PDA

View Full Version : மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4



Pages : 1 2 3 4 5 6 7 [8] 9 10 11 12 13 14 15 16

uvausan
12th July 2015, 07:47 AM
Good Morning

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/gm6_zps9z7mrkyt.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/gm6_zps9z7mrkyt.jpg.html)

uvausan
12th July 2015, 07:50 AM
கருவின் கரு - 181

பாகம் 2 - தந்தை

தந்தை - மகன் பந்தம்

மாணவ /வாலிப / திருமண பருவம்

கண்ணனின் சிரிப்பு

ஒருநாள் யமுனை நதி தீரத்தில் மாய கண்ணன் குடிசை போட்டுக் கொண்டு தன் மனைவி ருக்மணியுடன் இருக்கிறான். பிசுபிசுவென்று மழைத் தூறல். குளிா் காற்று அடிக்கிறது.

கண்ணன் தூங்கவேயில்லை. ருக்மணி கண்ணனின் பாதத்தைப் பிடித்து தூங்கப் பண்ண வந்தாள். எவ்வளவு நேரம் ஆகியும் கண்ணன் தூங்கவேயில்லை.ஏன் நித்திரை கொள்ளவில்லை என்று கேட்டாள் ருக்மணி.

யமுனையின் அக்கரையில் என்னிடத்தில் ஆழ்ந்த பக்தி கொண்ட உபேந்திரன் என்று ஒருவன் இருக்கிறாள். அவன் மகன் இன்னும் தூங்கவில்லை; அதனால் நான் தூங்கவில்லை என்றான் பரமாத்மா.

அவன் ஏன் தூங்கவில்லை என்று கேட்டாள் ருக்மணி . மேலும் அவன் உபேந்திரன் அல்லவே !! அவன் மகன் தானே ? - கேள்விகள் சரமாரியாக ருக்மணியிடம் இருந்து வந்த வண்ணம் இருந்தன .

கண்ணன் சிரித்தான் . உபேந்திரன் இப்பொழுது மிகவும் வயதானவன் - அவனுக்கு எல்லா பணிவிடைகளும் அவன் மகன் மகேந்திரன் செய்கிறான் . தினமும் அவன் தன் தந்தைக்கு இரண்டு படி பாலைச் சுண்டக் காய்ச்சி பாிமள திரவியங்கள் எல்லாம் போட்டு அந்தப் பாலைப் பருக அளிப்பது வழக்கம். இ்ன்றைக்கு உபேந்திரன் பால் பருகவில்லை. பால் பருகாமலேயே தூங்கிவிட்டான் ஆனால் அவன் மகன் இன்னும் தூங்கவில்லை. அதனால் நான் தூங்கவில்லை என்றான்.

அவன் தூங்காததால் கண்ணனின் தூக்கத்திற்குத் தடை. மகேந்திரன் தூக்கத்திற்குத் தடை அவன் தந்தைஉபேந்திரன் பால் பருகாதது. உபேந்திரன் பால் சாப்பிட்டால் மகேந்திரனுக்கும் தூக்கம் வந்துவிடும் என்று எண்ணி ருக்மணி கிடுகிடுவென்று ஒரு பசுவைத் தானே கறந்தாள்.பாிமள திரவியங்கள் போட்டு பாலைக் காய்ச்சினாள். தானே படகைச் செலுத்திக்கொண்டு அக்கரைக்குப் போனாள்.

உபேந்திரன் என்ற பக்தனின் குடிசைக் கதவைத் தட்டினாள். மகேந்திரன் கதைவை ருக்மணியே தட்டியும் திறக்கவில்லை . தந்தையின் கால்களை பிடித்து விட்டுக்கொண்டிருந்தான் - இயற்கையின் உந்தலால் எழுந்த தந்தைக்கு அந்த பணிவிடைகளையும் செய்து முடித்தபின் மெதுவாக வந்து கதவை திறந்தான் . பொறுமையுடன் ருக்மணி காத்திருந்தாள் .



கதவைத் திறந்த அவன் மகன் ,எதிரே மஹாலக்ஷ்மி பாத்திரத்துடன் நிற்பதைப் பாா்த்து ப்ரமித்துப் போனான் . ருக்மணியே வாஞ்சையுடன் உபேந்திரனை எழுப்பி அவனுக்கு அந்த பாலை பருக வைத்தால் - மீதி இருந்த பாலை மகேந்திரனுக்கும் தந்தாள் . ருக்மணியே வந்து பாலைத்தந்தவுடன் உபேந்திரனுக்கும் அவன் மகன் மகேந்திரனுக்கும் அருமையான தூக்கம் வந்தது .

.பாத்திரத்தை வாங்கிக் கொணடு வந்துவிட்டாள் ருக்மணி. 'நித்திரை செய்வதைப்போல பாசாங்கு செய்தான் கண்ணன் . தலையோடு கால் போா்த்திக்கொண்டு படுத்திருந்தான். ருக்மணி வருவதைப் பாா்த்ததும் கண்ணை மூடிக்கொண்டான்.

கண்ணன் தூங்கிவிட்டான் என்று சந்தோஷப்பட்டு ருக்மணி, அவன் திருவடியைத் தொட்டு வணங்க வேண்டும் என்று போா்வையை நீக்கி திருவடியைப் பாா்த்தாள்.

திருவடியில் பாா்த்தால் ஒரே கொப்புளங்கள்.பகவானை எழுப்பினாள் ருக்மணி. பிசுபிசுவென்று தூரல் போட்டுக் கொண்டிருக்கிறது. குளிா் காற்று வீசுகிறது. காலையிலிருந்து வெளியில் எங்கும் போகவும் இல்லை. இப்படி திருவடியில் அக்னியில் கால் வைத்ததுபோல் கொப்புளித்து இருக்கே? என்று கேட்டாள்.

மகேந்திரன் பால் பருகினான் அல்லவா!அதனால்தான்! என்றான் கண்ணன் .

மகேந்திரன் பால் பருகியதற்கும், கால் கொப்புளித்ததற்கும் என்ன சம்பந்தம்? என்று கேட்டாள் ருக்மணி.

நீ சுடச் சுட கொண்டுபோய் கொடுத்தாய். உன்னைப் பாா்த்த அதிசயத்தில் அப்படியே பாலை இருவரும் பருகிவிட்டார்கள் . அதனால் என் கால் கொப்புளித்துவிட்டது என்றான்.

இதைக் கேட்ட ருக்மணி சிாித்துவிட்டாள். சுடச்சுட பாலைப் பருகினான் என்றால் அவர்கள் நெஞ்சு அல்லவா கொப்புளித்துப் போகவேண்டும். தங்கள் திருவடி ஏன் கொப்புளித்தது? என்று கேட்டாள்.

கண்ணன் சிாித்துக் கொண்டே சொன்னான்.'மகேந்திரனின் நெஞ்சில் இருப்பது என் பக்தன் உபேந்திரன் - அவன் நெஞ்சில் இருப்பது என் திருவடி. உபேந்திரனனின் மகன் தன் தந்தைக்கு செய்வது இன்னும் மகத்தான செயல் - உபேந்திரனனின் என்பால் கொண்ட பக்தியையும் மிஞ்சக்கூடியது - என் திருவடிகள் அவன் மகனின் நெஞ்சிலும் இருக்கின்றன அதானால் அவன் அருந்திய பால் சுடச்சுட என் திருவடியில்தானே விழுந்தது! என்றான்.

மஹாலக்ஷ்மியான ருக்மணி நடுங்கிவிட்டாள். மஹாலக்ஷ்மிக்கே தொியாத பக்தி தன் தந்தைக்கு வெறும் பணிவிடை செய்து அதன் மூலம் இறைவனிடம் வளரும் பக்தி. அவன் நெஞ்சில் இருப்பது என் திருவடியே என்று கண்ணன் சொன்னான் என்றால் , அவன் கொடுக்கும் பாடம் என்ன ? பெற்றோருக்கு மனதார பணிவிடைகள் செய்யுங்கள் - பலனை எதிர்ப்பார்க்காமல் - இந்த உலகம் என்ன , அந்த இறைவனையே வென்று விடலாம் ......



சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமுமில்லை
ஒரு துணையில்லாமல் வந்ததெல்லாம் பாரமுமில்லை
நன்றியுள்ள உயிர்களெல்லாம் பிள்ளைதானடா
தம்பி, நன்றி கெட்ட மகனை விட நாய்கள் மேலடா.

https://www.youtube.com/watch?v=Uh3980VY49Y

uvausan
12th July 2015, 07:56 AM
கருவின் கரு - 182

பாகம் 2 - தந்தை

தந்தை - மகன் பந்தம்

மாணவ /வாலிப / திருமண பருவம்


Mothers are the Soul of our homes... whereas fathers are their very existence.

But have we ever given much thought to the nature of this
existence?

Little is written or said about fathers, even though we understand their value in our lives.

We hardly ever hear anyone talk about fathers. ..
Mothers are made of an ocean of tears. Fathers are a wall of self-control.

Mothers relieve their pain through tears, fathers only console, and it is harder to console than it is to cry.

Surely the candlestick is hotter than the flame, yet
it is always the flame which gets the praise.

We remember mothers as the ones who took care of our daily needs, yet how easily we forget fathers, who arrange finances for daily needs!

Mothers can cry uncontrollably in public, and fathers sob in their pillows at night.

Mothers are allowed to cry; fathers can never be seen in tears.

We can notice the patches on his shoes. His tattered vest is a sure sign of the struggle he gone through. His unshaven beard is a sign of his frugality. He will buy new pairs of expensive jeans for his children, while an old pair of pyjamas will do for him.

While children don’t blink an eyelid when they spend 1000's of Rs in a beauty parlour or salon, yet in their own home, a father may be using talcum soap to shave because his shaving cream is finished, or he might be shaving
in just water.

When a father is ill, he does
not rush to the doctor. He does not fear his illness
but is afraid in case the doctor tells him to rest for a month, as there will be no other bread earner in the family.

Whether he can afford it
or not, he works hard to get his son admitted to an
engineering or medical course.
Despite the shortage of funds he send money regularly to his child at university even some children go on a gala spending spree on the same day the money arrives.

The Father is the existence of the
home. The home is secure from outsiders when a father, in the form of its manger, is alive. He holds the position of the chief executive of the household. He sees, repairs and cares for jobs around the house.

When you announce your exam results, it seems that mother is the closest person to you because she takes you in her arms, praises you and blesses you, but no one notices the father who quietly slips away to the sweet shop to get sweets to distribute among family and friends...

God made paradise under the feet of your mother but he made the father take care of the thorns under your feet....

https://youtu.be/23B8r_CHWy4

raagadevan
12th July 2015, 07:57 AM
வணக்கம் ராஜ்! & everyone else! :)

Here is another one in memory of Omar Sharif; from FUNNY GIRL...

https://www.youtube.com/watch?v=LU6DqMyFDOU

A Jewish woman and a Muslim man (Barbra Streisand & Omar Sharif) falling in love;
we need this in the middle east (in fact, the whole world) right now...

uvausan
12th July 2015, 08:00 AM
கருவின் கரு - 183

பாகம் 2 - தந்தை

தந்தை - மகன் பந்தம்

மாணவ /வாலிப / திருமண பருவம்

Divorce after 35 years !! -


An elderly man in Mumbai calls his son in New York and says,

'I hate to ruin your day son, but I have to tell you that your mother and I are getting a divorce; 35 years of marriage... and that much misery is enough!'

'Dad, what are you talking about?' the son screams.

'We can't stand the sight of each other any longer,' the old man says.

'We're sick of each other, and I'm sick of talking about this, so you call your sister in Hong Kong and tell her!'

Frantic, the son calls his sister, who explodes on the phone.

'Like heck they're getting divorced,' she shouts, 'I'll take care of this.'

She calls Mumbai immediately, and screams at the old man, 'You are not getting divorced. Don't do a single thing until I get there. I'm calling my brother back, and we'll both be there tomorrow. Until then , don't do a thing, DO YOU HEAR??' and she hangs up.

The old man hangs up his phone and turns to his wife. 'Okay', he says, 'It's all set. They're both coming for our anniversary and paying their own airfare!!'

MORAL:
No man / woman is busy in this world all 365 days.
The sky is not going to fall down if you take few days LEAVE to make your loved ones, parents or friends happy.

https://youtu.be/WpTNzZX8b68

uvausan
12th July 2015, 08:03 AM
கருவின் கரு - 184

பாகம் 2 - தந்தை

தந்தை - மகன் பந்தம்

மாணவ /வாலிப / திருமண பருவம்

Seven Wonders of Life -

1. Your mother - who is the first person to welcome you in this world.

2. Your Father - who is the first person to go through all the hardships just to see you smile!

3. Your sibling - the first person to teach you the art of 'sharing and caring'.

4. Your friend - the first person to teach you how to respect people with different opinions and viewpoints!

5. Your love - the first person to make you realize the value of sacrifice and compromise and the first one for whom you've to fight the world to be together.

6. Your children - the first little person to teach you how to be selfless and think about others before yourself.

https://youtu.be/ImbpUz1tOhk

7. Your grandchildren - the only creatures who make you want to live the life, all over again... :)

Russellrqe
12th July 2015, 09:17 AM
RARE ADVT
http://i59.tinypic.com/j0cygl.jpg

Russellrqe
12th July 2015, 09:18 AM
http://i58.tinypic.com/2yjrc7o.jpg

Russellrqe
12th July 2015, 09:23 AM
http://i62.tinypic.com/t04u81.jpg

Russellrqe
12th July 2015, 09:31 AM
http://i58.tinypic.com/2djtok.jpg

Russellrqe
12th July 2015, 09:34 AM
http://i61.tinypic.com/dnmv7s.jpg

Russellrqe
12th July 2015, 09:35 AM
http://i62.tinypic.com/2mm62jt.jpg

Russellrqe
12th July 2015, 09:38 AM
http://i62.tinypic.com/2ptvyh2.jpg

Russellrqe
12th July 2015, 09:39 AM
http://i58.tinypic.com/n3vtvn.jpg

Russellrqe
12th July 2015, 09:41 AM
http://i61.tinypic.com/rhvh1j.jpg

Russellrqe
12th July 2015, 09:42 AM
http://i62.tinypic.com/2drc2le.jpg

Russellrqe
12th July 2015, 10:16 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் ''நேற்று இன்று நாளை '' வெளியீட்டு தினமான இன்று [12.7.1974- 12.7.2015] 42 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த இனிய நன்னாளில் நாம் யாருமே பாத்திராத மக்கள் திலகத்தின் ''ராஜ குமாரி '' திரைப்படத்தின் விளம்பரத்தையும் , ''சிவாஜி ''பத்திரிகையில் 11.4.1947 அன்று வந்த விளம்பர ஆவணத்தையும் மிக மகிழ்ச்சியுடன் இங்கு பதிவிடுகிறேன் .

http://i60.tinypic.com/efm0b9.jpg
http://i60.tinypic.com/r0s47q.jpg
http://i60.tinypic.com/v7yukz.jpg
http://i57.tinypic.com/2i7biog.jpg
http://i60.tinypic.com/j7s361.jpg
http://i60.tinypic.com/211kx3c.jpg
http://i60.tinypic.com/2hxox7d.jpg

vasudevan31355
12th July 2015, 10:22 AM
ரவி சார்,

நேற்றைய தங்கள் கருவின் கரு படித்து முடித்து விட்டேன்.

Sylvester Stallone பற்றிய பதிவு அருமை. சௌத்ரியின் பிள்ளைப்பாசம் தந்தை கருவிற்கு தலையாய பெருமை. யாரை நம்பியும் பிறக்காத அந்த பாசக் கிழவரின் தளராத உறுதி உங்களிடமும் இருக்கிறது. பாலூட்டி வளர்த்த கிளி பறந்து போன கதை சொல்லி கண்ணீர் விடும் கௌரவ பெரியப்பா தந்தைக் கருவிற்கு ஒரு கௌரவம். அதே பெரியப்பா மகனுடன் நீயும் நானுமா போட்டியிட்டு ஆட்டத்தின் முடிவில் ஆட்டம் கண்டு அடங்கிப் போவதும் தந்தையின் கௌரவம் காட்டுவதே. கருவிற்கும் பொருத்தமானதே.

அருமையான செருகல்கள். ஆழ்ந்த கருத்துக்கள். இப்படிப் பதிவிட நானும் விரும்புகிறேன். ஹைதராபாத்தில் எனக்கு பிளாட் கிடைக்குமா?

அருமை ரவி சார். காலைப் பொழுது தங்கள் பதிவுகளைப் பார்த்தவுடன் இனிதே ஆரம்பிக்கிறது. மனதில் தானாகவே நல்லெண்ணங்கள் அமர்ந்து கொள்கின்றன. அது தங்களுக்கும் தங்கள் தொடருக்கும் கிடைத்த வெற்றி.

வாழ்த்துக்கள்.

vasudevan31355
12th July 2015, 10:24 AM
குமார் சார் அடுத்தடுத்து வரும் அற்புத காணக் கிடைக்காத ஆவணங்களுக்கு நன்றிகள். அசர வைக்கிறீர்கள்.

vasudevan31355
12th July 2015, 12:37 PM
http://www.katzy.dsl.pipex.com/Smileys/1000post.gif

1000 பதிவுகளை தாண்டிய நண்பர் குமார் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

adiram
12th July 2015, 01:09 PM
டியர் வரதகுமார் சுந்தரராமன் (குமார்) சார்,

தங்களின் மகத்தான 1000 பதிவுகளுக்கு பாராட்டுக்கள் .

இது மேலும் பல்லாயிரமாக பெருக வாழ்த்துக்கள்.

adiram
12th July 2015, 01:37 PM
டியர் வாசு சார்,

மு.க.முத்துவின் சிறந்த பாடல் ஒன்றினை எதிர்பாராத நேரத்தில் திடுமென பதித்து அசத்தி விட்டீர்கள். அதுவும் தலைப்பு 'கருப்பு சிவப்பில்'.

உண்மையில் எம்.ஜி.ஆர் நடித்த பாடலுக்கு முத்து குரல் கொடுத்தது போலத்தான் இருந்தது. அந்த காப்பிதான் அவரது பெரிய மைனஸ் பாயிண்டாக அமைந்து போனது. ஒன்றிரண்டு படங்களோடு சுதாரித்திருக்கலாம். கோட்டை விட்டுவிட்டார். கார்பன் காப்பி எப்போதும் அசலாகாது என்பதை அறியத் தவறிவிட்டார்.

எம்.ஜி.ஆர். அவர்கள் பார்முலா எம்.ஜி.ஆர். அவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதை மு.க.முத்து., பாக்கியராஜ், ராமராஜன் ஆகியோர் உணரத் தவறியது அவர்கள் துரதிஷ்டமே.

இவ்வளவு பெரியஅரசியல் பின்புலம் இருந்ததற்கு, மதுவுக்கு அடிமையாகாமல், தனிப்பட்ட ஒரிஜினல் நடிப்பை மேற்கொண்டிருந்தால் ஒரு முப்பது நாற்பது படங்களாவது தந்திருக்க முடியும்.

ஆனால் மனிதர் பாட்டு ராசிக்காரர். அவர் படங்களில் பாடல்கள் அருமையாக அமைந்து விடும்.

நல்லதொரு பாடலை பதிவிட்டதற்கு நன்றி.

uvausan
12th July 2015, 01:59 PM
திரு குமார் - 1000 பதிவுகள் - உங்கள் அயராத உழைப்பை எடுத்துக்காட்டுகிறது . எவ்வளவு ஆவணங்கள் - எப்படி இப்படி சேமித்து வைத்து உள்ளீர்கள் - முன்பே இப்படி ஒரு மய்யம் வரும் என்று தெரியுமா ? தீர்கத்தரசி என்று உங்களை அழைத்தால் அது மிகையாகாது - 1000 பதிவுகள் பல லக்ஷ்சம் பதிவுகளைத்தொட உங்களுக்கு நல்ல தேக ஆரோக்கியத்தையும் , இதே உற்ச்சாகத்தையும் இறைவன் அளிக்க வேண்டுகிறேன்

vasudevan31355
12th July 2015, 02:44 PM
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்

http://2.bp.blogspot.com/-HRNJSnA1-84/TenskpB9duI/AAAAAAAAAuY/mP0R6cDrGMY/s320/spb.jpg

(நெடுந்தொடர்)

17

'ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு '

படம்

http://tamildada.com/wp-content/uploads/2013/08/Avalukendru_Oru_Manam.jpg

http://i.ytimg.com/vi/_ukBdTZTQgM/hqdefault.jpg

உற்சாகம்...உற்சாகம்... உற்சாகம்

அப்படி ஒரு உற்சாகம்... கரை கடந்த உற்சாகம்

அணை உடைத்த வெள்ளமாய் பொங்கி வரும் உற்சாகம்.

கட்டவிழ்ந்த காட்டாறாய் கரை புரண்ட உற்சாகம்

அதுதான் பாலாவின் இந்தப் பாடல். உற்சாகம் அன்றி வேறு எதுவுமே இல்லை.

http://i.ytimg.com/vi/FX1BdEvGwW0/hqdefault.jpg

மழைக்கு மரத்தோரம் ஒதுங்கும் ஜெமினி. அதே மழையில் நனைந்து அதே மரத்தோரம் காஞ்சனா ஒதுங்க, ஜெமினி தன் வேலையைத் தொடங்க, கரெக்டாக அந்தக் கால தப்பாத சினிமா பார்முலாவின்படி ஒரு பெரிய இடி இடித்து வைக்க, நாயகி மிரண்டு நாயகனை பயத்தில் கட்டிப் பிடித்து அவன் மார்பில் சாய்ந்து கொள்ள, நாயகன் இன்ப சுகம் அனுபவிக்க, சட்டென்று நாயகி சுதாரித்து விலகி வெட்கத்தில் ஓடிவிட, நாயகன் மனதில் 'ஆயிரம் நினைவும் ஆயிரம் கனவும்' வருவது நிஜம்தானே!

மனம் மகிழ்ச்சி எல்லை மீறி துள்ளிக் குதித்து பாட ஆரம்பிக்கிறான் காதலன் கொட்டும் மழையிலே. அந்த பூங்காவைச் சுற்றி ஓடி ஆடி தன்னுள் பொங்கும் ஆனந்தத்தையெல்லாம் அள்ளித் தெளிக்கிறான் அங்கு பெய்யும் மழையை விடவும் வேகமாக .

காதலனாக ஜெமினி. முழுக்க முழுக்க மழையிலே (செயற்கை) எடுக்கப்பட்ட பாடல். ஜெமினி துள்ளாட்டம் போட்டிருப்பார். ஜெமினிக்கு இந்தப் பாடலில் 'இது தேவையா?' என்று பாதியும், "ஏன் நன்றாகத்தானே இருக்கிறது? அதுக்கென்ன?" என்று மீதியுமாக விமர்சனங்கள் அப்போது எழும்ப நான் அதில் இரண்டாவது கட்சி.

மனதை வருடும் மென்மையான பாடல்களிலேயே நாம் பார்த்துப் போன ஜெமினி இதில் எம்.ஜி.ஆர் ரேஞ்சுக்கு அங்குமிங்கும் ஓடி ஆடி, கை கால்களைத் தூக்கி ஆடிப் பாடுவதும் ரசிக்கத் தகுந்ததே.

மழைக் காட்சிகளை மெனக்கெட்டுப் படமாக்கியிருப்பார் ஸ்ரீதர். ஆனாலும் சில இடங்களில் கன்டின்யூட்டியில் கோட்டை விட்டுவிட்டதை சொல்லாமல் இருக்க முடியவில்லை.

'பூவை அள்ளித் தந்தாள் அந்தப் பூந்தென்றல் அன்னம்
போதை கொண்டு ஆடும் எந்தன் மனமென்னும் கிண்ணம்'

சரண வரிகளை முதல் முறை ஜெமினி பாடும்போது முழுக்க தொப்பரையாக நனைந்திருப்பார். பேன்ட் ஷர்ட் முழுக்க நனைந்திருக்கும். அதே வரிகள் திரும்ப வரும்போது பார்க்கில் உள்ள நீர்த்தேக்கக் கட்டையில் அமர்வார். அப்போது பேன்ட் காய்ந்து இருக்கும். பிறகு மழை நீர் பட்டு மீண்டும் நனைய ஆரம்பிக்கும். எப்படி?:)

அதே போல நல்ல வெயில் அடித்துக் கொண்டிருக்கும். வரிசையாக நடப்பட்டிருக்கும் அசோகா மரங்களின் இடைவெளிகளில் நிழலும், வெயிலும் மாறி மாறி நன்றாகவே தெரியும். ஆனால் ஜெமினி முழுக்க பூவாளி பக்கெட்டுகளின் மழைச் சாரலில் நனைந்து கொண்டிருப்பார்.

சரி! வெயில் அடிக்கும்போது அதே சமயம் மழை பெய்யக் கூடாதா? அது என்ன அதிசயமா? என்று ஜெமினி ரசிகர்கள் சண்டைக்கு வந்து விட வேண்டாம். காக்கைக்கும் நரிக்கும் கல்யாணம் என்றே நினைத்துக் கொள்கிறேன். போதுமா?:)

ஜெமினிக்கு முன்னால் மட்டுமல்ல... அவருக்குப் பின்னாலேயும் நீண்ட தூரம் மழை பெய்ய வைத்து காட்சியின் மழை சூழ்நிலைக்கு மெனக்கெட்டிருப்பார்கள். அதைப் பாராட்டியே தீர வேண்டும். ஸ்ரீதர் ஸ்ரீதர்தான்.

பாடலின் நடுவில் காட்சி தரும் வானவில் அழகுக் கோர்வை. ஆனால் வானவில் வானத்தில் இல்லாமல் பூஞ்செடிகளின் மேல், பூங்காவின் தரையில் எல்லாம் ஊடுருவிப் பாயும். இதையும் கொஞ்சம் கவனித்திருக்கலாம்.

http://i.ytimg.com/vi/ZcRkwPfJPBM/hqdefault.jpg

ஜெமினியின் சில போஸ்கள் ரசிக்கத்தகுந்தவை. பாடலின் முதல் சரணம் முடிந்து இடையிசை துவங்கும் போது ஜெமினி வைக்கும் ஸ்டெப்ஸ் அப்படியே 'காலங்களில் அவள் வசந்தம்' பாடலைக் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும். (ஒரு டர்ன் திரும்பி ரவுண்ட் அடிப்பார்) பின் இருபக்கமும் அசோகா மரங்களுக்கு இடையில் உள்ள பாதையில் காமெராவின் டாப் ஆங்கிளில் இருந்து பின்பக்கமாக நடந்து செல்வது செம டக்கராக இருக்கும்.

பொல்லாத கவிஞன் எழுதிய,

'கை கொள்ளாத வண்ணம் அவள் சுகம் கொடுத்தாளோ'

வரிகளை நல்லவேளை ஜெமினி தன்னை அணைத்துக் கொள்வது போல பாவம் காட்டி நம் வயிற்றில் பால் வார்த்தாரோ!:) நாம் தப்பினோமோ!

கொஞ்சம் ஏமாந்தால் போதும்டா சாமி! கண்ணதாசன் நம்மை மண்ணைக் கவ்வ வச்சுடுவார். புரிஞ்சவங்க மத்தியில் சங்கடத்திலும் நெளிய வச்சுடுவார்.

இப்பாடலின் இசை பற்றி என்ன சொல்ல! எப்படி எழுத!?

ஒவ்வொரு வாத்தியமும் வசியம் செய்கிறது. முதல் சரணம் தொடங்குமுன் வரும் அந்த ஷெனாயின் அற்புதத்தை வார்த்தைகளில் விவரித்து விட இயலுமா என்ன? அதற்கப்புறம் பொங்கிப் பிரவாகமெடுக்கும் அந்த இசை. யம்மாடி! இசை மழை என்பார்களே! இசை வெள்ளம் என்பார்களே! அது இந்தப் பாடலுக்குத்தான் பொருந்தும். மழைப் பாடலுக்குத் தக்கபடி மகத்தான இசை. சின்ன சின்ன புல்லாங்குழல் கலக்கல்களை மறக்கவே முடியாது.

'என் கண்ணோடு பெண்மை ஒரு கதை படித்தாளோ' என்று பாலா முடித்தவுடன் அப்படியே அந்த டியூனையே மன்னர் இசையாகக் கொடுக்கும் அழகு கோடி பெறும். அதே போலத்தான் 'கை கொள்ளாத வண்ணம் அவள் சுகம் கொடுத்தாளோ' வரிகள் முடிந்ததும்.

'மெல்லிசை மன்னர்' விஸ்வரூப இசை அமைத்து நமக்களித்த பாடல் இது. படத்தின் டைட்டில் இசை மறக்கவே முடியாத ஒன்று. (டைட்டில் இசையில் 'கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா' பாடலின் கிடார் இசை டியூனை மிக அழகாக கொஞ்சமாக தெரியாத வண்ணம் கலந்து கொடுத்திருப்பார் 'மெல்லிசை மன்னர்')

பாலா பாடல் காட்சியை நன்கு மனதில் உள்வாங்கி குதூகலித்திருப்பார். நம்மையும் குதூகலிக்க வைப்பார்.

அந்த முதல்

'லா...ஹஹஹா ஹோஹஹோ
ஹஹஹா ஹஹஹா ஹா'

ஹம்மிங்கிலேயே கதாநாயகனின் சந்தோஷ மனநிலையை மிக அருமையாக பாலா தன் குரலில் கொண்டு வந்து விடுவார். என்னவோ லாட்டரியில் கோடி ரூபாய் விழுந்த உற்சாக மனநிலை நமக்கு ஏற்பட்டுவிடும்.

இந்தப் பாடல் விரும்பிகள் யாராக இருந்தாலும் மேற்சொன்ன அந்த ஹம்மிங்கை முணுமுணுக்காமல் இருக்கவே மாட்டார்கள். (யாருக்கும் தெரியாமல்)

இந்த உற்சாகம் கொப்புளிக்கும் பாலாவின் பாடலுக்குப் பின்னால்தான் மற்ற பாலாவின் பாடல்கள் எல்லாம்.

'நாள் போகப் போக ஆசை உள்ளம் எங்கே போகுமோ? என்ன ஆகுமோ?
எங்கே போகுமோ?'

என்று எதிர்கால சந்தோஷ நினைவுகளை நினைத்து 'என்ன ஆகுமோ...இது எங்கு போய் முடியுமோ' என்று காதலன் இன்பக் கவலை ஒன்றை மட்டுமே படும்படி வார்த்தைகளில் கண்ணதாசன் விளையாடும் விளையாட்டே விளையாட்டு.

கேட்க, கேட்க, பார்க்க பார்க்க பரவசம் ஒன்றையே பரிசாகத் தரும் பாலாவின் பாடல் ஒன்று உண்டென்றால் அது இதுதான்.

http://i.ytimg.com/vi/irmgxxYkhkw/maxresdefault.jpg

ஓ...ஓ...ஒஹஹஹோ ஹஹஹா
ஒஹஹஹோ ஹஹஹா ஹா

லா...ஹஹஹா ஹோஹஹோ
ஹஹஹா ஹஹஹா ஹா

ஓ...ஓ...ஒஹஹஹோ ஹஹஹா
ஒஹஹஹோ ஹஹஹா ஹா

ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு
காணுது மனது ஹோ ஹோ
பெண்ணைத் தொட்ட உள்ளம்
எங்கும் இன்ப வெள்ளம்
எங்கே அந்த சொர்க்கம் ஹா(ங்)
எங்கே அந்த சொர்க்கம்

லா...ஹஹஹா ஹோஹஹோ
ஹஹஹா ஹஹஹா ஹா

ஓ...ஓ...ஒஹஹஹோ ஹஹஹா
ஒஹஹஹோ ஹஹஹா ஹா

ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு
காணுது மனது ஹோ ஹோ
பெண்ணைத் தொட்ட உள்ளம்
எங்கும் இன்ப வெள்ளம்
எங்கே அந்த சொர்க்கம் ஹா(ங்)
எங்கே அந்த சொர்க்கம்

பூவை அள்ளித் தந்தாள் அந்தப் பூந்தென்றல் அன்னம்
போதை கொண்டு ஆடும் எந்தன் மனமென்னும் கிண்ணம்
பூவை அள்ளித் தந்தாள் அந்தப் பூந்தென்றல் அன்னம்
போதை கொண்டு ஆடும் எந்தன் மனமென்னும் கிண்ணம்
என் கண்ணோடு பெண்மை ஒரு கதை படித்தாளோ
நான் காணாமல் நெஞ்சை அவள் படம் பிடித்தாளோ
நாள் போகப் போக ஆசை உள்ளம் எங்கே போகுமோ என்ன ஆகுமோ
எங்கே போகுமோ

ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு
காணுது மனது ஹோ ஹோ
பெண்ணைத் தொட்ட உள்ளம்
எங்கும் இன்ப வெள்ளம்
எங்கே அந்த சொர்க்கம் ஹா(ங்)
எங்கே அந்த சொர்க்கம்

மூடி வைத்த தட்டில் இன்று மோகச் சின்னங்கள்
ஆடுதொட்டில் போடும் எந்தன் காதல் எண்ணங்கள்
மூடி வைத்த தட்டில் இன்று மோகச் சின்னங்கள்
ஆடுதொட்டில் போடும் எந்தன் காதல் எண்ணங்கள்

கை கொள்ளாத வண்ணம் அவள் சுகம் கொடுத்தாளோ
நான் சொல்லாத சொல்லில் அவள் சுவை வளரத்தாளோ
நாள் போகப் போக ஆசை உள்ளம் எங்கே போகுமோ என்ன ஆகுமோ
எங்கே போகுமோ

ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு
காணுது மனது ஹோ ஹோ
பெண்ணைத் தொட்ட உள்ளம்
எங்கும் இன்ப வெள்ளம் எங்கே அந்த சொர்க்கம் ஹா(ங்)
எங்கே அந்த சொர்க்கம்

லா...ஹஹஹா ஹோஹஹோ
ஹஹஹா ஹஹஹா ஹா

ஓ...ஒஹஹஹோ ஹஹஹா
ஒஹஹஹோ ஹஹஹா ஹா


https://youtu.be/_ukBdTZTQgM

adiram
12th July 2015, 04:22 PM
டியர் வாசு சார்,

நேற்று 'மங்கையரில் மகராணி' படித்தபோதே நினைத்தேன், தொடர்ந்து 'ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு' வருமென்று. தாமதிக்காமல் வந்தே விட்டது. பாராட்டுக்கள்..

வழக்கம்போல கூர்ந்த கவனிப்பு, வழக்கம்போல சிரத்தையான உழைப்பு, வழக்கம்போல கலர்புல் பரிமாறல், வழக்கம்போல முழுப்பாடல் வரிகள், வழக்கம்போல அருமையான வீடியோ இணைப்பு, பாடல் காட்சிகளை பாராட்ட மட்டும் செய்யாமல் படமாக்கத்தில் உள்ள குறைகளையும் சுட்டிக்காட்டல்... என வழக்கம்போல அறுசுவை விருந்து.

முதல் பாடல் பதிவில் இருந்த டெம்போ கொஞ்சமும் குறையவில்லை உங்களிடம். சொல்லப்போனால் கூடிக்கொண்டே போகிறது.

இதுவரையில் இந்தப்பாடல் நிஜ மழையில் எடுத்தது என்றே எண்ணியிருந்தேன். அந்த அளவுக்கு ஏரியா முழுவதும் தூறல்கள் விழும். பல படங்களில் செயற்கைமழை அப்பட்டமாக தெரியும் (உ-ம்: நான் படத்தின் போதுமோ இந்த இடம்). ஆனால் இப்பாடலில் மரங்களின் நிழல் விழுந்ததை நான் கவனிக்கவில்லை. (அதுசரி, எல்லோரும் வாசு ஆகிவிட முடியாது)

உண்மையான மழையில் எடுக்கப்பட்ட காதல்கோட்டை கிளைமாக்ஸ் அபாரம். கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் நிஜ மழையிலே படமாக்கி அசத்தியிருப்பார்கள் அகத்தியனும் தங்கர்பச்சானும்.

கண்டினியூட்டி விஷயத்தில் பல இயக்குனர்கள் கோட்டை விடுவது வழக்கமே. தியாகம் படத்தின் 'வருக எங்கள் தெய்வங்களே' பாடல் காட்சியின் இறுதியில் தொடர்ந்து 72 மணி நேரம் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருக்கும் நடிகர்திலகம் இறுதி கட்டத்தை நெருங்கும்போது பலரும் பிரார்த்தனை செய்வார்கள். அப்போது கடிகாரம் மணி இரண்டை நெருங்கும். அப்போது நடிகர்திலகத்தின் சீடர்களில் ஒருவர் ஜீசஸை பிரார்த்திப்பதை காட்டுவார்கள். அப்போது சூரியன் மாலை ஐந்து மணி பொசிஷனில் இருக்கும்.

இப்பாடலில் ஜெமினி தொப்பலாக நனைந்து துள்ளாட்டம் போடுவது இருபது வயது இளைஞனை நினைவுபடுத்தினாலும், உருவத்திலும் முகத்திலும் முதிர்ச்சி நன்றாக தெரியும்.

செயற்கை மழை என்பதை மறைக்க வானவில் உத்தியை ஸ்ரீதர் கையாண்டிருப்பார் போலும்.

நல்ல பாடல்.. நல்ல ஆய்வு வேறென்ன சொல்ல?.

uvausan
12th July 2015, 05:22 PM
வாசு , மீண்டும் வார்த்தைகள் கிடைக்கவில்லை - ஒரே ஒரு மொழியில் மட்டும் சில வார்த்தைகள் கிடைத்தன - அவற்றின் தமிழாக்கத்தை எனக்குத் தெரிந்தவரை எழுதுகிறேன் .

இரிஸ் : "தொப்பாக்கோ தோன்டோ , டமால் மாண்டோ - அபுள்ளே கஷ்ட்டம் சபோக்கோ ஜாக்கோ "

தமிழாக்கம் : தொப்பாக்கோ தோன்டோ : உண்மையான உழைப்பு ; டமால் மாண்டோ : என்றுமே வீண் போகாது ; அபுள்ளே - அப்படி இல்லாமல் ; கஷ்ட்டம் : ஏனோதானோ என்று ; சபோக்கோ ஜாக்கோ : எழுதினால் ஒருவரும் மிஞ்ச மாட்டார்கள் ....

சுருக்கம்மாக சொன்னால் , திரு ஆதிராமின் வார்த்தைகளை அப்படியே ஆமோதிக்கிறேன் ...

uvausan
12th July 2015, 05:48 PM
திரு ஆதிராம் - நன்றாக எழுதுபவர்கள் எவ்வளவு முக்கியமோ , அவ்வளவு முக்கியம் அவர்கள் போடும் பதிவுகளை ரசனையோடு படிப்பவர்கள் , படித்து மனமார பாராட்டுபவர்கள் - இவர்கள் இல்லையென்றால் எழுதும் எழுத்துக்கள் செடிகள் போல பூத்துக்கொண்டே இருக்காது , வெறும் பூக்கள் போல பூத்து வாடிவிடும் - எழுதுபவர்களுக்குக் கூட அவ்வளவு பெரிய மனம் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை - ஆனால் , படித்து , அதற்குப்பின்னால் இருக்கும் உழைப்பை உணர்ந்து அவர்களை ஓர் இரண்டு வார்த்தைகளாவது சொல்லிப்பாராட்டுவதர்க்கு பரந்த மனம் தேவை -

இந்த திரியில் யாருமே எதையுமே எதிர்ப்பார்க்காமல் சேர்ந்து இருக்க வேண்டும் என்ற ஒரே நினைப்பில் பதிவுகளை போட்டுக்கொண்டே இருக்கிறோம் - இந்த உழைப்பை , dedication யை வேறு எங்காவது காண்பித்து இருந்தால் பல லட்சம் சம்பாதித்து இருக்கலாம் - இங்கு கிடைப்பது விலை மதிக்க முடியாத ஆத்ம திருப்தி - இது ஒன்றுதான் வாசு போன்றவர்களுக்கு உங்கள் மூலமும் , கொஞ்சம் என் மூலமும் கிடைக்கிறது - சிலர் எதையுமே கண்டு கொள்ளாமல் அவர்கள் வழியில் , அவர்களுக்குப்பிடித்ததை மட்டுமே பதிவிட்டு மற்றவர்களின் ஈடுபாட்டை கண்டுக்கொள்ளாமல் இருப்பது - எழுதுபவர்களுக்கு ஒன்றும் இல்லை ஆனால் அந்த போக்கு நமக்குள் இருக்கும் சகோதரத்தன்மையை எடுத்துக்காட்டுவதாய் அமைவதில்லை .

மற்றவர்களுடைய நல்ல பதிவுகளை எவ்வளவு பழைய பதிவுகளையும் மனதில் கொண்டு அதையும் சம்பந்தப்படுத்தி அவர்களைப்பாராட்டுவது என்பது உங்களது பரந்த மனம் - இறைவன் கொடுத்த வரம் . வாசுவின் பதிவுகளை விட நீங்கள் அவரை நெஞ்சார பாராட்டும் பதிவுகளை நான் மிகவும் ரசிக்கிறேன் - நம்மால் வாசுவிற்கு திருப்பி செய்யும் நன்றிக்கடன் இது ஒன்றுதான் - என்னால் உங்களைப்போல எழுத வராது , அதனால் ஒரு பெரிய நன்றி மீண்டும் உங்களுக்கு !!

eehaiupehazij
12th July 2015, 06:13 PM
வாசு சார்
ஆயிரம் வளைவு ஆயிரம் நெளிவுசுளிவுடன் உங்கள் வர்ணனை மழையில் நனைய வைத்தமைக்கு நன்றித் தூறல்கள்!!


இப்பாடல் காட்சிக்கு இன்ஸ்பிரேஷன் மழை நனைவுப் பாடல்களின் இலக்கண இலக்கியக் காட்சியமைப்பைக் கொண்ட Singing in the Rain திரைப்படமே!

இப்புவியின் நம்பர் ஒன் நடன நாயகரான ஜீன் கெல்லியின் காலமழை கரைக்க முடியாத குடை டான்ஸ்!! கதாநாயகியின் தீண்டுதலால் மகிழ்வு தூண்டப்பட்ட நாயகன் மழையில் நனைந்து ஓடி ஆடி பாடி தாண்டி ஆடுவதே தீம் !!

குடைநடனம் காதல்மன்னரின் நடன வரையறைக்கு அப்பாற்பட்டதால் ஸ்ரீதர் அவரது மென்மையான தன்மைக்கு ஏற்ப ஜெமினியை குடை பிடிக்காமல் மழையில் நனைய விட்டு விட்டார் !!

https://www.youtube.com/watch?v=w40ushYAaYA

vasudevan31355
12th July 2015, 06:57 PM
டியர் ஆதிராம் சார்,

தங்கள் மனமுவந்த பாராட்டிற்கு என் ஆத்மார்த்தமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ரவி சார் சொன்னது போல கடின உழைப்புப் பதிவுகளின் பெருமைகளை எந்த நாளிலும் நீங்கள் பாராட்டத் தயங்கியதே இல்லை. அடுத்தவர் பதிவுகளை அலட்சியம் காட்டாமல் படித்து அதிலுள்ள நிறை குறைகளை சுட்டிக் காட்டி பதிவர்களை உற்சாகப்படுத்துவது என்பது தங்களுக்குக் கைவந்த கலை. இது எல்லோருக்கும் அமையாது.

சிறு சிறு கருத்து மோதல்கள் நண்பர்களுக்கிடையே ஏற்பட்டாலும் அது குழந்தைகளின் சண்டை போலத்தான். ஆனால் அதை மனதிலே வைத்து நீங்கள் பதிவுகளை படிக்காமல் பாராட்டாமல் விட்டது கிடையாது. இது ஒரு உயரிய பெருங்குணம். இதுவும் எல்லோரிடமும் அமையாது.

அது போல நிறைய தரம் சொல்லியிருக்கிறேன். பதிவைப் பற்றிப் புரிந்தவர்கள் மனதார அதை ரசிப்பார்கள் அது சம்பந்தப்பட்ட விஷயங்களை பதிவாளர்களிடம் பகிர்ந்து கொள்வார்கள் என்பதற்கு சிறந்த முன் உதாரணம் நீங்கள். நடுவில் திரிக்கு வேலை நிமித்தம் தாங்கள் வர இயலாவிட்டாலும் ஒரு வாரம் சென்று மீண்டும் வந்தால் கூட மறக்காமல் பழைய பதிவுதானே என்று விட்டுவிடாமல் அதையும் படித்து கருத்துக்கள் கூறி பதிவாளர்களை நீங்கள் உற்சாகப்படுத்தியதை நான் பலமுறை கண்டிருக்கிறேன். குமார் சாருக்கு நீங்கள் வாழ்த்து கூறியிருப்பது உங்கள் பாராட்டும் உயர் குணத்திற்கு சிறந்த உதாரணம். தங்கள் உண்மையான பாராட்டுதல்களுக்கு என் நன்றிகள் மீண்டும். தங்கள் ரசிப்புத் தன்மைக்கும் என் மனமுவந்த பாராட்டுதல்கள்.

'தியாகம்' படத்தின் கன்டின்யூடி விஷயம் அருமை. இனிமேல்தான் பார்க்கப் போகிறேன். நான் இதுவரை கவனித்ததில்லை ஆதி சார்.

நிறையப் படங்களில் சண்டைக் காட்சிகளில் ஹீரோ, வில்லன் அடியாட்கள் சேற்றில் புரண்டு, வீதியில் விழுந்து சண்டை இடுவார்கள். பேன்ட் பின்புறம் எல்லாம் அழுக்காக இருக்கும். சண்டை அடுத்த கட்டத்தைத் தாண்டும் போது மீண்டும் பேன்ட் அழுக்கே இல்லாமல் சண்டை போடுவார்கள். வேடிக்கையாக இருக்கும்.

அவ்வளவு ஏன்? பிரம்மாண்ட பெரிய படமான 'ஷோலே' படத்தில் கவனிக்காமல் மிகப் பெரிய தவறொன்றை செய்திருப்பார்கள். அது என்னவென்று விஷுவலுடன் விரைவில் தெரிவிக்கிறேன்.

vasudevan31355
12th July 2015, 07:56 PM
ஆதிராம் சார்,

'தியாகம்' படத்தில் நடிகர் திலகத்தின் உதவியாளர்களாக நடிக்கும் சிஷ்யப் பிள்ளைகள் இருவர்.

ஒருவர் ஜூனியர் பாலையா.

இன்னொருவர் கிருஷ்ணமூர்த்தி.

http://i62.tinypic.com/30xem40.jpg

நாடக நடிகர். நிறைய சினிமாக்களிலும் நடித்துள்ளார். பார்த்திபன் கனவு (புதிது) படத்தில் கூட ஸ்ரீகாந்த்துடன் நடித்திருப்பார். ரேடியோ ரிப்பேர் செய்து கொண்டே இருப்பார்) வெடுவெடுவென்று கொஞ்சம் உயரமாய் இருப்பார்.

http://i59.tinypic.com/51ujbs.jpg

நீங்கள் சொன்னதை கவனித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக பொழுது போவதாக காட்டியது மாதிரிதான் தெரிகிறது.

http://i61.tinypic.com/2qn1gmf.jpg

கடிகாரத்தில் ஒரு மணி காட்டும் போது கிருஷ்ணமூர்த்தி,

'நம்பிக்கை வைத்தோம் நன்மை செய்வாய் ஆண்டவரே' என்று முழங்காலிட்டு சிலுவையில் அறைந்த இயேசு படத்தின் முன் வேண்டுவார்.

அப்புறம் மேஜர் குளுகோஸ் கலந்து கொடுப்பது, நடிகர் திலகம் அதைக் குடிக்க முடியாமல் தவற விடுவது, பின் வாயிலிருந்து ரத்தம் அழிய அதை சட்டையால் துடைத்துக் கொள்வது, பின் அனைவரும் சோகத்துடன் பார்பாது, நாகேஷின் அல்லா வேண்டல், (கடிகாரம் அப்போது மணி 1.30 காட்டும்) அப்புறம் மனோரமாவின் சக்தி வேண்டல், படாபட்டின் மாரியம்மா கும்பிடு, பின் கிருஷ்ணமூர்த்தியின் பிதா வேண்டுதல், (இப்போது வானம் கொஞ்சம் இருண்டிருக்கும். சூரிய ஒளி மங்கியிருக்கும்) மறுபடி மேஜரின் வேண்டுகோளுக்குப் பிறகு வானம் தெளிவாக இருக்கும். நடிகர் திலகம் சைக்கிள் ஓட்டி முடிக்கும் போது மணி இரண்டு காட்டும். பார்வையாள ஜனங்கள் மீது 'சுள்'ளென்று வெயில் அடிக்கும்.

சரியென்றும் படுகிறது. இல்லையென்றும் படுகிறது. சரி! அந்த நேரம் மேகங்கள் சூழ்ந்து விட்டது என்றே வைத்துக் கொள்வோமே.:)

http://i57.tinypic.com/35lylc7.jpg

இன்னொரு கொசுறு செய்தி. நாகேஷின் பரிதாபத்துக்குரிய வியாதி பெண்ணாக நடிகர் திலகத்தை பெண்டு நிமிர்த்தும் அந்த முஸ்லீம் பெண் நடிகை யார் தெரியுமா?

சுமங்கிலி. இந்தப் படத்தில்தான் அவர் அறிமுகம். பின்னாளில் சில படங்களில் காமெடி ரோல்களில் தலை காட்டினார்.

இவ்வளவு இருந்தும் அத்தனை பேரையும் 'ஆண்டவரை' போடாமல் இருந்தால் எப்படி?

http://i60.tinypic.com/2vdr0hy.jpg

vasudevan31355
12th July 2015, 08:20 PM
திரு ஆதிராம் - நன்றாக எழுதுபவர்கள் எவ்வளவு முக்கியமோ , அவ்வளவு முக்கியம் அவர்கள் போடும் பதிவுகளை ரசனையோடு படிப்பவர்கள் , படித்து மனமார பாராட்டுபவர்கள் - இவர்கள் இல்லையென்றால் எழுதும் எழுத்துக்கள் செடிகள் போல பூத்துக்கொண்டே இருக்காது , வெறும் பூக்கள் போல பூத்து வாடிவிடும் - எழுதுபவர்களுக்குக் கூட அவ்வளவு பெரிய மனம் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை - ஆனால் , படித்து , அதற்குப்பின்னால் இருக்கும் உழைப்பை உணர்ந்து அவர்களை ஓர் இரண்டு வார்த்தைகளாவது சொல்லிப்பாராட்டுவதர்க்கு பரந்த மனம் தேவை -

இந்த திரியில் யாருமே எதையுமே எதிர்ப்பார்க்காமல் சேர்ந்து இருக்க வேண்டும் என்ற ஒரே நினைப்பில் பதிவுகளை போட்டுக்கொண்டே இருக்கிறோம் - இந்த உழைப்பை , dedication யை வேறு எங்காவது காண்பித்து இருந்தால் பல லட்சம் சம்பாதித்து இருக்கலாம் - இங்கு கிடைப்பது விலை மதிக்க முடியாத ஆத்ம திருப்தி - இது ஒன்றுதான் வாசு போன்றவர்களுக்கு உங்கள் மூலமும் , கொஞ்சம் என் மூலமும் கிடைக்கிறது - சிலர் எதையுமே கண்டு கொள்ளாமல் அவர்கள் வழியில் , அவர்களுக்குப்பிடித்ததை மட்டுமே பதிவிட்டு மற்றவர்களின் ஈடுபாட்டை கண்டுக்கொள்ளாமல் இருப்பது - எழுதுபவர்களுக்கு ஒன்றும் இல்லை ஆனால் அந்த போக்கு நமக்குள் இருக்கும் சகோதரத்தன்மையை எடுத்துக்காட்டுவதாய் அமைவதில்லை .

மற்றவர்களுடைய நல்ல பதிவுகளை எவ்வளவு பழைய பதிவுகளையும் மனதில் கொண்டு அதையும் சம்பந்தப்படுத்தி அவர்களைப்பாராட்டுவது என்பது உங்களது பரந்த மனம் - இறைவன் கொடுத்த வரம் . வாசுவின் பதிவுகளை விட நீங்கள் அவரை நெஞ்சார பாராட்டும் பதிவுகளை நான் மிகவும் ரசிக்கிறேன் - நம்மால் வாசுவிற்கு திருப்பி செய்யும் நன்றிக்கடன் இது ஒன்றுதான் - என்னால் உங்களைப்போல எழுத வராது , அதனால் ஒரு பெரிய நன்றி மீண்டும் உங்களுக்கு !!

ரவி சார்,

மிக்க நன்றி! தாங்கள் என் மீது வைத்திருக்கும் அபரிமிதமான அன்பிற்குத் தலை வணங்குகிறேன்.

//வாசுவின் பதிவுகளை விட நீங்கள் அவரை நெஞ்சார பாராட்டும் பதிவுகளை நான் மிகவும் ரசிக்கிறேன்//

நூறு சதவீதம் உண்மை ரவி சார். எழுதினால் மட்டும் போதாது. அதை ரசித்து இடும் பதிவுகளே (நிச்சயம் பாராட்டுதல்களை இல்லை) பதிவாளர்களுக்கு உத்வேகத்தைத் தரும். உற்சாகத்தையும் அளிக்கும். திரிக்கென்றெ தினமும் பலமணி நேரம் செலவாகின்றது. ஒரு பதிவை முழுமையாக அளிக்க குறைந்தது ஐந்து மணி நேரங்களாவது பிடிக்கிறது. இது நாமாக விரும்பி ஏற்றுக் கொண்டதுதான். நமக்குத் தெரிந்தது இன்னும் நாலு பேருக்குத் தெரியட்டும் என்றுதானே கொடுக்கிறோம். (இதில் சுயநலமோ, வருமானங்களோ மற்ற எதுவுமே இல்லை), ஆனால் அதை பார்வையாளர்கள் படித்தார்கள் என்று தெரியும்போது பட்ட களைப்பெல்லாம் நீங்கி விடுகிறது. அதைத் தான் பதிவாளர்கள் விரும்புவது. பாராட்டையல்ல.

ஆதிராம் சார், ராகவேந்திரன் சார், சின்னக் கண்ணன் சார், நீங்கள், நண்பர் கல்நாயக், கிருஷ்ணா எல்லாம் அதைப் படித்து விட்டு பதிலிடும் போது பதிவுகளுக்கு இருக்கும் மரியாதை கூடுகிறது. பாராட்டுவது ஒரு புறம் கிடக்கட்டும். பதிவைப் படித்து நல்லதோ கெட்டதோ நாலு வார்த்தை அதைப் பற்றி பகிர்ந்து கொண்டால் அதில்தான் ஆத்ம திருப்தியே.

உங்களுடைய இந்தப் பதிவு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய பதிவு. மிகவும் நன்றி ரவி சார்.

vasudevan31355
12th July 2015, 08:26 PM
வாசு , மீண்டும் வார்த்தைகள் கிடைக்கவில்லை - ஒரே ஒரு மொழியில் மட்டும் சில வார்த்தைகள் கிடைத்தன - அவற்றின் தமிழாக்கத்தை எனக்குத் தெரிந்தவரை எழுதுகிறேன் .

இரிஸ் : "தொப்பாக்கோ தோன்டோ , டமால் மாண்டோ - அபுள்ளே கஷ்ட்டம் சபோக்கோ ஜாக்கோ "

தமிழாக்கம் : தொப்பாக்கோ தோன்டோ : உண்மையான உழைப்பு ; டமால் மாண்டோ : என்றுமே வீண் போகாது ; அபுள்ளே - அப்படி இல்லாமல் ; கஷ்ட்டம் : ஏனோதானோ என்று ; சபோக்கோ ஜாக்கோ : எழுதினால் ஒருவரும் மிஞ்ச மாட்டார்கள் ....

சுருக்கம்மாக சொன்னால் , திரு ஆதிராமின் வார்த்தைகளை அப்படியே ஆமோதிக்கிறேன் ...

ரவி சார்,

உங்களை....ஆ...நற நற:)

RAGHAVENDRA
12th July 2015, 10:44 PM
வாசு சார்
ஆயிரம் நினைவு பாடலைப் பற்றி என் மனதில் உள்ளதை அப்படியே எழுதி விட்டீர்கள். இதற்கு மேலும் இலக்கியத்தில் வார்த்தை ஏது சொல்ல என்ற வாலியின் வரிகள் தான் ஞாபகத்திற்கு வருகிறது.
சென்னை மிட்லண்டில் முதல் வெளியீட்டில் பார்த்த போதே மனதில் தோன்றி விட்டது. என்னடா இவ்வளவு வெயில் அடிக்கும் போது மழையும் வருகிறதே. சுட்டெரிப்பது போன்ற வெயில் அடிக்கும் போது எப்படி மழை அடிக்கும் எனத்தோன்றும். அப்புறம் நாளடைவில் ஒளிப்பதிவு பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்ட போதே புரிந்தது. ஸ்ரீதரைப் பொறுத்தவரையில் கன்டின்யூடி பெரும்பாலும் தவறாது. இருந்தாலும் யானைக்கும் அடி சறுக்கும் என்பதற்கேற்ப அவ்வப்போது இது மாதிரி நிகழ்வதுண்டு. இருந்தாலும் இதையெல்லாம் மீறி மெல்லிசை மன்னரின் இசையும் பாலாவின் குரலும் நம்மை இப்பாடலோடு ஒன்றி விடச் செய்து விடும். மிட்லண்டில் படம் ஓடிய அந்த கொஞ்ச நாட்களுக்குள்ளேயே இந்த பாடலுக்காக நான் மூன்று முறை பார்த்தேன். இடைவேளைக்குப் பிறகு படம் பொறுமையை சோதிக்கும். இருந்தாலும் பாரதியின் நடிப்பு நம்மைக் கட்டிப்போட்டு விடும்.
படத்தின் முடிவில் நம்மை படத்தில் மூழ்கவைத்து அதன் ஹேங்கோவர் ரொம்ப நேரம் இருக்கும் படி செய்து விடும்.
அருமையான பதிவிற்கு உளமார்ந்த பாராட்டுக்கள்.

Russellisf
12th July 2015, 11:54 PM
முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான பல தமிழ்த் திரைப்படங்கள், கதாபாத்திரங்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதைக் கொண்டாட்டமாகச் சித்தரித்தவை. வெளிநாட்டு மண்ணில் விமானம் தரையிறங்குவது தொடங்கி ஒவ்வொரு காட்சியிலும் அந்நிய மண்ணை வியந்து ரசிக்கும் இந்திய மனது வெளிப்படும்.

அந்த வரிசையில் இடம்பெறும் படம் ‘உல்லாசப் பறவைகள்’(1980). கமல்ஹாஸன், ரதி, தீபா பிரதான பாத்திரங்களில் நடித்த இப்படத்தை சி.வி. ராஜேந்திரன் இயக்கியிருந்தார். ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் படமாக்கப்பட்ட இப்படத்தில் மேற்கத்திய இசையில் தனக்கு இருக்கும் மேதமையை முழு வீச்சில் வெளிப்படுத்தினார் இளையராஜா. நுட்பங்கள் நிறைந்த விரிவான இசைக்கோவை கொண்ட பாடல்களும் பின்னணி இசையும் நிறைந்த படம் இது.

மாமா மியா

‘அம்மாடி’ எனும் வியப்புச் சொல்லின் இத்தாலி மொழி வடிவமான ‘மாமா மியா’ எனும் வார்த்தையைப் பயன்படுத்தி இளையராஜா உருவாக்கிய பாடல், ‘அழகு ஆயிரம் உலகம் முழுவதும்’. முகப்பு இசையிலேயே ஜாலங்களை நிகழ்த்தியிருப்பார் இளையராஜா. மெலிதாக ஒலிக்கத் தொடங்கும் பியானோவுடன், வெவ்வேறு இசைக் கருவிகள் ஒவ்வொன்றாக இணைந்துகொண்டே வரும்.

பல்லவி தொடங்குவதற்குச் சற்று முன்னர் வரும் அந்த பிரம்மாண்டமான வயலின் இசைக் கோவை நம்மைக் காற்றில் தூக்கிச் செல்லும். ஆண் தன்மை கொண்ட குரலுடன் ‘பபபப்பா..’ என்று ஜானகி ஹம்மிங் செய்யும் பாடல்களில் இதுவும் ஒன்று. மெல்லிய குளிர் காற்று வீசும் ஐரோப்பிய நகரங்களின் பின்னணியில் துள்ளலாக ஒலிக்கும் பாடல் இது.

பரிவின் இசை

மனநோயால் பாதிக்கப்பட்டி ருக்கும் கமலுக்கு ஆறுதல் தரும் மனதுடன் ரதி பாடும் ‘நான் உந்தன் தாயாக வேண்டும்’ பாடல், ஒரு வித்தியாசமான தாலாட்டு. வேகமான தாளக்கட்டின் மேல் விரிந்து செல்லும் இசைக்கோவைகளுக்கு நடுவில் தாயின் பரிவுடன் காதலி பாடும் பாடல் இது. நுட்பமான பாவங்களுக்குப் புகழ்பெற்ற ஜானகி இப்பாடலுக்கு மேலும் மேன்மை சேர்த்திருப்பார். விரிந்திருக்கும் கடலின் மீது ஒவ்வொன்றாக விழும் தூறல் போல், மிக மென்மையான இசையுடன் தொடங்கும் இப்பாடல் முழுவதும் அன்பின் சாரல் நிறைந்த இசையைத் தந்திருப்பார் இளையராஜா.

சுகந்தத்தின் மணம்

மற்ற பாடல்களாவது ஐரோப்பாவின் எந்த நகரத்தின் கட்டிடங்கள், பாலங்கள், சாலைகளின் பின்னணியில் பொருந்திவிடும். ஆனால், ‘அழகிய மலர்களின் புதுவித ஊர்வலமே’ பாடல் ஐரோப்பிய நகரம் ஒன்றில் (ஆம்ஸ்டர்டாம் இணையக் குறிப்பு ஒன்று) நடக்கும் மலர்க் காட்சியின் பின்னணியில் பிரத்யேகமாகப் படமாக்கப்பட்டிருக்கும். இந்த மலர்க்காட்சிக்குப் பொருத்தமானதாக இப்பாடலை இளையராஜாவிடம் கேட்டு வாங்கியிருக்க வேண்டும்.

மலர்க் காட்சியின் ஊர்வலத்தில் இசைக்கப்படும் தாள வாத்தியங்களுடன் தொடங்கும் பாடலில் மலர்களின் சுகந்தமும் குளுமையும் நிரம்பித் ததும்பும். முதலாவது நிரவல் இசையில் புல்லாங்குழல் ஊர்வலத்தின் பின்னே தொடரும் ‘லலலல்லால லாலா’ எனும் சங்கமக் குரல்கள் நிஜ வாழ்வில் தேவதைகளின் இருப்பை நம்பச் செய்யும்.

தேவதைகளின் பாடல்

படத்தின் ஒரேயொரு ‘உள்ளூர்ப் பாட’லான ‘தெய்வீக ராகம் தெவிட்டாத’ பாடலைக் குரலுலகின் தேவதை ஜென்ஸி பாடியிருப்பார். ‘ஓஓஓ..ஏஏஏ’ என்று தொடங்கும் ஜென்ஸியின் ஹம்மிங்குக்குப் பின்னர் ஒலிக்கும் இசை நம் உணர்வுகளை மீட்டிச் சிலிர்க்க வைக்கும். காதலை ரகசியமாக உணர்த்தும் புல்லாங்குழல் இசையைத் தொடர்ந்து ‘செந்தாழம் பூவைக் கொண்டு’ என்று சரணத்தைத் தொடரும் ஜென்ஸியின் குரல், தனிமையின் வலியை மென்மையாகப் பதிவுசெய்யும்.

இயற்கையின் நுட்பமான கூறுகளை உள்வாங்கி அதை இசை வடிவமாகத் தரும் இளையராஜாவின் மேதமைக்குச் சான்று இப்பாடல். பாடல்களில் பால் வித்தியாசம் உண்டா தெரியாது. ஆனால், இது ஒரு பெண்பால் பாடல் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். ரதிக்கு இப்பாடலைக் கமல் பாடிக்காட்டும் காட்சியில் அத்தனை உணர்வுடன் இப்பாடலை ஒரு ஆண் பாடவே முடியாது என்று தோன்றும்.

செந்தேன் மலர்

பெண் குரல்களின் தனிப்பாடல்கள் நிறைந்த இப்படத்தின் ஒரேயொரு டூயட் பாடல் ‘ஜெர்மனியின் செந்தேன் மலரே’. தமிழ்த் திரையிசையின் இணையற்ற ஜோடியான எஸ்.பி.பி.- ஜானகி பாடிய இப்பாடல் இளைய ராஜாவின் மிகப் புகழ்பெற்ற பாடல்களில் ஒன்று. ‘ஜெர்மனியின் செந்தேன் மலர்’ எனும் பதமே, மனதுக்குள் பரந்த மேற்கத்திய நிலத்தின் வசீகரச் சித்திரத்தை விரிக்கும்.

ஆர்ப்பாட்டமான சாக்ஸபோன் இசையுடன் தொடங்கும் இப்பாடல் முழுவதும் இனிமையின் கொண்டாட்டம் தான். ஜெர்மனி என்று பாடல் வரி சொன்னாலும் பிரான்ஸ், நெதர்லாந்து என்று வெவ்வேறு நாடுகளின் நகரங்களில் படமாக்கியிருப் பார்கள். இரண்டாவது நிரவல் இசையில் துள்ளும் கிட்டார் இசையைத் தொடர்ந்து குளிர் காற்றில் பரவும் வயலின் இசைக் கோவை தமிழ்த் திரை யிசையின் மகத்தான சாதனை

courtesy the hindu tamil

sivaa
13th July 2015, 02:31 AM
, ''சிவாஜி ''பத்திரிகையில் 11.4.1947 அன்று வந்த விளம்பர ஆவணத்தையும் மிக மகிழ்ச்சியுடன் இங்கு பதிவிடுகிறேன் .







http://i60.tinypic.com/2hxox7d.jpg

தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

1956ல் வெளிவந்த அலிபாபாவும் 40 திருடர்களும்தான்
முதல் தமிழ் கலர் படம் என அனைவரும் அறிந்த விடயம்.

ஹரிதாஸ் கலர் படம் என மேலே உள்ள
விளம்பரம் சொல்கிறது .

ஹரிதாஸ் கலர் படமா?
அல்லது தவறான விளம்பரமா?

rajraj
13th July 2015, 03:28 AM
ஹரிதாஸ் கலர் படம் என மேலே உள்ள
விளம்பரம் சொல்கிறது .

ஹரிதாஸ் கலர் படமா?
அல்லது தவறான விளம்பரமா?

I think some scenes were color painted by hand. The entire movie was not in color.

uvausan
13th July 2015, 05:55 AM
Good Morning


http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/IMG-20150712-WA0037_zpsdhkyh7sq.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/IMG-20150712-WA0037_zpsdhkyh7sq.jpg.html)

uvausan
13th July 2015, 05:59 AM
கருவின் கரு - 185:smile2::)

பாகம் 2 - தந்தை

தந்தை - மகன் பந்தம்

மாணவ /வாலிப / திருமண பருவம்

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/appa%207_zpsvzk5c3pg.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/appa%207_zpsvzk5c3pg.jpg.html)

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/appa%206_zpsdhp0knl3.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/appa%206_zpsdhp0knl3.jpg.html)

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/appa%205_zpssugl4w5b.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/appa%205_zpssugl4w5b.jpg.html)

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/appa4_zps3r2noins.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/appa4_zps3r2noins.jpg.html)

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/appa%203_zps5xt7nlsx.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/appa%203_zps5xt7nlsx.jpg.html)

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/appa%202_zpszcwg5iih.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/appa%202_zpszcwg5iih.jpg.html)

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/appa%201_zpsyge7qfye.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/appa%201_zpsyge7qfye.jpg.html)

uvausan
13th July 2015, 06:08 AM
கருவின் கரு - 186

பாகம் 2 - தந்தை

தந்தை - மகன் பந்தம்

மாணவ /வாலிப / திருமண பருவம்


போர் முடிந்து அயோத்தி திரும்பிய ராமன் சக்கரவர்த்தியாக முடிசூட்டிக் கொண்ட பின்னர் அசுவமேத யாகத்திற்கு தயாராகிக் கொண்டிருந்த நேரம் அது!. இராமனின் அரசவையை வசிட்டர், விசுவாமித்திரர் போன்றவர்கள் அலங்கரித்திருந்தனர். அந்த சமயத்தில் அரசன் ஒருவன் அரசவை வந்து ராமரை வணங்கிச் சென்றான். அங்கிருந்த நாரதர் கலகம் மூட்டும் நோக்கத்துடன் விசுவாமித்திரரிடம் அந்த அரசன் உங்களை வணங்காமல் அவமதித்து விட்டான் என விசுவாமித்திரரை கோபம் கொள்ள செய்தார்.

வெகுண்டெழுந்த விசுவாமித்திரர், இராமரிடம் இன்று மாலை சூரிய அஸ்தமனத்திற்கு முன்னதாக அந்த அரசனின் தலையை என் காலில் கொண்டு வந்து போடவேண்டுமென ஆணையிட்டார். குருவின் கட்டளையை சிரமேற் கொண்ட ராமனும் போருக்கு கிளம்பி விட்டான். இதற்கிடையில் நாரதர் அந்த அரசனையும் சந்தித்து விசுவாமித்திரரின் கோபத்தையும் அதன் விளைவையும் கூறிவிட, அந்த அரசன் பயந்து நாரதரின் காலில் விழுந்து காப்பாற்ற வேண்டினான்.

இராம பாணத்திற்கு முன்னால் ஏதும் செய்ய இயலாதென கூறிய நாரதர், இந்த உலகில் உன்னை காப்பாற்றும் வல்லமை ஒரே பெண்ணுக்குத்தான் இருக்கிறது. அவள் பாதங்களை சரணடைந்து விடு, அவள் உணக்கு அபயமளித்தேன் என சொல்லும் வரை அவள் பாதத்தில் வீழ்ந்து கிட என்று கூறினார்.

அவள் அனுமனின் தாயாரான அஞ்சன தேவி...

அஞ்சன தேவியில் காலில் வீழ்ந்து கதறியழுத மன்னனை காப்பாற்றுவதாக கூறிய அஞ்சன தேவி, தனது மகன் அனுமனை அழைத்து இவனை காப்பாற்று என கூறினாள். தாயின் கட்டளையை மீற இயலாத அனுமன் தன் வாலை சுருட்டி மலை போல அமைத்து அதன் நடுவில் அந்த அரசனை உட்கார வைத்து விட்டு, மேலே அமர்ந்த் ராம நாமம் ஜெபிக்க ஆரம்பித்தார்.

போருக்கு வந்த ராமன், அனுமனிடம் அரசனை வெளியே அனுப்புமாறு கூற, அனுமன் தாயின் கட்டளையைக் கூறி தனது இயலாமையை கூறினார். கோபமுற்ற ராமன் உன் மீது பாணம் தொடுக்க வேண்டி இருக்கும் என எச்சரித்ததையும் அனுமன் ஏற்காமல் ராமநாம ஜெபத்தில் ஈடுபட்டார்.

ராமனும் ஆவேசமாக அம்புகளைத் தொடுக்க அவை அனுமனை தாக்காது அவர் காலடியில் விழத் துவங்கின....தொடரும் ராமனின் அம்பு மழையின் உக்கிரத்தால் உலகமெல்லாம் நடுங்கத் துவங்கியது. தேவர்கள் சிவபெருமானை அணுகி இந்த யுத்தத்தினை நிறுத்திட வேண்டினர். அவரோ இதை முடிக்க விசுவாமித்திரனால் மட்டுமே முடியும் என கூறிவிட்டார்.

தேவர்கள் விசுவாமித்திரரை சரணடைய, அவர் மனமிறங்கி போர்களம் வந்தார், அவருடன் நாரதரும் வந்தார். விசுவாமித்திரரின் வார்த்தையை ஏற்று ராமரும் போரை நிறுத்தினார். நாரதல் அனுமனின் வாலுக்குள் மறைந்திருந்த அரசனை அழைத்து விசுவாமித்திரரில் காலில் விழச்செய்தார். அப்போது விசுவாமித்திரரிடம் இவன் தலை இப்போது உங்கள் காலடியில் விழுந்துவிட்டது. இவனை மன்னித்து விடுங்கள் என கோரிக்கை வைக்க, விசுவாமித்திரும் மனமிறங்கி மன்னித்தார்.

அப்போது அங்கு வந்த ராமன், நாரதரிடம் எப்படி என் பாணங்கள் வலுவிழந்தன என கேட்டதற்கு....நாரதர், ராமா!, உன் பாணங்களை விட உன் நாம ஜெபம் சக்தி வாய்ந்தது என்பதை புரிய வைக்கவே இத்தனையும் நடத்தினேன் என்றார்.. ராமருக்கு இன்னும் சந்தேகம் தீரவில்லை - என்னை விட என் நாமத்திற்கு எங்கிருந்து சக்தி வந்தது ? - குல குருவான வஷிஷ்டரையே கேட்டு விடலாம் என்று எண்ணி அவரிடம் தன் சந்தேகத்தை கேட்க்கிறார் .. " ராமா - எவன் ஒருவன் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று வாழ்கிறானோ , எவன் ஒருவன் தந்தைய விட வேறு தெய்வம் இல்லை என்று நினைக்கிறானோ அவனுடைய நாமம் அவனை விட சக்தி வாயிந்ததாக ஆகிவிடுகிறது - அவன் பெயரை சொல்லும் எவருக்குமே அவன் அருளால் , அவனையே வெல்லும் பலம் வந்துவிடுகிறது " என்றார்

எவ்வளவு உண்மை !!

https://www.youtube.com/watch?v=Dla1V9VoML0

uvausan
13th July 2015, 07:28 AM
கருவின் கரு - 187

பாகம் 2 - தந்தை

தந்தை - மகன் பந்தம்

மாணவ /வாலிப / திருமண பருவம்

Following is a letter to his son from a renowned Hong Kong TV broadcaster/Child Psychologist. The words are actually applicable to all of us, young or old, children or parents! This applies to daughters too.

Dear son,

I am writing this to you because of 3 reasons

1. Life, fortune and mishaps are unpredictable; nobody knows how long one lives. Some words are better said early.

2. I am your father, and if I don't tell you these, no one else will.

3. What is written is my own personal bitter experiences that perhaps could save you a lot of unnecessary heartaches.

Remember the following as you go through life

1. Do not bear grudge towards those who are not good to you. No one has the responsibility of treating you well, except your mother and I. To those who are good to you, you have to treasure it and be thankful, and ALSO you have to be cautious, because, everyone has a motive for every move. When a person is good to you, it does not mean he really likes you. You have to be careful, don't hastily regard him as a real friend.

2. No one is indispensable, nothing in the world that you must possess. Once you understand this idea, it would be easier for you to go through life when people around you don't want you anymore, or when you lose what/who you love most.

3. Life is short. When you waste your life today, tomorrow you would find that life is leaving you. The earlier you treasure your life, the better you enjoy life.

4. Love is but a transient feeling, and this feeling would fade with time and with one's mood. If your so called loved one leaves you, be patient, time will wash away your aches and sadness. Don't over exaggerate the beauty and sweetness of love, and don't over exaggerate the sadness of falling out of love.

5. A lot of successful people did not receive a good education, that does not mean that you can be successful by not studying hard! Whatever knowledge you gain is your weapon in life. One can go from rags to riches, but one has to start from some rags!

6. I do not expect you to financially support me when I am old, neither would I financially support your whole life. My responsibility as a supporter ends when you are grown up. After that, you decide whether you want to travel in a public transport or in your limousine, whether rich or poor.

7. You honor your words, but don't expect others to be so. You can be good to people, but don't expect people to be good to you. If you don't understand this, you would end up with unnecessary troubles.

8. I have bought lotteries for umpteen years, but I never strike any prize. That shows if you want to be rich, you have to work hard! There is no free lunch!

9. No matter how much time I have with you, let's treasure the time we have together. We do not know if we would meet again in our next life.

Love,
Your Dad


https://www.youtube.com/watch?v=p36pPEucSyo

uvausan
13th July 2015, 07:33 AM
கருவின் கரு - 188

பாகம் 2 - தந்தை

தந்தை - மகன் பந்தம்

மாணவ /வாலிப / திருமண பருவம்

''இங்கிதம் என்றால் என்ன?'' - அப்பாவிடம் கற்றுக்கொண்டது

'அப்பா பெரிதும் மதிக்கும் பெரும் பாடகி ஒருவர் எங்கள் வீட்டுக்கு வருகை தந்தார். தெரிந்தோ தெரியாமலோ காலணிகளைக் கழற்றாமல் வீட்டுக்குள் நுழைய எத்தனித்தார். அதை எப்படி உணர்த்துவது? 'அம்மா! உங்கள் பாதங்கள் என் வீட்டில் பட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்!’ என்றேன். பதறிப்போய்க் காலணிகளைக் கழற்றிவிட்டு வந்தார்.

புண்படுத்தாமல் பண்படுத்துவது இங்கிதம்!'' - ஒரு சில வார்த்தைகளில் ஓராயிரம் படிப்பினையை புகற்றிவிட்டார் ------

https://youtu.be/qtDFgxN0DRA?list=PLtqQVuKkatIbC90bn7t4A02i-HxlSFmN6

uvausan
13th July 2015, 07:36 AM
கருவின் கரு - 189

பாகம் 2 - தந்தை

தந்தை - மகன் பந்தம்

மாணவ /வாலிப / திருமண பருவம்

Its about autistic son, where the father struggles to make him do something that the kids are good in. You should watch to understand better... trust me.. Very inspiring.


https://www.youtube.com/watch?v=joGhFD5lPYQ&index=16&list=PLtqQVuKkatIbC90bn7t4A02i-HxlSFmN6

uvausan
13th July 2015, 07:39 AM
கருவின் கரு - 190:smile2::)

பாகம் 2 - தந்தை

தந்தை - மகன் பந்தம்

மாணவ /வாலிப / திருமண பருவம்

இந்த பதிவை திரு ராஜ்ராஜ் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் - பழைய பாடல் - அதில் இன்னும் இருப்பது புதிய அர்த்தங்கள் ----



https://www.youtube.com/watch?v=_UmOaAw8n3c&list=PLD26ED8C178B2565A

Russellrqe
13th July 2015, 01:23 PM
எனக்கு வாழ்த்துக்களையும் , பாராட்டுக்களையும் தெரிவித்த அன்பு உள்ளங்கள் திரு வாசுதேவன்
திரு ஆதி ராம் , திரு ரவிகுமார் ஆகியோருக்கு என் அன்பான நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் .
http://i60.tinypic.com/2uid8ao.jpg

Russellrqe
13th July 2015, 01:24 PM
http://i59.tinypic.com/35mfud1.jpg

Russellrqe
13th July 2015, 01:28 PM
http://i59.tinypic.com/2d0glsk.jpg

Russellrqe
13th July 2015, 01:29 PM
http://i62.tinypic.com/1679ph5.jpg

Russellrqe
13th July 2015, 01:31 PM
http://i60.tinypic.com/20h1vud.jpg

Russellrqe
13th July 2015, 01:32 PM
http://i61.tinypic.com/28i8d4h.jpg

Russellrqe
13th July 2015, 01:36 PM
http://i60.tinypic.com/1zzgzk8.jpg

Russellrqe
13th July 2015, 01:37 PM
http://i58.tinypic.com/bj7nn.jpg

vasudevan31355
13th July 2015, 09:26 PM
வெஜ் அண்ட் நான் வெஜ்

http://www.lakshmansruthi.com/news/Feb2011/Images/susheela.jpg

தென்றல் சுசீலா

http://2.bp.blogspot.com/-PKo0PlKxNoA/Twe00VH4DNI/AAAAAAAALcQ/oU8uEjKN8EQ/s1600/lr+eswari-super+hit+songs+6+volumes.jpg

புயல் ராட்சஸி

இருவரும் ஒரே மாதிரி இணைந்து பாடிய பாடல் இரண்டை இன்று பார்ப்போம்.

இரண்டு பாடல்களுமே கிட்டத்தட்ட ஒரே ரகம்தான். இரண்டுமே அமைதியாக ஆரம்பித்து படுஆர்ப்பாட்டமாய் முடியும். இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். அமைதியை யார் தருவது? ஆர்ப்பாட்டத்தை யார் அளிப்பது? என்று.

நடிகை பாமா பக்கத்து வீட்டில் குடி வந்ததால் ஒரு வீட்டில் ஏற்பட்ட ஏகப்பட்ட களேபரங்கள் நமக்கு அத்துப்படி. அதுவும் புலி பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது போல நடிகையைப் பார்த்து அவள் போலவே தோற்றத்திலும், பழக்கத்திலும் தங்கள் மனைவியும் இருக்க வேண்டும் என்ற முத்துராமன், நாகேஷ் போன்ற கணவன்மார்களின் ஆசையை நிறைவேற்றும் குடும்ப மனைவிகள் காஞ்சனா மற்றும் ஜெயந்தி.

http://sim.in.com/2/e3955f0afed430bff1dcf9aa72739952_ls_t.jpg

கணவனுக்கு வசியப்பொடி கலந்து பாமா நினைப்பிலிருந்து அவனை விடுவிக்க காஞ்சனா செய்யும் தந்திரம் துரதிர்ஷ்டவசமாய், தாறுமாறாய் மாறிப் போக (முத்து எல்லாம் தெரிந்து வசியப்பொடி கலந்த பாலை காஞ்சானாவையே அருந்தச் செய்து விடுவார்) வசியம் செய்யப் போனவரே அதில் சிக்குண்டு கணவனை 'கிக்' பார்வை பார்த்து மயங்கிச் சிரிக்க சுசீலாவின் அமைதியான குரலில் ஆழமான பாடல் ஆரம்பம்.

கலர் தேவதை காஞ்சனா பிளாக் அண்ட் ஒயிட் தேவதையாக அமர்க்களம். முத்துராமன் திருதிரு முழி ராமன்.

நினைத்தால் சிரிப்பு வரும்
நிலவில் மயக்கம் வரும்
முதல் நாள் இரவு அதுதான் உறவு
அதை மாற்ற முடியாது

காதில் தேனாய் இறங்கும் சுசீலாவின் குரல்.

பாடலின் மறுபாதி

கணவன் நாகேஷை மயக்க ஜெயந்தி யோசனை. ரேடியோ பாடிக் கொண்டிருக்கிறது. 'சங்கம்' படத்தில் வைஜயந்தி மாடர்ன் உடை அணிந்து ராஜ்கபூரை உண்டு இல்லை என்று படுத்தும் 'Main Ka Karun Ram Mijhey Buddha Mil Geya' பாடல் வானொலியில் ஒலிக்க செம ஐடியா கிடைக்கிறது ஜெயந்திக்கு. விளைவு சேலை போய் நைட் டிரெஸ் கோலம். நாகேஷ் இன்ப அதிர்ச்சி.('மை டியர் குட்டிச்சாத்தான்' ரேஞ்சுக்கு பக்கவாட்டு சுவர்கள் மேலே நடப்பார். ஏறும் போது காலண்டரை வேறு தூக்கிப் பார்த்துவிட்டுச் செல்வார்):)

சும்மா பேயாட்டம். நவ நாகரீக ஆட்டம். இந்த ஆட்டம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா என்ற ரேஞ்சுக்கு. 'மெல்லிசை மன்னர்' மெச்சும்படி போட்ட மெல்லிசை பிளஸ் வல்லிசை

நினைத்தால் சிரிக்க வைப்பேன்
அணைத்தால் துடிக்க வைப்பேன்
ஒருநாள் முழுதும் அந்த நாடகத்தை
நான் ஆட முடியாதா

பாடலின் மீதிப் பாதி ராட்சஸியின் குரலில் ஜெயந்திக்கு. முதல் பாதி சுசீலாவுக்கு அப்படியே நேர் எதிர். படு ஸ்பீட். அலட்சியம். தன்னம்பிக்கை, பாமாவை விட எந்த வகையில் நான் குறைந்தவள் என்ற எகத்தாளம். 'ஒருநாள் முழுதும் அந்த நாடகத்தை நான் ஆட முடியாதா?' என்று எக்கச்சக்க கேள்வி. ஆதி மனிதர்கள் போலவே இருக்க ஆசை வேறு. அத்தனையும் அந்தக் குரலில் ஆர்ப்பாட்டமாய் வந்து சேரும்.

ஒரே பாடலில் இரு வேறு பாடகிகளின் தனித் தன்மையைக் கொண்டு என்ன ஒரு வெரைட்டி! அமைதிப் பாடகியும், ஆர்ப்பாட்ட பாடகியும் அவரவர்கள் பாணியில் பின்னி எடுக்க இருவேறு நிலை காட்டும் பாடல்.


https://youtu.be/vSnnSKLMVnw



இதே போல இன்னொரு பாடல். இதே இரு பாடகிகளும் பாடியது. ஆனால் ஜெயாவிற்கும், சி.ஐ.டி.சகுந்தலாவிற்கும். நாயகன் ஒருவர் ஜெய்சங்கர்.

https://i.ytimg.com/vi/llcwVOPSDwY/hqdefault.jpg

குத்துச் சண்டை வீர சூரர் ஜெய்யைக் காதலிக்கும் ஜெயா. பதிலுக்கு ஜெய்க்கும் ஜெயா மேல் காதல். ஆனால் நடுவில் நடிகை சகுந்தலா (படத்தில் நடிகை ரோல்) ஜெய்யைக் காதலிப்பார் ஒருதலையாக.

ஜெய் தன்னைக் காதலிப்பதாகச் சொன்னதும் கனவில் மூழ்கி ஜெயா தேவதைகள் அமுதம் தர, அருந்தி, மயங்கி காதலனை நினைத்து அமைதியாகப் பாடுவார். சேலை கட்டிக் கொண்டு நாகரீக மூவ்ஸ் அருமையாகத் தருவார். ஜெயாவை மோக போதையில் இது போல வேறு படத்தில் காண முடியாது

நான் எண்ணத்தில் நீந்தும் பெண்ணல்லோ
வண்ணங்கள் சூடும் செண்டல்லோ
மின்னலை வீசும் கண்ணல்லோ
வா வா

(சுசீலா பின்னணி தந்திருப்பார்)

மிக அருமையான பாடல்.

சுசீலா பின்னுவார். (வா வா)

அப்படியே திடுமென சகுந்தலா ஜெய்யை ஜெயாவிடமிருந்து பிரித்து அழைத்துச் சென்று விடுவார். இப்போது ஈஸ்வரிக்கு வேலை. வழக்கம் போல வெள்ளப் பிரவாகம். புயல் வேகம். சகுந்தலா இங்கு பேயாட்டம். செம டான்ஸ். ஜெய் தடதடவென ஜேம்ஸ் பாண்ட் போலவே கூட ஓடுவார்.:)

வா தினம் ஒரு புது சுகம் தரவா
என் மடியினில் கலைகளைப் பெறவா
நாம் இரவிலும் பகலிலும்
போதையில் விழவா

மிக மிக அருமையான பாடல். வி.குமார் அவர்களின் இசைக்கருவிகளின் ஆளுமை அசத்தல். பாடலின் நடுவே வரும் ஆண்குரலின் ஹம்மிங் சங்கர் கணேஷை ஞாபகப்படுத்தும். இசை கூட அவர்களின் பாணியிலேயே இருக்கும் இது பற்றி ராகவேந்திரன் சாரை கூற அழைக்கிறேன்.

எல்லாம் சரி! என்ன படம் என்று சொல்லாமலேயே அறுக்கிறானே என்று நினைக்கிறீர்களா?:) எஸ்.பி.முத்துராமன் இயக்கிய 'தெய்வக் குழந்தைகள்' என்ற அதிகம் தெரியாத படம்தான். முத்துராமன், 'குமாரி' பத்மினி, பாபி ஸ்ரீதேவி, மாஸ்டர் ராமு எல்லோரும் உண்டு.

வி.குமார் அவர்களின் அற்புத இசைக்கருவிகளின் சங்கமத்திற்கு இந்த ஒரு பாடல் சிறந்த சான்று.

இந்த இரண்டு பாடல்களையுமே சுசீலா ஆரம்பிப்பார். ஈஸ்வரி முடிப்பார். மெதுவாகப் பாடல் தொடங்கி வேகமாக முடியும். இரண்டும் நடிகை சம்பந்தப்பட்டது என்பது இன்னொரு விசேஷம்.

கேட்டுப் பார்த்துவிட்டு சொல்லுங்கள். 12.09 க்கு பாடல் துவங்கும்.


https://youtu.be/T14l68EYtVM

rajeshkrv
13th July 2015, 10:20 PM
ஜி சூப்பர்

rajraj
13th July 2015, 10:30 PM
இந்த பதிவை திரு ராஜ்ராஜ் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் - பழைய பாடல் - அதில் இன்னும் இருப்பது புதிய அர்த்தங்கள் ----[/B]


Thanks Ravi ! :) I like songs by PUC,MKT, T.R.Mahalingam, N.C.Vasantha kokilam, MLV,DKP, P.A.Periyanayaki and other older stalwarts.

Here is one by P.U.Chinnappa in Jagathalaprathapan(1944):

http://www.youtube.com/watch?v=mPzjb0R9bbg

I posted this song to bring out the camera trick in the early 40s.

RAGHAVENDRA
13th July 2015, 10:35 PM
வாசு சார்
என்ன சொல்வது எப்படிப் பாராட்டுவது..
நெய்வேலியிலிருந்து நிலக்கரி மட்டுமே சுரங்கத்தில் கிடைக்கும் என்பதை உடைத்தெறிந்து அதை விட பற்பல மடங்கு சிறப்பு வாய்ந்த தமிழ்த் திரையிசைத் தகவல் களஞ்சியமும் அங்கே சுரங்கமாய் கிடக்கிறது என்பதை மீண்டும் நிரூபித்து விட்டீர்கள்.
விக்டரி மூவீஸ் பெத்த மனம் பித்து தந்த பிரமிப்பூட்டும் வெற்றியைத் தொடர்ந்து எஸ்.பி.முத்துராமன் புதிய வெற்றி இயக்குநராக அடையாளம் காணப்பட்டார். அந்த வெற்றியைத் தொடர்ந்து அதே விக்டரி மூவீஸ் அதே ஜெயாவைக் கதாநாயகியாக வைத்து தயாரித்து அதே ஆண்டில் செப்டம்பரிலேயே வெளியிட்ட படம் தான் தெய்வக் குழந்தைகள். இரண்டுமே மெல்லிசை மாமணி வி.குமாரின் இசை தான். இன்னும் சொல்லப் போனால் பாலச்சந்தரின் ஆஸ்தான இசையமைப்பாளரான வி.குமாரை விட்டு பாமா விஜயத்திற்கு எம்.எஸ்.வி.யிடம் சென்றார் கே.பி. இருந்தாலும் இந்த நினைத்தால் சிரிப்பு வரும் பாட்டில் வி.குமாரின் பாணியை நினைவு படுத்தும் வகையில் மெல்லிசை மன்னர் இசையமைத்திருப்பார். அதனால் இந்த இரு பாடல்களும் ஒரே சாயலில் இருக்கும். [இந்த இடத்தில் சாயல் எனக் குறிப்பிடுவது மெட்டை அல்ல, பாடலின் அமைப்பு, இசைக் கருவிகளின் பிரயோகம், தாளக்கட்டு மாறும் உத்தி போன்றவை]. தங்களின் அபார ஞாபகசக்திக்கு இது மிகச் சிறந்த உதாரணம் வாசு சார். வி.குமாரின் இசையைப் பொறுத்த வரையில் ஹம்மிங் மிகவும் அபூர்வமாகத் தான் ஒலிக்கும். அவருடைய உதவியாளர் குணசிங் தான் பெரும்பாலும் குரல் கொடுப்பார் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். தாங்கள் இப்பாடலில் குறிப்பிடும் ஹம்மிங் அநகமாக குணசிங் அவர்களின் குரலாக இருக்கலாம். பல ஆண்டுகள் குமாரிடம் உதவியாளராக இருந்த குணசிங், சங்கு புஷ்பங்கள் படத்திற்கு தனியாக இசையமைத்தார். அப்படி யில்லாத பட்சத்தில் இந்தக் குரல் ஏ.வி.ரமணனுடையதாக இருக்கலாம். ஏனென்றால் குமார் இசையமைத்த சில படங்களில் அவர் ஹம்மிங் பாடியிருக்கிறார் எனவும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

rajraj
14th July 2015, 03:11 AM
Vasu mentioned the song 'main kya karoon ram...' from Sangam(1964)

Here is the song:

http://www.youtube.com/watch?v=tc4PTMHeOHo


I thought this was obscene. This is nothing compared to what we see in modern movies. The trend seems to be 'more skin, less clothing'. I won't say anything about the lyrics ! :lol: That is 'progress' ! :) Of course, I felt the song and dance 'Oh rasikkum seemaane vaa' in Parasakthi was obscene when I watched the movie in 1952 ! :)

RAGHAVENDRA
14th July 2015, 06:49 AM
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/6a/M.s.v.JPG/220px-M.s.v.JPG

இசை இன்று அதிகாலை 5 மணிக்கு நம்மையெல்லாம் விட்டு இறைவனிடம் சேர்ந்து விட்டது.

மெல்லிசை மன்னர் நம் இதயத்தில் இசையாய் குடியிருந்த அந்த தெய்வம் தெய்வத்தோடு சேர்ந்து விட்டது.

http://thefunstons.com/wp-content/uploads/2014/03/tears.jpg

வார்த்தைகள் வரவில்லை. எழுத்தும் அழுகிறது.

eehaiupehazij
14th July 2015, 07:24 AM
மனதிற்கினிய அமரத்துவம் வாய்ந்த மதுர கானங்களை அள்ளித் தந்து நமது இதயங்களைக் கொள்ளை கொண்ட மெல்லிசை மன்னருக்கு நடிகர்திலகம் / மக்கள் திலகம் / காதல் மன்னரின் திரி சார்ந்த அஞ்சலியை சமர்ப்பிக்கிறோம்

https://www.youtube.com/watch?v=KiYCD6Nldqg

https://www.youtube.com/watch?v=vHVwDiEr64Q

https://www.youtube.com/watch?v=UuMzmHuqN2I

https://www.youtube.com/watch?v=YN3a660t6Mo



Heartfelt condeolences on the sudden demise of our beloved Mellisai Mannar. May his soul rest in peace even as our souls are filled with his mind scintillating vibrators!

uvausan
14th July 2015, 08:06 AM
மெல்லிசை மன்னர் ..எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள் இயற்க்கை எய்திவிட்டார் ....
கலைத்தாய் தன்மகனை தன்னோடு அழைத்துக்கொண்டாள்.
அவருடைய ஆன்மா கலைமகள் பொற்பாதத்தில் இளைப்பாறும் என்பதில் ஐயமில்லை...
அன்னாரை இழந்துவாடும் குடுப்பதாருக்கும்...இசை உலகுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும்..
வருத்தங்களையும்...தெரிவித்துக்கொள்கிறேன் .....அவருடைய ஆன்மா சாந்தியடைவதாக இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன் .

இன்று அவரைப்பற்றிய பதிவுகள் எல்லோரும் போடுவதற்காக - கருவின் கருவை இன்று பதிவிட மனம் வரவில்லை .


https://www.youtube.com/watch?v=JqJ62bv_07g

Gopal.s
14th July 2015, 08:34 AM
அஞ்ஞாத வாசத்திற்கு பிறகு என் முதல் பதிவே , என் இசை தெய்வத்துக்கு அஞ்சலியா? கடவுளே, என் இசை ஞானத்தின் ஆரம்ப புள்ளி, குடும்ப நண்பர், ஒரு வருட மொட்டை மாடி உலாவல் தோழர், நான் இந்தியாவிலேயே முதல்வராக நினைக்கும் இசை மேதை , எனக்கு மிக வேதனையான கருப்பு தினம். அந்த மேதையை இழந்து வாடும் திரி உறவினர்களுக்கு, என் நண்பர்களான அவர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். (எனக்கே தேவை)

rajraj
14th July 2015, 08:41 AM
மெல்லிசை மன்னர் ..எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள் இயற்க்கை எய்திவிட்டார் ....


May his soul rest in peace.

Can we observe a day of silence(no posts in this thread) as a mark of respect for the departed soul?
It is about 8:30 AM Tuesday in India. Silence till 8:30 AM Wednesday.

sss
14th July 2015, 10:33 AM
RIP..music @ MSV

https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/11236467_970331873004946_6176914221604258267_n.jpg ?oh=cc40f0b877306755a33d6564e0e1a02b&oe=5656C391&__gda__=1444053581_8e9c2f8347293b3f22136c3f7ac9dbc 7

It was probably the last song he recorded.. And he sang as though it was his first song
https://www.youtube.com/watch?v=922IEXhpi_c&feature=youtu.be

RAGHAVENDRA
14th July 2015, 11:36 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Mellisai%20Mannar%20MSV/MSVHOMAGEfw_zpsguxnavni.jpg

vasudevan31355
14th July 2015, 03:03 PM
http://static.sify.com/cms/image/miln9Uhigjbsi.jpg

இன்பத்தை தவிர வேறொன்றும் தந்தறியாத இசை சக்கரவர்த்தி இறந்தார்.

மதுர கானங்களில் நான்கில் மூன்று பங்கு ஆக்கிரமித்த 'மெல்லிசை மன்னர்' மறைந்தார்.

இசை சாம்ராஜ்யம் வீழ்ந்தது. இனி இனிமைக்கு யாரை நாடுவோம்?

இனி அவர் பாடல்களே எங்களுக்கு ஜெபம்.

நடிப்பின் சக்கரவர்த்தி மறைந்த போது ஆவி துடித்தது

மெல்லிசை மன்னர் மறைந்த போது நெஞ்சு துடிக்குது.

இறப்பு உங்களையும் எங்களையும் பிரிக்கலாம்
இசையும் ரசிப்பும் எங்களின் பரிமாற்றவல்லவா!

அதைப் பிரிக்க எவருக்கும், எதற்கும் சக்தியில்லை.

மெல்லிசை மன்னரை இறந்து வாடும் அவர் குடும்பத்திற்கும், இரு திலக ரசிகர்களுக்கும், மதுர கானங்களின் நண்பர்களுக்கும், மற்ற ஏனையோருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை கண்ணீருடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இசையும், நாதமும் கலந்த விஸ்வரூப விஸ்வநாதனே!

உம் ஆத்மா சாந்தி அடையட்டும்.

உன் புகழ் பாட மதுர கானங்கள் என்றும் இருக்கும்.

adiram
14th July 2015, 04:16 PM
மெல்லிசை மன்னர் காலமாகவில்லை, காலாகாலத்துக்கும் நம் இதயங்களில் நிறைந்து வாழும் இசை வடிவமாகி விட்டார்.

சில மாதங்களுக்கு முன்னர் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சிக்கு கைத்தாங்கலாக அழைத்து வரப் பட்டபோதே நம் இதயம் நெகிழ்ந்தது. மெல்ல மெல்ல ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து வந்தார்.

சில நாட்களுக்கு முன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார் என்பதை அறிந்து மனம் பதைபதைத்தது.

இன்று அதிகாலை இசை ரசிகர்கள் மீது பேரிடி விழுந்து விட்டது.

அவர் உடலால் நம்மை விட்டு பிரிந்தாலும் தன அழியாத பாடல்களால் நம்மிடையே என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்.

அவர் புகழைப் போற்றுவதே அவருக்கான சிறந்த அஞ்சலி.

uvausan
14th July 2015, 05:37 PM
எம்.எஸ்.விஸ்வநாதன்

( நண்பர் ஒருவர் என்னிடம் பகிர்ந்துக்கொண்டது )

சாதனை நாயகன் எம்.எஸ்.விஸ்வநாதன் 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் தேதி.கேரளாவில் உள்ள எலப்புள்ளி என்ற கிராமத்தில் பிறந்தவர் எம்.எஸ். விஸ்வநாதன். இவரது தந்தை பெயர் சுப்ரமணியன். தாயார் பெயர் நாராயண குட்டியம்மாள். நான்காவது வயதிலேயே தந்தையை இழந்த விஸ்வநாதன் கண்ணனூரில் உள்ள தன் தாத்தா கிருஷ்ணன் நாயர் வீட்டில் வளர்ந்தார்.

பள்ளிப்படிப்பில் நாட்டமில்லாத இவர் இசையின் மீது கொண்ட நாட்டத்தால் கர்நாடக இசையை நீலகண்ட பாகவதரிடம் பயின்று பதிமூன்றாவது வயதிலேயே மேடைக் கச்சேரி நிகழ்த்தியவர் இவர்.

இசையமைப்பாளர் சி. ஆர். சுப்பராமன் இசைக்குழுவில் எம். எஸ். விஸ்வநாதன் ஆர்மோனியக் கலைஞராகவும் ,டி. கே. ராமமூர்த்திவயலின் கலைஞராகவும் பணிபுரிந்தனர் . உடல் நலகுறைவு காரணமாக, தன்னுடைய முப்பது வயதில் சுப்புராமன் மறைந்தார். அவருடைய மறைவைத் தொடர்ந்து அவரது இசையமைப்பில் முழுமை பெறாமல் இருந்த தேவதாஸ், சண்டிராணி, மணமகள் போன்ற படங்களின் இசைப்பணியை அவரின் உதவியாளர்களாக இருந்த இவரும் ராமமூர்த்தியும் முடித்துக்கொடுத்தார்கள்.

எம்.எஸ்.வியிடம் கவியரசு கண்ணதாசன் விருது பெற்ற போது , தமிழ், தெலுங்கு தேவதாஸ், தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியான சண்டிராணி படங்களின் இணை இசையமைப்பாளராக இவர்கள் இருவரும் அறிமுகப் படுத்தப்பட்டார்கள்.

எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த ஜெனோவா திரைப்படம்தான் எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பாளராக அறிமுகமான முதல் படம்.""வடநாட்டில் சங்கர் - ஜெய்கிஷன் மாதிரி தென்னாட்டில் எம்.எஸ். விஸ்வநாதன் -ராமமூர்த்தி ஏன் இருக்கக் கூடாது'' என்று சொல்லி தன்னுடைய "பணம்' என்ற படத்தில் இருவரையும் இணைத்து முதன்முதலில் இசையமைக்க வைத்து டைட்டிலில் " ராமமூர்த்தி -விஸ்வநாதன்' என்று போட்டவர் பணம் படத்தின் தயாரிப்பாளர் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் அப்படத்திலிருந்து ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வரை சுமார் 700 படங்களுக்கு இவர்கள் இருவரும் இணைந்து இசையமைத்தார்கள்.

இது தவிர எம்.எஸ்.விஸ்வநாதன் தனியாக 500 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இளையராஜாவோடு சேர்ந்து, மெல்லத் திறந்தது கதவு, செந்தமிழ்ப்பாட்டு, செந்தமிழ்செல்வன் என மூன்று படங்களுக்கு இசை அமைத்துள்ள இவர் தில்லு முல்லு படத்தில் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர்ராஜாவுடன் இணைந்து இசையமைத்தார்.

1951-ல்ஆரம்பித்து 1981 வரை 30 வருடங்கள் தமிழ்த் திரை இசை உலகின் முடிசூடா மன்னராக இருந்த இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் சேர்த்து 1,200 படங்களுக்கு மேல் இசை அமைத்திருக்கிறார்.

`பாசமலர்’ படத்தில் பாட ஆரம்பித்த இவர் வி.குமார், இளையராஜா, ஏ ஆர் ரகுமான், கங்கை அமரன், தேவா, யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் என பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடி இருக்கிறார்.

`புதியபறவை’ படத்தில் 300-க்கும் மேற்பட்ட இசைக் கருவிகளைக் கொண்டு `எங்கே நிம்மதி’ பாடலுக்கு இசைக் கோர்ப்பு செய்த இவர் `பாகப்பிரிவினை’ படத்தில் `தாழையாம் பூ முடிச்சு’ பாடலுக்கு மூன்றே இசைக் கருவிகளைக் கொண்டு இசைக் கோர்ப்பு செய்தவர்.`நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் இடம் பெற்ற `முத்தான முத்தல்லவோ’ பாடலை 20 நிமிடங்களில் உருவாக்கிய இவருக்கு `நெஞ்சம் மறப்பதில்லை’ பாடலை உருவாக்க இரண்டு மாதம் ஆனதாம்!

தமிழ்த் தாய் வாழ்த்தான `நீராடும் கடலுடுத்த’ பாடலுக்கு இசைக் கோர்ப்பு செய்த பெருமையும் இவருக்கு உண்டு. உலக இசையைத் தமிழில் புகுத்தி எளிமைப் படுத்திய பெருமையும் இவருக்கு சொந்தமானது எகிப்திய இசையைப்`பட்டத்துராணி’ பாடலிலும், பெர்சியன் இசையை `நினைத்தேன் வந்தாய் நூறு வயதிலும், ஜப்பான் இசையைப் `பன்சாயி காதல் பறவை’களிலும், லத்தீன் இசையை `யார் அந்த நிலவிலும்’, ரஷ்ய இசையைக் `கண் போன போக்கிலே கால் போகலாமா’விலும், மெக்சிகன் இசையை `முத்தமிடும் நேரமெப்போ’ பாடலிலும் கொண்டு வந்தவர் இவர்.

எம்.எல்.வசந்தகுமாரி, பாலமுரளிகிருஷ்ணா, மகாராஜபுரம் சந்தானம், பாம்பே ஜெயஸ்ரீ போன்ற பல கர்நாடக இசைக் கலைஞர்கள் இவரது இசையில் பாடி இருக்கிறார்கள்! இந்தியாவில் முதன் முதலாக முழு ஆர்கெஸ்ட்ராவை மேடையில் ஏற்றி நிகழ்ச்சியை நடத்திய வரும் இவர் தான் நடிக்க வேண்டும் என்ற கனவோடு சினிமா துறையில் அடியெடுத்து வைத்த இவரது ஆசை ஆரம்பத்தில் நிறைவேறாமல் போனாலும் `கண்ணகி’ படத்தில் நடிக்க ஆரம்பித்த இவர் `காதல்மன்னன்,’ `காதலா.... காதலா’ உட்பட 10 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்.

எம்.எஸ்.விஸ்வநாதனின் மனைவி பெயர் ஜானகி அம்மாள். இவர்களுக்கு கோபிகிருஷ்ணா, முரளிதரன், பிரகாஷ், அரிதாஸ் என நான்கு மகன்களும், லதா மோகன், மது பிரசாத் மோகன்,சாந்தி குமார் என மூன்று மகள்களும் உள்ளனர். 1963ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ஆம் தேதி கவியரசு கண்ணதாசன் இயக்குனர் ஸ்ரீதர் ஜெமினி கணேசன் சந்திரபாபு "சித்ராலயா" கோபு முன்னிலையில் நடைபெற்ற ஒரு விழாவில் திரு சிவாஜி கணேசனால் இவருக்கும் இராமமூர்த்திக்கும் மெல்லிசை மன்னர்கள்
என்று பட்டம் வழங்கப்பட்டது.

கலைமாமணி, ஃபிலிம் ஃபேர், போன்ற பல விருதுகள் பெற்றுள்ள இவருக்கு தேசிய விருதோ, பத்மஸ்ரீ போன்ற இந்திய அரசின் உயரிய விருதோ இதுவரை கொடுக்கப்படாதது குறித்து விஸ்வநாதன் ஒரு போதும் வருத்தப்பட்டதில்லை என்றாலும் தமிழ் இசை ரசிகர்களைப் பொறுத்தவரை அது இன்றுவரை பெரிய ஏமாற்றம்தான்.

இந்த விருதுகளை விட பெரிய விருதாக இவர் நினைப்பது எல்லா தமிழ் நெஞ்சங்களிலும் வாழ்வதைத்தான். அந்த இடம் இவரைப் பொறுத்தவரை நிரந்தரமானது என்பதிலும் எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் அந்த இடத்திற்கு அவர்களால் சொந்தம் கொண்டாட முடியாது என்பதும் நிஜம்.

vasudevan31355
15th July 2015, 09:47 AM
'அழகு ஆயிரம் உலகம் முழுவதும்'

http://blog-assets.spuul.com/wp-content/uploads/2013/02/Ullasa-Paravaigal.jpg

வாசுதேவன் சாரும், யுகேஷ் சாரும் ஹிந்துவில் வந்த 'உல்லாசப் பறவைகள்' படப் பாடல்கள் பற்றிய பதிவை அளித்திருந்தார்கள். அதைப் படித்ததிலிருந்து 'உல்லாசப் பறவைக'ளின் மிக மிகச் சிறந்த பாடலான,

'அழகு ஆயிரம் உலகம் முழுவதும்'

பாடலே எண்ணம் முழுதும் ஓடிக் கொண்டிருக்கிறது. 'மெல்லிசை மன்னரி'ன் இழப்பு சோகமே தற்காலிகமாக அதைக் கொஞ்சம் விரட்டியது.

முதலில் அந்த அருமையான கட்டுரையைப் பதித்த இரு நண்பர்களுக்கும் நன்றி.

பிறகு அந்தக் கட்டுரையை எழுதின ரசனையாளருக்கு என் மனமுவந்த பாராட்டுக்கள்.

'உல்லாசப் பறவைகளி'ன் பாடல்கள் அனைத்தையும் ரத்தினச் சுருக்கமாக அந்த விமர்சகர் எழுதியிருந்தாலும் குறிப்பிட்ட 'அழகு ஆயிரம்' பாடலுக்கு அவர் எழுதியிருந்த ஒரு சில வரிகள் அருமையிலும் அருமை. மிக ரசனையாக ஓரிரு வரிகளில் அந்தப் பாடலின் மகத்துவத்தை அவர் உணர்த்தியிருந்தார்.

இந்தப் பாடல் அன்று முதல் இன்று வரை என்னைப் பைத்தியமாகவே ஆக்கிக் கொண்டிருக்கிறது. இந்தப் பாடலைப் பற்றி நான் எண்ணாத நாளே இல்லை எனலாம்.

இசைக் கருவிகளின் ஆதிக்கம் நிறைந்த ஒரு பாடல். நோட்ஸ் எல்லாம் வினாடிக்கு வினாடி திகைக்க வைக்கும். அதுவும் ராஜா கிராமப் பின்னணியிலிருந்து மாறுபட்டு வெஸ்டர்ன் இசைக்கு வந்த ஆரம்ப காலத் துவக்கம்தான் அது. ஆனால் ராஜா எல்லாவற்றிலும் கரை கண்ட பிறகு கூட இந்த ஒரு பாடலுக்கு கொடுத்த இசை போல வேறு படத்தில் கொடுக்கவில்லை என்பது தனிப்பட்ட்ட என் தாழ்மையான கருத்து. இதை விட பிரம்மாண்டங்களை ராஜா தந்திருந்தாலும் இந்தப் பாடலின் ஒவ்வொரு வினாடி இசையும் தேவ ரகசியம் போல பல இசை விஷயங்களை உள்ளடக்கியது.

இந்தப் பாடலின் ஆரம்ப வினாடியே அப்படியே நம் உயிர் அணுக்களில் ஊடுருவி உடல் சில்லிட ஆரம்பித்து விடும். கட்டுரையாளர் மிக அழகாகக் குறிப்பிட்டிருந்தார் முகப்பு இசையிலேயே ஜாலங்களை நிகழ்த்தியிருப்பார் இளையராஜா என்று. எவ்வளவு உண்மை!

'உய்ய உய்ய உய்ய'...என்று சைரன் ஒலி போல இசை அஸெண்டிங்காகத் தொடங்கி அப்படியே அதனுடன் இணையும் பியானோவின் இசை (டங்டங்டங்டங்டங்... டங்டங்டங்டங்டங்) அந்தப் பியானோவின் இசைக்குப் பின்னால் மெதுவாகத் தட்டப்படும் டிரம் ஒலி, இவை எல்லாம் மிகச் சரியாக ஒன்றாகக் கலந்து நம் உடலோடு கலக்கும் போது அப்படியே பாடலின் டியூன் கிடாரில் மென்மையாக வந்து மிருதுவாக நம் முன்னாடி விழும். அதையே ஒரு ஆண்குரல் 'ததததாததா.... ததததாததா' ஹம்மிங் செய்யும் போது நம் மனம் இறக்கை கட்ட ஆரம்பித்து விடும். அப்படியே வயலின்களின் மொத்த ஓசையும் கடல் அலை போல ஒன்று போல் எழுந்து ஆர்ப்பரித்து அடங்கும்! அந்த அலை அடங்கவும் அதிலிருந்து ஜானுவின் குரல் அம்சமாக எழும்பவும் திரும்பவும் சுகம் சுகந்தத் தென்றலாய் பரவும்.

ஜானகி எனக்கு அவ்வளவாகப் பிடிக்காத பாடகி. ஆனால் இந்த ஒரு பாடலில் என் எண்ணத்தை சுக்கு நூறாக்கினார் அவர். இந்த ஒரு பாடல் போதும். 'சிங்கார வேலேனே தேவா'வில் சொக்கிப் போனவர்கள் ஏராளம். ராஜாவின் ஏகப்பட்ட பாடல்கள் ஜானகியிடம் போக, பிடிக்கிறதோ இல்லையோ ஜானகி சூப்பர் என்று ஒட்டு மொத்த தமிழகமும் ஓலமிட்டது..

ஊர் விட்டு ஊர் செல்லும் தனியார் பஸ்களில் ஜானகியின் முக்கலும் முனகலும் 5.1 ஸ்பீக்கர்களில் பஸ்சின் எஞ்சின் இரைச்சலையும் மீறி அலறியது.

ஆனால் என்வரையில் இந்த ஒரு பாடலுக்காகவே ஜானகி என்னுள் சமரசமானார். மாறாக என்னை மண்டியிடவும் வைத்தார் என்று ஒத்துக் கொள்ள எனக்கு வெட்கம் இல்லை. அந்த அளவிற்கு தன்னுடைய குரல் ஜாலத்தால் செயற்கைத்தனம் சிறிதும் இல்லாமல் வெகு அமர்க்களமாக இப்பாடலின் மூலம் மனதில் நுழைந்து வெளியே கிளம்பாமல் அங்கேயே குடிகொண்டு விட்டார். 'ஒ மாம மியா மாம மியா’ என்று அவர் பாடும் அழகை வர்ணிக்க எங்கு சென்று வார்த்தைகளைத் தேடுவது? அவர் குரலோடு சேர்ந்து பின்னால் 'மாம மி' என்று குரல்கள் ஒலித்து 'டக்'கென்று நின்றுவிடும் விந்தைகளை ராஜா தவிர வேறு யார் செய்து விட முடியும்?

'இறைவனின் திருக்கரம்.... எழுதிய ஓவியம்' என்று ஜானகி ஏறி ஏறி இறங்குவார். 'மாம மியா மாம மியா மாம மியா ...மா' என்று 'மா' என்ற ஒற்றை எழுத்துக்கு முடியும் போது அந்த எழுத்திற்கு 'மா'மரியாதை கிடைக்கும். பின்னணி கோரஸ் அற்புதமாக ஜானகியுடன் மேட்ச் ஆகும்.

இளையராஜாவின் திருக்கரம் எழுதிய இசை ஓவியங்கள் ஆயிரம் ஆயிரம் இருக்க இந்தப் பாடல் தனி 'மாம மியா'தான். அடுத்தடுத்து வித விதமான ஒலிகள் பின்னணிகள் அந்த சிறிய இடைவெளிக்குள் இந்திர ஜாலங்கள் புரிய ('கூக்கூக்கூ... கூக்கூக்கூ' என்ற இருமுறை ஒலிக்கும் அந்த புல்லாங்குழல் பின்னணி உட்பட) சற்றே பெண்மைத் தன்மை விடுத்து, குரலைத் தடிமனாக்கி, ஜானகி லேசான ஆண் குரலின் ரேஞ்சில் 'பா...பபபபப்பா' என்று பாடத் துவங்கும் அழகு பரவசமல்லாமல் வேறு என்ன? 'பா...பபபபப்பா' வுக்குப் பின்னால் அதனுடன் சேர்ந்து ஒலிக்கும் இசை சித்து வேலைகள் பார்த்து பார்த்து ராஜாவால் செதுக்கப்பட்டிருக்கும். அதற்குப் பிறகு மெல்லிய பியானோவின் ஒலி மட்டுமே இசைக்கப்பட்டிருக்கும்.

'ஹே......... மனம் போல நாளும்
மகிழ்ந்தாட வேண்டும்
ஒன்றாக நானும் நீயும்'

'ஹே.........' என்பதை மெதுவாக ஆரம்பித்து அம்சமாக உச்சத்துக்கு கொண்டு வருவார் ஜானகி. குரலில் லேசான நடுக்கத்தை அழகாகக் காட்டுவார். பின்னால் ராஜாவின் வான வேடிக்கைகளை கவனிப்பதா.... ஜானகியின் ஜாலங்களைக் கவனிப்பதா என்று மனம் குழப்பமடையும். இன்பத்தை ஒரு சேர அனுபவிப்பது எப்படி என்று எங்காவது கற்றுக்கொண்டுதான் நாம் வரவேண்டும். எவ்வளவு துன்பத்தை வேண்டுமானாலும் தாங்கிக் கொள்ளலாம்.... இந்தப் பாடலின் இனபத்தை தாங்கவே முடியாது போல் தோன்றும்

'இளமையின் சிலிர்ப்புகள்...புதுமையின் அழைப்புகள் எங்கும் 'மாம மியா மாம மியா' என்று மீண்டும் நம் மீது தேன் கொட்டும்.

http://i60.tinypic.com/wrkxf4.jpg

அடுத்த சரணம் தொடங்குமுன் ராஜா புறாக்கள் பறந்து போவதற்கான சப்தம் ஒன்று தருவார். அவ்வளவு அம்சமாக இருக்கும் 'டர டர டர டர டங்' என்பது போல். அப்படியே அதனுடன் சேர்ந்து மிக அழகான கிடார் பிட் ஒன்று அடுத்து வரும். பின் அதனுடன் சேர்ந்து பின்னால் வயலின் விளையாடத் தொடங்கும். வயலினும், பியானோவும் மாறி மாறி மார் தட்டும்.

முதல் சரணத்தில் 'ஹே' என்று தொடங்கியவர் இப்போது 'ஆ' என்று ஆரம்பித்து ஆனந்தப்படுத்துவார்.

ஆ...மழைக்காலம் மாறும்
வசந்தங்கள் தோன்றும்
உல்லாசம் வாழ்வில் சேரும்

திரும்ப அதை எடுக்கும் போது ஜானகி பழையபடி 'ஹே'... என்று மாற்றி தொடருவார்.

ஹே....மழைக்காலம் மாறும்
வசந்தங்கள் தோன்றும்
உல்லாசம் வாழ்வில் சேரும்

'மாலையே இந்த மாலை... வேளையே நல்ல வேளை...இனியது கனவுகள்... மயங்கிய நினைவுகள் எங்கும்
மாம மியா மாம மியா'

அதே முதல் சரணத்தின் இனிமை தொடரும்.

'லலலலாலலா... லலலலாலலா' என்று அற்புதமாகப் பாடலை முடிப்பார் ஜானகி.

உணர்வு சம்பந்தப்பட்ட சில பாடல்கள், சோகப் பாடல்கள் என்றெல்லாம் நம் நாடி நரம்புகளை அசைத்துப் பார்த்து நம்மையறியாமல் நம் கண்களில் நீர் துளிர்க்கச் செய்யும் பாடல்கள் பல உண்டு. அந்தப் பாடலின் காட்சியோடு ஒன்றி விட்டால் இன்னும் நம் நிலைமை கவலைக்கிடம் ஆகும். (எனக்கு 'மெல்லிசை மன்னரி'ன் 'நேரான நெடுஞ்சாலை')

ஆனால் காதலன், காதலி இருவரும் வெளிநாடுகளில் சுற்றி ஆனந்தமாகத் திரியும் இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் உடல், உள்ளம் சிலிர்த்து கண்களில் ஓரம் நீர் தெறிக்கிறதே! இது என்ன மாயம்?!
இத்தனைக்கும் சந்தோஷமான பாடல். காட்சி அமைப்புகள் அப்படியே ஒன்றி விடவும் வைக்காது. கமல் ரதி ஓடல்கள், துரத்தல்கள், விளையாட்டுக்கள், பிளைட், ஸ்கேட்டிங், உயர்ந்த கட்டடங்கள், ஆயிரக்கணக்கான கார் பார்க்கிங், கார் லோட் எடுத்துச் செல்லும் கண்டெயினர் என்று ஜாலியான, வழக்கமான வெளிப்புறப் படப்பிடிப்புதான்.

ஆனால் நம் நரம்புகள் அனைத்தும் இளையராஜாவின் வாத்தியங்களால் மீட்டப்படுகிறதே! ஜானகியின் வளமான குரலினால் 'ஜாம் ஜாம்' என்று மனம் குதிக்கிறதே! கண்களில் பொழிவது ஆனந்தக் கண்ணீர்தான். சந்தேகம் இல்லை.

ராஜா! இந்த ஒரு பாடல் போதும் நீ என் நெஞ்சை விட்டு அக்லாதிருக்க.

ஜானகியம்மா! மனதை விட்டு போக மறுக்கிறீர்கள்.

ஒரு நாளோ... இரண்டு நாளோ... பாடல் கம்போஸ் முடித்துவிட்டு, பாடி விட்டுப் போய் விடுவது நீங்கள். ஆனால் இங்கு வாழ்நாள் முழுதும் இந்தப் பாடலை எண்ணி எண்ணி வியந்து போவது நாங்களா? அந்த இனிமையிலே மூழ்கி எங்களைத் தொலைத்துக் கொள்வதும் நாங்களா?

இது நியாயமா?

http://i.ytimg.com/vi/Ga5WH7_hEZE/hqdefault.jpg

அழகு ஆயிரம் உலகம் முழுவதும்
அழகு ஆயிரம் உலகம் முழுவதும்
ஒ..மாமமியா மாமமியா
இறைவனின் திருக்கரம்
எழுதிய ஓவியம்
மாமமியா மாமமியா மாமமிய..மா
அழகு ஆயிரம் உலகம் முழுவதும்

பா...பபபபப்பா....பபபபப்பா...பபபப்பா....பபபப்ப ா

ஹே...மனம் போல நாளும்
மகிழ்ந்தாட வேண்டும்
ஒன்றாக நானும் நீயும்
ஹே...மனம் போல நாளும்
மகிழ்ந்தாட வேண்டும்
ஒன்றாக நானும் நீயும்
சோலையில் எங்கும் காற்று
காற்றிலே எங்கும் வாசம்
இளமையின் சிலிர்ப்புகள்
புதுமையின் அழைப்புகள் எங்கும்
மாமமியா மாமமியா

அழகு ஆயிரம் உலகம் முழுவதும்
ஒ..மாமமியா மாமமியா
இறைவனின் திருக்கரம் எழுதிய ஓவியம்
மாம மியா மாம மியா மாமமியா மா

ஆ....மழைக்காலம் மாறும்
வசந்தங்கள் தோன்றும்
உல்லாசம் வாழ்வில் சேரும்
ஹே......மழைக்காலம் மாறும்
வசந்தங்கள் தோன்றும்
உல்லாசம் வாழ்வில் சேரும்
மாலையே இன்ப மாலை
வேளையே நல்ல வேளை
இனியது கனவுகள்
மயங்கிய நினைவுகள் எங்கும்
மாமமியா மாமமியா

அழகு ஆயிரம் உலகம் முழுவதும்
ஒ..மாமமியா மாமமியா
இறைவனின் திருக்கரம்
எழுதிய ஓவியம்
மாமமியா மாமமியா மாமமியா மா

அழகு ஆயிரம் உலகம் முழுவதும்
லலலலாலலா..லலலலாலலா


https://youtu.be/DN9GdmNjVbc

பியானோவில் இந்தப் பாடல் ஒலிக்கப்படும் அற்புதத்தை போனஸ் பதிவாகப் பெறுங்கள். மிஸ் பண்ணி விடாதீர்கள்.


https://youtu.be/7jqOhmf4d1M

uvausan
15th July 2015, 10:53 AM
வாசு , ஒரு இனிப்பை தந்து சுவைத்து முடிக்கும் முன் , இன்னொமொரு விருந்து - உங்கள் தீவிர ரசிகர்களான நாங்கள் எல்லோரும் இனி இன்சுலின் Dependents தான் . மிகவும் அழுக்கான துணிகளைக் கூட சற்றே சிரமம் எடுத்து அலசி விடலாம் - ஆனால் , படத்தயாரிப்பளர்களுக்கே தெரியாத அவர்களின் படங்களை , அதில் வரும் பாடல்களை தேடிக் கொண்டுவந்து , தீவிரமாக அலசி , நாங்கள் பார்க்காத கோணங்களில் விவரித்து , சரளா , குசல குமாரி போன்றவர்களை வாழவைக்கும் உங்கள் பதிவுகளை இன்னும் சரியாக பாராட்ட வேண்டுமென்றால் இந்த ஒரு பிறவி எங்களுக்கு போறாது . உங்களிடம் இருந்து இன்னும் நாங்கள் தெரிந்து கொள்ள விரும்பும் நபர்கள் :

1. அங்க முத்து

2. அங்குச பிரகதாம்பாள் - 1951 இல் வந்த மின்னல் கொடியில் கதாநாயகிக்கு சித்தியாக நடித்தவள் .

3. ஸ்வப்பன சுந்தரி

சும்மா ஒரு நகைச்சுவைக்காக சொன்னேன் ... தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் - உங்கள் பதிவுகள் உண்மையில் MSV யின் இழப்பிற்கு , மனத்தின் வேதனைக்கு சற்றே ஆறுதலாக உள்ளன . தொடருங்கள் ---

uvausan
15th July 2015, 11:04 AM
Good Morning

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/IMG-20150627-WA0009_zpsq9aljyyc.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/IMG-20150627-WA0009_zpsq9aljyyc.jpg.html)

uvausan
15th July 2015, 11:10 AM
கருவின் கரு - 191

பாகம் 2 - தந்தை

தந்தை - மகன் பந்தம்

மகனே! குழந்தைப் பருவத்தில் உன்னை மீட்டெடுக்க வழியின்றி அறுவை சிகிச்சைக்கு முதன் முதலாக
நகையை விற்றேன்..!

முதல் வகுப்பிலேயே உன்னை முதலிடத்தில் உள்ள பள்ளியில் சேர்க்க நன்கொடை கட்டமுடியாமல்
நிலத்தை விற்றேன்..!

அடுத்தடுத்த வகுப்புகளுக்கு ஆடுகளை விற்றேன்..!

மேல்நிலை வகுப்புகளுக்கு மாடுகளை விற்றேன்..!

சுற்றுலா செலவுக்கு சில சமயம் நான்
சுற்றியிருந்த பொருளை விற்றேன்..!

பயணச் செலவுக்கு பல சமயம் என்
பசியை விற்றேன்..!

தேர்வு நாட்களில் உனக்கு தேநீர் கொடுக்கவே என்
தூக்கத்தை விற்றேன்..!

கடைசியில் கல்லூரி படிப்புக்காக
கட்டிய வீட்டையும் விற்றேன்..!

படித்தாய்.. உயர்ந்தாய்.. வளர்ந்தாய்
வாங்கினாய் மீண்டும் எல்லாவற்றையும்..!

இன்று நீ இருப்பதோ மூன்றடுக்கு இல்லத்தில்
நானிருப்பதோ முதியோர் இல்லத்தில்..!

எல்லாம் விற்றும் என்னிடம் இருந்தது இதயம்

எல்லாம் வாங்கியும் உன்னிடம் காணாமல் போனது .
உன் இதயம்

https://www.youtube.com/watch?v=vAoUr0p094g

uvausan
15th July 2015, 11:12 AM
கருவின் கரு - 192

பாகம் 2 - தந்தை

தந்தை - மகன் பந்தம்


எல்லா அப்பாக்களுமே ராஜாவாக இருப்பதில்லை - ஆனால் எல்லா பிள்ளைகளுமே இளவரசர்களாகவும் , இளவரிசிகளாகவுமே வளர்க்கப்படுகிறார்கள் ----------

https://www.youtube.com/watch?v=7qqKkfyhvAw

uvausan
15th July 2015, 11:20 AM
கருவின் கரு - 193

பாகம் 2 - தந்தை

தந்தை - மகன் பந்தம்

தந்தையை தெய்வமாக மகன் கருதும் பருவம்

கருவுற்ற மான் தன் மகவை ஈயும் ஒரு நிலை..
அது ஒரு அடர்ந்த புல் வெளியை கண்டது,
அதன் அருகே ஒரு பொங்கும் ஆறு.
இதுவே சரியான இடம் என்று அது சென்றது அங்கு.
அப்போது கருமேகங்ள் சூழ்ந்தன.
மின்னலும் இடியும் இசையாட்சி செய்ய ஆரம்பித்தன.
மான் தன் இடப்பக்கம் பார்த்தது.. அங்கே ஒரு வேடன் தன் அம்பை மானை நோக்கி குறி பார்த்து நின்று கொண்டிருந்தான்.
மானின் வலப்பக்கமோ பசியுடனான ஒரு புலி மானை நோக்கி வந்து கொண்டிருந்தது.
ஒரு கருவுற்ற மான் பாவம் என்ன செய்யும்? அதற்கு வலியும் வந்து விட்டது.மேலும் காட்டு தீயும் எரிய ஆரம்பித்து விட்டது.
என்ன நடக்கும்.?
மான் பிழைக்குமா?
மகவை ஈனுமா?
மகவும் பிழைக்குமா?
இல்லை காட்டு தீ எல்லாவற்றையும் அழித்து விடுமா?
வேடனின் அம்புக்கு இரையாகுமா?
புலியின் பசிக்கு புசியாகுமா?
மான், தீ ஒரு புறமும், பொங்கும் காட்டாறு மறு புறமும், மற்ற இருவரும் எதிர் புறமும்..
மான் என்ன செய்யும்?

மான் தன் கவனம் முழுதும், தன் மகவை ஈவதிலேயே செலுத்தியது.. ஒரு உயிரை விதைப்பதிலேயே தன் கவனம் இருக்க, மற்ற சூழல் அதன் கண்களில் இல்லை.
அப்போது நடந்த நிகழ்வுகள்.......
எங்கிருந்தோ அந்த பெண் மானின் துணையான ஒரு ஆண் மான் ஓடி வந்தது - குறிவைத்த வேடனனின் அம்புக்குத்தன்னை பலியாக்கிகொண்டது - பார்த்துக்கொண்டிருந்த புலி அங்கிருந்து ஓடிவிட்டது .. வேடனையும் மின்ன தாக்கியது - அவனால் அந்த இறந்து கிடந்த மானை எடுத்துச்செல்ல முடியாமல் அங்கிருந்து அகன்று விட்டான் .

தீவிர மழை காட்டு தீயை அழித்து விடுகிறது..
அந்த மான் அழகான குட்டி மானை பெற்றெடுக்கிறது. தந்தை செய்த ஒரு மாபெரும் தியாகம் அந்த பிறந்த மானுக்குத் தெரிய வாயிப்பில்லை . தன் குட்டி ஒரு புறம் , தன்னை காப்பாற்றிய கணவன் ஒரு புறம் --- பெண் மான் வாடியது .

நம் வாழ்விலும் இப்படிபட்ட சந்தர்ப்பங்கள் நிறைய வந்திருக்கிறது.. வரும்..அச்சூழ்லில் பல எதிர்மறை சிந்தனைகள் நம்மை சுற்றி நின்று அச்சுறுத்தும்.. சில எண்ணங்களின் பலம் நம்மை வீழ்த்தி அவை வெற்றி பெற்று நம்மை வெற்றிடமாக்கும்..

இம்மானிடம் இருந்து இந்த மானிடம் கற்றுக்கொள்வதென்ன ?

அந்த மானின் முக்கியத்துவம் முழுதும், மகவை பெற்றிடுவதிலேயே இருந்தது..மற்ற எதுவும் அதன் கை வசம் இல்லை..மற்றவற்றிற்கு அது கவனம் கொடுத்து இருந்தால் மகவும் மானும் மடிந்து இருக்கும். தந்தை மான் தியாகம் செய்யாவிடில் எல்லாமே அங்கு அழிந்திருக்கும்
இப்போது உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்..
எதில் என் கவனம்?

எதில் என் நம்பிக்கையும் முயற்ச்சியும் இருக்க வேண்டும்?
வாழ்வின் ஒரு பெரும் புயலில், எதில் கவனம் செலுத்த வேண்டுமோ அதில் செலுத்தி , மற்றதை தந்தைப்போல் இருக்கும் இறைவனிடம் விட்டு விடுங்கள்.. - நம் தந்தையைப்போல தியாக சிந்தனை நமக்கும் இருந்தால் நம்மால் பலருக்கு வாழ்வு கொடுக்க முடியும் .

https://youtu.be/UQVM44VTL9g

https://youtu.be/mV9faql_I6Y

uvausan
15th July 2015, 11:23 AM
கருவின் கரு - 194

பாகம் 2 - தந்தை

தந்தை - மகன் பந்தம்

தந்தையை தெய்வமாக மகன் கருதும் பருவம்

https://youtu.be/gjlCDqHd4FU

https://youtu.be/ScnsHvkTfIY

vasudevan31355
15th July 2015, 01:09 PM
பெருந்தலைவரின் 113 ஆவது பிறந்த நாள்.

http://i.ytimg.com/vi/xU2iN2oMF0g/maxresdefault.jpg


https://youtu.be/psNH1lcohvk

uvausan
15th July 2015, 02:01 PM
திரு காமராஜரை நினைவில் கொண்டு வரும் நடிகர் திலகத்தின் என்றும் அழியாத பாடல்கள்

https://www.youtube.com/watch?v=_TQqVSwWd1A

https://www.youtube.com/watch?v=Xr4gvXXgCnU

Russellzlc
15th July 2015, 03:02 PM
வாசு சார்,

மோகம் அது முப்பதுநாள் பதிவை இன்றுதான் சார் பார்த்தேன். தாமதத்துக்கு மன்னிக்க வேண்டும். பணி நெருக்கடிகளோடு, மெல்லிசை மன்னர் மறைவால் நேற்றிலிருந்து மனசே சரியில்லை. நம்மால் நேசிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவராக வரமுடியாத இடத்துக்கு விடைபெற்றுச் செல்லும்போது இதுதான் இயற்கை நியதி என்று என்னதான் அறிவு விளக்கினாலும், உணர்வு அதை ஏற்க மறுக்கிறது. இதயம் கனக்கிறது.

மேலும், கல்தூண் பதிவை அன்றே பார்த்தாலும் பெரிதாக இருக்கிறதே பின்னர் படிப்போம் என்று தள்ளிப்போட்டேன். இன்றுதான் அதையும் படித்தேன். வெளுத்து வாங்கி விட்டீர்கள். (இன்னும் ராகவேந்திரா சாரின் அற்புதராஜ் படிக்கவில்லை. மன்னிக்கவும். விரைவில் படித்துவிடுவேன்) இனிமேல் அந்தப் பாடலையும் அதில் நடிகர் திலகம் திரு.சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பையும் இதற்கு மேலும் யாரும் விவரிக்க முடியாது. உங்கள் உழைப்புக்கு தலைவணங்குகிறேன்.

கலைஞர் திரு.கருணாநிதி அவர்களை அரசியல் ரீதியாக நான் ஏற்கமாட்டேன். என்றாலும், நீங்கள் குறிப்பிட்டது போல அவர் மீது தனிப்பட்ட மரியாதை மற்றும் கலைத் திறமை மீது மதிப்பு எனக்கு உண்டு. உங்களுக்கும் உண்டு என்று கூறியதற்கு நன்றி. அதுதான் திறமை எங்கிருந்தாலும் மதிக்கும் தமிழனின் பண்பாடு.

பிள்ளையோ பிள்ளை படம் பார்த்து விட்டு, தனது ரிஸ்ட் வாட்சை முத்துவுக்கு பரிசளித்து, ‘‘தனக்கென்று தனி பாணியை முத்து உருவாக்கிக் கொள்ள வேண்டும்’’ என்று மக்கள் திலகம் சொன்னார். அதை திரு.முத்து அவர்கள் கேட்டிருந்தால் மேலும் சில ஆண்டுகள் தாக்குப்பிடித்திருப்பார். நல்ல குரல் வளம் கொண்டவர்.

மோகம் அது முப்பது நாள்... பாடலில் மக்கள் திலகத்தின் காப்பி சற்று தூக்கலாகவே இருக்கும். மிகவும் இனிமையான பாடலை பதிவிட்டிருக்கிறீர்கள். மிக்க நன்றி சார். இசையரசியுடன் மேட்ச் ஆகி பாடுவது அருமை. நம்மை மட்டுமல்ல, எல்லார் மனதையும் கொள்ளை கொண்ட பாடல்தான் இது.

//எது எப்படியோ எல்லாவற்றையும் மீறி இப்பாடல் என் மனதை எப்போதோ கொள்ளையடித்து விட்டது. எம்.ஜி.ஆர் அவர்கள் பாணியில் நடித்திருந்தாலும் மு.கமுத்துவும் இப்பாடலில் கவரவே செய்கிறார். அது ஏன் என்றும் புரியவில்லை. //

மக்கள் திலகம் பாணியில் நடித்ததுதான் கவர்வதற்கு காரணம். திரு.சத்யராஜ், திரு.ராமராஜன் ஆகியோருக்கெல்லாம் முன்பாகவே முதன் முதலில் மக்கள் திலகம் பாணியில் நடித்தவர் என்ற பெருமை பெற்றவர். ஓரிரண்டு படத்தோடு அதை விட்டிருந்தால் நிலைத்திருப்பார்.

நீங்கள் மேலே பதிவிட்டிருக்கும் திரு.முத்துவின் படம் சமையல்காரன் படத்தில் இடம் பெற்ற ‘நான் பாடிடும் கவிதையின் சந்தம்’ பாடலும் பாடகர் திலகத்தின் குரலில் அருமையான பாடல்தான். திரு.ராமராஜன் படங்கள் மாதிரி திரு.முத்து படங்களில் பாடல்கள் அமைந்துவிடும். அருமையான பாடலை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி சார்.
மங்கையரில் மகராணி, வெஜ்-நான் வெஜ் ஆகியவையும் சூப்பர். எல்லாருக்கும் வேலை இருக்கத்தான் செய்யும். அதையும் மீறி நேரம் ஒதுக்கி எல்லாரும் ரசிக்க அர்ப்பணிப்புடன் பதிவிடும் உங்கள் உழைப்பு பாராட்டத்தக்கது.

வேலை அதிகம் இருந்தாலும் இழுத்து வந்து விட்டீர்கள். அதுதான் உங்கள் திறமை. மீண்டும் நன்றி சார்.

ரவி சார்,

உங்கள் பாடல்களும் பொருத்தமான புராணக் கதைகளும் என்ன சொல்லி பாராட்டுவது? (மன்னிக்கவும். இன்னும் படிக்க வேண்டியது இருக்கிறது. அப்படி அள்ளி வழங்கியிருக்கிறீர்கள்) ஒன்று நிச்சயம் சார் . எல்லா பதிவுகளிலும் உங்கள் நல்ல உள்ளம் தெரிகிறது. ‘குட் மார்னிங்’ படங்களை எங்கிருந்து பிடிக்கிறீர்கள்? அட்டகாசம்.

திரு.ராஜேஷ், திரு.சிவாஜி செந்தில், திரு.குமார் சாரின் ஆவணப் பதிவுகள், திரு.யுகேஷ் பாபுவின் இணையத்திலிருந்து தேடி எடுத்த முத்தான பதிவுகள், திரு.ஆதிராமின் ஊக்கமூட்டும் பதிவுகள், திரு.ராஜ்ராஜ் சாரின் ஜூகல் பந்தி எல்லாமே அருமை.

முக்கியமாக, திரு.குமார் சாருக்கு திரு.ஆதிராமின் வாழ்த்தும் அதற்கு குமார் சாரின் நன்றியும் நான் ரசித்த பதிவுகள்.

கல்நாயக் எங்கே? கிருஷ்ணா சாரையும் ரொம்ப நாளா காணோமே?

நண்பர் திரு.சிவா அவர்கள் போட்டிருந்த பதிவு டெலிட் செய்யப்பட்டுள்ளது. மக்கள் திலகம், நடிகர் திலகம் திரிகளிலும் அப்படியே. திரு.சிவா அவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் கடுமையாக கருத்து கூறாதவர். என்ன பதிவு அது?

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellxor
15th July 2015, 05:39 PM
எங்க ஊர் ராஜா
இடது கையைதூக்கி அப்படியே இடது கால் தொடையில் ஒருதட்டல்
வலது கையை தூக்கி இடது கையின் மேற்புறம் தட்டல்
வலது கையை தூக்கி இடது கையின் மேற்புறம் ஒரு தட்டல்
அப்புறம் வலது கை இடது நெஞ்சின் மேலும் இடது கை வலது நெஞ்சின் மேலும் ஒரு தட்டல்
மறுபடி வலது கை இடது கையை தட்டல் இடது கை வலது கை மேற்புறம் தட்டல்.
ஒவ்வொரு கையும் மாறிமாறி தட்டும் போது காமிராவலது இடது என்று மாறி மாறி படம் பிடித்திருக்கும்.இது என்ன பெரிய விசயம் என்று கேட்கலாம்.(Scene continuity )காட்சியின் தொடர்ச்சி க்காக இடத்தின் கோணங்கள் மாறாமல்படம் பிடிக்க வேண்டும்.அப்போதுதான் காட்சியின் தொடர்புகோர்வையாக இருக்கும்.கோணங்களில் மாறிமாறி படம் பிடிக்க வேண்டுமென்றால்காமிராவை வலது இடது என்று மாற்றி மாற்றி படம் பிடிக்க வேண்டும்.அப்போது நடிப்பவர் அதே இடத்தில் இருக்கும் நிலை மாறாமல்
அதற்குமுந்தைய கோணங்களில் சிறிதும் மாறாமல்நடித்தால் மட்டுமே அந்தக்காட்சி
சரியாக அமையும்.இப்போது அந்தக் காட்சியைப் பாருங்கள். அதன் சிறப்பு இன்னும் பல மடங்கு புரியும்.11 விநாடிகளுக்குள் இந்த அற்புதம் நடந்திருக்கும்.பின் இரு கைககளையும் சேர்த்து கை தட்டல் ஆரம்பமாகும்.அது படிப்படியாக உயர்ந்து உச்சத்தை அடையும்.இந்தக்காட்சியே ரசித்துப்பார்ப்பவர்களின் மனம் பிரமை நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும்.கைதட்டலின் முலம் உலகில் சரித்திரம் படைத்த படம் இது ஒன்றே.
அடுத்து கை தட்டுவதை தொடர்ந்து வேகமாக தட்டி பின் சட்டென்று நிறுத்தி கண்களை விரித்து ஒரு விரலை வாயில் வைத்து உஷ்ஷ்ஷ் என்று சொல்லும்போது
பிரமை நிலை விடுபட்டு மொத்த திரையரங்கமும் நிசப்தமாயிருக்கும்.இதற்கு மேல் ஒரு நடிப்பா?இப்படி ஒரு நடிகனா?இவருடைய ரசிகனல்லவா நாம்.நம்மை கர்வம் கொள்ள வைக்கும் நடிப்பு.இந்த மாதிரி நடிப்புகளை ஒருவன் பார்த்துக் கொண்டு வரும்போது அவனுடைய ரசனையின் ஈர்ப்பு (வெறி)
அதிகமாகிக் கொண்டேதானே இருக்கும்.



யாரை நம்பி நான் பொறந்தேன்போங்கடா போங்க-என்காலம் வெல்லும்
என்று மீசையைமுறுக்கும் அந்த ஸ்டைல்
தளர்ந்து போனவர்களுக்கும் புத்துணர்ச்சி
ஊட்டும்.


வென்ற பின்னேவாங்கடா வாங்கன்னு கையை மேலும் கீழும் ஆட்டும்அந்த ஸ்டைலுக்கு அரங்கங்கள் அதிரும்.



!குளத்திலே தண்ணியில்லேகொக்குமில்லே மீனுமில்லே
இரண்டு கைககளையும் முன்னால் நீட்டி வளைத்து வளைத்து ஆட்டியபடி அவர் நடக்கும் நடை நாட்டியத்திலே தேர்ச்சி பெற்று பல வருடங்கள் அனுபவங்கள் பெற்றிருந்தாலும் நடந்து காட்ட முடியாத நடை(பத்மாசு ப்ரமணியம்போன்றோர்பல சமயங்களில் கூறிய கருத்துக்களை நினைத்துப் பார்க்கவும்)


பெட்டியிலே பணமில்லேபெத்தபுள்ளே சொந்தமில்லே!...

பீரோவின் அருகில் வந்து பணத்தைக் குறிக்கும் அந்தக் விரல்களின் சைகை அபாரமாயிருக்கும்.அந்த விரல் வித்தை சாகசம் பாடல் வரிகள் இல்லாவிட்டாலும் அர்த்தத்தை விளங்க வைக்கும்.

தென்னையைப் பெத்தா இளநீருபிள்ளையைப் பெத்தா கண்ணீரு
அதுவரைஎவ்வளவு தன்னம்பிக்கை தைரியத்துடன் காட்டிக்கொண்டிருக்கும் அவரது முக பாவனைகள் சட்டென்று
சோக த்தையும் கலந்து காட்டும். வாழ்க்கையின் இழப்புகளை அந்த சோகத்தில் பிரதிபலித்திருப்பார்.



பெத்தவவன் மனமே பித்தம்மாபிள்ளை மனமே கல்லம்மா
இந்த வரிகளின் முடிவில் சுயமரியாதை தலைதூக்கும்படியும் சோகத்தை அலட்சியப்படுத்தும்படியும் படியான உடல் மொழிகளையும் முக பாவனைகளையும் வெளிப்படுத்தியிருப்பார்.



!பானையிலே சோறிருந்தாபூனைகளும் சொந்தமடாசோதனையை பங்கு வெச்சாசொந்தமில்லே பந்தமில்லே!...
இப்பொழுது தன்னம்பிக்கை சோகத்துடன் சிறிது வெறுப்பையும் கலந்து கதம்ப மாலையாகஉணர்ச்சிகளை
காட்டியிருயிருப்பார்.

நெஞ்சமிருக்கு துணிவாகநேரமிருக்கு தெளிவாக
இப்பொழுது வயதானால் ஏற்படும் தடுமாற்றத்தை மறைக்க முயற்சிப்பதையும்
தைரியத்தை இழக்கவில்லை என்பதையும்
கலந்து உணர்ச்சிகளைவெளிப்படுத்துவார்.

நினைத்தால் முடிப்பேன் சரியாகநீ யார் நான் யார் போடா போ
இயலாமையும் தள்ளாமையும் சேர்ந்து கொண்ட நிலைமையில் கொஞ்சம் விரக்தியும் அடைந்த நிலை.எங்கிருந்து அந்த வேகம் வந்தது ?உட்கார்ந்து கொண்டிருப்பவர் திடீரென்று எழுந்து நடந்து வருவது வெறி பிடித்த வேங்கை போல் இருக்கும்.

ஆடியிலே காத்தடிச்சாஐப்பசியில் மழைவரும்தேடிவரும் காலம் வந்தாசெல்வமெல்லாம் ஓடிவரும்!...
முடிவில்
வேட்டியை தூக்கிக் கட்டுவதும்
சென்று சென்று திரும்பி வருவதும்
என்று நடிப்பு ராஜாங்கம் செய்திருப்பார்.

uvausan
15th July 2015, 07:26 PM
வருக வருக அரிமா செந்தில் அவர்களே - இது உங்கள் முதல் பதிவு இங்கு என்று நினைக்கிறேன் - வாசு அவர்களின் பதிவுகள் அனைவரையும் இங்கு வரவழைக்கும் சக்தி வாய்ந்தது . உங்கள் கடினமான உழைப்பை இந்த மதுரகானத்திலும் பார்க்க எங்களுக்கு ஒரு வாயிப்பு கிடைப்பதற்கு மிகவும் பெருமை படுகிறோம் .

rajraj
16th July 2015, 04:18 AM
From Thulabharam (Tamil) (1969)

poonchittu kannangaL.....

http://www.youtube.com/watch?v=gOXox6BwOvw

From the Malayalam original Thulabharam(1968)

omanathinkalin onam........

http://www.youtube.com/watch?v=2rC0tU_R8pg

From the Telugu version Manushulu marali (1970)

paappayi...

http://www.youtube.com/watch?v=jBWEL20NPbo

From the Hindi version Samaj ko badal dalo(1970)

Taaron ki charon....

http://www.youtube.com/watch?v=OVzxbRuJUEM

taaron .... Duet

http://www.youtube.com/watch?v=qVPvAOsckXg


Thanks RD for the link to the Hindu article on Thulabharam. I have posted the video clips I found. I am sure there are other Malayalam movies remade in other languages. Time for you to enlighten us ! :)

rajeshkrv
16th July 2015, 05:05 AM
Ankil ragam was remade in tamil & telugu

i guess the hindi version was the original not sure(nutan kishore kumar)

https://www.youtube.com/watch?v=P2F9GJzNm2g

tamil- madham oru poo malarum from neelamalargal
telugu - anuragaalu - jaabili velige

rajraj
16th July 2015, 06:04 AM
i guess the hindi version was the original not sure(nutan kishore kumar)

Yes ! Anuraag(Hindi) was the original.

vasudevan31355
16th July 2015, 06:14 AM
ரவி சார்,

மகனுக்காக எல்லாவற்றையும் இழந்த தந்தை , தாய் மானின் துணிவு, தந்தை மானின் உயிர்த் தியாகம், எல்லா அப்பாக்களுமே ராஜாவாக இருப்பதில்லை - ஆனால் எல்லா பிள்ளைகளுமே இளவரசர்களாகவும் , இளவரசிகளாகவுமே வளர்க்கப்படுகிறார்கள் என்று பதிவுகள் கலக்கல்.

இன்னும் 8 வந்தால் 200 ஐத் தொடுவீர்கள். என் முதல் வாழ்த்துக்கள் முன் கூட்டியே.

vasudevan31355
16th July 2015, 06:21 AM
கலை சார்,

வருக. பதிவுகளைப் பொறுமையாகப் படித்து பின்னூட்டம் மற்றும் பாராட்டுக்கள் அளித்ததற்கு நன்றிகள். பதிவுகளிட்டு நாட்களான போதும் ஒன்று விடாமல் அதைப் படித்து பின்னூட்டம் அளிப்பதில் ஆதிராம் சார் போலவே தாங்களும் நிகரற்றவர்தான். அதற்காக என் மனமார்ந்த நன்றிகள்.

இன்னும் சில மு.க.முத்துவின் பாடல்கள் இருக்கின்றன. விரைவில் அதையும் அளிக்கிறேன். 'கல்தூண்' படப் பாடல் கதை சொல்லும் பாடல் ஆதலால் அதன் நீளம் அதிகம். கதை முழுவதையும், அத்தோடு சேர்ந்து வேலின் பெருமையையும் கூறும் பாடல். அதனால்தான் பதிவின் நீளம் அதிகம்.

வேலைப் பளுவிற்கு மத்தியிலும் நடுவே வந்து பதிவிட்டதற்கு நன்றிகள் சார்.

vasudevan31355
16th July 2015, 06:29 AM
செந்தில்வேல் சார்,

மதுர கானத் திரிக்கு தங்களை அனைவரும் மனமகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். வருக12 வருக!.

அது போல 'எங்க ஊர் ராஜா' படத்தின் 'யாரை நம்பி நான் பொறந்தேன்' பாடலில் நடிகர் திலகத்தின் நடிப்பு அம்சங்களை பிட்டு பிட்டு வைத்து பிளந்து கட்டியதற்கு நன்றிகள். நடிகர் திலகம் திரியில் தங்களுடைய 'தியாகம்' பதிவையும் ரசித்துப் படித்தேன். நேற்று ராகவேந்திரன் சாரிடமும் இதுபற்றி பேசினேன்.

நடிகர் திலகத்தின் நடிப்பை அலசுவதற்கு ஒன்றன்பின் ஒருவராக தொடர்ந்து வருவது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது. இது தங்களைப் போன்றவர்கள்ள இன்னும் தொடர வேண்டும். நல்ல பதிவிற்கு நன்றிகள். தொடர்ந்து பங்களியுங்கள்.

uvausan
16th July 2015, 06:35 AM
Good Morning

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/GM_zpszmmpyvzu.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/GM_zpszmmpyvzu.jpg.html)

vasudevan31355
16th July 2015, 06:40 AM
//விக்டரி மூவீஸ் பெத்த மனம் பித்து தந்த பிரமிப்பூட்டும் வெற்றியைத் தொடர்ந்து எஸ்.பி.முத்துராமன் புதிய வெற்றி இயக்குநராக அடையாளம் காணப்பட்டார். அந்த வெற்றியைத் தொடர்ந்து அதே விக்டரி மூவீஸ் அதே ஜெயாவைக் கதாநாயகியாக வைத்து தயாரித்து அதே ஆண்டில் செப்டம்பரிலேயே வெளியிட்ட படம் தான் தெய்வக் குழந்தைகள். இரண்டுமே மெல்லிசை மாமணி வி.குமாரின் இசை தான். இன்னும் சொல்லப் போனால் பாலச்சந்தரின் ஆஸ்தான இசையமைப்பாளரான வி.குமாரை விட்டு பாமா விஜயத்திற்கு எம்.எஸ்.வி.யிடம் சென்றார் கே.பி. இருந்தாலும் இந்த நினைத்தால் சிரிப்பு வரும் பாட்டில் வி.குமாரின் பாணியை நினைவு படுத்தும் வகையில் மெல்லிசை மன்னர் இசையமைத்திருப்பார். அதனால் இந்த இரு பாடல்களும் ஒரே சாயலில் இருக்கும். [இந்த இடத்தில் சாயல் எனக் குறிப்பிடுவது மெட்டை அல்ல, பாடலின் அமைப்பு, இசைக் கருவிகளின் பிரயோகம், தாளக்கட்டு மாறும் உத்தி போன்றவை]. தங்களின் அபார ஞாபகசக்திக்கு இது மிகச் சிறந்த உதாரணம் வாசு சார். வி.குமாரின் இசையைப் பொறுத்த வரையில் ஹம்மிங் மிகவும் அபூர்வமாகத் தான் ஒலிக்கும். அவருடைய உதவியாளர் குணசிங் தான் பெரும்பாலும் குரல் கொடுப்பார் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். தாங்கள் இப்பாடலில் குறிப்பிடும் ஹம்மிங் அநகமாக குணசிங் அவர்களின் குரலாக இருக்கலாம். பல ஆண்டுகள் குமாரிடம் உதவியாளராக இருந்த குணசிங், சங்கு புஷ்பங்கள் படத்திற்கு தனியாக இசையமைத்தார். அப்படி யில்லாத பட்சத்தில் இந்தக் குரல் ஏ.வி.ரமணனுடையதாக இருக்கலாம். ஏனென்றால் குமார் இசையமைத்த சில படங்களில் அவர் ஹம்மிங் பாடியிருக்கிறார் எனவும் கேள்விப்பட்டிருக்கிறேன்.//

ராகவேந்திரன் சார்,

வெஜ் அண்ட் நான் வெஜ் பதிவுக்கு தங்களுடைய பின்னூட்டம் அம்சம். குமார் அவர்களின் இசை பற்றியும், குணசிங் பற்றிய அரிய தகவல்கள் தந்தும் பதிவை முழுமை பெறச் செய்து விட்டீர்கள். இதற்குத்தான் ரசிக வேந்தர் வேண்டும் என்பது. இந்த மாதிரி பதிவு சம்பந்தமான பின்னூட்டங்களே பெரு மகிழ்ச்சி அளிக்கின்றது. பார்த்தீர்களா? எவ்வளவு விஷயங்கள் தங்கள் மூலமாக இப்போது வெளிவருகின்றன!

அருமையான சப்போர்ட்டிற்கு நன்றிகள் சார்.

uvausan
16th July 2015, 06:42 AM
கருவின் கரு - 195:smile2::)

பாகம் 2 - தந்தை

தந்தை - மகன் பந்தம்

தந்தையை தெய்வமாக மகன் கருதும் பருவம்

கண்ணன் வாழ்ந்காலத்திலேயே கோபஸ்திரீகளிடத்தில் அதீத சாமா்த்தியம் இருந்திருக்கிறது. கண்ணனைப் பிடிக்கஒரு கோப ஸ்திரீ செய்த காாியம் அற்புதம்! உறியைத் தொட்டால் மேலே ஒரே மணி இருக்கும். அது கண,கண என்று அடிக்கும். வெண்ணெய் எடுக்க வேண்டும் என்று இல்லை. உாியைத் தொட்டாலே மணி அடிக்கும் .

குழந்தை கண்ணனுக்கு இந்த மணி இருப்பது தொியாமல் ஒரு நாள் சாயங்கால வேளை இந்த வீட்டிற்குச் சென்றான் . எல்லோரும் ஜாக்கிரதையாக இருந்ததால் வெண்ணெய் கிடைக்கவேயில்லை. ஒவ்வொரு வீடாகச் சுற்றி கடைசியில் இந்த வீட்டிற்கு பசியோடு வருகிறான் . உறியைப் பாா்த்தவுடன் அதீத சந்தோஷம்.
உறியைத்தொட்டான் ; தொட்டவுடன் மணி அடித்தது. நடுங்கிப் போய் விட்டான் குழந்தை கண்ணன் . இந்த குழந்தைக்கு த் தொிந்தது ஒரே வித்தை. அது பண்ணுவதும்,நமக்குச் சொல்லிக் கொடுப்பதும் அந்த வித்தைதான். என்ன அது? சரணாகதி. அதைத் தவிர வேறு எதுவும் தொியாது. மணியைப் பாா்த்து சரணாகதி பண்ணியது.

இப்படி அடிக்கிறாயே! நான் மாட்டிக் கொண்டால் அம்மா என் முதுகை சுத்தம் பண்ணிவிடுவாளே! உதை விழுமே! காலையில் இருந்து எதுவும் சாப்பிடவில்லை.கொஞ்சம் அடிக்காமல் இரேன்! என்று கைகூப்பியது.

மணி உடனே'அடியேன்!அடியேன்!' என்று தாஸனான நான் அடிக்க மாட்டேன் என்றது. மிகவும் சந்தோஷத்தோடு குழந்தை பானைக்குள் கையை விட்டு வெண்ணெயை எடுத்து வாயில் போட்டுக் கொண்ட போது 'கண கண' வென்று மணி அடித்தது .

மணியே! அடிக்க மாட்டேன் என்றாயே! இப்படிப் பண்ணுகிறாயே..இதுதானா தர்மம் ? நீ சொன்னதால்தானே வெண்ணெயை வாயில் போட்டுக் கொள்ளப் போனேன். இப்படிச் செய்வது நியாயமா! என்று கேட்டது குழந்தை.

மணியின் மணியான வாா்த்தை இது. " ஏ க்ருஷ்ணா! நாராயணா! உனக்கு நிவேதனம் ஆகும் போது நான் பக்கத்தில் இருந்துகொண்டு அடிக்காமல் இருந்தால் எனக்கு ஏது பிரயோஜனம்? பகவானுக்கு நிவேதனம் ஆகும்போது மணியடிக்காமல் இருக்கலாமா...?அதனால் அடித்தேன் என்றது.

உனக்கு நிவேதனம் ஆனதால் மணியடித்தேன். இல்லையென்றால் அடித்திருப்பேனா? இனிமேல் அடிக்கமாட்டேன்.நீ சாப்பிடு என்று மணி சொன்னது. தா்மத்தைப் பற்றி பேசினால் கண்ணன் வாதாட மாட்டான். ஒத்துக் கொண்டு விடுவான்.அப்படி மணி பேசியதை ஒத்துக்கொண்டு போய் விட்டான் பரமாத்மா. உலகத்திற்கே தந்தையான அந்த பரம்பொருளே தர்மத்தைப்பற்றி பேசினால் அமோதித்து செல்லும் போது நடமாடும் தெய்வமான நம் தந்தையிடம் என் வாதிட வேண்டும் ? அவரின் தர்ம சிந்தனைகளுக்கு நாம் ஏன் ஒரு அணை போடவேண்டும் ? கண்ணனுக்கு ஒரு மணி போல , நாமும் நம் தந்தையை ஆராதிப்போம் - முதியோர் இல்லம் தேவை இல்லை - நம் மனக்கதவுகள் மணியோசையை எழுப்பும் போது !!

https://www.youtube.com/watch?v=15qP6ymBr3Q

uvausan
16th July 2015, 06:56 AM
கருவின் கரு - 196

பாகம் 2 - தந்தை

தந்தை - மகன் பந்தம்

நல்ல மனைவி , நல்ல பிள்ளை , நல்ல குடும்பம் தெய்வீகம்

ஆபத்துக்கு உதவாத
நண்பன்

அரும்பசிக்கு உதவாத
அன்னம்

தரித்திரம் அறியாத

பெண்டீர்


தாகத்தை தீர்க்காத

தண்ணீர்

கோபத்தை அடக்காத

மனிதன்

குருமொழி கேளாத

சீடன்

பெற்றோருக்கு அடங்காத

பிள்ளை

எதற்கும் பயன் இல்லை

இவ்வேழும் மெய்யே

==========


நல்ல மனைவி நல்ல பிள்ளை நல்ல குடும்பம் தெய்வீகம் தெய்வீகம்
அது தெய்வீகம் -
நல்ல மனைவி நல்ல பிள்ளை தன்னை இழந்து கடமை மறந்து தவறும் இல்லம் அலங்கோலம் -
நல்ல மனைவி நல்ல பிள்ளை கள்ளிப்பூவில் முல்லை மணத்தைக்காணத் திரியும் ஒரு பிள்ளை
கானல் நீரில் தாகம் தீர ஓடித் திரியும் ஒரு பிள்ளை
உள்ளவரையில் ஆடிப்பார்த்து உறங்கத்துடிக்கும் ஒரு பிள்ளை
உறவை மறந்து உரிமை மறந்து பிள்ளை போலே ஒரு அன்னை பிள்ளை போலே ஒரு அன்னை - நல்ல மனைவி நல்ல பிள்ளை,,!

https://www.youtube.com/watch?v=ETpBKjWaaT4

uvausan
16th July 2015, 08:06 AM
கருவின் கரு - 197

பாகம் 2 - தந்தை


நல்லதொரு குடும்பம் என்றுமே ஒரு பல்கலை கழகம்

https://www.youtube.com/watch?v=0n2pYvN95kM

uvausan
16th July 2015, 08:09 AM
கருவின் கரு - 198

பாகம் 2 - தந்தை:)

நல்ல குழந்தைகள் , பெற்றோர்களை மதிக்கும் பிள்ளைகள் ,, அன்னை தந்தையை தன்னுடனே வைத்துக்கொள்ளும் மகன் இவர்கள் ஒன்றாக இருக்கும் வீட்டில் ஆனந்தம் என்றுமே விளையாடும் , குடி கொண்டிருக்கும் ...

https://www.youtube.com/watch?v=LcYi6FqPgh8&feature=youtu.be

uvausan
16th July 2015, 08:12 AM
கருவின் கரு - 199

பாகம் 2 - தந்தை:)

https://www.youtube.com/watch?v=JD0g42lu43E

uvausan
16th July 2015, 08:20 AM
கருவின் கரு - 200 :smile2::)

பாகம் 2 - தந்தை

அருமையான பாடல் - பாலாவின் குரலில் - இந்த 200 வது பதிவை எல்லோருக்கும் மதுர கானத்தை , தன் உடம்பை மிகவும் வருத்திக்கொண்டு , பிரதிபலன் பார்க்காமல் அள்ளி அள்ளி வழங்கும் நம் வாசுவிற்கு சமர்ப்பிக்கிறேன் .

https://www.youtube.com/watch?v=eSyiD-iWK5c

uvausan
16th July 2015, 08:32 AM
கருவின் கரு - 201

பாகம் 2 - தந்தை

எந்த தந்தை மனமகிழ்வுடன் தான் வாழும் காலத்தில் இப்படி பாடுகிறானோ , அந்த நாள் நம் வாழ்வில் ஒரு பொன்நாள் - நாம் நம் பிறவிப்பயனை அடைந்த நாள் .

" எங்க குடும்பம் ரொம்ப பெரிசு
பிள்ளைக்குட்டிகளோ பத்து தினுசு
இவை அத்தனையும் அன்பு பரிசு
நல்ல முத்துப்போல் வெள்ளை மனசு "

தந்தையைப்பற்றி பேசுவது , எழுதுவது என்பது சமுத்திரத்தில் ஒரு துளி தண்ணீரை மொண்டு எடுப்பதுப்போல - அவரின் பெருமைகள் கண்டிப்பாக 100 பதிவுகளில் அடக்கி விட முடியாது . ஏதோ என்னால் முடிந்த வரை ஆத்மார்த்தமாக பதிவுகள் போட்டுள்ளேன் - இதை மிகவும் பொறுமையுடனும் , பாராட்டுக்களுடனும் படித்த , வாழ்த்திய எல்லா நல்ல உள்ளங்களுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் .

அன்புடன்
ரவி

https://www.youtube.com/watch?v=YzqHAAsA9h0

vasudevan31355
16th July 2015, 08:50 AM
http://logos.textgiraffe.com/logos/logo-name/Ravi-designstyle-candy-m.png

http://4.bp.blogspot.com/-hqUPusC6Jag/U0fBLC-cRYI/AAAAAAAAB4U/mjvQMAgqKvo/s1600/ravi+name+poem.jpg

http://oyster.ignimgs.com/wordpress/www.ign.com/1048/2013/07/THE-BIG-200+.gif

http://mspmentor.net/site-files/mspmentor.net/files/uploads/2014/03/top200.jpg

raagadevan
16th July 2015, 09:44 AM
அபபா/(தத்துப்) பிள்ளை பந்தம்/சொந்தம்...

"கண்ணான கண்ணா உன்னை..."

"நீ தானா அந்தக் குயில்"; வைரமுத்து/ இளையராஜா/ கே.ஜே. யேசுதாஸ்...


www.youtube.com/watch?v=1kFc_TCRaxM

This is one of my (K.J. Yesudas' too!) most sentimental TFM songs. If I have posted this one before,
please bear with me...

vasudevan31355
16th July 2015, 11:26 AM
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்

http://2.bp.blogspot.com/-HRNJSnA1-84/TenskpB9duI/AAAAAAAAAuY/mP0R6cDrGMY/s320/spb.jpg

(நெடுந்தொடர்)

18

'என்ன சொல்ல! என்ன சொல்ல! '

http://i60.tinypic.com/qoa78o.jpg

பாலா பாடிய பாடல்களில் சற்று விரசம் தூக்கலான பாடல். காட்சியமைப்பிலும்தான். 'எத்தனை அழகு கொட்டிக் கிடக்கு' பாடலுக்கு முன்னோடி.

இந்த மாதிரிப் பாடலுக்கு அப்போது வேறு யார் பாலாவுடன் ஜோடி சேர முடியும் ராட்சஸியைத் தவிர. பின்னால் அந்த வேலை ஜானகியிடம் ஒப்படைக்கப்பட்டது.:)

பெரிதாக ஒன்றும் சொல்வதற்கில்லை. விஸ்தாரமாக எழுதுவதற்கும் இல்லை. மாட்டிக் கொண்டு விழிப்பதாயும் இல்லை.:)

மோக தாபப் பாடல். அவ்வளவே! அப்போது திரையரங்கில் நெளிய வைத்த பாடல்தான். இப்போதும் கூடத்தான். அதுவும் பாசமான 'பாபு' படத்தில். தவிர்த்திருக்கலாமோ என்று கூடத் தோன்றும். இந்தப் பாடலை இணைத்தால்தான் அந்தக் காவியமா? இன்னும் ஒன்று 'அந்தக் காலத்தில் கண்ணனும் கோபிகளும்'.

அப்போதைய இளம் ஜோடிகளை விரல்விட்டு எண்ணி விடலாம். இளம் வாலிபனுக்கு அப்போது சூர்யாவின் அப்பாவை விட்டால் ஆளேது? இவருக்கு பொருத்தமாக நிர்மலா, லஷ்மி இருவரும் அளவெடுத்தாற் போல் பொருந்தியது வேறு வாட்டமாகப் போய் விட்டது. அந்தக் காலத்தில் கண்ணன் சிவக்குமார் என்றால் கோபிகா ஸ்திரீ நிர்மலா. ஆரம்ப காலத்தில் பேந்தப் பேந்த விழித்த சிவக்குமார் இளம் சிட்டுக்கள் ஜோடி சேர, சேர சிலிர்த்தெழுந்த காளையானார்.:) சபை நடுக்கம் போய் குளிர் நடுக்கம் கண்டவராக மனிதர் ஜமாய்க்க ஆரம்பித்து விட்டார். அதற்கேற்ற மாதிரி பின்னணி பாட பாலா வசமாகச் சிக்கினார். (சிவக்குமாருக்கு பாலா சிறந்த பொருத்தம்) அப்புறம் ஈடு கொடுக்க இல்லை இல்லை ஈடுக்கு மேல் ஈடு கொடுக்க ஈஸ்வரி இருக்க, ஈரப் பாடல்களுக்கு இங்கித இசை தந்து 'மெல்லிசை மன்னர்' இளசுகளை ஈர்க்க ஆரம்பித்தார். (பெருசுகளையும்தான்)

மழை கொட்டு கொட்டு என்று கொட்ட, அழகான சிவக்குமார் அடுக்குமல்லிச்சர நிர்மலாவுடன் சரசமாடும் பாடல். 'ஸ்.....ஸ், ஆஹஹஹா...ஓஹோஹோ' என்று சப்த நாடியையும் அடக்கும் சப்தங்கள். உதடு மடித்து, கடித்து உஷ்ணம் ஏற்றும் 'வெண்ணிற ஆடை' நிர்மலா. (அவளுக்கு நிகர் அவளே):)

'லஹஹஹஹா...அஹ்ஹஹ்ஹா' என்று அலற ஈஸ்வரி அவர்களுக்கு சொல்லித் தர வேண்டுமா?

ஒற்றை ஒற்றை வரிகள். நாயகனும் நாயகியும் மாறி மாறி.

பாட்டின் இசைப் பின்னணி சங்கதிகள் சிலவற்றை 'சிவகாமியின் செல்வன்' பாடலில் மறுபடி கேட்கலாம்.

அப்புறம் நான் என்ன சொல்ல? (ஆதிராம் சார் எதிர்பார்ப்பு நிறைவேறியது)

பாடலைக் கேட்க, கேட்க 'மெல்ல மெல்ல' நான் சொன்னது விளங்கும். கொஞ்சம் நடுக்கமும் ஏற்படும்.

பாட்டின் முனகல் சப்தங்களை நான் சென்ஸார் செய்து பாடல் வரிகளில் நீக்கி விட்டேன். தயவு செய்து யாரும் போராட்டம் நடத்த வேண்டாம்.:)

இந்தப் பாட்டிற்கு HTML ஒர்க்கெல்லாம் கிடையாது. பதிவுகள் கருப்பு வெள்ளையில்தான். :)

http://i62.tinypic.com/1115ykw.jpg

என்ன சொல்ல என்ன சொல்ல

சொல்லித் தர நானிருக்கேன்

மெல்ல மெல்ல விளங்கும் போது
மயக்கமேன்

என்ன சுகம் என்ன சுவை

அள்ளித் தர நானிருக்கேன்

தொட்டுத் தொட்டுத் தொடங்கும்போது
நடுக்கமேன்


என்ன சொல்ல என்ன சொல்ல

சொல்லித் தர நானிருக்கேன்

மெல்ல மெல்ல விளங்கும் போது
மயக்கமேன்

என்ன சுகம் என்ன சுவை

அள்ளித் தர நானிருக்கேன்

தொட்டுத் தொட்டுத் தொடங்கும்போது
நடுக்கமேன்

ஓ... நான் கொடுத்த முத்திரைக்கு நன்றி சொல்

ஓ... நன்றி என்ன என்னையே நீ கொண்டு செல்

எடுத்துக் கொள்ளவோ

தடுத்துக் கொள்ளவோ

இடை அணைக்கவோ

தடை விதிக்கவோ

எடுத்துக் கொள்ளவோ

தடுத்துக் கொள்ளவோ

இடை அணைக்கவோ

தடை விதிக்கவோ

எதுவும் சொந்தமோ

எழுதிச் சொல்லவோ

தழுவக் கூடுமோ

நழுவிப் போகுமோ


என்ன சொல்ல என்ன சொல்ல

சொல்லித் தர நானிருக்கேன்

மெல்ல மெல்ல விளங்கும் போது
மயக்கமேன்

என்ன சுகம் என்ன சுவை

அள்ளித் தர நானிருக்கேன்

தொட்டுத் தொட்டுத் தொடங்கும்போது
நடுக்கமேன்

ஓ...ஓரிடத்தில் விழியிரண்டின் சங்கமம்

ஓ...ஒருவருக்கு ஒருவர் தந்த சங்கமம்

வழி தெரிந்தது

நதி நடந்தது

கரை கடந்தது

கடல் கலந்தது

விழி சிவந்தது

வாய் வெளுத்தது

உடல் குளிர்ந்து

மனம் வெளுத்தது


என்ன சொல்ல என்ன சொல்ல

சொல்லித் தர நானிருக்கேன்

மெல்ல மெல்ல விளங்கும் போது
மயக்கமேன்

என்ன சுகம் என்ன சுவை

அள்ளித் தர நானிருக்கேன்

தொட்டுத் தொட்டுத் தொடங்கும்போது
நடுக்கமேன்


https://youtu.be/w-qJOxY6v2E

chinnakkannan
16th July 2015, 11:38 AM
Hi folks ! :)

Hope all is well ( அதான் வந்துட்டியேய்யா.. இனிமே எப்படி இருக்கப் போகுதோ! :) “ “யார்ப்பா அங்க குரல் விடறது”)

ம்ம் என்ன சொல்ல என்ன சொல்ல ( ஹா ஆ ஆவ்..ஒண்ணுமில்லீங்க்ணா டயர்ட் கோல்ட் காஃப் அப்புறம் களைப்பு..!)

பின்ன வாரேன் :)

chinnakkannan
16th July 2015, 11:55 AM
”நீங்கள் வாழும்காலத்திலேயே நாஙகள் வாழ்வது எங்களுக்குப்பெருமையாக இருக்கிறது”

பற்பல வருடங்களுக்கு முன்னால் பாலகுமாரனின் ஒரு மாத நாவலைப் புரட்டிக்கொண்டிருந்த போது கண்ணில் பட்டது இந்த வாசகர் கடிதம்.. எதேச்சையாக கண்கள் டிவி பார்க்க.. ட்ட்ட டட்ட ஆ ஆ..ஆஆ.. என சுசீலாம்மா ஹம்மிங்கில் அ.கா கனவுக்கன்னி(?!) செளகார் மைக் பிடித்து பார்த்த ஞாபகம் இல்லையோ பாட ஆரம்பிக்க நாவலை வைத்து விட்டு பாட்டை முழுக்கப் பார்த்துவிட்டுத் தான் மறுபடி படிக்க ஆரம்பித்தேன்..அப்போது மனதில் ஓடிய எண்ணம் - எம்.எஸ்.வி வாழும் காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதெ பெருமை என்பது..

எத்துணை பாட்டுக்கள்.. இறப்பு என்பது எல்லாருக்கும் வருவது தான் தவிர்க்க முடியாதது..பழுத்த இலை உதிர்வது இயல்பு நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை படைத்து இவ்வுலகு என்றெல்லாம் சொல்லிக் கொண்டாலும் கூட ம்ஹூம் ஆற மாட்டேன் என்கிறது..

தனக்கு, தன் குரலுக்குப் பொருத்தமான பாடல்கள் எப்படி தேர்வு செய்தார் என்பது எனக்கு இன்னும் ஆச்சர்யம்..

அவர் குரலில் எனக்கு மிகப் பிடித்த பாடல் ஒன்று.

https://youtu.be/49Ua6vIWfSw


அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்..

chinnakkannan
16th July 2015, 11:56 AM
இரு நூறு தந்தைப் பதிவுகள் அளித்த ரவிக்கு பாராட்டுக்கள். அப்புறம் மற்ற உறவுகள் எல்லாம் கடந்து மச்சினி க்கு இவர் வர எவ்வளவு காலம் ஆகும் என வாசு சாரைக் கேட்க வேண்டும் :)

vasudevan31355
16th July 2015, 12:04 PM
Hi folks ! :)

Hope all is well ( அதான் வந்துட்டியேய்யா.. இனிமே எப்படி இருக்கப் போகுதோ! :) “ “யார்ப்பா அங்க குரல் விடறது”)

ம்ம் என்ன சொல்ல என்ன சொல்ல ( ஹா ஆ ஆவ்..ஒண்ணுமில்லீங்க்ணா டயர்ட் கோல்ட் காஃப் அப்புறம் களைப்பு..!)

பின்ன வாரேன் :)

http://padamhosting.me/out.php/i75384_vlcsnap2011042820h34m46s35.png:)

uvausan
16th July 2015, 02:41 PM
Welcome back CK - எப்படி இருந்தது உங்கள் இந்தியா - பயணம் - உங்கள் பழைய நண்பியை பார்க்க முடிந்ததா ? நீங்கள் இல்லாமல் இந்த திரியை வாசுவின் மூலம் சிறிது தொலைவிற்கு எடுத்துச் சென்றிருக்கிறோம் . ஒரு பெரிய நிம்மதி - நீங்கள் கொஞ்ச நாட்களில் 4வது பாகத்தை முடித்து விடுவீர்கள் . கொஞ்ச நாட்கள் ஈசி chair இல் உட்க்காந்து கொண்டு கும்பகோணம் காபியைப் பருகிக்கொண்டு வாசுவின் " என்ன சொல்ல என்ன சொல்ல " போன்ற பாடல்களையும் , பாலாவின் அலசல்களையும் , சரளா/ குசல குமாரியின் தற்போதைய நிலைமையையும் இன்னும் மிகத்துல்லியமாக தெரிந்துகொள்வதர்க்காகவும் சில நாட்கள் திரியின் பின்னால் இருக்க விரும்புகிறேன் . உங்கள் பதிவிலிருந்து உங்கள் மச்சினியை மிகவும் மிஸ் பண்ணுகிறீர்கள் என்று நினைக்கிறேன் . இது முழுக்க முழுக்க வாசுவின் department - அவரால்தான் " என்ன சொல்ல , என்ன சொல்ல " என்று சொல்லிக்கொண்டே நன்றாக அலச முடியும் ... என்னமோ போங்க - உங்கள் எதிர்பார்ப்பு மிகவும் அதிகம் தான் ......

RAGHAVENDRA
16th July 2015, 03:20 PM
வாருங்கள் சிக. சார்
திரியின் நகைச்சுவை அம்சம் மீண்டும் தொடரும் சந்தோஷம் எங்களுக்கு..
(ஆனால் அதிலும் கூட சில சமயம் லேசாக சோகம் இழைக்கும் சாமர்த்தியம் தங்களுக்கே உரித்தான ஸ்பெஷல் க்வாலிடி)

chinnakkannan
16th July 2015, 05:09 PM
ரவி..எந்துகு ஈஸி சேர்லாம்…வேண்டாம்.. அப்புறம் ஹைதராபாத்திற்கு அடுத்த ட்ரிப் வந்துடுவேன்..உஷார்..

என்னோட லீவ் பத்தி சொல்றதுக்கு முன்னால ஹோம் வொர்க்.. 123ம் பக்கத்துலருந்து…!

*
//- ventillatorஇல் இருக்கும் அவரை - உன் உடம்பை கொஞ்சம் பார்த்துக்கோ " என்று சொல்லிவிட்டு மிகுந்த மனசுமையுடன் ஊர் திரும்பினேன் .//
ரவி, ..வைத்தீஸ்வரன் கோவில் ஒரு அழகிய கோவில் முன்பு மூன்று நான்கு வருடங்களுக்குமுன் சென்று வந்தேன்..ப்ளஸ் கும்ப கோணம் கோவில்கள் என நீண்டது அந்த ட்ரிப். கோவில் மூடுவதற்குள் அரக்கப் பரக்க சென்று தரிசனம் முடித்து அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருந்த ஒரு அழகிய ஹோட்டலில் பகலுணவைமுடித்தோம்..

ராஜேஷ்…//மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய் ராஜா சீதாராமன் பற்றிய தகவலுக்கு நன்றி.. ஆஹா ரவீந்தர் சில்க் எக்ஸர்சைஸ்.. மெல்ல மெல்ல. என்னைத் தொட்டு மன்மதன்.. பாட்டு குட். ரொம்ப நாளாச்சு கேட்டு..
பாடல்களுக்கும் ஜூலியா ராபர்ட்ஸை ஆதரித்ததற்கும் நன்றி!
*
//"தூது சொல்ல ஒரு தோழி" ரெகார்டிங் முடித்து ஏதோ ஒன்று குறைவதாக தோன்ற சுசிலா பல்லவி பாட ஈஸ்வரி குரலை கொண்டு இணையாக ஆஹா சொல்ல வைத்து முடிவு கொடுத்தாராம்.// கோபால் எம்.எஸ். வி பற்றிய பதிவு நைஸ்..

வரதகுமார்// மின்னல் கோலம் கண்ணில்
போட யார் சொன்னதோ

கோலம் போடும் நீலக் கண்ணில்
யார் நின்றதோ.. தங்கத் தோணியிலே பாடல் பதிவிற்கு நன்றி. எனக்கும் ரொம்பப் பிடிக்கும்..
*
வாசு
/
//இன்பம் அவள் இன்னும் அறியாத கல்வி'/ பெண்ணைப் பார்த்தால் சொல்லத் தோன்றும் இன்னும் நூறாயிரம் ( நன்னா டயட்ல இருக்கப் பழகிக்கமா வா இருக்குமோ!) நல்ல பாட் நல்ல ரைட் அப் குட்..

*
கலை..

வளர்ந்த குழந்தை(?!) பாடும் இளமை கொலுவிருக்கும் பாடலுக்கு நன்றி..
*
ராஜ் ராஜ் சார்.
..//A few weeks back the pomegranate bushes in our backyard started blossoming. Now they are fruits. Hope the birds leave some for us. The blossoms reminded me anarkali meaning pomegranate bloom. Strictly kali in Sanskrit means bud.//

நான் தினமும் இரவு உணவுப்பின் உண்ணும் கன்னிகளில் ஸாரி டைப்போ கனிகளில் மாதுளம்பழமும் உண்டு.. ஹார்ட்டுக்கு நல்லதாமே.. ஜுகல்பந்திக்குத்தாங்க்ஸ்..

பூத்திருக்கும் விழி எடுத்து பாடலுக்கு தாங்க்ஸ் கோபால்..

//நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்
தேன்மொழி பேசும் சிங்காரச் செல்வம்
நான் பெற்ற செல்வம்...// எனக்கு மிகப் பிடித்த பாடல்களில் ஒன்று தாங்க்ஸ் ராகவேந்திரர்.

*
//கலரில் தாய் வேடம் 'ஞான சௌந்தரி'க்கு. கணவர் எடுத்த படத்தில் நாயகனுக்குத் தாய். இவர் கொஞ்சம் உதடுகளை குவித்து சிறுபிள்ளை சாக்லேட் கிடைக்காமல் வெம்புவது போல் அழுவது மிக இயல்பாய் இருக்கும்.// vasu sir. வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் வெரி குட்டான பதிவு..
தாய்ப் பாலில் வீரம் கண்டேன்
தாலாட்டில் தமிழைக் கண்டேன்
தாய்ப் பாலில் வீரம் கண்டேன்
தாலாட்டில் தமிழைக் கண்டேன்
மற்றவர்க்கு வாழுகின்ற உள்ளம் என்னவோ
அது உன்னிடத்தில் நானறிந்த பாடம் அல்லவோ// எனக்கு மிகவும் பிடித்த வரிகள்..
*

//இவர் நடிகர் திலகத்துடன் ஒரு படத்தில் நடித்திருப்பார். கிட்டத்தட்ட முறைப்பெண் ரோல். சின்னையா சின்னையா என்று நடிகர் திலகத்தை சுற்றி வருவார். என்ன படம் என்று தெரிகிறதா?// vasu.. maha kavi kaali daas thane m.s maalathy nadiththathu..

*
//சொல்லத் தெரியவில்லை
உள்ளத்தில் உள்ளதை
தெள்ளத் தெளிவாய்த்
சொல்லத் தெரியவில்லை// வாசு.. மூணாம்பாகத்துல இந்தப் பாட் போட்டாச் போட்டாச்னு நினைக்கிறேன்..( நீங்க மூணாம்பாகம் முழுசாப் படிக்கலை தானே!)

*
Raghavendar sir, மாப்பிள்ளை நீயல்லவா மாமா பாடலுக்கு தாங்க்ஸ்..ஷீலு அழகு.. ! இப்ப த் தான் பார்க்கறேன் கேட்கறேன்..அதே போல ஜெய் கறுப்பு திராட்சைக் கண்களுடன் சிற்பி செதுக்கிய ஒல்லி ஒல்லி சிலையாக விதுபாலாவின் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அர்த்தம் பாடலுக்கும் ஒரு நன்றி..(அது விதுபாலா தானே.. பக்கெட் வருமோ?)
/
அக்கக்கோ கை கை மலர்க்கை பாட் பிடிக்கு.ம்..வி.கு நோ..
*
எம்.எஸ்.வி, கண்ணதாசன் பிறந்த நாளில் பாடல் வழங்கியவர்களுக்கு நன்றி.. ம்ம்.. நேரான நெடுஞ்சாலை பாட் எனக்குப் பிடிக்கும்..என்னமோ இப்போ வரலை..
*
அச்சம் பாதி ஆசை பாதி பொங்குவதென்ன ஹைலல்லோஹைல்லல்லோ பாட்டுக்கு நன்றி கோபால்..
*
//பூவிரி சோலைகள் ஆடிடும் தீவினில்
பறவை பறக்கும் அழகோ
தேவியின் வெண்ணிற மேனியில்
விளையாடும் பொன்னழகு// தூள் பஹீத் அச்சா சூப்பர்..தாங்க்ஸ் வாசு( எல்.ஆர். ஈஸ்வரி லஷ்மிக்குப் பொருந்தவில்லை போல ஒரு பிரமை) பார்த்தது மட்டும் போதுமா ஒரு பாடம் சொல்லிவிடு.. இந்தவரியைவைத்து இன்னொரு இழையில் க்விஸ் கேட்டிருந்தேன் ஒருகாலத்தில்!

சாய்பாபாவின் 'அந்தப் பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ' (நான் இந்தப் பாடலுக்கு வாழ்நாள் அடிமை)// நானும் வாசுங்ணா..
*

பூவப்பூவ.. வெங்கடரமண ஷண்முகானந்த சங்கர சதாசிவ கல் நாயக்.. எப்படி இருக்கீர் செளக்க்யமா… ஆளையே காங்கலை..

//அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்// பாட் ரொம்பப் பிடிக்கும் ரவி..தாங்க்ஸ்

*

மெய்யாலுமே ஏன் கதை தலை சுற்றல் தான் வாசு சார்..ஆனால் வருவாயா வேல் முருகா பாட் மிகப் பிடிக்கும்..தாங்க்ஸ் டு ராகவேந்தர்

*
//இறைவன் என்றொரு கவிஞன்
அவன் படைத்த கவிதை மனிதன்// ithuvum enakkup pidukkumE..

*

வெல்கம் சி.செ.. வாங்க வாங்க.. பல இனிய பதிவுகள் அளியுங்கள்..
*
ஆக 163 பக்கம் வரை படித்து விட்டேன்.மிச்சம் அப்புறம் சரியா..

பின்ன வாரேன்..
அன்புடன்
சி.க..
வரவேற்ற வாசு, ரவி, ராகவேந்திரருக்கு மிக்க நன்றி..

மீண்டும் வாரேன்..:)

eehaiupehazij
16th July 2015, 06:03 PM
மாற்றார் தோட்டத்து மெல்லிசையும் மதுரமே ! குறுந்தொடர்
பகுதி 1 ஜேம்ஸ் பாண்ட் தீம் ம்யூசிக்!
/ டாக்டர் நோ (1962) starring Sean Connery as James Bond OO7!


உலகளாவிய மார்கெட்டில் என்றும் முதலிடத்தில் இருக்கும் ஜேம்ஸ் பாண்ட் படங்களை ரசிக்காதவர் உலகில் எவருமிலர்!
ஜேம்ஸ் பாண்டின் வீரதீரசூர சாகசங்களின் கருத்தை உள்ளடைக்கிய ரசிகர்களின் மனதை ஆகர்ஷித்த டைட்டில் மற்றும் பட ஓட்டம் முழுவதும் தூவப்படும் பிரபலமான தீம் இசை காரண கர்த்தா ஜான் பேரி என்னும் இசையமைப்பாளரே !
1962ல் டாக்டர் நோ திரைப்படம் உலகின் நம்பர் ஒன் வசூல் மன்னராக ஷான் கானரியை ஜேம்ஸ் பாண்ட் வடிவில் களமிறக்கியது. இன்று வரை அவரே ஒரிஜினல் ஜேம்ஸ் பாண்டாக உருவகப் படுத்தப் பட்டு ஒப்பீட்டளவில் நிகரற்றவராக போற்றப்படுகிறார்.!!
இந்த மனங்களை ஒட்டுமொத்தமாக இன்றும் வசீகரிக்கும் தீம் இசையை ரசிப்போமே !!
...இனி வரும் பகுதிகளில் என்னியொ மோர்ரிகோன்....உள்ளிட்ட ஏனைய வழிகாட்டி இசை விற்பன்னர்களின் இசைத் தூவல்களையும் வகைப் படுத்த எண்ணியுள்ளேன்.

இந்த தீம் இசையும் Gun Barrel Openingம் இல்லையெனில் ஜேம்ஸ் பாண்ட் படத்தை முழுமையாக ரசிக்க இயலாது

https://www.youtube.com/watch?v=E-IDfoZuQLM


The James Bond theme music by John Barry in subsequent Sean Connery/Bond OO7 movies epitomized the tempo of Bond movies as an indispensable music component not only in the title sequences but also alongside the movies run till the climax and beyond! Dr No, From Russia with Love, Goldfinger, Thunderball, You Only Live Twice and Diamonds Are Forever...all these original James Bond movies created the Bond fever and this theme music was repeated in the subsequent Bond movies by Lazenby, Moore....and Craig till date!

BOND and B(EY)OND!

https://www.youtube.com/watch?v=CYbKKQ-hPwc

madhu
16th July 2015, 06:23 PM
ஒவ்வொருவரும் மணி மணியாக பதிவுகள் செய்து அசத்துறீங்க... எனக்குத்தான் படிக்கவும் ரசிக்கவும் நேரமும் உடல் நிலையும் ஒத்துழைக்காமல் படுத்துது.. சிக்கா.. செந்தமிழ் நாட்டுக்கு வந்துட்டு கண்டுக்காமலே திரும்பிட்டீங்களே... கண்ணாலே பார்த்தால் மெட்ராஸ் ஐ ( அட... ரெண்டுமே லேட்டஸ்ட் படத்துப் பெயராக இருக்குதில்லே ) வந்துடுமின்னு பயமா ?

கரிதான் வைரத்தின் அடிப்படை இல்லையோ.. அதான் நெய்வேலியின் வைரம் ஜொலிக்குது.

ராகவேந்திரா சார்... பழைய பதிவுகளை எல்லாம் மெதுவாக ரீவைண்ட் செஞ்சு உங்க rare songs எல்லாம் கேக்கணும்.

ரவி சார்... உங்க பதிவுகள் எல்லாமே அருமை. ஆனால் நான் இன்னும் எல்லாவற்றையும் படிக்கவில்லை. தந்தை-மகன் பாடல்களில் ஒருவனுக்கு ஒருத்தி படத்தில் இடம் பெற்ற டி.எம்.எஸ்., ஜேசுதாஸின் "சரவணன் சொன்னான்" பாடல் நுழைய சான்ஸ் இருக்கிறதா ? உங்கள் உரையுடன் படிக்க ஆசை.

முடிந்தபொழுதெல்லாம் வந்து ரசிப்பேன். இயன்ற பொழுது பதிவேன். எல்லோருக்கும் நன்றி.

eehaiupehazij
16th July 2015, 06:43 PM
மாற்றார் தோட்டத்து மெல்லிசையும் மதுரமே ! குறுந்தொடர்
பகுதி 2 ஜேம்ஸ் பாண்ட் தீம் ம்யூசிக்!

From Russia with Love(1963) starring Sean Connery as James Bond OO7!


This second outing of Connery/Bond was quite interesting and filled with inimitable action sequences, particularly the pioneering train fight sequence with Robert Shaw as the villain and the climax helicopter chase adapted by our director Sreedhar in his NT starrer Sivandha Mann!! The best Bond of all hitherto as regards the story content, narration and Connery's brilliant portrayal in tandem with John Barry's unforgettable music!!

courtesy : Wikipedia and You Tube

The "James Bond Theme" is the main signature theme of the James Bond films and has featured in every Eon Productions Bond film since Dr. No, released in 1962. The piece has been used as an accompanying fanfare to the gun barrel sequence in almost every James Bond film.

The "James Bond Theme" has accompanied the opening titles twice, as part of the medley that opens Dr. No and then again in the opening credits of From Russia with Love (1963). It has been used as music over the end credits for Dr. No, Thunderball (1965), On Her Majesty's Secret Service (1969), The World Is Not Enough (1999), Casino Royale (2006), Quantum of Solace (2008), and Skyfall (2012).

The "James Bond Theme" was recorded on 21 June 1962, using five saxophones, nine brass, a solo guitar and a rhythm section.The guitar riff heard in the original recording of the theme was played by Vic Flick on a 1939 English Clifford Essex Paragon Deluxe guitar plugged into a Vox AC15 amplifier. He was paid a one-off fee of £6 for recording the famous James Bond Theme riff. John Scott played the saxophone

Sean Connery (1962—1967, 1971)

The first appearance of the "James Bond Theme" was in Dr. No. There it was used as part of the actual gun barrel and main title sequence.

In From Russia with Love, the "James Bond Theme" in not only the gun barrel pre-title sequence, but as part of the main title theme and appears in the track "James Bond with Bongos". It is a slower, jazzier, somewhat punchier rendition than the original orchestration. The original Barry arrangement from Dr. No is heard during a check of Bond's room for listening devices.

In Goldfinger, the "James Bond Theme" can be heard on the soundtrack in "Bond Back in Action Again" (gun barrel and pre-title sequence). The "James Bond Theme" for this movie is heavily influenced by the brassy, jazzy theme song sung by Shirley Bassey.

Thunderball featured a full orchestral version of the theme in the track "Chateau Flight". Another full orchestral version was intended for the end titles of the film.

You Only Live Twice featured a funereal orchestration with Bond's "burial" at sea sequence in Hong Kong harbour.

With the return of Sean Connery in Diamonds Are Forever, the guitar made a comeback along with a full orchestral version during a hovercraft sequence. On the soundtrack this track is named "Mr. Wint and Mr. Kidd/Bond to Holland."

இசையை ரசிக்கும் செவிக்கு ருசிக்கும் மனதுக்கு மொழி எல்லை இல்லை !!

https://www.youtube.com/watch?v=Lcdmq07u2T8

Enjoy the title too dancing to the tune of John Barry's scintillating theme music!

https://www.youtube.com/watch?v=aOw2hTBHMvA

RAGHAVENDRA
16th July 2015, 08:25 PM
https://scontent-cdg2-1.xx.fbcdn.net/hphotos-xpf1/t31.0-8/s720x720/11012428_953399441387856_1349100073250743716_o.jpg

chinnakkannan
16th July 2015, 08:59 PM
சிக்கா.. செந்தமிழ் நாட்டுக்கு வந்துட்டு கண்டுக்காமலே திரும்பிட்டீங்களே... கண்ணாலே பார்த்தால் மெட்ராஸ் ஐ ( அட... ரெண்டுமே லேட்டஸ்ட் படத்துப் பெயராக இருக்குதில்லே ) வந்துடுமின்னு பயமா ?// மதுண்ணா ரியல்லி வெரி ஸாரி.. சென்னையில் இருந்த நாட்கள் இந்த தடவை இரண்டும் இரண்டும் நாலே நாலு நாள்..உங்களுக்குடன் பேசவேண்டும் என்றிருந்து பேசவே முடியாமல் போய் விட்டது.. (கொஞ்சம் ஒரு ப்ரச்னை மனதைக் குடைந்து கொண்டு இருந்ததில்). மறுபடியும் மன்னிக்க..( ஹப்பர் ஸ் மீட் செப்டம்பரில் வைத்திருக்கிறீர்கள் ..முடிந்தால் டிசம்பரில் இன்னொன்று வைக்கலாமல்லவா.. உறுதியாகவும் சொல்ல இயலாது தற்போது).. உடல் நிலை எப்படி இருக்கிறது..

வாசு..இதே காரணம் தான் நான் உங்களிடமும் தொலைபேசிக்காத காரணம்..மன்னிக்க..

uvausan
16th July 2015, 09:04 PM
கருக்குள் கரு 202

தந்தை -மகன் பந்தம்


மது சார் - விரும்பி படிப்பதுடன் நிற்காமல் , பாராட்டுக்கள் தருவதற்கு பெரிய மனம் வேண்டும் - இவைகள் தான் secreat of our energy . எந்த விதமான எதிர்பார்ப்புகள் இல்லாமல் இங்கு எல்லோரும் பதிவுகள் போட்டாலும் அவர்களுக்கும் energy தேவைப்படுகிறது . நான் நினைத்துக்கொள்வது உண்டு . உதாரணமாக வாசு அவர்களை எடுத்துக்கொள்வோம் - அவர் ஒரு பதிவை இங்கு போட குறைந்தது 5 மணி நேரம் தேவைப்படுகிறது - அவர் பதிவுகள் எதுவுமே ஏனோ தானோ வகையச் சார்ந்தது அல்ல .யாருமே பார்க்காத கோணங்கள் , அலசாத பாடல்கள் , கேட்க்காத பெயர்கள் . முழு ஈடுபாடு , முழு கவனம் தேவை , சுவை குறையாமல் பதிவுகளைப்போட ----- தினமும் ஆபீஸ் வேலை அவருக்கு குறைந்தது 10 மணி நேரமாவது இருக்கும் . 7 மணி நேரமாவது ஒருவன் உறங்க வேண்டும் - அவர் தன் குடும்பத்துக்கு என்று ஒதுக்கிடும் நேரம் 2 மணிகளே . 2மணி நேரம் தான் என்றாலும் தன் பிள்ளைகளுக்கு ஒரு உதாரணம் காட்டும் தந்தையாக , பெருமைப்படக்கூடிய தந்தையாக இருக்கிறார் - ஆங்கிலத்தில் சொல்வார்கள் " don't cite an example - be that example " வாசு இந்த வாக்கியத்திற்கு மிகவும் பொருத்தமானவர் .

ஒரு சில நபர்கள் மட்டுமே பாராட்டும் இந்த திரியில் இவ்வளவு அருமையாக அவர் எழுதுகிறார் , அலசுகிறார் , ஆராய்கிறார் , மழையில் நனைய வைக்கிறார் , சரளாவையும் , குசல குமாரியையும் நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறார் - பாலாவின் புகழைப்பரப்புகிறார் , கல் தூண் நாயகனை ஒரு நிமிடமும் மறக்காமல் உடுக்கையின் ஒலியை எழுப்பிய வண்ணம் இருக்கிறார் , கேடக்காதவருக்கும் அவர்களுக்குப்பிடித்த பாடல்களை கர்ணன் போல வாரி வழங்குகிறார் .. எல்லோரும் பாராட்டினால் அவர் எப்படி எழுதுவார் என்று கற்பனை பண்ணியும் பார்க்க முடியவில்லை

ஒன்றிரண்டு இனிய வார்த்தைகள் உங்களைப்போல நல்ல ரசிகர்களிடம் இருந்து வரும்பொழுது பட்ட கஷ்ட்டங்கள் , வலிகள் எல்லாம் மறைந்து புதிய உற்ச்சாகம் பிறக்கிறது - இன்னும் நன்றாக , சிறப்பாக எழுத வேண்டும் என்ற ஆவலும் பிறக்கின்றது .

உங்களுக்காக இந்த பாடலை தந்தை மகன் பந்தத்தில் சேர்த்து பதிவிடுகிறேன் - இந்த கருவிற்கு முடிவே இல்லை - எழுதிக்கொண்டே போகலாம் . படிக்கத்தான் ஆள் இருக்க வேண்டும் - அதுதான் என் கையில் இல்லை ...

அன்புடன் ரவி

https://www.youtube.com/watch?v=Cz0tIzWbTvU

chinnakkannan
16th July 2015, 09:10 PM
சி.செ.. உங்கள் அசத்தல் தொடருக்கு டைட்டில் நான் வைக்கிறேன்.. Bondடு ரங்க விட்டலா! (முன்னால் ஒருகாலத்தில் பாண்ட் படங்களைப் பற்றி எழுத த்கவல்கள் சேகரித்து எழுதலாம் என வைத்த தலைப்பு! அப்புறம் விட்டு விட்டேன்..) .. நீங்கள் நான் எல்லாம் கமர்ஷியல் படங்களைப் பற்றி எழுதுவதில் வல்லவர்கள்.. (கோபால், வாசு போல் ஜீனியஸ் படங்களைப் பற்றி எல்லாம் கொஞ்சமே கொஞ்சம் தெரிந்தவர்கள்) எனில் இசை மட்டுமென்றில்லாமல் கொஞ்சம் ஒவ்வொரு படத்தின் ஸ்பெஷாலிட்டியையும் கொஞ்சம் டீடெய்ல்ட் வெர்ஷனாக தமிழில் எழுதுங்களேன்.. சின்ன ரெக்வஸ்ட் ....

லிவ் அண்ட் லெட் டை எப்போ வரும்னு ஆவல் மிகுகிறது..ஏன் எனில்.. 1996 ல் துபாய் ஷாப்பிங்க் ஃபெஸ்டிவல் துவங்கப் பட்ட போது அப்போது தான் மியூஸிக்கல் ஃபெளண்டன் கான்ஸெப்ட் அங்கு வந்தது..அப்போது போட்ட முதல் பாடல் என்ன தெரியுமா.. லிவ் அண்ட் லெட் டை இசை..!

chinnakkannan
16th July 2015, 09:12 PM
//ஒரு சில நபர்கள் மட்டுமே பாராட்டும் இந்த திரியில் இவ்வளவு அருமையாக அவர் எழுதுகிறார் , அலசுகிறார் , ஆராய்கிறார் , மழையில் நனைய வைக்கிறார் , சரளாவையும் , குசல குமாரியையும் நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறார் - பாலாவின் புகழைப்பரப்புகிறார் , கல் தூண் நாயகனை ஒரு நிமிடமும் மறக்காமல் உடுக்கையின் ஒலியை எழுப்பிய வண்ணம் இருக்கிறார் , கேடக்காதவருக்கும் அவர்களுக்குப்பிடித்த பாடல்களை கர்ணன் போல வாரி வழங்குகிறார் .. எல்லோரும் பாராட்டினால் அவர் எப்படி எழுதுவார் என்று கற்பனை பண்ணியும் பார்க்க முடியவில்லை// சரி சரி..வாசு வடகிழக்குல இருக்கற வாழைத் தோப்பை ரவி பெயரில் எழுதி வைச்சுடுங்கோ :)

uvausan
16th July 2015, 09:13 PM
சிவாஜி செந்தில் சார் - உங்கள் பதிவுகள் தனித்தன்மை வாயிந்தவை - உங்களால் மட்டுமே கற்பனை செய்து எழுதக்கூடியவை - புரிந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு ஞானம் குறைவுதான் என்றாலும் - உங்கள் ஈடுபாடு , உழைப்பு என்னை மிகவும் ஆச்சரிய பட வைக்கின்றது - உங்கள் அளவிற்கு உயர பல பிறவிகள் எடுக்க வேண்டும் - தொடருங்கள்

RAGHAVENDRA
16th July 2015, 10:05 PM
சிவாஜி செந்தில் சார்
வித்தியாசமான கோணங்களில் பாடல்களை அணுகுவதில் தங்களுடைய பாணியே தனி. இந்த வகையில் மாற்றார் தோட்டத்து மல்லிகையும் நிச்சயம் தனித்துவமாக விளங்குகிறது.
இந்தப் பட்டியலில் கம் செப்டம்பர், செப்டம்பரில் தான் வருமோ...?

eehaiupehazij
16th July 2015, 10:09 PM
சரி சரி..வாசு வடகிழக்குல இருக்கற வாழைத் தோப்பை ரவி பெயரில் எழுதி வைச்சுடுங்கோ

மீள் வருகைக்கு மீண்டும் நன்றி சி க ! தென்மேற்கே இருக்கும் ஜெமினித் (காதல் மாந் )தோப்பை மட்டும் கேட்டுவிடாதீர்கள்!!

eehaiupehazij
16th July 2015, 10:15 PM
சிவாஜி செந்தில் சார்
வித்தியாசமான கோணங்களில் பாடல்களை அணுகுவதில் தங்களுடைய பாணியே தனி. இந்த வகையில் மாற்றார் தோட்டத்து மல்லிகையும் நிச்சயம் தனித்துவமாக விளங்குகிறது.
இந்தப் பட்டியலில் கம் செப்டம்பர், செப்டம்பரில் தான் வருமோ...?


சிவாஜி செந்தில் சார் - உங்கள் பதிவுகள் தனித்தன்மை வாயிந்தவை - உங்களால் மட்டுமே கற்பனை செய்து எழுதக்கூடியவை - புரிந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு ஞானம் குறைவுதான் என்றாலும் - உங்கள் ஈடுபாடு , உழைப்பு என்னை மிகவும் ஆச்சரிய பட வைக்கின்றது - உங்கள் அளவிற்கு உயர பல பிறவிகள் எடுக்க வேண்டும் - தொடருங்கள் Ravi
Thanks for the complements Raaghavendhar Sir and Ravi Sir
The Good The Bad and the Ugly, My Name is Nobody, For a Few Dollars More...fame Ennio Morricone next to JB's John Barry
followed by The Sound of Music, Singing in the rain, Come September...a bonanza of western movies with evergreen music and songs...
I try my level best to extract...for a change and lateral thinking among our friends..

chinnakkannan
16th July 2015, 10:18 PM
விட்டுப் போன ஹோம் வொர்க் ஃப்ரம் 163
வாசு..அருணோதயம் மதுரை நியூசினிமாவில் பார்த்த நினைவு.. நார்மல் படக்காட்சியிலேயே (35 எம் எம்) சரோஜாதேவி 70 எம் எம் ஆக இருப்பார்..மகா அகலமாக!.. ந.தி இளமை. முத்துராமனின் குடிப்பழக்கத்தை நிறுத்த நடத்தும் நாடகம் …தெள்ளிய நடிப்பு. சோ மனோரமா கொஞ்சம் புன்னகைக்க வைப்பார்கள்.. இந்தப் பாட் பிடிக்கும் என்றாலும் எனக்கு குங்குனாரே மிகப் பிடிக்கும்.. தாங்க்ஸ்..

//கன்னிமோகனம் என்னை கட்டி கட்டி
இழுப்பதற்கு என்ன காரணம்

என்ன காரணம் நெஞ்சின் எண்ணம் காரணம்' //
*
பால் வண்ணம் பருவம் கண்டு, பளிங்கினால் ஒரு மாளிகை..
சி.செ.. இரண்டுமே நல்ல பாடல்கள் தாங்க்ஸ்
*

ராஜ் ராஜ் சார் திடீர்னு கலர் ஜூகல் பந்தி யாருக்காக.. தாங்க்ஸ்லு..
///அல்லித் தண்டு கால் எடுத்து
அடி மேல் அடி எடுத்து
சின்னக் கண்ணன் நடக்கையிலே
சித்திரங்கள் என்ன செய்யும்/// எனக்குமிகவும் பிடித்த பாடல் ரவி..தாங்க்ஸ்
*
குசல குமாரி கட்டுரை நைஸ் வாசு சார்.. என் தாத்தாவிற்கு அவரை மிகப் பிடிக்கும் என நினைக்கிறேன்..
*
//"nagumOmu ganalEni..." in Abheri raagam...//ராகதேவன் நகுமோமுபாடல்கள் தொகுப்பிற்குஒரு ஓ அண்ட் தாங்க்ஸ்..

இதைச் சொல்லிக் கீழே வந்தால் ரவியின் அட்டகாசத் தொகுப்பு ப்ரோவ பாராமா.. ரவிக்கும் ஒரு ஓ அண்ட் தாங்க்ஸ்..

அப்புறம் ராஜ் ராஜின் மெல்லிய நகைச்சுவையுடன் பானுமதியின் நகுமோ..ஓ.. மத்யானம் தூங்கியும் இப்பக் கேட்கும் போது தூக்கம் வருகிறது..அமைதியுடன்..தாங்க்யூ சார்..
அப்புறம் அதே பானுமதி வைத்துமாசிலா உண்மைக்காதலேவிற்கும் ஒரு தாங்க்ஸ்..

*
வாசு..கல் தூண் பார்த்ததில்லை..பார்க்கத் தூண்டுகிறது உங்களின் எழுத்து..

*

ராகவேந்திரருக்கு 7000 பதிவிற்கு வாழ்த்துக்கள்.. மிக்க நன்றியும் கூட..
*
//Objection your honour!

ஜெமினி 'கொஞ்சும் லவராக' நடித்திருப்பார் என்றுதானே டைப்படித்தீர்கள் ?!
காதலில் விழுந்தாலே எல்லாம் வேகம்தான் ரவி சார்//
மங்கையரில் மகராணி பாட்டுக்கும் வழக்கமான அசத்தல் அலசலுக்கும் வாசு விற்கு ஒரு ஓ.. அப்புறம் சி.செ.. காதல்ல எப்படி எல்லாம் வேகமாகும்..குழம்புமே..

வளமாய் விழியூடி வாகாக நெஞ்சைக்
குழப்புமே காதலெனக் கூறு!.

*
குமார்..பட விளம்பரங்கள் ஆவணங்கள் என அசத்துகிறீர்கள்.. நன்றி..
//*'ஆபீஸில் வேலை வெட்டியில்லாமல் (?!?!?!) சும்மாதானே உட்கார்ந்திருக்கிறாய். சாத்தனூர் அணைக்கட்டில் படமாக்கப்பட்ட பாடல்களை உனக்குத்தெரிந்த வரையில் பட்டியலிட்டால் என்ன?' என்று மனம் கட்டளையிட்டதால் என் நினைவுக்கு வந்தவரை பட்டியலிட்டிருக்கிறேன். நிறைய விடுபட்டிருக்கு// ஆதி ராம் கண்ணுக்குத் தெரியாத அந்த சுகம் முத்ராமன் உடன் வருவது யார்..- அந்தப்பாட்டும் சாத்தனூர் தானே

*
ஆஹா..பட்டுச் சிறகுகொண்ட சிட்டுக்குருவி பாட்டில்கே.ஆர்.விஜயா அழகாய் இருக்கிறாரே.. நான் இப்போது தான் பாடலைக் கேட்கிறேன் பார்க்கிறேன்..தாங்க்ஸ் வாசு

*
நினைத்தால் சிரிப்பு வரும் (மதுரகானம் முதல் பாகத்தில் நான் கேட்டு நீங்கள் கொடுத்தீர்கள் வாசு.. நினைவிருக்கிறதா), மே. க்யா கரூ ஆஸ் முஜே புட்டாமில்கயா இரண்டும் எனக்குப் பிடித்த பாடல்கள்.. வாசு, ராஜ்ராஜ் சார் தாங்க்.ஸ்

*
என்ன சொல்ல பாட் இனிமேல் தான் கேக்கணும்..கொஞ்சம் இரவு இன்னும் ஏறட்டும்!
*
ரவி..தந்தை பாடல்களில் எல்லா வற்றையும் நான் கேட்கவில்லை.பல ஏற்கெனவே கேட்டது தான்..இருந்தாலும் ஒரு மிஸ்ஸிங் இருப்பது போல் தெரிகிறது..போட்டிருக்கிறீர்களா தெரியவில்லை..தந்தை என்று படித்த போதே எல்லார் மனதிலும் வரும் பாடல் அது..அது என்னவென்றால்…

https://youtu.be/ayXXXujt3Fo

*
சில பல விட்டுப் போயிருக்கலாம்.. என்னை மன்னிக்க..அப்புறம் சி.செ.. தென்மேற்கே இருக்கற தென்னந்தோப்பை தரமாட்டேன்..!

பின்ன வாரேன்.. நாளை நாம் எல்லாம் போவோமா ஊர்கோலம்(?!)
*

eehaiupehazij
16th July 2015, 10:34 PM
சி.செ.. உங்கள் அசத்தல் தொடருக்கு டைட்டில் நான் வைக்கிறேன்.. Bondடு ரங்க விட்டலா! (முன்னால் ஒருகாலத்தில் பாண்ட் படங்களைப் பற்றி எழுத த்கவல்கள் சேகரித்து எழுதலாம் என வைத்த தலைப்பு! அப்புறம் விட்டு விட்டேன்..) .. இசை மட்டுமென்றில்லாமல் கொஞ்சம் ஒவ்வொரு படத்தின் ஸ்பெஷாலிட்டியையும் கொஞ்சம் டீடெய்ல்ட் வெர்ஷனாக தமிழில் எழுதுங்களேன்.. சின்ன ரெக்வஸ்ட் ....

லிவ் அண்ட் லெட் டை எப்போ வரும்னு ஆவல் மிகுகிறது..ஏன் எனில்.. 1996 ல் துபாய் ஷாப்பிங்க் ஃபெஸ்டிவல் துவங்கப் பட்ட போது அப்போது தான் மியூஸிக்கல் ஃபெளண்டன் கான்ஸெப்ட் அங்கு வந்தது..அப்போது போட்ட முதல் பாடல் என்ன தெரியுமா.. லிவ் அண்ட் லெட் டை இசை..!

நிச்சயம் சி க !
முடிந்த வரை வகைப் படுத்துகிறேன் மேலோட்டமாக ...ஏனெனின் முதலிலேயே என் லெவல் இசையறிவில் அவுரங்கசீப் அளவுதான் என்று பாதுகாப்பாக
டிக்ளேர் செய்து விட்டேன்
நீங்கள் ரவி வாசு கோபால் ராகவேந்தர் கல்நாயக். ராஜேஷ் கலை......கோலோச்சும் இசைத்திரியில் நானும் அலைந்து திரிந்து பதிவிடுகிறேன்
ஆனால் இந்த இசை வகையறாக்களில் பயன்படுத்தப் பட்ட இசைக்கருவிகள் இசையின் தன்மை மற்றும் இதர சங்கதிகள் உங்களனைவரின் கைகளிலேதான் !
மாற்றார் தோட்டத்து மல்லிகை மணக்கும் போது மெல்லிசை மதுரமாகாதா என்னும் ஒரு சிறிய கருத்துப் பொறியின் விளைவே இது !!

When Roger Moore took over the Bond duty from Connery, the traditional musician was also changed for a change and the theme music was rarely sprinkled in this movie parts. Duran Duran troop music was so scintillating and added a fresh flavour to this light weight Bond movie with Moore trying his style even though shadowed by Connery till he broke the shell to come out in the Spy Who Loved Me!!

Richardsof
17th July 2015, 05:16 AM
எம்ஜிஆர் ''தெய்வத்தாய்

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலத்தில் அவர் இசையமைத்த திரையிசைப் பாடல்களில்பிரபலமாகக் காணப்பட்டு, முழக்கப்பட்ட இசைக்கருவி பொங்கஸ் ( Bongo Drums) ஆகும்.

பொங்கஸ் ட்றம் என்றழைக்கப் படும் இந்த வாத்தியம் காலத்துக்குக் காலம் அதன் தோற்றத்திலும்தரத்திலும் மாற்றமடைந்து வந்தாலும் அது இசை உலகின் மிகப் பெரிய வரலாற்றைக் கொண்டது. 19ம்நூற்றாண்டின் இறுதியில் உருவாக்கப் பட்டதாகக் கருதப்படும் இதன் பூர்வீகம் கியூபா எனக் கணிக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான அழவு கொண்ட இரண்டு ட்றம்ஸ் களை ஒன்றோடு ஒன்று சேர்த்துப்பொருத்துவதன் மூலம் பொங்கஸ் வடிவமைக்கப் படுகிறது. இரண்டு மேளத்திலும் அழவில் பெரிதாக உள்ள மேளத்தை ( Drum ) , ஹெம்ப்றா ( hembra) என்று அழைக்கிறார்கள். . இது ஸ்பானிய மொழியில்பெண்பாலைக் குறிக்கும். சிறிய Drum மஹ்கோ (macho ) என்று ஸ்பானிய மொழியில் ஆண்பாலாகஅழைக்கப் படுகிறது. இதன் அழவு 6 – 7inch தொடக்கம் 7 – 8.5 inch ஆகும். ( சிறுவர்களுக்காகசெய்யப்படுவது அழவில் சிறியதாகக் காணப்படும்

1900இன் ஆரம்பத்தில் கியூபாவில் வாழ்ந்த ஆபிரிக்க ஸ்பானிய மக்களால் “changui`என்ற இசைக்கு/பாடலுக்கு இசையாக இது பயன்படுத்தப் பட்டதாதாகவும் காலப்போக்கில் அதுவே மருவி இப்போதையசல்சா ( Salsa ) ஆகியுள்ளதாகவும் கருதப்படுகிறது.

1900 தின் நடுப்பகுதியில் இந்த வாத்தியம், பொங்கோ மற்றும் ஜக் கோஸ்ரன்சோ என்பவர்களால்மிகப்பிரபலமாகி உலகின் எல்லா இசைகளிலும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. தற்போதும்உலகெங்கும் பிரபலமாகவுள்ள jazz ற்கு அடித்தளம் இந்த வாத்தியமென்றால் அது மிகையல்ல.

இதை இசைப்பவர்கள் தங்களின் இரு கால்களிற்கிடையிலும் தாங்கிப்பிடித்தபடியே விரல்களால்லாவகமாக இசைக்கவேண்டும்.

1960களில் விஸ்வநாதன் – ராமமூர்த்தி மற்றும் கே.வி.மகாதேவன் கோலோச்சிக்கொண்டிருந்த நேரம், இந்தவாத்தியம் தமிழ் திரையிசையில் புகுந்தது. அந்த நாளைய பல படங்களின் பாடல்களுக்கு இந்த இசைபயன்படுத்தப்பட்டிருந்தாலும் குறிப்பாக எம்.ஜி.ஆரின் பாடல்களில் அதிகளவில் இது புகுந்து விளையாடியது.எம்ஜிஆரின் படங்களில் மகிழ்ச்சியானதும், கலகல்ப்பானதும், வேகமானதுமான பாடல்கள் அதிகமாகஇருந்ததனால் மகிழ்ச்சியைக் கொண்டுவரும் இந்த வாத்தியத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்பது எனது எண்ணம்.

இதன் ஆதிக்கம் பல பாடல்களில் இருந்தாலும், தெய்வத்தாய் திரைப்படத்தில் எம்ஜிஆர் சரோஜாதேவியைசுற்றி ஓடியபடி குதூகலித்து வெளிப்படுத்தும் ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் என்ற பாட்டுபொங்கசின் அட்டகாசத்துக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு.

இந்தக்காலகட்டத்தில் எம்.எஸ்.வி.யின் ஆர்கெஸ்ட்ராவில் பொங்கஸ் கலைஞராக இருந்தவரின் பெயர்கணேஷ். இவர் எப்படி பொங்கசை இசைத்துள்ளார் என்பதைக் கேட்கும் போது, பலவருடங்கள் கடந்தாலும்இன்றும் உற்சாகம் கரைபுரண்டோடும்.

எம்ஜிஆரின் காதலின் போது குறும்புத்தனதுடன் குதூகலமாக ஓடி வருவது இந்தப் பொங்கஸ் தான். இளமை ததும்பும் இசைக்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி பொங்கசைப் மிகத் திறம்படப்பயன்படுத்தியிருப்பார்கள்.

மெல்லிசை மன்னர் ஒரு பாட்டுக்கு பொங்கசை, என்னென்ன நேரப் பரிமாணங்களில் பாவித்துள்ளார் எனபதை விளக்குவதற்கும் அதன் மூலம் எப்படி ஒரு பாட்டில் குதூகலத்தையும், புத்துணர்ச்சியையும் கொண்டுவந்தார் என்பதைப் புலப்படுத்தவும் எம்ஜிஆரின் இந்தப்பாடல் நல்லுதாரணம். இந்தப் பாடலில் அவர் பொங்கசை அட்டகாசமாகப் பாவித்துள்ள விதத்தை விபரமாகப் பார்ப்போம்.

இந்தப் பாட்டின் மொத்த நீளம் 4.30 நிமிடங்களாகும். இதில் பாடலின் ஆரம்ப இசையை அட்டகாசமாகத்தொடக்கி வைப்பதே பொங்கஸ் கணேஷ் தான். அழகான எம்ஜிஆர், மிடுக்காகத்தொடங்கும் பொங்கசின்தாளத்துக்கேற்ப, தனது கால்களால் ஆடுவது கண்கொள்ளாக் காட்சி.

பாடல் தொடங்கிய 0.04 செக்கனில் தனது விளையாட்டை ஆரம்பிக்கும் பொங்கஸ் 0.19 செக்கன் வரைஅட்டகாசமாகச் சென்று பல்லவிக்கு வழிவிட்டொதுங்கிகிறது..

பின் முதலாவது இடையிசையில் 1.08 நிமிடத்தில் தொடங்கி, ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிவிட்டு 1.26நிமிடத்தில் மெதுவாக ஓய்கிறது. முதலாம் சரணம் முடிந்ததும், 2.19 நிமிடத்தில் பாட்டின் இரண்டாவதுஇடையிசையில் மீண்டும் குதித்தோடி வரும் பொங்கஸ் எம்ஜிஆருடன் சேர்ந்து சில்மிஷம் பண்ணியபடி2.57 நிமிஷம் வரை எமையெல்லாம் உற்சாகத்தில் கட்டிப்போடுகிறது. அது முடிவுற்று இரண்டாவது சரணம்தொடங்கும் போது காணாமல் போய் இறுதியாக சரணம் முடிந்தும் முடியாததுமாக பாய்ந்தோடி வந்து 3.46நிமிடத்தில் காதுகளை அணைத்துக் கொள்கிறது. அப்படியே எம்ஜிஆருடன் மீண்டும் பரிணமித்து 4.09நிமிடத்தில் மெதுவாக வேகமெடுக்கும் பொங்கஸ், தொடர்ந்து மிக வேகமாக ஓடிப்போய் 4.30 நிமிடத்தில்பாடலின் முடிவுடனும் எம்ஜிஆருடன் மலர்ந்த முகத்துடனும் முடிந்து போகிறது.. ஆஹா அற்புதமான இசைகேட்டுப்பாருங்கள் நண்பர்களே தொலைந்து போவீர்கள்.
https://youtu.be/ufwwcCxpz8E
அதேபோல் நாளை நமதேயில் எம்ஜிஆர் லதாவுடன் ரொமாண்டிக் பண்ணும் என்னை விட்டால்யாருமில்லையிலும் பொங்கசைத்தான் முன்நிலைப் படுத்தியுள்ளார் எம்.எஸ்.வி. தனது ஆசானின்எதிர்பார்ப்பை உணர்ந்த பொங்கஸ் கலைஞர் அவரின் எதிர்பார்ப்புக்கு எந்தக் குறையும் வைக்காமல்அற்புதமாக இசைத்துள்ளார்.

courtesy - net

Richardsof
17th July 2015, 05:32 AM
இனிய நண்பர் திரு ரவி அவர்களின் கதையின் கரு -200 பதிவுகள் மிகவும் அருமை .உறவுகள் பற்றி விரிவாக பட்டியிலிட்டு அதற்கேற்றபடங்கள் , பாடல்கள் பதிவிட்டு இந்த நாள் இனிய நாள் என்று தினமும் மகிழ்விக்கும் உங்களுக்கு அன்பு வாழ்த்துக்கள் .

Richardsof
17th July 2015, 05:53 AM
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்‘,

என்கிற பல்லவி கடமையைக் குறிக்கவே எழுதப்பட்டிருந்தாலும்.. எம்.ஜி.ஆர் என்கிற மூன்றெழுத்தையும் குறிக்கிறதே!!
https://youtu.be/izPbQMhpnBc
புகழுக்குப் புகழ் சேர்க்க இப்பூமியில் அவதரித்த புருஷர்களுள் பொன்மனச்செம்மல், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களும் ஒருவர் என்றே கருதுகிறேன்! அவரின் மனிதாபிமானம், கொடைத்தன்மை, விருந்தோம்பல், நற்குணங்களைப் பின்பற்றும் தன்மை, மக்கள்மீது கொண்டிருந்த பற்று, பாசம்..அவர்களிடம் காட்டிய பரிவு, வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்கிற பேராவல், இவைதான் ஒரு சரித்திர மனிதராய் எம்.ஜி.ஆரை உருமாற்றிற்று என்றால் அது மிகையில்லை! மேலும் தாய்மீது எம்.ஜி.ஆர் கொண்டிருந்த பற்று என்பது தெய்வ பக்திக்கெல்லாம் இணையானது! அதுவே எம்.ஜி.ஆர் அவர்களுக்கு வழிகாட்டியாய் ஆன்மபலம்தந்து அடுத்தடுத்து வெற்றித் திருமகள் கட்டித்தழுவிடக் காரணமாய் அமைந்தது!

இவருக்காக பாடல் எழுதிய பெருமக்கள் வரிசை நீண்டிருக்க.. அதிலே யார் பாடல் எழுதினாலும் அந்த வரிகள் எம்.ஜி.ஆருக்கு பொருத்தமாய் அமைந்ததுடன்.. அவர் புகழை இன்னுமின்னும் உயர்த்திட வழிவகுத்தன! எம்.ஜி.ஆர் அவர்களுக்காக திரு.ஆர்.எம்.வீரப்பன் அவர்களால் உருவாக்கப்பட்ட நிறுவனம் சத்யா மூவிஸ் ஆகும்! இதிலே இடம்பெற்ற இப்பாடல்.. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்! பாடலின் பல்லவி தொட்டு பவனி வருகிற வரிகள் அனைத்திலும் கூறப்பட்டுள்ள சிந்தனைகள் மனித குலம் என்றைக்கும் மனதில் கொள்ள வேண்டியவை என்பதை எவர் மறுக்க முடியும்?

கலைத்துறை என்பது மக்களை எளிதில் சென்றடைகிற ஊடகம் என்பதை முற்றிலும் உணர்ந்த எம்.ஜி.ஆர் அவர்கள் அதனை நல்ல கருத்துக்களைப் பரப்பவே பயன்படுத்த வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்திருக்கிறார். எம்.ஜி.ஆரின் கருத்துக்களை.. எண்ணங்களை உள்வாங்கிய கவிஞர்கள் வரிசையில் இதோ வாலி அவர்களின் வைர வரிகள்.. தெய்வத்தாய்க்காக.. மெல்லிசை மன்னரின் தக்கதோர் இசையமைப்பில் டி.எம்.செளந்திரராஜன் அவர்கள் குரலில்..

“பதவி வரும்போது பணிவு வரவேண்டும்..

துணிவும் வரவேண்டும் தோழா..”

“நாளை உயிர்போகும்.. இன்று போனாலும்

கொள்கை நிறைவேற்று தோழா..”

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்

திரைப்படம்:தெய்வத்தாய்
இசை:எம்.எஸ்.வி
பாடகர்கள்: டி.எம் செளந்தராஜன்
இயற்றியவர்: கவிஞர் வாலி

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
கடமை அது கடமை
கடமை அது கடமை
அந்த மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்

பதவி வரும்போது பணிவு வர வேண்டும்
துணிவும் வரவேண்டும் தோழா
பாதை தவறாமல் பண்பு குறையாமல்
பழகி வரவேண்டும் தோழா
பதவி வரும்போது பணிவு வர வேண்டும்
துணிவும் வரவேண்டும் தோழா
பாதை தவறாமல் பண்பு குறையாமல்
பழகி வரவேண்டும் தோழா
அன்பே உன் அன்னை
அறிவே உன் தந்தை
உலகே உன் கோவில்
ஒன்றே உன் வேதம்

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
கடமை அது கடமை
கடமை அது கடமை

வாழை மலர் போல பூமி முகம் பார்க்கும்
கோழை குணம் மாற்று தோழா
நாளை உயிர் போகும் இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்று தோழா
வாழை மலர் போல பூமி முகம் பார்க்கும்
கோழை குணம் மாற்று தோழா
நாளை உயிர் போகும் இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்று தோழா
அன்பே உன் அன்னை
அறிவே உன் தந்தை
உலகே உன் கோவில்
ஒன்றே உன் வேதம்

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
கடமை அது கடமை
கடமை அது கடமை.

Courtesy
காவிரி மைந்தன்

uvausan
17th July 2015, 07:42 AM
வினோத் சார் - உங்கள் பாராட்டுக்களுக்கு மிகவும் நன்றி - உங்கள் தெய்வத்தாய் பதிவு அருமை . மிகவும் ரசித்து எழுதியுள்ளீர்கள் . ஏற்கனவே நான் பதிவிட்ட வேண்டுகோள் தான் - அடிக்கடி வாருங்கள் - மக்கள் திலகம் பாடல்களுடன் மற்ற நடிகர்களின் பாடல்களையும் உங்கள் கண்ணோட்டத்தில் அலசி , ck , வாசு , ராகவேந்திரா சார் , சிவாஜி செந்தில் சார் இவர்கள் தரும் சந்தோஷத்தை நீங்களும் எங்களுக்கு பரிசாக தரலாமே ! வேண்டுகோள் நிறைவேறக்கூடியதா ?
அன்புடன்

uvausan
17th July 2015, 07:47 AM
//ரவி..தந்தை பாடல்களில் எல்லா வற்றையும் நான் கேட்கவில்லை.பல ஏற்கெனவே கேட்டது தான்..இருந்தாலும் ஒரு மிஸ்ஸிங் இருப்பது போல் தெரிகிறது..போட்டிருக்கிறீர்களா தெரியவில்லை..தந்தை என்று படித்த போதே எல்லார் மனதிலும் வரும் பாடல் அது..அது என்னவென்றால்…//

CK - ஹோம் work யை சரியாக பண்ணுவதில்லை என்று தெரிகிறது - இதிலும் ஏனோ தானோ தானா ? வாசு எனக்கு எழுதி வைக்கும் வாழைத்தோட்டத்தை அப்படியே உங்களுக்கு தந்துவிடலாம் என்று நினைத்தேன் - எண்ணத்தை மாற்றிக்கொண்டேன் - முதல் பதிவே " பிள்ளைக்கு தந்தை ஒருவன் " தான் சார் - இந்த பாடலை மறந்தவர்கள் நல்ல ரசிகர்களாக இருக்க முடியாது

eehaiupehazij
17th July 2015, 07:56 AM
மாற்றார் தோட்டத்து மெல்லிசையும் மது()ர(ம்)மே !!
பகுதி 3 : கோல்டுபிங்கர் / Goldfinger (1964) starring Sean Connery as James Bond OO7!


ஜேம்ஸ் பாண்டின் முதல் இரண்டு படங்களான டாக்டர் நோ மற்றும் ப்ரம் ரஷ்யா வித் லவ் டைட்டில் பாடல்களின்றி தீம் இசைக்கோர்ப்பு மட்டுமே செய்யப்பட்டு மாரிஸ் பைண்டரின் கற்பனைத் திறன் மிக்க அற்புதமான டைட்டில் கிராபிக்சுடன் கலக்கப் பட்டிருக்கும் !

இப்படத்தின் மூலம் ஜேம்ஸ் பாண்டின் உளவுத் தொழில்நுட்பங்கள் புதைந்த ஆஸ்டன் மார்டின் கார் அறிமுகமானது ! வெட்டுத் தொப்பியை சுழற்றும்
வில்லனின் அடியாள், அலட்டிக் கொள்ளாத வில்லன் ஜெர்ட் போர்பே, laesar scene, மற்றும் ஜேம்ஸ் பாண்டை வறுத்தெடுக்கும் கதாநாயகி....மறக்க முடியுமா?

கோல்டுபிங்கரில் முதல் முதலாக மனதை உரசும் வெண்கலக் குரலில் அருமையான குரல் வளம் கொண்ட பாடகி ஷர்லி பாஸ்சியின் பின்னியெடுக்கும் அரங்கமே அதிர்ந்த மனக்கிளர்ச்சியூட்டும்பாடல் இடம் பெற்றது. இப்படத்தின் மூலம் புகழேணியில் ஏறத் தொடக்கி மீண்டும் டயமண்ட்ஸ் ஆர் பாரெவர் படத்திலும் பாடினார். ஜான் பேரியின் இசையமைப்பு உச்சம் தொட்டது. ஷான் கானரியின் ஜேம்ஸ் பாண்ட் உருவகம் இப்படத்தின் மூலமே நூறு சதவீதம் ரசிகர்கள் மனதில் என்றென்றும் ஆராதிக்கப் படும் அகில உலக ஆராதனை நாயகராக அவருக்கு ஒளிவட்டமேற்றியது! ஜேம்ஸ் பாண்ட் அலை சுழன்றடித்து பாண்ட் காய்ச்சல் உலகம் முழுவதும் தொற்றிக்கொள்ள இப் பாடலும் ஒரு காரணமே !!

Goldfinger Pre-title sequence that made all the subsequent Bond movies to follow this pattern after From Russia with Love!!

https://www.youtube.com/watch?v=-CTpzLphy5Q

Enjoy Shirley Bassey's scintillating engrossing and embracing tonal magic!!

https://www.youtube.com/watch?v=Qt2WlDM3tEA

https://www.youtube.com/watch?v=mi2DRqW76c8

uvausan
17th July 2015, 08:04 AM
CK - உங்கள் ஹோம் வொர்க்கில் .எதை விடுகிறீர்களோ , இந்த பதிவைப்படிப்பதை மட்டும் விட்டு விடாதீர்கள் - உங்களுக்குத்தான் பெரிய நஷ்ட்டம் - ஆத்மார்த்தம் , ஈடுபாடு என்று சொல்கிறோமே அதற்க்கு உண்மையான உதாரணங்களை காட்டவேண்டுமென்றால் - கல்தூண் உடுக்கை பதிவும் , திரு ராகவேந்திரா சார் அவர்களின் இந்த ஒரு பதிவும் போதும் - எப்படிப்பட்ட அலசல் , உழைப்பு , ஈடுபாடு - இப்படிப்பட்ட பதிவுகள் எந்த விசாரணையும் இன்றி guinness world recordஇல் இடம் பெற வேண்டும் -குறைந்தது 10 மணி நேரமாவது அவர் செலவழித்திருக்க கூடும் - எந்த விதமான பலன்களையும் எதிர்பார்த்திருக்க மாட்டார் , வாசுவைப்போல .

அவருக்கு நாம் செய்யும் ஒரே நன்றிக்கடன் இறைவன் நல்ல தேக ஆரோக்கியத்தையும் , இப்படிப்பட்ட பல பதிவுகளை நமக்கு தரக்கூடிய நல்ல சூழ் நிலையையும் தர வேண்டும் என்று மனதார வேண்டுவது மட்டுமே !!

அவரிடமும் எனக்கு ஏதாவது எழுதி வைக்க முயற்சி செய்யவேண்டாம் :)


http://www.mayyam.com/talk/showthread.php?11355-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-15/page356

Russellrqe
17th July 2015, 08:07 AM
திரு ரவிகுமார்

பந்த பாசங்களை அழகிய நடையில் எளிய உரையில் தெளிவாக வழங்கிய உங்களின் 200 பதிவுகளுக்கு என் மனமார்ந்த நன்றி .

Russellrqe
17th July 2015, 08:12 AM
RARE OLD TAMIL CINEMA PAPER ADVT
http://i62.tinypic.com/10emvf4.jpg

Russellrqe
17th July 2015, 08:13 AM
http://i62.tinypic.com/2qukwuo.jpg

Russellrqe
17th July 2015, 08:17 AM
http://i61.tinypic.com/2lcmi35.jpg

Russellrqe
17th July 2015, 08:18 AM
http://i61.tinypic.com/6isewi.jpg

Russellrqe
17th July 2015, 08:19 AM
http://i60.tinypic.com/166bzvn.jpg

Russellrqe
17th July 2015, 08:19 AM
http://i61.tinypic.com/2v7xm2w.jpg

Russellrqe
17th July 2015, 08:20 AM
http://i61.tinypic.com/2yuayyq.jpg

Russellrqe
17th July 2015, 08:21 AM
http://i58.tinypic.com/rky2cg.jpg

Russellrqe
17th July 2015, 08:23 AM
http://i58.tinypic.com/264l838.jpg

Russellrqe
17th July 2015, 08:23 AM
http://i61.tinypic.com/20u8jfd.jpg

Russellrqe
17th July 2015, 08:27 AM
http://i60.tinypic.com/2v1m3pt.jpg

Russellrqe
17th July 2015, 08:28 AM
http://i58.tinypic.com/r7oyfp.jpg

Russellrqe
17th July 2015, 08:29 AM
http://i59.tinypic.com/2i0aook.jpg

Russellrqe
17th July 2015, 08:30 AM
http://i59.tinypic.com/2usenpi.jpg

vasudevan31355
17th July 2015, 08:49 AM
சின்னா!

மீண்டும் தங்களை வருக வருக என வரவேற்கிறேன். நேற்று பொழுது ஷிப்ட்டிலேயே கழிந்து விட்டதால் சரியாக வரவேற்க முடியவில்லை.

உங்களுடைய ஹோம் ஒர்க் சின்சியாரிட்டி அபாரம். அதற்கு உங்கள் பாணியிலேயே ஒரு 'ஹோ'.

//ந.தி இளமை. முத்துராமனின் குடிப்பழக்கத்தை நிறுத்த நடத்தும் நாடகம் …தெள்ளிய நடிப்பு//

குடிப்பழக்கம் தெளிய நடிப்பு

குசல குமாரி கட்டுரை நைஸ் வாசு சார்.. என் தாத்தாவிற்கு அவரை மிகப் பிடிக்கும் என நினைக்கிறேன்//

உங்களுக்கும் குசலகுமாரிக்கும் ஒரே வயசு இருக்கும் போது எப்படி இங்கே உங்கள் தாத்தா வந்தார்?:)

சரி! சரி! நமக்குள் கல்ஸ்,கலை சார் செல்லச் சண்டை வேண்டாம்.:) என் வயதை எப்ப்போதும் நான் சொல்ல ரெடி. சரியாக 54.

//சொல்லத் தெரியவில்லை
உள்ளத்தில் உள்ளதை
தெள்ளத் தெளிவாய்த்
சொல்லத் தெரியவில்லை// வாசு.. மூணாம்பாகத்துல இந்தப் பாட் போட்டாச் போட்டாச்னு நினைக்கிறேன்..( நீங்க மூணாம்பாகம் முழுசாப் படிக்கலை தானே!)//

அத்தனை பாகங்களையும் ஒரு எழுத்து விடாமல் படித்தாயிற்று. மறதியால் திரும்ப வந்திருக்கும். ஓகேவா?:)

அப்புறன் நீங்கள் மறந்து விட்ட விஜயநிர்மலா (கண்ணுக்குத் தெரியாத) பற்றி பக்கம் பக்கமாக தகவல் தந்து விட்டேன். அந்தப் பாடலையும் சேர்த்துத்தான். இப்போது நீங்கள் கேட்ட அதே கேள்வி உங்களுக்கு. ஐ...பழி வாங்கியாச்சு. ஜாலி.:)

அனைவர் பதிவுகளையும் படித்து அத்தனை பேரையும் பாராட்டி உற்சாகப் படுத்தியதற்கு நன்றி.

இருந்தாலும் சந்திக்காமல் அவாய்ட் பண்ணியதில் கோபம் தீரவில்லை. மன்னிப்பதாக இல்லை.:)

vasudevan31355
17th July 2015, 09:08 AM
மது அண்ணா!

தங்கள் பதிவைக் கண்டு மிக்க சந்தோஷமடைந்தோம். அப்பாடி! எவ்வளவு நாட்கள் ஆயிற்று? நீங்கள் இல்லாமல் இந்தத் திரி வாடிப் போய் இருப்பது உண்மை. நிச்சயம் இறைவன் அருளால் தாங்கள் நல்ல உடல்நலம் திரும்பப் பெற்று உங்களுக்கே உரித்தான தனித் தன்மையுடன் கலக்குவீர்கள். நீங்கள் இல்லாமல் எனக்கு ஒரு கை உடைந்த மாதிரி இருக்கிறது. தங்களுடைய அன்பான பாராட்டிற்கு என் தலை சாய்க்கிறேன்.

உடல்நிலையை கவனித்துக் கொள்ளுங்கள். தங்களுக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும் போன் செய்யுங்கள். உங்கள் பதிவுகளுக்காக நாங்கள் எப்போதும் ஆவலுடன் வெயிட்டிங்.

vasudevan31355
17th July 2015, 09:15 AM
குமார் சார்,

ஆவணப் பொக்கிஷமாக எங்களுக்குக் கிடைத்திருக்கிறீர்கள். கிடைத்தற்கரிய விளம்பரங்களை பதிவிட்டு எங்களை திக்குமுக்காடச் செய்கிறீர்கள். ஒவ்வொரு விளம்பரமாகத் தேடிக் கண்டுபிடித்து ஸ்கேன் செய்து போடுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதுவும் போட்டோ புக்கெட், டைனி பிக்சர்ஸ் இதிலெல்லாம் விளம்பரங்களை அப்லோட் செய்ய நீண்ட நேரம் பிடிக்கும். அது கேட்கும் வார்த்தைகளை வேறு பார்த்து பார்த்து டைப் செய்ய வேண்டும்.

டைப் அடித்து கட்டுரை பதிவிடுவதை விட இது கடினமான வேலை என்ற அனுபவத்தில் சொல்கிறேன். பம்மலாருக்குப் பிறகு அற்புதமான ஆவணங்களை எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் பதிவிட்டு திரியை
மேலும் வளப்படுத்துவதற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

உங்கள் உழைப்பு போற்றி வணங்கத்தக்கது.

vasudevan31355
17th July 2015, 09:22 AM
ரவி சார்!

தங்கள் மனமுவந்த பாராட்டுதல்களுக்கு என் பணிவான நன்றிகள். மது அண்ணா கேட்டு நீங்கள் பதித்த 'சரவணன் சொன்னான்... சங்கரன் கேட்டான்' என்ற 'ஒருவனுக்கு ஒருத்தி' படப் பாடல் தினமும் நடைப் பயிற்சியின் போது நான் கேட்டு மகிழும் பாடல். அப்பாடலைக் கேட்ட மது அண்ணாவிற்கும், பதித்த உங்களுக்கும் ஸ்பெஷல் நன்றிகள்.

சரி 'ஒருவனுக்கு ஒருத்தி' (இயக்கம் ரா.சங்கரன்) படத்தின் கதையைத் தழுவி நடிகர் திலகம் நடித்த படம் ஒன்று பிறகு வந்தது. அது என்ன படம் தெரியுமா?

ராகவேந்திரன் சார். ப்ளீஸ். மூச்.

vasudevan31355
17th July 2015, 09:29 AM
சின்னா!

வெல்டன். அது மாலதியேதான். கலக்கிட்டீங்க. ஆமா! 'உய்ய உய்ய உய்ய' ராஜாவின் அமர்க்களமான மியூசிக் கேட்டாச்சா? 'அழகு ஆயிரம்' படிச்சாச்சா?

'நல் பாட் வாசு சார்' என்று தப்பிக்கக் கூடாது.:)

அந்தப் பாடலைப் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை எழுதுங்கள். சுவைக்கக் காத்திருக்கிறேன்.

அந்தப் பாடலைப் பற்றி மற்றவர்கள் கருத்தை ரொம்ப எதிர்பார்த்தேன். கொஞ்சம் ஏமாற்றம்தான். கொஞ்சமல்ல... நிறையவே.:( அந்தப் பாடலுக்கு, அந்த இசைக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரமே வேறு.

vasudevan31355
17th July 2015, 09:45 AM
சிவாஜி செந்தில் சார்,

அருமையான அமர்க்களம். உங்களுடைய ஆங்கிலப் படங்களின் நுண்ணறிவை நான் அறிவேன். குறிப்பாக பாண்ட் படங்களில் உங்களுக்கிருக்கும் ஆர்வம் பற்றி ரொம்ப நாட்களாகவே எனக்குத் தெரியும். தங்களுடைய 'மாற்றார் தோட்டத்து மெல்லிசையும் மதுரமே' அலசல்களை அள்ளிப் பருகக் காத்திருக்கிறோம் அனைவரும். 'மாற்றான்' தோட்டத்து என்ற ஒருமை விளி கூட மற்றவரைப் புண்படுத்தும் என்று எண்ணி'மாற்றார்' என்று அதை மாற்றிக் காட்டியிருப்பது ஒன்றே போதும் உங்களின் பண்பான குணத்தை உணர்த்த. வாழ்த்துக்கள் சார்.

uvausan
17th July 2015, 09:51 AM
ரவி சார்!

தங்கள் மனமுவந்த பாராட்டுதல்களுக்கு என் பணிவான நன்றிகள். மது அண்ணா கேட்டு நீங்கள் பதித்த 'சரவணன் சொன்னான்... சங்கரன் கேட்டான்' என்ற 'ஒருவனுக்கு ஒருத்தி' படப் பாடல் தினமும் நடைப் பயிற்சியின் போது நான் கேட்டு மகிழும் பாடல். அப்பாடலைக் கேட்ட மது அண்ணாவிற்கும், பதித்த உங்களுக்கும் ஸ்பெஷல் நன்றிகள்.

சரி 'ஒருவனுக்கு ஒருத்தி' (இயக்கம் ரா.சங்கரன்) படத்தின் கதையைத் தழுவி நடிகர் திலகம் நடித்த படம் ஒன்று பிறகு வந்தது. அது என்ன படம் தெரியுமா?

ராகவேந்திரன் சார். ப்ளீஸ். மூச்.

"தேனும் பாலும் " - சரியா ??

uvausan
17th July 2015, 10:10 AM
திரு ரவிகுமார்

பந்த பாசங்களை அழகிய நடையில் எளிய உரையில் தெளிவாக வழங்கிய உங்களின் 200 பதிவுகளுக்கு என் மனமார்ந்த நன்றி .

குமார் சார் - மிக்க நன்றி . கருக்குள் கரு இன்னும் முடியவில்லை - 3வது பக்கம் தொடங்க இருக்கிறேன் - இது நீண்ட பாகமாக இருக்காது . இந்த மூன்றாம் பாகத்தில் மச்சினி உறவு :-dதவிர மற்ற எல்லோருமே ஓரளவுக்கு இடம் பெறுவார்கள் . ஓரிரு நாட்கள் மற்றவர்கள் இங்கு போடும் பதிவுகளை படித்து திறமையை வளர்த்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன் .


உங்கள் ஆவணங்களைப் பார்க்கும் பொழுது - இப்படிப்பட்ட படங்கள் கூட , அதை தயாரித்தவர்கள் கூட ஆச்சிரியப்படும் வகையில் வந்திருக்கின்றனவா என்று வியக்க வைக்கிறது - இந்த படங்கள் உங்களுக்கு அடுத்த வகையில் வாசுவிற்கு மட்டுமே தெரிந்த உண்மை .

நன்றி மீண்டும் .

eehaiupehazij
17th July 2015, 10:55 AM
மாற்றார் தோ(கோ)ட்டத்து மெல்லிசையும் மதுரமே !
பகுதி 4 : தண்டர்பால் (1965) / starring Sean Connery as James Bond OO7!


கோல்ட் பிங்கரையும் மீறிய இமாலய வெற்றி கண்ட ஜேம்ஸ் பாண்ட் படங்களின் மகுடம் தண்டர்பால்
இதில் வரும் கடல் நீரடிக் காட்சியமைப்புகள் இன்றுவரை எந்தப் படத்தினாலும் முறியடிக்கப் படாத சாதனையே

எதிரிகளிடமிருந்து டக்கென்று தப்பிச் செல்லும் ஜெட் பேக் புதுமையே! ஷான் கானரியின் ஜேம்ஸ் பாண்ட் ஆடையலங்காரங்கள் அமர்க்களம் !!Underwater action sequences are incomparable even today, winning an Oscar for meticulous underwater photography!!

இப்படத்திற்கு பின்னரே தமிழில் மாடர்ன் தியேடர்ஸ் ஜெய் ஷங்கர் இணைவில் ஜேம்ஸ் பாண்ட் பாணி படங்களை இசையமைப்பாளர்கள் வேதா மற்றும் டி ஆர் பாப்பா துணையுடன் ஜான் பேரி சாயலில் தமிழ் தீம் இசையுடன் வெளிக் கொணர்ந்தனர் !!

தண்டர்பாலின் டைட்டில் பாடலும் (Tom Jones / John Barry) படத்தினூடே ஆங்காங்கே நைட் கிளப்புகளில் வரும் இசையும் நடனத்துடன் சிறு பாடல்களும் ரசித்துத் தாளமிட வைக்கும் !!

Enjoy the theme music sprinkled with the Jet Pack escape!

https://www.youtube.com/watch?v=uuTUTbXPf48

He always runs .... while others walk!...and
He strikes like Thunderball!!....enjoy the lyrics too!!

https://www.youtube.com/watch?v=sT0x7QiJI1g

May I cut in...? You should have told me that your wife is here!!

https://www.youtube.com/watch?v=vgTHZhNqOAc

Mr Kiss Kiss Bang Bang sung by Shirley Bassey!!

https://www.youtube.com/watch?v=j4m9ptFefwo

rajeshkrv
17th July 2015, 11:05 AM
திரி மீண்டும் களை கட்டிவிட்டது.

வாசு ஜி, ரவி அருமையான பாடல்கள் தொடரட்டும்
சி.க. வருக வருக

எனக்கும் பாண்ட் மூவீஸ் மிகவும் பிடிக்கும். குறிப்பாக ரோஜர் மூர் படங்கள்
இப்பொழுது பாண்ட் படங்களை தழுவி வந்த ஸ்பை படங்களை பார்த்துகொண்டிருக்கிறேன்

chinnakkannan
17th July 2015, 11:29 AM
ஹாய் குட்மார்னிங் ஆல்..

ரவி.. ஸாரி.. என்றெல்லாம் சொல்ல மாட்டேன்..ச்சும்மா கொஞ்சம் எழுதிப் பார்த்தேன்.. நீங்கள் போட்ட இடுகை உங்களுக்கே நினைவிருக்கிறதா என்று ( கண்ணா நல்லா சமாளிக்கறடா நீ!)

மூன்றாம் பாகம் எழுதப் போறீங்களா.. அன்பரே கொஞ்சம் இடைவெளி விட்டு அதை ம.ம. கா ஐந்தாம் பாகம் ஆரம்பிக்கும் போது ( அதாவது கல் நாயக் அல்லது நீர் – இருவருக்குள்ளும் தான் போட்டியே) தொடங்கவும்.. இப்போதைக்கு வேறு தலைப்பு எடுத்து தொடராக எழுதும் படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.. (தமிழில் சொல்வதென்றால் – ஓய்.. கண்டியூவஸா ஸேம் டாபிக் என்று எழுதினீர்கள் என்றால் – அடுத்த டாபிக் கணவன் மனைவி, காதலன் காதலி என்று எழுதி என்,வாசு சப்ஜெக்டில் கை வைப்பீர் (!) அண்ட் அண்ணன் தங்கையையே அம்மா அப்பாவில் நிறையக் கொண்டு வந்துவிட்டீர் – பின் எதுவாக எழுதப் போகிறீர்கள் என்பதும் சில காலத்திற்குசஸ்பென்ஸாக இருக்கட்டுமே..( எழுதுவதென்றால் எழுதுங்கள்..இது என் எண்ணம் மட்டுமே..மன்னிக்க)

வாசு.. அழகு ஆயிரம் உலகம் முழுவதும் பாடல்கேட்டதில்லை.. ஹோம்வொர்க்ல சாய்ஸ்.லாம் விடப்படாது போல…! பட் இப்ப கேட்டேன் பார்த்தேன் படித்தேன் ரசித்தேன்...

உல்லாசப் பறவைகள் படம் பார்த்ததில்லை..சினிப்ரியாவில் ரிலீஸ் ஆகி ஸ்ரீதேவியில் மறு ரிலீஸ் ஆன நினைவு.. ஜெர்மனியில் செந்தேன் மலரே பாட் அடிக்கடி கேட்டிருக்கிறேன்..சிலோனிலும் வரும்..

//'இளமையின் சிலிர்ப்புகள்...புதுமையின் அழைப்புகள் எங்கும் 'மாம மியா மாம மியா' என்று மீண்டும் நம் மீது தேன் கொட்டும். // பாட்டு நல்லாத் தான் இருக்கிறது..என்ன.. ரத்தியை லாங்க் ஷாட்டில் காட்டுவது, பாடலுக்கு வாயசைக்காதது என்பது ஒரு குறையே..
இந்த இசைக்கருவிகள் எல்லாம் – சி செ சொல்வதுபோல- எனக்குஅவ்வளவாகச் சொல்லத் தெரியாது..இசையை ரசிக்க மட்டுமே தெரியும்..வெகு அழகாக அலசி இருக்கிறீர்கள்.. நல்ல பாட் வாசு சார் ! (கலர் எழுத்துக்களில் மஞ்சள் (அல்லதுஆரஞ்ச்?) எழுத்து கண்ணைச் சுருக்கிப் பார்க்க வைத்து படிக்க கஷ்டமாக இருந்தது.. மஞ்சள் தாவணி பார்ப்பது சுலபம் ஒருகாலத்தில்! இப்போ எழுத்து கொஞ்சம் கஷ்டம்..எனில் வேறு கலரில் இடுங்கள்..

பாராமல் பார்த்த நெஞ்சம் சம் ச சம் சம்.. என ஒருபாட் இப்பக் கேட்டேன்.. நடிக நடிகையர் தெரியவில்லை பட் பாட் ஓகே..1

https://youtu.be/sxItiuEa9MQ?list=RDDN9GdmNjVbc

சி.செ. தண்டர் பால் கொஞ்சம் சுமார் தான்..எனக்கு அவ்வளவாகப் பிடிக்காது..பார்க்கவிட்டுப் போன பாண்ட் என லிஸ்ட் போட்டு வெகு ஆவலுடன் துபாயில் வீடியோ வாங்கிப் பார்த்தது..ம்ம் அப்புறம் விரிவாய் எழுதறேன்.

அப்புறம் வாரேன்..:)
*

JamesFague
17th July 2015, 12:25 PM
Courtesy: Tamil Hindu

காற்றில் கலந்த இசை 13: எழுபதுகளின் இருவர்- எம்.எஸ்.வி. எஸ்.பி.பி.


எம்.எஸ்.வி. மறைவுச் செய்தி வெளியான சில மணிநேரத்தில் எஸ்.பி.பி.யின் பேஸ்புக் பக்கத்தில் வெளியான எம்.எஸ்.வி.யின் புகைப்படம் அனைவரையும் அதிரவைத்தது. மெலிந்த உடல், நரைத்த தாடியுடன் முதுமையின் கொடுங்கரம் அவரைப் பற்றியிருந்ததைப் பார்த்த பலரும் கலங்கியிருப்பார்கள்.

அவர் அருகே லேசாகச் சிரித்தவாறு அமர்ந்திருந்தார் எஸ்.பி.பி. ஆனால், தன்னை உருவாக்கிய இசை மேதையின் உடல்நிலை அப்படி ஆனதை நினைத்து உள்ளுக்குள் கதறிக்கொண்டு இருந்திருப்பார். ஏனெனில், அவரது இசைப்பயணத்தின் வழிகாட்டியும் வழித்துணையும் எம்.எஸ்.வி.தான்!

பகல் நேரத்துப் பாடல்கள்

சில பாடல்கள் காலத்துடன் இறுகப் பிணைக்கப் பட்டவை. அந்தப் பாடல்களைக் கேட்கும்போது குறிப்பிட்ட அந்தக் காலத்துக்கு நம்மை அழைத்துச் சென்றுவிடும் தன்மை கொண்டவை. இளையராஜா காலம் தொடங்குவதற்கு முன்னதான காலம், அவரது வருகைக்குப் பிறகான சில ஆண்டு காலம் ஆகிய காலகட்டத்தில் வெளியான எம்.எஸ்.வி.யின் பாடல்கள் அந்த வகைமையில் அடங்கக்கூடியவை. பாலசந்தரின் பரீட்சார்த்தப் படங்கள் வெளியான காலகட்டமும், கமல், ரஜினி போன்ற நடிகர்கள் அறிமுகமாகியிருந்த காலகட்டமும் இதில் அடக்கம்.

‘வால் பேப்பர்’ ஒட்டப்பட்ட அட்டைச் சுவர்கள் கொண்ட அறைகள், அகன்ற வானத்தை வெறித்து நிற்கும் பாறைகள் நிறைந்த நிலப்பரப்பு போன்ற இடங்களில், பெரும்பாலும் பகல் நேரங்களில் படமாக்கப்பட்ட இந்தப் பாடல்கள் தரும் உணர்வு மிக வித்தியாசமானது. 70-களின் மத்திய தரக் குடும்பங்களின் வாழ்க்கை, தாம்பத்ய உறவின் சிக்கல்கள் இக்காலகட்டத்தின் பாடல்களில் பொதிந்திருக்கும். இப்பாடல்களைக் கேட்கும்போது பகல் நேரத்தின் வெம்மையையும், பாடல் தரும் ஆறுதல் நிழலையும் உணர முடியும்.

அந்தக் காலகட்டத்தில் பிற பாடகர்களும் பாடகிகளும் எம்.எஸ்.வி.யின் இசையில் முக்கியமான பாடல்களைப் பாடியிருந் தாலும், எஸ்.பி.பி.யே பிற இசையமைப் பாளர்களின் இசையில் பாடி யிருந்தாலும் ‘எம்.எஸ்.வி.-எஸ்.பி.பி.’ ஜோடி தந்த பாடல்கள் தனிச்சுவை கொண்டவை. இளம் குரலுடன் தனது பயணத்தைத் தொடங்கிய எஸ்.பி.பி.யின் குரலில் கம்பீரமும் பாந்தமும் வெளிப்படுவதற்கு எம்.எஸ்.வி.யின் பாடல்கள் சிறந்த களமாக அமைந்தன.

கண்ணனை நினைக்காத (சீர் வரிசை), பொன்னென்றும் பூவென்றும் (நிலவே நீ சாட்சி) நிலவே நீ சாட்சி (நிலவே நீ சாட்சி), ராதா காதல் வராதா (நான் அவனில்லை), மங்கையரில் மகராணி (அவளுக்கென்று ஒரு மனம்), ஊர்கோலம் போகின்ற கிளிக்கூட்டம் எல்லாம் (அக்கரைப் பச்சை), நான் என்றால் அது அவளும் நானும் (சூரியகாந்தி), அன்பு வந்தது என்னை ஆள வந்தது (சுடரும் சூறாவளியும்), தென்றலுக்கு என்றும் வயது (பயணம்), ஓடம் அது ஓடும் (கண்மணி ராஜா), காதல் விளையாட (கண்மணி ராஜா), கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம் (எவளோ ஒரு பெண்ணாம்), மாதமோ ஆவணி (உத்தரவின்றி உள்ளே வா), மார்கழிப் பனியில் (முத்தான முத்தல்லவோ), தொடங்கும் தொடரும் புது உறவு (முடிசூடா மன்னன்), மான் கண்ட சொர்க்கங்கள் (47 நாட்கள்) என்று முடிவின்றி நீளும் பட்டியல் அவர்களுடையது.

பாலசந்தர்- எம்.எஸ்.வி.- எஸ்.பி.பி.

இக்கூட்டணியில் கணிசமான எண்ணிக்கையிலான பாடல்கள் கே. பாலசந்தர் இயக்கிய படங்களில் இடம்பெற்றவை. ‘நிழல் நிஜமாகிறது’ படத்தின் பாடல்களில்தான் எஸ்.பி.பி.யின் குரலில் எத்தனை விதமான பாவங்கள். கண்ணதாசனின் பங்களிப்பு இக்கூட்டணியை மேலும் செழிக்கச் செய்தது. ‘கம்பன் ஏமாந்தான்’ பாடலில், ‘… அந்த வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல… அட… நானும் ஏமாந்தேன்’ எனும் வரியில் சுய இரக்கம், சுய எள்ளல் கலந்த ஒரு சின்னச் சிரிப்பு அவர் குரலில் இருக்கும். அதேபோல், ’இலக்கணம் மாறுதோ’ பாடலில், ‘தெய்வங்கள் எல்லாம் உனக்காகப் பாடும்… பாடாமல் போனால் எது தெய்வமாகும்’ எனும் வரியில் எஸ்.பி.பி.யின் குரலில் இருக்கும் பாந்தமும் பரிவும் உருக்கிவிடும்.

உலுக்கும் வயலின் இசையுடன் தொடங்கும் ‘வான் நிலா நிலா அல்ல’ (பட்டினப் பிரவேசம்) பாடல் இந்த ஜோடியின் இன்னொரு சாதனை. ‘இன்பம் கட்டிலா.. அவள் தேகக் கட்டிலா’ எனும் வரியில் எஸ்.பி.பி.யின் குரலில் ஏக்கம், இயலாமை, தத்துவ மனம் வெளிப்படும். இரண்டு சரணங்களின் இறுதி வரிகளை வயலினால் பிரதியெடுக்கும் எம்.எஸ்.வி.யின் கற்பனை அற்புதமானது.

‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தின் ‘கடவுள் அமைத்து வைத்த மேடை’ மிகப் பெரிய வெற்றியடைந்த பரிசோதனை முயற்சி. ‘அவர்கள்’ படத்தின் ‘ஜூனியர்’ பாடலும் இதில் அடங்கும். ‘மிமிக்ரி’ கலையின் சாத்தியங்களைப் பாடலுக்கு நடுவே புகுத்துவதற்கு அற்புதத் திறன் மட்டுமல்ல, சோதனை முயற்சிக்கான துணிச்சலும் வேண்டும். அது எம்.எஸ்.வி.யிடம் ஏராளமாக இருந்தது.

என்று நினைத்தாலும் இனிக்கும்!

இளையராஜாவின் வருகைக்குப் பின்னர் வெளியான ‘நினைத்தாலே இனிக்கும்’ திரைப்படம் விஸ்வநாதனின் விஸ்வரூபத்தை ரசிகர்களுக்குக் காட்டியது. டைட்டிலிலேயே ‘இது ஒரு தேனிசை மழை’ என்று எழுதியிருப்பார் பாலசந்தர்.

‘எங்கேயும் எப்போதும்’, ‘இனிமை நிறைந்த’ போன்ற பாடல்களில் துள்ளும் உற்சாகம், ‘யாதும் ஊரே’ பாடலில் சுற்றுலாப் பயணியின் குதூகலம், ‘பாரதி கண்ணம்மா’, ‘நினைத்தாலே இனிக்கும்’ பாடல்களில் பொங்கும் காதல் உணர்வு என்று இசையின் வீச்சை எல்லைகளுக்கு அப்பால் கொண்டுசென்றிருப்பார் எம்.எஸ்.வி. அவரது கற்பனைக்கும் உழைப்புக்கும் உயிர் கொடுத்திருப்பார் எஸ்.பி.பி.

கண்ணதாசன் மறையும் வரை- 1980-களின் தொடக்க காலம் வரை எம்.எஸ்.வி.யின் இசைப் பயணத்தில் தொய்வு ஏற்படவில்லை. அதற்குப் பின்னரும் அவரால், ஹிட் பாடல்களைத் தர முடிந்தது. இளையராஜாவுடன் இணைந்து ’மெல்லத் திறந்தது கதவு’ படத்தில் அவர் தந்த பாடல்கள் மறக்க முடியாதவை. குறிப்பாக, ‘தேடும் கண் பாவை தவிக்க’ பாடல் கம்போஸ் செய்யப்பட்டபோது, அதைப் பாடுவது மிகச் சிரமம் என்று நினைத்ததாக எஸ்.பி.பி. குறிப்பிட்டிருக்கிறார். ஒரு கஜல் பாடலுக்குரிய அம்சங்களுடன் மிக மென்மையாக நகரும் அப்பாடல், காலத்தை வெல்லும் கலையாற்றலின் எடுத்துக்காட்டு!

JamesFague
17th July 2015, 12:28 PM
Courtesy: Tamil Hindu

எம்.எஸ்.விக்கு எப்படி இரங்கல் தெரிவிப்பது?


எம்.எஸ்.வி., கண்ணதாசன், ராமமூர்த்தி
மனதில் தோன்றியதை அப்படியே பேசிவிடும் வெகு சிலரில் விஜயகாந்தும் ஒருவர். அதனாலேயே கிண்டலுக்கும் உள்ளாகுபவர் அவர். எம்.எஸ்.வி.யின் மரணத்துக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது ஊடகங்களுக்குப் பேட்டியளித்த விஜயகாந்த் ‘எனக்கு இரங்கல் தெரிவிக்க மனம் வரவில்லை’ என்றார். பெரும்பாலானோரின் உணர்வும் அதுதான். நம்முடன் எப்போதும் இருப்பவர் இவர் என்ற உணர்வு ஒரு சிலரிடம் மட்டும்தான் ஏற்படும்; அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் எம்.எஸ்.வி. அவருடைய இறப்பைப் பற்றிச் சொல்லப்போனால் நம் கிராமத்து வழக்கில்தான் சொல்ல வேண்டும்:

‘கல்யாணச் சாவு’. இப்படிப்பட்ட மரணங்களின்போது ஒரு பெருவாழ்வு நினைவுகூரப்பட்டு ‘ஆகா, எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்’ என்ற பெருமகிழ்ச்சிதான் நம்மிடம் வெளிப்படும். எம்.எஸ்.வி காலமானதைக் கேள்விப்பட்டுப் பலரும் துயரத்தில் ஆழ்ந்துபோய் அவருடைய பாடல்களைக் கேட்க ஆரம்பித்துக் கடைசியில் சந்தோஷ உணர்வை, பரவச உணர்வை அடைந்ததுதான் உண்மை.

யோசித்துப் பார்த்தால் ஒரு விஷயம் புரிகிறது. நாம் கண்ணதாசனைக் கொண்டாடியிருக்கிறோம், டி.எம்.எஸ், பி. சுசீலா, பி.பி. ஸ்ரீனிவாஸ் போன்றோரைக் கொண்டாடியிருக்கிறோம். ஆனால், எம்.எஸ்.வி.யை அந்த அளவுக்குக் கொண்டாடவில்லை.

எம்.எஸ்.வி. இசையமைத்த எம்.ஜி.ஆர்., சிவாஜி பாடல்களைக்கூட எம்.எஸ்.வி-யின் பாடல்களாகக் கருதாமல் எம்.ஜி.ஆர்., சிவாஜி பாடல்களாகக் கருதிதான் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். தனது கலையின் பின்னால் தன்னை மறைத்துக்கொண்டவர் எம்.எஸ்.வி., அதனால்தான் நாம் எம்.எஸ்.வியின் பாடல்களில் கண்ணதாசன், டி.எம்.எஸ், பி. சுசீலா, பி.பி. ஸ்ரீனிவாஸ், எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றோரைக் காண்கிறோமேயொழிய எம்.எஸ்.வியைக் காண்பதில்லை.

ஆக, கண்ணதாசனின் அற்புதமான வரிகள், டி.எம்.எஸ்., பி. சுசீலா, பி.பி. ஸ்ரீனிவாஸ் ஆகியோரின் ஈடிணையற்ற குரல்கள், எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்றோரின் உத்வேகம், சோகம் போன்ற எல்லாவற்றுக்கும் பின்னால் நின்று களம் அமைத்துக்கொடுத்து அவர்களை முன்னிலைப்படுத்தியதுதான் எம்.எஸ்.வியின் இசை. ‘நான் ஆணையிட்டால், அது நடந்துவிட்டால்’ என்று எம்.ஜி.ஆர். நீதியின் சாட்டையை வீசும்போது நாம் எம்.எஸ்.வி.யையா நினைத்துப்பார்க்கிறோம்? எம்.ஜி.ஆரைத்தானே நினைத்துப் புல்லரிக்கிறோம். ‘நான் ஆணையிட்டால்’ என்ற டி.எம்.எஸ்ஸின் குரலைப் பின்தொடரும் ஏற்றமிகு கொம்பு சத்தம்தான் தமிழ் வாழ்வில் எம்.ஜி.ஆரின் இடம் எது என்பதற்கு அழுத்தம் திருத்தமாகக் கட்டியம் கூறியது.

இரட்டை இசையமைப்பாளர்கள்

எம்.எஸ்.வி-யைப் பற்றிப் பேசும்போது அங்கே கண்ணதாசன் இருப்பார். கண்ணதாசனைப் பற்றிப் பேசும்போது எம்.எஸ்.வி. இருப்பார். ‘இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலைக் கேட்கின்றேன்’ என்ற பாடல் வரிகளைக் கேட்கும்போதெல்லாம் பிரமிப்பாக இருக்கும். அதிலும் ‘மன்றம்’ என்ற சொல்லின் பயன்பாடு அற்புதமாக இருக்கும். சாதாரணமாகச் சொல்லும்போது கவித்துவமற்ற, பண்டிதத்தன்மை கொண்ட ஒரு சொல் அது.

ஆனால், எம்.எஸ்.வியின் மெட்டுக்குள் நுழையும்போது அது எளிமையான, அழகான சொல்லாக மாறிவிடுகிறது. இவ்வளவு எளிமையான சொற்கள், அதிக கனமில்லாத சொற்கள், அழகான சொற்கள் எப்படி இவ்வளவு இயல்பாகப் பொருந்தி, ஓடிவருகின்றன என்ற வியப்பு ஏற்படும். யோசித்துப்பார்த்தால் ஒரு உண்மை தெரியும்.

அந்த மெட்டின் இயல்பே அதுதான். வேறு எப்படியும் எழுதிவிட முடியாது. இது கண்ணதாசனைக் குறைத்துச் சொல்வதில்லை. கண்ணதாசனிடம் அற்புதமான வரிகளை வாங்கும் வித்தை எம்.எஸ்.வி.யின் மெட்டுக்குத் தெரிந்திருக்கிறது; எம்.எஸ்.வியின் அற்புதமான மெட்டுக்குள் எப்படிப் பாய்வதென்று கண்ணதாசனின் வரிகளுக்குத் தெரிந்திருக்கிறது. அப்படிப்பட்ட பரஸ்பர உறவு அது.

திரைப்பட இசையைப் பொறுத்தவரை பிரதானமானவர்களாக இசையமைப்பாளர்களையும், அவர்களைச் சார்ந்திருக்கும் இரண்டாம் நிலையினராகப் பாடலாசிரியர்களையும் கருதுவதுதான் வழக்கம். ஆனால், இங்கு ஒரு இசையமைப்பாளர் காலம் முழுவதும் ஒரு பாடலாசிரியரைப் பிரதானப்படுத்தியபடி அவரைத் தூக்கிவைத்துக் கொண்டாடியிருக்கிறாரே, என்ன உறவு அது, என்ன மனிதர் எம்.எஸ்.வி!

அதனால்தான், கண்ணதாசனின் மரணம் தந்த அதிர்ச்சியிலிருந்து எம்.எஸ்.வியும் அவரது இசையும் பெரும்பாலும் மீளவே இல்லை. விஸ்வநாதன்-ராமமூர்த்தி மட்டுமல்ல, விஸ்வநாதன் கண்ணதாசனும் இரட்டை இசையமைப்பாளர்கள்தான். தமிழர்களின் ரத்தத்தில் மயக்கத்தை, உத்வேகத்தை, காதலை, துயரத்தை ஏற்றத் தெரிந்த இரட்டை இசைக் கலைஞர்கள் அவர்கள்.

எத்தனையெத்தனை பாடல்கள்! ‘யார் அந்த நிலவு’ (சாந்தி) பாடலையே எடுத்துக்கொள்வோமே! விசித்திரமான ஒரு உணர்வைக் கொடுக்கும் பாடல். அந்தப் படத்தைப் பார்க்காதவர்களுக்கு அந்தப் பாடல் மௌனியின் கதையைப் படிப்பதுபோல் ஒரு உணர்வை ஏற்படுத்தும். தூரத்தில் ஒலிக்கும் ஒரு பாடலைப் போல அந்தப் பாடலை உருவாக்கியிருப்பார் எம்.எஸ்.வி., அப்படியே பாடியிருப்பார் டி.எம்.எஸ்., அப்படியே எழுதியிருப்பார் கண்ணதாசன். ‘யார் அவள், எனக்கும் அவளுக்கும் என்ன உறவு, இது கனவா நனவா’ என்ற இனம்புரியாத உணர்வுக்கு உயிரூட்டிப் புகைமூட்டமான வரிகளாக எழுதியிருப்பார் கண்ணதாசன்:

இப்படி அவர்களுடைய உறவால் விளைந்த பாடல்கள் ஏராளம். அவர்களுடைய உறவு நம் வாழ்க்கையின் அனைத்து தருணங்களுக்குமான பாடல்களை உருவாக்கியிருக்கிறது. கல்லூரி மாணவர்கள் தங்கள் கல்லூரிப் பருவத்தின் இறுதி நாள் பிரிவுக்கு ‘பசுமை நிறைந்த நினைவு’களை நாடுவது இன்று வரை நடக்கிறது.

காதலி/காதலன் பிரிவில் தவிக்கும் ஒருவருக்கு ‘நினைக்கத் தெரிந்த மனமே’ போன்று ஆறுதல் தருவது ஏது? ‘உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே’ என்ற பாடல் போல் உழைப்பாளிகளுக்கு உத்வேகம் அளிக்கும் பாடல்கள் மிகவும் குறைவு. இன்றும் மணப்பெண்களைக் கிண்டல் செய்ய ‘வாராயோ தோழி’ பயன்படுகிறது.

எம்.எஸ்.வி.க்காக எழுதப்பட்ட அஞ்சலிக் கட்டுரை ஒன்றில் இப்படி எழுதப்பட்டிருந்தது: ‘மயக்கமா கலக்கமா’ என்ற பாடல் ஒரு மனிதரைத் தற்கொலையிலிருந்து தடுத்துக்கொண்டிருக்கும் வரை, ‘காலங்களில் அவள் வசந்தம்’ என்ற பாடல் இன்னும் இன்னும் காதல் கதைகளைப் பூக்கச்செய்யும்வரை எம்.எஸ்.வி. வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்’. இந்த வரிகள் எம்.எஸ்.வி., கண்ணதாசன் இருவருக்கும் பொருந்துகின்றன என்பதைப் பார்க்கும்போது நாம் இவ்வளவு காலம் கண்ணதாசனைக் கொண்டாடியதில் மறைமுகமாக எம்.எஸ்.வி.யையும் கொண்டாடியிருக்கிறோம் என்ற உண்மை நமக்குப் புரிபடும்.

கண்ணதாசன், டி.எம்.எஸ்., பி. சுசீலா, பி.பி. ஸ்ரீனிவாஸ், எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்றோர் மட்டுமல்ல நான், நீங்கள் என்று அனைவரும் சேர்ந்த மொத்தம்தான் எம்.எஸ்.வி. திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல் நாம் வாழும் காலத்துக்கே பின்னணி இசை கொடுத்த அந்த மகத்தான கலைஞனின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பது அபத்தமான விஷயமாக விஜயகாந்துக்குத் தோன்றியதில் ஆச்சரியமே இல்லை!

JamesFague
17th July 2015, 12:31 PM
Courtesy: Tamil Hindu

எம்.எஸ்.வி.- தமிழர்களின் கிலுகிலுப்பை!


இலங்கை வானொலியில் மயில்வாகனன் சர்வானந்தாவோ, ராஜேஸ்வரி சண்முகமோ ‘பொங்கும் பூம்புனல்’ என்று சொல்லும்போது கடிகாரம் எட்டு மணியைக் காட்டும். அப்படியொரு சர்க்கரைப் பொழுதில்தான் எம்.எஸ். விஸ்வநாதன் என் செவியில் நுழைந்து மனசுக்குள் ரங்கராட்டினம் சுழற்றினார்.

‘பூ மாலையில் ஓர் மல்லிகை/ இங்கு நான்தான் தேன் என்றது’ என்கிற பாடல் காதுகளுக்கு தந்த தித்திப்பைப் போன்று எந்தப் பழங்களும் என் வாய்க்குத் தரவே இல்லை.

நின்று நிதானித்துப் பார்க்கும்போது - இன்று நாற்பதைத் தாண்டியிருக்கும் தமிழர்களின் வாழ்க்கைப் பொழுதுகளில் ஒரு சென்டி மீட்டர் இசை மழையையாவது பொழிந்திருப்பார் எம்.எஸ்.வி.

இரவு ஏழரை மணிக்கு திருச்சி வானொலியில் ஒலிப்பரப்பாகும் ‘வயலும் வாழ்வும்’ நிகழ்ச்சியில்

‘தாய் வரம் தந்த வரம்… தாவரம்’ என்கிற பாடல் கசியும். விவசாயப் பின்னணியைச் சேர்ந்த எங்களுக்கெல்லாம் விஸ்வநாதன் இவ்வாறாகத்தான் அறிமுகமாகியிருந்தார்.

காதல், ஊடல், திருமணம், தாம்பத்யம், பிறப்பு, வறுமை, உயர்வு, நட்பு... என வாழ்வின் எல்லா சந்து பொந்துகளிலும் புகுந்து புறப்பட்டிருக்கிறது அவருடைய இசை. தொலைக்காட்சி, கணினி போன்ற நவீன அறிவியல் சாதனங்களின் புழக்கமற்ற அப்போது ரேடியோதான் சந்தோஷ வாசல். அந்த வாசல் வழி வழிந்தோடிய விஸ்வநாதனின் விரல் வித்தை தமிழர்களின் 50 ஆண்டு கால மகிழ்ச்சியின் நீளம்.

எம்.எஸ்.வியின் சாதனை என்பது தமிழ்த் திரையிசையின் பாதி வரலாறு. படத்தின் பெயர் தெரியாது; அந்தப் படத்தைப் பார்த்திருக்க வேண்டிய கட்டாயமும் இல்லை. ஆனால், இது ‘எம்ஜிஆர் பாட்டு; இது சிவாஜி பாட்டு’ என்று சொல்லிவிட முடிகிற அளவுக்கு டி.எம்.எஸ்.ஸின் பக்கபலத்தோடு வித்தியாசம் காட்டியது எம்.எஸ்.வியின் இசை நுணுக்கம்.

ஒரு காலத்தில் மேட்டூர் அணையில் திறக்கப்படும் காவிரி நீர் கடைமடை வரை பாய்ந்தோடியதைப் போல எல்லோருக்குமான இசையைத் தந்ததுதான் எம்.எஸ்.வி.யின் முதல் சாதனை.

அடுத்தது - அவர் போட்ட மெட்டுக்கள். சுயம்புவாக அவர் கொடுத்த பாடல்கள் அனைத்தும் வரலாற்றில் ‘கிளாஸிகல்’ ரகத்தில் சேர்ந்துவிடும். மாடர்ன் தியேட்டர்ஸ் ‘சுகம் எங்கே’ என்று ஒரு படம் தயாரித்தது. இசையமைப்பாளர்களாக ஒப்பந்தமான விஸ்வநாதன் - ராமமூர்த்தியிடம் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர். சுந்தரம் “இந்தி டியூன் கொடுத்தா பாட்டு போடுவீங்களா?” என்று கேட்டுள்ளார்.

“நாங்க சொந்தமாதான் டியூன் போடுவோம். விருப்பமிருந்தா எங்களை புக் பண்ணுங்க. இல்லேன்னா எங்களை விட்டுடுங்க” என்று கம்பீரமாகச் சொன்னவர் எம்எஸ்வி.

எங்கள் கிராமத்தில் தங்கராசு என்கிற ஒரு சிகைதிருத்துநர் இருந்தார். அவருடைய ‘சார்மினார்’ சலூன்தான் எங்களின் விடுமுறை விருப்பம். எம்.எஸ்.வி.யின் தீவிர ரசிகர். ஒரு பாடலில் அதன் வரிகளை மட்டும் பாட மாட்டார். பாடலின் ஆரம்பத்திலோ இடையிலோ கடைசியிலோ வரும் இசைக் கருவிகளின் ஜாலங்களையெல்லாம் அவர் உருட்டிவிடும்போது, நாங்கள் திக்குமுக்காடிப்போவோம்.

‘ஊட்டி வரை உறவு' படத்தில் பி.சுசீலா பாடியது 'தேடினேன் வந்தது' என்கிற பாடல். அதனை தங்கராசு,

'தேடினேன் வந்தது...

டின்டக்கு டின்டக்கு...

நாடினேன் தந்தது

டின்டக்கு டின்டக்கு'

என்று பாடியதை நினைத்துப்பார்க்கும்போது எம்.எஸ்.வியின் இசை சாம்ராஜ்யம் தங்கராசு வரை விரிந்திருந்தது தெரிகிறது.

‘அவளுக்கென்ன அழகிய முகம்' என்ற ‘சர்வர் சுந்தரம்' படப் பாடலை பாடும்போது பாடல் வரிகளுக்கு இடையே டிரிபிள் பாங்கோஸும், கிளாரிநெட்டும் சேர்ந்திசைக்கும்

‘பாபப்பப்பம் பாபபப பாபப்பப்பம்...

ன்ட்டாகு... ன்ட்டாகு... ன்ட்டாகு’ என்று தங்கராசுக்குள் எம்.எஸ்.வி. புகுந்து புறப்படுவார்.

‘பாகப் பிரிவினை' படத்தில் ‘தாழையாம் பூ முடிச்சு' பாடலின் இடையே ஒலிக்கும்

‘தந்தானே தானனன்னே... தானன்னே தானனன்னே... தானன்ன தானானே...'

என்கிற ஹம்மிங்கை தங்கராசு மூலம் எங்கள் கிராமத்துக் கீர்த்தனையாக்கியவர் எம்எஸ்வி.

‘சிவந்த மண்' படத்தில் ‘ஒரு ராஜா ராணியிடம்' என்கிற பாடலை தங்கராசு பாடிக்கொண்டே வருவார். இடையில்

‘டண்டரரானே டண்டரரானே... டண்டர டண்டர டண்டர டண்டரரா...' என்று முழங்கிவிட்டு

‘வெள்ளிய மேகம் துள்ளி எழுந்து அள்ளி வழங்கும் வெள்ளைப் பூவில்

புதுவிதமான சடுகுடு விளையாட்டு

விட்டுவிடாமல் கட்டியணைத்து

தொட்டது பாதி பட்டது பாதி

விதவிதமான ஜோடிகள் விளையாட்டு

இது காதலில் ஒரு ரகமோ இங்கு காதலர் அறிமுகமோ’ என்று சரணத்துக்குள் பாய்ந்துவிடுவார்.

ராகம், ஆலாபனை, அவரோகணம், தாளக்கட்டு, நோட்ஸ் எதுவுமே தெரியாது தங்கராசு என்கிற எங்கள் ஊர் எம்.எஸ்.வி.க்கு. தமிழகத்தில் எத்தனையோ தங்கராசுக்கள் இன்னமும் வாழ்கிறார்கள். இந்தச் சாதனையை எந்தத் திரையிசைக் கலைஞனும் இதுவரை நிகழ்த்தவே இல்லை.

சாஸ்திரிய இசை அரங்குகளில் பாடிக்கொண்டிருந்த பாலமுரளி கிருஷ்ணாவை ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த ‘கலைக்கோயில்’ படத்தில் ‘தங்க ரதம் வந்தது வீதியிலே…’ பாடலைப் பாட வைத்து, இன்னொரு உலகில் புகழ்பெற்ற மேதமையைத் தமிழ் திரையிசைக்குள் கொண்டுவந்தார் எம்.எஸ்.வி.

‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் ஒரு பாடலில் உண்மையிலேயே ஓர் அபூர்வ ராகத்தைப் பயன்படுத்த நினைத்தார் எம்.எஸ்.வி. அந்த நேரத்தில் பாலமுரளி கிருஷ்ணா ‘மஹதி’ என்கிற பெயரில் ஒரு ராகத்தை உருவாக்கியிருந்தார். அந்த ராகத்தையும் வேறு சில ராகங்களையும் குழைத்து ஒரு ராகமாலிகையாக எம்.எஸ்.வி. கம்போஸ் செய்ததுதான் ‘அதிசய ராகம் ஆனந்த ராகம் அழகிய ராகம் அபூர்வ ராகம்’ பாடல்.

பந்துலு, பீம்சிங், ஸ்ரீதர், பாலசந்தர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் என்று பல இயக்குநர்கள் தங்களின் பல்லக்கை வெற்றிகரமாக நகர்த்த சக்கரமாக இருந்தவர் எம்.எஸ்.வி. திரைப்படப் பாடல்களை இசையை உரித்துவிட்டுப் பார்த்தால் அதில் உள்ள தமிழ் சட்டென்று நம்மைக் கவர்ந்திருக்காது. கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், முத்துலிங்கம் போன்ற கவிஞர்களை நாம் கொண்டாட விஸ்வநாதன் ஒரு மூல காரணம்.

தமிழ்த் திரையிசையில் பல வடிவங்களில் இசையை வாரி வழங்கியவர் எம்.எஸ்.வி.

‘அன்புள்ள மான்விழியே/ஆசையில் ஓர் கடிதம்/ நான் எழுதுவதென்னவென்றால்/ உயிர்க்காதலில் ஓர் கவிதை’ என்று அஞ்சல் அட்டைக்கு இசைச் சிறகு முளைக்க வைப்பார்.

‘பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி/ புது சீர் பெறுவாள் வண்ணத் தேனருவி’ என்று கல்யாணப் பத்திரிகை வடிவில் அட்சதை தூவும் ஒரு பாடல். இந்தப் பாடலில் வரும் ‘தங்கள் நல்வரவை விரும்பும்/ ரகுராமன் ரகுராமன் ரகுரா…மன்’ என்கிற வரிகளின்போது யாருக்கும் தெரியாமல் கண்களைத் துடைத்துக்கொண்ட பல அண்ணன்களை நான் பார்த்திருக்கிறேன்.

‘வாராயோ தோழி வாராயோ’ என்று பல தமிழ் வீடுகளின் வாசலுக்கு மருமகள்களை வலது காலை எடுத்து வைத்து அழைத்து வந்திருக்கிறது எம்.எஸ்.வி-யின் இசை.

‘மலர்ந்தும் மலராத பாதி மலர் போல

மலரும் விழிவண்ணமே - வந்து

விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக

விடிந்த கலையன்னமே

நதியில் விளையாடிக் கொடியில் தலைசீவி

நடந்த இளம் தென்றலே’ என்று ‘பாசமலர்’ படத்தில் கண்ணதாசனுடன் இணைந்து எம்.எஸ்.வி தந்த இசை தாலாட்டும் தாலாட்டு பாடியவர்களும் காணாமல் போன இந்நாட்களில் தமிழர்களின் கிலுகிலுப்பையாகும்.

chinnakkannan
17th July 2015, 12:52 PM
வாசு,
என்ன சொல்ல பாட்டைப் பற்றிச் சொல்லாமல் இருக்கலாமா..

//இந்தப் பாட்டிற்கு HTML ஒர்க்கெல்லாம் கிடையாது. பதிவுகள் கருப்பு வெள்ளையில்தான்// எனில் இந்த வரி தான் உங்கள் வயதைக் காட்டுகிறது..!

அந்தக் காலத்தில் ஹீரோவிற்கெல்லாம் கஷ்டமான வேலை..ஆ..ஊ என்றால் ஹீரோயினைத்தூக்கிக் கொள்வது போல் காட்டுவார்கள்..அதில் முகத்தில் சிருங்காரம் வேறு காட்ட வேண்டும்..என்ன சுவை என்னசுவை என நிர்மலாவைத் தூக்கியபடி பாடும் போது எப்படித் தான் கனத்தை முகத்தில்மறைத்தாரோ சிவகுமார்!

//விழி சிவந்தது
வாய் வெளுத்தது// வாயின் சிவப்பு விழியிலே மலர்க்கண் வெளுப்பு இதழிலே வரி நினைவில் வரவில்லையா.. மன்னவனின் தோளிரண்டை மங்கை எந்தன் கை தழுவ கார்குழலும் பாய் விரிக்கும் கண்சிவந்து வாய் வெளுக்கும்.. அதுவும் நினைவில்.வருகிறது

முழுக்க நனைந்து டூயட் பாடி முடித்த பிறகு சிவக்குமார் கோட் கழற்றி நிர்மலா நனையாமல் இருக்க அவருக்குப் போடுவது டைரக்டோரியல் டச்!

அந்தக்காலத்தில் கண்ணனும் கோபியரும் அதுவும் இந்த ப்படம் தானே..!

இருந்தாலும் பாடலில் மூழ்கி அழகாய் அலசி விலாவாரியாக எழுதி – எனக்கு வந்த இந்த மயக்கம் உங்களுக்கும் (எங்களுக்கும்) வரவேண்டும் என எழுதியதற்காக ஒரு குட்டிப் பரிசு (போட்டாச் இல்லை)

https://youtu.be/1UykRR6ZA_o


போனஸாக..


தாநூறு என்றாலோ சட்டெனவே கண்சிவந்து
தேனூறும் தெள்ளுதமிழ் பேச்சினிலே - வானூறும்
தூறலென மென்மையினைக் கன்னத்தில் சுட்டியே
பூடகமாய்க் கிள்ளியதே பூ


https://youtu.be/ddcUDbK-8Yg

மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு…
முப்பாலுக்கும் அப்பால் போகும் எந்தன் கண்ணுக்கு..

*

uvausan
17th July 2015, 12:56 PM
CK - ஒரு புதிய கோணத்தில் மற்றைய உறவுகளை 3வது பாகத்தில் அலசலாம் என்றிருந்தேன் - தலைப்பு அதே என்றாலும் - சொல்லக்கூடிய விஷயங்கள் வேறு . ஒரு circuit complete பண்ணலாம் என்றிருந்தேன் - உங்களுக்கு பிடிப்பு இல்லை என்பதை உணர்ந்துகொண்டேன் . வேறு புதிய எண்ணங்கள் , கருத்துக்கள் தோன்றும் வரை இந்த திரியில் ஒரு பார்வையாளர் ஆக இருந்து , உங்கள் , மற்றும் பலரின் பதிவுகளைப்படித்து திறமைகளை இன்னும் வளர்த்துக்கொள்ளலாம் என்ற நினைக்கிறேன் - என்றாவது ஒரு நாள் கண்டிப்பாக மீண்டும் சந்திப்போம் இதே திரியில் .....
அன்புடன்

adiram
17th July 2015, 12:57 PM
டியர் ரவி சார்,

கருவின் கரு என்ற அருமையான தலைப்பை எடுத்துக்கொண்டு, அதை மிக மிக சுவாரஸ்யமாகவும் நேர்த்தியாகவும் கொண்டு சென்று 201 வெற்றிப்பதிவுகளை பூர்த்தி செய்திருப்பது ஒரு இமாலய சாதனை. என்பதில் சந்தேகமில்லை.

ஒவ்வொரு பதிவுக்கும் எடுத்துக்கொண்ட உண்மைச்சம்பவங்கள், எடுத்துக்கொண்ட முயற்சிகள், ஒவ்வொரு குட்மார்னிங் கிற்காக பதித்த காணக்கிடைக்காத அருமையான நிழற்படங்கள் (குறிப்பாக துருவக் கரடிகளின் விளையாட்டு) அனைத்தும் சூப்பர் அட்டகாசம். எல்லாவற்றிற்கும் மேலாக தந்தையரின் தியாக வாழ்க்கை பற்றிய அற்புத அலசல்கள் மனதைத் தொட்டன,

உங்கள் வித்தியாச பதிவுகளால் மதுர கானம் திரி பெருமை பெற்றுள்ளது.

மூன்றாம் பாகத்துக்கு வாழ்த்துக்கள்.

chinnakkannan
17th July 2015, 01:09 PM
என்றாவது ஒரு நாள் கண்டிப்பாக மீண்டும் சந்திப்போம் இதே திரியில் .// ரவி..கோபம் இல்லை தானே.. என்றாவது ஒரு நாள் என்பதெல்லாம் செல்லாது.. நீங்கள் உங்கள் எண்ணங்க்ளை வழக்கம் போல் தொடருங்கள்.. பிடிப்பில்லை என்று சொல்லவில்லை.. ஆதிராமும் என் இதயத்துடிப்பை எகிற வைத்துவிட்டார்..கடைசி வரிக்கு தாங்க்ஸ் அவருக்கு - அதாவது கருவின் கருவிற்குத்தான் ஓய்வு எனச் சொல்லியிருக்கிறாரே தவிர உங்களை அல்ல..

அகெய்ன் கோபம் இல்லை தானே..

adiram
17th July 2015, 01:34 PM
டியர் வாசு சார்,

உல்லாசப் பறவைகள் படத்தின் 'அழகு ஆயிரம்' பாடலின் விஸ்தாரமான ஆய்வு அருமையோ அருமை.

நேர்மையாக சொல்வதென்றால் உங்கள் ஆய்வுக்கு முன் அந்தப்பாடலை படத்தில் பார்த்தபோது அவ்வளவாக என்னைக் கவரவில்லை. இளையராஜா பாடல் என்பதால் அசுவாரஸ்யமாக பார்த்ததாலோ அல்லது காட்சி பிரம்மாண்டத்தில் மனதைப் பறிகொடுத்ததாலோ தெரியவில்லை.

ஆனால் இப்போது கேட்கும்போது உங்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும் முன்னைவிட மனத்தைக் கவர்கிறது என்பதில் சந்தேகமில்லை.

பாடல் ஆய்வில் வழக்கம்போல உங்கள் அபரிமிதமான உழைப்பு மலைக்க வைக்கிறது. பாராட்டுக்கள்

adiram
17th July 2015, 01:47 PM
டியர் சின்னக்கண்ணன் சார்,

தங்கள் வருகை மனதுக்கு மகிழ்ச்சியை தருகிறது. இனி உங்கள் பங்குக்கு அதிரடி ஆரம்பம் ஆகட்டும்.

நீங்கள் கேட்ட 'கண்ணுக்கு தெரியாத அந்தசுகம்' பாடலில் முத்துராமன் ஜோடி விஜயநிர்மலா. ஏற்கெனவே வாசு சார் சொல்லியிருக்கிறார்.

அந்தப்பாடல் சாத்தனூர் அணையில் எடுக்கப்பட்டதல்ல. வேறொரு அணைக்கட்டு. பெரிய மீன் வயிற்றுக்குள் ஒரு அக்குவாரியம் (மீன்காட்சி சாலை) அமைக்கப்பட்டிருக்கும். மு.க.முத்துவின் பிள்ளையோ பிள்ளையின் 'மீனாட்டம் கண்கொண்ட மீனாட்சி' பாடலிலும் இந்த அணைக்கட்டுதான். (பெயர்தான் தெரியவில்லை. வாசு சார் இருக்கையில் கவலை எதுக்கு?)

உனக்காக நான் படத்தில் நடிகர்திலகம் - லட்சுமி டூயட் படமாக்கப்பட்டது மலம்புழா அணைக்கட்டில். அங்குள்ள மிகப்பெரிய நிர்வாண யட்சிணி சிலை ரொம்ப பேமஸ்.

மாட்டுக்கார வேலனின் 'பட்டிக்காடா பட்டணமா' பாடல் வைகை அணையில் எடுக்கப்பட்டது.

சாத்தனூர் அணையும், வைகை அணையும் பெருந்தலைவர் ஆட்சியின் நூற்றுக்கணக்கான சாதனை வெள்ளத்தின் இரு துளிகள்.

adiram
17th July 2015, 02:02 PM
டியர் வாசு சார்,

என் வேண்டுகோளை ஏற்று பாபு படத்தில் இடம்பெற்ற 'என்ன சொல்ல என்ன சொல்ல' பாடல் ஆய்வை சமர்ப்ப்பித்ததற்கு மிக்க நன்றி.

பாபு படத்தின் இடைவேளைக்குப்பின் பாபுவின் தியாகம், சோகம் என்று சென்று கொண்டிருந்ததை மாற்றி சற்று கிளுகிளுப்பூட்ட 'அந்தக்காலத்தில் கண்ணனும் கோபியரும்' பாடலையும் 'என்ன சொல்ல என்ன சொல்ல' பாடலையும் இடம் பெறசெய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். இரண்டிலும் நம்ம ராட்சசி கலக்கியிருப்பார்.

மேலும் நடிகர்திலகம் தன படங்களில் நடிக்கும் சக நடிகர்களுக்கும் டூயட் பாடல் கொடுத்து மகிழ்வார் என்பதற்கு 'என்ன சொல்ல என்ன சொல்ல' இன்னொரு எடுத்துக்காட்டு.

'நான் கொடுத்த முத்திரைக்கு நன்றி சொல்' என்னுமிடங்களில் பாலா கொஞ்சுவார். எனக்கென்னவோ இந்தப்பாடல் அவ்வளவு விரசமாக தெரியவில்லை.

கருப்புவெள்ளை பாடல் ஆய்வை கருப்பு வெள்ளையிலேயே தந்திருப்பது பொருத்தமே.

உங்களைப்பார்த்து, நடிகர்த்திலகத்தைப்போல 'கேட்டதும் கொடுப்பவனே(ரே)' என்று பாடுவதா அல்லது ஜெயந்தியைப்போல 'நான் கேட்டேன் அவன்(ர்) தந்தான்(ர்)' என்று பாடுவதா என்று தெரியவில்லை.

பாராட்டுவதற்கு ரவி சாரைப்போல நானும் புது மொழியைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

JamesFague
17th July 2015, 02:02 PM
Courtesy: Tamil Hindu


எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு மெல்லிசை மன்னர் பட்டம் வழங்கியது யார்?


திருவல்லிக்கேணி கல்சுரல் அகாடமி ஆதரவில், என்.கே.டி. கலா மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் (இடமிருந்து) சிவாஜி கணேசன் தலைமை தாங்க, கவிஞர் கண்ணதாசன் முன்னிலை வகிக்க, ‘மெல்லிசை மன்னர்கள்’ விருதுடன் டி.கே.ராமமூர்த்தி, எம்.எஸ்.விஸ்வநாதன்.
திருவல்லிக்கேணி கல்சுரல் அகாடமி ஆதரவில், என்.கே.டி. கலா மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் (இடமிருந்து) சிவாஜி கணேசன் தலைமை தாங்க, கவிஞர் கண்ணதாசன் முன்னிலை வகிக்க, ‘மெல்லிசை மன்னர்கள்’ விருதுடன் டி.கே.ராமமூர்த்தி, எம்.எஸ்.விஸ்வநாதன்.
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு ‘மெல்லிசை மன்னர்’ பட்டம் வழங்கியது யார், எப்போது, எங்கே என்பது குறித்து பலவிதமான செய்திகள் வெளியாகின்றன.

எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும், அவருடன் இணைந்து இசையமைப்பில் ஈடுபட்ட டி.கே.ராமமூர்த்திக்கும் சேர்த்தே ‘மெல்லிசை மன்னர்கள்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. இதுதொடர்பாக 1963-ம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி வெளியான ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் வெளிவந்த தகவல் இதோ:

‘தி இந்து’ மற்றும் ‘ஸ்போர்ட் & பாஸ்டைம்’ பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்த கஸ்தூரி சீனிவாசன் நினைவாக நூலகம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அந்த நூலகத்துக்கு நிதி திரட்டும் நல்ல நோக்கத்தில் பிரபல திரைப்படக் கலைஞர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. திருவல்லிக்கேணி கல்சுரல் அகாடமி ஆதரவில் என்.கே.டி. கலா மண்டபத்தில் 1963 ஜூன் 16 மாலை 6 மணிக்கு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தலைமை தாங்கினார். கவிஞர் கண்ணதாசன் முன்னிலை வகித்தார். ஜெமினி கணேசன், சாவித்திரி, ஏ.எல்.சீனிவாசன், இயக்குநர் ஸ்ரீதர், சித்ராலயா கோபு, சந்திரபாபு உட்பட பலர் கலந்துகொண்டு விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை இரட்டையர்களை பாராட்டிப் பேசினர். அப்போது இருவருக்கும் ‘மெல்லிசை மன்னர்கள்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. அதற்கு நன்றி தெரிவித்து எம்.எஸ்.விஸ்வநாதன் பேசினார். அந்த நிகழ்ச்சியில் 45 இசைக் கலைஞர்களைக் கொண்ட குழு 3 மணி நேரத்துக்கு அற்புதமான இசை விருந்து அளித்தது. பீ.பி.ஸ்ரீனிவாஸ், பி.சுசீலா, எஸ்.ஜானகி, எல்.ஆர்.ஈஸ்வரி, வீரமணி, சந்திரபாபு ஆகியோர் பாடினர். பின்னணி இசைக் கலைஞர்கள் வழங்கிய அந்த மெல்லிசை விருந்தில் 3,000 ரசிகர்கள் மூழ்கித் திளைத்தனர். குறிப்பாக ஸ்ரீனிவாஸ், சுசீலா, ஜானகி ஆகியோரின் பாடல்களை வெகுவாக ரசித்தனர்.

இசையமைப்பாளர்கள், பாடகர்களுக்கு லட்சுமி திருவுருவம் பொறித்த கேடயங்களை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நினைவுப் பரிசாக வழங்கி நன்றி தெரிவித்தனர். நிகழ்ச்சிக்கு வந்தவர்களை வரவேற்றும், நிகழ்ச்சி முடிந்த பிறகு நன்றி தெரிவித்தும் திருவல்லிக்கேணி கல்சுரல் அகாடமி துணைத் தலைவர் ஆர்.ரங்காச்சாரி பேசினார். இவ்வாறு ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

adiram
17th July 2015, 02:11 PM
டியர் குமார் சார்,

உங்கள் ஆவண அணிவகுப்பு மலைக்க வைப்பதுடன் அந்தந்த காலங்களுக்கு மனதை பயணிக்க வைக்கிறது.

ஏற்கனவே ஆவணப் பதிவுகளை அள்ளித்தந்து கொண்டிருந்த பம்மலார் சார், வினோத் சார் இருவரும் என் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளனர். அவர்களுக்கு அருகில் உங்களுக்கும் ஒரு சிம்மாசனம் போட்டுவிட்டேன். (ஆய்வு பதிவுகள் எழுதும் வாசு சார், கோபால் சார், ராகவேந்தர் சார், ரவி சார், ஆகியோருக்கான சிம்மாசனங்கள் அடுத்த அறையில்).

உங்கள் அபார உழைப்புக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்கள், நன்றிகள்.

அருமை... அற்புதம்... அட்டகாசம்...

RAGHAVENDRA
17th July 2015, 03:01 PM
மது
தங்கள் உடல் நிலை எவ்வாறுள்ளது. உடல் நலன் பேணவும்.
தங்களுக்கு எப்பொழுதெல்லாம் அவகாசம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் இங்கு பங்கு கொள்ளவும்.

RAGHAVENDRA
17th July 2015, 03:05 PM
மெல்லிசை மன்னர்கள் பட்டம் பற்றி ...
திருவல்லிக்கேணி கல்சுரல் அகாடெமி சார்பில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவருக்கும் பட்டம் அளிக்க தீர்மானித்த போது உறுப்பினர்களிடையே பல்வேறு பட்டங்களைத் தரச்சொல்லி அதற்கேற்ப அவர்களிடமிருந்து வந்திருந்த பல்வேறு பட்டங்களிலிருரந்து தேர்ந்தெடுக்கப்பட்டது தான் மெல்லிசை மன்னர்கள் பட்டம்.
அவ்வகையில் நடிகர் திலகம், மெல்லிசை மன்னர்கள் இரண்டுமே ரசிகர்கள் அளித்த பட்டங்கள். இவையே இவர்களுக்கு நிரந்தரமாக அமைந்தது இறைவனின் சித்தம்.

vasudevan31355
17th July 2015, 03:21 PM
'நான் தன்னந்தனிக் காட்டு ராஜா'

ரவி சார்,

'கருவின் கரு' - 201 ல் நடிகர் திலகத்தின் 'எங்க மாமா' படப் பாடலான 'நான் தன்னந்தனிக் காட்டு ராஜா' பாடலைப் பதிவிட்டு கொன்று விட்டீர்கள் கொன்று.

இந்தப் பாடலும், பாடலில் நடிகர் திலகம் என்னுள் ஏற்படுத்திய தாக்கமும் சொல்லி மாளாது. இன்றுவரை வியந்து, வியந்து பார்த்து ரசிக்கும் சந்தோஷப் பாடல் இது.

உணர்ச்சிக் கலவைகளுக்கு இடம் தராமல் குழந்தைகளோடு குழந்தையாய் 'நடிகர் திலகம்' என்ற தெய்வக் குழந்தை விளையாட்டாய், படுஜாலியாய், கவலை கிஞ்சித்தும் இல்லாமல் எல்லாவற்றுக்கும் மேல் ஆர்ப்பரிக்கும் கொள்ளை அழகால், இணையே இல்லாத ஸ்டைலால் அத்துணை பேரையும் கட்டிப் போட்ட பாடல் இது.

நடிகர் திலகத்திற்கென்றே எழுதப்பட்ட வரிகள்.

http://i.ytimg.com/vi/Yyhqu8jDWLs/hqdefault.jpg

'நான் தன்னந்தனிக் காட்டு ராஜா'

உண்மைதானே! எங்கும் எதிலும் அவர் 'தன்னந்தனிக் காட்டு ராஜா' தானே!

அதை வாயால் சொல்லிப் பார்க்கும் போதே அப்படி இனிக்கும். ('எங்கள் தங்க ராஜாவும்' அப்படியே)

இந்தப் பாடல் ஆரம்பிக்கும் போது அழகான ஒரு ஏரியில் (வேடந்தாங்கல்?) தண்ணீரில் மூழ்கி இருக்கும் மரக்கிளைகளில் இருந்து பறவைகள் ரம்மியமாக சிறகடித்துப் பறக்கும். அது ஏன் தெரியுமா?

அந்தப் பறவைகள் உல்லாசமாகப் பறந்து அனுபவிப்பதைப் போல இந்தப் பாடலை அதே சந்தோஷத்துடன் நீங்கள் அனுபவிக்கத் தொடங்குங்கள் என்று அர்த்தம் சொல்வதாகவே நான் நினைக்கிறேன்.

(நடிகர் திலகத்தோடு குழந்தைகள் உல்லாச பிக்னிக் என்பதற்கு பறவைகள் குதூகலம் என்ற திருலோக்கின் டைரெக்ஷன் 'டச்' அது என்பது வேறு)

சென்னை சிட்டியின் சென்ட்ரலுக்கு எதிரே பிரதான சாலைகளில் குழந்தைகள் அனைவரையும் ஏற்றிக் கொண்டு, அந்த 'டப்பா' சிகப்புக் கலர் ஓப்பன் காரை ஆரம்பக் காட்சியில் நடிகர் திலகமே ஓட்டி வருவார். பின்னால் ஒரு பிளாக் அம்பாஸிடர் வந்து கொண்டிருக்கும். உங்கள் 'கரு'வின் தந்தை ஒருவர் அவர் மகனை கைப்பிடித்தபடி அழைத்து வருவார்.

ரோடின் பக்கவாட்டு சாலையில் நடிகர் திலகம் காரோட்டும் அழகைப் பார்த்தவாறு ஷூட்டிங்கை ரசித்தபடி சிலர் மிதிவண்டிகளில் வேகமாக காருக்கு இணையாக சைடில் வந்து கொண்டிருப்பார்கள். இரண்டு கார்கள் கூட வந்து கொண்டிருக்கும். நல்ல உச்சி வெயிலில் இந்தக் காட்சியை எடுத்திருப்பார்கள். பிறகு பேக் புரஜெக்ஷன்.

மிக அழகான பூஞ்சிறகு பதித்த ரெட் ஹேட் அணிந்திருப்பார் நடிகர் திலகம். உள்ளே ரெட் ஷர்ட்டும், வெளியே வெளிர் சந்தன கோட்டும் கோலாகல கோமானாய்க் காட்டும் அவரை.

http://i61.tinypic.com/x0r1o5.jpg

'நான் தன்னந்தனிக் காட்டு ராஜா'

என்று வலது கை ஆள்காட்டி விரலை முகத்துக்கு நேரே உயர்த்தும் போதே ரசிகர்களின் ஆள்காட்டி விரலும், கட்டை விரலும் ஒன்றாகச் சேர ஆரம்பித்து விசில் வீ(பீ)றிட்டுக் கிளம்ப ஆரம்பித்து விடும். கொட்டகை இரண்டு படும்.

'ராஜா' என்னும் போது அந்த காந்த வார்த்தையை அமர்க்களமாக நம் 'ராஜா' அழுத்தமாக வாயசைப்பில் கொண்டு வருவார். ராஜா இல்லையா? 'ராஜான்னா ராஜா'தான்.

தலைகளில் வித வித தொப்பி அணிந்து, கைகளில் இசைக்கருவிகள் சுமந்து, எத்தனை அழகு கொட்டிக் கிடக்குது அந்தக் குழந்தைகளிடம்!

http://i58.tinypic.com/kbr9qu.jpg

ஜெய கௌசல்யா, ('தங்கை'யில் தங்கை, 'நீதி'யில் உடன் பிறவா தங்கை, 'ஞான ஒளி' யில் தலைவரின் பேத்தி பிரமோஷன் என்று நிறைய) ரோஜாரமணி, ('இரு மலர்களி'ல் ஒரு மலரின் மகள், பின்னால் 'என் மகனி'ல் மகள் மற்றும் தங்கை என்று இவரும் நிறைய) மற்றும் பிரபாகர், சேகர், லட்சுமி, விஸ்வேஸ்வரராவ், ரஜனிஸ்ரீ, சுரேந்திர குமார், ஜிந்தா, மாஸ்டர் ராமு, சுமதி, ரமேஷ் என்று நீளமான பட்டியலில் குழந்தை நட்சத்திரங்கள் நடித்திருப்பார்கள் நம் பெரிய குழந்தை பேரழகனுடன்.

http://i61.tinypic.com/ac4gop.jpg

'நான் தன்னந்தனிக் காட்டு ராஜா' என்று மறுபடி பாடும் போது நெற்றியையும், வலது கண்ணையும் மறைக்குமளவிற்கு தொப்பியை ஸ்டைலாக முன்னால் இழுத்து விடுவார் இந்த மூக்கழகர். மூக்குப் பகுதியிலிருந்து முகவாய்க்கட்டை வரை குறுக்கி, பெருமிதம் பொங்க 'இந்தத் தனிக்காட்டு ராஜாவுக்கு' நிகர் எவருமில்லை என்று உணர்த்துவார். நாக்கை சற்று முன் வைத்து கடித்தவாறு வாயசைப்பு அருமையாக இருக்கும். குழந்தைகள் 'ஊ ஊ' என்று இரைச்சல் இடும் போது டிரைவ் செய்தபடி அழகாக அவர்களைத் திரும்பிப் பார்ப்பார். இப்போதும் பக்கத்தில் ஷூட்டிங் பார்க்கும் ஜனங்களைப் பார்க்கலாம்.

அடுத்து மெரினா கடற்கரை. 'என்னப் பார்வை உந்தன் பார்வை?' என்று முத்து கார் ஓட்டியபடி காஞ்சனாவுடன் காதல் புரிந்த அதே இடம். அங்கு ரொமான்ஸ் செய்யும் ஒரு காதல் ஜோடியை குழந்தைகள் செமையாய்க் கத்திக் கலாய்க்கும்.

அப்படியே எல்.ஐ.சி கட்டிடம். மவுண்ட் ரோடு. குழந்தைகளின் வாத்தியங்கள் வாசிப்பு சப்தம் கேட்டு தாங்க முடியாதவாறு மிக அழகாக காதுக்குள் விரல் விட்டு அடைத்து குடைவார். (கோபால் சாருக்கு மிக மிக பிடித்த சீன் இது)

'முத்தம் கொடுக்கையில் மூக்கைக் கடித்திடும்'

வரிகளில் குழந்தைகளின் குறும்பைத் தாங்க மாட்டாமையை விழிகளை அகல விரித்துக் காட்டுவார்.

அடுத்து மெட்ராஸ் மிருகக் காட்சி சாலையில் குழந்தைகளோடு Midget train விளையாட்டு ரயில் பயணம். எஞ்சின் டிரைவருடன் சேர்ந்து நீராவிப் புகை முகத்திலடிக்க பயணம் செய்வார்.

அடுத்து வரும் காட்சிதான் மிக மிக அற்புதம்.

http://i61.tinypic.com/esjndv.jpg

ரயிலிலிருந்து இறங்கி, ரயில் பக்கத்தில் வந்து கொண்டிருக்க, ரயிலின் கூடவே விசலடித்தபடி, பேண்ட்டின் இரண்டு பாக்கெட்டுகளிலும் கை விட்டுக் கொண்டு, அப்படியே தொப்பியையும் சரி செய்து கொண்டு, மெதுவான ஸ்டைலான ஓட்டத்தில் கைகளை மிக அழகாக வைத்துக் கொண்டு பின்னி விடுவார் பின்னி. பிரவுன் நிற பேன்ட் பிரமாதம்.

சப்பாத்திக் கள்ளிச் செடியின் தடிமனான கடின இலைகளின் மேல் முள்ளால் எழுத்துக்கள் எழுதினால் எக்காலமும் அது அழியாதாம். அது போல இந்தக் காட்சி என் மனதை விட்டு அழியவே அழியாது. நான்கே விநாடிக் காட்சி. நாற்புறம் எரித்த சிவனே ஆனாலும் அதை அழிக்கவே முடியாது.

இந்த ஒரு காட்சிக்காகவே இப்பாடலின் ஆய்வை எடுத்தேன்.

மறுபடி ரயிலில்.

மெல்ல வளர்ந்திடும் செல்லக் குழந்தைகள்
நாளை உலகத்தை ஆளும் தலைவர்கள்
வஞ்சம் அறியாத பிஞ்சுக் கரங்களில் வாழத்
துடிக்கின்ற வேகம் இருக்குது

அப்படியே பொருட்காட்சிக்கு காட்சி நகரும்.

இள மனதில் தோன்றும் நினைப்பு
புது உலகைக் காணும் துடிப்பு
இதன் இடையில் ஏது களைப்பு
அதைக் காணத்தான் எந்தன் உழைப்பு

(என்று படத்தில் மட்டுமே வரும் வரிகள். வானொலிகளில் 'கட்')

http://i62.tinypic.com/20ftgjs.jpg

மேற்கண்ட வரிகளில் அப்படியே 'மக்களைப் பெற்ற மகராசி'யின் 'பொன்னு விளையிற பூமியடா' செங்கோடனை நாகரீக பேன்ட், கோட், சூட் போட்ட 'கோடீஸ்வரனி'டம் இங்கு காணலாம். (குறிப்பாக 'அதைக் காணத்தான் எந்தன் உழைப்பு' வரிகளில் காட்டும் பின்வாங்கல் தலையாட்டலில் கண்டு கொள்ளலாம்) ஒரு காலைத் தரையில் வைத்து, பேரல் இருக்கும் அந்த மர ஸ்டாண்டில் இன்னொரு காலைத் தூக்கி வைத்து கைகளைக் கொட்டி, தொப்பியைச் சரி செய்து, சிரித்துக் குதூகலித்தபடி செம ஸ்டைல் )

ராட்டினம் சுற்றும் குழந்தைகளிடம் வெளியே நின்று சிரித்தபடியே கை சைகையால் சுற்றச் சொல்லிக் காட்டுவது அருமையோ அருமை.

'Merry Go Round' ராட்டினத்தில் வெள்ளைக் குதிரை பொம்மை மேல் இன்னொரு பொம்மைக் குழந்தை பேபி சுமதியுடன் அமர்ந்து ராட்டினம் சுற்றுவார்.

'அல்லா முதற்கொண்டு இயேசு புத்தன் வரை
எல்லோர் மதங்களும் எங்கள் வழித்துணை'

என்று மத நல்லிணக்ககத்தை மழலைகளிடம் விதைப்பார்.

பின் ராட்சத சுழலும் ராட்டினத்தில் பலூன்கள் மத்தியில் மழலைகளுடன் அமர்ந்து பாடுவார்.

பாதி காட்சிகள் நிஜமாயும், மீதி புரஜெக்ஷன் காட்சிகளாயும் ரசிக்கும்படி படமாக்கப் பட்டிருக்கும்.

'நடிகர் திலகம்' தான் நடிகர் என்றே நினைக்காமல், படமென்று நினைக்காமல், படப்பிடிப்பு என்று நினைக்காமல், குழந்தைகளோடு குழந்தையாகவே மாறிவிடுவதை நாம் கண்கூடாக கண்டு கொள்ள முடியும். அதே போல் மற்ற குழந்தைகளாக ரசிகர்களாகிய நாமும் மாறி அவருடன் இணைந்து விடுவோம் என்பதும் மறுக்க முடியாத உண்மையே.

அத்தனை நடிகர்களும் குழந்தைகளோடு சேர்ந்து பாடல் காட்சிகளில் பல படங்களில் நடித்திருந்தாலும்... அவ்வளவு ஏன் நடிகர் திலகமே பல படங்களில் குழந்தைகளுடன் நடித்திருந்தாலும் இந்தப் பாடல் காட்சி தனி மகத்துவ விசேஷம் கொண்டது. இதற்குப் பிறகுதான் மற்ற எல்லா குழந்தைப் பாடல்களும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குதூகலிக்கும் பாடல்களில் என்றும் முதலிடமாக,

'நான் தன்னந் தனிக் காட்டு ராஜா'

என்று இறுமாப்புக் கொண்டு மார் தட்டும் பாடலும் கூட. பிள்ளைகள் கைகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வாத்தியக் கருவிகள் இருக்கும் டிரம்பென்ட், பேண்ட் என்று. அதற்கேற்றார் போல் 'மெல்லிசை மன்னர்' அத்தனை வாத்தியங்களையும் பயன்படுத்தி பாடலை இன்னும் பிரம்மாண்டப் படுத்தியிருப்பார் காட்சியமைப்பிற்குத் தக்கவாறு.

(வினோத் சார் உடனே 'சிக்கு மங்கு' பாடலைப் பதிவிடலாம்.:) அதுவும் குழந்தைகளை நல்வழிப்படுத்தும் நல்ல கருத்துக்கள் நிறைந்த, நன்கு ரசிக்கத் தகுந்த பாடலே! அருமையான படமாக்கமே!)

http://rajtv.tv/Image_Movies/EngaMama.jpg

ரவி சார்! உங்கள் எண்ணம் நிறைவேறியதா? இதில் போன் செய்து வேறு வெறி கிளப்பி விட்டீர்கள். 'எங்க மாமா' என்று குழந்தைகள் உரிமை கொண்டாடிய எங்க (நம்ம) அண்ணனை, அவர் நடித்த பட்டை கிளப்பும் பாடல் காட்சியை இங்கு பதிவிட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளிவிட்டு விட்ட தங்களுக்கு என் தங்கமான நன்றிகள்.

இதோ மீண்டும் ஒருமுறை


https://youtu.be/2BqghZZSNnQ

uvausan
17th July 2015, 04:41 PM
வாசு - பதிவிட வேண்டாம் சற்றே ( நீண்ட )ஒய்வு எடுக்கலாம் என்று நினைத்திருந்தேன் - உங்கள் " நான் தன்னந்தனிக் காட்டு ராஜா'" பதிவு என் "ஒய்வு எடுக்கலாம்" என்ற எண்ணத்தை கெடுத்து விட்டது .இந்த பதிவு எனக்கு நீங்கள் தந்த பரிசாக கருதுகிறேன் - உடுக்கை சத்தம் இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கும் போதே இளமையின் சத்தம் இன்னும் அதிகமாக கேட்க்கும் படி செய்து விட்டீர்கள் .

எனக்கு மிகவும் பிடித்த பாடல் - நான் 2வது பாகத்தை முடிப்பதற்குள் நெய்வேலிக்கு இந்த பாடல் ஓடிப்போய் விடக்கூடாதே என்று எல்லா இடத்திலும் போலீஸ் படையை நிறுத்தி வைத்திருந்தேன் - நல்ல வேலை , நான் 2வது பாகத்தை முடித்த பின் தான் அலசி உள்ளீர்கள் . இந்த பாட்டில் இவர் காட்டும் ஸ்டைல் , அழகு , நளினம் , இளமை , இனிமை -" தங்கை "யில் வரும் " இனியது இனியது உலகம் " என்ற பாட்டில் இவர் காட்டும் அழகை விட அதிகம் . வினோத் சாருக்கும் இந்த பாடல் மிகவும் பிடிக்கும் என்று அவரே சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன் . யாருக்குத்தான் வாசு இந்த பாடல் பிடிக்காது ? அப்படியே ஓரிருவர் இருந்தால் , உங்கள் அழகான , அருமையான அலசலை படித்த பின்பும் மரக்கட்டையாக இருக்க மாட்டார்கள் .

மீண்டும் நன்றி

RAGHAVENDRA
17th July 2015, 05:03 PM
வாசு சார்
பறவைகள் பறந்த வுடன் முதன் முதலில் காட்டப்படுவது

எங்கள் செனட் ஹவுஸ்..

சென்னைப்பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நூற்றைம்பது ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டிடம். அக்காலத்தில் பட்டம் பெற்று வருபவர்களைக் காட்ட இந்த இடத்தைத் தான் திரைப்படங்களில் பயன்படுத்துவார்கள்.

பாபு வில் அந்த உணர்வு மயமான காட்சி நினைவுக்கு வரும்.. நிர்மலா பட்டம் பெற்று வரும் போது ந.தி. வாயிலில் பூரிப்போடு கண்டு களிக்கும் உன்னதமான காட்சி. அதே போல் காதலிக்க நேரமில்லை என்ன பார்வை பாடலின் ஒரு பகுதியும் இந்த இடத்தில் தான் படமாக்கப்பட்டது.

அடுத்து சென்னை அண்ணா சாலை ஆயுள் காப்பீட்டு நிறுவனக் கட்டிடம்.

இதற்குப் பிறகு வருவது சென்னையில் அப்போது இருந்த மிருகக் காட்சி சாலை.

இதே கடற்கரையில் நடிகர் திலகத்தின் எத்தனை காட்சிகள்.. அதே போல் நினைத்ததை முடிப்பவன் படத்தில் இடம் பெற்ற பூமழை தூவி பாடலின் பெரும் பகுதியும் இங்கு தான் படமாக்கப்பட்டது.

நாகேஷ் நடித்த பாடல் காட்சி, மெட்ராஸ் நல்ல மெட்ராஸ், அதுவும் இங்கே தான் படமாக்கப்பட்டது. உழைப்பாளர் சிலையின் அருகில் நாகேஷ் நிற்கும் போது பின்னணியில் கடலில் கரை தட்டிய கப்பலைப் பார்க்கலாம்.

இது கிடக்கட்டும் ஒரு புறம்.

இப்பாடலைப்பற்றிய தங்கள் வர்ணனை.. ஆஹா... (வினோத்துக்கு நீங்கள் மட்டும் தான் பாடல் எடுத்துக் கொடுப்பீர்களா என்ன.. இப்போது பாருங்கள் இன்னொன்றும் கிடைத்து விட்டது.)

eehaiupehazij
17th July 2015, 05:33 PM
மாற்றார் தோ(போ)ட்ட மெல்லிசையும் மதுரமே
பகுதி 5 : யு ஒன்லி லிவ் ட்வைஸ் / YOU ONLY LIVE TWICE (1967)
Sean Connery is James Bond OO7!


இம்முறை ஜேம்ஸ் பாண்ட் வானவெளியில் 'லபக்'கப் படும் விண்கலங்களின் கடத்தல் மூளையை செயலிழக்க வைக்கும் பணியில் செய்யும் சாகசங்கள்

மெய் சிலிர்க்க வைக்கும் முரட்டுத்தனமான டூப் போடாத சண்டைக் காட்சிகளின் மன்னர் ஷான் கானரி !! ராட்சஷ மேக்னட்டின் துணை கொண்டு அடியாட்களுடன் பின் தொடரும் காரை அந்தரத்தில் பற்றியெடுத்து கடலுக்குள் வீசும் காட்சி.....லிட்டில் நெல்லி ஹெலிகாப்டரில் பறந்து எரிமலை வாய்களை வில்லனின் இருப்பிடம் கண்டறிய ஜேம்ஸ் பாண்ட் ஆய்வு செய்யும்போது வழிமறிக்கும் பெரிய ஹெலிகாப்டர்களை சிதறடிப்பது ....எரிமலை செட்டப்புக்குள் கயிறு கட்டிக் குதித்து சண்டையிடும் சாகசம்....இக்காட்சிகளில் பட்டையைக் கிளப்பும் ஜான் பேரியின் தீம் இசைச் சிதறல்...மெய்மறக்க வைக்கும் டைட்டில் இசைப் பாடலுடன் (by Nancy Sinaatra the daughter of Star/Singer Frank Sinaatra, the Von Ryon Express movie fame!) கூடிய மாரிஸ் பைண்டரின் கிராபிக்ஸ் அதிரடி.....அவ்வாண்டின் முதலிட வெற்றிப் படம்....அகில உலக சூப்பர் டூப்பர் ஸ்டார் அந்தஸ்தை எப்போதும் போல தக்க வைத்துக் கொண்டார் கானரி !!


The title credits with Maurice Binder's excellent graphics of the day alongside the tantelizing song by Nancy Sinatra!

https://www.youtube.com/watch?v=hcIl_6amBvU

Just a drop in the ocean!! Usual reception to baddies!!

https://www.youtube.com/watch?v=bLAo27BtBJ0

The excellent fight choreography with a sumo fighter!
Cheers!...Siamese Vodka?!

https://www.youtube.com/watch?v=VPBY6c5iuDg

The ever green action scene in the sky with this Little Nelli!!
The theme music enhances the tempo and makes the audience to their edge of seats restless till the end!!

https://www.youtube.com/watch?v=gnmau8_iypw

adiram
17th July 2015, 05:38 PM
இதே கடற்கரையில் நடிகர் திலகத்தின் எத்தனை காட்சிகள்.. அதே போல் நினைத்ததை முடிப்பவன் படத்தில் இடம் பெற்ற பூமழை தூவி பாடலின் பெரும் பகுதியும் இங்கு தான் படமாக்கப்பட்டது.

ராகவேந்தர் சார்,

பூமழை தூவி பாடல் படமாக்கப் பட்ட இடம் சென்னை கடற்கரை அல்ல. வேறு ஏதோ மலைப்பகுதியில் இருக்கும் அழகிய சாலை. (ஊர்வலம் திரும்பத்திரும்ப அதே இடத்தில் நகர்ந்து கொண்டிருக்கும்). அந்தப்பாடல் சாரதா காதில் விழுவதாக வரும் இடம் மட்டுமே சென்னை கடற்கரை.

Richardsof
17th July 2015, 06:16 PM
இனிய நண்பர் திரு குமார் சார்

அண்ணா மற்றும் நவமணி தின இதழ்களில் வெளிவந்த தமிழ் படங்களின் விளம்பரங்களை மீண்டும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில காணும் அரிய வாய்ப்பை தந்தமைக்கு நன்றி . சென்னை நகர அன்றைய திரை அரங்குகள் இன்று 99% மூடப்பட்டு விட்டது மிகவும் ஏமாற்றமாக உள்ளது .

இனிய நண்பர் திரு ஆதிராம் சார்
உங்கள் மனதில் எனக்கு இடமிருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி .சமீப காலங்களில் ஆவணங்கள் கிடைக்காததால் பதிவுகளை தர இயலவில்லை பூ மழை தூவி பாடல் பெரும்பாலான காட்சிகள்
காஷ்மீரில் படமாக்கப்பட்டது .சாரதா சம்பந்த பட்ட ஓரிரு காட்சிகள் மட்டும் சென்னையில் படமாக்கபட்டது .

இனிய நண்பர் திரு வாசு சார்

எங்க மாமாவில் இடம் பெற்ற நான் தன்னந்தனி காட்டு ராஜா பாடலை பற்றிய விரிவான வர்ணனைகள் அமர்க்களம் .
பாராட்டுக்கள் .

adiram
17th July 2015, 06:22 PM
டியர் வாசு சார், அசத்திட்டீங்க.

'நான் தன்னந்தனிக்காட்டு ராஜா' பாடல் அலசலில் நடிகர்திலகத்தின் ஒவ்வொரு அசைவையும் தனித்தனியாக புட்டு புட்டு வைத்து விட்டீர்கள். இதுபோன்ற பொது இடங்களில் (குறிப்பாக பொருட்காட்சி) படமாக்கும்போது ஸ்டுடியோவில் எடுத்தது போன்ற அதே முகமலர்ச்சி, உற்சாக துள்ளல் என்று அசத்தியிருப்பார். அதற்கேற்ப குழந்தைகளும் நடிப்பதாக தெரியாமல் ஏதோ பிக்னிக் வந்த உற்சாகத்தோடு நடித்திருப்பார்கள்.

அதென்ன ஜெயகௌசல்யா, ரோஜாரமணிக்கு மட்டும் அடிஷனல் விளக்கம் மறவர்களுக்கு இல்லையா. பிரபாகர் ('ராமன் எத்தனை ராமனடி'யில் நடிகர்திலகத்துக்கு படத்தில் நடிக்க சான்ஸ் வாங்கி (!?!?!?) கொடுப்பவர். சேகர் (ராஜா, வாணிராணி, கவரிமான், நல்லதொரு குடும்பம்) .

நடுவில் ஒரு சரணம் வானொலியில் வேண்டுமென்றே கட் செய்யப்பட்டதல்ல. அப்போதைய வினைல் ரிகார்டுகளில் மூன்றரை நிமிடங்களுக்குள் வருமாறு பாடல்கள் எடிட் செய்யப்பட வேண்டும். அதனால் பல பாடல்களின் அருமையான இடையிசை, மற்றும் சரணங்கள் கட் ஆகிவிடும்.

இதில் அதிகம் அடிவாங்கியது வசந்த மாளிகை பாடல்கள். ஒவ்வொரு பாடலிலும் ஒரு சரணம் கட்.

ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் பாடலில் 'தக்கதகதிமி தாளம் ஜதியோடு' கட் செய்யப்பட்டு 'சொர்க்கம் இருப்பது உண்மைஎன்றால்' என்ற சரணத்திலிருந்து துவங்கும்.

மயக்கம் என்ன பாடலில் இரண்டாவது சரணம் 'பாடிவரும் வண்ண நீரோடை' இசைத்தட்டில் கிடையாது.

கலைமகள் கைப்பொருளே பாடலில் 'உன்னிடம் ஆயிரம் ராகங்களே' சரணம் கட். 'நான் யார் உன்னை மீட்ட' என்றே துவங்கும்.

இரண்டுமனம் வேண்டும் பாடலில் 'சிறிய காயம் பெரிய துன்பம்' என்ற சரணம் கட். இரண்டாவது சரணமான 'இரவும் பகலும் இரண்டானால்' என்பதிலிருந்து துவங்கும்.

உ.சு.வாலிபனில் சிரித்து வாழ வேண்டும் பாடலில் 'முள்ளில் ரோஜா மலர்ந்ததாலே' என்ற சரணம் இசைத்தட்டில் இடம்பெறவில்லை.

சில பாடல்களில் படத்தில் இடம்பெற்ற அருமையான முன்னிசை இசைத்தட்டில் கட் செய்யப்பட்டு, திடீரென்று பல்லவியிலிருந்தே பாடல் துவங்கும்.

அதுபோலத்தான் நான் தன்னந்தனிக்காட்டு ராஜா பாடலில் 'மெல்ல வளர்ந்திடும் செல்லக் குழந்தைகள்' சரணமும் கட்.

நடிகர்திலகத்தின் வித்தியாசமான தொப்பி ஸ்டைல், அதுவும் பாடல் முழுவதும் அமர்க்களம்.

உங்கள் ஆய்வும் கூட முழுதும் அமர்க்களம்.

vasudevan31355
17th July 2015, 06:30 PM
//நாகேஷ் நடித்த பாடல் காட்சி, மெட்ராஸ் நல்ல மெட்ராஸ், அதுவும் இங்கே தான் படமாக்கப்பட்டது. உழைப்பாளர் சிலையின் அருகில் நாகேஷ் நிற்கும் போது பின்னணியில் கடலில் கரை தட்டிய கப்பலைப் பார்க்கலாம்.//

http://i57.tinypic.com/2im6d75.jpg

vasudevan31355
17th July 2015, 06:48 PM
//சென்னைப்பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நூற்றைம்பது ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டிடம். அக்காலத்தில் பட்டம் பெற்று வருபவர்களைக் காட்ட இந்த இடத்தைத் தான் திரைப்படங்களில் பயன்படுத்துவார்கள்.

பாபு வில் அந்த உணர்வு மயமான காட்சி நினைவுக்கு வரும்.. நிர்மலா பட்டம் பெற்று வரும் போது ந.தி. வாயிலில் பூரிப்போடு கண்டு களிக்கும் உன்னதமான காட்சி. அதே போல் காதலிக்க நேரமில்லை என்ன பார்வை பாடலின் ஒரு பகுதியும் இந்த இடத்தில் தான் படமாக்கப்பட்டது.//

http://oi57.tinypic.com/b5r95x.jpg

http://i59.tinypic.com/2us7ktc.jpg

http://i57.tinypic.com/tagabs.jpg

RAGHAVENDRA
17th July 2015, 08:06 PM
வாசு சார்
எங்க மாமா பதிவிற்காக தங்களுக்காக சிறப்புப் பரிசு..
இது வரை வெளிவராத நிழற்படம் (என எண்ணுகிறேன்)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/em010002fw_zps5cn5mjqi.jpg

RAGHAVENDRA
17th July 2015, 08:10 PM
குமார் சார்
அந்நாளைய பல விளம்பரங்களை மக்கள் மீண்டும் காண வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் பணி, மிகவும் போற்றுதற்குரியது. இதில் நம் மய்யத்தில் துவங்கிய பம்மலாரின் பணி, உலகெங்கும் பல இணையதளங்களில் அவருடைய பெயரோடு வெற்றி நடை போடுகிறது. அந்த வரிசையில் தாங்கள் அளித்து வரும் நிழற்படங்களும் அமைந்து விட்டன.
பாராட்டுக்கள்.

vasudevan31355
17th July 2015, 08:33 PM
ஆதிராம் சார்,

தங்கள் பாராட்டிற்கு நன்றி!

அமர்க்களம். அருமை. ஒரு பதிவு பதித்தால் அது சம்பந்தமாக யாரும் எதிர்பாராத விளக்கப் பதிகளை அளித்து அசர வைப்பதில் தாங்கள் அசகாய சூரர் என்பது மீண்டும் நிரூபணம்.

அப்போதைய பாடல்கள் வினைல் ரிகார்டுகளில் எப்படி சுருக்கப்பட்டன... அதில் அதிகம் பாதிக்கப்பட்ட 'வசந்த மாளிகை', இன்னும் பிற படங்களின் பட்டியல் என்று அசத்தல். எப்படித்தான் இதையெல்லாம் ஞாபகம் வைத்து சமயம் பார்த்து தருகிறீர்கள் என்று ஆச்சர்யமே மேலோங்குகிறது. என் மனமுவந்த பாராட்டுக்கள்.

'உலகம் சுற்றும் வாலிபன்' பாடலான 'உலகம்... அழகுக் கலைகளின் சுரங்கம்' பாடலில் அமர்க்களமான ஜப்பானின் 'எக்ஸ்போ 70' கண்கவர் காட்சிகளின் போது பாடலின் இடையே வரும் அசுரத்தனமான, அமர்க்களமான இடையிசை எடுக்கப்பட்டு பாடல் சுருக்கப்பட்டு முழுமை பெறாமல் போனது. நீங்கள் குறிப்பிட்டது போல இந்தப் பாடலில்

'சிவந்த கன்னம் பாருங்கள்
சேதி கொஞ்சம் சொல்லுங்கள்
இடையிரண்டின் ஓரங்கள்
பருக வேண்டும் சாரங்கள்
தேவதை விரித்தது மலர் மஞ்சம்
அதில் தேவையை முடிப்பது இரு நெஞ்சம்'

என்ற சரணம் அப்படியே ஸ்வாஹா.

கிட்டத்தட்ட இடையிசையுடன் ஏழு நிமிடங்கள் முழுதாக ஓடும் பாடல். படம் பார்ப்பவர்கள் மட்டுமே இடையிசை மற்றும் சரணங்களை வீட்டு விடாமல் ரசிக்கலாம்.

அதே போல 'மேயர் மீனாட்சி' படத்தின் சூப்பர் ஹிட் பாடலான 'கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம்' பாடலின்

'இதழின் மீதாக வளையும் வண்ணங்கள்
இளமைப் பூப்பந்தலோ
திரையும் மூடாமல் தலையும் வாராமல்
அசையும் பொன் பூக்களோ

நடையில் அன்னங்கள் அடையும் இல்லங்கள்
இடையில் வைத்தார்களோ
நளினப் பொன்மேனி சுவையைப் பார்
என்று உனக்கே தந்தார்களோ

சுகம் ஒன்றாக வைத்தார்களோ
நம்மை ஒன்றாக்க வைத்தார்களோ
கண் பார்க்க வைத்தார்களோ
உன்னை பெண் பார்க்க வைத்தார்களோ'

சரணமும் மேற்கூறிய காரணத்தால் பறி போனது.

இன்னும் சொல்லலாம். டைம்தான் இல்லை.

'அதென்ன ஜெயகௌசல்யா, ரோஜாரமணிக்கு மட்டும் அடிஷனல் விளக்கம் மறவர்களுக்கு இல்லையா?'

என்று கேட்டிருந்தீர்கள்.

நான் பதிவு தயார் செய்யும்போது நினைத்துக் கொண்டேதான் தயார் செய்தேன். உங்களுக்குத் தெரியாததா?:) 'ஒளி' சம்பந்தப்பட்டதால் கௌசல்யாவுக்கு முன்னுரிமை. 'இருமலர்கள்' படத்தில் நடிகர் திலகம் பத்மினியிடம் குமுறும் அற்புதக் காட்சி மிகவும் பிடிக்கும் என்பதால் அந்த இடத்தில் ரோஜாரமணி பின்னிப் பெடல் எடுத்ததால் அவருக்கு அடுத்த உரிமை. (முரளி சாருக்கு ரொம்பப் பிடிக்கும்)

'மாஸ்டர் ராமு' 'மனிதரில் மாணிக்கம்' படத்தில் நடிகர் திலகத்துடன் நடித்திருப்பார். 'திருடன்' படத்தில் ராமுவேதான் சிறுவயது நடிகர் திலகம் என்று நினைக்கிறேன்.

நிறைய விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளள ஆசைதான். நான் முன்பு சொன்னது போல நேரம்தான் இடிக்கிறது.

நன்றி ஆதிராம் சார்.

eehaiupehazij
17th July 2015, 08:33 PM
காதல் மன்னரின் திரி சார்ந்த இணைப் பதிவு

மனதை ஈர்க்கும் எந்த கானமும் மதுர கானமே! அன்பு மேலோங்கும் போது பிரிவுத் துன்பமும் இன்பமே!!

சந்தேகச் சேற்றில் மலர்ந்த அன்பு செந்தாமரைகள் :
புதிய குறுந்தொடர் : Illusions and Hallucinations of Love with the King of Romance!!
பகுதி 1 : இதயத்தில் நீ !


கண்ணை மறைக்கும் காதல்.....கண் மூடினாலும் காதல் மன்னரே முன்னால்!! காதல் பைத்தியம் தீர என்ன வைத்தியப் பத்தியம்?!
ஜெமினியின் வசீகர வசிய சிரிப்பு மருந்து மாயத்தில் மந்திரித்து விட்ட கோழியாக அல்லலுறும் தேவிகா !!

கோபம் உள்ள இடத்தில்தானே குணமும் இருக்கும் சந்தேகத்தின் பிறப்பிடமும் என் அன்பு இதயம் முழுவதும் நீ இருப்பதாலேயே...என் காதல் மன்னவனே!
உறவு என்றொரு சொல்லிருந்தால் பிரிவு என்று ஒரு பொருளிருக்கும் ..

https://www.youtube.com/watch?v=uIpswezWfAM

chinnakkannan
17th July 2015, 08:34 PM
//நடிகர் திலகம்' தான் நடிகர் என்றே நினைக்காமல், படமென்று நினைக்காமல், படப்பிடிப்பு என்று நினைக்காமல், குழந்தைகளோடு குழந்தையாகவே மாறிவிடுவதை நாம் கண்கூடாக கண்டு கொள்ள முடியும். அதே போல் மற்ற குழந்தைகளாக ரசிகர்களாகிய நாமும் மாறி அவருடன் இணைந்து விடுவோம் என்பதும் மறுக்க முடியாத உண்மையே//வாசு.. வழக்கம் போல கலக்கல்.. நான் எதுவும் சொல்லவிடாதபடி ரவி ராக்வேந்தர் எஸ்வி ஆதிராம் சொல்லி விட்டார்கள்.. மறுபடியும் ஒருமுறை பாட்டை க் கேட்டேன் பார்த்தேன் ரசித்தேன்..உங்கள் எழுத்துக்களையும் சேர்த்து.. நன்றி..

என்ன பார்வை பாட்டும் கடற்கரை தான்..டாடி எனக்கொரு டவுட்டு..வெண்ணிற ஆடையில் சித்திரமே சொல்லடி என்ன பார்க்..( இந்த என்ன சொல்ல என்ன சொல்லவில் எக்ஸ்ப்ரஷன் காட்டும் நிர்மலா ரியல் பொம்மையாய் வாயசைத்திருப்பார்..சித்திரமே சொல்லடி முத்தமில்லை சொல்லடி எனும்போது மெல்ல வா என க் கூப்பிட்டு படக்கென அறைய வேண்டும் போலிருக்கும்!

//உலக்கையின் சத்தம் இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கும் போதே இளமையின் சத்தம் இன்னும் அதிகமாக கேட்க்கும் படி செய்து விட்டீர்கள் . // ரவி.. அர்த்தம் புரியவில்லை :)

eehaiupehazij
17th July 2015, 08:43 PM
ஜெ'மினி'த் தீவிலிருந்து மதுரகான தீபகற்பத்திற்கு ஒரு மெல்லிசைப் பார்சல் !

சந்தேகச் சேற்றில் மலர்ந்த அன்பு செந்தாமரைகள் :
புதிய குறுந்தொடர் : Illusions and Hallucinations of Love with the King of Romance!!

பகுதி 2 : பாதகாணிக்கை !


எட்டடுக்கு காதல் மாளிகையில் ஏற்றி வைத்த மன்னவரே விட்டுவிட்டு விலகி செல்லலாமா?! சந்தேக வட்டத்துக்குள்ளும் அன்பின் விளிம்பில் அலைமோதும் சாவித்திரி!!

https://www.youtube.com/watch?v=YpS9AkgHCo0

chinnakkannan
17th July 2015, 08:49 PM
மாற்றார் தோ(போ)ட்ட மெல்லிசையும் மதுரமே
பகுதி 5 : யு ஒன்லி லிவ் ட்வைஸ் / YOU ONLY LIVE TWICE (1967)
Sean Connery is James Bond OO7!



The title credits with Maurice Binder's excellent graphics of the day alongside the tantelizing song by Nancy Sinatra!





சி.செ. யூ ஒன்லி லிவ் ட்வைஸ் எனக்கு மிகப் பிடித்த பாண்ட் படங்களில் ஒன்று.. ஆரம்பத்திலிருந்து ஆக்*ஷன் ஆக்*ஷன் தான்..சுறுசுறு ஷான் கானரி.. கூடவே இழையோடும் மெல்லிய நகைச்சுவை வேறு..

ஜப்பான் சென்று அந்த இடத்திலிருந்து தப்பி வரும் போது கொய்ங்க் என்று அந்த ஜப்பான் நளின நங்கை காரில் வந்து நிற்க அதில் தாவி ஏறியும் நம்பாமல் பேசி..பின் அவள் மறைய அவரும் ஓடிப் பின்னால் துரத்த....

ஓரிடத்தில் அவள் நிற்க..

த்த்டட்...

தரைக்கீழே கதவு திறக்க சொய்ங்க்க் என வழுக்கி விழுந்தால்...

குட் ஈவ்னிங்க் மிஸ்டர் பாண்ட் என்று டைகர் - ஜப்பானிய சீக்ரட் ஏஜண்ட் வந்துபேசுவதெல்லாம் மறக்க முடியாத காட்சிகள்..

அதற்கு முன்னமேயே ஒரு ஆளை அறையில் பார்த்து ப் பேசிக்கொண்டிருக்கையிலேயே அந்த ஆள் வாக்கியம்முடிக்காமலேயே அப்படியே வெறித்து நோக்க
ஷணப் பொழுதில் தாவி அந்த நபரைத்தொட்டால் சரிய அவர் முதுகில் கத்தி..

பின் தாவி காரில் பாய்ந்து ஏறி...ம்ம்

*

அந்தக் கார் லிஃப்ட் பெண்... எதிரிகளை டைகரிடம் சொல்ல் மாக்னட் மூலமாக கடலில் தள்ளுபவர்... பாவம் பாண்டுடன் தாச்சித் தூங்கி களைப்பில் புரண்டுபடுக்க உச்ச்சியிலிருந்து அதாவதுகூரை உச்சியிலிருந்து ஒல்லி ஒல்லி அந்தக்கால அடிமைப்பெண் ஜோதி லட்சுமி போல விஷம் மெல்ல மெல்ல ஒரு நேர்க்கோடாக இறங்க எதேச்சையாக இதழில் பட்டு உதட்டை நாக்கால் தொட்டு மரணிப்பது கொஞ்சம் கஷ்டமாகவே இருக்கும்..

கடைசியில் அந்தத் தீவு..தீவில் நடக்கும் கல்யாணம்..

கல்யாணம் கட்டிக்கிட்ட குட்டிச்சுட்டி ஜப்பான் பெண்ணிடம்... வீ ஆர் மேரீட்..

அவள் ஒடிந்து விடும் இடுப்பை ஒசித்து கண்களினால் மறுத்து நோ வி ஆர் இன் பிஸினஸ் சொல்வது... ஜோர்..

ம்ம் நினைவுகளைக் கிளறி விட்டீர்கள்.. நன்றி சி.செ :)

eehaiupehazij
17th July 2015, 08:54 PM
சந்தேகச் சேற்றில் மலர்ந்த அன்பு செந்தாமரைகள் :
புதிய குறுந்தொடர் : Illusions and Hallucinations of Love with the King of Romance!!
பகுதி 3 : ஆடிப்பெருக்கு !

காவேரி ஓரம் கவி சொன்ன காதல் வெறும் கதைதானோ என்று பதை பதைக்கும் சி க வின் சரோ ! சரூ ?

https://www.youtube.com/watch?v=F5qzLK10Gnk

uvausan
17th July 2015, 08:56 PM
அவசரத்தில் " உடுக்கை " என்று திருத்த மறந்துவிட்டேன் . இப்பொழுது திருத்திவிட்டேன் --

// உடுக்கை சத்தம் இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கும் போதே இளமையின் சத்தம் இன்னும் அதிகமாக கேட்க்கும் படி செய்து விட்டீர்கள் . // ரவி.. அர்த்தம் புரியவில்லை:)

CK - தங்கப்பதக்கத்தில் சோ தன் தம்பி வையாபுரியைப்பற்றி மனோரமாவிடம் சொல்லுவார் " ம்ம் ஒண்ணுமே புரியாம பேசக் கற்று கொண்டு விட்டான் - கூடிய சீக்கிரம் பெரிய ஆளாகிவிடுவான் " - அதுபோல உங்களுக்கே புரியவில்லை என்றால் நான் நிஜமாகவே பெரிய ஆள் தான் ------

உலுக்கை சத்தம் - வாசுவின் கல்தூண் பதிவு

இளமையின் சத்தம் - தலைவரின் "நான் தன்னந்தனிக் காட்டு ராஜா" பாடலில் துள்ளி விளையாடும் அவரது இளமை

அந்த உலுக்கையின் சத்தம் இன்னும் இந்த திரியில் ஒலித்துக்கொண்டிருக்கும் வேளையில் , இந்த பாடல் மூலம் தலைவரின் இளமை சத்தம் இன்னும் இனிமையாக இருந்தது

( அப்பாடா economics விடைத்தாள் எழுதின சோர்வு -----) - கொஞ்ச மாதங்கள் திரிக்கு வெளியே இருக்க விரும்புகிறேன் CK - அப்பொழுதுதான் நான் எழுதாமல் , மற்றவர்கள் எழுதுவதை இன்னும் வெகுவாக ரசிக்க முடியும் ......

eehaiupehazij
17th July 2015, 08:59 PM
சந்தேகச் சேற்றில் மலர்ந்த அன்பு செந்தாமரைகள் :
புதிய குறுந்தொடர் : Illusions and Hallucinations of Love with the King of Romance!!
பகுதி 4 :பாக்கியலட்சுமி !


பால்ய விவாகத்தில் இதயத்தில் நுழைந்து வாலிப வயதில் தன்னை மறந்து விட்ட கணவன் தன்னை இனம் கண்டுகொள்ள மாட்டாரோ என்ற பரிதவிப்பும் தங்கைபால் ஈர்க்கப் பட்டுவிடுவாரோ என்ற சந்தேகமும் ஒருசேர ஆட்டிவைக்கும் அபலையாக சௌகார் ஜானகி !

https://www.youtube.com/watch?v=qKjzzxsZSvE

eehaiupehazij
17th July 2015, 09:01 PM
சந்தேகச் சேற்றில் மலர்ந்த அன்பு செந்தாமரைகள் :
புதிய குறுந்தொடர் : Illusions and Hallucinations of Love with the King of Romance!!
பகுதி 5 :ராமு


உயிரையே உன்னிடம் அர்பணித்த பின்னும் மறைந்த முதல் மனைவியின் ஞாபகத்திலேயே தன்னை ஒதுக்கி விடுவாரோ என்ற சந்தேகத்தில் தடுமாறும் விஜயா

https://www.youtube.com/watch?v=rfKI9IhA-0k

vasudevan31355
17th July 2015, 09:03 PM
//உலக்கையின் சத்தம் இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கும் போதே இளமையின் சத்தம் இன்னும் அதிகமாக கேட்க்கும் படி செய்து விட்டீர்கள் . // ரவி.. அர்த்தம் புரியவில்லை :)

ரவி சார் 'கல்தூண்' உடுக்கைப் பாடல் பதிவை சொல்ல வந்திருக்கிறார் என்று எண்ணுகிறேன்.

தங்கள் பாராட்டிற்கு நன்றி சின்னா! நைட் ஷிப்ட் போக வேண்டும். நேரமாகி விட்டது. இன்னைக்கு முழுக்க மதுர கானத்தில் செலவழித்தாகி விட்டது. எல்லோரும் அற்புதமாகக் கலக்குகிறீர்கள். வருகிறேன். நாளை சந்திப்போம்.

chinnakkannan
17th July 2015, 09:23 PM
//( அப்பாடா economics விடைத்தாள் எழுதின சோர்வு -----) - கொஞ்ச மாதங்கள் திரிக்கு வெளியே இருக்க விரும்புகிறேன் CK - அப்பொழுதுதான் நான் எழுதாமல் , மற்றவர்கள் எழுதுவதை இன்னும் வெகுவாக ரசிக்க முடியும் ......//

உடுக்கை - உலக்கை , உலுக்கை என மாறியதில் ஒரு சின்ன கன்ஃப்யூஷன்..ரவி.. அம்புட்டு தேன்..திரும்பத் திரும்ப திரிக்குவெளியே எனச் சொல்வது முறையில்லை ஆமாம்..சொல்லிவிட்டேன் :)

உலக்கை என்பது நெல் குத்துவது..- மண்வாசனையில் ரேவதியிடம் பாண்டியன் நீ கை விலக்கி..உலக்கையைத்தான் கையை மாற்றி அரிசி குத்தும் போது வலிக்கவில்லையா எனப் பாடியிருப்பார்..

உடுக்கை - இசைக்கருவி..

அம்பிகையே ஈஸ்வரியே விலும் வரும்..

பம்பை உடுக்கை கொட்டி
பரிவட்டம் மேலே கட்டி
தங்கரதம் போலே ஆடும் சித்தாரக் கள்ளி
எந்தன் தாளத்தையே கேட்டு ஆடு
அச்சாரம் சொல்லி
ஹோ ஹோ ஹோ .... ஹோய்

என இந்தப் பாடலிலும் வரும்..(ஹை..கலையோட பாட்டை சுட்டுட்டேன்.. ( இதுக்குப் பெரிசா அவர் வியாசம் எழுதியிருப்பார் அவர்..ம்ம் இப்பவும் எழுதுவார் தான் :) )

https://youtu.be/TXkUdYztEt8

உலுக்கை தெரியலீங்க்ணா :)

eehaiupehazij
17th July 2015, 11:38 PM
மாற்றார் தோட்ட மெல்லிசையும் மதுரமே !
PART 6 : ON HER MAJESTY'S SECRET SERVICE (1969)
Introducing GEORGE LAZENBY as James Bond OO7 to fill in the shoes of Sean Connery who opted out due to monotony !


ஒரு காலகட்டத்தில் ஷான் கானரி ஜேம்ஸ் பாண்ட் வட்டத்தை விட்டு வெளிவந்து பல்வேறு கதாபாத்திரங்களில் பரிமளிக்க முடிவு செய்தார். ஜார்ஜ் லாசன்பை என்னும் துடிப்பான உடற்கட்டு கொண்ட ஆஸ்திரேலிய இளைஞர் புதிய ஜேம்ஸ் பாண்டாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவரும் நன்றாகத்தான் குறைவின்றி ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்தின் தன்மைகளை வெளிக்கொணர முயற்சித்தார். குறிப்பாக சண்டைக் காட்சிகளில் கானரியைப் போலவே பிரமாதப் படுத்தியிருந்தார். எனினும் ரசிகர்களின் கண்ணுக்கு ஷான் கானரி என்ற மகத்தான மக்கள் கலைஞர் ரத்தமும் சதையுமாக உயிர் தந்து உலவ விட்ட ஜேம்ஸ் பாண்ட் என்ற கற்பனைப் பாத்திரத்தில் புது நடிகரை ஏற்றுக் கொள்ள இயலவில்லை! படமும் தரமானதாக இருந்தாலும் ஜேம்ஸ் பாண்ட் என்னும் பிளேபாய் ஜாலிக்காரர் கல்யாண வட்டத்துக்குள் வருவதை ஜெமினி போல சைவக் காதல் செய்வதை ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை! குறைந்த பட்ச லாபத்துடன் படம் சுருண்டு லாசன்பை ஒருபட அதிசயமானார்!! மீண்டும் உலகிலேயே வேறு எந்த நடிகரும் நினைத்துப் பார்த்திராத அதிகபட்ச பணமும் லாபத்தில் பங்கும் வழங்கப் பட்டு கானரி தனது ஜேம்ஸ் பாண்ட் பணிக்கு டயமண்ட்ஸ் ஆர் பாரெவர் படம் மூலம் திரும்பி வந்து வாகை சூடினார் !!
ஆன் ஹெர் மேஜஸ்டிஸ் சீக்ரட் சர்வீஸ் படத்திலும் தீம் இசையும் பாடலும் பிரபலமாயின!!

This never happened to the other fella (Connery, suggestive)!

https://www.youtube.com/watch?v=q7v9ClAH1LI

The sand cone timer suggests the changing times with the new hero assuming the Bond role. All other characters except Connery are shown draining down suggestively!

https://www.youtube.com/watch?v=z0OQAxT1LR4

Scintillating theme song sung by Louis Armstrong!

https://www.youtube.com/watch?v=YJeEwkVoUpk

The ski chase long before that in Roger Moore's The Spy Who Loved Me epic ski jump!! Enjoy the time trendy theme music juxtaposition by John Barry to suit the night effect of the ski chase!! George Lazenby himself was a two time Ski champion in real life too!!

https://www.youtube.com/watch?v=lrkerh77MYY

chinnakkannan
18th July 2015, 02:56 AM
மாற்றார் தோட்ட மெல்லிசையும் மதுரமே !
PART 6 : ON HER MAJESTY'S SECRET SERVICE (1969)
Introducing GEORGE LAZENBY as James Bond OO7 to fill in the shoes of Sean Connery who opted out due to monotony !

!

This never happened to the other fella (Connery, suggestive)!



The sand cone timer suggests the changing times with the new hero assuming the Bond role. All other characters except Connery are shown draining down suggestively!



Scintillating theme song sung by Louis Armstrong!



The ski chase long before that in Roger Moore's The Spy Who Loved Me epic ski jump!! Enjoy the time trendy theme music juxtaposition by John Barry to suit the night effect of the ski chase!! George Lazenby himself was a two time Ski champion in real life too!!



தன்னை மறக்கவைக்கும் தன்னுடைய சுற்றத்தை
எண்ணாமல் மாறாக எள்ளிடும் - கண்ணில்
பகரும் நடிப்பும் பாங்காய் வரவும்
அகந்தை அழித்தது ஆம்..

யெஸ்.. ஜார்ஜ் லேஸன் பை..

எக்கச்சக்கமாய்க் கோகுலக் கிருஷ்ணன் போல பற்பல ரகங்களில் எழில் நங்கைகள்.. சுவாரஸ்யமான திரைக்கதை மிகுந்த பொருட் செலவு .. கொஞ்சம் உட்கார்ந்து பார்த்தோமானால் சுவாரஸ்யமான திரைக்கதை (என்னைப் போல காமிக்ஸ் லவர்களை ஆவென்று பார்க்க வைக்கும் விஷூவல் காட்சிகள்+ சண்டைகள்) இவ்வளவு இருந்தும் இந்த நபர்..அதாவது ஜார்ஜ் லேஸன் பை ஏன் புகழ் பெறவில்லை..

காரணம் அகந்தை..

ஜேம்ஸ்பாண்ட் படத்திற்கு புக்காகி ஆல்பர்ட் ப்ரோக்கோலியால் இவனே இனி தான் எந்நாளும் பாண்ட் என
இளையராஜா வராத காலத்திலேயே அவரது இசையை இசைத்து பாடப்பட்ட ஜார்ஜ் லேஸன் பை என்ன செய்தார்..

பாண் ட் படம் எடுக்கும் போது, எடுக்கப் பட்ட போது, புக் ஆன போது என்னவோ ஏதோ உள்ளத்தில் விழுந்த எண்ணம்...

நானே என்றும் ராஜா...

என்பது போல் நினைத்ததாலோ என்னவோ மிகப் படுத்தல்.. படம் எடுக்கும் போதும் சரி படம் எடுத்து முடித்த போதும் சரி..

என்னவெல்லாமோ செய்ததாக பதினைந்து வருடங்கள் முன்னால் அமெரிக்காவில் இருந்த போது வந்த ஒரு ஆர்ட்டிகிளில் படித்திருக்கிறேன்..

அழகான காளை தான்..ஆனால் ஆர்வக்கோளாறு + அகந்தை எனில் வாய்ப்பைக் கோட்டை விட்டவர்..

பிற்காலத்தில் ப்ரூஸ்லீயிடம் பழகியவர் .. சனி,குரு, சூரியன் இன்ன பிற கிரகங்களின் பார்வையாலோ என்னவோ
ப்ரூஸ்லியுடன் ஒரு மார்ஷியல் ஆர்ட்ஸ் படத்தில் புக்காகி பின் படம் ஆரம்பிக்கும் முன்னே ப்ரூஸ்லீ மரிக்க அந்தப்படமும் டிலே ஆக

அதன் பின்னர் அவர் தொட்டது எதுவும் சோபிக்கவில்லை

ஆஸ்திரேலேயாவைச் சேர்ந்த ஜார்ஜ் லேஸன் பை முதலில் தன் கரியரை ஆரம்பித்தது ஆட்டோ மெகானிக் - அண்ட் கார் சேல்ஸ்மென்.. ஆல்பர்ட் ப்ராக்கோலியைச் சந்தித்தது ஆண்களுக்கான அழகு நிலையத்தில்..அதாவது பார்பர் ஷாப்..பின் தான் ஜேம்ஸ்பாண்ட் வாய்ப்பு..

என்னதான் பாண்ட் மணமுடித்ததால் தான் படம் ஃபெய்லியூர் எனச் சொன்னாலும் கூட படத் தோல்விக்கு ஜார்ஜின் அகந்தையும் ஒரு காரணமே..ம்ம்

டிவி சீரியல்கள் இன்னும் ஒரு ட்ராகுலா படம் (2016 வெளியீடு) என இருந்தாலும் கூட ஜேம்ஸ்பாண்ட் புகழ் எனத் தான் அவரது அடையாளம்..அவரே மறுத்தாலும் கூட..

ம்ம்

அந்தப் பெண்கள்... வில்லனுக்குக் கட்டுப் பட்டு ஜேம்ஸ்பாண்டுடன் ஜொள்ளுவிடும் ஒரு நங்கை மறக்க முடியுமா என்ன சி.செ.. ம்ம்

டயமண்ட்ஸ் ஆர் ஃபார் எவரின் அந்த வெள்ளைக்காரி, அண்ட் நீக்ரோ பெண்ணுடனான பாண்ட் ஃபைட் போடுவீர்கள் தானே!

Gopal.s
18th July 2015, 04:08 AM
எம்.எஸ்.வீ பற்றி என் நண்பன் சாரு நிவேதிதா .

தொலைக்காட்சி வருவதற்கு முன்பு ஒட்டுமொத்தத் தமிழ் இனமே, ரேடியோ சிலோனில் கே.வி.மகாதேவனையும் அவரைத் தொடர்ந்து எம்.எஸ்.விஸ்வநாதனையும்தான் கேட்டுக்கொண்டிருந்தது. இரவு நேரத்தில் பத்து மணிக்கு மேல் வீட்டுத் திண்ணையில் பாயைப் போட்டு “அமைதியான நதியினிலே ஓடம்” (ஆண்டவன் கட்டளை) என்ற பாடலைக் கேட்காத ஒரு தமிழன் அந்நாளில் இருந்திருக்க முடியுமா? சர்வர் சுந்தரம், ஆயிரத்தில் ஒருவன், வாழ்க்கைப் படகு, பஞ்சவர்ணக் கிளி (தமிழுக்கும் அமுதென்று பேர்), எங்க வீட்டுப் பிள்ளை, பணத்தோட்டம், பாகப்பிரிவினை, கை கொடுத்த தெய்வம், பணம் படைத்தவன், பார்த்தால் பசி தீரும், பாவ மன்னிப்பு, பாலும் பழமும், புதிய பறவை என்று இப்படி நூற்றுக்கணக்கான படங்களில் எம்.எஸ்.விஸ்வநாதன் காலத்தால் அழியாத காவியப் பாடல்களை உருவாக்கினார். (வண்ணதாசன் “சில பழைய பாடல்கள்” என்று ஒரு சிறுகதையே எழுதியிருக்கிறார்).

எம்.எஸ்.விஸ்வநாதன் பற்றி ஏற்கெனவே ஏராளமாக எழுதியிருக்கிறேன். முக்கியமாக, தமிழர்கள் வரலாற்று உணர்வு இல்லாமல் எப்போதும் தற்காலத்திலேயே வாழ்ந்து தற்காலமே முக்காலமும் என்று நிரூபிக்க முயலும்போதெல்லாம் எம்.எஸ்.வி. பற்றி எழுதியிருக்கிறேன். கிட்டப்பா, பாபநாசம் சிவன், எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா தொடங்கி தமிழ் வெகுஜன இசையில் பெரும் மேதைகளும் கலைஞர்களும் இருந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் ஜி.ராமநாதனுக்குப் பிறகு வந்த இரண்டு மேதைகள் கே.வி.மகாதேவனும் எம்.எஸ்.விஸ்வநாதனும் ஆவர். மற்ற இசை அமைப்பாளர்களிடம் இருந்து எம்.எஸ்.வி. வேறுபடும் இடம் எதுவென்றால், தொடர்ச்சி அறுபடாமலே பல ஆண்டுகள் மிகச் சிறந்த பாடல்களைக் கொடுத்தபடியே இருந்தார். ஆண்டுக்குப் பதினைந்திலிருந்து இருபது படங்கள் வீதம் (சில ஆண்டுகளில் இருபதுக்கும் மேல்) சுமார் இருபது ஆண்டுகள் தமிழ் சினிமாவின் சிகரத்தில் இருந்தவர் எம்.எஸ்.வி.

ஒரு படத்துக்காக இசை அமைப்பதற்கு இப்போதெல்லாம் எத்தனை எத்தனையோ வசதிகள் இருக்கின்றன. பாங்காக், லண்டன் என்றெல்லாம் போய் மாதக்கணக்கில் தங்கி இசை அமைக்கிறார்கள். ஆனாலும் ஒரு படத்தில் ஒரு பாடல் ஹிட் ஆவதே பெரும்பாடாக இருக்கிறது. ஆனால், எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் ஒரே படத்தில் ஐந்தாறு பாடல்கள் சூப்பர் ஹிட் ஆவதெல்லாம் அந்நாளில் மிகச் சாதாரணமாக நடந்துகொண்டிருந்தது. ஆனந்த ஜோதி, கர்ணன் என்ற இரண்டு படங்களை மட்டும் இங்கே உதாரணமாகச் சொல்லலாம். அவற்றில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் காலத்தால் அழியாதவை.


தமிழர்களின் காதலை, பாசத்தை, துக்கத்தை, துயரத்தை, கொண்டாட்டத்தை, வீரத்தை, வேதனையை, மகிழ்ச்சியை, தனிமையை, பக்தியை, கேலியை, கிண்டலை இசையாக மாற்றிக்கொடுத்த மேதையான எம்.எஸ்.வி.யின் பூத உடல் இன்று மறைந்துபோனாலும் அவரது இசை, தமிழ் உள்ளளவும் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த வகையில். எம்.எஸ்.விஸ்வநாதன் என்ற மகா கலைஞனுக்கு மரணமே இல்லை.

Gopal.s
18th July 2015, 04:46 AM
நினைத்தால் போதும் பாடுவேன்.

மெல்லிசை மன்னரின் சாதனை துளிகளில் முக்கியமானது நெஞ்சிருக்கும் வரை.இறுதி காட்சிக்கு முன்போ அல்லது இறுதி காட்சியிலேயோ பாடல் வைக்கும் தைரியம் ஸ்ரீதருக்குத்தான் உண்டு.அதுவும் சற்று சறுக்கினாலும் ,நகைப்புள்ளாக்கி விடும்.காதலிக்க நேரமில்லை நெஞ்சத்தை அள்ளி போல லகுவான படமல்ல. intense emotion with compelling climax scene .முதல் மேதைமை ஹம்சாநந்தி ராகத் தேர்ந்தெடுப்பு.டெம்போ கூட்ட கூடியது.அடுத்தது arrangement of multi -layered archestration with sharp transition counter -points .
அடுத்தது எனக்கு பிடித்த கீதாஞ்சலி. அருமையான நாட்டிய கவர்ச்சி பாவை.இந்த பாடலில் அவர் கொடுத்திருக்கும் fast movements ,துப்பாக்கியை மனதில் கொடுத்து விடும்.அவர் தன் Grace சற்று துறந்து பாடலின் டெம்போ வுடன் இணைவார்.(choreographer யார்?)சிவாஜி ஓடி வருவதில் ,இசையின் வேகத்திற்கேற்ப கட் பண்ணி ஸ்ரீதர் கொஞ்சம் fast motion கொடுத்திருக்கலாமோ என்று தோன்றும்.(அந்த கோப உக்கிரம் அந்த ஓட்டத்தில் register ஆகவில்லை ,விஸ்வநாதனின் இசை உக்கிரத்திற்கு தக்க).கண்ணதாசனை கேட்க வேண்டுமா?

பாலின் நிறம் போல உருவான பெண்மை
பனியில் விளையாடும் கனிவான மென்மை
எங்கும் பறந்தோடும் இளம் தென்றல் அல்ல
ஏக்கம் வரும் போது எல்லோர்க்கும் சொல்ல

இறுதியாக பாடகி.ஜானகியை விட்டு வேறு பாடகியை இந்த பாடலுக்கு நினைத்தே பார்க்க முடியாது.(இத்தனைக்கும் கிளாஸ் என்று பார்த்தால் சுசிலாவின் கண்ணன் வரும் தான்)இந்த situation க்கு ஏற்ற பரபரப்பு ,ஆரம்பமே உச்சம் தொடும்,பாவமுள்ள ஜீவனுள்ள பாடும் முறை.

எனக்கு இன்றும் கூச்செறிய செய்யும் பாடல்.ஸ்ரீதர் மட்டும் இன்னும் கொஞ்சம் திரைகதையை செதுக்கி இருந்தால் ,மெல்லிசை மன்னர் பட்ட பாட்டிற்கு நெஞ்சிருக்கும் வரை எங்கோ சென்றிருக்க
வேண்டிய படம். என்னவோ ...ஏதோ....ஒரு பீம்சிங்,பந்துலு,நாகராஜன் சிவாஜியுடன் கூட்டணி கண்டது போல ஸ்ரீதர்,பாலசந்தரால் காண முடியாதது அவர்களுக்கும் நமக்கும் துரதிர்ஷ்டமே.

https://www.youtube.com/watch?v=a7vKsW8W69U

eehaiupehazij
18th July 2015, 05:06 AM
கடுகடுப்பில் கொதித்தாலும் காதல் மன்னரை வெறுக்க இயலாத மதுர நங்கையர் மனதை நிலைநிறுத்தப் பாடும் நங்கூர கானங்கள் !

சந்தேகச் சேற்றில் மலர்ந்த அன்பு செந்தாமரைகள் :
புதிய குறுந்தொடர் : Illusions and Hallucinations of Love with the King of Romance!!
பகுதி 6 :தேன் நிலவு

மோதலில் ஆரம்பித்து காதலில் முடியும் வரை கண்ணற்ற காதலுக்கு எந்த சந்தேக முடிச்சும் விழவில்லை
வேறு ஒரு பெண்ணுடன் (vasanthi) காதலனைக் காண நேரும் போது இதயத்தில் தேங்கும் சந்தேகச் சேற்றில் அன்புத் தாமரை எப்படி மலரும் ?
மலரே மலரே தெரியாதா......மனதின் நிலைமை புரியாதோ .....வைஜயந்தியையும் அலையவிடும் காதல் மன்னர்!

https://www.youtube.com/watch?v=5adqzc2GRPU

eehaiupehazij
18th July 2015, 05:14 AM
அந்தப் பெண்கள்... வில்லனுக்குக் கட்டுப் பட்டு ஜேம்ஸ்பாண்டுடன் ஜொள்ளுவிடும் ஒரு நங்கை மறக்க முடியுமா என்ன சி.செ.. ம்ம்

டயமண்ட்ஸ் ஆர் ஃபார் எவரின் அந்த வெள்ளைக்காரி, அண்ட் நீக்ரோ பெண்ணுடனான பாண்ட் ஃபைட் போடுவீர்கள் தானே!

si ka


Exclusive thanks si ka for your exponential analysis on the unfortunate debacle vehicle On Her Majesty's Secret Service the single Bond credit for George Lazenby! He could have donned the tuxedo as expected for 10 subsequent movies planned by Broccoli group!! Time Boss!! But I like his tough stature and original stunt skills on par with Connery!

அதுதானே படத்தின் டர்னிங் பாயின்ட் சி க ! முதல் முதலாக ஈகோ பார்க்காமல் வலிமையான பெண்களிடம் அடி வாங்கும் ஜேம்ஸ் பாண்ட் கானரி!!
ஏதோ ஒரு வகையில் தூக்கலான கவர்ச்சியைப் புகுத்தியாக வேண்டும் என்பதுதானே ஜேம்ஸ் பாண்டின் Golden Rule! இதை சர்க்கஸ் கூடாரத்திலும் செய்வார் பாண்ட்!!

Dedicated to Si Ka as this bit is no fit for theme music category!!

சர்க்கஸ் சாகசக்காரிகள் ஜேம்ஸ் பாண்டை புரட்டி எடுக்கிறார்கள் !

https://www.youtube.com/watch?v=hACnmen0sGY

Gopal.s
18th July 2015, 05:27 AM
சிவந்த மண் படத்தின் பல தங்க புதையல்களின் நடுவே தொலைந்து விட்ட பிளாட்டின புதையலை பற்றி இந்த பதிவு.பிளாட்டினத்தின் மதிப்பு மக்களுக்கு புரியாததாலோ என்னவோ.

ஒரு நாளிலே உறவானதே
கனவாயிரம் நினைவானதே
வா வெண்ணிலா இசையோடு வா
மழை மேகமே அழகோடு வா
மகராணியே மடி மீது வா

நாளை வரும் "நாளை" என நானும் எதிர்பார்த்தேன்.
காலம் இது காலம் என காதல் மொழி கேட்டேன்
போதை தரும் பார்வை எனை மோதும் அலை மோதும்
போதும் என கூறும் வரை பூவே விளையாடு
வரும் நாளெல்லாம் இது போதுமே

மஞ்சம் இது மஞ்சம் என மார்பில் விழி மூடு
கொஞ்சும் இதழ் சிந்தும் என் நெஞ்சில் ஒரு கோடு .
தஞ்சம் இது தஞ்சம் என தழுவும் சுவையோடு.
மிஞ்சும் சுகம் யாவும் பெற வேண்டும் துணையோடு
வரும் நாளெல்லாம்.இது போதுமே

ஒரு நிர்ப்பந்தமாய் நடந்த காதல் ஜோடியின் நாலு பக்கம் வேடர் சூழ்ந்த நிலையில் (நண்பர் செஞ்சியும்)மானிரெண்டின் காதல்.(மகாராணியின் முதலிரவு கட்டாந்தரையில்).இரவு ஊருறங்கிய பின் குளிக்கும் மனைவியிடம் தாபத்தை கண்ணியமாய் வெளியிடும் புரட்சியாளன்.

காஞ்சனாவின் தாபம் நிறைந்த விழிகளும்,நடிகர்திலகத்தின் காதல் வயப்பட்ட மோவாய் முத்தங்களும்.போதும் என கூறும் வரை அணைத்து,வினாடி கண் சொக்குவாரே !!!!!வரும் நாளெல்லாம் என்று வீணை மாதிரி மடி கிடத்துவாறே (50 ஆவது நாள் போஸ்டர் என நினைவு),மிஞ்சும் சுகம் யாவும் வரிகளில் காஞ்சனாவின் கண்களை பாருங்கள் .வரும் நாளெல்லாம் என மடியில் இரு கால்களை வெவ்வேறு நிலை மடித்து மயக்குவாறே....

புரட்சியாளனின் இயல்பான முடியழகும் ,ஆண்மை நிறைந்த கட்டம் போட்ட சட்டையும்,make -up மிதமாக திராவிட மன்மதனின் இளமை பொங்கும் handsome என படும் ஆணழகும்(அந்த மூக்கு ...அடடா) ,காஞ்சனாவின் நாணம்,தாபம் நிறை பெண்மையும், ஆபாசமில்லாத உறுத்தாத ஈர உடையும் உங்களை வேறு உலகத்துக்கே அனுப்பும்.

நடிகர்திலகத்தின் முதல் ஐந்து காதல்களுக்குள் வரும். நல்ல வேளை ...அசல் திட்ட படி பாலமுரளி இதை பாடவில்லை. டி.எம்.எஸ் -சுசிலாவின் மயக்கும் குரலும் (ரெண்டு பெரும் சௌகரியமான pitch இல் ),எம்.எஸ்.வியின் சாதனை பாடல்களில் ஒன்று.

பார்த்து பார்த்து பார்த்து பார்த்து ,கேட்டு,கேட்டு,கேட்டு,கேட்டு மகிழவும்.

https://www.youtube.com/watch?v=ZNQSCPPTFzc&feature=endscreen

eehaiupehazij
18th July 2015, 05:34 AM
மாற்றார் தோட்ட மெல்லிசையும் மதுரமே !
PART 7 : DIAMONDS ARE FOREVER (1971)
SEAN CONNERY IS JAMES BOND 007 FOREVER! after getting lured for a huge sum that was unimaginable for any other star at that time!
But he gave away all this money generously for an educational trust to help student talents!


டயமண்ட்ஸ் ஆர் பாரெவெர் திரைப்படம் அதற்கு முந்தைய ஆன் ஹெர் மேஜஸ்டிஸ் சீக்ரட் சர்வீஸ் படத்தின் கதைத் தொடர்ச்சியே!
திருமணமான முதல்நாளே தனது கண் முன்னே மனைவியைக் கொன்றுவிட்டுச் சென்ற வில்லன் புளோபெல்டை பழிவாங்க துடிக்கிறார் பாண்ட்!!
தொழில்முறை சந்தர்ப்பங்கள் அனுகூலமாக அமைந்து வரும்போது பழிதீர்க்கிறார் !!

மீண்டும் ஜான் பேரி இசைத்தூரலில் ஷர்லி பஸ்ஸி இணைந்து கலக்கிய டைட்டில் தீம் பாடல் வழக்கம் போல மாரிஸ் பைண்டரின் கற்பனைத்திறன் மிக்க
கிராபிக்ஸ் குழைவில் !! தீம் இசையும் படம் நெடுக முக்கியமான துரத்தல் காட்சிகளில் அசத்தலாகப் புகுத்தப் பட்டிருக்கும்!!

இப்படத்திற்குப் பின் கானரி ரோஜர் மூருக்கு வழிவிட்டு ஒதுங்கிக் கொண்டார்....மீண்டும் கடைசித் தோற்றமாக 1983ல் நெவர் ஸே நெவர் அகைன் என்னும் தண்டர்பால் மறுபதிப்பில் வயதானாலும் தனது ஜேம்ஸ் பாண்ட்தனம் எள்ளளவும் குறையவில்லை என்பதை நிரூபித்தார் !!

Mind Sizzler theme song by Shirley Bassy!

https://www.youtube.com/watch?v=YWQir3sL72Q

Enjoyable pre-title sequence sprinkled with theme music!

https://www.youtube.com/watch?v=ztXmwXBlF-E

The famous car chase scene with its tempo enhanced by theme music juxtaposition!!

https://www.youtube.com/watch?v=0cjlnnj0gtM

The most famous Moon Buggy ride accompanied by no theme music prop!! Connery's original stunts without a body double! Amazing to watch him abandon the bike and swiftly getting into the heroine's car in a single shot!!

https://www.youtube.com/watch?v=Y03zBX_q4TM

Connery's come back interview!Enjoy the making of this movie scenes...one can perceive why Sean Connery is James Bond forever in the hearts and minds of fans!!

https://www.youtube.com/watch?v=F83fagXZ4pA

eehaiupehazij
18th July 2015, 06:38 AM
சந்தேகச் சேற்றில் மலர்ந்த அன்பு செந்தாமரைகள் :
புதிய குறுந்தொடர் : Illusions and Hallucinations of Love with the King of Romance!!
பகுதி 7 :இரு கோடுகள்


முதல் மனைவி தவறி விட்டதாக தவறாக எண்ணித் தவறாமல் இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார் புன்னகை மன்னர் பூவிழிக் கண்ணர் காதல் மன்னர்! இரண்டு மனைவிகளும் சந்திக்க நேரும் போது....யாருக்குமே No Peace of Mind! GG feels between a deep sea and a devil!!

மனங்கள் கடுகடுத்தாலும் தன்னை விட்டுக் கணவர் பிரிந்து விடுவாரோ என்ற பயத்தோடு அன்புப் பெருக்கில் ஜெயந்தி Vs சௌகார் !!



நாகேஷுக்குப் பாடல் காட்சியை விட்டுக் கொடுத்து ஒதுங்கி நின்று வெள்ளந்தியாக ரசிக்கும் பெருந்தன்மையாளர் ஜெமினி !

வி குமாரின் துள்ளிசைத் தூறலில் ...

https://www.youtube.com/watch?v=VzKWWPMiSmI

https://www.youtube.com/watch?v=8G5Q7BNI7jY

vasudevan31355
18th July 2015, 08:07 AM
http://i58.tinypic.com/2pq9xud.jpg
http://i57.tinypic.com/2h5pbug.jpg
http://i59.tinypic.com/29kz6gj.jpg

eehaiupehazij
18th July 2015, 08:20 AM
மாற்றார் தோட்ட மெல்லிசையும் மதுரமே !
PART 8 : NEVER SAY NEVER AGAIN (1983)Directed by Irvin Kershner
SEAN CONNERY IS JAMES BOND 007 FOREVER!
after a long hyatus Connery was lured back for one more last performance! Good to see him as a matured Bond maintaining his physique well though rills are seen on his face!


தண்டர்பால் திரைப்படத்தின் பகுதி உரிமை சட்டப்படி கையில் வைத்திருந்த இன்னொரு தயாரிப்பாளர் கெவின் மேக்லோரி ஷான் கானரியை வைத்து மீண்டும் தண்டர்பாலை அடிப்படையாகக் கொண்ட கதையை உருவாக்கினார் மீண்டும் பாண்டாக நடிக்க மாட்டேன் என்று நடிகர்திலகம் பாணியில் NEVER ...NEVER AGAIN...என்று உறுமிக் கொண்டிருந்த கானரி சிங்கத்தை மீண்டும் ஜேம்ஸ் பாண்டின் தங்கக் கூண்டில் அடைக்கும் வண்ணம் NEVER SAY NEVER AGAIN என்ற பொருத்தமான தலைப்பில் படத்தை உருவாக்கி வெற்றி கண்டனர்

ஜான் பேரியின் இடத்தில் புகழ் பெற்ற இசை வல்லுநர் MICHEL LEGREND புது வகை தீம் இசை மற்றும் டைட்டில் பாடலை உருவாக்கினார் மிகச்சிறந்த சண்டைக் காட்சிகளும் துரத்தல்களும் கூடவே கடலடி சாகசங்களும் நிறைந்த இப் படத்தின் இசை ட்ராக்கும் பிரபலமானது

Titles alongside scenes and titile song BY SOPHIE DELLA!

https://www.youtube.com/watch?v=ZqqYoLRTgI8

The most famous horse riding into deep sea!

https://www.youtube.com/watch?v=rdgJsT7FTKw

The most famous video game scene!

https://www.youtube.com/watch?v=R0355pD08lY

The thrilling bike chase and end of villi

https://www.youtube.com/watch?v=NWQHlNaBVRM

vasudevan31355
18th July 2015, 08:32 AM
http://2.bp.blogspot.com/-2TFMgkp_PyM/VXa5K_njOdI/AAAAAAAAALI/tQYa3R7M5lc/s640/eid-mubarak-2015-greetings-wishes-tamil-messages-sms.png

vasudevan31355
18th July 2015, 08:54 AM
வானுக்குத் தந்தை எவனோ
மண்ணுக்கு மூலம் எவனோ
யாவுக்கும் அவனே எல்லை
அவனுக்கும் தந்தை இல்லை
அல்லா பெற்ற பிள்ளைதானே யாரும்.


https://youtu.be/k-KOgDEm8aw

vasudevan31355
18th July 2015, 09:03 AM
எங்குமுள்ள அல்லா
பேரை சொல்லு நல்லா
நன்மைகள் மாத்திரம் கிடைக்கும்
மேடு பள்ளம் இல்லா
பாதை தரும் அல்லா
பார்வையில் நிம்மதி பிறக்கும்

அன்று மெக்காவில் உதித்தது ஜோதி
அதில் உண்டாச்சு உலகத்து நீதி
நாம் எல்லோரும் அல்லாவின் செல்வம்
எடுத்து நல்வாக்கு எப்போதும் சொல்வோம்


https://youtu.be/0OLP9SUTEdM

vasudevan31355
18th July 2015, 09:08 AM
அல்லாவே எங்களின் தாய் பூமி
பூவாசம் பொங்கியதால் ஏரி
பூவனம் போர்க்களம்
ஆனதேனோ
பனிவிழும் மலைகளில்
வலிகள் ஏனோ
யா அல்லாஹ்! என் கஷ்மீர் அழகாக மாறாதா?
யா அல்லாஹ்! என் கஷ்மீர் அமைதி காணாதா?

https://youtu.be/7TFjKOzxn28

rajeshkrv
18th July 2015, 09:51 AM
http://www.thehindu.com/multimedia/dynamic/01467/TH-VAALI_1467654f.jpg
இரண்டு ஆண்டுகள் ஒடிவிட்டன .. இன்னும் துயரத்தில் இருந்து மீள முடியவில்லை.
60 ஆண்டுகள் அசராமல் எழுதியது உன் பேனா அது நின்றதும் தமிழே நின்றது
உன் இளமை வரிகளை மட்டுமே பார்ப்பவர் சிலர்
உன் தமிழ் வளமையை பார்த்தவர் பலர்
1000 இளம்கவிகள் வந்தாலும் தனி ஒரு கவியாக
பெருங்கவியாக அவர்களுடன் போட்டியுடன் வழியும் காட்டியாகவும் விளங்கியது நீ மட்டுமே
என் தமிழ் ஆசானே மெல்லிசை மன்னரும் வந்து விட்டார். இனி மேலுலகில் கவியரங்கள் களை கட்டும் ...
என்றுமே காவியக்கவிஞராக எங்கள் மனதில் ராஜ சிம்மாசனம் போட்டிருப்பது நீர் ஒருவரே - வாலியின் அடிமை ராஜேஷ்

chinnakkannan
18th July 2015, 11:06 AM
ஹாய் குட் மார்னிங் ஆல்..

அனைவருக்கும் எனது ஈத் பெரு நாள் நல்வாழ்த்துக்கள்..

வெய்யில் கொளுத் கொளுத் என்று தான் இருக்கிறது.. இரவில் டெம்பரேச்சர் 42 டிகிரி சி என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.. கண்ணுக்குக் கீழ் உஷ்ணம்..உஸ்... அப்பாடா..

ஊரிலிருந்து வந்து ரெண்டு ரெண்டு பனடால், பின் சீஸீ3 மற்றும்காஃப் சிரப் போட்டுத்தூங்கினாலும் தூக்கம் வராமல் ஒருமாதிரி ரெண்டுங்கெட்டானாய்ப் போய்விட்டது..

ச்சும்மா வீட்டிலிருந்து நாலு ஸ்டெப் இரவு ஒன்பது மணியளவில் அருகிலிருக்கும் ரூவி ஹைஸ்ட்ரீட் நடந்தால்..

ஜே .ஜே.. என்று கூட்டம்..கிட்டத் தட்ட தீபாவளி சமய மதுரை கீழ வாசல் மாதிரி.. அண்ட் ட்ராபிக் நான்கு சக்கர வாகனங்கள் மெல்ல பொறுமையுடன் பொறுமை இழந்து
ஆனால் கட்டுப்பாட்டுடன் முன்னுள்ள காருக்கு முத்தா கொடுக்காமல் ஊர்ந்து கொண்டிருக்க, துணிக்கடைகளில் கொஞ்சம் கூட்டம் ..ஷூக் கடைகளிலும் தான்..

அந்தப் பக்கம் கொஞ்சம் நடு வீதியில் இருந்த மலபார் ஹோட்டல்களில் கும்பல் ப்ளஸ் ஹோட்டல் காரரிடம் கொஞ்சம் நிம்மதி (பின்னே.. ஒருமாதம் ஈவ்னிங் மட்டும் தானே திறக்க முடியும் இங்கு..) இனி முழுதும் திறக்கலாமல்லவா..

*
நன்றி சி.செந்தில்..அந்த லேஸன் பை கட்டுரையை இரவு ஒன்றோ இரண்டோ தூக்கம் வராமல் எழுந்து எழுதினேன்..

டைமண்ட்ஸ் ஆர் ஃபார் எவர்..என்னைக் கவர்ந்த பாடல்களில் ஒன்று

நெவர் ஸே நெவர் அகெய்ன் ரொம்ப காலத்துக்கு முன் பார்த்தது ஒரே ஒரு முறை மட்டும் அதுவும் விட்டு விட்டுப் பார்ததில் அவ்வளவாக நினைவில் இல்லை..ம்ம் நடத்துங்கள்..

chinnakkannan
18th July 2015, 11:08 AM
வாலி ஐயா மறைந்து இரண்டு ஆண்டுகளா ஆகிவிட்டன ராஜேஷ்..ஆச்சர்யமாக இருக்கிறது எப்படி காலம் வெகுவாக ஓடுகிறது என்று..ம்ம்

Gopal.s
18th July 2015, 12:09 PM
கவிஞர் வாலி

வாலியின் மிக சிறந்த வரிகள்.

தன்னுயிர் பிரிவதை பார்த்தவரில்லை. என்னுயிர் பிரிவதை பார்த்து நின்றேன்.

கன்னமெனும் கிண்ணத்திலே வண்ணங்களை குழைத்தாயே. பொங்கி வரும் புன் சிரிப்பில் கொஞ்சம் கொஞ்சம் இறைத்தாயே.

மனசுக்குள்ளே தேரோட்ட மைவிழியில் வடம் புடிச்சான்

முன்னுரைத்த காதலையே உந்தன் முடிவுரையாய் தருக

முக்கனிக்கும் சர்க்கரைக்கும் சுவையை செவ்வாய்தான் தருமோ

நித்தமும் நாடகம் நினைவெல்லாம் காவியம்

கடல் நீர் நடுவே பயணம் போனால் குடிநீர் தருபவர் யாரோ

மாளிகையே அவள் வீடு மரகிளையில் என் கூடு

மாதவி பொன்மயிலாள் தோகை விரித்தாள் வண்ண மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்

நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும் நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும் ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்

புத்தம் புதிய புத்தகமே உன்னை புரட்டி பார்க்கும் புலவன் நான்

வான் பறவை தன் சிறகை எனக்கு தந்தால் ,பூங்காற்றே உன் உதவியும் எனக்கிருந்தால்,வானத்திலே பறந்து சென்றே போனவளை அழைத்து வந்தே காதலை வாழ வைப்பேன்

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ





எங்களுக்கு மீளா வலி தந்து எங்களை விட்டு மறைந்த கவிஞர் வாலி அவர்களின் நினைவலைகள்.அவரை ஒரு தமிழ் மன்ற நிகழ்ச்சிக்கு ஜகார்த்தா அழைக்க சென்ற போது வர மறுத்தவர், பாஸ்போர்ட் எடுக்கலை என்றார். அவரிடம் சற்று உரையாடிய போது ,நடிகர்திலகத்தை அறிந்திருக்க மாட்டீர்கள் என்று சில குறிப்புகளை தந்த போது சீறி எழுந்து , பொழப்பு வேறே ,ரசனை வேறப்பா.உன்னை விட நான் பெரிய ரசிகனாக்கும் என்ற படி ,சிவாஜியின் சிறப்புகளை பற்றி விடாமல் 20 நிமிடம் பேசினார்.அசந்து நின்றேன் .

எங்கிருந்தாலும் இளமையோடு வாழுங்கள் கவிஞரே .

நானும் கண்ணதாசன், வைரமுத்து ஆகியவர்களின் ரசிகன் என்றாலும் வாலி அவர்களில் இருந்து வேறு பட்டவர் , சமமமாக மதிக்க பட வேண்டியவர் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன் .(வாலி யுருத்த?.)

1)வாலி அளவு சங்கீத அறிவு கொண்ட பாடலாசிரியர்கள் இந்திய அளவு கிடையாது. இதை விஸ்வநாதன்-ராமமூர்த்தி ,இளைய ராஜா முதல் இளம் இசையமைப்பாளர்கள் வரை சுட்டி காட்டியுள்ளனர்.

2)வாலி இலக்கியங்கள் அளவு புராண,இதிகாச,வேத அறிவுகளும் கொண்டிருந்ததால் வசீகர ,அபூர்வ கருத்துக்களை பாடல்களில் தர முடிந்தது. (சாண்டில்யன் கதைகள் போல)

3)வாலி down to earth .அணுக சுலபமானவர். அழிவு தரும் அகந்தையோ, தீய பழக்கங்களில் மூழ்கியோ போகாமல் உலகத்தோடு ஒட்டினார்.

4) 1959 முதல்- 2013 வரையான longevity with glory என்பது டெண்டுல்கர் சாதனைக்கு ஒப்பானது.

5)வாலி கொடுத்த range எந்த பாடலாசிரியரும் தொட முடியாதது.

வாலி ஒரு விதத்தில் துரதிர்ஷ்டசாலி. கண்ணதாசன் திறமைக்கு மீறி புகழடைந்தார். வாலி திறமை இருந்த அளவு போற்றப்படவில்லை.கீழ்கண்ட உதாரணங்களே போதும்.

ஒரு முறை ஜீவி(மணி ரத்தினம் அண்ணன்) ஒரு மேடையில் பேசும் போது , மூன்று பாடல்களை குறிப்பிட்டு , கண்ணதாசன் எழுதிய இது போன்ற பாடல்களை நீங்கள் எழுதவில்லை என்றார். வாலியோ ,அடபாவி,நீ குறிப்பிட்ட மூன்று பாடல்களுமே நான் எழுதியவை என்றாராம்.

M .S .V கண்போன போக்கிலே,அந்த நாள் ஞாபகம் பாடல்களை கண்ணதாசன் எழுதியதாகவே குறிப்பிட்டு வந்தார்.(ஒரு தொடரிலும்!!)

இப்படியாக கண்ணதாசனுக்கு வேண்டாத புகழ்களும் சேர்ந்தன. ஆனால் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் ,வாலி எழுதியதாக குறிப்பிடபட்டதேயில்லை.

வாலி தன்னை ஒரு குறிப்பிட்ட நடிகருடன் ,முக்கிய காலகட்டங்களில் Brand பண்ணி கொண்டது, வாலியின் தவறாகும். இது அவர் திறமையை மற்றவர் குறைத்து எடை போட காரணமானது.கண்ணதாசன்,வைரமுத்து அந்த பொறியில் சிக்கவில்லை .

chinnakkannan
18th July 2015, 12:51 PM
//வாலி தன்னை ஒரு குறிப்பிட்ட நடிகருடன் ,முக்கிய காலகட்டங்களில் Brand பண்ணி கொண்டது, வாலியின் தவறாகும். இது அவர் திறமையை மற்றவர் குறைத்து எடை போட காரணமானது.கண்ணதாசன்,வைரமுத்து அந்த பொறியில் சிக்கவில்லை .//

ஹாய் கோபால் நலம் தானே

உங்கள் மீது அளவிடற்கரிய கோபம்+ வருத்தம் எல்லாம் எனக்கு உண்டு (எதனால் என உமக்கே தெரியும்) ஆனால்
நீங்கள் முனைந்து இடும் பதிவுகளை கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு என் பிஞ்சு (?!) மனம் ஒப்பவில்லை..

நினைத்தால் போதும் பாடுவேன் - மிகப் பிடித்த பாட்டு எனக்கு. ஹை பிட்ச்சில் ஜானகி பாட சுழன்றாடும் கீதாஞ்சலி.. மறக்க முடியாது..எனக்கும் அதைக் கேட்கும் போது மயிர்க்கூச்சமெடுக்கும்..

அதுபோலவேமீண்ட சொர்க்க இறுதிப் பாடல் மன நாட்டிய மேடையில் ஆடினேன் - சுசீலா நும் பிடிக்கும்

ஒரு நாளிலே உறவானதே...யும் அப்படியே..

வாலியைப் பொறுத்தவரை யார் என்ன சொன்னாலும் கவலைப் படாதவர்..தன்னைப் பொறுத்தவரை தெளிவாக இறுதிவரை எழுதியவர் பாடலாகட்டும் சரி, புதுக்கவிதை நூல்களாகட்டும் சரி..( ம.தியைச் சார்ந்து இருந்தார் என்பதால் பலர் பேசியிருக்கிறார்களா என்ன..)

மற்ற மதப் பாடல்களைப் பற்றி அவர் சொன்னது மட்டும் நினைவில்.. அந்த சமயப் பாடல்கள் எல்லாம் பாடல்கள் திரையில் வரும் சமயத்திற்கேற்ப எழுதப் பட்டது..

நடிப்புச் சுடர், புஷ்பலதா + வாலி - இன்று வந்த சொந்தமா..

https://youtu.be/3prYBNIPtlg


உங்களுக்காக ஒரு பாட்..(ஆண்டவா பிடிக்கணுமே :) )

ஆனந்த மயக்கம் அருகில் வந்த நெருக்கம்... ரவி கே.ஆர்.வி

https://youtu.be/hwb0L7c4f3c

eehaiupehazij
18th July 2015, 03:24 PM
மாற்றார் தோட்ட மெல்லிசையும் மதுரமே
பகுதி 9 : LIVE AND LET DIE (1973) / லிவ் அண்டு லெட் டை (வாழ்ந்து சாக விடு) : ஜேம்ஸ் பாண்டாக ரோஜர் மூரின் வருகை!
Refreshing entry of ROGER MOORE as a long standing alternative to Sean Connery


ஒரு வழியாக ஷான் கானரி ஜேம்ஸ் பாண்ட் வட்டத்திலிருந்து விடுபட்டு ரோஜர் மூருக்கு சிவப்புக் கம்பள வரவேற்புக்கு வழி காட்டினார்.
முதல் படத்தில் ஷான் கானரி பெருமைப் படுத்திய ஜேம்ஸ் பாண்ட் அறிமுக வார்த்தைகளான 'பாண்ட்...ஜேம்ஸ் பாண்ட்' ரோஜர் மூரை சொல்ல வைக்க மிகவும் யோசித்தார்கள்.

அதே போல மூரின் முதலிரண்டு படங்களிலும் டைட்டிலுக்கு முன்னால் வரும் சாகசக் காட்சிகளிலும் அவர் தோன்றுவதை சற்று அவநம்பிக்கையுடன் தவிர்த்தார்கள். ஷான் கானரி அளவு முடியாமல் காமடி ஆகிவிடக் கூடாது என்று நினைத்தாராம் புரோக்கோலி!

But Moore proved that he would be the right alternative to Connery with his alter ego Bond image in a lighter vein comedy mix as his unique brand contribution!!


ஷான் கானரி உருவகப் படுத்திய ஜேம்ஸ் பாண்ட் அறிமுக வசனம் 'பாண்ட்....ஜேம்ஸ் பாண்ட்' டாக்டர் நோ படத்திலிருந்து....

Super voice and dialogue delivery with a sizzling modulation by Connery that remains inimitable till date, even after five more actors have donned the tuxedo after him!!

உதட்டில் புகையும் சிகரெட்டுடன் என்னவொரு ஸ்டைலாக 'பாண்ட்... ஜேம்ஸ் பாண்ட்' பிறக்கிறது !!
53 வருடங்களுக்குப் பிறகும் வெல்ல முடியாத அமரத்துவ அறிமுக ஒன் லைனர்!!(புதிய பறவையில் பார்த்த ஞாபகம் இல்லையோ....... நடிகர்திலகத்தின் கெட்டப் இக்காட்சியை அடியொற்றியதே!!)

தீம் மியுசிக் பின்னணியில் ரீங்காரமிட ஷான் கானரியின் ஜேம்ஸ் பாண்ட் கெட்டப்பில் அவரது கம்பீர நடையழகு உள்ளத்தைக் கவர்ந்து சொக்க வைக்கிறதே

https://www.youtube.com/watch?v=0xDj3NRYTU8

An interesting scene..Roger Moore utters 'My Name is Bond .....James Bond'!!....quite impressive!!...like the cannon ball dialogue delivery of NT in VPKB imitated by a school child in a fashion show in a lovable baby dialect!!

https://www.youtube.com/watch?v=rIbIiFRpL5Y

லிவ் அண்ட் லெட் டை படத்துக்கு ஜான் பேரியின் தீம் பாடல் இல்லை. பதிலாக பால் மெக்கார்ட்னி அண்ட் விங்ஸ் இணைவில் பாடல் அமர்க்களமாக கோர்க்கப்பட்டு நல்ல வரவேற்ப்பை பெற்றது George Martin has scored the Music!

https://www.youtube.com/watch?v=ngLB6pUpFmU

https://www.youtube.com/watch?v=sn8alMYSu44

The movie received mixed criticisms. Over all it could not fare well up to expectations but profit wise better than On Her Majesties Secret Service!! Now Moore has been slowly becoming the inevitable Bond icon to replace Connery over time though Moore could establish his individuality only after his third outing The Spy Who Loved Me!!

The most famous Crocodile farm escape by Bond/Moore!
unlike Lazenby's fiasco, Moore firmly established his footsteps to don the Bond tux in a line of 7 movies creating the record to be balanced by the original Bond Connery by his NSNA!! We love Moore next only to Connery!!

https://www.youtube.com/watch?v=kmH0PP_zAKo

eehaiupehazij
18th July 2015, 07:32 PM
மடிந்து விட்ட மனசாட்சி ......
நடிகர்திலகத்தின் மாண்பு அறியாத பேதைமை.....
அமரனே !! எம் இதயத்தில் பதிந்த உன் பொற்பாதங்களை எம் கண்ணீரால் நனைப்பதே எம்மால் இயன்ற மனமண்டப அஞ்சலி!!

http://mlife.mtsindia.in/nd/?pid=420190&rgn=tn

உலகப் பொதுமறை திருக்குறள்
உலக நடிப்பிலக்கணம் நடிகர்திலகமே ! தமிழ் மண்ணின் பெருமை உலகெங்கும் பரப்பிய செம்மலுக்கு தமிழை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று கற்றுத் தந்த ஆசானுக்கு தமிழகத்தில் சொந்த மண்ணில் மணி மண்டப அஞ்சலி மறுக்கப்படுவது .....ஆறாத ரணமே!

Richardsof
18th July 2015, 08:38 PM
Brand செய்ததால்தான் grand success அடைந்தார் வாலி .வாலிக்கு இது பெருமைதான்.

eehaiupehazij
18th July 2015, 10:22 PM
(கனவுச்) சேற்றில் மலர்ந்த (காதல்) செந்தாமரைகள் :
புதிய குறுந்தொடர் : Illusions and Hallucinations of Love with the King of Romance!!
பகுதி 8 :அவளுக்கென்று ஒரு மனம் : பாரதி Vs காஞ்சனா



மாமாவையே கல்யாணக் கனவுடன் உயிருக்குயிராக நேசிக்கிறார் பாரதி. ஆனால் ஜெமினி மாமனோ அவரை சிறுவயது முதல் குழந்தைப் பெண் என்ற கண்ணோட்டத்திலேயே பாசம் செலுத்துகிறார். மாமா விலக விலக சந்தேக சேற்றில் சிக்கி காஞ்சனா தொடர்பு மனதை அரிக்க நிம்மதி இழக்கிறார். மாமாவின் உண்மை நிலை தெரிந்ததும் வெறுக்கவும் முடியாமல் அன்பை வி(ல)ளக்கவும் முடியாமல் தவித்து மதுவுக்கும் அடிமையாகிறார். சந்தர்ப்ப சூழலில் முத்துராமனின் கைப்பாவையாகிறார்.....

கலைந்த கனவும் தெளிந்த நினைவும்

https://www.youtube.com/watch?v=vHVwDiEr64Q

https://www.youtube.com/watch?v=AcZIhu9xXWg

chinnakkannan
18th July 2015, 11:54 PM
இரவு நேரச் சிந்தனை..1

*

பாளையாந்தன்மை கெட்டும்
பாலனாந்தன்மை கெட்டும்
காளையாம் தன்மை கெட்டும்
காமுறு இளமை கெட்டும்
மீளும் இவ் இயல்பு முன்னே
மேல்வரு மூப்புமாகி
நாளும் நாட் சாகின்றோமால்
நமக்கு நாம் அழாததென்னா..

மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.. உலகத்தில் மாறவே மாறாதது மாற்றமே..எனில் மாற்றத்தை ஏற்றுக்கொண்டு
கண் மூடி இந்தப் பாடலைக் கேட்டு ரசிப்போமாக..கண் திறந்து பார்த்தாலும் வேறு மாற்றம் ஏற்படலாம்!

https://youtu.be/SD5fhs1JwbQ?list=RDcVWuW67Xo_Y

chinnakkannan
19th July 2015, 12:18 AM
I.N.S - (!) - 2

கனவென்பார் இல்லையிலை கண்களுக்குள் உறைந்துவிட்ட
நனவென்பேன் நாள்தோறும் நங்கையுடன் நின்றிருந்த
மனங்கொண்டு ஆற்றோரம் மகிழ்ந்திடவே பாடியதை
வினவித்தான் விடைகேட்டு முதுமையதும் வந்ததுவே..


https://youtu.be/3J095E4z16I?list=RDZBS5EYCXAhI

raagadevan
19th July 2015, 12:50 AM
Welcome back Chinnakkannan; and vaNakkam to everyone! :)

In 1967, M. Krishnan Nair (known in Tamil as M. Krishnan) directed the Malayalam movie COCHIN EXPRESS
starring Prem Nazir and Sheela. The movie was a thriller, dealing with the investigation of a murder that occurred
in the Cochin Express (train) on its way from Madras to Cochin (Chennai to Kochi!) :)

There were six songs, all penned by Sreekumaran Thampi and tuned by V. Dakhinamoorthi (Swami). Here is
one of the songs; “chanthamuLLoru penmani…” by KJY & L.R. Eeswari:


https://www.youtube.com/watch?v=0rYDHBB_7ws

In 1968, the movie was remade in Tamil under the name NEELAGIRI EXPRESS with Jai Shankar
(as CID Shankar) and Vijayanirmala. Kannadasan wrote the lyrics, and T.K. Ramamurthi composed the music.
Here is “naan kalainjanalla unnai…” by TMS (humming by P. Suseela):

https://www.youtube.com/watch?v=G6wYdeAhQiA

In Telugu, it became CIRCAR EXPRESS (1968), and featured Krishna and Vijayanirmala. The songs were composed
by Sathyam. I couldn’t find a video link to the Telugu songs (Raj: we need your help!) Here is an audio link to
some of the Circar Express songs:

http://tunes.desibantu.com/circar-express/

The 1970 Hindi version was named THE TRAIN, and it featured Rajesh Khanna and Nanda. Here is
Mohamed Rafi singing R.D. Burman’s composition:

https://www.youtube.com/watch?v=2rvoiBkDePY

Raj: I am sure you would like this link to a write-up in The Hindu:

http://www.thehindu.com/features/cinema/neelagiri-express-1968/article6993706.ece

vasudevan31355
19th July 2015, 07:34 AM
சின்னா!

இன்று வந்த சொந்தமா..சலிக்காது. ஆனால் நீங்களும் நானுமே நிறையப் போட்டுட்டோம். அதே போல நினைத்தால் போதும் பாட்டும். கீதாஞ்சலி அலசலில் பார்த்தோம்.

//உங்களுக்காக ஒரு பாட்..(ஆண்டவா பிடிக்கணுமே )//

ஏப்பு இவ்வளவு பயம்? இப்படி உசுப்பேத்தியே......இதுகெல்லாமா ஆண்டவனை கூப்பிடுவாக. ஆண்டவா!:)

ரோஷக்காரியைப் போட்டு ரோஷமானை:) மடக்கப் பார்க்கிறீர். ம்ம். முடியதுங்காணும்.:)

தமிழகம் வந்து போனதும் தாய்மொழிப் பற்று ஜாஸ்தி ஆயிற்றோ! கவிதையா கொட்டுதே.

நானே நானா, ஆத்து மேட்டுல பார்த்து ரசித்தேன் மீண்டும். நன்றிங்னா.

vasudevan31355
19th July 2015, 07:47 AM
CIRCAR EXPRESS

http://1.bp.blogspot.com/-ZAT5UJCD-kQ/Uxin581XssI/AAAAAAAAJbU/f1KImIt_eZw/s1600/Circar+Express+12-04-1968.jpg

http://2.bp.blogspot.com/-Mj1qjYHFOms/TnH3jrV-_nI/AAAAAAAAAIA/mqOGEGrnfKQ/s640/sarkar+express1-1.JPG

eehaiupehazij
19th July 2015, 09:51 AM
மாற்றார் தோட்டத்து மெல்லிசை மதுரங்கள்
பகுதி 10 தி மேன் வித் தி கோல்டன் கன் / The Man with the Golden Gun (1974) starring Roger Moore as James Bond OO7


ரோஜர் மூரின் இரண்டாவது பாண்ட் படம் இப்படமும் பெரிய அளவில் பேசப்படவில்லை எனினும் வில்லனாக வரும் டிராகுலா புகழ் கிறிஸ்டோபர் லீ பாண்டையும் மீறி மனதில் பதிந்தார். ஷர்லி பாஸிக்கு சற்றும் குறையாமல் மனதில் ஆணியடிக்கும் எல் ஆர் ஈசுவரி குரலில் Lulu டைட்டில் பாடலில் அசத்தினார் ஜான் பேரியின் இசைத்தூறல் மன நிறைவே !

ஜேம்ஸ் பாண்டின் குணாதிசயத்தை நகைச்சுவை தூக்கலான ஆனால் பாத்திரத்தின் மாண்பு கெடாமல் நிலைநிறுத்திய பெருமைக்கு சொந்தக்காரர்ரோஜர் மூரே! ஆனாலும் இப்படத்திலும் கானரியின் நிழல் பாதிப்பு அதிகம்!

The Man with the Golden Gun (1974)

Lulu has justified her voice as a perfect replacement to the Goldfinger fame Shirley Bassy in John Barry's music bonanza!

https://www.youtube.com/watch?v=PSbj2Mx2By8

Enjoy the rib tickling comedy element infused by Roger Moore as a pleasing deviation from the Connery format of serious o' serious James Bond characterization!

https://www.youtube.com/watch?v=5Q-wdaxsAac

The towering presence of Christopher 'Dracula' Lee as the arch villain to Bond / Moore!

https://www.youtube.com/watch?v=9_dAKu_cNS8

Enjoy the mind boggling take over by Bond on Scaramanga in the climax duel! See the swiftness of the dwarf henchman for Scaramanga!!

https://www.youtube.com/watch?v=jqCJqRhikDk

chinnakkannan
19th July 2015, 10:06 AM
ஹாய் குட்மார்னிங் ஆல்

ராகதேவன் நன்றி.. நீலகிரி எக்ஸ்ப்ரஸ் கொச்சின் எக்ஸ்ப்ரஸ் ஹிந்தி எக்ஸ்ப்ரஸ் பாடல்களுக்கு..ஹிந்திப் பாட் பல நாட்களுக்குப் பின் கேட்கிறேன்..தாங்க்ஸ்

வாசு..பாராட்க்கு நன்றி :) ஆமாங்க்ணா.. கீதாஞ்சலி ரொம்பவே அலசியிருக்கிறோம்..இன்னிக்கு என்ன பாட் தரப் போறீங்க.. கொய்ங்க் கொய்ங்க் என த் தேனீயாட்டம் பறந்து ஈத் ஹாலிடேஸ் ஓடியே ஓடி விட்டது..
நாளன்றைக்கு மறுபடி ட்யூட்டி..பழைய செக்கு தான்..சுற்ற வேண்டும்..வாழ்க்கைக்காக!

*

சிவாஜி செந்தில்..

மேன் வித் தெ கோல்டன் கன்.. படம் ரொம்பத் தேடித் திண்டாடி எனக்குக் கிடைத்தது வீடியோ - 90களில்.. அவ்வளவு தேடலுக்கும் ஏமாற்றத்தை விளைவிக்கவில்லை படம்.. (ஹீரோயின் ஒல்லிப் பெண் தான் கொஞ்சம் ஏமாற்றம்..கண்ணு நல்லா இருக்கும்) கிறிஸ்டாஃபர் லீயின் மென்மையான கொடூரம் வியக்க வைக்கும்..அதுவும் அந்த எல்லாரும் கூடும் ஸ்டேடியத்தில் தன் காதலியின் நெற்றியில் புல்லட் பொட்டு வைத்து உட்கார்த்தி வைக்கும் செயல்..ச்சிலீர்.. குள்ளப் பையன் வேறு...

திடீர் என அந்த ஆச்ரமம் அல்லது வில்லனின் பங்களா இன் பாங்காக்கா ..அங்கிருந்து கராத்தே ஸ்கூல்..அங்கு வரும் இரண்டு ஸ்கூல் கேர்ள்ஸ் பள்ளிச் சீருடையில் வரிந்து கட்டிக்கொண்டுபாண்ட் டிற்கு ஹெல்ப் பண்ண கராத்தேயில் இறங்குவது நன்றாக இருக்கும்..

அந்த ஒற்றைப்பாறை த் தீவு அதனுள் மர்மங்கள்..ம்ம் நல்ல படத்தைப் பற்றிய நினைவூட்டலுக்கும் இசைக்கும் நன்றி.. :)

rajeshkrv
19th July 2015, 10:11 AM
அருமையான கன்னட பாடல்

எல்லே இரு ஹேகே இரு

https://www.youtube.com/watch?v=Wn5oOqxvVuU

கஸ்தூரி நிவாஸா (அவன் தான் மனிதனின் ஒரிஜினல்)

eehaiupehazij
19th July 2015, 10:41 AM
Dear Raagadevan Sir and Vaasudeven Sir

Can you twosome elaborate on the fascinating and absorbing musical feat of the evergreen Crown of Malayalam movies ...Chemmeen! by Salil Chowdhary Ramu Kariyath Markus Bartley combo with Madhu Sheela Satyan...for the lyrics and captivating play back by Jesudas, and Manna Dey?

I await with CK

chinnakkannan
19th July 2015, 10:51 AM
சி.செ.. செம்மீன் பற்றி தொழில் பாட்டுகளில் ஏற்கெனவே எழுதியிருந்தேனே.. பாடல்கள்..ம்ம் ஓ.கே..அது பற்றி டீடெய்லாக எழுதவிலலை என நினைக்கிறேன்.. ஒரு மீள் பதிவு போட்டட்டுமா?

eehaiupehazij
19th July 2015, 10:56 AM
Thanks a lot CK for sharing your nostalgia on The Man With the Golden Gun taken over by Roger Moore as the inevitable replacement Bond to Connery!
It was just a mediocre Bond flick but gradually establishing the cult comical image of Bond carved by Moore over a long sustaining stay in that role!!

Though Roger Moore was not that manly like Sean Connery (the perfect body frame with a hairy chest and a tough face!) Moore slowly settled in that role comfortably after his impressive performance in his next grand gala venture The Spy Who Loved Me' managing to come out of the shadows of Connery. There upon he could successfully perform in his own format..but over comedy elements slowly eroded the characterization till Timothy Dalton could resume the danger of Connery!!

I am happy that CK's format of light vein interaction on Bond flicks is quite interesting and dominating over my just tit-bits type video dependant presentations!! Kudos and thumbs up CK!!

Thanks a lot for the sustained encouragment from Vasu, Ravi,Gopu, Adiram, Raagadevan and Rajesh (grown up in the era of Moore's Bond?!) as regards this extended series on Bond music and its global influence on all other language spy genre movies, particularly in Tamil..through Tamil Bond Jaishankar movies ably supported by Vedha and TR Paappa!!

with regards, Senthil


I hope, having become good friends in our threads, kindly address me just Senthil. Suffix like Sir may still keep us distance apart! Any objection your honour...I am just in this corner!(Gowravam?)

eehaiupehazij
19th July 2015, 10:58 AM
சி.செ.. செம்மீன் பற்றி தொழில் பாட்டுகளில் ஏற்கெனவே எழுதியிருந்தேனே.. பாடல்கள்..ம்ம் ஓ.கே..அது பற்றி டீடெய்லாக எழுதவிலலை என நினைக்கிறேன்.. ஒரு மீள் பதிவு போட்டட்டுமா?

Thanks CK for pointing out my oversight on this. I have to peruse your writings back. as I came into this thread only recently...sorry about that CK.

vasudevan31355
19th July 2015, 11:21 AM
'வாலிபம் ஒரு வெள்ளித் தட்டு'

ராகதேவன் சார்,

பன்மொழி 'எக்ஸ்பிரஸ்' பாடல்களுக்கு நன்றி!

தெலுங்கில் கிருஷ்ணா நடித்த 'Circar Express' படத்தில் இருந்து தாங்கள் அளித்துள்ள ஆடியோ லிங்க் பாடலான "Kuchchula kollu chudu chudu, pichchuka goollu chudu chudu...You you girls" பாடல் தமிழ் 'நீலகிரி' யிலும் உண்டு.

இதில் ஒரு விசேஷம். தெலுங்கில் 1968 ல் நமது பாலா ஈஸ்வரியுடன் சேர்ந்து அந்தப் பாடலைப் பாடியிருப்பார். அப்போதெல்லாம் காமெடி டிராக் பாடல்களை தெலுங்கில் பாலா பாடிக் கொண்டிருந்தார். சத்யம் அவர்கள் அப்போதுதான் தெலுகு பீல்டில் நுழைந்த நேரமும் கூட.

http://i.ytimg.com/vi/Q972u9mVuF4/hqdefault.jpg

தமிழில் 'வாலிபம் ஒரு வெள்ளிதட்டு' என்ற அந்தப் பாடல் 'கள்ளபார்ட்' நடராஜன், ராஜேஸ்வரி மற்றும் கோஷ்டியினர் ரயிலில் ஜாலியாக அரட்டை அடித்துப் பாடுவது போல வரும். சோ மற்றும் விஜயலலிதா டிரெயினில் அமர்ந்திருக்க துணை நடிகர்கள் (காலேஜ் ஸ்டூடெண்ட்ஸாம்:)) ஆரவாரத்துடன் இப்பாடலைப் பாடுவார்கள். இந்தப் பாடலையும் ஈஸ்வரி தான் பாடியிருப்பார். தெலுங்கில் பாலா பாடியதை தமிழில் சௌந்தரராஜன் ஈஸ்வரியுடன் இணைந்து பாடியிருப்பார்.

நான் இரண்டு நாட்களாகவே இந்தப் பாடலைத்தான் அடுத்து 'ஜாலிப் பாடல்கள்' வரிசையில் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். சில தினங்களுக்கு முன் கூட பாடலைப் பற்றி ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். என்ன ஆச்சர்யம்! நீங்கள் முந்தி கொண்டு விட்டீர்கள்.

இந்தப் பாடல் மிகவும் ஜாலியாக இருக்கும். (இதே போல் 'சுமதி என் சுந்தரி' படத்தில் 'எல்லோருக்கும் காலம் வரும்' என்ற பாடல் உண்டு. இதைப் பற்றி மதுரகானத்தில் விவரமாக எழுதி இருக்கிறேன்.)

டி.கே ராமமூர்த்தியின் உற்சாகமான இசைக்கு கண்ணதாசன் இளமை பொங்க பாடல் வரிகளை இயற்றி இருப்பார். பல படங்களில் வில்லனாக நடித்த 'கள்ளபார்ட்' நடராஜன் மிகச் சிறந்த டான்ஸர். கோஷ்டி நடிகராக அப்போதைய பல பழைய படங்களில் இவரைக் காணலாம். ஆனால் குள்ளம் இவரது மைனஸ் பாய்ன்ட். இவரை ஞாபகம் வைத்து பின்னாளில் 'தேவர் மகன்' படத்தில் மறக்காமல் இவருக்கு ஒரு நல்ல ('அட புதியது பிறந்தது.... பழையது ஒதுங்குது... ஹரஹர சிவசிவ பழைய பரமசிவமே! ரேவதியின் அப்பா) சான்ஸ் தந்தார் கமல். (ஒரு டான்ஸரை இன்னொரு டான்ஸர் விட்டுக் கொடுத்து விடுவாரா என்ன!?)

உடன் ஆடும் நடிகை ராஜேஸ்வரி என்ற நடன நடிகை. ('கலாட்டா கல்யாணம்' படத்தில் ஏ.வி.ராஜன் அவர்களுடன் உறவினில் 50 50' பாடலுக்கு ஆடியிருப்பார். நடிகர் திலகம் நடித்த 'பாலாடை' படத்தில் 'அப்படி என்னப் பார்வை அங்கும் இங்கும்' பாடலுக்கும் நடனமாடுவார்) 'நவராத்திரி' கூத்துப் புகழ் சந்திரன் பாபு கூட இப்பாடலில் ஆடுவார்.

பாடலின் பாதி வரை வெஸ்டர்ன் மியூசிக். 'சோ' வந்து இவர்களை சத்தம் போட்டவுடன் அப்படியே folk டைப் குத்துப் பாடலாக மாறும்.

'கொட்டுங்கடி கையைக் கொட்டுங்கடி
இந்தக் குருட்டு மாட்டைக் கட்டுங்கடி'

என்று எல்லோரும் 'சோ'வை கேரோ செய்வார்கள்.

இதில் சில ரசிக்கத்தக்க வரிகள் வரும்.

'சோ' அவர்களின் பெயரை வைத்தே அவரை பொருத்தமாகக் கிண்டல் அடிப்பார்கள்.

'ஆத்தாடியோ மொகத்தப் பாரு ஆலோலங்காடி 'சோ'
('சோ' 'சோ' 'சோ' 'சோ' 'சோ' 'சோ' என்று எக்ஸ்ட்ரா நடன நடிகைகள் கத்துவார்கள்)
அய்யா வேட்டியைக் கிழிச்'சோ'ம்
போட்ட சட்டையைக் கிழிச்'சோ'ம்.

அம்மாமாரு கும்மாங்குத்து வாங்கிக் கட்டிகிச்'சோ'
சும்மா ராங்கி பண்ணிகிச்'சோ'
இன்னும் பாக்கி வச்சுகிச்'சோ'
ஒட்டிகிச்'சோ' சிக்கிகிச்'சோ'
ஒட்டிகிச்'சோ' சிக்கிகிச்'சோ'

என்று பாதி பாடல் முடியும் வரை ஒரே 'சோ' மயம்தான். கண்ணதாசனின் டைமிங் குறும்பு. படத்துக்கு கதை வசனம் 'சோ' தான். என்ஜாயபிள் சாங் தான்.


https://youtu.be/Q972u9mVuF4

chinnakkannan
19th July 2015, 11:52 AM
//மீள் பதிவு// சி.செ அண்ட் படிக்காதவர்களுக்காக..

**

தொழில் பாட்டுக்கள் 10
அது ஒரு கனாக்காலம் என்று ஆரம்பிக்கலாமா.. அல்லது
அது ஒரு கற்பனைகள் பூத்துக் குலுங்கித் திரிந்த காலம் எனலாமா
அல்லது அது ஒரு அழகிய எழிலெலாம் கோர்த்த வெள்ளந்தி மனம் கொண்டிருந்த, இகவாழ்வு பற்றி அறியாத இளமைப் பருவம் எனலாமா..

(யோவ் என்ன தான்யா சொல்ல வர்றே நீ..
வெய்ட் வெய்ட்)

யெஸ். இளமைப் பருவம்.. என்னுடையது.. 1990. தலைகீழ்ப் ப மீசை, கண்களில் மின்னல், காதுகளுக்குத் துணையாக விருதாவுடன் மின்னிய கிருதாக்கள், விட்டேத்தியாய் அலைபாயும் தலைமுடியை அடக்கி வாசித்திருந்த சமயம்..பின்ன ஆஃபீஸுக்குள்ள போய் வந்துக்கிட்டிருந்தேன்.

ஒரு நாள் டெலிஃபோன் தபுவாய் ச் சிணுங்கிக் கூப்பிட்டது..

எடுத்தால் “ நாளைக்குக் காலை கிளம்பறியாடா கண்ணா..கூட ஹரி வர்றானா”

கேட்டது டாக்டர் கல்யாணி ஆண்ட்டி.. என் சகோதரியின் கணவரின் ரிலேஷன். இருந்தது அபுதாபி தாண்டி டெல்மா ஐலேண்ட் எனப்படும் இடத்தில்.. வேலை ஹாஸ்பிட்டல் இன்சார்ஜ்.. கைனி. (இப்போது அவர் உயிருடன் இல்லை)

யெஸ் ஆண்ட்டி.. ஹரியும் வர்றான்..காலைல பஸ்ல அபுதாபி வந்துடுவோம்..பின் அங்கருந்து ஜபல்தானாக்கு இன்னொரு பஸ்..அப்புறம் கடல்கரை தானே..போட் தானே..

ஆமாம்” என்றார் டாக்டர்.. “ நீ வர்றச்சே ஃபெர்ரி போயிருக்கும். ஸோ கரைல்ல ஒரு மோட்டார் போட் சின்னது சொல்லியிருக்கேன்.. ரெண்டு லோக்கல் ஆள் இருப்பாங்க..என் பேரைச் சொல்லு. நானும் அவங்களோட பேசிடறேன்..

சரி என்று ஃபோனை வைத்து ஹரியைக் காலை வரச் சொல்லிவிட்டு உறங்கினேன்..

மறு நாள் காலை கத்தரிக்காய்க்கு கைகால் முளைத்துக் கண்ணாடியும் போட்டாற்போல் இருந்த ஹரி துள்ளிக் குதித்து வர அவனை அள்ளி பஸ்ஸிலேற்றி துபாய் டு அபுதாபி இரண்டரை மணி கழித்து அபுதாபி ட்டு ஜபல்தானா இரண்டுமணி நேரம் ட்ராவல் செய்து அந்தப்பக்கம் உள்ள கடற்கரையை அடைய மதியம் மூன்று மணி ஆகியிருந்தது. (நடு நடுவில் பஸ் மாற காத்திருக்க வேண்டியிருந்தது)

போனால் ஒரு சின்ன இயந்திரப் படகு..முழு வெள்ளை ஆடை அணிந்து தலையிலும் முக்காடும் அணிந்த இரண்டு அரபு நபர்கள்..

ஹாய்..

ஹாய்.. நீங்கள் டாக்டர் சொன்ன..

அவர்களே தான்.. போகலாமா..

இரண்டு அரபு நபர்களில் ஒருவன் ஒல்லி கருப்பு இன்னொருவன் செவேலென இருந்தான் சற்றே குண்டு.. டபக்கென எங்களை ஏறச் சொல்ல, மேலும் கீழும் ஏறி இறங்கிக் கொண்டிருந்த அலைகளினால் சற்றே மெலிதாக டான்ஸ் ப்ராக்டிஸ் செய்துகொண்டிருந்த படகில் கால் வைக்க அது வெட்கப் பட்டு மறுபடியும் ஆட ஹரி பொத்தென உள் விழுந்தான். பின் நான் ஏறி அமர..ட்ர்ருர்… எனக் கிளம்பி கடலில் படகு தாவினால்..


ஆஹா.. மேலே வெளிர் நீல வானம்.. சிலச் சில வெண்ணிற மேகங்கள் பலப் பல வடிவில்.. கீழே யாரோ கோபித்துக் கொண்டு வெள்ளிக்காசுகளை நீலப் படுக்கை விரிப்பில் எறிந்தாற்போல் மின்னுகின்ற கடல்..

கிடுக் கிடுக்கென இருபது நிமிடத்தில் படாரெனக் கடல் நடுவில் வந்துவிட சுற்றிலும் எங்கு பார்த்தாலும் நீல ம் நீலம் நீலம்…

எவ்ளோ நல்லா இருக்கு – என்றான் ஹரி..
ம்ம் என்றேன் நான்..என் மனக்கடலில் சாண்டில்யனின் ராஜதிலகக் கதா நாயகி மைவிழிச் செல்வி (எப்படிச் சுருக்கிக்கூப்பிடலாம் மையூ..ம்ஹூம் செல்லூ!) வாளை மீன் குட்டியாய்க் கடலில் நீந்திக் கொண்டிருக்க அருகில் ராஜசிம்மனாய் மாறிய நான் அவளுக்கு இணையாய் நீந்த இடையில் அவள் இடையில் கை பட அவளோ மென் குரலில் கடலுக்குள்ளேயே சிவந்த உதடுகளை அசைத்து “ம்க்கும் இப்படி எல்லாம் செய்தால் எப்படி நீந்துவது ட்ர் ரி க் க்ர்ர்ர்” என ஏன் இவள் குரல் இப்படி இருக்கிறது என திடுக்கென முழித்தால்.. படகு நின்றிருந்தது. நடுக்கடலில்..

“என்ன ஆச்சு”

ஒல்லி அரபி நோப்ராப்ளம் என மென்சிரிக்க குண்டு அரபி மோட்டாரைக் கொஞ்சம் செக் செய்து கொண்டிருக்க ஹரி கவலையுடன் “ கண்ணா என்னடா இது”

“அவன் தான் நோ ப்ராப்ளம்னு சொல்றானே”

“எனக்கென்னவோ பயம்மா இருக்குடா..அதோ பார்” நடுக்கடலைக் காட்டினான்.”அங்கிட்டிருந்து என்னோட தாத்தா கூப்புடறமாதிரி இருக்கு”

“ஷ் ஷ்..கவலைப் படாதே” எனச் சொன்னாலும் என்னையும் கவலை பற்றத் தான் செய்தது..சற்றே ஆடிய படகில் ஒல்லியும் ஹெல்ப்புக்கு ச்சென்று மோட்டாரின் கவரைக் கழற்றி உடம்பு தெரிந்து செக்ஸியாக நின்றிருந்த இயந்திர பாகங்களை என்னவோ ஆராய்ந்துகொண்டிருந்தான்..

ஹரி விடாமல், “கண்ணா.. நாம ரெண்டு பேரும் ஒண்ணா கல்யாணம் பண்றதா இருந்தோமே” எனப் புலம்ப “அப்படில்லாம் ஐடியா வச்சிருந்தீனா நானே இப்படிக் குதிச்சுடுவேன்” என நான் சொல்ல “இல்லடா நீ தனியா நான் தனியாடா “ என எக்ஸ்ப்ளனேஷன் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே ட்ர்ரு ட்ரு.. மோட்டார் கிளம்பி விட்டது..

துள்ளிக் குதித்து டுவேர்ட்ஸ் டெல்மா ஐலாண்ட்..ஆனால் எனக்கோ மனதில் தினம் தோறும் கடலாடுபவர்கள் நினைவில் வந்தார்கள்..மீனவர்கள்..

பின் அரைமணி நேரத்தில் டெல்மா ஐலண்ட் போய் அங்கிரு நாட்கள் கல்யாணி ஆண்ட்டியுடன் தங்கி அந்தக் குட்டி த் தீவைச் சுற்றிப்பார்த்து பின் துபாய் வந்தது எல்லாம் கனவாய்த் தான் இருக்கிறது..

இருந்தாலும் இந்தக் கடல் – இன்று வரைத்தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது என்னை..

கடல் எப்போதும் ஆச்சரியம் தான்..
**
ஆழம் பலகொண்டு ஆட்டுவிக்கும் நெஞ்சத்தில்
கோலமிட்டு நன்றாய் கொலுவிருக்கும் - வேழத்தைப்
போல வலுவும் பொலிவுகளும் கொண்டமங்கை
நீலக் கடலுக்கு நேர்
சுமையெதுவும் எண்ணாமல் சூதானமாய் நின்றே
அமைதியாய் உள்ளிருக்கும் ஆற்றல் – இமைப்பொழுதில்
சூறையென ஆடியே தூற்றியே நீர்தூவும்
பிறைநெற்றிப் பெண்ணாம் கடல்


முத்த மிடுதற்போல் மீன்களது நீந்தியங்கு
சித்தமது சொன்னாற்போல் செல்வதுவும் – நித்தமும்
எண்ணிலா ஜீவன்கள் ஏற்றமாய் வாழுமிடம்
கண்படுங் காதற் கடல்

அலைபோல எண்ணங்கள் ஆர்ப்பரிக்கும் என்பார்
கலையாக ஆடுங் கடலால் – வலைவீசும்
ஆடவர் மீன்பிடிக்கும் அல்லலெலாம் கண்டாலோ
வாடி மனமிளகு வார்..
**

கடலைப் பற்றிய பலபடங்கள் வந்திருக்கின்றன..இருந்தாலும் மனதுள் பதிந்த ஒரு படம் அது.. அதைப் பற்றி..

**
(thodarum)

chinnakkannan
19th July 2015, 11:54 AM
thozil paattukkaL 10 thodarchchi..


**


நீளமாய், நீலமாய் வானில் காய்ந்துகொண்டிருந்தான் கதிரவன்..

கீழே அவனைப் பிரதிபலித்தவண்ணம் சிற்சில எண்ணச் சலனங்களைக் கொண்டவாறு அலைபாய்ந்திருந்தது..கடல்..

சற்றுத் தள்ளிக் கரையோரம் போடப்பட்டிருந்தது ஒரு தோணி..கொஞ்சம் நீளவாக்காக இருந்தாலும் சற்றே உயரமாக இருந்தபடியால் தோணியின் அந்தப்புறத்தில் கொஞ்சம் நிழல்..அந்த நிழலில் சாய்ந்து கொண்டு பரீக்குட்டி..அவனைப் பார்த்தபடி நின்றிருக்கும் கறுத்தம்மா..

கறுத்தம்மா தன் வெண்பற்கள் காட்டிச் சிரித்தாள்..”என்ன சின்ன மொதலாளி..என் அப்பாக்கு தோணிவாங்கக் காசு வேண்டுமென்றால் எனக்காக வேண்டுமென்றால் தாரேங்கறீங்க.. எம்மேல அம்புட்டு நம்பிக்கையா”

சிரித்த கறுத்தம்மாவையே பார்த்தான் பரீக்குட்டி..இவள் .கறுத்தம்மா..மரக்காத்தி..சிறுவயது முதற்கொண்டே இந்தக் கடற்கரையோரம் எனக்குக் கிடைத்த சினேகிதி.. நாங்கள் பேசாச பேச்சா..விளையாடாத விளையாட்டா..ஆனால் இப்போது..

மீண்டும் பார்க்க கறுத்தம்மாவின் உடை.. பெயர் தான் கறுத்தம்மா..ஆள் நல்ல சிவப்பு.. அவள் கழுத்திலிருந்து இடைவரை சரேலென இறங்கி அடங்கியவண்ணம் இருந்த செவேல் ரவிக்கை. பின் மாலை மங்கி இரவு கூடிவரும் பொழுதில் மெல்லிய இருள் படரும் மலர்களைப் போல சற்றே மங்கிய நிறத்தில் சின்னப் பூக்கள் போட்ட சாயம்போன பாவாடை.. நன்றாகத் தான் வளர்ந்திருக்கிறாள்..உடலெங்கும் ததும்பி நிற்கும் அழகு..அழகுடன் துள்ளும் இளமை..அட இவள் சிரிப்பு என்னை எங்கோ தூக்கிச்செல்கிறதே..

சிரித்துக்கொண்டிருந்த கருத்தம்மா நிறுத்தினாள்.கொஞ்சம் வெட்கம், பயம் வந்தது சின்ன முதலாளி பார்த்த பார்வையினால்..உடலில் ஒருவித கூச்சம்..கூடவே ஒரு சிலிர்ப்பு.. என்னாயிற்று இவனுக்கு என நினைத்துப் பார்வையைத் திருப்ப பயம்..ஏனெனில் தொலைவில் இருந்த மரமொன்றின் பின்னால் பார்த்திருந்த பஞ்சமி.. அவள் தங்கை..

கறுத்தம்மா..

பரிக்குட்டி கூப்பிட்டான்.. ‘உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா”

கறுத்தம்மாவினால் கேள்விக்கு பதிலளிக்க முடியவில்லை.. நான் யார் கறுத்தம்மா.. ஒரு மரக்காத்தி..சின்னமொதலாளி வேறு இனம்.. ஆனாலென்ன.. ஏனிப்படி ஒரு கேள்வி.. பதில் சொல்ல நேரமில்லை..பஞ்சமி பார்த்து விட்டாள்..இப்போது கிளம்பியாக வேண்டும்..

வர்றேன் மொதலாளி..
சட்டெனக் கிளம்பிச் சிட்டென ஓடினாள் தொலைவில் இருந்த தனது குடிசை நோக்கி..

அதற்குள் வெடி பத்தவைக்கப் பட்டு விட்டது பஞ்சமியால்..

வீட்டு வாசலிலேயே சக்கி. அவளுடைய அம்மா...”என்ன இவளே..எங்க போன”

அழகின் பொக்கிஷமாய் குறுகுறு கண்களில் கனவுடன் ஓடி வரும் மகள்..அவள் எண்ணம் சக்கிக்குச் சட்டெனவும் புரிந்தது..

“இங்க தான் கொஞ்சம் காலாற நடந்தேம்மா.. நீ ஏன் இப்படிக் கலவரப் படறே”

“கொஞ்சம் உள்ளவா” குடிசையுள் அழைத்துச் சென்று சொன்னாள் சக்கி. “சின்ன மொதலாளி கூடவா இருந்தே”

“ஆமாம்..ச்சும்மா பேசிக்கிட்டிருந்தேம்மா”

“சிரிச்சுப் பேசினயாம்”

“யார் சொன்னதும்மா” பஞ்சமியாய்த் தான் இருக்கும்..மனசுள் நற நற.

‘இந்த பார். நீ வளந்துட்ட . பெரிய பெண்ணாய்ட்ட..ஒனக்குக் காலாகாலத்துல கல்யாணம் பண்ணிவைக்கணும்னு எனக்கு க் கவலை அடிச்சுக்குது..ஏன் தெரியுமா கறுத்தம்மா.. நீ ஒரு மரக்காத்தி..மரக்காத்திங்கறவ நெருப்பாட்டம் இருக்கணும்.. அப்படி இல்லாம கொஞ்சம் மனச அலைபாய விட்டுட்டு இருந்தேன்னாக்க உன்னைக் கட்டிக்கிட்டவன கடல் காவு வாங்கிடும்.. நியாபவம் வெச்சுக்கோ..”

“அம்மா..ஏம்மா இப்படில்லாம் நெனக்கறே”

“எனக்கு ஒன்னோட நெனப்பு தெரியும்டி..அதான் கண்ணு ஒடம்புல்லாம் மலந்து மலர்ந்து பேசுதே.. அந்த சின்ன மொதலாளி நினைப்புல்லாம் வேண்டாம்..
‘அம்மா”

“சும்மா பேசாத..இன்னிக்கு அந்த ஆளு வரட்டும் அவன்கிட்ட ஒன்னோட கல்யாணத்துக்கு என்ன பண்ணப் போறேன்னு கேக்கப்போறேன்”

சக்கி அந்த ஆள் என்று சொன்னது செம்பன் குஞ்சுவை..அவள் கணவன்..மரக்காத்தன்..இப்போதைக்கு கும்பலோடு கும்பலாய் தோணியிலேறி மீன்பிடிப்பது தான் தொழில்..ஆனால் அவனுக்கும் ஒரு நெடுங்காலக் கனவு..இந்தத் துறையில் சொந்தமாய்த்தோணி வாங்க வேண்டும் என்பது..

அந்த மீன்பிடிக்கும் திருக்குன்றங் கரையில் பலகாலம் கடலாடுபவன் தான் அவன்.. மரக்காத்தன் கையில் துட்டு சேராது என்பது காலம் காலமாகப் பேசப்படும் வழக்கு.. அதை முறியடிக்க வேண்டும். சொந்தத்தோணி எக்கச் சக்க துட்டு..

அன்றிரவு செம்பன் குஞ்சு வர, ஒருபுறம் சக்கி கறுத்தம்மா பற்றி பேச்செடுக்க நினைக்கையிலேயே அவன்சொன்னான்..” ஒரு பழைய தோணி விலைக்கு வருது வாங்கலாமுன்னு இருக்கேன்”
சக்கிக்குக் கறுத்தம்மா பற்றிய கவலை பின்னுக்குத் தள்ளப் பட்டுவிட “அவ்ளோ பணம் எப்படி சம்பாரிக்கப் போறீங்க”

“சக்கி. எனக்கு வாரதெல்லாம் உன்கிட்ட தான் கொடுக்கறேன்..”

“அது சரி..ரெண்டு பொட்டப் புள்ள..காலாகாலத்துல கட்டிக் கொடுக்க வேண்டாமா. அப்படி ஒண்ணும் நா நிறையசேத்துடலை. நீங்களும் நிறைய தந்துடலை”

“கவலைப் படாதே சின்ன முதலாளி தர்றேன்னுசொல்லியிருக்காங்க”

“யாரு கிட்டங்கி பரீக்குட்டி மொதலாளியா” சக்கியின் நெஞ்சுக்குள் பகீர்.. “எப்ப்டித்தருவாகளாம்..”

“பிடிக்கிற மீன்லாம் தர்றேன்னு சொல்லியிருக்கேன்.. நாளைக்கே பக்கத்து கிராமத்துல ஒருதோணி விலைக்கு வருது வாங்கப் போறேன்”

உரையாடலைக் குடிசையில் இன்னொரு தட்டியறையில் கேட்டுக் கொண்டிருந்த கறுத்தம்மாவிற்குப் புரிந்தது. பரீக்குட்டியிடமும் அவ்வ்ளவு துட்டு இல்லை..இருக்கிற – தன் கிட்டங்கி வியாபாரத்தின் முதலுக்காக வைத்திருக்கும் பணத்தை – தன்னை நம்பித் தருகிறான் என்பது..ஆனால் அப்பா திருப்பித் தருவாரா என்பது சந்தேகம் தான்.

செம்பன் குஞ்சு வெளியில் போனதும் கேட்டும் விட்டாள். “அம்மா..மொதலாளிக்கு தந்துடுவாரா அப்பா”

சக்கியின் மனதிலும் சந்தேகம் தான்..இருப்பினும்.” நல்லாத்தருவாக சும்மா கவலைப் படாதே”

இரவில் பாயில் படுத்திருக்கும் போது கரையோரம் பரீக்குட்டி பாடும் பாட்டு அவளுக்குக் கேட்டது..விச்ராந்தியாய் வெள்ளந்தியாய் பாடுகின்ற அந்தப் பாட்டு அந்தக் குரல் அவள் மேனியை சிலிர்க்க வைத்தது..

சொன்னாற்போல மறு நாள் தோணி பார்க்கப் போய்விட்டு கொஞ்சம் கவலையுடன் வந்தான் செம்பன் குஞ்சு..
“ஏன் கவலை”

‘சக்கி நீ சேர்த்துருக்கற துட்டும் பரீக்குட்டி கொடுத்திருக்கற முன்னூறு ரூபாயும் பத்தாது.. இதர சாமானுக்கு முப்பதாவது வேணும்”

“என்னபண்ணப் போறீங்க..”

“பரீக்குட்டியையே கேக்கப் போறேன்” போய் கேட்டு வந்தவன்சந்தோஷமாய் இருந்தான்.. முதலாளி தந்துட்டாரு.. நாளைக்கே தோணி வாங்கி மறு நாள் கடல்ல இறக்கறேன்.

அதே போல் தோணியைக் கடலாடி – செம்பன் குஞ்சு சில ஆட்களையையும் வைத்துக் கொண்டு – திரும்பும்போது பார்த்தால் தோணி முழுக்க மீன்கள்..முகம் முழுக்க சந்தோஷம்..

கரையில் வரும்போதே சில்லறைவணிகத்துக்காக மீன்கள் வேண்டி பெண்கள் சூழ்ந்து கொள்ள, கூடவே பரிக்குட்டியும்… ஆனால் செம்பன் குஞ்சு அவன் முகத்தைப் பார்க்கவே இல்லை.. வந்த மீன்களையெல்லாம் நல்ல விலைக்கு மற்றவர்களிடம் விற்று கிடைத்த காசை சக்கியிடம் கொடுக்க சக்கி, “மொதலாளிக்கு மீன் கொடுக்கலையா”

“என்ன அவசரம்” அலட்சியமான பதில்.. கொஞ்சம் சேர்த்துக்கிட்டு கொடுக்கலாம்.. இப்ப கொடுத்தா காசு வாராது.. கடன்ல குறைச்சுக்கிடுவார்…

கறுத்தம்மாவுக்கு அப்போதே புரிந்தது.. தன் தகப்பன் பரீக்குட்டிக்குத்தரப் போவதில்லை..

அதே போல் சில மாதமும் போக நல்ல வியாபாரம் செம்பன் குஞ்சுவும் செய்ய பரீக்குட்டி முதல்போடக் காசில்லாமல் அவனது கிட்டங்கி வேலை நின்று போனது..ஆனாலும் செம்பன் குஞ்சுவிடம் கொடுத்த காசை க் கேட்கவில்லை அவன்.

கறுத்தம்மா உசுப்பேற்ற சக்கியும் கவலையாய் சிலசமயம் செம்பன்குஞ்சுவிடம் கேட்டாள்..கிடைத்த பதில் “சும்மா யிரு பொண்ணுக்குக் கல்யாணத்துக்குப் பார்க்கலாம்”

கறுத்தம்மாவிற்குத்தான் பரீக்குட்டியின் நினைப்பு பொங்கும்..கூடவே சக்கி விடுகிற முறைப்பும் புரியும்..அவனுடன் பேசுவதும் இல்லை.பார்த்தாலும் விலகி விலகிச் சென்றாள்

ஒரு நாள் செம்பன் குஞ்சு சந்தோஷமாய் “ கறுத்தம்மாவுக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கேன்..இதுபழனி.. என்கிட்ட புதுசா சேர்ந்தவன் மத்த குன்றத்து ஆள்..”

“உறவுகள்ளாம்” சக்கி கேட்க “அதெல்லாம் இவனுக்குக் கிடையாது.. நல்ல மரக்காத்தன்..சும்மா சொய்ங்க் சொய்ங்க்னு மீனு அள்ளுறான்.. நல்லா துடுப்பும் போட்றான். கறுத்தம்மாவை கவனிச்சுக்குவான்”

பழனி நல்ல கறுகறுவென்று இருந்தான்..சின்னவயதிலேயே தாய் தந்தை இல்லாமல் தானாக்வே தோணியில் சேர்ந்து தொழில் காரன் ஆனவன் எது பற்றியும் கவலை இல்லாதவன்..

ஆனால் சக்கிக்குக் கொஞ்சம் குழப்பம்..உறவுசனம் இல்லாதவனுக்குப் பொண் கொடுப்பதா.. கறுத்தம்மா ஒன்றும் சொல்லவில்லை. பரவாயில்லை அம்மா..சின்னமொதலாளி கடன் மட்டும் கொடுத்துவிடச் சொல்லு அப்பாவை..

நல்ல நாளில் மீனவர்தலைவரான துறை அரையரைக் கூப்பிட்டு கல்யாணம் செய்கையில் தான் அது நடந்தது..

மீனவக் குடும்பங்களில் வேறு துறை க்காரர்கள் மணம் செய்யவேண்டுமென்றால் துரை அரையருக்கு கட்டணம் செலுத்த வேண்டும்..செலுத்தாமலும் இருக்கலாம்..ஆனால் துரை அரையர் இஷ்டம் அது..

கல்யாணத்திற்கு பழனி தன் நீர்க்குன்றத்துறையிலிருந்து பத்து ஆண்பிள்ளைகளை அழைத்து வந்திருந்தான் அதுவே கறுத்தம்மாவின் துறையில் இருந்தவர்களுக்கு அதிசயம்…என்ன ஒரு பெண்பிள்ளை கூட இல்லை..

துறை அரையர் மாப்பிள்ளை 75 ரூபாய்கொடுக்கணும் கட்டணமாய் என்றதும் வெடித்தது பூகம்பம்.. “அதெப்படிக் கேக்கலாம் “ என பழனியுடன் வந்த ஒருவன் கேட்க “அது அப்படித் தான்” எனத் துறை அரையர் சொல்ல வந்தவன் “ எங்களுக்கு விஷயமேதும் தெரியாதுன்னா சொல்றீங்க..ஒங்க துறைக்காரப் பொண்ணு ஒண்ணும் அவ்ளோ சுத்தமிலலின்னு எல்லாரும் பேசிக்கறாங்க.மத்த சாதிக்காரனோட அது சிரிச்ச சிரிப்பு ஊரெல்லாம் சிரிக்குதே..இல்லைன்னா ஏன் சாதிசனம் இல்லாத எங்க ஊர் ஆளை மாப்பிள்ளையாக் கூட்டிருக்கீங்க”


(தொடரும்)

chinnakkannan
19th July 2015, 11:55 AM
தொழில் பாட்டுக்கள் 10 தொடர்ச்சி..

**

கேட்ட பழிச்சொல்.. சக்கி எதிர்பார்த்துப் பயந்த சொல்.. கறுத்தம்மாவை பார்த்து நடந்துக்கோடி எனச் சொல்லிச் சொல்லி வளர்த்தும் எங்கிருந்தோ வந்தவன் ஏகடியமாகச் சொன்ன சொல். சக்கி அப்படியே மயங்கி விழ வைத்தியரைக் கூப்பிட ஆள் போகிறது.

செம்பன் குஞ்சுவோ பழனியைத்தனியாகக் கூப்பிட்டு தன் பணம் 75 ரூபாயைக் கொடுத்து துறை அரையனிடம் கட்டச் சொல்ல கல்யாணம் நடக்க பின் தான் குழப்பமே.

“மாப்பிள்ளை..கொஞ்சம் இங்க தங்கிட்டு அப்புறம் உங்க குன்றத்துக்குப் போங்களே.ன் என் பொண்டாட்டிக்கு உடல் சரியில்லை..கறுத்தம்மா கொஞ்ச நாள் தங்கினா பார்த்துக்குவா”

உள்ளே சக்கிக்கோ மகள் பற்றிய கவலை..மகளிடம் “கறுத்தம்மா என்னைப் பத்திக் கவலைப் படாதே.. இங்க இருந்தால் இன்னும் ஊர் பேசும்.. உனக்கும் மனசு மாறினாலும் ஆகும்..நீ புருஷனோட போய்டு”

“அம்மா”

“இப்ப நீ கல்யாணங்கட்டின மரக்காத்தி. ஒனக்கு நெனப்பு கொஞ்சம் அங்கிட்டு இங்கிட்டு போனாலும் ஒன் புருஷன் உனக்கு இல்லை

” நா அப்படில்லாம் இல்லைம்மா”

“எனக்குத் தெரியும் ஆனா..போய்டேன்..”

பழனி செம்பன் குஞ்சுவிடம்.. “ நான் கூட்டிக்கிட்டே போய்டறேன்.என்னோட ஆட்கள நீங்க என்னபேச்சு பேசினீங்க”

செம்பன் குஞ்சு கெஞ்ச, துறை அரையர் அந்தப் பொண்ணிடமே கேட்கலாம் எனச் சொல்ல கறுத்தம்மாவிடம் கேட்டால் க்றுத்தம்மா “ நான் அவர் கூடவே போறேம்பா”

செம்பன் குஞ்சுவிற்குக் கோபம்மிக அதிகமாகி “என் முகத்துலயே முழிக்காதே போ”

கறுத்தம்மா பிறந்து வளர்ந்து பழகிய கடற்கரையைப் பார்த்தாள் அம்மாவை மறுப்டியும் ஒருமுறை பார்த்தாள்..பின் புறப்பட்டுவிட்டாள் பழனியின் நீர்க்குன்றத்திற்கு..

**

பழனி நல்ல கணவன் தான். சமர்த்தாய் வெள்ளென தோணியோட்டி மீன்பிடித்து மாலை நேரம் வந்துசம்பாதித்ததை கறுத்தம்மாவிடம் கொடுத்து இணக்கமாகத்தான் இருந்தான்.. கறுத்தம்மாவிற்குப் பிடித்த் வண்ணம் எல்லா விதங்களிலும் இருந்தாலும் ஒன்றே ஒன்று மட்டும் அவன் மனதில் வெகு ஆழமாய். கறுத்தம்மா அவள் வீட்டிற்குப் போகக் கூடாது.

கறுத்தம்மாவும் நல்ல மரக்காத்தியாகத் தான் இருந்தாள்..விருப்பத்துடன் தன்னைக் கொடுத்தாள் அவனுக்கு.

அவள் நினைவில் பரீக்குட்டி மங்கிவிட்டான் என்றே சொல்லவேண்டும்..ஆனால் ஊரார் நினைவில். அப்படி இல்லை.

ஒரு நாள்
சூழ்நிலையில் சக்கி மரிக்க செம்பன் குஞ்சுவுக்கு கறுத்தமமாவிடம் சொல்லியனுப்ப மனமில்லை..ஆனால் பரிக்குட்டிக்குத் தான் பொறுக்கவில்லை.

சொல்லலாம் என நீர்க்குன்றம் வர, அங்கு பார்த்தது பழனியுடன் தோணி தள்ளுபவன்..

என்ன திருக்குன்றங்காரவுகளே இந்தப் பக்கம்

கறுத்தம்மா…பழனி வீடு எங்க இருக்கு

எதுக்காம்.

இல்ல கறுத்தம்மா வோட அம்மா இறந்து போய்ட்டாங்க சொல்லலாம்னு தான்

அதுக்கு நீங்க எதுக்கு வந்தீங்க அதுவும் இவ்வளவு கருக்கலல் இம்புட்டு தூரம் – ம்ம் ஊர்வாய்..அப்படித்தான் கேட்கும்

பரிக்குட்டி எதுவும் சொல்லாமல் விவரம் வாங்கி கறுத்தம்மா இருக்கும் குடிசைக்குச் சென்று தட்ட அவள் கதவைத் திறக்க மறுக்கிறாள்..ம்ஹூம்.. ம்ஹூம் கூடாது.. நான்மரக்காத்தி..என் காதலை, கனவை குழிதோண்டிப் புதைத்தவள். அவனைப் பார்க்கமாட்டேன்..

தூளியில் இருக்கும் இருமாதப் பெண்குழந்தையை ஆட்டியும் விடுகிறாள்…

கறுத்தம்மா

பரீக்குட்டியின் குரல்

கறுத்தம்மாவிற்கோ கையறு நிலை உள்ளே படுக்க விரித்திருந்த பாயில் அப்படியே கூனிக்குறுகி உட்காருகிறாள்

கறுத்தம்மா உன்னுடைய அம்மா சக்கி இறந்து போய்ட்டாங்க. சொல்லத்தான் வந்தேன் – பரீக்குட்டி தள்ளாடி த் திரும்பிச் செல்ல…
இவளுக்கோ காதை சுறா கவ்வியது போலப் பிரமை..ஓஹ்.. எண்ட அம்மே எனக் குரலெடுத்து அழலாம் என்றால் மறுபடி தட் தட்

யாரு
நாந்தான் – பழனியின் குரல்

கதவைத்திறந்து உதடு கண் கன்னம் தலைமுடி எல்லாம் துடிக்க ஏங்க…

கண்சிவந்திருந்த பழனியோ “என்ன ஒஞ் சின்ன முதலாளி வந்தானா இங்கே”

அதெல்லாம் காதில் விழவில்லை..”ஏங்க எங்கம்மா இறந்து போய்ட்டாங்க நான் போகணும்..

ம்ம் முடியாது ஏன் சொல்லிவிட வேற ஆள் கிடைக்கலையா.. ஏன் இந்த ஆள் வரணும் இன்னும் அவனை நெனச்சுக்கிட்டிருக்கியா

சுருக்..

கறுத்தம்மா பார்த்தாள்..”ஹச்சோ நாந்தான் எல்லாத்தையும் ஒங்ககிட்ட வந்த மொத நாள்ளே சொல்லிட்டேனே. நா எதும் தப்புத் தண்டா செய்யலீன்னு..பேசினதுமட்டும் தான் குத்தம்.. அம்மாவப் பாக்கணுங்க”

‘ஒன்னப் பத்தித் தெரியும்..ஊர்ப்பேச்சு ஒண்ணு இருக்குல்ல..ஆனா ஒங்கம்மா சாவுக்கு நீ போக முடியாது போ” இறுதியான முடிவு பழனியிடமிருந்து.

*
ஊர் பேச்சு எனச் சொன்னது வாஸ்தவம் தான்.. ஒரு நாள் பழனி தோணியில் மீன்பிடிக்கச் செல்லும் போது சுக்கான் பிடித்த படி ஏதோ சிந்தனையில் ஆழ்கடலுக்குள் சென்று விட உடனிருந்த்வர்களுக்கு பயம்.பழனி பழனி என உலுக்கியபிறகு தான் அவனுக்கு நினைவே வந்தது.

கரை திரும்பியதும் சக தோணிஓட்டுபவர்கள் கலந்தாலோசித்து “அவஞ்சம்சாரம் தான் மாறிப்போனது ஊரே சிரிக்கே.. மரக்காத்தி மாறிப்போனா கடல் காவுகொள்ளும்லா..அவம் போறது பத்தாதுன்னு நாமும் சாகணுமா என்ன” எனப் பேசி மறு நாள் அதற்கு மறு நாள் என பழனிகடற்கரைக்கு வரும்முன்னமேயே தோணி எடுத்துச் சென்றுவிட பழனிக்குக் கோபம் வருகிறது.. நான் நல்லவன் என் பொஞ்சாதியும் தான்..

பின் முடிவெடுத்து யாருக்கும் தெரியாமல் இருட்டிலேயே இருக்கும் ஊரார் தோணியில் மீன் பிடித்துக் கொண்டு வந்து வீட்டில் உலை பொங்கக் கொடுக்க ஆரம்பித்தான்.

கறுத்தம்மாவிற்கோ வாழ்க்கையே சோகம்..அதில் பழனியின் வார்த்தைகள் வேறு.. இன்னும் நினைச்சுக்கிட்டிருக்கியா.பரீக்குட்டியை.. தன்னைத் தானே கேட்டுக் கேட்டு க் கேட்டு..கடைசியில் ஆம்.. நேசம் இருப்பது பரீக்குட்டியிடம் தான்..அவன் தான் தனக்காக எல்லாம் தியாகம் செய்தான்.. அவனை உதறிவிட்டு விட்டேன்..அவன் மேல ஆசையா..இல்லை இல்லை ஆமாம்..அவனுக்கும் தான்..ஆனா தப்பா ஒரு பார்வை பார்த்ததில்லயே.. நான் செஞ்சது தப்பு தான் …என மனதுக்குள் நினைத்துக் கொண்டிருக்கையில்….

அங்கே நீர்க்குன்றத்தில் செம்பன்குஞ்சு இரண்டாம் கல்யாணம் செய்து கொண்டும் நிம்மதியற்ற நிலையில் இருக்க கருத்தம்மாவின் தங்கை பஞ்சமி அக்கா ஊருக்கு வருகிறாள்.

குழந்த செவேல்னு ஒன்ன மாதிரி இருக்குக்கா

கறுத்தம்மாவிற்கோ ஏக சந்தோஷம் அவ்வளவுதுக்கத்திலும்.. பஞ்ச்சமீயின் கையைப் பிடித்து கட்டிப்பிடிக்க பஞ்சமி எல்லாவற்றையும் சொல்கிறாள்

“அப்பா தோணிய வித்துடுச்சு. அவர் கல்யாணங்கட்டிக்கிட்ட பொம்பளை அவ பையனுக்கு அப்பா பணத்த எடுத்துக் கொடுத்திச்சா அப்பா அவளை வெரட்டி விட்டுட்டார்.. திரும்பவும் கூட்டிக்கிட்டார்.. ஆனா பித்துப்பிடிச்சுடுச்சு அப்பாக்கு
அப்புறம் சின்ன மொதலாளி பரிக்குட்டிய ப் பார்த்தேன் வரவழில்ல.. ரொம்ப மாறிட்டாக..எதையோ பறிகொடுத்தாப்புல.. அவரோட கிட்டங்கியும் போச்சு தெரியும்லா”

எல்லாப் பேச்சும் கறுத்தம்மாவின் காதில் விழவில்லை.கடைசியில் பரீக்குட்டி என்று சொன்னது மட்டும் காதில் விழ.”சின்ன முதலாளியப் பார்த்தியா.எப்படி இருக்காக”

அவள் கேட்டது இன்னொருவன் காதிலும் விழுகிறது..பழனி. உள்ளே வந்து பஞ்சமியை வெறுப்பாய் ஒரு பார்வை பார்த்து பின் “ நா அன்னிக்கு கேட்டது சரி தான் நீ இன்னும் மறக்கல அவனை”

கறுத்தம்மா விழி சுருங்கி ஏதும் பேசாமல் மெளனிக்க அதுவே அவனுக்கு எதையோ உணர்த்த கோபமாய் வெளியில் கடற்கரைக்குச் சென்று இருந்த தோணியைக் கடலில் தள்ளி வேக வேகமாக கடலுக்குள் செல்கிறான்..

பஞ்சமி குழந்தையைப்பார்த்துக்கோ

கறுத்தம்மா கொஞ்சம் நடக்க சற்றுத்தொலைவில் அந்த மாலை வெளையில் வருவது யார்… தளர்வாய்..பரீக்குட்டி

கறுத்தம்மாவின் கண்கள் அவன் கண்களுடன் பேசுகின்றன
நிறைய ஆசை
நிறைய பாசம்
நிறையக் காதல்
நிறைய ஏக்கம்
நிறைய துக்கம்

துக்கம் விழிகளில் முட்ட சின்ன மொதலாளி இப்படி மாறிட்டீங்களே என்ற வார்த்தைகள் காற்றுடன் சிக்கி ஒலியிழக்க

பரீக்குட்டி – கறுத்தம்மா இன்னும் என்னை விரும்பறயா…

என்ன கேள்வி இது சின்ன மொதலாளி நா எங்க ஒங்களை வெறுத்திருக்கேன்..

விம்மல் அழுகை துடிப்பு ஏக்கம் தடுமாற்றம் – தூண்டிவிடும் காற்று..வெகுதொலைவில் கேட்கும் அலையோசை

கறுத்தம்மா

மறுபடி பரீக்குட்டி விளிக்க அவள் அப்படியே சாய்கிறாள் அவன் மார்பில்.. பரிக்குட்டியும் அணைக்க காற்றுகொஞ்சம் வேகமாய் சுழன்றடிக்கிறது..

*

கடலுள் தோணியைச் செலுத்திய பழனிக்கும் அப்படித்தான். எண்ணங்கள். இப்படி ஒருத்தி இருப்பாளா.. முதலிலேயே சொல்லியிருக்கலாமே. ஏன் காற்று இப்படி அடிக்கிறது அலைகளும் வேகமாகக் கூவுகின்றன.. இதோ இது என்ன…

கன்னங்கரேலெனச் சுறா ஒன்று மேலெழும்புகிறது.. பழனியின் தூண்டிலில் வாய் மாட்ட்டிக்கொண்டிருக்க வேண்டும்..உயிர் போகக்கூடாது எனக்கு.. என்னையா எடுக்கப் பார்க்கிறே என உயிராசையால் மறுபடியும் மோதி அலைபாய..

பழனி வேகமாக இழுக்கிறான்..எங்கிருந்தோ மேகங்கள் சுழற்காற்று..தோணியும் சுழல்கிறது.. இது என்ன எங்கிருந்து வந்தது இந்தக் காற்று.. இத்தனை நாள் கடலாடினேனே எனக்கு நிகழ்ந்ததில்லையே. இது போல்…ஒரு வேளை ஒருவேளை என்வீட்டு மரக்காத்தி தவறிழைக்கிறாளா..இருக்காது.அவள் என்னிடம் தவறேதும் செய்யவில்லை எனச் சொன்னவளாயிற்றே….இருந்தும் அவளைக் குத்திக் காட்டியது தவறோ..என்ன இது இந்தத் தோணி சுற்றுகிறது..இந்தச் சுறாவேறு ஆட்டங்கண்டு இருக்கிறது.. கடலம்மா என்னைக் காவு வாங்கப்போகிறாளா..என்னைக்காப்பது கறுத்தம்மாவின் கையிலல்லவா இருக்கிறது…

கறுத்தம்மா. அடிவயிற்றிலிருந்து உயிரின் ஓசையாய் பழனியின் குரல் இடி மின்னல் காற்றலைகளில் கலந்து அமுங்கிப்போக அவன் தோணி கவிழ்ந்து சுழலில் சிக்கிக் கொள்ள அவனும் சுழன்று சுழன்று சுழன்று அதலபாதாளத்தில்…..
**
மறு நாள் விடிகாலை பஞ்சமி கடற்கரையில் கொஞ்சம் குழந்தையுடன் வெகு தூரம் நடந்த போது தெரிந்தது…வெகு தொலைவில் கடலலைகளுடன் அணைத்தபடி உயிர் விட்டிருந்த கறுத்தம்மாவும் பரீக்குட்டியு.ம்

சில மைல் தொலைவில் உள்ள இன்னொரு கடற்கரையில் தூண்டிலை முழுங்கிய சுறா ஒன்று ஒதுங்கியது..

பழனியின் உடல் மட்டும் கிடைக்கவேயில்லை..

**
இது தகழி சிவசங்கரன் பிள்ளை எழுதிய செம்மீன் மலையாள நாவலின் மிகச் சுருங்கிய சுருக்கம்.. (தமிழில் மொழிபெயர்த்தவர் சுந்தர ராமசாமி)

**
கடல் பாட்டுக்காக கடல் மேல் பிறக்கவைத்தான் எழுதலாம் என இருந்தேன்.பின் இந்தப் படம் செம்மீன் (ஆம் முதலில் நாவலாய் வந்து பின் மலையாளத்தில் திரைப்படமாய் வந்தது) பத்தி எழுதலாம் என்று இருந்தால் படம் பார்த்ததில்லை.. நாவலும் படித்ததில்லை.

(thodarum)

chinnakkannan
19th July 2015, 11:56 AM
thozil paattukkaL 10- thodarchchi..

**

பின் வாங்கி வைத்திருந்த நாவல் முழுவதும் படித்த பின் உடனே படம் பார்க்க முடியவில்லை..காரணம் நாவல் அப்படி.அப்படியே கண்முன்னே விரிகின்ற கடற்கரைகள், மீனவ வாழ்க்கை, அவர்களின் சோகம் சந்தோஷம் துக்கம் வருத்தம்..சோர்வு உழைப்பு சுறுசுறுப்பு.. “மரக்காத்தன் கிட்ட துட்டு எப்படி ச் சேரும் தெனம் துள்ளத் துடிக்க ஆயிரம் ஜீவன்க தோணியில அவன முறச்சு பாத்துத் தானே செத்துப் போகுதுங்க.எங்கோ கடலடில நீஞ்சிக்கிட்டிருந்தோமேடா.எங்களக் கொல்றீகளேன்னு எவ்ளோ கதறியிருக்கும்” வசனங்கள்
பின் சில நாட்சென்று தான் படம் பார்த்தேன்
..சே இவ்ளோ நாள்மிஸ் பண்ணிவிட்டேனே என நொந்து கொண்டது அப்போது தான்....(பாடல்கள் கேட்டிருந்தாலும் படமாய்ப் பார்த்ததில்லை)
செம்பன்குஞ்சு – கொட்டாரக்கரா ஸ்ரீதரன் நாயர் கறுத்தம்மா – ஷீலா சத்யன் பழனி ஆடூர் பவானி – சக்கி.. பரீக்குட்டி மது. என நடிக நடிகையர்கள் பாத்திரமாகவே வாழ்ந்திருந்தார்கள்.

அதுவும் கறுத்தம்மாவாக ஷீலா கனப்பொருத்தம்.. ரவிக்கை பாவாடையில் இருந்தாலும் விரசமாக இல்லை.. காதலும் நயமாகத் தான் வெளிப்படுத்தியிருந்தார்..புருஷனிடம் கொண்டாடும் அழகென்ன.. பிற மரக்காத்திகள் ஏகடியம் பேசும் போது நடிப்பு வெகு நன்று ( மலையாளத்தில் அரயாத்தி அரயன்..என்பார்கள்)

செம்பன்குஞ்சுவாக நடித்தவர் நாவலில் நான் பார்த்த அதே ஆள்..பரீக்குட்டி மது பழனி எனப் பொருந்திய பாத்திரங்கள்..ஜனாதிபதியின் தங்கப் பதக்கம் பெற்றதில் வியப்பேதுமில்லை.. ரிலீஸான நாள் 19.08.1966. தகழியின் நாவலும் கேந்திர சாகித்ய அகாதமி அவார்ட் 1957ல் பெற்ற ஒன்று..

அதுவும் வண்ணப் படத்தின் ஒளிப்பதிவு. மார்கஸ்பார்ட்லி அண்ட் யு ராஜகோபால்.. காட்சிகள்கண்ணில் ஒத்திக்கொள்ள வைக்கின்றன. கடல் கிராமம் அப்படியே கண்முன் காட்சிப்படுத்திய பெருமை இவர்களைச் சாரும்

பாடல்கள் கடலினக்கர போனோரே, மானஸ் மைன வரூ..பெண்ணாளே பெண்ணாளே சலீல் செளத்ரியின் இனிய இசை..மன்னாடேயின் மானஸ் மைன வரூபாட்டு..வசனம் புரம் சந்தனா.இயக்கம் ராமுகரியத்

முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் தகழி சிவசங்கரன் பிள்ளையின் செம்மீன் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறதாம்.. ஒரு நாவலை அப்படியே வார்த்துத்திரையிலிட்டிருப்பது வெகு அழகு.. ரொம்ப நாள் மனதில் நிலைத்து இருக்கும்..

http://www.youtube.com/watch?x-yt-cl=84503534&v=Qv5p8OwwbYE&x-yt-ts=1421914688&feature=player_detailpage

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Qv5p8OwwbYE


முற்றும்..

eehaiupehazij
19th July 2015, 12:03 PM
கண்முன்னே விரிகின்ற கடற்கரைகள், மீனவ வாழ்க்கை, அவர்களின் சோகம் சந்தோஷம் துக்கம் வருத்தம்..சோர்வு உழைப்பு சுறுசுறுப்பு.. “மரக்காத்தன் கிட்ட துட்டு எப்படி ச் சேரும் தெனம் துள்ளத் துடிக்க ஆயிரம் ஜீவன்க தோணியில அவன முறச்சு பாத்துத் தானே செத்துப் போகுதுங்க.எங்கோ கடலடில நீஞ்சிக்கிட்டிருந்தோமேடா.எங்களக் கொல்றீகளேன்னு எவ்ளோ கதறியிருக்கும்” வசனங்கள்
பின் சில நாட்சென்று தான் படம் பார்த்தேன்
..சே இவ்ளோ நாள்மிஸ் பண்ணிவிட்டேனே என நொந்து கொண்டது அப்போது தான்....(பாடல்கள் கேட்டிருந்தாலும் படமாய்ப் பார்த்ததில்லை)
செம்பன்குஞ்சு – கொட்டாரக்கரா ஸ்ரீதரன் நாயர் கறுத்தம்மா – ஷீலா சத்யன் பழனி ஆடூர் பவானி – சக்கி.. பரீக்குட்டி மது. என நடிக நடிகையர்கள் பாத்திரமாகவே வாழ்ந்திருந்தார்கள்.

அதுவும் கறுத்தம்மாவாக ஷீலா கனப்பொருத்தம்.. ரவிக்கை பாவாடையில் இருந்தாலும் விரசமாக இல்லை.. காதலும் நயமாகத் தான் வெளிப்படுத்தியிருந்தார்..புருஷனிடம் கொண்டாடும் அழகென்ன.. பிற மரக்காத்திகள் ஏகடியம் பேசும் போது நடிப்பு வெகு நன்று ( மலையாளத்தில் அரயாத்தி அரயன்..என்பார்கள்)

செம்பன்குஞ்சுவாக நடித்தவர் நாவலில் நான் பார்த்த அதே ஆள்..பரீக்குட்டி மது பழனி எனப் பொருந்திய பாத்திரங்கள்..ஜனாதிபதியின் தங்கப் பதக்கம் பெற்றதில் வியப்பேதுமில்லை.. ரிலீஸான நாள் 19.08.1966. தகழியின் நாவலும் கேந்திர சாகித்ய அகாதமி அவார்ட் 1957ல் பெற்ற ஒன்று..

அதுவும் வண்ணப் படத்தின் ஒளிப்பதிவு. மார்கஸ்பார்ட்லி அண்ட் யு ராஜகோபால்.. காட்சிகள்கண்ணில் ஒத்திக்கொள்ள வைக்கின்றன. கடல் கிராமம் அப்படியே கண்முன் காட்சிப்படுத்திய பெருமை இவர்களைச் சாரும்

பாடல்கள் கடலினக்கர போனோரே, மானஸ் மைன வரூ..பெண்ணாளே பெண்ணாளே சலீல் செளத்ரியின் இனிய இசை..மன்னாடேயின் மானஸ் மைன வரூபாட்டு..வசனம் புரம் சந்தனா.இயக்கம் ராமுகரியத்

முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் தகழி சிவசங்கரன் பிள்ளையின் செம்மீன் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறதாம்.. ஒரு நாவலை அப்படியே வார்த்துத்திரையிலிட்டிருப்பது வெகு அழகு.. ரொம்ப நாள் மனதில் நிலைத்து இருக்கும்..


இத ..இத...இதைத்தான் எதிர்பார்த்தேன் சி க!
மலையாளக் கடலில் செம்மீன் பிடித்துப் பந்தி பரிமாறுங்கள் சி க , வாசு, ராகதேவன்...
ஒரு மறக்க முடியாத நல்ல திரைப்படத்தின் மென்மையான இசையும் மேன்மையான ஒளிப்பதிவுடன் கூடிய பாடல் காட்சிகளும் இனிமையான மதுர கானங்களும்
உங்கள் மீள்பதிவால் எங்களை நீந்திக் களிக்க வையுங்கள் !!
செந்தில்

Gopal.s
19th July 2015, 12:05 PM
கவிஞர்கள் நரஸ்துதி செய்ததாலேயே, திராவிட பிரபலங்கள் அளவு மீறிய புகழ் அடைந்தனர். அப்படியே பார்த்தாலும் ,நரஸ்துதி செய்த அத்தனை கவிஞர்களும் ,வாலி உயரத்தை எட்ட முடியவில்லையே ?(புலமை பித்தன் உட்பட ). வாலி புகழ் ,அவர் திறமையால் மட்டுமே கண்டது.

நான் சொல்ல வந்தது, அவரை கண்ணதாசன்,வைரமுத்து அளவிற்கு போற்றாத காரணம் , Brand பண்ணி கொண்டதால் வந்த வினையே.

மற்றபடி ,அவர் இவர்களுக்கு சமமான திறமை கொண்டு,இவர்கள் அளவு போற்ற தக்கவர் என்று குறிப்பிட்டேன்.

chinnakkannan
19th July 2015, 12:06 PM
மிள் பதிவு போட்டதில் ஒரு சுய நலமும் உண்டு.. வாசு அப்போது மெடர்னிடி (?!) ஸாரி டைப்போ பேடர்னிடி லீவில் :) போயிருந்தார் லாங்க் லீவாக.. கிஷ்ணாவும் மிஸ்ஸிங்க் எனில் கல் நாயக் தான் குட்டி பக்கெட்டில் இறால் மீன் அதாவது செம்மீன் கொணர்ந்தார்.. ராகதேவனும் முரளியும் பின்னூட்டம் அழகாகத் தந்திருந்தனர்..அதைத் தேட வேண்டும்..

எனில் வாசுவிடமிருந்து பெரிய பக்கெட் எதிர் பார்க்கலாம் என....:)

Gopal.s
19th July 2015, 12:09 PM
தயவு செய்து சொந்த கருத்துக்கள் கொஞ்சம் ,கட் பேஸ்ட் ஜாஸ்தி வரும் போது ,சொந்த எழுத்தில் கமா,புல் ஸ்டாப் ,ஆச்சரிய குறிகள் காணோம்.ஆனால் இரவலில் இருக்கிறது. ஒன்று இரவலில் குறிகளை நீக்குங்கள் அல்லது சொந்தத்தில் குறிகளை போட பழகுங்கள்.

eehaiupehazij
19th July 2015, 12:13 PM
மிள் பதிவு போட்டதில் ஒரு சுய நலமும் உண்டு.. வாசு அப்போது மெடர்னிடி (?!) ஸாரி டைப்போ பேடர்னிடி லீவில் :) போயிருந்தார் லாங்க் லீவாக.. கிஷ்ணாவும் மிஸ்ஸிங்க் எனில் கல் நாயக் தான் குட்டி பக்கெட்டில் இறால் மீன் அதாவது செம்மீன் கொணர்ந்தார்.. ராகதேவனும் முரளியும் பின்னூட்டம் அழகாகத் தந்திருந்தனர்..அதைத் தேட வேண்டும்..

எனில் வாசுவிடமிருந்து பெரிய பக்கெட் எதிர் பார்க்கலாம் என....:)

கல்நாயக் மற்றும் கிருஷ்ணாவின் எழுத்து வன்மையை அவ்வப்போது ரசித்திருக்கிறேன். அவர்களின் மீள் பார்வைக் கருத்துப் பரிமாற்றங்களையும்ரசிக்க வைப்பார்களா !? ஆவலுடன்!!

நீங்கள்,முரளி, ராகவேந்தர், கோபால், கலை, எஸ்வீ எல்லாம் வாசுவின் எழுத்துக் கடலில் விவரிப்புத் திமிங்கிலங்கள், அலசல் சுறாக்கள் தகவல் ஆக்டோபஸ்கள் !

Gopal.s
19th July 2015, 12:25 PM
மன்னிக்கவும். பூத்திருக்கும் விழி எடுத்து என்ற கல்யாண மண்டபம் பட பாடலின் இசையமைப்பாளர் ஆர்.பார்த்தசாரதி.

vasudevan31355
19th July 2015, 12:36 PM
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2015/ChemmeenSUR000001.jpghttp://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2015/ChemmeenSUR000002.jpg
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2015/ChemmeenSUR000003.jpghttp://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2015/ChemmeenSUR000004.jpg
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2015/ChemmeenSUR000005.jpghttp://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2015/ChemmeenSUR000006.jpg
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2015/ChemmeenSUR000007.jpghttp://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2015/ChemmeenSUR000009.jpg
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2015/ChemmeenSUR000010.jpghttp://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2015/ChemmeenSUR000008.jpg

eehaiupehazij
19th July 2015, 12:40 PM
வாசு அவர்கள் நீலகிரி எக்ஸ்ப்ரஸ் குறிப்பில் கூறியிருந்த திரு கள்ளபார்ட் நடராஜன் ஓர் அருமையான நடனக் கலைஞரும் கூட!
அதிகம் புகழ் வெளிச்சம் கிட்டாவிடினும் குணசித்திர வேடங்களிலும் மின்னியவர்.
தேவர் மகனில் ரேவதியின் தந்தையாக ஒளி விளக்கில் சிறு வில்லனாக...வண்ணக்கிளியில் சித்தாடை கட்டிக்கிட்டு மற்றும் குமுதத்தில் மாமா..மாமா..பாடலில் நடனத்திலும்.நிறைவான நடிப்புப் பங்களிப்பை நல்கியவர் !!

https://www.youtube.com/watch?v=sgXrZfcGSFo

https://www.youtube.com/watch?v=FGOsDFMrRSs

Gopal.s
19th July 2015, 12:41 PM
நண்பர் ஒருவர் வினோத கேள்வி கேட்டார்.ஒரு இசையமைப்பாளரின் ஒரே ஒரு பாடலை உங்கள் best தேர்வு செய்ய வேண்டும். அவர் பெரிய ஆளாக இருந்தாலும் ,சாதாரணமாக இருந்தாலும் என்று சவால் விட மகா கஷ்டமான பணிதான். இருந்தாலும் சமாளித்தேன்.பாருங்களேன்.

ஜி.ராமநாதன்- உன்னழகை கன்னியர்கள் (உத்தம புத்திரன்)

கே.வீ.மகாதேவன் -தூங்காத கண்ணென்று ஒன்று (குங்குமம்)

எஸ்.எம்.சுப்பையா நாயுடு-நீ எங்கே (மன்னிப்பு)

விஸ்வநாதன்-ராமமூர்த்தி-சொன்னது நீதானா (நெஞ்சில் ஓர் ஆலயம்)

ஏ.எம்.ராஜா - காவேரி ஓரம் (ஆடி பெருக்கு)

ராமமூர்த்தி- வசந்த காலம் வருமோ(மறக்க முடியுமா)

விஸ்வநாதன் - வெள்ளிக் கிண்ணந்தான் (உயர்ந்த மனிதன்)

சங்கர்-கணேஷ்- விடியும் மட்டும் பேசலாம்(நான் யார் தெரியுமா)

சுதர்சனம்- அன்னை என்பவள் நீதானா (அன்னை)

கோவர்த்தனம்-கண்ணில் கண்டதெல்லாம் (பட்டணத்தில் பூதம்)

டி.ஜி.லிங்கப்பா - காணா இன்பம் கனிந்ததேனோ(சபாஷ் மீனா)

வீ.குமார்- பறவைகள் சிறகினால் (நினைவில் நின்றவள்)

வேதா- என்னென்னவோ நான் நினைத்தேன் (அதே கண்கள்)

வெங்கடேஷ்- தொடுவதென்ன தென்றலோ (சபதம்)

விஜய பாஸ்கர் - மண மகளே உன் மணவறை (காலங்களில் அவள் வசந்தம்)

இளையராஜா- ஏ..பாடல் ஒன்று, ராகம் ஒன்று (பிரியா)

ஏ.ஆர்.ரகுமான்-வெண்ணிலவே...வெண்ணிலவே (மின்சார கனவு)

தேவா- என்னென்ன (நேருக்கு நேர்)

கார்த்திக் ராஜா - பார்த்து போ மாமா பார்த்து போ (நெறஞ்ச மனசு )

ரமேஷ் விநாயகம் -விழிகளின் அருகினில் (அழகிய தீயே)

யுவன் சங்கர் ராஜா -தீபிடிக்க தீ பிடிக்க (அறிந்தும் அறியாமலும்)

eehaiupehazij
19th July 2015, 01:02 PM
அக்கம் பக்கம்....சுற்றும் முற்றும்...மனதை வருடும் மதுர கானங்களே!

மன்னா தே ! நெஞ்சம் மறப்பதில்லை !

ஜனாதிபதி விருது பெற்ற பாரதப் பாடகர்களில் தனித்தன்மை வாய்ந்த குரல் குழைவால் முகமது ரபி , முகேஷ், கிஷோர் குமார் போன்ற சமகாலத்திய பாடகத் திலகங்களுடன் தனி இடம் பெற்றவர்.
செம்மீன் படத்திலும் மானச மயினே வரூ பாடலை பாடி மகிழ்வித்தவர்!! மேரா நாம் ஜோக்கர், சங்கம், ஸ்ரீ 420 Chori Chori புகழ் அரியணையில் அமர்த்தின!!

மானஸ மயினே வரூ ..மதுரச கீதம் தரூ...(மதுரம் உள்ளில் தரூ!)

https://www.youtube.com/watch?v=uVe4nEV_X2E

Manna De won National Award for this song in Raj Kapoor's Magnum Opus 'Meraa Naam Joker!'

https://www.youtube.com/watch?v=XSG2MFQhPX0

The Number One evergreen song of Indian Cinema with Raj Kapoor Nargis combo sung by Manna De and Latha!

https://www.youtube.com/watch?v=y01uvU0UAoU

Mukesh was Raj Kapoor's Voice! Manna De sings for Rajendra Kumar!

https://www.youtube.com/watch?v=mj7mr6f2xOo

Scintillating song picturization in Roman Holiday's loose adaptation in Hindi 'Chori Chori'

https://www.youtube.com/watch?v=f1DZxkiMjRo

vasudevan31355
19th July 2015, 01:54 PM
செந்தில் சார்,

அருமை.

அது மட்டுமா?

கள்ள பார்ட் 'பராசக்தி' படத்தில் அகதிகள் முகாம் அதிகாரியாக வருவார்.

'சபாஷ் மீனா' வில் பிரதான சபாஷ் வில்லன்.

'தெய்வப் பிறவி'யிலும் வில்லன் போலத்தான்.

'மதராஸ் டு பாண்டிச்சேரி' படத்திலும் ரவிக்கு வில்லன்.

'கண்காட்சி' திரைப்படத்தில் சகுந்தலாவுடன் 'துள்ளும் மங்கை முகம்' பாடல் நடனம் அருமை.

'செங்கமலத் தீவு' படத்தில் 'மலரைப் பறித்தாய் தலையில் வைத்தாய் மனதைப் பறித்தாய் எங்கே வைத்தாய்?'பாடலின் நாயகன்.

நிறைய தெலுகு படங்கள் தமிழில் டப்பிங் செய்யப்பட்ட போது தெலுங்கு நாயகர்களுக்கு குரல் கொடுத்ததும் இவரே.

'பராசக்தி'யில் அகதி முகாம் அதிகாரியாக 'கள்ளபார்ட்'. என் டிவிடியிலிருந்து கிளிக் செய்த படம்.

http://i61.tinypic.com/qmz5tz.jpg

eehaiupehazij
19th July 2015, 01:57 PM
ரோஜர் மூரின் ஜேம்ஸ் பாண்ட் அரியாசனம் தக்க வைக்கப் பட்ட சூப்பர் டூப்பர் படமான தி ஸ்பை ஹூ லவ்ட் மி திரைப்படம் பற்றிய விரிவான அலசல் காரணமாக இடை செருகலாக கம் செப்டம்பர் இசைக் காவியம் பற்றிய சிறு ஆய்வலசல் !

Raaghavendhar Sir ... need not wait till September!!

மாற்றார் தோட்டத்து மெல்லிசையும் மதுரமே
பகுதி 10 : கம் செப்டம்பர் / Come September (1961) starring ராக் ஹட்சன் with ஜினா லோலா பிரிகிடா!!


ஆங்கில ஹாலிவுட் கதாநாயகர்களிலேயே மிகவும் உயரமான 6'4" கட்டழகர் ராக் ஹட்சன் காதல் சார்ந்த இசை முக்கியத்துவம் பெற்ற படங்களில் புகழ்
பெற்றவர் ! கம் செப்டம்பர் மிகவும் புகழ் பெற்ற அகில உலக ரசிகர்களையும் வசீகரித்த காதல் மோதல் காவியம்!


இதில் வரும் டைட்டில் கிடார் இசை ரம்மியமானது ! தமிழகத்தில் பெரும்பாலான திரையரங்குகளில் திரை தூக்கப் படும்போது போடப்பட்டு ரசிகர்களின் விசில் கைதட்டல்களை அள்ளிய அதிசய இசை நிகழ்வு!!

நான் திரைப்படத்தில் வரும் வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே! பாடல் இந்த இசையின் அப்பட்டமான காப்பியே!! மக்கள்திலகத்தின் அன்பே வா திரைப்படமும் கம் செப்டம்பரின் தமிழ்த் தழுவலே!!

Come September theme music by Bobby Darin and orchestra!

https://www.youtube.com/watch?v=RhJaVvyanZk

https://www.youtube.com/watch?v=te7I_ta7Vzc

Now enjoy tamizhaised version in Ravichandran Jayalalitha starrer the silver jubilee super hit NAAN directed by Ramanna!!

https://www.youtube.com/watch?v=UJddfwD0ZEI

Multiplication .....by Bobby Darin!

https://www.youtube.com/watch?v=N16WP-vwIDA

Super dance movements by Hudson

Music only as in the movie!

https://www.youtube.com/watch?v=9cQ07f165Ac

With the song incorporated!! enjoy the beats and steps!

https://www.youtube.com/watch?v=R7DtB_jaUM0

The crispy trailor!!

https://www.youtube.com/watch?v=9j3vxhzM8MY

vasudevan31355
19th July 2015, 02:09 PM
இதோ இந்தி 'ராஜா' படத்தில் 'Nazren Mili Dil Dhadka' 'கம் செப்டெம்பர்' தழுவி. சஞ்சய் கபூர் மற்றும் மாதுரி தீட்சித் நடிப்பில். மாதுரி அமர்க்களம். உதித், அல்கா அமர்க்களம்.


https://youtu.be/jFImzXXrFJA

vasudevan31355
19th July 2015, 02:14 PM
சுமன் கல்யான்பூர் பாடிய அமர்க்களமான படமல்லாத பாடல். (கம் செப்டெம்பரைத் தழுவி)


https://youtu.be/2OASKpTV_BY

Gopal.s
19th July 2015, 02:29 PM
சலில் சௌதரி.

வங்காளத்தை சேர்ந்த சலில் சௌதரி 1923 இல் பிறந்து 1995 இல் மறைந்தார். வளர்ந்தது அஸ்ஸாம் டீ எஸ்டேட் என்பதாலும்,தகப்பனார் நாடக விருப்பம் உள்ளவர் மற்றும் மேற்கத்திய இசையில் நாட்டம் உள்ளவர் என்பதால் சலில் சிறு வயதிலேயே ,இசை,நாடகம்,கம்யுனிசம் இவற்றில் ஈர்க்க பட்டார். 1949 இல் வங்காள படத்திற்கு இசையமைக்க தொடங்கி, ஹிந்திக்கு பிமல் ராய் (என்னுடைய பிடித்தமான இயக்குனர்)அவர்களால் 1953 இல் தோபிகா ஜமீனில் அறிமுகமாகி,மலையாளம் செம்மீன் மூலம் 1964 முதல் இங்கேயும் அவர் கொடி பறக்க ஆரம்பித்தது.

என்னுடைய பிடித்தங்கள் அவர் இசையில்.

மதுமதி, சாயா,ஜூலா,சாந்த் ஔர் சூரஜ்,பூனம் கி ராத்,செம்மீன்,ஆனந்த் ,நெல்லு,ராச லீலா,கோகிலா,அழியாத கோலங்கள்,வஸ்துஹாரா,சாமி விவேகானந்தா .

இவர் இசை திறனுக்கு சான்றுகள்.

மதுமதி - சுஹானா சபர்

Gopal.s
19th July 2015, 02:31 PM
சலில் சௌதரி.

வங்காளத்தை சேர்ந்த சலில் சௌதரி 1923 இல் பிறந்து 1995 இல் மறைந்தார். வளர்ந்தது அஸ்ஸாம் டீ எஸ்டேட் என்பதாலும்,தகப்பனார் நாடக விருப்பம் உள்ளவர் மற்றும் மேற்கத்திய இசையில் நாட்டம் உள்ளவர் என்பதால் சலில் சிறு வயதிலேயே ,இசை,நாடகம்,கம்யுனிசம் இவற்றில் ஈர்க்க பட்டார். 1949 இல் வங்காள படத்திற்கு இசையமைக்க தொடங்கி, ஹிந்திக்கு பிமல் ராய் (என்னுடைய பிடித்தமான இயக்குனர்)அவர்களால் 1953 இல் தோபிகா ஜமீனில் அறிமுகமாகி,மலையாளம் செம்மீன் மூலம் 1964 முதல் இங்கேயும் அவர் கொடி பறக்க ஆரம்பித்தது.

என்னுடைய பிடித்தங்கள் அவர் இசையில்.

மதுமதி, சாயா,ஜூலா,சாந்த் ஔர் சூரஜ்,பூனம் கி ராத்,செம்மீன்,ஆனந்த் ,நெல்லு,ராச லீலா,கோகிலா,அழியாத கோலங்கள்,வஸ்துஹாரா,சாமி விவேகானந்தா .

இவர் இசை திறனுக்கு சான்றுகள்.

மதுமதி - சுஹானா சபர்

https://www.youtube.com/watch?v=aSU74fpWsfQ

https://www.youtube.com/watch?v=ofSmjIsOGB0

https://www.youtube.com/watch?v=b7JIfXxw6OU

https://www.youtube.com/watch?v=TY4lL68vqio

https://www.youtube.com/watch?v=3vgDb4TQneA

chinnakkannan
19th July 2015, 04:14 PM
கள்ள பார்ட் நடராஜன் - சிங்காரத் தேருக்கு சேலை கட்டியிலும் ஹேமாவுடன் ஆடியவர் என நினைக்கிறேன்

ஷீலா செம்மீன் படங்களுக்கு பக்கெட் நிறைய நன்றி வாசு சார்..

chinnakkannan
19th July 2015, 04:29 PM
கம் செப்டம்பர், வந்தால் என்னோடு - சி.செ, ஹிந்தி ராஜா, அப்புறம் அனதர் பாட் - வாசு.. தாங்க்ஸ்.. :)


எண்பதுகளில் என்று நினைவு..அப்பா அம்மா அண்ணன் + நான் ஒரு ஏப்ரல் மாதம்..அண்ணாவின் எல்.டி.சி.டூர் ஃப்ரம் மதுரை.. சில பல ஆடியோ கேஸட்டுகள் நான் ரெகார்ட் செய்திருந்துந்தேன்.. நினைவாக அவற்றை எடுக்காமல் மேலும் சில கேஸட் எடுத்து காரில் அமர்ந்தாயிற்று.. மதுரை ஊட்டி மைசூர் பெங்களூர் பின் மதுரை..

காரில் ஏறியவுடன் ( அம்பாஸிடர்) டிரைவர் காஸ ட் இருக்கா தம்பி..ஓ எனக் கொடுத்தவுடன் சமர்த்தாய் ஹிந்தியில் பாட ஆரம்பித்தது..ஒரு புறம் ஏக் துஜே கேலியே மறுபுறம் மதுமதி..டிரைவர் பஹூத் குஷி எனக்கு ரொம்பப் பிடிக்கும் தம்பி.. அதன் பிறகு கொண்டுவந்திருந்த காஸெட்ஸ் பார்த்தால் எல்லாம் கர்னாடிக்..அப்போது (ம்) எனக்கு கர்னாடிக் பாடல்கள் பற்றித் தெரியாததல் ஏமாற்றமே.. பாவம் டிரைவரிடமும் வேறு காஸட் இல்லாததால் டூ ர் சென்ற ஐந்து நாட்களும் மறுபடி மறுபடி மதுமதி ஏக் துஜே கேலியே தான்..!

மதுமதி பாடல்களை ப் பார்த்ததும் இது தான் நினைவுக்கு வந்தது.. நன்றி கோ..

adiram
19th July 2015, 05:23 PM
டியர் வாசு சார்,

கள்ளபார்ட் நடராஜன் பற்றி எல்லோரும் அவரவர் பங்குக்கு நினைவு கூர்ந்து விட்டீர்கள். நாமும் எழுத ஏதேனும் ஒரு பாடல் மிச்சம் இருக்கிறதா என்று நினைத்தபோது

அட... நம்ம படமே இருக்கிறதே

பேசும் தெய்வம் படத்தில் நடிகர்திலகமும் பப்பிம்மாவும் தேனிலவு போகும் இடத்தில் "இதய ஊஞ்சல் ஆடவா" என்று மெலோடியாக தொடங்கும் பாடல், திடீரென்று ஒரு நடன கோஷ்டி வந்ததும் "ஜோக்கா ஜொலிக்குது பார்... டேக்கா கொடுக்குது பார்" என்று ஸ்பீட் ட்யூனாக மாறும்.

அதைப் பார்த்ததும் 'நம்ம தேனிலவு தம்பதியும்' கற்பனையில் அந்த பாடலில் சங்கமம் ஆவார்கள்.

அந்த நடனகோஷ்டியின் பிரதான நடன ஜோடி கள்ளபார்ட் நடராஜனும் கீதாஞ்சலியும் தான். (அப்பா கீதாஞ்சலியையும் பதிவில் நுழைச்சாச்சு)

நீங்கள் எக்ஸ்பிரஸ் வாகத்தில் பதித்த நீலகிரி எக்ஸ்பிரஸ் பாடல் அருமை. பலமுறை அந்தப்பாடலை பாடலை பார்த்திருந்தும் கேட்டிருந்தும் வரிகள் 'சோ', 'சோ' என்று முடிவதைப் பற்றி சிந்திக்கவேயில்லை. (அதுசரி,... எல்லோரும் வாசு ஆகிவிட முடியாது)

adiram
19th July 2015, 05:50 PM
டியர் கோபால் சார்,

மீள்பதிவாயினும் "நினைத்தால் போதும் பாடுவேன்" பதிவு அருமை. எனக்கும் மிகவும் பிடித்த பாடல். ஜானகியின் பாடல்களில் என் மனதில் 'சிங்கார வேலனுக்கு' அடுத்த இடம் இதற்குத்தான்.

நெஞ்சிருக்கும் வரை பாட்டுக்கொரு படம் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு ஒவ்வொரு பாடலுக்கும் மெல்லிசை மன்னர் உழைத்திருப்பார்.

ஸ்ரீதர்தான் மேக்கப் இல்லாமல் எடுக்கிறேன் அது இது என்று போட்டு சொதப்பியிருப்பார்.

vasudevan31355
19th July 2015, 06:58 PM
நடன நடிகை சாந்தா

டியர் ஆதிராம் சார்,

தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி!

'கள்ளபார்ட்' நடராஜன் என்று வரும் போது அவர் நடித்த 'பேசும் தெய்வம்' படத்தை நினைவு படுத்தியமைக்கு நன்றி! உங்கள் ஞாபக சக்திக்கு என்னுடைய பாராட்டுக்கள்.

திரு நடராஜன் அவர்களைப் பற்றி, அவர் நடித்த திரைப்படங்கள் பற்றி நிறைய எழுதலாம். இப்போது ஊறுகாய் போல அனைவரும் தொட்டுக் கொண்டு அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளோம்.

ஒரு சிறு திருத்தம். 'பேசும் தெய்வம்' படத்தில் 'கள்ளபார்ட்' உடன் ஆடுவது கீதாஞ்சலி அல்ல. அந்த நடன நடிகை பெயர் சாந்தா.

'பேசும் தெய்வம்' படத்தில் 'கள்ளபார்ட்' மற்றும் சாந்தா.

http://i62.tinypic.com/o78ufk.jpghttp://i57.tinypic.com/2zhoak9.jpg

சாந்தா மக அழகானவர். முறையாக பரதம், மேற்கத்திய நடனங்கள் பயின்றவர். இப்போது நீங்கள் 'டக்'கென்று பிடித்துக் கொள்வீர்கள் பாருங்கள். 'சர்வர் சுந்தரம்' படத்தில் நாகேஷுடன் சாந்தா ஆடிப் பாடி நடித்த 'அவளுக்கென்ன அழகிய முகம்' பாடல் மகவும் பிரசித்தம். இப்போது புரிந்து விட்டதா?

http://i.ytimg.com/vi/kOMtTQSSW4E/hqdefault.jpg

சாந்தா கதாநாயகி போல மிக அழகாக இருப்பதால் இவருடன் நடிக்க நமது சில கதாநாயகிகள் தயங்குவார்களாம். (தன்னை விட அழகாய் இருக்கிறார் என்ற பொறாமையில்)

ஆனாலும் கதாநாயகியின் தோழியாக பல படங்களில் வந்து ஆடுவார். பெரும்பாலும் மேற்கத்திய நடனமே இவர் அதிகம் ஆடியிருப்பார்.

http://i.ytimg.com/vi/3-BNm0SM-jY/hqdefault.jpg

'குழந்தையும் தெய்வமும்' படத்தில் சுசீலா அம்மா பாடிய 'பழமுதிர் சோலையிலே தோழி' பாடலுக்கு சேலை கட்டி ஆடும் நடிகை இவர்தான். (இந்தப் படத்தில் கொஞ்சம் முகம் முற்றி பார்ப்பதற்கு ஜி.சகுந்தலா போலத் தோன்றுவார்)

இதே படத்தில் ஜமுனாவைப் பிரிந்து இருக்கும் ஜெயசங்கரை மயக்கும் நங்கையாக 'ஆஹா இது நள்ளிரவு... ஓஹோஹோ இது நல்வரவு' என்ற எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் மோகப் பாடல் ஒன்றும் இவருக்கு உண்டு.

இன்னும் சொல்கிறேன்.

பெரும்பாலும் இவரை பிரதான கதாநாயகியுடன் குளத்திலோ ஆற்றிலோ குளிக்க வைத்து இவரது மேனி அழகைக் காட்ட வைத்து விடுவார்கள்.

1966 ல் வெளியான 'கொடி மலர்' படத்தின் நாயகி உங்கள் 'வசந்தி என்ற சித்ரலேகாவுடன்':) சாந்தா ஆற்றில் குளிப்பது போன்ற பாடல் காட்சி. சுசீலாவும், ராட்சஸியும் பாடும் 'கண்ணாடி மேனியடி... தண்ணீரில் நீந்துதடி' என்ற அருமையான பாடல். இருவரிடமும் அழகு கொட்டிக் கிடக்கும்.

'அரசகட்டளை' படத்தில் ஜெயலலிதாவுடன்

https://i.ytimg.com/vi/idjMZqrpbS0/sddefault.jpg

'அரச கட்டளை' டைட்டிலில் 'சாந்தா'வின் பெயர்

http://i57.tinypic.com/9a65x4.jpg

அப்புறம் 'அரசகட்டளை' யின் ஒரு நாயகி 'அம்மா'வுடன் சாந்தா குளியல் போட்டு ஆடும் ஆட்டம் ஒன்று உண்டு எம்.ஜி.ஆர் அவர்களின் புகழ் பரப்பும் பாடலோடு. (பாலச்சந்தரின் 'பூவா தலையா' படத்தில் வரும் நிர்மலாவும், ராஜஸ்ரீயும் குற்றாலத்தில் இணையும், இழையும்:) 'பாலாடை மேனி பனிவாடை காற்றில்' பாடல் போல) 'என்னைப் பாட வைத்தவன் ஒருவன்... என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்' பாடல்தான் அது.

ஒரு நல்ல, அழகான, நடன நடிகையை நினைவுகூர வைத்ததற்கு நன்றிகள் ஆதி சார்.

இப்போது சாந்தா நடித்த பாடல்களை வரிசையாக ரசிக்க ஆரம்பியுங்கள்.

'அவளுக்கென்ன அழகிய முகம்'


https://youtu.be/KiYCD6Nldqg

'பழமுதிர் சோலையிலே தோழி'


https://youtu.be/CTeJfjZTQEc

'ஆஹா இது நள்ளிரவு'


https://youtu.be/UGKleTGehGI

'கண்ணாடி மேனியடி... தண்ணீரில் நீந்துதடி'


https://youtu.be/-SeCEd47iuY

'என்னைப் பாட வைத்தவன் ஒருவன்'


https://youtu.be/iiE2sQXP_rk

eehaiupehazij
19th July 2015, 07:14 PM
வாசு சார் அந்த சர்வர் சுந்தரம் நடன நடிகை பெயர் தாரா என்று படித்ததாக ஞாபகம். பின்னாளில் நடன இயக்குனராகவும் பணியாற்றியிருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன்

vasudevan31355
19th July 2015, 07:27 PM
(இதய ஊஞ்சல் ஆடவா) "ஜோக்கா ஜொலிக்குது பார்... டேக்கா கொடுக்குது பார்"

'பேசும் தெய்வம்' படத்தில் 'கள்ளபார்ட்' மற்றும் சாந்தா பங்கு கொண்ட பாடல்.


https://youtu.be/6HIOLu2t9Uc