PDA

View Full Version : மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4Pages : 1 2 3 4 5 6 7 8 [9] 10 11 12 13 14 15 16

vasudevan31355
19th July 2015, 07:28 PM
வாசு சார் அந்த சர்வர் சுந்தரம் நடன நடிகை பெயர் தாரா என்று படித்ததாக ஞாபகம். பின்னாளில் நடன இயக்குனராகவும் பணியாற்றியிருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன்

செந்தில் சார்.

அது சாந்தாதான். பின்னாளில் தாரா என்ற நடன இயக்குனராக இருந்தவர் இவரா எனத் தெரியவில்லை.

raagadevan
19th July 2015, 07:38 PM
Dear Raagadevan Sir and Vaasudeven Sir

Can you twosome can elaborate on the fascinating and absorbing musical feat of the evergreen Crown of Malayalam movies ...Chemmeen!

vaNakkam Sivajisenthil Sir! :) I think Chinnakannan Sir and Vasudevan Sir are doing a wonderful job discussing the songs from Chemmeen!
In the meantime, here is a link to "The World of Salil Choudhury", which is a comprehensive portal on the great Salilda...

http://www.salilda.com/filmsongs/malayalam/chemmeen.asp

Songs in Bengali, Hindi, Malayalam, Tamil and other languages are listed, featured and discussed in these pages:

http://www.salilda.com/filmsongs/films.asp

http://www.salilda.com/

vasudevan31355
19th July 2015, 07:46 PM
Sundaram master cheated Tara Master


https://youtu.be/0IUimRlYMMI

vasudevan31355
19th July 2015, 08:56 PM
அனைத்து நண்பர்களும் தத்தம் திறமைகளைக் காட்டிய அற்புதமான 'மனதை மயக்கும் மதுர கானங்கள்' பாகம் நான்கின்

இருநூறு பக்ககங்கள்.

http://elyoyofugitivo.com/wp-content/uploads/2015/05/200-1.jpg

rajeshkrv
19th July 2015, 09:10 PM
வாசு சார் அந்த சர்வர் சுந்தரம் நடன நடிகை பெயர் தாரா என்று படித்ததாக ஞாபகம். பின்னாளில் நடன இயக்குனராகவும் பணியாற்றியிருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன்

Thara debuted as back dancer in this song silai eduthan but shantha was the main assistant to thangappan master. she was called Inspector Shanta

rajeshkrv
19th July 2015, 09:10 PM
செந்தில் சார்.

அது சாந்தாதான். பின்னாளில் தாரா என்ற நடன இயக்குனராக இருந்தவர் இவரா எனத் தெரியவில்லை.

thara vera santha vera. santha is much senior to thara.

rajeshkrv
19th July 2015, 09:37 PM
https://www.youtube.com/watch?v=VfOo2NCjWuY

chinnakkannan
19th July 2015, 10:21 PM
எல்லார் போஸ்டையும் தாண்டி ராஜேஷ் ஜி.. ஏன் திடீர்னு பொம்மைல்லாம் காட்டிபுட்டீஹ..அதுவும் ஸ்ரீப்ரியா பொம்மை இருக்கே.. காலங்கள் மாறும் கோலங்கள் மாறும் மாறாமல் வாழ்ந்தென்ன லாபம்ங்கறது சொல்லுது..(ட்ரஸ் கொஞ்சம் டைட்டோ!)ம்ம் பேஷ் பேஷ்.. டாங்க்ஸ் :)

ம்ம் சிற்றிடை என்பது முன்னழகு சிறு நடை என்பது பின்னழகு.. பூவில் விளைந்தது உன்னழகு பொன்னில் விளைந்தது என்னழகு... அதுசரி..அவுக சாந்தாவாமா.. அதுவும் நம்ம நெய்வேலிக்காரவுக புட்டு புட்டுல்ல வச்சுபுட்டாக.. வெஷயத்துக்கும் பாட்டுக்கும் அவருக்கும் ஒரு டாங்க்ஸ் சொல்லிப் புட்டோம்ல..

ம்ம் என்னைக் காதலித்த ஒற்றி (சரிதானுங்களே செந்திலண்ணாச்சி) நாளைக்கு வருமாக்கும்..அதுக்கும் ஒரு அட்வான்ஸ் டாங்க்ஸ்... அந்த ஈரோயினப் பத்திக்கொஞ்சம் வெலாவாரியா எழுதுவீகளா..

இப்படி ஆளாளுக்கு சூப்பரா எழுதினா நா என்னதேஞ்செய்றது (ம்ம் திடுதிடுதிப்னு ரவி ய வேற கோச்சுக்க வச்சுட்டன்)

சரி ஐ.என்.எஸ் எழுதுதேன்..!

chinnakkannan
19th July 2015, 10:25 PM
அழகிய பதிவுகள் தந்த நண்பர்கள் அனைவருக்கும் ,மிக்க நன்றி... ..பட் டார்கெட் 250 ஆகியிருக்கணும்.. ம்ம் :)


அனைத்து நண்பர்களும் தத்தம் திறமைகளைக் காட்டிய அற்புதமான 'மனதை மயக்கும் மதுர கானங்கள்' பாகம் நான்கின்

இருநூறு பக்ககங்கள்.

http://elyoyofugitivo.com/wp-content/uploads/2015/05/200-1.jpg

chinnakkannan
19th July 2015, 10:47 PM
இ.நே. சி. - 3

விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி
விளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டி
விளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்கு
விளக்குடை யான்கழல் மேவலும் மாமே”


(திரு மூலர் திருமந்திரம்)

அகல் எண்ணெய் சுடர் என்றெல்லாம் பலவிதமாய்த் தெரிவது எண்ணெய் இடப்பட்ட விளக்கு.. தோற்றம் பலவாறானாலும் அது விளக்கு தான்..
பலவிதமாகத் தோன்றும், பலவிதமான மனிதர்களைத் தன்னுள் வைத்திருக்கும் பிரபஞ்சம் எனப்படும் உலகம் பரம்பொருளான சிவத்தில் அடங்கும்
என்பது இதன் பொருள்..

**

https://youtu.be/sesdbv0pXHA

**

rajraj
20th July 2015, 12:40 AM
Chemmeen Lehren is the Hindi dubbed version of Chemmeen (1965) (Malayalam).

Here is a song I liked most.

Pyasa hai main kya karoon... (sung by Hariharan)

http://www.youtube.com/watch?v=91GuiqRBksc

From the original (already posted)

Maanasa maine varoo... (sung by Manna De)

http://www.youtube.com/watch?v=W4FHG5baLOM


Same tune used by Salil Chodhuri in the Bengali movie, Srikante Will

Naam Sokuntola taar... (sung by Jesudas and Sabita)

http://www.youtube.com/watch?v=UGDqsyR1TqY


RD: I could not locate the video clips of songs from Circar Express. Probably due to spelling change in transliteration or copyright issues. I will keep trying. Was Chemmeen dubbed in other Indian languages? It was dubbed in English as
'Anger of the sea'.

raagadevan
20th July 2015, 06:24 AM
Thank you Raj! :) I am not aware of the movie Chemmeen being dubbed into any other languages other than Hindi and English even though the novel was translated into more than 30 languages. By the way, it was "The Anger of the Sea" in English. I have re-mixed youtube copies of the other songs from the Hindi version that I will post at another time. For anyone more interested in the movie, here is a well-written review: http://madhulikaliddle.com/2013/04/09/chemmeen-1965/ . Too much Chemmeen for one day; I am not going to talk about it anymore! :)

Varadakumar Sundaraman
20th July 2015, 08:19 AM
OLD TAMIL MOVIES ADVT.
http://i60.tinypic.com/5lxc0k.jpg

Varadakumar Sundaraman
20th July 2015, 08:20 AM
http://i59.tinypic.com/10qx847.jpg

chinnakkannan
20th July 2015, 10:31 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்

ஹும் வேக வேகமா ஐ.என்.எஸ். எழுதிட்டு நைட் ஷோ பாகுபலி பத்து மணிக்குப் போய் ஒரு மணிக்கு முடிந்து வீடுவர ஒன்றரை.. படம் நீளம்..ஆற அமர யோசித்து வெகு பிரம்மாண்டமாய் எடுத்திருக்கிறார்கள் இருந்தாலும் என்ன சொல்ல.. பச்சக் கென மனதில் ஒட்டிக் கொண்டது யாராக்கும்.. வேறு யார் தமன்னாவாக்கும்..

காலை எழுந்தவுடன் ஹேய் ஹேய் என்னை ப் பற்றி எழுதப் படாதோ என தமன்னா கண்ணுக்குள் வந்து மயிலிறகால் டபக் டபக் என வருடிவிட..எழுதிவிட்டேன்.,.
*

வெண்பனியின் மூட்டமதும் வேடிக்கை கொண்டங்கே
பின்னலெனக் கொள்ளாமல் பேரழகைக் காட்டத்தான்
மின்னல்போல் வேகமாய் மேவி விலகிவிட
கண்ணுள் விழுந்தாளே காண்..
*

காண்பதென்ன தேவதையா காட்டிலுள்ள மோகினியா
வான்நிலவு தானுதிர்த்த வண்ணநிறைக் கீற்றதுவா
தூண்டிவிடும் இளமையதைத்\ தூக்கிவிடும் மோகத்தை
பூண்டிருக்க கண்டமனம் புண்..
*
புண்ணாகும் என்றாலோ பூவையவள் கண்களதும்
என்னவிது என்றே எழுச்சியுடன் கேட்டுவிடும்
கன்னியவள் மெல்லங்கே காட்டிய நல்லெழிலை
எண்ண இனிக்குமே ஆம்..

*
பச்சைத் தீயே எனத் தமிழில் ஆரம்பிக்கும் பாடல் தெலுகில் பச்சை பொட்டேசினா

https://youtu.be/6otduL8VnA8

*
பின்ன வாரேன்

sivajisenthil
20th July 2015, 11:43 AM
மாற்றார் தோட்ட மெல்லிசை மதுரம்
பார்ட் 11 : The Spy Who Loved Me (1977) starring Roger Moore as James Bond OO7!

The lukewarm response to the first two outings of Bond with Moore created a sort of rift between Broccoli and his longstanding partner Harry Saltzman and resulted in a break up of partnership. Then Broccoli settled the dues for him and started producing on his own from this 1977 venture!! Rest is a success story continuing till date irrespective of which actor dons the Bond role!!


இப்படத்தின் மூலம் காமெடி கலந்த கடமை வீரராக ஜேம்ஸ் பாண்டிற்கு புது உருவம் கொடுப்பதில் வெற்றி கண்டார் ரோஜர் மூர்!
ஷான் கானரியின் தவிர்க்க முடியாத நிழல் படிவத்திலிருந்த குணாதிசயங்களை விட்டுக் கொடுக்காமல் நகைச்சுவை கலந்து ஆக்ஷனையும் பரிமாறினார் !!

மூரின் படங்களிலேயே பிரம்மாண்டமான படம் இதுவே , சற்று தண்டர்பால், யு ஒன்லி லிவ் டுவைஸ் படங்களை நினைவு படுத்தினாலும்!!

டைட்டிலுக்கு முன்னால் வரும் மெய்சிலிர்க்க வைக்கும் பனிச் சறுக்கு துரத்தல் காட்சி கின்னஸ் சாதனையாகும். ஜான் பேரியின் தீம் இசை சூழலின் வேகத்தை கூட்டும் வண்ணம் அபாரமாகக் கோர்க்கப் பட்டிருக்கும் !! வில்லனின் கடலடி மாளிகை, இரும்புப்பல் வில்லன் ஜாஸ், கடலுக்குள் நீர்மூழ்கி கப்பலாக மாறும் கார், ....மறக்க முடியாத அனுபவம்!!

இந்த ஒரு படத்தில் காட்டிய சுறுசுறுப்பான ஆளுமையை ஏனோ ரோஜர் மூரால் தொடர இயலவில்லை.!! டைட்டில் இசைப்பாடலும் மிகவும் பொருத்தமான வரிகளில் ஜேம்ஸ் பாண்ட் புகழ் பாடும் !!

கதாநாயகி பார்பரா பேக் ஒரு ஸ்பை பெண்ணை நன்கு சித்தரித்துள்ளார் ஜேம்ஸ் பாண்டுக்கு இணையாக துடிப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் வில்லன்
தன்னை கோல்டுபிங்கராக எண்ணிக்கொண்டு கொஞ்சம் சொதப்பியிருக்கிறார் !

Grand Gala Pre-titile adventure by Moore/Bond!! Most of the scenes Moore manages with his body double and back projection aided close-ups!!

https://www.youtube.com/watch?v=_kyQauA2udc

Excellent titile music, theme song mix with graphics!!
Nobody does ... sung by Carly Simon; Music by Marvin Kamlich! No more John Barry BGM but his theme music is just sprinkled in the critical action scenes to build up the tempo!!

https://www.youtube.com/watch?v=Wy-c8aAntWA

Enjoy the enchantic BGM in the Pyramids' light and sound show with thrills infused in the presence of Bond/Moore alongside Jaws/Kiel!!

https://www.youtube.com/watch?v=AxNyEUMewzg

https://www.youtube.com/watch?v=mC_H2URj8-E

James Bond's Spy Technology improvised Lotus Espirit Car!!
No Auston Martin...but Roger Moore fulfilled his desire to drive Sean Connery/Bond's Goldfinger car Auston Martin in a spoof Bond role in Cannon Ball Run starring alongside Burt Reynolds!!Enjoy the exotic visuals and one liner quips by Moore in dispatching baddies one by one!!

https://www.youtube.com/watch?v=UUxpXy1Oot4

James Bond Vs Jaws! The 7feet tall Richard Kiel reached the pinnacle of his fame after his Jaws characterization in this Bond flick!! Roger Moore looks quite handsome in this black dress with his comical winkling at Jaws before dragging him underneath the giant magnet!!

https://www.youtube.com/watch?v=7wmZrU6VQzE

The train fight is not so grand compared to that in Sean Connery starrer From Russia with Love's terrific duel with Robert Shaw! Moore does a light movement even as Jaws looks awesome with his projecting steel teeth that is a larger than life depiction!!

https://www.youtube.com/watch?v=CogCFACcNPc

The thrill filled end of villain! Roger Moore's suave and stylish Bond movements are impressive!!

ரோஜர் மூரின் ஜேம்ஸ் பாண்ட் இவ்வளவு க்ளோஸ் ரேஞ்சில் வில்லனை புல்லட்டடிப்பது சற்று அதிர்ச்சியே!!

https://www.youtube.com/watch?v=XbqxXFv1sik

sivajisenthil
20th July 2015, 12:19 PM
21/07

நினைவில் நிலைத்த நடிகர்திலகம் ....
அவரது நினைவு நாள் மன அஞ்சலி ...https://www.youtube.com/watch?v=MmYciykHXMM

https://www.youtube.com/watch?v=ydHGXXpVGdE

https://www.youtube.com/watch?v=SriIJv8p47Q

நடிகர்திலகத்தின் நினைவஞ்சலியை ஒட்டி எனது மதுர கான திரி பதிவுகளை 22.07 முதல் தொடர்கின்றேன்.
செந்தில்

Gopal,S.
20th July 2015, 08:04 PM
நான் மறக்கவே முயலும் நினைவு நாள் காணும் எங்கள் தென்னவர் திலகமே,திராவிட ஆண்மையின் மன்மத திலகமே ,நடிகர் திலகமே , இந்த தூசு கவி உனக்களிக்கும் மாசு காணா ஆசை கவி மழை. உன் ஆசிகளின் துளியை எனக்களி பிரதியாய் .

அன்னை தமிழின் அருந்தவ புதல்வனே நல்லூழ் கண்டோர் நாங்கள்
உன்னை தொழுதே அளப்பரிய களிப்புடன் அடிதன்னில் வீழ்வோம்

போற்றி உன்னை எனை மறந்து புகழ்ந்தே கவிபாடும் திறன்
ஆற்றல் எமக்கே அளித்தோனே ஆக்கமுடன் மருளாது

ஏற்றமிகு வாணியின் பிணக்கா செல்வம் கணக்கிலா இணக்கமுற
பெற்ற நீ இம்மண்ணுதித்ததோ ஆயிரத்தொன் இருபத்து எட்டில்

தோப்புகரண துதி செய்து தெளிதேனுடன் இடுவேன் இந்நினைவுநாள்
காப்பு நீயென வேண்டி தொழுவேன் எங்கள் கணேசமூர்த்தியே

தேவ பெற்றோருக்கு தேவமைந்தனாய் வந்துதித்த தேவனே
நாவன்மை பேறு நான் பெற காவன்மை குவித்த காருண்யனே

காரிருள் களைந்து களைத்துநின்ற தமிழுக்கு பேரொளி தந்தாய்
சூரிய செம்மை நிகர் ஒப்பரிய காரிய செம்மை வீரியம் கண்டோய்

கொஞ்சும் தமிழால் அஞ்சுக செல்வன் அருந்தமிழை விருந்தமைவாய்
தஞ்சையின் தங்கமே நல்லதோர் வீணையாய் விந்தையுறு விசையுறு

வேகமொடு வேந்துவின் வீச்சோடு வற்றியிருந்த மண்ணுக்கு வெற்றிவாகை
தாகமொடு தாங்கொணா தகிப்புடன் தவித்த தத்தைகளுக்கு தமிழமுத தாயமுது

தரணியே இருள் இற்று அடைநதது அளப்பெரும் பேறு அருந்தவன் பேரு
முரணியே தேங்கிடா காட்டாற்று வெள்ளம் கலையின் தலைமகன் கொடைநூறு

கண்டோர் கேட்டோர் களித்து கடைந்தெடுத்த பார்க்கடலமுதாய் நடிப்பமுது
வேண்டார் வேண்டார் நல்லோர் அல்லார் சிந்தையில் கண்டார் சிவாஜி வென்றதை

வசதி வேண்டி மெய்வருத்தம் காணா தடை தகர்த்து படைபுடை கண்டு
அசதி இன்றி ஈந்தாயே இன்னுயிர் இன்னுடல் கலைபணிக்கே

சந்தையில் நிலை உயர நேசம் மறவா நன்நெஞ்ச நற்றமிழர் நயந்தே
சிந்துபாடி சிறப்புற ஊக்கம் உகந்தனர் உணர்ந்தே உகந்தே

அந்தவரை தன்னை அணுவும் மறக்காமல் ,நிலை துறக்காமல்
தந்தவரை தலையில் தூக்கி போற்றினான் தன்னுள் பின்னாள் வரை

விந்தையுற தந்தான் உடன் உடன்பிறந்த கற்ற பெற்ற வித்தைகளை
தங்கு தடையின்றி ஓங்கு புகழ் சேர்த்தான் தன் பால் தமிழ்மண்ணுக்குமாய்

காசினியில் கண்டோர் விண்டொரெல்லாம் பூசித்து போற்றும்
மாசிலா புகழை எகிப்து ஆசிய ஆப்பிரிக்க பட விழாவில்

நேசித்து ஈந்தனர் உலகின் சிறந்த கலைஞர் உயர்ந்த சிறப்பை
யோசித்த நாசரோ நம் நடிகரல்ல உலக தலைவர் நேருவினும் நேரானவர்.

நாணிய அமெரிக்கனோ வா வா எனவே சிவப்பு கம்பளம் விரிக்க
வாணியின் வையக மைந்தனை சிறப்பு மேயராக்கி சிறக்க வைத்தான்

நெப்போலிய பூமிக்கோ அளப்பிலா அசூயை கலையின் ஊற்றிடம் அன்றோ
இப்புவியின் ஒப்பிலா வீரன் துவக்கிய அசுத்தம் கலக்கா புனித விருதை

எப்புவிக்கும் ஒப்புவிக்கும் ஒப்ப வைக்கும் ஓய்வு காணா கலை விந்தைக்கு
ஒப்புவித்தே தப்புவித்தது தன் கலை புகழை தன் தேச தகைமையை

நடிப்பு வீரம் போற்றி துடிப்பு மிகு விழா கண்டு பெருமை மீட்டது ஓங்கியும்
இடித்தே இகழ்ந்தது இந்திய துணை கண்டத்தின் இழிவு நிலை அரசு அரசியலை

வேகமற்ற இந்திய அரசோ அரசை கலையாக்க கலையை அரசியலாக்க
விவேகமுற்ற வேகத்தில் விருது ஒன்றிற்கு பெருமை தந்து தாதாவை காத்தது

உலக வல்லரசே உன் முறை மீண்டும் இம்முறை தங்க சாவியல்ல
கலகம் கண்டே கலக்கமின்றி உரைப்போம்,வாழ்நாள் ஆஸ்கார் பூட்டு

ஓர்ந்து பதில் சொல் விருதுகளுக்கு கேள்விகளும் கேலிகளும் கூடுமுன்
தேர்ந்தெடுப்பாய் தெளிவாக உலக உன்னத உயரத்தை பதிலாக

தூயவனே தேட படுகிறாய் உலக மனிதம் காக்கும் காவலர்களால்
மாயவனே மனித அடிமை விலங்கொழித்து துடைத்தெறிந்த வழக்கை

ஓயாமல் காத்துள்ளாயாமே பெரும் வாழ்நாள் அடிமை கூட்டம் சுமந்து
மாயாமல் மாய்ந்ததாய் கதைத்து விடுவிக்கும் மனமும் அற்று சோதிக்கிராயாமே

தேயாமல் புகழ் தாங்கும் கூட்டமோ நிலை பெற்ற விலையிலா பிடிப்புடன்
காயாமல் காக்கும் கதிர்களாய் கர்ணன் கண்ட புத்திளம் புது கூட்டம் கூடுதல்

வித்தகம் உன் நினைவை விழைவுடன் மனமேந்தி மெய்யுணர்வு தூண்ட பகிர்ந்து
இத்துடன் முடிக்கின்றேன் கவிதையை மட்டும் சித்தமதில் உணர்வை என் முடிவில் .

chinnakkannan
20th July 2015, 08:15 PM
ந.தி நினைவு நாளில் மீள் பதிவாக...


***
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அந்தாதி..
*
என்றென்றும் எண்ணவும் ஏட்டில் எழுதவும்
தண்ணொளி பெற்றுவிட்ட தங்கமாய் – மின்னி
துடிப்பாய் இருந்திடும் தூய்மையாய்த் தோன்றும்
நடிகர் திலகம் நடிப்பு
*
நடிப்பென்று சொன்னாலும் இல்லையவர் நெஞ்சம்
வடிக்கின்ற ஆற்றல் அறிவீrரே – விடியாத
வெண் திரைக்கு நன்றாக வித்தியாசம் கொண்டுவந்த
மின்னலாம் ஆவார் அவர்..
*
அவர்தான் நடிப்பென்று ஆய்ந்தவர்கள் சொல்ல
கவர்ந்திடும் கண்களால் பேசி – தவறென்று
தக்கபடி சொல்லியே சிரிக்கும் அடக்கத்தைப்
பக்குவமாய்ப் பெற்றவர் பார்..
*
பாரில் இவர்க்குநிகர் பார்த்தாலும் எந்தவொரு
ஊரிலு மிவர்போலே யாருமிலை – நேரிலோ
மென்சிரிப்பு நல்லாற்றல் மேன்மைக் குணமென்று
தன்னிறைவு பெற்றவர் தான்..
*
தானாட விட்டாலும் தாமாய்த் தசையாடக்
காணாத பேருக்குக் காட்டியவர் – வீணாய்ப்
புறம்பேசிப் பின்பக்கம் துற்றியவர் தம்மைத்தான்
புறந்தள்ளி விட்டவர் தாம்..
*
தாம்தூமாய்த் தம்நடிப்பே மேலென்று தாவியவர்
ஆமென்று சொல்வார் இவர்நடிப்பை மேம்பட்டு
பண்பட்டு மின்னிடும் பட்டென மக்களின்
கண்ணைக் கவர்ந்தவர் காண்..
*
காண்பதைக் கைப்படுத்தி காட்சியிலே நன்றாக்கித்
தூண்டி நடிப்பினைத் துல்லியமாய் -வேண்டுதற்போல்
மீண்டும் விழிபார்க்க மேலும் மெருகேற்றித்
தீண்டினார் நம்நெஞ்சில் தேன்..
*
தேனென்றும் பாலென்றும் தேவதையாய்ப் பாவையர்முன்
தூணென்றே காதலினைத் தூக்கியவர் – மீண்டுமே
கண்டிப்பாய்க் காதல் கவித்துவம் மேலேற்றித்
திண்ணமாய்ச் செய்தவர் தான்..
*
தான்தான் குழம்பெனில் தக்க ரசமாக்க
வீண் எண்ணம் என்றுமே விட்டவர் – மேன்மேலும்
தீட்டி நடிப்பைத் தெளிவாக வெண் திரையில்
காட்டியவர் நம்மிடம் ஆம்..
*
ஆமென்று சொல்லி அழகாய் மறுதலித்துப்
போமென்கும் பொய்கொண்ட வெண் திரையில் - நாமென்றும்
விந்தையாய்ப் பார்க்கும் வியப்பாம் நடிப்பினால்
சிந்தை நிறைந்தவர் தான்


*

Gopal,S.
20th July 2015, 08:20 PM
அடியேன் போடும் கோனார் நோட்ஸ்.

பாடல்

அன்னை தமிழின் அருந்தவ புதல்வனே நல்லூழ் கண்டோர் நாங்கள்
உன்னை தொழுதே அளப்பரிய களிப்புடன் அடிதன்னில் வீழ்வோம்

உரை

தமிழ் மொழிக்கு மகனை போன்றவரே. நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்.

உன் காலில் மிக மகிழ்ச்சியுடன் விழுந்து வணங்குகிறோம்.
பாடல்
போற்றி உன்னை எனை மறந்து புகழ்ந்தே கவிபாடும் திறன்
ஆற்றல் எமக்கே அளித்தோனே ஆக்கமுடன் மருளாதுஉரை

எங்களையே மறந்து உன்னை புகழ்ந்து பயமின்றி கவிதை பாடும்

ஆற்றலை எங்களுக்கு அளித்தவன் நீயே.
பாடல்
ஏற்றமிகு வாணியின் பிணக்கா செல்வம் கணக்கிலா இணக்கமுற
பெற்ற நீ இம்மண்ணுதித்ததோ ஆயிரத்தொன் இருபத்து எட்டில்உரை

சரஸ்வதியின் அருள் நிறைய பெற்ற நீ ,இந்த பூமியில் பிறந்தது

ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபத்தி எட்டாம் வருடம்.


பாடல்
தோப்புகரண துதி செய்து தெளிதேனுடன் இடுவேன் இந்நினைவுநாள்
காப்பு நீயென வேண்டி தொழுவேன் எங்கள் கணேசமூர்த்தியே
உரை.

இந்த நினைவு நாளில் உனக்கு தோப்பு கரணம் போட்டு, பல வகை படையல்கள் இட்டு

கணேச மூர்த்தி என்ற பெயர் கொண்ட உன்னை நீயே துணை என கும்பிடுவோம்.பாடல்
தேவ பெற்றோருக்கு தேவமைந்தனாய் வந்துதித்த தேவனே
நாவன்மை பேறு நான் பெற காவன்மை குவித்த காருண்யனேஉரை.

தேவர் குலம் சார்ந்த குடும்பத்தில் (உயர்ந்த தேவர் என்ற வானுறை குலம் என்ற உயர்வு பொருள்)

பிள்ளையாய் வந்த தெய்வம் போன்றவனே.எனக்கு நல்ல பேச்சு திறமை தந்து காத்த கருணை மனம் கொண்டவனே.
பாடல்
காரிருள் களைந்து களைத்துநின்ற தமிழுக்கு பேரொளி தந்தாய்
சூரிய செம்மை நிகர் ஒப்பரிய காரிய செம்மை வீரியம் கண்டோய்உரை

சோர்ந்து போயிருந்த தமிழ் மொழிக்கு சூரியனை போல ஒளி கொடுத்து

செயல் பட்டு இருளில் இருந்து வெளிச்சத்தை காட்டினாய்.

பாடல்

கொஞ்சும் தமிழால் அஞ்சுக செல்வன் அருந்தமிழை விருந்தமைவாய்
தஞ்சையின் தங்கமே நல்லதோர் வீணையாய் விந்தையுறு விசையுறு
வேகமொடு வேந்துவின் வீச்சோடு வற்றியிருந்த மண்ணுக்கு வெற்றிவாகை
தாகமொடு தாங்கொணா தகிப்புடன் தவித்த தத்தைகளுக்கு தமிழமுத தாயமுதுஉரை.

தஞ்சை மண்ணின் மைந்தனே , கலைஞர் அவர்களின் தமிழை விருந்து போல

நல்ல ஒரு வீணையின் கொஞ்சும் நாதம் போல ,ஒரு உதைக்க பட்ட பந்தின் வேகத்தோடு

ஒரு மன்னனின் கம்பீரத்தோடு,வற்றி போயிருந்த தமிழகத்தை வெற்றி காண செய்தாய்.

தாகத்துடன் குழந்தை போல தவித்து நின்ற எங்களுக்கு தாய் பாலூட்டுவது போல தமிழ் என்ற அமுதத்தை கொடுத்தாய்.பாடல்.
தரணியே இருள் இற்று அடைநதது அளப்பெரும் பேறு அருந்தவன் பேரு
முரணியே தேங்கிடா காட்டாற்று வெள்ளம் கலையின் தலைமகன் கொடைநூறு
கண்டோர் கேட்டோர் களித்து கடைந்தெடுத்த பார்க்கடலமுதாய் நடிப்பமுது
வேண்டோர் வேண்டார் நல்லோர் அல்லார் சிந்தையில் கண்டார் சிவாஜி வென்றதைஉரை

பூமி இருள் நீங்கி சொல்ல முடியாத உயர்வை அடைந்தது. உன் ஒருவனின் பெயரால்.

காட்டில் ஆற்றின் வேகம் போல ஓடி கொண்டே இருந்த நடிப்பு கலை எங்களுக்கு மிக மிக தனமாய் கிடைத்தது.

பார்த்தவர்கள் கேட்டவர்கள் எல்லோரும் சந்தோசம் கொள்ள பார்க்கடலில் கிடைத்த அமுதம் போன்ற நடிப்பு.

வேண்டியவர் வேண்டாதவர் நல்லவர் கெட்டவர் எல்லாருமே சிவாஜி ஜெயித்ததை பாகுபாடு இல்லாமல் உணர்ந்தனர்.பாடல்
வசதி வேண்டி மெய்வருத்தம் காணா தடை தகர்த்து படைபுடை கண்டு
அசதி இன்றி ஈந்தாயே இன்னுயிர் இன்னுடல் கலைபணிக்கே
சந்தையில் நிலை உயர நேசம் மறவா நன்நெஞ்ச நற்றமிழர் நயந்தே
சிந்துபாடி சிறப்புற ஊக்கம் உகந்தனர் உணர்ந்தே உகந்தேஉரை

தனக்கு வசதி செய்து கொள்ள எண்ணாமல் ,தன்னுடைய உடல் கஷ்டங்களை பொருட்படுத்தாது

ஓய்வு எடுத்து கொள்ளாமல் ,உடலையும் உயிரையும் நடிப்புக்கு கொடுத்து , இடைஞ்சல் செய்தோரை வெற்றி கண்டு

பலரை தன் பால் கவர்ந்து உன்னுடைய மார்க்கெட் value மேலே போக தமிழர்கள் உன்னை புகழ்ந்து

உன்னுடைய திறமை தெரிந்து உன்னை மதித்து உனக்கு ஊக்கம் தந்தனர்.
பாடல்
அந்தவரை தன்னை அணுவும் மறக்காமல் ,நிலை துறக்காமல்
தந்தவரை தலையில் தூக்கி போற்றினான் தன்னுள் பின்னாள் வரை
விந்தையுற தந்தான் உடன் உடன்பிறந்த கற்ற பெற்ற வித்தைகளை
தங்கு தடையின்றி ஓங்கு புகழ் சேர்த்தான் தன் பால் தமிழ்மண்ணுக்குமாய்உரை

தன்னுடைய நிலையில் இருந்து உயர்ந்தும் கர்வம் கொள்ளாமல் ,தனக்கு ஆதரவு கொடுத்தவர்களை

மதித்தே போற்றினார் கடைசி நாட்கள் வரையில் .

தனக்கு பிறவியிலேயே கிடைத்த நடிப்பு, அனுபவத்தால் கிடைத்த,பிறரிடம் கற்றறிந்த நடிப்பு திறமை

இவற்றை கொடுத்து தனக்கும் புகழ் சேர்த்து,தமிழகத்திற்கும் புகழை கொடுத்தார்.

பாடல்

காசினியில் கண்டோர் விண்டொரெல்லாம் பூசித்து போற்றும்
மாசிலா புகழை எகிப்து ஆசிய ஆப்பிரிக்க பட விழாவில்
நேசித்து ஈந்தனர் உலகின் சிறந்த கலைஞர் உயர்ந்த சிறப்பை
யோசித்த நாசரோ நம் நடிகரல்ல உலக தலைவர் நேருவினும் நேரானவர்.உரை

உலகத்தில் அந்த நடிப்பை கண்டு,அதை ஆராய்ந்த உலகத்தினர் பாராட்டி

அவருக்கு ஆசிய ஆப்பிரிக்க பட விழாவில் சிறந்த நடிகர் பட்டம் வழங்கி

உலகத்திலேயே சிறந்த நடிகர் என்று கொண்டாடினார்கள்.சிவாஜியை பற்றி தெரிந்து

மதித்த எகிப்தின் ஜனாதிபதி நாசர் . நமது நேருவை விட சிறப்பான நேர்மையான உலக தலைவர்.
பாடல்


நாணிய அமெரிக்கனோ வா வா எனவே சிவப்பு கம்பளம் விரிக்க


வாணியின் வையக மைந்தனை சிறப்பு மேயராக்கி சிறக்க வைத்தான்


நெப்போலிய பூமிக்கோ அளப்பிலா அசூயை கலையின் ஊற்றிடம் அன்றோ


இப்புவியின் ஒப்பிலா வீரன் துவக்கிய அசுத்தம் கலக்கா புனித விருதைஉரை

ஆப்பிக்கா முந்தி கவுரவித்ததால் அமெரிக்கா வெட்க பட்டு(தான் இதை முன்னமே செய்யாததை எண்ணி)அவரை சிறப்பு விருந்தினர் ஆக அழைத்து ,சிறப்பு மேயர் என்ற கவுரவம் அளித்தது இந்த சரஸ்வதியின் அருள் பெற்ற உலகம் ஒப்பு கொண்ட நடிகர்திலகத்தை. பல கலைகளின் பிறப்பிடம் ஆன பிரெஞ்சு நாட்டு அரசு இவர்களை பார்த்து பொறாமை பட்டு (அடடா நம்மை முந்தி கொண்டார்களே என்று )நெப்போலியன்
என்ற வீரனால் உருவாக்க பட்ட செவாலியே என்ற உன்னதமான விருதைபாடல்


எப்புவிக்கும் ஒப்புவிக்கும் ஒப்ப வைக்கும் ஓய்வு காணா கலை விந்தைக்கு


ஒப்புவித்தே தப்புவித்தது தன் கலை புகழை தன் தேச தகைமையை


நடிப்பு வீரம் போற்றி துடிப்பு மிகு விழா கண்டு பெருமை மீட்டது ஓங்கியும்


இடித்தே இகழ்ந்தது இந்திய துணை கண்டத்தின் இழிவு நிலை அரசு அரசியலைஉரை

எந்த உலகத்திற்கும் பொதுவான ஒப்பு கொள்ளும் விதத்தில் ,ஓய்வின்றி நடிக்கும் திறமை மதித்து , விருது கொடுத்து தன்னுடைய கலையின் மதிப்பை பிரெஞ்சு காப்பாற்றி கொண்டது.இதற்காக பெருமையாக விழா எடுத்தது.இந்தியாவின் இழிவான ,அரசியல் சார்பு கொண்ட ,கலையை மதிக்க தெரியாத இழிவை குத்தி காட்டுவது போல அமைந்தது.


பாடல்


வேகமற்ற இந்திய அரசோ அரசை கலையாக்க கலையை அரசியலாக்க


விவேகமுற்ற வேகத்தில் விருது ஒன்றிற்கு பெருமை தந்து தாதாவை காத்தது


உலக வல்லரசே உன் முறை மீண்டும் இம்முறை தங்க சாவியல்ல


கலகம் கண்டே கலக்கமின்றி உரைப்போம்,வாழ்நாள் ஆஸ்கார் பூட்டுஉரை

எதிலும் வேகம் காட்டாமல் அரசியலை நடிப்பு போல எண்ணி, நடிப்பை அரசியலாக்கிய இந்திய அரசு , முழித்து கொண்டு சிறிதே விவேகத்துடன் அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது தந்து ,அந்த விருதின் பெருமையை காத்தது.இப்போது அமெரிக்காவின் முறை மீண்டும்.மேயராக தங்க சாவி தந்தவர்கள் ,நாங்கள் உரத்த குரலில் சொல்லுவதை கேட்டு அவருக்கு வாழ்நாள் சாதனை ஆஸ்கார் கவுரவம் தர வேண்டும்.
பாடல்


ஓர்ந்து பதில் சொல் விருதுகளுக்கு கேள்விகளும் கேலிகளும் கூடுமுன்


தேர்ந்தெடுப்பாய் தெளிவாக உலக உன்னத உயரத்தை பதிலாகஉரை

ஆஸ்கார் விருதுகளை பற்றி நிறைய கேள்விகளும் ,கேலிகளும் அதிகம் எழாமலிருக்க ,சிவாஜி போன்ற மிக உயர்ந்த நடிகருக்கு வழங்குவதன் மூலம் ,பதில் சொல்ல முடியும் .பாடல்


தூயவனே தேட படுகிறாய் உலக மனிதம் காக்கும் காவலர்களால்


மாயவனே மனித அடிமை விலங்கொழித்து துடைத்தெறிந்த வழக்கை


ஓயாமல் காத்துள்ளாயாமே பெரும் வாழ்நாள் அடிமை கூட்டம் சுமந்து


மாயாமல் மாய்ந்ததாய் கதைத்து விடுவிக்கும் மனமும் அற்று சோதிக்கிராயாமேஉரை

human rights organisations உன்னை விசாரிக்க தேடுகிறது .ஏனென்றால் உலகத்தில்

அடிமைகளை ஒழித்து விட்டதாய் சொல்ல படும் நிலையை மாற்றி ஒரு பெரிய அடிமை கூட்டத்தை சிவாஜி என்ற நீ வைத்துள்ளாயாமே . நீ இறக்காமலே ,இறந்து விட்டதாய் உலகத்தை நம்ப வைத்து ,இந்த அடிமை கூட்டத்தை உன் பிடியில் இருந்து விடாமல் உலகத்தை சோதித்து கொண்டிருக்கிறாயாமே..
பாடல்


தேயாமல் புகழ் தாங்கும் கூட்டமோ நிலை பெற்ற விலையிலா பிடிப்புடன்


காயாமல் காக்கும் கதிர்களாய் கர்ணன் கண்ட புத்திளம் புது கூட்டம் கூடுதல்


வித்தகம் உன் நினைவை விழைவுடன் மனமேந்தி மெய்யுணர்வு தூண்ட பகிர்ந்து


இத்துடன் முடிக்கின்றேன் கவிதையை மட்டும் சித்தமதில் உணர்வை என் முடிவில் .உரை.

உன் புகழை சிறிதும் குறையாமல் காத்து கொண்டிருக்கும் இந்த அடிமை கூட்டம் யாரும் விலை கொடுத்து வாங்க முடியாதது. சூரியனின் கதிர்கள் போல உன் புகழுக்கு ஒளி கொடுத்து கொண்டே இருப்பதுடன் ,கர்ணன் மறு வெளியீட்டினால் நிறைய இளைஞர்களும் உன் அடிமை கூட்டத்தில் கூடுதலாக சேர்ந்து விட்டனர்

உணர்வில் தூண்ட பட்ட ,உன்னுடைய மிக பெரும் நடிப்பு வித்தகத்தை ,எங்கள் மனமெங்கும் உண்மை உணர்வுடன் தேக்கி இந்த கவிதைக்கு முடிவு கண்டாலும் ,

எனக்கு முடிவு நேரும் வரை உன்னையே நினைத்திருப்பேன்.

Murali Srinivas
20th July 2015, 08:38 PM
வாசு,

எஸ்பிபி பாடல்கள் தொடரை படித்துக் கொண்டு வருகிறேன். சில நேரங்களில் உடனே. சில நேரங்களில் தாமதமாக. ஆதலினால் உடனே அதை பற்றி எழுத முடிவதில்லை. .

வீட்டுக்கு வீடு படத்தில், அங்கம் புது விதம் பாடலை நீங்கள் அலசிய விதம் நன்றாக் இருந்தது. பிற்காலத்தில் எஸ்பிபியின் முத்தரையாக கருதப்பட்ட சில improvisations இந்தப் பாடலில்தான் தொடங்கியதோ என்று யோசிப்பேன். அவர் அங்கம் என்று சொல்லும் ஸ்டைலைதான் குறிப்பிடுகிறேன். 1970 மே மாதம் வந்த படம். இதுவும் மதுரை தங்கத்தில்தான். நன்றாக போனது. பிற்காலத்தில் [அதாவது 3,4 வருடங்களுக்கு பிறகு] என் கஸின் படித்த் மதுரை கல்லூரியில் [Madura College] மாணவர் யூனியன் சார்பில் திரையிட்டபோது பார்த்தேன்.

மங்கையரில் மகாராணி அருமையான பாடல். நீங்கள் குறிப்பிட்ட மாதிரி சில வரிகளில் எஸ்பிபி கிளப்பியிருப்பார்.

மையோடு கொஞ்சம் பொய் பேசும் கண்கள்

தீராத ஆசை கோடானு கோடி

போன்ற வரிகளை சொல்ல வேண்டும்.

ஆயிரம் நினவு பாடலை விட உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் பாடலும் மலர் எது பாடலும் ரொம்பவே பிடிக்கும். அதிலும் மலர் எது படமாக்கம் சூப்பர். [ஆனால் ஸ்ரீதரின் சிஷ்யன் சிவிஆர் இதற்கு முன்னரே நில் கவனி காதலி படத்தில் ஜில்லென்று காற்று வந்ததோ பாடலில் underwater ஒளிப்பதிவை அருமையாக பண்ணியிருப்பார். என்ன அது பிளாக் & ஒயிட், இது கலர்].


அவளுக்கென்று ஒரு மனம் படத்தை நினைக்கும்போது எனக்கு எப்போதும் இரண்டு சிந்தனைகள் வரும். ஒன்று அந்த படத்தின் விளம்பரங்களிளெல்லாம் எரிந்துக் கொண்டிருக்கின்ற மூன்று மெழுகுவர்த்திகள். ஒரொரு மெழுகுவர்த்தியிலும் படத்தின் தலைப்பிலிருந்து ஒரொரு வார்த்தையை எழுதியிருப்பார்கள்

இரண்டாவது, அவளுக்கென்று ஓர் மனம் 1971 ஜூன் 18 அன்று ரிலீஸ் ஆனது. மதுரை சென்ட்ரலில். 71 ஏப்ரல் 14 வெளியாகி 10-வது வாரமாக பிராப்தம் ஓடிக் கொண்டிருந்தது. அதை எடுத்து விட்டுத்தான் அவளுகென்று ஓர் மனம் வெளியானது. இந்த படத்தை ஓபனிங் ஷோ பார்த்து விட்டு படம் தேறாது என்று என் கஸின் சொல்லி விட்டான். கடுப்பாக வந்தது. இந்த படத்தை ஏன் இங்கே கொண்டு போட வேண்டும், விட்டிருந்தால் பிராப்தம் ஓடியிருக்குமே என்ற எண்ணம் எப்போதும் வரும்.

ஒரு சந்தேகம். 1977 வரை அனைத்து எஸ்பிபி பாடல்களும் இடம் பெறும் என சொல்லியிருந்தீர்கள். ஒரு பாடல் எனக்கு மிகவும் பிடித்த் பாடல் ஒன்று. இங்கே இடம் பெறவில்லையா அல்லது நான் கவனிக்காமல் விட்டு விட்டேனா என்று தெரியவில்லை. 1970-ல் வந்த பாடல். சங்கர் கணேஷ் இசை. சுறுசுறுவென தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட், (உங்கள் பாஷையில்) அதம் பதமாக லட்சுமி.

"மின்னுகின்ற கண்ணிரண்டும் வேலாயுதம்" என்று சற்றே மூக்கால் பாடுவார் எஸ்பிபி. அதில் "நாள் மணநாள் நெருங்கினால்" என்ற இடம் அள்ளிக் கொண்டு போகும். எந்த பாடல் என்று உங்களுக்கு புரியும் என நினைக்கிறேன். இந்த பாடல் போட்டு விட்டீர்களா?

அப்புறம் எனக்கு இரண்டு மூன்று எஸ்பிபி பாடல்கள் இருக்கின்றன. 1973-ல் G.K வெங்கடேஷ் இசையில் வந்த பாடல், 1974-ல் விஜயபாஸ்கர் இசையில் வந்த பாடல். எல்லாவற்றிருக்கும் மேலாக 1974-ல் மெல்லிசை மன்னர் இசையில் எஸ்பிபி உங்கள் ராட்சசியுடன் இணைந்த பாடல் (எனக்கு பிடித்த சுறுசுறு ஹீரோவும், எனக்கு பிடிக்காத நடிகரும் நடித்தது).அதெல்லாம் வருமல்லவா?

நன்றி! தொடருங்கள். நேரம் கிடைக்கும்போது கலந்துக் கொள்கிறேன்.

அன்புடன்

கண்ணா, சென்னை வந்துவிட்டு மதுஜியை பார்க்கவில்லை எனபதை விட சக மதுரைக்காரனை பார்க்கவில்லை என்பது பெரிய குற்றம். அப்புறம், உல்லாச பறவைகள் அலங்காரில் ரிலீஸ். சினிப்ரியா அல்ல. 1980 மார்ச்..

chinnakkannan
20th July 2015, 08:52 PM
மீள் பதிவு..


***
நண்பர்கள் கொடுத்த உற்சாக போதையில் மனம் மயங்கி சற்றே மதியிழந்து
இங்கு எழுதப் போவது என்னவோ இரண்டு செளகார் ஜானகி படங்கள்! (என்னா தெகிரியம்)

அதாகப் பட்டது நல்ல உயர்ந்த ரக டர்க்கித் துண்டினை வாஷிங்க்மெஷினில் போட்டு நனைத்து அலசி
பின் பிழிந்து பின் உதறி கொடியில் காயப் போட்ட பிறகும் கூட அதிலிருந்து ஓரிரு துளிகள் கீழே சிந்தும்..
அப்படிப் பட்ட துளி போல அடியேனும் இழையோட்டத்திலிருந்து மாறாமல் எழுதப் போகும் முதல் படம்..அதே தான்..

அரபு நாட்டில் இருப்பதால் மன ஒட்டகத்தைச் சற்றே பின்னுக்குத் தள்ள முயற்சித்து, முடியாமல்
கழுத்தை மட்டும் பின்னால் திருப்பி அழகான வாயால் அசைத்து எண்ணத்தைப் பின்னோக்கி ஓட வைத்தால்..

அட யாரந்தச் சிறுவன்.. மெரூன் கலர் டிராயாரும் வெள்ளை (ரின் சோப்) சட்டையுமாக என உற்றுப் பார்த்தால்
அட நான் தான்.(ஒன்பதாம் வகுப்பு).என்னருகில் இருந்தது வீடிருந்த தெருவில் மறு முனையில் இருந்த
வீட்டில் இருக்கும் பையன் சோமு(எட்டாம் கிளாஸ்) அவனருகில் அவனது அக்கா விம்மி என்றழைக்கப் பட்ட ஒல்லி நிர்மலா(?!)
கேப்ரன் ஹால் பத்தாம் வகுப்பு என நினைவு..

இருவரும் என்னிடம் தீபாவளிக்கு ரீரன்னாக வந்த படமான புதிய பறவையைப் பற்றிக் கொஞ்சமாய்ச்
சொல்ல என் வயிற்றுக்குள் கொஞ்சம் மிளகாய்க் காந்தல்..அதில் சோமு வேறு ஒன்றைச்
சொல்லிப் படுத்தியும் விட்டான்..அதற்காக இரண்டு வருடங்கள் கழித்து
அவனைத் திட்டியிருக்கிறேன்..(அது கடைசியில் சொல்கிறேன்)

அந்த வருடம் இரு முறை முயன்றும் டிக்கட் கிடைக்கவில்லை என நினைவு..பின்
தொலை தூர அலங்காரில் ஒரு தடவை போட பார்க்க முடியவில்லை என வருத்தம்
..இரண்டு வருடம் கழித்து அப்பாவின் ராலே சைக்கிள் கிடைத்ததும் பளஸ் ஒன்னில்
ஊர் சுற்ற ஆரம்பித்ததும் அந்தப் படத்தை பரமேஸ்வரி தியேட்டரில் போட்டிருந்தார்கள்.
.
ஒரு நல்ல சனிக்கிழமையில் அம்மாவிடம் பர்மிஷன்+ இரண்டு ரூபாய் வாங்கி
மாலைக்காட்சி பார்க்கக் கிளம்பினால் மழை.. அடடா மழைடா அடை மழைடா என்ற பாடல் மட்டுமல்ல
அந்தப் பாடல் பாடும் கதாநாயகி கூடப் பிறந்திருக்காத வருடம் அது!

இருந்தும் விறு விறு என மிதித்து கர்டர் பாலம் கீழே அவ்வளவாக தண்ணீர் தேங்காததால்
இறங்கி ஏறி கேப்ரன் ஹாலைக் கடந்து ஆரப்பாளையம் கிராஸ் அடைந்து குறுக்குவாட்டில்
பயணித்து தியேட்ட்ர் அடைகையில் ஆள் முழுக்க தெப்பமாகியிருந்தேன்..ஹச்..

இருந்தும் கூட்டம்..கியூவில் நின்று மேல்வரிசை 1.45ரூ டிக்கட் வாங்கி உள்சென்று
அமர்கையில் மனமெல்லாம் மத்தாப்பூ..(அதைப் பார்த்த யாரோ தான் பிற்காலத்தில் படத்தலைப்பாக்கினார்கள்!)
பின் இளமை பூரிக்கும் மாலா வந்து கோல்கேட் பற்பசை வாங்கச் சொல்லிச் சிரிக்க,
ஆரோக்கிய வாழ்வைக் காப்பது லைப்பாய் எல்லாம் வந்து, அரங்கம் நிறைந்திருந்தும்
ஏதோ கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் பீகாரில் வெள்ளம்
என மத்திய அரசு செய்திப்படம் ஓட, எனக்குள் எரிமலை பொங்கிக் குமுறி வெடிக்கும் நேரத்தில்
சென் ட்ரல் போர்ட் ஃபில்ம் சென்சார் போட எனக்கு இன்ப அதிர்ச்சி..

இந்த இரண்டு வருட காலகட்டத்தில் புதிய பறவை பாடல்கள் அனைத்தையும்
இலங்கை வானொலியில் கேட்டு ருசித்திருக்கிறேன், மறந்திருக்கிறேன் என்னை, ரசித்திருக்கிறேன்..
இன்னும் என்னவென்னமோ ..கிறேன்..!அதுவும் சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து பாடல்,
மெல்ல நட மெல்ல நட பாடல் எல்லாம் மனத்திரையில்(மன்னிக்க பழைய உவமை)
நடிகர் திலகம் கறுப்பு வெள்ளையில் க்ரேபாண்ட் வொயிட் ஷர்ட்டிலும் சரோஜா தேவி
டார்க் கறுப்பு புடவையிலும் நடப்பதாக ஓட்டிப் பார்த்திருந்த் எனக்கு படம் ஈஸ்ட்மென்கலர்
எனப் பார்த்ததும் சர்க்கரைப் பொங்கலை வாயிலிட்டால்
கூடவே முந்திரிப்பருப்பும் நிரடினால் என்னவொரு மகிழ்ச்சி பொங்குமோ அது போல ஆனது.
.
வைத்த கண் வாங்காமல் காரோட்டும் நடிகர் திலகக் கண்கள், ஓடும்பெண் என டைட்டில் பார்த்து
கப்பலில் ந.தி தெரியாமல் சரோஜா நதியுடன் மோதித் திரைப்படம் தொடர அதில் மூழ்கிவிட்டேன்..
சுவாரஸ்யமான த்ரில்லர்.. நடிகர் திலகத்தின் அற்புதமான முகபாவங்கள்:
சரோஜாதேவி தனது எண்ணத்தை சிட்டுக்குருவியிடம் பார்த்துத் தெரிந்து கொண்டது
போலச் சொல்லும் பாடல்- ஒரு பொழுது மலராகக் கொடியில் இருந்தேனாஇரவினிலே
நிலவினிலே என்னை மறந்தேனா, இளமை தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா-
என செக்கச் செவேல் மேக்கப் போட்டகன்னத்தைக் காட்டி வெட்கப் படும்போது முத்தெடுத்துக் காட்டும் முகபாவம்,
சடசடத்து ரயில் செல்ல படபடத்த இதயத்தை முகத்திலே காட்டுவது,
எம் ஆர் ராதாவின் டெலிஃபோன் உரையாடலைக் கேட்கும் போது யோசனையில் நெளியும் நெற்றிச் சுருக்கங்கள்,
பின் இரண்டாவது தடவை ரயிலில் வரும்போது சொல்லும் ஃப்ளாஷ் பேக்..

ப்ளாஷ் பேக் வரும்போது அவருடன் சேர்ந்து நானும் வருத்தப் பட்டிருக்கிறேன்..
அவர் ஹோட்டலில் அமர்ந்து நடனத்தைப் பார்க்க ஆரம்பிக்க- என்னா அருமையான பாட்டுங்க அது- அந்த நீல
நதிக்கரையோரம் நீ நின்றிருந்தாய் அந்தி நேரம் எனப் பாடும் செளகார் ஜானகியைப் பார்த்ததும் சற்றே ஏமாற்ற்ம் தான்.
.
என்ன தான் சொல்லுங்கள்.. என் கனவுக் கன்னி செளகார் ஜானகி தான்..என்ன ஒரு நிறம்..
என்ன ஒரு அழகு என்ன ஒரு நடிப்பு, என்ன ஒரு அழுகை..எப்பொழுதும் வந்து என்னிடம் டூயட் பாடுகிறார் அவர் என
எந்தத் தாத்தாவும் சொல்லியிருக்க மாட்டார்.. இதற்காக செளகாரை நான் குறைத்து மதிப்பிடுகிறேன் என்று எண்ண வேண்டாம்..
இந்த குறிப்பிட்ட படத்தில என்ன தான் வித்யாச நடிப்பைத் தந்திருந்தாலும்
கொஞ்சம் இளமைக் குறைவு அப்பட்டமாகத் தான் தெரிந்தது..

பின் ஃப்ளாஷ் பேக் முடிந்து சரோஜா தேவியைக் கல்யாணம் செய்து கொள்ள ஒப்புதல் வாங்குதல்
, நிச்சய தார்த்தத்தில் மறுபடி செளகார் ஜானகியைப் பார்க்கும் போது ஏற்படும் அதிர்ச்சி,
அவள் தன் மனைவியில்லை எனப்போராடும் தருணங்கள், இறுதியில் லதா நீயா இப்படிப் பண்ணே எனக் கேட்கும்
கையறு நிலை (ஏற்கெனவே கோபால் சார் புட்டுப் புட்டு வைத்ததால் நான் சுருக்கிவிட்டேன்)
என அபார நடிப்பு நடிகர் திலகத்தினுடையது....

சரோஜா தேவி முழுக்க முழுக்க ஆடையணிந்த மேக்க்ப் அணிந்த தேவதையாய் வந்தாலும்,
மேக்ஸியில் நடிகர் திலகத்துடன் கொஞ்சும் சமயத்தில் கொஞ்சம் கூடுதல் அழகாய்த் தெரிவார்..
நாகேஷின் முகபாவங்கள், எம்.ஆர்.ராதாவின் யதார்த்தமான வில்ல நடிப்பு
கதைக்குத்தேவை என்பதாலோ கொஞ்சம் பொம்மைத் தனமான இரண்டாம் செள.ஜா வின் நடிப்பு,
ராமதாஸ், ஓஏகே தேவர் என அனைவரும் தம் பங்கை ஒழுங்காய்ச் செய்திருந்தனர்..

இந்தப் படம் பார்த்துச் சிலமாதங்கள் கழித்துத் தான் சோமுவைப் பார்த்தேன்
மீனாட்சி அம்மன் கோவிலில்.. குட்டியாய் முதுகில் குத்தும் விட்டேன்.
.பாவி இப்படிப் பண்ணிட்டயே என..

அவன் அன்று சொன்னதாவது கடைசில தாண்டா சரோஜா தேவியும் போலீஸ் ஆஃபீசர்னு தெரியும்!

எத்தனை முறை பார்த்தாலும் இந்தப் படம் எனக்கு அலுக்கவே இல்லை..

*

https://youtu.be/xNInBEF8E7M

chinnakkannan
20th July 2015, 09:02 PM
//கண்ணா, சென்னை வந்துவிட்டு மதுஜியை பார்க்கவில்லை எனபதை விட சக மதுரைக்காரனை பார்க்கவில்லை என்பது பெரிய குற்றம். அப்புறம், உல்லாச பறவைகள் அலங்காரில் ரிலீஸ். சினிப்ரியா அல்ல. 1980 மார்ச்..//

அன்பின் முரளி.. ரொம்ப ரொம்ப ஸாரிங்க.. எல்லா நண்பர்களையும் பார்க்கவேண்டும் என்ற ஆவல் தான்.. இந்த தடவை லீவில் நிறைய டூர் போட்டுக்கொண்டு விட்டேன் ப்ளஸ் – ஒருகுட்டிப் ப்ரச்னையால் மன உளைச்சல்..(இங்கு வந்த பிறகு தான் சால்வ் ஆனது)சென்னையில் இருந்ததே இரண்டு+இரண்டு நாலு நாள் தான். தவிர திரும்புகையில் ஜலதோஷம் லொக் லொக் இருமல்..அதனால் சோபனம் முடித்த புது மணப் பெண்ணின் கண்களைப் போல கண்களில் சிவப்பு! விமானம் ஏறும் போது கூட இமிக்ரேஷன் என் கண்களைப் பார்த்து மறுமுறை பார்த்தார்..
கண்டிப்பாக அடுத்த விசிட்டில் உங்களை வாசுவை மதுண்ணாவை ராகவேந்திரரைப் பார்க்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறேன்..இந்த முறை என்னை மன்னிக்கவும்..

ஓ உ.ப அலங்காரா.. ஸாரி..வயதாகி வருகிறதோ..தெரியவில்லை ..(என்னைச் சொன்னேன்)

chinnakkannan
20th July 2015, 09:06 PM
வித்தகம் உன் நினைவை விழைவுடன் மனமேந்தி மெய்யுணர்வு தூண்ட பகிர்ந்து
இத்துடன் முடிக்கின்றேன் கவிதையை மட்டும் சித்தமதில் உணர்வை என் முடிவில் .// கோபால் சாமி சத்தியமா கோனார் நோட்ஸ் படித்த பின்னர் தான் புரிந்தது.. ஆனால் நினைவு நாளுக்கு க் கவிதை என்று எழுதீயிருந்தீர்கள்.. கவிதை எங்கே..?! (கண்ணா எஸ்ஸ்கேப் :) ) என்னமோ மரபு தெரியும் தெரியும் நு யாரோ சொன்னாங்க..ஆனா எழுத மட்டும் மாட்டாங்களாம்..ம்ம் என்னமோ போ நாராயணா :)

Gopal,S.
20th July 2015, 09:34 PM
வாசு,எல்லாவற்றிருக்கும் மேலாக 1974-ல் மெல்லிசை மன்னர் இசையில் எஸ்பிபி உங்கள் ராட்சசியுடன் இணைந்த பாடல் (எனக்கு பிடித்த சுறுசுறு ஹீரோவும், எனக்கு பிடிக்காத நடிகரும் நடித்தது).அதெல்லாம் வருமல்லவா?

நன்றி! தொடருங்கள். நேரம் கிடைக்கும்போது கலந்துக் கொள்கிறேன்.

அன்புடன்

கண்ணா, சென்னை வந்துவிட்டு மதுஜியை பார்க்கவில்லை எனபதை விட சக மதுரைக்காரனை பார்க்கவில்லை என்பது பெரிய குற்றம். அப்புறம், உல்லாச பறவைகள் அலங்காரில் ரிலீஸ். சினிப்ரியா அல்ல. 1980 மார்ச்..

முரளி ,

ரவியின் சுறுசுறுப்பை பாராட்டியதற்கு நன்றி. (ஒரே கலைஞரின் ராமானுஜ குலமல்லவா?)மற்ற படி எனக்கு பிடிக்காத நடிகர்,உங்களுக்கும் பிடிக்காததை எண்ணி மகிழ்ச்சியே. வாசு ,முரளியும் நம் இனமே.

senthilvel
20th July 2015, 10:33 PM
பழனி -இதயம் இருக்கின்றதே

குழிமேட்டில் இருந்து இதயம் இருக்கின்றதே என்று பாடிக்கொண்டே தலையைத்தூக்கி அவர் பாடுவது சோக ராகம் என்றாலும் அதிலும் கூட பிரமிப்பூட்டும் முக பாவனைகளில் சாகசம் செயயும் நடிப்பு அவருக்கு மட்டுமே வரும்.அடக்க முடியாத சோகங்களைதன் அடக்கியாளும் நடிப்பினால்அடக்கிக் காட்டும் நடிப்புச்சித்தன்இந்தப் பழனியாய் வாழ்ந்த நடிகர்திலகம்.அந்த இடத்திலிருந்து அவர் மெல்ல எழுந்துவரும்போது அவர் காட்டும் உணர்வுகள்அரை நூற்றாண்டு வாழ்ந்து கெட்டஒரு மனிதனின் சரித்திரத்தை அரை நொடியில் காட்டி விடும் நடிப்பல்லவா அந்த நடிப்பு.முதல்முறை வரும்"தம்பி "
என்கிற வார்த்தையின் போது வெளிப்படுத்தும்தலையாட்டல் இரண்டாம் முறை"தம்பி"என்று பாடும் போது வேறு. விதமாய் இருக்கும்.அதே "தம்பி"மூன்றாம்முறை இன்னொரு விதம்.இதே மூன்று வேட நடிப்பாகி விட்டது.இதெல்லாம் மீறினால்20 செகண்டுகளுக்குள் நடந்து விடும் மாயாஜாலம்.இந்த நடிப்புகளை நாம் கிரகித்து வியக்கும் காலகட்டங்கள் இன்று வரை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
அதனால்தான்அவை அதிசயங்கள்.அதிசயங்கள் எல்லா காலங்களிலும் ஆச்சரியப்படுத்திக்கொண்டே இருப்பதைப் போல்தான் இதுவும்.
வாழ்வின் உறவுகளை அதன் இழப்புகளை
வலிய பாடல்வரிகளையும் தாண்டி
பாவங்கள் காட்டிஅவர் நடித்த நடிப்பு கற்காலம் முதல் நிகழ்காலம் வரை மனிதன் பார்த்தறியாத உணர்ச்சிப் பிளம்புகளாகத்தான் இருக்கும்.

உழைப்பே கடமை என்று ஓடிடும் ஏழையர்க்கும்

துண்டை தோளில் தூக்கிபோட்டு" ஓடிடும் ஏழையர்க்கும்" எனும்போது நெஞ்சத்து குமுறல்களைமென்மையாகத்தான்வெளிப்படுத்துவார்.ஆன ால் அந்த வெளிப்பாடு எரிமலையின் சீற்றம்உள்ளே அடங்கி இருப்பதுபோல் காட்டும் மறைமுகநடிப்பின் வெளிப்பாடு.கிராமத்து விவசாயிகளின் துயரங்களையும்,இயாலாமைகளையும்
சில நிமிடங்களில் சாட்சியப்படுத்தும் பாடலுக்கு இதை விட வேறு சான்று தேவை இல்லை.எல்லாம் அறுந்து இனி பிடிப்புக்கு ஒன்றுமே இல்லை என்பது போல் , தரையில் மெதுவாக அவர் அமரும் காட்சி ஒன்றே அதை விளக்கிவிடும்.
எளியவர்களின் வலிய சோகங்களை துல்லியமாய் காட்டும் அந்த நடிப்பு அசாத்தியமானது.எந்த எழுத்து அதை வடிக்க இயலும்?


தானாட மறந்தாலும் சதை மட்டும் தனியாகத்தாளாமல் துடிக்கின்றதே! - தம்பிதாளாமல் தாயென்றும் பிள்ளையென்றும்தழுவிக் கிடந்தவர்க்கும்தர்மம் துணையில்லையே! - தம்பிதர்மம் துணையில்லையே!.


தானாட மறந்தாலும் என்பதற்கு முன் ஒரு நடை வரும்.உடம்பை ஒடுக்கி,குறுகி நடந்து வரும்நடை.அந்த நடையே அந்தப்பாத்திரத்தின் தன்மையை விளக்குவதாக இருக்கும்.சோகத்தை கூட சொர்க்கமாக்கும் அவருடைய நடிப்பு.


ஒரு மரத்துக்கிளிகள் ஒன்றைவிட்டு
எங்கோ பறக்கின்றதே
கூட்டுக்குடும்ப வாழ்க்கையில்,
பிரிவுகளை.,பிரிவுகளின் வருத்தங்களை
விளக்கும் வரிகள்.இந்த வரிகளுக்கு ஒரு கையைத் தூக்கி நடித்தே வரிகளை வரலாறு ஆக்கி விட்டார்.ஜீவனுள்ள நடிப்பு.நெஞ்சையறுக்கும் படப்பதிவுகள்.


பழனி யின் இந்தப்பாடல் கிராமத்து பாமரனின் நெஞ்சகுமுறல்.அந்தக் குமுறல்
அவனின்சாதாரண புலம்பல் அல்ல.
அதில் மண்ணின் பாரம்பரியமுமம்,
உறவுகளின் சங்கமும்,அவற்றின் தன்மையையும் உணர்த்தும் பாடல்.நன்றாக நடிக்க வேண்டும் என்று நினைக்கும் நாயகர்கள் பழனியைப் பாருங்கள்.
பழனி ...வாழ்கைப் போராட்டங்களின் பாடம்இதயம் இருக்கின்றதே - தம்பிஇதயம் இருக்கின்றதே!வாழும் வழி தேடி வாடிடும் ஏழையர்க்கும்உழைப்பே கடமை என்று ஓடிடும் ஏழையர்க்கும்... (இத)உறவினில் நீராகி பிரிவினில் நெருப்பாகும்உணர்வும் இருக்கின்றதே! - தம்பிஉணர்வும் இருக்கின்றதே!... (இத)தானாட மறந்தாலும் சதை மட்டும் தனியாகத்தாளாமல் துடிக்கின்றதே! - தம்பிதாளாமல் 4!...தாயென்றும் பிள்ளையென்றும்தழுவிக் கிடந்தவர்க்கும்தர்மம் துணையில்லையே! - தம்பிதர்மம் துணையில்லையே!... (இத)ஒரு மரத்துக் கிளிகள் ஒன்றை விட்டு ஒன்றுஎங்கோ பறக்கின்றதே! - தம்பிஎங்கோ பறக்கின்றதே!... (இத)கூடப் பிறந்து விட்ட கொடுமையினால் மேனிகனலாய்க் கொதிக்கின்றதே! - தம்பிகனலாய்க் கொதிக்கின்றதே!
- Kannadasan

sivajisenthil
20th July 2015, 10:36 PM
Monotony Breakers! Gap Fillers!!

தமிழ் படங்களில் பெண்ணாண்மை கீத மதுரங்கள் !

அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு : ஆண்மையின் பெண்மைப் போ(பா)ர்வை!


என்னதான் ஆண்மகனாக பிறந்து வளர்ந்து வாலிபம் எய்தினாலும் உளவியல் ரீதியாக மனதில் ஓர் ஓரத்திலாவது பெண் வேடமிட விரும்பாத ஆடவர் அபூர்வமே!! பெண்டிர் ஆடவர் போல உடையணிய எண்ணுவதும் உளவியல் கூறே!

வீரத்திருமகன் ஆனந்தனும் நீலகிரி எக்ஸ்பிரஸ் முட்டைக்கோஸ் கண்ணர் 'சோ'வும் (மொட்டை பாஸ் அசோகனுடன்) நளினமாக அதகளப்படுத்தும் ஆண்மையின் பெண்மை!! கண்களுக்குக் காட்சி விருந்து! காதுகளுக்கு மதுர மருந்து !!அருந்துவோமே !!!


https://www.youtube.com/watch?v=3VAX91N3uJc

https://www.youtube.com/watch?v=vZ8zu_IPGjE

பெண் திரைப் படத்தில் சந்திரபாபுவின் குரலில் வீணை எஸ் பாலசந்தரின் நளினமான பெண்ணாண்மை!
https://www.youtube.com/watch?v=JgtZk34-5WM

இனிது இனிது வடிவேலு!!

https://www.youtube.com/watch?v=y3nA4CgpYzA

ரிக்ஷாமாமா கவுண்டமணி !!

https://www.youtube.com/watch?v=Gfy-uRCIkKM

rajraj
20th July 2015, 10:46 PM
By the way, it was "The Anger of the Sea" in English. Too much Chemmeen for one day; I am not going to talk about it anymore! :)

Thanks RD ! I corrected the title in my post. I am not going to touch Cemmeen anymore. I am allergic to shellfish - Shrimp(chemmeen). crab and lobster. It is all yours ! :lol: Just joking. When we took a boat ride in the backwaters of Kerala we ordered shrimp(prawns) for the boys. After lunch they said that was the best shrimp they ever tasted! :)
I will wait for your dishes of Chemmeen ! :)

chinnakkannan
21st July 2015, 12:19 AM
சி.செ. கொஞ்சூண்டு கோபம் உங்களிடம் (அது இப்போது இல்லை பிகாஸ் ஆஃப் யுவர் போஸ்ட்)

நினைவு நாள் கழித்து வருவதாகச் சொல்லியதால் கோபம்..

இந்த ஸ்பை ஹூ லவ்ட் மி இருக்கிறதே..அது என்னவாக்கும்..


*

கண்ணா ஒரு காமிக்ஸ் லவர் இந்த (பலவருடம் குறைந்த) வாசு சார்வயதிலும்.. (லார்கோ, வேய்ன் ஷெல்டன் லயன் காமிக்ஸ் படித்திருக்கிறீர்களா..இல்லையெனில் படியுங்கள்.காமிக்ஸ் அறிமுக மானது எனக்கு இரும்புக் கை மாயவியில்.. எங்கள் வீட்டு முனையில்பி. 4 போலீஸ் ஸ்டேஷன் அதன் இடது பக்கம் வந்தால் ஒரு செட்டியார் கடை..

அதற்கு முன் ஒரு டெய்லர் ஆர். எம் டெய்லர்..ப்ளஸ் அதைத் தாண்டி ஒரு பொடிக் கடை..அங்கு தான் வாங்கினேன்..(90 பைசா) அந்தக் காலத்தில் அந்த 90 பைசா வென்பது ஓஹோ பணம்..ஆனால் பணத்திற்கு வொர்த்..

அதன் பின்னர் வரிசையாக வந்த புத்தகங்களை வாஙக்ப் பணம் கொஞ்சம் தான் இருந்தத்.. உறை பனி மர்மம் வாங்கினேன் கொலைகாரக் க்ள்வன் (ஒன்று சொல்லவேண்டும் அந்த சமயத்தில் குமுதம் 65 பைசா விகடன் 75 பைசா (ஆ.வி தான்))

நாச அலைகள் வாங்கவில்லை பக்கத்து வீட்டு செட்டியார் பையன் வாங்கியிருந்த காற்றில் கரைந்த கப்பல்கள் வாங்கி என் வீட்டின் மாடியின் குறுகலான படியில் குட்டியூண்டு கண்ணனாக படித்தது மட்டும் நினைவில் .. ஹீரோக்கள் லாரன்ஸ் டேவிட் ( தேங்க்ஸ் டு மை ஆழ் மனம்.இது டைப் பண்ணும் வரையில் லாரன்ஸ் என்ற பெயர் நினைவிலேயே இல்லை)

கதை.. ஒரு கப்பல் கடலில் செல்கிறது இன்னொரு கப்பல் விழுங்காமல் அதை காப்ச்யூர் செய்து பெயர் மாற்றுகிறது என்பது போல் வரும்,

அதையே விகடனில் ஒரு விமர்சனத்தில் (மதன் தான் ஆ.ப விமர்சனம் எழுதினார்) படிக்கவும் ஆவல் மேலிட ஆனால் அது வெளியாகி கிட்டத்தட்ட ஆறு மாதம் அல்லது ஒருவருடம் கழித்து ரிலீஸ் ஆக..எங்கே தங்கம் தியேட்டரில் (முரளி சரியா)

அது தான் ஸ்பை ஹூ லவ்ட் மி

ஆரம்பத்தில் கப்பலை பெரிய கப்பல் விழுங்கும் காட்சியிலாகட்டும் இறுதியில் பாண்டும் அந்தப் பெண்டும் முத்தங்கொளும் காட்சியிலாகட்டும் சோடை போகவில்லை..

ஆனாக்க

வீடியோவில் ஆரம்பக் காட்சியே கிடையாது. துபாயில் அந்தப் படம் banned. அரபிக் காட்சிகள் வருவது என்பதால் ..(உங்களுக்குத் தெரியுமா..பட்ட்த்து ராணி பார்க்கும் பார்வை அந்த்தப் பாட்டையே தடை செய்திருந்தார்கள் வீடியோவில்.. 1987 முதல் 1995 வரை கொஞ்சம் ஜெயராஜ் படங்களுக்கும் கறுப்பு மை பூசியிருப்பார்கள் ஆனந்த விகடன் குமுதம் இன்ன பிற பத்திரிகைகளில்)(சென்சாராம்!)


2000 ல் ஒரு ஈராஸ் தியேட்டரோ வேறு எதுவோ (அதுஇப்போது இல்லை) அங்குஎன் ப்ரதர் இன்லாவிடம் சொல்லி போய்ப்பார்த்தேன்..அந்த வெர்ஷனிலும் கிடையாது..

ம்ம்

ஆனால் நல்ல படம்..ஆ. ...என சி.க பார்த்து ரசித்த படம்..அதுவும் கடலிலிருந்து கார் வெளியேறும் போது ஒரு மீனை பாண்ட் எறியும் காட்சியின் நகைச்சுவை எத்தனை பேருக்குப் புரிந்திருக்கும்..

நினைவூட்டலுக்கு நன்றி சி.செ :)

ஜாஸ் என்னவோ எனக்குப் பிடிக்காது...!

Gopal,S.
21st July 2015, 04:06 AM
எம்எஸ்வியின் இசை நுணுக்கங்களை வெளிப்படுத்தவே என்னுள்ளே எம்எஸ்வி நிகழ்ச்சி! - இளையராஜா பேட்டி

ஜூலை 27-ம் தேதி இளையராஜா நடத்தும் என்னுள்ளே எம்எஸ்வி என்ற இசையஞ்சலி நிகழ்ச்சி, வெறும் பாட்டுக்கச்சேரியாக மட்டுமல்லாமல், எம்எஸ்வியின் இசை நுணுக்கங்களை விளக்கும் நிகழ்ச்சியாக நடக்கப் போகிறது. ஒவ்வொரு பாடலையும் எம்எஸ்வி உருவாக்கிய விதம், அந்த இசையின் நுணுக்கங்கள் போன்றவற்றை தன் இசைக் குழு மூலம் வாசித்து விளக்கப் போகிறார் இளையராஜா. Ilaiyaraaja speaks on Ennulle MSV concert இந்த நிகழ்ச்சியை ஜீவா இளையராஜா அறக்கட்டளை நடத்துகிறது. இதுகுறித்து இளையராஜா கூறுகையில், "இந்த நிகழ்ச்சி வெறுமனே அண்ணன் எம்எஸ்வியின் பாடல்களைப் பாடி அஞ்சலி செலுத்துவது அல்ல. எம்எஸ்வி என்ற மாமேதை தந்த இசையின் நுணுக்கங்களை ரசிப்பது. அண்ணன் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசைத் திறமையும், ஆளுமையும் அனைவரும் அறிந்ததே. அவரின் இந்த இசை நுணுக்கங்களை நான் அறிந்த அளவுக்கு வேறு யாரும் அறிந்திருக்க மாட்டார்கள் என நம்புகிறேன். இந்த இசை நுணுக்கங்களையெல்லாம் எல்லோருக்கும் வெளிப்படுத்தும் வகையில் சிறு இசைக்குழுவினரோடு நான் வாசித்துக் காட்ட இருக்கிறேன். எவ்வளவு பெரிய உயர்வான விஷயங்களை எப்படி சர்வ சாதாரணமாக செய்து காட்டியிருக்கிறார் மெல்லிசை மன்னர் என்பதை நான் மக்களுக்கு தெரியப்படுத்தப் போகிறேன். இசையில் ஒவ்வொருவருடைய கற்பனையும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். நம் உயிரை எங்கோ அழைத்துசெல்லுகின்ற உணர்வை கொண்டுவருவது அவ்வளவு சதாரணமான விஷயம் அல்ல. இதை நான் நன்றாக அறிந்திருக்கிறேன். இதை மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்பதால் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறேன். அவர் உடலை விட்டு உயிர் பிரிந்து சென்றாலும் அவர் என்றும் மறையாத நித்ய சொரூபர். எம்.எஸ்.வி.யின் இசைத்திறமையை வெளிப்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி இருக்கும். அண்ணனின் உடல் மறைந்த 13வது நாளில் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறேன்," என்றார். இதுவரை எந்த இசையமைப்பாளருக்கும் இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டதில்லை. ஒரு இசையமைப்பாளர் இறந்தால், இசைக் குழுக்கள் சில இப்படி நிகழ்ச்சி நடத்துவார்கள். ஆனால் பெரும் இசையமைப்பாளர் யாரும் அப்படி நடத்தியதில்லை. இளையராஜாதான் முதல் முறையாக எம்எஸ்விக்கு இப்படி இசையஞ்சலி நடத்துகிறார்.

vasudevan31355
21st July 2015, 08:49 AM
http://i59.tinypic.com/dyxcol.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/GnanaOli-Uyirvanicomavi_005384921.jpg

நடிப்புக்கு மட்டுமல்ல
வாழ்வியல் நெறிமுறைகளுக்கும்
ஆசானே!

இன்று உன் நினைவு நாள்.

நினைவிலேயே கலந்தவருக்கு
நினைவு நாளா?
இறைவனுக்கு ஏது இறப்பு?
நீ தெய்வத்தின் பிறப்பு

எம் அகம் புறம் அத்தனையும்
ஆண்டதால்
என் ஆண்டவன் நீ

நான் தொழும் முழு முதற் கடவுளே
கணேச நாமம் தவிர வேறு ஒன்றும் நானறியேன்

என் ஐம்புலன்களும் என் வசமில்லை
அது நான் பிறந்த போதே உன் வசமானது

மாதா பிதா குரு தெய்வம் உலகிற்கு
அனைத்தும் நீ ஒருவனே எனக்கு

அங்க அசைவுகள் மூலம் அமிர்ததைத்
தெளித்தவனே

அழகு எதுவென உலகிற்கு அடையாளம்
காட்டியவனே

உன்னால் அகிலம் அன்பைக் கற்றது
பாசத்தைப் பயின்றது

காலன் உன்னை அழைத்துக் கொண்டாலும்
காலம் உன்னை மறவாது

என் தேவனே என்னைப் பாருங்கள்
பாவிகளின் பாவங்களை வாங்கிக் கொள்ளுங்கள்

உன்னை இயக்கிய இயக்குனர்கள்
எத்தனையோ பேர் இருக்க
என்னை இயக்குபவன் நீ மட்டுமே

என் உயிரின் அணு ஒவ்வொன்றும்
உனக்கு மட்டுமே

சிவ பூஜை சிவனடியார்களுக்கு
சிவாஜி பூஜை இந்த அடியேனுக்கு

துன்பம் நேர்கையில் யாழ் நீ எனக்கு
இன்பம் தருவதில் இன்னிசை நீ எனக்கு

இன்பதுன்பம் எது வந்தாலும்
எனக்கு நீதான் உலகம்

வினாடி கூட உன்னை மறவாத
விந்தைக் கூட்டத்தில் நானும் ஒருவன்

என்றும் நீதான் என் இறைவன்.

உடலால் மட்டுமே நீ மறைந்த
இந்நாளில்

உயிராய் உணர்வாய் உன்னை
என்றும் போல் இன்றும் வணங்குகிறேன்.

எங்களைக் காத்தருள்வாய்.

vasudevan31355
21st July 2015, 09:59 AM
அன்பின் முரளி சார்!

பாலா தொடரை தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி! நேரம் கிடைக்காவிடினும் எப்படியும் தாங்கள் வாசித்து விடுவீர்கள் என்று தெரியும். பாராட்டுதல்களுக்கும் நன்றி!

//ஒரு சந்தேகம். 1977 வரை அனைத்து எஸ்பிபி பாடல்களும் இடம் பெறும் என சொல்லியிருந்தீர்கள். ஒரு பாடல் எனக்கு மிகவும் பிடித்த் பாடல் ஒன்று. இங்கே இடம் பெறவில்லையா அல்லது நான் கவனிக்காமல் விட்டு விட்டேனா என்று தெரியவில்லை//

இல்லை முரளி சார். இன்னும் இடம் பெறவில்லை. 1969 லேயே இன்னும் சில பாடல்கள் பதிவிடுவதற்கு இருக்கின்றன. என்னிடம் இருக்கும் பழைய படங்களின் டிவிடி க்களை முழுதும் மீண்டும் ஒவ்வொன்றாகப் பார்த்துவிட்டுத்தான் இத்தொடரை நான் எழுதுகிறேன். முடிந்தவரை படத்தின் கதை, பங்கு கொண்ட நடிகர்கள், டெக்னீஷியன்கள் என்று விவரங்களை அளிக்க வேண்டுமென்றுதான் இப்படி. மறந்த, பார்க்காத அல்லது இல்லாத படங்களை பார்த்து விட்டுத்தான் எழுத வேண்டும் என்பதால் சில பாடல்கள் விடுபட்டுப் போகின்றன. ஆனால் நிச்சயம் மிஸ் ஆகாது. படம் கிடைத்து பார்த்த பின் கண்டிப்பாக வரும்.

நீங்கள் சொன்ன சின்னப்பரின் ஸ்டூடன்ட் நிச்சயம் கல்யாண ராமனாய் லஷ்மிகரமாக விரைவில் வருவார்.

அதே போல உங்களுக்குப் பிடித்த சுறுசுறு ஹீரோவும், பிடிக்காத நடிகரும் நடித்த படத்தில் நிச்சயம் பிடிக்காத நடிகர்:) உங்களுக்குப் பிடித்த பாடல் பாடி சைக்கிளில் ஊர்கோலம் வருவார் அதே சட்டக்காரியுடன். ஒரு கோடி இன்பங்களை ஒன்றாக அள்ளித்தரும் ராட்சஸி பாலா இணைவு. அந்தக் க(றை)ரையும் பச்சைதான். பிரகாசத்தின் பச்சை. சரிதானே அல்லது தவறா?

அதே போல 73 ன் வானம் சிந்திய தேனும், 74 ன் விதுபாலா, ஜெயசித்ராவின் அம்மா போட்ட சபதத்தின் விளைவாக ஓடி வரும் அன்பு மேகமும் விடுபட்டால் பாலாவின் தொடருக்கு அர்த்தம் எது?

இதற்கெல்லாம் மேலே அனைத்திற்கும் டாப்பாக விஜயா 1971ல் முன்னமேயே போட்ட சபதம் ஒன்று உண்டே. அதே gkv மலர்களாய் தென்றலாய் நம் மனதை தொட்ட பனித்துளிப் பாடல்.

எல்லாமே வருகிறது முரளி சார்.

தங்கள் நினைவூட்டல்களுக்கும், உயரிய ரசனைக்கும் என் வாழ்த்துக்களுடன் கூடிய நன்றிகள்.

vasudevan31355
21st July 2015, 10:06 AM
சின்னா!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அந்தாதி..

கண்களில் அருவி.

vasudevan31355
21st July 2015, 10:08 AM
1000 பதிவுகள் அள்ளி வழங்கிட்ட செந்தில்வேல் சாருக்கு என் மனப்பூரவமான வாழ்த்துக்கள்.

Varadakumar Sundaraman
21st July 2015, 10:50 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் கலந்து கொண்ட நடிகர் திலகம் பட விழா பற்றிய அண்ணா நாளிதழில் வெளிவந்த ஆவணம் - இன்று நடிகர் திலகத்தின் நினைவு நாளில் மலரும் நினைவாக பகிர்ந்து கொள்கிறேன்
http://i58.tinypic.com/2uymzad.jpg

adiram
21st July 2015, 12:13 PM
டியர் வாசு சார்,

பேசும் தெய்வம் பாடலில் ஆடுவது கீதாஞ்சலி அல்ல சாந்தா என்று தெளிவு படுத்தியதற்கு நன்றி. நான்தான் சற்று குழம்பி விட்டேன்.

மற்றபடி சாந்தா பற்றிய மற்ற விவரங்கள் நாம் ஏற்கெனவே பேசியதுதான். பாகம் இரண்டில் என்று நினைக்கிறேன்.

ஏ.வி.எம் நிறுவனத்தின் ஆஸ்தான (துணை) நடிகை. 'அவளுக்கென்ன அழகிய முகம்' பாடலில் மட்டுமல்ல, 'சிலையெடுத்தான்' பாடலிலும் அவர் ஆடுவார். 'அவளுக்கென்ன' பாடலில் அணிந்த அதே உடையில்.

ஏ.வி.எம்.படங்களில் டான்ஸ் மாஸ்டராகவும் இருந்திருக்கிறார். அவருக்கு மாஸ்ட்டர் சாந்தா, இன்ஸ்பெக்டர் சாந்தா, டெர்ரர் சாந்தா என பல பெயர்கள் உண்டு (இரண்டுமுறைக்கு மேல் சொல்லிக் கொடுத்தும் சரியாக ஆடாத குரூப் டான்சர்களுக்கு 'பளார்' என்று விடுவாராம்). நம்ப முடியவில்லை அல்லவா. சரவணன் சார் கொடுத்திருந்த சுதந்திரம் அப்படி. அவரிடம் அறைவாங்கிய ஒரு ஜூனியர் நடிகை சில ஆண்டுகளுக்கு முன் டி.வி.யில் சொன்னார். சாந்தாவால்தான் முன்னுக்கு வந்தேன் என்றும் சொல்லிக்கொண்டார்.

ஏ.வி.எம்.மில் எஸ்.பி.எம். நுழைந்ததும் சாந்தாவை மாஸ்ட்டர் பதவியிலிருந்து ஓரம் கட்டி தனது ஆஸ்தான புலியூரை முன்னிலைப் படுத்தினார்.

அரசகட்டளையில் ஜெயலலிதாவும் சாந்தாவும் குழாயடியில் நனையும் காட்சி ஓவர் விரசம். அதோடு ஒப்பிடுகையில் நீங்கள் சொன்ன 'என்ன சொல்ல என்ன சொல்ல' எல்லாம் ஒன்றுமில்லை.

சாந்தா அழகாக இருந்ததால் அன்றைய கதாநாயகிகள் அவரைத் தனது தோழியாக நடிக்கவைக்க தயங்கினார்கள் என்ற தங்கள் கூற்றைப் படித்ததும், பலகாலம் முன்பு ஒரு வாரப் பத்திரிகையில் படித்த ஜோக் நினைவுக்கு வருகிறது....

ஒருவர் தன நண்பரிடம்: "கருப்பான, குள்ளமான, அழகில்லாத இளம்பெண்கள் ஒரு ஐந்தாறு பேரை அழைத்து வர ஏற்பாடு செய்"

நண்பர் : "எதற்கு?"

முதலாமவர் : "இன்றுமாலை என் மகளை பெண்பார்க்க வருகிறார்கள். அவளைச்சுற்றி தோழிகளாக நிறுத்தத்தான்"

சாந்தா இடம்பெற்ற பாடல்களின் வீடியோக்களை தேடியெடுத்து பதித்த உங்கள் சுறுசுறுப்பான உழைப்பு அசர வைக்கிறது. பர்ரட்டுக்கள்.

adiram
21st July 2015, 12:35 PM
நடிகர்திலகத்தின் நினைவு நாளையொட்டி கோபால் சார், வாசு சார் மற்றும் நண்பர்களின் அஞ்சலிக்கவிதைகள் மனதை கனக்க வைக்கின்றன.

அவற்றுக்கு நிகராக நான் எதுவும் எழுதிவிட முடியாதென்பதால் அந்த அஞ்சலியில் என்னையும் இணைத்துக் கொள்கிறேன்.

வாழ்க நடிகர்திலகத்தின் மாண்பு, பெருமை, சாதனை.

adiram
21st July 2015, 12:54 PM
டியர் வாசு சார்,

பாலா தொடரில் மாணவன், அக்கரைப்பச்சை, சபதம், பொண்ணுக்கு தங்க மனசு, எங்கம்மா சபதம் படப்பாடல்கள் தொடரவிருப்பது மகிழ்ச்சி (உங்கள் மனசாட்சி: "நான் மூடு மந்திரமாக எழுதினால் இப்படிப் போட்டு உடைக்கிறானே")

முரளி சாருக்குப் பிடித்து கோபால் சாருக்குப் பிடிக்காத நடிகரும், கோபால் சாருக்குப் பிடித்து முரளி சாருக்குப் பிடிக்காத நடிகரும் இணைந்து நடித்த "ஓ.. மைனா" பாடலை ஏற்கெனவே வேறொரு தலைப்பில் பதிவிட்டிருக்கிறீர்கள். இருப்பினும் பாலாவுக்காக மீள்பதிவு செய்வீர்கள் அல்லவா?.

'பொட்டுவைத்த முகமோ', 'இரண்டில் ஒன்று', 'எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது', 'யமுனா நதியிங்கே' பாடல்களையெல்லாம் கிளைமாக்ஸில் வைத்துக்கொள்ள திட்டமா?.

chinnakkannan
21st July 2015, 02:46 PM
ஆதிராம்.. நலமா :) ஆஹா..இப்படி போட்டு உடைத்ததற்கு மிக்க நன்றி..சின்ன மூளை ( நான் தான்) ரொம்ப கன்ஃப்யூஸ் ஆகிட்டுக் குழம்பிக்கிட்டு இருந்தேன்!


கல் நாயக் எங்கே ஆளையே காணோம்..

chinnakkannan
21st July 2015, 03:39 PM
வந்து மறுபடியும் வேலை..லீவ் முடிந்து போச்..

ஊர் சுற்றலில் கண்ட மழை, பனி எல்லாம்கனவு தான்..இதோ இதோ இங்கே சுடும் வெயில் மட்டும் நிஜம்..

ம்ம் பாட் கேக்கலாம்..வேறென்னசொல்ல..

https://youtu.be/9ZOCSLL261w

sivajisenthil
21st July 2015, 05:15 PM
மாற்றார் தோட்ட இசை மதுரம்
ஜேம்ஸ் பாண்ட் படங்களின் இசைக் கோர்வை
பகுதி 13 : மூன் ரேக்கர் (1979) / Moon Raker starring Roger Moore as James Bond OO7!ஜேம்ஸ் பாண்ட் படங்கள் மட்டுமே பிரமிப்பான பிரம்மாண்டங்கள் என்னும் கருத்து ஸ்டார் வார்ஸ் குளோஸ் என்கவுண்டர்ஸ் போன்ற அதிபிரம்மிப்பான தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் ஜார்ஜ் லூகாஸ் விண்வெளி சார்ந்த படங்களின் வருகையால் சற்று மாறத்துவங்கிய காலகட்டம்! போட்டிகளால்தான் தரம் உயரும் என்ற கூற்றின்படி புரோக்கோலி ஜேம்ஸ் பாண்டையும் விண்ணில் ஏவி விட எண்ணி ஆவியான படம்தான் மூன்ரேகர் !!
டைட்டிலுக்கு முன்னால் வரும் விண்வெளி சாகசமும் பேக் ப்ரோஜக்ஷன் உத்தி புகுத்தப் பட்டதால் அதிகம் ரசிக்க முடியவில்லை.
திரைக் கதையும் விண்வெளி சார்ந்த விண்கல/விமானக் கடத்தலை மையமாகக் கொண்டதால் அதிக பொருட்செலவில் அமைக்கப் பட்ட அரங்குகளில் காட்டிய ஆர்வத்தை இயக்குனர் திரைக்கதையில் கோட்டை விட்டு சலிப்படையச் செய்தார் பழையபடி ரோஜர்மூரும் ஒரு மாடல் போல வந்து போனார்!

மீண்டும் இரும்புப் பல் வில்லன் ரிச்சர்ட் கீல் நுழைக்கப் பட்டாலும் அவர் தோன்றும் காட்சிகள் சொதப்பலான எரிச்சலே!! சற்று ஏமாற்றமளித்த காமிக் கதை வரிசைப் படமாக முடிந்தது !

ஆனாலும் டைட்டில் தீம் இசை ஈர்ப்பானது ! இப்படத்திலிருந்து ரோஜர்மூரின் வயதான தோற்றம் வெளிப்படையாக ஒரு ஆயாசத்தை உண்டாக்கத்தொடங்கியது !! முந்திய படத்தில் உச்சம் தொட்ட மூர் ஏழு பட சாதனையாளரானாலும் படிப்படியாக தொய்வடைய துவங்கினார்!!

Moonraker pre-title action sequence! Enjoyable music but back projection irks!!

https://www.youtube.com/watch?v=Jesy6Kt-tvc

Moonraker Titles with theme music!
மீண்டும் ஜான் பெரி இசையில் ஷர்லி பஸ்ஸி பட்டையை கிளப்பினார் where are you பாடல் மூலம் !

https://www.youtube.com/watch?v=eR6k_2IVNVU

Some more action scenes .....

https://www.youtube.com/watch?v=woDyKekeTTg

sivajisenthil
21st July 2015, 09:52 PM
Cloud o' Nine songs Vs Passing Cloud songs
ஒன்பதாம் அடுக்கு மேகப் பாடல்களும் கடந்து செல்லும் மேகப் பாடல்களும் !

குறுந்தொடர் பகுதி 1 கர்ணன்!

உள்ளத்தில் நல்ல உள்ளம் Vs போய் வா மகளே போய் வா !


நாம் பார்த்து ரசிக்கும் மதுர கானங்களில் பல நமது மனதிலேயே நங்கூரமிட்டு உறக்கத்தில் கூட மனச்செவிகளில் ரீங்காரமிடுகின்றன!! காரணம்....
இசைக்கோர்ப்பு நம்மை ஆகர்ஷித்து ஏதோவொரு இனம் புரியாத பரவச நிலைக்கு நம்மை உட்படுத்துவதே !!
பாடல் காட்சியமைப்பும் நன்கு அமைந்து இசையும் மதுரமாகப் பொருந்தினால் ஒன்பதாம் மேகத்தின் Cloud o' 9 கூரை மேல் அமர்ந்திருப்பது போன்ற சிலிர்ப்பே !!
பல பாடல்கள் இவ் வண்ணம் அமையாமல் கடந்து செல்லும் மேகங்களாகவும் Passing Clouds இருப்பதுண்டு !!


கர்ணன் திரைக்கவியத்தில் இறுதிக்கட்ட தெய்வீகப் பாடலான உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடல் மனதை ஈர்க்கும் சீர்காழியாரின் குரல் வளத்தாலும் MSV பொருத்தமான இசைக் கோர்ப்பினாலும், இதயத்தைப் பிழியும் நடிகர்திலகத்தின் வசனமற்ற உடல்மொழி முகபாவ வேதனை வெளிப்பாடுகளாலும், என் டி ஆரின் விசுவரூப தெய்வீக உருவகத்தாலும், பிரம்மாண்டத்தின் அடையாளமான காட்சியமைப்பாலும், இந்த நூற்றாண்டின் மறக்கவொன்னாத சிறந்த பாடலாக என் மனதில் சிம்மாசனமிட்டு என்னை ஒன்பதாம் அடுக்கு மேகத்தின் மேல் அமர்ந்திருப்பது போன்ற பிரமையை தந்து கொண்டேயிருக்கிறது !!

https://www.youtube.com/watch?v=QroxeC_HQ6k

ஆனால் அதே காவியத்தில் இடம் பெற்ற போய் வா மகளே போய் வா எனும் பாடல் குரலினிமையால் காட்சியின் பிரம்மாண்டத்தால் படம் பார்க்கும்போது ரசிக்க வைத்தாலும் மனதில் தங்காமல் கடந்து செல்லும் மேகமாகி விட்டதே!https://www.youtube.com/watch?v=3LwFGJSX1h8

chinnakkannan
21st July 2015, 10:40 PM
ஐ.என்.எஸ் 4

*

ஓரிடத்தில் நிற்காது ஒரொழுங்காய்ப் பார்க்காது
வேறிடத்தில் தாவி விழுந்திடும் - பாரிலே
வீழா அலைபோலே வேடிக்கை காட்டுவதும்
கேளாமல் நிற்குமுள்ளம் ஆம்..

https://youtu.be/DUgmdCmb898

chinnakkannan
21st July 2015, 10:57 PM
ஐ.என்.எஸ். 5

**


பருவம் வந்திடத்தான் பாய்ந்தே பிரவகிக்கும்
உருவ அழகினிலே உருகி நின்றிருக்கும்
புருவம் நீட்டிவிடும் பூவாய்ச் சிரித்துவிடும்
அருவ இளமையதோ ஆளை மாற்றிவிடும்..

*

https://youtu.be/wy8lwjmnTys

எல் ஆர் ஈஸ்வரி பி.எஸ் மணிஓசை - விஜயகுமாரி புஷ்பலதா..

chinnakkannan
21st July 2015, 11:19 PM
ஐ.என்.எஸ். 6

**

எள்ளலும் துள்ளலும் இன்னுமோ பலவாறாய்
வெள்ளமாய் சீறி விகசிக்கும் - மெள்ளவே
பொங்கிப் பிரவகித்தே பெண்ணவளும் பாடுவது
தங்குமவன் நெஞ்சிலோ தான்?

*

பூவுக்குள் தேனை வைத்தவன் ஊரென்ன ஊரென்ன
பூவை மேல் ஆசை வைத்தவன் பேரென்ன பேரென்ன

கல்யாண்குமார், மீனாய்த் துள்ளும் ராஜ ஸ்ரீ யாருக்கு சொந்தம். சுசீலாம்மா குரல்.( நல்லா இருக்கே.. நான் முதவாட்டி கேக்கறேன் :) )

https://youtu.be/karcWAkgwDI

sivajisenthil
21st July 2015, 11:22 PM
சி க
ஏன் திடீரென்று நாலாயிர திவ்யப் பிரபந்தத்திலிருந்து நாலாடியாருக்கு மாறி விட்டீர்கள் ?!

chinnakkannan
21st July 2015, 11:38 PM
ஓய்.. அது நாலாயிர திவ்யப் பிரபந்தமில்லை..ஒரே ஒரு திருமூலர் பாட் போட்டேன் (விளக்கு)..சங்கப் பாட்டு (பாளையாம் தன்மை கெட்டும்) இப்ப வெண்பா மற்ற பாக்கள்.. சொந்தமாய் எழுத முயற்சி பண்ணினேன் :)

Gopal,S.
22nd July 2015, 05:28 AM
கலைஞர் டீவீயில் ,19/7/2015 ,மானாட மயிலாட ,நடன நிகழ்ச்சி எம்.எஸ்.வீ ஸ்பெஷல் என்று சொல்லபட்டாலும் ,அவரோடு பிரிக்க இயலாத பந்தம் கொண்ட நடிகர்திலகம் ஸ்பெஷல் ஆகவும் அமைந்து விட்டது.

சரோஜாதேவியின் இதயத்தில் இன்றும் ஆக்கிரமிப்பது, பாலும் பழமும்,புதிய பறவைதான். (டெலிபோன் பேச்சில் 1979 என்று நினைவு.தன் பிரிய நடிகராக நடிகர்திலகத்தையே குறித்தார்)

சி.ஐ.டீ சகுந்தலா, மாலையிட்ட மங்கை பட பாடலில் குரூப் டான்சர் ஆக
இருந்ததை குறிப்பிட்டு விட்டு ,தவ புதல்வன் love is fine darling பற்றி சிலாகித்தார்.

முத்தாய்ப்பாக ஏ.எல்.எஸ் புதல்வி (மருமகள்???) ஜெயந்தி ,ஒன்றை குறிப்பிட்டார். எம்.எஸ் .வீ -டி.கே .ஆர் இணைந்தது ,நடிகர்திலகத்தின் பணம்(1952) என்கிற ஏ.எல்.எஸ் தயாரிப்பு. கடைசியில் பிரியும் முன் போட்ட கடைசி பாடல் யார் அந்த நிலவு.சாந்தி(1965) என்ற நடிகர்திலகம் நடித்த ஏ.எல்.எஸ் தயாரிப்பில் வந்த படமே.

நடிகர்திலகத்தின் 14 பாடல்களுக்கு நடனமாடினார்கள்.

chinnakkannan
22nd July 2015, 10:54 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..

மூன் ரேக்கர் ரொம்ப மோசம் எனச் சொல்ல முடியாது சி.செ.. இதை வீடியோவில் பார்த்த நினைவு..

யூ ஒன்லி லிவ் ட்வைஸில் விண்கப்பலை விழுங்குவது மிக நன்றாக இருக்கும்..இதில் கொஞ்சம் ஏமாற்றமே..

தவிர நன்றாக ஊறவைக்கபப்ட்ட சப்பாத்தி மாவில் ஒரு உருணடையை எடுத்து ஒரு சின்னப் பையன் இடப்பார்த்தால் கன்னா பின்னா வென வட்டமாகவும் இல்லாமல் சதுரமாகவும் இல்லாமல் இருப்பது போன்ற தோற்றத்தில் ஹீரோயின் மூக்கு கொஞ்சம் நீளம்..

போதாக்குறைக்கு இரும்புப் பல்லைக்காந்தமாய் ஈர்க்கும் மூக்குக்கண்ணாடிப் பெண்..

க்ளைமாக்ஸ் விண்வெளி அரண்மனை ஜோர்.. வில்லனின் நாய்கள் வெகு அழகு..

ம்ம்..லிவிங்க் டேலைட்ஸா அடுத்து..ஓஹ்

வியூ டு எ கில், ஆக்டோபஸ்ஸி, ஃபார் யுவர் ஐஸ் ஒன்லி (ஏதென்ஸ் டாக்ஸி சேஸ் இதில் தானே) மறந்துவிட்டேன்..இ.அ தான் லி டே வரும்..!

Varadakumar Sundaraman
22nd July 2015, 01:24 PM
RARE STILLS VENNIRA ADAI NIRMALA & LATHA
http://i60.tinypic.com/28ur2fm.jpg

Varadakumar Sundaraman
22nd July 2015, 01:25 PM
http://i62.tinypic.com/33w87lh.jpg

Varadakumar Sundaraman
22nd July 2015, 01:49 PM
http://i62.tinypic.com/2dklh69.jpg

Varadakumar Sundaraman
22nd July 2015, 01:50 PM
http://i60.tinypic.com/2jg5lpw.jpg

Varadakumar Sundaraman
22nd July 2015, 01:51 PM
http://i57.tinypic.com/2cwjrcj.jpg

Varadakumar Sundaraman
22nd July 2015, 01:52 PM
http://i60.tinypic.com/241qwrm.jpg

Varadakumar Sundaraman
22nd July 2015, 01:54 PM
http://i62.tinypic.com/6ypmdd.jpg

sivajisenthil
22nd July 2015, 05:42 PM
the monotony breaker

தவற விடக் கூடாத பரவசம் !!
ஹாலிவுட்டின் இசை ஜாம்பவான் என்னியோ மொர்ரிகொன் / Ennio Morricone

மாற்றார் தோட்ட மெல்லிசை மதுரங்கள் ! Cowboy film genre!!

பகுதி 14 : For a few Dollars more and The Good The Bad and the Ugly music by Ennio Morricone!
Starriing Clint Eastwood!

Hollywood's Italian Sphagatti Westerns by Ennio Morricone of the Good, The Bad, and the Ugly fame!!


ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு சரிநிகர் போட்டியாக ஹாலிவுட்டில் இத்தாலி சார்ந்த தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் இசையமைப்பாளர்கள் இத்தாலியின் ஸ்பாகட்டி வேஸ்டேர்ன்ஸ் என்று செல்லமாக விளிக்கப்பட்ட கௌபாய் படங்களால் கலக்கியெடுத்த காலகட்டம்!
ஜேம்ஸ் பாண்ட் ஷான் கானரியின் சமகாலப் போட்டியாளர்களான கிளிண்ட் ஈஸ்ட்வுட் , கிரிகரி பெக், டெரன்ஸ் ஹில்-பட் ஸ்பென்சர்... ஜாங்கோ...படங்கள் ரசிகர்களின் மாறுபட்ட ரசனைகளுக்கு ரசவாத மாற்றங்களில் தீனி போட்டுக்கொண்டிருந்தன !!
கௌபாய் படங்களில் தனி முத்திரை பதித்த கிளிண்ட் ஈஸ்ட்வுட் படங்களான தி குட் தி பேட் தி அக்ளி மற்றும் பார் எ பியூடால்லர்ஸ் மோர்...பட வரிசைகளின் மனதை கவர்ந்திழுத்த இசைக் கோர்ப்புக்கு சொந்தக்காரர் எண்ணியோ மொர்ரிகோன் என்னும் இத்தாலிய இசை மேதை!!
ஜேம்ஸ் பாண்ட் தீம் இசையையும் மிஞ்சி இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்படும் அந்தத் துள்ளிசைத் தூறல் இதோ!...


இந்த இசை மந்திரவாதி என்னியோ மோரிகோன் நமது மனங்களை வசியம் செய்து ஜேம்ஸ் பாண்டின் இறவாப் புகழ் பெற்ற டாக்டர் நோ தீம் இசையையும் மிஞ்சுகிறார் !!

Enjoy with a Head Phone!

https://www.youtube.com/watch?v=ZG1fmfZGuWw

https://www.youtube.com/watch?v=AFa1-kciCb4

சிரஞ்சீவித்துவம் வாய்ந்த இறுதிக்கட்ட கல்லறைத் தோட்ட மோதலில் துடிக்கும் தோட்டாக்கள் வெடிக்கும் துப்பாக்கிகள் !!

https://www.youtube.com/watch?v=h1PfrmCGFnk

Watch the rythmic dancing to the tune of Clint Eastwoods'
Cowboy cap!!

https://www.youtube.com/watch?v=mLXQltR7vUQ

https://www.youtube.com/watch?v=O9vZJMVYHf0

sivajisenthil
22nd July 2015, 10:08 PM
மாற்றார் தோட்ட மெல்லிசை மதுரம் !
Cowboy Genre பகுதி 15 : மெக்கன்னாஸ் கோல்டு McKenna's Gold starring Gregory Peck and Omar Shariff


ஹாலிவுட் திரைவரலாற்றில் மறக்க முடியாத கதாநாயகர் கிரிகரி பெக் !!
ரோமன் ஹாலிடே, கன்ஸ் ஆப் நவரோன், ஓமன் போன்ற காவியங்களின் நாயகர். அவர் கவ்பாய் பாணியில் ஷரீப் ஆக தங்க வேட்டைக்காரர்களை வளைத்துப் பிடிக்கும் சாகசக் கதை ! மிகச்சிறந்த பொழுதுபோக்குப் படமாக சக்கை போடு போட்டு வெள்ளிவிழா கண்டு வசூலில் பெரும் புரட்சி செய்த படம்!!
நண்டுப்பிடி வில்லனாக ஓமர் ஷெரீபிடம் கிரிகரி பெக் படும் அவஸ்தைகள் முறுவலை வரவழைக்கும்!
ஒரு கழுகின் பார்வையில் கதை விரிந்ததும் அமர்க்களமான டைட்டில் இசை ஆரம்பம் !! படம் நெடுக சிலிர்க்க வைக்கும் இசை வெள்ளம்!!

Old Turkey Bazzard ....Gold Gold Gold..! by Quincy Jones!

https://www.youtube.com/watch?v=h7mVLWcMm-U

Grand Canyan of Gold! Excellent Gunshot BGM!! Enjoy!

https://www.youtube.com/watch?v=VxJesXhxMrI

https://www.youtube.com/watch?v=33jV9gVjypk

vasudevan31355
22nd July 2015, 11:04 PM
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்

http://2.bp.blogspot.com/-HRNJSnA1-84/TenskpB9duI/AAAAAAAAAuY/mP0R6cDrGMY/s320/spb.jpg

(நெடுந்தொடர்)

19

http://musiclounge.in/wp-content/uploads/2015/05/Kanni-Penn.jpg

'பௌர்ணமி நிலவில்'

http://i.ytimg.com/vi/5mfXohOU2eo/hqdefault.jpg

இதோ பாலாவின் 'படா' ஹிட் 1969 ன் ஆரம்ப காலப் பாடல். 'சத்யா' பிலிம்ஸ் 'கன்னிப் பெண்' படத்தில்,'மெல்லிசை மன்னரி'ன் மறக்க முடியாத இசையில், தமிழகத்தையும், சிலோனையும் சும்மா ஆட்டோ ஆட்டோவென்று ஆட்டுவித்த அட்டகாசப் பாடல். திரும்பும் இடமெல்லாம் 'பௌர்ணமி நிலவு' தான். ஒலிக்காத இடங்களே இல்லை எனலாம். அதுவும் புதுச்சேரி வானொலி நிலையத்தில் போட்டு 'கிழி கிழி' என்று கிழித்து விட்டார்கள்.

பின்னால் இளையராஜாவின் ஆஸ்தான ஜோடியாய் பல ஹிட் பாடல்களை அளித்த பாலா, ஜானகியின் ஆரம்ப கால முன்னோடிப் ஜோடிப் பாடல் இது.

இந்தப் பாடலின் இனிமையைப் பற்றி என்ன சொல்வது? சுகம்..கேட்க சுகம்.. கேட்கக் கேட்க சுகம். திகட்டாத, தெவிட்டாத சுகம். நம்மையறியாமல் நாம் மெய் மறந்து விடுவோம். சரி! இப்போது கேட்டால்? எப்போது கேட்டாலும் ஒரே சுகம்தான். அதே இனிமைதான்.

https://i.ytimg.com/vi/O2co_qBEn7w/mqdefault.jpg

மிகப் பொருத்தமாக பாலாவும், ஜானகியும் குரல்களில் ஜோடி சேர்வார்கள். அலட்டல் இல்லாமல் அழகாகப் பாடுவார்கள். (பின்னாளில் போல் அல்ல.) பாலாவை எங்கோ உச்சியில் கொண்டு போய்க் கிடத்திய பாடல் இது. . இன்று பல இளைஞர்களுக்குக் கூட இப்பாடல் தெரிந்திருக்கிறது என்பதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். இதிலிருந்தே இப்பாடலின் விஸ்வரூப வெற்றியை அறியலாம்.

முக்கியமாக பாடல் வரிகள் குறிப்பிடத்தகுந்தவை. (வரிகள் 'வாலிபக் கவிஞர்' வாலி) தமிழின் பெருமையை அந்தக் கால சினிமாக் காதலர்கள் தங்கள் காதல் பாடல்களில் கூட அழகாகப் புகுத்துவது போலக் கவிஞர்கள் அற்புதமாக எழுதிக் கொடுத்தார்கள். இந்தக் காலக் காதலன் போல 'உன் கொலுசு நான்...உன் மூக்குத்தி நான்... உன் பாதம் சரண் அடைவேன்... உன் காலைப் பிடிப்பேன்'... என்றெல்லாம் பிதற்றி உளறிக் கொட்டவில்லை.

காதலில் கூட தமிழின் பெருமை ரசிக்கும்படி உணர்த்தப்பட்டது.

கம்பன் தமிழோ பாட்டினிலே
சங்கத் தமிழோ மதுரையிலே
பிள்ளைத் தமிழோ மழலையிலே
நீ பேசும் தமிழோ விழிகளிலே

என்று தமிழ் எப்படிபோற்றப்படுகிறது பார்த்தீர்களா? எப்படி வளர்க்கப்படுகிறது பார்த்தீர்களா?

துள்ளும் இளமைப் பருவம் நமது
தொட்டுத் தழுவும் சுகமோ புதிது

என்று காதலர்கள் தங்கள் இளமைப் பருவத்தை சிலாகித்தலும் அருமை.

காதலியின் பூமேனியை கவிஞர் பொன் வீணைக்கு ஒப்பிடுதலும் அற்புதம். (காதலன் இசை ஆசிரியன் அல்லவா!)

ஒவ்வொரு பருவத்தையும் ஒவ்வொரு மடியில் வைத்துப் பார்க்கும் கவிஞர் வாலியின் ரசனை அபாரம். அதிலேயும் அவர் தமிழை விடவில்லை. 'பிள்ளைப் பருவ'த்தை தாய் மடியில் ஒப்படைத்து, 'பேசும் பருவ'த்தை தமிழ் மடியில் ஒப்படைக்கிறார். 'கன்னிப் பருவம்' என் வடிவில் என்று காதலி அந்தப் பருவத்தைத் தன் மூலம் பெருமைப்படுத்திக் கொள்வாள். ஜோர்.

http://i.ytimg.com/vi/IIWgLGvy9I0/hqdefault.jpg

மிக இளமையான, 'பாபு' வுக்கு முந்தின, காமெரா முன் கூச்சமுடன் நிற்கும் இசை ஜிப்பா அணிந்த சிவக்குமார் (கொடுவா கிருதா வேறு):) படத்தில் இசை ஆசிரியர். (தலையை இழுத்து, தலைவர் போலப் பாட முயன்று, நமக்கு சிரிப்பை வரவழைப்பார். நிர்மலாவுடன் நெருங்க பயம் நன்றாகவே தெரியும். பரிதாபமாய் இருக்கும்.)

அவரிடம் பயிலும் மாணவி அழகான 'வெண்ணிற ஆடை' நிர்மலா. இருவருக்கும் காதல். அதனால் வரும் டூயட் இந்தப் பாடல். (இந்தப் படத்தில் நிர்மலா மிக அழாக 'மொழு மொழு'வென்றிருப்பார்) கண்கள் காதல் களியாட்டங்கள் புரியும். சிவக்குமார் என்றால் இவரிடம் இன்னும் உற்சாகம் கொப்புளிக்கும். நெருக்கமும் அதிகம் தெரியும். முழங்கால் கவுன் பிளாக் கலரில் நிர்மலாவுக்கு அம்சமாக இருக்கும். கழுத்தில் மின்னும் நெக்லஸ் இன்னும் அழகு சேர்க்கும். காதில் தொங்கும் நீள் ஜிமிக்கியும் ஓஹோ! இந்தப் பாடலுக்கு நன்றாக வாயசைப்பார் நிர்மலா. இந்தக் காலதத்து நடிகைகள் எங்கே வாய் அசைக்கிறார்கள்? வாய்தான் அடிக்கிறார்கள்.

http://i57.tinypic.com/2v1aka8.jpg

'காவல்காரன்'(1967) படத்திற்குப் பிறகு 'சத்யா' மூவிஸாரின் படத்தில் மீண்டும் சிவக்குமார். (நல்ல ஒத்துழைப்பு போல.) மெயின் ஹீரோ ஜெயசங்கர். வாணிஸ்ரீ ஹீரோயின். இன்னொரு காதல் தோல்வி தியாகி லஷ்மி. போலீஸ் கதை. அதெல்லாம் வேண்டாம் நமக்கு.:) 'சத்யா பிலிம்ஸ்' என்பதால் ஆர்.எம்.வீரப்பன் மாலை போட, 'கன்னிப் பெண்' படத்தை எம்.ஜி.ஆர் அவர்கள் வந்து துவக்கி வைப்பது (மானிட்டர் பார்த்து முடுக்கி வைப்பார்) போன்ற காட்சியுடன் படம் ஆரம்பமாகும். படத்தை ஏ.காசிலிங்கம் இயக்கியிருப்பார்.

ஆனால் பாடல்களுக்கென்று ஒரு படம் என்ற பாராட்டை நிச்சயம் நாம் இந்தக் 'கன்னிப் பெண்'ணுக்குத் தரலாம். சிலோன் ரேடியோவில் அடிக்கடி ஒலித்த 'ஒளி பிறந்த போது மண்ணில் உயிர்கள் பிறந்தந்தம்மா', (வாவ்! என்ன பாட்டு அய்யா அது!) அப்புறம் ஜெய், லஷ்மி ஜோடி பாடும் படத்தின் ஆரம்பப் பாடலான 'இறைவன் எனக்கொரு உலகத்தைப் படைச்சி' (இன்றைய ஸ்பெஷல்' தொடரில் விருப்பத்துடன் எழுதி இருப்பேன்) வாணிஸ்ரீ, லஷ்மி இரட்டை நாயகிகள் சுசீலா, ராட்சஸி குரல்களில் பாடும் 'அடி ஏண்டி அசட்டுப் பெண்ணே' (என்னை மிகவும் கவர்ந்த பாடல். இந்தப் பாடல் பற்றியும் ஏற்கனவே எழுதி இருக்கிறேன்) என்று பாடல்கள் ஒவ்வொன்றும் பிரமாதத்திலும் பிரமாதம்.

அப்புறம் சுமாரான 'உன் அத்தைக்கு ஒத்தக் கண்ணு இந்தப் பக்கம்தான்' பாடல் ஒன்றும் உண்டு.

சரி! நம் பாடலுக்கு வந்து விடுவோம். படியுங்கள். கேளுங்கள். பாருங்கள். ரசியுங்கள். அற்புதமான சாகாவரம் பெற்ற சிரஞ்சிவித்துவம் மிக்க பாடல். முக்கியமாக பாலாவின் இளமை கொஞ்சும் குரல் நம் நெஞ்சில் குதூகலமாய் எதிரொலித்தபடியே இருக்கும்.

அதுவும் பாலா,

பௌர்ணமி நிலவில்
பனி விழும் இரவில்
பௌர்ணமி நிலவில்
பனி விழும் இரவில்

வரிகளில் என்று இரண்டாம் முறை பாடுகையில் 'பனி' என்ற வார்த்தையை உச்சரிக்கும் போது சற்றே மாற்றுவார் பாருங்கள். சூப்பர்.

பன்னீர் மழைதான் விழி மேல் பொழிய
தண்ணீர் அலை போல் குழல்தான் நெளிய

எனும்போது கடலலை தாலாட்டும் சுகத்தை அப்படியே நமக்கு அள்ளித் தருவார் பாலா.

ஜானகியும் கூடத்தான்.

http://i.ytimg.com/vi/aZLIpVTeop0/hqdefault.jpg

பௌர்ணமி நிலவில்
பனி விழும் இரவில்
கடற்கரை மணலில் இருப்போமா

மௌனத்தின் மொழியில்
மயக்கத்தின் நிலையில்
கதை கதையாக படிப்போமா

பௌர்ணமி நிலவில்
பனி விழும் இரவில்
பௌர்ணமி நிலவில்
பனி விழும் இரவில்
கடற்கரை மணலில் இருப்போமா

மௌனத்தின் மொழியில்
மயக்கத்தின் நிலையில்
மௌனத்தின் மொழியில்
மயக்கத்தின் நிலையில்
கதை கதையாக படிப்போமா
கதை கதையாக படிப்போமா

கம்பன் தமிழோ பாட்டினிலே
சங்கத் தமிழோ மதுரையிலே
கம்பன் தமிழோ பாட்டினிலே
சங்கத் தமிழோ மதுரையிலே
பிள்ளைத் தமிழோ மழலையிலே
நீ பேசும் தமிழோ விழிகளிலே

நெஞ்சம் முழுதும் கவிதை எழுது
கொஞ்சும் இசையைப் பழகும் பொழுது

துள்ளும் இளமைப் பருவம் நமது
தொட்டுத் தழுவும் சுகமோ புதிது

கண் பார்வையே உன் புதுப் பாடலோ

பொன் வீணையே உன் பூமேனியோ

பௌர்ணமி நிலவில்
பனி விழும் இரவில்
கடற்கரை மணலில் இருப்போமா

மௌனத்தின் மொழியில்
மயக்கத்தின் நிலையில்
கதை கதையாக படிப்போமா

https://i.ytimg.com/vi/O55r1q6kLL8/hqdefault.jpg

பிள்ளைப் பருவம் தாய் மடியில்
பேசும் பருவம் தமிழ் மடியில்
பிள்ளைப் பருவம் தாய் மடியில்
பேசும் பருவம் தமிழ் மடியில்
கன்னிப் பருவம் என் வடிவில்
காலம் முழுதும் உன் மடியில்

பன்னீர் மழைதான் விழி மேல் பொழிய
தண்ணீர் அலை போல் குழல்தான் நெளிய

தன்னந் தனிமை தணல் போல் கொதிக்க
தஞ்சம் புகுந்தாள் உனைத்தான் அணைக்க

பொன்னோவியம் என் மன மேடையில்
சொல் ஓவியம் உன் ஒரு ஜாடையில்

பௌர்ணமி நிலவில்
பனி விழும் இரவில்
கடற்கரை மணலில் இருப்போமா

மௌனத்தின் மொழியில்
மயக்கத்தின் நிலையில்
கதை கதையாக படிப்போமா
கதை கதையாக படிப்போமா

ம்ஹூஹூஹூம் ஹூம் ஹூம்
ம்ஹூஹூஹூம் ஹூம் ஹூம்


https://youtu.be/aZLIpVTeop0

vasudevan31355
23rd July 2015, 07:48 AM
இதுவரை பாலாவின் பாடல்கள்.

1.'மல்லிகைப் பூ வாங்கி வந்தேன்' (பால் குடம்)

http://www.mayyam.com/talk/showthread.php?11173-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3&p=1223953#post1223953

2. 'ஆயிரம் நிலவே வா.. ஓராயிரம் நிலவே வா' (அடிமைப் பெண்)

http://www.mayyam.com/talk/showthread.php?11173-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3&p=1224467#post1224467

3. 'இயற்கை என்னும் இளைய கன்னி' (சாந்தி நிலையம்)

http://www.mayyam.com/talk/showthread.php?11173-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3&p=1226259#post1226259

4. 'ஆரம்பம் யாரிடம்' (மிஸ்டர் சம்பத்)

http://www.mayyam.com/talk/showthread.php?11441-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%A F%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-4/page35

5. 'கற்பனையோ கைவந்ததோ' (மாலதி)

http://www.mayyam.com/talk/showthread.php?11441-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%A F%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-4/page62

6. 'சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் எங்கே போவோம்' (மாலதி)

http://www.mayyam.com/talk/showthread.php?11441-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%A F%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-4/page69

7. 'உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது' (நவக்கிரகம்)

http://www.mayyam.com/talk/showthread.php?11441-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%A F%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-4&p=1230352#post1230352

8. 'நீராழி மண்டபத்தில்' (தலைவன்)

http://www.mayyam.com/talk/showthread.php?11441-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%A F%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-4/page112

9.' நிலவே நீ சாட்சி' (நிலவே நீ சாட்சி)

http://www.mayyam.com/talk/showthread.php?11441-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%A F%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-4/page112

10.'பொன்னென்றும் பூவென்றும்' (நிலவே நீ சாட்சி)

http://www.mayyam.com/talk/showthread.php?11441-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%A F%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-4&p=1233121#post1233121

11.'வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்' (தேடி வந்த மாப்பிள்ளை)

http://www.mayyam.com/talk/showthread.php?11441-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%A F%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-4&p=1233667&posted=1#post1233667

12.'அங்கம் புதுவிதம் அழகினில் ஒருவிதம்' (வீட்டுக்கு வீடு)

http://www.mayyam.com/talk/showthread.php?11441-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%A F%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-4&p=1234280#post1234280

13.'இறைவன் என்றொரு கவிஞன்' (ஏன்)

http://www.mayyam.com/talk/showthread.php?11441-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%A F%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-4&p=1235169&posted=1#post1235169

14.'வருவாயா வேல்முருகா' (ஏன்)

http://www.mayyam.com/talk/showthread.php?11441-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%A F%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-4/page160

15.'எங்கள் வீட்டு தங்கத் தேரில் எந்த மாதம் திருவிழா?' (அருணோதயம்)

http://www.mayyam.com/talk/showthread.php?11441-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%A F%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-4&p=1236278#post1236278

16.'மங்கையரில் மகராணி' (அவளுக்கென்று ஓர் மனம்)

http://www.mayyam.com/talk/showthread.php?11441-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%A F%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-4&p=1236961#post1236961

17.'ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு' (அவளுக்கென்று ஓர் மனம்)

http://www.mayyam.com/talk/showthread.php?7734-Gemini-Ganesan-Romance-King-of-Tamil-Films&p=1237573#post1237573

18.'என்ன சொல்ல! என்ன சொல்ல! (பாபு)

http://www.mayyam.com/talk/showthread.php?11441-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%A F%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-4&p=1238172#post1238172

19.'பௌர்ணமி நிலவில்' (கன்னிப் பெண்)

http://www.mayyam.com/talk/showthread.php?11441-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%A F%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-4/page206

vasudevan31355
23rd July 2015, 11:27 AM
நான் ரசித்த காட்சி.

நான் மிக மிக ரசித்த காட்சி ஒன்றை சொல்கிறேன். காவியப்படமான 'காவியத் தலைவி' யிலிருந்து தான்.

தன் கணவர் எம்.ஆர்.ஆர்.வாசுவுக்குப் பயந்து ஹாஸ்டலில் தன் குழந்தையைத் தங்க வைத்துப் படிக்க வைப்பார் நடன மாது சௌகார்.

http://i60.tinypic.com/bg5kzc.jpg

குழந்தைக்காக துணி எடுக்க சௌகார் துணிக்கடை சென்றிருப்பார். அப்போது பார்த்தால் தான் முன்னால் காதலித்துப் பிரிந்த காதல் மன்னன் அங்கு இருப்பார். இருவரும் ஒருவரையொருவர் பார்த்து அதிர்ச்சி அடைவார்கள். (காதல் மன்னன் இப்போது பெரிய வழக்கறிஞர். வழக்குகளில் வெற்றி பெற்றவருக்கு வாழ்க்கையில் தோல்வி. அதுவும் காதல் மன்னனுக்கே காதல் தோல்வி) இப்போது சௌகார் நேராக ஜெமினியிடம் வருவார். ஜெமினி பழைய நினைவுகளைச் சொல்லி கண் கலங்குவார்.

யாருக்கும் தெரியா வண்ணம் முகம் பார்த்தும், முகம் பார்க்காமலும், கோட்டை தனக்கு அந்த சமயம் துணையாகப் பிடித்து சௌகாரிடம் 'உனக்குக் கல்யாணம் ஆயிடுச்சா?' என்று தாழ்குரலில் கேட்பார் வேதனையோடு. அதற்கு சௌகார் ஜெமினியிடம் நேரிடையாக பதில் சொல்லாமல் மிக புத்திசாலித்தனமாக துணி எடுத்துக் கொடுக்கும் பையனிடம்,

"ஏம்பா! இந்தத் துணியில ஒரு கோட்டும், ஒரு பேண்ட்டும் தைக்கணும்னா எவ்வளவு துணி வேணும்?"

என்பார்.

உடனே கடைக்காரப் பையன் 'வீட்டுக்காரருக்கு சூட்டா?' என்று சௌகாரிடம் கேட்க, சௌகார் புரிய வைத்துவிட்ட தோரணையில் இப்போது ஜெமினியைப் பார்ப்பார். ஜெமினி அவர்களின் சம்பாஷணையிலிருந்து சௌகாருக்குக் கல்யாணம் ஆகி விட்டது என்று புரிந்து கொள்வார்.

http://i60.tinypic.com/11llesj.jpg

'ஓ'..என்று அதிர்ந்து அதிர்ச்சி முகபாவம் காட்டுவார். சௌகாரும் மிக பாவமாக நடித்திருப்பார்.

உடனே கடைப்பையன்,

'இந்தத் துணியைத்தானே கேட்டீங்கம்மா'

என்று துணியை எடுத்துப் போட,

சௌகார்,

'இல்லே! அவர் கேட்டதையேதான் நானும் கேக்கிறேன்' என்று இருபொருள் படக் கூறுவார்.

அதாவது ஜெமினி கேட்ட துணியை கேட்பது போல் ஜெமினி இவரிடம் கேட்ட 'கல்யாணம் ஆயிடுச்சா? என்ற அதே கேள்வியை பூடகமாகக் கேட்பார். கேட்டு ஜெமினியின் பதிலை ஆவலுடன் அவர் முகத்தில் எதிர்பார்ப்பார்.

கடைப்பையன்,

'ஏன் சார் நீங்களும் இதைத்தான் கேட்டீங்களா?'

என்று ஜெமினியிடம் கேட்டவுடன்,

'முதலில் லேடீஸை கவனிப்பா. இந்தத் தனிக்கட்டையைப் பத்தி என்ன? வீட்ல என்ன பெண்டாட்டியா பிள்ளையா? (குரலில் விரக்தி) என்று விரக்தியுடன் கூறி தனக்குக்கு இன்னும் திருமணம் ஆகாததை சௌகாரின் அந்தப் பாணியிலேயே சொல்லி பதிலை உணர்த்துவார். ஜெமினி இன்னும் தன் நினைப்பில் திருமணமே செய்து கொள்ளவில்லை என்று தெரிந்ததும் சௌகார் கண்கலங்குவார் வேதனையோடு.

கடைக்காரப் பையன் 'துணி கிழிக்கட்டுமா?' என்று கேட்டவுடன்

'வேண்டாம்பா! அந்த அதிர்ஷ்டம் எனக்கில்லே!'

என்று சௌகார் கண் கலங்குவார். ஜெமினி இன்னும் குழம்பி அதிர்வார். 'கல்யாணம் ஆகி விட்டது என்று சொல்கிறாள்....ஆனால் துணி வாங்க அதிர்ஷ்டம் இல்லையென்று சொல்கிறாளே... ஒருவேளை புருஷனை இழந்து விதவை ஆகி விட்டாளோ' என்று ஒருகணம் குழம்புவார்.

இருவரும் அப்போது பிரிந்து மீண்டும் கடையில் உடனே சந்திப்பார்கள்.

'நீ ஏன் அப்படி சொன்னே?'

என்று ஜெமினி விடாமல் சௌகாரிடம் கேட்க,

சௌகாரோ பேச்சை மாற்றுவார். ஜெமினி புகழ் பெற்ற பாரிஸ்டர் என்பதை பத்திரிகைகளில் பார்ப்பதாக, படித்ததாக சொல்வார்.

அதற்கு ஜெமினியின் பதில்,

'நினைவுகளை மறக்க நீதிமன்றத்துக்குப் போறேன்'

'துணியெல்லாம் பேக் பண்ணியாச்சு'

என்று பையன் வந்து சொல்ல, அப்போது ஜெமினி சௌகாரிடம்,

'நீ எப்படி? வசதியாக இருக்கியா?'

என்று அடுத்த கேள்வி கேட்பார்.

அதற்கும் சௌகார் நேரிடையாக பதில் சொல்லாமல் பையனிடம்,

'ஏம்பா ஆயிரம் ரூபாய்க்கு துணி வாங்கியிருக்கேன். கொஞ்சம் குறைச்சி போடக் கூடாதா?' என்று கேட்பார்.

அதிலிருந்து சௌகார் வசதியாக இருக்கிறார் என்று ஜெமினி புரிந்து கொள்வார். (பின்னே! அப்பெல்லாம் ஆயிரம் ரூபாய்க்கு துணி வாங்கினா சும்மாவா?)

'நீங்க எப்படி இருக்கீங்க?'

என்று சௌகார் ஜெமினியிடம் திரும்பக் கேட்பார்.

'நான் நெனச்சபடி வாழ்க்கையை நடத்த முடியல்ல. வழக்குகள் நடத்திகிட்டு இருக்கேன்'

என்று ஜெமினி சலிப்போடு சொல்லிவிட்டு,

'உன் கணவருக்கு இந்த ஊருதானா?'

என்று சௌகாரிடம் எப்படியாவது அவர் கணவரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆவலாய்க் கேட்க,

அதற்கு சௌகாரோ,

'நான் மெட்ராஸில தான் இருக்கேன்'

என்பார் கணவரைப் பற்றி மறந்தும் கூட குறிப்பிடாமல். (எம்.ஆர்.ஆர். வாசு சொல்லக் கூடிய கணவன் வகை இல்லையே)

ஜெமினி வெறுத்து,

'உன் கணவரைப் பத்தி நான் எதுவுமே தெரிஞ்சிக்கக் கூடாதா?'

என்றதும்..

சௌகார்,

'இப்போ எந்த வழக்குல குறுக்கு விசாரணை செய்றீங்க?'

என்பார் அழுகையுடன்.

'எந்த வழக்குல நான் தோத்துப் போய்ட்டேனோ அந்த வழக்குலதான்'

என்று ஜெமினி பதில் சொல்லி வேதனைப்படுவார்.

உடனே சௌகார் அவசரமாகக் கிளம்பி விடுவார்.

என்ன மாதிரி வசனங்கள்! உணர்ச்சிகளின் வெளிப்பாடுகள்! டைரக்டோரியல் டச். பாலச்சந்தர் பாலச்சந்தர்தான்.

http://i61.tinypic.com/oj457b.jpg

காதல் தோல்வியையும், பிரிந்த காதலர்களின் தற்போதைய நிலைமையையும் பார்வையாளர்கள் ரசனையுடன் புரிந்து கொள்ளுமாறு காட்சி அமைப்புகள். ஜெமினியின் பிரிவு வேதனை நெஞ்சை நெருடும். சௌகார் கிழடு தட்டிப் போய் பார்க்க சகிக்கா விட்டாலும் நடிப்பில் முதிர்ச்சி தெரியும். அளவான முகபாவங்கள்.

வசனங்களுக்காகவே நான் மிக மிக ரசித்த காட்சி இது.

sivajisenthil
23rd July 2015, 11:57 AM
வாசு சார்
பாடல்களாகட்டும் காட்சிக் கண்ணோட்டமாகட்டும் அதை அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராயும் அப்பாடக்கர் நீங்களே !
காவியத்தலைவியில் இந்த மனம் பிசையும் நடிப்புடன் கூடிய காட்சியை நீங்கள் விவரித்திருக்கும் விதமே உங்கள் மாஸ்டர்பீஸ் !!
ஜெமினி திரி சார்ந்த நன்றிகள் !!
ஜெமினியின் திரியிலும் மீள்பதிவிட்டுப் பெருமைப் படுத்த வேண்டுகிறேன்
செந்தில்

GG and Sowkaar both are on their recession phase of visibly aging symptoms of rills on face and reduced energy levels in physical movements!!

https://www.youtube.com/watch?v=4wGgjcKCsiE

https://www.youtube.com/watch?v=D9yDuM3OcaI

vasudevan31355
23rd July 2015, 12:28 PM
நன்றி செந்தில் சார்.

ஜெமினி திரியில்தான் முதலில் பதித்தேன். அப்புறம்தான் இங்கு.:)

sivajisenthil
23rd July 2015, 12:34 PM
மாற்றார் தோட்ட மெல்லிசை மது/ரம்
பகுதி 16 : For Your Eyes Only / Roger Moore as Bond OO7!


வழக்கமான காமெடி கலந்த விறுவிறுப்பான மூரின் பாண்ட் படம்
அதிரடி இசைக் கோர்வையில் ஷீனா ஈஸ்டன் பாடல் !
சாகசக் காட்சிகளின் பின்னணி இசைக் கோர்ப்பும் ரசனையே !

https://www.youtube.com/watch?v=TxgwjGn-_Gc

https://www.youtube.com/watch?v=Id08vsWjT2c

https://www.youtube.com/watch?v=RpBWIr4EWb8

https://www.youtube.com/watch?v=Ma0LFJS8Ksc

adiram
23rd July 2015, 01:56 PM
டியர் வாசு சார்,

பாலா தொடரில் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 'பௌர்ணமி நிலவில் பனிவிழும் இரவில்' பாடலை அசத்தலாகத் தந்து ஆனந்தப் படுகுழியில் தள்ளிவிட்டீர்கள். பாலாவின் கொஞ்சும் குரலினிமைக்காக கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

நீங்கள் சொன்னதுபோல பாடல் வெகுநாள் வரையில் இலங்கை வானொலி, விவித்பாரதி என அனைத்து வானொலிகளிலும் பட்டையைக் கிளப்பியது. படம் பார்க்கதவர்களுக்கும் பாடல் மனப்பாடம் ஆனது.

படம் வெளியானபோது நான் பார்க்கவில்லை. சில வருடங்கள் கழித்து மறு வெளியீட்டில்தான் பார்க்க முடிந்தது. (அப்போதெல்லாம் ஜெய்சங்கர் படங்களும் மறுவெளியீட்டிற்கு வருவதுண்டு). படம் பார்க்கும் வரையில் இந்தப்பாடல் ஜெய்சங்கர் லட்சுமி ஜோடிக்கு என்றே நினைத்திருந்தேன். படத்தில் சிவகுமாருக்கு என்றதும் சற்று ஏமாற்றமாக இருந்தது உண்மை. ('என் கேள்விக்கென்ன பதில்' தந்த ஏமாற்றத்தை விடவா?. நடிகர்திலகத்தின் ரசிகர்களை மிகப்பெரிய ஏமாற்றத்தில் தள்ளிய விஷயமாயிற்றே)

ஜோடியாக நடிக்கும் நடிகையை தொட்டு நடித்தால் தூக்கில் போட்டு விடுவார்களோ என்ற பயத்திலிருந்து சிவகுமார் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்துகொண்டிருந்த நேரத்தில் வந்ததுதான் 'பௌர்ணமி நிலவில்'. கொஞ்சம் நெருங்கியிருப்பார்.

தன் காலத்தில் இருந்த மொக்கை நடிகைகளைஎல்லாம் முதல்தர கதாநாயகிகளாக உயர்ந்துகொண்டிருக்க, கொள்ளை அழகிருந்தும், மெல்லிய உடலிருந்தும் பெரும்பாலான படங்களில் இரண்டாம் நிலை நாயகியாகவே நடித்துக் கொண்டிருந்த அதிர்ஷ்டமில்லாத நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா. (கார்த்திக் சார் இவரை 'வெண்ணிறக் கொடியிடை நிர்மலா' என்று பொருத்தமான பெயரில் குறிப்பிடுவார்) . இவர் எம்.எல்.சி.ஆகிறார் என்றதும் மேல்சபையே கலைக்கப்பட்டு விட்டதென்றால் இவர் அதிர்ஷடத்தை என்னவென்று சொல்வது.

'சிலரது நஷ்ட்டம் சிலருக்கு லாபம்' என்பதுபோல, இவர் ஒரு படப்பிடிப்புக்கு தாமதமாக வரப்போய் "நான் சிவாஜி சாரோடு நடித்த ஒரே படம்" என்று சொல்லி பெருமைப்படும் வாய்ப்பு லதாவுக்கு கிடைத்தது. இருந்தாலும் தங்கச்சுரங்கம், எங்க மாமா, தங்கைக்காக, பாபு, உனக்காக நான் என்று பல படங்கள் நிர்மலாவும் பெருமைப்படும்படி அமைந்தன.

'பௌர்ணமி நிலவில்' கவிஞர் வாலி அவர்களின் வார்த்தை ஜாலங்களும் அவைகளை பாலா உச்சரிக்கும் அழகும் அட்சரம் பெரும். ஜானகியம்மாவும் தன் பங்குக்கு அசத்தியிருப்பார்.

இப்படத்தில் இடம்பெற்ற இன்னொரு அசத்தல் பாடலான 'அடி ஏண்டி அசட்டுப்பெண்ணே' பாடலைக் கேட்கும்போது கிட்டத்தட்ட அதே காலத்தில் வந்த 'வாடி தோழி கதாநாயகி' (துலாபாரம்) பாடலும் என் நினைவுக்கு வரும்.

துவக்கத்தில் நீங்கள் சொன்னதுபோல, இத்தகைய அருமையான பாடல்களை தொகுத்து எஸ்.பி.பி. அவர்களிடம் அளிக்கும்போது அவரிடமிருந்து பெரிய பாராட்டும், மரியாதையும் உங்களுக்கு கிடைக்கப் போவது நிச்சயம்.

g94127302
23rd July 2015, 02:00 PM
வாசு - உங்கள் பாலாவின் பாடல்களில் இன்று பதித்த " பௌர்ணமி நிலவில் " அலசல் மிகவும் அருமை . எனக்கு மிகவும் பிடித்த பாடல் - தமிழின் சுவை இந்த காதல் பாட்டில் வரும் காதல் சுவையை விட மிகவும் ரசிக்கும்படி இருக்கும் - அந்த காலத்தில் TMS - NT -கண்ணதாசன் -MSV என்ற combination படங்களையும் பாட்டுக்களையும் நம் மனதில் ஆழமாக பதித்தன . இன்று இதையே சற்று மாற்றி சொல்ல வேண்டும் - பாலாவின் பாடல் + வாசுவின் அலசல் + ராட்சஸியின் பங்கேற்ப்பு - பதிவுகளை அற்புதமாக்கி விடுகின்றன . கூடவே உங்கள் மீது ஒரு கோபமும் வருகிறது - இப்படி உங்களை வருத்திக்கொள்ளத்தான் வேண்டுமா? - எங்களுக்கு மொத்த பொன் முட்டைகளும் தேவையில்லை - தினமும் சாதரணமான ஒரு முட்டையே போதும். உங்கள் உடம்பு ஆரோக்கியத்திலும் கவனம் தேவை .

உங்கள் " நெஞ்சிருக்கும் வரை " பதிவை நேற்றுதான் படிக்க முடிந்தது - நெஞ்சை உருக்கி விட்டது . கொஞ்சம் நேரமே வரும் ஒரு காட்சியே இவ்வளவு அருமை என்றால் - அவரின் நடிப்புத்திறமையை இன்னும் புரிந்துக்கொள்ளாத , புரிந்தும் ஏற்றுக்கொள்ள மனம் வராத , அரசியலை புகுத்தாமல் அவரை - ஒரு தமிழ் நாட்டை சேர்ந்தவரை இன்னும் ரசிக்க தெரியாதவர்களை நினைத்தால் என்ன ஜென்மங்கள் என்றுதான் பரிதாப பட வைக்கின்றது - தமிழன் என்று சொல்லடா ! தலை குனிந்து நில்லடா நடிகர் திலகத்தை புரிந்து கொள்ளும் வரை --- என்றே சொல்ல தோன்றுகிறது .

" காவியத்தலைவி " ஜெமினி - சௌகார் சந்திப்பு , உரையாடல் மிகவும் அருமை - சிந்திக்க வைக்கும் வசனங்கள் பாலச்சந்தரின் மிகப்பெரிய சக்தி - ஒரு முழு படத்தையே பார்த்த சந்தோஷத்தை பதிவின் மூலம் தந்து விட்டீர்கள் . எனக்கு அவர்கள் ஜோடியாக நடித்த படங்களில் " ஸ்கூல் மாஸ்டர் " என்ற படம் எனக்கு மிகவும் பிடிக்கும் - மிகவும் போற்றத்தக்க நடிப்பு , தாம்பத்தியத்தின் பெருமைகளை அருமையாக இருவரும் நடிப்பில் எடுத்துக்காட்டுவார்கள் ...

adiram
23rd July 2015, 02:27 PM
டியர் வாசு சார்,

'நெஞ்சிருக்கும் வரை' மற்றும் 'காவியத்தலைவி' காட்சி விளக்கம் அருமை. மிகவும் தத்ரூபமாக இருந்தன.

எழுத்துக்களை காட்சி வடிவில் தருவதில் ஸ்ரீதரும், பாலச்சந்தரும் 'இரு வல்லவர்கள்' என்றால், அந்தக்காட்சி வடிவங்களை மீண்டும் எழுத்து வடிவில் தருவதில் நீங்கள் 'வல்லவன் ஒருவன்'.

நெஞ்சிருக்கும் வரை படத்தின் மிக முக்கியமான காட்சியை அப்படியே கண்முன் ஓடவிட்டு விட்டீர்கள். பாராட்டுக்கள்.

kalnayak
23rd July 2015, 04:57 PM
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

மன்னிக்கவும், சிந்துபாத்துடன் திமிங்கிலத்தின் உள்ளே இருந்து பயணம் போனபோது தொடர்பு அறுந்து போனதால் என்னுடைய பதிவுகளை இட முடியவில்லை - என்று சொல்லி நான் சமாளிக்க முடியாது. கிடைக்கும் நேரம் வெகு சொற்பமே. அதில் நான் வரும் நேரம் எல்லோரது பதிவுகளை படிக்கக் கூட முடியவில்லை. தற்போது கடைசி இரண்டு பக்க பதிவுகளை வேகமாக பார்த்துவிட்டு இப்பதிவை இடுகிறேன்.

கருவின் கருவை ரவி நிறுத்தி விட்டார் என்று நினைக்கிறேன். அபாரமான தொடர். அன்னை, தந்தை, மற்ற உறவு முறைகளுக்கும் எழுதி இருந்தார். எல்லா உறவு முறைகளுக்கும் எழுதினாரா என்று தெரியவில்லை. நல்ல கதைகளையும், நிகழ்வுகளையும் அற்புதமாக கோர்த்து மதுர கானத் திரிக்கு அழகுக்கு அழகு சேர்த்தார். தொடருமாறு அவரை கோருகிறேன்.

வாசு, உங்களை என்ன சொல்லி பாராட்டுவது என்று எனக்கு வார்த்தைகள் வரவில்லை. ரவி சொல்வது போல உங்களின் உடல் நலனிலும் அக்கறை செலுத்தி உங்கள் தொடர்களை நீண்ட மெகா தொடர்களாக வழங்கி எங்களை மகிழ்விக்க வேண்டும். காவியத் தலைவி படக் காட்சியை நீங்கள் விளக்கியிருப்பதை படித்தேன். அப்பா என்ன ஒரு விளக்கம். எவ்வளவு கூர்ந்த கவனிப்பு. கன்னிப்பெண் பட பாலா பாடல் படித்தேன். நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. ஏனென்றால் இந்த பாட்டைக் கேட்டிருக்கிறேன். யார் நடித்தது, எந்த படம் என்ற விவரங்களுக்கு நான் கேட்க வேண்டும் என்று கூட நினைத்ததில்லை. கன்னிப் பெண் என்று திரைப் படம் உள்ளதென்று தெரியும். வானொலி மூலம் கேட்டது நினைவுக்கு வருகிறது. வானொலி மூலமே இப் பாடல் இவ்வளவு பிரபலம் அடைந்திருக்க வேண்டும். நிச்சயமாக பாலாவும், மெல்லிசை மன்னரும், வாலிபக் கவிஞரும் தங்கள் கைவண்ணத்தை அட்டகாசமாக காட்டி இருக்கிறார்கள். தேடித் தேடி எடுத்துக் கொடுத்து, அட்ட, அட்ட, அட்டகாசமாக எழுதி மகிழ்சிக் கடலில் தள்ளி விட்டீர்கள். நன்றி.

ஆதிராம் தங்கள் பாடல்களுக்கு பதில் அளித்து அவர் பங்குக்கு தன் நினைவில் வரும் விஷயங்களாக அள்ளித் தருவதும் அருமை. எனக்கோ உங்கள் எல்லோரின் எழுத்துக்களும் புதுமை. நானோ இப்போது ஒரு பதுமை.

chinnakkannan
23rd July 2015, 05:26 PM
Hi good evening to all. Now I an in dubai will be back on
Sunday.

Vasu sir what happened to your health, Take care,

Enjoying the postings of friends

sivajisenthil
23rd July 2015, 06:23 PM
மாற்றார் தோ(போ)ட்ட மெல்லிசை மது/ரம் கானங்(கள்)!
பகுதி 17 : ஜேம்ஸ் பாண்ட் தீம் ம்யுசிக் மற்றும் டைட்டில் பாடல்கள் வரிசை
ஆக்டோபுசி / OCTOPUSSY starring ROGER MOORE as JAMES BOND OO7!


வயதின் நிழல் படிந்து விட்ட நிலையில் ஷான் கானரியும் ரோஜர் மூரும் நல்ல நண்பர்களாக போட்டி அடிப்படையில் வெளியிட்ட பாண்ட் படங்கள் ஆக்டோபுஸ்சி / நெவர் சே நெவர் அகைன் !!

இரண்டு பேருக்குமே தனிப்பட்ட ரசிகர் வட்டம் உண்டாகி விட்ட கால கட்டம் ...

இரண்டு படங்களுமே வசூலை வாரிக் குவித்தாலும் ஒரிஜினல் ஜேம்ஸ் பாண்ட் ஷான் கானரியின் மீள் வருகை ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது!!
சென்னையில் இரண்டு படங்களுமே நூறு நாட்களைக் கடந்தன!!

ஆக்டோபுசி பல காட்சிகள் இந்தியாவில் எடுக்கப் பட்டது கூடுதல் ஈர்ப்பானது !

ஜேம்ஸ் பாண்டின் ஆட்டோ ரிக்ஷா சாகசங்கள் முறுவலை வரவழைத்தாலும் இறுதிக்கட்டங்களில் படம் சற்றுத் தொய்வே!!புரோக்கோலி ரோஜர் மூருக்கு மாற்று நடிகர் தேடும் முயற்ச்சியை ஆரம்பித்தாலும் மூரை வைத்தே அடுத்த படமான எ வியூ டு எ கில் படத்தையும் எடுத்து முடித்து நீண்ட காலம் ஷான் கானரியின் மாற்று பாண்டாக உலக ரசிகர்களை மகிழ்வித்து வெற்றிக் கொடி நாட்டிய ரோஜர் மூருக்கு ஓய்வளிக்கப் பட்டது!!

https://www.youtube.com/watch?v=Zbl3n2qQ-iQ

இனிய தீமிசைக் கோர்ப்பும் டைட்டில் பாடலும்

https://www.youtube.com/watch?v=VlBUPtKIoHo

https://www.youtube.com/watch?v=kutZEuGZSlA

https://www.youtube.com/watch?v=Md8uNCYX_Nc

https://www.youtube.com/watch?v=jiqmdJqzB10

vasudevan31355
23rd July 2015, 06:31 PM
Hi good evening to all. Now I an in dubai will be back on
Sunday.

Vasu sir what happened to your health, Take care,

Enjoying the postings of friends

ஒன்றுமில்லை சின்னா! இடைவிடாமல் பதிவுகள் இடுவதால் என்பால் உள்ள அக்கறை பொருட்டு ரவி சார், கல்நாயக் சார், மற்றும் நண்பர்கள் உடல் நலனில் அக்கறை காட்டச் சொல்லி அறிவுறித்தி இருக்கிறார்கள். என் இதய தெய்வம் மற்றும் நம் நண்பர்கள் ஆசியால் நலமாகவே இருக்கிறேன். ஒவ்வொரு பதிவுக்கும் நிறைய நேரம் பிடிப்பதால் இடையில் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துத்தான் எழுதுகிறேன். இப்போது கல்ஸ் வந்துவிட்டார். ரவி சார் அருமையான தொடர் ஒன்றைத் தர ரெடியாகி விட்டார். நீங்களும் வந்து விடுவீர்கள். அப்போது சற்று ரிலாக்ஸ் செய்து கொள்கிறேன். நீங்கள் உங்கள் பணிகளை முடித்துவிட்டு வாருங்கள்.

vasudevan31355
23rd July 2015, 06:32 PM
நன்றி சிவாஜி செந்தில் சார்.

vasudevan31355
23rd July 2015, 06:50 PM
டியர் ஆதிராம் சார்

தங்கள் மனம் மகிழ்ந்த பாராட்டுதல்களுக்கு நன்றி!

உங்கள் சந்தோஷக் குரலிலிருந்தே 'பௌர்ணமி நிலவில்' பாடல் எந்த அளவிற்கு தங்களால் அப்போதிலிருந்தே ரசிக்கப்பட்டு வருகிறது என்பதை உணர முடிகிறது.

நிர்மலாவைப் பற்றி நீங்கள் கூறியுள்ளது அனைத்தும் நிதர்சனமான உண்மையே. அழகு இருந்தும், ஓரளவிற்கு திறமை இருந்தும் ராசியில்லாத நடிகை ஆகி விட்டார். 'தமிழகத்தின் மும்தாஜ்' என்று இவரை நான் அடிக்கடி கூறுவேன்.

நடிகர் திலகத்துடனான நிர்மலா சம்பந்தப்பட்ட படங்களின் பட்டியலில் 'லஷ்மி கல்யாணம்' படத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்தானே! அனைவரும் வியந்த 'ராமன் எத்தனை ராமனடி' பாடலை படத்தில் மங்களகரமாக அவர்தானே பாடுவார்! அந்தப் படத்தில் கூட கல்யாண பிராப்தம் இல்லாத, ராசி இல்லாத பெண்தான்.

பெரும்பாலான முன்னணி நடிகைகள் செய்த தவறை முன்னணியில் இல்லாத போதே இவரும் செய்தார். 'அவளுக்கு நிகர் அவளே' என்று சொந்தப்படம் எடுத்து அதலபாதாளத்தில் வீழ்ந்தார்.

ஆனால் பாரதி, நிர்மலா அப்புறம் வாணிஸ்ரீ என்று மிகக் குறைந்த நடிகைகள் மட்டுமே உடலை ஸ்லிம்மாகவும், அழகாகவும் வைத்துக் கொண்டனர். முகமும் இவர்களுக்கு இயற்கையாகவே நல்ல அழகு. மற்ற நல்ல அழகு நடிகைகள் இருந்தும் எல்லோரும் உப்பிப் போன 'போந்தா' கோழிகள்தான். விஜயா கூட ஸ்லிம்மாக இருந்து பின் ஊதியவர்.

//இப்படத்தில் இடம்பெற்ற இன்னொரு அசத்தல் பாடலான 'அடி ஏண்டி அசட்டுப்பெண்ணே' பாடலைக் கேட்கும்போது கிட்டத்தட்ட அதே காலத்தில் வந்த 'வாடி தோழி கதாநாயகி' (துலாபாரம்) பாடலும் என் நினைவுக்கு வரும்//

அதே போல 'அடிப் போடி பைத்தியக்காரி', (தாமரை நெஞ்சம்) 'அடியே ஒரு பேச்சுக்குச் சொன்னேன்' (அன்புக்கு ஓர் அண்ணன்) பாடல்களும் சட்டென்று நினைவுக்கு வருகின்றன.

//துவக்கத்தில் நீங்கள் சொன்னதுபோல, இத்தகைய அருமையான பாடல்களை தொகுத்து எஸ்.பி.பி. அவர்களிடம் அளிக்கும்போது அவரிடமிருந்து பெரிய பாராட்டும், மரியாதையும் உங்களுக்கு கிடைக்கப் போவது நிச்சயம்//

மிக்க நன்றி ஆதிராம் சார். நிச்சயம் உங்கள் எல்லோருடைய ஆதரவிலும் இதைச் செய்து முடிக்கலாம். ஆடியோ மட்டுமல்ல... அந்தந்தப் பாடலுக்கான வீடியோக்களையும் பாலாவிடம் தருவதற்காக தொகுத்துக் கொண்டு வருகிறேன் பதிவு விளக்கங்களையும் சேர்த்து.

vasudevan31355
23rd July 2015, 07:19 PM
ரவி சார்

மற்றவர்களை மனதார பாராட்டும் உயர்குணம் எப்போதும் உங்களுக்கு உண்டு.

'கன்னிப் பெண்' பாடலை ரசித்து நல்ல பின்னூட்டம் தந்துள்ளீர்கள். பாடலின் தமிழை சுவைத்ததற்கு நன்றி.

'நெஞ்சிருக்கும் வரை' பதிவை வாசித்து விட்டு தொலைபேசியில் பாராட்டியதற்கும் நன்றி. எஸ்.எம்.எஸ்ஸுக்கும் நன்றி. காவியத் தலைவி ரசிப்புக்கும் நன்றி.

http://images.boxtv.com/clips/34/11034/player_crop_1000x563_14128_11034_q80.jpg

http://www.metromatinee.com/movies/images/m1814/thumb/School%20Master53154.jpg

உங்களுக்கு 'ஸ்கூல் மாஸ்டர்' ரொம்பவும் பிடிக்கும் என்று தெரியும். ஒன்று தெரியுமா? தமிழ் தவிர மலையாளம், இந்தி, கன்னடம் என்று எடுத்த மொழிகளில் எல்லாம் நம் நடிகர் திலகம் கௌரவ நடிகராக, ஸ்கூல் மாஸ்டரின் அன்புக்குரிய மாணவனாக பட்டை கிளப்புவார். படமே இவரை வைத்துத்தான் முடிவடையும். 'எங்கள் குடும்பம் பெரிசு' என்று 1958 இல் கன்னடத்திலிருந்து தமிழிலும் வெளிவந்தது. சரியா ராகவேந்திரன் சார்?

http://i.ytimg.com/vi/dvIQFMz771Q/0.jpg

1973 ல் வெளிவந்த 'ஸ்கூல் மாஸ்டர்' தமிழில் மட்டுமே அவர் அந்த ரோலைச் செய்யவில்லை. திலகத்திற்குப் பதிலாக முத்துராமன். தமிழில் 'ஸ்கூல் மாஸ்டர்' சிவாஜி செந்தில் சாரின் பிரியத்துக்குரிய 'காதல் மன்னன்'.

http://ecx.images-amazon.com/images/I/614pFNhi%2BLL._SY300_.jpg

எல்லா மொழிகளிலும் வெற்றி அடைந்த படம். பந்துலுவின் தயாரிப்பு. கன்னடத்தில், இந்தியில் (1959) அவரே ஸ்கூல் மாஸ்டர். மலையாளத்தில் (1964) 'திக்குரிச்சி' ('உலகின் மூதல் இசை தமிழிசையே' தவப்புதல்வனின் போட்டியாளர்) நடிகர் திலகத்தின் நெருங்கிய நிஜ நண்பர்.

'ஸ்கூல் மாஸ்டர்' தமிழில்,

'தன்னந் தனிமையிலே
உடல் தள்ளாடும் வயதினிலே'

மறக்க முடியாத உணர்ச்சிபூர்வமான பாடல்.

இந்தப் படத்தில் பட்டை கிளப்பிய பாலாவின் பாடல் விரைவில் அவர் பற்றிய தொடரில்.

ஒரு கொசுறு செய்தி

இந்த எல்லா ஸ்கூல் மாஸ்டர் படங்களுக்கும் முன்பாக 1943 இல் இந்தியில் ஒரு 'ஸ்கூல் மாஸ்டர்' வந்து விட்டது.

நன்றி ரவி சார்.

sivajisenthil
23rd July 2015, 08:03 PM
Take Care Vaasu Sir ! We wait for you as the Care Taker of this thread!!
Happy upon your safe landing back to the pavilion Chinnak Kannan Sir. Enjoy your rest pause!! Good to hear you back Ravi Sir

with regards, senthil

KALAIVENTHAN
23rd July 2015, 08:36 PM
நண்பர்களுக்கு வணக்கம்.

ஹலோ, சின்னக்கண்ணன்..

எப்படி இருக்கீங்க? பிரயாணம் எல்லாம் எப்படி? லொக்... லொக். தேவலையா?

//ஆனால் கட்டுப்பாட்டுடன் முன்னுள்ள காருக்கு முத்தா கொடுக்காமல் ஊர்ந்து கொண்டிருக்க, துணிக்கடைகளில் கொஞ்சம் கூட்டம் //

இதுபோன்று புன்னகை அரும்ப வைக்கும் குறும்பு வரிகளை படித்து சுமார் ஒரு மாதம் ஆகிவிட்டது. வந்ததும் வராததுமாய் மீண்டும் குட்டிப் பயணமா?

வாசு சார்,

உழைப்பின் உருவம் நீங்கள். அனுபவி ராஜா அனுபவியில் கரை தட்டி நிற்கும் கப்பல் ஸ்டில்லை மட்டுமல்ல, அந்தக் கப்பலையே கொண்டுவரும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. ‘நெஞ்சிருக்கும் வரை’ பதிவு இன்றுதான் படித்தேன்.

மனதில் உள்ளதை சொல்கிறேன். வெறும் புகழ்ச்சிக்காகவோ, முகஸ்துதிக்காகவோ அல்ல. உங்களுக்கு பிடித்த பாடகி ராட்சஸி என்றால், தான் ரசித்தவற்றை அதே உணர்வுக்கு எல்லாரையும் கொண்டு வருவதில், அதற்கான உழைப்பில் நீங்கள் ராட்சஸர். காவியத் தலைவி பதிவும் அற்புதம்.

சாதாரணமாக என்னைப் போல டைப் மட்டும் செய்தாலே அதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்று என்று எனக்குத் தெரியும். அதிலும் விளக்கங்களுக்கு ஏற்றவாறு காட்சிகளை தரவேற்றுவதற்கு பல மணி நேரம் பிடிக்கும். பாராட்டுக்கள். நன்றிகள்.

சிவாஜி செந்தில் சார்,

தங்கள் ஜேம்ஸ்பாண்ட் பதிவுகள் பொங்கலில் திராட்சையாய் வித்தியாச சுவை.

நடிகர் திலகம் திரியின் 16-வது பாகத்தை தொடங்க இருக்கும் உங்களுக்கு முன் கூட்டியே எனது நல்வாழ்த்துக்கள். தங்கள் திருக்கரங்களால் தொடங்க இருக்கும் திரியில் அரிய தகவல்களும், தங்களுக்கே உரித்தான விதவிதமான கோணங்களில், வித்தியாச சிந்தனைகளில் வீடியோ பதிவுகளும் இடம் பெறவும், நமது நட்புறவு மேலும் பலம் பெறவும் வாழ்த்துக்கள்.

ரவி சார்,

சோர்வாக இருக்கும் நேரங்களில் நீதிகளையும் அறிவுரைகளையும் நல்ல கருத்துக்களையும் கூறும் தங்களின் பதிவுகள் மனதுக்கு இதமளிக்கும். (நான் கொஞ்சம் லேட்டாக படித்தாலும் கூட) சொன்னபடி கேட்டுக் கொண்டிருந்த, வேலைகளை சரியாக செய்து கொண்டிருந்த ஒரு குரங்கை குரங்காட்டி ஒவ்வொரு முறையும் அது சொன்ன வேலையை செய்து முடித்தபின் இரண்டு அடி அடிப்பானாம். ‘‘ஏன்? அதுதான் ஒழுங்காக வேலை செய்கிறதே?’’ என்று கேட்டதற்கு, ‘‘அடித்துக் கொண்டே இருந்தால்தான் அது ஒழுங்காக இருக்கும். இல்லாவிட்டால் பயம் போய் அது வேலையை காட்டி விடும்’என்றானாம். மனம் ஒரு குரங்கு. நல்ல கருத்துக்களால் நெறிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். தொடருங்கள் தங்கள் பணியை.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

KALAIVENTHAN
23rd July 2015, 08:37 PM
‘செல்வர்கள் நீதி நன்றோ?’


நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் ஊழியர்களுக்கான 5 ஆண்டுகால ஊதிய மாற்று ஒப்பந்தம் 31-12-2011-ல் முடிந்து விட்டது. 2012 ஜனவரி 1-ம் தேதி முதல் புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஏறத்தாழ மூன்றரை ஆண்டுகள் ஆகியும் தொழிலாளர்களுக்கு புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதுவரை 22 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாத நிலையில், தொழிலாளர்கள் 20-ம் தேதி இரவு முதல் வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.

வேலை நிறுத்தம் தொடர்ந்தால் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஏற்கனவே மின்பற்றாக்குறை இருக்கும் நிலையில், மின் உற்பத்தி பாதிக்கப்பட்டால் மக்களுக்கும் கஷ்டம். ஆனாலும், என்.எல்.சி. நிர்வாகம் ஊதிய உயர்வு கிடையாது என்று விடாப்படியாக உள்ளது. தொழிலாளருக்கான ஊதியம் மற்றும் இதர சலுகைக்கான தொகை இப்போது ஆண்டுக்கு ரூ.1,330 கோடி. ஊதியத்தை உயர்த்தினால் அது ரூ.1,500 கோடியாக உயரும் என்று கூறுகிறது. மேலோட்டமாக பார்த்தால், ‘‘பாவம்.....என்.எல்.சி. நிறுவனமும்தான் என்ன செய்யும்? ரூ.1,500 கோடிக்கு எங்கு செல்லும்?’’ என்று தோன்றும். ஆனால், இப்போது செலவாகும் 1,330 கோடியுடன் ஒப்பிட்டால் வெறும் ரூ.170 கோடி மட்டுமே ஆண்டுக்கு கூடுதலாக செலவாகும் என்பதே உண்மை..

என்.எல்.சி. நிறுவனத்தின் ஆண்டு லாபம் எவ்வளவு? 2013-14-ம் நிதி ஆண்டில் ரூ.1,500 கோடிக்கு மேல் லாபம் ஈட்டியுள்ளது. அதில் ரூ.170 கோடி தொழிலாளருக்காக ஊதியம் அளித்தால் என்ன? ஊழியர்கள் 24 சதவீத ஊதிய உயர்வு கோருகின்றனர். ஊழியர்கள் கேட்பது ஊதிய மாற்று ஒப்பந்தம். அது 5 ஆண்டுகளுக்கானது. இப்போது, ஊதியம் நிர்ணயிக்கப்பட்டால் அது, அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பொருந்தும். அப்படிக் கணக்கிட்டால் ஊதிய உயர்வு ஆண்டுக்கு தோராயமாக 5 சதவீத்துக்கும் குறைவாகவே இருக்கும்.

ஒரு வாதத்துக்கு நஷ்டம் என்றே வைத்துக் கொள்வோம். தொழிலாளருக்கு நியாயமான ஊதியம் வழங்கி, மக்களுக்கும் சேவை செய்யத்தான் அரசும், பொதுத்துறை நிறுவனங்களும் உள்ளனவே தவிர, லாபம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தொழிலாளரையும் மக்களையும் சுரண்டுவதாக அவை இருக்க முடியாது.

நிலக்கரி நிறுவனம் செயல்படுவது தமிழ்நாட்டில். அங்கு கிடைக்கும் லாபம் மத்திய அரசுக்கு. இதற்காக, தமிழகத்துக்கு மத்திய அரசு ராயல்டி தொகை மட்டுமே கொடுக்கிறது. அதுவும் பல கோடி ரூபாய் நிலுவை. இங்கிருந்து அண்டை மாநிலத்துக்கு மின்சாரம் செல்லும். ஆனால், அவர்கள் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் கொடுக்க மாட்டார்கள். தென் மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் செல்லும். ஆனால், அவர்கள் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த அனுமதிக்க மாட்டார்கள். தெலுங்கு சினிமா உலகமே சென்னையில் இருந்து செயல்பட்டது ஒரு காலம். ஆந்திராவின் பொருளாதார மையமாகவும் சென்னை திகழ்ந்தது. ஆனால், பாலாற்றின் குறுக்கே அணைகளை கட்டி தண்ணீர் இல்லாமல் தவிக்க விடுவார்கள். இவற்றை எல்லாம் மத்திய அரசு கண்டு கொள்ளாது. ‘நீ அரிசி கொண்டு வா. நான் உமி கொண்டு வருகிறேன். இரண்டையும் கலந்து இருவரும் ஊதி ஊதி தின்னலாம்’ என்பதற்கு பெயர்தான் தேசியம் நண்பர்களே.

அதற்காக, நான் பிரிவினை பேசவில்லை. சீன ஆக்கிரமிப்பின்போதே பேரறிஞர் அண்ணா அவர்கள் பிரிவினையை கைவிட்டு விட்டார். அப்போது நாடாளுமன்றத்தில் அவர் பேசிய வரலாற்று சிறப்பு மிக்க உரையில், ‘‘நாம் ஒன்றாக இருந்தால் நமக்குள் கேட்டு வாங்கிக் கொள்ளலாம். ஒட்டுமொத்தமாக நாம் ஆக்கிரமிக்கப்பட்டால் நிலைமை என்னாகும்? எனவே, நாட்டு நலன் கருதி பிரிவினை கோரிக்கையை கைவிடுகிறோம். ஆனால், பிரிவினை கோருவதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன’’ என்றார். பேரறிஞர் அண்ணா சொன்ன அந்தக் காரணங்கள் 50 ஆண்டுகள் கடந்தும் இன்னும் தொடர்கின்றன... வலுவாக.. என்பதுதான் வருத்தம்.

என்.எல்.சி. நிறுவனத்தில் வேலை நிறுத்தம் தொடர்ந்தால் அதனால், ஏற்படும் நஷ்டம் எவ்வளவு? அதை தொழிலாளர்களுக்கு கொடுத்தால் மகிழ்ச்சியாக பணியாற்றுவார்களே? சென்னையில் நேற்று நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது. நெய்வேலியில் நாளை உண்ணாவிரதம் இருக்க தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர். தொழிலாளர்கள் கோரிக்கை ஏற்கப்படும் என்று நம்புவோம். நம்பிக்கைதானே வாழ்க்கை.

மக்கள் திலகம் நடித்த ‘நான் ஏன் பிறந்தேன்?’ திரைப்படத்தில் பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட். புரட்சிக் கவிஞர் பாரதி தாசனின் ‘சித்திரச் சோலைகளே..’ பாடல் தொழிலாளர்களின், உழைத்து உருக்குலைந்து போன அவர்களின் நிலையை, அப்பட்டமாக சொல்லும்.

ஒயிட் & ஒயிட்டில் ஒளிமயமாக தலைவர். பாடலின் ஆரம்பத்தில் பியானோ வாசித்துவிட்டு ஸ்டைலாக இருக்கையில் இருந்து (வலது புறம் மேடை இருக்க, நாம் எதிர்பாராமல் இடதுபுறம் அழகாக) அரைவட்டமாக திரும்பி, எழுந்து, இசையினூடே ரிதத்துடன் மேடையின் படிகளில் ஏறி அசால்டாக மைக்கை பிடித்து ‘சித்திரச் சோலைகளே....’ என்று ஆரம்பிக்கும்போது காலப் பிரமாணம் ஒரு விநாடி கூட தவறாமல் .... என்ன ஒரு டைமிங் சென்ஸ்.

பாதாம் அல்வாவை நாவில் எச்சில் ஊற பார்ப்பதுபோல, மக்கள் திலகத்தின் அழகையும் சுறுசுறுப்பையும் மகிழ்ச்சி பொங்க விரியும் விழிகளால் விழுங்கும் காஞ்சனாவை குறை சொல்ல முடியாதுதான். மக்கள் திலகத்தைப் பார்த்தால் அந்த நிலைதான் ஏற்படும். படம் வெளியாகும்போது மக்கள் திலகத்துக்கு 55 முடிந்து 56 வயது என்றால்... வெளிநாட்டினர் நம்புவது கடினம்.

ஒரு இடத்தில் குழந்தைகளிடம் தனக்கு உள்ள அன்பையும் ஆசையையும் நுணுக்கமாக வெளிப்படுத்தியிருப்பார். ஒவ்வொரு மேஜையாக பரிமாற கேக்கை எடுத்துச் செல்லும்போது புயல் வேகமாகச் செல்பவரின் கண்களில் ஒரு குழந்தை பட, அப்படியே நிதானித்து, வேகம் குறைத்து கண்களில் கருணை வழிய குழந்தைக்கு கேக் கொடுக்கும் பாசமும் அழகும்.... ஏதோ படத்துக்காக நடிப்பது போலவே தெரியாது.

மத்திய அரசின் நவரத்தினா எனப்படும் லாபம் கொழிக்கும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக என்.எல்.சி. நிறுவனம் உள்ளது. இந்த அளவுக்கு அந்நிறுவனத்தை உயர்த்தியிருப்பது யார்? படத்தில் மக்கள் திலகம் பாடும் வரிகளில் சொன்னால்...

ஆர்த்திடும் எந்திரக் கூட்டங்களே
உங்கள் ஆதியந்தம் சொல்லவோ?
நீங்கள் ஊர்த்தொழிலாளர் உழைத்த உழைப்பில்
உதித்தது மெய்யல்லவோ?...

ஏற்கனவே வறுமையால் மக்கள் வாடிய நிலையில், பிரான்சில் புரட்சி வெடிக்க காரணமாக அமைந்தது ஆணவம் பிடித்த அரசியின் கிண்டல். ‘ரொட்டி கிடைக்காவிட்டால் என்ன? மக்களை கேக் சாப்பிடச் சொல்லுங்கள்’ என்ற வார்த்தைகள்தான் பிரெஞ்சுப் புரட்சியை தவிர்க்க முடியாததாக்கி விட்டன. அந்த அரசியைப் போன்ற செல்வந்தர்களின் நிலையை புரட்சித் தலைவர் தோலுரிக்கிறார், புரட்சிக் கவிஞரின் பாடல் வழியாக....

தாரணியே தொழிலாளர் உழைப்புக்கு
சாட்சியும் நீயன்றோ?, பசி தீரும் என்றால்,
உயிர் போகும் எனச் சொல்லும் செல்வர்கள் நீதி நன்றோ?
....செல்வர்கள் நீதி நன்றோ?

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Gopal,S.
24th July 2015, 03:26 AM
கலை வேந்தன்,
வழக்கம் போல வேலை பளு காரணமாக எப்போதாவது வந்து உறுப்பினர்களை வாழ்த்தி விட்டு ,ஏதோ ஒரு பத்திரிகை செய்தி போல ஒன்றை போட்டு ,அதற்கு சற்றும் சம்பந்தமில்லா படத்திலிருந்து ஒரு துக்கடா பாட்டை மேற்கோள் காட்டும் பாணியை விட மாட்டீர்கள் போல.
நினைவு நாளன்று ,தமிழர்களின் ஒரே பெருமையான நடிகர்திலகத்தை வாழ்த்த கூட மனமில்லாத தங்களை,உண்மையான நடிகர்திலகத்தின் ரசிகர்கள் நிறைந்த இந்த சபை , நண்பராக ஏற்று விடும் என்று கனவு கூட காண வேண்டாம்.

esvee
24th July 2015, 04:36 AM
மக்கள் திலகம் நடித்த ‘நான் ஏன் பிறந்தேன்?’ திரைப்படத்தில் பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட். புரட்சிக் கவிஞர் பாரதி தாசனின் ‘சித்திரச் சோலைகளே..’ பாடல் தொழிலாளர்களின், உழைத்து உருக்குலைந்து போன அவர்களின் நிலையை, அப்பட்டமாக சொல்லும்.

ஒயிட் & ஒயிட்டில் ஒளிமயமாக தலைவர். பாடலின் ஆரம்பத்தில் பியானோ வாசித்துவிட்டு ஸ்டைலாக இருக்கையில் இருந்து (வலது புறம் மேடை இருக்க, நாம் எதிர்பாராமல் இடதுபுறம் அழகாக) அரைவட்டமாக திரும்பி, எழுந்து, இசையினூடே ரிதத்துடன் மேடையின் படிகளில் ஏறி அசால்டாக மைக்கை பிடித்து ‘சித்திரச் சோலைகளே....’ என்று ஆரம்பிக்கும்போது காலப் பிரமாணம் ஒரு விநாடி கூட தவறாமல் .... என்ன ஒரு டைமிங் சென்ஸ்.

https://youtu.be/tsLa1gumBA8

SUPERB KALAI

vasudevan31355
24th July 2015, 07:52 AM
//நானோ இப்போது ஒரு பதுமை//

கல்ஸ்!

நீங்கள் இல்லாமல் திரி வெறுமை. உங்கள் பதிவு அருமை. எனக்குத் தெரியும் கடலூர் நண்பரின் திறமை மற்றும் அவர் பெருமை. நீங்கள் அடிக்கடி திரிக்கு டிமிக்கி கொடுத்து விடுவது கொடுமை. இதுவரை நான் காப்பது பொறுமை. செல்லத் திட்டில் திண்டாடப் போவது உங்கள் நிலைமை. எனவே மறக்கக் கூடாது உங்கள் கடமை. கலை, உங்களிடம் இருப்பது இளமை,:) உங்கள் பூப் பதிவுகள் தந்தது இனிமை. நண்பர்கள் இல்லாமல் போனால் திரி வறுமை.

பாராட்டிற்கு நன்றி கல்ஸ். உங்கள் பதிவுகளுக்காக எல்லோரும் வெயிட்டிங்.

அப்புறம் நம் ஊரில் வரும் 31ம் தேதி 'வீரபாண்டியக் கட்ட பொம்மன்' நண்பர்களுடன் பார்க்கப் போகிறேன். ஏற்பாடுகள் அமர்க்களமாக நடக்கின்றன. இப்போதே மனம் குதூகலிக்க ஆரம்பித்துவிட்டது.

Gopal,S.
24th July 2015, 07:53 AM
காலப்ரமாணம், timing என்பதெல்லாம் பெரிய சமாசாரங்கள்.பாடகர் எந்த வகை பட்டவர் என்று தெரிந்து, அவர் பாடும் பாணிக்கேற்ப வாயசைத்தலே சிறப்பு. தன்னுடைய பாணியிலேயே, எல்லா பாடகர்களுக்கும் மற்ற நடிகர்கள் நடிக்க, பாடகர் பாடும் பாணியை கவனித்து ,அதற்கேற்ப வாயசைத்தலே நடிகர்திலகத்தின் மேதைமை. இந்த திராவிட மன்மதனின் ,டி.எம்.எஸ் பாடலுக்கான வாயசைப்பை ,வசந்த முல்லை போலே வந்து, மலர்ந்தும் மலராத,என்னை யாரென்று,பொன்னை விரும்பும்,நீயே உனக்கு என்றும்,சின்னஞ்சிறிய ,கண்ணெதிரே,மடிமீது, அந்த நாள்,உன் கண்ணில் நீர் வழிந்தால் பாடல்களில் கவனியுங்கள். பாடகர் open voice இல் பாடுகிறாரா,bass voice ஆ ,nasal tone ஆ என்று கவனித்து அவர் பாடும் பாணி இருப்பதுதான் இந்த வகை வர்ணனைகளுக்கு பொருந்தும்.அதை தவிர பொட்டு வைத்த முகமோ, நினைவாலே சிலை செய்து என்ற எஸ்.பீ,ஜேசுதாஸ் இவர்களுக்கு வேறு வகை. என்னவொரு கலைஞரைய்யா அவர்.பத்திரிகை துறையில் இருந்து,நம் நண்பர் போல நடித்து கொண்டிருக்கும், நடிகர்திலகத்தின் மேல் வன்மம் கொண்டு அவர் நினைவு நாளுக்கு நண்பர்களுக்காக ஒரு பதிவு கூட போடாத கலை போன்றவர்கள் ,தங்கள் கொண்ட தொழிலுக்கு வெறுப்பு-வெறுப்பற்ற நேர்மையை காட்டுவார்களா? பொய்யும் ,புனைசுருட்டுமல்லவா ,சரித்திரமாக போகிறது?என்னை உதாரணம் காட்ட தேவையில்லை. நான் எங்கும் சென்று நண்பன் போல் நடிக்கவில்லை. விருப்பு-வெறுப்புகள்,தேர்ந்தெடுப்புக்கள்,நல் ரசனை உள்ளதால் ,தங்க தட்டில் வைத்து வழங்க பட்ட பத்திரிகை துறையை ஒதுக்கியவன் நான்.தயவு செய்து,தனிப்பட்ட பாராட்டுரைகளுக்கு அடிமை படாமல் ,விழிப்புடன் இருக்க வேண்டியது நமது ரசிகர்களுக்கு மிக மிக அவசியம்.கலை போன்றவர்களுக்கு என் வலுவான கண்டனங்கள்.சுதாங்கன் போன்ற பல நடிகர்திலகம் ரசிகர்களான பத்திரிகையாளர்கள் நேர்மையுடன் ,உண்மையை மட்டுமே எழுதுபவர்கள். இந்த விதத்திலும் நாம்தான் முன்னுதாரணம்.

Varadakumar Sundaraman
24th July 2015, 08:08 AM
கலைவேந்தன்
நெய்வேலி நிலக்கரி சுரங்க பிரச்சனையை மிக தெளிவாக கூறி அதற்கேற்ற மிக பொருத்தமான நம் உலக பேரழகன் மக்கள் திலகத்தின் ஆளுமையை அழகாக பதிவிட்டமைக்கு நன்றி .உங்கள் பதிவை
மனதார விரும்பியும் , நன்றியும் தெரிவித்த திரு வாசுதேவன் , ரவிகுமார் , சிவாஜி செந்தில் , வினோத் அவர்களை பாராட்டுகிறேன் .

Varadakumar Sundaraman
24th July 2015, 08:14 AM
RARE PAPER ADVTS
http://i57.tinypic.com/30ksn6b.jpg

Varadakumar Sundaraman
24th July 2015, 08:15 AM
http://i60.tinypic.com/2z6xdm9.jpg

Varadakumar Sundaraman
24th July 2015, 08:16 AM
http://i62.tinypic.com/wm0xtv.jpg

Varadakumar Sundaraman
24th July 2015, 08:17 AM
http://i59.tinypic.com/1fid7a.jpg

Varadakumar Sundaraman
24th July 2015, 08:18 AM
http://i62.tinypic.com/ibymbd.jpg

Varadakumar Sundaraman
24th July 2015, 08:19 AM
http://i62.tinypic.com/n64xvp.jpg

Varadakumar Sundaraman
24th July 2015, 08:21 AM
http://i62.tinypic.com/69i0lw.jpg

Varadakumar Sundaraman
24th July 2015, 08:21 AM
http://i57.tinypic.com/2m2apgz.jpg

chinnakkannan
24th July 2015, 12:24 PM
ஹாய் குட் மார்னிங் ஆல்

குறுகிய விடுமுறைக்காக துபாய் செல்ல முடிவெடுத்து இயந்திரக் குதிரையை உசுப்பி வந்தாகி விட்டது.. வழக்கம் போல் துபாய் கலர்புல்லாக வானளாவிய கட்டடங்களுடன் கொஞ்சம் மனம் வெறுத்த மனிதர்களுடனுமாய் காட்சி தருகிறது..

அடுதத மாதம் முதல் துபாயிலும் பெட்ரோல் விலை உயர்கிறதாம்! மஸ்கட்டில் இப்போதைக்கு ஆகாது என ப்ரார்த்தித்துக் கொண்டு இருக்கிறேன்

வாங்க கலை..தாங்க்ஸ்.. கூடிய விரைவில் மீண்டும் எழுதுகிறேன்

ஆதிராமிடம் மிஸ்டர் கார்த்திக்கின் சாயல் நன்றாகவே தெரிகிறது,,அல்லது என் மனப் பிரமையா

வாசு சார் விளக்கமான பதிலுக்கு நன்றி.. யெஸ் டேக் கேர் பட் டோண்ட் ரிலாக்ஸ்.. பின்ன எங்களுக்கு கட்டுரைகள் வேண்டுமே

ஸ்கூல் மாஸ்டர் பார்த்ததில்லை. மற்றமொழிகளில் ந.தி என்பது நான் அறியாத ஒன்று

சி.செ வாழ்த்துக்கள்..

சரி வந்ததுக்கு ஒரு பாட்,, பத்மப்ரியா இவரும் வாசுவின் எழுத்துக்களுக்கு அடிமையாம்!

https://youtu.be/X9Uy1vRL2MU

chinnakkannan
24th July 2015, 01:29 PM
பதமாய் இளஞ்சிவப்பாய்ப் பார்க்க இனிதாய்
இதமாய் இருக்கும் இதழ்

கனவுடைக் கன்னியரின் கண்களின் கீழ்தான்
உணர்வினைத் தூண்டும் உதடு

என்றெல்லாம் ஆன்றோர் சொல்லியிருக்கிறார்கள்!

எனில் இந்தப் பையனும் பெண்ணும் என்ன சொல்லிப் பாடுகிறார்கள்

குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை உறிஞ்சத்துடிக்கும் உதடு …ம்ம்\

https://youtu.be/zbjAUPasd3I?list=RDX9Uy1vRL2MU

இன்னும் நிறைய உதடு பழைய பாடல்கள் வரும் தானே

s.vasudevan
24th July 2015, 01:55 PM
Courtesy: Tamil HIndu

காற்றில் கலந்த இசை 14: தனித்துவம் கொண்ட குரல்களின் பாடல்இளையராஜாவுடன் ஜென்ஸி...

தமிழ்த் திரையிசையில் ஆயிரக் கணக்கான பாடல்களைப் பாடிப் புகழ்பெற்றவர்களைப் போல், மிகச் சில பாடல்களை மட்டுமே பாடி ரசிகர்கள் நினைவில் நிலைத்து விட்டவர்கள் உண்டு. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியிருந்தாலும் அவற்றில் புகழ்பெற்ற பாடல்களின் சதவீதம் அதிகம் கொண்டவர்கள் தனிரகம். பாடகர்களில் ஜெயச்சந்திரனும், பாடகிகளில் ஜென்ஸியும் இப்பட்டியலின் முதல்வர்கள். குறிப்பாக, இளையராஜாவின் இசையில் இவர்கள் பாடிய எல்லாப் பாடல்களும் ரசிகர்களால் ஆராதிக்கப்படுபவை.

ஜேசுதாஸ் குரலுடன் ஜெயச்சந்திரனைப் போட்டுக் குழப்பிக்கொள்பவர்கள் உண்டு. அதேபோல், (ஆரம்பகால) சுஜாதாவின் பாடல்களை ஜென்ஸி பாடியதாகச் சொல்பவர்களும் உண்டு. உண்மையில், இவர்கள் இருவரின் குரல்களும் ஒப்புமை இல்லாத் தனித்தன்மை கொண்டவை. மெல்லிய உணர்வை அதன் இயல்புடன் வெளிப்படுத்தத் தெரிந்த மிகச் சிறந்த கலைஞர்கள் இவர்கள்.

ஜேசுதாஸ், இளையராஜா, எஸ்.பி.பி., கங்கை அமரன் உள்ளிட்டோருடன் பாடியிருக்கும் ஜென்ஸி, ஜெயச்சந்திரனுடன் இரண்டு பாடல்களைப் பாடியிருக்கிறார். ஒன்று ‘அழகே உன்னை ஆராதிக்கிறேன்’ படத்தின் ‘ஏ… மஸ்தானா’. ஜெயச்சந்திரன் ஜென்ஸி இணையின் மற்றொரு பாடல், ‘அன்பே சங்கீதா’ படத்தில் இடம்பெற்ற ‘கீதா… சங்கீதா’.

1979-ல் வெளியான ‘அன்பே சங்கீதா’ படத்தின் நடிகர்கள் தேர்வு பல ஆச்சரியங்களைக் கொண்டது. ராதிகாவுக்கு ஜோடியாக ஜெய்கணேஷ் நடித்திருப்பார். முக்கியப் பாத்திரத்தில் சுமித்ரா, தேங்காய் சீனிவாசன் என்று ’வித்தியாசமான’ படம். ‘அச்சாணி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய காரைக்குடி நாராயணனின் இந்தப் படம் தோல்வியடைந்தது. ஆனால், வெற்றி தோல்விகள் படங்களுக்குத்தான்; இளையராஜாவின் பாடல்கள் அந்த எல்லையைக் கடந்தவை.

பட்டியலில் அடங்கா இசை

‘லாலாலலலா… லாலாலலலா’ என்று புத்துணர்வுடன் தொடங்கும் ஜென்ஸியின் குரலைப் பின்தொடர்வது போல் புல்லாங்குழல் ஒலிக்கும். இனிமையான அந்தக் கலவையைத் தொடர்ந்து அழுத்தமான உணர்வுகளின் தொகுப்பாக வயலின் இசைக்கோவை காற்றில் படரும். காதல் பாடல்தான் என்றாலும், பாடல் முழுவதும் மெல்லிய சோகம் தொனித்துக்கொண்டே இருக்கும்.

பாந்தமான கம்பீரத்துடன் ‘கீதா… சங்கீதா’ என்று பல்லவியைத் தொடங்குவார் ஜெயச்சந்திரன். ‘ஜீவ அமுதம் உன் மோகனம்’ எனும் வரிகளைப் பாடும்போது ஆண் குரலுக்குள் இத்தனை மென்மை இருக்குமா என்று ஆச்சரியமாக இருக்கும். ‘கண்ணா… என் கண்ணா’ என்று பதில் தரும் ஜென்ஸியின் குரலில் இருக்கும் மெல்லிய நடுக்கம், காதலில் தடுமாறும் இளம் இதயத்தின் நுட்பமான பதிவு.

இப்பாடலின் நிரவல் இசை முழுவதும் கடந்த காலத் தருணங்களை நினைவூட்டும் இசைக்கூறுகளைக் கொண்டது. நகரம் அல்லது சிறு நகரம் ஒன்றின் தெருக்களின் சித்திரத்தை இப்பாடல் மனதுக்குள் வரையும். மதிய வேளைக்கும் மாலை நேரத்துக்கும் இடைப்பட்ட நேரங்களில் மனதுக்குள் பதிவான காட்சிகளை இப்பாடல் தொகுத்துத் தரும். காதல், சோகம் எனும் பட்டியல் உணர்வுகளைத் தாண்டி மிக நுட்பமான உணர்வுகளைத் தரும் பாடல்களை உருவாக்கியதில் இளையராஜாவின் பங்கு மகத்தானது. அவற்றில் ஒன்று இப்பாடல். எச்சரிக்கை: இப்பாடல் யூட்யூபில் காட்சி வடிவிலும் கிடைக்கிறது. அதைக் கவனமாகத் தவிர்த்துவிட்டு, ஒலி வடிவில் மட்டும் இப்பாடலைக் கேட்பது நலம்.

நிழல் மேகத்தின் பாடல்

படத்தின் தலைப்பைக் கேட்டவுடன் பலரது நினைவில் வரும் பாடல், ‘சின்னப் புறா ஒன்று’. தனது இசையுலக வாழ்வின் முக்கியமான கட்டத்தை எட்டியிருந்த எஸ்.பி.பி. உணர்வுபூர்வமாகப் பாடிய பாடல்களில் ஒன்று இது. இயலாமையின் வலியைப் பிரதிபலிக்கும் பியானோ இசையைத் தொடர்ந்து, சோக தேவதையின் அசரீரி போல் எஸ்.பி. ஷைலஜாவின் ஹம்மிங் ஒலிக்கும். இசைக் கருவிகளால் எட்ட முடியாத உயரத்தை, தர முடியாத உணர்வைப் பொழியும் குரலாக அவரது குரல் காற்றை ஊடுருவும்.

இழப்பின் வலியை உணர்த்தும் பாடலுக்கு, ஒரு இசையமைப்பாளர் எத்தனை நியாயம் செய்ய முடியும் என்பதற்கு உதாரணம் இந்தப் பாடல். பியானோ, வயலின், கித்தார் என்று இப்பாடலில் பயன்படுத்தியிருக்கும் இசைக் கருவிகள் அனைத்திலும் சோக வண்ணங்களைப் பூசியிருப்பார் இளையராஜா. ‘எந்தன் ராகங்கள் தூங்காது…’ எனும் வரியைத் தொடர்ந்து ஒலிக்கும் தாளத்தின் மாற்றத்தில் ஒரு சின்ன நுணுக்கத்தைக் காட்டியிருப்பார் இளையராஜா.

‘நூறாண்டுகள்… நீ வாழ்கவே’ என்று உச்ச ஸ்தாயியில் ஒலிக்கும் எஸ்.பி.பி.யின் குரலின் தொடர்ச்சியாகத் எதிர்பாராத வெள்ளம் போன்ற அடர்த்தியுடன் வயலின் இசைக்கோவையை அமைத்திருப்பார் இளையராஜா. இரண்டாவது நிரவல் இசையில் தனித்து ஒலிக்கும் ஒற்றை வயலின், இறுகிய மனதைக் கூட உடைத்து அழச் செய்துவிடும். ‘மீட்டும் விரல்கள் காட்டும் ஸ்வரங்கள் மறந்தா இருக்கும் பொன் வீணை?’ எனும் வாலியின் வரிகள் அன்பின் இழப்பை அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கும்.

ஜெயச்சந்திரன் பாடும் ‘பெத்தாலும் பெத்தேனடா’, இளையராஜா பாடும் ‘ரெண்டு பொண்டாட்டி’ ஆகிய பாடல்களும் இப்படத்தில் உண்டு.

sivajisenthil
24th July 2015, 05:57 PM
மாற்றார் தோ(போ)ட்ட மெல்லிசை மது/ரம் கானங்(கள்)!
பகுதி 18 : ஜேம்ஸ் பாண்ட் தீம் ம்யுசிக் மற்றும் டைட்டில் பாடல்கள் வரிசை
எ வியூ டு எ கில் / A View to A Kill starring ROGER MOORE as JAMES BOND OO7!


ரோஜர் மூரின் கடைசி ஜேம்ஸ் பாண்ட் படம்!!
சிலிகன் வேல்லி கைப்பற்றுதலில் முனைந்த வில்லன் கும்பலை எப்படி பாண்ட் போட்டுத் தள்ளி உலகை காப்பாற்றுகிறார் என்பதே கதைக் களம்
தளர்ச்சியின் வெளிப்பாட்டால் மூர் இப்படத்துடன் விலகிக் கொண்டார்
ஆக்ஷனுக்குப் பஞ்சமில்லை... .... ஆனால் ......சுவாரஸ்யமில்லை!! படமும் சுமாரான ஓட்டத்தில் சுருண்டது.
வழக்கம்போல இனிமையான கலக்கலான டைட்டில் தீமிசைப் பாடல் ....சிறந்த பின்னணி இசைக் கோர்ப்பு!Duran Duran's song!

https://www.youtube.com/watch?v=UPj_ieoUju8

https://www.youtube.com/watch?v=hWRWX-t1X0A

https://www.youtube.com/watch?v=MmMIgIygzdA

esvee
24th July 2015, 06:29 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் பெரும்பாலான பாடல் காட்சிகளில் துள்ளி குதித்து ஓடி ஆடி பாடுவார் .

தொழிலாளி
படகோட்டி
பல்லாண்டு வாழ்க
படங்களில் உட்கார்ந்த இடத்தில் அமர்ந்து சாந்தமாக பாடும் காட்சிகள் மனதை மயக்கும் மதுர கீதங்கள்
https://youtu.be/GIoMayfeGWwhttps://youtu.be/Sw8yn3JcNXc
https://youtu.be/iPMrQXfSJF0

RAGHAVENDRA
24th July 2015, 08:14 PM
குமார் சார்
பல அபூர்வமான விளம்பர நிழற்படங்கள் நம்மையெல்லாம் அக்காலத்திற்கே அழைத்துச்செல்கின்றன. பாராட்டுக்கள். எல்லாமே அபூர்வ பொக்கிஷம்.

RAGHAVENDRA
24th July 2015, 08:16 PM
வாசு சார்
தங்களுடைய அசராத உழைப்பில் வெளிவரும் ஒவ்வொரு பதிவும் ஒரு முனைவர் பட்ட ஆய்விற்குத் தகுதியுடையவை. பாலாவின் பழைய பாடல்களாகட்டும், அபூர்வமான காட்சி ஆய்வுரைகளாகட்டும், அனைத்துமே தங்களுடைய தனித்துவம் வாய்ந்த எழுத்தில் மிளிர்கின்றன.
தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
தாங்கள் கூறியது சரி. ஸ்கூல் மாஸ்டர் தமிழில் எங்கள் குடும்பம் பெரிசு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதி மதுரா அனுராதா கன்னட ஸ்கூல் மாஸ்டர் பாடலின் மெட்டே தமிழிலும் பயன்படுத்தப்ப்ட்டது.

rajeshkrv
24th July 2015, 08:40 PM
athi mathura anuraga in kannada

sivajisenthil
24th July 2015, 11:31 PM
Monotony Breaker

மாற்றார் தோட்ட மெல்லிசை மதுரம்
பகுதி 19 : ஜாங்கோ (அல்லது டிஜாங்கோ) Franco Nero in and as D'Jango!

ஜாங்கோ ஒரு புகழ் பெற்ற கௌபாய் பாணி திரைப்படம்
பிராங்கோ நீரோ என்னும் துடிப்பான கதாநாயகர் ஜாங்கோ கதாபாத்திரத்துக்கு உயிரூட்டினார்!!
இப்படத்தின் பின்னணி இசைக்கோர்ப்பும் டைட்டில் பாடலும் மறக்க முடியாதவை

https://www.youtube.com/watch?v=Bz7VrgkgMMA

https://www.youtube.com/watch?v=WnfNHpTBVW0

vasudevan31355
25th July 2015, 07:22 AM
'குழந்தை உள்ளம்' (1969)

அடுத்து பாலா தொடருக்குப் போவதற்கு முன்னால்.

ஜெமினி சொல்ல சொல்லக் கேட்காமல் சாவித்திரி சொந்தப் படம் எடுக்க வேண்டும் என்று பிடிவாதம் செய்ய, அந்த பிடிவாதத்தின் விளைவாக 'குழந்தை உள்ளம்' வந்து விழுந்தது. ஜெமினியின் வாக்கு மெய் ஆனது. சாவித்திரியின் நம்பிக்கை சரிந்து விழுந்தது.

தமிழ், தெலுங்கு இரண்டிலும் கோலோச்சிய, அதுவும் 'நடிகையர் திலகம்' என்று பட்டம் வாங்கிய நடிகை நன்றாக யோசித்து முடிவெடுத்திருக்கலாம். விதி, ஆசை இரண்டும் யாரை விட்டது?

சரி! ஸ்ரீசாவித்திரி புரொடக்ஷன்ஸ் தயாரித்த, அதிகம் பேருக்குத் தெரியாத, 'குழந்தை உள்ளம்' படத்தின் கதையை அனைவரும் தெரிந்து கொள்ளும் வண்ணம் சுருக்கமாக இங்கு அளிக்கிறேன். பிற்பாடு தொடருக்கு வருகிறேன்.

https://antrukandamugam.files.wordpress.com/2013/07/gemini-vanisree-kuzhanthai-ullam-1969-1.jpg?w=593https://antrukandamugam.files.wordpress.com/2013/07/vanisree-manokar-kuzhanthai-ullam-1969.jpg?w=528&h=394https://antrukandamugam.files.wordpress.com/2013/07/vanisree-gemini-kuzhanthai-ullam-1969.jpg?w=593

காட்டுக்குள்ளே திரிந்து ஓவியங்கள் தீட்டிக் கொண்டிருக்கும் ஜெமினி அங்கு வேறு என்ன செய்வார்? நிச்சயம் அங்கு ஒரு பெண்ணைப் பார்ப்பார் இல்லையா? காட்டுவாசிப் பெண்ணான வாணிஸ்ரீயை சொன்னபடி பார்த்து லவ்ஸ் விடுகிறார். அவ்விடமும் சம்மதமே. ஆனால் வாணிஸ்ரீயின் முறைமாமன் முரட்டு வில்லன் மனோகர் 'வாணிஸ்ரீயை கட்டிக் கொண்டே தீருவேன்' என்று உறுதியாய் இருக்கிறார். வாணிஸ்ரீ இதற்கு ஒத்துக் கொள்வாரோ? இல்லை. அப்புறம் ஜெமனி வாணிஸ்ரீயை யாருக்கும் தெரியாமல் காட்டிலேயே கல்யாணம் செய்து அங்குள்ள ஒரு வீட்டில் குடித்தனமும் செய்கிறார்.

ஊரிலிருந்து வேலைக்காரப் பெரியவர் ரங்காராவ் ஜெமினியைத் தேடிக் காட்டுக்கு வருகிறார். 'ஜெமினியின் அம்மா சாந்தகுமாரிக்கு உடல்நிலை மோசமாகி விட்டது... உடனே புறப்பட வேண்டும்... அம்மா ஜெமினிக்கு உடனே திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறார்'... என்று ரங்காராவ் கூற, ஜெமினி தனக்கு வாணிஸ்ரீயுடன் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது ரங்காராவிடம் சொல்கிறார். ரங்காராவ் வாணிஸ்ரீயை 'இப்போது அழைத்து வர வேண்டாம்' என்று சொல்லி ஜெமினியைத் தனியே ஊருக்கு அழைத்துப் போகிறார்.

ஜெமினி அம்மாவிடம் தனக்கு வாணியுடன் நடந்த திருமணத்தைப் பற்றி சொல்ல, முதலில் அதை ஏற்க மறுக்கும் சாந்தகுமாரி பின் மனம் மாறி, ஜெமினியிடம் காட்டுக்குச் சென்று வாணிஸ்ரீயை அழைத்து வரச் சொல்கிறார். ஜெமினியும் சந்தோஷமாக வாணிஸ்ரீயை அழைத்து வர காட்டிற்குப் போக, அங்கு அவருக்கு பேரதிர்ச்சி. காட்டில் வெள்ளம் வந்து காட்டையே அழித்துவிட்டதாகவும், அதில் வாணிஸ்ரீ இறந்து விட்டதாகவும் அங்கிருப்பவர் சொல்ல மனம் உடைந்து ஊர் திரும்புகிறார் ஜெமினி.

பின் அம்மாவின் வற்புறுத்தலால் சௌகார் ஜானகியை திருமணம் செய்து கொள்கிறார். முதல் இரவில் தன்னுடைய துயர காதல் கதையை சௌகாரிடம் மறைக்காமல் சொல்லியும் விடுகிறார். எல்லா கதையும் தெரிந்த சௌகார் ஜெமினியிடம் வாணிஸ்ரீயை மறந்து விடுமாறு கேட்டுக் கொள்கிறார். வாணிஸ்ரீயை மறக்க முடியாமல் தவிக்கிறார் ஜெமினி.

இதற்கிடையில் வாணிஸ்ரீ காட்டில் உயிருடன் தப்பித்து ஜெமினியின் குழந்தைக்குத் (ரோஜாரமணிக்கு பையன் ரோல்) தாயாகிறார். தாய்மாமன் வில்லன் மனோகர் இப்போது மனம் திருந்தி அண்ணனாய் இருந்து வாணிஸ்ரீயை கவனித்துக் கொள்கிறார்.

இங்கோ காதல் மன்னனின் இன்னொரு முயற்சியால் சௌகாருக்கு பெண் குழந்தை பிறக்கிறது. காட்டில் வாணிஸ்ரீயும், நாட்டில் சௌகாரும் ஒரே சமயத்தில் குழந்தைகளை தாலாட்டி 'உத்தமபுத்திரன்' பட ரேஞ்சுக்கு ஒரு பாடலில் வளர்க்கிறார்கள். '(பூ மரத்து நிழலமுண்டு')

ஜெமினி தன்னைத் தேடி வராதது கண்டு கவலை கொள்கிறார் வாணிஸ்ரீ. தன் பையன் ரோஜாரமணி, மாமன் மனோகர் சகிதம் பட்டணம் புறப்பட்டு ஜெமினையைத் தேடுகிறார். ஒருவழியாக ஜெமினியின் வீட்டைத் தேடிக் கண்டுபிடித்துப் போனால் அங்கு சௌகார் தான் ஜெமினியின் மனைவி என்று காட்டிக் கொள்ளாமல் வாணிஸ்ரீயைத் தெரிந்து கொண்டு, சென்டிமென்ட் டயலாக் சொல்லி, 'ஜெமினிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது...அவர் மனைவி சந்தோஷமாக இருப்பதை தடை செய்ய வேண்டாம்' என்று சொல்லி வாணிஸ்ரீயை திருப்பி அனுப்பி விடுகிறார். வாணிஸ்ரீயும் சௌகாருக்காகத் தன் வாழ்வைத் தியாகம் செய்து, இறுதியில் ஜெமினியின் நினைவால் தன் உயிரையும் தியாகம் செய்து விடுகிறார். மனோகர் இப்போது பையனை வளர்க்கிறார். ரோஜாரமணியை படிக்க வைத்துப் பெரிய ஆளாக்க வேண்டும் என்று துடிக்கிறார்.

https://antrukandamugam.files.wordpress.com/2014/09/baby-rojaramani-vanisree-kuzhanthai-ullam-1969.jpg?w=593https://antrukandamugam.files.wordpress.com/2015/01/baby-shakila-rojaramani-kuzhanthai-ullam-1969.jpg?w=511&h=384https://antrukandamugam.files.wordpress.com/2013/07/r-s-manokar-kuzhanthai-ullam-1969-2.jpg?w=593

ஜெமினியின் இரு குழந்தைகளும் ஒன்றையொன்று தற்செயலாகச் சந்தித்து இணைபிரியா நண்பர்கள் ஆகின்றனர். அண்ணன் தங்கையாகவே பழகுகின்றன. எல்லா விஷயமும் தெரிந்த ரங்காராவ் நைஸாக வாணிஸ்ரீயின் பையன் ரோஜாரமணியை ஜெமினி வீட்டிற்கு அடிக்கடி கூட்டி வருகிறார். இரு குழந்தைகளின் நட்பும் இறுகுகிறது. சௌகாரின் கோப குணத்தால் தனக்குத் தெரிந்த எதையும் சொல்ல முடியாமல், தெரிந்தால் ஜெமினியின் நிம்மதி கெடும் என்று வாய் பேசாமல் ஊமையாய் இருக்கிறார் ரங்காராவ்.

காட்டுவாசிப் பையன் ரோஜாரமணி என்பதால் 'அவனுடன் பழகக் கூடாது' என்று சௌகார் தன் மகள் ஷகீலாவைத் தடுக்கிறார். ரொம்ப காலமாக அந்த வீட்டை சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு நல்ல பாம்பு யாரையும் ஒன்றும் செய்வதில்லை. ஆனால் அந்த பாம்பை பிடித்துக் கொல்ல சௌகார் ஒரு பாம்புப் பிடாரனை அழைத்துவர ரங்காராவிடம் சொல்ல, ரங்காராவ் பாம்பு பிடிக்கும் பிடாரன் மனோகரைக் கூட்டி வருகிறார். மனோகர் பாம்பைப் பிடிக்கும் போது அது கொத்தி உயிரை விடுகிறார். உயிர் விடும்போது வாணிஸ்ரீயின் பையன் அதாவது தன் மருமகனை ஜெமினி கையில் ஒப்படைத்து விட்டு இறந்து போகிறார் ஜெமினிதான் அக்குழந்தையின் தகப்பன் என்று தெரியாமலேயே.

இப்போது ஜெமினி ரோஜாரமணி தன் பிள்ளை என்று தெரியாமலேயே வீட்டில் பலத்த எதிர்ப்புகளுக்கிடையில் மனோகருக்குக் கொடுத்த வாக்கின்படி வளர்க்கிறார். ரோஜாரமணி சௌகார் மற்றும் அவர் குடும்பத்தினரால் கொடுமைப்படுத்தப்பட, ரங்காராவ் ரோஜாரமணியைத் தன் தோட்டத்து வீட்டில் கொண்டு போய் வளர்க்கிறார். ஜெமினி மனோகர் ஆசைப்படி அவனை கான்வென்ட்டில் சேர்த்து படிக்க வைக்க ஏற்பாடு செய்கிறார்.

ரோஜாரமணியால் ஜெமினிக்கும், சௌகாருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடுகளும், சண்டையும், சச்சரவும் ஏற்படுகிறது.

இதை உணர்ந்த ரோஜாரமணி தன்னால்தானே இவ்வளவு பிரச்னையும் என்று வீட்டைவிட்டுக் கிளம்ப, அதைக் கண்ட தங்கை ஷகீலா பின் தொடர்ந்து ஓடிவர, அந்த நேரத்தில் அங்கிருக்கும் பாம்பு ஷகீலாவைக் கொத்திவிட, காட்டுவாசி சிறுவன் ரோஜாரமணி தங்கையின் உடலில் கலந்த விஷத்தை உறிஞ்சி அவளைக் காப்ற்ற, விஷத்தை உறிஞ்சியதால் தான் உயிருக்குத் தவிக்க, முடிவில் தயாரிப்பாளர் சாவித்திரி டாக்டராக வந்து ரோஜாரமணியைக் காப்பாற்றி படத்தைக் காப்பாற்ற முடியாமல் போக, ரங்காராவும் ஜெமினியிடம் எல்லா விவரங்களையும் கூறி ரோஜாரமணி அவருடைய மகன் என்ற உண்மையை சொல்லி விட, இறுதியில் சௌகார் தவறு உணர்ந்து தன் மகளைக் காப்பற்றிய ரோஜாரமணியைத் தன் இன்னொரு குழந்தையாக ஜெமினி மனம் மகிழும்படி ஏற்றுக் கொள்ள, முடிவு ஒரு வழியாக சுபம்..

அப்பாடா! ஒரு வழியாக எப்படியோ கதை எழுதி முடித்துவிட்டேன். தலை சுற்றுகிறது. என்ன கதையோ! என்ன படமோ!

அப்புறம் ஏன் எழுதினாய் என்று நீங்கள் குமுறுவது புரிகிறது. எல்லாவற்றையும்தான் தெரிந்து கொள்ள வேண்டும். 'குழந்தை உள்ளம்' பற்றி பல பேர் பலவிதமாக நினைத்திருப்பார்கள். அதுவும் சாவித்திரியின் சொந்தப்படம் வேறு. இப்போது தெளிவாகி விடுமல்லவா?

https://antrukandamugam.files.wordpress.com/2013/08/rama-prabha-kuzhanthai-ullam-1969.jpg?w=593https://antrukandamugam.files.wordpress.com/2013/08/rama-prabha-thenkai-kuzhanthai-ullam-1969.jpg?w=593

ஜெமினி, வாணிஸ்ரீ, சௌகார் தவிர வி.கே.ஆர், தேங்காய், ரங்காராவ், சுருளிராஜன் மனோகர், வீரப்பன், ரமாப்ரபா, சாந்தகுகுமாரி, சி.கே சரஸ்வதி, சுந்தரிபாய், கௌரவ நடிகையாக 'நடிகையர் திலகம்' என்று நட்சத்திரக் கும்பல். அத்தனையும் வேஸ்ட்.

படத்தின் மெயின் கதையைவிட நகைச்சுவைக் காட்சிகள் என்ற பெயரில் அனைவரும் செம பிளேடு போடுகின்றனர். ஜெமினிக்கும், சௌகாருக்கும் பழகிப் புளித்துப் போன ரோல். நமக்கும் இதுமாதிரிப் பார்த்து சலித்துப் போன படங்கள் ஏராளம்.

எத்தனை படத்தில்தான் ஜெமினி இரண்டு மனைவிகளுக்குக் கணவனாக வருவாரோ! எங்காவது காடு மலை என்று சுற்றி அங்கு ஒன்றை செட் அப் செய்து குழந்தையைக் கொடுத்துவிட்டு வந்து விட வேண்டியது. அப்புறம் இன்னொரு திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டியது. அப்புறம் முதல் சம்சாரம் திரும்ப குழந்தையுடன் உயிரோடு வரும். அப்புறம் இரண்டு சம்சாரங்களுக்கிடையில் சிக்கி நிம்மதி இல்லாமல் தவிக்க வேண்டியது. சம்சாரங்களையும் தவிக்க விடவேண்டியது. மனிதருக்கு இதே வேலைதானா நிஜ வாழ்க்கையைப் போன்றே?

https://antrukandamugam.files.wordpress.com/2013/07/vanisree-kuzhanthai-ullam-1969.jpg?w=593

வாணிஸ்ரீ காட்டுவாசிப் பெண். வயிறு இவருக்கு அடங்காது. சௌகார் எரிச்சல். இதிலும் முதல் இரவுக் காட்சில் அழுவார். இவர் தரும் சித்ரவதை சொல்லி மாளாது. ரங்காராவின் கடைசி காலம். அவரால் முடியாது. சிரமப் படுவார். இவருக்கு பொருத்தமே இல்லாமல் டி.எம்.எஸ்.பாட்டு வேறு.

காட்டுவாசிகள் என்று ஆந்திர வாடை அதிகம். வாணிஸ்ரீ காட்டுவாசிப் பெண். அழகாகவே இருக்கிறார். மனோகர் மேல் உடம்பு காட்டி, டார்ஜான் போல காட்டுவாசி டான்ஸ் ஒன்று போடுவது கொஞ்சம் புதுமை. ஜெமினியுடன் 'திருவாரூர்' தாஸ் புண்ணியத்தில் ஒரு ஃபைட்டும் உண்டு. கொடும் வில்லன் திடுமென்று அநியாயத்துக்கு நல்லவராக ஆகி விடுவார்.

நகைச்சுவை நடிகர்கள் படத்தை சர்வ நாசம் செய்வார்கள். தேங்காய் ஹிப்பி ரேஞ்சுக்கு செம அறுவை. வி.கே.ஆர் முதற்கொண்டு வீரப்பன் வரை அநியாயத்துக்கு நம் பொறுமை சோதிப்பார்கள்.

ஒரே ஒரு நல்ல விஷயம். சில நல்ல பாடல்கள்.

'பூமரத்து நிழலுமுண்டு...பொன்னி நதி பாட்டுமுண்டு'

'அங்கும் இங்கும் ஒன்றே ரத்தம்'

தொடரில் வரப் போகும் பாலா பாடல்,

என்று அருமையான பாடல்கள்.

'ஓ...தர்மத்தின் தலைவனே' (சுமார்தான்)

இசை தெலுங்கின் கோதண்டபாணி. நம் தொடர் நாயகர் பாலாவை நமக்கு முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர். (இவருடைய இனிஷியலும் எஸ்.பி.தான்) அருமையான மூன்று முத்தான பாடல்களைத் தந்திருப்பார். ஒளிப்பதிவு சேகர் சிங் அபாரம். தயாரிப்பு திரைக்கதை, டைரெக்ஷன் சாவித்திரி.

http://i61.tinypic.com/2hoflgn.jpg

சாவித்திரி ஹீரோயின் ரோல் எதுவும் எடுத்துக் கொள்ளாமல் டாக்டராக சிறிது நேரம் வருவார். ஆனால் சற்று உடல் இளைத்து மிக அழகாக அருமையாக இருப்பார். இயக்கத்தில் கவனம் செலுத்தியதால் நடிக்க அவாய்ட் செய்து விட்ட மாதிரி தெரிகிறது. தவிரவும் இந்த மாதிரி ரோல்களை சாவித்திரி நிறைய செய்தும் விட்டார். தன் கணவருடன் இணைந்தே. 'பார்த்தால் பசி தீரும்' ஒன்று போதாதா?

புகழ் பெற்ற நடிகைகளாய் இருந்தாலும் நடிகைகள் படமெடுக்கக் கூடாது....இயக்கமும் செய்யக் கூடாது (சில விதிவிலக்காக இருக்கலாம்) என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் இந்தப்படம். 'நினைத்தது ஒன்று... நடந்தது ஒன்று' தான் நினைவுக்கு வருகிறது. வெற்றி பெற்ற கதைகளை திரும்பத் திரும்ப எடுத்தால் அது தோல்வியில்தான் முடியும் என்று சாவித்திரிக்கு ஏன் தெரியாமல் போனது? வேறு புதுக் கதை ஒன்றைக் கையில் எடுத்திருக்கலாம்.

கொஞ்சம் அபூர்வமான இந்தப் படத்தைப் பற்றித் தங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.

விரைவில் இப்படத்தின் அருமையான பாலாவின் பாடலோடு உங்களைச் சந்திக்கிறேன்.

நன்றி!

rajraj
25th July 2015, 08:00 AM
ChinnakkaNNan: You said that listening to P.Bhanumathi's rendition of 'Nagumomu' made you sleep well. Here are a few more by Bhanumathi.

From Chandirani( Tamil)

nilaa nilaa Odi vaa...

http://www.youtube.com/watch?v=6pNLgronslg

From Chandirani ( Telugu)

kilaa kilaa navvulaa....

http://www.youtube.com/watch?v=G87GpfaNANI

From Chandirani (Hindi)

khili khili chandni....

http://www.youtube.com/watch?v=42tqDxBAXzQ


Sleep well ChinnakkaNNan ! :) You need the rest after your hectic vacation in India!

rajeshkrv
25th July 2015, 08:00 AM
குழந்தை உள்ளம் திரைப்படம் எப்படியோ வந்திருக்க வேண்டிய படம் சாவித்திரியின் சொதப்பல் இயக்கம்
கோதண்டபானியின் இசையில் பாடல்கள் நன்றாக அமைந்தது.
இசையரசியின் குரலில் அழகான பாடல்கள்
அதுவும் இசையரசியும் ஜானகியும் பாடிய பூமரத்து நிழலுமுண்டு பாடல் அழகான பாடல்
பாலாவுடன் இசையரசியுடன் பாடிய முத்துச்சிப்பிக்குள்ளே பாடல் அருமை
நீஙகள் நினைவூட்டியதற்கு நன்றி வாசு ஜி

chinnakkannan
25th July 2015, 12:40 PM
Thanks raj raj sir for the songs. I am outside now. Will listen and revert back

Vasu, our azhagaana paattu Tharp pogireerkal advance thanks.

Kuzhantha ullam kathai yip nagaichuva pongi vazhikirathe. Miya rasiththen. Example geminiyin innoru muyarch

Varadakumar Sundaraman
25th July 2015, 12:47 PM
RARE OLD TAMIL MOVIES ADVT
http://i58.tinypic.com/nb53jm.jpg

Varadakumar Sundaraman
25th July 2015, 12:48 PM
http://i59.tinypic.com/2qcqs0l.jpg

Varadakumar Sundaraman
25th July 2015, 12:49 PM
http://i59.tinypic.com/264ghox.jpg

Varadakumar Sundaraman
25th July 2015, 12:50 PM
http://i61.tinypic.com/spkepi.jpg

Varadakumar Sundaraman
25th July 2015, 12:50 PM
http://i61.tinypic.com/2jb51s.jpg

Varadakumar Sundaraman
25th July 2015, 12:51 PM
http://i61.tinypic.com/1555hs1.jpg

Varadakumar Sundaraman
25th July 2015, 12:52 PM
http://i62.tinypic.com/donom8.jpg

g94127302
25th July 2015, 12:59 PM
திருக்குறளும் , திரை இசையும்

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/thiruvalluvar-statue-images-photos-512b1ae1e4b0695acbefda35_zpskzmslztt.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/thiruvalluvar-statue-images-photos-512b1ae1e4b0695acbefda35_zpskzmslztt.jpg.html)

எல்லோருக்கும் வணக்கம் . ஒரு புதிய பதிவாக திருக்குறளும் , திரை இசையும் என்ற சிறிய தொடர் ஒன்றை ஆரம்பித்தால் என்ன என்று தோன்றியது - ஒரு 10 அல்லது 15 குறள்களை , தினமும் ஒரு குறளாக , அந்த குறளை மையம்மாக வைத்து வெளிவந்த சில சிறந்த திரைப்பாடல்களையும் , படங்களையும் அலசலாம் என்று ஒரு சிறிய ஆசை . உங்கள் ஆதரவு முக்கியமாக CK வின் ஆதரவு இந்த பதிவுகளுக்கு நிச்சயம் கிடைக்கும் என்று நம்புகிறேன் . நீண்ட தொடர்கதையாக இந்த பதிவுகள் இருக்காது என்ற உத்திரவாதத்தையும் தருகிறேன் . முதலில் திருக்குறளை பற்றிய சிறிய தொடக்கம் .

திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது.

வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்: திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை. கருத்துக்களை இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும் அழைக்கப்படுகிறது

திருக்குறள் - இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான். தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் சிலவற்றை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இத்தளத்தின் வாயிலாக படித்து மகிழுங்கள்.

தமிழ் உரை எழுதியவர்கள்
திரு பரிமேலழகர்
திரு மு.வரததாசனார்
திரு மணக்குடவர்
திரு மு.கருணாநிதி
திரு சாலமன் பாப்பையா

ஆங்கில உரை எழுதியவர்கள்
Rev. Dr. G. U. Pope
Rev W. H. Drew
Rev. John Lazarus
Mr F. W. Ellis

தந்தை , தாயை எப்படி இன்னும் கற்றுக்கொண்டிருக்கின்றோமோ அதே மாதிரி ஒவ்வொரு பருவத்திலும் திருக்குறள் ஒரு புதிய அரத்தத்தை நமக்கு தந்துக்கொண்டே இருக்கும் - இதுதான் குறளின் பெருமை - இரண்டே அடிகள் ( மனைவி நம்மை ஒரே அடியில் திருத்திவிடுவாள் என்பது வேறு விஷயம் ) , இனிமையான அர்த்தங்கள் , வாழ்க்கை நெறிமுறைகள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சொல்லும் வரிகள் - இனி பதிவுகளுக்கு செல்வோம் ......

chinnakkannan
25th July 2015, 01:33 PM
ஹாய் ரவி வாங்க.. வழக்கம் போல தூள் பரத்துங்கள்

வாகாய்த் தமிழில் வளமுடன் நன்றாய்
ரசமாய்த் தருவார் ரவி

g94127302
25th July 2015, 01:39 PM
திருக்குறளும் , திரை இசையும் 2


ந.தி சம்பந்தபடாத ஒரு கருத்தையோ , ஒரு தொடரையோ , அவர் எண்ணங்கள் இல்லாத நல்ல பாடல்களையோ சொல்வது என்பது பிரம்ம ப்ரயத்தனம் . திருக்குறளின் அருமையை இந்த பாடல் சொன்னதைப்போலவோ , பாடலில் கலந்து ஒன்றான நடிகர் திலகம் பெருமிதம் கொண்டதைப்போலவோ , பாடல் திலகம் பாடியத்தைப்போலவோ , திருவள்ளவரே மீண்டும் உயிருடன் வந்தாலும் கேட்டு வாங்க கூடியதல்ல ... அனுபவிக்க வேண்டிய பாடல் - திருக்குறள் இன்னும் எவ்வளவு நாட்கள் இந்த உலகத்தில் இருக்குமோ அதை விட அதிக நாட்கள் வாழும் பாடல் இது ---

அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே வள்ளுவர்
ஆக்கி நமக்களித்த அரும் பொருளே
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே வள்ளுவர்
ஆக்கி நமக்களித்த அரும் பொருளே
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே


உலகுக்கு ஒளிபோலே...... உலகுக்கு ஒளிபோலே
உடலுக்கு உயிர்போலே
உலகுக்கு ஒளிபோலே உடலுக்கு உயிர்போலே
பயிருக்கு மழைபோலே.......
பயிருக்கு மழைபோலே பைந்தமிழ் மொழியாலே
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே

அறம் பொருள் இன்பம் எனப்படும் முப்பாலே
அனுபவத்தாலே தான் சுவைத்ததற்கப்பாலே
அறம் பொருள் இன்பம் எனப்படும் முப்பாலே
அனுபவத்தாலே தான் சுவைத்ததற்கப்பாலே
அவனியில் உள்ளோர்கள் அனைவரும் தலைபோலே
அவனியில் உள்ளோர்கள் அனைவரும் தலைபோலே
அவசியம் கற்றுணர்ந்து பயன் பெறும் நினைப்பாலே
அவசியம் கற்றுணர்ந்து பயன் பெறும் நினைப்பாலேஅறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே ......


வாழும் வழிமுறைக்கு இலக்கணமானது
மனம் மொழி மெய்யினிக்க வார்த்திட்ட தேனிது......ஆ......ஆ.....
வாழும் வழிமுறைக்கு இலக்கணமானது
மனம் மொழி மெய்யினிக்க வார்த்திட்ட தேனிது
வானகம் போல் விரிந்த பெரும் பொருள் கொண்டது எம்
மதத்துக்கும் பொதுவென்னும் பாராட்டைக் கண்டது எம்
மதத்துக்கும் பொதுவென்னும் பாராட்டைக் கண்டது
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே வள்ளுவர்
ஆக்கி நமக்களித்த அரும் பொருளே
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே

https://www.youtube.com/watch?v=_XzRfJsL5xg

g94127302
25th July 2015, 01:44 PM
திருக்குறளும் , திரை இசையும் 3

இதோ இந்த தம்பதிகளைப்பாருங்கள் - வள்ளுவர் வழியினிலே இனி வாழ்க்கை ரதம் செல்லுமே என்று பெருமிதத்துடன் தாம்பந்திய உறவை ரசித்து பாடுகிறார்கள் - நாமும் இவர்களுடன் இணைந்து காலம் காலமாக பாடிவரும் பாடல் இது ....

பெண் : இன்று நமதுள்ளமே - பொங்கும்
புது வெள்ளமே
இல்லற ஓடமிதே - இனி இன்பம்
ஏந்திச் செல்லுமே!

ஆண் : மங்கையர் குலமணியே
மஞ்சள் முகந்தனிலே
மகிழ்ச்சிகள் துள்ளுமே
வந்தென்னை அள்ளுமே!

பெண் : நேற்று நம்மைக் கண்ட நிலா
நெஞ்சுருகிச் சென்ற நிலா
வாழ்த்துகள் சொல்லுமே
மனந்தனைக் கிள்ளுமே!

ஆண் : வள்ளுவன் வழியினிலே - இனி
வாழ்க்கை ரதம் செல்லுமே

பெண் : கண்களில் ஊறும் நீரும் - இனி
நம் நிலைகாண நாணும் - சுகம்

https://youtu.be/Ll-yDdgCHm0

g94127302
25th July 2015, 01:58 PM
வாசு - யாரும் அதிகமாக தெரிந்துக்கொள்ளாத , பார்த்திருக்காத நபர்களையும் , பாடல்களையும் , படங்களையும் எங்களுக்காக நிலக்கரி சுரங்கமென தோண்டி எடுத்துவந்து அவைகளை எங்கள் நினைவுகளில் நிறுத்தி , ஆணி அடித்து என்றும் மறக்கமுடியாமல் செய்து வெற்றிகொள்வதில் உங்களை யாருமே மிஞ்ச முடியாது . இந்த "குழந்தை உள்ளத்தை " ஒரு படமாக நான் படிக்கவில்லை - உங்கள் உள்ளமும் இதுபோலத்தான் என்று எண்ணியே ரசித்தேன் . உங்களிடம் இருந்து எந்த பாடல் , எந்த நபர் , எந்த படம் எப்பொழுது வரும் என்றே சொல்ல முடியவில்லை - பாலாவைபார்த்துகொண்டிருக்கும் போது , சரளா வருகிறார் - சரி சரளாவைப்படிப்போம் என்று நினைக்கும் போது குசல குமாரி எங்கிருந்தோ வருகிறார் - சரி அவர்களைப்பார்ப்போம் என்று நினைக்கும் போது " ஏன் ஏன் " அங்கு பார்க்கிறீர்கள் என்று மீண்டும் பாலா வந்து தடுக்கிறார் . இராவணன் போல பத்து தலையும் , இருபது கண்களும் எங்களுக்கு வேண்டாம் - முருகன் போல ஆறுமுகமும் , பன்னிரண்டு கண்களாவது வேண்டும் - எல்லா பதிவுகளையும் சரிசமமாகப்படிக்க --------

g94127302
25th July 2015, 05:33 PM
தாம்பத்யம்

உறவுகள் முறிந்து வரும் இந்த காலத்தில் , அன்பு , பாசம் , பந்தம் இவைகள் வெறும் காசோலைகளாகத் தெரியும் இந்த காலத்தில் , தாம்பத்யத்தின் அருமையை எடுத்துச்சொல்வது என்பது , மீண்டும் LKG யில் சேர்ந்து படிப்பதைப்போன்றது ... இருந்தாலும் இந்த உறவு மகத்தானது - வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒன்று . ஒருவனுக்கு நல்ல பெற்றோர்கள் கூட அமைந்துவிடலாம் - ஆனால் ஒரு நல்ல மனைவி , அருமையான ஒரு தாம்பத்திய வாழ்க்கை அமைவது என்பதற்கு மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் . பெற்றோர்கள் என்ற பந்தத்தை எப்படி இந்த தலைமுறை அதிகமாக கண்டு கொள்வதில்லையோ , அதே போல மனைவியின் அருமைகளையும் அதிகமாக நாம் புரிந்து கொள்வதில்லை - ஒரு நல்ல கணவனின் வெற்றிக்கு முன்னும் , பின்னும் ஒரு நல்ல மனைவிதான் இருக்கிறாள் - அவள் எடுக்காத அவதாரங்களே இல்லை - மருமகளாக , மனைவியாக , தாயாக , சகோதரியாயக -----

live in relationship அதிகமாக வளர்ந்துகொண்டிருக்கும் இந்த காலத்தில் , கணவன் , மனைவி இருவர் மட்டுமே இருக்கும் ஒரு குடும்பத்தை " joint family " என்று சொல்லக்கூடிய நிலைமை வந்துவிட்டது - சற்றே காலத்தை பின்னோக்கி நகர்த்துவோம் - உனக்கு நான் , எனக்கு நீ என்று உணர்த்தும் சில அருமையான பாடல்களைப்பார்ப்போம் . இதுதான் தாம்பத்யம் - இப்படித்தான் வாழ வேண்டும் ஒருவர் அருமையை ஒருவர் உணர்ந்துகொண்டு ---------------

g94127302
25th July 2015, 05:37 PM
தாம்பத்யம் - 2

மனைவி அமைவதெல்லாம்! (முழுவதும் படிக்கவும் )

திருமணம் நிச்சயம் ஆனதிலிருந்தே எல்லா ஆண்களையும் போல நானும் ஒரு வித உற்சாகத்துடனும்,பரவசத்துடனும் நாட்களை கடத்தினேன். கனவுகள் வராத நாள் கிடையாது. வரும் பெண்ணை பற்றிய எதிர்பார்ப்புகளும்,கற்பனைகளும் சுவாரஸ்யத்தை கூட்டியது. நெறைய பாலகுமாரன் புத்தகங்களை சேமித்து வைத்து இருந்தேன் வருகிறவளுக்கு படிக்க கொடுக்க வேண்டும் ஒருவேளை அவளும் பாலகுமாரன் ரசிகையாக இருந்தால் ..? நினைக்கவே சிலிர்ப்பாய் இருந்தது.

கிரிக்கெட்டில் நான் வாங்கிய பரிசுகளை எல்லாம் தூசு தட்டி எடுத்து பார்வையில் படும்படி வைத்தேன் . இளையராஜா பாடல்கள் தொகுப்புகளை வாங்கி வைத்தேன்.எஸ் .ஜானகி பாடல்களை தனியே பதிவு செய்து வைத்தேன்.கேரம் ,செஸ் போர்டு எல்லாம். இன்னும் பல விஷயங்கள் . ஒரு பெரிய கற்பனை கோட்டையில் வாழ துவங்கி இருந்தேன் .

ஒரு சுபயோக சுபதினத்தில் திருமணம் இனிதே நடந்தது..!
விருந்து முதற்கொண்ட சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்தது.

கீழ்க்கண்ட உரையாடல்கள் சில தினங்களில் சில தினங்கள் இடைவெளியில் நடந்தது.

புத்தகம் எல்லாம் படிக்கும் பழக்கம் இருக்கா ?

இல்லங்க நான் எந்த புக்கும் படிச்சது இல்ல..!

எந்த புக்கும் படிச்சது இல்லையா ?

ஆமாங்க எனக்கு இந்த புத்தகம் ஏதும் படிக்க புடிக்காது..!

இந்த குமுதம் ,ஆனந்த விகடன் இதெல்லாம் கூட படிச்சது இல்லையா ?

நான் + 2 படிச்சப்போ படிச்ச பாட புத்தகம் தான் நான் கடசியா படிச்சது அதுக்கப்புறம் எந்த புக்கும் படிச்சது இல்ல...!

எதோ ஜோக் சொன்னதுபோல அவள் சொல்லி சிரிக்க நான் வெளிறிபோனேன் ..!

எனக்கு மண்டை காய்ந்துபோனது எந்த ஒரு புத்தகமும் படிகாதவளிடம் போய் பாலகுமாரனை பற்றி பேச முடியுமா..? சேர்த்து வைத்து இருந்த புத்தகங்கள் ...?ஒரு அட்டைப்படத்தில் பால குமரன் என்னை கவலையுடன் பார்ப்பதாக தோன்றியது ..!

கிரிக்கெட்டில் நான் வாங்கிய பரிசுகளை பார்வையில் படும்படிதான் வைத்து இருந்தேன்..! அதை பற்றி அவள் கேட்கவேண்டும் நான் பீற்றி கொள்ளவேண்டும் இதுதான் திட்டம் .

ஆனால் ..? எதோ வீட்டில் உள்ள காலண்டரை பார்ப்பது ,வால் கிளாக்கை பார்ப்பதுபோல அந்த பரிசுகளை கோப்பைகளை அவள் கண்டுகொள்ளவே இல்லை.

அப்புறம் வேறு வழி இல்லாமல் நானே சொல்ல ஆரம்பித்தேன் ..!

இந்த கப் எல்லாம் நான் வாங்கினது தெரியுமா ..?

எதுக்கு வாங்குனீங்க..?

இதெல்லாம் நான் கிரிக்கெட் வெளையாடி வாங்கினது
ஒனக்கு கிரிக்கெட் புடிக்குமா ..? கிரிக்கெட் பார்ப்பியா ..?

எங்க வீட்டுல எல்லாரும் கிரிக்கெட் பார்ப்பாங்க எனக்கு மட்டும் கிரிக்கெட் சுத்தமா புடிக்காது ..!

(அதானே எனக்குன்னு இப்படித்தான் வாய் க்கனும்னு இருக்கும்போது எப்படி கிரிக்கெட் புடிக்கும் )

யாரோ பின் மண்டையில் பேட்டால் அடித்தது போல இருந்தது..! நொந்துபோனேன்..!

இந்த பாடகர் - பாடகிகள்ல உனக்கு யார புடிக்கும்..?

ம்ம்... இவங்களத்தான் புடிக்கும்னு சொல்ல முடியாது பொதுவா எல்லா பாட்டும் கேப்பேன்..!

உனக்கு புடிச்ச பாட்டு ஒன்னு சொல்லேன்..!

அட போங்க திடீர்னு இப்படி கேட்டா எப்படி சொல்லுறது ..?

சரி எஸ் .ஜானகி புடிக்குமா ?

யாரு கெழவி போல இருக்குமே அதுவா ?

எஸ் .ஜானகியை கெழவி ன்னு சொன்னதும் எனக்கு செம கோவம் ...!எனக்கு புடிச்ச பாடகி அவரை கிழவின்னு சொன்னதும் என்னால அதை பொறுத்துக்க முடியல. என்ன செய்ய எல்லாம் விதி...!

என்னை நானே நொந்து கொள்வதை தவிர வேறு வழியில்லை அவள்மேல் கோபப்பட முடியவில்லை ஆனால்..? அவளுக்கு கோவம் அதிகம் வரும் முன்கோபி என் பாதுகாப்பும் முக்கியமில்லையா எதுவும் எனக்கு பிடிக்கவில்லை.

மனைவி விசயத்தில் மிகுந்த ஏமாற்றம் ...!துளியும் எனக்கு எந்த விதத்திலும் பொருத்தமில்லை .

ஆணித்தரமாய் எனக்கு தோன்றியது இதுதான்

இவள் எனக்கு ஏற்ற ஜோடிஇல்லை .

கணவன் மனைவி இருவரும் இரட்டை மாட்டு வண்டியைபோல என்று சொல்வார்கள் ஒரு மாடு சரியில்லாமல் போனாலும் குடும்ப வண்டி சரியாக ஓடாது என்று. உண்மைதான். நான் இப்படி முடிவு எடுத்தேன் பேசாமல் அவளையும் வண்டியில் தூக்கி உட்கார வைத்துவிட்டு ஒற்றை மாடாக வண்டியை ஓட்ட வேண்டியதுதான். வேறு என்ன செய்வது ? எங்களுக்குள் எந்த கெமிஸ்ட்ரியும் ஒர்க் அவுட் ஆகவில்லை..!

பெரிய சுவாரசியம் ஏதுமின்றி நகர்ந்தன நாட்கள் சில மாதங்களில் மனைவி கர்பவதியகவே நிலைமை மாற தொடங்கியது. வீடு உற்சாகத்தில் திளைத்தது ஆளாளுக்கு அவளை கொண்டாட ஆரம்பித்தோம்.

மாசமா இருக்கும்போது என்னவெல்லாம் புடிக்குமோ அதெல்லாம் வாங்கி கொடுக்கணும் புடிச்சத சமைச்சு போடணும் - இது என் அம்மா

நானும் அவளிடம் கேட்கிறேன்

உனக்கு என்னவெல்லாம் சாப்பிட புடிக்கும் சொல்லு

அதெல்லாம் ஒன்னும் வேணாம்

இல்ல சொல்லு நான் வற்புறுத்தி கேட்கிறேன்

பிடிக்குமென சிலதை சொல்ல

முன் சமயங்களில் என்ன சமையல் செய்யலாம் என்ற விவாதம் வரும்போது இதையெல்லாம் சொல்லி இருக்கிறாள் நானும் சாதாரணமாய் அதையெல்லாம் மறுத்து இருக்கிறேன் ஆனால் அவளுக்கு பிடிக்குமென சொன்னதில்லை.

இதெல்லாம் உனக்கு புடிக்குமா இதுவர சொன்னதே இல்ல ..?

ம்ம்ம் இப்போதானே கேக்குறீங்க.

அவள் சிரித்து கொண்டே சொல்ல எனக்குள் சுளீரென ஒரு குற்ற உணர்ச்சி ஏற்பட்டது.

பிரசவம் நெருங்க இயல்பாய் ஒரு பதற்றம் தொற்றி கொண்டது இன்னும் சில தினங்களில் இங்கே ஒரு குழந்தை இருக்கும் என்ற எண்ணமே ஆனந்த கூத்தாட வைத்தது.

நாங்கள் விரும்பிய படியே அழகிய பெண் குழந்தை நார்மல் டெலிவரிதான் .

நான் நினைத்து இருந்தேன் பிரசவம் ஆன பெண்கள் ஒரு வாரம் பத்துநாள் என படுக்கையிலேயே இருப்பார்கள் என ஆனால் இவள் மறுநாளே சாதரணமாக நடமாட ஆரம்பித்தாள் யாராவது பெரியவர்கள் குழந்தையை பார்க்க வந்தால் சொல்ல சொல்ல கேட்காமல் கட்டிலிலிருந்து இறங்கி எழுந்து நின்று கொள்வாள் மரியாதையை நிமித்தமாய்.

இவளில் இந்த செய்கை குறித்து உறவினர்கள் புகழ்ச்சியாய் பேச எனக்கோ மிகவும் பெருமையாய் இருந்தது.

பெண்களின் குணம் எப்படி இருந்தாலும் தாய் ஆன பிறகு எல்லா பெண்களும் ஒரேமாதிரித்தான் இருக்கிறார்கள். கோபம்,ஆத்திரம் இவைகள் எல்லோருக்கும் பொதுவானதுதான் ஆனால் குழந்தை கவனிப்பில் எப்போதும் பொறுமை மட்டுமே காட்டுகிறார்கள் நள்ளிரவில் குழந்தை அழுதாலும், மலம் கழித்தாலும் கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் கவனிக்கும் தன்மை இயல்பாகவே வந்து விடுகிறது.

குழந்தையையும் கவனித்துகொண்டு எனக்கு செய்யும் பணிவிடைகளிலும் எந்த குறையும் வைக்கவில்லை .

தாய்மை என்ற விசயத்தை என் தாயிடம் உணர்ந்ததைவிட மனைவியிடமே அதிகம் தெரிந்து கொள்ள முடிந்தது . இப்போது அவள்மேல் ஒரு மரியாதையை ஏற்பட துவங்கியது .

வீட்டு வேலைகள் குழந்தை வளர்ப்பு என அவள் சுமை எனக்கு புரிந்தது..!

சில வருடங்கள் போக...! இப்போது இரண்டாவது குழந்தை...! முதல் குழந்தை நார்மல் டெலிவரி ஆனால் இரண்டாவது சிசேரியன்.

இரண்டாவது குழந்தை பிறந்தவுடன் மயக்கத்தில் இருக்கும் அவளை பார்க்க செல்கிறேன் தூக்கம் போலவும் இல்லாமல் ,மயக்கம் போலவும் இல்லாமல் மூக்கில் எதோ ஒரு குழாய் இருக்க அவள் இருந்த நிலை என்னை ஒரு மாதிரி ஆக்கிவிட்டது. அப்போது நினைத்து கொண்டேன் இவளிடம் இனி எதற்கும் கோபப்பட கூடாது என்ன சொன்னாலும் பொறுத்து கொள்ள வேண்டும் என்று ..!

சில பெண்கள் நினைத்து கொள்ளலாம் கணவன் தன்னிடம் அடங்கி போகிறான் என்று ..! அப்படி அல்ல...! சில நேரங்களில் மனைவி செய்த தியாகங்களுக்காகவும் அவள் அடைந்த சிரமங்களுகாகவும் மனைவிக்கு செலுத்தும் நன்றி கடனே அந்த அடங்கி போதல். மனைவியை ஜெயிக்க விட்டு அதனால் அவள் அடையும் சந்தோசத்தை ரகசியமாய் பார்த்து ரசித்து கொள்ளுதல் எல்லாம் ஒரு நன்றி கடன்தான் .

இரண்டு குழந்தைகள், வீட்டு வேலைகள், குழந்தை படிப்பு, பாடம் சொல்லி கொடுத்தல், இதற்க்கு இடையே நான் செய்யும் அலும்புகள் எல்லாவற்றையும் சமர்த்தாக கவனித்துகொள்ளும் அவளிள் அந்த மனைவி ,இல்லத்தரசி என்ற ஸ்தானத்தின் பிரம்மாண்ட விஸ்வ ரூபத்தின் முன் ''நான்'' கொஞ்ச கொஞ்சமாக நலிந்து கொண்டு இருந்தேன். பால குமாரன் ,கிரிக்கேட் எஸ் .ஜானகி எல்லாம் என் கவனிப்பில் இருந்து விலகி செல்ல ..!

ஒற்றை மாட்டு வண்டியாக குடும்பத்தை ஓட்ட நினைத்தேன் ஆனால் சில சமயங்களில் அவள் ஒற்றை மாடாக வண்டியை இழுக்க நான் அதில் பயணம் செய்வதாக உணர்ந்தேன்.!

எங்களுக்குள் எந்த கெமிஸ்ட்ரியும் ஒர்க் அவுட் ஆகவில்லை என நினைத்தேன்

ஆனால்...! இப்போது எங்களுக்குள்...!

தமிழ் ,ஆங்கிலம் ,வரலாறு ,புவியியல்,இயற்பியல்,தாவரவியல் ,விலங்கியல் வேதியல் எல்லாம் ஒர்க் அவுட் ஆகி போனது ..

(படித்ததில் பிடித்தது)

https://www.youtube.com/watch?v=kXiNKTXbHCk

g94127302
25th July 2015, 05:49 PM
தாம்பத்யம் - 3

தன்னம் தனிமையிலே, உடல் தள்ளாடும் வயதினிலே...................... வெறும் உணர்ச்சி துடிப்பில் வாழ்கின்ற இளமைக்கால வாழ்க்கையை விட...இவ்வாறு இன்பங்களை மனதோரம் சுமக்கின்ற முதுமை வாழ்க்கைக்குத்தான் அர்த்தம் அதிகம் இருக்கின்றது .

"பத்து முறை பிறந்தாலும் உங்கள் பக்கத்துணை நான் வருவேன் - பெற்ற பிள்ளை மறந்தாலும் - நான் பிள்ளைப்போல் வளர்த்திருப்பேன் ..... "

அருமையான பாடல் GG & சௌகார் நடிப்பில் காலத்தை கடந்து நிற்கும் உன்னத வரிகள்

https://www.youtube.com/watch?v=dvIQFMz771Q

Yukesh Babu
25th July 2015, 11:49 PM
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவனென்று போற்றுவோம்
அன்னை இதயமாக அன்பு வடிவமாக வந்து வழிகாட்ட வேண்டும் என்று வணங்குவோம்

கடவுளிலே கருணை தனை காணலாம்
அந்த கருணையிலே கடவுளயும் காணலாம்
நல்ல மனசாட்சியே தேவன் அரசாட்சியம்
அங்கு ஒருபோதும் மறையாது அவன் சாட்சியாம்

பாவம் என்ற கல்லறைக்கு பலவழி
என்றும் தர்மதேவன் கோவிலுக்கு ஒரு வழி
இந்த வழி ஒன்று தான் எங்கள் வழியென்று நாம்
நேர்மை ஒருநாளும் தவறாமல் நடை போடுவோம்

இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்
அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்
அந்த ஒளி காணலாம் சொன்ன வழிபோகலாம்
நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்


https://www.youtube.com/watch?v=rJ8F1ANSyuE

Yukesh Babu
25th July 2015, 11:53 PM
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

https://www.youtube.com/watch?v=usLFng3LZiE

vasudevan31355
26th July 2015, 08:07 AM
ரவி சார்,

'திருக்குறளும் , திரை இசையும்'

அருமையான தலைப்பின் தொடர். அதுவும் திருக்குறளை முதலாக வைத்து. உங்களுக்கு சொல்ல்லித் தர வேண்டுமா? அழகழான சம்பவங்களுடன் தூள் கிளப்பி விடுவீர்கள். தாம்பத்யம் பதிவுகளும் அருமை. மனைவியின் பெருமையை உணர்த்தும் பதிவை இங்கே பதித்ததற்கு நன்றி!

'அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே' என்ற நம் 'அறிவாளி'யின் பாடல் எடுத்து தொடரை ஆரம்பித்து வைத்தது மிகப் பொருத்தமே. உங்கள் கான்செப்ட்கள் வியக்க வைக்கிறது.

அதே போல 'இன்று நமதுள்ளமே' பாடல் என்னை மிக மிக கவர்ந்த பாடல். மிக அழகாக அருமையாக நெஞ்சில் பதிந்த பாடல். பாடகர் திலகத்தின் குரல் அவ்வளவு அம்சமாக இருக்கும். அருமையான பாடலுக்கு உள்ளம் மகிழ்ந்த நன்றி.

'தன்னந் தனிமையிலே வரும்' என்று எனக்குத் தெரியும்.:)

தங்களுடைய பாராட்டுகளுக்கும் நன்றி!

தூள் கிளப்புங்கள்.

vasudevan31355
26th July 2015, 08:19 AM
குமார் சார்,

தங்கள் விளம்பர நிழற்படங்கள் மூலம் எங்களையெல்லாம் அந்தக் காலக் கட்டத்திற்கே அழைத்துச் செல்கிறீர்கள். ஒவ்வொரு விளம்பரங்களையும் பார்க்கும் போது அந்தந்தப் படங்களைப் பார்த்த ஞாபகங்கள் நெஞ்சில் நிழலாடுகின்றன. தங்கரங்கன் விளமபரத்தில் 'நவரச நாயகன்' தேங்காய் சீனிவாசன் என்பதைப் பார்த்த போது ஏனோ என்னையுமறியாமல் சிரிப்பு வந்தது. தாய் மீது சத்தியம், சிகப்பு ரோஜாக்கள் (கடலூர் பாடலி) ஏணிப்படிகள், பிரியா, மனிதரில் இத்தனை நிறங்களா (நியூசினிமா) ருத்ரதாண்டவம் (ரமேஷ்) என்று இப்படங்களை நண்பர்களுடன் சேர்ந்து ஜாலியாக அரட்டை அடித்துக் கொண்டே பார்த்தது நினைவுக்கு வந்தது. மீள்நினைவுகளில் மனம் உற்சாகம் ஆனது.

ரொம்ப நன்றி குமார் சார். ஆமாம்! திடீரென்று ஏன் லதா படம்? நீங்களும் என்னையும் வினோத் சாரையும் போல லதா ரசிகரா?:)

vasudevan31355
26th July 2015, 08:22 AM
//ஸ்கூல் மாஸ்டர் தமிழில் எங்கள் குடும்பம் பெரிசு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதி மதுரா அனுராதா கன்னட ஸ்கூல் மாஸ்டர் பாடலின் மெட்டே தமிழிலும் பயன்படுத்தப்ப்ட்டது//

தகவலுக்கும், பாராட்டிற்கும் நன்றிகள் ராகவேந்திரன் சார்.

vasudevan31355
26th July 2015, 08:26 AM
சின்னா!

அவசர அவசரமாக ஆங்கிலத்தில் டைப்பா? ஏன் அவ்வளவு சிரமம்? நிதானமாக வேலை முடித்துவிட்டு வாருங்கள். ஒன்றும் அவசரமில்லை. பயணங்கள் எல்லாம் ஜாலியாய் இருந்ததா? இங்கு ஸ்டிரைக். ஆறாவது நாளாகத் தொடர்கிறது. தற்சமயம் வேலையில்லா ஐடிஐதாரி.:)

sivajisenthil
26th July 2015, 08:49 AM
திருக்குறள் திரைக்குரல் தொகுப்பினை சிறப்புற சீரமைத்து ரவி சார் வழங்கிடும் நேர்த்தி வியப்பு கலந்த மகிழ்ச்சியளிக்கிறது. வாழ்த்துக்கள்!
senthil

sivajisenthil
26th July 2015, 08:59 AM
வாசு சார்
நாளுக்கு நாள் மெருகு குலையாத பொன்னான பதிவுகளில் வைர நெஞ்சமாக திகழும் தங்களின் எழுத்தாற்றல் நடிகர்திலகம் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட எண்ணிடும் இளம் தலைமுறையினருக்கு ஒரு முத்தாரமே !!
நன்றிகளுடன் செந்தில்

Hope things will become amicable at your work place and you will resume your duties soon, my prayers
senthil

Varadakumar Sundaraman
26th July 2015, 09:17 AM
RARE PICS FROM V.C. GUGANATHAN'S BOOK.
http://i61.tinypic.com/23sjg1v.jpg

Varadakumar Sundaraman
26th July 2015, 09:18 AM
http://i58.tinypic.com/2isw0sl.jpg

Varadakumar Sundaraman
26th July 2015, 09:19 AM
http://i62.tinypic.com/kb8ubs.jpg

g94127302
26th July 2015, 09:20 AM
யுகேஷ் - மிக்க நன்றி - இங்கு பதிவிடும் தலைப்புக்கள் உங்களுக்கும் பிடித்த வண்ணம் இருப்பதற்காகவும் , உங்களை பங்கு ஏற்க தூண்டும்விதமாக இருப்பதற்காகவும் . " இந்த பாடல்களை வைத்துதான் ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்தேன் - நீங்கள் முந்திக்கொண்டு விட்டீர்கள் - உங்கள் பங்கேற்ப்பு இங்கு இன்னும் வலிமை பெறட்டும் .

Varadakumar Sundaraman
26th July 2015, 09:20 AM
http://i60.tinypic.com/3329c0x.jpg

Varadakumar Sundaraman
26th July 2015, 09:21 AM
http://i59.tinypic.com/307nho9.jpg

Varadakumar Sundaraman
26th July 2015, 09:22 AM
http://i57.tinypic.com/k4yyid.jpg

Varadakumar Sundaraman
26th July 2015, 09:24 AM
http://i57.tinypic.com/123ky9y.jpg

Varadakumar Sundaraman
26th July 2015, 09:25 AM
http://i61.tinypic.com/fxfr06.jpg

Varadakumar Sundaraman
26th July 2015, 09:26 AM
http://i59.tinypic.com/jkhkw5.jpg

Varadakumar Sundaraman
26th July 2015, 09:27 AM
http://i58.tinypic.com/2ues5fm.jpg

sivajisenthil
26th July 2015, 09:40 AM
வாசு சார்

குழந்தை உள்ளம் திரைப் படத்தையும் ஒதுக்காது ஓர் அன்(னை)னப் பறவை போல பாலை நீரிலிருந்து பிரித்தெடுத்து பாடல்களுக்கு சுவை மதிப்பூட்டல் அளித்து ரசிக்க வைத்தமைக்கு நன்றி


உங்கள் இடைவெளியற்ற தேடுதல் குணமே உங்களை விண்ணளாவிய பதிவர் திலகமாக உயர்த்தியிருக்கிறது !
நடிகர்திலகம் என்ற புயலின் மையத்தில் இருந்து கொண்டே பல்வேறு கரைகளைக் கடந்து பதிவு மழை பொழியும் உங்கள் நிகரற்ற ஆற்றல் விடா முயற்சி எதையும் முறைப்படுத்தி செய்வன திருந்தச் செய்தல் சுவை மதிப்பூட்டல் ...எங்களுக்கு எட்டாக் கனியே!
இளைய தலைமுறையினரின் இதயக் கனியே !!

https://www.youtube.com/watch?v=lcSF8OVHyUY

https://www.youtube.com/watch?v=NyxTVJ_gpTY

https://www.youtube.com/watch?v=dM1YcW_JDmQ

g94127302
26th July 2015, 09:46 AM
திருக்குறளும் , திரை இசையும் -4


http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/Valluvar%20Kottam-Chennai_zpsajtwvmxl.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/Valluvar%20Kottam-Chennai_zpsajtwvmxl.jpg.html)

குறள் 4:

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.


வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு - ஒரு பொருளையும் விழைதலும் வெறுத்தலும் இல்லாதவன் அடியைச் சேர்ந்தார்க்கு; யாண்டும் இடும்பை இல - எக்காலத்தும் பிறவித் துன்பங்கள் இல்லை .

ஆடை அணிகலன் ஆடம்பரங்கள் ஆண்டவன் விரும்புவதில்லை - அங்கொரு கண்ணும் , இங்கொரு கண்ணும் ஆலய வழிப்பாடு இல்லை

" பல நூல் படித்து நீ அறியும் கல்வி
பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

தன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வை
கண்டு தொழில் புரிந்து உயிர் வளர்க்கும் ஏழை
அவன் இதழ் மலரும் சிரிப்பொலியை கேட்டேன்
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்

பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்அவன் கருணை உள்ள நெஞ்சினிலே
கோயில் கொள்கிறான்


https://www.youtube.com/watch?v=Ry7xzM477BI

https://www.youtube.com/watch?v=k3YN6RCZHs0

vasudevan31355
26th July 2015, 11:12 AM
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்

http://2.bp.blogspot.com/-HRNJSnA1-84/TenskpB9duI/AAAAAAAAAuY/mP0R6cDrGMY/s320/spb.jpg

(நெடுந்தொடர்)

20

'முத்துச் சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு'

'குழந்தை உள்ளம்' கதைப் பதிவு படித்து முடித்து விட்டீர்கள் தானே!

இப்போது பாலாவின் தொடருக்கு வருவோம்.

http://i.ytimg.com/vi/ULjpODgUpyY/hqdefault.jpg

பாலாவின் அற்புதமான ஒரு பாடல் இந்தப் படத்தில் ஒலிக்கும் சுசீலாவுடன் இணைந்து. அபூர்வமானதும் கூட. பாலாவை அறிமுகப்படுத்திய எஸ்.பி.கோதண்டபாணி அவர்களின் இசையிலேயே பாலா தமிழில் அட்டகாசம் புரிந்த பாடல்.

http://upload.mediatly.com/card_pictures/7b/a6/3f/7ba63f26-28b4-4abf-84d8-7d8ce1430e66.jpg

இசையமைப்பாளர் கோதண்டபாணி பற்றியும், தான் பின்னணிப் பாடகராக நிலைக்க பட்ட கஷ்டங்களையும் பற்றி நமது பாலா என்ன சொல்கிறார்?

(நன்றி spbindia.blogspot.in இணையதளத்திற்கு)

SPB on his debut film:

S P Balasubramanyam

http://1.bp.blogspot.com/_kNcjDcXkq94/R6VINvCD9kI/AAAAAAAAAHI/13Np1fwzgNE/s400/padmanabham.jpg

This is my debut film. (Sri Sri Sri Maryada Ramanna 1967) (telugu) It happened because of Sree Kodandapani gaaru. He was one of the judges when I contested in a singing competition in 1963 in Madras. After the program, he came to me and said that I'd become a popular singer and will keep on singing for the next forty years! And, true to his blessings, I find myself still singing, even after forty years! He took me to S. Bhavanarayana gaaru, introduced me, and recommended me but nothing happened on that front. I was disappointed and went back to college to complete my second year AMIE.

Again, Kodandapani gaaru called me one day and took me to Padmanabham and asked meto sing a song. I sang the title song of mErE mehboob, pibarE raamarasam, etc.to Padmanabham, who liked my voice and assured that he'd definitely give me a chance. Apart of the song Emi yee vinta mOham! was intially supposed to be sung by Ghantasala maasTaaru. He went to his native place to attend to his mother who fell ill and was thus unable to come to the recording. As the shooting neared, they made me sing it on an adhoc basis, with an intention to replace it with Ghantasala maasTaaru's voice if it was not as good. Though I had only one charaNam to sing, I practised the whole song. On the day of recording, December 15, 1966, no car came to pick me up.

I waited for sometime and went the studio on my bicycle. Until I went to Vijaya Gardens, I had a feeling that they might not have liked my voice, but when I reached I was informed that the car had a mechanical problem. After waiting for some time, I got a call from Kodandapani gaaru and I recorded the whole song in twenty minutes. I was paid Rs. 300/-as the remuneration for this song. I mailed Rs. 100/- to my father. At that time, I used to get Rs. 80/- per month from my home to meet my expenses in Madras as I was staying in a room along with other friends for my studies. While sending the money, I also wrote to my father that he need not send me money for another two months.

My first song along with bigwigs like P.B. Sreenivos, Raghuramayya gaaru, and P. Susheela was a memorable experience. When Ghantasala maasTaaru returned from the village they showed the song to him. He said that my voice was good and insisted that the voice should be kept as is in the song. It was his blessings and S.P. Kondandapani gaari blessings, which I cannot forget even after forty years...

பாலா பின்னணிப் பாடகராக ஆகப்பட்ட சிரமத்தை இப்போது நாம் தெரிந்து கொண்டோமல்லவா!

எனவே தங்கப் பாடகரை நமக்கெல்லாம் அறிமுகப்படுத்திய இசையமைப்பாளர் கோதண்டபாணி அவர்களுக்கு நம் வாழ்நாள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வோம். மதுர கானமும் அவருக்கு தன் மகத்தான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

காட்டில் ஜெமினிக்கும், காட்டுவாசிப் பெண் வாணிஸ்ரீக்கும் டூயட். பி.பி. ஸ்ரீனிவாஸ் அவர்களுக்குப் பிறகு ஜெமினிக்கு பாலா மிக அம்சமாகவே பின்னணி பாடகராகப் பொருந்தினார். கவனியுங்கள். இயற்கை என்னும் இளைய கன்னி, கற்பனையோ கை வந்ததோ, சிட் சிட் சிட் எங்கே போவோம், முத்துச் சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு, மங்கையரின் மகராணி, ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு என்று பாலா ஆரம்பத்தில் ஜெமினிக்கு அதிகமாகவே பாடி அத்தனையும் ஹிட் ஆயிற்று.

பாடல் படமாக்கலில் ஒன்றும் விசேஷம் இல்லை. ஆனால் ஜெமினி கச்சிதமாக, அழகாக, இளமையாகத் தெரிகிறார். நைட் கவுனுடன் பாடலைப் பாடுகிறார். தலையில் ஒற்றை பெரிய ரோஜாவுடன், நெற்றியில் ஸ்ரீதரின் 'சித்ராலயா' லோகோ போல பொட்டிட்டு (நங்கூரப் பொட்டு போலவும் தெரிகிறது) காதில் பெரிய ஜிமிக்கி அணிந்து, முகவாய்க் கட்டையில் ஃ போன்ற மூன்று கரும் புள்ளிகளுடன், கால்களில் தண்டையுடன், கைகளில் நிறைய கருப்பு வளையல்களுடன், நாகரீகக் காட்டுப் பெண் சேலையணிந்து வாணிஸ்ரீயும் அழகாத்தான் இருக்கிறார். அந்தக்கால முகத்தோடு முகம் வைத்தல், முகவாய்க் கட்டைகளை இணைத்தல், கன்னத்தோடு கன்னம் உரசல், இருவரும் இணைந்து சைட் குளோஸ் -அப் போஸ் தருதல் என்று அத்தனையும் இந்தப் பாடலிலும் உண்டு.

ஆனால் வாணிஸ்ரீயிடம் 'முன்னிடை மெலிந்து நூலாக' என்று ஜெமினி பாடும் போது சிரிப்பு நமக்கு பொங்கித்தான் வருகிறது.

பாலா தமிழுக்கு வந்த புதிதில் பாடியதால் கொஞ்சம் தமிழ் உச்சரிக்க சிரமப்படுவது போல் தெரியும். 'பூ வண்டு' என்பதை 'பூ வந்து' என்று உச்சரிப்பது போலத் தோன்றும்.

சரணங்களுக்கிடையில் சுசீலா அம்மா தரும் 'லா லா ல லா' ஹம்மிங்குகள் குளிர்த் தென்றலின் சுகம். மூன்றாவது சரணம் மட்டும் சுசீலா அம்மா அருமையாகப் பாடுவார் அந்த சரண வரிகள் 'தேன் தரும் நிலவு' போலவே. செட்-அப் முழு நிலவு 'பளிச்'சென்று காய, இரவுப் பின்னணியில் இந்த வரிகள் அருமையாகப் படமாக்கப் பட்டிருக்கும்.

நான் அப்போது இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் ஏ.எல்.ராகவன் தான் இப்பாடலைப் பாடுகிறாரோ என்று மனதிற்குள் நினைத்துக் கொள்வேன். நீங்கள் நன்றாக உன்னிப்பாக கவனித்தீர்களானால் ஏ.எல்.ராகவன் குரல் போலவே பாலாவின் குரல் இருக்கும். 1969-ன் படம் என்பதால் பாலாவின் குரல் மிக இளசாக இருக்கும்.

மிக அமைதியான பாடல். ரசிக்கத் தகுந்த ஆரம்ப கால பாலாவின் அபூர்வ ஜெம். பாடல் வரிகளை அளித்தது கவிஞர் கண்ணதாசன். இசை இன்ப மயம். பாடலில் தெலுங்கின் சாயல் வராமல் பார்த்துக் கொண்டது கோதண்டபாணியின் சாமர்த்தியம். இரண்டு எஸ்.பி.க்களான குருவும், சிஷ்யனும் பங்களித்து கலக்கிய பாடல்.

http://i.ytimg.com/vi/xTA8KQ6Q6BI/hqdefault.jpg

முத்துச் சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு
குடி கொண்டதே இன்பத் தேன் உண்டு
முதல் நாள் மயக்கம் வரக் கண்டு
மோனத்தில் ஆழ்ந்தது சுவை கொண்டு

முத்துச் சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு
குடி கொண்டதே இன்பத் தேன் உண்டு

தலைமகன் செய்தது சோதனையோ
தலைவிக்கு இன்பத்தின் வேதனையோ
கலைகளில் ஓவியம் ரசிக்கின்றதோ
கனவினிலே கண்டு சிரிக்கின்றதோ

முத்துச் சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு
குடி கொண்டதே இன்பத் தேன் உண்டு

முத்தமிட்ட இதழே பாலாக
முன்னிடை மெலிந்து நூலாக
கட்டி வைத்த கூந்தல் அலையாக
கட்டி வைத்த கூந்தல் அலையாக
கன்னங்கள் இரண்டும் விலையாக

முத்துச் சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு
குடி கொண்டதே இன்பத் தேன் உண்டு

தேன் தரும் நிலவே நீ சாட்சி
தென்றல் காற்றே நீ சாட்சி
வானும் நிலவும் உள்ளவரை
வளரட்டும் காதல் அரசாட்சி
வளரட்டும் காதல் அரசாட்சி

முத்துச் சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு
குடி கொண்டதே இன்பத் தேன் உண்டு
முதல் நாள் மயக்கம் வரக் கண்டு
மோனத்தில் ஆழ்ந்தது சுவை கொண்டு

முத்துச் சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு
குடி கொண்டதே இன்பத் தேன் உண்டு


https://youtu.be/xTA8KQ6Q6BI

போனஸ் இணைப்பு.

http://3.bp.blogspot.com/_VDa-LO0uvAQ/RoaSPUOVLLI/AAAAAAAAAo0/4TZK0X8R1pg/s400/photo_3.jpg

பாலா 1966 டிசம்பர் மாதம் 15ம் தேதி பாடி, பதிவாகி, 1967 ல் ரிலீஸ் ஆன, 'ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாத ராமண்ணா' தெலுங்குப் படத்தின் பாலாவின் முதல் பாடல். ('Emi Ee Vintha Moham') கோதண்டபாணியின் இசையில். பாலாவுடன் பி.பி. ஸ்ரீநிவாஸ் அவர்களும், ரகுராமையா அவர்களும் இணைந்து பாடியிருப்பார்கள்.

ராஜஸ்ரீ ஒற்றையாய் நடுவில் ஆட, தெலுங்கு உலகின் சூப்பர் ஸ்டார்கள் கிருஷ்ணா, சோபன்பாபு, ராமகிருஷ்ணா, ஹரநாத் (ராஜா) நால்வரும் அவரை சுற்றி மோக போதையில் அலைய, சோபன்பாபுவுக்கு ஒலிப்பது நம் பாலாவின் குரல். 'விளையும் பயிர் முளையிலேயே தெரியும்' என்று அட்டகாசமாக நிரூபித்திருப்பார் பாலா.

பாடல் அருமை. இதையும் கேட்டு மகிழுங்கள்.


https://youtu.be/Jc6V4CcgCSI

vasudevan31355
26th July 2015, 01:22 PM
http://i58.tinypic.com/8zpjq8.jpg

g94127302
26th July 2015, 01:25 PM
தாம்பத்யம் -4


....வாழ்கையில் வெற்றி பெற வேண்டுமானால்
நல்ல நண்பர்கள் தேவை
வாழ்நாள் முழுவதும்
வெற்றி பெற வேண்டுமானால்
ஒரு நல்ல மனைவி தேவை ---

உன்னை கரம் பிடித்தேன் வாழ்க்கை ஒளிமயமானதடி
உன்னை மணந்ததினால் சபையில் புகழும் வளர்ந்ததடி

https://www.youtube.com/watch?v=NC3QQL3cMlg

என் தேவையை யார் அறிவார் உன்னைப் போல் தெய்வம் ஒன்றே அறியும் ------

" என்னை போல வாழ்ந்தவர்கள் குறைவு - என் தேவன் தந்ததிந்த நிறைவு "

https://www.youtube.com/watch?v=y7alUNh9U-0

தாம்பத்யத்தின் இனிமையை இந்த பாடல்களை விட வேறு ஏதாவது மிக அழகாக எடுத்துச்சொல்லிவிடுமா ?? கண்டிப்பாக முடியவே முடியாது .

====

40 வருடங்களுக்கு மேல் ஆகியும் இப்படிப்பட்ட அருமையான பாடல்கள் அழிவதில்லை ; நம் மனங்களை விட்டு நீங்கு வதில்லை இனி இப்படிப்பட்ட பாடல்கள் வரப்போவதும் இல்லை - தமிழ் சமுதாயத்தின் அடையாளச்சின்னம் சிவாஜி - ஆயிரம் ஆஸ்கர் அவார்டுகளை இவரது காலடியில் கொட்ட வேண்டும் -கண் நடிக்கிறது - புருவம் நடிக்கிறது - அவரை விட அவரை வைத்து கோடீ ஸ்வரர்கள் ஆனவர்கள் ஒரு கோடி - அவர்கள் இன்னும் நடித்துக்கொண்டிருப்பதால் - மணிமண்டபம் இன்னும் வராமல் நம்மிடம் நடித்துக்கொண்டே இருக்கிறது ------

=====

g94127302
26th July 2015, 01:46 PM
வாசு - "குழந்தை உள்ளத்தை" மிகவும் ரசித்தேன் - எனக்கென்னவோ gg க்கு pbs அல்லது amr இவர்கள் குரல்கள் பொருந்தியதைப்போல spb யின் குரல் அவ்வளவு கச்சிதமாக பொருந்தவில்லை என்றே தோன்றுகின்றது . மன்னிக்கவும் - இது என் தனிப்பட்டக் கருத்து . இந்த படத்தில் ggக்கு யாரோ - " இது காதல் பாட்டு - கண்களில் உணர்ச்சிகளை காட்டினால் இன்னும் நன்றாக இருக்கும் " என்று சொல்லியிருப்பார்கள் என்று நினைக்கிறேன் . காதல் உணர்ச்சிகள் என்ற பெயரில் சில இடங்களில் அவர் கண்களை உருட்டும் போது - தனியாக இந்த பாடலை ரசிக்க பயமாக இருந்தது . மற்றபடி spb யின் குரல் இனிமையில் தமிழில் அவருக்கு ஏற்ப்பட்ட தடுமாற்றம் பெரிதாக தெரியவில்லை . போனஸ் ( 20% ஆ அல்லது 8.33% ஆ ??) இணைப்பு மிகவும் அருமை

vasudevan31355
26th July 2015, 02:02 PM
//போனஸ் ( 20% ஆ அல்லது 8.33% ஆ ??) இணைப்பு மிகவும் அருமை//

ரவி சார்,

இங்கு ஆறாவது நாளாகத் தொடரும் ஸ்ட்ரைக்கில் ஆறு நாளும் சம்பளம் கட். (கிட்டத்தட்ட 12000 ரூபாய்) இதில் 'போனஸ் 20% ஆ அல்லது 8.33% ஆ' ? என்று கேள்வி வேறா?:)

ஓ...நீங்க பதிவு போனஸ் பற்றிய சதவீதம் கேட்டீர்களா?:)

அப்புறம் ஜெமினி பற்றிய உங்கள் சந்தேகங்களுக்கு அருமையாக பதில் சொல்வார் நம் அருமை சிவாஜி செந்தில் சார். எஸ்கேப். விடு ஜூட்.:)

vasudevan31355
26th July 2015, 02:23 PM
ரவி சார்

உங்கள் தொடரின் தலைப்புக்கு நான் தரும் பரிசு.

http://i.ytimg.com/vi/9IxLsPjOvEc/maxresdefault.jpg

http://i.ytimg.com/vi/8Rgc2Y6y_gk/maxresdefault.jpg

chinnakkannan
26th July 2015, 07:09 PM
ஹாய் ஆல்

ஒரு வழியாய் மஸ்கட் வந்தாகி விட்டது( ஐந்தரை மணி நேரம் ட்ரைவ்)... ஹாஆஆவ்.. ரெஸ்ட் எடுத்து நாளை மறுபடி ஆஃபீஸ்

வாசு..

ஸ்ட்ரைக் பற்றி நீங்கள் சொன்னது வருத்தமாக இருக்கிறது..கூடிய விரைவில் சரியாகிவிடும் அனைத்தும்.. என்னுடைய ப்ரார்த்தனைகள் எப்போதும் உங்களுடன்..

குழந்தை உள்ளம் கதை க் குழப்பத்தில் - இழையோடிய நகைச்சுவையை மிகவும் ரசித்தேன்.. இந்த முத்துச் சிப்பிக்குள்ளே ஒரு பூ வந்து முன்பு போட்ட போது நீங்கள் எஸ்பிபி தொடரில் போடப் போகிறேன் என்றுசொன்னது மட்டும் நினைவில்.. பாட் மட்டும் மறந்து போயிருந்தது..இப்போது தங்களது வண்ண அழகிய விவரணைகளுடன் ஜோர்..

//ஆனால் வாணிஸ்ரீயிடம் 'முன்னிடை மெலிந்து நூலாக' என்று ஜெமினி// அவர் என்ன பண்ணுவார் பாவம்..கவிஞரின் கற்பனை.. டைரக்டரல்லவா தேர்ந்தெடுத்திருக்க வேண்டும் நாயகியை..

*

தாம்பத்யத்திற்கும் (எல்லா பதிவுகளுக்கும்)குறள் கொடுத்து கொண்டு போயிருந்தால் இன்னும் ஜோராயிருந்திருக்கும் ரவி..

மனைவி அமைவதெல்லாம் பதிவு ஏனோ எனக்கு சுவாரஸ்யமாக இல்லை. கடைசியில் அதை எழுதியவர் நீர் இல்லை..(படித்ததில் பிடித்தது ) என போட்டிருக்கிறீர்கள்.. யாருடையது எனச் சொல்லிருக்கலாம்..

குறளும் இசையும் ஓ.கே.. குறள் என எடுத்து அதில் ஆரம்பிக்காமல் வள்ளுவன் என வரும் பாடல்களைப் போட்டது ட்விஸ்ட் தான்..பாருங்கள் சைக்கிள் கேப் பில் யுகேஷ் முந்திக் கொண்டுவிட்டார்..ஆனால் என்ன அந்தக் குறள்களுக்கும் உங்கள் நேரேஷன் கொடுக்கலாமே.. (ஏதோ எனக்கு மனதில் பட்டதைச் சொல்கிறேன்..)

vasudevan31355
26th July 2015, 07:18 PM
'குழந்தையும் தெய்வமும்' படத்தில் சுசீலா அம்மா நாம் என்றென்றும் நன்றி சொல்லும் அளவிற்கு எப்படி 'நான் நன்றி சொல்வேன்' தந்தார்களோ அதையே தெலுங்கிலும் ('Letha Manasulu') அற்புதமாகத் தந்திருப்பார்கள். தமிழில் ஜெய்சங்கருக்குப் பதில் ஹரநாத். ஹீரோயின் தமிழின் ஜமுனாவேதான். தெலுகுதான் சுசீலா அம்மா வாயில் உச்சரிக்கப்படும் போது எவ்வளவு அழகு! இரண்டையும் கேளுங்களேன். என்ன இனிமையான பாடல்கள்!

'குழந்தையும் தெய்வமும்' தமிழ் 1965 ல் வெளிவந்தது. தெலுகு 'லேத மனசுலு' 1966 ல் வந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழை விட தெலுங்கில் ஜமுனா சற்று முதிர்ச்சியாகத் தெரிவார். தெலுங்கில் இப்பாடலுக்கு லொகேஷனை கம்ப்ளீட்டாக மாற்றியிருப்பார்கள். முழுப் பாடலும் மலைப் பிரதேசத்தில் ஏரி ,அருவி என்று படமாக்கியிருப்பார்கள்.

சுசீலா அம்மாவிற்கு இந்த ஒரு பாடல் போதும். அந்த அமிழ்தக் குரலும், அந்தக் குரலுக்கேற்ற ஜமுனாவின் 'ஜம்'மென்ற முகமும், கொஞ்சமும் அலட்டாத, அருமையான, அவரின் பாடலுக்கான நடிப்பும், மைசூர் பிருந்தாவனத்தைக் கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் காமிராவின் ஒர்க்கும், 'மெல்லிசை மன்ன'ரின் தாலாட்டும் இசையும் இந்தப் பாடலை சிகரத்தில் கொண்டு போய் நிறுத்துகின்றன. ஜமுனாவின் செல்ல முகச் சுளிப்புகளைக் கவனியுங்கள். சொக்கிப் போவீர்கள்.

'நான் நன்றி சொல்வேன்'

http://i.ytimg.com/vi/0VYfAewIyis/0.jpg


https://youtu.be/5oENOUx8olM

http://2.bp.blogspot.com/--Ov8CM3j7zs/VEYaH-p9vQI/AAAAAAABGw4/qa1u0avtWZc/s1600/letha%2Bmanasulu-jamuna-harinath-telugucinemasongs-lyrics.jpg


https://youtu.be/LynKzfuhHhk

Yukesh Babu
27th July 2015, 01:34 AM
மனிதர்கள் அதிகம் நடமாட்டம் இல்லாத , ஏகாந்தமான கானகம் !
அதன் நடுவே ஒரு தடாகம் ...
.அத்தடாகத்திலே , ஆங்காங்கே மலர்ந்த தாமரை மலர்கள் !
நாயகி சரோ , ஒயிலாக நடந்து .... தடாகத்திலிருந்த ஒரு தாமரை இலையை எடுத்து ........ குருத்து போன்ற தனது அழகான கரங்களில் ....தடாகத்து நீரை எடுத்து ......பின் , .அன்ன நடை பயின்று கார் நின்றிருந்த இடத்தையடைந்து ..நாயகன் எம் ஜி ஆரை , எதிர் நோக்கி , காருக்குள் நோக்க ..... ...அங்கு அவரை காணாததால் .... மருண்டு போய் ...... தன் பெரிய விழிகளால் சுற்றுமுற்றும் பார்வையை சுழலவிட்டு ........பின் ..செய்வதறியாது நின்றிருக்கும் போது ...
அவர் சற்றும் எதிர்பாராத வகையில் , மக்கள் திலகம் காரின் மேல் பகுதியிலிருந்து ' திடீரென்று 'தோன்றி ,
சரோவின் தலையில் செல்லமாக தாளமிட்டவாறு ..
'' பேசுவது கிளியா ''
என்று பாட .....அப்போது சரோ , ஒரு எக்ஸ்ப்ரஷன் கொடுப்பார் பாருங்கள் ...
ஆஹா .....அதியற்புதம் ! சூப்பர் !...
காதுகளில் ஜிமிக்கி ஊஞ்சலாட
'' பாடுவது கவியா
பாரிவள்ளல் மகனா ''
என்று பாடும் அழகே அழகு !
இந்த பாடலை காவியப்பாடலாக்கிய பெருமை , .சாருகேசி ராகத்தில் வெகு அழகாக பாடலை அமைத்த மெல்லிசை மன்னர்கள் + ..கவியரசரின் எளிமையான வரிகள் + திரையில் இப்பாடலுக்கு உயிரூட்டிய மக்கள் திலகம் - சரோஜாதேவி + திரைக்கு பின் இந்த பாடலுக்கு ' நடித்த ' டி எம் எஸ் - சுசீலாம்மா ...!


courtesy net

raagadevan
27th July 2015, 02:33 AM
https://www.youtube.com/watch?v=Zf-CmIKvRIE

Varadakumar Sundaraman
27th July 2015, 07:49 AM
http://i62.tinypic.com/hvcd4p.jpg

Varadakumar Sundaraman
27th July 2015, 07:50 AM
http://i61.tinypic.com/flfxpk.jpg

Varadakumar Sundaraman
27th July 2015, 07:51 AM
http://i60.tinypic.com/2hwi6mr.jpg

Varadakumar Sundaraman
27th July 2015, 07:52 AM
http://i60.tinypic.com/33ae0kg.jpg

Varadakumar Sundaraman
27th July 2015, 07:53 AM
http://i60.tinypic.com/157g4t3.jpg

Varadakumar Sundaraman
27th July 2015, 07:54 AM
http://i58.tinypic.com/k3vq0n.jpg

vasudevan31355
27th July 2015, 11:40 AM
நான் ரசித்த பாடல்.

'வென்றிடுவேன்... உன்னை வென்றிடுவேன்'

http://img254.imageshack.us/img254/7075/vlcsnap92639gr7.png

ஒரு அருமையான பக்தி மற்றும் புராண சம்பந்தப்பட்ட, ஒரு காலத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்து ரசித்த ஒரு போட்டிப் பாடல்.

நாரத முனியின் 'நாராயண' செருக்கை அடக்க அகத்திய முனிவர் நாரதரின் உள்ளங்கையில் ஒரு கிண்ணத்தில் எண்ணெயை வைத்து 'அது துளியும் சிந்தாமல் உலகத்தை ஒருமுறை சுற்றி வர வேண்டும்' என்று கூறிவிட, எண்ணெய் சிந்தி விடக் கூடாதே என்று முழுக் கவனம் வைத்து, அந்த நேரங்களில் 'நாராயணா' நாமத்தை மறந்தவராய் உலகத்தை சுற்றி வர, அதற்கு அகத்தியர் 'இன்று நீர் நாராயணனை எத்தனை முறை நினைத்தீர்?' என்று நாரதரிடம் கேள்வி கேட்க, அதற்கு நாரதர் கடுப்புடன், 'என்னை எங்கே நாராயணனை நினைக்க வைத்தீர்? எண்ணெய் சிந்தாமல் இருக்க வேண்டும் என்றுதானே என்னை நினைக்க வைத்தீர்!' என்று புலம்ப, நாரதராக டி,.ஆர்.மகாலிங்கமும், நாரத முனியாக சீர்காழி கோவிந்தராஜனும் அமர்க்களப்படுத்த.....

தன்னை அவமானப்படுத்திய அகத்தியரை பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு இலங்கை அதிபதி ராவணேஸ்வரனிடம் செல்கிறார் நாரதர். வீணைக்குக் கொடி கொடுத்த வீணைக் கொடியுடைய வேந்தனிடம்

'இசையில், அதுவும் வீணை மீட்டலில் தன்னை மிஞ்ச எவரும் இல்லை என்று அகத்தியர் மார் தட்டுகிறார்'

என்று நாரதர் தெளிவாகப் பற்ற வைக்க, ராவணன் சினந்து அகத்தியரை சந்திக்க வருகிறான்.

அவனை வரவேற்கும் அகத்தியர் அவன் வந்த காரணம் கேட்கிறார். 'நீர் வீணை வாசிப்பதில் வல்லவரானால் என்னுடன் போட்டியிட வேண்டும்' என்று ராவணன் கூற, ராவணைன் இசை மகத்துவம் அறிந்த அகத்தியர் முதலில் அதை மறுக்க, ராவணன் சற்றே ஆணவம் கொண்டு அகத்தியரை நையாண்டி செய்ய, இறுதியில் 'ஈசன் ஒருவனுக்குத்தான் கட்டுப்படுவேன்' என்று கூறி அவனுடன் வீணைப் போட்டிக்குத் தயாராகிறார் அகத்தியர்.

http://i.ytimg.com/vi/z5wZVG_oJiI/hqdefault.jpg

அகத்தியரின் ஆசிரமக் குடிலிலேயே போட்டி நடக்க ஏற்பாடாகிறது. போட்டிக்கு 'யார் நடுவர்?' என்று ராவணன் கேட்க, 'போட்டியை ஆரம்பித்து வைத்த நீங்களே நடுவரையும் தேர்ந்தெடுத்து விடுங்கள்' என்று அகத்தியர் கூற, கலைமகளை நடுவராக இருக்க அழைக்கிறான் ராவணன். கலைமகளோ 'எதற்கு வம்பு?' என்று நயமாக இருவரிடமும் பேசி 'நம்மாலாகாது' என்று ஒதுங்கி விடுகிறாள்.

இறுதியில் 'இசைக்கு உருகாதது எது?' என்று இருவரும் ஆராய்ந்து இறுதியில் 'கல் உருகாது' என்று முடிவெடுத்து அந்தக் கல்லை வீணை இசையால் யார் உருக வைக்கிறார்களோ அவர்களே வென்றவர்கள் என்று முடிவாகிறது. அதற்கு தென் மலையாம் பொன் மலையைத் தேர்ந்தெடுத்து அந்த மலையை நடுவராக நியமிக்கிறான் ராவணன்.

இப்போது தேவர்கள், மகரிஷிக்கள் சூழ்ந்திருக்க, அகத்தியருக்கும் ராவணனுக்கும் இசைப் போட்டி நடக்க ஆரம்பிக்கிறது.

ராவணேஸ்வரன் வீணையைக் கையில் எடுத்து செருக்குடன் அகத்தியரைப் பார்த்துப் பாட ஆரம்பிக்கிறான்.

'வென்றிடுவேன்... உன்னை வென்றிடுவேன்
நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
எந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்'

என்று கொக்கரிக்கிறான்.

அவன் கொட்டம் அடக்க பதிலுக்கு அகத்தியர் அடக்கமாய், ஆனால் கம்பீரமாய்,

'வென்றிடுவேன்... உன்னை வென்றிடுவேன்
அந்த பைரவி துணைவன் பாதம் பணிந்து
உன்னை வென்றிடுவேன்... உன்னை வென்றிடுவேன்'

என்று சிவனை மனதில் தொழுது ராவணனுக்கு மரண அடி கொடுக்க சித்தமாகி பதிலுக்குப் பாடுகிறார்.

ராவணன் தன்னுடைய இசையில் மயங்கி சிவனே எழுந்து ஓடோடி வந்தவன் என்று ஆண்டவனையே இழிவு பேசி அகந்தை தொனிக்க பாடுகிறான்.

இசை கேட்டு எழுந்'தோடி' வந்தான்
என் இசை கேட்டு எழுந்'தோடி' வந்தான்
உந்தன் இதயத்திலே வாழும் ஈசன் எனைத் தேடி
எழுந்'தோடி' வந்தான்
என் இசை கேட்டு எழுந்'தோடி' வந்தான்

என்று அகத்தியரின் 'எம்பெருமானை' எள்ளல் செய்கிறான். 'தோடி' ராகத்தின் மகிமையையும், அதில் தனக்கிருக்கும் திறமையையும் சாமர்த்தியமாக எடுத்துரைக்கிறான்.

'நடித்தான் தமிழை
படைத்தான் இசையை
வடித்தான் தன்னை மறந்தனனே
முத்தமிழ் புலமை சித்தமமும்
எனது வித்தகம் கண்டு பரிவுடனே
என் இசை கேட்டு எழுந்'தோடி' வந்தான்'

தமிழைப் படைத்து, இசையை வடித்து, நடிப்பின் நாயகனாம்(!)அந்த 'திருவிளையாடல்' புரியும் ஈசனே ராவணன் இசையில் மயங்கி அவனை மறந்தனாம். ராவணன் சொல்லிக் காட்டுகிறான்.

விடுவாரா அகத்தியர்? பதில் சூடு கொடுக்கிறார் பத்துத் தலையனுக்கு.

'ராகத்தின் பெயரை வைத்தே என் ஈசனை எள்ளி நகையாடுகிறாயா?... விட்டேனா பார் உன்னை?' என்று கைவசம் 'ஆரபி' ராகத்தை ஆயுதமாய் எடுக்கிறார்.

ராவணனை சுட்டிக் காட்டி,

'ஆரபிமானம் கொள்வார்?
ஆரபிமானம் கொள்வார்?'

அதாவது,

'இவ்வளவு திமிர் பிடித்த அரக்கனே! ராவணனே! உன் மேல் யார் அபிமானம் (ஆரபிமானம்) கொள்வார்?' என்று பரிதாபக் கேலிக் கேள்வி கேட்கிறார்.

'பெரும் அகந்தையினால் உனது அறிவது மயங்கிட
இறைவனை இகழ்ந்தனையே!
அகந்தையினால் உனது அறிவது மயங்கிட
இறைவனை இகழ்ந்தனையே!
ஆரபிமானம் கொள்வார்?'

என்று செம குடைச்சல் கொடுக்கிறார்.

அது மட்டுமா?...

'வெற்றி எட்டு திசை முட்டவே
பெற்ற வெறியினால் வந்த விளைவிதுவா?
தனித்து நினைத்து மனத்தை மறைத்து
கொடுத்த வரத்தை கணத்தில் மறந்தனையே
ஆரபிமானம் கொள்வார்?'

என்று அவனுக்குப் புத்தி புகட்ட முயற்சிக்கிறார்.

அதற்கு ராவணன் கூறுவது என்ன?

'சண்முகப்பிரியன் என்னும் தைரியமா?
இனிய சங்கீதத்தில் எனக்கு இணையாகுமா?
சண்முகப்பிரியன் என்னும் தைரியமா?
இனிய சங்கீதத்தில் எனக்கு இணையாகுமா?'

'சண்முகப்ப்ரியா' ராகத்தைக் கொண்டு ஷண்முகனின் பிரியனான அகத்தியரை சாடி, அவரை அசைத்துப் பார்க்க முற்படுகிறான் ராவணன். இசையில் 'எனக்கு எவரும் ஈடு இணையில்லை' என்று எக்காளமிடுகிறான்.

http://i.ytimg.com/vi/ClJogW9wYyk/maxresdefault.jpg

அகத்தியர் பதிலுக்கு வரிந்து கட்டுகிறார்.

'நாடகமா? தர்பார் நாடகமா?
அடக்குமுறை தர்பார் நாடகமா?
எதுவும் அவன் செயல் அல்லாமல் கூடிடுமா?
அவன் செயல் அல்லாமல் கூடிடுமா?'

'என்ன? 'தர்பார்' நாடகம் நடத்துகிறாயா? அதுவும் அடக்குமுறை தர்பார் நாடகம். ஈசன் அருள் இல்லாமல் எதுவும் நடந்து விடுமா?'

என்று அறிவுரை கூறுகிறார்.

அதெல்லாம் எங்கே இவன் காதில் விழுகிறது? அடுத்த தற்பெருமைக்குத் தாவுகிறான் ராவணேஸ்வரன்.

"அம்சத்வனி அமைந்த மன்னவன் நான்"

பதிலுக்கு அகத்தியர்,

'அட சும்மா இருய்யா! எல்லாமே உன்னுடயதுதானா? எதற்கு உனக்கு வீண் ஆணவம், அகம்பாவம்?'

என்ற அர்த்தத்தில்,

'அனைத்தும் உன் வச(ம்)ந்தானா? ஆணவம் ஏன்?'

என்று அடக்குகிறார் அடங்காத அரக்கனை.

'மோகன கானம் நான் மீட்டிடுவேன்'---- இது ராவணன்.

'மனோ'லயம்' இல்லை உன் பாட்டினிலே'---- இது அகத்தியர்

'பாகேஸ்வரியோ...பரம்பொருளோ
பாகேஸ்வரியோ...பரம்பொருளோ
பாற்கடலில் துயிலும் சாரங்கனோ
பாற்கடலில் துயிலும் சாரங்கனோ'

என்று அனைத்து தெய்வங்களையும் ராவணன் அலட்சியப்படுத்தி,

'வச்சிருக்கேன்பா ஒரு ராகம்.. எப்படிப்பட்ட கடவுள் ஆயினும் கட்டிப் போட்டுவிடும் ராகம்'

என்பதை இப்படிப் பாடுகிறான்.

'யார் வந்தால் என்ன? காம்போதி'...

என்று காம்போதி ராகத்தை இசைத்துக் காட்டி,

'யார் வந்தால் என்ன காம்போதி
ராகம் ஒன்றே போதும் வென்றிடுவேன்
ராகம் ஒன்றே போதும் வென்றிடுவேன்'

என்று காம்போதி ராகம் மேல் கண்மூடித்தனமான நம்பிக்கை வைக்கிறான் தெய்வங்களைத் தோற்கடிப்பதற்கு.

'நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
எந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்'

தன்னம்பிக்கை கொஞ்சமும் தளராமல் ராவணன் ரகளை செய்கிறான்.

'நீ என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கோ...எனக்கு'...

'கௌரி மனோகரி துணையிருப்பாள்'

தெய்வத்தின் பெயரோடு ராகத்தின் பெயரை சாமர்த்தியமாக நுழைக்கிறார் இருபொருள்பட அகத்தியர்.

அத்தோடு விட்டாரா?.... மிக அழகாக,

'கல்யாணி மணாளன் கை கொடுப்பான்'

என்று 'கல்யாணி' ராகத்தோடு தான் வணங்கும் கல்யாணியின் மணவாளன் துணையும், ஆசியும் தனக்கு உண்டு என்று பதமாகக் கூறுகிறார்.

'சரஸ்வதி என் நாவில் குடியிருப்பாள்
சரஸ்வதி என் நாவில் குடியிருப்பாள்
சத்தியமே நிலைக்கும் வென்றிடுவேன்
சத்தியமே நிலைக்கும் வென்றிடுவேன்.

அந்த 'பைரவி' துணைவன் பாதம் பணிந்து
உன்னை வென்றிடுவேன்
உன்னை வென்றிடுவேன்'

என்று அகத்தியர் ராவணனை நடுக்கம் கொள்ள வைக்கிறார்.

உச்சகட்டத்திற்கு வருகிறான் ராவணன்.

என்ன கேட்கிறான் பாருங்கள் கில்லாடி?

'தபமகரிசரி மபதததபபா தபதா.... சமமா?'

"யோவ் அகத்தியரே! நீ எனக்கு சமமா?" என்று இறுமாப்பு கொள்கிறான்.

அகத்தியரும்,

'கமகசா நிதநி சமகசா... சமமா? நீ சமமா?

என்று அகத்தியரும் இறுமாப்பை எதிர்கொள்கிறார்.

'பநிசரிமகரி நிதநிதப... நீ சரிசமமா?' ----ராவணன்.

'தநிசா நிதாநி (நிதானி) தமகரிசா மதமா? நீ சதமா?'----அகத்தியர்.

என்று கையால் அடக்கல் வேறு இந்த அகத்தியருக்கு. 'நிதாநி' என்பதை 'சற்று நிதானி' என்று அர்த்தம் கொள்ள வைப்பார். மதம் கொண்டு திரிகிறாயா என்று கேட்பார்.

'நிதபமகரிச மநிதா!... நீ பாதக மனிதா'...

அகத்தியரை ஜாடையாகத் திட்டித் தீர்ப்பான் ராவணன்.

'சரிகமகசரி தமபதநி சநிதநிம... பரிகாசமா? சாகசமா?'

அகத்தியர் கொஞ்சமும் சலியாமல், அலட்டாமல் 'பரிகாசம் செய்கிறாயா?.. அதைப் பெரிய சாகசம் என்று நினைக்கிறாயா புத்தி கெட்டவனே!' என்பார் அமர்க்களமான பதிலோடு.

இப்படியே பாடல் ஸ்வரப் போட்டியுடன் தொடரும்.

ராவணன் தன் அவசர புத்தியாலும், செய்கையாலும் வீணையின் கம்பிகளை அசுரத்தனமாக மீட்ட, அந்த அரக்கனின் விரல் வலிமை தாங்க மாட்டாமல் கம்பித் தந்திகள் ஒவ்வொன்றாக அறுந்து போய் வீணை இசைக்க முடியாமல் பாழடைய,

பொறுமையோடு காத்திருந்த அகத்தியர் இப்போது வீணையை அருமையான இசையால் 'பிடிபிடி'யென்று பிடிக்க, 'திருதிரு'வென ராவணன் செய்வதறியாது திகைத்து முழிக்க, அகத்தியரின் அரும் இசையினால் பொன்மலை உருக ஆரம்பித்து விடுகிறது. நடுவராக நின்று அகத்தியரே வெற்றி பெற்றவர் என்று தீர்ப்பையும் கல்மலை தன் உருகலால் கூறி விடுகிறது.

'அகத்தியரே! நாம் இருவருமே சிவ பக்தர்கள்தானே. நம்மில் யார் ஜெயித்தால் என்ன?'

மீசையில் மண் ஒட்டாத குறையாக ராவணன் தோல்வியை ஒத்துக் கொள்ள மனமில்லாதவனாய் இப்படி அகத்தியரிடம் கூறுகிறான்.

இனி வருவதுதான் எல்லாவற்றையும் விட டாப்.

"அகத்தியரே! நான் தோற்றேன் என்று சொல்வதைவிட தாங்கள் வென்று விட்டீர்கள் என்பதை ஒத்துக் கொள்கிறேன்"

என்று போடுவானே ராவணன் தன்னை விட்டுக் கொடுக்காமல் ஒரு போடு! அமர்க்களம்.

அகத்தியர் வென்றதற்கு தன்னிடம் ஏதாவது பரிசு கேட்குமாறு ராவணன் அவரிடம் கூற, அதற்கு அகத்தியரின் வேண்டுகோள் என்ன தெரியுமா?

'இந்தத் தென்னகத்து மக்களை நீங்கள் கொடுமைப்படுத்தாமல் நிம்மதியாக வாழவிட்டால் அதுவே போதும் எனக்கு'

ஈழம் அன்றும் இன்றும் என்றும் தமிழர்களுக்குப் பிரச்சனைதானோ!

ராவணனுக்கும் அகத்தியருக்கும் நடந்த இசைப் போட்டியில் பொதுவாக நின்று தீர்ப்பு வழங்கியதால் அந்தப் பொதுமலை அதற்குப் பிறகு 'பொதிகை மலை' என்று அகத்தியரின் அருள்வாக்கால் பெயர் மாற்றம் பெற்றதாம்.

http://3.bp.blogspot.com/-3QtuU6M6gNo/T43HYSSKaxI/AAAAAAAAA-k/aibAJwU5tlU/s1600/with%2BLakshmi%2Band%2BSeergazhi%2Bduring%2Bthe%2B filming%2Bof%2BAgasthiar.jpg

ராவணனாக நாடகக் காவலரும், அகத்தியராக அம்சமாக குள்ள சீர்காழியாரும் சரியான தேர்வு. மிடுக்குக்கும், தோரணைக்கும் என்றைக்குமே பஞ்சம் இருந்ததில்லை மனோகரிடம். சிசுபாலன், சாணக்யா, இலங்கேஸ்வரன் என்று எத்தனை வேஷங்கள் கட்டியவர்!

ராகங்களின் பெயர்களைக் கொண்டே தற்பெருமைகளும், புத்தி புகட்டல்களும், வசை பாடுதலுமாய் எவ்வளவு அழகான பாடலுக்குத் தகுந்த இருபொருள் அர்த்தம் பொதிந்த வரிகள்!

ஏனோ தானோ என்று எதையோ வெட்டி, ஒட்டி மலை செட் அப் என்று காதில் பூ சுற்றுவார்கள்.

இசை ஏ.பி.நாகராஜனின் ஆஸ்தான 'குன்னக்குடி'. வீணையின் இசை அம்சம்.
.
சும்மா பாடகர் திலகமும், வெண்கலக் குரலோரும் புகுந்து புறப்பட்டிருப்பார்கள். நடிப்பைப் போலவே பாடுபவர்களுக்குள்ளேயும் போட்டிதான். மலை கூட தீர்ப்பு சொல்ல முடியாது.

அற்புதமான போட்டிப் பாடல். மறந்த நண்பர்கள் மீண்டும் ஞாபகப்படுத்திக் கொண்டு இன்புறலாம்.


https://youtu.be/z5wZVG_oJiI

g94127302
27th July 2015, 03:00 PM
வாசு - இன்று பதிவு போட மனமே வரவில்லை - இன்று முழுவதும் - உங்கள் பதிவை படித்துக்கொண்டிருக்கலாம் என்று ஆசைப்படுகிறேன் - நேரம் ஒத்துழைக்கும் என்று நம்புகிறேன் . ஈஸ்வர பட்டம் பெற்றவர்கள் மூன்றே பேர் - ஒன்று சனி - சனீச்வரன் ; இரண்டாவது சண்டீகேஸ்வரர் - மூன்றாவது இராவணன் . அவ்வளவு பெருமை வாய்ந்தவன் தன் சக்தியை எல்லாம் தன் தலை கணத்தால் ( 10 தலைகள் இருந்தால் , தலை கணம் வருவது நியாயம் தான் என்றாலும் ) வீனாக்கிக்கொண்டவன் . அவன் இறைப்பக்திக்கு ஈடாக எதுவுமே சொல்ல முடியாது - அப்படி இருந்தும் தான் கொண்ட கர்வத்தால் ஒரு மனிதனால் மட்டுமே அவன் தன் முடிவை தேடிக்கொண்டான் .

உங்கள் கை வண்ணத்தில் முதல் முறையாக புராணப்படங்கள் ஜொலிப்பதையும் பார்க்கும் பொழுது மிகவும் பெருமையாக இருக்கின்றது . இந்த பாடல் அன்று ஒலிக்காத இடமே இல்லை - மலை உருகும் காட்சி மிகவும் குழந்தைத்தனமாக இருக்கும் ( budget இல் துண்டு விழுந்திருக்கலாம் ) - நல்ல பாடல் , நடிகர்கள் , அவர்களின் அருமைகளை எடுத்துச்சொல்லும் நல்ல நெய்வேலி மணம் .

senthilvel
27th July 2015, 04:31 PM
ஒரே ரூம்.ஒரெ டிரஸ்.எந்தவித ஆட்டங்களும் இல்ல.உடல்மொழிகளாலும்.,முகத்தில் காட்டுகிற உணர்ச்சிகளாலும் மட்டுமே
பாட்டைக் கொண்டு போகணும்.இந்தப் பாட்டோ சோகத்தோட சந்தோசத்தையும் கலந்து பாட வேண்டிய பாட்டு வேற.சோகம் தூக்கலாயிச்சுன்னா பாட்டோட ரசனை மாறிப்போய்விட வாய்ப்புகள் அதிகம்..இந்த பாடலின் சிச்சுவேசனை கேட்கிற யாராயிலிருந்தாலும் அவங்க மனசுல சோகம்தான்தங்கும்.நடிக்கிறவர்களும் சோகத்தைக் காட்டியேதான் நடிப்பாங்க.அதனால் இந்த மாதிரி பாடல்கள் நன்றாக இருந்தாலும் உணர்ச்சி மயமாக நடிப்பு அமையாதபோது அந்த பாடல்கள் காலம்தாண்டி நிற்பதில்லை.

அந்தந்த கோணங்களில் காட்டப்பட்ட நடிகர்திலகத்தின் பாவனைகளும் அசைவுகளும் இப்பாடலை உயரத்துக்கே கொண்டு சென்று விட்டது.அலட்டிக்கொள்ளாத நடிப்பில்அசர வைக்கும் பாடலாக மாறிய அதிசயம் இந்தப் பாடல்.


(கல்யாணமாம் கச்சேரியாம்
பொன்னூஞ்சலாம் பூமாலையாம்
ஜோர் ஜோர் ஜோர் ஜொஜொ ஜொஜோர்)

ஜோர் ஜோர்னு பாரதியின் முகத்திற்கு அருகில் சென்று அந்த வார்த்தைகளை பாடும்போது அந்த காட்சிக்குமேற்கூறிய விளக்கம் மேம்படுத்தப்பட்டிருக்கும்.
TMS ன்குரல் வெளிப்படுத்திய உச்சரிப்பை
பலமடங்காக உயர்த்திக்காட்டிய பாவனை அது.அது காட்சிப்படுத்தப்பட்ட பின்பு தான்TMSக்கே அதன்பலம் புரிந்திருக்கும்.

அதன் பின் ஒரு சிறுநடை.அந்த உடம்பு அசையற பாணியே தனிதான்.சோகப்பாட்டாவது.
வாழ்த்துப்பாடாவது.
அவர் நடந்தாலே போதும்யா.என்ன அழகு.நடைதிலகம்யா.

மறுபடியும் கல்யாணமாம்..,

கல்யாணியில் ஆலாபனை
கண்ணீரில்ஆராதனை(கல்

ஆலாபனையில் முகம் சொக்கவைக்கும்
ஆராதனையில் முகம் மயங்க வைக்கும்.
ஆராதனை என்று முடிக்கும்போது அவர்
மெல்ல கண்மூடி திறக்கும்போது நம்மையுமஅதுபோல் மெல்ல கண்முடி திறக்க வைக்கும் உணர்வைக் கொண்டு வரும்.


இப்போது Backround music

இதுல வருதய்யா அந்த சீன்.நடந்து வந்து
டீப்பாய்அருகில் வந்துமெல்லக் குனிந்து
காகிதங்களைப ப்ப்பூபூ என்று ஊதி தள்ளும் ஸ்டைலுக்கு எந்த நடிப்பிலக்கணம் யாரால் எழுதப்பட்டு உள்ளது?
அட்டகாசமான ACT(K)ING.


நான் வளர்த்த பூங்குருவி வேறிடம்தேடி

இப்போதுகையசைவில் கலங்கடிப்பார்

செல்ல நினைத்தவுடன்அமைந்தம்மா

அதற்கொரு ஜோடி

நிழல்படமாய் ஓடுதம்மா என் நினைவுகள் கோடி

அவரின் நிழலும் நடிப்பதற்கு உண்டான ஆதாரம் இப்போது காட்சிகளாய்...

அந்த நினைவுகளால் வாழ்த்துகிறேன் காவியம் பாடி
(கல்
பாடலை உச்சத்துக்கு கொண்டு சென்ற காட்சி.அழகியல் நடிப்பு எதுஎன்பதற்கு இதுவே சாட்சி.

ஏடெடுத்தேன் எழுதிவைத்தேன்நான் ஒரு பாட்டு

silhouette எனப்படும் நிழல் படத்தில் கூட நடிப்பை காட்டக்கூடிய நடிகன் உலகில் நீ மட்டுமே
.அதை சாதாரணனும்எளிதில் புரிந்து கொள்வான் இந்தக் கணமே.


அதை உனக்களித்தேன் பாடுக நீ ராகத்தைப் போட்டு
அமைதியை நான் வாங்கிக் கொள்வேன்இறைவனைக் கேட்டு
அவன் நினைத்தது போல் மணமுடிப்பான் மாலையைச் சூட்டு
(கல்
மறுபடியும் அந்த ஜோர் ஜோர் பாவனை..
அட்டகாசப்படுத்தும்.
இப்போது Backround music

ஒன்பது வகையான பாவங்களை தொன்னூறு வகையாகக் காட்டும் உன்னத நடிப்பைச் சொல்வேனா?
இது கண்ணாதாசன் சொன்னது.
தொன்னூறு வகை பாவங்கள் காட்டப்படும் காட்சிகளின்அணிவகுப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கும்.


காவியத்தில் ஓவியத்தில் இருப்பது காதல்
அது நடைமுறையில் என் வரையில் ஒரு வகை காதல்
தனிமரமாய் இருப்பதற்கே பிறந்தவன் நானே
உந்தன் தலைவனுடன் நலம் பெறுவாய் வாழிய மானே!
இடது கையை தூக்கி ஒரு விரலை காட்டி வாழிய மானே என்று வாழ்த்தும் ஸ்டைலுக்கு வயது வித்தியாசமின்றி கைதட்டல் பறக்கும்.'
அனைவருக்கும் இப்பாடல் பிடிக்கும்.


காமிரா உலாவலும், கோணங்களும் ரசிப்பை தூண்டும்.

madhu
27th July 2015, 04:32 PM
வாசு ஜி..

நீங்க ஒரு ராகமாலிகை.
எங்கள் மனமே உங்கள் மாளிகை

madhu
27th July 2015, 04:36 PM
வாசு ஜி..

நீங்க ஒரு ராகமாலிகை.
எங்கள் மனமே உங்கள் மாளிகை

vasudevan31355
27th July 2015, 07:01 PM
செந்திவேல் சார்,

சிறப்பான பாடல் ஆய்வு. அப்போதிலிருந்தே உங்கள் முகநூல் மூலமாக தங்களின் நடிகர் திலகத்தின் பக்தி அறிந்தவன் நான். இப்போது பட, பாடல் ஆய்வுகளிலும் கலக்குகிறீர்கள். 'கல்யாணமாம் கச்சேரியாம்' பாடலில் வெளியே சொல்ல முடியாமல் தன் காதலை அப்படியே மென்று விழுங்கி உள்நெஞ்சத்தில் சோகத்தோடு சோகமாய் வைத்துப் புதைப்பது போல 'அவன்தான் மனிதன்' படத்திலும் ஜெயலலிதாவுடனான காதலை உள்ளுக்குள் மறைத்து விடுவார். அதற்கும் இதற்கும் வித்தியாசம் தெரியும். நல்ல பாடலை எடுத்து எழுதியமைக்கு நன்றி. ஒரு சமயம் இந்தப் பாடலைப் பற்றி தங்களைப் போலவே ராகவேந்திரன் சாரும் வரிக்கு வரி அற்புதமாக எழுதியிருந்தார். நடிகர் திலகத்தின் இருநூறு படங்களுக்கு மேல் உள்ள பாடல்களையும் தங்களைப் போன்ற இளைஞர்கள் இது போல ஆய்வு செய்து எழுத முன்வரவேண்டும். நிறைய இருக்கின்றன. தெரிந்ததையே கொடுத்துக் கொண்டிருக்காமல் இன்னும் வெளியே அதிகம் தெரியாத அருமையான பாடல்கள் அவர் படங்களில் கொட்டிக் கிடக்கின்றன.... அந்தப் பாடல்களைக் கொடுக்க வேண்டும்.

(உதாரணமாக என் உள்ளம் என்கின்ற வானத்திலே, மான் குட்டி இப்போது என் கையிலே, மோக வீணை ஒரு ராகம் பாடக் கேட்டேன், தோரணம் ஆடிடும் மேடையில் நாயகன் நாயகி, ஆசை தீரப் பேச வேண்டும் உன்னிடத்தில், ஓட்டம் கண்டா குதிரைக்கு ஆசை, கண்ணிரெண்டில் மையெழுதி, வேண்டும் வேண்டும் உந்தன் உறவு, ஆடல் பாடலில் உலகமே மயங்காதோ என்று நிறைய) அவையெல்லாம் இது போல வெளியே வரவேண்டும். அதுதான் என் விருப்பம்.

தங்களின் 'தெய்வ மகன்' பதிவை நமது திரியில் ரசித்துப் படித்தேன். உங்கள் உழைப்பிற்கு என் நன்றிகளும், வாழ்த்துக்களும்.

இதோ 'கல்யாணமாம்...கச்சேரியாம்'


https://youtu.be/v5MyR7lX30E

sivajisenthil
27th July 2015, 07:51 PM
தமிழ்த் திரை நகைச்சுவை ஷாம்பெயின் கலக்கல் மது(ர)(ம்) கானங்கள் !
பகுதி 1 : கே ஏ தங்கவேலு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்!!

நகைச்சுவை நடிகர்கள் நிரம்பி வழிவது உலகின் வேறெந்த மொழிப் படங்களையும் விட தமிழ்ப் படங்களில்தான்!! கலைவாணர், சாரங்கபாணி, பாலையா,ராதா, சந்திரபாபு, தங்கவேலு, நாகேஷ், சோ, சுருளி, தேங்காய்....கவுண்டமணி-செந்தில், வடிவேலு, விவேக், சந்தானம்.....நீளம் அதிகமே!
பாடல் நடன திறமை காரணமாக சந்திரபாபுவின் தனிப்பட்ட காமெடி தத்துவ ஆடல் பாடல்கள் பெரிய அளவில் பேசப்பட்டன. அதற்கப்புறம் நாகேஷின நடனத் திறமை சோகரசம் பரிமாறப் பட்ட பாடல் காட்சிகள் ...இருப்பினும் தனித்துவம் வாய்ந்த சிரஞ்சீவித்துவம் மிக்க துளியும் ஆபாசமற்ற பசுமையான நகைச்சுவை நினைவலைகளுக்கு சொந்தக்காரர் டணால் தங்கவேலு அவர்களே ! அவருடைய கல்யாண பரிசு மன்னார் கம்பனி காமடி இன்றுவரை நம்பர் ஒன்தான்!! பெரிய நடனத் திறமைகள் இல்லாவிட்டாலும் அவரும் பல ரசிக்கத்தக்க குத்தாட்ட அசைவுகள் மிக்க ஷாம்பெய்ன் கலக்கலான பாடல் காட்சியமைப்புக்களை தந்திருக்கிறார்!
இக்கானங்களும் பார்வைக்கும் செவிக்கும் மதுரமே!!


நகைச்சுவை நடிகர் விவேக் 70 சதவீதம் தங்கவேலு 25 சதவீதம் எம் ஆர் ராதாவே!

தங்கவேலுவின் அசத்தலான 'சோனா' ஆட்டம் அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில்!!

https://www.youtube.com/watch?v=u4Lg_DVh1bA

ராகினியுடன் கலக்கலாட்டம் உத்தமபுத்திரனில் !

https://www.youtube.com/watch?v=YgMyPWvIHj8

அமைதியாக வசீகரிக்கும் தங்கவேலு !!

https://www.youtube.com/watch?v=nWtWltWRjp8

இரு 'நகைச்சுவை' வல்லவர்களின் காதல் டப்பாங்குத்து!

https://www.youtube.com/watch?v=6qAcJAAnflA

sivajisenthil
27th July 2015, 08:30 PM
Cloud O'Nine songs of NT Vs Passing Cloud Songs of NT!

ஒன்பதாம் அடுக்கு மேகங்கள் Vs கடந்து செல்லும் மேகங்கள்


ஒன்பதாம் மேக அடுக்கு என்பது சொர்க்கத்தின் நுழைவாயிலைத் தாங்கி நிற்கும் திரண்ட மேகக்கூட்டத்தைக் குறிப்பதே! அதை வைத்தே சந்தோஷத்தின் உச்சத்தை feeling as if we are on a Cloud 9 என்று சொல்லும் பழக்கம் வந்திருக்க வேண்டும்!
கடந்து செல்லும் Passing Clouds மேகங்களோ சிலசமயம் குளிர்ச்சியாகவும் சிலசமயம் வெறுமையாகவும் நம்மை மேனியைத் தழுவிச் செல்லும் போது ஒரு சிலிர்ப்பை மட்டுமே உண்டாக்கும் !
நடிகர்திலகத்தின் மகத்தான படங்களிலும் இசைக்கோர்வையும் பாடல்களும் உள்ளத்தை அள்ளினாலும் பலபாடல்கள் நம்மை ஒன்பதாம் மேக அடுக்கின் உச்சிக்கு கொண்டு சென்று ஆனந்த அதிர்வுகளை உண்டாக்கின! சில பாடல்கள் படத்தில் பார்க்கும்போது மட்டுமே சிலிர்ப்பை உண்டுபண்ணி கடந்து செல்லும் மேகங்களாக முடிந்து விட்டன !!
நேற்று சன்லைப் சானலில் உத்தமபுத்திரன் திரைக்காவியத்தை ஈடுபாட்டுடன் ரசித்த போது சில பாடல்கள் இந்த எண்ணத்தை தூண்டி விட்டன !

பகுதி 2 : உத்தமபுத்திரன் (1958) : என் கண்ணோட்டத்தில்.....
Cloud O'9 songs : உள்ளம் சொர்க்கவாசலுக்கே சென்றுவிட்ட உணர்வினைத் தந்தவை!

https://www.youtube.com/watch?v=a63IlNFGip8

https://www.youtube.com/watch?v=DK24QATSGBM

https://www.youtube.com/watch?v=vNLRpeXzb3Y

https://www.youtube.com/watch?v=XEmF9jzEwCIபடம் பார்க்கும்போது மட்டும் நினைவில் நிற்பவை!!Passing Clouds!

https://www.youtube.com/watch?v=bRHVR0yKWM8

https://www.youtube.com/watch?v=UxAjNMWvE1o

mannulakellam ponnulakaka maaridium vaelai! song with Padmini and Ragini introduction!

https://www.youtube.com/watch?v=JAeBYyw35vY

sivajisenthil
27th July 2015, 08:54 PM
அக்கினிச் சிறகுகள் தந்தவர்!! மக்களின் ஜனாதிபதியாக ஒளிர்ந்தவர்!! இளைஞர்களின் கனவாற்றலை தூண்டியவர்!!
பாரத ரத்னா ஏவுகணை விஞ்ஞான வழிகாட்டி apj அப்துல் கலாம் அவர்களின் இழப்பு ஈடு செய்ய இயலாதது!!
நடிகர்திலகம் / மதுர கானங்கள் / ஜெமினி திரி சார்ந்த கண்ணீர் அஞ்சலி

vasudevan31355
27th July 2015, 09:19 PM
இருந்த ஒரே எதிர்காலக் கனவு நம்பிக்கையும் தகர்ந்தது.

அப்துல் கலாம் அவர்களின் மறைவுக்கு எங்கள் கண்ணீரில் அஞ்சலி.

chinnakkannan
27th July 2015, 09:42 PM
அதிர்ச்சியான செய்தி..

அப்துல் கலாம் அவர்களின் மறைவுக்கு எங்கள் கண்ணீர் அஞ்சலி..

g94127302
27th July 2015, 10:02 PM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/images_zpssb6vd2yd.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/images_zpssb6vd2yd.jpg.html)

If a country is to be corruption free and become a nation of beautiful minds, I strongly feel there are three key societal members who can make a difference. They are the father, the mother and the teacher.

English is necessary as at present original works of science are in English. I believe that in two decades times original works of science will start coming out in our languages. Then we can move over like the Japanese.

You have to dream before your dreams can come true.

--- abdul kalam

மிகவும் துயரமான செய்தி - இந்தியா மிசைல் மனிதர் இன்று நம்மிடையே இல்லை . இந்தியா ஒரு நல்ல தேசியவாதியை இழந்துவிட்டது . ஹைதராபாத்தில் அவரை சந்தித்து 15 நிமிடங்கள் உரையாட எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது - அவருக்கு இருந்த energy level என்னை மலைக்க வைத்தது - venture capital யை பற்றி பேசிக்கொண்டிருந்தோம் --- முடிவில் அவர் சொன்ன ஒரு quote என் மனதில் மிகவும் ஆழமாக பதிந்து விட்டது .

" Don't read success stories
you will get only message

Read failure stories
you will get ideas to
get success "

rajraj
27th July 2015, 10:12 PM
அக்கினிச் சிறகுகள் தந்தவர்!! மக்களின் ஜனாதிபதியாக ஒளிர்ந்தவர்!! இளைஞர்களின் கனவாற்றலை தூண்டியவர்!!
பாரத ரத்னா ஏவுகணை விஞ்ஞான வழிகாட்டி apj அப்துல் கலாம் அவர்களின் இழப்பு ஈடு செய்ய இயலாதது!!
நடிகர்திலகம் / மதுர கானங்கள் / ஜெமினி திரி சார்ந்த கண்ணீர் அஞ்சலி


May his soul rest in peace .

chinnakkannan
27th July 2015, 11:42 PM
அப்துல் கலாம் மறைவு சோகம் என்றால் என்னுள்ளும் ஒரு சோகம்..அதன் விளைவு இந்தப் பாக்கள்.. கொஞ்சம் மனதைத் தொடும் என நினைக்கிறேன்..
(அந்த மாரி எழுதவே வரமாட்டேங்குதுங்க்ணா)

*
வேடிக்கை நான்கொண்டேன் வெஞ்சினம் கொள்ளாமல்
கூடிக் களிக்கவே ஓடியிங்கே –பாடி
மகிழவந்தேன் மன்னுதமிழ் மாண்பின் கவிதைகளால்
நெகிழவந்தேன் என்னாளு மே

எந்நாளும் உள்ளத்தின் ஏக்கங்கள் தீராமல்
வண்ணக் கவிதைகளை வாகாகப் பாடியவன்
சின்னவனாய்ப் பாவலர்முன் சீருடனே நின்றவந்தான்
வெண்ணுள்ளம் கொண்டவந்தான் நான்

நானாய் இருந்தகாலம் நல்லவழி சொல்லாமல்
தேனாய் தித்தித்துத் தீய்ந்துபோய் – வேண்டுமென
தெய்வத்தின் தாள்பற்றித் தேடித்தான் பார்த்தபடி
உய்ய உழல்கிறே னோ

உழல்வது என்பதெலாம் ஓடித்தான் சென்றே
சுழலெனச் சுற்றுகின்ற வாழ்வில் – கழலைப்
பிடிக்கின்றேன் கண்ணனவன் பேரழகுக் காலை
விடியுமா எப்போ தெனக்கு.


எனக்காய் இருக்கையிலே ஏற்றங் கொளவும்
கணக்காக வந்தநண்பர் கூட்டம் – கனவில்லை
நன்றையே எண்ணியவென் நல்நெஞ்சை மேலெடுத்துத்
திண்ணமாய்த் தீட்டினார் தாம்..

தாமாக முன்னே தயங்காமல் பாராட்டித்
தானாக ஏசுகின்றார் தாளாமல் – பாமாலை
சூட்ட நினைத்திங்கு சொக்கித்தான் போகின்றேன்
ஊட்டம் வரவேண்டு மே..

வரவேண்டும் என்றெல்லாம் வாய்மொழிந்தே பின்பே
வதங்கி முகம்வைத்து வாகாய் – மரமென்றே
எள்ளிச் சிரித்திங்கே ஏகடியம் செய்பவரை
தள்ள இயலவில்லை தான்..

தானாடும் இல்லை தசையாடும் என்றெல்லாம்
ஊனோடு கலந்த உறவென்பர் – மீனாடும்
செம்மதுரைக் காரன்நான் சேர்ந்திங்கே சொல்லிடுவேன்
இம்மையில் நட்பதுவும் தான்..

தானாய் வந்திடுமா தங்கத்தில் கற்பனைகள்
பேனா எடுத்துவிடில் பொங்கிடுமோ – காணாத
காட்சிகளைக் கண்டுவந்து கண்களுக்குள் கட்டிவைத்தே
மீட்சிகொள வைக்கவேண்டு மே

வேண்டுமே எந்நாளும் வெண்ணிதயம் மேதினியில்
தீண்ட மென்காற்று தேகத்தை – மீண்டுமே
யாரையும் நோகாமல் ஆட்கொள்ளும் நெஞ்சமெனும்
தேரையே தெய்வம்நீ தா..

**

g94127302
28th July 2015, 07:57 AM
Ck - உங்களுக்கு தெரியாததா ? இல்லை புரியாததா ? நாம் மற்றவரை காயப்படுத்தாத வரையில், அவர்களின் மனதை நோகடிக்காமல் இருக்கும் வரை நம் பதிவுகள் பலரின் மனங்களை தொட்டுக்கொண்டுதான் இருக்கும் . . உங்கள் கவிதைகள் தனித்துவம் வாய்ந்தவைகள் - மனதை தொடாமல் இருக்க முடியாது - மற்றவர்களின் மனதை தொடவில்லை என்று வைத்துக்கொண்டாலும் அப்துல் கலாமின் நெஞ்சை , ஆத்மாவை கண்டிப்பாக தொட்டிருக்கும்

g94127302
28th July 2015, 08:01 AM
" எங்களை கனவு காண சொன்னீர்கள் !!! இப்பொழுது
காண்கிறேன் இது , கனவாக இருக்கக்கூடாதா என்று !!!!

சாதனைச்சரித்திரம்
சரிந்தது ..
மேகாலயாவில்
மேகத்தினில்
கலந்தார் கலாம் ...
எங்களைக் கனவு காணச் சொன்ன
கனவு நாயகனே...நீர்
காற்றினிலே கலந்ததென்ன?
விண்வெளியின்
நாயகனே...நீர்
விண்ணோடு கலந்ததென்ன?
ஏவுகணை மூலம்
எல்லா இடங்களையும்
கண்டவரே ...நீர்
எட்டா உயரம் சென்றதெங்கே்?
அக்னி யிலே
அகிலம் திரும்பச் செய்தவரே...
அக்னியிலே கலந்ததென்ன??
தமிழகத்தின் தலைமகனே ...
இந்தியாவின் கோமகனே...
தளர்வடையோம்
உம் பிள்ளைகள் நாங்கள் ...
மனதினில் மட்டுமல்ல...
மகவாயும் நீர் வருவாய் ...
மழலை மொழியும் நீர்
சொல்வாய் ...

உனக்காக காத்திருப்போம் ...
அப்பனே நீர் வருவாய் ....

g94127302
28th July 2015, 08:03 AM
இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்.

பிறப்பு: அக்டோபர் 15, 1931

இடம்: இராமேஸ்வரம் (தமிழ் நாடு)

பிறப்பு:

1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஒரூ இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.

இளமைப் பருவம்:

அப்துல் கலாம், இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். இவருடைய பள்ளிப்பருவத்தில் இவர் ஒரு சராசரி மாணவனாகவே வளர்ந்தார்.

கல்லூரி வாழ்க்கை:

தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சிராப்பள்ளியிலுள்ள “செயின்ட் ஜோசப் கல்லூரியில்” இயற்பியல் பயின்றார். 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர், 1955 ஆம் ஆண்டு தன்னுடைய “விண்வெளி பொறியில் படிப்பை” சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

விஞ்ஞானியாக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:

1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (drdo) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (isro) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (slv) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு slv -iii ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-i என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது. இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது. 1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.

குடியரசுத் தலைவராக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:

2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம், பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்து விலகினார்.

விருதுகள்:

1981 – பத்ம பூஷன்

1990 – பத்ம விபூஷன்

1997 – பாரத ரத்னா

1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது

1998 – வீர் சவர்கார் விருது

2000 – ராமானுஜன் விருது

2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்

2007 – கிங் சார்லஸ்-ii பட்டம்

2008 – பொறியியல் டாக்டர் பட்டம்

2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது

2009 – ஹூவர் மெடல்

2010 – பொறியியல் டாக்டர் பட்டம்

2012 – சட்டங்களின் டாக்டர்

2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது

ஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய நூல்கள்:

அக்னி சிறகுகள்இந்தியா 2012எழுச்சி தீபங்கள்அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை

இறுதிவரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் எளிமையான வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும் எல்லோரையும் கவர்ந்தது என்றால் வியப்பில்லை. ‘எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில்’ என்ற அவர் “கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள்” என்னும் வாக்கியத்தை இளைஞர்களின் மனதில் வேரூன்ற செய்தவர்.

உலகம் போற்றும் விஞ்ஞானியான கலாம் தன்னுடைய பொன்மொழிகளாலும், கவிதைகளாலும், வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

Varadakumar Sundaraman
28th July 2015, 08:06 AM
Rest in peace Dr Abdul Kalaam.

g94127302
28th July 2015, 08:40 AM
Ck - உங்கள் தரத்தில் அல்ல ! உங்கள் நடையில் ஒரு சின்ன பொதுவான கவிதை - உங்களுக்கு ஒரு சிறிய காணிக்கை இது .....

வேடிக்கை நான்கொண்டேன் வெஞ்சினம் கொள்ளாமல்
கூடிக் களிக்கவே ஓடியிங்கே –பாடி
மகிழவந்தேன் மன்னுதமிழ் மாண்பின் கவிதைகளால்
நெகிழவந்தேன் என்னாளு மே

எந்நாளும் உள்ளத்தின் ஏக்கங்கள் தீராமல்
வண்ணக் கவிதைகளை வாகாகப் பாடியவன்
சின்னவனாய்ப் பாவலர்முன் சீருடனே நின்றவந்தான்
வெண்ணுள்ளம் கொண்டவந்தான் நான்

நானாய் இருந்தகாலம் நல்லவழி சொல்லாமல்
தேனாய் தித்தித்துத் தீய்ந்துபோய் – வேண்டுமென
தெய்வத்தின் தாள்பற்றித் தேடித்தான் பார்த்தபடி
உய்ய உழல்கிறே னோ

உழல்வது என்பதெலாம் ஓடித்தான் சென்றே
சுழலெனச் சுற்றுகின்ற வாழ்வில் – கழலைப்
பிடிக்கின்றேன் கண்ணனவன் பேரழகுக் காலை
விடியுமா எப்போ தெனக்கு.

எனக்காய் இருக்கையிலே ஏற்றங் கொளவும்
கணக்காக வந்தநண்பர் கூட்டம் – கனவில்லை
நன்றையே எண்ணியவென் நல்நெஞ்சை மேலெடுத்துத்
திண்ணமாய்த் தீட்டினார் தாம்..

தாமாக முன்னே தயங்காமல் பாராட்டித்
தானாக ஏசுகின்றார் தாளாமல் – பாமாலை
சூட்ட நினைத்திங்கு சொக்கித்தான் போகின்றேன்
ஊட்டம் வரவேண்டு மே..

வரவேண்டும் என்றெல்லாம் வாய்மொழிந்தே பின்பே
வதங்கி முகம்வைத்து வாகாய் – மரமென்றே
எள்ளிச் சிரித்திங்கே ஏகடியம் செய்பவரை
தள்ள இயலவில்லை தான்..

தானாடும் இல்லை தசையாடும் என்றெல்லாம்
ஊனோடு கலந்த உறவென்பர் – மீனாடும்
செம்மதுரைக் காரன்நான் சேர்ந்திங்கே சொல்லிடுவேன்
இம்மையில் நட்பதுவும் தான்..

தானாய் வந்திடுமா தங்கத்தில் கற்பனைகள்
பேனா எடுத்தால் பொங்கிடுமோ – காணாத
காட்சிகளைக் கண்டுவந்து கண்களுக்குள் கட்டிவைத்தே
மீட்சிகொள வைக்கவேண்டு மே

வேண்டுமே எந்நாளும் வெண்ணிதயம் மேதினியில்
தீண்ட மென்காற்று தேகத்தை – மீண்டுமே
யாரையும் நோகாமல் ஆட்கொள்ளும் நெஞ்சமெனும்
தேரையே தெய்வம்நீ தா..

vasudevan31355
28th July 2015, 09:47 AM
http://www.thehindu.com/multimedia/dynamic/00117/20IN_KALAM_117579f.jpg

ஜவஹர்லால் நேருவுக்குப் பின் குழந்தைகளின் நலனில், இளைஞர்களின் நலனில் அக்கறை கொண்ட, அவர்களுக்குப் பிடித்தமான ஒரு உன்னத மனிதர் அப்துல் கலாம் அவர்கள். மிகப் பெரிய பேரிழப்பு. இப்போதுதான் மெல்லிசை மன்னரை இழந்தோம். அதற்குள்ளாகவே அடுத்த பேரிடி.தாங்கும் சக்தியை அந்த இறைவன்தான் நமக்கு அளிக்க வேண்டும். மனம் அமைதி அடைந்தபாடில்லை.

madhu
28th July 2015, 10:20 AM
அந்தக் காலத்தில் பொன்னான வாழ்வு என்று ஒரு ஜெய்சங்கர் படம் வெளிவந்தது. அதில் எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடிய நேரு மாமா பாட்டு ஒன்று ( இணையத்தில் எங்கேயும் சிக்கவில்லை ). அந்தப் பாடலை அடித்தளமாகக் கொண்டு டி.எம்.எஸ்ஸுடன் எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடிய இன்னொரு பாடலும் அந்தக் காலத்தில் பிரசித்தம்.

கதை கதையாம் கதை கதையாம் காரணமாம்
அதை வரி வரியா பாடிடுவேன் பாடிடுவேன்

வண்ண வண்ண மலர்கள் பூத்த தோட்டத்திலே - ஒரு
சின்ன அழகு ரோஜாச் செடி வளர்ந்திருந்ததாம்
நேரு மாமா ஒரு நாள் அங்கு வந்திருந்தாராம்
ரோஜா மலரை எடுத்து மார்பில் அணிந்து கொண்டாராம்
நல்ல மணம் வீசுகின்ற ரோஜா மலருமே - தன்
உள்ளத்திலே பெருமையோடு மகிழ்ச்சி அடைந்ததாம்

( கதை )

மறு நாள் அவர் வருவார் எனப் பூத்திருந்ததாம் - அவர்
வரும் வழியை எதிர்பார்த்துக் காத்திருந்ததாம்
தென்றல் காற்று புயலாக மாறி வீசியதாம்
திடீர் என்று நேரு மறைந்த சேதி வந்ததாம்

அதனைக் கேட்டு ரோஜா மலரும் வாடிப் போனதுவாம்
நேருஜியை அமர லோகம் தேடி போனதுவாம்
அவர் முன்னே சென்றதாம் அன்பு நெஞ்சைத் தொட்டதாம்
கண்ணீர் விட்டதாம் தேம்பித் தேம்பி அழுததாம்

பூவின் வருத்தம் தன்னை நேரு புரிந்து கொண்டாராம்
நான் இறந்ததற்கு யாரும் அழக் கூடாதென்றாராம்
பாரதத்தைக் காத்திடுவோர் பலர் இருக்கின்றார்
ஆதலினால் அமைதியாக வாழ்க என்றாராம்
அப்படியே ரோஜா மலர் திரும்பி வந்ததாம்
அவர் நினைவாய் உலகில் மீண்டும் பிறந்து மலர்ந்ததாம்

( கதை )

இந்தப் பாடல் பள்ளியில் ஏதோ ஒரு போட்டிக்காக பாடப்படுவதாக நினைக்கிறேன். படத்தின் பிற்பகுதியில் அந்தக் குழந்தையே இறந்து விடுவதாக காட்சி அமைப்பு இருக்கும் என்று தோன்றுகிறது.

டி.எம்.எஸ் பாடும் பாடலில் "குங்குமச் சிமிழே கோபுர விளக்கே தங்கக் கலசமே தாமரைப்பூவே ..எங்கே .. எங்கே நீ எங்கே ?" என்று பாடுகிறார். இறுதியில்

"பூத்திருக்கும் ரோஜாப்பூவில் மணமில்லையா - அந்த
மணத்துக்குள்ளே மனதைப் போல நான் இல்லையா
நேரு மாமா சொன்ன சொல்லும் நினைவில்லையா - உன்
நேரிலேதான் நான் இருக்கேன் தெரியலையா

குங்குமச் சிமிழும் கோபுரவிளக்கும் தங்கக் கலசமும் தாமரைப்பூவும்
இங்கே.. இங்கே.. நான் இங்கே.."

என்று எம்.எஸ்.ராஜேஸ்வரி குரல் கொடுக்கிறார்.

நம்ம அப்துல் கலாம் சார் மறைவுச் செய்தி கேட்டதும் இந்தப் பாடல் நினைவுக்கு வந்தது. அண்ணா பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ. வகுப்புகளின் நடுவே கிடைத்த சின்ன இடைவேளையில் நண்பர்களுடன் ஓடிச்சென்று ஒரு அறைக்குள் சில மாணவர்களுடன் பேசிக் கொண்டிருந்தவரைப் பார்த்து வணங்கி விட்டு
வந்த நினைவு இன்னும் மனதில் மணக்குது...

அக்கினிச் சிறகுகள் நெருப்பில் எரிவதில்லை.

madhu
28th July 2015, 11:30 AM
Cloud O'Nine songs of NT Vs Passing Cloud Songs of NT!

ஒன்பதாம் அடுக்கு மேகங்கள் Vs கடந்து செல்லும் மேகங்கள்

நேற்று சன்லைப் சானலில் உத்தமபுத்திரன் திரைக்காவியத்தை ஈடுபாட்டுடன் ரசித்த போது சில பாடல்கள் இந்த எண்ணத்தை தூண்டி விட்டன !சிவாஜிசெந்தில் சார்..

இந்தப் பாட்டை எந்த மேகத்திரளினுள் பொதியலாம் ?

https://youtu.be/axTPgf6lxR8

vasudevan31355
28th July 2015, 11:56 AM
மது அண்ணா!

ஆஹா! அற்புதம். மனதுக்குள் ரொம்ப நாள் தூங்கிக்கிட்டு இருந்த பாட்டை சிலிர்க்க வச்சி எழ வச்சுட்டீங்க. அப்படியே பாடல் முழுக்க மனசுல ஓடுது. இதுதான் எங்க மது அண்ணா என்பது. அசத்தீட்டீங்க அண்ணா!

இப்படிப்பட்ட பாடல்களை நீங்க ஞாபகப்படுத்தி மீண்டும் அதை நாங்கள் அனுபவிக்கும் சுகமே அலாதி.

மது அண்ணா! இந்தாங்க. ஒரிஜினல் வீடியோ இல்லைன்னாலும் ஆடியோ வடிவில் கேட்டு இன்புறுவோம். மறுபடி மறுபடி ஆயிரம் நன்றிகள் அண்ணா! பாடல் வரிகளுக்கும் நன்றி மதுண்ணா!


https://youtu.be/gVZxNSSpQVU

sivajisenthil
28th July 2015, 12:00 PM
சிவாஜிசெந்தில் சார்..

இந்தப் பாட்டை எந்த மேகத்திரளினுள் பொதியலாம் ?
Madhu


மது சார்
மேகக் கூட்டங்கள் எல்லாமே மழை மேகங்களாய் மாறிவிடுவதில்லை
திரண்டு வரும் கார்மேகங்கள் மழை பொழியும் அதில் நனையும் சுகமே அலாதி!! அப்படித்தான் அன்பே அமுதே பாடலும்!
கடந்து செல்லும் மலைமுகட்டு மேகத்திரள் நமது உடலையும் மனதையும் குளிர்விப்பது போல ...தருணம் பொருத்தமானதாக இருக்க வேண்டுமே!
மலைமுகட்டில் நின்று அனுபவிப்பது போல உத்தமபுத்திரன் திரையில் பார்க்கும்போது மட்டுமே இப்பாடல் காட்சியமைப்பு நம்மைக் குளிர்விக்கிறது !
ஆனால் நம்மை ஒன்பதாம் அடுக்கு மேகத்திரளுக்கே தூக்கிச் செல்லும் திரில் ...இப்பாடலில் இல்லை என்பதே என் தனிப்பட்ட கருத்து!!
கருத்துப் பரிமாற்றத்திற்கு நன்றி
செந்தில்

vasudevan31355
28th July 2015, 12:10 PM
மது அண்ணா!

உங்களுக்க&