PDA

View Full Version : மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4



Pages : 1 2 3 [4] 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

kalnayak
8th June 2015, 10:48 AM
ரவி,

கருவின் கருவில் நீங்கள் மட்டும் என்னவாம், எல்லோரையும் கண்ணீர் சிந்த வைத்து படிக்கும் ஒவ்வொரு தருணத்திலும் அவரவர்கள் அம்மா, அப்பாவை நினைத்து நெக்குருக எல்லோருக்கும் புண்ணியம் சேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நன்றி.

kalnayak
8th June 2015, 11:02 AM
சி.க.,

எடை போடும் பாடல்கள் அருமை. என்ன "கத்திரிக்காய், கத்திரிக்காய், குண்டு கத்திரிக்காய்" என்று எடை போட்டவரை உணர்ச்சி வயப்பட செய்யும் பாடலையும் சேர்த்திருக்கலாம். பரவாயில்லை. மற்றபடி நல்ல தொகுப்பு.

இதில் நீங்கள் "நிலவில் பொருள்கள் எடை இழக்கும்.." என்ற வரிகளை சொன்னவுடன் ராஜண்ணாவின் நினைவுதான் வந்தது. ஏன் என்றால் நானும் அவரும் ஒருமுறை பேசிக் கொண்டிருந்தபோது அவரிடம் நான் சொன்னேன், "பூமியில் இருக்கும் வெயிட், நிலாவிற்கு போனபின்பு ஆறில் ஒரு மடங்காக குறைந்து விடும். உதாரணத்திற்கு 60 கிலோ வெயிட் உள்ளவர் நிலாவிற்கு போனால் 10 கிலோ ஆகி விடுவார்" என்றேன். "அட அப்படியா?" என்று ஆச்சரியப்பட்டவர் சொன்னார் "அப்படியென்றால் வெயிட் குறைக்க ஆசைப் படுபவர்களை எல்லாம் நிலாவிற்கு அனுப்பி வைத்தால் எளிதாக வெயிட் குறைத்துக் கொள்வார்களே!!!" என்றார்.

வழக்கம் போல நான் ஒன்றும் பேச வில்லை. ஆனால் நினைத்துக் கொண்டேன் "அதைப் போல வயதைக் குறைக்க ஒரு கோளோ, துணைக் கோளோ கண்டு பிடித்தால், நமது திரியில் இருக்கும் நம்ம ரவி மற்றும் நான் இந்த விஷயத்தில் டூ விட்ட நம் நண்பர் ஒருவர் போன்றவர்களை அங்கே அனுப்பி வைத்தால் சந்தோஷமாக சென்று வருவார்கள்" என்று. நீங்க என்ன சொல்றீங்க?

kalnayak
8th June 2015, 11:12 AM
சி.க.,
காஜோல் பிடிக்காது என்று சொல்லியே பக்கெட் பக்கெட்டாக தகவல் வாங்கி விட்டீர்கள். நுங்கு நுங்காக நுங்குடன் அடுக்கி வைத்து விட்டார்கள். பாராட்டுகள். அடுத்த தூண்டிலும் போட்டு விட்டீர்கள் சுஷ்மிதா சென் என்று சொல்லி. வாழ்த்துகள். தண்ணீர் வரலையே என்று கவலைப் பட்டு கவலைப் பட்டு ஜல தோஷம் வரவைத்துக் கொண்டு விட்டீர்கள். குழாயில் தண்ணீர் கண்ட பின்பாவது மூக்கு குழாயில் ஜலம் நிற்கட்டும். உடல் நலனை பேணுவீர்.

uvausan
8th June 2015, 11:27 AM
" தெய்வம் த்ந்த பூவே பாட்டுக்கே ஒரு வியாசம் எழுதலாம் ரவி.. விட்டுட்டீங்களே..."

ck - தேர்ந்தெடுக்கும் எல்லா பாடல்களுக்குமே வியாசம் தேவை - இந்த பாடலும் அதற்க்கு ஒரு விதிவிலக்கு அல்ல - எழுத ஆரம்பித்துவிட்டால் எங்கு முடிப்பது என்று தெரியவில்லை - எழுதும் விஷயங்களுக்கு உதவியாகத்தான் பாடல்களை தேர்ந்தெடுக்கிறேன் - பாடல்களுக்காக விஷயங்களை எழுதவில்லை . இருப்பினும் வியாசம் தேவைப்படும் பாடல்களில் கண்டிப்பாக எழுத முயற்சி செய்கின்றேன் - நன்றி

kalnayak
8th June 2015, 11:33 AM
பூவின் பாடல் 24: "பூப்பூவா பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கேள்வி பதிலா வர்ற பாட்டு. சரோ அம்மா நடிச்சிருக்காக. கூட குழந்தையாக ஸ்ரீதேவி வர்றாக. கவியரசர் கண்ணதாசன் எழுதி இருக்காக. சுசிலாம்மா பாடியிருக்காக. கேளும்மா மின்னலு. மன்னிக்கணும். கேளுங்க நண்பர்களே.

நான் நெறைய பாட்டு எழுதனுமின்னு நெனைச்சுகிட்டு இருக்கேன். சட்டுன்னு பூவிலே சிறந்த பூ அன்புன்னுட்டாங்களே. நான் எழுதற பூ வரிசையிலே அன்பு பத்திய பாடல்களையும் எழுதணுமா? இல்லையின்னா சி.க. கேட்டுருவாரே. என்ன பாட்டு எழுதிருக்கீங்க. பூவிலே சிறந்த பூ அன்புன்னு கவியரசரே சொல்லியிருக்காரு. அதைப் பத்தி சொல்லாம வேற எல்லாப் பூக்களையும் எழுதி என்ன உபயோகம்?-ன்னு. சரி அவருக்கு அந்த சிறந்த பூவை எழுதிச் சொல்லிட்டு மத்த பூவையெல்லாம் நாம எழுதிடலாம். சரியா நண்பர்களே?

இப்ப இந்த பாட்டை கேட்போம்.

https://www.youtube.com/watch?v=1VgykXmqfhc

அது சரி குலவிளக்குக்கு அந்த சிறந்த பூவைச் சூட முடியுமா? சூடினால்தான் குலவிளக்கா இருக்க முடியுமா... யாருங்க சொல்றது?

uvausan
8th June 2015, 11:49 AM
ரவி,

கருவின் கருவில் நீங்கள் மட்டும் என்னவாம், எல்லோரையும் கண்ணீர் சிந்த வைத்து படிக்கும் ஒவ்வொரு தருணத்திலும் அவரவர்கள் அம்மா, அப்பாவை நினைத்து நெக்குருக எல்லோருக்கும் புண்ணியம் சேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நன்றி.

நன்றி கல்நாயக் சார் , இந்த திரியில் இருக்கும்/ திரியைப்படிக்கும் எல்லா உள்ளங்களும் அம்மா, அப்பாவிற்கு சேவை செய்த, செய்துகொண்டிருக்கும் , கருணை நிறைந்த, கடமை உணர்சிகள் நிறைந்த உள்ளங்கள் ஆகத்தான் இருக்க முடியும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை -

எடுத்து எழுதும் எல்லா உண்மை சம்பவங்களும் , என் வாழ்வில் , என் உறவினர்கள் வாழ்வில் , எனது நண்பர்கள் வாழ்வில் நடந்த , நடக்கின்ற சம்பவங்களே ... இதில் எதுவுமே கற்பனை இல்லை , பெயர்களைத்தவிர ---- . ஆராதிக்க வேண்டியவர்களை அவமானம் படுத்துகிறார்கள் ; நடமாடும் தெய்வங்களை , முதியோர் இல்லங்களில் நடை ஒடிந்த கல்லறை சின்னமாக ஆக்குகிறார்கள் ; பேசும் தெய்வங்களை ஊமையாக்கி மகிழ்வதில் என்ன வாழ்க்கை இருக்கிறது ? position , possesion எதற்குமே ஒரு மதிப்பை உண்டாக்குபவள் ஒரு தாய் தான் - அவளை தீண்டாத உலகம் , தீண்டும் நெருப்பிற்கு இரையாகட்டும் - இப்படிப்பட்ட எண்ண குமறல்களுக்கு ஒரு மாறுதல் /ஆறுதல் தருவதற்காகத்தான் இந்த கருவின் கருவை ஆரம்பித்தேன் - இதை முடிக்கும் தருவாயில் இருக்கிறேன் - அம்மாவிற்கு முடிவில்லை , அவள் கருணை மடிவதில்லை - உங்கள் எல்லோருடைய ஆதரவு இருப்பதால் , என் எண்ண ஓட்டங்களுக்கும் தடை வருவதில்லை -----

uvausan
8th June 2015, 12:03 PM
Disaster Management Plan (DMP) , இந்த திரிக்கு உடனே தேவை என்று சற்று நாட்களுக்கு முன் எல்லோரையும் கேட்டுக்கொண்டேன் - யாருமே அதை படித்தமாதிரியும் , கவலைப்பட்டதாகவும் , கவலைப்படுவதாகவும் தெரியவில்லையே - அது ஏன் , ஏன் , ஏன் ????????

மீண்டும் இந்த திரியில் "பாலாவின்" சூராவளிப்பயணம் .. கூரைகள் தரைமட்டம் - வீடுகள் இடிந்தன , ஒயர்கள் அறுந்தன , தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன - கடைசியாக வந்த செய்தி நம்மையெல்லாம் கதி கலங்க வைக்கிறது - ஆமாம் எது நடக்ககூடாது என்று நினைத்தோமோ அது நடந்து விட்டது - ராஜேஷையும் , கிருஷ்னாஜியையும் காண வில்லை - வெள்ளம் அடித்து செண்டிருக்ககூடும் என் நம்பப்படுகிறது - இனி வரப்போகும் புயலில் நாமும் இருப்போமா என்பது சந்தேகமே !!

திரு CK , திரு கல்நாயக் , திரு ஆதிராம் , திரு ராகவேந்திரா , திரு கலை , எல்லோருக்கும் பணிவான வேண்டுகோள் - ஏதாவது உடனே செய்யுங்கள் ப்ளீஸ் -------நம்மை நாம் தானே காப்பாற்றிக்கொள்ள வேண்டும் !?

gkrishna
8th June 2015, 12:05 PM
அன்பு நண்பர்களே

காலை வணக்கம்

மூன்று தினங்கள் உறவினர்கள் கல்யாண வேலையாக கோயம்புத்தூர் குருவாயூர் சென்றதால் திரியில் சங்கமிக்க முடியவில்லை.
மன்னிக்கவும்.

நல்லதொரு நட்பு திரியில் மூன்று நாட்கள் நடந்த சில அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஆசை.அனைத்தும் உண்மை . எதுவும் கற்பனை இல்லை. 7/6/15 சண்டே அன்று என் மனைவியின் தாய்மாமனின் பெண்வழி பேரனுக்கு கல்யாணம் . மணபெண் என் மனைவியின் சித்தப்பாவின் பெண் . மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் குருவாயூரில் நடப்பதாக நிச்சயக்கப்பட்டு கோயம்புத்தூர்இல் சனிகிழமை reception ,ஞாயிறு (நேற்று) குருவாயூரில் கல்யாணம் என்று தீர்மானிக்கப்பட்டு இருந்தது. என் மனைவிக்கு இரு வழி உறவு என்பதால் நிச்சயம் திருமணத்திற்கு செல்ல வேண்டும் என்பது எனக்கு இடப்பட்ட கட்டளை. கட்டளையை நிறைவேற்ற தவறி விட்டால் சவுக்கடி தான் (பூவா தலையா ஜெமினி எஸ் வரலட்சுமியை அடிப்பது போல் :)) வெள்ளிகிழமை இரவே அனைவரும் சென்னையில் ஆஜர் ஆகிவிட்டனர். இரவு 8.45 alleppy எக்ஸ்பிரஸ்இல் பயணம்.பயணத்தின் போது மணப்பெண் ,மணப்பையன் இருவருமே ஒருவரை ஒருவர் கிண்டல்,கேலி,கலாய்ப்பு அடித்து கொண்டு தான் வந்தார்கள். எல்லோருமே மிக சந்தோசமாக இருந்த தருணம். சனிகிழமை காலை 4.15 கோயம்புத்தூர் ஜங்ஷன் இல் இருந்து எல்லோரும் கல்யாண சத்திரம் சென்றோம். காலையில் 10 மணிக்கு எங்கள் இன வழக்கப்படி பெண்ணுக்கும் பிள்ளைக்கும் காப்பு (சிலர் அதை கை விலங்கு என்பார்கள் :)) அணிவிப்பார்கள்.மணபையன் குளித்து ரெடி ஆகி காப்புக்கு தயாராகி விட்டான். சாஸ்த்ரிகள் அருமையாக வேத மந்திரம் ஓதி மணப்பையனுக்கு காப்பையும் கட்டி விட்டார். பிறகு 'பெண்ணை அழைத்து கொண்டு வாருங்கள். அவாளுக்கும் காப்பு கட்டி முடிந்தது என்றால் பிறகு சாப்பாடு தான் ' என்றார் தீடிர் என்று பரபரப்பு. .அங்கும் இங்கும் ஒரே ஓட்டம் சாட்டம். ஆளாளுக்கு. ஒருவர் 'போலீஸ் க்கு போன் போடு ' என்றார் . இன்னொருவர் "நேற்று ட்ரெயினில் பார்த்தேனே.இன்று என்ன ' என்று சந்தேகபட்டார் மற்றொருவர் 'எல்லா ரூமும் தேடி பார்த்தேளா' என்றார். இதில் காமெடி சத்திரத்தில் ரூம் என்று எதுவுமே கிடையாது. ஒரு நீண்ட ஹால் அதை ஓட்டிஒரு மணப்பெண் அறை.அதை அறை என்று சொல்ல முடியாது. ஒரு தடுப்பு தான் .இறுதியில் தான் தெரிந்தது.மணப்பெண்ணை காணவில்லை என்று. பிறகு விசாரித்ததில் காலை 4.15 மணிக்கு கோயம்புத்தூர் ஜங்ஷன்இல் இறங்கி பேங்க் atm இல் பணம் எடுத்து வருகிறேன் என்று சென்ற பெண் அப்படியே எஸ்கேப்.பெண்ணின் தாயாரும்,தந்தையும் கிட்டத்தட்ட 6 மணி நேரமாக எதையும் யாரிடமும் சொல்லாமல் மனதிற்குள் அப்படியே வைத்து கொண்டு பின் function நேரத்தில் சொல்கிறார்கள். மாப்பிள்ளை பையன் MBA . மணப்பெண் MA ,M Phil . பெண்ணின் தந்தை பெங்களுருவில் ஒரு பிரபல தொழில் அதிபர். எல்லோரும் நல்ல நிலையில் இருப்பவர்கள்.

"உன்னை சொல்லி குற்றமில்லை .என்னை சொல்லி குற்றமில்லை.காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி ' என்று பெரியவர்கள் எல்லோரும் பாட ஆரம்பித்து விட்டார்கள்

இதுவும் கடந்து போகும் என்பார்கள்.

என்னமோ போ கோபாலா . நடந்தது,நடப்பது,நடக்க போகிறது எல்லாமே வாசுதேவனின் (I mean கிருஷ்ண பரமாத்மா) செயல்

இது ஒரு பகிர்வு மட்டுமே . மன அழுத்தத்தை பகிரும் போது பாரம் சற்று குறையும் என்பார்களே அது போல் தான் . நமது திரியை நான் சாய்ந்து கொள்ளும் ஒரு தோள் போலவே கருதுகிறேன் .

gkrishna
8th June 2015, 12:08 PM
ரவி அருமையாக எழுதுகிறீர்கள். உண்மையை சொல்ல வேண்டுமானால் சில சமயம் மனம் வெறுமையாக இருக்கும் போது உங்களின் பல பதிவுகளை படித்து தெளிவு அடைகிறேன் . எந்த சுனாமி வந்தாலும் தொடர வேண்டும்

gkrishna
8th June 2015, 12:23 PM
lovely சாங் வாசு . பாலாவின் ஹம்மிங் (ரீங்காரம்) மற்றும் சுசீலாவின் தேன் குரல் இணைந்து பின்னி எடுக்குமே .அதுவும் சுசீலாம்மா குரல் வளைந்து நெளிந்து போகும் அழகு .கேரளாவின் மலை பாதைகளில் வண்டி வழுக்கி கொண்டு சொல்வது போல்

இந்த நாணம் என்ற சொல் தான் கவிஞர்கள் கையில் சிக்கி கொண்டு எப்படி எல்லாம் கற்பனை ஊற்றாக வருகிறது .

உன் பாதம் தொட்ட அலைகள் என் பாதம் தொட்டது
நம்மிருவரையும் ஒன்றுசேர்க்க பாலமிட்டது
இந்த நேரம் பார்த்து நாணம் வந்து கோலமிட்டது
கொஞ்சநாள் வரையில் பொறுத்திருக்க ஆணையிட்டது

இன்னொரு definition for நாணம் (இதுவும் வாலி தானே )

ஆடவர் கண்களில் காணாதது
அது காலங்கள் மாறினும் மாறாதது
காதலன் பெண்ணிடம் தேடுவது
காதலி கண்களை மூடுவது அது எது

நாணமோ இன்னும் நாணமோ

https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcSH4iULpmypZpqz1_sfqoCoM7JUox65H Z_yh-Kb_HM8qzS-yVJsWQ

chinnakkannan
8th June 2015, 12:25 PM
//உன்னை சொல்லி குற்றமில்லை .என்னை சொல்லி குற்றமில்லை.காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி ' என்று பெரியவர்கள் எல்லோரும் பாட ஆரம்பித்து விட்டார்கள் // கிருஷ்ணா.. வந்தவுடன் ஒரு பாம் ஷெல்லா.. முழுவதுமே சொல்லவில்லையே..

அப்புறம் என்ன ஆயிற்று.. மணப்பெண் என்ன் ஆனாள்..

gkrishna
8th June 2015, 12:39 PM
ஏற்கனவே 6 ஆண்டுகளாக உடன் படித்த ஒரு பையனுடன் understanding . சில நண்பர்கள் உதவியுடன் அந்த பையன் உடன் அதே முஹுர்த்ததில் பெங்களுருவில் கல்யாணம் .

பெண் வீட்டினர் கவலைப்பட்டதாக தெரியவில்லை. பையன் வீட்டினர் தான் கொஞ்சம் upset .

gkrishna
8th June 2015, 12:48 PM
பூ பாட்டில் பின்னி எடுக்கும் அப்பு கல்நாயக்
கலைவாணர் கேட்ட கேள்வி
நம்மையும் வாடவிடாமல் தானும் வாடாமல் வட்டியில் வளரும் பூ முதுமையிலும் உதவும் பூ என்ன பூ - சொல்லுங்கப்பு சி கே :mrgreen:

gkrishna
8th June 2015, 12:58 PM
ராஜ்ராஜ் சார்
நன்றி ஜெயதேவரின் கீதகோவிந்தம் அஷ்டபதி பாடலுக்கு,
அதிலும் வசந்தா ராகத்தில் தொடங்கும் 'லலித லவங்க' என்ற பாடலை எத்தனை முறை கேட்டாலும் எனக்கு சலிக்காது

chinnakkannan
8th June 2015, 01:00 PM
காப்பு.. பாலிசி.. கரீட்டா

பெண் வீட்டினர் கவலைப்பட்டதாக தெரியவில்லை.// இது போன்ற சந்தர்ப்பங்க்ளில் மாப்பிள்ளைப் பையன் தான் பாவம்..இல்லியோ

uvausan
8th June 2015, 01:03 PM
ரவி அருமையாக எழுதுகிறீர்கள். உண்மையை சொல்ல வேண்டுமானால் சில சமயம் மனம் வெறுமையாக இருக்கும் போது உங்களின் பல பதிவுகளை படித்து தெளிவு அடைகிறேன் . எந்த சுனாமி வந்தாலும் தொடர வேண்டும்

கிருஷ்னாஜி - இப்பொழுதுதான் cnn -ibn யைப்பார்தேன் - எனக்கு கிடைத்த தகவல் தவறு என்பதை புரிந்துகொண்டேன் - நீங்கள் அடித்துச் செல்லப்படவில்லை என்பதை அறிந்து மனம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறது . ராஜேஷை கப்பாற்ற முடிந்ததா ? அடித்துச் செல்லப்பட்ட பட்டியலில் அவரின் பெயர் இன்னும் இருக்கிறதே - கவலையாக இருக்கிறது ....

kalnayak
8th June 2015, 01:27 PM
Disaster Management Plan (DMP) , இந்த திரிக்கு உடனே தேவை என்று சற்று நாட்களுக்கு முன் எல்லோரையும் கேட்டுக்கொண்டேன் - யாருமே அதை படித்தமாதிரியும் , கவலைப்பட்டதாகவும் , கவலைப்படுவதாகவும் தெரியவில்லையே - அது ஏன் , ஏன் , ஏன் ????????

மீண்டும் இந்த திரியில் "பாலாவின்" சூராவளிப்பயணம் .. கூரைகள் தரைமட்டம் - வீடுகள் இடிந்தன , ஒயர்கள் அறுந்தன , தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன - கடைசியாக வந்த செய்தி நம்மையெல்லாம் கதி கலங்க வைக்கிறது - ஆமாம் எது நடக்ககூடாது என்று நினைத்தோமோ அது நடந்து விட்டது - ராஜேஷையும் , கிருஷ்னாஜியையும் காண வில்லை - வெள்ளம் அடித்து செண்டிருக்ககூடும் என் நம்பப்படுகிறது - இனி வரப்போகும் புயலில் நாமும் இருப்போமா என்பது சந்தேகமே !!

திரு CK , திரு கல்நாயக் , திரு ஆதிராம் , திரு ராகவேந்திரா , திரு கலை , எல்லோருக்கும் பணிவான வேண்டுகோள் - ஏதாவது உடனே செய்யுங்கள் ப்ளீஸ் -------நம்மை நாம் தானே காப்பாற்றிக்கொள்ள வேண்டும் !?

ரவி,

நான் ஏற்கனவே வாசுவிற்கு போட்ட பதிவில் சொல்லியிருக்கேனே, இது ஒரு சுகமான சுனாமி, அடிக்கடி வரவேண்டும் என்று. இது நம்மை மயக்கும் உண்மை, நம்மை அடித்துச் செல்லும் அதுவும் உண்மை. அது நம்மை கொன்று போடாது. நாம் அந்த பித்தத்தில் மதி மயங்கி தெளிவு பெற வேண்டும். ராஜேஷ் ஜி மயக்க நிலையில் இருக்கலாம். நிச்சயம் வருவார். அவரது சுகானுபத்தை நமக்கு விளக்குவார்.

gkrishna
8th June 2015, 02:07 PM
வாசு
மந்திரிகுமாரன் அப்படின்னு ஒரு படம் பார்த்த நினைவு .அது தானா
காந்தராவ்,ஹரநாத் நடித்து தமிழில் டப் ஆகி வெளிவந்த படம்

ஹரநாத் ராஜு தானே சரஸ்வதி சபதம் பரமசிவன் (பத்மினி -பார்வதி)

http://cinemachaat.files.wordpress.com/2012/05/parvati1.png

சரஸ்வதி சபதத்தில் பிரம்மா யாரு வாசு ?

https://cinemachaat.files.wordpress.com/2012/05/saraswathi-and-brahma.png?w=300&h=225

uvausan
8th June 2015, 02:21 PM
ஒரு ஊரில் பெரிய கோயிலில் கோபுரத்தில் நிறைய புறாக்கள் வாழ்ந்து வந்தன, திடீரென்று கோயிலில் திருப்பணி நடந்தது அதனால் அங்கு வாழ்ந்த புறாக்கள் வேறு இடம் தேடி பறந்தன வழியில் ஒரு தேவாலயத்தை கண்டன அங்கு சில புறாக்கள் இருந்ததன அவைகளோடு இந்த புறாக்களும் அங்கு குடியேறின, சில நாட்கள் கழித்து கிறிஸ்துமஸ் வந்தது. தேவாலயம் புதுப்பிக்க தயாரானது இப்போது இங்கு இருந்து சென்ற பறவைகளும் அங்கு இருந்த பறவைகளும் வேறு இடம் தேடி பறந்தன .வழியில் ஒரு மசூதியை கண்டது அங்கும் சில புறாக்கள் இருந்தன. அவைகளோடு இந்த புறாக்களும் குடியேறின சில நாட்கள் கழித்து ரம்ஜான் வந்தது வழக்கம் போல் இடம் தேடி பறந்தன.

இப்போது மூன்று இடத்திலும் உள்ள புறாக்களும் கோயிலில் குடியேறின.

கீழே மனிதர்கள் சண்டை போட்டு ஒருவரை ஒருவர் வெட்டி சாய்த்துக்கொண்டு இருந்தனர்.

ஒரு குஞ்சுப்புறா தாய் புறாவுடன் கேட்டது "ஏன் இவர்கள் சண்டை போடுகிறார்கள் ?" என்று...

அதற்கு அந்த தாய் புறா சொன்னது "நாம் இங்கு இருந்த போதும் புறா தான், தேவாலயத்துக்கு போனபோதும் புறா தான், மசூதிக்கு போன போதும் புறா தான் ",

"ஆனால் மனிதன் கோயிலுக்கு போனால் இந்து"

"சர்ச்க்கு போனால் "கிறிஸ்த்தவன்"

"மசூதிக்கு போனால் "முஸ்லிம்"

என்றது.

குழம்பிய குட்டி புறா

"அது எப்படி நாம் எங்கு போனாலும் புறாதானே அதுபோல தானே மனிதர்களும் "என்றது.

அதற்கு தாய் புறா "இது புரிந்ததனால் தான் நாம் மேலே இருக்கிறோம், இவர்கள் கீழே இருக்கிறார்கள்" என்றது.

https://youtu.be/jxz3QK4FnF8

gkrishna
8th June 2015, 02:40 PM
அருமை ரவி அருமை உங்கள் புறா கதை .

கருமை சூழ்ந்து எருமையாய் வாழும் சிறுமை மனிதர்களுக்கு திறமை வழிகாட்டி ரவி
உங்களை நண்பராய் அடைந்தது எங்கள் பெருமை

chinnakkannan
8th June 2015, 03:37 PM
எருமையைக் கருமை என்பார்
..எமனவன் ஊர்தி என்பார்
சிறுமைகள் மனதில் கொள்ளா
..ஜடமென உலகை ப் பார்த்தே
வெறுமையாய் நிற்கும் ஆங்கே
..வேற்றுமை தெரிந்திடாமல்
பெருமையின் அர்த்தம் என்றும்
..பேதைகள் அஃதறி யாதே..!

ஹை..குட்டீக் கவித எழுதிப் பார்த்தேனே :)

க்ருஷ்ணா ஜி.. வியட்னாம் வீடுல ந.தி பொண்ணா வாடி ரமணி போடி ரம்ணின்னு போன்ல பேசுமே..அவங்களப் பத்தி இங்க பேசியாச்சா (பொழுது போலைன்னா என்னபண்ணனும்..பத்த வைக்கணும் :) )

uvausan
8th June 2015, 04:04 PM
நன்றி கிஷ்ணாஜி - என் கற்பனையில் வறுமை இருப்பதால் , வெளிவரும் கவிதைகள் கொடுமையாக இருக்குமே என்று எண்ணி மேலும் மடமை வராமல் இத்துடன் நிறுத்திக்கொண்டேன் .:):smokesmile:

Russellzlc
8th June 2015, 04:21 PM
வாசு சார்,
‘உன்னைத் தொட்ட காற்று வந்து..’ பாடலைப் போலவே உங்கள் அலசலும் சுகம். நீங்கள் சொல்வது போல ஹார்ட்டுக்குள் இறங்கிய பாடல்தான். உங்களிடம் எனக்கு பிடித்தது சொல்ல வேண்டியதை சுவைபட விளக்குவதற்காக நீங்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சியும் அதற்கான கடின உழைப்பும். நன்றி.

ரவி சார்,
//இந்த திரியில் இருக்கும்/ திரியைப்படிக்கும் எல்லா உள்ளங்களும் அம்மா, அப்பாவிற்கு சேவை செய்த, செய்துகொண்டிருக்கும் , கருணை நிறைந்த, கடமை உணர்சிகள் நிறைந்த உள்ளங்கள் ஆகத்தான் இருக்க முடியும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை -//
..நீங்கள் சொல்வது 200 சதவீதம் உண்மை. நூடுல்ஸ் விளம்பரம் தொடர்பான உங்கள் கருத்துக்களை முழுமையாக ஆதரிக்கிறேன். விளாசி விட்டீர்கள்.

சின்னக்கண்ணன்,
வாழ்க்கை வெறுத்துப் போகும் தருணங்கள் சுவையாக (?!) இருந்தது.(படிப்பதற்கு), ஜலதோஷம் தேவலையா?

கிருஷ்ணா சார்,
நீங்கள் விவரித்த சம்பவம் (இடையிடையே நீங்கள் நகைச்சுவை தெளித்திருந்தாலும்) வருத்தத்தை அளித்தது. அதிகாலை 4.15 மணிக்கு அதுவும் மணப்பெண்ணை எப்படி தனியே பணம் எடுத்து வர அனுப்பினர்? இந்த சம்பவத்தை விடுங்கள். சாதாரணமாகவே அது பாதுகாப்பானதல்லவே? தங்களின் வருத்தத்தில் பங்கு கொள்கிறேன்.

கல்நாயக்,
நண்பர்கள் செல்லக் கோபத்துடன் டூ விடுவதும் பிறகு சேர்ந்து கொள்வதும் சகஜம். நீங்கள் டூ விட்டு என் மீது கோபித்துக் கொண்டு விட்டீர்கள். அதற்காக, என்னை சந்திர மண்டலத்துக்கு அனுப்பத்தான் வேண்டுமா? நான் பயப்படுவதாக நினைக்க வேண்டாம். மேலும் வயதை குறைக்க எனக்கு ஆசையில்லை. 18-ஏ போதும். ஏதோ பாத்து செய்ங்க.

வேலை முதுகை முறிக்கிறது. அதனால் பாட்டு கொண்டு வரவில்லை. எல்லாரும் மன்னிக்கவும். ‘இந்தப் படத்தில் இருந்து இந்தப் பாடலை போடுங்கள்’ என்று மட்டும் சொன்னால் எனக்கும் திருப்தியாக இருக்காது. பாடல் பற்றியும் அதையொட்டிய நிகழ்வுகள் பற்றியும் விளக்கினால்தான் எனக்கும் திருப்தி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

gkrishna
8th June 2015, 05:18 PM
நீங்கள் விவரித்த சம்பவம் (இடையிடையே நீங்கள் நகைச்சுவை தெளித்திருந்தாலும்) வருத்தத்தை அளித்தது. அதிகாலை 4.15 மணிக்கு அதுவும் மணப்பெண்ணை எப்படி தனியே பணம் எடுத்து வர அனுப்பினர்? இந்த சம்பவத்தை விடுங்கள். சாதாரணமாகவே அது பாதுகாப்பானதல்லவே? தங்களின் வருத்தத்தில் பங்கு கொள்கிறேன்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்


நண்பர் கலை

மிக்க நன்றி . மன பாரத்தை குறைக்கவே சற்று நகைச்சுவை கலந்து எழுதினேன் . மற்றபடி இன்னமும் அந்த தாக்கத்தில் இருந்து என்னால் விடுபடமுடியவில்லை.

ஸ்டேஷன் இல் இறங்கி உடன் எல்லோருமே van இல் சத்திரத்தை நோக்கி சென்று விட்டோம். நாங்கள் யாருமே மணப்பெண் மிஸ்சிங் என்பதை கவனிக்கவே இல்லை. பெண்ணின் பெற்றோர் கூட எந்த பரபரப்பும் காட்டவே இல்லை. காலையில் 11 மணிக்கு அவர்கள் சொல்லும் போது தான் எல்லா விஷயமும் தெரிய வந்தது. இருவரும் ஒருவருக்கொருவர் உறவு என்பதால் பெரிய அளவில் வாக்கு வாதம்,போலீஸ் என்று செல்லவில்லை. மாப்பிள்ளை பையனும் மிகவும் எந்தவித பரபரப்புக்கும் ஆளாகாமல் மதியமே சென்னைக்கு கிளம்பி விட்டார். என் வருத்தம் எல்லாம் அந்த பெண் மீது தான். 6 ஆண்டுகள் வேறு ஒருவரிடம் பழகி விட்டு எதற்காக இந்த திருமணத்திற்கு ஓத்து கொண்டார். பிறகு திருமணத்திற்கு முன்தினம் இப்படி ஒரு முடிவு எடுத்தார். மணப்பெண் வீட்டாரும் பெரிய அளவில் கவலைப்பட வில்லை. பெண்ணின் பெற்றோர் எதற்காக பெண்ணிற்கு பிடிக்காத ஒன்றை பெண்ணிடம் திணிக்க வேண்டும் . படித்த பெண்கள் கூட இப்படி நடந்து கொள்கிறார்களே என்ற ஆதங்கம் ஒன்றே மனதை வாட்டுகிறது . மன்னிக்கவும்
சம்பவத்தை மறக்க நினைக்கிறேன்.முடியவில்லை

chinnakkannan
8th June 2015, 06:39 PM
//மன்னிக்கவும்
சம்பவத்தை மறக்க நினைக்கிறேன்.முடியவில்லை// அதோட தாக்கம் சில நாள் இருக்கும் கிருஷ்ணாஜி.. மனசுல ரொம்ப எடுத்துக்காதீங்க..

adiram
8th June 2015, 07:25 PM
டியர் ரவி சார்,

தொடர் அருமையாக சென்று கொண்டிருக்கிறது. பாராட்டுக்கள்.

'தவறு இருந்தால் சுட்டிக்காட்டவும்' என்ற உங்கள் கூற்றே தவறு. பின்னே?. தவறு இல்லாத ஒன்றில் தவறை கண்டுபிடிப்பது தவறிப்போய்க்கூட செய்யக்கூடாத தவறான ஒன்றல்லவா?. எனவே தவறியும் நான் அந்த தவறை செய்வதாக இல்லையென்று தவறாமல் உறுதியெடுக்கிறேன்.

(கண்டது கற்றால் பண்டிதன் ஆவான் என்பார்கள். ஆனால் சின்னக்கண்ணன் பதிவுகளைப் படித்தால் (என்னைப்போன்ற) கணடவ்னும் பண்டிதன் ஆகலாம் போலிருக்கிறதே)

rajeshkrv
8th June 2015, 07:39 PM
ரவி,

நான் ஏற்கனவே வாசுவிற்கு போட்ட பதிவில் சொல்லியிருக்கேனே, இது ஒரு சுகமான சுனாமி, அடிக்கடி வரவேண்டும் என்று. இது நம்மை மயக்கும் உண்மை, நம்மை அடித்துச் செல்லும் அதுவும் உண்மை. அது நம்மை கொன்று போடாது. நாம் அந்த பித்தத்தில் மதி மயங்கி தெளிவு பெற வேண்டும். ராஜேஷ் ஜி மயக்க நிலையில் இருக்கலாம். நிச்சயம் வருவார். அவரது சுகானுபத்தை நமக்கு விளக்குவார்.

இந்த சுனாமி ஒரு இசைச்சுனாமி .. எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம்.

adiram
8th June 2015, 07:44 PM
கல்நாயக் மற்றும் கலைவேந்தர்,

நீங்க ரெண்டுபேரும் உங்கள் வயது விஷயமாக சண்டையிட்டுக் கொள்வதைப் பார்க்கும்போது முன்னாள் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் சொன்ன ஜோக்தான் நினைவு வருகிறது. நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த ரீகன், பேச்சுவாக்கில் "அமெரிக்க ஜனாதிபதியாக ஒரு பெண் வரவே முடியாது" என்றர்.

நண்பர்களுக்கு ஆச்சரியம்.

"மிஸ்டர் பிரசிடெண்ட், நமது சட்டத்தில் அப்படி ரூல்ஸ் எதுவும் இருப்பதாக தெரியவில்லையே" என்றனர்.

"நேரடியாக இல்லை. ஆனால் மறைமுகமாக ஒரு தடை இருக்கிறது" என்றார் ரீகன்.

"அதென்ன?" என்று நண்பர்கள் கேட்க ரீகன் சொன்னார்...

"அமெரிக்க அதிபராக வருவதற்கு 35 வயது நிரம்பியிருக்க வேண்டுமல்லவா?. அமெரிக்காவில்தான் எந்தப்பெண்ணும் தனக்கு 35 வயது நிரம்பியதாக ஒப்புக்கொள்ள மாட்டார்களே"

அதிபர் சொன்னதைக்கேட்டு நண்பர்கள் மத்தியில் பெரிய நகைப்பொலி.

vasudevan31355
8th June 2015, 07:47 PM
சி.க,

எடைப்பாடல்கள் 'அட' என்று ஆச்சரியப்பட வைக்கின்றன. தண்ணீர் வராம தரையில் குப்பறப்படுத்து யோசித்து டைட்டில் பிடிக்கிறீரோ! அப்புறம் எங்களையும் யோசிக்க வைத்து தண்ணி காட்டுகிறீர்.:)

vasudevan31355
8th June 2015, 07:48 PM
//எனக்கும் , என் மனைவிக்கும் சேர்ந்து பிடிக்கும் ஒரே விஷயம் ஜல தோஷம் ஒன்றுதான்//

தைரியசாலி அய்யா நீர் சி.கவுக்குப் பிறகு.

அம்பா பாடல்கள் அருமை. குட்டிக் கதைகள் நிறைய யோசிக்க வைக்கின்றன. ஆயர்பாடி மாளிகையில் பாடலை கருவில் மறக்காமல் சேர்த்ததற்கு நன்றி ரவி சார். மிகப் பொருத்தமான ஆராதனா பாடல். அழகான ஷர்மிளா.

ஆனால் தத்தி செல்லும் முத்துக் கண்ணன் சிரிப்புக்கு ஒரே ஒரு வரிதானா?

சுனாமியெல்லாம் இல்லை ரவி. சும்மா ஜாலியாக ஆனால் மனம் லயித்து எழுதுகிறேன். தினம் கருவைக் கலைக்கும் இந்தக் காலத்தில் நீங்கள் மறக்காமல் கருவில் கலக்குகிறீர்கள். அம்பா ஜனனி என்று தலைப்புகளும் வாழ்கின்றன. புயலாய் சீறுவது தாங்கள்தான்.

அனைத்து பாடல்களுக்கும் அருமையான எழுத்துக்களுக்கும் நன்றி.

vasudevan31355
8th June 2015, 07:48 PM
ராகவேந்திரன் சார்,

நிதர்சனமான உண்மை. மிக மிக மிக மிக மிக மக பிடித்தமான பாடல். இப்போதே எழுத கை துடிக்கிறது. பாலா பாடல்கள் முடிந்த மட்டும் வரிசையாக வருவதால் இதைப் பற்றி பின்னால்தான் எழுத வேண்டி வரும்.

கல்நாயக் ஒருமுறை கடலூரில் கமர் திரை அரங்கில் 'கண்ணாமூச்சி' படம் பார்த்ததாக எழுதியிருந்தார் . நல்ல ஞாபகசக்தி அவருக்கு. அங்குதான் ரிலீஸ். மறக்க முடியாத படம். சக்கை போடு போட்டது.

இந்த பாடலைப் பற்றி மிகச் சிறப்பாக எழுத வேண்டும்.

மிகப் பெரிய பரிசாக இப்பாடலை நான் பெற்றுக் கொள்கிறேன். நன்றி ரசிக வேந்தரே! அப்படியே இளைய பிறவிகளுக்கும் ஒரு 'ஓ'

adiram
8th June 2015, 07:49 PM
கிருஷ்ணா ஜி,

சம்பவத்தை பாதியில் தொங்கலில் விட்டுட்டீங்களே . திருமணம் நின்றதால் சாப்பாடு கிடைக்காத கோபமா?.

vasudevan31355
8th June 2015, 07:51 PM
பூ பாட்டில் பின்னி எடுக்கும் அப்பு கல்நாயக்
கலைவாணர் கேட்ட கேள்வி
நம்மையும் வாடவிடாமல் தானும் வாடாமல் வட்டியில் வளரும் பூ முதுமையிலும் உதவும் பூ என்ன பூ - சொல்லுங்கப்பு சி கே :mrgreen:

சேமிப்பு

adiram
8th June 2015, 07:58 PM
டியர் வாசு சார்,

'இளைய பாலா' வின் பாடல் வரிசையில் 'உன்னைத்தொட்ட காற்று வந்து என்னைத்தொட்டது' பாடல் அலசல் நன்றாக உள்ளது. அந்த 'கொலைகார குடும்பம்' படத்தில் உருப்படியானது இந்தப்பாடல் ஒன்றுதான்.

பாபுவில் இடம்பெற்ற 'என்ன சொல்ல என்ன சொல்ல சொல்லித்தர நானிருக்கேன்' பாடல் எப்போது வருமென காத்திருக்கிறேன்.

vasudevan31355
8th June 2015, 08:10 PM
//சரஸ்வதி சபதத்தில் பிரம்மா யாரு வாசு ?//

http://telugucinemainfo.com/(S(u0ts551icsmpr0nlz31v3e0x))/TCI_images/MovieProfile/FullImages/PrabhakarReddy_pf_Fl_1829.jpg

அது அப்போதைய சூப்பர் தெலுங்கு வில்லன் பரங்கிக்காய் மூஞ்சி பிரபாகர் ரெட்டி. நல்ல குணச்சித்திர நடிகரும் கூட.

நடிகர் திலகத்தின் 'விஸ்வரூபம்' பார்த்திருப்பீர்களே! அதில் நடிகர் திலகத்திற்கு கப்பலில் அடைக்கலம் கொடுக்கும் 'டான்' இவர்தான். இவர் ஒரிஜினலாகவே டாக்டர். எம்.பி.பி.எஸ் படித்து சினிமாவில் கதாநாயகர்களை ஆபெரேஷன் செய்தார். அதிர்ச்சி ஆபெரேஷன்.

டாக்டர் பண்ற வேலையைப் பார்த்தீங்களா கிருஷ்ணா?:)

http://i.ytimg.com/vi/IPDpEKEvscM/maxresdefault.jpg

"Yuvataram Kadilindi ...என்ற கம்யூனிஸ கொள்கைகளை விளக்கும் புரட்சி தெலுங்குப் படத்தில் ரெட்டி நடித்ததை மறக்க முடியாது.

http://www.frontline.in/multimedia/dynamic/01603/18fl_tel_3_jpg_1603494g.jpg

இவரும் நடிகர் திலகத்தின் ஹேர் ஸ்டைலை பின்பற்றி இருக்கிறார் என்பதை கீழ்கண்ட நிழற்படத்தில் உணரலாம்.

http://static.telugumoviepedia.com/image.php?image=/images/poster/4/artist_1764.jpg

http://nalgonda.info/wp-content/uploads/2015/01/Prabhakar-reddy.png

vasudevan31355
8th June 2015, 08:15 PM
கிருஷ்ணா,

சினிமாவில் வரும் சம்பவம் போல் அமைந்து விட்டது. இப்போது புரிகிறது. 'என்னடா இவர் போனை எடுக்க மாட்டேன் என்கிறாரே...உடனே கால் பண்ணி விடுவாரே!'என்று நினைத்தேன். ஓஹோ! இதுதானா விஷயம்?

வருத்தம்தான் கிருஷ்ணா! இதுவே அந்தப் பையன் ஓடிப் போய் இருந்தால் விஷயம் எவ்வளவு பெரிது படுத்தப் பட்டிருக்கும்? அந்த பொறுமைசாலிக்கு நல்ல மணப்பெண்ணாக கிடைப்பாள் பாருங்கள்.

vasudevan31355
8th June 2015, 08:16 PM
நன்றி கலை! தங்கள் ஒய்வு நேரத்தில் தாங்கள் நிச்சயம் உங்களுக்கே உரிய பாணியில் நல்ல பாடல்களைத் தாருங்கள். தருவீர்கள். காத்திருக்கிறோம் அனைவரும்.

vasudevan31355
8th June 2015, 08:21 PM
நன்றி ஆதிராம் சார்,

தாங்களும் 70 களின் ஏனைய நல்ல பாடல்களை அலசினால் அதைவிட சந்தோஷம் வேறு எனக்கில்லை. ஏனென்றால் அனைத்தையும் விரல் நுனியில் வைத்திருப்பவர் தாங்கள்.

என்ன சொல்ல! என்ன சொல்ல! உங்கள் விஷய ஞானத்தைப் பற்றி என்ன சொல்ல!

'சொல்லித்தர நானிருக்கேன்' என்று எவ்வளவோ சந்தேகங்களை நீங்கள் தீர்த்து வைத்து உள்ளீர்கள். இதில் பெரிய விஷயம் என்ன தெரியுமா? தாங்கள் தரும் அனைத்து தகவல்களும் மிகச் சரியானவை என்பதே.

Murali Srinivas
8th June 2015, 08:35 PM
வாசு,

மிக மிக மிகப் பிடித்த பாடலை தந்ததற்கு மனங்கனிந்த நன்றி! சின்ன வயதில் காதல் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் உண்மையான காதலர்கள் இப்படித்தான் இருப்பார்கள், இருக்க வேண்டும் என்று மனதில் ஒரு ஆழமான கருத்து உருவாவதற்கு காரணமாக இருந்த பாடல். பாடல் வரிகள் மனதை கொள்ளை கொண்டு போகும். அதிலும் சுசீலாவின் குரலில் கேட்கும்போது சொல்லவே வேண்டாம்.

எனக்கு இரண்டாம் சரணம் மிகவும் பிடிக்கும். அதிலும் அந்த சரணம் முடியும்போது அதுவே போதும் என்று பெண்மை இன்று கேட்டுக் கொண்டது என்ற வரியில் சுசீலாம்மாவின் குரல் தேனாமிர்தததிற்கும் மேலே.

இரண்டாவது சரணம் செட் என்பதனால் சற்றே செயற்கை எட்டிப் பார்க்கும். பாடல் ஆரம்பம் மற்றும் முதல் சரணம் கடற்கரையில் எடுத்திருப்பதால் இயல்பாக இருக்கும். அதிலும் பாடல் ஆரம்பிக்கும்போது லட்சுமி இரண்டு கையையும் வீசி ஒரு ஸ்டெப் போட்டு வருவது மிக நன்றாக இருக்கும்.[வசந்த மாளிகையில் தலைவர் மலைவாசி கூட்டத்தினரிடையே ஆடும்போது ஒரு ஸ்டெப் போட்டு வருவாரே! அது போல] .

இந்த பாடலும் இந்த ஹம்மிங்கும் கேட்கும்போது மற்றொரு பாடல் நினைவுக்கு வரும். உத்தரவின்றி உள்ளே வா படத்தில் வரும் காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ பாடல்தான் அது. அதில் ஸ்ரீகாந்த் என்ற பின்னணி பாடகர் ஹம்மிங் கொடுத்திருப்பார். [நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு பாடலை பாடியவர், இல்லையா?]

மீண்டும் நன்றி வாசு!

அன்புடன்

Murali Srinivas
8th June 2015, 08:36 PM
ரவி,

உங்கள் பதிவுகளையெல்லாம் படிக்கிறேன். அண்மைக் காலமாக நிறைய ஆன்மீக, தத்துவ கருத்துகள் பதிவு முழுவதும் விரவி கிடைக்கின்றன. உங்களில் ஒரு மாற்றம் வந்தது போல். மெருகேறிய உங்கள் பாணிக்கு வாழ்த்துகள்.

கண்ணா, சில பதிவுகள் மனதில் சில சலனங்களை ஏற்படுத்தும். உங்கள் தாயாரின் மறைவு பற்றிய பதிவு அப்படித்தான் இருந்தது. தாமதமாக சொல்கிறேன். மன்னிக்கவும்.

கல்நாயக்,

பாடல்கள் எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். தொடருங்கள்.

கிருஷ்ணாஜி,

நமது கோட்டைக்கு வராமல் இன்னும் எத்தனை நாள் இருக்கப் போகிறீர்கள்? நெல்லை சீமையில் சிங்கத் தமிழனின் சாதனைகளை எடுத்து சொல்ல வாருங்கள்!

அன்புடன்

chinnakkannan
8th June 2015, 08:54 PM
//தினம் கருவைக் கலைக்கும் இந்தக் காலத்தில்// வாசு ஜி.. என்னை பற்றி நீங்கள் தவறாக எண்ணிவிட்டீர்கள்.. நான் டெய்லி ஆம்லெட்லாம் சாப்பிட மாட்டேன் :)

முரளி வாங்க வாங்க.. நன்றி..

வாசு.. பரங்கிக்காய் மூஞ்சி பிரபாகர் ரெட்டி யை விடுங்கள்..இன்னொரு வில்லன் அந்தக்காலத்தில் படுத்தி எடுத்தாரே நினைவிருக்கா சுதர்ஸன்.. சந்திப்பு வில் வயசான டான் ..எப்பப் பார்த்தாலும் கான்ஸ்டிபேஷனில் இருப்பது போல ஒரு முகம்.. நிறைய படஙக்ளில் வில்லன் அப்புறம் மர்மதேசம் என்ற சீரியலின் முதல்பாகத்தில் இவர் டபிள் ஆக்டா அல்லதுசகோதரருடன் நடித்தாரா தெரியவில்லை..அதிலும் வருவார்..

chinnakkannan
8th June 2015, 09:00 PM
வாசு, நன்றி எடையைப் பாராட்டியதற்கு..// நீர் தைரிய சாலிதான்.. சி.கவிற்குப் பிறகு// அதானே :) சின்னான்னு கூப்பிடறதுல்லாம் மறந்து போச்சா.. மனிதர் மாறிவிட்டார்..மாறியது நெஞ்சம் மாற்றிய்வர் யாரோ :)



(கண்டது கற்றால் பண்டிதன் ஆவான் என்பார்கள். ஆனால் சின்னக்கண்ணன் பதிவுகளைப் படித்தால் (என்னைப்போன்ற) கணடவ்னும் பண்டிதன் ஆகலாம் போலிருக்கிறதே) அடடா ரொம்ப தாங்க்ஸ் ஆதிராம்.. யாரங்கே செளதிக்கு ஒரு பக்கெட் பன்னீர் பார்சல் :)

vasudevan31355
8th June 2015, 09:08 PM
கல்ஸ்!

முதலில் கையைக் கொடுங்கள். 'பூப்பூவாய் பூத்திருக்கு' பாடலுக்காக. எப்போது வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். கரெக்ட்டாக பிடித்து விட்டீர்கள்.

இந்தப் பாட்டு என்னுள் கலந்த பாடல். சிறுவர்களை மையப்படுத்திய பாடல் என்றாலும் இந்தப் பாடலை கேட்கும் போது ஸ்ரீதேவியோடும், மற்ற குழந்தைகளோடும் சேர்ந்து நானும் சிறுவனாகி விடுவது உண்டு. (அப்போது மட்டும்):)

என்னவோ ஒரு சோகமும், இன்பமும் கலந்த சுவையான பாடல். என்ன பூ என்ன பூ என்று சரோஜாப்பூ கேள்விகளாக அடுக்க, பிள்ளைப் பூக்கள் சரியும் தவறுமாக பதில் சொல்வது இனிமையோ இனிமை.

இந்தப் பாட்டில் பல விசேஷங்கள் இருக்கின்றன. குழந்தைகளின் தந்தையான ஜெமினி இப்பாடலின் போது உடன் இருப்பார்.

பாட்டின் இறுதி சரணத்தில்

'வேலை செய்ய சோம்பல் தரும்
வீட்டில் கூட வெறுப்பு வரும்
வேதனையில் மலரும் பூ என்ன பூ?

சொல்லுங்க என்ன பூ?'

என்று சரோஜாதேவி பிள்ளைகளிடம் கேள்வி கேட்பார். ஆனால் முந்திரிக் கொட்டைஜெமினி (ஜெமினி சரோஜாவை உள்ளூரக் காதலிப்பார்) பிள்ளைகளுக்கு முன்னால் முந்திக் கொண்டு சலிப்பு என்று பதில் சொல்லி விடுவார்.

அதற்கு தேவி,

'மலர்களிடம் கேட்டதற்கு மரங்கள் வந்து பதிலை சொன்னால் மனசுக்குள்ளே தோன்றும் பூ என்ன பூ?'

என்று இன்னொரு கேள்வியைக் கேட்டு வைப்பார் சற்றே வெறுப்புடன்.

அதாவது பிள்ளைகளை மலர்களாக நினைத்து அவர்களுக்குத் தக்கபடி கேள்வி கேட்டால் எல்லாம் தெரிந்த ஜெமினி மரம்:) மலர்களுக்கு முன்னால் முந்திக் கொண்டு பதில் தரலாமா என்ற வேதனை கலந்த எதிர் கேள்வி அது.

அதற்கு ஜெமினி மிகப் பெருமையாக,

'மதிப்பு'

என்று பதிலளிப்பார் கன்னடத்துக்கிளி தன் காதல் கிளியாகும் என்ற அவருடைய வழக்கமான எண்ணத்தில்.:)

ஆனால் ரூட் வேற மாதிரி போ(ஆ)கும். எதிலும் பிடிப்பிலாமல் குடும்பத்துக்காகவே உழைத்து ஓடாய்த் தேயும் தேவிக்கு காதலிக்க நேரமேது... இல்லை அந்த எண்ணம்தான் ஏது?

உடன் வெறுப்பாக முகத்தை வைத்து பதில் சொல்வார் சரோஜாதேவி. அந்த பதிலிலேயே காதல் மறுப்பும் இருக்கும்.

'மனசுக்குள்ளே தோன்றும் பூ

'கசப்பு'...

(ஏன்யா! பிள்ளைகள் கிட்ட கேள்வி கேட்டா நீ வந்து பதில் சொல்றியே...அறிவில்லை?!...நீ பண்ணிய கூத்துக்கு உன் மேல் மதிப்பா வரும்? உன் மேல் ஆத்திரம்தான் வரும். நீ சம்பளம் கொடுக்கும் முதலாளியாச்சே! நான் வாயை மூடிக் கொண்டு போக வேண்டியதுதான்..? இருந்தாலும் நாசூக்காகவாவது பதில் சொல்றேன்.)

இந்த பதிலை சற்றும் எதிர்பார்க்காத ஜெமினி சட்டென்று திரும்பி நாணத்துடன் நெற்றியில் கைவைத்து அவமானப்படுவது ஓஹோ!

ஒரே ஒரு பாடல்!

அதில்தான்

எத்தனை ஆழமான, விதவிதமான

கருத்துக்கள்...சம்பவங்கள்...உள்குத்துக்கள்...கேள்வ ிகள்...பதில்கள்..கருத்துப் பரிமாற்றங்கள்...உணர்வு வெளிப்பாடுகள்...நடிப்பு நயங்கள்.

'ஓல்ட் ஈஸ் கோல்ட்' என்கிறார்களே! எத்துணை உண்மை.

அவ்வளவு இருக்கிறது இந்தப் பாடலில்.

மறுபடி நன்றி கல்நாயக். இன்னொரு முறை நீங்களும் பார்த்து இன்புறுங்கள்.

uvausan
8th June 2015, 09:23 PM
ரவி,

உங்கள் பதிவுகளையெல்லாம் படிக்கிறேன். அண்மைக் காலமாக நிறைய ஆன்மீக, தத்துவ கருத்துகள் பதிவு முழுவதும் விரவி கிடைக்கின்றன. உங்களில் ஒரு மாற்றம் வந்தது போல். மெருகேறிய உங்கள் பாணிக்கு வாழ்த்துகள்.


அன்புடன்

நன்றி முரளி - உங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் இங்கு பதிவிடும் பதிவுகளை படிப்பதற்கும் , பாராட்டுவதற்கும் . சொல்லும் கருத்துக்கள் படிப்பவர்களின் மனதில் ஆழமாக பதிய வேண்டும் , அவர்களை காயப்படுத்தும் வகையில் இருக்கவே இருக்கக்கூடாது , அவர்களுக்கு உபயோகமாக இருக்கவேண்டும் -- இவைகளின் அடிப்படையில் தான் எழுதுகிறேன் - தவறுகள் இருக்கலாம் .

உங்களைப்போல அதை பொறுத்துக்கொள்ளும் பல நல்ல உள்ளங்கள் பல இங்கு இருப்பதால் எண்ண ஓட்டங்களில் தடை வருவதில்லை . மீண்டும் என் உளமார்ந்த நன்றிகள் உங்கள் பாராட்டுக்களுக்கு .

chinnakkannan
8th June 2015, 09:45 PM
என்னமோ போங்க -19
*

எப்பவும் ஒரு விஷயம் உண்டு.. மனம் கவர்ந்தஆண்மகன் எதுக்காவது சீரியஸா இருந்தா அவனைத் தொந்தரவு செய்யறது பொண்ணுக்கு எப்போதும் பிடிக்கும்.

ஹாய் டியர்..

ஹல்லோ


என்ன சுரத்தில்லாம இருக்கு

ஷ்ஷூ.. கொஞ்சம் வேலைம்மா

மொகத்தையாவதுக் கொஞ்சம் காட்டேண்டா

இதோ

ஏன் முகமும் சுரத்தா இல்லை..சரிவேண்டாம் காரணம்பாஸ்ம்ப.. இப்ப எனக்குஒரு விஷயம் தெரிஞ்சாகணும்

என்ன

ஒரு இமெய்ல் அனுப்பறேன்..அதுல சில சினிமாப் பாட்டுல்லாம் இருக்கு எது எந்தப்படம் நு தெரியலை..கொஞ்சம்பார்த்துச் சொல்லேன்

ஏய். ப்ரோக்ராம்ல ப்ராப்ளம்னு சொல்றேன்..சரி செய்றேன்

பின் என்ன.ஆணாகப்பட்டவன் வேலையெல்லாம் ஒதுக்கி அவள் கேட்ட சி.பா படம் பார்த்து எழுதி அனுப்பத் தான் செய்வான்.. எதற்கு அதற்கு அப்புறம் சிம்ம்பிளா ஒரு மெஸேஜ் வரும்.. மிஸ் யூ அண்ட் கிஸ்யூ..

அதே அது பெண்கள் சீரியஸாய் இருந்தால் போச் எஸ்பெஷலி காதலி..

ஏம்ம்மா உம்முன்னு இருக்க

என்னை ஒண்ணும் கேக்காத. கண்ணில் கண்ணீர் திரளும்பின் புரளும் கூந்தல் நெற்றியில் மருளும்

ஏய் சொல்லேன் அம்மா ஏதாவது சொன்னாளா

எதுவும் கேக்காத என்னை

சரி என்று பேசாமலிருந்தால் – உனக்கு என் மேல அக்கறையே இல்லை என்று ஆரம்பிப்பார்கள் பெண்கள் காதலில் என்று ஆன்றோர் சொல்வார்கள்..

*
இங்கு பாருங்கள் ரவிச்சந்திரனுக்கு என்னாயிற்று எனத் தெரியவில்லை ச்சும்மா ஸ்ப்ரிங் வச்ச மயிலாட்டமா துள்ளித் துள்ளி ஜெயலலிதா ஆட ஏதோ எதையோ பறி கொடுத்த மாதிரி உம்முனு மூஞ்சிய வச்சுக்கிட்டு இருக்கார்..இருந்தாலும் ஜெ விடலியே.. கடோசி வரைக்கும் எல்.ஆர்.ஈஸ்வரி குரல்ல ஆடிட்டாங்களே..

அப்புறமாவது நாடகம் ஆரம்பிச்சாங்களா இல்லையா..என்ன உங்களுக்கும் தெரியாதா ..என்னமோ போங்க..

எப்போது நாடகத்தை ஆரம்பிக்கலாம்
எங்கெங்குகாதலுக்கு வேளை வைக்கலாம்..
பெண்ணோட கையெடுத்துப் பார்த்ததில்லையா
கண்ணோடு வார்த்தை சொல்லிக் கேட்டதில்லையா அய்யய்யா

https://youtu.be/3IFzqF8xBmw

chinnakkannan
8th June 2015, 09:49 PM
குலவிளக்கு பாட்டுக்குன்னு ஆசைப்பட்டு டிவிடிவாங்கினேனா.. ஓர்ர்ரே அழுகை.. டி.வி. ஸ்க்ரீன் கூட ஈரமாய்டுச்சுன்னா பார்த்துக்கோங்களேன்..

எஸ்வி.ரங்காராவ் கொஞ்சம் வித்யாச கேரக்டர்.. அதுக்காக சர்ரூவ லொக் லொக் லொக்குன் இரும வச்சு ( இன்னொருபட இருமல் ஓகே) வியாதி கொடுத்து சாகடிக்கறதெல்லாம் ஓவர்..படம் ஆரம்பம் முதல் முடிவு வரை ஏனோ என்னிடம் ஒட்டவே இலலை


பாட்டு இசைக்களஞ்சியத்தில் கேட்டுக் கேட்டுப் பிடித்துப்போனது.. நன்றி கல் நாயக் அண்ட் வாசு..

chinnakkannan
8th June 2015, 10:49 PM
என்னமோபோங்க – 20

இந்தப்பாட்டு ரொம்ப நாளாப் பார்க்க நெனச்ச பாட்டு..

காதலைப் பொய்யென்றேனே கவனிக்க வில்லை நீயே
அழகெலாம்பொய்யென்றேனே அறியவும் வில்லை நீயே

என சிலோனில் அடிக்கடி கேட்டது. இன்று தான் கிடைத்தது..எல்லாம் புத்தர் அருள்! என்னமோ போங்க..

*

மன்னர்கள் வணங்கும் சிலையானேன்
உள்ளங்கள் வணங்கும் கலையானேன்

*


https://youtu.be/7_Lb1iwkOAA

rajeshkrv
8th June 2015, 11:23 PM
வாசு ஜி,

பாலா பாடல்களின் வரிசை அருமை. உன்னைத்தொட்ட காற்று வந்து என்னை தொட்டது
இசையரசியின் தேன் குரல் இளவயது பாலா , வாலி ஐயாவின் வரிகள், குமாரின் இசை என எல்லாமே அமர்க்களம்

uvausan
9th June 2015, 05:42 AM
Good Morning

http://i756.photobucket.com/albums/xx208/basikp/animals/BeautifulAnimalsBearFamily071001.jpg (http://media.photobucket.com/user/basikp/media/animals/BeautifulAnimalsBearFamily071001.jpg.html)

uvausan
9th June 2015, 05:55 AM
கருவின் கரு - பதிவு 61

" அம்பா "

உண்மை சம்பவம் 9

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/amma-kavithai_zpsnc5ptrux.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/amma-kavithai_zpsnc5ptrux.jpg.html)

அம்மாவிற்கு என் மீது மிகுந்த கோபம் - இருக்காதா பின்னே - கணவனை இளம் வயதில் இழந்து , ஒரு வீட்டில் எடுபிடி வேலை செய்து என்னை படிக்க வைத்தாள் - ஒரு நாயிக்கு இருக்கும் நன்றி உணர்வுகள் கூட என்னக்கு இல்லாமல் போய்விட்டது .. என்னோவோ தெரியவில்லை , மேரியை சந்திக்கும்வரை நன்றாகத்தான் இருந்தேன் - அவள் என் வாழ்வில் குறுக்கிட்டபின் அம்மாவின் முக்கியத்துவம் குறைந்தது உண்மைதான் ..... " ராமு நீ எந்த பெண்ணை வேண்டுமானாலும் திருமணம் செய்துகொள் ஆனால் அவள் ஒரு இந்து வாகத்தான் இருக்கவேண்டும் " இது அம்மாவின் வாதம் ...

" அம்மா மதங்கள் நம்மால் உண்டாக்கப்பட்டவைகள் - இதற்க்கு நாம் ஏன் அடிமையாக வேண்டும் - மேரி நல்ல பெண்னம்மா - ஒரு தடவை ஆவலுடன் பேசிப்பார் - உன்னை தங்கமாக பார்த்துக்கொள்வாள் - முன் பின் பார்க்காத ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்வதை விட, தெரிந்த பெண்ணை திருமணம் எய்துகொல்வதில் தவறு என்னம்மா ?"

அம்மாவிடம் இருந்து பதில் வரவில்லை - அவள் இப்பொழுதெல்லாம் துணை என்று சொல்லிக்கொள்வது அவளுடைய பழைய கால நினைவுகளும் , கண்களில் வற்றிய நிலையில் இருக்கும் கண்ணீர் -இவைகள் மட்டுமே ... மிகவும் ஆச்சாரமாக வளர்ந்தவள் ----

என் காதல் முன் , அவளுடைய பிடிவாதம் தோற்று போனது - அம்மா எங்களுடன் இருக்க விரும்ப வில்லை - அப்பாவின் 1 bhk வீட்டில் தனியாக வசிக்கிறாள் - நானும் மேரியும் பல தடவைகள் சென்று பார்த்தோம் - அவளின் கோபம் தனியவே இல்லை - மேரி என் நிலமையக்கண்டு மிகவும் வருந்தினாள் - இருவரின் துடிப்பினால் அங்கே கண்ணனின் வருகை . அம்மாவின் மனம் மாறலாம் என்று கண்ணனை காண்பிக்க அவளிடம் எடுத்துச்சென்றேன் - கண்ணனைப்பார்த்தாள் - கைகள் ஏந்த வரவில்லை -----

கண்ணனுக்கு இன்று மூன்று வயது ---- மேரிக்கு உடம்பு சரியில்லை - எனக்கும் கலை போல வேலை பளுவுடன் ஏகப்பட்ட ஆபீஸ் பிரச்சனைகள் .... கண்ணன் வெளியில் விளையாடிக்கொண்டிருந்தான் - ஒரு நிமிடம் - கீச் என்ற சப்தம் - யாரோ கத்தும் குரல் --- வீட்டில் இருந்த நான் வெளியே ஓடி வந்தேன் - நல்ல வேளை , யார் பெத்த பிள்ளையோ - காரில் அடிபடாமல் தப்பித்தது - பாவம் அந்த குழந்தையை காப்பாற்றின அந்த அம்மாதான் மயக்கமாக இருக்கிறாள் --- கைகள் பதறின - ஓடினேன் - அது -- அது என் அம்மா தான் -- இங்கு எப்படி வந்தாள் ? காப்பாத்தினது என் மகனைத்தான் என்று தெரியுமா ? -- அவளை உடனே ஆஸ்பத்திரிக்கு விரைந்து அழைத்துச்சென்றேன் -- மண்டையில் அடி -- எல்லா டெஸ்டும் எடுத்தாகிவிட்டது --- மெதுவாக ICU வில் இருந்த அம்மாவை நெருங்கினேன் --- அம்மாவிற்கு என்னை பார்த்து புரிந்துகொண்டாள் -- ராமு மேரிக்கு உடம்பு முடியவில்லை என்று எப்படியோ கேள்விப்பட்டேன் - அவளுக்கு செய்த கஷாயத்தை தரவே வந்தபோது ஒரு குழந்தை காரின் அடியில் போக இருந்தது - காப்பாற்றி விட்டு , நான் விழுந்துவிட்டேன் -----

" அம்மா நீ காப்பாற்றியது உன் பேரனைத்தான் அம்மா ! கண்ணன் ----"

" அம்மாவின் முகத்தில் பிரகாசம் - பூரிப்பு - ராமு உனக்கு ஒரு உண்மையை சொல்லவேண்டிய நேரம் வந்து விட்டது - உன் தந்தை ஒரு இந்து அல்ல - நான் காதலித்து மணந்துகொண்ட பீட்டர் -- யாருமே எங்கள் திருமணத்தை ஒப்புக்கொள்ளவில்லை - முடிவில் நாங்கள் இணைவது என்று முடிவு செய்தோம் . வருடம் இனிமையாக எங்கள் வாழ்க்கை ஓடம் ஓடியது - பீட்டர் படிப்பதற்காக வெளி நாடு செல்வதாக என்னிடம் சொல்லிவிட்டு சென்றவர் தான் - திரும்பி வரவேயில்லை - அங்கு வேறு யாரையோ திருமணம் செய்து கொண்டு அங்கேயே தங்கிவிட்டதாக செய்தி .. " நீ கேட்கலாம் இதற்கும் மதத்திற்கும் என்ன சம்பந்தம் - ஒரு இந்து வாக இருந்திருந்தாலும் , ஏமாற்ற நினைத்தால் என்ன செய்ய முடியும் ? என்று " நீ நினைப்பது சரி ----- என்னிடமும் இதற்க்கு சரியான பதில் இல்லை - " ஒரு வேளை என் விதி வேறு மாதிரி அமைந்திருக்கலாம் ... உன் அப்பா இருந்தும் நான் விதவையாகினேன் --- பல வீட்டில் வேலை செய்து உன்னை படிக்க வைத்தேன் --- பல வசதிகள் உள்ள குடும்பத்தில் இருந்து வந்தவள் - காதலித்தேன் என்ற ஒரு பாவத்தை தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை -- நான் சந்தித்த சோதனைகள் , வேதனைகள் மிக மிக அதிகம் - நீயும் அப்படி ஒரு மாய வலையில் விழுந்து விடக்கூடாது என்பதால் தான் நான் தடுத்தேன் - மேரியை நான் ஒரு போதும் வெறுத்ததில்லை - என் மகன் ஒரு பீட்டர் இல்லையே சொல்லி வருத்தப்பட ------------

கண்ணன் ---- மேரியையும் , பீட்டரையும் என் வாழ்வுடன் இணைத்தான் - அன்பு என்பது மத சார்பற்ற ஒன்று --- அதன் பெயர் - பைபிள் அல்ல , குரான் அல்ல , பகவத் கீதை அல்ல - ஒரே பெயர் -- அதுதான் "அம்மா "..

=========

பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா லல ல்லா
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
அலைபோலவே விளையாடுமே சுகம் நூறாகுமே
மண்மேலே துள்ளும் மான்போலே

பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா


என்னாளும் நம்மைவிட்டு போகாது வசந்தம்
தோளோடு ரோஜா ரெண்டு உறங்கும்
தள்ளாடும் பூக்கள் எல்லாம் விளையாட அழைக்கும்
ஏதேதோ ஏழை மனம் நினைக்கும்
தென்னை இளம் சோலை பாளைவிடும் நாளை
தென்னை இளம் சோலை பாளைவிடும் நாளை
கையிரண்டில் காதோறம் அன்னை மனம் பாடும்
கண்கள் மூடும்

பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா லல ல்லா
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
அலைபோலவே விளையாடுமே சுகம் நூறாகுமே
மண்மேலே துள்ளும் மான்போலே

ஆளான சிங்கம் இரண்டும் கைவீசி நடந்தால்
காலடியில் பூமி எல்லாம் அடங்கும்
சிங்காரத்தங்கம் ரெண்டும் தேர்போல வளர்ந்தால்
ஆகாயம் வந்து இங்கே வணங்கும்

எங்களால் தாயே உயிர் சுமந்தாயே
எங்களால் தாயே உயிர் சுமந்தாயே
கண்களிலேயே முத்துச்சுரம் காப்பாத்தி
கட்டிவைத்தாய் நீயே எங்கள் தாயே

பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
அலைபோலவே விளையாடுமே சுகம் நூறாகுமே
மண்மேலே துள்ளும் மான்

https://youtu.be/ol2f03smANU

uvausan
9th June 2015, 06:04 AM
கருவின் கரு - பதிவு 62

" அம்பா "

பூவே பூச்சூட வா -- ( கல் நாயக் சார் மன்னிக்கவும் - உங்கள் தோட்டத்திலிருந்து சில பூக்களைத் திருடி விட்டேன் உங்களுக்குத்தெரியாமல் ----)

தாயின் பாசம் கிடைக்கவில்லை - காதலித்த ஒரு பாவத்திற்காக தன் பேத்தியையும் வெறுக்கிறாள் இந்த பாட்டி - பின்னிப்பிணையும் பாச வலைகள் என்றுமே பிரியாது - பாட்டியுடன் பாசமும் மீண்டும் பேத்திக்கு கிடைக்கின்றது .....

https://youtu.be/wDOUp9H_mTA

லலலா லலலா லாலாலா.. லலலா லலலா லாலாலா..
லலலா லாலா லாலாலா.. லா..லா..லா..

பூவே பூச்சூடவா.. எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா
பூவே பூச்சூடவா.. எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா
வாசல் பார்த்து.. கண்கள் பூத்து.. காத்து நின்றேன் வா
பூவே பூச்சூடவா.. எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா

அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும்
ஓடி நான் வந்து பார்ப்பேன்
தென்றல் என் வாசல் தீண்டவே இல்லை
கண்ணில் வெந்நீரை வார்ப்பேன்
கண்களும் ஓய்ந்தது.. ஜீவனும் தேய்ந்தது
ஜீவ தீபங்கள் ஓயும் நேரம்
நீயும் நெய்யாக வந்தாய்
இந்தக் கண்ணீரில் சோகமில்லை
இன்று ஆனந்தம் தந்தாய்
பேத்தி என்றாலும் நீயும் என் தாய்

பூவே பூச்சூடவா.. எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா

காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும்
பாசம் வெளுக்காது மானே
நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும்
தங்கம் கருக்காது தாயே
பொன்முகம் பார்க்கிறேன்.. அதில் என் முகம் பார்க்கிறேன்
இந்தப் பொன்மானைப் பார்த்துக் கொண்டே
சென்று நான் சேர வேண்டும்
மீண்டும் ஜென்மங்கள் மாறும்போதும்
நான் உன் மகளாக வேண்டும்
பாச ராகங்கள் பாட வேண்டும்

பூவே பூச்சூடவா.. எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா

பூவே பூச்சூடவா,
இளையராஜா,
வைரமுத்து,
சித்ரா,
நதியா, பத்மினி.

------------------

இணையத்தளத்தில் ஒருவர் எழுதின குமறல்கள் :

" என் பிள்ளைகளை என்னை அடித்து என் தாய் தந்தையை பலவீனபடுத்தி என்னிடம் இருந்து பிரித்தபின் இந்த பாடல் என் தொண்டையில் முள்ளாக குத்துகிறது. ஏதோ ஒரு உணர்வு தொன்டையில் குத்துவதும், எச்சில் ஒருவிதமாக சுரப்பதும், நெஞ்சம் தவிப்பதும், அப்பப்பா பத்மினி வாசலை பரிதவிப்போடு பார்த்து ஏங்குவது போல் நானும் எத்தனை முறை ஏங்கியிருப்பேன். என் பிள்ளை, என் பிள்ளை என்று மனம் பேதலித்து தவித்து இயலாமையில் கோபம் கொண்டு கத்தி இருக்கிறேன். பாசம் மிக கொடியது என்று ஔவை சொல்லவில்லை, அன்பில்லா பெண் மனைவி ஆக அமைந்து அவள் கையால் சாப்பிட வேண்டும் என்ற நிலையே கொடியது என்று ஔவை சொல்லிய கருத்து என் வாழ்கையில் அனுபவம் ஆகிறது. சாப்பாடு என்று ஔவை எதை சொன்னார், வயிற்று பசி, உடல் பசி இரண்டுக்கும் உணவு தேவை. ஔவையே நீங்கள் மீண்டும் பிறக்கவேண்டும், எனக்கு தர்மம் கிடைக்க உதவி செய்யவேண்டும் என மனம் ஏங்குகிறது. இந்த பாடல் இதயத்தில் வலி. எந்த சமுதாயத்தில் இன்பமாக,கௌரவமாக, மரியாதையுடன் பெற்றோரின் கருணையில் வாழ்ந்தேனோ, அதே சமுதாயத்தை கொடூரமான, மோசமான, மிகவும் சிக்கலான, அவமான படுத்தும் அருவருப்பான சமூகமாக உணரவைத்தவள் ரேணுகா. திரையில் பத்மினியை போல் என் தாய், என் பிள்ளைகளை நெஞ்சில் சுமந்து, கண்களில் ஏந்தி, ஏங்கிய வாழ்க்கை. பரிதவிப்பு என் தந்தையின் உயிரை எடுத்த சதி."

uvausan
9th June 2015, 06:10 AM
கருவின் கரு - பதிவு 63

" அம்பா "

குழந்தைகள் பெற்றவர்கள் நடந்துகொள்வதை உன்னிப்பாக பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் -- அவர்களின் எதிரில் மதிக்கத்தக்க வகையில் நாம் நடந்துகொள்ள வில்லை என்றால் அவர்கள் வாழ்வும் கேப்டன் இல்லாத கப்பலைப்போல அமைந்து விடுகிறது ......


கோழி ஒரு கூட்டிலே
சேவல் ஒரு கூட்டிலே
கோழிக்குஞ்சு இரண்டும் இப்போ
அன்பில்லாத காட்டிலே

கோழி ஒரு கூட்டிலே
சேவல் ஒரு கூட்டிலே
கோழிக்குஞ்சு இரண்டும் இப்போ
அன்பில்லாத காட்டிலே

பசுவைத் தேடி கன்னுக்குட்டி
பால் குடிக்க ஓடுது........
பசுவைத் தேடி கன்னுக்குட்டி
பால் குடிக்க ஓடுது

பறவை கூட இரை எடுத்து
பிள்ளைக்கெல்லாம் ஊட்டுது
பறவை கூட இரை எடுத்து
பிள்ளைக்கெல்லாம் ஊட்டுது
தாத்தா தெரியுமா பார்த்தா புரியுமா
தாத்தா தெரியுமா பார்த்தா புரியுமா
தனித் தனியா பிரிந்திருக்க
எங்களால முடியுமா
எங்களால முடியுமா
கோழி ஒரு கூட்டிலே
சேவல் ஒரு கூட்டிலே
கோழிக்குஞ்சு இரண்டும் இப்போ
அன்பில்லாத காட்டிலே

அடுத்த வீட்டு பாப்பா இப்போ
அம்மா அப்பா மடியிலே
அடுத்த வீட்டு பாப்பா இப்போ
அம்மா அப்பா மடியிலே
அதிஸ்டம் இல்லா பொண்ணுக்குதான்
சேர்த்துப் பார்க்க முடியல்ல
அதிஸ்டம் இல்லா பொண்ணுக்குதான்
சேர்த்துப் பார்க்க முடியல்ல
அம்மா மறக்கல்ல அப்பா நினைக்கல்ல
அம்மா மறக்கல்ல அப்பா நினைக்கல்ல
அங்கும் இங்கும் சேர்த்து வைக்க
எங்களுக்கும் வயசில்ல
உங்களுக்கும் மனசில்ல
கோழி ஒரு கூட்டிலே
சேவல் ஒரு கூட்டிலே
கோழிக்குஞ்சு இரண்டும் இப்போ
அன்பில்லாத காட்டிலே.

https://youtu.be/Iv8YcPW8zGw

uvausan
9th June 2015, 06:25 AM
கருவின் கரு - பதிவு 64

" அம்பா "

தாய் அன்பிற்கு ஈடேதம்மா ஆகாயம் கூட அது போதாது .
தாய் போல யார் வந்தாலுமே உன் தாயை போல அது ஆகாது ...

https://youtu.be/J8kayxD7o4w

uvausan
9th June 2015, 07:29 AM
கருவின் கரு - பதிவு 65

" அம்பா "

அம்மா , அப்பா என்றும் இணைந்து வாழவேண்டும் - அவர்கள் வாழ்க்கை என்றும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் - இது குழந்தைகளின் ப்ராத்தனை ;

குழந்தைகள் என்றுமே நான்றாக ஆரோக்கியமாக , நல்ல பெயருடன் என்றும் இருக்க வேண்டும் - இது தினமும் வேண்டும் ஒரு தாயின் ப்ராத்தனை...

ப்ராத்தனைகளுக்கு உரியவன் ஒருவன் , அவன் நம்மை ப்ராத்திப்பது - உலகில் அன்பு என்றும் நிலைத்து இருக்கவேண்டும் - மத சார்பற்ற உறவுகள் ஓங்கி வளரவேண்டும் ---- நம் ப்ராத்தைனைகள் பலிக்கலாம் - அவனுடையது ????

https://youtu.be/Eiy0iJouEuk

https://youtu.be/bWtoPYfjM6s

vasudevan31355
9th June 2015, 07:44 AM
எம்.எல்.ஸ்ரீகாந்த்

எம்.எல்.ஸ்ரீகாந்த் பாடிய அபூர்வ பாடல்களின் தொகுப்பு.

மிக்க நன்றி முரளி சார்!

'காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ' பாடலில் ஹம்மிங் தருபவர் பாலாதான் என்று பல பேர் அடித்துச் சொல்வதுண்டு. ஆனால் ஒரு சிலரே எம்.எல்.ஸ்ரீகாந்த் என்பார்கள். நான் ஒரு சிலர் கட்சி. அதாவது உங்க கட்சி.:)

இதோ 'உத்தரவின்றி உள்ள வா' படத்தின் டைட்டில் கார்டில் பின்னணி பாடியவர்களின் பெயரில் ஸ்ரீகாந்த் என்று போட்டிருப்பதைக் காணலாம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355035/uuvaa.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355035/uuvaa.jpg.html)

நீங்கள் குறிப்பிட்டுள்ள எம்.எல்.ஸ்ரீகாந்த் அதிகமாகப் பாடல்கள் பாடவில்லை என்றாலும் 'நினைப்பது நிறைவேறும்' பாடல் மூலம் தமிழகத்திற்கு நன்கு பரிச்சயமானவர். வாணியுடன் இவர் பாடிய இந்தப் பாடல் பேய் ஹிட். ஆனால் பின்னால் என்ன காரணத்தினாலோ இவர் அதிகம் பாடவில்லை. ஆனால் இவர் பாடல்கள் சிலவே என்றாலும் ஒவ்வொன்றுமே கேட்டு ரசிக்கக் கூடியவை. அபூர்வமானவை.

இவர் ஜானகியுடன் 'கல்யாண வளையோசை' படத்தில் இணைந்து பாடிய (சரியா ராகவேந்திரன் சார்?)

'வள்ளுவன் குரலில் சொல் எடுத்தேன்
கம்பன் கவியில் சுவை எடுத்தேன்
இளங்கோ வரியில் எழிலெடுத்தேன்
ஆடுவோம் நாம் ஆடுவோம்'

என்ற

பாடல் அருமை. சற்ற குரல் நடுக்கத்துடனே எப்போதும் பாடுபவர் இவர்.

இப்பாடலை 'லல்லல்லால லலலலலா' என்று ஜானகி துவங்கும் போது நம்மை நாமே மறந்து விடலாம். ஜானகி அற்புதமாக பாடிய பாடல்களில் இதுவும் ஒன்று. மேலும் இப்பாடலின் வரிகள் அருமையோ அருமை. டியூன் இன்னும் பிரமாதம்.


https://youtu.be/XhjLhqsOheE
அப்புறம் இன்னொரு பாடல்.

'பேசு மனமே பேசு' என்ற யாருக்கும் அதிகம் தெரியாத படம் ஒன்று. படம் வெளிவந்ததா இல்லையா என்று தெரியவில்லை.

'கண்கள் தேடுது ஒளி எங்கே
கலை கூடுது அழகெங்கே
ஒளி போன பின்னால் என் வாழ்வும்
நிலையானது வீண் என்பேன்'

என்ற பிரமாதமான பாடல் ஒன்றை எம்.எல்.ஸ்ரீகாந்த் அதில் பாடியிருப்பார் மனதை உருக்கும் விதமாக. நிச்சயமாக கண்களில் கண்ணீர் பெருகும் இப்பாடலைக் கேட்டால். பாடலின் பின்னால் ஒலிக்கும் கோவில் மணி ஓசை நெஞ்சை பிசைவது உண்மை


https://youtu.be/VuOA4YcNEZw

இவர் ஒரு லக்கி கை. சுசீலா, ஜானகி, வாணி என்ற ஜாம்பவான் பாடகிகளுடன் இணைந்து பாடி அசத்தி விட்டார். சுசீலாவுடன் இணைந்து கிறித்துவ பக்திப் பாடலும் பாடி இருக்கிறார். மலையாளப் பாடல்களும் பாடி உள்ளார். இசையமைப்பாளரும் கூட. 70 களின் பாடல்களை ரசிக்கும் எவருக்கும் ஸ்ரீகாந்தைத் தெரியாமல் இருக்க முடியாது.

மேற் சொன்ன பாடல்களை தமிழ்நாட்டு வானொலிகளை விட இலங்கை வானொலி அதிகமாக ஒளிபரப்பி நம் இதயத்தில் நீங்கா இடம் பெற்றது. இன்னும் சொல்லப் போனால் எம்.எல்.ஸ்ரீகாந்த் என்ற பாடகரையே இலங்கை வானொலி மூலமாகத்தான் நாம் அறிய முடிந்தது.

இவருடைய எல்லாப் பாடல்களுமே அருமை என்றாலும் நீங்கள் கூறியது போல 'நினைப்பது நினைவேறும்... நீ இருந்தால் என்னோடு' பாடல்தான் இவரை டாப்பில் உயர்த்தியது. இப்படத்திற்கு இசையும் இவரே. 'தன்வினை தன்னைச் சுடும்' என்ற படத்தின் இசையமைப்பாளரும் இவர்தான்.



இவர் பாடிய நினைவுக்கு வரும் இன்னொரு பாடல்

'எங்கு பார்த்தாலும் இயற்கை காட்சி
தென்றல் கவி பாடும் இன்ப ஆட்சி'


https://youtu.be/YZd-0vBjMnE

ரொம்ப நன்றி முரளி சார். ஒரு அருமையான பாடகரை நினைவுகூர வைத்ததற்கு.

rajeshkrv
9th June 2015, 08:41 AM
ஜி நலம்தானே

rajeshkrv
9th June 2015, 08:43 AM
எம்.எல்.ஸ்ரீகாந்த் நல்ல பாடகர்.
ஆமாம் ஜி காதல் காதல் பாடலில் வரும் ஹம்மிங் இவருடையதே. மலையாளத்திலும் பாடியுள்ளார். அவரை நினைவுகூர்ந்த உங்களுக்கு நன்றி

vasudevan31355
9th June 2015, 08:56 AM
குட் மார்னிங் ஜி! சுகந்தன்னே?:)

rajeshkrv
9th June 2015, 08:57 AM
திரையில் பக்தி -4
http://www.thehindu.com/multimedia/dynamic/00961/2008082950231601_961473e.jpg
பக்தி என்பது ஒரு சாரார்க்கு மட்டுமல்ல
தமிழ் திரையில் எல்லா சமய பக்தியும் வந்துள்ளது அப்படிப்பட்ட பாடல்களும் அருமையாகவும் அமையத்தான் செய்தன

அப்படிப்பட்ட பாடல் தான் இது.
பி.ஏ.பெரிய நாயகி அவர்களின் குரலில் அற்புத பாடல்

எஸ்.வி.வெங்கட்ராமனின் இசை, எம்.வி.ராஜம்மாவின் நடிப்பு என எல்லாமே தூள்

எனக்கு மிகவும் பிடித்த எம்.வி.ராஜம்மா

அருள் தாரும் தேவ மாதாவே

https://www.youtube.com/watch?v=AcSApyQDX6g

vasudevan31355
9th June 2015, 08:57 AM
சுருக்க எழுதுவது எப்படிஜி? கொஞ்சம் கத்துக் கொடுங்களேன்.:)

rajeshkrv
9th June 2015, 08:58 AM
குட் மார்னிங் ஜி! சுகந்தன்னே?:)

சுகமே .. நிங்கள் சுகமானோ

rajeshkrv
9th June 2015, 08:59 AM
சுருக்க எழுதுவது எப்படிஜி? கொஞ்சம் கத்துக் கொடுங்களேன்.:)

வாசு ஜி நீட்டி முழக்க எழுதினால் தான் வாசு ஜி.. ராஜேஷ் சுருக்க எழுதினாத்தான் அது ராஜேஷ்
அம்புட்டுத்தேன்

vasudevan31355
9th June 2015, 09:02 AM
'ஆதியே இன்ப ஜோதியே!'

என்ன இனிமையான பாடல்!. இந்தப் பாடலே 'கதியே' என்றிருந்த காலம் உண்டு.

நன்றிஜி!

vasudevan31355
9th June 2015, 09:03 AM
பிரபு,

நீ இளைச்சா நல்லா இருக்க மாட்டே:)

நான் குண்டானா நல்லா இருக்க மாட்டேன்.:)

vasudevan31355
9th June 2015, 09:07 AM
வாசு ஜி நீட்டி முழக்க எழுதினால் தான் வாசு ஜி.. ராஜேஷ் சுருக்க எழுதினாத்தான் அது ராஜேஷ்
அம்புட்டுத்தேன்

அட செல்லப் பாவிகளா?:) முடிவே பண்ணிட்டீகளா?:)

rajeshkrv
9th June 2015, 09:10 AM
பிரபு,

நீ இளைச்சா நல்லா இருக்க மாட்டே:)

நான் குண்டானா நல்லா இருக்க மாட்டேன்.:)

அதே தான்.

rajeshkrv
9th June 2015, 09:13 AM
அட செல்லப் பாவிகளா?:) முடிவே பண்ணிட்டீகளா?:)

நீட்டி முழக்கி என்று சொன்னது அழகாக விவரமாக நகைச்சுவையாக எழுதுவது என்று அர்த்தமய்யா

vasudevan31355
9th June 2015, 09:22 AM
சின்னா (போதுமா)

இப்படி ராட்சஸி பாட்டைப் போட்டு கொல்கிறீரே!

'எப்போது நாடகத்தை ஆரம்பிக்கலாம்?' அசத்தல்.வேறு வேலையே ஓடவில்லை. யய்யய்யய்யா.

இன்னும் மூன்று மாசத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் இருக்கக் கடவது.

vasudevan31355
9th June 2015, 09:26 AM
சின்னா கமல் புத்த பிட்சு. ஆனால் நாகநந்தி இல்லை.

ஆமாம்...

'காதலைப் பொய் என்றேனே
கவனிக்க வில்லை நீயே'

பாடும் குரல் யாருது தெரியுமா? தெரியலை என்றால்

'கவனிக்க வில்லை நீயே'...:)

rajeshkrv
9th June 2015, 09:28 AM
ராமனுக்கு பட்டம் கட்ட ஏற்பாடு நடக்கிறது
ஊரே கோலாகலம் ...
லீலாவின் குரலில் அம்மாக்கள் கொண்டாட
இசையரசியின் குரலில் சீதாவும் மகிழ, காமுகாராவின் குரலில் ராமனும் பாட
ஆஹா
அதுவும் இசையரசியின் பகுதி அப்படியே நம்மை மெய் மறக்க செய்யும்

https://www.youtube.com/watch?v=Fv4nfG2qsW4

chinnakkannan
9th June 2015, 10:03 AM
ஹாய் குட்மார்னிங் ரவி வாசு ராஜேஷ்

பிள்ளை நிலா பாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும் ரவி..உங்களுக்கு ஒரு ஹோம் வொர்க்.. முடிந்தால் இந்த வாரகுமுதத்தில் தூரத்து உறவு என்ற வைரமுத்து சிறுகதையை படித்து எழுதுங்கள்..முடியவில்லையெனில் சொல்லுங்கள் நான் எழுதுகிறேன்.. மனதை உலுக்கும் யதார்த்தமான சிறுகதை..

வாசுஜி
//இன்னும் மூன்று மாசத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் இருக்கக் கடவது.// ஏன் இப்படி ஒரு சாபம்..இப்போது தான் சின்னதாக குட்டி முதலைக் கண்ணீர் போல ஒல்லியாக வருகிறது..ஆகஸ்ட் வரை நீடிக்குமாம்..(சந்திரலேகாவில் உபயோகப்படுத்திய டிரம்ஸ் கிடைக்குமா எனப் பார்க்க வேண்டும்.. தண்ணீர் பிடித்து வைக்க)

எம் எல் ஸ்ரீகாந்த்.. இந்த வள்ளுவன் வழங்கியசொல்லெடுத்தேன் என்னமோ போங்கவில் போடுவதற்காக எடுத்து வைத்திருந்தேன்.. எங்கு பார்த்தாலும் இயற்கை காட்சியும் நல்ல பாட்

காதலைப் பொய்யென்றேனே - கமல் தானே பாடுவது.. ஆனால் நீங்கள் கூறியது சாலச் சிறந்தது.கிட்டத்தட்ட நாக நந்தி கெட்டப்பில் தான் இருப்பார் கமல்! :)

ராமருக்குப் பட்டாபிஷேகம் இனிமேல் தான் கேக்க்ணும்.. ராஜேஷ்..

chinnakkannan
9th June 2015, 10:07 AM
ஞான செளந்தரி சின்னவயதில் சாந்தி தியேட்டரில் பார்த்த நினைவு கை வெட்டுப் பட்டு வளர்வது மட்டும் நினைவு..ராஜேஷ்..

சுருக் ராஜேஷ் கல் நாயக் நீளம் வாசு சம்டைம்ஸ் ரவி... ஸ்மைலி அண்ட் இங்க்லீஷ் ராஜ் ராஜ் சார்,- திட்டல், குட்டல், கொஞ்சம் நிறைய நான், எழுதட்டுமா போன்ற வார்த்தைகள் கொண்டவர் கோபால், ஆதிராம் இப்பத் தான் தமிழ் எழுதுகிறார் அவரும் சுருக் ஆனால் ஆங்கில சுர்ருக், அப்ப நான் எந்த கேடகரி..:)

uvausan
9th June 2015, 10:09 AM
ஹாய் குட்மார்னிங் ரவி வாசு ராஜேஷ்

பிள்ளை நிலா பாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும் ரவி..உங்களுக்கு ஒரு ஹோம் வொர்க்.. முடிந்தால் இந்த வாரகுமுதத்தில் தூரத்து உறவு என்ற வைரமுத்து சிறுகதையை படித்து எழுதுங்கள்..முடியவில்லையெனில் சொல்லுங்கள் நான் எழுதுகிறேன்.. மனதை உலுக்கும் யதார்த்தமான சிறுகதை..



ck - கம்பன் மனமுவந்து எழுத முன் வரும்போது கட்டுத் தரிக்கு அங்கு என்ன வேலை ?? - உங்கள் கைவண்ணத்தில் ரசிக்க காத்திருக்கிறோம்

chinnakkannan
9th June 2015, 10:16 AM
ஹச்சோ தெய்வ குத்தம் ஆகிடுச்சே..

இந்தாருங்கள் என கொஞ்சம் சில பல பாராக்ராஃப்ஸ் ; பாரதி, அப்புறம் வாசு பக்கெட்டை விட ச் சின்ன பக்கெட் ; அண்ட் தகவல் களஞ்சியம் க்ருஷ்ணாஜி,

ஒரு டெஸ்ட் ட்யூபில் ஒரு தத்துவப் பாட்டு+ ஒரு அரசியல் சமீபத்திய நிகழ்வு+ பாடல் வரிகள்+ ஒரு அரசியல் ஜோக் வித் கலைஞர் ஆர் அண்ணா+ பாட் மோஸ்ட்லி ம.தி இல்லையென்றால் மு.க.மு(இவரை மறக்காதது கலை ஒருவர் தான்) இது கலை ஸ்டைல்;

சி.க. சார் இந்தாருங்கள் உங்களுக்காக ஜாலியான பாடல் அல்லது ஆவணங்கள் அல்லது இளவயது ஜெ. போட்டோ இது எஸ்வி ஸ்டைல்;

எஸ் வாசுதேவன் பல வலைகளிடமிருந்து தேடிப் பிடித்து மீன்..அதாவது மீனிங்க்ஃபுல் பதிவிடுபவர்.. ம்ம்

ரவி சமீபத்தில் தான் சிவாஜியின் பழைய படம் கமலின் பழைய படமான புதியபடம் பார்த்தாரோ என்னவோ டபக்கென விஸ்வரூபம் எடுத்துவிட்டார்..

gkrishna
9th June 2015, 10:51 AM
கவிஞனும் கண்ணனும்



''அபயம் அபயம் ..............கண்ணா வா!!''

கதை வேறு பாட்டு வேறு. கதையையே பாட்டாகவும் சொல்லும் உத்தி பழைய செய்யுள்களில் நிறைய உண்டு. கம்ப ராமாயணம், வில்லி பாரதம் போன்றவையும், காப்பியங்களை புகட்டிய சிலப்பதிகாரம் போன்றவையும் உரைநடையில் இல்லை.

அவற்றை ரசிக்கும்போது இரண்டு வித அனுபவம் பெற முடியும். கவிதையின் நடை, சந்தம், அதன் பொருள் செறிவு,, மாட்சிமை, ஒரு பக்கம் இருக்கட்டும் கதையையும் விறுவிறுப்பாக சொல்லும் பாங்கு அதோடு சேர்ந்திருந்தால் அதன் உன்னதமே தனி.

ஒரே ஒரு பாட்டு கம்பரின் ராமாயணத்தில் சொல்கிறேன். பரதன் ராமனைத் தேடி கங்கைக் கரை வருகிறான். அவனோடு அயோத்தியில் அனைவரும் ரத கஜ துரக பதாதிகளோடு வருகிறார்கள். ஒருவேளை ராமனை திரும்ப அழைத்து வர முடிந்தால் ஒரு ராஜ மரியாதை வேண்டாமா ? அதற்காக.
தூரத்தில் இந்த பரதனின் கூட்டத்தை குகன் எனும் வேடன் பார்த்து விடுகிறான். ராமனை கங்கைக்கரையில் சந்தித்து ''நால்வரோடு ஐவரானவன்'' அல்லவா? எதற்கு இந்த பரதன் படையோடு இங்கு வருகிறான்? ஒருவேளை நாட்டை விட்டு துரத்தியது போதாது, அவனை காட்டிலேயே கொன்று முடித்துவிடவும் எண்ணமோ?

அப்படி ஒருவித எண்ணம் அவன் மனதில் இருந்தால் அவன் இன்றோடு முடிந்தான். வேடுவர்களாகிய நாங்கள் என் ராமனுக்கு தீங்கு செய்ய வந்த பரதனை உயிரோடு விட்டு வைப்போமா? என்று எண்ணி தனக்குத் தானே பேசுகிற மாதிரி ஒரு பாட்டு.


''கரிய நிறம் கொண்ட, என் ஆருயிர் நாயகனான, ராமன் அயோத்தி நகரை அரசனாக முடி சூட்டிக் கொண்டு ஆள முடியாதவாறு தாயைத் தூண்டிவிட்டு வஞ்சனை செய்து ராஜ்யத்தை பிடுங்கிக்கொண்ட இந்த பரதன் இதோ இங்கு வகையாக என்னிடம் மாட்டிக்கொண்டான். இவன் என்ன வெறும் படகோட்டிதானே என்று என்னைப் பற்றி நினைப்பா? எங்கள் அம்புகள் நெருப்பை உமிழ்ந்து கொண்டு அவன் படையையே அழிக்கும் என்று அறியாதவன்! வேடன் விட்ட அம்பு என்பதால் அரசன் நெஞ்சில் அது பாயாதா என்ன ?''''

குகன் என்ற கதா பாத்ரம் சொல்வதாக இப்படி அமைந்த பாடல் எவ்வளவு நேர்த்தியாக வெண்பாவாக வந்திருக்கிறது பாருங்கள் சந்தத்தோடு கம்பருக்கு:

அஞ்சன வண்ணன் என்னாருயிர் நாயகன் ஆளாமே
வஞ்சனையா லரசெய்திய மன்னரும் வந்தாரே
செஞ்சரமென்பன தீயுமிழ்கின்றன செல்லாவோ மன்னவர்
நெஞ்சினில் வேடர் விடும் சரம் பாயாவோ?'''

கம்ப ராமாயணத்தை விட இன்னும் எளிதில் எல்லோருக்கும் புரியும் தமிழில் பாடியவர் அமரகவி பாரதியார்.

கண்ணனைக் காதலனாகவும் தன்னை அவன் காதலியாகவும் உருவகித்து ஒரு கதையாக சொல்கிறார்.

அது ஒரு அடர்ந்த காடு, வடக்கா தெற்கா என்று புரியாத எங்கும் மரங்கள் அடர்ந்த பெருங்காடு.அங்கே கண்ணா உனைத் தேடி ஓடி வந்தேன்.ஆனால் எனக்கு எங்கு செல்வதென்றே தெரியவில்லை. சுற்றி சுற்றி வருகிறேன். களைப்பும், திகைப்பும் தான் மிச்சம். இளைத்தே போனேனடா.!
என்னைச் சுற்றிலும் எத்தனையோ வித மரங்கள், அண்ணாந்து பார்க்கவே வேண்டாம். கண்ணெதிரே கைக்கெட்டிய வாறே வித வித கனிகள் தொங்குகின்றனவே. அடர்ந்த இந்த மரக்கூட்டத்தின் இடையே எங்கு நோக்கினும் உயர்ந்த மலைத்தொடர் பிரமிக்க வைக்கிறதே.

அந்த உயர்ந்த மலைகளிருந்து வெள்ளிக்கம்பியாக நிறைய நீர் வீழ்சிகள், ஆறுகளாகவும், நதிகளாகவும் பெருகி கீழே ஓடுகிறதே.
அது சரி நான் இதைத் தேடியா ஓடி வந்தேன், நீ எங்கே அதைச் சொல்?

இந்த கனி தரும் மரங்கள் செடிகள், பூக்களையும் அவற்றின் மணத்தையும் அல்லவோ வாரி வழங்குகின்றன. நீர்ச் சுனைகள், புதர்கள், முட்கள்; இவையும் உண்டு. ஜாக்ரதையோடு நடந்து தான் உன்னை தேடுகிறேன் கண்ணா?

இதோ பாரேன் இந்த மான்கள் கூட்டத்தை? என்னை ஆசையோடு பார்க்கின்றன. அவற்றின் விழியில் நீ தெரிகிறாய் கண்ணா, அவ்வளவு அழகு.

இதென்ன, எங்கிருந்தோ ஒரு பயங்கர புலி உறுமல், நீ பயப்படாதே ஒன்றும் உனக்கு ஆகாது என்று இனிய நட்புக்குரலோடு ஒரு சில பறவைகள் பாடுகிறதும் அதே சமயம் கேட்கிறது.

எனக்கொரு கவலையும் இல்லை என்ற பாணியில் ஒரு நீண்ட மழைப் பாம்பு வயிறு நிறைந்து படுத்துக்கொண்டிருக்கிறது. அதற்கு நான் இப்போது தேவையில்லை.

ஏதோ அசைகிறதே தூரத்தில், என்று பார்த்தால் ஒரு பெரிய சிங்கம், சர்வ சுதந்திரத்தோடு பிடரியை அசைத்து கம்பீரமாக செல்கிறது. அதன் கர்ஜனை காடு முழுதும் எதிரொலிக்கிறது. அதன் சத்தம் யானைக் கூட்டத்தைக் கூட கதி கலங்க வைக்கிறது. அவை மிரண்டு அங்குமிங்கும் சிறு கண்களால் பார்க்கின்றன.

சத்தம் வந்த திசைக்கு எதிர்பக்கம் தலை தெறிக்க மான்கள் ஓடுகிறதே. அதன் பயம் அதற்குத்தானே தெரியும்.

ஒரு கெட்டிக்கார தவளை. இந்த கூட்டத்தில் நம்மை ஏதாவது மிதித்துவிடப்போகிறதே என்று ஒரு ஓரமாக பதுங்குகிறதே. அதிருக்கட்டும் என் கண்ணா நீ எங்கேடா?

எவ்வளவு நேரமாக உன்னை தேடுகிறேன். என் காலும் கையும் சோர்த்து போய் விட்டதே. களைப்பு மீறி தூக்கமும் கண்களை சுற்றுகிறதே. கண்ணா, கண்ணா......

இந்த நேரம் பார்த்து யார் இவன்?

சிவந்த கண்களில் கொலை வெறி. கைகளில் கூர் ஈட்டி. காணாததைக் கண்டது போல் என்னை கண்கள் தெறித்து விழுகிறமாதிரி ஏன் பார்க்கிறான்.எனக்கு வெட்கம் பிடுங்கித் தின்கிறது.

''பெண்ணே, யாரடி நீ மோகினி? உன் அழகு என்னை பித்தனாக்கி விட்டதே. ஹா ஹா என்ற இடி இடிக்கிறமாதிரி ஒரு சிரிப்பு. ''அடி என் கண்ணே, என் கண் மணியே - உன்னை இருகைகளாலும் கட்டித் தழுவ என் மனம் விழைகிறதே.''

''ஏன் பெண்ணே, இப்படி சோர்ந்து படுத்திருக்கிறாய்? உனக்கு - நல்ல மான் மாமிசம் கொண்டுவருகிறேன். கறி சமைத்து நாம் இருவரும் தின்போமா? தேடித் பிடித்து அருமையான சுவை மிக்க பழங்களை உடனே கொண்டு வருவேன் - போதாததற்கு இந்த விருந்தைத் தொடர்ந்து நல்ல இனிய கள் கொண்டுவந்து விடுகிறேன். சேர்ந்து களிப்போம்.''

''கண்ணா, அந்த கொடிய சிவந்த விழி கொண்ட வேடன் இவ்வாறு என்னிடம் சொல்லும்போது என் காதில் பழுக்கக் காய்ச்சிய ஈயத்தை கொட்டியது போல் இருக்கிறதே . உயிரே போய்விடுமோ என்று இருக்கிறது.

தன்னந்தனியே நான் ஒரு பெண், என்ன செய்ய முடியும்? இருகரமுங் குவித்து - அந்த முட்டாள் வேடனாகிய நீசனிடம் என்ன சொன்னேன் தெரியுமா ?

''கண்ணா, அவனை ''அண்ணா'' என்றேன்.

அண்ணா, உன் காலடி டியில் வீழ்வேன் - எனை பயமுறுத்தாதே. கொடுமையான வார்த்தைகளைச் சொல்ல வேண்டாம். - நான் கண்ணனுக்குறியவள். அவனை எப்போதோ மணந்து விட்டேன். பிறன் மனைவியை கண்ணால் நோக்குவதும் கூட தவறல்லவோ?

''ஏய நிறுத்தடி உன் பேச்சை. சாத்திரங்கள் நீஎனக்கு சொல்ல வேண்டாம். எனக்கு நீ வேண்டும். உன்னிடம் நான் இன்பம் பெறவேண்டும். என் கனியே, - உன்னழகில் என்னை இழந்தேன். என் தலை நிறைய மொந்தை மொந்தையாக பழைய கள்ளை குடித்தால் ஏற்படும் போதையில் கிறுகிறுக்கிறது. உன் அழகு செய்யும் வேலை இது. வா பெண்ணே வா ''

''கண்ணா, அவன் சொன்ன வார்த்தையை கேட்டாயா?

'' கண்ணா நீயே கதி'' என்று அலறி விழுந்தது தான் எனக்கு கடைசியாக ஞாபகமிருக்கிறது.

மரக்கட்டைஆகி விட்டேனே.

எவ்வளவு நேரம் இப்படி மயங்கி கிடந்தேன்? கொஞ்சம் கொஞ்சமாக நினைவு வந்தது. கண்ணை விழித்தேன்.

''ஆஹா கண்ணா? நீயா? அந்த கொடிய வேடன் எங்கே போனான்?

ஒருவேளை என் குரல் கேட்டு நீ வந்த கணமே உன்னை எதிர்கொள்ள பயந்து அலறி அடித்துக்கொண்டு ஓடிவிட்டானோ. உன்னை ஆபத் பாந்தவன் அனாத ரக்ஷகன் என்று சொல்வது எவ்வளவு பொருத்தம்.

என் அபயக் குரல் கேட்டு அபாயத்தில் இருந்து என்னைக் காப்பாற்ற வந்த கண்ணா நீ வாழ்க வாழ்க வாழ்க.!

இந்த கதை எப்படி இருக்கிறது?. பாரதியின் இந்த கதைப் பாட்டை இனி படியுங்கள். தேனில் அமிர்தம் கலந்தால் எப்படியிருக்கும் என்று ருசிக்க ஒரு யோசனை சொல்லட்டுமா?

மகாராஜபுரம் சந்தானம் அவர்கள் ராகமாலிகையில் இந்த பாட்டை பாடியிருக்கிறார் அதையும் ஒரு தரம் கேளுங்கள். இன்றைய பருப்பு விலை விருதுநகர் மார்க்கெட்டில் 130 வரை விற்கிறது ரேஷன் கடையில் கூட்டமில்லாமல் 5 கிலோ துவரம் பருப்பு உளுத்தம் பருப்பு தந்தாலும் அப்போது வேண்டாம் என்பீர்கள்.

கண்ணன் - என் - காதலன்
(காட்டிலே தேடுதல்)

திக்குத் தெரியாத காட்டில் - உனைத்
தேடித் தேடி இளைத்தேனே.

1.
மிக்க நலமுடைய மரங்கள், - பல
விந்தைச் சுவையுடைய கனிகள், - எந்தப்
பக்கத்தையும் மறைக்கும் வரைகள், - அங்கு
பாடி நகர்ந்து வரு நதிகள், - ஒரு ... (திக்குத்)

2.
நெஞ்சிற் கனல்மணக்கும் பூக்கள், - எங்கும்
நீளக் கிடக்குமலைக் கடல்கள் - மதி
வஞ்சித் திடுமகழிச் சுனைகள், - முட்கள்
மண்டித் துயர்பொடுக்கும் புதர்கள், - ஒரு ... (திக்குத்)

3.
ஆசை பெறவிழிக்கும் மான்கள், உள்ளம்
அஞ்சக் குரல்பழகும் புலிகள், - நல்ல
நேசக் கவிதைசொல்லும் பறவை, - அங்கு
நீண்டே படுத்திருக்கும் பாம்பு, - ஒரு ... (திக்குத்)

4.
தன்னிச்சை கொண்டலையும் சிங்கம் - அதன்
சத்தத் தினிற்கலங்கு யானை அதன்
முன்னின் றோடுமிள மான்கள் - இவை
முட்டா தயல்பதுங்குந் தவளை - ஒரு ... (திக்குத்)

5.
கால்கை சோர்ந்துவிழ லானேன் - இரு
கண்ணும் துயில்படர லானேன் - ஒரு
வேல்கைக் கொண்டுகொலைவேடன் - உள்ளம்
வெட்கம் கொண்டொழிய விழித்தான் - ஒரு ... (திக்குத்)

6.
''பெண்ணே உனதழகைக் கண்டு - மனம்
பித்தங்கொள்ளு'' தென்று நகைத்தான் - ''அடி
கண்ணே, எனதிருகண் மணியே - எனைக்
கட்டித் தழுவமனம் கொண்டேன்.

7.
சோர்ந்தே படுத்திருக்க லாமோ? - நல்ல
துண்டக் கறிசமைத்துத் தின்போம் - சுவை
தேர்ந்தே கனிகள் கொண்டு வருவேன் - நல்ல
தேங்கள் ளுண்டினிது களிப்போம்.''

8.
என்றே கொடியவிழி வேடன் - உயிர்
இற்றுப் போகவிழித் துரைத்தான் - தனி
நின்றே இருகரமுங் குவித்து - அந்த
நீசன் முன்னர் இவை சொல்வேன்:

9.
''அண்ணா உனதடியில் வீழ்வேன் - எனை
அஞ்சக் கொடுமைசொல்ல வேண்டா - பிறன்
கண்ணலஞ் செய்துவிட்ட பெண்ணே - என்றன்
கண்ணற் பார்த்திடவுந் தகுமோ?''

10.
''ஏடி, சாத்திரங்கள் வேண்டேன்: - நின
தின்பம் வேண்டுமடி, கனியே, - நின்றன்
மோடி கிறுக்குதடி தலையை, - நல்ல
மொந்தைப் பழையகள்ளைப் போலே''

11.
காதா லிந்தவுதை கேட்டேன் - 'அட
கண்ணா!' வென்றலறி வீழ்ந்தேன் - மிகப்
போதாக வில்லையிதற் குள்ளே - என்றன்
போதந் தெளியநினைக் கண்டேன்.

12.
கண்ணா! வேடனெங்கு போனான்? - உனைக்
கண்டே யலறிவிழுந் தானோ? - மணி
வண்ணா! என தபயக் குரலில் -எனை
வாழ்விக்க வந்தஅருள் வாழி!

http://www.musicindiaonline.com/p/x/74K24FUJn9.As1NMvHdW/

http://userserve-ak.last.fm/serve/_/33081975/Bharathiyar+Songs++Maharajapuram+Santhanam.jpg

gkrishna
9th June 2015, 10:53 AM
கொஞ்சம் சுருக்கமா எழுத ஆசை . ஆனால் நிறைய எழுதிவிட்டேன் .

vasudevan31355
9th June 2015, 10:57 AM
ஏன் இப்படி ஒரு சாபம்

சின்னா!

அது சாபம் அல்ல. சுயநலம்...நீங்கள் குளிக்கும் நேரத்தில் ஒரு ஈஸ்வரி பாட்டு தந்து விட மாட்டீர்களா என்ற நப்பாசைதான்.

நெய்வேலி வாங்க. பக்கெட் பக்கெட்டா தண்ணீர் தரேன். (அப்பாடி! எப்படியெல்லாம் சமாதானப் படுத்த வேண்டி இருக்கு!)

vasudevan31355
9th June 2015, 11:01 AM
ம்ம்.. எனக்கும் தத்தா ஒருத்தர் இல்லாமலா போய் விட்டார்?

கிருஷ்ணா,

அந்த பிரபாகர் ரெட்டி. நீர் பாட்டுகிட்டு கேட்டுட்டுப் போய் விட்டீர். அவஸ்தைப்பட்டது யாருங்கானும்?

அப்புறம் ஹரநாத்தும், காந்தாராவும் நடித்த படத்தின் பெயர்... பெயர்... பெயர்... பெயர்....

ம்..இருங்க வரேன். மிளகாய் வத்தலை மாடு கடிக்குதாம். விரட்டிட்டு வரேன்.

gkrishna
9th June 2015, 11:02 AM
நன்றி வாசு .
பிரபாகர் ரெட்டி பற்றிய தகவல்களுக்கு
எம் எல் ஸ்ரீகாந்த் பற்றி சில நினைவூட்டல் அருமை

முரளி சார்
அழைப்பிற்கு நன்றி . நிச்சயம் வருகிறேன்

vasudevan31355
9th June 2015, 11:03 AM
நெல்லைச் சீமைக்கு நேரம் சரியில்லை.:):)

uvausan
9th June 2015, 11:10 AM
மிகவும் அருமையான பதிவு - கிருஷ்னாஜி - மிகவும் ரசித்துப்படித்தேன் - உங்களிடம் எங்கள் எதிர்பார்ப்புக்கள் மிகவும் அதிகமாகி கொண்டுருக்கின்றன . உங்கள் வேகம் எங்கள் எதிர்பார்ப்புகளுடன் போட்டிப்போட முடியுமா ??

rajraj
9th June 2015, 11:31 AM
krishna: I think the last line in 'anjana vaNNan' is "unjivar poividil naaik kugan endrenai odhaaro". I had this in intermediate in 1954 -1956 ! :)

gkrishna
9th June 2015, 11:43 AM
வாசுவின் பாலா நெடுந்தொடர் அருமை.

இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் பாலுவின் சாதனை பற்றி வெளியிட்டு உள்ள ஒரு செய்தி

http://cache.epapr.in/517248/40bb6795-de37-4f8b-9235-83b9cd7a1da5/thumb.jpg

SPB is Magic, No Matter What the Language

By Express Features Published: 09th June 2015 06:00 AM Last Updated: 08th June 2015 11:09 PM

CHENNAI: S P Balasubrahmanyam’s singing and songs transcend boundaries. Though it was mostly Telugu songs that were performed, the centenary auditorium at the Madras University was packed on Saturday evening.

People of all ages were present in the audience, enjoying the songs sung by SPB himself or his songs performed by the other playback singers for Swarabhishekam – a musical extravaganza over the weekend. Telugu solo hits of SPB such as Antha Ramamayam from the film Sri Ramadasu and duets such as Kammani ee Premalekha from Guna and Edalo Tholi Velape, were performed by the singer. Children dancing and the older audience nodding their heads and tapping their feet to the rhythm were consistent throughout the show, which had no noticeable dull moments.


SPB pulled a massive fan following at the show on Saturday | R SATISH BABU

Although mainly a show for Telugu fans, the Tamil audience was not disappointed. A few Tamil songs such as Unakkenna Mele Nindrai – one of the singer’s hit songs – were performed. The song had perhaps been performed by the singer several times on stage before, but it still brought on a standing ovation from some members in the crowd. One of them was overheard saying, “This is an M S Viswanathan composition and he was very young when he actually sung in the film. Look at how he reproduces it now, even in his 60s.”

If Unakkenna Mele Nindrai received applause from the audience after the performance, claps for the mere mention of the film Sagara Sangamam (Salangai Oli in Tamil) ensued. And SPB sang Thakita Thadimi Thakita Thadimi Thandaana, which particularly pleased the older members of the audience, during whose time the film and the song were popular.

Besides his performance, there were also songs rendered by playback singer Karthik who sang the Telugu version of the song Aye Sinamika from Ok Kanmani (OK Bangaram in Telugu) that went Hey Anamika. He also sang the Tamil version of the song. Another noteworthy performance of his was Nee Maatalo Mounam from the film 180, which again has a Tamil equivalent – Nee Korinaal from the same film. The Tamil-speaking fans enjoyed this even more, because they could sing along.

Other popular Telugu songs were rendered by playback singers such as Geetha Madhuri, Gopika Purnima, Hemachandra, Kalpana, Malavika and Mallikarjun. An appreciated performance of A R Rahman’s Alaipayudhey, in Telugu again, was delivered by Kalpana and Gopika Purnima

http://media.newindianexpress.com/SPB.jpg/2015/06/08/article2856167.ece/binary/original/SPB.jpg

gkrishna
9th June 2015, 11:48 AM
மிகவும் அருமையான பதிவு - கிருஷ்னாஜி - மிகவும் ரசித்துப்படித்தேன் - உங்களிடம் எங்கள் எதிர்பார்ப்புக்கள் மிகவும் அதிகமாகி கொண்டுருக்கின்றன . உங்கள் வேகம் எங்கள் எதிர்பார்ப்புகளுடன் போட்டிப்போட முடியுமா ??

ரவி
உங்கள் உடன் நிச்சயம் போட்டி போடவே முடியாது :)

gkrishna
9th June 2015, 11:49 AM
krishna: I think the last line in 'anjana vaNNan' is "unjivar poividil naaik kugan endrenai odhaaro". I had this in intermediate in 1954 -1956 ! :)

ராஜ்ராஜ் சார்

திருத்தத்திற்கு நன்றி. உங்கள் நினைவு திறன் அபாரம்

‘அஞ்சன வண்ணன், என் ஆர்
உயிர் நாயகன், ஆளாமே,
வஞ்சனையால் அரசு எய்திய
மன்னரும் வந்தாரே!
செஞ் சரம் என்பன தீ
உமிழ்கின்றன, செல்லாவோ?
உஞ்சு இவர் போய்விடின், “நாய்க்குகன்”
என்று, எனை ஓதாரோ?

RAGHAVENDRA
9th June 2015, 11:50 AM
வாசு சார்
எம்.எல்.ஸ்ரீகாந்த் பற்றிய பதிவு சூப்பர்.ஞாபகப்படுத்திய முரளி சாருக்கும் சபாஷ்.
தாலாட்டு இசையமைப்பாளராயிற்றே..

கல்யாண வளையோசை படத்திற்கு இசையமைத்து அப்பாடலைப் பாடியவர் எம்.எல்.ஸ்ரீகாந்த்.

அக்னிப்பிரவசேம் கல்யாணப் பெண் போல பாட்டைப் பாடியவர் ஜாலி ஆபிரகாம்...

Murali Srinivas
9th June 2015, 01:45 PM
நெல்லைச் சீமைக்கு நேரம் சரியில்லை.:):)

வாசு,

நடிகர் திலகம் அவர்தம் சாதனை என்றாலே ஒரு சிலருக்கு அஸ்தியில் புளியை கரைக்கும் என்பதை நாம் இப்போதும் பார்த்துக் கொண்டுதானே வருகிறோம். அதுதான் யதார்த்தம் எனும்போது கிருஷ்ணாஜியை ஏன் காபராப்படுத்த வேண்டும்? அது நெல்லை சீமையானாலும் நெய்வேலி சீமையானாலும் நடிகர் திலகம் திரியில் அனைவரும் safe என நான் சொல்கிறேன். அனைவரும் வாருங்கள்.

அன்புடன்

chinnakkannan
9th June 2015, 02:01 PM
//நெல்லை சீமையானாலும் நெய்வேலி சீமையானாலும் நடிகர் திலகம் திரியில் அனைவரும் safe என நான் சொல்கிறேன். அனைவரும் வாருங்கள்.// அந்தக் கால மதுரைக் காரவுக சொன்னா உண்மையாய்த்தான் இருக்கும் :)

vasudevan31355
9th June 2015, 03:12 PM
கலை சார், வினோத் சார்,

எம்.ஜி.ஆர் அவர்களின் பாடல் கொடுத்து ரொம்ப நாட்களாகி விட்டது. அதனால் எனக்குப் மிகப் பிடித்த இந்தப் பாடலை உங்களுடனும், வினோத் சாருடனும், மற்ற எல்லோருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.

எம்.ஜி.ஆர் அவர்கள் கதை எழுதி, சொர்ணம் அவர்கள் வசனம் எழுதி, வாலி மற்றும் ஆலங்குடி சோமு பாடல்கள் இயற்றி, 'மெல்லிசை மன்னர்' இசையமைத்து, ப.நீலகண்டன் இயக்கிய 'வள்ளி பிலிம்ஸ்' தயாரிப்பில் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த 'கணவன்' திரைப்படத்தின் கலக்கல் பாடல்.

இந்தப் படத்திற்கு உதவி இயக்குனராக இருந்தவர் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார் இதே எம்.ஜி.ஆரை வைத்து மிகப் பெரிய ஹிட் படமொன்றை பின்னாளில் தரப் போகிறோம் என்று.

அந்த இயக்குனர் ஏ.ஜெகந்நாதன். அந்தப் படம் 'இதயக்கனி'

பணக்காரத் திமிர் பிடித்த பெண் ஜெயலலிதா தன் சொத்துக்களை காப்பாற்ற வேண்டி சிறையில் இருந்து வரும் எம்.ஜி.ஆரை சூழ்நிலை காரணமாக தன் கணவனாக நடிக்க வைக்கிறார். காரியம் முடிந்ததும் கழற்றி விட்டு விடுகிறார். அப்புறம் ஜெயாவின் மானேஜர் வில்லன் அசோகன் பிளாக்மெயில். ஜெயலலிதா உலகம் தெரிந்து கொள்ளட்டும் என்று எம்.ஜி.ஆர் மௌனம். பிறகு எம்.ஜி.ஆர் மௌனம் கலைத்து வில்லனை புரட்டுதல். ஜெயாவுக்கு புத்திமதி புகட்டி விலகல். பிறகு ஜெயலலிதா திருந்தல். விரட்டி விட்டு விட்ட எம்.ஜி.ஆரை பின் ஏழைப்பெண்ணாக மாறி, பெயர் மாற்றி, விரட்டி விரட்டி ஜெயா காதலித்து அவரைக் கைப்பிடித்தல் என்று கதை போகும்.

அப்படி எம்.ஜி.ஆர் ரோடுகளில் தார் போடும் தொழிலாளியாய் வேலை செய்யும் போது ஜெயா ஏழைப் பெண்ணாக நடித்து அவர் மனம் கவர்வார்.

http://i.ytimg.com/vi/FY8wlTLWzxQ/hqdefault.jpg

அந்த மாதிரி சிச்சுவேஷனில் ஒரு இனிய காதல் டூயட். பாடகர் திலகமும், இசையரசியும் தந்த இன்னொரு லட்டு.

சாதாரண வெள்ளை வேட்டி, கருப்பு சட்டையில் எளிமையாக எம்.ஜி.ஆர். சற்றே கவர்ச்சியாக ஜாக்கெட் இல்லாத சுங்கிடிச் சேலை அணிந்து ('தாய்', 'வைரம்' படங்களிலும் இது போல் வருவார்) ஜெயா கழுத்தில் கருகுமணியும், கொண்டையில் சுற்றிய பூவுமாக அம்சம்.

இங்கும் வைக்கோற் போரில் காதலர்களின் அக்கப்போர்தான். வாழை மரங்களும், புடலங்காய் தோட்டமும், கயிற்றுக் கட்டிலும், கிணறும், பரணும், அழகான குடிசையும், அதன் மேல் தாவும் புறாக்களுமாக செட்டோடு சேர்ந்து பாடலும் புழுதி பறக்கிறது.

தலையில் உட்கார்ந்து சிறகடிக்கும் வெண்புறாவைக் கூட கவனியாமல்:) தன் மடியில் கொஞ்சி விளையாடும் பெண் புறாவை விருந்தாக சுவைக்கும் எம்.ஜி.ஆர் இளமையாக காட்சி அளிக்கிறார். அழகாகவும் இருக்கிறார். ஷர்ட் நச்சென்று பொருந்துகிறது. ஷாட்டும்தான். பேண்ட், ஷர்ட்டில் ஓடாமல், தாவாமல், துள்ளிக் குதிக்காமல், நல்ல பிள்ளையாய் சமர்த்தாய் உட்கார்ந்த இடத்தில், நடந்த இடத்தில் காதல் புரிவது புதுமை கலந்த ஆச்சரியம்தான். விரும்பத்தக்க விஷயம்தான். அதுவும் தமிழகத்தின் பாரம்பரிய எளிமை உடையில். வண்ணப் படமல்லாமல் கருப்பு வெள்ளையில்.

எல்லோரும் சொல்வது போல சரியான பொருத்தம்தான். அதிக நெருக்கம்தான். அதனால் எல்லோருக்கும் மயக்கம்தான்.

முகத்தோடு முகம் புதைத்தும், மூக்கோடு மூக்கு உராசியும், பின்பக்கம் வளைத்து உள்வாங்கலும், கழுத்தைச் சுற்றி வளைத்தல்களும், முகவாய்க் கட்டைகளோடு முகவாய்க் கட்டை சேர்த்தலும், கட்டிலில் கட்டிப் பிடித்தல்களும், பாடலை நீலகண்டன் இயக்கவில்லை... ஜெகந்நாதன்தான் இயக்கியிருக்கிறார் என்று படுகிறது. சென்ஸாரும் கொஞ்சம் சென்ஸிட்டிவாய் இல்லை என்றும் தெரிகிறது.:)

அப்படி இருந்தால்தானே நமக்குக் கோலாகலம்... கொண்டாட்டம்.

'மெல்லிசை மன்னர்' உற்சாகத் துள்ளல் போட்டு பிரித்து மேய்ந்து விட்டார். அடடா! என்ன ஒரு டியூன்! வீட்டிலிருந்து வரும் போது குஷியாயிட்டு வந்திருப்பார் போல.:) ஹார்மோனியம், மவுத் ஆர்கன், மோர்சிங் (நாமுழவு), சிதார், வயலின் என்று எங்கெங்கு என்ன பொருத்தமோ அங்கங்கு அவற்றின் இனிமையைப் பொருத்தி மயங்க வைத்து விட்டார் போங்கள்.

பாடல் வரிகள் மட்டும் என்னவாம்! கொஞ்சம் கூட நாங்கள் குறைவில்லை என்று எதிர் சவால் விடுகின்றன இசைக்கும், பாடகர்களுக்கும்.

http://i.ytimg.com/vi/4zWhe0De1bM/hqdefault.jpg

'மயங்கும் வயது' (சைக்கிள் கேப்பில் வரும் அந்த இனிய பிட் இசை 'டர டர டர டைன்' டக்கரோ டக்கர். அதே போல 'மடி மேல் விழுந்து' முடிந்தவுடன் அப்படியே தொடரும். இன்னும் கொஞ்சம் வாராதா என்று ஏங்க ஏங்க வைக்கும்.)

பாடலில் வரிகளின் முடிவில்

வயது.. விழுந்து... மலர்ந்து... விருந்து

என்று வாலிப வார்த்தைகள் வாகாக, தோதாக நமக்கு. மருந்து எதுவும் தேவையே இல்லை. இந்த விருந்து ஒன்றே போதும்.

அழகிருக்க... துடித்திருக்க... வரவழைக்க... அணைத்திருக்க... குறைந்திருக்க... முத்தம் பதிக்க

என்று பாடல் முழுதும் 'க்க' மயம். முழுக்க, முழுக்க இன்ப மயம்.

தொடங்கும்... அடங்கும்... தொடரும்... வளரும்... என்று வார்த்தைகள் முடிந்து மேலும் மேலும் இனிமை தொடரும்.

'இதழ்கள் மலர்ந்து' ரெண்டாம் தரம் ஒலிக்கும் போது முதல் தரம் ஒலிப்பதைவிட வேறு விதமாக இன்னும் இனிமையாக ஒலிக்கும்.

'ஆடையில் மூடிய ஒரு அழகிருக்க
ஆயிரம் ஆசையில் அது துடித்திருக்க'

என்று எம்.ஜி.ஆர் பாடும் போது கட்டிலில் படுத்து என்னமாய்க் கைகளை நெட் முறிக்கிறார் ஜெயா!

'மூவகைத் தேன்கனி ஒன்று குறைந்திருக்க' (ஓஹோ! 'பலா'வோ அது!):)

(சின்னாவுக்கு 'quote' பண்ண செம சான்ஸ்.):)

'மாமரத் தோப்பினில் வண்டு பறந்து வரும்
மாம்பழச் சாறினில் வந்து மயங்கி விழும்'

வரிகளைப் படிக்கும் போதே கிறக்கமும் மயக்கமும் உண்டாகிறதே! பொல்லாத கவிஞன். அனுபவித்து எழுதியிருக்கிறான்.

அதே போல நினைத்தவுடன் தொடங்குமாம்... அணைத்தவுடன் அடங்குமாம்....தொட்டால் தொடருமாம்... தொடர்ந்தால் வளருமாம்

என்னது அது? தெரியலையே!:)

காமத்துப் பாலை ஆபாசக் கசப்பில்லாமல் இன்பத்துப் பாலாய் அப்படியே தந்த கவிஞனுக்கு வாழ்த்துக்கள். ஆனால் அர்த்தங்கள் பொல்லாதவை. அளவிட முடியாதவை.

இனிமை வரவாக வேண்டுமானால் இளமையை செலவு செய்துதானே ஆக வேண்டும். அதையும் கவிஞன் சுவைபடவே கூறுகிறான்.

'இனிமேல் வரவு
இளமை செலவு'

என்று.

சுசீலா அம்மாவின் குரல் ஜவ்வுமிட்டாய்க்காரன் மிட்டாய் போல் இஷ்டத்திற்கும் எப்படி வேண்டுமானாலும் நீளுகிறது...சுருங்குகிறது...வளைகிறது... குழைகிறது... நெளிகிறது.

('மடி மேல்' எனும் போது 'மே' வுக்கு ஒரு அதிர்வு தருவார் பாருங்கள்!)

இணையாகப் பாடும் பாடகர் திலகத்திற்கு வஞ்சனை செய்யத் தெரியுமா? சும்மா சுசீலா 'சுனாமி'க்கேற்ற 'தானே'வாய் தன் வாயால் சௌராஷ்டிரர் தகதகப்பார்.

இப்போது முழுப் பாடலையும் படித்து, கேட்டு, பார்த்து இன்புறுங்கள். செலவு மூன்று நிமிடங்கள்தான். வரவோ இன்பமான இன்பம் இதயம் இனிக்க இனிக்க.

http://i.ytimg.com/vi/P50oZyTU1hc/hqdefault.jpg

மயங்கும் வயது
மடிமேல் விழுந்து
மயங்கும் வயது
மடிமேல் விழுந்து
இதழ்கள் மலர்ந்து
வழங்கும் விருந்து
இதழ்கள் மலர்ந்து
வழங்கும் விருந்து

ஆடையில் மூடிய ஒரு அழகிருக்க
ஆயிரம் ஆசையில் அது துடித்திருக்க
ஆடையில் மூடிய ஒரு அழகிருக்க
ஆயிரம் ஆசையில் அது துடித்திருக்க
வாவென ஜாடையில் எனை வரவழைக்க
வந்தது கைகளும் மெல்ல அணைத்திருக்க

மூவகைத் தேன்கனி ஒன்று குறைந்திருக்க
மூவகைத் தேன்கனி ஒன்று குறைந்திருக்க
முல்லைப்பூ கன்னத்தில் முத்தம் பதிக்க
முல்லைப்பூ கன்னத்தில் முத்தம் பதிக்க

முதலில் தயக்கம்
முடிவில் மயக்கம்
இடையில் நெருக்கம்
இருந்தால் இனிக்கும்

மயங்கும் வயது
மடிமேல் விழுந்து
இதழ்கள் மலர்ந்து
வழங்கும் விருந்து
இதழ்கள் மலர்ந்து
வழங்கும் விருந்து
விருந்து

மாமரத் தோப்பினில் வண்டு பறந்து வரும்
மாம்பழச் சாறினில் வந்து மயங்கி விழும்
மாமரத் தோப்பினில் வண்டு பறந்து வரும்
மாம்பழச் சாறினில் வந்து மயங்கி விழும்
மீறிய போதையில் தன்னை மறந்திருக்கும்
போனது போகவும் மிச்சம் சுவையிருக்கும்

ஆடிய நாடகம் நெஞ்சில் நினைவிருக்கும்
ஆடிய நாடகம் நெஞ்சில் நினைவிருக்கும்
அம்மம்மா என்னென்ன நடந்திருக்கும்
அம்மம்மா என்னென்ன நடந்திருக்கும்

நினைத்தால் தொடங்கும்
அணைத்தால் அடங்கும்
தொடத்தான் தொடரும்
தொடர்ந்தால் வளரும்

இதுதான் உறவு
நெடுநாள் கனவு
இனிமேல் வரவு
இளமை செலவு

இதுதான் உறவு
இதுதான் உறவு
இதுதான் உறவு உறவு உறவு


https://youtu.be/P50oZyTU1hc

JamesFague
9th June 2015, 03:38 PM
Courtesy: Tamil Hindu

நாங்கள் மொத்தம் ஆறு பேர். கல்லூரி முடித்த தருணம் அது. தீபாவளியை முன்னிட்டு திரைப்படம் பார்க்கலாம் என்று திட்டம்.

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் அஜித் நடித்த 'வரலாறு' வெளியாகியிருந்தது.

கே.எஸ்.ரவிகுமார் பிறந்து வளர்ந்ததெல்லாம் எங்கள் ஊருக்குப் பக்கத்தில் உள்ள வங்கனூர் கிராமத்தில்தான். பத்து வயது வரைக்கும் அங்கேதான் பாட்டி வீட்டில் ரவிகுமார் வளர்ந்ததாக சொல்வார்கள். அதனாலேயே ரவிகுமார் நம்ம ஏரியா ஆள் என்ற பாசம் எங்கள்

பக்கத்து கிராமங்கள் முழுக்க ஒட்டிக்கிடந்தது. அஜித் நடித்த படம் என்றால் இன்னும் சொல்லவா வேண்டும்?

நான், மணி, உதயன், புருஷோத், சந்துரு, பாபு என்று ஆறு பேரும் ராணிப்பேட்டை ராஜேஸ்வரி தியேட்டருக்கு 'வரலாறு' படம் பார்க்க பேருந்தில் பயணித்தோம்.

சினிமா குறித்து பேச ஆரம்பித்த எங்கள் பேச்சு, எப்படி காதல் தலைப்புக்குள் வந்தது என்றே தெரியவில்லை. யாரும் எதிர்பார்த்திராத அந்தக் கணத்தில் புருஷோத் தான் அந்த வார்த்தையை உதிர்த்தான்.

''எனக்கு ப்ரியா மேல ஒரு இது இருந்துச்சுடா'' என்றான்.

''என்னடா சொல்ற? நீயா!'' என்று நம்பமுடியாத ஆச்சர்யத்தோடு கோரஸாகக் கேட்டோம்.

''ஆமாம்'' என்றான்.

டவுசருக்கு குட் பை சொல்லிவிட்டு பேன்ட்டுக்கு வெல்கம் சொன்ன அந்த ஒன்பதாம் வகுப்பில்தான் ப்ரியாவின் மறுவருகை நிகழ்ந்தது.

பக்கத்து ஊர் ஸ்கூலில் படித்தவள் புதிதாக எங்கள் வகுப்பில் வந்து சேர்ந்தாள். புது ஆசிரியர்கள், புதிய சூழல் என்று கொஞ்சம் திணறிய அவளுக்கு உதவ ஏராளமான நட்புக்கரங்கள் நீண்டன. நோட்ஸ் கொடுப்பதும், புரியாத கணக்கை புரிய வைப்பதுமாக அவள் சொல்லும் ஒற்றை நன்றிக்காக ஒரு கும்பலே காத்துக் கிடந்தது.

அப்போதுகூட புருஷோத், ப்ரியாவிடம் பெரிதாய் ஒன்றும் பேசிவிடவில்லை. நெருக்கமாகப் பழகியதுமில்லை. அப்புறம் எப்படி இவனுக்கு காதல் முளைத்தது?

உதயன் கூட சின்ன சின்ன சேட்டைகள் செய்திருக்கிறான். மாணவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால், பெண்கள் அமரும் பகுதியில் 2 பெஞ்ச் மட்டும் ஆண்களுக்காக ஒதுக்கப்பட்டு இருந்தது. உயரம் குறைவான உதயனும், இன்னும் சில பேரும் மட்டும் 2-வது பெஞ்சில் அமர்ந்தனர். அதற்கடுத்த பெஞ்ச்சில்தான் ப்ரியா இருந்தாள்.

அப்போதெல்லாம் உதயன் செய்யும் ஹீரோயிஸம் ஒன்றே ஒன்றுதான். ஆசிரியர் பாடம் நடத்தாமல் வெட்டியாய் பொழுது கழியும்போது ஏதாவது சேட்டைகள் செய்வான் உதயன். உச்சபட்சமாக ஒரு நாள் எல்லா பெண்களையும் சிரிக்க வைத்துவிட்டான்.

பேசுகிறவர்கள் பெயரை போர்டில் எழுதிக்கொண்டிருந்தான் வகுப்புத் தலைவன். உதயன் பெண்கள் அணியிடம் பேச்சு கொடுத்தான். முதலாவதாக அவன் பெயர் எழுதப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த உதயன் உடனே பேன்ட்டை கழட்ட ஆரம்பித்தான்.

பயப்படாதீர்கள்... உள்ளே டவுசர் போட்டிருந்தான். உதயன் இப்படி பேன்ட்டுக்குள் டிரவுசர் போட்டு வந்திருப்பான் என்றோ, பெண்கள் மத்தியில் அதிரடியாய் இறங்குவான் என்றோ எதிர்பார்க்கவில்லை. ஆனால், அந்த நேரத்தில் எல்லோரும் கொல்லென்று சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்த சிரிப்பு ஒர்க் அவுட் ஆனதால் உதயன் இதையே வழக்கமாக்கிக் கொண்டான்.

இப்படி இருந்த உதயனுக்கே புருஷோத் காதல் அரும்பியதாகச் சொன்னது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருந்தது. உதயன் தான் காதலில் விழுவான் என்று எல்லோரும் எதிர்பார்த்த தருணத்தில் புருஷொத் தனக்கு காதல் பூத்த தருணத்தை சொல்ல ஆரம்பித்தான்.

இத்தனைக்கும் ப்ரியா 5-ம் வகுப்பு வரை எங்களுடன்தான் படித்தாள். ஆறாம் வகுப்பு படிக்க பக்கத்து ஊர் சென்றவள் 9-ம் வகுப்பு படிக்க மீண்டும் வந்தாள். புதிதாக ஒரு பெண் வந்ததும் புருஷோத் தனக்கு ஏற்பட்ட குறுகுறுப்பையும், உணர்வுகளையும் எங்களிடம் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தான்.

அந்த வயதில் காதல் கதை கேட்பதை விட வேறு என்ன சுவாரஸ்யம் இருந்துவிடப் போகிறது?

புருஷோத் ஒவ்வொரு சம்பவமாய் சொல்லிக்கொண்டே போனதும், எனக்கு 'அழியாத கோலங்கள்' பட்டாபி ஞாபகம் வந்தது. தமிழில் இப்படி ஓர் உலக சினிமா எப்படி சாத்தியம் ஆனது என்று இன்றளவும் யோசிக்க வைக்கும் திரைப்படம் 'அழியாத கோலங்கள்'.

பரபரப்பான நகரத்தில் அலுவல் நிமித்தமாக காரில் பயணிக்கிறார் கமல்ஹாசன். லிஃப்டில் ஏறி தன் இருக்கையை அமர்ந்ததும், அங்கு வரும் உதவியாளரிடம் மெயில் குறித்து ஆங்கிலத்தில் எழுதச் சொல்கிறார்.

ஒரு போன் கால் வருகிறது. அதற்குப் பிறகு அந்த உதவியாளர் வந்திருக்கும் பெர்சனல் கடிதங்களை கமலிடம் கொடுக்கிறார். எல்லா கடிதங்களின் அனுப்புநர் முகவரியைப் பார்க்கும் கமலுக்கு, ஒரு கடிதம் மட்டும் புன்னகையை வரவழைக்கிறது.

''10 நிமிடங்களுக்கு நோ போன் கால்ஸ். வந்தாலும் கொடுக்காதீங்க'' என்ற கட்டளையிட்டு, கடிதத்தைப் பிரித்துப் படிக்கிறார் கமல்.

''டேய் ராஸ்கல். நான் பட்டாபி எழுதுறேன்டா... எப்படிடா இருக்கே? ஊர் பக்கமே வர்றதில்லை. வருஷத்துக்கு ஒரு முறை வருவ. இப்போ அதுவும் இல்லை... நான் ஏன் இந்த லெட்டரை எழுதுறேன்னா... இந்து டீச்சர் இல்ல... நம்ம இந்து டீச்சர். அவங்க முந்தாநாள் காலமாயிட்டாங்கடா'' என்று எழுதியிருக்கும் கடிதத்தைப் படித்ததும் கமலின் நினைவுகள் பின்னோக்கி நகர்கின்றன.

அந்த கிராமம், அந்த ஜனங்க எதையும் மறக்கலை நான் என்று வாய்ஸ் ஓவரில். ஒரு கிராமம் நம் கண் முன் விரிகிறது.

ரகு, கௌரி, பட்டாபி எனும் மூன்று நண்பர்களை நீங்கள் எந்த கிராமத்திலும் சந்தித்திருக்கலாம்.

வயல்வெளி, ஆறு, ரயில்வேகேட், சிமெண்ட் பெஞ்ச் என்று சுற்றித் திரியும் இந்த மூன்று பேர் வாழ்க்கை அவ்வளவு அழகானது. இந்து டீச்சரின் வருகையை இந்த சிறுவர்கள் கொண்டாடும் தருணம் அலாதியானது.

ஊரில் ஆட்டம்போட்டு காசு பார்க்கும் ஒரு பெண் போஸ்ட் மாஸ்டர் வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் காதல் ரசவாதத்தில் ஈடுபடுகிறார். பழைய கோயில் மண்டபத்தில் அந்தப் பெண்ணுக்கும், வெண்ணிற ஆடை மூர்த்திக்கும் நடக்கும் ரசவாதத்தை மூவரும் பார்க்கின்றனர்.

ஆனால், இதில் எந்த ஆபாசமும் இல்லாமல் க்ளோஸப் காட்சிகள் மூலம் உணர்வுகளை படம் பிடித்திருப்பார் இயக்குநர்.

அந்த காட்சியைப் பார்த்த அதே வேகத்தில் அந்த பெண் வீட்டுக்குச் சென்று ரகு, கௌரி (சின்ன வயது கமல்), பட்டாபி ஆகிய மூவரும் அதே மாதிரி இருக்க வேண்டும் என்று ஆசையோடு கேட்கத் துணிவார்கள். கேட்க முடியாமல், திணறி, அக்கா... தண்ணி கிடைக்குமா என்று கேட்டு, குடித்துவிட்டு வருவார்கள்.

'அழியாத கோலங்கள்' படத்தில் இந்து டீச்சர் முக்கியமான படலம். இந்து டீச்சராக ஷோபாவின் நடிப்பு அத்தனை இயல்பாய் இருந்தது.

''என் பேரு இந்து. உங்க பேர்லாம் சொல்லுங்கம்மா'' என தயக்கமும், வெட்கமும், படபடப்புமாய் சொல்லும்போது அந்த வகுப்பறை இன்னும் அழகாகத் தெரிந்தது. பக்கத்து வகுப்பறையில் பாடம் நடத்தும் சத்தமும் பின்னணியில் ஒலித்துக்கொண்டிருக்கும்.

இந்து டீச்சர் அந்த கிராமத்துக்கு வந்த புது தேவதையாகவே மூவரும் பார்க்கிறார்கள். மளிகை சாமான் பொருட்களை இந்து டீச்சர் தவறுதலாக கீழே போட்டு விட, அதை எடுத்து வீடு வரை கொண்டு சேர்க்கும் கௌரி, டீச்சரின் அன்புக்குப் பாத்திரமாகிறான்.

பரணில் இருக்கும் பொருளை எடுக்க, ஏணியில் ஏறும்போது தவறி விழப் பார்க்கும் கௌரியின், தொடைப் பகுதியை இந்து டீச்சர் அழுத்திப் பிடித்து, பார்த்தும்மா எனும் சொல்லும்போது அந்தப் பால்ய வயதில் அவன் பாலுணர்வை எந்த விகல்பமும் இல்லாமல் அழுத்தமாகப் பதிவு செய்திருப்பார் இயக்குநர் பாலு மகேந்திரா.

பிரதாப் போத்தன் படத்தைக் காட்டி, ''எப்படி இருக்காரும்மா? அவர் தான் என் வருங்காலக் கணவர்'' என்று இந்து டீச்சர், கௌரியிடம் சொல்கிறார். அவரை கௌரி பிடிக்காமல் பார்க்கிறான். தன் கனவைக் கலைக்க வந்த வில்லனாகவே பார்க்கிறான். பிரதாப் போத்தன் சிகரெட் பிடிப்பதைப் பார்த்து ரசித்து சிரிக்கிறார் இந்து டீச்சர்.

சிகரெட் பிடித்தால் ஆம்பளையாகிடலாம் போல என்று மூவரும் சிகரெட் பிடிக்க ஆரம்பிக்கிறார்கள். இப்படிக் கழியும் விடலைப் பருவத்தில் பட்டாபிக்கு அத்தை மகள் வருகை அவன் வாழ்வை வசந்தமாக்குக்கிறது.

''பட்டணத்துல கடைசியா என்ன பிக்சர் பார்த்த?'' என்று அத்தை மகள் மரகதத்திடம் கேட்கிறான் பட்டாபி.

''இருவர் உள்ளம்'' என்கிறாள் மரகதம்.

''என்னது இருவர் உள்ளம் பார்த்தியா. சரோஜாதேவி எப்படி இருக்கா. '' என்கிறான் பட்டாபி.

''ம்ம்ம் அவசியம் தெரிஞ்சுக்கணுமோ?''

''என் ஃபேவரைட் தெரியுமா?''

''அந்த அம்மா நடை பிடிக்கலை'' என்கிறாள் மரகதம்.

அந்த இடத்தில் பட்டாபியிடம் பாலுமகேந்திராவின் தொனியை நீங்கள் பார்க்கலாம். பிரதாப் போத்தனுக்கு இது அறிமுகப் படம். இதில் பாலு மகேந்திராதான் பிரதாப்புக்கு டப்பிங் பேசியிருப்பார்.

இரவுப் பொழுதில் மரகதம் தூங்கிக்கொண்டிருக்கையில், பட்டாபி அவள் கெண்டைக் காலைத் தடவி, நெற்றியில் ஆரம்பித்து உதட்டில் விரல்கள் பட்டு கழுத்தில் இறங்க இருமல் சத்தம் அந்த நிலையைக் குலைக்கும்.

சம்மர் ஆஃப் 42 என்ற ஆங்கிலப் படத்தின் தழுவல் கிழுவல் என்றெல்லாம் உலக சினிமா போராளிகள் சொன்னாலும், தமிழ் சினிமாவில் பதின்ம வயதினரின் பாலுணர்வுகளை இவ்வளவு அழகாக, நேர்த்தியாக, வரம்பு மீறாமல் நம் மண்ணுக்கே உரிய தன்மைகளுடன் பதிவு செய்தவர் எவரையேனும் சுட்டிக் காட்ட முடியுமா?

ரகு ஆற்றில் குளிக்கப்போய் நீச்சல் தெரியாமல் தண்ணீருக்குள் மரணமடைகிறான். அவன் மரணத்தோடு கௌரி, பட்டாபியின் மகிழ்ச்சி காணாமல் போகிறது.

ரகுவின் மரணத்தை தாங்க முடியாத இந்து டீச்சர் கௌரியைக் கட்டிப்பிடித்துக் கதறுகிறார். இதெல்லாம் நெஞ்சில் இட்ட அழியாத கோலம் என்று லெட்டரை படித்து முடித்த கமல் சொல்கிறார்.

நடிகை ஷோபா இதில் துணை இயக்குநராகவும் பணி செய்திருக்கிறார். சொந்தக் குரலில் பேசி இருந்தால் ஷோபாவுக்கு நிச்சயம் விருது கிடைத்திருக்கும்.

அத்தை மகள் குறித்த பதிவுகள் பாலு மகேந்திராவின் சொந்த வாழ்க்கை என்று சொல்வதும் உண்டு மட்டக்களப்பில் பிறந்த பெஞ்சமின் எந்த சமரசமும் இல்லாமல் இந்தப் படத்தை எடுக்கத் துணிந்தார். ஆனால், இரு பாடல்கள் வைத்தது உறுத்தல் என்று அவரே ஒப்புக்கொண்டார். இப்படி சமரசங்கள் செய்துகொண்டதைக் கூட மிக நேர்மையாக சொல்ல முடிவதால்தான் அவரை வாத்தியார் என்று தமிழ் சினிமா சொல்கிறது. பாலு மகேந்திரா என்று சினிமா உலகம் அழைக்கிறது.

அந்த பட்டாபியாய் இருந்த புருஷோத்? அதற்குப் பிறகு அவன் அட்டகத்தி நாயகனாய் மாறிப்போனதுதான் எங்களுக்கு அடுத்த ஆச்சர்யம்.

மான்டேஜ் மனசு இன்னும் சுழலும்...

gkrishna
9th June 2015, 03:42 PM
மாமரத் தோப்பினில் வண்டு பறந்து வரும்
மாம்பழச் சாறினில் வந்து மயங்கி விழும்
மீறிய போதையில் தன்னை மறந்திருக்கும்
போனது போகவும் மிச்சம் சுவையிருக்கும்

யோவ் யோவ்
இது கடவுளுக்கே அடுக்காது :)
இன்னாய்யா பாட்டு இது
படா சோக்கா கீது
நீயும் செம ஆளு அய்யா
இன்னிக்கு ஷிப்ட் டேயா நைட்ஆ :)
கோனார் நோட்ஸ் கூட இவ்வளுவு விளக்கம் கொடுத்த மாதிரி தெரியலை
இன்னிக்கு தபா நீ நெய்வேலி நச்சினார்க்குஇனியார்
பாடல் யாரு

http://i1.ppfry.com/media/catalog/product/a/r/800x880/aristo-printed-oscar-bucket-17-liters-aristo-printed-oscar-bucket-17-liters-grddto.jpg

தானே

Richardsof
9th June 2015, 03:48 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/82adef58-9ec0-4ab6-b178-b0cb6fe0b2dd_zpsui3lhjsu.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/82adef58-9ec0-4ab6-b178-b0cb6fe0b2dd_zpsui3lhjsu.jpg.html)

gkrishna
9th June 2015, 03:55 PM
நண்பர் வினோத்

நலமா ?அடிக்கடி வாசுவிடம் உங்களை விசாரிப்பேன்.

நண்பர் முத்தையன் அம்முவிடம் சொல்லி கணவன் பட பாடல் சம்பந்தபட்ட ஸ்டில் ஷாட்களை பதிவிடுமாறு அன்போடு வேண்டுகிறேன்.

adiram
9th June 2015, 05:44 PM
எஸ். வாசுதேவன் சார்,

அழியாத கோலங்கள் பதிவை இங்கு மறுபதிவு செய்து, மீண்டும் தேவிபாலா தியேட்டருக்குள் கொண்டுபோய் அமர வைத்து விட்டிர்கள். கொஞ்சம் விவகாரமான படம்தான். 'விடலைகளை கெடுக்க வந்த படம்' என்றெல்லாம் குதறப்பட்ட படம்தான். எடுத்த முறையில் கொஞ்சம் தப்பித்துக் கொண்டது. சிறுவர்களில் ஒருவன் நிரோத் வாங்கி வருவதை கட்டுரையாளர் குறிப்பிடாது ஏனோ.

சிறுவர்களில் ஒருவனான ரகு இறந்தபின், ஆற்றில் குதித்து அவனைத்தேடியவர்கள் அவன் பிணத்தைத் தூக்கிச் செல்லும்போது, காமிரா அப்படியே மரத்தின் பக்கமாக திரும்பி, அந்த மரத்தடியில் கழற்றி வைக்கப்பட்ட ரகுவின் கண்ணாடியை குளோசப்பில் காட்டும்போது, ஷோபாவின் அழுகையை விட பலமடங்கு சோகத்தை நம் மனதில் பதியவிடும்

adiram
9th June 2015, 06:00 PM
நெய்வேலி வாசு சார்,

ஒரே பாடலில் இருவருக்கு முதுகு சொறியலா?. நடக்கட்டும்.

பதிவு எனக்கு பிடித்திருக்கிறது.

புரட்சிப்பாடல்களும், தத்துவப் பாடல்களுமாக "அங்கே" பதித்து, ஒரு மாயை கிரியேட் பண்ணிக்கொண்டிருக்கும் போது, அவைகளுக்கிடையே இம்மாதிரி சிற்றின்பப் பாடல்களும் பாடப்பட்டிருக்கின்றன என்று அவ்வப்போது வெளிச்சம் போடுவது நல்ல பணியே.

அடுத்த முதுகு சொரியல் என்ன?.

"கண்கள் இரண்டும் விடிவிளக்காக
கட்டழகு மட்டும் வெட்ட வெளியாக
கைகள் இரண்டும் தொட்ட்ட்ட்ட சுகமாக
கலந்திருப்போமே யுகம் யுகமாக

பனித்துளி விழ விழ முத்து விளையும்.. ஆஹா"
பாடல்தானே..?.

Russellzlc
9th June 2015, 06:02 PM
வாசு சார்,

கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து கொள்வோமே என்று திரிக்கு வந்து பார்த்தால் எதிர்பாராத இனிய அதிர்ச்சி. கணவன் படத்தின் ‘மயங்கும் வயது’ பாடலை சுவையாக அலசியிருக்கிறீர்கள்.என்ன சொல்லி உங்களை பாராட்டுவது என்று தெரியவில்லை. நேற்று நான் குறிப்பிட்டதைப் போல, உங்களிடம் பிடித்தது, சொல்ல வேண்டியதை சுவைபட சொல்வதும் அதற்கான கடின உழைப்பும்.

நானும் பலமுறை படத்தை பார்த்திருக்கிறேன். இருந்தாலும் மனம் விட்டு உண்மையை சொல்கிறேன். நீங்கள் கவனித்த சில அம்சங்களை நான் கவனித்ததில்லை. நீங்கள் சொல்லி பாடலையும் பார்க்கும்போது, ‘ஆமாம், இதை நாம் கவனிக்கவில்லையே’ என்று தோன்றியது. //ஜெயாவின் கழுத்தில் கருகுமணியும் கொண்டையில் சுற்றிய பூவும் இதில் அடக்கம்// நான் கவனிக்காததில் இதுவும் அடக்கம். மக்கள் திலகத்தையே பார்த்துக் கொண்டிருந்ததால் இருக்கலாம். ஆனால், அவர் தலையை ஆட்டியபடி இருந்தும் பறந்து விடாமல் அவர் தலையில் அமர்ந்தபடி, சிறகடிக்கும் புறாவை கவனித்து ஆச்சரியப் பட்டிருக்கிறேன்.

//'மூவகைத் தேன்கனி ஒன்று குறைந்திருக்க' (ஓஹோ! 'பலா'வோ அது!)//
விழுந்து விழுந்து சிரித்தேன்.

பல பாடல்களைப் போலவே இதிலும் பாடகர் திலகத்துக்கும் இசையரசிக்கும் வெற்றியில் சமபங்கு. நல்ல ரசிகர் நீங்கள். நானும் ரசித்த ‘'டர டர டர டைன்' என்ற பிட் இசையை கூட நீங்கள் குறிப்பிடத் தவறவில்லை.

இந்தப் பதிவை போடுவதற்காக பாடலை பார்த்து, ரசித்து, சிறப்புகளை கவனித்து, கோர்வையாக நினைவில் கொண்டு வந்து, டைப் செய்து, படங்களை, பாடல் காட்சியை தரவேற்ற பல மணி நேரம் பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன். உங்கள் உழைப்புக்கு என் தலைதாழ்த்திய வணக்கங்கள்.

மக்கள் திலகம் நடித்த இந்த பாடலை பற்றி அருமையான ஆய்வை எல்லாரும் ரசிக்கும்படி பதிவிட்ட உங்கள் கர மலர்களில் என் கண் மலர் பதித்து நன்றி கூறுகிறேன்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
9th June 2015, 06:03 PM
கிருஷ்ணா சார்,
கவிஞனும் கண்ணனும் கட்டுரை அருமை. ‘சுருக்கமா எழுத ஆசை’ என்கிறீர்களே? நீங்கள் சுருக்கமாக எழுதியிருந்தால் இவ்வளவு விரிவாக நாங்கள் ரசித்திருக்க முடியுமா? தொடருங்கள்.

ரவிசார்,
//அன்பு என்பது மத சார்பற்ற ஒன்று --- அதன் பெயர் - பைபிள் அல்ல , குரான் அல்ல , பகவத் கீதை அல்ல - ஒரே பெயர் -- அதுதான் "அம்மா "..//
உங்கள் வரிகள் ஒவ்வொன்றும் ஐவரி.

சின்னக்கண்ணன்,
என்னவோ போங்க பிரமாதம். ரவிச்சந்திரன் மட்டுமல்ல, யார் சீரியஸா முகத்தை வைத்துக் கொண்டிருந்தாலும் உங்கள் பதிவுகளை படித்தால் சிரிக்காமல் இருக்க முடியாது.

ஆதிராம் சார்,
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பெண்கள் போட்டி தொடர்பான நகைச்சுவை அருமை. நான் கலைவேந்த‘ன்’தான். மரியாதை காரணமாக கலைவேந்த‘ர்’ என்று அழைக்க வேண்டியதில்லை. ‘அசோகர் உங்க மகரா?’ மாதிரி இல்ல? உங்கள் பதிவு ஒன்றை படித்ததில் இருந்து தெரிந்து கொண்டேன். நீங்கள் உடன் பிறப்பா? அண்ணாவின் தம்பியா? மகிழ்ச்சி.

என்னை சந்திர மண்டலத்துக்கு அனுப்பப் பார்த்த நண்பர் எங்கே?

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.

vasudevan31355
9th June 2015, 06:17 PM
//பதிவு எனக்கு பிடித்திருக்கிறது.//

நன்றி ஆதிராம் சார்.

//அடுத்த முதுகு சொரியல் என்ன?.//

நிறைய நேரம் இருக்கிறது. பின்னால் பார்க்கலாம் சார்.:) பின்னால்தான் மு.சொ.:)

vasudevan31355
9th June 2015, 06:19 PM
//பாடல் யாரு//

அதை எப்பவுமே அவர் சம்பந்தப்பட்டவர்கிட்ட விட்டுடுவேன். அவர் பில்-அப் பண்ணிக்குவார் கிருஷ்ணா! வந்துட்டார். வந்துடுவார்.:)

vasudevan31355
9th June 2015, 06:21 PM
மிக்க நன்றி கலை சார் பதிவை ரசித்து பதில் எழுதியதற்கு.

vasudevan31355
9th June 2015, 06:31 PM
ராகவேந்திரன் சார்,

நன்றி! 'கல்யாணப் பெண் போல்' பாடல் ஜாலி ஆபிரகாம் பாடியிருக்கிறார் என்று விளக்கியதற்கு நன்றி! அப்போதே சந்தேகம் வலுத்தது. ஜெயச்சந்திரன், யேசுதாஸ், ஜாலி, ஸ்ரீகாந்த் என்று குரல் குழப்பம் எப்பவுமே ஜாஸ்தி.

vasudevan31355
9th June 2015, 06:34 PM
கிருஷ்ணா!

'இந்தியன் எக்ஸ்பிரஸ்' பாலுவின் சாதனை பற்றி வெளியிட்ட தகவல்களை இங்கே பதிப்பித்ததற்கு நன்றி!

vasudevan31355
9th June 2015, 06:37 PM
கிருஷ்ணா!

'கவிஞனும் கண்ணனும்' படித்துக் கொண்டிருக்கிறேன். நன்றாக இருக்கிறது.

vasudevan31355
9th June 2015, 07:14 PM
//இன்னிக்கு ஷிப்ட் டேயா நைட்ஆ//

இன்னும் முடிவு பண்ணலே கிருஷ்ணா!:)

rajeshkrv
9th June 2015, 07:23 PM
//இன்னிக்கு ஷிப்ட் டேயா நைட்ஆ//

இன்னும் முடிவு பண்ணலே கிருஷ்ணா!:)

இது கூட உங்க முடிவுதானா ..ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

Richardsof
9th June 2015, 07:51 PM
இனிய நண்பர் திரு கிருஷ்ணா சார்

உங்களின் அன்புக்கு நன்றி . நீங்கள் பதிவிட்ட '' நின்று போன திருமணம் '' நிஜக்கதை - வருத்தமாக இருந்தது .
திரு ரவிக்குமாரின் கருவின் கதை , வாசுவின் அட்டகாசமான '' மயங்கும் '' பதிவு , கல்நாயக்கின் ''பூக்கள் '' பதிவுகள்
சின்னகண்ணனின் கவிதை நடை ,ராகவேந்தரின் திலக சங்கமம் , கலைவேந்தனின் பதிவுகள் ,ராஜேஷ் மற்றும் நண்பர்களின் இனிய பதிவுகள் எல்லாமே அருமை .

Richardsof
9th June 2015, 07:58 PM
நெய்வேலி வாசு சார்,

ஒரே பாடலில் இருவருக்கு முதுகு சொறியலா?. நடக்கட்டும்.

பதிவு எனக்கு பிடித்திருக்கிறது.

புரட்சிப்பாடல்களும், தத்துவப் பாடல்களுமாக "அங்கே" பதித்து, ஒரு மாயை கிரியேட் பண்ணிக்கொண்டிருக்கும் போது, அவைகளுக்கிடையே இம்மாதிரி சிற்றின்பப் பாடல்களும் பாடப்பட்டிருக்கின்றன என்று அவ்வப்போது வெளிச்சம் போடுவது நல்ல பணியே.

அடுத்த முதுகு சொரியல் என்ன?.

"கண்கள் இரண்டும் விடிவிளக்காக
கட்டழகு மட்டும் வெட்ட வெளியாக
கைகள் இரண்டும் தொட்ட்ட்ட்ட சுகமாக
கலந்திருப்போமே யுகம் யுகமாக

பனித்துளி விழ விழ முத்து விளையும்.. ஆஹா"
பாடல்தானே..?.

https://youtu.be/KSFTdt6I1n8

chinnakkannan
9th June 2015, 09:24 PM
வாஸ்ஸூ சார்…

//முகத்தோடு முகம் புதைத்தும், மூக்கோடு மூக்கு உராசியும், பின்பக்கம் வளைத்து உள்வாங்கலும், கழுத்தைச் சுற்றி வளைத்தல்களும், முகவாய்க் கட்டைகளோடு முகவாய்க் கட்டை சேர்த்தலும், கட்டிலில் கட்டிப் பிடித்தல்களும், பாடலை நீலகண்டன் இயக்கவில்லை... ஜெகந்நாதன்தான் இயக்கியிருக்கிறார் என்று படுகிறது. சென்ஸாரும் கொஞ்சம் சென்ஸிட்டிவாய் இல்லை என்றும் தெரிகிறது.// அப்படில்லாம் இல்லை அங்கங்கே ரெண்டு பூ வந்துச்சு :)

//இங்கும் வைக்கோற் போரில் காதலர்களின் அக்கப்போர்தான். வாழை மரங்களும், புடலங்காய் தோட்டமும், கயிற்றுக் கட்டிலும், கிணறும், பரணும், அழகான குடிசையும், அதன் மேல் தாவும் புறாக்களுமாக செட்டோடு சேர்ந்து பாடலும் புழுதி பறக்கிறது.// அதானே.. புடலங்காய் எல்லாம் பிஞ்சா இருந்ததுங்காணும்.. அப்படியே நெலாவாட்டமா வட்டவட்டமா வட்டவட்டமா கட்பண்ணிப் பாசிப்பருப்பு போட்டு கூட்டுப் பண்ணா அட அடடா…ஸ்டமக் கொண்டா கொண்0டாஇன்னும்னு சொல்லும்.!
.
அப்புறம் வைக்கோற்போருக்குள்ள இந்தப்பக்கம் ஜெ அந்தப்பக்கம் ம.தி உள்ள போய்ட்டுவெளிய வந்து ஸ்ட்ரெய்ட்டா பாடறாங்க ..கொஞ்சம் ஸ்லைட்டா அரிக்கறாமாதிரி சீன் வச்சுருக்கணும் டைரக்ஷன் மிஸ்டேக்!

கிணத்துமேலல்லாம் தலை மேல தலைவெச்சு பாட்டு.. காதல்னா ரிஸ்க்லாம் பாக்காதோ..

சின்னாவுக்கு 'quote' பண்ண செம சான்ஸ்// எனக்கு எங்க கோட் பண்ண சான்ஸ் கொடுத்தேள்.. எல்லாம் தோள்வாரியா..ஸாரி விலா வாரியா எழுதிட்டீரே..

பாட்டு முன்னமே கேட்டு ரசிச்ச பாட்டுதான் என்றாலும் கலை சொல்வது போல இவ்வளவு ஆழமாக அகலமாக நீளமாக இன்னும் என்னவெல்லாமோ க போட்டுக் கேட்டதில்லை ரசித்ததில்லை.. நீங்கள் செய்ததால் நெல்லுக்குப் பாயும் தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போலே நானும் ரசித் ரசித் ரஞ்சிதா ஸாரி டைப்போ ரசித்தேன் மிகவும்..! :)

கணவன் படம் பார்த்ததில்லை..

யூ நோ ஒன் திங்க்..

முக நூல் நண்பர் ஒருவர் இந்த நீங்கள் சொன்ன பாடலைப் போல பலப் பல ஆண்டுகள் கழித்துக் கொஞ்சம் விரசமாகவும் இளசுகளை எல்லாம் நிறையக் கேட்கவைத்த ஒரு ஹிட் பாடலான நிலாக் காயுது பாட்டிற்கு ஒரு சிந்துப் பாட்டு எழுதியிருந்தார்.. ( என்ன இந்தப் பாட்டுல புடலங்கா வைக்கப் போர் மிஸ்ஸிங்க்.. ஸீ என்னமா காப்பி அடிக்கறாங்க ம்ம் என்னமோ போங்க)

அதற்கு ப் பதிலாக..அல்லது அந்தப் பாட்டைப் பற்றியே யாரோ ஒரு வயதானவர் ( யாரு..யாரோ!) சொல்வது போல சிந்து எழுதியிருந்தேன்..

இரவினில் பாடிய பாடல் – நெஞ்சில்
உறவுடன் மோதிடும் சாரல் –இன்று
கேட்கவும் கூட்டிடும் ஆடல் – பின்னர்
நாடல்- நெஞ்சில்
ஆறல் -பருவம்
ஓடிய தெண்ணியேச் சாடல்..!

ம்ம் என்னபண்றது..மயக்கத்தை தந்தது யாரடி!

*

கிருஷ்ணாவின் பக்கெட்டிற்கான அர்த்தம்புரியவில்லையே.. பிங்க் கலர் ஃபளவர்ஸ்..ம்ம் அதில் தண்ணீரும் இல்லை.. ஐயாம் நாட் இண்ட்டரஸ்டட்!

*
கலைவேந்தன்.. நன்றிங்க்ணா.. கொஞ்சம் ஃப்ரீயாகும் போது ஒரு குழந்தைப் பாட்டு கொண்டு வாங்க..!
(அனேகமா சிக்கமங்கு சிக்கமங்கு பாட்டா இருக்கும்!)

*

எஸ்வி நன்றி.

*

ஆதிராம்.. என்னங்க இப்படிப் பச்சப் புள்ளையா இருக்கீங்க..

கண்கள் இரண்டும் விடிவிளக்காக
கட்டழகு மட்டும் வெட்ட வெளியாக
கைகள் இரண்டும் தொட்ட்ட்ட்ட சுகமாக
கலந்திருப்போமே யுகம் யுகமாக

நல்ல பாட்டு தான் இல்லேன்னு சொல்லலை.. மா பலா வாழை இருக்கான்னு பார்த்தீயளா..
*

//குகன் என்ற கதா பாத்ரம் சொல்வதாக இப்படி அமைந்த பாடல் எவ்வளவு நேர்த்தியாக வெண்பாவாக வந்திருக்கிறது பாருங்கள் சந்தத்தோடு கம்பருக்கு:

அஞ்சன வண்ணன் என்னாருயிர் நாயகன் ஆளாமே
வஞ்சனையா லரசெய்திய மன்னரும் வந்தாரே
செஞ்சரமென்பன தீயுமிழ்கின்றன செல்லாவோ மன்னவர்
நெஞ்சினில் வேடர் விடும் சரம் பாயாவோ?'''//

கிருஷ்ணா அது வெண்பாவில்லை.. கலித்துறைன்னு நினைக்கறேன்.. நேத்துக்கூட ஒண்ணு ட்ரைபண்ணேனா.. அதை அப்புறம் சொல்றேன்..

திக்குத் தெரியாத காட்டில் விளக்கம் அருமை கிருஷ்ணா ஜி.. எனக்கு மிகப் பிடித்த பாரதி பாடல்களில் ஒன்று..

துள்ளித் தந்தாரொரு பாட்டு –அதில்
தோயும் இளமனமும் கேட்டு – முகம்
அல்லி மலர்ந்தது போலும் –அங்கே
அழகாய்ப் பொலிந்ததுவே பாரும்..!

நன்றி கிருஷ்ணா..

*

கல் நாயக் ஏன் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வர்றார்.. தமிழ் நாடு எக்ஸ்ப்ரஸ்ல ட்யூட்டியா என்ன ( அந்தக்காலத்தில சென்னையில் ஈவ்னிங்க் 5 மணிக்கு ஏறினா மறு நாள் முழுக்க ஓடி அதற்கு மறு நாள் விடிகாலை டெல்லி போகும் …இப்பவும் அப்படியா தெரியாது!)

*

ஹை..கண்ணா சமர்த்து.. ஹோம் ஒர்க் முடிச்சுட்டேனே :)

rajeshkrv
9th June 2015, 09:48 PM
மறந்து போன பாடல்களின் தொடர்ச்சி

மனதில் ஒரே ஒரு பூ பூத்தது (கல் நாயக் நானும் உங்கள் பூவை திருடிவிட்டேன் மன்னிக்கவும்)
மு.மேத்தாவின் வரிகள் இசையரசியின் குரல்

https://www.youtube.com/watch?v=Q2VC0QoqHoc


எனது விழி வழி மேலே கனவு பல வழி மேலே
ஜெயசந்திரன் ஜானகி குரலில் அழகான பாடல்
வரிகள் வாலி

https://www.youtube.com/watch?v=fGb82FXkYZc

வி.எஸ். நரசிம்மனின் இசையில் விழிகளில் கோடி அபிநயம்
கண் சிமிட்டும் நேரம் (சரத்குமார் தயாரிப்பாளராக இருந்த காலம்.. சிறிய வேடத்தில் வருவார்)
https://www.youtube.com/watch?v=U2-QrZwSMQ8

chinnakkannan
9th June 2015, 10:37 PM
*

ரொம்ப நாளைக்கு முன்னால் ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். “என் வீட்டில் மா, பலா, வாழையெல்லாம் வளர்த்திருந்தோம் தெரியுமா “ என்றார்..

இப்போ இருக்கா என்ன

ம்ஹூம் அதெல்லாம் ஒரு இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன்னமேயே வித்து ப்ளாட்டா பண்ணிட்டாங்க..அதுல ஒரு ஃப்ளாட் எங்களுக்கு..

கஷ்டம் தான் இந்த மாதிரி மரங்கள் வளர்ந்திருக்க அவற்றை விற்றுவிடுவது..அதுவும் பலா மரம் வளர்வது என்பது கஷ்டம்

*

ஸோ இந்த முக்கனின்னு எடுத்துக்கிட்டீங்கன்னா பழைய பாடல்கள்ல நிறைய பாடல்கள் இல்லை யுவர் ஆனர்..

புதுப் பாட்டுல நிறைய கொட்டிக் கிடக்கு. எனிவே பழைய பாடல்னு வந்தா மூணு பாட்டு நினைவில்..

முத்து பவளம் முக்கனி சர்க்கரை மூடி வைக்கலாமா

முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சர்க்கரை
அள்ளித் தெளித்த பொன் மாடமெங்கே..

சரி மூணாவது.. ஹை..அவ்ளோ சீக்கிரமா போகமுடியுமா அதுக்கு

இந்தக் காதல் வயப்பட்ட பெண்கள் இருக்கிறார்கள் பாருங்கள்..எல்லாருமே வித்தாரக் கள்ளிகள்!

*

செந்தேன் இதழில் சிதறாமலே மென்மைப் பூவாய்
வெண்மைச் சிரிப்பில் விளையாடிடும் பாடல் கேட்டே
கண்ணின் இமைகள் களிகொண்டிட மெல்ல ஆட
வந்தாள் கனிவாய் விகசித்திடும் வண்ணங் கொண்டே

(கலித்துறை முயற்சி- கொஞ்சம் ட்ரை பண்ணினேன்)

இப்படித் தான் காதலன் எதிர்பார்க்கறச்சே எதுவும் அறியாத பசுவாய் (வாசு போல) கொய்ங்க் கொய்ங்க்னு குட்டிப் புறா கணக்கா நடந்து வந்து கருவண்டுக் கண்களின் மேல் இருக்கும் சிறகினைப் போன்ற இமைகள் மெல்ல மெல்ல கொட்டக் கொட்ட பாக்கற நம்ம ஆள் கொட்டக் கொட்ட முழிப்பான்..மனசும் மெல்ல மெல்ல முரசு தட்ட ஆரம்பிக்கும் சந்தோஷத்தில்..

ஹப்புறம் என்ன ஆகும்

என்ன புள்ள சுகம் தன்னே

ம்க்கும் புறா பக்கும் பக்கும் சொல்லும்..

என்ன ரொம்ப அலட்டிக் கொள்கிறாய்

ம்ம் போங்க

இங்கிட்டு வாவேன்..

என்னவாம்..

ஒண்ணு கொடேன் கன்னத்திலே

போய்யா உனக்கு வேற வேலை இல்லை நான் போறேன் – ஆனால் போகமாட்டாள்.

அப்புறம் இப்பக் கொடுத்தா ஒண்ணோட போய்டும் அப்படி இல்லாங்காட்டி

இல்லாங்காட்டி – மென்னகை புரிந்து தூண்டும் புறா..

நூறு தரவேண்டியிருக்கும்..

ஹச்சோ ஓஓ.. என் கன்னம் இன்னாபா ஆகும்… எனப் பொய்வெட்கம் கொள்வாள்.அருகில் கன்னத்துடன் கன்னம் இணைக்க வருவது போல் வந்து கிள்ளியும் விட்டு விடுவாள் ..(இது ரொம்ப மோசமில்லா).

இதையே அந்தக் காலச் சின்னக் கண்ணனார் என்னவா எழுதியிருக்கார்னா..

தாநூறு என்றாலோ சட்டெனவே கண்சிவந்து
தேனூறும் தெள்ளுதமிழ்ப் பேச்சினிலே - வானூறும்
தூறலென மென்மையினைக் கன்னத்தில் சுட்டியே
பூடகமாய்க் கிள்ளியதே பூ!


*

இதே மாதிரிதான் அந்தக்காலத் திரைப்படத்துல ஒரு பாட்டு..(எல்லாம் வாசு சாரினால் வந்த வினை.. என்னை கிள்ளி விட்டுட்டார்..)

ஒயிலா அந்த இள நங்கை வர்றா.. வர்றாளா.. காதலனைப் பார்த்து எதுவும் கேக்கலை.. தன்னழகைத் தானே ரசிச்சுக்கிட்டு பாடறா..

கன்னி நதியோரம்
மின்னி விளையாடும்
உன் அழகு மேனி
என்ன கதை கூறும்

அவன் என்னவாக்கும்சொல்றான்

வண்ண விழி மேடை
வந்த இளம் பேடை
சின்ன இடையோடு
சேர்ந்து இசை பாடும்

இப்படிப் பாடறச்சயே அவளோட அழகோட சி.வியான சி.இ யைப் பார்த்துடறானா தடுமாற்றமா சின்ன இடையோ டு டு டுன்னு பாடிடறான்..

சரி நம்ம காதலி தான்..பார்த்தா ரசகுல்லாக்கு கண் காது வாய் மூக்கு கண்மை கூந்தல் பொட்டு வெச்சா மாதிரி முகம் அதில் தவழும் ஜீரா போன்ற குறும்பு, சூப்பர் டூப்பரான புடவைக் கட்டு அதைக்கட்டியிருப்பவளின் நளினம், சொற்செட்டான பாட்டு என சொய்ங்க் சொய்ங்க்னு மயங்கிக்கிட்டே இருக்கறச்சே டவுட் வருது..கேட்டுடறான்..

கன்னங்கள் கோடி பெறுமோ
கைகளில் ஆடி வருமோ
எண்ணங்கள் பொங்கி வருமோ
இன்பத்தை பங்கு தருமோ

**

பாக்கறா காதலி.. அவளுக்கு சிரிப்பு மேலே மேலே வருது.. லூஸுன்னு திட்டலாம்..ஆனா ஆண்கள் காதல்னா லூஸாத்தான் ஆகிடுவாங்கன்னு தெரியுமே..அவள் மட்டும் என்ன வாழுதாம்

அவளுக்கும் அவன் வேண்டுமே.. வெளிப்படையா சொல்ல முடியாது..

கட்டிப் பிடித்திடக் காளையைக் கூப்பிடலாம்
வெட்கம் தடுக்குமே ஆம்..

சரி பதில் பாடிப் பார்க்கலாம்

தானாக ஓடி வருமோ
தழுவாமல் ஆசை தீருமோ
நாணத்தை பெண்மை விடுமோ
நான் என்ன சொல்ல வேண்டுமோ


*

பாக்கறான் நம்ம காதலன் பயபுள்ள.. சரி சரி.. அம்மா கொஞ்சம் மென்மையா ஒரு வழியா அதாவது ஒரு மார்க்கமாத் தான் இருக்காக.. கொஞ்சம் பாராட்டிடலாம்னு எடுத்து விடறான்
*

முந்தானை முகவுரையோ
முக்கனிக்கு ஒன்று குறையோ
செந்தேனில் தெளிவுரையோ
சேர்ந்ததும் முடிவுரையோ

*

அவளுக்கோ வெட்கம், நாணம், ஆசை.. கொஞ்சம் கோபமும் கூட..அரை லூசு என்னமெல்லாமோ உக்காந்து ரூம்போட்டு நம்ம அழகை வர்ணிக்குது பாரேன்.. நாம என்ன அவ்ளோ அழகாவா இருக்கோம்.. பாட்டு முடிஞ்சதும் ஹேண்ட்பேக் எடுத்து குட்டிக் கண்ணாடில்ல முகம் பாத்துக்கணும்..!

இது என்ன கொஞ்சம் லைன்ஸ்லாம் பார்த்தா வம்பா இருக்கே..புள்ளையாண்டான் ஜொள் கொஞ்சம் ஓவர் தான்..சரி அவனுக்குத் தான் நூல் விடத் தெரியுமா.. நாம வேணும்னா நூலிடை விட்டுப் பார்க்கலாம்!


*

பெண்மேனி ஊஞ்சல் வேண்டுமோ
பொழுதெல்லாம் ஆடவேண்டுமோ
பாலாற்றில் நீந்த வேண்டுமோ
பசியாறித் தூங்க வேண்டுமோ


*

அம்புட்டு தான் அப்புறம் என்ன ஆச்சா

இரவினில் நிலவு மின்ன
..இளையதாய் மேகம் ஒன்று
உறவினைக் கொள்ள மதியை
..ஓடியே மூடும் போலே
கரகர வென்றே காளை
..கட்டெலாம் விட்டே அங்கு
சரமென அன்பைக் காட்ட
..சாய்ந்ததே மாலை அன்றோ..!

அம்புட்டுதேன்.. தே லிவ்ட் ஹாப்பிலி எவர் ஆஃப்டர்..!

*
நீங்கள்ளாம் கேட்ட பாட்டு தான்.. இளமை+அழகு+குறும்பு த்ரீ இன் ஒன்னாய் ஜெயந்தி.. நடனத்தில் வல்லவராய் நாகேஷ்.. படம் நீர்க்குமிழி..

https://youtu.be/kjePOCQCbNM

பின்ன வாரேன் :)

chinnakkannan
9th June 2015, 10:54 PM
என்னமோ போங்க – 21
*
ஆஃபீஸ் முடிச்சுட்டு வீட்டுக்கு வந்தா சமர்த்தா முகம் கழுவி கை கால் அலம்பி பூஜை ரூம் போய் சாமி கும்பிட்டுட்டு கொஞ்சம் பிடிச்ச புத்தகம் , பத்திரிகை படிச்சுட்டு கொஞ்சம் இனிய இசை கேட்டுட்டு அழகா வீட்டில கொடுக்கற டின்னரச் சாப்பிட்டா தூக்கம் துரத்தோ துரத்தி வந்து சமத்தா தூங்கவும் பண்ணும் மனுஷனை..

அத விட்டுட்டு இப்படி கன்னி நதியோரம்னு பாட்டுல்லாம் அனலைஸ் பண்ணா இப்படி த் தான் நாகேஷ் மாதிரி புலம்ப வேண்டியது தான்.. தூக்கம் எப்படி வரும்.. என்னமோ போங்க..

https://youtu.be/VybvUzOAnRw

uvausan
10th June 2015, 07:26 AM
Good Morning

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/IMG-20150609-WA0023_zpsir2dzuwm.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/IMG-20150609-WA0023_zpsir2dzuwm.jpg.html)

uvausan
10th June 2015, 07:30 AM
அம்மா

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/amma%202_zpscacgjq1f.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/amma%202_zpscacgjq1f.jpg.html)

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/amma_zpsq9vlt5i8.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/amma_zpsq9vlt5i8.jpg.html)

rajeshkrv
10th June 2015, 07:33 AM
தாய்மை பற்றி ரவி அழகாக கருவின் கருவில் எழுதி வருகிறார்.

ஏதோ என் பங்கிற்கு நானும் சில தாய்மையின் சிறப்பை சொல்லும் தாலாடு பாடல்கள் சிலவற்றை பதிவிடலாம் என நினைக்கிறேன்
ரவி மன்னிக்கவும்

கணவன் வெறுத்து ஒதுக்கினாலும் குழந்தையே உலகம் என வாழும் இந்த தாய் பல வருடங்களாக வராத தன் அண்ணன் வருவார் என்று அழகாக பாடும் பாடல் இது
சோகத்திலும் சுகம்

https://www.youtube.com/watch?v=nizKjQNq2-E

உன் முகம் அரவிந்தம் ஆம் நின்ன முகா அரவிந்தா

https://www.youtube.com/watch?v=SBSpZeummZM

கல்யாணி முல்லே நீயுறங்கு

https://www.youtube.com/watch?v=vBQX5ioALQU

அக்கா அன்னையாக மாறுவது பல வீடுகளில் இயல்பு
இதோ தம்பிக்கு தாலாட்டு. குரல் லதா மங்கேஷ்கர்
https://www.youtube.com/watch?v=Lr2GnBjo6nM


மனைவி அன்னையாக மாறி பாடும் தாலாட்டு
ராதையின் நெஞ்சமே, கில்தே ஹைன் குல் யஹான் பாடல்களின் தெலுங்கு வடிவம்

https://www.youtube.com/watch?v=4cVlegTZYU4

uvausan
10th June 2015, 07:38 AM
கருவின் கரு - பதிவு 66

" அம்பா "

செவந்திபூ செண்டு போல கோழிக்குஞ்சு தாய் சிறகுக்குள்ளே குடியிருக்கும் கோழிக்குஞ்சு ----

அன்னையோடு இரை எடுக்கும்
கோழிக்குஞ்சு ; நல்ல அன்புமிக்க பிள்ளை அந்த கோழிக்குஞ்சு

தாயைவிட்டு ஒருபோதும் தனித்திருக்காது ; அண்ணன் தங்கையரை தனித்துவிட்டு சிறை எடுக்காது ; வாயில்லாத கோழிக்குஞ்சு வார்த்தை சொல்லாது ; தன்னை வளர்ப்பவரை நாளும் பிரிந்து விடாது

நாம் எல்லோரும் அந்த கோழிக்குஞ்சை போன்றவர்கள்தான் - அம்மாவின் அணைப்பில் இருந்தோம் - சிறகுகள் வந்தபின் அந்த அன்னையை விடுதலை பெற முடியாத சிறையில் தள்ளுகிறோம் - நம்மிடம் பயிற்சி எடுத்துக்கொள்ளும் ஐந்து அறிவே உள்ள ஜீவராசிகள் , ஆறு அறிவுடைய நம்மிடம் கற்றுக்கொள்ள ஒன்றுமே இல்லாமல் செய்துவிடுகிறோமே !!


https://youtu.be/CJ3q8-VQIv0
====

இந்த பாடல் இணையத்தளயத்தில் கிடைக்க வில்லை - முழு படத்தையும் download செய்து , பிறகு வீடியோ கட்டர் மூலம் பாடலை பிரித்தெடுத்து , பிறகு அதை youTube இல் எற்றம் செய்தேன் ( வாசுவின் அசுர உழைப்பை நினைத்துக்கொண்டேன் , இது ஒன்றுமே இல்லை என்ற திருப்தி கிடைத்தது )- அருமையான பாடலை எற்றம் செய்த பெருமையடன் "அம்பா " முடிவடைகிறாள் -- அடுத்த அடுத்த பருவங்கள் "வீரசு " & ஷுஸ்ரூ - Shusroo-

rajraj
10th June 2015, 07:43 AM
chinnakkaNNan: "English rajraj" ? :) You took me back to my early college days (1954-56). I spent more time on English Literature than optional subjects ( Mathematics,Physics, Chemistry). I was particularly interested in Shakespeare and earned a nickname 'Shakespeare' from my friends. :lol: Of course, they also warned me that the return on time invested in languages was not that much and that I would miss my 'first class' ! :) But, I learnt a lot about Shakespeare. One drama was compulsory as part of English language. I also came close to losing my seat in science/engineering. The vice chancellor of the university where I studied spoke to me for about half an hour with questions on Goldsmith to Shakespeare. I was puzzled. But the answer came soon. He said : " You are good in English. We need people like you. You take English honours." The rest is history ! :)

uvausan
10th June 2015, 07:44 AM
கருவின் கரு - பதிவு 67

நான்காவது "வீரசு" ( veerasu ) - (One who makes him a hero),- தன் குழந்தையை வளர்க்கத்தொடங்குகின்றாள் - தன்னம்பிக்கையை பாலாக ஊட்டுகின்றாள் - ஒரு பண்புள்ள நல்ல தலைவனாக வருவான் என்று கனவுகள் பல காணுகின்றாள் . 5 வது ஷுஸ்ரூ - Shusroo- (One who takes care of him till her end )

தாயைப்பற்றி சில நண்பர்களின் கவித்துளிகள் :

சுடச்சுட உணவு இருந்தால், தாத்தா அதிகம் சாப்பிடுவார் !!

அம்மா உணவு பரிமாறினால் அப்பா அதிகம் சாப்பிடுவார் !!

தூக்கி வைத்துக்கொண்டு உணவு ஊட்டினால் தங்கை அதிகம்

உண்ணுவாள் !! தொட்டுக்கொள்ள ஏதேனும் இருந்தால் தம்பி

அதிகம் சாப்பிடுவான் !! சமைத்தது மீதமானால் மட்டுமே

அம்மா அதிகம் சாப்பிடுவாள!! உண்மைதானே??

உன் உயிர் தந்து என்உயிர் வளர்த்ததாயே!!

=================


தரணியில்நானும் அவதாரம்
எடுத்திட துணையாய் இருந்தவளே!!

ஈரைந்து மாதங்கள் எனைகருவாய் வயிற்றில் சுமந்தவளே!!

பசியால்நீ வாடிடும்போதும் நான்பசியறியாது செய்தவளே!!

நோயினால்நீ வாடியபோதும் என்மனம் நோகாமல் பார்த்தவளே!
!
உன்னை என்னவென்று நான்சொல்வேன்...

நீதெய்வம்என்று சொன்னால்கூட உனக்குஅது இழுக்குதான்...!!

நீதெய்வத்துக்கு மேலேதான் என்மனதில்...!!

https://youtu.be/anonHtYQFxs

https://youtu.be/aSa9qb_jXlg

rajeshkrv
10th June 2015, 07:44 AM
ரவி முரடன் முத்துவின் அருமையான பாடலுக்கு நன்றி
இதோ அதே பாடலின் கன்னட வடிவம். எம்.வி.ராஜம்ம என்ன அருமையான நடிகை
https://www.youtube.com/watch?v=MW-tJH9l6Vc

uvausan
10th June 2015, 07:47 AM
கருவின் கரு - பதிவு 68


அவள் ஆசைகளுக்கும் , கனவுகளுக்கும் முடிவே இல்லை , அழிவும் இல்லை !!!!!

https://youtu.be/mh-4s5KzgsU

https://youtu.be/eVp26XEkFkM

uvausan
10th June 2015, 07:52 AM
கருவின் கரு - பதிவு 69



உனக்கு என்று ஒரு ஸ்லோகத்தை உருவாக்க ஆசைப்பட்டேன் - உலகமே அதில் அடங்கிவிட்டது ---- இயற்கையை எடுத்து உனக்கு மாலையாகத் தொடுக்கலாம் என்று ஆசைப்பட்டேன் - நீயே இயற்க்கை என்பதை பிறகுதான் புரிந்துகொண்டேன் . எதை எடுத்துக்கொண்டாலும் குறைவாகாத்தான் தெரிகிறது -----

https://youtu.be/NovCNFS1O1M?list=RD2DJ0qlZpOos


https://youtu.be/DuA_BurpvU4

uvausan
10th June 2015, 07:55 AM
கருவின் கரு - பதிவு 70:):smile2:

A mothers love they say, is peace, It need not be acquired, it need not be deserved. Celebrating our mothers, the reason we believe in ourselves, the person who taught us to love and expect nothing in return .

As you listen to these songs, understand the love of a mother through the lyrics and feel your mothers love, no matter how close or far she might be. Listen and Enjoy.

Track Names:
01. Tu Kitni Achhi Hai
02. O Maiya Mori Main Nahin Makhan
03. Maa Pyari Maa
04. Maa Tujhe Dhundun Kahan
05. Kaun Si Hai Woh Cheez
06. Maa Ka Aanchal Ladle
07. Maa Mujhe Apne Aanchal Mein
08. Meri Duniya Hai Maa
09. Maa Hai Mohabbat Ka Naam
10. O Maa Meri Maa
https://youtu.be/KAFanEYk9as

uvausan
10th June 2015, 08:02 AM
தாய்மை பற்றி ரவி அழகாக கருவின் கருவில் எழுதி வருகிறார்.

ஏதோ என் பங்கிற்கு நானும் சில தாய்மையின் சிறப்பை சொல்லும் தாலாடு பாடல்கள் சிலவற்றை பதிவிடலாம் என நினைக்கிறேன்
ரவி மன்னிக்கவும்


[/url]

என்ன ராஜேஷ் , மன்னிக்கவும் என்றெல்லாம் பெரிய வார்த்தைகள் -- ?? அருமையான பாடல்களை கொடுத்துள்ளீர்கள் - நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் - அன்னையின் அன்பைப்போல , நமக்கு தெரியாதது இன்னும் எவ்வளவோ இருக்கிறது என்பதை உங்கள் அபூர்வ பாடல்கள் நிரூபிக்கின்றன . மிகவும் நன்றி

rajeshkrv
10th June 2015, 08:03 AM
no one is better than Nirupa roy as mother.. what a lady she was :)

vasudevan31355
10th June 2015, 09:32 AM
http://i.ytimg.com/vi/3Qa7K5QSQ4c/maxresdefault.jpg

'அக்கி டோரா' என்ற தெலுங்குப் படம் 1967 இல் வெளிவந்தது. நம்ம விட்டலாச்சார்யா படம்தான். அப்போ கண்டிப்பா தமிழிலேயும் 'டப்' ஆயிருக்கணுமே.. சொல்றேன்! சொல்றேன்!

http://i2.ytimg.com/vi/bzRDwUrG-NY/mqdefault.jpg

புரட்சிதாசன் வசனம் எழுதிய இப்படத்தில் விட்டல் விரும்பிய காந்தாராவ் (காந்தாராவ் நல்லா கத்திச் சண்டை போடுவார். அதாவது வாள் பைட். அதனால் அவரை தமிழகத்தில் வசூலுக்காக 'ஆந்திரா எம்.ஜி.ஆர்' என்று விளம்பரப்படுத்தி விடுவார்கள். காந்தராவ் கையில் கத்தியைப் பிடித்தபடி போஸ் கொடுக்கும் போஸ்டர்களை ஒட்டி எம்.ஜி.ஆர் ரசிகர்களைக் கவர இந்தத் திட்டம்):) 'கவர்ச்சிக் கன்னி' பாரதி, விஜயலலிதா என்று பட்டாளம். (நான் சொல்லலப்பா... போஸ்டர் சொல்லும் அப்படி) அப்புறம் விஜயலலிதாவுக்கு என்ன பட்டம் கொடுத்திருப்பார்கள் தெரியுமா? வேண்டாம்...விட்ருவோம்.:)

ஆச்சார்யாவுக்கே உரிய அரங்க பிரம்மாண்ட செட்கள், அப்புறம் பெரிய வெள்ளைப் பூ,:) (அதான் கந்தாராவாம்) ஜிகு ஜிகு என அடிக்கடி ஓடி வந்து பாடும் சி.ஐ.டி சகுந்தலா எக்ஸ்ட்ராக்கள், மாயாஜாலங்கள், சாபம், வில்லன் சத்யநாராயணா, டங் டங் கத்திச் சண்டைகள் என படம் சகல கார, மண, குணங்களையும் பெற்று வெற்றி வாகை சூடும்.

http://i.igcinema.com/MovieImages/8424039f-59c7-4517-b8e1-9a2348897576.jpg

தமிழில் இந்தப் படம் நாம் எல்லோரும் அறிந்த 'மாய மோதிரம்'தான். பாடல்களை இந்தி, தமிழ் என்று அநியாயத்துக்கு காப்பி அடிப்பார்கள்.

ராஜா ராணி கதையில் பாரதி நவீன நீச்சல் உடையில் மர்லின் மன்றோ போல் வருவதும், பாடல்களுக்கு மேற்கத்திய பாணி இசை அமைத்து கிடாரை உருட்டுவதும் விட்டலாச்சார்யா படங்களுக்கு மட்டுமே சாத்தியம்.

பாருங்கள்...இல்லை...இல்லை...ச்சூடுங்கள்:)... பாரதி நீச்சல் உடை அணிந்து எழிலாய் குளத்தில் குளிக்க வரும் போது ஏழை நாயகன் காந்தாராவ் கையில் கம்புடன் வம்பு வளர்த்து பாடுகிறார்.

'பிள்ளா... படுச்சு படுச்சு பிள்ளா'..

என்று விசிலடித்து, பாரதியையும் விசிலடிக்க வைத்து, ஆடியன்ஸையும் விசிலடிக்க வைக்கிறார்.

சரி! எப்படியோ போகட்டும்! 'பார் மகளே பார்' படத்தின் அற்புத பாடலான 'அவள் பறந்து போனாளே' படத்தின் தொடக்க மியூசிக் அல்லவா இப்பாடலின் தொடக்கத்தில் கேட்கிறது. அட ராமா! கோவிந்தா! கோவிந்தா!

அடுத்து பார்த்தால் இன்னொன்று.

ஜாய் முகர்ஜி, ஆஷா ப்ரேக் இந்தியில் நடித்து வெளிவந்த 'லவ் இன் டோக்கியோ' படத்தின் புகழ் பெற்ற பாடலான,

'ஜப்பா..........ன்.... லவ் இன் டோக்கியோ
லே கை தில்
குடியா ஜப்பான்கி'

பாடலை அப்படியே கண்டசாலாவின் குரலில்

'எவ்வரிகோசம்
நீ விந்த வேஷம்'

கார்பன் எடுத்து விட்டார்கள். என்னத்தை சொல்ல?. என்னமோ போங்க. ஆனா நல்லாத்தான் இருக்கு.:)

சின்னா! அப்புறம் நீங்கள் நேற்று எழுதினீர்களே! 'கன்னி நதியோரம்'...அந்தப் பாடலின் துவக்க ம்யூசிக்கையும் விட்டு வைக்கவில்லை. அதை இடையிசையாக சுட்டு விட்டார்கள்.:)


https://youtu.be/cDIXT-QuTBc

அப்படியே தமிழிலும் பார்த்து பரவசம் காணுங்கள். தமிழிலே 'பாடகர் திலகம்' குரல் கொடுத்திருக்கிறார்.

'பெண்ணே! பருவ வயது பெண்ணே!'
கற்பனைத் தோற்றம்
கண்முன்னே மாற்றம்'

என்று.

பாரதி ஸ்லிம்மாக ஸ்விம்மிங் டிரெஸ்சில் கொள்ளை அழகு. (சின்னா! அப்படியே பாரதி குளிக்கும் குளத்தில் இருந்து உங்களுக்கு வேண்டிய தண்ணீரையும் எடுத்துக் கொள்ளுங்கள்.):)


https://youtu.be/6iRCu81tWzw

chinnakkannan
10th June 2015, 10:07 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்

விண்ணுளே தேவனாக வேட்கையைத் தீர்ப்பதற்கே
தண்ணீர் கொடுத்திட்ட தங்கமே - கண்ணுள்ளே
காண அழகை கவிதையாய்த் தந்தீரே
பானம் பருகுவேன் பார் (ரும்)

நன்றி வாசுங்க்னா..வீட் போய் பார்க்கறேன் ரொம்ப வேலை :)

chinnakkannan
10th June 2015, 10:08 AM
இங்கே நாளை இடி மின்னல் சூறாவளி வருகிறதாம்.. வானம் இப்போதே பாரதி படம் பார்க்க முடியாத சி.க போல முகத்தில் கருமை பொங்க இருக்கிறது..வெயிலும் சுமார் தான்.. ம்ம் என்னமோ போங்க..

ராஜ் ராஜ் சார் நான் சும்மா சொன்னேன் தவறாக எண்ண வேண்டாம் :)

vasudevan31355
10th June 2015, 10:17 AM
ஜி! எங்கே போயிட்டீங்க?:)

chinnakkannan
10th June 2015, 10:20 AM
இது எந்த ஜி வாசு ஜீ:) சைக்ளோனின் பெயர் அஷோபாவாம் நாளைக் காலை அனேகமா ஓமானை முட்டுமாம்..ஏதாவது சூறாவளிப் பாட்டு போட்டுவிடுஙக் ஜி..

gkrishna
10th June 2015, 11:05 AM
கிருஷ்ணாவின் பக்கெட்டிற்கான அர்த்தம்புரியவில்லையே.. பிங்க் கலர் ஃபளவர்ஸ்..ம்ம் அதில் தண்ணீரும் இல்லை.. ஐயாம் நாட் இண்ட்டரஸ்டட்!


நண்பர் ராஜேஷ் மட்டும் அல்ல வேறு யாருமே கோவிச்சிக்க கூடாது ப்ளீஸ் :).
அது பாடல் கவிஞர் வாலியா என்பதை படம் வரைந்து கேட்டு இருந்தேன் .

vasudevan31355
10th June 2015, 11:09 AM
ஜாக்கிரதையாய் இருங்க சின்னா! முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் எடுத்தாயிற்றா?

பாருங்க... (நன்றி வாணிஸ்ரீ) புயல்ல கூட ஷோபா ன்னு உங்களுக்கு ஏத்த மாதிரிதான் இருக்கு. ஷோபா வலுவில்லே! அதனால புயலும் வலுவிருக்காது.

vasudevan31355
10th June 2015, 11:12 AM
கிருஷ்ணா !வாப்பா வா! 'மாய மோதிரம்' போட்டு உங்களை ஏற்கனவே வரவேத்தாச்சு மறைமுகமா.:)

ஆமா! நைட்டு 'மயங்கும் வயதில்' தூங்கினீரா?:)

vasudevan31355
10th June 2015, 11:14 AM
கிருஷ்ணா !

ஆக பக்கெட் பக்கெட்டா போட்டும் இன்னும் பக்கெட்டின் அர்த்தம் இன்னும் யாருக்கும் புரியலியே. இவுங்களை 'வாலி'யை விட்டு அம்பு விடச் சொல்வோமா?:)

vasudevan31355
10th June 2015, 11:19 AM
//ஏதாவது சூறாவளிப் பாட்டு போட்டுவிடுஙக் ஜி..//

சின்னா!

இதை விட வேகமான புயல் பாட்டு இருக்குதான்னு எனக்கு தெரியல. புயல் பாட்டுல கூட தலைவர்தான் பர்ஸ்ட். எங்கும் பர்ஸ்ட். எதிலும் பர்ஸ்ட். என்ன வேகம்! என்ன ஆங்காரம்! என்ன கோபம்!


https://youtu.be/HHduRl8B6VY

chinnakkannan
10th June 2015, 12:04 PM
ஜி நீங்க சொல்றது ஷோபா.. ஷோபான்னா லக்கியாய் இருக்கும் ஏனெனில் அஷோபான்னா ஸ்ரீலங்கன் லேங்க்வேஜில் அன்லக்கியாம்..ஓமானி ஸ்டாஃப்லாம் கலங்கிக்கிட்டு இருக்காங்க.. அண்ட் யூ நோ.. நேத்தி வரை தகதக தகதகன்னு மன்னவன் வந்தானடி பாட்டு பத்மினி ட்ரஸ் மாதிரி ஜொலித்த வெய்யில் கொஞ்சம் சூடு குறைந்து மென்காற்றும் கொஞ்சம் வேகமாக அடிக்கிறது.. Ashobaa in oman கூகுள் பண்ணி ப் பாருங்க தெரியும்


ஜாக்கிரதையாய் இருங்க சின்னா! முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் எடுத்தாயிற்றா?

பாருங்க... (நன்றி வாணிஸ்ரீ) புயல்ல கூட ஷோபா ன்னு உங்களுக்கு ஏத்த மாதிரிதான் இருக்கு. ஷோபா வலுவில்லே! அதனால புயலும் வலுவிருக்காது.

rajeshkrv
10th June 2015, 05:30 PM
மதுரையில் என் தம்பியுடன் எல்லா விட்டலாச்சார்யா படங்களையும் பார்ப்பதற்கு மிட்னைட் ஷோவிற்கு போனது நினைவுக்கு வந்தது ஜி
குறிப்பாக மாயமோதிரம், மாயக்குதிரை என அவர் படங்கள் எல்லாமே கலக்கல்

chinnakkannan
10th June 2015, 08:20 PM
//ஏதாவது சூறாவளிப் பாட்டு போட்டுவிடுஙக் ஜி..//

சின்னா!

இதை விட வேகமான புயல் பாட்டு இருக்குதான்னு எனக்கு தெரியல. புயல் பாட்டுல கூட தலைவர்தான் பர்ஸ்ட். எங்கும் பர்ஸ்ட். எதிலும் பர்ஸ்ட். என்ன வேகம்! என்ன ஆங்காரம்! என்ன கோபம்! வாசு ஜி இப்பத்தான் பார்த்தேன் அண்ட் கேட்டேன்..தாங்க்ஸ். ரிலீஸ் ஆனது அகெய்ன் மதுரை ஸ்ரீதேவி தான்..ந.தியை துஷ்யந்தனாகவும் ஜெ வை சகுந்தலையாகவும் பார்த்ததற்கு - பிரபு நளினி ஏமாற்றமே..மானைத் தான் நான் கண்டேன் இந்தப் படம் தானே..

புயலுக்குப் பின்னே அமைதின்னு ஒரு பாட்டு தான் நினைவுக்கு வருது..

அடடா மழைடா அடை மழைடா அழகாச் சிரிச்சா புயல் மழை டா

ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ

புயல் வந்து போனதொரு வனமாய்
ஆனதடா என்னுள்ளம்

பாவம் அடுத்த வரி அறியாமப் பேசிடுது பொண்ணு.. எனக்கு இப்படித் தான் பாட்டுல்லாம் நினைவுக்கு வருது!

நன்றி வாசு சார்..

chinnakkannan
10th June 2015, 08:47 PM
சரி! எப்படியோ போகட்டும்! 'பார் மகளே பார்' படத்தின் அற்புத பாடலான 'அவள் பறந்து போனாளே' படத்தின் தொடக்க மியூசிக் அல்லவா இப்பாடலின் தொடக்கத்தில் கேட்கிறது. அட ராமா! கோவிந்தா! கோவிந்தா!

அடுத்து பார்த்தால் இன்னொன்று.

ஜாய் முகர்ஜி, ஆஷா ப்ரேக் இந்தியில் நடித்து வெளிவந்த 'லவ் இன் டோக்கியோ' படத்தின் புகழ் பெற்ற பாடலான,

'ஜப்பா..........ன்.... லவ் இன் டோக்கியோ
லே கை தில்
குடியா ஜப்பான்கி'

பாடலை அப்படியே கண்டசாலாவின் குரலில்

'எவ்வரிகோசம்
நீ விந்த வேஷம்'

கார்பன் எடுத்து விட்டார்கள். என்னத்தை சொல்ல?. என்னமோ போங்க. ஆனா நல்லாத்தான் இருக்கு// ஜி..இப்பத் தான் பார்த்தேன்..ஒருபாட்டு தான்..ஆனால் நீங்கள் கூறியிருபப்து முக்காலும் உண்மை

இதுவும் பார்த்திருக்கிறேன் என நினைக்கிறேன்.

விட்டலாச்சார்யா படஙக்ளில் நடிப்பவர்கள் மக்கரே பண்ண மாட்டார்கள் எனக் கேள்விப் பட்டிருக்கிறேன்.. அப்படி ஏதாவதுசெய்தால் அவர் பாட்டுக்கு சிலை பூ காய் என மாற்றிவிட்டுபடமெடுத்து முடித்துவிடுவாராம்.. ப்ளாக் அண்ட் ஒயிட் சிலபடங்கள் கவர்ந்த அளவு ஜெகன் மோகினி என்னைக் கவரவில்லை..இதுவரை நான் முழுவதும் பார்த்திராத ஒருபடம் அது..மீனாட்சியில் ஓடு ஓடுஎன ஓடிய நினைவு.

நன்றிங்க.. வேண்டிய அளவு தண்ணீர் எடுத்துக் கொண்டு விட்டேன் ..:)

chinnakkannan
10th June 2015, 08:51 PM
//The vice chancellor of the university where I studied spoke to me for about half an hour with questions on Goldsmith to Shakespeare. I was puzzled. But the answer came soon.// என்ன பேசினீங்கன்னு நினைவிருக்கா ராஜ்ராஜ் சார் :)

chinnakkannan
10th June 2015, 09:05 PM
சி.க.,


வழக்கம் போல நான் ஒன்றும் பேச வில்லை. ஆனால் நினைத்துக் கொண்டேன் "அதைப் போல வயதைக் குறைக்க ஒரு கோளோ, துணைக் கோளோ கண்டு பிடித்தால், நமது திரியில் இருக்கும் நம்ம ரவி மற்றும் நான் இந்த விஷயத்தில் டூ விட்ட நம் நண்பர் ஒருவர் போன்றவர்களை அங்கே அனுப்பி வைத்தால் சந்தோஷமாக சென்று வருவார்கள்" என்று. நீங்க என்ன சொல்றீங்க?
கல் நாயக்..நா கொஞ்சம் லேட்டு நானே போவேன்.அப்புறம் டயட் மிஸ்ஸானதுனால எடை மறுபடியும் ஏறிடுச்சுன்னா..ஓ..வயதைக் குறைக்கவா.. ஏற்கெனவே இருபத்து நாலாவது பிறந்த நாள் தான் கொண்டாடிக்கிட்டிருக்கேன் வருஷா வருஷம் :)

uvausan
10th June 2015, 09:05 PM
வாசு , இது நியாமா?? - அன்னை பதிவுகளுக்கு ஏதோ ஒன்றிரண்டு வாரத்தைகள் ck திட்டியாவது பதிவு போடுவார் - மாய மோதிரம் , பாரதியின் நீச்சல் உடை என்றெல்லாம் எழுதி , அவர் இருக்கும் இடத்தில் அஷோபாவாவத்தை உண்டாக்கி , பக்கெட் , பக்கெட் ஆ தண்ணீர் வேறு கொடுத்து திசைத்திருப்பி விட்டீர்கள் ---- சாதரணமாக , என்னைப்போல எழுதினால் பரவாயில்லை - நன்றாக , அலசி , நடித்த காந்தாராவ்க்கே தெரியாத பல உண்மைகளை எழுதி எல்லோருடைய மனதையும் அலை பாய வைத்து விட்டீர்கள் - கருவைத்தொலைத்து விட்டு தேடிக்கொண்டிருக்கிறேன் .....

chinnakkannan
10th June 2015, 09:26 PM
//அப்படி ஒரு படம் பந்திபொட்டு .. அதிலும் கண்டசாலாவின் இசையில் இந்த பாடல் நம்மை எங்கோ கொண்டு செல்லும்
இந்த பாடல் படத்தில் இடம்பெற முதலில் விட்டலாச்சார்ய அனுமதிக்கவில்லை. பின் கண்டசாலா மற்றும் ராமாராவ் அவர்களின் வேண்டுகோளுக்காக
சேர்க்கப்பட்டு படத்தின் பிரபலமான பாடலானது// ராஜேஷ் தெலுகுப் பாட்டு இப்போ தான் பார்த்தேன்.. அழகாய் இருக்கிறது பாடல் அழகாயிருக்கிறார் கி.கு.. நன்றி



படம் 'வீரகுமார்'தான்

அழகு கிருஷ்ணகுமாரி ராணி (போர்) உடை கம்பீரமாகத் தரித்து சாரட் வண்டியில் தோழிகளுடன் பாடும் பாடல். கிருஷ்ணவேணி குரல் தந்திருப்பார்.

'ஆளும் தமிழ்நாட்டைப் பார்
அம்மலை மேல் கண் கொண்டு பார்'

பாடலாசிரியர் கில்லாடி. ஆந்திராப் பெண்ணை 'ஆளும் தமிழ் நாட்டைப் பார்' என்று பாட வைத்து விட்டாரே! அதே போல இன்னொரு மாங்காயும் அடிக்கிறார். ஒரிஜினல் தமிழ்ப்ப் படம் போல பார்ப்பவர்களை ஏமாற்ற 'தமிழ் நாட்டை' சேர்த்து விட்டார். ஏமாற நாங்கள் என்ன சின்னக் கண்ணனா?:)

சின்னக் கண்ணனுக்கு கிருஷ்ணகுமாரி இருந்தால் போதும்.:) ஆனால் இந்த விஷயத்தில் நான் விட்டுக் கொடுப்பதாய் இல்லை.:)


https://youtu.be/s1efYrnKaJg


அஹோய் வாஸ்ஸு தேவரே.. சரி என்னவோ எழுதியிருக்கேள் அப்புறம் பார்க்கலாம்னு பார்த்தா விட்டே போய்டுச்சு.. ட்வின்ஸா இரண்டு ஆண்குழந்தைகளை ப் பெற்ற, சிறுவயதிலேயே கல்யாணமாகிப் பெற்ற, பெண் குழந்தைகளை ஸ்கூல் பஸ்ஸில் ஏற்றிவிட்டு, ஆஃபீஸூக்கு கணவருக்கு ப்ரேக்ஃபாஸ்ட் லஞ்ச் கொடுத்து அனுப்பிவிட்டு பின் சின்னதான் தானும் கொறித்து தொபுக்கென காட் டில் விழுந்து கொஞ்சம் கண்மூடி தனது இளமைக்காலத்தை யோசிக்கிறார்போல - இப்பத் தான் பல பக்கம் திரும்பிப் பார்த்தேனா :)
அந்தப் பாட்டும் கேட்டேன்..

ம்ம் கி.கு எனக்கும் பிடிக்கத் தான் செய்கிறது.. தென்றல் போன்ற நண்பன் தான் தீயைப் போல மாறினான்! :)

//ராஜேஷ் மக்கள்ஸூக்கு புரியாதேன்னு தான் விடியோ இட்டாந்தேன்.. ஊருக்குத் தான் அட்வைஸான்னு கேக்காதீரும் :) )

uvausan
10th June 2015, 09:49 PM
வாசு , CK , ராஜேஷ் , கல்நாயக் சார் , கிஷ்ணாஜி ,ஆதிராம் சார் , கலை சார் - நாம் படிக்கும் புராணங்களில் இறைவன் ஒருவன் தான் அவனே சிருஷ்ட்டிக்காக தன்னை ஆணாகவும் , பெண்ணாகவும் இரு அம்சங்களாக உருவாக்கி கொண்டான் என்பதை உணர்ந்துள்ளோம் - அதாவது , தந்தையும் தாயும் ஒன்றுதான் , கருணைக்காட்டுவதிலும் , அன்பை பொழிவதிலும் . இதனை விஞ்ஞானம் மூலம் நிரூபிக்க முடியுமா என்ற ஒரு கேள்வி வரும் காலத்தில் எழக்கூடும் . இப்பொழுதே அம்மாவும் அப்பாவும் வேறு வேறு அல்ல என்பதை நிரூபித்து விட்டால் இந்த சந்தேகத்தை அரும்பிலேயே கிள்ளிவிடலாம் .
இதோ அதற்கான மிகவும் ஆராயிந்து கண்டுப்பிடித்த விளக்கம் :

as we know

Pressure ( P) = Force ( F) / Area ( A)

I.e P = F/A ;

Therefore F = P*A = PA ----------------------------(1)

Now according to Newton's second Law of Motion

Force (F) = Mass (M) * Acceleration (A)

i.e F= M*A = MA -----------------------(2)

From equation (1) and (2)

PA = MA

Squarring bothe the sides ---

(PA)2 = (MA)2

i.e

PA*PA = MA*MA

i.e

PAPA = MAMA

Interchaning the letters will not affect the equation ---

APPA = AMMA

chinnakkannan
10th June 2015, 09:57 PM
ஹப்பா ஹம்ம்மா ஹச்சோ ரவி :) ஹைதரபாத்திலயா ரூம் போட்டிருக்கீங்க! :)

RAGHAVENDRA
10th June 2015, 10:39 PM
https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xat1/t31.0-8/s960x960/11312896_395285050665242_7333686709777875240_o.jpg

rajraj
11th June 2015, 12:45 AM
என்ன பேசினீங்கன்னு நினைவிருக்கா ராஜ்ராஜ் சார் :)

I don't remember everything. But, I will tell you whatever I remember later. It is a long story ! :lol:

rajeshkrv
11th June 2015, 06:53 AM
திரையில் பக்தி - 4

பக்தி என்பது தமிழ் மொழிக்கு மட்டும் சொந்தமல்ல.
எல்லா மொழிகளிலும் வழிபடுதல் எல்லாம் வல்ல இறைவனை வேண்டியே ..

அந்த வகையில் தமிழைவிட தெலுங்கில் பல பக்தி படங்களும் பக்தி பாடல்களும் வெளிவந்தன. தமிழ் சமூகத்திலும் காதலிலும் மூழ்கியிருந்த வேளையில்
தெலுங்கில் புராண கதைகளும் பக்தி படங்களும் நிறையவே வந்தன

அப்படிப்பட்ட ஒரு படம் தான் ரேணுகாதேவி மஹத்யம்
ஜி.வரலெட்சுமி ரேணுகாதேவியாக நடித்த படம் பாடல்களுக்கு பஞ்சமில்லை

சிவ பக்தையான ரேணுகா தன் தந்தையுடன் சிவனைப்போற்றி பாடும் பாடல்
எல்.மல்லேஸ்வரராவ் அவர்களின் இசையில் பி.பி.ஸ்ரீனிவாஸும் இசையரசியும் மீட்டும் தேவகான
http://i.ytimg.com/vi/j8CfAQhZmL8/maxresdefault.jpg

பாடலை இங்கே கேட்கவும்

https://app.box.com/s/365l2fqwcvsl63n3w2u4

முழு படமும் இங்கே
https://www.youtube.com/watch?v=j8CfAQhZmL8

rajeshkrv
11th June 2015, 08:37 AM
படத்தின் பெயர்களை வைத்து பாடல்கள் வருவதுண்டு
மேரே ஜீவன் சாத்தி போன்ற பாடல்கள்
அப்படி ஒரு பாடல் தான் இங்கே
ஹீரோ படத்தின் புல்லாங்குழலிசையை ஹம்சலேகா நன்றாக சுட்டு பயன்படுத்திக்கொண்டார்

குஷ் மற்றும் ரவிச்சந்திரன். குரல்கள் இசையரசியுடன் எம்.ரமேஷ் (ராதே என் ராதே எல்லாம் பாடினாரே அவரே தான்)
எல்லாமே கன்னட படங்களின் பெயர்கள்.
https://www.youtube.com/watch?v=jhrE4kgDJYw

RAGHAVENDRA
11th June 2015, 09:35 AM
https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xta1/v/t1.0-9/q85/s720x720/11265416_722674664507705_1444383212303501295_n.jpg ?oh=dfa6f1cc5ce550759fe768826f973973&oe=55EF2E91&__gda__=1441878700_5d23238645964a752f6dca81d939fa3 f

Laxmikant, R.D.Burman, Anandji and Pyarelal.

.. courtesy: https://www.facebook.com/pages/Imprints-and-Images-of-Indian-Film-Music/391149464326895?fref=photo&sk=photos

What a documentary achive this page is...

You have sumptuous treasures of vintage images...

When will Tamil cinema field preserve such an archive

chinnakkannan
11th June 2015, 10:00 AM
குட் மார்னிங்க் ஆல்

ஹாய் ராஜேஷ்..படத்தின் பெயருடன் பாடல்கள் என்றால் நினைவுக்கு வருவது தேன் கிண்ணம் நாகேஷ், விஜயலலிதா ஒரு பாட்டு

அப்புறம் ஹிந்தி ஏக் துஜே கேலியே மேரே ஜீவன் சாத்தி ப்யார் கியா ஜாய் ஜவானி திவானி என கமல் ரத்தி லிஃப்டில் பாடுவார்..மரோசரித்ராவில் அப்படி இருக்கா என்ன..

ம்ம் பக்தி வீட் போய் கேக்கறேன்.

இங்கே இப்போ ஒரே க்ளெடியா இருக்கு.. மழை ம்ஹூம்..மூணு மணி நேர ட்ரைவில் ஸூர் என்னும் இடத்தில் இருக்கிறதாம்..பார்க்கலாம்..

uvausan
11th June 2015, 10:24 AM
Good Morning

http://i65.photobucket.com/albums/h235/Ignwar/Album%20Ocean%20Life/SunsetCoast.jpg (http://media.photobucket.com/user/Ignwar/media/Album%20Ocean%20Life/SunsetCoast.jpg.html)

uvausan
11th June 2015, 10:48 AM
கருவின் கரு - பதிவு 71

"வீரசு" & ஷுஸ்ரூ


ஸ்ரீ அகஸ்திய முனிவர் தான் தொடுத்த ஸ்ரீ லலிதா நவரத்ன மாலையில் அன்னையை ஒன்பது நவரத்தின , விலை உயர்ந்த கற்களுடன் ஒப்பீடு அகமகிழ்கிறார் . நான் அவரிடமிருந்து சற்றே மாறுபட விரும்பிகிறேன் - நம் தாய் இந்த கற்களுடன் ஒப்பிடவே முடியாது - ஏனென்றால் அவள் இந்த கற்களை காட்டிலும் மிகவும் உயர்ந்தவள் ; எதனுடனும் ஒப்பிட முடியாதவள் - ஒவ்வொரு கல்லின் அருமையையும் அதைவிட ஒரு தாய் எவ்வளவு சிறந்தவள் என்பதையும் என் பதிவுகளில் பார்க்கப்போகிறோம் - பதிவிடும் பாடல்கள் இந்த கற்களின் பெயர்களைத் தாங்கி வரும் - அதனிடம் இருந்து வேறுபடும் படி என் கருத்துக்கள் அமையும் - ஒரு சிறிய வித்தியாசமான கோணம் - உங்கள் மனம் நிறையும் என் நம்புகிறேன் . முதலில் சில விட்டுப்போன பாடல்கள் :

incredible song from Kaithapram and Music Maestro Johnson Mash..

Lyrics : Kaithapram Damodaran Namboothiri
Music : Johnson
Singer : KS Chitra

https://youtu.be/jAWxX4F0YKU

https://youtu.be/OqcgQVtdh98

https://youtu.be/7qZrihNhejo

https://youtu.be/qQGdM5sKHgg

uvausan
11th June 2015, 12:20 PM
கருவின் கரு - பதிவு 72


நம் அன்னைக்கு ஒரு நவரத்தின மாலை - 1

முதலில் நவரத்தினம் என்று சொல்லப்படுபவை என்ன என்ன கற்கள் என்று பார்ப்போம் - பிறகு அதன் உயர்வுகளைப்பார்ப்போம் - நம் அன்னையர்களோடு ஒப்பிடும் போது எப்படி அவைகளின் ஜொலிப்பு குறைகிறது என்பதையும் பார்ப்போம் ----

1. வைரம்
2. நீலம்
3. முத்து
4. பவளம்
5. மாணிக்கம்
6. மரகதம்
7. கோமேதகம்
8. பதுமராகம்
9. வைடூரியம்

1. வைரம்

The name diamond is derived from the ancient Greek αδάμας (adámas), "proper", "unalterable", "unbreakable", "untamed", from ἀ-(a-), "un-" + δαμάω (damáō), "I overpower", "I tame". Diamonds are thought to have been first recognized and mined in India, where significant alluvial deposits of the stone could be found many centuries ago along the rivers Penner, Krishna and Godavari. Diamonds have been known in India for at least 3,000 years but most likely 6,000 years.

Diamonds have been treasured as gemstones since their use as religious icons in ancient India. Their usage in engraving tools also dates to early human history. The popularity of diamonds has risen since the 19th century because of increased supply, improved cutting and polishing techniques, growth in the world economy, and innovative and successful advertising campaigns.

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/images_zps6evfe2mm.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/images_zps6evfe2mm.jpg.html)

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/images%201_zpssmwzfltz.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/images%201_zpssmwzfltz.jpg.html)


அகஸ்தியரின் நவரத்தின மாலை - வைரம்
" பற்றும் வயிரப்படை வான் வயிரப்
பகைவர்க் கெமனாக எடுத்தவளே "
அன்னையே - நீ வைரம் - நீ எங்கள் பகைவர்க்கு எமன் - பாதங்களில் சரணடைகிறோம் . எங்களை காப்பாற்று .......


நம் அன்னையர் - வையிரத்திர்க்கும் வையிரமானவர்கள் - நம்மை சுற்றி வரும் பகைவர்கள் , வியாதிகள் , சூது வாதுகள் . திருஷ்ட்டிகள் அனைத்தையும் தவிடு பொடியாக்குபவர்கள் - அவள் பாதங்கள் பூஜிக்க வேண்டியவைகள் - அவர்களை விட்டு விட்டு ஆலயம் செல்வதில் ஒரு பயனும் இல்லை


Vennilavu song from malayalam movie Vairam. Yesudas, M. Jayachandran

https://youtu.be/YIirR5HzOUk


https://youtu.be/IqsMz20hETo

எனக்கு ஒண்ணு ஆனதுனா, உனக்கு வேற பிள்ளை உண்டு,
உனக்கு ஒண்ணு ஆனதுனா எனக்கு வேற தாயும் உண்டா ?????

நாம் கருவறையில் உள்ளபோது நேசித்த ஒரே ஜீவன் தாய் மட்டுமே தாயின் அன்பு கரு உருவான உடன் வந்திடும் ஆனால் தாயின் மீது நாம் கொண்ட அன்பு எப்போவரும் என்று சொல்லி தெரிய கூடாது. .

https://youtu.be/IHHpa2in-_g

JamesFague
11th June 2015, 12:31 PM
Courtesy:Tamil Hindu

உருமாறும் ஏவிஎம் ஸ்டுடியோவின் முக்கியப் பகுதிகள்!

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான அடையாளம் ஏவிஎம் ஸ்டுடியோ.

உலக உருண்டையுடன் இருக்கும் ஏவிஎம் ஸ்டுடியோவில் சினிமா, சீரியல், ரியாலிட்டி ஷோ என எல்லாவிதமான படப்பிடிப்புகளும் நடந்து வருகின்றன.

தற்போது ஏவிஎம் ஸ்டுடியோ மெய்யப்ப செட்டியாரின் மகன்கள் ஏவிஎம் சரவணனுக்கும், பாலசுப்பிரமணியனுக்கும் சொந்தமாக உள்ளது.

இதில், பாலசுப்பிரமணியனுக்கு சொந்தமான பகுதிகள் மட்டும் இடிக்கப்படுகின்றன. அந்தப் பகுதியில் பாலசுப்பிரமணியன் அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டலாம் என்று திட்டமிட்டுள்ளார்.

ஸ்டுடியோக்களால் வருமானம் இல்லை என்பதாலேயே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

கோயில், பூங்கா, காவல் நிலையம், நீதிமன்றம், பேருந்து நிலையம் என்று சினிமாவுக்குத் தேவையான எல்லா செட்டும் போடுவதற்கு வசதியாக இருந்த ஏவிஎம் ஸ்டுடியோ பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி வருவதால், இனி சின்ன பட்ஜெட்டில் சினிமா எடுப்பவர்கள் லொக்கேஷனுக்காக கொஞ்சம் மெனக்கெட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

uvausan
11th June 2015, 12:34 PM
வாசு - உங்கள் " மாய மோதிரம் " பதிவிலிருந்து மீளவே இல்லை - மோதிரத்தை எங்கோ வைத்து விட்டு வீடு முழுவதும் தேடினேன் - உங்கள் பதிவும் , பாரதியும் சற்றே என் நினைவில் நிழலாடினார்கள் - மோதிரம் உடனே கிடைத்துவிட்டது - மனைவியின் சொல்லடியில் இருந்து தப்பித்துக்கொண்டேன் .....

உங்கள் பதிவை மேலாக முதலில் படித்தேன் - பாரதி என்றவுடன் , சுப்பிரமணி பாரதி தான் நினைவிற்கு வந்தது - ஒரே குழப்பம் - இவர் எப்போது நீச்சல் உடையில் வந்தார் என்று - எனக்கு நானே சற்று சமாதானம் செய்துகொண்டேன் - வறுமையில் இருந்தார் - அதிக ஆடைகள் உடுத்திக்கொள்ள வறுமை தடை போட்டிருக்கும் - பிறகு இரண்டாவது தடவை படித்தபின் தான் , நான் நினைத்த பாரதி அவரல்ல என்று உணர்ந்தேன் . உங்கள் பதிவை படித்தவுடன் ஒரு சின்ன சம்பவத்தை பகிர்ந்து கொள்ளலாமா ?? Ck விற்கும் உதவியாக இருக்கும் .

(மனைவியுடன் பொது இடங்களுக்கு செல்லும்போது உஷார்.)

ஒரு கணவனும் மனைவியும் லிப்ட் ல 10 வது மாடியிலிருந்து கீழே வந்து் கொண்டிருக்கிறார்கள். 5வது மாடியில் அழகான இளம்பெண் ஒருத்தி லிப்ட் ல ஏறி அந்த கணவன் பக்கத்தில் நிற்க, அவன் அவளின் அழகில் மயங்கி ஜொள் விடுகிறான். சிறிது நேரத்துக்குப்பின் அவள் இவனது கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு "இனி இப்படி செய்தால் செருப்பு பிஞ்சிரும்" னு சொல்லிட்டு அவனிடமிருந்து விலகி நிற்கிறாள். இவனுக்கோ தன் மனைவி முன்னிலையில் அடிவாங்கிய அவமானம். லிப்ட் ல இருந்து இறங்கி வெகுநேரமாகியும் மனைவியிடம் பேச வெட்கி வாயடைத்தான். வீட்டிற்கு நடக்கிறார்கள்.

மனைவி : ஏங்க அதையே நினைச்சிகிட்டு. விடுங்க. ஏதாவது பேசிட்டு வாங்க.

கணவன் : இல்லடி, நான் லிப்ட் ல...

மனைவி : அட, அத தான் விடுங்க னு சொன்னேன். நீங்க ஜொள் விடுறத பொறுக்காம நான்தான் அவ இடுப்பைக் கிள்ளுனேன்.

கணவன் : (மீண்டும் வாயடைத்தான்)

madhu
11th June 2015, 03:16 PM
குட் மார்னிங்க் ஆல்

அப்புறம் ஹிந்தி ஏக் துஜே கேலியே மேரே ஜீவன் சாத்தி ப்யார் கியா ஜாய் ஜவானி திவானி என கமல் ரத்தி லிஃப்டில் பாடுவார்..மரோசரித்ராவில் அப்படி இருக்கா என்ன..


அவுனண்டி... அமெரிக்க அம்மாயீஈஈஈ. ரோஜுலு மாராயி... இக்கட சூடண்டி.. சிக்கா பாபோய்...

https://www.youtube.com/watch?v=JHf33AqLcvQ

vasudevan31355
11th June 2015, 03:42 PM
ஆதி காலத்தில் ராமன் திரியில் திரி நாயகரை 'தலைவர்' என்று புகழ்ந்து எழுதியவர்கள் எல்லாம் இன்று எதுவுமே என்னவென்று புரியாமல் யோக்கிய நியாயம் பேசுவது வியப்பாக உள்ளது, திடீர் திடீர் என்று காணமல் போவதும், திடீரென்று தலைவர் மேல் வந்து அக்கறை பாசம், வேஷம் காட்டுவதும், பின் வருவதும், சம்பந்தமே இல்லாமல் உளறுவதும், அப்புறம் வாங்கிக் கட்டிக் கொள்வதும் பாலம் கட்டாத இந்த ராமருக்கு ரொம்ப பழக்கமாகிவிட்ட விஷயம்தான். அதான் ஒவ்வொரு நாளும் 'லாகின்' ஆகி ஆகி, ஓடி ஓடி, மறைந்து மறைந்து, ஒளிந்து வாழும் முகமூடி விஷயம்தான் கண்கூடாகத் தெரிகிறதே.:banghead: இதுகளெல்லாம் எதையுமே புரிந்து கொள்ளாமல் பெண் பிள்ளைத்தனமும், பேடித்தனமும் கொண்டு அப்பப்போ வந்து வீரம் காட்டுவதை அறியாமலா இத்தனை நாள் இங்கே குப்பை கொட்டுகிறோம்? போனால் போகுது என்று விட்டால்...எதனிடம் எப்படி குரைக்க வேண்டுமோ அதனிடம் அப்படிக் குரைத்தால்தான் அடங்குமோ!:hammer:

Russellzlc
11th June 2015, 05:28 PM
வாசு சார்,

எல்லாரிடமும் நான் அன்போடு பழகினாலும், உங்கள் மீதும் ராகவேந்திரா சார், கிருஷ்ணா சார் மீதும் எனக்கு மதிப்பும் மரியாதையும் அன்பும் கூடுதலாக உண்டு. ஆரம்பத்தில் இருந்தே எங்கள் வளர்ச்சியை ஊக்குவித்தவர்கள் நீங்கள். எங்கள் திரியின் 2வது பாகம் நிறைவு பெற்றதை முன்னிட்டு ‘சர்டிபிகேட் ஆப் அச்சீவ்மென்ட்’ என்று நீங்கள் போட்டிருந்த பதிவை எல்லாம் படித்து மகிழ்ந்திருக்கிறேன். (அப்போதெல்லாம் நான் திரியில் இல்லை. பார்வையாளர் மட்டுமே)

சில நாட்களாக (அதுவும் இன்று காலையில் இருந்து) என்னடா இது? தர்மசங்கடம் என்று மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல், பதில் சொல்லலாமா? பேசாமல் விட்டுவிடலாமா? உங்களைப் போன்றவர்கள் தவறாக நினைப்பார்களோ? எந்த வகையில் சொல்வது? (பணிகள் வேறு விரட்டுகிறது) என்று குழம்பிக் கிடந்தேன். மிக்க நன்றி சார். நமது அன்புப் பாலத்தை யாரும் உடைக்க முடியாது.

கணவன் பட பாடல் பற்றிய உங்கள் பதிவு சிற்றின்பம் என்றால், இந்தப் பதிவு பேரின்பம்.

அப்பாடா.... இன்னும் ஒரு 3 மாதத்துக்கு தொல்லை இல்லை.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
11th June 2015, 05:29 PM
ரவி சார்,
மனதில் மிக உயர்ந்த சிந்தனைகள் இருந்தால்தான் இதுபோன்று எழுத வரும். அன்னைக்கு நவரத்ன மாலை பதிவு அருமை. அம்மா, அப்பா வேறல்ல என்பதை நீங்கள் விளக்கியிருக்கும் விதம் அற்புதம்.

சின்னக்கண்ணன்,
//மனசும் மெல்ல மெல்ல முரசு தட்ட ஆரம்பிக்கும் சந்தோஷத்தில்..

ஹப்புறம் என்ன ஆகும்//

ஹப்புறம் என்பதில் ‘அ’ வுக்கு பதில் ‘ஹ’ போட்டிருக்கிறீர்கள் பாருங்கள். அங்குதான் நிற்கிறீர்கள். குழந்தை பாட்டோடு விரைவில் வரேன். (சிக்குமங்கு இல்லை).

திரு.ராஜேஷ்,

//பக்தி என்பது தமிழ் மொழிக்கு மட்டும் சொந்தமல்ல.
எல்லா மொழிகளிலும் வழிபடுதல் எல்லாம் வல்ல இறைவனை வேண்டியே ..//

முற்றிலும் உண்மை. திரையில் பக்தி தொடர் ரசிக்க வைக்கிறது.

ராகவேந்திரா சார்,

தங்கள் புகழ் முகநூலிலும் பரவுவது மகிழ்ச்சி. பாராட்டுக்கள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

vasudevan31355
11th June 2015, 06:07 PM
நன்றி கலை சார்!

மடியில் கனம் இருந்தால்தானே வழி நெடுக நான் பயப்படுவதற்கு? சும்மாவா பாடினான் பாரதி.

'நெஞ்சில் உரமுமின்றி......வாய்ச் சொல்லில் வீரரடி என்று'

மனது தூய்மையாய் இருக்கும் போது கிலேசத்துக்கு இடமில்லை. ஆனால் 'மானம் அழிந்து விட வில்லையடா மறத்தமிழனுக்கு' என்று கட்டபொம்மன் கொக்கரித்தானோ இல்லையோ நான் வணங்கும் என் தெய்வம் கொக்கரித்ததே! அது மறந்து போகவில்லை. அந்த மானம் அழிந்து போகவில்லை கலை சார். நியாயம் என்றால் நியாம்தான். அநியாயம் என்றால் அநியாயம்தான்.

vasudevan31355
11th June 2015, 06:09 PM
//மனைவி : அட, அத தான் விடுங்க னு சொன்னேன். நீங்க ஜொள் விடுறத பொறுக்காம நான்தான் அவ இடுப்பைக் கிள்ளுனேன்.

கணவன் : (மீண்டும் வாயடைத்தான்)//

ரவி சார்,

http://s.techtunes.com.bd/tDrive/tuner/computer-lover/265017/SHOCKED-face.jpg

vasudevan31355
11th June 2015, 06:12 PM
//அப்பாடா.... இன்னும் ஒரு 3 மாதத்துக்கு தொல்லை இல்லை.//


http://images.sodahead.com/polls/004300513/laughing-138804527175_xlarge.jpeg

Richardsof
11th June 2015, 06:26 PM
//அப்பாடா.... இன்னும் ஒரு 3 மாதத்துக்கு தொல்லை இல்லை.//


http://images.sodahead.com/polls/004300513/laughing-138804527175_xlarge.jpeg

vasu sir

https://youtu.be/80zBTeNz-iA

adiram
11th June 2015, 06:27 PM
என்னவோ தெரியவில்லை, சிலருக்கு பாராட்டு பதிவுகள் எத்தனை போட்டாலும் இனிக்கிறது. ஆனால் நெகடிவ் பதிவு ஒன்றைக்கூட ஜீரணிக்க முடிவதில்லை.

அன்று அவர் (வியட்நாம்காரர்) மீது பாய்ச்சல் இப்பொழுது என் மீது.

பந்துலு பற்றி நான் சொன்னது பொய்யா?. அதை எடிட் பண்ணி அவர்கள் போட்டுக்கொண்டது பொய்யா?. அவர்கள் நோக்கத்தை சரியாக செய்கிறார்கள் என்று சொன்னது பொய்யா?. எதுவுமே பொய்யில்லை. பாலம் கட்டுவதும் பொய்யில்லை.

ஆதிகாலத்தில் அந்த திரியில் தலைவர் என்று நான் சொல்லியிருக்கலாம் உளவு வேலை, ஒற்றன் வேலை பார்ப்பதற்காக, ஆனால் இப்போது 'நடிகர்த்திலகமே தெய்வம்' என்று போட்டுக்கொண்டு முதுகு சொரிந்து கொண்டிருக்கவில்லை.

கலைவேந்தர் அவர்களே,

நீங்கள் என் பதிவுக்கு பதில் சொல்லியிருக்கலாம் என்று தோன்றுகிறது. சற்று கண்ணியமாக சொல்லியிருப்பீர்கள் (இது முதுகு சொரியல் அல்ல).

சரி அதென்ன மூணு மாசம், வனவாசம் போகிறீர்களா?.

kalnayak
11th June 2015, 06:50 PM
சரி அதென்ன மூணு மாசம், வனவாசம் போகிறீர்களா?.


சந்திர மண்டலத்திற்கு போறாரோ, இல்லை வேற கிரகத்துக்குப் போறாரோ என்னமோ. அவர் வந்து சொன்னால்தான் ஆச்சு. சரி இப்ப பாத்துக்கோங்க. இதை நான் சொல்லலை. எல்லோருக்கும் திரும்ப சொல்லிடறேன் - இதை நான் சொல்லலை. நான் சொன்னதா என் மேலே யாரும் கோச்சுக்கக் கூடாது பின்னால.

adiram
11th June 2015, 06:58 PM
பந்துலு பற்றிய சிவா அவர்களின் பதிவுக்கு பதில் சொல்லும்போது 'ஒருசிலர்' என்றுதான் சொல்லியிருந்தேன். அதை ஏன் தனக்கு என்று எடுத்துக் கொண்டார்கள்?'

ஒப்புதல் வாக்கு மூலமா?.

adiram
11th June 2015, 07:10 PM
சந்திர மண்டலத்திற்கு போறாரோ, இல்லை வேற கிரகத்துக்குப் போறாரோ என்னமோ. அவர் வந்து சொன்னால்தான் ஆச்சு. சரி இப்ப பாத்துக்கோங்க. இதை நான் சொல்லலை. எல்லோருக்கும் திரும்ப சொல்லிடறேன் - இதை நான் சொல்லலை. நான் சொன்னதா என் மேலே யாரும் கோச்சுக்கக் கூடாது பின்னால.

சந்திர மண்டலத்துக்கு போனால் எடைதான் குறையும், வயது குறையாது என்பது கலைவேந்தருக்கு தெரியும். ஆகவே அங்கெல்லாம் போகமாட்டார். 'ராமச்சந்திர மண்டலத்தில்' அதாவது எம்.ஜி.ஆர் திரியில்தான் இருப்பார்.

இனி உங்களைப்பற்றி ஒரு வெண்பா...

கல்லால டித்தாலும் கலங்கிடாத எனை
சொல்லால டித்துச்சுகம் காண்போர் மத்தியில் - தன
சொல்வாக்கினால் எனை சுகமடைய வைத்த
கல்நாயக் இவரன்றோ காண.

(எனது குரு சின்னக்கன்னனுக்கு சமர்ப்பணம்)

vasudevan31355
11th June 2015, 07:10 PM
//பந்துலு பற்றி நான் சொன்னது பொய்யா?. அதை எடிட் பண்ணி அவர்கள் போட்டுக்கொண்டது பொய்யா?. அவர்கள் நோக்கத்தை சரியாக செய்கிறார்கள் என்று சொன்னது பொய்யா?. எதுவுமே பொய்யில்லை. பாலம் கட்டுவதும் பொய்யில்லை.//

இதையெல்லாம் சம்பந்தப் பட்ட திரிகளில் போய்க் கேட்க வேண்டும். இங்கு வந்து பேத்தக் கூடாது.

Russellzlc
11th June 2015, 07:15 PM
திரு. ஆதிராம் சார்,

நான் இந்த திரியில் வணங்காமுடி, (ஓங்காரமாய் விளங்கும்), பிராப்தம் (சொந்தம் எப்போதும்) திருமால் பெருமை (கண்ணனுக்கும் கள்வனுக்கும்) படங்களின் பாடல்களையும் சித்ரா பவுர்ணமி பாடல் பற்றி கருத்துக்களும் நடிகர் திலகத்தின் நடிப்பையும் சிலாகித்து பதிவுகள் போட்டுள்ளேன். அதுவும் (உங்களைப் போன்றவர்கள் மொழியில்) முதுகு சொரியல்தான். வாசு சாரும் அப்படியே என்றே ஒரு வாதத்துக்கு வைத்துக் கொள்வோம்.

ஆனால், நானும் சரி, திருவாளர்கள் எஸ்.வி.,வாசு, ராகவேந்திரா, கிருஷ்ணா, ரவி ஆகியோரும் சரி,

//ஆதிகாலத்தில் அந்த திரியில் தலைவர் என்று நான் சொல்லியிருக்கலாம் உளவு வேலை, ஒற்றன் வேலை பார்ப்பதற்காக//

.......இதுபோன்ற வேலைகளில் ஒருபோதும் ஈடுபட்டதில்லை. ஈடுபடவும் மாட்டோம். உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியாக இருந்தால் மகிழ்ச்சிதான்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

vasudevan31355
11th June 2015, 07:26 PM
கல்ஸ்! நண்பா!

என்ன சில நாட்களாய்க் காணவில்லை. தங்கள் பூ பாடல்களுக்காக வெயிட்டிங். ராகவேந்திரன் சார் நாம் கடலூரில் கண்டு களித்த 'கண்ணாமூச்சி' படப் பாடலை போட்டிருந்தார் பார்த்தீர்களா? எனக்கு உங்கள் ஞாபகம்தான் வந்தது. அந்தப் பாடலைப் (கண்ணே! உலகமே பள்ளிக்கூடம்) பற்றியோ படத்தைப் பற்றியோ பகிர்ந்து கொள்ளுங்களேன்.

vasudevan31355
11th June 2015, 07:28 PM
//உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியாக இருந்தால் மகிழ்ச்சிதான்//

:):)

adiram
11th June 2015, 07:31 PM
இது மதுர கானங்கள் திரி. அடித்துக் கொள்வதற்கு, மண்டை உடைத்துக் கொள்வதற்கு, அடுத்தவனை சண்டை மூட்டி விட்டு சுகம் கண்டு இன்பம் கொண்டாட இது கலகத் திரி அல்ல. இது ஒரு பொதுத் திரி. பாடல்கள் பற்றிய திரி. ஒருவர் புகழ் பாடும் திரியும் அல்ல. இது ஒரு முட்டாளுக்குக் கூடத் தெரியும்.

கள்ள வேடம், கபட வேடம் போட்டு ஊரை ஏமாற்றி ஏய்த்துப் பிழைக்கவில்லை. கமல் 5 சிம் கார்ட் வைத்து 'உன்னைப் போல ஒருவன்' படத்தில் மாய்மாலம் செய்வது போல 5 ஐ டி வைத்து ஈனப் பிழைப்பு பிழைக்கவும் வில்லை.

முன் போல அவசரப்பட்டு தவறாக எழுதி மன்னிப்பு கேட்டு மண்ணைக் கவ்வவும் வில்லை.

தமிழ் டைப் அடிக்கத் தெரியாது என்று அண்டப் புளுகு விடவுமில்லை.

கணணி பழுது என்று காது குத்தவும் இல்லை.

அன்றைக்கும்,இன்றைக்கும் என்றைக்கும் நடிகர் திலகம்தான் தெய்வம்.

இது ஊருக்கும் தெரியும். உலகத்துக்கும் தெரியும்.

தானே பதிவு போட்டு இன்னொருத்தர் பெயரில் தானே பாராட்டிக் கொள்ளும் லூஸு வேலையும் இல்லை. மென்டல் ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டிய நிலையிலும் இல்லை.:) உளவு வேலை பார்க்கும் சி.ஐ.டி சங்கரும் இல்லை.

இதற்கு மேல் முட்டாள்களுக்கு பதில் சொல்லப் போவதுமில்லை.

தெரிந்ததெல்லாம் இறைவன் நடிகர் திலகம் ஒருவரே!

1) நடிகர்திலகம் திரியில் நான் பதிவிட்டதற்கு அங்கேதானே பதில் சொல்ல வேண்டும். இங்கே பதில் பதிவிட்டு இந்த திரியில் கலகத்தை துவக்கியது நானா நீங்களா?.

2) கணினி பழுது யாருக்கும் வரும். உங்களுக்கும் வந்திருக்கிறது.

3) தமிழில் டைப் பண்ண முன்பே கற்றுக்கொண்டுவிட்டேன் (பிரபுராம் அவர்கள் வழிகாட்டலில் ). சமீபத்தில் தமிழ் கன்வெர்ட்டர் வேலை செய்யவில்லை என்றுதான் ஆங்கிலத்தில் பதித்தேன்.

4) பல ஐ.டி. விவகாரம் ஏற்கெனவே மாடரேட்டர்களால் ஆராயப்பட்டு புகாரில் உண்மையில்லை என்று அறிந்த பிறகே என்னை தொடர்ந்து அனுமதித்துள்ளனர்.

நீங்கள் வனவாசம் போயிருந்த நாட்களில் ரவி, சி.க., இவர்களோடு சேர்ந்து இந்த திரியை இழுத்த கல்நாயக்கை கூட முன்பு என்னில் ஒருவன் என்றார்கள்.

(ஸ்டெல்லா என்ற பெயரில் உங்கள் பதிவுகளை "மட்டுமே" பாராட்டிக் கொண்டிருக்கும் அந்த அம்மையார் யார்?. அவருக்கு சின்னக்கண்ணன், ரவி, கல்நாயக், ராகவேந்தர், கலைவேந்தன் பதிவுகளெல்லாம் கண்ணுக்கு தெரியலையோ? . அது உங்களின் இன்னொரு ஐ.டி தானே)

kalnayak
11th June 2015, 07:36 PM
திரியில சூடா விவாதம் நடக்குதே. கொஞ்சம் கூல் பண்ணலாமேன்னு பார்த்தேன். ஆளை விடுங்க யப்பா. அண்ணன் தம்பிங்க சண்டைய நிறுத்தப் போன வடிவேலு மாதிரி ஆயிடப் போவுது. சண்டைய நிறுத்தி ஒற்றுமையா இருப்போம். எனக்கு கிடைச்ச கொஞ்ச நேரம் முடிஞ்சது. நான் கிளம்பறேன். பின்னால வாரேன்.

vasudevan31355
11th June 2015, 07:40 PM
சின்னா!

ஒரு நாளில் தமிழ் கற்றுக் கொள்ள, கவிதை எழுத கற்றுக் கொள்ள (எனக்கு தமிழே ததிகினத்தோம்.. இதுல கவிதை வேறயா? இங்கிலீஷ்ல ஒரு வரி ரெண்டு வரி 'கிறுக்கு'வேன்.) எனக்கு குருவாய் இருந்து சொல்லிக் கொடுக்க முடியுமா? நான் அரை நாளில் கற்றுக் கொள்வேன். பிராமிஸ்.:)

vasudevan31355
11th June 2015, 07:42 PM
1) நடிகர்திலகம் திரியில் நான் பதிவிட்டதற்கு அங்கேதானே பதில் சொல்ல வேண்டும். இங்கே பதில் பதிவிட்டு இந்த திரியில் கலகத்தை துவக்கியது நானா நீங்களா?.

2) கணினி பழுது யாருக்கும் வரும். உங்களுக்கும் வந்திருக்கிறது.

3) தமிழில் டைப் பண்ண முன்பே கற்றுக்கொண்டுவிட்டேன் (பிரபுராம் அவர்கள் வழிகாட்டலில் ). சமீபத்தில் தமிழ் கன்வெர்ட்டர் வேலை செய்யவில்லை என்றுதான் ஆங்கிலத்தில் பதித்தேன்.

4) பல ஐ.டி. விவகாரம் ஏற்கெனவே மாடரேட்டர்களால் ஆராயப்பட்டு புகாரில் உண்மையில்லை என்று அறிந்த பிறகே என்னை தொடர்ந்து அனுமதித்துள்ளனர்.

நீங்கள் வனவாசம் போயிருந்த நாட்களில் ரவி, சி.க., இவர்களோடு சேர்ந்து இந்த திரியை இழுத்த கல்நாயக்கை கூட முன்பு என்னில் ஒருவன் என்றார்கள்.

(ஸ்டெல்லா என்ற பெயரில் உங்கள் பதிவுகளை "மட்டுமே" பாராட்டிக் கொண்டிருக்கும் அந்த அம்மையார் யார்?. அவருக்கு சின்னக்கண்ணன், ரவி, கல்நாயக், ராகவேந்தர், கலைவேந்தன் பதிவுகளெல்லாம் கண்ணுக்கு தெரியலையோ? . அது உங்களின் இன்னொரு ஐ.டி தானே)

த்சொ!த்சொ!த்சொ!:)

ஐயோ! பாவம். உங்களின் இன்னொரு திருமுகத்தையும் நீங்களே காட்டிக் கொடுத்து விட்டு மாட்டிக் கொள்கிறீர்களே! ஆமாம்! இன்னைக்கு யார் முகத்தில் விழித்தீர்?:) எனக்கே உம்மைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது.

kalnayak
11th June 2015, 07:46 PM
வாசு,

நீங்க குறிப்பிட்டு என்னை கேட்டதால இந்த பதிவ போடறேன். என்னோட பூவின் பாடல் பதிவுக்கு நீங்க கொடுக்கும் பின்னோட்டம் மிகப் பிரமாதமா இருந்துகிட்டு இருக்கு. குலவிளக்கு பாடலுக்கு நீங்க கொடுத்த விளக்கம் பிரமாதம். நிறைய நேரம் கிடைக்கிறப்ப பொறுமையா பெரிய பதிவா போடலாமேன்னு இருந்தேன். நிறைய நேரம் கிடைக்கலை. ராகவேந்திரா போட்ட கண்ணாமூச்சி பாடலை பார்த்தேன். பாடல் நினைவிற்கு வரவில்லை. ஆனால் நான் கண்ணாமூச்சி என்றதும் நீங்கள் பதிவிட்டது நினைவிற்கு வந்தது. நீங்களும் நினைவில் வந்தீர்கள். மேலே எதுவும் சொல்ல நேரம் இல்லாததால் படித்துவிட்டு சென்று விட்டேன். மன்னிக்கவும். நேரம் கிடைக்கும்போது வந்து முடிந்ததை எழுதுகிறேன். இப்போதைக்கு ஜூட்.

adiram
11th June 2015, 08:06 PM
கலைவேந்தர் அவர்களே,

நான் ஆரம்ப காலத்தில் எம்.ஜி.ஆர் அவர்கள் திரியில் ஒரு 'சிவாஜி படை' ஒற்றனாக, உளவாளியாகத்தான் உலவினேன். அதில் எனக்கு பெருமையே

(அப்போது அங்கே ராஜ்ஜா, டி.எப்.எம். லவ்வர் போன்ற ஒருசிலரே பதிவிட்டு வந்தனர்.)

vasudevan31355
11th June 2015, 08:07 PM
1)

(ஸ்டெல்லா என்ற பெயரில் உங்கள் பதிவுகளை "மட்டுமே" பாராட்டிக் கொண்டிருக்கும் அந்த அம்மையார் யார்?. அவருக்கு சின்னக்கண்ணன், ரவி, கல்நாயக், ராகவேந்தர், கலைவேந்தன் பதிவுகளெல்லாம் கண்ணுக்கு தெரியலையோ? . அது உங்களின் இன்னொரு ஐ.டி தானே)

இப்படித்தான் முன்னால் முத்துராமன் என்று உளறி பின் உண்மை உணர்ந்தீர். இப்போதுமா? மறுபடியும் அவசர புத்தி. மந்த புத்தி. மன்னிப்பு கேட்டும் வரவில்லை புத்தி. கடவுள் கொடுக்க வேண்டும் நல்ல புத்தி.:)

சரி! நிறைய வேலை இருக்கிறது. நீங்கள் அங்கு போய் சொறிந்தததால்தான் நான் இங்கு சொறிந்தேன். இங்கு வந்து கெடுத்துக் கொண்டிருக்க வேண்டாம்.. உங்களுக்கும் நிறைய இடங்களில் ஒற்று வேலைகள் இருக்கும்.:) பாருங்கள். பார்த்துக் கொள்ளுங்கள். பாடல்கள் இருந்தால் போடுங்கள். அதைப் பற்றி எழுதுங்கள். ரசிக்கக் காத்திருக்கிறோம். நன்றி!

அடுத்த பாலா பதிவும் வரிசைக் கிரமமாக வருவதால் முதுகு சொரியும் பதிவுதான். வேண்டுமென்றே இல்லை. நீங்கள் எப்படி நினைத்தாலும் எனக்கு அதுபற்றிக் கவலையுமில்லை.செவிடர் காதில் எப்படி சங்கு ஊதினாலும் புண்ணியமில்லை. புரிந்து கொள்ள திறனும் இல்லை. அந்த அல்லாதான் துணையிருக்க வேண்டும்.:)

நான் என் வேலையைப் பார்க்கிறேன்.

vasudevan31355
11th June 2015, 08:13 PM
கல்ஸ்

என்ன உடனே கிளம்பி விட்டீர்கள்? பூ பதிவு பாடல்கள் இல்லையா? எனக்கு ஏமாற்றமே! இருந்தாலும் அந்தப் பாடலை சொல்லி விடுகிறேன்.

'கண்ணே உலகமே பள்ளிக் கூடம்
அங்கே நடக்குமே பல பாடம்'

நடிகர் திலகம் 'எங்க மாமா'வில் நான் 'தன்னந்தனிக் காட்டு ராஜா' என்று குழந்தைகளுடன் பாடி அமர்க்களப் படுத்துவாரே! அது போல சிவக்குமார் குழந்தைகளுடன் காரில் அமர்ந்து நல்ல புத்திமதி சொல்லிப் பாடும் அருமையான பாடல். இது பற்றி வரும்போது விவரமாக பாலா தொடரில் எழுதுகிறேன்.

நன்றி!

Richardsof
11th June 2015, 08:13 PM
https://youtu.be/XRpNpE5wPvs

rajeshkrv
11th June 2015, 09:20 PM
மதுர கானம் திரி நன்றாய் தானே போய்க்கொண்டிருந்தது. பிடித்தவர்கள் வரட்டும் பதியட்டும். பிடிக்காதவர்கள் ஒதுங்கியிருக்காமல் எதற்கு கலகத்தை உண்டு செய்ய வேண்டும்..

சரி சரி .. கலகம் நண்மையில் முடியட்டும் ... எல்லோரும் மீண்டும் பாடல்களை பதிவிடுங்கள். அதற்கு முன்னோடியாக அழகான பாடலை வழங்கிய எஸ்.வி ஜிக்கு ஒரு பெரிய “ஒ” போடுங்க....

vasudevan31355
11th June 2015, 09:40 PM
//மதுர கானம் திரி நன்றாய் தானே போய்க்கொண்டிருந்தது. பிடித்தவர்கள் வரட்டும் பதியட்டும். பிடிக்காதவர்கள் ஒதுங்கியிருக்காமல் எதற்கு கலகத்தை உண்டு செய்ய வேண்டும்//

ஜி! விட்டுத் தள்ளுங்கள். சாலையில் சகதி இருந்தால் தள்ளிப் தாண்டிப் போய் விடுவோம் இல்லையா? அது போல தள்ளிப் போய் நம் வேலையைப் பார்ப்போம்.

ஜி! 'அக்கி டோரா' படத்தின் இன்னொரு பாடல். விஜயலலிதா அழகாக இருக்கிறார். ஆனால் நடனம் ஒரு மாதிரி ஆடுகிறார்.

'லவ் இன் டோக்கியோ' படத்தின் சூப்பர் ஹிட் முகமத் ரபி பாடலின் 'ஆஜாரே ஆஜரா' டியூனை இப்பாடலுக்கு எடுத்திருப்பார்கள்.

சுசீலா அம்மா அருமையாகப் பாடி இருக்கிறார். (Yegisi Raaraaga)


https://youtu.be/a1MwAH_DW6M

rajeshkrv
12th June 2015, 07:09 AM
என்ன தான் ஸ்ரீதேவி ஆடினாலும் மாதுரியின் நடனத்தில் ஒரு புதுமை இருந்தது.
ஏக் தோ தீன் என்று இவர் ஆடியதைக்கண்டு மயங்காதவர்கள் இல்லை
அப்படி புதுமையான நடனம் ஒவ்வொன்றும் அவரது படங்களில் இருந்து வந்த காலமது.
அப்படி ஒரு படம் தான் தானேதார். சஞ்சய் தத் மற்றும் மாதுரி இடம்பெற்ற இந்த பாடல் பப்பிதா வின் அழகான இசை
சும்மா சும்மா தே தே சாயலில் இருந்தாலும் நடனம் அபாரம்
மிகவும் சிரமப்பட்டது சஞ்சய் தானாம். சரோஜ் கான் சொல்லுவார். சஞ்சய் ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு ஆடியது என்று
சிலர் அந்த இருக்கை நடனம் ஜாவேத் ஜெஃப்ரி ஆடியது என்றும் சொல்லுவார்கள். என்றாலும் மிகவும் அருமையான பாடல்
மாதுரியைத்தவிர யார் வேண்டும் நமக்கு

இதோ தம்மா தம்மா லோகே

https://www.youtube.com/watch?v=OOeLlHyTFoo

uvausan
12th June 2015, 07:26 AM
Good Morning

http://i65.photobucket.com/albums/h235/Ignwar/Album%20Clouds/VisionsofHeaven.jpg (http://media.photobucket.com/user/Ignwar/media/Album%20Clouds/VisionsofHeaven.jpg.html)

uvausan
12th June 2015, 07:33 AM
கருவின் கரு - பதிவு 73


நம் அன்னைக்கு ஒரு நவரத்தின மாலை - 2

நீலம்

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/Neelam-Gemstone_zpsw6549mny.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/Neelam-Gemstone_zpsw6549mny.jpg.html)

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/original1.166285.2_zpsqgmrdbxr.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/original1.166285.2_zpsqgmrdbxr.jpg.html)

Benefits & Effects of Wearing Blue Sapphire or Neelam Gemstone

Effects of Wearing Neelam Gemstone
If you think that Blue Sapphire or Neelam is limited to September babies or natives of Capricorn and Aquarius, then, think again…! As a food for thought, in every individual’s birth chart there is a position for Saturn. Fortunately some may have Saturn in apt position and some may have it on wrong side. Those people should be aware, who have got a wrong Saturn position in their birth chart because a ferocious Saturn is like a fire spitting dragon – can bring down the life of an individual into ashes. But as an oasis in desert, Neelam can help out those ill – fated folks by turning the negative force of Saturn into positive one.

https://youtu.be/MUdmPuF05YU

அகஸ்தியரின் நவரத்தின மாலை 2 - நீலம்

" நீலத் திருமேனியிலே நினைவாய்
நினைவற் ரெளியேன் நின்றேன் அருள்வாய் "

அம்மா உனது அழகு திருமேனியை கண்ட அந்த நினைவில் , வேறு எந்த நினைவும் வராமல் நிற்கிறேன் - அருள் செய் தாயே !

நம் எண்ணங்கள் :

அம்மா உடம்பில் நீலம் பாய்ச்சும் அளவிற்கு எங்களுக்காக உழைத்தாயே - என்ன கைம்மாறு கண்டாய் ? - உன் உடம்பு நீலமானதிர்க்கு எங்கள் விஷம் தோய்த்த வார்த்தைகள் தானே காரணம் --- அதோ அந்த நீல வானங்களில் உள்ள நட்சத்திரங்களை எண்ணி விட்டேன் - நீ காட்டும் அன்பின் முன் அவைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது .....கடலின் ஆழத்தையும் அளந்துவிட்டேன் - உன் கருணையின் ஆழத்தை விட அதன் ஆழம் கம்மியே .... எல்லாவற்றையும் படித்துவிட்டேன் - படித்தும் முடிக்கமுடியாமல் இருக்கும் ஒரே புத்தகம் நீதான் - என் கடன்கள் எல்லாவற்றையும் அடைத்துவிட்டேன் - அடைக்க முடியாமல் திணறுவது உன்னிடம் நான் பட்ட கடன் ஒன்று தான் ----உயிர் இல்லாத பொருள்கள் என்னிடம் ஏராளம் - கார் , பங்களா , பணம் ......இருந்தும் என்ன பயன் ? உயிர் உள்ள உன்னைத் தொலைத்து விட்டேனே !!

https://youtu.be/uPdzO1jxXkM

https://youtu.be/flGly3pqfbI

uvausan
12th June 2015, 07:35 AM
கருவின் கரு - பதிவு 74

நீலம்

https://youtu.be/HxD_pyskfUo

https://youtu.be/6DWhOASRFvk

uvausan
12th June 2015, 07:41 AM
கருவின் கரு - பதிவு 75

நீலம்

https://youtu.be/5Eh7W4cd4bk

https://youtu.be/ijMets1JLfI

https://youtu.be/pofKvhiXIkA

uvausan
12th June 2015, 07:53 AM
கருவின் கரு - பதிவு 76

ஒரு சொற்பொழிவில் கேட்டு ,என் அன்னை என்னிடம் பகிர்ந்துக்கொண்டது - அருமையான பொன் மொழிகள் - மனதில் சாகுவரை போட்டியும் , பொறாமையுடன் வளர்க்கிறோம் - தேவை இல்லாமல் நம்முள் பகைமையை வளர்த்துக்கொண்டு வார்த்தைகளில் விஷத்தைக் கக்குகிறோம் - உண்மையில் பார்த்தால் , நமக்குத்தான் பாம்புகளை விட அதிகமான விஷம் இருக்கிறது - எதுவுமே நிரந்தரம் இல்லாத இந்த உலகில் , நிரந்தரமாக இருக்கும் கடும் சொற்களை ஏன் விட்டு விட்டு செல்லவேண்டும் ??? அன்புடன் இருப்போம் - அருமையாக பழகுவோம் - நல்ல எண்ணங்களை நம் அடுத்த தலைமுறைக்கு விட்டுவிட்டு செல்லலாமே !!!!!

Once a dog ran into a museum- where all the walls, the ceilng, the door and even the floor were made of mirror, seeing this the dog froze in surprise in the middle of the hall, a whole pack of dogs surrounded it from all sides, from above and below. Just in case, the dog bared his teeth -and all the reflections responded to it in the same way. Frightened, the dog frantically barked - the reflections imitated the bark and increased it many times. The dog barked even harder and the echo was keeping up. The dog tossed from one side to another, biting the air - his reflections also tossed around snapping their teeth.

Next day in the morning the museum security guards found the miserable dog, lifeless and surrounded by a million reflections of lifeless dogs. There was nobody, who would make any harm to the dog. The dog died by fighting with his own reflections.

The world doesn't bring good or evil on its own. Everything that is happening around us is the reflection of our own thoughts, feelings, wishes and actions. The World is a big mirror. Strike a good pose! Smile from deep within. Life is beautiful.:-D

rajraj
12th June 2015, 08:05 AM
From Samsaram (1951)

samsaram samsaram...... (Tamil audio and Hindi video)

http://www.youtube.com/watch?v=87aTACl1iUw

From Samsaram(telugu)

samsaram samsaram......

http://www.youtube.com/watch?v=rmQBJuPVX4M

From Sansar(Hindi)

ye sansar ye sansar.........

http://www.youtube.com/watch?v=CLvjRMGffgA

Samsaram was a popular movie and so were the songs! :)

chinnakkannan
12th June 2015, 10:01 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்

நேற்று கொஞ்சம் அலுவலில் வேலை வேலை அண்ட் மீட்டிங்க்ஸ் வீடு வந்தால் கொஞ்சம் டயர்ட்.. நண்பருடன் தொலைபேசிவிட்டு வைத்தால் இன்னும் சில் பக்கத்து எதிர் ஃப்ளாட் நண்பர்களின் வருகை அவர்கள் செல்ல சற்றே நேரம் பிடிக்க மறுபடி இப்போது தான் வர முடிந்தது..

முதலில் மரோசரித்ரா லிஃப் ட் சாங்க் கொடுத்த மதுண்ணாவிற்கு நன்றி.. ஆர் யூ ஆல்ரைட் நெள மதுண்ணா.. அந்தப் பாட்டில் வருவதெல்லாம் படப் பெயர்களா..
*

நேற்றே படித்தேன் ஆதிராம் வாசுவின் பதிவுகளை.ஒன்றுமே புரியவில்லை
.ஆதிராம் என்ன எழுதினார் என்பதைப் பார்ப்பதற்கு கொஞ்சம் பின்னால் போகவேண்டியிருந்தது..விஷயம் புரிவதற்கு எனக்கு சில நேரம் பிடித்தது..
.கொஞ்சம் மனவருத்தம் தான்.ஆதிராம் உங்களிடம்.. வாசுவின் ந.தி பக்தி எல்லாருக்கும் தெரியும்..அதைத் தவறுதலாகப் பேச உங்களுக்குஎப்படித் தான் மனம் வந்ததோ.. அப்புறம் இங்கு எஸ்வி, கலை எல்லாருமே நண்பர்கள் தான். வெகு அழகாகப் பழகிக் கொண்டிருக்கிறார்கள்.. ஜோக்கை ஜோக்காகத்தான் எடுத்துக் கொள்கிறார்கள் ( சிக்கு மங்குவோட வருவார் கலை.. குழந்தைப் பாட்டோடு வருகிறேன்.. சிக்குமங்கு இல்லை)

. அகெய்ன் ஜாலியாக இருப்பதற்காகத் தான் இங்கு வருவதே.பிடித்த விஷயங்களை பிடித்த விதமாக எழுதிப் பார்ப்பதற்கு ஒரு பயிற்சி மையம் என வைத்துக்கொள்ளலாம்..என்ன பிடித்த விஷயங்களில் இங்கு முழுக்க முழுக்க திரைப்படங்கள் தான்… நான் இன்னும் முயன்று கொண்டிருக்கிறேன் நன்றாக எழுதுவதற்கு.

குரு என்கிறீர்கள் நன்றி.. அந்த அளவுக்கு ப் பெரிய ஆள் இல்லை நான்..
இருந்தாலும் நீங்கள் எழுதியது வெண்பா இல்லை கவிதைக்கு க் கவிதை கமெண்ட்ஸ் த்ரெட்டில் வெண்பா இலக்கணம்பற்றி கல் நாயக்கிற்கு எழுதியிருக்கிறேன்.. அதைக் கொஞ்சம் பார்க்கவும்.. அப்படியே அலுவல் முடிந்து வீடு சென்று அங்கு இருக்கும் நாற்காலி அல்லது பெட்டின் மேல் கொஞ்ச நேரம் ஏறி நிற்கவும்!

//இனி உங்களைப்பற்றி ஒரு வெண்பா...

கல்லால டித்தாலும் கலங்கிடாத எனை
சொல்லால டித்துச்சுகம் காண்போர் மத்தியில் - தன
சொல்வாக்கினால் எனை சுகமடைய வைத்த
கல்நாயக் இவரன்றோ காண. //

(எனது குரு சின்னக்கன்னனுக்கு சமர்ப்பணம்)
அப்புறம் இதுவரை – உம்மை எனக்குத் தெரிந்து எத்தனை வருடம் இருவருடம் இருக்குமா- நீங்கள் ஆங்கிலத்தில் ரெண்டு மூன்று வரி அடித்துவிட்டுக் காணாமல் போய்விடுவீர்கள் இல்லியோ.. இவ்வளவு சரளமாக டபக்கென அடிக்கிறீர்களே.. அது ஏன் என நானே கேட்க நினைத்திருந்தேன்..
*
வாஸ்ஸூ.. நான் ஆதிராமிற்கு எதுவும் கற்றுத் தரவில்லை. கல் நாயக் கேட்டதால் எனக்குத் தெரிந்ததை எழுதிச் சொல்லியிருந்தேன்.. அவ்வளவு தான்.. ஆதிராம் தானாகவே கற்றிருந்தார்..இருந்தாலும் என்னை இப்படிச் சொல்வது அவரது பெருந்தன்மை

சுட்டுத்தான் கற்றேன்நான் தூயவரே உம்முடைய
சுட்டித் தமிழினால் தான்

/( என்ன பண்றது..அப்பப்ப நமக்கு நாமே செல்ஃப் மோட்டிவேட் செய்துக்க வேண்டும்)

உங்களுக்கு த் தமிழா நானா.. சொக்கா சொக்கா காப்பாத்து!
*
கலை..மிக்க நன்றி.. குழந்தையை சீக்கிரம் எதிர்பார்க்கிறேன்..!
*
எஸ்வி சார்.. ம.தியின் ஆடலுடன் பாடலைக் கேட்டுதான் எனக்கு மிகப் பிடிக்கும்..இந்த ஆடுவது பாட்டை விட.. இருந்தாலும் இதுவும் பிடிக்கும்..பாடல்களுக்கு நன்றி
*
ராஜ்ராஜ் சார் ஜூகல் பந்தி மெல்லக் கேட்கிறேன்.
. *
ராஜேஷ்..மாதுரி அழகு தான்..(*கொஞ்சம் சிரிக்கும் போது கன்னுக்குட்டிப் பல் கணக்காக இருக்கும்.. ) பாட் இனி கேட்கிறேன்

ரவி..

கருவின் கரு என்று டாபிக் கொடுத்து டபக்கென நீலத்துக்கு மாறி நீல நயனங்களில் பாட் போட உம்மைத் தவிர யாராலும்முடியாது நன்றி மற்றவற்றையும் கேட்டு எழுத வேண்டும்..
*
கொஞ்ச்சம் ஷாப்பிங்க் போக வேண்டும்.. வெளியேவானம் சற்றே கருமை சூழ்ந்து இருக்கின்றது ( என்ன உவமைசொல்லலாம்.. பாரதியை ப்ளாக் அண்ட் ஒய்ட் டிரஸ்ஸில் நீச்சலுடையில் பார்த்து வண்ணத்தில் பார்க்கமுடியவில்லையே என ஏங்கும் என் சித்தப்பாவின் மனதைப் போல!) மழை வருவதற்கு முன் போய்விட்டு வருகிறேன்..

வந்து உங்கள் காதோடு ஒரு சேதி சொல்கிறேன்....
*
https://youtu.be/qysg5d_cYiQ

(வாஸ்ஸூ..என்னைத் திட்டாதீர்கள்! spb பாடல் போட்டதற்கு..)

அப்புறம் வாரேன் :)


*

gkrishna
12th June 2015, 01:12 PM
சி கே
வெரி வெரி positive writing . ஹட்ஸ் ஆப்

வாசு
விஜயலலிதாவின் வெட்டல் டான்ஸ் செம உடான்ஸ். ஆனால் இரண்டு கால்களையும்
(எங்கள் ஊரில் இதை கவுட்டை என்பார்கள். இலக்கணம் அறிந்தவர்கள் கவுட்டாபுல் என்பார்கள் கொஞ்சம் தரை டிக்கெட் மொழியில் சொல்வதானால் கவுட்டை கிழிந்து விடும் என்பதே சரியான தமிழ் :) இணையதளத்தில் இதற்குரிய சரியான புகைப்படம் கிட்டவில்லை. நண்பர்கள் யாரிடமாவது இருந்தால் வெளியிடவும். பொதுவாக காக்கை குருவி போன்றவற்றை அடிப்பதற்கு நரிகுறவர்கள் (மன்னிக்கவும் ஜாதியை சொல்லவில்லை ) இதை தான் பயன்படுத்துவார்கள்.v shape இல் கருவேல முள் கம்பை செதுக்கி இரண்டு முனையும் ஒரு ரப்பரில் இணைத்து நடுவில் ஒரு தோல் வைத்து இருப்பார்கள். ) விரித்து ஆடும் போது அம்மே அம்மே தான் வடநாட்டு எம்ஜீயார் காந்தாராவ் ஏன் முகத்தில் expression இல்லாமல் இருக்கிறார்.விஜயலலிதாவின் கண் தான் என்னமா சுண்டி சுண்டி இழுக்குது.

gkrishna
12th June 2015, 02:17 PM
இறைவா, அந்த நாட்களை இன்னொரு முறை தரமாட்டாயா? -நடிகர் சிவகுமார்


16 வயதில் குக்கிராமத்து இளைஞன், பட்டணம் பிரவேசம். 1958 ஜூன் முதல் 1964 வரை கல்விக் கடன் தந்து வாழ்க்கையில் கரையேற்றிவிட்ட மாமனிதர், பொள்ளாச்சியில் சென்ட்ரல் லாட்ஜ் என்ற அசைவ உணவு விடுதி நடத்தி வந்த என் ஒன்றுவிட்ட மாமா ஆறுமுகக் கவுண்டர்.

மாதம் ரூ.85-க்கு மணியார்டர் வரும்.
தபால்காரருக்கு 1 ரூபாய் அன்பளிப்பு.
மவுண்ட் ரோடு புகாரியில் அரைபிளேட் பிரியாணி 14 அணா (88 பைசா). டபுள் ஆம்லட் 50 பைசா. மனமும் வயிறும் நிறைந்த பிறகு
மீதி ரூ. 82.50/-க்கு பட்ஜெட் போடுவேன்.
காலை சிற்றுண்டி எழும்பூர் பாந்தியன் கபேயில் ரூ.15/- முன்பணம் கட்டி சாப்பிட்ட ஒரே நபர் நான்தான்.
பூபதி கபே பகல் உணவு 30 கூபன் ரூ.14
இரவு உணவு மவுண்ட் ரோடு கீதா கபே மாதம் ரூ.14.
விருந்தாளி வந்தால் ஒரு கூபன் காலி. மறுநாள் இரவு நீர்தான் ஆகாரம்.
வீட்டு வாடகை ரூ.15.
ஓவிய உபகரணங்கள் ரூ.15.
மாதம் 4 சினிமா பார்க்க ரூ 3.50 பைசா. 84 பைசா டிக்கட் இன்று கிடைக்காவிட்டால் நாளை அரை மணி முன்னால் போய் க்யூவில்.
துவைத்த துணிகளுக்கு இஸ்திரி போட மாதம் ரூ.5.
சலூன் செலவு 75 பைசா..

திருப்பதி சென்று, 7 நாள் கோயில் வாசலில், கும்பலோடு படுத்துறங்கி, குழாய் நீரை கை பம்ப்பில் அடித்து குளித்து, நேரு கபே தண்ணிச் சாம்பாரில் இட்லியை அமுக்கிச் சாப்பிட்டு ஏழுமலையான் கோயிலைச் சுற்றிய இயற்கை எழிலை ஓவியமாகத் தீட்ட பஸ் கட்டணமும் சேர்த்து ரூ.35. இப்படி தர்மச் சத்திரங்கள், குறைந்த வாடகை ரூ. 1.50 முதல் அதிகபட்சம் ரூ.4 ஓட்டலுக்குக் கொடுத்து திருச்சி, தஞ்சை, மதுரை, கன்யாகுமரி, குற்றாலம், பாண்டி- இப்படி விடுமுறை நாட்களில் ஓவியங்கள் தீட்டச் செல்வேன்.

மகாபலிபுரம் சைக்கிளில். ஊர் கணக்குப் பிள்ளை வீட்டு வெளித்திண்ணையில் படுத்து, தெருக் குழாயில் குளித்து, மாமல்லபுரம் கபேயில் சிற்றுண்டி முடித்து 5 ரத ஓவியம், கடற்கரை கோவில்,புது லைட்ஹவுஸ் என வரைந்து முடித்து, அடைமழையில் நனைந்தவாறு 30 கி.மீ. சைக்கிள் சவாரி செய்து திருக்கழுக்குன்றம் சென்று, ஓவியங்கள் தீட்டிக் கொண்டு அங்கிருந்து செங்கல்பட்டு 30 கி.மீ, சென்னை அங்கிருந்து 42 கி.மீ. வண்டலூர் லேலண்ட் கம்பெனி, ஆயுத பூஜைக்கு கடலை, பொரி, சில்லு தேங்காய் கொடுத்ததை வாங்கி பாக்கட்டில் போட்டுக் கொரித்தவாறு பயணித்த நாட்களை, இறைவா இன்னொரு முறை தரமாட்டாயா? -

நடிகர் சிவகுமாரின் பேஸ்புக் பக்கத்திலிருந்து...

http://tamil.filmibeat.com/img/2015/06/12-1434090990-shivakumar-d2-600.jpg

vasudevan31355
12th June 2015, 02:50 PM
சின்னக் கண்ணன் சார்,

பக்குவப்பட்ட பதிவு. தங்கள் பெருந்தன்மைக்கும், நற்குணங்களுக்கும் இந்த பதிவு ஒன்றே சான்று. மற்றவர் மனம் கோணாமல் பதிவிடுவது எப்படி என்று உங்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும். உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டவன் ஆகிறேன். நன்றி! நன்றி!

இப்போது வழக்கமான உங்கள் வாஸ்ஸூ

சின்னா!

//கலை..மிக்க நன்றி.. குழந்தையை சீக்கிரம் எதிர்பார்க்கிறேன்..!//

ஆனாலும் இவ்வளவு குசும்பு ஆகாது.:) எங்கே பக்கத்தில் சிரிப்பு பொம்மை காணோம்.:)

'ராதா ராதா ராதா உன் காதோடு சொல்ல ஒரு சேதி இருக்கு'

போட்டாச்.... கேக்கல?:)

vasudevan31355
12th June 2015, 03:21 PM
//நடிகர் சிவகுமாரின் பேஸ்புக் பக்கத்திலிருந்து..//

படித்து ரசித்தேன் கிருஷ்ணா! சிவாதான் எத்தனை அழகு!

நடிகர் திலகத்துடன் சிவா இள வயதில் நடிக்கும் போது நடிகர் திலகம் சிவாவிடம் அடிக்கடி சொல்வாராம்..."டேய்! சிவா! என்னா அழகுடா நீ!"

uvausan
12th June 2015, 03:26 PM
இறைவா, அந்த நாட்களை இன்னொரு முறை தரமாட்டாயா?

உண்மை கிஷ்ணாஜி -

எங்கோ படித்தது

" அன்று பாட்டி வீட்டில் பிறந்ததால் , பாட்டி வீட்டிற்கு அடிக்கடி போனோம் !!

இன்று மருத்துவ மனையில் பிறப்பதால் , அடிக்கடி மருத்துவ மனைக்கு போகிறோம் !!!"

gkrishna
12th June 2015, 03:58 PM
great ravi

uvausan
12th June 2015, 06:51 PM
ஒரு பட்டி மன்றத்தில் கேட்டது ----



Ubuntu: A very nice message ---

An Anthropologist proposed one game to the kids of African tribal children.

He placed a basket of fruits near a tree.

And made them stand 100 metres away.

And announced that who ever reaches first would get all the fruits in the basket.

When he said ready steady go...

Do you know what these small children did?

They all caught each other's hands and ran towards the tree together, divided the fruits among them and ate the fruits and enjoyed it.

When the anthropologist asked them why you did so?

They said 'Ubuntu'..

Which meant, 'How can one be happy when all the others are sad?'

Ubuntu in their language means: 'I am because, we are!'

A message for all generations..

Let all of us always carry this attitude within us and spread happiness.


https://youtu.be/smlQQAZHKpk

uvausan
12th June 2015, 06:54 PM
ஒரு பட்டி மன்றத்தில் கேட்டது

200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி ”யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார். கூடியிருந்த அனைவரும் தமக்குப் பிடிக்குமென கையைத் தூக்கினர். பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன். ஆனால், அதற்கு முன்” எனச்சொல்லி அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து “இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார்கள். அனைவரும் கையைத் தூக்கினர். அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி “இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார். அனைவரும் இப்போதும் கைகளைத் தூக்கினர். அவர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 500 ரூபாய்தாள் பல முறை கசங்கியும், மிதிப்பட்டும், அழுக்கடைந்தும் அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப் படும் போதும், தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்திக் கொள்கிறோம் . நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர். இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித் தன்மை இருக்கும். அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. ஆகையால் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்கள்..

https://youtu.be/f_f-tzZYOac

vasudevan31355
12th June 2015, 09:08 PM
//நீங்கள் தனித்துவமானவர். இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித் தன்மை இருக்கும். அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. ஆகையால் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்கள்//

அருமை ரவி சார் ! இதுதான் ரவி சார் என்பது. பொருத்தமான அபூர்வ பாடல். 'யானையின் பலம் எதிலே!'

vasudevan31355
12th June 2015, 09:59 PM
சிவக்குமார் செம அழகு. கோட் சூட்டெல்லாம் போட்டுகிட்டு.

'குங்குமச் சிமிழில் மாதுளை முத்துக்கள்
கொட்டிக் கிடப்பதென்ன'

'எதிரொலி' பாடலில்

சைக்கிள் காதல்.

அதற்கு முன் தனியாக பஸ் ஸ்டாண்டில் நிற்கும் தங்கை லஷ்மியிடம் வழிந்து ஜொள் விடும் சிவக்குமாரை காரில் வரும் போது நடிகர் திலகம் பார்த்து விட்டு, பஸ்ஸில் செல்வதனால்தான் அந்தப் பையனைக் காதலிக்கிறாளோ என்று தங்கை மேல் சந்தேகம் கொண்டு, வீடு வந்தவுடன் லஷ்மிக்கு சைக்கிள் வாங்கித் தருவதாக உளவு பார்த்தபடி நைஸாக சொல்ல, தங்கை மறுப்பாள் என்று இவர் எதிரபார்த்தது நடக்காமல் லஷ்மி கில்லாடித்தனமாய் சைக்கிள் வாங்கித் தர சொல்ல, அந்த சைக்கிள் கேப்பில் தங்கை காதலிக்கவில்லை என்ற உண்மையை (!) உணர்ந்து கொண்டு (பாவம்.. அப்பாவி மனுஷர்)

http://thiruttudvd.net/wp-content/uploads/2014/07/Ethiroli000000006-1.jpg

'பையன் சைட்ல இருந்துதான் ஒருதலைக் காதல்...
தறுதலை' (சிவக்குமாரை நடிகர் திலகம் திட்டுவதைப் பாருங்கள்):)

(ரெண்டு வரியில என்ன ஒரு எக்ஸ்பிரஷன்ஸ்! மனிதரின் கண்கள் அப்படியே விளையாடும். 'தெய்வத்தை'ப் பத்தி புரியாத தறுதலைகளுக்கு புரிஞ்சா சரி!)

என்று 'நடிகர் திலகம்' லஷ்மி போனவுடன் சொல்லி அமர்க்களப்படுத்தி பாடலை மறக்கடிக்கச் செய்து விடுவார். நம்ம புத்தி நம்மை விட்டுப் போகுமா?

லஷ்மிக்கு நல்ல முகம். ஆனால் உடம்பு அந்தபந்தம் இல்லாம இருக்கும். குறிப்பா இடை. அப்படின்னா என்னன்னு கேட்பார்.:) (ம்..இதுக்கு யார் யார்கிட்டே என்னென்ன வாங்கிக் கட்டிக்கணுமோ! ஒற்றர்கள் நடமாட்டம் வேற ஜாஸ்தி.:) ஆனா சின்னா இந்த விஷயத்தில் சப்போர்ட்டா இருப்பார்) என்ன சின்னா! மாமா மியூசிக். 'பாடகர் திலகம்' சிவாவுக்குப் சரிப்பட்டு வர மாட்டார்.:) பாடல் சுமார் ரகமே. அருமையான தமிழுக்கு நன்றி!

http://i.ytimg.com/vi/43eXvrWgEGg/maxresdefault.jpg


https://youtu.be/Uj7W3UlxyF8

rajraj
13th June 2015, 04:49 AM
chinnakkaNNan: You are going to 'read' my jugalbandi later? :) Here are a few lines from the song to read:

samsaram samsaram
samsaram sakala dharma saaram suka jeevana aadhaaram
kaNavan manaivi ondraai iNai piriyaadhu iru kaNNum maNiyumpole
iLam baalakar viLaiyaadum samsaram samsaram
uravodu uNNa veNdum oorodu vaazha veNdum
................

uvausan
13th June 2015, 06:11 AM
Good morning

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/nature_zpsqoeiypkl.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/nature_zpsqoeiypkl.jpg.html)

uvausan
13th June 2015, 06:17 AM
கருவின் கரு - பதிவு 77

நவரத்தன மாலை 3 - முத்து

A pearl is a hard object produced within the soft tissue (specifically the mantle) of a living shelled mollusk. Just like the shell of a clam, a pearl is composed of calcium carbonate in minute crystalline form, which has been deposited in concentric layers. The ideal pearl is perfectly round and smooth, but many other shapes (baroque pearls) occur. The finest quality natural pearls have been highly valued as gemstones and objects of beauty for many centuries. Because of this, pearl has become a metaphor for something rare, fine, admirable and valuable.

The most valuable pearls occur spontaneously in the wild, but are extremely rare. These wild pearls are referred to as natural pearls.Cultured or farmed pearls from pearl oysters and freshwater mussels make up the majority of those currently sold. Imitation pearlsare also widely sold in inexpensive jewelry, but the quality of their iridescence is usually very poor and is easily distinguished from that of genuine pearls. Pearls have been harvested and cultivated primarily for use in jewelry, but in the past were also used to adorn clothing. They have also been crushed and used in cosmetics, medicines and paint formulations.


http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/South-Sea-pearls_zps242cgpkl.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/South-Sea-pearls_zps242cgpkl.jpg.html)
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/Gold-Pearls_zpsputjutvr.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/Gold-Pearls_zpsputjutvr.jpg.html)
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/PB091457_zpsjihft8rh.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/PB091457_zpsjihft8rh.jpg.html)

நவரத்தன மாலை 3 - முத்து

அகஸ்தியரின் நவரத்தின மாலை 3

" முத்தே வரும் முற்தொழிலாற்றிடவே
முன் நின்றருளும் முதல்வீ சரணம் ------"

மூன்று தொழில்களான படைத்தல் , காப்பாற்றுதல் , அழித்தல் இவைகள் சரியாக நடந்திட நீ தான் முன்னின்று அருள்கிறாய் - முதல்மையான உனக்கு எங்கள் சரணம் ......

நம் எண்ணங்கள் :

அந்த அம்பிகை மூன்று தொழில்கள் மட்டுமே செய்கிறாள் - ஆனால் நம் தாயோ நம்மை வளர்க்க செய்யாத வேலை இல்லை - , பண்ணாத தியாகங்கள் இல்லை .... அம்பிகை பண்ணுவதால் போல யாரையும் அழிப்பதில்லை - அழிக்க நினைத்தவர்களுக்கும் ஆசிர்வாதங்கள் தருபவள் நம் அன்னை - முத்தை விட மிகவும் உயர்தவள் - மிகவும் ஆழமாக சென்றாலும் அவளின் அன்பை அளந்துவிட முடியாது ....

https://youtu.be/ED0bwUuSQMg

https://youtu.be/5_ZIJ6KuYC8

uvausan
13th June 2015, 06:20 AM
கருவின் கரு - பதிவு 78

நவரத்தன மாலை 3 - முத்து

https://youtu.be/1rC0ny8Q7bA


https://youtu.be/5lp_5Zv--tM

uvausan
13th June 2015, 06:20 AM
கருவின் கரு - பதிவு 79

நவரத்தன மாலை 3 - முத்து

https://youtu.be/fRiX3T5REkM

https://youtu.be/nkqvI6D4M3Q

uvausan
13th June 2015, 06:22 AM
கருவின் கரு - பதிவு 80:smile2::)

நவரத்தன மாலை 3 - முத்து

https://youtu.be/2Tbp5-aoBU0

uvausan
13th June 2015, 06:27 AM
கருவின் கரு - பதிவு 81

நவரத்தன மாலை 3 - முத்து

https://youtu.be/ZTX9-5q50Dw

இந்த முத்தான பாடலுக்கு இணை உண்டா ??

https://youtu.be/3xzlyze2Fuo



பொன்மகள் வந்தாள்
பொருள் கோடி தந்தாள்
பூமேடை வாசல் பொங்கும் தேனாக*
க*ண்ம*ல*ர் கொஞ்சும் க*னிவோடு என்னை
ஆளாக்கினாள் அன்பிலே !
.
பொன்மகள் வந்தாள்
பொருள் கோடி தந்தாள்
பூமேடை வாசல் பொங்கும் தேனாக*
க*ண்ம*ல*ர் கொஞ்சும் க*னிவோடு என்னை
ஆளாக்கினாள் அன்பிலே
.
முத்துக்க*ள் சிரிக்கும் நில*த்தில்
தித்திக்கும் நினைப்பை விதைக்கும்
முத்துக்க*ள் சிரிக்கும் நில*த்தில்
தித்திக்கும் நினைப்பை விதைக்கும்
பாவை நீ வா
சொர்க்க*த்தின் வ*ன*ப்பை ரசிக்கும்
சித்த*த்தில் ம*ய*க்கும் வ*ள*ர்க்கும்
யோக*மே நீ வா
வைர*மோ என் வ*ச*ம்
வாழ்விலே ப*ர*வ*ச*ம்
வீதியில் ஊர்வ*ல*ம்
விழியெல்லாம் ந*வ*ர*ஸ*ம்
பொன்மகள் வந்தாள்
பொருள் கோடி தந்தாள்
பூமேடை வாசல் பொங்கும் தேனாக*
.
செல்வ*த்தின் அணைப்பின் கிட*ப்பேன்
வெல்வெட்டின் விரிப்பில் ந*ட*ப்பேன்
செல்வ*த்தின் அணைப்பின் கிட*ப்பேன்
வெல்வெட்டின் விரிப்பில் ந*ட*ப்பேன்
ராஜ*னாக* !
இன்ப*த்தில் ம*ன*த்தில் குளிப்பேன்
என்றென்றும் சுக*த்தில் மித*ப்பேன்
வீர*னாக* !
திரும*க*ள் ச*ம்ம*த*ம் த*ருகிறாள் என்னிட*ம்
ம*ன*திலே நிம்ம*தி
ம*ல*ர்வ*தோ புன்ன*கை
.
பொன்மகள் வந்தாள்
பொருள் கோடி தந்தாள்
பூமேடை வாசல் பொங்கும் தேனாக*
க*ண்ம*ல*ர் கொஞ்சும் க*னிவோடு என்னை
ஆளாக்கினாள் அன்பிலே......
பொன்மகள் வந்தாள்
பொருள் கோடி தந்தாள்
பூமேடை வாசல் பொங்கும் தேனாக*...

vasudevan31355
13th June 2015, 09:00 AM
ரவி சார்,

கரு முத்து பவளம் என்று ஜொலிக்கிறதே அதே வரி பாடலுடன். நடிகர் திலகத்தின் அருமையான பாடல்களுக்கு நன்றி! மாலைக் கோர்புகளை ரசித்தேன்.

vasudevan31355
13th June 2015, 09:05 AM
'வாடா மச்சான் வாடா'

'அன்று கண்ட முகம்' படத்தில் வரும் செம ஜாலி கலாய்ப்பு பாடல். 1968-ல் வந்த இந்தப் படம் நன்றாகவே இருந்தது.

http://media-images.mio.to/various_artists/A/Andru%20Kanda%20Mugam%20(1968)/Art-350.jpg

ரவி, நாகேஷ் இருவரும் சேர்ந்தால் கேக்கணுமா?

வில்லனின் அடியாட்களை அறிந்து கொண்டு, அவர்களைத் தொடர்ந்து சென்று, அவர்களிடம் சவால் விட்டு, புத்திமதி தந்து, கலாட்டா செய்து ரவியும், நாகேஷும் பாடி ஆடும் பாடல்.

சிறுவயது முதற்கொண்டே எனக்கு மனதில் ஊறி நிரம்பப் பிடித்துப் போன பாடல் அது.

ரவிக்கு இந்த மாதிரிப் பாடல்கள் அல்வா சாப்பிடுவது மாதிரி. கிண்டல் கேலிப் பாடல்களை குத்தகைக்கு எடுத்துக் கொண்டவர் அவர். அவருடன் சேர்ந்த இன்னொரு குத்தகைக்காரர் நாகேஷ்.

'வாடா மச்சான்' என்று ரவி ஒரு நீளக் குரல் கொடுத்தவுடன் சஸ்பென்சும், திகிலுமாய் ஒலிக்கும் மாமாவின் இசை. குறிப்பாக கிடார் பேஸ். அடுத்து ஒலிக்கும் அருமையான இசைக்கு ரவி கால்களை மாற்றி மாற்றி வைத்து நடனமாட செம ரகளையாய் ஆரம்பிக்கும் பாடல்.

ரவி ரகளை பண்ண ஆரம்பிக்க, நாகேஷ் பந்து போலத் துள்ளி வந்து ஜாயின் செய்து கொள்ளுவார்.

நக்கல்களும், நையாண்டிகளும் தொடரும்.

ரவிக்கு 'பாடகர் திலகம்' வாய்ஸும், நாகேஷுக்கு அவருக்கென்றே பிறந்த பாடகர் ஏ.எல்.ராகவன் வாய்ஸும். நானா நீயா என்று இருவரும் போட்டா போட்டி போடுவார்கள். கிண்டல் பாடல் என்பதால் எக்ஸ்ட்ரா கூக்குரல்கள் எல்லாம் கொடுத்து ராகவன் ஓட்டத்தில் முந்தி விடுவார்.

இந்த எக்ஸ்ட்ரா பிட்கள் கொடுப்பதில் சதனும், ராகவனும் சக்கரவர்த்திகள். சதன் பலகுரல். ராகவன் ஒரே குரல் ஆனால் பலவிதம்.

('நான் யார் தெரியுமா?' என்ற ஜெய்சங்கர் படத்தில் 'பார்த்ததும்... காதலை... தருவது அழகிய பெண்களே' என்றொரு பாடலில் இதே பாடகர் திலகத்துடன் சேர்ந்து எவருமே செய்ய முடியாத தர முடியாத 'எக்கோ' வாய்ஸை எதிரொலிக்கச் செய்து நான் யார் தெரியுமா என்று மார் தட்டியவர் ராகவன்).

'ஆசை மட்டும் பெருசா இருந்தா
அதிர்ஷ்டம் வருமாடா'

என்று முடித்துவிட்டு சௌந்தர்ராஜன் ஆஅ ஆஅ ஓஒ... என்று இழுப்பது ரகளை என்றால்

'மீசை மட்டும் பெருசா இருந்தா
வீரம் வருமாடா'

என்று நாகேஷ் குப்பைத்தொட்டியில் வில்லன் ஆள் ஒருவரை அமர வைத்து கேலி செய்வது ஜோர்.

'வெறும் காசுக்காக காரியஞ் செஞ்சா
கருணை வருமாடா'

என்று சௌந்தர் முடித்தவுடன்,

ராகவன் 'ஹெஹெஹ்ஹெஹே' என்று கொக்கரிப்பது அட்டகாசம்.

பின் இருவரும் மாறி மாறி

'ஏன்டா டேய்
ஏன்டா டேய்
ஏன்டா டேய்
டேய்! டேய்'

என்று எதிரிகளை அலட்சியமாய் எகத்தாளம் செய்வது கலக்கல்.

பாடலாசிரியர் வார்த்தைகளை அதிகமாக போட்டாலும் மாமா சாமர்த்தியமாக ராகவனை வேகமாக பாட வைத்து டியூனுக்குள் அடக்கி விடுவது செம விசேஷம். பாருங்கள்

'தண்டனைக்குத் தப்பிய திருடன் தரணியில் உண்டோடா'

இந்த 5 வார்த்தைகளையும் ராகவன் ரொம்ப அருமையாக, விரைவாக ஒரே வரியில் கொண்டு வந்து வருவார். அது மட்டுமல்ல. கூட 'அடா அடா அடா' வேறு சேர்த்து இன்னும் பரிமளிப்பார். பாட்டின் ராகத்தோடு சேர்ந்து இந்த 'அடா புடாக்கள்' எல்லாம் அற்புதமாக மேட்ச் ஆகும்.

'அண்டப் புழுகன் கொள்ளையன் கூட
அகப்பட்டுக் கொண்டான்டா'

என்று நாகேஷ் பாடியதும்,

'அவனே அப்படி ஆனா நீ என்ன
அப்பன் மகனோடா'

என்று ரவி தொடர,

உடனே நாகேஷ்

'போடா' என்று அலட்சியமாக சொல்லி விட்டுப் போவாரே! சூப்பரப்பா.

அடுத்து பல்லவி வரி பாடகர் திலகத்தின் குரலில் 'வாடா மச்சான் வாடா' வந்தவுடன் எக்ஸ்ட்ராவாக ராகவன்

'பயப்படாமே வாடா'

என்று அற்புதமாக இணைவார் பாருங்கள். அருமையோ அருமை. என்ஜாய் பண்ணலாம்.

'அம்மா இருந்தா அவளைக் கேளு
பாசம் என்னென்று'

என்று அன்பைக் குழைத்து சௌந்தாரராஜன் அந்த வரிகளில் எங்கோ போய் கொடி நாட்டுவார். திரும்பவும்

'உங்க' என்பதையும் சேர்த்து

'உங்கம்மா இருந்தா அவளைக் கேளு
பாசம் என்னென்று'

என்று பாடுவது அற்புதத்திலும் அற்புதம்.

முழுக்க முழுக்க மலைப் பிரதேசத்தில் எடுக்கப்பட்ட பாடல்.ஸ்டூடியோ ஷாட்களே இருக்காது. முழுதும் அவுட்டோரிலே படமாக்கப் பட்டது இன்னொரு சிறப்பு.

சவால் பாடல். சவால் பாடல்களுக்கு சவால் விடும் பாடல் கூட.

மனதில் துணிவையும், தைரியத்தையும், நம்பிக்கையையும் ஊட்டும் பாடல்.

'எதிரிகளைக் கண்டு அஞ்சாதே... துச்சமாக நினை....எவனாயிருந்தாலும் துணிவுடன் எதிர்த்து நில்லு...அடுத்துக் கெடுக்கும் ஆதிக்கக்காரகளை அடக்கு...வேஷதாரிகளின் வேடத்தைக் கலைத்து வெட்ட வெளிச்சமாக்கு...'

என்ற உற்சாக சக்தி தரும் டானிக் பாடல்.

'ஏடா மூடா உந்தன் ஜம்பம்
என்னிடம் பலிக்குமாடா
வாடா மச்சான் வாடா'

எனக்கு இப்போது மட்டுமல்ல...எப்போதும் பிடித்த வரிகள்.


வாடா மச்சான்

வாடா மச்சான் வாடா
வாடா மச்சான் வாடா
ஏடா மூடா உந்தன் ஜம்பம்
என்னிடம் பலிக்குமாடா
வாடா மச்சான் வாடா
ஏடா மூடா உந்தன் ஜம்பம்
என்னிடம் பலிக்குமாடா

வாடா மச்சான் வாடா

ஆசை மட்டும் பெருசா இருந்தா
அதிர்ஷ்டம் வருமாடா
ஆஆ ஆஆ ஒ.....ஒ

மீசை மட்டும் பெருசா இருந்தா
வீரம் வருமாடா
அஹா அஹா அஹா ஓஓ....ஓ

ஆசை மட்டும் பெருசா இருந்தா
அதிர்ஷ்டம் வருமாடா

மீசை மட்டும் பெருசா இருந்தா
வீரம் வருமாடா

காசுக்காக காரியஞ் செஞ்சா
கருணை வருமாடா
வெறும் காசுக்காக காரியஞ் செஞ்சா
கருணை வருமாடா

ஹெஹெஹ்ஹெஹே

கைக்குக் கையா சண்டை போட
தைரியம் உண்டோடா

ஏன்டா டோய்
ஏன்டா டோய்
ஏன்டா டேய்
டேய்! டேய்

வாடா மச்சான் வாடா
ஏடா மூடா உந்தன் ஜம்பம்
என்னிடம் பலிக்குமாடா
வாடா மச்சான் வாடா

தண்டனைக்குத் தப்பிய திருடன்
தரணியில் உண்டோடா அடா அடா அடா

தப்பிப் போன திருடனைக் கூட
தர்மம் விடுமாடா..டாய்..

தண்டனைக்குத் தப்பிய திருடன்
தரணியில் உண்டோடா
ஆ டஹா ஆ டஹா ஆ டஹா

தப்பிப் போன திருடனைக் கூட
தர்மம் விடுமாடா

அண்டப் புழுகன் கொள்ளையன் கூட
அகப்பட்டுக் கொண்டான்டா அடா அடா அடா

அவனே அப்படி ஆனா நீ என்ன
அப்பன் மகனோடா

போடா (நாகேஷ் ஜோர்)

வாடா மச்சான் வாடா

பயப்படாமே வாடா

ஏடா மூடா உந்தன் ஜம்பம்
என்னிடம் பலிக்குமாடா
வாடா மச்சான் வாடா

சொந்தப் புத்தி இருந்தா
நல்ல சோத்துக்கு வழி உண்டு ஓ ஓ ஓ
இந்தப் புத்தி இருந்தா
அங்கே கம்பிக் கதவுண்டு
ஓஹோ ஓஹோ ஓஹோ
ஓ ஓ ஓ

சொந்தப் புத்தி இருந்தா
நல்ல சோத்துக்கு வழி உண்டு
இந்தப் புத்தி இருந்தா
அங்கே கம்பிக் கதவுண்டு

அம்மா இருந்தா அவளைக் கேளு
பாசம் என்னென்று
உங்கம்மா இருந்தா அவளைக் கேளு
பாசம் என்னென்று
ஹெஹெஹே

அடுத்தவன் சொல்லைக்
கேட்டுக் கெட்டவன்
ஆயிரம் பேருண்டு

ஏன்டா டோய்
ஏன்டா டோய்
ஏன்டா டேய்
டேய் டேய்

வாடா மச்சான் வாடா
பயப்ப்படாமே வாடா
ஏடா மூடா உந்தன் ஜம்பம்
என்னிடம் பலிக்குமாடா
வாடா மச்சான் வாடா


https://youtu.be/FX_Nk4xLj24

JamesFague
13th June 2015, 10:26 AM
Courtesy: Tamil Hindu

பணி நிமித்தமாகத் தொலைதூரப் பிரதேசங்களுக்கு இடம்பெயரும் மனிதர்கள், சொந்த ஊர் நினைவுகளை ஜியாமெட்ரி பாக்ஸுக்குள் மறைக்கப்பட்ட பொன்வண்டைப் போல் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

இளம் பிராயத்து நினைவெனும் வானத்தில் அந்த வண்டு பறந்து செல்லும்போது, அதைப் பிணைத்திருக்கும் நூலைப் பற்றிக்கொண்டு கூடவே பறந்து செல்வதும், வலிநிறைந்த நினைவுகளுடன் அதைப் பார்த்துக்கொண்டே நிற்பதும் அவரவரின் அவ்வப்போதைய மனநிலையைப் பொறுத்தது. பழுப்பேறிய பசுமை நிறத்தில் உறைந்திருக்கும் அவ்வாறான நினைவுகளை மீட்டுத் தரும் பாடல் ‘அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா’. பாடல் இடம்பெற்ற திரைப்படம் 1981-ல் மகேந்திரனின் இயக்கத்தில் வெளிவந்த ‘நண்டு’.

சிவசங்கரி எழுதிய கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் ‘உதிரிப் பூக்கள்’ அஸ்வினி, சுரேஷ் (அறிமுக நடிகர்) ஆகியோருடன் செந்தாமரை, வெண்ணிற ஆடை மூர்த்தி, சாமிக்கண்ணு என்று சிறந்த நடிகர்கள் நடித்திருந்தனர்.

வட நாட்டு இளைஞனான நாயகன், பெரும் பணக்காரரான தன் தந்தையின் பிற்போக்குத்தனத்தை எதிர்த்து வீட்டை விட்டு வெளியேறியவன். தமிழகத்தில் வெள்ளந்தி மனிதர்கள் வசிக்கும் குடியிருப்பில் ஒரு அறையில் தங்கியிருப்பான். அந்த மனிதர்களுக்கும் அவனுக்கும் இடையில் மலரும் உறவு, காதல் என்று நேர்கோட்டில் பயணிக்கும் திரைக்கதை.

அள்ளித் தந்த ராஜா

பிறந்து வளர்ந்த ஊரின் வீடுகள், தெருக்கள், குளங்களை வெவ்வேறு வடிவங்களில் கனவுகளில் காண்பவர்கள் எங்கும் நிறைந்திருக்கி றார்கள். அந்தக் கனவுகளைப் பதிவு செய்த பாடல் ‘அள்ளித் தந்த பூமி’. பூர்வீக வீட்டின் மொட்டை மாடியில் நின்றுகொண்டு மனதுக்குப் பழக்கமான தெருக்களை, வீடுகளைப் பார்த்தபடி பழைய நினைவுகளில் மூழ்கித் திளைக்கும் அனுபவத்தை இந்தப் பாடல் தரும். நினைவின் ஒவ்வொரு அடுக்குக்கும் ஒவ்வொரு வண்ணத்தில் இசையிழைகளை நெய்திருப்பார் இளையராஜா.

அலைபாயும் பல்வேறு எண்ணங்கள் ஓரிடத்தில் கலந்து பிரிவதைப் பாடலின் நிரவல் இசைக்கோவைகள் உணர்த்திவிடும். நிரவல் இசையில் முதல் சரணத்துக்கு முன்னதாக இளம் வயதின் பசுமையான நினைவுகளை அசைபோட்டபடி எலெக்ட்ரிக் கிட்டார் ஒலிக்க, அந்நினைவை வருடிச் செல்வதுபோல், ஒரு வயலின் கோவையை அமைத்திருப்பார் இளையராஜா.

‘இளமை நினைவை இசைக்கும் தெருக்கள்’போன்ற ஆத்மார்த்தமான வரிகளை எழுதியவர் மதுக்கூர் கண்ணன். கடந்து சென்ற வாழ்வின் மகிழ்ச்சியான கணங்களையும், துயர நினைவுகளையும் தனது குளிர்ந்த, தணிந்த குரலில் பதிவுசெய்திருப்பார் மலேசியா வாசுதேவன். காலத்தின் சுவடுகளைத் தாங்கி நிற்கும் கோட்டைகள் நிறைந்த நகரின் பின்னணியில் அசோக்குமாரின் ஒளிப்பதிவு, படம் வெளியான சமகாலத்திலேயே அப்பாடலுக்குக் காவியத் தன்மையைத் தந்துவிட்டது.

ஈரம் படிந்த இசை

தன் குழந்தையின் அழகை வர்ணித்துத் தாய் பாடும் ‘மஞ்சள் வெய்யில் மாலையிட்ட பூவே’ பாடல், இளையராஜா தந்த தாலாட்டுகளில் ஒன்று. வீணை மற்றும் கிட்டாரின் மெல்லிய உரையாடலுடன் தொடங்கும் அந்தப் பாடல் முழுவதும், வாழ்க்கையின் சுகந்தங்களையும் சிடுக்குகளையும் சித்தரிக்கும் இசையைத் தந்திருப்பார். நாயகனுக்குப் புற்றுநோய் இருப்பது உறுதிசெய்யப்பட்ட பின்னர் ஒலிக்கும் பாடல் இது.

சற்று முன்னர் பெய்த மழையின் ஈரம் படிந்த தெருக்களின் வழியே நடந்து செல்லும் நாயகன் ஒருபுறம், குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மூழ்கியிருக்கும் அவனது குடும்பம் மறுபுறம் என்று இருவேறு மனநிலைகளை இசையாக்கியிருப்பார் இளையராஜா. உமா ரமணனின் மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று இது.

முதல் நாள் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துவிட்டு, மறுநாள் காலையில் எந்த வித அலுப்பும் இல்லாமல் புத்துணர்வுடன் இந்தப் பாடலை ‘கம்போஸ்’ செய்திருந்தார் இளையராஜா என்று, ஒலிப்பதிவுக் கூடத்துக்கு உமா ரமணனுடன் சென்றிருந்த அவருடைய கணவர் ஏ.வி. ரமணன் குறிப்பிட்டிருக்கிறார். பாடலில் தோன்றும் குழந்தையை ‘நடிக்க’ விடாமல் அதன் போக்கில் இருக்கவைத்து, யதார்த்தமாகப் படமாக்கியிருப்பார் மகேந்திரன்.

நாயகன் வட நாட்டுக்காரன் என்பதால், முழுக்க முழுக்க இந்தியிலேயே எழுதப்பட்ட பாடலும் படத்தில் உண்டு. ‘கேஸே கஹூ(ம்)… குச் கே(ஹ்) ந சகூ(ம்)’ (‘எப்படிச் சொல்வேன், எதையும் சொல்ல முடியவில்லையே’) என்று தொடங்கும் இந்தப் பாடலை எஸ். ஜானகியுடன் கஜல் பாடகர் புபேந்தர் சிங் பாடியிருப்பார்.

நெகிழ்வூட்டும் இசைக் கூறுகள் நிறைந்த பாடல் இது. பி.பி.ஸ்ரீநிவாசும் தீபன் சக்கரவர்த்தியும் சரி விகிதத்தில் கலந்த குரல் புபேந்தருடையது. பல மொழிகள் அறிந்த பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் எழுதிய பாடல் இது. ‘பாடுதம்மா காற்றின் அலைகள்’ எனும் டைட்டில் பாடலைத் தெளிவான தமிழ் உச்சரிப்புடன் பாடியிருப்பார் புபேந்தர் சிங்.

JamesFague
13th June 2015, 10:28 AM
Courtesy: Tamil Hindu

ழல் ஒன்று பார்வை இரண்டு: என்னை மறந்ததேன் தென்றலே?

ஒன்றாய் இருக்கும்பொழுது உற்சாகமாகப் பாடும் திரைக் காதலர்கள், பிரிந்திருக்கும்போது பாடும் சோக கீதங்களும் பொருள் செறிந்தவை. இந்தியாவின் எல்லா மொழிகளிலும் இப்படிப்பட்ட சூழலுக்கான பாடல்கள் உள்ளன. காதலர்களுக்குப் பொதுவான இந்தச் சூழ்நிலையை வெவ்வேறு விதமாகக் கையாளும் கவித்துவமான பாடல்கள் இந்தியிலும் தமிழிலும் உள்ளன.

‘என்னை விட்டுத் தொலைவில் உள்ள காதலனுக்கு, என் நினைவு கட்டாயம் வரத்தான் செய்யும், நீ போய் என் நிலையைச் சொல்’என்று வண்ணத்துப் பூச்சியைத் தூது விடும் இந்திப் படக் காதலியையும் என்னை ஏன் அவர் மறந்து விட்டார் எனத் தென்றலையும் கற்சிலைகளையும் கடல் அலைகளையும் பார்த்துப் பாடி, அவற்றைத் தூது அனுப்பும் தமிழ்க் காதலியையும் பார்க்கலாம்.

இந்திப் பாடல்:

படம்: பதங்க் (பட்டம்).

பாடலாசிரியர்: ராஜேந்திர கிஷன்.

பாடியவர்: லதா மங்கேஷ்கர்.

இசை: சித்ரகுப்த்

பாடல்:

ரங்க் தில் கி தட்கன் பீ லாத்தி தோ ஹோகி

யாத் மேரி உன்கோ பீ ஆத்தி தோ ஹோகி

ஓ பியார் கீ குஷ்பு கஹான் ஆத்தி தோ கலியான் ஸே

ஹோ கே ஆயீ ஹை ஹவா பீ உன்கீ ஃகலியான் ஸே

சூகே உன் கே தாமன் கோ ஆத்தி தோ ஹோகி

ரங்க் தில் கி …

பொருள்:

இதயத்தின் துடிப்பை இவ்வண்ணங்களும் எடுத்தே காட்டும்

என் நினவு அவனுக்கும்

வரத்தான் செய்யும்

ஏ காதல் என்ற நறுமணமே,

நீ உள்ள பூங்காவனத்தில் வீசும்

இனிய காற்றும் அவன் மேலாடையை

முத்தமிட்டே வந்திருக்கும் (இதயத்தின் துடிப்பை)

இந்த வசந்தம் இந்த வனம் எல்லாம் அவன் வசம்

இருப்பது அவன் கொள்ளும் சிறு தயக்கம் என்னிடம் மட்டும்

இதனால் அவனது இதயம் கொஞ்சம் பதறவே செய்யும் (இதயத்தின் துடிப்பை)

செல் என் செல்ல

வண்ணத்துப் பூச்சியே

நன்கு நீ அறிந்த அவன் நகரத்துக்கு

மெல்ல உன் செய்திகளை அவனிடம் அளித்துவிட்டு வா

எப்படியும் அங்கு நீ போகத்தானே செய்கிறாய்

இதயத்தின் துடிப்பை இவ்வண்ணங்களும் எடுத்தே காட்டும்

என் நினைவு அவனுக்கும் வரத்தான் செய்யும்.

இந்த மெல்லிய ஏக்க உணர்வைச் சற்று ஆற்றாமையுடன் வெளிப்படுத்தும் தமிழ்ப் பாடலைப் பாருங்கள்:

படம்: கலங்கரை விளக்கம் பாடலாசிரியர்: கண்ணதாசன்

பாடியவர்: பி.சுசீலா இசை: எம்.எஸ் விஸ்வநாதன்

என்னை மறந்ததேன் தென்றலே?

சென்று நீ என் நிலை சொல்லுவாய்

காற்றோடு வளரும் சொந்தம்

காற்றோடு போகும் மன்னவா

கண்ணோடு மலரும் அன்பு

கவியாக மாறாதோ? (என்னை மறந்ததேன்…)

கலையாத காதல் நிலையாகவென்று

அழியாத சிலைகள் செய்தாயோ? ஒன்றும்

அறியாத பெண்ணின் மனவாசல் தொட்டுத்

திறவாமல் எங்கே சென்றாயோ?

நினைவான தோற்றம் நிழலான நெஞ்சில்

நீ ஆடும் நாளும் வருமோ? இந்த

நிலமாளும் மன்னன் நீயானபோதும்

நானாளும் சொந்தம் இல்லையோ?

கண்டாலும் போதும் கண்கள்

என் ஆவல் தீரும் மன்னவா

சொன்னாலும் போதும் நெஞ்சம்

மலராக மாறாதோ? (என்னை மறந்ததேன்)

தொடராமல் தொடரும் சுவையான உறவில்

வளராமல் வளர்ந்து நின்றாலும்

இன்று முடியாமல் முடியும் பனிபோன்ற கனவில்

எனை வாழ வைத்துச் சென்றாயே

வந்தோடும் அலைகள் என்றும்

என் காதல் பாடும் இல்லையோ?

எந்நாளும் எனது நெஞ்சம்

உனைத் தேடி வாராதோ? (என்னை மறந்ததேன்)

JamesFague
13th June 2015, 10:31 AM
Courtesy: Tamil Hindu

ஒருமணி நேரம் நின்ற ரயில்!


அன்றும் இன்றும்
ஊர்வசி சாரதா 70-வது பிறந்த தினம்: ஜூன் 12

நடிகர்கள் உருவாவதில்லை பிறக்கிறார்கள் என்று சொன்னார் எல்லீஸ் ஆர் டங்கன். அவரது கூற்று உண்மை என்பதற்கு வாழும் உதாரணம் இன்று தனது 70-வது பிறந்தநாளைக் கொண்டாடும் முன்னாள் நாயகி இன்னாள் குணச்சித்திர நடிகை சாரதா. இந்திய சினிமாவில் ஒப்பிட முடியாத நட்சத்திரமாக விளங்கும் இவர் யதார்த்தமான நடிப்புக்காகத் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஆகிய நான்கு மொழிகளில் கொண்டாடப்படும் தன்னிகரற்ற தாரகை.

சிறந்த நடிகைக்கான தேசிய விருதை மூன்று முறை பெற்ற முதல் இந்திய நட்சத்திரம். நடிப்புக்கான அன்றைய தேசிய விருது ‘ஊர்வசி விருது’ என்று அழைக்கப்பட்டதால் ‘ ஊர்வசி சாரதா’ என்று அழைக்கப்படும் இவரை முதன்மைக் கதாபாத்திரமாகக் கொண்டு தயாரான ‘அம்மேக்கோரு தாராட்டு’ என்ற மலையாளப் படம் கடந்த ஜனவரியில் வெளியாகி மலையாள ரசிகர்களைக் கவர்ந்தது.

கண்ணீரின் தத்துப் பிள்ளை

துன்பமும் துயரமும் துரத்த, ததும்பும் கண்ணீரை ஏந்தி நிற்கும் கண்களையும் கேள்விக்குறியைத் திலகமாய்ச் சூடியதுபோன்ற வாழ்வையும் சுமக்கும் கதாபாத்திரங்களுக்காகவே தத்து கொடுக்கப்பட்ட நாயகி இவர். கூடு விட்டுக் கூடு பாய்ந்து காட்டிய இவரது நடிப்புத் திறமையைக் கண்டு, கதாபாத்திரங்களை இவருக்காகவே வார்க்க ஆரம்பித்தார்கள் தென்னிந்திய இயக்குநர்கள்.

எத்தனை சோகமான கதாபாத்திரங்களில் மீண்டும் மீண்டும் நடித்தாலும் அவரது பெயரைத் தங்களது பெண் பிள்ளைகளுக்கு வாஞ்சையுடன் வைத்தார்கள் மலையாள ரசிகர்கள். ஆந்திராவில் பிறந்து சென்னையில் வளர்ந்து, மலையாள சினிமாவில் மகுடம் சூடிய சாரதாவை மலையாள மக்கள் தங்கள் சேச்சியாகவும் அம்மேயாகவும் இன்றும் கொண்டாடுகிறார்கள்.

சென்னை வாசம்

1945-ல் வெங்கடேசலு ராவ் – சத்தியவதி தம்பதியின் மூத்த மகளாக ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள தெனாலியில் பிறந்த அவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் சரஸ்வதிதேவி. கலைமகளின் பெயரைச் சூட்டியதாலோ என்னவோ ஆறு வயதில் ஆரம்பித்துப் பரதம் கற்றுக்கொண்டார். தனது பதினோராவது வயதில் என்.டி.ராமாராவ் நாயகனாக நடித்த ‘கன்னியா சுல்கம்’ என்ற தெலுங்குப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானர். பிறகு பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துக்கொண்டே பள்ளிக்கல்வியை முடித்தார். பதிமூன்று வயது முதல் நாடகங்களில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார்.

மொத்தத் தென்னிந்திய சினிமாவும் சென்னையில் இயங்கியதால் சென்னைக்குக் குடிபெயர்ந்தார்.

1961-ல் வெளியான ‘இத்தரு பித்ருலு’(இரு நண்பர்கள்) என்ற படத்தில் நாகேஸ்வர ராவின் தங்கையாக முதல் முழுநீள வேடத்தில் நடித்தார். அந்தப் படத்தில் அவரது நடிப்பைக் கண்டு துணைக் கதாபாத்திரங் களுக்கான தெலுங்குப் பட வாய்ப்புகள் வரிசை கட்டி வந்தன. இன்னொரு பக்கம் நாடக வாய்ப்புகளுக்கும் பஞ்சமில்லை. இவரது அபார நடிப்புத் திறமையைப் புரிந்துகொண்ட மலையாளப் பட உலகம் இவரை மொத்தமாக ஸ்வீகரித்துக்கொண்டது.

சாதனைகள் படைத்த துலாபாரம்

திரைக்கதையின் பிதாமகன் என்று வர்ணிக்கப்படும் எம்.டி. வாசுதேவன் நாயர் தனது சிறுகதையொன்றை விரித்து எழுதித் திரைக்கதை எழுத்தாளராக அறிமுகமான படம் ‘முறப்பெண்ணு’. முதுபெரும் இயக்குநர் ஏ. வின்சென்ட் இயக்கத்தில் பிரேம்நசீர் நாயகனாக நடித்து 1965-ல் வெளியான படம். இந்தப் படத்தில் பாக்கியலட்சுமி என்ற முறைப்பெண் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி மலையாள ரசிகர்களைக் கவர்ந்தார்.

அதன் பிறகு எம். டி. வி. – ஏ. வின்சென்ட் – பிரேம் நசீர் கூட்டணி வெற்றிகளைக் குவித்த படங்களில் சாரதா ஆஸ்தான நாயகி ஆனார்.

தொடர்ந்து பத்து ஆண்டுகள் மலையாளப் பட உலகின் தன்னிகரற்ற நாயகியாகக் கோலோச்சிய சாரதா நடிப்புக்கான முதல் தேசிய விருதைப் பெற்றது 1968-ல் வெளியான ‘துலாபாரம்’ படத்துக்காக. ஏ. வின்சென்ட் இயக்கிய இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்டபோது இவருக்கு மாற்றாக யார் என்ற யோசனைக்கே இடமில்லாமல் எல்லாவற்றிலும் கதாநாயகியாக நடித்தது சாரதாவேதான்.

துலாபாரத்தின் தெலுங்குப் பதிப்பு ஆந்திராவின் பெஜவாடா நகரில் இருக்கும் லீலா மஹால் என்ற திரையரங்கில் வெளியாகியிருந்தது. அந்தத் திரையரங்குக்குத் துலாபாரம் படம் பார்க்கப் போயிருந்தார். இவர்தான் சாரதா என்று யாருக்கும் தெரியவில்லை. படத்தின் உச்சகட்டக் காட்சியில் படத்தைப் பார்த்துக்கொண்டிருந்த அத்தனை பெண்களும் அழுது கொண்டிருப்பதைப் பார்த்து சாரதாவும் ஆனந்தத்தில் அழுதார்.

ஒரு பெண் ரசிகை வாய்விட்டுக் கதறி “பாவி மகளே… மூணு குழந்தைகளை வச்சுக்கிட்டு இவ்வளவு கஷ்டப்படுறியே... என் வீட்டுக்கு வந்தா வயிறார நான் போஜனம் தர மாட்டேனா” என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதிருக்கிறார். அந்தக் கணமே ஓடிப் போய் அந்த ரசிகையைக் கட்டிப்பிடித்துக்கொண்டார் சாரதா.

ஒருமணி நேரம் நின்ற ரயில்

சாரதாவின் நடிப்பாளுமைக்கு மேலும் பெருமை சேர்ப்பது அடூர் கோபால கிருஷ்ணனின் கலைப்படங்களில் அவர் கதாபாத்திரங்களாக மிளிர்ந்த காலம். அடூர் இயக்கத்தில் 1972-ல் வெளியான ‘ஸ்வயம்வரம்’ படத்துக்காகச் சிறந்த நடிகைக்கான ஊர்வசி விருதை இரண்டாவது முறையாகப் பெற்றார். முன்றாம் முறை அவர் தேசிய விருதைப் பெற்றது பி.எஸ். நாராயணா இயக்கத்தில் 1979-ல் வெளியான ‘நிமாஜனம்’என்ற தெலுங்குப் படத்துக்காக.

25-ம் வயதில் முன்னணிக் கதாநாயகியாக இருந்தபோது ஒரு படப்பிடிப்புக்காகச் சென்னையிலிருந்து கல்கத்தா மெயிலில் சென்றுகொண்டிருந்தார் சாரதா. ஆந்திராவின் அனக்காபள்ளி என்ற நிலையத்தில் ரயில் நின்றது. சாரதாவை ரயிலில் பார்த்துவிட்ட உள்ளூர் ரசிகர்கள் திமுதிமுவென்றுகூட ஆரம்பித்தார்கள். ரயில் கிளம்பிப் போய்விட்டால் சாரதாவைக் காண முடியாதே என்று கிளம்பிய வண்டியை அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து நிறுத்திவிட்டார்கள். நேரம் ஓடிக்கொண்டே இருந்தது.

ரயிலை விட்டு எந்தக் கர்வமும் இல்லாமல் இறங்கிவந்த சாரதா “இந்த வண்டியில் நான் மட்டும் பிரயாணம் செய்யவில்லை. பலர் அவசர வேலையாகச் செல்லலாம். தயவுசெய்து எல்லோரும் உதவுங்கள்” என்று அவர் கேட்டுக் கொண்ட பிறகே ரயிலுக்கு வழிவிட்டார்கள் ரசிகர்கள். ஐந்து நிமிடங்கள் மட்டுமே நிற்க வேண்டிய அந்தச் சிறிய நிலையத்தில் சாரதாவுக்காக ஒருமணி நேரம் ரயில் நின்றது.

சிவாஜி கண்டுபிடித்தார்

எத்தனை பெரிய நட்சத்திரமாக இருந்தாலும் எளிமையின் உருவமாக வாழ்ந்துவரும் சாரதாவைத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். ‘திருப்பதி’ என்ற நாடகத்தில் சாரதா நடித்துக் கொண்டிருந்தபோது, அந்த நாடகத்துக்குத் தலைமை தாங்க வந்தார் சிவாஜி.

நாடகத்தில் சாரதாவின் நடிப்பைப் பார்த்து வியந்து 1963-ல் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளியான ‘குங்குமம்’ படத்தில் இரண்டாவது கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து ‘துளசி மாடம், ‘வாழ்க்கை வாழ்வதற்கே’ ‘ஞான ஒளி’ ‘என்னைப்போல் ஒருவன்’உள்ளிட்ட பல படங்களில் சிவாஜியுடன் சரிக்குச் சரியாக நடித்துப் புகழ்பெற்ற சாரதா எம்.ஜி.ஆருடன் ‘நினைத்ததை முடிப்பவன்’படத்தில் நடித்தார்.

சென்னையில் வசித்தாலும் தனது சொந்த ஊரான தெனாலியில் 100 ஆண்டுகளாகத் தன் குடும்பத்தார் வசித்த பாரம்பரிய வீட்டை வாங்கி அதைப் புதுப்பித்து அதற்கு ‘ஊர்வசி பவனம்’என்று பெயர் சூட்டியிருக்கிறார் அரசியலிலும் கால் பதித்த இந்தச் சாதனை நட்சத்திரம்.

JamesFague
13th June 2015, 10:34 AM
Courtesy: Tamil Hindu

சினிமா ரசனை 2: பட்டை தீட்டிய பயிற்சிப் பட்டறை!




ஈவ் என்ஸ்லர்
ஈவ் என்ஸ்லர்

உலக நாடக அரங்கின் மிக உயரிய விருதான டோனி விருதை ஈவ் என்ஸ்லர் என்ற பெண் வென்றிருக்கிறார். கிட்டத்தட்ட இருநூறு பெண்களைப் பேட்டிகண்டு, பாலியல், உறவுகள் மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறை ஆகியவற்றைப் பற்றிய அவர்களது கருத்தை 1996-ல் ஈவ் என்ஸ்லர் பதிவுசெய்தார்.

இந்தக் கருத்துகளை மையமாக வைத்து, வெஜைனா மோனோலாக்ஸ் (Vagina Monologues) என்ற நாடகத்தையும் எழுதினார். பெண்களுக்கெதிரான வன்முறையை எதிர்த்து எழுதப்பட்ட இந்த நாடகம் உலகெங்கும் புகழ்பெற்றது. (நீங்கள் எதிர்பார்ப்பது போலவே) தமிழகத்தில் உடனடியாகத் தடையும் செய்யப்பட்டது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மேடையேற்றப்பட்டாலும், தமிழ்நாட்டில் மட்டும் இன்றுவரை அத்தடை நீடிக்கிறது.

இந்நாடகத்தின் மூலமும், அவருடைய பிற பங்களிப்புகளின்மூலமும் குறிப்பிடத்தக்க சமுதாயத் தொண்டு புரிந்ததன் காரணமாகவே இஸபெல் ஸ்டீவன்ஸன் விருது 2011-ல் ஈவ் என்ஸ்லருக்கு வழங்கப்பட்டது. இந்த ஈவ் என்ஸ்லரை அழைத்து, தனது படத்தில் நடிக்கும் நடிகைகளுக்காக ஒரு கருத்துப் பட்டறை நடத்தச் சொல்லி ஜார்ஜ் மில்லர் என்ற இயக்குநர் பரிந்துரைத்தார்.

உலகம் முழுக்கப் பெண்களுக்கெதிராக நடைபெறும் வன்முறை, போர்க்களங்களில் சிக்கிக்கொள்ளும் பெண்களுக்கெதிராக எப்படியெல்லாம் வன்முறை கட்டவிழ்க்கப்படுகிறது என்பன போன்ற கருத்துகளை வைத்துக்கொண்டு ஈவ் என்ஸ்லர் ஒரு வாரம் நமீபியாவில் இருந்த படப்பிடிப்புத் தளத்துக்கே வந்து நடத்திய இந்தப் பட்டறை பரவலாகப் பரவியது. இதனால் படப்பிடிப்பில் இருந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் பலருமே இந்தப் பட்டறையில் இடம்பெற்றனர்.

சுக்குநூறாக உடைத்த இயக்குநர்

இந்தப் பட்டறைக்கான காரணம் என்ன? ஜார்ஜ் மில்லர் இயக்கிய ‘மேட் மேக்ஸ் ஃப்யூரி ரோட்’ (Mad Max: Fury Road) என்ற அந்தப் படம் முழுக்கவே பெண்களுக்கெதிரான வன்முறையைப் பற்றியதுதான். ஆனால் பொதுவாக நாம் எதிர்பார்ப்பதுபோல இத்தகைய கருத்துகளை மென்மையாகச் சொல்லும் படம் இல்லை இது. தொடக்கம் முதல் இறுதிவரை அதிரடி ஆக்*ஷன் காட்சிகள் நிறைந்த ஹாலிவுட் படம்.

ஆனால் பிற ஹாலிவுட் படங்களுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு என்றால், இதில் ஒரு பெண்தான் (சார்லீஸ் தெரான்) கதாநாயகி. அவருடன் நடித்திருக்கும் டாம் ஹார்டி, படம் முழுக்கவே சார்லீஸ் தெரான் ஏற்றிருக்கும் ஃப்யூரியோஸா என்ற கதாபாத்திரத்துக்குத் துணையாகவே வருகிறார்.

சில காட்சிகளில் இவரால் செய்ய முடியாமல் போனவற்றையெல்லாம் ஃப்யூரியோஸா எளிதாகச் செய்து முடிப்பதுபோன்ற காட்சிகள் படத்தில் உள்ளன. ஹாலிவுட்டுக்கு இது புதிதுதான். அங்கே எப்போதுமே மிகப் பெரிய ஆக்*ஷன் படங்களில் ஆண்கள் மட்டுமேதான் நாயகர்கள். பெண்களுக்கு எப்போதும் துணைக் கதாபாத்திரம்தான். மிக அரிதாக ‘ஏலியன்’ போன்ற படங்கள் வந்தாலும், பெரும்பாலான படங்களில் அங்கே பெண்கள் ஊறுகாய்கள் மட்டுமே. அதைத்தான் ஜார்ஜ் மில்லர் சுக்குநூறாக உடைத்தெறிந்திருக்கிறார்.

இந்தப் படத்திலும், நாயகி ஃப்யூரியோஸா காப்பாற்றுவது ஐந்து அப்பாவிப் பெண்களை. ஒரு கொடுங்கோலனின் பிடியில் சிக்கிக்கொண்டு, அவனுடைய வாரிசுகளைச் சுமப்பதற்காக அடிமைப்படுத்தப்படும் ஐந்து பெண்களைத்தான் ஃப்யூரியோஸா தப்புவிக்கிறாள். அவளைத் துரத்திக்கொண்டு வரும் இம்மார்ட்டன் ஜோ என்ற அந்தக் கொடியவனின் பிடியிலிருந்து இந்த ஐந்து பெண்கள் எவ்வாறு தப்புவிக்கப்பட்டனர் என்ற கதையை விறுவிறுப்பான திரைக்கதையோடு சொல்வதுதான் ‘மேட் மேக்ஸ் ஃப்யூரி ரோட்’.

கற்றுத் தந்த பட்டறை

இப்படிப் படத்தில் இடம்பெற்றிருக்கும் அனைத்துமே பெண்கள் சார்ந்து இருந்ததால்தான் இயக்குநர் ஜார்ஜ் மில்லர் நாடகாசியர் மற்றும் பெண்ணியச் செயற்பாட்டாளர் ஈவ் என்ஸ்லரை அழைத்தார். படத்தில் நடித்த அனைத்துப் பெண்களுக்கும் ஈவ் என்ஸ்லரின் பட்டறை மிகவும் உதவியது. உலகம் முழுக்க இப்படி அடிமைப்படுத்தப்பட்ட பெண்களைப் பற்றி ஈவ் என்ஸ்லர் விரிவாகப் பேசினார்.

ஜப்பானியர்களால் இப்படி அவர்களது பாலியல் தேவைகளுக்காக அடிமைகளாக்கப்பட்ட Comfort Women என்று அழைக்கப்பட்ட பெண்களைப் பற்றி, போஸ்னியா, காங்கோ, ஆஃப்கானிஸ்தான், ஹைத்தி போன்ற இடங்களில் இன்னமும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வன்கொடுமைகள், வன்முறைகள் ஆகியவை பற்றி, அமெரிக்காவில் நடந்துவரும் பாலியல் வியாபாரத்துக்காக (Sex Trafficking) பிற நாடுகளைச் சேர்ந்த பல்வேறு பெண்களை ஒவ்வொரு வருடமும் ஏராளமாக அமெரிக்காவினுள் சட்டவிரோதமாகக் கொண்டுவருவதைப் பற்றியெல்லாம் ஈவ் என்ஸ்லர் உதாரணங்களோடும் புள்ளி விவரங்களோடும் இந்தப் பட்டறையில் விளக்கினார். இதனால் அப்படிப்பட்ட கதாபாத்திரங்களைப் படத்தில் நடித்தவர்கள் உணர்ந்துகொண்டு நடிக்க முடிந்தது. உண்மையில் இந்தப் பயிற்சிப் பட்டறை படத்தில் இடம்பெற்ற பெண் நடிகர்களைப் பட்டை தீட்டியது.



படத்தின் இயக்குநர் ஜார்ஜ் மில்லர், இக்கதாபாத்திரங்களை அடிமைகளாகக் காட்ட விரும்பவில்லை. மாறாக, சுதந்திர வேட்கை உள்ள பெண்களாக, அடிமைத்தளையை உடைத்துக்கொண்டு வெளிவரும் வீரமிக்க பெண்களாகவே காட்ட விரும்பினார். படத்தின் தொடக்கத்தில் கிழிந்துபோன ஆடைகளோடு அடிமைகளாகக் கிடந்த பெண்கள், படம் முடியும் தறுவாயில் எப்படி வீரத்தோடு போரிட்டு மரணத்தையும் தழுவத் தயாராக இருக்கிறார்கள் என்பதுதான் ஜார்ஜ் மில்லர் காட்ட விரும்பிய கதை. அது ஈவ் என்ஸ்லரின் பங்களிப்பால் இன்னும் துல்லியமாக எடுக்கப்பட்டது.

நாம் கவனிக்க வேண்டிய படம்

உலகம் முழுவதும் சில வாரங்கள் முன்னர் வெளியான ‘மேட் மேக்ஸ் ஃப்யூரி ரோட்’ படத்துக்கு ஏராளமான வரவேற்பு. படத்தில் இடம்பெற்ற அட்டகாசமான சண்டைக் காட்சிகளைவிடவும், படம் முழுவதும் பேசப்பட்ட பெண்ணியக் கருத்துகள்தான் உலகெங்கும் மக்களின் ஆதரவைப் பெற்றுவருகின்றன.

முழுக்க முழுக்கக் வணிகத் திரைப்படமான இதில், இப்போது பரவலாக விவாதிக்கப்பட்டுவரும் பல பெண்ணியக் கருத்துகள் இடம்பெற்றது உண்மையிலேயே அனைவரும் வரவேற்க வேண்டிய அம்சம். குறிப்பாக, இந்தியாவில் இது அவசியம் கவனிக்கப்பட வேண்டிய படம்.

மேலோட்டமாகக் கவனித்தால் இவையெல்லாம் இப்படத்தில் தெரியாமலேயே போய்விடும் ஆபத்து உள்ளது. எனவே, ஈவ் என்ஸ்லரைப் பற்றி முழுமையாக அறிந்துகொண்டு அதன் பின் இப்படம் பார்த்தால் அவசியம் அது பல கேள்விகளை மனதில் எழுப்பும்.

uvausan
13th June 2015, 10:37 AM
வாசு - பாடல் உங்களுக்காகவும் , CK விற்காகவும் அண்ட் கலை அவர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன் - கணவன் பாதையில் செல்லும் இந்த பாடல் முத்துக்களின் வரிசையில் இடம் பெற வேண்டிய ஒன்று .

https://youtu.be/baVfueJXQvU

uvausan
13th June 2015, 11:03 AM
'வாடா மச்சான் வாடா'

[COLOR="blue"][SIZE=2][B]'அன்று கண்ட முகம்' படத்தில் வரும் செம ஜாலி கலாய்ப்பு பாடல். 1968-ல் வந்த இந்தப் படம் நன்றாகவே இருந்தது.

http://media-images.mio.to/various_artists/A/Andru%20Kanda%20Mugam%20(1968)/Art-350.jpg

ரவி, நாகேஷ் இருவரும் சேர்ந்தால் கேக்கணுமா?



வாசு - மற்றவர்களுக்கு சாதாரணமாகத் தெரியும் ஒரு பாடலை தேடிக்கண்டுபிடித்து , அதை உயிர்ப்பித்து அதற்க்கு அழகு பூட்டி , சிங்கார நகையைப்பூட்டி ( என் முத்துக்களில் சிலவற்றை காணவில்லை, தேடுகிறேன் !!) அழகிய நெய்வேலி அக்மார் நெய்யில் தமிழைத்தோயித்து இங்கு எல்லோருக்கும் தாழ்வு மனப்பான்மை யைக்கொடுத்து ( ஏன் இவ்வளவு நாட்களாக இந்த பாடலை ரசிக்காமல் போய்விட்டோம் என்று எண்ணும் படி ---) இங்கு எங்கள் எல்லோருக்கும் மதுர காண விருந்து வைக்கும் உங்களை எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை ...... சிலருக்கு இறைவன் திறமையைக்கொடுக்கிறான் - சிலருக்குத்தான் கொடுக்கிறான் --- திறமையை வைத்தே சிலரை படைக்கிறான் - நீங்கள் மூன்றாவது இனத்தை சேர்ந்தவர் என்று ,நான் சொல்லி யாரையும் புரியவைக்கும் தேவை இல்லை ... ஸ்விம்மிங் பூலில் இருப்பதால் , போட்டுக்கொண்டிருக்கும் நீச்சல் உடையுடன் உங்களை மனமார வாழ்த்துகிறேன் ... பிடியுங்கள் இந்த பாட்டை - இதில் எனக்கு தலைவர் தென்படவில்லை - நீங்கள் தான் தெரிகிறீர்கள் ..........

https://youtu.be/lvUb1m0f5Bk

gkrishna
13th June 2015, 11:08 AM
வாசு

சூப்பர் பாடல்

"வாடா மச்சான் வாடா பயபடாம வாடா "
ஏடா மூடா உந்தன் ஜம்பம் என்னிடம் பலிக்குமாடா "

வில்லனின் அடியாட்கள் ஒருவர் ஜஸ்டின் என்று நினைக்கிறன் இன்னொருவர் யார் என்று தெரியவில்லை . இந்த பாட்டு முடிந்த உடனே ஒரு fight இருக்கும்.கால் பிடி, கை பிடி, ஜூடோ போன்றவற்றுடன் அவ்வபோது அடியாட்களின் ஓங்கார சவுண்ட் "ஹ ஆ உ "
இன்று வேலை கிழிஞ்ச மாதிரி தான் .சீட் கிழியாமல் இருந்தால் சரி

இது போன்ற படங்கள் இப்போது வருவதில்லை
வாலிப விருந்து,அன்று கண்ட முகம்,எதிரிகள் ஜாக்கிரதை ,நான் யார் தெரியுமா ,பணக்கார பிள்ளை,கௌரி கல்யாணம்,நாம் மூவர் நெல்லை palace டீ walace திரை அரங்கில் 70 களில் கண்டு கழித்த களித்த திரைப்படங்கள்.

தாடி கார மச்சான் இவரு நாடி பிடிச்சு பாரு - பாட்டு நினைவு இருக்கா

chinnakkannan
13th June 2015, 11:20 AM
ஹாய் குட்மார்னிங் ஆல்

வாசு, கிருஷ்ணா நன்றி

வாசு வாடா மச்சான் வாடா ரொம்ப நாள் முன்னால கேட்ட பாட்டு இப்பத் தான் மறுபடி கேட்கிறேன் நன்றி

நமக்கெல்லாம்பெண்கள் மச்சான் என்று பாடுவது தான் நினைவுக்கு வரும்..

ஏ மச்சான் என்ன மச்சான்..

அங்கே வீட்டூக்குள்ளே ஆளிருக்காக தொல்லையாக
இங்க காட்டுக்குள்ளே யாரிருக்கா என்னைப் போலே

கோட் சூட்டோட காட்டில ஹீரோ – நாடோடி டிரஸ்ஸில்ஹீரோயின்.. கண்மணி ராஜா..

https://youtu.be/plSUKQWfMec


*

முத்து பாட்டு வரிசைக்கு தாங்க்ஸ் ரவி.. என் வியாபாரமும் அதே என்றாலும் தங்கள் தகவல்களும் நன்றாக உள்லன

*
ராஜ் ராஜ் சார் வரிகளுக்கு நன்றி :)

*

எஸ்.வாசு.. அழகான பாடல் இந்த குருட்டுப் பெண் பாடும் பதங்க் பாடல்..அப்படியே இன்னொரு தமிழ்ப் பாடலை நினைவு படுத்துகிறது இல்லியோ

ஏறு பூட்டிப் போவாயே அண்ணே சின்னண்ணே


https://youtu.be/9RJfMjq3fcU

நிறைய எழுதலாம்..இப்போ வெளியில் போய்விட்டு அப்புறமா வாரேன்..

Gopal.s
13th June 2015, 11:25 AM
அப்பாடா ,இன்றுதான் மூச்சு விட நேரம் கிடைத்தது. கிடைத்த மூச்சை யார் மீதாவது விட வேண்டாமா? (சுதந்திரம் என் மூச்சு, அதை பிறர் மீது விடாதே).அதுதான் இங்கு வந்தேன். இந்த நூற்றாண்டில் பிறந்து சினிமா பிடிக்காது என்று சொல்பவன் பிறக்கவே தகுதியற்றவன். அதுவும் நல்ல சினிமா பிடிக்காது என்று சொல்பவன் வாழவே தகுதியற்றவன்.

எனக்கு சினிமா இயக்குனர்களின் கரும் பலகை (அல்லது வெண் பலகை)என்பதில் அபார நம்பிக்கையுள்ளவன். உலகத்திலேயே ஒரே ஒரு மனிதருக்காக மட்டும் ,நடிகரின் படம் என்று ரசிப்பது ,நம் நடிகர்திலகத்தை முன்னிட்டு மட்டுமே. இவரை ரசிக்க தெரியாதவன் (வாய் விட்டு சொல்வானேன்)

ஏற்கெனெவே எனக்கு பிடித்த தமிழ் படங்களை வரிசை படுத்திய போது ,முரளி முரண் பட்டார். இங்குதான் இலக்கியம்,தத்துவம்,கரு, நவரத்னங்கள் என்று ஏதேதோ நுழைந்த பிறகு, இதையும் நுழைத்தால் என்ன என்று பட்டது. எனக்கு மிக பிடித்த உலக இயக்குனர்களின் ஒரே ஒரு படம் அலச படும். எனக்கு பிடித்த வரிசையில்.

adiram
13th June 2015, 11:26 AM
மதுர கானம் திரி நன்றாய் தானே போய்க்கொண்டிருந்தது. பிடித்தவர்கள் வரட்டும் பதியட்டும். பிடிக்காதவர்கள் ஒதுங்கியிருக்காமல் எதற்கு கலகத்தை உண்டு செய்ய வேண்டும்..

டியர் ராஜேஷ் சார்,

நடிகர்திலகம் திரியில் சிவா அவர்களின் பதிவுக்கு நான் இட்ட பதிவுக்கு வாசுதேவன் அவர்கள் அதே திரியில் பதில் சொல்லியிருந்தால் ரேயானால், விஷயம் அங்கேயே முடிந்துபோயிருக்கும் அல்லது அங்கேயே தொடர்ந்திருக்கும். மதுர கானம் திரியில் கலகமும் வந்திருக்காது. அங்கே நான் பதித்ததற்கு இங்கே பதில் சொல்லி கலகத்தை இங்கே இறக்குமதி செய்தது யார் என்பது இங்கு எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.

அதிலும் அவரிடமிருந்து வந்த பதில்களில் என்னை முட்டாள், மென்ட்டல், தற்குறி, (இன்னும் பல அர்ச்சனைகள்) கடைசியாக சகதி என்று அழைக்கப்பட்டுள்ளேன். ஆனால் என்னுடைய பதிவுகளில் வாசுதேவன் பற்றி ஒரு வார்த்தைகூட மரியாதைக் குறைவாக வந்ததில்லை. காரணம் அவருடைய அந்தரங்க சுத்தியான உழைப்பின்மீது எனக்கிருக்கும் மரியாதை.

பாடல்கள் தீவிரமாக அலசப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் மேலும் இதை நீட்டிக்க விரும்பவில்லை.

adiram
13th June 2015, 11:46 AM
டியர் கிருஷ்ணா சார்,

பல்வேறு இடங்களில் பதியப்பட்டிருக்கும் சிறந்தவற்றை இங்கே தொகுத்து தருவது சிறப்பாக உள்ளது. பல நல்ல விஷயங்களை தேடி இங்கு பறிமாருகீறீர்கள்.

அனைத்தும் நன்றாக உள்ளன. தொடருங்கள்.

vasudevan31355
13th June 2015, 11:48 AM
//தாடி கார மச்சான் இவரு நாடி பிடிச்சு பாரு - பாட்டு நினைவு இருக்கா//

நினைவு இருக்காவா? இந்தப் பாட்டோடேயே வாழ்ந்த காலங்கள் உண்டு கிருஷ்ணா. கோபாலருக்கு கோகோ கோலா இந்தப் பாடல். இப்ப ஓடி வரும் பாருங்களேன்.

'எட்டடி உயரம் ரெண்டடி அகலம் ஒட்டகம் என்பது இவன்தானோ'

ரவி தாடியுடன் செம ஸ்டெப்ஸ். கூட மாந்தோப்பில் நின்றிருந்த ரத்னா மாடர்ன் டிரெஸ்ஸில்.

இன்னா பாட்டு. 'வாடா மச்சான் போட்டா' நீர் 'சிங்கப்பூரு மச்சானை'கூப்பிடுறீர். (தலைவர் 'சவாலே சமாளி'யில் நம்பியாரிடம் தாலியைக் கையில் வைத்துக் கொண்டு சொல்வார் 'சும்மா இருடா மச்சான்' அந்த மச்சானுக்கு முன் எந்த மச்சானும் நிக்க முடியாது. )

நாம் மூவர் அல்ல. நால்வர் ... ஐவர்.. அறுவர்... ஏழ்வர். ஆனால் வீழ்வோர் அல்ல.

இன்னைக்கு முழுக்க மச்சான் பாட்டா இருக்கப் போவுது.

கிருஷ்ணா! மச்சானைப் பார்த்தீங்களா?


https://youtu.be/9WLCf9ij8jU

Richardsof
13th June 2015, 11:54 AM
//தாடி கார மச்சான் இவரு நாடி பிடிச்சு பாரு - பாட்டு நினைவு இருக்கா//

நினைவு இருக்காவா? இந்தப் பாட்டோடேயே வாழ்ந்த காலங்கள் உண்டு கிருஷ்ணா. கோபாலருக்கு கோகோ கோலா இந்தப் பாடல். இப்ப ஓடி வரும் பாருங்களேன்.

'எட்டடி உயரம் ரெண்டடி அகலம் ஒட்டகம் என்பது இவன்தானோ'

ரவி தாடியுடன் செம ஸ்டெப்ஸ். கூட மாந்தோப்பில் நின்றிருந்த ரத்னா.
மாடர்ன் டிரெஸ்ஸில்

இன்னா பாட்டு. 'வாடா மச்சான் போட்டா' நீர் 'சிங்கப்பூரு மச்சானை'கூப்பிடுறீர். (தலைவர் 'சவாலே சமாளி'யில் நம்பியாரிடம் தாலியைக் கையில் வைத்துக் கொண்டு சொல்வார் 'சும்மா இருடா மச்சான்' அந்த மச்சானுக்கு முன் எந்த மச்சானும் நிக்க முடியாது. )

நாம் மூவர் அல்ல. நால்வர் ... ஐவர்.. அறுவர்... ஏழ்வர். ஆனால் வீழ்வோர் அல்ல.

இன்னைக்கு முழுக்க மச்சான் பாட்டா இருக்கப் போவுது.

கிருஷ்ணா! மச்சானைப் பார்த்தீங்களா?


https://youtu.be/9WLCf9ij8jU

https://youtu.be/ipl299IevjY

Richardsof
13th June 2015, 11:56 AM
https://youtu.be/3NJwjO7-Aes

Gopal.s
13th June 2015, 12:08 PM
அப்பாடா ,நான் எழுத போகும் உன்னத விஷயங்களுக்கு ,திருஷ்டி பொட்டு வைத்து விட்ட பெங்களூர் நண்பருக்கு நன்றி.

Richardsof
13th June 2015, 12:10 PM
https://youtu.be/ggv_b-iIuM0

adiram
13th June 2015, 12:25 PM
டியர் ரவி சார்,

எடுத்துக் கொண்ட தலைப்புக்கு தகுந்தாற்போல ஒவ்வொரு பதிவும் அருமையாக உள்ளது. ரொம்ப சிரத்தையெடுத்து பதித்து வருகிறீர்கள் பாராட்டுக்கள்.

gkrishna
13th June 2015, 12:40 PM
ஸ்ரீதரின் இயக்கத்தில் ஜெயகாந்தனின் யாருக்காக அழுதான், ஏ. பீம்சிங்கின் பட்டதாரி, எஸ். பாலசந்தரின் பெண் பாவம் பொல்லாதது, ஏ.சுப்பாராவின் நடமாடும் தெய்வம் உள்ளிட்ட சினிமாக்கள் சிவாஜி- சாவித்ரி நடித்து ஆரம்ப நிலையிலேயே நின்று விட்டன. ஒரு வேளை ஒழுங்காக அவை வெளி வந்திருந்தால் நடிகர் திலகமும் நடிகையர் திலகமும் இன்னமும் புதிய உயரங்களுக்கு நிச்சயம் சென்றிருப்பார்கள்.


இன்று காலை தினமணி ஜங்ஷன் இல் மேற்கண்ட தகவல்கள் கட்டுரையாளர் தீனதயாளன் அவர்களால் இடம் பெற்று இருந்தன . இது பற்றி மேல் தகவல்கள் பகிர்ந்து கொள்ள முடியுமா ?

adiram
13th June 2015, 12:42 PM
டியர் கோபால் சார்,

உங்கள் வருகை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

நீங்கள் எழுதப்போகும் உன்னத விஷயங்களுக்காக எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

vasudevan31355
13th June 2015, 12:48 PM
//எனக்கு மிக பிடித்த உலக இயக்குனர்களின் ஒரே ஒரு படம் அலச படும். எனக்கு பிடித்த வரிசையில்.//

வாங்க கோபால் சார். என்ன அது? ஆவல் அதிகரிக்கிறது.

Gopal.s
13th June 2015, 12:49 PM
1)spring summer fall winter spring ----Korean -Kim Ki Duc

நான் கொரியா சென்றிருந்த போது அங்கு என் வியாபார நண்பியுடன் (ஜேமி ஜுங் )சுற்றி கொண்டிருந்த போது ,நான் விரும்பும் சில கொரிய இயக்குனர்களை குறிப்பிட்டேன். உடனே அப்போது சியோல் நகரில் திரையிட பட்டிருந்த இந்த படத்துக்கு அழைத்து சென்றாள் . சூழ்நிலை மறந்து ,மெய் மறந்து ,ரசித்து ,ஒரு இரண்டு மூன்று நாட்கள் எதிலும் கவனம் செல்லவில்லை. பிறகு இந்த இயக்குனரின் அத்தனை படங்களையும் ஒரு சேர வாங்கி, குறிப்பாக இந்த படத்தை தனிமையில் ஆளரவமில்லா இருட்டறையில், பிற சத்தங்கள்,தொல்லைகளற்று வெள்ளி இரவுகளில் 10 மணி தொடங்கி ,என்னை மறப்பேன்.எனக்கு பிடித்த படங்களில் முதலிடம் பெறுவது இதுவே. இதை ரசிக்க மொழி,வயது,இனம் ,ரசனை எதுவுமே தடையாக முடியாது.

பொதுவாக பொழுது போக்கு என்பதை பற்றி தவறான கருத்தாக்கங்கள் உருவாக்க பட்டு நம் கழுத்தை நெரிக்கின்றன.சில பாடல்கள், சண்டைகள்,சம்பந்தமில்லா நிகழ்வுகள்,மூளைக்கு தொல்லையில்லாமல் காணும் சலனங்கள் என்று . என்னை பொறுத்த வரை எந்த படம் ,கதாபாத்திரங்களுடன்,நிகழ்வுகளுடன் ,தோய வைத்து நம்மை கட்டி போட்டு பரவச படுத்துகிறதோ, அவைதான் பொழுது போக்கு. அவலமும் சுவையே,நகையும் சுவையே.வாழ்வின் சுவடுகளும் சுவையே.தூக்கம்தானே மிக சிறந்த பொழுது போக்கு?பின் வருவது தியானம்.

இந்த படம் ஒரு தியானமே. எனக்கு மதங்களை பிடிக்காது. லாட்சு,புத்தம் இவை பிரியமானது. இந்த படம் கொரியா சார்ந்த புத்த மதத்தின் கூறுகளை பின்னணியாக கொண்டது. நான்கு பருவங்களில் (வெவ்வேறு கட்ட நிலைகளில் 20 வருடங்கள்) நான்கு வித மனித உணர்வுகளின் பிரதிபலிப்பை , புத்தத்தின் சாரத்துடன், குறியீட்டுடன் வெளியிடும் அற்புத உணர்வு நிலை படம்.

புத்த துறவியிடம் ஒரு மாணவன் சேரும் மிதக்கும் தீவு போன்ற புத்த மடத்தில் நடக்கும் நிகழ்வுகளின் கோர்வை.தனிமையில் நிழலில்,நம் மன அழுக்குகளை, வக்கிரங்களை, ஆக்ரமிக்கும் ஆவேச உணர்வு நிலைகளை,குற்ற உணர்வுகளை,பாவ மூட்டைகளை,புனித வேள்விகளை சுமந்து திரிந்ததுண்டா? ஒரு வருடம் தனிமையில் ,ஆளரவமில்லா பூமியில் ,நம் உணர்வுகள் அலச பட்ட உணர்வு ,இரண்டரை மணிகளில்.

இது ஒரு புதிய அனுபவம். இதை புத்தகங்கள் கூட தர இயலாது.அப்படியே உங்களை வசிய படுத்தி ,உங்கள் வெவ்வேறு வகை கால பருவங்களில், மனிதர் தவிர்த்த (அவர்கள் ,சூழ்நிலை காரணகர்த்தா ஆயினும்) உங்கள் உணர்வு நிலைகளை ,ஆடை அணிவிக்காமல் தரிசித்த உணர்வு. Trans என்ற பரவச நிலை. நூறு தியானங்களுக்கு சமமான உணர்வு.

தயவு செய்து , உணவு கொறிக்காமல், தொலை அழைப்புகளுக்கு இணங்காமல்,இயற்கை உபாதைக்கு பதில் சொல்லாமல், அரை படுக்கை,இருள் அறையில் ,இந்த அனுபவம் பெறுங்கள்.

சொர்க்கத்தில் தங்கி விட்டு வந்த உணர்வு.

vasudevan31355
13th June 2015, 12:57 PM
//காரணம் அவருடைய அந்தரங்க சுத்தியான உழைப்பின்மீது எனக்கிருக்கும் மரியாதை.//

ஆதிராம் சார்,

தங்கள் மரியாதைக்கு தலை வணங்கி நன்றி கூறுகிறேன். அதே சமயம் தாங்களும் தங்களுக்குப் பிடித்த பாடல்களை இங்கே எங்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். நல்ல ரசிகராய், சினிமா விஷயங்கள் மிகச் சரியானவற்றை அறிந்தவராய் தங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். உங்கள் அழகான நச்சென்ற பதிவுகளுக்கு அப்போதிலிருந்தே முதல் ரசிகன், முதல் விசிறி நான். உங்களுடைய புள்ளி விவரங்களில் நான் தவறே கண்டதில்லை. தொடருங்கள்.

adiram
13th June 2015, 01:04 PM
வாசுதேவன் அவர்களின் 'வாடா மச்சான் வாடா' மற்றும் 'சிங்கப்பூரு மச்சான்' பாடல் ஆய்வுகள் நன்றாக உள்ளன.

வினோத் அவர்களின் 'மச்சானா மாமாவா' பாடலும் பொருத்தம்.

அடுத்து வரப்போகும் மச்சான் யாரோ.

Gopal.s
13th June 2015, 01:07 PM
ஒரு விஷயம். என் பிடித்தத்தில் அடுத்து வருவது God father ஒன்றும் இரண்டும்.(கதையும்தான்)அவை உங்களுக்கு பரிச்சயமானது. விட்டு விட்டு தொடர்கிறேன்.(Francis Ford Coppola ,Mario puzo )

vasudevan31355
13th June 2015, 01:09 PM
http://cinema.lk/wp-content/uploads/2013/03/spring-summer-fall-winter-and-spring-movie-poster-2003-1020253780.jpg

http://static.diario.latercera.com/201209/1615005.jpg

vasudevan31355
13th June 2015, 01:11 PM
http://ia.media-imdb.com/images/M/MV5BMTg4Mzc4NzEwMF5BMl5BanBnXkFtZTYwODA2MjA3._V1_S X640_SY720_.jpg

vasudevan31355
13th June 2015, 01:27 PM
இதோ சில மச்சான் பாடல்கள்

'மச்சானை வச்சுக்கடி
முந்தானை முடிச்சுலதான்'

இன்னொரு பாட்டு

ஆனால் விஷுவல் வேண்டாம். ஆனால் கோபால் கோபிப்பார் ஏன் போட வில்லையென்று. போட்டால் பல பேருக்கு பதில் சொல்ல வேண்டி வரும். அதனால் முதல் வரி மட்டும்.

'மச்சான் தொட்டா மஜா மஜா
என் மனசுக்குள்ளே ஏதோ ஒரு கசாமுசா'

கிருஷ்ணா படம் என்னன்னு டக்கென்று சொல்லி விடுவார் என்று நினைக்கிறேன்.

கருத்த மச்சான்... கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்

ஏ மச்சான்... என் பொண்ணு மச்சான்... என்னைத் தொடாதே

வேணாம் மச்சான் வேணாம்... இந்த பொண்ணுங்க காதலு

அட மச்சமுள்ள மச்சான்

மச்சான் மீசை வீச்சருவா

வாங்க மச்சான் வாங்க... வந்த வழியப் பார்த்து போங்க.

மாமன் மச்சான் ஹே நீதானோ

gkrishna
13th June 2015, 01:43 PM
(ஜம்)போ(பு) நமீதா அனைவரையும் அன்போடு அழைப்புது 'மச்சான்ஸ்" :) :mrgreen:

http://i416.photobucket.com/albums/pp248/googeobuzz/Tamil%20Actress/Namitha/gOOgeo_Namitha_nameetha01.jpg

vasudevan31355
13th June 2015, 01:46 PM
கிருஷ்ணா உங்க மூளை தனியா வேலை செய்யுதே!:)

vasudevan31355
13th June 2015, 01:47 PM
மகா மெகா தைரியம் அய்யா உமக்கு.:)

vasudevan31355
13th June 2015, 01:54 PM
சின்னா!

நீங்கள் தொடங்கிய நான்காவது பாகம் நூறாவது பக்கத்தை எட்டப் போகிறது. வாழ்த்துக்கள்.

22 மே மாதம் தொடங்கி இன்று வரை ஏறக்குறைய மூன்று வாரங்கள்தான் ஆகிறது. ஆனால் திரி நண்பர்களின் ஆதரவினால் அருமையான பாடல்களுடன் ஏராளமான விஷயங்களுடன் அமர்க்களமாக நகர்கிறது. நூறையும் தொட்டு விட்டது. வழக்கம் போல ஐந்து நட்சத்திரமும் முன்னாலேயே பெற்று விட்டது.

ஆதரவு தந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி சொல்வோம். .

Gopal.s
13th June 2015, 01:58 PM
ஆனால் விஷுவல் வேண்டாம். ஆனால் கோபால் கோபிப்பார் ஏன் போட வில்லையென்று. போட்டால் பல பேருக்கு பதில் சொல்ல வேண்டி வரும். அதனால் முதல் வரி மட்டும்.

'மச்சான் தொட்டா மஜா மஜா
என் மனசுக்குள்ளே ஏதோ ஒரு கசாமுசா'

ஜம்பு.

தோஷமில்லை. போடலாம்.பயம் வேண்டாம்.

gkrishna
13th June 2015, 02:07 PM
வாசு அண்ணா

சாஸ்த்ரிகளே 'தோஷமில்லை" என்று சொல்லிட்டார் .

பக்கத்தாத்து அம்புஜம் அடிக்கடி அவா ஆத்துகாரர் கிட்ட சொல்லும் வசனம்

தொட்டது தான் தொட்டேள் விட்டது தான் விட்டேள்
அழுத்த சாதிங்கோ ண்ணா :)

(ஹோமத்திற்கு ஆஹூதியில் நெய்யை விடும் போது )

gkrishna
13th June 2015, 02:09 PM
இன்று 100வது பக்கத்தை கடக்கும் 'மதுர கானங்கள் திரி பாகம் நான்கிற்கு ' வாழ்த்துகள்

http://animatedimagepic.com/image/congratulations/congratulations-2663.gif

Richardsof
13th June 2015, 03:15 PM
மதுர கானம் திரி இன்று 23வது நாளில் 1000 பதிவுகளுடன் ,14,000 பார்வையாளர்களுடன் வெற்றி நடை போடுவதற்கு காரணமான நண்பர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் .

கிருஷ்ணா சார்
நமீதாவின் நிழற் படம் கண்ணுக்கு விருந்து .
வாசு சார்
மச்சானை தொடர்ந்து மாமாவா ?
.

Richardsof
13th June 2015, 03:40 PM
இனிய நண்பர் திரு ரவி சார்

உங்களின் புதுமை படைப்பான நவரத்தின மாலை - அருமை .
எனக்கு பிடித்த மாணிக்கம்
இந்த பாடல் உங்களுக்காக
https://youtu.be/uqSfNTwYjJY

chinnakkannan
13th June 2015, 04:30 PM
spring summer fall winter spring -கோபால் வாங்க உஙகள் எழுத்து வழக்கம்போலவே ஆவலைத் தூண்டுகிறது.. பார்த்துவிட்டுச் சொல்கிறேன்..//(சுதந்திரம் என் மூச்சு, அதை பிறர் மீது விடாதே)// தமிழ் எனது மூச்சு அதை பிறர் மீது விடமாட்டேன் என்பது ஞானக்கூத்தனின் ஒருகவிதையில் வருவதாக நினைவு..ம்ம்

நூறாவது பக்கம் வரை இட்டாந்த அன்பு தோஸ்த்துகள் அனைவருக்கும் ஒரு கும்பிடு.. இன்னும் நிறைய ஆராய்ந்து எழுதி பலபல பக்கஙக்ளைக் கடக்க எல்லாம் வல்ல இறையை வணங்குகிறேன்..

அச்சாரம் போடுதற்கு ஆடெட்டு வேணுமின்னு
..அப்பத்தா சொன்னதால் ரோசனையாப் போனவரே
இச்சைகள் தான்கூட்டி இமைக்குள்ல நெனைப்பவச்சு
..கண்ணுவிழி கொட்டகொட்ட கன்னிப்பொண் காத்திருக்கேன்
வச்சுருக்கும் பணமுமக்கு ப் பத்திடுமோ தெரியாதே
..வாகாகக் கேட்டிருந்தா சிறுமாடு தந்திருப்பேன்
மச்சானே ஒன் நெனப்பில் மயங்கித்தான் நின்னுருக்கேன்
..மாறாம வந்துடய்யா மாலையுந்தான் தந்திடய்யா..!


ஆஹா அழகாக மச்சான் பாடல்களாகத் தந்த எஸ்வி வாசு கிருஷ்ணாவிற்கு நன்றி.. நமீதாவின் “எங்கள் அண்ணா “ ஸ்டில் பக்கெட்டில் கொணர்ந்திருக்கலாம் கிருஷ்ணா.. அதில் ஒல்லி ப்ளஸ் அழகுடன் இருந்தார்..

rajraj
13th June 2015, 09:59 PM
Vasu: Here is another 'machchaan' song for you:

loL loL loL loL loL loL
machchaan unnai paarthu mayangi ponen nethu
manasu vachchaa inbam varum pazhaiya nadaiya maathu
............

vasudevan31355
13th June 2015, 10:26 PM
Vasu: Here is another 'machchaan' song for you:

loL loL loL loL loL loL
machchaan unnai paarthu mayangi ponen nethu
manasu vachchaa inbam varum pazhaiya nadaiya maathu
............

pazhaiya nadaiya maathu

pazhaiya... nadaiya... maathu

pazhaiya......... nadaiya.......... maathu

pazhaiya............ nadaiya............. maath....u:)

Thank u sir.

vasudevan31355
13th June 2015, 10:33 PM
ஜம்பு.

தோஷமில்லை. போடலாம்.பயம் வேண்டாம்.

'பொன்னான உள்ளம் உன்னோடு இருக்க
கண்ணான கண்ணே (எனக்கு) பயம் வேண்டாம்':)

chinnakkannan
14th June 2015, 12:36 AM
என்னமோ போங்க -23

வித்தை பலகாட்டி வீரமாக அங்குதான்
முத்ததன் சிப்பியை மூழ்கியே – பக்குவமாய்
தேர்ந்தே எடுத்தே திசையெங்கும் விற்றிடுவார்
பாசமிகு பாண்டிநாட் டார்..

எஸ்..முத்துக்கள் பெயருடைத்தது பாண்டிய நாடு என்பது அனைவருக்கும் தெரியும்.. அதை வைத்து எழுதப்பட்ட ஒரு மிகச் சிறப்பான நாவல் ராஜமுத்திரை.. சாண்டில்யன் எழுதியது..ஆஹா எத்தனை முறை படித்திருப்பேன்..

முன்னுரையில் அந்தக்காலத்தில் எப்படி முத்துக்கள் எடுத்தார்கள் என்பதை விலாவாரியாக எழுதியிருப்பார்..

அதைப்பற்றி விவரணையாக எழுத ஆசை தான்..ஆனால் மனம் மிகக் களைப்பாக இருக்கிறது..

ஆக என்ன சொல்லவந்தேன்..முத்து. செயற்கை முத்து இயற்கை முத்து பற்றி ஒரு வியாசமே எழுதியிருக்கலாம் ரவி..பட் அவருக்கும் என்ன மனக்களைப்போ..

சரி என்னபண்ணலாம் .. நீராடலாம்.. அழகாய்க் குளிர்ந்த நீரில் (யார் கண்போட்டார்களோ தெரியவில்லை ( நற நற) மஸ்கட்டுக்கு வரவிருந்த சைக்ளோன் கொஞ்சம் சூரில் சூறையாடிவிட்டுப் போய்விட்டது (மஸ்கட்டிலிருந்து இரண்டரை மணி நேரப் பயணம்) இங்கே மறுபடி வழக்கப்படி வெய்யில்

ஒரே வேலைகள்..டபக் டபக்கென போய்க்கொண்டிருந்ததில் நூறாவது பக்கத்திற்கு ஒரு ஓஹோ எனச் சொல்லும்படி இல்லாவிட்டாலும் ( என்னால் ஓஹோ என எழுதவேவராது.)

ரொம்ப சீரியஸா கண்ணா எழுதிட்டான்னு நினைக்கறியளா..என் நிலைமை அப்படி..

ஜல்ப்புன்னேன். அது போகவே இல்லை. கர் கர் என ஓடும் மூக்கு.. எதாவது உருப்படியாய் எழுதவும் வரவில்லை..

அடுத்தவாரம் முதல் லீவ்..வாசு கல்நாயக், ரவி,ராஜேஷ் கிருஷ்ணா கலை எஸ்வி – ஒன் மன் த் லீவ்பா சிக்கா.. ஸோ நான் வரும் போது இந்த மதுரகானம் திரி 250 பக்கங்கள் கடந்திருந்தால் உங்கள் எல்லாருக்கும் போனஸ்..

நான் எழுதவே எழுதாமல் கோபு 1954 போல மறைந்திருந்து லைக் போட்டுஆதரவு கொடுப்பேன். பட் பக்கங்கள் 90% எழுத்துக்களின் மூலமாக நிரம்பவேண்டும் என்பது என் விருப்பம்.

இங்க ரவியும் விஜியும் என்னமோ பாடி ஆடறாங்க.. காதல் தான் இப்படித் தான் ..மூழ்கி எழுந்து முத்தைக் கண்டெடுத்தா ஆபரணமாப் போட்டுக்க வேண்டாமோ.. என்னமோ போங்க
லிரிக்ஸ் நல்லா இருக்குங்க்ணா..
*
முத்துக்குளிப்பவரே கொஞ்சம் பக்கத்திலே வாங்க
முக்கனிச் சாறெடுத்துக் கொஞ்சம்கிண்ணத்திலே தாங்க..
மூழ்கி எழுந்துவிட்டேன்
இந்த முத்தை கண்டெடுத்தேன்
மனதில் பூட்டிவைத்தே
என் உயிரைக் காவல் வைத்தேன்..

உறக்கம் வராமல் என்னைத் தடுத்ததென்ன
பொறுக்கவிடாமல் உள்ளம் தவிப்பதென்ன

காற்று வந்து முத்தமிட்டால் கார்மேகம் நீர் பொழியும் (ஹை..)
காதல் வெள்ளம் பொங்கி வந்தால் காவியத்தில் தேன் பாயும்

இளமை வானிலே எண்ணம் பறப்பதென்ன
இனம்புரியாத சுகம் பிறப்பதென்ன

நெருங்கி வந்து நின்றுவிட்டால் நினைவுகள் மயங்கி வரும்
மயக்கம் வந்து தெளியும் முன்னே மறு நாளும் விடிந்துவிடும்


https://youtu.be/m205Gt7LfCk

chinnakkannan
14th June 2015, 01:01 AM
முழுமதி சிரிக்கும் நேரம்
…மூக்கிலே நகையும் மின்ன
சிலுசிலுக் காற்றும் மேனி
;...சிலிர்த்திட வைத்து உன்னைத்
தழுவிட நீயும் கொஞ்சம்
..தள்ளியே நின்று கொண்டே
குலுங்கிடச் சிரிப்ப தென்ன
..கூறிடு உண்மை தன்னை

காற்றினில் கலையும் கேசம்
..காரணம் தெரியும் அன்பே
கூற்றுவன் போலக் கண்கள்
.குட்டியாய் முகத்தில் தாடி
தீற்றலாய் நெற்றி வேர்வை
..திரிந்துதான் கன்னம் வீழ
சீற்றமும் கொண்ட வில்லன்
…சீரிய தோற்றம் கண்டேன்..!


https://youtu.be/baNwe5JdGZ0