PDA

View Full Version : மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4Pages : 1 2 3 4 5 6 [7] 8 9 10 11 12 13 14 15 16

rajeshkrv
28th June 2015, 10:17 PM
ஒரு மண்ணுக்கும் என்று திருத்து.
திருத்திக்கொள்கிறேன்
நீங்கள் என்னை சொன்னீர்கள் என்று நான் சொல்லவில்லை
சபை நாகரீகத்தோடு எழுதுங்கள் என்றுதான் சொல்கிறேன்
படிக்கிறவர்கள் எல்லோரையும் அது புண்படுத்தத்தானே செய்யும்..

எல்லோரும் எல்லாவற்றையும் ரசிப்பதில்லை. ஆனால் படிக்காமல் இருக்க மாட்டார்கள்
நீங்கள் என்னையோ யாரையோ குறிப்பிட்டு சொல்லவில்லை என்பது தெரியும் இருந்தாலும் ஏக வசனம், இரண்டு கால் மிருகங்கள் என்றெல்லாம் சொல்வது நலல்தல்ல. அப்படிப்பார்த்தால் எல்லோருமே இரண்டு கால் மிருகங்கள் தான் உம்மையும் என்னையும் உட்பட

rajeshkrv
28th June 2015, 10:20 PM
அதே போல் உலகப்படங்களை “World Music and Movies” திரியில் நீங்கள் பதிவிட்டுருந்தீர்கள் என்றால் அமோக வரவேற்பு கூட கிடைத்திருக்கும்
எல்லோரையும் குறை கூறுவது சுலபம் .. மற்றவர்கள் சொல்லும் குறையை ஏற்கவும் வேண்டும் ...

Gopal,S.
29th June 2015, 04:25 AM
சின்ன கண்ணன்,

என்ன ரொம்ப நாளாக காணவில்லை? விடுமுறை திளைப்பா? வாருங்கள். திரிக்கு சுறுசுறுப்பு தேவை.

Gopal,S.
29th June 2015, 05:16 AM
Kyatapira -2010- Koji Wakamatsu -Japan .

1)முக்கால் வாசி இந்திய பெண்கள் கேட்கும் கேள்வி, எங்களுக்கு எங்கே ஞாயிறு?போராவது,அமைதியாவது? பெண்களுக்கு எங்கே விடிவு?ஆணை சார்ந்து வாழ்வு என்பது ,அவலத்தை சமூக திணிப்பாக சுமந்து வாழும் , இழிவு,பரிதாபம். இதில் மொழியென்ன,நாடென்ன,இனமென்ன ,மதமென்ன?

2)ஆண்கள் எப்படியிருந்தாலும் ஏற்றே ஆக வேண்டிய நிலையில் பெண்கள். (படித்து,பொருளாதார பலம் பெற்ற பின்பும் தொடரும் அவலம்).ஒரு தமிழ் நாடகம் நினைவுக்கு வருகிறது. உலகிலேயே அதிகம் தாழ்த்த பட்டது தலித் ஆண்களல்ல, அவர்களால் மேலும் தாழ்த்த படும் தலித்தின் மனைவியே என்று.

4)புனித போர், போர் நாயகர்கள் என்று உண்டா? போரில் குற்றவாளிகள் மட்டுமேதானே மிஞ்ச முடியும்?

மேற்கண்ட கருத்துக்களை வலுவூட்டும் விதமாக முகத்தில் காரி உமிழ்ந்து ,அறையும் குரூர அருவருப்புடன் சொன்ன படமே கம்பளி பூச்சி என பொருள் தரும் மேற்சொன்ன படம். படங்களில் அருவருப்பு தன்மையை சுமக்க இயலாத மனம் கொண்டவர்கள் தயவு செய்து பார்க்க கூடாத படம் ,எடோகொவா என்ற எழுத்தாளரின் தடை செய்ய பட்ட சிறுகதையை தழுவிய இப்படம்.
1930இன் ஜப்பான்-சீன போரின் பின்னணி. குரோகவா என்ற ஜப்பான் லெப்டினன்ட் போரில் பலர் குடலையுருவி,சித்ரவதை தண்டனைகளுக்கு பலரை ஆட்படுத்தி,பல பெண்களை கதற கதற கற்பழித்த பெருமையாளன் .போரில் முகம் சிதைந்து,தொண்டை அறுந்து, கைகால்கள் துண்டு பட்டு, சிறிதே உடல் ,பாதி முகம் என்று ஊரால் போர் கடவுளாக தொழ பட்டு ,பதக்கங்கள் மட்டுமே மிஞ்சின பிண்டம்.அவன் மனைவி தஷாஷியால் அவனை ஏற்க முடியாவிட்டாலும் ,ஊரின் கட்டளைக்கு கட்டு பட்டு அவனை ஏற்று சேவை செய்யும் கட்டாயத்துக்கு தள்ள படுகிறாள்.குரோகவாவுக்கு ,மனிதன் என்று சொல்ல மிஞ்சியிருப்பது குரூர வக்கிர உணர்வு,கோபம்,காமம்,பசி. தனக்காக எதுவுமே செய்ய இயலாதவன் சாப்பிடுவது,மல-ஜலம் கழிப்பது உட்பட. மனைவியை வற்புறுத்தி வினோத முறையில் உடலுறவுக்கு நிர்பந்திக்கிறான். (அவளை அடித்து துன்புறுத்தி கேவலமாக பில்லையில்லாதவள் என்று தூற்றியிருப்பான் நல்லாயிருந்த காலத்தில்)அவளை கோபமூட்ட, அவள் உடையணிந்து கிளம்பும் போது சிறுநீர் கழிப்பது,சாப்பாட்டை துப்புவது என்று மகா படுத்தல்.பதக்கங்களை ரசிப்பது ஒரே பொழுதுபோக்கு.

துன்புறும் ,வேதனையுறும் மனைவி, அவன் மறுத்தும் கேளாமல்,ராணுவ உடையை அணிவித்து ,அவனை தள்ளு வண்டியில் ஊர்வலம் போவாள். (என்ன அற்புத பழிவாங்கல்).

இறுதியில்,தேய்த்தே ,தவழ்ந்து சென்று குட்டையில் உயிர்விடும் பிண்டம். நம் பழங்கால கூத்தில் கட்டியக்காரன் போல,நம் மனசாட்சியாய் ஒரு கோமாளி.

இந்த மாதிரி படங்களே,போரை வெறுக்க,பெண்ணை சகாவாய் அங்கீகரிக்க நமக்கு கற்று கொடுக்கும்.

ஒரு சித்ரவதை போன்று நம்மை துடிக்க,துவள வைத்து,மனதை குதறி போடும் படம். ஆனால் முடிவில் ,இன்னும் மேன்மையாக்கும் நம்மை.

rajeshkrv
29th June 2015, 05:41 AM
இனி பேசி ஒரு புண்ணியமும் இல்லை.
நீங்கள் தொடருங்கள்
நான் எனக்குத்தெரிந்ததை தொடருவேன். இந்த கும்பலில் தான் நீங்களும் வந்து எழுதுகிறீர். இதே கும்பலில் நீரும் அடக்கம்..

இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.. நாம் தூர விலகுவதே நல்லது.

rajeshkrv
29th June 2015, 05:52 AM
ரவி

உங்கள் கருவின் கரு தொடர் அருமை.
தாய்மையை போற்றி இப்பொழுது தந்தைக்கு சிறப்பு சேர்க்கும் பதிவுகள் எல்லாம் அருமை.

எதையும் எதிரிபாக்காமல் பாசத்தை பொழியும் தாய் ஒரு புறம், வாழ்க்கையின் நேர்த்தியை உணர்த்தும் தந்தை ஒரு புறம்
இருவரும் தியாக சொரூபிகள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
வாழ்த்துக்கள்.

Gopal,S.
29th June 2015, 06:47 AM
-deleted with warning-

rajeshkrv
29th June 2015, 07:10 AM
ஹ ஹா
யார் எலி.. உம்மை மாதிரி ஆளுக்கெல்லாம் பயந்து நாங்கள் ஒளிந்து கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை
மிச்ச மீதியா .. நீர் என்ன சினிமா என்சைக்ளோபீடியா .. பிலிம் நியூஸ் ஆனந்தன் கூட இன்றும் பணிவோடுதான் பேசுகிறார்.
நீர் ஒன்றுமே இல்லை ஆனாலும் இவ்வளவு ஆணவம், தலைக்கனம் ..
சிரிப்புத்தான் வருகிறது. உமது எழுத்தில் எப்பொழுதுமே சிறுபிள்ளை சண்டைபிடிப்பது போன்ற பேச்சு ..

அப்பா நம்மால முடியாது. .. நீர் உண்டு உமது பிதற்றல்கள் உண்டு. இந்த திரி உம்முடையது அல்ல.
யார் வேண்டுமானாலும் வருவோம் பதிவுகள் போடுவோம்.. படிக்கவில்லை லைக் போடவில்லை என்று நாங்கள் யாரும் இதுவரை புலம்பவில்லை.

vasudevan31355
29th June 2015, 07:41 AM
கோபால்

நைட் டியூட்டி முடித்து வந்து பார்த்தால் இங்கு ஒரு போரே நடந்திருக்கிறது.

என்ன இது? நான்தான் உங்களிடம் சொல்லி இருந்தேனே! ஒழுங்காகத்தானே பதிவுகள் இட்டுக் கொண்டிருந்தீர்கள்? திடீரென்று ஏன் தடித்த வார்த்தைப் பிரயோகங்கள்? மிருகம், அது இதுவென்று. இது உங்களுக்கே நன்றாய் இருக்கிறதா?

இங்கு எல்லோரும் சகோதர உணர்வுடன் பதிவுகளை இடுகிறோம். உங்களிடமும் உங்களை அறியாமலேயே அது உண்டு. சில நாட்களுக்கு முன் கூட எல்லோர் பெயர்களையும் குறிப்பிட்டு ஒருவர் விடாமல் பாராட்டியிருந்தீர்கள். இப்போது என்ன வந்தது? ஏன் தேவையே இல்லாமல் இவ்வளவு கடுமையான வார்த்தைப் பிரயோகம்?

இப்போது ராஜேஷ்ஜியிடம் மீண்டும் முருங்கை மரம். அதுவும் அத்து மீறிய வசை பாடல். ஏன் இந்த மாதிரி வார்த்தைகள்? அதில் நீங்கள் காணும் லாபம்தான் என்ன? அனைவரும் மிகவும் மனம் புண்பட்டுப் போய் இருக்கின்றனர். நீங்கள் எல்லைகள் மீறி வார்த்தை பிரயோகம் செய்துள்ளீர்கள். அவரவர்களுக்கு தெரிந்ததை ஆத்மசுத்தியுடன், மன திருப்தியுடன் இங்கே பதிவிடுகின்றனர். எல்லோருக்கும் எல்லாம் தெரிய வேண்டிய அவசியமில்லை.

என்னுடைய இந்தப் பதிவுக்கும் என்னை நீங்கள் வசை பாடுவீர்கள் என்று தெரியும். அதைப் பற்றி எனக்கு கவலையோ வருத்தமோ ஏற்படாது. ஆனால் மற்ற பதிவர்கள் என்னைப் போல எப்படி பொறுத்துக் கொள்வார்கள்?

தனிப்பட்ட முறையில் உங்களை நன்றாகப் புரிந்தவன் நான். பொதுத் திரியில் அதே உரிமையை நீங்கள் என்னிடம் கூட எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் மற்ற நண்பர்கள் உங்கள் வசவுகளைப் பொறுத்துக் கொள்ளத் தயாராய் இல்லை. இன்னொன்று. உங்கள் அறிவேதான் மற்றவர்களுக்கும் இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பதும் தவறு.

உங்கள் கோபமும் வார்த்தைகளும் குழந்தைத்தனமானது. நீங்கள் உடனே மறந்து சகஜமாகி விடுவீர்கள். ஆனால் மற்றவர்கள் அது போல இருக்க இயலாது. மாறாத காயமாய் நெஞ்சில் நிலைத்து நின்றுவிடும். அப்புறம் நீங்கள் நல்லமுறையில் பேசினால் கூட உங்களிடம் நெருங்க விரும்பாமல் தள்ளி விலகியே நிற்பார்கள்.

உங்களுடைய அருமையான பதிவுகளுக்கு நண்பர்களிடமிருந்து பின்னூட்டம் வராததற்கு இதுவே முக்கியக் கரணம். ஏன் வீண் வம்பு என்று அனைவரும் ஒதுங்கி விடுகிறார்கள்.

இதையெல்லாம் நான் சொல்லித்தான் நீங்கள் உணர வேண்டுமா?

தயவுசெய்து தடித்த வார்த்தைகள் கொண்ட உங்கள் பதிவுகளை நீக்குங்கள். (நீக்கு நீக்கு என்று சொல்லியே நாக்கு மரத்துப் போய் விட்டது) குறிப்பாக மிருகம். உங்கள் பதிவுகளின் மேல், உங்கள் திறமையின் மேல் எல்லோரும் மதிப்பு வைத்துள்ளார்கள்.

ஆனால் ஒரு நொடியில் அதை நீங்கள் பாழாக்கிக் கொள்கிறீர்கள்.

யாருமே உங்களை சட்டை செய்யாமல் போனால் அதைவிட கொடுமையான தண்டனை உங்களுக்கு எதுவும் இல்லை. அந்தக் கட்டத்தின் உச்சத்தை நீங்கள் தொட்டிருக்கிறீர்கள்.

நான் சொல்வதை சொல்லி விட்டேன். இனி உங்கள் இஷ்டம். பதிவாளர்களை இப்படி வசை பாடினால் உங்களுக்கு எப்படி பின்னூட்டம் அளிப்பார்கள்?

நீங்கள் தயவு செய்து இது போன்ற திட்டுதல்களை நிறுத்துங்கள். மேலும் தொடராதீர்கள். என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். தயவு செய்து ஹப்பர்களை புண்படுத்தாதீர்கள். எதற்குமே ஒரு எல்லை உண்டு.

மதுர கானங்கள் சண்டை சச்சரவின்றி ஒரே குடும்பமாக, சகோதரத்துவமாக, நட்பின் சின்னமாக வெற்றி நடை போடும் திரி. அதில் இது போன்ற கரும்புள்ளிப் பதிவுகள் தேவையா? ஜாலியாகக் கலாய்க்கலாம். அளவுடன் கேலிகள் இருக்கலாம் மற்றவர் மனம் புண்படாதவகையில்.

சரி! நீங்கள் என்னைத் திட்டி பதிவுகள் தொடங்கலாம். ஆனால் பதில் பதிவுகள் வராது. உங்களுடைய எந்த விதமான பதிவிற்கும். நன்றி!

இப்படிக்கு

ரெண்டுகால் மிருகங்களில் ஒரு மிருகம்.

rajeshkrv
29th June 2015, 08:36 AM
ராஜேஷ் ,புரிகிறது.உன் அறிவின் எல்லை கோடு பிலிம் நியூஸ் ஆனந்தன் . நீயும் அவரோடு அடக்கமாக கடவதாக.த்தூ... உன்னிடம் பேச வந்தேனே?வாசு,ராஜேஷ் வழிக்கு நான் போவதேயில்லை. ஆனால் சமீப காலங்களில் தேவையில்லா சர்ச்சைகளில் மாட்டி கொள்கிறார். அவர் பாட்டுக்கு பதிவு போட்டு கொண்டிருந்தால் பிரச்சினை இல்லை.ஊர் நியாயத்தில் தலையிடும் அளவு இவர் சிறந்த பதிவர் இல்லை. நீ கேட்டதால் சொல்கிறேன். இது கவிஞர்கள் அல்லது கலைஞர்களுக்கு உள்ள license . புரிந்து கொள்ளுங்களேன் முண்டங்களா என்ற அழைப்பு. இது உலகத்தின் மேல் அவர்கள் காட்டும் அக்கறையின் பாற் பட்டதே .தவிர்க்க முயன்று கொண்டே இருக்கிறேன். இது தனிப்பட்ட தாக்குதல் இல்லை.(வேண்டுமானால் அது தனி Department).

ஊர் நியாயத்தில் தலையிட யார் வேண்டுமானாலும் வரலாம். சிறந்த பதிவர் என்று உம்மிடம் சான்றிதழ் வாங்க வேண்டிய அவசியம் இங்கு யாருக்கும் இல்லை. நீர் பல்கலைக்கழகம் நடத்தவும் இல்லை. பொதுவாக இப்படி வார்த்தைகளை உபயோகிக்க வேண்டாம் என்று சொன்னால் அதை கேட்கும் பக்குவமில்லை.. .. வாசு ஜி சொன்னால் தான் கேட்பேன் என்று சொல்ல இது உங்கள் சொந்த பக்கமோ ப்ளாகோ அல்ல. இது பொதுவான ஹப்.
இனி நான் உம்மை பற்றி பேசப்போவதில்லை. நீரும் என் பெயரையோ என்னைப்பற்றியே பேசவேண்டியதும் இல்லை அந்த உரிமை உமக்கில்லை.
period. end of discussion

NOV
29th June 2015, 09:56 AM
Note from moderator: One of the basic rules of The Hub is to refrain from personal abuse.
Offenders id will be disabled for a period of time and if constantly repeated, will be banned permanently.
Discuss civilly please.

vasudevan31355
29th June 2015, 11:39 AM
'ஹலோ மை டார்லிங் இப்போ காதல் வந்தாச்சு'

https://i.ytimg.com/vi/hQZUQPZwYuk/hqdefault.jpg

சரி! நண்பர்களே! இயல்பு நிலைக்குத் திரும்புவோம்.

ஒரு ஜாலியான பாடலைப் பற்றிப் பார்ப்போம். கவலைகள் மறந்து போகும்.

என் அபிமானப் பின்னணிப் பாடகர் சாய்பாபா. கொஞ்சமல்ல...நெஞ்சம் நிறைய இவரைப் பிடிக்கும். என்னால் மறக்கவே முடியாத அற்புத குரல் வளம் கொண்டவர். ஜேசுதாஸ், பாலா, கண்டசாலா இவர்களின் குரல்களின் கலவை போன்று.

துரதிர்ஷ்டம் என்னவென்றால் குறைந்த பாடல்களே இவர் பாடியிருப்பது. இது வாழ்நாள் முழுக்க என் வருத்தம்.

ஆங்கிலம் கலந்த தமிழ் காமெடிப் பாடலை இவரை விட்டால் பாட ஆளில்லை. நாகேஷுக்கு மிகப் பொருத்தமாவார் ஏ.எல். ராகவன் போல.

அதில் செம ஜாலியான ஒரு பாடல்.

http://padamhosting.me/out.php/i39275_vlcsnap389631.png

நடிகர் திலகத்தின் 'எங்கிருந்தோ வந்தாள்' திரைப்படத்தில் நாகேஷும், சச்சுவும் பாடும் டூயட் பாடல்.

சட்டைக்காரி சச்சுவுடன் சம்சாரி நாகேஷ் கும்மாள ஜோடி சேருவார் ஏற்கனவே ரமாபிரபாவுடன் குடும்பம் நடத்தியும்.

அணைக்கட்டு, (எந்த ஊர்?) பார்க், ஏரி என்று இயற்கைக் காட்சிகள். ரம்யமாக இருக்கும். (இப்போது அதையெல்லாம் பார்க்க மனதுக்கு எவ்வளவு ஆனந்தம்! இதற்காகவே ஒரு முறை சாத்தனூர் அணைக்கட்டு போய்ப் பார்த்து விட்டு ரசித்து வந்தேன் அது பாழடைந்த நிலையிலும்.)

கைகளில் குடை சகிதம் நாகேஷ், சச்சு. சச்சுவுக்கு சட்டைக்காரி வேஷம் பொருந்தாது. அவரது உடல் வேறு அந்தபந்தம் இல்லாமல் இருக்கும். நாகேஷ் கண்ணாடி அணிந்து நடுத்தர வயது மனிதராக காட்சி தருவார்.

பாலாஜி ஆபீஸில் வேலை செய்யும் இருவருக்கும் காதல்.

'மெல்லிசை மன்னர்' துள்ளல் போட வைப்பார் இசையால். இந்த மாதிரிப் பாட்டெல்லாம் அவருக்கு சர்வ சாதாரணம்.

எனக்குப் பிடித்த இரு பாடகர்கள். ஈஸ்வரி சாய்பாபாவுடன் சேரும் போது இன்னும் இனிப்பார்.

பாடலின் வரிகள் சில காமெடிக் கலக்கலாக இருக்கும்.

'நர்கீஸ் போலே நீ இருக்க விட்டுப் போவேனா?

என்று நாகேஷ் ராமாவைப் பார்த்து கேட்க,

'நாகேஷ் போலே நீ இருக்க நான் விடுவேனா?'

என்று நாகேஷிடமே சச்சு பாடுவது நகைச்சுவை. இருவரும் ஆட்டத்தில் தூள் கிளப்புவார்கள்.

ரமாபிரபாவின் கண்காணிப்பு, நாகேஷின் களவாணித்தனம், முன் ஜாக்கிரதை, அப்பாவி டைப்பிஸ்ட் மாட்டி அம்மாஞ்சியாய் முழிப்பது, ரமாபிரபாவை ஏமாற்றி அவருடனேயே நாகேஷ் எஸ்கேப் என்று கலகல.

ஈஸ்வரியின் ஹா, ஹஹ்ஹா, ஹோ அலட்சிய தொனிகள் வழக்கம் போல அசர வைப்பவை.

சாய்பாபாவுக்கு காந்தக் குரல். 'ஹலோ'வை 'ஹல்லோ' என்று அழுத்தமாக உச்சரிப்பது சுவை.

'எங்கிருந்தோ வந்தாளி'ன் நடிகர் திலகம், ஜெயா மேடம் நடிப்பு மற்றும் பாடல்களின் வெள்ள ஆக்கிரமிப்பில் சிக்கி அருமையான இப்பாடல் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. சிம்பிளான காமெடிப் பாடல்தான். ஆனால் 'சிக்'கென்று மனதில் ஒட்டிக் கொள்ளும்.

சாய்பாபாவால் சாகாவரம் பெற்று விட்டது என் வரையில். எனக்கு இந்த மாதிரி ஜாலிப் பாடல்கள் என்றால் உயிர்.

முத்தமிடும் நேரமெப்போ...

எல்லோருக்கும் காலம் வரும்...

அங்கமுத்து தங்கமுத்து தண்ணிக்குப் போனாளாம்...

ஏ புள்ளே சச்சாயி...

பாட்டுக்காரன் பாடிப் பார்க்கலாம்...

குளிரடிக்குதே கிட்ட வா...

மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்...

அல்லிப் பந்தல் கால்கள் எடுத்து...

உத்தரவின்றி உள்ளே வா...

அந்தப் பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ...

சப்பாத்தி சப்பாத்திதான் ரொட்டி ரொட்டிதான்...

ஆட்டத்தை ஆடு புலியுடன் ஆடு...

ஜம்புலிங்கமே ஜடாதரா...

இப்படிப் பல பாடல்கள்.

இப்போ நம்ம பாடல். பாடல் இரண்டு நாட்களுக்காகவாவது மனதில் ரீங்காரம் இட்டபடி இருக்கும்.

https://i.ytimg.com/vi/kvSs63rw4Zg/hqdefault.jpg

ஹலோ மை டார்லிங் இப்போ காதல் வந்தாச்சு
கல்யாணம் பண்ணச் சொல்லி பிராமிஸ் பண்யாச்சு
புதுசு பொண்ணு ரிசர்வு பண்ணு
போட்டுக்க மாலை ஒன்னு
ஹோ மை ஸ்வீட்டி விச்சு

சொர்க்கம் என் பக்கம் உண்டல்லவோ
லில்லிச் செண்டல்லவோ (ஈஸ்வரி பின்னுவார்)
வெட்கம் இல்லாத பெண் அல்லவோ
மேனி பொன் அல்லவோ

சொர்க்கம் என் பக்கம் உண்டல்லவோ
லில்லிச் செண்டல்லவோ
வெட்கம் இல்லாத பெண் அல்லவோ
மேனி பொன் அல்லவோ

பட்டுப் போலக் கூந்தல் உண்டு
தொட்டுப் பாரய்யா
பக்க மேளம் போல என்னைத் தட்டிப் பாரய்யா
உன்னாலே என் ஆசை தீர்ந்தாலென்ன
ஒன்னோடு ஒன்னாகச் சேர்ந்தாலென்ன ஹோ

ஹல்லோ மை டார்லிங் இப்போ காதல் வந்தாச்சு
கல்யாணம் பண்ணச் சொல்லி பிராமிஸ் பண்யாச்சு
புதுசு பொண்ணு தயவு பண்ணு
போட்டுக்க மாலை ஒன்னு ஹோ மை ஸ்வீட் டிஷில்லா

Hei! Come on baby! shake with me! Not this a way! dance away. wov..wov..(right or wrong):)

சிட்டு சிட்டான பெண்டாட்டி நீ
சின்னக் கண்ணாட்டி நீ
கட்டிப் போடாமல் தீராதடி
கண்ணைக் கண்ணால் அடி

(நாகேஷ் என்னமாய்க் கண் அடிப்பார் தெரியுமா! யானை சிலையின் தும்பிக்கையில் அமர்ந்து குடை பிடித்தவாறு)

விட்டு விட்டாலும் போகாதய்யா
வேகம் மாறாதய்யா
பக்கம் நீயின்றி வாழாதய்யா
பாதி நீதானய்யா

நர்கீஸ் போலே நீ இருக்க விட்டுப் போவேனா:)
நாகேஷ் போலே நீ இருக்க நான் விடுவேனா:)
காஷ்மீரில் தேன் நிலவு போனால் என்ன
ஹோ! போகாமல் இங்கேயே வாழ்ந்தால் என்ன அஹ்ஹோ!

ஹல்லோ மை டார்லிங் இப்போ காதல் வந்தாச்சு
கல்யாணம் பண்ணச் சொல்லி பிராமிஸ் பண்யாச்சு

புதுசு பொண்ணு தயவு பண்ணு
போட்டுக்க மாலை ஒன்னு ஹோ மை ஸ்வீட் டிஷில்லா

ஹோ மை ஸ்வீட்டி விச்சு


https://youtu.be/5JJ9mbYMegg

g94127302
29th June 2015, 11:42 AM
Good Morning

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/Happy-Fathers-Day-Quotes-Images-7_zpsvog68bn0.png (http://s818.photobucket.com/user/jravikumar/media/Happy-Fathers-Day-Quotes-Images-7_zpsvog68bn0.png.html)

vasudevan31355
29th June 2015, 12:08 PM
குட் மார்னிங் ரவி சார்!

ஷிப்ட் கிளம்பும் நேரம் வந்தாச்சு. உங்கள் தந்தை தொடர் தொடரட்டும். 'ஹலோ மை டார்லிங்' பார்த்து ரிலாக்ஸ் பண்ணிக்கோங்க.:) வரேன்.

g94127302
29th June 2015, 12:26 PM
கருவின் கரு - 132

பாகம் 2 - தந்தை

தந்தை - மகள் பந்தம்

உண்மை சம்பவம் 19

அன்று வெள்ளிக்கிழமை - மிகவும் சந்தோஷமாக இருந்தேன் - என் மகள் USA விலிருந்து ஒரு மாதம் விடுமுறையில் வருகிறாள் - இரண்டு மூன்று நாட்களாக அவள் வருவதை எண்ணியே பொழுதை போக்கிக் கொண்டிருந்தேன் .. என் மனைவி சாதரணமாகத்தான் இருந்தாள் - அவளிடம் ஒரு படபடப்பும் இல்லை ... திருமணம் செய்துகொண்டு சென்றவுடன் முதல் தடவையாக வீடு வருகிறாள் - இரண்டு வருடங்கள் ஒட்டிவிட்டன . இரண்டு நிமிடம் கூட என்னை விட்டு பிரியாதவள் ... இரண்டு வருடங்கள் எப்படி ???? skype வந்துவிட்ட காலத்தில் , வசதிகள் பெருகிவிட்ட காலத்தில் யார் யாரை மிஸ் பண்ணுகிறார்கள் ?? மிஸ் பண்ணுகிறேன் என்று சொல்வதெல்லாம் பைத்திய காரத்தனம் - என் மனைவியின் வாதம் ---

இன்றைய வாழ்க்கை மாறி விட்டது --- வேகமாக செல்லும் வாழ்க்கை - எதிலுமே செயற்கை கலந்துவிட்ட காலம் - மனிதாபிமானம் , பாசம் ,
மனச்சாட்சி இவைகளை பொன்னாக மதித்தோம் ஒரு காலத்தில் - இன்று விஞ்சானம் எல்லாவற்றிலும் முன்னேறிவிட்டது - whatsappஇல் வாழ்க்கை நடக்கின்றது - skype இல் பாசம் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது - facebook இல் உறவுகள் பின்ணப் படுகின்றன - ஈமெயில் லில் வாழ்க்கை முடிவடைந்து விடுகிறது ....

ஷ்ரேயா வந்துவிட்டாள் - ஹாய் dad -- எப்படி இருக்கீங்க ? உள்ளே சென்றுவிட்டாள் --- ஒரே வார்த்தை - இரண்டு வருடங்களின் பிரிவை இணைத்து வைத்தது ---- கண்களை மூடிக்கொண்டேன் - கண்ணீர் கவிதையாக வெளிவந்து அன்று இருந்த ஒரு இனிய காலத்திற்கு அழைத்துச்சென்றது ....

ஒரு காலம் இருந்தது.

ஒரு காலம் இருந்தது.மனிதாபிமானத்தையும்
மனச்சாட்சியையும்
எம்மில் பெரும்பாண்மையினர்
நேசித்த ஒரு காலம் இருந்தது.

கடவுளுக்கு பணிந்த காலம்.
சத்தியத்தை மதித்த காலம்.
நம்பிக்கையை காப்பாற்றிய காலம்.
வாக்குறுதிகளை பறக்கவிடாத காலம்.
அகிம்சைக்கு அடிபணிந்த காலம்.
பெண்களை போற்றிய காலம்.
நீதியை நிலைநாட்டிய காலம்.
நியாயத்தை துணிந்து கேட்ட காலம்.
பணத்துக்கு மதிப்பிருந்த காலம்.
பாசத்துக்கு கட்டுப்பட்ட காலம்.

நாடகக்கலை வளர்ந்த காலம்.
நடிப்புக்கு இலக்கணமிருந்த காலம்.
பயபக்தி என்ற சொல்லையே வணங்கிய காலம்.
சுவாமிமாரை கடவுள்களாய் பார்த்த காலம்.
வானொலிப் பாடல்களில் சுகித்திருந்த காலம்.
பழஞ்சோற்று உருண்டையை ருசித்த காலம்.
பனம்பாயில் படுத்துறங்கிய காலம்.
ஆறுகளில் எப்போதும் நீர் இருந்த காலம்.
முழுநிலவை சனங்கள் ரசித்த காலம்.

பத்திரிகைகைள் உண்மைகளை மட்டுமே சொன்ன காலம்.
கட்சிகள் மக்களுக்காய் உழைத்த காலம்.
கோயில்கள் சேவை செய்த காலம்.
மழை தவறாமல் பொழிந்த காலம்.
மலிவு விலையில் எல்லாம் கிடைத்த காலம்.
ஊழல் என்ற சொல் அறியாத காலம்.
தண்ணீர் விற்கப்படாத காலம்.
வயல்களில் கட்டிடங்கள் எழுப்பப்படாத காலம்.
கடிதங்கள் மட்டுமே இருந்த காலம்.

மீதிப் பணத்திற்கு மிட்டாய்களைத் தராத காலம்.
ஆபாசங்களை நம்பியிராத நடிகைகளின் காலம்.
பாடகிகள் நிலைத்து நின்று பாடிய காலம்.
மருந்தில் பழுக்காத மாம்பழங்கள் கிடைத்த காலம்.
நகைக்கடன் கடைகள் அதிகமிராத காலம்.
இராப் பிச்சைக்காரர்கள் வீடுதேடி வந்த காலம்.
விபத்துக்கள் அரிதாக இருந்த காலம்.
வீட்டு வாசல்களில் குடிதண்ணீர் வைத்திருந்த காலம்.

எல்லோரையும் கள்வர்களாய் பார்க்காத காலம்.
மருந்துக் கடைகள் குறைவாய் இருந்த காலம்.
புற்றுநோய் அதிகம் உயிரெடுக்காத காலம்.
உடலுழைப்பு அதிகமாய் இருந்த காலம்.
மின்வெட்டு பற்றி யாருமறியாத காலம்.
வண்ணத்துப் பூச்சிகளை இலகுவாய் பிடித்த காலம்.
வழுக்கல் இளநீரை மிகமலிவாய் குடித்த காலம்.

சிட்டுக்குருவிகள் முத்தத்துக்கு வந்த காலம்.
வாகன நெரிசல் இல்லாத காலம்.
இலவசங்கள் ஏதும் தரப்படாத காலம்.
அர்த்தமுள்ள பாடல்கள் எழுதப்பட்ட காலம்.
வார்த்தைகள் விளங்கும் சங்கீதம் வாழ்ந்த காலம்.
கலப்பில்லாத அழகுத் தமிழ் பேசிய காலம்.
வேப்பமரங்களும்,குயில்களும் நிறைந்திருந்த காலம்.
எல்லோருக்கும் நேரமிருந்த காலம்.
ஊர்கூடி தேர் இழுத்த காலம்.

என் மகள் என் மடியில் தூங்கிய காலம் அது
கதைகள் பல சொன்ன காலம் அது
sky யைப்பார்த்து சொன்ன கதைகள் -
skype யை ப்பார்த்து மகளை த்தேடுகிறேன் ..
face யை books இல் புதைத்து படிப்பாள் என் மகள்
இன்று face book இல் தான் குடியிருக்கிறாள் ..
தந்தை சாப்பிடுவது tablets - மகள் வாழ்வதும் ஒரு
tablet இல் தான் ------


இனிமேல் யாருக்கும் கிடைக்கவே கிடைக்காத
ஒரு காலமிருந்தது
ஒரு காலமிருந்தது.

அது நாங்களெல்லோரும்
அன்பில் திளைத்திருந்த காலம்.

https://youtu.be/SdcAN3dobz4

g94127302
29th June 2015, 12:30 PM
கருவின் கரு - 133

பாகம் 2 - தந்தை

தந்தை - மகள் பந்தம்


மகள் என்றுமே ஒரு தெய்வத்திருமகள்

https://youtu.be/XS904XgEPz4

g94127302
29th June 2015, 12:32 PM
கருவின் கரு - 134

பாகம் 2 - தந்தை

தந்தை - மகள் பந்தம்

https://youtu.be/skzF7BQUgbU

g94127302
29th June 2015, 12:33 PM
கருவின் கரு - 135

பாகம் 2 - தந்தை

தந்தை - மகள் பந்தம்


https://youtu.be/BbH1z9AoT3E

adiram
29th June 2015, 02:09 PM
டியர் கோபால் சார்,

உலகத்திரைப்படங்கள் பற்றிய உங்கள் தொடரை தொடர்ந்து படித்து வருகிறேன். மிகவும் நன்றாக இருக்கின்றன. ஆனால் அத்தகைய திரைப்படங்கள் மீது எனக்கு அவ்வளவாக பரிச்சயம் இல்லாததால் அவைகளைப்பற்றிய பின்னூட்டங்கள் இட முடியவில்லை.

அவைதான் காரணமே தவிர, கண்டுகொள்ளக் கூடாது என்ற எண்ணம் எனக்கு அறவே இல்லை.

திரியில் இடம்பெறுவோரின் திரை ரசனையை உலகத்தரத்துக்கு உயர்த்த முயலும் உங்கள் எண்ணமும் முயற்சியும் நிச்சயம் பாராட்டுக்குரியவையே.

உங்கள் விமர்சனங்களைப் படிக்கும்போது அத்தகைய படங்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது. அந்த அளவுக்கு விரிவான விளக்கங்கள்.

குறிப்பாக 'ரோஷ்மான்'. அப்படம் பற்றி உங்களது அறிமுகமும் விமர்சனமும், தொடர்ந்து வந்த வாசு அவர்களின் மேலதிக விவரங்களும் அப்படத்தின் மீது ஒரு பிடிப்பை ஏற்படுத்தியுள்ளன. (பார்க்க வேண்டும்) இதை முன்பே சொல்லியிருக்க வேண்டும். சொல்லாதது என் தவறுதான்.

உங்கள் அயராத முயற்சிக்கு என் வாழ்த்துக்கள். என் மனதில் உங்கள் மீது எப்போதும் பெருமதிப்பு உண்டு.

adiram
29th June 2015, 05:38 PM
டியர் வாசு சார்,

எதிர்பாராத நேரங்களில் எதிர்பாராத பாடல்களை பதிவிட்டு அசத்துகிறீர்கள். 'ஹெல்லோ மை டார்லிங் இப்ப காதல் வந்தாச்சு' பாடல் பதிவு சூப்பர். என் காதில் எப்போதும் ஓ மை ஸ்வீட்டி விச்சு" என்றுதான் விழுகிறது.

எனக்கென்னவோ ரமாப்ரபாவின் சாமியார் பைத்தியத்தை தெளிய வைக்கவும், சச்சுவை பாலாஜியிடமிருந்து பிரிக்கவும் நாகேஷ் இந்த போலி காதல் நாடகத்தை நடத்துவார் என்று தோன்றுகிறது.

சாய்பாபாவின் குரல் மீது இவ்வளவு கிரேஸா? ஆச்சரியமாக இருக்கிறது. எனக்கு அவர் குரல் சற்று வித்தியாசமாக தோன்றுகிறதே தவிர மயக்கம் கொள்ள வைக்கும் அளவுக்கு அல்ல.

சாத்தனூர் அணை பூங்கா பாழடைந்த நிலையில் இருப்பதாக நீங்கள் குறிப்பிட்டது மனம் வருந்தச் செய்தது. நல்ல செழிப்பான நிலையில் இருந்தபோது நான் பார்த்தது. சமீபத்தில் போகவில்லை. எத்தனை திரைப்படங்களில் இடம்பெற்றது இந்த அணையும் பூங்காவும்.

நடிகர்திலகம் - கலைச்செல்வி நடிப்புப்போட்டி சுனாமியில் இப்பாடல் காணாமல் போனது உண்மை.

அடுத்தது என்ன அதிரடியோ.

rajeshkrv
29th June 2015, 06:53 PM
சில பாடல்கள் கேட்ட உடன் பிடித்து போய்விடும்
அப்படி ஒரு பாடல் தான் இது.

புதுமுகங்களை கொண்டு திரு ஜோசப் தலியத் சிட்டாடல் நிறுவனம் மூலம் தயாரித்த “இரவும் பகலும்”

posessiveness என்பது இயற்கை.. இங்கே நாயகி காலை நேரம் ஒருவன் வந்தான் என்று சொன்னவுடனே மிரட்டும் தொனியில் யாரவன் என்று இவர் கேட்க
மாலை நேரம் ஒருத்தி வந்தாள் என்று நாயகன் சொன்னதும் நாயகியின் முகம் கடுகடுவென மாற
அமைதியான மயக்கும் இசை டி.ஆர்.பாப்பாவினுடையது.
குரல்கள் ஏழிசை வேந்தரும் இசையரசியும்.. ஆஹா என்னமாய் பாடுகிறார்கள்

ஸ்மார்ட் ஜெய்சங்கர், அழகான வசந்தா(இவரை ராணுவ வீரன் மற்றும் நானே ராஜா நானே மந்திரியிலும் பிடிக்கும்)

பாடல் இதோ

https://www.youtube.com/watch?v=AbMBxQ4sJXE

raagadevan
30th June 2015, 05:20 AM
கருவின் கரு - 130:smile2::)

பாகம் 2 - தந்தை

தந்தை - மகள் பந்தம்

என்ன ஒரு பாடல் !! " கண்ணாடி வளையலும் காகிதப் பூக்களும் கண்ணே உன் மேனியில் நிழலாடும், இல்லாத உள்ளங்கள் உறவாகும் "


https://youtu.be/gOXox6BwOvw?list=PLpz0b5jwR3B85WMB21PFZ2yRZIo5XRZl-

Here is the Malayalam version of this song...

https://www.youtube.com/watch?v=2rC0tU_R8pg

vasudevan31355
30th June 2015, 06:51 AM
ஆதிராம் சார்.

நன்றி! கழுகுக் காது சார் உங்களுக்கு. நீங்கள் சொன்னதுதான் உண்மை. அது 'ஸ்வீட்டி விச்சு' தான். பாடலிலும் மாற்றிவிட்டேன். இதற்குதான் ஆதிராம் சார் வேண்டுமென்பது. மிக்க நன்றி சார். நாகேஷ் ரமாபிரபா சீன்களும் நீங்கள் சொன்னது போல்தான். அது வேண்டாமென்றுதான் பாடல் காட்சியோடு சுருக்கமாக முடித்து விட்டேன்.

நிஜமாகவே சாய்ப்பா குரல் என்றதால் அவ்வளவு பிடிக்கும். அதுவும் 'அந்தப் பக்கம் வாழ்ந்தவன்' ரோமியோ பாடல் கேட்க ஆரம்பித்தால் எந்தப் பக்கம் என்ன நடக்கிறது என்றே தெரியாது. ரஜினியின் 'வேலைக்காரன்' (ஏங்குதே மனம்..) படத்திலும் கூட பாடி இருப்பார். இவர் நடிகர் பாலையா அவர்களின் மகன் என்பதும் கூடுதல் தகவல். நல்ல கிடாரிஸ்ட். நல்ல ஆங்கிலப் புலமை உள்ளவர்.

இப்போது உங்களுக்குப் பதிவிடும் இந்த நேரத்தில் கூட சாய்பாவின் குரல் (ஹலோ மை டார்லிங்.... சின்னக் கண்ணாட்டி நீ) காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அடுத்த பாலா பாடல் வந்தால்தான் இது மாறும். பதிவுகளை வரி விடாமல் படிப்பதற்கும், மேலதிக தகவல்கள் தருவதற்கும், தவறுகள் இருந்தால் சரி செய்வதற்கும் என் நன்றிகள்.

vasudevan31355
30th June 2015, 06:54 AM
ராஜேஷ்ஜி!

'துணை' படத்தில் வசந்தாவை விட்டுவிட்டீர்களே.

g94127302
30th June 2015, 08:12 AM
வாசு - அருமையான அலசல் - அந்த பாடலை விட உங்கள் அலசல் அருமை . உங்களால் மட்டுமே இப்படி அலச முடியும் என்று திரும்ப திரும்ப எழுதி உங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை ... இந்த பாடல் என்னைப்பொருத்த வரையும் படத்தின் வேகத்தை இழுத்து நிருத்தக்கூடியதாக அமைந்த ஒன்று - இந்த பாடலுக்குப்பதில் இன்னொமொரு சகுந்தலை துஷ்யந்தன் பாடலை சேர்த்திருக்கலாம் - சச்சு அடிக்கும் லூட்டி தாங்க முடியாது . சச்சு பேசும் ஆங்கிலோ இந்தியன் ஸ்டைல் வேறு முகம் சுளிக்க வைக்கும் - உங்கள் அலசலின் அருமையினால் மட்டுமே மீண்டும் இந்த பாடலைக்கேட்டேன் .....

g94127302
30th June 2015, 08:15 AM
[QUOTE=raagadevan;1234767]Here is the Malayalam version of this song...

மிகவும் நன்றி சார் - உங்கள் கருத்துக்களையும் இங்கு பதிவிடலாமே - இந்த பாடல் மனதை கசக்கிப்பிழியும் பாடல்களில் ஒன்று - மொழி வேறுபாடுகள் இல்லாமல் ரசிக்ககூடிய பாடல் இது

g94127302
30th June 2015, 08:18 AM
சில பாடல்கள் கேட்ட உடன் பிடித்து போய்விடும்
அப்படி ஒரு பாடல் தான் இது.

ராஜேஷ் - உண்மை - அருமையான பாடல் - பல முறை கேட்டுருக்கிறேன் - ஜெய் நடித்த முதல் படம் என்று நினைக்கிறேன் - இந்த படத்தில் பாடல்கள் எல்லாமே தத்துவ பாடல்களாக இருக்கும் - சரியா ??

g94127302
30th June 2015, 08:19 AM
Good Morning

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/father-day-quotes-image_zpsnbzizd9r.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/father-day-quotes-image_zpsnbzizd9r.jpg.html)

g94127302
30th June 2015, 08:49 AM
கருவின் கரு - 135

பாகம் 2 - தந்தை

தந்தை - மகள் பந்தம்

உண்மை சம்பவம் 20

"அப்பா " பேப்பர் படிக்கும் போது யார் கூப்பிட்டாலும் அவர்களின் கதி அதோகதிதான் - ஆனால் என் மகளுக்கும் மட்டும் பல சலுகைகள் கொடுத்திருந்தேன் - 5 வருடங்கள் காத்திருந்து எங்கள் வீடு வந்த மகா லக்ஷ்மி அல்லவா அவள்

" மீண்டும் அப்பா !! - பேப்பர் யை பிடுங்கிக்கொண்டாள் - இன்று உங்களிடம் பேசியே ஆக வேண்டும் . உங்களிடம் எல்லோரும் பொறாமையும் , பெருமையும் படக்கூடிய குணங்கள் இருக்கின்றது - clinical சைகாலஜி யைப்பற்றி பொறுமையுடன் 1000 students க்கு புரியும் வண்ணம் உங்களால் மணிக்கணக்கில் எடுத்துச்சொல்ல முடியும் - ஆனால் உங்களுக்கு இருக்கும் இந்த முன் கோபத்தை விட்டு விட மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறீர்கள் - எவ்வளவு நல்ல நண்பர்கள் - உங்கள் பக்கம் வரவே பயப்படுகிறார்கள் - அம்மா அழாத நாளில்லை --- விஜிக்கு நீங்கள் என்றாலே சிம்ம சொப்பனம் ( விஜி என் கடைசி மகள் ). ..

" வரும் கோபத்தை கொஞ்சம் தடுத்துக்கொண்டேன் - லக்ஷ்மி சொல்வதில் நியாயம் இருக்கிறது - எனக்கு எல்லா வசதிகளும் ஆண்டவன் கொடுத்திருக்கிறான் - எதற்கும் யாரிடமும் கை எந்த வேண்டாம் - பின் இந்த குணம் என்னிடம் எப்படி வந்தது ?? "

" அம்மா குறையே இல்லாத மனிதன் யாரு ? " ( தில்லான மோகனாம்பாள் நேற்று பார்த்ததின் விளைவு இந்த வசனம் !) "

குறை இருக்கலாம் - ஆனால் அதையே ஒரு பெரிய சக்தியாக நினைக்கிறீர்கள் - அதுதான் தவறு ... மகளின் விவாதம் தொடர்கிறது -------

"நீங்கள் கோபம் வரும்போது கத்தி தீர்த்து விடுகிறீர்கள் மேலும் உங்கள் இயல்பு தன்மைக்கு மாறாக நடந்து கொள்கிறீர்கள் ."

இதோ உங்களிடம் இந்த சுத்தியலும் நிறைய ஆணிகளையும் கொடுக்கிறேன் .இனி மேல் கோபம் வரும் போது எல்லாம் வீட்டின் பின் சுவரில் ஆணி அடிக்குமாறு கூறினாள் ”.

முதல் நாள் 10 ஆணி,மறுநாள் 7,பின்பு 5,2 என படிப்படியாக ஆணி அடிக்க கோபம் குறைந்தது.

ஒரு நாள் ஒரே ஒரு ஆணி அடித்தேன் , மொத்தமாக 45 ஆணிகள் அடித்து உள்ளேன்.இனி கோபம் வராது என என் மகளிடம் கூறினேன் . இனிமேல் கோபம் வராத நாளில் ஒவ்வொரு ஆணியாகப் பிடுங்கி விடுங்கள் அப்பா என்றாள் என் மகள் . 45 நாளில் அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன என பெருமையுடன் மகளை அழைத்து காட்டினேன் .

“உடனே மகள் சொன்னாள் . ஆணிகளை பிடுங்கிவிட்டீர்கள் ,சுவற்றில் உள்ள ஒட்டைகளை என்ன செய்வீர்கள் ? உங்கள் கோபம் இது போல பலரை காயப்படுத்தி இருக்கும் அல்லவா? நான் வெட்கித் தலை குணிந்தேன் .

பிறரை காயப்படுத்துவதை நிறுத்தினால் வாழ்க்கை புதிய அத்தியாயம் பெறும்- என் மகள் எனக்கு சொல்லிக்கொடுத்தாள் - சின்னவள் வயதில் , அறிவில் , அனுபவத்தில் -- ஆனால் நான் அவளிடம் கற்றுக்கொண்டது மிகப்பெரிய விஷயம் ..


இப்பொழுதெல்லாம் கோபம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்க்கிறேன் ---------

https://youtu.be/qIkvUVjeExc

g94127302
30th June 2015, 08:52 AM
கருவின் கரு - 136

பாகம் 2 - தந்தை

தந்தை - மகள் பந்தம்

https://www.youtube.com/watch?v=xdhY-uRL0Gw

அழகே அழகே எதுவும் அழகே
அன்பின் விழியில் எல்லாம் அழகே
மழை மட்டுமா அழகு?
சுடும் வெயில் கூட ஒரு அழகு
மலர் மட்டுமா அழகு?
விழும் இலை கூட ஒரு அழகு
புன்னகை வீசிடும் பார்வைகள் அழகு
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு
நன்மைக்குச் சொல்லிடும் பொய்களும் அழகு
உண்மையில் அதுதான் மெய்யாய் அழகு

குயில் இசை அது பாடிட
ஸ்வர வரிசைகள் தேவையா
மயில் நடனங்கள் ஆடிட ஜதி ஒலிகளும் தேவையா
நதி நடந்தே சென்றிட வழித்துணை தான் தேவையா
கடல் அலை அது பேசிட மொழி இலக்கணம் தேவையா
இயற்கையோடு இணைந்தால் உலகம் முழுதும் அழகு
கவலையாவும் மறந்தால் இந்த வாழ்க்கை முழுதும் அழகு

அழகே அழகே எல்லாம் அழகே

இதயம் ஒரு ஊஞ்சலே இடம் வலம் அது ஆடிடும்
இன்பத்தில் அது தோய்ந்திடும் துன்பத்தில் அது மூழ்கிடும்
நடந்ததை நாம் நாளுமே நினைப்பது பொருள் இல்லயே
நடப்பதை நாம் எண்ணினால் அதை விட உயர்வில்லையே
பூக்கும் பூவில் வீசும் வாசம் என்ன அழகு
அதையும் தாண்டி வீசும் நம் நேசம் ரொம்ப அழகு

g94127302
30th June 2015, 08:58 AM
கருவின் கரு - 137

பாகம் 2 - தந்தை

தந்தை - மகள் பந்தம்

தகாத உறவுகள் - தாய் தந்தை என்னும் பந்தத்தை உடைத்து எறிகின்றன -- அந்த மகள் எங்கே போவாள் ??- செய்யாத தவறினால் மனம் செய்யும் ஒரு பாடல் - உருகவைக்கும் ....

https://youtu.be/WMM51gNwkxA

vasudevan31355
30th June 2015, 10:24 AM
'பிள்ளை மனம் கலங்குதென்றால்'

http://directorksomu.com/images/Films/v_valaigappu_1.jpg

நடிகர் திலகத்தின் அபூர்வ பாடல்.

ஆனந்தபுரி சமஸ்தானத்தின் மகாராஜா தன் மகன் விஜயேந்திரனை மகுடம் சூட்டப் பணிக்கிறார். மறுக்கிறான் மகன். காரணம் காதல். ஒரு சாதாரணப் பெண் வடிவின் மீது வலிமையான காதல். தந்தையுடன் தர்க்கம் புரிகிறான். காதலே பெரிது என்கிறான். கோ கோபமுறுகிறான். வடிவை வாலிப மகன் மறக்கத்தான் வேண்டும் என்று வலியுறுத்துகிறான். மகன் பணிந்தானில்லை. ஒன்று வடிவு இல்லை நான்... இருவரில் ஒருவரை இழந்துதான் தீர வேண்டும் என்று தனயனுக்கு தர்மசங்கடத்தை தருகிறான் தகப்பன்.

மகாராஜாவா?...

மாதர்குல மாணிக்கமா?...

காதலா?...

பாசமா?...

எதைத் தேர்ந்தெடுத்தான் விஜயன்?

ஆம்..காதல்... தீராக் காதல். அதைத்தான் தேர்ந்தெடுத்தான். அருமைக் காதலி வடிவுக்காக அரண்மனையைத் துறக்க சித்தமாகி, புத்தனை உதாரணம் காட்டி புறம் செல்லுகிறான். நண்பன் தடுக்கிறான். ஆனாலும் விஜயன் வீழ்ந்தானில்லை.

விருப்ப மகன் விஜயேந்திரன் பிரிவால் துயருற்று, பேச்சு இழந்து, படுத்த படுக்கையாகிறான் ஆனந்தபுரி அரசன். நிலைமை மோசமாகிறது. மரண வாயிலை நோக்கி துரிதமாக பயணிக்கிறான் மன்னன். செய்தி விஜயனுக்கு போய்ச் சேர்கிறது.

பிடிவாத மகன் பிதாவுக்குப் பிடித்த பிரிவு வியாதியால் பித்துப் பிடித்தவன் போல் ஆகிறான். கண்களை மறைத்த காதலை மீறி கண்ணான தந்தையைப் பார்க்க கண்ணீருடன் ஓடி வருகிறான். மன்னன் மயக்கத்தில் கிடக்கிறான். விஜயன் தந்தையின் கோலத்தைப் பார்த்து விசும்புகிறான். தான் செய்தது தவறென்று புலம்புகிறான்.

'வா விஜயா என்று வாய் நிறையக் கூப்பிடுங்கள்' என்று அழுகிறான்.

'காதலைத் துறப்பேன்...கடமையைச் செய்வேன்...காவலனே எழுந்திரு...உன்னை ஒரு கணமும் இனிப் பிரிவேனில்லை'...என்று கதறுகிறான்.

'நீ போனால் அதற்கு முன் என் உயிர் போகும்' என்று உயிர் போட்டிக்கு முந்த முயற்சிக்கிறான்.

தான் இல்லாத நேரத்தில் தன் வீணையைக் கொண்டு வரச் சொல்லி அதில் ஆறுதல் அடைந்த தந்தையின் கதை கேட்டு அந்த வீணை மூலமாகவே இசை மீட்டிப் பாடுகிறான். வாய்ப் பேச்சிழந்த தந்தையின் நிலை எண்ணி வாடிப் பாடுகிறான்.

http://i.ytimg.com/vi/wlv1SHOEKYQ/hqdefault.jpg

பிள்ளை மனம் கலங்குதென்றால் பெற்ற மனம் கரையாதோ
பிள்ளை மனம் கலங்குதென்றால் பெற்ற மனம் கரையாதோ
பெருங்கதை முடிந்து விட்டால் சிறுகதைகள் தேம்பாதோ
பெருங்கதை முடிந்து விட்டால் சிறுகதைகள் தேம்பாதோ
பிள்ளை மனம் கலங்குதென்றால் பெற்ற மனம் கரையாதோ

கரைகளும் உடைந்து விட்டால் நதியின் வெள்ளம் வழியாதோ
கரைகளும் உடைந்து விட்டால் நதியின் வெள்ளம் வழியாதோ
கண் மூடி நீ கிடந்தால் என் இதயம் உடையாதோ
கண் மூடி நீ கிடந்தால் என் இதயம் உடையாதோ
காற்றோட்டம் நின்று விட்டால் உயிர்களெல்லாம் மடியாதோ
காற்றோட்டம் நின்று விட்டால் உயிர்களெல்லாம் மடியாதோ
காவலனே நீ மறைந்தால் என் கதையும் முடியாதோ

பிள்ளை மனம் கலங்குதென்றால் பெற்ற மனம் கரையாதோ

கன்றழுத குரல் கேட்டு தாய்ப்ப்பசுவும் கதறியதோ
கன்றழுத குரல் கேட்டு தாய்ப்ப்பசுவும் கதறியதோ
நான் இன்றழுத குரல் கேட்டு நின் கண்ணீர் பெருகியதோ
இன்றழுத குரல் கேட்டு நின் கண்ணீர் பெருகியதோ

அன்னை முகம் பார்த்ததில்லை
அவள் மடியில் தவழ்ந்ததில்லை
அன்னை முகம் பார்த்ததில்லை
அவள் மடியில் தவழ்ந்ததில்லை
அய்யா உன் துணை தவிர வேறு துணை ஏதுமில்லை
அய்யா உன் துணை தவிர வேறு துணை ஏதுமில்லை
வேறு துணை ஏதுமில்லை

'திரை இசைத் திலகம்' கே.வி.மகாதேவன் அவர்களின் இசையில் 'வடிவுக்கு வளைகாப்பு' திரைப்படத்தில் இடம் பெற்ற அபூர்வப் பாடல். 'ஏனழுதாய்? ஏனழுதாய்?' பாடல் நம் நினைவுக்கு வராமல் இருக்காது

விஜயேந்திர இளவரசனாக நடிகர் திலகம். மன்னனாக வி.கே.ஆர். நடிகர் திலகம் வீணை எடுத்து மீட்டி மனமுருகப் பாடுவது மகோன்னதம்.

அருமையான குளோஸ்-அப் காட்சிகள். எந்த எந்த ஆங்கிள்களில் நடிகர் திலகத்தைக் கவர் செய்வது என்று காமிராமேனுக்குக் குழப்பம்.

'கன்றழுத குரல் கேட்டு தாய்ப் பசுவும் கதறியதோ'

என்று திலகம் பாடும்போது சுயநினைவிழந்த மன்னன் கண்களிலிருந்து அவனையறியாமல் கண்ணீர் வழியும் காட்சி காட்சிக்கே சிகரம். நம் கண்களிலும் அதே கோலம். அதற்குக் காரணம் நடிப்பின் ஜாலம்.

விதவிதமான காமிராக் கோணங்களில் தனக்கே உரிய முத்திரை வாயசப்புடன், கண்களில் கண்ணீருடன், சுத்தமான வீணை சுதி மீட்டலுடன், கனமான அமைதி நடிப்பைத் தந்து நம்மை அழவைக்கிறார் நடிகர் திலகம். வி.கே.ராமசாமியும் படுத்த படுக்கையில் படுபாந்தம். (படத்தயாரிப்பில் பாதி பங்குதாரர் இவர். மீதி ஏ.பி.என்.)

தந்தையின் பெருமையை பிள்ளை பேசும் பாடல். முன்பு 'மகளுக்காக' தந்தை பாடினான். இன்று தந்தைக்காக பிள்ளை பாடுகிறான்.

இரண்டுமே தந்தை பெருமை பேசுபவை.

ரவி சார் மீண்டும் மன்னிக்க. கடலூர் நண்பரும் சேர்த்துத்தான்.:)


https://youtu.be/wlv1SHOEKYQ

g94127302
30th June 2015, 10:41 AM
வாசு - மூன்றாவதாக புண்ணியம் செய்த பாடல் - நெய்வேலி பயணம் - எந்த வேலி போட்டாலும் பாடல்கள் பல உங்கள் ஊரைப்பார்த்து தான் பயணிக்கின்றன --- எனக்கு இப்பொழுது ஞாபகத்திற்கு வருவது இந்த படம் தான் !!!

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/Pied_Piper2_zpsdj835x7b.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/Pied_Piper2_zpsdj835x7b.jpg.html)

adiram
30th June 2015, 02:00 PM
டியர் வாசு சார்,

நிஜமாகவே பார்த்திராத படம், பார்த்திராத கேட்டிராத பாடல். நடிகர்திலகத்தின் படப்பட்டியலில் 'வடிவுக்கு வளைகாப்பு' என்ற படம் இடம்பெற்றுள்ளது என்பதைத் தவிர மேலதிக விவரங்கள் எதுவும் தெரியாதிருந்தது. இன்று உங்கள் புண்ணியத்தில் கொஞ்சம் அறிமுகம் கிடைத்தது.

1963-ல் வந்த படம் என்று நினைக்கிறேன். இதே ஆண்டில்தான் ஏ.பி.என். - வி.கே.ஆர். இணைந்து தயாரித்த குலமகள் ராதையும் வந்தது. (1963 கேவி.மகாதேவன் ஆண்டு என்று கோபால் சார் சொல்வார்). இதன்பின் வி.கே.ஆர். பிரிந்து விட்டார் என்று நினைக்கிறேன். வி.கே.ஆரை கழற்றி விட்ட காரணத்தாலேயே நவராத்திரியில் நடிக்க நடிகர்திலகம் மறுத்துவிட்டாராம். மீண்டும் வி.கே.ஆர். பழைய நண்பனுக்காக வற்புறுத்தி நடிகர்திலகத்தை நடிக்க வைத்தாராம். அதன்பின் வி.கே.ஆருக்கு ஏ.பி.என் தன படங்களில் நடிக்க வாய்ப்புக் கொடுக்கவேயில்லை என்று கேள்வி.

சமஸ்தானங்களின் கதை பழையதாகிப் போன காலகட்டத்தில் வந்ததால் வெற்றிபெறவில்லை என்று நினைக்கிறேன். அதில் தப்பிப் பிழைத்ததோடு மாபெரும் சரித்திரத்தையும் படைத்தது வசந்தமாளிகை மட்டுமே.

ஒவ்வொரு முறையும் அரிய, அபூர்வ பாடல்களோடு வரும் உங்களுக்கு பாராட்டுக்கள்.

rajraj
30th June 2015, 09:48 PM
From Vaazhkkai(1949)

aasai koLLum meesaai uLLa aambaLaiya paathiyaa........

http://www.youtube.com/watch?v=ZelSkcKSXec

From Jeevitham (1950)

Chakkanaina Boya......

http://www.youtube.com/watch?v=yORkx1zZjPs

The original tune from Patanga(1949)

Pyar ki jahan nirali sarkar....

http://www.youtube.com/watch?v=uqDhw8TKmuQ


The tune was not used in the Hindi version of Vaazhkkai, Bahar.

I will never forget this song. When my father was transferred to another location after I started 8th standard in 1950, he was welcomed with a song in this tune -'aasai koLLum meesai uLLa aNNaavai paatheengaLaa......' :)

esvee
1st July 2015, 05:12 AM
Thanks Ravichandran
Rare still

http://s22.postimg.org/vxjzualv5/ddd.jpg (http://postimage.org/)
http://s9.postimg.org/k8p5g9r4v/1452541_215340365314933_2054109558_n_1.jpg (http://postimage.org/)
இந்த நிழற்படத்தை பார்க்கும்போது உலகம் சுற்றும் வாலிபன் நினைவிற்கு வருகிறது . மெல்லிசை மன்னரின் இசையில் பாடிய பாடகர் திலகம் - இசை அரசி - இசை அரக்கி - இசை மயக்கி ஆகியோருடன் உலகம் சுற்றும் வாலிபன் நாயகன் -அபூர்வமான ஸ்டில் . .

esvee
1st July 2015, 05:39 AM
TMS- P.SUSEELA
https://youtu.be/Tk9JS0zTZ5A

TMS- JANAKI
https://youtu.be/SXcf1djh2DE

TMS- LR ESWARI
https://youtu.be/E5U55FsVikE

g94127302
1st July 2015, 08:09 AM
நன்றி வினோத் சார் - இந்த திரியில் உங்கள் மனதிற்குப்பிடித்த மற்ற நடிகர் , நடிகைகளின் பாடல்களையும் பதிவிடுவீர்கள் என்று எதிர்ப்பார்க்கிறோம் ...

g94127302
1st July 2015, 08:09 AM
Good Morning

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/pic2_zpsw8aqwez8.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/pic2_zpsw8aqwez8.jpg.html)

g94127302
1st July 2015, 08:12 AM
கருவின் கரு - 138

பாகம் 2 - தந்தை

தந்தை - மகள் பந்தம்

உண்மை சம்பவம் 21:

இன்று என் மகளின் டீச்சர் வீட்டுக்கு வந்திருந்தார் - என் மகள் 5வது வகுப்பு - Oakridge இன்டர்நேஷனல் ஸ்கூல் . மகள் அந்த டீச்சர் வந்திருந்த பொழுது வீட்டில் இல்லை . வரவேற்ற நான் டீச்சர்க்கு காபி , டிபன் வரவழைத்தேன் - மனைவியும் ஊரில் இல்லை . அவள் இருக்கும் போதே சமையல் கட்டுக்கு போனதில்லை - இப்பொழுது மட்டும் எப்படி போக முடியும் ? --

மெதுவாக டீச்சரிடம் பேச்சுக்கொடுத்தேன் - " டீச்சர் அக்ஷயா எப்படி படிக்கிறாள் ? கிளாஸ் இல் ஒழுங்காக நடந்துகொள்கிறாளா ?? "

" சார் - நீங்கள் ரொம்பவும் கொடுத்து வைத்தவர் - அக்ஷயா உங்களுக்கு மகளாக பிறக்க - இன்று அவளின் வகுப்பே ஒரு பெரிய பாடத்தை அவளிடம் இருந்து கற்றுக்கொண்டது - அதைச்சொல்லத்தான் நான் இங்கு வந்திருக்கிறேன் ---- "

"very interesting " சொல்லுங்கள் - கேட்க மனமும் , காதும் தயாராகின ..

" இன்று ஒரு சின்ன டெஸ்ட் வைத்தோம் - குடும்பத்தில் உள்ள பிடித்தமான எல்லாருடைய பெயர்களையும் போர்டுஇல் எழுதச்சொன்னேன் .. அக்ஷயா வந்து இப்படி எழுதினாள் .....

" அம்மா , அப்பா , தம்பி , ஈஷா ( friend ) , தாத்தா , பாட்டி - இப்படி பல "

நான் இதில் இரண்டு வேண்டாத பெயர்களை அழித்துவிட சொன்னேன் - அக்ஷயா அழ ஆரம்பித்து விட்டாள் - சும்மா இது ஒரு விளையாட்டுத்தான் என்று சொல்லி இரண்டு பேரை போர்டுஇல் இருந்து நீக்கச்சொன்னேன் - அவள் தாத்தா , பாட்டி பெயரை நீக்கினாள் - பிறகு மீண்டும் இரண்டு பெயர் -- ஈஷா , தம்பியின் பெயர் நீங்கியது - மீண்டும் ஒரு பெயரை நீக்கச்சொன்னேன் - அவளின் அழுகை அதிகமாகியது - அம்மா என்ற பெயரை நீக்கினாள் - உங்கள் பெயர் கடைசி வரையில் நீக்கப்படவில்லை ...

அவளிடம் என்ன காரணம் என்று கேட்டேன் - அவள் சொன்ன பதில் எங்கள் எல்லோருக்கும் ஒரு பாடமாய் அமைந்தது ---

" டீச்சர் என் தாத்தா பாட்டி ரொம்பவும் வயதானவர்கள் - சுவாமி என்னுடன் ரொம்ப நாளைக்கு சேர்ந்து வாழ விட மாட்டார் - அதனால் அவர்களின் பெயரை முதலில் நீக்கினேன் .. ஈஷா என்னுடன் தொடர்ந்து வளர்வாள் , வருவாள் என்று சொல்ல முடியாது , என் தம்பியும் அப்படித்தான் - வளர்ந்தபின் எங்கு செல்வான் என்று சொல்ல முடியாது - என் அம்மா என்னுடன் என்றும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் . முடியுமா என்று புரியவில்லை - ஆனால் எனக்கு என் அப்பா வேண்டும் - என்றும் அவர் என்னுடன் இருக்க வேண்டும் , மனதால் , நினைவால் , செயலால் -- அவர் இல்லாத உலகம் எனக்கும் தேவை இல்லை ------"

மொத்த வகுப்பே அவளுக்கு கைத்தட்டி ஆரவாரம் செய்தது சார் !

" அக்ஷயா ! யாருக்கு புரிகிறதோ இல்லையோ நம் பந்தம் - இந்த டீச்சருக்கு புரிந்து விட்டது --- என்னை நீ இன்று புதிதாக பெற்று எடுத்தாய் மகளே !!" - எவ்வளவு நேரம் தனிமையில் அழுதேன் என்று எனக்கே தெரியவில்லை . -----

https://youtu.be/PZsBzGTglbA?list=RDp3X7wZEXpfs

g94127302
1st July 2015, 08:14 AM
கருவின் கரு - 139

பாகம் 2 - தந்தை

தந்தை - மகள் பந்தம்

வா வா என் தேவதையே !!

வான் மிதக்கும்… கண்களுக்கு….
மயில் இறகால் மையிடவா…
மார் உதைக்கும்… கால்களுக்கு…
மணி கொலுசு…. நான் இடவா…

https://youtu.be/p3X7wZEXpfs

g94127302
1st July 2015, 08:16 AM
கருவின் கரு - 140:):smile2:

பாகம் 2 - தந்தை

தந்தை - மகள் பந்தம்

கருவின் கரு - 140

பாகம் 2 - தந்தை

தந்தை - மகள் பந்தம்

அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளை கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

அம்மு நீ
என் பொம்மு நீ
மம்மு நீ
என் மின்மினி

உனக்கு தெரிந்த மொழியிலே எனக்கு பேசத் தெரியலே
எனக்கு தெரிந்த பாஷை பேச உனக்கு தெரியவில்லே..
இருந்தும் நமக்குள் இது என்ன புது பேச்சு
இதயம் பேச எதற்கிந்த ஆராய்ச்சி

அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளை கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

ரோஜாப்பூ கை ரெண்டும் காற்றோடு கதை பேசும்
உன் பின்னழகில் பௌர்ணமிகள் தகதிமிதா ஜதி பேசும்
எந்த நேரம் ஓயாமல் அழுகை
ஏன் இந்த முட்டிக்கால் தொழுகை
எப்போதும் இவன் மீது பால் வாசனை
எந்த மொழி சிந்திக்கும் இவன் யோசனை
எந்த நாட்டை பிடித்து விட்டான்
இப்படியோர் இரத்தினக்கால் தோரணை.. தோரணண..

அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளை கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

நீ திண்ற மண் சேர்த்தால் வீடொன்று கட்டிடலாம்
நீ சினுங்கும் மொழி கேட்டால் சங்கீதம் கற்றிடலாம்
தண்டவாலம் இல்லாத இரயிலை
தவழ்ந்த படி நீ ஓட்டிப் போவாய்
வம்பு தும்பு செய்கின்ற பொல்லாதவன்
கடவுள் போல் கவலைகள் இல்லாதவன்
ஒளிந்து ஒளிந்து போக்கு காட்டி
ஓடுகின்ற கண்ணனே.. புன்னகை மன்னனே..

அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளை கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

அம்மு நீ
என் பொம்மு நீ
மம்மு நீ
என் மின்மினி
உனக்கு தெரிந்த மொழியிலே எனக்கு பேசத் தெரியலே
எனக்கு தெரிந்த பாஷை பேச உனக்கு தெரியவில்லே..
இருந்தும் நமக்குள் இது என்ன புது பேச்சு
இதயம் பேச எதற்கிந்த ஆராய்ச்சி

அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளை கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன் __

https://youtu.be/6_OXIDXpgBs?list=RDu03_Dq0rGNg

g94127302
1st July 2015, 08:26 AM
கருவின் கரு - 141

பாகம் 2 - தந்தை

தந்தை - மகள் பந்தம்பாரதியின் வரிகளிலே --- கண்ணன் என் தந்தை !!


பூமிக் கெனை யனுப்பினாள்; -- அந்தப்
புதமண்ட லத்திலென் தம்பிகளுண்டு;
நேமித்த நெறிப்படியே -- இந்த
நெடுவெளி யெங்கணும் நித்தம் உருண்டே
போமித் தரைகளிலெல்லாம் -- மனம்
போலவிருந் தாளுபவர் எங்களினத்தார்;
சாமி இவற்றினுக்கெல்லாம் -- எங்கள்
தந்தையவன் சரிதைகள் சிறிதுரைப்பேன்.


செல்வத்திற்கோர் குறையில்லை; -- எந்தை
சேமித்து வைத்தபொன்னுக் களவொன்றில்லை;
கல்வியில் மிகச்சிறந்தோன் -- அவன்
கவிதையின் இனிமையொர் கணக்கிலில்லை;
பல்வகை மாண்பினிடையே -- கொஞ்சம்
பயித்திய மடிக்கடி தோன்றுவதுண்டு;
நல்வழி செல்லுபவரை -- மனம்
நையும்வரை சோதனைசெய் நடத்தையுண்டு.


நாவு துணிகுவதில்லை -- உண்மை
நாமத்தை வெளிப்பட உரைப்பதற்கே;
யாவருந் தெரிந்திடவே -- எங்கள்
ஈசனென்றும் கண்ணனென்றும் சொல்லுவதுண்டு;
மூவகைப் பெயர்புனைந்தே -- அவன்
முகமறி யாதவர் சண்டைகள் செய்வார்;
தேவர் குலத்தவன் என்றே -- அவன்
செய்தி தெரியாதவர் சிலருரைப்பார்.


பிறந்தது மறக்குலத்தில்; -- அவன்
பேதமற வளர்ந்ததும் இடைக்குலத்தில்;
சிறந்தது பார்ப்பனருள்ளே; -- சில
செட்டிமக்க ளோடுமிகப் பழக்கமுண்டு;
நிறந்தனிற் கருமைகொண்டான்; -- அவன
நேயமுறக் களிப்பது பொன்னிறப்பெண்கள்;
துறந்த நடைகளுடையான்; -- உங்கள்
சூனியப்பொய்ச் சாத்திரங்கள் கண்டு நகைப்பான்.


ஏழைகளைத் தோழமைகொள்வான்; -- செல்வம்
ஏறியார் தமைக்கண்டு சீறிவிழுவான்;
தாழவருந் துன்பமதிலும் -- நெஞ்சத்
தளர்ச்சி கொள்ளாதவர்க்குச் செல்வமளிப்பான்;
நாழிகைக்கொர் புத்தியுடையான்; -- ஒரு
நாளிருந்தபடி மற்றொர் நாளினிலில்லை.
பாழிடத்தை நாடி யிருப்பான்; -- பல
பாட்டினிலும் கதையிலும் நேரமழிப்பான்.


இன்பத்தை இனிதெனவும் -- துன்பம்
இனிதில்லை யென்றுமவன் எண்ணுவதில்லை;
அன்பு மிகவுமுடையான்; -- தெளிந்
தறிவினில் உயிர்க்குலம் ஏற்றமுறவே
வன்புகள் பலபுரிவான்; -- ஒரு
மந்திரியுண் டெந்தைக்கு விதியென்பவன்;
முன்பு விதித்ததனையே -- பின்பு
முறைப்படி அறிந்துண்ண மூட்டிவிடுவான்.


வேதங்கள் கோத்துவைத்தான்; -- அந்த
வேதங்கள் மனிதர்தம் மொழியிலில்லை;
வேதங்க ளென்றுபுவியோர் -- சொல்லும்
வெறுங்கதைத் திரளிலவ் வேதமில்லை;
வேதங்க ளென்றவற்றுள்ளே -- அவன்
வேதத்திற் சிலசில கலந்ததுண்டு;
வேதங்க ளன்றியொன்றில்லை -- இந்த
மேதினி மாந்தர்சொலும் வார்த்தைகளெல்லாம்


நாலு குலங்கள் அமைத்தான்; -- அதை
நாசமுறப் புரிந்தனர் மூடமனிதர்;
சீலம் அறிவுகருமம் -- இவை
சிறந்தவர் குலத்தினில் சிறந்தவராம்;
மேலவர் கீழவரென்றே -- வெறும்
வேடத்திற் பிறப்பினில் விதிப்பனவாம்
போலிச் சுவடியையெல்லாம் -- இன்று
பொசுக்கிவிட் டாலெவர்க்கும் நன்மையுண்டென்பான்


வயது முதிர்ந்துவிடினும் -- எந்தை
வாலிபக் களையென்றும் மாறுவதில்லை;
துயரில்லை, மூப்புமில்லை, -- என்றும்
சோர்வில்லை, நோயொன்று தொடுவதில்லை;
பயமில்லை, பரிவொன்றில்லை, -- எவர்
பக்கமுநின் றெதிர்ப்பக்கம் வாட்டுவதில்லை;
நயமிகத் தெரிந்தவன்காண்; -- தனி
நடுநின்று விதிச்செயல் கண்டுமகிழ்வான்.


துன்பத்தில் நொந்துவருவோர் -- தன்னைத்
தூவென் றிகழ்ந்துசொல்லி வன்புகனிவான்;
அன்பினைக் கைக்கொள் என்பான்; -- துன்பம்
அத்தனையும் அப்பொழுது தீர்ந்திடும் என்பான்;


என்புடை பட்டபொழுதும் -- நெஞ்சில்
ஏக்கமுறப் பொறுப்பவர் தம்மை உகப்பான்;
இன்பத்தை எண்ணுபவர்க்கே -- என்றும்
இன்பமிகத் தருவதில் இன்பமுடையான்.

https://youtu.be/kHbuo95l-JU?list=RDu03_Dq0rGNg

raagadevan
1st July 2015, 09:38 AM
மிகவும் நன்றி சார் - உங்கள் கருத்துக்களையும் இங்கு பதிவிடலாமே - இந்த பாடல் மனதை கசக்கிப்பிழியும் பாடல்களில் ஒன்று - மொழி வேறுபாடுகள் இல்லாமல் ரசிக்ககூடிய பாடல் இது

Here is a link to a review, in the Hindu, of the (original) classic movie THULABHARAM (1968)...

http://www.thehindu.com/features/metroplus/thulabharam-1968/article822028.ece

The movie was remade in Tamil, Telugu and Hindi, all of them featuring Sharada in the main role. At least some
of the songs from these versions are available on youtube.

Here is another gem from the movie...

https://www.youtube.com/watch?v=hpbcEetmQRw

காற்றினிலே பெரும் காற்றினிலே
ஏற்றிவைத்த தீபத்திலும் இருள் இருக்கும்
காலம் எனும் கடலிலே சொர்கமும் நரகமும்
அக்கரையோ இக்கரையோ

ஆண்டவனும் கோவிலில் தூங்கிவிடும் போது
யாரிடத்தில் கேள்வி கேட்பது
ஏழைகளின் ஆசையும் கோவில் மணி ஓசையும்
வேறுபட்டால் என்ன செய்வது
தர்மமே மாறுபட்டால் என்ன செய்வது

ஆடுவது நாடகம் ஆளுக்கொரு பாத்திரம்
இறைவனுக்கு வேஷமென்னவோ
ஆடவைத்து பாடுவான் மூடுதிரை போடுவான்
மேடை அவன் மேடையல்லவோ
வாழ்க்கையின் பாதை அவன் பாதையல்லவோ...

...and; the Malayalam version:

https://www.youtube.com/watch?v=Od27_L3WNKM

vasudevan31355
1st July 2015, 11:58 AM
ஏன்? (1970)

http://i.ytimg.com/vi/tlqQoHrJRWQ/maxresdefault.jpg

அடுத்த பாலா தொடருக்கு முன்னால்....

'ஏன்?' என்று வினவாமல் இதைப் படியுங்கள். அப்புறம் ஏன்? என்று இப்பதிவின் அவசியம் புரியும்.

'ஈ.வி.ஆர்' பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த படம்தான் 'ஏன்?' அதுதான் இவ்வளவு பீடிகை. கொஞ்சம் அபூர்வமும் கூட.

1970-ல் பொங்கலுக்கு வெளி வந்த இந்தப் படத்துடன் நடிகர் திலகத்தின் 'எங்க மாமா', திரு.எம்.ஜி.ஆர் அவர்களின் 'மாட்டுகார வேலன்' படங்களும் ரிலீஸ்.

குமுதம் இதழில் கிருஷ்ணா அவர்கள் எழுதிய 'மதுக்கிண்ணம்' என்ற கதையைத் தழுவி எடுக்கப்பட்ட படம் இது.

சரி! என்ன கதை? கொஞ்சம் சுருக்கமாகவே (!):) பார்த்து விடலாம்.

ஏ.வி.எம்.ராஜன், லஷ்மி, 'மாஸ்டர்' ஆதிநாராயணன் மூவரும் வீரராகவனின் பிள்ளைகள். வீரராகவன் ஒரு எஸ்டேட்டில் பணிபுரிகிறார். பிள்ளை ராஜனோ மதுரையில் தன் அத்தை வீட்டில் தங்கி பட்டப் படிப்பு படிக்கிறார். அத்தை சி.கே சரஸ்வதி ஒரு பணப் பேய். வீரராகவன் ராஜனுக்கு அனுப்பும் பணத்தையெல்லாம் அவர் எடுத்துக் கொள்கிறார். அவருடைய நல்ல மகன் நாகேஷ். அப்புறம் ராஜனின் படிப்பு 'ஏன்? என்னாயிற்று?' என்று கேட்பீர்கள். வருகிறேன்.

லஷ்மி கவிதை எழுதும் ரவிச்சந்திரனைக் காதலிக்கிறார். ரவி, லஷ்மி இருவர் வீட்டிலும் இவர்கள் திருமணத்திற்கு சம்மதம்.

தங்கையின் கல்யாணத்திற்கு ராஜன் புறப்பட்டு வருகிறார். சோதனை ஆரம்பமாகிறது. கல்யாணத்தன்று வீரராகவன் எதிர்பாராமல் வழுக்கி விழுந்து பிணமாகிறார். மண வீடு பிண வீடாகிறது. ரவியின் அம்மா அபசகுனமாக அதைக் கருதி கல்யாணத்தை நிறுத்துகிறார் மகன் ரவியின் வேண்டுகோளையும் மீறி.

அனாதைகளான மூவரும் அத்தை சரஸ்வதி வீட்டுக்கே வருகிறார்கள். வீரராகவன் இறந்ததும் அவருக்குண்டான எஸ்டேட் இறப்புப் பணத்தையும் சரஸ்வதி பிடுங்கிக் கொள்கிறார். லஷ்மியின் தம்பி சரஸ்வதியினால் துன்புறுத்தப்பட்டு காய்ச்சல் வந்து, போலியோ நோயினால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் போகிறான்.

பணத்துக்கு வழியில்லாததால் ராஜன் சூதாட்டம் ஆடி சம்பாதிக்கிறார். லஷ்மிக்கு இது தெரியவர அவரைக் கண்டிக்கிறார். அத்தை தன் படிப்புக்கு வந்த பணத்தையெல்லாம் சுருட்டிக் கொண்டதால் தன்னால் படிப்பைத் தொடர இயலவில்லை என்று ராஜன் கூறுகிறார்.

பட்டணத்தில் தம்பிக்கு வைத்தியம் பார்க்க லஷ்மியும், ராஜனும் மதுரையை விட்டு புறப்படுகிறார்கள்.

https://i.ytimg.com/vi/ye0lcLc5nP4/hqdefault.jpg

பட்டணத்தில் ராஜனின் நண்பன் எம்.ஆர்.ஆர்.வாசு இவர்களுக்கு வீடு வாடகைக்கு எடுத்துக் கொடுத்து உதவுகிறார். ஆனால் இவர் ஒரு கேடி. லஷ்மியின் மீது காதல் கொண்டு அவருக்கு ஈவ் டீசிங் டார்ச்சர் கொடுக்கிறார்.

அந்தக் காலனியில் இருக்கும் 'வெண்ணிற ஆடை' நிர்மலா ராஜனைக் காதலிக்கிறார்.

சி.கே சரஸ்வதி இறந்து போன தன் கணவரின் உறவினர் வி.எஸ்.ராகவன் வெளிநாட்டிலிருந்து சென்னை வந்திருப்பதாகவும், அவர் பெரிய பணக்காரர் என்றும், அவருடைய ஒரே மகளை தன் மகன் நாகேஷ் திருமணம் செய்து கொண்டால் சொத்துக்கள் முழுதும் தனக்கே சேரும் என்றும் முடிவு செய்து நாகேஷை பட்டணத்துக்கு வற்புறுத்தி அழைத்துச் செல்கிறார்.

ராஜன் திருடனாகிறார். ஒருசமயம் தம்பியின் வைத்தியத்திற்காக பணமில்லாமல் சிரமப்பட்டு லஷ்மி தன் வீட்டில் உள்ள வெள்ளித்தட்டை அடகு வைத்து பணம் கொண்டு வரும்போது அது ராஜனாலேயே திருடப் படுகிறது. இது தெரிந்து கொண்ட லஷ்மி கடுமையாக அண்ணனைச் சாடுகிறார். ராஜன் மனவருத்தத்துடன் வீட்டைவிட்டு வெளியேறுகிறார்.

இதற்கிடையில் ரவிச்சந்திரன் லஷ்மியின் நினைவால் வேறு திருமணம் செய்யாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறார்.

நிர்மலாவை ராஜன் அடிக்கடி கள்ளத்தனமாக சந்திக்கிறார். இது தெரிந்த லஷ்மி நிர்மலாவிடம் ராஜனை மறந்து விடச் சொல்கிறார். நிர்மலா மறுக்கிறார். காலனிக்கே இவர்களது கள்ளக் காதல் தெரிகிறது.

வீட்டுக்கார அம்மா சுந்தரிபாய் லஷ்மி நலன் கருதி அவரை பணக்காரப் பெரியவர் ராகவனை திருமணம் செய்து கொள்ளச் சொல்கிறார். அப்படியே 'தம்பியின் வைத்திய செலவுகளையும் பார்த்துக் கொள்ளலாம்' என்கிறார். குடும்ப கஷ்டத்தின் சூழ்நிலையின் காரணமாக லஷ்மி தன்னைத் தியாகம் செய்ய முடிவெடுத்து ராகவனுக்குக் கழுத்தை நீட்டத் தயாராகிறார்.

ராஜன் போலிசாரால் பிடிபடுகிறார். அவரை ஜாமீனில் எடுக்க எம்.ஆர்.ஆர்.வாசு வக்கீல் (!) ரவிச்சந்திரன் உதவியை நாடுகிறார். அப்போது ரவி லஷ்மியை சந்திக்க நேரிடுகிறது. லஷ்மிக்காக இதுவரை திருமணமே செய்து கொள்ளாமல் இருப்பதை ரவி லஷ்மியிடம் கூறுகிறார். தான் தாயின் சம்மதத்தை பெற்று விட்டதாகவும், லஷ்மியை திருமணம் செய்து கொள்ளத் தயாராய் இருப்பதையும் ரவி கூற, லஷ்மி தான் ராகவனுக்கு வாழ்க்கைப் படப் போவதை கூறி விட்டு தன்னை மறந்து விடுமாறும் கூறிச் சென்று விடுகிறார்.

ஜெயிலில் இருந்து ஜாமீனில் வெளிவரும் ராஜன் லஷ்மி ராகவனைத் திருமணம் செய்து கொள்ள இருக்கும் விஷயம் தெரிந்து அவரைப் போய் தடுக்கப் பார்க்க, லஷ்மி 'குடும்பம் தழைக்க நான் எடுத்த இம்முடிவை மாற்ற இயலாது' என்று கூறி விடுகிறார்.

மனம் நொந்த அண்ணன் ராஜன் ஒருபுறம். காதலி வயதானவனுக்கு மனைவியாகப் போகிறாளே என்ற கவலையில் காதலன் ரவி ஒரு புறம்.

வைத்திய சாலையில் இருக்கும் தம்பிக்கு நடப்பதெல்லாம் தெரியவர, லஷ்மி ராகவனுக்கு மனைவியாகப் போகும் நேரம் தம்பியைக் காணவில்லை என்ற செய்தி வருகிறது. தம்பி அக்காளின் திருமணத்தைத் தடுக்க வைத்திய சாலையில் இருந்து தப்பித்து வருகிறான். லஷ்மி பதறிப் போய் ராகவனிடம் 'தம்பியைப் பார்த்து விட்டு வருகிறேன்' என்று சொல்ல, ராகவன் மறுக்க, அப்போது ராகவன் மார்பை ஒரு துப்பாக்கிக் குண்டு துளைக்கிறது. ராகவன் மரணம் அடைகிறார்.

கொலை செய்தது யார்? ஏன்?

காலனிக்காரர்கள் தன்னை அடித்து விட்டார்கள் என்று அவர்கள் மீது ஆத்திரம் கொண்டு வாசு காலனிக்கே வெடிகுண்டு வைத்துவிட, தம்பியும், அவன் நாயும் அதைக் கண்டுபிடித்து என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்க, அந்த நேரத்தில் அங்கு வரும் ராஜன் அதைத் தூக்கித் தூர எறிய முற்பட, வெடிகுண்டு அப்போது வெடித்து குற்றுயிரும், குலையுயிருமாக கிடக்கிறார் ராஜன்.

https://i.ytimg.com/vi/vJvABrx-4IY/hqdefault.jpg

போலீஸ் ராகவனைக் கொலை செய்தது யார்? என்று விசாரணை செய்கிறது. ரவி 'லஷ்மிக்கு இப்படி ஒரு வயதான கணவனா?' என்று மனம் நொந்து தான்தான் ராகவனை சுட்டதாக சொல்கிறார். பழியைத் தானே ஏற்கிறார்.

ஆனால் வெடிகுண்டில் காயமாகி கிடக்கும் ராஜன் உண்மை முடிச்சுகளை அவழ்த்து, போலீஸிடம் வாக்குமூலம் தருகிறார். தங்கைக்கு இப்படிப்பட்ட வாழ்வு அமைய வேண்டாம் என்று ராகவனைத் தான் சுட்டுக் கொன்ற உண்மையையும் கூறுகிறார். ரவி, லஷ்மி கைகளை இணைத்து வைத்து தன் உயிரை விடுகிறார்.

'வெண்ணிற ஆடை' நிர்மலா ராஜனை இழந்து வெண்ணிற ஆடை உடுத்தித்தானே ஆக வேண்டும்?

அப்பாடா! போதுமடா சாமி! தலை சுற்றுகிறது. :(

இந்தக் கதையை நீங்கள் முழுவதும் படித்தால் உங்களைப் போல பொறுமைசாலி பூமியிலே யாருமே இல்லை என்று அர்த்தம்.:)

மொத்தமாக சேர்ந்து எல்லோரும் நம் உயிரை எடுத்து விட்டார்கள்.:banghead:

ஒரே ஒரு நபரைத் தவிர.

அவர்தான் டி.ஆர்.பாப்பா.

ஏன்? நிறுத்திவிட்டாய்? என்று கேட்கிறீர்கள்.

ஏன்? என்று அடுத்த பதிவில் சொல்கிறேன்.:)

g94127302
1st July 2015, 12:21 PM
வாசு - ஏற்க்கனவே எடுக்கப்பட்ட உயிர்கள் என்று நினைத்துத்தானே - தேடிப்பிடித்து இந்த படத்தை அலசி உள்ளீர்கள் ??? அது ஏன் சார் எங்கள் மீது உங்களுக்கு இவ்வளவு கோபம் ?

vasudevan31355
1st July 2015, 12:36 PM
வாசு - ஏற்க்கனவே எடுக்கப்பட்ட உயிர்கள் என்று நினைத்துத்தானே - தேடிப்பிடித்து இந்த படத்தை அலசி உள்ளீர்கள் ??? அது ஏன் சார் எங்கள் மீது உங்களுக்கு இவ்வளவு கோபம் ?

//'ஏன்?' என்று வினவாமல் இதைப் படியுங்கள். அப்புறம் ஏன்? என்று இப்பதிவின் அவசியம் புரியும்.//

முன்னாலேயே போட்டு 'ஸ்டே' வாங்கி விட்டேன்.:) நல்லது கெட்டது ரெண்டுமே வேண்டும்.:)

'தெரியாததைத் தெரிய வைக்கும் புது இடம்
இது புது இடம்

அது தெரிந்து விட்டால் பொழுதெல்லாம்
நீ(ங்கள்) மதுர கானத்திடம்':)

rajeshkrv
1st July 2015, 07:32 PM
எங்கெங்கோ சில மணிகள் பாலா வாணி மற்றும் இசையரசியின் குரலில் நமக்கு தெரிந்ததே
இதோ மூவர் குரல்களில் இன்னுமொரு அழகான பாடல்

https://www.youtube.com/watch?v=e80T9soVDyY

vasudevan31355
1st July 2015, 07:35 PM
வணக்கம்ஜி! நலமா?

RAGHAVENDRA
1st July 2015, 07:44 PM
வாசு சார்
ஏன் என்று நான் கேட்க மாட்டேன்.
ஏன் என்றால், ஏன் படத்தைப் பற்றி நான் முன்னமே அறிந்திருந்தது மட்டுமல்ல, படத்தைப் பார்த்திருந்ததும் தான்.
ஏன் என்றால் கண்ணாடி பாத்திரத்தைக் கல்மீது வைப்பது போல் மெல்லப் பேசினால் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள்.
ஏன் என்றால் உரக்க இப்படத்தைப் பற்றிப் பேசினால் எல்லோருக்கும் போய் சேருமல்லவா..

சரி.. சரி. யாராவது கல்லைத் தூக்கி ஓடி வரப் போகிறார்கள். ஐயா வுடு ஜூட்..

ஏன் பாட்டுப் புத்தகப் பக்கங்கள் உங்களுக்கு பரிசாக..

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/OLDSONGBOOKPAGES/Yaenp01fw_zpssneregwt.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/OLDSONGBOOKPAGES/Yaenp02fw_zpsevjn3yxr.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/OLDSONGBOOKPAGES/Yaenp03fw_zpsmftfdbos.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/OLDSONGBOOKPAGES/Yaenp04fw_zpswarljyqa.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/OLDSONGBOOKPAGES/Yaenp05fw_zpsjy1f8t8k.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/OLDSONGBOOKPAGES/Yaenp06fw_zpsc9ui3akq.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/OLDSONGBOOKPAGES/Yaenp07fw_zpsxwqjegyb.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/OLDSONGBOOKPAGES/Yaenp08fw_zpss2b1jpva.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/OLDSONGBOOKPAGES/Yaenp09fw_zpsvo9ydhg6.jpg

rajeshkrv
1st July 2015, 07:49 PM
வணக்கம்ஜி! நலமா?

நலம் நலம்தானே நீ இருந்தால் சுகம் சுகம் தானே உன் நினைவிருந்தால்

நலமே ஜி.. ஏன் ஏன் ஏன்னு கொன்னுட்டீங்க

RAGHAVENDRA
1st July 2015, 07:54 PM
நம் நெஞ்சையெல்லாம் கொள்ளை கொண்ட அற்புதப் பாடல்...

விவரமாக விஸ்தாரமாக எழுதப் போவதில்லை.. வாசு சாரின் எழுத்தில் இதைப் பற்றிப் படியுங்கள்.

https://www.youtube.com/watch?v=SD1WGCUcVgU

உள்ளத்தைக் கொள்ளை கொண்ட மற்றோர் பாடல் ஏன் படத்திலிருந்து...

கண்ணன் எனக்கொரு பிள்ளை.. சூலமங்கலம் ராஜலகஷ்மியின் குரலில்...

https://www.youtube.com/watch?v=XM9aIhxNCDU

RAGHAVENDRA
1st July 2015, 08:02 PM
வாசு சார்
வடிவுக்கு வளைகாப்பு பாடலைத் தந்தை மகற்காற்றும் பாசத்தொண்டாய் அருமையாக சித்தரித்து தங்கள் எழுத்தின் சிறப்பை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளீர்கள். தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.

g94127302
2nd July 2015, 05:56 AM
Good Morning

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/pic1_zpstbcns3wb.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/pic1_zpstbcns3wb.jpg.html)

g94127302
2nd July 2015, 06:03 AM
கருவின் கரு - 142

பாகம் 2 - தந்தை

தந்தை - மகள் பந்தம்

வாசு - புலியைப்பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டதை போல - தோகையை விரித்தாடும் மயிலைக்கண்டு வான் கோழி தானும் ஆடுவதைப்போல - இந்த பாடலை உங்கள் பாணியில் அலசலாம் என்ற ஒரு நப்பாசை - இந்த பாடல் என்னிடம் இருந்து தப்பித்து நெய்வேலி செல்லப்பார்த்தது - ஒரே அமுக்கு - தப்பிக்க முடியவில்லை ( வீட்டுக்கு வீடு - நாகேஷ் பாணியில் --- ம்ம் மாட்டிக்கிச்சு --------)

ஒருவன் பாசத்தைப் பொழிய தந்தையாகத்தான் இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை - அந்த , பரிவு அந்த பாசம் இருந்தால் போதும் - அவனும் தந்தையின் அந்தஸ்த்தை பெற்றுவிடுவான் . இதோ பாபுவைப்பாருங்கள் - யாரோ பெற்றமகள் - ஒரு வேலை அன்புடன் தனக்கு அன்னம் இட்டார்கள் என்ற ஒரே காரணத்தினால் தன்னை அந்த குடும்பத்திற்கு செருப்பாக தெய்த்து போடுகிறான் - அந்த பெண்ணை தன் மகளாக நினைத்து வளர்க்கிறான் -- தெய்வங்கள் எங்கெல்லாம் வசிக்கும் என்பதை பட்டியல் போட்டு அந்த பெண்ணிற்கு அன்பை , பாசத்தை , நெறிமுறைகளை இந்த பாடல் மூலம் போதிக்கிறான் --- இனி பாடல் ரசிப்போம்

வலது கையை காட்டி " இதோ எந்தன் தெய்வம் முன்னாலே " என்றபடி பாடல் ஆரம்பிக்கிறது - அந்த வரிகளில் இருந்து தலைவரின் கொடி விண்ணுயரத்திர்க்கு பறக்க ஆரம்பிக்கிறது - முகத்தில் ஒரு பூரிப்பு - கண்களில் கருணை வெள்ளம் -- ( ந.தியின் TMS க்கு எப்படி பொருந்துகிறது ----) ஸ்ரீதேவியை தூக்கி தன் ரிக்ஷ்ஷாவில் உட்க்கார வைப்பார் - கொடுத்து வைத்த ஸ்ரீதேவி !!

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்
அவன் கருணை உள்ள நெஞ்சினிலே
கோயில் கொள்கிறான்

ஒரே பார்வையில் தான் சொல்ல வந்ததனைத்தையும் சொல்லிவிடுவார் ...

கமலும் ஸ்ரீதேவியும் மிகுந்த பாக்கியசாலிகள் - இருவரும் தலைவரின் கைகளிலே தவழ்ந்து விளையாடியவர்கள் . பம்பரமாக சுத்தும்போது நமக்கே வலிக்க ஆரம்பிக்கும் . சோர்வை அலட்சியமாக தள்ளி விட்டு பாடும் வரிகள் கீழே :

அவன் பூவிரியும் சோலையிலே மணப்பான்
இசை பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்......
அவன் பூவிரியும் சோலையிலே மணப்பான்
இசை பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்
குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான்
தளிர் கோடி விளையும் கனிகளிலே இனிப்பான்
குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான்
தளிர் கோடி விளையும் கனிகளிலே இனிப்பான்
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்
அவன் கருணை உள்ள நெஞ்சினிலே
கோயில் கொள்கிறான்
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனேமீண்டும் உயரத்தில் ஸ்ரீதேவியை தூக்குவார் - கருணை உள்ள நெஞ்சிலே என்று சொல்லும் போது அவரது கண்களை பாருங்கள் - புத்தன் , ஏசு , அல்லா எல்லோருமே ஒரு நிமிடம் தோன்றி மறைவார்கள் . சௌகார் ஜானகி கொண்டுவரும் உணவை தன் கையில் வாங்கி ஸ்ரீதேவிக்கு அழகாக ஊட்டி விடுவார் -- கீழே வரும் வரிகள் பெரிய பெரிய பண்டிதர்களும் சுலபமாக சொல்ல முடியாத வார்த்தைகள் -

பல நூல் படித்து நீ அறியும் கல்வி
பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

இதோ எந்தன் தெய்வம் என்று விரலை சுண்டிவிட்டு சொல்லும் போது நம் மனம் ஒரு பெரிய கீதோ உபதேசத்தையே கேட்டுவிட்ட மகிழ்ச்சியை அடையும் . நிலவு மேலே வர ஆரம்பிக்கும் - அதை தலைவருக்கு ஸ்ரீதேவி காட்டும் காட்சி - அதை மீண்டும் அவளுக்கே காண்பித்து ஊட்டிவிடும் அழகு -- காண கண் கோடி வேண்டும் -- வரிகள் தொடரும் .

தன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வை
கண்டு தொழில் புரிந்து உயிர் வளர்க்கும் ஏழை
அவன் இதழ் மலரும் சிரிப்பொலியை கேட்டேன்
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்அவன் கருணை உள்ள நெஞ்சினிலே
கோயில் கொள்கிறான்
அவன் கருணை உள்ள நெஞ்சினிலே
கோயில் கொள்கிறான்
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே.
ஆ...ஆ.....ஆ......ஆ......ஒ......ஒ......ஒ,..... .

ஊட்டி விட்டது முடிந்தபின் - மீண்டும் தூக்கிக்கொண்டு ஒரு பெருமிதத்தில் கொஞ்ச தூரம் நடப்பார் - அந்த நடையில் தெரியும் மிடுக்கு , தன்னிடம் இருக்கும் குழந்தை பெரிய மனுஷி யாக கண்டிப்பாக வருவாள் என்ற நம்பிக்கை , அவள் தான் இனி தன் உலகம் என்ற மகிழ்ச்சி - தான் ஊட்டிவிட்டதில் தூங்கி விட்டாளே என்ற பூரிப்பு - சொன்ன பொன் மொழிகள் அவள் மனதில் ஆழமாக பதிந்து விட்டன - இனி கவலை இல்லை என்ற சந்தோஷம் - இத்தனையையும் ஒரே நடையில் சொல்லிவிடுவார் - கண்ணீர் இல்லாத வரிகள் அனால் கண்ணீரை வரவழைத்துவிடும் அவரின் நடிப்பு .. பிறந்ததற்காக அவர் நடிக்கவில்லை - நடிப்பதற்காக பிறந்தவன் இவன் ஒருவன் தான் என்பதை இந்த பாடல் பல தலைமுறையத்தாண்டியும் நிரூபித்துக்கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை ....

https://youtu.be/k3YN6RCZHs0

https://youtu.be/RALoq6Lv0qw

g94127302
2nd July 2015, 06:07 AM
கருவின் கரு - 143

பாகம் 2 - தந்தை

தந்தை - மகள் பந்தம்

மற்றுமொரு மறக்க முடியாத பாடல் - ஒரு அண்ணன் இங்கே தந்தையாகுகிறான் - அதே பரிவு , அதே பாசம் !!

enthan ponnvaname anbu poovaname
enthan ponnvaname anbu poovaname
nenjil poratama kannil nirotama
athai nan parkava manam than thanguma
enthan ponnvaname anbu poovaname

kovil illai endral theivam illai
inge ni illai yen kanne nanum illai
vanam illai endral mathiyum illai
unthan varthai iillai endral keetham illai

nee vantha thal thane poo vanthathu
nee vaadinal vanna poo vadume
enn rajathi kanne kalangathiuru

enthan ponnvaname anbu poovaname

pennai kanden athil unnai kanden
thalai kanden intha kathirai kanden (this line not sure)
ennai kanden nenjil uravai kanden
niyum illai endral nanum enge sellven
thai seithathe thavam nan vanthathu
thai kondathe varam nam valvathu
enn rajathi kanne kalangathiuru

enthan ponnvaname anbu poovaname

kallam illai nenjil kavadam illai
naam kannir sintha oru niyayam illai
kalam varum angu theivam varum
antha naalum varum nalla vazhvu varum
kalam thani nan vara vaithen
kanne unnai naan vazha veithen
enn rajathi kanne kalangathiuru

enthan ponnvaname anbu poovaname
nenjil poratama kannil nirotama
athai nan parkava manam than thanguma
enthan ponnvaname anbu poovaname

https://youtu.be/tOxcNByVzVU

g94127302
2nd July 2015, 06:09 AM
கருவின் கரு - 144

பாகம் 2 - தந்தை

தந்தை - மகள் பந்தம்

"கண்ணழகு பார்த்தால் பொன்னெதற்கு. கையழகு பார்த்தால் புவெதற்கு. காலழகு பார்த்தால்...... தெய்வத்திற்கு கருனை என்றொரு பேரெதற்கு" -இந்தப் பாடலை எப்பொழுது கேட்டாலும் மனது நெகிழ்ந்து விடுகிறது.

அண்ணன் தந்தையாகும் இன்னொமொரு பாடல்


https://youtu.be/f2gQqwbeJRM

g94127302
2nd July 2015, 06:12 AM
கருவின் கரு - 145

பாகம் 2 - தந்தை

தந்தை - மகள் பந்தம்

தந்தையாக அண்ணன் --

" தண்ணீரிலே தாமரை பூ --- எனக்கு என்று இருப்பது இந்த மகளான என் தங்கை ஒருத்திதான் - இதனுடன் தானா உன் வழக்கு ???

https://youtu.be/7wwZV_6sqOA

g94127302
2nd July 2015, 06:17 AM
கருவின் கரு - 146

பாகம் 2 - தந்தை

தந்தை - மகள் பந்தம்


இந்த அண்ணனை பாருங்கள் - என்ன பாசம் !! தந்தையையும் தோற்கவைக்கும் -- பத்து பிள்ளை தங்கச்சிக்கு பொறக்கணும் - நான் பாமாலை சட்டை தைச்சுகொடுக்கணும் ----

நாகேஷ் அவர்கள் நடித்த மிகச்சிறந்த படங்களில் இதுவும் ஒன்று

https://www.youtube.com/watch?v=h20IllB8z_g

vasudevan31355
2nd July 2015, 07:27 AM
ராகவேந்திரன் சார்,

மிக்க நன்றி!

எள் என்பதற்குள் எண்ணையாக 'ஏன்?' படத்தின் அபூர்வ பாட்டுப் புத்தகத்தைப் பதிவு செய்து 'ஏன்?' பதிவுக்கே பெருமை சேர்த்து விட்டீர்கள். இதெல்லாம் எங்கே பார்க்கப் போகிறோம் என்று நினைத்தோம். இதன் அருமை தெரிந்தவர்களுக்கு இது பொக்கிஷமே. சேமிப்பில் வைத்துக் கொண்டேன். இப்படியெல்லாம் படம் வந்தது இப்படியெல்லாம் பாடல்கள் இருந்தது என்பதற்கு ஆணித்தரமான அத்தாட்சியாய் விளங்குவது இது போன்ற ஆவணங்களே!

vasudevan31355
2nd July 2015, 07:35 AM
ரவி சார்!

'பாபு' படத்தில் 'இதோ எந்தன் தெய்வம்' பாடலின் அருமை அலசலில் உங்கள் உழைப்பும், எழுத்தும் பளிச்சிடுகிறது. சிறியவர் பெரியவர் என்றில்லாமல் அனைத்து வயதினரையும் கவர்ந்த அற்புதப் பாடல் இது.

அது போல தந்தை மகள் பாடல்களில் நடிகர் திலகம் பாடல்கள் அதிகம் இடம் பெறுவது தவிர்க்கவே முடியாது. ஒரு சிறு வேண்டுகோள்.

அண்ணன் தங்கை பாடல்களை தனி தொடரில் நீங்கள் பதித்தால் நன்றாக இருக்கும். தந்தை மகள் உறவுப் பாடல்களில் அண்ணன் தங்கை பாடல்களைக் கலக்க வேண்டாமே! என்னதான் அண்ணன் தந்தை ஸ்தானத்தில் இருந்தாலும் ரத்த உறவு மாறுபடுமல்லவா?

தந்தைக் கருவிற்கு உங்களால் ஆயிரம் பாடல்கள் தர முடியும். தொடருங்கள். வாழ்த்துக்கள். நல்ல பாடல்களுக்கு நன்றிகள்.

raagadevan
2nd July 2015, 07:49 AM
தந்தை/மகன்/மகள்/தாய் பந்தம்...

தாய் சொன்ன தாலாட்டு
தலைமுறையா தமிழ் மறையா
முல்லையே கேளு மூவேந்தர் பாட்டு
நீர் தூங்க நிலம் தூங்க
கொடி தூங்க செடி தூங்க
தென்றலே பாடும் பாவேந்தர் பாட்டு... ஹொய்
நிலா காயும் நேரம் தானே மடி மீது தூங்கு
ஒச்சேவல் கூவும் வரையில்
ஜோஜோஜோ ஆரீரோ ஜோஜோஜோ ஆரீரோ
ரோஜாவே...
வரும் காலம் அரசாடும் ராஜாவே...

https://www.youtube.com/watch?v=hifIP4nn0xI&feature=player_embedded#!

rajraj
2nd July 2015, 07:52 AM
RD: I hope to see you more here ! :)

raagadevan
2nd July 2015, 08:11 AM
RD: I hope to see you more here ! :)

நன்றி ராஜ்! :) I am going to try; within my limitations (as you know!)...

g94127302
2nd July 2015, 08:15 AM
வாசு , உங்கள் கருத்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றி - தந்தையின் பரிமாணங்களாக - அண்ணன் -தங்கை உறவைப்பார்க்கிறேன் - ரத்த சம்பந்தம் குறுக்கே வருவதில்லை - பாசம் பரிவு உள்ளவர்கள் எந்த வடிவத்திலும் இருக்கலாம் - பெற்றால் தான் பிள்ளையா ? தன் தங்கையை ஒரு மகளாக பார்க்கும் அண்ணன்களை தேடிப்பிடித்து பதிவு செய்தேன் அவ்வளவே - தனி திரி தேவைதானா ??

vasudevan31355
2nd July 2015, 08:32 AM
வாசு , உங்கள் கருத்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றி - தந்தையின் பரிமாணங்களாக - அண்ணன் -தங்கை உறவைப்பார்க்கிறேன் - ரத்த சம்பந்தம் குறுக்கே வருவதில்லை - பாசம் பரிவு உள்ளவர்கள் எந்த வடிவத்திலும் இருக்கலாம் - பெற்றால் தான் பிள்ளையா ? தன் தங்கையை ஒரு மகளாக பார்க்கும் அண்ணன்களை தேடிப்பிடித்து பதிவு செய்தேன் அவ்வளவே - தனி திரி தேவைதானா ??

ரவி சார்,

நன்றி! நன்றாக கவனியுங்கள். (கவனிக்க மறந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன்):) தனித் திரி என்று கூறவில்லை. தனித் தொடர் என்றுதான் கூறியுள்ளேன்.:) தந்தை மகள் பந்தம் என்று தலைப்பு இட்டதனால்தான் அந்தக் கருத்தை முன் வைத்தேன். அண்ணன் தங்கை பாசப் பாடல்கள் அதில் ஒட்டாதது போலத் தோன்றியது. அதுதான் சொன்னேன். தவறிருந்தால் மன்னிக்கவும். மற்றபடி ஒன்றுமில்லை.

vasudevan31355
2nd July 2015, 08:45 AM
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்

http://2.bp.blogspot.com/-HRNJSnA1-84/TenskpB9duI/AAAAAAAAAuY/mP0R6cDrGMY/s320/spb.jpg

(நெடுந்தொடர்)

13

'இறைவன் என்றொரு கவிஞன்'

பாலா தொடரில் அடுத்து வருவது 'ஏன்' திரைப்படத்தின் அருமையான பாடல்.

இப்போது உங்களுக்கு 'ஏன்?' படத்தின் கதையை ஏன் நேற்று பதித்தேன் என்று புரிந்திருக்கும்.

தன் தாயின் உடல்நலம் கருதி மண்ட மாருதம் வீசும் மூலிகை சூழ்ந்த மலைப்பகுதியில் அவளை அழைத்து வந்து அவளைக் குணப்படுத்த முயல்கிறான் அந்தக் கவிஞன்.

தனிமையில், தூய தமிழில், மிக அமைதியான சூழ்நிலையில் இயற்கை வளங்கள் கொஞ்சி மலையருவி வழிந்தோடும் ஒரு நீரோடை அருகே அமர்ந்து ஒரு அற்புதமான கவிதை இயற்றி அதைப் பாடலாகவும் இசைக்கிறான் அவன் .

அந்தப் பாடலில் மயங்கி தன்னையறியாமல் அங்கு வருகிறாள் ஒரு மங்கை. இள நங்கை. அவனுடைய தமிழில், அவன் சொல்லும் கருத்தில் மயங்கி நிற்கிறாள்.

http://i.ytimg.com/vi/R5hj0T2Zvjo/maxresdefault.jpg

இந்த மனிதக் கவிஞன் இறைவனான கவிஞனை வியந்து பாடுகிறான்.

இறைவன் என்றொரு கவிஞன்
அவன் படைத்த கவிதை மனிதன்
இறைவன் என்றொரு கவிஞன்
அவன் படைத்த கவிதை மனிதன்
அதில் அறிஞனும் மூடனும் உண்டு
ஆனால் தொடக்கமும் முடிவும் ஒன்று

இறைவன் என்றொரு கவிஞன்
அவன் படைத்த கவிதை மனிதன்

கடவுளின் படைப்பிலே கவிதையும் உண்டு
காந்தியைப் போலவே காவியம் உண்டு

(காந்தியைக் காவியமாக்கிப் பார்க்கும் கவிஞரின் வரிகள் அருமை.)

முடிவு விளங்காத தொடர்கதை உண்டு
முடிக்க வேண்டுமென்று முடிப்பதும் உண்டு.

(எதற்குப் பொருந்துகிறதோ இல்லையோ 'ஏன்? படத்திற்கு இவ்வரிகள் மிகப் பொருந்தும்):)

இறைவன் என்றொரு கவிஞன்
அவன் படைத்த கவிதை மனிதன்

கண்களில் தொடங்கி கண்களில் முடித்தான்
பெண்ணிடம் பிறந்ததை பெண்ணிடம் கொடுத்தான்
கண்களில் தொடங்கி கண்களில் முடித்தான்
பெண்ணிடம் பிறந்ததை பெண்ணிடம் கொடுத்தான்
மண்ணிலே நடந்ததை மண்ணுக்கே அளித்தான்
மண்ணிலே நடந்ததை மண்ணுக்கே அளித்தான்
வானத்திலிருந்தே கவிதையை முடித்தான்.

இறைவன் என்றொரு கவிஞன்
அவன் படைத்த கவிதை மனிதன்

கருவிலிருந்தே கவிஞனின் பிறப்பு
காலத்தின் பரிசே கவிதையின் சிறப்பு
கற்பனை என்பது கடவுளின் படைப்பு
கடவுளை வென்றது கவிஞனின் நினைப்பு

இறைவன் என்றொரு கவிஞன்
அவன் படைத்த கவிதை மனிதன்
அதில் அறிஞனும் மூடனும் உண்டு
ஆனால் தொடக்கமும் முடிவும் ஒன்று

இறைவன் என்றொரு கவிஞன்
அவன் படைத்த கவிதை மனிதன்

கண்ணதாசனின் அருமையான வரிகள். டி.ஆர் பாப்பா என்ற அற்புத இசையமைப்பாளரின் அமைதியான மனதை வருடும் இசை.

http://i.ytimg.com/vi/0Tyuu67UZqM/hqdefault.jpg

பாலா மிகவும் அமைதியாக சிறிதும் ஆர்ப்பாட்டாம் இல்லாமல் இப்பாடலை இப்பாடலின் வரிகள் போலவே கவிதை ஆக்கியிருப்பார் தன் சுகமான குரலால். அதுவரை பாலா பாடிய பாடல்களில் இது ஆர்ப்பாட்டமில்லாமல் மிக மென்மையாகத் தவழ்ந்து வந்து நம் மனதை மிருதுவாக சுகமாக வருடி விடுகிறது. ஆர்ப்பாட்டம் இல்லையென்றாலும் தமிழை பாலா அழுத்தம் திருத்தமாக, சுத்தமாக உச்சரிப்பதை நாம் நன்றாக உணரலாம்.

டி.ஆர் ராமண்ணாவின் ஆஸ்தான நாயகன் ரவி கவிஞனாக, அமைதியாக செய்திருப்பார். லஷ்மி கவிஞனைத் துரத்தும் காதலி.

பாடலின் துவக்க இசையில் பொங்கி ஓடும் அருவியை மட்டும் வெளிப்புறப் படப்பிடிப்பாய்க் காட்டிவிட்டு, பாடல் முழுதையும் ஸ்டுடியோவில் செட் போட்டு நாசம் செய்திருப்பார்கள். இவ்வளவு அற்புதமான பாடலை முழுதும் இயற்கை எழில் கொஞ்சும் பிரதேசங்களில் படமாக்கி இருந்தால் இப்பாடலின் வெற்றி மேலும் பரிமளித்திருக்கும்.

'ஏன்' படம் ஒரு குப்பை என்றாலும் அந்தக் குப்பையில் மின்னும் வைரங்களாய் பாப்பாவின் இசையில் அருமையான சில பாடல்கள். இந்தப் பாடல்களாலேயே இந்தப் படத்தை மறப்பதற்கில்லை. இதை மறுப்பதற்கும் இல்லை.

இதே படத்தின் இன்னொரு அற்புதமான பாலாவின் பாடல் அடுத்த தொடரின் பதிவில்.

சந்திப்போம்.

g94127302
2nd July 2015, 08:47 AM
ரவி சார்,

நன்றி! நன்றாக கவனியுங்கள். (கவனிக்க மறந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன்):) தனித் திரி என்று கூறவில்லை. தனித் தொடர் என்றுதான் கூறியுள்ளேன்.:) தந்தை மகள் பந்தம் என்று தலைப்பு இட்டதனால்தான் அந்தக் கருத்தை முன் வைத்தேன். அண்ணன் தங்கை பாசப் பாடல்கள் அதில் ஒட்டாதது போலத் தோன்றியது. அதுதான் சொன்னேன். தவறிருந்தால் மன்னிக்கவும். மற்றபடி ஒன்றுமில்லை.

வாசு - திருத்திக் கொள்வதர்க்குள் உங்கள் பதில் பதிவு வந்துவிட்டது - அண்ணன் - தங்கை என்று பார்க்காதீர்கள் - அந்த பரிவில் , பாசத்தில் , அரவணைப்பில் , அன்பின் ஆழத்தில் , உணர்ச்சிகளைக் கொட்டும் விதத்தில் , ஒரு தந்தையின் ஆதங்கம் /பாதிப்பு /தாக்கம் நிழாலடுவது உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா ?? "கல்லில் மறைந்தது மா மத யானை " என்று சொல்வார்கள் - அப்படித்தான் இதுவும் - நீங்கள் சிற்பி செதுக்காத சிலையாக ( அண்ணன் -தங்கை ) பாடல்களை பார்க்கிறீர்கள் - நான் அதில் மறைந்திருக்கும் மா மத யானையை ( தந்தையை ) பார்க்கிறேன் - இதில் தவறுகள் இருப்பதாக புலப்படவில்லை - மீறி இருக்கிறது என்று நீங்கள் இன்னும் சொன்னால் தனித்தலைப்பு ரெடி .....:-d

vasudevan31355
2nd July 2015, 09:58 AM
ரவி சார்!

//நீங்கள் சிற்பி செதுக்காத சிலையாக ( அண்ணன் -தங்கை ) பாடல்களை பார்க்கிறீர்கள்//

இல்லை. மறுக்கிறேன். வன்மையாக மறுக்கிறேன். நீங்கள் அவசரப்படுகிறீர்கள். முழுவதும் ஒரு வரி விடாமல் படித்து, புரிந்துதான் பார்க்கிறேன். ஓரளவிற்கு புரிந்து கொள்ளும் தன்மையும் உண்டு என்று நினைக்கிறேன்.:)

//இதில் தவறுகள் இருப்பதாக புலப்படவில்லை//

நான் தவறென்றே சொல்லவில்லையே! 'தந்தை' 'கருவின் கரு' தலைப்பு தந்து விட்டு ,அதே மாதிரி பாச உணர்வுகளோடு வேறு உறவு உள்ள பிற பாடல்கள் அந்தத் தலைப்போடு ஒட்டவில்லை என்றுதானே கூறினேன். 'தாயின் கரு'வில் அக்காள் தங்கை உறவை சேர்க்க முடியாதல்லவா? என்னதான் அக்கா தாய் போன்று அன்பு செலுத்தினாலும்.

அதற்கு தனிப்பட்ட முறையில் தாய், தந்தை என்று தனித்தனி தலைப்புகளே தேவை இல்லையே. வெறும் 'பாசம்' என்ற தலைப்பு மட்டும் போதுமே!:)

உங்கள் பதிவுகளையோ, திறமைகளையோ நான் கொஞ்சமும் குறைத்து மதிப்பிட வில்லையே? மதிப்பிடவும் முடியாது.

vasudevan31355
2nd July 2015, 09:59 AM
இதுவரை பாலாவின் பாடல்கள்.

1.'மல்லிகைப் பூ வாங்கி வந்தேன்' (பால் குடம்)

http://www.mayyam.com/talk/showthread.php?11173-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3&p=1223953#post1223953

2. 'ஆயிரம் நிலவே வா.. ஓராயிரம் நிலவே வா'(அடிமைப் பெண்)

http://www.mayyam.com/talk/showthread.php?11173-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3&p=1224467#post1224467

3. 'இயற்கை என்னும் இளைய கன்னி' (சாந்தி நிலையம்)

http://www.mayyam.com/talk/showthread.php?11173-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3&p=1226259#post1226259

4. 'ஆரம்பம் யாரிடம்' (மிஸ்டர் சம்பத்)

http://www.mayyam.com/talk/showthread.php?11441-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%A F%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-4/page35

5. 'கற்பனையோ கைவந்ததோ' (மாலதி)

http://www.mayyam.com/talk/showthread.php?11441-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%A F%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-4/page62

6. 'சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் எங்கே போவோம்' (மாலதி)

http://www.mayyam.com/talk/showthread.php?11441-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%A F%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-4/page69

7. 'உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது' (நவக்கிரகம்)

http://www.mayyam.com/talk/showthread.php?11441-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%A F%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-4&p=1230352#post1230352

8. 'நீராழி மண்டபத்தில்' ('தலைவன்')

http://www.mayyam.com/talk/showthread.php?11441-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%A F%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-4/page112

9.' நிலவே நீ சாட்சி' (நிலவே நீ சாட்சி)

http://www.mayyam.com/talk/showthread.php?11441-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%A F%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-4/page112

10.'பொன்னென்றும் பூவென்றும்' (நிலவே நீ சாட்சி)

http://www.mayyam.com/talk/showthread.php?11441-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%A F%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-4&p=1233121#post1233121

11.'வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்' (தேடி வந்த மாப்பிள்ளை')

http://www.mayyam.com/talk/showthread.php?11441-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%A F%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-4&p=1233667&posted=1#post1233667

12.'அங்கம் புதுவிதம் அழகினில் ஒருவிதம்' (வீட்டுக்கு வீடு)

http://www.mayyam.com/talk/showthread.php?11441-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%A F%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-4&p=1234280#post1234280

13.'இறைவன் என்றொரு கவிஞன்' (ஏன்)

http://www.mayyam.com/talk/showthread.php?11441-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%A F%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-4&p=1235169&posted=1#post1235169

adiram
2nd July 2015, 05:29 PM
டியர் வாசு சார்,

'ஏன்' படக்கதை விளக்கத்துக்கும், தொடர்ந்து வந்த பாலாவின் பாடலுக்கும் நன்றி.

படம் குப்பை என்கிறீர்கள். ஆனால் கதைச்சுருக்கத்தை படிக்கும்போது பரவாயில்லை ரகமாக தெரிகிறது. ஒருவேளை படமாக்கத்தில் சொதப்பி விட்டார்களோ.

டியர் ராகவேந்தர் சார்,

'ஏன்' பட பாட்டுப்புத்த்கத்துக்கு நன்றி.

ஒவ்வொரு பாடலையும் படிக்கும்போது 'அட, இது இந்தப் படத்தில்தானா' என்ற ஆச்சரியம் ஏற்படுகிறது.

kalnayak
3rd July 2015, 03:09 PM
வாசு,

'ஏன்' படத்தைப் பற்றி ஏன் இப்படி எழுதினீர்கள் என்று யோசித்தேன். அதுவும் எங்க மாமா, மாட்டுக்கார வேலன் என்று ஜாம்பவான்களின் படங்களோடு போட்டியிட்டது என்று சொல்லிவிட்டீர்களா. நல்ல படம் போல என்று நினைத்தேன். நன்றாக காய்த்து எடுத்து விட்டீர்கள். நல்லவேளை நான் பார்க்கவில்லை எங்கேயும். பின்னர் நீங்கள் பாலா தொடரில் பாடல் போட்டதும் 'ஏன்' என்ற காரணம் புரிந்தது. 'இறைவன் என்றொரு கவிஞன்' என்ற பாடலையும் கேட்டதில்லை. உங்களால் கேட்டுப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நீங்கள் சொன்னது போல பாலா தமிழை தெளிவாக உச்சரித்து பாடியிருக்கிறார். பின்னர் வந்த பாலாவின் குரலுக்கும், இந்த பாடலில் உள்ள குரலுக்கும் வித்தியாசம் அவ்வளவு அதிகம். நல்ல பாடல். நன்றி. அடிக்கடி கேட்கலாம்.

kalnayak
3rd July 2015, 03:15 PM
ரவி,

உங்களின் எல்லா கருவின் கரு பதிவுகளையும் படிக்கிறேன். ஆனால் என்னால் பதில் எழுதத்தான் முடியவில்லை. மிக அருமையான பதிவுகள். அவசியமான பதிவுகள். ஆத்மார்த்தமான பதிவுகள். நல்ல பதிவுகள். சும்மா கலந்து வச்சி அடிக்கறீங்க. பிரமாதம்.

அப்புறம் நம்ம வாசு சொன்ன யோசனை நன்றாக இருந்தது. அதையே நீங்கள் ஏற்றுக் கொண்டிருந்திருக்கலாம். அதாவது முன்பு தாயைப் பற்றி எழுதினீர்கள். பின்னர் தந்தை பற்றி எழுகிறீர்கள். அதையே தொடர்ந்து ஒரே வயிற்றில் உருவாகும் அண்ணன்-தங்கை, அக்கா-தங்கை, அண்ணன்-தம்பி மற்றும் அக்கா-தம்பி பாசத்தைப் பற்றியும் தொடர்ந்திருக்கலாம். நீங்கள் எழுதியதை அண்ணன்-தங்கை தொடராக புதியதாக வழங்கி இருக்கலாம். சரி பரவாயில்லை. நீங்கள் ஏதாவது திட்டம் வைத்திருப்பீர்கள். பார்க்கலாம்.

RAGHAVENDRA
3rd July 2015, 08:59 PM
அபூர்வ கானங்கள்

https://www.youtube.com/watch?v=r97_63zc774

ஜெயா நீ ஜெயிச்சுட்டே... உடனேயே கற்பனையை எங்கோ கொண்டு போகாதீங்க.. இப்படி ஒரு படம் வந்தது. அதிலிருந்து அருமையான கவ்வாலி பாடலை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவுதான்..

பாடல் காட்சியில் வி.எஸ்.ராகவன், அசோகன் மற்றும் எல்.காஞ்சனா

RAGHAVENDRA
3rd July 2015, 09:02 PM
அபூர்வ கானங்கள்

https://www.youtube.com/watch?v=XqGd4uVBe-o

மிக மிக நீண்ட நாட்களுக்குப் பின் பார்வைக்கு..

வாழ்க்கை என்பதே ஜாலி .. வாழ்ந்து பார்ப்பதே ஜோலி...

தரவேற்றிய நண்பருக்கு மிக்க நன்றி

vasudevan31355
3rd July 2015, 09:23 PM
அபூர்வ கானங்கள் ஒவ்வொன்றும் அருமை ராகவேந்திரன் சார். நன்றி!

'கண் கண்ட தெய்வ'த்தின் 'வாழ்க்கை என்பதே ஜாலி' பாடல் சூப்பர். கலக்கல்.

'கண் கண்ட தெய்வம்' படத்தின் ஜெராக்ஸ் படமான 'படிக்காத பண்ணையாரி'ல் அதே சூழ்நிலை, அதே காட்சி அமைப்பில் அதே மாதிரி ஜாலிப் பாடல். (ஒய்.ஜி.எம், அரவிந்த், திலீப்)

சவாரி காரு சவாரி
இது சந்துல பொந்துல இந்து இடுக்குல
விட்டாலும் நிக்காது சவாரி


https://youtu.be/vRojGHUtmoo

g94127302
3rd July 2015, 09:25 PM
கல்நாயக் சார் - நன்றி உங்கள் பாராட்டுக்களுக்கு . வாசு அவர்களின் யோசனையை நான் புறகணிக்கவில்லை - அப்படி செய்யவும் எனக்கு தயிரியம் வராது . நான் எல்லா உறவுகளையும் தாய் தந்தையின் வடிவத்தில் பார்க்கிறேன் - அவர் ரத்த உறவுகளாகப் பார்கிறார் - பார்வைகள் ஒன்று - கோணங்கள் வேறு ... கண்டிப்பாக சில பதிவுகள் மூலம் நீங்கள் சொன்ன அனைத்து உறவுகளின் பெருமைகளையும் எழுத முயற்ச்சிக்கிறேன் .. மீண்டும் என் நன்றி - உங்கள் பூக்களின் நறுமணம் எங்களுக்கு தொடர்ந்து கிடைக்காதது எங்களின் துரதிஷ்ட்டம் என்று நினைக்கிறேன் .

vasudevan31355
3rd July 2015, 09:32 PM
ராகவேந்திரன் சார்,

'வாழ்க்கை என்பது ஜாலி' பாடலில் நகைச்சுவை நடிகர் ஏ.வீரப்பன்,'கள்ளபார்ட்' நடராஜன் நன்றாகத் தெரிகிறது. இன்னொருவர் யார்? மஹரன்!?

RAGHAVENDRA
3rd July 2015, 09:40 PM
ராகவேந்திரன் சார்,

'வாழ்க்கை என்பது ஜாலி' பாடலில் நகைச்சுவை நடிகர் ஏ.வீரப்பன்,'கள்ளபார்ட்' நடராஜன் நன்றாகத் தெரிகிறது. இன்னொருவர் யார்? மஹரன்!?

மஹரனே தான்...

vasudevan31355
3rd July 2015, 09:42 PM
மஹரனே தான்...

அப்பாடி! பிழைச்சேன்.:p

g94127302
3rd July 2015, 09:49 PM
கருவின் கரு - 147

பாகம் 2 - தந்தை

தந்தை - மகள் பந்தம்

உண்மை சம்பவம் 21


IAS நுழைவு பரிட்சை இன்னும் ஒரு வாரத்தில் . என் மகள் லதா மிகவும் மும்மரமாக படித்துக்கொண்டிருந்தாள் - இரவு மணி இரண்டு - அவள் அறையில் இன்னும் விளக்கு எரிந்துகொண்டிருந்தது - மெதுவாக அவள் அறையில் நுழைகிறேன் - தூங்க முயற்ச்சிக்கும் அவள் கண்கள் , நான் வருவதை அறிந்து மெல்ல திறக்கின்றன - அப்பா -- ஒரே பயமாக இருக்கிறது - என் மீதே எனக்கு நம்பிக்கை இல்லை - உங்கள் கனவை தொலைத்து விடுவேனோ என்று மனசு கிடந்தது துடிக்கிறது -- மெதுவாக அவள் முதுகை தடவிக்கொடுத்தேன் -தன்னம்பிக்கை மிகவும் முக்கியம் லதா - வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் நாம் இழக்கலாம் - சுயமரியாதையையோ , தன்னம்பிக்கையையோ இழக்கவே கூடாது - வழக்கம் போல உனக்கு ஒரு சின்ன கதை ஒன்றை சொல்லட்டுமா ? - சரி அப்பா - லதாவின் தூக்கம் அவளிடம் இருந்து பிரியா விடைப்பெற்றது ---

மிகப் பெரிய சக்கரவர்த்தி அவன். அவனுக்கு கீழ் பல சிற்றரசுகள் உள்ளன. ஒரு முறை இந்த அரசனின் அவைக்கு வருகை தந்த சீன தேசத்து சேர்ந்த அறிஞர் ஒருவர் தாயை இழந்த இரண்டு பஞ்சவர்ண கிளிக்குஞ்சுகளை பரிசளித்துவிட்டு சென்றார். பஞ்சவர்ண கிளியை அதிர்ஷ்டத்தின் சின்னமாக கருதுவர் என்பதால் அரசன் மிகவும் அக மகிழ்ந்து தனது நாட்டின் பறவைகள் பயிற்சியாளரை அழைத்து “இவற்றை நல்ல முறையில் பராமரித்து, பழக்கப்படுத்தி பறப்பதற்கு பயிற்சியளியுங்கள்!” என்று கட்டளையிட்டான்.

மாதங்கள் உருண்டோடின. பறவைகள் எப்படி வளர்கின்றன? நன்றாக பறக்கின்றனவா? என்று தெரிந்துகொள்ள பயிற்சியாளரை அழைத்தான் மன்னன்.

“அரசே… இரண்டு பறவைகளில் ஒன்று நன்றாக பறக்க கற்றுக்கொண்டுவிட்டது. மற்றொன்று எவ்வளவோ முயற்சித்தும் அது அமர்ந்திருக்கும் கிளையை விட்டு நகர மறுக்கிறது” என்றான்.

உடனே மன்னன், தனது நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கால்நடை மருத்துவர்களையும் பறவையியல் நிபுணர்களையும் அழைத்து பறவைக்கு என்ன ஆயிற்று? அது ஏன் பறக்க மறுக்கிறது? என்று ஆராயுமாறு கட்டளியிட்டான்.

அவர்களும் அதை முற்றிலும் பரிசோதித்துவிட்டு, “இந்த பறவையிடம் எந்த குறையுமில்லை. உடலில் ஊனமுமில்லை. ஆனால் அது ஏன் பறக்க மறுக்கிறது என்று புரியவில்லை அரசே” என்றனர்.

உடனே தனது அமைச்சரை அழைத்து “என்ன செய்வீர்களோ ஏது செய்வீர்களோ தெரியாது. இந்த கிளி இன்னும் இரண்டு நாளில் பறக்கவேண்டும்” என்றான் கண்டிப்புடன்.

சில நாட்கள் கழித்து ஒரு நாள் தனது மாளிகையின் உப்பரிகையிலிருந்து வெளியே பார்க்கிறான். கிளி அதே இடத்தில் தான் உட்கார்ந்திருந்தது. நகரவேயில்லை. மன்னனுக்கு என்னவோ போலிருந்தது.

“இதற்கு என்ன ஆயிற்று ஏன் பறக்க மறுக்கிறது என்று தெரியவில்லையே? நாட்டுப்புறத்தில் உள்ள வயலில் வேலை செய்யும் விவசாயிகள் அல்லது மூத்த குடிமக்கள் எவரையேனும் அணுகி இது பற்றி கேட்கவேண்டும். அவர்களுக்கு ஒருவேளை இது பறக்க மறுப்பதன் காரணம் தெரிந்திருக்க்கலாம்” என்று கருதி உடனே காவலர்களை அழைத்து, “நாட்டுப்புறத்திற்கு போய் யாரேனும் ஒரு மூத்த விவசாயி ஒருவரை அழைத்து வா” என்று கட்டளையிட்டான்.

அடுத்தநாள் காலை கண்விழிக்கும்போது, அந்த பஞ்சவர்ணக் கிளி மரத்தை சுற்றி அங்கும் இங்கும் பறந்துகொண்டிருப்பதை பார்த்தான்.

அவனுக்கு ஒரே சந்தோஷம். “இந்த அற்புதத்தை செய்தவரை உடனே அழைத்து வாருங்கள்!” என்றான்.

அந்த விவசாயி மன்னன் முன்பு வந்து பணிந்து நின்றார்.

“எல்லாரும் முயற்சி செய்து தோற்றுவிட்ட நிலையில் நீ மட்டும் கிளியையை எப்படி பறக்கச் செய்தாய்?”

மன்னன் முன் தலையை வணங்கியபடி விவசாயி சொன்னார்… “அது ரொம்ப சுலபமான காரியம் அரசே. மரத்தில் ஏறி அந்த பறவை உட்கார்ந்திருந்த கிளையை நான் வெட்டிவிட்டேன். வேறொன்றுமில்லை!” என்றார்.

இறைவனும் சில சமயம் அந்த விவசாயி போல, நம்மை நமது சக்தியை உணரச் செய்யவேண்டி, நாம் அமர்ந்திருக்கும் கிளையை வெட்டிவிடுவான். அது நமது நன்மைக்கே. நம் சக்தியை ஆற்றலை நாம் உணரவேண்டியே என்று கருதி நம்மை உயர்த்திக்கொள்ள முயற்சிக்கவேண்டும்.

நாம் அனைவரும் உயர உயர பறப்பதற்கு படைக்கப்பட்டவர்கள். ஆனால் பல சமயங்களில் நாம் நமது சக்தியை உணராமல் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு பழக்கப்பட்ட வேலைகளை மட்டுமே அது தான் நம்மால் முடியும் என்று கருதி செய்து வருகிறோம். நாம் சாதிக்க கூடியவை எண்ணற்றவை. முடிவற்றவை. ஆனால் நம்மில் பலருக்கு அது கண்டுபிடிக்கப்படாமலே போய்விடுகிறது. செக்கு மாடு போல, ஒரே இடத்தில், மிக சுலபமான, ஒரே வேலையை செய்வதிலே தான் நாம் ஆர்வம் செலுத்துகிறோம். ஆகையால் தான் பலருக்கு வாழ்க்கை ஒரு உற்சாகமான, த்ரிலிங்கான, மன நிறைவான ஒன்றாக இல்லாமல் மிகச் சாதாரணமாக கழிந்துவிடுகிறது.

நாம் அமர்ந்திருக்கும் (ஒட்டிக்கொண்டிருக்கும்) பயமென்னும் கிளையை வெட்டி எறிந்து, உயரப் பறக்கும் பெருமிதத்திற்க்காக சுதந்திரப் பறவைகளாய் நம்மை விடுவித்துக்கொள்வோம். நாம் சாதிக்கப் பிறந்தவர்கள். செக்கு மாடுகள் அல்ல.

லதா இன்று மானிலமே பெருமைபடம் ஒரு தலைசிறந்த IAS ஆபீசர் - அதைவிட பெருமை லதா என் மகள் . அவள் ஒரு செக்கு பாடு அல்ல என்பதை நிரூபித்து விட்டாள் .

https://youtu.be/GonTN9gRinY

g94127302
3rd July 2015, 09:59 PM
கருவின் கரு - 148
பாகம் 2 - தந்தை
தந்தை - மகள் பந்தம்

மனதை வருடும் ஒரு இனிய பாடல் - தந்தை மகள் பந்தம்

https://youtu.be/87aaRf_twdk

g94127302
3rd July 2015, 10:08 PM
கருவின் கரு - 149
பாகம் 2 - தந்தை
தந்தை - மகள் பந்தம்

புரிந்துக்கொள்ள முடியாத ஒரு பந்தம் தந்தை மகள் - எண்ணகளாலும் , எழுத்துக்களாலும் இந்த பந்தத்தின் அருமையை விவரிக்க முடியாது - விவரிக்க முயன்றவர்கள் தோல்வியைத்தான் தழுவி இருக்கிறார்கள் - அனுபவிக்க வேண்டிய உறவு - ஆண்டவனால் அளிக்கப்பட வரப்பிரசாதம் இந்த உறவு .


https://youtu.be/hhKTKe2Kw6k

rajeshkrv
3rd July 2015, 10:08 PM
https://www.youtube.com/watch?v=6uxRc3cpohE

g94127302
3rd July 2015, 10:13 PM
கருவின் கரு - 150:smile2::)
பாகம் 2 - தந்தை
தந்தை - மகள் பந்தம்

Dance with a daughter !!

https://youtu.be/otOiO7nKywU?list=RDKPFq22tQfG4

When tomorrow starts without me
And I'm not there to see,
If the sun should rise and find your eyes
All filled with tears for me.

I wish so much you wouldn't cry
The way you did today,
While thinking of the many things
We didn't get to say.

I know how much you love me
As much as I love you,
And each time that you think of me
I know you'll miss me too.

But when tomorrow starts without me
Please try to understand,
That an angel came and called my name
And took me by the hand.

And said my place was ready
In heaven far above,
And that I'd have to leave behind
All those I dearly love.

But when I walked through heaven's gates
I felt so much at home,
When God looked down and smiled at me
From His great golden throne.

He said "This is eternity
And all I've promised you",
Today for life on earth is past
But here it starts anew.

I promise no tomorrow
For today will always last,
And since each day's the same way
There's no longing for the past.

So when tomorrow starts without me
Don't think we're far apart,
For every time you think of me
I'm right here in your heart.
https://youtu.be/9xfgxWAIcxQ?list=RDKPFq22tQfG4

g94127302
3rd July 2015, 10:21 PM
ஹிட்லர்
இடியமின்
கோபக்காரர்
சிடுமூஞ்சி
பெருசு
அந்தாளு
பழைய பஞ்சாங்கம்
இம்சை அரசன்
இப்படி பல பட்டப்பெயர்களுக்கு சொந்தக்காரர் தான் நமது அப்பா!

இந்த பெயர்களெல்லாம்
அவரை சரியாக புரிந்துகொள்ளாததினால் வைத்த பெயர்கள்!
அவர் நம் சிரிப்புக்கு பின்னால் இருக்கும் அழுகை!
நம் சந்தோஷங்களுக்கு பின்னால் இருக்கும்
துயரம்!

எட்டாத உலகத்தை எட்டிப்பார்க்க
ஏணியானவர்
நம் சந்தோஷத்தை கலைக்கக்கூடாது என்பதற்காக கண்ணீரை கூட கண்ணுக்குள்ளே விழுங்கியவர்!
அவர் ஒரு
கருத்தரியமுடியாத கவிதை !
அவரை புரிந்துகொள்ள ஜென்மம் போதாது,

இந்த உலகத்திலிருக்கும் எல்லோரையும் ஜெயிக்க வேண்டும் என்று நினைத்தாலும் மகனிடம்/ மகளிடம் தோற்பதை மட்டும் பெருமையாக நினைப்பார்!
அவருக்கள் அடங்கிய பல அம்மாக்களில் ஒருவரை தான் நமக்கு அம்மாவாக கொடுத்திருக்கிறார்!
எப்போதும் போல எல்லோரையும் போல நாம் சரியாக புரிந்துகொள்ள தவறிய அப்பாவைப்பற்றி எவ்வளவோ எழுத நினைத்தும் முழுமையாய் எழுதமுடியாமலே போய்விடுகின்றது !

ஆனால் ஒன்று மட்டும் உண்மை! ஒரு நல்ல மனைவியால் தாயைக்கூட ஈடு செய்யமுடியும் ஆனால் ஒரு நல்ல தந்தையை ஈடுசெய்ய இறைவன் கூட இன்னொரு உறவை படைக்கவில்லை காரணம் அவர் ஒரு நிகரற்ற அதிசயம் !!

தந்தை - மகள் - இந்த உறவுக்கு ஒரு முற்று புள்ளி வைக்க முடியாது - அதனால் பதிவுகளுக்கு ஒரு சிறிய முற்று புள்ளியை வைத்து விட்டு தந்தை -மகன் - இந்த பந்தத்தைப்பற்றி சில பதிவுகள் பார்ப்போம் - இதுவரை பொறுமையுடன் படித்த உங்களை இன்னும் கொஞ்சம் பொறுமையுடன் எனது பாணியில் விளக்க இருக்கும் தந்தை -மகன் உறவையும் படிக்க வேண்டுகிறேன் .

அன்புடன்

g94127302
4th July 2015, 06:28 AM
Good Morning

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/gm_zpszajscw6s.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/gm_zpszajscw6s.jpg.html)

RAGHAVENDRA
4th July 2015, 06:30 AM
ஹிட்லர்
இடியமின்
கோபக்காரர்
சிடுமூஞ்சி
பெருசு
அந்தாளு
பழைய பஞ்சாங்கம்
இம்சை அரசன்
இப்படி பல பட்டப்பெயர்களுக்கு சொந்தக்காரர் தான் நமது அப்பா!

இந்த பெயர்களெல்லாம்
அவரை சரியாக புரிந்துகொள்ளாததினால் வைத்த பெயர்கள்!
அவர் நம் சிரிப்புக்கு பின்னால் இருக்கும் அழுகை!
நம் சந்தோஷங்களுக்கு பின்னால் இருக்கும்
துயரம்!

எட்டாத உலகத்தை எட்டிப்பார்க்க
ஏணியானவர்
நம் சந்தோஷத்தை கலைக்கக்கூடாது என்பதற்காக கண்ணீரை கூட கண்ணுக்குள்ளே விழுங்கியவர்!
அவர் ஒரு
கருத்தரியமுடியாத கவிதை !
அவரை புரிந்துகொள்ள ஜென்மம் போதாது,

இந்த உலகத்திலிருக்கும் எல்லோரையும் ஜெயிக்க வேண்டும் என்று நினைத்தாலும் மகனிடம்/ மகளிடம் தோற்பதை மட்டும் பெருமையாக நினைப்பார்!
அவருக்கள் அடங்கிய பல அம்மாக்களில் ஒருவரை தான் நமக்கு அம்மாவாக கொடுத்திருக்கிறார்!
எப்போதும் போல எல்லோரையும் போல நாம் சரியாக புரிந்துகொள்ள தவறிய அப்பாவைப்பற்றி எவ்வளவோ எழுத நினைத்தும் முழுமையாய் எழுதமுடியாமலே போய்விடுகின்றது !

ஆனால் ஒன்று மட்டும் உண்மை! ஒரு நல்ல மனைவியால் தாயைக்கூட ஈடு செய்யமுடியும் ஆனால் ஒரு நல்ல தந்தையை ஈடுசெய்ய இறைவன் கூட இன்னொரு உறவை படைக்கவில்லை காரணம் அவர் ஒரு நிகரற்ற அதிசயம் !!

தந்தை - மகள் - இந்த உறவுக்கு ஒரு முற்று புள்ளி வைக்க முடியாது - அதனால் பதிவுகளுக்கு ஒரு சிறிய முற்று புள்ளியை வைத்து விட்டு தந்தை -மகன் - இந்த பந்தத்தைப்பற்றி சில பதிவுகள் பார்ப்போம் - இதுவரை பொறுமையுடன் படித்த உங்களை இன்னும் கொஞ்சம் பொறுமையுடன் எனது பாணியில் விளக்க இருக்கும் தந்தை -மகன் உறவையும் படிக்க வேண்டுகிறேன் .

அன்புடன்

Well said Ravi.
No more explanation would suit this.
Best presentation of the esteem of a Father.

g94127302
4th July 2015, 06:48 AM
கருவின் கரு - 151
பாகம் 2 - தந்தை
தந்தை - மகன் பந்தம்


சரியாக புரிந்து கொள்ளாமல் வளரும் உறவு இது - 10 வயது வரை அப்பாதான் நமக்கு ஹீரோ - வயது மாறும் போது - உறவுகளின் அர்த்தங்கள் திரிக்கப்படுகின்றன -- ஹீரோவாகத் தெரிந்தவன் , ஒரு உதாரண புருஷனாகத்தெரிபவன் , ஒரு தடையாக தெரிகிறான் - இந்த தவறான அர்த்தங்கள் 30 வயது வரை ஏன் அதற்க்கு மேலும் தொடர்கின்றன .... இதே மகன் 40யை தொட்டவுடன் , தானும் ஒரு குழந்தைக்கு தந்தையானவுடன் , தன் தந்தையின் பெருமைகளை உணர ஆரம்பிக்கிறான் .... மீண்டும் அவன் தந்தை அவனுக்கு ஒரு ஹீரோ வாகத் தெரிய ஆரம்பிக்கிறான் .... இந்த உண்மை சிலருக்கு அவன் தந்தை இருக்கும் போது உணர வாயிப்பு கிடைக்காமலும் போய் விடுகிறது . இனி வரும் பதிவுகளை கீழ்கண்டவாறு பிரித்து ஒரு சின்ன அலசல் செய்யல்லாம் என்று எண்ணுகிறேன் .

1. தந்தை -மகன் பந்தம் - குழந்தை பருவம்

2. தந்தை -மகன் பந்தம் - மாணவ பருவம்

3. தந்தை -மகன் பந்தம் - காதல் பருவம்

4 .தந்தை -மகன் - முதிய பருவம்

முதலில் குழந்தை பருவம் :

என்னவெல்லாம் கனவுகள் - என்னவெல்லாம் பூரிப்புக்கள் - தந்தை என்றவுடன் அவன் மனதில் தான் எத்தனை கர்வம் , ஆனந்தம் - உலகமே அவன் காலடியில் விழுந்து விட்டதைப்போன்ற இன்ப உணர்வு ....... twinkle twinkle little star - how I wonder what you are !! அவன் கனவுகள் நட்ச்சத்திரமாக வானத்தில் ஜொலிக்கின்றது - தன் மகனும் வளர்ந்து ஒரு நட்ச்சத்திரமாக மின்னுவான் என்று மலர்களை போன்று உறங்கும் அந்த கண்களை வருடிவிடுகிறான் ....... கனவுகள் வளர்கின்றன -- காலமும் விரைவாக முன்னோக்கி நகர்கின்றது -------

https://youtu.be/aGyhXnU05nk

g94127302
4th July 2015, 06:55 AM
கருவின் கரு - 152
பாகம் 2 - தந்தை
தந்தை - மகன் பந்தம்

நான்கு குழந்தைகள் - நான்கும் பெண்கள் - ஒரு ராஜ குமாரன் பிறப்பானா என்று எங்கும் இந்த தம்பதிகளின் குமரலுக்கு நாம் ஓர் ஆறுதல் சொல்வோமா ?

https://youtu.be/LVtK3t0D55E

g94127302
4th July 2015, 07:01 AM
கருவின் கரு - 153
பாகம் 2 - தந்தை
தந்தை - மகன் பந்தம்

இந்த தந்தை பாடுவதை கேளுங்கள் - கடவுளை இவர் பார்க்கிறாராம் - அவருடைய குழந்தையின் வடிவில் - கடவுளின் கருணை எப்படி தெரிகிறதாம் -கொஞ்சும் அந்த குழந்தையின் மழலை மூலமாக - இந்த பாடல் ஒரு கல்லையும் கனியாக்குமே !!

https://youtu.be/pbqQHFzDUOE

g94127302
4th July 2015, 07:03 AM
Well said Ravi.
No more explanation would suit this.
Best presentation of the esteem of a Father.

மிக்க நன்றி சார் - பதிவை போட்டவுடன் படிக்க உங்களுக்கு நேரம் கிடைத்ததை எண்ணி பெருமை அடைகிறேன்

vasudevan31355
4th July 2015, 07:34 AM
//ஆனால் ஒன்று மட்டும் உண்மை! ஒரு நல்ல மனைவியால் தாயைக்கூட ஈடு செய்யமுடியும் ஆனால் ஒரு நல்ல தந்தையை ஈடுசெய்ய இறைவன் கூட இன்னொரு உறவை படைக்கவில்லை காரணம் அவர் ஒரு நிகரற்ற அதிசயம் !! //

ரவி சார்!

அமர்க்களப்படுத்தி விட்டீர்கள். இதைவிட தந்தை பெருமை பேசும் வரிகள் இருக்கவே முடியாது. இனிமேல் உங்களுக்கு எழுத வராது என்ற கதைகள் வேண்டாம். இவ்வளவு விஷயங்களை எப்படி உங்களால் அற்புதமாக எழுத முடிகிறது? வாழ்த்துக்கள்.

kalnayak
4th July 2015, 10:50 AM
பூவின் பாடல் 26: "பூப்பூவா பறந்து போகும் பட்டுப் பூச்சி அக்கா"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தினத்தந்தியில் முதல் பக்கம் வாசித்து விட்டு புரட்டினேன். சிந்துபாத் கடலில் நீந்திக் கொண்டிருந்தான். திடிரென அருகில் வந்த மிகப் பெரிய திமிங்கிலம் விழுங்கிய நீரில் உள்ளே இழுத்துச் செல்லப்பட்டான் சிந்துபாத். அவன் மட்டுமா நானும்தான். உள்ளே ஒரு ஊரையே கண்டான் சிந்துபாத். இதுபோல அவன் எத்தனை திமிங்கலங்களை பார்த்திருக்கிறான். நான்தான் வியந்து போனேன். அவனின் இடையில் லைலா தாங்கும் மரப் பெட்டி தொங்கிக் கொண்டிருந்தது.

நானும் சிறுவயதில் இருந்து இந்த சிந்துபாத்தை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். அப்படியேதான் இருக்கிறான். என்றும் பதினாறு மார்கண்டேயனுக்கு, என்றும் பதினெட்டு கலைவேந்தனுக்கு (நான் விடணும்னு நெனைச்சாலும் முடியலை, என்ன பண்றது நாட்டில ரொம்ப பேரு இப்படிதான் இருக்கறாங்கன்னு இப்பவாவது கல்நாயக்குக்கு புரியட்டும்.) சிந்துபாத்தும் இந்த ரகத்தில் சேர்த்தி.
சிந்துபாத்திடம் பேச்சு கொடுத்தேன். நீங்களும் எனக்கு நினைவு தெரிஞ்ச நாளிலிருந்து கன்னித்தீவு தேடிக்கிட்டுதான் இருக்கீங்க. மந்திரவாதி மூசாவும் உன்னையும் லைலாவையும் நிம்மதியா இருக்க விடமாட்டேங்கிறான். (சிந்துபாத், மூசாவிற்கு வருகிறார், போகிறார் என்று எழுதி, பேசி அவர்கள் வயதை கூட்டக் கூடாதாம்). நீயும் சரின்னுட்டு சின்ன லைலாவோடு வாழலாமுன்னு நெனைக்க மாட்டேங்கறே. உனக்கும் எதுவாவது வழி கிடச்சதான்னு பார்த்தா அதுவும் கெடைக்க மாட்டேங்குது. இன்னும் எத்தனை காலம்தான் இப்படியே இருக்கப் போறீங்க, ஒரு வேலை வெட்டி கிடையாது. எதைச் சாப்பிட்டுதான் இம்புட்டு நாளா உயிர் வாழறீங்கன்னும் தெரியலை.

தமிழ்நாடு முழுக்க உங்களை தெரியாதவங்க ரொம்ப கம்மி. கடல்ல கன்னித்தீவ தேடுற. இப்பிடி திமிங்கலத்துக்குள்ள வர்ற. புது தீவுக்கு போற . காட்டு மிருகங்களோட சண்டை போடற. பூதங்களை பார்க்கற. வாய், மூக்கு, காது வழியா சுலபமா அவங்க உடலுக்குள்ளார இப்ப திமிங்கலத்துக்கு உள்ளார இருக்கற மாதிரியே போயிட்டு வந்திடற. உனக்கெல்லாம் தோல்வியே கிடையாதா. என்றேன். "ஏம்பா இப்படி பொறாமைப் படறே" என்றான். 'எனக்குத் தேவைதான்' என்று மனதினுள் நினைத்துக்கொண்டு தொடர்ந்தேன். இல்லை. 'உங்க (சிந்துபாத் & லைலா) வாழ்கையில எதவாது உற்சாகம் இருந்திருக்கா?'ன்னு கேக்குறேன். என்றேன். என்னப்பா நீ படிச்சதில்லையா என்றான் சிந்து. இல்லை தமிழ்நாடு முழுக்க பிரபலமானவங்களா நீங்க ரெண்டு பேர் இருந்தாலும் தமிழ்நாட்டில பிரபலமான திரைப் படங்களை பார்த்திருக்கீங்களா என்று கொக்கியைப் போட்டேன். இல்லையே என்று பரிதாபமாக சொன்னான் சிந்து.

ஆனால் உங்க கதையில வர்ற பேர பாத்திரங்களுக்கு வச்சு திரைப் படங்கள் வந்துருச்சு. ஏன் சமீபத்தில் 'யுத்தம் செய் 'படத்தில் 'கன்னித்தீவு பொண்ணா?' என்று கேள்வி கேட்டு ஒரு பாடல் வந்து பிரபலமாகி விட்டது. இது ஏன் 'கன்னித்தீவு'ன்னு பேர வச்சு ஒரு படம் 1980-லையே வந்திருக்குன்னு கூகுளே சொல்லுது. நீ இப்படி அப்பாவியா இருக்கறியே என்றேன். படா ஷோக்கா மாட்டிகினான் சிந்துபாத்.

"சரி. அதுக்கு இப்ப என்ன?" என்றான் சிந்து. இல்லை பூவின் பாடல்கள்-னு ஒரு தொடர் எழுதறேன். அதுதான் உன்னோட பேட்டிய வச்சு ஒரு பாட்டைப் பத்தி எழுதலாமின்னு. அதுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? என்றான் சிந்து. 'ஆமாம் சினிமா படத்தோட தலைப்புக்கும் அதோட கதைங்களுக்கும் தொடர்பு இருக்கற மாதிரியில்ல நீ கேட்கற என்றேன். சரி என்ன பாட்டைப் பத்தி எழுதப் போற என்றான்.

நீதான் நெறைய திக்குத்தெரியாத காட்டில எல்லாம் அலைஞ்சி இருக்கறியே. அதுமாதிரி ஒரு காட்டில் ஒரு குழந்தை பூச்சிங்க, பறவைங்க, மிருகங்களைப் பார்த்து பாடற ஒரு பாட்டு என்றேன். என்ன பாட்டு என்றான். தலைப்பில படி என்றேன்.

யாரு எழுதின பாட்டு?

நம்ம வாலிபக் கவிஞர் வாலி எழுதி, மெல்லிசை மன்னர் எம்.எஸ். வி. இசை அமைத்து எம்.எஸ். ராஜேஸ்வரி பாடிய அற்புதமான பாடல்.

எதைப் பத்தி எழுதி இருக்கிறார் வாலி?

என்ன குழந்தைக்கு இந்த மிருகங்கள் கிட்ட இருக்கிற சந்தேகங்களை கேக்கிற மாதிரியான பாட்டுதான். கேட்டு பாரு உனக்கே புரியும் என்றேன்.

https://www.youtube.com/watch?v=010ikQLt5wE

vasudevan31355
4th July 2015, 10:52 AM
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்

http://2.bp.blogspot.com/-HRNJSnA1-84/TenskpB9duI/AAAAAAAAAuY/mP0R6cDrGMY/s320/spb.jpg

(நெடுந்தொடர்)

14

'வருவாயா வேல்முருகா '

'ஏன்' படத்தின் இன்னொரு அருமையான பாலாவின் பாடல். மிக மிக அருமையான பாடல். அந்தப் பாடல்தான் பாலாவின் தொடரில் அடுத்து வருவது.

அண்ணன் சிரமப்பட்டுப் படித்து பி.ஏ.பட்டம் வாங்கி வருகிறான். அவன் பட்டம் வாங்க அல்லும் பகலும் இறைவனிடம் வேண்டிய அன்புத் தங்கையிடம் இந்த சந்தோஷ விஷயத்தைச் சொல்லுகிறான். தங்கை மகிழ்ச்சி அலைகளில் துள்ளிக் குதிக்கிறாள். அண்ணன் தனக்கு அதிக சம்பளத்தில் நல்ல வேலை கிடைத்து விட்டதாகவும், இனி அந்த சின்ன வீட்டில் குடித்தனம் நடத்த வேண்டாம்...பெரிய வீடாகப் பார்க்கலாம் என்று கூறுகிறான்.

தங்கை அந்த வீட்டின் வாசலில் தன் அண்ணன் வக்கீல் என்பதை பெருமையுடன் உணர்த்த 'ராமு பி.ஏ' என்று போர்டு வைத்து அழகு பார்க்கிறாள். அவள் மனமெல்லாம் மகிழ்ச்சி.

அழகாகப் பாடவும் ஆரம்பிக்கிறாள்.

லா லா
லா ல ல ல ல லா

என்று மிக இனிமையாக ஹம்மிங்குடன் பாடல் தொடங்குகிறாள். அவளுடன் சேர்ந்து அவள் அண்ணனும் பாடி மகிழ்கிறான்.

'மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும்
மங்கை என் கோயிலிலே'

என்று அந்த மங்கை மயங்கிப் பாட, அண்ணன் அந்த வரிகளில்

'மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும்
தங்கையின் கோயிலிலே'

என்று 'மங்கை' யின் இடத்தில் 'தங்கை' யை வைத்து மகிழ்கிறான்.

அண்ணனுக்குத் தங்கையும், தங்கைக்கு அண்ணனும் துணை தேடி மகிழும் வரிகள்.

'திருமணத் திருநாளுக்கு வரும் விருந்தினர்கள் இந்தப் பாவையின் உறவினர்கள்' என்ற வளமான, யாரும் நினைத்துப் பார்க்க முடியாத, எதிர்பாராத திடீர் தித்திப்பு வரிகள். பொருத்தமென்றால் பாடலுக்கு அப்படிப் பொருந்தும் பொருத்தம்.

'திருநாளுக்கு வருகின்ற விருந்தினர்கள்
அவர் பாவையின் உறவினர்கள்'

கண்ணதாசன் ஒருவனாலேயே முடிந்த ஒன்று.

http://i.ytimg.com/vi/SD1WGCUcVgU/hqdefault.jpg

வருவாயா வேல்முருகா
என் மாளிகை வாசலிலே
மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும்
மங்கை என் கோயிலிலே

வருவாயா வேல்முருகா
என் மாளிகை வாசலிலே
மாதுளம் பூக்கள்
தீபம் ஏற்றும் தங்கையின் கோயிலிலே

அண்ணனுக்குப் பெண் பார்க்க
வரும் என் அண்ணியை என் கண் பார்க்க

ஹாஹா ஹா ஹா ஹா....(அற்புதம்... அற்புதம்)

அண்ணனுக்குப் பெண் பார்க்க
வரும் என் அண்ணியை என் கண் பார்க்க

என் தங்கையின் துணையை நான் பார்க்க
அந்த இன்பத்தை நீ பார்க்க

நீ வருவாயா வேல்முருகா
என் மாளிகை வாசலிலே
மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும்
தங்கையின் கோயிலிலே

மார்கழியில் மாயவனும்
தை மாசியிலே நாயகனும்

ஹாஹா ஹா ஹா ஹா....

மார்கழியில் மாயவனும்
தை மாசியிலே நாயகனும்

திருநாளுக்கு வருகின்ற விருந்தினர்கள்
அவர் பாவையின் உறவினர்கள்

நீயும் வருவாயா வேல்முருகா
என் மாளிகை வாசலிலே
மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும்
மங்கை என் கோயிலிலே

முன்னவனோ ஆலமரம்
தம்பி முளைத்து வரும் சின்ன மரம்

எங்கள் தோட்டத்தில் இன்று மூன்று மரம்
எங்கள் வாழ்வே அன்பு மாயம்

நீ வருவாயா வேல்முருகா
என் மாளிகை வாசலிலே
மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும்
மங்கை என் கோயிலிலே

பாடல் முடிந்து பார்த்தால் அந்தப் பேதை தங்கை அண்ணனை நினைத்து கனவு காணுகிறாள்.

அண்ணனாக ஏ.வி.எம்.ராஜனும், தங்கையாக லஷ்மியும் வழக்கம் போல. இவர்களை யார் பார்த்தார்கள்?:)

பாடலின் உண்மையான நாயகர்கள் பாலா, மற்றும் டி.ஆர்.பாப்பா மற்றும் சரளா.

கோடி முறை கேட்டாலும் திகட்டாத தேவ கானமோ இந்தப் பாடல்!

அடடா! 'இப்படியெல்லாம் பாடல்கள் இருக்குமா'?! என்று எண்ணி எண்ணி வியக்க வைக்கும் பாடல். அணு அணுவாகக் கேட்டுப் பாருங்கள். நான் சொல்வதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்று உணர்வீர்கள்.

இந்தப் பாடலை அபூர்வமான பின்னணிப் பாடகி எஸ்.சரளா தொடங்கும் போதே டோட்டலாக நாம் ஆ(ல்)ள் அவுட் ஆகி விடுவோம்.

லா லா லா
லா ல ல ல ல லா

என்று இந்த வசியக் குரல் பெண்மணி பின் தொடர்ந்து 'லலல லலல லலல லலலலலா லலாலா' என்று இந்த ஹம்மிங்கை முடிக்கும் போது பாடலுக்குபோகவே மனசு வராது. அந்த ஹம்மிங்லேயே ஒன்றிப் போய் ரீவைண்ட் பண்ண ஆரம்பித்து விடுவோம் நம்மை அறியாமலேயே.

சரளா பற்றி ஒரு சிறுகுறிப்பு (இலவச இணைப்பு)

சரளா ஒரு அருமையான குரல்வளம் கொண்ட பாடகி. நிறைய இஸ்லாமிய பக்திப் பாடல்கள் பாடியவர்.

முக்தாவின் 'தேன் மழை' காமெடிப் படத்தில் அறிமுகம். 'என்னடி! செல்லக் கண்ணு...எண்ணம் எங்கே போகுது?' மிக அருமையான பாடல் இது. சச்சு விஜயாவிடம் பாடுவது போல் வரும்.

'பூனை கண்ணை மூடினால் உலகம் இருளுமா?' தாராபுரம் சுந்தரராஜனுடன் இணைந்து 'பொம்மலாட்டம்' படத்தில். இதுவும் முக்தாவின் படம்தான்.

அப்புறம் 'நினைவில் நின்றவள்' அதே முக்தாவின் படத்தில் 'நந்தன் வந்தான் கோவிலிலே' என்ற அருமையான பாடல். சச்சுவிற்குப் பாடுவார்.

மூன்றுமே முக்தாவின் முத்தான காமெடிப் படங்கள்.

முக்தாவின் படங்களில் சச்சுவுக்கு நிறையப் பாடல்கள் பாடியது சரளாதான்.

அவ்வளவு ஏன்? நம் 'இசைஞானி' இளையராஜாவின் இசையில் கூட 'பொண்ணு ஊருக்குப் புதுசு' படத்தில் அவருடனேயே இணைந்து,

'ஒனக்கெனத்தானே இந்நேரமா
நானும் காத்திருந்தேன்
ரகசியம் பேச மனசிருக்கு
ராத்திரி நேரம் நெலவிருக்கு'

என்ற அழகான பாடலைப் பாடியிருப்பார். (கிட்டத்தட்ட ஜென்ஸியின் குரல் போல)

இஸ்லாமியப் பாடல்களில் கொடி நாட்டியவர்.

http://www.inbaminge.com/t/allah/Nagore%20E%20M%20Hanifa%20Muslim%20Songs/

'எல்லாமே நீதான்
வல்லோனே அல்லா'

பாடலை எவரால் மறக்க முடியும்?

'சிந்தனையில் மேடை கட்டி
கந்தனையே ஆட வைத்தேன்
செந்தமிழில் சொல் எடுத்து
எந்தனையே பாட வைத்தான்'

என்று 'திருமலை தென்குமரி' திரைப்படத்தில் 'சீர்காழி'யுடன் சரளா இணைந்து பாடிய பாடல் மிகவும் பிரசித்தம். (இந்தப் பாடல் 'திருவருட்செல்வர்' படத்தில் இடம் பெற்றதாக பல இணைய தளங்கள் கூறும் கொடுமையை எங்கே போய் முட்டிக் கொண்டு அழ?!):banghead:

சரளா இப்போது கோயமுத்தூர் ஆசிரமம் ஒன்றில் தன் மகளுடன் வசித்து வருகிறார். ஆசிரமத்தில் உள்ள பள்ளி, கல்லூரியில் ஸ்டோர் வைத்து நடத்தி வருகிறாராம். பிள்ளைகளுக்கு இசைப் பயிற்சியும் அளிக்கிறாராம்.

சரளா பற்றிய அபூர்வ வீடியோவை இணையத்தில் தேடித் பிடித்தேன். அதில் சரளா வயதானவராக சிறிது நேரம் பேட்டி தருகிறார். ஆனால் அவர் தான் பாடிய பாடல்களைப் பாடிக் காட்டும் போது குரல் வளம் அப்படியே உள்ளது. மிகவும் எளிமையாக காணப் படுகிறார். பாவமாயும் பரிதாபமாயும் இருக்கிறது. சரளா பற்றிய அற்புத பொக்கிஷம் இந்த வீடியோ. அவசியம் பாருங்கள்.

பாலா தொடரில் அவருடன் பாடிய இந்தப் பாடகியைப் பற்றி எனக்குத் தெரிந்ததை உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் பெருமையும், மகிழ்ச்சியும் கொள்கிறேன்.


https://youtu.be/pfEa61HHehk

இப்போது தொடருக்கு மீண்டும் வந்து விடுவோம்.

உடன் வருவார் தொடரின் நாயகர். குரல் ஜாலங்களின் மன்னர். மிக அழகான வெண்ணெய்க் குரலுடன். அப்படியே குரல் மெழுகாய் உருகும். மிக இளமையான, இதமான வெண்கலக் குரல். அண்ணன் தங்கை பாச உணர்வுகளை வெகு அழகாகப் பிரதிபலிப்பார். பாலசுப்ரமணியம் பாடிய வேல்முருகன் பாட்டு.

வழக்கம் போல அம்சம். இனிமையைக் குழைத்துத் தந்து தன் முத்திரையை நிலைநாட்டும் அந்த அமர்க்களமான இடம் ஆழ்ந்து அனுபவிக்க வேண்டிய ஒன்று

'அண்ணனுக்குப் பெண் பார்க்க-வரும்
என் அண்ணியை என் கண் பார்க்க'

என்று சரளா முடித்தவுடன் ஒரு ஹம்மிங் எடுப்பாரே இந்த பாலாடைப் பாடகர் பாலா! என்னத்தை சொல்ல!

'ஹாஹா ஹா ஹா ஹா....என்று தொடர்ந்து 'ம்ஹூம் ம்....ம்' என்று ஒரு பிரளயமே நிகழ்த்துவாரே! உடம்பு அப்படியே சில்லிட்டுப் போகுமே! நாம் நார்மலுக்கு வர நாளாகுமே!

பாலா! இந்த ஒரு ஹம்மிங் போதுமய்யா! நீ வேறெதுவும் பாடவே வேண்டாம். அடப் போய்யா!

இதுவரை பாலாவின் பாடல்கள் பதின்மூன்று எழுதியிருக்கிறேன். சில பாடல்கள் ஒன்றையொன்று மிஞ்சும். எது டாப் என்று எழுதுவது சிரமம். இப்போதும் மாட்டிக் கொண்டேன்.

இதுதான் டாப். இந்தப் பாடல்தான் டாப்.:)

இந்த இன்பக் குழப்பத்தை இந்த இனிய குரலோன் அன்றி வேறு யார் தர முடியும்?

இதற்கு மேல் வேண்டாம்.

சொர்க்கத்தை அனுபவிக்கத் தயாராகுங்கள்.


https://youtu.be/SD1WGCUcVgU

g94127302
4th July 2015, 01:42 PM
கல்நாயக் சார் , நாங்கள் யாருமே துரதிஷ்ட்டசாலி இல்லை என்பதை உங்கள் பூக்கள் பதிவை உடனே போட்டு நிரூபித்து விட்டீர்கள் - வாசு அவர்களைப்போல ஒரு " ஏன் " பதிவு என்று தொடக்கத்தில் நினைத்தேன் - பிறகு அதை கண்ணித்தீவாக ஆக்கி - ஒரு "கலை " அம்சத்துடன் சொல்லவந்ததை விளக்கி எங்கள் ஏக்கத்தையும் போக்கிவிட்டீர்கள் - அருமை என்று சொல்வது உங்கள் பதிவை குறைத்து சொல்வது போல ஆகிவிடுமோ என்ற பயத்தில் நன்றி என்ற ஒரே ஒரு வார்த்தையுடன் முடித்துக்கொள்கிறேன் - தொடருங்கள்

g94127302
4th July 2015, 01:53 PM
வாசு - எப்படி உங்கள் ஒவ்வொரு "பாலா " பதிவும் முந்தைய "பாலா " பதிவுகளைக்காட்டிலும் இன்னும் அதிகமாக எங்களை சொக்க வைக்கின்றது ? வேறு ஏதாவது மயக்க மருந்துகள் சேர்ப்பீர்களா ??

"வருவாயா வேல் முருகா " இந்த பாடல் அன்று ஒலிக்காத பட்டி தொட்டிகள் கிடையாது - உங்கள் அலசலில் நாங்கள் " ஏன் ? ஏன் ?" என்று கேட்க்க முடியாமல் " வேல் ! வேல்!!" என்று சொல்ல வைத்து விட்டீர்கள் -- இலவச இணைப்பு அல்ல அது - எங்களுக்கு இலவச இனிப்பு " நீங்களே கோயம்பத்தூர் சென்று சரளாவை பேட்டி எடுத்ததைப்போன்ற ஒரு இன்ப உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள் - பாலா கூட தன் பாடல்களை இவ்வளவு ரசித்து அலசியிருப்பாரா என்று தெரியவில்லை - உங்களை ரசிகராக அடைந்தது மூலம் மிகவும் புண்ணியம் செய்திருக்கிறாரர் என்று மட்டும் நன்றாக புரிகின்றது . அவர் மட்டுமா ? நாங்களும் தான் !!

rajeshkrv
5th July 2015, 07:14 AM
திரையில் பக்தி-7

திருப்புகழைப்பாட பாட வாய் மணக்கும்
இந்த பாடலை கேட்டால் நம் செவி இனிக்கும்

இசையரசியுடன் சூலமங்கலம் பாடிய அருமையான பாடல்

https://www.youtube.com/watch?v=awxORiSnHig

g94127302
5th July 2015, 07:38 AM
Good Morning

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/tiger_zpskg1vpvne.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/tiger_zpskg1vpvne.jpg.html)

g94127302
5th July 2015, 07:41 AM
கருவின் கரு - 154
பாகம் 2 - தந்தை
தந்தை - மகன் பந்தம்
குழந்தை பருவம்

உண்மை சம்பவம் 22

அன்று பள்ளிக்கு விடுமுறை . என் மகனுக்கு படிப்பு சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தேன் . நன்றாகவே படிக்கிறோம் என்ற நினைப்பு அவன் மனதில் அதிகமாக இருந்தது . இதுவே நாளடைவில் கர்வமாக மாறிவிடக்கூடாதே என்ற ஒரு பயத்தில் அவனிடம் ஒரு நீதிக்கதை ஒன்றரை சொல்லலாம் என்று ஆரம்பித்தேன் - நல்ல வேளையாக அவனும் கேட்க்கும் மூட் இல் இருந்தான் .

ராமு ஒருவன் கோயிலுக்குச் சென்றான். அவனது கூடையில் ஆண்டவனுக்குச் சமர்ப்பிப்பதற்காக வாழைப்பழம், தேங்காய், கற்பூரம் ஆகியன இருந்தன.
தேங்காய் பேச ஆரம்பித்தது: நம் மூவரில் நானே கெட்டியானவன், பெரியவனும்கூட! என்றது. அடுத்து வாழைப்பழம், நமது மூவரில் நானே இளமையானவன், இனிமையானவன் என்று பெருமைப்பட்டுக் கொண்டது. கற்பூரமோ எதுவும் பேசாமல் மௌனம் காத்தது.

அவன் சந்நிதியை அடைந்தான். தேங்காய் உடைபட்டது. பழத்தோல் உரிக்கப்பட்டது. கற்பூரமோ தீபம் ஏற்றியதும் கரைந்து ஒன்றும் இல்லாமல் போனது.

நாம் இதிலிருந்து ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் தேங்காய் போல் கர்வத்துடன் இருந்தால், ஒருநாள் நிச்சயம் உடைபடுவோம். இனிமையாக இருந்தாலும், வாழைப்பழம் போல் தற்பெருமை பேசித் திரிந்தால் ஒருநாள் கிழிபடுவோம். ஆனால் கற்பூரம் போல் அமைதியாக இருந்துவிட்டால், இருக்கும் வரை ஓளிவீசி இறுதியில் மீதமின்றி இறைவனோடு இரண்டறக் கலந்து போவோம்... எவ்வளவு மேலே மேலே உயர்ந்தாலும் கர்வமோ , கோபமோ வராமல் வாழ கற்றுகொள்ளவேண்டும் .....

ராமுவின் கர்வம் அன்றே கொல்லப்பட்டுவிட்டது .......


https://youtu.be/BDo_JBFgH3k

g94127302
5th July 2015, 07:42 AM
கருவின் கரு - 155
பாகம் 2 - தந்தை
தந்தை - மகன் பந்தம்
குழந்தை பருவம்

ஆசைகள் கண்களில் தேங்க , ஆண்மையினால் அடைந்த ஒரு வெற்றியை முழுவதுமாக பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறான் - பத்து மாதங்கள் சுமந்த சுமையை அவள் இறக்கி வைக்கின்றாள் - அதை அன்று தோளில் சுமந்தவன் தான் - தன்னை நாலு பேர்கள் சுமக்கும் வரை சுமக்கின்றான் - அதற்க்கு அவன் கூலி கேட்பதில்லை - சுமந்த சுமை அவன் முதுகை ஒரு கேள்விக்குறி ஆக்குகின்றன - அவனுடைய முதுகை விட அவன் வாழ்க்கை ஒரு பெரிய கேள்விக்குறியாகும் போது அவனுடன் துணைக்கு வருவது அவனுடைய பழைய நினைவுகள் மட்டுமே .........

https://www.youtube.com/watch?v=ls9y0gesMSI

g94127302
5th July 2015, 07:43 AM
கருவின் கரு - 156
பாகம் 2 - தந்தை
தந்தை - மகன் பந்தம்
குழந்தை பருவம்

மனதில் படுவதை யோசிக்காமல் வெளியே சொல்வது குழந்தையின் உள்ளம் ... கள்ளம் கபடம் இல்லாத அந்த குழந்தை உள்ளம் என்றுமே அவனை ஒரு ஹீரோ வாக பார்க்கிறது . வயதாகி அவன் ஒரு குழந்தையாகும் போது அந்த குழந்தை உள்ளத்தில் என்றுமே ஹீரோ வாக அமர்ந்து இருப்பது அவனுடைய பிள்ளைகள் தான் ...

https://youtu.be/3nDwEtoiLtQ

g94127302
5th July 2015, 07:44 AM
கருவின் கரு - 157
பாகம் 2 - தந்தை
தந்தை - மகன் பந்தம்
குழந்தை பருவம்

அர்த்தமே இல்லாத அந்த கபடம் அற்ற சிரிப்பு - ஒரு தந்தையின் மடி மீது ஓடி வந்து விழும் கவிதைகள் ----

https://youtu.be/Fo_dKWe-MoE

g94127302
5th July 2015, 07:44 AM
கருவின் கரு - 158
பாகம் 2 - தந்தை
தந்தை - மகன் பந்தம்
குழந்தை பருவம்

வாய் பேசத்தெரியாத குழந்தை - தந்தையின் பரிதவிப்பு - கேட்டவர்க்கு கேட்டபடி தரும் அந்த கண்ணனிடம் தஞ்சம் - உருக வைக்கும் ஒரு ப்ராத்தனை ------

கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான் - ஏழை
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான் - ஏழை
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் ஆ..

தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்
தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்
தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்
தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்
கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான்
கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான்
தருமம் என்னும் தேரில் ஏறிக் கண்ணன் வந்தான்
தாளாத துயர் தீர்க்கக் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் மாயக் கண்ணன் வந்தான்
கண்னன் வந்தான்

கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான் - ஏழை
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் ஆ..

முடவர்களை நடக்க வைக்கும் ப்ருந்தாவனம்
மூடர்களை அறிய வைக்கும் ப்ருந்தாவனம்
முடவர்களை நடக்க வைக்கும் ப்ருந்தாவனம்
மூடர்களை அறிய வைக்கும் ப்ருந்தாவனம்
குர்டர்களைக் காண வைக்கும் ப்ருந்தாவனம்
ஊமைகளைப் பேச வைக்கும் ப்ருந்தாவனம்
குர்டர்களைக் காண வைக்கும் ப்ருந்தாவனம்
ஊமைகளைப் பேச வைக்கும் ப்ருந்தாவனம்
அடையாத கதவிருக்கும் சந்நிதானம்
அஞ்சாத சொல்லிருக்கும் சந்நிதானம்
சந்நிதானம் கண்ணன் சந்நிதானம் சந்நிதானம்

கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான் - ஏழை
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் கண்ணா கண்ணா கண்னா!

கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும்
காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும்
கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும்
காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும்
கனி மழலைக் குரல் கொடுத்துப் பாட வேண்டும்
கண் மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும்
கனி மழலைக் குரல் கொடுத்துப் பாட வேண்டும்
கண் மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும்
கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா
கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா
கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா
கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா
கண்ணா கண்ணா கண்ணா கண்ணா

கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான் - ஏழை
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான்

https://www.youtube.com/watch?v=DIjy5z9GJi0

KALAIVENTHAN
5th July 2015, 04:30 PM
நண்பர்களுக்கு வணக்கம். நேரமின்மையால் வர முடியவில்லை. மன்னிக்கவும்.

வாசு சார்,
‘வெற்றி மீது வெற்றி வந்து....’ பாடலுக்கு மனமார்ந்த நன்றிகள். தாமதமாக பாராட்டுவதற்கு மன்னிக்கவும் சார். நீங்கள் குறிப்பிட்டதுபோல மக்கள் திலகம் தனது சுறுசுறுப்பால் ராஜம்மாவை மட்டுமல்ல, நம்மையும் சுறுசுறுப்பாக்கி விடுவார். மாடிப்படியின் கைப்பிடியில் வழுக்கி வரும் அழகு சொக்கவைக்கும். பொருத்தமான இடத்தில் கர்ணன் காட்சியை இணைத்திருக்கும் உங்கள் திறமை ரசிக்க வைக்கிறது. பாராட்டுக்கள்.

அதிகம் அறியப்படாத ‘ஏன்?’ திரைப்படத்தை பற்றிய தங்களின் பதிவு உங்கள் அசாத்திய உழைப்பை காட்டுகிறது. மற்றவர்கள் ரசிப்பதற்காக தன்னையே வருத்திக் கொள்ளும் உங்கள் உழைப்புக்கு நன்றி.

ஏன்? படத்தின் பாட்டுப்புத்தகத்தை பதிவிட்ட ராகவேந்திரா சார் அவர்களுக்கும் நன்றி.

ரவி சார்,
நவரத்தின வியாபாரம் பற்றிய எனது கருத்துக்கு தங்களின் பதிலை ரசித்து சிரித்தேன். நகைச்சுவை உங்களுக்கு இயல்பாய் வருகிறது. கருவின் கரு பாடல்களும் கருத்துக்களும் பாச சங்கிலியால் எங்களை பிணைத்து விடுகிறது. பாராட்டுக்கள். நன்றிகள்.

கல்நாயக்,
பூ பாடல்களை மீண்டும் தொடங்கியிருப்பதற்கு நன்றி. ‘இறைவன் என்றொரு கவிஞன்’ பாடலை இதற்கு முன் நீங்கள் கேட்டதே இல்லையா? ஆச்சரியமாக இருக்கிறது. ஹிட்டான பாடல்தானே. ஆமாம்........... சின்னக்கண்ணனை ஏன் மறக்க நினைக்கிறீர்கள்? உங்கள் பதிவை (எண்.1403) பாருங்கள். ‘இங்கே நிறைய எழுத உற்சாகம் கொடுக்கும் சி.க.வை என்னால் மறக்காமல் இருக்க முடியாது..’ என்று கூறியிருக்கிறீர்களே? ‘ சி.க.வை என்னால் மறக்க முடியாது’ என்றல்லவா இருந்திருக்க வேண்டும்? சின்னக்கண்ணன் மீது உங்களுக்கு என்ன கோபம் அவரை மறப்பதற்கு? (சும்மா விளையாட்டுக் சொன்னேன்) சரியாக மாற்றி விடுங்கள்.
அப்புறம்... எனக்கு என்றும் 18 இல்லை. ரொம்ப பொறாமைப்பட வேண்டாம். இன்னும் சில மாதங்களில் எனக்கு 19 வயது பிறக்கப் போகிறது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு.ஆதிராம்,
உங்கள் தந்தையைப் பற்றி நீங்கள் கூறியிருப்பது கண்களை குளமாக்கியது.

திரு.ராஜேஷ்,
திரை இசையில் பக்தி பாடல்கள் அருமை. திருப்புகழை பாடப் பாட... பாடல் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களையும் கூட தலையாட்டி ரசிக்கச் செய்யும் அருமையான பாடல். நன்றி.

இங்கே பதிவிடும் எல்லாரையும் நான் மதிக்கிறேன். ஒவ்வொருவருக்கும் தனித்திறமை உண்டு. என்றாலும் நான் சொல்வதை எல்லாரும் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். எல்லாருக்கும் செல்லப் பிள்ளையான நமது சின்னக்கண்ணன் இல்லாத திரி குழந்தை இல்லாத வீடு போல வெறிச் சென்று இருக்கிறது. விடுமுறை முடிந்து எப்போது வருகிறார்?

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

KALAIVENTHAN
5th July 2015, 04:31 PM
திரு.கோபால்,

பதிவுகளைப் படித்தேன். நிலைமைகளைப் புரிந்து கொண்டு அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். பதில் சொல்வதற்கு வாய்ப்பு இல்லாத நிலையில் உங்களை விமர்சிப்பது முறையோ, அழகோ அல்ல.

என்னுடைய கருத்தோடு ஒத்திசைவு கொண்டவர்களாக இல்லாவிட்டாலும் கூட, விஷயம் தெரிந்தவர்களை, திறமையாளர்களை, அவற்றை வெளிக்கொணரும் ஆற்றலும் அதற்காக கடின உழைப்பும் கொண்டவர்களை என்றும் மதிப்பவன் என்ற முறையில் வருந்துகிறேன்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

KALAIVENTHAN
5th July 2015, 04:37 PM
‘இதை மறந்தாலே வாழ்வில் கிடைக்கும் சன்மானம்.......’


சமீபத்தில் படித்த செய்தி ஒன்று மனதை உலுக்கியது. சேலம் அருகே ஒரு பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காரணம், ஒரு கொள்ளை வழக்கில் அவரது கணவருக்கு தொடர்பு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதை அறிந்தோ என்னவோ, அந்த பெண்ணின் கணவரும் தலைமறைவாக இருந்தார். அக்கம்பக்கத்தாரின் இழிசொல் பொறுக்க முடியாமல், கணவரால் ஏற்பட்ட அவமானம் தாங்காமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் அந்தப் பெண்.

இதில், கொடுமை அந்தப் பெண்ணுக்கு 2 பெண் குழந்தைகள். ஒரு குழந்தைக்கு 2 வயது, இன்னொரு குழந்தைக்கு 4 வயது. விஷயம் அறிந்து 5 நாட்களுக்கு முன் தனது வீட்டுக்கு நள்ளிரவில் வந்திருக்கிறான் தலைமறைவாக இருந்த ஆசாமி. வந்தவன், தனது இருகுழந்தைகளுடன் விளையாடிவிட்டு குளிர்பானத்தில் குழந்தைகளுக்கு விஷத்தை கலந்து கொடுத்து அவர்களை கொன்று விட்டு தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டான்.

உண்மையில் தனது பெண் குழந்தைகள் மீது அவனுக்கு அளவற்ற பாசம் இருந்திருக்கிறது. அதனால்தான், தாயும் தந்தையும் இல்லாமல் ஆதரவின்றி இரு குழந்தைகளும் கஷ்டப்படக் கூடாது என்று நினைத்தவன் அவர்களையும் தன்னோடு அழைத்துக் கொண்டு போய்விட்டான். குடும்பத் தலைவன் தவறான வழியில் சென்றதால் ஒரு குடும்பமே அழிந்திருக்கிறது.

மானத்துக்கும் நல்லோர் பழிக்கும் செயல்களுக்கும் அஞ்சியிருந்தால் அவனுக்கும் அவன் குடும்பத்துக்கும் இந்த நிலையே வந்திருக்காது.

சதாரம் திரைப்படத்தில் இசை மேதை ஜி.ராமநாதன் அவர்களின் அருமையான இசையமைப்பில் திருச்சி லோகநாதன் அவர்கள் பாடும் பாடல், என்னை மிகவும் கவர்ந்த பாடல். எல்லாருக்கும் தெரிந்த பாடல்தான்.

திரு.லோகநாதன் அவர்களின் வாழ்வும் துயரமானதுதான். கடைசி காலத்தில் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். திருச்சிக்கு அருகே குணசீலம் என்ற இடத்தில் பெருமாள் கோயிலில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அவர்களுடைய குடும்பத்தார் கொண்டு வந்து வைத்திருப்பார்கள். சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட நீரை தினமும் தெளித்தால் மனநலம் சரியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அங்கு சிறிது காலம் வைக்கப்பட்டிருந்தார். பிறகு, அவர் குணமடைந்தாலும் தீவிரமாக செயல்பட முடியவில்லை. எனது அபிமான பாடகர்கள் வரிசையில் திரு.லோகநாதன் அவர்களுக்கு தனி இடம் உண்டு. அவர் பாடிய அழியாத பாடலுக்கு வருவோம்.

மானத்துக்கு பயந்து கணவனின் செயலால் ஏற்பட்ட அவமானம் தாங்கமுடியாமல் தற்கொலை செய்த பெண்ணின் நிலையை விளக்குவது போன்ற வரிகள்...

கண்ணான கணவன் தன்மானம் தன்னை
காப்பாற்றும் பெண் தெய்வம்
மனம் புண்ணாகி சிந்தும் கண்ணீரைக் காண
பொறுக்காதடா தெய்வம்

எதற்காக, அந்த ஆசாமி கொள்ளையடித்தான்? கேவலம் பணத்துக்காகத்தானே? கடுமையாக உழைத்தால் வயிற்றுக்கு சோறு நிச்சயம். அதிக பணம் வேண்டும் என்ற ஆசையால்தானே கொள்ளையடித்தான்? அதனால், அவனுக்கு என்ன இன்பம் கிடைத்து விட்டது? நேர்மையாக உழைத்து வாழ்ந்தால் குடும்பத்தாரின் மெய்யான அன்பு என்னும் ஈடில்லாத செல்வத்தோடு மகிழ்ச்சியாக வாழந்திருப்பானே? இதை புரிந்து கொள்ள மனிதன் மறுக்கிறான்.

அழியாத இன்பம் புவியோர்கள் எண்ணும்
பணம் காசிலே இல்லை
மெய்யன்பே எந்நாளும் அழியா செல்வம்
அதற்கீடு வேறில்லை..

இந்த வரிகளில், பணம் காசிலே இல்லை.. என்ற வார்த்தைகளுக்குப் பிறகு திரு.லோகநாதன் அவர்கள் அ... அ... அ... அ.. என்று ஏற்ற இறக்கத்துடன் ஒரு பிட் பாடுவார் பாருங்கள். எவ்வளவு மேதைகளை நாம் இழந்து விட்டிருக்கிறோம் என்பது புரியும்.

பாடலின் ஆரம்ப வரிகள்.....

மண் மீது மானம் ஒன்றே பிரதானம்
என்றெண்ணும் குணம் வேணும்
இதை மறந்தாலே வாழ்வில்
கிடைக்கும் சன்மானம், மாறாத அவமானம்

சிந்திக்க வைக்கும் வரிகள்.... எல்லாரையும்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

g94127302
5th July 2015, 05:17 PM
கலை சார் , நீங்கள் மீண்டும் இங்கு வருவதற்கு நன்றி பல - என்னடா இன்று சொன்ன ஒரு " good morning " வேஸ்ட் ஆக போய்விட்டதே - எடுத்துக்கொள்ள யாருமே இன்று திரியின் பக்கம் வரவில்லையே என்று வருத்தப்பட்டுக்கொண்டிருந்தேன் - வாராத ஒருவர் வந்தது மட்டும் அன்றி அருமையான திரு லோகநாதனைப்பற்றிய அரிய பல தகவல்களையும் தந்து உள்ளீர்கள் - அவர் பாடிய இனிமையான பல பாடல்களில் எல்லோருடைய மனதையும் கவர்ந்த சில பாடல்கள் -உங்களுக்காக இதோ

Trichy Loganathan

Download Trichy Loganathan Hits

Aasaiye Alaipole Namellam Adan Mella

Adikkira Kai Than Anaikum Anaikura Kai

Chinnakkuti Natthana Silaraiya Mathuna

Endru Thaniyum Intah Sundhanthira Thagam

Inbam Engum Ingae Asai Puriyuthu

Indha Vazhvu Sontham Anal Aiya Inbalogam

Inithai Naamum Inainthirupom

Kaiyile Vaanginen Paiyilae Podala Kasu Pona

Kalyana Samayal Satham Kaikarigalum Pramatham

Kangalum Kavi Paduthae Kannae Un Kangalum

Koovamal Koovum Kokilam Un Kondadum

Maanilamae Sila Manidaral Enna Maruthal Paraiyah

Manmeethu Maanum Onrae Prathanam

Nilave Neethan Thoothu Sellayao

Oorar Urangayile Utrarum Thongayile Nalla Pambu

Ponnana Vazhvu Managi Ponal Thuyaram

Pottukitta Rendu Paerum Sathae Pottukanum

Purusan Veettil Vazhapogum Pennae Thangachi

Ulavum Thendral Katrinilae Odam

Vaanameethil Yenthi Odum Venilavae

Vaarai Nee Vaarai ogum Idam Vegu Thooram

Vazhkkaiyin Padam Ooridum Odum

Velli Anname Varayao Entha Vedikaiyai Nee Parayo

KALAIVENTHAN
5th July 2015, 05:43 PM
நன்றி ரவி சார். எல்லாமே அருமையான பாடல்கள். சொல்ல மறந்து விட்டேன். நீங்கள் ஒவ்வொரு நாளும் குட்மார்னிங் பதிவு போடும்போது தேர்ந்தெடுக்கும் படங்கள் அருமை. அப்புறம்..... நல்லவர்களின் குட்மார்னிங் என்றுமே வீணாகாது சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

sivajisenthil
5th July 2015, 08:37 PM
பாடகக் கோமாளிகளின் ஊடகப் பார்வையில் கோமான்களின் (வாழ்க்கை) நாடகங்கள் !!

இதுவும் ஒரு (வி)/(சொ)ல்லம்புகளால் மனத்தைக் கவ்வும் விதுர பாணமான மதுர கானமே ! ! படித்தால் மட்டும் போதுமா


உலகம் ஒரு நாடக மேடைதான். இறைவனின் இயக்கத்தில் நாமெல்லாம் பொம்மலாட்ட நடிகர்களே!சர்க்கஸ் கோமாளிகளின் slapstick கோமாளித்தனமும் நாம் கவலை மறந்து களித்திடவே!

நீர்க்குமிழி வாழ்க்கையில் உள்ளம் செய்யும் கோமாளித்தனங்களை எப்படி வகைப்படுத்துவது ?!படிப்பினால் பதவிகளால் பணத்தால் குணத்தால் பண்பால் அன்பால் அறிவால் ...எத்துணை சர்க்கஸ் ட்ரபீஸ் தாவுதல் போல நிலையற்ற ஏற்றத்தாழ்வுகள்? பணமிருந்தும் படிப்பில்லையேல் படித்த மனைவியின் கண்களுக்கு கணவனும் கோமாளியே !!!

அதிகம் பிரபலமாகாத நகைச்சுவை நடிகர்களுக்கும் பாடல் கருத்தினை மையப்படுத்திட screen space அளித்து பதைபதைப்பான பரிதவிப்புடன் தர்மசங்கடம் சேர்ந்த சோர்ந்த மௌனமான உடல்மொழியிலே தனது பாத்திரத்தின் மன உளைச்சல்களை வெளிப்படுத்துவதில் உச்சம் காணும் நடிகர்திலகத்துடன் குறைவற்ற நடிப்பினை நிறைவாக நல்கிடும் ராஜசுலோச்சனா!!

வாழ்க்கைப் புதிருக்கு ஒரு வகையான பொருள் பொதிந்த பாடல் வரிகள்......படித்தால் மட்டும் போதுமா....

அழுகிற கூட்டத்தின் நடுவில் சிரிப்பவர் கோமாளி.......அறிவற்ற கூட்டம் அருகில் இருந்தால் அறிஞனும் கோமாளி .....

நான்கு கோமாளிகளின் கணிப்பில் இரண்டு ஏமாளிகள் !!

https://www.youtube.com/watch?v=Eeod3MiL-YQ

g94127302
5th July 2015, 09:14 PM
வருக வருக செந்தில் சார் - நீங்கள் வந்த இடம் நல்ல இடம் ! உங்களின் கற்பனை நயத்தை எண்ணி நான் வியக்காத நாளே இல்லை - சமீபத்தில் உங்கள் ஹெல்மெட் பதிவுகள் - மிகவும் ரசிக்கக்கூடியதாக இருந்தது - என் சிறிய வேண்டுகோள் , நேரம் கிடைக்கும் போது இங்கும் வந்து உங்கள் அருமையான பதிவுகளை போட வேண்டும் - இது எங்கள் எல்லோர் விருப்பமும் கூட .

நெஞ்சத்தை வருடும் " பாலா" பதிவுகள் ," ஏன் " இதுவரை ரசிக்காமல் போய்விட்டோம் இந்த பாடல்களை என்று ஏங்க வைத்துவிடும் திரு வாசுவின் தீவிர உழைப்பில் மலரும் பதிவுகள் ;

திரு கோபாலின் ஆங்கில படங்கலைப்பற்றிய அதிரடி அலசல்கள்;

கண்ணித் தீவாக அருமையாக திரு கல்நாயக் அவர்களின் கை வண்ணத்தில் வளரும் "பூக்களின் ஆனந்த நடனம் ;

"என்னமோ போங்க " என்று விட்டு விடாமல் எங்களை கட்டிப்போட்டு தன் பதிவுகளால் மயங்க வைக்கும் திரு சின்ன கண்ணனின் ராஜாங்கம் ;

திரு கிருஷ்ணாஜி அவர்களின் அட்டகாசமான கண்ணனைப்பற்றிய ஆராதனைகள் ;

திரையில் பக்தி- ராஜேஷ் அவர்களின் அருமையான அலசல் ;

படிக்க படிக்க திக்கட்டாத ராகவேந்திரா அவர்களின் திலக சங்கமம் ;

சமூக சிந்தனைகளை தூண்டிவிடும் "கலை " அவர்களின் பதிவுகள் ;

ஓடிவந்து மனமார பாராட்டும் திரு முரளி அவர்களின் சிந்தனைகள் ;

அருமையாக ரசித்து பாராட்டத்தவறாத திரு ஆதிராம் அவர்களின் எண்ண ஓட்டங்கள் ;

திரு ராஜ் ராஜ் அவர்களின் " மலரும் நினைவுகள் ;

திரு rd அவர்களின் அருமையான சிந்தனைகள் ;

திரு வினோத் அவர்களின் திடீர் வருகை & பதிவுகள் ;

திரு குமார் அவர்களின் அருமையான எண்ண ஓட்டங்கள் ;

திரு யோகேஷ் அவர்களின் அற்புத பங்களிப்பு , தகுந்த ஆவணங்களுடன் ;

திரிக்கு வெளியே இருந்துகொண்டு அனைத்து பதிவுகளையும் பொறுமையாகப்படித்து அந்த பதிவாளர்களை மனமுவந்து எதையும் திரும்பி எதிர்பார்க்காமல் பாராட்டும் திரு கோபு அவர்கள் ;

இப்படி இந்த திரிக்கு தன்னையே அர்பணித்துக்கொண்டவர்கள் நிறைந்த இடம் இது .

உங்கள் வருகை இந்த திரியை இன்னும் பலப்படுத்தும் என்பதில் கடுகளவும் சந்தேகம் இல்லை

g94127302
6th July 2015, 06:24 AM
Good Morning

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/IMG-20150705-WA0004_zpshzpajw2i.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/IMG-20150705-WA0004_zpshzpajw2i.jpg.html)

g94127302
6th July 2015, 06:27 AM
கருவின் கரு - 159
பாகம் 2 - தந்தை
தந்தை - மகன் பந்தம்
குழந்தை பருவம்

உண்மை சம்பவம் -23

அன்று வழக்கத்திற்கு மாறாக என் 8 வயது மகனுடன் விளையாட சிறிது நேரம் கிடைத்தது ..

" அப்பா ! இவ்வளவு கதைகள் நீ எனக்கு சொல்கிறாயே , நீ தாத்தாவிடம் இருந்து என்ன தெரிந்துகொண்டாய் ? "

" கண்ணா நான் சொல்வதெல்லாம் அவரிடம் இருந்து தெரிந்துகொண்டததுதான் ! . அவரிடம் இருந்து தெரிந்துகொண்டதில் நான் இன்னும் மறக்காமல் இருக்கும் ஒரு விஷயத்தை உனக்கு இன்று சொல்லப்போகிறேன் .

" அப்படியா ! " மிகவும் ஆர்வத்துடன் உங்களைப்போல கேட்கத்தயாரானான் .

ஒருவன் ஒரு பெரிய குருவிடம் கேட்டான் . " குருவே நீங்கள் யாரை மிகச்சிறந்த குருவாக உங்களுக்கு நினைக்கிறீர்கள் ?"

குரு சொன்னார் " பல பேர்கள் இருக்கிறார்கள் - இருந்தாலும் மூன்று பேர்கள் என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவர்கள் - அவர்களிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட பாடங்கள் மிக அதிகம் .

" யார் அவர்கள் ? எனக்கும் சொல்ல முடியுமா ?" அவன் ஆவலுடன் கேட்டான் .

சொல்கிறேன் - அந்த மூன்றில் முதல்வன் ஒருவன் திருடன் - ஒருமுறை வழிதெரியாத பாதையில் இரவு நேரத்தில் ஒரு இடத்தில் நான் மாட்டிக்கொண்டேன் - தங்குவதற்கு ஒரு இடத்தை தேடிக்கொண்டிருந்தேன் . ஒருவன் கண்களில் தென்பட்டான் - அவன் தன் வீட்டில் தங்கலாம் என்றான் - அவன் திருடன் என்றும் ஒத்துக்கொண்டான் . இரவு நேரங்களில் அவன் வீட்டில் இருப்பதில்லை . ஒரே ஒரு இரவு மட்டும் தங்க நினைத்த நான் ஒரு வாரம் அங்கேயே தங்க வேண்டிய சூழ்நிலை . தினமும் அவனிடம் என் கேள்வி இன்று "உனக்கு ஏதாவது கிடைத்ததா?" என்பதுதான் . இல்லை அய்யா - நம்பிக்கை உள்ளது - நாளை ஏதாவது கிடைக்கலாம் . அவன் நம்பிக்கை எனக்கு ஒரு பாடமாக அமைந்தது .

இரண்டாவது குரு - ஒரு நாய் - ஒரு ஓடையில் நீரைக்குடிக்க விரைந்தது - அதில் தெரியும் தன் நிழலைப் பார்த்து பயந்து விட்டது - தினமும் அதை கவனித்துக் கொண்டிருந்தேன் - தினமும் அங்கு அந்த நாய் வரும் - தன் நிழலைப்பார்க்கும் - ஓடிவிடும் . ஒரு நாள் வழக்கத்திற்கும் மேலாக அந்த நாய் திடீரென்று அந்த ஓடையில் குதித்தது - அதன் நிழல் மறைந்தது - வேண்டும் மட்டும் நீரை அருந்திவிட்டு , நீந்தி கரை சேர்ந்தது , அதன் பயமும் மறைந்துவிட்டது . என்ன துன்பங்கள் வந்தாலும் பயத்தை உதவிக்கு அழைத்துச்செல்ல கூடாது என்பதை அந்த நாயின் மூலம் கற்றுக்கொண்டேன் .

மூன்றாவது ஒரு குழந்தை - ஒரு எரியும் மெழுகு வர்த்தியை கையில் பிடித்துக் கொண்டு என் எதிரில் வந்துகொண்டிருந்தாள் . அந்த குழந்தையிடம் கேட்டேன் - " குழந்தே ! நீ பிடித்துக்கொண்டிருக்கும் மெழுகு வர்த்திக்கு எங்கிருந்து வெளிச்சம் வந்தது ? " கொஞ்சமும் தயங்காமல் அந்த குழந்தை உடனே அந்த மெழுகு வர்த்தியை ஊதி அணைத்தது . உடனே என்னிடம் " அய்யா ! இந்த மெழுகு வர்த்தியின் வெளிச்சம் போனதைப்பார்தீர்கள் . அது எங்கே போனது என்று சொல்லமுடியுமா ?" -- பொட்டில் அறைந்தது போன்று இருந்தது - என் ஆணவம் , அறியாமை அன்றே மறைந்தது . யார்கிட்டே இருந்தும் நாம் எதுவும் கற்றுக்கொள்ளலாம் என்பதை புரிந்து கொண்டேன் .. இதில் வயது வித்தியாசமே இல்லை , பார்க்கவும் கூடாது .

ஒரு வழியாக என் தந்தை சொன்ன கதையை என் மகனிடம் சொல்லி முடித்தேன் - அந்த சமயம் ஒரு தெரு நாய் அந்த பக்கம் வந்தது - அதற்க்கு வால் இல்லை . என் மகன் சொன்னான் " அப்பா , தாத்தா சொன்ன கதை மிகவும் அருமை - இதோ இந்த நாயிடம் இருந்தும் நான் ஒன்றை இன்று தெரிந்து கொண்டேன் .....

" சிரித்தேன் - வால் இல்லாத இந்த தெரு நாயிடம் இருந்து என்ன கற்றுக்கொண்டாய் ?? "

" எவ்வளவு தான் நாம் உயர்ந்தவர்களாக இருந்தாலும் யாரிடமும் தேவை இல்லாமல் வாலாட்டக்கூடாது என்பதை புரிந்துகொண்டேன் அப்பா !"

அசந்து விட்டேன் - அந்த நாயின் குரைச்சல் தான் என்னை எழுப்பி விட்டது .......

https://youtu.be/8kxAZn-8iVw?list=PLyDKwAT9o6wOLnwqq4IVMR6fAxlj4EyyI

g94127302
6th July 2015, 06:29 AM
கருவின் கரு - 160:smile2::)
பாகம் 2 - தந்தை
தந்தை - மகன் பந்தம்
குழந்தை பருவம்

பொல்லாத புன்சிரிப்பு
போதும் போதும் உன் சிரிப்பு
பொல்லாத புன்சிரிப்பு
போதும் போதும் உன் சிரிப்பு
யார் வீட்டுத் தோட்டத்திலே
பூத்ததின்த ரோஜாப்பூ
பொல்லாத புன்சிரிப்பு
போதும் போதும் உன் சிரிப்பு
யார் வீட்டுத் தோட்டத்திலே
பூத்ததின்த ரோஜாப்பூ
பொல்லாத புன்சிரிப்பு

மன்கையரைப் பார்த்ததுண்டு
மனத்தைக் கொடுத்ததில்லை
மலர்களை பார்த்ததுண்டு
மாலையாய் தொடுத்ததில்லை
மணக் கோலம் பார்த்ததுண்டு
மாப்பிளையாய் ஆனதில்லை
மணக் கோலம் பார்த்ததுண்டு
மாப்பிளையாய் ஆனதில்லை
யார் வீட்டுத் தோட்டத்திலே
பூத்ததின்த ரோஜாப்பூ
பொல்லாத புன்சிரிப்பு

தெய்வம் ஒரு சாட்சி என்றால்
நேரிலே வருவதில்ல
பிள்ளை மறு சாட்சி என்றால்
பேசவே தெரியவில்லை
யாரை சொல்லி என்ன பயன்
என் வழக்கு தீரவில்லை
யாரை சொல்லி என்ன பயன்
என் வழக்கு தீரவில்லை
யார் வீட்டுத் தோட்டத்திலே
பூத்ததின்த ரோஜாப்பூ
பொல்லாத புன்சிரிப்பு

உன் வீட்டுத் தோட்டத்திலே
ஒரு மரம் தனி மரமாம்
தனி மரம் தவிக்க கண்டு
தளிர் கோடி தழுவியதாம்
ஒன்றுக்கொன்று மாலையிட்டு
அன்று முதல் பழகியதாம்
ஒன்றுக்கொன்று மாலையிட்டு
அன்று முதல் பழகியதாம்
பழகிய பழக்கத்திலே
பூத்ததின்த ரோஜாப்பூ

பொல்லாத புன்சிரிப்பு
போதும் போதும் உன் சிரிப்பு
யார் வீட்டுத் தோட்டத்திலே
பூத்ததின்த ரோஜாப்பூ
பொல்லாத புன்சிரிப்பு

https://youtu.be/pGa38sIVtxs

g94127302
6th July 2015, 07:57 AM
கருவின் கரு - 161
பாகம் 2 - தந்தை
தந்தை - மகன் பந்தம்
குழந்தை பருவம்

https://youtu.be/wOcgJ3lK_VI

kalnayak
6th July 2015, 03:26 PM
நண்பர்களுக்கு வணக்கம். நேரமின்மையால் வர முடியவில்லை. மன்னிக்கவும்.

கல்நாயக்,
பூ பாடல்களை மீண்டும் தொடங்கியிருப்பதற்கு நன்றி. இறைவன் என்றொரு கவிஞன் பாடலை இதற்கு முன் நீங்கள் கேட்டதே இல்லையா? ஆச்சரியமாக இருக்கிறது. ஹிட்டான பாடல்தானே. ஆமாம்........... சின்னக்கண்ணனை ஏன் மறக்க நினைக்கிறீர்கள்? உங்கள் பதிவை (எண்.1403) பாருங்கள். இங்கே நிறைய எழுத உற்சாகம் கொடுக்கும் சி.க.வை என்னால் மறக்காமல் இருக்க முடியாது.. என்று கூறியிருக்கிறீர்களே? சி.க.வை என்னால் மறக்க முடியாது என்றல்லவா இருந்திருக்க வேண்டும்? சின்னக்கண்ணன் மீது உங்களுக்கு என்ன கோபம் அவரை மறப்பதற்கு? (சும்மா விளையாட்டுக் சொன்னேன்) சரியாக மாற்றி விடுங்கள்.
அப்புறம்... எனக்கு என்றும் 18 இல்லை. ரொம்ப பொறாமைப்பட வேண்டாம். இன்னும் சில மாதங்களில் எனக்கு 19 வயது பிறக்கப் போகிறது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

கலைவேந்தன்,

சி.க. பற்றி நான் தவறாக கொடுத்ததை சுட்டிக் காட்டியதற்கு நன்றி. திருத்திவிட்டேன்.

அப்புறம் உங்கள் வயதைப் பற்றி... உங்களோடு சற்றே பழம் விட்டு சொல்லிவிடுகிறேன். ஒரு ஆங்கிலப் படத்தில் கதாநாயகனுக்கு ஒரு வருடத்தில் ஆறு வருட வளர்ச்சி வளர்ந்து விரைவில் முதியவனாகி விடுகிறான். ஆனால் இங்கே உங்களுக்கு மாற்று விதமாக இருக்கிறதே... உங்களுக்கு என்ன ஒவ்வொரு ஆறு வருடத்திற்கும் ஒரு வயது கூடுகிறதா? சரி சரி பரவாயில்லை அனுபவியுங்கள். உங்களோடு விவாதத்திற்கு வரவில்லை. இன்னும் இதைப் பற்றி என்னுடைய சிந்துபாத் பேட்டி தொடரும்போது பேசுகிறேன்.

kalnayak
6th July 2015, 03:35 PM
ரவி,

மூன்றாம் பாகத்தில் பெரும்பாலும் சி.கவும் நானும் இருவராய் செய்த பணியை, தாங்கள் 4-ஆம் பாகத்தில் தற்போது செய்து கொண்டு இருக்கிறீர்கள். அவ்வப்போது வாசு அவர்கள் புயலாய் வந்து பல பதிவுகள் முடிக்கிறார். அவர் இருந்தாலும், பணியால் பதிவிடா விட்டாலும் நீங்கள் பதிவுகளை தொடர்கிறீர்கள். ஏதாவது புதிதாக சொல்லி உங்கள் பதிவுகளை பாராட்டவேண்டுமேன்று தேடிக் கொண்டு இருக்கிறேன். நீங்களே சொல்லுங்களேன், உங்கள் பதிவை நான் புதிதாக எப்படி பாராட்டுவது எப்படி என்று. வித்தியாசமாக இருக்கிறதா? இன்னும் உங்களின் பல பதிவுகளை படிக்க வேண்டும். படித்து விட்டு சொல்லுகிறேன். பணி அதிகமானதால் எனது பங்கு பெருமளவு குறைந்து விடுகிறது. மன்னிக்கவும். சிறிது நாட்களில் சரியாகி விடும் என்று நினைக்கிறேன்.

g94127302
6th July 2015, 04:56 PM
ரவி,

மூன்றாம் பாகத்தில் பெரும்பாலும் சி.கவும் நானும் இருவராய் செய்த பணியை, தாங்கள் 4-ஆம் பாகத்தில் தற்போது செய்து கொண்டு இருக்கிறீர்கள். அவ்வப்போது வாசு அவர்கள் புயலாய் வந்து பல பதிவுகள் முடிக்கிறார். அவர் இருந்தாலும், பணியால் பதிவிடா விட்டாலும் நீங்கள் பதிவுகளை தொடர்கிறீர்கள். ஏதாவது புதிதாக சொல்லி உங்கள் பதிவுகளை பாராட்டவேண்டுமேன்று தேடிக் கொண்டு இருக்கிறேன். நீங்களே சொல்லுங்களேன், உங்கள் பதிவை நான் புதிதாக எப்படி பாராட்டுவது எப்படி என்று. வித்தியாசமாக இருக்கிறதா? இன்னும் உங்களின் பல பதிவுகளை படிக்க வேண்டும். படித்து விட்டு சொல்லுகிறேன். .

கல்நாயக் சார் , நீங்கள் என் பதிவுகள் எல்லாவற்றையும் படிப்பதே எனக்கு பாராட்டுக்கள் அளிப்பதாகும் - இதைத்தவிர எனக்கு தனியாக வேறு பாராட்டுக்கள் தேவை இல்லை - எனக்கும் உங்களைப்போல வேலை பளு அதிகமாக இருக்கின்றது - ஆனாலும் இங்கு வந்து பதிவுகள் போடுவதால் stress level அதிகமாக குறைகின்றது , மனதிருக்கும் ஒரு இனம் புரியாத இன்பமும் கிடைக்கிறது . In my humble submission , this thread is a great unwinding platform for people who are entangled in ocean of work load. ஒன்றுமே சாதிக்காமல் போனாலும் , எதையோ சாதித்து விட்டதைப்போன்ற ஒரு மனநிலை .

சிறிது நாட்களில் உங்கள் வேலை பளு குறைந்துவிடும் , உங்களுக்கு பதிவுகள் போட நேரம் கிடைக்கும் என்பதை அறிய மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது .

vasudevan31355
6th July 2015, 08:00 PM
கலை சார்,

கொஞ்சம் இடைவெளிக்குப் பின் உங்கள் பதிவுகளைப் பார்த்ததும் மிகவும் உற்சாகமடைந்தேன். அடைந்தோம். தங்களது பாராட்டிற்கு என் நன்றிகள்.

நண்பர்கள் அனைவருடைய பதிவுகளையும் படித்து இன்புற்று அனவைருக்கும் பாராட்டுத் தெரிவித்ததற்கும் நன்றி!

தங்களது வழக்கமான முத்திரையோடு கூடிய சதாரம் படப் பாடல் அலசலுக்கு நன்றிகள். யாருமே இதுவரை தொடாத பாட்டை நீங்கள் தொட்டு விட்டதால் மிகவும் மகிழ்ச்சி எனக்கு. இப்போதைக்கு அது மிகவும் அபூர்வ பாடல். ஒருகாலத்தில் கலக்கிய பாடல்தான். தகப்பன் தவறால் அவனோடு அவன் குடும்பமே நிர்மூலமான நிகழ்வைப் படித்ததும் மிகவும் வேதனையாக இருந்தது.

எண்ணாத துன்பம் எது வந்த போதும்
எதிர் கொள்ளத் தயங்காதே
எளியோருக்காக நீ செய்த தியாகம்
இதை லோகம் மறவாதே
(லோகம் பற்றி லோகநாதன் பாடியது நம் யோகமே!)

இந்த இடத்தில் அற்புதமான இசை சங்கதி ஒன்று வந்து விழும்.

http://www.inbaminge.com/t/s/Satharam/

'மெய்யன்பே எந்நாளும் அழியாத இன்பம்
அதற்கீடு வேறில்லை'

உண்மையே!

நல்ல பாடலை நினைவுபடுத்தியமைக்கு நன்றிகள் கலை சார்.

இன்னொன்று. நம் சின்னா இல்லாமல் திரி சிறிது களை இழந்திருப்பதும் மறுக்க இயலாத உண்மை. இது பற்றி சின்னாவுடன் போனில் பேசினேன். அவர் இந்தியா வந்திருப்பதால் பயங்கர பிஸி. என்னால் கூட பார்க்க இயலவில்லை. விரைவில் திரியில் வந்து கலக்குவார். அவர் டூரில் இருந்தாலும் திரியின் விவரங்களை அவர் என்னிடம் கேட்டுத் தெரிந்து கொண்டே இருந்தார். திரியின் மீது அவருக்கிருந்த ஈடுபாட்டை நினைத்து பூரித்துப் போனேன். சின்னாவுக்கு என் சிந்தை குளிர்ந்த நன்றிகள்

நண்பர் கல்நாயக்கும், ரவி சாரும் அருமையான பங்களிப்பை நல்கி வருகிறார்கள். குறிப்பாக ரவி சார். தன் கடமையை அற்புதமாக செவ்வனே செய்து வருகிறார். அவருக்கும் பாராட்டுக்கள்.

நன்றி கலை சார்.

vasudevan31355
6th July 2015, 08:25 PM
http://ttsnapshot.biz/out.php/i25847_thikku-theriyatha-kattil-1972-04.png?id=9df04524bff7d4fe313934313932http://ttsnapshot.biz/out.php/i25848_thikku-theriyatha-kattil-1972-05.png?id=9df04524bff7d4fe313934323335
http://ttsnapshot.biz/out.php/i25846_thikku-theriyatha-kattil-1972-03.png?id=9df04524bff7d4fe313934323538http://ttsnapshot.biz/out.php/i25849_thikku-theriyatha-kattil-1972-06.png?id=9df04524bff7d4fe313934323830

நண்பர் கல்நாயக்,

பூ பாடல்களில் அருமையான பாடலான 'பூப் பூவா பறந்து போகும்' பாடலை கன்னித் தீவு சுவாரஸ்யத்துடன் இணைத்து அளித்ததற்கு பாராட்டுக்கள்.

'திக்குத் தெரியாத காட்டில்' படமே பாடல்களில் பட்டை உரித்த படம்.

கேட்டதெல்லாம் நான் தருவேன் எனை நீ மறக்காதே (பாலாவின் வரிசையில் வரும்)

பாட்டுக்காரன் பாடிப் பார்க்கலாம்

குளிரடிக்குதே கிட்ட வா கிட்ட வா

காற்றடிக்கும் திசையினிலே காற்றாடி போகுமப்பா (சீர்காழியின் தனி முத்திரை)

என்று எந்நாளும் இனிக்கும் எவர்க்ரீன் பாடல்கள்.

http://img6a.flixcart.com/image/av-media/movies/5/g/w/pillai-selvam-400x400-imadbnfge2ka5pdp.jpeghttp://sim.in.com/3fd0d839690779672f837fbf82befa2d_ls_lt.jpg

இந்தப் படத்தைப் பார்த்தால் ரங்காராவ், தேவிகா, மாஸ்டர் ராமு நடித்த 'பிள்ளைச் செல்வம்' (தெலுங்கிலிருந்து இறக்குமதி) படம் நினைவுக்கு உடனே வரும். இந்தப் படத்தில் 'மாஸ்டர் ராமு' தன்னந் தனியாக காட்டில் அலைவான். 'திக்குத் தெரியாத காட்டில்' படத்தில் பேபி சுமதி காட்டில் அலைவாள்.

இந்தப் படத்தில் நாகேஷ், வி.கே.ஆர் இருவரும் காவலர்களாக காட்டில் அலைந்து கிச்சு கிச்சு மூட்டுவார்கள். 'பல்லாண்டு வாழ்க' படத்தில் பார்த்த முரட்டு நம்பியாரை முன்னமேயே கிட்டத் தட்ட அதே கோலத்தில் இப்படத்தில் காணலாம்.

முத்துராமன், ஜெயலலிதா, சச்சு, வி.கோபாலகிருஷ்ணன், மாலி, நாகேஷ், வி.கே.ஆர். நம்பியார், ராகவன் என்று ஏகத்துக்கும் நட்சத்திரக் கும்பல்.

பிள்ளைகள் தனியாக காட்டில் அலைவது போன்று படங்கள் வந்து அப்புறம் இளசுகள் இரண்டு மட்டும் காட்டில் சிக்கிக் கொண்டு ஆபாசக் கலப்புடன் இளமை விருந்து படைத்த பல படங்கள் வர ஆரம்பித்தன. (புளூ லாகூன், கிழக்கு ஆப்பிரிக்காவில் ஷீலா, எல்லோரையும் குஷிப்படுத்திய தனி ரக 'ஜம்பு' என்று)

நல்ல முன்னேற்றம்தான்.

இதே தலைப்பில் ரமணிச்சந்திரன் எழுதி ஒரு நாவலும் வெளிவந்தது.

sivajisenthil
6th July 2015, 08:34 PM
பக்கமாக வந்த பின்னும் வெட்கமாகுமா ......இங்கே பார்வையோடு பார்வை சேர தூது வேண்டுமா...

ஸ்ரீதரின் தூரப் பார்வையில் ஜெமினி வைஜயந்தியின் கிட்டப் பார்வை !

நமது ஓரப் பார்வையில் மதுரகானம்.....

பாட்டுப் பாடவா.......... பார்த்துப் பேசவா
பாடம் சொல்லவா ,,,,,,,,,,,,பறந்து செல்லவா
பால் நிலாவைப் போல வந்த பாவையல்(ல)வா
நானும் பாதை தேடி ஓடி வந்த காளையல்லவா


புதுமை இயக்குனர் என்று புகழின் உச்சியில் ஏறி நின்ற ஸ்ரீதரின் இயக்கத்தில் வந்த அனைத்துப் படங்களிலும் பாடல்கள் தேனிசை ரீங்காரமிடும் மதுர கானங்களே !

கல்யாண பரிசு போன்ற காலத்தினால் கரையாத கனமான கதைக் களம் மட்டுமல்லாது தன்னால் என்றென்றும் சிரித்து மகிழ வைக்கும் தரமான நகைச்சுவைத் ததும்பலையும் சம பங்கில் தர இயலும் என்பதை தேன் நிலவு, காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு படங்களின் மூலம் நிலைப்படுத்தினார் ஆரம்பகால தயாரிப்புக்களில் இசையில் ஏ எம் ராஜா இணைவில் மறக்க முடியாத பாடல்களில் கண்ணியமான காதலை படம் பிடித்தார்.

ஜனரஞ்சகமான பொழுதுப் போக்குப் படமான தேன் நிலவில் பாட்டுப் பாடவா...பார்த்துப் பேசவா..பாடல் காட்சியமைப்பும், இதமான வண்ணத்தில் எடுக்கவில்லையே என்று ஏங்க வைத்த வெளிப்புற இயற்கையழகுக் காட்சிகளும், இளமைத்துள்ளல் மங்கை வைஜயந்தியுடன் காதல் மன்னரின் பதமான காதல் பதிவுகளுடன் கூடிய ராஜாவின் மென்மைக் குரல் குழைவும்...என் மனத் திரையில் என்றும் பசுமையான மதுர கானப் பதிவே!!

மேகவண்ணம் போல மின்னும் ஆடையினாலே மலை மேனியெல்லாம் மூடுதம்மா நாணத்தினாலே

https://www.youtube.com/watch?v=NX696MhkpLg

vasudevan31355
6th July 2015, 08:42 PM
கல்ஸ்,

'திக்குத் தெரியாத காட்டில்' படத்தில் 'மாஸ்டர்' ராமு காட்டில் தனியாக அலைந்து துன்புறும்போது பாடகர் திலகம் பாடும் ஒரு பாடல் பின்னணியில் ஒலிக்கும்.

பாம்பு ஒன்று கொடுமையாக விஷத்தை ராமு கண்ணில் பீய்ச்சி அடித்துவிட, அந்தப் பையன் கண்களை இழந்து விடுவான். பாலைவன மணல் திட்டுகளில் கையில் பொம்மையுடன் அலைந்து விலங்குகள் துரத்த ரொம்பவும் கஷ்டப்படுவான். பரிதாபமாக இருக்கும். மனதை உருக வைக்கும் அருமையான பிக்சரைசேஷன்.

'தெய்வம் இறங்காதா
உன் முகம் பார்க்காதா'

இதையும் பார்த்து விடுங்களேன்.


https://youtu.be/Iz9UKziVRbg

vasudevan31355
6th July 2015, 09:34 PM
சிவாஜி செந்தில் சார்!

மதுர கானங்கள் திரிக்கு மனமகிழ்ச்சியுடன் தங்களை வரவேற்கிறேன். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக விதவிதமான அசத்தல் தலைப்புகளில் நடிகர் திலகத்தின் புகழ் பாடும் தங்களின் பாணியை எண்ணி வியந்தபடியே இருப்பேன்.

இப்போது உங்கள் திறமைப் பார்வை மதுரகானங்களில் பதிய ஆரம்பித்திருக்கிறது. மிகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.

உங்கள் பாடல் கேட்டு பரவசத்தில் 'பறந்து செல்லவா?' என்று கேட்கத் தூண்டுகிறது.

பாடகக் கோமாளிகளின் ஊடகப் பார்வையில் கோமான்களின் (வாழ்க்கை) நாடகங்கள் !! அற்புதம்.

எனக்கு மிகவும் பிடித்த பாடல். சதன், நம்பிராஜன், வீரப்பன் ஏன்று ஜாலி களை கட்டும்.

பீம்சிங் படங்களில் இந்த மாதிரிப் பாட்டுக்கள் நிச்சயம் அவருடைய ஒவ்வொரு படத்திலும் இடம் பெறும்.

'படிச்சதையெல்லாம் பயன்படுத்தாதவன் முதல்தர கோமாளி
ரொம்பப் படித்தவன் போலே நடிப்பவன் உலகில் எந்நாளும் கோமாளி'

என்று கதைக்குப் பொருந்திய வரிகள் காட்சிகளினூடே இணைந்து வரும் அந்த சொர்க்க தினங்கள் எங்கே?

'படித்தால் மட்டும் போதுமா?' என்று இன்றும் கேட்கத்தான் தோன்றுகிறது.

நன்றி செந்தில் சார். நம் இறைவனாரின் ஆசீர்வாதம் மிகப் பெற்றவர் நீங்கள்.

vasudevan31355
6th July 2015, 09:46 PM
ரவி சார்!

உங்கள் பதிவுகள் எல்லையில்லா ஆனந்தத்தை அளிக்கின்றன. தந்தைக் கருவில் இத்தனைப் பாடல்களா என்று ஆச்சர்யம் மேலோங்குகிறது.

கற்பூரக் கதை, கண்ணன் வந்தான் என்ற உணர்ச்சிக் குவியல்களின் சங்கமப் பாடல், செந்தில் சாரை வரவேற்று அனைவருக்கும் கௌரவம், மெழுகுவர்த்தி குழந்தைக் கதை, எனக்கு ரொம்பப் பிடித்த பாடலான பொல்லாத புன்சிரிப்பு, (இந்தப் பாடலை 'இன்றைய ஸ்பெஷல்' தொடரில் எழுதி இருக்கிறேன். ரவி, உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?) நான் பெத்த மகனே ஜாலி என்று திரியின் நாயகராக ராஜநடை போடுகிறீர்கள். உங்கள் அயராத உழைப்பிற்கு என் அசந்து போன நன்றிகள். பாராட்டுக்கள்.

sivajisenthil
6th July 2015, 10:23 PM
நன்றிகள் வாசு சார்
மதுரகானங்கள் திரிக்குப் பார்வையாளனாக மட்டுமே வந்திருக்கிறேன் உங்கள் எழுத்து ஜாலம், ரவியின் ஈடுபாடு, சின்னக் கண்ணரின் கலைவாணத்துவம், கலைவேந்தரின் (எ)/(வ)ண்ணச்சிதறல்கள் முரளி/ராகவேந்தர்/கோபால்/ராஜேஷ் வர்ணனைகள், கல்நாயக்கின் தெளிந்த நீரோட்டம், ..... உண்மையில் நான் கொஞ்சம் 'இரும்படிக்கும் இடத்தில் ஈ' என்று சற்று தயக்கத்துடனேயே என் பதிவை அளித்தேன். ஜாம்பவான்களின் உள்ளம் திறந்த நல்வரவு கூறல் எனக்கு மதுரமாக இருக்கிறது !
இசை அவுரங்கசீப்பாக இருக்கும் நானும் மாறுதல் விரும்பியே உங்கள் பாதையில் பயணிக்க விழைகிறேன்! களம் வேறு என்பதை மனதில் இருத்தி!!
அன்புடன் செந்தில்

g94127302
7th July 2015, 08:20 AM
Good Morning

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/gm1_zpsbcuta4lp.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/gm1_zpsbcuta4lp.jpg.html)

sivajisenthil
7th July 2015, 08:22 AM
ரவி சார்
உங்கள் நல்வார்த்தைகள் எனக்கு சத்து டானிக்கே. நீங்கள் போட்டுக் கொடுத்த கோட்டில்தான் நானும் ரோடு போட்டுக் கொண்டிருக்கிறேன் என்பதை நன்றியுடன்
நினைவு கூர்கிறேன்.
உங்களுடன் இணைவதில் பெருமைகலந்த மகிழ்வே!
அன்புடன் செந்தில்

g94127302
7th July 2015, 08:27 AM
கருவின் கரு - 162
பாகம் 2 - தந்தை
தந்தை - மகன் பந்தம்
குழந்தை பருவம்

உண்மை சம்பவம் 24

அப்பா , ஒரு சின்ன சந்தேகம் - என் 7 வயது மகன் அருண் நான் ஆபீஸ் புறப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் குறுக்கே வந்தான் - அவன் சந்தேகங்களை சேர்த்தால் ஒரு பெரிய புத்தகமே போட்டுவிடலாம் . அருண் இன்று எனக்கு போர்டு மீட்டிங் - evening உன் கேள்விக்கு பதில் சொல்லுகிறேன் ... நழுவப்பார்த்தேன் . " அப்பா நான் இன்னும் கேள்வியே கேட்கவில்லை - எப்படி நீங்கள் ஒரு கேட்க்காத கேள்விக்கு பதில் சொல்ல முடியும் ? " அதிகமாக வழிந்தேன் - வழிவது இதுவரை மனைவியிடம் மட்டும் தான் - முதல் தடவை மகனிடமும் ஏற்பட்டது .

" ம்ம் .. சொல் ! என்ன சந்தேகம் ? - பதில் evening தான் கிடைக்கும் "

" ஒருவன் எப்படி அப்பா ஞானி யாக முடியும் ? " ( மனதிற்குள் சொல்லிக் கொண்டேன் - உன் கேள்விகளுக்கு பதில் சொன்னாலே , ஞானி ஆகிவிடலாம் ) ..

ஓகே , சாயிந்திரம் பதில் கிடைக்கும் . உடனே வண்டியை 4வது கியரில் ஸ்டார்ட் செய்தேன் ----

சின்ன கேள்விதான் - அனால் அவனுக்கு புரியும் வண்ணம் எப்படி சொல்வது ? வழி நெடுக இதே யோசனைதான் - வழியில் இருந்த கிருஷ்ணர் கோவிலில் வண்டியை நிறுத்தி - " கேட்பதும் கொடுப்பவனே கிருஷ்ணா ! நீதான் எனக்கு ஒரு நல்ல பதில் சொல்ல வேண்டும் ...." கிருஷ்ணன் சிரித்தான் - அவன் சிரிப்பில் அருணைப் பார்த்தேன் ....

இரவு 7மணி - வீடு திரும்பினேன் - அருண் எனக்காக காத்துக்கொண்டிருந்தான் - அப்பா ரெடி யா ?? - அவன் ஆர்வத்தை குறைக்க மனம் வரவில்லை .. அவனை தூக்கிக்கொண்டேன் - பதில் இருக்கிறது கண்ணா - உனக்கு ஒரு சிறிய கதை மூலமாக என் பதிலை சொல்கிறேன் -------


ஒரு சமயம் ஸ்ரீகிருஷ்ணர், அவரது சகோதரர் பலராமர், அர்ஜுனன் இம்மூவரும் ஒரு அடர்ந்த வனத்தின் வழியாகச் சென்றனர். இரவாகி விட்டது. மூவரும் ஒரிடத்தில் தங்கிவிட்டு விடிந்ததும் செல்லலாம் என்று எண்ணினர். வனத்தில் துஷ்ட மிருகங்கள் இருக்கும் என்பதால் மூவரும் ஒரு சேரத் தூங்கக்கூடாது என்றும், ஜாமத்திற்கு ஒருவராகத் காவல் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்தனர்.

அதன்படி ஸ்ரீகிருஷ்ணரும், பலராமரும் தூங்கச்செல்ல, அர்ஜுனன் காவல் இருந்தான். அப்போது திடீரென புகை மண்டலம் சூழ்ந்தது. அதிலிருந்து ஒரு பயங்கர உருவம் வெளிப்பட்டது. அகன்ற நாசியும், தூக்கிய பற்களும், முட்டைக் கண்களுமாக இருந்தது அவ்வுருவம். மரத்தடியில் இருவர் தூங்குவதையும், ஒருவன் காவல் இருப்பதையும் கண்ட அவ்வுருவம் தூங்கும் இருவரின் அருகில் சென்றது.

அதைக்கண்ட அர்ஜுனன் கோபத்துடன் அதைத் தடுத்தான். அப்போது அவ்வுருவம் அவ்விருவரையும் தான் கொல்லப்போவதாகவும் அதற்கு அர்ஜுனன் துணை செய்ய வேண்டும் என்றும் கேட்டது. அதைக்கேட்டு கோபம் மிகக்கொண்டு அவ்வுருவத்தைத் தாக்கினான். அர்ஜுனனின் கோபம் அதிகமாக அதிகமாக அவ்வுருவத்தில் பலமும் அதன் வடிவமும் பெருகியது.அர்ஜுனன் ஆக்ரோஷத்தோடு அதனுடன் போரிட அது பூதாகாரமாய் விளங்கியது. அர்ஜுனனை பலமாகத் தாக்கிவிட்டு மறைந்தது.

இரண்டாம் ஜாமம் தொடங்கவும் பலராமரை எழுப்பிவிட்டு அர்ஜூனன் தூங்கச் சென்றான். பலராமர் காவல் இருந்தார். அப்போது மீண்டும் அவ்வுருவம் அங்கு தோன்றி அர்ஜுனனிடம் கூறியதுபோல பலராமரிடமும் கூறியது. அதைக்கேட்டு கோபம் கொண்ட பலராமர் அதனுடன் சண்டையிட்டார். அவ்வுருவம் அடிபணிவதாய் இல்லை. பலராமரின் கோபம் அதிகமாக அதிகமாக அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் பெரிதானது. பின் பலராமரையும் பலமாகத் தாக்கிவிட்டு அவ்வுருவம் மறைந்துவிட்டது.

மூன்றாம் ஜாமம் தொடங்கவும் பலராமர் கிருஷ்ணரை காவலுக்கு எழுப்பிவிட்டு படுக்கச் சென்றார். அப்போதும் அப்பொல்லாத உருவம் தோன்றியது. அதைப்பார்த்த கிருஷ்ணர் கடகடவெனச் சிரித்தார். ஏன் சிரிக்கிறாய்? என்றது அவ்வுருவம். உனது தூக்கிய பற்களும், அழகான முட்டைக் கண்களையும் கண்டுதான், என்றார் சிரிப்பை அடக்க முடியாமல். அவர் தன்னைக் கேலி செய்வதைக் கண்டு ஆக்ரோஷத்துடன் அது சண்டை போட்டது.கிருஷ்ணரின் பார்வையிலே கருணையும் அன்பும் ஆறாக ஓடியது .

கிருஷ்ணரோ புன்னகையை மாற்றாமலே, சண்டை போட்டார். கிருஷ்ணர் சிரிக்கச் சிரிக்க அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் குறைந்துகொண்டே வந்தது. கடைசியில் அவ்வுருவம் சின்னஞ்சிறு புழுவாக மாறி தரையில் நெளிந்தது. ஸ்ரீகிருஷ்ணர் அப்புழுவை எடுத்து ஒரு துணியில் முடிந்து வைத்தார்.

பொழுது விடிந்தது. பலராமரும், அர்ஜுனனும் எழுந்தனர். இருவரும் இரவில் ஒரு பயங்கர உருவம் வந்ததும், அவர்களைத் தாக்கியதும் அவ்வுருவம் வளர்ந்து வளர்ந்து பெரிதாகியது பற்றியும் பேசினர். அப்போது கிருஷ்ணர் துணியில் முடிந்திருந்த புழுவைக் காட்டி, நீங்கள் இருவரும் சண்டை போட்ட உருவம் இதுதான். நீங்கள் அதனுடன் சண்டை போடும் போது கடுமையாகக் கோபப்பட்டீர்கள். உங்கள் கோபம் அதிகரிக்க அதிகரிக்க அதன் பலமும் வடிவமும் அதிகரித்தது. நான் சிரித்துக்கொண்டே சண்டை போட்டதால் இதன் பலமும் வடிவமும் குறைந்து கொண்டே வந்து புழுவாக மாறிவிட்டது. வம்பு சண்டைக்கு வருபவனை விட்டு புன்னகையோடு வெளியேறி விட்டால், அவன் புழுவுக்கு சமமாகி விடுவான். கோபத்தைக் குறைத்துக்கொண்டு அன்பை காட்டுபவனே ஞானி, என்றார்.

அருண் முகத்தில் என்றும் பார்க்காத ஒரு வெளிச்சம் , திருப்தி , சந்தோஷம் - அப்பா - நீ எனக்கு கிடைத்தபின்பும் இந்த கேள்வியை நான் உன்னிடம் கேட்டிருக்க கூடாது ....

https://youtu.be/sOXXHi2fNFQ

g94127302
7th July 2015, 08:34 AM
கருவின் கரு - 163
பாகம் 2 - தந்தை
தந்தை - மகன் பந்தம்
குழந்தை பருவம்

ஒரு குழந்தைதான் அம்மாவையும் அப்பாவையும் இணைக்கிறது - அந்த மழலை இல்லாத வீடு, உயிர் இல்லாத வெறும் கூடு . அதே மழலை வளர்ந்ததும் தன் தவறான போக்கால் குரலை உயர்த்தும்போது உண்மையிலேயே தாயும் தந்தையும் ஒரு உயிர் இல்லாத கூடாகத்தான் ஆகி விடுகின்றனர் .........

https://youtu.be/GfM3pr4d7cw

g94127302
7th July 2015, 08:48 AM
கருவின் கரு - 164
பாகம் 2 - தந்தை
தந்தை - மகன் பந்தம்
குழந்தை பருவம்

நமக்கு கிடைத்த சில அருமைகளை நாம் என்றுமே உணர்ந்து கொள்வதில்லை - இல்லாதவைகளைப்பற்றித்தான் அதிகமாக உணர்ந்து வருத்தப்பட்டுக்கொண்டிருக்கிறோம் . நமக்கு கிடைத்த விலை மதிப்பற்ற நவரத்தனங்களை மதிக்காமல் கண்ணாடி கற்களில் பெருமை அடைகிறோம் .... அதன் மதிப்பை உணரும்போது நம் வாழ்க்கை முடிவடைந்து போகிறது ...

வெயிலின் அருமை தெரிய வேண்டுமா ? நிழலைக்கண்டு பிடியுங்கள்

காலில் போட்ட புதிய செருப்புக்கள் கடிக்கின்றனவா ? - இரண்டு கால்களும் இல்லாத ஒரு முடவனை சந்தியுங்கள் ;

பெற்றவர்கள் பாரமாகத் தெரிகிறார்களா ? அனாதைகளை பாருங்கள் - அந்த தெய்வங்களின் பரிசம் படாமல் வளரும் உடம்புகள் ;

வெற்றியின் பெருமைகளை உணர வேண்டுமா - தோல்வி அடைந்தவனை சந்தியுங்கள் ....

இதோ இந்த பெரிய குழந்தை அப்பா , அம்மா இருந்தும் அநாதை - இவன் குமறல்களை அந்த படைத்தவனிடம் சொல்லி அழுகிறான்

https://www.youtube.com/watch?v=sPFnxjnsJug

g94127302
7th July 2015, 08:51 AM
கருவின் கரு - 165
பாகம் 2 - தந்தை
தந்தை - மகன் பந்தம்
குழந்தை பருவம்

அநாதை குழந்தைகளுக்கு ஆதரவாக தந்தை போல் இருக்கும் இவன் பாடலை கேளுங்கள் - குழந்தைகளுக்கு மற்றும் அல்ல , நமக்கும் ஒரு புதிய உற்ச்சாகம் கிடைக்கும் .

https://youtu.be/yglkhIIxBf8

vasudevan31355
7th July 2015, 12:11 PM
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்

http://2.bp.blogspot.com/-HRNJSnA1-84/TenskpB9duI/AAAAAAAAAuY/mP0R6cDrGMY/s320/spb.jpg

(நெடுந்தொடர்)

15

'எங்கள் வீட்டு தங்கத் தேரில் எந்த மாதம் திருவிழா?'

http://i.ytimg.com/vi/oWh7jGp4AmM/maxresdefault.jpg

பாலாவின் தொடர் இன்று 'அருணோதய'த்தை நோக்கிப் பயணிக்கிறது.

ஆமாம். நடிகர் திலகம் நடித்த 'அருணோதயம்' திரைப்படத்திலிருந்து 'திரை இசைத் திலகம்' கே.வி.மகாதேவன் அவர்களின் இசையில் ஓர் ரம்மியமான பாடல்.

மீண்டும் பாலா, சுசீலா இணைவு. 1969-ல் வெளிவந்து நாட்டியே இரண்டுபடுத்திய 'ஆராதனா' படத்தின் மிகப் புகழ் பெற்ற பாடலான,

'Gunguna Rahe Hain Bhanwar Khil Rahi Hai
Kali Kali'


https://youtu.be/6zp7vAWY3Nk

பாடலை நினைவில் வைத்து, இப்பாடலுக்கு இசை அமைத்து தன் தனி முத்திரையைப் பதித்திருப்பார் 'திரை இசைத் திலகம்'. இந்தியில் வெளுத்து வாங்கிய இப்பாடலின் முழு டியூனையும் எடுத்துக் கொள்ளாமல் 'Kali Kali' என்ற வார்த்தையின் அருமையான டியூனை மட்டும் 'திருவிழா... திருவிழா' என்ற வார்த்தைக்கு அழகாக எடுத்து, கொஞ்சமும் கெடாமல், நல்ல இனிமையுடன் தன் சொந்த பாணியில் அற்புதமாக பாடலைத் தந்திருப்பார் மகாதேவன். பாடல் வரிகளை மிக எளிமையாக அழகாக எழுதி இருப்பார் கண்ணதாசன்.

நடிகர் திலகத்தின் தங்கையாக வரும் லஷ்மிக்கும், அவரது காதலன் முத்துராமனுக்கும் படத்தில் ஆரம்பத்திலேயே வரும் காதல் டூயட்.

நல்ல மலைப் பிரதேசத்தில் ஒற்றையாய் நிற்கும் அந்த சின்ன, சிதைந்த கட்டடத்தின் மேல் பாடல் ஆரம்பமாகும். இப்போது 'பாபாநாசம்' படத்திலிருந்து இன்னும் அதிகமாகப் புகழ் பெற்றுவிட்ட நடிகர் திலகத்தின் அந்த நெற்றியில் விழும் முடி ஸ்டைலை முத்துராமன் முன்பே முயற்சி செய்திருப்பது நன்றாகத் தெரியும்.

ஆனால் அந்த ஒரு அசல்தானே நிறைவான அழகு!

முத்துராமன் 'டி ஷர்ட்' ரேஞ்சிற்கு கரெக்ட் ஃபிட்டிங்காக மேல் உடை அணிந்திருப்பார். இப்பாடலில் கொஞ்சம் உற்சாகமாயும் நடித்திருப்பார். ஒன்றிரண்டு ஸ்டெப்ஸ் ஆட்டமும் உண்டு. லஷ்மி வழக்கம் போல முழங்கை அளவு ஜாக்கெட் அணிந்து ஜமாய்ப்பார். (பின்னால் குமரியாக வந்த குழந்தை நட்சத்திரம் ஜெயகௌசல்யா ('தங்கை' புகழ்) அப்படியே லஷ்மியின் ஸ்டைலை காப்பியடிப்பார்)

பாடலில் இரண்டு முத்துராமன்கள், இரண்டு லஷ்மிகள் என்ற மிக்ஸிங் நகாசு வேலைகளும் உண்டு. குரங்கு ஒன்று ஒல்லி ஒற்றை மரத்தை ஆட்டுவதும், (முத்துராமன் குரங்கு மரத்தை ஆட்டும் வேகத்தைவிடவும் லஷ்மியின் தோள்களைப் பிடித்து வேகமாக ஆட்டுவார்):) லஷ்மி மலைமீது சுமைதாங்கி போன்ற பாறாங்கல்லில், வெட்டவெளியில் நடுமண்டை காய வெயிலில் அமர்ந்திருப்பதும் ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.வர்மாவின் திறமைக்கு சான்றுகள்.

கருப்பு வெள்ளை என்பதால் இயற்கை அழகை நாம் ரசிக்க முடியாமல் போனது வருத்தமே.

பாலாவின் பால் குரல் சுசீலாவின் தேன் குரல் இரண்டும் சரிசமமாகக் கலந்து இப்பாடல் 'திருவிழா'வின் சந்தோஷத்தை நமக்களிப்பது உண்மைதான். பாடல் துவங்கும் போது வரும் 'டொங் டொங் டொங் டொங் டொங்' இசையை மறக்கவே முடியாது.

'திருவிழா' வார்த்தையை பாலாவும், சுசீலாவும் மாறி மாறி உச்சரிப்பது உற்சாகமூட்டும். நாமும் அவர்கள் கூடவே சேர்ந்து ஈஸியாகப் பாடலாம். அதே போல இருவரின் 'அஹஹ ஹா....ஒஹொஹொ ஹோ'
ஹம்மிங்கையும் அமோகமாக ரசிக்கலாம்.

ஒரு சாதாரண அந்தகக் கால சினிமா ரசிகரிடம் இந்தப் பாடலின் முதல் வரியைப் பாடிக் காட்டினாலே போதும்.... அவர் கூட 'நல்ல பாடலாயிற்றே' என்று இந்தப் பாடலை 'டபக்'கென்று பிடித்துக் கொள்வார்.

அப்போது பேய் ஹிட் அடித்த பாட்டு. இப்போது ஆயிரெத்தெட்டு சேனல்கள் இருந்தும் இந்தப் பாட்டு தட்டுப்பட மாட்டேன் என்கிறது. ராஜ் டிவியில் 'அருணோதயம்' படம் போட்டால் மட்டுமே இப்பாடலை பார்க்க முடியும். இல்லை என்றால் யூடியூப், டிவிடிதான் துணை.

http://i.ytimg.com/vi/zGxI97uC3DY/hqdefault.jpg

எங்கள் வீட்டு தங்கத் தேரில் எந்த மாதம் திருவிழா

திருவிழா

திருவிழா

இன்று நாளை எந்த நாளும் இன்பத் தேவன் திருவிழா

திருவிழா

திருவிழா

சிரிப்பு வந்தது அது சிரிப்பதல்ல
உன்னை மெல்ல அழைப்பதென்பது

அழைப்பு வந்தது அது அழைப்பதல்ல
பெண்ணை மெல்ல அணைப்பதென்பது

கோபம் வந்தது அது கோபமல்ல
காலம் பார்க்கும் ஊடல் என்பது
கோபம் வந்தது அது கோபமல்ல
காலம் பார்க்கும் ஊடல் என்பது

கொஞ்ச வந்தது வெட்கம் கொஞ்சம் வந்தது
அஹஹ ஹா
ஒஹொஹொ ஹோ

எங்கள் வீட்டு தங்கத் தேரில் எந்த மாதம் திருவிழா

திருவிழா

திருவிழா

போகச் சொன்னது கால் போகும்போது
கண்ணும் நெஞ்சும் பார்க்கச் சொன்னது

பேசச் சொன்னது வாய் பேசும்போது
நாணம் வந்து மூடச் சொன்னது

தழுவச் சொன்னது கை தழுவும்போது
என்ன வந்து நழுவ சொன்னது
தழுவ சொன்னது கை தழுவும்போது
என்ன வந்து நழுவச் சொன்னது

தயக்கம் வந்தது பெண்ணின் பழக்கம் வந்தது

அஹஹஹா

ஒஹொஹொஹோ

இன்று நாளை எந்த நாளும் இன்பத் தேவன் திருவிழா

திருவிழா

திருவிழா

அன்னவாகனம் போல ஆடி ஆடி
வருவதுதான் பெண்ணின் சீதனம்

தர்மதரிசனம் அதை தலைவன் மட்டும்
பார்ப்பதுதான் தெய்வ தரிசனம்

கன்னிமோகனம் என்னை கட்டி கட்டி
இழுப்பதற்கு என்ன காரணம்
கன்னிமோகனம் என்னை கட்டி கட்டி
இழுப்பதற்கு என்ன காரணம்

என்ன காரணம் நெஞ்சின் எண்ணம் காரணம்

அஹஹஹா

ஒஹொஹொஹோ

எங்கள் வீட்டு தங்கத் தேரில் எந்த மாதம் திருவிழா

திருவிழா

திருவிழா

இன்று நாளை எந்த நாளும் இன்பத் தேவன் திருவிழா

திருவிழா

திருவிழா

அஹஹஹா, ஒஹொஹொஹோ, ம்ஹுஹுஹும்


https://youtu.be/oWh7jGp4AmM

இந்தப் பாடலில் வரும் மூன்றாவது சரண வரிகள்

'அன்னவாகனம் போல ஆடி ஆடி
வருவதுதான் பெண்ணின் சீதனம்

தர்மதரிசனம் அதை தலைவன் மட்டும்
பார்ப்பதுதான் தெய்வ தரிசனம்

கன்னிமோகனம் என்னை கட்டி கட்டி
இழுப்பதற்கு என்ன காரணம்
கன்னிமோகனம் என்னை கட்டி கட்டி
இழுப்பதற்கு என்ன காரணம்

என்ன காரணம் நெஞ்சின் எண்ணம் காரணம்'

வீடியோவில் இல்லை. முதல் இரண்டு சரணங்கள் மாத்திரமே உள்ளன.

அதனால் மூன்றாவது சரணம் உள்ள ஆடியோ லிங்கையும் இத்துடன் இணைத்துள்ளேன். கேட்டு இன்புறவும்.

http://www.inbaminge.com/t/hits/Hits%20of%20P%20Susheela/

g94127302
7th July 2015, 01:28 PM
வாசு , கல்நாயக் சார் , செந்தில் சார், ராஜேஷ் , ஆதிராம் சார் - ஒரு இனிய அநுபவத்தை உங்கள் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன் . நேற்று "பாபநாசம் " படம் பார்த்தேன் - அந்த படத்தைப்பற்றிய ஒரு சின்ன அலசல் தான் இந்த பதிவு .

நேரம் கிடைக்கும் போது இந்த பதிவைப்படியுங்கள் , படத்தையும் குடும்பத்துடன் தியேட்டருக்கு ச் சென்று பாருங்கள் .

இந்த படம் மலையாளம் , தெலுங்கு , ஹிந்தி , தமிழ் என்று பல மொழிகளில் வெளிவந்து வெற்றிக்கொடியை நாட்டி . ஹிந்தி யில் படம் உருவாகிக்கொண்டு இருக்கிறது . உலக நாயகனனின் நடிப்புக்கு நீண்ட நாட்களுக்குபிறகு நன்றாக தீனி போட்டப்படம் .

படத்தின் சிறப்புக்கள்

நீரோட்டம் போல தெளிவாக ஓடும் படம் - ஒரிஜினல் கதையை சிறிதும் சிதைக்காமல் , நிஜ வாழ்க்கையிலும் இணைந்த அந்த ஒரிஜினல் ஜோடியையே போட்டு படம் எடுத்திருக்கிறார்கள் . அதனால் நெருங்கி நடிக்கும் சில காட்சிகளில் செயற்கைத் தெரியவில்லை .

ஒரு நடுத்தர குடும்பம் எப்படி இருக்கும் என்பதை கமல் மிகவும் அழகாக தன் நடிப்பின் மூலம் புரியவைப்பார் .

அதிகம் படிக்காத தந்தை - வீட்டில் anchor ஆக இருக்கும் அவனுடைய மனைவி , பள்ளிக்குச்செல்லும் இரண்டு அழகான பெண் பிள்ளைகள் - அவனுடைய உலகம் மிகவும் சிறியது . ஆனால் அவன் மனம் ஒரு பெரிய பாசக்கடல் . படம் பார்க்கும் போது நாமும் நம்மை அறியாமலேயே அந்த குடும்பத்தில் ஒருவராகி விடுவோம் . அவன் எப்படி தன் மகளை ஒரு பழியிலிருந்து பாதுக்காக்கிறான் என்பதுதான் படத்தின் மீதி பாதி .

நடிகர் திலகத்தின் பெருமை

ந .தி யின் உண்மையான ரசிகன் என்பதை கமல் ஆத்மார்த்தமாக சொல்லும் சில வார்த்தைகளில் புரிந்துவிடும் .

" பாசமலரைபார்த்து அழாதவன் ஒரு மனிதனே இல்லை " என்று அழுதுகொண்டே சொல்வதும் , சிவாஜியின் நடிப்பை புரிந்துக்கொள்ளாதவன் ஒரு நல்ல ரசிகனும் இல்லை இன்று அவருடைய assistant யைப்பார்த்து கோபத்துடன் சொல்வதும் , கண்ணாடியில் , சிவாஜி ஸ்டைலில் முடியை முன்னுக்கு சுருட்டி விடுவதும் , அதையே பெருமையாக தன் மகளுடன் பகிர்ந்து கொள்வதும் , கமலின் உண்மையான ஆதங்கத்தில் ஒரு முத்திரை .

பல இடங்களில் அவரின் நடிப்பு நடிகர் திலகத்தின் பாணியிலே இருக்கும் - கடைசியில் அவர் குமறும்போது அந்த மாமேதையின் நடிப்பைத்தான் நமக்கு ஞாபகப்படுத்தும் .

கருவின் கரு :

தந்தை- மகள் பந்தம் ; தாய் -மகன் பந்தம் இப்படி கருவின் கருவை 3மணி நேரம் அருமையாக எடுத்துச்சொல்லும் படம்.

மகன் கெட்டவனாக ஆனதிற்கு எங்கள் கவனக்குறைவு தான் காரணம் - அவன் கேட்க்காமலேயே பல கெட்ட பழக்கங்கள் அவனுக்குள் வருவதற்கு எங்கள் பொறுப்பின்மைத்தான் காரணம் - என்று புலம்பும் ஒரு பெற்றோர் ஒரு பக்கம் ; என்ன ஆனாலும் , எது வந்தாலும் தான் பெற்ற குழந்தைகளை காப்பற்ற வேண்டும் - இதில் பொய் சொல்வதில் தவறு இல்லை என்று போராடும் பெற்றோர் ஒருபக்கம் - இவர்களை பார்த்துக்கொண்டே வாயடைத்துப் போகும் நாம் ஒருபக்கம் - இந்த எல்லா பக்கங்களையும் சேர்த்து வைப்பது இந்த படத்தின் வெற்றி , கமலின் நடிப்பு.

சில குறைகள் - படத்தின் நீளம் அதிகம் - குறைத்திருக்கலாம் - பாடல்கள் சட்டென்று மனதில் பதிய வில்லை - மலையாளம் நிறைந்த வாடைகள் அதிகமாக உள்ளன .. மீனா இன்னும் சிறப்பாக செய்திருப்பாள் கெளதமியை விட என்றே எண்ண தோன்றுகின்றது சில இடங்களில் .

"நாயகன்" கமலையும் , நடிகர் திலகத்தையும் மீண்டும் சேர்ந்து ஒரு படத்தில் பார்த்த திருப்தி - படம் தந்த பாடம் அதிகம் ...

https://youtu.be/5KH2WKISoxs

g94127302
7th July 2015, 01:44 PM
வாசு - மீண்டும் ஒரு இன்ப அதிரிடி அலசல் - பாலாவின் பாடல்களின் பதிவு . இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் - அலசாமலேயே அன்று பிடித்திருந்தது - இன்று உங்கள் அலசலில் கேட்க்கவா வேண்டும் .

தர்மதரிசனம் அதை தலைவன் மட்டும்
பார்ப்பதுதான் தெய்வ தரிசனம்

வார்த்தைகளில் தான் என்ன நயனம் - குரலில் தான் என்ன பவ்யம் - கொஞ்சம் மாறினாலும் அர்த்தம் அனர்த்தமாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது .. இதையே சற்று எனக்குத் தெரிந்த தமிழில் மாற்றி அமைக்கிறேன் .

"பாலா பாடல் " தரிசனம் அதை வாசு மட்டும்
அலசுவதுதான் தெய்வ சங்கல்ப்பம்

Varadakumar Sundaraman
7th July 2015, 02:29 PM
RARE ADVT- FROM NET
http://i59.tinypic.com/mc91de.jpg

KALAIVENTHAN
7th July 2015, 05:06 PM
வாசு சார்,

மண் மீது மானம்.... பாடலின் இணைப்பை அளித்ததற்கு நன்றி. சின்னக்கண்ணன் விரைவில் திரிக்கு வந்து கலக்குவார் என்ற தகவலை பகிர்ந்து கொண்டதற்கும் மகிழ்ச்சியும் நன்றிகளும்.

சிவாஜி செந்தில் சார்,

அற்புதமான பாடல்களை உங்களுக்கே உரித்தான உவமைகளோடும் தேர்ந்த ரசனையோடும் விமர்சனங்களோடும் அளிக்கும் நீங்களே இசை அவரங்கசீப் என்று உங்களை சொல்லிக் கொண்டால் நான் எந்த மூலைக்கு? காஷ்மீரில் எடுக்கப்பட்ட முதல் தமிழ்ப்படமான ‘தேன்நிலவு’ வண்ணத்தில் எடுக்கப்பட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும்? என்று நானும் நினைத்ததுண்டு. நன்றி.

ரவி சார்,

// எனக்கும் உங்களைப்போல வேலை பளு அதிகமாக இருக்கின்றது - ஆனாலும் இங்கு வந்து பதிவுகள் போடுவதால் stress level அதிகமாக குறைகின்றது , மனதிருக்கும் ஒரு இனம் புரியாத இன்பமும் கிடைக்கிறது . In my humble submission , this thread is a great unwinding platform for people who are entangled in ocean of work load. //

என் மனதை அப்படியே பிரதிபலித்துள்ளீர்கள். நன்றி. இந்த திரிக்கு காரணமான வாசு சாருக்கும் நன்றிகள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

sivajisenthil
7th July 2015, 05:28 PM
பால் வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம் விழிகள் கண்டு ....பாசம்... நேசம் வீசும் இசை வாசம் !!

துள்ளிக் குதித்த கட்டிளங் காளையையும் சாதுப் பசுவாக்கிக் கட்டிப் போட்ட மதுர கானம்

மக்கள் திலகத்தின் படங்களில் சற்றே வித்தியாசமான கதைக் களத்தில் சண்டைக் காட்சிகளை நம்பியிராமல் கலைஞர்களின் நடிப்புப் பங்களிப்புக்கு முக்கியத்துவம் அளித்த எக்காலமும் மறக்க முடியாத செவிக்கும் சிந்தனைக்கும் இனிய இசையமைப்பில் மெல்லிசை மன்னர்களின் பேர் சொல்லும் தேனினும் இனிய பாடல்களை உள்ளடக்கிய திரைப்படம் !

அனைத்துப் பாடல்களுமே தேன்! ஆனாலும் இந்தப் பாடல் கண்ணியமான காதலுணர்வுடன் கூடிய துளியும் ஆபாசமற்ற முதலிரவு மய்யப்படுத்தப்பட்ட காட்சியமைப்பினாலும் ஜெமினியின் PBS காதல் குழைவுக் குரல் மக்கள் திலகத்துக்கும் பாந்தமாகப் பொருந்தியதாலும் எனக்கு கேட்கத் திகட்டாத நேசத்துக்குரிய மதுர கானமே!!

துள்ளிக் குதித்து கைகளை சுழற்றி வான் நோக்கி உயர்த்தாத மக்கள் திலகமும் மதுரமான இன்ப அதிர்ச்சியே!!


காதல் காந்தம் கவரும்போது துள்ளிக் குதிக்கும் கட்டிளம்காளை கல்யாண முடிச்சு இறுகும் போது...பாவம்.... என்னவொரு சாதுப் பசு போன்ற முகபாவம் !

https://www.youtube.com/watch?v=7BZaobQGf9c

KALAIVENTHAN
7th July 2015, 06:01 PM
சிவாஜி செந்தில் சார்,

எனக்கும் மிகவும் பிடித்த அருமையான பாடல்.

//துள்ளிக் குதித்து கைகளை சுழற்றி வான் நோக்கி உயர்த்தாத மக்கள் திலகமும் மதுரமான இன்ப அதிர்ச்சியே!!

காதல் காந்தம் கவரும்போது துள்ளிக் குதிக்கும் கட்டிளம்காளை கல்யாண முடிச்சு இறுகும் போது என்னவொரு சாதுப் பசு போன்ற முகபாவம் !//


கூர்ந்து கவனிக்கும் நுட்பமான ரசிகர் நீங்கள் என்பதை தெளிவுபடுத்திவிட்டீர்கள். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

sivajisenthil
7th July 2015, 07:55 PM
In the ever loving memory of James Bond of South Jai Shankar!


During my school days, my father wanted me to see many english movies to refine my ability to talk in english with proper accent as done by the actors. That way I was also made to see Goldfinger, the definitive James Bond 007 movie starring Sean Connery. I still remember that the James Bond fever was at its peak during 1964 and 1965 thanks to Goldfinger and Thunderball. Jaishankar entered the movieworld in 1965 and he acted in Modern Theatres' Vallavan Oruvan in 1966 (?), in a typical Bond role. After seeing Vallavan Oruvan, Jaishankar made the impression of Tamil James Bond in my mind! At that age the Bond scenes with girls were little bit undigestable for me and shocking too! But in Jaishankar's Bondian movies, those Bond girl scenes were in the form of songs like Palinginaal oru maaligai.... etc.,

பளிங்கினால் ஒரு மாளிகை பருவத்தால் மணிமண்டபம்
உயரத்தில் ஒரு கோபுரம் உன்னை அழைக்குது,,,,வா!

சாதாரண பாடல் வரிகள் ....அசாதாரண இசைக் கோர்வை,,,, அந்தக்கால தேவாவான வேதாவின் ஜேம்ஸ்பாண்டு மெட்டில் இப்பாடலை என்றும் ரசிக்கும் வண்ணம் மதுர கானமாக்கிற்று!!

ஈஸ்வரியின் மனதில் ஆணியடிக்கும் குரலில் விஜயலலிதாவின் இடுப்பு வெட்டாட்டத்தில் மக்கள் கலைஞரின் ஜேம்ஸ் பாண்ட் ஸ்டைலில் ...ரசிப்போமே!!

இரவு 10 மணிக்கு மேல் நடுநிசி வரையே இப்பாடலின் மதுரம் சிந்தையில் தங்கும்!!
https://www.youtube.com/watch?v=5MDOr0gq0-8

rajraj
8th July 2015, 05:05 AM
From Vasantha MaaLigai (1972)

Yaarukkaaga ihu yaarukkaaga.....

http://www.youtube.com/watch?v=m4sX_5LL8e8


From the Telugu original Prema nagar (1971)

Evarikosam evarikosam.........

http://www.youtube.com/watch?v=UNMHPV9ThAs

vasudevan31355
8th July 2015, 08:00 AM
மறக்க முடியாத கலைஞர்கள்.

குசலகுமாரி

https://oldmalayalamcinema.files.wordpress.com/2013/02/t-d-kusalakumari-in-as-as-seetha-1960.jpg

நல்ல அழகான நடிகை. பரத நாட்டியத்தில் தேர்ந்த பயிற்சி. வழுவூர் ராமையாப் பிள்ளை, எம்.எஸ்.ராமசாமி பிள்ளை இருவரின் சிஷ்யை. நிறையப் படங்களில் நடனம் ஆடும் மங்கை.

நடிகர் திலகத்துடன் குசலகுமாரி

http://i.ytimg.com/vi/TkORvrbypl4/hqdefault.jpg

இவர் நடிகர் திலகத்தின் முதல் படமான 'பராசக்தி' படத்திலேயே நடித்திருப்பார். படம் டைட்டில் முடிந்தவுடன் ஆரம்பமாகும் நாட்டிய நிகழ்ச்சியில் குசலகுமாரி நடனமாடிப் பாடுவார்.

'வாழ்க வாழ்கவே
வளமாய் எமது திராவிட நாடு
வாழ்க வாழ்க வாழ்கவே'

என்ற பாடலுக்கு ஆடுவார்.

டைட்டிலில்

நடனம் குசலகுமாரி, குமாரி கமலா என்று போடுவார்கள். இவர் முகத்தை முதலில் 'பராசக்தி'யில் காட்டிய ராசி நடிகர் திலகத்திற்கு முதல் படத்திலேயே வானளாவிய புகழைப் பெற்றுத் தந்தது என்று கூட கூறலாம்.


https://youtu.be/TkORvrbypl4

அடுத்து

http://raretfm.mayyam.com/pow07/images/koondukili02.jpg

'கூண்டுக்கிளி' படத்தில் நடிகர் திலகத்தை விரட்டி விரட்டிக் காதலிக்கும் பெண்ணாக நடித்திருப்பார். தீபாவளிப் பண்டிகையின் போது ஒலிக்கும் வித்தியாச அற்புத பாடலான,

'வாங்க எல்லோருமே சேர்ந்து ஒன்றாகவே
தீப நன்னாளிதை ஒன்றாகக் கொண்டாடுவோம்'

கோஷ்டிப் பாடலில்

'மிகச் சிறியாரும் பெரியாரும் மகிழ்வே கொண்டே
ஆடித் திரிவார் இன்றே சுகம் பெறுவார் நன்றே'

வரிகளின் போது இவர் நடனமாடுவார்.


https://youtu.be/qzLwDNX2z0E

http://i59.tinypic.com/a0kplg.jpg

படத்தில் இவருக்கு சொக்கி என்று பெயர். நடிகர் திலகத்துடன் தனியாக இவருக்கு ஜாலியாக ஒரு பாடல் உண்டு. இந்தப் பாடலில் பாவாடை தாவணியுடன் கொஞ்சம் கிளாமராக வருவார்.

எனக்குத் தெரியல்லே
நெஜம்மா எனக்குத் தெரியல்லே
நெஜம்மா தெரியல்லே
ஒன்னும் புரியல்லே


https://youtu.be/aJj1XXFC8IQ

பாடல் முடிந்ததும் நடிகர் திலகம் குசலகுமாரி கன்னத்தில் ஓர் அறை விடுவார். அதற்கு குசலகுமாரி மறு கன்னத்தை சிரித்தபடி காட்டி 'இந்தக் கன்னத்திலே' என்பார். நடனமும், பாடலும் அம்சம்.

http://i59.tinypic.com/smartf.jpg

இன்னொரு காட்சியும் ரசம். தொழிலாளிகளுக்கு சாப்பாடு போடும் ஒரு கிழவியின் பேத்திதான் குசலகுமாரி. தலைவர் அந்தக் கிழவியிடம் சாப்பாடு கொடுக்கச் சொல்லி காசு தர வருவார். 'பாட்டி... பாட்டி' என்று கதவு தட்டி நடிகர் திலகம் கூப்பிட, 'இதோ வந்துட்டேன் பேரா' என்று குசலகுமாரி அங்கு வருவது அழகு. நடிகர் திலகம் பாட்டியை சாப்பாடு கொண்டு வந்து தரும்படி குமாரிடம் சொல்ல,அதற்கு குறும்பாக 'பாட்டி வராட்டி பேத்தி கொண்டு வந்து தரலாமா?' என்று சிரித்தபடி கேட்பதும் சுவை. 'எனக்கு வேண்டியது சாப்பாடு... இதுல பாட்டி கொண்டுகிட்டு வந்தா என்ன? பேத்தி கொண்டுகிட்டு வந்தா என்ன?' என்று நடிகர் திலகம் கடுப்பாக பதில் சொல்லி செல்வது இன்னும் டாப். (மனிதர் முகத்தில்தான் எவ்வளவு கடுப்பு?!) பின் நடிகர் திலகம் போனதும் பாட்டியிடம் தலைவரைப் பற்றி குமாரி சொல்லி மகிழும் நடிப்பு நன்றாக இருக்கும்.

இறுதிக் காட்சியில் எம்.ஜி.ஆர் அவர்கள் நடிகர் திலகம் கழுத்தை பிடித்து நெரிக்கும் போது குசலகுமாரி புத்தி சொல்லி அழுவது அவர் சிறந்த நடிப்பிற்கு சான்று.

அடுத்து,

'கள்வனின் காதலி' படத்தில் குசலகுமாரி தலைவரின் தங்கை அபிராமியாக வருவார். இதில் படம் முழுக்க தலைவருடன் வருவார்.

படத்தின் ஆரம்பத்தில் பானுமதிக்கு ஒரு கிழவருடன் கல்யாணம் நடக்கப் போகும் நேரத்தில் நடிகர் திலகம் பூங்குளம் ஊரில் இருக்கப் பிடிக்காமல் அவசரஅவசரமாக மூட்டை முடிச்சு கட்டி வெளியூர் செல்வார் குசலகுமாரியுடன். அண்ணனின் காதலுக்கு சப்போர்ட் பண்ணும் பெண் குசலகுமாரி.

http://i59.tinypic.com/ogw3gp.jpg

வெளியூரில் தங்கியிருக்கும்போது அங்கு பெரிய மனிதர் வேடம் போடும் டி.எஸ்.துரைராஜ் அவர்களின் கழுகுப் பார்வையில் சிக்கி குசலகுமாரி பரிதவிப்பது பரிதாபம்.

நடிகர் திலகம் கள்வனாகி நீண்ட நாள் சென்று பிரிந்த தன் தங்கையை மைத்துனர் டி.ஆர்.ராமச்சந்திரன் வீட்டில் சந்திக்கும்போது அந்தக் காட்சி நன்றாக உணர்ச்சிபூர்வமாக இருக்கும்.

'காவேரி' படத்தில் இவருக்கு ஒரு நடனக் காட்சி உள்ளது.

http://i57.tinypic.com/i1iekh.jpg

நடிகர் திலகம் மனம் குழம்பியிருக்கும் நிலையில் அவர் புத்தியைத் தெளிய வைப்பதற்காக பத்மினி, ராகினி, குசலகுமாரி, மாடி லஷ்மி மற்றும் நடன மாதர்கள் ஜிப்ஸி கூட்டம் போல பாடி ஆடுவார்கள். அந்தப் பாடலில்

கீழ்க்கண்ட

'சுந்தரனுக்காக தோகை மயில் கொண்டு வந்தோம்
சொந்தமாகத் தருவோமின்னா வந்த வேலை சரியில்லே'

வரிகளைப் பாடி ஆடுவது குசலகுமாரிதான். ஆனால் சொற்ப நேரமே வருவார்.

https://i.ytimg.com/vi/_7A2YHWyNBc/hqdefault.jpg

இதுவல்லாமல் 'நீதிபதி' இவர் நடித்த ஒரு முக்கியப் படம்.

மலையாளத்தில் 1960-ல் வெளியான 'சீதா' என்ற படத்தில் நசீர் ராமனாக நடிக்க இவர் பிரதான சீதை வேடத்தில் நாயகியாக நடித்திருப்பார். பிரேம் நசீருடன் சில படங்களில் இணைந்து நடித்துள்ளார். ('மரியக்குட்டி' 1959)

இவர் சிரிப்பும் கொள்ளை அழகுதான். குள்ளம் இவரது மைனஸ் பாய்ன்ட். 'கலைமாமணி' 'கலைச்செல்வம்' பட்டமும் இவர் பெற்றுள்ளார்.

வறுமையில் வாடி வரும் நடிகை குசலகுமாரி தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய வீட்டு வாடகை கட்ட முடியாமல் 2004 ல் அப்போதய முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்களிடம் உதவி கேட்டு கடிதம் எழுதியிருந்தார்.

இந்தக் கடிதத்தைப் பரிசீலித்த முதல்வர் ஜெயலலிதா குசலகுமாரியை கோட்டைக்கு வரவழைத்தார். அவருக்கு தமிழக அரசின் சார்பில் மாதந்தோறும் ரூ. 5,000 உதவித் தொகையை அறிவித்த முதல்வர் அதற்கான உத்தரவையும் அன்றே வழங்கினார். வாழ்நாள் முழுவதும் இந்த உதவித் தொகை குசலகுமாரிக்கு வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

அது சரி! இப்போது குசலகுமாரி என்ற நடிகையைப் பற்றி இப்போது ஏன் எழுதுகிறான் என்றுதானே நினைக்கிறீர்கள்?

விஷயம் இருக்கிறது.

அக்டோபர் ஒண்ணாம் தேதி தானாக உங்களுக்குத் தெரிய வரும்.

அதுவரை பொறுங்கள்.

இதோ ஒரு கலை நிகழ்ச்சியில் பங்கு கொண்ட சிறுவர்களைப் பாராட்டி குசலகுமாரி மேடையில் பேசும் பேச்சு. கண்டு களியுங்கள். இப்போதும் இளமையாகவே இருக்கிறார்.


https://youtu.be/KOymnocy1ow

g94127302
8th July 2015, 08:11 AM
Good Morning

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/gm1_zpsdndxb1kd.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/gm1_zpsdndxb1kd.jpg.html)

g94127302
8th July 2015, 08:14 AM
கருவின் கரு - 166
பாகம் 2 - தந்தை
தந்தை - மகன் பந்தம்
குழந்தை பருவம்உண்மை சம்பவம் 26

என் அப்பாவிற்கு அதிகமான கடவுள் நம்பிக்கை - நம்புவதுடன் மட்டும் நிற்காமல் தன் சேமிப்பை பல நல்ல காரியங்களுக்கும் செலவழிப்பார் . நான் அவருக்கு opposite . கடவுள் மீது சுத்தமாக நம்பிக்கை இல்லாதவன் - என் 6 வயது மகன் சுரேஷ் தாத்தா மாதிரி - அவருடைய கையைப்பிடித்துக்கொண்டு எல்லா இடத்திற்கும் போவான் ... நான் ஒரு திரிஷ்ட்டி பரிகாரம் எனது வீட்டில் . இவ்வளவு வேறுபாடுகள் இருந்தாலும் அப்பா என் சுதந்திரத்தில் என்றுமே தலையிட்டத்தில்லை - கோவில் போடா என்று திட்டினதும் இல்லை - என் மகனுக்கு மட்டுமே வருத்தம் -- நான் அவனுடன் கோவிலுக்கு வருவதில்லை என்று .. ஒருநாள் வீட்டில் பேச்சு சப்தம் அதிகமாக இருந்தது - என் மகன் தாத்தாவின் மடியில் உட்க்காந்திருக்க , என் தந்தை வேறு யாரிடமோ , ஆன்மிகத்தில் நுழைய முதல் தகுதி என்ன என்பதை விளாவாரியாக சொல்லிக்கொண்டிருந்தார் .. வழக்கத்திற்கும் மாறாக அவர்கள் பேசுவதை சற்றே செவி சாயித்துக் கேட்டேன் - அப்பா சொன்னார்

" ஒரு சமயம் கண்ணபிரானும், அர்ஜுனனும் சென்று கொண்டிருந்தபோது, மேலே பறந்த பறவையை அது புறா தானே, என்றார் கண்ணன். அர்ஜுனனும் ஆம் என்றான். இல்லையில்லை....கழுகு மாதிரி தெரிகிறது, என்றார் கண்ணன்.ரொம்ப சரி...அது கழுகே தான், என்றான் .

அர்ஜுனன்.மைத்துனா! சரியாகப் பார், அது கிளி மாதிரி பச்சையாக இல்லை... என்றதும், அதிலென்ன சந்தேகம், அது கிளி தான், கிளிதான், கிளிதான் என்றுமூன்று முறை அடித்துச் சொன்னான் அர்ஜுனன். என்னடா நீ!நான் என்ன சொன்னாலும், ஆமாம் சாமி போடுகிறாயே...!அது என்ன பறவை என தெளிவாகச் சொல்,

என்றகண்ணனிடம்,கண்ணா! என்பார்வையை விட உ ன்வார்த்தையில்எனக்கு நம்பிக்கை அதிகம். மேலும், அந்தப்பறவையை நான் புறா என்று அடித்துச் சொன்னால், அதை கிளியாகவோ, கழுகாகவோ மாற்றிவிட, உனக்கு எவ்வளவு நேரமாகி விடும்! நீயே எல்லாம் என்றான பிறகு, எந்தப்பொருளும் எப்படி வேண்டுமானாலும் மாறுமே...! உன் சக்தியை மட்டுமே நான் நம்புகிறேன், என்றான்.

பார்த்தீர்களா! பக்திக்கு தேவை நம்பிக்கை தான்! புராணங்களில் அப்படி சொல்லியிருக்கிறதே... இப்படி சொல்லியிருக்கிறதே... நம்புகிற மாதிரி இல்லையே... என்று வாதம் செய்தால், பக்தி என்ற ஏணியின், முதல் படிக்கட்டில் கூட காலை வைக்க முடியாது."

எவ்வளவு பெரிய உண்மை ! எவ்வளவு எளிதில் ஒரு பாமரனக்கும் புரிகின்ற அளவில் இருந்தது அப்பாவின் உபதேசம் - அவர் கால்களில் சாஷ்ட்டாங்கமாக விழுந்தேன் - அப்பா எனக்கு நம்பிக்கை வந்து விட்டது - கதறினேன் --- " அப்பா " இது என் மகனின் குரல் - அவனுக்கு இருந்த தெளிவு கூட எனக்கு இல்லாமல் போய் விட்டதே !- கோவில்களுக்கு வர என் மகன் தாத்தாவை இப்பொழுதெல்லாம் தொந்தரவு படுத்துவதில்லை .............

அல்லித் தண்டு கால் எடுத்து
அடி மேல் அடி எடுத்து
சின்னக் கண்ணன் நடக்கையிலே
சித்திரங்கள் என்ன செய்யும்

https://www.youtube.com/watch?v=HnfgnbhPrgU

g94127302
8th July 2015, 08:25 AM
கருவின் கரு - 167
பாகம் 2 - தந்தை
தந்தை - மகன் பந்தம்
குழந்தை பருவம்


உண்மையான பக்தி என்பது என்ன ? - என் தந்தையின் வார்த்தைகளில்


ஒருமுறை சைதன்ய மகாபிரபு ஸ்ரீரங்கத்துக்கு வந்தார். அங்கே தினமும் ஒருவர் தவறான சுலோக உச்சரிப்பில் கீதைவாசித்து கொண்டிருப்பார். எல்லோரும் அவரை கேலிசெய்வார்கள். சைதன்ய மகாபிரபு வருகிறார் என அறிந்த ஆலய பொறுப்பாளர்கள் அவரை ஒரு ஒதுக்குபுறமாக இருந்து கீதை வாசிக்கவிட்டனர். அங்கே வந்த சைதன்யருக்கு கீதையை யாரோ தவறாக வாசிப்பது காதில்விழுந்தது.

அவர் அருகில் சென்றுகேட்டார்.., "உங்களுக்கு சமஸ்கிருதம் நன்றாகதெரிவதாய் எனக்கு தோன்றுகிறது. ஆனால் ஏன் தவறாக வாசிக்கிறீங்கள்?" என்றார் சைதன்யர் .

அதற்கு அவர்சொன்னார்.., "கீதையை திறந்ததும். கிருஷ்ணரும் அர்ஜுனனும் தேரில் நிக்கிறார்களே சுவாமி..! அதை காணும்போது என் உடல் நடுங்கிறது..! என் நா தழு தழுக்கிறது..! கண்ணீர் பெருகிஒடுகிறது..! வார்த்தைகள் தவறுகிறது..! நான் என்னசெய்வேன் பிரவு..?" என கண்ணீர்விட்டார்.

திரும்பி மற்றவர்களை பார்த்து சைதன்யர் கேட்டார்.. "உங்களுக்கு அந்த தேராவதுதெரிந்ததோ..?" வெட்கி தலைகுனிந்தனர் அவரை கேலிசெய்தவர்கள்.

இங்கே இருக்கிறது பக்தி. பக்தி என்பது கண்ணீர் விடும் மிகஉயர்த ஒரு உண்ணதமான உணர்வு. அதில் ஆய்வுக்கோ விமர்சனத்துக்கோ இடம் இல்லை. இந்த சரணா கதியை அடைந்தவர்களை யாரும்_வெல்லவோ, தோற்கடிக்கவோ முடியாது . இதில் மத வேறுபாடுகளே இல்லை - எல்லா மதங்களும் இப்படிப்பட்ட பக்தியைப்பற்றித்தான் பெருமையாக கீதையிலும் , பைபிள்லிலும் , குரான்லிலும் பக்கம் பக்கமாகச்சொல்கின்றன ......

https://www.youtube.com/watch?v=uSiRfar4180

கவிஞரின் முத்தான வரிகளில் ஒரு இனிமையான தாலாட்டு. மிகவும் குறைவான வாத்தியங்கள் மூலம் அமைக்கபட்ட அருமையான இசை. டி.எம்.எஸ் தன் கணீர் குரலில் மென்மையாகவும் பாடலின் அர்த்தம் தெளிவாக புரியும் வண்ணம் பாடியுள்ளார்.

g94127302
8th July 2015, 08:27 AM
கருவின் கரு - 168
பாகம் 2 - தந்தை
தந்தை - மகன் பந்தம்
குழந்தை பருவம்

அப்பாவைப்பற்றிய ஒரு அருமையான ஆராதனை


https://youtu.be/Nf__wsTc9jc

g94127302
8th July 2015, 08:30 AM
கருவின் கரு - 169
பாகம் 2 - தந்தை
தந்தை - மகன் பந்தம்
குழந்தை பருவம்

words from a child of wisdom ----

https://youtu.be/xX4QaBBqQk4

Varadakumar Sundaraman
8th July 2015, 08:44 AM
RARE DOCS FROM NAVAMANI -1974
http://i60.tinypic.com/29m3wwm.jpg

Varadakumar Sundaraman
8th July 2015, 08:45 AM
http://i62.tinypic.com/2ihox3s.jpg

Varadakumar Sundaraman
8th July 2015, 08:50 AM
http://i57.tinypic.com/jhf2f9.jpg

g94127302
8th July 2015, 08:51 AM
கருவின் கரு - 170:smile2::)
பாகம் 2 - தந்தை
தந்தை - மகன் பந்தம்
குழந்தை பருவம்

வராத கரு ஒன்று வந்தது . வெளியில் வரும் போது அதற்க்கு கத்த தெரியவில்லை =வாய் பேசத்தெரியாத குழந்தை - கதருகிறான் தந்தை - புலம்புகிறாள். அன்னை .--- அம்மா என்று கூப்பிடாதா ? - அப்பா என்று அழைக்காதா? --- வாழ்க்கை அவர்களுக்கு ஒரு சூனியமாகத் தெரிகிறது - செல்லாத கோவில் இல்லை , வேண்டாத தெய்வம் இல்லை - இறைவன் செவி சாய்க்கிறான் குழந்தை வடிவில் - ஒரு குழந்தை இன்னொமொரு குழந்தையிடம் உலக அதிசியங்களை கேள்விகளாக கேட்கிறது - வாய் பேச வந்த அந்த குழந்தை இறைவியிடம் அந்த குழந்தை (யாருக்கும் வேண்ட தோன்றாத ) வேண்டுவதெல்லாம் இதுதான்

" ஆண்டாண்டு காலமாய் அழுகின்ற ஏழைக்கு அறுசுவை உணவு வேண்டும் ;

ஆணவகார்கள் நெஞ்சிலே தான் என்ற அறியாமை நீங்க வேண்டும் ;

வேண்டாத குணங்களை விட்டு விட்டு என்றும் உன்னை வேண்டிடும் உள்ளம் வேண்டும் ;

வேறென்ன வேண்டும் என்று நீ நினைத்து - அதை விரைந்தோடி தர வேண்டும் ....

https://youtu.be/gkTarFCIOLw

g94127302
8th July 2015, 09:01 AM
வாசு உங்கள் அலசல்களை , அதற்குப்பின் ஒளிந்திருக்கும் அயராத உழைப்பை , எல்லோரும் மறந்து விடும் சில உன்னத ஆத்மாக்களை தேடி கண்டுப்பிடித்து , அவர்களில் சாதனைகளை அலசி , அவர்களே மறந்திருந்த உண்மைகளை வெளிக்கொண்டுவந்து , அவர்கள் உயிருடன் இன்னும் இருந்தால் , தற்போதைய நிலைமையையும் எடுத்துக்காட்டி -- வயதில்லை உங்கள் பதிவுகளை உங்கள் கண்ணோட்டத்தில் புரிந்துக்கொள்ள - அதனால் நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாண்டு நலமுடன் , இதே உற்ச்சாகத்துடன் வாழ அந்த இறைவனை வேண்டிக்கொள்கிறோம்

g94127302
8th July 2015, 09:04 AM
திரு குமார் சார் - என்ன பொக்கிஷங்கள் - எப்படி இப்படி பாதுக்காக்கிண்டீர்கள் - இன்றைய செய்தித்தாளை இன்றே பழைய பேப்பர் காரனுக்கு போடும் இந்த காலத்தில் - உங்களைப்போல சில பொக்கிஷங்கள் தான் இப்படிப்பட்ட பொக்கிஷங்களை சேர்த்து வைக்க முடியும் - அருமை சார் ! தொடருங்கள்

Varadakumar Sundaraman
8th July 2015, 09:10 AM
http://i59.tinypic.com/4uflf8.jpg

Varadakumar Sundaraman
8th July 2015, 09:11 AM
http://i58.tinypic.com/2aj1ap4.jpg

Varadakumar Sundaraman
8th July 2015, 09:12 AM
http://i61.tinypic.com/2wpv483.jpg

Varadakumar Sundaraman
8th July 2015, 09:13 AM
http://i61.tinypic.com/1qofn8.jpg

vasudevan31355
8th July 2015, 09:57 AM
ராஜ்ராஜ் சார்,

ஜுகல் பந்தி அணிவகுப்பு பிரமாதம்.

இதில் என் பங்கிற்கு இன்னொன்று உங்கள் அனுமதியோடு.:)

இந்தி 'அனார்கலி' (1953) படத்தில் பீனா ராய்க்காக லதாஜி பாடிய, சி.ராமச்சந்திராவின் இசையில் உருவான,

'Mujh se mat pooch mere
ishq mein kya rakha hai'

என்ற அற்புதப் பாடலின் டியூனை அப்படியே தமிழில்

நடிகர் திலகம், பத்மினி நடித்த 'காவேரி' திரைப்படத்தில் இடம் பெறச் செய்திருந்தனர் இசையமைப்பாளர் ஜி.ராமநாதன் மற்றும் 'மெல்லிசை மன்னர்கள்' விஸ்வநாதன்-ராமமூர்த்தி மூவரும்.

'கன்னி எந்தன் காதல் மனம்
உன் அருளால் ஆகாதோ'

என்ற 'உடுமலை' நாராயணகவி இயற்றிய பாடல்.

தமிழில் ஜிக்கி பாடியிருப்பார் பத்மினிக்கு.

'ஜுகல் பந்தி'யில் இன்னும் இடம் பெறவில்லை என்று நினைக்கிறேன். இருந்தாலும் மன்னிக்க வேண்டுகிறேன்.:)

'Mujh se mat pooch mere' (இந்தி வடிவம்)


https://youtu.be/bdm-YmBriS0

'கன்னி எந்தன் காதல் மனம்' (தமிழ் வடிவம்)


https://youtu.be/wOQj5VJftHE

raagadevan
8th July 2015, 10:00 AM
Here are a few "modern" movie versions of Thyagaraja Swami's "nagumOmu ganalEni..." in Abheri raagam...

In 1988, Priyan (Priyadarshan) directed a musical comedy in Malayalam titled CHITHRAM, featuring Mohanlal,
Ranjini, Nedumudi Venu and Pooranam Viswanathan. The background music was by Johnson, but the songs were
composed by Kannur Rajan, who included and orchestrated Thyagaraja's classic composition.
Here it is, sung by M.G. Sreekumar & Neyyattinkara Vasudevan...

https://www.youtube.com/watch?v=22CaN6buSjs

The Telugu version of the movie was called ALLADUGARU (1990); starring Mohan Babu, Shobhana,
Jaggaiyah and Chandramohan. K.V. Madevan orchestrated this classic version sung by
K.J. Yesudas and Poorana Chandar...

https://www.youtube.com/watch?v=1T6hJKUqW1M

The Hindi version PYAR HUA CHORI CHORI (1991) had music by
Lakshmikant-Pyarelal, but "nagumOmu..."was not included!

In Kannada, the movie was called RAYARU BANDARU MUVANA MAMEGE (1993), and featured Vishnuvardhan,
Bindiya and Dolly Minhas. Music was by Raj-Koti; and the singers were KJY and Poorana Chandar...

https://www.youtube.com/watch?v=XxU9pIh0kDw

The Tamil version ENGIRUNDHO VANDHAAN was made in 1995, but unfortunately, "nagumOmu ..."
was not included in it! Instead, I am posting M.S. Subbakshmi's version of the Thyagaraja classic...

https://www.youtube.com/watch?v=TmZ5U9SfDNk

Varadakumar Sundaraman
8th July 2015, 01:36 PM
http://i59.tinypic.com/290xauu.jpg

Varadakumar Sundaraman
8th July 2015, 01:37 PM
http://i62.tinypic.com/md305x.jpg

Varadakumar Sundaraman
8th July 2015, 01:38 PM
http://i57.tinypic.com/33utk75.jpg

Varadakumar Sundaraman
8th July 2015, 01:40 PM
http://i57.tinypic.com/2vjoojr.jpg

Varadakumar Sundaraman
8th July 2015, 01:40 PM
http://i62.tinypic.com/vdjwv7.jpg

Varadakumar Sundaraman
8th July 2015, 01:41 PM
http://i62.tinypic.com/jkvqiq.jpg

Varadakumar Sundaraman
8th July 2015, 01:42 PM
http://i59.tinypic.com/1059n3k.jpg

Varadakumar Sundaraman
8th July 2015, 01:44 PM
http://i59.tinypic.com/9qxxj7.jpg

Varadakumar Sundaraman
8th July 2015, 01:46 PM
http://i60.tinypic.com/2n7li4k.jpg

Varadakumar Sundaraman
8th July 2015, 01:48 PM
http://i62.tinypic.com/w1sq60.jpg

Varadakumar Sundaraman
8th July 2015, 01:49 PM
http://i58.tinypic.com/zyeuj5.jpg

Varadakumar Sundaraman
8th July 2015, 01:52 PM
http://i60.tinypic.com/33y45cg.jpg

Varadakumar Sundaraman
8th July 2015, 01:56 PM
http://i61.tinypic.com/vowide.jpg

sivajisenthil
8th July 2015, 06:20 PM
கலைநிலவு ரவிச்சந்திரன் கலர் கனவுகளின் கதாநாயகனாக வெள்ளிவிழா வாலிபனாக கோலோச்சிய பொன்னான தருணங்கள் !நல்ல டைமிங்குடன் கூடிய நளினமான ஸ்டெப் நடனங்களுக்குச் சொந்தக்காரர் !
காதலிக்க நேரமில்லையில் இந்த இளம் கதாநாயகப் புயல் மையம் கொண்டு வரிசையாக இளமைத் துள்ளல் படங்களுக்கு வழி கண்டார் !!
அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன் .... மிகமிக மென்மையான காதல் உணர்வுகளை தேக்கி வைத்த இளமை ஏக்கங்களை தேனினும் இனிய இம்மதுர கானத்தின் வாயிலாக ரம்மியமான வண்ணக் குழைவில் வெளிக் கொணர்ந்தது காட்சியமைப்பில் புதுமை இயக்குனர் ஸ்ரீதர் புகுத்திட்ட புரட்சியே!!

கலைநிலவையே மறைத்திடும் கவின் மேகக் கார் கூந்தலழகி ராஜஸ்ரீ இளமை இளவரசியே !!

https://www.youtube.com/watch?v=0hkEyrNXiwc


காதல் அனுபவம் முதல் முறை புதுமையே !! ருசிகண்ட பூனை போல உறியை சுற்ற வைக்கும்!!
காதல் கசந்தால்....அனுபவம் அவஸ்தையே! சூடு கண்ட பூனை போல தலை சுற்ற ஓட வைக்கும்!!
எப்படியானாலும் உயரத்திலிருந்து விழுந்தாலும் பூனைகள் நான்கு கால்களையும் நன்றாகப் பரப்பி பாதுகாப்பாகவே தரையை வந்தடையும் ...
ஆனால் காதல் பால் ...திரிந்து விட்டால் கடுவன் பூனையும் நெருங்காதே!!

g94127302
8th July 2015, 07:09 PM
Brova bharama - various singers

This posting is dedicated to RD .

Brova bharama raghurama
raagam: bahudaari

taaLam: dEshaadi
Composer: Tyaagaraaja
Language: Telugu


pallavi

brOva bhAramA raghurAmA bhuvanamella nIvai nannokani

anupallavi

shrI vAsudEva anDakOTula gukSiNi yuncakOlEdA nannu
(brOva)

caraNam

kalashAmbudhilO dayatO namarulakai adigAka gOpi
kalakai koNDa letta lEdA karuNAkara tyAgarAjuni
(brOva)

Meaning:

Oh Karunaakaraa (a name for Vishnu), is it a heavy burden for you to protect a single soul like me? You are the whole universe itself and as Krishna showed it all to be in your stomach. Have you not lovingly borne for the sake of the Devas the whole weight of Mount Mandara when the ocean was churned, and have you not lifted Mount Govardhan for the sake of Gopis?

கவரிமான்

அருமையான கர்நாடிக் கீர்த்தனை - நடிகர் திலகம் யேசுதாஸ்க்கு பாடினது போல இருக்கும் - இன்று முழுக்க கேட்டுக்கொண்டே இருக்கலாம் - பாடல் அழகு என்றால் - பாடினவர் மிக அழகு - அதைவிட அந்த பாட்டுக்கு நடித்தவர் கொள்ளை அழகு

https://www.youtube.com/watch?v=Tn3N_af6Hsg&feature=youtu.be

Jalatarangam


https://www.youtube.com/watch?v=932sdmoDfRY

Sukumar Prasad, the first guitarist to play South Indian Carnatic classical music on the electric guitar tears through his rendition of the standard Brova Barama by Tyagaraja set to Adi tal in rag bahudari.


https://www.youtube.com/watch?v=_xqDRBVETDI


https://youtu.be/TOh9Vp56N30

https://youtu.be/MTt_SMffWoMhttps://www.youtube.com/watch?v=kKEnfIJBK3o

G J R Krishnan J Vijayalakshmi - Violin Trio

https://www.youtube.com/watch?v=JTBloqcMo9U

raagadevan
8th July 2015, 07:46 PM
g94127302:

Thank you from the bottom of my heart! :) 7 versions of my favorite keerthanai; WOW! What a treat! I am going to listen to all of them over and over again...
இன்று முழுக்க கேட்டுக்கொண்டே இருக்கலாம்! :)

rajraj
8th July 2015, 10:17 PM
RD posted 'nagumomu ganaleni...' from modern movies. Understandable. He is young ! :) Here is an old movie version from vivaha bhandham (1964).

http://www.youtube.com/watch?v=zhwl_GlTo6E

The singer is P.Bhanumathi.

sivajisenthil
9th July 2015, 07:21 AM
தமிழ்த் திரையுலகின் மதுர கான மெல்லிசை மன்னர் பூரண உடல் நலத்துடன் வாழ்வாங்கு வாழ்ந்திட இறைவனருள் வேண்டுகிறோம்

https://www.youtube.com/watch?v=DClZydALE3g

g94127302
9th July 2015, 07:50 AM
Good Morning

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/IMG-20150708-WA0015_zpsqlxeqhqb.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/IMG-20150708-WA0015_zpsqlxeqhqb.jpg.html)

g94127302
9th July 2015, 07:56 AM
கருவின் கரு - 171

பாகம் 2 - தந்தை

தந்தை - மகன் பந்தம்

குழந்தை பருவம்

குழந்தையாகவே இருந்துவிட்டால் பிரச்சினையே இல்லை - வளர வளர உறவுகளின் பந்தம் மெலிதாகிக்கொண்டே போகிறது .. மகன் என்று மீசையை முறுக்கிகொன்டவன் , பின் காலத்தில் முடங்கி விடுவது ஏன் ? --- இப்படி பல கேள்விகள் மட்டுமே மிஞ்சி இருப்பது தந்தையிடம் ....

குழந்தை பருவம் பதிவுகளை இத்துடன் முடித்துக்கொள்கிறேன் --- இனி மாணவ / வாலிப /திருமண பருவத்திற்கு செல்வோம்

https://www.youtube.com/watch?v=HtI2WuwCvyI

rajeshkrv
9th July 2015, 07:59 AM
தேவாவின் இசையில் தட்டி தட்டி பானை செஞ்சேன்.. மதுஸ்ரீ மற்றும் நரேஷ் ஐயர் குரல்களில் அழகான பாடல்

https://www.youtube.com/watch?v=AfElxZoR4S8

Varadakumar Sundaraman
9th July 2015, 08:01 AM
OLD TAMIL CINEMA PAPER ADVTS 1975
http://i57.tinypic.com/9k8km9.jpg

Varadakumar Sundaraman
9th July 2015, 08:02 AM
http://i60.tinypic.com/2my2rty.jpg

Varadakumar Sundaraman
9th July 2015, 08:02 AM
http://i61.tinypic.com/25q7v4l.jpg

g94127302
9th July 2015, 08:06 AM
கருவின் கரு - 172

பாகம் 2 - தந்தை

தந்தை - மகன் பந்தம்

மாணவ /வாலிப / திருமண பருவம்


உண்மை சம்பவம் 27

நான் ISB இல் professor ஆக இருக்கிறேன் - பல மாணவர்கள் , என்னிடம் படித்தவர்கள் இன்று வெளிநாட்டில் பெரிய அந்தஸ்த்தில் இருக்கிறார்கள் - என்னுடன் இன்னும் தொடர்பில் உள்ளனர் - இருந்தாலும் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு தமிழ் மாணவன் என் மனதில் ஆழமாக பதிந்து போல வேறு எந்த மாணவனும் பதிய வில்லை - ஒரு நிமிஷம் - நான் professor ஆ அல்லது அவனா என்று என்னை ஸ்தம்பிக்க வைத்து விட்டான் . பார்க்க மிக சாதரணமாகத்தான் இருப்பான் - அவன் பூர்வீகம் கும்பகோணம் - அப்பா ஒரு கோயிலில் குருக்களாக இருக்கிறார் . அம்மா வீட்டில் முடங்கி இருப்பவள் .

அவன் கண்ணில் இருந்த ஒரு ஒளி என்னை அவன்பால் இழுத்தது , வலிய பேச வைத்தது .. என் பல கேள்விகளுக்கு பிறகு அவன் தந்தையப்பற்றி பேச்சு வந்தது . உன் தந்தை எப்படி ? மிக மிக சாதரணமான , casual ஆன கேள்வி - அவன் சொன்ன பதில் என்னை ஒன்றுமில்லை என்று ஆக்கி விட்டது

" சார் , அப்பாவை நான் கற்றுக்கொண்டிருக்கிறேன் " என்று சொன்னான் - அவன் தமிழை திருத்தினேன் - "அப்பாவிடம் இருந்து கற்றுக்கொண்டிருக்கிறேன்" என்று சொல்லவேண்டும் என்றேன் .

" இல்லை சார் , நான் சொன்னது சரிதான் என்றான் !" - நான் class இல் மற்ற மாணவர்களை குழப்புவதற்கும் மேலாக என்னை குழப்பிவிட்டான் . " எப்படி சரி ?" என்றேன் - பதிலில் ஒரு மிகப்பெரிய உண்மையை அவன் எனக்கு உணர்த்தினான் .

" சார் மகனின் ஒவ்வொரு பருவத்திலும் "அப்பா " என்ற வார்த்தைக்கு அர்த்தம் மாறிக்கொண்டே இருக்கும் - அப்பா ஒரு கடவுளுக்கு சமம் - அப்படித்தான் அவர் தெரிவார் நமக்கு முதலில் , பிறகு ஒரு கடமை வீரன் ; பிறகு உணர்ச்சிகளின் உச்சம் ; பிறகு அமைதியின் இருப்பிடம் - மீண்டும் அவர் கடவுளுக்கு சமம் ....

" இன்னும் சரியாக எனக்கு விளங்கவில்லை .. என் முகத்தில் இருந்த அறியாமை அவனை மேலும் விவரிக்கத்தூண்டியது .

" சார் - திருக்குறள் ஒரு தந்தை மாதிரி - ஒவ்வொரு தடவை ஒரு குறளை படிக்கும் போதும் அந்த குறள் வேறு வேறு அர்த்தத்தை தரக்கூடியது . " - குழப்புகிறானே !!! என் கவலை தொடர்ந்தது

" சார் இந்த குறல் உங்களுக்கு தெரிந்திருக்கும் - " நிலையாமை " என்ற அதிகாரத்தில் வருகிறது .

குறள் 336

" நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ்வுலகு "

அதாவது இந்த உலகமானது நேற்று உயிருடன் இருந்தவரை இன்று இல்லாமல் செய்து விட்டோம் என்ற அகந்தையைக் பெருமையாகக் கொண்டதாகும் . வாழ்க்கையில் , மரணத்தின் எதார்த்தங்களை எடுத்துச் சொல்லும் குறள் . திருவள்ளுவர் இப்படி மறைமுகமாக புகழ்வதுபோல் இகழ கூடியவரா ? இதில் இந்த உலகிற்கு என்ன பெருமை இருக்க முடியும் ?? பல கேள்விகள் என் மனதில் ----

இப்படித்தான் சிறு வயதில் படித்திருக்கிறேன் - இன்று அதே குறளை மீண்டும் படிக்கும் பொழுது வேறு வித்தியாசமான அர்த்தம் வருகிறது .

" என் ஆர்வம் அதிகரித்தது -- என்ன அர்த்தம் அது ?"

" இதன் வேறு அர்த்தத்தை சொல்லும் முன் ஒரு சிறிய சம்பவத்தை உங்களிடம் சொல்கிறேன் --- ஒருவர் புத்தரிடம் ஒருவனை அறிமுகம் செய்யும் போது " he is a sinner " என்று சொன்னார் - உடனே புத்தர் " oh ! இவர் ஒரு potential saint " என்று பதில் கொடுத்தார் . அந்த கெட்டவனுக்கு ஒரு ஞானியின் அந்தஸ்த்துக்கு உயர ஒரு வாயிப்பு இருக்கிறது இன்னும் வரப்போகும் காலத்தில் ... இதுதான் புத்தர் சொல்ல வந்தது ...


ஒருவன் எப்பவாவது தவறு செய்திருந்தால் அதே கண்ணோட்டத்தில் தான் இந்த உலகம் அவனை பார்க்கிறது -- அவன் இன்று மாறி இருக்கலாம் என்றே உணர்ந்து கொள்வதில்லை - ஒருவன் திருடன் , கோபக்காரன் என்று ஒரு சமயம் பெயர் எடுத்திருந்தால் அவன் சாகும் வரை அவன் மன்னிக்கப்படுவதே இல்லை . நேற்று கெட்டவனாக இருந்தவன் இன்று திருந்தி ஒரு புது வாழ்வு வாழ ஒரு வாய்ப்பு இருக்கிறது - அதைத்தான் இந்த குறள் சொல்லுகிறது - இப்பொழுது இந்த கண்ணோட்டத்தில் படியுங்கள் - நான் சொல்வது உண்மை என்று புரியும் .

நெருநல் உளனொருவன் இன்றில்லை - நேற்று தீய எண்ணகளுடனும் , பழக்க வழக்கங்களுடனும் இருந்தவன் இன்றில்லை - அவன் மாறிவிட்டான் நல்லவனாக ! இப்படிப்பட்ட ஒரு நல்லவனை அடைந்த பெருமை உடையது இவ்வுலகு --- இப்பொழுதுதான் இந்த உலகிற்கு பெருமை வருகிறது ..

என்னைப்பொருத்த வரையில் இந்த குறளை தவறுதலாக " நிலையாமை அதிகாரத்தின் " கீழ் சேர்த்துள்ளார்கள் .. அப்பாவும் இந்த குறளை போலத்தான் - அவரை சரியாக புரிந்துக்கொள்ளவே முடியாது - ஒவ்வொரு தடவையும் அவரின் பந்தம் புதிய புதிய அர்த்தத்தை , தெய்வீகத்தன்மையை நமக்கு எடுத்துச்சொல்லிகோண்டே இருக்கும்.அதனால் தான் அவரை நான் கற்றுக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னேன் - அவரைப்பற்றி சொல்கிறேன் என்று சொல்வதிலும் , அவரை கற்றுக்கொண்டிருக்கிறேன் என்று சொல்வதிலும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன . கற்று கொள்கிறேன் என்று சொன்னால் பல புதிய அர்த்தங்களை தேடிக்கொண்டிருக்கிறேன் என்று அர்த்தம்

அவன் இப்படி சொன்ன பிறகு எல்லோரிடமும் நானும் என் அப்பாவை கற்றுக் கொண்டிருக்கிறேன் என்றுதான் சொல்லி வருகிறேன் - professor என்பவர் பிறருக்கு பாடங்கள் சொல்லித்தருபவர் மட்டும் அல்ல பிறரிடம் பாடங்களை தெரிந்து கொள்பவரும் கூட ......

https://youtu.be/Ex8glPuXw80

g94127302
9th July 2015, 08:10 AM
கருவின் கரு - 173

பாகம் 2 - தந்தை

தந்தை - மகன் பந்தம்

மாணவ /வாலிப / திருமண பருவம்

" புரியாதது தந்தையின் அன்பு ; அதை புரிந்துக்கொள்ளாதது பிள்ளையின் பண்பு ;
தெளிவான வேளையில் இன்று , அழகாக சிரித்தது அவன் தந்தைக்காட்டிய அன்பு "

இதுவரை குழந்தைப்பருவத்தைப்பற்றி பார்த்தோம் . காலம் ஓடுகின்றது - பிஞ்சு பாதங்கள் வளர்கின்றது - இதுவரை ஒரு ஹீரோ வாகத் தெரிந்த தந்தை கண்டிப்பானவன் என்பதை மகன் உணர்கிறான் -- அந்த கண்டிப்பில் தன் சுதந்திரம் விலை போகிறது என்ற ஒரு தவறான எண்ணம் அவன் மனதில் உதயமாகுகின்றது - இருவருக்கும் உள்ள அந்த பந்தத்தில் சிறிது இடைவெளி தோன்ற ஆரம்பிக்கின்றது .. ஒரு விவரிக்க முடியாத உறவு இந்த பருவம் . மகன் தந்தையை வெறுக்க வில்லை , ஆனால் விலகி இருக்க அவனுக்கு சூழ்நிலைகள் உதவியாக இருக்கின்றன - மகன் தவறான வழியில் செல்லக்கூடாதே என்ற கவலை தந்தைக்கு - தான் செல்லும் வழியில் தந்தை வந்துவிடக்கூடதே என்ற கவலை மகனுக்கு ----

https://www.youtube.com/watch?v=GD9IuPqN5ZI

vasudevan31355
9th July 2015, 03:37 PM
7000 -முத்தான பதிவுகளை அளித்த அருமை ராகவேந்திரன் சாருக்கு என்னுடைய சிறப்புப் பதிவுப் பரிசு.

http://i61.tinypic.com/4zx7yb.jpg

'நடிப்பின் கல்தூண்' வேல் கதை சொல்லி 'கல்தூண்' படத்தில் பாடும் பாடல்.

வேல் பூஜை.

வேல் நட்ட கதையை வேங்கை வெளிப்படுத்தும் பாடல்.

ஊரே வணங்கும் பரமேஸ்வர கவுண்டரின் மூத்த மகன் திக்குவாய் கணபதி, கல்லூரிப் படிப்பு படித்துக் கொண்ருக்கும் திமிர் பிடித்த இளைய மகன் பழனிச்சாமி, கவுண்டரின் மனைவி, அந்த ஊரின் எக்ஸ்.எம்.எல்.ஏ இன்னும் பிறரும் வேல் பூஜைக்காக தங்கள் கிராமத்தின் கோவிலுக்கு வருகின்றனர்.

பரிவட்டம் கட்டி பூஜை செய்ய பூசாரி தயாராகிறார். முறைப்படி மூத்த மகனுக்கு பரிவட்டம் கட்டி பூஜை ஆரம்பிப்பது மரபு. வில்லன் எம்.எல்.ஏ இளைய மகனை தூண்டி விட்டு பரிவட்ட ஆசையை அவனிடம் வளர்க்கிறான். பூசாரியிடம் தனக்கே பரிவட்டம் கட்ட வேண்டும் என்கிறான் இளையவன். 'அது முறையல்ல... குல வழக்கப்படி மூத்த பிள்ளைக்குத்தான் பரிவட்டம் கட்ட வேண்டும்' என்று பூசாரி எடுத்துச் சொல்லியும் இளையவன் கேட்காமல் யாரும் தொடக் கூடாத, பெரிய சரித்திரத்தை பின்னால் தன்னகத்தே கொண்டிருக்கும், கோவிலின் முன்னால் கம்பீரமாக நிற்கும் அந்த வேலைத் தொடப் போகிறான் தொடரப் போகும் விளைவுகளைப் பற்றி ஒன்றும் தெரியாமல்.

தொடப் போனவனுக்கு தொடை நடுங்கும்படி ஓர் அடி விழுகிறது. சுருண்டு விழுந்தவன் எழுந்து பார்த்தால் நிற்பவன் தந்தை பரமேஸ்வர கவுண்டர்.

ஒருமுறை நட்ட வேல் மறுமுறை மண்ணிலிருந்து எடுக்கப்பட்டால் ரத்தம் குடிக்காமல் மீண்டும் மண்ணில் பதியாது... புதையாது. அப்படிப்பட்ட பாரம்பரிய சக்தி மிகுந்த வேல். சாமானியர் எவரும் கை வைக்க முடியாத வேல்.

வேலின் பின்னணிக் கதையை தந்தையிடம் கேட்கிறான் மகன்.

"சொல்றேண்டா! நீ மாத்திரமில்ல....இங்க இருக்கிற எல்லாரும் தெரிஞ்சுக்கணும்...இந்த வேலைப் பத்தின கதையை சொல்றேன் கேளுடா''

என்று கையில் ஆவேசமாக உடுக்கை எடுக்கிறான் தந்தை. எடுத்து அதை அடிக்க ஆரம்பிக்கிறான். வேலின் கதையை அனைவரும் உணரும்படி பாட்டாகப் பாடுகிறான். கதையின் பின்னணி உணர்ச்சியால் துடிக்கிறான். வேலின் பெருமையை வேதனையோடு கூறுகிறான். அந்தத் தந்தை சொல்லும் கதை தான் என்ன?

ஏழுதலைமுறைக்கு முன்பு இருந்த, கவுண்டரின் வம்சத்தில் வந்த வீர மகன் ஒருவன் நட்ட வேல் அது. குற்றவாளிகளை கொன்று தீர்க்கும் ஒரு வேலையைத் தவிர வேறு வேலை ஒன்றும் அறியாத புனித வேல்.
பகைவரையும் அஞ்ச வைத்து அவர்கள் குருதியையும் பொங்க வைக்கும் பொன்னான வேல். பாவம் செய்தவர்களுக்கு பாடம் புகட்டும் பக்தி தேவதையின் சக்தி வேல். பந்த பாசங்களுக்கு இடம் கொடாமல் பூமி விட்டு வெளி வந்தால் உயிர் வாங்கித்தான் மீண்டும் மண்ணில் பதியும் அந்த வேல்.

நாச்சிமுத்து கவுண்டன் என்ற நயவஞ்சகனுக்கு நல்ல பெண்டாட்டியாய் ஒருத்தி. குலமகளாய் குணமகளாய் குணவதி அவள் தாரமாய் வாய்த்தும் நாச்சிமுத்துக் கவுண்டன் நாடியது தராதரம் கெட்ட நங்கைகளை. வைப்பாட்டி என்னும் வழி தவறிய பெண்களை.

அவன் பத்தினித் தெய்வமோ அழகான ஒரு ஆண் பிள்ளை பெற்று இருந்தாள். இன்னொருத்தியுடன் கொஞ்சிக் குலாவிய கணவனை தடுக்கும் மனைவியை தன் மகன் சிறுவன் கண்முன்னே போட்டு உதைத்தான் நாச்சியப்பன். பையன் மனதில் வஞ்சம் முளைத்தது. தகப்பன் மேல் தாளமுடியாக் கோபம் பொங்கியது. நித்தம் அடி வாங்கும் தாயின் நிலை கண்டு சிறுவனுக்கு வாய் பேச்சு நின்று போனது. வாய் இழந்தாலும் வஞ்சம் வளர்ந்தது அந்த பிஞ்சு நெஞ்சில். தாயின் மேல் தொடரும் தந்தையின் தொடர் தாக்குதல்களில் வாய்விட்டு கதற முடியாமல் பதிலுக்குக் கண்ணீர் விட்டுக் கதறி, காவிரியின் வெள்ளத்தைத் தோற்கடித்தான் கற்புக்கரசி பெற்ற மைந்தன்.

ஊர் பெயரைக் கெடுத்த ஊதாரிச் சிறுக்கி ஒருத்தியின் கைப்பாவை ஆனான் காமுகக் கணவன். அந்த ஊர் கெடுப்பவளோ 'மனைவியைக் கொன்று போடு' என்று மண்டியிட்டுக் கிடப்பவனிடம் கண்டிப்புடன் கட்டளை பிறப்பிக்கிறாள். "பட்டத்து ராணியை நீ பல்லாக்கில் அனுப்பி வைத்தால்தான் படுக்கைத் துணைக்கு என்னை பாங்காகப் பயன்படுத்த முடியும்" எனவும் நிபந்தனை விதிக்கிறாள்.

வேசியின் பேரழகில் சொக்கிக் கிடந்தவன் வேதமாக அவள் சொல்லை மதித்தான். மனைவியை மகன் கண்முன்னே கழுத்தை நெரித்து மரண வாசலில் தள்ளினான் அந்த மதி கெட்டவன்.

அப்பாவின் அக்கிரமத்தைப் பார்த்தான் மகன்.

அம்மா கொலையுண்டதைக் கண்டான் மகன்

அதிர்ச்சியில் அன்று நின்று போன வாய் இன்று

அதே அதிர்ச்சியில் 'அம்மா' என்று அலறியது....கதறியது...ஓலமிட்டது.

அம்மாவைச் சாய்த்த அப்பனைச் சாய்க்க ஆங்காரத்துடன் புறப்பட்டான் ஆண்மகன்.

ஆனால்

கண்மூடுமுன் கற்புக்கரசி கனலாய் நிற்கும் மகனைப் பார்த்து பாசத்தால் அவனைக் கட்டி, பாதகக் கணவனை பாடை போகும் போதும் கூட மகனிடமிருந்து பாதுகாத்துவிட்டுத்தான் பயணம் மேற்கொள்ளுகிறாள்.

நீறு பூத்த நெருப்பாய் மகன் மனதில் பழி கனன்று கொண்டிருந்தது. அப்பனின் அக்கிரமமோ அதிகமாகிப் போய்க் கொண்டே இருந்தது. சிறுவன் வாலிபனாய் வளர்ந்து போனான். உடன் சினமும் சிதறாமல் உள்ளே வளர்ந்து கொண்டிருந்தது.

உச்சமாய் அப்பன் கொடுந்தவறு ஒன்றை செய்ய தலைப்பட்டான். ஊர் பித்தமாக ஊரை எதிர்த்து கள்ளுக்கடை திறக்க சித்தமானான். அதுவரை பொறுத்த மகன் பொங்கினான். தாய் கடைசியில் வாங்கிய வாக்கு நினைவில் இருந்தது.

தாய் தவித்து இறக்கும் போது தனயனிடம் உறுதி வாங்கிக் கொண்டது.

"என்னைக்கு உங்க அப்பனின் அக்கிரமம் எல்லை மீறி ஊர் அழிக்குமோ அன்றைக்கு நீ அவனை அழித்து விடு... அதுவரை பொறுத்து விடு"

வம்ச மகன் நட்ட வேல் வஞ்சம் தீர்க்க இந்த மகனால் இப்போது மண்ணிலிருந்து பிடுங்கப்பட்டது. பிதாவின் உயிர் பிள்ளையினால் பரிதாபமாய் பறி போனது.

ஆமாம்! ஆறுபடை வேலனாக புதைந்த வேலெடுத்து, தந்தை பிள்ளை பாசம் அறுத்து, சூரபத்மன் மேனிதனில் வேல் பாய்ச்சி, ரத்தம் தந்த ரத்த உறவின் ரத்தம் பதிந்த வேலை மீண்டும் மண்ணில் புதைத்தான் மகன்.

வேலின் மானம் காத்தான் வேங்கை.

மகனிடம் இந்தக் கதை சொல்லி, வேலின் பெருமை சொல்லி, அங்கிருப்பவர்களுக்கு அதன் மகத்துவத்தைப் புரிய வைத்தார் பரமேஸ்வர கவுண்டர்.

http://i60.tinypic.com/v82z3o.jpg

வேங்கை பாய்ந்து பார்த்திருப்பீர்கள். சிங்கம் சீறி பார்த்திருப்பீர்கள். இதையெல்லாம் தாண்டிய சீற்றத்தைப் பார்த்திருக்கிறீர்களா? இதோ பாருங்கள்..இங்கு பாருங்கள்... இப்போது பாருங்கள்.

பரமேஸ்வரக் கவுண்டராய் பரம்பரை வேலின் கதையை உடுக்கை அடித்து உறுமியபடி, ஊரார் முன் பாடலாய் உரைத்தபடி உலவும் நடிப்புச் சிங்கத்தின் சீற்றம் பாருங்கள். அங்கங்கள் துடிக்க அலைபாய்ந்த நடையுடன் அத்தனை பேர் மத்தியில் கம்பீரக் களிநடம் புரியும் நடிப்புக் கடவுளின் நடிப்பைக் காணுங்கள்.

பரமேஸ்வரக் கவுண்டராய் பரமேஸ்வர வேடம் பூண்டவர். நடிப்பில் நம்மை ஆண்டவர்...நடிப்பின் ஆண்டவர்... நடிகர் திலகம் உடுக்கை அடித்து இந்தப் பாடலைப் பாடும் போது நம் சகல அங்கங்களும் ஒடுங்கிப் போகின்றன. சப்த நாடிகளும் அடங்கிப் போகின்றன.

உடுக்கை வாங்கி, அம்மனை வணங்கி, அடிக்க அராம்பிப்பாரே! நடிப்பை வடிக்க ஆரம்பிப்பாரே!

கைவைத்த பனியனும் வேட்டியும் அணிந்து, இடுப்பில் கட்டிய பட்டுத் துண்டுடன், உச்சந்தலையில் உன்னதம் காட்டும் கம்பீரக் குடுமியுடன், கையில் கட்டிய காப்புடன், கழுத்தில் செயினுடன் ருத்திராட்சக் கொட்டை மாலையுடன், நெற்றியில் நீறு குங்குமம் இட்டு காதில் கடுக்கணுடன், முறுக்கிய அடர் மீசையுடன் எனது கடவுள், நடிப்பைக் காத்த கடவுள் கையில் உடுக்கையுடன் உறுமியபடி களம் இறங்குமே!

அந்த அழகுக் கம்பீரத்தை உங்களுக்கு நான் எப்படிச் சொல்ல?!

'ஏழு தலைமுறையில் முன்பிருந்ததொரு
எங்கள் வம்சமகன் நட்ட வேல்'

என்று உடுக்கை அடியில் அதிசயங்கள் தொடங்க ஆரம்பித்து இதே வரிகள் உடுக்கை ஒலி இல்லாமல் ஒலிக்க, வரி முடிந்ததும் குளோஸ் -அப்பில் தலையை சற்றே சாய்த்து, படுகம்பீரத்துடன் பாடலைத் துவங்குவார் பார் புகழும் நடிக மன்னர். (கே.ஆர்.விஜயா நடிகர் திலகத்தை மெய்மறந்து பார்ப்பார்)

'எங்கள் வம்சமகன்' என்னும் போது புருவங்களுடன் நெற்றி ஏறி இறங்கி குலத்தின் பெருமையை அருமையாக பேசும். 'முன்பிருந்ததொரு' எனும் போது கண்களை கம்பீரமாக மூடித் திறப்பார்.

உடன் உடுக்கை அடிக்கும் அழகைப் பாருங்கள். காதருகே உடுக்கை வைத்து அந்த சப்தத்தைக் கேட்டவாறே தலையாட்டும் தன்னிகரில்லா அழகு.

எந்த நாளினிலும் குற்றவாளிகளைக்
கொன்று தீர்த்துவிடக் கற்ற வேல்

வலதுகால் முன்வைத்து, வீராவேசமாக நடந்து வந்து, அதே நேரம் வலது கையை முன் நீட்டி, ரௌத்திரம் காட்டி,

பகைவர் அஞ்சவரும் குருதி பொங்க வரும்
பழியை வாங்க வரும் வீர வேல்

பாவம் செய்தவர்க்கு பாடமாக வரும்
பக்தி தேவதையின் சக்தி வேல்

என்று அம்மன் கடவுள் பக்கம் ஆக்ரோஷமாகத் திரும்பும் திகைப்பூட்டும் திரைக் கடவுள்.

பந்த பாசங்களை எந்த நாளினிலும்
பார்ப்பதில்லை இந்த வெற்றி வேல்

என்று பாடி திரும்ப சற்றே வசன நடையில் மீண்டும் உச்சரிக்கும் உறுமல்.

இந்த பூமி விட்டு வந்த போதும்
உயிர் வாங்கித்தான் பதியும் இந்த வேல்

என்று பலி வாங்கும் வேலின் பழிதீர்த்தலை பட்டவர்த்தனமாக பார்ப்போருக்கு உரைக்கும் தீர்க்கம்.

இது முடிந்தவுடன் மிக மிக அருமையான உடுக்கை சப்தத்துடன் மிகவும் ஒன்றி லயித்து அங்கிருப்பவர்களை வட்டமிடுவார்.

இளைய மகனிடம் வந்து நின்று உடுக்கை தட்டியபடி, அதற்குத் தக்கவாறு தலையை ஆட்டியபடி,

மாரியாத்தா சந்நிதியில் வேலெடுத்து நட்டு வச்ச
காரணத்தை சொல்றேன் கேளடா
அட மானமுள்ள நாச்சியப்பன் ஆனபழி தீர்த்துவிட்டு
தானெடுத்து நட்ட வேலடா

அடடடா! இந்த வரிகளை முடித்தவுடன் வெறும் உடுக்கை சப்தம் மட்டுமே. உடுக்கை அடிப்பார் பாருங்கள் எம் மன்னவர்! காணக் கோடிக் கண்கள் பத்தாதய்யா பத்தாது. பார்க்கும் நமக்கு உடல் சில்லிட்டுப் போகும். உதடுகளை ஒன்று குவித்து தலையை வலதும் இடதுமாய் ஆட்டி, தன்னையறியாமல் மனம் லயித்து, இவர் உடுக்கை அடிக்கும் அதிசய அற்புதம் எழுத்துக்களால் வர்ணிக்க முடியாதது. இந்த ஒரு இடத்தை மட்டும் எத்தனை முறை பார்த்து ரசிக்கலாம் தெரியுமா!

இந்தக் காட்சியை பார்க்கும் போது என் கண்களில் என்னையுமறியாமல் ஏதோ இனம் புரியாத சோகக் கண்ணீர். மனம் பாரப்பட்டது. இந்த தெய்வம் பிறந்த மண்ணில்தானே நானும் பிறந்தேன் என்ற மார் தட்டும் பெருமையும் என்னை குடி கொண்டது.

நாச்சிமுத்து கவுண்டரு கட்டி வந்த பெண்டாட்டி
நல்லவள் ஒருத்தி இருந்தா
அவ உள்ளபடி தானிருக்க ஒன்பது பேர் வைப்பாட்டி
ஊருக்குள்ளே கூட இருந்தா

உத்தமமாம் பத்தினியாய் சத்தியம் தவறாமல்
ஒத்த பிள்ள பெத்து இருந்தா
அந்த பச்ச புள்ள முன்னிலையில்
பத்தினியை நாச்சிமுத்து நித்தமுமே போட்டு உதைச்சான்
நித்தமுமே போட்டு உதைச்சான்

மேற் சொன்ன வரிகளில் பிளாஷ்பேக் காட்சிகள் மிக அருமையாக தொகுக்கப்பட்டு காண்பிக்கப்படும். வரிகளில் கதை அற்புதமாய் புரியும். பதிவில் நான் கொடுத்திருக்கும் கதையைப் படித்தால் ஆழமாகப் புரிந்து கொள்ளளலாம்.

இது முடிந்ததும் நடிகர் திலகம் அந்த பிளாஷ் பேக் காட்சிகளை அப்படியே உள்வாங்கி, தாய் படும் கஷ்டத்தை காணச் சகியாத அந்த பிள்ளையின் மனநிலையை அப்படியே உடுக்கை அடித்தவாறு நமக்குக் காட்டி, அந்த சோகத்தைக் கூட கம்பீரமாக மாற்றி, நம் மனதில்தான் எத்துணை ஆழமாக நடந்த சம்பவங்களைப் பதிய வைக்கிறார்!

குளோஸ்-அப் காட்சியில் இவரின் முகபாவம் எப்படியெல்லாம் விந்தை புரிகிறது! அந்த பாவங்களில் நம் சிந்தையும் குளிர்கிறது.

திரும்பவும் பிளாஷ் பேக் காட்சிகள்.

தாய் வடித்த கண்ணீரை தான் பார்த்த பிள்ளைக்கு
வாய்ப்பேச்சு நின்னதேயடா
பிள்ளை வாயிழந்து போனாலும் பால் குடித்த நெஞ்சுக்குள்ளே
வஞ்சம் ஒன்னு வந்ததேயடா

சைடு ஆங்கிளில் உடுக்கை அமர்க்களம்.

வெள்ளாட்டி முன்னிலையில் வெள்ளாடு போல
அவள் வேதனையும் கொஞ்சமல்லடா
அந்த வேதனையைப் பார்த்த பிள்ள தானழுத்த கண்ணீரு
காவிரியை மிஞ்சுமேயடா

'காவிரி' எனும் போது காவிய மகன் மீண்டும் காட்டப்படுவார். உலகில் உள்ள அத்தனை நடிப்பு நுட்பங்களும் இந்த மனிதருக்குள் புகுந்து புயலாய் வெளிப்படும் இந்த நேரத்தில்.

'காவிரியை மிஞ்சுமேயடா' என்று தோள் பட்டைகளையும் உடலையும் வெளிப்பக்கம் வாங்கியவாறு, வாயைப் பிளந்து அழுதபடி, அனுபவித்த வேதனையை எண்ணி உருகும் இடம் ஒன்று போதும் இவர் நடிகரல்ல நடிக தெய்வம்...நடிகர்களுக்கெல்லாம் தெய்வம் என்று காட்ட.

இருநூறுக்குப் பிறகு ஒன்றுமில்லை என்று சொல்வோர் இந்தப் பாடலில் இந்த மந்திரஜால நடிப்பு மன்னனின் அசைவுகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்? பதில் சொல்ல இயலுமா உங்களால்?

வண்ணமுள்ள பெண்ணொருத்தி வஞ்சகனுக்கு
வாய்த்து விட்டாள்
பின்னும் அவள் போன கதை பெருசாச்சு
அந்த பேரழகி சொன்னதுதான் செயலாச்சு

பட்டத்து ராணியை நீ பல்லாக்கில் அனுப்பி விட்டால்
பக்கத்தில் நானிருப்பேன் என்றாளே
அந்த பாதகன் மனைவி தன்னைக் கொன்றானே
பாதகன் மனைவி தன்னைக் கொன்றானே

ப்ளாஷ்-பேக் காட்சி முடியும். மீண்டும் காமெரா நடிகர் திலகத்திடம் வரும்.

அப்பாவின் செயல் பார்த்தான்
அம்மாவின் கொலை பார்த்தான்
அப்போது சீறி வந்தான் ஊமையடா

அம்மா அம்மா அம்மா

பேசி அம்மா அம்மா வென்றே துடித்தான் பிள்ளையடா...

மீண்டும் குளோஸ்-அப். 'அம்மா அம்மா' வென்று கூறும்போது சாதனை நிகழ்த்தும் வாயசைப்புக்கள். உள்ளே நடித்துக் கொண்டிருக்கும் நாக்கு. உணர்ச்சிகளின் பிழம்பாய் அந்த முகம். தாயை இழந்த பிள்ளையின் முகத்தை இங்கே காணலாம். அந்த சோகத்தை இங்கே உணரலாம்.

திரும்பவும் காட்சி கதைக்குத் திரும்பும்.

கண்ணிலே நெருப்பெடுத்த வண்ணமகன் தான் பார்த்து
பெண்ணரசிதான் அழைத்தாள் அன்பினிலே
தன் பேச்சினால் அடக்கி விட்டாள் முடிவினிலே
பேச்சினால் அடக்கி விட்டாள் முடிவினிலே

இப்போது மீண்டும் சிங்கத்தின் ஆக்ரோஷமான ஆக்டிங்.

பாடலுடன் நடிப்பும் வேகம் எடுக்கும்.

கட்டுப்பட்ட அந்த மகன் காத்திருந்தாண்டா
அந்தக் காலம் வரும் வேளை வரை காத்திருந்தாண்டா
தட்டுக்கெட்ட அந்த எமன் பங்காளியானான்
மகன் தாயுரைத்த வாக்கின்படி பகையாளியானான்

ஆறுபடை வேலனென ஆடி வருகின்றான்
சூரபதன் மேனிதனில் பாய வருகின்றான்
தந்தையென பிள்ளையென பாசம் இனி இல்லை
சந்ததியில் இந்த வடி வேல் உரைக்கும் எல்லை

பாடல் முடிந்ததும் மீண்டும் உத்தமரின் உடுக்கை முழக்கம்.

பின் வசன மழை.

'அந்த நாச்சியப்பன் நட்ட வேல்தாண்டா இது.

இந்த வேல் என் பரம்பரையின் வரலாறு...

கட்டின பொண்டாட்டிக்கு துரோகம் செய்தவனுக்கு இது ஒரு சிம்ம சொப்பனம்...

ஊரைப் பகைச்சுக்குற அயோக்கியனுக்கு இது ஒரு பாடம்....

என் பரம்பரையில பொறக்குற தலைச்சன் புள்ளதான் இந்த வேலைத் தொட்டு பூஜை பண்ணனும்...'

என்று ஆணித்தரமாகத் தொடருவார்.

அப்பாடி! என்ன ஒரு காட்சி! எப்படிப்பட்ட பாடல்! கதைக்குப் பொருத்தமான வரிகளை கண்ணதாசன் மிக அற்புதமாக வடித்துத் தந்திருப்பார். பாடலுக்கேற்ற அருமையான கதை சொல்லும் மேஜரின் இயக்கம். பொருத்தமான நடிகர்கள் தேர்வு. உடுக்கையின் இடி மழை, 'மெல்லிசை மன்னரி'ன் வல்லிசை, அச்சு வார்த்து எடுத்த மாதிரி நடிகர் திலகத்திற்காக உணர்ச்சி ததும்பப் பாடும் 'பாடகர் திலகம்',

இவை எல்லாவற்றையும் தூக்கி 'டபக்'கென்று வாயில் போட்டு விழுங்கி ஏப்பம் விட்டுக் கொள்ளும் நடிகர் திலகத்தின் ஈடுஇணையில்லா நடிப்பு. நடிப்பின் அரிச்சுவடி அறியாதவன் கூட இந்தப் பாடலில் நடிகர் திலகத்தின் நடிப்பைப் பார்த்தால் நடிப்பை உணர்வதில் பண்டிதனாவான்.

வி.கே.ஆர், மனோரமா, கே.ஆர்.விஜயா, கல்தூண் திலக்ஜி, சதீஷ், நாகேஷ், கோகுல்நாத், வாணி இன்னும் பலர் சுற்றியிருக்க அத்தனை பேர் மத்தியில் ஒற்றை ஆளாய் ஒப்பற்ற நடிப்பை வாரி வழங்கி, 'என்றுமே நான் நடிப்பில் எவரும் முந்த முடியாத தனிக் காட்டு 'ராஜா' என்று நடிகர் திலகம் நிரூபிப்பதோடு 'என்னுடைய பின்னாளைய படங்களையும் பாருங்கள்...அதில் கொஞ்சமும் என் நடிப்பு சளைத்ததல்ல...குறைந்ததல்ல' என்று சவால் விடுவது போல் தோன்றுகிறது.

நீங்களே பார்த்துவிட்டு சொல்லுங்கள்.


https://youtu.be/Oz_lxmyaQSo

g94127302
9th July 2015, 08:26 PM
வாசு - இந்த திரிக்கு ஒரு கல்தூணாக இருக்கும் நீங்கள் , கல்தூண் படத்தைப்பற்றி ஏன் இதுவரை அலசவேயில்லை என்ற ஒரு கேள்வி என் மனதில் நீண்ட நாட்களாக இருந்து வந்தது . எப்படியோ என் மனதைப்படித்து விட்டீர்கள் - இன்று திரிக்கு வந்தால் ஒரே ஆச்சிரியம் - " "பாலாவிற்கு " சற்றே ஒய்வு கொடுத்து கல்தூணில் எங்களை கரைய வைத்துவிட்டீர்கள் - நீங்கள் எழுதி இருப்பது மிகையே அல்ல - அத்தனையும் உண்மை. "பாபனாசத்தில் "கமல் சொன்னதைப்போல - நடிகர் திலகத்தை , அவர் நடிப்பை பாராட்ட தெரியாதவர்கள் ஒரு நல்ல ரசிகனாக இருக்க முடியாது - இந்த படமும் மேஜரை காப்பற்றவேண்டி நடித்துக்கொடுத்த படம். ஓஹோ என்று ஓடி வசூலில் சாதனை பண்ணியப்படம் - தலைவரும் , கே .ஆர் விஜயாவும் மாட்டு வண்டியில் செல்லும் போது , பின் இசையில் , தலைவரின் பராசக்தி யில் வரும் " கா கா " பாடல் மலரும் நினைவுகளை உண்டாக்கும் .

திரு ராகவேந்திரா அவர்களுக்கு இதற்கும் மேலும் ஒருவர் சிறப்பான பரிசைக்கொடுத்திருக்க முடியாது - அவருக்கு பரிசு என்று நீங்கள் அறிவித்து இருந்தாலும் எங்கள் எல்லோருக்குமே சமமாக வழங்கியுள்ளீர்கள் - உங்கள் பரந்த மனம் எங்களை புல்லரிக்க வைக்கின்றது - ஏன் ஒரு இலவச இணைப்பும் இல்லை இந்த தடவை - ஏன் ஏன் ஏன் ???

g94127302
9th July 2015, 08:33 PM
ராகவேந்திரா சார் - 7000 பதிவுகள் !! - நடிகர் திலகத்தின் நடிப்புக் கூட என்னை இவ்வளவு அசர வைத்ததில்லை - இதன்பின் எத்தனை உழைப்பு , ஈடுபாடு , தன்னடக்கம் , தளராமை , தன்னம்பிக்கை - உங்களிடம் கற்று கொள்ளவேண்டும் இவை எல்லாவற்றையும் - நல்ல தேக ஆரோக்கியத்துடன் இன்னும் பல்லாயிரம் பதிவுகள் நீங்கள் இட வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை மட்டும் அல்ல , பிராத்தனையும் தான்

Yukesh Babu
9th July 2015, 10:31 PM
தாம்பத்யம்....இது..தாம்பத்யம்...
"உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா என் உயிர் நின்னதன்றோ..."பாரதியின் இந்த இரண்டு வரிகளை இரவல் வாங்கிக் கொண்டு மீதி சந்தங்களை இதன் பொருளுக்கு முழு நீதி வழங்கி இருக்கிறார் கவியரசர் .இசையமைத்திருப்பவர் திரை இசைத் திலகம்..பாடலுக்கு உடல் நடிகர் திலகம்,பத்மினி அம்மா...உயிர் டி .எம்.எஸ்.......ஏற்ற இறக்கங்க&#