத்தனர். ‘ஐயா, உங்கள் போதனை முதல் தடவை கேட்க நன்றாகத்தான் இருந்தது. ஆனால் அதே போதனையை எத்தனை முறை கேட்பது?

வேறு போதனைகள் கொடுக்கலாமே?’ யோகி சொன்னார், ‘என்னிடம் இன்னும் நிறைய போதனைகள் இருக்கின்றன. ஆனால், முதல் போதனையையே நீங்கள் இன்னும் கடைப்பிடிக்கவில்லையே?

உணர்வுபூர்வமாக அது உங்கள் வாழ்வின் முறையாக மாறிவிட்டால், நான் அடுத்த போதனையைக் கொடுக்கிறேன்!”

அந்த யோகியின் நிலையில்தான் நான் இருக்கிறேன். பலநூறு முறை சொல்லிவிட்டேன். இன்னமும் மக்களுக்கு அதே கேள்வி இருக்கிறது.

மனித மனம் இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம் என்று கேட்டுக்கொண்டேதான் இருக்கும். எத்தனை கிடைத்தாலும் நிறைவின்மையைத்தான் உணரும். உங்கள் உள்நிலைக்கு எல்லை இல்லாமல் போகவேண்டும் என்று ஆசை. அதைப் பூர்த்தி செய்யாமல், வெளிச்சூழ்நிலைகளில் நீங்கள் மேலே மேலே கொடுத்துக்கொண்டே இருந்திருக்கிறீர்கள்.

இந்த உடலின் கட்டுப்பாட்டிலும் மனதின் வளையத்திலும் சிக்கிக்கொண்டு, அது விடுதலை பெற ஏங்குகிறது. இப்போதாவது, எதற்கும் திருப்திப்படாமல் இருப்பது ஏன் என்று தெரிந்துகொள்ள ஆர்வம் வந்ததே இந்த உயிரின் அடிப்படை என்ன என்பதை உணராமல் வாழ முயற்சி செய்வதுதான் பெரிய பிரச்சினை. வாழ்க்கையின் நோக்கம் என்ன?

புகழும் பெருமையும் பெறுவதா?

அன்பையும் காதலையும் அனுபவிப்பதா? வளத்தையும் வசதிகளையும் பெருக்கிக்கொள்வதா? மதத்தையும் கடவுளையும் மதிப்பதா? இல்லை உங்கள் வாழ்க்கையின் அடிப்படை நோக்கமே எல்லை இல்லாமல் போகவேண்டும் என்பதுதான்.

ஆனால் உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் படிப்பு, பதவி, பணம், குழந்தைகள், சொத்து என்று ஏதேதோ குறுக்கிட்டுள்ளன. உங்கள் நோக்கத்தின் கவனத்தைத் திசை திருப்பியதில் அவற்றுக்கும் பங்கு உண்டு.

அவை வாழ்க்கைக்கு நிறைவு தரும் தீர்வுகள் அல்ல என்பதால், எல்லாம் கிடைத்தும் அடுத்து என்ன என்று பதின் வயதில் ஏற்படும் தடுமாற்றம் உங்களுக்கு அறுபதில் வந்துவிட்டது.

வாழ்க்கையைக் கவனிக்கவே நேரம் இல்லாமல், எதையோ தேடி ஓடிக்கொண்டே இருந்துவிட்டு, ஒருநாள் புஸ் என்று போய்விடுவது சாதனை இல்லை, வேதனை. வாழ்க்கையின் முழு ஆழத்தையும் அகலத்தையும் வேர்வரை ஊடுருவி மனித மனம் எப்போதும் புரிந்துகொண்டது இல்லை.

அதனால்தான், வாழ்க்கைக்கு மேலோட்டமான ஏதாவது நோக்கத்தை அது தேடிக்கொண்டே இருக்கிறது. ‘முழுமையான நிறைவு இல்லாமல், உள்ளுக்குள் ஓர் ஆசைத் தீ எப்போதுமே எரிந்துகொண்டு இருப்பதற்கு என்ன காரணம்?’ இந்தக் கேள்வி கேட்கும் மனதை சிறிது காலத்திற்குச் சமாதானம் செய்துவைக்க, மகான்களின் தத்துவங்கள், மதக் கோட்பாடுகள், புராண விளக்கங்கள், மறைநூல்களின் சொல்லாக்கம் எல்லாம் பயன்படலாம்.

ஆனால் அடிப்படைக் கேள்வி காணாமல் போய்விடாது. விரைவிலேயே மீண்டும் தலை நிமிர்த்தி தவிப்பு ஏற்படுத்தும். வாழ்க்கையைக் கவனிக்கவே நேரம் இல்லாமல், எதையோ தேடி ஓடிக்கொண்டே இருந்துவிட்டு, ஒருநாள் புஸ் என்று போய்விடுவது சாதனை இல்லை, வேதனை.

அளந்து பார்க்கக்கூடிய எதைக் கொடுத்தாலும், உங்களுக்கு நிறைவு வராது. எல்லை இல்லாத பிரபஞ்சத்தின் அங்கமாகிய நீங்கள், கவனம் இல்லாமல் உங்களை ஓர் எல்லைக்குள் அடையாளப்படுத்தி அடக்கப்பார்ப்பதால் வரும் விளைவு இது.


விரிவடைந்து விரிவடைந்து எல்லையற்றதுடன் கலந்துவிடத் துடிப்பதால்தான் அந்த ஆசைத் தீ வேறு எதைக் கொடுத்தாலும், அடங்க மறுக்கிறது. வாழ்க்கையின் உண்மையான நோக்கம் முழுமையாக வாழ்வதுதான். அதை ஒழுங்காகச் செய்யவிடாமல், அதற்குப் பெரும் தடையாக இருப்பது நீங்கள் மட்டும்தான். உங்களை கரைத்துவிட்டால், வாழ்க்கை அதன் முழுமையை நோக்கித் தானாகவே மலரும். இந்தப் பிரபஞ்சமும் நீங்களும் ஒன்றே என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்ததும் ஆசை சட்டென்று அதன் தவிப்பை விட்டுவிடும்.



இந்த அறியாமையை எப்படிக் களைவது?

முறையான யோகாவின் மூலம் குறுகிய எல்லைகளை உடைக்க முடியும். பேரானந்தத்தை ருசிக்க முடியும். உங்கள் உச்சபட்ச சக்தியை உயிர்ப்பித்துவிட்டால், அப்புறம் இந்த உலகில் எந்த விளையாட்டை வேண்டுமானாலும் வலி இல்லாமல் விளையாடிப் பார்க்க முடியும்.

எல்லாவற்றையும் மறந்து தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னால் உட்கார்ந்து இருக்கிறீர்கள். முழு கவனமும் அதில் பதிந்து இருக்கும்வரை பிரச்சினைகளைத் தற்காலிகமாக மறந்து போயிருப்பீர்கள். மனைவி வந்து தலை மேல் ‘டப்’ என்று கொடுத்ததும், காணாமல் போன பிரச்சினைகள் எல்லாம் கணத்தில் திரும்ப வந்து பூதாகரமாக நிற்கின்றன.

உங்கள் வாழ்க்கையில் 40 வருடங்கள் தொலைக்காட்சி முன் உட்கார்ந்திருந்தது போல் ஓடிவிட்டது. அந்த நிகழ்ச்சிகள் முடிந்துபோய், மறுபடியும் கேள்வி எழுந்துவிட்டது. இப்பவும் தாமதம் ஆகிவிடவில்லை. இந்தக் கணத்தில் இருந்துகூட வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முழுமையான ஈடுபாட்டுடன் முயற்சி செய்யுங்கள். எல்லோருக்கும் ஒரே அளவு பணம், பதவி, அதிகாரம், வசதி கிடைப்பது சாத்தியமில்லாமல் இருக்கலாம். ஆனால் எல்லோருக்கும் உள்ளுணர்வில் ஒரே அளவு ஆனந்தம் கிடைப்பதை யார் தடுக்க முடியும்?”

அந்த பெரியவர் ஒரு முழு திருப்தியுடன் வெளியேறினார் - அம்மாவின் உள் இத்தனை வேதாந்தமா ? அதிகம் பேசாதவள் - அன்று எல்லோரையும் பேசவே முடியாதபடி செய்துவிட்டாள் - அந்த ஆசை முகம் இன்று மறந்து போச்சே - யாரிடம் சொல்லி அழுவேன் ??

ஆசை முகம் மறந்து போச்சே
இதை யாரிடம் சொல்வேனடி தோழி

நேசம் மறக்கவில்லை நெஞ்சம் எனில்
நினைவு முகம் மறக்கலாமோ

அன்னை (கண்ணன் )முகம் மறந்து போனால்
இந்த கண்கள் இருந்து பயன் உண்டோ??

https://youtu.be/utBPfITWcog

uvausan
25th May 2015, 01:22 PM
நாளை இதே பகுதியில் சந்திப்போம் -வணக்கம்

gkrishna
25th May 2015, 02:02 PM
நெஞ்சை பிழியுதே ரவி .
மன்னிக்கவும் இந்த வார்த்தைகளுக்கு.
உங்கள் எழுத்து ரொம்பவும் உணர்ச்சி வசப்பட வைக்கிறது .

gkrishna
25th May 2015, 02:13 PM
Dear ravi,

நண்பர் வினோத் கூறியது போல் இன்று பாடகர் திலகம் நினைவு நாள் .அன்னை ஒரு ஆலயம் பாடல் அதற்கு சரியாக பொருந்தி இருக்கிறது.
எம்ஜீயார்,சிவாஜி மற்றும் பல முன்னணி நடிகர்களுக்கு குரல் கொடுத்த பாடகர் திலகம் நடிகர் ரஜினிகாந்த்க்கு மிக சில பாடல்களே பாடி உள்ளார் . அவற்றில் மிக சிறந்த பாடல் 'அம்மா நீ சுமந்த பிள்ளை' .

chinnakkannan
25th May 2015, 02:58 PM
25.04.91 அதிகாலை

கொழும்பு ட்ரான்ஸிட் டெஸ்கிலிருந்த அந்த இளைஞன் கொஞ்சம் தூக்கம் கலைந்து என்னைப் பார்த்தான்.. எஸ். கேன் ஐ ஹெல்ப் யூ

நான்.. என் பெயர் இது.. கொழும்பு ட்ரிச்சி கன்ஃபர்ம் ஆகியிருக்கிறதா...என்னுடையது டிஸ்கவுண்ட்ட்ட் டிக்கட்.. ஐயாம் ஃப்ரம் எ ட்ராவல் ஏஜன்ஸி..


என் கலைந்த தலை கசங்கிய சட்டை கலங்கிய கண்கள் உறுத்தியிருக்கவேண்டும்.. கொஞ்சம் நிச்சலனமாய்ப்பார்த்து.. “ நீங்கள் தானா அது” எனச்சொல்லி ஒரு கத்தை ஃபேக்ஸ் பேப்பர்களை எடுத்துப் போட்டான்.. இவ்வளவு பேர் இவ்வளவு தடவை உங்களுக்காக அனுப்பியிருக்கிறார்கள்..எனில் இந்தாருங்கள் டிக்கட்”

“ நன்றி..என்னிடம் இன்னொரு முழு டிக்கட் கொழும்பு திருச்சி இருக்கிறது..அதை உபயோகப் படுத்தவேண்டியதில்லை தானே..”

“அஃப் கோர்ஸ்.. நீங்கள் அதை ரீஃபண்ட் செய்து விடலாம்..லக்கேஜ்”

சோனியான ஹேண்ட் லக்கேஜ் காண்பித்தேன்..இது மட்டும் தான்..”

“போங்கள்..கேட் நம்பர்.. பை த பை உங்கள் மதர் தான் எக்ஸ்பைர்டா.. ஐயாம் ஸாரி..”
கொழும்பில் ட்ரான்ஸிட் சென்றுதிருச்சி ஃப்ளைட்டில் ஏறி திருச்சியில் கால் வைத்த போது பொல பொலவென விடிந்திருந்தான் சூரியன்..

திருச்சி ஏர்போர்ட் அந்தக் காலத்தில் கொஞ்சம் கிராம பஸ்ஸ்டாண்ட் மாதிரி இருக்க இறங்கி லக்கேஜ்ஸூக்காக சக பயணிகள் இன்னொரு தகரக் கொட்டகையை முற்றுகையிட கொஞ்சம் தொலைவிலிருந்த இன்னொரு இட்த்திற்குச் சென்றால் அங்கும் க்யூ..

என்னருகில் நின்றவர் என்னைப்பார்த்தார்..என் கலங்கிய கண்களைப் பார்த்தார்.. ஒரு முறை நான் பானம் ஏதாவது அருந்தியிருக்கிறேனா என அருகிலும் வந்து எதுவும் வராத்தினால் பேச ஆரம்பித்தார்..என்ன விஷயம்..

சொன்னேன்..

நீங்கள் எதற்கு க்யூ.. எனச் சொல்லி அவரே முன்னாலிருந்தவர்களிடம் சொல்லி என்னை முன் தள்ள, கஸ்டம்ஸில் இருந்த்து ஒரு பெண்மணி.. கடமை தவறாதவர்..

என் அம்மா போய்ட்டாங்க.. ஸோ மதுரைக்குப் போகிறேன்..

சரி..என்றவர் இது ஒண்ணு தான் பெட்டியா ப்ளீஸ் ஓப்பன்..

ஹேண்ட்லக்கேஜை ஓப்பன் செய்தபின்னர் கைவிரல்கள் எல்லாம் உள்ளே விட்டு கடமையாய் ச்செக்கிங்க்.. பின் கண்கள் என்னை முற்றுகையிட கையில் என்ன
மோதிரம்..ஒன்றரை பவுன்.. கழுத்தில் செய்ன் 35 கிராம் அவ்வளவு தான்.. வேண்டுமென்றால் எண்டார்ஸ் செய்து கொள்ளுங்கள்.. நான் மதுரைக்குப் போக வேண்டும் இரண்டாம் நாள் காரியம்..இஃப் பாஸிபிள் தெரிந்த டாக்ஸி இங்கு இருக்கிறதா..

ஹெல்ப்பெல்லாம் அப்புறம்..முதலில் அந்த ஆஃபீஸர் ஒத்துக் கொள்கிறாரா எனத்தொலைவில் அமர்ந்திருந்த இன்னொருவரைக் காட்டி “சார்..பாஸஞ்சர் மதர் எக்ஸ்பைர்ட்,. இந்த ரிங்க் செய்ன் போட்டிருக்கார் ஓகேயா”அவர் தலையசைக்க “சரிங்க நீங்க போகலாம்.. இதோ இந்த ஆள்- ஏர்போர்ட் ஆள்- காண்பித்து”இவர் உங்களை டாக்ஸியில் ஏற்றி விடுவார்”

அந்த ஏர்போர்ட் ஆள் வெளிவந்து இன்னொரு டாக்ஸியிடம் மதுரை சொல்லி முன்னூறோ நானூறோ பேசி ஏற அவன் திருச்சி பஸ்ஸ்டாண்ட் வந்து இன்னொரு டாக்ஸியில் என்னை மாற்றி விட புது டாக்சிக்காரன் என்னசார் ஆச்சு..

மதர் எக்ஸ்பைர்ட்பா எவ்ளோ சீக்கிரம்போக முடியுமோ போ”

இதோ ரெண்டரை அவர்ல போலாம் சார்..

டாக்சியில் சாய்ந்த போது ரெண்டு நாள் முன் மன்னி அழைத்த்து நினைவு..”அம்மாக்கு ரொம்ப ஒடம்பு முடியலை கண்ணா வந்தா நன்னா இருக்கும்”

“ரொம்ப சீரியஸா மன்னி..என்னோட பாஸ் ஊரில் இல்லை” எனச்சொன்ன மட்த்தனம்..

“சரி சரி கொஞ்சம் சீக்கிரம் வரப்பார் “எனச்சொன்னவர் 24 காலையில் “அம்மா போய்ட்டாடா”

எந்த ஃப்ளைட் இருக்கு சென்னைக்கு எனத் திண்டாடி அலமலந்து கொண்டிருக்கையில் மறுபடி ஃபோன்..”இன்னிக்கே இப்பவே எல்லாம் பண்ணிடலாம்னு ஃபீல் பண்றாப்பா.. ஸோ நாங்க காட்டுக்குப் போறோம்” என அண்ணனின் குரல்..

என்ன் சொல்லவெனத் தெரியாமல் பதறி பின் மறுபடி சரி என்றேன்..இன்னொரு மட்த்தனம்..

ஆக 24ம் தேதி மதியம் எல்லாம் முடிந்துவிட்ட்து என் அன்னையினுடைய ஈமகாரியங்கள்.. பின்னும் டிக்கட் எல்லாம் கிடைக்காமல் ஏர்லங்காவில் கிடைத்து..இதோ மதுரை..

வீட்டில் இறங்கினவுடனே கண்ணில் நீர் முட்டியது..இந்த வீடு..இதில் அன்னை இனி இல்லை..

அண்ணா அணைத்துக்கொள்ள ஊரிலிருந்துவந்த சகோதரிகள் அழ என் கண்ணில் மட்டும் கொஞ்சம் நீர் கொட்டிக்கொண்டு இருந்த்து. வாய் விட்டு அழுகை வரவில்லை...

சரி குளிச்சுட்டு ரெண்டாம் நாளுக்கு கிளம்பு

ஆற்றங்கரையோரம் தோப்பு ஈம காரியங்களுக்கானது.. தாடி வைத்த சாமி வாத்யார் வந்திருக்கப் படாதோ ஒரு நாள் முன்னால..

ஏதோ விதி தடுத்துடுச்சு மாமா

ஆமாம்ப்பா..சமயத்தில அப்படித் தான் ஆகும் ..ஆனா மத்த எல்லா நாளுக்கும் இருந்து பண்ணிடு..என்ன..

கண்டிப்பா..

சொல்லு- ஒனக்குப் பூணுலும் இல்லையா.. சரி பரவாயில்லை..அண்ணாக்களோட முதுகைத் தொட்டுக்கோ.. ம்மஹ சொல்லு

ம்மஹ..

மாத்ரு..ப்ரேதஸ்ய.. த்விதியே அஹனி.. என அவர் ஸ்லோகம் சொல்லும் போது வெடித்து அழுதேன்.. ஒருவருடம் முன் ஊர்வந்து மறுபடி துபாய் சென்ற போது அம்மாவிடம் “உன்னை இனி பார்ப்பேனான்னு தெரியலையேம்மா..இப்ப பாத்துக்கறேன்” என வெளையாட்டா வினையா..ஏதோ ஒன்றாகப் பேசிய வார்த்தைகள் நினைவு வந்து பிராவகமாக அழுகை வர,, மற்றவர்கள் ஆறுதல் மட்டுமே சொன்னார்கள்.

திரும்ப வீடுவந்து கொஞ்சம் நேரம் சென்று மாலைப்போதில் சகோதர சகோதரிகளிடம் சொன்னேன்..” உங்களுக்கெல்லாம் அம்மாவின் முகம் கொடுத்து வைத்திருக்கிறது..எனக்கு இல்லை.. கொஞ்சம் தவறாக நினைக்கவில்லை எனில் எல்லா பதின்மூன்று நாள் காரியச் செலவுகளும் நானே ஏற்றுக்கொள்கிறேன்..” அவர்கள் மறுக்க மறுக்க சம்மதிக்க வைத்தேன்..

.
*
ஒன்றை இழக்கும் போது தான் அதன் அருமை தெரியுமாம்..அன்னையின் மறைவு அந்த அருமை இதோ தொடர்ந்து தொடர்ந்து தெரிந்து கொண்டே தான் இருக்கிறது..

*
ரவி..என் அன்னையின் முகம் மறக்கவில்லை..இன்னும் நின்று ஆசிர்வதித்துக்கொண்டு தானிருக்கிறது..

*

பாலகுமாரன் –அவரது தலையணைப்பூக்கள் கதையில் ஹீரோ சுந்தர்ராஜன் இறப்பதற்கு முன் அலை பாய்வான் பல்விதமாய்..அதற்கும் அலைபாயுதே கண்ணா பாட்டிற்கும் முடித்து ப் போட்டு எழுதியிருப்பார் அற்புதமாய்..

அதையே நீங்கள் ஆசை முகம் மறந்து போச்சே காதல் பாட்டில் அன்னையின் நினைவைக் கொண்டு வந்திருக்கிறீர்கள்..மேலும் “வாழ்க்கையை ஆன்ந்தமாக வாழ்” என்ற விஷயம் சொல்லி அதை ப்பற்றிய உங்கள் அன்னை சொன்ன கதையையும் வெகு அழகாக எழுதியிருக்கிறீர்கள்.. நன்றி..( வர வர எழுத்துல என்னமோ பளபளன்னு பாலீஷ்லாம் தெரியுது..என்ன்வாக்கும் செய்யறீங்க..குட். ..)
*
மன்னிக்க என் சோக நினைவலைகளில் உங்களனைவரையும் துன்புறுத்தியதற்கு..
*

chinnakkannan
25th May 2015, 03:35 PM
கோ..

லஷ்மி எனப்படும் டாக்டர் திரிபுர சுந்தரி..பெண்மனம் படித்ததில்லை..ஸ்ரீ மதி மைதிலி பின் 22 வருடம்
கழித்து தென்னாப்பிரிக்காவில் இருந்து வ்ந்து குமுதத்தில் எழுத ஆரம்பித்த அத்தை, கதவு திறந்தால், விகடனில்
நல்லதோர் வீணை குமுதத்தில் தேடிக்கொண்டே இருப்பேன் என நினைவுக்கு வருகின்றன

வாஸந்தி எனக்குப் பிடிக்கும்.. கொஞ்சம் மென்மையான அதேசமயம் அழுத்தமான எழுத்துக்குச் சொந்தக்காரர்..தீக்குள் விரலை வைத்தால்
மயக்கங்களும் சிலந்திக் கூடுகளும் துரத்தும் நினைவுகள் அழைக்கும் கனவுகள், வேர்களைத்தேடி

ரமணி சந்திரன் அவ்வளவாய்ப்படித்ததில்லை.. பெர்முட்டேஷன் காம்பினேஷனில் வல்லவர் அவர்..

இந்துமதி - பைசா நகரத்துக் கோபுரங்கள் என நினைவு, பின் சக்தி 81, ஒரு நிமிடம் தா ஒரு கொலை செய்கிறேன் என ஒரு மர்மக்கதை

சிவசங்கரி - நதியின் வேகத்தோடு.. பாலங்கள்..

கிட்டத்தட்ட எல்லாப் பத்திரிகைகளும் தொடர்ந்து வாங்கி ப்படித்துக் கொண்டு தானிருக்கிறேன்.

ம்ம் அப்புறம் வாரேன்..

uvausan
25th May 2015, 03:53 PM
Ck - உணர்ச்சிகளை வெகு அழகாக எடுத்துச்சொல்லியிருக்கிண்டீர்கள் அதுவும் உங்கள் இயல்பான நடையில் . "கருணா ரஸ ஸாகரா " என்ற நாமம் லலிதா சஹஸ்ரநாமத்தில் தேவியை குறிப்பதாக வரும் - கருணையில் அவள் சமுத்திரத்தைவிட மிகப்பெரியவள் - அவள் தான் தன்னை பல ரூபங்களாக மாற்றிக்கொண்டு நம்மிடயே நம் தாயாக உலாவி வருகிறாள் - பலருக்கு வாழும் போது இதை புரிந்துக்கொள்ள நேரம் கிடைப்பதில்லை . புரிந்துகொள்ளும் போது கொடுக்கப்பட்டுள்ள நேரம் முடிவடைந்து விடுகின்றது ---------

chinnakkannan
25th May 2015, 05:15 PM
ரவி..

//அவள் தான் தன்னை பல ரூபங்களாக மாற்றிக்கொண்டு நம்மிடயே நம் தாயாக உலாவி வருகிறாள் -
பலருக்கு வாழும் போது இதை புரிந்துக்கொள்ள நேரம் கிடைப்பதில்லை .
புரிந்துகொள்ளும் போது கொடுக்கப்பட்டுள்ள நேரம் முடிவடைந்து விடுகின்றது -----// வெகு அழகாகச் சொன்னீர்கள்..


வெகு காலத்திற்கு முன் எழுதிப்பார்த்த புதுக்கவிதை.. ( நினைவிலிருந்து எழுதுகிறேன்)

**

காக்கைக்கும் தன் குஞ்சு...
**

சின்ன வயதில்
பட்டுப் பாவடை
சட்டை, பூச்சூட்டி
அழகுபார்த்தேன் உன்னை..

சற்று வளர்ந்ததும்
கண்ணில் கலக்கமுடன்
கேள்வி நீ கேட்கப்
பொறுன்மயாய் விளக்கம் சொல்லிக்
கற்றும் கொடுத்தேன்..

பின் திருமணமான பின்
கத்தரிக்காய் பொடிக்கறிமீது
இவருக்குப் பிடிக்கும் என்று
என்னிடம் தான்
கற்றுக் கொண்டாய்..

இன்று
என்ன வந்தது உனக்கு?

ஓடியாடி விளையாடும்
உன் பெண்ணைக்
கொஞ்சம் பார்த்து விளையாடு
எனச் சொன்னதற்கு
என்னிடம்
முகம் காட்டுகிறாய்..


சரித்தான் போடி..!

*

chinnakkannan
25th May 2015, 05:25 PM
அன்னை சம்பந்தப்பட்ட இன்னொரு பாடல்..

கவிதை எழுதுவோம் வாருங்கள் இழையில் எழுதியிருந்தது.

*

ஓர் இள அன்னை சோஃபாவில் சாய்ந்தவண்ணம் கண்ணயர்ந்திருக்கிறாள்..;அவளை இறுக அணைத்தபடி மார்பில் தலைசாய்த்துத் தூங்குகிறது குழந்தை.. இப்படி ஒரு புகைப்படம் போனவருடமோ என்னவோ முக நூலில் நண்பர் ஒருவர் கொடுத்து அவரும் ஒரு வெண்பா இட்டிருந்தார்.. அந்த படத்திற்கு நான் எழுதிய வெண்பா ( என்னிடம் நான் பதிந்து வைத்துக் கொள்ளவில்லை) இன்று மறுபடி இன்னொரு நண்பர் லைக்கிட அது கிடைத்தது

வெல்லமென வந்தமகன் விந்தையென வஞ்சிமடிச்
செல்லமெனக் கண்ணுறங்க சிந்தைநிறை கொண்டவளும்
மெல்லமெல்ல மெய்மறந்து மேனிதனைச் சாய்த்தபடி
தள்ளுகிறாள் தூக்கத்தைத் தான்..

**

கொள்ளையிட வந்தமகன் கெஞ்சிநெஞ்சில் கண்ணயர
தொல்லைகளும் துன்பமதும் தள்ளிசெல மெய்மறந்து
அல்லியிதழ்க் கண்ணிமைகள் அஞ்சுகத்தின் கண்தழுவி
அள்ளுமனச் சித்திரம்தான் ஆம்

**

முற்றிலும் குறில்களால் ஆன கூவிளங்காய்ச் சீர்களில் நண்பர் எழுதியிருந்தார் (இறுதிச் சொல் மட்டும்காசு என்ற வாய்ப்பாட்டில் முடியும் வண்ணம்) எனக்கு அது வரலை..

chinnakkannan
25th May 2015, 10:18 PM
என்னமோ போங்க – 8
**

பாட்டு பாட்டு பாட்டு.. அதக் கேட்டுபுட்டு ஆஹா இப்படி இருக்கே படம் சூப்பரா இருக்குமப்புன்னுக்கிட்டு அந்தக்காலத்துல (சரி என்னை வர்ணிக்கலை) நானும் என்னோட ஃப்ரண்ட்டும் போனோமா..

எங்க.. புதுசா கட்டின தியேட்டர் மதுரைல..(அந்தச் சமயத்தில).. ஒரு மாதிரி எசகுபிசகாக் கட்டியிருப்பாங்க.மொத்தம் மூணு தியேட்டர் (மதுரைல சினி மினி சுகத்திற்கு அப்புறம் வந்த மூணு தியேட்டர் காம்ப்ளெக்ஸ் இதுன்னு நினைக்கறேன்) நடனா நாட்டியா நர்த்தனா.. இதில் நர்த்தனாவில் இந்தப் படம் ரிலீஸ்..எது இளையராஜா இசையில் கார்த்திக்கின் நடிப்பில் பாடல்கள் இனிமையாய் இருக்கும் படம்.. சொல்லத் துடிக்குது மனசு..

போனாக்க டிக்கட் காஸ்ட்லி ரூ.4.50 தான் கிடைச்சது டிக்கட் எடுத்துட்டு மாடி மாடி யாய் ஏறி மூச்சிரைக்க மூச்சிரைக்க படம்பார்க்க உட்கார்ந்தா பாட்டெல்லாம் ஓ.கே..ஆனா படம்.. .. குமுதம் விமர்சனத்தில் சொ வுக்குப் பதில் கொ என எழுதியிருந்ததாக நினைவு..

(லொகேஷன் அலங்காருக்கும் அபிராமிக்கும் இடைப்பட்டதுன்னு நினைக்கேன்..சரியா முரளி.. இப்பவும் இருக்கான்னு தெரியாது.. ராமராஜன் அதை வாங்கியதாகப் புகையாகக் கேள்விப்பட்ட நினைவு)

ம்ம் இந்தப் பாட்டக் கேக்கறச்சே பட்ட கஷ்டமெல்லாம் நெனப்பு வந்துடுச்சு.(படம்பார்த்துப் பட்ட கஷ்டமெல்லாம்) என்னமோ போங்க..

குயிலுக்கொரு நிறமிருக்கு கூ கூ
அதன் குரலுக்கொரு நிறமிருக்கா..கா கா

https://youtu.be/2XqZ2D2C0DE
*

chinnakkannan
25th May 2015, 10:19 PM
*

என்னமோ போங்க 9
**

இந்த விக்கெல்லாம் நான் வைத்துக் கொண்டதே கிடையாது.. அது போட்டுக்கொண்டால் தலைக்குள் வேர்க்குமா என்ன..இதுவரை நாடகம் சினிமா என நடிச்சதேயில்லை.. வாழ்க்கைல ம்ம் நிறைய நடிச்சுருக்கேன்..

ஒரு சில பேர்கள் திரையில் போட்டுக்கொள்ளும் விக்- கள் நமக்கு விக்கலை ஏற்படுத்தி சோகத்தில் தள்ளிவிடும்..

சிக்கல் வரும்போது சீர்மிகுந்த நாயகர்கள்
விக்கில் மறைவாராம் ஆம்..

ம்ம் அவ்ளோ கஷ்டப்பட்டு விக் போட்டு நடிச்சு எடுபடாமப் போச்சுன்னா பாவம் அந்த ஹீரோக்கு ரொம்ப கஷ்டமா இருக்குமில்லை.. .

இங்க பாருங்க நம்ம முத் ராமர் பாட துள்ளலா ஃபடாபட் செயலச்சுமி அயகா இளமையா ஆடறாக..இருந்தாலும் அவரைப் பாக்காம இழுத்துப் போத்திக்கிட்டு வரும் ஸ்ரீவித்யாவப்பாத்துப் பாடறார்.. ஸ்ரீவித்யாவும் அவரைப்பார்க்கறார்..ஒண்ணு சொல்லணும் செயலச்சுமிக்கும் ஸ்ரீவித்யாவிற்கும் பயங்கர தில்லுள்ள மனசாங்காட்டியும்.. முத்துராமனோட ராபர்ட் கிளைவ் டைப் விக்கைப் பார்த்தும் ஒருத்தர் தைரியமா ஆட ஒருத்தர் கலங்காம பாக்கறார்னா நான் என்னா சொல்றது… என்னமோ போங்க..
*
வாழ்க்கை என்றொரு பாடல்
அதில் ஆளுக்கு ஆள் ஒரு ராகம்..
செல்வம் என்றொரு தாளம்
ஆசை தான் அதன் மேளம்..அதுசரி லைன்ஸ் நல்லா இருக்கே..
பார்வையில் மோகனம், ஆனந்த பைரவி நான் விரும்பும் ஒரு மென்மை..
அது பக்தியில் கல்யாணி
பரவச வசந்தா பந்து வராளி மென்மை – ம்ம் ஒரேபாட்டில ராகத்தெல்லாம் இட்டாந்துட்டாரே..
*

https://youtu.be/mayZ1E1nNBs

உறவுகள் என்றும் வாழ்கங்கறது படத்தோட பேராம்
**

chinnakkannan
25th May 2015, 10:22 PM
**

என்னமோ போங்க 10
**
இங்க பாருங்க இந்தம்மா என்னவோ கேள்வில்லாம் கேக்கறாங்க

உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும் எது அது
அடக்க நினைத்தால் .. சரி விடுங்க.. இதுல
மிருதங்க பாணி பாங்கோஸ்ஆம்.. கேக்க நன்னாவே இருக்கு யாரு ஷீலுவா..அடையாளமே தெரியலை..என்னமோ போங்க..
(கூட இருக்கறது ஜெய்ஷங்கர் நம்பியாராம் அது யாருக்கு வேணும்..)

https://youtu.be/t8dhgkAuFw0

அன்பளிப்பு படத்துல வாசுவிற்குப் பிடித்த ராட்சஸி குரல் ராகவேந்தருக்குப் பிடித்த பாங்கோஸ் ( ஒரு இடுகைல எழுதியிருக்கார்னு நினைக்கேன்) (போட்டாச் இல்லை தானே)

vasudevan31355
25th May 2015, 10:57 PM
சி.க,

http://hamaraforums.com/uploads/post-6151-1207983897.jpghttp://www.telugutvstars.co.in/profile-images/old-heroine-geetanjali.jpg

அது கீதாஞ்சலி. நெஞ்சிருக்கும் வரை படத்தில் 'கண்ணன் வரும் நேரமிது' பாடலுக்கு ஆடுவார். அவ்வளவு ஏன்? ஒரு சில தினங்களுக்கு முன் போட்ட பீச் சாங் அசோகனுடன் அதே கண்கள் படத்தில் வருமே 'என்னென்னவோ நான் நினைத்தேன்' பாடலுக்கு பிகினியில் கவர்ச்சியாக வருபவரும் இவரே. தெலுங்கு நடிகர் ராமகிருஷ்ணாவை (புண்ணியபூமி படத்தில் நடிகர் திலகத்தின் அண்ணன். மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த வல்லவன் வருகிறான் நேரடி தமிழ்ப் படத்தின் ஹீரோ. 'அன்னப் பறவை' படத்தில் உங்கள் லத்துவின் இணை. 'பொன் என்பதோ பூவென் ன்பதோ பாடலுக்கு")மணந்து கொண்டார். என் அண்ணன் படத்தில் சோவின் காமெடி ஜோடி. பணம் படைத்தவன் படத்தில் 'கண் போன போக்கிலே கால் போகலாமா' பாடலின் இடையிசையில் நாகேஷுடன் ஆடுபவரும் இவரே.

ராமகிருஷ்ணாவும், கீதாஞ்சலியும் சில படங்களில் தெலுங்கில் இணைந்து நடித்தார்கள். அது லவ் ஆகி திருமணத்தில் முடிந்தது. இவர்கள் நடித்த படம் ஒன்று தமிழ் டப்பிங் செய்யப்பட்டு 70 களில் பல தியேட்டர்களில் காலை பத்து மணிக் காட்சியில் ஓடோ ஓடென்று ஓடியது.

பகவான் குமார் என்று தெலுங்கில் வந்து தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு பைட்டர் பகவானாக மாறி ஓடி அன்றைய ரிக்ஷாகாரர்களிடம் வசூல் செய்தது. :)

vasudevan31355
25th May 2015, 11:08 PM
http://www.cinejosh.com/uploadexclosivesimg/oldphotos/normal/memories/old_021.jpg

chinnakkannan
25th May 2015, 11:19 PM
வாசுங்க்ணா :)

ஏதோ கொஞ்சம் வயசாய்டுச்சோன்னோ வெள்ளெழுத்து..தூரக்க இருந்து பார்த்தேனா கொயந்தைய அடையாளம் தெரியலை..அதுக்காக் இப்படியா வார்றது..

கீ இ பு போ யா அ (கீதாஞ்சலியின் இன்றைய புகைப்படத்தைப் போடலைன்னு யார் அழுதா..:) ) ஸ்ரீ ராமக்ருஷ்னா.. ராமா க்ருஷ்ணா..:)

chinnakkannan
25th May 2015, 11:22 PM
சரிங்க எனக்குப் பிடித்த கீ. பாடல்.. (கீ தானா)

https://youtu.be/qD-xjwNmLLY

நினைத்தால் போதும் பாடுவேன்
அணைத்தால் கையில் ஆடுவேன்
சலங்கை துள்ளும் ஓசையில்
கலங்கும் கண்ணை மாற்றுவேன்..

rajraj
26th May 2015, 06:39 AM
chinnakkaNNan: You fogot 'Mithila Vilas' by Lakshmi aka Thiripurasundari. I think it was a serial in Anandaviktan in the 1940s. :) I remember my aunts discussing the story after reading Anandavikatan every week !

RAGHAVENDRA
26th May 2015, 07:55 AM
பாராட்டுக்கள்..

சினிமாப் பாட்டு என்றாலே மிகவும் ஏளனமாகவும் தீண்டத் தகாததாகவும் ஒதுக்கப் பட்ட காலங்கள் இருந்ததுண்டு. பல இசை மேடைகளில், என்னதான் கர்நாடக இசை அடிப்படையில் அமைக்கப்பட்டிருந்தாலும் சினிமாவில் இடம் பெற்றிருந்தால் அது தவிர்க்கப் பட்டதுண்டு.

வெகுஜன ரசனையின் அடிப்படையில் எஸ்.வி.வெங்கட்ராமன், ஜி.ராமனாதன், சி.என்.பாண்டுரங்கன் போன்ற இசை மேதைகளின் பங்களிப்பில் மக்களிடம் பலத்த வரவேற்பைத் திரையிசை பெற்று அவர்களின் வாழ்வில் தவிர்க்க இயலாத நிலையை அடைந்து விட்டது. இவர்களின் சமகாலத்தில் தெலுங்குத் திரையுலகில் ஆதிநாராயண ராவ், அட்டப்பள்ளி ராமராவ், ஜி. அஸ்வத்தாமா, பெண்டியாலா நாகேஸ்வரராவ் போன்ற உன்னத இசைக் கலைஞர்கள், அதே போல கன்னடத்தில் ராஜன் நாகேந்திரா, கேரளத்தில் எம்.எஸ். பாபுராஜ் போன்ற பல இசை மேதைகளின் பங்களிப்பில் திரையிசை நல்லதொரு பங்களிப்பை இசை உலகிற்கு அளித்தது.
இவர்களுக்கு அடுத்த தலைமுறையாக மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராம மூர்த்தி, திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன், விஜய பாஸ்கர் போன்றோர் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி அடுத்த கட்ட பரிமாணத்தை மக்களுக்கு அளித்தனர்.

அதன் பின்னர் வேகமாக வளர்ச்சி யடைந்த தொழில் நுட்பங்களின் காரணமாக இன்று முற்றிலும் புதிய முகத்தோடு திரை இசை காட்சியளிக்கிறது.

இசையுலகில் இதனுடைய முக்கியத்துவத்தை அறிந்து இதனை ஒரு முறை சார்ந்த கல்வியாக அளிக்கும் வகையில்

முதுகலை திரையிசை

படிப்பினை அறிமுகப் படுத்தும் தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்திற்கு நமது உளமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

http://www.thehindu.com/multimedia/dynamic/00859/08dec_tasri03_Gayat_859763e.jpg

புகழ் பெற்ற தெலுங்கு திரைப்பட இசையமைப்பாளர் ஜி.அஸ்வத்தாமா அவர்களின் புதல்வியும் வீணையிசை மேதையும், தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான திருமதி வீணை ஈ. காயத்ரி அவர்களுக்கு நமது பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அஸ்வத்தாமா அவ்ர்களைத் தெரியாதவர்கள் கூட அவர் இசையமைத்த மலரோடு விளையாடும் தென்றலே வாராய் பாடலைத் தெரியாமல் இருக்கமாட்டார்கள்.

rajeshkrv
26th May 2015, 08:02 AM
வணக்கம்
வாசு ஜி கீதாஞ்சலி பற்றி மேலும் தகவல்கள்
அவர் நடனத்திற்காக வந்து
பாபுபாய் மிஸ்திரியால் பாரஸ்மணியில் அறிமுகமானார்
பின் ராமாராவ் அவர்களால் சீதாராமகல்யாணம் படத்தில் சீதையாக அறிமுகம் செய்யப்பட்டார்
ஹரி நாத் ( நம் அண்ணை திரை ராஜா) இதில் ராமராக அறிமுகம்

பின் எல்.வி.பிரசாத் அவர்களின் இல்லாளு(இதயக்கமலம் தமிழில் பின் மேரே சாயா ஹிந்தியில்) மெயின் ரோல் செய்தார்
பின் பத்ம நாபம் இவரை காமெடி ரோலுக்கு அழைக்க அப்படியே காமெடி நடிகையாகிப்போனார்
நல்ல நடனத்திறன், நடிப்பு அழகு எல்லாம் கொண்டவர்
ராமகிருஷ்ணாவை மணந்து கொண்டு பல காலம் படங்களில் நடிக்காமல் இருந்தார்
மீண்டும் பாட்டி வேடங்களில் இப்பொழுது நடிக்கிறார்.

https://www.youtube.com/watch?v=YYu9pF_RK1Q

https://www.youtube.com/watch?v=RBknx0r1PpY

uvausan
26th May 2015, 08:14 AM
Good Morning

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/IMG-20150525-WA0011_zpsnrnqtht0.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/IMG-20150525-WA0011_zpsnrnqtht0.jpg.html)

http://i228.photobucket.com/albums/ee305/adikcik_izan/cute_baby.gif (http://media.photobucket.com/user/adikcik_izan/media/cute_baby.gif.html)